நண்பர்களே,
வணக்கம். இந்த வாரம் தேய்ந்து போன cliche திருமொழிகளைத் துவைத்தெடுக்கும் வா-ர-ர-ம்-ம்-ம் !! So ஆங்காங்கே க்ளீஷே கொழந்தைசாமி அவதார் தலைகாட்டினால் கண்டுகொள்ளாதீர்கள் ப்ளீஸ் !
⧭மாற்றம் ஒன்றே மாறாதது !!
ஆங்... போன வாரப் பதிவில் ஜானதன் கார்ட்லேண்டின் அளவில் அடிக்க நேர்ந்த பல்டி ; செய்திட அவசியமாகியிருந்த மாற்றங்கள் பற்றி எழுதியிருந்தேன் ! மாற்றங்களை நடைமுறைப்படுத்தி, அச்சிட்ட இதழாகக் கையிலேந்திப் பார்த்த போதுதான் அதுவரையிலும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விடமுடிந்தது ! நார்மலான சைஸில்; தெளிவான படங்களோடும்; பழக்கப்பட்ட அந்த எழுத்துருக்களோடும் படித்துப் பார்த்த போது ஜம்மென்று இருந்தது ! “சரி, இதெல்லாமே போன வாரத்துக் கதை தானே...! இப்போது எதற்கு?” என்கிறீர்களா? இருக்கே... தொடர்ந்து கதை இன்னுமிருக்கே...!!
எஞ்சியிருந்தது ஜம்போ சீஸன் 2-ன் முதல் இதழான “காலவேட்டையர்” எடிட்டிங் பணிகள் மட்டுமே என்பதை போன வாரம் சொல்லியிருந்தேன் ! And இந்தக் கதை ஒரு one-shot ஆக்ஷன் மேளா என்பது பற்றியும் ஏற்கனவே பகிர்ந்திருந்தேன் ! போன ஞாயிறு இதன் பணிகளுக்குள் புகுந்தேன் – ‘மள மள‘வென்று போட்டுத் தாக்கிய கையோடு மே மாத பராகுடா மீது ரேடாரைத் திருப்பலாமென்ற எண்ணத்தில் ! Black & White இதழே & இது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே மொழிபெயர்க்கப்பட்டுத் தயாராகிக் கிடந்த script என்பதால் எவ்விதச் சிக்கல்களும் எழ வாய்ப்பில்லை என்று தைரியமாகயிருந்தேன் ! ஆனால்... ஆனால்... பக்கங்களைப் புரட்டப் புரட்ட லேசாயொரு நெருடலும் தொற்றிக் கொண்டது ! மர்ம மனிதன் மார்ட்டின் & மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் கதைகளின் ஜாடையில் கதை தடதடக்க, எனக்கோ லேசாயொரு குழப்பம் ! 15 வருடங்களுக்கு முன்பு இதன் ஆங்கில இதழைப் படித்தே கதையைத் தேர்வு செய்திருந்தது நினைவிருந்தது – ஆனால் கதையின் அவுட்லைனைத் தாண்டி வேறு பெருசாய் எதுவும் தற்சமயம் ஞாபகத்தில் இல்லை என்பதால், கதையின் ஓட்டம் புதுசாகவே தோன்றியது. இரு அத்தியாயங்கள் கொண்ட ஆல்பத்தின் பாதியைத் தொட்டிருந்த போதே லேசாயொரு குழப்பம் என்னுள் ! பரபரப்பான ஆக்ஷன் கதை தான்; சித்தே காதுல பூ ரகம் தான் ; ஆனால் ஜம்போவின் சீஸன் 2-ஐத் துவக்கித் தர இது சரியான புள்ளி தானா ? என்ற கேள்வி எழத் துவங்கியது !! பக்கங்களைப் புரட்டிக் கொண்டே 100-ம் பக்கத்தை எட்டிப் பிடித்திருந்த போது என்னுள் ஒரு தீர்மானம் தோன்றியிருந்தது – ‘Nopes... ஜம்போ காமிக்ஸில் நாம் சித்தரிக்க முனையும் “நூற்றுக்கு நூறு ஏற்புடைய காமிக்ஸ்” நிச்சயமாய் இதுவல்லவென்று !“ 15 ஆண்டுகளுக்கு முன்பாய் மெர்சலூட்டிய கதையானது இன்றைக்கு ஓ.கே.வாக மட்டுமே தென்பட்டது ; தெறிக்கும் ஒரு துவக்கத்துக்கான களமாய்த் தட்டுப்படவில்லை ! கதைகள் என்னவென்று அறிவிக்கா நிலையிலேயே நம்மை நம்பி சந்தா செலுத்திய நண்பர்களுக்கு இப்படியொரு Season opener-ஐ அறிமுகம் செய்வது நிச்சயமாய் சுகப்படாது என்று திட்டவட்டமாய் முடிவெடுத்தேன் ! ராப்பர் அச்சாகி ரெடியாக உள்ளது; கதையும் வாங்கியாச்சு; DTP செய்து அச்சுக்கும் தயாராக உள்ளது ; ஆனால் பச்சைக்கொடி காட்ட மனசு வரவில்லை - at least - ஜம்போவின் முதல் இதழென்ற ஸ்லாட்டினுக்கு ! !!
⧭ A job well begun is half done....!
சரியாய்த் துவக்கம் காணுமொரு பணியானது – அப்போதே பாதி நிறைவானது மாதிரித் தான் என்பதை ஜம்போவின் முதல் சீஸன் உணர்த்தியிருந்தது ! இளம் TEX “காற்றுக்கென்ன வேலி” என ரகளையாய் பிள்ளையார்சுழி போட்டுத் தந்திருக்க – அழகான அட்டைப்படம்; தெளிவான கதையோட்டம்; தரமான தயாரிப்பு என்ற முத்திரைகளை ஜம்போவின் முதல் சீஸனின் முழுமைக்கும் தொடர்வது சாத்தியப்பட்டிருந்தது ! So அந்த மாதிரியானதொரு அதிரடித் துவக்கமே சீஸன் 2-க்கும் அவசியமென்று மனசு துடித்ததால் – வேறு யோசனைகளுக்கே இடம் தராது – ‘The Lone Ranger’-ஐ fast track செய்திடத் தீர்மானித்தேன் ! 6 பாகங்கள் – 138 பக்கங்கள் and பிரித்து மேயும் ஆக்ஷனுடனான அதிரடி சாகசம் என்பது தெரியுமாதலால், ஜம்போவின் launching pad-க்கு perfect என்று நினைத்தேன் ! So மே மாதம் அதனைக் களமிறக்கத் தயாராகிக் கொண்டு, ஜம்போவின் 2nd சீஸனையும் மே முதலாயென்று அமைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன் ! மே மாதம் ஏற்கனவே சில பல heavyweights காத்துள்ளனர் என்பது தெரியும் தான் ; ஆனால் கொஞ்சம் எக்ஸ்டராவாய் உருண்டு, புரண்டு சிரமப்பட்டுவிட்டாலும் தப்பில்லை – இயன்றதில் best-ஐ முன்வைப்பது தான் சாலச் சிறந்தது என்றுபட்டது ! So ஜம்போ சீஸன் 2 மே முதலாய் folks ! And முதல் இதழே “தனியொருவன்“!!
⧭ஆட்றா ராமா... தாண்ட்றா ராமா...!
ஆக ஏப்ரலின் திட்டமிடலில் 3 வண்ண இதழ்கள் ரெடியாகியிருந்தன :
- - ஜானதன் கார்ட்லேண்ட் : குளிர்காலக் குற்றங்கள்
- - லக்கி லூக் : பரலோகத்திற்கொரு படகு
- - கேப்டன் ப்ரின்ஸ் : மரண வைரங்கள்
And ஒரே b&w இதழாய்த் திட்மிட்டிருந்த “கால வேட்டையர்”-ஐப் பின்தள்ளத் தீர்மானித்ததால் மொத்தம் மூன்றே புக்குகளோடு ஏப்ரலின் கூரியரை நிறைவு செய்திடலாமென்ற ரோசனை ஓடத் தொடங்கியது தலைக்குள் ! “ஊஹும்... ஒரு 128 பக்க முழுநீள ஆக்ஷன் கதையும் சேர்த்தி என்றிருந்த planning-ல், அதனை கழற்றிய கையோடு, வேறு எதையேனும் இணைக்காவிட்டால் லயிக்காதே !” என்று குரல் கேட்டது உள்ளுக்குள் ! 'சரி.... ‘தல‘ இல்லாத கூரியர் சுவைக்காது !' என்றபடிக்கு சுற்றுமுற்றும் பார்த்தால் Color Tex 32 பக்க சாகஸம் நினைவுக்கு வந்தது ! ரைட்டு... இந்த வருஷம் இதுவரையிலும் அதனைக் கண்ணில் காட்டவில்லையே ; இந்த மாத ரயிலில் இணைத்துக் கொள்ளலாமென்று வேக வேகமாய் அதனைத் தயாரித்தோம் ! ஒரே நாளில் எழுதி, DTP செய்து அச்சுக்கும் தயார் செய்து, செவ்வாயன்றே முடித்தும் விட்டோம் ! ‘சூப்பரப்பு...‘ என்று என்னையே மெச்சிக் கொண்டே ஏப்ரலின் 4 all-color இதழ்களையும் கையிலெடுத்து ஜாலியாய்ப் புரட்டினேன் ! அப்போது தான் ஒரு விஷயம் லேஸ் லேசாய் உறைத்தது...! தடதடவென எழுதி, படபடவென முடிக்க சாத்தியப்பட்ட 32 பக்க இதழைப் படித்து முடிப்பதுமே சடுதியான சமாச்சாரமாகத் தானே .இருந்திட முடியும் ?! அதிலும் இந்த முறை நாம் கையிலெடுத்த கலர் Tex சிறுகதை செம வேகத்திலான நேர்கோட்டுக் கதையெனும் போது – படபடக்கும் பட்டாசாய்ப் பக்கங்கள் ஓட்டம் எடுத்து விடுகின்றன! 'ஆஹா... இதை பத்தே நிமிடங்களில் படித்து முடித்த கையோடு கொட்டாவி விடத் தோன்றுமே!!' என்ற கவலை குடிகொள்ளத் துவங்கியது மறுக்கா!!
⧭லெப்டிலே இண்டிகேட்டரைப் போட்டு... ரைட்டிலே கையைக் காட்டி, நேரா போ!!!
