Powered By Blogger

Sunday, April 07, 2019

முன்னும், பின்னும் பார்க்கும் படலம் !!

நண்பர்களே,

வணக்கம். ஏப்ரலின் கோவில் திருவிழா – வழக்கம் போல ஊரையே உற்சாகமாக்கிக்கொண்டிருக்க – சந்தடிசாக்கில் கிட்டும் 3 நாள் வி்டுமுறைகளை நினைத்து இப்போதே சப்புக் கொட்டிக் கொண்டிருக்கிறேன் ! காலை 4 மணிக்கெல்லாம் கோவில் நடை திறக்க – மக்கள் அந்த அதிகாலைக்கே வரிசைகட்டி நிற்பதை ‘ஆ‘வென பார்ப்பது ஒரு பரவசமெனில், நேற்று வரை ‘தேமே‘ என்று கிடந்த வெயில் படர்ந்த வீதிகள் திடீரென எக்கச்சக்க வர்ணங்களை ஏற்றிக் கொண்டு நண்டு முதல் தொண்டு கிழம் வரைக்கும் குதூகலிக்கும் விதமாய் உருமாறிடும் அதிசயத்தை ரசிப்பது இன்னொரு பரவசம் ! கிடைக்கும் ஞாயிறு, திங்கள் & செவ்வாய் விடுமுறைகளில் The Lone Ranger & பராகுடா கதைகளை முழுசுமாய் எழுதி முடிக்கவொரு சூப்பர் வாய்ப்பு கிட்டியுள்ளதே என்பது என்னளவிலான பரவசம் # 3 ! So குதிரையிலேறி தெறிக்க விடும் நாயகரிலிருந்து – அலைகடலில் ஆட்சி செய்யும் அசுரர்களென மாறி, மாறிச் சவாரிசெய்வதே எனது இந்த விடுமுறைகளின் லட்சியமாகயிருக்கும் !

ஏப்ரலின் இதழ்களைப் பொறுத்தவரையிலும் இன்னமும் உங்களின் எண்ணச் சிதறல்களை முழுமையாய் உள்வாங்கிட இயலவில்லை தான்... நிறையப் பேர் அந்த முதல் புரட்டலைத் தாண்டி வாசிக்க நேரம் எடுத்துக் கொண்டதாய் தெரியக் காணோம் ! ஆனால் – ஒரு தேக்ஸ்சா ஆம்பூர் பிரியாணிக்கு ஒரு தம்மாத்துண்டு சாம்பிளே போதும் தான் எனும் போது – இதுவரையிலான அபிப்பிராயங்களை ஒரு வழிகாட்டியாக எடுத்துக் கொள்வதில் தவறிராது என்றே தோன்றுகிறது !

எனது பார்வையில் ஏப்ரலின் best லக்கியின் “பரலோகத்திற்கொரு படகு” தான் ! And கார்ட்டூன்கள் என்றாலே காததூரம் ஓட்டமெடுக்கும் நண்பர்கள் நீங்கலாய் – மற்ற அனைவருக்குமே இதனில் உடன்பாடிருக்கும் என்றே தெரிகிறது ! Of course இதுவுமே “சூப்பர் சர்க்கஸ்” தரத்திலோ ; “புரட்சித் தீ”யின் சிரிப்புத் தோரண பரிமாணத்திலோ இல்லை தான் ! பக்கத்துக்குப் பக்கம் ‘கெக்கே பிக்கே‘வெலாம் நஹி தான்... ஆனால் முற்றிலும் புதுசான அந்த ‘படகு ரேஸ்‘ சமாச்சாரம் & அது சார்ந்த கதையோட்டம் செம fresh எனும் போது கொஞ்சமும் அலுப்புத் தட்டாது நகன்ற ஆல்பமிது என்பது அப்பட்டம் ! And இது போன்ற ஜாலியான இதழ்களில் பணியாற்றும் போது தான் நடப்பாண்டின் கார்ட்டூன் வறட்சியின் தாக்கம் ஒரு மிடறு ஜாஸ்தியாகத் தெரிகிறது ! Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் ! என்னவொரு கொடுமையிது guys ??!!

ஏப்ரலின் இரயிலை லேட்டாகப் பிடித்தாலும் லேட்டஸ்டான அட்டைப்படத்தோடு, அசத்தலாய்க் களமிறங்கிய டெக்ஸ் இம்மாதத்தின் இரண்டாமிடத்தில் – again எனது கண்ணோட்டத்தில் ! மெஃபிஸ்டோ; யமா; மோரிஸ்கோ; கர்னல் ஜிம் ப்ராண்டன்; யூசெபியோ போன்ற சில கதாப்பாத்திரங்கள் மட்டும் டெக்ஸின் தொடரினில் தொடர் பயணம் செய்வது வழக்கம். அந்தப் பட்டியலில் இம்மாதம் நாம் பார்த்துள்ள – ‘மிஸ்டர் P‘ கூட சேர்த்தி தான் ! வெகு சமீப இதழொன்றில் கிட்-வில்லர் போலவே மாறு வேஷம் போட்டுக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்ததும் இந்த மனுஷனே ! So 35 ஆண்டுகளாய் டெக்ஸோடு பயணிக்கும் நாம் இந்த வில்லனை யாரென்றே அறியாதிருப்பது தப்பாச்சே என்று நினைத்தேன் ! அதன் பலனாய்த் தேர்வான ஆல்பமிது ! And பெரியவர் போனெல்லியின் கைவண்ணம் எனும் போது, அதனை விமர்சிப்பதெல்லாம் எனக்கு வேண்டாத வேலை என்பதால் இந்த இதழின் ஏராளமான positive-களை மட்டுமே ரசித்திட நினைக்கிறேன் ! And there are plenty... ஓவியரின் இதமான சித்திர பாணியில் துவங்கி, பரபரவென ஓட்டமெடுக்கும் கதைக்களம், டைகர் ஜாக் நீங்கலாய் பாக்கி ரேஞ்சர்களின் முக்கூட்டுப் presence என்று ஏராளமாய் ! ஆனால் க்ளைமேக்ஸில் வில்லனை இன்னும் கொஞ்சம் ரகளையோடு அமுக்குவது போல் போனெல்லி அவர்கள் அமைத்திருப்பின் ‘மிஸ்டர் P` யின் அறிமுக இதழே சரவெடியாகியிருக்கக் கூடும் தான் ! டைனமைட் ஸ்பெஷலின் அந்த நீ-ள ஆல்பத்தின் முடிவுரையைப் போலவே இதனிலும் வில்லனை சிறைப்பிடிக்கும் படலத்தை சடுதியில் முடித்து விட்டது தான் லேசாய் நெருடியது ! ஆனால் தற்சமயம் ஒரு 110 பக்க ஆல்பம் தான் என்ற விதத்தில் not complaining at all !

ஏப்ரலின் மறுபதிப்புப் பற்றி எனக்கும் சரி, உங்களுக்கும் சரி, பெரிதாய் எதிர்பார்ப்புகளோ – ஏமாற்றங்களோ இராதென்றே நினைக்கிறேன் ! ஏற்கனவே படித்தான கதை தான் எனும் போது, வண்ணத்தில் அதன் மேக்கிங் மட்டும் தரமாய் அமைந்துவிடின் – கிணற்றின் தொண்ணூறு சதவிகிதத்தைக் கடந்து விட்டது மாதிரித் தான் ! அட்டைப்படமும் சரி, வண்ணப்பக்கங்களும் சரி, கலரிங் பாணியும் சரி, அச்சும் சரி – டீசண்டாக அமைந்து போனதால் விறுவிறுப்பாய் ஓடியதொரு இதழாக இது அமைந்திருக்கும் தானே folks ? Correct me if I am wrong please ?!

ஏப்ரலின் ஏகோபித்த ஏமாற்றம் ; in fact நடப்பாண்டின் முதல் மெகா ஏமாற்றமும் “குளிர்காலக் குற்றங்கள்” தான் என்பதை உங்களின் இதுவரையிலான பாசமும், நேசமும் நிறைந்த (!!!) பின்னூட்டங்கள் தெரிவிக்கின்றன ! காரமான வார்த்தைகளெல்லாம் இப்போது commonplace என்றான பிற்பாடு, அவற்றை எண்ணி தூக்கத்தைத் தொலைப்பதை விடவும், சொதப்பலின் பின்னணியினை ஆராய்வதும், இது போன்ற boo boos மறுக்கா நேராதிருப்பதுமே முக்கியமென்று படுகிறது ! இந்த இதழின் சுருதி ரொம்பவே குறைவாகயிருப்பதை நான் உணர்ந்தது அதன் எடிட்டிங் பணிகளுக்குள் புகுந்த தருணத்திலேயே ! இதனைத் தேர்வு செய்த சமயமோ, நெட்டில் காணக் கிடைத்த விமர்சனங்களையே ஒரு வழிகாட்டியாகக் கொண்டிருந்தேன் ! கிட்டத்தட்ட எல்லாமே இதற்கு பாசிட்டிவாக thumbs up தந்திருக்க, அந்த clear சித்திர பாணிகளும் எனது தீர்மானத்தை influence செய்திருந்தன ! Of course இவையெல்லாமே எனது தேர்வை நியாயப்படுத்திடவோ ; பிழையினைச் சரியென்று தர்க்கம் செய்திடும் பொருட்டோ அல்ல ! பொதுவாய் கௌபாய் கதைகளின் அந்த நேர்கோட்டு பாணிகளில் not too many things can go wrong என்பது போலொரு நம்பிக்கை என்னுள் குடியிருந்ததே – ஜானதன் கார்ட்லேண்டின் அறிமுகத்தக்குப் பின்னணி ! And நிஜத்தைச் சொல்வதானால் ஒவ்வொரு ஆண்டின் அட்டவணையிலும் ஏதேனுமொரு புதுவரவை நுழைத்து உங்கள் புருவங்களை உயர்த்திட வேண்டுமென்றதொரு அரூப அவசியம் இருப்பது போல் எனக்குத் தோன்றிடும் ! So இயன்றமட்டிலும் புதுசுகளை இணைக்கப் பார்க்கும் படலங்கள் சாத்தியப்படுவதெல்லாமே சந்தா A-வின் ஆக்ஷன் களங்களில் மட்டுமே ! Simply becos – சந்தா B-யில் டெக்ஸின் நிழலில் மார்ட்டின்; ராபின்; ஜுலியா; டைலன் டாக் ஆகியோர் ஒண்டுக் குடித்தனம் நடத்தவே நாக்குத் தள்ளுகிறது ! And சந்தா C-யில் ஏற்கனவே செம கத்திரி விழுந்திருக்க, அங்கு ஏது இடம் ? So புதுவரவுகளை வரவேற்க சந்தா A மாத்திரமே களமென்பதால் ஒவ்வொரு தடவையும் அங்கே இயன்ற தேடல்களை நடத்துவது என் குரங்குச் சேட்டை ! சில தருணங்களில் அவை க்ளிக் ஆவதுண்டு... சில தருணங்களில் not so ! இது பின்னது !

கதையின் தேர்வில் வெற்றி கிட்டும் போது – காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளத் தோன்றும் அதே மூச்சில், சொதப்பல்களின் பொருட்டு முதுகில் மத்தளம் கொட்டப்படுவதையும் ஏற்றுக் கொள்வதில் தயக்கமிருக்கலாகாது என்பது புரிகிறது ! So இந்த நொடியில் வெப்பத்தை உமிழும் நண்பர்கள் மீது எனக்கு no ஆதங்கம்ஸ் ! ஆனால் ஒரு சுமாரான தேர்வோ; ஒரு மிதமான கதையோ உங்களுக்குத் தரக்கூடிய ஏமாற்றத்தை ஒரு படி மேலாகவே நானும் உணர்ந்திடுகிறேன் என்பதையும் சேர்த்தே உணர்ந்திருப்பின், லேசாய் மகிழ்ந்திருப்பேன் ! We take pride in what we do guys & ஒரு சுமாரான இதழ் உங்களளவில் கூட சடுதியில் மறக்கப்படலாம் ; ஆனால் எனக்குள்ளோ அவை காலத்துக்கும் வடுவாய்த் தங்கிடுவதுண்டு ! So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies !! நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் ! So நிச்சயமாய் இதனில் ஒரு பாடம் கற்றிடாது போக மாட்டேன் என்பது எனது promise !

