Powered By Blogger

Saturday, March 09, 2024

ஒரு கிய்யாமோ-மிய்யாமோ படலம்

 நண்பர்களே,

வணக்கம். மெது மெதுவாய் மார்ச் நகர்ந்து கொண்டிருக்க, இவ்விட நம்ம டீமோ ஏப்ரல் ; மே என்று சஞ்சாரம் செய்து கொண்டுள்ளது ! சற்றே crisp வாசிப்புகளுக்கான இதழ்களை நடப்பாண்டின் அட்டவணைக்குள் பிரதானமாய் புகுத்தியதில் உங்களுக்கு எம்புட்டு குஷியோ, கடுப்போ - முழுசாய் ஞான் அறியில்லா ; பட்சே நம்ம டீமானது இப்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாய் மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது ! ஐநூறு பக்கங்கள் ; அறுநூறு பக்கங்கள் என்ற ரவுசுகளை 2024-ல் நாம் மட்டுப்படுத்தியிருப்பதால், நமது backend-ன் வேலைப்பளு நிரம்பவே மெலிதாகியுள்ளது ! ஆனால் நமக்குத் தான் சைக்கிள் கேப்பில் ஏதாச்சும் இடைவெளி தென்பட்டால் கூட - அதனுள் புல்டோசரை நுழைத்துப் பார்க்கும் ஆர்வம் எழுந்திடுமே ; so 'ஆன்லைன் மேளா ; ஆப்பக்கடை கீழா' - என்ற ரேஞ்சில் புச்சு புச்சான திட்டமிடல்களில் பொழுதுகளை நகர்த்தி வருகிறோம் !

அதனிடையே ஒரு கிய்யாமோ-மிய்யாமோ படலம் - கடந்த 10 தினங்களாக அரங்கேறி வருகிறது ! 

  • சிக்கலான ; செம complex ஆன கதைகளுக்குள் தம் கட்டி இறங்கி, கூகுளை அலசி ஆராய்ந்து கரை சேரணுமா ?                                எப்படியாச்சும் செஞ்சுப்புடலாம்ணே ! 
  • டின்டின் போலான தொடர்களில், ஒரே கதைக்குள் ஏழு மாசங்களுக்கு சலிக்காமல் செக்குமாடாட்டம் சுற்றிச் சுற்றி வரணுமா ?                    பல்லைக் கடிச்சிட்டே  பண்ணிடலாம்ஜி  ! 
  • கி.நா.ஸ் ? Oh yes ! 
  • டார்க்கான கதைகள் ?                                                                                      லைட்டைப் போட்டுக்கினு விடிய விடிய குந்திக்கினே எழுதிடலாம் சாரே ! 

ஆனால்....ஆனால்....இவற்றையெல்லாம் விட அசாத்தியமாய் பெண்டைக் கழற்றவல்ல பணி ஒன்று உள்ளது ! அதனில் தான் கடந்த பத்து திவசங்களாய் ஞான் பிசியாகி, இல்லாத கேசத்தில் கணிசத்தை தொலைக்க நேர்ந்துள்ளது ! க்ளாஸிக் கதைகள் ; நேரோ நேர்கோட்டுக் கதைகள் ; 'கராத்தே வெட்டு வெட்டினார் ; வாழைத்தண்டு ஜூஸ் பருகினார் !' என்ற ரேஞ்சிலான வஜனங்களை உள்ளடக்கிடும் '70s கதைகள் !! இவைகளுக்குள் புகுந்து ; பணி முடித்து வெளிப்படுவதென்பதெல்லாம் ஒரு அசாத்திய ஆற்றலையும், பொறுமையையும் கோரிடும் சமாச்சாரம் - at least என்னளவிற்காவது ! இளவரசி கதைகளில் நான் குறிப்பிடும் இதே நேர்கோட்டுத்தனம் இருக்கும் தான் ; ஆனால் அங்கே கொஞ்சமாச்சும் கார்வினின் நையாண்டிகள் ; பிரிட்டிஷ் வறண்ட ஹியூமர் - என தேறிடுவதால் வண்டியை ஓட்டி விடலாம் ! டெக்ஸ் கதைகள் straight as an arrow தான் ; but 'தல' பேசும் பன்ச் வரிகள் ; கார்சனுக்கான கவுண்டர்கள் என்று பொழுது செமத்தியாக ஓடி விடும் ! நம்ம ஒல்லியார் லக்கி  நேர்கோட்டு லீனியர் கதைக்காரரே - yet அங்கு நகைச்சுவையில் ஸ்கோர் செய்திட ஓராயிரம் தருணங்கள் அமைந்திடும் ! தட்டைமூக்கார் டைகரின் கதைகளிலும் twists இருக்கும் ; அவரது வசனங்களிலும் ஒரு மெலிதான பகடி இருக்கும் ! ஆனால் - நம்ம வேதாள மாயாத்மாவாகட்டும் ; டிடெக்டிவ் சார்லீயாகட்டும் ; விங்-கமாண்டர் ஜார்ஜ் ஆகட்டும் ; FBI ஏஜெண்ட் பிலிப் காரிகன் ஆகட்டும் ; மாயாஜாலப் பார்ட்டீ மாண்ட்ரேக் ஆகட்டும் ; மாயாவிகாரு ஆகட்டும் ; லாரன்ஸ்-டேவிட் ஜோடியாகட்டும் ; ஜாக்கி நீரோவாகட்டும்  - இம்மியும் எக்ஸ்டரா நம்பர்களைக் கோரிடாது - உள்ளதை, உள்ளபடிக்கே மொழிமாற்றம் செய்து ஒப்படைக்கும் பொறுப்பை மட்டுமே நம்மிடம் தந்திடுவார்கள் ! And அதன் லேட்டஸ்ட் படலம் தான் நான் குறிப்பிட்ட அந்தக் கிய்யாமோ-மிய்யாமோ ரகளை !   

SUPREME '60s !! இரண்டாம் சீசனாக அமெரிக்க க்ளாஸிக் ஜாம்பவான்களை தொகுப்புகளில் வாசிக்கும் இந்தத் தனித்தடத்தின் கடைசி இதழ் பெண்டிங் உள்ளது ! And அது தான் நம்ம FBI ஏஜெண்ட் காரிகன் ஸ்பெஷல் - 2 ! பத்துக் கதைகள் ; முன்னூற்றி எண்பதுக்கு அருகாமையில் ஒரு பக்க எண்ணிக்கை என்பதே திட்டமிடல் ! And இந்த SMASHING '70s ; SUPREME '60s தடங்களின் சகல கதைகளின் மொழிபெயர்ப்புப் பணியினையும் கையாண்டு வருவது நமது கருணையானந்தம் அங்கிள் தான் ! In fact கொஞ்ச காலமாகவே க்ளாஸிக் கதைகளை பிரத்தியேகமாக அவரிடம் மாத்திரமே ஒப்படைத்து வருகிறோம் ! இந்த ரகக் கதைகளில் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு ஸ்கோர் செய்திட வாய்ப்புகள் சொற்பமோ - சொற்பம் ; left - right ...left -right .....என்று மார்ச்பாஸ்ட் செய்வது போல ஒரே சீராய் எழுதிக் கொண்டே செல்ல மட்டுமே வேண்டியிருக்கும் ! Yet - துளியும் தளராது, சுவாரஸ்யத்தைத் தக்க வைத்துக் கொண்டபடியே, பக்கம், பக்கமாய்த் தொடர்வதென்பதெல்லாம் லேசுப்பட்ட காரியமே அல்ல !! And அதனை அசாத்தியமாய் அங்கிள் தொடர்ந்து வருகிறார் என்பதால் எனது பெண்டு தப்பி விடுகிறது ! Truth to tell - க்ளாஸிக் நாயகர்களின் மத்தியில் ஒரே ஒருத்தருக்கு மட்டும் பேனா பிடிப்பது எனக்கு பிடித்தமான சமாச்சாரம் - and அது நம்ம ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப் கிர்பிக்கு ! அவரது கதைகளில் இழையோடும் ஒரு மெலிதான ஹியூமரையும், டெஸ்மாண்ட்-விக்கர்ஸ் மத்தியிலான உரையாடல்களையும் லயித்து எழுதிட இயலும் என்பேன் ! அவர் நீங்கலான மீதப் பேரெல்லாம் - வாசிக்க சுகப்படுவர் ; but பணியாற்ற முனைந்தால் சுக்கா போட்டு விடுவர் !  