‘பளிச்‘ சென்று அந்த நொடியிலேயே மே மாதத்துக்கான Tex-ன் “பச்சோந்திப் பகைவன்” தயாராகிக் கிடப்பது மின்னலடித்தது மண்டைக்குள் ! ராப்பரும் ரெடி... கதையும் ரெடி என்ற மறுநொடியே லியனார்டோ தாத்தாவுக்குப் போல பல்பு எரிந்தது பிரகாசமாய் ! வியாழன் காலையில் அதனைக் கையில் எடுத்து; அன்றைக்கே எடிட்டிங் முடித்து, வெள்ளி காலை அச்சுக்கு கொண்டு சென்று, சனி காலையில் புக்காகவும் ஆக்கி விட்டோம் !! So ஏப்ரலின் பட்டியல் ஒருமாதிரியாய் எனக்கு திருப்தி தரத் தொடங்கிய நொடியே டெஸ்பாட்சுக்கு ஏற்பாடு செய்திடச் சொல்லி ஆபீஸையே ரணகளமாக்கிட, உங்களது கூரியர்கள் சகலமும் புறப்பட்டு விட்டன – ஏப்ரலின் முதல் தேதியை உங்கள் கைகளில் செலவிடும் பொருட்டு ! கூத்தடிப்பது நமக்குப் புதிதல்ல தான்; குட்டிக்கரணங்கள் அன்றாடமே ; ஆனால் இம்மாதம் taking it to a different level என்பேன் ! எது எப்படியோ – all’s well that ends well !
ஆக எங்கோ துவங்கி, எப்படியோ பயணித்து, எவ்விதமோ நிறைவு கண்டுள்ள ஏப்ரலின் பாக்கி 2 இதழ்களின் preview இதோ !
ஒரிஜினல் அட்டைப்படம் ; கதாசிரியர் மோரிஸின் உச்சநாட்களில் உருவான vintage லக்கி சாகசம் & இம்முறையோ பாழும் பாலைவனமாயன்றி, மிஸிஸிப்பி நதியே நமது ஒல்லியாரின் கதைக்களம் !! நாம் ஏற்கனவே ரசித்த template கதை தான் ; ஆனால் வழக்கம் போல ஜாலியாய்க் கதாசிரியர் நகற்றிச் சென்றிருக்க, a pretty breezy read in the offing !!
And இதோ - இம்மாத மறுபதிப்பின் preview !! (நானிருக்கும் கிர்ரில் இந்த ராப்பரை ஏற்கனவே கண்ணில்காட்டி விட்டேனா - இல்லை இப்போது தானா ? என்பது கூட தெரியவில்லை !!) மறு ஒளிபரப்பாய் இருப்பின் sorry folks !! எப்போதோ ஒரு யுகத்தின் black & white கோடைமலரில் இடம்பிடித்த இந்த சாகசமானது இப்போது ஹை-டெக் வண்ணத்தில் வளம் வரக்காத்துள்ளது ! இதுவும் ஒரிஜினல் ராப்பர் - நமது DTP டீமின் கோகிலாவின் கைவண்ணத்தில் !
So மொட்டையும் போட்டாச்சு ; ஆனையிடம் ஆசீர்வாதமும் வாங்கியாச்சு ; இனி திங்கள் முதல் கிடா வெட்ட வேண்டியது தான் !! Monday வித் கூரியர் ; மாதப்பிறப்பு வித் காமிக்ஸ் - என்று ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா ?
மே மாதம் காத்திருக்கும் இதழ்களின் பட்டியல் இப்போதே மிரளச் செய்கிறது :
பராகுடாவின் இரண்டாம் பாகத்தினுள் நுழைந்துள்ளேன் ; இன்னொரு பக்கம் தனியொருவனை கவனிக்கத் துவங்கவும் வேண்டும் !! எண்ட அம்மே !! ஞான் இப்போ விடைபெறும் !! Bye all ! See you around ! Have a cool Sunday !!
- ட்யுராங்கோ
- பராகுடா - The climax !!
- தி Lone ரேஞ்சர்
பராகுடாவின் இரண்டாம் பாகத்தினுள் நுழைந்துள்ளேன் ; இன்னொரு பக்கம் தனியொருவனை கவனிக்கத் துவங்கவும் வேண்டும் !! எண்ட அம்மே !! ஞான் இப்போ விடைபெறும் !! Bye all ! See you around ! Have a cool Sunday !!
P.S : Almost ரெடி என்ற நிலையிலான "காலவேட்டையர்" நிச்சயம் வெளியாகிடும் ; ஆனால் ஜம்போவின் சந்தாவின் அங்கமாகயிராது ! ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும் ; and ஆன்லைனில் லிஸ்டிங் செய்யப்படும் & முகவர்களுக்குமே அனுப்பப்படும் ! So இஷ்டப்படும் நண்பர்கள் அந்நேரம் வாங்கிக்கொள்ளலாம் ! And சந்தாவினில் இந்த இதழுக்குப் பதிலாய் வேறொரு apt replacement சீக்கிரமே அறிவிப்பேன் !!
1st
ReplyDeleteFirst time came 1st. But books not received till date. Please check. No update on phone also. Pls. Jeevan prakash. Chennai
DeleteLet me read and come back. It seems others are not online
ReplyDelete3rd.Hai
ReplyDelete4th
ReplyDeleteGood news. If courier works can we expect the books tomorrow.
ReplyDeleteYes !!
Delete5th :-)
ReplyDeleteOh 6th !!
Delete8th
ReplyDelete10kulla
ReplyDeleteI guess for the first time - 3 cowboys in APRIL and 2 Cowboys in MAY! So much is our love for cowboys :-)
ReplyDeleteWhat about the second color Tex collection of last year Sir? Eagerly waiting to lay hands on it.
ReplyDeleteOn sale now....
DeleteNice decision.
ReplyDeleteThanks my dear editor
A
##மே மாதம் காத்திருக்கும் இதழ்களின் பட்டியல் இப்போதே மிரளச் செய்கிறது :
ReplyDeleteட்யுராங்கோ
பராகுடா - The climax !!
தி Lone ரேஞ்சர் ##
உண்மையில் மிரளச்செய்யும் வரிசைதான் சார் ..
முதலிடம் யாருக்கு என தெரிய செய்யும் ஆவலில் மே மாதம்...
ஜம்போவிற்க்கு பணம் அனுப்பலாம் என ஆபிஸிற்க்கு போன் செய்த போதே இந்த மாதம் ஜம்போ வராது தகவல் கிடைத்தது...
ReplyDeleteஏனெனில் மகளுடைய பள்ளி கட்டணம் கட்ட வேண்டிய தருணத்தில் இருந்ததால் செலவினங்களை குறைத்து மாற்று வழி உண்டா என யோசித்த வேளையில் சற்று நிம்மதியடைந்திருக்கிறேன்..
இனி பிளான் பி சி டி என ஏதாவது ஒன்றை யோசித்து விரைவில் ஏப்ரல் இறுதிக்குள் ஜம்போ சந்தா கட்டி விடுவேன்..
வந்தாச்சி...
ReplyDeleteவாங்க,வாங்க...
Deleteஇரவு வணக்கம் இரவு கழுகுகளுக்கு....
ReplyDeleteThank you very much sir!
ReplyDeleteஆசிரியரே இந்த வருடம் நிறைய குட்டிகரணங்கள் அடித்து கொண்டிருக்கிறீர்களே இன்னும் முழுதாக 8 மாதங்கள் உள்ளன இன்னும் எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடிக்கப் போகிறிர்களோ பாவம் சார் நீங்கள்
ReplyDeleteசின்ன வயதில் அடிக்காத குட்டி கரணங்களா....நம்மவருக்கு அது எல்லாம் ஜூஜூபி மேட்டர்....
Deleteஅந்த காலவேட்டையர் கேப்ல நம்ம டெக்ஸ் மெபிஸ்டோ கதையை போடாலமே.
ReplyDeleteஅப்படி சொல்லுங்கள் உரக்க.....
Delete+12345678910
Deleteஎவ்ளோ பெரிய பூவா இருந்தாலும் பரவால ...நாங்க ரெடி சார்...:-)
Deleteஎன்னவென்று சொல்வது தங்களின் காமிக்ஸ் அர்பணிப்பை...தலைவணங்குகிறேன். ..........
ReplyDelete1990 ல் மாதத்திற்கு நமது நிறுவனமே 4 புத்தகம் வெளியிட்டது எல்லாம் சாதனையா அல்லது 4 கலர் புத்தகம் பற்றாமல் இன்னொரு புத்தகத்தையும் சேர்த்து கொடுக்கும் லாவகம் எங்கிருந்து வந்தது இந்த துணிச்சல். .
1.600+ வாசகர்களின் காமிக்ஸ் காதலுக்காக(உங்களையும் சேர்த்து)நீங்கள் அடிக்கும் அந்தர் பல்டி...அப்பப்பா...(சந்தா கட்டாத நண்பர்கள் தயவு செய்து முன்பதிவில் வாருங்கள். .நிறைய நிறைய அந்தர் பல்டிகளை ரசிக்கலாம்...ப்ளீஸ் .
2.சகட்டு மேனிக்கு புத்தகங்களை வெளியீட்டு die hard fans களை மகிழ்வித்து கொண்டு இருக்கும் தாங்கள் மீதி அச்சிட்ட புத்தகங்களை கழுதை பொதி போல் சுமக்கும் அந்த பொறுமையும் ஒரு துணிச்சல் தானோ?....
3.எதை பற்றியும் கவலைப்படாமல் தமிழ் நாட்டின் 100 ல் .01% மட்டுமே படிக்க கூடிய காமிக்ஸ் வாசகர்களுக்காக ரெடியான புத்தகத்தை அம்பலிக்கா போய் விளையாடு என்ற சொல்லும் அந்த -----------.வார்த்தை இல்லை.
4.சின்ன சைஸையை பெரிதாக்குகிறீர்கள்,B&W யை கலராக மாற்றுகிறீர்கள்.,படித்த கதையை கலரில் மறுபதிப்பாக 1000,2000 என்று போட்டு தாக்குகிறீர்கள். .எங்கேயோ போயிட்டிங்க...( மறுபதிப்பை ரூபாய் 2000+ கொடுக்கும் நீங்கள் நம்ம இரவு கழுகுக்கு புதுகதைகளில் அது போல் ஒரு முயற்சி எடுக்க மாட்டேன் என்று அடம்பிடிப்பது ஏனோ????????)....
