Powered By Blogger

Saturday, March 02, 2024

கேள்விகள் முடிவதில்லை !

 நண்பர்களே,

வணக்கம். மார்ச் இதழ்கள் இன்னமும் கணிசமான நண்பர்களுக்குக் கிடைத்தும், கிடைக்காதிருக்கும் பொழுதுகள் இவை ! புக்ஸ் கிடைத்த நண்பர்களுள் டப்பியினை உடைக்கவே இன்னமும் தீராதோரும் இருப்பர் ; உடைத்து படம் பார்த்தபடிக்கே தலைமாட்டில் கிடத்தியோரும் இருப்பர் ; பரபரவென்று வாசித்துத் தள்ளியோரும் இருப்பர் ! So இந்த நொடியினில் வெளிச்ச வட்டத்தை - MYOMS ; ஆன்லைன் மேளா போலான சிலபஸுக்கு அப்பாற்பட்ட சமாச்சாரங்கள் மீது பாய்ச்சிடல் சுகப்படாதென்பதால் அவற்றை மார்ச்சின் நடுவாக்கிலான பதிவினில் போட்டுத் தாக்கிட எண்ணினேன் ! So இந்த வாரயிறுதியில் பொதுவாய் ; ஜாலியாய் எதையேனும் கதையடித்து விட்டுக் கிளம்பலாமென்று நினைத்தேன் ! 

இந்த வலைப்பதிவின் backend-க்குப் போய் ஒவ்வொரு பதிவினையும் upload செய்யும் போதெல்லாம் இதன் வயதினை எண்ணி வியப்பது வழக்கம் ! புதுசாய் இந்த வலைப்பதிவுப் பக்கத்தை ஆரம்பித்து விட்டு, பேந்தப் பேந்த முழித்தபடிக்கே   - 'அல்லோ...இங்க யாருனாச்சும் இருக்கீங்களா ?...தனியாருக்கேன்....பயம்மா கீது !' என்று புதுப்பேட்டை தனுஷ் போல நான் கூவி கிட்டத்தட்ட பன்னிரெண்டே கால் வருடங்கள் ஆகின்றன ! தொடர்ந்துள்ள நாட்களில் : 

 • குட்டியும், பெருசுமாய் 982 பதிவுகள்  !
 • ஒரிஜினலும், டபாய்ங்க்ஸுமான ஐடிக்களுடன்  631 followers !
 • ஜாலியும், ஜோதியுமாய் 245686 பின்னூட்டங்கள்  !
 • அறுபத்தி ஐந்து லட்சத்துச் சொச்சம் பார்வைகள் !

என்பதே இன்றுவரையிலான  நிலவரம் ! 

தொடரும் நாட்களில், மாசத்துக்கொரு 6 பதிவுகள் என்று வைத்துக் கொண்டாலும், இன்னும் மூணே மாதங்களில் - "ஆயிரம் பதிவு கண்ட ஆந்தையனின் அரட்டைஸ்" என்ற ரவுசுக்கு இங்கே தயாராகியிருப்போம் ! Which'd mean - பன்னிரெண்டரை ஆண்டுகளில் - அதாவது மிகச் சரியாக 150 மாதங்களில், "1000 மொக்கை போட்ட அண்டாவாயன்" என்ற கெத்து waiting ! 'இம்புட்டு நாட்களுக்கு என்னதான்லே எழுதினே ?' என்ற கேள்வியை என்னை நானே சில தருணங்களில் கேட்டுக் கொள்வேன் !  இன்றைக்குக் கொஞ்சமாய் நேரம் கிடைத்திட, பதிவுகளினூடே ஒரு பின்னோக்கிய பயணத்தைப் போட்டு வைக்க, ஏகப்பட்ட ஆச்சர்யங்கள் கண்ணில்பட்டன ! 

*உச்சபட்ச மின்வெட்டுக்கள் தமிழகத்தில் தாண்டவமாடிய நாட்களின் பதிவினில் 346 பின்னூட்டங்கள் !! https://lion-muthucomics.blogspot.com/2012/11/blog-post_25.html 

**அதே 2012-ன் நவம்பரில் பார்த்தால் 454 பின்னூட்டங்கள் கொண்ட பதிவும் கீது : https://lion-muthucomics.blogspot.com/2012/11/blog-post.html 

*இதோ - இன்றைக்கு நாம் தொகுப்புகளாய்த் திகட்டத் திகட்டப் போட்டுத் தாக்கிவரும் க்ளாஸிக் நாயகர்களை அன்றைக்கே "டிடெக்டிவ் டைஜஸ்ட்" என்ற template-ல் விளம்பரப்படுத்தியிருந்திருக்கிறோம் !   

ஏதேதோ தலைப்புகளில் வண்டி வண்டியாய் எழுதியிருக்கிறேன் ! அவற்றின் பின்னூட்டக் குவியல்களுள் செமத்தியான சண்டைக்காட்சிகளும் அரங்கேறியுள்ளன - அற்புதமான அலசல்களும் ; நயமான நையாண்டிகளும் கரைசேர்ந்துள்ளன  ! சர்ச்சைகளுக்குப் பஞ்சமே இருந்திருக்கவில்லை ; 'கையப் புடிச்சி இழுத்தியா ?' பஞ்சாயத்துகளுக்கும் குறைச்சலே இருந்திருக்கவில்லை ! 

இன்றைக்கு நாமும் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் பழகியிருக்கிறோம் ; ஒவ்வொருவருக்கும் கூடியுள்ள பொறுப்புகள், WWF போடும் அந்நாட்களது வேகங்களை மட்டுப்படுத்தவும் செய்துள்ளது ; and அதன் பலனாய் தளமும் சற்றே sober ஆகியுள்ளது ! Oh yes - ஒரு சந்திப்பு ; ஒரு மெகா மேளா ; மனதுக்கு நெருக்கமான நாயகர்களின் மீள்வருகை ; கலாய்க்க ஏதேனும் முகாந்திரம் - போலான ஜாலியான தருணங்களில் இன்னமும் பழைய பன்னீர் செல்வங்களாய் நீங்கள் வீறு கொண்டு எழுவதைக் காண முடிகிறது தான் ; but  ஒரு தசாப்தத்துக்கு முன்னே இருந்த நாமும் - இந்தப் பொழுதுகளின் நாமும் - கேப்டன் ஹேடாக்குக்கும், டின்டினுக்கும் இடையிலான வேற்றுமையில் இருப்பதாய்த் தோன்றியது ! Maybe இன்னொரு தசாப்தம் கழிந்த பின்னே புரஃபஸர் கேல்குலஸைப் போல சுற்றித் திரிவோமோ - என்னவோ ?!

எது, எப்படியோ - அரையணா செலவின்றி நமது வட்டத்துக்கு சேதி சொல்லும் ஒரு சுலபக் கருவியாய் இந்த blog செயல்படுவதையும் ; ஒவ்வொரு இதழின் தலையெழுத்துக்களை நிர்ணயம் செய்யும் ஜூரிக்களாய் இங்குள்ள ஒவ்வொருவரும் செயல்பட்டு வருவதும் காலவோட்டத்தில் இம்மி கூட  மாறியிருக்கவில்லை ! And தோசைக்கு பொடியா ? மல்லிச்சட்னியா ? எது ரசிக்கும் ? என்ற ரேஞ்சுக்கு உங்களின் ரசனைகளை நாங்கள் புரிந்து கொள்ளவும் இதுவொரு மார்க்கமாய் தொடர்ந்திடவும் செய்கிறது ! 

QUESTION # 1 :

So இந்தக் கருவிக்கொரு கௌரவத்தினை ஆயிரமாம் பதிவினில் தந்திட என்ன செய்யலாமென்று சொல்லுங்களேன் folks ?  ஏற்கனவே என் மண்டைக்குள் இது குறித்தொரு குட்டியான திட்டமிடல் உள்ளது தான் ; and அதற்கான டைமிங்கும் கிட்டத்தட்ட சரிவரும் என்றும் நினைக்கிறேன் தான் - ஆனால் இது உங்கள் கைவண்ணங்களிலான  ரங்கோலி ; so அதற்கு வர்ணமூட்டுவதும் நீங்களாகவே இருப்பது தானே பொருத்தம் ? சொல்லுங்களேன் guys - என்ன செய்யலாம் ?

Moving on, மேற்கொண்டு 2 ஜாலியான கேள்விகளும் வெயிட்டிங் : 

QUESTION # 2 :

பதிவினில் நீங்கள் இணைந்து கொண்டது எந்த ஆண்டு முதலாய் guys ? அமைதியாய் வாசித்துவிட்டு கிளம்புவோராக நீங்கள் இருந்தாலுமே, இந்த ஒற்றைக்கேள்விக்கான பதிலை சும்மா ஒரு ஜாலியான அட்டெண்டன்ஸாய் பதிவிடலாமே ப்ளீஸ் ?

QUESTION # 3 :

நடப்பாண்டின் அட்டவணையில் இதழ்களின் எண்ணிக்கையும் சரி, பருமனும் சரி, சற்றே குறைவு என்பது obvious ! வாசிக்க நேரமற்ற நண்பர்கள், இதுக்கே இன்னமும் டான்ஸ் ஆடி வருவதிலுமே ரகசியங்களில்லை தான் ! But அதற்காக வண்டியின் ஸ்பீடை ஒரேடியாக குறைப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை ! வந்தே பாரத் ரயில் அப்பாலிக்கா 'வந்துட்டே இருக்கும் பாரத்' ரயிலாகிப் போயிடக் கூடாதல்லவா ? So மே மாதமோ ; ஜூன் மாதமோ - போட்டுத் தாக்கக்கூடிய  ஏதோவொரு ஆன்லைன் மேளா தருணத்தினை, ஒரு காமிக்ஸ் அடைமழைக்கான சந்தர்ப்பமாக்கிக் கொள்ளாட்டியும், ஒரு தூறலுக்கான வாய்ப்பாக்கிக் கொள்ளவாவது விழைகிறோம் ! So ஆன்லைன் மேளாவினில் நீங்கள் பார்த்திட விரும்பும் இதழ்கள் பற்றி மூன்றுக்கு மிகாத சாய்ஸில் தெரிவித்தால் பரிசீலிக்க உதவிடும் folks ! நான்பாட்டுக்கு எனக்குப் புடிச்ச மேகி கேரிசன் ரேஞ்சுக்கு யாரையாச்சும் கூட்டிக்கினு வந்து, உங்களைக் கடுப்பேத்தக் கூடாதில்லையா ? So இரும்புக்கவிஞரை கடத்திக் கொண்டு போய் டென்காலி கானகத்தில் பதுக்கிய கையோடு, நன்னாயிட்டு யோசிச்சு - "MY CHOICES for Online Mela" : என்று மூன்றே மூன்று ஆல்பங்களுக்கான பரிந்துரைகளைச் செய்திடலாமா ப்ளீஸ் ? Of course - ஞான் ஏற்கனவே ஒரு லிஸ்ட் போட்டிருக்கிறேன் தான் ; ஆனால் போர்த்திட்டே படுக்கிறதைக் காட்டிலும் படுத்த பின்னே போர்த்துக்கிறது தேவலாமா இருக்குமோ ? என்ற எண்ணம் தான் ! So சொல்லுங்களேன் people ?!

அப்புறம் புறப்படும் முன்பாக சில updates :

1.ரொம்பவே early ; ஆனால் இதுவரைக்குமான current ஆர்டர்களில் மிஸ்டர் நோ தான் முன்னணியில் என்பது வியக்கச் செய்கிறது !

