Powered By Blogger

Saturday, September 26, 2020

ஜானி ...ஜானி..யெஸ் பப்பா !

 நண்பர்களே,

வணக்கம். பீலா விடுவதில் நிறையவே நடைமுறைச் சிக்கல்கள் உண்டு தான்! சாமி அந்த ஆந்தை முழிகளை குத்துவாரோ – இல்லையோ, பீலாக்களின் மறுமுனையிலிருப்பது நீங்களாக இருப்பின், சூட்டோடு சூடாய் மூக்கில் குத்தி விட்டிருப்பீர்கள் ! “உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்ற பில்டப்பைப் பண்ணிப்புட்டு – “வெடிக்க மறந்த வெடிகுண்டையோ”; “தூங்கிப் போன டைம்பாமையோ”; “துயில் எழுந்த பிசாசையோ” உங்கள் தலைகளில் கட்டி விட்டால் – குத்து விடும் உங்கள் முனைப்புகளில் தவறே இருக்காது தான்! ஆனால் இது தவிர்த்துமே ஒரு நடைமுறைச் சிக்கலுள்ளது – பீலாக்களின் பின்தொடார்ச்சியாய் ! அது தான் – மெய்யாலுமே ”புலி வருதுங்கோய்” என்று நான் கூவிட அவசியமாகிடும் நேரங்களில், நீங்கள் விடக்கூடிய மெகாக் கொட்டாவிகள் ! ‘அட… இந்தப் பளாபளா மண்டையனுக்கு பில்டப்பெல்லாம் பால்பன் சாப்பிடற மாதிரி ; இதுவுமே அந்த ரகம் தான் !‘ என்று நீங்கள் கருதினால் தவறு நிச்சயம் உங்கள் மீதிராது ! சரி… இப்போது இந்த ஆராய்ச்சிக்கு என்ன அவசியம் ? என்ற கேள்வியா.... அவசியம் எழுந்துள்ளதே – ”புலி வருதுடோய்; செம ஷார்ப் நகங்களுடன் செம தில்லாய் ஒரு புலி வருதுடோய்!” என்று நான் கூவிட! இது என்ன புதுக் கரடி ? என்று கேட்கீறீர்களா- சொல்கிறேனே...! காத்திருப்பது ஒரு சாதாப் புலியல்ல… கோட் & சூட் போட்டதொரு துப்பறியும் சூரப்புலி ! அதிலும் பழசின் கெத்தையும், புதுசின் பரபரப்பையும் ஒன்றிணைத்து நடைபோடக் காத்திருக்கும் புலனாய்வுப் புலி ! Without anymore ado – இது காத்திருக்கும் ரிப்போர்ட்டர் ஜானியின் டபுள் ஆல்பமான ”ஆதலினால் கொலை செய்வீர்” இதழுக்கான preview படலமே என்பதைப் போட்டு உடைத்து விடுகிறேனே !

கிட்டத்தட்ட கடந்த 100 மாதங்களாய், எனது நாட்கள் புலர்வதும், நிறைவுக்கு வருவதும் வண்டி வண்டியாய்க் கதைகளோடும், வண்டி வண்டியாய் தொடர்களோடும் தான் ! மொழிபெயர்ப்புப் பணி ; எடிட்டிங் ; ப்ரூஃப்ரீடிங் என்று ஏதேனும் சமாச்சாரங்களால், தினப்படி என் மேஜைகள் நிறைந்து நிற்கும்! So ஒரு புள்ளியில் – ‘ப்பா… இந்த மாசம் பின்னிப்புட்டோம்லே!! என்று ஹிட்டடித்ததொரு பராகுடாவையோ ; பிஸ்டலுக்குப் பிரியாவிடையையோ பார்த்தபடிக்குப் பல்லிளித்துக் கிடக்கும் சொகுசெல்லாம் நான்கே நாட்களைத் தாண்டிடாது ! அதற்குள் அட்டவணையின் அடுத்த மாதத்துக் கிங்கரப் பணி ரெடியாகக் காத்திருக்கும் ! And அடுத்த கத்தைக்குள் புகுந்திடும் நேரம் – மண்டைக்குள் எல்லாமே ஒருவித ‘மசமச‘ கலரில் தான் தோற்றமளிக்கும் ! ஒரு மாதம் நிறைவு காண்பதும், அடுத்தது துவங்குவதும் – கன்னியாகுமரியில் சமுத்திரங்கள் ஏதோவொரு புள்ளியில் ஒன்றிணைவது போல ஒன்றோடொன்று merge ஆகி நிற்கும் ! So நாளாசரியாய் ஒருவிதச் செக்குமாட்டு routine குடிகொண்டிருப்பது தவிர்க்க இயலாது போய்விடும் ! இடையிடையே ஒரு ”பந்தம் தேடிய பயணமோ” ; ஒரு “பிரிவோம் சந்திப்போமோ” பிரசன்னமாகும் போது தான் ஒரே ரகப்பணிகளுக்கு மத்தியிலுமே மண்டைக்குள் பல்ப் எரிவது சாத்தியமாகும் ! 

அந்த விதத்தில் பார்த்தால் 2020 has been quite decent ! க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் ; டெக்ஸ் சாகஸங்கள்; டயபாலிக்; மாடஸ்டி தொடர்கள்; ட்ரெண்ட்; ட்யுராங்கோ என்ற சலனமற்ற பயணத்தின் மத்தியில் சில அதிர்வேட்டுக்கள் அவ்வப்போது பற்றித் தெறித்து வந்துள்ளன – தானே?!

- பிழையில்லா மழலை (Damocles)

- SODA

- 2132 மீட்டர்கள்

- பிரிவோம்… சந்திப்போம்!

- எதிரிகள் ஓராயிரம்

- பந்தம் தேடிய பயணம்

- கண்ணான கண்ணே!

- தனித்திரு… தணிந்திரு

என்று இம்முறை சற்றே வித்தியாசம் காட்டி நின்ற இதழ்களின் எண்ணிக்கை கணிசம் தானே ? வழக்கமான கதைகளில் பணியாற்றுவதை விடவும், இது போன்ற மாறுபட்ட களங்கள் கண்ணில்படும் போது உள்ளுக்குள் துளிர்விடும் ஒரு மெல்லிய உற்சாகமானது, பணிகளில் அயர்ச்சி தெரியாது செய்து விடுவது வழக்கம். ஆனால், ரொம்ப நாட்களுக்குப் பின்பாய், “அயர்ச்சியாவது - புண்ணாக்காவது; இந்த ஆல்பத்தை எழுதியே தீரணும்டோய்!” என்ற உத்வேகம் பொங்கியது இம்மாதம் தான் !

ரிப்போர்ட்டர் ஜானி ! 1986 முதல் இவருடனான நமது பரிச்சயம் தொடர்கிறது ! இந்த 34 ஆண்டுகளில் இவரது சாகஸங்களில் எத்தனையைப் போட்டிருப்போம் ? என்ற புள்ளிவிபரமெல்லாம் கைவசம் நஹி…ஆனால் சுமார் 30 இதழ்களிலான இவருடனான பயணத்தின் போது இரண்டே விஷயங்கள் மட்டுமே என்மட்டிற்கு மனதில் தங்கியுள்ளன : முதலாவது : மனுஷனின் கதைகளின் கடைசி இரண்டோ / மூன்றோ பக்கங்களில் ஒட்டுமொத்தப் புதிர்களையும் விடுவிக்க கதாசிரியர் மெனக்கெடும் பாணி ! பாசமானதொரு தாய், மசக்கையான பிள்ளைக்குச் சாப்பாட்டு ஐட்டங்களைத் திணியோ திணியென்று திணிக்கும் பாணியில் – ஜானியின் ஒவ்வொரு ஆல்பத்தின் இறுதிப் பக்கங்களிலும் கதாசிரியர் – ‘அந்தத் தடயம்… இந்தத் துப்பு… இங்கே விடைகள்… அங்கே கேள்விகள்‘ என்று திணித்துத் தள்ளுவதையும், அவற்றை முழுசாய், உருப்படியாய் புரிந்து கொண்டு பணியாற்றுவதற்கு நாக்குத் தள்ளுவதுமே நினைவில் நிற்கும் முதல் சங்கதி ! இரண்டாவது – அந்தக் கேரட் மண்டையுடனான பளீர் சிரிப்பு ! 

‘டக்‘கென்று யோசித்துப் பார்க்கும் போது – ‘சிரித்த முகம்‘ என்ற அடையாளத்துக்கு அருகதையுள்ளோராய் எனக்குத் தோன்றுவதும் இரண்டே பேர் தான் : முதலாமவர் – ரிப்போர்ட்டர் ஜானி & இரண்டாமவர் ஜென்டில்மேன் டிடெக்டிவ் ரிப்கிர்பி ! பாக்கிப் பேரெல்லாம் இறுகிய முகங்கள்; முறைக்கும் ரகங்கள் என்றே சொல்வேன்! Give it a moment’s thought folks:

டிரெண்ட் : ஒரு கம்பீரமான முகம் – ஆனால் கொரோனாவுக்கு மருந்து தேடுவதும், கனேடியக் காவலரின் முகத்தில் புன்சிரிப்பைத் தேடுவதும் சமஅளவிற்குச் சிரமமான முயற்சிகள் தானே ?

