Powered By Blogger

Wednesday, September 30, 2020

ஒரு ஆன்லைன் லூட்டி !

 நண்பர்களே,

வணக்கம். உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக ; ஆபீஸ் மாடியில், கடைக்கு வந்து சில மாதங்களே ஆன டெக்ஸ் வில்லர் ; லக்கி லூக் ; டைகர் ; ட்யுராங்கோ ; XIII ; மாடஸ்டி மற்றும் பலர் பங்கேற்கும் ஆ-ன்-லை-ன் பு-த்-த-க-விழா  !!! கா -ண-த் - தவறாதீர்கள் !!




**CINEBOOK பிரதிகளுக்கும், நடப்பாண்டின் (புது) வெளியீடுகளுக்கும் 10% டிஸ்கவுண்ட் & பாக்கி அனைத்து இதழ்களுக்கும் 20% டிஸ்கவுண்ட் இருந்திடும் ! 

**அப்புறம் ஆயிரம் ரூபாய்க்கு மேலான ஆர்டர்களுக்கு தமிழகத்தினுள் கூரியர் கட்டணம் இராது ! அதென்ன - பெங்களூருக்காரங்க உம்ம கண்ணுக்குத் தெரிலியா ? என்ற வினவல்கள் இருந்திடுமென்பது புரிகிறது தான் ! ஆனால் அண்டை மாநிலங்களுக்கான கூரியர் கட்டணங்கள் கிட்டத்தட்ட டபுள் என்பதாய் சாத்துகிறார்கள் ; so சலுகையினை அனைவருக்கும் வழங்குவது சிரமமாகிறது ! Sorry guys !

**அப்புறம் அந்த 2 ஸ்பெஷல் இதழ்கள் என்னவென்பதை நாளைக் காலையில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் guys ? 'ஆயிரம் பக்க புக்  ; கொலைப்படை ; விண்வெளிப் பிசாசு ..இத்யாதி..இத்யாதி' என்ற க்ற்பனைகளின்றி casual ஆக எட்டிப் பார்த்தீர்களெனில் அந்த இரண்டு இதழ்களுமே உங்களை ஏமாற்றிடாது ! 

அப்புறம் எப்போதும் போலவே அந்த 2 இதழ்கள் பின்னிலும் ஒரு குட்டிக் கதையுள்ளது ! "இன்னொரு குட்டிக்கதையா ???" என்று நீங்கள் மூர்ச்சையாகிட்டாலுமே சோடா வாங்கி 'புளீச்' என்று முகத்தில் தெளித்து எழுப்பி, ஞாயிறு பதிவில் கதையைச் சொல்லிப்புடுவதாய் உள்ளேன் ! And இந்த வார ஞாயிறின் பதிவு அநேகமாய் vlog ஆகவே இருந்திடும் ; simply becos இவ்வாரம் முழுக்கப் பேனா பிடித்து புஜமெல்லாம் கழன்று விட்டது ! பதிவுக்கென மேற்கொண்டும் எழுத சுத்தமாய் தம் நஹி !! 

**இது வரையிலும் சுமார் 60 நண்பர்கள் போன் செய்து தங்களுக்கான நேர ஸ்லாட்களைப் பதிவு செய்துள்ளனர் என்பது ரொம்பவே pleasant surprise !! 

எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி வீசிப் பார்க்கும் இந்தக் கல்லுக்கு மாங்காய்ப் பத்தை பலனாகிட்டாலுமே சந்தோஷமாய்க் கடித்திடுவோம் ! மனிடோவின் அருளால் மாங்காயோ ; மாம்பழமோ விழுந்திடும் பட்சத்தில் லுங்கியை பல்லில் கவ்விக்கொண்டு ஆபீஸ் மேஜையில் நானும், அண்ணாச்சியும் ""ஹெய்ய....ஓரக்கண்ணால்..."என்று தனுஷ் பாணியில் ஒரு டான்சைப் போட்டாலும் ஆச்சர்யப்படலாகாது ! Bye folks ! See you around ! And if you find the time, please do give this a try !!

282 comments:

  1. டெக்ஸ் புக் ரேக் காணலயே???

    ReplyDelete
  2. 5th, வாங்குவதற்காக பல புத்தகங்களை செலக்ட் செய்து வைத்திருக்கிறேன் அந்த சர்ப்ரைஸ் புத்தகமும் தெரிந்தவுடன் ஆர்டர் கொடுத்து விடுவேன்.

    ReplyDelete
  3. கலந்து கொள்ள ஆசை இன்னும் சம்பளம் போடல. அஞ்சாம் தேதி சம்பளம்

    ReplyDelete
  4. புதிய முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். காரணம் நேரடி புத்தக விழாக்கள் சில ஊர்களில் மட்டுமே நடைபெறுவதால் பலருக்கும் அது எட்டாக்கனியே.


    இந்த முயற்சி அனைவரையும் சென்றடைய நாங்களும் இயன்றதை செய்வோம்.

    இந்த புதிய முயற்சி இரு தரப்புக்குமே மாம்பழங்களையே அள்ளித்தரப்போவது நிச்சயம்!

    ReplyDelete
    Replies
    1. // இந்த புதிய முயற்சி இரு தரப்புக்குமே மாம்பழங்களையே அள்ளித்தரப்போவது நிச்சயம்! //

      +1

      Delete
  5. விஜயன் சார், புத்தகங்கள் அட்டகாசமாக அழகாக வழக்கமான புத்தகத் திருவிழாவுக்கு அடுக்குவது போல் அடுக்கபட்டுள்ளது. இது ஆன்லைன் புத்தக திருவிழா என்பதை மறக்க செய்யும் வகையில் உள்ளது. இப்போதே சிவகாசி கிளம்பி நேரில் புத்தகங்களை வாங்கி விடலாமா என ஆர்வத்தை கிளப்புகிறது.

    ஆன்லைன் புத்தக திருவிழா வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இந்த பதிவில் அந்த இரண்டு புத்தகங்கள் எவை என சொல்வீர்கள் என பார்த்தால் நாளை என்று இன்னும் காக்க வைக்கிறீர்கள் சார் :-)

    ஆனாலும் சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் என சொல்லி பொறுமையை ரொம்பவே சோதிக்கிறீங்க சார். :-)

    சீக்கிரம் புத்தகங்கள் எவை என அல்லது கொஞ்சம் க்ளூ கொடுங்கள் ஜாலியாக யோசிக்க :-)

    ReplyDelete
    Replies
    1. // ஆனாலும் சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ் என சொல்லி பொறுமையை ரொம்பவே சோதிக்கிறீங்க சார். :-) // ஆமா ஆமா

      Delete
  7. விஜயன் சார், தற்போது தங்களிடம் உள்ள சினி புக்கில் ரின் டின் கேன் கொஞ்சமேனும் சாகசம் செய்யும் கதை இருந்தால் சொல்லுங்கள் எனது குழந்தைகளுக்கு வாங்க.