காரிகன் கதைகளையும் கொஞ்ச வாரங்களுக்கு முன்னமே மொழிபெயர்த்து வாங்கியும் விட்டாச்சு ! நம்மாட்கள் DTP செய்து கையில் தந்தும் விட்டார்கள் ! எடிட்டிங் முடித்தால் பிரின்டிங் பண்ணப் புறப்படலாம் தான் ! ஆனால் கடோத்கஜனின் பருமனில் மேஜை மீது படபடத்துக் கொண்டிருந்த கதைக்குவியலுக்குள் புகுந்து வெளி வருவது அத்தனை சுலபமாய் தென்படவே இல்லை ! 'ரைட்டு...நெதம் ஒரு கதைய வூட்டுக்கு எடுத்து போறோம் ; வாசிக்கிறோம் ; திருத்தங்கள் போடறோம் ; பத்தே நாட்களில் சுபம் போடறோம் !' என்று நினைத்துக் கொண்டே முதல் கதையைக் கையோடு எடுத்துப் போனேன் ! மாமூலாய் பணிசெய்யும் தருணத்தில் இதைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தால் பத்து பக்கங்களைத் தாண்டக் கூட முடியலை ; corrections ; தேவையின்றி repeat ஆகும் வசனங்களை / முன்னுரைகளை காலி பண்ண வேண்டிய அவசியம் ; லே-அவுட்டில் செய்திட வேண்டிய திருத்தங்கள் ; அந்நாட்களின் மொழிபெயர்ப்புகளில் இருந்த பிழைகளைத் திருத்தல் - என்று ஒரேடியாக கண்ணைக் கட்டின ! இதன் மத்தியில், பட்டையான காலருடனான கோட்-சூட் போட்டபடிக்கே - சரக்கையோ, சர்பத்தையோ, இம்மி-இம்மியாய் சப்பிக் குடித்துக் கொண்டிருக்கும் ஈரோ சாரை வசியப்படுத்த  பச்சை கலரில் விக் வைத்துக் கொண்டே க்ளப் டான்ஸ் ஆடும் அந்நாட்களின் தமிழ் பட கவர்ச்சிக் கன்னியைப் போல, ஒரு பக்கமிருந்து டின்டினின் புதுப் பணிகள் என்னை "வாயேன் டா...அட..வாயேண்டா !" என seduce செய்வது போலவே இருந்தது ! பெளன்சரும், ஒரு டபுள் ஆல்ப தெறி சாகசத்தோடு கண்சிமிட்டிக் கொண்டே இருப்பது போலிருந்தது ! ஏஜெண்ட் ராபினாருமே "ஒரு tight க்ரைம் த்ரில்லருக்கு வாரீகளா ?" என்று கூவிக் கொண்டிருப்பது போலவே தோன்றியது ! இந்த சபலங்களுக்கெல்லாம் கடுக்காய் கொடுத்து வந்தால் OTT-ல் டிசைன் டிசைனாய் படங்கள் ரிலீஸ் ஆகியிருக்கும் சேதிகள் கும்மியடித்தன ! Phew !! 'தம்' கட்டி ஒவ்வொரு காரிகன் கதையினையும் எடிட் செய்யும் போது தான் அவற்றை எழுத என்ன மாதிரியான discipline அவசியமாகியிருக்கும் என்பது புரிந்தது ! கடைசி நிமிஷத்தில் காலில் வெந்நீரைக் கொட்டிக்கொண்டே, தேதியின் மீதொரு கண்ணைப் பதித்தபடிக்கே பணியாற்றும் last minute சோம்பேறிமாடனுக்கெல்லாம் சீரான இந்த எழுதும் discipline சாத்தியமே ஆகிடாதென்பது புரிந்தது ! ஒரு மாதிரியாய் இல்லாத குட்டிக்கரணங்களையெல்லாம் போட்டு, ஒரு மாதிரியாய் வியாழனிரவு பணிகள் முடித்து DTP டீமிடம் ஒப்படைத்து விட்டேன் ! வரும் செவ்வாய்க்கு அச்சுக்குப் புறப்படுவார் நம்ம காரிகன்ஜி !

And yes - இந்தப் பத்துக் கதைத் தொகுப்பினில் 4 க்ளாஸிக் ஹிட் கதைகள் உள்ளன :

  • மடாலய மர்மம் 
  • வைரஸ் X 
  • கடலில் தூங்கிய பூதம்
  • பழி வாங்கும் பாவை 

இவற்றை ஒரிஜினலாய் அந்நாட்களில் எழுதியதும் கருணையானந்தம் அங்கிள் தான் என்பது அந்தச் சொற்பிரயோகங்களே காட்டிக் கொடுக்கின்றன ! ஓவராய் புராதனம் தொனிக்கும் பகுதிகளில் லேசு லேசாய் திருத்தங்கள் போட்டு விட்டு, SUPREME '60s தடத்தின் final இதழுக்கு டாட்டா சொன்ன போது - நேபாளத்து ட்ரிப் கெலித்த சரவணகுமார் சாரைப் போலவே ஒரு பேஸ்தடித்த சிரிப்பை உதிர்த்துக் கொண்டேன் !! க்ளாஸிக் ரசிகர்களுக்கு இதுவொரு முழு அசைவ மீல்ஸின் திருப்தியினைத் தருமென்பது உறுதி !! But "புராதனமாஆஆ ???" என்ற ரியாக்ஷன் தருவோர் - that பல்லடத்து புன்சிரிப்பு moment-ஐ உணர்வர் என்பதிலும் ஐயங்களில்லை எனக்கு !

ரைட்டு....இந்தத் தனித்தடம் done & dusted ! அடுத்து என்ன ? என்ற கேள்விக்கு முன்பாய் - Supreme '60s அறிவிப்பினை செய்த வேளையில் நான் பண்ணியிருந்ததொரு பிராமிசையும் இங்கே நினைவு கூர்ந்திடுகிறேன் ! And அது தான் மாயாஜால மன்னன் மாண்ட்ரேக் ஸ்பெஷல் - 2 தடத்தின் அங்கமாக இல்லாது போனாலும், ஏதேனும் ஒரு தருணத்தில் independent ஆக வெளிவந்திடும் - என்பதே அன்றைய பிராமிஸ் ! 

இப்போது சொல்லுங்களேன் guys - மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ? If yes - நடப்பாண்டின் ஏதோவொரு வேளையில் தொப்பிக்காரரை நுழைத்திடலாம் ! சொல்லுங்களேன் folks !! "சுனாமியைப் பார்த்துப்புட்டோம் ; கொரோனாவைத் தாண்டிப்புட்டோம் ; பவர் ஸ்டார் படங்களையும் ஜீரணிச்சுட்டோம் ! இதையும் பாத்துப்புடலாமே ! என்று மேச்சேரிக்காரர் குழல் ஊத, 'ஆமா..ஆமா....டெபினிடலி !' என்று அமெரிக்கக் குரல் கேட்கும் என்பதில் எனக்கு no doubts ! இருந்தாலும் மீத நண்பர்களின் குரல்களையும் கேட்டு விட்டால் தேவலாமே என்று நினைத்தேன் ! 

Bye all....have a lovely weekend !! டின்டின் க்ளைமாக்ஸ் ஆல்பமான "கதிரவனின் கைதிகள்" இக்கட வெயிட்டிங் என்பதால் நான் புறப்படுகிறேன்  ! See you around !


கடலில் தூங்கிய பூதம் 

பழி வாங்கும் பாவை 

வைரஸ் X 


222 comments:

  1. வணக்கம் நண்பர்களே🙏

    ReplyDelete
  2. காரிகன் அட்டைப் படம் சூப்பரு சார் 👌

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  4. ///மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ? ///

    டெபனட்லீ டெபனட்லீ...

    ReplyDelete
  5. For some mandrake is synonymous with Muthu comics. They are not ready to accept other hero books as Muthu comics at all. So a one shot book as reprint is enough just like steel claw books

    ReplyDelete
    Replies
    1. அது யாருங்க சார் - அந்த அதிசய மாந்தர் ? எனக்கே பாக்கணும் போலிருக்கே !

      Delete
    2. He is a drawing master in a govt school in Tiruvannamalai sir. His name is Ravichandran. His friends are also like that it seems. He once told me.

      Delete
    3. I have also heard this from septagenarians sir

      Delete
  6. அடுத்த பதிவுலாவது பெவிகோல் பெரிய சாமிக்கு லீவு குடுத்து அனுப்பி விட்டு ஓட்டை வாய் உலகநாதனை அழைத்து வரவும்.

    ReplyDelete
    Replies
    1. ப்பே...ப்பே...பெப்பப்பப்ப..பெ..பெ..!

      Delete
  7. ஆஹா...

    காரிகன் அட்டைப்படத்தைக் கூட கண்கொட்டாமல் ரசிச்சுப் பார்ப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்லை சார்...

    ஜூப்ப்ப்பர்ர்...😍

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் தோர்கல் பரீச்சை எழுதி வந்த மகிமை !

      Delete
  8. ஆவலோடு எதிர்பார்த்த காரிகன் வர்றார் அதுவும் வைரஸ் x உடன் இம்முறை காரிகன் குறி மிஸ் ஆகாது

    ReplyDelete
  9. புயலுக்குப் பின்னே பிரளயம் :-

    அணைக்கட்டு உடைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நகரத்திற்கு வருகிறார்கள் கார்சனும் டெக்ஸும்.! படகில் வருகையில் ஆற்றில் மிதக்கும் பெண்ணின் பிணம் ஒன்று கண்ணில்பட.. அதைத்தொடர்ந்து அந்த ஊருக்குள் என்ன நடக்கிறது.. யார் குற்றவாளி என்பதே கதை..!

