நண்பர்களே,
வணக்கம். 1980-களின் துவக்கமோ - என்னமோ புரட்சித் தலைவர் சிவகாசி வந்திருந்தார் ! அரசியலென்றால் வீசம்படி எவ்வளவென்று தெரியாத நாட்களவை ! ஏதோவொரு பொதுத் தேர்தலில் அவரது கட்சி ஒட்டுமொத்தமாய்த் தோல்வியைத் தழுவியிருக்க, வெற்றியைத் தந்திருந்த இரண்டே தொகுதிகளுள் சிவகாசியும் ஒன்றாகயிருக்க, நன்றி சொல்ல இங்கு வருகை தந்திருக்கிறார் ! அச்சக அமைப்பின் சங்கத்தில் அவருக்கு வரவேற்பு திட்டமிடப்பட்டிருந்தது & அந்நாட்களில் சீனியர் எடிட்டர் தான் சங்கத்தின் (மெய்யாலுமே செயல்பட்ட) செயலர் என்பதால் என்னையும் அங்கு கூட்டிப் போயிருந்தார் ! திபு திபுவென்று கூட்டம் ; அதனுள் திடீர் பரபரப்பு ; சுள்ளானாக இருந்த எனக்கு எதுவும் அவ்வளவாய்த் தெரியவில்லை & வருகை தந்திருப்பது யாரெல்லாம் என்பது கிஞ்சித்தும் புரியவில்லை ! ஆனால் அரை நிமிடம் தான், கண் கூசும் கலரில், அசாத்தியமான personality சகிதம் ஒரு உருவம் உற்சாகமாய் மேடையேறுவதைப் பார்க்க முடிந்த கணத்தில், சுற்று வட்டாரத்தில் இருந்த பாக்கிப் பேரெல்லாம் காணாதே போய் விட்டது போலிருந்தது ! மேடையில் நடுநாயகமாக புன்சிரிப்புடன் அவர் கரம் கூப்பி நின்ற போது அரங்கில் இருந்த அத்தனை கண்களும் அவர் மீதே ! பின்னாட்களில் அரசியல், ஆட்டுக்குட்டி இத்யாதிகளெல்லாம் மண்டைக்குள் ஏறத்துவங்கிய பின்னே - 'அவர் இதைச் செய்தார் ; இவர் அதைச் செய்யலை !' என்று ஏதேதோ கேட்கவும், வாசிக்கவும் துவங்கிய பிற்பாடு எண்ணங்கள், அபிப்பிராயங்கள் என ஏதேதோ உருவாகிடத் துவங்கின ! ஆனால் அன்றைக்கு முதன்முறையாய்ப் பார்த்த அந்த ஆளுமை ; ஆயிரம் பேரின் மையத்திலும் துளி முயற்சியுமின்றி கவனங்களைத் தனதாக்கிடும் வல்லமை மண்டைக்குள் நிலைத்து நிற்கின்றது !
அது சரி , அம்பி இந்த வேளையிலே இதை எதுக்கு சொல்லுது ? என்ற கேள்வியா ? Very simple folks ....!
ஒரு லேட்டஸ்ட் பாணி க்ரைம் த்ரில்லர் முழு வண்ணத்தில் ; ஒரு popular கார்ட்டூன் அணி - எக்ஸ்டரா நீள காமெடி மேளாவுடன் ; ஒரு அசாத்திய சித்திர விருந்துடனான மிரட்டும் கி.நா.படைப்பு & ஒரு மறுபதிப்பு !! இவையே இம்மாதத்து மெனு ! நார்மலாய்ப் பார்த்தால் அந்த மறுபதிப்பு தான் ஒளிவட்டத்தின் கடைசிக் கற்றையைச் சொந்தமாக்கியிருக்க வேண்டும் !
ஆனால்...ஆனால்...இங்கு நடப்பது என்னவோ ?
'அல்லாரும் அப்டி ஓரமாப் போயி வெளயாடுங்க கண்ணுங்களா !' என்றபடிக்கு நடுநாயகமாக டாலடிக்கிறார் மறுபதிப்பில் சுழன்றடிக்கும் நமது 'தல' டெக்ஸ் !! சுற்றிலும் எத்தனை பேர் இருப்பினும், அந்த மஞ்சள் சட்டை சதுர தாடைக்காரர் அத்தனை போரையும் தனது ஆளுமையால் ஊதித் தள்ளுவதைப் பார்க்கும் போது, 1980-களின் அந்த நாள் தான் நினைவுக்கு வந்தது !
"கழுகு வேட்டை" !! சந்தாவின் முதல் புள்ளியாய் இந்த இதழே இருந்திட வேண்டுமென்பதை நண்பர் மகியின் தொகை கிடைக்கப் பெற்ற தினமே தீர்மானித்திருந்ததால், அட்டைப்பட டிசைனிங்குக்கு ; நகாசு வேலைகளுக்கு ; எடிட்டிங்குக்கென கணிசமான அவகாசம் கிட்டியிருந்தது ! எப்போதுமே தயாரிப்பினில் இயன்ற அத்தனையையும் செய்யத் தோன்றுவதே நமது இயல்பு என்றாலும், இம்முறை இதுவொரு மைல்கல் இதழாக இருந்திடவுள்ள சூழலில், leave no stones unturned என்று தீர்மானித்தேன் ! And இங்கே போனெல்லியின் சகாயமும் கொஞ்சம் உண்டு ! அவர்களது TEX கருப்பு வெள்ளைப் பதிப்புகளே பின்னாட்களில் இத்தாலிய செய்தித்தாளுடனான ஒரு மெகா கூட்டணியினில் கலரூட்டப்பட்டு மிரட்டலாய் வலம் வரத்துவங்கின என்பதை அனைவரும் அறிவோம் ! So நமக்கு அந்த வண்ணக்கதைகளின் உரிமைகளை அவர்கள் வழங்கும் போது, ஒரிஜினலாய் b&w-ல் வெளியான போது போடப்பட்ட அட்டைப்பட டிசைன்களையே வழங்கிடுவர் ! அந்த செய்தித்தாளுடன் கரம்கோர்த்த முயற்சியினால் உருவாக்கப்பட்ட பிரத்யேக அட்டைப்படங்களை இதுவரையிலும் அவர்கள் நமக்குத் தந்ததில்லை ! ஆனால் எனக்கோ அந்த exclusive கவர்களைப் பார்க்கும் போதெல்லாம் ஜொள்ளுப்பிரவாகமே எடுக்கும் ! இம்முறை கேட்டுத் தான் பார்ப்போமே என்று மெதுவாய் ஒரு கோரிக்கையை முன்வைக்க, மறுப்பின்றி அனுப்பித் தந்தார்கள் !! And அதுவே இப்போது நமது கழுகு வேட்டையின் முகப்பிற்குப் புது மெருகூட்டிடுகிறது ! Of course அவர்களது டிசைனை நாம் கோகிலாவைக் கொண்டு நமக்கேற்றார் போல மாற்றியமைத்ததும், பொன்னனைக் கொண்டு அந்த நகாசு வேலைகளைச் செய்திட்டதும் தொடர்ந்தன தான் ; ஆனால் ஓவியர் Claudio Villa-வின் அந்த மிரட்டும் டிசைனே இங்கு show stopper !! அப்புறம் பழைய "எல் ம்யூர்டோ" - எடிட்டிங்கின் போது சரியான உச்சரிப்பாய் மாற்றம் கண்டது ; அதற்கோசரம் சில வாடிய முகங்கள் நம் மத்தியில் இருக்குமே ; அவர்கட்கு எவ்விதம் சமாதானம் சொல்வது ? என்ற ரோசனை ஓடியது - என பணிகள் நிறைவுற்றன !
தொடர்ந்தது தான் பெரும் சவால் : போட்டோக்களை சேகரிப்பது ; சந்தாதாரர்கள் பெயர்கள் ஒன்றாகயிருக்க, அவர்கள் அனுப்பி வைத்த போட்டோக்களினடியில் போடக் கோரிய பெயர்கள் வேறாக இருக்க - அந்தப் பஞ்சாயத்துக்களை சிக்கலின்றிக் கையாள நம்மவர்களுக்கு அவகாசம் தந்ததே ஓரளவுக்கு சேதாரங்களை (இதுவரையிலுமாவது) மட்டுப்படுத்தியுள்ளது !
And yes - "கழுகு வேட்டை" புக்கினில் தமது போட்டோக்களை பார்த்திட விரும்பும், சந்தாவில் இல்லாத நண்பர்களுக்கும் வாய்ப்பு இதோ துவங்குகிறது ! நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான் : ஞாயிறு (ஏப்ரல் 4 ) முதல் ஏப்ரல் 11 வரையிலும் உங்கள் போட்டோக்கள் + தேவையான புக்ஸிற்கான பணத்தினை அனுப்பினால், தொடரும் மறு வாரத்தினில் உங்கள் போட்டோக்களுடனான புக்ஸை 'ஏக் தம்மில்' முடித்து அனுப்பிடலாம் ! Please note : இது ஒருசேரச் செய்திட மட்டுமே சாத்தியப்படும் ; "நேத்திக்கே அனுப்பிட்டேன், இன்னுமா ரெடியாகலை ?" என கண்சிவந்து இங்கே எதுவும் ஆகிடாது ! So பொறுமை அத்தியாவசியம் please ! And ஏப்ரல் 11-க்குப் பின்பாய் இதற்கான தேதி நீட்டிக்கப்பட மாட்டாது என்பதையும் சொல்லி விடுகிறேன் folks !
அப்படியே அடுத்த deadline சார்ந்த சமாச்சாரமுமே ! "இரத்தப் படலம்" வண்ணத்தொகுப்பின் முன்பதிவினை சந்தா சேகரிப்புகளின் பொருட்டு தாற்காலிகமாய்ப் பரணிற்கு ஏற்றியிருந்தது நினைவிருக்கலாம் ! And அதனை மீண்டும் தரைக்குக் கொணரும் தருணம் புலர்ந்து விட்டது ! So மே 31 வரையிலும் இதன் முன்பதிவு அரங்கேறிடும் ! So இறுதி முறையாய் இ.ப.தொகுப்பினை சேகரிக்க எண்ணும் நண்பர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திடலாம் ! ஜூன் முதல் தேதிக்கு அச்சுக்கு கிளம்பி விடுவோம் என்பதால் அதன் பின்னே நம்மிடம் வாங்கிட வழிகள் இராது ! So பந்து மறுக்கா உங்கள் பக்கமே folks ! பாதிக்கிணற்றைத் தாண்டியுள்ள நிலையில், மீதத்தையும் தாண்டி விட்டோமெனில், அடுத்த பணிகள் பக்கமாய்ப் பார்வைகளை ஓட விடலாம் !
"ஒற்றை நொடி .ஒன்பது தோட்டா"..... "கென்யா".... and இன்னும் சில தயாராகி, பேந்தப் பேந்த நிற்கின்றன , என்றைக்கு, எப்போது ஸ்லாட் கிடைக்குமோ ? என்ற பரிதவிப்பினில் ! So முன்னே நிற்கும் இந்த "13" ரயில்வண்டியானது ஊர் சென்று சேர்ந்து விட்டால் - பின்னே லைனில் நிற்கும் ரயில்களுக்கு வழி பிறக்கக்கூடும் ! இதில் கொடுமை என்னவெனில், "ஓ.நொ.ஓ.தோ" - "இ-ப'வுக்கு tough கொடுக்கவல்ல தெறிக்கும் த்ரில்லர் ! அதனில் 60% பணிகளை முடித்து வைத்துக் கொண்டு, ஓராண்டாய் அடைகாத்து வருகின்றேன் ! And "கென்யா" கிட்டத்தட்ட 90% complete ! Of course நடப்பாண்டில் ஈரோடு புத்தக விழா நிஜமாகிடும் பட்சத்தில் அதுவொரு வாகான வாய்ப்பே ; ஆனால் நித்தமும் ஒலித்து வரும் கொரோனா அபாயச் சங்கானது நமக்கெல்லாம் ஆண்டின் மத்தியினில் என்ன சேதியினை சொல்லக் காத்துள்ளதோ ? என்பது புதிராய் உள்ள நிலையில் திட்டமிடவே டரியல் எடுக்கிறது !! So இப்போதைக்கு "13" முழுமை கண்டால் அடுத்த project சார்ந்து திட்டமிட இயலும் !
