Powered By Blogger

Friday, March 01, 2024

காலை எழுந்தவுடன் காமிக்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். நான்காண்டுகளுக்கு ஒரு தபா வரும் லீப் வருஷத்தின் பிப்ரவரி 29-ம் தேதிக்கே உங்களது கூரியர்கள் புறப்பட்டிருக்க, இன்று காலை முதலே பட்டுவாடாக்கள் துவங்கியிருக்க வேண்டும் ! நேற்றிரவே பதிவில் தகவலைச் சொல்லியிருக்க வேணும் தான் - ஆனால் காரிகன் ஸ்பெஷலுக்கான இறுதிக்கட்டப் பணிகளில் தொங்கிக்கிடந்த நாக்கைச் சுருட்டி வாய்க்குள் திணித்தபடியே கட்டையைச் சாய்க்கவே நேரம் சரியாக இருந்தது ! So மார்ச்சின் பதிவு பின்னே ; புக்ஸ் முன்னே - என்பதே நிலவரம் !

And ஆன்லைன் லிஸ்டிங்களுமே நேற்று மாலையே ரெடி ! இதுவொரு சிக்கன பட்ஜெட் மாதம் என்பதாலும், மூன்று இத்தாலிய நாயகர்களுமே அழகாய் அதிரடி செய்யும் சாகசங்கள் என்பதாலும் - எதையும் skip செய்திடாது, மூன்றையும் வாங்க மட்டுமன்றி ; வாங்கிய கையோடு வாசிக்கவும் செய்தீர்களெனில் - சிவகாசி தேரடி முனையில் ஆளுக்கொரு சிலை வைத்து விடுவோம் ! 

அப்புறம் இந்த மாதம் முதலாய் ஒரு ranking system கொண்டு வரவும் உத்தேசித்துள்ளோம் ! 

*இதழ்கள் கைகளில் கிடைத்த நொடியினில், முதல்பார்வையில் நீங்கள் போடும் ரேங்குகள் 

&

*இதழ்களை வாசித்து முடிக்கும் நொடியினில் போடும் ரேங்குகள் 

என இரண்டையும் பதிவு செய்து செல்ல உத்தேசித்துள்ளோம் ! 

ஆண்டின் இறுதியில் ஒவ்வொரு மாதத்தின் best ஆகத் தேர்வாகிடும் இதழ்களை நிதானமாய் study செய்து - அவற்றுள் என்ன ஸ்பெஷல் என்பதை புரிந்திட முயற்சிப்போம் ! And உங்களுக்குப் பிடித்தவற்றை நீங்கள் தேர்வு செய்யும் போதே, பிடிக்காதவை பற்றியும் புரிந்திருக்கும் ! So உங்களின் ரசனைகளை இன்னும் கவனமாய் உள்வாங்கிட இந்த selections உதவிடும் என்பது உறுதி ! 

So மார்ச்சின் மூன்றில் - முதல் பார்வையில் best எதுவோ ? And எதனிலிருந்து வாசிப்பைத் துவக்கிடப் போகிறீர்களோ ? சொல்லுங்கண்ணே...சொல்லுங்க ! ஹாப்பி ரீடிங் ! See you around ! Bye for now ! 



102 comments:

  1. Replies
    1. இட்ஸ் யூ சகோ 😎😎😎
      வாழ்த்துகள்

      Delete
  2. வணக்கம் நண்பர்களே 🙏

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  4. வந்தாச்சு! வந்தாச்சு!

    அட்டென்டென்ஸ் போட நான் வந்தாச்சு!

    இந்த முறை பத்துக்குள்ளே!

    ஆனா, புக் வர ஒரு வாரம் ஆகும்!

    ReplyDelete
  5. அருமையான புதிய நடைமுறை இந்த மார்க்கிங் திட்டம்.

    மார்டினே முதல் வாசிப்பு.
    அடுத்து டெக்ஸ் & மி. நோ

    ReplyDelete
  6. 1. மிஸ்டர் நோ
    2. மர்ம மனிதன் மார்டின்
    3. டெக்ஸ்

    ReplyDelete
  7. 10க்குள்ளே நம்பர் ஒன்று...

    ReplyDelete

  8. 1 மர்ம மனிதன் மார்டின்
    2 மிஸ்டர் நோ
    3. டெக்ஸ்

    ReplyDelete
  9. அல்லாருக்கும் வணக்கமுங்கோ....

    ReplyDelete
  10. எனக்கு எப்பொழுதும் சித்திரங்கள், பின்னர் மேக்கிங் தரம்...

    இந்த முறை மூன்றிர்க்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை...

