Powered By Blogger

Tuesday, May 11, 2021

அதிகாரியோடு செவ்வாய் !

 நண்பர்களே,

வணக்கம். அதிகாரியின் அதிரடிகள் தொடர்கின்றன ! 'தல' என்றாலே தடதடக்கும் தளமானது 'இளம் தல' என்றவுடன் ஒரு மிடறு தூக்கலாகவே தெறிக்க விட்டதில் எனக்கு வியப்பே இல்லை தான் ! And இந்த தினப்படி "அதிகாரி updates" அகுடியாவுக்கு நண்பர் காமிக் லவருக்கே நாம் thumbs up தந்திட வேண்டும் ! "இந்தச் சிரம நாட்களின் மத்தியில் "டெக்ஸ்" பற்றி ஏதாச்சும் அப்பப்போ  போடுங்களேன்  ; பாசிட்டிவாக feel பண்ணச் செய்ய  அவரை விட்டால் வேறு நாதி லேதல்லவா ?" என்று கோரியிருந்தார் ! ரைட்டு..."அப்பப்போ" என்பதை "தினப்படி" என்று அமைத்துக் கொள்வோமென நானும் தீர்மானித்தேன் ! 

இளம் டெக்ஸ் கதை வரிசையினை வரும் காலங்களில் எவ்விதம் கையாள்வதென்ற நேற்றைய கேள்விக்கு 'பொளேர்'என்று பதில் கிட்டி விட்டதென்பதால் நோ குழப்பம்ஸ் ! 'படிச்சா முழுசாத் தான் !" என்பதே உங்களின் (பெரும்பான்மை) பதிலாக இருக்குமென்று யூகித்திருந்தேன் தான் ; ஆனால் எனது கேள்வியின் பின்னே ஒருவித லாஜிக் இல்லாதில்லை தான் ! 

கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்களேன் - என்ன மாதிரியாய் தன்னைத் தானே மாற்றிக் கொண்டுள்ளதென்று பார்த்திட முடியும் ! எழுபதுகளிலும், எண்பதுகளின் துவக்கங்கள் வரையிலும் டெஸ்ட் மேட்ச் போட்டியின் நான்காவது தினம் ஒரு ரெஸ்ட் day !!  சாவகாசமாய் அன்றைக்கு ஓய்வெடுத்து விட்டு அப்புறமாய் மேட்சைத் தொடர்ந்திடுவார்கள் ! அப்புறமாய் அந்த ரெஸ்ட் தினத்துக்கு கல்தா தரப்பட்டது ! 'ஊஹூம்..இன்னமும் இது ஜவ்வாய் இழுக்கிறதே' என்ற நினைப்பில் ஒரு நாள் போட்டிகளைக் கொண்டு வந்தார்கள் - ஆளுக்கு 60 ஓவர்களைத் தந்து ! 'இதுவுமே மொக்கை போடுதுடோய் ' என்றபடிக்கே 60 ஓவர்களை 50 ஆக்கினார்கள் ! கொஞ்ச காலம் சக்கை போடு போட்டது ! ஆனால் காலப்போக்கில் இதுக்குமே ஆப்பு விழுந்தது ! "எவனுக்குடா நேரமிருக்குது நாள் முழுக்க டி-வி பொட்டி முன்னாடி குந்திக்கிடக்கிறதுக்கு ?" என்றபடிக்கே T20 என்று கொணர்ந்தார்கள் - ஆளுக்கு 20 ஓவர்களே போதுமென்று ! இதோ - இப்போது அது ரகளை செய்து கொண்டிருக்கையிலேயே THE HUNDRED என்றொரு சமாச்சாரத்தை இங்கிலாந்தில் முன்மொழிந்துள்ளார்கள் - ஆளுக்கு வெறும் 100 பந்துகள் மட்டுமே & அணியில் ஆண்களும் இருக்கலாம், அம்மணிகளும் இருக்கலாம் என்ற திட்டமிடலோடு ! இதுவே the next big thing in cricket என்று சொல்கிறார்கள் ! 

மாற்றமென்பது மாறிடா ஒரு தொடர் நிகழ்வு என்றாலும், இங்கே கவனம் கோருவது ஒற்றை விஷயமே : பொழுதுபோக்கு சார்ந்த சமாச்சாரங்களுக்கும்  ஒரு நேரக்கட்டுப்பாடு அவசியமாகிறது ! "ஓட்டம்..ஓட்டம்..சதா ஓட்டம்" என்பதே இன்றும், இனியும் வாழ்க்கை என்றான பின்னே பொழுதுபோக்குகளுமே அந்த வேகத்துக்கு ஈடு தந்திட வேண்டும் போலும் ; இல்லையேல் ஆடியோ கேசட் ; வீடியோ கேசட் ; வாக்மேன் ; CD பிளேயர் போல "காணாது போய்விட்ட சங்கதிகள்" பட்டியலில் ஐக்கியமாகிடணும் என்பதே நிதரிசன நிஜம் ! 

So "வாசிக்க நேரமில்லை " என்ற ஒரே காரணத்தினால் இம்மியூண்டான இந்த வட்டம் - வரும்காலங்களில் இக்ளியூண்டாகிடக் கூடாதே என்ற சன்னமான உறுத்தலே - இத்தாலியில் போலவே நாமும் crisp 64 பக்க இதழ்கள் பாணிக்குப் பழகிப் பார்ப்போமா ? என்ற நினைப்பு ! ரைட்டு - இப்போதைக்கு அந்த எண்ணத்தை மூட்டை கட்டியாச்சு ; தொகுப்புகளாகவே அடுத்த year-க்கு தொடர்ந்திடுவோம் ! 'தல'யின் 75-வது ஆண்டினில் இதே கேள்வியை மறுக்கா கேட்டு வைக்கிறேன் ; அன்றைக்கும் உங்களின் பதில்கள் இவ்விதமே உள்ளனவா - இல்லியா என்பதற்கேற்ப அன்றைய தீர்மானம் இருந்திடட்டும் ! நமக்கும் பொழுது போகணுமில்லீங்களா ?

ரைட்டு...இன்றைய updates பற்றி இனி பார்க்கலாமா ? 

COLOR TEX !!

டெக்ஸ் கதைகளை அவ்வப்போது கலரில் போடும் நமது முயற்சிகளை நானிங்கு குறிப்பிடவில்லை ! அதே போல ஒரிஜினலாக கருப்பு-வெள்ளையில் உருவாக்கப்பட்டு அப்பாலிக்கா கலர் செய்யப்பட்டு ரவுண்டு செல்லும் போனெல்லியின் படைப்புகளையும் நான் குறிப்பிடவில்லை ! மாறாக - உருவாக்கும் போதே கலர் கதைகளாய் ; அட்டைப்பட ஓவியங்களின் பாணியிலேயே கலர் செய்யப்பட்டு வரும் அந்த COLOR TEX பிரத்யேக வரிசையினையே குறிப்பிடுகிறேன் இங்கே ! 

