Powered By Blogger

Sunday, April 07, 2024

ஜஸ்ட் மிஸ்ஸ்ஸ்ஸ் !

நண்பர்களே,

வணக்கம். இது இங்கே-அங்கேவென லாந்தித் திரியப் போகும் ஒரு ஜாலியான unplugged பதிவே தவிர, வந்துள்ள புக்ஸ் / வரப்போகும் புக்ஸ் பற்றியெல்லாம் பெருசாய் தகவல்ஸ் கொண்டிருக்கப் போகும் களஞ்சியமல்ல ! So IPL மேட்ச்களின்  நடு நடுவே எழக்கூடிய மொக்கை phase-களிலோ, மட்டன் வாங்கப் போய் அங்கே தேவுடு காக்கும் நேரங்களிலோ, புள்ளைகளை கட்டிங் பண்ண சலூனுக்கு கூட்டிப் போய் காத்திருக்கும் சமயங்களிலோ, இங்கே தயக்கமின்றிக் குதித்திடலாம் ! 

ஏப்ரலின் இதழ்கள் நான்கையும் அனுப்பிய கையோடு what next ? என்று எப்போதும் போலவே பார்வையை நீள விட்டால் - மே மாதத்தின் ரெகுலர் இதழ்கள் டென்க்ஷன் தரும் ரகமல்ல என்பது புரிகிறது ! 

  1. லோன்ஸ்டார் டேங்கோ ஒரு சோலோ சாகசத்தில் புதுசாயொரு தென்னமெரிக்க தேசத்தில் கலக்குகிறார்...
  2. நம்ம உட்ஸிட்டி சிரிப்பு போலீசோ வழக்கம் போல தமது ரகளைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் ...and.....
  3. நம்ம V காமிக்சில் ஏஜெண்ட் ராபினின் "தலைவனுக்கொரு தாலாட்டு" காத்துள்ளது ! 

மூன்றுமே fast ; racy ; crisp புக்ஸ் ! And வாசிப்போரையும் சரி, வரிகளுக்கு உயிர் சுவாசிக்க முனைவோரையும் சரி - பெருசாய் படுத்திடாத இதழ்கள் !! So  சற்றே breezy ஆன இந்த May அட்டவணையினைப் பார்க்கப் பார்க்க, ஸ்டேடியங்களில் ஆரஞ்சு சொக்காயில் காவ்யா மாறனைப் பார்த்த ஜனத்தைப் போல, எனக்கும் செம குஷி ! 

Of course - மே மாதத்தின் நடுவாக்கில் "ஆன்லைன் மேளா" என்ற கூத்துக்கள் வெயிட்டிங் என்பதாலேயே, முதல் தேதிக்கான ரெகுலர் தடத்தில் பெருசாய் பளு ஏற்றியிருக்கவில்லை என்பது கொசுறுச் சேதி ! தவிர, பௌன்சர் போலானதொரு intense பணிக்கும், காரிகன் போலானதொரு குண்டுப் பணிக்கும் பின்னே ஒரு மினி ப்ரேக் அத்தியாவசியமே என்பதை கொஞ்சம் முன்கூட்டியே தீர்மானித்துமிருந்தேன் ! அரசாங்க உத்தியோகத்தில் இருந்திருப்பின், பொன்னாடை போர்த்தி, ஸ்வீட், காரம் வாங்கிக்கொடுத்து, வழியனுப்பு விழா நடத்தி, ரிட்டயர்மென்டுக்குள் அனுப்பிடும் வயசானது கூப்பிடு தொலைவிலிருக்க, இப்போதெல்லாம் பேட்டரிகளை மறுக்கா சார்ஜ் ஏற்றிக் கொள்ள அவகாசம் அவசியமாகிறதே ! Moreso becos - மாதாந்திர ரெகுலர் பணிகளுக்கிடையே அடுத்த டின்டின் டபுள் ஆல்பத்துக்கான 124 பக்க மொழிபெயர்ப்புகளையும் இணைத்தடத்தில் செய்து கொண்டே இருந்தேன் ! பக்கமொன்றுக்கு சுமார் 15 கட்டங்கள்...கட்டமொன்றில் குறைந்த பட்சம் 2 வசனங்கள் எனும் போதே பக்கத்துக்கு 30 boxes எழுதணும் ! இதே ரீதியில் 124 பக்கங்கள் எனும் போது தோராயமாக 3700 பெட்டிகள் என்றாகிறது !! செம ஜாலியான கதையே என்றாலும், பணியின் sheer பளு சொற்பமே அல்ல தான் ! அவை முழுசுமாய் முடிந்து, முதல் பாகத்துக்கான படைப்பாளிகளின் ஒப்புதலும் கிட்டியாச்சு எனும் போது - நாக்காரின் சமீபத்தைய தொங்கலுக்கு ஆகஸ்டில் வர வேண்டிய டின்டினும் ஒரு முக்கிய காரணம் ! 

Anyways இப்போதைக்கு கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொள்ளும் அவகாசம் கிட்டியிருக்க, YouTube-க்குள் புகுந்து ரீல்சும், மீம்ஸுமாய் பார்த்தபடிக்கே பொழுதுகளை ஓரிரண்டு நாட்களுக்கு நகற்றினேன் ! தலையில் காரக்குழம்பை ஊற்றிய கையோடு, ஜீன்ஸின் பாதியைக் கிழித்து வைத்துக் கொண்டு, பசங்களும், புள்ளைகளும் ஊர் ஊராய் ; நாடு நாடாய் ; டிசைன் டிசைனாய், மொட்டை மாடிகளிலும், டிராபிக் சிக்னல்களிலும் டான்ஸ் ஆடுவதும், ஆங்காங்கே உள்ள காமெடிகளுக்கு voice-over தருவதும் ரீல்சில் வரிசை கட்டி வர, ஒவ்வொருவருக்கும் தனி channel ; மூணரை / நாலரை லட்சம் followers என்றிருப்பதை திரு திருவெனப் பார்த்தேன் ! And ஒவ்வொரு முப்பது நொடி ரீல்சுக்கும் லட்சங்களில் பார்வைகள் இருப்பதைப் பார்த்த போது தான் உறைத்தது - 'இங்கே 500 பார்வைகள் கிடைக்கவே நம்மளுக்கு மூணு மூத்திரச் சந்தும், நாலு முட்டுச் சந்தும் அவசியமாகுதே !!!' என்ற யதார்த்தம் ! ரைட்டு....ஏற்கனவே தாய்வானில் துரதிர்ஷ்ட நிலநடுக்கம் ; இந்த அழகில் நாமளும் shuffle dance ; சுரைக்காய் டான்ஸ்லாம் படிச்சுப் போட்டு, டான்ஸ்லாம் ஆடி, லட்சங்களிலே பார்வைகளை அள்ளுற கொடுமையை பூமி சத்தியமாய்த் தாங்காதென்றபடிக்கே, Facebook பக்கமாய் நகன்றால், அங்கே நிறைய நோஸ்டால்ஜியா பதிவுகள் - courtesy நம்ம வேதாளர் மறுபதிப்பு + காரிகன் மறுபதிப்பு ! 'அட, இம்புட்டு பேருக்கு தங்களது பால்ய வாசிப்புகள் சார்ந்த நினைவுகள், ஆதியோட 'மடாலய மர்மம்' மெரி இவ்ளோ தெளிவா இருக்குதே ? நமக்கு மட்டும், மொசு மொசுன்னு இருக்கே...? அதனில் கொஞ்சம் தண்ணி தெளிச்சுப் பார்ப்போமா ?' என்று தோன்றியது ! 

So here goes - சின்ன வயசிலே வாசிக்க எனக்கு வாய்த்த வாய்ப்புகள் பற்றியொரு flashback !! பயம் வேணாம் மக்கா - இது சத்தியமா frankfurt சார்ந்த yet another காதில தக்காளிச் சட்னி நினைவலைகளே அல்ல - பால்ய வயசில் எனது வாசிப்புகள் பற்றிய மொக்கை மட்டுமே ! And for sure - இதனைத் தெரிந்து கொண்டு இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்தவெல்லாம் முடியாது தான் ; but இந்த ஞாயிறின் ஒரு அரை மணி நேரத்தை போக்க வேணுமானால் செய்யலாம் !

நான் எப்போது வாசிக்கப் பழகினேன் என்பதோ, எதை முதலில் வாசித்தேன் என்பதோ நினைவில்லை ! ஊரில் அப்போது தான் ஆரம்பித்திருந்த இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் என்னைச் சேர்த்ததே டைரெக்டாய் அரை கிளாசில் ! அது ஏனென்று எனக்கும் தெரியாது ; சேர்த்து விட்ட சீனியர் எடிட்டருக்கும் தெரியாது ! வீட்டில் மூத்த சகோதரிகள் இருவரும் தமிழ் மீடியம் ; நம்ம மட்டும் இங்கிலீஷ் - என்பதில் எப்போதுமே ஒரு கெத்து உண்டு ! And ஸ்கூலில் தமிழில் பேசவே கூடாது என்பது ரூல் ; so வேற வழியே இல்லாமல்...what boy ? what girl ? ரேஞ்சில் ஆரம்பித்த மொழிப்பயிற்சி, மெள்ள மெள்ள இங்கிலீஷில் வாசிக்க ரூட் போட்டுத் தந்தது ! 

எனது வாசிப்பு சார்ந்த நினைவுகளில் முதலில் வருவது - அந்நாட்களில் அமர் சித்ர கதாவோ ; அல்லது வேறு யாரோவோ வெளியிட்ட பினோக்கியோ காமிக்ஸ்  தான் ! பொம்மலாட்டக்காரர் செய்திடும் ஒரு மர பொம்மை ; பொய் சொன்னால் அதன் மூக்கு நீண்டு விடும் என்று செல்லும் அந்தக் கதை புக்கை அப்பாவின் ஆபீசில் பிரிண்ட் செய்தார்கள் என்பதான ஞாபகம் ! அதே போல அமர் சித்ர கதாவின் ஏதோவொரு இதழினை இங்கிலீஷிலும், இன்னும் சில பிராந்திய மொழிகளிலும் இங்கு பிரிண்ட் செய்தார்கள் என்பதும் நினைவில் உள்ளது ! அதுவும் எனது துவக்க கால 'படம் பார்க்கும் படலத்தில்' சேர்த்தி !அப்பாவுக்கு நிறையவும், அவரது தம்பிக்கு ஒரு மிடறு குறைவாகவும் காமிக்ஸ் மோகம் உண்டு ! So அவர்கள் வாங்கிக் குவித்திருந்த  எக்கச்சக்கமான காமிக்ஸ் இதழ்கள் விரல் தொடும் அண்மையில் குவிந்திருந்தன ! வீட்டில் இறைந்து கிடந்த வேதாளர் புக்ஸ் & மாண்ட்ரேக் புக்ஸ் எனக்கு ரொம்பச் சின்ன வயது முதலே தோழர்கள் ! சீனியரிடம் அவற்றிலிருந்து கதை கேட்பது ஒரு பக்கம், முத்து காமிக்ஸ் வெளியீடுகளுக்கென இலண்டனிலிருந்து Sea-மெயிலில் வரும் லாரன்ஸ்-டேவிட் ; மாயாவி கதைகளிலிருந்தும் கதை கேட்பது இன்னொரு பக்கம் என்று நாட்கள் நகர்ந்தன !