    இருப்பினும்...

    1. மிஸ்டர் நோ
    2. மர்ம மனிதன் மார்டின்
    3. டெக்ஸ்

    ReplyDelete
  11. இதழ்கள் கைகளில் கிடைத்த நொடியினில், முதல்பார்வையில் நீங்கள் போடும் ரேங்குகள்

    &

    *இதழ்களை வாசித்து முடிக்கும் நொடியினில் போடும் ரேங்குகள்

    💪💪💪💪

    ReplyDelete
  12. 1.டெக்ஸ்
    2.மிஸ்டர் நோ
    3.மார்ட்டின்

    ReplyDelete
    Replies
    1. என்னோட ரேங்கிங் :
      இந்த வரிசையை கீழிருந்து மேல் நோக்கி மாற்றவும்...

      Delete
  13. புத்தகங்களை கையில் கிடைத்தவுடன் ஒரு புரட்டு..

    டெக்ஸ் ஓவியங்கள் - முதலில் அவரை படிக்கவே தூண்டியது
    மர்ம மனிதன் மார்ட்டின் - அட்டை படம் ஆவலை தூண்டியது
    MR நோ வேறு வழியில்லை கடைசி அவர் தான்

    ReplyDelete
  14. வந்துட்டேன்...

    ReplyDelete
  15. Replies
    1. மெட்ரோபாலிடன் சிட்டிக்கே இன்னும் புக் வரலைங்கோ...😩

      Delete
    2. கரூருக்கே வந்துருச்சு கிஆக....

      அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்....

      Delete
    3. மெட்ரோபாலிடன் சிட்டிக்கே இன்னும் புக் வரலைங்கோ...😩///

      ஙே... எந்தா இது..?! புரபசனல் கூரியரில் வந்திரிக்குன்னு... எனிக்கி வலர சிநேகம் STயல்லோ.!?

      ///அதுக்கெல்லாம் நல்ல மனசு வேணும்....///

      உங்க நல்ல மனசுக்காகவே ஷுப்காப்ராவோட மாடஸ்பாட்டி சண்டை போடுறா மாதிரி கதை ஒண்ணு வரும் டாக்டர்..😍

      Delete
  16. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  17. இந்த மாதம் மூனு புத்தகமும் ஆர்டர் போட்டாச்சு..

    ReplyDelete
  18. மார்ச் புக்ஸ் கிடைத்ததுங் சார்...

    முதல் லுக்கில் ரேங்கிங்....

    1.தல
    2.Mr.No
    3.மார்டின்

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. @ஈ.வி.:
      நான்லாம் புத்தக டப்பியைப் பிரிக்கும் முன்...
      1) மோந்து பாப்பேன்...
      2) "புக்குன்னு நெனச்சு புத்தக டப்பியையா மோந்து பாத்தோம்" என்று நொந்து கொண்டு, அலமாரியில் அடுக்கி வைத்து விடுவேன்...

      இந்த மோந்து பாக்கும் முன் போடும் ரேங்கு, மோந்து பாத்த பின் போடும் ரேங்கு சிஸ்டம்லாம் இருக்கான்னு கொஞ்சம் எடிட்டர்ட்ட கேட்டுச் சொல்லுங்களேன்?! :-)

      என்று டைப் அடித்து விட்டு, உங்களுக்கு பதில் போடலாம் என்று பார்த்தால், இங்கே ஒரு"டெலீட்டட் கமெண்ட் மர்மம்!"

      Delete
    2. ஹிஹி! மாடஸ்டி கதையப் படிச்சதுல மண்டை சூடாகிப் போச்சு. அந்த மயக்கத்துல ஏதேதோ டைப்பிட்ட மாதிரி ஒரு பீலிங்கு - அதான் டெலீட் பண்ணிட்டேன்!
      உங்களை மாதிரி எனக்கும் டப்பியை மோந்து பார்த்துட்டு அலமாரியில அடுக்கிடற நிலைமை வந்துடக் கூடாதுன்னு இப்போ வேண்டிக்கிட்டிருக்கேன்.. ஆபீஸ் வேலை அம்புட்டு படுத்தியெடுக்குது! :)

      Delete

  20. ///*இதழ்கள் கைகளில் கிடைத்த நொடியினில், முதல்பார்வையில் நீங்கள் போடும் ரேங்குகள் ///