ட்யுராங்கோ : ‘சி-ரி-ப்‘ என்று ஆரம்பிப்பதற்குள் சுட்டுத் தள்ளிவிட்டுத் தன்பாட்டுக்கு நடையைக் கட்டிவிட மாட்டாரா மனுஷன்? 

SODA : "அட… போடா… மனுஷனுக்கிருக்கும் பிடுங்கல்களுக்கு இளிப்பு ஒன்று தான் குறைச்சல் ?"  என்பாரோ ??

XIII : தெய்வமே… இந்த ஆட்டத்துக்கே ஞான் வரில்லா…!!

தோர்கல் : ரம்பயமான ஆணழகனே… ஆனால் போகும் திக்கெல்லாம் ஆரிசியாவை இட்டாண்டு போகின்றவரைச் சிரிக்கக் கேட்பது டூ மச்சோ ?

டெக்ஸ் : வெள்ளிமுடியாரைக் கலாய்த்தாதொழிய ‘தல‘ டெரர் பார்ட்டியன்றோ ?

மர்ம மனிதன் மார்டின் : ஆங்… அது வந்து… என்ன சொல்ல வர்றேன்னா…?  சரி.. விடுப்பா....!

ஜேம்ஸ் பாண்ட் : 007 சிரித்திட என்ன அவசியமென்பதை அறியாதோரா நாம் ?

டயபாலிக் : வாணாம்… அழுதுருவேன் !

Of course கார்ட்டூன் பார்ட்டிகளையோ; மகளிரணியையோ இந்த அலசலுக்கு உட்படுத்துவது நியாயமாகாது என்பதால் அவர்களை ஆட்டத்துக்குச் சேர்த்திடவில்லை! So “புன்சிரிப்பு” என்ற நினைவுகளை எனக்குள் விதைத்து வைத்த வகையிலும் ரிப்போர்டர் ஜானி என்மட்டிற்கு memorable!

ஆனால் பணியாற்றும் போது, உராங்குட்டானாய் முழிக்கச் செய்பவரும் இவரே ! “சிகப்புப் பாதை” என்றதொரு பாக்கெட் சைஸ் b&w இதழினில் நான் அந்நாட்களில் போட்ட மொக்கை இன்றளவிற்கு மறக்கவில்லை ! ஆனால் – ஜானியின் இந்த இடியாப்ப template–ல் சின்னதாகவொரு மாற்றத்தை உணர முடிந்தது - சென்றாண்டினில் ! And that was because ஜானி 2.0 தொடருக்குப் புதுக் கதாசிரியர் Zidrou தந்திருந்த treatment ரொம்பவே refreshing ஆக இருந்தது. கதையின் ஓட்டத்தோடு ஒன்றிடுவதோ ; க்ளைமேக்ஸில் சிண்டைப் பிய்க்காது பயணிப்பதோ - பெரிய சிரமமாகவே தோன்றவில்லை ! அதனால் தான் Old is Gold என்பதில் தீரா நம்பிக்கை கொண்ட உங்கள் மத்தியில் – ‘என்ன தான் இருந்தாலும், பழசு தான் டாப்!‘ என்ற முணுமுணுப்பு உரக்கக் கேட்டு வந்தாலுமே, நடப்பாண்டில் நான் ஜானி 2.0 ஐ உட்புகுத்த ஆசைப்பட்ட்டேன் ! And even better - ஒரே இதழில் க்ளாஸிக் ஜானி Vs. புதுயுக ஜானி மோதிக் கொண்டால் ஒரு தீர்க்கமான முடிவு பிறக்குமென்று பட்டது ! அதன் பலனே ”ஆதலினால் கொலை செய்வீர்!

ரிப்போர்டர் ஜானி கதைகள் என்றைக்குமே நமது கருணையானந்தம் அவர்களின் பொறுப்பாக இருந்து வந்துள்ளதால், நான் பெருசாய் அதற்குள் தலைநுழைக்கப் பிரியப்பட்டதில்லை! இம்முறையும் அந்த routine–ல் மாற்றமிருக்கவில்லை ; 2 ஆல்பங்களையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளோடு, லாக்டவுணுக்கு முன்னமே அனுப்பி விட்டிருந்தோம் ! And க்ளாஸிக் ஜானியின் தமிழாக்கம் இரண்டு வாரங்களில் டாணென்று வந்தும் சேர்ந்தது ! ஆனால் அந்த ஜானி 2.0 கதையின் சார்பாய் எனக்கு வந்தது அங்கிளிடமிருந்து போன் மட்டுமே : “இது அவ்ளோவா புரியலியேப்பா… கஷ்டப்பட்டு பத்துப் பதினைந்து பக்கங்களை எழுதிப் பார்த்தாச்சு – மேற்கொண்டு இழுக்க மாட்டேன்கிறதே!‘” என்று சொன்னார். ‘சரி… ரைட்டு… அதைத் திருப்பியனுப்பிடுங்க ; நிறைய நேரமிருக்குது… பார்த்துக்கலாம் !" என்று சொல்லி வைத்தேன் பந்தாவாய் ! ஆனால் லாக்டௌனோடு “சோம்பல்” எனும் புதுவரவும் இணைந்து  கொள்ளுமென்பதை நான் எதிர்பார்க்கவேயில்லை தான் ! "அப்பாலிக்கா பார்த்துக்கலாம்…" என்றபடிக்கே நாட்களைக் கடத்த – ஒரு சுபயோக சுபதினத்தில் – அக்டோபர் வெளியீடு : ”ரிப்போர்டர் ஜானி” என்று எனது டயரி அறிவித்தது ! ஓடவும் முடியாது – ஒளியவும் முடியாது - என்றான பின்னே முதல் 10+ பக்கங்களின் தமிழ் டைப்செட்டிங் செய்யப்பட்ட pages & பாக்கியிருந்த 40+ பக்கங்கள் + பிரெஞ்சிலிருந்தான ஸ்க்ரிப்ட் என்று எடுத்துக் கொண்டு அமர்ந்த போது – வயிற்றைக் கொஞ்சமாய்க் கலக்கியது. நமது french மொழிபெயர்ப்பாளரோ பரீட்சைப் பேப்பரில் சுமார் 40 பக்கங்களுக்கு மணி மணியான கையெழுத்தில் ஆங்கில ஸ்க்ரிப்டை வெளுத்து வாங்கியிருக்க அதை வெறித்துப் பார்த்தபடிக்கே கொஞ்ச நேரத்தைக் கடத்தினேன்! For the umpteenth time அவரது ஆற்றலை எண்ணி வியக்காதிருக்க இயலவில்லை ! ‘எனக்கு ஒளிவட்டமே ஒத்துக்காது!‘ என்று ஒதுங்கிக் கொண்டு, பெரிதாய் சன்மானங்கள் சார்ந்த எதிர்பார்ப்புகளுமின்றி கடந்த 19 ஆண்டுகளாய் ஒரு தேர்ந்த இயந்திரமாய் பிய்த்து உதறி வருபவருக்கு வயது 67 என்றால் நம்ப முடியவில்லை தான்!

ரைட்டு. 67-ல் அவர் செய்வதை - 53-ல் நீ செய்யாட்டி என்ன புடலங்காய்க்குப் பீற்றிக்கணும்?” என்று என்னை நானே கேட்டுக் கொண்டு, கதைக்குள் புகுந்தேன். கருணையானந்தம் அங்கிள் குறிப்பிட்டிருந்தது சரி தான் என்பது சீக்கிரமே புரிந்தது. முதல் பத்துப்-பதினைந்து பக்கங்களில் தமிழ் ஸ்க்ரிப்ட் கோர்வையே இன்றி – இலக்கின்றிப் பயணிப்பது புரிந்தது ! ஆனால் ஏதோ ஒருவித ஈர்ப்பு கதையின் ஓட்டத்தில் தென்படுவதை உணர முடிந்தது ! முதல் 10 பக்கங்களின் பெரும்பகுதியை மாற்றியமைத்த கையோடு, தொடர்ந்தவற்றை பிரெஷ்ஷாக எழுத ஆரம்பித்தேன் ! ஆங்கிலத்தில் ஒரிஜினல்கள் இல்லாத பட்சங்களில் கதைகளை முழுசாய்ப் படித்து விட்டு எழுத ஆரம்பிக்கும் பொறுமைகள் என்றைக்குமே இருந்ததில்லை எனும் போது – இந்த முறையும் அதனில் மாற்றங்கள் இருந்திடவில்லை ! Take it as it comes என சிறுகச் சிறுக வண்டி நகர, நகர – எனக்கு இந்தப் புதுக் கதாசிரியர் மீதான ஈர்ப்பு கூடிக் கொண்டே போனது!

