Wednesday, April 14, 2021

ஒரு புத்தாண்டின் சிந்தனைகள்..!

 நண்பர்களே,

தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ! நல் ஆரோக்கியமும், நல் வாழ்வும் இந்த ஆண்டின் அடையாளங்களாய் அமைந்திட ஆண்டவன் கருணை காட்டிட வேண்டிக் கொள்ளுவோமே ! 

ஏப்ரலின் முதற்பாதி ஓட்டமெடுத்திருக்க, மே மாதத்துப் பணிகள் இக்கட ஜரூராய் ஓடிய வண்ணமுள்ளன ! சொல்லப் போனால் இந்த மாதத்தின் highlight நமது முத்துவின் இதழ் # 450 என்பதால், மாதத்தின் துவக்கம் முதலே அதனில் பிசி ! இதோ - ட்யுராங்கோ தொடரின் இறுதித் தொகுப்பின் அட்டைப்பட முதல் பார்வை : 

தொடரின் துவக்கம் முதலே அட்டைப்படங்களைத் தெறிக்க விட்டு வந்த நமது பொன்னனே இம்முறையும் இந்த ராப்பரை டிசைன் செய்துள்ளார் ! வழக்கமான அட்டைப்பட நகாசு வேலைகளுடன், ஹார்ட்கவரில் உங்களை எட்டும் போது, புக் செம கெத்தாய் இருக்குமென்ற நம்பிக்கையில் பணியாற்றி வருகிறோம் ! And இங்கொரு இடைச்செருகலுமே : 

விலைவாசிகளைப் பற்றி நாளொரு ஒப்பாரி வைத்தாலும் கூட கஷ்டம் தீராது என்ற ரேஞ்சில் செலவினங்கள் எகிறி வரும் இந்த நாட்களில், கொஞ்சமே கொஞ்சமாய் cost cutting செய்திடல் காலத்தின் கட்டாயமாகிப் போகிறது ! So இனி வரும் நாட்களில் மாஸான மைல்கல் இதழ்களைத் தவிர்த்த இதர ஆல்பங்கள் ஹார்ட்கவர் கண்டிடாது ! ஒவ்வொரு ஹார்ட் கவர் பைண்டிங்கிலும் ஏறிடும் செலவுகளை இன்றைய சூழலில் கணக்கிட்டுப் பார்த்திடும் போது B.P  தான் அதனோடு போட்டியிட்டு எகிறுகிறது ! So காலங்களுக்கு ஏற்ப சற்றே அடக்கி வாசிக்க நாமும் கற்றாக வேண்டிய நெருக்கடி குரல்வளையை நெரித்து வருகிறது !

Back to DURANGO - வழக்கம் போலவே 3 பாகங்கள் கொண்ட ஆக்ஷன் மேளா - பரிச்சயமான அதே சித்திரங்களுடன் & சுருக்கமாய்ப் பேசும் அதே நாயகருடன்  ! ஆனால் மாற்றமென்று இம்முறை புகுந்திருப்பது  - இதுவரைக்குமான எல்லா ட்யுராங்கோ ஆல்பங்களுக்கும் பேனா பிடித்த நமது கருணையானந்தம் அவர்கள் இந்த இதழினில் பணியாற்றிடாது போயுள்ளது மட்டுமே ! நேர்கோட்டுக் கதை தான் ; ஆனால் இதன் பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு ரொம்பவே கஷ்டமாய் இருப்பதாய் அங்கிள் feel செய்திட, கதையையும், ஸ்க்ரிப்ட்டையும், திருப்பி அனுப்பச் சொல்ல வேண்டிப் போனது ! And நமது டீமின் ஒரு சமீப வரவான மொழிபெயர்ப்பாளரிடம் இந்தப் பணியினை ஒப்படைத்து விட்டு, நான் வேறு வேலைகளுக்குள் மும்முரமாகிப் போயிருந்தேன் ! ஒன்றரை மாத அவகாசத்தினுள் ஒவ்வொரு பாகமாய் அவரும் முடித்து அனுப்பிட, நம்மாட்கள் 'மட மட'வென டைப்செட் செய்து மேஜையில் 150 பக்கங்களைக் கொத்தாய்த் தூக்கிப் போட்டு விட்டனர் ! 

ட்யுராங்கோ கதைகளினில்  எடிட்டிங் செய்வதென்பது சுலபமும் அல்லாத ; சிரமும் அல்லாத ஒருவித மத்திமமான பணி ! நாயகரின் 'நறுக்' டயலாக்ஸ் மாற்றி எழுதிட வேண்டி வரும் என்பதோடு - பொதுவான அந்தக் கரடு முரடு கதைக்களத்துக்கு கொஞ்சமேனும் ஒத்துப் போகும் விதமாய் பொதுவான நடையிலும் மாற்றம் செய்திட முனைவேன் ! So எப்போதுமே கொஞ்சம் லைட்டான 'டர்' இருந்திடும் இந்த மனுஷனின் சாகசங்களோடு பயணிக்கும் தருணங்களில் ! No different this time as well ; மெது மெதுவாய் ஏப்ரலின் துவக்கம் முதலே எடிட்டிங்கை துவக்கி விட்டேன் ! ஆனால் எனது மாமூலான பயங்கள் இம்முறை பெரியளவில் நிஜமாகி விட்டன ! இதுவரைக்குமான ட்யுராங்கோ template-க்கும், இந்த ஆல்பத்தின் வரிகளுக்கும் துளியும் ஒத்துப் போகவில்லை ! இந்தப் பக்கம் "ஆறாது சினம்" முந்தைய ட்யுராங்கோ ஆல்பம் ; அந்தப் பக்கம் 160 பக்கங்களிலான பிரெஞ்சு to இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் & மூஞ்சிக்கு முன்னே டைப்செட் செய்யப்பட 147 பக்கக் கதைக் குவியல் & இன்னொரு கோடியில் நான் மாற்றி எழுதிடும் வரிகளுக்கான writing pad என்று மேஜையே நிறைந்து கிடந்து வருகிறது கடந்த 15 நாட்களாய் ! ஹோல்சேலாய் வரிகளை மாற்றியமைப்பது ; புரிதலில் இருந்த பிழைகளை சரிபார்த்துச் செப்பனிடுவது & அவசியப்படும் இடங்களில் ஹீரோவுக்கு புதுசாய் வரிகளை அமைப்பது என்று தொடர்ந்த WWF மல்யுத்தமானது சுத்தமாய் 12 நாட்களை விழுங்கிவிட்டது ! ஏறுவது முன்மண்டையின் கேச அடர்த்தி (!!) மட்டுமன்றி அகவைகளுமே எனும் போது -   இப்போதெல்லாம் தொடர்கதைகளாகிடும் இந்த ஒட்டுமொத்த ரிப்பேர் பணிகளைச் சமாளிக்க மெய்யாலுமே நாக்குத் தொங்குகிறது ! ஒவ்வொரு மாதமும் கதைகள் வேறாக இருப்பினும், எனது இந்தக் காலட்சேபக் கதை ஒன்றாகவே இருப்பது, எனக்கே  அயர்ச்சியூட்டுகிறது ! 

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் ஓசையின்றி இது வரையிலும் 5 தனிப்பட்ட  மொழிபெயர்ப்பாளர்களை இங்கும், அங்குமாய்த் தேடிப்பிடித்து, பணிகளை ஒப்படைத்து வாங்கிப் பார்த்து வருகிறேன் தான் ; ஆனால் ஒரேயொரு பெண்மணி நீங்கலாய் பாக்கிப் பேரிடம் நாம் விரும்பும் output கிடைத்த பாடில்லை ! இடையிடையே நமது நண்பர்களுள் ஓரிருவர் நமக்கென பேனா பிடிப்பதும் உண்டு தான் ; ஆனால் "மாதம் 4 புக்ஸ்" என்ற அட்டவணையினைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் நாட்களில், நண்பர்களின் அவ்வப்போதைய சகாயங்களை கொண்டு நாம் சாதிக்கக் கூடியது சொற்பமே என்றாகிறது ! So நடப்பாய் நமது மொழிபெயர்ப்பு டீமுக்கு ஆட்பலத்தினை கூட்டிடாது போனால், சிக்கல் உத்திரவாதம் என்பது கொட்டை எழுத்துக்களில் என்முன்னே எழுதப்பட்டிருப்பது தெரிகிறது ! கொஞ்சம் கி.நா. பாணியிலான கதைகளுக்கோ ; கார்ட்டூன்களுக்கோ ; புது நாயகர்களுக்கோ மல்லுக்கட்டும் போது கூட பணியின் சுமை அத்தனை நெருடுவதில்லை ; ஆனால் நேர்கோட்டுக் கதைகளில் உருண்டு புரள்வதென்பது என் வயதினை அடிக்கடி உணர்த்திக் காட்டுவது போலவே உள்ளது ! And எழுதுவோர் மாறிட்டால், உங்களுக்குக் கிட்டிடக்கூடிய வாசிப்பு அனுபவத்தில் கொஞ்சமாச்சும் புத்துணர்ச்சியும் தென்படுமல்லவா ? இதோ, இப்போது கூட தென் மாவட்டத்தின் ஒரு இளைஞி நமக்குப் பணியாற்ற முயற்சித்து வருகிறார் ; இதுவரைக்குமான துவக்கம் promising என்று தோன்றுகிறது ! அவரது பேனாவுக்கோ ; லேப்டாப்புக்கோ மனிடோ ஆற்றலை வழங்கிட்டால் மகிழ்வேன் ! Fingers crossed !