    முதல் பாராட்டுகள் சித்திரங்களுக்கு.. அடேங்கப்பா.. பக்கங்களை புரட்டவே மனசு வரமாட்டேங்குது... (வசனங்களிலும் கண் லயிக்க மறுத்து சித்திரங்களிலேயே நிலைகுத்தி நின்றுவிடுகின்றது.!) மழை பொழிவும்.. அணைக்கட்டும்... நகரத் தெருக்களும்.. மலைப்பகுதியும்.. அத்தனை அழகாக வரையப்பட்டுள்ளன..!

    ரீட்டா.. டியானான்னு இயற்கை காட்சிகளையும் செம்மயா வரைஞ்சிருக்காரு... ரீட்டாவைதான் ஆரம்பத்துலயே போட்டுத்தள்ளிட்டாங்க.. எங்கே டியானாவையும் முடிச்சிருவாங்களோன்னு பயந்தேன்.. நல்லவேளை புள்ள தப்பிச்சி கடைசிவரைக்கும் வந்து மனசுக்கு நிம்மதியை தருது.!
    இந்த ஓவியர் Scascitelli பணியாற்றிய கதைகள் எத்தனை இருக்கோ அத்தனையும் சீக்கிரமா இறக்கிவிடுங்க சார்..!

    கதையோ வழக்கம்போல இல்லாம வெகு அளவான ஆக்சன் காட்சிகளோடு தரமானதொரு டிடெக்டிவ் கதைபோல நகர்கிறது.! கொலைகாரன் யாரென்பதை கொஞ்சம் முன்னதாகவே யூகிக்க முடியுதுதான்... கொலைக்கான காரணமும் புதுசில்லைதான்.. இருந்தாலும் கதையை ஆரம்பிச்சிட்டா முடிக்காம கீழே வைக்க மனசு வராது..!

    போன மாசம் ஷூப்காப்ரா.. காபிடபாரான்னு காமெடி பண்ணினதுக்கு இந்த மாசம் சேத்துவெச்சி செஞ்சிட்டாங்க டெக்ஸ் & கார்சன்.!
    எப்படியும் படிக்க நல்லா இருக்கும்கிறதாலதான் டெக்ஸ் கதைகளுக்கு இருக்கும் ஆதரவு எப்பவுமே குறையறதேயில்லை.. இதுபோன்ற கதைகள் அந்த ஆதரவை மேலும் வலுப்டுத்தும்னு உறுதியா நம்புகிறேன்.!

    எனக்கு ரெண்டு டவுட்ஸ்.. கதையை படிச்சவங்க சொல்லுங்க...

    டவுட் 1..

    டெக்சும் கார்சனும் ஏதாவது ஒரு ஊருக்கு போயி கலவரம் பண்றது வாடிக்கைதான்னாலும்.. அந்தந்த ஊருக்கு ஏன் வராங்கன்னு ஒரு காரணம் சொல்லப்ட்டிருக்கும்.! ஆனா.. இந்த ஊருக்கு எதுக்கு வராங்கன்னே தெரியலையே... அதுவும்
    எப்பவும் குதிரையிலயே ஊர்சுத்திக்கிட்டு இருக்குற ஆசாமிங்க.. படகுல வராங்களே.. அது ஏன்..?

    டவுட்டு 2

    ஜேசன் கார்னே.. ஹாக்குக்கு மகனா.. வேலைக்காரனா..? ஆரம்பத்துல மிஸ்டர் ஹாக்குன்னு கூப்பிடுறான்.. தப்பிச்சிப்போக வரும்போது.. ரீட்டாவோடு தனக்கு இருக்கும் ஸ்நேகம் அப்பாவுக்கு தெரியாதுன்னு ஹாக்கை குறிப்பிட்டு சொல்றான்..! ஆனா ஹாக் ஜேசன் தன்னோட குடும்பத்துல ஒருத்தன் மாதிரின்னுதான் சொல்றாரு..! ஜேசன் ஹாக்கை அப்பான்னு குறிப்பிடுற இடம் மட்டும் தப்புன்னு நான் நினைக்கிறேன்.. சரியா..?

    ரேட்டிங் 10/10

    ReplyDelete
    Replies

    1. டவுட்1) அதிகாரி, அதிகாரின்னு சொல்லிட்டே இருக்கற ' அவரை' கோபத்துடன் தேடிக்கிட்டே இருக்கும் டெக்ஸ் ஊரே ' தண்ணியில' மிதப்பதால் ' அவரு' அங்கேதான் இருக்கனும்னு படகில தேடி வந்திருக்கலாம். ;-)

      டவுட் 2) பேர் சொல்லும் பிள்ளையில் கமல் ' அப்பா சார்' னு சொல்ற மாதிரி father figure - னு எடுத்துக்கலாம். வேலைக்காரனா இருந்தாலுமே.

      Delete
    2. ///டவுட்1) அதிகாரி, அதிகாரின்னு சொல்லிட்டே இருக்கற ' அவரை' கோபத்துடன் தேடிக்கிட்டே இருக்கும் டெக்ஸ் ஊரே ' தண்ணியில' மிதப்பதால் ' அவரு' அங்கேதான் இருக்கனும்னு படகில தேடி வந்திருக்கலாம். ;-)///

      ஊரே தண்ணியில மிதப்பதால.. இல்லே.. சம்மந்தப்பட்ட ஆசாமி எப்பவுமே தண்ணியிலதானே மிதப்பாருன்ற எண்ணத்தாலா... .. ?!தெளிவாச் சொல்லுங்க செனா.. 😇

      Delete
  10. இன்னும் ஜாவா மாத்திரமே பாக்கி.. நாளைக்கு முடிச்சிரோணும்னு அகுடியா..!

    ReplyDelete
  11. ஜாக்கி நீரோ...க்ரூசோ நீரோ...ஹாஹஹாஹ்ஹாஹ்ஹா

    ReplyDelete
  12. காரிகன் கதைகள் சென்ற முறை சுமார் ரகங்கள்தானே சார்..?அப்படியிருக்க 2வது வெளியீடையும் போடுகிறீர்கள். ஆனால் எங்கள் மாண்ட்ரேக்'கிற்கு மட்டும் ஏன் இப்படி கேட்கிறீர்கள்? அவரது கதைகளிலும் பல க்ளாசிக் ஹிட்ஸ்கள் உள்ளன.இப்போது போடுவதுபோல நான்கு பழைய கதைகளையும்,படிக்காத புதுகதைகளையும் சேர்த்து போடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
  13. கண்டிப்பாக மாண்ட்ரேக் ஸ்பெஷல் - 2 வேண்டும் சாரே

    ReplyDelete
  14. Corigan idupil irrukum kulanthai yaru sir 😀

    ReplyDelete
  15. மாண்ட்ரேக் 2வது ஸ்பெஷலை ஆவலுடன் வரவேற்கின்றேன். ஒரு குண்டு இதழை மறுக்க மனம் வரவில்லை சார். உங்களுக்குப் புண்ணியமாகப் போகும் சார்.தயவுசெய்து மாண்ட்ரேக் ஸ்பெஷல் தாருங்கள் சார்.

    ReplyDelete
  16. வேதாளர் கல்யாணத்துக்கே மாண்ட்ரேக்தான் சீப் கெஸ்ட்டா போனாரு.. அதனால மாண்ட்ரேக் 2 வந்தே ஆகணும்..!
    (என்ன லாஜிக்குன்னு கேட்றாதிங்க... தெரியாது..😁)

    ReplyDelete
    Replies
    1. ஆமா..மாண்ட்ரேக் ம் லொதாரும் வந்தே ஆகணும்..😍😘

      Delete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. மாண்ட்ரேக் கதைகள் வரலாமே சார். எமனின் எண் 8 போன்ற கதைகள், விசித்திர குள்ளன், & மாயா ஜாலங்கள் ரசிக்கத் தகுந்தவையே

    ReplyDelete
    Replies
    1. இவையெல்லாம் ரொம்ப நாளாக விக்காம கிடந்த கதைகள் நண்பரே...எல்லோரிடமும் இருக்கலாம்...

      Delete
  19. மாண்ட்ரேக் ரசிக்கும் நண்பர்களுக்காக வரட்டும் சார். இதைவிடுத்து வாய்ப்பேது?

    ReplyDelete
  20. அடடே.. காரிகனின் அட்டைப்படம் இந்த முறை பிரமாதம் சார்..

    ReplyDelete
  21. Mystery martin மட்டும் பாக்கி! மற்ற மார்ச் இதழ்கள் படித்து விட்டேன்

    ReplyDelete
    Replies
    1. விறுவிறுப்பான வாசிப்பாக அமைந்தனவா சார் ?