எடிட்டர் மௌரோ போசெல்லி பொறுப்பேற்கும் வரைக்கும் போனெல்லியில் டெக்ஸ் ஒரு அற்புத ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்தாலுமே, அந்த மாமூலான தடங்களைத் தாண்டி புதிதாய் பரீட்சித்துப் பார்க்கும் முனைப்பு பெரிதாய் யாருக்கும் தோன்றியிருக்கவில்லை ! Of course - இதழ் # 400 ; # 500 என்று ஸ்பெஷல் இதழ்களைக் கலரில் தயாரிப்பது நிகழ்ந்து கொண்டே வந்தது தான் - ஆனால் தலைமைப் பொறுப்பு போசெல்லி  கைக்குச் சென்ற பின்னே ரகம் ரகமாய் அதிர்வேட்டுக்களைத் தயார் செய்யத்துவங்கினார் ! And 2011 -ல் அவரது முயற்சியே இந்த COLOR TEX ஆண்டுமலர்கள் ! முதல் 3 ஆண்டுகளுக்கு 160 பக்க நீள முழுநீள ; முழுவண்ண சாகசங்களை போனெல்லி போட்டுத் தாக்கினர் & அவற்றுள் இரண்டு போசெல்லியின் படைப்புகளே !  நான்காவது ஆண்டுக்குள் இந்த முயற்சி புகுந்திடும் தருணத்தில் போசெல்லிக்கு இதிலும் ஒரு மாற்றம் செய்யும் எண்ணம் எழுந்துள்ளது ! So COLOR TEX இதழ் # நான்கை - 32 பக்கச் சிறுகதைகள் நான்கு அடங்கியதொரு 132 பக்க ஆல்பமாய் சிருஷ்டித்தார் !  நிறைய புதிய கதாசிரியர்கள் ; ஓவியர்கள் தம் ஆற்றல்களை நிரூபிக்கும் களங்களாக இந்த மினி சாகசங்கள் அமைந்திட, இதுவுமே ஒரு செம மாற்றமாய் இத்தாலிய வாசகர்களுக்குத் தென்பட்டுள்ளது ; அழகாய் வரவேற்றுள்ளனர் ! தொடர்ந்த பொழுதுகளில் இந்த COLOR TEX வரிசையின் வெற்றியைக் கண்ட போனெல்லி ஆண்டுக்கு இருமுறை என்று மாற்றம் செய்தது மாத்திரமன்றி - ஒரு இதழ் முழுநீள 160 பக்க கலர் சாகசம் ; மாரு இதழ் 32 x 5 குட்டிக் கதைகள் வீதம் ஒரு 160 பக்கத் தொகுப்பு என்று ஆட்டத்தை அடுத்த லெவலுக்கு இட்டுச் சென்றுள்ளது ! So தற்சமயமாய் இதழ் # 18-ல் நிற்கும் இந்த வரிசையினில் :

160 பக்க முழுநீள சாகசங்கள் - 10 எண்ணம்

32 பக்க சிறுகதை சாகசங்கள் - 33 எண்ணம் 

உள்ளன !! 

இவற்றுள் நாம் 15 அல்லது 16 சிறுகதைகளை வெளியிட்டுள்ளோம் என்று நினைக்கிறேன் ...STV சார்...கணக்கு ப்ளீஸ் ? 

எனது கேள்வி இப்போது இது தான் :

2022-ன் அட்டவணையில் ஒரு ஸ்லாட்டை COLOR TEX இதழொன்றுக்கு தந்திடத் திட்டமிட்டு வருகிறேன் ! அதனில் புகுத்திட வழக்கம் போல 4 சிறுகதைகளைத் தேர்வு செய்து ஒரு வண்ணத் தொகுப்பாய் வெளியிடலாமா ? அல்லது இந்த 160 பக்க முழுநீள சாகசங்களுள் ஏதொவொன்றைத் தேர்வு செய்யலாமா ? 

சொல்லுங்கண்ணே...சொல்லுங்க ! நல்லா சிந்திச்சுச் சொல்லுங்க ! 'தென்னைமரத்திலே ஒரு குத்து ; பனைமரத்தில் ஒரு குத்து !' என்ற பாணியில், இதுவும் வேணும் ; அதுவும் வேணும் என்ற பதில்ஸ் வேணாமே ப்ளீஸ் ? பட்ஜெட் சிக்கனத்தையும் மனதில் கொண்டு அட்டவணையில் பணியாற்ற வேண்டியுள்ளது ! நான் மேலே குறிப்பிட்டுள்ள அந்த T20 கிரிக்கெட் ; THE HUNDRED கிரிக்கெட் போலவே இந்த 32 பக்கச் சிறுகதைகளை ஜல்தியான entertainment ஆகப் பார்த்திடலாம் அல்லவா ?! முழுக்கதைகளை முழுசாகவே படிப்போம் - ஓ.கே. ; ஆனால் இவையோ பிறப்பாலேயே சிறுகதைகள் தானே ? So அந்த crisp reading களத்துக்கென இவை ஒத்து வருமா ? So சொல்லுங்களேன் சாரே ? 

Bye all...see you around !





P.S : முழுநீள சாகசங்களுள் ஒரு லவ்ஸ் கதையும் கீது !! 😜😜

209 comments:

  1. சார் நாம் தற்போது 3 மாதங்களுக்கு ஒருமுறை சந்தாதாரர்களுக்கு அளிக்கும் சிறுகதை தொகுப்பு நன்றாகவே இருக்கிறது.

    ஆகையால் அந்த ஸ்லாட் 160 பக்க சாகசத்துக்கு அளிக்க வேண்டுகிறேன்.

    32 பக்க சாகசம் தற்பொழுது போலவே தொடரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அதே !! இதை நானும் வழிமொழிகிறேன் !

      Delete
    2. Sorry...32 பக்க விலையில்லா TEX தற்சமயம் நடைமுறையில் இல்லை என்பதை கவனிக்கவில்லையா நண்பர்களே ?

      Delete
    3. ஓ.. அப்போ ‘மலிவு விலை டெக்ஸ்’ அப்படின்னு மாதா மாதம் 32 பக்க டெக்ஸ வெளியிடுங்க சார். :-))

      Delete
    4. ரேஷன் கடையிலே கிடைக்குமான்னு அப்புறம் கேட்பாங்க சார் !

      Delete
    5. // ரேஷன் கடையிலே கிடைக்குமான்னு அப்புறம் கேட்பாங்க சார் ! //

      😃😃😃

      Delete
  2. நம்ம அதிகாரியின் தினசரி அப்டேட் கலர்ஃபுல்லா இருக்கு. படிக்க பரவசமாகவும் இருக்கு. நாளைக்கு என்ன அப்டேட் என்கிற எதிர்பார்ப்பு அதிக ஆவலாகவும் இருக்கு. ஆசிரியருக்கு நன்றி.

    ReplyDelete
  3. முழுநீள சாகசங்களுள் ஒரு லவ்ஸ் கதையும் கீது !! 😜😜.
    சார் அப்ப முதலில் அந்த கதையை ஓகே பண்ணவும் 🤭🤭🤭🤭🤭

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்...

      காரம் குறையாத சிறுத்த கடுகுகள் தாளிப்புக்கு ரொம்பவும் சுவை கொடுக்கும்...

      நல்லா பொரிய வுடுங்க சார்...

      Delete
    2. 'தல' என்றாலே அடுக்களையே அமர்க்களம் தானே சார் !

      Delete
  5. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  6. // முழுநீள சாகசங்களுள் ஒரு லவ்ஸ் கதையும் கீது // சூப்பர்!! முதல்ல இத போட்டு தாக்குங்க சாரே.. கோடி புன்னியமாபோகும்.

    ReplyDelete
  7. நாவில் ஜல்பு கொட்டும் பதிவு...

    ReplyDelete
  8. Replies
    1. நன்றியாவது, ஒண்ணாவது ! ஜாலியாய்ப் படிங்க சத்யா !

      Delete
  9. அப்டேட் தகவல் எல்லாம் பட்டையைக் கிளப்புது சார்...

    ReplyDelete
    Replies
    1. :-) எதையாச்சும் உருப்படியாய் செய்வோமே என்று தோணுச்சு சார் !

      Delete
  10. புது பதிவா !!

