Powered By Blogger

Saturday, May 01, 2021

பாயசம் எடு...கொண்டாடு..!

 நண்பர்களே,

தாமதமான மே தின வாழ்த்துக்கள் ! துவக்கத்திலேயே சொல்லி விடுகிறேனே - தொடரவுள்ள பதிவானது "அதிகாரி அலர்ஜி" கொண்டோருக்கு உகந்ததாய் இராதென்பதை ! நிறைய கடுப்சையும் ; கணிசமான காதோரப் புகைப்படலங்களையும் ஏற்படுத்திடக்கூடும் என்பதால் வேறொரு மஞ்சளுக்கு இன்றைக்கு 'விசில் போடுவது' சாதகமான பொழுதுபோக்காக்கிடலாம் என்பேன் ! 

ரொம்ப நாளாகவே இது எனக்குள் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணம் தான் ; ஆனால் சமீபப் பதிவுகளில் அலர்ஜி சார்ந்த ரியாக்ஷன்ஸ் சற்றே தூக்கலாய்த் தென்பட்டதால், அந்த நண்பர்கள் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சற்றே அவகாசம் தந்து விட்டு, யதார்த்தத்தைப் பதிவிட நினைத்தேன் ! 

"டெக்ஸுக்கு ஓவர் பில்டப் !"........

"டெக்ஸுக்கு ஓவராய் ஸ்லாட்ஸ் !"

"அட்டையை மாத்தினாக்கா இந்தக் கதைக்கும், அந்தக் கதைக்கும் வித்தியாசம் லேது !"

"ஒரே template !"

"அடுத்த நாயகர் வாய்ப்பையெல்லாம் தட்டிப் பறிக்கிறார் மஞ்சச்சட்டைக்காரர் !"

"வூட்டிலே அடுக்கி மட்டுமே வைக்கிறேன் டெக்ஸ் புக்ஸை !"

"ரசனைகளை பாழ் செய்யும் புண்ணியகோடி !"

பாயச அண்டாக்களின் பொதுவான உட்பொருட்கள் இவையே ! ஒவ்வொரு முறையும் 'தல' தலைகாட்டும் போது மேற்படி ஐட்டங்களோடு கொஞ்சம் இஞ்சி ; வத்தல் ; மிளகாய் ; சுக்கு ; கோங்கிறா காரமெல்லாம் சேர்க்கப்பட்டு பதமாய்ப் பாயாசமெனும் பானம் பரிமாறப்படுவதைப் பார்க்கிறோம் ! ஆனால் பாயசத்தை பரிமாற முற்படுவோரே அதற்கு முன்பாய் 'தல'யோடு ஒரு சத்தமில்லா சால்சா நடனம் ஆடி முடித்துவிட்டுத் தான் வருகின்றனர் என்பது பொதுவானதொரு சந்தேகம் ! எது எப்படியோ, யதார்த்தத்தின் முகத்தை இப்போது சித்தே பார்ப்போமே folks ?

வருஷம் 2012...மாதம் ஜனவரி ! 

  • நமது மீள்வருகையின் முதல் இதழான "COMEBACK ஸ்பெஷல்" களம்காண்கிறது - வெளியீடு எண் 210 சகிதம் !  112 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இன்றைக்கு நானூறு கூப்பிடு தொலைவில் தென்பட, வெளியீடு எண் 396-ல் நிலைகொண்டிருக்கிறோம் ! Which means -  இடைப்பட்டுள்ள இந்த near தசாப்தத்தில் லயன் காமிக்ஸில் 186 இதழ்கள் வெளியாகியுள்ளன ! 
  • அதே 2012-ல் முத்து காமிக்ஸின் வெளியீடு நம்பர் இருந்தது : 313-ல் ! இதோ இம்மாதம் தான் 450-ஐ தொட்டிருக்கிறோம் எனும் போது அங்கே வெளியாகியுள்ளவை 137 இதழ்கள்
  • இது தவிர சன்ஷைன் லைப்ரரியில் 22 ; ஜம்போவில் 20 & லயன் கிராபிக் நாவலில் 22 ! 
  • ஆக மொத்தமாய் இந்த ஒன்பதரை ஆண்டுகளில் நமது ஒட்டுமொத்த output - 387 இதழ்கள் என்றாகிறது ! 

Of course இவற்றுள் கணிசமான மறுபதிப்புகள் ; துண்டும், துக்கடாவுமான மினி இதழ்களுக்கும் ஒரு வெளியீட்டு நம்பர் என்றெல்லாம் இருக்கும் தான் ! "சரி, ரைட்டு - ரமணா பாணியில் அடுக்கிட்டு போறியே - எதுக்குடாப்பா ?" என்ற கேள்வி தோன்றிடுகிறதா ? (தோணாட்டியுமே) சொல்கிறேன் :

இந்த மீள்வருகையின் போக்கினில் எத்தனை எத்தனையோ நாயக / நாயகியரைப் பார்த்திருப்போம் தான் ! "வந்தார்...வென்றார் " என்று பலரும் ; "வந்தார்...சென்றார் !" என்று சிலரும் இதனில் அடக்கம் ! யாருக்கு எவ்வளவு ஸ்லாட்ஸ் கிட்டியுள்ளன ? என்பதையெல்லாம் ஒரு மழை நாளில் சாவகாசமாய் தேடிப் பார்க்கலாம் தான் ; ஆனால் நம்ம 'தல' இந்த இடைப்பட்ட நாட்களில் தலைகாட்டியுள்ளது எத்தனை இதழ்களில் ? என்ற கேள்வி எனக்குள்ளிருந்து வந்தது ! 'ரைட்டு, ஆபீஸ் திறந்த பிற்பாடு நம்மாட்களை கனக்குப் போடச்சொல்லலாம்' என்று தோன்றியது ! ஆனால் நம்ம STV கிட்டே கேட்டா சுலபமாய் ஜோலி முடிஞ்சிடுமே என்ற நினைப்பில் காலையில் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டால், அடுத்த முக்கால் மணி நேரத்துக்குள் ரமணாவுக்குச் சித்தப்பா ரேஞ்சுக்குப் புள்ளி விபரங்களை அனுப்பித் தாக்கித் தள்ளியிருந்தார் ! So அந்த நம்பர்களை சரி பார்க்கும் பொறுப்பை நண்பர் கலீல் போன்ற ஆர்வலர்களிடம் விட்டு விட்டு, மேட்டருக்குள் நான் நுழைந்திடுகிறேன் :

கடந்துள்ள இந்த ஒன்பதரை ஆண்டுகளில் - 

*தனி இதழ்கள்

*ஸ்பெஷல் இதழ்கள்

*மினி இதழ்கள்

*மினி இதழ்களின் தொகுப்புகள்

*இன்ன சில நாயகர்களுடன் இணைந்தான ஸ்பெஷல்  இதழ்கள்

*மறுபதிப்புகள் 

என ஒட்டுமொத்தமாய் 82 இதழ்களில் டெக்ஸ் வில்லர் & கோ.ரகளை செய்திருக்கின்றனர் ! (எந்த வருஷத்தில் - எவை ? என்ற பெயர் பட்டியலையும் STV அனுப்பியிருந்தார் தான் ; ஆனால் அவற்றை பின்னூட்டங்களில் அவரே போடுவாரென்று எதிர்பார்ப்போம் ! )

"ரமணா" பட்டியலிலிருந்து இன்னொரு பட்டியல் நோக்கி இப்போ நாம் zoom பண்ணினாக்கா - முன்னே தென்படுவது நமது தற்போதைய கையிருப்பு இதழ்களின் லிஸ்ட் ! 'ராமசாமி' புக்ஸ் இத்தினி இருக்கு ; கோயிந்தசாமி புக்ஸ் இத்தினி இருக்கு !' என்ற பட்டியலை பார்த்துக் கொண்டே போகும் போது "டெக்ஸ் வில்லர் கதைகள்" என்ற தலைப்பும் இடம்பிடித்து நிற்பதைக் காண்கிறோம் ! "ரைட்டு...82 புக்சிலே ஆக்ட் குடுத்த மனுஷனோட புக்ஸ் ஸ்டாக் இல்லாட்டி தானே ஆச்சர்யம் ?" என்றபடிக்கே பட்டியலை வாசித்தால், அடடே - வெறும் 20 புக்ஸ் தான் கையிருப்பில் உள்ளன !! அந்த இருபதிலும் ஒன்றேயொன்று, கண்ணே கண்ணென்று ஹார்ட்கவர் இதழாய் "ஈரோட்டில் இத்தாலி" மாத்திரமே ஸ்டாக்கில் உள்ளது ! பாக்கி அனைத்துமே - வெளியான இரண்டோ / மூன்றோ ஆண்டுகளுக்குள்  SOLD OUT ! Many even faster !!

அப்படியே இன்னொருக்கா zoom பண்ணினாக்கா - நமது ஒட்டு மொத்தக் கையிருப்புப் பட்டியல் again நம் முன்னே - ஆனால் இம்முறையோ வெறும் ஒரு நம்பராய் ! மைதீனைக் கொண்டு அவற்றை எண்ணிப் பார்க்கச் சொல்கிறேன் - ஆத்தாடி 268 titles கையிருப்பில் உள்ளன

இப்போ இன்னா பண்றோம் ? கணித மேதைகளை மனதில் வேண்டிக் கொண்டே இந்தப் புள்ளி விபரங்கள் சொல்லும் கணக்கை இலகுவாய்ப் புரியும் facts களாய் உருமாற்றம் செய்திட முனைகிறோம் :

Post 2012 - நமது மொத்த வெளியீடுகளின் எண்ணிக்கை : 387 

Less : தற்போதைய கையிருப்பு                                                    : 268 

ஆக - இந்தப் 10 ஆண்டுகளின் மத்தியில் நம்மிடம் தீர்ந்து போயுள்ள இதழ்களின் எண்ணிக்கையானது 119 மட்டுமே ! பாக்கி அனைத்திலுமே கணிசமாயோ ; கொஞ்சமாகவோ ஸ்டாக் உள்ளது தான் !

இதே கணக்கை நம்ம தல இதழ்களுக்கும் போடறோம் :

Post 2012 - நமது TEX -மொத்த வெளியீடுகளின் எண்ணிக்கை : 82 

Less : தற்போதைய கையிருப்பு                                                              : 20 

ஆக இந்தப் 10 ஆண்டுகளில் 62 டெக்ஸ் இதழ்கள் சூட்டோடு சூடாய்க் காலியாகியுள்ளன ! 

சதவிகிதமென்று இதனையே மாற்றிப் பார்த்தால் : 100 டெக்ஸ் இதழ்களை நாம் வெளியிடும் பட்சத்தில் - அவற்றுள்  76% விற்றுத் தீர்ந்து விடுவது உறுதி என்று கட்டியம் கூறுகின்றன மஞ்சளாரின் நம்பர்கள் !  இந்தச் சாதனை நிகழ்ந்திருப்பது குறுகலானதொரு அவகாசத்துக்குள் அல்லவே அல்ல ; முழுசாய் பத்தாண்டுகளின் பொழுதினில் ! And டெக்ஸ் நம்மிடையே அறிமுகம் கண்டது 1985-ல் எனும் போது, இது அவரது 36-வது ஆண்டு - தமிழ் பேசும் கரைகளினில் !  So அவரது ஆளுமையினை ஒரு fluke என்றோ ; அகஸ்மாத்தான நிகழ்வென்றோ ; ரசனைகளில் மலிந்ததொரு சரக்கென்றோ புறம்தள்ள நமது பாசக்கார பாயசக் கரத்தார்களுக்குமே சாத்தியப்படாதென்பேன் ! 

