நண்பர்களே.
வணக்கம். தமிழ் செப்பும் நல்லுலகிற்கு கவுண்டர் ; வடிவேலார் ; சந்தானம் ; பரோட்டா சூரி போன்ற மூதறிஞர்கள் நிறையவே 'நச்' கருத்துக்களை கல்வெட்டில் பதிக்காத குறையாய் விட்டுச் சென்றுள்ளதை நாமறிவோம் ! "நாகூர் பிரியாணியானது உளுந்தூர்பேட்டையிலிருக்கிற மிஸ்டர் நாயாருக்கு போணும்னு விதி இருந்தாக்கா - அது கிடைக்காம போகாது !" என்பது அந்தப் பொன்மொழிகளில் ஒன்றல்லவா ? அதன் நிஜத்தன்மையை கடந்த 10 தினங்களில் இந்த ஆந்தையன் உணர்ந்து வர்றான் !
இந்தப் பொன்மொழிப் புரிதலின் நதிமூலம் கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளுக்கு முந்தையது ! பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் சாகரத்தின் ஒரு Alltime Top 10-க்குள் இடம்பிடிக்கக்கூடிய தொடர் தான் கேப்டன் டைகரின் (ஒரிஜினல்) தொடர் என்பதை நாம் மட்டுமல்ல - இந்த உலகமே அறியும் ! அத்தனை அசாத்திய உச்சத்தினை கண்ணில் காட்டிய ஒரிஜினல் படைப்பாளிகள் இயற்கை எய்திய பிற்பாடு - ஒரு வெற்றிடம் உருவானதை மறுப்பதற்கில்லை ! சக்கை போடு போட்டு வந்த ஒரு நாயகனை எந்தவொரு பதிப்பகமும் அம்போவென மறந்து விடாதென்பதால் - புதுப் புது creative டீம்களோடு 'தங்கத் தலைவனுக்கு' புதுசாய் ஒரு ஜென்மம் தந்திட முனைந்தனர் - with mixed results ! புதுசாய் ஆட வரும் ஒரு பிள்ளையாண்டனை ஒரு சராசரியான ஆட்டக்காரரோடு ஒப்பிட்டால் தப்பில்லை ; ஆனால் ஒப்பீடுகள் சச்சின் டெண்டுல்கருடன் செய்ய நேரிட்டால், யாராய் இருந்தாலுமே டப்பா டான்ஸ் ஆடத்தானே செய்யும் ?! நடந்ததும் அதுவே ! அதிலும் அந்த 'இளம் டைகர்' தனித்தடத்தினை 1975 to 2015 என்ற முப்பதாண்டு காலகட்டத்தில் வெவ்வேறு கதாசிரியர் / ஓவியர்களைக் கொண்டு 21 ஆல்பங்களுடன் பயணிக்கச் செய்யும் முனைப்பில் ரொம்பவே தடுமாறியிருந்தனர் ! நாமும் தொடரினை ஆரவாரமாய் ஆரம்பித்து விட்டு, ஆல்பம் நம்பர் ஒன்பதோடு தள்ளாடி நின்று விட்டிருந்தோம் ! 2014-ல் "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" டபுள் ஆல்பம் தான் இத்தொடரினில் நாம் வெளியிட்டிருந்த கடைசி ஆல்பம் ! அந்த 'வடக்கு vs தெற்கு' என்ற உள்நோட்டு யுத்தப் பின்னணியிலேயே கதை விடாப்பிடியாய் பயணித்ததில் நீங்களும் சரி, நாங்களும் சரி அடைந்த அயர்ச்சியினில் இளம் த.த.க்கு ஒரு பிரேக் தந்திட எண்ணியதில் no secrets ! ஆனால் அந்த பிரேக் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு நீடித்திடுமென்று அன்றைக்கு நான் சத்தியமாய் யூகித்திருக்கவில்லை தான் ! Maybe ஓரிரு ஆண்டுகளுக்குப் பிற்பாடாய் வண்டி மறுக்கா புறப்பட்டு விடும் என்றே நம்பியிருந்தேன் ! ஆனால் தொடர்ந்த பொழுதுகளில் த.த.வின் "மின்னும் மரணம்" ; "இரத்தக் கோட்டை" ; "தோட்டா தலைநகரம்" போன்ற க்ளாஸிக் மறுபதிப்புகளில் நாம் பிஸியாகிட, அந்த மும்முரத்தில் கொஞ்ச காலம் ஓடியது ! அப்பாலிக்கா "என் பெயர் டைகர்" & மார்ஷல் டைகர் தொடர்களுக்குள் U-டர்ன் அடிப்பதில் கைப்புள்ள வடிவேலு ரேஞ்சுக்கு என் பச்சைச் சொக்காயெல்லாம் கந்தலாகிட்டதிலும் ஜாலியாய் பொழுது போச்சு ! அந்தப் பின்னணியில் மறுக்கா இளம் டைகர் தொடரினுள் புகுந்திட 'தம்' சுத்தமாய் இருந்திருக்கவில்லை தான் ! பற்றாக்குறைக்கு நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் மேடமும் தொடரின் அடுத்த சில ஆல்பங்களைப் படித்துப் பார்த்து விட்டு "ப்ச்" என்று உதட்டைப் பிதுக்கியிருக்க - ஓசையின்றி 'த.த.வுக்கு ஒய்வு தந்திருந்தோம் !
கொஞ்ச காலம் கழித்து "தனித்தடத்திலாவது ; only for முன்பதிவுஸ்" என்று வெளியிடலாமே ? என்ற கோரிக்கை வலுப்பெற்ற நாளில் - "ரைட்டு...முயற்சிப்போம் !" என்றபடிக்கே மொழிபெயர்ப்பாளர் மேடமை 'தம்' கட்டி எழுதச் செய்தோம் ! அவருமே கணிசமான நேரம் எடுத்துக் கொண்டாலும், 4 அத்தியாயங்களையும் கத்தையாக முடித்துத் தந்துவிட்டார் ! அதை தமிழாக்கம் செய்திட அப்டிக்கா கருணையானந்தம் அங்கிளுக்கு பார்சல் பண்ணி அனுப்பின இரண்டாவது தினமே, நம் கதவைத் தட்டிக்கொண்டு கூரியர் ரிட்டன் வந்திருந்தது ! 'இல்லேப்பா...கதை ரொம்ப நீளமா போகுது ; செரியா புரியவும் மாட்டேங்குது ! எனக்கு இது தேறாது !" என்று சொல்லிவிட, மலங்க மலங்க முழித்தபடிக்கே அந்த 184 பக்க குவியலோடு அமர்ந்திருந்தேன் ! "ஆங்...நம்மளே எழுதிப்புட வேண்டியது தான் !!" என்றபடிக்கே இங்கிலீஷ் ஸ்க்ரிப்ட்டை தூக்கினால் - சுத்தமாய் ரெண்டு கிலோ தேறக்கூடிய அந்தக் காகிதக்கத்தை கொடூரமாய் முறைப்பது போலிருந்தது !
அடிக்கடி நான் சொல்லியுள்ள விஷயம் தான் இது : கதையோட்டத்தில் ட்விஸ்ட்களும், மொழிமாற்றத்தில் பல்ட்டிகளுக்கான அவசியங்களையும் கொண்டிருக்கும் கதைகள் - எப்போதுமே பணிசெய்திட சுவாரஸ்யமானவைகள் - at least என்னளவிற்கு ! ஆனால் நேர்கோட்டுக் கதைகள் ; routine கதைகளுக்குள் என்னை இறக்கி விட்டால், கொரில்லா செல்லுக்குள் அடைக்கப்பட்ட நாய் ஷேகர் போல டான்ஸ் ஆடித் தள்ளிவிடுவேன் ! So ஸ்பஷ்டமாய்த் தெரிந்தது - இந்த மொழிபெயர்ப்புப் பணி எனக்கு சுகப்படவே செய்யாத ஒன்றென்று ! என்ன செய்வதென்று கையைப் பிசைந்து கொண்டே முழித்த வேளையில் தான் "முன்பதிவில் சுரத்தே நஹி சார் ; மொத்தமே முப்பதோ என்னவோ புக்கிங்ஸ் தான் வந்துள்ளன !" என்ற சேதி காதுக்கு வந்தது ! ஒரு புராஜெக்ட் சொதப்பியதைக் கண்டு நான் உள்ளூர நிம்மதிப் பெருமூச்சு விட்டது அன்றைக்குத் தான் ! So கண்ணைக் கசக்கியபடியே உங்களிடம் வந்து, புக்கிங் சொதப்பலின் பின்னணியினைச் சொல்லி விட்டு கழன்று கொண்ட போது...."ஷப்பா...கிரேட் யெஸ்கேப் !" என்று உள்ளுக்குள் ஒலிப்பது புரிந்தது !
இதெல்லாம் அரங்கேறி வருடங்கள் கொஞ்சம் உருண்டோடியான பின்னே - 'த.த.' முயற்சிக்கலாமே ? என்ற கோரிக்கை மறுபடியும் வலுப்பெற - "தமிழாக்கம் செய்ய ஆளில்லை தெய்வங்களா ; எச்சூஸ் ப்ளீஸ் !" என்று இம்முறை கைகளைத் தூக்கி சரண்டராகியிருந்தேன் ! "நான் எழுதித் தரேன் சாரே !!" என்றொரு குரல் ஒலிக்க, "யாரு...யாரு..யாரந்த ஆபத்பாந்தவன் ?" என்று சுற்றுமுற்றும் பார்த்தால், அசலூரில்லே, அசல்நாட்டிலிருக்கும் நம்மள் கி ஷெரீப்ஜி தான் கைதூக்கி நிற்பது புரிந்தது ! அவர்பாட்டுக்கு மனசு மாறி ரிவர்ஸ் கியரை போட்டுப்புடக்கூடாதே என்று 'பச்சக்' என்று துண்டை தோளில் போட்டு லாக் பண்ணிவிட்டிருந்தோம் ! And சூட்டோடு சூடாய் 2023 அட்டவணையிலும் "The தளபதி ஸ்பெஷல்" என்ற அறிவிப்பை ரெகுலர் தடத்திலேயே போட்டும் விட்டோம் !
கையில் இருந்த, கையால் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் முழுசையும் நம்மாட்களைக் கொண்டு ஸ்கேன் செய்யச் செய்து ; படங்களையும் மெகா பைல்களாக இல்லாது compress செய்யச் சொல்லி பாகம் பாகமாய் அமெரிக்காவுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தோம் ! முதல் பாகம் ஈ.வி.ரவுண்டு பன் சாப்பிடும் வேகத்தில் செம வேகமாய் எழுதி வந்தது ; ரெண்டாவது பாகம், பொழுது சாயத் துவங்கும் சமயத்தில் தலீவர் கொட்டாவி விடும் ஸ்பீடுக்கு வந்தது ; பாகங்கள் மூன்றும், நான்கும் - தலீவரின் வேப்பிலைப் போராட்டத்தின் வேகத்திலேயே வந்தன ! But எனக்கோ இம்மி கூட அதில் சிக்கலிருக்கவில்லை ! இதழினை நாம் அறிவித்திருந்தது நவம்பர் 2023-க்குத் தான் & எங்களது பக்கப் பரிமாற்றங்களெல்லாம் அரங்கேறியது கணிசமான மாதங்களுக்கு முன்பாகவே ! So அவரது அலுவலக / சமையலகப் பணிகளுக்குக் குந்தகங்களின்றி, ரிலாக்ஸாக எழுதி அனுப்பிட வேண்டி எவ்வித பிரஷரும் போடவில்லை ! And பணியின் கடுமை குறித்து எனக்குக் கிஞ்சித்தும் ஐயங்களிருக்கவில்லை என்பதால் அவரை தொந்தரவு செய்ய மனம் ஒப்பவுமில்லை !
