நண்பர்களே,
வணக்கம். அதிகாரியின் இத்தாலியத் தடங்கள் மீதான பார்வை தடங்கலுக்குப் பின்னே தொடர்கிறது ! இது குறித்த முந்தைய பதிவைப் படித்திடாதோர் - ப்ளீஸ் இங்கே ஒருவாட்டி பாருங்களேன் : http://lion-muthucomics.blogspot.com/2021/05/blog-post_12.html
போனெல்லியில் டெக்ஸ் இதழ்களுக்கென ஏற்படுத்தப்பட்டிருக்கும் சில தடங்கள் ரொம்பவே exotic ஆனவை ! And இவற்றின் பெரும்பான்மை வெகு சமீப உருவாக்கங்களே ! பொதுவாய் ஒரு கதாப்பாத்திரத்தை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றி அமைக்க விழைவதே நடைமுறையாக இருந்திடும் ! அமெரிக்க சூப்பர்ஹீரோ நாயகர்களின் விஷயத்தில் இது ரொம்பவே பயன்பாட்டில் இருந்திடுவதுண்டு ! கதாநாயகர்களின் நடை, உடை, உடனிருப்போரினில் மாற்றங்கள் ; என்று ஏதேதோ செய்யப்படுவதுண்டு ! போனெல்லியில் கூட 'டைலன் டாக்' தொடரினில் ஒரு புதுயுக டைலனை முன்னிறுத்த முயற்சித்து அதில் வெற்றியும் கண்டு வருகின்றனர் ! ஆனால் மேலே ஓட்டமெடுக்கும் நீரானது காட்டாற்று வெள்ளமாகவே இருப்பினும், அடியிலுள்ள டெக்ஸ் எனும் பாறையினில் சிறு மாற்றங்கள் கூட நிகழ்வதே இல்லை ! பெரியவர் போனெல்லி..அப்புறமாய் செர்ஜியோ போனெல்லி ; பின்னே க்ளாடியோ நிஸ்ஸி & இப்போது மௌரோ போசெல்லி என வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்தோரின் கைகளில் லகான்கள் மாறி மாறி இருந்திருப்பினும், டெக்ஸ் & டீமின் ஒட்டுமொத்த பாத்திரப்படைப்புகளில் இம்மி கூட மாற்றங்கள் செய்யப்படவில்லை ! சொல்லப் போனால் இந்த நால்வர் அணியின் ஆற்றல்களும், அவர்களிடையிலான நேசங்களும், முன்னெப்போதையும் விட இன்று கூடுதலாய் மெருகேற்றப்பட்டு செம polished version ஆக வலம் வருவதைக் காண முடிகிறது ! மாற்றங்களென்று படைப்பாளிகள் செய்திட முனைவது - டெக்ஸ் சிறுகதைகள் ; டெக்ஸ் வண்ணத்தொகுப்புகள் ; சற்றே வித்தியாச எதிரிகள் என்ற ரீதியில் தான் !
ஒரு தொடர் 20 ஆண்டுகளுக்கு மேலாய் வெற்றி கண்டு விட்டாலே, அதன் உப பாத்திரங்களைக் கொண்டு spin-offs உருவாக்குவதும் நடைமுறைகள் ! ஆனால் 73 ஆண்டுகளாக பின்னேயும் முன்னிலை காண்பது TEX என்றதொரு அதகள நாயகர் மட்டுமே ! "கார்சனைக் கொண்டு ஒரு தனித்தொடரை உருவாக்கும் எண்ணம் உண்டாங்க சார் ?" என்று நான் போனெல்லியில் கேட்ட போது ஒரு மந்தகாசப் புன்னகையினை மட்டுமே தந்தார்கள் ! "உடைந்திடாத வரைக்கும் எதையும் ரிப்பேர் செய்ய நினைப்பானேன் ?" என்பது அவர்களது திட சிந்தனை and ஒரு முக்கால் நூற்றாண்டாகியுமே டெக்ஸ் going pretty strong எனும் போது, அவர்களது சிந்தனையினில் பிழை இருப்பதாகத் தோணவே இல்லை ! So பழகிப் போன TEX எனும் பெயர் தாங்கியே தட தடுக்கும் மீதத் தடங்களை பற்றிப் பார்ப்போமா ?
"TEX நாவல்கள்" என்றதொரு வரிசையும் உண்டு - ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவந்திடும் படைப்புகளோடு ! "நாவல்" என்றால் நமக்குத் பரிச்சயமான புதினங்களை அவர்கள் குறிக்கவில்லை ; மாறாக - அந்த மாமூலான இத்தாலிய காமிக்ஸ் format-களில் அல்லாது, பிராங்கோ-பெல்ஜியப் படைப்புகளின் பக்க அமைப்புடன், சித்திர அமைப்புகளுடன், நீளங்களில், வண்ணத்தில், வெளிவரும் கி.நா. பாணி இது ! "ஒரு தலைவன்..ஒரு சகாப்தம்" என்று நாம் வெளியிட்ட இதழ் நினைவுள்ளதா guys - அது இந்த வரிசையினில் ஆல்பம் # 1 ! துவக்கமும், தொடர்ந்த சில ஆல்பங்களும் அத்தனை சுகப்படவில்லை தான் ; நொடியில் இளம் டெக்ஸ் கதைகளை இந்த பாணிக்கேற்ப அமைத்து உள்நுழைந்து போசெல்லி தனது வெற்றி முத்திரையைப் பதித்தார் ! இன்றைக்கு இதழ் # 12 -ல் நிலைகொண்டு நிற்கிறது இந்த "முழுக்க வண்ணம் ; முழுக்கவே பிரான்க்கோ-பெல்ஜியப் பாணி" என்ற template கொண்டிருக்கும் வரிசையானது !
தொடர்வது ஒரு முரட்டு புக்கின் தடம் !! TEX LIBRARY என்ற பெயரில் ஹிட்டடித்த கதைகளின் தொகுப்புகள் 400 பக்க டீலக்ஸ் பதிப்புகளாய் அவ்வப்போது வெளிவருகின்றன ! Black & White தான் ; ஆனால் செம rich தயாரிப்புத் தரங்களோடு !!
Last, but not the least : ஆண்டுக்கொருமுறை வெளியாகும் TEX MAGAZINE !! 176 பக்கங்களுடன் வெளியாகும் இந்த ஆண்டுமலரினில் 2 முழுநீளக் கதைகள் ; அப்புறம் வான்மேற்கு சார்ந்த நிறைய கொசுறுத் தகவல்கள் ; western movies பற்றிய அலசல்கள் என்று கலந்துகட்டி இருக்கின்றன ! இதுவரையிலும் 7 இதழ்கள் வெளியாகியுள்ளன இந்த வரிசையில் ! And டெக்ஸ் - லிலித் ஜோடியாய் பயணிக்கும் கதையும் இதனில் சேர்த்தி !