Looking ahead - புதுச் சந்தாவின் முதற்புள்ளியினில் நாம் நின்று கொண்டிருந்தாலுமே, எனது பார்வையானதோ - 2022 மீது ஓடிக்கொண்டிருக்கிறது ! நிறைய காரணங்களின் பொருட்டு வழக்கத்தை விடவும் சடுதியாகவே அடுத்தாண்டின் திட்டமிடலிலும் முனைப்பு காட்டிட வேண்டியுள்ளதால் இந்த early bird அவதார் ! And அந்தத் திட்டமிடல்களின் ஒரு அங்கமாய் ஒரு கேள்வியும் ; அதன் நீட்சியாய் ஒரு கோரிக்கையும் :
லார்கோ வின்ச் தொடரினில் கதாசிரியர் வான் ஹாம் VRS வாங்கிக் கொண்டதும், புதியதொரு கதாசிரியரின் துணையோடு ஓவியர் Francois Boucq தொடர்வது பற்றியும் முன்னமே பேசியிருக்கிறோம் ! And அவர்களது முதல் கூட்டுப்படைப்பு கொஞ்ச மாதங்களுக்கு முன்னே 2 பாக ஆல்பமாய் ரெடி ! ஆனால் சிக்கல் என்னவெனில், கதையோட்டம் ஏகமாய் big business / பங்குச் சந்தை நுணுக்கம் சார்ந்த தொனியில் பயணிப்பதால், ரொம்பவே ஜெர்க் அடித்தது எனக்கு ! அதனை மொழிபெயர்ப்பது முழிபிதுங்கும் பணியாய் இருக்கும் என்ற அச்சமும் எனது ஜெர்க்குக்கு ஒரு காரணம் ! எனது கேள்வி இதுவே : லார்கோ தொடரினில் இதை skip செய்திடலாமா - அல்லது இதுவும் வேணுமா ? தாண்டிச் செல்லலாம் எனில், no probs ! "இல்லே..இதுவும் வேணுமே !!" என்பதே பெரும்பான்மையின் கோரிக்கையெனில் - இதோ எனது counter கோரிக்கை ! இதனை மொழிபெயர்க்க தம்மோ, பொறுமையோ, அவகாசமோ நிச்சயமாய் நம் அணிக்கு லேது ! So பேனா பிடிக்க திறனும், தெளிவும் உள்ளதென்ற நம்பிக்கை கொண்டோர் can give it a try ! இப்போதே இந்த முயற்சிக்குத் துவக்கம் தந்தால் தான் 2022-ன் அட்டவணைக்குள் இதனை நுழைக்க இயலுமா ? இயலாதா ? என்பதற்கான விடை கிட்டும் என்பதால் இப்போதே Kaun Banega Translator ? ஆட்டத்தைத் துவக்கி விடலாம் !
இங்கே சின்னதாயொரு catch உள்ளது guys : வழக்கமாய் நண்பர்கள் வசம் ஒப்படைக்கும் பணிகளில் நான் முழுமையாய் உட்புகுந்து அவசியமென எனக்குத் தோன்றிடும் மாற்றங்களை கணிசமாகவே, வெகு கணிசமாகவே செய்வதுண்டு ! நண்பர்களின் outputs சற்றே raw ஆக இருப்பினுமே, அவற்றைச் செப்பனிட்டு வந்தேன் ! ஆனால், இதுவோ பல்லெல்லாம் ஆட்டம் காணச் செய்யும் பணியெனும் போது - நான் மறுக்கா உள்ளே புகும் வாய்ப்புகள் பூஜ்யம் ! So பேனா பிடிப்போரின் script ஓ.கே. எனில் ரைட்டு - லார்கோவை அட்டவணைக்குள் நுழைத்திடலாம் ! ஊஹூம்...scripts பட்டி டிங்கரிங்களின்றித் தேறாதென்று இருப்பின், அப்படியே பரண் பக்கமாய்த் தான் அவற்றைச் சாத்தி வைக்க நேரிடும் ! So மணந்தால் மஹாதேவி ; சொதப்பினால் பரணிலுள்ள கறுப்புக் கிழவி - என்பதே ஆட்ட விதிகள் ! முயற்சிக்க முனைவோர் இங்கோ, மின்னஞ்சலிலோ கைதூக்கிடலாம் !
ரைட்டு...ஏப்ரல் இதழ்களின் அலசல்களுக்குள் பிஸியாகிட முயற்சியுங்களேன் folks என்றபடிக்கே நான் கிளம்புகிறேன் - "நெஞ்சே எழு" டெக்ஸுடனான பயணத்திற்கு ! இன்னமும் ஒரு 25% சந்தா நண்பர்கள் சந்தா டிக்கெட் போடாது இருப்பதை நினைவூட்டிவிட்டு, கிளம்பினால் தேவலாம் என்று பட்டதால் - இன்னொரு நினைவூட்டல் all !
Bye all...see you around ! Have a cool weekend !
P.S : நண்பர்களின் அரவணைப்புகள் பற்றியும், இந்தப் பேரிடர் நாட்களில் அவரவருக்கு சாத்தியப்பட்டு வரும் ஒத்தாசைகளை செய்திடுவது பற்றியும் இம்மாத ஹாட்லைனில் எழுதியிருந்தேன் ! அந்த மசி உலர்ந்திருக்கும் முன்பாய் மின்னஞ்சலொன்று வந்திருந்தது - கணிசமான பணப் பரிமாற்றத் தகவலுடன் ! ரொம்பச் சீக்கிரமே இந்தப் பேரிடர் நாட்களின் தன்மையினைப் புரிந்து கொண்ட நமது பொருளாளர்ஜி சந்தாவினில் இணைந்திட இயலா நண்பர்களின் பொருட்டு மொத்தமாய் அனுப்பியுள்ள தொகைக்கு, நாம் அறுபதாயிரம் நன்றிகளைச் சொல்லிட வேண்டும் ! அதிலும், இல்லத்தில் அதிமுக்கிய நிகழ்வு காத்திருக்கும் தருவாயிலும், "என் வாக்கினை நான் காத்திடத் தவறிடல் தப்பாகிடும் சார் !" என்ற வரிகளுடன் !!
லட்சம் ; அறுபது ; என்று நம்பர்களுக்குள் அடைப்பதல்ல இங்கு நீங்கள் ஒவ்வொருவரும் காட்டி வரும் அன்புகளானது ! And பணமே அன்புகளின் அளவுகோல்களாகிடவும் செய்யாது ! இங்கே ஒவ்வொரு சனியிரவும் காத்திருந்து ஆஜராகி "Me the first" என்று பதிவிடும் அந்த ஆர்வங்களுக்குப் பின்னுள்ள அன்புக்குமே கூட விலைமதிப்பேது ? Phew !!
நிறைய..நிறைய..நிறைய கடன்பட்டுக் கொண்டே போகிறேன் folks - உங்கள் அனைவரிடமும் ! இவற்றையெல்லாம் தீர்க்கும் வரையிலாவது பணியாற்ற உடம்பிலும், உள்ளத்திலும் வலுவிருக்கப் பெருந்தேவன் மனிடோவிடம் கோரிக்கையினைப் போட்டு வைக்கணும் !! And thanks a ton sir !!
முதலில்.
ReplyDeleteஅருவாக்கார அய்யனாருக்கு வாழ்த்துக்கள்..
Delete3
ReplyDeleteஏ அஜக்கு ஏ டுமுக்கு
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteபோடுங்கப்பா ஓட்டு...
ReplyDeleteஉப்மாவ பாத்து...
இப்போல்லாம் நூடுல்ஸ் சார் !
Deleteஆமாம் ஜி. மல்டி கிரைண் நூடுல்ஸ் பக்கம் தாவியாச்சு
Delete7வது
ReplyDeleteபணமே அன்புகளின் அளவுகோல்களாகிடவும் செய்யாது !
ReplyDeleteநிச்சயமாக நமது வாசக வட்டத்தில் கிடையாது சார்!
உள்ளேன் ஐயா.
ReplyDeleteஆஜர்
ReplyDeleteலார்கோ... Come
ReplyDeleteலார்"go"நஹி
காலம் முழுவதும் எங்கள் காமிக்ஸ் பயணம் தொடர்ந்திடும் சார்,உங்க காமிக்ஸ், மூலமாக நாங்கள் இன்னும் சிறு குழந்தையின் மனம் போல் உள்ளது,இதை படைக்கும் உங்களுக்கு எப்படி உள்ளது, ஆசானே
ReplyDeleteசார்...படைப்பது கண்காணா தொலைவில் உள்ள ஜாம்பவான்கள் ; நாம் அவற்றை பத்திரமாய் டெலிவரி செய்யும் ZOMATO பாய்ஸ் !!
Deleteசிந்தாமல், சிதறாமல், சூடு குறையாது - பசியறிந்து கொண்டு வந்து சேர்ப்பிப்பதே நம் கடமை ! அதுவே செம ஜாலியான பொறுப்பு என்பதால் சந்தோஷத்துடன் செய்து வருகிறோம் !
பதிவுக்காக காத்திருந்து,பதிவை கொடுத்ததற்க்கு நன்றி 😘
ReplyDelete16th
ReplyDeleteஎங்க தல லார்கோ வுக்கு டபிள் ஓகே. யார் அந்த translator??? I'm waiting. நமது நண்பர்களில் நிறைய ஆடிட்டர் உள்ளனர் அவர்களில் ஒருவர்??? நண்பர் மிதுன்???
ReplyDeleteசார்,என்ற அடை மொழி வேண்டாம் ஆசானே,காமிக்ஸ் உலகில் உள்ள அத்தனை,நண்பர்களும் உங்களுக்கு உடன் பிறவா சகோதரர்கள்,யாரையும் சார் மோர் என்று கூறி தனிமை படுத்த வேண்டாமே ப்ளீஸ்
ReplyDeleteலார்கோ o.k Sir.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDelete// ஒற்றை நொடி .ஒன்பது தோட்டா"..... "கென்யா".... and இன்னும் சில தயாராகி, பேந்தப் பேந்த நிற்கின்றன , என்றைக்கு, எப்போது ஸ்லாட் கிடைக்குமோ ? // இப்போவே நீங்கள் ஒரு ஸ்பெஷல் ஸ்லாட் போட்டால் வேண்டாம் என்றா சொல்ல போகிறேன்.
ReplyDelete// பொருளாளர்ஜி சந்தாவினில் இணைந்திட இயலா நண்பர்களின் பொருட்டு மொத்தமாய் அனுப்பியுள்ள தொகைக்கு, நாம் அறுபதாயிரம் நன்றிகளைச் சொல்லிட வேண்டும் //
ReplyDeleteபாராட்டுக்கள் செல்வம் அபிராமி. உங்கள் காமிக்ஸ் நேசம் மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஒரே நேரத்தில் பரணி
Delete// நமது பொருளாளர்ஜி சந்தாவினில் இணைந்திட இயலா நண்பர்களின் பொருட்டு மொத்தமாய் அனுப்பியுள்ள தொகைக்கு, நாம் அறுபதாயிரம் நன்றிகளைச் சொல்லிட வேண்டும் // பொருளாளர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஆமாம் குமார்.
Deleteஇருக்கோமுங்...
ReplyDelete🙏🙏
ReplyDeleteகென்யாவை விட நான் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பது ஒற்றை நொடி ஒன்பது தோட்டாவைத்தான். விரைவில் வெளியிட வேண்டுகிறேன் சார். லார்கோ பணிகள் கடுமையாகத்தான் இருக்கும்.. இப்போதைய கடும் சூழலில் போதுமான கால அவகாசம் கிட்டுமா தெரியவில்லை. ஆயினும் முயற்சிப்போர் முன்னேற்ற சங்கப் பட்டியலில் துண்டு போட விழைகிறேன் சார்..
ReplyDeleteவழி "மொழி"கிறேன் சார்...
