Powered By Blogger

Sunday, March 03, 2019

Marching with March !!

நண்பர்களே,

வணக்கம். ஒரு சுட்டெரிக்கும் வெயில் நாளில் திடுமெனவொரு இதமான காற்று வீச ; கருமேகங்கள் எங்கிருந்தோ ஆஜரான மறு நொடி  - அதுவரை மண்டை காயச் செய்த வெப்பம்  காணாது போவதுண்டு தானே ? அதே போலத் தான் - என் நிலவரமும்   !! போன வாரம் இதே நேரத்தில், தேங்கிக் கிடந்த அத்தனை பணிகளையும் ஒப்பேற்ற 'லோ லோ'வென்று மொக்கை போட்டபடிக்கே சுற்றித் திரிந்தவன் - இப்போது ஜாலியாய் டி-வி-முன்னே அமர்ந்து ஒரு மெய்யான வீரரை தேசமே கொண்டாடுவதை ரசித்துக் கொண்டிருக்கிறேன் !! யுத்தக் கதைகள் ; விமானச் சண்டை சாகசங்கள் என்று ஏகமாய் சின்ன வயதில் படித்த சமாச்சாரங்கள் இன்றைக்கு நிஜமாய் கண்முன்னே அரங்கேறுவதைப் பார்க்கும் போதுமிரட்டலாய்த் தெரிகிறது !! Hail Bravehearts !!!

நாலு இதழ்களை உங்கள் கைகளில் ஒப்படைத்த பிற்பாடுக்கும் ; முற்பாடுக்கும் (??!!) மத்தியில் தான் எத்தனை வேறுபாடு ? இம்முறை நிச்சயமாய் லேட்டாகிடப் போகிறதென்ற டென்க்ஷனில் உச்சா போகாத உராங்குட்டான் போல  27-ம் தேதி வரை சுற்றித் திரிந்தவனுக்கு, நமது பைண்டிங் நண்பர் கடைசி நிமிடத்தில் (வழக்கம் போல்) கைதூக்கி விட்டு விடுவாரென்பது புரிபட்ட  நொடியில் பல்லெல்லாம் வாயாகிப் போனது ! But இனிமேல் தான் பரீட்சைப் பேப்பர்களைத் திருத்தும் பணிகளுக்குள் நீங்கள் புகுந்திடவுள்ளீர்களெனும் போது - அந்தப் "புன்னகை மன்னன் புருஷோத்தமன்" அவதாரைத் தற்காலிகமாய் பின்னணியிலேயே தொடரச் செய்தல் க்ஷேமம் என்பது புரிகிறது !! "எல்லாம் ஓ.கே. !!" என்று உங்கள் பக்கமிருந்தொரு பரவலான thumbsup கிட்டின் - "பு.ம.பு"-ஐ மறுக்கா கூப்பிட்டுக் கொள்ளலாம் தானே ?! இம்மாதத்து 4 இதழ்களுள் 3 புத்தம்புது ஆக்கங்கள் எனும் போது, அவற்றினை மேலோட்டமாயொரு புரட்டு புரட்ட மட்டுமே பெரும்பான்மைக்கு இதுவரையிலும் சாத்தியப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன் ! So அவை சகலத்தையும் நீங்கள் படித்து, அலசி முடிக்கும் வரைக்கும் பொறுமையாய் காத்திருப்பேன் !!

மார்ச்சின் இதழ்களுள் எனது favorite எதுவாக இருக்குமென்று யூகிப்பதில் சிரமமேதும்  இராதென்றே நினைக்கிறேன் ! Oh yes - ஜேம்ஸ் பாண்ட் 007 கதையினை எழுதும் போதே நிரம்ப ரசித்தேன் தான் ! தெறிக்கும் ஆக்ஷன் ; the enemy within என்ற கதையாய், எதிரிகள் வெகு நெருக்கத்தில் இருப்பது ; சினிமா பாணியில் அரங்கேறிய chasing சீன்கள் என்று நெடுக பராக்குப் பார்த்துக் கொண்டே தான் பணியாற்றினேன் ! ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்தப் புதுயுக ஜேம்ஸ் பாண்ட் கதைகளில், ஒரு மொழிபெயர்ப்பாளனை முழிபிதுங்கச் செய்யும் தரத்தில் ஒரிஜினல் ஸ்கிரிப்ட் இருந்தது தான் நினைவில் தொடர்ந்திடும் விஷயம் !   நல்ல நாளைக்கே crisp ஆக எழுதப் பிடிக்காது & தெரியாது எனக்கு ! ஆனால் இங்கோ நாலு வரிகளில் மாமூலாய் அடக்கிட வேண்டிய மேட்டர்களை ஒரே வீரிய வரியில் போட்டுத் தாக்கியிருக்க - அவற்றைத் தமிழாக்கும் பொருட்டு அடிக்க அவசியப்பட்ட கரணங்கள் நிரம்ப நாட்களுக்கு நினைவில் தங்கி நிற்கும் ! And இங்கொரு சின்ன விளக்கமுமே ! போன ஜேம்ஸ் பாண்ட் இதழில் ஆக்ஷன் பக்கங்களின் "டமால்..டுமீல்" சமாச்சாரங்களை முற்றிலுமாய் அடக்கி வாசித்த பிற்பாடு -  'பழைய குருடி..கதவைத் திறடி..!' என்று இப்போது DTS சவுண்ட் எபக்ட்களை நாடியது ஏனோ ? என்ற கேள்வி எழுந்திடலாம் ! சொல்லப் போனால் முதல் படிவத்தில் எடிட்டிங் செய்து முடித்திருந்த வேளையிலும், மௌன மொழியிலேயே தான் பாண்டை சாகசம் செய்திட விட்டிருந்தோம். பொதுவாய் நான் எடிட்டிங் செய்திடும் வார்ப்புகள் எல்லாமே black & white -ல் தான் இருந்திடுவதுண்டு ! So நிறைய நேரங்களில் கதையின் முழுமையையும் நானே வண்ணத்தில் பார்க்க நேரிடுவது அச்சின் போது தான் !  அதே பழக்கம் இங்கேயும் தொடந்தாலும், நிறைய தரைக்கடியிலான சண்டைக் காட்சிகள் காரிருளில் நடைபெறுவதாயிருப்பதைக் கண்ட போது, ஒரிஜினல் டிஜிட்டல் கோப்புகளை ஒருவாட்டி பார்க்கத் தோன்றியது ! கணினியின் திரைக்குள் உற்றுப் பார்த்தால் - லாந்தர் விளக்கு வெளிச்சம் கூட அந்தப் பக்கங்களில் மிஸ்ஸிங் என்பது தெரிந்தது !! 'இங்கே சுடுகிறார்களா ? சடுகுடு ஆடுகிறார்களா ?' என்பதே சந்தேகமாகிப் போகும் விதத்தில் அத்தனையும் இருட்டு sequences-ல் இருக்க, முழுக்கதையையும் கலரில் ஒருவாட்டி பிரிண்ட் போட்டுப் பார்த்தேன் ! நிறையவே இருள் ; நிறையவே ஆக்ஷன் ; நிறையவே மௌனம் என்ற கூட்டணி கொஞ்சமே கொஞ்சமாய் எனக்கு நெருடுவதாய்த் தோன்ற, வேறு வழியின்றி "ஜெய் ஒனுமாட்டூபீயுஹ் !!" (onomatopoeia) என்று தீர்மானித்தேன் ! ஒரு செயலை விளக்கும் விதத்திலும், அந்தச் செயலின் ஓசையையுமே பிரதிபலிக்கக் கூடிய "டுமீல்.....ணங்க்..கும்....".ரக வார்த்தைகளை இந்த "ஓணானை வேஷ்டியிலே போட்டுக்கிட்டியா ?" என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள் ! அதற்கு முன்பாய் 2 ஸ்டிக்கர் ஷீட்களில் ஆசை தீர "பூம் ; டுமீல் ; கிராக் ! க்ராஷ் " சமாச்சாரங்களை அச்சிட்டு புக்கோடு தந்திடுவதெனத் தீர்மானித்திருந்தேன் ! மௌனமே ஓ.கே. என்போருக்கு no worries ; "ஆனால் எனக்கு ஸ்பீக்கரைப் போட்ட்டே தீரணும் !!" எனக்கூடிய நண்பர்கள், ஸ்டிக்கர்களை உரித்து ஒட்டிக்கொள்ளலாமென்பதே பிளான் ! ஆனால்  அந்தந்த ஆக்ஷன் sequences அரங்கேறும் வளைவு, நெளிவு கோணங்களுக்கேற்ப ஸ்டிக்கர்களை வடிவமைப்பதும் சரி, அந்தந்த shape-களில் ஒவ்வொரு ஸ்டிக்கரையும் உரித்திடும் விதமாய் தயாரிப்பதும் செம கஷ்ட காரியமென்பது தலைக்குள் உஷ்ணம் குறைந்தபோது புரிந்தது !  So வேறு வழி தெரியாது "தொபுக்கடீர்" என்று மாமூல் பாணிக்குத் திரும்பினோம் !

ஜேம்ஸ் பாண்டின் பணிகளுக்குத் துளியும் குறையா சுவாரஸ்யத்தோடே இம்மாத டெக்ஸ் கதைக்குள்ளும் உலாற்ற முடிந்தது ! ஒரு மெகா ஆல்பம் என்றாலே நம்மை அறியாது அங்கே வண்டி வேகம் எடுத்து விடுவதை,  260 பக்கங்கள் கொண்ட பருமனான புக்கைக் கையில் ஏந்தும் நொடியே புரிந்து விடுமென நினைக்கிறேன் ! அந்த பருமன் + clean சித்திரங்கள் என்றாலே பாதிக் கிணற்றை நாம் தாண்டிவிட முடிகிறதோ ? எது எப்படியோ - ஒரு மாமூலாகா கதைக்களமும் இம்முறை வாய்த்திருக்க - ஜாலியாக ரேஞ்சர்களுடனான பாலைவனப் பயணம் அரங்கேறியது ! எனக்கு இங்கொரு கேள்வி  guys !! இதுவரைக்கும் நம்மவர்கள் பாலைவனங்களில் சுற்றித் திரிந்திருக்கும் கதைகள் எல்லாமே decent ஆக ஸ்கோர் செய்துள்ளதாக எனக்குள் லேசாய் ஒரு எண்ணம் ! Am I right on it ? அல்லது பாலைவனங்களில் உப்மா கிண்டியுள்ள கதைகள் ஏதேனும் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றனவா ?  And இம்முறை கார்சனை சற்றே தூக்கிப் பிடிக்கும் விதமாய் கதாசிரியர் வடிவமைத்துள்ளதுமே ஒரு முதன்முறையா ? அல்லது இதற்கு முன்பான சாகசங்கள் எதிலாவது இதே பாணியை நாம் பார்த்திருக்கிறோமா ? ஞாபகப்படுத்திப் பாருங்களேன் ?

கார்ட்டூன்கள் எப்போதுமே எனக்கு செல்லப் பிள்ளைகள் எனும் போது - "விற்பனைக்கு ஒரு பேய்" மீது வாஞ்சையான பார்வையைப் பதிக்க இயன்றதில்  வியப்பிருக்கவில்லை தான் ! And இந்த மறுபதிப்புகள் இரண்டுமே சுமார் 25+ ஆண்டுகளுக்கு முன்பானவை எனும் போது, அந்த எலும்புக்கூடுகள் ராவில் துரத்தி ஓடும் sequence-ஐத் தாண்டி வேறெதுவும்  நினைவில் தங்கியிருக்கவில்லை ! So புதுசாய் ஒரு கதையைப் படிப்பது போலவே இருந்தது எனக்கு ! பற்றாக்குறைக்கு இந்தக் கதைகள் சகலத்துக்கும் வர்ணமூட்டப்பட்டுள்ளது வெகு சமீபமாகவே என்பதால், லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை பணிகளில் உட்புகுத்த அவர்களுக்கு சாத்தியப்பட்டுள்ளது ! புக்கை ஒருவாட்டி புரட்டினாலே வண்ணங்களில் தென்படும் ஒருவித classiness அப்பட்டமாய்த் தெரிந்திடும் ! So  பெரிய சைசில், அழகு வர்ணங்களில் டாக்டர் வேஸ்ட்டையும், அவரது துப்பறியும் அண்ணாத்தையையும் நிரம்பவே ரசித்தேன் தான் ! இங்கொரு கேள்வி folks : இந்தத் தொடரினில் உள்ள மொத்தக் கதைகளே சொற்பம் தான் ; 11 in total ! அவற்றுள் நான்கை வண்ணத்தில் போட்டு விட்டோம். எஞ்சியிருக்கும் ஏழு கதைகளுள் நாம் இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் ! தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா ? இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா ? உங்கள் thoughts ப்ளீஸ் ?

