Powered By Blogger

Saturday, March 09, 2019

புத்தகங்கள் பதினொன்று...!

நண்பர்களே,

வணக்கம். நிறைய நேரங்களில் 'பில்டப்' கச்சேரிகளை நாம் யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை !! நூற்றுப் பதினேழாவது தபாவாய் "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்று கூவும் அறிவிப்பாளரையும் ; "இந்த படத்திலே எனக்கு ரொம்ப வித்தியாசமான ரோல் !" என்றபடிக்கே மரத்தைச் சுற்றி நர்த்தனமாடும் நாயகர்களையும் நாம் கொட்டாவிகளோடு பார்ப்பது தானே மாமூல் ? அதே போலத் தான் "7 முதல் 77 வரையிலும்  - வீட்டிலுள்ள அனைவருக்கும் !!" என்ற நமது tagline-ம் கூட என்று நினைக்கிறேன் !! "அட - கேட்க நல்லாயிருக்கே ?" என்பதைத் தாண்டி அந்தத் திக்கில் அதிகமாய் சிந்தையைச் செலவிட்டிருக்க மாட்டோம் தான் !!  நிஜத்தைச் சொல்வதானால் இந்த வரியினை நாம் சுட்டது நமது படைப்பாளிகளிடமிருந்தே !! பெல்ஜியத்திலுள்ள லோம்பா குழுமத்தின் இதழ்களை முன்னர் அலங்கரித்த வரிகளால் கவரப்பட்டு, அதனை இரவல் வாங்கிக் கொண்டோம் !! இதோவொரு சாவகாச சனி மாலையில் அதனை அசை போட்டிடும் போது தான் அந்த வரிகளுக்கு நியாயம் செய்திட வேண்டுமெனில் நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் எத்தனை ? என்பது புரிகிறது !! ஆனால் இந்தாண்டின் முதல் 3 மாதங்கள் ஓரளவுக்கு நமக்கு நிறைவாய் நிறைவுற்றிருக்கும் நிலையில் -  "7 to 77" என்ற அந்தப் பிராமிசினை கொஞ்சமே கொஞ்சமாய் நிறைவேற்றியுள்ளோமோ - இந்தப் 12 வாரங்களில்  ? என்று சிந்திக்கத் தோன்றுகிறது !! So தொடரும் இந்தப் பதிவு - இந்தாண்டின் முதல் மூன்று மாதங்கள் பற்றிய மினி அலசல் மாத்திரமன்றி ; உங்களில் எத்தனை பேர் இந்த 11 இதழ்களையுமே வாசித்துள்ளீர்கள் என்று நான் தெரிந்து கொள்வதற்குமே !! அதனால் இதுவொரு முதுகு சொரிந்துவிடும் படலமாய்ப் பார்த்திடல் வேண்டாமே - ப்ளீஸ் ? Nothing more than a simple performance rating !! Moreover அடுத்த மூன்றே மாதங்களில் "2020" என்று ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொண்டு - வீட்டிலும், ஆபீஸிலும் உள்ள அத்தனை மோட்டுவளையங்களையும் டிசைன் டிசைனாய்ப் பார்க்கத் துவங்கிவிடும் நேரம் புலர்ந்திருக்கும் என்பதால் - உங்களது சிற்சிறு inputs கூட எனது தீர்மானங்களுக்குப் பெரிதும் உதவிடும் guys !! So படித்ததில் பிடித்ததும், பிடிக்காததும் என்னவென்பதைச் சொல்லிடலாம் இங்கே !! 

Doubtless, ஜனவரியின் ஓட்டப்பந்தயத்தில் துவக்கக் கோட்டில் நின்றது மூவரென்றாலுமே, கோப்பைக்கென ஓடியது இருவரே என்பதில் சந்தேகம் லேது !! முதன்முறையாக 'தல' தஸ்ஸு-புஸ்சென்று மூச்சு வாங்கியபடிக்கே தூரத்து மூன்றாவதாய் ஓடி வர, "பராகுடா "& தோர்கல்" சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தது தான் ஜனவரியின் highlight !! சின்னதொரு வித்தியாசத்தில் கோட்டை முதலில் எட்டிப்பிடித்தது "சிகரங்களின் சாம்ராட்" என்பது எனது அபிப்பிராயம் ! அதிலும் அந்தக் காலப்பயணம் சார்ந்த கதை நம்மிடையே ஏற்படுத்திய தர்க்கங்கள் ; தாக்கங்கள் ரொம்ப ரொம்ப நாட்களுக்கு நினைவை விட்டு நீங்கிடா விஷயமென்பதில் மாற்றுக்கருத்து இருக்காது அல்லவா guys ?! இங்கே சில கேள்விகள் கேட்க ஆசை எனக்கு :

தோர்கல் இன்றைக்கொரு டாப் நாயகராய் நம்மிடையே எழுந்து நிற்பது - அவரது இதழ்களின் விற்பனையிலும் பிரதிபலிக்கின்றது ! ஜானி 2.0 ; ஜேம்ஸ் பாண்ட் 2.0 ; இளம் டெக்ஸ் என்றெல்லாம் traditional நாயகர்களைக் கூட புது யுக அவதார்களில் இன்று ரசித்திடும் நாம் - இந்த fantasy நாயகரை ; அவரது கற்பனைகளின் உச்சக் கதைகளை ரசிப்பது எவ்விதமோ ? டெக்ஸ் வில்லரையே "அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ !!" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் ?

Question # 2 : ஒரு டெக்சின் வெற்றி - ஒரு டைகரைக் கொணர்ந்தது ! ஒரு டைகரின் வெற்றி ஒரு பௌன்சரை ; ஒரு கமான்சேவை ; ஒரு டிரெண்ட்டை ; ஒரு ஜானதன் கார்ட்லெண்டை துளிர்க்கச் செய்தது - நம்மிடையே ! So ஒரு குறிப்பிட்ட நாயகரின் வெற்றி, அவர் சார்ந்த ஜானரில் இன்ன பிற கதைகளும், தொடர்களும் தொடர்ந்திடுவதற்கான ஆரம்பப் புள்ளியாகிடுகிறது ! அதே ரீதியில் தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா ? தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை ? அல்லது "பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா !!" என்பீர்களா ?

Moving on - பராகுடா மீதும் கிட்டத்தட்ட identical கேள்விகள் எனக்கு !! ஒரு தமிழ் சினிமாவின் திரைக்கதைக்குச் சவால் விடும் திருப்பங்களும், சென்டிமென்ட்களும் நிறைந்த "அலைகடலின் அசுரர்கள்"  - காமிக்ஸ் வாசிப்பனுபவத்திற்கு முற்றிலும் புதுசு என்பதால் நமக்கு ரசிக்க இயன்றதா ? அல்லது சித்திரங்களின் ஜாலங்களில் மற்ற எல்லாமே பின்னணிக்குப் போய் விட்டதால் திறந்த வாய் மூடாது போயிற்றா நமக்கு ?

Plus a repeat on Question # 2 : இந்தக் கடற்கொள்ளையர் ஜானரில் இன்னமும் நிறையவே கதைகள் உள்ளன தான் ! "அலைகடலின் அசுரர்கள்" - க்ளைமாக்ஸ் பாகம் தொடரும் மாதங்களில்  வெளிவந்தானபின்னே - சந்தோஷ நினைவாய் அதனை இருத்திக் கொண்டு வாடிக்கையான வேலைகளைப் பார்த்திடலாம் என்பீர்களா ? அல்லது - இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு  "ஜே" போடுவீர்களா folks ? நான்பாட்டுக்கு ஒரு ஆவேசத்தில் முட்டைக்கண்ணில் ஒரு முகமூடியை மாட்டிக்கொண்டு கிளம்பிடக்கூடாதில்லயா ?

மித வலுவிலான கதைகளோடு ஆண்டவனே பயணித்தாலும் நமது குக்கரில் அந்தப் பருப்பு வேகாது என்பதை எண்ணற்ற தடவைகள் நிரூபித்துக் காட்டிவிட்டீர்களெனும் போது - இரவுக்கழுகாரெல்லாம் விதிவிலக்காகிட இயலுமா - என்ன ? "சாத்தானின் சீடர்கள்" விஷயத்தில் எனது அனுமானத்திற்கு வலு சேர்த்த விஷயங்கள் நிறைய : பெரியவர் போனெல்லியின் கதையிது ! "GOLDEN TEX"  என்று இன்றைக்கும் சிலாகிக்கப்படும் அந்த முதல் 300 கதைகளுள் இடம்பிடித்த சாகசம் என்றவிதத்தில் இதன் மீது எனக்கு நிரம்பவே அபிமானம் தோன்றியது ! Plus கதையின் (இத்தாலிய) வாசக அலசல்களிலும்  நிறையவே positive ரேட்டிங் செய்யப்பட்டிருக்க - பக்கங்களைப் புரட்டிய போது சுவாரஸ்ய விஷயங்கள் வரிசையாக கண்ணில்பட்டன !  சாத்தான் பூஜை ; நரபலி ; முகமூடியணிந்த கும்பல் ; நிறைய ஆக்ஷன் என்றெல்லாம் கதை ஓடுவதைப் பார்த்த போது கதை தேறிடுமென்றுபட்டது ! Sadly அது நிகழாது போக - வசனங்களில் சடுகுடு ஆடி, குறைகள் ரொம்பவே glaring -ஆகத் தெரியாதிருக்கச் செய்வதிலியே நாக்குத் தொங்கிப் போய்விட்டது !  So "சாத்தானின் சீடர்கள்" என்னளவில் 5 /10 தான் !!

பிப்ரவரியை நான் சற்றே 'தேமே' என்று திட்டமிட்டுவிட்டதாய் அந்நேரம் எனக்குள் லேசாயொரு ஜெர்க் இருந்தது நிஜமே ! ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் எப்போதுமே மதில் மேல் பூனை ரகங்கள் தான் என்னைப் பொறுத்தமட்டிலும் ! Extraordinary !! என்றெல்லாம் சிலாகிக்க இடமிராது ; ஆனால் நிச்சயமாய் சராசரிக்கும் மேலிருக்கும் என்பதே எனது அனுவபவம் + அபிப்பிராயம் ! இந்த அழகில் புது ஜானியை எவ்விதம் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களோ என்ற பயமும் சேர்ந்து கொள்ள - ஜானி 2 .0 ஆல்பத்தினுள் பணியாற்றத் துவங்கும் வரைக்கும் இந்த இதழை நிறையவே அவநம்பிக்கையோடு தான் பார்த்துக்கொண்டிருந்தேன் ! ஆனால் மொழியாக்கத்தை மாற்றி எழுதத் துவங்கும் சமயமே - கதையின் ஒருவித இலகுத்தன்மையை கண்டு லேசாய் நிம்மதி கொண்டேன் ! 42 பக்கங்களுக்கு சட்டிக்குள் உப்பு, மிளகு.காரம்,புளிப்பு,இனிப்பு.தித்திப்பு,உவர்ப்பு என்று சகல "ப்புக்களையும் " போட்டு கிண்டோ கிண்டென்றுகிண்டிய கையோடு - கடைசி இரண்டே பக்கங்களில் கூட்டு ; குழம்பு ; பொரியல் என்று சமைத்துப் பரிமாறும் நோவுகள் இங்கிருக்காது என்று புரிந்த போதே - இதனை நிச்சயம் நீங்கள் புறம்தள்ள மாட்டீர்களென்ற நம்பிக்கை பிறந்தது !! ஜானி 2 .0 ஒரு ஹிட் என்பதை நீங்கள் ஊர்ஜிதம் செய்துவிட தருணத்தில் - இங்கே ஒரேயொரு கேள்வியே என்னிடம் :

இந்தத் தொடரின் ஆல்பம் # 3 வெளியாகிவிட்டது ! And இதனை நாம் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்தும் விட்டோம் ! ஒருவித காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் என்று இதனைச் சொல்லலாம் ! My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா ? என்பதே !! Yes என்றால் 2020 -ன் அட்டவணையில் இது இடம் பிடித்திடும் ! "வேண்டாமே...ஒரு சீரியஸ் நாயகர் சிரிக்க வைக்க முனைவது - முனியாண்டி விலாசின் மெனுவில்   மைசூர்பாகைத் தேடுவதற்குச் சமானம் !!" என்பீர்களெனில் - "புது ஜானியின்" கதை # 1 இடம்பிடித்திடும் தொடரும் ஆண்டுக்கு !!