On the same breath – இதே போன்ற அனுபவங்கள் இதற்கு முன்பாய் எப்போதெல்லாம் எழுந்துள்ளன ? என்ற ரீதியில் மண்டையில் சிந்தனைக் குதிரைகள் ஓடத் தொடங்கின ! அட... இந்த வாரப் பதிவுக்கு இதுவே கூட ஒரு spark ஆக இருந்திடலாமே என்று தோன்றிட – “இது சொ-த-ப்-ப-ல்-ஸ் வாரம் !!” என்று தீர்மானித்தேன் !

நினைவுக்கு வரும் முதன் முதல் அனுபவத்தில் எனக்கு ஓரளவு பரிச்சயமுண்டு ; ஆனால் பங்களிப்பு லேது ! ஆனால் இந்த சிந்தனைச் சங்கிலி தொடங்கிய முதல் நொடியே அது தான் தோன்றியது எனும் போது அங்கிருந்தே ஆரம்பிக்கட்டுமா ? 1970‘களின் இறுதிகளில் முத்து காமிக்ஸ் செம பிஸியாய்த் தடதடத்துக் கொண்டிருந்த நாட்கள் அவை ! கதைகள் எல்லாமே Fleetway உபயம் ; அல்லது அமெரிக்க நிறுவனமான King Features-ன் ஆக்கங்கள் எனும் போது அவர்களது இந்திய ஏஜெண்ட்களிடமிருந்து கொள்முதல் செய்வதே வழக்கம். மும்பையில் King Features-ன் முகவர்கள் இருப்பது எனக்குத் தெரியும். ஊரின் மையத்தில் ஒரு பரபரப்பான பழைய காலத்து ஆபீஸ் காம்ப்ளக்ஸின் நான்காவது மாடியில் இருப்பார்கள் ! ஏதோவொரு ஆண்டின் முழுப்பரீட்சை விடுமுறைகளின் போது என் தந்தையோடு நானும் மும்பை சென்றிருக்க, அப்போதைய காமிக்ஸ் கொள்முதலில் நானும் கலந்து கொள்ள முடிந்தது. கூரியர்களெல்லாம் அந்நாட்களில் கிடையாதெனும் போது, நீள நீளமான துணிக்கவர்களில் கதைகள் தபால் மூலமே நம்மை வந்தடையும் அப்போதெல்லாம் ! வந்த அதே மாலையில் அவற்றை வீட்டுக்குத் தூக்கிச் சென்று படிக்கும் முதல் ஆளாக நானே இருப்பேன் என்பதால் Phantom; Mandrake; Cisco Kid; Johnny Hazard (விங் கமாண்டர் ஜார்ஜ்); Buz Sawyer (சார்லி) காரிகன்; கிர்பி போன்ற நாயகர்களெல்லாமே எனக்கு அத்துப்படி ! இத்தனை நாட்களாய் கதைகளைத் தருவித்து அனுப்பும் ஆபீஸ் இது தானா ? என்று பராக்குப் பார்த்தபடியே என் தந்தை அவர்களது நிர்வாகியுடன் பேசிக் கொண்டிருப்பதை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தேன் ! அப்போது தான் அந்த நிர்வாகி Dr.Kildare என்றதொரு தொடர் பற்றிப் பேசினார் ! ”இதுவுமே King Features நிறுவன விற்பனையில் கிட்டிடும் என்பதால் உங்களுக்கு ஆர்வமிருப்பின் வெளியிடலாம்!” என்று அவர் சொன்னார். கையோடு ஒரு முழுநீளக் கதையின் strips-களை ஆர்ட் பேப்பரிலான பிரிண்டில் கையில் தந்தார் ! நானும் எட்டிப் பார்க்க, படங்களெல்லாமே பிரமாதமாய்த் தான் தெரிந்தன ! அப்பாவும் சரி சொல்லிய கையோடு அதற்கும் சேர்த்து பில் போட்டு வாங்க – தமிழ் பேசத் தயாரான முதல் (காமிக்ஸ்) டாக்டர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரானார் Dr.கில்டோர் ! ஊருக்கு வந்த பின்னே மொழிபெயர்ப்பு; அச்சுக்கோர்ப்பு ; அச்சு என்று பணிகள் துவங்கிய நிலையில் எனக்கு அவற்றுள் பங்கேதும் இருக்கவில்லை ! “விசித்திர வேந்தன்” என்ற பெயரில் அந்த இதழ் வெளியான போது தான் – 'அட நம்ம பார்த்த கதையாச்சே' என்று புரட்டினேன். இங்கிலீஷில் படித்த போதே கதை அத்தனை சுகப்படவில்லை எனக்கு; இருந்த போதிலும் அபிப்பிராயம் சொல்லுமளவிற்கான அப்பாடக்கரெல்லாம் இல்லை என்பதால் எதுவும் சொல்லவில்லை ! ஆனால் இதழ் வெளியாகி, ரொம்பவே சுமாரான வரவேற்புப் பெற்றதாய் அப்புறம் தெரிந்து கொண்டேன் ! அதன் பின்பாய் டாக்டர் கில்டோரின் கதை இன்னும் ஒன்று மட்டும் வெளிவந்ததா? இல்லையா? என்பது கூட நினைவில் இல்லை; ஆனால் அந்த  stylish டாக்டரின் சேவை நமக்கு வேணாமே என்று முத்து காமிக்ஸில் தீர்மானித்தனர் என்பது மட்டும் நினைவுள்ளது!

நினைவில் நிற்கும் அடுத்த சறுக்கல் ஒரு செம famous நாயகருக்கு ! 1982-ல் முத்து காமிக்ஸ் வாரமலர் வெளியாகவிருந்த சமயம். என் தந்தை டெல்லியிலிருந்து முகம் முழுக்கப் புன்னகையோடு திரும்பியிருந்தார்கள் – ப்ரூஸ் லீயின் காமிக்ஸ் தொடருக்கு உரிமைகள் வாங்கிவிட்டதாய்ச் சொல்லியபடிக்கே ! அந்தக் காலகட்டத்தில் ப்ரூஸ் லீ என்ன மாதிரியானதொரு legendary ஹீரோவென்பது உலகுக்கே தெரியும் ! So அவரது திரைப்பிரபல்யத்தைப் பயன்படுத்தி ஒரு காமிக்ஸ் தொடரையும் ஏதோவொரு அயல்தேசத்து நிறுவனம் துவக்கியிருக்க, அதன் முகவர்கள் டெல்லியில் இருந்துள்ளனர் ! அவர்களிடம் பேசி, கதையை வாங்கி வந்து முத்து காமிக்ஸில் ஒப்படைத்து விட்டார் சீனியர் எடிட்டர் ! அது “டிங் டாங்” என்ற இதழை வெளியிடும் எனது கனவுகள் சிதைந்து கிடந்த நாட்கள் என்பதால் ஆபீஸுக்குப் போவதே எட்டிக்காயாய்க் கசப்பதுண்டு ! வேண்டாவெறுப்பாக ஆபீசுக்கு மாலைகளில் போனால் “வாரமலர் கலரில் வரப் போகிறது !” என்று ஆளாளுக்கு அக்னிச்சட்டியைத் தூக்கியது போல ஆபீஸ் நெடுக கரகம் ஆடிக் கொண்டிருப்பது எனக்கு கடுப்பை மேலும் அதிகமாக்கிய சமாச்சாரம் ! அப்போதெல்லாம் “கலர்” என்பது நம் காமிக்ஸுக்கெல்லாம் ஒரு உச்சபட்ச luxury ! So ப்ரூஸ் லீயும் கலரில் கலக்கப் போகிறாரென்று நமது ஓவியர் சிகாமணி மூலமாகத் தெரிந்து கொண்டேன். கறுப்பு வெள்ளையிலான ஒரிஜினல் படங்கள் மீது மெலிதான ஒரு பட்டர் பேப்பரைப் போட்டுக் கொண்டு எங்கெங்கே என்ன வர்ணங்கள் வேண்டுமோ – அவற்றை போஸ்டர் கலர்களைக் குழைத்து சிகாமணி பூசித் தருவார் ! அந்த வர்ணம் பூசப்பட்ட பட்டர் பேப்பரே – தொடரவிருக்கும் கலர் பிராசஸிங் நிபுணர்களுக்கான color guide ! இந்தந்த இடங்களுக்கு இந்த இந்த வர்ணங்கள் வர வகை செய்ய வேண்டுமென பார்த்துத் தெரிந்து கொண்டு நெகட்டிவ்களில் பணி செய்வார்கள் ! ப்ரூஸ் லீக்கு கலர் பூசும் போது பக்கத்தில் உட்கார்ந்து பராக்குப் பார்த்தவனுக்குக் கதையை வாங்கிப் படித்துப் பார்க்கக் கூடத் தோன்றவில்லை ! “டிங்-டாங்குக்கு முக்காடு போட்டு போட்ட சூழலில் புதுவரவுக்குப் பகட்டா?” என்ற பொருமலே உள்ளுக்குள் ! அதிலும் ப்ரூஸ் லீ என்றால் எனக்கு ரொம்பவே இஷ்டம் ! நிச்சயம் இந்தக் கதை பட்டையைக் கிளப்பப் போகிறதென்பதை மண்டை சொன்னாலும், அதைக் காதில் போட்டுக் கொள்ள மனசுக்கு மூட் நஹி ! ‘ஐயே... படமே சரியில்லியோ...? சண்டைலாம் ஜாஸ்தி இல்லியே...? ப்ரூஸ் லீ முகமே சரியில்லியே !” என்று ஏகப்பட்ட “சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்” ரகங்கள் தான் எனக்குள் ஓடின ! ஆனால் நான் ரசித்தாலும், ரசிக்காது போனாலும் பணிகள் நடக்காது போகுமா – என்ன? இரண்டே வாரங்களில் வாரமலரின் முதல் இதழ் வண்ணத்தில் டாலடித்தது என் கைகளில் !

திட்டமிடல்களை மட்டும் பிசகின்றி நிறைவேற்ற அன்றைக்குச் சாத்தியப்பட்டிருப்பின் அதுவொரு அசாத்திய வெற்றியாகியிருக்க வேண்டிய முயற்சி என்பதில் சந்தேகமே கிடையாது ! Conceptwise it was close to brilliant ! Maybe அதன் content இன்னும் கொஞ்சம் rich ஆக இருந்திருக்கலாம் என்பதைத் தாண்டி இன்றைக்குமே அதனைப் புரட்டும் போது பிரமாதமாகவே தென்படும் ! இரும்புக்கை மாயாவியின் தொடர்கதை (வண்ணத்தில்); ப்ரூஸ் லீ தொடர்கதை ; அதிமேதை அப்பு (கலரில்) ; ராமு & சோமு ; கபிஷ்; அப்புறம் மு.த.வின் மாயாஜாலத் தொடர்களை என்று 16 பக்கங்களுக்குள் செம variety – சொற்ப விலையில் எனும் போது தமிழ் காமிக்ஸ் உலகிற்கு அதுவொரு மைல்கல்த் துவக்கமாய் இருந்திருக்க வேண்டியது ! ஆனால் ஏதேதோ காரணங்களின் பொருட்டு கிளம்பிய வேகத்திலேயே புஸ்வாணமும் ஆகிப் போயிட – வாரமலர், வராமலராகிப் போனது ! அந்நேரத்துக்குள் +2 பரீட்சைகள்; என் பாட்டி தவறிப் போன சோகம் என்று ஏதேதோ சொந்தக் காரணங்களுக்குள் நான் சிக்கியிருக்க - வாரமலரின் முன்னேற்றத்தையோ / பின்னேற்றத்தையோ தொடர்ந்திட எனக்குத் தோன்றியிருக்கவில்லை ! ஆனால் நான் ஆர்வத்துடன் பின்தொடர்ந்த ஒரே விஷயம் அந்த கலர் ப்ரூஸ் லீ தொடரையே ! துவக்கம் முதலே பதம் தவறிய அல்வா போல தொண்டையில் சிக்கிய தொடரானது, போகப் போக பாடாவதியாகிக் கொண்டே செல்வதை உணர ரொம்பச் சுலபமாய் முடிந்தது ! வாரமலரின் துவக்க நாட்களது promise பின்நாட்களில் தொடர்ந்திடாது போனதற்கு ப்ரூஸ் லீ தொடரின் சொதப்பலும் ஒரு முக்கிய காரணமென்பேன் ! ரொம்பவே எதிர்பார்க்கச் செய்து ரொம்பவே ஏமாற்றம் தந்த தொடர்களுள் ப்ரூஸ் லீ பிரதானமானவர் !

