Powered By Blogger

Thursday, May 13, 2021

வியாழனிலும் அதிகாரி !

 நண்பர்களே,

வணக்கம். First things first ....நேற்றைக்கும், அதன் முன்தினமும் இங்கே நான் கேட்டிருந்த கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் & அது சார்ந்த முடிவுகள் பற்றிச் சொல்லி விடுகிறேனே ! 

வினவல் # 1 :

COLOR TEX - 2022 அட்டவணையில் சிறுகதைத் தொகுப்பாகவா ? முழுநீள சாகசமாகவா ?

உங்களின் பதில்கள் இம்முறை தொங்கு பாராளுமன்றம் போலானதொரு தோற்றத்தைத் தந்துள்ளன ! 'இளம் டெக்ஸ் கதைகளை 64 பக்க தனியிதழ்களாய் வெளியிடுவதா - ஒரே சாகசமாக்கி வெளியிடுவதா ?' என்ற கேள்விக்கு 'நச்' என்று பதில் தந்து விட்டதால் அங்கே நான் பெருசாய் மண்டையை உருட்ட அவசியமின்றிப் போனது ! "ஒரே புக்காய் தான்"  என்று அட்டவணையிலும் அந்த ஸ்லாட்டைப் பூர்த்தி செய்து கொண்டு விட்டேன் ! So காத்திருக்கும் கதை வரிசைப்படி - டெக்ஸ் மாத்திரமன்றி, வில்லன் மெபிஸ்டோவுமே, மாயாஜாலம் செய்யும் இளைஞனாக ரகளை செய்யும் 4 பாக சாகசத்தை தேர்வு செய்திட இரண்டே நிமிடங்களே செலவாகின !


ஆனால் Color Tex : சிறுகதைகளின் விஷயத்தில் தென்னை மரத்துக்கும் ஆதரவு, பனைமரத்துக்கும் ஆதரவு என்று தென்பட்டதால் நானே முடிவெடுக்கும் நிலை ! 

Of course இந்தப் பக்கமாய் மண்டையை ஆட்டினாலும் குட்டு விழும் ; அந்தப்பக்கமாக ஆட்டி வைத்தாலும் சாத்து விழுமென்பது புரிகிறது ....but ஜமுக்காளமும் விரிச்சு, சபையும் கூடின பிற்பாடு தீர்ப்பென்று ஒன்று இருந்தாகணும் அல்லவா ? நிஜத்தைச் சொல்வதானால் இந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கும் முன்பாய் - குட்டிக் கதைகளின் தொகுப்பே எனது தனிப்பட்ட சாய்ஸாக இருந்தது ! இதுவரையிலுமான அந்தத் தொகுப்புகள் எல்லாமே விற்பனையில் மாஸ் காட்டியிருந்ததால், ஒரு தடுமாற்றக் காலகட்டத்தில் 'சிவனே' என அப்பக்கமாய்ச் சாய்ந்திடவே தோன்றியது ! ஆனால் அந்தப் பதிவுக்கோசரம் தரவுகளைச் சேகரித்த வேளையில் கண்ணில்பட்ட கலர் முழுநீள சாகஸங்களின் பெரும்பான்மை - டெக்ஸ் தொடரின் ஜாம்பவான் கதாசிரியர்களின் கைவண்ணத்தில் இருப்பதைக் கவனித்தேன் ! சிறுகதைகளிலோ நிறைய புதியவர்கள் ! Of course புதியவர்களால் தரமான கதைகளைத் தந்திட இயலாதென்றெல்லாம் கிடையாது தான் - ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட கில்லாடிகளின் அணியில் ஒதுங்குவது எப்போதுமே safe ஆச்சே என்று தோன்றியது ! அது மட்டுமன்றி, நாம் தற்சமயம் வண்ணத்தில் வெளியிடும் கதைகளின் பெரும்பான்மை மறுபதிப்புகளே ! எப்போதெல்லாம் - சர்வமும் நானே  ; டைனமைட் ஸ்பெஷல் ; லயன் 250 போன்ற புது சாகசங்கள் வண்ணத்தில் மிளிர்ந்துள்ளனவோ, அப்போதெல்லாம் blockbuster hits தான் பலனாகியுள்ளன ! So கலரிலான சிறுகதைகள் பத்திரமான வெற்றி தரக்கூடும் ; ஆனால் கலரிலான நெடுங்கதைகள் தெறிக்கச் செய்யும் வெற்றிகளைத் தர வல்லவை என்பது புரிந்த போது - எனது வாக்குச்சீட்டை எங்கே செலுத்துவதென்ற குழப்பமே இருக்கவில்லை ! 'அந்த லவ்ஸ் கதை இன்னா மெரி இருக்குமோ ? என்றதொரு குறுகுறுப்புமே நெடுங்கதைகள் அணிக்கு என்னை இழுத்துச் சென்றது என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; ஆனால் அதுவுமொரு காரணியாக இருந்திருப்பின் மகிழ்ச்சியில்லை என்று மையமாகச் சொல்லி வைக்கவுமே மாட்டேன் ! So COLOR TEX தொடரிலிருந்து முழுநீளக் கதைகளை பரிசீலனை செய்து பார்த்த பின்னே அவற்றுள் தரமான கதைகள் இருப்பதை ஊர்ஜிதம் செய்திட இயன்றால் 2022-ன் தீபாவளி மலரின் ஒரு சாகசம் அதுவாக இருந்திடும் !  




லவ்ஸ் கதையிலிருந்து...!

அதே சமயம் நண்பர் சம்பத் சொன்னது போல TEX குட்டிக்கதைகள் புத்தக விழாக்களுக்கு ஏற்றவைகளாக இருக்கும் என்பதும் தலைக்குள்ளே ஓடிக்கொண்டே இருப்பதால் - 2022-ன் நடுவாக்கே  நடைபெறக்கூடிய முதல் நிஜப் புத்தகவிழாவினில் சந்தாவினில் அல்லாத ஸ்பெஷல் இதழாய் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு அந்த compact சைசில் வெளியாகிடும் ! So 2022 -க்கென ஆர்டர் செய்திட வேண்டிய கதை லிஸ்டில் இப்போதே அதனையும் இணைத்திட வேண்டியது தான் ! 

So தென்னைமரத்துக்கும் 'ஜெ' ; பனைக்கும் 'ஜெ' ....ஓரஞ்சாரமாயிருக்கும் வேப்பை ..அரச....ஆல்...பலா...புங்கை... மரங்களுக்கும் 'ஜெ' போட்டு வைப்போம் - இன்றியமையா பிராண வாயுவை உருவாக்கித்தரும் சேவைக்கோசரம் !! 

வினவல் # 2 :

டைலன் டாக் கலர் சிறுகதைகள் ?

இங்கும் இந்தக் கதை வரிசைக்கு நீங்கள் இசைவு சொன்னால் சூப்பராக இருக்குமே என்றே உள்ளுக்குள் எண்ணம் ஓடியது - வரும் நாட்களில் டைலன் இப்படியாவது நம்மிடையே உலவினால் சரி தான் என்ற நினைப்பில் !  ஆனால் மஞ்சச்சட்டையாரை ஆராதிக்கும் அதே வேகத்தில் கறுப்புச் சட்டையாரை get out சொல்லி விட்டீர்கள் எனும் போது நானிங்கே மையமாய் டயலாக் அடிக்கத் தான் முடியும் ! ஆனால் முதுகு பழுத்து விடுமென்பதால் Topic 3 பக்கம் பாய்கிறேன் !

Task 3 :

டைலன் கதைகள் தான் ஆகலை ; ஆனால் அண்ணாச்சியின் படம் உங்களின் கற்பனை வேகங்களுக்கு றெக்கை தந்திருப்பது புரிகிறது !  நேற்றைய அந்த எலும்புக்கூட்டு அரவணைப்பு சித்திரத்துக்கு வந்திருந்த captions செம ! ஆனால் எனக்கு best என்று பட்டது நமக்காக மெய்யாலுமே இரத்தம் சிந்தியவரின் முயற்சியே ! So சேலம் 'பேபி' சுசீ அவர்களுக்கு "உயிரைத் தேடி" புக் நமது அன்புடன் !

அதே போல டாக்டர் A.K.K ராஜா அவர்கள் அனுப்பியிருந்த caption கூட செமத்தியாக இருந்ததால் wildcard entry என்பது போல wildcard பரிசாக அவருக்கும் ஒரு "உயிரைத் தேடி" புக் நமது அன்புடன் அனுப்பிடப்படும் !

ரைட்டு....தீர்ப்புகளைச் சொல்லியாச்சு ; டெக்ஸ் தொடரின் இதர தடங்கல் பற்றி நாளைய பொழுது பார்த்துக் கொள்வோமே guys ?

And இதோ - இன்றைக்குக்கான உங்களின் task :

தல' + 'தளபதி' together ...அடிச்சாடுங்க பார்க்கலாம் ! தளபதி பேசுவது போலவும்...தல சிந்திப்பது போலவும் உங்கள் வரிகளை அமைக்க முயற்சிக்கணும் guys !! பலூன்களில் கவனம் ப்ளீஸ் ! 

வெற்றி பெரும் caption-க்கு பரிசு இந்தாண்டின் லயன் தீபாவளி மலர்

Bye all ...see you around ...safe days ahead & power to you !!

223 comments:

  1. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  2. எல்லாருக்கும் வணக்கம் சொல்வது சின்னமனூர் சரவணர்ங்க....

    ReplyDelete
  3. டெக்ஸ் தொடரின் இதர தடங்கல் பற்றி நாளைய பொழுது பார்த்துக் கொள்வோமே guys ?

    என்னாது நாளைக்கா...ஆசானே ஞாயமா.....??

    ReplyDelete
    Replies
    1. செல்லில் வர்ற நெட்டை வைச்சு இவ்வளவு குப்பை கொட்றதுக்குள்ளேயே விற்கலாம் ஓய்ஞ்சு போச்சு சாமீ ! இங்கே 2G டவர் காட்டுது !!

      Delete
    2. கொட்டித் தீர்த்த மழையிலே WI-FI அவுட் ! கரென்ட்டும் இல்லை !

      Delete
    3. பரவாயில்லை சார் நாளை இன்னும் சிறப்பாக வரும்.. வெள்ளிக்கிழமை மங்களகரமான நாள்...

      Delete
  4. இவ்வளவு நேரம் தேவுடுகாத்தது வீணா போச்சே...!!!

    ReplyDelete
  5. பன்னெண்டாப்பு பாஸாயிட்டேன்ன்..

    ReplyDelete
  6. டைகர்: அட..அங்கே..பாலைவனத்தில் தண்ணி
    தல மை. வா. : எவ்வளவு தண்ணி இருந்தாலும் நீ தான் குளிக்க மாட்டியே. அழுக்கு மூட்டை.