"ரைட்டு...முன்னக்கூடி எழுதி வந்திருச்சு ; கையிலே கதைக்கான கோப்புகளும் ரெடியாக உள்ளன ; முன்கூட்டியே DTP முடிச்சு ; புக்கையும் நம்மள் சீக்கிரமே முடிக்கிறான்" என்று சொல்லிக்கொண்டேன் ! நம்மாட்கள் DTP வேலைகளை போட்டுத் தாக்கி மூன்றே வாரங்களில் முழுசையும் குவித்து விட, பிழைதிருத்தம் பார்ப்பதில் நமக்கு உதவிக் கொண்டிருக்கும் 2 நண்பர்களுக்கு பக்கங்களை அனுப்பி வைத்தோம் ! நான்கு பாகங்களையும் இருவருமே ரெண்டு தபா பார்த்து முடிக்க, "கரெக்ஷன்லாம் போட்டாச்சு அண்ணாச்சி ; பிரிண்டிங்குக்கு ரெடி பண்ணிடலாமா ?" என்று மைதீன் வினவினான் ! அம்மா இயற்கையோடு கலந்திருந்த வேளை அது என்பதால், இம்மாம் நீள கதைக்குள் முழுசாய் புகுந்து எடிட்டிங் செய்யும் 'தம்'மெல்லாம் எனக்கிருக்காதென்று சரியாகவே யூகித்திருந்தான் ! ஒரு கணம் யோசித்தேன் - "சரி...form போட ஆரம்பிக்கச் சொல்லு மைதீன் ; எழுதினதும் நம்மாளுங்கதான்...கரெக்ஷன் பாத்திருக்கதும் நம்மாட்கள் தான் ! பெருசா ஏதும் நோண்ட தேவை இருக்காது...சட்டுன்னு பிரின்டிங் முடிச்சா நல்லது தான் " என்று சொல்லிவிட்டு வந்திருந்தேன் ! உள்ளுக்குள் ஒரு சன்னமான நிம்மதியும் இருந்தது - காலமாய் என்னை மிரட்டிக் கொண்டிருந்ததொரு சிக்கலான பணியினை நண்பரின் சகாயத்தில் இம்மி நோவு கூட இன்றி முடித்து விட்டோமே !! என்று ! ஆனால் ராவில் மோட்டைப் பார்த்துக் கொண்டு படுத்துக் கிடந்த வேளையில் மனசு கேட்கவில்லை ; ஒருக்கா மேலோட்டமாய் வாசிச்சு மட்டும் விட்டுப்புடுவோம் என்று தீர்மானித்தேன் ! காலையில் - "மொத பாகத்தை மட்டும் கொண்டு வா மைதீன்..லைட்டா பாத்திட்டு தந்திடறேன் !" என்று சொல்ல, கொஞ்ச நேரத்தில் 46 பக்கங்கள் என் கைகளில் இருந்தன ! இங்கே லைட்டா scroll செய்து மேலே போய், அந்த "சந்தானப் பொன்மொழியினை" மட்டும் ஒருக்கா வாசியுங்களேன் folks !!
டைகர் கதைகளில் என்றைக்குமே படங்களும் அதிகம் ; வசனங்களும் அதிகம் ! மின்னும் மரணம் 18 பாகங்களும் கொண்ட முழுக்கதையிலெல்லாம் உள்ள டயலாக் பலூன்களை எண்ணினாலே கிறுக்குப் பிடித்துவிடும் தான் ! And இங்கேயும் அதனில் இம்மியும் மாற்றங்கள் இருக்கவில்லை என்பதை துவக்கப் பக்கங்களே நினைவூட்டின ! பொறுமையாய் மஹிஜி பணியாற்றியிருப்பதை படித்துக் கொண்டே பக்கங்களை மெதுவாய் புரட்டும் போதே, அந்தப் பரிச்சயமான பட்டாம்பூச்சிக் குத்தாட்டம் வயிற்றுக்குள் அரங்கேறுவதை உணர முடிந்தது ! ஆங்காங்கே சில இடங்களில் கதைப் புரிதலில் சிற்சிறு இடைவெளிகள் இருப்பது போல்பட்டது ! மலரை நான் 'புய்ப்பம்' என்று எழுதலாம் ; நண்பர் "பூ" என்று எழுதலாம் - அதனில் இம்மியும் சிக்கல்கள் லேது ! ஆனால் கதையின் புரிதல்களில் சமரசங்கள் சுகப்படாதென்றுபட்டது ! அதிலும் ரொம்பவே பிரயாசைகளுக்குப் பின்பாய் மறுக்கா ஸ்டார்ட் ஆகியிருக்கும் இந்த டைகர் எஞ்சினுக்கு, எனது சோம்பலால் எவ்வித சிறு இடர்களும் இருந்திடலாகாதே என்று நெருட ஆரம்பித்தது !
"இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் இருந்தா அதையும் எடுத்திட்டு வாப்பா...!" என்று மைதீனுக்கு போன் செய்த போதே அவனும் புரிந்து கொண்டான் - 'வேதாளம் முருங்கை மரம் ஏறிப்புடிச்சி ; இந்த மண்டகப்படி இனி அடுத்த 10 நாட்களுக்காவது நீடிக்கும்" என்று ! பாக்கியிருந்த 3 பாகங்களையுமே மொத்தமாய் தூக்கிக் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டான் ! வேறு வழியின்றி முழுமூச்சாய் உள்ளுக்குள் புகுந்த போது தான் நண்பரின் பணியின் பரிமாணம் முழுசுமாய்ப் புரிந்தது ! For the sheer length of the dialogues - இந்த 184 பக்கங்களுக்குப் பேனா பிடிப்பதென்பது ஒரு 250 பக்க நார்மலான கதைக்கு சமானம் என்பேன் ! And பொதுவாக இத்தனை பெரிய கதையினில் பணியாற்றும் போது ஒரு சீரான flow கிடைப்பது அரிதென்பது எனக்கு அனுபவத்தில் தெரியும். ஒரு தெளிவான மூடில் இருக்கும் போது வரிகளில் அந்தத் தெளிவு பிரதிபலிப்பதுண்டு ! அதே சமயம் வூட்டிலே பூரிக்கட்டைகள் சந்திராயன்களாய் உருமாற்றம் கண்டிடும் நாட்களில் - பேனாவுமே தடுமாறுவதுண்டு ! So நண்பரின் ஐந்தாறு மாத உழைப்பெனும் போது, அதனில் சில ups & downs இருப்பது தவிர்க்க இயலா இடர் என்பது புரிந்தது ! ஆங்காங்கே பட்டி-டிங்கரிங் என்று துவங்கிய எனது படலம், திருத்தங்கள், கொஞ்சமாய் மாற்றி எழுதல், அப்பாலிக்கா மறுக்கா proof reading என்று கடந்த 10 நாட்களாய் தொடர்ந்து வருகிறது & இன்றைக்குத் தான் பாகம் 3-க்கு சுபம் போட முடிந்துள்ளது ! எஞ்சியிருக்கும் 44 பக்கங்களை தக்கி-முக்கி இந்த ஞாயிறுக்குள் முடித்து விட்டால் - நாகூர் பிரியாணியை இந்த சிவகாசி ஆந்தையன் குட்டிக்கரணம் அடித்து முயன்றாலுமே தவிர்க்க வழியே நஹி என்பது மெய்யாகியிருக்கும் ! ஜெய் சந்தான பாஹுபலி !
And கதைக்குள் புகுந்து பணியாற்றிய போது தான் புரிந்தது - இளம் த.த.வை இத்தினி காலம் பரணில் பாய்போட்டுப் படுக்கச் செய்தது பிசகென்று !! ஒரிஜினல் கதாசிரியரின் படைப்புகளோடு ஒப்பீடு செய்யும் தவறை நானுமே செய்திருப்பது மண்டைக்கு உரைக்கிறது ! ஒரு நார்மலான கௌபாய் சாகசமாக மாத்திரமே பார்த்திருப்போமெனில் இந்தக் கதைகள் எப்போதோ கரை சேர்ந்திருக்கும் என்பது obvious ! இப்போவுமே மஹிஜி துணிந்து தண்ணிக்குள் இறங்கியிருக்காவிடின், நானாக இறங்கியிருக்கவும் மாட்டேன் & காலத்துக்கு இளம் டைகர் பரண்வாசியாகவே தொடர்ந்திருப்பார் ! So இந்த முயற்சிக்கொரு துவக்கம் தந்தமைக்கும், இயன்ற best-ஐ தந்துள்ளமைக்கும் thanks a ton மஹிஜி ! இதழ் வெளியாகி நண்பர்களின் கைகளில் தவழும் வேளைக்கே உங்களாலும் பார்க்க முடியாதென்பது ஒரு சிறு நெருடல் தான் - ஆனால் இங்கும், க்ரூப்களிலும் அரங்கேறப் போகும் அலசல்களை எனக்கு முன்பாய் நீங்கள் பார்த்து விடுவீர்களென்பது உறுதி !
இதோ - அட்டைப்படம் + உட்பக்க previews :
மீ 1
ReplyDeleteஆத்தாடி
Deleteவாழ்த்துகள் KS
Deleteவாழ்த்துகள்
Deleteநன்றி நன்றி நண்பர்களே
Deleteசூப்பர் சகோ
DeleteHi..
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 🙏
ReplyDelete🔥💥😘
ReplyDeleteதளபதி அட்டைப்படம் தெறி மாஸ்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteயங் டைகர்... வெல்கம் பேக்!!
Deleteவணக்கமுங்கோ அல்லாருக்கும்
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteதங்கத் தலைவனை பற்றிய பதிவு. எவ்வளவு நாட்கள் ஆச்சு இதைப் போல பார்த்து.
ReplyDeleteவாழ்த்துகள் & நன்றி செரீப்...
ReplyDeleteபாயாச அண்டாவ இரவல் தர முடியுமா
Deleteஅட்டைப்படம் அமர்க்களம்,
ReplyDeleteகலரிங் கண்ணைப்பறிக்கிறது.
இந்த வருட தீபாவளி கொண்டாட்டம்தான்.
///இப்போவுமே மஹிஜி துணிந்து தண்ணிக்குள் இறங்கியிருக்காவிடின், நானாக இறங்கியிருக்கவும் மாட்டேன் & காலத்துக்கு இளம் டைகர் பரண்வாசியாகவே தொடர்ந்திருப்பார் ! So இந்த முயற்சிக்கொரு துவக்கம் தந்தமைக்கும், இயன்ற best-ஐ தந்துள்ளமைக்கும் thanks a ton மஹிஜி !///
ReplyDeleteமச்சானப் பாத்தீங்களா
இளம்டைகர் தொகுப்புக்குள்ள..
❤💛💙💚💜
போட்டு தள்ளு மாப்பு....
Deleteநன்றி ஷெரிப் சார். உங்கள் புண்ணியத்தால் தங்கத் தலைவன், மிக நீண்ட காலத்திற்கு பிறகு தரிசனம் தருகிறார். உங்களுக்கு என் இதயத்தில் சிலை செய்து வழிபடுவேன்.
Deleteஜெய் மாதா...
உள்ளேன் ஐயா!!!
ReplyDeleteவாழ்த்துகள் மஹி ஜி. உங்களால் தான் இளம் டைகர் கிடைத்தது. பாராட்டுக்களும் நன்றிகளும் ஜி.
Deleteஅட்டைப்படங்களும் உள்பக்கங்களும் நன்றாகத் தான் உள்ளன. கதை நன்றாகவே உள்ளதே. இப்போதாவது வந்ததே டைகர். ஜெய் டைகர் ஜி.
ReplyDeleteஇளம் புலி தொகுப்பு..
ReplyDeleteவழக்கம்போல வண்டி வண்டியாய் வசனங்கள்.. 😍
வழக்கத்துக்கு மாறா தெளிவான அழகான சித்திரங்கள் + வண்ணக்கலவை..😍😍😍😍
7th
ReplyDelete2024 அட்டவணைக்காக காத்திருக்கிறோம் சார்.... விரைவில் வெளியிடுவீர்கள் என்று
ReplyDeleteமாதத்தின் இறுதி சனியன்று நண்பரே ! எற்கனவே சொல்லி இருந்தேனே !
Deleteகையத் தூக்கினதுக்கு காரணமே இந்த குழந்தை தத்தக்கா பித்தக்கா ன்னு நடக்கும் போது கீழே விழறதுக்கு முன்னே நீங்க தாங்கிப்பிடிச்சிடுவீங்கன்னு ஒரு நம்பிக்கைல தான். 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️
ReplyDeleteயோவ் பி.பி.வி. லயே அசத்தி இருந்தாய்..
Deleteஇளம் பிலியையும் தெறிக்க விட்டிருப்பாய்...
உண்மை
Deleteமச்சானே கொயந்தைன்னா மாப்பிள்ளை பச்ச மண்ணா இருக்குமோ ?
Deleteஒலிம்பிக்ல ஓடற கொயந்தை
Deleteஆஜர்
ReplyDeleteவணக்கம் நண்பரே
Deleteவணக்கம் சரவணரே
Deleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteவணக்கம் நண்பரே
Deleteசார் உங்களை ஏமாற்றி விட்டு இதோ ஆஜராகி விட்டேன் இந்த நட்ட நடு இரவில்...:-)
ReplyDeleteமகிழ்ச்சி ப்ரோ
Deleteநன்றி நண்பரே...:-)
Delete@Editor sir..😍😘
ReplyDeleteMe in..👍
ஷெரீப் சூப்பர்...அட்டகாசம்..வாழ்த்துக்கள் ..பாராட்டுக்கள் இவை இப்பொழது கொஞ்சம் தான் தரமுடியும்..இதழ் வருகை தந்து வாசித்து முடித்தவுடன் தான் மீதம்...
ReplyDeleteடைகரின் அட்டைப்படம் பாஸ் மார்க் கேக்குறீங்களே சார்...செம அட்டகாசமாய் அமைந்து உள்ளது ..முன். பின் இருபக்க அட்டைப்படங்களுமே...முழு மதிப்பெண்ணே தரலாம்...