    அதுவும் நம்ம டெக்ஸ் எனும்போது படித்து விட்டு ஒரு கமண்டையும் போட்டு வைக்கலேன்னா டெக்ஸ் கனவிலே வந்து பிஸ்டலால் நடுமண்டைல அடிச்சாலும்
    அடிச்சிப்புடுவாரு

    படிச்சிட்டு வாரேன் டியர் எடி

    ReplyDelete
    Replies
    1. தினத்துக்கும் நான் பகலில் போட்டுத் தாக்குவேன் சம்பத் ; படிக்காட்டி 'தல' ராவிலே போட்டுத் தாக்குவார் !!

      Delete
    2. ஆஹா சூப்பர் சூப்பர்....:-))))

      Delete
  11. // தல'யின் 75-வது ஆண்டினில் இதே கேள்வியை மறுக்கா கேட்டு வைக்கிறேன் ; //
    தொகுப்பு மொத்தமாய் கையில் கிடைத்து விட்டால் எப்படி படிப்பது,எப்போது படிப்பது எனும் தேர்வு நம் கையில் என்பதே என் நிலைப்பாடு சார்...
    தொகுப்புகளே என்றும் ஆராதனைக்குரியவை...

    ReplyDelete
  12. 32 பக்க டெக்ஸ் சாகசம் எனது வோட்டு

    ReplyDelete
  13. 160 பக்க கலர் டெக்ஸ் K எனது ஓட்டு ..
    32 பக்க
    குட்டி கதைகள் நன்றாகத்தான் இருக்கிறது இவைகளை புக் பேர் ஸ்பெஷலாக போட உபயோகித்துக்கொள்வோமே .. டியர் எடி

    ReplyDelete
    Replies
    1. டியர் எடி
      நீங்களே +1 என சம்மதம் தெரிவித்து விட்டதால் ஒவ்வொரு புக் பேர் ( அது ஆன்லைனாகினாலும் சரி ) நான் நினைவூட்டுகிறேன் ..

      Delete
  14. சிறுகதைத் தொகுப்பை வரவேற்கிறேன் சார்.. கண்டிப்பாக கடுகு சிறுத்தாலும் காரத்தில் சிறுத்ததல்ல டெக்ஸ் கதைகள்.. ஏகப்பட்ட கோணங்களில் டெக்ஸை இரசித்திட இந்த வடிவம் கைகொடுப்பது உறுதி...

    ReplyDelete
  15. // அதனில் புகுத்திட வழக்கம் போல 4 சிறுகதைகளைத் தேர்வு செய்து ஒரு வண்ணத் தொகுப்பாய் வெளியிடலாமா ? அல்லது இந்த 160 பக்க முழுநீள சாகசங்களுள் ஏதொவொன்றைத் தேர்வு செய்யலாமா ? //
    இதில் ஒன்றும் அதில் ஒன்றும் 2022 இல் முயற்சிக்கலாமே சார்,முந்தைய பதிவில் நான் சொன்னது போல் இளம் டெக்ஸிற்கு என ஒரு தனித்தடம் உருவாக்கி அதில் இவற்றை நுழைத்தால் அந்தத் தடம் முழுமையடைய வாய்ப்பு உண்டே,2022 ல் மட்டும் இந்த முயற்சியை முன்னெடுத்துப் பார்க்கலாமே...
    சிக்கனம் என்ற வழக்கமான பாட்டுதான் வரும் எனில் ஒன்றும் செய்ய முடியாதுதான்...
    முடிந்தால் பரிசீலிக்கவும் சார்...

    ReplyDelete
    Replies
    1. நடப்பாண்டில் சந்தித்து வரும் இடர்கள் ; விலையேற்றங்கள் கிறுகிறுக்க வைக்கும் ரகம் சார் ! இந்தாண்டின் ஜூலைக்குள் 2022 -ன் அட்டவணையை இறுதி செய்திட வேண்டிய நிலையில் அடுத்த வருஷம் பாலும், தேனுமாய் ஓடுமென்று கற்பனையாய்க் கூட நினைக்க முடியவில்லையே ?!

      Delete
  16. ஹிஹி அப்படியே அந்த லவ்ஸ் கதைக்கும் ஒரு இடம் ஒதுக்கினா நல்லா இருக்குமுங்..

    ReplyDelete
    Replies
    1. சிறுசா - பெருசா ? என்ற பஞ்சாயத்து முடியட்டும் முதலில் ; அப்புறமாய் லவ்ஸா ? வேறேயா ? என்று பார்ப்போமே !

      Delete
  17. 160 பக்க கதைகளே திருப்த்தி தரும் என்று தோன்றுகிறது. என் ஓட்டு அதற்கே

    ReplyDelete
  18. அந்த வரிசையில் இப்போது கார்சனின் கடந்தகாலம் வந்ததாக அறியப்படுகிறது...ரொம்பநாளா ஒரு கேறையோடே அந்த இதழ் உள்ளது சார் ..பேசாம நச்சுனு காககா போட்டுதாக்கியர்ல்லாம் சார் வந்து 10 வருஷம் ஆச்சு....

    ReplyDelete
    Replies
    1. எந்த வரிசையிலே "கா.கா.க" வந்திருக்கு பழனி ? போனெல்லிக்கே தெரியாம அங்கேயும் யாராச்சும் போட்டிருந்தாலன்றி இந்த COLOR TEX வரிசையின் 18 ஆல்பங்களும் புதுசுகளே ! நீங்க முதல் ஆல்பத்தின் கதைச்சுருக்கத்தைப் படிச்சுப்புட்டு குழப்பிக்கிறீங்க !

      Delete
  19. ///32 பக்க சிறுகதை சாகசங்கள் - 33 எண்ணம்

    உள்ளன !!

    இவற்றுள் நாம் 15 அல்லது 16 சிறுகதைகளை வெளியிட்டுள்ளோம் என்று நினைக்கிறேன் ...STV சார்...கணக்கு ப்ளீஸ் ? ///

    ஆசிரியர் சார்@

    2018ல் 6 மினி சிறுகதைகள்

    2019ல் 4 மினி சிறுகதைகள்

    2020ல் 4 மினி சிறுகதைகள்

    ஆக மொத்தம் 14 மினி சிறு கதைகள் வெளியிட்டு உள்ளோம் சார்.

    ReplyDelete
    Replies
    1. பல சிந்தைகள் கலந்து பதிவு எழுதும் போதும் கூட, 15 அல்லது 16 இருக்கலாம் என மிகச்சரியாக வெளியீட்டுக்கு அருகே கணக்கு வைத்து உள்ளீர்கள் சார். செம..செம...செம..👌👌👌👌👌

      தங்களது ஊகிக்கும் திறன் & தலமீதான பற்று வியக்க வைக்கிறது🙏🙏🙏🙏🙏

      Delete
    2. கூடவே அந்த தீபாவளி மலருடன் வந்த இலவச இணைப்பு...

      Delete
    3. ஆசான் சரியாகத்தான் கூறியுள்ளார் 15

      Delete
    4. 2018ல,
      விரட்டும் விதி 3
      புனிதப் பள்ளத்தாக்கு 3

      2019ல,
      ரெளத்திரம் மற 4

      2020ல,
      மின்னும் சொர்க்கம் 2
      இருளோடு யுத்தம் 1
      விண்டேர் spl 1

      ஆக மொத்தம் 14 தான் வந்து உள்ளது பழனி...

      எடிட்டர் சார் கணக்கு ஆச்சர்யம் தான். இத்தனை பணிகளுக்கு நடுவே டக்குனு சொல்வது.

      Delete
    5. உருட்டுப் பொதி மனக்கணக்கு - நமது தொகுப்புகளை நினைவில் கொண்டு !

      Delete
  20. ##160 பக்க முழுநீள சாகசங்கள் - 10 எண்ணம் ##.
    5 கதைகள் சேர்த்து 800 பக்கங்கள் கொண்ட இரண்டு சிறப்பிதழ்களாக வெளியிடலாமே sir,.☺️😊

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் இந்த டீலிங் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சார் !