ஜானியின் அந்த பளீர் புன்னகையினையோ ; நமக்குப் பரிச்சயப்பட்டு விட்டுள்ள அந்த youthful தோற்றத்தையோ, புது ஓவியர் Simon VAN LIEMT பறித்துக் கொண்டு விட்டிருந்தாலும், இந்த ஜானி 2.0க்கு சற்றே கரடு முரடான லுக்ஸ் + சற்றே mature வதனம் ரொம்பவே பொருத்தமாய் இருப்பதாய் எனக்குப்பட்டது ! பற்றாக்குறைக்கு இது நாள் வரைக்கும் மில்க் பிகிஸ் சாப்பிடும் ரேஞ்சிலேயே ஜானி – நாடீன் உறவு சித்தரிக்கப்பட்டிருக்க, இங்கோ 'வேலு மிலிட்டரி' பாணியில் கதாசிரியர் அதனை மாற்றியமைத்திருக்க – மாமூலான ஜானி கதைகளிலிருந்து ரொம்பவே மாறுபட்ட feel ! 

கதை ஓட்டமெடுக்க, எனக்குள்ளேயும் ஒரு வேகம் தொற்றிக் கொண்டது ! எப்போதும் போலவே இங்கேயும் கதை நெடுக சந்தேகத்தின் பார்வைகளை ஈர்க்கும் ஜனம் படையெடுத்திடுவது தொடர்ந்தது & கதையின் களமோ நமக்கு நிறைய விதங்களில் relate செய்து கொள்ளும் விதத்திலிருக்க – என்றைக்கும் இல்லாத திருநாளாய் – முகரை முழுக்கப் புன்னகையோடே கதையின் முழுமைக்கும் பணியாற்றியுள்ளேன் ! இந்த ஆல்பம் வெளியான பின்னே புரியும் - அதற்கான காரணம் ! And true to the original template – கதையின் க்ளைமேக்ஸில் ஒரு மந்தை மக்களை நிறுத்தி வைத்து ஜானி தனது புலனாய்வின் போக்கை விளக்க ஆரம்பித்த வேளையில் – ‘மறுபடியுமா? இங்கேயுமா ?‘ என்று லைட்டாக ஜெர்க் அடித்தது தான் ! ஆனால் இம்முறையோ, ஸ்படிகக் கண்ணாடியாய் அத்தனை முடிச்சுகளும் ஏக் தம்மில் அவிழ்ந்திட – எழுந்து நின்று பெல்ஜியம் இருக்கும் மேற்கு திசை நோக்கிக் கைதட்டத் தோன்றியது ! ரொம்பச் சுலபமானதொரு கதைக்கருவைக் கையிலெடுத்துக் கொண்டு அதனை கதாசிரியர் 54 பக்கங்களில் சொல்லியுள்ள ஸ்டைல் அமர்க்களமாய்பட்டது! Maybe – just maybe இது பணி முடிந்த நொடியின் உற்சாக மிகுதியால் சற்றே ஜாஸ்தியான ரியாக்ஷனாகவும் இருக்கலாம் தான் ; ஆனால் இது மெய்யாலுமே “புலி வருது moment” தான் என்று என் gut feel சொல்கிறது ! பணி முடித்து விட்டு, இறுதிக்கட்ட எடிட்டிங்கில் இதை எழுதும் போது ஈடுபட்டிருக்கிறேன் & இப்போதுமே கதையின் freshness என்னுள் தொடர்கிறது ! 

இதழ் வெளியான பின்னே, இதற்கென கொஞ்சம் அவகாசங்களை ஒதுக்கிட நம் எல்லோருக்குமே சாத்தியப்பட்டால் – ஒரு செம ஜாலி அலசல் அரங்கம் வெயிட்டிங் என்பேன் ! இது போன்ற ஆல்பங்கள் அடிக்கடி கிட்டுவதில்லை எனும் போது – too good to miss out on ! அதே போல – இந்தக் கதையின் பணி என் கைக்கு வந்தது யதேச்சையாகத் தான் என்றாலும் – இப்போது அதை எண்ணி மகிழ்கிறேன் ! தினமும் வேலைகள் வாய்த்திடும் தான், ஆனால் இத்தகைய அனுபவங்கள் ஆடிக்கும், அமாவாசைகளுக்குமே தான் வாய்த்திடும் ! So நடப்பாண்டின் நினைவில் நிலைத்திடக் கூடிய இதழ்களின் பட்டியலில் இந்தக் கதையும் இடம்பிடிக்குமென்ற நம்பிக்கையோடு இதோ இந்த ஆல்பத்தின் previews பக்கமாய்த் திருப்புகிறேன் :

Front & Back - ஒரிஜினல் டிசைன்களே; 6 மாதங்களுக்கு முன்னரே கோகிலா மெருகூட்டியவை ! And இதோ – உட்பக்கங்களது preview :

And மாறுபட்ட களங்களின் படலம் இந்த இதழோடு ஓய்ந்திடாது! ஜம்போவின் “மா…துஜே சலாம்” ஆல்பத்தின் முதல் half-ல் பயணம் பண்ணிக் கொணடிருக்கிறேன் & பார்த்தமட்டிற்கு இதுவுமே செம refreshing களம் ! அது பற்றி – அடுத்த ஞாயிறு ! (ஷப்பா…. ஆனாலும் நீங்க ரெம்போ பாவம் தான்!) Before I sign out - இந்த வாரத்தில் கேட்க  நினைக்கும் கேள்விகள் :

1 "சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?

2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?

3 சந்தாவில் அல்லாதோரில் யாரெல்லாம் ஜானியை கடையில் வாங்குவதுண்டு ? வாங்குவதில்லை ?

Bye all! See you around....!  Stay safe !!

P.S : ஆன்லைன் புத்தக விழாவின் பொருட்டு 2 இதழ்கள் தயாராகி வருகின்றன ! அணு குண்டா ? ஆயிரம்வாலாவா ? என்ற ரேஞ்சுக்கான கற்பனைகள் வேண்டாமே ப்ளீஸ் ? And நமது கைவசமுள்ள புக்சின் ஸ்டாக் விபரம் - pdf file ஆக நம்மவர்கள் வைத்துள்ளனர் ; வாட்சப்பில் (98423 19755) கேட்டு வாங்கிக்கொள்ளலாம் - ஆர்டர் செய்திட உதவிடுமெனில் ! நடப்பாண்டின் புக்ஸ் + Cinebook இதழ்களுக்கு 10% & பாக்கி அனைத்துக்கும் 20% ! 

216 comments:

 1. ஜானி வரும்போது கடைகளில் வாங்கி விடுவேன்...

  ReplyDelete
 2. நான் அஞ்சாப்பு ..

  ReplyDelete
 3. 3rd. பாம்பு புக் 5 காப்பிகள் புக் பண்ணியாச்சு.

  ReplyDelete
 4. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 5. // இதழ் வெளியான பின்னே, இதற்கென கொஞ்சம் அவகாசங்களை ஒதுக்கிட நம் எல்லோருக்குமே சாத்தியப்பட்டால் – ஒரு செம ஜாலி அலசல் அரங்கம் வெயிட்டிங் என்பேன் ! //
  வேறென்ன வேலை சார் நமக்கு......

  ReplyDelete
 6. ஏனுங்க பாபு சாரே..எப்போதும் உடன் வரும் வாழ்க, வாழ்க கோஷங்களைக் காணோமே. அக்கா ஊருக்கு போயிட்டாங்களா?

  ReplyDelete
  Replies
  1. கை உடைந்துவிட்டதுண்ணே!
   அதான் கையை உயர்த்தி கோஷம் போட முடியலை....

   Delete
  2. // கை உடைந்துவிட்டதுண்ணே! //

   கவனமாக இருங்கள் பாபு.

   Delete
  3. நிஜமாகவா பாபு சார்.Really Iam very Sorry.

   Delete
 7. நானும் வந்துட்டேன்

  ReplyDelete
 8. Sir - that colorful flyer on online bookfair you sent - please publish here sir - so that visitors will get reminded.

  ReplyDelete
  Replies
  1. // please publish here sir - so that visitors will get reminded. //

   +1

   அநேகமாக அக்டோபர் 1 அன்று ஒரு ஸ்பெஷல் பதிவில் இதனை பற்றி விரிவாக எழுதுவார் என நினைக்கிறேன்.

   Delete
 9. ஜானி கதைகள் என்றாலே எதிர்பார்ப்பில்தான் அதுவும் பழசு & புதுசு ஒரே நேரத்தில் வருவது கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா என்ற டயலாக்தான் நினைவுக்கு வருகிறது ! ஜானி கதைகள் சில கதைகள் தவிர்த்து எல்லாமே பிடித்த கதைகள் தான்! அதுவும் இதுவரை வந்த கதைகளில் பெஸ்ட்டாக பார்ப்பது இரத்தக் காட்டேரி மர்மம்! ஆன்லைனில் இரண்டு புக் வெளிவரப் போகிறதா சூப்பர் சார்! சிரித்த முகத்திற்கு சொந்தக்காரராக கேப்டன் பிரின்ஸ்ஸே என்றும் நினைவில் நிற்பவர்!