2.டின்டின் இதழ்கள் ஐரோப்பா முழுக்கப் பயணித்து வரும் அதிசயத்தினை வாய் பிளக்க ரசித்து வருகிறோம் ! கோபால் பல்பொடி விளம்பரத்தில் வருவதைப் போல சிங்கப்பூர் ; மலேஷியா ; இங்கிலாந்து ; ஸ்விட்சர்லாந்த் ; ஸ்பெய்ன் ; பிரான்ஸ் ; பெல்ஜியம் ; என்று அடுக்கிக் கொண்டே போகலாம் போலும். இதுவரைக்கும் குறைந்த பட்சமாய் 15 வெவ்வேறு சேகரிப்பாளர்கள் ஒரு வண்டி புக்ஸை வாங்கியுள்ளனர் !

3.ஆன்லைன் ஆர்டர்களில் ரவுசு செய்து வரும் 2 இதழ்கள் - "ஜேன் இருக்க பயமேன் ?" & "இரும்புக்கை மாயாவி" ! 

அப்புறம்....அப்புறம் கொஞ்சமே கொஞ்சமாய் தோர்கல் புக்ஸ் போணியாகி வருகின்றன ! (யாராச்சும் ஒரு "கமான்சே quiz" ; "மேஜிக் விண்ட் பஸ்" என்றுமே ஏதாச்சும் நடத்தினால் - கணிசமான புண்ணியம் சேரும் !! )

மார்ச் இதழ்களின் ரேங்க் போடும் படலத்தை மறந்து விடாதீர்கள் & அலசல்களையுமே !! Bye all...see you around ! Have a great weekend !

253 comments:

 1. வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 2. Option 2: 2014 முதலாய் சார்.

  ReplyDelete
 3. //யாராச்சும் ஒரு "கமான்சே quiz" ; "மேஜிக் விண்ட் பஸ்" என்றுமே ஏதாச்சும் நடத்தினால் - கணிசமான புண்ணியம் சேரும் !! )//

  😂😂😂😂😂

  ReplyDelete
 4. 1. ஆயிரமாவது பதிவை சிறப்பிக்கும் விதமாக ஒரு பாக்கெட் புத்தகம் ப்ளீஸ்

  2. 2012 முதல் ஃபாலோ செய்து வருகிறேன் சார்

  3. Valerian & Laurelne வெளியிட இக்கணத்தை விட தோதான காலகட்டம் எப்பொழுதும் இருந்திடாது...

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. @Dr.AKK Sir..🙏

   ஆமா..பாக்கெட் புக் போட்டே ஆகணும்..😃😃😃

   இப்படிக்கு
   😍😍பாவிகள் சங்கம்😃😃
   (பாக்கெட்புக் விரும்பிகள் சங்கம்)

   Delete
  3. Valerian & Laurelne வெளியிட இக்கணத்தை விட தோதான காலகட்டம் எப்பொழுதும் இருந்திடாது......


   பல காலமாக நண்பர்கள் கேட்டு வருமிக்கதைய பாக்க ஆவல் கூடுதே

   Delete
 5. //QUESTION # 2 :

  பதிவினில் நீங்கள் இணைந்து கொண்டது எந்த ஆண்டு முதலாய் guys ? அமைதியாய் வாசித்துவிட்டு கிளம்புவோராக நீங்கள் இருந்தாலுமே, இந்த ஒற்றைக்கேள்விக்கான பதிலை சும்மா ஒரு ஜாலியான அட்டெண்டன்ஸாய் பதிவிடலாமே ப்ளீஸ் ?//

  2014 -இல் ஆசிரியரே

  நம் புத்தகங்கள் வந்து கொண்டுள்ளன என தெரிந்து பின் வாங்கிய முதல் புத்தகம் தோர்கல்
  அதன் பின் அப்போது இருந்த எல்லா புத்நகங்களுக்கும் கோவை புத்தக கடையில் ஆர்டர் போட்டு
  புத்தகங்களை புரட்டிய போது ப்ளாக் ஒன்று இருப்பது அறிந்து இங்கே அட்டெண்டன்ஸ் போட ஆரம்பித்தது

  ReplyDelete
 6. //ரொம்பவே early ; ஆனால் இதுவரைக்குமான current ஆர்டர்களில் மிஸ்டர் நோ தான் முன்னணியில் என்பது வியக்கச் செய்கிறது !//

  சூப்பர் ஆசிரியரே

  ReplyDelete
 7. Question 3:

  1. ஒரு கிராபிக் நாவல்
  2. கார்ட்டூன் மேளா
  3. டெக்ஸ் குண்டு புக்

  அப்படியே V comics special இதழ் ஒன்று

  ReplyDelete
 8. @Edi Sir..😍😘

  அட்வான்ஸ் வாழ்த்துக்கள் for ஆயிரமாவது பதிவு..😍👍💐💐😘

  அந்த Detective digest -1 Super collection.. செம்மையா இருக்குங்க..😃😍👍👌✊

  அதே மாதிரி "1000 பதிவு காணும் அபூர்வ Edi" ன்னு வாழ்த்தும் நம்ப மக்களை குஜால் பண்ற மாதிரி
  #Classic stories 2 in 1(or ) 3 in 1# -
  ன்னு போட்டு தாக்கலாமே..😍🙏


  அப்புறம் நானு பழம்பெரும் வாசகரா இருந்தாலும்..
  Blogக்கு 2020 -ல தான் வந்தேனுங்க..😃😍😘

  Online மேளா-க்கு என்ன கேக்கலாம்கிறதை நாளைக்கு நண்பர்கள் பொழிய போகும் suggestion மழையில பாத்துக்கிறேனுங்க சார்..😍😘😃😀

  ReplyDelete
 9. மூன்று சாய்ஸ் .1 .டெக்ஸ். 2 மாடஸ்டி. 3 .ஆல்பா

  ReplyDelete
 10. +பேட்மேன் மறுபதிப்பு

  ReplyDelete
 11. @Edi Sir 😍😃

  இந்த "டிடெக்டிவ் ஸ்பெஷல் 1"..
  புத்தக விற்பனை குழுக்கள் ல கூட விற்பனைக்கு வந்த மாதிரியே தெரியலிங்களே..😶

  அதனால ஒரு "கையடக்க மறுபதிப்பு" போட்டிடலாமே சார்..😍

  ReplyDelete
  Replies
  1. ///இந்த "டிடெக்டிவ் ஸ்பெஷல் 1"..
   புத்தக விற்பனை குழுக்கள் ல கூட விற்பனைக்கு வந்த மாதிரியே தெரியலிங்களே..😶///

   விற்பனை குழுக்களே சொந்தமாக பிரின்ட் பண்ணினால்தால் வரும் சார்..! ஏன்னா அந்த இதழ் வெளிவரவே இல்லை.!

   Delete
  2. 😃😃😃Ok..ok..Kok ji..😍😃

   நாம ஏதும் கலெக்சன்ல மிஸ் பண்ணிட்டமோன்னு நினைச்சுட்டேன்..😃😃😃😘

   தகவலுக்கு நன்றி.🙏.

   Delete
 12. Q1: ஏதேனும் ஸ்பெஷல் வெளியீடுகள் பற்றிய அறிவிப்பு

  Q2:2015 இல் இருந்து

  Q3: 1. மேகி கேரிசன்
  2. ஓநாய் வேட்டை
  3. லக்கி ஸ்பெஷல்

  ReplyDelete
 13. பதிவினில் நீங்கள் இணைந்து கொண்டது எந்த ஆண்டு முதலாய் guys ? ///

  2012 இறுதியில் இருந்தே ஃபாலோ செய்திருந்தாலும்..2023ல் குருநாயர் ஈரோடு விஜய் மூலமாக சில கருத்துகளை பகிர்ந்துகொண்டிருந்தாலும்... நானே நேரடியாக பின்னூட்டமிட்டு இணைந்துகொண்டது 2014 மார்ச்சில் என நினைவு சார்.!

  ReplyDelete
 14. ///So ஆன்லைன் மேளாவினில் நீங்கள் பார்த்திட விரும்பும் இதழ்கள் பற்றி மூன்றுக்கு மிகாத சாய்ஸில் தெரிவித்தால் பரிசீலிக்க உதவிடும் folks ! ///

  1.வனரேஞ்சர் ஜோவின்..

  புதையல் பாதை + யானைக் கல்லறை
  &
  சிறுத்தைகள் சாம்ராஜ்யம் இணைந்த தொகுப்பு (இயலுமாயின்) வண்ணத்தில்

  2. லக்கிலூக் மாதிரி சிக்பில் கலெக்சன் ஒன்று

  3. டிடெக்டிவ் ஜெரோம் அல்லது ஜில் ஜோர்டான் ஏதேனும் ஒன்று.

  (மூணுமே போகாத ஊருக்கு வழின்னு தெரியும்.. இருந்தாலும்..😇)

  ReplyDelete
  Replies
  1. //டிடெக்டிவ் ஜெரோம் அல்லது ஜில் ஜோர்டான் ஏதேனும் ஒன்று//

   +9

   Delete
  2. 3. டிடெக்டிவ் ஜெரோம் அல்லது ஜில் ஜோர்டான் ஏதேனும் ஒன்று.

   +1

   Delete
 15. 2017 ல்blogவந்தேன் .மார்ச் முதல் பார்வை.1.புயலுக்குப் பின் பிரளயம். 2 .மிஸ்டர் நோ .9/10. .3 .ஆர்டிக் அசுரன்9/10

  ReplyDelete
 16. ///இந்தக் கருவிக்கொரு கௌரவத்தினை ஆயிரமாம் பதிவினில் தந்திட என்ன செய்யலாமென்று சொல்லுங்களேன் folks ? ///

  ஆயிரம் பக்கங்களில் ஒரு கதம்ப ஷ்பெசல் பற்றிய அறிவிப்பை செய்யலாம் சார்..☺

  ReplyDelete
 17. 1. ஆயிரம் பக்க குண்டு புக்.
  2. பதிவில் இணைந்தது 2014 மே வாக்கில்.
  3. A. கலர் டெக்ஸ் கிளாசிக்ஸ். B. மேகி 4. சோடா

  ReplyDelete
 18. கானகத்தில் ஒரு கபடநாடகம்

  ஜெரி ட்ரேக் என்னும் மிஸ்டர் நோ வின் இரண்டாவது கதையும் நல்லாவே இருக்கு.! எளிமையான கதைக்களம்... சிக்கலில்லாத நேர்க்கோட்டுக் கதை..சின்ன சின்ன திருப்பங்கள்.. கண்களை ஈர்க்கும் கருப்பு வெள்ளை சித்திரங்கள்னு வெற்றிக்கு தேவையான அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளார். !

  ஒரு இருபது வருடங்களுக்கு முன் அறிமுகமாகியிருந்தால் இன்று நம்மிடையே ஸ்டார் அந்தஸ்தில் இருந்திருப்பாரு.. இப்பவும் ஒண்ணு கெட்டுப்போயிடலை..!

  கதைக்கு வருவோம்..
  நாமெல்லாம் பைக்குல ஊர்சுத்துற மாதிரி ஜெரி ட்ரேக் தன்னோட பைப்பர் விமானத்துல ஊர்சுத்திட்டு திரும்புறப்போ உதவி கோரி ஒரு அழைப்பு வருது.. அதைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான விமானம் ஒன்றிலிருந்து தப்பியிருப்பார் என்ற அனுமானத்தில் தொழிலதிபர் கெல்லரை தேடும் பணி மிஸ்டர் நோ வுக்கு வந்து சேர்கிறது.! (மிஸ்டர் நோ என்பதை விட ட்ரேக் என்றழைப்பதே நல்லா இருக்கு.! )
  தொழிலதிபர் உயிரோடு கிடைத்தாரா.. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.!