மூன்று பாகங்களின் பட்டி, டின்கரிங்க் செய்த ஸ்க்ரிப்டை நம்மாட்கள் மறுக்கா டைப்செட் செய்து வருகிறார்கள் ! அவற்றை இன்றும், நாளையுமாய் சரி பார்த்தால், வெள்ளியோ, சனியோ - அச்சுக்குச் சென்று விடலாம் ! ஆனால் எங்கள் ஊரின் அம்மன்கோவில் திருவிழாவானது இந்த வாரயிறுதி & திங்கள் எனும் போது, அதனையும் கணக்கிட்டே பணிகளை திட்டமிட வேண்டி வரும் ! Of course - அரசு ஆணைகளின்படி திருவிழாவின் பொருட்டு வழக்கமான விமரிசைகள் ஏதும் இம்முறை கிடையாது தான் ; ஆனால் விடுமுறைகள் இருக்குமென்றே தோன்றுகிறது ! இதோ - கூத்துக்கள் பல பார்த்த பக்கங்களின் ஒரு preview : 

ட்யுராங்கோவுக்கு டாட்டா சொல்லும் தருணமும் இதுவே எனும் போது - கதாசிரியர் cum ஓவியர் Yves Swolfs-ன் அடுத்த வெஸ்டர்ன் தொடரின் பக்கமாய்க் கவனத்தைத் திருப்பிட முனைந்துள்ளேன் ! LONESOME என்ற அந்தத் தொடரும் ட்யுராங்கோவின் ஒன்றுவிட்ட சித்தப்பா பையனாகவே தென்படுவதால் வேலை லேசு தான் ; ஆனால் ஒரே சிக்கலானது அந்த முதல் சுற்றின் கதை 4 பாகங்களிலானதாம் ; முதலிரண்டு வெளி வந்துவிட்டன & பாகம் 3 - அக்டொபர் 2021-ல் ரிலீசாகிறது ! ஆனால் இறுதி பாகமோ 2022 அல்லது 2023-ல் தானாம் ! So அதுவரைக்கும் அந்தத் தொடரினில் கை வைப்பதற்கு தயக்கமே மேலோங்குகிறது !

ட்யுராங்கோ தொடர் முற்றுப்புள்ளி காணவுள்ள இந்த நேரத்தில் ஒற்றை விஷயத்தைக் குறிப்பிடாதிருக்க இயலவில்லை ! இந்தத் தொடரின் அதிரடி வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், நாம் இதனை தனித்தனி சிங்கிள் இதழ்களாய் வெளியிடாது, துவக்கம் முதலே தொகுப்புகளாகவே களமிறக்கியுள்ளதுமே என்று தோன்றுகிறது ! மொத்தம் ஐந்தே ஆல்பங்களில் ; ஐந்தாண்டுகளில் நிறைவுறும் இதே தொடரை தனித்தனி இதழ்களாய் ஜவ்வு இழுத்திருப்பின், குறைந்த பட்சம் எட்டோ-ஒன்பதோ-பத்தோ ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும் ; and இதே தாக்கம் அதனில் சாத்தியமாகியிருக்குமா என்பது தெரியவில்லை ! So ஒரு மிதநீள புதுத் தொடரைக் கையிலெடுக்கும் வேளைகளில் - இந்த 'தொகுப்பு பார்முலா ' தேவலாம் போலும் ! தற்போது நாம் பயணித்து வரும் தொடர்களுக்குள் SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன் போன்றவை இந்த ட்ரீட்மென்டுக்கு ஒத்து வரக்கூடியவை !  Maybe ஏதேனும் ஒன்றை வரும் ஆண்டுகளில் தொகுப்புகளாக்கி அழகு பார்த்திடலாமா ? அல்லது அவர்களோடு இப்போது புழங்கும் அன்னம்-தண்ணியே போதும் என்பீர்களா ? What say folks ?

கிளம்பும் முன்பாய் இன்னொரு கேள்வியுமே : முந்நூற்றிச் சொச்சம் கதைகள் கொண்ட "சுஸ்கி & விஸ்கி" கதைகளை மறுக்கா நம் அணிவகுப்புக்கு கொண்டு வந்தாலென்னவென்று ? நண்பர் மின்னஞ்சலில் வினவியிருந்தார் ! ஏற்கனவே Smurfs ; பென்னி ; மந்திரி ; லியனார்டோ போன்றோர் வெற்றிலை போடாமலே வாய் சிவந்து திரியும் வேளையினில், இந்தத் தொடரின் வெற்றி குறித்து எனக்கு உள்ள நம்பிக்கை குறைச்சலே என்று பதிலிட்டிருந்தேன் ! But still - இந்த தொகுப்பு concept-ல் சுஸ்கி & விஸ்கியை முயற்சிப்பதாயின் உங்களின் ஆதரவு ரேஞ் எவ்விதம் இருக்கக்கூடுமோ என்ற கேள்வி என்னுள் ! So இந்தத் தொடரினை ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்கள் ; அதனில் என்ன எதிர்பார்த்திடலாம் என்று அறிந்திருக்கும் நண்பர்கள் மட்டும் தங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்திடலாமே ? Nostalgia சார்ந்த தேடலாய் இதுவும் அமைந்திட்டால் ரொம்ப காலத்துக்கு வண்டி ஓடாதென்பதால் - கதைகளின் தன்மைக்கென உங்கள் ஓட்டுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ! 

Bye all...see you around ! Have a lovely year ahead !!

176 comments:

 1. விலைவாசிகளைப் பற்றி நாளொரு ஒப்பாரி வைத்தாலும் கூட கஷ்டம் தீராது என்ற ரேஞ்சில் செலவினங்கள் எகிறி வரும் இந்த நாட்களில், கொஞ்சமே கொஞ்சமாய் cost cutting செய்திடல் காலத்தின் கட்டாயமாகிப் போகிறது ! So இனி வரும் நாட்களில் மாஸான மைல்கல் இதழ்களைத் தவிர்த்த இதர ஆல்பங்கள் ஹார்ட்கவர் கண்டிடாது !well decision sir thankyou.

  ReplyDelete
 2. சுஸ்கி & விஸ்கி வந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.வரவேற்கின்றேன்.

  ReplyDelete
 3. 4th
  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 5. அன்பின் ஆசிரியர் சார்,
  சீனியர் எடிட்டர் சார்,

  தமிழ் காமிக்ஸ் சொந்தங்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும்

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹

  ReplyDelete
 6. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


  🌹🌹🌹🌹🌹.

  ReplyDelete
 7. Dear sir, Durango வின் முதல் இரண்டு ஆல்பந்களின் முன்கதை சுருக்கம் பின்னணிகள் பற்றி இந்த இறுதி பாகத்தில் உண்டா?

  ReplyDelete
 8. // சுஸ்கி & விஸ்கி" கதைகளை மறுக்கா நம் அணிவகுப்புக்கு கொண்டு வந்தாலென்னவென்று ? //
  ஹைய் சுஸ்கி,விஸ்கி...
  தொடரில் நல்ல தொகுப்பை முதலில் முயற்சிப்போம் சார்,வரவேற்பை பொறுத்து அடுத்த முயற்சியை முன்னெடுப்போம்...

  ReplyDelete
 9. ஆசிரியர் & பணியாளர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
 10. // SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன் போன்றவை இந்த ட்ரீட்மென்டுக்கு ஒத்து வரக்கூடியவை ! //
  இவங்க யாருமே அதுக்கு சரிப்பட்டு வருவாங்கன்னு தோணலை சார்...

  ReplyDelete
 11. // இந்தத் தொடரின் அதிரடி வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம், நாம் இதனை தனித்தனி சிங்கிள் இதழ்களாய் வெளியிடாது, துவக்கம் முதலே தொகுப்புகளாகவே களமிறக்கியுள்ளதுமே என்று தோன்றுகிறது ! //
  உண்மையோ உண்மை...

  ReplyDelete
 12. தன்னுடைய சகோதரர்களின் மரணத்துக்கு காரணமான அதிகார வெறி பிடித்த ஓர் அதிகாரியை பழி வாங்க துடிக்கும் சகோதரனின் கதை பற்றிய விமர்சனம் விரைவில்..

  ReplyDelete
  Replies
  1. கதையோட பேரென்ன தம்பி தங்கக் கம்பியா.?

   Delete
  2. ஈகிள் ஹெட் இல்லை.. ஈகிள் ஹன்ட்..

   Delete
  3. ஐயம் வெயிட்டிங்

   Delete
  4. சார்வரியின் சமாச்சாரத்துக்கு பிலவ பாயசமா ? ஆனாலும் இவ்ளோ இஷ்ப்பீடு ஆகாதுங்கோ !

   Delete
  5. மீ டூ வெயிட்டிங் ரம்மி...

   Delete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
 14. ///But still - இந்த தொகுப்பு concept-ல் சுஸ்கி & விஸ்கியை முயற்சிப்பதாயின் உங்களின் ஆதரவு ரேஞ் எவ்விதம் இருக்கக்கூடுமோ என்ற கேள்வி என்னுள் !///

  நூறு சதவீதம் ஆதரவு..!


  ப்ளஸ் பாயிண்ட்ஸ்..

  குட்டி சுட்டீஸ்களுக்கு ஏற்ற அருமையானை தொடர்.!

  சிறுவயதில் ரசித்த பெரியவர்களும் இன்னும் சிறுவர்களாகவே இருக்கும் என் போன்றோரும் கோலகாலமாக வரவேற்பார்கள்.!

  ஏற்கனவே நமக்கு அறிமுகமான ஜோடி என்பதால் வாசகர்களிடையே வாங்குவதற்கு தயக்கம் இருக்காது.!

  ஏகப்பட்ட கதைகள் இருப்பதால் கார்ட்டூன் வறட்சி குறைந்துபோகும்.!

  ராஜா ராணி ஜோக்கர், பேரிக்காய் போராட்டம் போன்ற பல கதைகள் தோர்கலுக்கே சவால்விடும் ஃபேன்டஸி ரகங்கள்.. எனவே ஃபேன்டஸி விரும்புவோரும் மகிழ்வர்.!

  மைனஸ் பாய்ண்ட்..

  வழக்கம்போல..
  டமால் டுமீல்.. ப்ளாம் பேங்.. கும் நங் சத்.. இவைதான் காமிக்ஸ் என்ற எண்ணம்கொண்ட அன்பர்களின் எதிர்ப்பு.!

  ReplyDelete
  Replies
  1. //குட்டி சுட்டீஸ்களுக்கு ஏற்ற அருமையானை தொடர்.!//

   சரி தான் சார் ; நமது வட்டத்தில் இவர்களது இருப்பு எத்தனை சதவிகிதம் இருக்குமென்றோரு கணக்குப் போட்டுமே பாருங்களேன் ?