    முதல் இடம்

    டெக்ஸ் வில்லரின் *புயலுக்குப் பின்னே பிரளயம்*
    ப்ப்ப்பா... என்னா சித்திரங்கள் சார்...😍😍😍😍 அள்ளுது..! இந்த ஓவியர் Scascitelli... சாக்சிடெல்லி (சரிதானா.?) யின் கைவண்ணத்தில் எத்தனை கதைகள் இருந்தாலும்..அவை எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் நிறைய வெளியிடுங்கள் சார்.. கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல அத்தனை வசீகரம்..😍
    10/10

    இரண்டாம் இடம்..
    மிஸ்டர் நோ வின் *கானகத்தில் ஒரு கபட நாடகம்*
    நோ வின் கதையும் ஏறத்தாழ அதுவேதான்.. முதல் பார்வையிலேயே சித்திரங்கள் ஈர்க்கின்றன.! ஒரு கொசுறு தகவல் சில 18+ காட்சிகள் இருக்கும் போல..!
    10/10

    மூன்றாவது இடம்..
    மார்டினின் *ஆர்டிக் அசுரன்*
    மார்ச் மாதத்துக்கு என்னாச்சுன்னு தெரியலை.. மூன்று இதழ்களுமே சித்திரங்களில் ஒன்றுக்கொன்று சளைத்ததாக தெரியவில்லை.! ஜாவாவின் கபி கபி யை கடைசியாகத்தான் படிக்க வேணும்..!
    9/10

    அட்டைப்படத்தில் முதல் இடமும் டெக்ஸ்க்குத்தான்.. அடுத்து மிஸ்டர் நோ.. இறுதியாக ஜாவா..!

    இவை பார்சலைப் பிரித்த முதல் பார்வையின் மதிப்பீடுகள்.!

    முதலில் படிக்கவிருப்பது மிஸ்டர் நோ.!

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா புத்தகத்தை புரட்டியதற்கே இப்படி விமர்சனம்னா இந்த கதைகளை படித்த பிறகு என்ன எழுத போறாரோ :-) (கைப்புள்ள ஸ்டைலில் படிக்கவும்)

      Delete
  21. புயலுக்கு பின்னே பிரளயம்

    படிக்க எடுத்துக் கொண்ட நேரம் 40 நிமிடங்கள். ஓவியங்கள் A1 ரகம். கதை ஒரு சுமார் கதை ஆனால் அதை சுவாரசியமாய் நகர்த்திக் கொண்டு சென்றது அபாரம். ஷெரிப் தான் குற்றவாளி என்று கணித்துக் கொண்டே படித்து சென்றவனுக்கு, செஸ்டரா இப்படி என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, அதானே பார்த்தேன் என்று நிஜ குற்றவளாய் அறிமுகமாக வழக்கமான டெக்ஸ் கதையாய் சுபம். டெக்ஸும் கார்சனும் ஏன் அபேஸ்வெல்லுக்கு வந்தார்கள் என்று சொல்லப்படவில்லை.

    வழக்கமாக குதிரையிலேயே குந்திக் கொண்டிருப்பதாக புலம்பும் கார்சன் இந்த கதையில் குதிரையிலேயே குந்த முடியவில்லை என புலம்புவது SEMA

    கதை 8.5/10
    ஓவியம் 11/10
    மேக்கிங் 10/10

    ReplyDelete

  22. 1. டெக்ஸ்
    2. மர்ம மனிதன் மார்டின்
    3. மிஸ்டர் நோ

    ReplyDelete
  23. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  24. மார்ச் இதழ்கள் இன்று மதியம் கிடைத்தது,மகிழ்ச்சி...

    ReplyDelete
  25. எனது வாசிப்பு வரிசை. .


    மார்ட்டின்
    டெக்ஸ்
    மிஸ்டர் நோ

    ReplyDelete
  26. அட்டைபடங்கள் ரேங்கிங்

    1. புயலுக்கி பின்னே பிரளயம்
    மழையில் நனைந்து கொண்டு குதிரையில் வரும் டெக்ஸ் மனதை கவருகிறது. கதையை படிக்க தூண்டுகிறார். பின்னடையில் இருக்கும் மனிதர்களின் உணர்ச்சிகள்
    மஞ்சளும் சிவப்புமாக நிறத்தில் தலைப்பு அட்டகாசம்

    2. ஆர்டிக் அசுரன்
    தலைப்பின் எழுத்துகள் அருமையான டிசைன்

    3. கானகத்தில் ஒரு கபட நாடகம்
    அட்டைப்படம் ஒகே

    மூன்றிலும் தலைப்பு டிசைன் பண்ணிய சகோதரருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்,மூன்று வெவ்வெறு டிசைன்கள் கதவை க்கு ஏற்றவாறு
    பாராட்டுக்குரிய பணி👏👏👏