‘அடுத்த இலையில் பதம் தப்பிய அல்வாக்களின் கதை போதும்... நம் பாட்டைப் பார்ப்போமே ?‘ என்று தோன்றுவதால் லயனின் first ever குச்சி முட்டாய் நாயகர் பறறி பார்ப்போமே ? இவருமே ஒரு டாக்டர் தான் & இவரையுமே தவமாய் தவமிருந்து கூட்டி வந்தேன் பாரிஸிலிருந்து ! “டாக்டர் ஜஸ்டிஸ்” என்பது அவரது நாமகரணம் & “கராத்தே டாக்டர்” என்ற பெயரில் களமிறக்கினோம் 1987-ல் ! லயன் காமிக்ஸின் உச்ச நாட்களுள் அதுவுமொரு முக்கிய காலகட்டம் ! அதுவரையிலான 40 இதழ்களுமே ‘ஹிட் ‘; ‘ஓ.கே ‘; `decent` என்ற ரகத்தில் இருந்தவை ! So மிதமிஞ்சிய நம்பிக்கையோடு நமது இதழ்களை நீங்கள் வாங்கி வந்த நாட்களுமே அவை ! படைப்பாளிகளின் கேட்லாக்கில் பார்த்த போது மிரட்டலான சித்திரங்கள் ; செம ரகளையான கதைக்களமாய்த் தோன்றிய கதையைக் காவடியெடுத்து வாங்கி, பிரெஞ்சிலிருந்தும் மொழிபெயர்த்து அப்பாலிக்கா பணி செய்த போது நொந்தே போக நேரிட்டது !! Gear மாறத் திணறும் வண்டியைப் போல, நெடுக திக்கத் திணறிச் சென்றவரை ஒரு மாதிரியாய் ஒப்பேற்றி இதழாக்கிய போது வயிற்றைக் கலக்கியது ! பற்றாக்குறைக்கு இதன் அட்டைப்படமும் ஒரிஜினல் என்றாலுமே செம சுமார் !! எதிர்பார்த்தபடியே மெகா சொதப்பலாகிட,இந்த கராத்தே டாக்டர்வாளை ஓய்வுக்கு அனுப்பிடத் தீர்மானித்தோம் - நம்மளவில் !

அதே தருணத்தில் ; அதே படைப்பாளிகளின் ; அதே மாதிரியான குருவிரொட்டி சாகஸமும் இல்லாது போகவில்லை – “மறையும் மாயாவி ஜாக்” உபயத்தில் !! அந்நாட்களில் கண்ணுக்குத் தெரியாது கரைந்து போகக் கூடிய சிட்டுக்குருவி சிக்கியிருந்தாலே குதூகலித்திருப்பேன்- இரும்புக்கை மாயாவியின் தாக்கம் அப்படியொரு உச்சத்தில் இருந்த காரணத்தினால் ! இந்த நிலையில் மாயமாகிடக்கூடிய ஒரு ஆக்ஷன் ஹீரோ முழுசாய் கிட்டினால் விட்டிருப்பேனா – என்ன ? “கூடையைப் போட்டு ஒரே அமுக்காய் அமுக்கு !!” என்றபடிக்கு இந்த மாயாவியையும் பாரிஸிலிருந்து வண்டியேற்றினோம் தமிழ் பேசும் பொருட்டு ! If I remember right – மினி லயனில் களமிறங்கினார் இந்த ஹீரோ ! ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்த மினியை மேற்கொண்டும் தடுமாறோ-தடுமாறென்று ஆட்டம் காணச் செய்ய இவரும் உதவினார் ! என்றே சொல்ல வேண்டும் ! ரொம்பவே சுமார் ரகத்திலான கதை !! மெகா ரகத்திலான ஏமாற்றம் ! அங்கே நாயகரைக் காணோம் என்பதை விட, கதையையே காணோம் என்பது தான் நிஜம் ! ஏகமாய் எதிர்பார்ப்புகளை ஏற்றி விட்டு அவற்றிற்கு நியாயம் செய்திட முடியாது நான் தவித்த தருணம் # 2 அதுவே !

தொடர்ந்த நாட்களில் லயனில், திகிலில், முத்துவில், மினி லயனில் என ஏகப்பட்ட அயல்மொழிக்கதைகள் வெளிவரத் துவங்கிய பிற்பாடு நிறையவே hit & miss கதைகள் தலைகாட்டத் துவங்கின தான் ! ஆனால் ஒரு சுவாரஸ்யமான தொடரில் ஒன்றிரண்டு கதைகள் குறைச்சலான பரபரப்போடு வலம் வருவது சகஜம் தானென்று அவற்றைச் சுலபமாய்த் தாண்டிச் சென்றோம் ! உதாரணத்திற்கு சாகஸ வீரர் ரோஜரின் தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட மித வேகக் கதைகள் இருந்துள்ளன தான் ; ப்ரூனோ ப்ரேசில் தொடரிலும் தான் ; அவ்வளவு ஏன் – டெக்ஸ் வில்லரின் தொடரிலுமே ! “துயிலெழுந்த பிசாசு” கதையினை மறந்திருக்க மாட்டோம் தானே ? அது போலவே “வெடிக்க மறந்த வெடிகுண்டு” இன்னமுமே என்னை ஓட்டப் பயன்படும் அணுகுண்டு தானே ? So ஒரு தொடரின் ஒரு பகுதியில் மிதமாய் இருப்பனவற்றை, “மறப்போம்; மன்னிப்போம்!” என்பதே நமது அணுகுமுறையாக இருந்து வந்துள்ளது ! At least – எக்கச்சக்கமாய் எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்டு ப்யூஸ் பிடுங்கி விட்ட பெட்டி பார்னோவ்ஸ்கியின் spin-off கதை போன்ற சில தருணங்களை மட்டும் கணக்கில் சேர்த்துக் கொள்ளாதிருப்பின் !! ஆனால் நாயகரே மிஸ்டர் சுமாரார் எனும் போது ‘மன்னிப்பு‘ என்ற பதம் அகராதியில் இல்லாததொரு வார்த்தை என்றாகிவிடுவது புரிகிறது ! On the flip side – விளக்குமாற்றுப் பூசை சர்வ நிச்சயமென்று நான் அஞ்சிக் கிடந்துள்ள தருணங்களில் நேர்மாறான reactions-ம் கிட்டியுள்ளன தான் ! So அவ்வப்போது கிடைக்கும் சாத்துக்களும் ; எப்போதாவது கிடைக்கும் போனஸ்களும் ஒன்றுக்கொன்று சமன் செய்து கொள்கின்றன என்று எடுத்துக் கொள்கிறேன்!

End of the day, the buck stops with me என்பதில் எவ்வித மாற்றங்களும் கிடையாதெனும் போது பொறுப்பைத் தட்டிக் கழிக்க நிச்சயமாய் நான் முயன்றிடப் போவதில்லை ! 'அங்கே பாருங்க .முத்து காமிக்சிலேயும் அந்நாட்களிலேயே சொதப்பியிருக்காங்க ; நாங்க புதுசா எதுவும் செய்யக் கிடையாதே !!" என்ற சிறுபிள்ளை வாதங்களை செய்வதும் எனது நோக்கமல்ல !!  இனியொரு முறை இது போலொரு நெருடல் உங்களுக்கு நேர்ந்திட இடம் தராது இயன்றமட்டிலும் நம் தேடல்களைத் துல்லியப்படுத்த முயற்சிப்பேன் ! Forgive me this once please !

புறப்படும் முன்பாய் சில updates :

- ட்யுராங்கோ : இந்த அடக்கி வாசிக்கும் நாயகருக்கும் அட்டகாச அட்டைப்படங்களுக்கும் ஏதோவொரு ராசியுண்டு போலும் ; தாமாய் கலக்கலாய் அமைந்து விடுகின்றன ! காத்திருக்கும் மே இதழும் அதற்கு விதிவிலக்கல்ல ! Blazing cover & blazing action !!

- The Lone Ranger: கௌபாய் கதைகளில் ஊறிப் போயுள்ள நமக்குமே இவரொரு whiff of fresh air என்பேன் ! சும்மா மிரட்டுகிறார் மனுஷன் !

(ஜடாமுடிக்கார கௌபாயின் பில்டப்பில் ஏகமாய் பல்பு வாங்கி நிற்கும் போதே அடுத்த பில்டப்பா ? என்று கேட்கிறீர்களா ? பழக்கதோஷமல்ல இது...!!! மே மாதம் நீங்களே பார்க்கத் தானே போகிறீர்கள்?!)

- பராகுடாThe Climax ! இதனைப் படிக்கப் போகும் வேளையில் கைவசம் ஒரு கர்ச்சீப் இருந்தால் தேவலாமென்பேன் ! புரட்டி எடுக்கும் ஆக்ஷன் அதிரடிகள் உங்கள் நெற்றிகளில் கொணரவுள்ள வியர்வைத் துளிகளைத் துடைக்கவும்; அப்புறம் கடைவாயோரமாய் அகஸ்மாத்தாய் ஊற்றெடுக்கக் கூடிய ஜலத்தை ஒற்றி எடுக்கவுமே பயன்படுமல்லவா ? Is absolutely scintillating stuff !!

May !! Bring it on Lord !! Can't wait for it to unfold.......!!

மீண்டும் சந்திப்போம் guys! Have a wonderful Sunday ! Bye for now !  
         

276 comments:

 1. வணக்கம்.. படித்துவிட்டு ஓடி விடுகிறேன்..

  ReplyDelete
 2. உள்ளேன் சார் 🙏🏼
  .

  ReplyDelete
 3. ப்பா!!! தளம் செம்ம அழகா இருக்கு.


  !!! ஜொலிக்குது!!!

  ReplyDelete
  Replies
  1. Background மாற்ற முனைந்துகொண்டிருக்கிறேன் சார் ; ரொம்ப நாளாய் இதே format-ல் உள்ளதல்லவா ?

   Delete
 4. டாக்டர் கில்டேர் முத்து காமிக்ஸில் இரு கதைகளில் தலைகாட்டியுள்ளார். 1.விசித்திர வேந்தன் 2.கல் நெஞ்சன். இதே நாயகர் ராணி காமிக்ஸிலும் தலைகாட்டியுள்ளார். காட்டில் விழுந்த விமானம் கதையில். முத்து காமிக்ஸில் வெளிவந்த இரு கதைகளும் சுமாராக இருந்தாலும், கல் நெஞ்சன் புத்தகம் கவரோட கிடைப்பது ரொம்பவும் அரிது. பல காமிக்ஸ் ஆர்வலர்களின் தேடலில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அட..கில்டெருக்கும் கிராக்கியா ?

   Delete
 5. என் கண்ணு புதுப்பிக்கபட்டு விட்டதா...தளம் செம பளீச்னு இவ்வளவு தெளிவா ,தூய்மையா தெரியுதே...

  பெரிய பதிவை பொறுமையா படிச்சுட்டு வந்துருறேன்...

  ReplyDelete
  Replies
  1. தலீவரே...பொழுது போகாமல் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்துக் கொண்டிருக்கிறேன் பதிவின் பின்னணியில் !! So உங்கள் கண்கள் நேற்றிருந்தது போலவே தொடர்கின்றன !!

   Delete
  2. ///
   என் கண்ணு புதுப்பிக்கபட்டு விட்டதா...தளம் செம பளீச்னு இவ்வளவு தெளிவா ,தூய்மையா தெரியுதே...///

   போனவாரம் 'இணையதள விடுமுறை'ன்னு எங்ககிட்டே கதைவிட்டுட்டு சத்தமில்லாம கண் புரை ஆப்பரேசனை செஞ்சுகிட்டு வந்திருக்கீங்க போலிருக்கே தலீவரே?!!
   ஆப்பரேசன் பண்ணிய புதுசுல எல்லாமே பளிச்சுனு தான் தெரியுமாம்.. நம்ம கிட்ஆர்டின் கண்ணன் தான் சொன்னாரு! :)

   Delete
 6. எடிட்டர் சார்..