    ReplyDelete
  8. சார், ஆன்லைனில் புத்தகங்களை கொள்வனவு செய்ய ஆசை. ஆனால், டெலிவரி முகவரியில் பலமுறை முயன்றும், பிரான்ஸ் வரவில்லை. என் சார்பில், என்னவாக இருப்பினும், அந்த இரு சர்ப்ரைஸ் இதழ்களையும் கணக்கிட்டு என் சந்தா இதழ்களுடன் அனுப்ப முடியுமா? பிளீஷ்?

    ReplyDelete
  9. புத்தகத்திருவிழா மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார்..💐💐💐

    ReplyDelete
  10. லுங்கியை பல்லில் கவ்விக்கொண்டு ஆபீஸ் மேஜையில் நானும், அண்ணாச்சியும் ""ஹெய்ய....ஓரக்கண்ணால்..."என்று தனுஷ் பாணியில் ஒரு டான்சைப் போட்டாலும் ஆச்சர்யப்படலாகாது//

    நிச்சயம் நடக்கும் சார்....😊😊😊

    ReplyDelete
  11. Online book fair வெற்றி அடைய வாழ்த்துகள்!

    ReplyDelete
  12. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  13. // அப்புறம் எப்போதும் போலவே அந்த 2 இதழ்கள் பின்னிலும் ஒரு குட்டிக் கதையுள்ளது ! "இன்னொரு குட்டிக்கதையா ???" என்று நீங்கள் மூர்ச்சையாகிட்டாலுமே சோடா வாங்கி 'புளீச்' என்று முகத்தில் தெளித்து எழுப்பி, ஞாயிறு பதிவில் கதையைச் சொல்லிப்புடுவதாய் உள்ளேன் //

    ஹா ஹா ஹா

    செம்ம சார் 😝😝😝

    ஆவலுடன் காத்திருக்கிறோம் சார் 😍🙏🏼
    .

    ReplyDelete
  14. /// அப்புறம் எப்போதும் போலவே அந்த 2 இதழ்கள் பின்னிலும் ஒரு குட்டிக் கதையுள்ளது ! "இன்னொரு குட்டிக்கதையா ???" என்று நீங்கள் மூர்ச்சையாகிட்டாலுமே சோடா வாங்கி 'புளீச்' என்று முகத்தில் தெளித்து எழுப்பி, ஞாயிறு பதிவில் கதையைச் சொல்லிப்புடுவதாய் உள்ளேன் //
    சர்ப்ரைஸ் புக்குக்கே ஒரு சர்ப்ரைஸ் கதையா?..
    பொல்லாதவன் தனுஷ் மாதிரி," மச்சி, கேளேன், மாப்ள, நீ கேளேன்." மாதிரி, கதை சொல்ல நீங்கள் ரெடி என்னும் போது கேட்க நாங்களுமே ரெடிதான்.

    And, ஆன்லைன் புத்தக விழா மாபெரும் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.
    சர்ப்ரைஸ் புக் ஆர்டர் செய்ய நாளை வரை காத்திருக்க வேண்டுமே?

    ReplyDelete
    Replies
    1. நானும் அப்படித்தான் நினைத்தேன் பத்து சார்! ஆனா பதிவு போட்ட நேரப்படி 'நாளை'ன்றது இன்னிக்குத்தான்!

      இன்னிக்கு.. இன்னும் சித்தநேரத்துல!

      டெக்ஸு புக்கா இருக்கும்னு தோனறது!!

      Delete
  15. சார்ந்த இரண்டு புத்தக வெலயச் சொன்னா பணத்த அனுப்பிடுவமே...வர ஏலாட்டியும்...இம்மாத இதழோடு வந்ருமே

    ReplyDelete
  16. அந்த ஸ்பெஷல் புக்ஸ்சயும் onlineல் லிஸ்டிங் போட்ருங்க சார் .. இதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் அதில் வாங்கி கொள்கிறோம் ..

    ReplyDelete
  17. இன்று தான் உண்மையில் தீபாவளி.10மணி எப்ப ஆகும்னு வெயிட்டிங்.சார் gpayல் பணம் அணுப்பலாம் தானே.

    ReplyDelete
  18. ///அப்புறம் அந்த 2 ஸ்பெஷல் இதழ்கள் என்னவென்பதை நாளைக் காலையில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் guys///

    கிர்ர்ர்ர்....😾😾😾😾


    ////ஞாயிறு பதிவில் கதையைச் சொல்லிப்புடுவதாய் உள்ளேன்///

    இந்தவாட்டியும் 'பதிவு கிழமை'யன்னிக்கு பதிவு லேதுன்றதை எம்புட்டு சூசகமா சொல்லியிருக்காரு பாருங்க மக்களே?!!😼😼😼

    /// லுங்கியை பல்லில் கவ்விக்கொண்டு ஆபீஸ் மேஜையில் நானும், அண்ணாச்சியும் ""ஹெய்ய....ஓரக்கண்ணால்..."என்று தனுஷ் பாணியில் ஒரு டான்சைப் போட்டாலும் ஆச்சர்யப்படலாகாது !///

    🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
  19. ////அப்புறம் அந்த 2 ஸ்பெஷல் இதழ்கள் என்னவென்பதை நாளைக் காலையில் நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் guys///

    அடடே! இந்தப் பதிவு போடப்பட்டது நேத்திக்கு நைட்டு 11:30 மணிக்கு! அப்ப 'நாளைக் காலையில்'ன்றது இன்னிக்குத்தானே?!! ஹைய்யா.. பார்த்துடுவோம்!!

    ReplyDelete
  20. சார்.. அப்புறம்.. அது வந்து...ஹிஹி.. கேட்கக் கூடாதுன்னுதான் நினைச்சேன்....☺️☺️☺️☺️

    ம்ம்... ஆன்லைன் புத்தகத் திருவிழாவுக்கெல்லாம் கூட நடிகை கஸ்தூரி வருவாங்களா சார்?!!😍😍😍

    ReplyDelete
    Replies
    1. "அந்தக் காலம்..அது..அது..அது...வசந்த் அண் கோ.. காலம்....
      இந்தக் காலம்.. இது..இது. இது..?..?"
      என்ன ஈவி..இளவேனில் காலத்துல இருந்துக்கிட்டு இலையுதிர் காலத்த பாக்கறீங்களே?

      Delete
    2. ஹிஹி.. நடிகை கஸ்தூரி எப்போதுமே தன் உதவியாளரையும் (அவங்க சொந்தக்காரப் பெண்தான்) உடனழைத்து வருவது வழக்கம் பத்து சார்...!!

      Delete
    3. எனக்கு ஒரு டவுட்டு... புத்தகத் திருவிழாவில், உள்ளே போய் ஒரு ரவுண்ட் அடிச்சு புத்தகங்களை வாங்கிட்டு வந்த களைப்பில, ஒரு நான்வெஜ் ஹோட்டலில் புகுந்து ரகளை பண்ண என்ன ஏற்பாடு பண்ணி இருக்கீங்க செயலாளரே...????