    ReplyDelete
  27. முதல் பார்வையில்...
    L
    M
    V

    ReplyDelete
  28. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  29. *இதழ்கள் கைகளில் கிடைத்த நொடியினில், முதல் பார்வையில் நீங்கள் போடும் ரேங்குகள்*
    &
    *இதழ்களை வாசித்து முடிக்கும் நொடியினில் போடும் ரேங்குகள்*

    சூப்பர் சார், நல்ல சிஸ்டம்...👌.
    வருட முடிவில் இதை ஆய்வு செய்து பார்க்கும் போது நல்ல பலனை தரும்.
    ஆனாலும், புத்தகங்கள் வந்தவுடன், ஹீரோக்களை வரிசைப்படுத்தும் போது உள்ள ரேங்க் முடிவு, புத்தகங்களை படித்தவுடன் ரேங்க் வரிசை மாறுகிறது.

    இந்த மாசம்...
    1) மார்டின்.
    2) டெக்ஸ்.
    3) மிஸ்டர் நோ.

    ReplyDelete
  30. Two books done -

    1) Mr NO was different and rapid
    2) Martin was rapid but சுத்த போர் - ஒரு history வகுப்பு போல இருந்தது

    TEX for the night !

    Overall lives up to the tagline of fast reads 2024 !!

    ReplyDelete
  31. எனக்கு 11 மணிக்கே பார்சல் கைக்கு வந்துவிட்டது. பார்சலை பிடித்ததும் மிஸ்டர் நோ தான் என்னைக் கவர்ந்தார் அதனால் அவரைப் படித்து முடித்து விட்டேன் அட்டகாசமான கதை. மிஸ்டர் நோ தொடர்ந்து வரணும். மற்ற கதைகளை நாளை தான் படிக்க வேண்டும். மிஸ்டர் நோவுக்கு எனது ரேட்டிங்
    9.5/10.
    அடுத்து மிஸ்டர் ஜாவாவுடன் பயணிக்கலாம் என்று இருக்கிறேன். ஜாவாவுடன் ஜலபுல ஜங் என்று ஆசிரியர் எழுதியிருந்தார். ஆனால் சின்ன குழந்தையான எனக்கு அதற்கு அர்த்தம் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. // பார்சலை பிடித்ததும் மிஸ்டர் நோ தான் என்னைக் கவர்ந்தார் அதனால் அவரைப் படித்து முடித்து விட்டேன் அட்டகாசமான கதை. //

      Fast fast!

      Delete
    2. ஐயகோ ....சங்கம் வளர்த்த பாண்டிய மன்னனின் ஐயத்தோடு திருவிளையாடல் நடத்திய சதாசிவருக்கே சந்தேகமா ? யாரங்கே - உருட்டுத் திரட்டான புலவர் ஈரோடு விஜயை அழைத்து வாருங்கள் !

      Delete
    3. விஜயன் சார் எங்க செயலரிடம் இது பற்றி கேட்டுப் பார்த்தேன் சார். அவருக்கும் இதைப் பற்றி ஒன்னும் தெரியலைன்னு சொல்லிட்டார். ஒருவேளை நான் குழந்தை அதனால் அதை எண்ணி அந்த விஷயத்தை என்னிடம் சொல்ல கூடாது என்று சொல்லாமல் செயலர் விட்டு இருக்கலாம் சார்.

      Delete
    4. நீங்க ரெண்டுபேரும் ஏதோ விவகாரமா பேசிட்டிருக்கீங்கன்றது மட்டும் இந்தப் பச்சமண்ணுக்கு புரியுது!
      என்னைப்பொறுத்தவரை 'ஜலபுல ஜங்'னா தண்ணீரில் குதித்து விளையாடுவது - அவ்வளவுதான்!

      Delete
    5. இங்கே ஒரு மீம் போட முடிந்தால்.....

      Delete
    6. நண்பரே மிஸ்டர் நோவே ஜலபுல ஜங்தா...மார்ட்டின படிக்க தெளிவாயிடுவீங்க

      Delete
    7. @All
      பணிக்கிடையிலேயும் இப்போது மார்ட்டினை படித்து முடித்து விட்டேன். மார்ட்டின் இல்லாமல் தனியாக ஜாவா மட்டும் அந்த பெண்ணின் வீட்டில் சென்று துப்பறிகிறது. அதைத்தான் ஆசிரியர் ஜலபுல ஜங் என்று கூறியிருக்கிறார் என்று இதன் மூலம் நான் புரிந்து கொண்டேன். என் புரிதல் சரிதானே விஜய் அண்ணா