  'குளிர்காலக் குற்றங்கள்' கதை சொதப்பலுக்காக நீங்கள் மன்னிப்புக் கோருவதெல்லாம் எங்களைச் சங்கடப்படுத்தும் சமாச்சாரங்கள்! 'லயன்-350' என்ற மணிமகுடத்தைத் தாங்கி வந்திருக்காவிட்டால் இது இந்த அளவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்காது! சினிமா கேப்டனுக்கு மட்டுமல்ல; எங்களுக்குமே தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'மன்னிப்பு'தான்!
  எங்களுக்குத் தேவை - பரிகாரம்! சீக்கிரமே ஒரு இத்தாலியக் கதம்ப குண்டையோ, பெல்ஜிய கதம்ப குண்டையோ போட்டு எங்களைக் கூல் படுத்தும் வழியைப் பாருங்கள் சார்!

  இனி இயன்றவரை, எந்தவொரு மைல்கல் ஸ்பெஷல் இதழுக்கும் இதுபோன்ற அறிமுகப் படலங்கள் வேண்டாம் என்பதையும், மேற்கூறியதைப் போல கதம்ப குண்டூஸைப் போட்டுத் தாக்கவேண்டும் என்பதையும் எடிட்டர் சமூகத்திடம் இந்த வாசகர் சமூகம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறது!

  ReplyDelete
  Replies
  1. துரதிர்ஷ்டவசமாய் படைப்பாளிச் சமூகங்கள் அந்த கதம்ப புக் சமூகங்களுக்கு இசைவு சொல்வதில்லையே !!

   Delete
  2. இனி இயன்றவரை, எந்தவொரு மைல்கல் ஸ்பெஷல் இதழுக்கும் இதுபோன்ற அறிமுகப் படலங்கள் வேண்டாமே ப்ளீஸ்.

   Delete
  3. ///இனி இயன்றவரை, எந்தவொரு மைல்கல் ஸ்பெஷல் இதழுக்கும் இதுபோன்ற அறிமுகப் படலங்கள் வேண்டாம்///

   அதே.!அதே.!

   Delete
  4. // தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை 'மன்னிப்பு'தான்!
   எங்களுக்குத் தேவை - பரிகாரம்! சீக்கிரமே ஒரு இத்தாலியக் கதம்ப குண்டையோ, பெல்ஜிய கதம்ப குண்டையோ போட்டு எங்களைக் கூல் படுத்தும் வழியைப் பாருங்கள் சார்! //

   அதே அதே 👍🏼🙏🏼
   .

   Delete
  5. // துரதிர்ஷ்டவசமாய் படைப்பாளிச் சமூகங்கள் அந்த கதம்ப புக் சமூகங்களுக்கு இசைவு சொல்வதில்லையே !! //

   வட போச்சே மொமண்ட் 😳
   .

   Delete
 7. Replies
  1. எங்கயா? லக்கிலூக் படத்த காணோம்??!!
   மொட்டை profileஆ இருக்கு!!

   Delete
  2. என்னோட புரொபைல் போட்டோவும் காணோம்..!

   Delete
  3. எனக்கும் காணோம். சில நாளுக்கு முன்னமே காணோம். 😫

   Delete
  4. இது எதிர்கட்சியின் சதியா இருக்குமோ??

   Delete
  5. என்னதும் காணோம்...என்ன ஆச்சுன்னு நானும் குழம்பிட்டு இருக்கேன்...:-(

   Delete
  6. நடுவிலே சில profile படங்களைக் காணோம் !! கூப்பிடுங்க ரிப்போர்ட்டர் ஜானியை !! இல்லாங்காட்டி..CID ராபினை !! அட..ரிப் கிர்பியையாவது ?

   Delete
  7. அல்லது மர்ம மனிதன் மார்டினை..
   😊😊😊

   Delete
  8. ரிப்கிர்பி. ஆசிரியரே சொல்லிவிட்டார். அப்பாடி எப்படியாவது ஒரு ஸ்லாட் இருக்கும்😃

   Delete
 8. விஜயன் சார், தளத்தின் இந்த புதிய background வெள்ளை வெளேர் என்று நன்றாக இல்லை. குறிப்பாக மொபைலில் படிக்க பளீர் என்று கண்களை கூசச்செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பட்டி-டிங்கரிங் தொடர்கிறது சார்...இப்போது பாருங்களேன் ?

   Delete
  2. Much better now sir. Thank you. பச்சைதான் எனக்கு பிடிச்ச கலரு :-)

   Delete
 9. பரகுடா climax நம் அட்டவணையில் எதற்கு பதிலாக சார்?
  லக்கியின் மீதி இரண்டு கதைகளியும் தனித்தனி இதழ்களாக்கினால் இன்னொரு மாதத்திற்கு கார்ட்டூன் ready இல்லையா?
  மாதம் ஒரு கார்ட்டூன் வேண்டும் சார்.
  அப்புறம் காலவேட்டையருக்கு பதிலாக ஜம்போவில் ஒரு புது கார்ட்டூன் ஹீரோ என்றால் கிட்டத்தட்ட சமாளித்து விடலாம் இல்லையா?

  கார்ட்டூன் வறட்சியில் ஓவராக புலம்புகிறேனோ???

  ReplyDelete
  Replies
  1. ///கார்ட்டூன் வறட்சியில் ஓவராக புலம்புகிறேனோ???///

   :)))))

   Delete
  2. //பரகுடா climax நம் அட்டவணையில் எதற்கு பதிலாக சார்?//

   In place of "பிரளயம்" !

   //லக்கியின் மீதி இரண்டு கதைகளியும் தனித்தனி இதழ்களாக்கினால் இன்னொரு மாதத்திற்கு கார்ட்டூன் ready இல்லையா?//

   Nopes...இரண்டும் இணைந்து ஆண்டுமலராய் சார் ...!

   //அப்புறம் காலவேட்டையருக்கு பதிலாக ஜம்போவில் ஒரு புது கார்ட்டூன் ஹீரோ என்றால் கிட்டத்தட்ட சமாளித்து விடலாம் இல்லையா?//

   நான் ரெடி....ஆனால்...ஆனால்....நண்பர்கள்...?

   Delete
  3. // நான் ரெடி....ஆனால்...ஆனால்....நண்பர்கள்...//
   I am ready ready.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
 10. மேமாத இதழ்களின் அறிவிப்பு.காத்திருப்பு படலத்தை வீரியப்படுத்தியுள்ளது.

  ReplyDelete
 11. இங்ஙகன தான் இருக்கேன். புது ஜானர், ஹீரோக்கள் ட்ரை பண்ணும் போது பல்பு கிடைப்பது சகஜம். போன வாரம் நண்பர் அசோக் சொன்னது போல 40 வைரத்துல ஒன்னு கூழாங்கல்லாப் போச்சு போல. ஏதோ ஒன்னு அப்படி இப்படி இருக்கிறது தான். அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. +1...

   வெளிநாட்டு மாப்பிள்ளை சாரின் புரைபல் படமும் காணலை்..அப்ப பிரச்சனை எனக்கு மட்டுமல்ல ..
   அதுவரைக்கும் சந்தோசமே...:-))

   Delete
  2. நிஜம் தான் சார் ; ஆனால் எனது சங்கடம் வேறு மாதிரியானது ! கடலளவுக் கதைகள் காத்திருக்கும் போது நமக்கான சாத்தியம் ஆண்டுக்கு அந்த 40 + கதைகளே ! அப்படியிருக்கும் போது ஒரே ஒரு கூழாங்கல் கூட நெருடத் தான் செய்கிறது !

   இங்கொரு கொசுறுச் சேதி : அடுத்தமுறை இதுபோலொரு மித ரக இதழில் இடறும் வாய்ப்பு எழுந்தால் அந்த மாதம் ஒரு ஸ்லாட் காலியாய்ப் போனாலும் பரவாயில்லையென்று அந்தக் கதையை பரணுக்குப் பார்சல் செய்திடுவேன் ! அதற்குப் பதிலாய் வேறொரு இதழை அந்தச் சந்தாக் காலத்துக்குள்ளேயே களமிறக்கி ஈடு செய்வோம் ! That's a promise !

   Delete
 12. காமிக்ஸ் என்ற பெயருடன் எது வந்தாலும் வாங்கத்தான் போகிறேன்

  ReplyDelete
  Replies
  1. அந்த காதலையும், நம்பிக்கையையும் எந்தவொரு தருணத்திலும் நான் taken for granted ஆக எடுத்துக் கொள்ளல் ஆகாதன்றோ ? எனது ஆதங்கமெல்லாம் அதன் பொருட்டே சார் !!

   Delete
  2. //
   காமிக்ஸ் என்ற பெயருடன் எது வந்தாலும் வாங்கத்தான் போகிறேன் //

   சரியே நண்பரே 👌🏼👍🏼
   .

   Delete
 13. மேமாத இதழ்களின் அறிவிப்பு.காத்திருப்பு படலத்தை வீரியப்படுத்தியுள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தல..தளபதி...தலைவர்...உலகநாயகர் படங்கள் ஒருசேர ரிலீஸெனில் ....?

   Delete
  2. உண்மை சார்...அப்படி தான் உள்ளது...ஆனால் நம்ம " தல " டெக்ஸையும் இறக்கி விட்டீர்கள் எனில் அடுத்த மாதம் அதிரடி அடிதடி மாதம் தான்...:-)))

   Delete
  3. மேமாத சரவெடி என்பதில் எள்ளளவும் ஐயமில்லை ஐயா.

   Delete
 14. பேக்ரவுண்ட் வெள்ளையாக தெரிந்தது திடீரென பச்சையாக மாறிவிட்டது

  ReplyDelete
  Replies
  1. இதுகுறித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தை செனாஅனா விளக்குவார்! :)

   Delete
  2. குரங்கு கையில் பூமாலை என்று கேள்விப்பட்டுள்ளீர்கள் தானே சார்..? சித்தே நேரத்துக்குப் பொறுத்துக் கொள்ளுங்களேன் - ஏதாச்சுமொரு கிளையில் செட்டில் ஆகி விடுவேன் !

   Delete
 15. பரலோகத்திற்கொரு படகு:- பிஸ்டல் பீப் - இந்த கொசுறு வில்லன் லக்கி லூக்கை பயமுறுத்தி ஓட்ட துப்பாக்கியை வைத்து விதவிதமாக வித்தை காட்டுவான், லக்கி அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பார். நானும் லக்கி அவனை விட வித்தியாசமாக என்ன துப்பாக்கி வித்தை காண்பிக்க போகிறார் என நினைக்கும் போது தம்பி ஆறு குண்டுகள் காலி நட ஷெரிப் ஆபிஸ்க்கு என்பது செம ரகளை. இதில் வில்லனுக்கு கணக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பது சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. ஆம்....இது போல பல இடங்களில் இந்த முறை லக்கி கலக்கி எடுத்து உள்ளார்..

   Delete
 16. அப்புறம் ஆகஸ்டு ஈ.பு.வி யில் ஒரு கார்ட்டூன் ஸ்பெஷல், இந்த வருடத்தின் கார்ட்டூன் வறட்சி காணாமல் போய்விடும்.

  ReplyDelete
  Replies
  1. சிலபல கார்ட்டூன் விரும்பா நண்பர்களும் சேர்ந்தல்லவா காணாது போய் விடுவார்கள் சார் ?!!

   Delete
 17. அப்புறம் எடிட்டர் சார்... ஒவ்வொரு பதிவுக்கும் தலைப்பு வைக்கும்போது நன்றாக யோசித்துவிட்டுத்தான் வைக்கிறீர்களா? ஹிஹிஹி! :P

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி!!
   😎😎😎😎😎😎
   இப்டிக்கா கண்ணாடி போட்டுட்டா எங்கெ பாக்கரோம்னு தெரியாதுல்ல??

   Delete
  2. ஒய் திஸ் கொலவெறி ?

   Delete
 18. பரலோகத்திற்கொரு படகு:- படகில் பயணிக்கும் போது தண்ணீரின் அளவு குறையும் போது ஜாலி ஜம்பர் மூலம் படகுக்கு வழி காட்டுவது செம கற்பனை, அதற்கு மகுடம் வைத்தாற்போல் லக்கி மற்றும் ஜாலி நீர் மட்டம் அதிகமாகி இரண்டு பேரும் மடக் மடக் என தண்ணீரை குடித்து மூழ்கும் இடம் காமெடியின் உச்சம்.