   Delete
  2. முதல்ல நான் 1
   ஈரோடு விஜய் 2
   திரும்பவும் நான் 3
   பெங்களூர் பரணி 4
   திரும்பவும் நான் 5
   மறுக்காவும் நான் 6
   திரும்பவும் நான் 7
   மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் 8
   அப்புறம் மௌனவாசகர்கள் ஒரு ஆயிரத்தி ஐநூறு பேரு..!

   நகைச்சுவைகளை ஒதுக்கிவிட்டு..

   சில ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட நமது நண்பர்களின் முகநூல் குழுக்களில் நல்ல ஆதரவு இருந்தது கண்கூடாக பார்த்த சங்கதி சார்.!


   (எங்க முகநூல் குழுவிலேயே கிட்டதட்ட 1700 மெம்பெர்ஸ் இருக்காங்க.. எல்லாம் ஒரிஜினல் ஐடி தானான்றது வேற விசயம்) :-)

   Delete
  3. ஏனுங்க ...அவுகள்லாம் இந்தி ; அசாமீஸ் ; பர்மீசிலே காமிக்ஸ் படிக்கிறவுகளோ ? தமிழிலே நாம அச்சிடுற எண்ணிக்கைக்கும் நிங்கள் க்ரூப் எண்ணிக்கைக்கும் சம்பந்தமே இல்லீங்களே ?

   ஆளுக்கு ஒண்ணு ; இல்லே இல்லெ ...ரெண்டு பேர் சேர்ந்து ஒண்ணு வாங்குனா கூட நா அந்த 14 வருஷ அபாச்சே பைக்கை மாத்திப்புட்டு சின்னதா ஒரு எலிகாப்டரு வாங்கிப்புடுவேனே ?

   Delete
  4. ///ஆளுக்கு ஒண்ணு ; இல்லே இல்லெ ...ரெண்டு பேர் சேர்ந்து ஒண்ணு வாங்குனா கூட நா அந்த 14 வருஷ அபாச்சே பைக்கை மாத்திப்புட்டு சின்னதா ஒரு எலிகாப்டரு வாங்கிப்புடுவேனே ?///

   😂😂😂😂😂😂😂😂

   Delete
  5. Kok அய்யாவுக்காக ஒரு சிறு தகவல்

   World population 7859098123

   Female 3822561123

   Facebook female id's 6822561123

   சும்மா ஒரு தகவலுக்காக....

   Delete
  6. கண்ணா @ பெங்களூர் பரணி மற்றும் ஈரோடு விஜய் திரும்ப மற்றும் மறுக்கா வரும் என நீங்கள் எழுத விட்டுட்டீங்க :-)

   Delete
 15. சுஸ்கி & விஸ்கி கதைகள் வண்ணத்தில் தற்காலத்துக்கு ஏற்றதாக இருந்தால் இரண்டு கதைகளை அடுத்த இரண்டு வருடங்களுக்கு வெளியிட்டு விற்பனை நன்றாக இருந்தால் தொடரலாம்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஊறுகாயாய் வெளியிட இயலாது சார் ; குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 4 போட வேண்டி வரும் ! நான் "தொகுப்பு" என்று சொன்னதே அதன் பொருட்டுத் தான் !

   Delete
  2. ///குறைந்த பட்சமாக ஆண்டுக்கு 4 போட வேண்டி வரும் ! நான் "தொகுப்பு" என்று சொன்னதே அதன் பொருட்டுத் தான் !///

   ஹைய்யோ.. நினைச்சாவே கிர்ர்ர்ரூங்குதே..!

   பழநியாண்டவா.. இதுமாத்திரம் நடந்துருச்சின்னா எங்க தலீவரும் செயலரும் பழநிக்கே வந்து ஆளுக்கு பத்து டப்பா பஞ்சாமிர்தம் வாங்கியாந்து எனக்கு குடுப்பாங்கன்னு வேண்டிக்கிறேன்பா..!

   Delete
  3. போடுங்க சார் தாராளமாக. எல்லாம் புது கதையாக போடுங்கள். இந்த நாயகர் கதையை படித்ததாக ஞாபகம் இல்லை.

   Delete
 16. // இனி வரும் நாட்களில் மாஸான மைல்கல் இதழ்களைத் தவிர்த்த இதர ஆல்பங்கள் ஹார்ட்கவர் கண்டிடாது ! //

  என்ன கொடுமை சார் இது....
  எதார்த்தம் புரிகிறது,எனினும் இதை மாற்ற ஏதேனும் வாய்ப்புகள் இருப்பின் அதை பரிசீலிக்கலாம் சார்...
  உண்மையில் சில சிறப்பிதழ்களுக்கு ஹார்ட் பைண்டிங் இன்னும் கூடுதல் சிறப்பை கொடுக்கும்,ஹார்ட் பைண்டிங் இல்லை எனில் அது ஒருவிதமான இழப்பே...
  ஏற்கனவே சில இதழ்களுக்கு இந்த துயரநிகழ்வு நடந்துள்ளது...

  ReplyDelete
  Replies
  1. மெய்யான துயர நிகழ்வு என்னவென்று சொல்லட்டுமா சார் ? நான்கு மாதங்களுக்கு முன்னே நாற்பது ரூபாய்க்கு 45 நாள் கடனில் வாங்கிய அதே சரக்கை இன்றைக்கு ரூ.60 க்கு ரொக்கம் தந்து வாங்குவது சார் !

   நமது அட்டைப்படங்களுக்கு பயன்படுத்தும் அட்டையினை நேற்றுத் தான் வாங்கினேன் - இந்தாண்டின் முழுமைக்குமாய் !

   Delete
  2. இதெல்லாம் முடிவுக்கு வந்தால் நலம்...

   Delete
  3. விலை ஏற்றங்களுக்கு பல காரணங்கள் இருப்பினும்,நிலைமைகள் மாறி விலைகள் இறங்குமுகமாக வாய்ப்புண்டா சார் ?!

   Delete
 17. // SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன் போன்றவை இந்த ட்ரீட்மென்டுக்கு ஒத்து வரக்கூடியவை ! Maybe ஏதேனும் ஒன்றை வரும் ஆண்டுகளில் தொகுப்புகளாக்கி அழகு பார்த்திடலாமா ? //

  தாராளமாக செய்யுங்கள். சோடா மற்றும் ஸ்டெர்ன் வெட்டியானை முயற்சிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. என்ன சொல்ல வர்றீங்க அறிவரசு?

   Delete
  2. // தாராளமாக செய்யுங்கள். சோடா மற்றும் ஸ்டெர்ன் வெட்டியானை முயற்சிக்கலாம் // இதுவே எனது கருத்தும்

   Delete
 18. // ட்யுராங்கோ தொடரின் இறுதித் தொகுப்பின் அட்டைப்பட முதல் பார்வை //
  ட்யூராங்கோ அட்டைப்படம் தெறிக்க விடுது சார்...

  ReplyDelete
 19. //SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன் போன்றவை இந்த ட்ரீட்மென்டுக்கு ஒத்து வரக்கூடியவை ! Maybe ஏதேனும் ஒன்றை வரும் ஆண்டுகளில் தொகுப்புகளாக்கி அழகு பார்த்திடலாமா ?//

  இவைகளுக்கு பதிலாக மீதம் இருக்கும் எங் tiger மற்றும் மீதம் இருக்கும் கமான்சே கதைகளை முயற்சி பண்ணலாமே சார் .. ஒரே தொகுப்பாக ..

  ReplyDelete
  Replies
  1. டவர் கிட்டில்லா இக்கட ; சிக்னல் மோசமாயுந்தி நண்பரே !

   Delete
  2. பாவம் ஸ்ரீ நீங்க...🤪🤪🤪🤪🤪🤪

   Delete
 20. இந்தமாத இதழ்களை வாசித்து முடித்தாயிற்று,
  1.நீர் இன்றி அமையாது உலகு-தரமான மொழிபெயர்ப்பு,மனம் விட்டு சிரிக்கவும்,இரசிக்கவும் வைத்தது.
  முழு மனநிறைவு...
  2.கழுகு வேட்டை-வண்ணத்தில் அசத்திய க்ளாசிக்,அழுத்தமான கதைக்களமும் கிடைத்தால் சும்மா இருப்பாரா தல....
  3.சோடா-ஓகே இரகம்...
  4.ஜெரோனிமா-வண்ணத்தில் கலக்கல்,வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பார்கள்,பொருளாதாரம் மற்றும் ஆயுதபலம் கொண்ட வலுவான ஓர் இனத்திற்கு எதிராக,இயற்கையுடன் இணைந்து வாழும் ஓர் இனம் தன்னைக் காக்க போராடுவதே கதைக்களம்...
  கதைக்களத்தின் நெடும்பயணத்தில் ஏதோ ஒன்று தவறுவதான ஒரு உணர்வு,சிறுசிறு நிகழ்வுகளை முழு தொகுப்பாய் மாற்றும் வாய்ப்பை படைப்பாளிகள் தவறவிட்டு விட்டார்களோ என்று தோன்றுகிறது,அப்பப்ப ஆவணப் படம் பார்க்கும் பீல் வருது...

  ReplyDelete
 21. // முதலிரண்டு வெளி வந்துவிட்டன & பாகம் 3 - அக்டொபர் 2021-ல் ரிலீசாகிறது ! ஆனால் இறுதி பாகமோ 2022 அல்லது 2023-ல் தானாம் ! So அதுவரைக்கும் அந்தத் தொடரினில் கை வைப்பதற்கு தயக்கமே மேலோங்குகிறது ! //

  நான்கும் வந்த பின்னர் அவைகளை ஒரே ஆல்பமாக போடலாமே சார். தனித்தனியாக பிரித்து வெளியிட வேண்டாம் சார்.

