நண்பர்களே,
வணக்கம். இப்போதெல்லாம் ஒரோபோரோ மோதிரமெல்லாம் தேவைப்படுவதில்லை காலப்பயணம் போக ; நாட்கள் தாமாகவே பிசாசு வேகத்தில் ஓட்டமெடுக்கின்றன !! At least என்னளவிற்காவது ! காதுக்கு மப்ளர் மாட்டிய குளிர் காலைகள் போனயிடம் தெரியலை ; மாறாகக் காதிலே புகை வரும் அனல் நாட்கள் ஆரம்பித்து விட்டன ! So சகலமும் வேக வேகமாய் ஓட்டமெடுத்து வர, நாமும் அந்த வேகத்துக்கு ஈடுதந்தாக வேண்டுமல்லவா ? இதோ மார்ச்சின் இதழ்களுக்கு இனி மனதில் இடம் என்றபடிக்கு ஏப்ரலை நோக்கிப் பார்வைகளை ஓட்டலாமா ? ஏப்ரலின் முதல் வாரம் எங்களது நகரின் முதல் திருவிழா வேளை என்பதால் எப்போதுமே ஒருவிதப் பரபரப்பு தொற்றிக் கொள்வதுண்டு !! பற்றாக்குறைக்கு "கோடை மலர்" ; சம்மர் ஸ்பெஷல் " "வெயில் ஸ்பெஷல் " ; "காத்தாடி ஸ்பெஷல்" என்றெல்லாம் எதையேனும் கிளப்பிவிட்டு உங்களது அந்நாட்களின் பள்ளி விடுமுறைகளை ஜாலியாக்கிடும் பொருட்டு கூத்தடிப்பதும் வாடிக்கை என்பதால் ஏப்ரல் எப்போதுமே நமக்கொரு ஆதர்ஷ மாதமாக இருந்துவந்துள்ளது ! And இம்முறையும் அதனில் மாற்றமிராதென்றே நினைக்கிறேன் - simply becos இந்த ஏப்ரலில் இரு அழகான தருணங்கள் இணைந்திடவுள்ளன !! முதலாவது நமது லயனின் இதழ் # 350 !!
349-க்கும் ; 351-க்கும் மத்தியிலான நம்பர் தான் ; ஏதேனும் ஒருவிதத்தில் மாதா மாதம் ஏதேனுமொரு மெகா இதழைக் கண்ணில் பார்த்து வரும் பொழுதுகளே இவை ! இருந்தாலும் அந்த "350" என்ற நம்பரோடு மெலிதாயொரு வசீகரம் மிளிர்வதாய் எனக்கொரு நினைப்பு !! நியாயப்படிப் பார்த்தால் - "அகவை 35" என்றான சிங்கத்துக்கு இந்நேரம் வெளியீடு எண் 420 ஓடிக்கொண்டிருக்க வேண்டும் தான் ! கிட்டத்தட்ட 70 இதழ்கள் இன்னமும் பின்தங்கி நிற்கிறோமெனும் போது இங்கே பீற்றிக் கொள்ள முகாந்திரங்கள் அதிகமிருக்கக்கூடாது தான் ! ஆனால் ஆமையாய்த் தவழ்ந்து திரிந்த நமக்கு இந்த நம்பரே ஆண்டவனும், நீங்களும் இணைந்து சாத்தியமாக்கியுள்ள வரங்கள் எனும் போது அதனை சிலாகிக்காது போவானேன் ? Enter - புது நாயகர் ஜானதன் கார்ட்லேண்ட் - ஒரு டபுள் ஆல்பத்தோடு - இந்த ஸ்பெஷல் பொழுதுக்கு வர்ணமூட்டிட !!
இந்த மீசைக்காரர் உருவானது 1974-ல் ! குதிரையில் ஏறி லொங்கு லொங்கென்று பாலைவனமும், பள்ளத்தாக்குமாய்ச் சுற்றித் திரியும் பரிச்சயமான கௌபாய் அல்ல இவர் ! மாறாக - காட்டினில் பொறி வைத்து விலங்குகளை வேட்டையாடும் trapper ! வெள்ளைக்காரர்கள் எப்போதுமே நல்லவர்கள் ; "வோ..வோ.." என்றபடிக்கே வலம் வந்த கையோடு காக்கை, குருவி போல சுடப்பட்டு வீழ்ந்திடும் செவ்விந்தியரெல்லாம் மோசமானவர்கள் என்ற ஒருவித காமிக்ஸ் template-க்கு ஜானதனை ஒரு விதிவிலக்காகவே உருவாக்கினார் கதாசிரியை லாரன்ஸ் ஹார்லே ! இயற்கையோடு ஒன்றிச் செல்லும் இந்தத் தொடரினில் வன்மேற்கின் செவ்விந்திய மக்களை பரிவோடு பார்த்திடும் பாணியை ரசித்திடலாம் ! 56 வயதிலேயே புற்று நோய்க்குப் பலியாகிப் போன இந்தக் பெண் எழுத்தாளர் - ஆண்களே கோலோச்சி வரும் காமிக்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு வித்தியாசமான அடையாளத்தை ஜானதன் கார்ட்லேண்ட் தொடரின் மார்க்கமாய் விட்டுச் சென்றுள்ளார் ! மொத்தமே 10 ஆல்பங்கள் கொண்ட இந்த series, இன்றைக்கும் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினில் பேசப்படும் விஷயமாய் இருப்பது லாரன்ஸ் ஹார்லேயின் கற்பனைத் திறனுக்கொரு சான்று ! இதோ தமிழ் பேசவிருக்கும் ஜானதனின் முதல் ஆல்பத்தின் முதல் பார்வை - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில் ! And இங்கொரு நினைவூட்டல் folks : இது compact size-ல் வரவுள்ள இதழ் ! So கூரியரைத் திறக்கும் நொடியில் no shocks or அர்ச்சனைஸ் ப்ளீஸ் !
ஒவ்வொரு பக்கத்திலும் பேனல்களின் எண்ணிக்கை குறைச்சலே & சித்திரங்களும் bold ஆக இருப்பதால் இவற்றை compact சைசில் ரசிப்பதில் சிரமமிராது என்ற நம்பிக்கை உள்ளது எனக்கு ! பாருங்களேன் உட்பக்க preview ஒன்றினை !!
And here are the creators :
ஏப்ரலை ஜாலியாய் எதிர்நோக்க "லயன் # 350" ஒரு காரணமெனில் - அந்த இதழினில் உங்களது அடையாளமாய் ஏதேனும் ஒரு சிறு விஷயமாவது இருத்தல் அவசியமன்றோ ? So இதுவரைக்குமான இந்த 349 இதழ்களுள் உங்களது TOP 3 இதழ்களை பட்டியலிட நேரம் எடுத்துக் கொள்ள முடியுமா guys ? ஆரம்ப நாட்களது ஸ்பைடராக இருந்தாலும் சரி ; சமீபத்தைய சமாச்சாரங்களாக இருந்தாலும் சரி, உங்களது இன்றைய கண்ணோட்டத்தில் லயனின் TOP மூன்று இதழ்களாக எவற்றைப் பார்த்திடுவீர்களென்று மட்டும் குறிப்பிட்டு எழுத நேரம் உள்ளோர்க்கு எனது முன்கூட்டிய நன்றிகள் - நேரமும், பொறுமையும் இலாதோர் சிரமம் மேற்கொண்டிட வேணாமே என்ற வேண்டுகோளுடன் !
ஏப்ரலில் reason to celebrate # 2 : ஜம்போ காமிக்சின் சீசன் # 2-ன் துவக்கமே என்பேன் !! Action Special மிதம் ; ஜெரெமியா 50 - 50 என்பதைத் தாண்டி, பாக்கி 4 இதழ்களுமே hits என்ற பின்னே, சீசன் 2 மீது எனக்கே ஒருவித லயிப்பு எழத்துவங்கியது !! இயன்றால் 6/6 வாங்கிட வேண்டுமென்ற ஆசை ஆட்டிப்படைக்க - இயன்ற மட்டிற்கு ரகளையான கதைகளாய்த் தேர்வு செய்திட முயற்சித்துள்ளேன் ! இளம் டெக்ஸ் ; Lone Ranger & ஜேம்ஸ் பாண்ட் 007 சொல்லி வைத்து அடிக்கும் கில்லிகள் என்பதால் அவர்கள் மூவருமே முழுசாய் புள்ளிகளை ஈட்டி விடுவார்களென்ற நம்பிக்கை உள்ளது ! எஞ்சிருக்கும் 3 ஸ்லாட்களில் ரகத்துக்கொரு கதையாய் புகுத்த முயற்சித்ததின் பலனாய் "கால வேட்டையர்" இதோ இந்த ஏப்ரலைத் தெறிக்கச் செய்யத் தயாராகி வருகிறார்கள் !! இந்த இதழைப் பொறுத்தவரை third time lucky என்பேன் !! ஏனெனில் இதை நாம் வெளியிட எண்ணியிருந்தது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாய் ! In fact விளம்பரமும் செய்திருந்தோம் என்று ஞாபகம் ! ஆனால் குஞ்சு பொரிக்கும் முன்னமே ரோஸ்டுக்கு மசால் தடவத் தயாராவது எத்தனை பெரிய மடமை என்பது அன்றைக்கே புரிய நேர்ந்தது - படைப்பாளிகள் கோரிய ராயல்டி தொகையினைப் புரட்ட இயலாது தட்டுத் தடுமாறிய போது ! கழுத்தின் மீது கத்தியாய், வேறு செலவினங்கள் அலையலையாய் போட்டுத் தாக்கிய அன்றைய சூழலில், "இதோ அடுத்த வாரம் ; இன்னும் பத்தே நாட்களில்.." என்று பணமே அனுப்பாது ஜவ்வு மிட்டாயாய் இழுக்க - அவர்களோ நமது கோரிக்கையையே மறந்தே போய் விட்டார்கள் ! நானுமே மௌனமாய் இருந்துவிட்டேன் அன்றைக்கு ! 2014-ல் நமது மறுவருகை சூடு பிடித்து ஓடத்துவங்கிய தருணத்தில் இந்த ஆல்பம் மீண்டும் நினைவுக்கு வந்திட, மறுக்கா தொடர்பு கொண்டேன் - உரிமைகளுக்கோசரம் !! "அட..போடா டேய்...உன்னோட ஓப்பனிங் நல்லா தானிருக்கும் ; ஆனால் பினிஷிங் தேறாது !" என்று படைப்பாளிகள் நினைத்தார்களோ - என்னவோ பதிலே போடவில்லை ! எனக்கும் லஜ்ஜை பிடுங்கித் தின்ன, மீண்டும் நினைவூட்ட திராணியின்றி மௌனியாகிவிட்டேன் ! ஆனால் ஜெரெமியா & ஹெர்லாக் ஷோம்ஸ் கதைகளின் பொருட்டு அவர்கள் கதவுகளை மறுபடியும் தட்டும் அவசியம் எழுந்த போது - ராயல்டியினில் முன்னாட்களது மொக்கை போடும் படலம் இராது என்று சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணாத குறையாய் கூத்தாடிட - ஒரு மாதிரியாய் அவர்களும் ஓ.கே. சொன்னார்கள் ! ஜெரெமியா - மொத்தம் 6 கதைகள் ; ஹெர்லாக் ஷோம்ஸ் 5 கதைகள் என ஏக் தம்மில் ஆர்டர் போட்ட போது உள்ளுக்குள் நிறையவே உதறல் தான் ! மிகக் குறுகிய காலத்துக்குள் மொத்தமாய் தொகையினை அனுப்ப வேண்டுமென்ற நிர்பந்தம் இருந்த போது தான் அந்த வருடத்து ஈரோட்டுப் புத்தக விழா பிரமாதமாய்க் கைகொடுத்தது !! அந்த விற்பனைத் தொகைகளை அலுங்காது, குலுங்காது ராயல்டிக்கென சேதாரமின்றி அனுப்பிட முடிந்த போது ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு உள்ளுக்குள் ! 'சரி...இவன் முன்போல் சட்டி நிறைய அல்வா கிண்டவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டதைத் தொடர்ந்து - "காலவேட்டையர் புளீஸ் !" என்று துண்டை விரிக்கத் தயாரானேன், வெகு சமீபமாய் ! ஒற்றைக் கதையோடு நில்லாது, ஹெர்மனின் வேறு சில one-shots களையுமே சேர்த்து வாங்கிடவும் ஏற்பாடு செய்துவிட - நீண்ட நெடுநாளாய் விளம்பரமாய் மாத்திரமே ரவுண்டடித்துக் கொண்டிருந்த இந்த ஆக்ஷன் த்ரில்லர் இதோ ஜம்போவின் இரண்டாவது சீசனுக்கு சுவாகதம் சொல்லத் தயாராகி வருகிறது ! And இதோ - அதன் அட்டைப்படத்துக்கென shortlist செய்துவைத்துள்ள சில டிசைன்களின் previews ! Of course இன்னமும் நிறைய மாற்றங்களுக்கு இங்கே வாய்ப்புண்டு தான் - so கூரியர் கவரில் இருக்கப்போகும் இதழின் ராப்பர் மாறுபாட்டிடவும் கூடும் !
ஜம்போவின் சீசன் 2-ல் ஒரு சுவாரஸ்யச் செய்தியுமுள்ளது !! பழம் தின்று கோட்டை போட்டு நிற்கும் சிங்கத்தையும் ; முத்துவையும் - ஒற்றை வயதே ஆகிடும் ஆனை தூக்கிச் சாப்பிட்டு விட்டது - சந்தாக்களின் எண்ணிக்கையினில் !! Yes folks - நடப்பாண்டினில் லயனுக்கும், முத்துவுக்கும் உள்ள சந்தாதாரர்களை விட, Season 2 ஜம்போ காமிக்ஸுக்கு enrol செய்துள்ள நண்பர்கள் அதிகம் ! எனக்கே இதன் பின்னுள்ள லாஜிக் புரியவில்லை தான் ; ஆனால் வாழ்க்கையில் நமக்குப் புரியாமலே போய்விடும் எக்கச்சக்க விஷயங்களின் பட்டியலோடு இதுவும் இணைந்துவிட்டுப் போகட்டுமென்றிருக்கிறேன் !! எது எப்படியோ - ஜம்போ சீசன் 2 is ready to rock & roll !! Join in the fun all !!