மேற்படி 10 தடங்கள் தவிர்த்தும் வேறு மார்க்கங்கள் இருந்துள்ளன தான் - முழுசும் கலர் செய்து ஒரு இத்தாலிய தினசரியின் சந்தாதாரர்களுக்கு விலையின்றி வழங்கப்பட்ட TEX தொகுப்புகளை போல ! ஆனால் தற்சமய நடைமுறையில் உள்ளவை இந்தப் பத்து தான் -at least நான் நோட்ஸ் எடுத்த வரையிலும் ! Of course I could stand corrected too !
ஆக போனெல்லியின் தலைமகனுக்கு உருவாக்கப்பட்டுள்ள தடங்களை பார்த்தாச்சு !!
- புது டெக்ஸ் - 112 பக்கங்களுடன்
- Classic Tex - வண்ண மறுபதிப்புகள் - 64 பக்கங்களில்
- ALL TEX - ஒரிஜினலின் அதே வரிசைக்கிரமத்தில் மறுபதிப்புகள்
- இளம் டெக்ஸ் - 64 பக்கங்கள் - மாதம்தோறும்
- MAXI Tex - முரட்டு சாகசங்களுடன் !
- TEX நாவல்ஸ் - வண்ணத்தில்
- COLOR TEX
- TEX புது மறுபதிப்ஸ்
- TEX லைப்ரரி
- TEX MAGAZINE
- மேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ?
- முன்னாளில் வெளியான "தலையில்லாப் போராளி" மாக்ஸி சைசில் கலக்கியது நினைவிருக்கலாம் ! ஆனால் ஆச்சர்யமூட்டும் விதமாய் அது விற்பனையில் அத்தனை சோபிக்கவில்லை ! அழகாய், தெளிவாய், அம்சமாய் இருந்த அந்தப் பெரிய சித்திரங்களை சிலாகித்தீர்கள் தான் ; ஆனால் பெருசாய் கைதூக்கி விடவில்லை ! அந்த சைசில் இன்னொரு black & white இதழ் பற்றிய உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?
- "TEX நாவல்ஸ்" பற்றி மேலே சொல்லியிருந்தேன் ! இவற்றிற்கு 2022 அட்டவணையில் ஒரு ஸ்லாட் போடலாமா - அல்லது இன்னமும் "ஒரு தலைவன்..ஒரு சகாப்தம்" தந்த சாத்துக்களிலிருந்து தெளியவில்லையா ? Your thoughts please ?
First
ReplyDeleteகங்ராட்ஸ்..
Delete2nd ...
ReplyDeleteநன்றி
DeleteSecond.... லயோ நம்பமுடியவில்லை.
ReplyDelete🙏🙏
ReplyDelete5
ReplyDeleteநானு
ReplyDeleteநானுந் தான் ஜோக்ஸ் போட்டேன்...
Deleteசிரிப்பே வல்லியா சார்...
சரி சரி...
நம்மாளு ஸ்டீல் வாங்குனா...நாம அல்லாரும் வாங்குன மேதிரி தான...
ஹிஹிஹி
Deleteகேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற 'கோவை புயல்' ஸ்டீல் க்கும், நண்பர் பார்த்திபனுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள் நண்பா
Deleteவாழ்த்துகள் நண்பர்களே🌹🌹🌹🌹
Deleteநானும்ம்
ReplyDeleteஷப்பாடி
ReplyDeleteஎடிட்டர் சார்.. அடுத்த வாரம் எங்கள் தளபதிக்கு ஒதிக்கியிருப்பதாக வரும் தகவல்கள் உண்மைதானா..(மெய்யாலுமே தகவல் வந்துச்சு சார்).
ReplyDeleteவாய்ப்பே இல்லீங்ணா
Deleteஓ மை கடவுளே... ஏதாவது ஒரு நாளைக்காவது பிலீஷ்..பாத்து பண்ணுங்கோ. :)
Deleteமேக்ஸி டெக்ஸ் முரட்டு சாகஸங்களுடன்..
ReplyDeleteஹிஹி அப்படியே அந்த பாக்கி எல்லாத்திலயும் ஒவ்வொண்ணுங்..அவ்வ்..
Delete+1
Deleteமேக்ஸியில் வந்தவை எல்லாமே மை ஃபேவரைட்😍
பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றிகள் மகி
Deleteஹூம்ம்ம்ம்....
ReplyDeleteடைகரை குளிக்க சொன்னவங்களுக்கும், டெக்ஸை குளிக்க சொன்னவங்களுக்கும் கடைசில ஒரு சோப்பு டப்பா கூட தராம விட்டுட்டாங்களே....!?!?
#1. டெக்ஸ் நாவல்ஸ்
ReplyDelete#2. யெஸ்ஸுங்கோ
#3. யெஸ்ஸோ யெஸ்ஸுங்க...
Delete#1. டெக்ஸ் நாவல்ஸ்
#2. யெஸ்ஸுங்கோ
#3. யெஸ்ஸோ யெஸ்ஸுங்க...
சார்... "ஒரு தலைவன்... ஒரு சகாப்தம்.." உண்மையிலேயே என்னை மிகவும் கவர்ந்த இதழ்... அதே தடத்தில்... "வண்ணத்தில்" வெளியிட.. என்னுடைய ஓட்டை இங்கே பதிவு செய்கிறேன்... நன்றி..
ReplyDelete+1
Delete21
ReplyDeleteCaption போட்டியில் வென்ற நண்பரகள் Steel Claw மற்றும் பார்த்தீபனுக்கு என் வாழ்த்துகள்...!!!
ReplyDeleteநன்றிகள் நண்பரே
Deleteடெக்ஸ் எப்படி வந்தாலும் சரிதான் சார்.. பிரங்கோ பெல்ஜியம் ஸ்டலில் வந்தால் இன்னும் சிறப்பு.
ReplyDeleteஎல்லாருக்கும் வணக்கம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க....
ReplyDeleteமேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ?
ReplyDeleteஇளம் டெக்ஸ் - 64 பக்கங்கள் - மாதம்தோறும்
இதில் பிரச்னை கதை மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து தான் முடிகிறது.
Deleteஆகையால் கதை முடிந்தபின்பு குண்டு புக் ஆக போட வேண்டுதல்.
//ஆகையால் கதை முடிந்தபின்பு குண்டு புக் ஆக போட வேண்டுதல்.//
Delete@KVV - அப்படியே செய்திடலாம்... அப்படின்னு ஆசிரியர் சொல்வாரு பாருங்களேன்....
இதுல் மாதம் ஆறு ...மீதம் ஆறு மேக்சில
Deleteஎல்லா டெக்ஸ்லயும் வரிசையா ஒண்ணொண்ணா போடணும்...சார்...
ReplyDeleteசரியா...
ஒங்களுக்கு கும்பகோணம் பன்னீர் ஜாங்கிரி வாங்கி தருவேன் சரியா...