Again வேறொரு பார்வையில் இதை அணுகிட்டால் : 

கடந்த பத்து வருடங்களில் - நமது மொத்த "SOLD OUT" இதழ்கள் : 119 

அவற்றுள் டெக்சின் பங்களிப்பு                                                                   : 60  

கிட்டத்தட்ட சரி பாதி ! அதாவது லக்கி லூக் ; டைகர் ; அவர்..இவர்...என அனைவருமாய்ச் சேர்ந்து செய்துள்ள விற்பனை சார்ந்த சாதனையை நமது இரவுக்கழுகார் ஒற்றையாளாய் சமன் செய்திருக்கிறார் ! IPL போட்டிகளில் நம்ம 'தல' கோலோச்சுவதை விடவும் அதகளம் நம்ம காமிக்ஸ் 'தல' நடத்தும் ராஜாங்கம் எனும் போது, அவரை அநேகர் ஆராதிப்பதில் அதிசயமேது ? And தட்டுத்தடுமாறும் ஒரு சிறு வட்டத்தினை தாங்கிப் பிடிக்க, 'தல' மீது - ஒரு publisher என்ற வகையில் நான் ஒரு மிடறு கூடுதல் வாஞ்சை காட்டுவதில் மர்மம் தான் ஏது ?

And நடப்பாண்டின் தீபாவளி மலரில், கேப்டன் டைகரின் ஸ்லாட்டில் டெக்ஸ் & கோ.வே இடம்பிடிப்பதிலும் அதிசயமேது ? Yes..it's official folks !! டைகரின் ஓவியப் பணிகள் இன்னமும் நிறைவுறவில்லையாம் ! So அதன் ஒரிஜினல் அட்டவணையான ஜூன் 2021-க்கு வெளிவரும் வாய்ப்புகள் ரொம்பவே கம்மி ! அநேகமாய் நமது முத்துவின் 50-வது ஆண்டினில் 'தளபதி' ஒரு முக்கிய பங்கெடுப்பார் என்றே எதிர்பார்க்கலாம் ! 

Before I wind up, நிறைவாய் இதை மட்டும் சொல்லிக்கொள்கிறேனே : ஒவ்வொரு ஹிட் நாயகருக்குமென ஒரு shelf life இருப்பதைப் பார்க்கிறோம் ! அன்றைய மாயாவி இன்றைக்கும் ஆக்டிவாக இருப்பது - 'அந்த நாள் ஞாபகம்' மூத்த வாசகர்களின் புண்ணியத்திலும் ; விடாப்பிடியாய் சேகரிக்கும் ஆர்வம் காட்டும் உங்களது புண்ணியங்களிலும் என்பதை உணர்கிறோம் ! எண்பதுகளில் கலக்கிய ஸ்பைடர் இன்றைக்கு உறக்கம் கிடத்துகிறாரென்று சொல்வதும் காதுகளில் விழுகிறது ! இளவரசியும், க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்டும் ஒரு தாண்டிச் சென்ற தலைமுறையின் அடையாளங்களாய்ப் பார்க்கப்படுவது இன்றைய நடைமுறை ! ஆனால் லக்கி லூக் ; டைகர் ; XIII போன்ற சொற்பமானோரே இன்றைக்கும் தேஜஸ் குன்றாது மிளிர்ந்து வருகின்றனர் ! And அவர்களுள் தலைமகன் நமது 'தல' என்பதை யார் மறுத்தாலும், நான் மறப்பதாகயில்லை ! 

"Facts are stubborn....statistics are flexible" என்று பிரபல எழுத்தாளர் மார்க் ட்வைன் சொன்னாராம் ! அதாவது - "நிஜங்கள் பிடிவாதமானவை ; ஆனால் புள்ளிவிபரங்கள் எப்படியும் வளைந்து கொடுக்க வல்லவை" என்று பொருள்படுவதாய் ! But ஒரே சமயத்தில் நிஜங்களே புள்ளி விபரங்களாகவும், புள்ளி விபரங்களே நிஜங்களாகவும் மாறிட்டால் ? அவற்றைக் கொண்டாடுவது தானே முறை ? 

And பாயசக்கார்ஸ் - நீங்களும் இணைந்து கொள்ளுங்களேன் கொண்டாட்டத்தில் ? 

Bye all....see you around ! Have a safe weekend !! And மே மாதத்து அலசல்கள் தொடரட்டுமே ?

180 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. இந்த பதிவை மட்டும் புரியாத ஒரு புது மொழியில் எழுதியிருக்கீங்களே.. நம்பர்கள் மட்டும் தான் தெரியுது....்்்்்

    ReplyDelete
    Replies
    1. 🤣🤣🤣. வாய்யா டெக்ஸ் ஸ்லீப்பர் செல்.

      Delete
    2. மஹி@ செம...செம.... பூரா பேரும் ஸ்லீப்பர் செல்லாவே இருக்காங்க.

      Delete
  3. நல்லவேளை இளவரசி புக் ஒண்ணுகூட கையிருப்பு லிஸ்ட்ல இருக்கிறதா சொல்லலை....

    ReplyDelete
  4. அம்மாடியோவ்!! அட்டகாசமான அலசல் + புள்ளிவிவரப் பதிவு!!

    ReplyDelete
  5. // தல' மீது - ஒரு publisher என்ற வகையில் நான் ஒரு மிடறு கூடுதல் வாஞ்சை காட்டுவதில் மர்மம் தான் ஏது ? //
    தல வெற்றி நாயகர் என்பதால் மட்டும் பலர் நாம் கொண்டாடுவதில்லை,மனதிற்கு நெருக்கமானவரும் கூட...

    ReplyDelete
  6. ///ஆக மொத்தமாய் இந்த ஒன்பதரை ஆண்டுகளில் நமது ஒட்டுமொத்த output - 387 இதழ்கள் என்றாகிறது ! ///

    👏👏👏👏👏

    ////
    அதாவது லக்கி லூக் ; டைகர் ; அவர்..இவர்...என அனைவருமாய்ச் சேர்ந்து செய்துள்ள விற்பனை சார்ந்த சாதனையை நமது இரவுக்கழுகார் ஒற்றையாளாய் சமன் செய்திருக்கிறார்////

    👏👏👏👏👏

    ReplyDelete
    Replies
    1. சமன் இல்லை. ஒரு இதழ்(பல பிரதிகள்) அதிகம் விற்பனை ஆகியுள்ளதால் தன்னிகரற்ற வெற்றியை பெற்றிருக்கிறார்.

      Delete
  7. யாஹீ...ஹீ....ஹீ....ஹீ.....

    கண்ணா லட்டு திங்க ஆசையா?

    டெக்ஸ் தீபாவளி மலர்--- மொத லட்டு!

    கண்ணா 2வது லட்டு திங்க ஆசையா???

    டெக்ஸ் புக்குகள் 60 சோல்டு அவுட்!

    ஆஹா.... அசத்தலான பதிவுங் சார்.

    ReplyDelete
  8. /// பாயசத்தை பரிமாற முற்படுவோரே அதற்கு முன்பாய் 'தல'யோடு ஒரு சத்தமில்லா சால்சா நடனம் ஆடி முடித்துவிட்டுத் தான் வருகின்றனர் என்பது பொதுவானதொரு சந்தேகம் !////

    ---- சந்தேகமே வேணாம். இது கன்ஃபார்ம் ஆன தகவல் சார். டெக்ஸ் ரசகர்களை விட இவர்கள் தான் முதலில் ரிசல்ட் தருவார்கள்.

    ReplyDelete
  9. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு! மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்று கொள்கிறோம் மக்கா 🙏

    இது வெற்றியில் ஏற்பட்ட சிறு தோல்வி மட்டுமே! நாங்கள் ரன்னராக இருப்பதால் தான் நீங்கள் வின்னராக ஜொலிக்கிறீர்கள் ❤️

    ReplyDelete
  10. அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

    திரை உலகில் MGR ஃபார்முலா என்று ஒன்று உண்டு. ஒரே Template. படத்திற்குப் படம் கதை, கதைமாந்தர்கள் மட்டுமே வேறுபடும். படத்தின் அடிநாதம் ஒன்றுதான். மர்மயோகி தொடங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அதே ஃபார்முலாதான். சில படங்கள் சுமார். பல படங்கள் வெற்றிமுரசு கொட்டியவை. அவர் திரை உலகை விட்டு விலகிய போது அவர் கைவசம் 18 படங்கள் ஒப்பந்தமாகி இருந்தன.அவர் வெற்றி நாயகராக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.
    அதே போல் தான், தமிழ் காமிக்ஸ் உலகில் டெக்ஸ் வில்லர் வலம் வருகிறார். அவது கதைகளிலும் சில சுமார் ரகம். பெரும்பாலான கதைகள் விற்பனையில் வெற்றியே. So, அவரை கொண்டாடுவதில் வியப்பதற்கு ஏதுமில்லை.
    காமிக்ஸ் தராசு தட்டின் ஒரு பக்கம் டெக்ஸ் என்றால், மறு பக்கம் மற்ற நாயகர்கள். இதில் தராசு முள் டெக்ஸ் பக்கம் சாய்ந்து நிற்பதில் ஆச்சரியமேதுமில்லை. மற்ற கதைகள் சீராக வெளிவர டெக்ஸ் முன்னணியில் நின்று வழியேற்படுத்தித் தந்து கொண்டிருக்கிறார். அவரை மனமார வரவேற்போம். நன்றி.

    ReplyDelete
  11. Tex willer will always be a super star.
    Vaniyambadi parvez arshad.

    ReplyDelete
  12. எப்போதும் எங்கள் காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்... டெக்ஸ் ...மட்டுமே.

    ReplyDelete
  13. Hater will always hate
    But mejority of comics lovers stand with tex.
    He is undisputed king of comics.

    ReplyDelete
  14. நண்பர் டெ வி ஒரு புள்ளிவிவரப் புலி... அண்ணாரிடம் எனது கேள்விகள்...

    டெக்ஸ் வில்லரின் 82 புத்தகளில் தனி ஆவார்த்தனை எத்தனை...!?

    டெக்ஸூம், டைகரும்... ஒரே மாதத்தில் வெளியான சம்பவம் எத்தனை முறை நடந்துள்ளது...!?

    டைகரின் இதழ்களின் மொத்த எண்ணிக்கை இந்த 9 1/2 ஆண்டுகளில்...!?

    முன்கூட்டியே எனது நன்றிகள் நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! ஆஹா!

      கீழ்வானத்தில் ஒரு விடிவெள்ளி!

      Delete
  15. ///*தனி இதழ்கள்

    *ஸ்பெஷல் இதழ்கள்

    *மினி இதழ்கள்

    *மினி இதழ்களின் தொகுப்புகள்

    *இன்ன சில நாயகர்களுடன் இணைந்தான ஸ்பெஷல் இதழ்கள்

    *மறுபதிப்புகள்

    என ஒட்டுமொத்தமாய் 82 இதழ்களில் டெக்ஸ் வில்லர் & கோ.ரகளை செய்திருக்கின்றனர் !//

    ---18 இதழ்கள் தாண்டி "டெக்ஸ் 100 நாட் அவுட் ஆஃப்டர் கம்பேக்"--மெகா ஸ்பெசல் ஒன்று பிளானிங் பண்ணி டெக்ஸ்க்கு சிறப்பு சேர்த்திட வேண்டுகிறோம் சார்.