Early '70s-களில்  ஒற்றை ரூபாய்க்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனையான GoldKey காமிக்ஸ் இதழ்களையுமே வண்டி வண்டியாய் வாங்கி வைத்திருந்தனர் ! அந்நாட்களில் முத்து காமிக்ஸ் செயல்பட்டு வந்து ஆபீஸின் மாடியில் இதற்கென ஒரு லைப்ரரியே உண்டு !  டொனால்டு டக் ; அங்கிள் ஸ்க்ரூஜ் ; மிக்கி மவுஸ் ; பக்ஸ் பன்னி ; daffy duck ; பீகிள் பாய்ஸ்  ; பீப்-பீப் தி ரோட் ரன்னர் ; ஸ்கூபி-டூ ; சூப்பர் goof ; பேபி ஸ்நூட்ஸ் ; லிட்டில் லூலூ - என்று அந்நாட்களது அமெரிக்க டி-வி கார்ட்டூன்களின் காமிக்ஸ் வார்ப்புகள் ஒவ்வொன்றும் கலரில், குட்டிக் குட்டிக் கதைகளில் பின்னிப் பெடலெடுக்கும் ! எனது அதிர்ஷ்டமோ - என்னவோ, அப்பாவுடன் பிறந்த அத்தனை சகோதரர்களின் பிள்ளைகளுக்குமே வாசிப்பில் இம்மி கூட நாட்டம் கிடையாது ! So ஆபீசில் குவிந்து கிடந்த காமிக்ஸ் புக்குகளை பங்கு போட ஈ-காக்காய் கூட இராது ! நான்பாட்டுக்கு திறந்த வீட்டுக்குள் டாபர்மேன் நுழைவதைப் போல புகுந்து இஷ்டத்துக்கு அள்ளி வீட்டுக்கு கொண்டு போய்விடுவேன் ! "குப்பையா சேக்குறான் !!" என்றபடிக்கே அவ்வப்போது அவற்றை ஆபீசுக்கே அம்மா கத்தையாக திருப்பி அனுப்புவது நேர்ந்தாலும், நான் சளைக்காது மறுக்கா எடுத்து வந்து விடுவேன் ! அதிலும் Super Goof என்றதொரு டிஸ்னி பாத்திரம், எனக்கு செம favorite ! சொங்கி போலானதொரு நாய்...ஆரஞ்சு கலரில் சொக்காய் போட்டுக் கொண்டு சுற்றித் திரியும். ஆனால் அதன் தோட்டத்தில் விளையும் Super Goober எனும் விசேஷ கடலைக்கு சூப்பர் ஆற்றலுண்டு ! அதை விழுங்கினால், மறுகணம் சூப்பர்மேன் டிரெஸ் ; முதுகில் ப்ளூ அங்கி என்று மாறுவது மாத்திரமன்றி, சூப்பர்மேனின் ஆற்றல்கள் சகலமுமே கிட்டி விடும் ! தலையில் அணிந்திருக்கும் தொப்பிக்கு அடியில் இந்த சூப்பர் கொட்டைகளை வைத்திருக்கும் ; எவனாவது களவாணிப் பயலை மடக்க வேணுமெனில், அள்ளி வாய்க்குள் போட்டுக் கொண்டு 'TAH DAH' என்றபடிக்கே பறந்து புறப்பட்டு விடும் ! நல்ல பருசான வேர்கடலையைப் பார்க்கும் போதெல்லாம் இன்றைக்குமே எனக்கு அந்த சூப்பர் hero தான் நினைவுக்கு வரும் ! 

GoldKey தவிர்த்து என்னை கட்டுண்டு வைத்திருந்த இன்னொரு காமிக்ஸ் வரிசை - இந்திரஜால் காமிக்ஸ் தான் ! வீட்டுக்கு ரொம்பவே கிட்டே இருந்த உள்ளூர் நியூஸ் ஏஜெண்ட்டின் கடையில் அப்போதெல்லாம் சிறார் புக்ஸ் குவிந்து கிடக்கும் & இந்திரஜால் தமிழிலும், இங்கிலீஷிலும் தருவித்திருப்பார் ! வேதாளர் & மாண்ட்ரேக் என ஆரம்பித்து, பின்னாட்களில் ரிப் கிர்பி ; சார்லி கதைகள் என்றெல்லாம் டிராவல் செய்த இந்திரஜாலிலோ எனது favorite பகதூர் என்றதொரு உள்நாட்டுத் தயாரிப்பு ஹீரோ ! மத்திய பிரதேஷின் சம்பல் பள்ளத்தாக்குகளில் பூலான் தேவி & இன்ன பிற கொள்ளைக் கும்பல்கள் கோலோச்சி வந்த நாட்களவை ! அந்தக் கொள்ளையரை மடக்கும் ஒரு சாகச வீரராய் அறிமுகமான பகதூரை ரொம்பவே ரசித்த ஞாபகம் உள்ளது ! And of course - எனது ஆதர்ஷ வேதாளருடனான பயணமும், மாண்ட்ரேக் + லோதாருடனான நட்பும் இந்திரஜாலில் தான் முழு வீச்சில் தொடர்ந்தது ! அதிலும் "களிமண் ஒட்டகம்" என்றதொரு மாண்ட்ரேக் சாகசம் இன்னமும் நினைவில் நிற்கிறது ! அதனைப் படித்துள்ளோர் இங்கிருப்பின் - நிச்சயம் நம்ம செட் என்பதில் சந்தேகமே இராது ! 



வளர வளர, முத்து காமிக்சின் முதல் வாசகனாகவும் மாறியிருந்தேன் ! ரொம்பச் சீக்கிரமே ஆபீசில் போய் பராக்குப் பார்த்தே இவற்றின் தயாரிப்பின் மீது ஒரு இனம்புரியா வசீகரம் வளர்ந்திருக்க, ஆர்டிஸ்ட்கள் பிரஷ் கொண்டு தடவிக் கொண்டிருந்த பக்கங்களிலேயே கதைகளையும் படிக்க ஆரம்பித்தேன் ! தமிழகமே காதலித்த மாயாவி மீது எனக்கு எழுந்த மையல் பாம்புத்தீவு இதழ் முதலாய் உச்சம் கண்டது ! And "பாதாள நகரம்" எனது alltime favorites-களுள் ஒன்று ! "காலேஜ் படிக்கிறதுக்கு உன்ன லண்டன் அனுப்புவேன்" என்று அள்ளி விடும் படலத்தினை சீனியர் எடிட்டர் அந்நாட்களிலேயே ஆரம்பித்திருக்க, மாயாவியோடு சேர்த்து அவர் பணியாற்றிய அந்த நகரம் மீதும் ஒரு லவ்ஸ் வளர்ந்திருந்தது எனக்கு ! மெய்யாலுமே அந்த ஊரில் "நிழல்படை" என்று ஒரு அமைப்பு இருக்கும் போலும் ' என்னிக்காச்சும் அதைப் போய் பார்க்கணும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன் !  "பாதாள நகரம்" இதழில், மாயாவி லண்டனின் ரிஜெண்ட் பார்க் வழியாய் நடந்து போகும் போது அடுத்த பணி சார்ந்த சங்கேதத் தகவல் தரப்படும் sequence இருக்கும் ! "உடனே ஸ்டேஷனுக்குச் செல்லவும் - அவசரம்" என்று ஒரு சாலையோர ட்ரம் அடிக்கும் ஆசாமி மூலமாய் மாயாவி உஷார்ப்படுத்தப்படும் அந்தப் பக்கங்களை எத்தனை முறை வாயைப் பிளந்தபடிக்கே நான் புரட்டியிருப்பேன் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் ! And மாயாவியைக் கடத்தியிருக்கும் குண்டு சுல்தான் அவரை ஏதோவொரு கண்ணாடி மிஷினுக்குள் போட்டு ஏதோ கதிர்களால் தாக்குவான் ; நம்மாளோ அதிலிருந்து மின்சாரத்தை straw போட்டு உரிஞ்சிக்கினு மிஷினை தெறிக்க விட்டு வெளியேறும் காட்சிக்கெல்லாம் அந்நாட்களில் நான் சிதற விட்ட சில்லறை ஏகம் ! மஞ்சள் பூ மர்மமும் எனது சூப்பர்-டூப்பர் இதழ்கள் லிஸ்ட்டில் உண்டு - கதைக்காகவும், இலண்டன் லவ்ஸ்காகவும் ! ஜானி நீரோவிலோ - "கொலைக்கரம்" என்னை மிரட்டியதொரு ஆல்பம் ! 'டேய்...டேய்...ஜானிக்கு வலிக்கும்டா...கழுத்தை நெரிக்காதே...விட்டுப்புடு !!' என்று கழுத்தை நெரித்தே கொல்லும் அந்த ஒய்வு பெற்ற சிப்பாய்-வில்லனை சபித்ததெல்லாம் எனது நினைவலைகளின் ஒரு அங்கம் ! ஆனால் நிஜத்தைச் சொல்வதானால் ஜாக்கி நீரோவை எனக்கு ரொம்பவெல்லாம் பிடித்ததில்லை ; ஜானி in லண்டன் ; மைக்ரோஅலைவரிசை 848 ; மூளைத் திருடர்கள் போன்ற கதைகளெல்லாம் எனக்கு அவ்வளவாய்ப் புரியலை என்பது காரணமோ - என்னவோ ! கொஞ்ச காலம் கழித்து அறிமுகமான ரிப் கிர்பியோ 'கண்டதும் காதல்' கொள்ளச் செய்த ஹீரோவாக அமைந்து போனார் ! அதிலும் "ரோஜா மாளிகை ரகசியம்" top of the list ! விங்-கமாண்டர் ஜார்ஜ் ; சார்லி - என்று முத்துவில் அறிமுகங்கள் தொடர, அவர்களுக்கும் விசில் போட நான் தவறியதில்லை ! But ஏனோ தெரியலை - காரிகனை பிடிக்கவே பிடிக்காது ! 

ரெகுலர் வாசிப்பில் இந்த அமெரிக்க ஹீரோக்களெல்லாமே ரொம்பவே நெஞ்சுக்கு நெருக்கமாகியிருந்த சூழலில் தான் - "மாலைமதி காமிக்ஸ்" அறிமுகமாகி எனது சந்தோஷக் கோட்டையின் செங்கல்களை உருவியது ! கொடைக்கானலில் விடுமுறைக்காக ஒரு பெரும் கும்பலாய் சித்தப்பா - பெரியப்பா - அத்தையின் குடும்பங்களோடு போயிருந்த சமயம் தான், குமுதம் குழுமம் காமிக்ஸ் உலகினுள் நுழைய உள்ள தகவல் காதில் விழுந்தது ! மாலைமதி காமிக்ஸ் என்ற பெயரிலான வாராந்திர வெளியீடுகளில் அதுநாள் வரை முத்துவில் வெளிவந்து கொண்டிருந்த முக்கால்வாசி நாயகர்கள் வலம் வரவிருப்பதை தனது பிரதர்ஸிடம் அப்பா சொல்லிக்கொண்டிருக்க, எனக்கோ செம காண்டு ! ஏதோ, நம்ம வீட்டுப் பொருளை ஊரார் எடுத்து பயன்படுத்தப் போகிறார் என்ற ரீதியில் கோபமும், அழுகாச்சியுமாய் வந்தது ! And வீட்டுக்குப் பக்கத்திலான அதே புத்தகக்கடையில் முதல் இதழ் விற்பனைக்கு வந்த போது - எனது காண்டையும் மீறி, அதனை வாங்கிடும் ஆர்வமே மேலோங்கியது ! நல்ல compact சைஸ் ; டிசைன் டிசைனான கதைப் பெயர்கள் ; எனக்கு ரொம்பவே பரிச்சயமான நாயகர்கள் -என்ற போது கடுப்பை விழுங்கிக்கொண்டே வாங்க ஆரம்பித்தேன் ! ஒவ்வொரு வெள்ளியும் குமுதம் இதழோடு மாலைமதி காமிக்ஸ் இதழும் வீடு வர ஆரம்பிக்க, பக்கத்து வீட்டில் நிற்கும் அழகான மோட்டார் சைக்கிளை கடுப்போடே ரசிக்கும் பாவனையில் ரசிக்க ஆரம்பித்தேன் ! ஆனால்...ஆனால்...ஓரிரு ஆண்டுகளிலேயே மாலைமதி காமிக்ஸ் - மாலைமதி நாவல் என உருமாற்றம் கண்டது - அவர்கள் எதிர்பார்த்த விற்பனைகள் காமிக்சில் சாத்தியமாகிடாது போனதால் ! So உரிமைகள் மறுக்கா முத்து காமிக்ஸுக்கே திரும்பிடும் என்பது புரிந்த போது, ஒரு அரை நாளைக்கு பேட்மேன் படத்தில் வரும் ஜோக்கரைப் போலவே "ஈஈஈஈ" என்று இளித்துக் கொண்டே திரிந்தேன் ! 