      Delete
    2. நமக்குத்தான் குண்டு புக் என்றாலே ஒரு கிறக்கம் உண்டே! படைப்பாளிகள் நம்ம குண்டு புக்ஸ் பத்தி என்ன சொல்றாங்க சார்! (Paperback படிக்க எளிதாக உள்ளது)

      Delete
  21. இளம் டெக்ஸ் ஒரு பார்வை ஒரு மறுபதிவு

    இளம் டெக்ஸ் கதைவரிசை
    கதை # 1-
    1-4 எதிரிகள் ஓராயிரம் (4 பாகங்கள்)
    கதை # 2-
    5-9 திக்கெட்டும் பகைவர்கள் (5 பாகங்கள்)
    கதை # 3-
    10-13 பிங்கெர்டன் லேடி (4 பாகங்கள்)
    கதை # 4-
    14-15 பாரடைஸ் வேல்லி (2 பாகங்கள்)
    கதை # 5
    16-17 (2 பாகங்கள்)
    கதை # 6
    18-23 (6 பாகங்கள்)
    கதை # 7
    24-28 (5 பாகங்கள்)
    கதை # 8
    29 முதல் தொடர்கிறது அனேகமாக 32ல் ஜூலை 2021ல்முடியலாம்.

    ஆக இரண்டு இளம் டெக்ஸ் போக இன்னும் 6 கதைகள் கைவசம் உள்ளது முடிந்தால் 2022 ல் ஒரு சூப்பர் 6 அறிவிக்கலாம் சார்..

    ReplyDelete
    Replies
    1. ////2022 ல் ஒரு சூப்பர் 6 //// சிறப்பான ஐடியா!!! வழிந்து வழிந்து வழி மொழிகிறேன்.

      இதை முன்கூட்டியே கொணர்ந்து 2021ஐ சிறப்பிக்க கேட்க மனசு ஆசைப்படுகிறது சார.. ஆனா தங்களது பணிச்சுமையை எண்ணி ஆசையை அடக்கி கொள்கிறேன்...!!

      Delete
    2. பையிலும், கையிலும் உள்ளது முக்காப் பணம் ! அதைக் கொண்டு குச்சி மிட்டாயோ ; குருவி ரொட்டியோ வாங்கிட இயலும் ! Baskin Robbins ஐஸ்க்ரீம் கேட்டால் ஞான் என்ன செய்யும் ?

      Delete
  22. 2022 கலர் டெக்ஸ் இற்கென்று ஒரு ஸ்லாட் மட்டும்தானே உள்ளது சார். முமு இதழாகவே வரட்டுமே சார். சந்தாகாரருக்கு விலையில்லா இதழாக தற்போது போல் 32 பக்க சிறுகதைகளை என்பதில் சரிகட்டி விடலாம் என்றால், எடிட்டர் அது தற்போது நடைமுறையில் இல்லை என்கிறாரே...... ஐயகோ!

    ReplyDelete
    Replies
    1. 2021 அட்டவணையினை ஒருவாட்டி பாருங்க சார் !

      Delete
    2. 2021 அட்டவணையினை உருட்டி விட்டேன் சார். Hot Line இல் மறைமுகமாக கூறி உள்ளீர்கள் சார். நீங்கள் கூறிய பின்பே கருத்தூன்றி பார்த்தேன். மன்னிச்சூ!

      Delete
  23. // 'தல'யின் 75-வது ஆண்டினில் //

    When it is?

    ReplyDelete
  24. // 160 பக்க முழுநீள சாகசங்களுள் ஏதொவொன்றைத் தேர்வு செய்யலாமா ? //

    I vote for this!!

    ReplyDelete
    Replies
    1. // சிறுகதைகளைத் தேர்வு செய்து ஒரு வண்ணத் தொகுப்பாய் //

      Not all the stories are great! hence I go with 160 பக்க முழுநீள சாகசங்கள்.

      Delete
  25. இப்படி லட்டு லட்டா போட்டோ போட்டு கேள்வி கேட்டா நான் எந்து செய்யும்? 160 பக்க கலர் சாகசம் ஒண்ணு கலர் சிறுகதைகள் தொகுப்பு ஒண்ணு கண்டிப்பா வேணும்.

    ReplyDelete
    Replies
    1. தென்னையோ - பனையோ - அனுமதி ஒற்றைக்குத்துக்கே சாரே !

      Delete
    2. ஒரே வரில எல்லாத்துலயும் ஒன்ணு அப்படி கேளுங்க மஹிஜி...

      Delete
    3. ஆசை இருக்கு எல்லாம் கேட்க, ஆனா நமக்கு அம்சம் இல்லையே எல்லாம் கிடைக்க...

      Delete
    4. சார்..கடந்த ஒரு மாதமாய் பணிகளுக்கு இடையிடையே புதுக் கதைகளை இங்கும் அங்குமாய் வெவ்வேறு மொழிகளில் ; மார்க்கெட்களில் தோண்டித் துருவி வரவழைத்துள்ளேன் ! அவற்றை பரிசீலிக்கும் போது இந்த வரியே தான் எனக்குள்ளும் ஓடுச்சு !!

      Delete
  26. அடேங்கப்பா அட்டைப்படத்தை பார்க்க பார்க்க பரவசம் பரவசம் பரவசம்...

    எதையும் வேண்டாம் என சொல்ல மனதே வரவில்லை...

    எது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வெளியிடுங்கள் சார்....எங்களுக்கு டெக்ஸ் மாசாமாசம் வந்தா மட்டும் போதும்...:-)

    ReplyDelete
  27. முழுநீள சாகசங்களுள் ஒரு லவ்ஸ் கதையும் கீது !! 😜😜

    சார் இப்படி PSஆ போடக்கூடாது... தலைப்பா போடணும்...

    Stop the press... எங்களுக்கு தேவை 160 பக்க லவ்ஸ் கதையே... கலரில்..

    ReplyDelete
    Replies
    1. நம்மாட்கள் பதிவை முழுசா படிக்கிறாங்களா - இல்லையான்னு ஒரு டெஸ்டிங்..டெஸ்டிங் டாக்டர் சார் !

      Delete
  28. முழுநீள சாகசங்களுள் ஒரு லவ்ஸ் கதையும் கீது !!


    #####


    ஆஹா எப்ப பாத்தாலும் அதிகாரி துப்பிக்கியிலே சுடுறாரு ணுடுறாரு ன்னு சொல்ற ரம்மிக்காகவே இந்த கதையை தேர்ந்தெடுத்து எடுக்கலாமோ...:-)

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத்தான் ஒரு யூத்தான தலீவரை நாங்க தெளிவா தேர்வு செஞ்சிருக்கோம் தலீவரே ! அதுனாலே தலீவரே...சிறுசுகளா ? பெருசா ? என்ற பஞ்சாயத்து முடிஞ்ச பிற்பாடு உங்க கோரிக்கையை பரிசீலிக்க நிச்சயம் ஆவனஆவண செய்வேன் தலீவரே !

      பி.கு. அன்பால் ; பண்பால் உசந்தவர் எங்களுக்கு என்றென்றும் தலீவரே !

      Delete
    2. உண்மையாகவே வெக்கமா வருது சார்...:-)

      Delete
    3. சார்..மனசாட்சியே இல்லீங்களா? மத்ததெல்லாம் ஒத்துக்கறேன். ஆனா அந்த யூத்துங்கறதை எத்தனை பாட்டில் ஜெலுசில் குடிச்சாலும் ஜீரணிக்க முடியலீங்.