    அநேகமாக 2023 ல் வரும்

    "டெக்ஸ் 75வது ஆண்டு சிறப்பு கொண்டாட்டம்+ டெக்ஸ் 100"--

    ஐ இணைத்து ஒரே திருவிழாவாக கொண்டாட வாய்ப்பு அமையும் என எடுத்துக் கொள்வோம் சார்....!!!

    ReplyDelete
    Replies
    1. அட அட அட எப்படி தல போட்டு தாக்குறீங்க நடத்திய நடத்துங்க ஆசிரியை மனசு வைச்ச எல்லாம் முடியும் 👌👌👌👌👌

      Delete
  16. பாயாசம்னா என்னனு புரிஞ்சிரிச்சு ...குருமா க்கு என்ன அர்த்தம் ....

    ReplyDelete
  17. நெஞ்சே எழு:
    நீதியை நிலைநாட்ட நீண்ட நெடியதொரு குதிரைப் பயணம்...
    அரிசோனாவின் டக்சனில் தொடங்கும் பயணமானது மெக்சிகோ உட்பட பலநகர்களை சுற்றிப் பயணித்து சரியான நீதி பரிபாலனத்துடன்
    இறுதியில் மீண்டும் டக்சனிலேயே முடிவுறுகிறது...
    அட்டகாசமான மாஸ் பேக்கேஜ்...
    சரியான கமர்ஷியல் காக்டெயில்...
    இறுதி மோதல் தெறிக்கும் இரகம்...
    லோகன் சகோதரர்களின் புத்திசாலித்தனமான உத்திகள் டெக்ஸ் & கோ விற்கு சரியான சவால் விடுக்கிறது...

    கதையின் தொடக்கம் முதல் இறுதி வரையிலான சிறுசிறு பரபரப்பான சம்பவங்கள்,உத்திகள்,வியூகங்கள் கதைக்களத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுகிறது....

    அதிலும் அந்த டெட்மேன் பாள்ளத்தாக்கு ட்விஸ்ட் சான்ஸே இல்லை....

    வழக்கம்போல பரபர,விறுவிறு வாசிப்புக்கு உத்தரவாதம்...
    அட்டைப்படம்,ஓவியங்கள், கதைக்களத்தை கொண்டு செல்லும் நேர்த்தி எல்லாவற்றிலும் இந்த இதழ் டாப்தான்...
    வில்லர் வில்லர் தான்...
    எமது மதிப்பெண்கள்-10/10...

    ReplyDelete
  18. காமிக்ஸ் உலகின் ராஜா டெக்ஸ்.

    ReplyDelete
  19. நடுவில் ஒரு நான்கு வருடம் காமிக்ஸ் விடுமுறையில் இருந்தேன். அதற்கு முன்பே இந்த தல தளபதி சண்டை இந்த தளத்தில் இருந்தது... அப்போதே நான் தளபதி கட்சி. டெக்ஸ் கதைகளில் எனக்கு ஒருவித அயர்ச்சி தென்பட தொடங்கிய வேளையில் அக்கட மாநிலத்தில் வேலை கிடைக்க காமிக்ஸ் தொடர்பு விட்டுபோனது. திரும்பி இவ்வருடம் சந்தா எக்ஸ்பிரஸில் சேர்ந்து போன மாசம் கழுகு வேட்டையை கையில் வாங்கிய பொழுது ஒரு தயக்கம் இருந்தது உண்மை. But that book was awesome. A perfect masala story. இம்மாதம் வந்த நெஞ்சே எழு அதை மிஞ்சி விட்டது. Maybe it is because of the gap, but I couldn't put down the book. இம்மாதிரி tex கதைகள் ரெகுலராக வரும் பட்சத்தில் டெக்ஸ் overload ஏற்புடையதே.. as long as new frontiers like Soda are given as a dessert.

    ReplyDelete
  20. நெஞ்ஞே எழு இதழை படித்து முடித்து விட்டு மிக சந்தோசமாய் இதழை மூடி விட்டு அலைபேசியை எடுத்தால் புது பதிவு தகவல்..உள்ளே நுழைந்தால் இந்த இதழின் அதிரடி போலவே பதிவும் அதிரடி...

    இந்த பதிவின் அனைத்து சாராம்ஸங்களுக்கும் இந்த நெஞ்சே எழு சாகஸமே ஒரே மூச்சில் ஆதாரமாக நிற்கிறது...


    என்பது மறுக்க முடியாத உண்மை

    ReplyDelete
  21. ////82 இதழ்களில் டெக்ஸ் வில்லர் & கோ.ரகளை செய்திருக்கின்றனர்//

    1985 தலைவாங்கி, முதல் 2012கம்பேக்கிற்கு முன்னர் 51 டெக்ஸ் கதை இடம்பெற்ற புத்தகங்கள் வந்திருந்தன...

    கம்பேக்கிற்கு பின்பு.....

    52.தலை வாங்கிக் குரங்கு-CC-2012

    53.சிவப்பாய் ஒரு சொப்பனம்-2013

    54.பூத வேட்டை-2013

    55.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் முதல் கலர் இதழ்)-2013-சன்ஷைன் லைப்ரரி

    56.தீபாவளிமலர்2013-சன்ஷைன் லைப்ரரி (நீதியின் நிழலில், மரண தேசம் மெக்ஸிகோ )

    57.நில் கவனி சுடு-2014

    58.காவல் கழுகு-2014

    59.சட்டம் அறிந்திரா சமவெளி-2014

    60.கார்சனின் கடந்த காலம்-2014-சன்ஷைன் லைப்ரரி

    ReplyDelete
    Replies
    1. 61.வல்லவர்கள் வீழ்வதில்லை-டிசம்பர்2014

      62.தி லயன் 250-ஜூலை2015 (ஒக்லஹோமா,முகமில்லா மரண தூதன்,பிரம்மன் மறந்த பிரதேசம்)

      63.தீபாவளி வித் டெக்ஸ்-நவம்பர்2015
      (டைனோசரின் பாதையில், எமனின் வாசலில்)

      64.சட்டத்திற்கொரு சவக்குழி-சனவரி2016

      65.திகில் நகரில் டெக்ஸ்-பிப்ரவரி2016

      66.விதி போட்ட விடுகதை-மார்ச்2016

      67.தலையில்லாப் போராளி-ஏப்ரல்2016

      68.டாக்டர் டெக்ஸ்-மே2016

      69.பழிவாங்கும் புயல்-ஜூன்2016

      70.குற்றம் பார்க்கின்!-ஜூலை2016

      71.ஒரு கணவாயின் கதை-ஈரோட்டில் இத்தாலி இதழ்-ஆகஸ்டு2016

      72.துரோகத்திற்கு முகமில்லை-செப்டம்பர்2016

      73.தற்செயலாய் ஒரு ஹீரோ-அக்டோபர்2016

      74.சர்வமும் நானே!-நவம்பர்2016

      75.நீதிக்கு நிறமேது?-டிசம்பர்2016

      76.ஆவியின் ஆடுகளம்-சனவரி2017

      77.அராஜகம் அன்லிமிடெட்-பிப்ரவரி2017

      78.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-மார்ச்2017

      79.ஒரு வெறியனின் தடத்தில்-ஏப்ரல்2017

      80.கவரி மான்களின் கதை-ஜூன்2017

      Delete
    2. 81.கியூபா படலம்-லயன்300-ஜூலை2017

      82.மரணத்தின் நிறம் பச்சை-ஆகஸ்ட் 2017

      83.கடற்குதிரையின் முத்திரை-செப்டம்பர்2017

      84.தீபாவளிமலர்-அக்டோபர்2017
      (ஒரு தலைவன் ஒரு சகாப்தம்
      அழகாய் ஒரு அராஜகம்)

      85.ட்ராகன் நகரம்-நவம்பர்2017

      86.ஒரு கணவாய் யுத்தம்-ஜனவரி2018

      87.விரட்டும் விதி-பிப்ரவரி2018

      88.வெண்பனியில் செங்குருதி-பிப்ரவரி2028

      89.பாலைவனத்தில் புலனாய்வு-மார்ச்2018

      90.கடைசிப்பலி-ஏப்ரல்2018

      91.பவளச்சிலை மர்மம்-ஏப்ரல்2018

      92.நடமாடும் நரகம்-ஜூன்2018

      93.இரவுக்கழுகின் நிழலில்-ஜூன்2018

      94.காற்றுக்கு ஏது வேலி-ஜூலை2018

      95.டெக்ஸ் மினி 3in1-விரட்டும் விதி-ஆகஸ்ட்2018

      96.சைத்தான் சாம்ராஜ்யம்-செப்டம்பர்2018

      97.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-செப்டம்பர்2018

      98.டைனமைட் ஸ்பெசல்-அக்டோபர்2018
      (புயலுக்கொரு பிரளயம், தெற்கே ஒரு தங்கத் தேட்டை)

      99.காதலும் கடந்து போகும்-நவம்பர்2018

      100.புனிதப் பள்ளத்தாக்கு-நவம்பர்2018

      Delete
    3. 101.காலனின் கானகம்-டிசம்பர்2018

      102.யார் அந்த மரண தூதன்-டிசம்பர்2018

      103.சாத்தானின் சீடர்கள்-ஜனவரி2019

      104.வைகிங் தீவு மர்மம்-பிப்ரவரி2019

      105.பாலைவனத்தில் ஒரு கப்பல்-மார்ச்2019

      106.டெக்ஸ் மினி3in1-2-புனிதப் பள்ளத்தாக்கு-ஏப்ரல்2019

      107.பச்சோந்திப் பகைவன்-ஏப்ரல்2019

      108.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-மே2019

      109.சிங்கத்தின் சிறுவயதில்-ஜூன் 2019.

      110.நட்புக்கு நாட்களேது-ஜூலை2019

      111.தகிக்கும் நியூ மெக்சிகோ-ஆகஸ்ட்2019

      112.பழி வாங்கும் பாவை-ஆகஸ்ட்2019

      113.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-செப்டம்பர்2019

      114.புதைந்து போன புதையல்-அக்டோபர் 2019

      115.சர்க்கஸ் சாகசம்-தீபாவளிமலர்-நவம்பர்2019

      116.சூது கொல்லும்-டிசம்பர்2019

      117.ரெளத்திரம் மற-டிசம்பர்2019

      118.இருளின் மைந்தர்கள்1-சனவரி2020

      119.இருளின் மைந்தர்கள்2-சனவரி2020

      120.ரெளத்திரம் மற- 4in1 தொகுப்பு-சனவரி2020

      121.ஒரு துளி துரோகம்-பிப்ரவரி2020

      122.இருளோடு யுத்தம்-மார்ச்2020 (சந்தா ஃப்ரீ கிஃப்ட்)

      123.வானவில்லுக்கு நிறமேது!-மே2020
      124.கைதியாய் டெக்ஸ்-ஜூன்2020

      125.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020

      126.பந்தம் தேடிய பயணம்-செப்டம்பர்2020

      127.தலைவாங்கி குரங்கு-அக்டோபர் 2020

      128.தீபாவளிமலர்-நவம்பர்2020
      +விண்டர் ஸ்பெசல்- ஃப்ரீ கிஃப்ட்

      129.கதையின் கதை-டிசம்பர்2020

      130.மரணமுள்-சனவரி2021

      131.மின்னும் சொர்க்கம்-பிப்ரவரி2021

      132.கழுகு வேட்டை-ஏப்ரல்2021

      133.நெஞ்சே எழு-மே2021.