ReplyDelete///மின்னும் மரணம் 18 பாகங்களும் கொண்ட முழுக்கதையிலெல்லாம் உள்ள டயலாக் பலூன்களை எண்ணினாலே கிறுக்குப் பிடித்துவிடும் தான் ! ///
ReplyDeleteஞாபகம் இருக்கு சார்..! அரிசோனா லவ் பாகத்துலன்னு நினைக்கிறேன்.. ஒரு பக்கத்துல கிட்டத்தட்ட 40. வசன பலூன்கள் இருக்கும்.!
பிலியாரு அட்டைப்படம் பிளிருதுங் சார்....
ReplyDeleteகதையை பார்த்துடுவோம்.... பாயாச குண்டாவை எடுக்கனுமோனு..
And before I forget - ஒரு அவசரக் கோரிக்கையும் !! இளம் டைகர் தொடரின் முந்தைய பாகம் வெளியாகி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகப் போவதால் முன்கதையினை நினைவுபடுத்திக் கொள்ள ஒரு மினி-கதைச்சுருக்கம் தேவை
ReplyDelete####₹
கண்டிப்பாக கதை சுருக்கம் வேண்டும் சார் என கேட்க நினைத்து இருந்தேன் சார்...செயல்படுத்தி விட்டீர்கள் நன்றி...
அப்படியே எழுதிக் குடுத்துடு தல...
Deleteநாங்களும் உனக்கு நன்றி சொல்வோம்..😍
அங்கன கொர்ர் ...கொர்ர்ன்னு சத்தம் தான் கேக்குது சார் !
Deleteஅவ்வளவ்வு சத்தமாவா கேக்க்குதுஊ.......
Deleteஇடின்னு நெனச்சு மழவருதான்னு பாத்ராதிய
Delete///முன்னும், பின்னும் ஒரிஜினல் ஓவியங்களே ! கலரிங் மாத்திரமே மாற்றியுள்ளோம் ! So ப்ளீஸ் - கொஞ்சம் பாத்து பாஸ் மார்க் போட்டு விடுங்க ! ///
ReplyDelete100/100
/////ஒற்றைப் பக்கத்துக்கு மிகாமல் crisp ஆக யாரேனும் எழுதிக் கொடுத்தால் - சிலை வைக்கிறோமோ இல்லையோ ; அரை டஜன் ரவுண்டு பன்களை கூரியரில் அனுப்பிடுவோம் !! Please guys ? இந்த விடுமுறைகளின் போதே இயன்றால் சிறப்பு !////
ReplyDeleteமீ முயற்சிக்கிறேன் சார்....
KOK, ஷெரீப் மாதிரி வசனங்கள் போட தெரியாது,.. கதை சொல்ல வரும்னு நினைக்கிறேன்....
ஆல்ரெடி டியூராங்கோவுக்கு எழுதியுள்ளேன்..
இம்முறை பிலிக்கு எழுதிடுவோம்...
செவ்வாயன்று அனுப்பி வைக்கிறேன்.....
சூப்பர் மாம்ஸ்..!
Deleteவாவ்! 👏👏👏
Deleteசும்மா தெறிக்கட்டும் டெக்ஸ்
Deleteநன்றி தோழர்.
Deleteநெடுநாள் வேண்டுகோள், மகேந்திரன் அவர்களின் முன்னெடுப்பினால் செயலாக்கம் பெறுவதை எண்ணி மிக்க மகிழ்ச்சி! நன்றி ஐயா!
ReplyDeleteஒரு வழியாக அடுத்தடுத்த பாகங்களையும் வெளியிட்டு விட்டால் ஒரு நோக்கம் செவ்வனே நிறைவேறும்...
உங்கள் ஒவ்வொருவரிடமுமே அந்த முயற்சிக்கான திறவுகோல் உள்ளது நண்பரே !
Deleteபுக் வெளியான பிற்பாடு நிறைய டவர்கள் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் போய்விடுகின்றன ; பில்டப்பில் தெறிக்கும் வேகங்கள் வாசிப்பிலும் தொடர்ந்தால் எல்லாம் சாத்தியமே !
நிச்சயமாக ஃபாலோ செய்வோம் எடிட்டர் சார்...
Deleteபேய் புகுந்த பள்ளிக்கூடம் :
ReplyDelete32 பக்க இலவச இணைப்புகள் இப்படியே தொடர்ந்தால் நன்றாக இருக்கும் சார்..!
நட்புக்காக.. தோழிக்காக.. தன்னையே தியாகம் செய்யும் நண்பனின் கதை..!
அமானுஷ்ய சக்திகளை கொண்டவனே ஆனாலும்.. வில்லனைப் போல பேசினாலும்.. க்ளைமாக்ஸ் சம்பவத்தால் ஸ்காட் கல்வர்ட்டனின் கேரக்டர் மனதில் பதிந்து விடுகிறது.. குட்டிக்கதை ( மறுக்கா சொல்றேன்.. குட்டின்னா சின்ன.. பெண்குட்டி அல்ல) என்றாலும் நிறைவானதொரு கதை..!
கலரிங் அட்டகாசம்.. சித்திரங்களும் வெகு நேர்த்தி.. அமானுஷ்யமே என்றாலுலேல் கதையும் குழப்பமே இல்லாத நேர்கோட்டுக்கதை..!
டைலனின் கதைகளில் தெளிவான கதைகள் குறைவென்று நினைக்கிறேன்.. அந்தக் குறைவானவற்றுள் நிறைவான ஒன்று இந்த பேய் புகுந்த பள்ளிக்கூடம்.!
குட்டி குழந்தை கதை...அது சுட்டியாதான இருக்கும்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete🤭 வியக்க வைக்கிறது காமிக்ஸ் உருவாக்கம்.. எத்தனை வேலை அம்மாடி.. மஹேந்திரன் பிஸ்டலுக்கு பிரியாவிடையிலேயே அசத்தி இருந்தாரே.. வாழ்த்துக்கள் மஹேந்திரன்... அட்டை அசத்தல்.. நம்ம "சில்க் " குங்களா அது..? ❤️
ReplyDeleteஎல்லாம் கிழமயம் :
ReplyDeleteநம்ம மூணு பெருசுகளோட அட்ராசிடியே தாங்கமுடியாது.. இதுல நாலாவதா ஒரு பெருசு வேற வந்து சேருது... அறுபத்தி அஞ்சி பக்கங்களும் அதகளம்தான்..!
கம்யூனிச சித்தாந்தங்களை அடிநாதமாகக் கொண்ட பியரோ தாத்தா கேரக்டர்.. தேனி வேசம் போட்டுக்கிட்டு பியரோ கோஷ்டி அடிக்கிற போராட்ட லூட்டி.. அதைத்தொடர்ந்து போலிஸாரிடமும் லாயர்களிடமும் பேசும் வாய்சவடால்கள்.. பியரோ தாத்தா கோஷ்டி செம்ம..!
அடங்கப்பா.. சின்னவயசுல என்னென்ன அட்டூழியம் பண்ணியிருக்குதுங்க இந்த பெருசுக... அந்த பெர்தா கிழவிதான் ஏதோ சூனியக்காரி.. லூசு.. முசுடுன்னு நினைச்சோம்.. ஆனா.. நம்மாளுகதான் படா வில்லனுகளா இருந்திருக்காங்க..!
உண்மையை தெரிஞ்சிக்கிட்ட ஸோஃபி மூணு பொம்மைகளை கொண்டு வந்து... "ஜெர்மன் பெட்டையும் மூணு தறுதலைகளும்'' னு டைட்டிலோட பெர்தாவோட கதையை பொம்மலாட்டமா சொல்ல ஆரம்பிக்கும் போதே மூணு பெருசுளோட மூஞ்சியும் ஜிஞ்சர் தின்ன மங்கியாட்டம் ஆயிடுது...!
நம்ம மில்ஸே தாத்தா இந்த மியாவியும் மில்க்கு சாப்பிடுமான்ற மாதிரி இருந்துக்கிட்டு என்னென்ன சோலி பாத்திருக்காரு.. காதல் மன்னன்.. ரக்பி வீரன்.. புதையல் வேட்டையன்.. அடேங்கப்பா.! அதிலும் பெர்தா பாட்டியோட மில்ஸே தாத்தாவோட ட்விஸ்ட் கற்பனை கூட பண்ணி பார்த்திராத ஒண்ணு.!
லெ பியூஷ்னு ஒத்தை வார்த்தையை மட்டுமே சொல்லிக்கிட்டு ஊருக்கு வந்து சேரும் ஆஸ்திரேலிய பேமானி எர்ரோல் தாத்தா செம்ம காமெடி..! மில்ஸேவோட ஸ்கேனில் ஏதோ வித்தியாசமாய் ஒண்ணு தெரியுதுன்னு எல்லோரும் குழம்பி.. பிறகு அது ஒரு பல்லுன்னு தெரியற சமயத்துல அது என் பல்லுதான்னு வாயைத் திறந்து பொக்கையை காட்டும் எர்ரோல் பெருசு செம்ம ரவுசு பார்ட்டியா இருக்காரு..! எர்ரோல், மில்ஸே.. எர்ரோலின் சிஸ்டர் கிரிஸ்டினா மூவரின் ஃப்ளாஸ்பேக் சூப்பர்..!
கதையில் சில குறியிடுகளும் உண்டு.. அவற்றை கவனிக்காமல் விட்டாலும் ஒன்றும் குடி மூழ்கிவிடாது.!
வசனங்கள் இந்தத் தொடருக்கு இதைவிட பொருத்தமாக வலைவீசித் தேடினாலும் கிடைக்காது.!
தாத்தாக்கள் ஒவ்வொரு கதை வந்த பிறகும் நம்ம மனசுல ஒவ்வொரு படி மேலே ஏறி நிற்கிறார்கள்..!
54th
ReplyDeleteபின்னட்டையை முன்னட்டையா போட்டிருந்தா சேல்ஸ் அதிகமா இருக்கும்னு தோணுது...🏃🏃🏃
ReplyDeleteஆமா...ஆமா...மாமோ.
Deleteவழிந்து வழிந்து வழிமொழிகிறேன்...💕💞😍
///ஆமா...ஆமா...மாமோ.///
Deleteயோவ்... என்னாது இது..!? பருத்தி வீரன் படத்து ஊரோரம் புளியமரம் பாட்டுல வர்ர சவுன்டெல்லாம் குடுக்குற..😂
ஓஹோ ன்னா...
Deleteபுலிய பார்க்கச் சொன்னா மயிலு பார்க்குறீங்களா 🤣😇😂
அது ஆசிரியரும் ரண்டட்டயயும் பாத்து தெகச்சுப் போய்...முன்னால் நிக்றத முன்னட்டையாயும்...பின்னால் நிக்றத பின்னட்டையாயும் ஒரு ரைமிங்ல போட்டுட்டாங்க...நாம் வேணா பின்னாலருந்து படிப்போம்
Deleteடைகர் வருகை + அட்டைப்படம் அருமை... அனைத்து கதைகளையும் வரிசையாக மீண்டும் படிக்க வேண்டும்...
ReplyDeleteதங்கக் கல்லறை, மின்னும் மரணம், இரத்தக் கோட்டை கதைகளை மறந்து விட்டு மீதமுள்ள டைகர் கதைகளை படித்தால் கண்டிப்பாக ரசிக்க முடியும்.
சகோதரனின் சகாப்தம் :
ReplyDeleteஇரத்தப்படலத்துக்கு ஸ்பின் ஆஃப் வந்தமாதிரி.. டெக்ஸ் வில்லருக்கான ஸ்பின்ஆஃப் இது..!
டெக்ஸின் தம்பி சாம்.. டெக்ஸின் குணத்திற்கு நேர் எதிரானவர்.. அமைதியான.. கௌரவமான.. அன்பான.. நட்பான.. இன்னும் பலவான ஒரு பண்ணையாளர்..!
டெக்ஸ் வில்லரை கண்டா கிடுகிடுன்னு நடுங்குற வன்மேற்கு சாம் வில்லரை கண்டு கிடு ன்னாச்சும் நடுங்கலாமில்லே.. ம்ஹூம்.. ஒரு பய மதிக்கிறதில்லே.!
சின்ன வயசுல பசங்களுக்குள்ள நடக்குற சண்டை.. அதுல ஓரிரு வயசு மூத்த டெக்ஸை (அண்ணன் கவுண்டமணி ஸ்டைலில்) அவர்ர்ர்ர் இவர்ர்ர்ர் நீங்க ஏங்க போங்கன்னுதான் பசங்க கூப்பிடுறாங்க..! எனக்கென்னவோ அந்த வயசு பசங்க ஒண்ணு ரெண்டு வயசு மூத்த பையனை அவ்வளவு மரியாதையா பேசுவாங்களான்னு டவுட்டா இருக்கு.. அந்த வசனங்கள் கொஞ்சம் செயற்கையாவும் இருந்துச்சி...!