  ReplyDelete
  Replies
  1. செம்ம கேப்டன் பிரின்ஸ் 👌

   Delete
 10. சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ undoubtedly Willie Garvin . His sense of humour also unparalleled.

  ReplyDelete
 11. 1. டெக்ஸ்
  2. ஊடு சூன்யம். திகிலில் ஆரம்பத்தில் வந்த பொழுது படிச்சிட்டு இந்த சில்வண்டின் சிறு வயதில் நடுங்கிய அனுபவம் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. /* நடுங்கிய அனுபவம் உண்டு */ - me too - I think it was 1987 Deepavali Special ? Terror struck after that !!

   Delete
  2. அப்ப அடுத்த வருடம் இந்த ஊடு சூன்யத்தை முடிந்தால் ஆசிரியர் மறுபதிப்பாக தர சொல்லி கேட்போமே.

   Delete
  3. அது ஏற்கனவே ரீப்போர்ட்டர் ஜனி ஸ்பெஷல் என்று கலரில் மறுபதிப்பு பாக வந்துள்ளது பரணி.

   Delete
  4. அப்படியா. பார்கிறேன் கணேஷ்.

   Delete
 12. டியர் எடி,

  ஜான் 2.0 கதையை அறிமுகம் ஆகப்போகிறது என்று அறிவிப்பு வெளியானது போது எனக்குள் இருந்த ஒரே ஐயம், ஜானி கிளாசிக் கதைகள் இனி வராது என்பதே.

  ஆனால் இரண்டையும் சேர்த்து ஒன்றாக ஒரே ஆல்பத்தில் பவனிவர செய்த ஐடியாவுக்கு ஒரு சபாஷ். கதைகளின் முன்னோட்டம் எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.. காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது முன்னோட்டமா அல்லது பீலாவா ? :-)

   Delete
  2. வெளிவந்தால் தான் தெரியும்... ;) பெரும்பாலும், எடி தேர்வில், 8/10 எனக்கும் பிடித்திருப்பதால்.. நம்பிக்கை தக்கவைக்கலாம் :)

   Delete
 13. அருமையான ...ஈர்ப்பான பதிவு....மீண்டுமொருமுறை...எப்டிதா இப்டில்லா நகத்த யோசன வருதோ....அருமை சார்...ஜானி அட்டகாசமாக எதிர்பார்க்க தயார் படுத்திட்டீங்க....திகில் திக்கில் பின்னோக்கி பயணிச்சா அன்னைக்கு ஜானி இரத்த அம்பு...காட்டேரி...பிசாசு பேரெல்லாம் பாத்து பேய்க்கதைகளை எதிர்பார்த்து ஏமாந்தது அதிகம் . கதைகளை ரசித்தேனா நினைவில் இல்லை...ஆனா இப்ப படிக்க சூப்பர் யாவும்னாலும் பெரிய எதிர்பார்ப்பில்லை.
  ஜானி நீரோ புன்னகை மன்னன் தானே சார்...

  ReplyDelete
  Replies
  1. ஜானி பெஸ்ட் ...அந்த கதை நினைவுகளைத் துரத்துவோம் ...சான்ஸே இல்ல...வேகமோ வேகம்னு வியந்தது நினைவில்

   Delete
  2. கருப்பு வெள்ளை காலத்ல சந்தால இல்லாத போதும் வாங்கிருக்கேன் ஜானியின் கதைகளனைத்தயுமே

   Delete
 14. 1. தனி ஒருவன் (Lone Ranger) ஒரு புன்னகை மன்னன்
  2. பழசு எதுவும் நியாபகத்துக்கு வர்லீங்கோ!!!
  பழைய ஜானி ஒரு அழகன், ஈசியா வரையலாம்கூட.

  ReplyDelete
 15. 1.சிரித்த முகம் என்றால் கார்வின்
  2. பயங்கரவாதி ஜானி
  3. சந்தா கட்டி இருக்கேன்

  ReplyDelete
 16. கடந்த வருடம் இந்த வருடத்திற்கான காமிக்ஸ் அட்டவணை அறிவித்த போது அதில் இடம் பிடித்த "மா துஜே சலாம்" என்ற கதையின் தலைப்பு என்னை மிகவும் யோசிக்க வைத்தது. தமிழ் தலைப்பு கிடையாது என்ன கதையாக இருக்கும் ஏன் இந்த மாதிரி ஹிந்தியில் ஆசிரியர் தலைப்பு வைத்து உள்ளார் என மிகவும் யோசித்தேன். அதற்கான விடை வரும் மாதத்தில் கிடைக்க உள்ளது. மிகவும் ஆர்வமுடன் இந்த புத்தகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இந்த வாரம் இந்த கதையை பற்றிய டீசர் இருக்கும் என நினைத்தால் ஜானி வந்து விட்டார் :-) இன்னும் ஓரு வாரம் காத்திருக்க வேண்டும் :-)

   Delete
 17. ஜானியின் அட்டைப்படம் மிகவும் நன்றாக உள்ளது அதுவும் வெள்ளை backgroundல் சில இரத்த துளி + ஒரு ஜோக்கர் படம் என செமயாக உள்ளது.

  ReplyDelete
 18. 1."சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?

  Vera yaru? Batmanla varra Joker thaan. (you didn't ask which hero)

  2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?

  Johnny's best are Vinveli padiyeddupu and Voodo Sooniyum

  3. சந்தாவில் அல்லாதோரில் யாரெல்லாம் ஜானியை கடையில் வாங்குவதுண்டு ?

  100% buy

  ReplyDelete
 19. 1 "சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?
  "முகமூடி வேதாளன்"

  2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?
  "இரத்தக்காட்டேரி மர்மம்,சைத்தான் வீடு,ஊடு சூன்யம், ஓநாய் மனிதன்."

  3 சந்தாவில் அல்லாதோரில் யாரெல்லாம் ஜானியை கடையில் வாங்குவதுண்டு ? வாங்குவதில்லை ?
  "சந்தாவில் இணைந்தாயிற்று சார்!"

  ReplyDelete
 20. சிரித்த முகம் என்றால் நமது கேப்சன் சரவணன் தான் ஞாபகத்துக்கு வருகிறார். ஈரோட்டில் முதல் முறையாக அவரை பார்த்த போது அவரின் குழந்தை போன்ற சிரிப்பு மறக்க முடியாது.

  அப்புறம் நமது காமிக்ஸ் நாயகர்களில் சிரிப்பு என்றால் கிட் ஆர்டின் மற்றும் ஜாலி ஜம்பரின் சிரித்த முகம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. Yes. கிட் ஆர்டின்

   Delete
  2. அதுவும் டாக்புல் ஆர்டினியின் பின் பக்கத்தில் உதைக்கும் போது குப்புற அடித்து பறந்து கொண்டே சிரிக்கும் சிரிப்பு இருக்கே அது சான்ஸே இல்லை.

   Delete
 21. Reporter Johnny இது வரையில் வெளிவந்துள்ன சாகாசங்களில் best ரத்த காட்டேரி படலம்!

  ReplyDelete
 22. இரத்த காட்டேரி மர்மம் best issue!

  ReplyDelete
 23. ஜானி பெஸ்ட் திகில் கனவு... பரபரப்பான கதைக்களம்....

  ReplyDelete
 24. அன்பு அண்ணன் K.V.Ganesh அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கேவி.

   Delete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் KVG சார்.

   Delete

  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் KVG

   Delete
  4. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கணேஷ் சார்💐💐💐💐💐

   Delete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணேஷ் அண்ணா

   Delete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கணேஷ் சார் ! 🎂🎂🍰

   Delete
  7. Many more happy returns of the day, Ganesh Sir.

   Delete
  8. வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

   Delete
  9. தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கணேஷ் சார்💐💐💐🙏🏼🙏🏼🙏🏼
   .

   Delete
 25. ஜானியின் டாப் 10
  1.ஓநாய் மனிதன்
  2.இரத்தக்காட்டேரி மர்மம்
  3.மரணப்பட்டியல்
  4.இரத்த அம்பு
  5.விண்வெளி படையெடுப்பு
  6.ஊடூ சூண்யம்
  7.சிவப்பு பாதை
  8.நள்ளிரவு பிசாசு
  9.விசித்திரப் போட்டி
  10.தலைமுறை எதிரி

  ReplyDelete
 26. Dear எடிட்டர்,

  இந்தப் புத்தகத்தில் கிளாசிக் ஜானி - எந்தக் கதை வருகிறது?