      Delete
  22. Dear Sir,
    Agree with you, Tex willer (300 plus Mega Stories) rocking today only after the end of Spider Era (who has got less than 30 stories...). If Tex Stories selling (even less 2000 copies, right sir?) even today also, that's really a great news.👏👏👏👏👏. Personally speaking, all these 9 years, I have read only less 20 tex comics out of that 82 comics. I have most of Tex books (not text books) with me... Thank you, Sir! ❤️.

    ReplyDelete
  23. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்....
    எதிர் பார்த்த பதிவு எதிர்பார்க்காத புள்ளிவிவரம்... அட்டகாசம் அமர்க்களப்படுத்தி விட்டீர்கள். சென்ற பதிவில் மாங்கு மாங்கென்று டெக்ஸ் பற்றி சொல்லியிருந்தோம் எந்த பதிலுமே இல்லை என்று சற்று மனம் வாடியது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு வட்டியும் முதலுமாக மிக அழகாக புட்டுப்புட்டு வைத்து விட்டீர்கள் தலையின் தாண்டவத்தை... இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது. மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே...
    தல தாண்டவம் தொடரட்டும்...

    ReplyDelete
  24. தலயின் ஈரோட்டில் இத்தாலி தே ங்கியிருப்பதாக எனக்கு தோன்றுவது. கூட்டத்தோடு கோவிந்தா போடும்போது அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தற்போதைய 2019 தீபாவளி மலரில் சேர்த்து.. இனிமேல் தீபாவளி தல எப்பவுமே தல ஆகவே தொடரட்டும். என் எண்ணம். ( தேங்கியுள்ள தல புக்கின் பின்னணியை ஒருநாள் சாவகாசமாக ஆராய வேண்டும்.)

    ReplyDelete
  25. நெஞ்சே எழு ...

    இந்த இதழின் அட்டைப்படமும் ,228 பக்க குண்டு புத்தக தோற்றமும் ,அசத்தலான சித்தரமும் ,அதை விட முதல் பக்கத்தில் ...

    "அரிசோனாவின் டக்சன் நகரில் ஒரு காலைப்பொழது அது !"


    என்று ஆரம்பித்த வரியில் எடுத்த வேகம்

    "குட்பை நண்பர்களே " என்று டெக்ஸ் குழு விடைபெறும் கடைசி பக்கம் வரை இரண்டு மணி நேரங்களும் ,229 பக்கங்களும் முடியும் வரை அந்த வேகம் குறையவே இல்லை...

    டெக்ஸ் கார்சனை குழுவில் அதிரடி சஸ்பென்ஸாக கிட் ,டைகர் அதிரடியாக களம் இறங்குவதும்..அவர்களின் அதிரடி மனித தலை வேட்டையே அடேங்கப்பா என அசரடிக்கிறது..


    இதில் இவர்கள் ஆபத்து சூழ்ந்த நேரத்திலும் நண்பர்களுக்கான கிண்டல் பேச்சுகள் நம்மை கார்ட்டூன் இதழை விட வாய்விட்டு சிரிக்க வைக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை..

    ஆசிரியர் ஒரு முறை ஓர் இதழில் ஹாட்லைனில் சொல்லியபடி டெக்ஸ் கதைகளில் முதல் பக்கத்திலியே இவன் தான் வில்லன் என்று தெரிந்து விடுகிறது..ஆனாலும் கதை நகர்ந்து செல்லும் வேகமும் சஸ்பென்சும் எத்தனை பக்கம் என்றாலும் குறைவதே இல்லை என்பதை இந்த நெஞ்சே எழு கதையும் நிரூபித்து விட்டது..


    டெக்ஸ் நீர் தாய்யா டெக்ஸ்...

    இந்த மாத இதழ்களில் என்னை பொறுத்தவரை டெக்ஸ் ,ட்யூராங்கோ இருவரும் சம அளவில் முதலிடத்தை பெறுகிறது..

    இப்பொழுது தான் கவனிக்கிறேன் இரு இதழ்களும் கெளபாய் நாயகர்கள் மட்டுமல்ல கதைகளமும் வில்லனை துரத்தி செல்லும் அதே பாணி..ஆனாலும் இரண்டிலுமே எவ்வளவு பரபரப்பான ,விறுவறுப்பான ,சஸ்பென்ஸான கதை நகர்த்தல் .

    செம அட்டகாசம்...கதையில் மட்டுமல்லாமல் இதழ் ,சித்திரம் ,தரம் என இரு இதழ்களுமே ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு முதலிடத்திலியே பறக்கிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே முதலிடம் ரொம்ப சந்தோசம் ஆனா கருப்பு வெளியில் வந்த நம்ம தலைக்கு ஒரு படி கூட வைக்கலாமே. 🙏

      Delete
  26. பிறகு அனைத்து இதழ்களும் படித்து முடித்தாயற்று சார்...

    ஒன்றாம் தேதி ஆகிவிட்டது ...மே வில் ஜீன் எப்பொழது சார்...?!

    ReplyDelete
  27. எனது ஆசைப்படி தல தீபாவளிக்கும் டைகர் தள்ளிப்போய் முத்துவின் 50ஆவது ஆண்டு மலரை சிறப்பிக்க உள்ளது மிகவும் சந்தோஷம் அளிக்கக்கூடிய செய்தி 🙏🙏🙏🌹🌹🌹🌹

    ReplyDelete
  28. அப்படியே தீபாவளி மலரின் கதை பக்கங்கள் இவற்றை தெரிவித்தால் மிகவும் சந்தோஷப் படுவோம்.

    ReplyDelete
  29. //And பாயசக்கார்ஸ் - நீங்களும் இணைந்து கொள்ளுங்களேன் கொண்டாட்டத்தில் ? //

    இணைஞ்சுட்டா போச்சு! அதனாலென்ன?

    ReplyDelete
    Replies
    1. மைண்ட் வாய்ஸ் :
      (கார்ட்டூன் இல்லாத குறையை "அதிகாரி" தானே தீர்க்கிறார்!!)

      ஹிஹி!

      Delete
  30. டெக்ஸ் வில்லர் ன்

    ஆரம்பம் முதல் கடந்த மாதம் வரையிலான புத்தகத்தொகுப்புகளை பார்வையிட விரும்புவோர்

    கீழ்கண்ட 👇👇
    முகநூல் வலைதளத்தில் பார்க்கலாம்

    https://www.facebook.com/TEXWILLER.FANS.IN.INDIA.TAMILNADU/

    தொகுப்புகளை வடிகட்டி இங்கே பதிந்திருக்கிறோம் ..

    Thanks To all ..
    Tex Sampath .. Tiruppur ..

    ( ஆரம்பம் முதல் பதிவில் உதவி அண்ணண் திரு. டெக்ஸ் விஜயராகவன் )

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான தொகுப்பு....

      நல்லா பண்ணி இருக்கீங்க சம்பத்.... வாழ்த்துகள் & பாராட்டுகள்...🌹🌹🌹🌹

      தலையை கொண்டாடுவது என்பது நமக்கு பார்ட் ஆஃப் லைப் ஆகவே ஆகிட்டது.... மகிழ்ச்சி அன்பு சகோதரர்!

      Delete
    2. சூப்பர் சம்பத் ஜி. நான் நண்பர் விஜயராகவனிடம் சில இதழ்களின் அட்டைபடத்தினை கேட்க நினைத்தேன். தங்களின் பதிவு அக்குறையினையும் நிவர்த்தி பண்ணிவிட்டது.
      அபாரமான உழைப்பு.!!!!

      Delete
  31. இந்த கொரொனோ காலத்திலும் தீபாவளி வித் டெக்ஸ் விற்றுத் தீர்ந்தது போல எந்த கதை நாயகரும் இப்படியொரு சாதனை பண்ணியிருப்பார்களா என்பதே சந்தேகம்தான் சார். அதுவும் வெளிநாட்டுக்காரர் பண்ண அட்டைப்படம் சிகப்பு ஓவர் கோட்ட பார்த்துமே 450 ரூபாய் என்பதை மறக்கடித்து விட்டது! ஒரு வாசகனாக மட்டும் இல்லாமல் ஒரு முகவராக இருப்பதாலும் விற்பனை நிலவரத்தை பார்த்ததாலே இதை எழுதுகிறேன்! அதனால்தான் தீபாவளிக்கு வேற எந்த நாயகரையும் அவர் இடத்தில் வைத்துப் பார்க்கத் தோணவில்லை! 260 புத்தகங்களுக்கு மேல் ஸ்டாக் தேங்கி இருப்பது மிகவும் கவலையளிக்கும் சமாச்சாரம் தான். ஒரு சிலர் மனம் நோகும் என்பதற்காக சில புத்தகங்களை போட்டு குடோனை நிரப்புவதற்கு பதிலாக போடாமலே இருந்து விடலாம்தான் சார். நண்பர்களும் இதனை புரிந்து (உணர்ந்து) கொள்வார்களென்றே நம்புகிறேன்! இந்த மாதம் வெளிவந்த கதைகளில் டெக்ஸை எடுத்து படிக்க தொடங்கினேன்! சான்ஸே இல்லை கதை தோட்டாவை விட வேகமாக செல்கிறது! கதைக்கு முக்கிய பலமே ஓவியம்தான். முதல் 60 பக்கம் தோட்டா எக்ஸ்பிரஸ் தான்! இது போல ரொம்ப ரசித்து படித்தது சர்வமும் நானே அதுல டெக்ஸ் எண்ட்ரீ ஆகுற சீன் செமையா இருக்கும்! இதுல கதையோட கான்செப்ட் மரண மாஸ் தான்! இந்த கதையும் சீக்கிரமாக விற்றுத் தீர்ந்திடும்னு நினைக்கிறேன்! எதிர்பார்ப்பில்லாத ஒரு அக்மார்க் வெற்றிக்கதை!

    ReplyDelete
    Replies
    1. மிக அழகாக சொன்னீர்கள் நண்பரே என்னைக்குமே டெக்ஸ் டெக்ஸ் தான்... உங்கள் விமர்சனத்தை பார்த்தபின் நெஞ்சை ஏழு புத்தகத்தை படிக்க ஆவலுடன் வெயிட் 👌👌👌👌👌

      Delete
  32. டெக்ஸ் வில்லர் எப்பொழுதும் ஒரு மந்திரச்சொல் தான், டெக்ஸ் Over dose என்று சொல்லும் வாசகர்களுக்கு மட்டும் ஒரு சிறிய விளக்கம்.

    நாம் விரும்பும் இதர கதாநாயகர்கள் மட்டுமல்ல தமிழில் காமிக்ஸ் வருவதற்கே வதற்கே டெக்ஸ் விற்பனையே அடித்தளமாக இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. ஆராதிக்கப்பட வேண்டிய கதாநாயகன்தான் அவர், பெருவாரியான ஆதரவே விற்பனையில் எதிரொலிக்கிறது. இந்த முதலீட்டில்தான் ஆசிரியரும் இதர வாசகர்களின் ரசனைக்குரிய கதாநாயகன்களை வெளியிடுகிறார் என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக ஒரு எடிட்டராக அவரது நிலைப்பாடு மிகவும் சரியான ஒன்றே.. அதில் நமக்கும் ஆதாயம் தானே டெக்ஸ் அதிகம் வருவது

      Delete
    2. வெல்செட் GK...👌👌👌👌
      வரிக்கு வரி வழி மொழிகிறேன்.