தத்தம் பாணிகளில் மார்ச்சின் முதல் 3 இதழ்களும் என்னை லயிக்கச் செய்திருந்த போதிலும், என்னளவில் பணிகளின் போது மனதைப் பறிகொடுத்தது சந்தேகமின்றி "முடிவிலா மூடுபனி" கிராபிக் நாவலிடம் தான் !! இதுபற்றி நண்பர்களின் அலசல்கள் ஜாஸ்தி துவங்கியிருக்கவே இல்லை எனும் போது - இங்கே நானாய் விடும் அலப்பறைகள்  "பீப்பீ smurf " ஊதிடும் குழலாகவே பார்க்கப்படும் என்பது புரிகிறது ! ஆனால் ஒரு எடிட்டர்  புடலங்காயாய் அல்லாது, ரெகுலரான வாசகனாய் மட்டுமே எனதுஅபிப்பிராயங்களை முன்வைப்பதாயின் - எனது வோட்டு இம்மாதம் without a doubt - "மு.மூ" க்குத் தான் ! இந்த ஆல்பத்தின் டிஜிட்டல் கோப்புகள் எனக்கு வந்து சேர்ந்தது 2016 -ன் மத்தியில் ! ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருவாட்டி  கதைத் தேர்வுகளுக்கென ஒரு மெகா பெட்டியில் அவர்களது சமீபத்து இதழ்களைக் கலவையாக்கி போனெல்லியிலிருந்து நமக்கு அனுப்பிடுவதுண்டு !  சகலத்தையும் பத்திரமாய் பீரோவில் அடுக்கிக் கொண்டு நேரம் கிட்டும் போது பரிசீலிப்பது வழக்கம் ! இந்த Le storie தொடரிலிருக்கும் கதைகள் என்னை ரொம்ப காலமாகவே உசுப்பி விட்டுக் கொண்டேயிருந்தன தான் ! வெள்ளையர் ஆட்சியின் போது - நம் மண்ணில் அரங்கேறிய சிப்பாய்க் கலகம் சார்ந்ததொரு கிராபிக் நாவல் உள்ளதென்று இங்கே பதிவில் நாலைந்து வருஷங்களுக்கு முன்பாகவே எழுதியிருந்தது நினைவிருக்கலாம் ! அது தான் இந்த கருப்பு-வெள்ளை கிராபிக் நாவலின் தனித்த தடம் இத்தாலியில் துவங்கியிருந்த வேளையுமே ! So வித்தியாசமான இந்தக் கதைகளை முயற்சித்துப் பார்க்கும் உத்வேகத்துக்குப் பஞ்சமே இருக்கவில்லை என்னுள் ! ஆனால் நமது முதற்சுற்று கிராபிக் நாவல்களைக் கண்டு தெறித்து ஓடிய நண்பர்கள், "கி.நா" என்றாலே குளிர் ஜுரம் கண்ட கரடிகளாய் தத்தம் குகைகளுக்குள் பதுங்கிட்டதும் நம் வரலாறு (!!!) தானே ? So   கொஞ்ச காலத்துக்கு "கி.நா" என்பதே ஒரு 'கெட்ட வார்த்தை' போல் பாவிக்கப்பட்டதால் டிக்கியை மூடிக் கொண்டிருக்க அவசியப்பட்டது எனக்கு ! ஆனால் இடைப்பட்ட அந்த ஆண்டுகளில் போனெல்லியில் அந்த Le Storie தொடரானது பர பரவென வேகமெடுத்திருக்க, ஒரு நெடும் பட்டியல் அங்கே தயாராகியிருந்தது ! So 2017 -ல் இவற்றைத் தமிழுக்குக் கொணர்ந்தே தீருவதென்ற வேகம் எனக்குள்ளும் துளிர்விட்டு சமயம், இந்தக் கதைவரிசையின் சில நல்ல தேர்வுகளை மட்டும் அனுப்பிடக் கோரியிருந்தேன் ! அதன் பலனாய்க் கிட்டிய ஒரு கத்தையினுள் இதுவுமொன்று ! பொதுவாகவே வரலாற்றின் ஏதேனுமொரு period-ல் அரங்கேறும் விதமாய் அமைந்திருக்கும் கதைகள் எனக்குள் ஒரு fascination-ஐ ஏற்படுத்தத் தவறுவதில்லை ! இதுவுமொரு 100 ஆண்டுகளுக்கு முந்தைய பிரான்சில் அரங்கேறும் கதை என்பதை கவனித்த போதே முதல் சுற்றிலேயே கை நம நமத்தது இதனை டிக் அடித்திட ! ஆனால் 2017-ன் லயன் கிராபிக் நாவல் தடத்துக்கென வேறு 3 கதைகள் தேர்வானதால், "முடிவிலா மூடுபனி" - மூடாக்குப் போட்ட மூடுபனியாகவே தொடர்ந்திட்டது இப்போது வரையிலும்  !
நிஜத்திலான போய்ஸ்பொன்னார்ட் மாளிகை !

இந்த இத்தாலிய கிராபிக் நாவல்கள் சார்ந்த reviews ; அலசல்கள் நிறையவே நெட்டில் இருப்பதால், யானையின் தூரைத் தடவுகிறோமா ? தும்பிக்கையைத் தடவுகிறோமா ? என்ற சந்தேகமின்றி - எதிர்நோக்கியுள்ள கதைகளின் தன்மைகளை ஓரளவுக்கேனும் புரிந்து கொள்ள சாத்தியமாகுகிறது ! So இந்தக் கதையின் சுலபத்தன்மை + சோகத்தன்மை பற்றி ஒரு கோடி கண்டிட இயன்றது எனக்கு ! More than anything else - இதற்கென வரையப்பட்டிருந்த சித்திரங்களில் பெரும்  துல்லியமெல்லாம் இல்லாவிடினும், எனக்கென்னமோ அந்த ஒருவித rustic simplicity-ல் ஒரு வசீகரம் தென்பட்டது ! நடப்பாண்டில் கிராபிக் நாவல்கள் தொடர்கின்றன என்பது தீர்மானமான கணமே "முடிவிலா மூடுபனி" க்கு நேராக ஒரு டிக் போட்டு விட்டேன் ! And yes - இந்தக் கதையினில் நான் பணியாற்றியது மொத்தமாகவே 2 நாட்களுக்குத் தான் எனும் போது, நியாயப்படிப் பார்த்தால்  அதனுடன் ஒன்றிடும் வாய்ப்புகள் குறைச்சலாகத் தானிருந்திருக்க வேண்டும் ! ஆனால் முன்னும், பின்னுமாய் பயணிக்கும் கதையின் காலகட்டங்கள் ; தனிமையில் அந்த போலீஸ்காரர் நடத்த முனையும் தேடல்கள் ; புலனாய்வுகள் ; தனக்குத் தானே புலம்பிக் கொள்ளும் இடங்கள் என்று நிறையவே விஷயங்களிருந்தன என் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்ள ! Icing on the cake - அந்த anticlimax நிரம்பிய climax தான் என்பேன் !! கதாசிரியர் லேசாய் மெனக்கெட்டிருந்தால் கூட கதை மாந்தர்களில் யாரையேனும் இன்னும் கொஞ்சம் டெவெலப் செய்து - அவருக்கு கொலை செய்திடும் முகாந்திரத்தையும் வலுவாக்கி - கிளைமாக்சில் ஒரு twist தந்திருக்கலாம் தான் ! அட, எனக்கே கூட இந்தக் கதையை இன்னும் வேறொரு ரூட்டில் எடுத்துக் போயிருக்கவொரு வழி தென்பட்டதென்றால் - கதாசிரியர்க்கு அது புலப்படாது போயிருக்குமா - என்ன ? ஆனால் அந்த பரிச்சயமான பாணிகளே வேணாமே என்பவராய் - நிஜ வாழ்வில் நடந்திடக்கூடிய விதமாய் ஒரு சுலப க்ளைமாக்ஸை நிர்ணயிக்கத் துணிந்ததை ரொம்பவே ரசித்தேன் நான் !! முடிவிலா மூடுபனி - போய்ஸ்பொன்னார்ட்  கிராமத்துக்கு மாத்திரமானது மட்டுமல்ல - ஒரு முதியவரின் சிந்தைகளை விடாப்பிடியாய் போர்த்திக் கிடக்கும் இருளுக்குமே என்பதை கதாசிரியர் சொல்ல முனைந்ததை எனக்கு ரொம்பவே ரசிக்க முடிந்தது !

Maybe இதற்கு தனிப்பட்ட இன்னொரு காரணமும் இருக்கக்கூடுமென்று தோன்றுகிறது ! பொதுவாய் இந்த போய்ஸ்பொன்னார்ட் மாதிரியான குட்டியூண்டு கிராமங்களை கதைகளிலும், சினிமாக்களிலும் தான் நாம் பார்த்திருப்போம் ! நிறைய தடவைகள் - இது மாதிரியான குக்கிராமங்களில் வாழ்க்கை எவ்விதம் தானிருக்குமோ ? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு ! 2014-ல் இதனை நேரில் கண்டு உணர்ந்திடும் வாய்ப்பு எனக்கு கிட்டியது - அதுவும் இதே போலொரு பிரெஞ்சு கிராமத்தில் !! வழக்கமாய் நமது அச்சு இயந்திரக் கொள்முதல் சார்ந்த தொழிலின் நிமித்தம் நான் பையைத் தூக்கிக் கொண்டு தெருத் தெருவாய் அலைவதெல்லாமே பெருநகரங்களில் ; அல்லது தொழில் நகரங்களில் என்று தானிருக்கும் ! ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன்பாய் மிஷின் ஒன்றை கொள்முதல் செய்திருந்தோம் பிரான்சின் உட்பகுதியிலிருந்த ஒரு மலையோர கிராமத்தில் ! அதனைப் பார்வையிட முதலில் போயிருந்த சமயம் பிரெஞ்சு விற்பனையாளர் என்னை காரில் இட்டுச் சென்றிருந்தார் ; so பேசிக்கொண்டே போன போது, லேசாய் மட்டுமே கண்ணில் பட்டது அந்தத் தூங்குமூஞ்சி கிராமம் ! ஒன்றரை மாதங்கள் கழித்து அந்த இயந்திரத்தை லோட் செய்ய வேண்டிய வேளை வந்த போது, பிரெஞ்சு டீலர் வேறொரு பணியில் தான் பிசியாக இருப்பதால் உடன் வர இயலாது ; நீயாகவே போய் பார்த்துக்கொள்ளேன் ! என்று சொல்லி விட்டார் ! அதற்கென உள்ள எஞ்சினியர்கள் பணிகளைக் கனகச்சிதமாய்ச் செய்திடுவர் ; அதனைப் பராக்குப் பார்ப்பதைத் தாண்டி, சாமான்கள் விட்டுப் போகாமல் சகலமும் லோட் ஆகிவிட்டனவா ? என்று சரி பார்ப்பது மாத்திரமே எனது பணியாக இருக்குமென்பதால், நானும் ஓ.கே. என்றபடிக்கு முகவரியை வாங்கி கொண்டு கிளம்பிவிட்டேன் பாரிஸிலிருந்து ! முதலில் Dijon என்ற இன்னொரு பெருநகருக்கு ரயில் ; அங்கிருந்து ஒரு குட்டி நகருக்கு இன்னொரு குட்டி ரயில் ; அப்பாலிக்கா அங்கிருந்து மூன்றாவதாயொரு பொம்மை ரயில் மாதிரியானதொன்றில் அந்த கிராமத்துக்குப் பயணம் என்று அன்றைய நாளின் காலை கடந்து போனது ! ஒரு மாதிரியாய் இரண்டே தண்டவாளங்கள் கொண்ட அந்த கிராமத்தின் ரயில்வே நிலையத்திலிருந்து (!!!!) வெளிப்பட்டால் ஈ-காக்கை கூடத் தென்படவில்லை அங்கே ! அந்த ஊரிலிருந்தே ஒரு சின்ன விடுதியில் தங்க புக்கிங் செய்திருந்தேன் என்பதால் - பொடி நடையாய் பெட்டியை இழுத்துக் கொண்டு நடந்த போது - காலத்தில் பின்னோக்கிச் திரும்பிவிட்டோமோ ? என்ற சந்தேகம் தான் !! அந்தக்காலத்து black & white ஆங்கிலப் படங்களில் வரும் தினுசில் வீடுகள் ; பண்ணைகள் ; கடைகள் என்று முற்றிலும் புதிதான காட்சிகள் ! அந்த கிராமத்தின் மொத்த ஜனத்தொகையே 1800 தான் என்பதை ஏற்கனவே கூகுளில் படித்திருந்தாலும் - நேரில் பார்க்கும் போது ரொம்பவே வித்தியாசமாகயிருந்தது ! அந்தப் பகுதிகளுக்கு அசலூர்க்காரர்கள் வருகை தருவதெல்லாம் ஆடிக்கொரு தபா-அமாவாசைக்கொரு தபா என்பதும் புரிந்தது - ஆளாளுக்கு என்னை விநோதமாய்ப் பார்த்த பார்வைகளில் ! விடுதியில் பெட்டியைப் போட்டு விட்டு ஊரைச் சுற்றிப் பார்ப்போமே (!!!) என்று நடைபோட்டேன் ; இந்த கிராபிக் நாவலில் வரும் போய்ஸ்பொன்னார்ட் கிராமத்தை போலவே, ஒரு சின்ன சதுக்கம், அங்கே சில கடைகள் ; சில pub-கள் ; சில ஹோட்டல்கள் என்றபடிக்கு  முடிந்துவிட்டது ! பாக்கி எல்லாமே அங்குள்ள குடியானவர்களின் பண்ணைகளும், வீடுகளும் தான் ! ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குட்டி கார் ; அப்புறம்  என் திருட்டு முழியைப் பார்த்து 'வள் வள்'   என்று குரைத்து நிற்கும் நாய் என்பதே  மாமூலான template ஆக தென்பட்டது ! திராட்சை பயிரிடுவதும், அவற்றை ஒயின் செய்ய விற்பதுமே அங்கே பிழைப்பு என்பதை ஏற்கனவே வாசித்திருந்தேன் ! திரும்பின  பக்கமெல்லாம் தென்பட்ட அந்தத் தொங்கு தோட்டங்களைப் பராக்குப் பார்த்தபடிக்கே, கண்ணில் பட்டதொரு சின்ன சூப்பர்மார்கெட்டில் நுழைந்து சாப்பிட வாங்கிக் கொண்டு ரூமுக்குத்  திரும்பினேன் !  அன்றைய மாலைப்பொழுதையும்,அந்த நிசப்த இரவையும் ரூமிலிருந்தபடிக்கே ரொம்ப நேரம் அசை  போட்டுக் கொண்டிருந்தது இன்னமும் நினைவில் உள்ளது எனக்கு !  நான்கு மணி நேர பயணத் தொலைவினில், உலகின் ஒரு அசாத்திய நாகரீக நகரம் காத்திருக்க - இங்கோ இன்னமும் அதன் சுவடைக் கூடக் கொண்டிரா ஒரு வாழ்க்கை நிலவுகிறதே என்ற முரண் ரொம்பவே புதிராகப்பட்டது எனக்கு ! இந்த மக்களுக்குமே வாழ்க்கைச் சக்கரங்கள் பரபரப்பின்றி ஓடுகின்றன என்பதை புரிந்து கொள்ள முடிந்த போது - ஒரு இனம்சொல்ல இயலா பீலிங் உள்ளுக்குள் !! So போய்ஸ்பொன்னார்ட் கிராமத்தை கிராபிக் நாவலில் பார்க்க முடிந்த போது, அந்தக் குக்கிராம வாழ்க்கையோடு ஒன்றிப் போக கூடுதலாய் சாதியப்பட்டுள்ளது போலும் எனக்கு !! Whatever the reasons - மனித உணர்வுகளை முகமூடிகளின்றிச் சொல்ல முனைந்துள்ள கதாசிரியரை எனக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது !! அதிலும் இவர் டைலன் டாக் கதைகளுமே பேனா பிடிப்பவர் எனும் போது, அங்கே செம அசைவமாய் ; violent  ஆகக் கதைகளை புனைந்திருக்கக்கூடியவரின் இந்த இன்னொரு முகம் all the more interesting !!

இந்த ஞாயிறை இம்மாத இதழ்களுள் எதனைப் படித்து அலசிடவும் நீங்கள் நேரமெடுத்துக் கொண்டாலும் அடியேன் ஹேப்பி தான் ! வாசிப்பின் முன்னணியில் கிராபிக் நாவல் இருக்க நேரிட்டால் ஹேப்பியா-ஹேப்பி !! Bye guys ; கிளம்புகிறேன் இப்போதைக்கு ! Have a sunny Sunday !! See you around !!   