ஸ்டீல் க்ளா மற்றும் பார்த்திபன் இரண்டு நண்பர்களுக்கும் என் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteவாழ்த்துகள் ஸ்டீல் க்ளா..💐💐
ReplyDeleteவாழ்த்துகள் பார்த்தீபன் சார்..💐💐
நன்றிகள் நண்பா
DeleteTEX லைப்ரரி பற்றிய தகவல்கள் கடைவாயில் ஒரு ஜலப் பிரவாகத்தையே உருவாக்கிவிட்டன.இதை முயற்சிக்கலாமா ஆசானே?
ReplyDeleteSpam!!!! இங்கே எப்படி திடீரென???? 🤔🤔🤔
ReplyDeleteஇதுவரை நாம் பயணிப்பது
ReplyDeleteரெகுலர் டெக்ஸ் கதைகள்
குண்டு கதைகள்
கலர் டெக்ஸ் சிறுகதைகள்
மாக்ஸி டெக்ஸ்
மறுபதிப்புகள்
எனது ஓட்டு
பெரியவரின் கிளாசிக் குண்டு புத்தகங்கள்
மாக்ஸி குண்டு புத்தகங்கள்
நாவல் இன்னும் ஒரு வாய்ப்பு அளிக்கலாம்
நல்ல முன்மொழிவு கிருஷ் ஜி!
Deleteநன்றி STV
Deleteஎன்னாது TEX நாவல்களா? ஒரு தலைவன் ஒரு சகாப்தம் மாதிரியா ?!!! த
ReplyDeleteதலை தெறிக்க காததூரம் ஓடும் படங்கள் பத்தாயிரம்.
மேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ?
ReplyDelete.....ALL TEX - ஒரிஜினலின் அதே வரிசைக்கிரமத்தில் மறுபதிப்புகள்
// TEX நாவல்ஸ்" பற்றி மேலே சொல்லியிருந்தேன் ! இவற்றிற்கு 2022 அட்டவணையில் ஒரு ஸ்லாட் போடலாமா - அல்லது இன்னமும் "ஒரு தலைவன்..ஒரு சகாப்தம்" தந்த சாத்துக்களிலிருந்து தெளியவில்லையா ? //
ReplyDeleteஆமாம் சார். தலைவன் ஒரு சகாப்தம் இன்னும் படித்து முடிக்க முடியவில்லை. எனவே TEX நாவல்ஸ் வேண்டாம் சார் வேண்டாம்.
என்னை விட்டு விடுங்க... :-)
என்னை(யும்) விட்டு விடுங்க... :-) நன்றி - pfb
Deleteவாழ்த்துக்கள் பொன்ராசு.
ReplyDeleteவாழ்த்துக்கள் பார்த்தீபன்.
நண்பர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
Deleteநன்றில....நன்றிகள் குமார்
Deleteபார்த்திபன் & ஸ்டீல் வாழ்த்துக்கள் நண்பர்களே
ReplyDeleteநன்றிகள் நண்பா
Deleteநானும் வந்துட்டேன்
ReplyDeleteபரிசு பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ..
ReplyDeleteபாராட்டுகள் நண்பர்களே...
//மேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ?/
ReplyDelete2.கிளாசிக் டெக்ஸ் வண்ண மறுபதிப்புகள்
// மேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ? //
ReplyDeleteColor டெக்ஸ்.
தலையில்லா போராளி size கதைக்கு double ok சார்.
டெக்ஸ் novels kkum double ok தான் சார்
ஆல் டெக்ஸ்
ReplyDeleteகலர் டெக்ஸ்..
டெக்ஸ் நாவல் களில் அந்த L'Ultima Mission படங்கள் தெறிக்க விடுகின்றன. அதை வெளியிட வாய்ப்பு உண்டா சார்???
ReplyDelete///முன்னாளில் வெளியான "தலையில்லாப் போராளி" மாக்ஸி சைசில் கலக்கியது நினைவிருக்கலாம் ! ஆனால் ஆச்சர்யமூட்டும் விதமாய் அது விற்பனையில் அத்தனை சோபிக்கவில்லை ! அழகாய், தெளிவாய், அம்சமாய் இருந்த அந்தப் பெரிய சித்திரங்களை சிலாகித்தீர்கள் தான் ; ஆனால் பெருசாய் கைதூக்கி விடவில்லை ! அந்த சைசில் இன்னொரு black & white இதழ் பற்றிய உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?//
ReplyDeleteதலையில்லா போராளி அருமையான சித்திரங்களுடன் அசத்தியது அதே போல் சித்திரத் தரத்துடன் உடைய கதைகளை முயற்ச்சிக்கலாம்
"TEX நாவல்ஸ்" பற்றி மேலே சொல்லியிருந்தேன் ! இவற்றிற்கு 2022 அட்டவணையில் ஒரு ஸ்லாட் போடலாமா - அல்லது இன்னமும் "ஒரு தலைவன்..ஒரு சகாப்தம்" தந்த சாத்துக்களிலிருந்து தெளியவில்லையா ? Your thoughts please ?
ReplyDeleteவேண்டாம் ஆசிரியரே தல கலக்கி கொண்டிருக்கிறார் அவரை மீண்டும் ஒரு ரிஸ்க் எடுக்க விடுவானேன்
பதிவை படிச்சாச்சு....
ReplyDeleteடெக்ஸ் லைப்ரயை திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.
கதைகளின் பக்க அளவுகளை பொறுத்து ; மூன்று அல்லது நான்கு கதைகள் உள்ளடக்கி இரண்டு மாத இடைவெளியில் வெளியிடலாம்.
என்னைக்கு கேட்டால், எந்த தடமும் வேண்டாம். மாறாக வருடத்திற்கு 30-40 மாறுபட்ட கதைகளை வெளியிட்டு நமது பன்முக வடிவத்தை ஸ்திரப்படுத்தலாம். ஒரே நாயகரின் கதைகளை 10-12 கதைகளாக வெளியிடுவது அயர்ச்சியூட்டுகிறது.
ReplyDelete(டெக்ஸ் கதைகளையும் விரும்பி படிப்பவன் நான். ஆனாலும், இவ்வளவு அதிகமான கதைகள் வேண்டாமே!)
30-40 இதும் நல்லாருக்கே
Deleteசார் நீங்கள் கூறுவது சரி தான் ஆனால் மீதம் நாயகர்கள் வருவதற்கே டெக்ஸ் விற்பனை தான் உதவுகிறது. இப்போ சொல்லுங்கள்
Deleteசார் சடசடவென பதிவ முடித்தது போல இருக்கு....
ReplyDelete1. சார் மேக்சி டெக்ஸ்ல பாதியும்....இளம் டெக்ஸ்ல மீதியும் கலந்து கட்டி ஒரு தனித்தடம்
2.மேக்சி டெக்ஸ் அந்த தலையில்லாப் போராளி அட்டகாச கதை...அதற்க்கு மேலாய் சித்திரங்கள்....புத்தக பிரம்மாண்டம்...முதல் முதலாய் இவ்வளோ பெரிய சைசா என பிரித்ததும் கிடைத்த சந்தோசமே தனி....புதுக் கதைகளே படிக்காத நிலையில் மூன்று முறை வாசித்திருப்பேன்....இரத்தப்படலத்தில் கூட பெரிய சைசுகள் விற்பதில் தாமதம் என கூறிய நினைவு....பிடிக்காத நண்பர்களை விட்டு விட்டு லிமிட்டெடுல பிரம்மாண்டமா ஒரு கதை தரலாமே...