அப்புறம் "ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள்" பற்றிய இறுதி முடிவெடுக்கும் நேரத்தை நெருங்கி நிற்கிறோம் ! ஏப்ரலில் சகல விபரங்களும் உங்கள் வசமிருக்கும் for sure !!
அப்புறம் கொஞ்சமாய் updates - நமது ஆதர்ஷ நாயகர் பற்றி :
குல்லாக்காரர் மோரிஸ்கோ தலைகாட்டினால் ஏதேனும் வில்லங்க வில்லன் தோன்றாது போவானா - என்ன ? இம்முறை ஒரு அமானுஷ்ய வில்லி !! டெக்சின் இதழ் # 701-ல் !!
இது அடுத்த வாரம் ஹார்டகவரில், வண்ணத்தில் வரவுள்ள 256 பக்க போக்கிரி TEX அதிரடியின் preview !! Ufffffff !!!
And போக்கிரி டெக்ஸ் தான் தற்போதைக்கு இத்தாலியைக் கலக்கி வரும் ஹீரோ என்பதை நிரூபிக்க - இதோவொரு 64 பக்க ஆல்பம் !!
பற்றாக்குறைக்கு ஏப்ரலில் காத்துள்ளதோ ஒரு MAXI TEX !!
படைப்புலகின் இந்த அசுரர்களை எண்ணி பிரமிக்காதிருக்க முடியவில்லை !! ஒவ்வொரு மாதமும் அவர்கள் உருவாக்கும் பக்கங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடுமெனும் போது, அவர்களது பின்னணி டீமின் பலத்தை கற்பனையில் கூட உருவாக்கப்படுத்திட இயலவில்லை !! Breathtaking !!!
மீண்டும் சந்திப்போம் guys ; பெருமூச்சோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் !! See you around !! Have a fun Sunday !!
இந்த மீசைக்காரர் உருவானது 1974-ல் ! குதிரையில் ஏறி லொங்கு லொங்கென்று பாலைவனமும், பள்ளத்தாக்குமாய்ச் சுற்றித் திரியும் பரிச்சயமான கௌபாய் அல்ல இவர் ! மாறாக - காட்டினில் பொறி வைத்து விலங்குகளை வேட்டையாடும் trapper ! வெள்ளைக்காரர்கள் எப்போதுமே நல்லவர்கள் ; "வோ..வோ.." என்றபடிக்கே வலம் வந்த கையோடு காக்கை, குருவி போல சுடப்பட்டு வீழ்ந்திடும் செவ்விந்தியரெல்லாம் மோசமானவர்கள் என்ற ஒருவித காமிக்ஸ் template-க்கு ஜானதனை ஒரு விதிவிலக்காகவே உருவாக்கினார் கதாசிரியை லாரன்ஸ் ஹார்லே ! இயற்கையோடு ஒன்றிச் செல்லும் இந்தத் தொடரினில் வன்மேற்கின் செவ்விந்திய மக்களை பரிவோடு பார்த்திடும் பாணியை ரசித்திடலாம் ! 56 வயதிலேயே புற்று நோய்க்குப் பலியாகிப் போன இந்தக் பெண் எழுத்தாளர் - ஆண்களே கோலோச்சி வரும் காமிக்ஸ் பிரபஞ்சத்தில் ஒரு வித்தியாசமான அடையாளத்தை ஜானதன் கார்ட்லேண்ட் தொடரின் மார்க்கமாய் விட்டுச் சென்றுள்ளார் ! மொத்தமே 10 ஆல்பங்கள் கொண்ட இந்த series, இன்றைக்கும் பிரான்க்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினில் பேசப்படும் விஷயமாய் இருப்பது லாரன்ஸ் ஹார்லேயின் கற்பனைத் திறனுக்கொரு சான்று ! இதோ தமிழ் பேசவிருக்கும் ஜானதனின் முதல் ஆல்பத்தின் முதல் பார்வை - நமது டிசைனர் பொன்னனின் கைவண்ணத்தில் ! And இங்கொரு நினைவூட்டல் folks : இது compact size-ல் வரவுள்ள இதழ் ! So கூரியரைத் திறக்கும் நொடியில் no shocks or அர்ச்சனைஸ் ப்ளீஸ் !
ஒவ்வொரு பக்கத்திலும் பேனல்களின் எண்ணிக்கை குறைச்சலே & சித்திரங்களும் bold ஆக இருப்பதால் இவற்றை compact சைசில் ரசிப்பதில் சிரமமிராது என்ற நம்பிக்கை உள்ளது எனக்கு ! பாருங்களேன் உட்பக்க preview ஒன்றினை !!
And here are the creators :
கதாசிரியை |
Artist Michel Blanc-Dumont |
ஏப்ரலில் reason to celebrate # 2 : ஜம்போ காமிக்சின் சீசன் # 2-ன் துவக்கமே என்பேன் !! Action Special மிதம் ; ஜெரெமியா 50 - 50 என்பதைத் தாண்டி, பாக்கி 4 இதழ்களுமே hits என்ற பின்னே, சீசன் 2 மீது எனக்கே ஒருவித லயிப்பு எழத்துவங்கியது !! இயன்றால் 6/6 வாங்கிட வேண்டுமென்ற ஆசை ஆட்டிப்படைக்க - இயன்ற மட்டிற்கு ரகளையான கதைகளாய்த் தேர்வு செய்திட முயற்சித்துள்ளேன் ! இளம் டெக்ஸ் ; Lone Ranger & ஜேம்ஸ் பாண்ட் 007 சொல்லி வைத்து அடிக்கும் கில்லிகள் என்பதால் அவர்கள் மூவருமே முழுசாய் புள்ளிகளை ஈட்டி விடுவார்களென்ற நம்பிக்கை உள்ளது ! எஞ்சிருக்கும் 3 ஸ்லாட்களில் ரகத்துக்கொரு கதையாய் புகுத்த முயற்சித்ததின் பலனாய் "கால வேட்டையர்" இதோ இந்த ஏப்ரலைத் தெறிக்கச் செய்யத் தயாராகி வருகிறார்கள் !! இந்த இதழைப் பொறுத்தவரை third time lucky என்பேன் !! ஏனெனில் இதை நாம் வெளியிட எண்ணியிருந்தது கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பாய் ! In fact விளம்பரமும் செய்திருந்தோம் என்று ஞாபகம் ! ஆனால் குஞ்சு பொரிக்கும் முன்னமே ரோஸ்டுக்கு மசால் தடவத் தயாராவது எத்தனை பெரிய மடமை என்பது அன்றைக்கே புரிய நேர்ந்தது - படைப்பாளிகள் கோரிய ராயல்டி தொகையினைப் புரட்ட இயலாது தட்டுத் தடுமாறிய போது ! கழுத்தின் மீது கத்தியாய், வேறு செலவினங்கள் அலையலையாய் போட்டுத் தாக்கிய அன்றைய சூழலில், "இதோ அடுத்த வாரம் ; இன்னும் பத்தே நாட்களில்.." என்று பணமே அனுப்பாது ஜவ்வு மிட்டாயாய் இழுக்க - அவர்களோ நமது கோரிக்கையையே மறந்தே போய் விட்டார்கள் ! நானுமே மௌனமாய் இருந்துவிட்டேன் அன்றைக்கு ! 2014-ல் நமது மறுவருகை சூடு பிடித்து ஓடத்துவங்கிய தருணத்தில் இந்த ஆல்பம் மீண்டும் நினைவுக்கு வந்திட, மறுக்கா தொடர்பு கொண்டேன் - உரிமைகளுக்கோசரம் !! "அட..போடா டேய்...உன்னோட ஓப்பனிங் நல்லா தானிருக்கும் ; ஆனால் பினிஷிங் தேறாது !" என்று படைப்பாளிகள் நினைத்தார்களோ - என்னவோ பதிலே போடவில்லை ! எனக்கும் லஜ்ஜை பிடுங்கித் தின்ன, மீண்டும் நினைவூட்ட திராணியின்றி மௌனியாகிவிட்டேன் ! ஆனால் ஜெரெமியா & ஹெர்லாக் ஷோம்ஸ் கதைகளின் பொருட்டு அவர்கள் கதவுகளை மறுபடியும் தட்டும் அவசியம் எழுந்த போது - ராயல்டியினில் முன்னாட்களது மொக்கை போடும் படலம் இராது என்று சூடத்தை அணைத்து சத்தியம் பண்ணாத குறையாய் கூத்தாடிட - ஒரு மாதிரியாய் அவர்களும் ஓ.கே. சொன்னார்கள் ! ஜெரெமியா - மொத்தம் 6 கதைகள் ; ஹெர்லாக் ஷோம்ஸ் 5 கதைகள் என ஏக் தம்மில் ஆர்டர் போட்ட போது உள்ளுக்குள் நிறையவே உதறல் தான் ! மிகக் குறுகிய காலத்துக்குள் மொத்தமாய் தொகையினை அனுப்ப வேண்டுமென்ற நிர்பந்தம் இருந்த போது தான் அந்த வருடத்து ஈரோட்டுப் புத்தக விழா பிரமாதமாய்க் கைகொடுத்தது !! அந்த விற்பனைத் தொகைகளை அலுங்காது, குலுங்காது ராயல்டிக்கென சேதாரமின்றி அனுப்பிட முடிந்த போது ஒரு பெரிய நிம்மதிப் பெருமூச்சு உள்ளுக்குள் ! 'சரி...இவன் முன்போல் சட்டி நிறைய அல்வா கிண்டவில்லை என்பதை அவர்கள் புரிந்து கொண்டதைத் தொடர்ந்து - "காலவேட்டையர் புளீஸ் !" என்று துண்டை விரிக்கத் தயாரானேன், வெகு சமீபமாய் ! ஒற்றைக் கதையோடு நில்லாது, ஹெர்மனின் வேறு சில one-shots களையுமே சேர்த்து வாங்கிடவும் ஏற்பாடு செய்துவிட - நீண்ட நெடுநாளாய் விளம்பரமாய் மாத்திரமே ரவுண்டடித்துக் கொண்டிருந்த இந்த ஆக்ஷன் த்ரில்லர் இதோ ஜம்போவின் இரண்டாவது சீசனுக்கு சுவாகதம் சொல்லத் தயாராகி வருகிறது ! And இதோ - அதன் அட்டைப்படத்துக்கென shortlist செய்துவைத்துள்ள சில டிசைன்களின் previews ! Of course இன்னமும் நிறைய மாற்றங்களுக்கு இங்கே வாய்ப்புண்டு தான் - so கூரியர் கவரில் இருக்கப்போகும் இதழின் ராப்பர் மாறுபாட்டிடவும் கூடும் !
ஜம்போவின் சீசன் 2-ல் ஒரு சுவாரஸ்யச் செய்தியுமுள்ளது !! பழம் தின்று கோட்டை போட்டு நிற்கும் சிங்கத்தையும் ; முத்துவையும் - ஒற்றை வயதே ஆகிடும் ஆனை தூக்கிச் சாப்பிட்டு விட்டது - சந்தாக்களின் எண்ணிக்கையினில் !! Yes folks - நடப்பாண்டினில் லயனுக்கும், முத்துவுக்கும் உள்ள சந்தாதாரர்களை விட, Season 2 ஜம்போ காமிக்ஸுக்கு enrol செய்துள்ள நண்பர்கள் அதிகம் ! எனக்கே இதன் பின்னுள்ள லாஜிக் புரியவில்லை தான் ; ஆனால் வாழ்க்கையில் நமக்குப் புரியாமலே போய்விடும் எக்கச்சக்க விஷயங்களின் பட்டியலோடு இதுவும் இணைந்துவிட்டுப் போகட்டுமென்றிருக்கிறேன் !! எது எப்படியோ - ஜம்போ சீசன் 2 is ready to rock & roll !! Join in the fun all !!
அப்புறம் "ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள்" பற்றிய இறுதி முடிவெடுக்கும் நேரத்தை நெருங்கி நிற்கிறோம் ! ஏப்ரலில் சகல விபரங்களும் உங்கள் வசமிருக்கும் for sure !!
அப்புறம் கொஞ்சமாய் updates - நமது ஆதர்ஷ நாயகர் பற்றி :
குல்லாக்காரர் மோரிஸ்கோ தலைகாட்டினால் ஏதேனும் வில்லங்க வில்லன் தோன்றாது போவானா - என்ன ? இம்முறை ஒரு அமானுஷ்ய வில்லி !! டெக்சின் இதழ் # 701-ல் !!
And போக்கிரி டெக்ஸ் தான் தற்போதைக்கு இத்தாலியைக் கலக்கி வரும் ஹீரோ என்பதை நிரூபிக்க - இதோவொரு 64 பக்க ஆல்பம் !!
பற்றாக்குறைக்கு ஏப்ரலில் காத்துள்ளதோ ஒரு MAXI TEX !!
படைப்புலகின் இந்த அசுரர்களை எண்ணி பிரமிக்காதிருக்க முடியவில்லை !! ஒவ்வொரு மாதமும் அவர்கள் உருவாக்கும் பக்கங்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடுமெனும் போது, அவர்களது பின்னணி டீமின் பலத்தை கற்பனையில் கூட உருவாக்கப்படுத்திட இயலவில்லை !! Breathtaking !!!
மீண்டும் சந்திப்போம் guys ; பெருமூச்சோடு இப்போதைக்கு கிளம்புகிறேன் !! See you around !! Have a fun Sunday !!
மீ the first - for the first time!
ReplyDelete( நாஞ்சொல்றது இந்த வாரம்)
3 weeks in a row. EV Engayo poitu irukinga
Delete@ kumar salem
Deleteஇதை நீங்க கின்னஸ்/லிம்கா/டொரினோ/கோலிசோடா ரெக்கார்டுக்கு நீங்க பரிந்துரை செய்தால் வேணாம்னா சொல்லப்போறேன்? ;)
Me the 2nd !