190 comments:

 1. எம்மாம் பெரிய பதிவு
  படிச்சிட்டு அப்பாலிக்கா வரறேனுங்கோ 🙏🏼

  ReplyDelete
 2. //இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் ! தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா ? இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா ? உங்கள் thoughts ப்ளீஸ் ?//

  கண்டிப்பாக வெளியிடலாம் சார்
  டபுள் ஓகே 👍🏼🙏🏼
  .

  ReplyDelete
 3. விஜயன் சார், கென்யா இதழ் ஜம்போ சீசன் - 2விலும் இடம் பெறவில்லை. ரெகுலர் சந்தாவான A+B+C+D+E விலும் இடம் பெறவில்லை. ஆனால் கடந்த ஆண்டு கென்யா பற்றி நடந்த தேர்தல் முடிவில் இந்த ஆண்டு நாங்கள் அவற்றை தரிசிக்க ஆவண செய்வதாக சொன்னதாக ஞாபகம்!

  கென்யா இந்த ஆண்டு வர உள்ள ஒரே வழி ஈரோடு புத்தக திருவிழாவின் BOOK FAIR SPECIAL. கென்யாவை ஈரோடு புத்தக திருவிழாவின் போது கண்டிப்பாக வெளி இட வேண்டும்!
  ஈரோடு புத்தக திருவிழாவின் BOOK FAIR SPECIAL எனது எதிர்பார்ப்பு
  1. கென்யா
  2. கார்ட்டூன் ஸ்பெசல்
  3. டெக்ஸ் 700 இதழுக்கு மௌரோ போசெல்லியின் கதைக்கு ஓவியர் சிவிடெல்லி சித்திரங்கள் தீட்டிய "பாண்நீ புதையல்"

  இதனை பற்றி கொஞ்சம் முன் கூட்டியே முன் அறிவிப்பு செய்தால் பணம் ரெடி செய்து அனுப்ப முடியும்.

  ReplyDelete
  Replies
  1. அததுக்கான நேரத்தில் அததது சார் ! இதோ இப்போது தான் ஜம்போவின் சீசன் 1 நிறைவுற்ற கையோடு சீசன் 2 துவங்கிடவுள்ளது ! அவை சார்ந்த பணிகளைத் தண்டவாளத்தில் ஏற்றிடவே எனக்கு இன்னும் அவகாசம் அவசியம் ! So பொறுமை ப்ளீஸ் !

   Delete
  2. Ippatiye dialog Sollunga. Oru doubt. Why u selling 65 page black and white book 50₹.

   Delete
 4. // இங்கொரு கேள்வி folks : இந்தத் தொடரினில் உள்ள மொத்தக் கதைகளே சொற்பம் தான் ; 11 in total ! அவற்றுள் நான்கை வண்ணத்தில் போட்டு விட்டோம். எஞ்சியிருக்கும் ஏழு கதைகளுள் நாம் இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் ! தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா ? இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா //

  ஆமாம். மிகவும் ரசிக்கிறேன். இந்த மாத இரண்டு கதைகளையும் இதுவரை படித்தது இல்லை. இந்த புத்தகங்களை நண்பர்கள் கண்களில் காட்டிய போது நமக்கு படிக்க வாய்ப்பு அமையுமா என நினைத்தேன். ஆனால் இன்று வண்ணத்தில் அட்டகாசமான தயாரிப்பு தரத்தில் எனது நீண்ட கால கனவை நிறைவேற்றி விட்டீர்கள்.

  இவரின் மீதமுள்ள கதைகளையும் இதேபோல் தயங்காமல் போட்டு தாக்குங்கள். படிக்க வாங்க நான் ரெடி.

  ReplyDelete
 5. புரிபட்ட நொடியில் பல்லெல்லாம் வாயாகிப் போனது !///
  ஆக.. பூனை மேல் மதில் போல.. ஆக..

  ReplyDelete
 6. சார்! சந்தா அட்டவணையில், இந்த வருடத்தின் ஆண்டு மலராக நீங்கள் போட்டிருந்த 'பரலோகத்திற்கொரு படகு'
  அடுத்த வெளியீடாக ஏப்ரலில் வருகிறதே. அப்படியென்றால், ஆண்டு மலரில் என்ன கதை சார்?

  ReplyDelete
  Replies
  1. பாரிசில் ஒரு கவ்பாய் !!

   Delete
 7. *இது ஒரு மறு பதி (வு ) ப்பு*


  முடிவிலா மூடுபனி : ( படிக்காதவர்களும் வாசிக்கலாம் என்றாலும் இம்முறை தாண்டி செல்வது உகந்தது என்பதால் அதுவே சிறப்பாகவும் இருக்கலாம்.படித்த முடித்த கணத்தில் நேரமும் இருப்பின் உடனடியாக மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்தி விட்டால் அடுத்த இதழுக்குள் சுலபமாக நடை போலாமே என்ற எண்ணத்திலியே உடனடி விமர்சனம்..)

  ஆசிரியர் முன்னோட்டத்தில் குறிப்பிட்ட அமைதியான ,தனிமை சூழலிலே ஆனால் மதிய நேரத்தில் முடிவிலா மூடுபனியை வாசிக்க ...மன்னிக்க நேசிக்க நேர்ந்தது... ஒரு காவல் அதிகாரியின் முன் நினைவுகளே இந்த கதையோட்டம் என்றாலும் கொஞ்சமும் சோர்வடையாமல் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் போலவே கதையோட்டம் செல்கிறது.ஒரு பெண்ணின் கொலைக்கு காரணமானவனை தண்டிக்க வேண்டும் ..நிரபராதி தண்டிக்க பட கூடாது ( தண்டிருக்கபட்டிருக்கலாகாது ) என்ற எண்ணவோட்டத்தில் காவலர் வேலையும் பறிபோக .. பல வருடங்கள் கழித்து அதற்கான தடயங்களை தேடும் ஒரு தனிப்பட்ட மனிதனின் தேடல்களே இந்த முடிவிலா மூடுபனி ..இதற்கிடையில் தன்னுடைய வாழ்வில் நிகழ்ந்த திருப்பங்கள் ,அதற்கு காரணமான குற்றவாளியை தண்டிக்க தான் அளித்த வழிமுறை என அவனின் வாழ்வின் சம்பவங்களும் கலந்தோட ஒரு அமைதியான துப்பறியும் கதையை படித்த திருப்தி...தான் நடந்தது போல நினைத்தது நிகழ்வு அல்ல என்று அவர் அதிரும் சமயம் அதிர்ந்து போவது நாமும் தான் ..முடிவுரை முன்னோட்டத்தில் ஆசிரியர் சொன்னபடி பரபரப்பாகவோ..அல்லது திடீர் திருப்பமாகவோ இல்லாது போவது ஒரு சிறு குறையாக தோன்றினாலும் இது ஒரு நிஜ நிகழ்வாக இருப்பின் இப்படி தானே நிகழ்ந்து இருக்க முடியும் என்ற எண்ணமும் எழாமல் இல்லை. ஒரு கற்பனை படைப்பை கூட வாசிப்பவருக்கு இது ஓர் நிஜ படைப்பு என ஒன்றி போக செய்வதில் இப்படி பட்ட முடிவுகளும் அவசியம் தானோ..?இதில் ஒருவரின் வாழ்க்கை ஓட்டத்தை மட்டும் அல்ல..பணிபெண்...பழையை பொருட்களை வாங்கி விற்கும் நண்பர் ,பூக்கடை ஓனர் என வரும் சில நிமிட மாந்தர்களின் வாழ்வியலை பற்றி கூட கதை ஆசிரியர் நம் மனதில் பதிந்து விட வைப்பது அவரின் படைப்பின் திறமையை பறை சாற்றுகிறது...


  ஆர்ப்பாட்டம் ...ஆராவாரம் இல்லாமல் அமைதியாக

  மனதில் பதிந்த பனி...!

  ReplyDelete
  Replies
  1. தோர்கல் கி.நா.விலிருந்தே நீங்கள் எங்கேயோ போயிட்டிங்க தலீவரே !

   Delete
 8. எடிட்டர் சார்,

  ஒரு சிறிய ஐரோப்பிய குக்கிராமத்திற்கு அழைத்து சென்றமைக்கு நன்றி!!! சிங்கத்தின் சிறுவயதோடு பயண அனுபவங்களையும் சேர்த்து கொண்டுவாருங்கள் சார்!!

  அப்புறம் 1250 பக்க ஒரே கதையை வெளியிடலாமா என சில பல மாதங்களுக்கு ( ஆண்டுகள்) முன் குறிப்பிட்டீர்களே, அதை முயற்சிக்கலாமே சார்?!?

  ReplyDelete
  Replies
  1. சார்...பயண அனுபவம் என்ற விதத்திலெல்லாம் இன்றைய பதிவை எழுத நினைக்கவில்லை நான் ! இந்தக் கதைக்களத்தோடு லேசாயொரு தொடர்பு கொண்ட அனுபவம் என்ற விதத்தில் மட்டுமே பகிர்ந்திட்டேன் ! மற்றபடிக்கு globetrotting என்பதெல்லாம் நம்மவர்களுக்கு இன்றைக்கு சுண்டைக்காய் மேட்டராகிப் போயிருக்கும் காலகட்டத்தில் - travel writing holds no more fancies !!

   Delete
  2. அப்புறம் ஒரு கேள்வி சார்..

   ரொம்ப நாளாச்சு கேட்டு...   அடுத்த இதழில் ஆவது ..சிங்கத்தின் சிறுவயதில் வருமா சார்...?!

   Delete
  3. தாரை பரணி இன்னுமா நீங்கள் நம்புகிறீர்கள்:-)

   Delete
 9. எழுந்துவந்த எலும்புக்கூடு :

  சவக்கிடங்கில் இருந்து அவ்வபோது பிணங்கள் காணாமல் போகின்றன.! ஏன்...எதற்கு ..எப்படி.. என்பதை ஹெர்லக் ஷோம்ஸ் தன் நண்பர் வேஸ்ட்சனுடன் சேர்ந்து தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் துப்பறிவதே கதை.!

  குற்றவாளிகளை போகவிட்டு ஹெர்லக்கை பாய்ந்து அமுக்குவதும்..... வண்டியோடு மாட்டிக்கொண்ட போக்கிரி கும்பலை.. மரியாதையாக கையைத் தூக்கியபடி கீழிறங்குங்க..இல்லேன்னா சுட்ருவேன்னு ஒரு போலீஸகார் சொல்வதும் அதே சமயம் அந்தப்பக்கம் இருந்து .. யாராவது அசைஞ்சிங்கன்னா சுட்ருவேன்னு இன்னொரு போலீஸ்கார் மிரட்டுவதும் ... ஹாஹாஹா..இப்படி பல இடங்களில் ஸ்காட்லாண்டு யார்டு அடிக்கும் லூட்டிகள் செம்ம கலகலப்பு ..!
  கடைசிப்பேனலில் வேஸ்ட்சன் ஹெர்லக் என நினைத்து எலும்புக்கூட்டிடம் புலம்பிக்கொண்டிருப்பது செம்ம காமெடி.!

  எழுந்துவந்த எலும்புக்கூடு : காமெடி த்ரில்லர்

  விற்பனைக்கு ஒரு பேய் :

  ஓய்வேடுக்க ஸ்காட்லாண்ட் செல்லும் ஹெர்லக் வேஸ்ட்சன் ஜோடி, ஒரு பேய் மாளிகையில் சந்தர்ப்ப வசமாக மாட்டிக்கொள்ள .... அதைத்தொடர்ந்து ஒரு நகைச்சுவை தோரணம் கட்டியிருக்கிறார்கள்.!

  ஒரே தோற்றத்தில் அஞ்சாறு பேய்கள் அடிக்கும் கூத்து நன்றாக இருந்தது.! யார் யார் பேய் வேசத்தில் இருக்கிறார்கள் என தெரியாமல் ஒருவர் மற்றவரை நிஜப்பேய் என நினைத்து பயப்படுவது... ஹாஹாஹா..!

  இறுதியில் போட்டோவில் இருந்து ஒரிஜினல் பேயே வருவது போல் வேஸ்ட்சன் வருவது செம்ம..!

  பிசாசு பிரச்சினைகளை சுமூகமாக முடித்துவிட்டு காதல் ஜோடியையும் சேர்த்து வைத்துவிட்டு ஹெர்லக் ஜோடி திரும்பி வருகிறார்கள்.!

  விற்பனைக்கு ஒரு பேய் : சிரிப்பு பேய்

  அளவான நகைச்சுவை இழையோடும இரண்டு க்ரைம் கதைகளையும் கண்டீப்பாக ரசிக்கலாம்..!


  ரேட்டிங் 10/10

  ReplyDelete
 10. இன்னும் காமிக்ஸ் கைக்கு வரவில்லை. அதனால் அடுத்த வாரம்தான் விமர்சனம்.

  ReplyDelete
 11. // இங்கொரு கேள்வி folks : இந்தத் தொடரினில் உள்ள மொத்தக் கதைகளே சொற்பம் தான் ; 11 in total ! அவற்றுள் நான்கை வண்ணத்தில் போட்டு விட்டோம். எஞ்சியிருக்கும் ஏழு கதைகளுள் நாம் இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் ! தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா ? இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா //


  இந்த காமெடி ஷெர்லக் நிறையவே ரசிக்க வைக்கிறார் சார்...தயங்காமல் வெளியிடலாம்...கண்டிப்பாக சோடை போக மாட்டார்...இம்முறை வந்த கதை கூட நான் எப்பொழுதோ படித்த நினைவு..இப்பொழுது இந்த தரத்தில் இந்த மறுபதிப்பை படிக்க மிக மிக ஆவலாகவே காத்து இருக்கிறேன்..

  வெல்கம் காமெடி ஷெர்லாக்...:

  ReplyDelete
 12. காமிக்ஸ் கைக்கு வராத காரணத்தால்,ஜெரமையாவை இன்னும் ஒருமுறை படித்தேன்.
  படிக்க படிக்க நன்றாக இருந்தது.

  எளிதாக இருக்கும் கதைகள் அவ்வளவு எளிதாக மனதில் பதியாது என்பதற்கு ஜெராமியா ஓரு உதாரணம்.

  ஆனால் படிக்க படிக்க நாள்பட்ட ஒயின் அல்லது மீண்குழப்பு போல அவ்வளவு ரூசி.

  ReplyDelete
  Replies
  1. எளிதாக இருக்கும் கதைகள் அவ்வளவு எளிதாக மனதில் பதியாது என்பதற்கு ஜெராமியா ஓரு உதாரணம்.