      Delete
  22. நான்லாம் காரிகன் கதைகளைப் 'போனாப் போவுது'ன்னுபடிக்கிற ரகம் தான்! ஆனா இந்த அட்டைப் படத்தைப் பார்த்தபிறகு காரிகனின் தீவிர ரசிகனாய்டலாமான்னு யோசிச்சுக்கிட்டிருக்கேன் சார்,.

    ReplyDelete
    Replies
    1. ஸ்டீல் அடுத்த கமெண்ட்டில
      குறிப்புடற அந்த 'கலர்'களிலே மயங்கி தானே இ.சி.இ. இதை வாசிக்க ரெடியாகிட்டிருக்கார் ?

      Delete
    2. Vijayan sir, corigan attai pad am mathiri Mandrake-ikkum oru attai padam potta attai parka Vijay ready😊

      Delete
  23. அட்டைப் படம் செம சார்..அந்த ஆரஞ்சு நிறமே எல்லாத்தையும் சாப்பிட்டுடும்னா...கீழ சிதறிக் கிடக்கும் நிறங்கள் வேற லெவல்

    ReplyDelete
  24. கடலில் தூங்கிய பூதம் இரு வண்ணத்தில் பாக்கெட் சைசில் வந்தது. நல்ல விறுவிறுப்பான கதை...

    வைரஸ் X & மடாலய மர்மம் 2ம் காரிகனாரின் டாப் கதைகள்...

    பழி வாங்கும் பாவை மற்றுமொரு அதிரடி...

    சிறப்பான தொகுப்பு ஐயா...

    இந்த புத்தகம் வருவது இதற்கு முன்பு வந்த விங் கமாண்டர் ஜார்ஜ் மற்றும் டிடெக்டிவ் சார்லி சிசுங்களா இல்ல அதைவிட கொஞ்சம் உயரம் குறைவான மற்றும் அகலம் அதிகமான சைசுங்களா?


    மாண்ட்ரெக் தொகுப்பு கண்டிப்பாக வேண்டும்... போனமுறை வந்தது போல இல்லாமல், அவருடைய மாயாஜலங்கள்நிறைந்த சாகசங்களிருக்க வேண்டும்.

    அப்புறம், இந்த முறையாவது அவர் கையில் மந்திரக் கோல் கொடுக்கவும்!

    ReplyDelete
  25. மாண்ட்ரெக் பாகம் 2. 😍😍😍

    காரிகனுக்கான காத்திருப்பில் .. 😎😎😎

    ReplyDelete
  26. ஒரு காரிகன் கதை வெளி கிரகத்திலிருந்து வந்தவர்களுடன் இருக்கும்.கடைசியில்‌ கை கொடுப்பதோடு முடியும்..
    இன்னொரு கதையில்‌ வில்லன் நிலத்தை மூழ்கடிக்கும் எண்ணத்தொடு நீருக்கடியில் இருப்பான்

    ReplyDelete
    Replies
    1. "ஒரு பனிமண்டலப் படலம்" என நினைக்கிறேன் ...காரிகன் கதை வரிசையில் எனக்கு மிகப் பிடித்தமான கதை.

      Delete
    2. அது பின்னாட்களின் கதை சார் - காரிகனின் தொடரில் ! செம க்ளாசிக் !

      Delete
  27. கார்ட்டூனோ, கிளாசிக்கோ,காமெடியோ,கி. நா. வோ, டெக்ஸோ, மாடஸ்டியோ,காரிகனோ ,மாண்ட்ரேக்கோ எதா இருந்தாலும்சரி. ,வேணுமானு கேட்காதீங்க சார்.எங்களுக்கு வேண்டியது லயன் முத்து.இன்னும் இன்னும் இன்னும் வேண்டும் வேண்டும் வேண்டும்.குடுங்க குடுங்க குடுங்க மந்திரவாதி சாருக்கு ஒரு உற்சாக தேம்ஸ் அப்.

    ReplyDelete
  28. காரிகன் இந்த முறை செமயான கதை தேர்வுகள் . ஓவியங்கள் அருமையாக மின்னுகின்றன.நிச்சயம் இது காமிக்ஸ் கலெக்சன் இல் ஒரு பொக்கிஷமாக மின்னும் என்பது உறுதி.

    ReplyDelete
  29. *****மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ?***

    கண்டிப்பா மாண்ட்ரேக் வேண்டும் சார்.

    ReplyDelete
  30. காரிகன் in பழிவாங்கும் பாவை, பணியில் தூங்கிய பூதம், வைரஸ் x& மடாலய மர்மம் sure this one collection of CORRIGAN IS GOING TO ROCK😍🥰. Expecting Magician MANDRAKE'S collection too. Last but not the least in the list Our beautiful princess MODESTY BLAISIE.... simply love the waiting for the releases. 🥰😍Thanks for the announcement EDI sir. U will always have lots of surprises up in your sleeve😍 Thank you once again. 😊🙏

    ReplyDelete
    Replies
    1. அடடே...இன்னொரு இளவரசி ரசிகரா !!

      Delete
  31. Fighting sequences of corrigan and phantom are classic and by books could not forget after 50 years.usable also line panels aresoul clutching.waitingto attaindear sir

    ReplyDelete
  32. வணக்கம் ஆசிரியரே
    வணக்கங்கள் சகோதரர்களே

    ReplyDelete
  33. //மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ? //

    ஆமாங்க ஆசிரியரே

    ReplyDelete
  34. //மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ? //

    ஆமாங்க ஆசிரியரே பிளீஸ்

    ReplyDelete
  35. காரிகன் தொகுப்பில் 4 கிளாசிக் கதைகள் இருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆமா எப்போ சார் வரும் இந்த புத்தகம்?

    ReplyDelete
  36. இந்த மாதத்தில் மார்டின் மட்டுமே படித்துள்ளேன்

    அம்மா டெக்ஸ் மற்றும், மார்டின் படித்து விட்டார்
    மார்டின் படித்ததும் அம்மா கேட்டாங்க, இதை கலரில் போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
    அட்டைப்படம் மட்டும் கலரில் சூப்பராக இருக்கு,

    இன்னொரு கரணம், சில கதை மாந்தர்கள் ஒரே மாதிரி தெரிந்தார்கள், வேறுபடுத்தி காண்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது என்று

    கதை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றியது கலரில் வந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று, காரணம் அந்த பனியின் அழகு அட்டைப்படத்தில் மிக அருமையாக இருக்கவே

    மார்டின் கதை எனக்கு த்ரில்லிங்காவே இருந்தது
    என்னாவயிற்று, என்னவாக இருக்கும்
    கொஞ்சம் பதட்டத்தில் வைத்திருந்தது கதை
    ரசித்து படிக்க நல்ல மிஸ்ட்ரி கதையாக இருந்தது

    ReplyDelete
    Replies
    1. // சில கதை மாந்தர்கள் ஒரே மாதிரி தெரிந்தார்கள், வேறுபடுத்தி காண்பதில் கொஞ்சம் சிரமம் இருந்தது என்று //
      இது போன்ற கதைகளில் பெயர்களுமே கொஞ்சம் கடினமான உச்சரிப்பில் அமைந்து விடுவதால் பெயர்களை நினைவு வைத்துக் கொண்டு கதையைத் தொடர்வதுமே கொஞ்சம் சவாலான விஷயம்தான்...

      Delete
    2. லாரன்ஸ் - டேவிட் போல பெயர்களை சுலபமாக்கிடலாம் ; ஆனால் அந்த nativity போய்விடும் !

      Delete
  37. S60 S70 தொகுப்பில் மாண்ட்ரேக எனக்கு Top3யில் இடம் பிடித்தது விட்டார், இன்னும் விங் கமாண்டர் படிக்க நேரம் கிடைக்கவில்லை.

    மாண்ட்ரேக் கண்டிப்பாக வேண்டும்

    ReplyDelete
  38. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  39. வைரஸ் X, பழிவாங்கும் பாவை இரண்டும் படித்து இருக்கிறேன். மடாலய மர்மம், கடலில் தூங்கிய பூதம் இரண்டும் இப்போது தான் படிக்கப் போகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மடாலய மர்மம் தான் காரிகனின் அறிமுக சாகசம் - முத்து காமிக்சில் !

      Delete
    2. ஆரம்ப கதைகளில் எல்லாம் பிலிப் காரிகன் என்றுதானே வருவார் ?

      Delete
  40. @காரிகன்..😍

    மடாலய மர்மம், கடலில் தூங்கிய பூதம்..❤💛

    பெயர்களை கேட்டவுடனே மனது சிலிர்க்குது.. பால்ய வயதிற்கே போனமாதிரி ஒரு ஜில் ஃபீலிங்..😍😘😃😀

    Thanks Edi Sir..😍😘😃😀

    ReplyDelete
    Replies
    1. பால்யத்திலே தானே சார் இப்போவும் இருக்கீங்க ?