  ReplyDelete
 22. அனைவருக்கும் இனியதமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  இரண்டு பாகக் கதைகள் ஏற்கெனவே ஹார்டு பவுண்டில் வந்த போது என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. இது அவசியமா என்றே என்ணினேன். எனவே உங்கள் முடிவை வரவேற்கிறேன்.
  அதிக பக்கங்கள் கொண்ட கதைகளை அவசியம் சார்ந்து ஹார்டு பவுண்டில் வெளியிடலாம்.

  ReplyDelete
  Replies
  1. இனி வேறு மார்க்கங்கள் லேது சார் !

   Delete
 23. ட்யுராங்கோ - அட்டைப்படம் உண்மையில் செம.

  ReplyDelete
 24. ட்யூராங்கோ மொத்தம் 17 பாகங்களில் இதுவரை 13 பாகங்கள் வந்தாயிற்று.. பாக்கி இன்னும் 4 பாகங்கள் இருக்கிறதே, தாங்கள் 3 பாகம் என்று குறிப்பிடுவதால் கடைசி பாகம் தனியாக வருங்களா sir?

  அருமையான அர்ட்வொர்க்கை கொண்ட லோன்ஸமை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கைவிடப்பட பாகம் (17) நண்பரே அது ..

   Delete
 25. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 26. கண்டிப்பா சுஸ்கி விஸ்கி கதை போடுங்கள் பயங்கர நகரம் ராஜா ராணி ஜாக்கி மறு பதிப்பும் கண்டிப்பாக

  ReplyDelete
 27. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. சுஸ்கி & விஸ்கிக்கு எனது 100 சதவிகித ஆதரவு உண்டு

  ReplyDelete
 29. இது போங்கு ஆட்டம்,அண்ணாச்சி,பதிவு வரும்என்று காலையில் இருந்து காத்திருந்தால்,இப்படியா சைலன்டா வருவது 😑😑

  ReplyDelete
  Replies
  1. ட்யுரங்கோவுடனான மல்யுத்தத்திலிருந்து கிட்டிய முதல் பிரேக்கில் போட்டது நண்பரே !

   Delete
 30. சார் அட்டகாச பதிவு....புத்தாண்ட இந்தாண்ட வரவேற்க....
  ட்யூராங்கோ அட்டை வேற லெவல்...பொன்னனுக்கு இந்தப் பொன்னனின் சார்பாக பொன்னான வாழ்த்துக்களயும் நன்றிகளயும் தெரிவித்திடுங்கள்....இது வர வந்ததிலேயே டாப் இதான...வண்ணங்கள் அதகளம்...‌சார் புது தெற்கத்திய ஆசிரியைக்கும் வாழ்த்துக்கள்....
  சுஸ்கி விஸ்கி இரண்டு வருடம் முன்னர் கதய பழமய கடைல வாங்கி படித்ததா தெரிவித்தேன்...நிச்சயம் சோடை போவாது...வாண்டு மலர்ல போடலாம்...தயக்கம் வேண்டாம்....சோடாவ...தொகுப்பா விடலாம்...லார்கோவும் தொகுப்பா வந்திருந்தா ட்யூராங்கோ போல வெற்றி ஈட்டியிருக்குமோ...தோர்களயும் குண்டாவே போடுவோமே..

  ReplyDelete
 31. சுஸ்கி விஸ்கியை கண்டிப்பாக ஒரு தொகுப்பாக போடுங்கள். முடிந்தால் இரண்டு மூன்று மறுபதிப்பு கதைகளை மறுபதிப்புகளாக. வசனங்களை மாத்திடாதீங்க 😄😄😄

  அதற்கு இருக்கும் வரவேற்பை பொறுத்து முடிவு செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. பதிவினை மறுக்கா ரீடிங் புலீஸ் !

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Nostalgia எனும் ஒட்டக முதுகிலான சவாரி - தற்போதைய தடுப்பு ஊசிகளைப் போலானவை சார் ! எத்தனை காலத்துக்கு வீரியம் தொடரும் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சமாகிடும் !

   Delete
  4. நீங்க சொன்னது புரிஞ்சுதுங்க சார். மறுக்கா ஒருக்கா இந்த கதைகளை படிச்சிட்டு வந்து கேக்கறேன். நீண்ட நாட்களுக்கு முன்னே படித்தது.

   Delete
 32. லோன்சம் கதையும் சுற்றுச் சூழல் அழகாய் சுற்றிக் காட்டும் போல...அருமையாய் ஈர்க்குது காட்டிய இப்பக்கம் இப்பக்கமாய்

  ReplyDelete
 33. *பழிக்குப் பழி*
  *இரத்த முத்திரை*
  *இரத்த வெறியர்கள்*
  *இரும்புக் குதிரையின் பாதையில்*
  *இரத்த நகரம்*
  *நள்ளிரவு வேட்டை*
  *பாலைவனப் பரலோகம்*-
  " *மந்திர மண்டலம்* "
  *மெக்ஸிகோ படலம்*-
  *ஓநாய் வேட்டை& இரத்த தாகம்*
  *இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*
  *கார்சனின் கடந்த காலம்*... 3ஆம் பதிப்பு. வசனம் பாடல்கள் மாற்றாமல்.
  எல்லையில் ஒரு யுத்தம்
  எமனுடன் ஒரு யுத்தம்.

  இதெல்லாம் மறுபதிப்பாக வண்ணத்தில் வரவேண்டிய கதைகள். சமயம் வாய்க்கும் போது இவற்றை கொண்டு வாருங்கள் சார்.

  ReplyDelete
  Replies
  1. கார்சனின் கடந்த காலம் தலையில்லா போராளி சைசுல//

   எப்போ பூமிக்கு வரப் போறீங்க ஸ்டீல்?

   Delete
  2. ///எப்போ பூமிக்கு வரப் போறீங்க ஸ்டீல்?///

   அந்த சினிஸ்டர் செவன் வெளியிட்ட அடுத்த நொடியே.!

   Delete
  3. வரவேற்கின்றேன்.ஆமோதிக்கின்றேன்.கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணும் விரதம் மேற்கொள்வேன் என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.

   Delete
  4. அப்படியே
   *சாத்தான் வேட்டை*
   *அதிரடி கணவாய்*
   *தனியே ஒரு வேங்கை, கொடூரவனத்தில் டெக்ஸ், துரோகியின் முகம்*

   Delete
  5. இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு..

   இதில் தான் டெக்ஸ் மனைவி இருந்து இறப்பது போல் வரும் தொடராக இருப்பின் ஒரே தொகுப்பாக இதை வெளியிட்டால் அருமைதான்..இதுவும் இளம் டெக்ஸ் போல் அட்டகாசப்படுத்தும்...

   Delete
  6. அட்ரா சக்கை செம லிஸ்டு....

   அத்தனையும் சோக்கா இருக்குமே மனிடோ....!!!

   ஆசிரியர் சார்@ தாங்கள் பதிவில் கேட்டுள்ள தொகுப்பு போடுவதற்கு ஷெரீப் அற்புதமான லிஸ்ட் தந்துள்ளார்....

   பால் ஈஸ் நவ் இன் யுவர் ஹேண்ட் சார்.

   3, 4 கதைகள் கொண்ட தொகுப்பாக தாக்கலாம்....

   Delete
  7. பட்டியல் சூப்பர் தான் , ரைட்டு ! ஆனால் இவற்றை எங்கே புகுத்துவதோ ? எற்கனவே முழித்துக் கொண்டிருக்கும் புது தொகுப்புகளுக்கே வழி தெரியா நிலையில - மறுபதிப்புகளுக்கு எக்கட slots தருவது ?

   Delete
  8. எங்க ஆசையை லிஸ்ட்போட வேண்டியது மட்டுந்தாங்க சார் எங்க வேலை. மற்றபடி இதெல்லாம் கம்பேனிக்கு எப்ப கட்டுபடியாகுமோ அப்போ வந்தாப் போதும். திடீர்னு உங்களுக்கு டெக்ஸ்ல ஏதாவது மறுபதிப்பு போடலாம்னு தோணுச்சினா இந்த லிஸ்ட் உதவியா இருக்குமில்லியா?

   Delete
 34. ட்யூராங்கோ,அட்டைபடம் சூப்பர் அருமையாக உள்ளது,கதையும் நன்றாக இருக்கும்,கடைசி தொடர் என்பதால்,வரவேற்பு சிறப்பாகவே இருக்கும்,
  சுஸ்கி விஸ்கி,தாரளமாக போடலாம்,மறு பதிப்பு என்றால் இன்னும் நன்றாகவே இருக்கும்

  ReplyDelete
 35. நீரின்றி அமையாது நேற்று படித்தேன்...நம்ம கள்ள மார்க்கெட் வியாபார நண்பர்களோடு? போட்டி போடுது கதை...மூன்று பிரிவினரோடு... கதய படித்த என்னையும் தாகத்தோடு அலைய வைத்தது என்றால் மிகையல்ல...அடடா அங்க இனி என்ன நடக்குமோ என தூண்டும் ஆர்வம் ஒவ்வொரு குழுவுடன் மாறி பயணிக்கும் போதும்.....மீண்டும் சங்கிலியில் இணையும் போதும் அதே விறுவிறுப்பு குறையாமல்...அட்டகாச விறுவிறுப்பு சிரிப்பு மேளா..‌‌கிளிப்பிள்ளை போல தாகம் எடுக்குமென மாறி மாறி சொன்னாலும் சலிப்பில்லா நகைச்சுவை...வாட்டர் ப்ரூஃப் பெயர்தான் தாகத்தால் வாய் குளறி ஆளாள மாத்தி பேச வைக்குதோன்னு ...நம்மையும் முன்பக்கத்தை புரட்ட வைப்பதழகு

  ReplyDelete
 36. இன்று சோடா படித்தேன்...எடுத்தேன்...முடித்தேன்...என்னா ஓட்டம்....போன பாதையிலே இருளில் பஸ் வருவது அருமை...இது வர வந்த டாப் கதைகளில் இதற்குமிடமுண்டு

  ReplyDelete
 37. மீண்டும் மீண்டும் லக்கி மற்றும் சிசிக்பில் படிப்பது தொய்வு ஏற்படுத்திவிட்டது.