      Delete
    4. ஒரு யெளவன இளைஞரை பொதுவாய் இந்தியாவிலே 'யூத்'ன்னு தான் அழைப்பார்கள் சார் !

      Delete
    5. ///ஒரு யூத்தான தலீவரை நாங்க தெளிவா தேர்வு செஞ்சிருக்கோம்///

      அவரு வெள்ளெழுத்து கண்ணாடி போட்டு பதினஞ்சி வருசம்மாச்சி சார்..! அவரெல்லாம் பெல்பாட்டம் யூத்து.!

      Delete
    6. அய்யஹோ.. ஈதென்ன கொடும்பழி..!?

      நான் பத்தினியென்பது உண்மையானால் பச்சைவாழைமரம் பற்றியெரியட்டும்.!

      Delete
    7. பொறாமை கரீட்டா சொன்னீங்க சார்..
      :-)

      Delete
    8. நான் பத்தினியென்பது உண்மையானால் பச்சைவாழைமரம் பற்றியெரியட்டும்.!//

      பச்சைக் கற்பூரம் கூட எரியாது

      Delete
  29. சார் அட்டைவ அள்ளுதே....
    அனைத்தையும் வெளியிடுவோமே....முடியாதெனில் அந்த 160 பக்கத்துக்கே நம்பட ஓட்டு

    ReplyDelete
  30. தற்பொழுது விலையில்லா காமிக்ஸ் இல்லாவிடில் மாதம் ஒரு லைட் ரீடிங் கிடைக்க கலர் டெக்ஸ் தனி தடத்தில் வரலாம் சார் விலையும் குறைவாக இருக்கும். அப்படியே 160 பக்க சாகசத்தையும் 3 மாதத்திற்கு ஒரு முறை வரலாம்

    ReplyDelete
    Replies
    1. ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்று ஒரு பழமொழி ...!

      இந்தப் பேரிடர் காலங்களில் இந்தப் பழமொழியே நினைவுக்கு வருது நண்பரே !!

      Delete
    2. அடுத்த வருடம் சிறந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு அடுத்த சந்தவில் சேர்க்கலாம் சார் அட்லீஸ்ட் ஒரு 6 மாத சந்தா ஜம்போ போல முயற்சி செய்யலாம் 🙏🏼😁

      Delete
    3. பார்க்கலாமே நண்பரே !!

      Delete
  31. மறுபடியும் சொல்றேன்....
    பெரியவங்களா பார்த்து என்ன முடிவெடுத்தாலும் இந்த சின்னக்குழந்தை அப்படியே பின்பற்றிக் கொள்ளும்....

    ReplyDelete
    Replies
    1. அந்த பீடிங் பாட்டில்லாம் ஆராச்சும் சுத்தம் பண்ணிடுங்களேன் புளீஸ் ?

      Delete
  32. எனது சாய்ஸ் முழுநீள (160 pages) டெக்ஸ் வண்ண புத்தகத்திற்கு.
    மேலும் 2022ல் மாதம் ஒரு டெக்ஸ் முழு நீளக்கதை வெளிவருமாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு மாதம் இளம் டெக்ஸ்க்கு, 11 மாதம் ரெகுலர் டெக்ஸ் என முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  33. 160 பக்க இதழுக்கு என் ஓட்டு.

    அப்புறம் எடிட்டர் சார் 2022 டெக்ஸ் தனிச்சந்தா உண்டு தானே ??

    ReplyDelete
    Replies
    1. இல்லைனாலும் பரவாயில்லை மாதம் ஒன்று குடுத்துடுங்க..
      அது போதும்....

      Delete
    2. போகிற போக்கில் இந்த லாக்டௌன் முடியும் நேரத்துக்குள் நடப்பாண்டிலேயே மீத இதழ்கள் சகலத்தையும் கடாசி விட்டு, அந்த இடங்களில் 'தல' மட்டுமே இடம்பிடிப்பார் போலுள்ளது சார் !

      2022 இன்னும் கொஞ்சம் தூரத்தில் உள்ளது தானே - பார்க்கலாம் !

      Delete
    3. //போகிற போக்கில் இந்த லாக்டௌன் முடியும் நேரத்துக்குள் நடப்பாண்டிலேயே மீத இதழ்கள் சகலத்தையும் கடாசி விட்டு, அந்த இடங்களில் 'தல' மட்டுமே இடம்பிடிப்பார் போலுள்ளது சார் !//

      ஙே!

      Delete
    4. கென்யாவாவது! தன்யாவாவது!!

      டெக்ஸ்... டெக்ஸ்... டெக்ஸ் மயம்.

      Delete
  34. எடிட்டர் சார்,

    இந்த முறை அதுவா இதுவா என்று கருத்து சொல்ல விரும்பவில்லை.
    டெக்ஸ் என்றால் எல்லாமே சூப்பர்தான் எனக்கு.
    எல்லாமே வேண்டும் என்று மட்டும் வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சார்....சிம்பிளா முடிஞ்சது பஞ்சாயத்து !!

      Delete
  35. அன்புள்ள ஆசான் அவர்களுக்கு
    2021 டெக்ஸ் தனி சந்தா அறிவித்து அதில் இளம் டெக்ஸ்க்கு 3 புக் ஒதுக்கினால் 3x4 = 12 கதைகள் வந்துட்டுப் போகுது. (அட்டைப்படத்துக்கு வேணா தனியா கார்டு போட்டு அந்தந்த புக்கோட குடுத்துருங்க..) மீதம் 9 புக் ரெகுலர் டெக்ஸ்க்கு குடுத்துடுங்க. பிராப்ளம் சால்வ்டு....

    நேற்றைய பதிவில் டைப்பியது மறுக்கா ஒருவாட்டி

    ReplyDelete
  36. ஞாயிற்று கிழமை பதிவின் கடைசி வரி இந்த பதிவுக்கு தான் பொருத்தமாக இருப்பதாக எனக்கு தோணுது... ஆனா உண்மையை யாரும் ஒத்துக்க மாட்டங்களே ...

    ReplyDelete
  37. உள்ளேன் தலீவரே..!!
    உள்ளேன் செயலரே..!!
    உள்ளேன் ஐயா..!!

    ReplyDelete
    Replies
    1. நிரந்தரத் தலீவரும், நிகரில்லா செயலரும் தங்கள் சார்பில் உங்கள் attendance ஐ வாங்கிக்கச் சொல்லி என்னிடம் பொறுப்பு கொடுத்திருந்தனர் சார் ! டிக் போட்டாச்சு !

      Delete
    2. நான் நிஜாரில்லா... ன்னு படிச்சுட்டேன்...

      Delete
  38. சிறுகதை தொகுப்புகளெல்லாம் வித்தியாசமான சிந்தனையை வெளிப்படுத்துகின்றன சார்.
    So..என் ஓட்டு சிறுகதை தொகுப்புக்கே.

    விண்டர் ஸ்பெஷல் கூட லவ் ஸ்டோரிதானே.
    அதனால்..
    அந்த லவ்ஸ் ஸ்டோரியும் சிறுகதைதான்னு பட்சி சொல்லுது.

    ReplyDelete
    Replies
    1. Nopes sir...அது முழுநீள 160 பக்க சாகசம் ! பார்க்க - மூன்றாவது ராப்பர் !

      Delete
    2. அட...நான்தான் சரியா கவனிக்கவில்லை சார்.

      Delete
  39. ///முழுநீள சாகசங்களுள் ஒரு லவ்ஸ் கதையும் கீது !! 😜😜///

    இதை அல்லவா முதலில் சொல்லியிருக்கணும்.!

    கார்சனின் லவ்ஸ் - கார்சனின் கடந்தகாலம் மாஸ் ஹிட்.!