ReplyDeleteMe the 3rd !
ReplyDeleteவாழ்த்துகள் சார்!!
Deleteசீக்கிரமே முதலிடத்துக்கு முயற்சி செய்யுங்க! :)
@Vijayan sir
Deleteஇது போங்கு ஆட்டம்..
நம்பர் மட்டும் போட்டுட்டு ஒடற இடத்துக்கு நீங்களும் போட்டியா ?
@EV 😂😁 semma
Deleteமீ டூ ச்சே மீ தி 53...
Deleteவாழ்த்துகள் சார்!!
Deleteசீக்கிரமே முதலிடத்துக்கு முயற்சி செய்யுங்க!
:-)))))))
சார்ரொம்ப நாளைக்கு முன்னாடியே மி தி பஸ்ட்டு போட்டிருந்ததா நினைவு
Delete.
Jumbo comics has all the attractions to make it your mainline from next year -
ReplyDeletea) Brand New Stories
b) Well known heroes - brand
c) Well presented books
d) Limited numbers - just 6 at a time
e) Most of them either in action / cartoon adventure genre
f) Total price point - 999 - these books are better than several Tamil movies of today
What else do you need for it to be a hit sir? It is a compact series that turned out to be a super hit. Jumbo season 3 is going to be challenging for you :-) Though, overall it is a welcome news.
Well said ji. Jumbo season 2 is going to be a bigger hit than season 1. As there are 4 cowboys this time. Only 2 different stories . James Bond and kaala vettayar both of them are gonna be a sure hit. Waiting for April Lion 350, lucky Luke, kaala vettayar Adi dhool
DeleteSuperb analysis Raghavan ji 👍🏼
Delete.
ஜனாதனன் காலெட் அட்டைப்படம் அட்டகாசம்; கதாநாயகனின் கண்கள் ஆயிரம் விஷயங்களை சொல்வது போல் உள்ளது.
ReplyDeleteநமது காமிக்ஸில் இது வரை பெண் கதாசிரியர் எழுதிய கதைகள் வந்து உள்ளதா? இது தான் முதல் கதை என நினைக்கிறேன்.
ஆர்வமுடன்...
// compact சைசில் ரசிப்பதில் சிரமமிராது என்ற நம்பிக்கை உள்ளது எனக்கு ! //
Deleteவசனங்களின் font size பெரியதாக இருந்தால் no problem அண்ணாச்சி :-)
7th. First time within 10
ReplyDeleteசந்தாக்களில் ஜம்போவே முன்னணி வகிக்கிறது என்பது ஆனந்த அதிர்ச்சியாக இருக்கிறது! நம்ம ஜேம்ஸ் பாண்ட் ஒரு மிக முக்கிய காரணியாக இருக்கக்கூடும்!!
ReplyDeleteஜனாதன் கார்ட்லேண்ட்டுக்கு நல்வரவு! இயற்கையோடு இணைந்த கதைத் தொடர் என்பதால், நிச்சயம் இந்தக் கோடைகாலத்துக்கு கண்களுக்கு விருந்தாகவும், சுவாரஸ்யமாகவும் அமைந்திடும்! கதாசிரியர் ஒரு பெண் என்பது கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது! அட்டைப்படம் - முன் & பின் - இரண்டுமே அட்டகாசம்! காம்பேக்ட் சைஸில் வரப்போகிறார் என்ற செய்திதான் கொஞ்சம் மிக்ஸ்ட் ரியாக்ஸனை ஏற்படுத்துகிறது! கையில் ஏந்திடும் கணத்தில்தான் இந்த சைஸ் பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியும்! பார்ப்போம்!
'காலவேட்டையர்கள்' எதிர்பார்பை எகிறச் செய்கிறது!
டெக்ஸ் அட்டைப்படங்களையும், படைப்பாளிகளின் அபரிமிதமான படைப்பாற்றலையும் காணும்போது - ஊஃப்ப்ப்!!!
கால வேட்டையர்கள் கதையை கைப்பற்றிய கதையை நீங்கள் சொன்ன விதம் சூப்பர் :-)
ReplyDeleteஅட்டைப்படம் நெருப்பு பறக்கிறது; அந்த லேடி பறந்து பறந்து அடிப்பது போல், அவருக்கு கீழே நெருப்பு பறப்பது போல்; செமையா இருக்கு. எனவே அனல் பறக்கும் ஆக்சன் திரில்லர் என caption அட்டையில் எழுதினால் இன்னும் பொருத்தமாக இருக்கும்.
உள்ளேன் ஐயா...
ReplyDeleteகதாசிரியை போட்டோ வை கலர்ல போடாம கறுப்பு வெள்ளைல போட்ட எடிட்டர் சமூகத்தை வன்மையா கண்ணடிக்குறோம்.
ReplyDeleteவர வர தாரை பரணி மாதிரி எழுதுறீங்க:-)
Deleteஈவி மாதிரி எழுதறதா்நினைச்சுட்டு எழுதினேன். பிள்ளையார் நினைச்சு பிடிக்க முருகர் ஆன கதையா போச்சு.
Delete///பிள்ளையார் நினைச்சு பிடிக்க முருகர் ஆன கதையா போச்சு.///
Deleteஆனா, ஒரிஜினல் பழமொழியில வேற மாதிரி வருமே... :D
//ஆனா, ஒரிஜினல் பழமொழியில வேற மாதிரி வருமே... :D // EV :D
Deleteலேசா ஒரு ஜாடையில பாக்கிறச்சே தலீவர் அதுமாதிரி தெரியலாம்தான். .! அதுக்காக பொதுவெளியில அப்படி நேரிடையா சொல்லிடமுடியுமா?
Deleteதலீவருக்கு வால் இல்லை என்பதனையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?
ஆனா ஷெரீப் ..
எங்க குருநாயரை மட்டும் தோற்றத்தை வைத்து பிள்ளையார்னு நேரிடையா குறிப்பிட்டு இருக்கீங்களே ..அது நியாயமா?
வர வர தாரை பரணி மாதிரி எழுதுறீங்க..
Delete:-))))
*******
ஈவி மாதிரி எழுதறதா்நினைச்சுட்டு எழுதினேன். பிள்ளையார் நினைச்சு பிடிக்க முருகர் ஆன கதையா போச்சு.
######
ஷெரீப் பாராட்டுறாரா ஓட்றாரா ன்னு தெரியவில்லை என்பதால் நோ கமெண்ட்ஸ்..:-(
லேசா ஒரு ஜாடையில பாக்கிறச்சே தலீவர் அதுமாதிரி தெரியலாம்தான். .! அதுக்காக பொதுவெளியில அப்படி நேரிடையா சொல்லிடமுடியுமா?
Deleteதலீவருக்கு வால் இல்லை என்பதனையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாமா?
யோவ்...நீர் இப்ப என்ன பண்றீருன்னு தெரியுது..
இருக்குடி ஈரோட்ல இருக்குது...கிர்ர்ர்...
///கதாசிரியை போட்டோ வை கலர்ல போடாம கறுப்பு வெள்ளைல போட்ட எடிட்டர் சமூகத்தை வன்மையா கண்ணடிக்குறோம்///
Deleteஅப்ப புரியல..!
///வன்மையா கண்ணடிக்கிறோம்.///
இப்ப புரியுது..😂😂😂
ஜனாதனன் காலெட்: பின் அட்டைப்படத்தில் உள்ள ஜனாதனன் காலெட் முகம் மிகவும் அருமையாக அவரை நேரில் பார்ப்பது போல் உள்ளது; ஓவியர் மிகவும் நேர்த்தியாக அவரை வரைந்துள்ளார், வண்ணமும் அதற்கு பக்கபலமாக உள்ளது.
ReplyDeleteபாலைவனத்தில் ஒரு கப்பல்: வித்தியாசமான சிந்தனை பாலைவனத்துக்குள் கப்பலை எப்படி கொண்டு வரலாம் என்று; கதாசிரியருக்கு ஒரு ஜே.
ReplyDeleteவழக்கம் போல் நண்பனுக்காக எமனின் வீடு வரை சென்று நன்னாரி சர்பத் குடித்துவிட்டு திரும்பிவரும் டெக்ஸ் கதை.
மூன்று பாகங்கள் கொண்ட கதை; இதுவே நமது காமிக்ஸ் மீள்வரவுக்கு முன்னால் என்றால் ஆசிரியர் இதனை தனித்தனியாக போட்டு மூன்று மாதங்கள் நம்மை காக்க வைத்து இருப்பார்.
இந்த கதையில் ஸ்மர்ப் வசனத்தை புகுத்தியது ரசிக்கவில்லை.
நீண்ட கதை கொட்டாவி இன்னும் கொஞ்சம் விறு விறுப்பாக இருந்து இருக்கலாம். கதை எப்போது தான் முடியும் என்ற எண்ணத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
டெக்ஸ் நான்காம் இடம் இந்த மாதம்.
அப்படியே இந்த கதையில் டெக்ஸை டெக்ஸாக வரைந்து அசத்திய ஓவியருக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்.
Deleteஇந்தக் கதையின் டைட்டில் "பாலைவனத்தில் ஒரு பாய்மரக் கப்பல்"னு இருந்திருந்தா ஒரு ரைமிங்கா இருந்திருக்கும்!
Delete// வழக்கம் போல் நண்பனுக்காக எமனின் வீடு வரை சென்று நன்னாரி சர்பத் குடித்துவிட்டு திரும்பிவரும் டெக்ஸ் கதை.// Parani unga kita irundhu Idha naa ethir pakala 4th place for Tex. I too have given him the 4 th place.
Deleteநான் எட்டாவது இடம் தான் கொடுத்து இருக்கேன்.
Deleteஇந்த மாத கதைகளில் தரவரிசை
ReplyDelete1. பாண்ட் ஜேம்ஸ் பாண்ட்
2. ஷெர்லாக் ஹோம்ஸ்
3. முடிவில்லா மூடுபனி
4. டெக்ஸ்
இன்று பிறந்தநாள் காணும் நம் அன்பிற்குரிய எடிட்டர் அவர்களுக்கு காமிக்ஸ் நண்பர்கள் அனைவரின் சார்பாகவும் உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
ReplyDeleteஹேப்பி ஹேப்பி பர்த்டே எடிட்டர் சார்!
மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்.
Deleteபிறந்தநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்..!
Deleteஇனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சார்...
Deleteஹேப்பி பர்த் டே டூ..யு...
மனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்...
Deleteவாழ்த்துக்கள் சார்.
Deleteமனம் கனிந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்...
Deleteநாளைக்குதானே 🤔
Delete.
டாப் 3:
ReplyDeleteரத்தப்படலம் வண்ணத் தொகுப்பு
நெவர் பிபோர் ஸ்பெசல்
டாப் டென் ஸ்பெசல்.
மகி ஜி N.B.S. முத்து காமிக்ஸ்
Deleteதேங்க்ஸ் செந்தில்.
Deleteரத்தப்படலம் வண்ணத் தொகுப்பு
டாப் டென் ஸ்பெசல்
லயன் செஞ்சுரி ஸ்பெசல்.
கால வேட்டையர் பின் அட்டைப்படத்தில் உள்ள பெண் நமது இளவரசி மாடஸ்டி போல் தெரிகிறது.
ReplyDelete##ஜம்போ சீசன் 2 is ready to rock & roll !! Join in the fun all !!###
ReplyDeleteஇன்னைக்கு என்னோட சந்தாவ நானும் கட்டிடறேன்..
எடிட்டர் சார், மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
ReplyDeleteஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDelete30ஆவது. எடிட்டர் அவர்களுக்கு, சகல வித வளங்களும் பெற்று, வையத்துள் வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்த வயதில்லை. வணங்குகின்றேன்.
ReplyDelete��������������������������������������������
அட்வாண்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எங்களின் ஆசானே மூத்த அண்ணனே வாழையடி வாழையாக நீங்கள் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
ReplyDeleteலயன் டாப் 3
ReplyDelete1.திக்குத் தெரியாத தீவில்
2.இரத்தப்படலம் 2018
3.ஆர்ச்சிக்கோர் ஆர்ச்சி
போக்கிரி டெக்ஸ் கதைகளை சுடச்சுட அதிரடியா வெளியிடுங்கள் சார். தனித்தடம் ஆரம்பித்த போது உள்ள டெக்ஸ் கதைகள் எண்ணிக்கை இப்போது குறைவு, எனவே தயக்கம் தாமதம்வேண்டாம். :-).
ReplyDeleteகாலவேட்டையர் அட்டைப்படத்தை சென்சார்க்கு உட்படுத்தவும். Not our standard. Thanks.
Happy birthday editor sir. நீங்கள் நீண்ட நெடும் காலம் வாழ வாழ்த்துகிறோம். மேலும் பல சாதனைகள் செய்து பல மைல் கல்லை கடந்து எங்களுக்கு மேலும் பல பல புத்தகங்களை தருமாறு வேண்டுகிறேன் நன்றி. உங்களை போன்றோர் எனது வாழ்வில் ஒரு வரம். நன்றி ஐயா. எனது சிறு வயதில் இருந்து இப்போது வரை என்னுடன் பயணிக்கும் நண்பனாக நமது காமிக்ஸ் இருந்துள்ளது. இன்னும் பல பல நினைவுகள் அலை அலையாக தோன்றுகிறது.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteMe the ...அய்யோ 40ஐ தாண்டிடுச்சே..!
நாளை மார்ச் 18ல் மீண்டும் தனது 18ஆவது பிறந்தநாளை (58ஓ 68ஓ ...மனதளவில் 18தானே) கொண்டாடவிருக்கும் எடிட்டர் அவர்கள் வருடம் 18 காமிக்ஸ்களுடன் மேலும் பலநூறு 18ஆவது பிறந்தநாள்களை கொண்டாட வாழ்த்தி வணங்குகிறோம்..!