அடிபட்டுக்கிட்டு இருக்கும்போது கூட அவரைப்பிடி.. அவரைக்கடின்னுகிட்டு இருக்காங்க.. நார்மலா சண்டையில வயசு வித்தியாசமே இல்லாம அட்ரா அவனை புட்ரா இவனைன்னுதான் பேசுவாங்க... அதுவும் துஷ்டப் பசங்க குடுக்கும் ஓவர் மரியாதை சுவாரஸ்யப்படவில்லை..!
வன்மேற்கு கதைகள்னு வரும்போது.... நியூசெஸ் பள்ளத்தாக்கில் மாடு மேய்க்கும் முரட்டுத்தனமான பசங்க.. உங்கண்ணன் என்ன பெரிய வெண்ணையா ன்ற மாதிரி ஏதாச்சும் கேட்டிருந்தா பொருத்தமா இருந்திருக்குமோன்னு தோணுச்சு..! (இது என்னோட பாயின்ட் ஆஃப் வியூ மட்டும்தான்).!
*ஓவர் புகழுரைகளும் ஒருவித சலிப்பை ஏற்படுத்தவல்லவை*
*ஹீரோ கூட இருக்குறவன் புகழ்ந்தா கூட.. சரி போ ன்னு நினைக்கலாம்.! வில்லன்.. வில்லனோட அடியாளு.. சமையல்காரர்.. பால் ஊத்துறவரு .. முறைவாசல் பண்றவருன்னு அத்தனை பேரும் அப்டியே பம்முறது ஆயாசமா இருக்கு..!*
ஒரு கதையின் வெற்றிக்கு வில்லன் ரொம்ப முக்கியம்.. வில்லன் ஹீரோவை படாதபாடு படுத்தி.. அவமானப்படுத்தி.. கொடுமைப் படுத்தினாத்தான் ஹீரோ ஜெயிக்கும்போது நமக்கு பூரிப்பா இருக்கும்..!
மேலே உள்ள இரண்டு பத்திகளும் ப்ளாக்கே வந்திராத நண்பர் ஒருவர் சொன்னது.. இதைத்தொடர்ந்து மேலும் சிலரோடு இதே விசயத்தை பேசியபோது ஆமோதித்தார்கள்.. ஆனால் யாரும் பொதுவில் சொல்ல முன்வரவில்லை.! அதனால் நானே அவர்களின் சார்பில் சொல்கிறேன்.. குறையாக நினைப்பதை சொன்னால்தானே தெரியும்..!
இதுதான் சரியென்று வாதாடவில்லை.. தவறாகவும் இருக்கலாம்.. தவறெனில் ஏற்றுக்கொள்ளவும் நண்பர்கள் தயாராகவே இருப்பார்கள் .!
கதைக்கு வருவோம்..
சின்ன வயசுல செஞ்ச தப்புக்கு பிராய்ச்சித்தம் தேடிக்கிறேன்னு போக்கிரி கும்பலில் இருந்து பிரிந்து மனம்திருந்தி சாம் வில்லரிடம் வந்து சேரும் பழைய நண்பன் ஜான்..... தன் நண்பன் இப்போது நண்பன் அல்ல தனக்கு முதலாளி என்று சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உணருகிறான்..! மனிதனுக்கே உரிய தீய குணங்கள் தலைதூக்க.. மீண்டும் போக்கிரிகளோடு சேர்ந்து சாமின் பண்ணையை சூறையாட முடிவெடுக்கிறான்..!
கைம்பெண் சூஸன் உதவியுடன் அந்த கும்பலை நிர்மூலமாக்கிய பிறகு.. மனம் வருந்தி அமைதி தேடி அரிசோனா பக்கம் போகிறார் சாம் வில்லர்... *அவரை தொந்தரவு செய்யாமல் அப்படியே போகவிட்டுவிடுவது நல்லதுன்னு நினைக்கிறேன்.!*
சூஸன் மற்றும் சாமின் காதல் மென்மையாக ஒரு பூந்தோட்டத்தில் வீசும் தென்றல் போல இருக்கிறது..!
குரங்கு கையில் மாலையை கொடுத்து கோபுரத்தின் மேல் நிற்க வைத்தாலும் மாறாதய்யா மாறாது மனமும் குணமும் மாறாதுன்னு சொல்வாங்க.. அதற்கு வெகு பொருத்தமான கேரக்டர் ஜான் மாக்குவாரி.. சாம் அவனை மன்னித்து கௌரவமாக வேலை கொடுத்தாலும் அவன் குணத்தை காட்டிவிடுகிறான்..!
கதை பரவாயில்லை.. சித்திரங்கள் அட்டகாசம்.. எல்லாமே நல்லா இருந்தும் ஏதோ சொல்லத்தெரியாத ஒரு குறை...!
சாம் வில்லர் - Calm வில்லர்
//சின்ன வயசுல பசங்களுக்குள்ள நடக்குற சண்டை.. அதுல ஓரிரு வயசு மூத்த டெக்ஸை (அண்ணன் கவுண்டமணி ஸ்டைலில்) அவர்ர்ர்ர் இவர்ர்ர்ர் நீங்க ஏங்க போங்கன்னுதான் பசங்க கூப்பிடுறாங்க..! எனக்கென்னவோ அந்த வயசு பசங்க ஒண்ணு ரெண்டு வயசு மூத்த பையனை அவ்வளவு மரியாதையா பேசுவாங்களான்னு டவுட்டா இருக்கு.. அந்த வசனங்கள் கொஞ்சம் செயற்கையாவும் இருந்துச்சி...!
Deleteஅடிபட்டுக்கிட்டு இருக்கும்போது கூட அவரைப்பிடி.. அவரைக்கடின்னுகிட்டு இருக்காங்க.. நார்மலா சண்டையில வயசு வித்தியாசமே இல்லாம அட்ரா அவனை புட்ரா இவனைன்னுதான் பேசுவாங்க... அதுவும் துஷ்டப் பசங்க குடுக்கும் ஓவர் மரியாதை சுவாரஸ்யப்படவில்லை....//
அசோகரு உங்க மகருங்களா?
மொமண்ட் :-)
தனிப்பட்ட முறையில் கருத்து :
Deleteஒட்டுமொத்த கதையுமே ரோகித்துக்குப் பதில் பும்ரா ஓப்பனிங் பேட்ஸ் மேனா இறங்கனா மாதிரிதான்.
ராமைய்யா.. அவர் எங்கே.?
Deleteஅவரா.. எவரு..?
அவர்தான்.. பாலு..!
ஓ... பாலுவா..! ? ராத்திரி பூரா இங்கதான் கெடந்தான்.. எங்கே போனான்னு தெரியலை..!
இது ஞாபகமிருக்கா செனா.. 😂😂😂
///ஒட்டுமொத்த கதையுமே ரோகித்துக்குப் பதில் பும்ரா ஓப்பனிங் பேட்ஸ் மேனா இறங்கனா மாதிரிதான்.///
Deleteபும்ரா கூட இல்லை.. சாஹல்.. யுஷ்வேந்திர சாஹல்.!
/இது ஞாபகமிருக்கா செனா.. 😂😂😂/
Deleteமறக்க முடியுமா? லேடிஸ் ஹாஸ்டல் வாட்ச்மேனையும் கன்னடத்து பைங்கிளியையும்.:-)
/பும்ரா கூட இல்லை.. சாஹல்.. யுஷ்வேந்திர சாஹல்.!/
Delete:-)))
முன் பதிவுக்கு மட்டுமா?
ReplyDeleteஇல்லீங்க இது சந்தாவில் உள்ளது. நீங்க சந்தாவில் இல்லை என்றாலும் முகவர்களிடம் வாங்கலாம்.
Deleteகப்பலேறி சீமைக்குப் போனாலும் குருவிக்காரன் காக்கையைத்தான் சுடுவாங்கற மாதிரி ஆகிப்போச்சு சார்லியேக்கு அப்புறம் வந்த கதாசிரியர்கள் புலியைக் கையாண்டவிதம். ஆயினும் தசம ஆண்டுக்குப் பிறகு வரும் தளபதியை சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் மனநிலையோடு வருக , வருக என வரவேற்கிறோம்.
ReplyDeleteஆனாலும் குறி தவறி கழுக...இரவுக்கழுக வீழ்த்தியத கதை வந்ததும் புரிஞ்சுக்குவீங்க
Deleteசுப்ரீமோவின் அனைத்து கதைகளையுமே படித்தாகிவிட்டது.
ReplyDeleteஇவ்வளவு சிறந்த கதைகள் அடங்கிய தொகுப்பு இனிவருமா என ஐயுறுமளவிற்கு மிகச் சிறப்பான கதைகள்.
திக்கெட்டும் திகில்(9.5/10)
பூதம் காத்த புதையல் (9.5/10)
சர்ப்பத்தின் சின்னம் (9.5/10)
இவை மூன்றுமே மிகச் சிறந்த பொழுதுபோக்கு கதைகள்
வந்தார் !வென்றார் ! ஒரு தனி இடம் பிடிக்கும் கதை. பில்லா ரஜினியை
முள்ளும் மலரும் காளியாக பார்ப்பது மாதிரி. தென் அமெரிக்கா குறித்து ஒரு ஆழமான வாசிப்பைத் தூண்டியிருக்கும் இதழ். ஒரு டெக்ஸ் கதையை இவ்வளவு உன்னிப்பாக படிக்க நேர்ந்தது இதுவே முதல் முறை.(9.8/10)
டெக்ஸ் 75 வருட கொண்டாட்டத்தின் பொருட்டு டெக்ஸ் தாகம் தணிய தண்ணீர் கேட்டால் எடிட்டர் சார் 75 வருட பழைய ஒயினை கொடுத்திருக்கிறார்.
Asked for water; Editor sir gave us wine.
ReplyDeleteஎல்லாம் கிழ மயம்: எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! லயன் முத்து வரிசையிலேயே ஆகச் சிறந்த கதைவரிசைகளில் தலையாய இடத்தை பிடிப்பதற்கு இவ்வரிசையுடன் பிற கதைவரிசைகள் போட்டிப் போட்டுக் கொண்டேயிருக்கும்.
அன்பே சிவம் படத்தை காலம் கடந்து ஆராதிப்பவர்கள் போல " கிழட்டு சவங்களை " காலம் கடந்து ஆராதிப்பவர்கள் வரிசையில் நீங்களும் இணைந்துவிட வேண்டாம்.
காய்ச்சினால் அருந்தும் பால்; புரை ஊற்றினால் தயிர்: அதில் நீர் விட்டால் மோர்; மோரைக் கடைந்தால் வெண்ணெய்; அதை உருக்கினால் நெய் என இக்கதையில் உள்ளுறை விவரங்கள்தான் என்னே?
உரமூட்டி வளர்த்த நாயகர்கள் முகத்தில் சேறை வாரி இறைக்கும் lupano வின் நெஞ்சழுத்தம்தான் என்ன?
நாயகர்கள் தோற்றார்கள்; கதை ஜெயித்தது.
சேப்பாக்கத்தில் நடந்ததுதான்; நாடு தோற்றது. எதிரிக்கு அரங்கம் எழுந்து கைதட்டியது. ஆட்டம் ஜெயித்தது.
ஆசிரியர் சொன்னது போல் இக்கதை வழக்கமான தாத்பர்யங்களுக்கு உட்பட்டது அல்ல. Lupano வின் ஆட்டத்தில் விதிமுறைகள் என்றேதுமில்லை.
"காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்”"
இவ்வரிகளை மேலோட்டமாக படித்தால் தூக்கி வாரிப் போடுகிறதல்லவா? எல்லாம் கிழமயம் முடித்தபின் இப்படித்தான் தூக்கி வாரிப் போட்டதெனக்கு. Lupano வை மேலோட்டமாக எல்லாம் படிக்க இயலாது.
கோலி பங்களாதேஷ்- க்கு எதிராக சதமடித்து வெற்றி பெற காரணமாயிருந்த போதும் அந்த 48 வது சதம் சுயநலமானது என இணையத்தில் விமர்சிக்கப்பட்டது. நாடு ஜெயித்தது. அதற்கு காரணமான நாயகன் ரசிகர்கள் பார்வையில் சற்றே வீழ்ந்துபட்டான் .
ராகுல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 97 ஓட்டங்கள் எடுத்து வெற்றிக்கு அடிகோலியபோதும் அவ்வெற்றியை களத்தில் கொண்டாடாமல் சில கணங்கள் மௌனப் பெருமூச்சு விட்டதற்கு காரணம் சதம் அடிக்க இயலாமல் போனதே என அறியவந்தபோது அங்கு நாடு ஜெயித்தது; அதற்கு காரணமான நாயகன் ரசிகர்கள் பார்வையில் சற்றே வீழ்ந்துபட்டான்.
Lupano விற்கு நாயகர்கள் குறித்த இவ்வித சமரசங்கள் ஏதுமில்லை.பட்டாம் பூச்சிகளும் இளவயதில் புழுக்களாய் இருந்தவைதான் என உரக்கச் சொல்வதில் அவருக்கு தயக்கமில்லை.