      Delete
  32. இந்த மாதம் புக்கு வருது முன்னே ஆனால் பதிவு வருது பின்னே

    ReplyDelete
  33. புதையல் பெட்டி கிடைத்து விட்டது

    ReplyDelete
    Replies
    1. முதல் பார்வையில்
      1. டெக்ஸ்
      2. மிஸ்டர் நோ
      3. மார்ட்டின்

      Delete
  34. பார்த்ததும் அசத்தியது mr.no, அடுத்து மார்ட்டின் அப்புறம் டெக்ஸ்.
    கதைகளை படித்துவிட்டு பின்னர் மீண்டும் வரிசைபடுத்துகிறேன்

    ReplyDelete
  35. Sir. Inuit. U have pronounced as inyuvet.
    But I think correct pronunciation is i-noo-yi

    ReplyDelete
  36. புக்கிங் முடித்து கையில் காசு வாங்கியதும் சர்வீஸ் முடிந்துவிட்டதாக நினைக்கின்றனர் கூரியர் சர்வீஸ் ஊழியர்கள் ..(நிர்வாகத்தினர் அப்படி நினைக்க மாட்டார்கள்)டெலிவரி செய்வதை free service ஆக ஊழியர்கள் நினைப்பதால் எனக்கும் இன்னும் புத்தகம் வந்து சேரவில்லை .சில மாதங்களில் இப்படி ஆகி விடுகிறது .சரி நாளை ஞாயிறு கொண்டாடுவோம் .

    ReplyDelete
  37. சார்....நண்பர்கள் யாருமே பதிவில் சொல்லாததால் நாளை தான் அனுப்புவீர்கள் என நினைத்தேன்...உறவினர் இழப்பிற்கு சென்றதால் இடையில் பதிவு பாத்து வீட்ல நிதானமா படிக்கனும்...கொரியர் கேக்காம விட்டுட்டனேன்னு வீட்டுக்கு போக இன்ப அதிர்ச்சி...என் மகன் அப்பா புது புக்கு...வந்தாச்சின்னு சொல்லிய படியே...துள்ளியபடி திரும்பிச் சென்று புத்தகத்த தூக்கி வர...காலையே வந்தாச்சுன்னு மனைவி சொல்ல...என் மகனின் உற்சாகம் புது விளையாட்டுச் சாமான் வாங்கித் தரும் போது எப்படி தலைக்கு கீழே தூங்குவானோ அதைப்போல தூங்க...அட்டைப்படம் மூன்றும் போட்டி போட ...மிஸ்டர் நோவ கையில் குடுக்க திருந்திட்டானேன்னு பாக்க...அவன் மறுக்கா சுக்கிரனின் கதையை தூக்கி தந்து கதையை சொல்ல சொல்லி தூங்க...ஆயிரமிரவுகள் கடந்தாலும் நம்ம கதி இதான்னு நானும் ரௌடிதான்...பேரிக்காய் போராட்ட சடுதியில் புரட்டி தூங்க வைக்க...இளையமகன் காலை ஒரு மணி நேரமா மூன்று புத்தகங்கள் தூக்கி வைத்து அடுக்கி அழகு பாத்து தத்தக்கா பித்தக்கான்னு திரிகிறான்...இங்க முதல் பார்வை வசீகரம்னு நீஙக கேள்வி கேக்க அருமைன்னு மூனு பேரும் கூவுறோம்....விடிஞ்சாச்சு...என் மகன் ஈர்த்த மிஸ்டர் போல எடுத்தாச்சு...எது டாப்புன்னு சொல்லத் தெரில...மழைல அவ்ளோ அழகான டெக்சட்டய பார்த்தும் மிஸ்டர் நோவ பாக்க...ஆர்ட்டிக்க பாக்க...அதா இதா


    அடுத்த மாதமும் மூனுதானான்னு ....பௌன்சர்...இளம் டெக்ஸ் ராபின்னு சூப்பர் சார்

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் மழைக்கு நீங்க தந்த பில்டப்ப அட்டையை பாத்து கடக்க முடியாம முதல்பக்கத்த பாத்தா...

      கொட்டும் மழைக்கு அஞ்சி மறைவிடம் நோக்கி ஓட்டமெடுத்த ஒற்றை உருவத்தை தவிர்த்து அந்த சிறுநகரமே நிசப்தத்தில் மழையை உள்வாங்கிக் கொண்டிருந்தது....முதல் பக்கத்த பாத்த ஒவ்வோர் உருவமும் இதை உணர வாழ்த்துக்கள்...அருமை

      Delete
  38. சார் இன்று பதிவுக் கிழமை...