ReplyDeleteஇப்படிக்கு ..
21ஏ நிரம்பாத இளஞ்சிட்டு ..!
///நாளை மார்ச் 18ல் மீண்டும் தனது 18ஆவது பிறந்தநாளை///
Deleteநாளை எடிட்டருக்கு monday blues வர வாய்ப்பிருப்பதால் ஞாயிற்றுக்கிழமையான இன்றே மனநிறைவோட கொண்டாடட்டுமேன்னுதான்.. ஹிஹி!!
)))))...
Delete//
Deleteநாளை மார்ச் 18ல் மீண்டும் தனது 18ஆவது பிறந்தநாளை (58ஓ 68ஓ ...மனதளவில் 18தானே) கொண்டாடவிருக்கும் எடிட்டர் அவர்கள் வருடம் 18 காமிக்ஸ்களுடன் மேலும் பலநூறு 18ஆவது பிறந்தநாள்களை கொண்டாட வாழ்த்தி வணங்குகிறோம்..!
இப்படிக்கு ..
21ஏ நிரம்பாத இளஞ்சிட்டு ..!//
நீங்க இளஞ்சிட்டாண்ணே 🤔🤪
வழக்கமா பொண்ணுங்களத்தான் இளஞ்சிட்டுன்னு சொல்லுவாங்க
உங்களுக்கு வசதி எப்படி 🤷🏻♂️
.
// ///நாளை மார்ச் 18ல் மீண்டும் தனது 18ஆவது பிறந்தநாளை///
Deleteநாளை எடிட்டருக்கு monday blues வர வாய்ப்பிருப்பதால் ஞாயிற்றுக்கிழமையான இன்றே மனநிறைவோட கொண்டாடட்டுமேன்னுதான்.. ஹிஹி!! //
ஈனா விணாண்ணாவின் மைண்ட் வாய்ஸ்
எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்குது 🤷🏻♂️
.
///வழக்கமா பொண்ணுங்களத்தான் இளஞ்சிட்டுன்னு சொல்லுவாங்க ///
Deleteஅப்படியில்லை சித்தரே..
சிட்டு என்னும் பறவை வகையில் ஆண்சிட்டு பெண்சிட்டு என்ற இரண்டுமே உண்டு .(இல்லேன்னா இனம் அழிஞ்சிடுமே)
காதல் சிட்டுகள் ..இளஞ்சிட்டுகள் என ஆண்பெண் இருபாலரையுமே குறிப்பிடுவார்கள்..!
இளஞ்சிட்டு ரெண்டும் இன்னும் தூங்கலே ..என்ற பாடல் வரிகளை நீங்கள் கேட்டதில்லையா. .!
க்கும்....
Deleteவந்தாச்சி...🙏🙏🙏
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்!!!
Delete48th
ReplyDeleteடாப் 3
ReplyDeleteரத்தப் படலம் 2018 முழுத்தொகுப்பு
Never before special
2004 mega dream special
Jumbo special. 007 ஐ விட அதிகமாக ஆர்வத்தை கிளப்புவது இளம் டெக்ஸ் என்பது என் கருத்து.
ReplyDeleteஎஸ்...வழிமொழிகிறேன் ..
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்!
ReplyDeleteஇரத்தப் படலம் முழூ தொகுப்பு
ReplyDeleteமின்னும் மரனம்
தங்கக் கல்லரை
லயன் டாப் 3
ReplyDeleteலயன் 250 நாட் அவுட்
லயன் மேக்னம் ஷ்பெசல்
லயன் செஞ்சுரி ஷ்பெசல்
ஆசிரியர் புத்தகத்தை கேட்கவில்லை ..கதையை சொல்லும்
Deleteஅட....இதில் உள்ள சூட்சுமத்தை நீங்க புரிஞ்சிக்கோணும் தலீவரே..!
Deleteஇப்படி குண்டு குண்டு புத்தகங்களை குறிப்பிட்டாதான் ...ஓ..மக்களுக்கு குண்டு புத்தகங்கள்தான் பிடிக்குது போலன்னு நினைச்சி மேலும் பல குண்டுகளை வெளியிடுவாங்க ..!
என்ன நாஞ்சொல்றது..?
உம்....அதுவும் சரிதான்...
Deleteநள்ளிரவு வேட்டை, இரும்பு குதிரையில் ஒரு தங்கப்புதையல், lion magnum special
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்!!!
ReplyDeleteடெக்ஸின் விதவிதமான விதவிதமான விளம்பரங்களை பார்க்கும் பொழுது அவ்ளோ சந்தோசமா இருக்கு .அதுவும் வெளிநாட்டு விளம்பரங்களை பார்த்தே இப்படி எனில் இது நமது இதழ்களில் என்றால்....வாவ்..
ReplyDeleteகொஞ்சம் மனசு வையுங்க சார்..
எனது டாப் 3 உடனடி நினைவுகளுக்கு வந்த டாப் 3....
ReplyDeleteஒன்று : இரத்தபடலம்
இரண்டு : கார்சனின் கடந்த காலம்..
மூன்று : பாலைவனத்தில் ஒரு கப்பல்
குளிர் கால குற்றங்கள் அட்டைப்படம் பட்டையை கிளப்புது சார்..இனையத்தில் சிறிது சுமாராக தோன்றும் அட்டைப்படங்களே இதழில் பார்க்கும் பொழுது மிக சிறப்பாக தோன்றும் பொழுது இப்பொழுதே கலக்கும் இந்த அட்டைப்படம் பற்றி சொல்லவே தேவையில்லை..
ReplyDeleteபழம் தின்று கோட்டை போட்டு நிற்கும் சிங்கத்தையும் ; முத்துவையும் - ஒற்றை வயதே ஆகிடும் ஆனை தூக்கிச் சாப்பிட்டு விட்டது - சந்தாக்களின் எண்ணிக்கையினில்...
ReplyDelete#######
அந்த யானைக்கு "இளம் டெக்ஸ் " ன்னு பேரு இருக்கும் போல சார்..:-)
/// உங்களது இன்றைய கண்ணோட்டத்தில் லயனின் TOP மூன்று இதழ்களாக எவற்றைப் பார்த்திடுவீர்களென்று மட்டும் குறிப்பிட்டு எழுத நேரம் உள்ளோர்க்கு எனது முன்கூட்டிய நன்றிகள் - நேரமும், பொறுமையும் இலாதோர் சிரமம் மேற்கொண்டிட வேணாமே என்ற வேண்டுகோளுடன் !///
ReplyDeleteசார்.. இதுமாதிரி ஒன்று, இரண்டு, மூனு'ன்னு வரிசைப்படுத்தி எழுதறதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை! பேஸிகல்லி, ஐயாம் வெரி பிஸி யூ நோ? ஆனா கேப்ஷன் போட்டி ஏதாவது வச்சீங்கன்னா பத்து பதினஞ்சு கேப்சன்களை ஒரே ரவுண்டுல எழுதித் தள்ளிடுவேனாக்கும்! ஏனோ ஆண்டவன் அதுக்கு மட்டும்தான் எனக்கு நேரத்தை ஒதுக்கியிருக்கான்!
சரி சரி.. 'விக்ஸ்'ன்றதை இப்படி ரவுண்டு ரவுண்டா பலபேருக்கு நான் எழுதித்தர வேண்டியிருக்கு! சீ யூ!!! :D
எய்தவன் எங்கோ இருக்க அம்பை நோவானேன்..!!
Deleteஅதுமட்டுமின்றி ... ஏதோ அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருயிருக்கிறார் என நினைத்து அத்தோடு விட்டுலிடலாமே குருநாயரே. .!
Deleteகண்ணரய்யா 👍🏼
Deleteஇப்படியே எல்லாரையும் கிண்டலடிச்சா, என்னை போல நடுநிலையாளர்கள், இங்க எப்படி எங்க கருத்த பதிவு செய்வது..???
Delete///இப்படியே எல்லாரையும் கிண்டலடிச்சா, என்னை போல நடுநிலையாளர்கள், இங்க எப்படி எங்க கருத்த பதிவு செய்வது..???///
Deleteஉண்மையான நடுநிலைக்காரவுஹளை நான் நெம்ப மதிக்கிறேன் கரூர்கார்! ஆனா டீஸன்ட்டான ஆளுங்கன்னு நாம நினைச்சுட்டிருந்தவங்கள்ல சிலர்பேர் திடீர்னு ஒருநாள் பெருசா எந்தவொரு காரணமும் இல்லாமயே தரக்குறைவான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தும்போதுதான் கொஞ்சம் அதிர்ச்சி ஆகிடுது! அதுவே பிற்பாடு ஒரு கடுப்பாவும் மாறிடுது!
எடிட்டர் தனிப்பட்ட முறையில் யாரோட பேரையும் குறிப்பிட்டு "கருத்துப் போடுங்க சார்.. உங்க வேலைவெட்டியையெல்லாம் விட்டுட்டு வந்து கருத்துப் போடுங்க சார்.. நீங்க கருத்துப் போட்டாத்தான் நான் காமிக்ஸே போடுவேன்"னு கைய பிடிச்சு இழுத்தாரா? பொதுவா எல்லோரிடமும் கேட்கிறார் - இஷ்டமிருந்தா/நேரமிருந்தா இங்கே வந்து கருத்தைப் பதியலாம் - இல்லேன்னா அவங்கவங்க வேலையைப் பார்க்கலாமே? எதுக்கு 'போய்யா வாய்யா'னு எழுதற அளவுக்குப் போகணும்? இப்படி எழுதறது தன்னைத்தானே தாழ்த்திக்கறதுக்குச் சமம் என்ற அடிப்படை உண்மை கூடவா புரியலை - சமூகத்தில் சற்றே உயர்வாக மதிக்கப்படும் இந்த மெத்தப் படித்த அறிவாளிகளுக்கு?!!
வீட்டிலே வாங்கிக்கட்டிக்கறவன்தான் வெளியிலே தன் எரிச்சலைக் காட்டறான்! சமூகத்தில் தலைகாட்ட முடியாதவன்தான் சமூக வலைத்தளங்களில் சகட்டுமேனிக்கு எழுதித்தள்றான்! காமிக்ஸ் மாதிரி மனசை இலேசாக்கிடும் ஒரு தளத்தில் கடுமையான வார்த்தைகளைக் கொட்டவேண்டிய அவசியமென்ன வந்தது?
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி...
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி' கதையாகிவிடக்கூடாது என்பதே நம் ஆதங்கம்!
இதை சம்மந்தப்பட்டவர்களும், அவர்களைப் பின்புலத்திலிருந்து தூண்டிவிடுபவர்களும் கொஞ்சமாவது புரிந்துகொண்டால் சரி!
சிலர்பேர் திடீர்னு ஒருநாள் பெருசா எந்தவொரு காரணமும் இல்லாமயே தரக்குறைவான வார்த்தைகளை இங்கே பயன்படுத்தும்போதுதான் கொஞ்சம் அதிர்ச்சி ஆகிடுது! அதுவே பிற்பாடு ஒரு கடுப்பாவும் மாறிடுது!
Delete+1
'நந்தவனத்தில் ஓர் ஆண்டி...
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தான்டி' கதையாகிவிடக்கூடாது என்பதே நம் ஆதங்கம்!
இதை சம்மந்தப்பட்டவர்களும், அவர்களைப் பின்புலத்திலிருந்து தூண்டிவிடுபவர்களும் கொஞ்சமாவது புரிந்துகொண்டால் சரி!
+1
காமிக்ஸ் மாதிரி மனசை இலேசாக்கிடும் ஒரு தளத்தில் கடுமையான வார்த்தைகளைக் கொட்டவேண்டிய அவசியமென்ன வந்தது
Delete*******
இத சொன்னா "சால்ரா பாய்ஸ் " ன்னு முத்திரை வேற..சொல்லுங்க கரூராரே...:-(
///எடிட்டர் தனிப்பட்ட முறையில் யாரோட பேரையும் குறிப்பிட்டு "கருத்துப் போடுங்க சார்.. உங்க வேலைவெட்டியையெல்லாம் விட்டுட்டு வந்து கருத்துப் போடுங்க சார்.. நீங்க கருத்துப் போட்டாத்தான் நான் காமிக்ஸே போடுவேன்"னு கைய பிடிச்சு இழுத்தாரா? பொதுவா எல்லோரிடமும் கேட்கிறார் - இஷ்டமிருந்தா/நேரமிருந்தா இங்கே வந்து கருத்தைப் பதியலாம் - இல்லேன்னா அவங்கவங்க வேலையைப் பார்க்கலாமே? எதுக்கு 'போய்யா வாய்யா'னு எழுதற அளவுக்குப் போகணும்? இப்படி எழுதறது தன்னைத்தானே தாழ்த்திக்கறதுக்குச் சமம் என்ற அடிப்படை உண்மை கூடவா புரியலை -///
Deleteவாஸ்த்தவம்தான். .!
(Copyright வெச்சிருக்கேன்... ராயல்டியை சரியா கட்டிடோணும் ..இல்லேன்னா உங்கமேல வழக்கு போட்டுவேன் குருநாயரே ..!) :-)
இதுகூட பரவாயில்லை ..Monday bluesனா என்னன்னு ஒரு "காப்ரா கோஷ்டி" முகநூல்ல திரிச்சி விட்டாங்க பாருங்க ..அடேங்கப்பா...என்னா அறிவு ..என்னா அறிவு ..!
அந்த ஆட்டோக்காரரு எத்தினி தபா அசிங்கப்பட்டாலும் ராங் சைடுல வண்டி ஓட்றதை நிறத்துறதே கிடையாது.! அதுலயும் சிலபேரு தொத்திக்கிட்டு திரியறதைப் பாத்தா... ஹிஹிஹி...!!
Deleteஅப்புறம் .. தவறாம எல்லா நேரங்களிலும் இன்னொரு புளுகுமூட்டையை அவிழ்த்து வைப்பாங்க ....
Deleteஅதாவது ..
எடிட்டர் தன்னுடைய ஆதர்ஷ ப்ளாக் பாய்ஸின் பேச்சைக்கேட்டுத்தான் புக்ஸ் வெளியிடுவாராம்..!