  நன்றி

  ReplyDelete
 27. இளிச்சவாயர்கள்
  1.ஜான் மாஸ்டர்
  2.பிரிண்ஸ்
  3.கிட் கார்ஸன்
  4.மாண்ட்ரேக்
  5.வேதாளர்

  ReplyDelete
  Replies
  1. Super, குற்றச் சக்கரவர்த்தியை மறந்திட்டீங்களே... Senthil

   Delete
 28. 1.சிரித்த முகம் என்றால் பார்னே
  அந்த பொக்கை வாய் செமயா இருக்கும்

  2.மரண பட்டியல்
  அடுத்தது யார் சாவாங்கன்னு ஒரு வித படபடப்பு கதை முழுக்க இருக்கும்

  3.அனைத்தும் சந்தா கட்டி இருக்கேன் சார்

  ReplyDelete
  Replies
  1. மரண பட்டியல் படித்து இல்லை. மறுபதிப்பு வண்ணத்தில் வந்தால் சந்தோஷம்.

   Delete
 29. ஹிரோ -வில் சிரிந்த முகம் என்றால் அது முகமூடி வீரர் வேதாளன் - தான்.
  .ரிப்.ஜானி கதைகளில் பெஸ்ட் எனில்
  1. ஓநாய் மனிதன்
  2. சிவப்புப் பாதை *
  3. விசித்திர நண்பன் *
  *வண்ணத்தில் -மறுபதிப்பாக மிகவும் விரும்பும் இதழ்கள்.
  அதுவும் சிவப்புப் பாதை - யை Maxi size-யில் மிகவும் விரும்புகிறேன்.
  ஒவியத்தில் வண்ணத்தில் ரசிப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன.
  மறைந்த ஓவியருக்கு சிறப்பு செய்ய மிகவும் ஏற்ற இதழ் . (ஏனோ அந்த கதையில் தாங்கள் முழி பிதுங்கி நிற்பது இந்த பதிவிலும் தெரிந்து கொள்ள முடிந்தது).

  ReplyDelete
 30. ஊடு சூன்யம் தான் எனக்கு மிகவும் பிடித்த ஜானி காமிக்ஸ்.
  அதுவும் மறுபதிப்பாக கலரில் வந்த போது அட்டகாசமாக இருந்தது.

  ReplyDelete
 31. சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ///
  டைகரோட சிரிப்பு தான் பெஸ்ட்.

  ReplyDelete
 32. 1. தங்க தலைவன்..
  2. ஊடு சூனியம்
  3. சந்தா..

  ReplyDelete
 33. // 2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ? //
  வாசித்ததில் நினைவில் உள்ள வரையில் இரத்தக் காட்டேரி மர்மம்,ஊடு சூன்யம்.....

  ReplyDelete
 34. ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் முந்தைய சாகஸங்களில் நல்ல கதைகள் இன்னும் மறுபதிப்பு செய்யப்படாமல் நிறைய நிலுவையில் உள்ளன போலும்,வருடத்திற்கு இரண்டு பழைய கதைகள்+ஒரு புதிய (2.0) கதை என்று சேர்த்து தொகுப்பாக முடிந்தால் தொகுப்பாக வெளியிடலாம்.....
  பரட்டை பிரின்ஸிற்கு கிடைக்கும் வாய்ப்பானது ரிப்போர்ட்டர் ஜானிக்கு நல்கப்படுவதில்லை என்பது வருத்தத்திற்குரியது......

  ReplyDelete
  Replies
  1. குத்தடி குத்தடி சைலக்கா ...!
   ..கரூரிலே குத்துனாங்க ஸ்டைலா தான் !
   .. பிரின்ஸ் வந்தார் அதன் பலனாத்தான் !

   ..அன்னிக்கு கடைமூடுனானுங்க பிளாக்கரில் தேர்தல்களையும் தான் !

   Delete
  2. இது அபாண்டமான பழி சுமத்தல்.. இதற்கு வேண்டுமானலும் ஒரு தேர்தல் வைத்துப் பார்க்கலாம்.. சென்னையா, கரூரா என்று...

   Delete
 35. 1 "சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?

  WAYNE SHELDON ..

  2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?

  திகில் டெலிவிஷன் ..

  ReplyDelete
  Replies
  1. அட...பரவாயில்லையே ; ஷெல்டனுக்கும் கொஞ்சம் ரசிகர் மன்றங்கள் உண்டோ ?

   Delete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. சஸ்பென்ஸ் இதழ்கள் பற்றிய டிப்ஸ் pls

  ReplyDelete
  Replies
  1. கலரா ? கறுப்பு -வெள்ளையா ? சிறுசா ? பெருசா ? இவரா ? அவரா ?

   விசாலக் கிழமையும் ; வெள்ளிக்கிழமையும் பதில் சொல்லிடுவோம்லே !

   Delete
  2. அப்ப, இந்த மாசம் 1ம் தேதியே புக் வந்துடுமா சார்...??!!

   Delete
  3. சார் வியாழக்கிழமை யா வெள்ளி kilamaiyaa?????

   Delete
  4. இல்லை சார் ; இந்தாண்டின் இறுதி வரையில் மாதத்தின் 10 ம் தேதியென்ற பாணி தொடர்ந்திடும் ! புத்தாண்டு முதலாய் முதல் தேதிக்குத் திரும்பிடுவோம் - God Willing !

   Delete
  5. இந்த ஆன்லைன் புத்தக விழா ஸ்பெஷல் புக்ஸ் 2 மட்டும் - வரும்வியாழனுக்கு or வெள்ளிக்கு வெளியாகிடும் !

   Delete
  6. அதற்கான ஸ்பெஷல் பதிவு எப்போது வரும் சார்??? அறிவிப்பு எப்போது???

   Delete
  7. 1. கால வேட்டையர்கள்?
   2. ?...?...?

   Delete
  8. This comment has been removed by the author.

   Delete
  9. இந்த இரண்டு புத்தகங்களின் விலையை சொன்னால் முன் பணம் அனுப்ப வசதியாக இருக்கும். அவைகளை இந்த மாத புத்தகங்களுடன் இணைத்து அனுப்பிவையுங்கள் சார்.

   ஆன்லைன் புத்தக திருவிழாவுக்கு வரவுள்ள இரண்டு புத்தகங்களும் எனக்கு வேண்டும் விஜயன் சார்.

   Delete
 38. சார் வணக்கம்
  கிட்டத்தட்ட ஒரு 3 வாரம் XIII மேல் நேரத்தை செலவு செய்துள்ளேன் யப்பா!...
  ஒரு அசாத்திய படைப்பு தான் XIII
  நான் வியந்தேன் ஈரோடு புத்தக விழாவின்போது ஏன் XIIIக்கு இவ்வளவு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என்று!?
  ஆனால் அந்த தொடரை எந்த இடைஞ்சல்கள் இல்லாமல்,வேறு எந்த புக்கை எடுத்து படிக்காமல் இதில் கவனம் செலுத்தினேன்
  சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை🤔🤷🏻‍♂️
  அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்😊...


  ஆனால் ஒரு சில சந்தேகங்கள்
  கர்னல் ஆமோஸ்
  மங்கூஸ்
  இது போன்ற 1 shot ஆல்பமை எப்போது படிக்க வேண்டும் யாராவது இதற்கு பதில் சொன்ன மிகவும் மகிழ்ச்சி அடைவேன்
  ஏனெனில் அந்த 2 மட்டும் இன்னும் படிக்காமல் வைத்திருக்கிறேன்🚶‍♂️😵😑...ஆழ்ந்த குழப்பத்தில்

  ReplyDelete
  Replies
  1. அகில் XIIIயின் SPINOFF கதைகள்
   என்று சொல்லப்படும் 13கிளைக்கதைகளையும் (அதுவும் 13தான்) எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம்.ஆனால் மூல கதையின் மையக்கருத்தோடு சில மாறுபடும் சில
   வேறுபடும்.அதனால் அதில் வரும் கதா
   பாத்திரங்களின் தனிக்கதையாக நினைத்து படித்தால் குழப்பம் வராது.

   Delete
  2. XIII கதைகளின் spin Offகளுக்கும், மெயின் கதைக்கும் உள்ள தொடர்பு கதைமாந்தர்கள் மட்டுமே. ஆனாலும், அந்த பாத்திரம் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள ஸ்பின் ஆஃப் கண்டிப்பாக உதவும்.

   முழு தொடரையும் படித்து முடித்ததும், ஸ்பின் ஆஃப்களை கையில் எடுங்கள்.

   நன்றி

   Delete
  3. @kvganesh,@discoverboo
   மிகவும் நன்றி அண்ணா...
   எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கிடப்பில் வைத்திருந்தேன்...
   மிகவும் நன்றி

   Delete
 39. "சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?


  1.செல்டான்
  2.கேப்டன் பிரின்ஸ்
  3.கேப்டன் டைகர்

  ...
  ஆனால் கேப்டன் டைகர் தான் எந்த பிரச்சினை வந்தாலும் சிரிப்பை மறக்காதவர்

  ReplyDelete
 40. ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?


  ஊடூ சூனியம் தான் எனக்கு மிகவும் பிடித்த ஜானி கதை...
  அந்த கதைல ஏதோ ஒன்னு இருக்கு சார்😊

  ReplyDelete
  Replies
  1. அந்த ஏதோ ஒண்ணு என்னாங்க சார் ?