Deleteஷெரீப் அங்கிளுக்கு தாங்க்ஸ்... டெக்ஸ் ன் கழுகு வேட்டை புத்தகத்தில் எடிட்டர் அங்கிள் எனக்கு கதை சொல்லும் போட்டோவுடன் வந்திருக்கு. ரொம்ப சந்தோசம்... இந்த வாய்ப்பைக் கொடுத்த ஷெரீப் அங்கிளுக்கு சந்தோசம்... (நன்றி சொல்லாதே சந்தோசமுன்னு சொல்லு, அப்படின்னு என் டாடி சொல்ல சொன்னார்)
ReplyDeleteSN பிரனேஷ்...
அப்பாடா, சந்தா பணம் செலுத்தியாச்சு.
ReplyDeleteதிங்கள் கிழமை பொட்டி வந்துடும். அப்புறம் சார் அந்த கென்யா, அமெரிக்கா, ஐரோப்பா அப்படினு எதை வேண்டுமானாலும் களமிறக்குங்கள்.
நான் ஆவலாக உள்ளேன்.
33..
ReplyDeleteரத்தப்படலம் முன்பதிவு தொகை எத்தனை ரூபாய் அனுப்ப ேவண்டும்?
ReplyDeleteஇந்தப் பேரிடர் நாட்களின் தன்மையினைப் புரிந்து கொண்ட நமது பொருளாளர்ஜி சந்தாவினில் இணைந்திட இயலா நண்பர்களின் பொருட்டு மொத்தமாய் அனுப்பியுள்ள தொகைக்கு, நாம் அறுபதாயிரம் நன்றிகளைச் சொல்லிட வேண்டும் ! அதிலும், இல்லத்தில் அதிமுக்கிய நிகழ்வு காத்திருக்கும் தருவாயிலும், "என் வாக்கினை நான் காத்திடத் தவறிடல் தப்பாகிடும் சார் !" என்ற வரிகளுடன் !! //
ReplyDeleteநன்றி என வெறும் வார்த்தையாக கூறக்கூடாது....இமயமலை போல் உயர்ந்து நிற்க்கிரீர்கள் சார்...என்ன எழுதுவதென எழுத்தே வரவில்லை....நிச்சயம் காலங்கள் கடந்து காமிக்ஸ் உறவுகள் வாழும்...
நிறைய..நிறைய..நிறைய கடன்பட்டுக் கொண்டே போகிறேன் folks - உங்கள் அனைவரிடமும் ! இவற்றையெல்லாம் தீர்க்கும் வரையிலாவது பணியாற்ற உடம்பிலும், உள்ளத்திலும் வலுவிருக்கப் பெருந்தேவன் மனிடோவிடம் கோரிக்கையினைப் போட்டு வைக்கணும்///
ReplyDeleteஎன்மகள்கள் வந்து இரத்தப்படலம் மறுமறுமறுமறுபதிப்பு கேட்பார்கள் சார் உங்களிடம் நீண்ட ஆயுளுடன் நிச்சயம் நீங்கள் எங்களுடன்...
லார்கோவிற்கு ஓய்வு அளித்துவிட்டு அவரையும் தாண்டி பார்வையை ஓட்ட எனது ஓட்டு.
ReplyDeleteமுன்பும் கூறி உள்ளேன் மீண்டும் ஒரு முறை,
இப்பொழுதெல்லாம் சந்தாவில் பிடித்தது க்ராபிக் நாவல்கள் மற்றும் ஜம்போ வே. அந்த அளவிற்க்கு தேர்வுகளில் வெரைட்டி மற்றும் கதைகளும் நன்றாக அமைந்துவிடுகிறது.
விரைவில் அனைத்துமே க்ராபிக் நாவல்கள் சந்தாவாக மாற ஆசை.
இதே தான் எனது அவாவுமே.....
DeletePhotoவை WhatsApp or mail - எதில் அனுப்பவேண்டும் sir
ReplyDeletemail நல்லது..சார்
Deleteநன்றி நண்பரே
Deleteலார்கோ கொண்டு வரலாம் சார் (அதிலேயும் என்னதான் வான்ஹேம் சொல்ல வரார்னு தெரிஞ்சிக்கலாம் 😃) யாராவது மொழிபெயர்த்து விட்டு அதை யாராவது ப்ரூப் ரீடிங் பார்த்து கொடுத்தால், உங்களுக்கு படித்து பார்க்கவும் சிரமம் கொஞ்சம் குறையுமல்லவா சார்! கழுகு வேட்டை விற்பனையில் கலக்குவார்னு எதிர்பார்த்ததுதான்! அப்புறம் கென்யா, ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வாய்ப்பு கிடைக்கும் போது போட்டுத் தாக்கலாம் சார்😊 இரத்தப்படலம் முன்பதிவு இதுவரை வந்துள்ள நிலவரத்தையும் சொன்னால் நம்மவர்களுக்கு அடிக்கடி நியாபகப்படுத்திய மாதிரியும் இருக்கும்!
ReplyDelete43வது
ReplyDelete// கழுகு வேட்டை" புக்கினில் தமது போட்டோக்களை பார்த்திட விரும்பும், சந்தாவில் இல்லாத நண்பர்களுக்கும் வாய்ப்பு இதோ துவங்குகிறது //
ReplyDeleteஹைய்...
// நெஞ்சே எழு" டெக்ஸுடனான பயணத்திற்கு ! //
ReplyDeleteதலைப்பே ஆர்வத்தை கூட்டுதே...
// மறுபதிப்பில் சுழன்றடிக்கும் நமது 'தல' டெக்ஸ் !! //
ReplyDeleteதல வண்ணத்தில் மெர்சல் கொடுக்கிறார் சார்...
இரத்தப்படலம் முன்பதிவு பற்றி ஒரு சின்ன update போடுங்க சார்..கூடவே ஒரு விளம்பர போட்டோ....
ReplyDelete// லார்கோ தொடரினில் இதை skip செய்திடலாமா - அல்லது இதுவும் வேணுமா ? //
ReplyDeleteகிர்ர்ர்ர்ர் அடிக்கும் பணி எனில் அவசரம் தேவையில்லை,வாகான நேரத்தில் பணியாற்றிக் கொள்ளலாமே...!!!
// கிர்ர்ர்ர்ர் அடிக்கும் பணி எனில் அவசரம் தேவையில்லை,வாகான நேரத்தில் பணியாற்றிக் கொள்ளலாமே...!!! //
Delete+1
// So முன்னே நிற்கும் இந்த "13" ரயில்வண்டியானது ஊர் சென்று சேர்ந்து விட்டால் - பின்னே லைனில் நிற்கும் ரயில்களுக்கு வழி பிறக்கக்கூடும் ! //
ReplyDeleteஸ்டார்ட்டிங் டிரபுள்...
//;Of course நடப்பாண்டில் ஈரோடு புத்தக விழா நிஜமாகிடும் பட்சத்தில் அதுவொரு வாகான வாய்ப்பே //
ReplyDeleteவிரைவில் ஐம்பது லட்சம் பார்வைகளை நமது தளம் தொட இருப்பதால் இன்னொரு திட்டமிடுலும் அவசியமாகலாம்...
This comment has been removed by the author.
ReplyDelete52nd
ReplyDeleteபொருளாளரின் அன்பு மனதுக்கும், ஈகைக் குணத்திற்கும் சீக்கிரமே அவருக்கு மாடஸ்டியுடன் மீன் பிடிக்கும் வாய்ப்புக் கிட்டட்டும்!
ReplyDeleteபதிவில் பொருளாளரைப் பாராட்டிய கையோடு கடைசியாய் ஷெரீப்பின் போட்டோவைப் போட்டீங்க பாருங்க - அங்க நிக்கறீங்க எடிட்டர் சார் நீங்க!
டியர் எடி,
ReplyDeleteஅட்டகாசமான தரத்தில் கழுகு வேட்டை சிறப்பிதழை வெளியிட்டதுக்கு உங்களுக்கும், உங்கள் அணிக்கும் பாலாட்டுகள் பல. சிறப்பு அட்டையுடன் வத்தது தான் மைல்கல். இதையே நமது அனைத்து டெக்ஸ் வண்ண இதழ்களுக்கும் போனலி அனுமதிப்பார்களா? அனுமதித்தால் களைகட்டலாம்.
இன்னொரு சிறப்பு, எனது குடும்ப போட்டோ சிறப்பாக அச்சடிக்கபட்டது. நான் குறிபிட்டு கேட்கவில்லை என்றாலும், என் பெயரை பிழையில்லாமல் முழுவதும் அச்சடித்த சிரத்தைக்கு, Thanks a Ton again.
Largo இதழ் மிஸ் பண்ண கூடாது. என்னை விட பல மொழிபெயர்ப்பு ஜாம்பவான்கள் இங்கு உண்டென்பதால், அவர்கள் கைதூக்குவார்கள் என்று ஜகா வாங்கி கொள்கிறேன்.
13 சீக்கிரம் நகரட்டும், காத்திருக்கும் இதழ்கள் களம் காண ஏதுவாக.
Wonderball😍😍😍😍. கடவாய் ஒழுக ஆரம்பிச்சது தான் மிச்சம். 22 லாவது எல்லாம் வெளி வர உதவு ஆத்தா.
ReplyDelete#####பொருளாளர்ஜி சந்தாவினில் இணைந்திட இயலா நண்பர்களின் பொருட்டு மொத்தமாய் அனுப்பியுள்ள தொகைக்கு, நாம் அறுபதாயிரம் நன்றிகளைச் சொல்லிட வேண்டும்####
ReplyDeleteமனமார்ந்த பாராட்டுக்கள் செ.அனா அண்ணா.
சந்தாவில் இல்லாதவர்கள் , கழுகு வேட்டை புத்தகத்தில் புகைப்படம் இடம் பெற, புகைப்படத்துடன் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் ஜி
ReplyDelete61
ReplyDeleteசார் அட்டகாசப் பதிவு.....
ReplyDeleteமகியின் நல்ல மனதும் உங்க நல்ல மனதும் கூடும் போது பவர் அதிகம்தானே தலையோடு ஒன்றும் போது...மீண்டும் நன்றிகள் கோடி...புத்தகத்த பார்க்கத் துடிக்கிறேன் அந்த தயாரிப்பின் சிலாகிப்புகளை கண்டு...என் மகனின் இவ்வுலக வரவிற்காக காத்திருந்ததைப் போல அடுத்த வாரம் ஊரிலிருந்து வர உள்ள என் மகன் பிரிக்க...
என் தம்பி...தங்கை குடும்பத்துக்கு அவர்கள் புகைப் படத்தோடு பரிசளிக்க இரண்டு புத்தகங்களுக்கு முன் பதிவு அலுவலகம் திறந்ததுமே...
பதிமூன்று பட்டய கிளப்பப் போவது உறுதி....இப்ப நீங்க சிலாகிக்கும் கழுகு வேட்டையத் தாண்டி....நண்பர்கள் பாய்ந்து வருவர் என பட்சி பறக்கிறது...
நம்ம கென்யா...ஒற்றை நொடி....இரண்டையும் எப்பாடு பட்டாவது ஈரோட்டு மலராய் கொண்டு வந்து விடுங்கள்....அதற்கான வாய்ப்புகளை வழங்க செந்தூரான் அருளை வேண்டுகிறேன்...
லார்கோ நிச்சயமாய் வேண்டும்....தமிழாக்கத்தை அனுப்பினால் பங்குச் சந்தை சார்ந்த விசயங்களை சரிபார்க்க என்னாலியன்ற முயற்சிகளை தர நான் தயார்...
நண்பர்கள் நீங்க ..ஈவி...செனா...மகி...மற்றும் பலர் செய்யும் உதவிகள் திகைப்பில் ஆழ்த்துகின்றன....இவர்கள் டெக்சின் அவதாங்களே வாழ்க...வளர்க...இவங்கள பங்களிப்பு பாக்கயில் மனம் வெட்கப் படுகிறது...நிச்சயமா சிறு தொகையானது தர இயலும்தா...ஆனா மனது...அதை கடந்து வரும் போது எனது பங்களிப்பும் விரைவில் இருக்கும்...தாமதமாகலாம்....நிச்சயம் உண்டு சார் செந்தூரான் அருளுடன்....மீண்டும் நன்றிகள் நண்பர்களே...