   கரீட்டு ஜீ....நம்ம லெவலுக்கு இனி எளிதான கதைகள் எல்லாம் வேண்டாம் ஜீ...ஒரு சிகரங்களின் சாம்ராட்..முடிவில்லா மூடுபனி போன்ற அழுத்தமான கதைகளே இப்போதைய தேவை..:-)

   Delete
  2. எளிதாக இருக்கும் கதைகள் அவ்வளவு எளிதாக மனதில் பதியாது என்பதற்கு ஜெராமியா ஓரு உதாரணம்.


   கரீட்டு ஜீ....நம்ம லெவலுக்கு இனி எளிதான கதைகள் எல்லாம் வேண்டாம் ஜீ...ஒரு சிகரங்களின் சாம்ராட்..முடிவில்லா மூடுபனி போன்ற அழுத்தமான கதைகளே இப்போதைய தேவை..:-)

   Delete
  3. படுத்துகிட்டே பிஸடல் மூலமாக எதிரிகளை எளிதாக பஞ்சர் செய்யும் டெக்ஸ் என்கிற டெரர்ரையும் நம்ம லெவலுக்கு மிக எளிதான கதை என்று fix செய்துகிட்டா ரொம்ப நல்லது.

   Delete
  4. The reason I read TEX is what you have mentioned :-) Just a breezy time-pass once a month. As for heavy varieties we have GN and for fun we have Cartoons + regular action we got regular stuff going on anywyas.

   Tex to me is an MGR move - just clean slate enjoyment from start to end - once a month - slam, bang, craaaack !! :-)

   Delete
  5. // படுத்துகிட்டே பிஸடல் மூலமாக எதிரிகளை எளிதாக பஞ்சர் செய்யும் டெக்ஸ் என்கிற டெரர்ரையும் நம்ம லெவலுக்கு மிக எளிதான கதை என்று fix செய்துகிட்டா ரொம்ப நல்லது //

   Well said.
   +1

   Delete
  6. // படுத்துகிட்டே பிஸடல் மூலமாக எதிரிகளை எளிதாக பஞ்சர் செய்யும் டெக்ஸ் என்கிற டெரர்ரையும் நம்ம லெவலுக்கு மிக எளிதான கதை என்று fix செய்துகிட்டா ரொம்ப நல்லது //

   Well said.
   +1

   Delete
  7. எஸ்...."வலிமையான " எளிய கதை என்பதை ஒத்து கொள்கிறேன் நண்பரே..:-)

   Delete
 13. முடிவில்லா மூடுபனி :

  நாம் கடந்துவந்திட்ட வாழ்க்கையில் .. ஒரு தவறான காரியத்திற்கு துணை போய்விட்டோமே .. அதைத் தடுக்கமுடியாமால் போய்விட்டதே என்ற ஆறாத மனத்துயரும் ...

  அதே போல ஒரு சரியான காரியத்தை.. சரியான பழிவாங்கலை .. சரியான நேரத்தில் செய்துவிட்டோமே என்ற ஆத்ம திருப்தியும்...

  ஒருங்கே கொண்ட மனநிலையுடன் நீண்ட காலம் வாழ்ந்தபின்னர் ..ஒரு நாள் ....

  நாம் சரியாக செய்துவிட்டதாக நினைத்து ஆத்ம திருப்தியடைந்த காரியம் தவறாக நடந்துவிட்ட ஒன்று என்றும் ...

  நாம் தவறுக்கு துணை போய்விட்டோமே ..நம்மால் தடுக்கமுடியாமல் போய்விட்டதே என்று இத்தனை நாட்களும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த காரியம் மிகச்சரியாக நடந்துவிட்ட ஒன்று என்றும் பதினெட்டு வருடங்கள் கழித்து அறிய நேர்ந்தால் எப்படியிருக்கும் ...!??!

  (க்கும்....இதுக்கு நாங்க அந்த கிநாவையே படிச்சித் தெரிஞ்சிக்கிறோம்னு நீங்க சொல்றது கேக்குது பாஸு)

  HB பென்சிலை மட்டுமே உபயோகப்படுத்தி வரைந்திருப்பார்களோ என்று நினைக்கத்தூண்டும் வண்ணம் அமைந்திருக்கும் சித்திரங்கள் ..வசீகரிக்கின்றன.!
  கோட்டோவியங்களில் அந்த இளம்பெண்ணை பார்த்த பிறகு , அடப்பாவிகளா.. இந்தப்பெண்ணை ஏண்டா கொன்னீங்கன்னு நமக்கே ஆத்திரம் வரும்..!
  கதைப்போக்கில் ஒருவரை குற்றவாளியாக நினைக்கத் தோன்றினாலும் ..என்னுடைய சந்தேகம் அந்த ஒருவர் மேல் விழவேயில்லை ..! க்ளைமாக்ஸ் படித்ததும் ..ஹிஹி..எனக்கு நானே சபாஷ் சொல்லிக்கொண்டேன்.!

  முடிவிலா மூடுபனி : விலகியதுதான் விபரீதம்

  ரேட்டிங் 10/10

  ReplyDelete
  Replies
  1. /* க்கும்....இதுக்கு நாங்க அந்த கிநாவையே படிச்சித் தெரிஞ்சிக்கிறோம்னு நீங்க சொல்றது கேக்குது பாஸு) */

   Exactly - நீங்க மேல எழுதினத்தைக் காட்டிலும் இந்த புத்தகத்தின் சில கவிதைகள் பரவாயில்லை :-) :-) :-) கவிஞர் புகுந்து விளாடிட்டாரு ;-)

   Delete
  2. அதுலாம் வஜனங்கள் சார் !!

   Delete
  3. அருமையான விமர்சனம் கிட்.

   Delete
 14. கிராமத்தை கிராபிக் நாவலில் பார்க்க முடிந்த போது, அந்தக் குக்கிராம வாழ்க்கையோடு ஒன்றிப் போக கூடுதலாய் சாதியப்பட்டுள்ளது போலும் எனக்கு !! Whatever the reasons - மனித உணர்வுகளை முகமூடிகளின்றிச் சொல்ல முனைந்துள்ள கதாசிரியரை எனக்கு ரொம்பவே பிடித்துப் போய் விட்டது !!


  #######


  வெளிநாடோ...உள்நாடோ...வெளியூரோ...உள்ளூரோ...எந்த இடத்தில் இருந்தாலும் பெரும்பாலான மனிதர்களுக்கு தமது வாழ்க்கையின் இறுதி கால ஓய்வோட்டத்தின் வாழ்க்கை இது போன்ற கிராமத்தில் இருப்பதை தான் மனது விரும்பும்...எனவே இது போன்ற கதை சூழல்கள் வாசிக்கும் பொழுது இன்னுமும் அந்த கதாநாயக பாத்திரஙகளுடன் மட்டுமல்ல அங்கு வசிக்கும் சிறுசிறு பாத்திரங்களாக வரும் மனிதர்களும் கூட நமக்கு நெருக்கமாகி விடுவது போல ஓர் உணர்வு.அது இந்த முடிவிலா மூடுபனியிலுமே உணர முடிந்தது..

  ReplyDelete
 15. ஜேம்ஸ் பாண்ட் அசத்தல்.
  இது ஒரு காமிக்ஸ் திரைப்படம் என்றால் மிகையாகாது.
  வாக்குவம் பாம் என்றால் என்ன? இந்த கேள்வி forward to Mr.Selvam Abiraami sirக்கு.

  ReplyDelete
 16. அடுத்து வரும் லயன் இதழில் அட்டகாசமான ஒரு அறிமுக நாயகர் என அறிய பட நேர்ந்தாலும் ..


  சிறப்பு எண் வெளியீட்டு மலரை எப்பொழுதுமே கொண்டாடி வரும் நாம்..

  இந்த முறை "லயன் 350 " என்ற மிக சிறப்பான மைல் கல் இதழுக்கு 100 பக்கங்கள் கொண்ட ஒரு இதழ் எனும் அறியும் பொழுது கொஞ்சம் ஏமாற்றமே சார்..

  ReplyDelete
  Replies
  1. தலீவரே..உங்கள் பர்ஸ்களில் போட்டுள்ள ஓட்டை ஏற்கனவே பெருசு ; இதில் ஒவ்வொரு ஐம்பதுக்கும் நானொரு மெகா இதழ் திட்டமிட்டால் - அது பர்ஸாக இராது ; சல்லடையாகத் தானிருக்கும் !!

   Delete
 17. அலட்டல் பாண்ட் ஆல்பம்.
  Spectre, MIT ,SBS இதற்கான விளக்கங்கள் எல்லாம் சூப்பர்.
  எடிட்டர் சார் இது மாதிரியான விளக்கங்கள் மிக பயனுள்ளவையாக அமைகின்றன. நன்றி தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. GMT+5:30
   அலட்டல் இல்லா பாண்ட் ஆல்பம்.
   Spectre, MIT ,SBS இதற்கான விளக்கங்கள் எல்லாம் சூப்பர்.
   எடிட்டர் சார் இது மாதிரியான விளக்கங்கள் மிக பயனுள்ளவையாக அமைகின்றன. நன்றி தொடருங்கள்.

   Delete
  2. //Spectre, MIT ,SBS இதற்கான விளக்கங்கள் எல்லாம் சூப்பர்.//

   கூகுளில் refer பண்ண ஆங்காங்கே நிறையவே அவசியங்கள் எழுந்தன சார் ! சுருக்கமான ஸ்கிரிப்ட் தான் ; ஆனால் சவாலானது !!

   Delete
 18. இன்று மதியம் தான் 007 உடன் பறக்க இருக்கிறேன் சார்....


  எப்படியோ இந்த முறை தாங்கள் ' தொபுக்கடீர் " ன்னு குதிச்சல மிகுந்த மகிழ்ச்சி பல நண்பர்களுக்கு...


  எனவே 007 வரும் பொழுது தாங்கள் எப்பொழுதுமே " தொபுக்கடீர்ன்னு " கண்டிப்பாக குதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்..:-)

  ReplyDelete
 19. எடிட்டர் சார் இனொரு கேள்வி டெக்ஸ் வில்லர் வாண்டட் பாக்ஸ் நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா சார்?
  அப்புறம் மோரிஸ்கோ கூட்டணி சாகசம் ஒன்று ப்ளீஸ் சார்.

  ReplyDelete
  Replies
  1. //டெக்ஸ் வில்லர் வாண்டட் பாக்ஸ் நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதா சார்?//

   புரியவில்லையே சார் எதைக் கேட்கிறீர்களென்று ?

   Delete
  2. புரியவில்லையே சார் எதைக் கேட்கிறீர்களென்று ?


   போக்கிரி டெக்ஸ் தான் சார் யூ டூபில் பார்த்தேன்.
   டைனமட் ச்பெஸல் போல இதற்கு TeX willed wanted box என பெயரிட்டு அதகளம் செய்துள்ளார்கள் போனல்லி படைப்பாளிகள் அதைத்தான் கேட்டேன் சார்.

   Delete
 20. The Graphic Novel "Mudivilla Moodupani" was fine. The anti-climax and a second climax were fascinating like Dr. Selvam had said in his previous comment.

  Only drawback of the story is that it is a tad longish - 50 pages would have been ideal for this story. But the art carries us through the length.

  ReplyDelete
  Replies
  1. அந்த "முன்னாள்-இந்நாள்" பாணியினில் alternate செய்திடும் பொருட்டு, ஒவ்வொரு காலகட்டத்துக்கும் கொஞ்சம் பிரத்யேக அடையாளங்களை உருவாக்கும் அவசியம் கதாசிரியருக்கு உள்ளதால் இந்தளவு பக்கங்கள் அவசியப்பட்டிருக்கலாமோ-என்னவோ சார் !

   Delete
 21. Now launching on JAMES BOND !! Yaay !

  ReplyDelete
 22. ஜம்போ சீசன் 2 கலக்ஸன் செலக்ஸன் ஆறும் அற்புதம்.சந்தா கட்டிட வேண்டியது தான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை சார்...


   நானும் கட்டியாச்சு...:-))

   Delete
 23. எடி ஜீ, இராணி காமிக்ஸில் வந்த ஜேம்ஸ்பாண்ட் கதைகளை கலரில் போட முயற்சி செய்யவும். அப்படியே நம்ம டெக்ஸின் மெபிஸ்டோ, யுமா கதைகளையும் ஸ்பெஷல் புத்தகமாக வெளியீடுமாறு கேட்டு கொள்கிறேன்.

  ஐ.வி‌ சுந்தரவரதன்
  சின்ன காஞ்சிபுரம்.

  ReplyDelete
  Replies
  1. பெயரளவிற்குத் தான் இரண்டும் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் சார் ; மற்றபடிக்கு நாமிப்போது வெளியிடுபவை JB version 2.0 என்று சொல்லலாம் ! முன்னவை தினசரிகளில் வந்த strip தொடர்கதைகளெனில், தற்போதையவை high end கிராபிக் நாவல்கள் ! So இரண்டையும் ஒரே பாணியில் அணுகுவது நட்வாக் காரியம் சார் !

   Delete
 24. SPECTRE ம் அ.கொ.தீ. கழகமும் ஒன்றுதானா.. நண்பர்கள் யாரேனும் விளக்கினால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. ஆ.கொ.தீ.க.வெல்லாம் fleetway & நமது உட்டாலக்கடி சார் ; SPECTRE - இயன் பிளெமிங்கின் உட்டாலக்கடி !

   Delete
 25. Night hawk ன் பாலைவன சாகசங்கள் அனைத்தும் super hit கதைகள் தான்.

  ReplyDelete
 26. ஷெர்லாக்கின் கார்டூன் கதைகள் பிடிக்க மற்றும் ஒரு முக்கிய காரணம் வண்ணம், மற்ற கார்டூன் கதைகளை விட இதன் வண்ணம் கண்ணை உறுத்தாமல் குளுமையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சொல்லப்போனால் இந்த கதையின் சித்திரப்பாணி மிகவும் வித்தியாசமாக ரசிக்கும் படி உள்ளது.

   Delete
  2. இதன் ஓவிய பாணி தான் இந்தத் தொடரின் ஈர்ப்புக்கு பிரதான காரணம் என்பதில் சந்தேகமில்லை சார் !

   Delete
 27. Our new bond villain like skillfall villain ....and his target also mi6 building....my obligation is allot two (double)album in every year for JB version 2.0....try our new sagasa veerar Roger version 2.0 in forth coming years...

  ReplyDelete
 28. JAMES BOND was a breezy read - Enjoyed it to the core :-) Next jump into : Cartoon - Herlock Sholmes ! Super Sunday !!

  PS:

  Editor Sir, one request:

  If a subscriber orders a second copy of any of current year's books on web, would you please consider 10% discount - they can use the subscription number so that the web site can deduct 10% of the book value and THEN add courier charges.

  Note: This is only for subscribers of A+B+C and above ordering current year's books again.