உள்நாட்டு புக்ஸ் தமிழ் வாசிப்புக்குத் தீனி தந்து கொண்டிருக்க, இங்கிலீஷிலோ War Comics எனது அடுத்த craze ஆகிப் போனது ! அத்தனையும் இரண்டாம் உலக யுத்தப் பின்னணியிலான கதைகள் ; அம்புட்டிலும் ஜெர்மன்காரன்கள் நம்பியார்களாகவும், இங்கிலாந்துக்காரன்கள் எம்.ஜி.ஆர்.களாகவும் சித்தரிக்கப்பட்டிருப்பர் ! நமக்குத் தான் லண்டன் பக்கத்து ஊடு ரேஞ்சுக்கு மனசளவில் நெருக்கமாகி இருந்ததே ; அதன் மீது குண்டு வீசும் பயபுள்ளைகளை பொறுக்கவாச்சும் முடியுமா ? டன் டன்னாய் யுத்த காமிக்ஸ் வாசித்தேன் ! அதிலும் ரகங்கள் இருக்கும் ; காலாட்படைகளின் சாகஸம்ஸ் ; tank-களில் அரங்கேறும் அதிரடிகள் ; கப்பற்படை கதைகள் ; வான்வெளி யுத்த சாகசங்களென்று ! எனக்கோ tank கதைகள் & வான்வெளிக் கதைகள் மீது தான் கொள்ளை லவ்ஸ் ! அதன் நீட்சி தான் 10 வருஷங்களுக்கு முன்னே "விண்ணில் ஒரு வேங்கை" என்றொரு வான்வெளி யுத்தக் கதையை கலரில் போட்டு உங்கள் குடல்களை உருவியது ! ஆவேசப்பட்டு அந்தக் கதையின் முதல் 3 ஆல்பங்களுக்கும் உரிமைகளை வாங்கிப் போட்டிருந்தேன் ; ஆனால் முதல் இதழுக்கே நீங்கள் பிடரியில் போட்ட போட்டுக்கு சப்த நாடிகளும் ஒதுங்கியிருக்க, மீத இரண்டை பரணில் கடாசிப்புட்டோம் ! ஆத்தீ...என்னா அடி !  

And யுத்த காமிக்ஸ் பைத்தியம் பிடித்திருந்த நாட்களிலேயே இன்னொரு துப்பாக்கி வீரரும் என்னை முழுசாய் ஆட்கொண்டிருந்தார் ! இவரோ இரண்டாம் உலக யுத்தத்தில் சுட்டுத் தள்ளியவரல்ல - மாறாக Wild West-ல் ரகளை செய்த மனிதர் ! இங்கிலாந்தில் TopSellers என்றதொரு பதிப்பகம் வெளியிட்டு வந்த cowboy காமிக்ஸில் அதிரடியாய் அறிமுகம் ஆன டெக்ஸ் வில்லர் தான் அந்த ஜாம்பவான் ! அந்த கம்பீரமான பெயர் ;  (மீசையில்லா) சிவாஜி கணேசன் சாரை லைட்டாய் நினைவூட்டிய முகவெட்டு ; மின்னலான செயல்வேகம் ; வித்தியாசமான கதைக்களங்கள் - என்று ஒவ்வொரு சாகசமும் என்னை செமத்தியாக வசியம் செய்தது !! "டிராகன் நகரம்" கதையினையும் தலைவாங்கிக் குரங்கையும் அன்றைக்கு நான் படித்த அதே வேகத்துக்குப் பாடங்களையும் படித்திருந்தால் district topper ஆக்கவாச்சும் வந்திருப்பேன் ! பின்னாட்களில் இந்த அசாத்தியர் தான் நமக்கு சோறு போடுவாரென்பது அன்றைக்கே தெரிந்திருந்தால், இன்னுமே கூட ஒரு மிடறு கூடுதல் பயபக்தியோடு வாசித்திருப்பேனோ - என்னவோ ; but still மண்டையினை முழுசுமாய் ஆக்கிரமித்திருந்தார் டெக்ஸ் !!  

கொஞ்சம் கொஞ்சமாய் எனது காமிக்ஸ் வாசிப்பு அடுத்த நிலைக்கு நகன்றதற்கான புண்ணியம் டின்டின் + ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ஆல்பங்களையே சாரும் ! டின்டின் புக்சின் பெரும்பகுதியினை நான் வைத்திருந்த நிலையில், ஸ்கூல் நூலகத்தில் குபீரென்று ஒரு வண்டி Asterix & Obelix காமிக்ஸ் இதழ்களை one fine day உட்புகுத்தி வியப்பூட்டினர் ! அதுநாள் வரைக்கும் இவர்களது இதழ்களை Higginbothams போலான கடைகளில் பார்த்திருந்தேன் தான் ; ஆனாலும் பெருசாய் ஈர்த்திருந்ததில்லை ! ஆனால் ஸ்கூல் லைப்ரரியில் ஓசியில் படிக்கும் வாய்ப்புக் கிட்டிய போது காய்ஞ்ச மாடு கம்பங்கொல்லையில் பாய்ந்த கதை தான் ! அதிலும் Asterix & The Cauldron மற்றும் Asterix & The Roman Agent கதைகளை தலா இருநூறு தபாவச்சும் வாசித்திருப்பேன் ! காமிக்ஸ் மோகம் ஒரு கிறுகிறுக்கும் உச்சம் தொட்ட நாட்களவை என்று சொல்லலாம் !  

இதனூடே நமக்குப் பரிச்சயமான Fleetway காமிக்ஸ்களுக்கொரு சந்தா செலுத்தும் வாய்ப்பும் எப்படியோ அமைந்தது ! இந்தியாவிலிருந்த ஏதோவொரு ஏஜென்சி மூலமாய் பணம் கட்டினால், அவர்கள் தருவித்துத் தருவார்கள் என்பது மாதிரியானதொரு ஏற்பாடு என்பதாக லேசாய் ஞாபகம் ! To his lasting credit - தொழில் செம சிரமத்தில் ஓடிக்கொண்டிருந்த நாட்களிலுமே எனது வாசிப்புகளுக்குத் தீனி போட சீனியர் எடிட்டர் யோசித்ததே இல்லை ! காமிக்ஸ் மட்டும் தானென்றில்லாது, நான் லிஸ்ட் போட்டுத் தரும் Enid Blyton ; Alfred Hitchcock's Three Investigators ; Hardy Boys ; Willard Price த்ரில்லர் நாவல்ஸ் சகலத்தையுமே தவறாது வாங்கித் தந்துவிடுவார் ! அதிலும் அந்த Three Investigators தொடர் அந்த வயதில் மெர்சலூட்டியதொரு வாசிப்பனுபவம் ! மூன்று ஸ்கூல் பசங்கள், தங்களை சூழ்ந்துள்ள ஊர்களில் அகஸ்மாத்தாய் சந்திக்கும் மர்மங்களை முடிச்சவிழ்க்கும் நாவல் வரிசை ! கொஞ்சம் டெரரான மர்மங்களுமே அவற்றுள் சேர்த்தி ! அந்த புக்ஸ் hardcover பதிப்புகளிலும் வெளிவரும் ; நார்மல் பதிப்புகளிலும் வந்திடும் ! எனக்கு ரெண்டையுமே வாங்கிட சீனியர் எடிட்டர் தயங்கியதில்லை ! தற்செயலாய் ஒரு நண்பனின் பையனுக்கு அந்த புக்கை வாங்கிப் பரிசளிக்க நினைத்து சமீபமாய் நெட்டில் தேடினால் அவையெதும் தற்போதைய புழக்கத்தில் இருப்பதாகத் தெரியக்காணோம் & பழைய புக்ஸோ நம்மூர் ஆர்வலர்கள் 'பாட்டில் பூதம்' இதழுக்குச் சொல்லும் விலையை விட மூணு மடங்கு ஜாஸ்தி இருந்தது ! அவற்றை எங்கேனும் தேற்ற முடிந்தால் உங்கள் ஜூனியர்களுக்கு வாசிக்கக் கொடுத்துப் பாருங்கள் folks - நிச்சயமாய் ரசிப்பார்கள் ! 


 

பின்னாட்களில் பெர்ரி மேசன் நாவல்கள் ; தமிழில் துப்பறியும் சாம்பு ; அப்புசாமி-சீதாப்பாட்டி கதைகள் ; சுஜாதா சார் நாவல்கள் என்று வாசிப்புகள் கிளை பிரிந்த போதும், காமிக்ஸ் தான் எனது பிரதான லவ்ஸ் என்பதில் மாற்றமே இருந்திருக்கவில்லை ! ஒவ்வொரு சாப்பாட்டு வேளையிலும் தட்டுக்கு இடப்பக்கம் இருக்கும் காமிக்ஸ் மட்டுமே மாறிடும் ! லக்கி லூக்கின் Western Circus (நமது சூப்பர் சர்க்கஸ்) & Jesse James சாப்பாட்டு மேஜையில் குடியிருந்த எண்ணற்ற நாட்கள் உண்டு ; பேட்மேன் குத்தகைக்கு எடுத்திருந்த நாட்களும் கணிசம் ; Fleetway-ன் "டைகர்" வாரந்திரியின் Annuals ; அமர் சித்ர கதா நிலைகொண்டிருந்த நாட்களும் அநேகம் ! பின்னாட்களில் இவற்றுக்குள்ளெல்லாம் வேறொரு அவதாரில் கால்பதிப்போமென்ற எண்ணங்கள் கிஞ்சித்தும் அன்று இருந்ததில்லை ; சந்தோஷமாய் பொம்ம புக் லோகத்தினில் உலாற்றியதே அந்த ஞாபகங்களின் துணைவன் !  

Looking back, 50 ஆண்டுகளுக்கு முன்பான இந்தியாவில் காமிக்ஸ் வாசிப்புக்கென எனக்குக் கிட்டிய வாய்ப்புகள் ரொம்பவே ஸ்பெஷல் என்பது புரிகிறது ! அப்பாவின் காமிக்ஸ் ப்ரேமமும், அவரது பயணங்களும் மட்டும் இல்லாது போயிருப்பின், இத்தனை பிரம்மாண்டமானதொரு சித்திரக்கதை உலகம் என் கண்முன்னே விரிந்திட அந்தக் காலங்களில் வாய்ப்பே இருந்திராது ! So அந்த வகையில் பெரும் தேவன் மனிடோவின் கருணைப் பார்வை என் மீதிருந்திருக்கிறது ! இல்லாங்காட்டி, காரக்குழம்பை கபாலத்தில் ஈஷிக் கொண்டு ஆப்-ட்ராயரைப் போட்டிக்கினு ரீல்ஸ் போடும் யூத்களுக்குப் போட்டியாக, ஸ்டீலின் கவிதைகளை நம்ம செயலர் எட்டுக்கட்டையில் பாட, பட்டாப்பட்டிகளில் தலீவரும், நானும் டான்ஸை போடும் கொடூரங்களை நீங்கள் ரசித்திருக்க வேண்டிப் போயிருந்திருக்கலாம் ! And ஞாயிறுக்கு பதிவை எதிர்பார்ப்பதற்குப் பதிலாய், எங்க லேட்டஸ்ட் டான்ஸ் வீடியோக்களை இணைய உலகே எதிர்நோக்கியிருக்கக்கூடும் !! Just missssssss !!   

Bye all...அம்மன்கோவில் பொங்கல் களை கட்டியிருக்க, ஊரே திருவிழா கோலத்தில் மினுமினுக்கிறது ! நமது அலுவலகம் நாளை ஒற்றை நாள் மட்டும் லீவு ; so இந்த ஞாயிறை ஆன்லைன் மேளாவுக்கான திட்டமிடலில் செலவிடப் புறப்படுகிறேன் ! MYOMS சந்தா செம வேகத்தில் ஆட்டத்தைத் துவக்கியுள்ளது ; இதே துரிதம் தொடர்ந்தால் சூப்பர் ! See you around ; have a cool Sunday !! 

P.S : Of course - இன்னுமே சில பல காமிக்ஸ் வாசிப்புகளை நான் குறிப்பிட மறந்திருக்கலாம் தான் ; பதிவின் அவசரத்தில் மறந்தவை அப்பாலிக்கா நினைவுக்கு வந்தால் இன்னொரு மொக்கையில்  சொல்கிறேன் ! 