   Delete
  2. அந்த கதைல ஒரு கெத்து இருக்கு😂🔥

   Delete
 41. /// இது நாள் வரைக்கும் மில்க் பிகிஸ் சாப்பிடும் ரேஞ்சிலேயே ஜானி – நாடீன் உறவு சித்தரிக்கப்பட்டிருக்க, இங்கோ 'வேலு மிலிட்டரி' பாணியில் கதாசிரியர் அதனை மாற்றியமைத்திருக்க – மாமூலான ஜானி கதைகளிலிருந்து ரொம்பவே மாறுபட்ட feel ! //


  Wow... Wow...wow...

  At last நல்லது நடந்திட்டதா ஒரு ஹீரோவுக்கு...

  மகிழ்ச்சி... பெருமகிழ்ச்சி...

  வழக்கமாக ஜானி கதைகளில் நாடினின் விழிகளில் தெறிக்கும்....

  மிரட்சி,
  மருட்சி,
  பயம்,
  அதிர்ச்சி,
  பிரமிப்பு---
  போன்ற உணர்வுகளை ரொம்பவும் ரசிப்பேன்.

  இம்முறை காதலை நாடினின் விழி வழியே காண ஆவலுடன் வெயிட்டிங்...!!!


  பல கதைகளில் ஜானி ஆபத்தில் இருக்கும் போது நாடினின் பாடி லாங்வேஜ்ல தொற்றி கொள்ளும் டென்சன் ரொம்பவே ரசிக்கும் படி இருக்கும்...!!

  மற்றபடி ஜானி நூடுல்ஸ் பிளேட் பிளேட் ஆக பரிமாறுவாரு.. ஒவ்வொரு தபாவும் கடைசி பக்கங்கள் வரவர நூடுல்ஸ் மல்டிபிளை ஆகிடும்...!!

  இம்முறை ஹிப்பியா?? டாப்ராமனா??

  ReplyDelete
 42. ///இது போன்ற ஆல்பங்கள் அடிக்கடி கிட்டுவதில்லை எனும் போது – too good to miss out on///

  --- ரொம்பவும் பெப்பர் தூக்கலாக இருக்கிறதே....!!!!

  இதற்காகவே இம்முறை ஜானியை மொதல்ல எடுத்துடனும்.

  ReplyDelete
  Replies
  1. மழை நேரமில்லையா - சூப்பில் பெப்பர் ஜாஸ்தி இருந்தால் தொண்டைக்கு நல்லதாச்சே !

   Delete
  2. ஆமா சார்... புரட்டாசி நாக்கு செத்து போச் உப்பு பருப்பு+ அப்பளம் ஆக சாப்பிட்டு...

   பெப்பர் சூப் ஆவது ஆறுதலாக இருக்கட்டும்.

   Delete
 43. 1 "சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?

  "ஹானஸ்டி"யின் காதலன்!

  2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?

  ஊடு, இரத்த காட்டேரி.

  ReplyDelete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. சிரித்த முகத்துக்கு, நம்ம ஜிம்மிக்கு வேறு யாரும் ஈடு இணையே கிடையாது. அதுவும் சரக்கடிக்கும் போது ஜிம்மியின் முகத்தில் தோன்றும் சந்தோஷப் புன்னகை இருக்கே,. அது அலாதியானது. அப்போது சந்தோஷத்தில் ஜிம்மியின் முகம் அரபிக்கடலில் இருந்து வங்கக்கடல் வரை விரியும். மின்னும் மரணம், தங்கக் கல்லறை இரண்டிலும் இது பல காட்சிகளில் அருமையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பொளர்பானை அருந்தும்போது ஜிம்மியின் சிரிப்புக்கு இணையும் உண்டோ???

   "அட குடிப்பதை நிறுத்தவே முடியலயே???" ---என அவர் உதிர்க்கும் வசனம் ஹைலைட்...!!

   நச்சுனு புடிச்சிட்டீங்க பத்து சார்...

   Delete
  2. மின்னும் மரணத்தில் ஜிம்மி தோன்றும் முதல் காட்சியே செம்மயாக இருக்கும். சுரங்கத்தில் மட்டையாகி இடக்கும் ஜிம்மியிடம் டைகர், "உன் மண்டையில இருக்கிற முடி அளவுக்கு கூட இங்கே தங்கம் இல்லேன்னு உனக்கு நல்லாவே தெரியும், ஜிம்மி" என்று கலாய்க்கும் டயலாக் குபீர் சிரிப்புக்கு உத்தரவாதமானது.

   Delete
  3. And ஜிம்மியின் சேஷ்டைகள் எல்லாம் சந்திரபாபு காமெடியை நினைவுபடுத்தக்கூடியவை.

   Delete
  4. ஜிம்மி..பார்னே..கார்சன்..கார்வின்.. சில வேளைகளில் நாயக / நாயகியரைத் தூக்கிச் சாப்பிட்டு விடும் துணைப்பாத்திரங்கள் ஆச்சே சார் !

   Delete
  5. அது போலவே, டைலன் டாக் கதைகளில், சமயாசமயம் இல்லாமல் க்ரௌச்சோ உதிர்க்கும் கடி ஜோக்குகளும் சிரிப்புக்கு உத்தரவாதமானதே. எனக்கு டைலன் டாக் பிடிக்கும். க்ரெளச்சோவை கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும். என்பார்வையில் க்ரவுச்சோ கிட்டத்தட்ட நம்ம மனோபாலா சார் மாதிரியே இருப்பார். சேஷ்டைகளும் அது போலவே இருக்கும்.

   Delete
  6. ஜிம்மி தான் எனக்கும் தோன்றிய சிரித்த முகம்.

   Delete
 46. பலமுறை படித்த, எனக்கு மிகவும் பிடித்த ஒரே டெக்ஸ் இதழ் "பழிவாங்கும் புயல்"!

  மறுவாசிப்பு!!

  ReplyDelete
  Replies
  1. 'நில்...கவனி.. சுடு ' முயற்சித்துப் பாருங்கள் சார் !

   Delete
  2. மாசம் ஒரு இதழ் என்ற காலகட்டத்தில் வெளியான இதழ்.

   எடிட்டர் சாருக்கு டயலாக்குகள் எழுத, போதிய நேரம் நிறைய கிட்டியிருக்கும்.

   அப்படி செதுக்கிய டயலாக்குகள் பல பழிவாங்கும் புயலில் பல இடங்களில் இடம்பெற்று இருக்கும்...!!

   கதையின் அசாத்திய வெற்றிக்கு டயலாக்குகள் மிகப்பெரிய பங்காற்றி இருக்கும்.

   சாம்பிள்ஸ் சில...

   "முட்டையை உடைக்காமல்
   ஆம்லெட் பண்ண முடியுமா?",

   "உண்மையை
   எடுத்துரைத்தவனுக்கு இதுதான் கதிஎன்கிற அளவுக்கு தரம் இறங்கிப் போய்விட்ட இந்த சமுதாயத்திற்காக நான்
   பேப்பரையும், மசியையும் வீணடிக்கத்
   தயாரில்லை"

   "அவர், சாந்தமானவர்தான்-
   ஆனால் ரோசத்தில் யாருக்கும்
   சளைத்தவரில்லை",

   "!பணி புரியப் போவது
   எனக்கல்ல - சத்தியத்திற்கு"

   "கொல்லப்பட்ட நவஜோ
   இளைஞர்கள் பிக் எல்க்கின் பிரிவைசேர்ந்தவர்கள். எனவே அவர்களுக்குரிய
   தண்டனையை தீர்மானிக்கும் உரிமை அவருக்கே உரியது"

   ----கதையின் ஓட்டத்தில், அந்த அசாத்திய சிக்கலான சூழலில் கதையோட ஒன்றிப்போக இந்த டயலாக்குகள் இன்றியமையாத காரணிகள்.

   மேலும் மிக மிக முக்கியமாக,

   "தன் உயிர் நண்பர்
   கார்சனோடே மல்லுக்கட்டும்
   நிலையிலும் தன் நவஜோஸ்களை
   கைவிடாதவர் தான் டெக்ஸ்...!
   தன் உயிர் நட்பையே தான் தலைமையேற்ற தன் மக்களுக்காக டெக்ஸ் இழக்க துணியும் காட்சி!

   ஒரு தலைவனாக டெக்ஸ் உயர்ந்து நிற்கும் காட்சி அது.

   இதை பற்றி இன்னிக்கிலாம் சொல்லிட்டே இருக்கலாம் மிதுனரே!

   ஒவ்வொரு பேணலும், காட்சியும், வசனமும் என் உயிரில்...!!!