காவிரி கரை புரண்டோடினாலும் காக்கைக்குத் தேவை மூக்களவே என்றார் கவியரசு. " கிழட்டு சவங்களின்" கதையோ கரை புரண்டோடும் ஆறு. காக்கைகளாய் இல்லாது வேழங்கள் என மாறி வேண்டுமளவு உறிஞ்சிக் கொள்ளுங்கள்.
மழை பொழியும் இரவில் கிராமத்தினை காட்டும் படங்கள் அனைத்தும் வேர்ட்ஸ்வொர்த் கவிதை.
9.9/10
உங்ககிட்டே இருந்து விமர்சனத்தை எதிர்பார்த்திட்டு இருந்தேன். அருமை.
Deleteஆமாம்! கதை ஜெயித்தது. ஸோபியோட சேர்த்து நாமும் ரெண்டு முட்டைய உடைச்சோம்ல... அங்க தெறிக்குது!
ஒவ்வொரு பிளாஷ்பேக்கின் போதும் கதையோட முடிச்சுகள் ஒவ்வொன்றா அவிழுது. அதிலும் கடைசி டாப்!
கேரன் செர்வியாவின் தற்போதைய நாள்கடந்த போராட்டங்கள்தான் பெருமை பீற்றிக்கும் பெரிசுகளை நினைச்சா சிரிப்புதான் வருது.
டாப் 10கி.நா.க்களில் இதுவும் ஆல்டைம் பெஸ்ட்களில் ஒன்றாக இடம் பெற்றிட்டது பொருளர் ஜி...
Deleteஎமனின் திசை மேற்கு
சிப்பாயின் சுவடுகளில்
இரவே இருளே கொல்லாதே
தேவரகசியம் தேடலுக்கல்ல
பெளன்சர்
ஜேசன் ப்ரைஸ்
என் சித்தம் சாத்தானுக்கு சொந்தம்
நிஜங்களின் நிசப்தம்
சிகரங்களின் சாம்ராட்
அண்டர்டேக்கர்
ஸ்டெர்ன்
தாத்தாஸ்.....
லிஸ்ட் நீண்டு போகுது......
Yes இந்த லிஸ்ட் இன்னும் நீண்டு கொண்டே செல்லவேண்டும்.
Delete
Delete@Selcam Abirami
அருமை அருமை சகோதரரே
//மழை பொழியும் இரவில் கிராமத்தினை காட்டும் படங்கள் அனைத்தும் வேர்ட்ஸ்வொர்த் கவிதை//
+999
Selvam Abirami sir @ excellent review. Enjoyed reading your review.
Deleteஜெய் டைகர்
ReplyDelete
ReplyDeleteவிதி எழுதிய வெள்ளை வரிகள்
அற்புதமான ஓவியங்கள்!
பசுமையானமரங்கள்,
குறுஞ்செடிகள் சூழ்ந்ததொரு குளம்.
ஆனால் குளத்தில் நீரில்லை.
8.5/10
அது பனியாஉறைந்திருக்கு நண்பரே...மெனக்கெட்டு உருக்கி குடிச்சா உங்க தாகம் தணியும்
Delete
ReplyDeleteசகோதரனின் சகாப்தம்
அணிந்திருப்பதோ ராணுவ ஜெனரலின் சீருடை. உள்ளிருப்பதோ சிப்பாய்.
8.75/10
இளம் டைகரோ
Deleteவாழ்த்துக்கள்&நன்றிகள் மகி ஜி.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteசெம்ம்ம்ம்மமமம அழகு... ரொம்ம்ம்ம்ப நாளைக்கப்புறம் அழகான அட்டை... So stoked for வெட்டிப்பயல்'s take on தங்கத் தலைவர்... 😍🌹🔥❤️
ReplyDeleteவேங்கைதானா சீறும் தானா...
ReplyDeleteஹஹஹஹஹ....சூப்பரான பதிவு சார்....எனக்கு இளம் டைகர் கதைகள் பிடித்தே இருந்தது....விற்பனையில்லை என்பதால் மூச்சு விட மறந்தே போனேன்.....
சூப்பர் சார்...இனி மீண்டுமோர் முறை கன்சாஸ் கொடூரன் தேடனும்....விதி எழுதிய வெள்ளை வரிகள் முகப்பை போல இவரின்னார்னு ஆரம்பம் முதல் இதிலும் பயணிக்கும் கதை மாந்தர்களின் தலைய தொங்க விட்டு இன்னார் இது செஞ்சார்னோ பேரோ எழுதி கழுத்ல தொங்க விட்டா புரிய எளிமையாருக்குமே...
அட்டைப்படம் நிச்சயம் டாப் தான்...நேரில் இன்னும் மிரட்டுமென்பதில் ஐயமில்லை...சூப்பர் சார்...மஹி பட்டய கிளப்பியுள்ளார் போல...இளம் டெக்சார் குறித்து ப்ரிவியூ குறித்து தாங்கள் எழுதிய இந்தி வரிகளை பிழை திருத்தம் செய்யனும் கட்டாயமா தாங்கள்..சென்சார் எப்படி அனுமதித்ததோ லியோவில் ஏமாந்தது போல
இருவருமே இளம் நாயகர்கள் ...சூப்பர் சார்...தெறிக்கும் தீபாவளிக்காக தெறிக்கும் ஆவலுடன் ஆச்சரியமாய் பட்டய கிளப்பும் தெறிக்கும் தாத்தாக்களுடன் தற்போது பயணிக்கையில்..இளம் டைகர் தெறிக்க விடாமல் போய்டுவாரா என்ன
💥💥💥💥💥
Deleteஇனிய ஞாயிறு காலை வணக்கங்கள்
ReplyDeleteசூப்பர் மஹி சகோ
ReplyDeleteவாழ்த்துகள் சகோ 👏💐🙏
இளம் தளபதி தான் வாராறு!!!
ReplyDeleteதீபாவளிய தெறிக்கவிடப்போறாறு💪💪💪😀😀😀🤩🤩🤩
நீண்ட காலங்களுக்கு பிறகு தலையுடன், தங்கத் தலைவனின் தலைத்தீபாவளி...
Deleteஜாலி... ஜாலி...
டைகர் அட்டைப்படம் செம மாஸா தெறிக்கிது
ReplyDeleteதீபாவளிக்கு பட்டைய கிளப்ப போகிறார் யங் டைகர்😍😍😍😍😍
// டைகர் அட்டைப்படம் செம மாஸா தெறிக்கிது // உண்மை
Deleteநெவாடா: நட்சத்திர வேட்டை
ReplyDeleteபரந்த பிரதேசத்தின் நடுவே மோட்டர் சைக்கிளில் காட்சியளிக்கும் நெவாடா
ஆக்ஷன் ஹீரோ என்று பறைசாற்றுகிறது அட்டைப்படம்
முதல் பேணல் ஓவியத்தில், பரந்த பாலைவனம் பிராமாண்ட மலைமேடுகள் மலைமேட்டில் வேவு பார்க்கும் செவ்விந்தியர்கள், அவர்கள் பார்த்திடும் அந்த குட்டியூண்டு மோட்டர் வண்டியின் புழுதியும் சிறிது தான்
I noticed the motorcycle after the third panel only
So a long shot intro entry from a spectator point of view
ஏற்கனவே வன்மேற்கில் பார்த்திருந்த மலைமேடுகள் என்றாலும், ஓவியங்களில் பிரமிப்பை தருகின்றன
நெவாடா
இண்ட்ரோ ஓவியங்களை வைத்து
செவ்விந்தியர்கள் மற்றும் வன்மேற்கு பாலைவன கதையோ என்ற நினைக்க தோன்றியது
ஓ...அது இல்லை போலும், வேறென்னவாக இருக்கும்,
அழகிய புன்னகைப்படம் பார்த்தவுடன், பொண்ணு க்காக பழிவாங்க தேடி வந்துள்ளார் போலும்,
சுத்தி இருங்கவங்க பார்வை வேற சரியில்லை
அதுவாகத்தான் இருக்கும்
அட,,,,அதுவும் இல்லை
சரி பொண்ணு உயிர காப்பாத்த பார்க்குறான்னு பார்த்த
அதுவும் இல்லை
என்னடாப்பா உன் சோலி கேள்வி எழும்போது
இண்ட்ரோ தராரு நம்ம ஹீரோ
இதுவரை நான் காமிக்ஸ் கதைகளில் பார்த்திராத இண்ட்ரோ
Nice
நெவாடா
அவரு வேலை, உல்லாசமாய் காணாமல் போகும் நட்சத்திர தெனாவெட்டு போக்கிரகளை வேட்டையாடி கொண்டு வருவது
அவனிடமுள்ள துணை மோட்டர்சைக்கிள் மற்றும் இசை வாத்தியம்
நெவாடா, தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவேற்றுவதில் திறமைசாலி
முன்னால் இராணுவ வீரன்
சாமர்த்தயசாலி, தைரியசாலி, இசை ப்ரியர், இயற்கையை ரசிப்பவன்
இரண்டாவது வேட்டை பணி மெக்சிகோக்கு நம்மை இட்டு செல்கிறது
இந்த தடவை செழிப்பான கட்டிட வேலைப்பாடுகள் நிறைந்த நகரை காண முடிந்தது (So detailed)
அப்புறம் அந்த சோலோ ஸ்டார் டான் வில்லாவை ஒண்டிக்கு ஒண்டி தோற்கடிப்பதில் காட்டும் அவனின் பேச்சு, அவன் சும்மா வீராவேசம் பேசுறானா இல்லை நிஜமாலும் வீரனா என்ற சந்தேகம் வர வைக்கிறது
நிஜமேலும் அவன்கிட்ட திறமை இருக்குது நம்பிட்டேன்
அவனின் தெனாவெட்டை பார்த்து, நெவாடா எழுப்பும் கேள்வியின் போது இவன கண்டிப்பா காப்பாத்துனுமா தோணுச்சு
கதை படிச்சு முடிச்சதும் ஒரு டவுட்
டான் வில்லாவுக்கு சுடப்பட்டது முன்னாடியா, பின்னாடியா வித்தியாசம் தெரியாமல இருக்கும்???
He is a Don, right?
கதை பிடித்திருக்கிறது
நெவாடா அடுத்த வருடம் வந்தால் நன்றாக இருக்கும்
சிறப்பான விமர்சனம் கடல்....
Deleteநெவேடாவும் நம்மிடையே ரொம்ப நாள் வலம் வருவார்...
ஏதோ ஒரு கவரும் அம்சம் அந்த தொடரில் உள்ளது கடல்.... எதிர்வரும் பாகங்கள் இன்னும் பலரையும் கவரும்னு நினைக்கிறேன்...
ஆமாங்க எனக்கு ஆரம்பம் நன்றாகவே இருந்தது. போகப் போக pick up ஆகிறதா என்று பார்க்கலாம்.
Deleteசூப்பர் கடல்....
Deleteமுதல் பேனலே மோட்டார் யுகம் வருது ...இரண்டாம் பேரால் நாம் முடிஞ்சோம்னு குதிரை மேல் சோக செவ்விந்தியர் சொல்ல...மூனாங்கட்டத்துல வரவர...அதன் பிறகு செவ்விந்தியரே காணல
Goooood review Ramya
Deleteசெம்மையான விமர்சனம் 👌
Delete🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ReplyDeleteMahendran @. Very good job. I really appreciate it 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ReplyDeleteமகி நலமா
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவிதி எழுதிய வெள்ளை வரிகள் அட்டகாசமான ஒரு கிராபிக் நாவல். கருப்பு வெள்ளையில் வெண்பனியின் நடுவே நடக்கும் உயிர் போராட்டத்தை மனதை கனக்கச் செய்யும் வகையில் சொல்லி உள்ளது.
Deleteகதையின் நடுநடுவே சதுரங்க ஆட்டத்தை காண்பித்து அடுத்து என்ன நடக்கப்போகுது என்ற ஒரு திகிலை கிளப்பிய விதம் அருமை.
கதையில் வில்லன்கள் என்று யாரும் இல்லை ஆனால் சூழ்நிலையே இங்கு வில்லன் & அந்த வெண்பனி பரப்பே வில்லன்.
கதையில் வரும் மாந்தர்கள் யாராவது ஒருவர் தப்பித்து விடுவாரா என்ற மனநிலையுடன் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் இறுதியில் முடிவு வேறு விதமாக இருந்தது விதியின் வரிகள் எப்பவுமே நம்மால் கணிக்க முடியாத ஒன்று என்பதை நிரூபணம் செய்தது முடிவு.
இந்தக் கதையின் ஓவியத்தை வண்ணத்தில் கொடுத்திருந்தால் மனதில் இன்னும் தாக்கத்தை அதிகமாகி இருக்குமோ என்ற எண்ணத்தை தோன்ற வைத்தது கதையைப் படித்து முடித்தவுடன்.