  காணாமல் போன கெல்லர் காட்டுவாசி கிராமத்துல கிளுகிளுப்பா இருந்துகொண்டு மீட்புக் குழுவினரோடு வரமாட்டேன் என்று அடம்பிடிப்பதும்.. இறுதியில் அதே மாதிரி மூன்று குஜிலிகளோடு கும்மாளமிட்டவாறே அலுவலை கவனிப்பதும் செம்ம காமெடி..! அந்த காட்டுவாசி கிராமம் எங்கே இருக்குன்னு தெரிஞ்சா நானும் பாராசூட்ல போயி குதிக்கலாம்னு இருக்கேன்.. செம்ம விருந்தோம்பல்பா..!

  கெல்லரை கண்டுபிடிக்கச் செல்லும் குழு.. இரு அணிகளாக பிரிந்து ஒருவருக்கொருவர் போட்டுத்தள்ள முயற்சிப்பது எதிர்பார்த்த ட்விஸ்ட்.. ஆனால் எதிர்பாராத விதத்தில்.!

  பயந்தாங்கொள்ளியாக இருக்கும் லூனிக் இறுதியில் துணிச்சலாக மெயின் வில்லனையே கதைமுடிப்பது சுவாரஸ்யம்.! ஆஸ்கார் வொயில்டின் தத்துவங்ளையும் அரதப்பழசான மொக்கை ஜோக்குகளையும் ஒரு சேர பேசிக்கொண்டு திரியும் அடியாள்.. காரியம் முடிந்ததும் சுயரூபம் காட்டும் லாயர் கார்டன் என கதாப்பாத்திரங்களும் அருமை.!

  மிஸ்டர் நோ வின் அமேசான் சாகசங்கள் படிக்க ரசிக்க நன்றாகவே இருக்கின்றன.. தொடர்ந்து வரவேண்டுமென விரும்புகிறேன்.!

  ரேட்டிங் 9/10

  ReplyDelete
  Replies
  1. நல்லவேளை மாடஸ்டி புக்க தொடல

   Delete
  2. //மிஸ்டர் நோ வின் அமேசான் சாகசங்கள் படிக்க ரசிக்க நன்றாகவே இருக்கின்றன.. தொடர்ந்து வரவேண்டுமென விரும்புகிறேன்//

   +9

   Delete
  3. ///நல்லவேளை மாடஸ்டி புக்க தொடல ///

   எங்க வெச்சேன்னு தெரியலை சகோ.. தேடிக்கிட்டு இருக்கேன்.. கிடைச்சதுன்னா அடுத்து அதுதான்..😇

   Delete
  4. எடிட்டர் சார்...

   டின்டின்னு இதழுக்கு கதையில வரும் நேபாள் கூட்டிப்போன மாதிரி.. மிஸ்டர் நோ இதழுக்கு கதையில வரும் அந்த காட்டுவாசி கிராமத்துக்கு கூட்டிப்போற ஐடியா ஏதாச்சும் இருக்குங்களா சார்..?!

   Delete
  5. பாராசூட் டாமும் சேத்து தின்னுட்டு வாங்க கண்ணரே....
   கம்முனு வீட்லயே குதிங்க...

   நிச்சயமா 90களில் இக்கதைகள் இறக்கியிருந்தா பல நண்பர்கள் பிரிந்திருக்க வாய்ப்பிருந்திராது...ஒருஃப்ளோல ஓடியிருக்கும்

   Delete
  6. ரிஸ்க் எடுக்காம ரஸ்க் சாப்பிடமுடியாதே ஸ்டீல்..

   Delete
 19. வணக்கம் நண்பர்களே 🙏

  ReplyDelete
 20. Received the books sir. Tex story reading is going on sir

  ReplyDelete

 21. Q1) ஆ ப கண்ட அபூர்வ ஆசிரியர்னு உங்களுக்கு பட்டம் அளிக்க ஆசை...

  பட்டத்த வாங்குன கையோட எங்களுக்கு , "மின்னும் மரணம்" மாதிரி எதிர் பாராத சர்ப்ரைஸ் தர்றீங்க ...சரியா?


  Q2) 2012

  Q3...
  1) ஒ நொ ஒ தோட்டா மாதிரி ஒண்ணு

  2) கென்யா மாதிரி உகாண்டா டான்ஜானிக்கான்னு எதாச்சியும்

  3)ஒரு சிரிப்பு ஸ்பெஷல் டைஜஸ்ட்  ReplyDelete
 22. Tex, zagor,robin,Martin அடங்கிய ஒரு ஆயிரம் பக்க குண்டு ஸ்பெஷல்
  ( இரத்த படலம் B/W குண்டு புக் size)

  ReplyDelete
 23. 2022 ல் தான் blog ல் வந்தேன்
  Sir... "ஆயிரம் பதிவு போட்ட அண்டா வாயன்."😄😄😄😄😄
  சிரிப்பில் இடது கண்ணில் நீர்
  பொல, பொல வென்று கொட்டியது நிஜம் sir.. 😄😄❤️👍..

  ReplyDelete
 24. 2014 தான் வந்தேன்

  ReplyDelete
 25. ஒரு JCU ஐ உருவாக்கவும்
  - ஜோடோரோவ்ஸ்கி காமிக்ஸ் யுனிவர்ஸ் - இன்கால் மற்றும் மெட்டாபரான்கள் சிறப்பு சந்தா.

  ReplyDelete
 26. பிப்ரவரி 2013 முதல் தளத்தின் பதிவுகளை தவறாமல் படித்து வந்தாலும்

  எண்ணங்களை எழுத்தாக பதிவிடுவது கடந்த 2 ஆண்டுகளாக மட்டுமே 😇

  ReplyDelete
 27. டெக்ஸின் சதுப்பில் ஒரு சதிகார கும்பல் (அந்த பனாமா காடுகளில் டெக்ஸ் டீம் பண்ணும் அதகளம் ரொம்பவே ரசித்தேன் அப்போது.) கலரில் வந்தால் நல்லா இருக்கும்.

  ReplyDelete
 28. 2012 ஜனவரி முதல் சார், அப்போதெல்லாம் பதிவுகள் அநேகமாக மிட்நைட் தான் அதிகமாக வரும். அதைப் போல மார்ச் மாதம் ஒரு மிட்நைட் பதிவில் டெக்ஸ் வில்லரின் , தலைவாங்கிக் குரங்கு ஆர்ட் பே
  ப்பரில் வரும் என்பதுப் பற்றி அறிவிப்பெல்லாம் மறக்கவே முடியாது & அதை எத்தனை முறை திரும்ப திரும்பப் படித்தேன் என்பது எனக்கே தெரியாது.

  ReplyDelete
 29. Hi @Editor sir Q1 : Book has collection of super heros (something like Never before special)
  Q2: Following blog from 2023 Mar
  Q3 : 1. Batman or any Thigil special
  2. Any tex classic
  3. Vedhalar

  ReplyDelete
 30. 1.டின் டின் 2 பற்றிய அறிவிப்பு

  2. 2019

  3. 1) மதியில்லா மந்திரி
  சிறப்பிதழ்
  2) சிக் பில் சிறப்பிதழ்
  3) Tiger one shot(ஏதேனும் இருந்தால்)

  ReplyDelete
 31. 1 ) இந்த ஆண்டின் முதல் குண்டு புக்காக இருந்தால் மகிழ்ச்சி... கௌபாய் ஸ்பெஷல் ( டியூராங்கோ
  Alike ) இருந்தால் சால சந்தோஷம்.

  2) ஆரம்பத்தில் இருந்தே...

  3) ரீ பிரிண்ட் ஆக இல்லாமல் இருந்தால் மூச்சு விடுவேன்..
  மூன்று பத்தாதே சார்!! ஒரு ஏழு, எட்டு? எல்லாமே 100 பக்கங்களுக்கு மேல் ..

  டைகர்,
  பராகுடா மாதிரி ஒன்று
  கார்ட்டூன் ஸ்பெஷல் ஒன்று
  டெக்ஸ் புதுசா ஒன்னு 500 பக்கத்தில்.

  ReplyDelete
 32. வணக்கம் நண்பர்களே!!

  ReplyDelete
 33. புயலுக்கு பின்னே பிரளயம் .இதுவரை டெக்ஸ் வில்லரின் எந்த கதையும் இவ்வளவு சிறப்பான ஓவியங்கள் உடன் வந்ததில்லை .காமிக்ஸ் இல் சித்திரங்களுக்கான உயரிய விருது ஏதேனும் இருந்தால் யோசிக்காமல் இந்தக் கதைக்கு அந்த விருதை கொடுக்கலாம் . கரூர் ராஜ சேகரன் .

  ReplyDelete
  Replies
  1. // இதுவரை டெக்ஸ் வில்லரின் எந்த கதையும் இவ்வளவு சிறப்பான ஓவியங்கள் உடன் வந்ததில்லை //
   தீபாவளி வித் டெக்ஸ்-2015 (எமனின் வாசலில்),
   தலையில்லா போராளி கதைகளில் ஓவியங்கள் இதைவிட சிறப்பாக இருக்குமே நண்பரே...!!!

   Delete
 34. கவிஞரின் வார்த்தைகளில் சொல்வதென்றால் இதுவரை வந்ததிலேயே இதுதான் டாப் ஓவியங்கள்

  ReplyDelete
 35. 1.ஆயிரமாவது பதிவில் கடல் கொள்ளையர் பரகுடாவின் போது அறிமுகப்படுத்திய சில கல்கொள்ளையர் கதைகளில் ஒன்று...வான் ஹாம்மே கூட


  2.துவங்கிய வருடம் முதலாய்...சில பதிவுகள் கடந்து
  3.
  1.ஆஸ்ட்ரிக்ஸ்
  2.டாக்டர் மார்த்தா
  3.விண்வெளிக் கதைல ஒன்னு


  சாய்ஸ் 2
  1.ஸ்பைடரின் சினிஸ்டர்
  2.
  ஸ்மர்ஃப்
  3.ஏதாவது 5 பாக
  தொகுப்பு

  சாய்ஸ் 3

  1.வான்வெளி
  2.கடல்வழி
  3.காட்டுவழி அல்லது மணல்வெளி
  4.பேய்வழி
  5.மங்கா
  6.கிரேக்கம்
  7இந்தியா அரசர்
  8.மாயன்
  9.வால்ட் டிஸ்னி

  ReplyDelete
  Replies
  1. ஆசிரியர் மைண்ட் வாய்ஸ்: “யாரைப் பார்த்து கேக்கறே,அண்ணனைப் பார்த்துதானே கேக்கறே,இன்னும் கொஞ்சம் பெரிசா கேளு”...!!!

   Delete
 36. Q2: 2013 ஜனவரி முதல்
  Q3: பாராகுடா மாதிரி ஒரு புத்தகம்

  ReplyDelete

 37. கேள்வி1

  சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு

  கேள்வி 2

  ? 2014

  கேள்வி 3

  அ) ஒரு புது நாயகர்

  ஆ) ஒரு புது நாயகர்

  இ) ஒரு புது நாயகர்

  ReplyDelete
  Replies
  1. //சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பு//

   +99999

   Delete
 38. மார்ச் இதழ்கள்
  1 . புயலுக்குப் பின்னே பிரளயம்
  9.25/10
  2. கானத்தில் ஒரு கபட நாடகம்
  9.0/10
  எழுத்துப் பிழை ஏதுமில்லை . 3-ம் பக்கம் அப்படித்தான் இருக்கிறது.
  நான் கூட மேச்சேரி கண்ணன் & இசிஈஇளவரசரின் ஸ்ம்யூல் இசைமழை பற்றிய டெர்ரர் கதையாக இருக்குமோ என நினைத்தேன்.:)

  3. ஆர்டிக் அசுரன் 8/10
  புள்ளியியல் புரபசரை காதலித்த கணக்கு புரபசர் கதையாகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் ஓவராய் தரவுகளை அள்ளித் தெளித்திருந்தனர் தான் சார் ! இத்தனை details தேவையா ? என்ற எண்ணம் எழாதில்லை !