    ReplyDelete
    Replies
    1. நார்மலா கலந்துக்க மாட்டேன். பட். இது பாத்தவுடனே தோணுச்சு. டவுசரை கலாய்க்கற வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம்னு. 🤣🤣🤣🤣

      Delete
    2. அப்போ 13 நீங்களா மஹிஜி...?

      Delete
    3. பழிக்குப்பழி புலிக்குப்புலி 👇

      டைகர் :- அங்க தண்ணி இருக்காப்ல தெரியுது.... ஒரு குளியல் போட்டுட்டு போவோம்.

      டெக்ஸ் :- அய்யய்யோ.... நான் எப்பவுமே குளிக்காம முகத்துக்கு மட்டும் பவுடர் பூசிக்குவேன்னு இவன்கிட்ட எப்படி சொல்லுவேன்..??!!

      Delete
    4. @ Blizybabu.

      ஹா...ஹா...ஹா

      நல்ல பழி வாங்கல்

      Delete
    5. அஹா..என்னே டைமிங்... சிறப்பு நண பரே.

      Delete
    6. :-) நன்று நண்பர்களே

      Delete
    7. ஆனா நம்பற மாதிரி இல்லிங்களே பாபு சார்.

      Delete
    8. ஹிஹிஹி எப்புடி ???

      Delete
  7. காத்திருக்கும் கதை வரிசைப்படி - டெக்ஸ் மாத்திரமன்றி, வில்லன் மெபிஸ்டோவுமே, மாயாஜாலம் செய்யும் இளைஞனாக ரகளை செய்யும் 4 பாக சாகசத்தை தேர்வு செய்திட இரண்டே நிமிடங்களே செலவாகின !//

    இந்த கதை கலரிலும் வந்து கலக்கியுள்ளது ஆசானே..இந்திய தொலைக்காட்சியில் முதலா இந்தியாவில் கலரில் இளம் டெக்ஸ போட்டுதாக்கியிருவோமே...??

    ReplyDelete
    Replies
    1. +2


      கருப்பிலே போட்டுபுட்டு பின்னாடி கலருக்கு ஏங்க வேணாமே சார்.


      அதுவுமில்லாம அங்கே நானும் ஒரு எட்டு எட்டி பார்த்ததுல கலரில் இந்த மெபியின் தங்கை லில்லி கலக்குறா😍😍😍😍😍😍

      அவளை அப்படி பார்த்ததில் இருந்மே இது இப்படி 💞💞💞💞💞 ஓடுது இதயத்தில்.. வண்ணத்தில் போட்டு புடுவோம் சார்..சார்.ப்ளீஸ்.

      Delete
    2. கருப்புதான் எனக்குப் புடிச்ச கலரு.:-)

      Delete
    3. கருப்புலயும் வண்த்திலயும் இரண்டும் போட்டா போச்சு...

      Delete
  8. பரிசு பெற்ற நண்பர்கள் AKK மற்றும் சுசீந்திரன் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அருமை சார்...ஆனா எவ்ளோ கதைகள்னு சொல்லலை....மெபிஸ்டோவுக்காக காத்திருக்கிறேன்...
    நண்பர்கள் சுசீ...ஏகேகே....வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  10. சரியான தீர்ப்புகள்.. வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இளமையான மெபிஸ்டோ மற்றும் காதல் கதையை பார்க்க ஆர்வம் அதிகமாகிறது

    ReplyDelete
  12. வெற்றி பெற்ற நண்பர் சுசீ அவர்களுக்கு வாழ்த்துக்கள். டாக்டர் AKK அவர்களுக்கும் வாழ்த்துக்கள். சூப்பர் சார்

    ReplyDelete
  13. Finally Mobisto is here 2022. Awesome awesome

    ReplyDelete
  14. டெக்ஸ் : இதோ பாருப்பா டைகர்.கேப்ஷன்ல வழக்கம்போல உன் மூஞ்சியை காட்டீயாச்சு.இந்த வருஷம் ஸ்லாட் 'டுக்கு சரியாப்போச்சு.ரைட்டா.?

    டைகர் :ஹே..டெக்ஸு.!போஸ் கொடுக்கிறது நானு.பரிசு..உன்னோட புக்கா.?எந்த ஊரு நியாயம்யா இது.?

    ReplyDelete
  15. டெக்ஸ் : ஏம்பா டைகர் நான் வருசத்துல பத்து தடவை வந்தாலும் கூட பாதிப்பேரு உன்னைத்தான் கேட்கிறாங்க அது எப்படி?
    டைகர் : அட நீங்க வேறங்க. ப்ளாக்கில் மட்டும் தான் கேப்பாங்க.மத்தப்படி உங்க கதையை தான் முதல்ல படிப்பாங்க. அம்புட்டு பேருமே ஸ்லீப்பர் செல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சூப்பர்

      Delete
    2. ஜட்ஜ் நானாக இருந்தால் இதற்கே என் பரிசு.அற்புதம்.

      Delete
    3. நன்றி நண்பர்களே

      Delete
  16. அடடே.

    இளம் மெபிஸ்டோவா.?சூப்பர்ல.

    ReplyDelete
  17. அட்டகாசமான பதிவு சார்.

    Young டெக்ஸ், கலர் டெக்ஸ் உறுதி. அருமையான தகவல்.

    எனக்கு பிடித்த 32 பக்க டெக்ஸ், தொகுப்பாக புத்தக விழா ரிலீஸ் என்பதும் இனிமையான தகவல்.

    2022 பட்டையை கிளப்பும் போல....

    ReplyDelete
  18. ##இருப்பதை ஊர்ஜிதம் செய்திட இயன்றால் 2022-ன் தீபாவளி மலரின் ஒரு சாகசம் அதுவாக இருந்திடும் ##
    ஒரு சாகசமா ? குறைந்தது மூன்று கதைகள் சேர்த்து வெளியிடலாமே sir

    ReplyDelete
    Replies
    1. Maxi டெக்ஸ் இருக்கும் சார். ஒரு 336 பக்க கதை.

      Delete
    2. கண்டிப்பாக கலர் குண்டு புக்கு தான் வெளியிடுவார் ஆசிரியர்... தீபாவளி தான் தல குண்டாகி விட்டாரே சார்...

      Delete
  19. Tiger: எப்பா டெக்ஸ் ஒன் ரசிக கண்மணிகள் கிட்ட சொல்லி எனக்கு ஒரு update போட எடிகிட்ட சிபாரிசு பண்ண சொல்லு பா.
    Tex: என்னத்த சொல்ல எனக்கே பாயாசம் போட ஒரு குரூப் காத்துட்டு இருக்கு இது தெரியாம நீ வேற ம்.

    ReplyDelete
  20. டைகர்: டெக்ஸ், பார்த்தியா இந்த கேப்சன் போட்டியிலே செயிக்கிறவங்களுக்கு இந்த வருடத்து என்னோட தீபாவளி மலர் புக் பரிசாமே...

    டெக்ஸ் (மனதுக்குள்) : அட கூமுட்டை, இன்னும் அப்டேட் ஆகாத பார்ட்டியாவே இருக்கியே..

    ReplyDelete
  21. அதிகாரி: நீ குளிக்கவே மாட்டியா??
    தங்க தலைவன்: நீ துவைக்கவே மாட்டியா??

    ReplyDelete
  22. வாழ்த்துகள் பேபிம்மா..💐💐💐
    வாழ்த்துகள் டாக்டர்..💐💐💐

    ReplyDelete
  23. A: அங்கன பாருங்க தல...கொரானா கடிக்க வருது...எஸ்ஸாயிடுவோம் சீக்கிரம்...

    B: (உங் கடியே தாங்கல...கொரானால்லாம் சூச்சுபி...எஸ்கேப்...)

    ReplyDelete
    Replies
    1. ஆனாலும் உங்க கடி தாங்க முடியல ஜனா 😁

      Delete
  24. A: உங் கூட வர்ற கெழவன் எங்க?

    B: ( உங் கூட வர்றவன் குமரனாக்கும்...முடயலடா சாமி)

    ReplyDelete
  25. A: தல ... சலூன் தெரியுது ...என்ன சாப்டுவோம்...

    B: ( ரெண்டு இட்லியும் - கெட்டி சட்னியும்...மாட்டிக்கினியா)

    ReplyDelete
  26. டெக்ஸ் : என்ன டைகர் இந்த பக்கம்?
    டைகர் : (மைண்ட் வாய்ஸ் ) ஹீம் கொரானுவுக்கு பயந்து குவாரன்டைன்ல இருக்கலாம்னு பாலைவனத்துக்கு வந்தா இவர்கிட்ட மாட்டிக்கிட்டேனே. இதுக்கு கொரானாவே தேவலாம் போல🙄🙄🙄

    ReplyDelete
  27. டைகர்: என்னா டெக்ஸூ! மாசா மாசம் ஸ்லாட்டதான் ஆக்ரமிச்ச... இப்ப பதிவுகளையும் ஆக்ரமிக்க ஆரம்பிச்சுட்டா எப்படி?

    டெக்ஸ் (மைண்ட் வாய்ஸ்): என்னத்த ஆக்ரமிப்பு பண்ணி என்ன பண்ண? இன்னும் இந்த மனுசன் ... "தரமான கதைகள் இருப்பதை ஊர்ஜிதம் செய்திட இயன்றால்" என்று கலாய்க்கிறதுமில்லாமல், அதைக் கலரடிச்சு ஹைலட் வேற பண்ணி மானத்த வாங்குறாரு ...


    🤣🤣🤣

    ReplyDelete
  28. 2022 தல ரவுண்டு கட்டி அடிக்க போறாரு ஆஹா ஆனந்தமோ ஆனந்தம்.. தீபாவளி கலர் புக்... சிறுகதைகளின் தொகுப்பு கலர் புக்.முத்து 50ல் தல தலையை கா ட்டுவார் என்று ஒரு பட்சி சொல்கிறது..

    ReplyDelete
  29. டைகர் : டெக்ஸூ...இந்த சிகுவாகுவா சில்க்க எங்கனாச்சும் பாத்தீங்களா...சிக்க மாட்டேங்குறா...அதாஞ் சிக்கலே...

    டெக்ஸ் : ( ஆனானப்பட்ட உனக்கே பட்ட நாமம் போட்டவளாச்சே...கார்சன் வேற அவள பாக்கணும்னு ஜொள்ளு விட்டான் )

    ReplyDelete
  30. டைகர் : என்ன தல நீங்க மட்டும் தனியா வரீங்க. உங்க கூட்டாளிகள காணோம்.
    டெக்ஸ் : அட நீ வேறப்பா . நான் ஒருவேலையா வெளியூர் போய்ட்டு வர்றதுக்குல எல்லோருக்கும் கொரானா வந்து குவாரன்டைன்ல இருக்காங்க.அதுதான் நான் மட்டும் தனியா வர்றேன்😔😔😔😔😔

    ReplyDelete
  31. A : வைட்டமின் D ஏகத்துக்கும் கெடக்கிது வெயில்ல...இந்த ஆக்சிஜனுக்கு எங்க போறது தல...