நண்பர்கள் சிலர் இதற்கு Graphic நாவல் என்று படிக்காமல் தவிர்க்க முற்படலாம் ஆனால் இதை கண்டிப்பாக படியுங்கள். வரலாற்றில் நடந்த இதுபோன்ற சம்பவங்களை நமது கண் முன்னே கொண்டு வந்து காட்டுகிறது இந்த கதை. இந்த அனுபவத்தை தவற விடாதீர்கள்.
விதி எழுதிய வரிகள் இந்த கதைக்கு மிகவும் சரியான தலைப்பு.
விதி எழுதிய வெள்ளை வரிகள் வெண்பனியின் கைகளில்.
நம்ம மனசு தேவைக்கேற்ப நம்மகிட்டயே உருவம் மாறி நம்ம சார்பாக பேசி நியாயப்படுத்துமே நம்மட்ட...அதுதான் வேறவேற கேரக்டர்களாய் இங்கே
Deleteஆமாம்ல
DeleteNice review sago
Delete//கதையில் வரும் மாந்தர்கள் யாராவது ஒருவர் தப்பித்து விடுவாரா என்ற மனநிலையுடன் படிக்க ஆரம்பித்தேன்//
Deleteஆமாம் சகோ, அந்த எண்ணம் தான் எனக்கும் இருந்தது
//ஆனால் இறுதியில் முடிவு வேறு விதமாக இருந்தது விதியின் வரிகள் எப்பவுமே நம்மால் கணிக்க முடியாத ஒன்று என்பதை நிரூபணம் செய்தது முடிவு//
😔😔😔😢😢
தாத்தா முதல் பாகம் இரண்டாம் முறை படிப்போம்னு எடுத்தா கதை ஒரு ஃப்ளோவா போய்ட்டேருக்கு...
ReplyDeleteதாத்தா ஒரு இடத்ல சொல்வார் கண்ணு தெரியாதவர்களுக்கு தலைமையேற்று போராடுவதாக...உனக்குத்தான் தெரியுமே...நாளைக்கு தெரியாம போலாமில்லியா...அசால்டாக வரிகளுடன் ...இளம் தலைமுறையாய் க்ஷோஃபியாவின் சாடல்...வாயில் வடை சுடும் கிழவிகளின் ஓடல்..லயனின் அதியற்புத தேடல்
மனைவியை இழந்து தாத்தா வருந்தைல...செர்பியா தொடர்பால் கோபம்...ஆத்திரம்...அவமானம்...பழிவாங்கல்...ஆனாலும் தன் மேல்தான் பிரியம்னு உணர்த்தும் கடிதம்...இளமைக்கால புதையல் ....அவர்களின் புதைந்த காலமா என அவர்களிருக்கவே விரியும் காட்சிகள்....அடடா....மாற்றம் மாற்றம்னு ஓலமிடும் காலம் வரும்போது என ஒதுக்கி வைத்தா ...டெக்சையே ஒதுக்குவது தாத்தா...
இரண்டாவது கதை படிக்கலைன்னு நினைக்கிறேன்....இதோ தாத்தாவோடு ஓடியாடப் போறேன் இளைஞனா
தலீவர் கூட வர்றாரு
Deleteஅருமை சார்!
ReplyDelete//இந்தக் கதையின் ஓவியத்தை வண்ணத்தில் கொடுத்திருந்தால் மனதில் இன்னும் தாக்கத்தை அதிகமாகி இருக்குமோ என்ற எண்ணத்தை தோன்ற வைத்தது கதையைப் படித்து முடித்தவுடன்//
கருப்பு வெள்ளையே இதன் உயிர்நாடி என எனக்குத் தோன்றுகிறது சார்!
Okay sir.
Deleteகருப்பு வெள்ளையில் ஓவியங்கள் சிறப்பாக இருந்தது, இவை வண்ணத்தில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும் எனவே அப்படி எழுதினேன் சார் !
விஜயன் சார், இந்த கதை ஒரிஜினலில் வந்தது கருப்பு வெள்ளையா அல்லது வண்ணத்திலா சார் ?
Black & white
Deleteஇந்த மாதத்தின் கதையில் சிறந்தது என்றால் என்னை பொறுத்தவரை "எல்லாம் கிழமயம்" தான். நான்கு வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு அழகான நான்கு புள்ளி கோலத்தை ஆக்ஷன் காட்சிகள் இல்லாமலும் ஒரு கமர்சியல் கதையை அனைவரும் ரசிக்கும் விதத்தில் கொடுத்து உள்ளார்கள்! எளிதாக புரிந்து கொள்ளும் மொழி பெயர்ப்பு சிறப்பு, நேர்கோட்டு கதைகளை விருப்பும் நண்பர்கள் கண்டிப்பாக இதனை படித்து பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும்.
ReplyDeleteஇந்த கதையின் highlight மூன்று தாத்தாக்கள் பக்கத்துக்கு வீட்டு பாட்டி பெர்தாவுக்கு சிறு வயதில் விளையாட்டாக செய்த செயல்கள் அந்த பாட்டியின் வாழ்க்கையை எப்படி பாதித்தது என்பதை நெற்றி பொட்டில் அறைந்தது போல பொம்மலாட்டம் மூலம் பார்த்த சொல்லும் விதம், அவர்களுக்கு கொடுக்கும் முட்டை அபிஷேகம் மிகவும் சரியானதே; விசிலடித்து கைதட்ட தோன்றியது!
Deleteஇந்த இடத்தில் ஆசிரியரின் வசனங்கள் மிகவும் வலு சேர்ப்பதாக இருந்தது.
Deleteவிளையாட்டாக அல்ல. வினயமாய் வன்மத்தோடு செய்ய காரியங்கள், வெட்கமில்லாமல் ஓர் குற்ற உணர்வு இல்லாமல் மனித தன்மை அற்ற வெறி கொண்ட இனம் இவர்கள்.
Delete//இந்த கதையின் highlight மூன்று தாத்தாக்கள் பக்கத்துக்கு வீட்டு பாட்டி பெர்தாவுக்கு சிறு வயதில் விளையாட்டாக செய்த செயல்கள் அந்த பாட்டியின் வாழ்க்கையை எப்படி பாதித்தது என்பதை நெற்றி பொட்டில் அறைந்தது போல பொம்மலாட்டம் மூலம் பார்த்த சொல்லும் விதம், அவர்களுக்கு கொடுக்கும் முட்டை அபிஷேகம் மிகவும் சரியானதே; விசிலடித்து கைதட்ட தோன்றியது!//
Delete+9
அட்டைப்படம் பக்கா மாஸ்..
ReplyDeleteமஹி ஜீக்கு மனம் நிறைந்த வாழ்த்துகளும்,நன்றிகளும்!
இளமையில் கொள் ன் தொடர்ச்சியா?
ReplyDeleteகொல்...
Delete// நாமும் தொடரினை ஆரவாரமாய் ஆரம்பித்து விட்டு, ஆல்பம் நம்பர் ஒன்பதோடு தள்ளாடி நின்று விட்டிருந்தோம் ! 2014-ல் "அட்லாண்டாவில் ஆக்ரோஷம்" டபுள் ஆல்பம் தான் இத்தொடரினில் நாம் வெளியிட்டிருந்த கடைசி ஆல்பம் ! // @chidambaram
Deleteமுன்பதிவு மட்டுமா இல்லை கடைகளில் கிடைக்குமா?
ReplyDeleteகடைகளில் கிடைக்கும் சார்.
Deleteஇளம் டைகர் வருகை உற்சாகமூட்டுகிறது சார். மஹி ஜி க்கும் நன்றிகள்.
ReplyDeleteஒரு காலத்தில் டைகர் கதைகள் காமிக்சில் ஏற்படுத்திய புரட்சியும் பரபரப்பும் எந்த ஒரு காமிக்ஸ் வாசகராலும் மறக்க முடியாத ஒன்று. ஆரம்ப கால கதைகள் அளவுக்கு இன்று சுவாரஷ்யம் இல்லாவிடினும் டைகர் என்ற நாயகருக்கு எமது கௌரவத்தை அளிக்க இளம் டைகர் கதைகள் ஆண்டுக்கு ஒரு ஆல்பமாகவாவது இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்காவது தமிழில் தொடர்ந்து வர வேண்டும் சார். மொத்தமாக விரைவில் குட்பை சொல்லி அனுப்புவதை விட சில ஆண்டுகளுக்காவது தொடர்ந்து அந்த நாயகரை காணும் வாய்ப்பில் உள்ள சுவாரஸ்யமும் அதிகம்.
///அப்புறம் ஓவிய ஆர்வல அண்ணாஸ் : முன்னும், பின்னும் ஒரிஜினல் ஓவியங்களே ! கலரிங் மாத்திரமே மாற்றியுள்ளோம் ! ///
ReplyDeleteஎடிட்டர் சார்.. அது ஒரிஜினல் ஓவியம் தான்றதுதான் பத்தடி தூரத்திலேர்ந்து பார்க்கும்போதே தெரியுதுங்களே!! btw, டைகர் ரசிகர்களை குஷிப்படுத்தி, விசிலடிக்க வைத்து, குத்தாட்டம் போட வைக்கும் அட்டகாச அட்டைப்படம் இது! வண்ணங்களும் பளிச் பளிச்!
அப்புறம் நம்ம ஷெரீப்பின் 'தில்'லை பாராட்டாமல் இருக்க முடியாது தான்! பல்லாண்டு கால மொழிபெயர்ப்பு அனுபவமுள்ளவர்களையே மிரளச் செய்த ஒரு கதையை அந்நிய மண்ணில் இருந்தபடியே அந்தர்பல்டிகள் பல அடித்து முழிபிதுங்கினாலும் மொழிபெயர்த்து அசத்தியிருப்பது ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனையே!! இந்தச் சாதனை ஒரு கமர்ஷியல் வெற்றியைப் பெற்றுத்தர புனிதமனிடோ அருள்புரியட்டும்!!
தீபாவளி மலர்களுக்காகவும், அட்டவணைப் பதிவுக்காண்டியும் ஆவலோடு வெயிட்டிங்...
நானுந்தான்...
Deleteஇன்னும் 6 நாட்களே...
ReplyDeleteநாமெல்லாம் தல பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆரவாரமாகஇருந்தபோது ஷெரிப் தளபதியோட மல்லு கட்டிக்கிட்டு இருந்திருக்கார். தேங்க்ஸ் மகி ஜி.தளபதிபிரிவியூ பார்க்கும் போது இரத்தப்படலம் ஸ்பின் ஆஃப் படிக்கும் ஃபீல் .கரூர் . ராஜ சேகரன்
ReplyDeleteஇன்னும் ஐந்தே நாட்கள்...
ReplyDeleteமகி ஜி வாழ்த்துக்கள். நன்றிகளும் கூட. என் தங்கத் தலைவன் தளபதியை மீண்டும் கொண்டுவர உதவியதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
ReplyDeleteஎன் தங்கத் தலைவன் தளபதி மீண்டும் வருவதில் மிகவும் சந்தோஷமாக உள்ளது.
ReplyDelete😃😁😍😍😍😍
டைகர் கதைகளில் களம் ஆட லிப்மென்ட் டைகர் மார்சல் டைகர் வரிசையில் இடம் இருக்க ஏனோ படைப்பாளிகள் இளம் டைகர் இடமே நிற்பது தான் வேதனையாக இருக்கிறது. பொதுவாகவே டைகரின் கதைகள் மிகவும் ஆழமாக ஏன்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் ஆக இருக்க வேண்டும். கதையை சுமந்து கொண்டு டைகர் செல்லும் கதைகள் தான் இதுவரை ஹிட் அடித்து இருக்கிறது. ஆனால் இளம் டைகர் அவரை ஹீரோவாக சித்தரித்தது தான் இளம் டைகர் கதைகளின் தோல்விக்கு காரணம். இதை எப்போது படைப்பாளிகள் உணரப்போகிறார்களோ தெரியவில்லை
ReplyDeleteWelcome back tiger
ReplyDeleteசகோதரனின் சகாப்தம். கதை ஓகே. ஆனால் டெக்ஸ் வில்லரை மிகையாக காட்டியிருப்பது கொஞ்சம் செயற்கை தனமாக இருக்கிறது. மெயின் தடத்தில் வரும் டெக்ஸை புகழ்ந்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் அவர் பல காலம் அனுபவத்திலிருந்து கற்ற பாடத்தின் மூலம் மெருகேறி இருப்பவர். ஆனால் ஆரம்ப காலத்தில் இருக்கும் டெக்ஸை சாதாரணமாக காட்டினால் தான் நன்றாக இருக்கும். பெரிய ஹீரோ கொடுக்கும் பில்டப்பை இங்கே கொடுத்தால் கதை நச நசத்து போய்விடும். படைப்பாளிகள் அதில் தெளிவாக இருக்கிறார்கள் என்பது கதையைப் படிக்கும் போது தெரியும். ஆனால் இங்கே ஆசிரியர் கையாளும்போது தான் மெயின் ஸ்பெக்சின் இலக்கணத்தை இளம் டெக்ஸ் இடமும் கொண்டு சென்று விடுகிறார். இளம் டெக்ஸ்டில் பில்டப்புகளை தவிர்ப்பது கதையோட்டத்திற்கு நன்றாக இருக்கும். இளம் டெக்ஸை இயல்பாக காட்டுவது தான் சரியாக இருக்கும் இல்லை என்றால் இளம் டைகரின் கதியை இளம் டெக்ஸ் அடைந்து விடக்கூடும் என்ற ஒரு பயம் இருக்கிறது. இளம் டெக்ஸ்ட் ஆனவர் தன் அனுபவத்தின் மூலம் எப்படி மெருகேறுகிறார் என்று ஒவ்வொரு கதையாக சொல்லி வந்தால் தான் அட்டகாசமாக இருக்கும். இதை ஆசிரியர் கவனிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்காக இளம் டெக்ஸை குறை சொல்கிறேன் என்று ஆகாது இளம் டெக்ஸில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டினால் தான் இந்தத் தொடர் தடுமாறாமல் இருக்கும்.