  ReplyDelete
 29. No shomes and wasteson further more, pls......

  ReplyDelete
 30. For all cartoon albums, the yardstick can be one album per year, except Lucky Luke which can be up 3 - one double album and one single. The real issue comes when we try for more than 1 album - of course the compulsions of 'no of prints' vs period of copyrights is a factor - no doubt ! Little difficult !

  May be we should look at counting Chik Bill reprints for cartoons as well.

  ReplyDelete
  Replies
  1. ///May be we should look at counting Chik Bill reprints for cartoons as well.///

   + infinity

   Delete
  2. இம்முறை ஜுனில் காத்திருக்கும் (புது) சிக் பில் பட்டையைக் கிளப்புவாரென்று நினைக்கிறேன் !!

   Delete
 31. முடிவிலா மூடுபனி அருமை

  ReplyDelete
 32. // இங்கொரு கேள்வி folks : இந்தத் தொடரினில் உள்ள மொத்தக் கதைகளே சொற்பம் தான் ; 11 in total ! அவற்றுள் நான்கை வண்ணத்தில் போட்டு விட்டோம். எஞ்சியிருக்கும் ஏழு கதைகளுள் நாம் இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் ! தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா ? இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா ? உங்கள் thoughts ப்ளீஸ் ? //

  ஹெர்லாக் ஷோம்ஸ் தரம்,வண்ணம்,கதை,காமெடி அனைத்திலும் அசத்துகிறார் சார். கண்டிப்பாக தேவை.
  கண்டிப்பாக தொடர வேண்டும்.

  ReplyDelete
 33. I have commented this in last blog, but repeating here again.
  JB 2.0 does not need the "ஓணானை வேஷ்டியிலே போட்டுக்கிட்டியா " ;)

  One good thing in the current book is that, the sounds were kept to the minimum and not in all panels. Maybe the editor can take the call on it and decide where to add and where to NOT use it.

  ReplyDelete
  Replies
  1. // JB 2.0 does not need the "ஓணானை வேஷ்டியிலே போட்டுக்கிட்டியா " ;) //

   சூப்பர் guess ji

   Delete
 34. எழுந்து வந்த எலும்புக்கூடு:
  பிணங்கள் காணாமல் போகின்றன அதன் மர்மம் என்ன என்பதை நமது மாறுவேட சிங்கம் ஹோம்ஸ் கண்டுபிடிப்பது கதை.
  எளிதான கதை சில அழகான முடிச்சுகள் மற்றும் சில அருமையான திருப்பங்கள் என ஸ்கோர் செய்திருக்கிறார். இவர் ஏதாவது ஒரு ப்ரேமில் இல்லை என்றால் கூட அந்த இடத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருட்கள் இவராக இருக்குமோ என சந்தேகப்பட வைக்கிறது.
  இவர் மாறுவேடத்தில் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டு தப்பிக்கும் இடங்கள் காமெடி; அதுவும் தேவதை போன்ற வேடம் பூண்டு கல்லறையை ஆராய்ச்சி செய்யும் படத்தை ரசித்து சிரித்தேன்.

  வேஸ்டன் மற்றும் ஹோம்ஸ் இடையே நடக்கும் உரையாடல் காமெடி கலந்து இயல்பாக இருந்தது, அதுவும் உதவியாளரை சுருக்கமாக வேஸ்ட் என அழைப்பது. சில இடங்களில் வசனங்கள் கையாண்ட விதம், சாக்ரடீஸை சாக்பீஸ் என இந்த காமெடி கதைக்காக மாற்றியது.


  எழுந்து வந்த எலும்புக்கூடுக்கு எழுந்து நின்று தாராளமாக கைத்தட்டலாம்.

  ReplyDelete
  Replies
  1. //சாக்ரடீஸை சாக்பீஸ் என இந்த காமெடி கதைக்காக மாற்றியது.//

   டாக்டர் வாட்சனே - வேஸ்ட்சன் ஆகிடும் போது சாக்ரடீஸெல்லாம் தப்பிக்க முடியுமா ?

   Delete
  2. ///ஒரு ப்ரேமில் இல்லை என்றால் கூட அந்த இடத்தில் உள்ள அசையும் மற்றும் அசையா பொருட்கள் இவராக இருக்குமோ என சந்தேகப்பட வைக்கிறது.////
   மிகவும் சரி பரணி.

   Delete
 35. Especially the first page was quite hilarious and set the tone though the rest of the pages were quite underwhelming though 'read once' is a good barometer. Now reading half through the second story which is a tad less funny but albeit we can have one album per year.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய் ஹெர்லக் & வேஸ்ட் laughathons கிடையாது தான் ; ஆனால் அந்த வித்தியாசமான ஆற்றலும், செம classy சித்திரங்கள் + வர்ணங்களும் சேர்ந்து இந்தத் தொடரை ஒரு வித்தியாசமான package ஆக்குகிறது !! நண்பர்களுக்குப் பிடித்தால் நலம் !!

   Delete
 36. ****** பாலைவனத்தில் ஒரு கப்பல் ******

  ஏதோவொரு தேடலின்பொருட்டு பாலைவனத்துக்குள் பிரவேசிக்கும் ஒருவன், பிற்பாடு அந்த பிரதேசத்தையே தன் சாம்ராஜ்யமாக்கிக் கொண்டு,அச்சுறுத்தும் தீய சக்தியாக வலம்வருவதும், நம் டெக்ஸ் & கோ அங்கே சென்று அந்த சாம்ராஜ்யத்தைத் தவிடுபொடியாக்குவதும் - என நமக்கு ஏற்கனவே பரிட்சயமான கதைக்களமே! எனினும், சொல்லப்பட்ட விதத்தில் ச்சும்மா ரவுண்டுகட்டி அசத்தியிருக்கிறது இந்த 'பாலைவனத்தில் ஒரு கப்பல்'!

  பாலைவனத்தின் நடுவே அந்த உப்பங்கழி - கணவாயில் தரைதட்டிய அந்தப் பழங்காலக் கப்பலும், அதன் பின்னணியும் - அந்த மரண மணியோசை - சத்தமில்லாச் சாவு - அந்த 'சத்தமில்லா சாவை' வழங்கும் பிமா இந்தியர்கள் - அந்த பிமா இந்தியர்களுக்கும் டெக்ஸ் குழுவினரிடையே நிகழும் சண்டைகள் - அந்தப் பாதாள நீரோட்டம் - பயமுறுத்தும் ராட்சஸ சுழலில் சிக்கிக் கொண்ட டெக்ஸ் குழுவினர் - என்று 260 பக்கங்களும் திக்திக் தடக்தடக் பாணியிலேயே பயணிக்கிறது! பக்கங்களை நிரப்பும் நோக்கில் தேவையற்ற வசனங்களையோ, ஃப்ரேம்களையோ புகுத்தாமல் மிக நேர்த்தியாக நகர்த்தியிருப்பது இக்கதைக்கு மிகப்பெரிய பலம்! சித்திரங்களிலும் நேர்த்தியோ நேர்த்தி!!

  இந்தக்கதைக்கு 'சத்தமில்லாச் சாவு' என்ற டைட்டிலையே வைத்திருந்தால் இன்னும் திகிலாக, நன்றாக இருந்திருக்கும்!

  டெக்ஸின் மற்றுமொரு நினைவில் நிற்கும் சாகஸம்!

  எனது ரேட்டிங் : 9.75/10
  ReplyDelete
  Replies
  1. //இந்தக்கதைக்கு 'சத்தமில்லாச் சாவு' என்ற டைட்டிலையே வைத்திருந்தால் இன்னும் திகிலாக, நன்றாக இருந்திருக்கும்! //

   தலைப்பைப் பார்த்துவிட்டு காமிக் லவர் மண்டையில் வைத்திருக்கக்கூடிய கூட்டு கூட நல்லாத் தானிருந்திருக்கும் சாமீ !!

   Delete
  2. பிட்ஸ்:

   * அங்கங்கே எட்டிப்பார்க்கும் சில லாஜிக் ஓட்டைகளும் உண்டு! உதாரணம் : எலெக்ட்ரிக் வயரால் பிணைக்கப்பட்ட எலும்புக்கூடு! தொட்டால் ஷாக் அடிக்குமாம்! குறைந்தபட்சம் ஒரு பேட்டரியும், இன்வெர்ட்டரும் கூட இல்லாமல் அந்த அத்துவான காட்டில் இதெல்லாம் எப்படித்தான் சாத்தியமாகிறதோ... கதாசிரியர் நிஸ்ஸிக்கே வெளிச்சம்!

   * முக்கிய வில்லனாக வரும் வெலார்டேயின் கதாபாத்திரம் ஒரு பணத்தாசை கொண்ட சாதாரண மனிதனின் இயல்பான செயல்பாடுகளையொட்டி ரொம்பவே யதார்த்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வில்லனை யதார்த்தமாகக் காட்டியிருந்தாலும், பிமா இந்தியர்களையும், சீனர்களையும் கொண்டு அவன் அமைத்திருந்த ராஜாங்கம் - மிரட்டலானது!

   * எதிர்வரயிருக்கும் ஆபத்தை எண்ணி கார்ஸன் புலம்புவது வாடிக்கைதான் எனினும், இதில் சற்றே தூக்கல்!! கார்சனைக் குறைசொல்லிப் பிரயோஜமில்லை - கண்ணுக்குத் தெரியும் எதிரிகளைக் கண்டு அஞ்சவேண்டியிருக்காதுதான் - ஆனால், கண்ணுக்குப் புலப்படாத 'சத்தாமில்லா சாவு'க்கு யாராக இருந்தாலும் மிரண்டுதானே ஆகவேண்டும்! டெக்ஸுமே ஒருகட்டத்தில் கார்ஸனின் புலம்பலில் உள்ள அர்த்தத்தைப் புரிந்துகொண்டு சற்றே பின்வாங்கிடும் நிகழ்வும் இங்கே உண்டு!!

   * வில்லன் வெலார்டேயைப் பார்க்கும்போது ஒரு சாயலில் நமது மதிப்பிற்குரிய கருணையானந்தம் அவர்களின் தோற்றத்தையொத்திருப்பதாய் எனக்குத் தோன்றியது! அடடே!!

   Delete
  3. //வில்லன் வெலார்டேயைப் பார்க்கும்போது ஒரு சாயலில் நமது மதிப்பிற்குரிய கருணையானந்தம் அவர்களின் தோற்றத்தையொத்திருப்பதாய் எனக்குத் தோன்றியது! //

   நல்ல வேளை ; இதை அவரிடம் எழுதத் தரவில்லை !!

   Delete
  4. //வில்லன் வெலார்டேயைப் பார்க்கும்போது ஒரு சாயலில் நமது மதிப்பிற்குரிய கருணையானந்தம் அவர்களின் தோற்றத்தையொத்திருப்பதாய் எனக்குத் தோன்றியது!

   ####


   ஆஹா....படிக்கும். போது இந்த வில்லன் முகத்தை எங்கோ பார்த்தது போலவே ஓர் உணர்வு வந்தது அதனால் தானோ...?!

   Delete
 37. பாலைவனத்தில் ஒரு கப்பல்.....


  அடேங்கப்பா.....என்னா கதைடா சாமீ.....சத்தியமாய் செம ...செம.....ன்னு சொல்றத தவிர வேற எதுவும் சொல்ல தோணவில்லை.....எனக்கு தெரிஞ்சு பல வருடங்களுக்கு முன் சிறிய வயதில் ஒரு டிராகன் நகரம் ,கழுகு வேட்டை ,பழிவாங்கும் புயல் என டெக்ஸ் வில்லரை தரிசித்து விட்டு எப்படி மகிழ்ந்தேனோ இன்று இப்போது இந்த பாலைவனத்தில் ஒரு கப்பலை படித்து விட்டு அதை விட அதிகமாக 100 சதவீதம் செம ஆராவராமான மகிழ்ச்சி ப்ளஸ் திருப்தியுடன் மகிழ்ந்து போயுள்ளேன். உண்மையை சொன்னால் இது வரை வந்த டெக்ஸ் சாகஸங்களை எல்லாமே இந்த ஒரு சாகஸம் முழுங்கி விட்டது என்பேன்.சும்மா அல்ல மூன்று மணி நேரம் அப்படியே அந்த பாலைவனத்தில் அஞ்சி ,நடுங்கி ,பயந்து,திடுக்கிட்டு போனதும மட்டுமல்லாமல் இறுதி க்ளைமேக்ஸ் பக்கங்கள் எல்லாம் திக் திக் என்று நெஞ்சை அதிர செய்து விட்டனர் டெக்ஸ் மற்றும் கார்சன்..பல இன்னல்களில் இருந்து தப்பித்த டெக்ஸ் குழு இறுதியில் நீரில் விழுந்த பிறகு என்னதான் இது கதை ,கண்டிப்பாக டெக்ஸ் தப்பித்து விடுவார் என்று ஆழ்மனது உரக்க சொன்னாலும் உண்மையாக சொல்கிறேன் சார்...நெஞ்சத்தில் ஐயோ்..டெக்ஸ் கார்சன் அவ்வளவு தானா என்று முரசு அடிப்பது போல் பக் ,பக் என்று துடித்ததை அப்படியே என்னால் உணர முடிந்தது. டெக்ஸ் சுட்டுட்டே இருப்பாரு ...அவருக்கு ஒண்ணுமே ஆகாது ..டெக்ஸை பாத்தவுனே எதிரிக அப்படியே மயங்கி விழுந்துருவாங்க அப்படி ..இப்படின்னு புடிக்காத மாதிரியே டெக்ஸ் மேல் விமர்சனம் வைக்குறவங்க கூட இந்த பாலைவனத்தில் ஒரு கப்பலை படித்து அப்படியே மனதை மாற்றி கொள்வார்கள் .இல்லை ...இல்லை எப்பவுமே அது மாறாது என விமர்சிப்பவர்கள் விமர்சித்து கொள்ளட்டும் இனி அதைபற்றி டோன்ட் கேரும் கூட ...காரணம் கண்டிப்பாக அது டெக்ஸின் குற்றம் ஆகாது.இப்படி பட்ட பரபரப்பான ஆட்டத்தில் டெக்ஸ் கார்ஸன் நையாண்டிகள் உண்மையாக சொல்கிறேன் சார் கார்ட்டூன் கதைகளில் கூட நான் வாய்விட்டு அதிகம் சிரித்ததில்லை..இதில் பல இடங்கிளில் அப்படி சிரித்தேன்.ஒரு திரைப்படத்தை பார்க்கும் பொழுது நாம் அனைவரும் நம்மை சுற்றி இருக்கும் அத்தனை புற நிகழ்வுகளையும் பறும் தள்ளி விட்டு வருத்தம் ,மகிழ்ச்சி ,சிரிப்பு என அப்படியே வெளிக்காட்டி அந்த திரைப்படத்தில் அப்படி ஒன்றி போய் நாம் அதில் திளைத்திருப்போம்.இந்த பாலைவனத்தில் ஒரு கப்பலும் அதே போல் தான் .அந்த அளவிற்கு ஒன்ற செய்து விட்டது கதையின் ஓட்டமும் ,மொழி ஆக்கமும் ,முக்கியமாய் அந்த சித்திரங்களும் ..இறுதியில் டெக்ஸ் ,கார்ஸன் அம்மாடி ...ஆத்தாடி என மூச்சுக்கு தவித்து மூச்சு விடும் பொழுது எனக்கே அம்மாடி...ஆத்தாடி ன்னு சிம்பு பாட்டையே சத்தமா பாடனும் போல ஒரு சந்தோச உணர்வு...