  சுஸ்கி விஸ்கி நல்ல சாய்ஸ் தான் சார்.

  ஆனா A4 சைஸ் கார்ட்டூன் காமிக்சுக்கு செட் ஆகவில்லை.

  சமீபத்திய Detective ஸ்பெஷல் டைப்பில்/சைசில் digest ஆக வந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 38. ட்யூராங்கோ அட்டைப்படம் அருமை! நேரில் பார்க்கும்போது இன்னும் அசத்துமென்பது உறுதி!

  ReplyDelete
 39. சுஸ்கி & விஸ்கியை தாரளமாக களம் இறக்கிப் பார்க்கலாம் சார்! அது குழந்தைகளை மட்டுமல்ல பெரியோர்களையும் கவரும் விதமாகவே இருக்கும்!இரண்டு இரண்டு கதையாக வருடத்திற்கு நான்கு கதைகளை போட முயற்சிக்கலாம்! சுஸ்கி & விஸ்கிக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர் (நானும்) அதனால் சோடை போக வாய்ப்பில்லை!

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சோடை போகாது இன்றைய சிறார்களும் விரும்பி படிப்பார்கள்


   ரசிகர்களில் இன்றளவும் நானும்

   Delete
 40. ஆசிரியருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. ஆசிரியர் மற்றும் காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...


  ( கொஞ்சம் தாமதமோ..:-)

  ReplyDelete
 42. ட்யூராங்கோ அட்டைப்படம் செம கலக்கலாக அமைந்துள்ளது..செம செம செம...ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 43. சுஸ்கி விஸ்கி ஆவலுடன் எதர்பார்க்கிறேன் சார்..கண்டிப்பாக வெளியிடலாம்..

  பின் வெற்றி தோல்வியை கண்டு தொடரலாமா என்பதை முடிவெடுக்கலாம் சார்..

  ReplyDelete
 44. SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன் போன்றவை இந்த ட்ரீட்மென்டுக்கு ஒத்து வரக்கூடியவை ! Maybe ஏதேனும் ஒன்றை வரும் ஆண்டுகளில் தொகுப்புகளாக்கி அழகு பார்த்திடலாமா ? //


  இவர்கள் தொகுப்புக்கு ஏற்றவர்களாக எனக்கு தெரியவில்லை சார்...:-(

  ReplyDelete
 45. மறுபதிப்புகள் காணும் இதழ்கள் மீது புதிய மொழிப்பெயர்ப்பு ஓகே தான் சார் ..ஆனால் அதே சமயம் மிக பழகிய ,அறிந்த பெயர்களை மாற்ற வேண்டாமே...

  உதாரணமாக காலம் காலமாக செவ்விந்தியர்கள் நவஜோக்கள் என அழைத்து ,படித்து ,பழகி அது தவறு என நவஹோ என படிக்கும் பொழுது அந்த நெருக்கம் விலகி தான் போகிறது..( அது தவறாகவே இருப்பினும் ) இதோ இந்த மாதம் கழுகு வேட்டையின் வில்லனின் பெயர் மாற்றம் கூட ஓர் அந்நிய தன்மையை ஏற்படுத்துவது போல் ஓர் எண்ணம்..புது மொழி ஆக்கம் ஓகே ஆனால் பழகி நெருங்கிய பெயர்களை ( தவறாக இருந்தாலும் ) மாற்ற வேண்டாமே சார்..

  ReplyDelete
  Replies
  1. தலைவரே @ வரிக்கு வரி வழி மொழிகிறேன்....!!!!


   தவறாக இருப்பினும் பழகியதை மாற்ற வேணாம்..

   நவஜோ"-வில் உள்ள நெருக்கம் நவஹோ"- வில் சுத்தமாக இல்லை....!!!

   "எல் மியூர்டோ"---

   பேரைக் கேட்டாலே ஒரு குலைநடுக்கம் வரும்..அது எல் ம்வெர்தோ வில் சுத்தமாக இல்லை.

   இரத்தப்படலம் பாகம் IVல் அமெரிக்க ராணுவ விதியையே ராஸ் டான்னர் உடைப்பாரு...!!
   குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டிய பயணத்தை, காயம்பட்ட நபருக்காக கேப்டனோடு வாதாடி நிறுத்துவார்.

   விதியையே மாற்றலாம் எனும்போது,
   சரியான உச்சரிப்பு போடணும்னு, பழமையான அந்நியோன்யத்தை இழக்க வேணாமே!!!!!

   Delete
  2. தெரியாமல் செய்வதற்குப் "பிழை" என்று பெயர் ; தெரிந்தே செய்திடும் பிழைக்கு "சொதப்பல்" என்று பெயர் !

   பிழைகளைத் தவிர்க்கவே இன்றைக்கு பிரயத்தனம் செய்பவன், சொதப்பலைச் செய்திடப் போவதில்லை - அதுவும் எழு கழுதை வயசான பின்னே !

   பெட்ரோமேக்ஸ் லைட்டே வேணும் என்பதில் தப்பில்லை தான் ; ஆனால் அது எரியாட்டியும் பரால்லே என்பதில் நான் உடன்பட்டிட மாட்டேன் guys ! No way for sure !

   Delete
  3. "Madasamy "எனும் பெயரை "மடசாமி" என்றுமே வாசிக்க வரும் தான் - முறையான உச்சரிப்பினை அறிந்திருக்க இயலா சூழலில் ! 'பழகிடுச்சி ; மடசாமியாகவே தொடரட்டும்" என்ற வாதம் ஒ.கே என்பீர்களா folks

   இவை வெளியான 30 + ஆண்டுகளுக்கு முன்னே உச்சரிப்புகளை அறிய ; சரி பார்க்க வாய்ப்புகள் இல்லை என்பதை சாக்காக நான் சொல்லிக் கொள்ளலாம் ; அதே பருப்பு இன்றைக்கு வேகுமா - என்ன ?

   அவசியமாகிடும் திருத்தங்களுக்கு ஒரு போதும் தடாக்கள் விதிக்கப்பட மாட்டாது !

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. பெயர்ச்சொல்லை பொருத்து ஒரே பெயருக்கு ஒவ்வொரு நாட்டில் ஓரு உச்சரிப்பு சொல்றாங்க சார்.


   தாங்கள் சொல்வது சரி என்றாலும் இருக்கும் 500-600ரசிகர்களும் விரும்புவது "நவஜோ"-யும் "எல் மியுர்டோ" - வையும் தானே.

   யாரும் ரசிக்காத சரியான பெயர் உச்சரிப்பால் பயன் என்னவோ????

   Delete
  6. Editors decision is always final and should be respected. DO NOT get into his domain - we should restrict our liberties.

   Delete
  7. // அவசியமாகிடும் திருத்தங்களுக்கு ஒரு போதும் தடாக்கள் விதிக்கப்பட மாட்டாது ! //

   +1

   Delete
  8. நவஜோ--- நவஹோ!

   எல்மியூர்டோ... எல் ம்வர்தோ!

   இரும்புக்கை மாயாவி- ஸ்டீல் கிளா!

   ரிப்போர்டர் ஜானி- Ric Hochet

   கேப்டன் டைகர்- ப்ளூபெர்ரி

   வசனம் தேவையா என்ன????

   அடுத்த மாசம் வரும் "கொரில்லா சாம்ராஜ்ஜியம்"--- ல திருத்தப்பட்ட சரியான பெயரை தான் போடுவார் இல்லியா ராக் ஜி & PFB!!!


   தவறான பெயர்ச்சொல் உச்சரிப்பையே திருத்தனும், மாற்றனும் எனும் போது பெயர்களையே தவறாக வைத்து இருப்பதையும் இப்போது சரிப்படுத்தி விடுவார் தான்!

   Delete
  9. இதனால டாக்புல் , கிட் ஆர்டினுக்கெல்லாம் எந்த பாதிப்பும் இல்லைதானே.!?

   Delete
  10. // அடுத்த மாசம் வரும் "கொரில்லா சாம்ராஜ்ஜியம்"--- ல திருத்தப்பட்ட சரியான பெயரை தான் போடுவார் இல்லியா ராக் ஜி & PFB!!! //

   Over to editor :-)

   Delete
  11. கதையில் நடுவே வரும் கதாபாத்திரங்கள் மற்றும் உபயோகிக்கும் பெயர்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார் விஜயராகவன். கதையின் கதாநாயக & கதாநாயகிகள் பெயர் மாற்றுவது பற்றி அவர் சொல்லவில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம் :-)

   Delete
  12. // இதனால டாக்புல் , கிட் ஆர்டினுக்கெல்லாம் எந்த பாதிப்பும் இல்லைதானே.!? //

   இருக்காதுங்கோன்னு நினைக்கிறேன் :-) உங்க கவலை உங்களுக்கு :-) :-)

   Delete
  13. ///இதனால டாக்புல் , கிட் ஆர்டினுக்கெல்லாம் எந்த பாதிப்பும் இல்லைதானே.!?///!

   ---😆😆😆😆 எடிட்டர் சார் முடிவாக சொன்னால் தான் தெரியும்.


   ////
   கதையில் நடுவே வரும் கதாபாத்திரங்கள் மற்றும் உபயோகிக்கும் பெயர்களை ஆசிரியர் குறிப்பிடுகிறார் விஜயராகவன். கதையின் கதாநாயக & கதாநாயகிகள் பெயர் மாற்றுவது பற்றி அவர் சொல்லவில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம் :-)///

   ----- தெரியலையே பரணி.

   இப்பத்தைக்கு பாத்திரங்கள் பெயர்கள் மட்டுமே மாற்றப்படுமா??? அல்லது நாயக, நாயகிகள் பெயர்களும் சரிப்படுத்தப்படுமா???? என்பது மில்லியன் டாலர் கொஸ்டியன் தான்!

   மாற்றுவது என வந்துட்டா எல்லாம் தான் மாறக்கூடும். எப்போது மாறும் அல்லது மாறாது என எடிட்டர் சார் தான் அறிவிக்கனும்...