ReplyDeleteபகெட் ஒன்னு தாங்க....வழவழன்னா...கொழகொழன்னான்னு அந்த முதல் பக்கமே சொல்லுது கதையை...டேய் முடியலடா...முதல் பாகம் என்னா போடு போட்ட கதை ...இரண்டாம் பாகம் பத்து பக்கம் தாண்டியும் வழவவழா கொல கொல தான்....
ReplyDeleteசும்மா தொணதொணக்காம தரமாட்டியா.......டேய் பிரெட்டே வேண்டாம்னு கிளம்பும் 47 ம் பக்க ஷோஃபியா வந்ததுந்தா நிம்மதியாச்சு...படிச்ச
நானுமே எப்பா சரியான கேள்விடான்னு துள்ள...அதுக்கு முன்னமே கதை சரிகட்டிடுதுன்னாலும்...
துள்ளுவதோ முதுமை....முதல் பாகத்ல இருந்தவ இறந்ததால சூடு பிடிச்ச கதை.....
இரண்டாம் பாகத்ல இறந்தவ பத்திய செய்தி பிறந்ததால் சூடு பிடிக்குது கதை.... சாதாரண சூடு இல்லைங்க....முதல்ல சொன்ன பத்து பக்கத்தையும் ஊதித் தள்ளிட்டு வளவளன்னு வசனங்கள் மொரமொரப்பான கதையால ஆசிரியரின் நேர்த்தியான பரபரதான்...பறபறதான்...குருவி உக்கார பனம்பழம் விழுந்த கதையாக நல்ல மனம் கொண்ட இளவரசி சோபியா குட்டி ...கைல கெடச்ச புதையல சொந்த தாத்தாக்கு கூட தெரியாம வந்த தாத்தாக்கு அனுப்ப....முதல் கதையை சமீபத்ல படிச்சா மறக்காது அந்த மண்டையோட்டு சின்னம்....அதோட ஆன்னின்னு வச்சு ...அனுப்ப...அடடா ஹீரோ தாத்தாவின் தனிமைக்கான காரணம் புரியுது... இறந்தவ இருப்பதா நினைச்சு தாத்தா கரய தேடித்திரிய கதை விரையுது பக்கங்கள் கரைய குறைய....
இதுல நமக்கு சைடுல ஒரு தீ பத்திக்குது ...ஒரு வேளை இருப்பாளோன்னு சுவாரஸ்யம் கூட நாமளும் தாத்தாவாக மாறிடுறோம்....( நெசமாவே தாத்தாவாக இருக்குற நண்பர்கள் இளைஞர்களாயிடுவீங்க அது வேற கதை)
காட்சிகள் திணிக்கப்பட்டதா ...அது எதுக்குன்னு உங்களுக்கு கேள்வி எழுந்தா அதது பின் தொடரும் போது அடேயப்பா போட வைக்கும்...
ஆடுகளுடன் விளையாடும் சிறுவர்க யுக்திய காட்டி ஷோஃபியா ...அந்த கார்பரேட் உலகில் வெடிக்கும் காட்சியும்....நான் துவக்கத்ல எழுதுனனே அந்த வழவழா முதல் பக்கம் குறித்தும் அதுவும் தேவையில்லா பக்கம்னு கோவம் வந்தா நீங்களும் கம்யூனிசம் பேசுறீங்களோ இல்லையோ நிச்சயமா கார்பரேட் கொள்ளயரா இருக்க மாட்டீர்கள் என்று நிச்சயம்....
அதுவும் அந்தத்துருதுரு யுவதி நடத்தும் கடைசி கிளை பொம்மலாட்ட கதையை தனியா எடுத்து போட்டாலுமே ஹிட்டாவது உறுதி...என்னா ஈர்ப்பான யுத்தி...ஒரே கல்ல ஷோஃபியா இக்கதைல மூனு மாங்கா அடிச்சாலும் ...ஆசிரியரும் மூனு மாங்காய தந்துருக்கார்...இரண்டாம் மாங்காய் பதினாறடியின் பாய்ச்சல்....ஏன்னா இது குட்டியோட பாய்ச்சல்ல...மூன்றாவது மாங்காய் தின்னுட்டு வாரேன் ருசியோட விரைவில்...
ஷோபியாவோட ஒவ்வொரு அசைவுகளையும் ஓவியர் காட்டிய விதமே குறுகுறுப்பு சொல்லும்...அந்தப் போல ஹீரோ தாத்தாவின் கைகள ஆட்டி தூக்கி செல்வது வரைஞ்ச விதமோ துள்ளுவதோ கிழமைன்னு சொல்லாம சொல்லும்....
அதெல்லாம் சரி அந்தக் காதலியை காட்டுனாங்களானு கேக்கியலா...புக்க படிச்சி தெரிஞ்சுக்கங்க நண்பர்களே...இந்தக் கதையை படிக்காம விட்டீங்க தாத்தா அறுவது வருசத்த இழந்துட்டமேன்னு குமுறுவத போல நிம்மதியில்லாமலைவதுறுதி....
கேப்டன் டைகர்-க்காக ஆவலோடு காத்திருப்பு..
ReplyDeleteநான்கு பாகங்களோடு ஒரு அட்டகாசமான அமைப்பில் இதழ் வருவதால் கதைக்கேற்ற ஒருதலைப்பையும் முன் அட்டையில் இடம்பெறச் செய்திருக்கலாமே...
அப்படியென்றால்தான் இது "அட்லாண்டாவில் ஆக்ரோசம்" - என்ற தொடரின் தொடர்ச்சி என்ற புரிதல் வரும்..
இந்த இதழின் வெற்றியை தொடர்ந்து..
அடுத்து" இளமையில் கொல்"-தொடரையும் வருடம் இரண்டு -இரண்டு பாகங்களாக நான்கு பாகங்கள் (அல்லது 4 பாகங்கள் ஒரே தொகுப்பு) என்று வெளியிட முயற்சிக்கலாமே..
"டியூராங்கோ."- இல்லாத .இடத்தில் டைகர் நிச்சயம் ரசிக்கப்படுவார்.. என்பது எனது எண்ணம்..
(அட்டவணைக்கு இன்னும் ஒரு வார அவகாசம் உள்ளதே..) சார்..
இளமையில் கொல் தொடரின் தொடர்ச்சிதான் இது நண்பரே
Delete..
இளம் டைகர் வரிசையில் மொத்தம் 21 கதைகள் உள்ளன..இதுவரை வந்தவை 9ஆல்பங்கள்..இப்போது 10 டூ13 காணவுள்ளோம்...
இளம்டைகர்...
1,2&3=இளமையில் கொல்-3பாகங்கள்-
லயன் கெளபாய் ஸ்பெசல்,2007
4.மரணநகரம் மிசெளரி(வைல்டு
வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)
5.கான்சாஸ் கொடூரன்
(முத்துNBS jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்)
6.இருளில் ஒரு
இரும்புக் குதிரை(முத்து NBS
jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)
7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்
2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)
8.அட்லான்டா ஆக்ரோசம்
9.உதிரத்தின்விலை...8&9-ஒரே
இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக
சாகசம்.
நன்றி..ii STV சார்..
Deleteவரிசைப்படுத்தி தெளிவுபடுத்தியதற்கு.. il
அப்படியானால், பாகம்-2&3 மட்டும்தான் நம்மிடம் கலரில் இல்லை..
அதற்கு மட்டும் ஒரு slot-ஒதுக்கிவிட்டால் போதுமே..
ஆசிரியர்.. கவனிப்பாரா..ii??
அன்பு ஆசிரியர் அவர்களுக்கும், நண்பர்களுக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை தின வாழ்த்துகள்
ReplyDeleteமுத்து காமிக்ஸ் எவர்க்ரீன் ஹீரோஸ்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய சீனியர் ஆசிரியருக்கும், மாடஸ்டி, டைகர் மற்றும் டெக்ஸ் போன்ற அதிரடி நாயகர்களை கொண்டு வந்த விஜயன் சாருக்கும், எங்களுக்காக பேனா பிடிக்கும் கருணையானந்தம் ஐயாவிற்கும் மற்றும் லயன் ஆபிஸ் அலுவலகனத்தினருக்கும்
ReplyDeleteகாமிக்ஸால் ஒன்றிணைந்திருக்கும் சகோதரர்களுக்கும் சரஸ்வதி பூஜை., ஆயுத பூஜை தின வாழ்த்துகள் 🙏🙏🙏
எடிட்டர் சார் அவர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை திருவிழா நல்வாழ்த்துகள்...
ReplyDeleteAm waiting for Deepavali special...
ReplyDelete/// அப்புறம் ஓவிய ஆர்வல அண்ணாஸ் : முன்னும், பின்னும் ஒரிஜினல் ஓவியங்களே ! கலரிங் மாத்திரமே மாற்றியுள்ளோம் ! So ப்ளீஸ் - கொஞ்சம் பாத்து பாஸ் மார்க் போட்டு விடுங்க ! ///
ReplyDeleteஇத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்.
பிடியுங்கள் சார்..ஒரு பூங்கொத்தை .
வானோக்கி உயர்ந்து நிற்கும் அந்த துப்பாக்கி ஏந்திய கரத்தின் கம்பீரம்,
டைகரின் செம அசத்தாலான அட்டைப்படம்.
தீபாவளியின் சரவெடி கொண்டாட்டத்திற்கு வெயிட்டிங்.
மகி ஜீக்கு மனமார்ந்த ஸ்பெஷல் வாழ்த்துக்கள், டைகர் ஸ்பெஷலின் பங்களிப்பிற்கு.
ReplyDelete
ReplyDeleteஆசிரியர் சார் அவர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை திருவிழா நல்வாழ்த்துகள்...
தளபதியை தீபாவளிக்கு சந்திப்பதில் மகிழ்ச்சி
ReplyDeleteதல தளபதி ஸ்பெஷல்கள் காண ஆவலோ ஆவல்.
ReplyDeleteவிதி எழுதிய வெள்ளை வரிகள்
ReplyDeleteசெஸ் ஆட்டத்தையும் பணியில் மாட்டிக் கொண்டவர்களின் நிலையும் மிகச் சிறப்பாக கையாளப்பட இருந்தது.
ஆனால் கடைசியில் அத்தநெஸ் தவிர்த்து அத்தனை பேரும் பேரும் இறந்தது பரிதாபமாக இருந்தது.
திகிலூட்டும் திகில் ஆக்சன் அதகளம் ஆனால் கதை சட்டே ன்று முடிந்தது போல் இருந்தது.
Deleteதிக்கெட்டும் திகில்...
DeleteThanks ji
Deleteஎனது rating 9.9/10
ReplyDeleteமுத்து காமிக்ஸ் எவர்க்ரீன் ஹீரோஸ்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திய சீனியர் ஆசிரியருக்கும், மாடஸ்டி, டைகர் மற்றும் டெக்ஸ் போன்ற அதிரடி நாயகர்களை கொண்டு வந்த விஜயன் சாருக்கும், எங்களுக்காக பேனா பிடிக்கும் கருணையானந்தம் ஐயாவிற்கும் மற்றும் லயன் ஆபிஸ் அலுவலகத்தினருக்கும்,
ReplyDeleteகாமிக்ஸால் ஒன்றிணைந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் சரஸ்வதி பூஜை & ஆயுத பூஜை தின நல்வாழ்த்துகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Thanks @Ramya 😊
Deleteஅட்டவணைக்கு இன்னும் 4 நாட்களே
ReplyDeleteஅதே அதே... 4 நாட்கள் மட்டுமே...