3.தலைவன் ஒரு சகாப்தம் போல நாவலில் ஒரே கதையிருந்தா அதே சைசுல போடலாமே கதை பிடித்திருந்தா...மேலும் நம்மிடையே மிகச்சிறந்த கதை வரிசைகள் பல உண்டென்பதால் ஆகச்சிறந்ததை போட்டுத் தள்ளுவோம்...
எனது பர்சனலாய்....
மேக்சிஸ் கலர்ல 1.ஒரு அட்டகாசக் கதை
2. இங்க காட்டிய சுறாமீன் வேட்டை மறு மறு பதிப்பிலிருந்து
3.தன் காதல் மனைவி லிலித்துடனான மேகசைன்...
சார் பரிசு எனக்கே எனக்கா....சொக்கா....இத்தீபாவளி மலருக்காக சந்தா கட்டி விட்டதால் வாங்க இயலா நண்பர் ஒருவருக்கு தங்கள் சார்பாகப் தந்திடுவோம்....ஈவி யாருக்கு தரலாம்னு சொல்லுங்க....நன்றிகள் ஆசிரியரே
மேக்சிஸ் நீங்க முதன்மை காட்டிய ரெண்டு அட்டயுமே அள்ளுவது...ஒவ்வொன்றாக விடலாம்
Delete///நண்பர் ஒருவருக்கு தங்கள் சார்பாகப் தந்திடுவோம்....ஈவி யாருக்கு தரலாம்னு சொல்லுங்க..///
Deleteஅதிகாரியின் அதி தீவிர விசிறிகளில் ஒருவரான நண்பர் கும்பகோணம் Sridharan ( Sridharanrckz)க்கு கொடுக்கலாம் ஸ்டீல் - அவர் ஏற்கனவே சந்தா கட்டியிராதபட்சத்தில்!
அப்படியே ஆகட்டும் ஈவி...சார் நண்பர் ஸ்ரீ தர்க்கு தந்திடுவோம்
Deleteபரிசை எனக்கு சிபாரிசு செய்த ஈ.வி அவர்களுக்கும் பரிசளித்த கோவை ஸ்டீல் ஜீக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
Deleteஎப்படியும் நான் தீபாவளி டெக்ஸ் வாங்குவது வழக்கம் ஆனால் இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளியாக இருக்கும்.
நண்பர்களின் அன்பில் கிடைப்பது விலைமதிப்பற்ற பொக்கிஷம்.
முதல் முறையாக கேப்ஷன் போட்டியில் பங்கு பெற்றேன்
பரிசு நமது காமிக்ஸ் நிறுவனத்தின் நன்பர்கள் அளித்து விட்டார்கள்.
ஆசிரியர் அவர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள் சார்.
நன்றிகள் நண்பரே
Deleteவாழ்த்துகள் நண்பரே ஸ்டீல்...
Deleteஏலே மக்கா நீ செய்தது நல்ல செயல்ல. பாராட்டுக்கள்.
Delete9. Tex library… 400 pages gundu book 😀😀😀
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteபரிசு பெற்ற நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎂🎂🎂
ReplyDeleteTEX library
ReplyDelete9. Tex library… 400 pages gundu book 😀😀😀
ReplyDeleteபார்த்திபன் & ஸ்டீல் வாழ்த்துக்கள் நண்பர்களே!!
ReplyDeleteநன்றிகள் நண்பா
Delete///மேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ?///
ReplyDelete5.MAXI Tex - முரட்டு சாகசங்களுடன்
TEX LIBRARY
Delete///முன்னாளில் வெளியான "தலையில்லாப் போராளி" மாக்ஸி சைசில் கலக்கியது நினைவிருக்கலாம் ! ஆனால் ஆச்சர்யமூட்டும் விதமாய் அது விற்பனையில் அத்தனை சோபிக்கவில்லை ! அழகாய், தெளிவாய், அம்சமாய் இருந்த அந்தப் பெரிய சித்திரங்களை சிலாகித்தீர்கள் தான் ; ஆனால் பெருசாய் கைதூக்கி விடவில்லை ! அந்த சைசில் இன்னொரு black & white இதழ் பற்றிய உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?///
ReplyDeleteதாராளமாக வரலாம் சார்..! தலையில்லா போராளி செம்மயா இருந்துச்சி.!
///"TEX நாவல்ஸ்" பற்றி மேலே சொல்லியிருந்தேன் ! இவற்றிற்கு 2022 அட்டவணையில் ஒரு ஸ்லாட் போடலாமா - அல்லது இன்னமும் "ஒரு தலைவன்..ஒரு சகாப்தம்" தந்த சாத்துக்களிலிருந்து தெளியவில்லையா ? Your thoughts please ?///
தலைவன் ஒரு சகாப்தம் அத்தனை ருசிக்கவில்லை சார்.! எனவே இதற்கு என்னுடைய பதில் NO!
வணக்கம் நண்பர்களே!
ReplyDelete1) கலர் டெக்ஸ்.
Delete2) வேண்டாம், கலர் மட்டுமே மேக்சியில்!
3) கண்டிப்பாக வேண்டும்.
அன்பால் எங்கள் இதயத்தில் *வாடகை தராமலே* குடியிருக்கும் தாரையின் தங்கம்,
ReplyDeleteபண்பில் *வரி கட்டாததால்* குறையாமல் இருக்கும் சேந்தம்பட்டியின் சிங்கம்
பதுங்கு குழி புதல்வர்,
போராட்ட குழுவின் நிரந்தர தலீவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் & வணக்கங்கள். 💐💐💐🙏🏼🙏🏼🙏🏼
வாழ்த்துகளுக்கு நன்றி ஷெரீப்...:-)
Deleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தலைவரே.
Delete🎂🎁💐🌹🎊🎆🎉💥🌈🎇🍰
நன்றி நண்பா...:-)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteALL TEX - ஒரிஜினலின் அதே வரிசைக்கிரமத்தில் மறுபதிப்புகள்
ReplyDeleteஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். டெக்ஸ் மறுபதிப்புகள் அதே வரிசை எண்ணுடன் என்பதெ ஆவலை தூண்டுகிறது
ReplyDelete+1
Delete##மேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ?##
ReplyDeleteMAXI Tex - முரட்டு சாகசங்களுடன் ! - அதுவும் இரண்டு கதைளாக சேர்த்து வெளியிடுங்கள் சார்
5maxi tex
ReplyDeleteகேப்டன் போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகோவையின் இரும்பு கவிக்கு தனிப்பட்ட விதத்தில் வாழ்த்து கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது.
பாட்டாவே பாடி பரிச தட்டிட்டு போரது நியாயமா???😆😆😆😆😆.