    B : (ங்கொப்புரான...எம் பேரு டைகர்ல குண்டடி பட்டியாம்ல...பெட்ல நீ இருந்தப்ப உனக்கு கொடுத்ததுல தீந்து போச்சி...கேக்குறாம்பாரு கேள்வி )

    ReplyDelete
  32. டைகர் : ஆமா டெக்ஸூ... உங்க துப்பாக்கீல மட்டும் குண்டு தீரவே மாட்டேங்குதே எப்பிடி?

    டெக்ஸ்: (எங்க எடிட்டரே...ஒங்களுக்கே இது நல்லாருக்கா...இவங்கூட கோத்துவிட்டு கேப்சன் பாக்குறீங்களே...இது அடுக்குமா...கார்சனே தேவலடா சாமீ)

    ReplyDelete
  33. A : டெக்ஸ் தல...ஊர் வந்திருச்சு...வாங்க பார்ல போயீ நல்லா ஊத்திக்கிருவோம்...அப்பறம் போத்திக்கிருவோம்...

    B : (ஒனக்கென்ன ப்பா... சில்க்க தண்ணீ தெளிச்சி விட்டுபுட்ட...எம்பாடு லிலித்துக்கு பதில் சொல்லியாகணுமே...ஙே...)

    ReplyDelete
  34. டைகர்....எப்டி தல உங்களால் மட்டும் இவ்வளோ கதைகள் தர முடியுது....கொரனா காலத்தையும்...
    டெக்ஸ்...நீதியா...நேர்மடா...நியாயம் டா...மொத்தத்ல உன்ன மாதிரி காட்டித்தரல

    ReplyDelete
  35. டெக்ஸ் அப்டேட்ஸ் சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  36. டைகர் : என்னப்பா நல்லா இருக்கியா
    டெக்ஸ் :ம்
    டைகர் :இருப்பே,உனக்கென்ன உன்ன பத்திதா தினம் தினம் பதிவா வருதே இந்த தீபாவளிக்கு நானும் தலையே காட்டலாம் என் ரசிகர்களை நானும் சந்திக்கனும் அப்படின்னு நெனச்சா,எதோ எதோ காரணம் சொல்லி அடுத்த ஆண்டுக்கு தள்ளி வெச்சிட்டாங்க அந்த எடத்திலையும் நீ தா வர அதுவும் குண்டு புக்கா ஒனக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா
    டெக்ஸ் :சரி சரி பொலம்பாம வா,எடியிடம் சொல்லி அடுத்த வருசம் ஒனக்கு ரெண்டு எடம் தர சொல்லி சிபாரிசு செய்றேன் ஒகேவா,

    ReplyDelete
  37. டைகர்...போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
    ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா...
    டெக்சு...இந்த பாலைவனத்லயா....அதாண்டா உனக்கு இடமே இல்ல

    ReplyDelete
  38. டைகர்...போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
    ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா......
    டெக்ஸ்...அது ஏண்டா என்னபாத்து பாடுற...மார்க்கமாதா இருக்கான்

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. டைகர்...ட்யூராங்கோ முடிச்சாச்சு....அடுத்த வாய்ப்பு எனக்குத்தான்
    டெக்ஸ்...என்னோட பத்து தடமும் வருதுன்னா தடயமே இல்லாம போய்ருவியேப்பா

    ReplyDelete

  41. டைகர் :: ஏன்தல இந்த ஆசிரியர் இளம் டைகர் என்று ஆசை காட்டி மோசம் செய்தாரே என்னுடைய ஆதரவாளர்கள் யாரும் தீ குளிக்கலையே அட்லிஸ்ட் போராட வேண்டாம் போராட்ட அறிவிப்பு கூட வெளியிடவில்லையே ரொம்ப வருத்தமா இருக்கு..........

    டெக்ஸ் :: (மனதுக்குள்) (என்னது உன் ஆதரவாளர்களா? எல்லாருமே எனது ஸ்லீப்பர் செல்கள் அல்லவா அவ்வளவு பேரும்.)

    ReplyDelete
  42. டவுசர்: என்ன டெக்சு. உன்னோட கதைல நல்ல கதை தேடனும்னு எடிட்டரு கலாய்க்கறாரு.
    தல மை. வா. : என்னோடதுல தேடுனா கிடைக்கும்னு அவருக்குத் தெரியும். உன்னோடதுலதான் தேடுனாலும் கிடைக்காதே

    பி. கு. சொந்தக் கற்பனை அல்ல.

    ReplyDelete
  43. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. கேப்சன் போட்டி:

    கேப்சன் 1:
    டைகர்:
    நம்ம சாகசங்கள் எல்லாத்தையும் நினைச்சு பார்த்தா புல்லரிக்குது டெக்ஸ்..
    டெக்ஸ்:
    (ம்க்கூம்...இதுலாம் எம்மாத்திரம்...
    அவனவன் பொண்டாட்டிக்கு தெரியாம
    உயிரை பணயம் வச்சு,ஔிஞ்சு ஔிஞ்சு,காமிக்ஸ் படிக்கறான் பாரு.. அதுதான்டா உண்மையான சாகசம்)


    கேப்சன் 2:
    டைகர்:
    டெக்சு யாருப்பா இந்த "நர்ஸ் மேக்னா"..
    எல்லோரும் சூப்பரா இருக்குனு பேசிக்கறாங்க?
    டெக்ஸ்:
    (அடேய் அது நர்ஸ் மேக்னா இல்லடா அர்ஸ் மேக்னா..காலாகாலத்துல கல்யாணத்த பண்ணுங்கனா கேட்டாத்தானே)


    கேப்சன் 3:
    டைகர்:
    லாக்டவுன்ல வெளியப் போகக்கூட விட மாட்டேங்கறானுங்கப்பா...நாம செய்யற சட்ட பரிபாலன வேலையும் எஸ்ஸன்சியல் சர்வீஸ்லதான் வருமுனு சொன்னா நம்பவும் மாட்டேங்கறானுங்க..
    டெக்ஸ்:
    (அதிகாரிங்கனு சொல்லிக்கிட்டு கொரோனா கொல்றத விட அதிகமா கொன்னா எப்படி ஒத்துக்குவாங்களாம்)


    கேப்சன் 4:
    டைகர்:
    என்னப்பா டெக்ஸ் லவ்ஸ் கதைலாம் வரப்போகுதாமே...சொல்லவே இல்ல..
    இனி லவ்வர்ஸ்டே,வெட்டிங்டேனு பிஸி ஆயிடுவ
    டெக்ஸ்:
    (ஏழு கழுதை வயசான நமக்குலாம் பர்த்டே
    வரதே பெரிய விசயம்..இவன் வேற..)


    கேப்சன் 5:-
    டைகர்:
    இங்க ஒரு கூட்டம் தலையா,தளபதியானு அடிச்சுகுது...ஆனா இப்ப உலகமே முகமூடிய பத்தி மட்டும் தான் பேசுது...இதாம்பா வாழ்க்கை..
    டெக்ஸ்:
    (ம்...வேதாளர் வேதாளர்தான்...)


    கேப்சன் 6:
    டைகர்:
    டெக்சு..இன்னைக்கு நம்ம ஷெட்யூல் என்னப்பா?
    டெக்ஸ்:
    (தெரியாத மாதிரி கேட்கறத பாரு.. லாக்டவுன்னாலே ஒரே ஷெட்யூல்தான்...
    திங்கறது தூங்கறது,திங்கறது தூங்கறது)


    கேப்சன் 7:-
    டைகர்:
    என்ன டெக்சு..விடிய விடிய தூங்காம குதிரைல முழிச்சுக்கிட்டே வர?
    டெக்சு:
    ("தனித்திரு விழித்திருனு" சொல்ற விசயம்லாம் ஐயாவுக்கு தெரியல போல..ஐயோ பாவம்..)


    கேப்சன் 8:-
    டைகர்:
    என்ன டெக்ஸ் ஏதோ கோவமா இருக்க மாதிரி தெரியுது?
    டெக்ஸ்:
    (புளுபெர்ரினு நாவல் பழத்தோட பேர வச்சுகிட்டு இருக்கவனுக்கு கெத்தா டைகருனு பேரு வச்சுட்டு,எனக்கு மட்டும் டெக்சுனு சிம்பிளா வுட்டுபுட்டாரே இந்த எடி..ஒரு லயனு,சீட்டானு வச்சிருந்தா கூட கெத்தா இருந்திருக்கும்)
    ஹிஹி ஒண்ணுமில்லப்பா...


    கேப்சன் 9:-
    டைகர்:
    இந்த கார்சனையும் ஜிம்மியையும் எங்கப்பா ரொம்ப நேரமா காணோம்?
    டெக்ஸ்:
    (ஓவரா தொண தொணத்துகிட்டு இருந்ததால குதிரைக்கு கொள்ளு வாங்கிட்டு வாங்கனு அனுப்பி,பக்கத்து தெருவுல போலீஸ் மாமாங்ககிட்ட மாட்டி விட்டுட்டேனு எப்படி சொல்றது... கண்டுபிடிச்சுடுவாரோ)


    கேப்சன் 10:-
    டைகர்:
    என்னப்பா டெக்ஸ் ஆட்டோபயாகிராபிலாம் எழுத போறோனு கேள்விப்பட்டேன்... புக்குக்கு என்ன பேரு வச்சிருக்க?
    டெக்ஸ்:
    (கள்ளிக்காட்டு "சதி"காசம்...)

    கேப்சன் 11:
    டைகர்:
    நம்ம வில்லனுங்க எல்லாம் குற்றங்கள "வொர்க்ப்ரம் ஹோம்" பண்ண போறாங்களாம்...இனி நாமளும் அவங்கள பிடிக்கற வேலைய "வொர்க் ப்ரம் ஹோம்லதான் பண்ணனும்பா...
    டெக்ஸ்.:
    (முடியலடா சாமி..இத இவன் தெரிஞ்சு பேசறானா தெரியாம பேசறானா)


    கேப்சன் 12:-
    டைகர்:
    அதிகாரி வேலைய விட்டுப்புட்டு வேற வேலைக்கு போகலானு பார்க்கறேன் டெக்ஸ்...ஏதோ வாட்சப் குரூப்ல அட்மின் வேலை இருக்காம்..கூப்பிட்டுகிட்டே இருக்காங்க
    டெக்ஸ்:
    (செத்தாண்டா சேகரு...)


    கேப்சன் 13:
    டைகர்:
    நாளைக்கு என்ன கலர் டிரெஸ் போடறதுனு ஒரே யோசனையா இருக்குப்பா...உனக்கு பிரச்சனையே இல்ல..எப்பவும் மஞ்சா சொக்காதான்....
    டெக்ஸ்:
    (நற..நற...)