      Delete
    2. definitely ..definitely ..😍😘😃😃

      Delete
  41. @Mandrek..😍😃

    சிறுவயதில் மாண்ட்ரெக் கதைகளை படிச்சிட்டு, ஆட்டோமேடிக்கா கோட்டை கதவு திறக்கறது, காற்றில மிதக்கிறது..etc..இதிலே எல்லாம் மயங்கி போய் மேஜிசியன் ஆகறதுதான் லட்சியம்னு நினைச்சு
    வாழ்ந்தகாலத்தை மறக்க முடியாது சாரே.. 😃😃

    #அதெல்லாம் ஒரு கனா காலம்..# 😍😘

    ReplyDelete
  42. //மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ?//

    my choice NO sir .. அதற்கு பதில் அந்த slotகு"ஒற்றை நொடி ஒன்பது தோட்டா", "கென்யா", "அர்ஸ் மேக்னா" போன்ற கதைகள் குடுக்கலாம் சார் ..

    ReplyDelete
    Replies
    1. கிட்டங்கியிலிருந்து குரல்கள் :

      அர்ஸ் மெக்னா ??
      "உள்ளோம் ஐயா !"

      கென்யா ?
      "கணிசமா உள்ளோம் ஐயா !"

      ஒற்றை நொடி ஒன்பது தோட்டா ?? "கணிசமோ கணிசமா உள்ளோம் ஐயா !"

      மாண்ட்ரேக் ? "அவன்லாம் போன வருஷமே பொட்டி படுக்கைகளை சுருட்டிக்கினு கிளம்பிட்டானே ஐயா !"

      நீங்களும் கிளம்பியிருக்கலாமே டா ?
      "இல்லீங் சார் ; இங்க நமக்கு வசதிக்கு கொறைவே இல்லீங் ! நாங்க பாட்டுக்கு ஊர் ஊரா டூர் போய் என்ஜாய் பண்ணிட்டு, பத்திரமா கிட்டங்கிக்கு திரும்பிடுவோம் சார் ! அந்த கதவை சாத்திட்டு, கொஞ்சம கெளம்புறீங்களா - நாங்க கண் அசர்ற நேரம் இது !"

      Delete
    2. யாருப்பா அது... தூங்குற நேரத்துல தொணதொணத்துக்கிட்டு...

      #கமான்சே & கார்ட்டூன்

      Delete
    3. @Edi Sir..😍😘

      Rofl..😃😃😃😃

      Delete
  43. MARCH RATING :
    மூன்று கதைகளுமே NOT SO BAD NOT SO GOOD TYPE STORIES .. GOOD FOR A BREEZY READ ..

    1.TEX
    2. மார்ட்டின்
    3. MR நோ

    இதுவரை ONLY டின்டின், லார்கோ, DEADWOOD DICK MADE IMPACT SO FAR THIS YEAR .. WAITING FOR BEST OF TEX ..

    ReplyDelete
  44. மாண்டிரேக் - O.K, O.K

    (கதைகள் மட்டும் best ஆக செலக்ட் பண்ணுங்கள், கண்டிப்பாக அனைவரையும் கவர்வார்)

    ReplyDelete
  45. போன தொகுப்பு கதைகளில் அதிகமாக அவர் விஸ்வரூபம் எடுக்கும் யுக்தி போல் வந்தது...

    வேறு யுக்திகளைக் கையாளும் interesting ஆன கதைகளை select செய்யுங்கள் சார்👍👍👍

    ReplyDelete
  46. Mandrake தேர்ந்து எடுத்த கதைகள் போடுங்கள்......


    வரட்டும் டும்

    ReplyDelete
    Replies
    1. அதிருதே நம்ம தொப்பி + பென்சில் மீசைக்காரருக்கான ஆதரவு !

      Delete
  47. // வரும் செவ்வாய்க்கு அச்சுக்குப் புறப்படுவார் நம்ம காரிகன்ஜி ! //
    மார்ச்சின் நடுமத்தி வாசிப்புக்கா...

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் இதழ்களோடு சார் !

      Delete
    2. கோடையில் வெயிட்டான வாசிப்பு காத்திருக்கு போல,,வாய்ப்பிருந்தால் மார்ச் 28 ற்குள் ஏப்ரல் இதழ்கள் வந்தால் மகிழ்வாய் இருக்கும்...
      மார்ச் 29 புனித வெள்ளி அரசு விடுமுறை,அடுத்தடுத்து சனி,ஞாயிறு விடுமுறைகள்..
      இதழ்களை வாசிக்க ஏதுவாய் இருக்கும்...
      வாய்ப்பு அமையுமான்னு பார்ப்போம்...

      Delete
  48. // இப்போது சொல்லுங்களேன் guys - மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ? //
    காரிகனையே படிக்கும்போது மாண்ட்ரேக்கின் மேஜிக்கை ரசிப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லைதான்,வாசிப்பளவில் போரடிப்பதாகவும் எனக்கு தெரிந்ததில்லை,மாண்ட்ரேக் என்னைப் பொறுத்த மட்டில் லாஜிக் இல்லா மேஜிக்தான்,அந்த வினோத உலகின் மேல் ஏனோ எனக்கு ஈர்ப்பு உண்டு...
    அதனால் மாண்ட்ரேக் ஸ்பெஷல்-2 இதழுக்காக ஆவலுடன் வெயிட்டிங்...
    வராத,வந்த நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து சிறப்பான ஸ்பெஷலாக வெளியிடவும் சார்...

    ReplyDelete
  49. மார்ச் இதழ்களில் மிஸ்டர் நோ படிச்சாச்சி,அமேசான் காடுகளில் இவரின் சாகஸம் போரடிக்காமல் நல்லாவே போகுது,கதையின் மையமும் நல்லா இருந்ததால் வாசிப்பு நல்லாவே போச்சி...
    காணாமல் போன பெரிய மனுஷனை மீட்க நோவுடன் கோஷ்டியில் சிலர் பழங்குடியினரை மட்டமாய் பார்ப்பதும்,பேசுவதுமாய்,துப்பாக்கியை வைத்து பயமுறுத்தி விடலாம் என்றும் மிதப்பாய் இருக்கின்றனர்,அவர்களைப் பொறுத்த வரை பழங்குடியினர் நாகரீகம் அறியாதவர்கள்,காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்பவர்கள் என்று தோன்றியிருக்கும்...
    அதே பழங்குடியினர் பார்வையில்அந்த நாகரீக மனிதர்களைப் பற்றி எப்படி தோணியிருக்கும்னு நினைக்கத் தோணிச்சி,என்னதான் நாகரீகம்னு சொல்லித் திரிஞ்சாலும்,துப்பாக்கியை வெச்சிருந்தாலும் அந்த காட்டில் பழங்குடியினரைத் தாண்டி அவர்களால் தப்பித்தும் போக இயலவில்லை,அவர்களின் அம்புகளுக்கும்,ஊதுகுழல்களுக்கும்,மறைந்திருந்து தாக்கும் கொரில்லா உத்திகளுக்கும் பதில் சொல்ல இயலவில்லை...
    இவனுங்க எல்லாம் இயற்கையை விட்டு,நாகரீகம்ங்கற பேரில் கான்க்ரீட் கானகத்தில் எப்படி வசிக்கறானுங்கன்னு அந்த பழங்குடியினருக்கு தோணினாலும் வியப்பதற்கில்லைதான்...

    ReplyDelete
    Replies
    1. வன்மேற்கை பார்த்துப் பார்த்து காய்ந்து கிடக்கும் கண்களுக்கு, அமேசான் கானகம் செம மாற்று தான் சார் !

      Delete
  50. Replies
    1. முக்காவாசி பொஸ்தவங்கள படிக்காமலே இம்புட்டு பில்டப்பா மக்கா

      Delete
    2. சார் நேரங்கள் சுத்தமான வாய்ப்பதில்லை...வாய்ப்பு கிடைக்கைல வசந்தத்தின் ஓர் வாழ்க்கை வாழாமல் விடுவதில்லை

      Delete
  51. உள்ளேன் ஐயா....

    //And yes - இந்தப் பத்துக் கதைத் தொகுப்பினில் 4 க்ளாஸிக் ஹிட் கதைகள் உள்ளன :

    மடாலய மர்மம்
    வைரஸ் X
    கடலில் தூங்கிய பூதம்
    பழி வாங்கும் பாவை //

    நண்பர்களின் சிலாகிப்புகளில் இந்த பெயர்களை கேட்டுள்ளேன் சார்..

    இவற்றின் ரசிகர்கள் காட்டில் மழை.. அவர்களுக்கு வாழ்த்துகள்.💐💐💐

    மாண்ட்ரேக்கை மட்டும் விடுவானேன்.. அந்த ரசிகர்கள் கூட சந்தோசமாக ஒருநாள் இருக்கட்டுமே.. அதையும் போட்டு விடுங்க..

    குறிப்பு:- காரிகரு கதை எப்படியோ தெரியாது...அட்டை அசத்தலாகவே உள்ளது.. அட்டையை ரசிப்பதோடு நம்ம சோலி ஓவர்.