  ReplyDelete
  Replies
  1. இந்த ஆல்பத்தில் ஒரிஜினலாய் ஜாலி ஜம்பருக்கு வசனங்களே கிடையாது ! பின்னாட்களது கதைகளில் தான் ஜாலி பேசும் பாங்கை கதாசிரியர் இணைத்திட்டார் ! ஆனால் நம்மளவுக்கு லக்கியைப் போலவே ஜாலி ஜம்பரும் ஒரு ஹீரோவே என்பதால் கொஞ்சமாய் மௌனங்களைக் கலைக்க வழி செய்தேன் !

   Delete
 19. ஹிஹிஹி!!
  😎😎😎😎😎😎
  இப்டிக்கா கண்ணாடி போட்டுட்டா எங்கெ பாக்கரோம்னு தெரியாதுல்ல??

  ReplyDelete
  Replies
  1. அட..உங்க profile படம் எக்கட போயி சார் ?

   Delete
  2. இன்னும் கொஞ்சம் மேல வாங்க??

   Delete
  3. நானும் அத தான் தேடிட்டு இருக்கேன் சார்...:-(

   Delete
 20. விருதுநகர் பங்குனி பொங்கலை முன்னிட்டு நேற்றிலிருந்து விருதுநகரில் டென்ட் போட்டாச்சு. விருதுநகர் மற்றும் சுற்றுப்பட்டி கிராமத்தில் காமிக்ஸ் ரசிகர்கள் யாராவது உண்டா, முடிந்தால் சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. சாமி கும்பிட வந்த இடத்திலும் கடா வெட்டுக்கு ஏற்பாடா ?

   Delete
  2. நேற்று இரவு பொருட்காட்சி மற்றும் "பானு" ஓட்டலிலும் எனது குடும்பம் மற்றும் சொந்தகாரர்களுடன் கடா விருந்து ஆரம்பித்து விட்டது.

   Delete
 21. பரலோகத்திற்கொரு படகு:- அந்த சீட்டாடி படகின் பாய்லர் பாயை பிடித்து சீட்டு விளையாட்டில் அவனை தோற்கடித்து கொண்டு இருக்கும் இடத்தில் லக்கி புகுந்து உனது சீட்டை வைத்து நான் ஆடுகிறேன் எனது சீட்டை வைத்து விளையாடு என பல்ப் கொடுக்கும் இடம் எதிர்பாராதது. I like it.

  ReplyDelete
 22. இன்றைய பதிவிற்கும் ,"சிங்கத்தின் சிறு வயதில் " தொடருக்கும் மிக்க நன்றி சார்..

  இதழ் தோல்விக்கு " மன்னிப்பு " என்பது எல்லாம் பெரிய வார்த்தை சார்..என்ன ஒரு ஸ்பெஷல் இதழில எப்பொழுதும் போல ஒரு வெற்றி நாயகரையே களம் இறக்கினால் நலமோ என தோன்ற வைத்து விட்டது அவ்வளவு தான்...

  (அதாவது டெக்ஸ் இல்லா ஸ்பெஷல் சாதா...)

  ReplyDelete
 23. வெகு சமீப இதழொன்றில் கிட்-வில்லர் போலவே மாறு வேஷம் போட்டுக் கொண்டு ஏகப்பட்ட ரகளை செய்ததும் இந்த மனுஷனே ! So....


  விரைவில் மீண்டும் மிஸ்டர் B அவர்களை உடனடியாக களம் காண ஏற்பாடு செய்யுங்கள் சார்..

  ReplyDelete
 24. சார் குட்டி டெக்ஸ் இந்த மாத சந்தாவில் உண்டுங்களா??????

  ReplyDelete
 25. ஆசிரியரே டெக்ஸ் வில்லரின் மினி சாகசங்கள் உதாரணம் எரிந்த கடிதம் மரண நடை போன்ற சில கதைகளை இனைத்து ஒரே புத்தகமாக வெளியிடலாமே கலர் டெக்ஸ் ஒன்றாக வந்தது போல

  ReplyDelete
  Replies
  1. நண்பர் செந்தில் சத்யாவின் கருத்தை வழிமொழிகிறேன் சார்..

   Delete
  2. Overkill ஆகிடக் கூடாதே சத்யா !

   Delete
 26. ஹாய் சார்,

  குளிர் கால குற்றங்கள் நன்றாக இருந்தது, அனால் அதில் வரும் இரண்டாவது கதை நிஜமாகவே பொறுமையை சோதித்து விட்டது, அழுகுணி ஹீரோ என்ற பெயருக்கு தகுதியாகி மொக்கையை போட்டு விட்டார். ஆனால் சித்திரங்கள் அருமை. டெக்ஸ் அண்ட் டைகருக்கு பிறகு அவர்கள் இடங்களை யாருமே நிரப்பவில்லை.

  பரலோகத்திற்கொரு படகு சில இடங்களில் வாய் விட்டு சிரிக்க வைத்தது ஆனால் இப்போது கார்ட்டூன் கதைகள் 45 பக்கம் என்பது படிக்க முடியாததாகிவிட்டது என்பதுதான் உண்மை.

  கேப்டன் ப்ரின்ஸ் : மரண வைரங்கள்
  பிரின்ஸ் எப்பொழுதும் சோடை போனதில்லை, மறு பதிப்பாக வந்து இருந்தாலும் திரும்ப படிக்க முடிந்தது.

  டெக்ஸ் எப்படி வந்தாலும் படிக்க முடிகிறது, மாதம் 4 புத்தகங்கள் வந்தாலும் தல தலைதான். ஹி ஈஸ் தி பெஸ்ட் ...

  ReplyDelete
  Replies
  1. கடைசி பத்திக்கு ப்ளஸ் ஓ ப்ளஸ் சார்..:-)

   Delete
  2. //டெக்ஸ் அண்ட் டைகருக்கு பிறகு அவர்கள் இடங்களை யாருமே நிரப்பவில்லை.//

   Yes..yes +1

   //ஆனால் இப்போது கார்ட்டூன் கதைகள் 45 பக்கம் என்பது படிக்க முடியாததாகிவிட்டது என்பதுதான் உண்மை.//

   No..no..-1

   Delete
 27. ஹலோ வாட் இஸ்த புரஸிசர் பார் கெட்டிங் மே‌ மந்த் புக்ஸ் ஆன் ஏப்ரல் மிடில் :-) ப்ளீஸ் ஹெல்ப் மீ.

  ReplyDelete
  Replies
  1. ஃபர்ஸ்ட் பை ஒன் டைம் மெஷின், தென் கோ டூ மே அன்ட் பை த புக்ஸ் அன்ட் கம் பேக் டு டுடே

   Delete
  2. வாடஸ்த புரொசிஞர் பார் பையிங் டைம் மெஷின்?

   Delete
  3. ட்ரான்ஸ்பர் 100 மில்லியன் டு மை அக்கவுண்ட்

   Delete
 28. ஜானதன் கதை நன்றாக இருந்தது..இன்னும் ஒரு வாய்ப்பு குடுத்து பார்க்கலாமே ..
  இப்படிக்கு
  ஆ.சோ.பாலசுப்ரமணியன்
  ஆறுமுகநேரி

  ReplyDelete
  Replies
  1. சில டெக்ஸ் & மாடஸ்தி கதைகளுக்கு ஜானதன் எவ்வளவோ தேவலை!!

   ஏன் இந்த டம்மி டெக்ஸ் கதைகளுக்கெல்லாம் யாரும் பொங்கரதே இல்லைனு தான் தெரியல!!!

   15 டெக்ஸ் கதைகள் 20 பக்கத்தை கடக்க முடியாமல் பிரோவில் துயில்கின்றன!!!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. மிதுன்ன் சார்...இதே தான் பல பேரு சமர்ப்புக்கு சொல்லி இருக்காங்க...:-)))

   Delete
  4. அதை விட அவர் ஆஹா ஓஹோ என பாராட்டிய நிஜங்களின் நிசப்தம் 10 பக்கங்களை படிக்க ஏன் பார்க்ககூட முடியவில்லை அதை சொன்னால் உனக்கு ரசனை வளரவில்லை உன் பார்வையில் கோளாரு நீ படிப்பதே தகறாறு என்பார் ஆனால் அவர் பாராட்டியதை குறை சொன்னால் டெக்ஸ் ஒரு டொக்ஸ் மாடஸ்டி ஒரு கேடஸ்டி என்பார் விடுங்கள் தலைவரே மிதுனருக்கு இதெல்லாம் வழக்கந்தானே

   Delete
  5. மாடஸ்டி மற்றும் டெக்ஸ்-க்கு சடையான்டி பரவாயில்லையா?😇

   Delete
  6. நான் சடையாண்டியை இன்னும் படிக்கவில்லை. இருந்தாலும் இளவரசி மற்றும் தல க்கு நிகராக ஒப்பிடுவதை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது

   Delete
  7. உண்மையில் நண்பர் ஈ.வி.யை பாராட்டியெ ஆக வேண்டும்!

   கடந்த ஜனவரியில் வந்த டொக்ஸ் (நன்றி : செந்தில் சத்யா) கதையை ஓட்டிக் தள்ளியிருந்தார்!

   விமர்சனம் யார் கதையாக இருந்தாலும் சரியில்லை என்றால் விமர்சிக்கவும், ஓட்டவும் செய்தால் சரிதான்!!

   அதை விடுத்து மொக்கையான டெக்ஸ், மாடஸ்டி, மாயாவி கதைகளை எல்லாம் ஓஹொன்னு சொல்லிவிட்டு, புதுவரவில் வந்து அது சொத்தை இது சொத்தைனு தூர்வாருவது தான் முரணாக இருக்கிறது!!

   Delete
  8. ///டெக்ஸ் ஒரு டொக்ஸ் மாடஸ்டி ஒரு கேடஸ்டி///

   சூப்பர் சூப்பர் 😂😂😂😆😆😆

   Delete
  9. மிதுனரே உஙகளைப்போல் ஒரு காமிக்ஸ் ரசனைவாதியை பார்ப்பது மிக அரிது ஜாம்பவான்களுடன் சப்பைவான்களை ஓப்பிட்டு வாதாடுவது யப்பா உங்களுக்கு ஆன்டெரர்தான் கரெக்ட்டு

   Delete
  10. @ ஆ.சோ.பாலசுப்ரமணியன்
   ஆறுமுகநேரி

   Thanks sir !!

   Delete
  11. ஒரு ஸ்பெசல் டீ பார்சேல்ல்ல்..

   Delete
 29. // எனக்குள்ளோ அவை காலத்துக்கும் வடுவாய்த் தங்கிடுவதுண்டு ! So இம்முறை உங்கள் அளவுகோல்களில் பின்தங்கிவிட்டதொரு தேர்வை செய்ய நேரிட்டதற்கு my heartfelt apologies !! நான்கில் ஒன்று பழுதில்லை... என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்பவனல்ல நான் ; நாற்பதில் கூட ஒரு பழுதில்லாது கரைசேர்க்கத் துடிப்பவன் ! So நிச்சயமாய் இதனில் ஒரு பாடம் கற்றிடாது போக மாட்டேன் என்பது எனது promise ! //

  உங்களுடைய வருத்தம் புரிகிறது சார்🙏🏼

  படைப்புலக ஜாம்வான்களுக்கே அடி சறுக்கும்போது

  இதுவும் கடந்து போகும் 🙏🏼🙏🏼🙏🏼

  இதற்காக புதிய தேடுதலை நிறுத்திவிடாதீர்கள் சார்
  ஒன்றிரண்டு சொதப்பினாலும்
  நல்முத்துக்கள் கிடைத்திருப்பதை மறக்கலாகாது 😍🥰🙏🏼
  .

  ReplyDelete
  Replies
  1. உண்மை....புதியதை ஆசிரியர் தேடியதாலியே பராகுடா ,பெளன்சர் போல களங்கள் நமக்கு கிடைத்தது..

   Delete
  2. சார்..தேடல்களைத் தொடர என்றைக்கு முனைப்பிலாது போகிறதோ - அன்றைக்கு தேமே என்று நானே VRS வாங்கி கொண்டு வீட்டில் குந்தியிருப்பேன் !! தேடலிலா இந்தப் பயணம் - கிடா விருந்திலாத ஈரோட்டுச் சந்திப்பு போலாகிவிடாதா ?