183 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கதைகள் ; ரசனைகள் ; அவற்றைக் கையாளும் விதங்கள் பற்றிய சகலத்தின் மீதான அலசல்களுக்கும் இங்கே இடமுண்டு but விற்பனை & நிர்வாகம் சார்ந்த முடிவுகள் எங்களதாக மாத்திரமே இருந்திடும் சார் ! And they are not for public debate - at least in here !

      And நண்பர் பழனி சார்ந்த விசாரங்களுக்கும் அவசியங்களில்லை ! ஒவ்வொரு ஆண்டின் மே மாதமும் அவரது பிள்ளைகளின் கல்விச் செலவுக்கான ஒரு தொகையினை நாம் தருவது இன்றும், என்றும் தொடர்ந்திடும் !

      Delete
    2. And ரைட்டோ - தப்போ, நம் மத்தியில் இன்றில்லாத நண்பர் துவக்கி வைத்ததொரு சமாச்சாரத்தின் பலன் அவரது குடும்பத்துக்குப் போகாத நிலையில், அவரை இதனில் தொடர்புபடுத்திப் பதிவிடுவது பொருத்தமாக இல்லை ! வேண்டாமே - ப்ளீஸ் !

      Delete
    3. சந்தோசம் Sir
      இனிமேல் மாதம், Rs.600 to 700 ஐ
      காமிக்ஸ் புத்தகங்களுக்கு ஒதுக்குவதைத் தவிர்த்து வேறு ஏதாவது பயனுள்ள ஒன்றுக்கு பயன்படுத்தலாம்.
      கடினமான முடிவுதான் இருப்பினும் பராவாயில்லை..
      நன்றி

      Delete
    4. வாசிப்புகள் பிரதானமாய் நமக்கே நமக்காக நண்பரே ! எனக்காகவோ, நண்பருக்காகவோ ; அந்தப் பத்து விழுக்காடு டிஸ்கவுண்டுக்காகவோ கிடையாதென்பதை நீங்களுமே அறிவீர்கள் !

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. ஸ்ரீ சார் நாரதர் கலகம் மட்டுமே நன்மையில் முடியும் மற்றவர் கலகம் தடம் தெரியாமல் போகும் free யா விடுங்க

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
  2. "Looking back, 50 ஆண்டுகளுக்கு முன்பான இந்தியாவில் காமிக்ஸ் வாசிப்புக்கென எனக்குக் கிட்டிய வாய்ப்புகள் ரொம்பவே ஸ்பெஷல் என்பது புரிகிறது ! "

    "இல்லாங்காட்டி, காரக்குழம்பை கபாலத்தில் ஈஷிக் கொண்டு ஆப்-ட்ராயரைப் போட்டிக்கினு ரீல்ஸ் போடும் யூத்களுக்குப் போட்டியாக, ஸ்டீலின் கவிதைகளை நம்ம செயலர் எட்டுக்கட்டையில் பாட, பட்டாப்பட்டிகளில் தலீவரும், நானும் டான்ஸை போடும் கொடூரங்களை நீங்கள் ரசித்திருக்க வேண்டிப் போயிருக்கலாம் !"

    டியர் எடி... நல்ல வேலை இப்படி நடக்கல... இல்லனா இதெல்லாம் பார்க்குற துர்பாக்கியம் அமைஞ்சிருக்கும் ....😁

    சீனியர் எடிட்டருக்கு கோடி நன்றிகள். 🥹

    ReplyDelete
    Replies
    1. யார் கண்டது ? நீங்களும் சைடிலே மூவ்மென்ட்ஸ் போட்டுக்கினு இருந்திருப்பீங்களோ - என்னவோ ?

      Delete
    2. கவிஞர் ஸ்டீல் கவிதை எழுத
      பாடகர் செயலர் பாட்டுப் பாட
      நம்ம தலீவரும் ஆசிரியரும் டான்ஸ் ஆட
      அட அட அட ஒரு அட்டகாசமான விருந்தே ஈரோட்டில் இந்த வருடம் இருக்கும் போலிருக்கே.
      ஆனா அத நினைச்சு பார்த்தா தான் டெரரா இருக்கு

      Delete
    3. 😄😄😄😄... சிரிப்பு தாங்கலைங்க சார்... கண்ணீர் பொல, பொல வென்று வந்துடுது... மிகவும் வியப்பான ஒரு விஷயம்... எனக்கும் பாதாள நகரம்.. மஞ்சள் பூ மர்மம் மிகவும், மிகவும் பிடித்த கதைகள் சார்... மஞ்சள் பூ மர்மம் .. படித்து 40 வருடம் இருக்கும்... அந்த கடைசி பேனல் மற்றும் அந்த பெண் ஜுனைதா வை இன்னும் மறக்க முடியல... அப்ப 50 முறையாவது படித்திருப்பேன்.. CSI நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும்போது அந்த கடைசி frame ஐ என் ஓவிய நோட்டில் வரைந்து வைத்திருந்தேன்.. பிரேமலதா டீச்சர் அதை பார்த்து விட்டு.. "இந்த ஓவியம் எதில இருந்தது,..ஏன் இந்த கடைசி கட்டத்த மட்டும் வரைஞ்ச,.".. என்று கேட்டதும்.. அதற்க்கு நான் சொன்ன பதிலை கேட்டு அவர்...."நீ ஓவியன் மட்டும் இல்லடா.. நந்தி.. நல்ல கதாஆசிரியனாவும் வருவடா..". 😄😄. என்று சிரித்துக்கொண்டே என்னை பாராட்டியதை மறக்கவே முடியலைங்க
      சார்.. வாழ்த்துக்கள்.. நன்றி
      ... ஏனோ.. இப்பவும் கண்ணீர் வருதுங்க... ஏன்னு புரியல... ❤️❤️❤️..
      Sorry.. உணர்வு வயப்பட்டு விட்டேன்.. 😄😄❤️.

      Delete
  3. அருமையான நினைவலைகள் ஆசிரியரே

    ReplyDelete
  4. பள்ளிக்கூட நூலகத்தில் என் சகோதரி கண்டுபிடித்த மறக்க முடியா டிடெக்டிவ் அட்வென்சர்ஸ் "The Three Investigators"
    ஆதில் ரால்ஸ் ராயை மறக்கு முடியுமா

    Slang-னா என்ன என்பதை இக்கதைகள் மூலமாக தான் தெரிந்து கொண்டேன்
    ஒரு கதையில் "slangs" தான் க்ளு-க்களாக குடுக்கப் பட்டிருக்கும்

    ReplyDelete
  5. சீனியர் ஆசிரியருக்கு பாராட்டுகள் பல
    மிக அருமையான பணி செய்துள்ளார்

    ReplyDelete
    Replies
    1. என் அம்மா எனக்கு கதை புத்தகங்கள் வாங்கி குடுத்து படிக்க ஊக்குவிக்க படுத்தியது நினைவுக்கு வருகிறது
      இல்லையென்றால் நானும் காமிக்ஸ் பக்கம் வந்திருக்க மாட்டேன்

      Delete
  6. அந்த பாதாள நகரம் சிகுவென்ஸ் எனக்கும் மிகவும் ஃபேவரிட்!

    என்னமா ரகசியத்தை பராமரிக்கிறாங்க!

    ReplyDelete
  7. Thanks for recommending The three investigators sir

    ReplyDelete
    Replies
    1. Willard Price புக்ஸையும் தேடிப்பாருங்கள் சார் ! ஒவ்வொன்றும் ஒரு வனவிலங்கு சார்ந்த சாகசமாய் - செம த்ரில்லிங்காக இருக்கும் !!

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரயர் தங்களுக்கு பதில் மேலே சொல்லி உள்ளார்

      Delete
    2. //நண்பர்களும் உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்//

      தனிப்பட்ட பிஸினஸ் சார்ந்த விஷயங்களை இங்கே பதிவிட வேண்டாமே , சகோ

      இது முறையானது அல்ல

      Delete
  9. /// To his lasting credit - தொழில் செம சிரமத்தில் ஓடிக்கொண்டிருந்த நாட்களிலுமே எனது வாசிப்புகளுக்குத் தீனி போட சீனியர் எடிட்டர் யோசித்ததே இல்லை ! காமிக்ஸ் மட்டும் தானென்றில்லாது, நான் லிஸ்ட் போட்டுத்தரும் த்ரில்லர் நாவல்ஸ் சகலத்தையுமே தவறாது வாங்கித் தந்துவிடுவார்///
    இது தந்தை மகர்க்காற்றும் உதவி...
    முத்துகாமிக்ஸ்.. லயன் காமிக்ஸ்...
    V காமிக்ஸ்..
    இது மகன் தந்தைக்காற்றும் உதவி.
    தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம்.

    ReplyDelete
  10. ஞாயிறு வணக்கம்

    ReplyDelete
  11. கோடானா கோடி நன்றி யேசப்பா...

    ReplyDelete
  12. //ஒரு அரை நாளைக்கு பேட்மேன் படத்தில் வரும் ஜோக்கரைப் போலவே "ஈஈஈஈ" என்று இளித்துக் கொண்டே திரிந்தேன் ! //

    🤣🤣🤣🤣🤣
    I know that feeling

    ReplyDelete
  13. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  14. //so இந்த ஞாயிறை ஆன்லைன் மேளாவுக்கான திட்டமிடலில் செலவிடப் புறப்படுகிறேன்//

    கூடிய சீக்கிரத்தில் புத்தங்கள் லிஸ்ட் தெரிந்து விடும், சூப்பர்

    ReplyDelete
  15. Replies
    1. நண்பர் குமார் சேலம் அவர்களிடம்,
      மதுரை கோ புதூர் நகர கிளை நூலகத்திற்கு ,
      பள்ளி சிறார்கள் படிப்பதற்கு ,
      காமிக்ஸ் மற்றும் கார்ட்டூன் புத்தகங்கள்
      கேட்டிருந்தேன்.
      அவரும் எனது வேண்டுகோளை ஏற்று
      புத்தகங்களை வாங்கி அனுப்பி இருந்தார்.
      அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

      Delete
    2. அருமையான செயல் @Kumar சகொ 👏👏👏

      Delete
    3. நண்பர் சேலம் குமாருக்கு நன்றிகள் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார்

      Delete
    4. நன்றி நண்பர்களே...

      Delete
    5. Great work kumaar சார்...
      Pls keep rocking💪💪💪

      Delete
  16. புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில்
    ஒப்படைக்க பட்டது.

    ReplyDelete
  17. அருமையான பதிவு sir.
    கமல் ஹாசன் தமது பேட்டிகளில் "தனக்கு பிடிச்ச விஷயத்தை செய்யறதுக்கு காசும் கொடுக்கறாங்க.. தமக்கு சினிமா எப்போதும் போரடித்ததே இல்லை." என்பதாக சொல்லியிருப்பார்.

    அதுபோல் ஒரு சிலருக்கே "கரும்பு தின்ன கூலியும் வாங்கிக்கோ" என்பது போல் தொழிலும் அமையும். கமல் ஹாசன் போல் நீங்களும் உங்கள் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல் சைல்ட் ஆக தான் இருந்துள்ளீர்கள் sir. மற்றும் தங்களுக்கு விருப்பமான காமிக்ஸ் தொழிலிலேயே நீடிக்கும் பாக்கியமும் அமைந்துள்ளது. உண்மையில் யாருக்கும் அமையாத தந்தையும் தங்களுக்கு கிடைத்தது தங்களின் பெரும் பேறு sir.

    ReplyDelete
  18. பதிவில் இரும்புக்கை மாயாவி நினைவலைகளை குறிப்பிட்ட போது.. என் சிறுவயதில் வேதாளரும் அவரது கானகமும் நிஜமாகவே அப்பிரிக்காவில் எங்கோ உள்ளது என்று நம்பியிருந்தேன். அது நினைவில் வந்து போனது தங்கள் பதிவை வாசித்ததும்.

    ReplyDelete
  19. நானும், என் சிறு வயதில் டெங்காலி கானகம், ஈடன் தோட்டம் இவைகள் நிஜமாக உள்ளன என்று நினைத்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் தான் சார்...
      அதுவும் அந்த ஈடன் தோட்டத்துக்கும், தங்க கடற்கரைக்கும் போய் பார்க்க வேண்டும் என ரொம்ப ஆசையா இருக்கும்😀😀😀

      Delete
  20. மலரும் நினைவுகளை படிப்பதே தனி சுவைதான் சார்.
    அப்றம்...