இந்த மாதம் தலை இல்லலையே என்று நண்பரிடம் ஆதங்க பட்டேன்..ஆனால் தங்களின் அந்தர் பல்டியால் ஒன்றுக்கு 2 யாக தலையை சந்திக்க போகிறேன் என்பதே..எனக்கு இரட்டை தீபாவளிக்கு சமம்.இதை போல் ஒவ்வொரு மாதம் ஏதேனும் குட்டி கரணம் அடித்தாவது தலையுடன் வாருங்கள். ........ப்ளீஸ்
ReplyDeleteவழிமொழிகிறேன்.
Deleteநன்றி!
ReplyDeletei am 24th - for the first time in my life!
ReplyDeleteOh God I can't believe this 😱
Deleteஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்!!!.
ReplyDeleteஎடிட்டர் சார்...
ReplyDeleteவரவர நீங்கள் அடிக்கும் குட்டிக்கரணங்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகிறது! அதுவும், ஒவ்வொரு குட்டிக்கரணமும் திணுசு திணுசாய்!! கோடம்பாக்கம் ஸ்டண்ட் நடிகர்கள் கூட இவ்வளவு குட்டிக்கரணங்கள் அடித்திருப்பார்களா என்றால் டவுட்டுதான்! திடீரென்று ஒருநாள் உங்கள் ஆபீஸுக்கு வந்து எட்டிப்பார்க்கும்போது அங்கே நீங்கள் குறுக்கும் நெடுக்குமாகக் குட்டிக்கரணங்கள் அடித்துக்கொண்டிருப்பதைக் காணநேரிடுவதைப் போன்ற பிரம்மைத் தோற்றங்கள் எழுகிறது!
'கால வேட்டையர்கள்'ஐ ஜம்போவை விட்டு அந்தண்டை வைத்திருப்பது ஏனோ மனதுக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது! காரணத்தை சரிவர சொல்ல இயலவில்லை!
கொரியர்காரவுகளின் வருகைக்காண்டி நாளைய பொழுதில் ஆவலுடன் காத்திருப்பேன்...
'ஆத்தா அழைத்துவரப்போகும் கொரியர்காரவுகளின் வருகைக்காண்டி' என்று திருத்திப் படிக்கவும்!
Deleteஆத்தாவின் அருளால் நாளை கிடைக்கவிருக்கும் புத்தகங்களில் 3 கெளபாய்கள் அணிவகுத்திருப்பது குஷியளிக்கிறது! கூடவே நம்ம படகுபாயும் துடுப்பை வழித்துக்கொண்டு வரயிருப்பது = மெத்த குஷி!
ReplyDeleteவந்தாச்சி...🙏🙏🙏🙏🙏
ReplyDeleteமாற்றம்...மாற்றம்...மாற்றம்....
ReplyDeleteஅது என்றுமே வாசகர்களின் இனிய மாற்றமாக முடிவது தான் சிறப்பு ...
மிக்க நன்றி சார்...
பிரின்ஸ் அட்டைப்படமும் சரி ,லக்கி அட்டைப்படமும் சரி செம கலக்கலாக அமைந்துள்ளது சார்...
ReplyDeleteடெக்ஸ் இல்லா மாதமா என்ற வெறுமையை விரட்டி அடித்த தங்கள் "கரணத்திற்கு " மனமார்ந்த பாராட்டுகள் சார்..
அடுத்த மாத இதழ்களின் அட்டவனையே பரபரக்க வைக்கிறது ...வெயிட்டிங்..
விஜயன் சார், இந்த மாத குட்டிக் கரணங்கள் எந்த மாதிரியும் இல்லாத புதுமாதிரி. நன்றி.
ReplyDeleteவந்தால் வாங்குவோம்.....
ReplyDeleteஅருமையான வெளியீடுகள் ஐயா.மிக்க நன்றி. சென்ற மாதம் டெக்ஸ் வெளியீடு இல்லாமல் ஏமாற்றமடைந்த எங்களுக்கு இம்மாத வண்ண டெக்ஸ் இதழ் நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.
ReplyDeleteசென்ற மாதம் தானே பட்டையை கிளப்பிய டெக்ஸ் வந்தது நண்பரே...!
DeleteHi..
ReplyDeleteDon't worry be happy
ReplyDeleteகால வேட்டையரை ஜம்போவிலேயே களம் இறக்கி பார்க்கலாம் சார்.
ReplyDeleteநான் நான் இம் last. கருர் ராja sekaran
ReplyDeleteCaptain Prince story .....Wow!
ReplyDeleteCaptain Prince story .....Wow!
ReplyDeleteவந்துட்டேன் 🏃🏻♂️🏃🏻♂️🏃🏻♂️🙏🏼
ReplyDelete.
// ராப்பர் அச்சாகி ரெடியாக உள்ளது; கதையும் வாங்கியாச்சு; DTP செய்து அச்சுக்கும் தயாராக உள்ளது ; ஆனால் பச்சைக்கொடி காட்ட மனசு வரவில்லை - at least - ஜம்போவின் முதல் இதழென்ற ஸ்லாட்டினுக்கு ! !! //
ReplyDeleteபாத்துக்கலாம் சார்
.
எச்சூஸ் மீ..!
ReplyDeleteஎஸ் புரசீட் 🤷🏻♂️
Delete.
பரலோகத்திற்கு ஒரு படகு.. அட்டைக் கலர் செம்ம அட்ராக்டிவா இருக்கு சார்..!
ReplyDeleteஎஸ்...
Delete// So ஜம்போ சீஸன் 2 மே முதலாய் folks ! And முதல் இதழே “தனியொருவன்“!! //
ReplyDelete😍😍😍காத்திருக்கிறோம் சார்
போட்டு தாக்குங்கள் சார்
அப்ப இம்மாதம் ரெண்டு டெக்சா 😍😍😍
.
// Almost ரெடி என்ற நிலையிலான "காலவேட்டையர்" நிச்சயம் வெளியாகிடும் ; ஆனால் ஜம்போவின் சந்தாவின் அங்கமாகயிராது ! ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும் //
ReplyDeleteஈரோடு புத்தக திருவிழாவுக்கு
ரெண்டாவது புக்கு ரெடின்னு சொல்லுங்கோ சார் 🙏🏼
.
டியர் எடி,
ReplyDeleteஉங்கள் ஷேமத்திற்காகவாது கடைசி நாள் குட்டிகரணங்களை கொஞ்சம் குறைத்து கொள்ளுங்களேன்?!?! ஆனால், உங்கள் உடல் மற்றும் மனதை செம்மைபடுத்துவதுடன், இந்த குட்டிகரணங்கள்தான், காமிக்ஸ் மீதான காதலை தொடர செய்கிறது என்றால், I am Double Ok :)
காலவேட்டையர் தனி புத்தக விழா இதழாக வருவதில், எனக்கும் சம்மதமே... ஜம்போவில் ஆக்ஷன் ஸ்பெஷல் என்ற ஒரு Box-Office-Flop மட்டுமே என்று எப்போதும் காப்போம்.
ஏப்ரலில் நான் அதிகம் எதிர்பார்க்கும் இரு இதழ், ஜானதன் மற்றும் ப்ரின்ஸ் கலர் ரீப்ரின்ட்.... :)
மரண வைரங்கள் முதல் முறையாக படிக்க போகிறேன். ஆவலுடன் புத்தகத்திற்கு காத்திருக்கிறேன்.
ReplyDeleteநான் படித்துள்ள கதையா ,இன்னமும் படிக்காத கதையா என்றே தெரியவில்லை என்பதால் ..
Deleteநானும் ஹேப்பி அண்ணாச்சி...:-)
ஜம்போவில் கால வேட்டையரின் இடத்தில் ஜெரேம்யா அல்லது கென்யாவை தரமுடியுமா?
ReplyDeleteகாலவேட்டையார் 120 ரூபாய் சார் ;
Deleteஜெரெமியா அதனில் இரு மடங்கு & கென்யா நாலரை மடங்கு !!
அப்படி என்றால் ஜெரெமியா ஒரு பாகம் மட்டும் வெளியீட முடியுமா சார்?
Deleteமொத்தமா வர்றப்பவே பாதி பேரு பயப்படறாங்க சார்...கொஞ்சம் கொஞ்சமா போட்டு நாமே இன்னும் பயத்தை கூட்ட வேண்டாமே...
Deleteகொஞ்சமாக போடும் போது பயம் குறைந்து விடும் என பாஸிட்டிவாக நினைக்க ஆரம்பியுங்களேன்.ப்ளீஸ்.
Deleteபிரின்சின் மரண வைரங்கள் கலரில் பிரமாதம் Sir
ReplyDeleteகாலவேட்டையரைக் கண்ணில் காணும் காலம் இன்னும் கனியவில்லையாக்கும் ?சரிதான் சரிதான்..நோ டெக்ஸ் என்றிருந்த காலம் போய் ஒன் கலர் டெக்ஸ் ஒன் அதிரடி டெக்ஸ் என்று டூ டெக்ஸ் வரயிருப்பது டூ மச் மகிழ்ச்சியை தருகிறது.மரண வைரங்கள் கரடிக்குட்டியோடு பிரின்ஸ் அண்கோ சாகசம் புரியும் அற்புதமான கதை .வரவேற்கிறேன் .லக்கிலூக் கும் சேர்ந்து கொள்ளஏப்ரல் களை கட்ட துவங்கி விட்டது
ReplyDeleteபுது வரவு ஜானதன் கார்ட்லெண்ட் குளிர் கால குற்றங்களோடு ஏப்ரல் வெயிலுக்கு இதமாய் வருவது எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது ..
வெ. வீ. சார். நீங்கள் மறுபடி ஆக்டிவா பட்டய கிளப்பறது மகிழ்ச்சி
Delete//வெ. வீ. சார். நீங்கள் மறுபடி ஆக்டிவா பட்டய கிளப்பறது மகிழ்ச்சி//
Delete+1
எனக்கு திருப்தி தரத் தொடங்கிய நொடியே டெஸ்பாட்சுக்கு ஏற்பாடு செய்திடச் சொல்லி ஆபீஸையே ரணகளமாக்கிட, உங்களது கூரியர்கள் சகலமும் புறப்பட்டு விட்டன – ஏப்ரலின் முதல் தேதியை உங்கள் கைகளில் செலவிடும் பொருட்டு !
ReplyDelete##########
இத்நனை மாற்றங்களை கொண்டும் இதழ்கள் சரியான தேதியில் எங்கள் கைகளில் ஒப்படைத்த தங்களுக்கும் ,தங்கள்அலுவலர்களுக்கும் சங்கத்து சார்பாக ஒரு பொன்னாடையை போர்த்துகிறோம் சார்...:-)
//சங்கத்து சார்பாக ஒரு பொன்னாடையை போர்த்துகிறோம் //
Deleteஅந்த காதி கிராப்ட் தள்ளுபடியில் வாங்கிய கர்சீப் தானே தலீவரே ; போடுங்க ! போடுங்க !
சங்கத்தை பத்தி எங்களை விட அதிகமா கரீட்டா தெரிஞ்சு வச்சு இருக்கீங்க சார்..:-)
Delete: Almost ரெடி என்ற நிலையிலான "காலவேட்டையர்" நிச்சயம் வெளியாகிடும் ; ஆனால் ஜம்போவின் சந்தாவின் அங்கமாகயிராது ! ஏதேனுமொரு புத்தக விழாவின் போது just like that வெளியாகிடும்...
ReplyDelete######
அது இந்த வருட ஈரோடு புத்தக திருவிழாகவே இருக்கட்டுமே சார்...சந தாவில் வராத இதழ்,இதுவரை பார்த்திரா கதை எனும் போது இந்த புத்தக விழாவில் இது விற்பனைக்கு வருமாயின் வருகை தந்தோருக்கு ஒரு ஸ்பெஷல் இதழாக இந்த கால வேட்டையர் இருக்கும் சார்..
வரட்டும்...வரட்டும்...,
Delete'ஈரோட்டில் காலவேட்டையர்கள் 'னு விளம்பரப்படுத்தலாம்.
கால வேட்டையர் அப்படிங்கிறத 'காலகேயர் 'னு படிச்சிடாதீங்க மக்களே !!!
-1
Deleteஈரோடு போன்ற புத்தகத் திருவிழாவில் கொஞ்சம் பெரிய நாயகர்கள் மற்றும் கதைகளை கொண்ட புத்தகங்களை வெளியிட வேண்டுகிறேன்.
ஜூலையில் கோவை ?
Delete// ஜூலையில் கோவை ? //
Delete+1
ஈரோடு போன்ற புத்தகத் திருவிழாவில் கொஞ்சம் பெரிய நாயகர்கள் மற்றும் கதைகளை கொண்ட புத்தகங்களை வெளியிட வேண்டுகிறேன்
Delete#######
கால வேட்டையரை மட்டும் கேட்கவில்லை நண்பரே...பெரிய நாயகர்களோடு இணைய முடியுமா என கேட்டேன்...!
Sir, If you issue "Kaala vettiyar" at Coimbatore Book Fair, (Probably) I Will buy the first copy. Thank you.
Deleteஉங்களது கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைத்தது sir. That too as தலைவர் சொன்னது போல இவ்வளவும் செய்து books um anupa patu vitathe great
ReplyDeleteசித்திரமும் கைப்பழக்கம் சார் ; குட்டிக்கரணமுமே !! பொழுதன்னிக்கும் இதே வேலையாகிப் போன பிற்பாடு, அதிலேயே ஒரு பாண்டித்துவம் வந்து விடும் தானே ?
Deleteகுட் நியூஸ் :
ReplyDeleteசர்ப்ரைஸாக கலரிலும் ,க/வெ யிலும் டெக்ஸ் வருவது.
பேட் நியூஸ் :
கால வேட்டையர் தள்ளிப் போனது.
குட் நியூஸ் :
நாளை புத்தக டெலிவரி தினம்.
பேட் நியூஸ் :
திங்கள் வேலை நாள் என்பது.
போன மாத அதிரிபுதிரி ஹிட்டுக்குப் பிறகு ,இந்த மாத டெக்ஸ் ரொம்பவே ஆவலை கிளப்புகிறார்.
ReplyDeleteலக்கி லூக்கைப் பார்த்து மாமாங்கம் ஆன ஃபீலிங்.அதுவும் அட்டைப்படத்தில் அநியாயத்திற்கு இளமையாகத் தெரிகிறார் பாருங்களேன்.
பிரின்ஸ்க்கு முன்குறிப்பு ,அறிமுகப் படலம் தேவையில்லை.அருமையான அட்டைப்படம் பிரின்ஸை 'ஓரம் 'கட்டியபடி கலக்குகிறது.
குளிர்கால குற்றங்களுக்காக மண்டையைப் பிளக்கும் வெயிலில் வெயிட்டிங்.
This comment has been removed by the author.
Delete/ குளிர்கால குற்றங்களுக்காக மண்டையைப் பிளக்கும் வெயிலில் வெயிட்டிங்.//
Deleteவெயில் தான் மண்டையை பிளக்குதுள்ள கொஞ்சம் மர நிழலில் வெயிட் பண்ணுங்க ஜி. :-)
அப்பப்பா என்னா வெயில் என்னா வெயில் மண்டையை பிளக்குது :-) :-)
//லக்கி லூக்கைப் பார்த்து மாமாங்கம் ஆன ஃபீலிங்.அதுவும் அட்டைப்படத்தில் அநியாயத்திற்கு இளமையாகத் தெரிகிறார் பாருங்களேன்.//
DeleteEarly சாகசங்களுள் ஒன்றிது சார் ; லக்கியின் ஜாடையே லேசாய் வித்தியாசப்பட்டிருக்கும் !
ஜம்போவில் ஒரு யங் டெக்ஸ், ஒரு போக்கிரி டெக்ஸ், இரண்டு ஜேம்ஸ் பாண்ட், ஒரு லோன் ரேஞ்சர், மற்றும் ஒரு டெக்ஸ் எப்படி இருக்கும் நண்பர்களே!
ReplyDeleteகேவலமா இருக்கும்.
DeleteExactly..சூப்பர் செமி சைக்கோ..
Deleteஜம்போவில் "சமரசமிலா ஜனரஞ்சகம்" என்பதே template ஆக இருந்திட விழைகிறேன் நண்பரே !! அதே நேரம் அதிரி புதிரி variety ம் காட்டிட ஆசை !! So டெக்ஸ் என்ற வட்டத்துக்குள் மட்டும் ஜம்போவை அடைப்பதில் உடன்பாடில்லை !
Delete// So டெக்ஸ் என்ற வட்டத்துக்குள் மட்டும் ஜம்போவை அடைப்பதில் உடன்பாடில்லை ! //
Deleteஐ லைக் திஸ்.
// ஜம்போவில் "சமரசமிலா ஜனரஞ்சகம்" என்பதே template ஆக இருந்திட விழைகிறேன் நண்பரே !! //
Deleteநன்றி. 👏👏👏👏👏👏
விஜயன் சார், டெக்ஸ் கதையின் (பச்சோந்தி பகைவன்) தலைப்புக்கு ஏற்றவாறு அவருக்கு பச்சை கலரில் சட்டை போட்டு விடுவது எல்லாம் ஜாஸ்தி. :-)
ReplyDeleteஅது மஞ்சச்சட்டைதான் சார்.ராத்திரி நேரம்ங்கிறதால நிலவொளியில் லைட்டை கலர் மாறியிருக்கிற மாதிரி தெரியுது.
Deleteநானும் கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பார்க்கிறேன் சார்...பேச்சையே தெரியலியே ?
Deleteஆமாம் எனது கண்ணில் குறை என்று சொல்லாத வரை சரிதான்.
Deleteஎலக்ஷென் டைம்ங்கிறதால, 'தேர்தல் ஸ்பெஷல் 'வெளியிடுங்க சார்.
ReplyDeleteநல்லா களை கட்டட்டும்.
பறக்கும் படை கிளம்பிடப் போகுது சார் !
Deleteஇந்த நேரத்தில் smurfs "ஒரேயொரு ஊரிலே" கதையை ஒருவாட்டி எடுத்துக் படித்துத் தான் பார்ப்போமா ?
Deleteகண்டிப்பாக இந்த மாத இதழ்களை முடித்தவுடன் பார்த்து விடுகிறேன் சார்..
Delete��������������������������
ReplyDelete��������������������������
வாழ்த்துகள் டூ.........
""""""லயன்350""""""
����������������������
����������������������
1984ல் ஆரம்பித்த தன்னுடைய பயணத்தில் லயன் 350 என்ற
மகா மைல்கல் சாதனையை எட்டியிருக்கும் லயன்க்கும், டீன் ஏஜ் எடிட்டர் டூ "ஆசிரியர் விஜயன்" சாராக உயர்ந்திருக்கும் லயன் நிறுவன எடிட்டர் சாருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பயணம் 450,550,650.....
என ஆண்டாண்டு காலமும் தொடர எம்பெருமானின் அருளை வேண்டிக் கொள்கிறேன்....!!!!!!!
��������������������������
��������������������������
��������������������������
உயர்ந்தேன்....இத்யாதி என்பதெல்லாமே கண்ணோட்டங்களில் மாத்திரமே சார் ; மற்றபடிக்கு அன்றைக்கும் பாடங்கள் கற்று வந்தேன் ; இன்றைக்கும் கற்று வருகிறேன் எனும் போது nothing has really changed !
Deleteவருக டெக்ஸ்...
Deleteபாத்து ரொம்ப நாளாச்சு...:-)
நன்றிகள் தலீவரே...!!!!
Deleteஆம் 6மாசந்தான் ஆகுது.ஹி...ஹி...!
எடிட்டர் சார் பிறந்தநாள், லயன்350, முத்து 450 போன்றவைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க என்ற அளவில் தான், காலம் என்ற மாயச்சுழல் அனுமதிக்கிறது....!!!
ஓகே தலீவரே அடுத்து முத்து 450ல் பார்ப்போம்.
டியர் சார் ,
ReplyDeleteமரண வைரங்கள் - அட்டைப்படத்தில் "ஹூரோ "க்கு பதில் வில்லனை முன்னிலைப்படுத்தி இருப்பதும் வில்லன் இரண்டு பாறைகளில் கால் வைத்து நிற்கும் ெகத்தும் இவனை எப்படி "பிரின்ஸ் " எதிர்கொண்டார் என்பதை அறிய ஆவலாய் உள்ளது . அட்டைப் vடம் மிக அருமையான வடிவமைப்பு. சூப்பர்..i. பின்னட்டையிலும் வில்லன் தானா. இந்த முறை ெ சமதில்லான வில்லனைத் தான் பிரின்ஸ் எதிர்கொள்ளப் போகிறார்?ii
அடுத்து "லக்கி லூக்" அட்டைப்படம் கலரிங்+ வடிவ மைப்பு அருமை.. இதிலும் பின்னட்டையில் "வில்லன் துப்பாக்கி சாகஸம் அருமை.லக்கி லூக் - குமே தனக்குகு நிகரான ஒரு வில்லனை சந்திக்க போகிறார் என்று நினைக்கிறேன். (சூப்பரான கற்பனை. துப்பாக்கி பயிற்சி. )
ஏப்ரலை சூப்பர் கதைகளுடன் வெற்றிகரமான மாதமாக்க நிறைய முயற்சி எடுத்துக் கொண்டுள்ளீர்கள்.