   Delete
 30. டியர் எடிட்டர்

  எனக்கு விளங்கவேயில்லை .. இப்போதுதான் ஜனநாதன் கார்ட்லண்ட் 40 பக்கம் படித்துவிட்டு வருகிறேன். இதுவரை பிடித்தே உள்ளது. 70களின் கதை என்பதால் சித்திரங்கள் வேறு மாதிரி இருந்தாலும் இது ஒரு template western அல்லவா? ரசிக்க பல விஷயங்கள் உள்ளனவே. Sprinkled action too .. (அந்த "ஏழு மலையை தாண்டி போனேன் ஏலேலோ" பாட்டு தவிர .. ஹி ஹி ..).

  கண்டிப்பாய்த் தொடரவும் - வருடம் ஒருமுறையேனும் !

  ReplyDelete
  Replies
  1. Read the first story completely. Loved it. Cartlands second story is different due to his soulmate being shut off suddenly from his life. Hence his period of aftershocks are perfectly understandable. The story picks up post the recovery from shock.

   All in all Johnathan Cartland is 100 times better than the longish Tex story in Dynamite Special which to me was not worth the money.

   Jonathan Cartland has some large mantle sketches too which are BEAUTIFUL. As a total package I rate KULIRKAALA KUTRANGAL 9/10.

   Delete
  2. ///All in all Johnathan Cartland is 100 times better than the longish Tex story in Dynamite Special which to me was not worth the money.//

   என்ன கொடுமை இது, ராகவன் ஜி!!

   Delete
  3. //As a total package I rate KULIRKAALA KUTRANGAL 9/10.//

   அட்றா சக்கை....அட்ரா சக்கை....அட்றா...அட்றா சக்கை !!

   Delete
  4. //the longish Tex story in Dynamite Special which to me was not worth the money.//

   அய்யய்யோ...அய்யய்யோ...அய்யய்யய்யயோ...!

   2018-ன் டாப் செல்லர் !!

   Delete
 31. P பார் பச்சோந்தி என்கிற ப்ரோடியஸ் என்கிற பெர்ரிட்ரெய்டன் 110ம் பக்கத்தில் டெக்ஸ் அண்ட் கோ கையில் மாட்டிக்கொள்ளும் வரை கதை ஜெட் வேகத்தில் பறக்கிறது. என்ன.விறுவிறுப்பான சினிமா .இன்டெர்வல் விடப்போகிறார்கள் இனி தூள் தான் என்று ஆசைப்படும் தருணத்தில் பொசுக்கென்று வணக்கம் போட்ட கதையாக வில்லன் பி ஒரு அடிகூட வாங்காமல் மாட்டிக்கொள்கிறான்..இனிவரும் அடுத்த கதைகளில் தொடரும் வில்லன் என்பது ஒரு ஆறுதல்.நல்லகதை..சிறந்த சித்திரங்கள்.ஏப்ரலின் பச்சோந்தி பகைவன் அக்மார்க் டெக்ஸ் கதை.வரவேற்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //விறுவிறுப்பான சினிமா .இன்டெர்வல் விடப்போகிறார்கள் இனி தூள் தான் என்று ஆசைப்படும் தருணத்தில் பொசுக்கென்று வணக்கம் போட்ட கதையாக வில்லன் பி ஒரு அடிகூட வாங்காமல் மாட்டிக்கொள்கிறான்..//

   +1

   Delete
 32. Why we don't try. Buck Jones kit karson and other vintage cowboy stories instead of new cowboy stories?

  ReplyDelete
  Replies
  1. இப்போ தான் சாத்து வாங்கியிருக்கும் முதுகு விஜய் சார் !!

   ஜானதன் 45 ஆண்டுகளுக்கு முன்பான படைப்பாக்கும் ! அதற்கே இந்தப் பாடு !! நீங்கள் குறிப்பிடுவோரெல்லாம் 1960 களின் பார்ட்டிகள் ! நம்மவர்கள் ஓட விட்டு உதைப்பார்கள் என்னை !!

   Delete
  2. I simply do not understand what's wrong with this album :-( It has all the ingredients of an epic ! Grrr !!!

   Delete
  3. Have a bunch of e-mails !! With loads of grrrrrs - for a different reason !!

   Delete
 33. நண்பர் ஜொனாதன், நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க !! மத்த கௌபாய்ஸ்-க்கு வழி விடுங்க !!!

  ReplyDelete
  Replies
  1. அவர் ஏற்கெனவே ஓரமா தான் நிக்குறாரு.

   Delete
 34. எடிட்டர் சார் ! So proud of you being open n honesty. இதுவும் கடந்து போகும் ! விடுஙக சார் !!!chill out!!!

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சிலிருந்த நெருடலை இறக்கி வைத்த கணமே light ஆகி விட்டேன் நண்பரே !

   Delete
 35. பச்தோதி பகைவன்:

  பச்சோந்தி பகைவன் ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக இருந்தது.

  காரணம் கதையின் ஹீரோ பச்சோந்தியால் தான். டெக்ஸை மண்டை காய வைத்த இடங்களை ரொம்பவும் ரசித்தேன்.
  அதுவும் செவ்விந்தியனாக வந்து யாருமே இல்லாத இடத்தில் டெக்ஸை டீ ஆத்த விட்டது அருமை.

  டெக்ஸை தேவைக்கு அதிகமாக கஷ்படுத்திடோமே என்ற குற்ற உணர்வினால் மொக்கை யான க்ளைமாக்ஸால் சட்டென்று ஆசிரியர் முடித்துவிட்டார்.
  இன்னும் கொஞ்ச பக்கங்களுக்கு டெக்ஸை சுத்த விட்ருக்கலாம்.
  (டெக்ஸ் நன்றாக உள்ளது என்று விமர்சனம் எழுதிய பின் பேனாவின் முனையை உடைத்து விட்டேன்).

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா....:-))))


   உண்மையை சொன்னா அடிக்கடி உடைக்கனும் பேனா முனையை நண்பரே்..:-))

   Delete
  2. இதுவரை எனக்கு மூன்று முறை மட்டுமே பேனாவை உடைக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

   Delete
  3. என்னுடைய ரசனை சார்ந்து, எந்த டெக்ஸ் கதை எனக்கு மிகவும் பிடித்தது என்று யாராவது கணிக்க முடியுமா?

   Delete
  4. கார்சனின் கடந்த காலம்

   Delete
  5. வல்லவர்கள் வீழ்வதில்லை

   Delete
  6. எழுதும் போது பேனாவை உடைக்கலாம் சார்...."டைப்பும்" போது ? கீ-போர்டைக் கடாசுவதா ?

   Delete
 36. அன்புக்குரிய ஆசிரியருக்கு பணிவான வணக்கம். நீங்கள் எந்தவொரு சூழலிலும் எங்களிடம் மன்னிப்பு கோர வேண்டாம்.உங்கள் வயது மற்றும் அனுபவங்களை ஒப்பிடும் போது நாங்கள் உங்களுக்கு அற்பமே.நாங்கள் எங்கள் கருத்துக்களை வெளியிடுவது தரமான கதைகள், உயிரோமாட்டமான சித்திரங்கள், அதிரடி,ஆக்‌ஷன்,தீர்க்கமான முடிவு போன்ற காரணங்களுக்காகத் தான்.எங்களுடைய பின்னூட்டம் உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் எங்களை எங்களை மன்னிக்க வேண்டும். அரை நூற்றாண்டு காலம் காலமாக காமிக்ஸ் என்ற பசிக்கு அட்சய பாத்திரத்தைப் போல் புத்தகம் என்ற உணவை வழங்கி வருகின்றீர்கள் .உங்களது இப்பணி தொய்வில்லாமல் தொடரவேண்டும்.உங்களுக்கு உற்ற துணையாய் நாங்கள் இருப்போம்.மறந்து விடுங்கள்.மன்னித்து விடுங்கள்...

  ReplyDelete
  Replies
  1. Correct ji correct . You are the best possible editor for us. No one or nothing can replace you editor Sir

   Delete
  2. @Vigneswaran tiger

   ஆத்மார்த்தமான எழுத்துகள்! செம்ம!!

   Delete
  3. நாம் அனைவரும் காமிக்ஸ் கடலில் பயணிப்பவர்கள்.நம் ஆசிரியரே கேப்டன்.நாம் அனைவரும் துடுப்பு.

   Delete
  4. ///நம் ஆசிரியரே கேப்டன்.நாம் அனைவரும் துடுப்பு.///

   ஆனால் சிலருக்கு மட்டும் அந்தக் கேப்டன் மீது கடுப்பு?

   Delete
  5. கதைகளில் தென்படலாகாது சலிப்பு !

   அதுவே ஜடாமுடியாரிடம் நான் கற்ற படிப்பு !

   ஒவ்வொரு முகத்திலுமொரு புன்னகை தானே இந்தப் பயணத்தின் உயிர்த்துடிப்பு !!

   So கடுகடுப்போரையும் காமிக்ஸால் வசீகரிப்பதும் நமக்கொரு பொறுப்பு !

   Delete
  6. @ Vigneswaran Tiger : அன்புக்கு நன்றிகள் நண்பரே ! வயதோ ; அனுபவமோ - அவற்றை வாழ்க்கைப் பயணத்தின் மாறி வரும் நிலைகளாய் மட்டுமே பார்த்திடுகிறேனே தவிர, தகுதிகளாய்க் கருதிட மாட்டேன் ! So எந்தவொரு நிலையில் பிழை நேர்ந்தாலும், அதற்கான பழி சுமக்கும் பொறுப்பிலிருந்து எனக்கு immunity என்றைக்குமே இருந்திடப் போவதில்லை ! தவறை ஏற்றுக்கொண்டு, ஒரு அனுபவப்பாடம் கற்றுக் கொண்டு நகர்ந்தால் போச்சு சார் !
   Delete
 37. ஐயா நீங்கள் இன்னும் ஈரோடு புக் Fair கான இரண்டாவது அறிவிப்பு இன்னும் செய்யவில்லை . அதையும் அறிவித்து விட்டால் சந்தா கட்டி விட்டு வேலையை முடித்து விடுவேன். குறைந்தது எப்பொழுது அறிவிப்பு என்று மட்டுமாவது சொல்லுங்கள்.

  ReplyDelete
 38. மாற்றம் + முன்னேற்றம் + தேடல் = புது வரவுகள் = லயன் காமிக்ஸ்

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளையா இதுமாதிரி ஃபார்மூலா எல்லாம் நான் படிக்கிற காலத்துல இல்ல! இல்லேன்னா என்னிக்கோ ஃபெயில் ஆகியிருப்பேன்!

   Delete
  2. //எப்பொழுது அறிவிப்பு என்று மட்டுமாவது சொல்லுங்கள்.//

   மே !!

   Delete
  3. ஈரோட்கார்! நீங்க பாஸ் ஆகிட்டத சொல்லவே இல்லையே!!..

   Delete
  4. ஹிஹி! எனக்கு பப்ளிசிட்டி பிடிக்காதுன்றது ஒரு பக்கம்!
   இன்னொன்னு, பாஸாகிட்டதை வெளியே சொன்னா பிரியாணி ட்ரீட் கேட்டு பல ஆயிரங்களை கபளீகரம் பண்ணிட ஒரு காமிக்ஸ் கும்பல் ஊருக்குள்ள சுத்திக்கிட்டிருப்பதும் ஒரு காரணம்! ;)

   Delete
 39. ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள்: மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும் 32 பக்க புக் எங்களிடம் இருக்கிறது. நீங்கள் மூன்று புத்தகங்களுக்கு ஒரு அட்டைபோட்டு தனியே விற்பனைக்கு வருகிறது. அந்த அட்டை எங்களுக்கு கிடைப்பதில்லை. அது எனக்கு ஒரு பெரிய குறையாக உள்ளது. எனவே அந்த அட்டையினை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது. தனியிதழாக அனுப்பாமல் மூன்றையும் சேர்த்து அட்டையுடன் அனுப்பவும். ஆமாம் அனுப்பவும்!