   Delete
  14. ஆசிரியர் சொன்னதை இன்னும் கொஞ்சம் கவனித்து படித்தால் "அவசியமாகிடும் திருத்தங்களுக்கு ஒரு போதும் தடாக்கள் விதிக்கப்பட மாட்டாது", அதாவது "அவசியமாகிடும்" என்பதை கவனிக்கவேண்டுகிறேன் விஜயராகவன்!

   Delete
  15. @ STV : அர்த்தமற்ற வாதம் ! "நவஜோக்கள்" பங்காளிகளும் அல்ல ; "நவஹாக்கள்" பகையாளிகளும் அல்ல ! எல்லாமே பழகப் பழக நெருங்கிடப் போகும் சமாச்சாரங்கள் ! இதனை ஏதோ "ஈ.வே.ரா.பெரியார் சாலையை" - Grand Western Trunk road என்று பெயர் மாற்றம் செய்த ரேஞ்சுக்கு மிகைப்படுத்திப் பார்ப்பதன் லாஜிக் எனக்குப் புரியவில்லை !

   ஒரு பெயரை மாற்றி அமைப்பது வேறு ; பிழையாகவே தொடரச் செய்வது வேறு ! "ரிக் ஹோஷே " - ஜானியாய் உருமாற்றம் கண்டது பிழையாகிடாது ......உலகின் இன்ன பிற மொழிகளிலும் உச்சரிப்பின் சுலபத்தின் பொருட்டு இவரது பெயரானது மாற்றிடப்பட்டுள்ளது ! ஆனால் மாற்றம் செய்யும் போது ஜானியை நான் "சாணி" என்று குறிப்பிடப்பட்டால் அது தான் பிழையாகிடும் !

   And அவ்விதப் பிழைகளை பின்னாட்களில் சரி செய்ய காரணங்களோ, முகாந்திரங்களோ நிச்சயமாய் அவசியமாகிடாது ! End of the day - இங்கே நிறைகளுக்கும், குறைகளும் பொறுப்பு நான் மட்டுமே எனும் போது - இது சார்ந்த விவாதங்கள் இங்கே, இந்தப் புள்ளியில் நிறைவுறுகின்றன - period ! And we move on..

   Delete
  16. ஆசிரியர் சார் @ நன்றிகள் விளக்கத்திற்கு....!!!!

   "நவஜோ" மேல ஒரு பாசம், அவ்வளவுதான். ஏன்னு விளக்கி சொல்ல இயலவில்லை! மே.பி., நானு தங்களது ரைட்டிங்ல மொத மொத படிச்சது "பழி வாங்கும் புயல்"--- தான். அதில் இந்த நவஜோக்களின் கதையை கையாண்டு இருந்தீர்கள். அதனாலயா இருக்கலாம்.

   16, 17 வயசுல இருந்தே அந்த பாசம் ஒட்டிகிச்சி... அது இனிமே இல்லை எனும் போது ஒரு பீலிங்...!!!! சட்டுனு மனசில இருந்து எடுத்து போடமுடியல!

   நவஹோனு வர்ற இடத்தில் நவஜோனு தானாகவே மனசு நினைச்சிகிடும....!

   ////And we move on..///--- OK sir. As usual we following you!

   Delete
 46. Sir,

  சுஸ்கி & விஸ்கி - yes for one trail collect. If it clicks can try again annually - if not - we can stop with the first collect.

  On the hardcover edition - yes - we need to be in tune with times- but do not stop Lucky Annual Hardcovers.

  இப்புவியையே 'கொஞ்சம் அடக்கி வாசிங்கோ' என்று புனித மானிடோ கட்டுப்படுத்தும் வேளை இது சார் - நாமும் கட்டுண்டு கிடக்கத்தான் வேண்டும் !

  ReplyDelete
  Replies
  1. Sorry sir..LION # 400 is going to be the only hardcover edition for the remaining part of 2021...

   Of course இரத்தப் படலம் அதற்கொரு விதிவிலக்காக இருந்திடும் !

   Delete
 47. டியூரங்கோ... முத்து 450

  அட்டைப்படம் சும்மா தெறிக்கிறது சார்.

  இதுவரையில் வந்த மற்ற புத்தகங்களின் அட்டைகளை பின்அட்டையில் போட்டுள்ளது சிறப்பாக இருக்கு...

  """டியூராங்கோ"""--- அந்த இருவண்ண எழுத்துருக்கள் செம அசத்தல்....!!!!

  முன்னட்டையில் தகிக்கும் பாலைவனங்களின் வெம்மையை உணர்த்தும் அடற்மஞ்சள் நெருப்பு குழம்பின் பின்னணியில் " டியூராங்கோ" வின் அசத்தலான போஸ்....சும்மா கோடைமலர் என்ற குதூகலத்தை நாடிகளில் பரவச்செய்கிறது....😍😍😍😍😍

  பின்அட்டை சிவப்பு நிறம், ஒரு குறியீடு.... டியூராங்கோ சந்திக்கும் பெண்கள் அனைவரும் மரணிக்கின்றனர்....!!!
  செம...செம....!!

  நேரில் இன்னும் நகாசு வேலைகளுடன் பார்க்கும் போது சும்மா மிரட்டும்....!!

  ReplyDelete
 48. ///இனி வரும் நாட்களில் மாஸான மைல்கல் இதழ்களைத் தவிர்த்த இதர ஆல்பங்கள் ஹார்ட்கவர் கண்டிடாது !///

  கொரோனா கால கொடூரங்கள்...ஹூம்....!!!!

  ஹார்டுகவர் என்ற முகப்பவுடர் இல்லாமலும் காமிக்ஸ் இதழ் இயற்கை எழிலோடு வசீகரிக்கத்தான் செய்யும்...!!!


  ReplyDelete
  Replies
  1. // ஹார்டுகவர் என்ற முகப்பவுடர் இல்லாமலும் காமிக்ஸ் இதழ் இயற்கை எழிலோடு வசீகரிக்கத்தான் செய்யும்...!!! //

   +1

   Delete
 49. Lonesome...முதல் ஆர்க்கின் 4 பாகங்கள் வரட்டும் சார்.. ஒரே தாக்காக தாக்கிடலாம்.

  ReplyDelete
 50. ///SODA ; க்ளிப்டன் ; 'அந்தியும் அழகே' தாத்தாஸ் கதை ; வெட்டியான் ஸ்டெர்ன்///---

  ஸ்டெர்னுக்கு என் வாக்கு... அண்ணாரின் அடுத்த இருபாகங்களை ஒரே இதழாக காண ஆசையோ ஆசை!

  ReplyDelete
 51. சுஸ்கி & விஸ்கி:-

  நாஸ்டால்ஜியா தாண்டி இந்த சோடி நம்மை வசீகரிப்பர் என்ற நம்பிக்கை பலமாகவே இருக்கிறது சார்.

  டபுள் ஓகே இந்த தொடரின் மறுவருகைக்கு!!!!

  தொடக்கமே ஒரு டபுள் தமாக்காவாக போட்டுத்தாக்குங்க சார்.....!!!

  வாய்ப்பு இருந்தால் அடுத்த ஆன்லைன் திருவிழாவில்.....!!!

  ReplyDelete
 52. "இந்த தொகுப்பு concept-ல் சுஸ்கி & விஸ்கியை முயற்சிப்பதாயின் உங்களின் ஆதரவு ரேஞ் எவ்விதம் இருக்கக்கூடுமோ என்ற கேள்வி என்னுள் ! So இந்தத் தொடரினை ஏற்கனவே வாசித்திருக்கும் நண்பர்கள் ; அதனில் என்ன எதிர்பார்த்திடலாம் என்று அறிந்திருக்கும் நண்பர்கள் மட்டும் தங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்திடலாமே ? Nostalgia சார்ந்த தேடலாய் இதுவும் அமைந்திட்டால் ரொம்ப காலத்துக்கு வண்டி ஓடாதென்பதால் - கதைகளின் தன்மைக்கென உங்கள் ஓட்டுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ! "

  Sir, i always support for this series, இது நிச்சயமாக வெற்றி அடையும், ஏதோ ஒரு காலகட்டத்தில் நீங்கள் வெளியிட்ட மூன்றே மூன்று கதைகளை இன்று வரை ஞாபகம் வைத்துக் கேட்பது Nostalgia effect க்காக மட்டும் அல்ல, அதனில் தரம் உள்ளது. பேரிக்காய் போராட்டத்தில் இல்லாத Fantasy யா, பயங்கரப் பயணத்தில் இல்லாத நல்ல கருத்துக்களா, ராஜா ராணி ஜாக்கி என்ன ஒரு Imagination,

  I vote for suski wiski digest sir

  ReplyDelete
 53. """""கழுகு வேட்டை""""

  1992 தீபாவளிமலர் ஆக வெளியான ஸ்பெசல் வெளியீட்டில் இடம்பெற்று இருந்த கதை. டெக்ஸ் ரசிகர்களின் நீஈஈண்டநாள் கோரிக்கையை அடுத்து இம்மாதம் வண்ண மறுபதிப்பாக வெளியாகியுள்ளது.

  முந்தைய இதழ் ஸ்பெசல் என்பதால் நிறைய பக்கங்களோடு வந்திருத்தது. தற்போதைய இதழ் மெலிதாக இருப்பதாக நண்பர்கள் கருதவே உடனடியாக பக்கங்கள் சரிபார்ப்பில் இறங்கினேன்.

  முன்பு கறுப்பு வெள்ளயில் 3ம் பக்கத்தில் ஆரம்பித்து 183ம் பக்கத்தில் முடிந்தது.

  இப்போது 7ம் பக்கத்தில் ஆரம்பித்து 190ம் பக்கத்தில் முடிவடைகிறது.

  புதிய வெளியீட்டில் 184 பக்கங்கள் இருந்தவுடன் 3பக்கங்கள் சேர்ந்து இருப்பது தெரிய வந்தது.
  அட என்ற ஆச்சர்யம்.

  முன்பு ஏதோ ஒரு காரணமாக இந்த பக்கங்கள் வெளியிட கிடைக்கலபோல....