உங்களை போன்ற வெள்ளந்தி் மனிதர்களின் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளுமே காமிக்ஸ் பயணத்தை சிறப்புற செய்யும் சிறந்த பங்களிப்பு ஸ்டீல். மற்றவற்றைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
Delete///..ஈவி...செனா...மகி...மற்றும் பலர் செய்யும் உதவிகள் திகைப்பில் ஆழ்த்துகின்றன///
Deleteலிஸ்ட்டுல என் பேரா?!! அதுவும் மொதல்லயா?!! ஹோ ஹோ ஹோ...!!! உங்க வெள்ளந்தித்தனத்துக்கு ஒரு அளவே இல்லீங்களா ஸ்டீல்?!!
மகி வாழ்க்கைப் பயணத்துல மகிழ்ச்சி துன்பம் எல்லாமே கடந்த பின் சாதாரணமே...நிலைப்பதில்லை எதுவும்....ஆனா காலத்தால் செய்யும் உதவி....வள்ளுவரே சொல்லிட்டாரே
Deleteநா வெள்ளந்தின்னு நினைக்கும் நீங்க வெள்ளந்திதானே....
This comment has been removed by the author.
ReplyDelete64th
ReplyDeleteHi..
ReplyDeleteலார்கோ நிச்சயமாக வேண்டும் சார்
ReplyDeleteலார்கோ தற்போது உள்ள புத்தகங்கள் ஓரளவு குடோனைவிட்டு வெளியேறிய பிறகு வெளியிட/திட்டமிட முடியுமா சார்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete* எனக்கு லார்கோ கதைகள் பிடிக்கும் தான்! ஆனால் பங்குச்சந்தை குழப்படிகள் இல்லாத ஆக்ஷன் கதையென்றால் மட்டுமே 'யெஸ்'னு சொல்லுவேன்.. இல்லேன்னா கடந்தகாலத்தில் லார்கோவின் சேல்ஸ் ரிப்போர்ட் நமக்குச் சொன்ன பாடத்தை நாம் கருத்தில் வைப்பது நல்லது!
ReplyDelete* எனக்கு கழுகு வேட்டை இன்னொரு பிரதி வேண்டும்; என் தற்போதைய ஃபோட்டோவுடன்! (யாருடைய கண்ணும் பட்டுவிடாமலிருக்க ஃபோட்டோவிலேயே திருஷ்டிப் பொட்டு வச்சு அனுப்பிடலாம்னு இருக்கேன்.. ஹிஹி!!) நாளை பணம் அனுப்புகிறேன்!
* 'ஒ.நொ.ஒ.தோ' & 'கென்யா' ஆகியவை 'ஷ்யூர் ஹிட்' ரகம் என்பதால் கிடைக்கும் கேப்பில் எப்போது வேண்டுமானாலும் களமிறக்குங்கள் சார்! இரண்டுமே சிலபல வருடங்களாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன!
* அடுத்த மாதம் வெளியாகயிருக்கும் டெக்ஸ் கதையின் தலைப்பு அட்டகாசம் சார்! ரொம்பவே அபாயகரமான தலைப்பும் கூட!! பிரின்ட்டிங்கின் போது தலைப்பில் எழுத்துப் பிழை எதுவும் நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
* சந்தா செலுத்தாமலிருக்கும் அந்த 25% நண்பர்களுள் 15 சதவீதத்தினர் இன்னும் ஒரு வாரத்திற்குள்ளும், மீதமுள்ள 10 சதவீதத்தினர் இந்த மாத இறுதிக்குள்ளும் சந்தா குடும்பத்தில் இணைந்துவிடுவார்கள் என்று புனித மனிடோ என் கனவில் வந்து சொல்லியிருக்கிறார்! 'சந்தா குடும்பமே - சந்தோஷக் குடும்பம்' என்பதைத் தற்போது எல்லா நண்பர்களுமே உணர்ந்து வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! மிக விரைவிலேயே உங்களது '1000 சந்தாக்கள் - கனவு' பலித்திடவும் புனித மனிடோ அருள்புரிவார்!! இன்பாக்ட், உங்களின் அந்தக் கனவு பலித்திட புனித மனிடோவால் அனுப்பப்பட்ட அவரது அடியாட்கள் தான் நமது ஷெரீப், செனாஅனா, PfB, KS, ராகவன், ரட்ஜா, 10 சார் - உள்ளிட்டோர்!!
இணைய விடுமுறையை புது காமிக்ஸ் கால நேரத்தால் ரத்து செய்து விட்ட சூழல்..
ReplyDeleteமகிழ்ச்சி ..மற்றும் நன்றி ஆசிரியர் சார்...:-)
இனி படித்து விட்டு....
ரொம்பச் சீக்கிரமே இந்தப் பேரிடர் நாட்களின் தன்மையினைப் புரிந்து கொண்ட நமது பொருளாளர்ஜி சந்தாவினில் இணைந்திட இயலா நண்பர்களின் பொருட்டு மொத்தமாய் அனுப்பியுள்ள தொகைக்கு, நாம் அறுபதாயிரம் நன்றிகளைச் சொல்லிட வேண்டும் ! அதிலும், இல்லத்தில் அதிமுக்கிய நிகழ்வு காத்திருக்கும் தருவாயிலும், "என் வாக்கினை நான் காத்திடத் தவறிடல் தப்பாகிடும் சார் !" என்ற வரிகளுடன் !!
ReplyDelete#####
வாவ்....மனமார்ந்த வாழ்த்துக்கள் ,பாரட்டுகள் செனாஅனாஜீ...
தாங்கள் ,ஷெரீப் போன்ற நண்பர்களை எல்லாம் அறிந்து இருப்பதே எங்களுக்கு எல்லாம் பெருமை தான..
பலத்த கைத்தட்டல்கள்...
// தாங்கள் ,ஷெரீப் போன்ற நண்பர்களை எல்லாம் அறிந்து இருப்பதே எங்களுக்கு எல்லாம் பெருமை தான.. // நூற்றுக்கு நூறு உண்மை
Deleteசீனியர் எடிட்டர் தான் சங்கத்தின் (மெய்யாலுமே செயல்பட்ட) செயலர் என்பதால்
ReplyDelete#######
இந்த வரியை ஏனோ தெரியவில்லை சார்...திரும்ப திரும்ப படிக்கிறேன்..
:-)
Deleteகொஞ்ச மாதங்களுக்கு முன்னே 2 பாக ஆல்பமாய் ரெடி ! ஆனால் சிக்கல் என்னவெனில், கதையோட்டம் ஏகமாய் big business / பங்குச் சந்தை நுணுக்கம் சார்ந்த தொனியில் பயணிப்பதால், ரொம்பவே ஜெர்க் அடித்தது எனக்கு
ReplyDelete#####
ஆஹா இதை படித்தவுடன் எனக்கே ஜெர்க் மட்டுமல்ல மின்சாரமே அடிக்கிறது சார்...பேசாமல் தாண்டி சென்று விடலாம் ப்ளீஸ்..:-(
இந்த மாதம் மிக சிறப்பான காமிக்ஸ் மாதமே என்பதை இந்த மாத பொட்டியை திறந்தவுடனே அறிந்து கொண்டாயிற்று..நான்கு அட்டகாசமான இதழ்கள் .அனைத்து இதழ்களையும் கைகளில் ஏந்தியவுடன் பெரு மகிழ்ச்சி.
ReplyDeleteமுதலில் மிக மிக மனதை கவர்ந்த இதழ் கழுகு வேட்டை என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன..? அட்டகாசமான பினிஷிங் தரம் ,மினுமினுப்பு போல் அசத்தும் அசத்தலான முன் பின் அட்டைப்படம்..எந்த குறையும் இல்லாத அச்சுதரம் மற்றும் சித்திரத்தரம் ,இதை விட மேலாக அவரவர் புகைப்படங்கள் பளப்பளப்பாக முதல் பக்கத்தில் மின்னுவது என செம,செம அட்டகாசமான இதழ் ..கழுகு வேட்டை கதையை பற்றி எல்லாம் சொல்ல தேவையில்லை..டிராகள் நகரம் போல் இந்த கழுகுவேட்டையையும் எத்தனை முறை படித்து இருப்பேன் என்பது கணக்கே இல்லை..அவ்வளவு அட்டகாசமான ,அக்மார்க் டெக்ஸ் கதை..இந்த முறை வண்ணத்தில் ரசித்து பார்க்கவே அவ்வளவு ஆனந்தம்..விரைவில் காலியாக போகும் இதழ் இந்த கழுகு வேட்டை என்பது நன்றாகவே அறிய முடிகிறது..
( இச்சமயம் நண்பர்கள் சிலர் முதலில் வந்த ஒரிஜினல் கழுகு வேட்டையை விட பக்கம் குறைவாக இருப்பது போல் உள்ளதே என்று வினவியிருந்தனர்..அதற்கான காரணம் பழைய கழுகு வேட்டையில் ஜார்ஜ் டிரேக் சாகஸம் மற்றும் ரிப்கெர்பி சாகஸம் ,மற்றும் வருகிறது விளம்பரங்கள் என இணைந்து வந்து இருந்த்து நண்பர்களே எனவே தான் நண்பர்களே அந்த வேறுபாடு )
இந்த இதழ் சந்தா நண்பர்களுக்கு இலவசமாக கைகளில் ஏந்த வைத்த எங்கள் ஆருயிர் நண்பர் திரு .ஷெரீப் அவர்களை எந்த சொற்களை வைத்து பாராட்டினாலும் ,வாழ்த்தினாலும் அது குறைவாகவே தான் இருக்கும்.. தங்களின் காமிக்ஸ் காதலுக்கு ஒரு ராயல் சல்யூட் ஷெரீப்..இந்த மாத ஹாட் லைனில் ஆசிரியர் எழுதிய கருத்துக்கள் 100% நிஜம் சார்..இந்த முறை ஹாட்லைன் பகுதியை படிக்கும் பொழுது ஓர் ஆனந்த நெகிழ்ச்சி.
இந்த மாதத்தின் முதலிடம் கழுகு வேட்டை என்பது மட்டுமல்ல இந்த வருடத்தின் முதலிடமும் கழுகு வேட்டைதான் என்பதிலும் எந்த ஆச்சர்யமும் இல்லை..
இது போன்ற ஆனந்த அதிர்ச்சி பரிசுகள் சந்தா நண்பர்களுக்கு வருடாவருடம் ஏதாவது முறையில் நடந்து கொண்டே உள்ளதால் சந்தாவை மிஸ் செய்து விடாதீர்கள் நண்பர்களே..
அப்புறம் வருத்தப்படுவது நாமாகவே இருப்போம்..
சந்தா கட்டுங்க சந்தோசமா படிங்க....:-)
அந்த நாள் நினைவில் கெளபாய் ஸ்பெஷல் இதழை பற்றி நினைவூட்டியவுடன் எனக்கும் சில நினைவுகள்.. முதலில் மெகா ட்ரீம் ஸ்பெஷல் பார்த்தவுடன் வழக்கம் போல் விமர்சன கடுதாசியை அனுப்பி விட்டு சார் எனக்கு ஓர் ஆசை இதை ப்போலவே நமது கெளபாய் நாயகர்கள் அனைவரையும் இதே போல் ஒரே இதழில் கொண்டுவந்து கெளபாய் ஸ்பெஷலாக ஒரு இதழை கொண்டு வரமுடியுமா என கடுதாசி மூலம் வினவியிருந்தேன் அது விரைவிலியே நிறைவேறியதில் அன்றே மிக மகிழ்ச்சியை ஏற்படுத்திய இதழ் அது.சில கடின சூழல்களால் பல இதழ்கள் கையை விட்டு சென்றாலும் இந்த இதழ் மனதில் மிக மகிழ்ச்சியை ஏற்படுத்திய இதழ் என்பதால் இன்றும் பத்திரமாக சேகரிப்பில் உள்ள இதழே இந்த கெளபாய் ஸ்பெஷல்..
ReplyDeleteநீரின்றி அமையாது உலகு...