  இன்னும் இந்த இதழை பற்றி ஏதோதோ சொல்ல வேண்டும் என்று மனது உந்தி தள்ளுகிறது ...ஆனா என்ன எழுதுறதுன்னே புரிய மாட்டேங்கது ...ஆனா ஒண்ணு தெரியுது பழைய கதைகளை மறுபடி மறுபடி என்று படிக்க தோன்ற வைத்த காலம் போ்ல இந்த இதழ் என்னை மறுபடி மறுபடி பலமுறை படிக்கவைக்க போகிறது என்பது மட்டும் உண்மை...பெரிய பெரிய குண்டு புத்தங்களில் புத்தக்காட்சி சமயம் ஆசிரியரை சந்தித்தால் கையெழுத்து வாங்கி ஆனந்தபடுவோம்.ஆனால் எத்துனை தாமதம் ஆனாலும் இந்த இதழில் ஆசிரியரின் ஆட்டோகிராப்பை வாங்க காத்து கொண்டு இருப்பேன்


  பாலைவனத்தில் ஒரு கப்பல்

  காமிக்ஸ் இதழில் ஒரு புதையல்...

  ReplyDelete
  Replies
  1. சித்தே மூச்சு வாங்கிக்கொள்ளுங்கள் தலீவரே....!! தலை தெறிக்க ஓடிவந்தது போலான உணர்வுடன் உள்ள உங்கள் பின்னூட்டம் சூப்பர் !!

   Delete
  2. சித்தே பதுங்குகுழிக்குள் புகுந்து மூச்சு வாங்கிக்கொள்ளுங்கள் தலீவரே....!! தலை தெறிக்க ஓடிவந்தது போலான உணர்வுடன் உள்ள உங்கள் பின்னூட்டம் சூப்பர் !!

   Delete
  3. \\காமிக்ஸ் இதழில் ஒரு புதையல்...\\

   படிச்சிட்டு சொல்றேன் புதையலா புஸ்வானமா என்று.

   Delete
  4. புஸ்வானமாகத் தோன்றுவதும் இயல்பே!

   விலைமதிப்பற்ற தங்கக்கட்டிகள் கூட செவ்விந்தியர்களிடத்தே மதிப்பிழந்த 'மஞ்சள் உலோகம்' தானே?!! ;)

   Delete
  5. உங்களுக்கு புஸ்வானமா இருந்தாலுமே டோன்ட் கேர் ஜீ..:-)

   Delete
  6. அழகான உதாரணம் செயலரே..:-)

   Delete
 38. பாலைவனத்தில் ஒரு கப்பல் கதையில் கார்சன் சித்தப்பு மனிதர் எலும்கூடாக்கும் முள் எலிகளை பற்றி கூறுவார். என் கணிப்பு சரியானால் He is pointing out. 'மரண முள்' சாகசம். எனவே We need மரண முள் Next year with old classic cover.

  ReplyDelete
  Replies
  1. ப்ளஸ் ப்ளஸ் ப்ளஸ் போட்டுக்கோங்க

   Delete
 39. முடிவில்லா மூடுபனி படித்து விட்டேன்.

  அந்த காலத்தில் "ஒரு தலை ராகம்" முதல் ஷோ பார்த்தவர்கள், தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் அழுதுகொண்டே இரண்டாவது ஷோ பார்க்க க்யூ வில் நின்றார்களாம். ஆனந்த விகடனில் எப்போதோ படித்த ஞபகம்.
  அது போன்ற ஆகச்சிறந்த படைப்பு முடிவில்லா மூடுபனி.

  ReplyDelete
 40. ஷொர்லக் மற்றும் ஜேம்ஸ் பான்ட் அருமையாக உள்ளது. விமர்சனம் ஞாயிற்றுக்கிழமை.

  ReplyDelete
  Replies
  1. அப்பாலிக்கா டெக்ஸ் விமர்சனம் சார் ?

   Delete
  2. ஆமாங் சார்... ரசிச்சு ரசிச்சுப் படிக்க ஆறேழு நாட்களாவது தேவைப்படும்! :)

   Delete
  3. டெக்ஸ் விமர்சனம் கண்டிப்பாக உண்டு. வரும் ஞாயிறு இல்லாமல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை.

   Delete
 41. எடிட்டர் சார்...

  'பாலைவனத்தில் ஒரு கப்பல்' அட்டைப்படம் அட்டகாசமே! கம்பீரமாய் டெக்ஸ் & பின்னணியில் அந்தக் பாழுங் கப்பல் என்று அருமையாகவே இருக்கிறது!

  எனினும், இருளினூடே திகிலாக நகரும் இதுபோன்ற கதைகளுக்கு இந்த 'பளிச்' ரகத்திலான அட்டையைவிட சற்றே 'டார்க்'கான அட்டைப்படங்களே பொருத்தமாய் இருக்கும் எ.எ.க!

  அதாவது, அட்டைப்பட வண்ணங்கள் கூட கதையின் தன்மைக்கு ஏற்றாற்போலிருப்பது சிறப்பு! உதாரணம் : தலையிலாப் போராளி!

  ReplyDelete
 42. @ ALL : மார்ச் இதழ்களின் YOUTUBE preview : https://youtu.be/3aAQtT9funI

  ReplyDelete
 43. டெக்ஸ் கதைக்கு விமர்சனம் எல்லாம் தேவையா? நாம் விமர்சனம் செய்யாவிட்டாலும் அவர் விற்பனையில் டாப் என்ற சிந்தனையின் விளைவு. நண்பர்கள் தவறாக நினைக்க வேண்டாம்.

  பிற நாயகர்களின் கதைகளின் பிடித்த விஷயங்களை எழுதினால் விற்பனை மற்றும் மற்ற நாயகர்களும் நம்மிடையே பிரபலமாக முடியுமே உங்களின் மூலம் என்ற ஒரு ஆசை. :-)

  ReplyDelete
  Replies
  1. 'சூரியனுக்கே டார்ச் அடிக்கணுமா?'ன்றீங்களா PfB?

   Delete
  2. //A king unguarded with reproving counsel Needs no foes to come to grief.//

   திருக்குறள்தான்...

   ஒரு வித்தியாசமா இருக்கட்டுமேன்னு ஆங்கிலத்தில்..

   துயில் எழுந்த பிசாசு இக்காலகட்டத்தில் வந்திருப்பின்..

   நெல்லுக்கும் உமியுண்டு...

   நீருக்கும் நுரையுண்டு..

   டெக்ஸ் டைஹார்ட் ரசிகர்கள் கூட குறை கூறும் கதைகள் டெக்ஸ் வரிசையில் உண்டு...

   விமர்சனம் அவசியம்...

   Delete
  3. பெங்களூர் பரணி சார்..

   உங்கள் கருத்திற்கு மைனஸ் ஒன்று.


   எந்த நாயகராக இருந்தாலும் அவர் மாபெரும் வெற்றி நாயகரும் ஆக இருந்தாலுமே கூட ஒவ்வொரு கதை விமர்சனத்தை பொறுத்து தான் அவரின் மதிப்பெண் உயர்ந்து கொண்டே போவதும் ..தாழ போவதும்....

   Delete
  4. சூரியனுக்கே டார்ச் அடிக்கணுமா?'ன்றீங்களா PfB?

   கரெக்ட்.

   Delete
 44. எச்சகியூஸ்மீ...ஹெர்லக் ஷோம்ஸ் அடுத்த மாசமும் வருமா???...

  ReplyDelete
 45. //எஞ்சியிருக்கும் ஏழு கதைகளுள் நாம் இதுவரையிலும் வெளியிட்டிருக்கா புதுசுகள் மூன்றோ, நான்கோ தான் தேறும் ! தொடரும் ஆண்டுகளில் அவற்றையும் வெளியிடலாமா ? இந்த 'டமாஸ்' பார்ட்டிகளோடு பயணம் செய்வது ரசிக்கிறதா ///
  ஏழு கதைகளையும் வெளியிடவிட்டால்..வாழைப்பூ வடை கொடுத்தாலும் போராட்டம் தொடரும்...

  ReplyDelete
  Replies
  1. இதுவரை ஒரு வாழைப்பூ வடையைக்கூட ருசி பார்க்கவில்லை! ஆனாலும் எதிரணி தான் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டிருப்பதுபோல தெரிகிறது!

   Delete
  2. சரியா சொன்னீங்க செயலரே...

   நீங்களாவது பரவால...நான் இன்னும் வாழைபூ வடையை கண்ணுல கூட பாத்ததில்ல...:-(

   Delete
 46. மார்ச் இதழ்கள் பட்டையக் கிளப்புகின்றன.

  ReplyDelete
  Replies
  1. யெஸ்!
   நண்பர்களிடமிருந்து பரவலாகக் கிடைத்துவரும் தகவலின்படி, இம்மாத இதழ்கள் எல்லாமே சூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன!

   Delete
  2. உண்மை ...இம்மாதம் எதுவுமே சோடை போகவில்லை...007 விமர்சனம் விரைவில் ...இதழ் அட்டகாசம்..காமெடி ஷெர்லாக் இன்று தான் படிக்க வேண்டும் ..ஆனால் அதுவும் வெற்றி என்பது படிக்காமலே அறிய நேர்கிறது.

   Delete
 47. As we are having our 350th Book in lion. What about the 1000book as you became editor for both lion and Muthu comics Sir. This year we are getting to that number and we want to celebrate a great milestone like that. Is it possible at erode book fair Sir. Please please

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் 'ம்'முனு சொன்னாருன்னா ஒரு காமிக்ஸ் மாநாடே கூட நடத்திப்புடலாம்தான்...

   Delete
  2. சார்...அன்றைக்குச் சொன்னதையே மறுஒலிபரப்பு :

   முத்து காமிக்ஸ் பொறுப்புக்கள் என்னிடம் வந்தது இதழ் # 168 (கடல் பிசாசு) முதலே ! So தற்போதைய நம்பரென்று பார்த்தால் 429 -ல் நிற்கிறோம் ! That makes it - 261 books to my credit !

   லயனில் ஒரு 350 ...

   திகிலில் ஒரு 61 ...

   மினி லயனில் ஒரு 38 ....

   ஜூனியர் லயனில் 8 ...

   சன்ஷைன் லைப்ரரியில் 13 ....

   முத்து மினி காமிக்சில் .. 6

   காமிக்ஸ் கிளாசிக்சில் maybe 25 ?

   லயன் கிராபிக் நாவலில் 8 ...

   எப்படிப் பார்த்தாலும் 770 -ஐத் தாண்டவில்லை சார் ! So வருடங்கள் இன்னும் காத்துள்ளன - 1000 எனும் நான்கிலக்கத்தைத் தொட்டுப் பார்க்க !!

   Delete
  3. Oh God still a long long way to go . So this will take another 6 years at least if we go in this pace to reach the milestone. Anyway I'm waiting . One more request from my side Sir. நமது முத்து காமிக்ஸ் 50வது ஆண்டு மலரில் தோர்கலின் 5 பாக சாகசத்தை வெளியிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அல்லது தங்களுக்கு வேறு ஏதேனும் திட்டம் இருக்கிறதா

   Delete
  4. You have missed jumbo 6 books. விலை இல்லா டெக்ஸ் ஒரு 5.

   Delete
 48. மார்ச் மாத விளம்பரம் காமிக்ஸ் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது சார்.

  ReplyDelete

 49. மார்ச் மாத யூடிப் விளம்பரம் காமிக்ஸ் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க செய்கிறது சார்.

  ReplyDelete
 50. This comment has been removed by the author.

  ReplyDelete
 51. 007 .,....2.0


  நிழலும் நிஜமும்....

  முன் பின் அட்டைப்படங்களில் பிரதிபலித்த அதே ஹைடெக் ஆக்‌ஷன் கதையிலும் அப்படியே நூறு சதவீதம் பிரதிபலித்தது .முதல் சாகஸத்தில் பிடிக்க வைத்த 007 இம்முறை இன்னும் அதிகமாகவே கவர்ந்து விட்டார் ...அலட்டல் இல்லா 007 ன் ஆக்‌ஷன் செம ஸ்டைலிஷ் ஆக பட்டையை கிளப்புகிறது.நல்ல வேளை இந்த அதிரடி ஆக்‌ஷன் கதையில் " 5.1 சவுண்ட் " மட்டும் இல்லாதிருந்தால் கொஞ்சம் ஆக்‌ஷனே குறைந்து போனதாக தான் மனதிற்கு பட்டு இருக்கும் ..வெளிநாட்டு உளவு பணியில் தான் ஆபத்து எனில் உள்நாட்டு உளவு பிரிவில் இருந்தே வரும் ஆபத்துகளும்...இறுதியில் வரும் சஸ்பென்ஸ் க்ளைமேக்ஸ் காட்சிகளும் அதிரடி....

  செம மாஸான இதழ்...

  ReplyDelete
 52. எடிட்டர் சார்

  விலையில்லா tex - 4-6 தொகுதியாய் போட்டாச்சா இல்லை இயர் எண்ட் ஓட்டத்தில் மறந்து விட்டோமா? இல்லை நான் வாசித்ததை மறந்துட்டேனா ?

  ReplyDelete
 53. 007 ஆக்க்ஷன் கட்ஸ் பிரமாதம்.
  வில்லனுக்கு அவன் கையால் எழுதப்பட்ட மரணம். பாண்ட் கையில் இரத்த கறை படாதது இன்னும் சிறப்பு 👌.

  ReplyDelete
 54. 007 ஒரே பிரேமை பலவகையான தாக பிரித்து ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஆக்க்ஷநன் பாண்ட்.

  ReplyDelete
 55. நிழலும் நிஜமும் ..

  இப்போதுதான் ஆரம்பித்தேன்..

  துப்பாக்கி முனையை தலையில் வைத்திருந்த போதும் சிரித்துக்கொண்டே ஏளனம் செய்தவனை. , துப்பாக்கியை இறக்கிவிட்டு .. கையைக் கோர்த்து சொடுக்கெடுத்தபடி சிரித்துக்கொண்டே வந்து தலையை பின்னால் அழுத்தி கழுத்தையே முறித்துவிட்டானே வில்லன்... (அவன்தான் வில்லனா!?)

  யப்பாடியோ ...ரத்தம் தெறிக்கும் இன்னொரு ஆக்ஷன் அதகளத்துக்குள் நுழையப்போகிறேன்.. பைபை...!

  ReplyDelete
  Replies
  1. ஆக்ஷன் அதகளத்துக்குள் நுழைந்தவர் வழி தெரியாம மாட்டிக்கிட்டார் போல இருக்கு! யாராவது அவர வெளிய கூட்டிக்கிட்டு வாங்கப்பா :-)

   Delete
  2. பொறுமையா ஃப்ரேம் ஃப்ரேமா ரசிச்சி கண்ணுங்கருத்துமா பார்த்துட்டு இருக்கேன் பரணி..:-)

   Delete
  3. நல்ல வேளை லேடி - எஸ் கதை இல்லை.

   Delete
 56. டியர் சார்,
  ஹெர்லக் ஹோம்ஸ் அட்டகாசமான வரவு .கார்டுன் சந்தா பலவீனமாகாமல் பார்த்துக் கொள்ள நிச்சயம் உதவும்..
  இவரின் துப்பறியும் சாகஸ் கதைகளையும் ( சிகப்புத் தலை மர்மம்) வெளியிட்டால் , இதில் உள்ள கிண்டல் காமெடியை புரிந்து கொண்டு மேலும் ரசிக்க வாசகர்ககளுக்கு ஏதுவாக இருக்கும்
  " வாரிசு.வேட்டை" தான் என் ALL time favorite. எப்போது வெளியிடப் போகிறீர்களோ ?'i

  ReplyDelete
 57. ."பாலைவனத்தில் ஒரு கப்பல் " -
  அப்பாடி ?i எழுந்து நின்று விட்டார்...
  . ரொம்ப நாள் கழித்து நான் ஆசைப்பட்ட "டெக்ஸ் வில்லர் "கிடைத்து விட்டார்.
  .. கதை வழக்கமானது தான்.. நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரின் நண்பரைத் தேடிச் செல்வது..
  இதில், கதாசிரியர்.செமையாக கதையை நகர்த்திச் செல்கிறார்.
  அவருக்கு ஈடு கொடுத்து ஓவியர் .C.villa_ ஒவ்வொரு frame _ யையும், ஒரு சினிமா கேமராமேனின் நேர்த்தியுடன் பல்வேறு கோணங்களில் ஷாட் - வைத்திருக்கிறார். க்ளோஸ் - அப் பிலும் சரி, லாங் ஷாட் டிலும் சரி இரண்டு பேரின் பர்சனாலிட்டியும் சோடை போகாமல் உள்ளது.. மற்ற கதைகளை விட இந்த சாகஸத்தில் இருவரும் பேசிக் கொள்வது ரொம்ப இயல்பாக அமைந்து ஓவிய நே ர்த்தியும் சேர்ந்து கொண்டு நாமும் அவர்களோடேயே .பயணம் செய்த அனுபவத்தை தந்து விட்டது.
  (இதற்கு முன் டெக்ஸ் வில்லர் ஓவியர் C.villa_வின் கைவண்ணத்தில் வெளிவந்த சாகஸம் எதேனும் இருக்கிறதா?i,)

  ReplyDelete
 58. நான் ரொம்ப ரசித்து படித்தது முடிவில்லா மூடுபனி, அருமை இது போன்ற இதழ்களை தான் நான் எதிர் பார்க்கின்றேன். சித்திரங்கள் மனதை கொள்ளையடித்து விட்டன.

  ReplyDelete
 59. ."பாலைவனத்தில் ஒரு கப்பல் " -
  அப்பாடி ?i எழுந்து நின்று விட்டார்...
  . ரொம்ப நாள் கழித்து நான் ஆசைப்பட்ட "டெக்ஸ் வில்லர் "கிடைத்து விட்டார்.
  .. கதை வழக்கமானது தான்.. நண்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி அவரின் நண்பரைத் தேடிச் செல்வது..
  இதில், கதாசிரியர்.செமையாக கதையை நகர்த்திச் செல்கிறார்.
  அவருக்கு ஈடு கொடுத்து ஓவியர் .C.villa_ ஒவ்வொரு frame _ யையும், ஒரு சினிமா கேமராமேனின் நேர்த்தியுடன் பல்வேறு கோணங்களில் ஷாட் - வைத்திருக்கிறார். க்ளோஸ் - அப் பிலும் சரி, லாங் ஷாட் டிலும் சரி இரண்டு பேரின் பர்சனாலிட்டியும் சோடை போகாமல் உள்ளது.. மற்ற கதைகளை விட இந்த சாகஸத்தில் இருவரும் பேசிக் கொள்வது ரொம்ப இயல்பாக அமைந்து ஓவிய நே ர்த்தியும் சேர்ந்து கொண்டு நாமும் அவர்களோடேயே .பயணம் செய்த அனுபவத்தை தந்து விட்டது.
  (இதற்கு முன் டெக்ஸ் வில்லர் ஓவியர் C.villa_வின் கைவண்ணத்தில் வெளிவந்த சாகஸம் எதேனும் இருக்கிறதா?i,)

  ReplyDelete
 60. டியர் சார்,
  ஹெர்லக் ஹோம்ஸ் அட்டகாசமான வரவு .கார்டுன் சந்தா பலவீனமாகாமல் பார்த்துக் கொள்ள நிச்சயம் உதவும்..
  இவரின் துப்பறியும் சாகஸ் கதைகளையும் ( சிகப்புத் தலை மர்மம்) வெளியிட்டால் , இதில் உள்ள கிண்டல் காமெடியை புரிந்து கொண்டு மேலும் ரசிக்க வாசகர்ககளுக்கு ஏதுவாக இருக்கும்
  " வாரிசு.வேட்டை" தான் என் ALL time favorite. எப்போது வெளியிடப் போகிறீர்களோ ?'i

  ReplyDelete
 61. ஷெர்லக் படித்துக் கொண்டிருக்கும் போது என் மகன்கள் வந்து விட்டனர். நான் என்னையறியாமல் சிரித்துக்கொண்டிருந்தேன். ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே அவன்களுக்குள்ளே ஏதோ பேசிக்கிட்டானுங்க. ஒருத்தன் UKG ஒருத்தன் 4 வது படிக்கிறான்

  ReplyDelete
 62. ஜேம்ஸ் பாண்ட் அட்டகாசம். முந்தைய பாண்ட் இதழில், இதை விட எப்படி ஒரு ஸ்பை காமிக்ஸை கொண்டு போக முடியும் என நினைத்தேன். கதையும், ஓவியங்களும், வன்முறையின் துல்லியமும் அவ்வளவு சிறப்பு. ஆனால் இந்த பாண்ட் இதழ் அதை விட ஒரு படி மேலே.

  முடிவிலா மூடுபனி-நல்ல கதை. பிரஞ்சு சினிமா பார்ப்பது போல் இருந்தது. ஒரு வரிக் கதை, ஆனால் அதை பதினெட்டு ஆண்டுகளுக்கு காட்டிய கதாசிரியர் வேற லெவல்.

  ஹெர்லக் சிரிப்பு தோரணம் ஒகே. சென்ற இதழ் இதை விட நன்றாக இருந்ததாக ஞாபகம். அந்த வேஷம் போடும் நாவல்ட்டி சென்ற இதழில் நன்றாக இருந்தது. இதில் பழகி விட்டது.

  டெக்ஸ் வழக்கம் போல அதிரடி. மனுஷன் எங்கிருந்து தான் இத்தனை வித்தியாசமான கதைகளை ஸ்ருஷ்டிப்பாரோ. பாலைவனத்தில் கப்பல், அங்கெ ஒரு ஒயேசிஸ், அதில் சீனர்கள். கொஞ்சம் பெரிய கற்பனை தான். டெக்ஸ்சுக்கு இத்தனை யோசித்தது பெரிய விஷயம் தான். ஜாலியாக இருந்தது.

  ReplyDelete
 63. வணக்கம் எடிட்டர் சார் ,
  இம்மாத கிராபிக் நாவல் முடிவில்லா மூடுபனி , நீங்கள் சிலாகித்து பேசிய அளவிற்கு ஒன்றும் இல்லை என்பது பெரிய ஏமாற்றம். விலையும் ரெகுலர் இதழ்களைவிட அதிகம். மொத்தத்தில் முடிவில்லா மூடுபனி, முகத்தில் கரி.

  ReplyDelete
 64. This comment has been removed by the author.

  ReplyDelete

 65. நண்பர் ஸ்டாலின் அவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தேன். அவர் குறிப்பிட்ட சம்பவம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவருடைய நண்பரின் மகன் வாசிக்கும் பழக்கமே இல்லாமல் இருந்தாராம். யதேச்சையாக ஸ்டாலின்ஜி வீட்டில் இருந்த ஸ்மர்ப் புத்தகத்தை புரட்டி இருக்கிறார். ஸ்மர்ப் வாசகனாகி, டெக்ஸ் வில்லர் படிக்க ஆரம்பித்து இப்போது தமிழில் நன்றாக வாசிக்கும் பழக்கம் வந்து விட்டதாம். ஸ்மர்ப்புக்கு ஜே.

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் சூப்பர் சூப்பர். சந்தோஷம்

   Delete
  2. மகிழ்வான செய்தி...:-)

   Delete
  3. இன்னும் சரியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரியாத (ஸ்டீல்க்ளா உள்ளிட்ட) நண்பர்கள் பலரும் உடனே ஸ்மர்ஃப் புத்தகத்தை வாங்கிப் படித்துப் பயனடையுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்!

   Delete
 66. இம்மாத டெக்ஸ் ஆரம்பமே அசரடிக்கிரது சார்.
  சூப்பர் செலக்சன்.
  கதை பட்டய கிளப்புகிறது.
  ஒரு திகில் திரில்லர் செம சார்.
  பாலைவனத்தில் ஒரு கப்பல் விற்பனை நம்பர் ஒன்னைக்கண்டிப்பாக தொடும்.
  இது போன்ற கதைகள் காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளன என்றால் அது மிகையாகாது.
  இந்த டெக்ஸ் கதையை எங்களுக்கு அருளிய ஆசிரியர் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள். நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. சார்...உருப்படியான கதைகளைத் தேடிப் பிடித்து வழங்குவது தான் என் வேலையெனும் போது அதன் பொருட்டு நன்றி சொல்வதெல்லாம் வேண்டாமே - ப்ளீஸ் ?

   சொதப்பலான ஒரு கதையை அட்டவணையினில் பரிமாறும் சமயம் - "நானா இதை உருவாக்கினேன் ?" என்ற போர்வைக்குப் பின்னே ஒளிந்து கொள்ள எனக்கு சாத்தியமாகிறதெனும் போது - கதைகள் சார்ந்த பாராட்டுக்களையும் படைப்பாளிகளின் திக்கில் திருப்பிவிடுவதே பொருத்தம் அல்லவா ?! So எல்லாப் புகழும் நிஸ்ஸிக்கே !!

   Delete
  2. Thank God you did not create that Dynamite Special color story :-) :-D ;-) :-p

   Delete
 67. இம்மாத இதழ்கள் அனைத்தும் படித்தாயிற்று....எந்த இதழுமே எந்த ஏமாற்றத்தையும் அளிக்காமல் அனைத்து இதழ்களுமே மனதை கவர்ந்து விட்டது...


  ஹேப்பி மார்ச்....:-)

  ReplyDelete
 68. ****** நிழலும் நிஜமும் *****

  ஒரே நாட்டின் இருவேறு உளவுத்துறைப் பிரிவுகளுக்கிடையே நிகழும் சதிவேலைகளும், அதை 007 வேரறுப்பதுமே ஒன்லைன் ஸ்டோரி! ஆனாப் பாருங்க... 'தீவிரவாதிகளே தேவலைடா சாமி' என்று நினைக்க வைக்குமளவுக்கு இருக்கிறது - உளவுத்துறையின் உயர்மட்ட ஆசாமிகள் நிகழ்த்தும் குற்றங்களும், குரூரங்களும்!!
  நிதானமாகப் பேசிக்கொண்டிருக்கும்போதே எந்தவித முன்னறிவிப்புமின்றி சட்டென்று அடுத்த ஃப்ரேமிலேயே ஆக்ஷன் அதகளத்தில் குதித்து, பொட்டு பொட்டென்று ஒருத்தருக்கொருத்தர் மாறிமாறி சுட்டுக்கொள்வதை இக்கதைத் தொடரின் ஒரு சிறப்பம்சமாகச் சொல்லலாம்!!

  சித்திரங்கள் வரையப்பட்ட கோணங்களிலும், வண்ணங்களிலும் அசத்துகிறது! எனினும், மனித முகங்களில் உயிரோட்டம் மிஸ்ஸிங்! அந்த இருட்டுக் குகை ஆக்ஷன் காட்சிகளை பிரின்ட் செய்தபோது சிவகாசியில் எத்தனை பேரல்கள் மை காலியானதோ!! ப்பா!!!

  சினிமா பாணியிலான பூச்சுற்றல்களும் இல்லாமலில்லை தான்! ( வில்லன் ஹாக்வுட் என்னதான் பலசாலின்னாலும், தலையைப் பிடித்து பின்புறமாக அழுத்தி குரல்வலையைப் பிளந்து ரத்தம் தெறிக்கச் செய்வதெல்லாம் ஓவரோ ஓவர்! அப்படி அழுத்தினால் அதிகபட்சமாக கழுத்தெலும்பு முறியலாம் - அவ்வளவுதான்!) ஆனால் வேகமான கதை நகர்வினூடே நம்மை லாஜிக் பற்றியெல்லாம் பெரிதாக யோசிக்க விடாமல், நம்மையும் மூச்சிரைக்க இழுத்துச் சென்றுவிடுகிறார்கள் - திறமையான படைப்பாளிகள்!!

  ஹைடெக் பாணி கதைக்களத்திற்குப் பொருந்தும் நேர்த்தியான, ஸ்டைலான மொழிபெயர்ப்பும் வசனங்களும் அவ்வப்போது 'அட!!' சொல்ல வைக்கின்றன!

  படித்து முடிக்கும்போது ஒரு பிரம்மிப்பை உணரமுடிகிறது! இன்னும் சில கதைகள் இப்போதே கிடைத்துவிடக் கூடாதா எனும் ஏக்கமும் எட்டிப்பார்க்கிறது!! வேறென்ன வேண்டும் ஒரு வெற்றிப் படைப்புக்கு?!!

  என்னுடைய ரேட்டிங் : 9.5/10

  ReplyDelete
  Replies
  1. தொடர்வது..