      Delete
    3. // நாம் விரும்பும் இதர கதாநாயகர்கள் மட்டுமல்ல தமிழில் காமிக்ஸ் வருவதற்கே வதற்கே டெக்ஸ் விற்பனையே அடித்தளமாக இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. // +1

      Delete
  33. Replies
    1. அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.

      Delete
  34. நெஞ்சே எழு மிகவும் விறுவிறுப்பான கதை.டெக்ஸ் குதிரை காலால் அடி வாங்கி கொண்டு சண்டை யிடுகிறார்.பரபர வுக்கு பஞ்சம் இல்லை.

    ReplyDelete
  35. நெஞ்சே எழு : ஜெட் வேக கதை அதனையும் மிஞ்சும் ஆர்ட் ஒர்க் அதகளம். நான்கு பேர் கூட்டணியும் நடத்தும் அதிரடி என டெக்ஸின் நீண்ட வெற்றி வரிசையில் இணைகிறது.

    எனது புத்தகத்தில் மட்டுமா தெரியவில்லை ஏக இடங்களில் பிரிண்டிங் மங்கலாக இருந்தது சற்றே நெருடலாக இருந்தது.

    ReplyDelete
  36. மஞ்சள் சட்டை மகானுபாவர் ஹாட் செல்லர் என தெரியும். இப்படி ஹாட்டோ ஹாட் செல்லராக இருப்பாரென நினைக்கவில்லை.

    எனக்குமே டெக்ஸ் ஓவர் டோஸாக சில நேரங்களில் தோன்றும். இந்த தீபாவளி சொறுகல் உள்பட.
    ஆனால் சென்னை புத்தக விழாவில் அதிகாரி விற்கும் விதத்தை நேரில் சில வருடங்கள் பார்த்த அனுபவமுள்ளதால் மீ பெவிகால் பெரியசாமி ஆகிவிடுவது வழக்கம்.

    மஞ்சள் சட்டையார் வாழ்க!

    ReplyDelete
  37. இந்த நேரத்தில் வரவேண்டிய மறுபதிப்பு பட்டியலை போட்டு வைச்சிடுவோம். டெக்ஸ் 75 ஆம் வருடத்தின் போது ஒரு பெரிய கலர் டைஜஸ்ட் அல்லது பாக்ஸ் செட் கிடைக்க மானிடோ அருள் புரியாமயா போயிடுவாரு.

    *பழிக்குப் பழி*
    *இரத்த முத்திரை*
    *இரத்த வெறியர்கள்*
    *இரும்புக் குதிரையின் பாதையில்*
    *இரத்த நகரம்*
    *நள்ளிரவு வேட்டை*
    *பாலைவனப் பரலோகம்*-
    " *மந்திர மண்டலம்* "
    *மெக்ஸிகோ படலம்*-
    *ஓநாய் வேட்டை& இரத்த தாகம்*
    *இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*
    மரண தூதர்கள்.
    சாத்தான் வேட்டை
    அதிரடி கணவாய்.
    எல்லையில் ஒரு யுத்தம்
    எமனுடன் ஒரு யுத்தம்.
    *கார்சனின் கடந்த காலம்*... 3ஆம் பதிப்பு. வசனம் பாடல்கள் மாற்றாமல்.

    ReplyDelete
    Replies
    1. பலி கேட்ட புலிகள் இதையும் சேத்திக்குவோம்

      Delete
    2. தனியே ஒரு வேங்கை & கொடூர வனத்தில் டெக்ஸ் & துரோகியின் முகம்

      இதை விட்டுட்டீங்களே?

      Delete
    3. லிஸ்டை அப்டேட் பண்ணிடறேன்

      Delete
    4. பாலைவன பரலோகமும் ,பலி கேட்ட புலிகள் இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்

      Delete
    5. ///பாலைவன பரலோகமும் ,பலி கேட்ட புலிகள் இரண்டும் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்/// ஆமா... பலிகேட்ட புலிகளாக அறிவிக்கப்பட்டு பாலைவன பரலோகமாக வெளியானது.

      Delete
    6. அருமையான லிஸ்ட் மஹி... இந்த வருட ஆன்லைன் புத்தக விழா ஏதேனும் நடத்தினால் கூட அதில் பழிக்கு பழி உடன் ஆரம்பிக்கலாம்

      Delete
  38. ஒரு ப்ளாஷ்பேக்:

    தற்போதைய பிரளயக் காலத்தை போல் அல்லாது 2017-ன் மத்தியில் சுகமான ஓர் மதிய வேளையது. சொந்த அலுவல் நிமித்தம் பல்லடத்திலிருந்து கரூர் செல்ல அரசு பேருந்தில் ஏறினேன். மதிய வேளை என்பதால் பேருந்தில் அவ்வளவு கூட்டம் இல்லை. பேருந்தில் இருந்த ஜன்னலோர இருக்கைகள் அனைத்தும் ஏற்கனவே நிரம்பி இருக்க மூன்று பேர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டேன். வழக்கமாக இதுபோன்ற பயணங்களில் படிக்க காமிக்ஸ் புத்தகங்களை கையோடு கொண்டு போவதுண்டு. அந்த வகையில் அன்று பையில் தங்கக் கல்லறையோ... WW ஸ்பெஷலோ இருந்தது. நடத்துநரிடம் பயணச்சீட்டு வாங்கிய கையோடு நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். அப்படியே சுற்றுமுற்றும் பார்வையை விட்டேன்; யாராவது என்னை அரிய பிராணியைப் போல பார்க்கிறார்களா என்று தேடினேன். பாதிப் பேருக்கு மேல் நித்திரை தேவியின் சகாயத்தில் இருக்க மீதிப்பேரோ வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் எனக்கு சீட்டு கொடுத்து விட்டு முன்னே நகர்ந்திருந்த அந்த நடத்துனர் என்னையும் இந்த புத்தகத்தையும் மாறி மாறி பார்த்தார். அவர் கண்ணில் ஏதோ ஒரு ஒளி பிரகாசிப்பதை என்னால் உணர முடிந்தது. அவர் கைகளில் ஒரு வேகம் தொற்றிக் கொண்டது. சீக்கிரமே புதிதாக ஏறிய பயணிகளுக்கு சீட்டுகளை விநியோகித்து விட்டு... விடுவிடுவென என் அருகிலே வந்த அவர் என்னை நோக்கி கேட்ட கேள்வி...

    "டெக்ஸா...?"

    அவர் முகத்தில் இருந்த ஆர்வமும் கண்களில் தெரிந்த பூரிப்பும் அடடா... வார்த்தைகளில் வடிக்க இயலாது. கைகளில் கூட ஒருவித நடுக்கம் பரவியிருந்ததை என்னால் கவனிக்க முடிந்தது.

    "இல்லைங்க... இது வேற காமிக்ஸ்!"

    அவர் சற்றே ஏமாற்றத்துடன் மீண்டும் கேட்டார்...

    "அப்போ டெக்ஸ் இல்லையா?"

    "இது டைகர்! ரொம்ப நல்லா இருக்கும்!"

    அவர் முகம் காற்று இறங்கிய பலூன் போல சுருங்கி விட்டது. அவர் உற்சாகம் முழுவதும் வடிந்து விட்டதை கண்டு கொண்டேன்!

    "ஓ! அப்படியா?"

    என்றவாறு ஏமாற்றத்துடன் நகர்ந்து விட்டார், என் கையில் இருந்த புத்தகத்தை ஏறிட்டுப் பார்க்கவே இல்லை... அதற்கு பின்னரும் எத்தனையோ முறை ஆர்வமின்றியே என்னை கடந்து சென்றதை என்னால் உணர முடிந்தது.

    என்னிடம் மட்டும் ஒரு டெக்ஸ் புத்தகம் கையில் இருந்திருந்தால் அவரின் ஆர்வத்துக்கு நிச்சயம் கொடுத்து விட்டு வந்திருப்பேன்! டைகர் அபிமானியான எனக்கு அப்போதுதான் டெக்ஸ் எந்த அளவுக்கு ஒரு வெகுஜன நாயகராக கோலொச்சி வருகிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.

    அந்த நடத்துனரைப் பொறுத்தவரையில் டெக்ஸ்தான் காமிக்ஸ்!
    காமிக்ஸ் என்றாலே டெக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. அந்த நடத்துனர் மட்டுமல்ல. நம்மில் பலருக்கும். முன்பு லயனில் ஸ்பைடர் செய்த ஆட்சியை... இப்போது மஞ்சள் சட்டை யார் பண்ணிக்கொண்டிருக்கிறாய்.

      Delete
    2. அருமையான நினைவுகள்.

      Delete
  39. நன்றி ஆசிரியரே.இந்த வருடமும் தலயுடன் தீபாவளியை கொண்டாட அறிவித்தமைக்கு...

    ReplyDelete
  40. //ஒருபெரியகலர்டைஜெஸ்ட் அல்லது பாக்ஸ்செட்//சீக்கிரமேகிடைக்கவேண்டும். ஆகா நினைக்கும் போதேவானத்தில்பறக்கிறமாதிரி இருக்குதே. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  41. தீபாவளி மலரில், கேப்டன் டைகரின் ஸ்லாட்டில் டெக்ஸ் & கோ.வே இடம்பிடிப்பதிலும் அதிசயமேது//// நிச்சயமாக தீபாவளி மலர் டெக்ஸ் என்றால் அனைவரும் வரவேற்கும் விஷயமே சார். நீங்கள் டெக்ஸை அவர் அளவிற்கு weight இல்லாத கதாபாத்திரங்களுடன் போட்டியில் இறக்கியதுதான்.....இதோ இது தீபாவளி வித் டெக்ஸ் என்று மட்டும் கூறியிருந்தால் வேறு சிந்தனைக்கே இடமிருக்காது. அப்புறம்... அவர் விற்பனையில் சாதித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ரிப் கெர்பி டிடெக்டிவ் ஹீரோக்களில் ஜென்டில்மேன் என்றால் இவர் wildest ஜென்டில்மேன் ஆச்சே!

    ReplyDelete
  42. Wildwest ஜென்டில்மேன்

    ReplyDelete
  43. Tequila - teh · kee · laa via Tex willer comics!

    நவஹோ செவ்விந்தியர்கள் போன்று சமீப காலங்களில் சரியான உச்சரிப்பை நாம் பயன்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்தததே!

    டெக்ஸ் வில்லர் கதைகளில் சலூன்களில் ஊற்றி ஊற்றி ராவாக அடிக்கும் சரக்கு டெக்வில்லா அல்லது டெக்விலா என்று வருவது Tequila தான் என்றால் - நாமும் டெகீலா என்று உச்சரிக்கலாமே?!

    Credit: டெக்ஸ் வில்லர் காமிக்ஸ்!

    ReplyDelete
    Replies
    1. நீங்க எப்படி வேணா கூப்பிட்டு கொள்ளுங்கள் தலைவரே. எங்களுக்கு போதை ஏறினாள் சரி😝😝😝😝😝

      Delete
  44. பாயசம் போடும் ரம்மிக்கு....குக்கூ..குக்கூ...டெக்சு...டெக்சு...
    அப்படியே குடிக்கும் உதயிக்கு...குக்கூ...குக்கூ...டெக்சு...டெக்சு...