      Delete
    4. ஈரோடு அஞ்சப்பரில் பேசி இருக்ககிறேன் சரவணரே...

      இதே போல எல்லா ஐட்டங்களையும் ஆன்லைனில் காண்பிப்பார்கள்.

      உங்களுக்கு விருப்பம் போல ஐட்டங்களை தேர்ந்தெடுத்தால், அதை இலவசமாக உங்கள் வீட்டிற்கே அனுப்பி வைப்பார்கள்.

      முக்கியமாக ஆர்டர் செய்யும்பொழுது 100% டிஸ்கவுண்ட் பெற கீழே உள்ள கோடு வோர்டை பயன்படுத்தவும் (வேறு யாருக்கும் இதை ஷேர் செய்யாதீர்கள்)

      டிஸ்கவுண்ட் கோடு: *கூழ்பாக்கி1000%@ஈரோடுஆத்தா*

      🙏🙏🙏🙏🙏🙏

      Delete
    5. /// எப்போதுமே உதவியாளரையும் (அவங்க சொந்தக்காரப் பெண்தான்) உடனழைத்து வருவது வழக்கம் ///

      மோகனாம்பா இல்லாங்காட்டி ஜில்ஜில் ரமாமணி..ஏனுங்க அப்படித்தானே.!!

      Delete
    6. மிக்க நன்னி நாகுஜி... !!!

      Delete
    7. @ ப்ளூ

      ///டிஸ்கவுண்ட் கோடு: *கூழ்பாக்கி1000%@ஈரோடுஆத்தா*///

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
  21. ஆன்லைன் புத்தகவிழா மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள் சார் (அப்போதான் சஸ்பென்ஸ் இதழ்கள் நிறைய வரும் 😊)

    ReplyDelete
  22. Let this venture bring in a joyous new phase for our beloved LionMuthuComics... Let this be a start to overcome the current dire situation... Hope this gets all the success it needs to continue such events in the near future... All the very best for you and your team dear Editor...

    ReplyDelete
  23. ஆன்லைன் புத்துக தி்ருவிழா நல்லதொரு வரவேற்பை பெற்று வெற்றியடைய வாழ்த்துகள் சார். 💐💐💐💐💐💐

    ReplyDelete
  24. இந்த விழா சலுகைகள் ஆன்லைனிலும், முத்து காமிக்ஸ் ஆப் வழியாக வாங்குபவர்களுக்கும் உண்டா சார்.???

    ReplyDelete
  25. நண்பர்களே, இதை அவர் அவர்களுடைய Facebookலும் WhatsApp குருப்களிலும் ஷேர் செய்யவும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய WhatsApp statusலும் போட்டாச்சு

      Delete
  26. // simply becos இவ்வாரம் முழுக்கப் பேனா பிடித்து புஜமெல்லாம் கழன்று விட்டது //

    நன்றாக ஓய்வு எடுங்கள் சார். இன்னும் நீங்கள் நிறைய எழுத வேண்டும் எங்களுக்கு. Take care.

    ReplyDelete
  27. விஜயன் சார், இன்னும் காபி (சஸ்பென்ஸ் புத்தகங்கள் பற்றிய விபரம்) வரல :-)

    ReplyDelete
  28. ம் காலை சாப்பாடு கூட வந்து அதனை சாப்பிட்டும் முடித்து விட்டேன் (உப்புமா இல்லை யுவர் ஆர்னர் :-)). ஆனால் அந்த இரண்டு புத்தகங்கள் பற்றிய விபரங்கள் மட்டும் வரவில்லை.

    ஒரு வேளை முதல் நண்பர் ஆன்லைன் purchase செய்த பிறகு அவரின் படத்துடன் update வருமோ?

    ReplyDelete
    Replies
    1. சார் இன்னும் update வரவில்லை.

      Delete
    2. ऊप्पर देखिये ना ?

      Delete
    3. Vijayan @ ನಾನು ಅದನ್ನು ನೋಡಿದ್ದೇನೆ

      Delete
    4. சார் ஹிந்தி நகி மாலும் சார்.

      Delete
  29. எனக்கு வேண்டிய முதல் செட் புத்தகங்களை ஆர்டர் செய்து விட்டேன் ஈ.மெயில் மூலம்.

    நாளை மற்றும் ஓரு ஆர்டர் கார்டூன் நாயகர்களின் புத்தகங்களை பள்ளிக்கு கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  30. முதன் முறையாக இன்று தொடங்கும் ஆன்லைன் புத்தக விழா வெற்றி பெற என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  31. Edi ji,

    சஸ்பென்ஸ் போதும் அந்த சஸ்பென்ஸ் புத்தகங்களின் படத்தோட போடுங்கள்,
    அத்துடன் சேர்த்து தான் வேறு புத்தகங்கள் ஆர்டர் தர வேண்டும்.

    ReplyDelete
  32. சஸ்பென்ஸ் இதழ்கள்...
    1.தலைவாங்கிக் குரங்கு Maxi size
    2.நேற்றைய நகரம் (ரோஜர்).
    என்று நண்பர்களின் whatsapp செய்திகள் தெரிவிக்கின்றன.
    சந்தோஷம்.மிக்க மகிழ்ச்சி.
    போடுறா வெடியை ,சரவணா.

    ReplyDelete
  33. தலைவாங்கிக் குரங்கு & நேற்றைய நகரம் is updated in the post now!

    ReplyDelete
  34. ஆசிரியரே ரோஜரின் அட்டைப்படம் மிக டாப்

    ReplyDelete
  35. ஆசிரியரே ஆண்டு மலரில் இடம்பிடித்து கடைசியில் பெட்டி கதை உள்ளே வந்துவிட அதனால் இடம் பெற முடியாமல் போன கதைதானே நேற்றைய நகரம்

    ReplyDelete
  36. ரெகுலர் சந்தா புத்தக கூரியர் பார்சலுடன் இந்த இரண்டு புத்தகங்களும் வர நான் எவ்வளவு செலுத்த வேண்டும்?

    ReplyDelete
  37. எடிட்டர் சார்!!

    'தலைவாங்கிக் குரங்கு' - செம தேர்வு! அட்டைப்படம் - நீலவண்ணப் பின்னணியில் மிரட்டலோ மிரட்டல்! அட்டைப்படத்துக்காகவே புக்கை வாங்கலாம்னா பார்த்துக்கோங்களேன்!!

    ரோஜர் அட்டைப்படம் - மனதில் ஏதோவொரு பெருத்த சிந்தனையோடு - பனியில் ஒரு நிதானமான வாக்கிங் போகும் ரோஜர் - செம கூல்!!
    ரோஜரின் இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு ஏனோ நம்ம XIIIஐ பார்ப்பதுபோலவே இருக்கிறது!!

    ReplyDelete
    Replies
    1. ரோஜரின் இந்தப் படத்தைப் பார்க்கும்போது எனக்கு ஏனோ நம்ம XIIIஐ பார்ப்பதுபோலவே இருக்கிறது!!//

      எனக்குமே நண்பரே...

      Delete
  38. Edi ji,
    ரோஜர் பிளாக் அண்ட் white ல போட்டு விட்டிர்

    ReplyDelete
  39. தலைவாங்கிக்குரங்கு அட்டகாசமாக வந்துள்ளது சார்..அருமை...
    ரோஜர் கருப்புவெள்ளை பிரமாதம்...
    ஆன்லை கலைகட்டுதுபோல சார்....

    ReplyDelete
  40. விஜயன் சார், இரண்டு புத்தகங்களுக்கும் பணம் அனுப்பி விட்டேன்!

    ReplyDelete
  41. யாஆஆஆஆஆஆஆ....ஹீ....ஹீ...ஹீ.....ஈஈஈஈஈஈஈஈஈஈஈ


    """"தலைவாங்கி குரங்கு!""""


    பேச வார்த்தைகள் இல்லை ஆசிரியர் சார்.

    நெஞ்சம் எல்லாம் பூவானம்....!!!

    ReplyDelete
  42. இந்த மகிழ்ச்சியான சமயத்தில் என் நினைவடுக்கில் இருக்கும், தீபாவளி மலர் சரத்தில் இருந்து தலைவாங்கி குரங்கு பகுதியை மறுபதிவு செய்கிறேன்.

    தலயின் முதல் இதழுக்கு ஆகச்சிறந்த மரியாதை செய்து விட்டீர்கள் சார்.

    மனம் எக்ஸைட்மென்ட் ஆகி கெடக்கு...!!!

    மாதத்தின் துவக்கமே அருமையாக அமைந்து விட்டது...

    இனி எல்லாம் சுகமே!!!

    ReplyDelete
  43. மேலும் ஒரு வரி,

    2012ல சாதாணமாக மறுபதிப்பாக தலைவாங்கி குரங்கை வெளியிட்டு இருந்தீர்கள். அதை பார்க்கும் போது தலையின் மொத இதழ் இப்படி சாதாவா வந்திட்டதே என ஒரு சன்னமான மருகல் இருந்தது. இன்று அதை முற்றிலும் துடைத்து ஆனந்தத்தில் குதூகலிக்க வைத்து விட்டீர்கள். 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

    ReplyDelete
  44. ரோஜர் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்💐💐💐

    ReplyDelete
  45. வாவ் தலைவாங்கும் குரங்கு அதோட சாகஸ வீரர் ரோஜர் உண்மையிலேயே இது சர்ப்ரைஸ்தான் சார் 😍

    ReplyDelete
  46. Google Pay account மூலம் Rs.210 அனுப்பியாகிவிட்டது. ஆத்தா... நான் பாஸாயிட்டேன்..

    ReplyDelete
  47. சர்ப்ரைஸ் என்றால் உண்மையிலேயே இதுதான் சார். பார்த்ததுடன் ஒரே துள்ளல். 'தல'யோட தலை வாங்கி அட்டைப்படம் கலரும், மேக்கிங்கும் செம. இதில் ஹை-லைட்டே என்னுடைய பேவரைட் ரோஜரின் ' நேற்றைய நகரம்' தான். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜரை பார்க்கப் போறதை நினைத்தால் உற்சாகமாகயுள்ளது. எப்படியோ, கடைசியில் ரோஜரோட ஒரு நல்ல கதையைத் தட்டி தூக்கிட்டீங்க போல...! நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. தலை வாங்கி குரங்கு இதழின் அட்டையில் டெக்ஸ் லோகோ முழுவதும் கறுப்பாக இருக்கிறதே..........!!!???

      Delete
    2. அந்த இடம் தான் மினுமினுக்கும் சார் ! புக்கைப் பார்க்கும் போது புரியும் !

      Delete
    3. ///தலை வாங்கி குரங்கு இதழின் அட்டையில் டெக்ஸ் லோகோ முழுவதும் கறுப்பாக இருக்கிறதே.....///

      அநேகமாக, அது அந்தக் குரங்கின் சேட்டையாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன்! ;)

      Delete
  48. பணம் கட்டியாச்சு, தகவல் சொல்லியாச்சு, மெயில் அனுப்பியாச்சு.
    தீயா வேலை செய்யணும் குமாரு.

    'இதற்கு மேலும் இலக்கியத்தில்
    வார்த்தை ஏது சொல்ல'

    ReplyDelete
  49. 'தலைவாங்கிக் குரங்கு'க்கு என் மனதில் எப்போதுமே ஒரு இஸ்பெஷாலான இடம் உண்டு!
    காரணங்கள் :
    * நான் படித்த முதல் 'லயன் காமிக்ஸ்' என்பதால்!
    * டெக்ஸ் வில்லர் என்ற என் வாழ்நாள் ஹீரோவை அறிமுகம் செய்த இதழ் என்பதால்!!
    * ஒரு காமிக்ஸால் இத்தனை திகிலை உணரச் செய்ய முடியுமா என வியக்க வைத்ததால்!
    * அன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற முறை என்னால் மறுவாசிப்பு செய்யப்பட்ட இதழ் என்பதால்!
    * அந்த ஒரிஜினல் இதழ் அதன் பிறகு ஏதோவோர் காலகட்டத்தில் என்னிடமிருந்து தொலைந்துவிட்டது என்பதால்!

    அப்படியாப்பட்ட 'த.வா.கு' இன்று வண்ணத்தில், பெரிய்ய்ய சைஸில் வந்திருப்பது குஜாலாக உணரவைக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. எல்லா பாயிண்ட்ம் டபுள் ஓகே செயலரே.
      திகில் உணர வைத்த கதை.
      டெக்ஸின் அறிமுகம் ஆக எடிட்டர் சார் எழுதி இருக்கும் இருவரி வசனங்கள்... ஆஹா... உணர்ச்சி ததும்பும்.

      அத்தோடு ஒவ்வொரு அத்தியாய பெயரும் சும்மா கலக்கும்...

      "முதல் கொலை----" தான் மொத அத்தியாய பெயர்.... சும்மா எகிற ஆரம்பித்த கதை சிகுபுகு..சிகுபுகு..
      எக்ஸப்ட் தொலைந்து போனது. என் துணிகளுக்கு இடையே டெக்ஸ் இதழ்களை போற்றி பாதுகாப்பு செய்து வந்ததால் சிலமுறை வீடுமாறியும் டெக்ஸ் புக்ஸ் தொலையவில்லை.

      Delete
  50. "தீபாவளி மலர்....!!!"

    ---------இந்த வார்த்தை கொணரும் சுகமே தனியொரு உற்சாகம்தான்.....
    நண்பர்கள் பலரது ப்ளாக்குகளிலும் லயன் தீபாவளிமலர்களை பற்றி கவர் ஸ்டோரிகள் நிறைந்து கிடைப்பதே இதற்கு சாட்சி......

    இந்த ஆண்டின் தீபாவளி மலர் வரும்நாள் நெருங்க நெருங்க அந்த தீபாவளி மலர் பற்றிய எதிர்பார்ப்பு சுமார் 20வருடங்களுக்கு முன்பு இருந்தை போலவே சற்றும் குறையாமல் இருக்கிறது.
    அதற்கு முன்பு இன்னுமும் சிறிய வயதில் அந்த அனுபவத்தை உணர்ந்த சில பல மூத்த நண்பர்களை பார்த்தால் இன்றும் பொறாமையாக உள்ளது.

    1990களின் ஆரம்பத்தில் லயன் தீபாவளி மலரில் ஒன்றான பழிவாங்கும் புயலோடு என்னுடைய லயன் காமிக்ஸ் பயணத்தை துவங்கினேன். அந்த புத்தகத்தை பழைய புத்தக கடையில் வாங்கிய நானே ஏக மகிழ்ச்சி அடைந்தேன். அப்போது அந்த புத்தகத்தை எதிர்பார்த்து தினமும் கடைக்கு சென்று ரூபாய் 6க்கு வாங்கிய நண்பர்களின் மகிழ்ச்சிக்கு இணை ஏதும் உண்டா????

    காலக்கோட்டையில் பயணித்து சாகசங்களை செய்யும் இரும்பு மனிதன் ஆர்ச்சியின் அறிமுகத்துடன் துவங்கிய தீபாவளி மலர்கள் இன்றும் காலவெள்ளத்தை வென்று நிற்கின்றன. நமக்கும் அப்படி ஒரு விக்டரும், தாம்சனும் அமைந்தால் நாமும் ஒரு கோட்டையில் பயணித்து 1980களின் தமிழ்நாட்டில் ஒரு விசிட் அடிக்கலாம் தான். இருக்கவே இருக்கிறது நம்முடைய கால கோட்டையான "பழைய இதழ்கள்". வாருங்கள் நண்பர்களே நாமும் நம் பழைய இதழ்கள் எனும் கோட்டையில் ஏறி பால்யத்தில் ஒரு ரவுண்ட் அடுத்து வரலாம்.

    லயன் காமிக்ஸ்ஸின் முதல் தீபாவளி மலர் 1984 நவம்பரில் ரூபாய் 4க்கு இருவண்ணத்தில் பெரிய மெகா சைசில் , "இரும்பு மனிதன்" வெளியானது. அப்போது நான் 7வயது சிறுவன், அந்த சமயத்தில் வாங்கி படித்த நண்பர்கள் யாரேனும் இருப்பின் உங்கள் மகிழ்ச்சியை இங்கே பகிரலாமே..அல்லது ஓரிரு வருடங்களுக்கு பிறகு படித்தவர்கள் கூட ......


    2வது லயன் தீபாவளி மலர்.....நவம்பர்1985.... தமிழ் காமிக்ஸ்ஸையே புரட்டி போட்ட அறிமுகம்.....

    "காமிக்ஸ்னா டெக்ஸ்........
    டெக்ஸ்னா காமிக்ஸ்......... "
    ----------என அன்றும் இன்றும் என்றும் சரவெடியாய் வெடித்து கொண்டிருக்கும் "டெக்ஸ்...டெக்ஸ்...டெக்ஸ்" அறிமுகம்....
    ஆசிய துணைகண்டத்திலேயே , அழகு தமிழில்.... தலை வாங்கி குரங்கு- பெரிய சைசில் ரூபாய்3க்கு வெளியானது. இன்றும் அதன் அட்டைப்படம் பார்க்கும் போது மனசில் ஒரு மெல்லிய சிலிர்ப்பு ஓடும்....

    கருப்பு குதிரையில் ஆரோகணித்து வரும் வாலில்லா குரங்கு(?) இரவில் தனியாக பயணம் செய்பவர்களின் தலையை வெட்டி கையில் கொடுத்து விடுகிறது.
    அந்த மர்மத்தை கட்டவிழ்க்க வரும் டெக்ஸ் அறிமுக காட்சியே ஆர்ப்பாட்டமாக இருக்கும். தொடர்ந்து டெக்ஸ், குரங்கு மர்மத்தை விடுவிப்பது செம்ம த்ரில் அந்த வயதில். முதலில் எனக்கு கிடைத்த புக்ல டெக்ஸ் அந்த கழுகு குளத்தின் குகையில் சென்று குரங்கின் உடுப்பை காணும் காட்சி வரைதான் கிடைத்தது. சில வருடங்கள் கழித்தே முழு புத்தகமும் கிடைத்து, பரோரா தான் அந்த குரங்கு என தெரிந்து கொண்டேன். அந்த கதையின் நினைவாக நாங்கள் கிராமத்தில் வசித்து வந்தபோது, எங்கள் காட்டு நாய்க்குட்டிக்கு "மயூம்பா" என பெயர் வைத்தேன்.
    அந்த சாகசத்தின் டயலாக்குகளை இளம் ஆசிரியர் செதுக்கி இருப்பார். எனக்கு மிகவும் பிடித்த வசனம்,
    "ஆட்டு மந்தையில் புகுந்து ஆர்ப்பாட்டம் பண்ணும் ஓநாயை சும்மா விட்டு விடமுடியுமா".....



    ////----- இன்னிக்கி தலைவாங்கி குரங்கு மறுபதிப்புல வண்ணமேக்ஸில பார்க்கும் போது சும்மா ஜிவ்வுனு இருக்கு!

    வாழ்க டெக்ஸ்... வளர்க மேக்ஸி!

    ReplyDelete
    Replies
    1. டெக்ஸ் வில்லரின் _ முதல் இதழாக "தலைவாங்கி குரங்கு" சரியான தேர்வு ..
      எத்தனை முறை படித்திருப்பேன் என்று எனக்கு கணக்கே தெரியாது.
      எனவே , இதழ் பழசாகி விட்டதால் புதிய இதழ் வாங்குவதில் (அதுவும் வண்ணத்தில்) - மட்டற்ற மகிழ்ச்சியே.ii
      கண்டிப்பாக, இந்த இதழ் யாருக்கும் படிக்க கொடுக்த்தால் டெக்ஸ் வில்லரின் ரசிகராகவே மாறிவிடுவார்கள்.. (மற்ற டெக்ஸ் வில்லரின் கதைகளை விட ) .

      Delete
    2. தீபாவளி என்றாலே எனக்கு காமிக்ஸ் மலர்கள் மற்றும் வார மாத இதழ்களின் குண்டு சிறப்பிதழ்கள் தான் எனக்கு ஞாபகம் வரும்.புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் தந்த சந்தோஷத்தை விட தீபாவளி மலர்களே அதிகம் மகிழ்ச்சி தந்தன.
      இதோ மற்றும் ஒரு தீபாவளி நெருங்கிவிட்டது.லயன் காமிக்ஸ் சிறப்பிதழ்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.

      Delete
    3. செம்ம டெக்ஸ் செம்ம.

      Delete
  51. Sir - why THalaivaangi Kurangu again? There could be so many other albums for reprint? This one looks to be a re-re-re-print and not a great story of TEX as well !

    Anyways I will buy it for the reason you said why you are hosting this fair !

    ReplyDelete
    Replies
    1. இதில் எனது கருத்து மங்கூஸ் ஒரு இடத்தில் கூறுவார்.. சரியா செய்யாமல் விட்டதை இந்த முறை தவறவிடக்கூடாது என...அதே போல தலைவாங்கிக்குரங்கு வந்த போது நீட்டவாக்கில் அனைவரது முகமும் இருக்கும் அதை சரி செய்ய ஆசிரியர் தோதான நேரம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரம் இப்போது கிடைத்துள்ளது என எண்ணுகிறேன்...முன்பைவிட சிறப்பாக மேக்ஸி சைஸ் முழுவண்ணம் என டெக்ஸ் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார்... அதனால நாமும் விருந்தில் கலந்துகொண்டு விழாவைசிறப்பிப்போமே. நண்பரே...

      Delete
    2. என்னளவில் டெக்சின் அட்டகாசக் கதைகளில் இதுமொன்றே நண்பரே...அக்கதை மறுபதிப்பில் வழவழப்பான தாளில் வெள்ளோட்டத்தில் முதன் முறை வந்தபோது சொதப்பி விட்டது...

      Delete
    3. Yes! No need for this book... some other book could have been reprinted..
      The rejoice would have been manyfold..

      Though booked the both books the anticipation of the arrival of the book
      Is diminished..

      Delete
    4. /// சரியா செய்யாமல் விட்டதை இந்த முறை தவறவிடக்கூடாது///--அதே..அதே...!!!!

      ராக் ஜி & பொருளர் ஜி@ உங்கள் கருத்துக்களை ஒப்பு கொள்ளும் அதேநேரம்.. இதுபோன்ற சமயத்தில் மட்டுமே இது வெளிச்சத்தை பார்க்க இயலும் அல்லவா!!!

      சந்தாவில் நுழைப்பது சரிவராது என்பதால் இச்சமயத்தில்...

      தங்களது இருவரின் ஆதரவுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏

      Delete
  52. சார் தலை வாங்கி குரங்கு புத்தக விழா ஸ்பெஷல் தானா அல்லது மாக்ஸி புத்தங்களுக்கு பணம் கட்டியவர்களுக்கு வருமா?

    இரண்டுமே சந்தா அல்லாத புத்தகங்கள் தான் என்றால் நான் ஆர்டர் செய்துகொள்வேன்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தலைவாங்கிக் குரங்கு MAXI சந்தாவின் அங்கமாகிடாது நண்பர்களே ! த.வா.கு.வுக்கு ஓ.கே. சொல்வோர் கொஞ்சம் ; "இது எதுக்கு இப்போ ?" என்போர் கொஞ்சமாய் இருப்பதால் இதனை சந்தாவின் அங்கமாக்கி வம்படியாய்த் தலையில் கட்டுவது சரியென்று படவில்லை ! So இது ஸ்பெஷல் இதழாய் மட்டுமே இருந்திடும் - buy this only if you wish folks என்ற சுதந்திரத்தோடு !

      சந்தாவுக்கான MAXI வேறொரு ஆல்பத்தோடு பிப்ரவரியில் வெளிவரும் !

      Delete
    3. அதெல்லாஞ்சேரி சாமி ! TVK இப்போ என்னதுக்காம்?
      (நான் வாங்கத்தான் போறேன் அக்காங் !)

      Delete
    4. நன்றி ஸ்டீல் மற்றும் விஜயன் சார் எனது புத்தகவிழா பர்சேஸ் இனிதே முடிந்தது.

      சார் பணம் Google Pay இல் செலுத்த முடியுமா? நம்பர் கொடுக்க முடியுமா

      Delete
    5. 9003964584 (lioncomics1@okicici)

      Delete
    6. நன்றி சார் பணம் அனுப்பிட்டேன்

      Delete
  53. நேற்றைய நகரம் ஆர்வத்தை மிகவும் கிளப்புகிறது. ஆர்வமுடன் waiting!

    ReplyDelete
  54. Dear Editor Sir,
    லயன்ஆன்லைன் புத்தக திருவிழாவை இப்போதுதான் கொண்டாடினேன். லயன் அலுவலக ஊழியர்களின் ஒத்துழைப்பு மிகவும் அருமை. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சூப்பராக இந்த ஆன்லைன் புத்தக விழாவை நடத்துவது, லயன் அலுவலக ஊழியர்களே! அவர்களுக்கு மிகவும் நன்றி.

      Delete
    2. அருமை நண்பரே. முதல் தகவல் உங்களிடம் இருந்து online புத்தக விழா பற்றி. நன்றி

      Delete
    3. ஆன்லைன் புத்தக விழா என்ற இந்த'ஐடியா'வே மிகவும் புதியது!
      (உலக வரலாற்றில் முதல் முறையாக????????????????)
      உங்கள் நன்றிக்கு தகுதியானவர் இந்த ஐடியாவின் சொந்தக்காரர்!!!

      Delete
    4. சூப்பர்....நானும் ஜிபேல அனுப்பி போன் செஞ்சதுமே...சார் பாத்துட்டேன்...அனுப்புறோம்னு மின்னலாய் ரெஸ்பான்ஸ்

      Delete
  55. ஆசிரியரே தலைவாங்கிக் குரங்கு மறுபதிப்பில் சொதப்பியதை இப்போது நிவர்த்தி செய்துவிட்டீர்கள் அதேபோல் கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பை சிறு சிறு படங்களாக போட்டு கொஞ்சம் சொதப்பி விட்டீர்கள் இப்போதல்ல எப்போதாவது வாகான நேரத்தில் அதையும் நிவர்த்தி செய்வீர்களா

    ReplyDelete
  56. Replies
    1. நாளை பதில் தருவார்கள் சார் ; இன்றைய பகலின் ஆர்டர்களை கணக்கிட்டு அவரவர்க்குச் சொல்லவே நிறைய நேரம் எடுத்துக் கொண்டது !

      Delete
  57. த. வா. கு அட்டையே மிரட்டுது. சில சினிபுக் இதழ்களும் புது ஸ்பெசல் இதழ்களும் நண்பர் பிரபாகர் மூலமாக வாங்க ஏற்பாடு செய்து விட்டேன்.

    ReplyDelete
  58. சார் முதல் நாள் புத்தக விழா எப்படி அமைந்தது????

    ReplyDelete
    Replies
    1. தங்கள் முகத்திற்கு ஒரு மென்னகை யாவது கொண்டுவந்ததா????

      Delete
    2. மூன்று பேரால் சமாளிக்க இயலவில்லை என்பதே நிலவரம் சார் ; overwhelming response !

      Delete
    3. விற்பனைத் தொகைகள் எவ்வளவென்றெல்லாம் தெரியவில்லை ; ஆனால் நெடுநாட்களுக்குப் பின்னே ஆபீஸ் பிஸியாகக் காட்சி தந்ததே மிகுந்த நிறைவைத் தந்தது !

      Delete
    4. அருமை அருமை சார். மிகவும் மன நிறைவை தந்தது தங்கள் பதில் சார். நாளை எனக்கு ஒரு ஸ்லாட் புக் செய்து இருக்கிறேன் சார். புதிய முயற்சி முன்னோக்கி செல்வது மிகுந்த மகிழ்ச்சி தான் சார். I'm very happy

      Delete
    5. That's good to hear that it was a success even on a working day. Hopefully the next 3 days would be even better sir.

      Delete
    6. // நெடுநாட்களுக்குப் பின்னே ஆபீஸ் பிஸியாகக் காட்சி தந்ததே மிகுந்த நிறைவைத் தந்தது ! //

      Good to know that sir.

      Delete
    7. ஆன்லைன் புத்தகத் திருவிழா நல்லபடியாக சென்று கொண்டிருப்பது மகிழ்ச்சி சார்...

      Delete
    8. // நெடுநாட்களுக்குப் பின்னே ஆபீஸ் பிஸியாகக் காட்சி தந்ததே மிகுந்த நிறைவைத் தந்தது ! //

      Super sir. Congrats.

      Delete
  59. தலை வாங்கி குரங்கு அட்டை படத்தில் உள்ள ஊதா கலர் புதுமையாக உள்ளது, அதுவும் அந்த குரங்கின் கண்ணில் தெரியும் குரூரத்தை சிவப்பு மற்றும் கோல்டன் வண்ணம் இணைந்து செம மிரட்டலாக தெரிகிறது. குரங்கின் கலர் காப்பர் சல்பேட் ப்ளூ வண்ணத்தில் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. காப்பர் சல்பேட் ப்ளூ வண்ணமா?!! கலர்ஸ் பத்தியெல்லாம் பலப்பல ஆராய்சிகள் பண்ணி வச்சிருக்கீங்க போலிருக்கே PfB?

      Delete
    2. எனக்கும் அதே டவுட்டுதான் ஈ.வி. பரணி சார் ஏஷியன் பெயிண்ட்ஸ்ல வேலை பாக்கறீங்களா? இல்லே, கலர் பிரிண்டிங் டெக். கோர்ஸ் ஏதாச்சும் படிச்சீங்களா?

      Delete
    3. அவரு பள்ளிக்கூடத்திலே கெமிஸ்ட்ரி க்ளாஸ் நடக்கிறப்போ பாடத்தைக் கவனிச்சிருக்காருங்கோ ; குமுதாவை நஹி !

      Delete
    4. எனது மனைவிக்கு பிடித்த கலர். அவருக்கு பிடித்த பாடம் கெமிஸ்ட்ரி. :-)

      நமக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப தூரம். :-)

      Delete
    5. கலா மாஸ்டரை கேட்டீங்கன்னா கெமிஸ்ட்ரி எப்படி ஒர்க்அவுட் ஆகும்னு சொல்லிக் கொடுப்பாங்க சாரே.
      அந்த.குமுதா யாருன்னு சொல்ல மறந்த கதைய அப்புறமா மறக்காம சொல்லிடுங்க.

      Delete
  60. கார்சனின் கடந்தகாலம் மேக்ஸி லயனில் வெளியிட கோரிக்கை விடுப்போர் சங்கத்திற்கு நானும் ஆதரவு தெரிவிக்கிறேன். ஏற்கெனவே வண்ணத்தில் வந்திருந்த போதிலும் படங்களின் பேனல்களில் ஏதோ ஒரு குறைபாடு இருந்ததாக எனக்கு அப்போதே ஒரு ஃபீலிங். அதை இந்த முறை வெளியிடும் போது (என்னா ஒரு நம்பிக்கை)சரி செய்துவிடுங்கள். அரசாங்கமே அரியர்ஸ் எல்லாம் ஆல்பாஸ்ன்னு அறிவிச்சுட்டாங்க. பாத்து செய்யுங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. ///அரசாங்கமே அரியர்ஸ் எல்லாம் ஆல்பாஸ்ன்னு அறிவிச்சுட்டாங்க. பாத்து செய்யுங்க சார்.///

      🤣🤣🤣🤣🤣 பின்றீங்க பத்து சார்!

      Delete
    2. உண்மை.மிகச் சிறந்த கதை.கார்சன் கலக்கும் இதழ்.மீண்டும் வர என் ஆதரவு உண்டு.

      Delete
    3. கார்ஸனின் கடந்த காலம் லார்கோ சைஸில் ஹாட் கேஸில் வந்தால், விற்பனையில் பின்னிப் பெடலெடுக்கும்! இது நடந்தால் கடந்த காலத்தை தவற விட்டவர்கள் நிகழ் காலத்தில் பூரித்து போய் விடுவார்கள் 😍

      Delete
  61. மூன்று பேரால் சமாளிக்க இயலவில்லை என்பதே நிலவரம் சார் ; overwhelming response !// ஒரு இரண்டு நாள் வாலன்டியராக வரவா சார்...சொந்த விருப்பத்தின் பேரில்....??

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் பழனி! பாராட்டுக்குரிய கேள்வி!! 👏👏👏👏

      Delete
    2. நல்ல பதிலுக்காக waiting நண்பரே....

      Delete
    3. நேர்ல போய் கேக்க இது வாய்ப்புல்ல மக்கா...

      Delete
    4. பாராட்டுகின்றேன் பழனி சார்.

      Delete
    5. நன்றி பழனி ; ஆனால் சின்ன இடத்துக்குள் சர்க்கஸ் செய்து வருகிறார்கள் பெண்பிள்ளைகள் ! சமாளித்து விடுவார்கள் !

      Delete
    6. உண்ணமயாகவே சர்க்கஸை விட சவாலான பணிதான் சார் அது.. நிச்சயம் சிறப்பாக சேய்து முடிப்பார்கள்.. நன்றி சார்..

      Delete
    7. // சின்ன இடத்துக்குள் சர்க்கஸ் செய்து வருகிறார்கள் பெண்பிள்ளைகள் ! சமாளித்து விடுவார்கள் ! //

      வாழ்த்துக்கள் அவர்களுக்கு. இந்த புதிய முயற்சி அவர்களுக்கு ஓரு புதிய அனுபவத்தை கொடுக்கும்.

      Delete
  62. அருமைநமது காமிக்ஸ் பயணத்தின் அடுத்த கட்டமான ஆன்லைன் ஸ்டோர் வெற்றிஎன்பதில் பெரு மகிழ்ச்சிசார் கரூர்ராஜ சேகரன்.

    ReplyDelete
  63. நேற்று இரண்டு மூன்று முறை முயற்சி செய்தும் நமது ஆன்லைன் புத்தகத் திருவிழாவைத் தொடர்பு கொள்ள இயலவில்லை! நம்பர் பிஸி! அதில் எனக்கு மகிழ்ச்சியே!