  பழைய இதழுடன் புதிய வண்ண இதழை அருகருகே வைத்து கம்பேர் செய்து புதிய பக்கங்கள் எவை என பிடிச்சாச்சி...

  அவைகள்.. பக்கங்கள் 104, 124 & 125.

  புதிய பக்கங்கள் உடன் புதிய கதையாகவே என்சாய் பண்ணலாம் ஏற்கனவே வாசித்தவர்கள்.


  ஆசிரியர் சார்@ முன்பு 3 பக்கங்கள் வெளிவராத காரணம்,

  சித்திரங்கள் தபாலில் மிஸ்ஸிங் ஆகிட்டதா??? அல்லது வேறு ஏதேனும் காரணமா???

  ReplyDelete
 54. சுஸ்கி என் விஸ்கி ..

  எனது சிறுவயது முதல் இன்று வரை இனிமேலும் என் மனம் கவர்ந்தவர்கள்

  மினி லயனில் வந்த அந்த மூன்று கதைகளில்

  பயங்கர பயணம் & பேரிக்காய் போராட்டம் இரண்டு கதைகளையும் எத்தனை முறை படித்து கிழித்திருப்பேன்னு கணக்கே இல்லை ( உண்மையிலேயே பேரிக்காய் போராட்டம் நிரம்பவே கிழி பட்டு விட்டது )

  இன்னும் எத்தனை நாட்களுக்கு ஆங்கிலத்திவ் வந்த புத்தகங்களையே புரட்டி புரட்டி பார்த்துக்கொண்டிருப்பது டியர் எடி .. நீங்க மனசு வைத்தால் மீதமுள்ள 180+ கதைகளில் நல்ல கதைகளாய் நீங்கள் புக்காய் தமிழில் பதிந்தால் நாங்களும் மீண்டும் 1990 களுக்கு சென்று மீண்டிட மாட்டோமா. !!!

  பயங்க பயணத்துக்காக என ஒன்பதாம் கிளாஸில் நண்பர்களுக்குள் நடந்த பெரும் சண்டையில் என் சட்டை கிழிபட்டு இந்த புத்தகத்தை கையிலேந்தி படித்த நினைவுகள் இன்றும் பசுமையாய் நினைவில் ... 😍😍😍

  ReplyDelete
  Replies
  1. பால்யத்துக்குள் டைவ் அடிக்க அந்த மறுபதிப்புகள் பயன்படலாம் சம்பத் ; ஆனால் அவற்றைத் தாண்டிய புதுக்கதைகளுக்குள் முனைப்பு தொடர்ந்திடணுமே ?

   Delete
  2. புதுக்கதைகளை கொண்டு வாருங்கள் .. பால்யத்துக்குள் நுழைய நாங்கள் ரெடி என்று சொல்லிருக்கேன் சார் ... இன்றைய குழந்தைகளுக்கும் பிடிக்கும் .. என் மகனார் சுஸ்கி விஸ்கி / அலிபா கதைகளை அதிகம் விரும்பி படிக்க வைத்து கதை கேட்பவர்

   Delete


 55. சீனியர் எடிட்டர் சார், எடிட்டர் சார், ஜூனியர் எடிட்டர்

  தமிழ் காமிக்ஸ் சொந்தங்கள், நண்பர்கள், ரசிகர்கள் அனைவருக்கும்

  இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
  🌹🌹🌹🌹🌹🌹🌹

  ReplyDelete
 56. சுஸ்கி விஸ்கி இற்கு சிவப்பு கம்பள வரவேற்பு சார். அதுவும் கார்டூன் வரட்சி உள்ள இந்நேரத்தில்

  ReplyDelete
 57. சுஸ்கி விஸ்கி அக்கா அண்ணனுக்கு ஜே!

  ReplyDelete
 58. சுஸ்கி& விஸ்கிகொஞ்சம் ரிஸ்க்கான சப்ஜெக்ட் தான். கார்ட்டூன் வறட்சியை போக்குவதற்க்காக என்று ஆரம்பித்து கார்ட்டூன் என்றாலேதெரித்து ஓடவைத்துவிடும் சீரிஸாக மாற்றிவிடும். வாய்ப்புகள்தான்எனக்குத் தெரிகிறது. மிக கவனமாகக் கையாளவேண்டியதொடர்இதுசார். முன்பதிவுக்கென்று முதலில் ஒரு தொகுப்பை வெளியிட்டுவிட்டு வெற்றியைப் பொருத்து பிறகு முடிவெடுக்கலாம். இன்றையரசனைக்கு ஒத்துப் போகாது என்றே எனக்குத் தோன்றுகிறது த பால் ஈஸ் யுவர் கோர்ட்சார் கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. // முன்பதிவுக்கென்று முதலில் ஒரு தொகுப்பை வெளியிட்டுவிட்டு வெற்றியைப் பொருத்து பிறகு முடிவெடுக்கலாம். //

   நல்ல ஐடியா.

   Delete
 59. மாறாக, உட்சிடீஸ் குழுவினரின் ஒரு மறுபதிப்பு தொகுப்பு, எனதுசாய்ஸ். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 60. // இனி வரும் நாட்களில் மாஸான மைல்கல் இதழ்களைத் தவிர்த்த இதர ஆல்பங்கள் ஹார்ட்கவர் கண்டிடாது ! //

  உங்கள் எண்ணம் படி செய்யுங்கள்.
  ஹார்ட்கவர் இரண்டாம் பட்சம் தான் சார் எனக்கு.
  தொடர்ந்து படிக்க அதிக புத்தகங்கள் கிடைத்தால் எனக்கு அதுவே போதும்.

  ReplyDelete
 61. வணக்கம் நண்பர்களே!

  சுஸ்கி விஸ்கி தொகுப்பாக வர டபுள் ஒகே!

  அடுத்தடுத்த ஆல்பங்களுக்கிடையே மெல்லிய தொடர்ச்சி இருந்தால் தொகுப்பாக வருவதற்கு கூடுதல் எபக்ட் இருக்கும்.

  ஸ்டெர்ன் சரியாக வரும் என்று தோன்றுகிறது.

  இளம் தோர்கல் தொடர் கூட தொகுப்பாக போடலாம்...
  நன்றாக இருக்கிறது!

  ReplyDelete
 62. டியர் சார்,
  சஸ்கி விஸ்கி தாராளமாய் வெளியிடலாம் எப்போதும் போல் இப்போதும் 100 % முழு ஆதரவு , தொகுப்பு ஆகவே வெளியிடுங்கள்.

  ReplyDelete
 63. ஹார்டு கவர்இரண்டாம் பட்சம்தான் படிக்கதொடர்ந்து நிறைய புத்தகங்கள் கிடைத்தால் போதும் எனக்கு//பரணி ப்ரம் பேங்களூர்சார். எனக்கும் அப்படியே. அட்டைஇல்லாத பழையமுத்துகாமிக்ஸ்களை தேடித்தேடி படித்த நமக்கு இன்று புதுப்புதுபுத்தகங்கள் கிடைப்பதே நிறைவான விசயம். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. // அட்டைஇல்லாத பழையமுத்துகாமிக்ஸ்களை தேடித்தேடி படித்த நமக்கு இன்று புதுப்புதுபுத்தகங்கள் கிடைப்பதே நிறைவான விசயம். //

   YES!!

   Delete
 64. Batman try Pannunkga sir ..court of owl type

  ReplyDelete
 65. Sir u forgot the Bond 2.0 .. there was no slots in 2021

  ReplyDelete
 66. i support suske and wiske

  i support clifton-as albums

  ReplyDelete
 67. புத்தாண்டின் சிந்தனைகள் ஆச்சரியப்படுத்தும் கேள்விகள் 2 1. வாட்ஸ்அப் குழுவின் 1700 பேர் நம்ப முடியவில்லை 2. அவர்கள் அனைவரும் சந்தாவில் இருந்தால் எப்படி இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வாட்ஸ்அப் குழு அல்ல நண்பரே.. முகநூல் குழு.!

   Delete
 68. ஆகா ரம்மி பாயாச அண்டாவோட கிளம்பிட்டாரே. ஜி பதிவுக்கு முன்னால விறுவிறு கிளைமாக்ஸை ஒரு தடவை ரீவைண்ட் பண்ணுங்க. அடுப்ப பத்தவைக்கவே மனசுவராது. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 69. கதைகளின் தன்மைக்கென உங்கள் ஓட்டுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ! ?????????

  ReplyDelete
 70. கதைகளின் தன்மைக்கென உங்கள் ஓட்டுகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்களேன் ப்ளீஸ் ! என்ன கருத்து வேண்டும் சார்

  ReplyDelete
 71. சுஸ்கி & விஸ்கி கதைகள்

  இவர்கள் எங்கேயாவது புது இடத்திற்கு செல்வார்கள் / இவர்களைத் தேடி யாராவது உதவி கேட்டு வருவார்கள். செல்லும் புது இடங்களில் யாருக்காவது உதவுவார்கள் அல்லது அங்கிருக்கும் மர்ம
  முடிச்சுகளை அவிழ்ப்பார்கள். குழந்தைகளுக்குக் நேர்மறை சிந்தனைகளையும் மற்றவருக்கு உதவி செய்யும் எண்ணத்தை தூண்டும் வகையிலும் அனைத்து கதைகளும் இருக்கும்.

  கண்டிப்பாக வெளியிடுங்கள் சார். இதுவரை ஆங்கிலத்தில் வெளிவராத நிறைய கதைகள் உண்டு (33 கதைகள் மட்டுமே ஆங்கிலத்தில் வந்துள்ளது). நாம் ஏன் ஆங்கிலத்திலும் வெளியிடக்கூடாது? உலகம் முழுவதும் சந்தைப்படுத்தலாம்.