   Delete
  2. ///நான் கூட மேச்சேரி கண்ணன் & இசிஈஇளவரசரின் ஸ்ம்யூல் இசைமழை பற்றிய டெர்ரர் கதையாக இருக்குமோ என நினைத்தேன்.:)///

   நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..
   நேரில் நடந்ததெல்லாம்.. அஹா.. அஹா.. அஹா..!

   Delete
  3. அதிகாரி கதைக்கு 9.25 என்பது மிக அதிகம்... இதன் மூலம் டின்டின் ஒரு டெங்கி என்பதை காட்டி விட்டார்..

   Delete
  4. //நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே..
   நேரில் நடந்ததெல்லாம்.. அஹா.. அஹா.. அஹா..!/./

   எப்போது பார்க்க நேரிட்டாலும் வீட்டுக்காரம்மாவை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கவுண்டரின் காமெடி..mood changer.

   Delete
  5. ரம்மி@ அதிகாரி, டெங்கி என புதுப்புது பதங்களை உருவாக்கி அசத்துறீங்க ரம்மி.:)

   Delete
 39. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 40. கேள்வி #1 : டெக்ஸின் ஆயிரம் பக்க கதை தொகுப்பு.. ( இரண்டு புத்தகங்களாக )

  கேள்வி #2: 2014 முதல்..

  கேள்வி #3:

  ஒன்று கண்டிப்பாக டெக்ஸின் கலர் மறுபதிப்பு..

  டேங்கோ..

  லக்கிலூக்..

  ReplyDelete
 41. // பதிவினில் நீங்கள் இணைந்து கொண்டது எந்த ஆண்டு முதலாய் guys ? //
  2013 இல் நடு வாக்கில் என்பதாய் நினைவு சார்...

  ReplyDelete
 42. // மார்ச் இதழ்களின் ரேங்க் போடும் படலத்தை மறந்து விடாதீர்கள் //
  இன்னிக்கு கண்டிப்பா படிச்சே தீரனும்...

  ReplyDelete
 43. Question2 - 2012லிருந்து (பெங்களூரு காமிக் கானில் நமது ஸ்டாலை பார்த்த பிறகு)

  ReplyDelete
 44. // So இந்தக் கருவிக்கொரு கௌரவத்தினை ஆயிரமாம் பதிவினில் தந்திட என்ன செய்யலாமென்று சொல்லுங்களேன் folks ? //
  பெரிய குண்டு புக்கா ஒரு கதம்ப ஸ்பெஷலை போட்டுத்தாக்கலாம் சார்...
  2 பெரிய குண்டு புக்காதான் போடனும்னு உங்க மைண்டில் நீங்க யோசிச்சி வெச்சிருந்தா அதைக் கூட நடைமுறைப்படுத்தலாம் சார்...

  ReplyDelete
 45. // So ஆன்லைன் மேளாவினில் நீங்கள் பார்த்திட விரும்பும் இதழ்கள் பற்றி மூன்றுக்கு மிகாத சாய்ஸில் தெரிவித்தால் பரிசீலிக்க உதவிடும் folks ! //
  1.டெக்ஸ் டைஜஸ்ட் ஸ்பெஷல்,
  2.கார்ட்டூன் ஸ்பெஷல்-லக்கிலூக்,
  3.பாட்டில் பூதம்-(ஸ்பைடர் ஸ்பெஷல்),
  4.கி.நா ஸ்பெஷல்...
  கொசுறா தொட்டுக்க,
  5.மினி புக்ஸ் கலெக்‌ஷன் சிலபல - 30/- விலையில்...

  ReplyDelete
 46. கேள்வி நம்பர் 1

  நீங்கள் எழுதிய சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரையை limited edition புத்தகமாக prebooking அடிப்படையில் வெளியிடலாம்.

  ReplyDelete
  Replies
  1. அட, வாரா வாரம் சிங்கத்தின் அல்லா வயது பற்றியும் இங்கே தான் எழுதி வருகிறேனே சார் - தனியாக ஒரு புக் எதுக்கு ?

   Delete
  2. தனியாக ஒரு தொகுப்பு புத்தகமாக வேண்டும் ஆசிரியரே
   இங்கு படிக்க நெட் தேவை படுது
   தொகுப்பு புத்தகத்தை எப்போது வேண்டுமானலும் படிக்கலாம்
   பிடித்த பக்கத்நை தேடி எடுத்தும் படிக்க முடியும் ஆசிரியரே

   Delete
  3. It is like a motivational story for me sir

   Delete
 47. 2013 இல் வெளிவந்த டிடெக்டிவ் ஸ்பெஷல்-1 அற்புதமான அறிவிப்பு,இன்னமுமே சிலபல அறிவிப்புகளை அப்போது பார்த்ததாய் நினைவு,குறைந்த விலையில் அருமையான கலெக்‌ஷன்கள் கிடைக்கும் வாய்ப்பு தவறவிட்டாயிற்று,சிறப்பான அந்த ஒரு தருணம் மீண்டும் அமைய வாய்ப்புகள் மிகக் குறைவு...

  ReplyDelete
 48. வணக்கம் நண்பர்களே!!

  ReplyDelete
  Replies
  1. Q1.
   ஆயிரம் பக்க இதழ். இன்னும் மூன்றுமாதம் நேரம் இருக்கிறது. முடிந்தால் கதம்ப இதழாக கொண்டு வரலாம்!

   Q2.
   2017/2018 முதலாக என்று நினைக்கிறேன்.

   Q3.
   #1: மேகி கேரிசன் (மீதியிருக்கும் ஒற்றை ஆல்பத்தையும் போட்டு முடித்துவிடலாங்க சார்)
   #2: டெக்ஸ் கிளாசிக் வரிசையில் அடுத்த புத்தகம்
   #3: ஒரு செமத்தியான கிராபிக் நாவல் (புத்தகவிழா டிரெண்டுக்கு ஏற்றபடி ஹாரர் ஸ்பெஷலாக வந்தால் இன்னும் நலம்)

   Delete
  2. //#3: ஒரு செமத்தியான கிராபிக் நாவல் (புத்தகவிழா டிரெண்டுக்கு ஏற்றபடி ஹாரர் ஸ்பெஷலாக வந்தால் இன்னும் நலம்//

   +999

   Delete
  3. சார் ....ஆயிரம் ....ரண்டாயிரம் ...என்ற பக்க எண்ணிக்கைகளெல்லாம் இயந்திரன் சிட்டியைப் போல 'விஷ்க் ' என்ற ஒரே பார்வையில் படித்து முடிக்கும் AI ஆற்றல்கள் நமக்கும் வாய்க்கும் ஏதேனுமொரு தூரத்து தினத்தில் தான் இனி சாத்தியம் ! அதுவும் டப்பிகளைப் பிரிக்காமலே ஸ்கேன் செய்யவும் ஒரு நவீனம் வந்திடும் பட்சத்தில், பெங்களூரு பரண்களில் படுத்துறங்கும் புக்ஸ் கூட கச்சேரிகளில் கலந்திருக்கும் !

   இப்போதைக்கு , ஈரோவுக்கு friend ; அமெரிக்க மாப்பிள்ளை போலான குட்டி குட்டி பாத்திரங்கள் பண்ணும் கதை நாயகர்களோடு பயணிப்போம் சார் !

   Delete
  4. பரவால்ல சார்...ஆயிரம் பக்கம் எப்போதும் வாய்க்கும் வாய்ப்பல்லவே...அத மிஸ் செய்யனுமா

   Delete
  5. மொதல்ல போன மாசத்து மாடஸ்டி மிஸ்ஸை படியுங்க தெய்வமே ; அப்பாலிக்கா ஆயிரத்தை ; ரண்டாயிரத்தை 'மிஸ்' பண்றது பற்றிலாம் யோசிக்கலாம் !

   Delete
 49. கேள்வி நம்பர் 2

  தளத்தில் நான் வருகை புரிந்து படித்த முதல் பதிவு

  WELCOME All !!
  Sunday, July 28, 2019

  தளத்தில் நான் பதிவிட்ட முதல் கமெண்ட்
  ஈர்....பேன்...பெருமாள் !!
  Sunday, October 13, 2019

  அன்றிலிருந்து ஒவ்வொரு பதிவும் படித்து விடுவேன்.
  நேரம் இருந்தால் கமெண்ட் செய்வேன்.

  ReplyDelete
 50. கேள்வி நம்பர் 1

  நீங்கள் எழுதிய சிங்கத்தின் சிறு வயதில் கட்டுரையை limited edition புத்தகமாக prebooking அடிப்படையில் வெளியிடலாம்.

  கேள்வி நம்பர் 3

  மேகி காரிசன் கதையில் இன்னும் கடைசி ஒரு பாகம் தான் மிஞ்சி இருக்கிறது என்றால் அதை வெளியிட்டு விடுங்களேன் சார்.

  மாடஸ்டியின் கழுகுமலைக் கோட்டை கலரில் வாசிக்க ஆசை. ஆனால் எத்தனை reprintகள் நீங்கள் போட்டுள்ளீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் வாய்ப்பு இருந்தால் வெளியிடவும்.

  சமீபத்தில் வெளிவராத ஏதாவது கிளாசிக் லக்கி லுக் கதைகள்

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு லக்கி லூக் மறுபதிப்புகள் போதும் சார் ! இனி அடுத்த பெரிய புத்தக விழாத் தருணத்தில் பார்த்துக்கலாம் !

   Delete
 51. No-1
  எதிர்பார்ப்பை தரக்கூடிய
  எப்போது வரும்
  என காத்திருப்பதை
  ஏற்படுத்தக் கூடிய புதிய வெளியீடுகள் பற்றிய அறிவிப்புகள்,
  No - 2
  2013.
  No-3
  1, கேப்டன் டைகர்
  ஸ்பெஷல் ,
  2, கார்ட்டூன் ஸ்பெஷல்,
  3, ஒரு கிராபிக் ஸ்பெஷல்.

  ReplyDelete
 52. இரண்டாவது கேள்விக்கு பதில் 2014.
  மூன்றாவது கேள்விக்கு பதில் நான் குண்டு புத்தகங்களின் காதலன்.

  ReplyDelete
  Replies
  1. ஒரு தசாப்தம் ஆச்சுங்களா - பதிவுடன் பயணம் துவக்கி ? சூப்பர் சார் !

   Delete
 53. அந்தக் காலத்தில் யார் வீட்டுக்கு சென்றாலும் அங்கிருக்கும் மஞ்சள் நிற குண்டு டெலீபோன்
  டைரக்டரியை கூட ஒரு முறை புரட்டி பார்ப்பேன்.

  ReplyDelete
 54. பதிவில் ஆரம்பம் முதலே இணைந்து விட்டேன் சார்...முதலில் மெளன பார்வையாளனாய்...பின் தமிழிங்கிலீஸில் கமெண்ட்...பின் நமது தளத்தில் பதிவிடவே தமிழ் டைப்பிங் முறையை கற்று கொண்டது..தளத்தில் பதிவிடுவதற்காகவே ப்ரெவ்ஸிங் செண்டர் சென்று கணிணியில் கருத்து சொன்னது ..பின் அலைபேசியிலேயே நண்பர்கள் மூலம் கருத்து பதிவிட கற்றது... பின் எனது வாசகர் கடிதமே ஒரு பதிவாக வந்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை...மேலும் கருத்து பதிவின் பொழுது சிறு சிறு எழுத்து பிழைகளுடன் வரும் பொழுது நமது செயலர் நீங்கள் கருத்துகளை ,விமர்சணங்களை எளிதாக அழகாக சொன்னாலும் எழுத்து பிழையை திருத்தி பதிவிடுங்கள் அதில் கவனம் கொள்ளுங்கள் என அறிவுறித்தியது என இந்த தளம் எனக்கு பலவற்றை கற்றுக்கொள்ள வைத்தது...