ReplyDeleteஇன்று காலையே இந்த இதழை படித்து முடித்தாயிற்று...அட்டைப்படத்திலிலே நமது வுட்ஸிடி நாயகர்கள் அனைவரும் இடம் பெற்றதிலியே மகிழ்ச்சி ப்ளஸ் கதையிலும் அது பிரதிபலிக்கும் என்ற எதிர்பார்ப்பும் பொய்க்க வில்லை..அதுவும் மிக குண்டாண இதழ் தென்படா விட்டாலும் இது வழக்கமானதை விட மிக அதிக பக்க நீளங்கள் கொண்ட இதழ் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை..கதை ஆரம்பத்திலியே நீரின்றி அமையாது உலகு வாய்விட்டு சிரிக்க வைத்தது..அதுவும் வாட்டர் ப்ரூப்பை (?) ஷெரீப் சொன்னபடி ஆர்ட்டின் உற்று நோக்குவது ,டுமில் ,டுமீல் என ஆரம்பமே உண்மையிலேயே காலையில் வாய்விட்டு சிரிக்க வைத்தது எனில் கதை போக போக இன்னமும் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.கார்ட்டூனை விரும்பாத நண்பர்கள் கூட இந்த இதழை படித்தவுடன் மிகவும் விரும்புவார்கள் என்பது உண்மை..லக்கியை முந்துகிறார்கள் சிக்பில் என்ற வாதத்திற்கு வலு சேர்க்கிறது இந்த நீரின்றி அமையாது உலகு இதழ்..
அதை விட சிறப்பு இந்த இதழில் அமைந்த சிறப்பான பில்லர் பேஜ்கள் தான்..மீண்டும் புதிய பாணியில் மாதம் ஒரு ஹீரோ ,அந்த நாள் நினைவை மறுபடி நினைவூட்ட பழைய இதழின் பார்வை ,மீண்டும் குட்டீஸ் கார்னர் என மிக சிறப்பாக அமைந்துள்ளது..
சிறப்பு சிறப்பு சிறப்பு
Please post XIII Booking link
ReplyDeleteசூப்பர்....வாழ்த்துக்கள் தம்பி
DeleteTomorrow..
Deleteஇந்த மாதம் அனைத்து நான்கு இதழ்களும் வண்ணத்தில் மிளிர்கின்றன. அனைத்து இதழ்களும் வண்ணத்தில் வருவது இதுவே முதன்முறை என்று எண்ணுகின்றேன். தவறா யிருந்தால் நண்பர்களைத் திருத்தும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.
ReplyDeleteWarm welcome
Deleteஇல்லை நண்பரே ; நிச்சயமாக இதற்கு முன்னேயும் all color மாதங்கள் இருந்துள்ளன !
Deleteஎனக்கு லார்கோ கதைகள் பிடிக்கும் தான்! ஆனால் பங்குச்சந்தை குழப்படிகள் இல்லாத ஆக்ஷன் கதையென்றால் மட்டுமே 'யெஸ்'னு சொல்லுவேன்.. இல்லேன்னா கடந்தகாலத்தில் லார்கோவின் சேல்ஸ் ரிப்போர்ட் நமக்குச் சொன்ன பாடத்தை நாம் கருத்தில் வைப்பது நல்லது!
ReplyDeleteஒரு தலைவனின் கதை சித்திரங்களில் கலக்கும் என்பது தெரிந்ததுதான். ஒருவித அசுவாரஸ்யத்துடனே மற்றபுத்தகங்களை ஒருபார்வை பார்த்தால் இன்பஅதிர்ச்சி. சோடா பலமாறுபட்ட கலரிங்குகளில் அசத்த, உட்சிடி குழுவினரோஅடர்வர்ணங்களில்பட்டாசுவெடிக்கிறார்கள். எதிர்பார்த்த கழுகுவேட்டையும்கலரில் அசத்துகிறது. இம்மாதம் நான்கு புத்தகங்களும் மேக்கிங் சூப்பர். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஉட்சிடீஸ் லக்கியை முந்துகிறார்கள்என்ற வாதத்திற்குவலுசேர்க்கிறது இந்தநீர்இன்றிஅமையாது உலகுஇதழ்.
ReplyDeleteபரணிதரன்ஜி வழிமொழிகிறேன்.கரூர் ராஜ சேகரன்
லார்கோ - இப்போதைக்கு வேண்டாமே. 2023-ல் வேண்டுமானால் திட்டமிட்டுக் கொள்ளலாம்.
ReplyDelete// கழுகு வேட்டை" புக்கினில் தமது போட்டோக்களை பார்த்திட விரும்பும், சந்தாவில் இல்லாத நண்பர்களுக்கும் வாய்ப்பு இதோ துவங்குகிறது //
ReplyDeleteஅருமை..அருமை..
சந்தாவில் இல்லாத நண்பர்களின் ஏக்கம் தீர்க்கும் மகிழ்ச்சியான செய்தி இது.!
கழுகு வேட்டை வெளிவர உதவிய மகேந்திரனுக்கும் அதை அழகாக வடிவமைத்த ஆசிரியர் மற்றும் குழூவிற்கு நன்றிகள் பல.
ReplyDeleteரெண்டு தடவை போட்டோ அனுப்பியும் புத்தகத்தில் காணாதது லேசான ஏமாற்றம் :(
உங்கள் சந்தா நம்பரோடு ஒரு மின்னஞ்சலை தட்டி விடுங்களேன் சார் ; சரி செய்து விடலாம்.
DeleteThx for the rapid response sir. I hv sent a email to office.lioncomics@yahoo.com
Deleteஜெரோனிமோ
ReplyDeleteநமக்கு செவ்வந்தியர்கள் அன்னியமானவர்கள் அல்ல ..ஆனால் இந்தக் கோணத்தில் எனக்கு தெரிந்து இந்த அளவிற்கு எந்தக் கதையும் வந்தது இல்லை.
செவ்வந்தியர்களுக்கு வெள்ளையர் இழைத்த கொடுமைகள் ஒவியர் நினைத்திருந்தால் பிரேம் முழுவதும் சிவப்பு வண்ண இரத்தக்களரியாக தெளித்திருக்கலாம்...ஆனால் அவை ஏதும் இல்லாமல் எல்லாவற்றையும் வசன நடையில் சொன்னது அருமை, அதை அப்படியே உள்வாங்கி பொருள் சிதையாமல் மொழி பெயர்த்த ஆசிரியருக்கு நன்றி.
வெள்ளையர்களின் வணிக பேராசை புரியாமல் "இவர்கள் மலையை உடைத்து தங்கம் எடுக்கிறார்கள், பொழுது போக்கிற்காக விலங்குகளைக் கொல்கிறார்கள் ..புல்வெளிகளை எரிக்கிறார்கள்..இதை எல்லாம் அழித்து இவர்கள் எப்படி வாழ்வார்கள்" என்று அங்கலாய்க்கும் ஒரு வசனம் போதும் அவர்கள் எந்த அளவிற்கு இயற்கையை நேசித்தார்கள் என்று சொல்வதற்கு.
வெள்ளையரோடு சேர்ந்து சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்க தயாரான செவ்வந்தியன், செவ்வந்தியர்கான ரேஷனை கள்ள மார்கட்டில் விற்கும் அதகாரி அதை கண்டு கௌள்ளாத மேலிடம் என அத்தனை கொடுமைகளையும் அழகாக தோலுத்துள்ளார் கதாசிரியர்.
இந்தக் கதையை படித்த பிறகு 'இரத்த கோட்டை' கதையில் வரும் செவ்வந்திய வில்லனை (க்குவானா என நினைக்கிறேன்) இவனும் நல்லவன் தானோ என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுபல்ல.
அட்டகாசமான விமர்சனம் ஜி.
Deleteநித்தமும் உந்தன் நிழலில்..
ReplyDeleteSoda. இந்த பெயர் கதையிலே எங்குமே காணமே..
DAVID SOLOMON = SO DA
Deleteபோன பதிவில் ஆசிரியர் வைத்த கேப்ஷன் போட்டியின் முதல் மூன்று இடத்தின் முடிவுகள் இதோ...
ReplyDeleteஅதற்கு முன் ..
ஆசிரியர் நடுவராக அறிவித்து ,அதில் செயலர் தவிர்க்க முடியாத காரணத்தால் விலக நேரிட மூன்று முத்தான பரிசு பதில் அறிவிக்கும் முடிவிற்கு அறிவிக்க அவசரவசரமாக இணைய இணைப்பு பெற்று அனைவரது பதிவுகளையும் பொறுமையாக படித்து மூன்று போட்டியாளர்களையும் தேர்ந்தெடுத்து விட்டாயிற்று.
இச்சமயத்தில் அனைவரது பதிவுகளும் சிறப்பாக அமைந்து இருந்த்தை சொல்லியே ஆக வேண்டும்..ஆனாலும் பரிசு மூன்று இடங்களுக்கு தான் எனும் பொழுது ரசனைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் என்பது போல எனக்கு பிடித்த ரசனையின் படியே இந்த முடிவகளை அறிவிக்கிறேன்..இதில் பதிவுகளை படித்து விட்டே சிறந்ததைவைகளின் மேல் எழுதிய நண்பர்களின் பெயரை அறிந்து கொண்டேன்.
இச்சமத்தில் இந்த சிறுவனையும் ஒரு பொருட்டாக மதித்து நடுவராக தேர்ந்தெடுத்த ஆசிரியர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...
இனி முடிவுகள் இதோ...
பரிசு பெறும் முதலாம் நபரும் ,முதல் பதிவும் நறுக் என...:-)
ReplyDeleteமதியில்லா மந்திரி....
A. என்ன பாஸ் தேடுறீங்க...
B.ஏண்டா நம்ம கப்பல்லிலேயே கொள்ளை அடிச்சீங்க..?
C. Work from home பாஸ்...
நன்றி நன்றி நன்றி....
Deleteஅய்யோ என்னோட உண்மையான அடையாளம்....ஆசானுக்கு தெரிஞ்சுடுமே.......
சொக்கா.....
சொக்கா கிழியபோகுது....
பரிசு பெறும் இரண்டாம் நபரும் ..பதிவும்..
ReplyDeleteSri ram..
பாஸ் எதுக்கு பதட்டமா இருக்காரு..
கடற்கொள்ளையர்கள் ன்னு சொல்றது பிடிக்கலையாம்..நாம எப்ப கடலை கொள்ளையடித்தோம்..கப்பலைத்தானே கொள்ளையடிக்கிறோம..அதனால் கப்பல் கொள்ளையர்கள் ன்னு தான் சொல்லனுமாம் எதிர்பார்க்கிறார்..
இவர் பாஸா இல்ல லூசா டாணாக்காரன் கண்ணுல பட்டா சுடுவான் இவனுக பேசுனாலே சுட்டுபுடுவானுக..:-)
கடற்கொள்ளையர்கள் ன்னு சொல்றது பிடிக்கலையாம்..நாம எப்ப கடலை கொள்ளையடித்தோம்..கப்பலைத்தானே கொள்ளையடிக்கிறோம../// அருமை. இப்படித்தான் நானும் ஒரு சந்தேகம் கேட்டு வாங்கி கட்டிக்கிட்டேன். விஷத்த குடிச்சவனை ஏன் மருந்து குடிச்சிட்டானு சொல்றாங்க? அப்பிடியே அவன் குடிச்சது பூச்சி மருந்துன்னாலும் பூச்சிக்கும் அது விஷம் தானே? எப்படி மருந்தாகும்?
Deleteபரிசு பெறும் மூன்றாம் நபரும் ,பதிவும்...
ReplyDeleteபார்த்தீபன்
கேப்டன் கேள்விப்பட்டீங்களா திரும்பவும் லாக்டவுன் வரப்போகுதாம்..
அப்படின.னா உடனே ஆயுதங்களை தயார்படுத்துங்கள்..
தாயக்கட்டையும் ,பல்லாங்குழியும் தானே..அதெல்லாம் எப்பவோ தயார் கேப்டன்.
வெற்றி பெற்ற நண்பர்களுக்கும் ,பங்கு பெற்ற அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகளும் ,பாராட்டுகளும்...
ReplyDeleteநல்ல தேர்வு தாரை பரணி. உங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து உள்ளீர்கள்.
Deleteபரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் பங்கு பெற்ற நண்பர்கள் அனைவரும் நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பர்களே.
ஜூப்பர் தலீவரே ; அருமையான தேர்வுகள் !
Deleteவெற்றி பெற்றுள்ள நண்பர்களை ஜம்போ சந்தாவினில் இணைத்திடவோ, அல்லது அவர்கள் சார்பில் யாருக்கேனும் வழங்கிடவோ ஒரு மின்னஞ்சல் ப்ளீஸ் !