  +++
  * நேர்மறை சிந்தனைக் கதைகள்
  * அற்புதமான படங்கள்
  * கண்கவர் வண்ணங்கள்
  * புது புது இடங்கள்
  * புது புது களங்கள்

  ---
  * ஒரே மாதிரியான கதையோட்டம்
  * இந்த கதைகள் குழந்தைத் தனமாக இருப்பதால் பெரியவர்களை கவருமா என தெரியாது. (46 வயதானாலும் என்னைப்போன்ற ஒரு சில விதி விலக்குகளும் உண்டு).
  * வரவேற்பில்லாத கார்ட்டூன் ஜானர் (வருத்தமளிக்கும் உண்மை)

  எப்படியோ கார்ட்டூன் கதைகள் தமிழில் வெளிவந்தால் மிக்க மகிழ்ச்சி. வெளிவந்தால் எனக்கெல்லாம் கொண்டாட்டம் தான். முன்கூட்டியே என்னுடைய நன்றிகள் சார்.

  ReplyDelete
  Replies
  1. ஆதவன் அப்படிங்குற படத்துல, வைகைப்புயல் வடிவேலுவோட மாப்பிள்ளையை (சத்யன்) சூர்யா கேங் கட்டி வெச்சிருப்பாங்க.!
   நாங்க சொல்றதை கேக்கலைல்னா உன்னோட மாப்பிள்ளையை கொன்றுவோம்னு வடிவேலுவை மிரட்டுவாங்க.!
   அப்போ வடிவேலு..அய்யா என் மாப்பிள்ளகிட்ட கொஞ்சம் பேசிச்கிறேன்.. வாய்கட்டை அவுத்துவிடுங்கய்யான்னு கேப்பாரு..!
   அவுத்துவிட்டதும் சத்யன் ஹவ்வ்வ்வ்வ்வுன்னு அழுவாரு.. அப்போ வடிவேலு ஒரு வசனம் பேசுவாரு..

   "என்னைய மாதிரியே அழுகுறியே மாப்புளே" ன்னு..

   மேலே நம்ம நண்பர் திருச்சி சங்கர் சுஸ்கி விஸ்கிக்கு ஆதரவா போட்டிருக்கும் பின்னூட்டத்தை படிச்சதும் வைகைப்புயல் சத்யனைப் பார்த்து சொன்ன அதே வசனத்தை சொல்லத்தோணுது..!

   செம்ம சங்கர்..😍😍😍

   Delete
  2. Sankar C @

   மன்னிக்கவும் சார்.!
   எனது நண்பர் திருச்சி சங்கரின் பதிவென்று நினைத்து கொஞ்சம் அதிகப்படியாக உரிமை எடுத்துக்கொண்டு எழுதிவிட்டேன்.! பொறுத்துக்கொள்ளுங்கள் ப்ளீஸ்.!

   மற்றபடி உங்கள் பின்னூட்டத்திற்கு ஆயிரம் சபாஷ் கள்..!

   Delete
  3. @Sankar C

   அருமை நண்பரே!! சுஸ்கி & விஸ்கி கதைகள் பற்றி இதை விடவும் அழகாக விளக்கிவிட முடியாது! யதார்த்தம், நேர்மை, அழகுணர்வு, ஆசை, ஆலோசனை, ஏக்கம், வருத்தம் எல்லாவற்றையும் ஒருங்கே கொண்ட பதிவு!

   Delete
  4. @KiD ஆர்டின் KannaN

   காமிக்ஸ் படிப்பவர்களை சந்திக்கும் போது புதியவர்களாக தோன்றாது.. ஏதோ நெடுநாள் பழகியவர்களாக பேச ஆரம்பித்து விடுவோம்..

   இதுவும் அதுபோலவே சகோ.. மன்னிப்பெல்லாம் தேவையில்லை...

   எல்லோரும் சுஸ்கி விஸ்கி வெளிவர ஆதரவை அழுத்தமாக பதிவு செய்வோம். நல்ல முடிவாக ஆசிரியர் எடுப்பார் என நம்புவோம்.

   நம்பிக்கை தானே வாழ்க்கை..

   Delete
  5. @Erode VIJAY நன்றி நண்பரே...

   தமிழில் வெளிவந்தால் மிக்க மகிழ்ச்சி. நம் கருத்தினை பதிவு செய்தாச்சு.. ஆசிரியர் நல்ல முடிவாக எடுப்பார் என காத்திருக்கிறேன்..

   2004-2005ம் வருடம் நான் ஆசிரியரை சிவகாசியில் சந்தித்த போது கார்ட்டூன் கதைகளை முழு வண்ணத்தில் வெளியிட வேண்டுகோள் விடுத்து வந்தேன். சிலபல வருடங்களுக்கு பிறகு இப்போது நிறைய கதைகள் முழு வண்ணத்தில் தரமான காகிதத்தில் வெளிவருகிறார்ப்போல.. சுஸ்கி விஸ்கியும் வருவார்கள் என நம்புகிறேன். வரட்டும் நிறைய கார்ட்டூன் கதைகள். மகிழட்டும் நம் அனைவரின் மனங்கள்..

   Delete
  6. சங்கர் @ நல்ல தகவல்கள் சுஸ்கி விஸ்கி பற்றி. நன்று.

   Delete
  7. 300 + stories, சொக்கா எனக்கே எனக்கா

   Delete
 72. சுஸ்கி விஸ்கி,தாரளமாக களம் காணலாம் ஐயா,ஆதரவு அதிகமாகிக்கொண்டே போகுது,எதாவது பார்த்து பன்னுங்க

  ReplyDelete
 73. சுஸ்கி விஸ்கி/ +1

  ReplyDelete
 74. சுஸ்கி விஸ்கி +++++++1111111
  தொகுப்பு ++++++++111111111

  ReplyDelete
 75. சுஸ்கி விஸ்கி 300க்கும் மேற்ப்பட்ட கதைகள். க்ளிக் ஆகிட்டால் கொண்டாடலாம். கார்ட்டூன் பஞ்சமே இராது சீக்கிரம் நல்ல முடிவா எடுங்கசார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 76. சுஸ்கி விஸ்கி வரட்டுமே சார்

  ReplyDelete
 77. வரட்டும் வரட்டும் சுஸ்கி

  ReplyDelete
 78. " இனிமேலும் இந்த இறுக்கம் தேவைதானா? "
  " வேறொரு இறுக்கம் நமக்கு அவசியமாகிடும் என்று தோன்றுகிறது"
  பிலிப், ஸோஃபி இடையிலான ரொமான்ஸிங்கான சுபத்துடன் கதை முடிகிறது.
  அர்ஸ் மேக்னா..
  அணுசக்தி கண்டுபிடிப்பு ரகசியத்தைத்தான் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்பது தெரியாமல் தேடும் நாயக, நாயகி.
  புதிர் மேல் புதிராக மர்ம முடிச்சுக்களின் விடையைத் தேடி ஒடிக் கொண்டே இருக்கிறார்கள். முதல் பக்கத்தில் இருந்து, கடைசி பக்கம் வரை விறுவிறுப்பு குறையாமல் அவர்களுடன் நாமும் ப்ரஸ்ஸல்ஸ் நகர வீதிகளிலும், மாளிகைகளிலும் இருண்ட பாதாள அறைகளிலும் சுற்றி வருகிறோம்.
  ஓவியருக்கு கிடைத்த அருமையான வாய்ப்பு. சித்திர அதகளம் செய்திருக்கிறார். ப்ரஸ்ஸல்ஸ் நகர வீதிகளும், பழமை வாய்ந்த கட்டிடங்களும் தேவாலயங்களும் மாளிகைகளும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.

  இந்த வருடத்தின் சிறந்த கதைகளில் ஒன்றாக நிச்சயம் இது இடம் பிடிக்கும்.
  இன்று மாலை 6 1/2 மணிக்கு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து இரவு 8 1/2 மணிக்கு முடித்தேன். நீண்ட மாதங்களுக்குப் பின்பு இன்றுதான் படிக்க முடிந்தது.
  ஆசிரியரின் உழைப்பும், மெனக்கெடலும் ஒவ்வொரு வரியிலும் தெரிகிறது. பராட்டுக்கள் சார். காமிக்ஸ் ரசிகர்கள் யாரும் மிஸ் பண்ணத் கூடாத, அவசியம் படிக்க வேண்டிய கதை.
  மார்க் போட வேண்டுமானால் கதைக்கு 10/10. சித்திரங்களுக்கு 10/10. வண்ண மெருகூட்டலுக்கு 10/10 .

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் விமர்சனம் பத்து சார்.

   Delete
  2. விமர்சனத்தின் ஆரம்பமே அட்டகாசம் பத்து சார்!! என்னாவொரு ரசணை!!

   Delete
  3. அருமையான விமர்சனம் சார்!
   நன்றி!

   Delete
  4. உங்கள் விமர்சனத்துக்கும் பத்துக்குப் பத்து - பத்து சார் !

   Delete
 79. //காமிக்ஸ் ரசிகர்கள் யாரும்மிஸ்பண்ணக்கூடாத, அவசியம் படிக்க வேண்டிய கதை//. பத்மநாபன் சார் யெஸ் . யெஸ் யெஸ் +1111111111111111111.கரூர்ராஜசேகரன்

  ReplyDelete
 80. எடிட்டர் சார் இன்று பதிவுக் கிழமை 🙏🙏🙏

  ReplyDelete
 81. சுஸ்கி விஸ்கியெல்லாம் நான் இதுவரை படிக்காதவை என்ற வகையில், வந்தால் ok தான்.அப்படியே ஏதாவது மாஜிக் செய்து அந்த மந்திரவாதி மாண்ட்ரெக்கையும் களமிறக்குங்களேன் சார்.

  ReplyDelete
 82. சார். மறுபதிப்புவரிசையில் அடுத்த புத்தகம் எதுங்க சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 83. இன்றைய பதிவில் என்ன சிறப்போ ???!!!

  ReplyDelete
 84. பதிவுக்கிழமை இன்று சுஸ்கி & விஸ்கி களம் காண போகிறார்கள் என்கிற நல்ல செய்தியுடன் வருமா

  ReplyDelete
 85. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete
 86. //பெட்ரோமேக்ஸ் லைட்டே வேணும் என்பதில் தப்பில்லை தான் ; ஆனால் அது எரியாட்டியும் பரால்லே என்பதில் நான் உடன்பட்டிட மாட்டேன் guys//

  Semma super Sir

  ReplyDelete