    கேப்சன் 14:
    டைகர்:
    டெக்சு பத்தாயிரம் ரூபா காசு கூட தரேன் வாங்கிக்க...இந்த நெஞ்சே எழு தலைப்புக்கும் அந்த கதைக்கும் என்ன சம்பந்தமுனு ஒழுங்கா சொல்லிடு
    டைகர்:
    (அதெல்லாம் மேல இருக்கவருக்கு தாம்பா தெரியும்..என்னை கேட்டா?)

    கேப்சன் 15:
    டைகர்:
    டெக்சு உன்னை எதுக்கு பாலைவனத்துக்கு கூட்டிக்கிட்டு வந்தேனு தெரியுதா...ஏன்னா இங்கதான் (இரண்டாவது)அலை வரதுக்கு சான்சே இல்ல..அதான்
    டெக்ஸ்:
    (இதெல்லாம் கேட்கறதுக்கு கொரோனாவுலயே நான் போயிருக்கலாமேடா..)


    கேப்சன் 16:-
    டைகர்:
    ஒரு மந்தையிலிருந்த இரண்டு மாடுகள் சந்தித்த போது அவைகளால் பேச முடியவில்லையே....
    டெக்ஸ்:
    (ஓ..இந்த டயலாக் கௌக்கு மட்டுமில்ல கௌபாய்க்கும் பொருந்துமா..ஜீப்பரு...)


    கேப்சன் 17:-
    டைகர்:
    ரொம்ப போரடிக்குது டெக்ஸ்...ஒரு கதை சொல்லுப்பா
    டெக்ஸ்:
    (ம்க்கூம்..இதுவரைக்கும் கதைனு ஒண்ண எவனும் எங்ககிட்ட எதிர்பார்த்ததே இல்ல...இந்த விசயம் கூட தெரியாம என்கிட்ட இப்படி கேட்டுட்டாரே...ரொம்ப நல்லவரு போல)

    கேப்சன் 18:
    டைகர்:
    கார்சன் போன தடம் இதுதானு எப்படிப்பா சொனானா...தடத்த கண்டுபிடிக்கறதுல உன்னை மிஞ்ச முடியாது டெக்சு..
    டெக்ஸ்:
    (ஹிஹி...வறுத்தக் கறி வாசம் அந்த பக்கம் இருந்துதானே வருது...)







    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா...! நமக்கெல்லாம் ஒன்னு கூட தோன மாட்டேங்குது...

      செம்ம நண்பரே!

      Delete
    2. கேப்சன் 19:
      டைகர்:
      இப்படியே போனா மதியத்துக்குள்ள சிலுக்குவார்பட்டி வந்துடும்பா
      டெக்ஸ்:
      (ஆ...அதுலயும் சிலுக்குதானா....)


      கேப்சன் 20:
      டைகர்:
      உயிரைத் தேடிக்கு வேற தலைப்பு எதும் யோசிச்சியா டெக்ஸ்...
      டெக்ஸ்:
      (இருக்கற நிலைமைக்கு "உரிமையத் தேடி"னு வேணா வைக்கலாம்..ஹம்ம்...)


      கேப்சன் 21:-
      டைகர்:
      டெக்ஸ் விசயம் தெரியுமா...அடிக்கற வெயிலுல,குதிரைல வர பயந்துகிட்டு,இந்த கார்சனும் ஜிம்மியும் பஸ்ல வராங்களாம்..
      டெக்ஸ்:
      (டிக்கெட் ப்ரீனதும் கேடிங்க ரெண்டும் லேடி கெட்டப்புல வர விசயம்லாம் டைகருக்கு தெரியாது போல..)

      கேப்சன் 22:
      டைகர்:
      அதெப்படி டெக்சு கொஞ்சம் கூட வெட்கப்படாம வருசம் புல்லா புத்தகத்துல வர...
      டெக்ஸ்:
      (அடேய் வருசத்துல ஒரு புக்குல கூட வராதவன் தாண்டா வெட்கப்படணும்..)

      கேப்சன் 23:
      டைகர்:
      வரப் போற ஊருல நல்லதா ஒரு சலூன் இருக்கு...தாக சாந்தி பண்ணிட்டு போகலாமா டெக்ஸ்?
      டெக்ஸ்:
      (ஓ..அப்ப இதுதான் நம்ம சந்தானம் சொன்னஅந்த தல தளபதி சலூனா...)


      கேப்சன் 24:
      டைகர்:
      ஐய்யய்யோ.. lஎந்த பாயும் எனக்கு பிரெண்டா இல்லையே..இன்னைக்கு ரம்ஜான் வேற..
      பிரியாணிக்கு நான் எங்க போவேன்... யார்கிட்ட கேட்பேன்?
      டெக்ஸ்:
      (ஐய்யய்யோ..எந்த பாயும் எனக்கு பிரெண்டா இல்லையே..இன்னைக்கு ரம்ஜான் வேற..
      பிரியாணிக்கு நான் எங்க போவேன்... யார்கிட்ட கேட்பேன்)
      குதிரைகள் மைண்ட் வாய்ஸ்:-
      (இவனுங்க ரெண்டு பேரும் குறுகுறுனு பார்க்கறத பார்த்தா இன்னைக்கு நாமதான் பிரியாணி போல...)

      கேப்சன் 25:
      டைகர்:
      டெக்சு அங்க பாருப்பா...ஒரு ஹோட்டல் தெரியுது...ஆனா ஒரு கண்டிசன்.. சாப்பிட்டுட்டு நான் தான் பில் கொடுப்பேன் இப்பவே சொல்லிட்டேன்.
      டெக்ஸ்:
      (ஓ..அவ்ளோ திமிரா...சரி அண்ணாத்த கூடயும் ஒத்தைக்கு ஒத்தை போட்டு பார்த்திட வேண்டியதுதான்)
      டைகர்:
      டெக்சு உன் மைண்டு வாய்சு கேட்குது..எந்த பிரச்சனைனாலும் இந்த ஒத்தைக்கு ஒத்தைய விட மாட்டேங்கறிங்களேப்பா..

      கேப்சன் 26:
      டைகர்:
      டெக்சு வழி மாறி போறது தப்பில்ல..
      அதுக்காக உன் கதைல இருந்து வழி தவறி என் கதைக்குள்ள வரதுலாம் ஓவருப்பா
      டெக்சு:
      (ஞீ...ஞீ...

      Delete
  46. வாவ்...ஆலமரத்து பஞ்சாயத்து தீர்ப்பு மிக சரியாக அமைந்துள்ளது.....அது கதை தேர்வானாலும் சரி ..கேப்ஷன் தேர்வானாலும் சரி...


    வாழ்த்துக்கள் நண்பர்களே...

    ReplyDelete
  47. டைகர்....டெக்ஸ் நாம் ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்தும் டோம்...வன்மேற்கு விரோதிகள வேட்டையாடலாமா
    டெக்ஸ்....டேய் டைகர் ஜாக்குக்கு பதிலாக மாத்தி வரைஞ்சிட்டாங்க...ஓவியர் உஷாராகும் வரைதான்

    ReplyDelete
  48. டைகர் : இளமையில் நான் எப்படி தெரியுமா...


    டெக்ஸ் மைன்ட் வாய்ஸ்...


    அதான் சாப்டரை இளமையிலேயே கொன்னுட்டாங்களே இன்னும் வேற நீ வெளில சொல்லனுமா ..

    ReplyDelete
  49. மஞ்சச்சட்டையாரை ஆராதிக்கும் அதே வேகத்தில் கறுப்புச் சட்டையாரை get out சொல்லி விட்டீர்கள் எனும் போது நானிங்கே மையமாய் டயலாக் அடிக்கத் தான் முடியும் ! ஆனால் முதுகு பழுத்து விடுமென்பதால் Topic 3 பக்கம் பாய்கிறேன் !

    :-))))))

    ReplyDelete
  50. டைகர் : இந்த அதிகாரிங்க தொல்லையே தாங்கலை டெக்ஸ்...வறுத்து எடுக்குறானுக...



    டெக்ஸ் மைண்ட் வாய்ஸ் :

    இவன் உண்மையான அதிகாரியை திட்றானா இல்ல என்னை திட்றானான்னு தெரிலையே..

    ReplyDelete
  51. டைகர் : டெக்ஸ் எவ்வளவு நேரம் நாம இப்படியே சுத்திக்கிட்டே இருக்கிறது எங்கயாவது சுக்கா ரோஸ்டும் வறுத்த உருளைக்கிழங்கும் கிடைக்குதான்னு பார்க்கலாம்
    டெக்ஸ் : பயபுள்ள அப்பப்ப கார்சன் இல்லாத குறைய நிவர்த்தி செய்கிறான்

    ReplyDelete
  52. டைகர் : டெக்ஸ் எனக்கு பக்கத்தூர்ல சின்ன வேலை இருக்கு போய்ட்டு உடனே வந்துறேன்
    டெக்ஸ் : (சில்க்க பார்க்க போறேன்னு சொல்லு, சிரிகாகுவாக்களை தேடுவதற்கு இந்த பூனை குட்டிய கூட்டிட்டு வந்ததுக்கு ஆட்டு தாடிய கூப்பிட்டு வந்திருக்கலாம்)

    ReplyDelete
  53. வெற்றி பெற்ற நண்பர்கள் ராஜா சார் மற்றும் சுரேந்திரன் சார் இருவருக்கும் என் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete

  54. டைகர் : ஹலோ தல என்ன இந்த பக்கம் வந்திருக்கீங்க
    டெக்ஸ் : தளபதி எங்கே காணோம்னு தமிழ்நாட்ல ஒரே பிரச்சினையா இருக்குது.அதான் உன்னை அழைச்சிட்டு போலாம்னு வந்தேன்.
    டைகர் : அட நீங்க வேறங்க.அவங்க தேடறது இந்த தளபதிய இல்லை 😒😒😒😒

    ReplyDelete
  55. அடேங்கப்பா.. பின்றீங்களே மக்களே..!!

    ReplyDelete
  56. Caption 1

    டைகர் A: என்ன தல, இந்த மாதத்து "நெஞ்சே எழு" அதிரி புதிரி ஹிட்டாமே. மைல்கல் இதழ்னு blockல பரவலா பேசிக்கிறாங்க

    டெக்ஸ் (B): (ஆமாமா, இப்ப நல்லா பேசிட்டு இந்த மாசத்தோட மறந்திடுவாங்க. All time best எதுனு கேட்டா உன்னோட தங்க கல்லறையும், மின்னும் மரணமும் தான்னு சொல்லி கவித்திடுவாங்க)

    Caption 2

    டைகர் (A) : இரவுக்கழுகாரே, எப்போ தான் அழுத்தமான கதைகள் கொடுத்து காமிக்ஸ் விருதெல்லாம் வாங்க உத்தேசம்?

    டெக்ஸ் (B): (நீ இப்படியே யோசிச்சிட்டு, பழைய கதைய பேசிட்டு மெதுவா வா தம்பி. அந்த நேரத்துல, ஒரு டஜன் கதைகளோட கிடைக்கிற சந்தில் எல்லாம் வந்து உன் தடமே இல்லாம் சோலிய முடிச்சுபுடறேன்.)

    ReplyDelete
  57. டைகர்: உனக்கென்னபா, இளம் டெக்ஸ், கலர் டெக்ஸ், மேக்ஸி டெக்ஸ், ரெகுலர் டெக்ஸ், கிளாசிக் டெக்ஸ்னு விதவிதமா புகுந்து வெளயாடுற....

    டெக்ஸ் (மனதுக்குள்): தங்க கல்லறை மாதிரி ஒரு ஹிட் நமக்கு அமையலேன்னு இவன் கிட்ட எப்படிச் சொல்றது.

    ReplyDelete
  58. This comment has been removed by the author.

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. @ ALL : தல & தளபதி என்றவுடன் மக்கள் பொங்கோ பொங்கென்று பொங்குவதை ஜாலியாகப் பார்த்து வருகிறேன் ! இம்முறை தீர்ப்புச் சொல்லுவது அத்தினி சுலபமாய் இராது தான் !

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக சார் நானும் மிகவும் ரசித்து வருகிறேன். இந்த லாக் டவுன் நாட்களை நமது Blog சந்தோச நாட்களாக மாற்றி விடுகிறது

      Delete
  61. டெக்ஸ் :ஏம்பா டைகர் குளிச்சியா
    டைகர் : இல்லை டெக்ஸ்
    டெக்ஸ் : எப்பவாவது குளிக்கலைன்னா பரவாயில்லை பிறந்ததிலிருந்தே குளிக்கலன்னா யப்பா தாங்கமுடியலைடா சாமி

    ReplyDelete
  62. டெக்ஸ் : டைகர் கொரோனா டெஸ்ட் எடுத்திட்டியா
    டைகர் :இல்லபா என்னை கொரோனா தாக்காது
    டெக்ஸ் : ஏன் ??
    டைகர் : பல்லு விளக்காதவங்களை கொரோனா தொடக்கூட செய்யாது

    ReplyDelete
  63. டைகர்: இந்த வேகத்துல போனா கோட்டைக்கு எப்போ போய் சேருவதாம் தல?
    டெக்ஸ்: மக்கள் மனசு என்னும் கோட்டையை ஏற்கனவே நான் எட்டி பிடுச்சுட்டேன் பா.

    ReplyDelete
  64. டைகர்: நாம ரெண்டு பேர் சேர்ந்து போனா தெறி தான் தல.
    டெக்ஸ்: இவர் பேசுறதை பார்த்தா இந்த தீபாவளிக்கு தல/தளபதி ஸ்பெஷல் கேட்பாங்க போலிருக்கு

    ReplyDelete
  65. Tiger: இந்த வெட்ட வெளியிலே வெய்யில் மண்டையா போலாக்குது ல தல.
    Tex: இருக்குற மரத்தை எல்லாம் வெட்டிட்டா வெய்யில் பொலக்காம குளு குளுன்னு காத்தா வரும் .

    ReplyDelete
  66. டைகர்: என்ன டெக்ஸூ, நம்மளோட கதை உரிமைகள் அம்புட்டையும் நாங்க வாங்கிப்புட்டோமுன்னு ஒரு கோஷ்டி FBல ரவுசு உட்டுகிட்டு கம்பு சுத்திக்கிட்டு திரியுதாமே!!!
    டெக்ஸ்: (அதுக்கு பேரு ரவுசு இல்ல அவுடு உடுறதுன்னு இந்த டைகருக்கு எப்படி புரிய வைக்கறதுன்னு தெரியலையே!!!)

    ReplyDelete
  67. டைகர்: என்ன டெக்ஸூ, நம்மளோட கதை உரிமைகள் மொத்தமும் நாங்க வாங்கிப்புட்டோமுன்னு ஒரு கோஷ்டி FBல ரவுசு உட்டுக்கிட்டு வம்பு பண்ணிக்கிட்டு சுத்துதாமே!!!
    டெக்ஸ்: (அட போப்பா விட்டா மெபிஸ்டோ கதை மொத்ததுக்கும் கூட உரிமை இருக்குன்னு அடிச்சு வுடுவாங்க... இந்த கொடிய வியாதிக்கு மருந்து லேதுப்பா !!)

    ReplyDelete
  68. டைகர்: என்ன டெக்ஸூ, குதிரைல ஏறுனதுல இருந்து ஒரு வார்த்தை கூட பேசாம ஒரே யோசனையா இருக்கு???
    டெக்ஸ்: மைண்ட் வாய்ஸ் (ஹம்ம்ம்ம்!!! முன்னாடி நம்ம புக்கை தான் FBல ஏலம் போடுவாங்க. இப்போ என்னாடான்னா நம்ம கதை உரிமையையே ஏலம் போடறாங்களேன்னு ஒரே பீலிங் பா!!!)

    ReplyDelete
  69. டைகர்: என்ன டெக்ஸூ, அடுத்த கதை Sci-Fi த்ரில்லர் சாகஸமா!!! சொல்லவே இல்ல???
    டெக்ஸ்: மைண்ட் வாய்ஸ் (அய்யயோ வியாழனிலும் அதிகாரி ன்னா கிரகத்தை சொல்லல கிழமையை தான் சொன்னாறுன்னு எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியலையே... என் கிரகம்... இப்படி புலம்ப வுட்டுட்டியே எடி!!!!

    ReplyDelete
  70. இளைஞனாக மாயதந்திரங்கள் செய்யும் அந்த வில்லன் மெபிஸ்டோ, அந்த லவ்ஸ் கதை என்பவற்றை எப்படியாவது உள்நுளைத்து விடுங்கள் சார்.

    ReplyDelete
  71. """உண்மையைத் தேடி"""

    *ஆங்கிலத்தில் Closure என்ற ஒரு வார்த்தையை உபயோகிப்பார்கள். அதாவது ஒரு பிரச்னைக்கான உண்மையான முடிவு. காதல் தோல்வியா இருந்தாக்கூட ஏன் என்னை விட்டு சென்றாய் என்று பதில் சொல்லியாக வேண்டும்.

    *“உயிரைத் தேடி” லயன் காமிக்ஸால் வெளியிடப்படும் என எடிட்டர் அறிவித்த அன்று நிறைய ஆச்சர்யங்களை கிளம்பியது.

    *சமீபத்தில் ஓரு காமிக்ஸ் இதழை வெளியிட்ட பிரின்ஸ் காமிக்ஸ் நிறுவனத்தார் "உயிரைத்தேடி"க்கு தாங்கள் ரைட்ஸ் வைத்து இருப்பதாகவும் அதை வெளியிட தயாராகி வருவதாகவும், புதிய பதிப்பகங்களை லயன் எடிட்டர் வளர விட மாட்டார் என்ற குற்றச்சாட்டையும் வைத்தனர்.

    *இது குறித்து லயன் எடிட்டர் தனது தளத்தில் "உயிரைத்தேடி"---யின் உரிமை லயன் வசம் இருப்பதாகவும், அதற்கு உரிமம் இருப்பதாக நிரூபித்தால் அதை வெளியிடுதை நிறுத்தி விடுவதாக பகிரங்க சவால் விடுத்தார். அத்தோடு பிரின்ஸ் காமிக்ஸின் முதல் வெளியீட்டிற்கான உரிமம் இருப்பதையும் நிரூபிக்கச்சொல்லி கேட்டிருந்தார்.!

    * எடிட்டரின் இந்த சவாலை லயன் தளத்தில் படித்த சில வாசகர்கள் உண்மையை அறிந்துகொள்ள விரும்பி சில சந்தேகங்களை எழுப்பினர்.!
    ஆனால் அந்த பிரின்ஸ் முகவரும் அவரது ஆதரவாளர்களும் சேர்ந்துகொண்டு, சக வாசகர்கள் என்றும் பாராமல் "எச்ச, ஆம்பிளையா, நாதாரி"-- போன்ற வன்சொற்கள் கொண்டு தாக்கி இருந்தனர். எடிட்டரையும் தகாத வார்த்தைகளால் அர்ச்சித்து, தொடர்ந்து சொல்லவே கூசும் வகையில் கிண்டல் ,கேலி செய்து வருகின்றனர். சாதாரணமாக கேள்வி கேட்ட நண்பர்களை இப்படி தாக்கிவிட்டு, ஏதோ அவர்கள்தான் குற்றவாளிகள் என்பதுபோல் தினமும் கும்பலாக சேர்ந்து கரித்துக் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எளிதாக இதை கடந்து போயிருப்பேன்.! ஆனால் தவறையும் செய்துவிட்டு பிறரை ஏளனமாகவும் கேவலமாகவும் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.!

    *இந்நிலையில் தங்களிடம் உரிமம
    உள்ளதாகவும் அதை விரைவில் நிரூபிப்பதாகவும் பிரின்ஸ் காமிக்ஸ் தரப்பில் சொல்லப் பட்டது. அதை தொடர்ந்து பல்வேறு நாடகங்கள் தினந்தோறும் அரங்கேறியது.

    *அதனால் இந்த பிரச்னையில் முன்னுக்குப்பின் முரணாக பேசுவதையும், பிரின்ஸ் காமிக்ஸ் இதழை காசுகொடுத்து வாங்கியவர்களின் சந்தேகத்தை போக்காமல், கேள்வி கேட்டவர்களையும் எடிட்டரையும் திட்டுவதையே வேலையாக வைத்துக்கொண்டிருப்பதையும் பார்த்துவிட்டு.. உயிரைத் தேடியது போல் உண்மைக்கு ஆதாரம் தேட ஆரம்பித்தேன்.!

    *மிக நீண்ட தேடலின் முடிவில் அதற்கான பதில் இன்று கிடைத்து விட்டது.

    """""DanDare Corporation""""

    ""உயிரைத் தேடி""- யின் தமிழ் உரிமை லயன்காமிக்ஸ் தவிர வேறு யாருக்கும் தரப்பட வில்லை என்பதை தெளிவாக உறுதிபட கூறி இருக்கிறார்கள்.

    *உண்மை தெரிந்தவுடன் இதை அனைவரும் அறிய பகிருகிறேன்.

    *இது குறித்து எடிட்டரின் மீதான அவதூறுகள் களையப்படுகிறது நிரந்தரமாக.!

    * உயிரைத்தேடி"- யின் உரிமம்
    தங்களின் வசம் இருப்பதாக பிரின்ஸ் காமிக்ஸ் நிறுவனம் சார்பில் போடப்பட்ட மெயில்கள் அனைத்தும் போலி எனவும் அவற்றில் துளியும் உண்மை இல்லை எனவும் இந்த தகவல் உறுதிப்படுத்துகிறது.

    *அதே நேரம் இன்னொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். இதில் வாங்கியவர்கள், நம்ப வைத்து ஏமாற்றப்பட்டிருக்கக்கூடும் என்றே நம்புகிறேன். எனவே இதைக் கொண்டு இனி அடித்துக் கொள்ள வேண்டாம்.! அந்த முகவரும் அவரது ஆதராவளர்களும் இனியாவது சகவாசகர்களையும் எடிட்டரையும் மட்டமாக பேசுவதை நிறுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்.!

    *இது ஒரு சிறு குழு. இருக்கிறவங்கெல்லாம் அடிச்சிகிட்டு காமிக்ஸ் மேலே கோபம் வைச்சுகிட்டு வாங்காமல் விட்டா நாம் காதலிக்கும் காமிக்ஸ் வடிவம் அழிந்து விடும். எனவே நாம் வாழ்நாள் முழுதும் காமிக்ஸை சுவாசிக்கனும் என்ற சுயநலம் பொருட்டு ஒத்துமையாக இருப்போம்.

    *அதே நேரம் உரிமம் பெற்று யார் கொண்டு வந்தாலும் காமிக்ஸ் வடிவத்தை ஆதரிப்போம்.

    பின்குறிப்பு:-

    ஸ்காட் என்னும் நண்பர் டைனமைட்டில் முன்னே இருந்தவர். அவர் கிங்ஸ் வாட்ச் பற்றியும் தெரிவித்து மேற்கொண்டு விசாரிக்க வழிகாட்டினார். இந்தப் பிரச்னையை தொடர வேண்டாம், என்பதால் இத்தோடு விடுகிறேன்.! இல்லை.. தொடரச்சொன்னாலும் சரியே..!

    --- மஹேந்திரன் பரமசிவம்

    ReplyDelete
    Replies
    1. உண்மை வென்றதில் மகிழ்ச்சி...

      இதற்காக உழைத்த ஷெரீப் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுதல்களும் ,வாழ்த்துகளும்...

      Delete
    2. *நண்பர்களே* @

      *இனிமேலும் இதைப்போன்ற யாராவது காமிக்ஸ் போடுவதாக சொன்னா முதலில் அவர்களது உரிமத்தை காட்டச் சொல்லுங்கள்.*

      *காமிக்ஸ் நமக்கு முக்கியம் தான்.*
      *ஆனா ஏமாளிகள் போல கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் நம்பி ஆதரிக்க கூடாது என இந்த சம்பவம் பாடம் கற்றுத் தந்துள்ளது* .

      *நம்முடைய ரசனையை யாராவது விற்று காசாக்க முனைந்தால் அதற்கு உடன்படாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.*

      *இன்றைய காலத்தில் காமிக்ஸ் பதிப்பகம் ஆரம்பிப்பது மிகவும் அசாதரமான காரியம்* .

      *எனவே போலிகளை கண்டு ஏமாறாதீர்கள் உசாராக இருங்கள்* .

      *போலிகளை ஆதரிப்பதும் சமூகத்திற்கு செய்யும் தீங்கு!*

      *தீங்கிற்கு துணை போகாதீர்கள்*

      Delete
  72. This comment has been removed by the author.

    ReplyDelete
  73. (முன்பு பதிந்த 18 கேப்சன்களின் தொடர்ச்சி)

    கேப்சன் 19:
    டைகர்:
    இப்படியே போனா மதியத்துக்குள்ள சிலுக்குவார்பட்டி வந்துடும்பா
    டெக்ஸ்:
    (ஆ...அதுலயும் சிலுக்குதானா....)


    கேப்சன் 20:
    டைகர்:
    உயிரைத் தேடிக்கு வேற தலைப்பு எதும் யோசிச்சியா டெக்ஸ்...
    டெக்ஸ்:
    (இருக்கற நிலைமைக்கு "உரிமையத் தேடி"னு வேணா வைக்கலாம்..ஹம்ம்...)


    கேப்சன் 21:-
    டைகர்:
    டெக்ஸ் விசயம் தெரியுமா...அடிக்கற வெயிலுல,குதிரைல வர பயந்துகிட்டு,இந்த கார்சனும் ஜிம்மியும் பஸ்ல வராங்களாம்..
    டெக்ஸ்:
    (டிக்கெட் ப்ரீனதும் கேடிங்க ரெண்டும் லேடி கெட்டப்புல வர விசயம்லாம் டைகருக்கு தெரியாது போல..)

    கேப்சன் 22:
    டைகர்:
    அதெப்படி டெக்சு கொஞ்சம் கூட வெட்கப்படாம வருசம் புல்லா புத்தகத்துல வர...
    டெக்ஸ்:
    (அடேய் வருசத்துல ஒரு புக்குல கூட வராதவன் தாண்டா வெட்கப்படணும்..)

    கேப்சன் 23:
    டைகர்:
    வரப் போற ஊருல நல்லதா ஒரு சலூன் இருக்கு...தாக சாந்தி  பண்ணிட்டு போகலாமா டெக்ஸ்?
    டெக்ஸ்:
    (ஓ..அப்ப இதுதான் நம்ம சந்தானம் சொன்னஅந்த  தல தளபதி சலூனா...)


    கேப்சன் 24:
    டைகர்:
    ஐய்யய்யோ.. lஎந்த பாயும் எனக்கு பிரெண்டா இல்லையே..இன்னைக்கு ரம்ஜான் வேற..
    பிரியாணிக்கு நான் எங்க போவேன்... யார்கிட்ட கேட்பேன்?
    டெக்ஸ்:
    (ஐய்யய்யோ..எந்த பாயும் எனக்கு பிரெண்டா இல்லையே..இன்னைக்கு ரம்ஜான் வேற..
    பிரியாணிக்கு நான் எங்க போவேன்... யார்கிட்ட கேட்பேன்)
    குதிரைகள் மைண்ட் வாய்ஸ்:-
    (இவனுங்க ரெண்டு பேரும் குறுகுறுனு பார்க்கறத பார்த்தா இன்னைக்கு நாமதான் பிரியாணி  போல...)

    கேப்சன் 25:
    டைகர்:
    டெக்சு அங்க பாருப்பா...ஒரு ஹோட்டல் தெரியுது...ஆனா ஒரு கண்டிசன்.. சாப்பிட்டுட்டு நான் தான் பில் கொடுப்பேன் இப்பவே சொல்லிட்டேன்.
    டெக்ஸ்:
    (ஓ..அவ்ளோ திமிரா...சரி அண்ணாத்த கூடயும் ஒத்தைக்கு ஒத்தை போட்டு பார்த்திட வேண்டியதுதான்)
    டைகர்:
    டெக்சு உன் மைண்டு வாய்சு கேட்குது..எந்த பிரச்சனைனாலும் இந்த ஒத்தைக்கு ஒத்தைய விட மாட்டேங்கறிங்களேப்பா..

    கேப்சன் 26:
    டைகர்:
    டெக்சு வழி மாறி போறது தப்பில்ல..
    அதுக்காக உன் கதைல இருந்து வழி தவறி என் கதைக்குள்ள வரதுலாம் ஓவருப்பா
    டெக்சு:
    (ஞீ...ஞீ...

    ReplyDelete
  74. டைகர் : டெக்ஸ் நீ பல எதிரிகளை பாத்து இருக்கலாம் ..ஆனா என்னோட எதிரியை மாதிரி நீ யாரையும் பாத்து இருக்க மாட்ட...


    டெக்ஸ் மைண்ட்வாய்ஸ் :

    ஆமாமா உன்னோட பலமான எதிரியே உன் வாய்தானே பக்கம்பக்கமா வளவளன்னு பேசி பேசி தான் என்பின்னாடி அன்னநடை போட்டு வர..பேச்சைப்பாரு

    ReplyDelete
  75. டைகர்...அமெரிக்கா முழுதும் சுத்திட்டோம்....என் அழகுக்கேத்த காதலி கெடக்கலியே டெக்சு...
    டெக்ஸ்...ஆப்ரிக்கால பாக்ற மொத பொன்னே உனக்கேத்த...உன் அழகுக்கேத்த சோடியாதான் இருக்கும் வெண்ண

    ReplyDelete
  76. டைகர்...அமெரிக்கா முழுதும் சுத்திட்டோம்....என் அழகுக்கேத்த காதலி கெடக்கலியே டெக்சு...
    டெக்சு...சிம்பன்சிய பாரு பத்து பொருத்தமும் பக்காவா இருக்குமே பயபுள்ள

    ReplyDelete
  77. டைகர்...டெக்ஸ் என்ன எங்க கூட்டிட்டு போறிய
    கார்சன்...பொறுல... கார்சன்ட உன்ன குடுத்துட்டு ஜிம்மியோட நழுவிடுவம்ல

    ReplyDelete
  78. டைகர்....கண்ணுக்கு தெரிஞ்ச வர ஒன்னும் தெரியலயேப்பா
    டெக்ஸ்....மொத கண்ணு தெரியுதால

    ReplyDelete
  79. டைகர்...டெக்ஸ் ஒரு ரம்மி ஆடுவோமா...
    டெக்ஸ்...பாயாசத்துக்கு சிக்னல் தாராராமா...

    ReplyDelete
  80. டைகர்...நாளைக்கு வெள்ளிக்கிழமைன்னு...ஆசிரியர் அனுப்புமாறு குளிக்க ஒரு சொட்டு தண்ணி இல்லயே ...
    டெக்சு இவன் கூட என்ன அனுப்புன உங்களுக்கு மழைய வரவழைக்கவா தெரியாது...புனித மானிடோ காப்பாத்து

    ReplyDelete
  81. டைகர்....இப்ப வர ஒரு வழித்தடத்ல வர்றோம்...இன்னைக்கு உனக்கு அஞ்சு வழித்தடத்த ஆசிரியர் போடப் போனாராம்...மழை வந்ருச்சாம்...தாரு கிடைக்கலாம்....ஹஹஹஹ
    டெக்ஸ்....யப்யா அந்த மழைய இங்க அனுப்புனா என்ன

    ReplyDelete
  82. டைகர்....நீ ஆனானப்பட்ட ஸ்பைடர....ஆர்ச்சிய...மாயாவிய...லாரன்ஸ்டேவிட்ட மிஞ்சிட்டிய தல
    டெக்ஸ்...இவர மிஞ்சினத சொல்ல மாட்டாராம் தொர...எல்லாம் ரம்மி பாயாசத்த குடிச்ச மிதப்ப

    ReplyDelete
  83. டைகர்....தங்கமே நா இப்ப குளிக்கப் போறேன்
    டெக்ஸ்....கண்டுக்காதிய மக்களா... வெயிலு அங்க மட்டுமில்ல...இங்கயுந்தே

    ReplyDelete
  84. டைகர்:ஹலோ அதிகாரி. சட்டத்த மதிக்க கத்துக்குங்க இல்லண்ணா தமிழ்வாசகர்கள் உங்கள மதிக்க மாட்டாங்க கழுவிக்கழுவிஊத்துவாங்க டெக்ஸ்(மைண்ட் வாய்ஸ்) : சட்டத்தமதிக்காமடூட்டிடைம்லயே சீட்டாடறதுமில்லாம. அதுலபித்தலாட்டமும் பண்றது. இந்தலட்சணத்துல ராணுவசட்டத்த மதிக்கரேன் பேர்வழின்னு. அனுபவமில்லாத ஒரு லெப்டிணண்ட்பேச்ச எதுத்துப்.பேசாமகேட்டுக்கிட்டுமொத்த ராணுவகுழுவையும் முட்டுச்சந்துக்குள்ள கூட்டிப் போய் சாகக் குடுத்தபயபுள்ளராணுவ சட்டத்தப்பத்தி பேசுது பாரேன். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  85. டைகர் : ஏன் தல இந்த பண்டிகைக்கு பிரியாணியா இல்லை பாயசமா?
    டெக்ஸ் (மை.வா.) ஏற்கனவே நம்மள ப்ளாக்கில பாயாசம் போட ஒரு குரூப் காத்திட்டு இருக்கும். இதுல எடி வேற அவங்களுக்கு ஏத்தமாதிரியே கேப்ஷன் போட்டி வேற வெக்கிறாறு.இனி டம்ளர் இல்ல பாயாசம். அண்டாவுல தான்

    ReplyDelete
  86. சும்மா,
    டைகர்:இன்னா டெக்ஸு,இந்த தீபாவளிக்கு நானும் வந்து உனக்கு ஃடப் கொடுக்கலாம்னு பார்த்தா நீ சிங்கிளாத்தான் வருவ போல...
    டெக்ஸ் (மைண்ட் வாய்ஸ்): பின்னே சிங்கம் சிங்கிளாத்தான் வரும்,டைகர் கூடவா வரும்...!!!

    ReplyDelete
  87. // So காத்திருக்கும் கதை வரிசைப்படி - டெக்ஸ் மாத்திரமன்றி, வில்லன் மெபிஸ்டோவுமே, மாயாஜாலம் செய்யும் இளைஞனாக ரகளை செய்யும் 4 பாக சாகசத்தை தேர்வு செய்திட இரண்டே நிமிடங்களே செலவாகின ! //
    வாவ் ஆவலுடன் வெயிட்டிங் சார்...

    ReplyDelete
  88. // 2022-ன் தீபாவளி மலரின் ஒரு சாகசம் அதுவாக இருந்திடும் ! //
    ரொம்ப தூரத்தில் மஞ்சள் கொடி ஆரவாரமா தெரியுது...

    ReplyDelete
  89. டைகர்:ஏம்பா டெக்ஸ் அடுத்த ஊர்ல சில்க் கண்டிப்பா இருப்பாபா.இந்த டைகரோட காதலுக்கும் உதவியாக இருந்த உனக்கு நன்றி ப்ரோ.

    டெக்ஸ் மை.வா:டைகர் அவ உன்ன விட்டு போனாலும் திரும்ப வருவான்ற உன் தன்னம்பிக்கை தான் ஒரு சிலர எனக்கெதிரா பாயாசம் போட வைக்கிறது ப்ரோ.

    ReplyDelete
  90. டைகர்....உங்க கூடவே வாரனே...எனக்கோரு தடம்
    டெக்ஸ்...அடி வாங்கியே வீங்குற உனக்கு ஒருதடம்லா கிடையாது.‌‌.. ஒத்தடந்தா

    ReplyDelete
  91. டைகர்...அண்ணே உங்க கூடவே சேத்து அனுப்புறன்னு .... தலதளபதி மலர்ன்னு ....சொல்லி வாத்தியாரு ஏச்சுபுட்டாரேன்ன...
    டெக்ஸ்....அதா இப்ப காட்டிட்டாறே...ஒன்னா

    ReplyDelete
  92. டைகர் :தல ஓரு டீ சொல்லேன் ..சாப்டு ரெண்டு நாள் ஆச்சு

    டெக்ஸ் Hmmm. எப்படி இருந்த மனுஷன்

    ReplyDelete
  93. Tiger : இந்த தீபாவளி 'தளபதி தீபாவளி' தானே ஓரு மாசம் முன்னாடி வரைக்கும் எல்லாரும் நினைச்சீங்க...அப்போ நானும் அப்படி நினைச்சதுல தப்பில்லையே ..ஓரு Clarity காக கேட்டேன்.

    Tex : ஆண்டவா.

    ReplyDelete
  94. டைகர்....யோவ் தல உங்க ஆளுக புலின்னா சாதாரணமா நினைச்சிட்டாங்க போல....வாத்தியாரும் இந்தா வருது...அந்தா வருதுன்னு புலிக்கதை எழுதிட்டே ...உன்னோட தடத்த விரிச்சிட்டே போறாரு...என் ஆளும் பாயாசம் உனக்கு போடுறாரா எனக்கு போடுறாரான்னே தெரில...
    டெக்ஸ்....யோவ் அவனுக்கு பாயாசம் போட மட்டுந்தா தெரியும்....அது உனக்குதான்னு அவனுக்கே தெரியாது

    ReplyDelete
  95. Tiger : நரி ஊளையிட்டிரிச்சு சக்ஸஸ் ...2341 கண்டிப்பா தளபதி தீபாவளி தான்..

    Tex : ஆண்டவா ரொம்ப முத்திரிச்சு போலயே

    ReplyDelete
  96. டைகர்.......என் வழில நீ குறுக்க வராத....உன் வழில நா வரல
    டெக்ஸ்...யோவ் நீ வாரதே என் தடத்லதே

    ReplyDelete
  97. டைகர்.....உன் ரசிகர்கிட்ட சொல்லி வை....இந்த டைகர் பனங்காட்டு நரி....எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன்னு
    டெக்ஸ்....நரி என்னோட தடத்ல வாரதே தப்பு...அதும் ஊளையிட்டுட்டேன்னா

    ReplyDelete
  98. அதிகாரி டெக்ஸ் இன் ஒவ்வொரு நாள் அப்டேட்டும் அட்டகாசம் !

    ReplyDelete
  99. டைகர் : ஏம்பா டெக்ஸ், உனக்கு மட்டும் தெனமும் அப்டேட்டா அள்ளி வுட்றாரு இந்த லயன் அதிகாரி. என்னைய கேப்ஷனுக்கு மட்டும் ஊறுகாயா யூஸ் பன்ணிக்கிறாரே. எனக்கும் கொஞ்சம் சிபாரிசு பன்றது.

    டெக்ஸ் : (மனதுக்குள்) ம்க்கும்.. ஊறுகாய் அளவுக்காச்சும் நீ உபயோகமா இருக்கியேனு சந்தோஷப்பட்டுக்கோ தம்பி. அதுவும் இந்த ரம்மி தம்பிக்காக பரிதாபபட்டு லயன் அதிகாரி உன்னைய இந்த இடத்துலையாவது வச்சிருக்காரு. இல்லைனா எல்லாரையும் போல மொத்தமா மறந்து போயிருப்பாரு.

    ReplyDelete
  100. டைகர் : ஏன்யா டெக்ஸ், என்னோட சாகசம் மின்னும் மரணம் எத்தினி வாட்டி படிச்சிருக்க.

    டெக்ஸ் : (மைண்ட்வாய்ஸ்) அட ஏன்யா நீ வேற, இந்த போனல்லி குருப் என்னை வித விதமா போட்டு தொவச்சி எடுத்துட்டு இருக்காங்க இது இவரு ஜாகசத்த வேற படிக்க டைம் இருக்காக்கும்.

    ReplyDelete
  101. டைகர்: கவலப்படாதே டெக்ஸூ...!! அதான் 2DG வரப் போகுதே...., பாரு கொரோனாவெல்லாம் துண்ட காணோம் துணியக் காணோம்ன்னு ஓடப்போறத...!! ஹா..ஹா.. ஹா...!!!

    டெக்ஸ் (மனதுள்) : அட லூசுப் பயலே... இப்படி மாஸ்க் போடாம நாம சுத்துணோம்ன்னா... 2DG,4EG... 100GG வந்தாலும் கொரோனாவ ஒழிக்க முடியாதுடா... இவனச் சொல்லி குத்தம் இல்ல... மொத வேலையா நாம ஒரு மாஸ்க மாட்டணும்...!!!

    ReplyDelete
  102. டைகர் : ஏம்பா டெக்ஸ், இந்த குதிரை சரியா செட்டாகுல. ஏதாச்சும் நல்ல குதிரை இருந்த சொல்லேன்.

    டெக்ஸ் : (மைண்ட்வாய்ஸ்) பாவம் எப்படி இருந்த மனுஷன். சாகசம் செஞ்சு ரொம்ப நாள் ஆச்சுல்ல, டச் விட்டு போச்சு. அதான் நல்ல குதிரையையும் குத்தம் சொல்றாப்ல.

    ReplyDelete
  103. ஆசிரியர் அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். பதிவுகளுக்கு கீழே கேப்ஷன் போட்டி அறிவிப்பதால்..90% கேப்ஷன் பதிவுகளே பதிவதால் தங்கள் பதிவின் சாரம் சரியாக அலசப்பட படாமல்போய்விடுகிறது. ஆதலால் தாங்கள் தனியாக அறிவித்து விடுங்கள். நிறைய முறை இதை கவனித்து உள்ளேன் ஆதலால். 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    ReplyDelete
  104. டைகர்....டெக்ஸ் ஊரடங்கு அறிவிப்புக்கு ஒத்துழைக்க சொன்ன வாத்தியாரு நம்மள மட்டும் சோடியா நடமாட விட்ருக்காரே ஏன்னு தெரியுதா...
    டெக்ஸ்....என்னோட தீராத்தோட்டாவும் ம்ம்...உன் மூடா வாயும் கிருமிகள சிதறடிச்சுடுமேன்னுதா

    ReplyDelete
  105. Caption Contest

    டைகர் : ஏன்பா டெக்ஸ், Editor ஏகப்பட்ட போட்டி வைக்கிறார், உன்னோட எல்லா கதையையும் அட்டைய கழட்டிட்டு என்ன கதைன்னு கண்டுபிடிக்கிற போட்டி வைச்சா போதும், ஒரு பய ஜெயிக்க முடியாது, Editor க்கும் பரிசு மிச்சம்,ஹாஹாஹா

    டெக்ஸ் : ( Mind voice) நூற்றுக்கணக்குல Hits கொடுத்துட்டு நான் பேசாம இருக்கேன், ரெண்டே ரெண்டு Hits கொடுத்துட்டு இவன் பேசுற பேச்சு இருக்கே, அய்யய்யயயய

    ReplyDelete
  106. டைகர்.....யோவ் டெக்சு....இதுக்கும் புறம் பிரியும் அஞ்சு நட்பும் உனதாமே
    டெக்ஸ்....போயா டுபுக்கு இதுவு எந்தடந்தா....என் ரசிககண்மணிக கேட்டதால் விட்ருக்கேன் உனக்கு...பாத்து வா தடுக்கிறப்போவுது

    ReplyDelete
  107. டைகர்....நா போற பாதை புலிப்பாதை...தைரியமிருந்தா தொடர்ந்து வா தல
    டெக்ஸ்...கொட்டையெடுத்த புளிதான...என் லிலித் இருந்தா உன்ன கொழும்பு வச்சிருப்பா

    ReplyDelete
  108. டைகர் : ஏப்பா டெக்ஸு நம்ம எடிட்டரு நம்ம ரெண்டுபேரோட கதையும் வெளியிடுறதா சொல்லிட்டு
    இப்போ உன்னோட கதையை மட்டும் டபுள் ஆல்பமா போடுறாரே இது எந்த வகையில நியாயம்


    டெக்ஸ் : மைண்ட் வாய்ஸ் :
    ( உசுரு போகறதா இருந்தா கொரோணாவுலயே போகட்டும்
    உன்னால போச்சுன்னு இருக்க வேண்டாமின்னு நெனைச்சாரோ என்னமோ 🤷🏻‍♂️)
    .