    ReplyDelete
  45. //'தல' மீது - ஒரு publisher என்ற வகையில் நான் ஒரு மிடறு கூடுதல் வாஞ்சை காட்டுவதில் மர்மம் தான் ஏது ?//

    👏👏👏👏👏👏👏👏👏👏👏

    இதயக்கனி தல டெக்ஸ்💪💪💪🤍🫀

    ReplyDelete
  46. நெஞ்சே எழு. முதல் பக்கத்தில் ஆரம்பித்து கடைசி பக்கம் வரை ஒரு நல்ல ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி விறுவிறுப்பாக இருந்தது.முதல் பக்கத்திலேயே வில்லன் யார் என்று தெரியும்,முடிவும் இப்படி தான் என்று தெரியும் இருப்பினும் கடைசி பக்கம் வரை அடுத்து என்ன என்று விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்ற விதம் மிகவும் அருமை.சித்திரங்கள் மிகவும் அழகாக இருந்தது கதையின் வேகத்திற்கு உதவியாக இருந்தது.மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும் கதைகளில் நெஞ்சே எழு கதைக்கும் நிச்சயம் இடம் உண்டு.மொத்தத்தில் டெக்ஸின் நெஞ்சே எழு படிக்கும் போதும் படித்த பிறகும் காமிக்ஸின் எழுச்சி நாயகன் டெக்ஸ் தான் எனத்தோன்றியது.

    ReplyDelete
  47. சென்ற ஆண்டு கோயம்பத்தூரில் இருக்கும் உடன் வேலை பார்த்த சீனியர் நண்பர் ஒருவரை சந்திக்க போயிருந்தேன். பல விசயங்கள் பேசிய பின் அம்புலிமாமா மற்றும் காமிக்ஸ் பக்கம் டாபிக் சென்றது காமிக்ஸ் என்றவுடன் அவர் முதலில் சொன்ன வார்த்தை டெக்ஸ்..இந்த காமிக்ஸ் இப்பல்லாம் இருக்குதா என்றார் நானும் கையில் இருந்த 'பந்தம் தேடிய பயணம்' அண்ட் 'ஒரு கசையின் கதை'யை கக்கொடுத்து விட்டு வந்தேன். ஒரு வாரம் கழித்து அவரிடம் இருந்து போன் 'ஏன் இந்த காமிக்ஸ் ல "தூத்தேறி" **** போன்ற வசனங்கள் இருக்கு. இத படிச்சா சின்ன குழந்தைகள் சீக்கிரமா கத்துக்குவாங்களே என்றார்... நான் உடனே இல்ல குழந்தைகளுக்கு வேற கார்ட்டூன் வருது என்று சமாளித்தேன். பின்னர் யோசித்து பார்க்கும் போது அவர் கூறியது சரி என்றே தோன்றியது. சாரி சொல்ல வந்த விஷயத்தை விட்டுட்டேன் 'பந்தம் தேடிய பயணம்' இங்கிலிஷ் கவ்பாய் படம் போல அட்டகாசமா உள்ளது என்றார்.

    ReplyDelete
  48. செம்ம.. மாஸ் நாயகர் டெக்ஸ் வாழ்க வாழ்க வாழ்க.. அப்படியே முழுமையா ஒருக்கா டைகரையும் கொடுத்துடுங்கன்னுதான் கேட்டுக்குறோம்..

    ReplyDelete
  49. அனைவருக்கும் சலாம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க.....

    ReplyDelete
  50. நெஞ்சே எழு....

    கையில் எடுத்தால் முழுவதும் படிக்காமல் கீழே வைக்க முடியாது. சர்வமும் நானே போல இதுவும் ஒரு அதிரடி சரவெடியே...

    முக்கியமாக எனக்கு பிடித்த இடம்

    "இந்த டெக்ஸ் வில்லரின் பிஸ்டல் சுயநலத்துக்காக என்றேனும் முழங்கிடுமெனில், அதுவே என் ஆயுளின் கடைசி நாளாய் இருக்கும்."

    அருமை... இது போன்ற கதைகள் இருந்தால் தாராளமாக மாதம் 2 டெக்ஸ் கூட வரலாம்...

    ReplyDelete
    Replies
    1. "இந்த டெக்ஸ் வில்லரின் பிஸ்டல் சுயநலத்துக்காக என்றேனும் முழங்கிடுமெனில், அதுவே என் ஆயுளின் கடைசி நாளாய் இருக்கும்." super sago

      Delete
  51. 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    வாழ்த்துகள்....

    வாழ்த்துகள்....

    வாழ்த்துகள்.,...

    ஆசிரியர் சார்@

    """ஸ்கோர் 401*"""

    நண்பர் AKK ன் கேள்விகளுக்கு விடைகாண 2012முதல் வத்துள்ள கதைகளை ஆய்வு செய்து கொண்டு இருந்தேன். அப்போதுதான் ஓரு மைல்கல்லை தாங்கள் சத்தமில்லாமல் தாண்டி உள்ளீர்கள் என் தெரிந்தது. அது , கம்பேக் ஆன பிறகான இதழ்கள் எண்ணிக்கையில் "4 சென்சுரி" போட்டுள்ளீர்கள் சார்.....

    இம்மாதம் வெளியாகி உள்ள முத்து 450வது இதழ் கம்பேக் ஆனதில் இருந்து 401 இதழ்....

    ஓன்பதரை ஆண்டுகளில் 400இதழ்கள் என்பது இன்றைய காலகட்டத்தில் நம் வட்டத்திற்கு அசாத்திய ஸ்கோர் சார்....

    இதழ்களின் பிரேக்அப் இதோ...,

    முத்து----137

    லயன்----186

    சன்சைன்- 22

    கி.நா.--- 22

    ஜம்போ--- 20

    மேக்ஸி--- 8

    முத்துமினி- 6

    மொத்தம்- 401

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    இது இப்படியே 500...600...1000 என சாதனை புரிய வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹

    400வது இதழ் "நெஞ்சே எழு" அல்லது "கொரில்லா சாம்ராஜ்யம்"- முத்துவை முதலில் எழுதுவது வழக்கம் என்பதால் 400வது இதழ்,- "நெஞ்சே எழு"


    ---STV வித் மஹி, KOK ,பேபி & "காமிக்ஸ் எனும் கனவுலகம்" ஃப்ரெண்ட்ஸ்!

    ReplyDelete
  52. வாழ்த்துக்கள் எடிட்டர் சார்.
    💐💐💐💐🎊🎊🎊🎊

    ReplyDelete
  53. என்னதான் டெக்ஸ் வில்லர் சாதனை படைத்திருந்தாலும் "மின்னும் மரணம்" மாதிரி ஒரு குண்டு புக் அந்த சைஸில் கலரில் டெக்ஸ் கதை எதுவும் வர வில்லையே .....

    மின்னும் மரணம் கதையும் டாப் டக்கரா இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே...எப்போதாவது மலரும் குறிஞ்சி மலருக்கும் ...எப்போதுமே மனம் வீசும் மல்லிகைக்கும் உள்ள வேறுபாடே... ம்ம்ல்லிகையை வேண்டாமென்போருமுண்டோ.... கார்சனின் கடந்த காலம் போதாதா

      Delete
    2. மின்னும் மரணம் சைஸில் முழு வண்ணத்தில் அந்த அளவு பக்கங்களோடு டெக்ஸ் வந்தால் நன்றாக இருக்கும் நண்பரே.

      Delete
    3. தலையில்லா போராளி தவிர பெரிய சைஸ் டெக்ஸ் கதைகளுக்கு வரவேற்பு அத்தனை சுகமானதாக இல்லை; எனவே எடிட்டர் சார் பெரிய சைசை ட்ராப் பண்ணிட்டாரு.....
      டெக்ஸக்கு இந்த காம்பேக்ட் சைசே சாஸ்வதம்!
      அதை அப்படியே கொண்டாடுவோம்...

      Delete
  54. இந்த மாதத்தின் இதழ்களை படித்தவர்கள்,அது குறித்து விமர்சனங்களை பதிவிடட்டும்.

    லயன் & முத்து குழுமத்தின் வெளியீட்டில் மனதில் நீங்கா இடம்பெற்ற படைப்புகள் குறித்த பார்வைக்காக இந்த பதிவு.

    ""கற்றது காமிக்ஸ்"" ஆகச் சிறந்த படைப்பின் வெளியீடுகள் குறித்த பார்வை.



    (வேலையில்லை.பொழுது போகாமல் .... ஏதாவது எழுதனும்னு தோணுச்சு. அதான்.

    கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.)

    தொடரும்....

    ReplyDelete
    Replies
    1. கற்றது காமிக்ஸ்.

      திரைக்கதையின் பயணத்தில் காட்சி அமைப்புகள் மூலம்,
      அடிநாதமாக ஒரு சிந்தனை அல்லது பிரதான மையக்கரு ஒன்று இழையோடும் வகையில் ஒரு படைப்பை அமைப்பது.

      Departed.
      காவல்துறையில் சமூக விரோத கும்பலை சேர்ந்த ஒருவர்.சமூக விரோதிகளுடைய குழுவில் காவல் துறையை சேர்ந்த ஒருவர் என்பதாக திரைக்கதை அமைந்திருக்கும்.கூட்டத்தில் ""கறுப்பு ஆடு""என்பதாக திரைப்படம் நகரும்.
      இதில் அடிநாதமாக காட்சிகளில் ஒரு கதை புனையப்பட்டிருக்கும்.
      Leonardo DiCaprio சமூக விரோதிகளின் கூடாரத்தில் காவல்துறைக்காக வேலை பார்க்கும் உளவாளி.அந்த உண்மை தெரிய வரும்போது தான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்று உணர்ந்து மன அழுத்தத்தில் பரிதவிப்பார்.அதற்காக பெண் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சைக்காக வரும்போது,அந்த பெண் மருத்துவருக்கு அவர் மேல் அபிமானம் உருவாகிறது.Dicaprio வுடைய மேன்மையான குணங்களுக்காக அவனோடு ஏற்படும் தொடர்பில் கருவுறுகிறாள்.
      ஆனால் அவனால் அவளோடு திருமண உறவில் இணைய முடியாத சூழல்.எனவே தன்னை காதலிக்கும் Matt Damon னோடு தன்னுடைய வாழ்வை இணைத்துக் கொள்வார்.இந்த காட்சி திரைக்கதையின் ஏதோவொரு இடத்தில் DiCaprio கொல்லப்படலாம் என்பதை பார்வையாளர்களுக்கு இயக்குனர் நடத்தியிருப்பார்.