    ReplyDelete
  52. டெக்ஸ் கதைக்கும், மார்டின் கதைக்கும் அம்மாவிடம் கேட்டால்
    டெக்ஸ் கதையில் வர தப்பு செஞ்சவங்களை திட்டிட்டு
    மார்டின் பாதி தான் படித்துள்ளேன் என்று கூறினார், எதிர்பார்க்கவில்லை

    டெக்ஸ் நேர்கோடு, மார்டின் அப்படி இல்லைல
    மிஸ்டர் நோ எடுத்துட்டார்
    இனி இவர் கதையை முடித்து விட்டுதான் மார்டின் பக்கம் 😶😶😶😶

    ReplyDelete
  53. மடாலய மர்மம், வைரஸ் X , பழிவாங்கும் பாவை என்னிடம் இப்போதும் உள்ளன. கடலில் தூங்கிய பூதம் படித்த நினைவில்லை.

    ReplyDelete
  54. மாண்ட்ரக் ஸ்பெஷல் 2ல், அவரும் அவர் தம்பி ட்ரெக்கும் ஹிப்னாடிசம் மூலமாக மேரதும் கதை ஒன்று உண்டு. அதை போடவும். பெயர் நினைவில் இல்லை

    ReplyDelete
  55. இம்முறையாவது மாண்ட்ரேக்கை மாமூல் துப்பறிவாளராக காட்டாது கரையான்,விநோத ஜீவராசிகள்,வேற்றுகிரகம,,காலப்பயணம் என்று அவர் score செய்யும் மாய உலக்கதைகளாக தேர்வு செய்யுங்கள். சென்ற முறை மாண்ட்ரேக்கின் பின்னடைவிற்கு எட்டு வரும் கதைகளாக தொகுத்ததுதான்.

    ReplyDelete
  56. சார் ஒரு இறுதி முறையாக தங்க கல்லறை அப்படியே ஆன்லைன் ஸ்பெஷலாக

    ReplyDelete
    Replies
    1. இது இந்த சிலபஸிலேயே இல்லாத ஐட்டமாச்சே கிருஷ்ணா !

      Delete
  57. ஒளிவட்டம் MYOMS மேல எப்போ வரப்போகுதோ? தேவுடு காத்துக் கெடக்கோம்....

    ReplyDelete
  58. காரிகன் - கடலில் தூங்கிய பூதம் - அந்த நேர்த்தியான ஓவியங்களும், கண்களைப் பதம் பார்க்காத பெரிய அளவு font-களும் ரொம்பவே சூப்பர் சார்! ஆனாலும், எந்த ஆங்கிளில் இருந்து பார்த்தாலும் அது ஒரு ரோபோவாகத் தெரிகிறதே தவிர, "ஐயோ பூதம்" என்று அலறுகிற அளவுக்கு அப்படி ஒன்றும் டெரர்ராக இல்லையே? சும்மா ஒரு ஈர்ப்புக்காக அந்நாளில் வைக்கப்பட்ட தலைப்போ?

    ReplyDelete
    Replies
    1. பூத சைசிலானதொரு ரோபோ கார்த்திக் !

      அப்பாலிக்கா கடலுக்குள்ளாற கிடந்தா நட்டு போல்ட்டெல்லாம் துரு புடிக்காதான்னு கேள்வி கேப்பீங்களோன்னு "பூதம்"ன்னு பெயர் வச்சிருப்பாங்க !

      Delete
  59. மந்திரவாதி மான்ட்ராக் மட்டும் என்ன பாவம் செய்தார் ,அவரும் வரட்டும் சார்

    ReplyDelete

  60. மாண்ட்ரேக் வேண்டாம். இது இல்லையாயின் வேறு எதுவும் இல்லை என்ற நிலைப்பாடு இல்லாமலிருப்பின் புதிய நாயகர் யாராவது .மாண்ட்ரேக் கதைகளை படிக்க ஜீரண மண்டலம் முழுமையும் Reboot செய்யவேண்டும் .

    ReplyDelete
    Replies
    1. சோடி போட்டு பாக்கலாமா சோடி..

      மாண்ட்ரேக்குக்கும் மாடஸ்(பா)ட்டிக்கும்...

      Delete
    2. மாண்ட்ரேக்=ஆஹா ஓஹோ சூப்பர்...பேஷ் பேஷா இருக்குமே..

      மாடஸ்தி=ஆஹா ஓஹோ சூப்பர்...பேஷ் பேஷா இருக்குமே...

      காரிகன்=ஆஹா ஓஹோ சூப்பர்...பேஷ் பேஷா இருக்குமே..

      நாம இருக்கிற இடம் தெரியாம இருந்திடறது..☺☺☺

      Delete
    3. சில கதைகள் மரண மொக்கையாக இருந்தாலும், மாண்ட்ரேக் சாகசங்களில் ஒரு வித வசீகரம் இருக்கும், பயங்கரப் பல்வலி, எத்தர் கும்பல் எட்டு - போன்ற சில கதைகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. முடிந்தால் இவற்றைத் தனி இதழ்களாக வெளியிடுங்கள்! டாக்டர் செவன், மன்னிக்க, டாக்டர் டின் டின் பேச்சை எல்லாம் கேட்க வேண்டாம்!

      Delete
    4. ///நாம இருக்கிற இடம் தெரியாம இருந்திடறது..☺☺☺///

      காணுமிடமெல்லாம் கார்கால நுணல்போல் (பில்டப்பாய்) கத்தித்திரியும் கார்சனுடைய நண்பரின் விசிறியோ இவ்வாக்கியத்தைச் சொல்லத்தக்கவர்...!?

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. @டின்டின் : போகிற போக்கிலே reboot தேவைப்படலாம் போலும் சார் !

      Delete
    7. அந்தப் பல்வலி கதை செமயா இருக்கும் தான் ; எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்குதுங்கோ ?

      Delete
    8. வில்லனின் டெக்னிக் லோதரிடம் செல்லாது பசுமையான நினைவுகளாக இருக்கிறது ஆசிரியரே

      Delete
    9. எனக்கும் பிடித்த கதைகளில் பயங்கர பல்வலியும் ஒன்று.

      Delete
  61. மாண்ட்ரெக் வரட்டும் சார்.

    ReplyDelete
  62. போன முறை வந்த காரிகன் தொகுப்பை நீண்ட நாட்களுக்கு வைத்திருந்து படித்து முடித்தேன் ...ஆனால் மாண்ட்ரேக் தொகுப்பை மொத்தமாக மூன்று நாளில் முடித்து விட்டேன்..அப்படி இருக்கும். போது மாண்டரேக் தொகுப்பு வேண்டுமா என்ற வினாவே தேவையில்லை சார்.
    .

    கண்டிப்பாக மாண்ட்ரேக் வரவேண்டும் வேண்டும் ண்டும்..டும்

    ReplyDelete
  63. மற்றொன்றையும் மறவாமல் சொல்ல வேண்டும் ...எனக்கு காரிகன் தொகுப்பு விருப்பமே இல்லை ஆனால் இந்த பதிவில் இந்த அட்டைப்படமும்...அட்டகாசமான மறுபதிப்பு கதைகளும் இப்பொழுது இந்த இதழை எதிர்பார்க்க வைத்து உள்ளது என்பது உண்மை சார்..

    ReplyDelete
  64. வாவ்...
    காரிகன் வருவதில் மகிழ்ச்சி.
    (அதிலும் என்னிடம் இல்லாத பழைய முத்துகாமிக்ஸ் - கதைகளுடன்) .. தீ விபத்தில் திரைப்படச்சுருள் - என்னிடம் இருக்கிறது.. சில நேரம் படிப்பேன்.. மற்றபடி அந்த ஓவிய நேர்த்தியை மெய்மறந்த ரசிப்பேன் ..
    அப்றம் - மாண்ட் ரெக்-
    இதே சைஸில் ஒரு குண்டு புக் - காக தந்துவிட்டால் மிக்க மகிழ்ச்சி...
    அப் றம் மிச்சம் இருப்பது - ஒரே ஒரு மாடஸ்டி தொகுப்பு தானே.. i??

    ReplyDelete
  65. மான்ட்ரேக் கதைகள் வேண்டும்.

    ReplyDelete
  66. ஒரு அட்டகாசமான ஆக்க்ஷன் கேம் உருவாகப் போகிறதாம் - தோர்கல் கதைகளைப் பின்னணியாகக் கொண்டு !

    பாருங்களேன் : https://m.youtube.com/watch?v=RHAm8lK5pLs

    ReplyDelete
  67. ****மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ?***

    மாண்ட்ரேக் கதைகளில் Editor குறிப்பிட்ட பயங்கரப் பல்வலி, கண்ணாடிக்குள் சென்றால் எதிர்பதமாக செயல்படும் உலகம் ஒன்று இருக்கும், இன்னும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட. இது போன்று இன்னும் பல அற்புதமான கதைகள் உள்ளன.