ஆனால் , என்னைப் போன்றோரை மே மாதம் ஒரு இதழோடு ( ட்யூராஸ்கோ) சமாளிக்க சொல்கிறீர்களே _..?i
பார்ப்போம் இந்த மாதம் -TeX இதழ்கள் - இரண்டையும் படிக்காமல் வைத்திக்ககப் போகிறேன். மே மாதத்தில் படிக்க.- (முடிகிறதா என்று பார்ப்போமே.Tex_ VS நான்.)
)
///வில்லன் இரண்டு பாறைகளில் கால் வைத்து நிற்கும் கெத்தும் இவனை எப்படி "பிரின்ஸ் " எதிர்கொண்டார் என்பதை அறிய ஆவலாய் உள்ளது . ///
Deleteரெண்டு காலுக்கும் நடுவிலே பூந்து போயிருப்பார்னு நினைக்கிறேன்! :D
இல்லை செயலாளரே இரண்டு கால் நடுவுல நேராக ஒரு உதை விட்டுருப்பார்
Deleteசார்....இது விற்பனைக்கான அடிப்போடுதலாய்த் தெரியலாம் தான் ; ஆனால் THE LONE RANGER ஆல்பத்தை நீங்கள் மிஸ் செய்தால், நிச்சயமாய் ஒரு மிரட்டலான க்ளாஸிக்கைத் தவற விடுகிறீர்கள் என்பேன் !! இன்றைய பொழுதை முழுசுமாய் அவரோடு செலவிட்ட அனுபவத்தில் சொல்கிறேன் - இதுவொரு மைல்கல் இதழாய் அமையவிருக்கிறது !!
Delete// விற்பனைக்கான அடிப்போடுதலாய்த் தெரியலாம் தான் ; //
Deleteஉங்களின் இந்த மாத குட்டி கரணங்களை படித்த பின்னர் யாரும் அப்படி நினைக்க வாய்பில்லை. அப்படி நினைத்தாலும் அதுபற்றி கவலைப்பட தேவையில்லை.
இன்றைய பொழுதை முழுசுமாய் அவரோடு செலவிட்ட அனுபவத்தில் சொல்கிறேன் - இதுவொரு மைல்கல் இதழாய் அமையவிருக்கிறது
Delete######
ஆவலுடன் ...
டியர் விஜயன் சார் ,
Deleteஎனது சிந்தனைகள் சிக்கலாைனது தான். குடும்பம் வெளியூரில் இருப்பதால் கொரியர் சிக்கல் இருந்தது .அதனால் இரண்டு வருடங்கள் கிட்ட தி ருநெல்வேவேலியில் கடையில் வாங்கிக் கொண்டிருந்தேன். இந்த வருடம் தான் தங்களுக்கு சந்தா எண்ணிகையை உயர்த்த வேண்டும் ஒரு ஆசையிலும் (DTDC) கொரியர் உபயத் தாலும் ABCD - என்ற நான்கு சந்தா பிரிவில் மட்டும் இணைந்தேன்.
மற்றபடி கிராபிக் நாவலோ, ஜம்போ காமிக்ஸ் - பிடிக்காமல் இல்லை..
கடந்த மாதம் 007-ம் , முடிவில்லா மூடுபனியும் கடையில் (நாகர்கோவில் கிருஷ்ணாபுக்ஸ்டால்) வாங்கிகி படித்து விட்டேன்..
என்ன.. சில பல காரணங்களால் விமர்சனம் எழுதவில்லை.
007-நானெல்லாம் பியர்ஸ் ப்ராஸ்னன் ரசிகர்கள் - எனவே ராணி காமிக்ஸ் ஜேம்ஸ் பாண்டை தாண்டி ரசிக்க கொஞ்சம் சிரமம் தான்.
அப்றம்" முடிவில்லா மூடுபனி "அந்த தனிமையும் சிந்தனை களும் அப்பா... மனதை பாதித்தது என்னமோ நிசம் தான். ஆனால் என்னைப் போல் தனிமையில் விமர்சனம் எழுதினால் - ஏன் இப்படி வெறுப்பேத்து றீங்க -என்று தான் எழுத முடியும். ஸாரி.
நான் சொல்ல வந்தது என்னவென்றால் எனக்கு புத்தகக்கடைகளில் தான் புத்தகம் வாங்க வேண்டும்..
தற்போது ஆத்தூர் ஆறுமுகனேரி பெட்டிக்கடைகளில் குமுதம் / விகடன் தவிர வேறு புத்தங்களே விற்பனை இல்லை. புலனாய்வு பத்திரிக்கைகள் விற்பபனை மிகவும் சரிந்து (இரண்டு பெரிய அரசியல் தலைவர்களின் மரணத்திற்கு பிறகு) விட்டதாம்..
எனவே ஜம்போ கா மிக்ஸ், கிராபிக் நாவல் கடைகளில் கண்டிப்பாக வாங்கத் தான் போகிறேன். இதில் ஒரு அல்ப சந்தோசம் அவ்வள வே.. ( வாங்காமல் விட்ட இரண்டுடு இதழ்க ள் ஜெர மையா - 2 ம், பர குடாவும் தான். கடைக் கு போகும் போது முழிச்சி, முழ்ச்சி பார்த்துக் கொண்டே இருக்கும் தான். ஒரு நாள் வாங்கி விடுவேன் என் றே நினைக்கிறேன்.நன்றி..
அருமை இளங்கோ
DeleteSir,
ReplyDeletePACHONTHIP PAGAIVAN individual listing is not up yet? Please list !
Monday sir...
DeleteIs listing done sir?
Deleteபாணபத்திர ஓணாண்டியால் புகழ்பெற்ற ஓணானும்,பயல்கள் கையிலே கவட்டையை வைத்துக்கொண்டு மரம் மரமாய் தேடித்திரியும் கரட்டாண்டியுமான பச்சோந்தி நினைத்த கலருக்கு மாறக்கூடிய தன்மை கொண்டது
ReplyDeleteஎன்பது பிரசித்தம் .அது உண்மையா இல்லையா என்பதை ஆராய்ச்சியாளர்களுக்கே விட்டுவிட்டு நாம் பச்சோந்திபகைவனை பார்ப்போம் .சாதாரணமாகவே டெக்சின் வில்லன்கள் அடிவாங்குவதற்காகவே பிறப்பெடுத்த பிரகஸ்பதிகள்.அவர்கள் பச்சோந்தியாய் மாறி எந்த மரத்தோடு மரமாய் ஒட்டிக்கொண்டாலும் நமது இரவுகழுகின் கழுகு கண்களுக்கு தப்ப முடியாது என்பது டெக்சின் மகன் கிட் எத்தனையோ கதைகளில் எத்தனையோ இள மங்கையரைப் பார்த்து சிலபல flow கடைவாயில் வழிய விட்டிருந்தாலும் இன்றுவரை கட்டை பிரம்மச்சாரி என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை.ஆக, ஏப்ரலில் எதிர்பாராது உதயமாகி விட்ட பச்சோந்தி பகைவனை நூறாண்டு காலம் அடியும் உதையும் பெற்று டெக்சின் புகழ் மங்காமல் பார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் .
பச்சோந்தி வில்லன் டெக்ஸ் தொடரில் தொடருமொரு பகைவன்....இவனைக் கொண்டே நாலைந்து கதைகள் உள்ளன !
Deleteஆஹா....தொடர் வில்லனாக ஒருவரே வரும் சாகஸங்கிளில் எப்பொழுதும் சுவை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும் .அதுவும் டெக்ஸ் எனும் போது சூடான சுவையாகவே இருக்கும்...எனவே கண்டிப்பாக இந்த வரிசையை தொடருங்கள் சார்...
Deleteவெட்டுக்கிளி சார்...அருமை .
Deleteசார்.ஒரு தலைவன் ஒரு சகாப்தம் என்ற ஒரு இதழைத் தவிர வேறு எந்த டெக்ஸ் கதையும் வண்ணத்தில் பார்க்க படிக்க நன்றாக இல்லை.கறுப்பு வெள்ளையில் வரும் கதைகள் தான் அருமையாகவும் தரமாகவும் இருக்கின்றன. மேலும் சந்தாவில் விலை கட்டுப்படியாகவும்,அல்லது இரண்டு கலர் புத்தகங்களின் விலையில் மூன்று கறுப்பு வெள்ளை புத்தகங்கள் போட முடியுமா என்றும் பாருங்கள்.அந்த ஒரு கதையை தவிர இதுவரை தாங்கள் வெளியிட்ட கலர் புத்தகங்கள் எல்லாம் "இந்த படத்திற்கு வண்ணம் தீட்டி மகிழுங்களேன்" என்ற வகையில்தான் இருந்தது என்பது என் கருத்து.
ReplyDeleteLMSல் வந்த சட்டம் அறிந்திடா சமவெளி படித்து விட்டு சொல்லுங்கள்.
Deleteபவளச் சிலை மர்மம்.....சர்வமும் நானே....TEX 250 ....இவையுமே நாம் வண்ணம் தீட்டும் ரேன்ஜ் என்று நினைத்தீர்களெனில், கலரிங் ஆற்றலில் நாமெல்லாம் எங்கேயோ போய்விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும் !!
Deleteசார்! நான் நேற்று மதியம் 11 மணி சுமாருக்கு இரண்டாவது தவணை தொகை+ஜம்போ சீஸன் 2'க்கும் சேர்த்து ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டேன். மாலை உங்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது, திங்கட்கிழமை காலையில்தான் வங்கி கணக்கில் சரிபார்க்க வேண்டும் என அலுவலக பெண் ஒருவர் சொன்னார்.
ReplyDeleteஇரண்டாவது தவணை கட்டாதவர்களுக்கும் சேர்த்து புத்தகம் நேற்று அனுப்பி விட்டீர்களா? அல்லது, அதை சரிபார்த்தப் பின்னர் நாளைக்கு தான் என் புத்தக பார்சல் புறப்படுமா?
எதுவாயினும் நாளை உறுதி செய்கிறேனே ஜெகத் !
DeleteTO ALL : நண்பர்களே : இம்மாத கூரியரில் COLOR TEX இதழைத் தேட வேண்டாமே - ப்ளீஸ் ! மே மாதம் 'தல ' சாகசம் எதுவும் கிடையாதெனும் போது ஏப்ரலில் ஒன்றுக்கு இரண்டாய்த் தாக்கிட வேண்டாமெனத் தீர்மானித்தேன் ! So தயாராகியிருப்பினும், கலர் டெக்ஸ் பயணம் செய்யப் போவது அடுத்த மாதமே !