      திரைக்கதை முழுவதுமே ஒவ்வொரு கதாபாத்திமும்,ஏதாவது ஒருவிதத்தில் ஒரு கதாபாத்திரத்தை ஏமாற்றுவது போல் அமைந்திருக்கும்.அதே போல் DiCaprio கொல்லப்படலாம் என்பதை பார்வையாளனுக்கு மறைமுகமாக காட்டப்பட்டிருப்பினும்,அதை கடைசி வரையிலும் பரபரப்பாக அமைத்து, எதிர்பாராத இடத்தில் அந்த நிகழ்வு காட்சிபடுத்தப்பட்டிருக்கும்.
      DiCaprio கொல்லபட்ட பின்,ஒரு ஆணுடைய பாதுகாப்பில் தன் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்பதற்காக,Matt Damon னோடு திருமண பந்தத்தை ஏற்படுத்தி கொண்ட பெண் மருத்துவர், அவரிடம் இருந்து விலகி விடுவர்.ஆணுடைய துணையின்றி பெண்ணால் வாழ முடியும் என்ற உறுதியில் அந்த உறவை முறித்துக் கொள்வார்.இந்த காட்சி திரைக்கதையில் அந்த கதாபாத்திரம் கொல்லப்படும் என்பதை தெளிவாக இயக்குனர் பார்வையாளர்களுக்கு உணர்த்தியிருப்பார்.தான் எவருடைய குழந்தையை கருவில் சுமக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சுய உணர்வுடைய கதாபாத்திரமாக அந்த பெண் மருத்துவருடைய பாத்திரம் அமைந்திருக்கும்.தனக்கும் தன் குழந்தைக்கும் அபாயம் எதுவும் நேரக்கூடாது என்ற மனநிலையில் திருமண உறவை முறித்துக் கொள்வார்.

      பரபரப்பான திரைக்கதை அமைப்புக்குள் , இத்தகைய உள்கட்டமைப்பை உணர்வது சற்று சிரமமான ஒன்று.திரைபடத்தில் காட்சிகள் நகரும் வேகத்தில் அனைத்தையும் கூர்ந்து கவனித்து உணர்வது சற்று சிரமம்.

      திரைக்கதையில் அடிநாதமாக இழைக்கப்பட்டிருக்கும் இத்தகைய உட்கூறுகளுக்காக வழங்கப்பட்டிருக்கும் விருதுகள் (ஆஸ்கர்) மிகவும் மதிப்பு வாய்ந்தவை.(MUST Watch FILM.)

      இந்த திரைப்படம் காமிக்ஸ் வெளியீட்டோடு எப்படி பொருந்துகிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

      தொடரும்....

      Delete
    2. கற்றது காமிக்ஸ்.


      பிஸ்டலுக்கு பிரியாவிடை.

      திரைக்கதை அரசியல் சாசனத்தில் திருத்தந்தை ஏற்படுத்த போராடும் ஒரு கணவானின் வாழ்க்கை போராட்டம் பற்றியதாக அமைந்திருக்கும்.அதில் அடிநாதமாக அமைந்திருப்பதை மட்டும் மிக சுருக்கமாக பார்க்கலாம்.
      அழகு பெட்டகமான மார்க்கோ ஆணழகனான அலெக்ஸாண்டர் மீது காதல் கொள்வார்.பைரனும் அலெக்ஸாண்டரும் சந்திக்கும் போது(174 ம் பக்கம்)பைரனை அலங்கோலமாக காட்சிப்படுத்தியிருப்பர்.
      அலெக்சாண்டரை விடவும் பைரன் புத்திசாதுர்யம் உடையவன் என்பதை புரிந்து கொண்டு அவனை மணந்து கொள்வாள்.அவர்களுடைய மகிழ்ச்சியான மணவாழ்வில் ஹேஸ்கர்ட் நுழைகிறார்.
      ஆவணங்களை பயன்படுத்தி பைரன் புகழபெற விரும்புகிறான்.ஆனால் அதன் மூலம் பணம் ஈட்ட முடியும் என்பது மார்கோவுக்கும் தெரிகிறது.இருவரும் வழக்கறிஞர்கள் என்பதால் opinion different ஏற்படுகிறது.பைரன் புகழ்பெற்ற வழக்கறிஞராக உருவெடுக்கும் போது அவன் மீது பலருடைய கவனமும் திரும்பும். அப்பொழுது மார்க்கோ ஒரு பொருட்டாக தோன்றாது.பைரன் மீது கவனம் செலுத்த பல பெண்கள் ஆர்வமாக இருப்பர்.வழக்கு நீதிமன்றத்துக்கு
      வரும்போது தன்னுடையகட்சிக்காரர் (ஹேஸ்கர்ட்) ,எதிர்தரப்புக்கு(ஆயுத உற்பத்தியாளர்களுக்கு) விலை போக கூடாது என்பதற்காக மார்கோவை தாராளமாக பழக அனுமதிக்கிறான்.இது மார்கோவின் கவனத்தை முழுவதும் ஹேஸ்கர்ட்டின் மீது திருப்புகிறது.
      பைரன் புத்தி சாதுர்யமானவனாக இருந்தாலும் மனோ தைரியம் இல்லாத காரணத்தால் புத்திபேதலித்து விடுகிறது.ஹேஸ்கர்ட் மனோ தைரியம் மிக்கவன் ஆனால் அழகோ,அறிவோ இல்லாதவன்.முரட்டுத்தனமாக
      செயல்படும் மனிதன் .விவேகம் அற்ற வீரம் வீண்.
      மார்கோ அழகு,அறிவு ,வீரம்(மனோதிடம் ) அனைத்தும் ஒருங்கே பெற்ற சுய விழிப்புணர்வுடைய பெண்.
      பைரனை விட்டு பிரிந்து ஹேஸ்கர்ட் மீது கவனத்தை திருப்ப அவனுடைய கணவனே காரணமாக அமைகிறான்.அனைவருடைய வாழ்வும் சிதைகிறது.

      அலெக்சாண்டர் மீது காதல் வயப்பட்டு பைரனை மணந்து கொண்டு ,அவனுடைய பிள்ளைகளுக்கு தாயாக விரும்பிய மார்கோவின் வாழ்வு பைரனால் சிதைக்கப்படுகிறது.புத்தி கூர்மை இல்லாத அலெக்சாண்டர் மூலம் வேடிக்கையான(கோமாளிகளை)
      பிள்ளைகளை சமூகத்துக்கு பெற்றெடுக்க மார்கோ விரும்பவில்லை.அலெக்ஸாண்டர் மூலம் பிறந்த பிள்ளைகள் விளையாட்டாய் பைரனை சுடும் போது,குற்றுயிராய் மார்கோ காலடியில் விழும் போது(204 ம் பக்கம்) தன் தவறுகளை பைரன் உணர்கிறான்.காலம் கடந்த நிகழ்வுகளை மார்கோ தாண்டி செல்கிறார்.
      லூசி என்ற பெண் குழந்தையை ஏற்றுக் கொண்டு தன்னுடைய பெண்மையின் பூரண வடிவமான தாய்மை உணர்வை நிறைவு செய்கிறார்.
      அந்த குழந்தையை சமூகத்தில் பொறுப்புள்ள ஜீவனாக வளர்த்தெடுக்க தன் வாழ்வை அமைத்து கொள்வார்.
      பைரனுடைய வாழ்வு ,ஹேஸ்கர்ட்டோடு விதி அமைத்திருக்கும்.ஒரு பெண் தாய்மையடைய பிள்ளை பெற வேண்டும் என்ற சமூக அவசியம் இல்லை.தெருவில் கைவிடப்பட்ட குழந்தை மீதும் தாய்மைக்குரிய புனிதமான அன்பை வழங்க இயலும்.ஆனால் ஆண்களுக்கு தன் பிள்ளைகளை சமூகத்துக்கு பெற்றெடுக்க பெண் என்பவள் இன்றியமையாத இயற்கையின் கொடை.


      பெண்ணறத்தினை ஆண்மக்கள் வீரத்தான்
      பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை-பாரதியின் சிந்தனை.

      சட்டங்களையும்,சட்ட திருத்தங்களை யுகம் வைத்து கொண்டு மானுட சமூகத்தை வடிவமைக்க இயலாது.சமூக பொறுப்புணர்வுடைய பிள்ளைகளை சமூகத்துக்கு ஈன்றெடுப்பது பெண்ணுடைய கடமை.
      சமூகங்கள் சட்டங்களால் உருவாவதை விட சிறந்த மனிதர்களால் நிறைய வேண்டும்.


      திரைக்கதையை ஆதாரமாக கொண்டு வாசிப்பை அணுகினால் மார்க்கோ தீய குணம் உடையவராகவும்,பைரன் சிறந்த மனிதனாகவும் தோன்றும் விதத்தில் படைப்பு அமைந்திருக்கும்.

      நாவல் வாசிப்பது போல் அணுகுவதால் ஏற்படும் சிறு கவனக்குறைவு.ஓவியங்களையும் புரிந்து கொள்ள முற்படும்போது மேன்மையான படைப்பின் மீதான உன்னதமான வாசிப்பு அனுபவம் கிடைக்க பெறலாம்.
      வார்த்தைகளில் வடிக்க இயலாத (நாகரிகம்
      கருதி) பல்வேறு உட்கூறுகள் அமையப்பெற்ற சிறந்த படைப்பின் மீதான சிறு வெளிச்சப்புள்ளி மாத்திரமே இது.


      லயன் வெளியீட்டின் மற்றுமொரு சிறந்த வெளியீட்டோடு உங்களை அணுகும் வரையில் , நன்றியோடு விலகுகிறேன் நட்பூஸ்.

      பிற்சேர்க்கை.

      இதன் மொழிப்பெயர்ப்பில் பங்கெடுத்து கொண்டது சக காமிக்ஸ் உறவுகளில் மற்றொரு நண்பர்.

      சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருதையை தரலாம்.
      இலக்கியத்தைப் மிக்க வேறொரு படைப்போடு விரைவில்...‌‌‌

      ******


      Delete
    3. ஶ்ரீராம் அட்டகாசமான விமர்சனம். சும்மா சூப்பர்.

      Delete
    4. ஶ்ரீராம் சார் சிறப்பான விமர்சனம்.பாராட்டுக்கள்.

      Delete
    5. அனைவருக்கும் நன்றி.

      🙏🙏🙏🙏.

      Delete
  55. மிக நுட்பமான விமர்சனம் sri ram sir super

    ReplyDelete
  56. This Durango has the best cover. This is one of best covers. Story was also good this time.

    Tex viller. Good read as usual

    ReplyDelete
  57. *நெஞ்சே எழு*
    ஏழு மாதங்களுக்கு பிறகு தற்போது விடுப்பில் இருப்பதாலும். கதை புத்தகங்களே அதிகம் தொடாத எனது அண்ணன் மகன் மதிய சாப்பாட்டுக்கு கூட வராமல் ஒரே மூச்சாக படித்து விட்டு வந்து, சூப்பர் சித்தப்பா என்றதாலும், நானும் அந்த கதையை படிக்க ஆரம்பித்தேன். ஆனால் என்னால் அவனை போல் ஒரே மூச்சாக படிக்க முடியவில்லை. VILLA வின் சித்திரங்கள் என்னை அந்த அளவுக்கு கட்டி போட்டது. WoW எத்தனை விதமான கோணங்கள் (view angle). நாமும் கதை நடக்கும் இடத்தில் இருப்பதை போன்ற ஒரு உணர்வு. கதையும் சரவெடி ரகம்.

    ஆனால் படித்து முடித்த போது, அண்ணன் மகன் என்னிடம் கேட்ட அதே சந்தேகம் எனக்கும் தோன்றியது. இந்த கதைக்கு *நெஞ்சே எழு* என்று ஏன் பெயர் வைத்தார்கள்��

    ReplyDelete
    Replies
    1. Super sir.
      Tex இளம் வயதினரை கவர ஆரம்பித்து விட்டார்.