அடே காப்ரா பாய்ஸ் ...
எங்க பேச்சைக் கேட்டு வெளியிடுறதா இருந்தா உங்க பொலன் விசாரானை வெளிச்சத்துக்கே வந்திருக்காதேப்பா ... அதேபோல ஸ்மர்ஃப்ஸ் வராம நின்னிருக்காதே...!
பொதுவான ப்ளாக் ,முகநூல், வாட்ஸ்அப் நண்பர்களே ...
யார் என்ன சொன்னாலும் கொஞ்சம் நீங்களும் யோசிச்சிப் பாருங்க.!
///அந்த ஆட்டோக்காரரு எத்தினி தபா அசிங்கப்பட்டாலும் ராங் சைடுல வண்டி ஓட்றதை நிறத்துறதே கிடையாது.! அதுலயும் சிலபேரு தொத்திக்கிட்டு திரியறதைப் பாத்தா... ஹிஹிஹி...!!///
Deleteஇங்கே ஆட்டோக்காரர் என்பது உவமானம் தானே தவிர தொழில் அல்ல .! அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன் என்னும் சந்தானத்தின் காமெடியை வைத்து எழுதியது !இதனையும் யாராவது திரித்துக்கூறினால் தயவுசெய்து நம்பவேண்டாம் நண்பர்களே.!
ஓ.கே. படிச்சாச்சு!!
ReplyDeleteபடுக்கைய மடிச்சாச்சு!!
இனி வேலய பார்ப்போம்!!
அப்புறம் போரதுக்கு முன்னாடி ஒரு விசயம்!!
இந்த தபா டெக்ஸ் வில்லர் தான் டாப்பு!
9.5/10
வண்ணத்தில் வந்திருந்தால் 15/10 மார்க் கொடுத்திருக்கலாம்!!!
வாவ்...மிதுனரே டெக்ஸை பாராட்டிட்டாரே்..
Deleteசெம....:-))
போன வருடம் இளம் டெக்ஸ் வாங்கவில்லை.
ReplyDeleteஇந்த வருடமும் வாங்காமல் இருக்க அனுமதி உண்டு தானே?.
மேலும் போன வருடம் வாங்காமல் போன இளம் டெக்ஸின் தொகையை கழித்து கொண்டு ஜம்போ சந்தா செலுத்தலாமா?
// இந்த ஏப்ரலில் இரு அழகான தருணங்கள் இணைந்திடவுள்ளன !! முதலாவது நமது லயனின் இதழ் # 350 !! //
ReplyDeleteஆவலுடன் வெயிட்டிங்கு சார் 😍
என்ன இந்த ஸ்பெசல் இன்னமும் கொஞ்சம் குண்டா ஹார்ட் பவுண்டோட வந்திருந்தா கலக்கலா இருந்திருக்குமோன்னு மனசுல தோன்றுவதை சொல்லாமலிருக்க முடியல சார் 🙏🏼
.
// "அகவை 35" என்றான சிங்கத்துக்கு இந்நேரம் வெளியீடு எண் 420 ஓடிக்கொண்டிருக்க வேண்டும் தான் ! கிட்டத்தட்ட 70 இதழ்கள் இன்னமும் பின்தங்கி நிற்கிறோமெனும் போது இங்கே பீற்றிக் கொள்ள முகாந்திரங்கள் அதிகமிருக்கக்கூடாது தான் ! ஆனால் ஆமையாய்த் தவழ்ந்து திரிந்த நமக்கு இந்த நம்பரே ஆண்டவனும், நீங்களும் இணைந்து சாத்தியமாக்கியுள்ள வரங்கள் எனும் போது அதனை சிலாகிக்காது போவானேன் ? //
ReplyDeleteஅதனை ஈடு கட்டும் விதத்தில் சிலபல குண்டு ஸ்பெசல்கள் போட்டு தாக்கினா
நாங்க என்ன வேண்டாமுன்னா சொல்லப்போறோம் சார் 😍
.
// இதுவரைக்குமான இந்த 349 இதழ்களுள் உங்களது TOP 3 இதழ்களை பட்டியலிட நேரம் எடுத்துக் கொள்ள முடியுமா guys ? ஆரம்ப நாட்களது ஸ்பைடராக இருந்தாலும் சரி ; சமீபத்தைய சமாச்சாரங்களாக இருந்தாலும் சரி, உங்களது இன்றைய கண்ணோட்டத்தில் லயனின் TOP மூன்று இதழ்களாக எவற்றைப் பார்த்திடுவீர்களென்று மட்டும் குறிப்பிட்டு எழுத நேரம் உள்ளோர்க்கு எனது முன்கூட்டிய நன்றிகள் - நேரமும், பொறுமையும் இலாதோர் சிரமம் மேற்கொண்டிட வேணாமே என்ற வேண்டுகோளுடன் ! //
ReplyDeleteசர்வமும் நானே 💪🏼
இரத்தப்படலம் கலர் குண்டு புக்கு 😍
மெகா ட்ரீம் ஸ்பெசல் 😍😍😍(முதல் ஸ்பெசல் முயற்சியாயிற்றே)
.
எனக்கு பிடித்த "லயன் டாப் 3" கதைகள்
ReplyDelete1 : இரத்தப்படலம்
2 : எஞ்சி நின்றவனின் கதை (Wayne Shelton)
3 : பௌன்சர்...
// ஜம்போவின் சீசன் 2-ல் ஒரு சுவாரஸ்யச் செய்தியுமுள்ளது !! பழம் தின்று கோட்டை போட்டு நிற்கும் சிங்கத்தையும் ; முத்துவையும் - ஒற்றை வயதே ஆகிடும் ஆனை தூக்கிச் சாப்பிட்டு விட்டது - சந்தாக்களின் எண்ணிக்கையினில் !! Yes folks - நடப்பாண்டினில் லயனுக்கும், முத்துவுக்கும் உள்ள சந்தாதாரர்களை விட, Season 2 ஜம்போ காமிக்ஸுக்கு enrol செய்துள்ள நண்பர்கள் அதிகம் ! //
ReplyDeleteவாவ் சூப்பரு சார்
🤔
ஜம்போ புத்தக எண்ணிக்கையை அதிகமாக்கினால் என்ன 🤷🏻♂️
.
லயன் 350 ஐ ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.புதுஹீரோ எப்படி அதகளம் செய்கிறார் என்று பார்ப்போம்.அந்த காம்பாக்ட் சைஸ் எப்படி அசத்தப் போகிறது என்றும் பார்க்க வேண்டும்.
ReplyDeleteமண்டையப் பிளக்கிற வெயிலில் 'குளிர்கால குற்றங்கள் 'னு வைக்கிறதுக்கு பதிலா, 'வெயில்கால வேட்டைகள் 'னு வச்சிருக்கலாம்.
Semma timing GP 😁
Deleteடியர் எடி,
ReplyDeleteஜானதன் அட்டைபடம் மிக அருமையாக வெளிபட்டிருக்கிறது... வழக்கமான நமது பளீர் சிவப்பு அல்ல மஞ்சள் பிண்ணனிக்கு பதிலாக மூலத்தை அப்படியே பிரதி எடுத்தற்கு பிடியுங்கள் பாராட்டை.
ஒரே நெருடல்... வழக்கமான ப்ரான்கோ-பெல்ஜிய அளவை விட, காம்பேக்ட் சைஸில் வெளிவரும் என்ற தங்களின் அறிவிப்புதான்.
350ம் இதழை வித்தியாசமாக வழங்க மட்டும் தான் இந்த முயற்சியா...? இல்லை விலையை கட்டுக்குள் வைக்க இந்த முறையை அறிமுகம்படுத்த போகிறீர்களா??
முதலாவதாகாவே இருக்க கடவட்டும், ஒரு முறைகக்காக மட்டும்.
லயனின் TOP மூன்று...
Delete340+ சொச்ச இதழ்களையும் மொத்தமாக படிக்க இதுவரை வாய்ப்பு கூடி வரவில்லை. படித்தவைகளில் இரந்து சட்டென்று ஞாபகம் வரும் மூன்று...
1. கார்ஸனின் கடந்த காலம் 1, 2
2. லயன் Centuary Special
3. இரத்தபடலம் Complete Collection
Rafiq,
DeleteThere are a couple of books in compact size this year - I guess 3 minimum - they were aimed at keeping price points in control. They were announced as such upfront ahead of subscriptions and you can find them announced as such in the 2019 subscription teaser book !
In essence, nothing new or surprising !!
I don't see a need for controlling price, by 20-40 rupees, sacrificing the standard size. It hardly matters for regular buyers, and also the price point of 150 is still high enough to invite new readers.
DeleteSo why even bother to reduce quality of art in compact size?
ஆதங்கம் புரிகிறது சார் ; ஆனால் இதனையொரு பரிசோதனை முயற்சி என்றும் சொல்லலாம் ! இதுவரையிலும் இந்த compact சைசில் வந்துள்ள அத்தனை கலர் இதழ்களும் புத்தக விழாக்களில் வேகமாய் நகர்ந்திடுகின்றன - மேஜிக் விண்ட் நீங்கலாய் ! So பெரிய பெரிய படங்களாயுள்ள ஜானதன் கார்ட்லேண்ட் ஆல்பங்களை இந்த சைசுக்குக் கொணர்வது வாசிப்பில் நெருடலைத் தராதென்று நினைத்தேன் ! Also இயன்ற இடங்களில், இயன்ற மட்டுக்கு பட்ஜெட்டை கம்மி செய்ய உதவிடுமென்ற எண்ணமும் தான் ! பிரச்சனையே சந்தா தொகையின் டோட்டலை முதலில் போட்டுக் கொண்டு அப்புறமாய் pricing செய்ய முனைவதே !!
DeleteAll said .. somehow I like this compact size thing sir .. and I am hoping it increases sales - it is also something which will enable cheaper hardbounds of Franco-Belgian - so full support from my end !
Deleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் எடிட்டர் சார்...
ReplyDeleteஹாப்பி பர்த்டே எடிட்டர் சார், எனக்கு 19th பர்த்டே, ஒரு நாள் முன்னாடி முந்திக்கிடீங்க.
ReplyDeleteடாப் 10 காமிக்ஸ் லிஸ்ட் பண்ணறதே கஷ்டம். இந்த டாப் 3 மாறிக்கிட்டே இருக்கும். இருந்தாலும் என்னுடைய டாப் 3
1. ஸ்பைடரின் பாதாள போராட்டம் - நான் ஸ்கூல் போவதற்கு முன் என் மாமா இதை காண்பித்தார், நான் ஸ்கூலுக்கு போய் எப்படா பெல் அடிப்பாங்க வீட்டுக்கு போய் இந்த புக் படிக்கணும்னு வெறியோடு படித்த புத்தகம் அதனாலே இதற்க்கு என் மனதில் எப்பொழுதும் ஒரு இடம் உண்டு.
2. கோடை மலர் 86 - இதுவும் ஒரு மறக்க முடியாத இதழ். இது தான் முதல் முறையாக 6 மல்டி ஹீரோஸ் சேர்ந்து வந்த புத்தகம்
3. திகிலூட்டும் நிமிடங்கள் - எதனை முறை இதை படித்து இருப்பேன் என்று சொல்லவே முடியாது. இதன் அட்டை படம் கூட வித்தியாசமாக ஒரு சினிமா போஸ்டர் போல் இருந்தது.
இந்த வாரம் முடித்த கதை சாத்தானின் சீடர்கள் - நேர் கோட்டில் ஆரம்பித்து, நேர் கோட்டில் முடியும் கதை. ஒரு சிறு ட்விஸ்ட் சஸ்பென்ஸ் ஊறுகாய் அளவிற்கு கூட இல்லை. ஜஸ்ட் bland .
கால வேட்டையர் இப்பொழுதாவது வருகின்றதே என்ற சந்தோஷம், ஜானதன் கார்ட்லேண்ட் அட்டைப்படம் செம மாஸ் , எதிர்பார்ப்பு எகிறுகிறது.
முன்கூட்டிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ...
Deleteமுன்கூட்டிய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ...
Delete///இது அடுத்த வாரம் ஹார்டகவரில், வண்ணத்தில் வரவுள்ள 256 பக்க போக்கிரி TEX அதிரடியின் preview !! Ufffffff !!! ///
ReplyDeleteநான் கூட லயன்லதான் வருருதுன்னு நினைச்சி அப்படியே மெர்சலாயிட்டேன்..
வாழ்த்துக்கள்,
ReplyDeleteவாத்தியாருக்கு,
வாலாட்டியின்.
வார்த்தைகளை மாற்றி போட்டு எழுதினால் கவிதை என்று எங்கள் தலைமை குரு கோக்கானந்தா சொல்லியிருக்கிறார்கள். அதனாலதான் இப்படி
அவரு பேரு கோக்கு மாக்கானந்தாவா?
Deleteஜம்போ சந்தா அதிகமாக மற்றும் ஒரு காரணம், வேண்டும் புத்தகங்களை மட்டும் வாங்கலாம் சந்தா செலுத்தி இருந்தாலும் என்பது.
ReplyDeleteNopes...மூன்றே பேரைத் தாண்டி பாக்கி அனைவரும், அனைத்தையும் வாங்குகின்றனர் சார் !
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteLion Top-3 revisited (I had forgotten LMS):
Deletea) Lion Super Special (1987)
b) Lion Magnum Special (First Hard Cover)
c) Danger Diabolik No 1 (Something about this was different back then)
பிறந்தநாள் வாழ்த்துகள் எடி..சார்...