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. எப்படி இப்படி விஜயராகவன் எல்லாவற்றையும் ஞாபகத்தில். நான் படித்த சில நாட்களில் அனைத்தையும் மறந்து விடுவேன் படிக்கும் போது பாடத்துக்கும் இதே நிலைமை தான் :-)

   Delete
 47. திகில் காமிக்ஸில் வெளிவந்த அத்துணை சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி கதைகளும் முதலிடம் பெறவேண்டிய எவர்க்ரீன் கதைகள். என்றாலும் 5ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் ஓரு ஜுரம் வந்த சனிக்கிழமை இரவில் தூங்காமல் லயன் சூப்பர் ஸ்பெஷலில் படிக்க கிடைத்த ஜானியின் அந்த வயதில் திக் திக் என்று உலுக்கி போட்ட ஊடு சூன்யம் கதை தான் என்னுடைய alltime favorite. போதாக்குறைக்கு ஊடு என்றால் என்ன என்று ஒரு பக்க அளவில் முன்னுரை கொடுத்து நம்மை மிரட்டியிருப்பார் ஆசிரியர்...

  ReplyDelete
  Replies
  1. திகில் காமிக்ஸில் வெளிவந்த அத்துணை சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி கதைகளும் முதலிடம் பெறவேண்டிய எவர்க்ரீன் கதைகள். என்றாலும் 5ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் ஓரு ஜுரம் வந்த சனிக்கிழமை இரவில் தூங்காமல் லயன் சூப்பர் ஸ்பெஷலில் படிக்க கிடைத்த ஜானியின் அந்த வயதில் திக் திக் என்று உலுக்கி போட்ட ஊடு சூன்யம் கதை தான் என்னுடைய alltime favorite. போதாக்குறைக்கு ஊடு என்றால் என்ன என்று ஒரு பக்க அளவில் முன்னுரை கொடுத்து நம்மை மிரட்டியிருப்பார் ஆசிரியர்...இரத்த காட்டேரி மர்மம் கதைக்கு அடுத்த இடம். -Udhay

   Delete
  2. நல்ல நினைவுகள் உதய்.

   அந்த ஊடூ கதையை படித்த பின் கொஞ்ச நாட்கள் எந்த பொம்மையை பார்த்தாலும்
   பயந்து பயந்து வரும்......!!

   Delete
  3. அதே கெட்ட கனவை பின்னாளில் டெக்ஸின் மரணமுள் கதையில் நள்ளிரவில் உசுரை உறுஞ்சும் முள்ளுருண்டைகள் தந்தன...!!

   Delete
  4. Thank you Vijay, Johnyin Marana patiyal kathaiyum miratum...
   Tex kathikalil Thikil kathai enraal Saithaan Samrajyam, Maranthin niram Pachai

   Delete
 48. This comment has been removed by the author.

  ReplyDelete
 49. ஜானி வர்றார்.......ஹய்யா

  ReplyDelete
 50. மர்ம சவப்பெட்டிகள் மற்றும் அப்பல்லோ படலம் கதைகளை சிறுவயதில் படித்ததாக ஞாபகம். அட்டைப்படம் இந்த இரண்டு கதைகளில் சிறப்பு. இந்த கதை ஞாபகம் இல்லை புத்தகமும் இல்லை ஞாபகம் உள்ளது அட்டைப்படம் மற்றும் அந்த வித்தியாசமான கதை தலைப்பு. இந்த இரண்டும் கதையை ஒரே புத்தகமாக வாய்ப்பு இருந்தால் மறுபதிப்பு செய்ய முடியுமா விஜயன் சார்?

  ReplyDelete
  Replies
  1. இப்போதைக்கு சாத்தியமாகாது சார் ; விற்பனைகளில் ப்ரூனோவுக்கு இப்போது நோ நோ சொல்கிறார்கள் நம் மக்கள் !

   Delete
  2. ஓகே. ப்ரூனோ கதையை மறுபதிப்பு செய்ய எதிர்காலத்தில் நினைத்தால் இந்த கதைகளுக்கு முதலிடம் கொடுங்கள் சார்.

   Delete
  3. சாக மறந்த சுறா நம் கிட்டங்கி மீதான காதலை என்றைக்கு மறக்கிறதென்று பார்ப்போம் சார் முதலில் !

   Delete
  4. ஓகே சார். உங்களின் ஆதங்கம் புரிகிறது. மன்னித்து விடுங்கள்.

   Delete
 51. /// சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?///

  உங்களைக்கூட சொல்லலாம் எடிட்டர் சார். பில்டப் கொடுத்த ஹீரோக்கள் (கார்ட்லேண்ட் மாதிரி), கதைகள் பல்பு வாங்கும்போதும் சரி, அவர்களை இங்கே தளத்தில் கழுவிக் கழுவி ஊற்றும் போதும் சரி, (சமயத்தில் உங்களையும்), கிட்டங்கிகள் நிறைந்து வழிந்தாலும் சரி, கண்டனக் கணைகள் கோபத்தோடு பாய்ந்தாலும் சரி, அசராமல் அனைத்தையும் சிரித்துக்கொண்டே லைட்டாக எடுத்துக் கொண்டு கடந்துபோகிறீர்களே..இப்பக்கூட நீங்க ஞாபகத்துக்கு வரல்லேன்னா எப்படி?

  ReplyDelete
 52. அந்த விதத்தில் பார்த்தால் 2020 has been quite decent ! க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் கதைகள் ; டெக்ஸ் சாகஸங்கள்; டயபாலிக்; மாடஸ்டி தொடர்கள்; ட்ரெண்ட்; ட்யுராங்கோ என்ற சலனமற்ற பயணத்தின் மத்தியில் சில அதிர்வேட்டுக்கள் அவ்வப்போது பற்றித் தெறித்து வந்துள்ளன – தானே?!
  100% Sir... This year is awesome with beautiful stories

  ReplyDelete
 53. அருமையான பதிவு சார். ஜானி க்கு இப்போது இருந்தே வெயிட்டிங். மிகவும் பிடித்த நாயகர்களில் ஒருவர். நீங்கள் சொன்ன பிறகு தான் யோசித்தேன் சிரிக்கும் நாயகர்கள் பற்றி நீங்கள் சொன்ன இருவரும் தான் எனக்கு ஞாபகம் வந்தார்கள்.

  எனக்கு பிடித்தது பயங்கரவாதி ஜானி, திகில் கனவு.

  எப்போதுமே ஜானியை மிஸ் செய்தது இல்லை.

  ஆன்லைன் புத்தக விழா வுக்கு வெயிட்டிங்.


  இரண்டு surprise இதழ்களுக்கு வெயிட்டிங்.

  1ஆம் தேதி எப்போது சார் வரும்????

  ReplyDelete
 54. ஜானியின் அட்டைப்படம் வித்தியசமாய், அருமையாய் இருக்கிறது!

  தன் உயிரைப் பறிக்கவரும் கத்தியைப் பார்த்து உண்மையில் மரண பீதியில் அலறினாலும், சர்க்கஸ் கோமாளியின் அந்த ஒப்பனைகள் நமக்கு சிரிப்பதைப் போலவே தெரிவது விந்தைதானே!

  எடிட்டர் ஒரு புன்னகையோடே இந்தக் கதையில் பணியாற்றியிருப்பது 'அப்படி என்ன சமாச்சாரமா இருக்கும்?' என்று சிந்திக்க வைக்கிறது! ஜானியின் இந்த டபுள் இடியாப்ப விருந்துக்காக ஆவலுடன் வெயிட்டிங்!

  ஆன்லைன் புத்தகத் திருவிழாவில் அந்த ரகசிய வெளியீடுகளுக்காகவும் வெயிட்டிங்!

  ReplyDelete
 55. ///// சிரித்த முகம்" என்ற அடையாளத்துக்கு உங்கள் பார்வைகளில் best suited யாரோ ? கார்ட்டூன் நாயகர்கள் அல்லாது ?///

  சிஸ்கோ கிட் & பாஞ்சோ!! ரணகளமான நேரத்தில் துப்பாக்கியை முழக்கிக் கொண்டிருக்கும்போது கூட புன்னகையோடே வலம்வரும் ஜோடி இவர்கள்!!

  ReplyDelete
 56. ///2 ரிப்போர்ட்டர் ஜானியின் தொடரினில் இதுவரையிலும் best எது ? உங்கள் பார்வையினில் ?///

  எனக்கும் - ஊடுசூனியமே!

  ReplyDelete
 57. சிரித்த முகம் - இளிச்சவாய் அப்டினு மொழிபெயர்க்க முடிஞ்சா அது டைகர்தான்..

  சிரிச்சமுகம்னா தங்கம் இருக்கறதா நினைச்சு பொட்டியை உடைக்கறச்சே விகோ சிரிப்புதான் நினைவுக்கு வருது..

  அப்ப இளிச்சவாய் டைகர்தான்...

  (கடவுளே! ரம்மிக்கு நெட்பேக் தீர்ந்து போய் இருக்கணும்)

  மத்தபடி மாதரணி இல்லாம " சிரித்த முகத்துக்கு" எங்க போறது?