ReplyDeleteபதிவில் இதனைக் குறிப்பிடாது போய் விட்டேன் - sorry !
Noted the point
Deleteஇது கொரியருக்கு முந்தைய கடைசி கரணம் போல.
Deleteஆனா ...நான் நினைச்சேன் சார்..:-)
Deleteபுத்தகங்கள் இன்று கிடைத்த நண்பர்கள் யாராவது உண்டா?
ReplyDeleteஇன்று ஞாயிறு நணபரே...:-)
Deleteஆமாம் பரணி. இதற்கு முன்னர் சில நண்பர்கள் ஞாயிற்றுக்கிழமை சென்று புத்தகங்களை கைப்பற்றிய பின்னூட்டங்களின் விழைவே எனது கேள்வி :-)
DeleteGood to see 'kala vettayar' is eliminated. Thanks..
ReplyDeleteபதிவுல பல இடங்களில் சிரித்துக் கொண்டே படித்தேன். ஈவி சொன்னது போல உங்கள் ஆபிஸை கற்பனை பண்ண மதன் அவர்களின் கார்ட்டூன் தான் நினைவுக்கு வந்தது. பல இடங்களில் நீங்கள் குட்டிக்கரணம் அடிப்பது போலவும் பணியாட்கள் விலகி ஓடுவது போலவும் அந்தக் கார்ட்டூன் மனதில் வடிவம் பெற்றது.
ReplyDeleteநீங்கள் சிரித்துக்கொண்டே படித்தது மாதிரி தெரியவில்லை... குட்டிக்கரணம் அடித்துக் கொண்டே படித்தது போல் தெரிகிறது. :-)
Delete///பல இடங்களில் நீங்கள் குட்டிக்கரணம் அடிப்பது போலவும் பணியாட்கள் விலகி ஓடுவது போலவும் அந்தக் கார்ட்டூன் மனதில் வடிவம் பெற்றது.///
Deleteஆரம்ப நாட்களில் பணியாட்கள் பயந்து விலகி ஓடியதெல்லாம் உண்மைதானாம்.. ஆனால் இப்போது குட்டிக்கரணத்தில் நிறையவே தேர்ச்சி பெற்றுவிட்டதால், பணியாளர்களுக்கு நடுவில் லாவகமாகப் புகுந்து குட்டிக்கரணம் அடித்துச்செல்லப் பழக்கப்பட்டுவிட்டாராம்! ஆகவே, முதுகுக்குப் பின்னால் அவ்வப்போது 'விஷ்க் விஷ்க்' என்று சத்தம் கேட்டால் பணியாளர்கள் திரும்பிக்கூடப் பார்க்காமல் "நம்ம விஜயன் சார் காமிக்ஸ் வேலைகள்ல இறங்கிட்டாரு போல!" என்று தங்களுக்குள் பேசியபடியே தங்கள் பணிகளில் மூழ்கிப் போகிறார்களாம்!
விஜய் @
Delete:-) செம கற்பனை.
சிறிய திருத்தம்:
"நம்ம விஜயன் சார் காமிக்ஸ் கடைசி கட்ட வேலைகள்ல இறங்கிட்டாரு போல; நம்ப சாரோட குட்டிக்கரணம் எப்போதுமே ஸ்பெஷல் தான்" என்று தங்களுக்குள் பேசியபடியே தங்கள் பணிகளில் மூழ்கிப் போகிறார்களாம்!
சார் இந்த அட்டையா...அந்த அட்டையா...என லக்கியும் இதுவரை வந்த அட்டைகளிலே பெஸ்டுக்கு போட்டுயிட்டா...அத விட பெஸ்டா விளம்பரங்களிலே பெஸ்ட் விளம்பரமா வந்த தனியோருவன சொல்வதான்னு குழப்பத்தோட யோசிச்சா ...மேய்ல பராகுடாவா...அப்ப. ட்யூராங்கோ இல்லயான்ன கேள்விக்கு விடை பால்வார்க்க...அடுத்த மாதம் தூள்னா ...இந்த மாதம் ஏக எதிர்பார்ப்ல இருந்த கால வேட்டையர் ....நல்லத அதாவது மிகச்சிறந்தத தரனும்கிற உயர்ந்த உள்ளத்ல மாறிய பச்சோந்தி பகைவன் பக்கங்கள் மனத ஈர்க்க ....இந்த மாதமும் டக்கரென மனம் பாய்கிறது நாளையின் திசை நோக்கி....நன்றிகள் சார்
ReplyDelete// உயர்ந்தேன்....இத்யாதி என்பதெல்லாமே கண்ணோட்டங்களில் மாத்திரமே சார் ; மற்றபடிக்கு அன்றைக்கும் பாடங்கள் கற்று வந்தேன் ; இன்றைக்கும் கற்று வருகிறேன் எனும் போது nothing has really changed ! //
ReplyDeleteஇங்கே நீங்கள் எங்களுக்காக அடித்த/அடிக்கும் குட்டிக்கரணங்கள் மற்றும் வாங்கிய சாத்துக்களும் ஒரு சாதனையே. இதனை வேதனையுடனே எழுதுகிறேன்.
எந்த ஒரு ஏடிட்டரும் இது போன்று வாசகரை திருப்திபடுத்த இவ்வாறு/இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்களா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான நண்பர்களின் குரலாக இருக்கும்.
உங்கள் காமிக்ஸ் மாரத்தான் தொடரட்டும். கண்டிப்பாக உங்கள் உடன் வருவோம் என்றும்.
///எந்த ஒரு ஏடிட்டரும் இது போன்று வாசகரை திருப்திபடுத்த இவ்வாறு/இவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்களா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலான நண்பர்களின் குரலாக இருக்கும்.
Deleteஉங்கள் காமிக்ஸ் மாரத்தான் தொடரட்டும். கண்டிப்பாக உங்கள் உடன் வருவோம் என்றும்.///
+111111111
சூப்பரா சொன்னீங்க PfB!
+1
Deleteபிரின்சோட ௐரு பக்கமும் வர்ணஜாலம்
ReplyDeleteசார், டெக்ஸ் சிறுகதை தொகுப்பு என்னவாயிற்று?
ReplyDeletePlease see online listing ! Is on sale already sir...
Deleteவிஜயன் சார், மே மாதம் வரும் உள்ள புத்தகங்கள் (ட்யுராங்கோ
ReplyDeleteபராகுடா, தி Lone ரேஞ்சர்) அனைத்தும் ஹெவி வெயிட். வாசிப்பு அனுபவத்தில் பட்டையைகிளப்பப் போகிறது. முதலிடம் யாருக்கு என்று மூன்று இதழ்களுக்கு இடையில் கடுமையான போட்டி இந்த முறையும் நிச்சயம். இது போக மினி atom bomb (டெக்ஸ்). மே மாதம் காமிக்ஸ் கொண்டாட்ட மாதம்.
ஒரு சிறிய வேண்டுகோள்: எங்களை போன்ற காமெடி பிரியர்களுக்கு அடுத்த மாதம் ஏதாவது ஒரு காமெடி கதையை முடிந்தால் இந்த கொண்டாட்டத்தில் பங்கு பெற முடிந்தால் செய்யவும்.
விஜயன் சார், எனது குழந்தைகள் ஸ்மர்ப் மற்றும் ரின் டின் கதைகள் எப்போது வரும் என்று கேட்டார்கள், அவர்களிடம் பெரியவர்கள் பலருக்கு அந்த கதைகள் பிடிக்க வில்லை, குழந்தைகள் மட்டும் தான் படிக்கிறார்கள். எனவே இனி அந்த கதைகள் வரப் போவதில்லை, அப்படி வந்தால் சொல்கிறேன் என்று சொன்னேன்.
ReplyDelete"குழந்தைகளுக்கு பிடிக்குதுல அப்ப எங்களுக்கு மட்டும் படிக்க கொடுக்கலாம்ல", "அது கஷ்டம்டா ரொம்ப செலவாகும்", "என் biggy bankகில் இருக்கிற பணத்தை வைத்து தயார் செய்து கொடுக்க சொல்லுங்க அப்பா, "பார்கலாம் நேரம் வரும்போது ஆசிரியர் வெளியிடுவார், நான் வாங்கி தருகிறேன்".
We are all waiting for the good day.
@PfB
Deleteஉங்களுக்கும் குழந்தைகளுக்குமான உரையாடல் நெகிழ்ச்சி + சுவாரஸ்யம்!
ஒரு குழந்தையோட மனசு இன்னொரு குழந்தைக்குத்தான் தெரியும்! (பி.கு : அந்த 'இன்னொரு' - நான்தானுங்க!)
விஜய் @ அதானே பாத்தேன் எங்கே உங்கள் கடைசி லைன் பஞ்ச் இல்லாமல் போய் விடுமோ எனப் பயந்தேன். :-)
Deleteவிஜயன் சார்,
ReplyDeleteரின் டின்: கடைசியாக வந்த "நண்பேன்டா" மற்றும் "பிரியமுடன் ஒரு பிணை கைதி" இரண்டுமே காமெடியில் மிகவும் நன்றாக இருந்தது. நமது காமிக்ஸின் வந்த ரின் டின் கதைகளில் இந்த இரண்டுக்கும் முதல் இடம் கொடுக்கலாம். வாய்ப்பு கிடைக்கும் போது இவரை அவ்வப்போது வெளியிடுங்கள் சார்.
கொரியர் ஓலை வந்துருச்சு...மாலை வரை காத்திருக்கும் வேளையும் வந்துருச்சு...
ReplyDeleteகொரியர் வந்தாச்சு. கால வேட்ையர் புத்தகம் வரவில்ைலை என்றாலும் ஜானதன் கார்ட் லேன்ட் கதை உள் அட்ையில் இம்மாத வெளியீடு ஜம்போ சீசன் 2 கால வேட்ையர் என்ற அறிவிப்பு வந்து விட்டது. ( குட்டிக் கரணத்தின் effect )
ReplyDeleteபுக்கு வந்திடுச்சாம் - வீட்லேர்ந்து ஃபோன்! பக்தர்களை சந்தோசமா வச்சுக்கறதுல ஆத்தாவ அடிச்சுக்க ஆளே கிடையாது! யூ ஆர் க்ரேட் ஆத்தா!
ReplyDeleteசாயந்திரம் எப்ப வருமோன்னு மனசு கிடந்து தவிக்குது! படிக்கிறமோ இல்லையோ புக்கை வாங்கி ரெண்டு தடவு தடவிப்புடணும்! ஹிஹி! :)
நானும் தடவி தடவித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். புத்தகம் கையில் வைத்திருந்தால் மேனேஜர் டென்ஷன் ஆவதால், அவர் இல்லாத நேரமே படிக்கிறேன். சென்ற மாத புத்தகங்களில், நேற்றுதான் 007'ஐ படித்தேன். இன்னும் ஹெர்லக் ஷோம்ஸை படிக்கவில்லை.
Deleteஉலக அதிசயமாக இன்று காலை 10½ மணிக்கே கூரியர் வந்து சேர்ந்தது. 3 மணிக்கு தொடங்கிய குளிர்கால குற்றங்கள் கதையில் இதவரை 16 பக்கங்களே படித்துள்ளேன்.
Pukku vanthachu !! 😆😆😆
ReplyDeleteஅடுத்த மாதம் கார்ட்டூன் இல்லையா? போச்சு, எல்லா புக்கும் ஹெவிவெயிட்,என் மகள் கேட்கும் கேள்விக்கு என்ன சொல்ல போகிறேனோ... தெரியவில்லை, இதற்கும் ஆசிரியர் ஒரு குட்டிக்கரணம் போட்டால் பரவாயில்லை.... ம்ம்ம்... எதாவது நடக்குமா... பார்க்கலாம்...
ReplyDeleteஎன்ன கு.க. போட்டாலும் இந்த வருடம் 5 மாதம் கார்ட்டூன் நகி சார்!!
Deleteகார்ட்டூனின் வாழ்வுதனை கி.நா கவ்வும்..
Deleteகார்ட்டூன் மறுக்கா வெல்லும்!
கு.க போட்டால் கார்ட்டூன் மட்டுமா நஹி ?...
Deleteஹி...ஹி..!
Deleteலக்கிலூக்கோடு மிஸிஸிபி படகுப் பயணம் தொடங்கியாச்சு! 🤣🤣🤣
ReplyDeleteஅமைதியான நதியினிலே ஓடும்...,ஓடம்
Deleteஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
///அமைதியான நதியினிலே ஓடும்...,ஓடம்
Deleteஅளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்///
அட! இந்த கதைக்கு பொருத்தமான வரிகள்!! கதைய படிங்க GP செம பொருத்தமான வரிகள்!!!
ஒருவேளை மிஸிஸிபிய நெனச்சு தான் கவிஞர் எழுதியிருப்பாரோ!!?
படிக்கலாம்தான்..ஆனா..புக் இன்னும் கைக்கு வரலையே.
Deleteபுத்தகங்களை கண்ணுல பார்த்தாச்சு!
ReplyDeleteஇம்மாதத்தின் சிறந்த அட்டைப் படத்திற்கான விருது - லயன் 350 இதழான - 'குளிர்காலக் குற்றங்கள்'க்கு வழங்கப்படுகிறது! ப்பா!! என்னவொரு துள்ளியம்.. என்னவொரு கலரிங்!! அட்டகாசம் அட்டகாசம்!!! பின்னட்டையுமே பிரம்மிக்கச் செய்கிறது!
இரண்டாவது பரிசு - தலயின் 'பச்சோந்திப் பகைவன்' அட்டைப் படத்திற்கு! இருளின் பின்னணியில் நிலவொளியில் பளீரிடும் அந்த மலைக்கோட்டையும், 'யாருடா அங்கே..'என்ற பாணியில் திரும்பிப் பார்க்கும் தலயும், அடர் நீலவண்ண வானத்தின் பின்னணியில் மல்டிகலரில் அட்டகாசமாய் அமைந்த தலைப்பின் எழுத்துருவும் - சிறப்புச் சேர்க்கின்றன!
பின்னட்டையில், TEX என்ற ஆங்கில எழுத்துருவின் மீது ஒரு மெல்லிய சிரிப்புடன் ஸ்டைலாக நின்று கொண்டிருக்கும் தல - ப்பா! அழகோ அழகு!!!
மூன்றாமிடம் - 'பரலோகத்திற்கொரு படகு' & 'மரண வைரங்கள்'
கொரியரை திறந்த உடன் ஆசிரியர் சொல்லாமல் விட்ட மற்றும் ஒரு குட்டிக்கரணம் தெரியும் :-)
ReplyDeleteஆம் லோன் ரேஞ்சர் ஜம்போவில் முதல் இதழாக வரும் அறிவிப்பு போஸ்ட் கார்ட் மூலமாக இணைப்பு.
வர வர உங்களின் கடமை உணர்வு புல்லரிக்க செய்கிறது விஜயன் சார். நன்றி உங்களின் இந்த மெனக்கெடலுக்கு.
This comment has been removed by the author.
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பிறகு ரசித்த டெக்ஸின் பச்சோந்தி பகைவன். வாய்ச் சண்டைக்கிடையில் அதிக ஓசை எழுப்பும் பிஸ்டலால் சைலன்ஸ் முத்திரை பதித்த டெக்ஸ், விறுவிறு பாணியில் சென்ற கதையோட்டம் , ஆயுதத்தை விட அறிவை அதிகம் பயன்படுத்திய டெக்ஸ் இம்மாதம் என்னை திருப்தி படுத்தியுள்ளார்.லக்கி லூக் எப்போதும் போல குறையல்லாத புன்னகை வர வைக்கும் சாகஸம். நன்றி ஆசிரியரே தேர்தல் பளுவில் இருந்த என் மனதை இலேசாக்கிய காமிக்ஸ் கதாபாத்திரங்களுக்கு நன்றி
ReplyDeleteஎன்னதான் சொல்லுங்க!
ReplyDeleteஆயிரம் காமிக்ஸ் கதைகள் இருந்தாலும் லக்கிக்கு நிகர் லக்கி மட்டுமே!!
சிரிச்சுமாளலடா சாமி! இதுல நம்ம எடிட்டரோட டைமிங் வேற?
பாலைவனத்தில் ஒரு கப்பல் போல
வயக்காட்டில் ஒரு கப்பல்னு டைட்டில் போட்டுருவாங்கனு சொல்லும் இடம் சூப்பர்! சூப்பர்!!😆😆😆
மாலுமி : இப்படித் தான் ஒருவாட்டி என்னாச்சுன்னா...
அசிஸ்டன்ட் : காபி போடட்டுமா பாஸ்??
டைலாக்கும் சூப்பர் 🤣🤣🤣
இப்போதைக்கு இந்த அளவோடு நிறுத்திக்குவோம்!!
ஆக மொத்தம் நம்ம மார்க் 9/10
அந்த ஒரு மார்க் என்ன பாவம் பண்ணுச்சி கோப்ப்பால் !!
Deleteசரி வுடுங்க கோப்ப்பால் !
Deleteஅழிச்சாம் புளிச்சா
10/9 ஓகேவா!!
காபி போடட்டுமா மிதுன்?? :-)
Delete///காபி போடட்டுமா மிதுன்?? :-)///
Deleteஉண்மையிலேயே வழவழனு பேசறவங்கள வாயடைக்க அருமையான டெக்னிக்!! 🤣🤣🤣
கொரியர் ஓலை வந்துருச்சு...மாலை வரை காத்திருக்கும் வேளையும் வந்துருச்சு...
ReplyDelete"பச்சோந்தி பகைவன் "
ReplyDeleteமுன்னட்டையை விட பின் அட்டை இன்னும் கலக்கலாக அமைந்துள்ளது.இந்த முறை "காவலன் " டெக்ஸ் ஒல்லிபிச்சான் சைசில் இருப்பது போல ஒரு மனப்பிரமை ..( 114 பக்கம் ஒல்லி பிச்சானா என வினவுவது புரிகிறது சார்..) என்ன செய்வது இந்த காவலன் படா படா ஆளா இருக்குறதால அளவும் படா படாவா இருக்க கூடாதான்னு மனசு ஏங்குது .ஆனா உட்பக்க சித்திரங்களில் நம்ம பழைய டெக்ஸ் பாணியில் குழுவினரோடு பார்க்கும் பொழுது பட்டாசாய் வெடிக்க போகிறது எனவும் புரிபடுகிறது.மேலும் இறுதியில் " தொடர் வில்லனாய் இந்த வில்லன் தொடரபோவதன் " அறிவிப்பும் ஒரு குஷியை கிளப்புகிறது .
**********
மரண வைரங்கள் ...
முன்பின் இருபக்கமும் வில்லனின் அட்டைப்படத்தை வெளியிட்டு அதுவும் ஹீரோ கணக்காய் போஸ் கொடுக்கும் அந்த அசத்தலான வித்தியாசமான ஓவிய பாணி சிறப்பாக அமைந்துள்ளது.உள்ளேயோ கேப்டன் பிரின்ஸ் வண்ணத்தில் மனதை அள்ளுகிறார்.இந்த கதை மறுபதிப்பாக இருந்தாலும் இதற்கு முன்னர் படித்து விட்டேனோ இல்லையோ என்றே நினைவு இல்லாத பொழுது பிரின்ஸின் புது சாகஸத்தை படிக்க போகும் ஆர்வமே முழுதாக படுகிறது.பிரின்ஸ் எப்பவும் ஒரு நெருங்கிய தோஸ்த் போல எனும் எண்ணம் எப்பொழுதும் உண்டு என்பதால் ஆவலுடன் வைரத்தை தேடலாம்.
**********
பரலோகத்திற்கொரு படகு:
அடேங்கப்பா லக்கியை பார்த்து மாமாங்கம் ஆகிவிட்டது போல ஒரு பிரமை ( உண்மைதானோ..?).அதுவும் மேகவண்ண கலரில் அட்டைப்படம் மனதை அள்ளுகிறது முன்னும் பின்னும் என்றால் உள்ளே அச்சுதரமும் ,வண்ணதரமும் இன்னும் மனதை கொள்ளை அடிக்கிறது.காமெடி கெளபாயை முதலில் படிப்பதா ,ஆக்ஷன் கெளபாயை முதலில் படிப்பதா என மிக பெரிய குழப்பம் .இங்கி பிங்கி பாங்கி தான்..
இந்த இதழில் ஒரு பெரும் "பிழையை " செய்து விட்டீர்கள் என குற்றம் சாற்றுகிறேன் சார்...அதுவும் ஹாட்லைனில்.கேப்டன் பிரின்ஸ் தோன்றும் மரண வைரங்கள் என அறிவிப்பதற்கு பதிலாக கேப்டன் டைகர் தோன்றும் என அறிவிப்பை கொடுத்து டைகர் ரசிகர்களை தூண்டி விட்டு விட்டீர்கள்...:-)
********
குளிர்கால குற்றங்கள் :
இந்த கோடை காலத்திற்கு ஏற்ற இதமான தலைப்பு ...அறிமுக நாயகரின் முன்பின் அட்டைபடமும் சரி ,உள்ளே வண்ண சித்திரங்களும் சரி ...மிக மிக நன்று ..நல்ல வேளை பெரிய அளவில் இதழை கொண்டு வந்து இந்த மாதம் ஒரு "குண்டு இதழை " கொண்டு வந்த திருப்தியை அளித்து விட்டீர்கள் சார்..