    🌹இந்த மாசம் வெளியான "சாபம் சுமந்த தங்கம்" பெளன்சரின் மற்றுமொரு அதகள கதை. "இதுஇது இப்படித்தான்" என்ற வழக்கமான கதைகளின் நியாய தர்மங்களை சற்றே ஒதுக்கிதள்ளும் எக்ஸ்ட்ரீமான கதாபாத்திர படைப்புக்களால் பல இடங்களில் படிப்பவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது.
    ஒவ்வொரு பாகத்தின் முடிவில் முடியும் அதே கேரக்டரை கொண்டு அடுத்த பாகத்தை தொடர்வது நல்ல சுவாரஸ்யமான தொடக்கம்.
    "அடுத்தது எப்ப?" என மனதை பரபரப்படுத்தும் இது போன்ற தெறிக்கவிடும் கதைகளை படிக்க வாய்ப்ளித்த லயன் காமிக்ஸ்க்கு நன்றிகள் பல.❤️.

    🌹இளம் டெக்ஸ்ன் "பகைவருக்கு பஞ்சமேது?"
    கதையை ஒரு எதிர்பார்ப்போடு படிக்கறப்ப பாதியோடு சட்டென தொடரும் போட்டது சற்றே வருத்தமாக இருந்தது சார். குறைஞ்சபட்சம் அந்த சம்பவத்தை முழுமையாக முடித்திருக்கலாம். கொஞ்சம் மனசு வெச்சு அடுத்தடுத்த பாகங்களை வெரசா போட்டு தாங்க சார்🙏.

    ReplyDelete
  21. ஆஹா ...செம சூப்பர் பதிவு சார்...வந்ததிலே பெஸ்ட் இதான்...நீங்க மட்டும் நல்லா ரசிச்சு ட்ரு ஆஸ்ட்ரிக்ச தராம விட்டுட்டீங்களே சார்...இந்த ஆயிரம் சாதனைக்கு அது லவட்டுனா எப்படி இருக்கும்....அந்த நாவல்கள் தமிழ்ல மொழி பெயர்த்திருந்தா மாயாஜால நாவல்களோட இதையும் கலந்து குடிச்சிருப்போமே ...ஜஸ்ட்ட்...மிஸ்ஸ்ஸ்....சே...ஆனா உங்களுக்கு எதெல்லாம் புடிக்கலியோ அதெல்லாம் எனக்கும் புடிக்கல சார்...நீங்க சொன்ன கதைகள் என் பையனுக்கு தேடி பார்க்கிறேன்..பிற கதைகள பகிருங்க....நான் படிச்ச மொத கதை நிச்சயமா இரும்பு மனிதன்தான்

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பிருந்தா அந்த வால்ட் டிஸ்னி கதைகள் எல்லாத்லயும் ஒன்ன மே மேளால பாப்பமே

      Delete
  22. எடிசார் ..
    ஒன்று விட்டு போச்சு-ன்னு நினைக்கிறேன்..
    மாயாஜாலக் கதைகள் படித்திருக்கிறீர்களா ?ii.
    நாங்க அப்ப - ஊர் பக்கம் தான் இருந்தோம்..
    சிங்கம்புணரி விருதுநகர் - என்று. - கோடை விடுமுறையில் - அம்மா - சொந்த பந்தங்களை
    கூட்டிச் செல்வார்கள்..
    நாகர்கோவிலில் - ஒரு தாத்தா
    டிரங் பெட்டி நிறைய. - மாயஜாலக் கதைகள் - நம் ஊர் படக்கதை தயாரிப்புகள் வைத்திருப்பார்..
    அந்த மாயஜாலக் கதைகள் வாசித்த அனுபவம் மறக்க முடியாது..

    ReplyDelete
    Replies
    1. இல்லையே..
      நான் படித்த மாயஜாலக் கதைகளின் ஆசிரியர்கள் பேரே டெரரா இருக்குமே .ii
      (எல்லாத்திலயும் அரக்கனின் உயிர் - (அ) மந்திரமாதியின் உயிர் - வேறு எங்கோ தான் இருக்கும் :)

      Delete
    2. அது போல நாயகனின் பறக்கும் அரக்கி ரத்தம்...அதை நெற்றியில் வைத்தால் பறக்கும் குதிரை....என் பல அற்புதங்கள் கொண்ட தொடர் நாயகன் ....சில கதைகளே கிடைத்தன ...தேடித் தேடி படித்தேன் 80 இறுதிகளில்...70 களில் வந்தவை போல...
      சாரி அணில் மாமா அல்ல...அணில் அண்ணா

      Delete
  23. சார் ரொம்ப ரொம்ப நாட்களுக்கு பிறகு ரொம்ப அருமையான பதிவு. உங்கள் மலரும் நினைவுகளை படிக்கும் போது நாங்களும் அங்கே சென்று வந்த உணர்வு. அருமை சார். மிகவும் ரசித்து படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இது பதிவு எண் 988.

      Delete
    2. கேக்கலாம்னு இருந்தேன். நீங்களே சொல்லிட்டீங்க. நன்றி சார்

      Delete
  24. சிரிக்க வைத்த பதிவு..


    பொறாமை பட வைத்த பதிவு..


    பெருமை பட வைத்த பதிவு...


    எதற்கு ,எதற்கு என நீங்களே யூகித்து கொள்ளுங்கள் சார....:-)


    உங்களின் காமிக்ஸ் ஆர்வமே அன்றும் இன்றும் இனி என்றும் எங்களின் காமிக்ஸ் பசியை போக்கி வருகிறது என்பதும் உண்மை..

    ReplyDelete
  25. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  26. Replies
    1. ஞாயிறு பதிவுக்கு வரவேற்கிறேன், சகோ

      Delete
    2. என்ன குமுதா பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு?

      Delete
    3. 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
  27. அருமையான பதிவு !

    ReplyDelete
  28. அபாரமான பதிவு சார்🖊️🖊️🖊️🔥🔥🔥

    Time machine இல் ஏறி அந்த காலத்துக்கு போய் வந்தது போல் இருந்தது🕛⚙️🛰️

    கூடவே எங்களது சிறு வயது comics மற்றும் பிற புத்தக வாசிப்பையும் நினைவுப் படுத்தி சென்றது👏👏👏

    உங்களது comics காதலும், ரசனைகளும் இந்த தலைமுறைக்கும் கடத்தப் படுவதை எண்ணி சந்தோஷப் பட முடிகிறது😀❤️

    ReplyDelete
  29. ***** சாபம் சுமந்த தங்கம் ******

    அதீத வன்முறைகளற்ற பெளன்ஸரைப் பார்ப்பது ஒரு நல்ல மாறுதல்!! இதமான(!) வன்முறைகள் ஆங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்டிருந்தாலும், முந்தைய பாகங்களோடு ஒப்பிடும்போது இதில் குறைச்சலாகவே தோன்றுகிறது!
    160+ பக்கங்கள் இருந்தாலும் பரபரவென்று பட்டாசாய் பறக்கிறது கதை!!
    கதாபாத்திரங்கள் பலமுள்ளதாய் அமைந்திருப்பது இப்படைப்பின் சிறப்புகளுள் ஒன்று!
    முகத்தில் டாட்டூவுடன் அறிமுகமாகி கடைசிவரை வதைபடும் அந்தச் சிறுமி பான்சிடா உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன!
    வில்லன் - எல் குச்சிலோ - மிரட்டுகிறான்!

    சித்திரங்களும் வண்ணங்களும் கண்களுக்கு இதம் சேர்க்க; எடிட்டர் + சுகன்யா சகோவின் கூட்டணியில் வசனங்களும் ரகளை செய்திட; உச்சகட்ட பரபரப்போடு முடிகிறது க்ளைமாக்ஸ்!!

    பெரும்பாலான கெளபாய் கதைக்களங்கள் தங்கப்புதையலையே சுற்றிவருவது மட்டும் ஒரு மெல்லிய சலிப்பை ஏற்படுத்துகின்றது!

    10/10

    ReplyDelete
  30. உங்கள் பதிவில் குறிப்பிட்ட மந்திரவாதி மாண்ரெக் களிமண் ஓட்டகம் கதை பற்றிய உங்கள் நினைவலைகள் என்னை ஐம்பது வருடங்கள் பின்னோக்கி அழைத்து சென்றுவிட்டது.

    முகத்தை அற்புதமாக சில நிமிடத்தில் மேக்கப் செய்து மாற்றிக்கொண்டு கொள்ளையடிக்கும் ஒரு பலே கொள்ளைக்காரனை மந்திரவாதி மாண்ரெக் பிடித்துத் தருவார்.

    அந்த கொள்ளையன் பலமுறை சிறையில் இருந்து சாமார்த்தியமாக தப்பித்துவிட்டதால் அவனை தங்கம் பாதுகாப்பது போல பலத்த பாதுகாப்புடன் ஐந்து வருடங்களாக சிறையில் வைத்திருக்கும் நிலையில்...

    அந்த பலே கில்லாடியை ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி எடுக்க ஸ்பெஷல் பர்மிஷனுடன் பேட்டி காண வரும் சந்தர்ப்பத்தை அந்த பலே கொள்ளையன் பயன்படுத்திக்கொண்டு, அந்த பத்திரிக்கையாளர் போல வேடத்தை மாற்றி சிறையில் இருந்து தப்பிவிடுவான்.

    "நான் தப்பிவந்து முதலில் உன்னை கொல்வேன் மாண்ரெக். " என சபதம்செய்தபடி நேராக மந்திரவாதி மாண்ரெக் மாளிகைக்கே காய்கறி,மாமிசம் சப்ளை செய்யும் பணியாள் போல வேடமணிந்து உள்ளே வந்து செல்வான்.

    அவன் கொடுத்துவிட்டு சென்ற உணவு பொட்டலத்தின் மேல் ஒரு சின்ன களிமண் ஓட்ட பொம்மை வைத்து, அத்துடன் ஒரு துண்டுசீட்டில் 'உன் சாவு விரைவில்' என குறிப்பும் வைத்திருப்பான்.

    உடனே மாண்ரெக் அந்த உணவு வண்டியை மடக்கிபிடிக்க போலீஸுக்கு சேதி தட்டிவிட்டு லொதருடன் விரைவார். உடனே ஒரு போலீஸ்காரரும் பைக்கில் விரட்டிச்சென்று பலே திருடனை பிடித்துவிடுவான். அடுத்து மாண்ரெக்கும் லொதரும் அங்கு வந்த உடனே அந்த போலீஸ்காரன் 'இந்த வண்டியை மடக்கி இதில் உள்ளவனை உடனே கைது செய்' என உத்தரவு வந்தது பிடித்துவிட்டேன், அடுத்த வளைவில் ஒரு விபத்து நடந்துவிட்டதாம் எனவே நான் அங்கு விரைய வேண்டும் நீங்கள் இந்த கைதியை பார்த்துக்கொள்ளுங்கள்' என போலீஸ்காரன் பைக்கில் சிட்டாய் பறந்துவிடுவான்.

    பிறகு தான் தெரியும் வண்டியில் இருப்பவன் உண்மையான வண்டிக்காரன். போலீஸ்காரன் வேடத்தில் மீண்டும் தப்பித்தவன் அந்த பலே திருடன் என்ற செய்தி. அங்கு மீண்டும் ஒரு சின்ன களிமண் ஓட்டக பொம்மையும் ஒரு துண்டு சீட்டில் 'இரண்டுமுறை உன் முன்னால் வந்தது போல மூன்றாவது முறை வருவேன் உன்னை கொல்வதற்கு' என குறிப்பை தனது டிரேட்மார்க் போல அடையாளம் வைத்திருப்பான் பலே திருடன்.