ஹஹஹஹ....நன்றிகள் நண்பா...வைரமுத்துக்கோ வாலிக்கோ சேரனும்
Delete// கோவையின் இரும்பு கவிக்கு தனிப்பட்ட விதத்தில் வாழ்த்து கூறுவது மகிழ்ச்சியாக உள்ளது. // ஸ்டீல் ஜெயிக்கும் ஒவ்வொரு பரிசும் நாம் ஜெயிப்பது போல.
Delete@@@@ Kumar Salem...
Deleteதிரு.ஸ்டீல் அவர்களை கோவை புத்தக விழாவில் முதல்முறையாக நேரில் சந்தித்தது.ப்ளாக் மூலமாக அறியப்பட்டு நேரில் சந்தித்த முதல் காமிக்ஸ் வாசகர் அவர்தான்.இரண்டாவது கடல் யாழ் அவர்கள்.பரபரப்பாக புத்தக விற்பனையில் உதவிகரமாக பங்களிப்பு செய்த வாசகர்.
அந்த ஒருசில நிமிட சந்திப்பும்,பேசிக்கொண்டு ஒருசில வார்த்தைகளும் மிகவும் மதிப்புக்குரியது.
அதன் பிறகு ஈரோடு புத்தக விழாக்களில் சந்தித்த காமிக்ஸ் உறவுகளில் அனைவரும் மரியாதைக்குரியவர்களே.
முன்பின் அறியாதவர்கள் மீதும் அவர்கள் காட்டிய அன்பு காமிக்சை நிச்சயமாக வாழ வைக்கும்.
குறிப்பாக கிட் ஆர்டின் கண்ணன் அவர்கள் வெளிப்படுத்திய நேசம் மனதில் பசுமையாக நிலைத்திருக்கும்.
காமிக்ஸ் நேசம் என்ற சிறு புள்ளியில் தொடங்கிய அறிமுகங்கள்தான், எத்தனை பெரிய அதிருப்திகளுக்கு மத்தியிலும் உயிர்ப்புடன் இருக்கும்.
தேவைப்பட்டா சண்டையிட வேண்டியதும் வரலாம்(சொக்கா கிழியற அளவுக்கு). ஆனால் அதற்காக நட்பையே காவு கொடுக்கும் அளவுக்கு உருமாறாது என்ற நம்பிக்கை உள்ளது.
எஞ்சி நிற்பது காமிக்ஸ் என்ற உணர்வு மட்டுமே.
///முன்பின் அறியாதவர்கள் மீதும் அவர்கள் காட்டிய அன்பு காமிக்சை நிச்சயமாக வாழ வைக்கும்.
Deleteகுறிப்பாக கிட் ஆர்டின் கண்ணன் அவர்கள் வெளிப்படுத்திய நேசம் மனதில் பசுமையாக நிலைத்திருக்கும்.///
நாம் நேசிக்கும் காமிக்ஸை நேசிப்பவர் என்று தெரிந்த அடுத்த நொடியே அவர் நம்மாள் ஆகிவிடுகிறார் Sri ram.!
உங்களிடம் பேசியது..
மலர்ந்த முகத்துடனான உங்கள் சம்பாஷனை எல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது.. நன்றி நண்பரே.😍😍!.
1. MAXI Tex - முரட்டு சாகசங்களுடன்
ReplyDelete2. Yes
3. Yes
தல 10 தடங்கள் என்பதே தலையை சுத்துதே!டெக்ஸ் நாவல் ஓகே!
ReplyDeleteஅந்த சைசில் இன்னொரு black & white இதழ் பற்றிய உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ?//// நிச்சயமாக சார். Maxi இனிமேல் கிடையாதுன்னு தெரிஞ்சதுல இருந்து அதன் மேல் விருப்பம் அதிகமாகி விட்டது. தலையில்லா போராளிய மறக்க முடியுமா?. சமிபத்தில் இரும்பு மனிதனையும் பனி அசுரர் படலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் புதிய புத்தகம், தரத்திலும் சைஸிலும் கூட விஞ்சி நிற்பதை ரசித்து கொண்டு இருந்தேன். Welcome B & W
ReplyDeleteM A X I !
மிகச்சரியான கதைகள்....
Deleteஆயிரம் முறை முயன்று விடாமுயற்சியுடன் கேப்ஷன் போட்டியில் பரிசில் வென்ற பார்த்திபன் மற்றும் சுனாமி கவி ஸ்டீல் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பர்களே...🎉🎉🎉🎊🎊🎊
ReplyDeleteநன்றிகள் நண்பரே
Deleteஎல்லா வரிசைகளையும் படிக்க ஆவலாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறை சாத்தியம்............
ReplyDeleteஅதை என்னிடம் விட்டு விடுங்கள்...!
Deleteஎனது விருப்பத்தினை மட்டுமே வெளிப்படுத்துவேன். பெரும்பாலும் அழுத்தம் கொடுக்கமாட்டேன்.
Deleteகலர் டெக்ஸ்
ReplyDeleteசரியாக இருக்கும் சார்.
மேக்ஸி சைஸ் வசீகரமாக இருந்தாலும், அந்த சைஸ் ஒரு மைனஸ் பாயிண்டாக உள்ளது.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே...
ReplyDeleteவாழ்த்து மழையில் நனையச் செய்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
லயனின் அன்பில் நான் பெறும் ஐந்தாவது பரிசு இதுவென கூறிக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்..
நான்கு முறை கேப்சனிலும்,ஒரு முறை கவிதை மொழிமாற்றத்திற்குமென எடிட்டரின் அன்பு வளையத்துக்குள் தொடர்வது மகிழ்ச்சி...
நன்றி நண்பர்களே....
வாழ்த்துக்கள் டாக்டர் சார். மேலும் பலப்பல பரிசுகள் பெற வாழ்த்துக்கள்.
Deleteவாழ்த்துகள் நண்பரே!
Delete1.கலர் டெக்ஸ் 18 உள்ளது அல்லது க்ளாசிக் மறுபதிப்பு..ஒவ்வொன்றும் சலித்து எடுத்த ரத்தினங்கள்
ReplyDeleteபட்ஜெட் தாங்காது எனில் மேக்ஸி கருப்பு வெள்ளை!
Maxi Tex
ReplyDeleteடெக்ஸ் நாவல்கள் தடமே எனக்கு விருப்பமான தடம்...உண்மையில் தாமதமாய் காமிக்சிற்கு அறிமுகமாகி படித்த கொஞ்சமே கொஞ்சம் டெக்ஸ் கதைகளுக்குள் என்னை கவர்ந்து,மற்ற எல்லாவற்றையும் மிஞ்சியது ஒரு தலைவன் ஒரு சகாப்தம்தான்...
ReplyDeleteநாவல்கள் பிரியரான எனக்கு அந்த சுஜாதா பாணி கிளைமேக்ஸ் அட்டகாசமாய் தெரிந்தது...
என் வோட்டு நாவல் பாணிக்கே...