    ReplyDelete
  109. // எனக்கு best என்று பட்டது நமக்காக மெய்யாலுமே இரத்தம் சிந்தியவரின் முயற்சியே ! So சேலம் 'பேபி' சுசீ அவர்களுக்கு "உயிரைத் தேடி" புக் நமது அன்புடன் !

    அதே போல டாக்டர் A.K.K ராஜா அவர்கள் அனுப்பியிருந்த caption கூட செமத்தியாக இருந்ததால் wildcard entry என்பது போல wildcard பரிசாக அவருக்கும் ஒரு "உயிரைத் தேடி" புக் நமது அன்புடன் அனுப்பிடப்படும் ! //

    Congrats Friends

    .

    ReplyDelete
  110. டைகர் : என்ன தல, இந்த வருஷமாவது எனக்கு தீபாவளிக்கு சான்ஸ் கிடைக்குமா?
    டெக்ஸ் : சான்ஸ், கிடைச்சால் நீ என்கிட்டயே ஒத்தைக்கு ஒத்தை வருவியே!



    டைகர் : என்னதான் தரமான கதைகளையும், சாகஸங்களையும் கொடுத்திருந்தாலும், உன் அளவுக்கு மாதாமாதம் வர முடியலையே டெக்ஸு!
    டெக்ஸ் : வருஷத்துக்கு ஒருமுறை வந்தாலும், நீ பெரிய ஆளுதான்யா! அதனால அடக்கியே வாசிக்கிறது எனக்கு நல்லது!


    டைகர் : ஏம்பா டெக்ஸு! உன்னை யாருமே துப்பாக்கியில் குறிபார்த்து சுடாமல் இருக்கறதுக்கு, காரணம் நீ போட்டிருக்குர மஞ்ச சட்டை தானாமே! பயபுள்ளங்கல்லாம், கண் தெரியாம சுத்துறதா கேள்விப்பட்டேன்!
    டெக்ஸ் : போட்டிருந்த டிரஸ்ஸ தவிர எல்லாத்தையும் சிலுக்கு உருவிட்டா! ஆனாலும், உனக்கு லொள்ளு அதிகம்யா!



    டைகர்: காடு, மலை, கடல் எல்லாம் சுத்திப் பாத்துட்டேன்! தங்கமும் காணோம்! சில்க்கையும் காணோம்!
    டெக்ஸ்: நல்லா இருந்த மனுசன் தான! போன வாரம் அம்மணி கழட்டி விட்டுட்டு போனதில் இருந்து, இப்படி பொழம்புறார்!


    டைகர் : இந்த பாலைவனத்தில் நாம ரெண்டு பேர் மட்டும் இருக்கோமே! இந்த லக்கிலூக்கு, சிக்பில், டுராங்கோலாம் எங்கே போனாங்க!

    டெக்ஸ் : அவங்கல்லாம் உஷார் பார்ட்டிங்க! நீ வரன்னு தெரிஞ்ச உடனே தெறிச்சு ஓடிட்டாங்க! நான் தான் அஞ்சா நெஞ்சன்னு நெனச்சி, உங்கிட்ட மாட்டிக்கிட்டேன்!



    டைகர் : அப்போ எனக்கு 24 வயசு இருக்கும்! கான்பெடரேட் தங்கத்தை தேடி எடுக்கப் போயி சில்க்-கிட்ட ஏமாந்துட்டேன்! திடீர்னு ட்ஸி-நா-பா-னு சொல்லிட்டு ஒருத்தி வந்தா, கடைசியில் அவளையும் விக்டோரியா தள்ளிட்டு போய்ட்டான்!
    டெக்ஸ் : இவனுக்காவது ரெண்டு லவ் ஸ்டோரி! எனக்கு ஒண்ணே ஒண்ணு! கண்ணே கண்ணுணு. அவளும் போய் சேர்ந்துட்டா!

    ReplyDelete
  111. மெபிஸ்டோ ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இளம் மெபிஸ்டோ. சூப்பர் சார். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  112. ஆசிரியரே வெள்ளி அப்டேட்ஸ்

    ReplyDelete
  113. டைகர்.....தல கார்சனயும் ..ஜிம்மியயும் முதியோர் இல்லத்துல சேத்தாச்சி...இனி நாம ரண்டு பேருந்தான் எல்லா நடத்தும்...
    டெக்சு....ஐயய்யய...வழவழன்னு பேசுற இவன மொத தள்ளிருக்கனும்

    ReplyDelete
  114. டைகர்....என்னொட 2.0 வரட்டும்....அப்புறம் பாரு...
    டெக்ஸ்....வந்துற கிந்துற போவுது

    ReplyDelete
  115. டைகர்...எங்கிட்ட மோதாதே...நா ராஜாதி ராஜன டா...வம்புக்கு இழுக்காதே...இந்தத் தடம் என்னோடது டா....
    டெக்ஸ்...தப்பாட்டம் என்னோடு ஆடாதே...மூக்குல குத்து பட்டு ஒடாதே

    ReplyDelete
  116. டைகர்....இந்த ரோட்லயே என்னையும் ஈரோட்டுக்கு கூட்டிட்டுப் போயேன்....வழித்துணையா நானுமிருப்பனே...
    டெக்ஸ் ...உங்குட சேந்தா என்னையும் ஒதுக்கி வச்சுருவாங்களே

    ReplyDelete
  117. Tiger : என் பேரு Blueberry பா ஆனா தமிழ்நாட்ல மட்டும் Tiger ru tiger ru nu கூப்புடுவாங்கப்பா...
    Tex : இந்த மூஞசிக்கு யாரு Tiger nu யாரு பேர் வச்சிருப்பா ...

    ReplyDelete
  118. டைகர்: உங்களோடு இணைந்து தீபாவளிய கொண்டாட நினைத்திருந்தேன், கொரனாவால் என்னால் சொன்ன நேரத்திற்கு வர முடியாத நிலை தலை....

    டெக்ஸ்- உனக்கும் சேர்த்தி வெடி கொளுத்தி நான் போடுவேன் நண்பா....

    ReplyDelete
  119. டைகர் : டெக்ஸ், மாஸ்க் போடாம இப்படி ஓபன் ப்ளேஸ்ல போயிட்டிருக்கோமே, கோவிட் வைரஸ் தொற்று பயம் இல்லையா உனக்கு?

    டெக்ஸ் : (மனதிற்குள்) ஆமா, இந்த மொட்ட பாலைவனத்துல, அடிக்கிர வெயில்ல உயிர் கோழியே வந்தாலும் வறுத்தக் கறியாகிடும். கொரோனா வைரஸ் எம்மாத்திரம்.

    ReplyDelete
  120. டைகர் : உங்க பெயரென்ன
    டெக்ஸ் : டெக்ஸ்
    டைகர் : என்ன பேரிது டெக்ஸ் விக்ஸ் சிக்ஸின்னு ஹா ஹா ஹா
    டெக்ஸ் : உங்க பெயர் என்னவோ
    டைகர் : டைகர் அதாவது புலி
    டெக்ஸ் :கொட்டையெடுத்ததா எடுக்காததா
    டைகர் : ??????

    ReplyDelete
    Replies
    1. Tiger : ஏம்பா tex su போன வருஷம் உன்ன ஓரு ஆபிசர் ஜெயில்ல போட்டு நொங்கி எடுத்தாராமே..இப்ப உடம்பு தேவலியா
      Tex :
      ஆகா நாம உதை வாங்குன விஷயம் இவன் வரைக்கும் தெரிஞ்சிரிச்சே ...சை ...இருந்தாலும் கடைசி வரைக்கும் கம்பீரமாவே காட்டீக்குவோம்

      Delete
  121. டைகர்...தானா தலையாடுண்டா தம்பிகளா நா பாடுனா..
    டெக்ஸ்...தலையாடலாண்டா தம்பி...உன்ன மாதிரி வாலுதான் ஆடக்கூடாது...என்னா வாலுத்தனம்

    ReplyDelete
  122. டைகர்....நீ சுட்டா மட்டும் தனியா நேரா தீராப் போவுது....மெபிஸ்டோ மட்டும் வேணாங்றாரே ஆசிரியர் ஏன்..
    டெக்ஸ்...வெள்ளிக் கிழமையும் அதுவுமா இன்னும் ஆசிரியர் என் தடங்கள காட்டாம...இன்னும் இவனோட கோத்து விட்டுருக்காரே

    ReplyDelete
  123. Tiger : ஏம்பா tex su போன வருஷம் உன்ன ஓரு ஆபிசர் ஜெயில்ல போட்டு நொங்கி எடுத்தாராமே..இப்ப உடம்பு தேவலியா
    Tex :
    ஆகா நாம உதை வாங்குன விஷயம் இவன் வரைக்கும் தெரிஞ்சிரிச்சே ...சை ...இருந்தாலும் கடைசி வரைக்கும் கம்பீரமாவே காட்டீக்குவோம்

    ReplyDelete
  124. Tiger : ஏம்பா tex su போன வருஷம் உன்ன ஓரு ஆபிசர் ஜெயில்ல போட்டு நொங்கி எடுத்தாராமே..இப்ப உடம்பு தேவலியா
    Tex :
    ஆகா நாம உதை வாங்குன விஷயம் இவன் வரைக்கும் தெரிஞ்சிரிச்சே ...சை ...இருந்தாலும் கடைசி வரைக்கும் கம்பீரமாவே காட்டீக்குவோம்

    ReplyDelete
  125. டைகர்....தல என்னோட மின்னும் மரணத்துக்கும்...தங்கக் கல்லறைக்கும் இணையா கதை இருக்கா..
    டெக்ஸ்....என்னோட 700 கதையுமே அப்டிதாண்டா

    ReplyDelete
  126. டைகர்....டெக்ஸ் நாம் மட்டுமே பிழைச்சிருக்குமே...எப்படி
    டெக்ஸ் ...டேய் நீயே கிருமி நாசினிதான....அதான் உன் தோள்ல கை போட்டு சுத்துறன்

    ReplyDelete