தலீவரே...பின்னி பெடலெடுத்திட்டீங்க...சரியான தேர்வுகள்.
Deleteவெற்றி பெற்ற மந்திரியார், ஶ்ரீராம், மற்றும் பார்த்தி சகோவிற்கு அன்பான வாழ்த்துகள்.
நன்றி ஆசிரியர் சார்..மற்றும் நண்பர்களே..
Deleteயாருக்கு மெயில் அனுப்பனும் ஆசான்.....
DeleteE mail பிலீஸ்...
அருமை தலைவரே பரிசு பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புங்க தலீவரே!
ReplyDeleteவெற்றி பெற்ற நண்பர்கள் மந்திரியார், sri ram, பார்த்தீபன் ஆகியோருக்கு என் வாழ்த்துகள்!! இந்த முறை கலந்து கொண்ட நண்பர்களில் கிட்டத்தட்ட அனைவருமே பின்னிப்பெடல் எடுத்திருந்தீர்கள்! அனைவருக்கும் வாழ்த்துகள்!
கழுகு வேட்டை
ReplyDeleteஒரு சிறிய புள்ளியை வைத்து பல வளைவுகள் ப்ளஸ் திருப்பத்துடன் கோலம் போட்டு வண்ணத்தில் அனைவரும் ரசிக்கும் படி உள்ளது.
அட்டைப்படத்தில் திறந்த வாய் படித்து முடித்த பிறகு தான் முட முடிந்தது. அட்டைப்படத்திற்கு தேர்வு செய்த படம் செம மாஸ். அந்த அட்டைபடத்திற்கு செய்த நகாசு வேலைகள் எல்லாம் அட்டகாசம்.
வில்லன் யார் ஏன் டெக்ஸ் மேல் இப்படி கொலைவெறியுடன் அலைகிறான் என்பது நல்ல டிவிஸட் மற்றும் வலுவான ஃப்ளாஷ் பேக்.
கார்சன் கதையில் இல்லாதது ஒரு சிறிய குறை. கதையில் இரண்டு இடங்களில் தென்படும் எழுத்துப்பிழைகள் மற்றும் ஒரு சிறிய குறை.
டைகர் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளார்.
கழுகு வேட்டை - டெக்ஸ் வேட்டை
பரிசுகள் வென்ற
ReplyDeleteமந்திரி ஜி,
நண்பர் ஸ்ரீராம்,
பார்த்திபன் சகோ
மூவருக்கும் வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🌹
டஃப் பைட் கொடுத்த மற்ற போட்டியாளர்களுக்கும் பாராட்டுகள்.💐💐💐💐💐
சிறப்பான தீர்ப்பு வழங்கிய தலைவருக்கும் "சந்தோசங்கள்"🌹🍫 (சந்தோசம்:செயலர்)
இரண்டு நாள் ஜாலியாக மனம்விட்டு சிரிக்கும் வகையில் போட்டியை ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் சாருக்கும் ஆங் அதேதான் "சந்தோசங்கள்"🙏🙏🙏🙏🙏(மீண்டும் சந்தோசம்:செயலர்)
////நிறைய காரணங்களின் பொருட்டு வழக்கத்தை விடவும் சடுதியாகவே அடுத்தாண்டின் திட்டமிடலிலும் முனைப்பு காட்டிட வேண்டியுள்ளதால் இந்த early bird அவதார் !///
ReplyDeleteசார்.. இது குறித்து அடுத்த பதிவிலோ, அடுத்த உப பதிவிலோ நீங்கள் பகிர்ந்து கொண்டால் நாங்களும் தெரிந்துகொள்வோமில்லையா?!
எப்படியும் இந்த ஆண்டின் இறுதிக்குள் பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு கொரோனா பயம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமாதலால் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் முத்து - பொன்விழா என்ற ஒரு வரலாற்று நிகழ்வினை சிவகாசியிலோ, மதுரையிலோ, சென்னையிலோ, ஈரோட்டிலோ கோலாகலமாகக் கொண்டாடுவதற்கு பெரியதொரு முட்டுக்கட்டை எதுவுமிருக்காது என்றே தோன்றுகிறது! பெரும்பான்மை நண்பர்களின் விருப்பம் 'சிவகாசியில் நடத்தப்பட வேண்டும்' என்பதாகக் கடந்தகால கருத்துக் கணிப்புகள் சொல்வதால், இப்போதிருந்தே இதற்கான ஆரம்பகட்ட திட்டமிடல்களைத் துவங்கிடலாம் என்றும் தோன்றுகிறது!
இதுகுறித்த உங்கள் பதிவினை விரைவிலேயே எதிர்பார்க்கிறோம் சார்! திட்டமிடல்களை இப்போதிருந்தே துவங்குவது வெளிநாடுகளிலிருந்து வர விரும்பும் நம் நண்பர்களின் பயணத்திட்டமிடல்களுக்கும் உதவியாக இருந்திடும் என்பது நீங்கள் அறியாததல்லவே!!
/* கொரோனா பயம் ஒரு முடிவுக்கு வந்துவிடுமாதலால் */
DeleteNo - Erode Vijay. As a runaway engineer belonging to the home of 4 generation doctors, with 3 current practising doctors in family, நான் தெரிவிக்க விழைவது யாதெனில் :
நான் தெரிவிக்க விழைவது யாதெனில் :
* 90% மனிதர்கள் இரண்டு ஷாட் போட்டுக்கொண்டாலும் இப்பேரிடர் முற்றிலும் நீங்குதல் கடினமே. பாரத தேசத்தில் இளைஞர்களே அதிகம் என்பதையும் 16 வயதிற்கு குறைவானவர்களுக்கு vaccine இன்னும் certify செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் நிறுத்திட வேண்டும்.
* Simply நாம் பாதிக்கப்படாமல் இருந்தாலும் மற்றவருக்கு கேரியர் ஆக எப்போதுமே இருப்போம் - அதாவது நாம் செலுத்திக்கொண்ட இரட்டை தடுப்பூசிகள் நம்மை காக்கும் ஆனால் கிருமி நம் உடலில் இருந்தால் நமது உமிழ் மற்றும் இதர உடல் நீர்கள் மூலம் அடுத்தவரை அடைந்து அவரை பாதிக்கச் செய்யலாம்
* மேலும் இந்த 2 ஷாட்ஸ் சுமார் 7-8 மாதங்கள் வரை மட்டுமே நோய் அண்டாமல் காத்திடும் - பிறகு மறுபடியும் மொதல்லேருந்து போட்டுக்கணும்.
* இந்நேரத்தில் நமக்குத் தேவை பொறுமை மற்றும் அடக்கம் - உள்ளும் புறமும் + masks + Social distancing + vaccines regularly
* In all respects - முத்து பொன்விழா ஆண்டு விமரிசையாகக் கொண்டாடப்படத்தான் வேண்டும் - ஆனால் using digital technology and online release.
உபயோகமான தகவல்களுக்கு நன்றி ராக் ஜி!
Deleteநாலு தலைமுறையாக பேஷண்டாக இருந்துவரும் பேமிலியிருந்து வந்தவன் என்ற வகையில் நானும் சொல்கிறேன்.. ஆரம்பத்தில் நிறையத் தடுமாறினாலும் கூட, விரைவிலேயே இப்பிரச்சினையிலிருந்து தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் வழிமுறையை மனிதகுலம் கண்டறியும்!
ஏற்கனவே ஒரு EBF கொண்டாட்டத்தை இழந்திருக்கும் நிலையில், பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திலும் துண்டு விழுவதை ஏற்றுக்கொள்ள முடியாது ராக் ஜி!
Unfortunately not a time for emotions EV :-) :-(
Delete// ஏற்கனவே ஒரு EBF கொண்டாட்டத்தை இழந்திருக்கும் நிலையில், பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்திலும் துண்டு விழுவதை ஏற்றுக்கொள்ள முடியாது // உண்மை. முத்து 50ஆம் ஆண்டு விழா மிகப்பெரிய அளவில் நடக்க வேண்டும்
Deleteஇந்த கொரோனா ஒரு யானையெனில், நாமும் , விஞ்ஞானமும் ,அதனைத் தடவிப் பார்த்திடும் பரமார்த்த குருவின் சிஷ்யப் புள்ளீங்கோ ! ஆங் ..இது வாலு ; இல்லே ..இல்லே ..தும்பிக்கை ! என்ற கதையாய் தினமும் எதையாச்சும் புதுசு புதுசாய்ப் படித்து வருகிறோம் ! இப்போதைக்கு 9 மாதங்களைத் தாண்டியதொரு வேளையினை பாஸிட்டிவாகவோ, நெகடிவாகவோ யூகமாய் அனுமானம் செய்திடுவதில் எனக்கு உடன்பாடு நஹி !
Deleteதற்போதைக்கு அடுத்தாண்டின் கதைகள் சார்ந்த தீர்மானங்கள், தெரிவுகளைச் செய்து கொண்டு ஆகஸ்ட் வாக்கில் ஈரோட்டிலோ ; ஒரு zoom ஆன்லைன் மீட்டிலோ இது பற்றி அலசிடுவோமே ?
////Unfortunately not a time for emotions EV :-) :-(//.
Delete100% அக்ரீட் ராக் ஜி.
நண்பர்களே இந்த கொரோனா காலத்தில் நிறைய இழப்புகளை பார்த்து விட்டேன். இறைவா இதற்கு மேலும் தாங்காது உன் மனசு இறைஞ்சுகிறது.
அதுவும் வியாழன் இரண்டு இழப்புகள் 90 ஆண்டுகள் வாழ்வார் என நினைத்து இருந்த கைலாய யாத்திரை பலமுறை சென்று வந்துள்ள மதிப்பிற்குரிய அசாதாரண வசதிபடைத்த எங்கள் வாடிக்கையாளர் எத்தனை ஆக்டிவ் ஆனவர்.(ஒரு நண்பர் போலவே பழகுபவர்) 55 வயசில கொரோனா பலி கொண்டு விட்டது.
மற்றொருவர் என் ஓனரின் நண்பர்.சென்ற தேர்தலில் mla வுக்கு நின்று தோற்றுபோன பிரமுகர், இப்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டவர், என்னைவிட ஓரிரு வயது மட்டுமே மூத்தவர். கொரோனா கொண்டு போயிட்டது.
ஆடிப்போயிட்டோம் நானும் என் ஓனர்களும்.
கொரோனாவில் அசட்டையாக இருப்பது தாங்கிக்கொள்ள பேரிழப்பாக முடியும்.
நெகடிவ் ஆக பேசுகிறேன் என நினைக்க வேணாம்.
இந்த பூமியும், அதில் உள்ள உயிரிகளும் இயற்கைக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு சர்வைவல் ஆகி வந்துள்ளன. இது நாம் அனைவரும் அறிந்தது.
ஆனா இந்த கொரோனாவுக்கு தாக்குப்பிடிக்கும் திறனை மனிதன் பெற சில ஆண்டுகள் நிச்சயமாக ஆகும்.
ஆறு மாதங்களில், 10 மாதங்களில் நடக்க கூடிய விசயம் இதுவல்ல என்பது தெளிவு.
கொண்டாட்டங்களும், விழாக்களும் வாழ்வை உயிர்ப்போடு நகர்ந்த உந்து சக்திகள். மறுப்பேயில்லை அதுபற்றி.
ஆனா சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய இயலும்.
எனவே கொண்டாட்டங்களை ராக்ஜி சொல்வது போல அமையுங்கள்.
இன்னும் பல ஆண்டுகள் நாம் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்.
தவிர்க்க இயலாதவர்கள் மட்டுமே வேலைக்கு, மற்ற விசயங்களுக்கு சென்று வருவோம்.
அனைவரது நலனையும் யோசித்து முடிவெடுங்க ப்ரெண்ட்ஸ்.🙏🙏🙏🙏🙏
கேப்சன் போட்டி பரிசுக்காக என்னை தேர்வு செய்த நண்பருக்கும்,போட்டியை அறிவித்த ஆசிரியருக்கும்,உடன் வெற்றி பெற்ற ஏனைய நண்பர்களுக்கும்,மற்ற சகோக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே.