    MYMOS அறிவிப்பு?

    ReplyDelete
    Replies
    1. இந்த சினிஸ்டர் செவன் இலைலயும் கொஞ்சம் பாயாசம்...அதிகமில்லை சார் ஏழே இலைதான்

      Delete
  39. மிஸ்டர் நோவ தூக்குனா வழக்கம் போல அமேசான் மேலே துவக்கிய பறக்கும் பக்கம்...இந்த இரவில்..கண்ட்ரோல் டவரில் லாம் என புலம்பும் பைலட்டின் பக்கம் ...விமானவோட்டியாக ஆசைப்பட்ட என்னையும் செலுத்த....


    முதல்ல படிக்க ஆசைப்பட்ட மார்ட்டின் ஓவியத்தால் அலரும் ஜாவாவை படிக்க அழைக்க...


    டெக்சின் இது போல் மழை பார்த்ததில்லை என சொல்லும் வழக்கமான வார்த்தையால் ஈர்க்கும் இரண்டாங்கட்டத்தின் மழையா ...பைலட்டா என அசைக்க...என் மகன் தேர்வான பைலட்டின் துணையோடு நேரங்கிடைக்கையில் ஆட்டோவில் பயணிக்கிறேன்...நன்றிகள் சொல்ல முடியா அளவிற்கு சார்

    ReplyDelete
  40. ஆர்டிக் அசுரன் 

    6 பக்க முன்னுரை. மனித மனங்களின் இருண்ட பக்கங்களில் இருந்து இருவேறு கதைகளாக ஆரம்பிக்கிறது. இங்கேயே நமக்கு கதை இது தான் என்று கோடிட்டு காட்டப்படுகிறது. ஆனால் அந்த முடிச்சுகள் எப்படி அவிழும்,கதை எப்படி நகரும், கதையின் முடிவு என்ன என்பதை நாம் வாசிக்க வாசிக்க எதிர்பார்ப்பு மீட்டர் எகிறிக் கொண்டே போகிறது.

    ப்ரைம் ott தளத்தில் தி டெரர் எனும் வெப் சீரிஸ் வெளியான பொழுது அநேகமாக ஒரு 4 அல்லது 5 எபிசோட் பார்த்தேன். உணவு கிடைக்காமல் மனிதனை மனிதனே தின்னும் அந்த அவலத்தை கதையில் காட்டிய உடன் மனம் அதிர்ந்து அத்தோடு அந்த வெப் சீரிஸ் என்ன ஆனது என்று பார்க்கும் எண்ணம் கூட வராமல் முழுவதையும் பார்க்காமல் விட்டு விட்டேன். மீண்டும் அதே கதையை மார்டினில் படித்த பொழுது பரிச்சயமான கதையாகவே உணர்ந்தேன். 

    ஆகையால் ஆசிரியர் மிரட்டியது போல தலையை சுற்றி மூக்கை தொடும் கதையாக நான் உணரவில்லை. ஒரு நான் லீனியர் கதை எப்படி பயணிக்குமோ அப்படி தான் இந்த கதையும் பயணிக்கிறது. வரலாறு ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம். அதற்கு அமானுஷ்யம் என்றெல்லாம் கதை கட்டி விட்டது அந்தக் கால மனிதர்களின் அறியாமையை காட்டுகிறது. ஆனால் அந்த அமானுஷ்யம் கெடாமல், லாஜிக் படி அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தபடி கதையை கொண்டு செல்வதில் ஆசிரியர் இந்த கதையில் கலக்கி இருக்கிறார். 

    அண்டார்டிக் மற்றும் ஆர்டிக் துருவ expedition குறித்த 8 ஆம் வகுப்பில் படித்தவை சிறிதளவே நினைவிருந்தால் போதுமானது. இந்த கதையில் நாம் ஒன்றிட முடியும். 

    இந்தக் கதையில் க்ரீன்லேண்டில் குடியேறிய வைக்கிங்ஸ் என்ன ஆனார்கள் என்ற கேள்விக்கும் பதில் தர முயன்றிருக்கிறார்கள். கூடவே மனித மனம் புரிந்துக் கொள்ள முடியாமல் அமானுஷ்யம் என்று கருதிய டுபிளாக் மற்றும் வெண்டிகோஸ் குறித்தும் பதிவு செய்துள்ளார்கள். 