பிப்ரவரியில் எனக்கு ரிசல்ட் பற்றிய "டர்" இல்லாத 2 இதழ்களும் இடம்பிடித்திருந்தன ! முதலாவது "வைக்கிங் தீவு மர்மம்" !! தல சாத்வீக அவதாரிலும் ரசிக்கும் விதமே மிளிர்வதை நீங்களாகவே தான் மறுபதிப்பினில் கூறியிருந்தீர்கள் எனும் போது அங்கே எனக்கேது டென்க்ஷன் ? ஜாலியான வண்ண ஆல்பம் ; நீங்களும் ஹேப்பி ; ஞானும் ஹேப்பி ! இங்கொரு குட்டி ஹேப்பி சேதியும் : வண்ண மறுபதிப்பு டெக்ஸ் ஆல்பங்கள் சகலமும் ஒரிஜினல் கல்கத்தா ரசகுல்லாக்களைப் போல சரேல் சரேலென்று காணாது போகின்றன ஸ்டாக்கிலிருந்து !! கார்சனின் கடந்த காலத்தில் துவங்கி, டிராகன் நகரம் ; பவளச் சிலை மர்மம் ; சைத்தான் சாம்ராஜ்யம் முதல், சமீபத்தைய TEX Color சிறுகதைகளின் மறுபதிப்பு # 1 முதற்கொண்டு almost காலி ! 2013-ன் இதழ்களில் ஏகம் இன்னமும் கையிருப்பில் மொய்யென்று இருக்க, recent reprints பறக்கின்றன !! ஒண்ணுமே புரிலீங்கோ !! Tex Color reprints எனும் போதே இந்த சமாச்சாரத்தையும் சொல்லிவிடுகிறேன் ! சென்றாண்டின் அந்த மினி டெக்ஸ் கலர் சாகசங்கள் தொகுப்பு # 2 ஏற்கனவே அச்சாகி ரெடியாகி விட்டது !! மார்ச்சில் புது இதழ்களின் பரபரப்பில் அதை அறிவிக்க போன வாரம் மறந்தும் போச்சு ! இதோ அதன் அட்டைப்பட preview : அடுத்த சில நாட்களில் இது ஆன்லைனில் லிஸ்டிங் ஆகிடும் என்பதால் தேவைப்படுவோர் அங்கே வாங்கிக்கொள்ளலாம் ! Better still - ஏப்ரல் இதழ்களோடு சேர்த்து வாங்கி கொண்டால் கூரியர் விரயம் மிச்சமாகிடலாம் !
பிப்ரவரியில் ஜாலியாய் என்னை எதிர்நோக்கச் செய்த இன்னொரு இதழ் "நடனமாடும் கொரில்லாக்கள்" ! அந்தச் சிரிப்பு மேளா - சிறப்பாய் அமைந்திடுமென்ற நம்பிக்கையினை நீங்களும் மெய்ப்படுத்திட - இங்கேயும் ஒற்றைக் கேள்வியே எனக்கு : "மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா ? அல்லது "ஒன்றே நன்று !" என்பீர்களா ?

"ஜெரெமியா - தொகுப்பு 2" தான் பிப்ரவரின் X factor !! "தேறுமா ? தேறாதா ? ; ஓடுமா ? ஓடாதா ?" என்று துளியும் கணிக்க இயலா சூழலில் களம் கண்ட இதழிது !! And உங்களின் அபிப்பிராயங்களும், இரு வெவ்வேறு துருவங்களில் நிலைகொண்டிருக்க, இங்கே இனி கேள்விகளுக்கு அவசியம் நஹி என்று தீர்மானித்துள்ளேன் ! விற்பனையின் துரிதமோ ; துரிதமின்மையோ தான் இனி இங்கொரு வழிகாட்டுதல் தந்திட வேண்டும் !! 
நடப்பு மாதத்தில் கணிசமான கேள்விகள் இருந்தன தான் என்னுள் !!

**ஜேம்ஸ் பாண்டின் அதிரடி இன்னொரு லெவெலுக்குச் செல்லும் இந்த பாணி புதிதாய் இருந்தவரையிலும் ஓ.கே ! ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ ? என்ற கேள்வி !!

**அப்புறம் ஹெர்லாக் ஷோம்ஸ் மறுபதிப்பிலும் identical கேள்வி !! முதல் வண்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று !!

**Last but not the least : "முடிவிலா மூடுபனி" கி,நா.வை எவ்விதம் வரவேற்பீர்களோ என்ற கேள்வியுமே !!

மூன்றுக்குமே நீங்கள் இதுவரைக்கும் தந்துள்ள பதில்கள் emphatic enough என்பதால், மண்டைக்குடைச்சலின்றி அடுத்த மாதத்துப் பணிகளில் பிசியாகிக் கிடக்கிறேன் ! இங்கே உங்கள் அலசல்களைத் தொடர்ந்திட்டாலே போதுமென்பேன் - புதிதாய்க் கேள்விகளை எழுப்பிடும் அவசியங்களின்றி !!

So...

டெக்ஸ் கதைகள் ஜனரஞ்சகத்துக்கும்....

தோர்கல் கதைகள் கற்பனைகளின் பரிமாண அலசல்களுக்கும்...

ஜேம்ஸ் பாண்ட் கதை புதுயுகப் பிரஜைகளுக்கும்....

கார்ட்டூன்கள் மனதை இலகுவாக்கிடவும்....

பராகுடா - நாம் பார்த்திராவொரு யுகத்தின் கதைகளை கலர்புல்லாகச் சொல்லிடவும்...

கிராபிக் நாவல் - தனிமையும், முதுமையும் எவ்வித சத்ருக்களென்று யதார்த்தமாய்ச் சொல்லிடவும்...

உதவிடின் - 7 to 77 வரை ஆளுக்கொரு சமாச்சாரம் இங்கிருக்க வாய்ப்புகள் உண்டு தானோ ? மகளிர் அதிகமாய் வினையாற்றும்  களமாய் காமிக்ஸ் இருப்பதில்லை என்பது இங்கொரு பொதுவிதி !! Of course - ரெகுலராய் காமிக்ஸ் படிக்கும் சகோதரிகள் நிரம்பவே உண்டென்பதை அறிவேன் தான் ; ஆனால் 80 % - 20 % என்பதே காமிக்ஸ் வாசக வட்டத்தின் ஆண்-பெண் break-up ஆக இருந்திடக்கூடும் ! இன்னுமிங்கே என்ன மிஸ்ஸிங் ? என்பதை அந்தச் சிறுபான்மை மகளிர் அணி மட்டும் சொல்லிட மெனெக்கெட்டால் நமது பார்வை இன்னும் முழுமையடையக்கூடும் !!

Before I  sign out - சில updates :

1."ஈரோடு ஸ்பெஷல்" பற்றிய அறிவிப்பு ஏப்ரலில் என்று அட்டவணையில் அச்சிட்டிருந்தது நினைவிருக்கலாம் !! நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன்  !! அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது !! So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் !! அதற்கு முன்பாய் -  அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks ? Go ahead & try giving it a guess ?

2.க்ரீன்மேனர் கதையினைப் போலொரு  கார்ட்டூன் பாணி artwork !! ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் !! இதன் உரிமைகளை வாங்கியுள்ளோம் ! வாகான வாய்ப்புக்கு வெயிட்டிங் !!

3.அரசியல்...வரலாறு...குற்றம்...புலனாய்வு....இரத்தக்களரி...ஒரு தூரத்து தேசம்....!! இவையே வெகு சமீபமாய் நான் வாசிக்க நேர்ந்ததொரு b & w கிராபிக் நாவலின் களம் !! சற்றே கனமானதென்பதில் no doubts !! ஆனால் முயற்சிக்க நீங்கள் ரெடியென்றால் - நிச்சயமாய் நாமும் ரெடி !! I repeat - கனமான களமே !!

4.ஆண்டின் ஒரு quarter நிறைவுற்றிருக்க - இதுவரைக்கும் சந்தாவினில் ஏதோவொரு காரணத்தினால் இணைந்திடாது போன நண்பர்கள் - ஏப்ரல் to டிசம்பர்'19 சந்தாவினில் இணைந்திடலாம் !! ஆபீசுக்கு ஒரு மின்னஞ்சலோ ; போனோ அடித்தால் விபரங்கள் சொல்வார்கள் !!

Bye all...have a sparkling week-end !! See you around !!


286 comments:

  1. வணக்கம் சார் 🙏🏼
    .

    ReplyDelete
  2. // டெக்ஸ் வில்லரையே "அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ !!" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் ? //

    இணை பிரபஞ்சத்தில் தேடி கண்டுபிடித்து நாளை சொல்லுகிறேன் சார் 🙏🏼
    .

    ReplyDelete
    Replies
    1. ஒரே ஒரு மாதம் முன்னாடி வருவதற்க்கு இவ்ளோ கெத்து தேவைய்யா
      யானைக்கும் அடி சறுக்கும் பின்னே முன்னில் நிற்க்கும் சில பல காரணங்களுக்காக டெக்ஸை கீழே இறக்கி பார்க்காதீரும் எடி விஜயன் சாரே

      பிழைப்பிழும் டெக்ஸ் முதல்வனே உணர்வீராக

      Delete
  3. உள்ளேன் ஐயா வை விடாத ஒரு நபர்
    மேச்சேரிக்கார நண்பர் இவர் ஒருவர் மட்டுமே

    பாவம் எடி !!!! 😝😝😝

    ReplyDelete
  4. //ஈரோடு ஸ்பெஷல்" பற்றிய அறிவிப்பு ஏப்ரலில் என்று அட்டவணையில் அச்சிட்டிருந்தது நினைவிருக்கலாம் !! நிறைய உருட்டல்களுக்குப் பிற்பாடு ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் !! அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது !! So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் !! அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks ? Go ahead & try giving it a guess ?//
    1. American detective story
    2. Cartoon special

    ReplyDelete
  5. I would like to have more fantasy Heros . And a big yes to pirates stories barracuda made its mark still a lot of good stories you have given us preview. I'm waiting. For the heavy graphic novel I'll give a big yes Sir . For Johny 2.0 a big welcome in the year 2020 for the third story.

    ReplyDelete
  6. இப்படிப் பண்ணிட்டீங்களே எடிட்டர் சார்!!

    தீபாவளி மலராகவோ, கோடை மலராகவோ வந்து அமர்க்களப்படுத்தியிருக்க வேண்டிய அட்டகாசமான அட்டைப் படத்தை ஒரு மறுபதிப்பு இதழுக்கு; அதுவும் பாக்கெட் சைசில் வரயிருக்கும் இதழுக்கு போட்டு வேஸ்ட் பண்ணிட்டீங்களே?!!

    டெக்ஸ், கார்சனின் ஸ்டைலான அந்த போஸ் ஆகட்டும், முகபாவமாகட்டும் - பட்டையைக் கிளப்புகிறது அட்டைப்படம்!!

    ReplyDelete
  7. எது தோர்கலினை தனித்து நிற்க செய்கிறது. எந்த ஒரு தர்மசங்கடமான நிலையிலும் அவர் கை விடாத அறம். ஆரிசியா வின் உயிருக்கு பதிலாக பிரபஞ்சத்தில் ஏதேனும் ஒரு உயிரை எடுக்க வேண்டிய நிலையிலும் அவர் எடுக்கும் நிலைபாடு. எவ்வளவோ அழகான பெண்கள் அவருக்காக உயிரையே கொடுத்து nesithaalum யாரையும் ஏறெடுத்து பார்க்காத ஆண்மை. Latest being vaalna in சிகரங் களின் சாம்ராட். இன்னும் நிறைய உள்ளது. திரும்ப வருவேன்

    ReplyDelete
    Replies
    1. 👌🏼👌🏼👌🏼👏🏻👏🏻👏🏻👏🏻

      அடிச்சீங்க சிக்ஸர். தோர்கல் எத்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடை நேர்மையை விட்டுக் கொடுத்ததில்லை. பாதுக்காப்புக்கு தவிர மீதி தருணங்களில் உயிர்க்கொலை செய்ததுமில்லை.

      Delete
    2. இதை கேட்டுட்டே இருக்கணும் போல தோணுது.இன்னும் இன்னும் நெறைய எழுதுங்க.

      Delete
    3. ///தோர்கல் எத்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னுடை நேர்மையை விட்டுக் கொடுத்ததில்லை. ///

      அப்போ, இன்னொரு டெக்ஸ் னு சொல்லுங்க!!

      கவனிக்க எடிட்டர் சார்!

      டெக்ஸ், தோர்கல், எம்.ஜி.ஆர் பாணி கதைகள் தான் நம்ம மக்களை பெரிதும் ஈர்க்கிறது!!