எந்த தடம் வேணா தேர்வு செய்யுங்க .. ஆனா மாசம் ஒரு TEX வர்ர மாதிரி 2022ல் பண்ணுங்க சார் ..
ReplyDeleteஇது பாயிண்ட்...
Deleteமாதம் ஒரு....
Deleteடெக்ஸ் வில்லர்....
க்ராபிக் நாவல்......
கட்டாயமாக "" கார்ட்டூன்"" ஸ்பெஷல் இடம் பெறுவது போல் திட்டமிட்டால் நன்றாக இருக்கும்.
ஷெர்லாக் ஷோம்ஸ் மிக சிறந்த காமிக்ஸ் படைப்பு.சற்றும் எதிர்பாராத நேரத்தில் மாறுவேடத்தில் தோன்றும் காட்சிகள் படைப்பாளிகளுடைய திறனை வெளிப்படுத்துகிறது.மதியில்லா மந்திரியும் குறிப்பிடப்பட வேண்டிய மைல்கள் தொடர்.
டெக்ஸ் வில்லர் கதைகளே சிரிப்பு கதைகளாகத்தானே இடம் பெறுகிறது என்று கேட்பதும் புரிகிறது.
அடுத்த ஆண்டு அதிக காமிக்ஸ் வெளியீடுகள்,மிகக் குறைந்த விலையில் என்ற விதமாக அமைய வேண்டும் என்ற கனவு உள்ளது.
மிகச் சொற்பமான வாசகர் வட்டத்தை வைத்துக் கொண்டு இது கனவாக மட்டுமே தொடரும்.
# எந்த தடம் வேணா தேர்வு செய்யுங்க .. ஆனா மாசம் ஒரு TEX வர்ர மாதிரி 2022ல் பண்ணுங்க சார் # அதே...அதே...
Delete+123....
Delete// மேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ? //
ReplyDeleteஎப்பப் பார்த்தாலும் கடினமான கேள்வியைக் கேட்பதே தங்களது பணியாக விட்டது...
சார் இளம் டெக்ஸ் தொகுப்பு தொடரட்டும் பின்னாளில் ஒவ்வொரு தடமாக தடதடக்க செய்யலாம் சார்.அப்போது தான்
ReplyDeleteபட்ஜெட் கைய கடிக்காமல் வாங்க முடியும் சார்.
இன்னும் நிறைய சொல்ல ஆசை பட் டைப்பிங் தடுமாற்றம்.
// முன்னாளில் வெளியான "தலையில்லாப் போராளி" மாக்ஸி சைசில் கலக்கியது நினைவிருக்கலாம் ! அந்த சைசில் இன்னொரு black & white இதழ் பற்றிய உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ? //
ReplyDeleteஇப்போதைக்கு மாக்ஸி சைஸ் வேண்டாம் என்றே தோன்றுகிறது...
// "TEX நாவல்ஸ்" பற்றி மேலே சொல்லியிருந்தேன் ! இவற்றிற்கு 2022 அட்டவணையில் ஒரு ஸ்லாட் போடலாமா - அல்லது இன்னமும் "ஒரு தலைவன்..ஒரு சகாப்தம்" தந்த சாத்துக்களிலிருந்து தெளியவில்லையா ? Your thoughts please ? //
ReplyDeleteமுயற்சிக்கலாம் தவறில்லை...
8.புது மறுபதிப்பு
ReplyDelete//அடுத்து சேலம் டெக்ஸ் விஜயராகவன் இவருக்கு நான் என்னவோ இவர் சாப்பிடும் சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டது போல தினமும் வசைவு வார்த்தைகளை மூச்சு முட்ட அள்ளி வீசி வருகிறார். எனது நண்பர் ராட்ஜா சொன்னதற்காக இந்த வருட சந்தாவை மட்டுமே அவருக்கு அன்பளிப்பாக கட்டுவதற்கு மட்டுமே முயற்சி செய்துள்ளேன்! அதற்கு பிரிதியுபகரமாக இதையெல்லாம் செய்கிறாரோ என்னமோ 😂// பொதுவெளியில் இவ்வாறு நண்பர்களின் பெயர்களை குறிப்பிட்டு இழுப்பது நாகரீகமாக தெரியவில்லை சார் எனக்கு. சந்தா கட்ட முயற்சி மட்டுமே செய்தவர் இவ்வாறு உயர்த்தி கூறிக் கொள்ளுதல் அழகல்ல சார். எடிட்டர் சார்... ஒரு வேண்டுக்கோள். உங்களுக்கும் நமது நண்பர் TEX விஜய்க்கும் (நண்பர் radja அவர்களுக்குமே) ஆட்சேபணை இல்லை எனில் நான் கட்டியுள்ள இரண்டு சந்தாவில் ஒன்றை நண்பர் TEX விஜயராகவன்'க்கு மாற்றி தருமாறு கேட்டு கொள்கிறேன். TEX விஜய் உங்களுக்கு ஆட்சேபணை இல்லை எனில் கூறுங்கள். சிவகாசிக்கு மெயில் அனுப்பி விடுகிறேன். எனது அடையாளமும் சக நண்பனாகவே இருக்கட்டும். எனது மனதில் பட்டதை கூறியுள்ளேன்; தவறாக ஏதும் கூறி இருப்பின் மூவரும் மன்னியுங்கள் ப்ளீஸ்.
ReplyDeleteமிகவும் சங்கடமாக உள்ளது. அந்த சந்தா நான் டெக்ஸ் விஜயராகவனுக்கு அளித்த அன்புப் பரிசு. தயவுசெய்து இதை பெரிது படுத்தாமல் தாண்டிச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Deleteமன்னியுங்கள் நண்பரே. நன்றாகவே புரிகிறது. ஸாரி... 🙏
DeletePuthagapriyanO. @
Delete.&
Radja &
பிரதிபலன் எதிர்பாராத உங்கள் அன்பு மெய்சிலிர்க்கச் செய்கிறது.!
சக நண்பர் ஒருவரின் சங்கடத்தைப் போக்க நீங்கள் இருவருமே எடுத்த முயற்சிகளூக்கு நன்றி நண்பர்களே..!
புத்தகப்பிரியன் & மாப்பு ரட்ஜா@
Deleteஉங்கள் இருவரது அன்பு மெய் சிலிர்க்க வைக்கிறது நண்பர்களே!
என்னுடைய சங்கடத்தை தன் சங்கடமாக உணர்ந்து கொண்டு கேள்வி எழுப்பிய புத்தகப்பிரியருக்கு நன்றிகள்.
உங்களின் கமெண்ட் பார்த்து சங்கடத்தை மேலும் வளரவிடாமல் உடனடியாக உண்மையை எடுத்துரைத்து-- நண்பர்கள் & ஆசிரியர் சார் அனைவரும் அறியச் செய்த ரட்ஜாவின் அன்பு கண்டு திகைத்துப்போய் உள்ளேன்.
🙏🙏🙏🙏🙏
நண்பர்கள் ரட்ஜா மற்றும் புத்தகப்பிரியன் இருவரது செயல்கள் பாராட்டுக்கு உரியது.