    டெக்ஸின் லவ்ஸ்.. (அதை லவ்ஸ்ன்னு சொல்லமுடியாது.. கம்பத்துல கட்டிவெச்சி கோடாரியால பொளக்கப் போகும்போது லிலித் வந்து கல்யாணம் பண்ணிக்க விரும்புறதா சொல்லும்) ..அந்த மூன்றுபாக கதையும் ஸ்மாஸ்ஹிட்..!

    டைகர்ஜாக்கின் லவ்ஸ் - காதலும் கற்றுமற.. இதுவும் செம்ம ஹிட்..!

    கிட் வில்லரின் லவ்ஸ்.. மெக்சிகோ படலம்தான் கொஞ்சம் சுமார்.. (ஆனா பர்சனலா எனக்கந்த கதை பிடிச்சிருந்துச்சி).!

    அதனால் நான் சொல்லவருவது என்னவென்றால்..

    டெக்ஸ் தொடரில் லவ்ஸ் கதைகள் மாபெரும் வெற்றியையே பெற்றிருக்கின்றன.. அதனால்..

    ரொம்ப ரோல் ஆகுது சார்.. அந்த லவ்ஸ் கதையையே போட்டுவிட்ருங்க..!

    ReplyDelete
    Replies
    1. சார். விதிபோட்ட விடுதலையில் கூட கிட் லவ்ஸ் பண்ணுவாரே🤔🤔🤔🤔🤔

      Delete
    2. விடுகதை என்று வாசிக்கவும்

      Delete
  40. அன்பு மிக்க தலீவர் & செயலர்...

    இந்த அடைமொழி அல்லது பட்டம் அதிகாரத்தைக் குறித்து அல்ல; துறப்பதற்கோ, பறிப்பதற்கோ. இப்படியெல்லாம் கூப்பிட்டா கூட ஒரு முட்டை போண்டாவோ அல்லது ஆட்டய போட்ட ரவுண்டு பன்னையோ கூட நீங்க தர மாட்டீங்கன்னு தெரியும்.

    இருந்தாலும் உங்களை அப்படி அழைப்பது உங்களின் மேல் இருக்கும் அன்பின் வெளிப்பாடே. அன்பை யாராவது வேண்டாம்னு சொல்லுவாங்களா? அப்படி சொன்னாத்தான் விட்டுடுவமா? இந்த கொடிய காலத்துல அன்பும் பாசமும் தானே அதிகம் பகிரனும். அதனால் அன்பால் எழுந்த இந்த அடைமொழிகளை எங்களால் நீங்களே சொன்னாலும் தவிர்க்க முடியாது என்று சொல்லி விடைபெறுவது

    உங்கள் அன்பு தொண்டன்.

    ReplyDelete
    Replies
    1. ///இந்த அடைமொழி அல்லது பட்டம் அதிகாரத்தைக் குறித்து அல்ல; துறப்பதற்கோ, பறிப்பதற்கோ. இப்படியெல்லாம் கூப்பிட்டா கூட ஒரு முட்டை போண்டாவோ அல்லது ஆட்டய போட்ட ரவுண்டு பன்னையோ கூட நீங்க தர மாட்டீங்கன்னு தெரியும்.///

      ங்ஙே.. முட்டைபோண்டா பஞ்சாயத்து எனக்கும் தலீவருக்கும் பேபிக்கும் நடுவே எழுந்ததாச்சே..!?

      Delete
    2. தலை வணங்குகிறேன் ஷெரீப்....

      Delete
    3. // அன்பால் எழுந்த இந்த அடைமொழிகளை எங்களால் நீங்களே சொன்னாலும் தவிர்க்க முடியாது //

      +1 Agreed!

      Delete
    4. தாரை தலைவர் பரணி அவர்களே, செயலாளர் விஜய் அவர்களே, தொண்டர்களே மற்றும் தலைவர் பதுங்கு குழியில் இருக்கும் போது அவ்வப்போது கல் எறிந்து தலைவரை உஷார் படுத்தும் நீண்டகால தொண்டர் கண்ணன் அவர்களே உங்கள் அனைவர்க்கும் எனது பணிவான வணக்கங்கள்!

      Delete
    5. அன்பாலும் பாசத்தாலும் இணைந்துவிடுவோம் நண்பர்களே.

      Delete
    6. ///அன்பு மிக்க தலீவர் & செயலர்...///

      அன்பால் வழங்கப்பட்டது மட்டுமன்று... தலீவர் என்ற சொல்லுக்கு நியாயமான முறையில் நிறைய விசயங்களில் முன்நின்று உள்ளார். 1990களின் ஆரம்பத்தில் இருந்தே இவரது விமர்சன கடிதங்கள் இடம் பெற்று உள்ளன...!!
      ஒவ்வொரு தருணத்திலும் எடிட்டர் சாரின் பின்புலத்தில் இருந்து உள்ளார்.

      செயலர்:- ஈவி என்றால் அதற்கு முழுத்தகுதியும் உண்டு...!!
      ஒவ்வொரு ஈரோடு விழாக்களிலும் முன்னின்று அனைத்து பணிகளையும் செய்வார்.

      10மணிக்கு மேல மீட்டிங் வரும் நண்பர்களுக்கு அலங்கரிக்கப்பட்ட மேடையும், ஹாலும் தான் காட்சி தரும். அதற்கு முன்பு ஒரு மணி நேரங்கள் பம்பரமாக ஈவி களத்தில் இறங்கி டேபிள்களை நகர்த்துவது முதல் , பேனர் கட்டுதல்....புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்தல்.... என அனைத்து பணிகளையும் சட்டை கசங்குவதைப் பற்றி கவலைப்படாமல் செய்வார்.
      நாம ஓரமாக நின்று அரட்டை அடிக்கும் போது அவர் விற்பனையில் மும்முரமாக இருப்பார்.
      பந்தியில் பரிமாறுவது முதல் கடைசி நபர் உண்டு முடிப்பது வரை கவனிப்பது என எல்லா நேரமும் செயல் ஒன்று அவரது முகம்...
      ஒப்புக்கு அவர் ஒன்றும் அவ்வாறு அழைகப்படல... சகல விதத்தில் பொருத்தமான வார்த்தை அது.

      நான் மேக்அப் பண்ணிகொண்டு ஓரமாக நின்று பார்த்து கொண்டு இருப்பேன் ஒவ்வொரு ஆண்டும்...!!!

      இதற்கெலாம் வயிறு எரிந்தா ஜெலிசில் நிறைய குடிங்கப்பா!!!

      Delete
    7. அருமை...குறையாது ஈவியின் பெருமை....இதெல்லாம் கிடைத்தவரிடம் ஆட்டையப் போடும் அந்த பசுத்தோல் புலிகளாலே...அவர்களால் தெரியாம சிக்கிய நண்பர்களும் இங்கு வர வெட்கப்படுவது தான் இவர்களின் சாதனை...அன்பளிப்பாக தருவது...இனாமா தருவது...தங்கள் ஈனத்தனங்களுக்கு தடையாய் உள்ள ஆசிரியர தூற்றுவது...இங்குள்ள நண்பர்கள தாக்குவது..ஜெலுசில் போதாது எரிச்சல் தீர

      Delete
    8. ங்ஙே.. முட்டைபோண்டா பஞ்சாயத்து எனக்கும் தலீவருக்கும் பேபிக்கும் நடுவே எழுந்ததாச்சே..!?//

      எல்லாப் பஞ்சாயத்தையும் விசாரிக்கத்தானே ஷெரீப்?

      Delete
    9. அன்புக்கு நன்றிகள் நண்பர்களே!🙏🙏🙏🙏

      Delete
    10. நன்றி மட்டுமா செயலரே. நிறய தம் கட்டி பேசிருக்கோம் ரவுண்ட் பன் இல்லீங்களா?

      Delete
    11. என்ன தலைவரே உங்களுக்கு பிரச்சனை,நீங்க என்ன சொன்னாலும் தலைவரே,யாரு என்ன சொன்னாலும் தலைவரே,நீங்க தலைவரே எமக்கு தலைவர்...
      சில விளக்கெண்ணைகள் சொல்வதால் உங்க தலைவர் பதவிக்கு பங்கம் வந்துடாது தலைவரே...
      விட்டுத் தள்ளுங்க தலைவரே...
      எப்பவும் போல இருங்க தலைவரே...
      அன்பால வரதெல்லாம் தடுக்க முடியாது தலைவரே...
      என்ஜாய் தலைவரே...

      Delete
  41. தல டெக்ஸ் பற்றி போட்டு தளம் சும்மா சுறுசுறுப்பாக இயங்குகிறதே .. I really love it Sir. அட்டகாசமான updates. உங்களுக்கும் காமிக் லவ்வர் ககும் எனது நன்றிகள்

    ReplyDelete
  42. Tex-naale "MEGA" "GUNDU"-nu mind-la fix aaiduchu. But we also read single crisp shots too. If it comes for voting, My Vote is for 160+ single slot.

    ReplyDelete
  43. ###வழக்கம் போல 4 சிறுகதைகளைத் தேர்வு செய்து ஒரு வண்ணத் தொகுப்பாய் வெளியிடலாமா ? அல்லது இந்த 160 பக்க முழுநீள சாகசங்களுள் ஏதொவொன்றைத் தேர்வு செய்யலாமா ? ###


    160 பக்க கலர் டெக்ஸ் க்கு என் ஆதரவு சார்..

    ReplyDelete


  44. ஒவ்வொரு கல்யாணத்திலும் பந்தி'னு வந்தால் உணவுவகைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கும்.ஒரே மாதிரியான விருந்துகளை கலந்துகொள்ளும் போது, ஒரு சலிப்பு, ஒரு சோர்வு, கூடவே மதமதர்ப்பும் சேர்வஉற்சாகனுபவம்து இயல்பானது.
    ஆனால்..
    வேறொரு கல்யாண விசேசம் எனும்போது அத்தனையும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் பழைய உற்சாகம் பந்தி வரை நீளுமல்லவா.?

    டெக்ஸ் கதைகளும் கல்யாணம் போலத்தான்.அந்த 'ஒரே ரகம் 'கொஞ்சம் சோர்வைத் தந்தாலும்.அந்த புத்துணர்சிகள் தனி ரகம்..

    ReplyDelete
    Replies
    1. அழகான உதாரணம் நண்பரே...:-)

      Delete
  45. I prefer Tex colour short stories collection; for diversified reading...

    ReplyDelete
  46. For Young tex; prefer complete story book than episodes... Thank you sir.

    ReplyDelete
  47. என்ன தான் சிறுகதைகளில் ஒரு கவர்ச்சி இருந்தாலும் ஐந்து கதைகள் ஒரே புத்தகமாக இருந்தால் ஒரு unfulfilled feeling தோன்றும். முழு நீள சாகசமே என் choice.

    ReplyDelete
  48. என்னாலே நம்பவே முடியவில்லை, தினம் தினம் பதிவு சூப்பர் ஆசானே,படித்து விட்டு வருகிறேன்

    ReplyDelete
  49. முழு நீள கதைக்கே எனது ஒட்டு.

    ReplyDelete
  50. லட்டு ஒன்ன முழுசா கையில குடுத்துட்டு எந்தப் பக்கம் கடிச்சா இனிப்பு அதிகம்னுகேட்கறீங்க.
    என்னத்த ொல்ல..

    ReplyDelete
  51. 160பக்க சாகசமேவேண்டும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  52. உயிரைத் தேடி தலைப்பு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சார்

    ReplyDelete
  53. ரொம்ப ஆவலுடன் எதிர்பாறேன்


    உயிரைத் தேடி...

    ReplyDelete
  54. Thanks. அவசியமான பதிவை பதிந்ததற்கு. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  55. ///முழுநீள சாகசங்களுள் ஒரு லவ்ஸ் கதையும் கீது !! ///

    பூப்போல அந்த 💞💞💞💕💞💕 திலே என் வாக்கை செலுத்துகிறேன்...!!!

    காதலும் வாழ்க!!! காதல் கதையும் வாழ்க!!

    ReplyDelete
  56. Dear Editor
    My vote is for 160 pages full single album
    Regards

    ReplyDelete
  57. 2022 க்கான திட்டமிடல் என்றால் டெக்ஸ்வில்லர் கதைக்கென செட்பாக்ஸ்ஸாக வழங்க முயற்சிக்கலாம்.

    ReplyDelete
  58. எல்லோருக்கும் வணக்கம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க....

    ReplyDelete
  59. 160 பக்க கலர் டெக்ஸ்க்கே எமது வோட்டுங்க.

    ReplyDelete
  60. அப்படியே எங்க தலைவருக்கும் ஒரு அப்டேட்ஸ் போடுங்களேன் சார்...

    ReplyDelete
  61. I prefer 160 pages whole color tex. All the small color tex can be published as specials 320 pages/10 stories....
    தலையின் சரவெடி ஸ்பெஷல்

    ReplyDelete
  62. “வழியனுப்ப வந்தவன்” எனக்குப் பிடித்திருந்தது. சித்திரங்கள், வித்தியாசமான கதைக்களம், கண்களை உறுத்தாத வண்ணக்கலவை என்று பல விடயங்கள்.....

    ReplyDelete
  63. டியர் எடி அடுத்த 2022 ம் வருடமும் இவ்வருடத்தை போல் 5000 - 7000 க்குள்ள சந்தா வை கம்ப்ளீட் செய்தால் ஆச்சு .. கொரோணா இரண்டாவது அலை எல்லாரையும் போட்டு தாக்கிட்டு இருக்கு .. இதில் சாமான்யன் முதல் ரிச் லெவல் வரை எல்லாரும் பணம் காசு என்கின லெவலில் பாதிக்கப்பட்டிட்டே இருக்காங்க .. கடந்த பத்து நாட்களாய் பெட்டுக்காகவும் ஆக்ஸிஜனுக்காகவும்
    ரெப்டெம்சிவிர் மருந்துக்காகவும் அலைந்தவர்களை ( Low To Rich ) பார்க்கும்போது மனம் பரிதவித்து போனது ..

    எனக்கும் இங்குள்ள நண்பர்கள் க்கும் எவ்விதமாக இப்பாதிப்பு ஏற்படுகிறது என்பது தெரியாவண்ணம் கேவிட் இரண்டாவது அலை அட்டாக் செய்யும் நாளைய வருடம் மூன்றாவது அலை சிறிது குறைந்தாலும் இரண்டாவதின்பா திப்பே மேலோங்கி இருக்கும் .. எனவே 5000 க்குள் 2022 சந்தாவை முடித்து புத்தகங்களின் எண்ணிக்கையை குறைவாக தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .. .. இன்னும் வருடங்கள் உள்ளது அப்போது விதம் விதமாக புத்தகங்களை களமிறக்காமல் போய் விடுவீர்களா என்ன.??

    இந்த வருடத்தை கடப்போமா என்கிற சந்தேகம் நிறைய பேர்க்கு வந்துவிட்டது.. காமெடி கிண்டல் தாண்டி தன்னையும் தன் குடும்பத்தையும் பொருப்பாக பார்த்துக்கொள்வனே ஒரு சிறந்த மகனாகவும் தந்தையாகவும் பேரனாகவும் கணவனாகவும் இருந்திட இயலும் ..