   ஒரு ஏமாற்றம் குறித்த வினவல்!

   எடிட்டர் சமூகம் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்!

   Delete
  2. 'நிழலும் நிஜமும்' அட்டைப்படத்தை ஓரிரு வாரங்களுக்கு முன்பு எடிட்டர் சமூகம் இங்கே வெளியிட்டது! அன்றுமுதல் நம் நண்பர்களில் பலருக்கு தூக்கம் பிடிக்கவில்லை என்பதே உண்மை!! ஏன் என்ற கேள்விக்கு அட்டைப் படத்தை மறுபடி ஒருமுறை பார்த்தால் புரியும்!

   புத்தகம் கைக்கு வந்தபின்னே, அந்த அட்டைப் படத்தை ஐந்தாறு முறை (என் பாணியில்) ரசித்துவிட்டு, உள்பக்கத்தில் தேடினேன் - கிடைக்கவில்லை! பிறகு அங்குலம் அங்குலமாகத் தேடினேன் - ம்ஹூம்.. பிரயோஜனமில்லை!
   ஏமாற்றம்.. ஏமாற்றம்!!! உர்ர்.. உர்ர்.. க்ரா!!!

   ஏமாற்றம் இப்போது சோகமாக உருவெடுத்திருக்க, மீண்டும் அட்டைப்படத்தைப் பார்த்தபோது ஜேம்ஸ் பாண்டின் தலைக்கருகே இருந்த மண்டைஓடு 'வெவ்வெவ்வே' காட்டி இளிப்பதைப் போலிருந்தது!!

   ஏமாந்த இதயத்தை என்ன சொல்லி தேற்றப் போகிறது - இந்த எடிட்டர் சமூகம்?

   Delete
  3. நிறைய சோக பாட்டு கைவசம் இருக்கு செயலரே...ஆனா இப்ப இந்த சிச்சுவேஷனுக்கு எதை போடாலாம்னு குழப்பமா கீது்.:-(

   Delete
  4. தலீவரே.. இந்தப் பாட்டு ஓகேவான்னு பாருங்க:

   "வெளி அட்டையில் கண்டேன்.. உள்பக்கம் இல்லை...
   எங்கேன்னு நான்தேட ஆகுமோ?
   எடிட்டர்கார் பதில்சொல்ல கூடுமோ?'

   Delete
  5. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போவோரெல்லாம் தேடுவதுண்டோ மைசூரையும் பாகுவினில் ?

   போட்டி போட முயலைக் கையிலேந்தி ஆமையைத் தேடுவதுமுண்டோ தெருவோரப் பாட்டியின் வடைக் கடையில் ?

   பாண்டென்றால் கண்ணுக்கு குளிர்வென்பது பொது நம்பிக்கை...

   ஆனால் அவையின்றியும் தெறிக்குமென்பது கதாசிரியரின் புது நம்பிக்கை !!

   துடைப்போமே எதிர்பார்ப்புகளின் கடைவாய் குற்றால அருவிகளை !!

   மறப்பானேன் - பறக்கும் கலன்களாகிடக்கூடிய இல்லத்துப் பூரிக் கருவிகளை ?

   Delete
  6. அப்புறம் அந்தக் கண்ணாடி அம்மணியுடன் பால்கனியில் நடைபெறும் சம்பாஷணையில் ஒரு வல்லிய அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர் உள்ளதைக் கவனித்தீர்களோ ?

   Delete
  7. ஹா ஹா! எடிட்டர் சார்.. உங்கள் கவிதை(?!!) ஓரளவுக்கு என் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதாய் இருக்கிறது!

   இனி ஜேம்ஸ் பாண்டு கதைகளில் ஆக்ஷன்களை மட்டுமே எதிர்பார்ப்பேன்! அட்டைகளைக் கண்டு ஏமாறமாட்டேன்!

   Delete
  8. ஆனாலும் நம்மூர் பூரிக்கட்டைகளுக்கு இன்னா பவரு ?!!

   Delete
 69. எளிதாகக் கிடைக்கும்போது 'தேமே' என்றிருந்துவிட்டு, பிற்பாடு புத்தகங்கள் காலியான பின்னே காடு-மலை கடந்து காமிக்ஸ் தேடும் நண்பர்கள் கூட்டமொன்று நம்மிடையே இல்லாமலில்லை!
  அப்படியாப்பட்ட நண்பர்களுக்கு என் அன்பான ஆரூடம் ஒன்று: உங்களுடைய தேடலில் 007ன் இந்தப் புதிய அவதார் புத்தகங்களும் பிரதான இடம்பெற்றிருக்கப்போவது உறுதி!

  ReplyDelete
  Replies
  1. JB # 1 - குறைவான பிரிண்ட் ரன் தான் என்றாலுமே, "சொற்பமே ஸ்டாக் !" என்ற நிலையைத் தொட்டாச்சு !

   Delete
  2. Actually I am seeing that DURANGO - Mounamaai oru idi muzhakkam is OUT OF STOCK - really ?!! That is something to smile :-)

   Delete
 70. ஜேம்ஸ் பாண்ட்..!

  அருமையான சாகஸம்.
  அட்டகாசமான ஆக்சன்.

  ஒரு பர்பெக்ட் பாண்ட் படத்தை நேரில் பார்த்த ஃபீலிங்.
  ஒரே வார்த்தையில் சொன்னால் ,

  'சூப்பர் '

  ReplyDelete
 71. ***** முடிவிலா மூடுபனி *****

  "நீங்கள் பதினெட்டு வருடங்களாய் ஊர்முழுக்கத் தேடியலைந்த புதிருக்கான விடையொன்று உங்கள் வீட்டு அலமாரியிலேயே காணக் கிடைத்தால்?!!" - இதுவே 'மு.மூ'யின் கதைக்கரு!

  கருவைப் பார்த்தாச்சு! இனி கதைக்குப் போவோம்....

  அழகான, அமைதியானதொரு பிரெஞ்சுக் கிராமம் அது! அங்கே ஆர்டர் செய்த பூக்களை வீடுவீடாகச் சென்று டெலிவரி செய்து பிழைப்பு நடத்திவருகிறாள் ஒரு இளம் யுவதி! தன் அழகான தோற்றத்தாலும், அன்பான குணத்தாலும் ஊரிலுள்ள அனைவரின் நன்மதிப்பையும் பெற்றிருந்த அவள் - ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒண்டிக்கட்டையாய் வாழ்ந்துவந்த செல்வந்தர் ஒருவரின் மோகப் பார்வைக்கு எதேட்சையாய் ஆளாகிறாள்! தொடர்ந்த நாளொன்றில், ஊரையொட்டிய வனாந்திரப்பகுதியில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறாள் - கழுத்தை நெறித்துக் கொல்லப்பட்டதற்கான தடயத்தோடு!
  அப்பாவி ஊமை ஒருவன் கொலையாளியாக இனங்கானப்பட்டு, கேஸை இழுத்துமூடுகிறது உள்ளூர் போலீஸ்! அதில் திருப்தியடையாத உள்ளூர் போலீஸ்காரர் ஒருவர் - கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் மீது கொண்டிருந்த அபிமானத்தின் காரணமாக - உண்மைக் குற்றவாளியைத் தேடி பதினெட்டு ஆண்டுகள் அலைந்துதிரிந்த பின்னும் எந்தத் துப்பும் கிடைக்காமல் துப்புக்கெட்டு நிற்கிறார்! இப்படியாக, மனப்புழுக்கங்களே வாழ்க்கையாய் - முடிவிலாத மூடுபனியாய் - தொடர்ந்திட்ட இறுக்கமான நாளொன்றில் - தன் வீட்டு அலமாரியில் 18 ஆண்டுகளாகப் பிரிக்கப்படாமலிருந்த தபால் கவர் ஒன்றைக் காண்கிறார் - ஏதோவொரு அவசரத்தில் அன்று பிரிக்காமல் விட்ட கவரினுள்ளே அவர் இத்தனை வருடங்களாய் தேடிவந்த புதிருக்கான விடை எழுதப்பட்டிருக்க - தன் அனுமானங்கள் பொடிப்பொடியாய் போனதையெண்ணி திகைத்துப்போய் நிற்கிறார் அந்த பிரெஞ்சுப் போலீஸ்கார்!

  * இளம் பெண்ணைக் கொன்ற உண்மைக் குற்றவாளி யார்?
  * கொலைக்கான பின்னணி என்ன?
  * 18 ஆண்டுகள் காத்திருந்த அந்தத் தபால் உறையினுள் அப்படி என்னதான் எழுதப்பட்டிருந்தது?

  என்பதற்கான பதில்களையெல்லாம் ஒரு ஆரவாரமற்ற தனிமைப் பொழுதில் ( முடிந்தால் இரவில்) படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

  அதிரடித் திருப்பங்களோ, ஆரவாரமான கதை நகர்வோ கிடையாது தான்! "நான் தீவிர 'டமால் டுமீல் ணங் சத்' பிரியன் மட்டுமே" என நீங்கள் சொன்னால், உங்களுக்கான கதையும் இதுவல்ல! அதற்கெல்லாம் டெக்ஸும், ஜேம்ஸும் துப்பாக்கி சகிதம் இம்மாத மற்ற வெளியீடுகளில் காத்திருக்கிறார்கள்!

  அருமையான சித்திரங்கள்!
  இறந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் மாறிமாறிப் பயணிக்கும் வழக்கமான கி.நா டெம்ப்ளேட்தான் என்றாலுமே கூட, குழப்பங்கள் ஏற்படுத்தாத நேர்கோட்டுப் பாணியிலான கதையே!

  கதைநெடுக வரும் அந்தப் பிரெஞ்சுப் போலீஸ்காரரின் கோணத்திலேயே கதை நகர்ந்தாலும் (self narration), கடைசிவரை அவர் பெயரைக் குறிப்பிடாமலேயே கதையை முடித்திருப்பது மற்றொரு சிறப்பு!
  போலீஸ்காரரின் மனோநிலையைக் குறிக்கும் பொருட்டு வைக்கப்பட்ட 'முடிவிலா மூடுபனி' தலைப்பும் அருமையாய் பொருந்திப்போகிறது!

  'ஆஹா ஓஹோ' இல்லையென்றாலும் - அழகானதொரு கவிதையே!

  என்னுடைய ரேட்டிங் : 9.75/10


  ReplyDelete
  Replies
  1. அருமையாக சொன்னீங்க

   Delete
  2. ஓ.. ஜெப்ரைன்...

   நீ பூக்களைக் கையிலேந்தியபடி நின்றிருப்பாய் - ஆனால்
   பூக்கள் ஒருபோதும் அழகாய் தெரிந்ததில்லை!
   எதிர்படுவோரிடமெல்லாம் உன் கையிலுள்ள
   பூக்களைக் காட்டி "கொள்ளை அழகு, இல்லையா?" என்பாய்..
   "ஆமாம்" என்றே அனைவரும் சொல்வர் - உன்
   அழகிய முகம் பார்த்து!

   அன்று நீ அனைவருக்கும் வீடுதேடிக் கொடுத்துச் சென்ற
   வண்ணவண்ணப் பூக்களையெல்லாம்
   இன்று கண்ணீருடன் திருப்பிக் கொடுக்க வந்திருக்கிறோம்...
   எழுந்துவந்து எடுத்துக்கொள் - உன்
   கல்லறையிலிருந்து!

   Delete
  3. முடியாது..முடியாது....

   தலைகீழா நின்னு பக்கெட்டிலே பிஸ்லெரியே குடிச்சாலும்...

   "கவிஞர்" பதவிய விட்டுக் குடுக்க முடியாது !!

   Delete
  4. EV super pa Enna kavithai arumai. Superb review. When I completed the story dhukkam thondayai adaithu vitathu.

   Delete
  5. @Kumar Salem

   அதை 'கவிதை'ன்னு நானே நம்பமாட்டேன்.. ஆனா அதை நீங்க 'கவிதை'ன்னு சொன்னதுமட்டுமில்லாம 'சூப்பர்'னு வேற சொல்லியிருக்கீங்க!!! நன்றிகளோ நன்றிகள்!! நாளைக்குப் பின்னே நான் கவிதைத் தொகுப்பு ஏதாச்சும் வெளியிட்டால் முதல் பிரதி உங்களுக்குத்தான்! :D

   Delete
  6. முதல்ல எல்லாம் கவிதையே புரியாது..

   ஆனா இப்ப எல்லாம் கட்டுரையை படிச்ச மாதிரி சூ்ப்பரா புரியுது செயலரே...:-)...D

   Delete
  7. என்னம்மா அங்கே சத்தம்:-)

   Delete
  8. உங்களுக்கு ஈஸியாப் புரியணுமேன்னுதான் நான் கட்டுரை வடிவுல கவிதையைத் தந்திருக்கேனுங்க தலீவரே!

   Delete
 72. இந்த மாத இதழ்களை இப்போது தான் படித்து முடித்தேன். ஜேம்ஸ் பாண்ட் முதல் இடத்தை தட்டி செல்கிறார். படைப்பாளர்கள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து சென்று விட்டனர். ஒரு திரைப்படம் பார்ப்பது போலவே தோன்றுகிறது. தெறிக்கும் இரத்தம் நமது மூக்கில் இருந்து தலையில் இருந்து வருவது போல தோன்ியது . பயங்கரம் என்ன ஒரு action comics. அட்டகாசம். முடிவிலா மூடு பனி மிகச்சிறந்த ஒரு கதை. இதை படித்து முடிக்கும் போது துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு போலீஸ்காரர் உடன் சேர்ந்து கொலையாளியை தேட ஆரம்பித்து 😪. பிறகு ஷெர்லாக் அட்டகாசம் அந்த சோக மூடை நீக்க சரியான தேர்வு. மார்ச் மாதம் அற்புதமான மாதம். Well done ஆசிரியரே .

  ReplyDelete
  Replies
  1. ///தெறிக்கும் இரத்தம் நமது மூக்கில் இருந்து தலையில் இருந்து வருவது போல தோன்ியது . ///

   லீவுல ஊருக்கு வந்து, வீட்டம்மா முன்னாடி உட்கார்ந்து வெறிபிடிச்சமாதிரி காமிக்ஸ் படிச்சுக்கிட்டிருந்தா நிஜமாவே இரத்தம் வர நிறையவே வாய்ப்பிருக்குங்க குமார் சார்!

   Delete
  2. சூப்பர் குமார். தொடர்ந்து எழுதுங்கள்.

   Delete
  3. சரி தான் விஜய் . அவர்களும் இந்த ஜென்மத்தை திருத்த முடியாது என்று விட்டு விட்டார்கள். ஒரே நாளில் 4 புத்தகங்களும் முடிந்தது

   Delete
 73. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!

  ReplyDelete