Delete
Deleteநண்பர் ராட்ஜா அன்ட் புத்தகப்ரியன்
பிரதிபலன் எதிர்பாராத உங்கள் அன்பு மெய்சிலிர்க்கச் செய்கிறது நண்பர்களே..
வாழ்த்துக்கள் நண்பர்களே...
என்ன சொல்வதென புரியல...நல்லாருங்க...நல்ல நண்பர்கள் திருந்தி வாருங்க
DeleteNo second thoughts - my vote for Tex Library
ReplyDelete121st
ReplyDeleteSeparate Track: Colour tex 160 pages 6 complete + 6 short stories combined.
ReplyDeleteNO, BW maxie...
Yes for Tex novels, I liked Oru thalaivan... Oru sagaptham very much. FANTASTIC ART. AWESOME!!!
Tex Novels vendum first pref.
ReplyDeleteSecond Tex magazine
Third Tex Library
Bi - monthly Tex Novels na super
ReplyDeleteYearly one Tex library ok
Dear Editor
ReplyDeleteMy answers
1.Tex Library 400 pages
2.Yes
3.No
Regards
Arvind
இளம் டெக்ஷ்
ReplyDeleteகேப்ஷன் போட்டியில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteநன்றிகள் நண்பரே
DeleteTex library and Tex magazine 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ReplyDeleteTex Library and Tex Magazine 👍🙏🙏🙏🙏🙏
ReplyDeleteSir,
ReplyDeleteதலையில்லா போராளி Size Tex க்கு மீண்டும் வாய்ப்பு தரலாம்,
Tex Library - கண்டிப்பாக வெற்றி அடையும் Sir, Tex குண்டு புக் விற்பனையில் எப்பொழுதும் சாதிக்கும்
தலையில்லாப் போராளி. புத்தகஅலமாரியைப்பார்க்கும் போதெல்லாம் தனித்துத்தெரியும் ஒருஉன்னதமான தயாரிப்பு. அதே சைசில் இன்னொருபுத்தகம்சூப்பர்சூப்பர் சார். கரூர் ராஜ சேகரன்
ReplyDelete// மேற்படிப் பத்தில் ஏதேனும் ஒரேயொரு தடத்தை நாம் இரவல் வாங்கி கொள்வதாயின் உங்களின் தேர்வு ஏதுவாக இருக்குமோ ? //
ReplyDeleteTEX LIBRARY - I vote for this.
// இன்னொரு black & white இதழ் பற்றிய உங்கள் சிந்தனைகள் ப்ளீஸ் ? //
We can try one more time!
ReplyDeleteபுது டெக்ஸ் - 112 பக்கங்களுடன்
Classic Tex - வண்ண மறுபதிப்புகள் - 64 பக்கங்களில்
ALL TEX - ஒரிஜினலின் அதே வரிசைக்கிரமத்தில் மறுபதிப்புகள்
இளம் டெக்ஸ் - 64 பக்கங்கள் - மாதம்தோறும்
MAXI Tex - முரட்டு சாகசங்களுடன் !
TEX நாவல்ஸ் - வண்ணத்தில்
COLOR TEX
TEX புது மறுபதிப்ஸ்
TEX லைப்ரரி
TEX MAGAZINE//
ஆண்டுக்கு 3 முறை வரும் SPECIAL TEX
album விட்டுப்போச்சு சார்.. தற்போது நிலைகொண்டுள்ளது #36 ல்
SPECIAL TEXNo .: 36Frequency: annual
ReplyDeleteREVENGE OF THE SHADOWS
THE INDIAN GODS TOOK TO THE VENGEANCE TRAIL ...
Format: 21x29.7 cm, b / w
Pages: 264
Barcode: 977112365504000036
Release: 20/06/2020
பார்த்திபன் & ஸ்டீல் வாழ்த்துக்கள் நண்பர்களே. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteநன்றிகள் நண்பரே
Deletehttps://youtu.be/eACTj5CrjyU
ReplyDeleteஅந்த புத்தகத்தின் ட்ரைலர் வீடியோ...
https://youtu.be/4v_jrYnyKRE
ReplyDeleteஇதோ இந்த மாத நெஞ்சே எழு ட்ரைலர்
149வது
ReplyDeleteசார் என்னோட சாய்ஸ் :
ReplyDeleteமேக்ஸி டெக்ஸ் &
டெக்ஸ் லைப்ரரி
முடிந்தால் அனைத்திலும் ஒவ்வொன்றை முயன்று பார்க்கலாம் சார்! தட் கட்டைவிரல் இன் வாய் மொமன்ட் :-)
ReplyDeleteமறுபதிப்புகளை சற்று குறைத்து கொண்டு, அதனிடத்தில் புதிய படைப்புகளை வெளியிடலாம் என்பது எனது கருத்து!
முதல் பதிவு எனது விருப்பம் Tex magazine மொத்தம் 7 புத்தகங்கள் தான் முயற்சி செய்து பார்க்கலாம் சார்
ReplyDelete# 1 அல்லது #9 விருப்பம் சார். தல இன் எந்த தடம் வந்தாலும் ஓகே சார். “ ஒரு தலைவன் ஒரு சகாப்தம்” எனக்கு பிடித்திருந்தது சார். அதே சைசில் இன்னொன்று black & white தாராளமாய் வெளியிடலாம் சார். தலையில்லா போராளி சைசில் இன்னொரு black & white இற்கு ஜே! ஆனால் அதே சித்திர தரங்களுடன் என்றால் டபுள் ஓகே.
ReplyDeleteMaxi Tex
ReplyDeleteபார்த்திபன். எப்பவாவது ஒருதடவைனா பரவால்ல ஒவ்வொரு தடவையும் சொல்லி அடிக்கறீங்களே சூப்பர் வாழ்த்துக்கள் & ஸ்டீல். உற்சாகமின்னல் . காமன் மேன் மெல்லமெல்ல சூப்பர் மேனாகிக்கிட்டிருக்கீங்க. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஅருமையான வாழ்த்து சார். இப்படி வாழ்த்தவும் மனசு வேண்டும்.
Deleteநன்றிகள் நண்பா....எல்லாம் காமிக்சாலும் ஆசிரியராலும் நண்பர்களாலும் செந்தூரான் அருளாலுமே
Deleteடியர் சார்,
ReplyDeleteகொரனா - பாதிப்பிலிருந்து மீண்டு வந்து, - என்னால் தங்கள் பதிவுகளையும், நண்பர்களின் பின்னூட்டங்களையும் மட்டுமே படிக்க முடிந்தது.
ஏதாவது கமெண்ட் ேபாட நினைத்தாலும் (யார் மன ைதயும் புண்படுத்துமோ என்று எண்ணி )ே ேபாடுவதில்ைலை
இனி விடுவதாயில்ைலை.
சார், 'ஒரு வாரமா- Tex_Tex என்று பதிவிடுவதை பார்த்தால் - "லயன் காமிக்ஸ்"லோ ேகாவில-சிங்கத்த எடுத்துவிட்டு குதிரைய-மாத்தீருவிங்க ேபால -
விடமாட்ே டாம் சார்.