DeleteCongrats Caption King, Sago Partheeban
Deleteநண்பர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteநேற்று மாலை கூரியர் நண்பர் 'சார் உங்களுக்கு பார்சல் வந்திருக்கு. நானே கொண்டு வந்துவிடுகிறேன். நீங்கள் சிரமப்படவேண்டாம்' என்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரில்லா சாம்ராஜ்யம் பிழைதிருத்தத்திற்காக வந்திருந்தது. ஏற்கனவே அதில் பிழைதிருத்தம் செய்யப்பட்டு இருந்தாலும் அன்று இரவு புத்தகத்தை மூன்றுமுறை புரட்ட விடுபட்ட மேலும் சில பிழைகள் கண்ணில்பட அதனை இரவே சரிசெய்து அடுத்தநாள் அலுவலகத்துக்கு அனுப்பிவிட்டேன். அதேபோல இன்று வேறொரு இதழ் பிழைதிருத்தம் செய்ய வேண்டி வந்திருக்குமோ என்று பார்த்தால் வந்தது ஜம்போ தவிர்த்து நமது ரெகுலர் சந்தா மூன்று இதழ்கள்! நாம்தான் சந்தா செலுத்தவில்லையே ஆனால் இது எப்படி என்று ஆச்சர்யம்! (சந்தா செலுத்தாததால் ஃபோட்டோவும் அனுப்பவில்லை.) மாலை ஆறு மணி ஆகிவிட்டதால் நம் அலுவலகத்தில் கேட்கவில்லை. சரி கடந்த மாதங்களின் பதிவுகளில் இதைப்பற்றி ஏதும் செய்தி இருக்குமாவென தேடினால் சேலம் குமார் அவர்களின் பதிவு கண்ணில் பட்டது. அவருடைய பரிசுதான் இதுவென புரிந்தது. நன்றி தோழரே. ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் கொஞ்சம் சங்கடமாகவும் இருக்கிறது. என்னால் உமக்கு சிரமம் என்பதை நினைத்து. அடுத்து.... உருவத்தாலும் உள்ளத்தாலும் உயர்ந்த மனிதரான மகேந்திரன் பரமசிவம் அவர்களின் அனைத்து தோழர்களுக்குமான அன்பு பரிசு!
அற்புதம்! நன்றி தோழரே!
மக்கள் பணத்தை ஏப்பம்விட்டு மறுபடி ஏப்பம்விட மக்கள் பணத்திலேயே கோடிகளில் விளம்பரம் செய்யும் அற்ப ஜீவன்கள் வாழும் இதே பூமியில்தான் இப்படிப்பட்ட அற்புதமான ஜீவன்களும் வாழ்கின்றனர்!
இந்த விருட்சங்களுக்கு விதை போட்டது நம் ஆசிரியர்! அவருக்கும் என் மனமார்ந்த நன்றியை கூறிக் கொள்கிறேன். தளத்தில் பகிர முடியாத பல சிக்கல்கள், சங்கடங்கள் தொடர்ந்து கொண்டே இருப்பதால் தளத்திற்கு முன்போல் வர இயலவில்லை. ஒருமுறை விடியவிடிய தோழர்களுடன் போட்டி போட்டு ஆயிரம் பதிவு போட்டதையெல்லாம் மறக்க இயலவில்லை. அன்று இரவு ஏனோ ஆசிரியர் தளத்தின் பக்கம் வரவில்லை. மறுபடி அந்தமாதிரியான நிகழ்வுகளை அனுபவிக்கும் மனநிலை என்று திரும்ப கிடைக்கும்? தெரியவில்லை . தோழர்களின் ஆசியுடன்
மீண்டு(ம்) வருவேன்.
நன்றி.வணக்கம்.
சார் சங்கடம் தேவை இல்லை. இது எனது கடமையாகவே நினைக்கிறேன். உங்களால் எப்போதுமே சிரமம் இல்லை. நீங்கள் எப்போதும் போல தளத்தில் வந்து பதிவுகள் இட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி சார்.
Deleteஉங்கள் ஃபோட்டோ அனுப்பி வையுங்கள் சார் இன்னொரு கழுகு வேட்டைkku. அதையும் வாங்கி விடலாம்.
Delete//ஒருமுறை விடியவிடிய தோழர்களுடன் போட்டி போட்டு ஆயிரம் பதிவு போட்டதையெல்லாம் மறக்க இயலவில்லை. அன்று இரவு ஏனோ ஆசிரியர் தளத்தின் பக்கம் வரவில்லை.//
Deleteஅதுவொரு தனிக் கதை சார் ; VRS வாங்கிய பின்னானதொரு சாவகாச நாளில் அதைப் பற்றி...
வாழ்த்துக்கள் குமார்
Deleteஅந்த ஆயிரம் பதிவுக்கு எதாவது ஸ்பெஷல் அறிவித்தால் நன்றாக இருக்கும் ஆசிரியரே
Deleteவிரைவில் வழக்கம் போல் கலக்க வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு பலமாகவே உண்டு ஏடிஆர் சார்..
Deleteகாத்திருக்கிறேன்...
ReplyDeleteநித்தமும் உந்தன் நிழலில்
SODA வின் அதகளம் என்று தான் சொல்ல வேண்டும்...தமிழில் ' திருடன் போலிஸ்' என்று ஓரு படம் உள்ளது ...அந்தக் கதையோடு 75% ஒத்துப்போகும் கதை...சும்மா ஊருக்கு வந்த ஹீரோவை 'இவன் நம்மள பழிவாங்குவதற்கு தான் வந்திருக்கிறான் என நினைத்து வில்லன் கோஷ்டி நினைக்க ....மத்தத நீங்களே படிச்சிகோங்க...SODA 2021 slot ஐ Strong ஆ தக்க வைத்துக் கொண்டார்.
பின் குறிப்பு : கதைக்கும் Tittle kum என்ன சம்பந்தம்னு கடைசி வரைக்கும் புரியலே.
கடைசிப் பக்கம் ஒன்ஸ் மோர் ரீடிங் ப்ளீஸ் ....!
Deleteபோட்டியில் ஜெயித்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteசிறப்பான தீர்ப்பை தந்த தலீவருக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteசோடாவின் தேர்வு மீண்டும் சோடை போகவில்லை. நன்றாக இருந்தது ஆர்ட் ஒர்க் அதகளம் தான். வசனங்கள் இல்லாமல் படங்கள் மூலம் கதைநகர்வு நன்றாகவே இருந்தது. நீங்கள் கூறியது போல படங்களை கவனிக்க சிரத்தை எடுக்கவேண்டும்.
ReplyDeleteYup...அதனால் தான் அதை ஒன்றுக்கு இருமுறை வலியுறுத்தினேன் !
Deleteஜாலியாக ஒரு போட்டியை அறிவித்த கம்பெனிகாரவுகளுக்கு நன்றி.
ReplyDeleteகேப்ஷன் தேர்வுகளில் பரிசுக்குரியதாக அறிவித்த தாரைத் தலைவருக்கு நன்றி.
இந்த பரிசுக்கான சாந்தா இணைப்பை G.P என்று அன்போடு அழைக்கப்படும் திரு.கோவிந்ராஜ் பெருமாள் அவர்களுக்கு வழங்குமாறு எடிட்டர் சமூகத்திடம் கோரிக்கை வைக்கப்படுகிறது.
அன்போடு பரிசை வழங்கும் கம்பெனிக்கும்,அதை பெற போகும் நண்பருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.
வலைதளத்தில் அன்பையும்நட்பையும் விதைத்து; மதிப்பிற்குரிய மனித மனங்கள் குழுமும் வணங்குதலுக்குரிய காமிக்ஸ் பொதுவெளியாக மெருகேற்றி உள்ள அனைவருக்கும் நன்றி.
நட்புடன் சக காமிக் தோழன்.
சூப்பர் சகோ
Deleteஅழகான வரிகள் !
Deleteஆரோக்கியமான முன்னுதாரணம் ஸ்ரீ!
Deleteநல்ல விஷயம் sri ram. வாழ்க வளமுடன்.
Deleteவாழ்த்துக்கள் நண்பரே
Deleteஅருமை Sri ram!
Deleteமனம் திறந்த வாழ்த்துக்களுக்கு நன்றி நட்பூஸ்.
Deleteபங்கு பெற்ற/வெற்றி பெற்ற நண்பர்களுக்கும்....சிறப்பான தீர்ப்பை அசையாது எழுதிய தலைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.அருமை நண்பர்களே
ReplyDeleteபங்கு பெற்ற/வெற்றி பெற்ற நண்பர்களுக்கும்....சிறப்பான தீர்ப்பை அசையாது எழுதிய தலைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.அருமை நண்பர்களே
ReplyDeleteலார்கோ...மேலே நம்ம பரணி சொன்னது போல் கொஞ்சம் ஸ்டாக்கெல்லாம் தீர்ந்த பிறகு கொண்டு வரலாம். கதையின் ஸ்டாக் மார்க்கெட் டெர்ம்கள் மொழிபெயர்க்கபடாமல் எளிமைப்படுத்தப்பட்டு வர வேண்டும். இல்லை என்றால் கதை அனைவரையும் சென்றடைவது சற்று கடினமே. Referral Index, Bear, Bull என்பதற்கெல்லாம் இணைச்சொற்கள் தமிழில் இருந்தாலும் அவற்றை அப்படியே உபயோகித்தால் கதை புரிவது கடினமே. ஆரிஜின் கதையின் தமிழாக்கத்தை படிக்க முயன்று நான் தள்ளாடியது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. கவனமாகக் கையாளப்பட வேண்டிய கதை.
ReplyDeleteஒ. நொ. ஒ. தோ. 666 லிஸ்ட் போன்ற கமர்சியல் கிநாக்கள் ஷ்யூர் ஹிட் வகையறாவை சேர்ந்தவை. இவற்றைத் தாமதிக்காமல் ரெகுலர் சந்தாவிலே கூட ஸ்பெசல் தருணங்களைக் கொண்டாட கொண்டு வரலாம். 2022 க்குள் இவற்றையெல்லாம் கையில் கிடைச்சா ஈவிக்கு மொட்டை போடறதா ஆத்தாகிட்ட வேண்டிக்கறேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகுடந்தைக் கோமான்.. பெருந்தகை ஸ்ரீலஸ்ரீ J என்கிற ஜனார்தன பெருமான் இப்பூவுலகில் உதித்த இந்நன்னாளில் அய்யனை வணங்கி ஆசிபெறுகிறேன்..!
Deleteஹேப்பீ பொறந்தநாளு பெர்சே..!
ஆப்பி பர்த்டேங்க ஜே தாத்தா...!!
Deleteஏதோ 25 ஆவது பிறந்த நாள் னு சொன்னாங்க 🤔
Deleteபழகுவதில் பண்பாளர்,
Deleteகவிதைகளின் நாயகன்,
கேப்ஷன்களில் வல்லவர்,
புனைகதை வித்தகர்,
புலன் விசாரணையை மொழி பெயர்த்த இருவரில் ஒருவர்,
அன்பு நன்பர்,
மூத்த வழிகாட்டி,
திரு ஜனார்த்தனன் கும்பகோணம்
(எ)J ji க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🌹
இந்நந்நாளில் தங்களது ஆசிகளை வழங்குமாறு பணிவுடன் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் ஐயா!🙏🙏🙏🙏
///ஏதோ 25 ஆவது பிறந்த நாள் னு சொன்னாங்க 🤔///
Deleteஅது போனவாரம் அவரோட பேரனுக்கு கொண்டாடியது அனு..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் J ji!
Delete@ STVR
J - ஒரு அருமையான பாடகர்'ன்றதை மறந்துட்டீங்களே?
///அது போனவாரம் அவரோட பேரனுக்கு கொண்டாடியது அனு..!///
Deleteஅதுவும் கொள்ளு பேரனாம்!!
அப்ப ரொம்ப பழைய நூடுல்ஸ் னு சொல்லுங்க.
Delete///J - ஒரு அருமையான பாடகர்'ன்றதை மறந்துட்டீங்களே?///
Deleteயெஸ்ஸ்.. உண்மை.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா.
Delete///J - ஒரு அருமையான பாடகர்'ன்றதை மறந்துட்டீங்களே//
Delete---ஈவி@ அட ஆமால்ல...!
வாழ்த்துல இதையும் சேர்த்துகிடுவோம்.,
"குடந்தை காணகுயிலோன்...""