    ஆய்வுகள் தேடல்கள் என்றெல்லாம் இன்னும் எத்தனை காலத்துக்கு ஓட்டமெடுக்க எனக்கு முடியுமோ என்று மார்ட்டின் அங்கலாய்ப்பது அநேகமாக கதாசிரியரின் சொந்த அனுபவமே. 

    இந்த 81 பக்க சித்திர கதைக்கு ஆசிரியர் காஸ்டெலி சேகரித்த தகவல்கள் இமாலய அளவு. அநேகமாக அவர் இந்த கதைக்காக சேகரித்த விஷயங்களுக்கு bibliography போட்டால் இன்னும் நாம் அதிகம் தெரிந்துக் கொள்ள முடியும் என்றே நினைக்கிறேன். 

    தலையை சுற்றி மூக்கை தொடும் கதை எல்லாம் இல்லை, நேரடியாகவே கதை பயணிக்கிறது, விளக்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கொடுக்கப் படுகிறது.  கோர்வையாக படித்துக் கொண்டே வந்தால் கதை ஈர்க்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. இதை அமானுஷ்ய கதை என்று சொல்வதை விட சூப்பரான கிராபிக் நாவல் என்று சொல்லலாம். 

    நான் குழம்பிய இடம் அண்டார்க்டிக் expedition குறித்து பேசிவிட்டு அடுத்த பேனலில் ஆர்டிக் expedition குறித்து பேச ஆரம்பித்த கணத்தில். பின் நிலைக்கு வந்து மீண்டும் படித்து அதே கப்பல்கள் இரண்டு expedititon க்கும் பயணம் ஆகியது என்பதை புரிந்துக் கொண்ட பிறகு கதை என்னை ஆட்கொண்டது. 

    கதை 10/10
    ஓவியங்கள் 10/10
    மேக்கிங் 10/10

    ReplyDelete
  41. கானகத்தில் ஒரு கபட நாடகம் 

    மிஸ்டர் நோவின் முந்தைய வெளியீடு என்னை ஈர்க்கவில்லை என்பதால் இந்த கதையை கடையிசியாய் கையில் எடுத்தேன். அட்டை படத்துக்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லை.

    ஆனால் அந்த முதல் பேனல். அங்கேயே நின்று விட்டேன். ரொம்ப நேரம் அமேசான் காடுகளை கருப்பு வெள்ளையில் ரசித்துக் கொண்டிருந்தேன். கலரில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துக் கொண்டிருந்தேன். 

    கதையை படிக்க ஆரம்பித்த உடன் விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. சுறுசுறு என்று பரவிய தீயாய் கதை நிற்காமல் ஓடியது என்றே சொல்லலாம். ஒரு வழியாய் கதையை ஊகிக்க முடிந்தது. லார்கோ கதைகளில் நாம் பார்க்காத விஷயத்தை இந்த கதையில் சொல்லிடவில்லை. அதே முதுகில் குத்தும் கதை தான். ஆனால் கதையை நகர்த்திய விதமும், வாழ்க்கை பாடமும் ஏராளம். 

    மிஸ்டர் நோ ஏமாற்றவில்லை. நம்முடன் நெடுநாட்கள் பயணிப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது. 

    கதை 9/10
    ஓவியம் 10/10
    மேக்கிங் 9.5/10 

    ReplyDelete
  42. இந்த மாத கதைகள் ரேங்கிங்

    கையில் ஏந்திய உடன்

    1. டெக்ஸ்
    2. மார்ட்டின்
    3. மிஸ்டர் நோ

    படித்து முடித்த பிறகு

    1. மார்ட்டின் 10/10
    2. மிஸ்டர் நோ 9.5/10
    3. டெக்ஸ் 9/10

    ReplyDelete
  43. வேலை பளு காரணமாக தளத்துக்கு வர முடியவில்லை. இன்று எப்படியாவது மார்ட்டினின் தலைவாழை விருந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். பார்ப்போம் இன்று

    ReplyDelete
  44. ஐ.. எனது விமர்சன பதிவு..
    ஐயோ.. Tex இதழில் இடம் பெற்று விட்டதே..
    சரி.. முதலில் கவர்ந்தது Tex இதழே..
    Mr.No.. இதழை படித்த பின் கவரலாம்..

    இரண்டாவது, பார்வையில் கவர்ந்தது. "ஆர்டிக் அசுரன். " தான். ( அயலான் - மாதிரி முன் - பின் அட்டை ஓவியங்கள் அசர வைக்கின்றன.) முதலில் படிக்கப் போவதும் மார்டினைத்தான்..