  இதனை விட சிறப்பு அவ்வளவு சிறப்பான நண்பர்களை எனக்கு இந்த தளம் தந்து உள்ளது...


  இப்படிப்பட்ட இந்த தளத்தின் ஆயிரம் பதிவு சிறப்பாக என்ன செய்தால் பொருத்தமாக இருக்கும் எனில் ஆயிரம் பக்க கொண்ட ஓர் இதழை வெளியிடுவதை தவிர...

  ReplyDelete
  Replies
  1. ///பின் எனது வாசகர் கடிதமே ஒரு பதிவாக வந்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை...///

   இப்போல்லாம் அந்தமாதிரி கடுதாசிகளே வருவதில்லைன்னு எடிட்டர் சார் ரொம்ப வருத்தத்தில் இருக்காராம் தலீவரே..! முன்னமாதிரியே கண்ணாமணி அன்போட மிஸ்டர் மர்மம்.. நான்.. எழுதும் கடுதாசின்னு வாரம் ஒண்ணாச்சும் எழுதி அனுப்புங்க தலீவரே..!

   Delete
 55. இந்த மாத இதழ்களை வழக்கம் போல் ஒவ்வொரு இதழையும் ரசித்த பின்னர் எதை முதலில் வாசிக்கலாம் என திணறிய பொழுது டெக்ஸ் வில்லரின் அட்டைப்படமும் ..உள்ளே சித்திரங்களும்...அதை விட ஆரம்பத்திலியே அந்த மழைக்காட்சிகளுமே இந்த வெயில் கொடுமையை மறக்க முதலில் இந்த கதையை தான் வாசிக்க வேண்டும் என முடிவெடுத்து வைக்க விட்டது...


  புயலுக்கு பின்னே பிரளயம்..


  கதை முதல் பக்கத்தில் வாசிக்க ஆரம்பித்தது தான் தெரிந்தது..அதன் பின் கடைசி பக்கம் வாசித்து முடிக்கும் வரை அந்த சிறுநகரத்தில் நானும் மழையினுள் சிக்கி கொண்டே அங்கே உலவி திரிந்த அனுபவம்...கெளபாய் கதையில் ஓர் துப்பறியும் கதை...கதையை வாசிக்கும் பொழுது இவர் தான் வில்லன் என என்னை நினைக்க வைக்க பின் அவர் இல்லை என கொண்டு போக பின் மீண்டும் ஒரு திருப்பத்தை அளிக்க மிக சுறுசுறுப்பாய் ,விறுவிறுப்பாய் கதை நம்மை நகர்த்தி சென்றது...சித்திரங்கள் செம அழகு...மொத்த்தில் இந்த முறை டெக்ஸ் அட்டைப்படம் ,சித்திரங்கள் ,கதை என அனைத்திலும் நம்பர் ஒன் ...

  ReplyDelete
  Replies
  1. தலீவரே....! இந்த மாச டெக்ஸ் கதையைப் படிக்கிறச்சே குடை பிடிச்சிட்டே படிச்சீங்களாமே ?! - செயலர் சொன்னார் !

   Delete
 56. லயன் கம்பெனிக்கு முன்பிருந்தே நான் பிளாக்கில் பார்வையிட்டு வருகிறேன். அப்போதெல்லாம் எழுதியது இல்லை. இடையில் புத்தகம் நின்றது எனக்கு தெரியாது ஆனால் பிளாக்கிற்கு சென்று பார்த்த போது பிளாக்கே பிளாக்காகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன் பின் லயன் நின்று விட்டதாக எண்ணி அத்துடன் நின்று விட்டேன். பின்னர் தாராபுரத்தில் ஜேபி புத்தக சென்டரில் ஆயிரம் ரூபாய் வெளியிட்டானமின்னும் மரணம்வெளிவந்த போது பெரிய பிளக்ஸ் ஆக வைத்திருந்தார்கள்.அதன் பின் தான் லயனில் புத்தகங்கள் திரும்ப வருவது எனக்கு தெரிந்தது. அந்தப் புத்தகத்தை வாங்கியது முதல் நான் பிளாக்கில் தொடர்ந்து பார்வையிட்டுக் கொண்டே தான் வருகிறேன்.கடந்த ஒரு வருடங்களாகத்தான் இங்கே பதிவுகளும் இட்டு வருகிறேன். ஆகவே நான் பிளாக்கின் ஆரம்பகால வாசகன் என்று சொல்வது மிகை ஆகாது. அப்போதைய முகவரி
  www.lioncomics.com என்று இருந்தது.

  ReplyDelete
 57. மர்ம மனிதன் மார்ட்டினின் ஆர்டிக் அசுரன் கதையை பொருத்தவரை இம்முறை நேர்கோட்டு கதையாக சென்று விட்டது. வரலாற்று நிகழ்வாகவும் அதில் மார்ட்டின் ஒரு கெஸ்ட் ரோலாகவுமே இருந்து விடுகிறார். மார்ட்டின் வர்றார் கதை சொல்றார் ரிப்பீட்டு
  மார்ட்டின் வர்றார் கதை சொல்றார் ரிப்பீட்டு
  மார்ட்டின் வர்றார் கதை சொல்கிறார் ரிப்பீட் இப்படியே செல்கிறது.
  ஆனால் கதை அட்டகாசமாக உள்ளது. எனது ரேட்டிங்
  9/10

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு கதாசிரியருக்கும் ஒரு பாணி உண்டு சார் ! இதே கதையினை அமரர் ஆல்பிரேடோ காஸ்டெல்லினி செய்திருந்தால் நிச்சயமாய் இன்னும் ஒரு மிடறு டாப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம் !

   Delete
 58. 1.Tex Special
  2.Cartoon Special -SMURF -and others
  3.Any one your choice sir - But no மேகி noodles 😀😀😀

  ReplyDelete
 59. Question No - 2- Reading from blog beginning

  ReplyDelete
  Replies
  1. I give the answer to Question no 3 only.
   Not 1&2.

   எதற்கு இந்த Super 🤔🤔

   Delete
 60. 1. டெக்ஸ் வில்லர் ஏழு வருடம் படம் வரைந்த ஓவியரின் கதையை மறுபடியும் a
  வண்ணத்தில் போடவும்

  2. 2005 ஆம் வருடம் இப்போதைய பிளாக்கிற்கு முன்னோடியாக நமது வலைத்தளத்தில் கமெண்ட் செக்‌ஷன் இருந்த காலத்திலிருந்து படித்து வருகிறேன்

  3.1 முத்து காமிக்ஸில் வந்த சூதாடும் சீமாட்டி கணவாய் கொள்ளையர் போன்ற கௌபாய் கதைகளை போடவும்
  3.2 மாடஸ்டி டைஜஸ்ட் போடவும்
  3.3 டெக்ஸ் விலரின் மறு பதிப்பு காணாத ஏதாவது கதை வண்ணத்தில் போடவும்

  ReplyDelete
 61. நான் பிளாக்கில் இணைந்தது 2014 வாக்கில் என நினைவு.
  1000 பக்க கதம்பம் புக்குக்கு என் ஓட்டு(இ.கை.மாயாவி முதல் எல்லா முக்கிய ஹீரோக்கள் பங்கு பெறும் சாகசங்கள்bw)

  ReplyDelete
  Replies
  1. சார்...அம்பதாவது பொறந்தநாளுக்கோசரம் பர்த்டே கேக் மேலே அம்பது மெழுகுவர்த்திகளை யாரும் செருகிப்பதில்லையே ? மிஞ்சிப் போனாக்கா 50-ன்னு காட்ட 5 & 0 என ரெண்டை மட்டும் வாங்கி ஒப்பேற்றிடுறோம் தானே ?

   அதே போலவே ஆயிரமாவது பதிவையும் symbolic ஆகக் கொண்டாடுவோமே ? "ஆயிரம் பக்க புக்" என்ற நிலைகளையெல்லாம் நம் வட்டத்தின் பெரும்பகுதி கடந்து, காலம் பலவாகிப் போச்சு !

   Delete
 62. கேள்வி 1
  1000 பக்கங்களுடன் ஒரு கதம்ப இதழ்
  கேள்வி 2
  1.பறக்கும் பிசாசு & பிளாக்மெயில்
  2.தோர்கல்
  3.மேகி கேரிசன்
  கேள்வி 3
  ஆதி கால வாசகனாக இருந்தாலும் இங்கு 2016 முதல்

  ReplyDelete
 63. ஆர்டிக் அசுரன் முத்து காமிக்ஸ் 490 ஆவது இதழ். 500க்கு மெகா புக் போடுங்க சார்

  ReplyDelete
  Replies
  1. 500 அடுத்த வருஷத்தில் தான் சார் ; நடப்பாண்டு 499-ல் நிறைவுறவுள்ளது !

   So முத்துவின் ஆண்டுமலரும் ; 500 வது இதழும் ஜனவரி 2025-ல் !

   Delete
  2. // முத்துவின் ஆண்டு மலரும் 500 வது இதழும் ஜனவரி 2025 ல் //
   அப்பா 2025 ஜனவரியில் டபுள் ட்ரீட் தான்.
   அதற்கான தயாரிப்புகளை இப்போது இருந்தே ஆரம்பித்தால் தான் சரியாக இருக்கும்
   ஆசிரியர் அவர்களே இது குறித்து தனியாக ஒரு பதிவியை போடுங்கள். 2025 ஜனவரி எப்படி கொண்டாடலாம் என்று

   Delete
 64. நானும் ஆரம்ப காலத்தே வந்தாச்...பதிவிட கத்துக்க சில பதிவ தாண்டி உள்ளே வந்தேன்

  ReplyDelete
 65. வணக்கம் சார்

  கேள்வி 1 - ஆயிரமாவது பதிவை சிறப்பிக்க ஒரு special புக் வெளியிடலாம். அது மறுபதிப்பாக இல்லாமல் புது கதையாக இருந்தால் OK. சென்ற வருடம் ஹிட்டான "கார்சனின் கடந்த காலம்" போல் ஒரு பதிய டெக்ஸ் கதை மெகா சைசில்

  கேள்வி 2: வலை தளத்தில் 2012 முதல் இருக்கிறேன்

  கேள்வி 3 - My Choce for online
  (i). கேப்டன் டைகர், அடுத்த சுற்று
  (ii). மேகி கேரிசன் இறுதி பாகம்
  (iii). வன்மேற்கின் அத்தியாயங்கள் அடுத்த சுற்று

  Jan 2024 My Order/Rating
  1. இரவின் எல்லையில் - லார்கோ (A+)
  2. திபெத்தில் டின் டின் (A+)
  3. கலாஷ்நிகோவ் காதல் - சிஸ்கோ - (A)
  4. கண்ணீருக்கு நேரமில்லை - டெக்ஸ் (A)
  5. பருந்துகொரு பொறி - Mini டெக்ஸ் - (B)
  6. விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல் - (C)
  7. வீரனுக்கு மரணமில்லை -
  வேதாளர் (D)

  Feb 2024
  1. காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் - டெக்ஸ் (A)
  2. தென்றல் வந்து என்னை கொல்லும் - டெட் வுட் டிக் - (A)
  3. ஒரு பண்டமாற்று படலம் - மாடாஸ்டி (A)

  March 24 முதல் பார்வை/படிக்கும் வரிசை
  1. டெக்ஸ்
  2. மார்டின்
  3. No
  நன்றி

  ReplyDelete
 66. ஊஊஊஊய்ய்ய்... 1000வது பதிவைத் தொடப்போகிறோம் என்பதை நினைத்தாலே மலைப்பாய் இருக்கிறது!!