அன்பான நண்பர்களே
Deleteசிரம் தாழ்ந்த நன்றிகள்...
மூத்தவங்க...அதாகப்பட்டது ஷெரீப்பு, சேலம் பெர்சு, நூடுல்ஸ் அனு பாட்டீ , மேச்சேரி பெர்ஸ் , கிருதா வெள்ள கணேஷூ - இப்டீ இன்னும் பல மூத்தகுடிகளுக்கு வணக்கம்ங்க...
வாழ்த்திய இளையோருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
ஆனாலும் பாடகர் ன்றதெல்லாம் டூ மச்சு...
Deleteஅதெல்லாமே நம்ம கந்தர்வ கானக்குயிலோன் மேச்சேரி க்கும், பிரபல மீம்ஸ் வித்தகர்க்கு மட்டுமே உரித்தான பட்டங்கள்...
நம்ம EV அருமையான பாடகர்...
ஒரு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் J சார்...
Deleteகெட்டி சட்னி தலீவரே...இப்பதாங்க பொறந்திருக்கேன்...
Deleteஓஹானானாம்.....
Deleteஎன்னது அனு பாட்டியா? எங்க பாட்டிக்கு 90வயசாவுது.கிட்டதட்ட உங்க வயசு தான்.
Deleteதேவர்மகன்.. சின்னகவுண்டர்.. எஜமான்.. நாட்டாமை.. (சொக்கா போடாத நாட்டாமை.. முக்காகையி சொக்கா போட்ட நாட்டாமை..அரைக்கை சொக்கா போட்ட நாட்டாமை மூணுபேரும் சேர்த்து) அப்புறம் வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி முருகேசன்.. இவர்களெல்லாம் தீர்ப்பு வழங்கிய தமிழ்நாட்டில் அவர்களைபோலவே சிறப்பான தீர்ப்பை வழங்கிய(அப்படி நினைச்சிக்கிட்டு இருக்கும்) தலீவரை வாழ்த்தி வணங்குகிறேன்.!
ReplyDeleteபரிசுபெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகளும் பங்குபெற்ற நண்பர்களுக்கு பாராட்டுகளும் உரித்தாகுக...!
தமிழ்நாட்டில் அவர்களைபோலவே சிறப்பான தீர்ப்பை வழங்கிய(அப்படி நினைச்சிக்கிட்டு இருக்கும்) தலீவரை வாழ்த்தி வணங்குகிறேன்.!
Deleteஓஹோ....
******* நித்தமும் உந்தன் நிழலில் *******
ReplyDeleteதன் அம்மாவிடம் பாதிரியாராகவும், நிஜத்தில் நியூயார்க் போலீஸாகவும் இரு வேடங்களில் பேலன்ஸ்டாக மெயின்டெய்ன் பண்ணிவரும் நம் சோடாவுக்கு, தன் சொந்த ஊரான ப்ராவிடென்ஸுக்குத் தன் மம்மியோடு சென்று சில நாட்கள் தங்கியிருக்க நேரிடுகிறது! தன் தந்தை ஷெரீப்பாகப் பணியாற்றிய அவ்வூரில் காலடி எடுத்து வைக்கும் முன்பே சோடாவுக்கு அவ்வூரிலுள்ள ஒரு ரவுடிக் கும்பலால் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகிறது! சோடாவை போட்டுத்தள்ள விடா முயற்சியில் இறங்குகிறது அந்த கும்பல்! பல வருடங்களுக்கு முன்னே அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் கார் விபத்தொன்றில் உயிரிழந்த தன் தந்தைக்கும் அந்த ரவுடி கும்பலுக்குமான தொடர்பை தன் தந்தை தனக்காக விட்டுச் சொன்ற ஒரு கடிதத்தின் வாயிலாகக் கண்டறியும் சோடா, தன் மம்மிக்கு ஒரு இம்மியளவும் அந்தப் பிரச்சினைகள் குறித்துத் தெரியவிடாமல் மொத்த கும்பலையும் ஒடுக்கிவிட்டு ஊர் திரும்புவதே ஒன் லைன் ஸ்டோரி!
* சோடாவின் தந்தை விபத்தில்(?!) இறக்கக் காரணமென்ன?
* சோடாவின் தந்தைக்கும் அந்த ரவுடி கும்பலுக்கும் என்ன தொடர்பு?
* இந்த ரவுடி கும்பல் சோடாவை ஏன் கொல்ல முயற்சிக்க வேண்டும்?
என்பதை அட்டகாசமான, விறுவிறுப்பான பக்கங்களைப் புரட்டித் தெரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே!
சின்ன சின்ன முடிச்சுகளுடன் கதையை நகர வைத்து, இறுதியில் சோடாவின் தந்தை சோடாவுக்கு எழுதிய ஒரு கடிதத்தின் மூலமாக அத்தனை முடிச்சுகளையும் அவிழ்த்திருப்பது அழகோ அழகு! அந்தக் கடிதம் எழுதப்பட்டிருக்கும் விதமும் அழகுதான்!!
சித்திரங்கள் இத்தொடரின் மிகப் பெரிய ப்ளஸ்!! வண்ண ஜாலங்கள் கண்ணுக்கு விருத்தளிக்கின்றன! சீரியஸான கதை நகர்வின் நடுவே எதார்த்தமாய் வந்து விழும் நையாண்டி வசனங்களும் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகின்றன!
'நித்தமும் உந்தன் நிழலில்' என்ற வரிகள் கர்த்தருக்காக உச்சரிக்கப்படும் ஜெப வரிகளாக கதையின் நடுவே ஓரிருமுறை வந்தாலுமே கூட, இதற்கான உண்மையான அர்த்தம் இறுதிப்பக்கங்களில் - அந்தக் கடிதத்தில் - மிக அழகாக, கவிதைத்துவமாகச் சொல்லப்பட்டிருக்கிறது! ஒரு ஆக்ஷன் அதகளத்திற்கு இப்படியொரு கவித்துவமான தலைப்பை வைத்தது 'தில்' என்றால், அந்தத் தலைப்பிற்கு 100% நியாயம் சேர்த்திருப்பதற்காகவே நம் எடிட்டருக்கொரு பூங்கொத்து பார்சேல் அனுப்பிடலாம் தான்!
சோடா - நம் மனங்களில் ஆழமாக நங்கூரமிட்டுவிட்டான் என்றே தோன்றுகிறது!
என்னுடைய ரேட்டிங் : 10/10
அழுத்தமான இந்தக் கதைவரிசையினை முன்னமே நாம் முயற்சித்திருக்கணும் தான் ; அம்மிணி லேடி S உடனான விஷப்பரீட்சை செய்த நேரத்துக்கு இவரைக் களமிறக்கி இருக்கலாம் !
Deleteதேர்தலுக்கப்பறமா லாக்கப் பாம்ப்பா...
ReplyDeleteரொம்ப நாளக்கப்புறமா மனசு விட்டு சிரிக்கவச்ச கிட் ஆர்டின், டாக்புல், சிக்ஃபிரைட் குள்ளன்னு கூடவே வசனத்துல பூந்து வெளாடுன சிவகாசி சிங்கம்-காமிக்ஸ் தங்கத்துக்கும் சலாம் வச்சிக்கிறேன்...
ReplyDeleteவாட்டர் ங்குற வார்த்தைக்கு பின்னால் வர்ற தெல்லாம் படிச்சி சிரிச்சி வவுறு பொன்னாயிடிச்சி...
சிக்ஃ பில்லும் பின்றாரூ...
Deleteவாட்டர் டிவைனரூ அவுரூ பங்குக்கு சிரிக்க வச்சாரூ...
Deleteடாக்புல் - நல்ல ஃபார்ம்க்கு வந்துட்டாரூ...
Deleteதந்தியடிக்கிறவர இவுரூ நெத்தியடி யா கலாய்க்குறாரு பாருங்க...செம...
தண்ணீ வண்டி டிரைவரும் அவுரு பங்குக்கு சிரிக்க வச்சிட்டாரூ...
Deleteகிட் ஆர்டின கேக்கவே வேணாம்...
Deleteஅந்தக் குச்சிய கவனிச்சிங்களா.?
Deleteமகுடம் படத்துல தண்ணிசாமி (நம்ம தானைத்தலைவர்) நீரோட்டம் பாக்க கொண்டுவர்ர குச்சிமாதிரியே இல்ல.!?
ஏங்க அந்த நீரோட்டம்..
இனிமே உங்களுக்கு ஓட்டம்தான்..
ஹாஹாஹா....!!
புது சந்தா
Deleteபுது காமிக்ஸ்
புது சிரிப்புத் தோரணங்கள்...
புதிய கொரோனோ 3.0
வாட்டர் க்கப்பறமா இத்தனை வார்த்தைகள ரூம் போட்டு ரோசிச்சி நமள ஒரு வழியாக்ன சிவகாசி மய்யத்துக்கு சலாம் குலாமு...
Deleteவாட்டர் குச்சி...பிரமாதம்...
Deleteகிளைமேக்ஸ் --- சும்மா பின்னீட்டாங்க...
வணக்கம் போட்றப்ப வர்ற சிரிப்பு போலீஸ் மாதிரி...
ஒரிஜினலில் கதாசிரியர் அந்த "வாட்டர்பால் ; வாட்டர்பாட்டில்" சமாச்சாரத்தை லேசாகக் கோடு போட்டிருந்தார் ! நாம அதிலே ஒரு டிராக்டரை ஓட்ட முனைந்திருக்கிறோம் சார் !
Deleteஅப்புறமா
ஆரம்பம் முதல் மொத்தம் எத்தனை பெயர்களால் மனுஷன் அழைக்கப்படுகிறார் என்று யாராச்சும் கணக்குப் போட்டுச் சொல்லுங்க பாக்கலாம் ?
நேற்று காலை...
ReplyDeleteசிக்பில் குழுவினருடன் ஓர் நகைச்சுவை பயணம்...
மாலை....
ஒரு தலைவனின் கதையாக செவ்விந்திய மண்ணில் பயணம்..
முன்னர் சிரிக்க வைத்தது...
பின்னர் யோசிக்கவும் ,சிந்திக்கவும் வைத்தது..
சித்திரங்கள் அமர்க்களம்...
கதை ...இந்த கதையை படித்தால் இனி கெளபாய் கதைகளில் செவ்விந்தியர்கள் நாயகர்களாவும் ,வெள்ளையர்கள் வில்லனாகவும் தான் நமக்கு தோன்றுவார்கள் சில காலங்களுக்காகவது என்பது மறுக்க முடியாத உண்மை...
வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி....
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஜனார்த்தனன் ஜி...
ReplyDeleteநன்றி அறிவு ஐயா...
DeleteEnjoyed woodcity this month a LOT
ReplyDeleteplease publish largo இடியாப்ப இதழ். i love it
ஜெரோனிமோ : அமர்களமான ஆர்ட் ஒர்க்கிற்காக ஒரு முறை படிக்கலாம்.
ReplyDeleteமொத்த வாழ்க்கையும் சொல்ல வேண்டி அவசரமாக சொன்னது போல இருந்தது.
நமக்கு தெரிந்த வரலாறாக இருந்தும் படங்களில் பார்த்து படித்தபொழுது அதன் தாக்கம் முழுமையாக இருந்தது.
ஜனார்த்தனன் என்கிற J அவர்களுக்கு
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நன்றி அட்ட பெட்டி பாகுபலீ அவர்களே...
Deleteதலைவருக்கே கதை எழுதிய அன்பு நண்பருக்கு உளமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ! தலைவரும், ஸ்டைலும் போல சந்தோஷமும்,ஆரோக்கியமும் கரம் கோர்த்திடட்டும் J சார் !
Deleteபி.கு. தலீவர் இல்லே ..தலைவர்ர்ர்ர்ர் !
பரவால சார்...ரெண்டும் ஒண்ணு தான்..( ன்னு நான் நினைச்சுக்கிறேன்.)
Delete;-)
J அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteபரிசை பெற...யாருக்கு மெயில் அனுப்பனும் ஆசான்.....
ReplyDeleteE mail பிலீஸ்...
lioncomics@yahoo.com
Deleteநன்றி ஆசான் சார்
Deleteநண்பர் jக்கு இனிய மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDelete200
ReplyDelete