அப்படின்னா "ஜாலி ஜாப்பர்" ைவக்கவும்
"வயன் காமிக்ஸ்" - என்றால் - மாடஸ்டி பிளைஸிதான்
"லயன் காமிக்ஸ்" என்றால் - ஸ்ைபடர்தான்
" (மினி) லயன் காமிக்ஸ் என்றால் - லக்கிலூக் தான்
"மினி) லயன் காமிக்ஸ் என்றால் - சிக்பில்தான்.
எனேவே - நீங்கள் "ெகள பாய் காமிக்ஸ்" என்று புது காமிக்ஸ் ஆரம்பித்துக்கொள்ளுங்கள்.
அடுத்த வாரம், என் அ பிமான-மாடஸ்டி, ஜேம்ஸ்பாண்ட் பதிவுகளாக இருக்கடும் சார்''
கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டீர்களா?!!
Deleteஇறைவனுக்கு நன்றிகள்.விரைவில் முழு நலமும் பெறுவீர்கள்.நன்றி சார்.
ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள் சார் ; பொம்ம புக்குகள் next !!
Deleteடெக்ஸ் தடத்தில் மாதமொன்றரை புத்தகங்கள் வரட்டும் சார்...அதாவது மாதமொன்னு....ஒரு மாத இடைவெளி விட்டு மீதமொன்னு...ஆக மொத்தம் 18... கணக்கு சரிதானுங்களே
Deleteஉடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் நண்பரே! விரைவில் பூரண நலம் பெற் வேண்டுகின்றேன்.
Deleteடேக்கேர் நண்பரே! விரைவில் முன்னர் போல நீங்கள் எழுதலாம் எல்லாம்.
DeleteTake care Elango
Delete2022ல் மாதம் ஒரு டெக்ஸ் வருகிற மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள் சார். உதாரணத்திற்கு "தலையில்லா போராளி" வெளிவந்த ஆண்டில் அற்புதமாக டெக்ஸை கையாண்டிருந்தீர்கள்.
ReplyDelete1. 330, 240,110 பக்க கறுப்பு வெள்ளை சாகஸங்கள்
2. 110, 176, 336 பக்க வண்ண இதழ்கள்
3. Maxi size (தலையில்லா போராளி).
கதைகள் மட்டுமின்றி புத்தக வடிவம், வண்ணம், கதைகளின் நீளம் என படு அசத்தலாகவே அந்த ஆண்டு இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு வந்த தீபாவளி மலர் "தலைவன் ஒரு சகாப்தம்", முந்தைய தீபாவளி மலரான "சர்வமும் நானே" மற்றும் பெரிய சைசில் வந்த "தலையில்லா போராளி"க்கு சற்றும் ஈடு கொடுக்க முடியவில்லை. ஆகையால் நாவல் முயற்சிக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை சார்.
மேற்படி இரவல் வாங்குவதாயின்,
1. மாதம் ஒரு முழு நீள ரெகுலர் டெக்ஸ்
2. ஆண்டுக்கு ஒரு புத்தகம் "தலையில்லா போராளி" சைஸில் வெளியிடலாம்.
விஜயன் சார், டெக்ஸின் படிக்காத கதையின் சாகசங்கள் அதிகம் உள்ள நிலையில் மறுபதிப்பு மற்றும் புதுமறுபதிப்பு தனிதடத்தில் வேண்டாம். தற்போது அவ்வப்போது நீங்கள் வெளியிடும் வண்ண டெக்ஸ் மறுபதிப்புகள் நிறைவாக உள்ளது. இதனையே தொடர முடியுமா. இதுவே நலம் என்பது எனது எண்ணம்.
ReplyDeleteஎனவே எனது சாய்ஸ் மெக்ஸி டெக்ஸில் நல்ல கதை, விறுவிறுப்பு அதிகம் உள்ள மற்றும் சித்திரங்கள் மெக்ஸி சைசில் ரசிக்கும் போல் இருந்தால் ஒரு கதையை முயற்சி செய்து பார்க்கலாம் அடுத்த வருடம்.
டெக்ஸ்க்கு மேலும் ஒரு புதிய தடம் டெக்ஸ் லைப்ரரி கதைகளை வெளியிடுங்கள்.
முடிந்தால் ரெகுலர் டெக்ஸ் கதைகளையும் அதிகரியுங்கள்.
அப்புறம் முடிந்தால் ஆண்டுக்கு இரண்டு இளம் டெக்ஸ் முழு சாகசங்களை எங்களுக்கு படிக்க கொடுங்கள்.
நீயா கேட்டதுல
Deleteசுமார் 500 காமிக்ஸ் புத்தகங்கள் கையில் இருக்கும் போது, சோத்துக்கு மட்டும் காசிருந்தால் போதும் 1000 கொரானா வந்தாலும் சமர்த்தாய் வீட்டிலேயே இருப்பேனாக்கும்!
ReplyDeleteமறுவாசிப்பு படலம் துவங்கியாச்சு!
மறுவாசிப்புனு வந்தாலே நம்ம முதல் சாய்ஸ் "டைகரின் - இரத்தக் கோட்டை" தான்!
இது உண்டாக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை,
2-Deoxy-D-Glucose (2DG) கூட கொடுக்காதுன்னா பாருங்களேன்!
*2DG - Dr.Reddysன் Anti covid drug
கஷ்டமான வேலைகளைச் செய்ய உடலைப் பழக்குங்கள்!
Deleteகஷ்டமான சூழ்நிலையைக் கையாள மனதைப் பழக்குங்கள்!!
உடலும், உள்ளமும் உறுதியாய் இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம்!!!
- டைகர் @ Blueberry
சூப்பர் மிதுன் well said very well said
Deleteஉண்மை...உணவைத் தவிர பிற அனைத்தும் ஆடம்பரந்தா....ஊர் சுத்துவது பெரிய செலவுதான்...மலிவு விலை டிக்கெட்ல டெக்சோட வன்மேற்க சுத்தி மனவலிமை...இயற்கையோடு ம்ம்...லார்கோ லோட் உலகச் சுத்தி நாகரிகங்களும் காண்கிறோமே ...வேறென்ன வேணும்....பொம்மை புஸ்தகமே போதும்
Deleteமறு வாசிப்பில்
ReplyDeleteசிகப்பாய் ஒரு சொப்பனம்
காபால முத்திரை
சதுப்பில் ஒரு சதிகார கும்பல்
மரண போராட்டம்
காவல் கழுகு
எமனின் எல்லையில்
முடித்து விட்டேன்.
சிறப்பு!
DeleteTex magazine, would like to add our portfolio sir...
ReplyDeleteசார் ஞாயிறு சிறப்பு பதிவு இல்லையா....
ReplyDeleteஇல்லை சார்..
ReplyDeleteசார் இன்றைய பதிவு....
ReplyDeleteஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே
ReplyDeleteoption 10
ReplyDelete