  2012 ஜூலை மாதத்தில் 'ஏன் இப்போதெல்லாம் லயன்-முத்து காமிக்ஸ் வருவதில்லை?!!.. ஒருவேளை அது வந்துகொண்டிருப்பது நமக்குத்தான் தெரியவில்லையோ!! சரி எதற்கும் ஒருவாட்டி கூகுள்ல தேடிப்பார்த்துடுவோம்னு தேடியபோது தான் இந்த ப்ளாக் இருப்பது தெரியவந்தது. எடிட்டர் அவ்வப்போது பதிவிட்டுவருதையும், நிறைய நண்பர்கள் தங்கள் கருத்துகளைக் கமெண்டுகளாய் தெரிவித்துவருவதும் என்னை ரொம்பவே உற்சாகம் கொள்ளச் செய்தது. 'ஈரோடு புத்தகத் திருவிழாவில் பங்கேற்க முயற்சிக்கலாமே' என்று எடிட்டரிடம் எனது முதல் இங்கிலிபீச் கமெண்ட்டை 22/7/2012ல் பதிவு செய்ததும்; எடிட்டர் அதற்குப் பதிலளித்ததும் ரொம்பவே பிரம்மிப்பான தருணங்கள் எனக்கு!

  கார்த்திக் சோமலிங்கா, புனித சாத்தான், ஸ்டீல்க்ளா, பொடியன், கனவுகளின் காதலன், BN USA, PfB, கிருஷ்ணா V.V, ராஜ்குமார், ப்ளூபெர்ரி உள்ளிட்ட பலரும் ரவுண்டுகட்டி அடித்த கமெண்டுகளை கிடைத்த கேப்புகளில் எல்லாம் படித்து ஆச்சரியப்படுவேன். அவ்வப்போது நானும் ஒரு ஆர்வத்தில் 'பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கலாமே', 'கடைகளில் விற்பனையை ஊக்கப்படுத்தலாமே' என்று எதையாவது இங்கிலிபீச்சில் (அப்போதெல்லாம் தமிழில் டைப் செய்வது எப்படி என்று தெரியாத காலம்) கமெண்ட் போட்டுவைக்க - பெரிதாய் யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள்! ஆனால் விரைவிலேயே தமிழில் டைப்ப கற்றுக்கொண்டான பின்னே கருத்துக்களை பதிவிடும் ஆர்வம் அதிகரித்தது! 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நிறைய நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தபோது உலகமே புதிதாய் தெரிந்தது!
  தொடர்ந்த மாதத்தில் பெங்களூர் காமிக்கானில் எடிட்டரை முதன்முதலாய் சந்தித்து 'திக் பிரமை' அடைந்ததும், நண்பர்கள் வட்டம் பெரிதாகிக் கொண்டேபோனதும், சதாகாலமும் தளத்திலேயே குடியிருந்து வந்ததும் பசுமையான நாட்கள்!

  தற்போது அதிக வேலைப்பளு காரணமாகப் பழைய பன்னீர் செல்வமாக இங்கே அடிக்கடி கமெண்ட் போட முடியவில்லை என்றாலும், கிடைக்கும் கேப்பில் இங்கே எட்டிப்பார்த்து மனதை லேசாக்கிக் கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது!

  இது எல்லாவற்றையும் விட - இங்கோ, முகநூலிலோ, யூட்யூபிலோ, வேறு எங்குமோ 'Vijayan' என்ற பெயரைக் கண்ட முதல் கணத்திலேயே மனதுக்குள் ஒரு புன்னகை பூத்திடும் மந்திரம் இன்றளவும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது!

  😍😍😍😍

  ReplyDelete
  Replies
  1. //பெங்களூர் காமிக்கானில் எடிட்டரை முதன்முதலாய் சந்தித்து 'திக் பிரமை' அடைந்தது//

   ஆத்தீ...அத்தினி டெரராவா அன்னிக்கி இருந்திருக்கேன் ?

   இது தெரியாம நான்பாட்டுக்கு கைய புடிச்சு இழுக்கிறவுக கூடல்லாம், சிக்கின சிக்கின மூ.ச. ; மு.ச.க்களுக்கு விஜயம் பண்ணி பற்பல முதல்மருவாதிகளை வாங்கியிருக்கேனே ?!

   Delete
  2. ஈவி ஈரோடு நமது நண்பர்களோடும் ஆசிரியரோடும் முதல் சந்திப்பு....அடடா....

   Delete
  3. ///ஆத்தீ...அத்தினி டெரராவா அன்னிக்கி இருந்திருக்கேன் ?///

   குருநாயர் உங்க உருவத்தை எப்படி கற்பனை பண்ணி வெச்சிருந்தார்னு கேட்டுப்பாருங்க சார்..😂😂😂

   Delete
  4. ஆத்தீ...அத்தினி டெரராவா அன்னிக்கி இருந்திருக்கேன்//
   பாக்க ஹல்க் மாதிரி பல்க்கா இருந்தாலும் செயலருக்கு மில்க் மாதிரி மனசுங்க சார். அவரை கண்ணாடில பாத்தே அவரு பயந்துக்குவாருன்னா பாத்துக்குங்களேன்.

   Delete
  5. @கிட் & all

   2012 பெங்களூர் காமிக்கானில் எடிட்டரைச் சந்திக்கும் வரை அவருடைய ஃபோட்டோவைக் கூட நான் பார்த்ததில்லை! ஆனால் 'ஹாட் லைன்' எழுத்துக்கள் மூலம் மட்டுமே மனதுக்கு நெருக்கமானவராக மாறிய நம் எடிட்டருக்கு நான் கற்பனையில் வடித்திருந்த தோராயமான உருவத்தைக் காண.. "இங்கே கிளிக்குங்க பாஸு"

   Delete
  6. @ஷெரீப்

   உண்மைதான்!!🤣🤣🤣🤣🤣🤣

   Delete
  7. நான் நம்ம எடிட்டர பார்க்குறதுக்கு முந்தி அவரு தேவாரம் போல முறுக்கு மீசை வைச்சுட்டு பைஜாமா எல்லாம் போட்டுட்டு இருப்பாருன்னு நினைச்சேன் 😆😇

   Delete
 67. பரவால்ல சார்...ஆயிரம் பக்கம் எப்போதும் வாய்க்கும் வாய்ப்பல்லவே...அத மிஸ் செய்யனுமா

  ReplyDelete
 68. ஆர்டிக் அசுரன்,
  தேடல்களும் ஆராய்ச்சிகளுமாய் கடுமையானதொரு பயணம்...
  முன்னவர்களின் கடுமையான உழைப்பும் தேடலுமே தற்போதைய தலைமுறை மனிதர்களின் சொகுசான வாழ்வு முறைக்கு வித்திட்டுள்ளது...
  எத்தகைய கடுமையான தேடல்கள்,ஆராய்ச்சிமுறைகள்,
  இவற்றுக்கெல்லாம் பின்புலமாய் இருக்கும் நோக்கங்கள்தான் எத்தனை எத்தனை...
  கடந்தகாலத்திற்கும்,
  சமகாலத்திற்கும் முன்னும்,பின்னுமாய் பயணிக்குமாறு கதையின் உத்தி அமைக்கப்பட்டிருப்பது சற்றே வேகமாய் களம் நகர உதவுகிறது, குறைந்த ஆக்‌ஷனும்,கொஞ்சம் பரபரப்பும்,கொஞ்சம் த்ரில்லுமாய் கதையமைப்பு இருப்பதால் ஆங்காங்கே ஏற்படும் தொய்வானது சற்றே கதையை நிமிரச் செய்கிறது, களம் நெடுகிலும் இன்யுவெட்கள்,வைகிங்குகள்,வெண்டிகோக்கள்,எரெபஸ்,டெரர் கப்பல்களின் ஆற்றல்கள், புதிய புதிய வார்த்தை உச்சரிப்புகளாய்-"உட்சுக்டூக்","அக்லூக்கா","கப்லூனாக்கள்" என ஏகப்பட்ட தகவல்கள் விரவிக் கிடக்கின்றன...
  ஜாவாவிற்கும்,மெர்லினுக்குமான புரிதலின் தருணம் வாய்த்தது எந்தவொரு கணத்தில் நிகழ்ந்திருக்குமோ ?!
  மெர்லின் மானுடவியல் நிபுணர் என்பதாலா,பழம் மொழிகளை இனம் காணும் நிபுணராய் இருப்பதால் ஜாவாவின் வித்தியாசமான உச்சரிப்பை எளிதாய் இனம் கண்டு உரையாடுவதால் ஏற்ப்டும் புரிதலா ?!
  வரலாறு மீதாய் காதல் கொண்டவர்களை எளிதாய் ஈர்ப்பான் ஆர்டிக் அசுரன்...
  ஓய்வானதொரு தருணத்தில் மீண்டுமொரு மீள்வாசிப்பை நிகழ்த்த வேண்டும்...
  ஆர்டிக் அசுரன் உறைபனியில் உறைந்த மர்மம்...
  வரலாற்றின் ஊடே ஒரு பயணம் போன உணர்வு,கதாபாத்திரங்கள் இடையேயான உரையாடல்கள்,கதையின் Detailing & Depth கொஞ்சம் அதிகமாய் போனதாலோ என்னவோ குட்டி ஆவண பெட்டகமாய் மாறிவிட்டது ஆர்டிக் அசுரன்,இந்த விவரணைகள் எல்லாம் மார்ட்டின் கதைகளில்தான் பெரும்பாலும் வாய்க்கிறது...
  மொழி பெயர்ப்பாளரை கடுமையாக வேலை வாங்கியிருப்பான் இந்த ஆர்டிக் அசுரன்...
  எமது மதிப்பெண்கள்-8/10...

  ReplyDelete
 69. புயலுக்குப் பின்னே பிரளயம்,
  புதுமையான கதை நகர்த்தல்கள் எதுவும் இல்லைன்னாலும்,வழக்கமாய் டெக்ஸ் கதைகளுக்கே உண்டான பாணியில் பரபரப்பாகவே போகிறது...
  வில்லன் யாரென கணிப்பதில் பெரிய கஷ்டம் எதுவுமில்லை...
  இரு குழுக்களுக்கு இடையிலான மோதல்கள்,சலூன் சண்டைன்னு ஆங்காங்கே பரபரப்பைத் தூவி கதையை நகர்த்தியிருப்பதால் ரொம்பவுமே நேர்கோட்டில் போய் சுவராஸ்யக் குறைவா முடிஞ்சிருக்க வேண்டிய கதை ஓகே எனச் சொல்லுமளவு போய் முடிகிறது...
  இன்னுமுமே கதையில் வலு கூட்டியிருந்தா சிறப்பா இருந்திருக்குமோன்னு தோணிச்சி...
  அசத்தலான ஓவியங்கள் இக்கதைக்கு கூடுதல் சிறப்பம்சம்...
  பின் அட்டையில் இடம் பெற்றுள்ள அடைமொழியான வன்மேற்கின் சாம்ராட்,இவர் கமர்ஷியல் சாம்ராட்டும் கூட...
  புயலுக்குப் பின்னே பிரளயம் பொழுதுபோக்கான வாசிப்புக்கு உத்தரவாதம்...

  ReplyDelete
 70. ஆயிரம் ஆவது பதிவை முன்னிட்டு லயன் சூப்பர் ஸ்பெஷல் போன்று ஒரு பாக்கெட் சைஸ் புத்தகம் வெளியிடுமாறு அனைத்து உலக வாசகர் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete
 71. ஆயிரமாவது பதிவுக்கு முதலில் வாழ்த்துகள் சார்💐💐💐💐💐

  Q1:-
  ஆயிரம் பக்க இதழ்களெல்லாம் வாசிக்க நேரம் அமைவதில்லை சார்...
  கபீஷ் கதம்பம் மாதிரி ஏதாவது பழைமையை நினைவூட்டும் விதமாக..ஒரு இதழ் போதும்

  Q2:-
  2010,2011களில் அவ்வப்போது வெளியிடப்படும் சில புக்ஸ் ஒன்றாக பணம் கட்டி வாங்கினேன்..அதில் இருந்த கம்பேக் ஸ்பெசல் விளம்பரம் பார்த்து புக்கிங் செய்திருந்தேன். கம்பேக் கைக்கு கிடைத்தபோது அதில் இருந்து இத்தள முகவரி பார்த்து 2012 ஜனவரியோ பிப்ரவரியோ இணைந்து கொண்டேன். நான்லாம் மெளன வாசகனே.
  அப்போது என்னிடம் இருந்தNokia போனல Load more ஆகிட்டா அதற்கு பின் வரும் கமெண்ட் லோடு ஆகாது. நண்பர் கார்த்திக் சோமலிங்கா ஒரு லிங் அப்போது இங்கே பகிர்ந்து இருந்தார். அதை க்ளிக் செய்தால் கடைசியாக வந்த 25கமெண்ட்களை மட்டுமே காட்டும். இப்படி தான் கமெண்ட்ஸ் பாலோ பண்ணி வந்தேன்.
  ஈவிக்கு ஆங்கிலத்தில் என் கருத்தை அனுப்பி வைப்பேன். அவர் தமிழில் இங்கே போடுவார். பிற்பாடு 2014 ஆரம்பத்தில் வாங்கிய XOLO போன்ல இருந்து கமண்ட் போட கற்றுக்கொண்டேன்.. எதெதோ பெயர் இருக்கும் வர்றவங்களுக்கு.. மரமண்டைனு கூட ஒரு பெயர் உண்டு.
  என் பிரிய டெக்ஸ் பெயரில் யாரும் இல்லைனு நான் சேர்த்து வைத்துக் கொண்டேன்.
  "மாடர்ன் மங்கூஸ்"-னு ஒரு பெயர் ரொம்ப காமெடியாக எழுதும், பிற்பாடு "மேச்சேரி மங்கூஸ்"-னு பெயர் மாற்றியது அது. அட நம்ம சேலத்துக்காரர்தான்னு தைரியமாக மாமா என உரிமையோடு அழைக்க அவரும் ஏற்றுக் கொள்ள, ஆச்சு வருடங்கள் 10.. இன்னொரு தாய் மாமாவை பெற்றுத் தந்தது இத்தளம்...

  முகம் தெரியாத காமிக்ஸ் வாசகர்களை காமிக்ஸ் நண்பர்கள் ஆக, சொந்தக்காரங்களாகவும் ஆக்க இயலும்னு தளம் காட்டியது.

  ஆயிரமாவது பதிவுல ஆயிரம் கமெண்ட் போட்டா சிறப்பாக இருக்கும்..😍

  Q3:-
  இதுவரை தாங்கள் சொல்லும் கெளபாய் சிங்கிள் ஷாட், கமர்சியல் கி.நா., கா.க.கா. தரத்தில் தங்க கல்லறை, பிக்பாய்ஸ்2ல உலகப்போரில் ஆர்ச்சி& கடத்தல் குமிழிகள், சார்ஜண்ட் தாமஸ்ன் எமனுக்கு எமன்.. இப்படி ஏதாவது 3.
  இயன்றால் அந்த மேகி காரிசனை கூட....

  ReplyDelete
 72. அனைவருக்கும் வணக்கம்…

  ReplyDelete
 73. ஆயிரமாவது பதிவுக்கு முதலில் வாழ்த்துகள் ஆசிரியர் சார்💐💐💐💐💐.

  ReplyDelete
 74. This month s all 3 issues were good.

  Martin- there is always scope for reading lots of unknown information. Very interesting read too

  Mr. No. I reluctantly thought in previous Mr no issue, how they are going to continue in this genre without boredom. But story and speed were good.

  Tex. Refreshing detective story without horses and routine bang bang

  ReplyDelete
 75. 1. சுவிட்சர்லாந்தில் மாயாவி
  2. டாக்டர் மாக்னோ Vs இரும்புக்கை மாயாவி
  3. பாட்டில் பூதம்

  ReplyDelete
 76. Q1. ஐடியா ஒன்னும் சிறப்பாக தோனலை, நமது வாசகர்களை ஆயிரம் வாட்டி ஹீரோ/ஹீரோயின் பெயரை "ஓம் **** நமக" ன்னு எழுதி போட்டோ எடுத்து அனுப்ப சொல்லலாம்.

  Q2. 2016 முதல் தான் இந்த blog பக்கம் வந்தேன், அதன் பின்னர் ஒன்று கூட படிக்க தவறவில்லை

  Q3. பெருச்சாளி பட்டாளம், அதிரடிப்படை போன்ற இரண்டாம் உலகப் போரின் கதைகள்
  தங்கக் கல்லறை Hard bound

  ReplyDelete
 77. @கிட் & all

  2012 பெங்களூர் காமிக்கானில் எடிட்டரைச் சந்திக்கும் வரை அவருடைய ஃபோட்டோவைக் கூட நான் பார்த்ததில்லை! ஆனால் 'ஹாட் லைன்' எழுத்துக்கள் மூலம் மட்டுமே மனதுக்கு நெருக்கமானவராக மாறிய நம் எடிட்டருக்கு நான் கற்பனையில் வடித்திருந்த தோராயமான உருவத்தைக் காண.. "இங்கே கிளிக்குங்க பாஸு"

  ReplyDelete
 78. 💥982 பதிவுகள் !
  💥631 followers !
  💥245686 பின்னூட்டங்கள் !
  💥அறுபத்தி ஐந்து லட்சத்துச் சொச்சம் பார்வைகள்.👏👏👏👏👏👏👏💐.

  1) இந்த பதிவு என்பதே வாழ்க்கையில் ஒரு முக்கியமான விசியமாக மாறிவிட்டதால்,
  "கடிதம் எழுதினால் பிரசுரம் ஆகுமா?,
  ஆசிரியரை நேரில் பாக்க முடியாதா?"
  என ஏங்கிய காலங்கள் கடந்து,இன்று வாரவாரம் ஆசிரியருடன் உரையாடலாம் எனும் விதத்தில் தங்களது
  ஒவ்வொரு வார பதிவும் எங்களுக்கு உற்சாகம்தான் சார்.
  இந்த உற்சாகத்தை தரும் உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?.
  நீங்கள் எது செய்தாலும் மகிழ்ச்சி தான் ❤️.

  2)2021 லாக்டவுனில் காமிக்ஸ் வருகிறது என தெரிந்ததும் அடுத்து இதற்கு வலைப்பதிவு உள்ளது என தெரிந்து இணைந்ததும் 2021 ஆகஸ்டில் தான்.
  நன்றி அன்பு நண்பர் "சிவகுமார் சிவா திருப்பூர்."

  3) MY CHOICES for Online Mela:-
  தொடர்ந்து படிப்பவர்களுக்கு
  இந்த வருடம் குண்டுபுக் இல்லாதது குறைதான் சார்.
  1) மேகி கேரிசன் (பல வாசகர்களின் எதிர்பார்ப்பு )
  2) க்ராபிக் நாவல்.
  3) ஒரு குண்டு புக்காக- டெட்டிவுட் டிக் போன்ற நாயகர்களின் கதைகள் கொண்ட கதம்ப இதழ்.

  வாய்ப்புக்கு நன்றி சார்🙏.

  ReplyDelete
 79. @Edi Sir..😍😘

  #1000 வது பதிவுக்கு

  அல்லது

  #முத்து காமிக்ஸ் 500 வது வெளியீட்டின்போது#

  முத்து வாரமலரில் வந்த "இரும்புகை மாயாவியின் ஒற்றைக்கண் மர்மம்" கதையினை மறுபதிப்பு செய்து அதேபோல் நாளிதழ் சைசில் நம் வாசகாஸ் க்கு "விலையில்லா அன்பு பரிசாக"😍

  வழங்கலாமே Edi Sir..😍😘😃😀

  ReplyDelete
 80. மார்ச் 2024 புக்ஸ் கைக்கு கிடைக்கும் முன் கதை வரிசை..

  1.மார்ட்டின்
  2.மிஸ்டர் நோ
  3.Tex

  படித்து முடித்தபின் கதை வரிசை..

  1.Tex (10/10)❤❤❤
  2.மிஸ்டர் நோ (9.5/10)❤❤
  3.மார்ட்டின் (9/10)❤

  ReplyDelete
 81. பரலோக பாதை பச்சை ... கேப்டன் பிரின்ஸ் புத்தகம் எப்படி கிடைத்ததோ அதிலிருந்து நானும் ரெகுலர் ...

  ReplyDelete
 82. Q2 - 2011ஆம் ஆண்டில் அப்போதைய முகநூல்/வலைப்பதிவு நண்பர்கள் மூலம் செய்தி அறிந்து தங்களின் இரண்டாம் பதிவை பார்வையிட்டதன் மூலம் லயன் ப்ளோக் அறிமுகமாகியது. அன்று முதல் இணைந்திருந்தாலும் இலங்கை என்பதால் உடனுக்குடன் காமிக்ஸ்களை படித்து கருத்துப்பகிர்வுகள் செய்யும் பாக்கியம் (ஓரிரு சந்தர்ப்பங்கள் தவிர்த்து) கிடைக்காததால் பெரும்பாலும் மௌன பார்வையாளனாகவே இருக்கின்றேன்.

  ReplyDelete

 83. அந்த நேரத்தில் பெருந்தலைகள் மட்டுமே கமெண்ட் செய்வார்கள். உங்களை வேறு எங்க ஸ்கூல் ஹெட் மாஸ்டர் மாதிரி பார்ப்பேன். அதனால் எப்படி கமெண்ட் போடுவது என்று பயமாக இருக்கும். ஒருவழியாக சுவரைப் பார்த்து பேசி எல்லாம் பழகி விட்டு துணிச்சலாக வந்து "விண்ணில் ஒரு குள்ளநரி பதிவில்" முதல் கமெண்ட் பண்ணியது பெப்ரவரி 2012 இல் 😁

  // Abisheg11 February 2012 at 00:57:00 GMT+5:30
  விஜயன் சார் ,சென்ற தீபாவளிக்கு வெளிவந்த இரத்தபடலம் collection கிட்ட தட்ட இந்த தீபாவளிக்கு தான் இலங்கையில்[கொழும்பில் மட்டும்] கிடைத்தது.அதற்கும் பலத்த போட்டி நடந்து இரண்டு நாளில் அனைத்தும் தீர்ந்துவிட்டது.பலர் ஏமாற்றத்துடன் சென்றனர்.இந்நிலையில் இங்கு தங்கள் காமிக்ஸ் வந்தாலும் கையில் கிடைப்பது அவரவர் அதிர்ஷ்டம் என்ற நிலையில் இவ்வாறான நேரடி வெளியீடுகளை பெறக் கூடிய வாய்ப்பு எமக்கும் உள்ளதா? //

  ReplyDelete
 84. This comment has been removed by the author.