    வேதாளர் எதிரிகள் முகத்தில் எலும்புக்கூடு முத்திரை 'பன்ச்' பண்ணுவது போல, பலே திருடன் தனது கைவரிசை காட்டும் இடங்களில் எல்லாம் களிமண் ஓட்டம் விட்டுச் செல்வான். கதை சும்மா ஜெட் வேகத்தில் நகரும், வேடங்கள் மாற்றிக்கொண்டு தப்பிக்கும் அந்த பலே திருடனின் சாமார்த்தியம் அந்த சின்ன வயதில் படித்த படக்கதை இன்றும் காட்சிகளாக ஒடுகிறது.

    இதில் ஒரு சுவையான விஷயம் என்னவென்றால், இந்த புத்தகமும் இரும்புக்கை மாயாவியின் முதல் புத்தகமும் ஒருசேர விற்பனைக்கு கடையில் வந்தது என்பது தான் மறக்க முடியாத நினைவு. அன்று ஆ வென வாய்பிளந்து தலையை தூக்கி பெட்டிக்கடை மேல் கயிற்றில் கிளிப் போட்டு தொங்கவிடப்பட்டிருந்த முத்துகாமிக்ஸ் அட்டையில் மின்சாரம் தெரிக்கும் இரும்புகை ஒளியும், மாயாவியின் முகமும் இன்றும் மனதின் மையத்திலேயே உள்ளன.

    முப்பதுக்கும் குறைவாக வந்த மாலைமதி காமிக்ஸ்...பத்து புத்தங்கள் மட்டுமே டிஷ்னி காமிக்ஸை வெளியிட்ட அமர்சித்திர கதை, (அதில் வந்தவை தான் பினோக்கியா) இது பற்றி எல்லாம் நினைக்க நினைக்க மனம் பத்துவயது பாலகனாகவே மாறிவிட்டது.

    என்ன ஐம்பது வருடங்களாக அனைத்தையும் பத்திரப்படுத்தி பரனில் வைத்ததை எடுத்து தழுவிப் பார்க்கும் வாய்ப்பும்,உடல் ஒத்துழைப்பும் மட்டுமே இந்த பாலக வயோதிகனுக்கு கிடைக்காத நிலை.

    இதைப் பற்றியெல்லாம் பேசவே ஆள் இல்லாத சூழலில், பதிவாக ஒரு காமிக்ஸ் ஆசிரியர் எழுதுவதை படிக்க அவ்வளவு சுவையாக உள்ளது. காலமும் காமிக்ஸிம் வந்தேபாரத் வேகத்தில் எங்கோ சென்றுவிட்ட இந்த காலத்தில்...அந்த காலத்தை பற்றி பகிர ஒரு நண்பராக ஒரு  பத்திரிக்கை ஆசியராக இருக்கிறார் என்பதை நினைக்கையில் மனசு லேசாக உணர்கிறேன்.

    இங்கு பகிர்ந்தது ஐந்து நிமிட சிந்தனை தான். அதை பகிர,டைப் அடிக்க என் அக்கா மகன் இரண்டு மணிநேரம் வரையில் நேரம் விழுங்கிவிட்டது என நினைக்கையில் வருத்தமாக உள்ளது.

    இது சார்ந்த சிந்ததைகள் மணிக்கணக்காக ஓடிக்கொண்டே உள்ளது. அதை எழுத்தில் பகிரும் வாய்ப்பு என்பது ஒரு எழுத்தாளருக்கே சாத்தியம்.

    பழைய நினைவுகளை அவ்வப்போது ஆசியர் பகிர வேண்டுகிறேன்.

    (என் மாமா சொன்னது பலவிஷயங்கள் என்றாலும் கூட, அதை தமிழில் டைப் செய்வது என்னால் இவ்வளவே சாத்தியமானது. இதுவே பலமுறை புரூப் பார்த்து முடிப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. மற்றபடி அவரின் ஊர்,பெயர் விவரங்கள் சொல்ல வேண்டாம் என வேண்டினார்...காரணம் புத்தக வேட்டையர்கள் என குறிப்பிட்டால் ஆசியருக்கு புதிந்திடும் என்றார்.) 

    ReplyDelete
    Replies
    1. முத்துகாமிக்ஸ் ஸ்தாபகர் மதிப்பிற்குரிய சௌந்திரபாண்டியன் அவர்களை நலம் விசாரித்ததாக தெரிவிக்க சொன்னதை டைப்பிங் எடிட்செய்யும்போது தவறிவிட்டது. (மன்னிக்கவும் மாமா)

      Delete
    2. உண்மை சகோ.. என்னை சிரிக்கவும் வைத்தது... கண்கலங்கவும் வைத்தது... எடிட்டர் ன் பதிவு... ❤️👍🙏..

      Delete
    3. சூப்பர் நண்பரே...ஒட்டக கதை அருமை...கடையில் தொங்கிய காமிக்ஸ்கள்...ஒரேமரம் முழுக்க வகை வகையான மனமான ருசியான பழங்கள் தொங்குவதை போல

      Delete
    4. Super sir.
      நம்முடைய பால்ய கால நினைவுகளை பல பதிவுகளில் நம் கண்முன்னே ஆசிரியர் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறார்.
      இன்று போல் என்றும் வாழ்க படத்தில் நம்பியார் எம் ஜி ஆரிடம் சொல்வதாக ஒரு வசனம் வரும். அதில் நம்பியார் ரிடையர்டு மிலிட்டரி ஆபீசராக வருவார்.
      " இலையுதிர் காலத்தில் இருந்து கொண்டு இளவேனில் காலத்தை எண்ணிப் பார்க்கிறேன்" என்பார்.
      இது அனைவருக்கும் பொருந்தக்கூடியதே.
      ஆசிரியரின் காமிக்ஸ் மீதான காதலால், நம்மில் பலருடைய பால்ய காலங்கள் தற்போது நிகழ்காலங்களாக மாறி வருகின்றன.
      நன்றிகள் சார், அனைத்து நண்பர்கள் சார்பிலும்.

      Delete
    5. மாண்ட்ரேக் கதைகளை பகடி செய்வதை மட்டுமே அண்மைக் காலங்களில் கண்டு வந்த எனக்கு, இந்த பதிவு ஒரு உற்சாக பானம்...

      அதிலும் எடிட்டர் மற்றும் ஒரு பழம் காமிக்ஸ் வாசகரின் பதிவு என இரட்டைப் பதிவுகள் மாண்டிரெக்கை சிலாகித்து எழுதியுள்ளதை பார்க்கும் போது எனக்கும் அதே உற்சாகம்!

      Delete
  31. //பின்னாட்களில் பெர்ரி மேசன் நாவல்கள்....  என்று வாசிப்புகள் கிளை பிரிந்த போதும், காமிக்ஸ் தான் எனது பிரதான லவ்ஸ்  //
    தொண்ணூறுகளின் துவக்கத்தில் நீங்கள் வெளியிட்ட திகில் லைப்ரரி நாவல்கள், அப்போது புற்றீசல் போல வந்து கொண்டிருந்த இதர மாத நாவல்களில் இருந்து வேறுபட்டுத் தெரிந்தன. அந்நியமான மற்றும் புராதனமான கதைக்களங்களைக் கொண்டிருந்தாலோ என்னவோ, அவை சரியான வரவேற்பைப் பெறவில்லை (என நினைக்கிறேன்). ஒரு சில பெர்ரி மேசனின் கதைகளையும் வெளியிட்டிருந்தீர்கள். என்றாவது ஒரு நாள், அப்புத்தகங்களைத் தேடி எடுத்துப் புரட்டிப் பார்க்க வேண்டும் இரண்டாம் இதழில், நான் எழுதிய வாசகர் கடிதங்களும் இடம் பெற்றிருந்தன!

    ReplyDelete
  32. //டெக்ஸ் வில்லர் தான் அந்த ஜாம்பவான் ! அந்த கம்பீரமான பெயர் ; (மீசையில்லா) *சிவாஜி கணேசன்* சாரை லைட்டாய் நினைவூட்டிய முகவெட்டு ; //

    இனி டெக்ஸை பார்க்கும் போதெல்லாம் கௌரவம் சிவாஜி முகம் மைண்ட்ல வந்து நிக்குமே சார்!!
    நல்ல வேளை, நமது வாலிப வயோதிகர் கார்ஸன் மேஜர் சுந்தர்ராஜன் போல தங்களுக்கு தோன்றவில்லை. ஹௌ ஆர் யூ, நீங்க எப்படி இருக்கீங்க ன்னு கார்ஸனுக்கு டபுள் டயலாக் எழுத வேண்டியிருந்திருக்கும். :-)

    ReplyDelete
  33. பிளாக் மெயில்...!

    விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷலின் இன்னொரு பட்டாசு கதை!

    விங் பிரிவின் தலைவரான ஆல்பா வின் நண்பர் மற்றும் பெரும் செல்வந்தர் புதிதாக கட்டமைத்த டேங்கர் கப்பலை தொடங்கி வைக்க இருக்கிறார். அதற்கு நடைபெறும் பார்ட்டியில் தனக்கு பதிலாக ஜார்ஜ் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆல்ஃபா அனுப்பி வைக்கிறார்.

    பார்ட்டி தொடங்கவிருக்கும் நேரத்தில் தென் சீனக் கடலில் இருக்கும் அந்த கப்பலை ஹைஜாக் செய்கிறார்கள் ஒரு குழுவினர். கப்பல் முழுமையாக மீண்டும் கைக்கு வர வேண்டும் என்றால் 10 மில்லியன் டாலர்கள் ரொக்கமாக கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை.

    அந்தப் பணத்தை கொண்டு போய் சேர்ப்பிக்க நம்பிக்கையான ஏஜெண்டாக விங் கமாண்டர் ஜார்ஜினை தேர்ந்தெடுக்கிறார் அந்த செல்வந்தர். ஜார்ஜுக்கோ பணத்தை அப்படியே தூக்கிக் கொடுத்து விட மனமில்லை. ஒரு துப்பறிவாளரின் மூளையோடு யோசிக்கும் ஜார்ஜ், பணத்துக்கு பதிலாக வேறு ஒன்றை ஹெலிகாப்டர் வழியாக கப்பலில் இறக்குவதற்கு திட்டம் போடுகிறார்.

    ஜார்ஜ் எப்படியும் குளறுபடி ஏற்படுத்துவார் என்பதை யூகிக்கும் கொள்ளையர் கும்பலின் கையாளாக இருக்கும் நபர், தன்னுடைய குழுவிற்கு தகவல் கொடுத்து மாற்று திட்டத்தை வகுத்து ஜார்ஜ் ஹெலிகாப்டரில் செல்லும் போது பின் தொடர்ந்து கண்காணித்து செல்கிறார். தன்னுடைய திட்டத்தை எதிரிகள் யூகித்தீட்டு யூகித்திருக்கிறார்கள் என்பதை உணராத ஜார்ஜ் ஹெலிகாப்டரில் செல்லும்போது ஆல்பாவிடம் பேசிவிட்டு ஆப்கானிஸ்தானில் இறங்கி தனக்கு தேவையான தளவாடங்களை ஏற்றுக் கொண்டு ஹாங்காங்கில் உள்ள பேங்க்-ஐ நோக்கி செல்கிறார்.

    அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதை ஜார்ஜ் உணரவில்லை! கவச வண்டியில் கொண்டு வரப்பட்டு, ஹெலிகாப்டரில் ஏற்றப்பட இருக்கும் பணத்தை, வாகனத்தில் இருந்து மாற்றும் போதே களவாடிச் செல்வதே கொள்ளையர்களின் திட்டம்!

    கொள்ளையர்கள் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்பதையும், இடைமறித்து பணத்தை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்பதையும் தெரியாமலேயே, ஜார்ஜ் சமயோசிதமாக வேறொரு திட்டத்தை போட்டு வைத்திருக்கிறார்.

    எதிரிகள் தங்களுடைய நோக்கத்தில் வெற்றி பெற்றார்களா அல்லது எதிரிகளின் நோக்கம் முறியடிக்கப்பட்டதா என்பதை கிளைமாக்ஸ்சில் கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்...

    வில்லனுக்கு வில்லன் என்பதை இருப்பான் என்பதை வில்லியாக வரும் ஸிஸ்ஸி தெளிவாக செய்திருக்கிறாள்...!