  ReplyDelete
  Replies
  1. வெறும் அட்டையைக் கொண்டு என்ன செய்வீர்களாம் சார் ? மூன்று தனித்தனி புக்குகளையும் இணைத்து பைண்ட் செய்வதொரு வீண் செலவு தானே ? வேண்டுமானால் ஒரு போஸ்ட் கார்ட் போல அந்த அட்டைப்பட டிசைனை அனுப்பிடலாம் - சேகரிப்பில் ஒரு அங்கமாகிக் கொள்ளவாவது !

   Delete
  2. மொத்ததமாக புத்தகமாக அனுப்பினால் இன்னும் நலமே!

   Delete
  3. மூன்று தனித்தனி மாதங்களில் டெக்ஸ் சிறுகதை ரூபத்திலாவது உங்கள் கதவுகளைத் தட்ட வேண்டுமென்பதற்குத் தானே சார் அந்த color tex முயற்சியே ? அதை விடுத்து ஒரே போடாய் மூன்று கதைகள் இணைந்த புக்காய் ஒப்படைத்து விட்டால், இந்தத் திட்டத்தின் நோக்கம் நிறைவேறியிருக்காதே ?

   Delete
 40. // கார்ட்டூன் வறட்சியின் தாக்கம் ஒரு மிடறு ஜாஸ்தியாகத் தெரிகிறது ! Already 3 gone for the year எனும் போது – இந்தாண்டின் முழுமைக்குமென எஞ்சியிருப்பது இன்னும் நான்கே கார்ட்டூன்ஸ் தான் ! என்னவொரு கொடுமையிது guys ??!! //

  அந்த வறட்சியை சரி செய்ய மூன்று கார்டூன் கதைகளை இணைத்து கார்டூன் ஸ்பெஷல் என்று போட்டுத் தாக்கலாமே? வேண்டும் என்றால் முன்பதிவுக்கு மட்டும் என்று.
  1.ஸ்மர்ப்
  2.ரின் டின்
  3. லியர்டினோ

  ReplyDelete
  Replies
  1. கார்ட்டூன் "பைத்தியம்?"

   Delete
  2. 100 பிரதிகளுக்கு மேல் புக் ஆனால் ஆச்சர்யப்படுவேன் சார் !

   Delete
 41. ஏப்ரல் மாத ரேட்டிங் ..
  1.பச்சோந்தி பகைவன் .. TEX கதைகளில் TEX ku நிகராக வேறு கதாபாத்திரம் எப்பொழுது வந்தாலும் கதை வேற லெவல் ல இருக்கும் .. eg:வல்லவர்கள் வீழ்வதில்லை ,மெபைஸ்டோ
  .. MR.P ம் அதில் இணைந்துவிட்டார் .. waiting for his next issue as kit ..
  2.பரலோகத்திற்கொரு படகு .. லக்கி ஏமாற்ற வில்லை வழக்கம் போல் .. good .. light .. breezy read ..
  3.கேப்டன் ப்ரின்ஸ் : மரண வைரங்கள் ..முதல் தடவை படிக்கிறேன் .. nice ..
  4. ஜோனதன் கார்ட்லண்ட் .. முதல் கதை மட்டும் தான் படித்து உள்ளேன் .. மோசமில்லை ..ஆனால் 350 வது இதழுக்கு தகுதி ஆன கதையா என்று தெரியவில்லை ..

  ReplyDelete
  Replies
  1. //MR.P ம் அதில் இணைந்துவிட்டார் .. waiting for his next issue as kit .. //

   அடுத்த கதையில் மனுஷன் 'தல'யாகவே உருமாறுகிறார் !!

   Delete
 42. ஜானதன்
  இன்னும் ஒர்
  வாய்பு
  குடுங்க சார்

  ReplyDelete
  Replies
  1. அட....! இப்படியும் ஒரு குரலா ?

   Delete
  2. எங்கேயோ கேட்ட குரல் !

   Delete
 43. பச்சோந்தி பகைவன் அருமை

  ReplyDelete
 44. ஈரோடு 2019 சிறப்பிதழ் உறுதியாகிவிட்டதா?

  ReplyDelete
 45. ஏப்ரல் மாத ரேட்டிங்:
  1. பரலோகத்திற்கொரு படகு 10/10
  2. மரண வைரங்கள் 9/10
  3. பச்சோந்தி பகைவன் 8/10
  4. குளிர் கால குற்றங்கள் 7.75/10

  ReplyDelete
  Replies
  1. ஹை...பத்துக்குப் பத்தா ?

   Delete
 46. 154. அதென்னமோ எப்ப நம்ம வந்தாலும் 150+ comments னு இல்ல இருக்குது. ஆசிரியர் ஏதாவது அட்வான்ஸ் information இவிங்களுக்கெல்லாம் குடுக்குறாரா ... இல்ல இந்த பார்ட்டிங்க கர்ச்சீப் போட்டுட்டு போயிரங்களா ! இல்ல விடிய விடிய lion லைன் சைட்டுக்குள்ள குப்புற படுத்திருக்கங்களா ! ஒன்னும் புரிய மாட்டேங்குது.

  சரி. எதுக்கு சார் சாரியெல்லாம் போட்டுக்கிட்டு... சங்கடப்படுத்துகிறது அந்த வார்த்தை...
  கைப்புள்ள போ போ போயிட்டே இருன்னு விடுங்க...
  இப்ப என்ன ... அப்படி நீங்க உண்மையாலுமே வருத்தப் பட்டா ... அத ஒரு சிறப்பு டெக்ஸ் & மேபிஸ்டோ 350 வது இதழா போட்டு prove பண்ணுங்க... நம்பறோம். (நமக்கு நம்ப சோலி).
  அதென்னமோ ஆசிரியர் டெக்ஸ் vs மேபிஸ்டோவை பத்தி எத்தனபேரு பேசுனாலும் கண்டுக்கவே மாட்டேங்கிறாரே .. selective அம்னீஷியா மாறி selectiveவா கண்ணு தெரியுதா... கொழப்புதே

  அது... என்னான்னா ... ஜானதன் கதைய விட மொக்கையா இருந்தாலும் டெக்ஸ் கதைய ஏன் திட்ட மாட்டெங்குறோம்னா .... MGR க்காக ரெட்ட எலைல ஓட்டு போட்ட கெழவிங்க, இப்ப MGRரே இல்லனாலும் ரெட்ட எலெயா மாத்தி போட முடியுதா ? முடியாது. நாங்கெல்லாம் அந்த மாறி... டெக்ஸ்சும் , கார்சனும் காலைல எந்திரிச்சி ஒரு 240 பக்கம் குதிரைல பேசிட்டே போனாலும் அட்டகாசம், ஆஸம், superனு சொல்றவிங்க நாங்க. போங்கப்பு .. போங்க.. போய், புள்ள குட்டிங்களா படிக்க வைங்க...அதுவும் engineering படிக்க வைங்க...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா!! செம கலாய்!! :))))

   Delete
  2. இப்ப பஸ்ஸுக்காக காத்துட்டு இருந்து பஸ்ஸு வந்தவன கும்பலா பல பேரு ஏறுனவுன பாருங்க..ஒரு சீட்டு ,ரெண்டு சீட்டு மட்டும் காலியா இருந்தா டக்குன்னு அதுல போய் உக்காந்துவாங்க...அதுவே பத்து பதினைஞ்சு சீட்டு இருந்த்துன்னு வச்சுகுங்க ஏறுன ஆளுக முன்னாடி உக்காருலாமா ,பின்னாடி உக்காரலாமா,நடுவுல உக்காரலாமா ,ஜன்னலோரமோ உக்காரலாமான்னு நின்னுகிட்டு யோசனை பண்ணிகிட்டே இருப்பாங்க...அது மாதிரி மாசம் ஒரு புக்கு வந்தவுன ஏதும் சொல்லாம நாம பாட்டுக்கு படிச்சுட்டு இருந்தோம்..இப்ப மாசம் நாலு வந்தவுன எல்லா புக்கையும் படிச்சு ,ஆராய்ஞ்சு ,பிரிச்சு மேஞ்சு யோசிச்சு விமர்சிக்கறோம்..

   தப்பில்ல...

   எவ்ளோ யோசிச்சாலும் பஸ்ஸுல நிறைய சீட்டு காலியா இருந்தா ஏறுனவுன ஒரு குபீர் நிம்மதி வந்துருதுல...அது மாதிரி எங்களுக்கு புக்கு வர்றப்ப ஒரு குபீர் சந்தோசம் வந்துருதுல அது போதும் சார்...

   பட்டையை கிளப்புங்க...அரிசி புடைக்குறப்ப ஒரு கல்லு இருக்குறதெல்லாம் சகஜம் தான்..:-)

   Delete
  3. அசோக் சார். உங்களோட ஃபீலிங்ஸ் புரியுது. பேட்ட படம் ரிலீஸ் ஆகி. SUN TV ல இந்த வாரம் போடுறாங்க தெரியுமா?

   Delete
  4. தலீவரே.. கண்ணுகள்ல வெங்காயத்தை விட்டு ஆட்டறீங்க தலீரே!

   Delete
  5. (வடிவேலு slang please )
   தம்பீ... நாங்கெல்லாம் டிவி ல போடுறத OCல பார்க்கிறவங்க கிடையாது...
   படம் வந்த உடனே சுட சுட torrent ல download பண்ணி பாக்கிறவங்க...
   இந்த படத்தையெல்லாம் துபாய்லயிருந்தே பிரிண்ட எடுத்து பாத்துட்டோம்ம். :-)

   Delete
  6. தலீவரே.. கண்ணுகள்ல வெங்காயத்தை விட்டு ஆட்டறீங்க தலீரே!

   #####

   ஹீஹீ..

   Delete
  7. உவமைலாம் சும்மா பட்டையைக் கிளப்புதே தலீவரே !

   Anyways - தரம் சார்ந்த அளவுகோல்களை சிறுகச் சிறுக உசத்திக் கொண்டே போகும் அவசியம் நேர்வதில் எனக்கு நிச்சயமாய் நெருடல்களில்லை ! ஏழு கழுதை வயசான நிலையில் ஒவ்வொரு முயற்சியிலும் எழக்கூடிய சவால்களே இந்தப் பணியின் மீதான சுவாரஸ்யத்தைத் தொடரச் செய்கிறது !

   இன்னும் ஆழமாய் ; இன்னும் அழுத்தமாய்த் தேடுவோம் !!

   Delete
  8. நண்பரே....முன்னாட்களில் "பாட்டில் பூதம்" ; "யார் அந்த மினி-ஆர்ச்சி ?" ; "விண்ணில் எழுந்த பிசாசு" போன்ற கதைகளுக்கு ஆரவார வரவேற்பு தரும் வயதிலும், ரசனையிலும் இருந்தோம் ! So டெக்ஸை மெபிஸ்டோவோடு மோத விடத் தயக்கம் எழுந்திடவில்லை ! அதே போல 'தல' ஒரு ஸ்டாராக அன்றே வலம் வந்தார் தான் எனினும், அவருக்கு முன்னே சிலபல சூப்பர் ஸ்டார்கள் இருக்கவும் செய்தனர் - ஸ்பைடர்கார் ; ஆர்ச்சிக்கார் ; இரட்டை வேட்டையார்க்கார் போல !! தவிர அன்றைக்கு கலாய்ஸ் ; காலை வாரல்ஸ் இருந்திருக்கும் பட்சத்திலும், அது பொதுவெளியினை எட்டிட மார்க்கங்கள் இருந்ததில்லை ! மிஞ்சிப் போனால் ஓரிரண்டு கோபமான போஸ்ட்கார்டுகள் மட்டுமே வந்து சேரும் ! அவற்றை நாசூக்காய் உள்ளாற போட்டுவிட்டு, "அட்டைப்படம் சூப்பர் ; ஆக்ஷன் சூப்பர்" என்ற வாசகர் கடுதாசிகளை மட்டுமே பிரசுரித்துவிட்டு நடையைக் கட்டிவிட முடியும் !

   ஆனால் இன்றைக்கு நிலைமை அப்படியா ?