Delete😊😊😊😊😊
Deleteஅதே அதே :-)
Deletesuper sir
ReplyDeleteஇளம் டைகர்.....தளபதி ஸ்பெசல்"
ReplyDelete*டெக்ஸ் வில்லர் லயனில் கோலோச்சி வந்த வேளையில் அவருக்கு போட்டியாக , முத்துவில் 1990களின் மத்தியில் ஆசிரியர் திரு S.விஜயன் அவர்களால் களம் இறக்கப்பட்டார் டைகர். தங்ககல்லறை என்ற இரு பாக சாகசம் வாயிலாக புயலென புறப்பட்டவர் . தொடர்ந்து வெளிவந்த இரத்தகோட்டை, இரும்புக் கை எத்தன் , மின்னும் மரணம் போன்ற அட்டகாசமான கதைகள் இவரை ஏணியின் உச்சத்தில் அமர்த்தின .
டைகர் சாகசங்களின் தனித்தன்மையே பிரம்மாண்டமான கதைக்களமே . டெக்ஸ் வில்லரின் ஒன் சாட் சீரியஸ் களை மட்டுமே ரசித்து வந்த தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்,டைகரின் ஆழமான மற்றும் பிரம்மாண்டமான கதைக்களத்தின் முன் வாயைப்பிளந்து திக்குமுக்காடி சொக்கி போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை தான் .
#ஒழுக்கம் கெட்ட ராணுவ லெப்டினண்ட் டைகர் , இவரின் கூட்டாளிகளோ கிழட்டு குடிகாரன் ஜிம்மி மற்றும் வயதான ரெட் உல்லி; இருந்தபோதிலும் - லயன் காமிக்ஸ்க்கு ஒரு டெக்ஸ் வில்லர்னா, முத்துவிற்கு ஒரு டைகர்னு சொல்லும் அளவுக்கு கேப்டன் டைகர் புகழ்பெற என்ன காரணம்? பதில் வெரி சிம்பிள்.
"டைகர் ஒரு சாதாரண சராசரி மனிதன். சக மனிதர்களை மதிக்கும் ஒரு கேசுவல் கேரக்டர். பிரம்மாண்டமான கதைக்களன்களில் சமயோசித யுத்தியால் அத்துணை சவால்களையும் சர்வசாதரணமாக கையாளும் எளிமையான வடிமைப்பே ரசிகர்களை சொக்க வைத்த மந்திரம் இங்கே".
இத்தொடர் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து டைகரின்
இளவயது நடப்புகளை கொண்ட யங்டைகர் சீரியஸ் 1989ல் வெளியிடப்பட்டது. அதில்
இதுவரை 21கதைகள் வந்துள்ளன. தமிழில் 9கதைகள் 3பாக, இருபாக கதைகளாக வெளிவந்துள்ளன.
இளம்டைகர்...
1,2&3=இளமையில் கொல்-3பாகங்கள்-
லயன் கெளபாய் ஸ்பெசல்,2007
4.மரணநகரம் மிசெளரி(வைல்டு
வெஸ்ட் ஸ்பெசல்sep2012-இருபாக கதையின் முதல் பாகம்)
5.கான்சாஸ் கொடூரன்
(முத்துNBS Jan2013-இருபாக கதையின் க்ளைமாக்ஸ்)
6.இருளில் ஒரு
இரும்புக்குதிரை(முத்து NBS
Jan2013-அடுத்த இருபாக கதையின் முதல் பாகம்)
7. வேங்கையின் சீற்றம்(டிசம்பர்
2013-NBSல் வந்த இருபாக கதையின் க்ளைமாக்ஸ் சாகசம்)
8.அட்லான்டாவில் ஆக்ரோசம்
9.உதிரத்தின்விலை...8&9-ஒரே
இதழாக மார்ச்2014ல் வந்த இருபாக சாகசம்.
அப்போது போதிய வரவேற்பு இல்லாத காரணமாக இத்தொடர் நிறுத்தப்பட்டது. மீண்டும் டைகர் ரசிகர்களின் ஓயாத குரலுக்கு செவிசாய்த்து யங் டைகரை ஆசிரியர் தூசு தட்டி கையில் எடுத்துள்ளார்...
வரும் தீபாவளி மலர் ஆக நம்ம மாப்பு ஷெரீப் எ மகேந்திரன் பரமசிவம் Mahendran Paramasivam மொழி பெயர்ப்பில் வெளிவரவுள்ள தளபதி ஸ்பெசலில் யங் டைகர் பாகங்கள் 10,11,12 & 13 என 4பாகங்கள் வரவுள்ளன.
இம்முறை யங் டைகரும் ஹிட் அடிக்குமா என்ற கேள்விக்கான விடை காண ஆவலுடன் உங்களுடன் நானுமே........!!!
முந்தைய இளம் டைகர் புத்தகங்களை காணலாம் இந்த லிங்கில்...
Deletehttps://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PSNWZXhACb6CRUcLLnDx7DZAazMDo4ESN5ym7TvyUmQ5xQkjSkd7a6LwgRtZhh3Rl&id=100036515580386&mibextid=Nif5oz
இந்த மேலேயுள்ள யங் டைகர் கமெண்ட்ல ஒரே யொரு பேரா நம்ம ஆசிரியர் சார் எழுதியது... அது எதுனு கண்டுபிடிங்க பார்க்கலாம் நண்பர்களே??
Deleteவணக்கம் ஆசிரியர் சார்.
ReplyDeleteஅட்டவணைப் பதிவு வெள்ளிக்கிழமை இரவிலா ? சனிக்கிழமை இரவிலா சார் ?
ReplyDeleteசனிக்கிழமை :-)
Delete**** சகோதரனின் சகாப்தம் *****
ReplyDeleteமுற்பாதி - ஹாவ்!
பிற்பாதி - வாவ்!!
க்ளைமாக்ஸில் டெக்ஸ் எப்படியும் ஆஜராகி தன் சகோதரனைக் காப்பாற்ற அதிரடி செய்வார் என்று ஒவ்வொரு பக்கமுமே எதிர்பார்த்து ஏமாந்தது ஒருபுறம் - என்றாலும், சின்னச்சின்ன யுக்திகளைக் கையாண்டு ஒற்றை ஆளாய் ஒரு கூட்டத்தையே வேரறுக்கும் ஸாம் வில்லரின் தைரியம் 'சபாஷ்' சொல்ல வைக்கிறது!
9/10
எல்லாம் கிழ மயம்....
ReplyDeleteதுவக்கம் முதல் இறுதி வரை ஓர் அற்புத உணர்வு...தாத்தா பாட்டி கதை சொல்லி கேட்ருப்போம்...தாத்தா பாட்டியோட பயணித்திருப்போமா...
முதலிரண்டு கதைகள் இரு தாத்தாக்கள் காதலை சொன்னா...மூன்றாவது கதை ஆர்பாட்டமில்லா ஆர்ப்பாட்டமான மில்சே தாத்தா காதலால் தானே இருக்கனும் ...அதேதான்...ஆனா அது போல தெரியாம அதோட இணையும்....என்னடா முட்டை கதைன்னு கேக்க நினைக்க அடுத்த காட்சிக அதை மறக்கடித்து நகர்த்திச் செல்ல. கடைசில மில்சே தாத்தாவோட பரிதாபமான கதை...இப்ப முட்டைதான நாட்ட உருட்டுது
கதையெங்கும் தள்ளாத வயதில் துள்ளிச் செல்லும் பக்கங்களையும் வேகமா தள்ளிச் செல்லும்...ஓவியங்கள் சிறுவர்கள் பேத்தி என கதையில் இருப்பதால் இன்னும் ஈடுபாட்டை கூட்டுதோ...புதையல் பெரிய விஷயமாவே இல்லாம போகுது கதைல...ஆனா கதைல புதைந்து கிடக்கும் வாடாமல்லி வண்ண புதையல் வேட்டையன் மில்சே பக்கங்கள் செம் ஈர்ப்பு...எல்லா பக்கங்களும் என்பதும் கூடுதல் சிறப்பு...
செம் சார்...உணர்வுகள் வர்ணிக்க வார்த்தைகளில்ல...கடைசில இங்க கார்பரேட்டுக்கு ஜேவோ...
ஆசிரியர் தேடலில் நான்
முதலில் படித்த ஆர்ச்சி
அப்புறம் ஸ்பைடர்
அப்புறம் தலை வாங்கிக் குரங்கு
அப்புறம் தங்கக்கல்லறை
அப்புறம் இரத்தப்படலம்( தங்கக்கல்லறைக்கு முன்னன்னாலும் பரபரப்பானது பின்னர்தான்)
லார்கோ..
ஷெல்டன்...
ட்யூராங்கோ...
அண்டர் டேங்கர் இருவருமே
வரிசையில் மாபெரும் வெற்றி தாத்தாக்கள் தான்...ஏன் அவர்களை விஞ்சி டாப்னாலும் ஆச்சரியமில்லை
அந்த பல்பதிஞ்ச கதய கேட்டு தாத்தாக்களிருவரும் ஹஹஹ
Delete// அண்டர் டேங்கர் // ?? Undertakerley
Deleteசவப்பெட்டில...அண்டர் டேங்கர்னா
Deleteஅருமை சகோ
Deleteஇனி சகோதரனோடு கைகோப்போம்
ReplyDeleteஅக்டோபர் இதழ்களை முடிச்சாச்சி,எல்லா இதழ்களுமே நிறைவு,ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரகத்தில் அசத்தியுள்ளது...
ReplyDeleteடைலன் டாக் அட்டகாசமான கலரிங்,அசத்தலான சந்தா இணைப்பு...
ReplyDeleteசகோதரனின் சகாப்தம்,பேச்சு நல்லா இருக்கு வீச்சு கொஞ்சம் கம்மியா இருக்கு,போகப் போக சாம் வில்லர் அசத்துவார்னு நினைக்கிறேன்...
விதி எழுதிய வெள்ளை வரிகள் சோகக் காவியம்,முடிவு ஏனோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...
எல்லாம் கிழமயம் பெருசுகளின் ரவுசும்,கடந்த கால போலி முகமூடிகளுமாய் முடிவில் தோல் உரிக்கப்பட்ட ஆடுகளாய் பரிதாபகரமான தாத்தாக்களாக ஆகி விட்டார்கள்...
டெக்ஸ் 75 ஸ்பெஷல்,4 கதைகளும் நான்கு முத்துகள்,திக்கெட்டும் திகில் பரபர ஆக்ஷனும்,அனல் பறக்கும் வேகமுமாய் போனதே தெரியலை...
பூதம் காத்த புதையல் கொஞ்சம் பெரிய கதைக் களமாயினும் டெக்ஸ் & கோ ஆக்ஷனும்,நக்கல் வசனுங்களுமாய் நல்லதொரு பொழுதுபோக்கு சித்திரம்...
சர்ப்பத்தின் சின்னம் பக்கா கமர்ஷியல் மசாலா,விறுவிறுப்புக்கும் குறைவில்லை...
வந்தார் வென்றார்,நான்கில் டாப் இதுவே,டெக்ஸின் Cult Classic கதைகளில் இடம்பெற வேண்டிய அனைத்து தகுதிகளும் உள்ள களமிது,மேஜர் ரிகார்டோ மெண்டோசா,சொலானோ,ஜூலியோ,சோங்கி என நினைவில் நிற்கும் பாத்திரங்கள் நிறைய...
டெக்ஸும் சொலானோவும் மோதும் ஒற்றைக்கு ஓற்றை சண்டையும் அசத்தல்...
பூதம் காத்த புதையலில் வரும் மரண வட்டத்தில் ஒற்றைக்கு ஓற்றை சண்டையும் அசத்தல் ஒரே மாதத்தில் இரு சாகஸங்களில் ஒற்றைக்கு ஓற்றை சண்டை இடம் பெற்றது தற்செயலாய் அமைந்து விட்டது போலும்...
மொத்தத்தில் டெக்ஸ் 75 செம காம்போ,வருடம் ஒருமுறை இது போன்ற காம்போ அமைந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்...
வந்தார் வென்றார் டெக்ஸின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்....
மேலும் வாசித்தவரை,கண்ணுக்கு எட்டிய வரை எழுத்து பிழை எனும் கற்கள் எங்கும் இடறவில்லை என்பதும் நிறைவான ஒரு தகவல்...
👌👌👌👌👌
Deleteசூப்பர் அண்ணா.
DeleteKumar @ அட்டவணைக்கு இன்னும் 3 நாட்களே 😁
ReplyDeleteஆமாம் சார். மூன்றே நாட்களே.
Deleteஆமாம் பரணி இன்னும் 3 நாட்களே...
Deleteஆமா...ஆமா..ஆமாமோய்
Delete1. கடல் கொள்ளையர்
ReplyDelete2. எகிப்து பிரமிட்
3. பெர்முடா முக்கோணம்
4. விஞ்ஞான கதை
5. விண்வெளி சாகசம்
6. ஒரு பேய்கத
7. ஒரு மாங்கா...
8 ஒரு போர்க்கள கதை
....அட்டவணை???????
😐😑😶😌😋😝😜😛
Deleteகனவு நனவாகுமா தோழரே?
Delete### 200 ###
ReplyDelete