    வரிசையாக 10-11 கதைகளையும் படித்து முடித்து விட்டேன். இந்த கதைகளில் வரும் ஓவியங்களின் வித்தியாசமான பணி கொஞ்சம் கொஞ்சமாக என்னை கவர்ந்து விட்டிருக்கிறது என்பது நிஜம்... அழகிகள் என்ற பெயரில் ஓவியர் வரைந்திருப்பவர்கள் கிழவிகள் போலவே தோற்றம் கொண்டிருப்பதாக ஆரம்பத்தில் நினைத்தேன்..._

    இப்போது அழகிகளை ரசிக்கிறேனா கிழவிகளை ரசிக்கிறேனா என்பது அவனுக்கே வெளிச்சம்!

    ReplyDelete
    Replies
    1. அருமை.. நம் ரசனைக்கு பிடித்த கதைகள்..
      இதே மாதிரி காரிகன் ஸ்பெஷலிலும் - ஒரு கதைக்கு விமர்சனம் எழுதுங்களேன்.. ii

      Delete
    2. செஞ்சுடுவோம்!

      Delete

  34. பகைவருக்குப் பஞ்சமேது?

    ஆத்தாடி! டெக்ஸ் கதையில் முதல் முறையா ஒரு overt ரொமான்ஸ். ஒரு'தலை' ராகம் என்றாலும்.

    டெக்ஸை ஒரு rugged boy ஆ தொடர்ந்து பாக்கயில வித்தியாசமா இருக்கு.

    9/10




    ReplyDelete

  35. சாபம் சுமந்த தங்கம்

    எல் குச்சீலோ , ஓவியர் மற்றும் வண்ணக் கலவையாளர் கதாநாயகராய் தோன்றும் இக்கதை பார்க்க , படிக்க சுவாரஸ்யமானதே.

    9.5/10

    பி.கு. Alejandro என்ற ஸ்பானிஷ் சொல்லுக்கு அலெக்ஸாண்டர் என்ற ஆங்கில பதம் பின்னட்டையில் போட்டிருப்பது ஒருவகையில் சரிதான். யூடியூபில்
    அலெஹாண்ட்ரோ என்று போட்டிருக்கிறார்கள்.( ஸ்பானிஷ் உச்சரிப்பு). அலெஹாண்ட்ரோ ஹொடாராவ்ஸ்கி என்பது சரி அப்படின்னு்ம் போட்டிருக்காங்க.

    ReplyDelete
  36. வன்மேற்கு அதிரடி ஆக்ஷன் ஹீரோவை தன் பெயரில் சேர்த்து கொண்ட
    @சேலம் டெக்ஸ் விஜயராகவன் சகோவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

    ReplyDelete
    Replies
    1. HBD STV Sir🎉🥳🤝☘️🍫🎂
      Keep rocking as usual with yr details💪👏🔥

      Delete
    2. காமிக்ஸ் டேட்டாபேஸ், காமிக்ஸ் விக்கிபீடியா, புள்ளிவிபர புலியுமான நண்பர் டெக்ஸ் விஜயராகவனுக்கு ஈ.வியின் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!💐💐💐💐💐💐💐🥳🥳

      Delete
    3. நண்பர் டெக்ஸ் விஜயராகவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

      Delete
    4. கடல்@
      JSVP@
      ஈவி@
      செனா அனா ஜி@
      ரட்ஜா@

      அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நட்புகளே😍🙏

      Delete
  37. மதிய வணக்கம் நண்பர்களே.. 🙏🙏

    ReplyDelete
  38. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் டெக்ஸ்...

    ReplyDelete
  39. அருமையான பதிவு எடிட்டர் சார்! நேற்றைய பொழுது கொஞ்சம் பிஸி என்பதால் - இன்று உங்கள் பதிவை வாசிக்கத் தோதான நேரத்திற்காகக் காத்திருந்தேன். வழக்கம் போல சிரிக்கவும், சிலிர்க்கவும் வைத்துவிட்டீர்கள்!
    பதிவின் கடேசியில் நீங்கள் குறிப்பிட்டிருந்த வீடியோ சமாச்சாரத்தை என்றேனும் ஒருநாள் கண்டுகழிக்க வாய்ப்புக் கிட்டின் - பேரானந்தமே!! :)
    (அப்படிக்கிப்படி வீடியோ போடும் பட்சத்தில் நம்ம தலீவருக்கு 'ஒற்றை வேப்பிலை' காஸ்ட்யூமை மட்டும் மறந்துவிடாதீர்கள் ஹிஹி) :D

    ReplyDelete
  40. Many more happy returns of the day STVR ji.

    ReplyDelete
  41. நண்பர் டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  42. Sir - how crazy we were, reading those Commondo libraries (some of which also came in Rani) without full understanding of the context :-) Oh those days !!

    ReplyDelete
  43. சென்னைக்கு வந்த பின் 1981ல் எனது முதல் காமிக்ஸ் அனுபவம் சீனியர் எடிட்டர் apprenticeship எடுத்த டால்டன் காமிக்ஸ் - சந்தமாமா நிறுவனத்தின் வெளியீடுகள் - 60களின் சூப்பர்மேன் பேட்மேன் கதைகளை ரூ 2.50க்கு முழுவண்ணத்தில் கொஞ்சம் சஸ்தாவான தாள்களில் வந்தது. மாதம் இருமுறை என்பதால் செம த்ரில். 

    பின்னர் இவர்களே வெளியிட்ட மிக்கி அண்ட் டொனால்ட் 3 ரூபாய் விலையில் முழுவண்ணத்தில் சற்றே தரமான தாள்களில்.

    பின்னர் இவர்களே தொடங்கிய FALCON for Spiderman !

    கூடவே TINKLE and ACK !

    பின்னர் ஸ்டார் IBHல் - சூப்பர்மேன் பேட்மேன் சுப்ரீமோ (அமிதாப் பச்சன் ஹீரோவாக வந்தது) மிக்கி and டொனால்ட் மற்றும் லாரல் ஹார்டி. 
    பின்னர் வந்தது ஸ்பெக்ட்ரம் .. 

    ஏனோ இந்திரஜால் என்னைக் கவரவே இல்லை !

    மாதம் பிறந்தால் 24 காமிக்ஸ்களுக்கு குறைவில்லாத கோல்டன் 80ஸ் !!

    இது தவிர சென்னையில் பேட்டைக்கு ஒன்றாக திறந்திருந்த லைப்ரரிகள் - அவற்றில் இருந்து டின்டின் Asterix Commando-War-Libraries, Looney Tunes இத்யாதி இத்யாதி இத்யாதி ...

    வாசிப்பை மறந்த ஒரு தேசம் அத்துடன் கூடிய ஆனந்தத்தையும் மறந்தது மென் சோகம் !!

    ReplyDelete
    Replies
    1. பைகோ முழுவண்ணத்தில் SCIFUN என்று ஒரு காமிக்ஸ் வகையிலான அறிவியல் magazine வெளியிடுவார்கள் சார் - heights of excitement for a teenager with a bend towards science sir !!

      How I hate Rupert Murdoch ... Grrr ... !!

      Delete
    2. சூப்பர் ராகவரே....நமக்கு...லயன்முத்துராணிஜூலயன்மிலயன்பொன்னிமேத்தாஅசோக்மினிபொன்னிபைகோகிளாசிக்ஸ்அமர்சித்திரகதைகள்தாம் பிடித்தும்பிடிக்காமலும்இந்திரஜால்...நீங்க சொன்னத கண்லயே பாக்கா தலைமுறை நான்

      Delete
  44. 1950 முதல் 1990 வரையிலான காலம் வாசிப்பு உலகின் பொற்காலம்.

    ReplyDelete
  45. I searched for the three investigators. Book prices are around rs.4000 to 4000 each. But shipping cost is 4000 rupees for 3 books. So I downloaded pdf and going to print one by one

    ReplyDelete
    Replies
    1. Printed first volume at home. Just 39 pages and ink spent. Happy

      Delete
  46. வேதாளர் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் மகிழ்ச்சி...வண்ணத்தில் இந்த முறை சிறப்பு..என்னளவில் ஓகே..

    ReplyDelete
    Replies
    1. விருந்து பலமோ தல 😀

      Delete
    2. உங்கள் தலைமையில் நடந்ததா தல 😂

      Delete
    3. இன்னும் தலைவர்ன்னு
      சொல்லிகிட்டு தா இவரு இருக்காரா.

      இல்லை,
      நாங்க தான்
      சும்மா தலைவர் சொல்லி அவரை ஓட்டுறோம்ன்னு சொன்னா ,
      எனக்கு இதுல எல்லாம் நேரமெல்லாம் இல்லை.

      Delete
    4. அன்றும் இன்றும் என்றும் ஒரே ஒரு நிரந்தர தலீவர்.. எங்க தாரை பரணிதரன்தான்...
      காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் எங்கள் தலீவரின் பட்டமும் பதவியும் மாறவே மாறாதுங்க.!

      Delete
    5. சும்மா தலைவர் சொல்லி அவரை ஓட்டுறோம்ன்னு சொன்னா ,
      எனக்கு இதுல எல்லாம் நேரமெல்லாம் இல்லை.//

      உங்களை யாருமே அவரை தலைவர்னு கூப்பிட சொல்லி கட்டாயப்படுத்தலைங்களே சார்!

      தலைவர்னு அவரு யாரையும் கூப்பிட சொல்லலீங்க...அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவர் மேல் உள்ள அன்பினால் தலைவர்னு கூப்பிடறோம்.

      Delete

    6. @ கிஆக & ஷெரீஃப்

      வழிமொழிகிறேன்.

      @ புன்னகை ஒளிர் ! தாரையார் கூட பழகெல்லாம் வேண்டாம் . அவருகிட்ட பழகுறவங்க பேசறதை கேட்டாலே போதும். தலீவர் னோ , தலன்னோ அவரைக் கூப்பிடுவோம். எளிமை, இனிமை வாது சூதற்ற தன்மை. இதுதான் தாரையார்.



      Delete
    7. நண்பர்களே,
      உங்களிடையே இருந்து நான் மாறுபடவே விரும்புகிறேன்.
      என்னை நீங்கள் கார்னர் செய்ய விரும்பினால் கூட எனக்கு உங்கள் மேல் வருத்தம் இல்லை.
      அனைத்து பழிகளையும் நீங்கள் என்மேல் சுமத்தினாலும் கூட எனக்கு துளியளவும் வருத்தம் இல்லை.
      எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.
      என்னை பழித்துரைப்பது உங்களுக்கு இன்பமானால் அதை
      ஏற்றுக் கொண்டு வாழ்வதில் எனக்கு விருப்பமே.
      அதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை.
      உங்களுக்காக இந்த பழியை
      ஏற்றுக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
      உங்களுக்கு இதை எனக்கு கொடுப்பதில் இன்பமானால்,
      அதை பெரு மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன். இந்த சிலுவை எனக்கு பேரின்பமே.

      Delete
    8. நீங்கள் அனைவரும் தலைவனுக்காக பொங்கி எழுந்ததில் எனக்கு மிகுந்த சந்தோஷமே.
      நன்றி தோழர்களே.

      Delete
    9. ஆனால் உங்களிடையே நான் மட்டும் உங்களை போல் இல்லை.
      அதுவே என்னிடையே உள்ள குறைபாடு என்று ஏற்றுக் கொள்ளுங்கள்.
      அது உங்களுக்கு கஸ்டம் என்றால்,
      தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.
      உங்கள் அனைவரையும் என் நண்பர்கள் என்று நினைத்த குற்றத்திற்காக.
      நன்றி தோழர்களே,
      உங்கள் அனைவரிடமும் விடை பெறும் நேரம் வந்துவிட்டது.
      என்றும் உங்கள் நினைவில் இருப்பேன் தோழர்களே.

      Delete
    10. நன்றி தோழர்களே.
      லயன் காமிக்ஸ் குழுமத்திலிருந்து, நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது.
      எனக்கு நீங்கள் அனைவரும் தந்த விருந்தோம்பலை நான் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன்.
      எனக்காக மதிப்பு,
      நீங்கள் தந்தது போதுமானது.
      Bye dear Rev Brothers.
      உங்கள் அன்புக்கு மற்றும் அந்த வெறுப்புக்கு
      முழு உரிமை கொண்டவன்.
      என்றும் அன்புடன் தங்கள்
      புன்னகை ஒளிர்.
      நாம் இனிமேல் சந்திப்போமோ
      இல்லையோ.
      எனக்கு தெரியாது.
      நான் உங்களை
      என் நண்பர்கள் என்று சொல்லி கொள்ள தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால்,
      தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.நன்றி.
      மிகுந்த மனவருத்தம் என்றாலும் நன்றி தோழர்களே.