    இன்று முயற்சிப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பதில் கிடைக்கவில்லை... கன்னி முயற்சி வெற்றி பெற்றுளதில் மிக்க மகிழ்ச்சி... இன்றும் முயற்சிப்பேன்...!!

      Delete
    2. நேற்று மாலையில் எனக்கு வாய்ப்புகிடைத்தது ஆர்டர் போட்டாச்சு. இன்று டெக்ஸ் எக்ஸ்பிரஸ் இன்று புகளூர் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது...

      Delete
    3. // இன்று முயற்சிப்பேன்! //
      வாட்ஸ் ஆப்பில் முன்னரே செய்தி அனுப்பி முன்பதிவு பண்ணிக்கோங்க ஈ.வி...

      Delete
  64. அன்புள்ள ஆசிரியரே, சந்தாவில் உள்ள நான் 2 புதிய புத்தகங்களுக்கு ரூபாய். 210+சர்பத்தின் சவால் ரூ.90 சேர்த்து ரூ.300 அனுப்பினால் சந்தா பார்சலில் எல்லாம் வந்து விடுமா தெளிவுபடுத்துங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் நிச்சயமா... வந்துவிடும்...நண்பரே...

      Delete
    2. சர்ப்பத்தின் சவால் நவம்பரில் சார் ! நடப்பு மாதத்தில் அதனையும் சேர்த்தால் மொத்தம் 6 புக்ஸ் என்றாகிடும். மாறாக நவம்பரில் மூன்றே இதழ்கள் மட்டுமே இருந்திடும் ! So வலைமன்னரும் தீபாவளிக்கே !

      Delete
    3. That is a super Diwali - Spider, Tex - apdiyE oru surpriseMayavi and Lucky Luke if you combine - it would be a SUPER STAR DIWALI !!

      Delete
    4. அப்படியே எங்க XIII னும் சேத்துக்கங்க....

      Delete
    5. AxA...ஆஹா... பிறவி பயனை அடைந்து விடுவோம்...😍😍😍😍😍😍

      ஒரு பதிவாக போட்டு அறிவிக்க வேண்டிய அறிவிப்பு சார்.

      ஒரு ஸ்பெசல் பதிவு எதிர்பார்க்கிறோம்.

      Delete
  65. இந்த மாசம் நிறைய பேருக்கு இரண்டு கூரியர் பெட்டியா.....!!!!
    தீபாவளி முன்னாடியே வந்துடிச்சோ......

    ReplyDelete
  66. சார் இன்னும்50 நாட்களே தீபாவளிக்கு . தலையுடன் அசத்துவோம் என்பது தெரிந்தது தான். அறிவிப்பு ப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  67. Yesterday I ordered few books through video call. Waiting for total amount to pay.

    Online book fair idea is excellent. Hope the godown will give space for more new books.

    All the best.

    ReplyDelete
  68. அப்புறம் இன்னொரு கொசுறுக் சேதியும் ! அதிகாரியின் நிறைய புக்ஸ் காலியாகும் தருவாயில் !

    ReplyDelete
  69. அச்சச்சோ! நேத்திலேர்ந்து இங்கே பதிவாகும் கமெண்ட்ஸ் என்னோட மெயில் க்ளையன்ட்டுக்கு வரமாட்டேன்றதே?!!

    ReplyDelete
    Replies
    1. கூழ்வினைப் பயனோ?!!!🤔🤔

      Delete
    2. அது உங்களுக்கும் ஆத்தாவுக்கும் இடையில் உள்ள பிரச்சினை :-)


      கவனமாக இருந்து கொள்ளுங்கள்....


      நான் ஆத்தாவிடம் சொன்னேன் :-)

      Delete
    3. கூழ்வினை உறுத்து வந்தூட்டும்.

      Delete
    4. ஓவர் கூழ் பாக்கி உடம்புக்கும் ஆகாது,மெயிலுக்கும் ஆகாதுங்கோ...
      ஆத்தா இப்ப லேட்டஸ்ட் டிரெண்டுக்கு அப்டேட் ஆயிட்டாங்க போல...!!!

      Delete
  70. வலைமன்னரும் தீபாவளிக்கே !//
    தீபாவளி கலைகட்டீருச்சே....

    ReplyDelete
  71. // 2 இதழ்கள் பின்னிலும் ஒரு குட்டிக் கதையுள்ளது ! "இன்னொரு குட்டிக்கதையா ???" என்று நீங்கள் மூர்ச்சையாகிட்டாலுமே சோடா வாங்கி 'புளீச்' என்று முகத்தில் தெளித்து எழுப்பி, ஞாயிறு பதிவில் கதையைச் சொல்லிப்புடுவதாய் உள்ளேன் //

    ஐ ஜாலி. சோடா வருவதால் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் காஃபி வேண்டாம் என சொல்லி விட வேண்டியதுதான் :-)

    ReplyDelete
  72. // சர்ப்பத்தின் சவால் நவம்பரில் சார் ! //

    ஸ்பைடரா கொக்கா. இந்த வருடம் தீபாவளி அதிர் வேட்டுக்கு பஞ்சம் கிடையாது போல் தெரிகிறது. சூப்பர்.

    ReplyDelete
  73. Going to join the fair in ten minutes :-) Excited !!

    ReplyDelete
    Replies
    1. :-) வாழ்த்துக்கள்.

      நாங்கள் வாங்க ஏதாவது மிச்சம் வையுங்கள் ராகவன் :-)

      Delete
    2. Done this was quick and easy - good for our sales indeed !!

      Delete
    3. சூப்பர்.. சூப்பர் ராக் ஜி🌹🌹🌹🌹

      Delete
  74. ///சர்ப்பத்தின் சவால் நவம்பரில் சார் !///

    ----அன்றைய தலையும், இன்றைய தலையும் நேரடி போட்டியா...!!!!

    வாஆஆஆஆஆஆஆவ்வ்வ்...சூப்பரு...!!!

    """தலைகளின் தாண்டவம்"""

    மற்றதுகளாம் ஒதுங்கு...ஒதுங்கு...ஒதுங்கே....💪💪💪💪💪💪💪💪💪

    ReplyDelete
  75. வாட்ஸ்ஆப்பில் என் லிஸ்ட்டை அனுப்பி உள்ளேன்.

    பதிலுக்காண்டி வெயிட்டிங்...!!!

    ReplyDelete
  76. This online bookfair is a good initiative. முன்பே செய்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.
    வருடம் இருமுறை இவைகளுக்கென்றே பிரத்யோக  2-3 வெளியீடுகளைத் திட்டமிட்டு இவ்வாறு செய்யலாம். சிறு நகரங்களில் நடக்கும் புத்தகவிழாக்களுக்கு நாம் பாய் சுருட்டுவோமல்லவா? அதன் அருகாமையில் செய்யலாம். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களுக்கென இணையத்தில் முன்னறிவிப்பு செய்து - with digital partners - வருடத்தில் ஒரு வாரம் - லேபர் டே, போன்ற long weekend அருகாமையில் செய்யலாம். 
    It was quick and efficient ...

    ReplyDelete