மொத்தத்தில் அனைத்து இதழ்களுமே ஒரு சிறப்பை நோக்கி காத்திருப்பது போல ஒரு எண்ணம்...
எனவே இனி படித்து விட்டு.....
நண்பர்களுக்கு,
ReplyDeleteகீழ்கண்ட புத்தகங்கள் என்னிடம் விடுபட்டுள்ளன. நண்பர்கள் அவற்றின் பெயர்களை தெரிவித்தால் மிக உபயோகமாக இருக்கும்.
Lion comics 321
Lion comics 338
Lion graphic novel 6
மண்ணில் துயிலும் நட்சத்திரம் (இதன் வெளியீட்டு எண் இல்லை. இது தான் 338 ?)
- சங்கர்
பரலோகத்திற்கொரு படகு அட்டைப் படம் அருமை. வித்தியாசமான கலர், அதுவரை நமது காமிக்ஸ் அட்டவணைகள் எதுவும் இது போன்ற கலர் காம்பினேஷனில் வரவில்லை. அட்டகாசமான அட்டைப்படம்.
ReplyDeleteஅட்டைப்படத்தில் இரண்டாம் இடம்.
அட்டைப்படத்தில் முதல் இடம் குளிர்கால குற்றங்கள். அதுவும் பின் அட்டைப்படத்தில் உள்ள ஓவியம் மற்றும் கலரிங் செம. சான்ஸே இல்லை. சூப்பர்.
349- பரலோகத்திற்கொரு படகு
ReplyDelete350- குளிர்காலக் குற்றங்கள்
351- மரண வைரங்கள்
353- பச்சோந்தி பகைவன்.
352- ?
அட்டைப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது பச்சோந்தி பகைவனின் பின்னட்டையே. வன்மேற்கின் சூறாவளி.
ReplyDeleteஇந்த மாத கதைகள் எப்படி ?? யாராவது ரேட்டிங் கொடுங்கப்பா.
ReplyDeleteMudivilla Mudupani padithumudithuviten. Pictures awesome. Winter days came so realistic in the story. Being alone I feel loneliness so real. Story is also not bad.
ReplyDeleteபரலோகத்திற்கொரு படகு
ReplyDeleteகுளிர்காலக் குற்றங்கள்
மரண வைரங்கள்
பச்சோந்தி பகைவன்......
மேற்கண்ட புத்தகங்களின் ரேட்டிங் சொல்லுங்க
பச்சோந்தி பகைவன் :- நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெக்ஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வில்லன், அதுவும் அவனின் திட்டமிடல் மற்றும் அடுத்து என்ன நடக்கும் என ஊகித்து டெக்ஸுக்கே குச்சி மிட்டாய் கொடுக்கும் பலமான வில்லன். அதே போல் டெக்ஸும் துப்பாக்கியை விட தனது மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த சாகசம் என்னைப் பொருத்தவரை இந்த வருடத்தின் முதல் டெக்ஸ் அதிரடி என்பேன்.
ReplyDeleteஎல்லாம் சரிதான். ஆனால் கடைசியில் "நீ என்ன என்னை பிடிக்கிறது, நானே மாட்டிக்கிறேன்" என்று பொசுக்குன்னு வில்லன் மாட்டிக்கிறார்.
Deleteஎதிரி சுதாரிப்பதற்குள் டெக்ஸ் முந்திக்கொண்டார் என எடுத்துக் கொள்ளலாமே.
Deleteசார்....கணேஷ்குமாரின் பார்வையில் இது டெக்ஸுக்கான பாராட்டுப் பத்திரம் !!
Deleteபரலோகத்திற்கொரு படகு:
ReplyDeleteகுதிரை ரேஸ் கார் ரேஸ் பைக் ரேஸ் போன்று பல ரேஸ் பார்த்திருப்போம். ஆனால் இது எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான படகு ரேஸ். சிரிக்க சிரிக்க வயிற்றில் கண்ணீர் வரவழைக்கும் லக்கி லூக் சாகசம். I enjoyed this story lot.
அப்பா அந்த கப்பல் ஓட்டும் மாலுமியின் லெவலே வேற. எனது மனதில் நீங்கா இடம் இவருக்கு உண்டு.
26ஆம் பக்கம் மடக் மடக் காமெடி எப்படிங்க பரணி??
Deleteஅப்புறம் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் "பிஸ்டல் பீப்" அசத்தல்!
🤣🤣🤣
மிதுன் @ இந்த கதையில் ஒவ்வொரு கதாபாத்திரங்களூம் ஒவ்வொரு விதத்தில் என்னை கவர்ந்தன. விரிவாக எழுத ஆசை. ஆனால் புத்தகங்கள் கிடைக்காத அல்லது படிக்காத நண்பர்கள் பலர் உண்டு என்பதால் கைகளை கட்டிக்கொண்டு வரும் ஞாயிறு பதிவு வரை காத்திருக்கிறேன்.
Deleteஅந்த "கதை விடும் படகு பைலட்" பாத்திரம் தான் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது !
Deleteநான்கு புத்தகங்களும் ஓரே நாளில் முடிந்து விட்டது.
ReplyDeleteBooks not received. Jeevan prakash
ReplyDeleteசார் நான்கு அட்டைகளுமே சூப்பர்....டெக்ஸ் இது வரை வந்த டெக்சிலயே பெஸ்ட்...குளிர்கால குற்றங்கள் அதகளம்....பிரின்சின் பக்கங்கள் வண்ணங்கள் அற்புதம்...டெக்சோ. 80களுக்கு அழைக்கிறார் சித்திரங்கள் வாயிலாக...L.R.தனி அட்டை அட்டகாசம்....கோடை மலர்கள் ௐவ்வொன்றும் அட்டகாசம்
ReplyDeleteஇரும்புக்கையாரின் கமெண்டா ?
Deleteநன்றி ஆசிரியரே. இம்மாத வெளியீடுகள் அனைத்துமே அருமை.மிகச்சிறந்த கலவை.அட்டைப்படம் அனைத்தும் அருமை அட்டகாசம். டெக்ஸ் வெளியீடு இல்லாத மாதம் வெறுமை எனத் தோன்றும் என் போன்ற டெக்ஸ் இரசிகர்ளுக்கு இன்ப அதிர்ச்சி. நீங்கள் அடித்த பல்டியில் மிகச் சிறந்த பல்டி என்பேன்.டெக்ஸ் வெளியீடு இல்லாத மாதங்களில் இதே போன்று பல்டி அடித்திட வேண்டுமாய் வேண்டுகோளை முன்மொழிகின்றேன்.
ReplyDeleteஒவ்வொரு பல்டிக்கும் குடல் வாய்க்கு வருவது தனிக்கதை சார்...!!
Deleteமரண வைரங்களும் படித்து முடித்து விட்டேன்.
ReplyDelete200th
ReplyDeleteஐயோ இப்படி அநியாயமா 'load more'க்கு காரணமாகிட்டேனே... ப்பூஊஊவ்.. ப்பூஊஊவ்..
டெக்சுக்கு வில்லன் ரப்பர் மண்டையன்... :P..
ReplyDeleteபச்சோந்தி பகைவன்...
ReplyDeleteபோனமுறை பெரிய்ய்ய சாகஸத்தில் பட்டையை கிளப்பிய டெக்ஸ் இந்த முறை 114 பக்கங்களில் எவ்விதம் அதிரடி காட்ட போகிறாரோ என்ற எண்ணத்தை அட்டகாசமான ஓட்டத்தில் அதகளபடுத்தி விட்டார்.வில்லனும் இந்த முறை மெகா வித்தியாச முறையில் வெளிப்பட துப்பாக்கி முனையை விட புத்தி முனையை அதிகம் பயன்படுத்தி வில்லனை பிடிக்க செல்லும் பாணியும்...வழக்கமான டெக்ஸ் ,கார்சன் நகைச்சுவை கலந்த வசனங்களும் மீண்டும் வழக்கம் போல் ஒரு வெற்றிக்கனியை டெக்ஸ் பறித்து சென்று விட்டார்...வில்லனின் உண்மையான முகத்தை முதல் சாகஸத்திலியே கண்டுபிடித்த டெக்ஸ் ..வில்லன் விடும் இறுதி சவால் பாணி சாகஸங்களில் எந்த முறையில் அதகளம் பண்ண போகிறார் என்பதை அறிய இப்பொழுதே ஆவல் பீறிடுகிறது.டெக்ஸ் வில்லரை மட்டுமல்ல மிஸ்டர் B யை விரைவில் காணவும் இந்த சாகஸம் ஆவலை ஏற்படுத்தி விட்டது எனில் அது மிகையல்ல.
பச்சோந்தி பகைவன்...
ReplyDeleteபோனமுறை பெரிய்ய்ய சாகஸத்தில் பட்டையை கிளப்பிய டெக்ஸ் இந்த முறை 114 பக்கங்களில் எவ்விதம் அதிரடி காட்ட போகிறாரோ என்ற எண்ணத்தை அட்டகாசமான ஓட்டத்தில் அதகளபடுத்தி விட்டார்.வில்லனும் இந்த முறை மெகா வித்தியாச முறையில் வெளிப்பட துப்பாக்கி முனையை விட புத்தி முனையை அதிகம் பயன்படுத்தி வில்லனை பிடிக்க செல்லும் பாணியும்...வழக்கமான டெக்ஸ் ,கார்சன் நகைச்சுவை கலந்த வசனங்களும் மீண்டும் வழக்கம் போல் ஒரு வெற்றிக்கனியை டெக்ஸ் பறித்து சென்று விட்டார்...வில்லனின் உண்மையான முகத்தை முதல் சாகஸத்திலியே கண்டுபிடித்த டெக்ஸ் ..வில்லன் விடும் இறுதி சவால் பாணி சாகஸங்களில் எந்த முறையில் அதகளம் பண்ண போகிறார் என்பதை அறிய இப்பொழுதே ஆவல் பீறிடுகிறது.டெக்ஸ் வில்லரை மட்டுமல்ல மிஸ்டர் B யை விரைவில் காணவும் இந்த சாகஸம் ஆவலை ஏற்படுத்தி விட்டது எனில் அது மிகையல்ல.