      Delete
    11. உங்களுக்கு
      தலைவன் மட்டுமே முக்கியமாக தெரிந்து விட்டது.
      மற்ற நாங்கள் யாவரும் யாரோ எவரோ

      எனக்கு இன்று
      இந்த உண்மையை நீங்கள் உணர்த்தி விட்டீர்கள். எவ்வளவு பெரிய முட்டாள நான்.
      நன்றி தோழர்களே.

      Delete
    12. //என் நண்பர்கள் என்று சொல்லி கொள்ள தகுதி இல்லை என்று நீங்கள் நினைத்தால்,
      தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்.நன்றி.//

      மன்னித்தோம் ! :-)

      Delete
  47. இளம் டெக்ஸ்..

    அவரின் பல இளவயது வரலாற்றை இளம் டெக்ஸ் மூலமாக அறிய முடிவதில் மகிழ்ச்சி...இம்மாதம் வந்த சாகஸத்தில் அவர் ரேஞ்சரான வரலாறு தெரிய போகிறது என மிக ஆவலுடன் வாசித்து கொண்டே வந்த பொழுது இறுதியில் மீண்டும் குற்றவாளியுடன் முடிவடைவதுடன் பாதியில் நின்றது வருத்தமே...அடுத்த இளம் டெக்ஸ் இந்த இதழின் தொடர்ச்சியாகவே வருமாறு பார்த்து கொள்ளுங்கள் சார்..

    ReplyDelete
  48. காரிகன் அட்டைப்படம் இந்த முறை கலக்கல் சார்..இவ்வளவு குண்டான இதழ் கைகளில் ஏந்தும் பொழுது அதன் கணமே தெரியவில்லை என்பது ஆச்சர்யமே..இன்று முதல் தினம் ஒரு காரிகன் என்று முடிவெடுத்து உள்ளேன்..ஒரே மூச்சில் படித்து விட்டு அடுத்த மாதம் வரை மற்ற இதழ்களுக்கு காத்திருக்கும் நேரம் குறையும்அல்லவா பத்து நாட்கள் நோ ப்ராபளம்...:-)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பதிவுகள் எப்போதும் சிறப்பானவை தலீவரே..!

      Delete
  49. Young tex. Can't keep up sir. Don't remember the old characters.

    And this month issue was very much boring.

    ReplyDelete
  50. ***** பகைவருக்குப் பஞ்சமேது ******

    இளம் டெக்ஸ் தொடர் நாளுக்கு நாள் வலுவாகிக் கொண்டே போவதை மீண்டும் இந்த பாகத்தில் அழுத்தமாக உணரமுடிகிறது!
    தலைநரை விழாத இளம் கார்ஸன் கெஸ்ட் ரோலில் வந்து தொடங்கிவைக்கும் கதையானது ஆரம்ப பக்கங்களில் 'வளவளாவென்று சற்றே அதிக வசனங்களோ' என்று நினைக்க வைத்து, பின்பு அழுத்தமான கதைக்கு அந்த வசனங்கள் எத்தனை அவசியமென்பதை தொடரும் பக்கங்களில் புரிந்துகொள்ளவும் வைக்கிறது!

    சித்திரங்கள் அருமை - என்றாலும் பின் பக்கத் தாளின் சித்திரங்கள் முன்பக்கம் கொஞ்சூண்டு தெரிவதால் சற்றே கசமுசாவாகிவிடுகிறது! (இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமே கூட இருக்கலாம் தான்)

    எனக்கென்னவோ இப்போதெல்லாம் - க*ளக் காதலர்களை சேர்த்து வைக்கப் பணியாற்றும் 'அதிகாரி' டெக்ஸை விட, தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிக்கப் போராடும் இந்த இளம் டெக்ஸே ஒரு படி மேலாகத் தோன்றுகிறார்!

    அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங்... (முடிஞ்சா குண்டுபுக்கா போடுங்க எடிட்டர் சார்(ஸ்).. சஸ்பென்ஸ் தாங்கலை)

    9.75/10

    ReplyDelete
    Replies
    1. குண்டு புத்தகத்துக்கு +9

      Delete
    2. //அடுத்த பாகத்துக்காக ஆவலுடன் வெயிட்டிங்... (முடிஞ்சா குண்டுபுக்கா போடுங்க எடிட்டர் சார்(ஸ்).. சஸ்பென்ஸ் தாங்கலை)// ஆமா சார். ஒரே புத்தகமாக போடவும். பாதியில் ஆரம்பித்து பாதியில் முடிவது போலவே உள்ளது.

      Delete
    3. ஆமா சார். ஒரே புத்தகமாக போடவும். பாதியில் ஆரம்பித்து பாதியில் முடிவது போலவே உள்ளது.

      #

      உண்மை...முன்னர் போல் ஒரு சாகஸத்தின் தொகுப்பை தொகுப்பாகவே போடுங்கள் சார்..எவ்வளவு குண்டாக இருந்தாலும் சரி..

      Delete
  51. ரம்ஜான் பண்டிகை வாழ்த்துக்கள் நண்பர்களே 😊

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களுக்கு இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள்.

      Delete
  52. This comment has been removed by the author.

    ReplyDelete
  53. Dear Editor Sir,

    We would like to know why you are not providing the books to agents on discount?

    We started supporting Lion-Comics and was a subscriber, but when Palanivel Brother requested to buy from him to support, we started buying from him.

    But after his untimely demise, we started supporting many people like him and even other publishers as well.

    Many of us here are known to each other and we know how to give a helping hand in case of any need!

    It's just that we wanted to support the intermediary people who are part of the supply chain.

    I'm a comic reader from the initial days and was very happy when the publishing started again.

    But because of age and other factors, slowly drifted away and was bought back by the good people like Palanivel who went beyond his ability to create a community and camaraderie amongst the few of us. His efforts were beyond comments and we want to live is as much as we can.

    Publishers exists because of readers like us and you know better than any one.

    We are here to support you.

    But at the same time, please help the intermediary supply chain of people as well.

    We know the pain of publishers and book sellers / shop owners as I was in printing business and was a shop keeper myself.

    Please and again requesting to support intermediate agents and provide books to them as well.

    We know the dynamics of printing and requesting your support!

    Please support them and provide the books else, we are afraid, that more readers will be lost.

    As such we are a small group and everyone here knows everyone and the past!

    We sincerely hope you will provide books to the agents.

    Thanks and this is not to hurt any one, but until it is resolved and amicably settled, we will continue to post this message again and again!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, ஏஜெண்ட்களுக்கு ; அதாவது மெய்யாலுமே அந்தந்த ஊர்களில் கடைகளில் விற்பனை செய்யும் ஏஜெண்ட்களுக்கு புக்ஸ் டிஸ்கவுண்டுடன் அனுப்புவது தொடரவே செய்கிறது ! So உங்களுக்கு கிட்டேயுள்ள முகவரிடம் தாராளமாய் வாங்கிக் கொள்ளலாம் ! அதைத் தாண்டி, யாருக்கு வழங்குவது ; யாருக்கு வழங்காதிருப்பது என்ற தீர்மானங்கள் எங்களதாக மாத்திரமே இருந்திடும் !

      Delete
    2. எதற்கு நண்பரே இவ்வளவு பஞ்சாயத்து

      "யாருக்கு வழங்குவது ; யாருக்கு வழங்காதிருப்பது என்ற தீர்மானங்கள் எங்களதாக மாத்திரமே இருந்திடும் !

      நீங்களும். இனிமேலும் புக் வாங்குனுமா? இல்லை வாங்க வேண்டாமா? என்ற தீர்மானம் எடுங்கள்.
      நீங்கள் எதிர்பார்க்கும் காலம் வரும்..
      எதுவும் நிரந்திரம் இல்லை..

      Delete
  54. நானும் எப்படியாச்சும் வேதாளர் கல்யாணத்துக்கு போயிட்டு வந்துடலாம்னு ஒரு வாரமா ட்ரை பண்றேன்.. ஊஹூம்.. முடியவே மாட்டேங்குது..!
    இன்னும் பௌன்சர் பயல்.. யங் கார்சன் & யங் டெக்ஸ் வேற வெயிட்டிங்..!

    ஜப்பான் மாங்காவை சாப்பிட்டுட்டு சீக்கிரம் வந்துடலாம்னு போனா.. இழுத்துக்கிட்டே போகுது.. அதை முடிச்சிட்டு கல்யாணத்துக்கு வரதுக்குள்ள அடுத்த வேதாளரே போஸ்ட்டிங்ல வந்துடுவார் போல..!

    ReplyDelete
  55. //அடுத்த வேதாளரே போஸ்ட்டிங்குள வந்திருவார் போல.//வேதாளர் கல்யாணம் காட்டுக்குள்ள நாமளும் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு வந்த ஃபீலிங் க குடுக்குதுங்க. நீங்களும் போயிட்டு வாங்க

    ReplyDelete
    Replies
    1. கெளம்பிட்டேன் ராஜசேகரன் சார்.. ஆன் த வே ஆன் த வே..!

      Delete
  56. // எனது favorite பகதூர் என்றதொரு உள்நாட்டுத் தயாரிப்பு ஹீரோ ! மத்திய பிரதேஷின் சம்பல் பள்ளத்தாக்குகளில் பூலான் தேவி & இன்ன பிற கொள்ளைக் கும்பல்கள் கோலோச்சி வந்த நாட்களவை ! அந்தக் கொள்ளையரை மடக்கும் ஒரு சாகச வீரராய் அறிமுகமான பகதூரை ரொம்பவே ரசித்த ஞாபகம் உள்ளது ! //

    +1

    எனக்கு மிகவும் பிடிக்கும்

    ReplyDelete
  57. // ஜானி நீரோவிலோ - "கொலைக்கரம்" என்னை மிரட்டியதொரு ஆல்பம் ! 'டேய்...டேய்...ஜானிக்கு வலிக்கும்டா...கழுத்தை நெரிக்காதே...விட்டுப்புடு ! //

    😃😃😃😃😃

    ReplyDelete
  58. @Edi Sir..😍😘

    இன்றைக்கு பதிவுகிழமை..😍😘
    ன்னு @Salem Kumar&@Covai கயல்ரம்யா சொல்ல சொன்னாங்க சார்..😃😃

    ReplyDelete
    Replies
    1. போட்டாச்சா, சூப்பர் சகோ

      Delete
  59. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட்டா போட்டீங்க

      ஆசிரியர் இன்று பயணம் மேற்கொள்ள மாட்டார் எனக் கொள்வோம்

      Delete
    2. @all..😃😍😘

      மே மேளா பற்றிய அறிவிப்பு இன்றைக்கு வரும்..😍😘👍👌

      Delete
  60. bloggerல் ஏதோ பிரச்சினை போலிருக்கு. 'mail subscription' சிலபல வாரங்களாக வேலை செய்யவில்லை. அதனால் இன்பாக்ஸுக்கு இங்கே போடும் கமென்ட்ஸ் எதுவும் வருவதும் இல்லை! அதனால் கமெண்ட் வடிவில் நண்பர்கள் செய்திடும் அலப்பறைகளை படிப்பதும் லேட்டாகிறது!

    வலி தீர வழி என்னவோ?
    விதி எழுதிய புதிருக்கு விடை தருவார் யாரோ?

    ReplyDelete
    Replies
    1. //வலி தீர வழி என்னவோ?//

      தங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டு மொபைலில் ப்ளாக் பக்கத்தை பார்த்து இந்த வரிகளை அதே மெட்டில் உச்சஸ்தாயில் பாடினால் சரி ஆகிவிடும், சகோ

      Delete
    2. பத்து தடவை பாடனும், அப்பத்தான் சரியாகும், சகோ

      Delete
    3. கடல் சகோ 🤣🤣🤣🤣

      Delete
  61. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete