Powered By Blogger

Sunday, January 10, 2021

தலயின் தலை !!

 நண்பர்களே,

வணக்கம். 2020-ன் அட்டவணையின் இறுதி மூன்று மாதங்களுக்கென - தோர்கல் ; அர்ஸ் மேக்னா & பிரளயம் - என மூன்று மெகா இதழ்களை ஒதுக்கி வைத்தருந்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன் ! அவ்வப்போது பணியாற்றச் சோம்பல் என்பதுமே அவற்றை ஒத்திப் போட்டே பயணித்ததன் பின்னணிக்கொரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை ! But எது எப்படியோ, நாட்காட்டிகளின் சருகுத் தாட்கள் - 'க்றிஸ் ஆப் வல்நாரை' விடவும் இரக்கமற்றவை என்பதை ஆண்டின் துவக்கம் முதலாகவே உணர்ந்து வருகிறேன் ! 'லொடக் லொடக்' என சாவகாசமாய் பயணமாகும் பேஸஞ்சர் ரயிலைப் போல மாதத்தின் 10  தேதிகளிலும், 15 தேதிகளிலும் ஆஜராகிக் கொண்டிருந்த இதழ்களை மறுக்கா முதல் தேதிக்கென சீரமைக்க தோர்கல் & கோ.வோடு அடிக்க நேர்ந்த அந்தர்பல்டிக்களின் கிறுகிறுப்பே ஓய்ந்திருக்கா நிலையினில் - பிப்ரவரியின் கத்தை மேஜை மீது குவிந்து கிடக்க, அதற்குமிடையே - "ஆன்லைன் புத்தக விழாவுங்கோ ; நாங்க அதுக்கோசரம் தயாராக வேணும்ங்கோ !" என்று புதிதாய் ஒரு இடைச்செருகல் ! என்ன பண்ணுகிறோமோ இல்லையோ - இப்போதெல்லாம் பிரிண்ட் அவுட்களை எடுத்துக் குவிக்க நாங்கள் வாங்கித்  தள்ளும்  A4 பேப்பர் பாக்கெட்டுகளை - அந்நாட்களில் கடுதாசிக் கணைகள் தொடுக்க நம்ம தலீவர் கூட வாங்கியிருக்க மாட்டார் என்பேன் ! So பிப்ரவரியின் முதல் தேதிக்கென வந்திடவுள்ள இன்னொரு ஹார்ட்கவர் மெகா இதழ் & அதன் கூட்டணி மீதொரு கண் ; இடைப்பட்டுள்ள நமது ஆன்லைன் விழாவுக்கான 3 இதழ்கள் மீது இன்னொரு கண் - என all கண்ஸ் ஒரே பிசி ! இதுக்கோசரமே புனித மனிடோ தாராமுட்டை சைசுக்கு கண்களைத் தந்திருப்பாரோ ?

ஜனவரியின் முக்கூட்டணியின் இதுவரையிலான உங்கள் அலசல்கள் + விற்பனைகளைக் கொண்டு பார்க்கும் போது - the real surprise என்பது "கோழைகளின் பூமி" தான் ! தோர்கல்அடிக்கவுள்ளது சிக்ஸரே என்பது எப்போதோ தெரிந்த சேதியே ; என்மட்டில் புக்கின் தயாரிப்பு நயமாய் அமைகிறதா ? என்ற பயம் மாத்திரமே குடியிருந்தது ! அதுவும் பெருசாய் பிசகுகளின்றித் தயாராகி நின்ற போதே - " ரைட்டு...ஆண்டின் துவக்கம் சார்ந்த கவலைகள் அனாவசியம் !" என்று புரிந்து விட்டிருந்தது ! ஹெர்லக் ஷோம்ஸ் பற்றியும் என்னுள் ஒரு புரிதலிருந்து - கூரையிலேறிக் கூவிடும் வெற்றியாக இது இராது ; ஆனால் ஒரு 20 நிமிட வாசிப்பினில் மனதுகளை refresh செய்திட  நிச்சயம் தவறிடாது என்று ! And அது கச்சிதமாய் நிறைவேறியுள்ளதாய்த் தோன்றுகிறது - at least கார்ட்டூன் ஆர்வலர்களின் மத்தியினில் ! அநேகமாய் 2021 -ல் வெளியாகவுள்ள ஹெர்லக் ஆல்பத்துக்குப் பிற்பாடு, ஒரேயொரு சிங்கிள் சாகசம் மட்டுமே எஞ்சியிருக்கும் இத்தொடரினில் என்று நினைக்கிறேன் ! "கோழைகளின் பூமி" நிச்சயமாய் பேசப்படுமென்று யூகித்திருந்தேன் தான் ; ஆனால் விற்பனையிலுமே அது சாதித்திடுமென்பது நான் எதிர்பாரா ஒன்று ! And again - எனக்குள் கொஞ்சமாய் நெருடல்களிருந்தன - 'நிறைய loose ends தொங்கிக் கொண்டுள்ளனவே - அவற்றைக் கொண்டே இந்தக் கதையின் கழுத்துக்கு சுருக்கு மாட்டி விடுவீர்களோ ?' - என்று ! ஆனால் இந்தக் கருப்பு வெள்ளை கி.நா. பாணிகளுக்கு நீங்கள் செமையாய் sync ஆகி விட்டுள்ளீர்கள் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிஞ்சூ ! So எதிர்நோக்கியுள்ள ஆண்டுகளில் ஏதேனுமொன்றில் - ஆறுக்கு ஆறு கி.நா. தேர்வுகளையும் இந்த போனெல்லி வரிசையிலிருந்தே அமைத்திடும் வாய்ப்பும் பிரகாசமோ ? 

And on the topic of கி.நா.ஸ் - ஒரு கனவு உள்ளுக்குள் கடந்த சில வாரங்களாகவே துளிர் விட்டு வருகிறது ! ஒரு ரொம்ப ரொம்ப வித்தியாசப் படைப்பு கண்ணில் பட்டது ! பணியினில் பெண்டை நயமாய்க் கழற்ற வல்லது என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது ! ஆனாலும்  அதை எப்படியேனும் தமிழுக்கு கொணரும் ஆசை ததும்புகிறது ! ஒரே சிக்கல் : இதனில் பணி செய்வதெனில் ஒரு ரெண்டோ / மூணோ வாரங்களுக்கு பாக்கி சகலத்துக்கும் டாட்டா காட்டி விட்டு, இதற்குப் பேனா பிடிப்பதில் முழுமூச்சாய் இறங்கிட வேண்டியிருக்கும் ! அந்த மாதிரியொரு அவகாச luxury வாய்க்கும் தருணத்தில் சத்தமின்றி இதனை நனவாக்கிட முனைய நினைத்துள்ளேன் ! Could be 2021 ..or  2022 ...or ....!! Fingers crossed !

இம்மாத தோர்கல் சிக்ஸர் ஒருபக்கமிருக்க ; காமெடிக்கோசரம் "கானகமே காலடியில்" இதழும் இருக்க - நிஜ காமெடி துவங்கியது வேறொரு ரூபத்தில் ! வரிசையாய் நமது ஏஜெண்ட்களுக்கு போன் போட்டு ஜனவரியின் பட்டியலை நம்மவர்கள் வாசித்தால் - "ம்ம்..அப்புறம் ?..அப்புறம் ?" என்ற கேள்விகளே ! "அப்புறம் ஒன்னும் இல்லேங்கண்ணா ; இந்த மாசம் மூணே புக் தான் !" என்று பதில் சொல்ல - "இன்னாது ? டெக்ஸ் கிடையாதா ? வருஷத்திலே மொத மாசத்திலேயே டெக்ஸ் கிடையாதா ? " என்ற கண்சிவத்தல்கள் மறுமுனைகளிலிருந்து !! "இல்லீங்க ; இந்த மாசம் தோர்கல்ன்னு பெரிய புக் ரெடியாகிருக்கு ; இது நல்லா இருக்கும் !" என்றால் - "என்னமோ போங்க !!" என்ற சலிப்புகளே ! இப்போதெல்லாம் நம்மவர்களே - அந்த மாதத்து புக்ஸ் என்னவென்று என்னிடம் கேட்க வரும் போது "டெக்ஸ் கிடையாதா சார் ?" என்று பீதியோடே வினவுகின்றனர் ! இன்னமும் 2 டெக்ஸ் வறட்சி மாதங்கள் காத்திருக்க, செத்தார்கள் நம்மவர்கள் !! இது தான் யதார்த்தம் ; இது தான் ஒரு மெய்யான தல தாண்டவம் என்பதை சிலபல அண்டா ஓனர்கள் புரிந்திட புனித தேவனிடம் கோரிக்கை வைப்போம் !  

And இந்தத் தல தாண்டவங்களின் இன்றைய தலைமகனுடன் இத்தாலியில் நிகழ்ந்துள்ளதொரு அளவளாவலின் தமிழாக்கமே இவ்வார பதிவின் highlight ! டெக்ஸ் வில்லரின் நடப்பு எடிட்டரும், அநேகமாய் அவரது தொடரின் maximum hits தந்திடும் ஜாம்பவானுமான திரு மௌரோ போசெல்லி அவர்கள் இணையத்தில் மனம் திறந்துள்ளார் !  

டெக்ஸ் வில்லர் : ஆற்றலின் மறு உருவம் ; நேர்மையின் சின்னம் ; விவேகம் ; வீரம் ; வேகம் என சகலத்திலும் முதல்வன் ! உருவில் இவர் அசுரனல்ல ; ஆனால் உணர்வுகளுள் கலந்து 72 ஆண்டுகளாய் உலகெங்கும் ஏகமாய் காமிக்ஸ் ரசிகர்களின் மனதில் கோலோச்சும் அசாத்தியன் !! 1948-ன் செப்டெம்பர் 30 முதலாய்த் துவங்கிய இவரது அதிரடிகள் - பல லட்சம் சித்திரங்களோடு ; பல நூறு சாகசங்களோடு கலக்கி வந்தாலும், இதன் பின்னணியில் உள்ள கதாசிரியர்கள் சொற்பமே ! பிதாமகர் போனெல்லி துவக்கியதை தமையன் செர்ஜியோ தொடர்ந்திட, இன்று அந்த ஜோதியைக் கையில் ஏந்தி நிற்கும் மௌரோ போசெல்லி பேசுகிறார் :

முதல் கேள்வி : டெக்ஸ் தொடரின் கதாசிரியர் ஆவது எப்படி ? அதற்கென என்ன மாதிரியான முன்னேற்பாடுகள் ; முஸ்தீபுகள் அவசியப்படும் ?  

போசெல்லி : அடிப்படையில் நமது கதாநாயகனை உள்வாங்கிக் கொள்ள - அவரைப் படைத்த பிதாமகரின் ஆக்கங்களை ஒன்று விடாமல் வாசித்திட வேண்டியது அத்தியாவசியம் ! ஷெர்லாக்  ஹோம்ஸின்புதுக் கதைகளை எழுதிடுவதானால் - சர்.ஆர்தர் கோனன் டாயில் எழுதியவற்றை மனப்பாடமாய் அறிந்திருக்க வேண்டிவரும் தானே ? டெக்ஸைப் பொறுத்தவரை - பிதாமகரின் படைப்புகளை உள்வாங்கிய பின்னே, தொடர்ந்திட்ட முக்கிய கதாசிரியர்களின் சுவடுகளை நாம் பின்பற்றிடவும் வேண்டி வரும் ! இன்றைக்கு டெக்ஸுக்குப் புதிதாய்க் கதை எழுதுவோர் க்ளாடியோ நிஸ்ஸியின் படைப்புகளையோ ; எனது கதைகளையோ உதாசீனப்படுத்திட இயலாது ! தற்போதைய டெக்ஸ் கதை டீமில் உள்ளோர் : நான், பஸ்க்வாலே ருஜு ; ஜியான்பிராங்கோ மான்பிரெடி ; ஜாக்கோபோ ரவ்ச் ; கிளாடியோ நிசி மற்றும் எனது உதவியாளன் ஜியோர்ஜியோ கியூஸ்ப்ரெடி மட்டுமே ! ஒரு விதத்தில் எனது சகாக்களை விட எனக்கு இந்தப் பணி சுலபமே - ஏனெனில் நான் அவர்களை விட வயதில் மூத்தவன் (நிஸ்ஸி நீங்கலாக) ! ஆகையால் டெக்ஸ் கதைகளுடனான பரிச்சயம் எனக்கு நீண்டு செல்கின்றது ! எலிமெண்டரி ஸ்கூலில் இருக்கும் நாட்களிலிருந்தே எனக்குப் பெரியவர் G.L. போனெல்லியைத் தெரியும் ! எனது மதியப் பொழுதின் பெரும்பான்மை அவரது பணிக்கூடத்திலேயே கழிந்திருக்கின்றன ; அவரது மகன் என்நண்பன் என்பதால்  - அவனோடு ஒட்டித் திரியும் சாக்கில் பெரியவர் டெக்ஸ் கதைகளில் பணியாற்றுவதை ஏகப்பட்ட நாட்கள் தரிசித்திருக்கிறேன் ! So எனக்குள்ளே டெக்ஸ் ஆழமாய் வேரூன்ற அது உதவியது ! கதை சொல்லும் பாணியினில் நான் அவரிடமிருந்து மாறுபட்டிருந்தாலும், அடிப்படையில் அவர் உருவாக்கிய அந்தக் கதாப்பாத்திரத்தை நன்றாகவே புரிந்திருந்தேன் ! நாம் செல்லவுள்ள கதையின் நாயகன் நமக்குள் குடியிருக்க வேண்டியது தான் அடிப்படைத் தேவை ! 

கேள்வி # 2 : டி-வி. தொடர்களில் ஒவ்வொரு எபிசோடுக்கும் கதை எழுதுவோர் ஒருவித wiki-யை ; தொடரும் ஆசிரியர்கள் தவறாது பின்பற்ற வேண்டிய தகவல்கள் அடங்கிய ஒரு களஞ்சியத்தை உருவாக்கிக் கொள்வர் என்று கேள்விப்பட்டுள்ளோம் ! கதையின் ஓட்டம் ; அதை உருவகப்படுத்திய விதங்கள் ; கதாப்பாத்திரங்களின் தன்மைகள் என்றெல்லாம் அதில் குறிப்பெடுத்திருப்பார்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம் ! டெக்ஸுக்கு அது போல் ஏதேனும் "களஞ்சியம்" உண்டா ? உங்களது கதாசிரிய டீமின் உபயோகத்துக்கு என ஏதேனும் பிரேத்யேகமாய் உண்டா ?

உண்டு ! டெக்ஸுக்கென ஒரு குட்டியான களஞ்சியம் உண்டு ! ஒரு மதியப்பொழுதில் நான் எழுதிய அந்த நாலோ ஐந்தோ பக்கங்களை மற்ற கதாசிரியர்களும் கையில் வைத்திருப்பர் ! ஒரு டெக்ஸ் கதையின் உருவாக்கத்தில் எவையெல்லாம் மீறிடக் கூடா மரபுகள் ? என்பது பற்றி அதனில் இருக்கும் ! 

டெக்ஸ் கதைகளுக்குப் பேனா பிடிப்பேன் என்றெல்லாம் நான் கற்பனை கூடக் கண்டதில்லை ! காமிக்ஸ் உருவாக்கிட எண்ணியிருந்தேன் தான் ; ஆனால் இது எதிர்பாராது எனக்கு கிடைத்த வாய்ப்பு ! எனக்கு 30 வயதான போது வாழ்க்கையில் ரொம்பவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன் ; அப்போது பெரியவர் போனெல்லி என்னைத் தனது உதவியாளராக ஏற்றுக் கொண்டு எனக்குப் பெரும் சகாயம் செய்திருந்தார் ! பின்னாட்களில் அவரது மனைவிக்குச் சொந்தமான போனெல்லி நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டியது ! பெரியவருடனான எனது நெருக்கம் டெக்ஸை உயிர்ப்போடு வைத்திருக்க எனக்கு ரொம்பவே உதவியது ! எனக்கு முந்தய டெக்ஸ் எடிட்டரான கிளாடியோ நிஸ்ஸிக்கு எனக்கு கிட்டியிருந்த அதிர்ஷ்டங்கள் வாய்த்திருக்கவில்லை ! ஆகையால் அவர் அத்தனை டெக்ஸ் கதைகளையும் நெட்டுரு போட வேண்டியது அவசியமாகியிருந்தது ! ரொம்பவே கடினமான காரியம் தான் ; ஆனால் அதனை பிரமாதமாகச் செய்து காட்டினார் நிஸ்ஸி ! அவரது டெக்ஸ் கதைகளுமே இந்த நாயகரை எவ்விதம் முன்னெடுத்துச் செல்வது ? என்பதற்கான உதாரணங்கள் ! நானும் அவரும் கதை சொல்லும் விதங்களில் நிரம்பவே வேறுபட்டோர் என்றாலும் - கதாநாயகனை அழகாய், எவ்வித நெருடல்களுமின்றி நடத்திச் செல்வதில் இருவருக்குமே வெற்றி என்பேன் ! 

கேள்வி # 3 : சரி, நடைமுறைகளின் பக்கமாய் இனி நகர்வோம் ! லாக்டௌன் நாட்களில் பதிவொன்றைப் பார்த்த போது - நீங்கள் டைப்ரைட்டரில் கதையை டைப் செய்வது போலிருந்தது ! முழுக்கவே டிஜிட்டல் யுகமாகி விட்ட இந்நாட்களில் நீங்கள் இன்னமும் டைப்ரைட்டர் பார்ட்டி தானா ?  

பெரியவர் போனெல்லி காலத்துக்கு ஏற்ற தொழில் நுட்பங்களோடு பயணித்தவர் ; ஒலிவெடி லெட்டரா 33 என்ற டைப்ரைட்டரை பயன்படுத்துவார் டெக்ஸ் கதைகளை டைப் அடிக்க ! அவரைப் பார்த்து நானுமே அதில் பழகிப் போனேன் ! கம்பியூட்டர்களில் டைப் அடிப்பதை விட இது கொஞ்சம் சுலபமாய் இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது ! இதில் அடிப்படையில் உள்ள வசதி - முந்தைய பக்கங்களை  ; கதையின் துவக்கங்களை நான் review செய்திட நினைத்தால் பக்கங்களைத் தரையில் போட்டு நொடியில் படித்து விட முடியும் ! கதை வளர வளர, கதாபாத்திரங்கள் அந்த நொடியில் எங்கிருக்கிறார்கள் ; என்ன மாதிரியான மாற்றங்களுக்கு கதையின் ஓட்டத்தில் ஆளாகியிருக்கிறார்கள் ? என்பதையெல்லாம் எனக்கு நானே நினைவூட்டிக் கொள்ள இது ரொம்பவே உதவிடுகிறது ! உதாரணத்திற்கு நானிப்போது பக்கம் 130 -ல் இருந்தாலுமே, துவக்கங்களை நினைவு கூர்ந்துகொண்டே தான் எழுதுவேன் !

அப்புறம் எழுதுவதில் இன்னொரு சூட்சுமமும் உண்டு !! வழக்கமாய் எந்தவொரு தருணத்திலும் நான் 15 முதல் 20 கதைகள் வரைக்கும் ஒரே வேளையில் துவக்கி எழுதிக் கொண்டிருப்பது வாடிக்கை ! GL போனெல்லி இந்த பாணியைக் கடைபிடித்துப் பார்த்துள்ளேன் - ஒரே சமயத்தில் 4 வெவ்வேறு டெக்ஸ் சாகசங்கள் ஓடிக்கொண்டிருக்கும் அவரிடத்தில் ! டைலன் டாக் கதைகளைக் கையாண்ட கதாசிரியர் டிஸியானோ ஷ்லாவியும் இதைச் செய்திடுவார் ! கடந்த 30 ஆண்டுகளாய் நான் இந்த பாணியையே கடைப்பிடித்து வருகிறேன் ! சில சமயங்களில் எனக்கே இது எவ்விதம் சாத்தியமாகிறதென்ற மலைப்பு இருப்பதுண்டு ; ஆனால் என்னுள் உள்ள எழுத்தாளனை உயிர்ப்போடு வைத்திருக்க உதவிடுவது இதுவே !

அப்புறம் ஒரு கதையை நான் நேரடியாய் முடித்திடுவதும் கிடையாது ! இது கூட ஷ்லாவியிடம்   நான் கற்றுக் கொண்டதே ! கதையை க்ளைமேக்ஸுக்கு அருகாமையில் நிறுத்திக் கொள்வேன் - மேற்கொண்டு எவ்விதம் நகரலாம் என்ற எனது யோசனைகளை நோட்ஸ்களாக மட்டும் எழுதி வைத்துக் கொண்டு ! ஆர்டிஸ்டும் படம் போடத்துவங்கி - க்ளைமாக்ஸ் வரைக்கும் முடித்து விட்டு - "மீதம் எப்போ ரெடியாகும் ?" என்ற கேட்பார் ! அதன் பின்னே பணியைத் தொடர்வேன்; அதற்குள் என்னுள் அந்தக் கதையினை நேர்த்தியாய் முடிக்கும் தெளிவு இருக்கும் !

இந்த பாணி அத்தனை பேருக்கும் ஒத்துப் போவதில்லை தான் ! க்ளாடியோ நிஸ்ஸி நிதானமாய் எழுதுபவர் ; ஒட்டு மொத்த ஸ்கிரிப்ட்டையும் கத்தையாக என்னிடம் ஒப்படைப்பார் ! ஆனால் ஓய்வுக்குள் புகும் முன்னே, டெக்சின் தீவிர கதாசிரியராக அவர் இருந்த நாட்களை எண்ணெய் போலவே ஒரே தருணத்தில் ஏகப்பட்ட கதைகளுக்குள் தலை நுழைத்தே கிடப்பார் ! 20 வருடங்களாய் இவ்விதம் பணியாற்றியது, அவரது ஆரோக்கியத்துக்கு பங்கம் ஏற்படுத்தியதை வாசகர்கள் அறிவர் ! 

பஸ்க்வாலே ருஜு கூட இந்த பாணிக்காரர் தான் ; ஆனால் ஒரு நேரத்துக்கு நாங்கோ ; ஐந்தோ கதைகளுக்கு மேலாய் துவங்கிட வேண்டாமே என்று என்னிடம் அடிக்கடி சொல்லுவார் ! அதற்கு மேலாய் இழுத்து விட்டால் குழம்பிப் போய்விடுவோம் என்பது அவரது பயம் ! அவர் Ipad களில் எழுதுபவர் என்பதால், எங்கேனும் பயணம் செல்லும் போதுமே எழுதுவதைத் தொடர்வதுண்டு ! ஆனால் எனக்கு என் ஸ்டுடியோவில் இருந்தால் தவிர எழுத சாத்தியப்படாது ! ஒரு கதைக்குள் ஊன்றி ; கவனம் தந்து ; கானை நகர்த்த எனக்கு என் பணிக்கூடமே சுகப்படும் ! வீட்டுக்கு மாளிகைகளை வாங்கிப் போக மறந்து, திட்டுக்கள் வாங்கிய நாட்கள் நிறைய ; ஆனால் ஒரு டெக்ஸ் கதையின் முடிச்சைத் தவற விட்டதில்லை ! 

எழுத்தென்பது பழகப் பழக மெருகேறும் சமாச்சாரம் எனும் போது - நாட்களின் ஓட்டத்தோடு நமக்கே ஒரு வேகம் கிட்டி விடும் ! இன்றைக்கு டெக்ஸுக்கு கதை எழுத வரும் புதியவர்களின் ஸ்கிரிப்ட் என்னிடம் எடிட்டிங்கிற்கு வரும் போது - ஒவ்வொரு வசனத்துக்குமே அவர்கள் நிரம்ப நேரம் எடுத்து, யோசித்து எழுதியிருப்பது புலப்படும் ! நானோ, போனெல்லியோ ; மர்ம மனிதன் மார்டினின் கதாசிரியராக காஸ்டெல்லியோ இவ்விதம் யோசிப்பதில்லை ; கதாப்பாத்திரங்கள் எங்களோடு நேரடியாய்ப் பேசுவது போல் உணர்வோம் ; நேரடியாய் அடித்துக் கொண்டே போவோம் ! 

ஒருமுறை ஒரு டெக்ஸ் மினி சாகசத்துக்கு கதை எழுதிக்கொண்டிருந்தேன் ; அதற்கான ஆர்ட்டிஸ்ட் ரொம்பவே மெதுவாய் படம் போட, எனக்குப் பொறுமையின்றி பக்கம் 10 -ல் நிறுத்தி விட்டு வேறு பணிக்குள் புகுந்து விட்டேன் ! ரொம்ப காலம் கழித்து ஆர்ட்டிஸ்ட் மீத ஸ்கிரிப்ட்டைக் கேட்ட போது - "ஆண்டவா - இவ்வளவு காலம் கழித்து அந்தக் கதையை எப்படிக் கையாள்வதோ ?" என்ற கலக்கத்தோடு அமர்ந்தேன் ; ஆனால் எனது உள்ளுணர்வுகள் அந்தக் கதையை அடுத்த 2 மணி நேரங்களுக்குள் எடுத்துச் சென்று பூர்த்தியடையச் செய்தன ! என்னையும் அறியாமலே கதாபாத்திரங்கள் தாமாகவே கதையை வழிநடத்திடுவதை உணர்ந்தேன் ! எனக்காக வேறு யாரோ எழுதித் தந்தது போல் அன்றைக்கு உணர்ந்தேன் ! கலைவடிவங்களில் ; குறிப்பாய் இசைத்துறையில் உள்ளோருக்கு இது நன்றாகவே புரியும் என்பேன் ; ஒவ்வொரு நோட்ஸிலும் இசையமைப்பாளர் யோசித்துக் கொண்டிருக்க மாட்டார் ; திடீரென தோன்றும் inspiration வழிநடத்திடும் அவரை ! எங்களை போல காமிக்ஸ் உருவாக்கும் சாமான்யர்களுக்கும் இதுவே நடைமுறை ; கதைகள் திடீரென தாமரை உயிர் கொண்டு ஓட்டமெடுப்பதுண்டு ! 

கேள்வி # 4 : டெக்ஸ் கதைகள் உற்பத்திச் சங்கிலி பற்றிச் சொல்லுங்களேன் ?

ஒரு கதாசிரியர் டெக்ஸுக்கு புதிதாய் கதை துவக்குகிறாரெனில், அதன் மையத்தை விவரித்து எனக்கு அனுப்பிடுவார் ; என் பார்வையிலான அதன் சாதக-பாதகங்களை அலசுவோம் ! ஏதேனும் நெருடல் எனக்கிருந்தால், கலந்து பேசி அவற்றை நேர் செய்வோம் ! அப்புறமாய் அவர் எழுத ஆரம்பித்து, சில மாதங்களுக்குப் பின்னே பூர்த்தி கண்ட ஸ்கிரிப்ட்டை எனக்கு அனுப்பிடுவார் ! அப்போது ஏதேனும் இடறினால், நானாகவே மாற்றி அமைத்திடுவேன் ! ஆனால் பொதுவாய் அவ்விதம் அதிகம் நேர்வதில்லை ; பேனா பொடிப்போர் எல்லோருமே இன்று ரொம்பவே ஆற்றல் நிரம்பியவர்கள் எனும் போது ! 

ஒரு வருஷத்துக்கும் முன்னேயே கதைகளில் நாங்கள் பயணித்து வருவோம் ; ஆர்டிஸ்ட்களுக்குத் தான் கூடுதலாய் அவகாசம் தேவைப்படும் ! ஒரு 350 பக்க டெக்ஸ் MAXI ஆல்பமேனில் அதற்கு வழக்கமாய் 3 வருஷங்களுக்கு மேலாகிடும் ! ஏற்கனவே சொன்னது போல நான் 'ஏக் தம்மில்' எல்லாம் இதனை எழுதிட மாட்டேன் ; மூன்றாண்டுகளின் ஓட்டத்தோடு எனது கதையும் சிறுகச் சிறுக மலர்ந்து செல்லும் ! ஒரு யோசனையை 36 மாதங்களுக்கும் அதிகமாய் தலைக்குள் அசை போடும் போது அது ரொம்பவே அழகாய் மெருகேரிடுவதை உணர முடிகிறது எனக்கு ! 

சில தருணங்களில் ஒரே மாதிரியான கதைக்கருக்களை வெவ்வேறு கதாசிரியர்கள் கையில் எடுத்திருக்கவும் கூடும் ; ஆனால் கூடிய மட்டுக்கு அதனைத் தவிர்க்க முனைவோம் ! புதுசு புதுசாய் கருக்களை கண்டறியும் ஆற்றல் இல்லாதோர் எங்களது டீமில் இருக்க இயலாதே ! சில கதாசிரியர்களுக்குள், குறிப்பிட்டதொரு எண்ணிக்கைக்கு மேலாய் கதைகள் இராது ; ஒரு கட்டத்துக்கு மேல் வறட்சியில் ஒதுங்கி விடுவார்கள் ! ஆனால் என்னைப் போலவும் எழுத்தாளர்கள் உண்டு ; உலகத்தை உலுக்கும் விதமாய் இல்லாவிட்டாலும், ஏதேதோ புது உத்திகளைக் கண்டறிந்து தொடரை நகற்றிப் போய்க் கொண்டேயிருப்போம் ! 


தொடர்கிறது !!

ரொம்ப காலத்துக்கு டெக்ஸ் கதைகள் மாதாந்திர கதைவரிசையில் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன ! எழுபதுகளின் காமிக்ஸ் உச்ச நாட்களில், இத்தாலியெங்கும் தழைத்திருந்த சிறு புத்தக ஸ்டால்களின் உபயத்தில் பல தச்சத்தில் நின்றது விற்பனை ! ஆனால் காலப்போக்கில் விற்பனைகள் அந்த உச்சத்தைத் தக்க வைத்திடத் திணறிட, டெக்ஸ் மேலும் சில பாணிகளில் களமிறங்குவது அவசியமானது ! இந்த சூட்சமங்கள் செர்ஜியோ போனெல்லிக்கு அத்துப்படி ; மாக்ஸி டெக்ஸ் ஆல்பங்கள் ; டெக்ஸ் ஸ்பெஷல்ஸ் ; சிறுகதைகள் - என ரவுண்டு கட்டி அடிக்கும் வித்தைகளை அவிழ்த்து விட்டார் ! சிறுகதைகள் கொண்ட COLOR டெக்ஸ் பரீட்சர்த்தமும் செர்ஜியோவுடனானதொரு முயற்சியே ! புதுக் கதாசிரியர்களையும் ; ஸ்கிரிப்ட் ரைட்டர்களையும் கண்டறிய அந்தக் களம் எங்களுக்கு உதவியது ! பிரெஞ்சு ஹார்ட்கவர் ஆல்பங்களின் பாணிகளையுமே பரிசோதிக்க முனைந்தோம் - கதைகளுக்கும் புது லே-அவுட் ; புது கதைசொல்லும் யுக்திகளென்று வழங்கி ! 

இளம் டெக்ஸ் கதைகளைப் பிரதானப்படுத்தும் யோசனையானது - தற்போதைய போனெல்லி GM சிமோன் ஐரோல்டியினது!"டெக்சின் கதையை துவக்கத்திலிருந்து சொன்னாலென்ன ? " என்று ஒரு நாள் என்னிடம் கேட்டார் ! நான் ஏற்கனவே இளம் டெக்சின் கதைகளில் அந்நேரத்துக்கு பணியாற்றியிருந்தேன் தான் (காற்றுக்கென்ன வேலி ? சிங்கத்தின் சிறுவயதில்) ; ஆனால்  இளம் டெக்ஸை ஒரு மாதாந்திரத் தனி இதழாய் கொண்டு செல்வதென்பது நட்வாக் காரியமாய் எங்களுக்கு துவக்கத்தில் தென்பட்டது ! ஆனால் ஒரு ஓய்வான மத்திய சிந்தனையில் அதை நனவாக்கிட இயலும் தான் என்று தீர்மானிட்டேன் ! ரொம்பவே விறுவிறுப்பான ; பரபரப்பான கதை சொல்லும் பாணியோடு, இளம் டெக்ஸை துள்ளிப் பாயும் சிறுத்தையாய் அமைக்க முடிந்தது ! பெரியவர் போனெல்லி மெது மெதுவாய்த் தொட்டுச் சென்றிருந்த டெக்சின் இளம் பிராயங்களை சிதைத்திடாது - அதையொட்டியே கதைகளை அமைக்கும் தீர்மானமானது டெக்ஸ் பாரம்பரியத்தை மதித்ததாகவும், புது வாசக ரசனைகளுக்கு தீனி போட்டதாகவும்  இருக்கக் கண்டோம் ! இளம் டெக்சில் கொஞ்சம் பழமையும் உண்டு ; புதுமையும் உண்டு ! 

கேள்வி # 5 : இளம் டெக்ஸ் கதையின் ஓட்டத்தோடு நாயகர் முதிர்ச்சியடைவதையும் காட்ட முற்படுகிறீர்கள் ! இளம் டெக்ஸ் - யதார்த்த டெக்ஸை சந்திக்கும் புள்ளி வரைக்கும் இத்தொடரைக்  கொண்டு செல்ல உத்தேசித்துள்ளீர்களா ? 

இளம் டெக்சின் முடிவினில், என்னுடைய முடிவும் கலந்திருக்கக்கூடும் ! ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் தானே எனது பணிக்காலம் இருந்திட சாத்தியம் ? அதே சமயம், இந்தப் புதுத் தொடரானது காலாகாலத்துக்கும் பயணிக்கவும் கூடும் ! முதல் 6 வருஷங்களுக்கான கதைகளை நான் தயார் செய்து வைத்துவிட்டேன் ! போக்கிரியாய்த் துவங்கிடுபவர்,  மெது மெதுவாய் சட்டத்துக்கு உதவிடும் ஆற்றலாளராய் இளம் டெக்ஸ் பரிணாம வளர்ச்சி காண்பதை கதைகளின் போக்கில் உணர்ந்திட இயலும் ! நடுவே கிட் கார்சனுடனான சந்திப்பு ; ரேஞ்சர் ஆகிடுவது என்ற முக்கிய மைல்கல்களும் இடம்பிடித்திடும் ! ரெகுலர் டெக்ஸ் கதைகளில் வந்து சென்றுள்ள வில்லன்களை இளம் டெக்ஸ் சந்திப்பதும் நிகழும் ! 

பெரியவர் GL போனெல்லி - டெக்சின் இளம் பிராய நாட்கள் பற்றி விரிவாய்ச் சொல்ல முனையவில்லை எனும் போது - இத்தொடரை கணிசமாய் நீட்டிச் செல்ல நிறையவே வாய்ப்புகள் உண்டு ! ரெகுலர் தொடரில் ஆரம்ப ஆல்பங்களில் இளம் டெக்ஸ் சர சரவென முதிர்ந்து, பெரியவராவதாய் சித்திரத்திருப்பார் GL போனெல்லி ! அந்த கேப்பில் இளம் டெக்ஸ் கதைகளுக்கானதொரு தங்கச்சி சுரங்கமே இருப்பதாய் நான் உணர்கிறேன் ! ஆகையால் இளம் டெக்ஸுக்கு நீண்ட எதிர்காலம் இருக்கலாம் தான் ; ஆனால் எல்லாமே விற்பனைகளைப் பொறுத்தது ! தற்சமயத்துக்கு விற்பனை செம வேகம் ! 

2020 முதலாய் டெக்ஸுக்கென கிருஸ்துமஸ் ஸ்பெஷல் இதழ்களும் திட்டமிட்டுள்ளோம் ! 2020 டிசம்பரில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் சோலோவாய் டெக்ஸுக்கு கவனம் தந்திடுகிறது ! 2021 க்கென நான் திட்டமிட்டுள்ள ஸ்பெஷலில் 2 முக்கிய போனெல்லி கதாப்பாத்திரங்கள் சந்தித்துக் கொள்வர் ! ஆனால் "புதுமையைப் புகுத்துகிறேன் ; மாற்றங்களைச் செய்கிறேன் பேர்வழி !" என்று நொண்டிக் கொண்டே இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது ! ஓவர் அலம்பல் ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை !

கேள்வி # 6 : கதைகளில் தொடரும் உப பாத்திரங்கள் ; வில்லன்கள் பற்றிச் சொல்லுங்களேன் ? 

எந்தவொரு தொடருக்குமே - தொடர்ந்திடும் கதை மாந்தர்கள் முக்கியம் ; ஒருவித பிணைப்பை வாசகர்களுக்கு ஏற்படுத்த இவர்கள் உதவிடுவர் ! 1960-களில் மெபிஸ்டோ மீள்வருகை செய்வது உற்சாகத்தைக் கொணரும் சம்பவங்களாய் அமைந்தன ! கடைசியாய் 2002-ல் க்ளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் வந்த மெகா மெபிஸ்டோ சாகசமானது ஆல்பம் 501 to 504 வரை ஓடியது ! அதற்கொரு தொடர்ச்சியை வழங்குவது அத்தனை சுலபமான காரியமல்ல ! ஆகையால் மெபிஸ்டோவின் மைந்தன் யமாவை களமிறக்கும் யோசனை உதித்தது எனக்கு ! "யமாவின் முத்திரை" ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் சமீபமாய் உருவானது இந்தப் பின்னணியில் தான் ! தொடரும் காலத்துக்கென ஒரு கதையை உருவாக்கி வருகிறோம் ; அது பட்டையைக் கிளப்புகிறதோ - இல்லையோ ; நீ-ண்-டு செல்லவிருப்பது உறுதி ! தோராயமாய் 6 அல்லது 7 பாகங்கள் கொண்டிருக்கவுள்ள இந்த மெபிஸ்டோ கதைக்கு சிவிடெல்லியும், இன்னொரு ஓவியக்கூட்டணியும் பணியாற்றவுள்ளார்கள் ! 

சற்றே இரண்டாம் நிலையிலான கதை மாந்தர்களும் தொடர்வதுண்டு ; சிறு நகர ஷெரீஃகள் ; மிஸ்டர் P போல ! இது போல நிறைய தொடரும் உபபாத்திரங்கள் இருப்பது - கதைத்த தேடல்களில் எங்களுக்குப் பெரிதும் உதவுவதையும் நான் குறிப்பிட்டாக வேண்டும் தான் ! 

கேள்வி # 7 : டெக்சுக்கோ, அவரது துணைகளுக்கோ வயதாவது போல் தெரிவதே இல்லை ! ஆனால் அவ்வப்போது நிஜ வான்மேற்கு வரலாற்றினில் இங்கும் அங்கும் அவர்கள் உலா செல்வதைக் காண்கிறோம் ! வெவ்வேறு கால கட்டத்துக்கு இவர்கள் பயணமாகினாலும், நெருடல்களின்றி அவர்களை சித்தரிக்க முடிவது எவ்விதம் ? 

ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் எனும் போது ஆங்காங்கே கொஞ்சமாய் லாஜிக்கின் எல்லைகளை தொட்டுப் பயணிப்பது நிகழ்வதுண்டு ! கதைகளின் தேவைக்கேற்ப சில நிஜ வரலாறுகளை கொஞ்சமாய் முன்னேயும், பின்னேயும் இழுத்துக் கொள்வோம் தான் ! டெக்சின் சாகசங்கள் அரங்கேறுவது தோராயமாய் 1880 வாக்கில் ! ஆனால் கோச்சைஸ் அதற்கு முன்பாகவே இரண்டு விட்டிருந்தார் ; so அவரை கதைகளுக்குள் புகுத்திட விழைந்திடும் வேளைகளில் வரலாற்று timeline -ஐ சற்றே மாற்றிக் கொள்ள வேண்டி வரும் ! அதே போல 1880 வாக்கில் கமான்சே இன மக்களோ ; செயன்னீ இன மக்களோ ஒரு ஆபத்தாக இருந்ததில்லை - அடக்கிடப்பட்டிருந்தனர் ! ஆனால் டெக்ஸ் சாகசங்களில் நாங்கள் அந்த வரையறைகளை லேசாய் மாற்றிக் கொள்வோம் ! இன்றைக்கு, இயன்ற மட்டிலும் வரலாற்றோடு ஒன்றிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம் ! முன்னாட்களில் ஜில் போனெல்லி உருவாக்கிய கதைகளுள் ஒரே யுத்தத்தில் இரு வெவ்வேறு வயதிலான டெக்ஸ் வில்லர்கள் இடம் பிடிக்கும் முரணெல்லாம் அரங்கேறியிருந்தது ! இன்றைக்கு கூடியமட்டும் அவற்றைத் தவிர்க்க முனைகிறோம் ! 

எங்கேனும் ஒரு நகருக்கு டெக்ஸ் ரயில் ஏறிப் போவதாய்க் கதை அமைக்கும் முன்பாய் - அந்நாட்களில் அந்த ஊருக்கு ரயில் வசதி இருந்ததா ? என்பதை அறிந்திட முயற்சிக்கிறோம் ! ஆனால் எல்லா நேரங்களிலும் அது வேலைக்கு ஆவதுமில்லை தான் ! உதாரணத்துக்கு, டெக்ஸை அலாஸ்காவில் சாகசம் செய்திட இட்டுப் போகும் முயற்சியில் அவரை ஸ்காக்வே நகர் வழியாகப் பயணிக்கச் செய்திருந்தோம் ! ஆனால் தங்க வேட்டை சூடு பிடித்த பிற்பாடே ஸ்காக்வே நகரே பிறந்திருந்தது ! ஆகையால் சில முரண்களுக்கு நாங்கள் கண்களை மூடிடவே தேவைப்படும் ! 

கேள்வி # 8 : டெக்ஸ் இதர மீடியாவினில் தலைகாட்டும் வாய்ப்புகள் பற்றி ? சின்னத்திரையிலோ ; வெள்ளித்திரையிலோ 'தல' தலைகாட்டுவாரா ? 

இதனைத் தீர்மானிக்க போனெல்லியில் ஒரு தனிப் பிரிவு உள்ளது ! ஆனால் இங்கு சிக்கல்கள் நிறையவே ! டெக்ஸ் ஒரு வெஸ்டர்ன் கதை ஜானர் ! காமிக்ஸ் அல்லாத இன்றைய மீடியாவினில் இந்த ஜானருக்குப் பெரிதாய் வரவேற்புகள் கிடையாது ! சில பல முயற்சிகள் நடந்துள்ளன தான் ; ஆனால் வெற்றி கிட்டியிருக்கவில்லை ! என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரேயொரு விஷயம் தான் பிரதானமானது ! ஒவ்வொரு திரைப்பட டைரக்டருமே, தனது படத்தின் கதாப்பாத்திரத்தை தன் பார்வையில் பார்த்திடவே விழைவார் ! அதனை கூட்டுவது, குறைப்பதும் தனது சுதந்திரமாய் அமைந்திட வேண்டுமென்று விரும்புவார் ! ஆனால் டெக்சின் கதாசிரியர்களான நங்கள், எங்களின் டெக்ஸாகவே அவர் எப்போதும் இருந்திட விரும்புகிறோம் ! திரைக்கு வந்த பின்னே, இத்தனை காலமாய் நாம் பார்த்து ரசித்திரா ஒரு புது டெக்ஸ்சாக பார்க்க நேர்ந்தால், அது நெருடும் தானே ? 1985-ல் இந்த சங்கடம் நேர்ந்திடவே செய்தது - "TEX and The Lord of the Abyss" திரைப்படத்தினில். ! GL போனெல்லியே இதற்கு திரைக்கதையில் இணைந்து பணியாற்றியிருந்தும், எதிர்பார்த்தது கிட்டவில்லை ! 

கேள்வி # 9 : ஒரே நேரத்தில் ஏகப்பட்ட கதைகளை எழுதி வருவது பற்றிச் சொன்னீர்களே ; தற்சமயமாய் உங்கள் மேஜையில் குவிந்து கிடப்பன என்னவோ ?

தற்போதைக்கு டெக்ஸ் மாதாந்திரத் தொடர் + இளம் டெக்ஸ் + Dampyr கதைத்தொடர்களில் நான் ஈடுபட்டுள்ளேன் ! அனைத்திலுமாய்ச் சேர்ந்து - 20 கதைகள் ஓடிக்கொண்டுள்ளன ; டெக்ஸுக்கு 15 ; பாக்கி Dampyr-க்கென ! அப்புறம் மற்ற டெக்ஸ் கதாசிரியர்கள் அனுப்பிடும் ஸ்கிரிப்ட்களை நானும், எனது அசிஸ்டண்டுமாய் வாசித்து, சரி பார்த்து, சரி செய்து வருகிறேன் ! 

ஆர்டிஸ்ட்கள் தரும் பென்சில் ஸ்கெட்ச்களும் என் மேஜையை நிறைத்துள்ளன ! ஓவியர் நமது கதை மாந்தர்களை சரி வர புரிந்து கொண்டிருக்கிறாரா ? நாம் உருவாக்கப்படுத்தியுள்ள விதங்களில் கதை பயணிக்கிறதா ? என்பதையெல்லாம் சரி பார்த்திட வேண்டிவரும் !ஒவ்வொரு பிரேமுமே ஒரு கதையின் வெற்றிக்கு ஜீவநாடியெனும் போது எங்கும் கோட்டை விடலாகாதில்லையா ? சித்திரங்களும் ; கதையும் கச்சிதமாய்க் கைகோர்க்கும் வேளையில் ஒரு கதை சுலப ஹிட்டாகிறது ! 

கேள்வி # 10 : ஓவியர்களை பற்றி பேசுவோமா ? டெக்சின் ஓவியராகிட என்ன தகுதிகள் தேவையோ ? 

இதற்கான பதில் + இன்னும் கேள்விகள் + இன்னும் பதில்கள் - என போசெல்லி அதகளம் தொடர்ந்திடும் - உபபதிவினில் or அடுத்த பதிவினில் ! இதற்கு மேலாய் டைப்படிக்க இப்போதைக்கு திராணி நஹி ! ஒன்று மட்டும் சொல்லிடலாம் - ஈ ஆள் மனுஷன் அல்லா ; தேவுடு !! Phewwwwww !!

Bye folks...see you around ! அர்ஸ் மேக்னா அழைக்கின்றது ! Have a fun Sunday !!

157 comments:

 1. கோழைகளின் பூமி - நன்று.

  ReplyDelete
 2. //// இடைப்பட்டுள்ள நமது ஆன்லைன் விழாவுக்கான 3 இதழ்கள் மீது இன்னொரு கண் - ///

  இதன் மீதும் நம் கண்களும் இருக்கட்டும்...🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

  ReplyDelete
 3. Replies
  1. காலையிலே இது சகஜம் தானே தல..

   Delete
 4. ஆஹா..

  ஜாம்பவான் மௌரோ போசெல்லியுடன் நேரில் பேசியது போலவே இருக்கிறது.! மீதமிருக்கும் கலந்துரையாடலுக்காக காத்திருக்கிறோம்.!

  ReplyDelete
 5. ஹைய்யா புதிய பதிவு......

  ReplyDelete
 6. அன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் செந்தில் மாதேஷ் ஜி!

   Delete
 7. மௌரொ போசெல்லியின் டெக்ஸ் கதைகள் ரொம்பவே பிடித்தமானது.அவரது பேட்டி, மிகவும் நெருக்கமானவருடனான நேரடியான சந்திப்பைப் போல் அமைந்துவிட்டது

  இன்னொரு பகுதியையும் விரைவில் வெளியிடுங்கள் சார்.

  ReplyDelete
 8. வாவ் ஆன்லைன் புத்தக விழாவில் மூன்று புத்தகங்கள் களம் இறங்குகின்றனவா அட்ஹாசம் 😍 (மரணமுள் + லக்கிலுக் + ?)

  ReplyDelete
 9. எலக்ட்ரானிக் டைப்ரைட்டரா? 🤔

  ReplyDelete
 10. Replies
  1. தெய்வமே - டைப்படிக்க அவகாசம் ப்ளீஸ் !

   Delete
 11. காலை வணக்கம் நண்பர்களே ஃ☺️☺️😊

  ReplyDelete
 12. டெக்ஸின் விக்கிபிடியா பக்கத்தில் அவரின் முதல் எதிரியாக குறிப்பிட்டுருப்பது மொபிஸ்டோ. அந்த கதைகளை எப்போது வரும் என்ற ஏக்கம் நிறைய. அவை காதில் பூ சுற்றும் கதைகள் என்றால் இருளின் மைந்தர்கள், மரணமுள் , மரணத்தின் நிறம் பச்சை, சைத்தான் சாம்ராஜ்யம், இருளோடு யத்தம் ... என ரோஜா, செம்பருத்தி, தாமரை என பல பூக்களை காதில் வைத்து ரசித்திருக்கோம். பட்ஷா படம் பார்க்காத ரஜினி ரசிகர்கள் போல டேக்ஸ் ரசிகர்களின் நிலை உள்ளது.

  ReplyDelete
 13. ///கலைவடிவங்களில் ; குறிப்பாய் இசைத்துறையில் உள்ளோருக்கு இது நன்றாகவே புரியும் என்பேன் ; ஒவ்வொரு நோட்ஸிலும் இசையமைப்பாளர் யோசித்துக் கொண்டிருக்க மாட்டார் ; திடீரென தோன்றும் inspiration வழிநடத்திடும் அவரை !///

  சூப்பர்!!! 👌👌👌

  ReplyDelete
 14. //And on the topic of கி.நா.ஸ் - ஒரு கனவு உள்ளுக்குள் கடந்த சில வாரங்களாகவே துளிர் விட்டு வருகிறது ! ஒரு ரொம்ப ரொம்ப வித்தியாசப் படைப்பு கண்ணில் பட்டது ! பணியினில் பெண்டை நயமாய்க் கழற்ற வல்லது என்பது பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது ! ஆனாலும் அதை எப்படியேனும் தமிழுக்கு கொணரும் ஆசை ததும்புகிறது ! //

  எனக்கும் ததும்புகிறதே.

  ReplyDelete
 15. வாவ்...இன்னமும் தொடர்கிறதா சார்..சூப்பர்...

  ReplyDelete
 16. // ஆறுக்கு ஆறு கி.நா. தேர்வுகளையும் இந்த போனெல்லி வரிசையிலிருந்தே அமைத்திடும் வாய்ப்பும் பிரகாசமோ ? // மிகப் பிரகாசம்

  ReplyDelete
  Replies
  1. ஒரே புக்காக , ஹார்ட்கவரில், இன்னும் சிறப்பாக இருக்கும். அனைத்தும் போனெல்லி என்பதால் சாத்தியமே!!!

   Delete
  2. பைக்குள் கை விட எல்லோருக்கும் சாத்தியமாகிடுமா ? ஒரே நேரத்தில் அத்தனையிலும் பணியாற்றத் தான் சாத்தியமாகிடுமா ? என்ற கோணத்தில் லைட்டாக யோசித்தும் பார்க்கலாமே ?

   Delete
  3. கனவு காணூங்கள் என்று அப்துல் கலாம் சொல்லியுள்ளார் ஹி..ஹி.. ஹி..

   Delete
  4. பொசெல்லி அவர்களின் பேட்டியை மறுக்கா மறுக்கா படித்து பார்த்தால் தங்களுக்கு புரியும், ஒரே நேரத்தில் 20 கதைகளில் பணியாற்றும் போது, அத்தனையிலும் பணியாற்றிட தங்களுக்கு சாத்தியமே. Yes you can 😂👏👏👏

   Delete
  5. பதிவின் நான் விடைபெறுவதற்கு முன்பான வரியை மறுக்கா மறுக்கா வாசித்தும் பார்ப்போமே ?

   Delete
  6. நான் கூறியது ஹாஸ்யமாக மட்டுமே. தங்களின் உழைப்பின் பரிமாணம் பற்றி மிகவும் உணர்ந்தவர்கள் நாங்கள் 👍

   Delete
 17. ஆன்லைன் புத்க்க திருவிழாவில் மூன்று புத்தகங்கள் சூப்பரோ சூப்பர்..

  வாட்ஸ் அப் குழுவில் போட்டிகளை வைத்து அந்த மூன்று புத்தகங்களையும் பரிசாக பெற்ற சிலரில் நானும் ஒருவன் என்பதில் இன்னமும் ஐயம் வெரி ஹேப்பி்.

  ReplyDelete
 18. //ஒருமுறை ஒரு டெக்ஸ் மினி சாகசத்துக்கு கதை எழுதிக்கொண்டிருந்தேன் ; அதற்கான ஆர்ட்டிஸ்ட் ரொம்பவே மெதுவாய் படம் போட, எனக்குப் பொறுமையின்றி பக்கம் 10 -ல் நிறுத்தி விட்டு வேறு பணிக்குள் புகுந்து விட்டேன் ! ரொம்ப காலம் கழித்து ஆர்ட்டிஸ்ட் மீத ஸ்கிரிப்ட்டைக் கேட்ட போது - "ஆண்டவா - இவ்வளவு காலம் கழித்து அந்தக் கதையை எப்படிக் கையாள்வதோ ?" என்ற கலக்கத்தோடு அமர்ந்தேன் ; ஆனால் எனது உள்ளுணர்வுகள் அந்தக் கதையை அடுத்த 2 மணி நேரங்களுக்குள் எடுத்துச் சென்று பூர்த்தியடையச் செய்தன ! என்னையும் அறியாமலே கதாபாத்திரங்கள் தாமாகவே கதையை வழிநடத்திடுவதை உணர்ந்தேன் ! எனக்காக வேறு யாரோ எழுதித் தந்தது போல் அன்றைக்கு உணர்ந்தேன் ! கலைவடிவங்களில் ; குறிப்பாய் இசைத்துறையில் உள்ளோருக்கு இது நன்றாகவே புரியும் என்பேன் ; ஒவ்வொரு நோட்ஸிலும் இசையமைப்பாளர் யோசித்துக் கொண்டிருக்க மாட்டார் ; திடீரென தோன்றும் inspiration வழிநடத்திடும் அவரை ! எங்களை போல காமிக்ஸ் உருவாக்கும் சாமான்யர்களுக்கும் இதுவே நடைமுறை ; கதைகள் திடீரென தாமரை உயிர் கொண்டு ஓட்டமெடுப்பதுண்டு ! //
  சார் நச் வரிகள்....வாழ்வின் வழியில் ஒரே மாதிரி வெற்றி தொடர்வது ....எனது முயற்ச்சி...சாதனை என்பதில் அர்த்தமில்லை என்பதை மெய்யாய் உணர்ந்தேன்....தேடினால் செந்தூரான் துணையின்றி என்னவாயிருக்கும்....
  நமது காமிக்ஸே எனது சந்தோச உற்ச்சாகத்துக்கு...புரிதல்களுக்கு என்பதில் ஐயமில்லை...வழி செந்தூரான் என்றால் வழிகாட்டி ஆசிரியரான தங்களைத் தவிர யார்...எனது உற்ச்சாக ஊற்றே நீங்கள்லாம்.....அருமையான பதிவு...சீக்கிரம் தொடரவும் நம்ம மெய்யான டெக்ஸின் வார்த்தைகளை

  ReplyDelete
 19. ஒன்றே ஒன்றை சேர்க்க சொல்லுங்க சார்..எங்க சொல்லிப் பாரு மீண்டும் என கடூரமாய் துவைத்தெடுப்பாரே...அந்தக் காட்சிகள் குறையுது....பழைய கதைகளில் தேடித் தேடி படிப்பதே இக்காட்சிகளதான்

  ReplyDelete
 20. // டைப்பட்டுள்ள நமது ஆன்லைன் விழாவுக்கான 3 இதழ்கள் மீது இன்னொரு கண் - என all கண்ஸ் ஒரே பிசி ! //
  மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி......

  ReplyDelete
 21. // ஆறுக்கு ஆறு கி.நா. தேர்வுகளையும் இந்த போனெல்லி வரிசையிலிருந்தே அமைத்திடும் வாய்ப்பும் பிரகாசமோ ? //
  இதைவிட ஆனந்தம் வேறு என்ன வேண்டும் சார்......

  ReplyDelete
 22. // அவகாச luxury வாய்க்கும் தருணத்தில் சத்தமின்றி இதனை நனவாக்கிட முனைய நினைத்துள்ளேன் ! //
  ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்...

  ReplyDelete
  Replies
  1. அந்த luxury கனவாகவே தொடர்கிறது சார் - 2021 -ன் ஏப்ரல் (லாக்டௌன் மாதம்) நீங்கலாய் ! என்றைக்கோ பணியாற்றும் மனநிலை மிஸ்ஸிங் !

   Delete
  2. புரிகிறது சார்...,அதே நேரத்தில் கோழைகளின் பூமி போன்ற நல்லதொரு கி.நா வை எங்களுக்கு அளித்ததற்கு மீண்டும் ஒரு நன்றிகள்,கோ.பூ தலைக்குள் ஏறி சில நாட்கள் நர்த்தனம் ஆடி விட்டது சார்...

   Delete
 23. விஜயன் சார், நீங்கள் போனெல்லி வரிசையில் இருந்து இதுவரை வெளியிட்டுள்ள முடியா இரவு, என் சித்தம் சாத்தானுக்கு, கனவுகளின் கதை, முடியா மூடுபனி, நித்திரை மறந்த நியூயார்க், கதை சொல்லும் கானகம், பனியிலொரு குருதிப்புனல், கோழைகளின் பூமி என்று அனைத்தும் மிகச்சிறந்த கதைகளாக அமைந்து விட்டன. எனவே, அத்தொடரிலிருந்து மேலும் பல நல்ல கதைகளை வெளியிடுங்கள் சார்.

  ReplyDelete
 24. தோர்கல மொத்தமாக போட சொல்லி ஒரு கோரிக்கை வந்துச்சே...பார்த்தாச்சுங்களா...

  ReplyDelete
  Replies
  1. நம்ம பழனி வெறும் 100 ரூபாய்க்கு தனித்தனி இதழ்களை மொத்தமாய் tபைண்ட் பண்ணி அழகாய்த் தந்து வருவதை பாத்தாச்சிங்கள ?

   Delete
 25. Replies
  1. என்னாது மெபிஸ்டோ கிராஃபிக் நாவல் ஆ??????

   Delete
 26. // நாம் செல்லவுள்ள கதையின் நாயகன் நமக்குள் குடியிருக்க வேண்டியது தான் அடிப்படைத் தேவை ! //
  நூற்றில் ஒரு வார்த்தை...

  ReplyDelete
 27. 1960-களில் மெபிஸ்டோ மீள்வருகை செய்வது உற்சாகத்தைக் கொணரும் சம்பவங்களாய் அமைந்தன ! கடைசியாய் 2002-ல் க்ளாடியோ நிஸ்ஸியின் கைவண்ணத்தில் வந்த மெகா மெபிஸ்டோ சாகசமானது ஆல்பம் 501 to 504 வரை ஓடியது ! அதற்கொரு தொடர்ச்சியை வழங்குவது அத்தனை சுலபமான காரியமல்ல ! ஆகையால் மெபிஸ்டோவின் மைந்தன் யமாவை களமிறக்கும் யோசனை உதித்தது எனக்கு ! "யமாவின் முத்திரை" ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தில் சமீபமாய் உருவானது இந்தப் பின்னணியில் தான் !//
  சார்..சார்...தங்கத் தட்டு

  ReplyDelete
 28. Replies
  1. ஆமாம் சார்...யோசியுங்கள்..ஆனால் தொகுப்பு தொகுப்பாக...

   Delete
 29. எங்கேனும் ஒரு நகருக்கு டெக்ஸ் ரயில் ஏறிப் போவதாய்க் கதை அமைக்கும் முன்பாய் - அந்நாட்களில் அந்த ஊருக்கு ரயில் வசதி இருந்ததா ? என்பதை அறிந்திட முயற்சிக்கிறோம் !

  Oooops! !!!! ஒரு கதை உருவாக சுமாராக மூன்று வருடங்கள், எவ்வளவு தரவுகள், எத்தனை மெனக்கெடல்கள், சர்வதேச தரத்திலான இக்கதைகளை தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பு எத்தனை மாநிலத்தவருக்கு இந்தியாவில் கிடைத்திடப் போகிறது. Thank you very much editor sir,

  ReplyDelete
 30. // ஒன்று மட்டும் சொல்லிடலாம் - ஈ ஆள் மனுஷன் அல்லா ; தேவுடு !! Phewwwwww !! //
  உண்மைதான் சார்,பேச்சின் சாரம் ஒரு பிரம்மாண்டத்தை கண்முன் நிறுத்துகிறது...

  ReplyDelete
 31. // இன்னமும் 2 டெக்ஸ் வறட்சி மாதங்கள் காத்திருக்க, செத்தார்கள் நம்மவர்கள் !! இது தான் யதார்த்தம் //
  ஆகவே வருங்காலங்களில் டெக்ஸ் ஏதேனும் ஒருவகையில் நமது மாதாந்திர வரிசையில் இடம்பிடித்தால் விற்பனைக்கு நலம் சார்...
  சில நண்பர்கள் சொல்வது போல் தொடர்ந்து டெக்ஸ் வெளிவருவது சலிப்பூட்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை...
  தங்கமுட்டை,வாத்து என்று சொல்லிக் கொண்டு டெக்ஸை குறிப்பிட்ட அளவில் கட்டுப்படுத்துவது உடன்பாடில்லா விஷயம்...
  எட்டப்பட வேண்டிய இலக்கும்,போக வேண்டிய இலக்கும் மிகப்பெரியது....
  அதகளம் செய்யும் டெக்ஸ் வரிசை தொடர்கள் இதையே நமக்கு சொல்கின்றன...

  ReplyDelete
  Replies
  1. வரிக்கு வரி வழிமொழிகிறேன்...

   Delete
 32. தோர்கல் வூடு கட்டி அடிக்குது சார்...

  ReplyDelete
  Replies
  1. சும்மா பிரித்து மேய்ந்து விட்டது.

   Delete
  2. எஸ்...நாமும் அந்த மாய லோகத்தில்...

   தோர்கல் தோர்கல் தான்...

   Delete
 33. 2மாதங்கள் டெக்ஸ் இல்லா வறட்சி மாதங்கள். அப்ப ஆன்லைன் ஸ்பெஷல் 3 புத்தகங்களில் டெக்ஸ் இல்லையோ. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாதம் தான் கலர் டெக்ஸ் இருக்கே

   Delete
  2. புத்தகத் திருவிழாவில் சஸ்பென்ஸ் இதழ்களில் ஒரு இதழ் கண்டிப்பாக டெக்ஸ் ஆக இருக்கும் என நம்புகிறேன்.

   Delete
  3. இருப்பின் மிக மிக மிக சிறப்பு....

   Delete
 34. மாதம் ஒரு டெக்ஸ் வரும் படி வருங்கால காமிக்ஸ் காலண்டரை அமைத்தால் நன்றாக இருக்கும் விஜயன் சார்.

  ReplyDelete
  Replies
  1. அதே...அதே...அதே...சார்...:-)

   Delete
  2. அதே...அதே...அதே...சார்...:-)

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. நமது விற்பனையாளர்கள் காமிக்ஸ் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான தூண். டெக்ஸ் இருந்தால் அவர்களின் விற்பனை சிறக்கும் என்று எண்ணும் பட்சத்தில் மாதம் ஒரு டெக்ஸ் அவசியமாகின்றது. இதன் மூலம் நமது காமிக்ஸ் பல பழைய மற்றும் புதிய வாசகர்களை சென்றடையும். எனவே மாதம் ஒரு டெக்ஸ் காலத்தின் கட்டாயம். எங்களின் ஆதரவு உண்டு

   Delete
 35. கோழைகளின் பூமி :

  ஒரே ஊர்.. ஆனால் வெவ்வேறு காலகட்டங்களில்..
  ஒரே கதாப்பாத்திரங்கள்.. ஆனால் வெவ்வேறு பரிணாமங்களில்..

  இரு காலகட்டங்களிலும் அங்கு நடக்கும் சம்பவங்களை மாற்றி மாற்றி காட்டி,., இருப்பவன் இல்லாதவன் இருசாராருக்கும் வாழ்க்கையின் மீதான பயம் ஏதோவொரு வகையில் இருக்கத்தான் செய்கிறது என்று சொல்லியிருக்கிறது கோழைகளின் பூமி.!

  இக்கதையை கொஞ்சம் ஊன்றிப்பார்த்தால் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக பணமே இருக்கிறது.!
  பிராவிடென்ஸ், கடன் கொடுத்து நிலங்களை கையகப்படுத்தி சொத்து சேர்க்க ஆசைப்படுவதும் பணத்திற்காக..
  ஹேசலின் தந்தை ஜோ, முழு விருப்பம் இல்லாமல் பிராவிடென்ஸுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதன் காரணமும் பணமே. (மற்ற பண்ணையாளர்களைவிட ஜோவிற்கு கூடுதல் சலுகை கிடைப்பதே அதற்கு சான்று.! பிராவிடென்ஸை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இனிமேல் உன்னைப்பார்க்க வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு அடுத்தமுறையும் போய் நிற்பது அந்த சலுகைக்காகத்தான்.!)

  ஹேசலை விட்டு ஜூடித் பிரிவதும் அதே காரணத்திற்காகத்தான்.! நாலு காசு சம்பாதிப்பவனை நம்பி என் வாழ்க்கையை ஒப்படைக்கப் போகிறேன் என்று ஜூடித் ஹேசலிடம் சொல்வதே அதற்கு சான்று.!
  கிட்டதட்ட ஹேசலின் நிலையை ஒத்திருக்கும் ஐசக்கையும், ஜூடித்தின் நிலையை ஒத்திருக்கும் ரெபேக்கா பிரிவதும் அதே காரணத்திற்காகத்தான் இருக்க வேண்டும்.. வருமானம்.. அதாவது பணம்.!
  கதையின் ஆரம்பத்திலேயே கொஞ்சம் கம்யூனிச சித்தாங்களையும் தெளித்து இருக்கிறார்கள்.!
  விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதை தவிர வேறெதுவும் தவறாக செய்யாத பிராவிடென்ஸை தங்களை சுரண்டித் தின்று, அடிமைப்படுத்துகிறாள் என்றும் , வெட்டுக்கிளிகள் இயற்கையாக ஏற்படுத்தும் அழிவிற்குக்கூட பிராவிடென்ஸ்தான் காரணம் என்றும் ஹேசல் குற்றம் சாட்டுவதும், தொடக்கத்தில் வரும்.. "ஒருவருக்குத்தான் கோப்பை என்றால் மற்றவர்கள் ஏன் ஓடவேண்டும்?" என்ற கேள்வியும் ஹேசல் முதலாளித்துவத்திற்கு எதிரானவனோ என்று நினைக்க வைக்கிறது.!

  அத்தோடு, ஜூடித், ரெபேக்கா போன்ற பெண்கள், பணமில்லாத காரணத்தினால்தானே நம்மை கழட்டிவிட்டார்கள்., நம்மிடம் பணமில்லாமல் போவதற்கு காரணம் பிராவிடென்ஸ்தானே காரணம் என்ற எண்ணத்தில்தான் ஹேசலும் ஐசக்கும் அவளை வதம் செய்கிறார்கள்.!.

  ஹேசலோ ஜூடித் வீட்டு மரத்தை கொளுத்தியும் பிராவிடென்ஸை கொன்றும் தன் காதல் தோல்வியின் ஏமாற்றத்தால் உண்டாகும் வெறியை தீர்த்துக்கொள்கிறான்.! ஊரைவிட்டு வெளியேறி ஒரு டிடெக்டிவாக வாழ்க்கையை உயர்த்திக்கொள்கிறான்.!

  அடிப்படையில் கோழை என்றாலும் ரெபேக்கா ஏமாற்றியதால் உண்டான ஆத்திரமும், ஹேசலின் துர்போதனைகளும்தான் பிராவிடென்ஸின் கொலையில் ஐசக்கையும் ஈடுபட வைக்கின்றன.! ஆனாலும் ஹேசலைப்போல் ஐசக்கின் ஆழ்மனம் அவ்வளவு எளிதில் காதலியின் துரோகத்தை மறக்க தயாராக இல்லை.!
  ஹேசலின் போதனையால் அத்தனைக்கும் காரணம் பணம்தான் என்று ஐசக்கின் மனதில் பதியவைக்கப்பட்டுவிட்டது. அதனால்தான் ஐசக், பணத்திற்காக பிராத்தலில் ஈடுபடும் பெண்களை தேடிப்பிடித்து தொடர்கொலைகள் புரிகிறான்.!
  டிடெக்டிவாக அதே ஊருக்கு திரும்பிவரும் ஹேசல், கொலை நடந்திருக்கும் விதத்தை வைத்து கொலையாளி யார் என்பதை எளிதில் யூகித்துவிடுகிறான். ஊருக்குள் நுழைந்ததும் பழைய கோழைத்தனமும் பயமும், இயலாமையின் ஆத்திரமும் ஹேசலை ஆட்டிப்படைக்க தொடங்கியிருக்கலாம் (வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன). ஐசக்கை கொன்றுவிட்டால் தன்னை துன்புறுத்தும் நினைவுகளில் இருந்து விடுபட்டுவிடலாம் என்று கருதியே ஹேசல் ஐசக்கை சுடுகிறான்., தனக்கு இந்த கொலை ருசியை காட்டிய நண்பன், தற்போதைய தன்னுடைய வேட்டைக்கு ஒத்துழைப்பான் என்று நினைத்த நண்பன், அதற்கு எதிராக பேசுவதோடு, தடையாக இருப்பானோ என்ற ஐயத்தில்தான் ஹேசலைக்கொல்ல துப்பாக்கியை எடுக்கப்போகிறான் ஐசக்.. ஆனால் ஹேசல் முந்திக்கொள்(ல்)கிறான்.!
  ஹேசலுக்கு மனைவி என்று யாருமே இல்லை, அவன் எதிர்முனையில் யாருமே இல்லாமல்தான் போனில் பேசுகிறான் என்பது என் யூகம்.! தனிமையின் வலியும் வேதனையும் உனக்கு நன்றாகத் தெரியும் என்று ஐசக் சொல்வதில் இருந்து ஹேசலுக்கு குடும்பம் எதுவும் கிடையாது என்று யூகிக்கலாம்! அதுமட்டுமின்றி இந்த ஊரைவிட்டு சீக்கிரம் கிளம்பிடுவிவேன் என்று திரும்ப திரும்ப ஹேசல் போனில் பேசுவது தன் உள்மனதோடுதான் என்பது என் யூகம்.!

  பிராவிடென்ஸின் மனமாற்றத்திற்கு காரணமாக நான் நினைப்பது வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லால் இருந்த அவளுக்கு ரத்த உறவாக தனக்கு மகன் ஒருவன் இருக்கிறான் என்று தெரியவருவதே.! ஆனால் ஹேசலுக்கோ, மற்றவர்களுக்கோ அது இறுதிவரை தெரிவதேயில்லை.!

  இந்த கி.நா க்களில் ஒரு விசித்திரம் என்னவென்றால், ஒவ்வொரு சம்பவத்திற்கும் நாலைந்து விதமான யூகங்களும் அத்தனைக்கும் பொருத்தமான வியாக்கியானங்களும் இருப்பதுதான்..!

  கோழைகளின் பூமி - கோழைகளின் பூமி

  ரேட்டிங் 9/10

  ReplyDelete
  Replies
  1. மற்றுமொரு மாறுபட்ட பார்வை,மாறுபட்ட கோணம்,வியப்பு யாதெனில் இதுவும் அழகாய் பொருந்திப் போவதே...

   Delete
  2. கதாசிரியர் சொல்லும் கதையை மட்டும் அப்படியே தேமே என்று உள்வாங்கிக் கொண்டுவிடாமல், வாசகர்களையும் சிந்திக்கவைத்து கதையில் விடுபட்டிருக்கும் சில சூட்சுமப் பக்கங்களை நிரப்புவதே இதுபோன்ற கி.நா'க்களின் சிறப்பு!!

   அருமையாக உணர்ந்து, உள்ளார்ந்து படித்திருக்கிறீர்கள் KOK! அதை விமர்சனமாக வடித்திருக்கும் விதமும் செம!!

   க்ளாமாக்ஸில் ஐசக் காரை நோக்கி நடப்பதின் உள் அர்த்ததை முழுவதுமாய் புரிந்துகொண்டு எழுதியிருப்பது - அருமை!! இதைப் படித்த பிறகுதான் எனக்கும் 'அட ஆமால்ல?!!' என்று தோன்றியது!!

   Delete
  3. அருமையான விமர்சனம். பாராட்டுக்கள்.

   Delete
  4. அடேங்கப்பா விமர்சனம்..

   Delete
  5. @ KoK

   ஈ. வி. அவர்கள் ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் ஏமாற்றங்கைளை அழகாக சொன்னார் என்றால், நீங்கள் ஒவ்வொருவரின் பணத்தாசைப் பற்றி சொல்லி அசத்தி விட்டீர்கள். செம, செம.

   Delete
 36. தோர்கல் கதை சிறந்த சம்பவம் (Forever Fan)
  தோர்கலுக்கான தொகை சற்று கிறுகிறுப்பு....

  ReplyDelete
 37. எடிட்டர் சார்,

  'கோழைகளின் பூமி' கி.நா விற்பனையிலும் சாதித்துவருவது மிகுந்த மகிழ்ச்சியயையும், நம்பிக்கையும் அளிக்கிறது! எதிர்காலத்தில், வருடத்திற்கு 6 கி.நா'க்களாவது வந்தால் ரொம்பவே செமயாக இருந்திடும்!

  மெளரோ போசெல்லியின் பேட்டியில் குவிந்து கிடக்கும் தகவல்களில் பல பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன! குறிப்பாக, ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கதைகளில் பணியாற்றி எல்லாவற்றையுமே நேர்த்தியாக, கோர்வையாகப் படைப்பதெல்லாம் - அம்மாடியோவ்.. அபாரம்!!

  'டெக்ஸ் கதைகளுக்கே இத்தனை உழைப்புகள் அவசியமாகிறதென்றால்... அப்ப டைகர் கதைகளுக்கு?!!' - என்ற ஆச்சரியமும் எழாமலில்லை!

  போசெல்லியின் பேட்டியை கோர்வையாகத் தமிழாக்கம் செய்து, கஷ்டப்பட்டு டைப்பி - எங்களுக்கு அளித்தமைக்கு எங்களது நன்றிகள் பல!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. // போசெல்லியின் பேட்டியை கோர்வையாகத் தமிழாக்கம் செய்து, கஷ்டப்பட்டு டைப்பி - எங்களுக்கு அளித்தமைக்கு எங்களது நன்றிகள் பல! //

   +1
   Well said.

   Delete
 38. /// வழக்கமாய் எந்தவொரு தருணத்திலும் நான் 15 முதல் 20 கதைகள் வரைக்கும் ஒரே வேளையில் துவக்கி எழுதிக் கொண்டிருப்பது வாடிக்கை /// ஓகோ... இது தான் விசயமா..

  ReplyDelete
 39. இளம் டெக்ஸ் ரேஞ்சர் டெக்ஸை விட உண்மையிலேயே ஒருபடி மிகவும் கவர்ந்து விட்டார். வரும்காலத்திலும் இப்படி 4 பாகங்களையும் ஒன்றாக முழுநீளக் கதையாக வெளியிட்டால் அருமையாக இருக்கும்.ஒரே குறை இள வயதிலாவது கடுவன் பூனையாட்டம் இல்லாமல் ஆசாமிக்கு கொஞ்சம் ரொமான்ஸ் மூட்டும் இருந்தால் தேவலாம்.

  டெக்ஸ்-கார்சன் அறிமுகம் நிகழும் கதை ஏற்கனவே இட்லியில் இருப்பின் கண்டிப்பாக முன்னுரிமை கொடுத்து வெளியிடுங்கள்.

  ReplyDelete
 40. பதிவுக்கு நன்றி. நீண்ட பதிவு.

  ReplyDelete
 41. தோர்கலுக்கொரு தோர்கல்,
  மந்திர இடைக்கச்சையை மீட்கும் படலம்...

  கதிரவனின் கத்தி,
  ஓர்கோப் பிரபுவை வெல்லும் படலம்...

  வசனங்கள் அழகு,
  "அடடா...எல்லா ஆண்களுமே இவரைப் போலவே இருந்து விட்டால்...! ஒருநாள் நீயும்,அவரைப் போன்றவனாகி விட்டால் அற்புதமாக இருக்கும் ஷென்கோ !"

  "நல்லவர்கள் கெலிப்பதெல்லாம் கதைகளில்தான் என்பதை என்றைக்குமே நீ கற்றுக் கொள்ள மாட்டாயா தோர்கல் ?"

  ஒரு அழகிய அகதி,

  "ஏனோ உனக்கு எப்போதுமே அடங்காத இரத்த தாகம் ! இந்த வெறிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்காவிடின் ஆண்டவன் தண்டிக்காது விட மாட்டார் !
  இருக்கலாம் ! நீயும் உன் இரக்க சிந்தைக்காகத் தண்டிக்கப்படலாம் ! ஆனால்,ஆண்டவனால் அல்ல !"

  தடம் மாறிய தலைவன்,

  அப்பப்பா ஆரிஸியா குழந்தைகளும் எதிர்கொள்ளும் சோதனைகள்தான் எத்தனை,எத்தனை...
  கணநேரத்தில் மனம்மாறி கொடுரமாய் நடந்து கொள்ளும் கிராம மக்களின் மனப்பான்மை,நெருக்கடி வந்தாலே எல்லா மக்களும் இபடித்தானோ ?!

  தலை காப்பான் தனயன்,

  ஆரிசியாவை சிறுவன் ஜோலன் எப்படி மீட்பான்,இது சாத்தியமா என்ற சிந்தனையில் பயணிக்கும்போது ஜாக்ஸின் உதவி கிட்டுமாறு கதையின் முடிச்சு அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு...
  என்ன மாதிரியான கதை உத்தி இது,யப்பா சான்ஸே இல்லை,சின்ன ஜோலன் கடந்தகால சின்ன ஜோலனிடம் போய் சம்பவங்களை மாற்றிவிட்டு,திரும்பவும் நிகழ்காலத்திற்கு வந்து,திரும்பவும் பெரிய ஜோலனை பார்த்து விட்டு எதிர்காலத்திற்கு போய் அங்கேயும் பெரிய ஜோலனை பார்த்து விட்டு,சின்ன ஜோலன் அங்கேயே இருக்க,திரும்ப பெரிய ஜோலன் போய் ஜாக்ஸை சந்தித்து நிகழ்வுகளை படித்தறிந்து விட்டு, மறுக்கா தோர்கல்,ஆரிஸியாவை காப்பாற்றப் போய் விட்டு,சம்பவங்களை திரும்பவும் மாற்றி அமைச்சிட்டு,மறுக்கா ஆரிஸியாவோட நிகழ்காலத்திற்கு வந்துவிட்டு,மறுக்கா மறுக்கா குட்டி ஜோலன் சம்பவம் தொடங்கிய கடல் பயணத்திற்கே வந்து,அங்கேயும் ஒரு பெரிய சம்பவத்தை மாத்திட்டு,இடையே பெரிய ஜோலன் தலைமை கண்காணிப்பாளரின் யோசனையை ஏற்று 30,000 ஆண்டு பின்னோக்கி போய்விட்டு,என்ன சார் நடக்குது இங்கே,இல்லை தெரியாமத்தான் கேட்கறேன்,கதாசிரியர் மனுஷனா இல்லை தெய்வமா சார்... மொத்தத்தில் ஆரிஸியா குடும்பத்தோட Safe,நம்ம தோர்கல்தான் எங்கியோ போயிட்டாரு...இந்த தோர்கலை பிரபஞ்சத்தை சுத்தறதே வேலையா போச்சி,ஆ ஊன்னா டீ கடைக்கு பிற மாதிரி பிரபஞ்சங்களுக்கு இடையே பயணம் போயிடறாரு...

  ஒரு சந்தேகம் (இடையில் அப்பப்ப நிறைய சந்தேகம் வரும்கிறது வேற விஷயம்) ஜாக்ஸிடம் குட்டி ஜோலன் டிராவலரை கைப்பற்றி ஓடுகிறான்,அடுத்து ஓடிவரும் ஜாக்ஸை பின்னிருந்து பெரிய ஜோலன் தாக்குகிறான்,அடுத்து குட்டி ஜோலன் டிராவலர் மூலம் பயணித்து மீண்டும் பெரிய ஜோலனை பார்க்கப் போகிறான்.
  அப்ப குட்டி ஜோலன் எதிர்காலத்திற்கு போய் விடுகிறான்,கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு அப்பால்,பின்னர் பெரிய ஜோலனின் அறிவுரைப்படி மீண்டும் பெரிய ஜோலனையே பார்க்கச் செல்கிறான்...
  அங்கு சின்ன ஜோலனின் மூலம் பெறும் டிராவலர் மூலம் மீண்டும் பயணமாகும் பெரிய ஜோலன் 1 நிமிடம் என்று கெடு சொல்லிவிட்டு,அடுத்த நிகழ்வில் ஜாக்ஸை சந்திக்கிறான்(அங்கே சின்ன ஜோலன் அப்போது இல்லை),அவர் மனதைப் படித்தறிந்துவிட்டு மீண்டும் ஆரிசியா,தோர்கலைக் காக்க வேறிடம் செல்கிறான்...
  இங்கே கொந்சம் புரிதல் குழப்பம் நிகழ்கிறதே,நிகழ்வுகளை ஒருங்கிணைப்பு செய்ய முடியவில்லையே ?!
  ஏப்பா நான் சரியாத்தான் பேசறனா ???!!!

  என்ன மாதிரியான உலகமிது,கற்பனைகளை கட்டவிழ்த்து விட்டு நம்மை மாய உலகில் சஞ்சரிக்க வைக்கிறார் கதாசிரியர்...
  இதற்காகவே கதாசிரியரை கட்டிப் பிடித்து வாழ்த்தத் தோன்றுகிறது...
  சித்திரங்கள் முத்திரை பதிக்கின்றன,கண்களுக்கு,குளுமையும்,பசுமையுமாய் காட்சிகள் விரிகின்றன...
  நாமெல்லாம் தாத்தா,பாட்டிகளிடம் கதை கேட்டு வளர்ந்த தலைமுறை தானே...
  ஒரு ஊர்ல ஒரு இராஜா இருந்தாராம்...அப்படின்னு ஆரம்பிச்சா போதும் நாம் கற்பனை உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுவோம்...
  அம்புலிமாமாவுடன் கையைப் கோர்த்து நடந்தவர்கள்தானே நாம்...
  இவை எல்லாம் போதாதா தோர்கலின் உலகத்தில் நம்மை கட்டி இழுத்துச்செல்ல...
  ஜால வித்தைகள் காட்டும் மாய உலகினில் ஓர் அற்புதப் பயணம்...

  நார்னியா,ஹாரிபாட்டர்,ஆலிஸ் இன் வொண்டர்லேண்ட் படங்களை பார்த்து வியந்தவர்களுக்கு இந்த உலகம் மற்றொரு தரிசனத்தை அளிக்கிறது...
  நம் சிறுபிராயத்து அலைவரிசையில் ஒத்திசைந்து கதை நகர்வதால் லாஜிக் கண்ணாடிகளை தாரளமாக கழட்டி ஓரமாக வைத்து விடலாம்,அப்படி செய்தால் மட்டுமே இந்த மாய உலகம் நம்மை ஈர்க்கும்...

  இறுதிப் பாகத்தின் நிகழ்வுகள் டைம் டிராவலை அடிப்படையாக வைத்து தமிழில் "24" என்ற திரைப்படத்தில் காட்சிகளை நினைவூட்டின...!!!

  எமது மதிப்பெண்கள்-10/10.
  (மதிப்பீடுகளைத் தாண்டி இதயத்தை கவர்ந்த தோர்கலுக்கு இந்த மதிப்பெண்கள் குறைவே)

  ReplyDelete
  Replies
  1. செம விமர்சனம் ...

   Delete
  2. நண்பரே உங்கள் விமர்சனம் படித்த பிறகு கதாசிரியருக்கு சளைக்காமல் நீங்களும் என்னை குழப்பம் அடையச்செய்கிறீர். சிறப்பு மிகச் சிறப்பு.வாழ்த்துகள்

   Delete
 42. டெக்ஸ் பிதாமகரின் பேட்டி அருமையோ அருமை சார்...மீண்டும் அடுத்த பதிவில் தொடரப்போவதை நினைத்தாலே "குஷி " யாக உள்ளது..

  நாமும் இளம் டெக்ஸை தொடர்ந்து முயற்சிக்கலாமே சார்...இடைவெளியின்றி .அதே சமயம் மூன்று நான்கு தொகுப்புகளாக இணைந்து இளம் டெக்ஸ் வருவதே அனைவருக்கும் பிடித்தமானது என்பதும் உண்மை..எது எப்படியோ வழக்கமான டெக்ஸை விட இளம் டெக்ஸ் அதிரி புதிரி ஹிட் அடிக்கிறார்...

  ReplyDelete
 43. BOSELLI.. MAY BE ONE OF THE ALL TIME GREATS OF COMIC WORLD.. AMAZZZZINGGGG

  ReplyDelete
 44. //ஒரு சந்தேகம் (இடையில் அப்பப்ப நிறைய சந்தேகம் வரும்கிறது வேற விஷயம்) ஜாக்ஸிடம் குட்டி ஜோலன் டிராவலரை கைப்பற்றி ஓடுகிறான்,அடுத்து ஓடிவரும் ஜாக்ஸை பின்னிருந்து பெரிய ஜோலன் தாக்குகிறான்,அடுத்து குட்டி ஜோலன் டிராவலர் மூலம் பயணித்து மீண்டும் பெரிய ஜோலனை பார்க்கப் போகிறான்.
  அப்ப குட்டி ஜோலன் எதிர்காலத்திற்கு போய் விடுகிறான்,கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு அப்பால்,பின்னர் பெரிய ஜோலனின் அறிவுரைப்படி மீண்டும் பெரிய ஜோலனையே பார்க்கச் செல்கிறான்...
  அங்கு சின்ன ஜோலனின் மூலம் பெறும் டிராவலர் மூலம் மீண்டும் பயணமாகும் பெரிய ஜோலன் 1 நிமிடம் என்று கெடு சொல்லிவிட்டு,அடுத்த நிகழ்வில் ஜாக்ஸை சந்திக்கிறான்(அங்கே சின்ன ஜோலன் அப்போது இல்லை),அவர் மனதைப் படித்தறிந்துவிட்டு மீண்டும் ஆரிசியா,தோர்கலைக் காக்க வேறிடம் செல்கிறான்...
  இங்கே கொந்சம் புரிதல் குழப்பம் நிகழ்கிறதே,நிகழ்வுகளை ஒருங்கிணைப்பு செய்ய முடியவில்லையே ?!//
  +1
  இதைப்பற்றி தான் இன்று காலை சேலம் குமார் அவர்களுடன் விவாதம் இருந்தது. நண்பர்கள் எவரேனும் விடை தருவீர்களா.

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் முதல் முறை எப்படி பெரிய ஜோலன் அங்கே வந்து காப்பளரை தாக்கி குட்டி ஜோலனை காப்பாற்றுகிறான் என்பது மட்டுமே. மற்ற வினாக்களுக்கு பதில் கண்டு பிடித்து விட்டேன். நண்பர்களின் பதிலுக்கு வெயிட்டிங்

   Delete
  2. //முதல் முறை எப்படி பெரிய ஜோலன் அங்கே வந்து காப்பளரை தாக்கி குட்டி ஜோலனை காப்பாற்றுகிறான் என்பது மட்டுமே. //

   சின்ன ஜோலன் ஓகோடையின் கிரீடம் அணிந்திருப்பதால் டிராவலர் இயக்க மட்டும் அறியவில்லை..

   மன வலிமை அதிகரித்து இருப்பதால் பெரிய ஜோலனை சின்ன ஜோலன் சந்தித்து உதவி கேட்பதுதான் இந்த சங்கிலி நிகழ்வுகளின் முதல் புள்ளி .

   பெரிய ஜோலன் 15 வருடங்களுக்கு முன் பயணிப்பது (அப்போது மப்ஸ் உயிரோடு இருப்பதை கவனிக்க) டிராவலர் இல்லாமல் சாத்தியம் இல்லை...

   நமக்கு காட்டியிருப்பது நிகழ்வுகளின் கலைக்கப்பட்ட வரிசை..

   இது ஜாக்ஸ் கிரீடத்தை கைப்பற்ற முயலும்போது சின்ன ஜோலன் முதன்முதலில் அங்கு வந்த காலத்தை விட முன்னதாகவே வந்ததால் ஏற்பட்ட பிழை.


   முதன்முதலில் பெரிய ஜோலன் சின்ன ஜோலனை சந்திப்பது உண்மையில் இரண்டாவது முறை சந்திப்பதாகும்..

   சுருக்கமாக 15 ஆண்டுகள் பின்னோக்கி பெரிய ஜோலன் சின்ன ஜோலன் தந்த டிராவலர் மூலம் பயணித்து சின்ன ஜோலனை ஜாக்ஸை தாக்கி காப்பாற்றி தொடர் நிகழ்வுகளை செயல்படுத்துகிறான்.

   இவை அனைத்தும் ஏக காலத்தில் நடைபெறுகிறது...


   Delete
  3. படிக்கும் பொழுது எனக்கு ஏனோ இந்த வினாவெல்லாம் எழும்ப வில்லை...( இவ்வகை கதைகளில் லாஜீக்கை எதிர்பார்ப்பதில்லை என்பதால் ) ஆனால் நண்பர் வினவியவுடன் அட ஆமாம்ல என்ன வினா தொங்கியது...இப்பொழுது புரிந்த்து போலவும் இருக்கிறது,புரியாததது போலவும் இருக்கிறது செனாஅனாஜீ..

   நா வளரனும்...:-)

   Delete
  4. நன்றி செனா அனா சார். மிக அழகான விளக்கம். நான் பல முறை திரும்ப திரும்ப படித்தே புரிந்து கொள்ள முடிந்தது. நாம் புரிந்து கொண்டதை பிறருக்கு அழகாக விளக்கவும் உங்களால் முடிகிறது. செம்ம செம்ம

   Delete
  5. நீங்கள் சொன்ன விளக்கத்தை பலமுறை நான் திரும்ப திரும்ப படித்தே புரிந்து கொண்டேன்.

   Delete
 45. போனெல்லின் படைப்புகள் உண்மையிலேயே பிரமிப்புதான். எண்ணற்ற நாயகர்கள், கணக்கிலடங்காத கதைகள் என ஒவ்வொரு வருடமும் என்பது அசாதரணமானது!

  அதிலும் இக்குழுமத்திற்கு இது ஒரு ஸ்பெஷல் ஆண்டு. Yes, இது போனெல்லி பதிப்பகத்தின் 80-ம் ஆண்டு. அதனைச் சிறப்பிக்கும் வகையில் இந்தாண்டு வரும் அனைத்திதழிகளின் அட்டையில் "Bonelli Editore 80" என்ற Logo-வுடன் வரவுள்ளது.

  அடுத்து இக்குழுமத்திலிருந்து வரும்:

  1. Zagor - க்கு இது 60 -வது ஆண்டு.

  2. Nathan Never-க்கு இது 30-வது ஆண்டு.

  3. Dampyr-க்கு இது 20-வது ஆண்டு.

  இந்த நாயகர்கள் யாரும் நம்முடைய ரேடாரில் இல்லையென்றாலும் இத்தனையாண்டுக் காலம் வெற்றி நடைப் போடுவது என்பது லேசா னதல்லவே.....!?

  அதிலும் Dampyr திரைப்படமாக இந்தாண்டு வரும் ஜனவரி 23 -ல் வெள்ளித்திரையில் மின்னயிருக்கிறது. Dampyr - ராக "Harlan Drake" கதாபாத்திரத்தில் பிரதான நாயகனாக "Wade Briggs" நடிக்க, Riccardo Chemello இயக்கியுள்ளார்.

  போனெல்லி பதிப்பகத்திற்கு இந்தாண்டொரு அதிரடியான வருடம்தான்.

  ReplyDelete
 46. நாடி நரம்பு ரத்தம் சதை புத்தி அத்தனையிலும் டெக்ஸ் ஊறிப் போனவர்கள் கதாசிரியர்களாக இருந்தது/இருப்பது/இருக்கப் போவது(?!) நமக்கு கிடைத்த வரம். அமிழ்தினும் இனிய நம் தாய் மொழியாம் தமிழில் நமக்கு கிடைத்தது/கிடைக்கிறது/கிடைக்கப்போவதை என்னவென்பது... மிக்க நன்றி சார் என்பதைத் தாண்டி வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன்...

  மீதி பேட்டியை சீக்கிரம் பதிவிடுங்கள்...

  ReplyDelete
 47. டெக்ஸ்ஸின் கதாசியர்களின் அபார உழைப்பு மற்றும் ஈடுபாடு மிரள வைக்கிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 48. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 49. டியர் விஜயன் சார்.
  "டெக்ஸ் வில்லர் "உருவாக்கத்தில் உள்ள அனைத்து விசயங்களையும் - ஆசிரியர் சொன்ன விதம் அருமை... மொழி பெயர்த்து வழங்கிய தங்களுக்கும் நன்றி.
  ஒரே ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறதே.. இத்தாலியில் இருப்பவர்கள் - ஏன் அமெரிக்காவை கதைக்களமாகக் கொண்டு ஹீரோவை உருவாக்கினார்கள்.
  அதனால் ஏதேனும் பிரச்சனை எழுந்ததா?i என்பது போன்று கேள்விக்கு விடை தெரியவில்லையே? i (முன்பு ஏதேனும் - இக்கேள்விக்கு தாங்கள் Uதில் சொல்லி இருந்தீர்களா என்று நினைவில்லை....) .
  எனக்கு இதேபோல் " இரத்தப் படலம் "ஓவியம் - கதை உருவாக்கத்தில் உள்ள சுவராஸ்யங்களையும் வெளிக்கொணரலாமே.
  (உங்களுக்கு நேரம் இருக்கும் போது..)
  நன்றி சார் ...iii

  ReplyDelete
 50. கானமே காலடியில்.
  ஆப்பிரிக்க கானக கதைகள் என்றாலே சித்திரங்களை ரசிக்க தனி ஆர்வம் பிறப்பதென்னவோ நிஜம்தான்.ஷெர்லக் ஹோம்ஸ் கொலைகாரனை யூகித்து காட்டுக்குள் செல்லும்போது அடிக்கும் சேட்டைகள் சிரிப்பை உதிர்க்க வைக்கிறது.அட்டகாசங்களுக்கு மத்தியில் கொலைகாரனல்ல கொலைகாரி என தெரியவரும்போது ஷெர்லக்குடன் சேர்ந்து நாமும் பல்பு வாங்குவது தனி சிரிப்புதான்.இறுதியில் கொலைகாரியை எவ்வாறு மடக்கினார் கொலைக்கான விளக்கமும் சூப்பர்.பழைய பாணியிலான ரசிக்கும்படியான கதை சூப்பர்.

  ReplyDelete
 51. கோழைகளின் பூமி,
  நண்பர்களான ஹேசல், ஐசக் மற்றும் அவர்களுடைய ஊரைச்சுற்றி நகரரும் கதை.நண்பர்களான இருவரும் ஊரின் எதிரியாக(?) கருதப்படும் பிராவிடன்ஸை கடத்திப்போட்டுத்தள்ளுவதும் பின் அவர்களுடைய காதலியை பிரிவதும் பின் தொடர்கொலைகளாக நகர்கிறது.இறுதியில் நண்பர்களே ஒருவருக்கொருவர் ஏன் எமனாகிறார்கள் என்பது சோகமான துரதிஷ்டம்.அடுத்த நாள் திரும்பி வருவதாக போனில் கூறும் ஹேசல் திரும்ப முடியாத இடத்துக்கு செல்வது மேலும் சோகம்.நேர்மறையான எண்ணங்களுடன் வரும் ஷெரீப் மட்டும் நமக்கு பல அர்த்தங்களை கற்றுத்தருகிறார்.சுலபப்புரியும்படியான கி.நா. நன்று.

  ReplyDelete
  Replies
  1. அருமை நண்பரே..நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கே விமர்சனத்தை பகிர்ந்து உள்ளீர்கள் என நினைக்கிறேன்..இனி தவறாமல் தொடரவும்...:-)

   Delete
 52. மெளரோ போசலி அவர்களின் செம தெறிக்கும் பேட்டி படித்தேன்.தல போல் வருமா ?

  ReplyDelete
 53. சார் புத்தக விழா ஸ்பெஷல் இதழ்கள் பற்றிய அறிவிப்பு எப்போது??? நான் 14ஆம் தேதி காலை 11 மணி ஸ்லாட் book செய்து விட்டேன். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 54. கோழைகளின் பூமி!
  9/10

  மண்ணும், அதன் மனிதர்களும்!!
  20/10

  113 பக்கக் கதையை விட எடிட்டரின் விமர்சனம் அட்டகாசம்!!! 👏👏👏

  இனிவரும் கி.நா.களிலும் தொடருங்கள் சார்!

  ReplyDelete
 55. ***** கானகமே காலடியில் *****

  நிறைகள் :
  * கானகக் காட்சிகள்
  * பெரிய படங்கள் + வண்ணங்கள்
  * க்ளைமாக்ஸ்

  குறைகள் :
  * சிரிப்பதற்கான வாய்ப்பு குறைச்சல்
  * அவ்வப்போது மாறுவேடம் போடுவதைத் தாண்டி ஹெர்லக் ஷோம்ஸ் எதையுமே துப்பறியவில்லை

  என்னுடைய ரேட்டிங் : 9/10

  ReplyDelete
  Replies
  1. காண்டாமிருகம் ஆக மாறி ஹோம்ஸ் துரத்தும் போது சிங்கம் 'மியாவ்' என்று கத்திக்கொண்டு தாவும் இடத்தில் நன்றாக வாய்விட்டுச் சிரித்தேன்...

   Delete
  2. ///* சிரிப்பதற்கான வாய்ப்பு குறைச்சல்///

   அடடே..
   குழம்புசட்டி, அயாம் ப்ரைட் கூடவா குருநாயரே.!?

   * ///அவ்வப்போது மாறுவேடம் போடுவதைத் தாண்டி ஹெர்லக் ஷோம்ஸ் எதையுமே துப்பறியவில்லை///

   துப்பறிவதை ரிப்போர்ட்டர் ஜானி செய்வார், இரும்புக்கை மாயாவி செய்வார், ஜானி நீரோ செய்வார், ஜேம்ஸ்பாண்ட் செய்வார், ராபின் செய்வார், அவ்வளவு ஏன்... சமயங்ளில் டெக்ஸ்வில்லர் கூட செய்வார்.!
   ஆனால் இவர்களில் எவரேனும் குழம்புவைக்கும் கரிசட்டியாக மாறுவேடம் போடமுடியுமா.??
   கார்ட்டூன்ஸில் லாஜிக்கோ, ஹீரோயிசமோ பார்க்கவேண்டாமே குருநாயரே.!
   எதையாவது கண்டுபிடிச்சாத்தான் கதாநாயகன் என்னும் கான்செப்டை சீரீயஸ் கதைகளிலேயே நான் கடைபிடிப்பதில்லை குருநாயரே..:-)

   Delete
  3. //துப்பறிவதை ரிப்போர்ட்டர் ஜானி செய்வார், இரும்புக்கை மாயாவி செய்வார், ஜானி நீரோ செய்வார், ஜேம்ஸ்பாண்ட் செய்வார், ராபின் செய்வார், அவ்வளவு ஏன்... சமயங்ளில் டெக்ஸ்வில்லர் கூட செய்வார்.!
   ஆனால் இவர்களில் எவரேனும் குழம்புவைக்கும் கரிசட்டியாக மாறுவேடம் போடமுடியுமா.??
   கார்ட்டூன்ஸில் லாஜிக்கோ, ஹீரோயிசமோ பார்க்கவேண்டாமே//

   சரியாக சொன்னீர்கள் நண்பரே!

   Delete
  4. நிறைய கமர்ஷியல் படங்களில் எல்லாம் பார்த்தா கதைன்னு ஒன்னும் பெருசா இருக்காது,கிளைமெக்ஸுக்கு 15 நிமிஷம் முன்னாடி வரை காமெடி,பாட்டுன்னு எதையாவது மொக்கிட்டு கடைசியா போனா போகுதுன்னு ரெண்டு வரில கருத்துன்னு ஒன்றை சொல்லிட்டு போவாங்க....
   அதுமாதிரி ஷோம்ஸ் ஏதாவது பண்ணியிருக்கலாம்னு ஈ.வி சொல்ல வர்றாரோ என்னமோ ?!
   லாஜிக் இல்லேன்னாலும் மேஜிக்காவது இருக்கனுமில்லையா....

   Delete
  5. ஷெர்லாக் டார்ஜன் வேடம் போடுவது ஏன் என்று புரிந்து கொண்டால் அவர் எப்படி துப்பறிகிறார் என புரிந்து கொள்ளமுடியும்.

   Delete
  6. ///ஷெர்லாக் டார்ஜன் வேடம் போடுவது ஏன் என்று புரிந்து கொண்டால் அவர் எப்படி துப்பறிகிறார் என புரிந்து கொள்ளமுடியும்.///

   யெஸ்.. கிட்டத்தட்ட ஒரு கி.நா போன்ற கதையமைப்பு.!

   Delete
 56. நாளைய ஆன்லைன் புத்தக விழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன்.சிறப்பு வெளியீடுகள் பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைக்குமா ஆசானே?

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஆமா இன்றா நாளையா?????

   Delete
 57. ஆன்லைன் திருவிழா சிறப்புப் பதிவு இன்று இரவு உண்டா சார் ?!
  இதழ்கள் விவரங்கள் ?!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு இன்னிக்கு ராக்கூத்தே அது தானே சார் !

   Delete
  2. அப்போ எங்களுக்கும் ராக்கூத்து இருக்கிறது இன்று

   Delete
  3. /* எனக்கு இன்னிக்கு ராக்கூத்தே அது தானே சார் ! */

   கொஞ்சம் சீக்கிரமா போட்டிங்கன்னா படிச்சுப்புட்டு தூங்கலாம் சார் - 4 நாள் லீவு - நல்லா தூங்கி ஒரு வருஷம் ஆச்சு சார் - projects அப்டி !

   Delete
  4. // எனக்கு இன்னிக்கு ராக்கூத்தே அது தானே சார் ! //
   ஹைய்யா ஜாலி,ஜாலி...!!!

   Delete
 58. ஒருவேளை நாளை புத்தக விழா ஸ்பெசல் வெளியீடுகள், தள்ளிப்போன டில்லான், ரிங்கோ 2 போன்றவயாக இருக்குமோ!

  ReplyDelete
  Replies
  1. வொய் திஸ் கொலைவெறி பாஸ்.??

   Delete
  2. ஜார்கண்ட் கிளம்ப வேண்டும் போல

   Delete
 59. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
  பொங்கலோ பொங்கல்!

  ReplyDelete