      Delete
    4. குமார் @ தோர்கல் பற்றி அருமையாக சொன்னீங்க. சூப்பர்

      Delete
    5. 👌👌👌👌👌👌👍👍👍👍

      Delete
  8. //க்ரீன்மேனர் கதையினைப் போலொரு கார்ட்டூன் பாணி artwork !! ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் !! இதன் உரிமைகளை வாங்கியுள்ளோம் ! வாகான வாய்ப்புக்கு வெயிட்டிங் !!// நானும் வெயிட்டிங் .

    ReplyDelete
  9. இன்னும் ஒரே ஒரு பாய்ண்ட் சொல்லிக்கொள்கிறேன். நீங்கள் எடுக்கும் எந்த புது முயற்சிக்கும் நான் எனது ஆதரவை தருகிறேன். Go ahead ஆசிரியரே.

    ReplyDelete
  10. எது எப்படியோ ஈரோட்டில் டெக்ஸ் வில்லர் இருக்கின்ற மாதிரி பார்த்து செய்யுங்கள் எடிட்டர் சார்.

    ReplyDelete
  11. விற்பனைக்கு ஒரு பேய்: ஒரு பெரிய மாளிகையின் விற்பனை விலையை குறைத்து அந்த மாளிகையை அடி மாட்டு விலைக்கு வாங்குவதோடு மட்டுமில்லாமல் அந்த வீட்டின் பெண்ணையும் திருமணம் செய்ய நடக்கும் ஏமாற்று கும்பலை நமது கதாநாயர் எப்படி மடக்குகிறார் என்பதை சுந்தர்.சி பாணியில் பக்கத்துக்கு பக்கம் சிரிப்புடன் சொல்வதே கதை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சுந்தர்.சி இந்த கதையை பார்த்து தான் தனது பல பட ஆள்மாறாட்ட படங்களை எடுத்து இருப்பார் என நம்புகிறேன்.

    இந்த கதையில் ஒரு மாளிகைக்குள் கதை நடப்பதால் நமது புலிக்கு மாறுவேடம் போடும் வாய்ப்பு குறைவு ஆனால் எல்லாவற்றிற்கும் சேர்த்து காமெடியில் கலக்கிவிட்டார். அதுவும் கடைசி சில பக்கங்களில் ஆங்கஸ்ஸே பிரபுவாக எல்லோரும் வேடமிட்டு சுற்றுவது செம; அதிலும் வேஸ்டன் ஆங்கஸ்ஸே பிரபுவின் படத்தில் இருந்து வந்து ஹோம்ஸை காப்பாற்றுவது சூப்பர் கற்பனை. ஹோம்ஸ் நாய் வேடம் போட்டு அனைவருடனும் அடிக்கும் லூட்டி வயிற்று வலிக்கு உத்தரவாதம்.

    பேய் படங்கள் என்றும் வெற்றி படம் என்பார்கள் அது இந்த பேய் காமெடி கதைக்கும் பொருந்தும்.

    விற்பனைக்கு ஒரு பேய் சிரிப்புக்கு உத்திரவாதமான பேய்.

    ReplyDelete
    Replies
    1. ///விற்பனைக்கு ஒரு பேய் சிரிப்புக்கு உத்திரவாதமான பேய்.///

      யெஸ்ஸு...!

      Delete
  12. நிழலும் நிஜமும் :

    ஏ...யப்பா ..என்னா ஒரு ஆக்ஷன் ..! ஆக்ஷன் காட்சிகளை வரைந்திருக்கும் விதமும் அதற்கு எடுத்துக்கொண்ட கோணங்களும் அற்புதம்..! முக்கியமாக அந்த மலைக்குகை பதுங்குதளத்தை பாண்ட் உளவறியச் செல்லும் காட்சி.., லாஸ் ஏஞ்சல்ஸில் லிப்டினுள் நடக்கும் சண்டைக் காட்சி .., கார் சேஸிங் காட்சிகள் .. இப்படி பலப்பல...!!

    உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் தலையே வில்லனாக இருப்பார் என்பது எதிர்பாராத ஒன்று என்றால் ... அவரை காக்காயை குருவிக்காரர் சுடுவது போல் பாண்ட் சுட்டுக்கொல்வது அதைவிட எதிர்பாராதது.!

    கமிஷ்னர் தலைமையில் M15 மற்றும் M16 தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தும் காட்சி செம்ம ஆக்ஷன் ப்ளாக்.!

    M16 தலைவரை நோக்கி அந்த நபர் சுட்டதும் .. மின்னலாய் மணிபெண்ணி கையில் தோன்றும் துப்பாக்கியும் ..அதிலிருந்து வெளியான தோட்டாவால் தாக்கப்பட்டு சுட்ட நபர் தெறித்து விழுவதும்.. அடடா.. அருமையான காட்சியமைப்பு ..!.
    மணிபெண்ணி கையில் துப்பாக்கியா ..எப்படி(!?) என்று நாம் மலங்க மலங்க விழிக்கத்தொடங்கும் முன்பாகவே வரும் ஃபாளாஷ்பேக் காட்சிகள் நல்ல ட்விஸ்ட் .!

    க்ளைமாக்ஸில் பாதுகாப்பு துறையின் கண்ணியத்தை காக்கவேண்டி பாண்ட் எடுக்கும் முடிவும் வில்லன் எடுக்கும் முடிவும் நெகிழ்ச்சி ..!

    நிழலும் நிஜமும் - ரத்தமும் சத்தமும்

    ரேட்டிங் 10/10

    ReplyDelete
  13. இந்த fantasy நாயகரை ; அவரது கற்பனைகளின் உச்சக் கதைகளை ரசிப்பது எவ்விதமோ ? டெக்ஸ் வில்லரையே "அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ !!" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் //

    டெக்ஸை அப்பாலிக்கா விளையாட சொல்லும் அளவிற்கு தோர்கல் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை சார்.

    ReplyDelete
    Replies
    1. ///டெக்ஸை அப்பாலிக்கா விளையாட சொல்லும் அளவிற்கு தோர்கல் ஒன்றும் அவ்வளவு பெரிய அப்பாடக்கர் இல்லை சார்.////

      உண்ம!

      Delete
    2. தோர்களின் விற்பனை தான் டெக்ஸை அப்பாலிக்க போன்னு சொல்லி இருக்கு.

      Delete
    3. இருந்தாலும் நம்ப ஆசிரியர் டெக்ஸ ரொம்ப ஓட்டுகிறார். வயதான டெக்ஸ இப்படி சொல்வது சரியில்லை... அய்யா பெரியவரே கொஞ்சம் மெதுவா நகர்ந்து அந்த பக்கம் போறீங்களா என்று சொல்ல வேண்டும். :-)

      Delete
  14. மேக் & ஜாக் இந்த வருடம் வந்த கதை கடந்த வருடம் வந்த கதையை விட சுமார். இவருக்கு ஒரு ஸ்லாட் போதும்.

    ReplyDelete
  15. Question # 2

    போதும் போதும்

    ReplyDelete
  16. இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு "ஜே" போடுவீர்களா folks
    நோ,நொக்கோ,No,j போடமாட்டேன்.

    ReplyDelete
  17. "புது ஜானியின்" கதை # 1 பழைய ஜானியின் கதைகள் போல் இல்லை குறிப்பாக அந்த இடியாப்ப சிக்கல் இல்லை. எனவே வருடத்திற்கு ஒரு பழைய ஜானி கதைகளை வெளியிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. "புது ஜானியின்" கதை # 1 பழைய ஜானியின் கதைகள் போல் இல்லை குறிப்பாக அந்த இடியாப்ப சிக்கல் இல்லை. எனவே வருடத்திற்கு ஒரு பழைய ஜானி கதைகளை வெளியிடுங்கள்.

      Delete
  18. "சாத்தானின் சீடர்கள்" என்னளவில் 5 /10 தான் !!/

    பொய் கணேஷ் ஜிக்கு ஆதரவாக பொய்.

    ReplyDelete
    Replies
    1. சாத்தானின் சீடர்கள் களை நான் சாத்தவே இல்லையே(விமர்சனம் செய்ய வில்லை).

      Delete
  19. // தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா ? தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை ? அல்லது "பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா !!" என்பீர்களா ? //

    இப்போதைக்கு இவர் மட்டும் போதும். இவரின் அனைத்து கதைகளையும் வெளியிட்டு முடித்த பின்னர் புதிய fantasy கதைகளை பற்றி யோசிக்கலாம்; இன்னும் சொல்லப்போனால் இளம் தோர்கலையும் முழுவதுமாக வெளியிட்ட பின்னர் பார்த்துக் கொள்ளலாமே.

    ReplyDelete
    Replies
    1. ஜம்போவில் இளம் தோர்கலுக்கு இடம் ஒதுக்கலாம்.

      Delete
  20. ///
    2.க்ரீன்மேனர் கதையினைப் போலொரு கார்ட்டூன் பாணி artwork !! ஆனால் கதையோ ஒரு சுவாரஸ்ய ஆக்ஷன் !! இதன் உரிமைகளை வாங்கியுள்ளோம் ! வாகான வாய்ப்புக்கு வெயிட்டிங் !!///

    நாங்களுமே ..!

    ReplyDelete
    Replies

    1. ///நா...நானுமே..///

      எங்க தல 'க்கு எவ்ளோ தில் 'லு பாருங்க..!

      Delete
  21. ///ஈரோடுக்கென பிரத்யேக இதழ்கள் 2 என்பதை உறுதி செய்துள்ளேன் !! அவை எவையென்பதையும் கிட்டத்தட்ட தீர்மானம் செய்தாகிவிட்டது !! So ஏப்ரல் இதழ்களில் அவை சார்ந்த விளம்பரங்கள் இருந்திடும் !! அதற்கு முன்பாய் - அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks ? Go ahead & try giving it a guess ?///

    ஆப்ரிக்கா (கென்யா) மற்றும் அமெரிக்கா... சரியா சார்.!?



    என்னோட தனிப்பட்ட ஆசை .. கார்ட்டூன், ஆக்ஷன், கி.நா., கௌபாய் கலந்ததொரு கதம்ப ஷ்பெசலே. .!

    ReplyDelete
    Replies
    1. என்னோட தனிப்பட்ட ஆசை .. கார்ட்டூன், ஆக்ஷன், கி.நா., கௌபாய் கலந்ததொரு கதம்ப ஷ்பெசலே. .!

      Delete
    2. என்னோட தனிப்பட்ட ஆசை .. கார்ட்டூன், ஆக்ஷன், கி.நா., கௌபாய் கலந்ததொரு கதம்ப ஷ்பெசலே. .!

      Delete
  22. தோர்கல்: தோர்கலின் வெற்றி அதிசயமொன்றும் இல்லை. நல்லதை செய்யும் வலுவான ஹீரோக்களின் ஆக்சன் அட்வெஞ்சர்களுக்கு என்றுமே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. சொல்லப்போனால் டெக்ஸின் கதைகள் கூட மிகுபுனைவுக் கதைகளே. களம் மட்டுமே வேறு. சிறு வயதிலுருந்தே அம்புலிமாமா பால மித்ரா படித்த நமக்கு தோர்கல் பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம். கண்டிப்பாக இந்த வகையான கதைகளில் உங்கள் தேடல் இருக்கட்டும். உங்கள் வலையில் மாட்டும் கெளுத்தியான மீன்களை சுவைக்க காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. ஷெரீஃப் அற்புதம். செம்ம கருத்து

      Delete
    2. உண்மை தான் மகேந்திரன்.

      Delete

  23. MI5.
    MI6
    டார்ஜ் புரோட்டகால்.
    CB கார்பைன் ரக துப்பாக்கி
    UGL கையெறி குண்டுகள்.
    SAS (Special Air service)
    SBS (Special Boat Service)
    MIT (துருக்கிய உளவுத்துறை)
    'அவசர கால ரிசர்வ் படை '
    யூபெர்டி1873 கெட்டில்மேன் ரிவால்வர்
    (சுடும்போது வலதுபக்கமாக இழுத்துவிடும். உஷார்.)

    இப்படி நம் அறிவை உலகம் தழுவி விசாலப்படுத்தும் விசயங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு ' யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..!

    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..! //

      சங்கத்துக்கு ஆஸ்தான வக்கீல் சிக்கிட்டாரு விஜய்.

      Delete
    2. ///காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு ' யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..!///

      கீ...கீ...கீ...:-)

      Delete
    3. ///காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு ' யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..!///

      ஆனாலும் குழந்தைங்களுக்கு இம்புட்டு கோவம் வரப்படாது!!