    என் மனதில் மதியத்தில் தோன்றியது சொல்ல நினைத்ததை சொல்லி விட்டேன் .. மேலும் எடியோட விருப்பம் தான்

    ReplyDelete
    Replies
    1. சம்பத்....நியாயமான கவலைகள் & ஆதங்கம் ! உங்கள் வயசுக்கே இவ்வளவு பயமெனில் என் வயதில் யோசித்துப் பாருங்களேன் ?! ஒவ்வொரு தினத்தையும் முழுசாய்க் கடந்தாலே தம்புரான் புண்ணியமென்றே வண்டி ஓடிவருகிறது ! அக்டொபரில் வரவுள்ள அட்டவணை நிச்சயமாய் யதார்த்தங்களை உணர்ந்ததாகவே இருந்திடும் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  64. எடி
    2023ல் டெக்ஸ் 75க்கு டெக்ஸோட 75 கதைகளை வெளியிடவும்.

    ReplyDelete
    Replies
    1. 2021-ஐ கடக்க வரம் தேடுவோம் நண்பரே முதலில் !

      Delete
  65. 160 க்கு 10 புக் உள்ளதை முதலில் முடிப்போம் ஆசான்.....

    32 பக்க விப்பித்தான் டெக்ஸ் பின்னர் பார்க்கலாம்...


    😊😊😊

    ReplyDelete
  66. எப்போதும் மாஸ்க்.....தெரிந்தவர்....தெரியாதவர்....யாரை பார்த்தாலும் மாஸ்க் மட்டுமே காப்பாற்றும்....



    எங்க ஊரு...பாகத்தாத் அழகிகள் போல எப்போதும் முகம் காட்டாமல் இருப்பதே நலம்.....

    ஹி ஹி....☺️☺️☺️☺️☺️

    ReplyDelete
  67. 32 பக்க சிறுகதை தொகுப்புக்கு ஒரு குத்து.

    ReplyDelete
  68. சார் போன lockdown ல் நீங்கள் மலரும் நினைவுகளை நிறைய பகிர்ந்து கொண்டதாக நினைவு...இப்பவும் சிங்கத்தின் சிறுவயதில் ஏதாச்சும்.....

    ReplyDelete
    Replies
    1. இது அதிகாரியெனும் அசல் சிங்கத்தின் வேளை சார் !

      அப் கி பார்...
      டெக்ஸ் கி சர்க்கார் !

      Delete
    2. அப்ப இன்னிக்கும் உண்டா சார் சிங்கத்தின் கர்ஜனை...

      Delete
  69. My vote 5x32 pudusa 5 wrapper kidaikume colour la

    ReplyDelete
    Replies
    1. அவை ஒரிஜினலாகவே ஒரே புக்குக்குள் வெளியாகும் சிறுகதைகள் என்பதால் தனித்தனியாய் அட்டைப்படங்கள் நஹி ! ஒரே அட்டைப்படம் மொத்தத்துக்குமாய் !

      Delete
  70. கிட்டதட்ட இன்னும் 24000 பார்வைகளே எஞ்சியுள்ளன, 5 இலட்சம் பார்வைகளுக்கு...!!!
    5 மில்லியன் ஸ்பெஷலுக்கு ஓ போடும் தருணமிது...!!!

    ReplyDelete
  71. 32 பக்க டெக்ஸ் தொகுப்பு 5 விதமான கதைகள் தாங்கி வரும் போல இவற்றில் கார்சன் தனி ஆவர்த்தனம்,கிட் வில்லர் சோலோ எல்லாம் கிடைக்கும் போல.

    ReplyDelete
  72. 32 பக்க தொகுப்புக்கு ஜே.

    ReplyDelete
  73. XIII க்காக தயார்செய்துகொண்டிருக்கிறார்...

    200

    ReplyDelete
  74. அதிகாரியோடு புதன் பதிவு எப்போது :-)

    ReplyDelete
  75. *காமிக்ஸ் எனும் கனவுலகம்*

    *அன்பார்ந்த நண்பர்களே.!*

    *இதோ நமது குழுவின் அடுத்த காமிக்ஸ் போட்டிக்கான அறிவிப்பு*

    *மொத்தம் 3 போட்டிகள்..*

    *வரும் 16, 23, 30/5/2021 ஆகிய மூன்று ஞாயிறுகளும் போட்டிகள் நடைபெறும்*
    *இம்முறை தோர்கல் ஷ்பெசல் போட்டிகள்*

    *ஒவ்வொரு போட்டியிலும் மூன்று பரிசுகள் வீதம் மொத்தம் ஒன்பது பரிசுகள் ப்ளஸ் ஒரு போனஸ் பரிசு.. ஆக பத்து பரிசுகள்*
    ~~~~~~~~

    *பரிசு- லயன் காமிக்ஸ் வெளியிடும் ஆகஸ்ட் புத்தகத்திருவிழா ஷ்பெசல் இதழான "உயிரைத் தேடி." ஒன்பது நபர்களுக்கு.. அத்துடன் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட ஒருவருக்கு கூடுதலாக ஒரு போனஸ் பரிசும் உண்டு.. அது பின்னர் அறிவிக்கப்படும்*

    *தோர்கல் போட்டிக்கான கதைகள்*

    *16/5/2021 ஞாயிறு இரவு 9மணிக்கு நடக்கவிருக்கும் போட்டிக்கான புத்தகங்கள்..*

    *1.பிரபஞ்சத்தின் புதல்வன்*
    *2.பனிக்கடலில் ஒரு பாழும் தீவு*
    *3.சாகாவரத்தின் சாவி(முதல் பாகம் மட்டும்)*

    ~~~~~~~~~

    *23/5/2021 ஞாயிறு இரவு 9 மணிக்கு நடக்கவிருக்கும் போட்டிக்கான இதழ்கள்*

    *1.சாகாவரத்தின் சாவி(இரண்டாவது பாகம் மட்டும்)*
    *2.மூன்றாம் உலகம்(இரண்டு பாகங்களும்)*
    ~~~~~~~~~~~

    *30/5/2021 ஞாயிறு இரவு 9 மணிக்கு நடக்கவிருக்கும் போட்டிக்கான இதழ்கள்*
    *1விண்வெளியின் பிள்ளை*
    *2. கனவு மெய்ப்பட வேண்டும்(இரண்டு பாகங்களும்)*

    *நடுவரின் முடிவே இறுதியானது*

    *பதில்கள் அனுப்ப ஒருமணி நேரம் அவகாசம்(அதாவது 9Pm -10pm)*

    *பதில்களை 9787222717 என்ற எனது வாட்ஸ்அப்பிற்கு மட்டுமே அனுப்பவேண்டும்*

    *ஒரு போட்டியில் வென்றவர் அடுத்த போட்டியிலும் கலந்துகொள்ளலாம்.. பரிசு ஒருமுறைதான்.. ஆனால் ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் சிறப்பு பரிசு வழங்ப்படுவதால் அனைத்து போட்டிகளிலும் கலந்துகொள்வது நலம்*

    *போட்டிக்கான கேள்விகள் குழுவில் பகிரப்பட்ட நொடியில் இருந்து போட்டி நேரம் முடியும்வரை குழுவில் மற்ற கமெண்டுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது*
    *மீறி கமெண்ட் செய்தால் போட்டி முடியும்வரை குழுவில் இருந்து தற்காலிமாக நீக்கப்படுவார்கள்*

    *கடந்த காமிக்ஸ் போட்டிகளைப் போலவே இதற்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்*

    *முன்கூட்டிய நன்றி நண்பர்களே🙏🏻🙏🏻*

    ReplyDelete
  76. Wow அப்போ அடுத்த வருசம் 3 டெக்ஸ் x,y,z வழி தடத்தில் வர போகுதா....

    ReplyDelete