    இது போன்ற கதைகளுக்கு முன் ஒற்றை நொடியில் ஒன்பது லட்சம் தோட்டாக்கள் வந்தாலும் நிற்காது,

    பழைய Classic கதைகள் வேண்டுமா என்று எப்போது கேட்டாலும் எங்கள் பதில்

    " அப்கோர்சுங்க "

    ReplyDelete
    Replies
    1. ///கண்ணாடிக்குள் சென்றால் எதிர்பதமாக செயல்படும் உலகம் ஒன்று இருக்கும், இன்னும் கற்பனைக்கும் அப்பாற்பட்ட. இது போன்று இன்னும் பல அற்புதமான கதைகள் உள்ளன.///
      அந்தக் கதை 'நிழல் எது, நிஜம் எது?'
      கற்பனைக்கு அப்பாற்பட்ட அருமையான கதை.

      Delete
  68. ///மாண்ட்ரேக்காரையும் one last time இந்த முரட்டுத் தொகுப்பு template-ல் ரசித்திடணுமா ?///

    இரும்பு தெய்வம்
    ரிப்பாரு
    காரிகராரு
    முகமூடியாரு
    சார்லியராரு
    ஜார்ஜாரு
    மாண்டியாரு
    --னு பூரா பூரா முத்து காமிக்ஸ் நாயர்களாகவே 70s and 60s தொகுப்புல வருது வாஸ்தவந்தாங்க.


    இந்தாண்டு லயனாரோட 40வது ஆண்டு இப்பவாச்சும் லயனார்களுக்கு வாய்ப்பு அளிக்கலாமுங்களே...

    மாடஸ்தியாரு
    ஸ்பைடராரு
    ஆர்ச்சியாரு
    லக்கியாரு
    டெக்ஸ்ஸாரு

    னு எங்க கிட்டயும் பஞ்ச நாயகமாருக உள்ளாங்க...
    இங்கனயும் ஓரு Smashing 70s மாதிரி Striking 80யோ stellar 90னோ ஒரு சந்தா போடலாமுங்களே...

    70sக்கே ஆதரவு கொடுத்தோம்.
    இதற்கு ஆதரவு தரமாட்டோமா??

    "லயன் 40"--ஐ விட வேற என்ன தருணம் இதற்கு பொருத்தமுங்க??..

    இந்தாண்டு இவுக 5பேரு தொகுப்பு கொண்ட Lion striking 80s சந்தா அறிவிக்கணும்னு லயன் காமிக்ஸ் ரசிகர்கள் லாம் கேட்டுக்கிறமுங்க..

    ஏதோ பார்த்து பண்ணுங்க சாமி...

    ReplyDelete
    Replies
    1. //இந்தாண்டு இவுக 5பேரு தொகுப்பு கொண்ட Lion striking 80s சந்தா அறிவிக்கணும்னு லயன் காமிக்ஸ் ரசிகர்கள் லாம் கேட்டுக்கிறமுங்க..//

      +99999

      Delete
    2. லயன் நாற்பதாம் ஆண்டஅல் லயனின் கதை மாந்தர்களுக்கு சிறப்பு செய்யுமாறு கேட்டு கொள்கிறொம் ஆசிரியரே

      Delete
    3. வரவேற்கின்றேன். ஆமோதிக்கின்றேன். எதிர்பார்க்கின்றேன்.

      Delete
    4. ஏனுங் ....அவரு உசுப்பி விட்டுப்புட்டு கெளம்பிட்டாரு....நீங்க கொடி புடிக்கிறீகளே ? மொதல்ல ஒரு மாண்ட்ரேக் கதைய படிச்சி அவர கதை சொல்லச் சொல்லுங்க !

      Delete
    5. காதுல நிறையா புய்ப்பம் இருப்பதால், மாண்ட்ரேக் வேண்டாம் என்று சொல்லிட்டாருங்க

      எப்படி இருந்தாலும் மாண்ட்ரேக் வந்து விடுவார்

      நம்ம லயன் நாற்பதாவது ஆண்டு குண்டு புத்தகம் ப்ளானிங் போடுவோம் ஆசிரியரே

      Delete
    6. @Lion comics ஆசிரியர் சாருக்கு...

      மாண்டி பாயும் 2கதை படிச்சிருக்கனுங்க...

      1.ஓசியில மூத்த நண்பர்கள் கிட்ட வாசிக்கும் காலத்தில ஒன்று. அதி பயங்கர வசதி படைத்த செலிபரேட்டிகளுக்கு ஒரு கருவியை பயன்படுத்தி செயற்கையாக பலவலி வரவைப்பான் ஒருவன். அவர்களிடம் இருந்து மில்லியன் கணக்கில பணத்தை வாங்கிட்டு வைட்டமின் மாத்திரையை பல்வலி மாத்திரைனு விற்பான். பல்வலிக்கான காரணம் செலிபரிட்டிகளோட மெட்டல் பல்லில் அவன் பாய்ச்சும் சிறிதளவான மின்சாரம். அதை வெளிக்கொணுரும் விதம் அருமை. செம கதை... அந்த கருவியை மிலிட்டரிக்கு கூட ரெகமன்ட் பண்ணுவாங்கனு நினைவு!!!

      2.சமீபத்தில் ஒரு கதை... தோர்கல் மாதிரி இணைப்பிரபஞ்சம்...ஆனா அது கண்ணோடிக்குள்ளார.. அந்த உலகம்ல மாண்டி பாய் கெட்டவன்...நிஜ மாண்டி கோஷ்டி எப்படி இதில் சிக்குதுனு இன்ட்ரஸ்ட்டா (??)இருப்பாங்க...

      இது ரெண்டை தவிர மீதிலாம் படிச்சி ரொம்பவே இன்புற வேணாம்னு நிப்பாட்டியாச்சிங்கோ....!!

      கதை சொல்லி யாச்சி..

      Lion Striking 80s அறிவிப்பு எப்பங்கோ..🤩🤩🤩🤩

      (STVவக்கு மாண்டி பாய் கதை ஏதும் நினைவிராதுனு நினைச்சி மாட்டிகிட்டாரு சார்)😉😉😉

      Delete
    7. செம சகோ 🤝🤝🤝🤝🤝

      ஆசிரியரே லயன் ஸ்பெசல் புத்தகம் வேண்டும்

      Delete
    8. லயன் 80's ஸ்பெஷல் - வேண்டும் வேண்டும் ..

      Delete
    9. கொயந்தை புள்ளைங்க ஆசையாக் கேக்குது. 80s special போடுங்க சாரே. அதுவும் கலர் ல.

      Delete
  69. ஜயோ சொக்கா. சொக்கா எல்லாமுமே வேண்டுமே

    ReplyDelete
  70. அடடே இன்னொரு இளவரசி ரசிகர் . இதில் என்ன ஆச்சர்யம் சார்.70,80களின் அந்நாளைய முத்து லயன் வாசகர்கள் அனைவருமே இளவரசியின் ரசிகர்களே.அவர்கள் அனைவரையும் மீண்டும் காமிக்ஸ் வாசிப்பிற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே மீண்டும் மீண்டும் இளவரசி வேண்டும் வேண்டும் என்று கேட்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. அவங்க எல்லாம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்று 30 வருடங்கள் ஆகி விட்டது சார்.

      Delete
  71. எடிட்டர் சார்
    கண்டிப்பாக மாண்ட்ரெக் தொகுப்பு வேண்டும்

    ReplyDelete
  72. புத்தக விழாக்களில் கண்களில் பட்டு மீண்டும் வரலாமேங்க சார்

    ReplyDelete
  73. பயங்கரப்பல்வலி . சொத்தைக் பற்கள் அடைத்திருக்கும் கெமிக்கலை ஒருவித அலைவரிசையின்மூலம் தூண்டிபல்வலியை உண்டுபண்ணி குணப்படுத்தபல லட்சம் டாலர்கள் feesஆக கறக்கிறான்.ஒருவன்.துப்பறிய களமிறங்கும் மாண்ட்ரேக்கும் பல்லியால் பாதிக்கப்பட ஆரோக்யம் ஆன லோதார் உதவியுடன் சதியை மாண்ட்ரேக் முறியடிக்கும் அற்புதமான கதை .

    ReplyDelete
  74. நள்ளிரவு நாடகம், பயங்கரப்பல்வலி ,மாயக்குள்ளன் .போன்ற ஹிட் கதைகள் அமைந்தால் மாண்ட்ரேக்கும் கா.க.கா போல் பெரிய ஹிட் அடிப்பார்

    ReplyDelete
  75. மாடஸ்டி ஆர்ச்சி ஸ்பைடர் லக்கி டெக்ஸ் ..வரவேற்கிறேன் .ஆமோதிக்கிறேன் .எதிர்பார்க்கிறேன்நானும் .

    ReplyDelete
  76. My opinion

    Big No to Mandrake
    சென்ற சீசனில் வந்த ஆக சிறந்த மொக்கைகள் காரிகனும், மான்ட்ரேக்கும் தான். மான்ட்ரேக்குக்கு செலவிடும் உழைப்பையும், நேரத்தையும் நன்றாக விற்கும் மற்ற ஏதாவது கதைகளுக்கு ஒதுக்கலாம்.