      Delete
    4. // காமிக்ஸை 'குழந்தைப்புள்ள சமாச்சாரம்னு யாராச்சும் சொன்னாக்கா அவதூறு வழக்கே போடலாம்னு இருக்கேன்..! //
      இதுக்கெல்லாம் விசாரணை தேவையா? நல்ல புளிய மரமா பார்த்து...

      Delete
    5. ...புத்திமதி சொல்லி திருத்தலாம்னு சொல்றீங்க..!

      Delete
  24. 1.மந்திரராணி மற்றும் தங்க நகரம் இதழ்களில் சாகசம் புரிந்த சாம்சன் fantasy கதைகளை வெளியிடலாம்.இக்கதைகளும் வரையப்பட்ட சித்திரங்களும் மிகச் சிறப்பாக இருந்தன.
    2.பராகுடா போன்ற கடற்கொள்ளையர்கள் சார்ந்த கதைகளை வெளியிடவேண்டுகின்றேன்.

    ReplyDelete
  25. பராகூடா: நமது வாசிப்பினை வேறு தளத்திற்கு கொண்டு சென்ற கதைகளில் இதுவும் ஒன்று. சொல்லப் போனால் வேறு வடிவங்களில் படித்திருந்த போதும் தரமான மொழிபெயர்ப்பில் புத்தகமாக வாசிக்கும் சுகமே அலாதி. எத்தனை தடவை மறுவாசிப்புக்கு உள்ளாகப் போகும் என்று சொல்ல இயலாது.

    இது மாதிரிக் கதைகள் வேண்டுமா என்று கேட்டால் வேண்டாம்னா சொல்லப் போறோம். கண்டிப்பாக வேண்டும். விறுவிறுப்பான சிறந்த கதைகளை எங்களுக்கு கொண்டு வாருங்கள்.

    ReplyDelete
  26. ஃபேன்டஸி, பைரேட்ஸ், பாண்ட், ஜானி எல்லாமே தொடரலாம் சார்!!! டபுள் தம்ப்ஸ் அப்!!! ஜெரமையா முதல் இதழை விட இரண்டாவது இதழ் நன்றாக இருந்தது. முடிவிலா மூடுபனி 7/10. பிடித்திருந்தது.

    மேக் & ஜாக் அவ்வளவாக பிடிக்கவில்லை.

    ஈரோடு ஸ்பெஷல்
    1. கென்யா
    2. நமீபியா

    க்ரீன் மேனர் டைப் கார்ட்டூனிற்கும், கிராஃபிக் நாவலுக்கும் வெய்ட்டிங்.

    ReplyDelete
  27. சென்ற மாத ஓட்டப்பந்தயத்தில் தல சற்று சறுக்கியது என்னவோ உண்மைதான் (கதை ஓகேதான்) ஆனால், இந்த மாதம் அவர்தான் முன்னனியில் நிற்கிறார். அதே போல முடிவிலா மூடுபனி வித்தியாசமான கதைக்களம். கதையும்,காட்சியமைப்புகளும் பிரமாதம். இது போன்ற வித்தியாசமான கதைகள் வருடத்திற்கு இரண்டு,முன்று முடிந்தால் ஒரு ஸ்பெஷல் ஆல்பமாக வெளிவருவது சிறப்பாக இருக்கும். கமான்சே & டைகர் போன்ற நாயகர்களின் எஞ்சிய தொடர்களையும் போட்டு முடிக்கலாம். சிங்கிள் ஆல்பமாக இல்லாமல் நெவெர் பிபோர் ஸ்பெஷல் போன்ற இதழ்களைப் போன்று இவரைப் போன்று வாய்ப்பு மறுக்கப்பட்ட நாயகர்களை களம் இறக்கி விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. Nopes..."வாய்ப்பு மறுக்கப்பட்டோர் சங்கம்" ஒன்றிணைய படிப்பாளிகள் நாம் மனது வைத்தாலும், படைப்பாளிகள் வாய்ப்புத் தர மாட்டார்களே சார் ! NEVER BEFORE SPECIAL என்பது NEVER AGAIN too !!

      Delete
  28. மாயாஜால கதைகள் ...

    தோர்கல் கொஞ்சம் கொஞ்சமாக மிக உயரத்தில் சென்று கொண்டிருப்பது உண்மையே ..இதே போல மற்ற மாயாஜால கதைகளும் மனதை ஈர்க்குமா என சொல்ல தெரியவில்லை சார்...இதில் எனது கருத்து 50 : 50 மட்டுமே..

    அதாவது " மதில் மேல் செயலரு"

    ***************

    கடற் கொள்ளை சாகஸங்கள் :

    இது போன்ற ஆக்‌ஷன் அதுவும் இதுவரை அதிகம் காணாத இது போன்ற கடற் சாகஸங்கள் ஏமாற்றாது என்றே நினைக்க தோன்றுகிறது .எனவே மேலும் பராகுடா போல் சிறந்த கடற் சாகஸங்கள் இருப்பின் தாராளமாக தொடரலாம் .

    ****************

    ஜானி 2.0 :

    காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் :

    கண்டிப்பாக வெளியிடலாம் சார்...கார்ட்டூன் பாணியில் ஆக்‌ஷன் கதைகள் இருந்தால் தான் ரசிக்க தோன்றாது .ஆனால் ஆக்‌ஷன் கதையில் காமெடி கலந்து வரும்பொழுது இன்னும் அதிகமாகவே ரசிக்கலாம்..சூப்பர்ஸ்டாரே ஆக்‌ஷனோடு காமெடியும் கலந்து நடித்தவுடன் தானே பொரும்பாலானோரை தன்வசம் இழுத்தார் எனவே கண்டிப்பாக கொண்டு வாருங்கள் .அதே சமயம் பழைய ஜானி கதையும் என்னை பொறுத்தவரை சிறப்பே...அந்த பாணியையும் மறக்க வேண்டாம் .அதாவது இரண்டுமே டபுள் ஓகே சார்..

    ReplyDelete
    Replies
    1. ///அதாவது " மதில் மேல் செயலரு"////

      ஹா ஹா ஹா! :)))))))))

      Delete
    2. //சூப்பர்ஸ்டாரே ஆக்‌ஷனோடு காமெடியும் கலந்து நடித்தவுடன் தானே பொரும்பாலானோரை தன்வசம் இழுத்தார்//

      ஸ்ட்ரெய்ட்டா தலைவரையே ஒப்பீடுக்கு இழுப்பதால் தான் நீங்க தலீவராத் தொடறீங்களோ ?

      Delete
  29. ////டெக்ஸ் வில்லரையே "அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ !!" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் ?////

    அது மாயமோ, மந்திரமோ, பில்லிசூனியமோ இல்லைங் சார்... அட்டைப்படம்!
    'பறக்கும் குதிரை மேல ஒரு கொயந்த உட்கார்ந்துக்கிட்டு ஜம்முனு சவாரி பண்றாமேரி' அட்டைப்படத்தைப் போட்டிருந்தீங்கல்லே? அதான்!
    சாதாரணமாவே எல்லா மனுசனுக்குள்ளும் ஒரு பறக்கும் ஆசை உண்டு! நான்கூட தரையில் காலை உந்தி ஒரு முக்கு முக்கினால் அப்படியே ஜிவ்வுனு மேலெழும்பி வானத்தில் பறக்கிறா மாதிரி தத்ரூபமா கனவு காணுவது உண்டு! லேண்ட் ஆகும்போது கரண்ட் கம்பிகள்ல சிக்கிக்கிடாம இறங்க ரொம்பவே சிரமப்படுவேன்!
    இதுபோல கனவும், ஆசையும் கிட்டத்தட்ட எல்லா மனிதர்களுக்குமே உண்டு என்பதால், அதுமாதிரியான ஒரு அட்டைப் படத்துடன் ஒரு புத்தகத்த பார்த்தவுடன், உள்மன ஆசை உந்தித்தள்ள அதை உடனே வாங்கத் தோனிடுச்சு பலருக்கு! உண்மையில், அதே அட்டைப்படத்தை ஒரு நோட்டுப் புத்தகமாப் போட்டு ஸ்டால்ல வச்சீங்கன்னாக்கூட அத்தனையும் வித்துத் தீர்ந்திருக்கும்!

    உண்மை இப்படியிருக்க, தோர்கல் டெக்ஸை ஓரம் கட்டியதன் மர்மம் என்னன்னு கேட்கிறதெல்லாம் ரொம்ப ஓவருங்க எடிட்டர் சார்!
    விற்பனையில் டெக்ஸை அடிச்சுக்க இனியொருவன் பிறந்து வந்தால் தான் உண்டு!!

    இது நீங்கள் அறியாததல்லவே?

    ReplyDelete
    Replies
    1. ஆமாங் சார்...தாங்கள் அறியாததல்லவே...?

      Delete
    2. சங்கத்துப் பெருந்தகைகார்ஸ் : ஞான் ஜனவரியின் ஒற்றை மாதத்து புக் சேல்ஸ் நம்பர்களை மாத்திரமே மனதில் வைத்து இதனை எழுதிடவில்லை ! ஒட்டுமொத்த சென்னைப் புத்தக விழாவின் விற்பனை + அந்த மாதத்து CINEBOOK ஆங்கில தோர்கல் இதழ்களது விற்பனை என இரண்டையுமே கணக்கில் எடுத்துக் கொண்டுதான் பறைஞ்சூ ! அதன் மையக் காரணத்தைத் தேடி அதிகம் மெனெக்கெடத் தேவையிராதென்றே நினைக்கிறேன் : சென்றாண்டு "கடவுளரின் தேசம்" ஒரு மாஸ் ஹிட்டாகிய நிலையில் இந்த ஜனவரியில் இங்கே நடந்த தோர்கல் அலசல் சுனாமியின் தாக்கம் தான் அந்த விற்பனையில் பிரதிபலித்திருக்க வேண்டும் !!

      மற்றபடிக்கு man to man ; ஹீரோ to ஹீரோ : போட்டியே லேது என்பது நண்பர் கணேஷ் குமாருக்கே தெரிந்த சமாச்சாரம் தானே ? நான் அறியாது போவேனா - என்ன ?

      Delete
    3. மகிழ்ச்சி சார்...:-)

      Delete
  30. தோர்கல் ...டெக்ஸ்...

    ஒரு தடவ பர்ஸ்ட் வர்றது முக்கியமில்ல சார்...ஒவ்வொரு தடவையும் பர்ஸ்ட் வரணும்...

    அது டெக்ஸ் மட்டுமே...!

    ReplyDelete
    Replies
    1. தலீவரே..நேத்திக்கு கேபிள் டி-வி-லே ஏதாச்சும் 'தலைவர்' படம் பாத்தீங்களா ? பன்ச் தெறிக்குதே !!

      Delete
    2. தலைவரே நியாயமா பேசணும். தோர்கல் வருவதே வருடத்தில் ஒரு முறை தானே அப்போ இந்த ஒப்பீடு நியாயம் இல்லயே.

      Delete
    3. ////தலைவரே நியாயமா பேசணும். தோர்கல் வருவதே வருடத்தில் ஒரு முறை தானே அப்போ இந்த ஒப்பீடு நியாயம் இல்லயே.////

      :)))))

      Delete
  31. முடிவில்லா மூடுபனி

    1939! பிரான்சின்... என்று ஆரம்பிக்கும் கதையில் ஒவ்வொரு frame மும் அற்புதம்.

    சரியாக நடந்து இருக்கும் ஒரு விஷயத்தை தவறாக புரிந்து இருக்கும் ஹிரோவின் நினைவுகள் தான் கதையே.

    துடுக்கு மற்றும் மகிழ்ச்சி யோடு அந்த கிராமத்தில் வலம் வரும் ஜெப்ரைன் என்ற இளம் பெண்ணின் கோர மரணம் தான் கதையின் துவக்க புள்ளி.

    "மந்திரி சார்... உங்களை தடுமாறச் செய்துவிட்டேன்! ஸாரி..."என்ற பிரேமில் தடுமாறி கொண்டே சொல்லும் ஜெப்ரைன் பார்த்து மந்திரி தடுமாறியதில் வியப்பு இல்லை.(அவ்வளவு அழகு).

    "கொடிய இரக்கமற்ற பாவிகள்! நிச்சயம் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்!" என்று ஹிரோவை சமாதானம் படுத்தும் ஹிரோவின் மனைவியே கொல்லப்படுவது கதையில் ஒரு திருப்பம்.

    ஜெப்ரைன் கொன்றது யார்?. தன் மனைவியை கொன்ற கொலைகாரனை ஹிரோ என்ன செய்தார் என்பது தான் "முடிவில்லா மூடுபனி"

    "நிஜத்தை சொல்வதானால், என்னுள் இதயமோ: ஒரு ஆன்மாவோ இல்லது போய் காலம் ஏகமாகிவிட்டது!அதனிடத்தில் குடியிருப்பதோ குற்ற உணர்வுகளின் குவியல்!"

    "கல்லறையில் எஞ்சி யிருந்தது நானும், என்னவளும், மாத்திரமே! அன்னியோன்மாய் வாழ்ந்த வளுக்கு விடை தந்து அனுப்பும் போது ஊரே திரண்டு நிற்க வேண்டுமென எதிர்பார்ப்பது அபத்தம் தானோ?.
    ஏகாந்தமான இந்த தனிமையைத் தான் அவளுமே ரசித்திருப்பாள்!"

    மேலும் வயதான பிறகு தன் மனைவியின் கல்லறை முன் "அழகும், இளமையும் உனதாக இருந்த போதே விடைபெற்று போய்விட்டாய்..." என்று அந்த
    பக்கம் முழுவதும் ஹிரோ பேசுவது நெஞ்சை பாரமாக்கி விடும்.

    வலுவான வசனங்கள் கதை நெடுகிலும் வருகிறது.

    சித்திரங்கள் அற்பதம். கதையின் இறுக்கத்தை அப்படியே பிரதிபலிக்கிறது.

    வழக்கமாக ஏதார்த்தமான கதைகளில் குற்றவாளிகள் தப்பி விடுவார்கள். அனால் "முடிவில்லா முடுபனி" யில் அப்படி கிடையாது.

    மேலும் இந்த கதையில் தீடீர் திருப்பங்கள் உண்டு.

    "முடிவில்லா முடுபனி" போன்ற கதைகள் முடிவில்லாமல் வரவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே ரசித்து பேனாவையோ, கீ-போர்டையோ கையாளும் சமயம் பலனாகிடும் வரிகளுக்கு ஒரு ரம்யம் சேர்ந்து கொள்ளும் போலும் !! எழுதும் போது நான் ரசித்ததை விடவும் ஒரு படி மேலே சென்று அலசியுள்ளீர்கள் சார் !

      //சரியாக நடந்து இருக்கும் ஒரு விஷயத்தை தவறாக புரிந்து இருக்கும் ஹிரோவின் நினைவுகள் தான் கதையே.//

      Awesome !!

      Delete
    2. //ஒரு ரம்யம் சேர்ந்து கொள்ளும் போலும் !//
      ஆமாம் சார்.

      Delete
    3. ரசித்து ரசித்துப் படித்திருக்கிறீர்கள் கணேஷ் குமார்!
      மகிழ்ச்சி!

      Delete
  32. அதே ரீதியில் தோர்கலின் வெற்றி - இன்னும் சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா?\\\\

    வான் ஹம்மே வின் மிகச்சிறந்த படைப்பாளி.
    அவர் அளவு இல்லை என்றாலும். அவரைபோன்று 75% கற்பனை திறனுல்ல fantasy கதைகளை தாராளமாக கொண்டு வரலாம்.

    ReplyDelete
  33. இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு "ஜே" போடுவீர்களா folks ? \\\

    நாமளும் எவ்வளவு நாள் தான் தொடர்ந்து பாலைவனத்தில் குதிரை ஓட்றது?.

    ஒரு மாறுதலுக்கு கடல்ல கப்பல் ஓட்டுவோமே.

    ReplyDelete
    Replies
    1. //நாமளும் எவ்வளவு நாள் தான் தொடர்ந்து பாலைவனத்தில் குதிரை ஓட்றது?.//

      உங்களுக்கு அந்த மேரி சிரமம்லாம் வேணாங்கிறதுக்கோசரம் தான் இந்த மாசத்தில் பாலைவனத்துக்கே கப்பலைக் கொண்டு வந்துட்டோம்லே சார் ?

      Delete
    2. அந்த கப்பல் தான் ஓடவே இல்லையே. ஓரே இடத்தில் நீக்குது.

      Delete
    3. நிக்குற கப்பலுக்கே இம்மாதம் ஆர்ப்பரிக்கும் முதலிடமென்றால்....?

      Delete
    4. இருக்கலாம்.

      ஆனால் எனக்கு குதிரைல போறதே பிடிக்காது.
      நீங்கள் பழமையான குதிரை பதில விமானம் முயற்சிக்க கூடாது.

      Delete
  34. முடிவில்லா மூடுபனி:

    1. போலீஸ்காரரின் மனைவியை கொன்றதும் ஜெப்ரைனை கொன்றதும் ஒரே ஆளா? வேறு நபர் எனில் தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்?

    2. போலீஸார் எப்படி உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்தார்கள் அதனை ஏன் நமது நாயகரிடன் சொல்லாமல் விட்டார்கள்? அவரை ஏன் அவசர அவசரமாக வேலையை விட்டு நீக்க காரணம் என்ன?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக்கு பதில் கூறினால், இன்னும் படிக்காதவர்கள் கதையின் முடிவு தெரிந்து விடும் அபாயம் உள்ளது.

      Delete
    2. 1. போலீஸ்காரரின் மனைவியை கொன்றதும் ஜெப்ரைனை கொன்றதும் ஒரே ஆளா? வேறு நபர் எனில் தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்?

      ######

      ஆஹா...பெங்களூர் பரணியே கண்டுபிடிக்க முடியா ஒரு பாயிண்ட்டை நாம ஒரே தடவைல படிச்சு கண்டுபிடிச்சுட்டமே...உடனே பதில் சொல்ல ஆசைபட்டாலும் " செயின் " மாதிரி கோர்வையாய் எல்லோரும் சொல்ல வேண்டாம்னு சொல்றதால

      கம்முன்னு போறேன்..:-(

      Delete
    3. ///தனது மனைவியை கொன்றவனை எப்படி கண்டுபிடித்தார்?////

      அவர் கடைசி வரை எதையுமே கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை! கடைசியில் அந்தக் கடுதாசி கூட எதேட்சையாய் அவர் கையில் கிடைத்தது தான்!!

      பதினெட்டு வருசமா ஒரே ஒரு கேஸை மட்டும் புலனாய்வு பண்ணி, எதையுமே கண்டுபிடிக்காமப் போன ஒரே போலீஸ்காரர் இவராத்தான் இருப்பார்!
      வடிவேலு காமெடிதான் ஞாபகத்துக்கு வருகிறது "ஏன்டா.. மூனு மணி நேரமா நெருப்புக்குள்ளயே கிடந்தும் வெடிக்காம இருந்திருக்கே.. இதுக்குப்பேர் தான் வெடிகுண்டா?"

      Delete
    4. செயலரே...:-))))

      ஆனால் தங்களின் அந்த முதல் வினாவிற்கு அதாவது அவர் மனைவியை கொன்றனை கண்டுபிடித்தது உண்மை...

      கிராபிக் நாவல்ல எல்லாம் கூர்ந்து சித்திரத்தை கவனித்து படிக்க வேண்டும் செயலரே...

      என்னமோ போங்க....இங்கே சொல்ல கூடாதுன்னு சொன்னதால திரும்ப கம்முன்னு போறேன்..

      என்ன கிராபிக் நாவல் படிக்கிறீங்க...உம்..

      Delete
  35. முடிவில்லா மூடுபனி: நீண்ட இடைவெளிக்கு பிறகு அற்புதமான பென்சிலினால் தீட்டப்பட்ட ஓவியம். இயற்கை முதல் மனிதர்கள் அனைவரின் முகபாவனை மற்றும் வசனங்கள் இல்லாமல் ஓவியமே கதை சொன்ன இடங்கள் பல. முடிவில்லாத மூடுபனி ஓவியத்தால் என்னை வசீகரித்த பனி

    ReplyDelete

  36. **ஜேம்ஸ் பாண்டின் அதிரடி இன்னொரு லெவெலுக்குச் செல்லும் இந்த பாணி புதிதாய் இருந்தவரையிலும் ஓ.கே ! ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ ? என்ற கேள்வி

    !!

    பதில் தொடரட்டும்


    **அப்புறம் ஹெர்லாக் ஷோம்ஸ் மறுபதிப்பிலும் identical கேள்வி !! முதல் வண்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று !!

    கண்டிப்பா ஐ லவ் ஷெர்லாக் uncle

    **Last but not the least : "முடிவிலா மூடுபனி" கி,நா.வை எவ்விதம் வரவேற்பீர்களோ என்ற கேள்வியுமே !!

    எப்போதோ ஒரு முறை என்றால் சரி

    கி நா மீண்டும் படிப்பதே இல்லை...படிக்க தோன்றுவதும் இல்லை
    One shot reading மட்டுமே....

    மேக் ஜாக் சுமார் ரகம் ....

    ReplyDelete
    Replies
    1. கார்ட்டூன்களை எடை போட நாம் பயன்படுத்திடும் அளவுகோல்களைத் தான் என்னால் இன்னமும் புரிந்தே கொள்ள முடீலை மந்திரியாரே !!

      Delete
  37. // இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு "ஜே" போடுவீர்களா folks ? //

    முயற்சிக்கலாம் சார் தவறில்லை.

    // "புது ஜானியின்" கதை # 1 இடம்பிடித்திடும் தொடரும் ஆண்டுக்கு !! //

    ஜானி புதிய வெர்ஷனை விட பழைய ஜானியே சிறப்புன்னு தோணுது,வேண்டுமெனில் புதியதில் ஒன்று,பழையதில் ஒன்று என கலந்து வெளியிடலாம்.

    // ஜேம்ஸ் பாண்டின் அதிரடி இன்னொரு லெவெலுக்குச் செல்லும் இந்த பாணி புதிதாய் இருந்தவரையிலும் ஓ.கே ! ஆனால் இரண்டாவது ஆல்பம் என்ற பிற்பாடு அந்த novelty factor இருக்க வாய்ப்பில்லையெனும் போது உங்களது reactions எவ்விதமிருக்குமோ ? என்ற கேள்வி !! //

    இன்னும் படிக்கலை.


    // அப்புறம் ஹெர்லாக் ஷோம்ஸ் மறுபதிப்பிலும் identical கேள்வி !! முதல் வண்ண இதழில் பரிச்சயம் ஏற்பட்ட பிற்பாடு - ஆல்பம் # 2 வெற்றியினைத் தொடருமாவென்று !!//

    ஹெர்லாக் ஹோம்ஸ் சுவராஸ்யமாகவே உள்ளது,தெளிவான கதையோட்டம்,ஹாஸ்யமான வசனங்கள் இன்னும் சுவையைக் கூட்டுகின்றன,ஹெர்லாக் வரவேற்புக்குரியவர்.


    //Last but not the least : "முடிவிலா மூடுபனி" கி,நா.வை எவ்விதம் வரவேற்பீர்களோ என்ற கேள்வியுமே !!//

    படிக்க ஓகேதான் சார்,ஆஹா,ஓஹோன்னு இல்லேன்னாலும்,மோசம்னு சொல்லிட முடியாது,கதை எளிய கவிதை பாணியில் செல்கிறது,எனினும் சென்ற ஆண்டு வெளியான கி.நா க்களின் ஆழமான ஒரு பாதிப்பு இதில் மிஸ்ஸிங் தான் சார்.

    ReplyDelete
    Replies
    1. //சென்ற ஆண்டு வெளியான கி.நா க்களின் ஆழமான ஒரு பாதிப்பு இதில் மிஸ்ஸிங் தான்//

      True !!

      Delete
    2. எனக்கு என்னவோ இதுவரை வந்த கி.நா வில் மு.முடுபனி தான் சிறப்பாக தோன்றியது.

      ஒருவேளை குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து விட்டதால் இருக்குமோ?

      Delete
  38. சில fantasy நாயகர்களின் வருகைக்கு அறிகுறியா ? தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை ? அல்லது "பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா !!" என்பீர்களா ?


    போதும்.. இத்தோடு நிறுத்திக்குவோம்..

    ReplyDelete
  39. கொண்டு வாடிக்கையான வேலைகளைப் பார்த்திடலாம் என்பீர்களா ? அல்லது - இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு "ஜே" போடுவீர்களா folk ///


    // 🤗🤩😜 ஜே.

    ReplyDelete
  40. 1. கடற்கொள்ளையர்களுக்கு ஜே போட நான் ரெடி...

    2. ஜானியை பொறுத்த வரையில், அவருடைய பழைய இடியாப்ப பாணி க்ரைம் திரில்லர்களின் ரசிகன் நான். 2.0-வில் வந்துள்ள கதையிலும் மனிதர் ஆங்காங்கே சஸ்பென்ஸ் முடிச்சுகளை வைத்தே முன்னேறி சென்றார். இன்னொரு வாய்ப்பு கொடுத்து, காமெடி-க்ரைம் எப்படி என்று பார்ப்போம்.

    3. மேக் & ஜாக் லக்கிலூக் அளவிற்கு இன்னும் மனதில் வேரூன்றவில்லை. நடனமாடும் கொரில்லாக்களை நன்றாகவே இரசித்திருந்தாலும், 2 ஸ்லாட்களை யோசித்து முடிவு செய்யுங்கள் ஆசிரியரே.

    4. ஜெரமியா பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. ஹெர்மான் போன்ற ஜாம்பவானின் கைவண்ணமாக இருந்தாலும், கதை வேகமாக நகரவில்லை என்பதை ஏற்க வேண்டும்.

    5. ஜேம்ஸ்பாண்ட், அதிரடி ஜேம்ஸ்பாண்ட் ஆக சாகஸம் செய்வதை நிரம்பவும் இரசிக்கிறேன். தொடரட்டம் அதிரடி பாண்ட்... 2.0

    6. ஹெர்லாக் ஷோம்ஸ் இன்னமும் படிக்கவில்லை... படித்த பின்னர் பதிவிட வருகிறேன்.

    7. முடிவிலா மூடுபனி சஸ்பென்ஸாக செல்லும் கதை. கடைசி 3-4 பக்கங்களில் உண்மையான கொலைகாரன் யார் என்று கண்டுபிடிக்கிறார் போலீஸ்காரர். மிகவும் மிதமான வேகத்தில் நகரும் கதையை, அங்கே ஒன்றி உறவாடும் சஸ்பென்ஸ் மட்டுமே நகர்த்தி செல்கிறது. தொடருங்கள்...

    8. தோர்கலைத் தொடர்ந்து fantasy-நாயகர்களை களமிறக்கினால் கண்டிப்பாக வாங்குவேன்.

    ReplyDelete
    Replies
    1. //ஜானியை பொறுத்த வரையில், அவருடைய பழைய இடியாப்ப பாணி க்ரைம் திரில்லர்களின் ரசிகன் நான்.//

      Old என்றைக்குமே நமது அகராதியினில் gold தான் போலும் !!

      Delete
    2. ஒவ்வொரு நாயகனுக்கும் ஒரு ஸ்பெஷல் உண்டு ஜானிக்கு இடியாப்பம். புதிய ஜானி அவதாரக் கதைகள் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ரிப் கெர்பி மற்றும் காரிகன் போல் இருக்கும் என தெரிகிறது 😁😂😂😂

      Delete
  41. "அலைகடல்"... More of an art revolution than the story...

    ReplyDelete
    Replies
    1. True sir ; கதை vs ஆர்ட்ஒர்க் என்ற போட்டியினை வைத்தால் - பின்னதே கெலிக்கும் அலைக்கடலின் அசுரர்களில் !!

      Delete
  42. க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா ? என்பதே !! Yes என்றால் 2020 -//


    New john is boring..

    ReplyDelete
  43. ஆசிரியருக்கு முதல் கேள்வி --- புனித பள்ளத்தாக்கு டெக்ஸ் புக் கடைகளிலும் கிடைக்கும் தானே ?

    எனக்காக ஒவ்வொரு மாதமும் கோவை பாரதி புக் ஸ்டோரில் லயன், முத்து, ஜம்போ, கிராபிக் எடுத்து தனியாக வைத்து விடுவார்கள். எப்பொழுது கோவை போக முடியுமோ அப்பொழுது சென்று அனைத்தையும் அள்ளி கொண்டு வருவது வழக்கம்.

    அப்படி இந்த மாதம் சென்ற போது, டிசம்பர், ஜனவரி, மற்றும் பெப்ரவரி மாத இதழ்களை கொண்டு வந்து இருக்கிறேன்.

    பழையது புதியது என்று அவ்வப்பொழுது ஆளே இல்லா டீ கடைகளில் டி போடுவது போல நான் பழைய இதழ்களை பற்றி ஒரு வரி விமர்சனம் செய்து கொண்டு இருந்தேன். நான் என்னிடம் இருந்த அணைத்து லயன் முத்து கதைகளை படித்து முடித்து இங்கே விமர்சித்தும் விட்டேன். இப்பொழுது மேத்தா / அசோக் காமிக்ஸ் பக்கம் போய் விட்டேன். ஒன்று மட்டும் சொல்லி கொள்கிறேன். ஜான் ஸ்டீல் சாகசங்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. லயன் முத்துவின் ஒரு இரு முறை மட்டுமே ஜான் ஸ்டீல் கதைகள் வந்து இருந்தது.


    டிசம்பர்: கனவெல்லாம் கலீபா --- எப்பொழுதும் போலவே பட்டாசாக இருந்தது ஒவ்வொரு கதையும்.
    நான் மோடி மஸ்தானின் பரம விசிறி. ஆனால், இனி மந்திரியை எப்பொழுது சந்திப்போம் என்று தெரியவில்லை.

    ஜனவரி :
    சாத்தானின் சீடர்கள் - 50 பக்கங்கள் தான் படித்து இருக்கிறேன். இது வரை நன்றாக தான் போய் கொண்டு இருக்கிறது. முடிந்தால் தான் ஆசிரியர் சொல்வது போல் மொக்கையா என்று தெரிய வரும்.

    தோர்கல் - இன்னும் படிக்கவில்லை. சேவிங் இட் போர் தி லாஸ்ட்

    பெப்ரவரி:
    நடனமாடும் கொரில்லாக்கள் - ஹாஹாஹாஹாஹா ஒரே சிரிப்பு மழை. இ லவ் இட். இது வருடம் ஒரு முறை வருவது தான் நல்லது. நம்ம கார்ட்டூன் ரசிகர்களை பற்றி தான் தெரியுமே.. எல்லாவற்றையும் காலை வாரி விட்டு விடுவார்கள். (என்னையும் சேர்த்து தான்)

    ஜானி 2 . ௦ - இந்த வெர்சன் நன்றாக புரிகிறது. சித்திரங்கள் அந்த அளவு இல்லை என்றாலும் சோடை போக வில்லை. பழைய ஜானி கதைகள் புரிவதற்கு ரொம்ப சிரம பட வேண்டி இருக்கும். ஒரு 2 அல்லது 3 முறை படித்தால் தான் புரியும். நடுவில் பல பக்கங்களை காணம் என்பது போல் இருக்கும். ஆனால் சித்திரங்கள் அருமையாக இருக்கும். Version 2 .௦ ராக்ஸ்.



    ஜெரேமியா 2 - முதல் கதையே தொண்டையில் சிக்கிய பெரிய மாத்திரை போல் கஷ்ட பட்டு முழுங்க வேண்டி இருந்தது. ஜெரேமியா 2 நிறைய பேருக்கு இது பிடிக்கவில்லை என்று அறிந்ததால், இதை நான் வாங்கவில்லை.

    மார்ச் - அடுத்த மாதம் போனால் தான் கொண்டு வர முடியும்.

    ஆசிரியர் கேள்வி

    1. ஈரோடு ஸ்பெஷல் - பிரிட்டிஷ் crime அண்ட் கென்யா ??
    2. காமடி + ஆக்ஷன் - ஓகே
    3. கனமான களம் - எனக்கு நிஜங்கள் நிசப்தம் என்னவோ ஒரு இனம் புரியா கனமான அனுபவம் குடுத்தது. ஆனால் நிறைய பேர் தூக்கம் வருகிறது என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். படிக்காதவர்கள் கொஞ்சம் பொறுமையாக ஒரு 60 பக்கங்கள் தாண்டி விட்டீர்கள் என்றால்,அதுக்கு அப்புறம் கதை உங்களை ஆக்ரமித்து கொள்ளும், சமீபத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை தூக்கி கொண்டாடுபவர்கள், அப்பொழுது வந்த போது அங்கீகரிக்கவில்லை. இந்த நாவலும் அது போல தான்.

    கம்மியான பிரதிகளை பதியுங்கள், நிஜத்தின் நிசப்தம் எனக்கு சேலம் விஜய் ராகவன் புண்ணியத்தில் கிடைத்தது ஏனென்றால் வந்த மாதம் முடிவதற்குள்ளே விற்று தீர்ந்து விட்டது.

    ReplyDelete
    Replies
    1. //ஜெரேமியா 2 நிறைய பேருக்கு இது பிடிக்கவில்லை என்று அறிந்ததால், இதை நான் வாங்கவில்லை. //

      //நிஜத்தின் நிசப்தம் : வந்த மாதம் முடிவதற்குள்ளே விற்று தீர்ந்து விட்டது.//

      Two sides of the coin !! இங்கே அரங்கேறும் அலசல்களும், ஆராய்வுகளும் விற்பனையில் பிரதிபலிப்பதன் யதார்த்த முகம் !!

      Delete
  44. போராட்டக்குழு தலீவருக்கு வேளை வந்தாச்சு

    ReplyDelete
    Replies
    1. அவர் போர்வைக்குள் புகுந்து ரொம்ப நாழியாச்சு நண்பரே !!

      Delete
  45. 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா ? அல்லது "ஒன்றே நன்று !" என்பீர்களா ?


    ஒன்றுக்கு மேல் வேண்டவே வேண்டாம் ஐயா ....

    ReplyDelete
  46. டெக்ஸ்கு இரண்டாவது இடமா, ம்ஊகும் நான் ஒத்துக்க மாட்டேன்

    ReplyDelete
    Replies
    1. இரண்டாவது கிடையாது. ஜனவரியில் மூன்றாவது இடம்.

      Delete
    2. ஆமாம் நல்லவேளை ஜனவரியில் நான்கு புத்தகங்களாக வரவில்லை வந்தால் நான்காவது இடத்தை டெக்ஸுக்கே கிடைத்து இருக்கும். :-)

      Delete
  47. ஜேம்ஸ் பாண்ட் நேற்று தான் படித்தேன். ஒரு hollywood படம் பார்த்த மாதிரி இருந்தது

    ReplyDelete
  48. முத்துவின் 421 இதழின் பெயர் என்ன?

    ReplyDelete
    Replies
    1. அந்தளவுக்கெல்லாம் நமக்கு ஞா.ச.கிடையாது சார் ; ஆபீசுக்குப் போய்ப் பார்த்தால் தான் தெரியும் !!

      Delete
  49. பாலைவனத்தில் ஒரு கப்பல்.

    அய்யா..! டெக்ஸூ இத்தினி நாளா எங்கைய்யா போனீரு..? உம்மை இப்பிடி பாத்து எத்த்தனை நாளாச்சி.?இதுமாரிதான்தான்யா நாங்க எதிர்பாக்குறோம்..!

    ReplyDelete
  50. JAMES BOND.... எப்ப முடியும் ?😓

    ReplyDelete
    Replies
    1. கடைசி பக்கம் வந்தவுன சார்...:-)

      Delete
    2. தலீவரே .....


      அடேங்கப்பா ...!! ;-)))

      Delete
  51. Herlock.... sss..appappa.. முடியல..

    ReplyDelete
  52. Paraguda is the No.1 as far as 2019 is concerned

    ReplyDelete
  53. R.Giri Narayanan. Sir, for erode book fair: my guess is 1. either America or Kenya. 2. Tex vs Mefisto.

    ReplyDelete
  54. வேலைப் பளு காரணமாக ஜனவரி,பிப்ரவரி இதழ்களை இன்னும் தரிசிக்கவில்லை,ஆதலால் விமர்சனமும் பதிவிட இயலவில்லை,மார்ச் இதழ்களில் பாண்டின் ஆக்‌ஷன்+ரொமான்ஸ் மட்டும் இன்னும் கிட்டலை,
    மார்ச்சின் டெக்ஸ்,கி.நா,ஹெர்லக் எல்லாம் முடிச்சாச்சி.
    இதுவரை நண்பர்கள் மூலம் கேட்டது,பார்த்தது,படிச்சது எல்லாம் கணக்கு போட்டா
    ஜனவரியில்,
    பராகுடா,தோர்கல் சூப்பர்,டெக்ஸ் ஓகே.
    பிப்ரவரியில்,
    ஜானி,மேக் & ஜாக் கலக்கல்,டெக்ஸ் ஓகே.
    மார்ச்சில்,
    டெக்ஸ்,ஹெர்லக் சூப்பர்,கி.நா ஓகே,ஜேம்ஸ் இனிதான்.
    --------------
    மார்ச்சின் மினி விமர்சனம்,
    1.முடிவிலா மூடுபனி (கி.நா)- வாழ்வைப் பொறுத்தவரை சரி,தவறு என்று எதையும் வரையறுக்க முடியாது. -ஓஷோ.
    இதுதான் இக்கதையின் அடிநாதம் என்று எனக்க்கு தோன்றுகிறது,கால ஓட்டத்தில் சரி என்பது தவறாக தோன்றினாலும்,தவறு என்பது சரியாக தோன்றினாலும் இறுதியில் மிஞ்சுவது குற்ற உணர்வு மட்டுமே,முடிவிலா மூடுபனி “ஜெப்ரைன்” என்ற பெயரில் ஒரு கவிதை.
    ”மரணம் தட்டாத கதவுதான் ஏது இந்தப் பூமியில்” வசனங்கள் நச் கதையை தாங்கிச் செல்கின்றன.
    எனது ரேட்டிங்-9/10
    2.பாலைவனத்தில் ஒரு கப்பல்-டெக்ஸின் நிறைவான ஒரு சாகசம்,ஆக்‌ஷன்,கார்ஸன் மற்றும் டெக்ஸிற்கு இடையேயான ஹாஸ்ய உரையாடல்கள்,கொஞ்சம் அமானுஷ்யம்,த்ரில் போன்றவைகள் சரியான கலவையில் கலந்து கொடுக்கப்பட்டுள்ளன,விறுவிறுப்பான ஒரு முழு நீள முழு நிறைவான சாகஸம்.
    எனது ரேட்டிங்-9.5/10.

    3.ஹெர்லக் ஹோம்ஸ்-
    இரு கதைகளுமே நிறைவு,நீண்ட வருடங்களுக்குப் பின் இவற்றை வண்ணத்தில் காண்பதே ஒரு அலாதியான ஒரு அனுபவம்,
    எழுந்து வந்த எலும்புக் கூடு - பேசும் மரக்கட்டை,ஆடு,வீனஸ் தேவதை ஹெர்லக்கின் உருவ மாற்றங்கள் வியப்பையும்,புன்னகையையும் வரவழைக்கின்றன.
    விற்பனைக்கு ஒரு பேய் - சதுரத் தலையன்,பளிங்குத் தலையன்,இறுதியில் கொள்ளுத் தாத்தா ஆங்கஸ் பாஸ்கர்வில் உருவத்தில் கும்பலாய் எல்லோரும் திரிவது நம்மைத் தலையை சுற்ற வைக்கும் காமெடி,ஹாஸ்யமான வசன பாணிகள் கதையை நன்கு ரசிக்க வைக்கின்றன...
    எனது ரேட்டிங் - 9.5-10

    ReplyDelete
    Replies
    1. முடிவிலா மூடுபனியின் வரிகளை ஆங்காங்கே நண்பர்கள் பாராட்டும் போது சொல்லத் தோன்றுவது ஒன்றேயொன்று தான் சார் :

      ஒரு கதையின் மூட் தான் அங்கே நான் பயன்படுத்திட நேரும் வரிகளின் வீரியத்தைத் தீர்மானக்கின்றது !! கதாசிரியரும், ஓவியருமாய்ச் சேர்ந்து ஒரு மெலிதான கதையைக் கவித்துவமாய் நகற்றிச் செல்வதைப் பார்த்த போது - 'பக்கத்துக்குப் பக்கம் போட்டி போட்டுக் கொண்டு படைப்பாளிகள் விளாசுகிறார்களே ; நமக்கு தலைநுழைக்க தம்மாத்துண்டு opening ஆச்சும் கிடைத்தால் சூப்பராக இருக்குமே !!" என்ற ஆதங்கம் ! வரிகளைக் கூர்தீட்டுவது மட்டுமே எனக்கான வாய்ப்பெனும் போது - "அதையாச்சும் கோட்டைவிட்டுப்புடாதேடா கைப்புள்ளே !!" என்று தான் தோன்றியது ! Credit in full goes to the creators for the noir mood they created all through !!

      Delete
    2. மரணம் தட்டாத கதவுதான் ஏது இந்தப் பூமியில்” வசனங்கள் நச் கதையை தாங்கிச் செல்கின்றன.///

      அருமை.

      Delete
    3. அதே போல,கி.நாவும் சரி,ஹெர்லக்கும் சரி,டெக்ஸும் சரி வசனங்கள் இக்கதைகளுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது,கி.நாவைப் பொறுத்தவரை இன்னும் கூட விரிவாக அலசலாம்,சிலாகிக்கலாம்,ஆழமான கதைகருவில் கதை சற்றே சறுக்கினாலும்,வசனங்கள் தூண்களாய் தாங்கி நிற்கின்றன சார்.
      ஆண்டில் முதல் குவார்ட்டரை பொறுத்த மட்டில் நிறைவாக சென்றுள்ளது சார்,அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை.

      Delete
    4. மேலும் ஹெர்லக்கின் இரண்டாம் கதையில் ஆங்காங்கே சில எழுத்து பிழைகள் தட்டுப்படுவது உறுத்துகிறது,இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி தவிர்த்தல் நலம் சார்.
      டெக்ஸின் கதையில் சில இடங்களில் கார்ஸன் ஸ்மர்ப் பாணியில் பேசும் வசனங்களையும் தவிர்க்கலாம் என்பது எனது எண்ணம்,கதையின் ஓட்டத்தில் இவை ஒரு தடைக் கல்லாகவே தோன்றுகிறது.

      Delete
    5. ஆண்டில் முதல் குவார்ட்டரை பொறுத்த மட்டில் நிறைவாக சென்றுள்ளது சார்,அதில் மாற்றுக் கருத்து ஏதுமில்லை

      ######

      வழிமொழிகிறேன்..

      Delete
  55. My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா ? என்பதே !! Yes என்றால் 2020 -ன் அட்டவணையில் இது இடம் பிடித்திடும் ! /////

    எனக்கு இரண்டு வகையான ஜானி காமிக்ஸ் பிடித்துள்ளது.
    அதில் ஒன்று இதில் ஒன்று என்று வரலாம்.

    ReplyDelete
    Replies
    1. உள்ள சீட்கள் சுருக்கமே சார் !! ஒற்றைத் தொகுதிக்கு மேல் ஒதுக்க வழி நஹியாச்சே ?

      Delete
  56. இங்கே பிடிக்கவில்லை என்பதை உடனே செல்வது பலர் அதனை படிக்காமல் விட்டுவிட மற்றும் அதனை வாங்காமல் செல்ல இதனைவிட சிறந்த உதாரணம் தேவையில்லை நண்பர்களே.

    பிடிக்காத கதைகளில் உள்ள குறையை இதமாக சுட்டி காட்டுங்கள். சில நேரங்களில் ஆசிரியர் இதுபோன்ற கதைகள் தொடரலாமா வேண்டாமா என கேட்கும் போது yes or no சொல்லலாம்.

    விஜயன் சார், சில கதைகளை தொடரலாமா வேண்டாமா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்லாட் கொடுக்கலாமா போன்ற கேள்விகளை ஆறு மாதத்திற்கு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை வைத்துக் கொள்ளலாமே? (இந்த பதிவு போன்று). ஆனால் புத்தகங்கள் வெளிவந்த மாதமோ அல்லது தொடரும் மாதங்களிலோ இது போன்ற opinion pool வேண்டாமே.

    ReplyDelete
    Replies
    1. காரணமில்லாதில்லை சார் எனது கேள்விகளுக்கு ! சீக்கிரமே புரியும்...!

      Delete

  57. ஜேம்ஸ் பாண்ட்..!

    கதை சொல்லும் ஓவியங்கள்..!

    பக்கம் 20 ல் காரும்.,வீடும், மரமும் மூன்று ப்ரேம்களில் அப்படியே இருக்க, முதல் ப்ரேமில் பாண்ட் காரின் மேலிருந்து, அடுத்த ப்ரேமில் காற்றில் தாவி, கடைசி ப்ரேமில் கொலைகாரனில் முதுகில் உதைக்கும் சீக்வென்ஸை, சினிமாபோல் காட்சிப்படுத்தியது அருமை.

    அஅடுத்த பக்கத்தில் சண்டை முடிந்த பிற்பாடு அந்த காருக்கு முன்னே திட்டு, திட்டாக பரவியிருப்பது இரத்தமென்றே நினைத்தேன். அது இந்தப்பபக்க ஓரத்தில் இருக்கும் ,ப்ரேமுக்குள் வராத மரத்தின் நிழல் என உணர்ந்து 'அட 'போட்டேன்.

    லிப்டில் நடக்கும் சண்டையில் ஒரே ப்ரேமை இரண்டாக பிரித்து காண்பித்த யுக்தியை ரொம்பவே ரசித்தேன்.அதே ஐடியாவை வில்லன் ஹீரோயினிடம் பேனா குத்து வாங்கும் இடத்தில் பயன்படுத்தியிருப்பார்கள்.
    ஏர்போர்ட் குண்டுவெடிப்புக்கு பின்னேயான புகைமண்டலத்திற்கு கூட உயிர் கிடைத்ததைப் பாருங்களேன்.

    'அவசர கால ரிசர்வ் படையின் குகைக்குள் பாண்ட் மெல்ல, மெல்ல முன்னேறி மறையும் இடம் .
    அடுத்த பக்கத்திலேயே பாண்ட் துப்பாக்கியுடன் நிழலுருவமாக முன்னே வர, எலிவளையைப் போல குகை வாயில் தென்படுவது .
    60 ம் பக்கத்தில் ஆரம்பித்து 75 ம் பக்கம் வரை நீடிக்கும் இருள்போர்வை போர்த்திய சண்டைக் காட்சி என பரவசப்படுத்தியது இன்னொரு லெவல்.

    வில்லனிடம் துளியும் அலட்டிக் கொள்ளாமல் 'காரை ஓட்டியது மணிப்பென்னி அல்ல ' என்று M மெல்ல பின்னோக்கும் இடம் செம்மை..! இருவகையான நினைவுகளை, இருவண்ணங்களில் வித்யாசப்படுத்தி மாற்றி, மாற்றி குழப்பமில்லாமல் காட்டி, 'காரை ஓட்டியது மணிப்பென்னி அல்ல ' என்று மீண்டும் M முடிக்கும் இடம் கைதட்ட வைத்தது.

    இன்னும்...,

    இன்னும்..,

    ஏகப்பட்டவை இருந்தாலும்,! புக்க இன்னும் படிக்காதவங்க புரட்டி எடுத்துவாங்க (என்னைச் சொன்னேன்) னு முன்னெச்சரிக்கையா இப்போதைக்கு ஆர்வத்திற்கு அணை போடுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. Gp இந்த விஷயங்களை நான் கவனிக்கவே இல்லயே . One more time. ரசிகர் ஐயா நீங்கள்.

      Delete
    2. நன்று கோவிந்தராஜ்

      Delete
    3. ரசிச்சு படிச்சிருக்கீங்க GP! சூப்பர்!!

      நம்மில் பலரும் இதுபோல ரசித்துப் படித்திருந்தாலும், ரசித்ததை இங்கே எழுத நேரமோ, பொறுமையோ இருப்பதில்லை!

      உங்களுக்குக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி!

      Delete
    4. அருமை நண்பரே...:-)

      Delete
  58. // ஆனால் புத்தகங்கள் வெளிவந்த மாதமோ அல்லது தொடரும் மாதங்களிலோ இது போன்ற opinion pool வேண்டாமே.//
    யோசிக்க வேண்டிய பாயிண்ட்தான் PFB.

    ReplyDelete
  59. ஆசிரியருக்கு முதல் கேள்வி --- புனித பள்ளத்தாக்கு டெக்ஸ் புக் கடைகளிலும் கிடைக்கும் தானே ? ஆன்லைனில் சென்று தான் வாங்க முடியுமா ??

    ReplyDelete
    Replies
    1. அது முகவர்களின் கையிலுள்ள option சார் ; இது போன்ற limited edition இதழ்களுக்கு கடன் தருவதில்லை ! So முன்பணம் தந்து வாங்குவோரிடம் நிச்சயம் கிடைக்கும் !

      Delete
  60. ஜானி 2.0 கமிஷ்னரை காமெடியாக சித்தரித்ததையே மனது ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் ஜானியையும் காமெடி+ஹீரோ ப்பா முடியவில்லை. போதும் சாமி.

    இப்படி என்றால் இந்த ஜானி 2.0 கதைக்கு பதில் வருடம் ஒரு ஜில் ஜோர்டன் கதையை வெளியிடலாமே🤔🤔🤔🤔

    ReplyDelete
  61. ஐயோ ஜில் ஜோர்டனா ??

    ReplyDelete
  62. முடிவில்லா மூடுபனி *** Spoiler alert*** கி.நாவின இலக்கணத்தின்படியே ஒரு சோகமான முடிவை கொண்டதெ. கதை முடிவில் 18ஆண்டுகளுக்கு பின் நாயகனின் கைய்யில் கிடைக்கும் அந்த கடிதம் கொலை நடப்பதற்கு முன்பே அனுப்பட்டு அதை அவர் தவறவிட்டதாள் ஜெப்ரைனின் கொலையை தடுக்க முடியாத குற்ற உணர்வு செர்ந்துகொண்டதுபோல முடித்திருப்பின் Impact இன்னும் அதிகமாக இருந்திருக்கம். கதாசிரியர் நல்ல மூடில் இருந்திருப்பார் போல

    ReplyDelete
    Replies
    1. நல்ல மூடுக்கே இந்த இருண்ட களமென்றால்......!!

      Delete
  63. ///: "மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா ? அல்லது "ஒன்றே நன்று !" என்பீர்களா ?///

    ஒன்றே நன்று சார்..!

    இரண்டு ஸ்லட்ஸ் இருக்கு .. ஏதாவது கார்ட்டூன் போட்டே ஆகவேண்டுமெனில் நம்ம வுட்சிடி கும்பலின் மறுபதிப்பு ஷ்பெசல் ஒன்று போடலாமே சார்.!

    மலையோடு மல்யுத்தம் + மிஸ்டர் மஹாராஜா + தலைவாங்கும் தேசம் .. ஆகியவற்றின் காம்போ ஒரு இதழுக்கு செட்டாகும்.! நீண்ட நெடுங்காலத்தைய கோரிக்கையை கொஞ்சம் பரிசீலிக்குமாறு வேண்டி விரும்பி தாங்கி தயங்கி கொஞ்சி குலைந்து நம்பி நயந்து பம்மி பயந்து ஓங்கி ஒலித்து கேட்டுக்கொள்கிறேன்..!!

    ReplyDelete
    Replies
    1. அட இந்தக் கேள்வியை மறந்துட்டேனே,கண்ணன் சொன்னதுபோல் இரண்டாவது ஸ்லாட்டிற்கு சிக்பில் & கோவின் மறுபதிப்பை பரிசீலிக்கலாமே சார்.

      Delete
    2. சிக் பில் reprint Big no friends.

      Delete
    3. புதிய காமெடி கதைகளை முயற்சிக்கலாம்.

      Delete
    4. ஒன்று நன்றே...ஆனால் அடுத்த காமெடிக்கு மறுபதிப்பு இல்லாமல் பது சிக்பில்லே..அல்லது புது லக கியே இருக்கலாமே...

      மறுபதிப்பு தடத்தில் மறுபதிப்பு வந்தாலே போதுமானது அல்லவா...

      Delete
    5. ///மறுபதிப்பு தடத்தில் மறுபதிப்பு வந்தாலே போதுமானது அல்லவா...///

      அதுவும் சரிதான்..!

      சிக்பில் க்ளாசிக்ஸ் மறுபதிப்பு இரண்டுமே சக்ஸஸ்தான்.!
      இந்த வருடம் இல்லை ..அடுத்த வருடமாவது ஒரு ஸ்லாட் கொடுக்கலாம் தலீவரே .!

      Delete
    6. // மறுபதிப்பு தடத்தில் மறுபதிப்பு வந்தாலே போதுமானது அல்லவா...!! //
      ஏதாவது வரட்டும் தலைவரே,ஏற்கனவே கோடை வறட்சி,அதுபோல காமிக்ஸிலும் காமெடி வறட்சி வந்துடக் கூடாது.....

      Delete
    7. சிக் பில் reprint HUGE YES friends.

      Delete
    8. அட..இது பாடத்திட்டத்திலேயே இல்லாத கேள்வியாச்சே ?!

      Delete
  64. #1. தோர்கல்- பேண்டசி ஜானர் ஆரம்பத்தில் காதில் பூ சுற்றும் ரகமாக இருந்தாலும் அதை ரசிக்க பழகிய பின்னர் தோர்கல் நமக்கு மிகவும் வேண்டியவராக மாறிவிட்டார். மேலும் வான் ஹாமேயின் கதையோட்டமும் நம்மைக் கட்டிபோட்ட பின்னர் ஒரே அதகளம்தான்.
    #2.பேண்டசி ஜானருக்கு இப்போது தோர்கல் மட்டுமே போதும்.

    ReplyDelete
  65. #3. பராகுடா- அற்புதமான கதைக்களம், நமக்கு புதியதும் கூட, இதன் இரண்டாம் தொகுதிக்குப் பின்னர் கடற்கொள்ளையர் கதைகளும் நம்மால் கொண்டாடப்படும். எனவே ஜே! to pirates on the seas...

    ReplyDelete
  66. #4. Tex - டெக்ஸ் கதைகளைப் பொருத்தவரை கதைத் தேர்வில் இன்னுமே கவனம் தேவை சார், சாத்தானின் சீடர்கள் ரொம்பவுமே ஆவரெஜ். பாலைவனத்தில் ஒரு கப்பல் டீசன்ட்டான கதை. இன்னும் tex ல் நிறைய வெரைட்டி தேவை. வல்லவர்கள் வீழ்வதில்லை போன்ற tactics plus action கதைகள் மிகவும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  67. #5. ஜானி 2.0 - புதிய பாணி நன்றாகவே உள்ளது. ஜானி 2.0-ன் ஆல்பம் #1ஐ நாம் ஏன் skip செய்தோம்?
    காமெடி ஜானி 3.0 வா? இது என்ன புதுசாக?
    ஜானியை காமெடியாக ரசிக்க முடியுமான்னு தெரியவில்லை சார்.

    ReplyDelete
  68. #6. மேக் & ஜாக் - முழு திருப்தி. இருந்தாலும் ஆண்டுக்கு ஒன்று போதும். திகட்டிவிட கூடாதில்லையா சார்?

    ReplyDelete
  69. #7. ஜெரெமயா- ஹெர்மானின் கதை சொல்லும் ஓவியங்கள். நமக்கும் புதிய ஜானர். தோர்கலை போலவே starting trouble. களம் பழகிய பின்னர் அற்புதமான அனுபவமாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு ஆல்பமாகவாவது வருமா?

    ReplyDelete
  70. #8. ஜேம்ஸ் பாண்ட்- தெறிக்கும் ஆக்சன், ஆனால் ஓவியங்கள் பேசாத மொழியையா வார்த்தைகள் வெளிப்படுத்தப் போகிறது?

    ReplyDelete
  71. இன்று முஹுர்த்த தினமாதலால் இங்கிருந்து கிளம்பி ஒப்பிலியப்பன் கோவிலில் ஒரு விசேஷத்திற்கு சென்று விட்டு வந்து பார்த்தா nearly 200 ! ஹ்ம்ம் !!

    முதல் 11 பொறுத்தவரை அதிக சேதாரமில்லை - smooth ride. இவ்வாண்டு அட்டைவணையைப் பார்த்த உடனேயே சந்தா கட்டியது இதன் பொருட்டே - சென்னையில் கூட சொல்லி இருந்தேன். எனினும் sequencing also turned out well.

    -----

    மேக் அண்ட் ஜாக், ஹெர்லோக் ஷோல்ம்ஸ் போன்றவை ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக வரவேற்கிறேன். அப்டியே ஒரு பென்னி, ஒரு smurf, ரெண்டு லக்கி, ரெண்டு சிக் பில், ஒரு காரட் மீசை கர்னல், ஒரு மதியில்லா மந்திரி, ஒரு லெனார்டோ .. (ஹி ஹி !! ), ஒரு மறுபதிப்பு - மொத்தம் 12 போதும் :-)

    -----

    இவ்வாண்டு தோர்கல் தொகுப்பில் சிகரங்களின் சாம்ராட் பற்றி ஓவராய் அலப்பறை செய்ததில், ஆரிசியா பகுதியில் வந்த ஒரு gem பற்றி பேசாமலே விட்டுவிட்டோம்.

    ஒரு தேவனின் தேடல் is that gem that brought a huge smile when I finished reading it. கடவுள்களுக்கு ஆயிரம் சக்தி இருந்தும் மனிதர்களுக்கு (ஆரிசியா) இருக்கும் பொறுப்புணர்வு மற்றும் இரக்கம் அவனை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது என்ற இழையில் Van Hamme நெய்த உன்னதமான கற்பனைச் சிதறல் இந்த கதை. Just awesome ! இந்த ஒரு கதைக்காகவே இந்த ஆல்பம் is worth it !

    ReplyDelete
    Replies
    1. ஒரு தேவனின் தேடல் is that gem that brought a huge smile when I finished reading it. கடவுள்களுக்கு ஆயிரம் சக்தி இருந்தும் மனிதர்களுக்கு (ஆரிசியா) இருக்கும் பொறுப்புணர்வு மற்றும் இரக்கம் அவனை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது என்ற இழையில் Van Hamme நெய்த உன்னதமான கற்பனைச் சிதறல் இந்த கதை. Just awesome !

      Well said.

      Delete
  72. #9. ஹெர்லாக் ஷோம்ஸ் - பட்டாசு...
    2020 திட்டமிடலில் கார்ட்டூன்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் சார். கார்ட்டூன் இல்லாத (சனவரி) கொரியர் பாக்சை பிரித்த என் மகள் கேட்ட கேள்வி, "இந்த மாதம் எனக்கு புத்தகம் இல்லையாப்பா?" என்பதுதான். நல்லவேளை தோர்கலும் அவள் படிப்பாள் என்பதனால் சமாதானப் படுத்தி விட்டேன்.பிப்ரவரி ok. மார்ச் மாதமும் மறுபதிப்பின் புண்ணியத்தில் ஓடி விட்டது. ஏப்ரலுக்கு லக்கி லூக், இது போலவே ஒவ்வொரு மாதமும் வந்துவிட்டால் பரவாயில்லை.

    ReplyDelete
  73. 1. ////டெக்ஸ் வில்லரையே "அப்பாலிக்கா போய் விளையாடுங்களேன் ப்ரோ !!" என்று சொல்லச் சாத்தியமாகிடும் ஆற்றல் தோர்கலுக்குக் கிட்டியதன் மாயம் தான் என்னவாகயிருக்கக்கூடும் ?///
    வான் ஹாமேவின் மேதமையை ஒதுக்கினால்
    தோர்கல் தொகுப்பு இதழாக வெளி வந்தது முக்கிய காரணம்

    2.//தேடலாமா - இன்னமும் சில fantasy பார்ட்டிகளை ? அல்லது "பிடுங்கின மட்டுக்குப் போதும் ராசா !!" என்பீர்களா ?//
    FANTASY BRINGS ECSTATIC FRENZY … இன்னும் வரலாம் ..
    3.//இன்னுமொரு PIRATES ON THE SEAS கதைக்கு / தொடருக்கு "ஜே" போடுவீர்களா folks ? //
    போதும் ....PIRATES ARE OVERRATED


    4.// My question for you is : க்ரைமுக்கும், காமெடிக்கும் ஒத்துப் போகுமா ? என்பதே//
    TO RELISH OR REJOICE COMEDY WE NEED NOT SEEK SEASON OR REASON !!
    கண்டிப்பாக கொண்டு வரலாம் ....
    ******************************************************************************************************************
    5.// "மேக் & ஜேக் இதுவரையிலுமான 2 இதழ்களிலுமே 80 + மார்க்குகள் வாங்கியுள்ள நிலையில் 2020 -ல் இரண்டு ஸ்லாட்களுக்கு தகுதியுள்ளவர்களாவார்களா ? அல்லது "ஒன்றே நன்று !" என்பீர்களா ?//
    ஒன்று போதும் ..’’.TOO MUCH OF A GOODTHING….’’.காரணி வந்துவிடுகிறது
    ////அந்த 2 ஸ்லாட்களைப் பிடித்திடவுள்ள ஆல்பங்கள் எவையென்று யூகிக்க ஆசையா folks ? Go ahead & try giving it a guess ?///
    WY SHOULD I? I LIKE SURPRISES AND I AM FRUGAL UPON WILD GUESSES!!!!
    **************************************************************************************************************


    ReplyDelete
  74. #10. முடிவில்லா மூடுபனி: கி.நா.வுக்கே உரித்தான அந்த mood செம. அருமையான மொழியாளுமை கதையோடு ஒன்றச் செய்கிறது சார், பென்டாஸ்டிக்.

    ReplyDelete