ReplyDeleteலயன் TOP 3
ReplyDelete1. பழிவாங்கும் பாவை
முதன் முதலாக எனக்கு டெக்ஸ் அறிமுகமான இதழ் என்ற வகையில் இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
2. சாத்தான் வேட்டை
ஒரு முறை திருமங்கலத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துவிட்டு திரும்பும்போது, மதுரை மாட்டுதாவனியில் வாங்கியது. வாங்கிய வேகத்தில் அங்கேயே அமர்ந்து படித்துவிட்டு பாண்டிச்சேரி பஸ்ஸை தவறவிட்டுவிட்டேன். அதன்பின் தஞ்சாவூர் நெய்வேலி வழியாக சுற்றி மிகத்தாமதமாக வீடு வந்து சேர்ந்தேன். எனவே இது எனக்கு மறக்க முடியாத ஸ்பெஷல் இதழ். டெக்ஸ் கதைகளில் அதிகமுறை திரும்ப திரும்ப படித்ததும் சாத்தான் வேட்டைதான்.
3. லயன் சூப்பர் ஸ்பெஷல்
லயனில் இனி ஆயிரம் ஸ்பெஷல் இதழ்கள் வந்தாலும், இந்த புத்தகத்தை அப்போது கைகளில் ஏந்தும்போது மனதுக்கு கிடைத்த அந்த ஆனந்தமான தருணங்கள், அந்த பிரமிப்பு என்னை பொறுத்தவரை வேறு எந்த இதழும் தராது. இந்த புத்தகத்தை தொலைத்துவிட்டு எவ்வளவு நொந்துபோனேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். பல ஆண்டுகளுக்கு பிறகு நண்பர் கலீல் இதை எனக்கு கிப்டாக கொடுத்தபோது மறுபடியும் அன்றைய சந்தோஷம் கிடைத்தது. அந்தவகையில் இது எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்.
/* அப்போது கைகளில் ஏந்தும்போது மனதுக்கு கிடைத்த அந்த ஆனந்தமான தருணங்கள், அந்த பிரமிப்பு என்னை பொறுத்தவரை வேறு எந்த இதழும் தராது. இந்த புத்தகத்தை தொலைத்துவிட்டு எவ்வளவு நொந்துபோனேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் */
DeleteTrue for me too :-) :-(
/// புத்தகத்தை தொலைத்துவிட்டு எவ்வளவு நொந்துபோனேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் ///
Deleteகிட்டத்தட்ட பெரும்பாலானோருக்கு நேர்ந்து இருக்கிறது..
கடந்த வாரம் ஆசிரியர் கேட்ட கேள்விகளின் காரணம் என நினைப்பது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இது போன்று வெற்றி தோல்வி கதைகளை தெரிந்து கொண்டு அடுத்து வரும் மாதங்களில் அறிவித்த கதைகளில் ஏதாவது நமது ரசனைக்கு ஒத்து வராது என்றால் அவற்றிற்கு பதில் புதிய (சந்தாவில் அறிவிக்காத) கதைகளை வெளியிட்டு அனைத்து இதழ்களையும் வெற்றி இதழாக நமக்கு கொடுக்கும் எண்ணத்தில் எழுப்பப்பட்டது என நினைக்கிறேன்.
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை இது மிகவும் உபயோகமாக சர்வே.
From Steel claw coimbCoimb:
ReplyDeleteஅன்பின் ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எனக்கு பிடித்த லயன் டாப் 3
ReplyDelete1. சர்வமும் நானே... 😍
2. இரத்தப்படலம் (கலர்) & கார்சனின் கடந்த காலம்...😍😍
3. மேக்னம் ஸ்பெசல், மெகா ட்ரீம் ஸ்பெசல் & வல்லவர்கள் வீழ்வதில்லை.. 😍😍😍
புதிதாக வரும் இளம் டெக்ஸுக்கு என தனி சந்தா ஆரம்பிக்கலாமே...
ReplyDeleteபோட்டு வைப்போம்... எப்படியும் வெளில வைவாங்க..
ஆரம்பிக்கலாமே....
Deleteபோக்கிரி பயலையும் அப்படியே சேத்திக்கிலாமே...
என்ன கரூராரே நான் சொல்றது..
இளம் டெக்ஸுலதானே போக்கிரி டெக்ஸும் வருது.. 🤔
Deleteஇளம் டெக்ஸே ஒரு போக்கிரிதான்..!
Delete:-)
Deleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜயன் சார். ii
ReplyDeleteஇந்த தருணத்தில் மூன்று முக்கிய இதழ்களை கேட்கிறீர்களே.
அது நமது முதல் வருடத்திலேயே முடிந்து விட்டதே ii
முதன்முதலாக நான் காமிக்ஸ் என்று வாங்க தொடங்கி வைத்த "கத்தி முனையில் மாடஸ்டி " _ மாட ஸ்டிபிளைஸி.
அடுத்து காமிக்ஸ் - க்கு என்று இருந்த Template _ யை உடைத்து பாக்கெட் சைஸில் _ நீயூயார்க் சிட்டியையும் என்னையும் மிரள வைத்த "எத்தனுக்கு எத்தன்' - ஸ்பைடர் .
அடுத்து "தீபாவளி மலராக " இப்படியும் காமிக்ஸ்ஸ் வெளியிட முடியும் என்று பிரமாண்ட தயாரிப்பான _ ரொம்பவே பெரிய சைஸ் _ இரு வண்ணம் - மனதிற்கும் நெருக்கமான _ரோபோ ஆர்ச்சி.. ii
From Steel claw Coimbatore:
ReplyDelete1இரத்தப்படலம்
2லார்கோ
3ட்யூராங்கோ
இனணயற்ற காலம் போனாலும் போகாத எதிலும் சேர்க்க இயலாத...மூன்றுக்குள்ளாற கட்டம் கட்ட இயலாத ஈடுஇணையற்ற கார்சனின் கடந்த காலம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்.
ReplyDeleteஎன்னுடைய உயிராக நினைக்கும் முத்தான காமிக்ஸ்களை சளைக்காமல் வழங்கி என் போன்றோரை வாழவைத்துக் கொண்டிருக்கும் தாங்கள் நீண்ட ஆயுளுடன் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற என்போன்றோர் என்றும் உங்கள் பின்னே பயணிப்போம் என்று இந்த இனிய நாளில் நன்றியுடன் கூறிக்கொள்வது எனக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்க வளமுடன்.
நன்றி சார்.
ஏடிஆர் சார்...நலமா ...
Deleteஇப்பொழுது எல்லாம் தங்களை இங்கே காண முடிவதில்லையே..தொடர்ந்து வாருங்கள்...:-)
நன்றி தலீவரே.
Deleteஉங்களைப் போன்ற நல்ல உள்ளங்கள் துணையுடன் நான் நலமுடன்தான் இருப்பேன்.நீங்கள் நலம்தானே தலீவரே?
மனது நிறைந்த வாழ்த்து, திரு.ATR சார்!
Deleteஆசிரியருக்கு வாழ்த்து சொல்கையில் நம்மையறியாமல் ஒரு சிலிர்ப்பு,ஆனந்தம் உண்டாகிறது திரு.ஈ.வி.நம் குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட உணர்வு.அநேகமாக நம் எல்லோருக்கும் இந்த உணர்வு ஏற்படுமென நினைக்கிறேன்.அந்த அளவு அன்பை நம்முள் விதைத்துள்ளார் ஆசிரியர்.
Deleteபிறந்தநாள் வாழ்த்துக்கள் sirசார். இப்படி போட்டோ வா போட்டு எங்களை பெருமூச்சு விடவைக்கிறீர். Birthday ஸ்பெஷல் புக் உண்டா
ReplyDelete
ReplyDeleteஎனக்கு பிடித்த லயன் டாப் 3
1. சர்வமும் நானே...
2. இரத்தப்படலம் (கலர்)
3.NBS
மனம் கனிந்த முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துகள் எடிட்டர் சார்...
ReplyDeleteமலையளவு புதையலில் வெறும் மூன்றை மட்டும் தேர்ந்தெடுப்பது ரெம்பவே சிரமம்.
ReplyDeleteஇருந்தாலும்..,
லயன் சூப்பர் ஸ்பெஷல்
கார்சனின் கடந்த காலம்.
இரத்தப்படலம்.
கால வேட்டையர் பின் அட்டைப் படத்தில் "ஓய்வான" எழுத்தில் "ய்"க்கு மேலே புள்ளி இல்லை. சரிபார்க்கவும்.
ReplyDeleteTop 3 out of 349? Very very very very .............very difficult sir. It ll take some time
ReplyDeleteWhy not 10 out of 349 option?
ReplyDeleteOh! Now only came to know of your birthday sir. Hearty birthday wishes sir💐🎂
ReplyDeleteடெக்ஸ் வில்லரும், ஜேம்ஸ் பாண்டும் எப்போதும் ஒன்றாக முடியாது.. ஜே.பா. கதையோட்டம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. ஒரு காட்டு குதிரையை போல பயங்கர வேகம்.. மூச்சிரைக்கிறது.. பிரதான பிராது என்னவெனில் கதையின் வேகத்தில் சித்திரங்களை விட்டு விடுகிறோம்.. டெக்ஸ் கதை போல மிதமான வேகத்தில் ( டெக்சின் வாள் எப்போதும் சுத்தமாக இருக்கும், ஜே.பாண்டின் வாள் எப்போதும் ரத்த கறையுடனே இருக்கிறது)இருந்தால் நல்லது..
ReplyDeleteஇது மஞ்சள்சட்டை மாவீரருக்கான சிலாகிப்பா ? அல்லது லைட்டான leg pulling ஆ ? confusion ....!
Deleteடாப் 3..
ReplyDelete1. LMS
2.MDS
3.XIII ( B&W)/COLOR
சில நண்பர்களுக்கு, லயன் எது முத்து எது என்று பிரித்து பார்க்க முடியவில்லை :-)
ReplyDeletePrabu - திகிலூட்டும் நிமிடங்கள் - முத்து காமிக்ஸ்
ஸ்டீல் claw - லார்கோ - முத்து காமிக்ஸ்
ricky_tbm Ramesh- NBS முத்து காமிக்ஸ்
மேலே குறிப்பிடப்பட்டதில்
ReplyDeleteLMS வெளியீட்டு தருணமும் இரத்தப்படலம் வண்ணம் வெளியீட்டு தருணமும் அவற்றின் உள்ளடக்கம் என்றல்லாது லயன் –ன் நெடும்பயணத்தில் முக்கியத்துவம் பெற்றவை ....
அது என்ன என உணரவும் நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் எடிட்டரை வாழ்த்தியது போலவும் இருக்கட்டுமே என்ற எண்ணத்தில் என்றோ ஒருநாள் வாட்ஸ் அப் குழுமம் ஒன்றில் எழுதிய இக்கட்டுரை மீள்பதிவாக –இங்கு முதல்முறையாக – பதிவிடப்படுகிறது....
[நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன் என்ற தலைப்பில் சென்ற வருட ஈரோடு புத்தக திருவிழாவில் எடிட்டரை பற்றி நான் பேச உத்தேசித்து இருந்த பொருளடக்கம் சிறிது மாறுதல்களுடன் ...இவ்வருடம் நான் கலந்து கொள்ள இயலாது என்பதால் ]
Deleteநண்பர்களுக்கு வணக்கம் !
காமிக்ஸ் வானின் நட்சத்திரங்களாகிய காமிரேடுகள் நாற்காலியில் எதிரே வீற்று இருக்க மின்மினிபூச்சியாகிய யான் மேடையேறி பேசுவது என்பது நகைமுரணே.
இங்கு நடைபெறும் விழாவின் கோலாகலங்கள் பூம்புகாரில் நடைபெற்ற இந்திர விழா வர்ணனைகளை நினைவூட்டுகின்றன ..
ஈரோடு விஜய் உள்ளிட்ட வரவேற்பு குழுவினர் நெடும் தொலைவில் இருந்து வரும் நண்பர்களை புன்னகை என்னும் நறுமணம் சுமந்து காமிக்ஸ் வாசகர்கள் அல்லாத பொது மாந்தர்கள் மத்தியில் நீந்தி வரவேற்பது
அகில் உண விரித்த அம் மென் கூந்தல்
முகில்நுழை மதியத்து முரிகரும்
என்ற வரிகளை நினைவூட்டுகிறது .
நெடுநாள் பிரிவுக்கு பின் தலைவி அகில் நறுமணம் கமழும் கூந்தலுடன் மேகத்தில் நுழைந்த முழுமதி போல் நின்று தலைவனை வரவேற்கிறாளாம்.
ஆகஸ்ட் மாதம் காமிக்ஸ் ஏதுமில்லை என நோயுற்று இருக்கும் வாசகர்களின் நிலை அறிவோம் ..
இந்நிலைக்கு மருந்துதான் என்ன ?
அவள் தந்த நோய்க்கு அவளே மருந்து என்றார் வள்ளுவர் ..
’பிணிக்கு மருந்து பிறமன், அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.’
என சொன்னார் ..
ஆகஸ்ட் மாத காமிக்ஸ் நோய்க்கு மருந்தாக மகோன்னத புகழுற்ற இரத்தப்படலம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்பட போகிறது ..
அதுசரி ..காமிக்சால் ஏற்பட்ட நோய்க்கு காமிக்ஸ்தானே மருந்தாக இருக்கமுடியும்
விழா சிறப்புற நடைபெறுகிறது எனினும் அதன் நாயகனை பாராட்டவே இங்கு வந்தேன்..
Deleteமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக காமிக்ஸ் மொழிபெயர்ப்பு மற்றும் அச்சு நுணுக்கங்கள் பற்றி அறிந்த ஆசிரியரை பாராட்ட இந்த மூடமதியாளனுக்கு என்ன தகுதி உள்ளது ?
ஷெனாய் வாத்திய கருவிக்கு பதிலாக சில்வண்டின் ரீங்காரம் இசையாகுமா என்ற கேள்வி இங்கிருக்கும் பலர் மனதில் எழலாம் ..
ஞானத்தால் தொழுவர் சில ஞானியர்
ஞானத்தால் தொழுவேன் உனை நானலேன்
ஞானத்தால் தொழுவார் தொழக்கண்டு
ஞானத்தால் உனை நானும் தொழுவனே!” என்பது அப்பர் வாக்கு.
காமிக்ஸ் பற்றிய அறிவால் யாம் இங்கு ஆசிரியரை பாராட்ட வரவில்லை .