    வில்லன்கள் ஏதேதோ செய்து மண்டையை கசக்கி ஒரு திட்டத்தை நடைமுறை படுத்தினால், இவர் கடைசி இரு பக்கங்களின் ஹிப்னாடிசம் செய்து முறியடித்து விடுவார். ஒரு கதைக்கு ok. மொத்த கதைகளும் அதுவும் ஒரே புத்தகத்தில் என்றால் எப்படி ஜீரணிப்பது.

    காரிகன் அட்டைப்படத்தில் உள்ள அந்த பச்சை girl நன்றாக இல்லை சார். முடிந்தால் தூக்கி விடுங்கள்

    ReplyDelete
  77. காரிகன் அட்டை அழகு.
    மாண்ட்ரேக்குக்கும் நண்பர்கள் விரும்பினால் கண்டிப்பாக வாய்ப்புக் கொடுக்கலாம்.

    ReplyDelete
  78. எடிட்டர் சார். சென்ற இரு வருடங்களாக தொகுப்பு வடிவில் சுமார் 10 வேதாளர் கதைகள் வந்தன. இவ்வருடமும் அதே எண்ணிக்கையான கதைகள் வருமா?

    ReplyDelete
  79. மேண்ட்ரக் அந்த காலத்திலேயே தன்னுடைய மாயாஜாலத்தினால் மனதை தொட்டவர் அதனால் அவருடைய கதைகள் தொகுப்பாக தேவை.

    ReplyDelete
  80. Editor Sir...As you promised earlier please bring Montrake on pre booking atleast. Also, as STV rightly mentioned this year Lion's 40th year ....request you to Announce Lion Striking 80s in this year as new SPL classic Santha...

    ReplyDelete
  81. Dear Editor Sir,
    If possible please remove the lady with green T-shirt (யாரு பெத்த புள்ளையோ effectதான் வருது) from Corrigan wrapper.
    Thanks.

    ReplyDelete
  82. Hi Editor sir , Like to read Madrake books for sure. Is there any chance for reprinting Thigil comics which was published in 80's.Like Batman or other Thighil stories sir?

    ReplyDelete
  83. சார்...சில நேரங்கள்ல பழம் கதைக போரடிக்கும் தான்....பல நேரங்கள்ல ஆச்சரியமா அது தரும் இன்பங்கள் வேற லெவல்...லார்கோ உசத்தியோ உசத்தி தான்....அதுக்கினையா நம்ம மாண்ட்ரேக்னா மிகையில்லை...


    பன்னென்டு தேச இளவரசர் லொதாருடன் மாண்ட்ரேக் இணையும் கதை... சும்மா கைய புடிச்சி இழுத்து அந்தகால நட்பு வட்டத்தில் உலாவ விட்டுள்ளார் மாண்ட்ரேக்...

    மாறி மாறி கதை சொல்லும் நண்பர்கள் இருவரும் ஒரு கடுமையாக பரவி வரும் மரணத்தோடு நம்மையும் பரபரப்பாய் தேட வைக்க....


    லொதார் ஒரு டயலாக் விட்டு உதறி வருவாரே...போரடிக்குது மாண்ட்ரேக்கோடு போரேன்னு...அன்றய காமிக்ஸ் ஆர்வம் இப்படித்தானே துவங்கியது...அந்த காலத்துக்காக...இந்த காலத்துல காற்றுள்ள போதே தேற்றிக் கொள்கிறோமே...தொடரட்டும் மாண்ட்ரேக்குடனான லயனின் பயணம்...போரடிக்கும் பொழுதுகள் வருங்காலத்தில் வாய்க்கும் போது இவை வழித்துணை

    ReplyDelete
  84. எடிட்டர் சார்,

    காரிகன் தொகுப்பு இரு வண்ணத்தில் வர வாய்ப்பு இருக்கிறதா? வந்தால் நன்றாக இருக்கும் !

    ReplyDelete

  85. செயற்கை நுண்ணறிவு உலகை கட்டியாளப் புறப்பட்டிருக்கும் வேளையில் மாண்ட்ரேக் கதைகளின் அவசியம் குறித்து கேள்விகள் எழுகின்றன.
    சமகாலத்திய கதைகள் கொட்டிக் கிடக்க இவைகள்/ இவர்களின் தேவைதான் என்ன?
    ஜானி in இஸ்ரேல், உக்ரைனில் காரிகன் என வந்தால் பரவாயில்லை.ஆயினும் வருவாய்க்கு உத்தரவாதம் அளிக்கும் பட்சம் இவைகளுக்கு / இவர்களுக்கு ஆட்சேபம் ஏதுமில்லை.புதுமை என்ற நோக்கில் உங்களது( எடிட்டர் சாரின்) பரீட்சார்த்த முயற்சிகளை யாராலும் குறைசொல்ல முடியாது.
    பழைய காலக்கதைகள் எனினும் சொல்லப்படும் விதத்தில் சுவாரஸ்யம் இருக்க வேண்டுமல்லவா?

    டெட்வுட் டிக் ஒரு அற்புதமான சமீபத்திய படைப்பு. ஒரு வரலாற்று உண்மைச் சம்பவத்தை இவ்வளவு யதார்த்தமான முறையில் , ஆக்ரோஷமான உரையாடல்களால் சுவையான கதை சொல்லல் மூலம் வெளிக் கொணர்ந்திருப்பது ஒரு பாராட்டுதற்குரிய செயல்பாடு.
    வேறு வகையில் சொல்லப்பட்டு இருக்குமாயின் அலுப்பூட்டி இருக்க
    கூடும். கதை இங்கு நடப்பது பழங்காலத்தில். கதை சொல்லும் யுக்தியோ புதுமையானது.

    வாசக நெஞ்சங்களை திருப்தி செய்யவும் ( இது அவசியமானது)
    வருவாய் பொருட்டும் ( இது மிக மிக அவசியம். நீங்கள் பொருளாதார ரீதியாக ஸ்திரத் தன்மையுடன் இருந்தால்தான் எங்களால் உங்களிடம் வேண்டுதல் எழுப்ப இயலும்) மாண்ட்ரேக் கதைகள் வருமாயின் மாண்ட்ரேக் கையில் வாழைப்பழம் வரும் காட்சிகளில் ஸ்ட்ராபெர்ரி அல்லது தர்பூஸ் இருப்பது போல் குறைந்தபட்ச மாறுதலாவது இருக்கட்டும். :-)








    ReplyDelete
  86. புயலுக்கு பின் பிரளயம்:- புயலே ஒரு பிரளயம் தான், அது என்ன இப்படி ஒரு தலைப்பு என படிக்க ஆரம்பித்தால் 30-40 பக்கம்களில் ஆகா இது உண்மையில் புயலுக்கு பின் ஒரு பிரளயம்தான் என உணர வைத்தது. புயலால் முழுவதும் பாதிக்கபட்ட ஒரு கிராமம், ஒரு கொலை, மற்றும் தங்களுக்குள் அடித்துகொள்ளும் இரண்டு அணி என ஆரம்பிக்கிறது கதை; வழக்கமான நேர்கோட்டு கதைதான், கொலையாளி யார் என கண்டுபிடித்து கிராமத்தில் அமைதியை நிலைநாட்டுகிறார்கள் டெக்ஸ் & கார்சன்; கொஞ்சம் சுதாரித்து படித்தால் கொலையாளி யார் என புரிந்து கொள்ளலாம்; கதையை முடிந்த அளவு சஸ்பென்ஸாக ஒரு திகிலுடன் கதையை நகர்த்திய விதம் அருமை.

    கதையின் ஆரம்பமே புயலில் சிக்கிய கிராமத்தை கண் முன்னால் அருமையாக காண்பித்து உள்ளார் ஓவியர்; கதையை விட இந்த கதையின் ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன; எப்பா என்ன கற்பனை என்ன திறமை, கதையில் அவரும் அனைத்தையும் உயிரரோட்டமாக வரைந்துள்ளார் ஓவியர்!

    டெக்ஸ் இது போன்ற துப்பறியும் கதையில் வரும் போது கொஞ்சம் போரடிக்கிறது, வழக்கமான நங் சத் கும் இல்லாதலால்.

    ReplyDelete
  87. காரிகன் ஸ்பெஷல்-1 கதைகள் பெரியதாக என்னை ஈர்க்கவில்லை, அதில் இன்னும் சிலகதைகள் படிக்காமல் உள்ளன!

    வைரஸ்-x & பழி வாங்கும் பாவை போன்ற கதைகள் முதல் தொகுப்பில் வரும் என ஆவலுடன் இருந்தேன், இந்த கதைகளின் படம்களை முகநூலில் பார்த்து அவைகளை எப்போது படிப்போம் என இருந்த எங்கு அவை இனிவரும் தொகுப்பில் வரும் என்பது ஆர்வத்தை கூட்டுகிறது.

    மற்ற கிளாசிக் நாயகர்கள் கதை போல் காரிகன் கதைகள் என்ன கவரவில்லை!

    ReplyDelete