   புராதன சூப்பர் ஹீரோக்களை ஓட்டுவது நம்மாட்களுக்கு ஒரு செம பொழுதுபோக்காகியே போச்சு ! So அவர்கள் அனைவருக்குமே VRS தந்தாச்சு ! தவிர TEX இன்றைக்கு ஒரு மெகா ஸ்டார் மாத்திரமல்ல - நமது flagship நாயகருமே என்றாகிவிட்டார் !! அப்படியிருக்கும் நிலையில் அவருக்கென சமீப ஆண்டுகளில் நாம் establish செய்திருக்கும் அந்த சீரியஸ் ரேஞ்சர் என்ற இமேஜைத் தொடர்ந்து கட்டிக் காப்பாற்றியாக வேண்டுமென்றோ ? இன்றைக்கு நாம் விட்டலாச்சார்யா ஸ்டைல் வில்லன்களோடு டெக்ஸை மோதவிட்டால் நண்பர்கள் (பெங்களூரு) கணேஷ்குமாரும், கோபி மிதுனனுமே போதாதா ஆட்டோ ; லாரி ; JCB : அரைபாடி வண்டி என சகலத்தையும் ஓட்ட ?

   இத்தாலியில் துவக்கம் முதலே இந்த மாயாஜால பாணிகளையுமே audience ஏற்றுக்கொள்ள ஓ.கே.வாக இருந்துள்ளனர் ! அங்குள்ள லட்சத்திலான விற்பனை நம்பர்களுமே அவ்வப்போதைய மாறுபட்ட பாணிக்கதைகளையும் கரை சேர்த்திடும் ஆற்றல் கொண்டது ! ஆனால் நாமோ மெரினா பீச்சில் பட்டாணிச் சுண்டல் விற்கும் சிறுவனின் பையிலுள்ள பணத்துக்குச் சமானமானதொரு சர்குலேஷனில் வண்டி ஓட்டுபவர்கள் எனும் போது விஷப்பரீட்சைகளை நமது தலைமகனின் விஷயத்தில் நடத்த மனம் ஒப்புமா ?

   Delete
 47. " குளிர்கால குற்றங்கள் "

  என்ன சொல்ரது ..ஸ்மர்ப்ஸ் & நிஜங்களின் நிசப்தம் அளவுக்கு படிக்கவே முடியாத படு மொக்கையா இல்லைனாலும் கஷ்டப்பட்டு , கடுப்பாகி ஒருவழியாக எரிச்சலோடு படிச்சி முடிச்சாச்சி சார்....சத்தியமாக லயனின் 350 ஆவது இதழாக வந்திருக்க தகுதியே இல்லாத கதையிது என்பது என்னுடைய கருத்து..( நல்லா பாருங்க என்னுடைய கருத்துன்னு தான் சொல்லியிருக்கேன்..)

  ReplyDelete
  Replies
  1. பாத்தாச்சு யுவா ; உங்களது கருத்து மட்டுமே என்பதைக் கவனிக்கவும் செஞ்சாச்சு !!

   ஆனாலும் smurfs பொடியர்களை ரசிக்க படும் சிரமம் தான் உதைக்கிறது எனக்கு !!

   Delete
 48. // ஞாயிறு, திங்கள் & செவ்வாய் விடுமுறைகளில் The Lone Ranger & பராகுடா கதைகளை முழுசுமாய் எழுதி முடிக்கவொரு சூப்பர் வாய்ப்பு கிட்டியுள்ளதே என்பது என்னளவிலான பரவசம் //

  விஜயன் சார், நீங்கள் எழுதி இருத்கிறத பார்த்தால் இந்த மாத இறுதியிலும் சில பல புதிய குட்டிக்கரணம்கள் உறுதி என்பது போல தெரிகிறது.

  ReplyDelete
  Replies
  1. மாதக்கடைசியில் குட்டிக்கரணம் அடிக்க அவசியமின்றிப் போக வேண்டுமென்பதற்காகத் தான் விடுமுறைகளில் மெனெக்கெடல்கள் சார் !

   மூன்றுமே மெகா இதழ்கள் அல்லவா ?!!!

   Delete
  2. அது எல்லாம் சரிதான். எனக்கு நீங்கள் இப்படி சொல்லும் போது
   எல்லாம் இந்த மாதம் மற்றும் ஒரு குட்டிக்கரணம் நிச்சயம் என தோன்றுகிறது ஏன் என் புரியவில்லை.:-)

   Delete
 49. அன்புள்ள ஆசிரியருக்கு இதயம் கனிந்த வணக்கம் ��. ஈரோடு புத்தக விழாவிற்கான இரண்டாம் அறிவிப்பில் எங்கள் தல டெக்ஸ் சாகசம் இடம் பெற ஆவண செய்யுங்கள் ஐயா.

  ReplyDelete
  Replies
  1. 'தல' டெக்ஸ் தான் மாதா மாதம் ஆஜராகிவருகிறாரே நண்பரே !

   Delete
  2. நன்றி ஐயா.அதிரடி ஆக்சன் கதையினை வெளியிடுங்கள் ஐயா.

   Delete

 50. லைவ் ஃப்ரம் பாலதண்டாயுதசுவாமி சன்னதி, பழனி....!

  இன்று திருக்கார்த்திகை திதியில் பழனி முருகரை தரிசித்தால் நினைத்தவை நிறைவுறும் என்பது ஐதீகம் போல...!!!!

  சில பல பிளானிங்கிற்கு பின் இன்று கார்த்திகையில் பழனி சென்றோம் குடும்ப சகிதமாக....!!!

  வின்சில் மேலே செல்கையில் பின்னாடி தண்டவாளத்தை பார்த்த ஒரே நொடி சப்த நாடியும் நடுங்கியது.

  கண்குளிர தங்கத்தேரில் பாலதண்டாயுதரை தரிசித்து, என் நலம், எடிட்டர் சாரின் நலம் மற்றும் அனைத்து காமிக்ஸ் அன்பர்கள் & நண்பர்கள் நலத்திற்கு முருகரை வேண்டினேன்.

  தெறிக்கும் கூட்டத்தில் ரூ200சிறப்பு டிக்கெட்டில் சந்தன அலங்காரத்தில் இருந்த மூலவரை நெஞ்சுருகி தரிசிக்க முடிந்தது.

  இன்று போல் என்றும் கைநிறைய காமிக்ஸ் பெற சந்தன நாயகரிடம் வேண்டி கொண்டு ஆசுவாச படுத்திக் கொண்டேன்.

  பஞ்ச மூலிக முருகரை உருவாக்கிய ஜீவசமாதி சித்தர் அய்யன் போகர் சன்னதியில் மின்னல் வேக தரிசனம்.
  சித்தர்கள் மேல் அபரிமிதமான பக்தி கொண்ட காமிக்ஸ் அன்பர்கள் நம்மிடையே உண்டு. அவர்கள் அனைவரின் நலனிற்கு வேண்டி போகரை நினைத்து சித்த நேரம் அமர்ந்து இருந்தேன்.

  மொத்தத்தில் இன்றைய நாள் இனியநாள்.

  நம்மிடையே எண்ணங்களும், சிந்தைகளும் அபிப்பராங்களும், பாதைகளும் வேறானாலும், இதை அனைத்தையும் தாண்டி கடவுள் சன்னதியில் நாம் அனைவரும் காமிக்ஸ் ரசிகர்கள் என்ற எண்ணமே மேலோங்கியது. அதனால் இங்கே இதை பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா.சிறப்பான உங்கள் பிரார்த்தனை ஈடேறட்டும்.நமது காமிக்ஸ் குழு வாழ்வு சிறக்கட்டும்...

   Delete
  2. நன்றி.மீண்டு(ம்) வருக

   Delete
 51. நண்பர்களே

  ஒரு வேட்டையன் .. வரும் காலங்களுக்கு உணவு சேகரிக்க கிளம்புபவன் .. வழியில் க்ரிஸ்லி bear உடன் ஒரு சாகசம் .. ஒரு அப்பாவி செவ்விந்தியன் தூக்கில் தொங்குதல் .. அவனின் நண்பனாக அவன் முடிவிற்கு பழி தீர்க்க எண்ணுதல் .. மேலும் நியாயம் தவறும் இரு ப்ளூகோட் வீரர்கள் .. செவ்விந்தியர்களுடன் சேர்ந்து நியாயம் புகட்டும் ஹீரோ .. நாகரீக சமுதாயத்திற்கும் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்திடத் துடிக்கும் மனிதர்களுக்கும் இடையேயான மோதல் .. ஆங்காங்கே short yet swift action sequences .. இறுதியில் செவ்விந்தியக்கூட்டத்துடன் தங்குதல் .. தலைவரின் மகளை மனம் முடித்தல் .. இவ்வாறு ஒரு பாகம் ...

  --X--X--

  காதல் மனைவியுடன் சில மாதங்கள் .. மகன் பிறத்தல் .. மறுபடியும் வேட்டைக்கு செல்லுதல் .. ஒரு செவ்விந்திய ஓநாயின் நயவஞ்சகத்தால் காதல் மனைவியை இழத்தல் .. வாழ்வே வெறுத்து முடங்குதல் - into a state of deep emotional shock - நண்பரின் பரிந்துரையில் OREGON நகரம் செல்லும் settlersக்கு வழித்துணையாக தலைமை தங்குதல் .. again some sprinkled yet specific action sequences .. புலம்பெயர்வோருக்கு ஏற்படும் இடர்கள் .. அதனிலும் வஞ்சகர்களையும் கொள்ளையர்களையும் சமாளித்தல் .. பனிக்காலம் முடியும் தருவாயில் நாயகனின் மனதில் படர்ந்திருந்த பனித்திரையும் மெல்லவே விலகுதல் ... தன மகனின் ஞாபகம் தலைதூக்க பாசத்துடன் விடை பெறுதல் ...

  ====

  WOW - அட்சரம் பிசகாத ஒரு ரியல் லைப் wild west collect - ஆங்காங்கே அகலச் சித்திரங்களுடன். ஒரு wild west கிராபிக் நாவலுக்குரிய அனைத்தும் உள்ளடக்கிய இந்தக்கதையா வினாவெழுப்ப வைக்கிறது ? புரியவில்லை. லயன் 350க்கு இதை விட சிறந்த காமிக்ஸ் என்னவாக இருக்கக்கூடும் - அதுவும் கௌபாய் காதலர்களுக்கு ! நேக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்கறதே காமிக்ஸ் லோகத்துல !!

  My rating after both stories - ஜொனாதன் கார்ட்லண்ட் - குளிர்காலக் குற்றங்கள் - 9.5/10

  ReplyDelete
  Replies
  1. ///நேக்கு ஒண்ணுமே புரியமாட்டேங்கறதே காமிக்ஸ் லோகத்துல !!///

   நேக்கும் தான்! தலைய சுத்தறது!!!

   Delete
 52. //லயன் 350க்கு இதை விட சிறந்த காமிக்ஸ் என்னவாக இருக்கக்கூடும் - அதுவும் கௌபாய் காதலர்களுக்கு !//

  அப்படித்தான் நானுமே நினைத்தேன் சார் ; ஆனால் விழுந்துள்ள சாத்துக்களின் ஒரு பகுதி ஜானத்தனின் கதையோட்டம் பிடிக்காததனால் என்றால் - மீதப் பெரும்பான்மைச் சாத்துக்கள் "இதை போய் 350 க்குத் தேர்வு செய்ததேன் ?" என்ற கேள்வியோடே !!

  சிக்கலே அந்த wild west with a graphic novel 's twist என்பதில் தானோ ?

  ReplyDelete
  Replies
  1. Perhaps! This one is as good as WESTERN ! Probably in future you wanna try slot JC in Graphic Novels. Who knows? தோர்கல் போல மாறிவிடக்கூடும். Still unbelievable that you had brick bats for this splendid story.

   Delete
  2. ////Who knows? தோர்கல் போல மாறிவிடக்கூடும்.////

   சத்தமா சொல்லாதீங்க ராக் ஜி! JCயின் கதாசிரியர் காதிலே விழுந்தா அப்புறம் தோர்கல்'லேர்ந்தும் சில பக்கங்களை உருவி, நம்ம வேட்டைக்கார JC வேற ஒரு பிரபஞ்சத்திலேர்ந்து வந்த ஆள்னு அடுத்த ஆல்பத்துல சொல்லிப்புடுவார்! 'பிரபஞ்சத்தின் பெரியப்பா'ன்னு தலைப்பு வச்சாலும் ஆச்சரியப்படறதுக்கில்லே!

   Delete
 53. ஹிஹி!! அமாவாசை முடிந்து மீண்டும் வளர்பிறை!!!

  ReplyDelete