காமிக்ஸ் பற்றி அறிந்த நல்லோர் ஆசிரியரை பாராட்டுவது கண்டு அதன்மூலம் பெற்ற அறிவால் இங்கு யாம் ஆசிரியரை பாராட்ட வந்ததாக அறிக .
நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகர் என்ற தலைப்பெடுத்து ஆசிரியர் பற்றி பேச இவ்விடம் வந்தேன் ..
நான்கு கோடியா ?
கணக்கில் ஏற்பட்டு இருக்கும் இப்பிழை பேசுபவர் மூப்பினால் வந்ததா?
அல்லது கைப்பேசி கால்குலேட்டர் ஆப்பினால் வந்ததா ?
என சிலர் எண்ணக்கூடும் .
எனது கணக்கு சரிதான் என நிரூபிக்க கையோடு ஒரு பாட்டியை கூட்டி வந்திருக்கிறேன்..
பாட்டி என்றவுடன் ஆசிரியர் அச்சமுற வேண்டாம்
இவர் அடுத்தவர் பையில் கைவிடும் ஐரோப்பிய பாட்டி அல்ல
அனைவருக்கும் அறிமுகமான அவ்வைப்பாட்டி .
சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;
கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்.
என்பதே அப்பாடல்.
இப்பாடலில் ஒவ்வொரு ஈரடியும் ஒரு கோடி பாடலுக்கான உண்மையை உணர்த்துவதாக புரிந்துகொள்வது சுலபம் ..
Deleteஇதற்கும் ஆசிரியர்க்கும் என்ன தொடர்பு ?
தமிழக வரலாற்றில் களப்பிரர் ஆண்ட காலத்தை ;;இருண்ட காலம் ‘’ என அழைப்பர் .
லயன்முத்துவின் வரலாற்றிலும் அப்படிப்பட்ட இருண்ட காலம் வரத்தான் செய்தது .
களப்பிரர் ஆண்ட சமயம் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை .
அதே போல் 2010- 2012 வரை தமிழ் காமிக்ஸ் உலகில் என்ன நடக்கிறது என்பதை பெரும்பாலோர் அறிந்திலர்...
2012 கம்பேக் –க்கு பிறகு இதழ்கள் சீராக வெளிவரத் துவங்கின ..
கிரகணம் பீடித்த நிலையில் விடுபட்ட இருந்து கதிரவனாய் லயன்முத்து பிரகாசிக்க துவங்கியது..
ஆயினும் பலருக்கு சந்தேகம் இருந்து கொண்டுதான் இருந்தது ...
இவரால் இப்படி தொடர முடியுமா ?
புதிய தலைமுறை சவால்களை ஆசிரியரால் சந்திக்க இயலுமா /
தமிழ் காமிக்ஸ் வானை சந்தேக மேகங்கள் சூழ்ந்து இருந்தன..
இச்சூழ்நிலையில்தான் நெவர் பிபோர் ஸ்பெஷல்- ஐ ஆசிரியர் வெளியிட்டார் .
வாசகர்கள் மத்தியில் அளவற்ற குதூகலத்தையும் ஆசிரியர் மாட்டு பெரும் நம்பிக்கையையும் தோற்றுவித்த NBS அக்காலகட்டத்தில் ஒரு கோடி காமிக்ஸ் வெளியிட்டதற்கு சமமாகும்...
நிலைக்குமா இவ்வாழ்வு என்ற நெஞ்சின் கலக்கத்தை
குலைத்திட்ட என் பிஎஸ் கோடி பெறும்.
சந்தேக மேகங்களை சண்ட மாருதமாய் வந்து NBS விரட்டியடித்தது என்றால் அது மிகையான கூற்று அல்ல ...
ஒரு நிலையை அடைந்தபின் எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வதும் அடைந்த நிலையை தக்க வைத்து கொள்வதும் எளிய விஷயமல்ல..
கடின உழைப்பினால் எதிர்பார்ப்புகளுக்கு ஈடு கொடுத்தார் ஆசிரியர் ..
லயன் மேக்னம் – வெளியிட்டார் .
இச்சையுடன் எதிர்பார்த்தோம்;இருகரத்தில் ஏந்தி களித்தோம்
லஜ்ஜையின்றி சொல்வேன் லயன் மேக்னம் கோடி பெறும்...
பின்னர் நடைபெற்றதோ பெருமுயற்சி ....
தமிழ் காமிக்ஸ் வளர்ச்சியின் பாயிரம் என ஆயிரம் ரூபாயில் வெளிவந்தது மின்னும் மரணம் .
பதிப்பக உலகின் ஜாம்பவான்கள் கண்களின் புருவங்களை உயர்த்தியது ..
தின்னுமது இதயத்தை ; திரும்பி பார் பார்க்கும்
மின்னும் மரணம் மற்றுமோர் கோடி பெறும்..
தொடர்வதோ சொற்களில் அடக்க இயலா விந்தை......
உள்அகம் நறுந்தாது உறைப்ப மீதுஅழிந்து
கள்உக நடுங்கும் கழுநீர் போல ....
தன்னுள்ளே உள்ள தாதுக்கள் ஊறி இருத்தலால் மேலேயிருக்கும் கட்டு அவிழ்ந்து தேன் சொரியும் கழுநீர் பூவை போல ஆகிவிட்டார் ஆசிரியர் ...
ஆசிரியர் உள்ளே எப்போதும் ஊறி கொண்டே இருக்கும் சித்திரக்கதைகள் மீதான பிரேமம் பல இக்கட்டுகளையும் அவிழ்த்து காமிக்ஸ் என்னும் தேன்தனை சொரிய செய்துகொண்டுதான் இருக்கிறது .
இதற்கு சமீபத்திய உதாரணம் இதோ வெளிவரப்போகும் ரத்தப்படலம் வண்ணப்பதிப்பு.
சத்தம் போட்டு சொல்வேன் சந்தோஷ பறையொலிக்க
இரத்தப்படலம் சத்தியமாய் கோடி பெறும் ....
ஆக நான்கு கோடி காமிக்ஸ் வெளியிட்ட நாயகன் என்ற எமது தலைப்பு உங்களுக்கு விளங்கியிருக்கும் ..
Deleteஆசிரியர் வெளியிட்ட மற்றவையெல்லாம் ? என்ற சிந்தனை தோன்ற வேண்டுவதில்லை ...
நவரத்ன புதையலில் உயர்வென்ன / தாழ்வென்ன ?
தகுந்த காலத்தே செய்யப்பட்டவை என்பதாலும் சில கூடுதல் சிறப்பம்சங்களாலும் இவை நான்கும் சுட்டி காட்டப்பட்டன ..
தை மாதம் நதி நீராடும் பாவை நோன்பு பாடல் ஒன்றை சொல்லி உரையை நிறைவு செய்கிறேன்
கழுத்து அமை கை வாங்காக் காதலர்ப் புல்ல,
விழுத் தகை பெறுக!” என வேண்டுதும்’ ..
...........................................................................
............................................................................
மழ ஈன்று மல்லற் கேள் மன்னுக!”
எம் கழுத்தைச் சுற்றித் தழுவிய எம் காதலர் (கணவர்) எம்மைப் பிரியாது இருக்க வேண்டும்.
...............................................................................
இந்த இளம் பருவத்தினராகவே இன்று இங்கு தைந் நீராடுவது போல என்றும் நிலைபெற வேண்டும்.”
ஆசிரியருக்கும் வாசகர்களுக்கும் உள்ள இப்பந்தம் என்றும் பிரியாது இருக்கவேண்டும் .
மனதளவில் இளமையுள்ளவராய் என்றும் ஆசிரியர் வெளியிடும் காமிக்ஸ் வாசித்து மகிழ்ந்து
இதுபோல் எண்ணற்ற புத்தக வாசக சங்கம விழாக்கள் என்றென்றும் நடைபெற வேண்டும் என
வேண்டி விடைபெறுகிறேன்
செனா அனா...👌👌👌👏👏👏👏👏👏
Deleteசெனா அனா...👌👌👌👏👏👏👏👏👏
Deleteசெனா அனா...👌👌👌👏👏👏👏👏👏
Deleteசெனா அனா...அருமை...அருமை..
Deleteஇந்த மாதிரி கணக்குப் பாத்தா நாப்பது கோடி தேருமே. இந்த ஆகஸ்ட்ல வந்து இதை நீங்களே படிக்கறீங்கன்னா நான் இப்பவே டிக்கெட் போட்டுடறேன்.
சார்...இது அவையடக்கமல்ல ; சத்தியமாய் இத்தனை சிலாகிப்பிற்கு தகுதி கொண்டவனாய் என்னை நான் பார்த்திடவில்லை !
Deleteமனதுக்குப் பிடித்ததைச் செய்யத் துவங்கினேன் இளமையில்....! ஆண்டவனும், நீங்களும் மடியில் இடம் கொடுத்தீர்கள் வாஞ்சையோடு ! நடுப்பிராயத்தில் ஏதேதோ தேடல்களிலும், ஓட்டங்களிலும் தொலைத்திருந்த (காமிக்ஸ்) காதலை, முதுமையின் முதல் படியில் கால் வைக்கும் வேளையில் மீட்டெடுத்தேன் தற்செயலாய் ! அதனையே ஒரு ஆயுட்பணியாய் இன்றளவிற்கும் முன்னெடுத்துச் செல்ல உதவிடுவது இத்தகைய கலப்படமிலா அன்பே ! நம் வீட்டுப் பிள்ளை இடுப்பில் நிற்காத டிராயரோடு சுற்றி வந்தாலும், அதனை உச்சி மோர்ந்திடும் பாங்கையே அந்த அன்பிலும், இந்த வரிகளிலும் பார்க்கிறேன் சார் ! நாலு கோடி நன்றிகள் !!
அதென்ன கணக்கு என்கிறீர்களா ?
பாக்கெட் சைஸ் ; பெரிய சைஸ் ; மினி சைஸ் ; மேக்சி சைஸ் ; ரெண்டு ரூபாய் ; நாலு ரூபாய் ; இருபது ரூபாய் என்று புதுசாய்க் கோலம் போட்டுப் பழகும் கத்துக்குட்டி போல அன்றைக்கு அடித்த சகல கூத்துக்களையும் ஏற்றுக் கொண்டது மாத்திரமன்றி, அவற்றை ரசிக்கவும் செய்த போது ஒரு கோடி நன்றிகளை சொல்லும் கடமை எனக்கு எழுந்தது !
பத்திரிகை இலக்கணமென்றால் வீசம்படி என்னவென்றே தெரியாத ஒரு 17 வயது முட்டைக்கண்ணன் தான் எடிட்டர் என்றான பின்னேயும், துளி கூட ஏளனம் காட்டாது - பணியினில் நான் வளர்ந்திட அவகாசம் தந்த அந்த அன்புக்கொரு கோடி !!
மொத்தமாய்க் காணாது போய் - "இவன் பூட்ட கேசு டோய் !!" என்று ஊரே தீர்மானித்த நொடியிலும், விடாப்பிடியாய் என் மீது நம்பிக்கை வைத்து - ஓராண்டின் சந்தாவை என் கையில் முழுசாய்த் தைரியமாய் திணித்த 2012-ன் அந்த நொடிகளுக்கு மூன்றாவது கோடி !!
ஏதேதோ காரணங்களின் பொருட்டு ; ஏதேதோ விருப்பு-வெறுப்புகளின் பொருட்டு நடுத்தெருவில் நிறுத்தப்பட்டு ஒரு நூறு தடவைகள் நாயடி வாங்க நேரிட்ட வேளைகளிலும், விலகிப் போயிடாது தோள் கொடுத்த அந்தப் பெருந்தன்மைகளுக்கு கோடி # 4 !!
கோடிகளில் ஓடிக்கொண்டிருக்கும் நமது டீலிங், தேர்தல் நேரத்துப் பறக்கும் படைகளுக்குத் தெரிய நேர்ந்தால் வண்டியைப் போட்டுக் கொண்டு கிளம்பி வந்துவிடுவார்கள் என்பதால் அடக்கி வாசிக்கிறேன் !! Thanks from the bottom of my heart !!!
எடிட்டர் சார்...👌👌👌👏👏👏👏👏👏
Deleteஎடிட்டர் சார்...👌👌👌👏👏👏👏👏👏
Deleteசெனா அனா...👌👌👌👏👏👏👏👏👏
பொருளாளர் மற்றும் எடிட்டர்...
Deleteஇருவருக்குமே என்ன சொல்றதுன்னு சத்தியமாய் தெரில..
மனம் நெகிழ்ந்த வாழ்த்துகள்...
எடிட்டர் சார்...👌👌👌👏👏👏👏👏👏
Deleteசெனா அனா மற்றும் எடிட்டர் சார்...
Deleteஇருவருக்குமே
மனம் நெகிழ்ந்த வாழ்த்துகள்...
இந்த வருட ஆகஸ்டு மீட்டுக்கும் தயார் பண்ணிடுங்க...
சொற்பொழிவுக்காக காத்துகிட்டு இருப்போம்..
சண்டே சும்மா இந்த பக்கம் வந்து லந்து பண்ணலாமேன்னு வந்தா ஒரே எமோஷனல் ஏகாம்பரமாய் ஓடிக்கிட்டிருக்கு .. ஹ்ம்ம் .. ;-) எனினும் 4 கோடி சமாச்சாரம் ரெண்டு சைடுலயும் சூப்பருங்கோ .. :-)
Deleteடாப் 3
ReplyDelete1. தலைவாங்கி குரங்கு - அப்ப வந்த அந்த புது சைஸ், அழகான படங்கள் மற்றும் தரமான கதை
2. கார்சனின் கடந்த காலம்
3. லயன் சூப்பர் ஸ்பெஷல் . பத்து ரூபாய்க்கு இப்படி ஒரு புக்கா என்று பிரமிக்க வைத்த இதழ்
எனது தேர்வுக்கு வெகு அருகிலான தேர்வுகள் சார் !