  ReplyDelete
 85. Dear விஜயன் சார்,

  2011 ல் முதல் பதிவிலிருந்து தங்களை பின் தொடர்ந்து வருகிறேன்.
  ------------------------------------------------------------------------------------------------------
  Mahesh kumar S 26 December 2011 at 12:08:00 GMT+5:30
  Welcome back sir,
  Wow,It's good to see you online. Eagerly awaiting for upcoming releases.
  ---------------------------------------------------------------------------------------------------------------

  லயன் மறுபிறவி எடுத்தது மீண்டும் விஸ்வரூபமும் எடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

  எங்களின் பால்ய காலத்தை (childhood days) மீண்டும் நினைத்து பார்க்கும் பொழுது தாங்களும் தங்கள் தந்தை திரு சௌந்தர பாண்டியன் சார் அவர்களும் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இனிப்பாக கொண்டாட உதவியுள்ளீர்கள் என்பது புரிகிறது.நினைவு கூறும் பொழுது மீண்டும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
  தங்களுக்கும் தங்கள் தந்தையாருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
  Regards,
  Mahesh kumar Selvaraj

  ReplyDelete
 86. டியர் விஜயன் சார்,

  //பன்னிரெண்டரை ஆண்டுகளில் - அதாவது மிகச் சரியாக 150 மாதங்களில், "1000 மொக்கை போட்ட அண்டாவாயன்" என்ற கெத்து waiting !//
  அதே மேரி, "ரெண்டாயிரம் கமெண்டு போட்ட குண்டாவாயன்" என்ற வெத்து கெத்து என்னிடம் இருந்தாலும், ஸ்டீல் ஒரு சில பதிவுகளிலேயே மூவாயிரம் முட்டைகள் சாரி, கமெண்டுகள் இட்டு, இதுவரை வந்த அண்டா, குண்டாக்களிலேயே, அவருடையது தான் பெஸ்ட் என்று அசால்ட்டாக கடந்து போய் விடுவார்!

  //QUESTION # 1 : So இந்தக் கருவிக்கொரு கௌரவத்தினை ஆயிரமாம் பதிவினில் தந்திட என்ன செய்யலாமென்று சொல்லுங்களேன் folks ?//
  முதல் பதிவில் கமெண்டு போட்ட அனைத்து வாசகர்களுக்கும், தலா ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்கலாம்! இந்த கமெண்ட்டைப் படித்து விட்டு, அவசர அவசரமாக முதல் பதிவை தேடி கமெண்டு போடுபவர்களுக்கு இந்த ஆஃபர் கிடையாது. 

  //QUESTION # 2 : பதிவினில் நீங்கள் இணைந்து கொண்டது எந்த ஆண்டு முதலாய் guys ? அமைதியாய்//
  உங்களுடைய முதல் பதிவில் இருந்தே ரெகுலராக மொக்கை போட்டு வருகிறேன்!

  //QUESTION # 3 :So ஆன்லைன் மேளாவினில் நீங்கள் பார்த்திட விரும்பும் இதழ்கள் பற்றி மூன்றுக்கு மிகாத சாய்ஸில் தெரிவித்தால்//
  சந்தானம் மாதிரி புத்தகங்களை மோந்து பார்த்தே போதை அடையும் எனக்கு, இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் தகுதி இல்லையென்றாலும், வெறும் அறிவிப்புகளோடு மட்டுமே நின்று விட்ட இந்தக் கதைகளை வெளியிடலாம்:

  1) டெக்ஸ் வில்லர் எட்டி உதைக்கும் முழுநீள சாகசம் - "அப்படித்தாண்டா உதைப்பேன்"

  2) மர்ம மனிதன் மார்ட்டின் மண்டையைப் பிச்சிக்க வைக்கும் - "உதிர்ந்த முடிகள்"

  3) கரண்டுக்கே ஷாக் கொடுக்கும் இரும்புக்கை மாயாவியாரின் ஷாக்கசம் - "எகிறிப் போன எலெக்ட்ரிசிட்டி பில்"

  ReplyDelete
  Replies
  1. ///ரெண்டாயிரம் கமெண்டு போட்ட குண்டாவாயன்" என்ற வெத்து கெத்து என்னிடம் இருந்தாலும், ஸ்டீல் ஒரு சில பதிவுகளிலேயே மூவாயிரம் முட்டைகள் சாரி, கமெண்டுகள் இட்டு, இதுவரை வந்த அண்டா, குண்டாக்களிலேயே, அவருடையது தான் பெஸ்ட் என்று அசால்ட்டாக கடந்து போய் விடுவார்!
   ///
   ///அப்படித்தாண்டா உதைப்பேன்///
   ///எகிறிப் போன எலெக்ட்ரிசிட்டி பில்///

   🤣🤣🤣🤣🤣

   Delete
 87. Question 2:
  நான் பால்ய வயது முதலே காமிக்ஸ் வாசகன். நமது வலைப்பதிவில் இணைந்து கொண்டது 23 மார்ச் 2014.
  _____________________________________________________________________________________________
  Dasu bala 23 March 2014 at 20:59:00 GMT+5:30

  Hi everybody...i am new to this webpage but not for Prakash publishers comics....I love love love very very much the comics of this publishers....hope i am reading this comics from 1992....but lost the way around 2006 and joined again last month...
  I feel very happy to have these comics again in my hand...i am so excited and happy to share this with all.....

  Dasu bala23 March 2014 at 21:57:00 GMT+5:30

  நன்றி நண்பரே, NBS மட்டும் அன்றி முந்தையே வெளியீடு அனைத்தையுமே நான் மிஸ் பண்ணுகிறேன். மூன்று நாட்கள் முன்னதாக தான் 2013 வெளியிடுகளை தபாலில் பெற்றேன். அது இப்போதைக்கு மகிழ்ச்சி, ஆனால் அனைத்தையும் படித்து முடித்ததும் மனம் பிற முந்தையே வெளியிடுகளை எதிர்பார்க்கும். XIII பாகம் 1-19 முழு புத்தகம் கிடைக்கவில்லை ஆனால் ஆங்கிலத்தில் படித்துவிட்டேன், இருந்தாலும் தமிழில் படிக்கும் ஆசை தீரவில்லை.
  _____________________________________________________________________________________________

  ReplyDelete
 88. Q1: Something special book for 1000 post
  Q2:From 2012
  Q3: your choice

  ReplyDelete
 89. புயலுக்கு பின்னே பிரளயம்..
  Pictures excellent!

  ReplyDelete
 90. I still remember the 1st post announcing Comeback special. Its during 2012 pongal.

  ReplyDelete
 91. சத்ய சாயி நாதன் சாரின் .சாய்ஸ் ஆன 1 .பறக்கும் பிசாசு 2 .பிளாக் மெயில் .இரண்டுமே எனது தேடலிலும்இருப்பவை. .எனவே எனது பட்டியலிலும் இணைத்து கொள்கிறேன்

  ReplyDelete
 92. புயலுக்கு பின்னே அமைதி . டெக்ஸ் இன் "கரையெல்லாம் செங்குருதி"போலவே அணை அடைவதில் ஆரம்பிக்கிறது.அதில் போலவே உள்ளூர் பண்ணையாரின் மகளின் காதல் டிட்டோ.பிறகு 80களின் துப்பறியும் நாவல்களின் சாயலில் சென்று வழக்கமான டெக்ஸ் வில்லர் கதையாக முடிகிறது . "வழக்கமான என்றால் "வழக்கமான அதே விறுவிறு விறுப்பு. அதேசுறுசுறுசுறுப்பு+அற்புதமான ஓவியங்கள் மதிப்பெண்.10/10

  ReplyDelete

 93. இப்போதைக்கு , ஈரோவுக்கு friend ; அமெரிக்க மாப்பிள்ளை போலான குட்டி குட்டி பாத்திரங்கள் பண்ணும் கதை நாயகர்களோடு பயணிப்போம் சார்//Ha!Ha

  ReplyDelete
 94. சார் ஆயிரம் பதிவிட்டிருக்கிறீர்கள். சரி .அத்தனை பதிவுகளிலும் குறைந்தது பத்து கமெண்டுகளாவது இட்டு குறைந்ததுபத்தாயிரம் கமெண்டுகள் தொட்டு (தளத்தினை உயிர்ப்புடன் வைத்திருந்து)சரித்திர சாதனை நிகழ்த்தபோகும் கவிஞரின் பதிவுகளை எண்ணிகண்டுபிடிக்க ஏதேனும் a iஉள்ளதுங்களாங்க சார்

  ReplyDelete
 95. # 1 :

  So இந்தக் கருவிக்கொரு கௌரவத்தினை ஆயிரமாம் பதிவினில் தந்திட என்ன செய்யலாமென்று சொல்லுங்களேன் folks ? ஏற்கனவே என் மண்டைக்குள் இது குறித்தொரு குட்டியான திட்டமிடல் உள்ளது தான் ; and அதற்கான டைமிங்கும் கிட்டத்தட்ட சரிவரும் என்றும் நினைக்கிறேன் தான் - ஆனால் இது உங்கள் கைவண்ணங்களிலான ரங்கோலி ; so அதற்கு வர்ணமூட்டுவதும் நீங்களாகவே இருப்பது தானே பொருத்தம் ? சொல்லுங்களேன் guys - என்ன செய்யலாம் ?


  40 ஆயிரம் பிரதிகள் விற்பனையான கறுப்பு பாதிரி மர்மம் & புரட்சி தலைவன் ஆர்ச்சி இரண்டையும் வெளியிடலாம் ஆசிரியரே

  # 2 :

  பதிவினில் நீங்கள் இணைந்து கொண்டது எந்த ஆண்டு முதலாய் guys ? அமைதியாய் வாசித்துவிட்டு கிளம்புவோராக நீங்கள் இருந்தாலுமே, இந்த ஒற்றைக்கேள்விக்கான பதிலை சும்மா ஒரு ஜாலியான அட்டெண்டன்ஸாய் பதிவிடலாமே ப்ளீஸ் ?

  நண்பர் விஜயராகவன் தூண்டுதலால் நமது தளத்திற்கு 2015 இறுதியில் வந்தேன்
  அன்றிலிருந்து நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியிருக்கேன் எதாவது போட்டு குடுங்க சாமி ( வீட்டுல எக்கு தப்பா போட்டு கொடுத்திடங்க சாமியோவ் புண்ணியமா போகும் 🙏)

  # 3 :

  நடப்பாண்டின் அட்டவணையில் இதழ்களின் எண்ணிக்கையும் சரி, பருமனும் சரி, சற்றே குறைவு என்பது obvious ! வாசிக்க நேரமற்ற நண்பர்கள், இதுக்கே இன்னமும் டான்ஸ் ஆடி வருவதிலுமே ரகசியங்களில்லை தான் ! But அதற்காக வண்டியின் ஸ்பீடை ஒரேடியாக குறைப்பதிலும் எனக்கு உடன்பாடில்லை ! வந்தே பாரத் ரயில் அப்பாலிக்கா 'வந்துட்டே இருக்கும் பாரத்' ரயிலாகிப் போயிடக் கூடாதல்லவா ? So மே மாதமோ ; ஜூன் மாதமோ - போட்டுத் தாக்கக்கூடிய ஏதோவொரு ஆன்லைன் மேளா தருணத்தினை, ஒரு காமிக்ஸ் அடைமழைக்கான சந்தர்ப்பமாக்கிக் கொள்ளாட்டியும், ஒரு தூறலுக்கான வாய்ப்பாக்கிக் கொள்ளவாவது விழைகிறோம் ! So ஆன்லைன் மேளாவினில் நீங்கள் பார்த்திட விரும்பும் இதழ்கள் பற்றி மூன்றுக்கு மிகாத சாய்ஸில் தெரிவித்தால் பரிசீலிக்க உதவிடும் folks !

  10 ரூபாய் விலையில் மூன்று பாகமாக வந்த டெக்ஸ் வில்லரின்
  தனியே ஒரு வேங்கை & கொடுரவணத்தில் டெக்ஸ் & துரோகியின் முகம் ஒரே புத்தகமாக
  மேகி கேரிஸனின் இறுதி பாகம்
  மார்ட்டின் & டைலன் டாக் இணைந்த சாகஸம்

  ReplyDelete
 96. Q1: Any Tex in pocket size
  War related stories
  Agatha Christie/ Sherlock Holmes

  Q2:From 2011 .First post onwards
  Q3: Maggie Carson
  Smurfs /
  Iznogoud collection or single volume
  Any unpublished thigil Johny/prince/batman story

  ReplyDelete