    ReplyDelete
    Replies
    1. // . எனது விமர்சன பதிவு..
      ஐயோ.. Tex இதழில் இடம் பெற்று விட்டதே //

      Wow

      Delete
  45. எனக்கும் 11மணி குமாருக்கு புத்தகம் வீட்டுக்கு வந்துவிட்டதாம் . .வழக்கமாக நான் படிக்க எடுக்கும் வரிசைப்படியேபுத்தகங்களின் ரேங்க் அமையும் .டெக்ஸ் லேசாக ஜெர்க் அடிக்கும் மாதங்களில் மட்டும் தர வரிசை மாறும் .அதாகப்பட்டது எப்பவும் முதலில் எடுப்பது டெக்ஸ் அதுஇரண்டாமிடம் என்று ஆகும்போது தரவரிசை மாறுமல்லவா .

    ReplyDelete
  46. 11மணி "சு"மாருக்கு

    ReplyDelete
  47. கொரியர் மதியம் வந்து விட்டது. முதலிடம் டெக்ஸ்க்கு.
    இரண்டாவது மார்ட்டின்.
    மூன்றாவது MR. நோ.
    மூன்று கதைகளும் சித்திரங்கள் அருமை.
    எனது விமர்சனப் பதிவும் வாசகர் கடிதம் பகுதியில் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  48. கானகத்தில் கபட நாடகம்....கதையின் தலைப்பே கதையை சொல்லி விட தொடர்கிறோம்....கதை முழுக்க நம்மையும் பறக்க வைக்கிறார்....சிதற வைக்கிறார்...மனிதாபிமானத்தில் உச்ச கொட்ட வைக்கிறார்....காட்டு வாழ்க்கையை ஏங்க வைக்கிறார்...அதற்கேற்ப கதையின் முடிவில் வாழ்க்கைய புரட்டிப் போடுகிறார்...மனுசன் இங்கேயே விட்டு விடலாமா என்று ஏங்க வைக்கிறார் நாயகனைப் போல நம்மையும்...சாதாரணமாக பிற கதைகளில் அங்க கம்பெனிய அயோக்கியன் கைப்பற்றி விடுவானேன்னு கொதிக்கும் மனம் போனா போகுதுன்னு அந்த தொழிலதிபர் போல அடங்குவது ஆச்சரியமே....கடைசில இன்னொருவன் கையெழுத்து வாங்கிச் செல்லும் போதும் கதாசிரியர் போலுனர்வே வருவது இக்கதையின் வெற்றி என என் மனது சொல்ல....ஆனா தொழிலதிபர் பத்தி எல்லோரும் பகடி செய்து நகைக்க வைக்கிறார் நமதாசிரியர்....என்ன செய்ய முடிவு சந்தோசம் யாவும் பணக்காரராக இருந்தால்தானே இது அமையும்னு யோசிக்கும் மூளைய தட்டியடக்குகிறார் முருகன் நம் கலாச்சாரத்தின காட்டி...செம கதை சார்...வேகம்...வேகம்...விவேகம்னு பைலட்டுக தூள் கிளப்ப ...நையாண்டி நக்கல்களால் வில்லன்களோட ஆசிரியரும் கதையை விரைவு படுத்த ஒரு கதையாவது வண்ணத்ல ராபின் போல வந்திருக்குமா என ...கானக விலங்கு...கானகம்...நதிகளை வண்ணத்தில் காண ஏங்குது கண்கள்

    ReplyDelete
  49. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)

    ReplyDelete
  50. இந்த மாத கதைகள் ரேங்கிங்


    படித்து முடித்த பிறகு

    1. மார்ட்டின் 10/10
    2. மிஸ்டர் நோ 9/10
    3. டெக்ஸ் 9/10

    ReplyDelete
  51. 1 . A special issue of your choicesir. 2 From 2012 sir. 3. Captain Tiger / Blueberry special sir.

    ReplyDelete
  52. புயலுக்குப்பின்னே பிரளயம்..
    டெக்ஸ் வில்லர் சாகஸம்..
    கொலையாகும் பெண்ணின் பின்புலன் என்னவென துப்பறியக் கிளம்புது டெக்ஸ் ஜோடி. பக்க விளைவுகளாக பலரைப் போட்டுப் பெண்டெடுக்கும் பணியையும் புத்திபுகட்டும் பட்டி டிங்கரிங்கையும் சரியாகப் பார்த்துக் கொண்டே துப்பறிவதில் இஞ்ச் இஞ்சாக நகர்ந்து எதிர்பாராத திருப்பமாக குற்றவாளியைக் கண்டுபிடித்து புயலுக்குப் பின்னான பிரளயத்துக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிகின்றனர். சுபம்.

    ReplyDelete