Deleteவிஜயன் சார் ii
Deleteதாங்கள் Top 3 என்று குறிப்பிட்டதால் (மாட ஸ்டி , ஸ்பைடர், ஆர்ச்சிசி முதல் இதழ்கள் ) விடுபட்ட ஒரு இதழ் டெக்ஸ் வில்லரின் "தலைவாங்கி குரங்கு" இதழ் தான். அந்த சைஸும் துப்பறியும் கதைகளாக காரிகனையும் , ரிப் கிர் பியையும் படித்துக் கொண்டிருந்த நிலையில் ஊரையே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி டெக்ஸ் வில்லர் துப்பறிந்தவிதமும் 349 இதழ்களில் மறக்க முடியாத இதழ் தான்.
எனது ஆசை தற்போதைய தரத்தில் ஒரு இதழாவது இந்த சைஸில் வெளியிட வேண்டும் என்பதே.. (தற்போதைய சைஸில் நீளத்தில் வேஸ்டாக கூடுதலா க வைத்து அகலத்தில் சுருக்கி படங்களை (Frameகளை)Compressing செய்து முகங்களை சப்பையாக் கியது போல் உள்ளது. எனக்கென்னவோ டெக்ஸ் வில்லர் என்றாலே முதல் இதழ் சைஸ்தான் சரி.என்பதை.
இதை நான் தலைவாங்கி குரங்கு மறுபதிப்பு இதழிலேயே ஒப்பிட்டு பார்த்து கண்டு கொண்டேன். அதனால் தான் நீங்கள் வண்ணத்தில் வெளியிட்டும்" பவளச் சிலை மர்மம்" வாங்கவில்லை.
எனவே ஒரு இதழாவது அதே சைஸில் வெளியிட முயற்சியிங்களேன். ஃப்ளீஸ். (அல்லது அதில் இருக்கும் சிரமங்களையாவது குறிப்பிங்களே்ன்ன்.)
விஜயன் சார் ii
Deleteதாங்கள் Top 3 என்று குறிப்பிட்டதால் (மாட ஸ்டி , ஸ்பைடர், ஆர்ச்சிசி முதல் இதழ்கள் ) விடுபட்ட ஒரு இதழ் டெக்ஸ் வில்லரின் "தலைவாங்கி குரங்கு" இதழ் தான். அந்த சைஸும் துப்பறியும் கதைகளாக காரிகனையும் , ரிப் கிர் பியையும் படித்துக் கொண்டிருந்த நிலையில் ஊரையே கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்தி டெக்ஸ் வில்லர் துப்பறிந்தவிதமும் 349 இதழ்களில் மறக்க முடியாத இதழ் தான்.
எனது ஆசை தற்போதைய தரத்தில் ஒரு இதழாவது இந்த சைஸில் வெளியிட வேண்டும் என்பதே.. (தற்போதைய சைஸில் நீளத்தில் வேஸ்டாக கூடுதலா க வைத்து அகலத்தில் சுருக்கி படங்களை (Frameகளை)Compressing செய்து முகங்களை சப்பையாக் கியது போல் உள்ளது. எனக்கென்னவோ டெக்ஸ் வில்லர் என்றாலே முதல் இதழ் சைஸ்தான் சரி.என்பதை.
இதை நான் தலைவாங்கி குரங்கு மறுபதிப்பு இதழிலேயே ஒப்பிட்டு பார்த்து கண்டு கொண்டேன். அதனால் தான் நீங்கள் வண்ணத்தில் வெளியிட்டும்" பவளச் சிலை மர்மம்" வாங்கவில்லை.
எனவே ஒரு இதழாவது அதே சைஸில் வெளியிட முயற்சியிங்களேன். ஃப்ளீஸ். (அல்லது அதில் இருக்கும் சிரமங்களையாவது குறிப்பிங்களே்ன்ன்.)
கார்சனின் கடந்தகாலம் & தலைவாங்கிக் குரங்கு மறுபதிப்புகளில் compression இருந்திருக்கும் சார் ; ஆனால் தற்போதைய ரெகுலர் டெக்ஸ் புக்குகளில் proportionate reduction தான் ! So சப்பையாகவோ, நீள்வாக்காகவோ சித்திரங்கள் விகாரப்பட வாய்ப்பில்லை !
Deleteஅந்நாட்களது த.வா.கு. வெளியான வேளையில் ஒரு சுவாரஸ்ய சமாச்சாரம் அரங்கேறியதே அந்த சைசுக்குக் காரணி !! அது பற்றி சி.சி.வ. பகுதியில் கூட எழுதியதாய் ஒரு ஞாபகம் !! அவையெல்லாம் இன்றைக்கு சாத்தியமாகிடாது என்பதால் மாற்று சைசுக்கு வழி நஹி சார் ! மார்க்கெட்டில் தற்போது கிடைக்கும் காகித அளவுகள் இரண்டே : டெக்ஸ் ரெகுலர் சைஸ் & இன்னொன்று லக்கி லூக் சைஸ் !
Steel claw from Coimbatore:
ReplyDeleteஅட்டைபடம் அசத்தல்...இது வர வந்ததில பெஸ்ட்.....வித்தியாச சைசுக்காக ஆவலுடன் வெயிட்டிங்...இதழ் ஆர்வத்த அதிகமா கிளப்பினாலும் 350க்கு ஈடு செய்யுமா தெரியல....இளம் டெக்ச மட்டும் அங்க எப்படி விடுறாங்களோ அதே சைசுல , அதே நிறத்துல வெளியிடலாமே சார்..ஜம்போன்னா சும்மாவா... வித்யாசம்...விறுவிறுப்பல்லவா....ஜம்போவ 12 ஆக்குனா நல்லாருக்குமே...டெக்ஸ் அதிரடிகள நுழைக்க ஏதுவாகலாமல்லவா
ஆரம்பத்தில் Steel claw from Coimbatore என்று டைப்படிப்பானேன் சார் ? மூச்சிரைக்கும் வேகத்திலான அந்தப் பின்னூட்டங்களை வேறு யார் தான் இட முடியும் ?
Deleteஹிஹி! அதுவும் சரிதான்!
Deleteஇளம் டெக்ச மட்டும் அங்க எப்படி விடுறாங்களோ அதே சைசுல , அதே நிறத்துல வெளியிடலாமே சார்..ஜம்போன்னா சும்மாவா... வித்யாசம்...விறுவிறுப்பல்லவா....ஜம்போவ 12 ஆக்குனா நல்லாருக்குமே...டெக்ஸ் அதிரடிகள நுழைக்க ஏதுவாகலாமல்லவா//
Deleteஅநேக வாசகர் எண்ணங்களை பிரதிபலிக்கும் பின்னூட்டம். நன்றி ஜி.
Steel claw from Coimbatore:
ReplyDelete1இரத்தப்படலம்
2கார்சனின் கடந்த காலம்
3வேய்ன் ஷெல்டன்
இணையற்ற யார் அந்த மினி ஸ்பைடர்
யார் அந்த ஜூனியர் ஆர்ச்சி
/// போக்கிரி டெக்ஸ் தான் தற்போதைக்கு இத்தாலியைக் கலக்கி வரும் ஹீரோ ///
ReplyDeleteகூடிய விரைவில் போக்கிரி டெக்ஸ் தனது முத்திரையை தமிழிலும் பதிப்பார் என ஆவலுடன் காத்திருக்கிறோம்..!
டெக்சின் இந்தப் புதுப் பரிமாணத் தேடல்களுக்கு முழு credit கதாசிரியர் மௌரோ போசெல்லியையே சாரும் ! போனெல்லியின் தலைமகனை முழுசாய் ; புதுசாய் வாசகர்களுக்கு காட்டிட மனுஷன் எடுத்து வரும் ஒவ்வொரு முயற்சியும் பட்டாசு ரகம் தான் !! சீக்கிரமே போக்கிரியாரை தமிழ் பேசச் செய்ய வேண்டும் போலும் !!
Deleteஆமாம் சீக்கிரமே செய்ய வேண்டும். அது காலத்தின் கட்டாயம் :)
Deleteஆமாங் சார்...அதுவும் வெகு சீக்கிரமாய்...
Deleteநன்றி சார்.
Deleteசீக்கிரம் செய்யுங்கள் சார்.
அன்பிற்குரிய ஆசிரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇதுவரை வெளிவந்த இதழ்களில் சிறந்த மூன்றினை தேர்வு செய்வது கடினம்.
ReplyDeleteஎல்லா கால கட்டங்களிலும் விரும்பி பலமுறை வாசிக்கப்பட்ட இதழ்கள் பல உள்ளது.
காமிக்ஸ் இதழ்களின் வெளியீட்டில் சிறந்த உருவாக்கமாக கருதும் சில...
1.மின்னும் மரணம் மற்றும் இரத்தக் கோட்டை.
(ப்ளூ பெரி கதைதொடர்கள் அனைத்துமே சாகா வரம் பெற்ற காலம் வென்ற படைப்புகள்)
2. இரத்தப் படலம் முழு வண்ணத் தொகுப்பு.
கதாசிரியராக வான் ஹாம் உச்சம் தொட்ட படைப்பு.வான்ஹாம் கதை சொல்லியாக இல்லாமல் கற்பிக்கும் பேராசிரியராக தம்முடைய படைப்புகளில் ஜீவிப்பதை உணர்த்திய வெளியீடு.
3.இரவே இருளே கொல்லாதே...
காமிக்ஸ் வடிவத்தில் ஓர் முழு நீள திரைப்படைத்தையே காட்சிப்படுத்திய வெளியீடு.
4.நிஜங்களின் நிசப்தம்.
இன்னும்மொரு காமிக்ஸ் திரைப்படம்.
இது மொழி வடிவத்திலிருந்து சித்திர வடிவத்துக்கு மாற்றப்பட்ட அசாத்தியமான படைப்பு.
அதிலிருந்து சில காட்சிகள் (சித்திர வடிவத்தில் உள்ளதை மொழி வடிவத்தில்)....
136 ம் பக்கத்தில் இருந்து தொடக்கம் பெறுகிறது.
ப்ரோடெக் பாதிரியாரை சந்திக்கும் காட்சி.
தன்னுடைய ஆடையில் படிந்திருக்கும் கறைகளை சலவை செய்து கொண்டிருப்பார்.
ஆனால் தன்னுடைய மனதின் முகடுகளில் படிந்திருக்கும் வலிகளையும்,அழுக்குகளையும்(அந்த கிராமத்து மக்களால் ஏற்படுத்தப்பட்ட) அப்புறப்படுத்த இயலாமல் மதுவின் கோர பிடியில் வதைப்படுவது.
ஆனால் ப்ரோடெக்கும்,எமிலியோவும் தங்களை வேதனை படுத்தும் மனத்துயரங்களை போராடி வெற்றி பெற முயற்சிப்பது.
தன் மனதோடு தானே திராணியோடு போராடி தீர்வை பெற விழையும் மாந்தர்களாக ........
நாவலின் பேசும் பொருள் அடர்த்தியானது.....
5.லார்க்கோ கதைத் தொடர்...
மேலும் கூடுதல் கதை யுக்திகளோடு,மாறுபட்ட கதை தொழில்நுட்பங்களோடு......உருவாக்கப்பட்ட படைப்பு.
நிஜங்களின் நிசப்தம் ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னேயும் பேசுபொருளாய்த் தொடர்வது ஒரு சந்தோஷ ஆச்சர்யம் சார் ! ப்ரொடெக்கும், ஆன்டெரரும் நம்மிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நினைவுகூர்வதே ஒரு வித வித்தியாச அனுபவமாயுள்ளது !
Delete///நிஜங்களின் நிசப்தம்///
Deleteஇப்படியொரு கதையினை காமிக்ஸ்களில் எதிர்பார்க்கவே இல்லை!!
என்னளவில் நிச்சயமாக இதுவரையிலான ஒட்டுமொத்த காமிக்ஸ்களிலேயே முதலிடம்
நி.நி.க்கு தான்!
"புரிந்தவருக்கு புதையல்
புரியாதவருக்கு புதிர்"
Top 3. 1.kodai malar 1986, 2. Deepavali malar 1986 3. Kodai malar 1987. By God's grace I still have these three treasure. There are no words to explain how they please me even now nor can any new reader understand how such masala stories matter to me this much. Really really I am so pleased even by holding or beholding these books
ReplyDeletePrivileged sir...to have been able to bring a smile on !
DeleteI wish I could list out 30 such books sir. But only 3 are allowed .phew!
ReplyDelete@ ALL : நாளைய பிறந்தநாளுக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களும், அன்பினையும் தெரிவித்துள்ள நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள் !! Thanks a ton !!
ReplyDeleteADVANCE BIRTHDAY WISHES SIR... :)
DeleteADVANCE BIRTHDAY WISHES SIR... :)
Deleteநாளைக்கும் சொல்வோம் சார்..
Delete1.kazugu vettai
ReplyDelete2.satthan vettai
3.lion top ten special
1.இரத்தப்படலம்
ReplyDelete2.தலைவாங்கி குரங்கு
3.டாக்டர் டக்கர்(நான் படித்த முதல் காமிக்ஸ்)
Happy birthday sir
ReplyDelete201
ReplyDeleteTop 3
ReplyDelete1. இரத்தப்படலம்-வண்ணத்தொகுப்பு
மூன்று பாகங்கள் அடங்கிய ஸ்லிப்கேஸ், வாய்பிளக்க வைக்கும் தரம்/அட்டைப்படங்கள்/கதை மற்றும் மெகா பக்கங்கள்
2. லயன் மேக்னம் ஸ்பெசல்
Compact size, mega size, colour, black & white and hardcover
3. லயன் 250 not out (டெக்ஸ்)
பல ஹீரோக்கள் இல்லாமல் டெக்ஸ் கதைகள் மட்டுமே கொண்ட முதல் special வண்ண தொகுப்பு
& தலையில்லா போராளி
முதல் மெகா சைஸ் புத்தகம்
காலங்கள் கடக்க century special, top 10 special, mega dream special ஆகியவைக்கு மனதில் மட்டுமே இடம்.