  கடுவன்கள் சிரிச்சா என்ன...சிரிக்காட்டி என்ன? :-)

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ஈவி!! :-)

   கெழவியோ கொமரியோ பொம்மனாட்டி சிரிப்புன்னா அது!!! :)

   Delete
 58. சுஜாதா வாசகர்கள் மத்தியில உரையாடல் நிகழ்த்தி கொண்டிருந்தார்...

  அப்ப.

  ரீசன்ட் மெமரி ( சமீபத்திய ஞாபகம்)

  ரிமோட் மெமரி ( பழைய ஞாபகம்)

  ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம் பத்தி வாசகர்கள் உணர ஒருத்தரை ஒரு கேள்வி கேட்டார் ..

  நேத்திக்கு மதியம் என்ன சாப்பிட்டீங்க?

  தயிர் சாதம்,ஊறுகாய்..


  போன வாரம் புதன் கிழமை மத்தியானம்?


  தயிர் சாதம் ,ஊறுகாய்


  ஆறுமாசம் முன்னாடி பிப்ரவரி 12- ம் தேதி மதியம் என்ன சாப்பிட்டீங்க?

  இப்படி கேட்டுவிட்டு கூட்டத்தை ரிமோட் மெமரி பத்தி விளக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் வாசகரை பார்த்தார்..அவரால் கண்டிப்பாக ஞாபகத்தில் வைத்திருக்க முடியாது என்ற எண்ணத்துடன்..

  வாசகரோ....

  தயிர் சாதம் ஊறுகாய் என்றார்..

  நான் எப்பவும் மதியம் தயிர் சாதம் ஊறுகாய்தான் சாப்பிடுவேன் அப்டின்னார்..

  சுஜாதா சார முகத்தில் ஈயாடவில்லை..

  எனக்கும் ஜானி கதைகள் எல்லாமே தயிர் சாதம் ஊறுகாய் மாதிரிதான்..

  பிடித்தமானவை...எல்லாமே ஒரே ரகம்தான்


  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா! சூப்பர்!!

   Delete
  2. செம்ம சார் செம்ம செம்ம ஹிஹிஹி. தரையில் உருண்டு புரண்டு சிரிக்கும் படங்கள் 1000

   Delete
 59. இனிய நண்பர் ஈவி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🎂🎂🎂

  ReplyDelete
  Replies
  1. நள்ளிரவு வாழ்த்து மர்மம்!! 😝

   நன்றிகள் பல, ரட்ஜா அவர்களே!! 😇😇🙏

   Delete
  2. கலாட்டா பண்ணுறதே வழக்கமா வச்சுறக்குற பூனையாருக்கு பொறந்தநாள் வாழ்த்துகள்!!!!

   Delete
  3. எசகுபிசகா எதையாவது எழுதியே சிரிப்பு வைத்தியம் செய்யும் செனா அனா'வுக்கு என் நன்றிகள் பல!!😇😇🙏

   Delete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் செயலரே.

   Delete
 60. தளத்தின் நிரந்திர செயலாளருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மியாவ்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் செந்தில் சத்யா!! 🙏🙏😇😇

   Delete
 61. அன்பு நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் KS!! 🙏🙏😇😇

   Delete
 62. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது செயலர் @ ஈனா வினா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🙏🏼

  இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
  🎂🎂🎂🎂🎂
  🍧🍧🍧🍧🍧
  🍫🍫🍫🍫🍫
  🍭🍭🍭🍭🍭
  💐💐💐💐💐

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் சித்தரே! 🙏🙏😇😇

   Delete
 63. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செயலரே என்றும் போல் இன்றும் அதே மகிழ்வுடன் வாழ்வீர் என்ற நம்பிக்கை பலமாகவே உண்டு..

  Happy birth day🎂🎂🎂🎂

  ReplyDelete
  Replies
  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துககள் ஈரோடு விஜய் !

   அதிகாரியும், வெள்ளிமுடியாருமாய் ; ஒல்லிப்பிச்சானும், ஜாலி ஜம்பருமாய், ரவுண்டு பன்னும், தொப்பையுமாய் - வாழ்வும், மகிழ்வும் இணைபிரிந்திடாதிருக்க வாழ்த்துக்கள் !

   Delete
  2. வாழ்த்துக்கு நன்றிகள் எடிட்டர் சார்!! எங்கே கவிதை கிவிதை எழுதிடுவீங்களோன்ற கலக்கத்தில் இருந்தேன்! 🙏🙏😇😇


   வாழ்த்துக்கு நன்றிகள் (ஒரேயொரு) தலீவர் அவர்களே!! 🙏🙏😇😇

   Delete
 64. இனிய பிறந்தநாள் வாழ்த்துககள் ஈரோடு விஜய் அவர்களே! இந்த சந்தோஷமும், குதூகலமும் என்றும் தொடர வாழ்த்துக்கள். (நான் உங்களை ஒருநாள் முந்திக் கொண்டு விட்டேன்.)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் பத்து சார்!! 🙏🙏😇😇

   ///நான் உங்களை ஒருநாள் முந்திக் கொண்டு விட்டேன்.///

   அடடே!! தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள் சார்!!💐💐

   Delete
  2. தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பத்மநாபன் சார் 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
   .

   Delete
  3. வாழ்த்துக்களுக்கு நன்றி KS. நன்றி ஈ.வி. நன்றி பிரபாகர் சார்.

   Delete
  4. தாமதமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பத்மநாபன் சார் 🎂🎂🍰🍰🥞🥞 !!

   Delete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் எடிட்டர் சார்.

   Delete
 65. இன்று தனது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது செயலர் @ ஈனா வினா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் 🙏🏼

  இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼
  🎂🎂🎂🎂🎂
  🍧🍧🍧🍧🍧
  🍫🍫🍫🍫🍫
  🍭🍭🍭🍭🍭
  💐💐💐💐💐

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் அதிகாரியின் நண்பரே!! 🙏🙏😇😇

   Delete
 66. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஈ.வி,வாழ்வில் எப்போதும் வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.
  💐💐💐💐💐💐💐💐💐

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி ரவி ஜி!! 🙏🙏😇😇

   Delete
 67. 1. சிரித்த முகம் - வில்லி கார்வின்
  2. ஜானி best - நினைவுகளை துரத்துவோம்
  3. புத்தக கடையில் ஜானி கதைகளை வாங்குகிறேன்

  ReplyDelete
 68. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் ஜி!! 🙏🙏😇😇

   Delete
 69. 🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
  தளத்தின் உயிர்ப்பு,

  விழாக்களில் விழிப்பு,

  பிறாண்டலில் பெலிஸ்கேயஸ்,

  ரசிப்பில் ரம்மியம்,

  விவாதத்தில் அழுத்தம்,

  பழகுவதில் பாசம்

  கொண்ட இனிய நண்பர் ஈவிக்கு
  இனிய இனிப்பான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

  💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹💐💐💐

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் பல, STVR!! 🙏🙏😇😇

   Delete
 70. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிகள் நண்பரே!! 🙏🙏😇😇

   Delete
 71. சகோதரர் ஈ. விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

  ReplyDelete
 72. அன்பு நண்பர் ஈரோடு விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..💐💐💐 காமிக்ஸ்சும் காமிக்ஸ்சுமாய் காலகாலம் வாழ வாழ்த்துகிறேன்...

  ReplyDelete
 73. தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பத்மநாபன் சார் 🙏🏼🙏🏼🙏🏼💐💐💐
  . அன்புடன் பழனிவேல்...

  ReplyDelete
 74. இந்த வாரம் முழுவதும் தளமே பிறந்தநாள் கொண்டாட்டமா இருக்கு ஆசிரியர் ஒரு பிறந்தநாள் ஸ்பெசல் புக்போட சொல்லனும்....

  ReplyDelete
 75. Sorry missed it, Belated Birthday wishes Padmanaban Sir💥💥🎊🎉🎊🎉🎂

  ReplyDelete
 76. தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் பத்து சார்💐💐💐💐💐🎂🎂🎂🎂🎂

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் STVR Sir and புத்தகப்பிரியன் சார். ஈவியின் பிறந்தநாளும், என் பிறந்தநாளை ஓட்டியே வந்ததால் அதனை தெரிவித்தேன். மற்றபடி பிறந்தநாள் கொண்டாடும் பழக்கம் எல்லாம் எனக்கு இல்லை. சிம்பிளாக,எப்போதும் போல் அன்றைய தினமும் வீட்டிலேேயே விளக்கேற்றி, பிரார்த்தனை செய்து சுவாமி கும்பிடுவதுடன் சரி. தட்ஸ் ஆல்.
   இல்லமே கோவில். மனதிலே இறைவன். இதுவே என் சிம்பிள் பாலிசி.

   Delete
  2. சார் இப்படி எல்லாம் பேசி உங்கள் பிறந்த நாளில் 40+ இளம் வாலிபர்களான எங்களை கண் கலங்க வைக்காதீர்கள் ப்ளீஸ் 🤪😝😛😜😁😁😁

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 77. Editor sir please break the suspense and tell the name and price of the books.😄🤗🤗🤗

  ReplyDelete