      Delete
  58. இவ்வளவு facts, இவ்வளவு fan following, இவ்வளவு proof இருந்தும் டெக்ஸ்ஸின் மிகச்சிறந்த வில்லனாக உலகம் கருதும் மெபிஸ்டோ'வின் கதைகள் தமிழில் வர தயக்கம் என்னவோ ❓ இருபதோடு இருபத்தொன்னாய் ஆக வாய்ப்பு இல்லை சார்

    ReplyDelete
    Replies
    1. காமிக்ஸ் உலகின் சிரஞ்சீவி நமது டெக்ஸ் .

      Delete
    2. இந்த மாதத்து டெக்ஸ் வில்லரையே உங்கள் பதிலாக்கிடலாம் நண்பரே ! ஒரு யதார்த்த Wild West கதையில் அதிரடியாய் அனைவரையும் கவர்ந்திடும் நாயகரை ஒரு விட்டலாச்சார்யா களத்துக்குள் இறக்கிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை !

      கடந்த பத்தாண்டுகளில் மாயாஜால கலவையோடு வெளியான ஒரே டெக்ஸ் சாகசமான "கியூபா படலம்" பட்ட பாடை நான் இன்னும் மறக்கவில்லை ! ரேஞ்சராகவே அவர் நம்மிடையே வலம் வரட்டும் ; மாயாஜாலங்களை மாண்ட்ரேக்கும், மார்டினும் பார்த்துக் கொள்ளட்டுமே !

      Delete
    3. ரேஞ்சராகவே அவர் நம்மிடையே வலம் வரட்டும்/// அது மட்டுமல்ல சார் டைனசாருடன் மோதுவதும் இனிமேல் வேண்டாம்

      Delete
    4. சார் மந்திர மண்டலம் மட்டுமே இது வரை வந்த MEFISTO - TEX கதை .. அதில் மாயாஜாலம் எதுவும் வராதே சார் .. HYPNOTISM மட்டும்தானே இருக்கும் .. ஒரு MEFISTO கதை விட்டுட்டு அதற்கு வரும் வரவேற்பை பொருத்து முடிவு பண்ணலாமே சார் ..

      Delete
    5. ரேஞ்சராகவே அவர் நம்மிடையே வலம் வரட்டும்/// அது மட்டுமல்ல சார் டைனசாருடன் மோதுவதும் இனிமேல் வேண்டாம்

      Delete
    6. சார் மந்திர மண்டலம் மட்டுமே இது வரை வந்த MEFISTO - TEX கதை .. அதில் மாயாஜாலம் எதுவும் வராதே சார் .. HYPNOTISM மட்டும்தானே இருக்கும் .. ஒரு MEFISTO கதை விட்டுட்டு அதற்கு வரும் வரவேற்பை பொருத்து முடிவு பண்ணலாமே சார் ../////


      ரொம்ப சிரமப்படாதிங்க ஸ்ரீ..இங்க வருகிற எல்லோருமே மெபிஷ்டோ வேணும்னு கேட்டாலுமே , அவர் ஒருவர் முடிவு பண்ணா மட்டுமே அது வெளி வர வாய்ப்பு உள்ளது...இரத்த படலம் எல்லாம் 4 தடவை ( அதில் 3 தடவை மறுபதிப்பு) வெளியிடலாம்...ஆனா டெக்ஸ் & மெபிஷ்டோது புது கதையை கேட்டா கூட அத வெளியிட முடியாது....ஏன்னா அந்த மாதிரி கதை வந்தா எல்லாரும் கழுவி..கழுவி ஊத்துவாங்க பாருங்க...அப்படி கழுவி ஊத்துனா அதுக்கு அப்பறமா வரும் டெக்ஸ் கதை ஒன்னுகூட சேல்ஸ் ஆகாமா போயிடும்...ஏன்னா இதுவரை வந்த ஒரு டெக்ஸ் ( கியூபா படலம் தவிர ) கதையை கூட யாரும் கழுவி ஊத்தியதே இல்லை பாருங்க....போங்க ஸ்ரீ போயி வேற வேலையிருந்தா பாருங்க...நம்பள மாதிரி ஆளுங்க எல்லாம் என்ன புக்கு வருதோ அத வாங்கி படிச்சிட்டு போயிடனும்..

      Delete
    7. நன்றி சார் ! ரொம்பவே நன்றி !

      Delete
    8. 2015 Or 16 ஜனவரி, சென்னை புத்தகவிழாவில் விஜயன் சாரிடம் (யாரென்று தெரியாது அப்போது) "இரத்த படலம் ஒரே புக்காக வர வாய்ப்பு உள்ளதா? " என்று கேட்டேன். அதற்கு வாய்ப்பு 0% என்றும், இன்னும் கதையே முடியவில்லை என்று கூறினார். ஆனால் இன்றோ அது இரண்டுவது பதிப்பு காணவுள்ளது. அதே போல மேபிஷ்டோவும் ஒருநாள் வருவார் என்று fingers crossed, legs crosses, body crossed... Everything crossed காத்திருப்போம் 🙏

      Delete
    9. அவசரம் ஏனோ....ஆசிரியர் வராதுன்னு சொல்லி வந்ததில்லயா....காட்டம் தேவையா....அதிர்ச்சிதான் வருது சில நண்பர்கள பாக்கயில்....

      Delete
  59. தோர்கலின் மாயாஜால உலகம் – பகுதி-2

    THE BETRAYED SORCERESS!
    பிரபஞ்சத்தின் புதல்வன்!

    THE ISLAND OF THE FROZEN SEAS!
    பனிக்கடலில் ஒரு பாழும் தீவு!

    தோர்கல் யார்?

    பிரபஞ்சத்தின் புதல்வன், விண்வெளியின் பிள்ளை, நட்சத்திரங்களின் நாயகன் என பல பெயர்களால் அழைக்கப் படும் தோர்கல் யார்? உண்மையில் கடவுளின் பிள்ளையா? வேற்றுகிரகவாசியா? பிரபஞ்சப் பயணியா? சாதாரண மனிதனா? இல்லை, இது தவிர்த்த வேறு இனமா?

    ஜாம்பவான் வான் ஹாம் தோர்கலின் முதல் ஆல்பத்தை ஆரம்பிக்கும் போது தோர்கல் ஓர் இளவயது வாலிபன், வடதிசை வைகிங்குகளில் ஓர் குழுவின் தலைவனான காண்டால்ப் (Gandalf the Mad); தன்னுடைய மகளான ஆரிசியாவை காதலிக்கும் தோர்கலை ஏற்காமல் அவனை கொல்ல முயற்சி செய்வதாக கதை ஆரம்பிக்கும். காரணம் தோர்கல் ஒரு வைகிங் அல்ல; எங்கிருந்தோ வந்த யாரென்றே தெரியாத ஒருவன் என்பதே!

    தோர்கல் எவ்வாறு இங்கே வந்து சேர்ந்தான் என்பது பற்றி பின்வரும் ஆல்பங்களில் விளக்கப் பட்டிருக்கும். ஆனால் தோர்கல் யாரென்ற உண்மையும் வேறு சில முக்கியமான தகவல்களும் இந்த இரண்டு ஆல்பங்களிலேயே ஆங்காங்கு சொல்லப்பட்டு இருக்கிறது. கதையோட்டத்தில் நாம் கவனிக்கத் தவறும் அல்லது முக்கியமற்ற வசனங்களாக நாம் நினைக்கும் சில பகுதிகள் இளம் தோர்கல் என்ற இதன் முன்னொட்டுத் (Prequel) தொடரினை வாசிக்கும் போது நாம் இந்த ஆல்பங்களை மீண்டும் தேட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்த வல்லவை.

    ஸ்லைவ் (SLIVE):
    பனிக்கடல் தீவின் ராணியா? சூனியக்காரியா? அவளின் வஞ்சத்திற்கான காரணம் என்ன? அவளுக்கும் தோர்கலுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த கேள்விகளின் விடையை இந்த இரண்டு ஆல்பங்களில் ஓரளவு அறிந்து கொண்டாலும் ஸ்லைவின் பூர்வக்கதையை இளம் தோர்கல் தொடர் விளக்கமாக சொல்கிறது. ஆக மொத்தத்தில் இளம் தோர்கல் தொடருக்கு இந்த இரு ஆல்பங்களும் முக்கியமான அகராதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

    காண்டால்பினால் பலியிடும் பாறையில் கட்டப்பட்ட தோர்கல் எவ்விதம் தப்பினான்? ஸ்லைவின் நோக்கம் நிறைவேறியதா? தோர்கல், ஆரிசியா எவ்விதம் இணைந்தார்கள் என்பதே இந்த இரு ஆல்பங்களின் ஒருவரிக் கதையென்றாலும் அதுதவிர்த்து எண்ணற்ற தகவல்கள் இந்த ஆல்பங்களில் புதைந்துள்ளன.

    தோர்கலின் இந்த இரண்டு ஆரம்ப ஆல்பங்களும் ஒரே ஆர்க் என்பதால் ஒன்றாக படித்தால் நல்ல அனுபவமும் புரிதலும் கிடைக்கும். கூடவே ஏறத்தாழ சொர்க்கம் (ALMOST PARADISE) என்ற தலைப்பில் ஒரு சுவாரசியமான சிறுகதை இத்துடன் இணைந்துள்ளது. காலம் உறைந்துபோன ஓர் கடும்பள்ளத்தில் சிக்கிக்கொண்ட தோர்கல் சந்திக்கும் மூன்று சகோதரிகள் யார்? அங்கிருந்து தோர்கல் எவ்வாறு மீண்டு வருகிறார் என்பதை குறைந்த பக்கங்களில் அருமையாக சொல்லப்பட்டிருக்கும் கதை அது! மொழியாடல் மட்டும் தற்போதைய தோர்கலிலிருந்து சற்றே மாறுபட்டிருப்பது அந்நியமாக தெரியும்.

    புதிய நண்பர்கள் வாசிக்க லயன் முத்து காமிக்ஸ் தளத்தில் இரு புத்தகங்களும் விற்பனைக்கு உள்ளது. ஏற்கனவே வாசித்த நண்பர்கள் மீள்வாசிப்பு செய்ய நேரமிருந்தால் முயற்சிக்கலாம்!

    தொடரும்...

    ReplyDelete
  60. சார் ட்யுராங்கோ கதையில் கடைசி சாகசத்தில் வில்லன் கையில் வைத்திருக்கும் போட்டோவில் முதல் சாகசத்தில் பார்த்த பையன் மற்றும் அவனது அம்மாவிற்கும் வில்லனுக்கும் என்ன தொடர்பு? அந்த பையன் தான் வில்லன் என்றால் எனக்கு புரியவில்லை

    ReplyDelete
  61. மெபிஸ்டோ ரசிகர்கள் மனம்தளரவேண்டாம். நேரம் வரும் போது ஆசிரியர் நிச்சயம் மெபிஸ்டோ வெளியிடுவார். நிச்சயமாய் உங்களுடனோ அல்லது மெபிஸ்டோ வுடனோஆசிரியருக்கு தனிப்பட்டவிருப்பு வெருப்பு ஆசிரியருக்குஇல்லை. தக்கநேரத்தில் நமதுஆசைநிறைவேறும் பொறுமைப்ளீஸ். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  62. **** நெஞ்சே எழு *****

    அட்டைப்படம் : 8/10
    கதை : 8/10
    சித்திரங்கள் : 10/10
    கதை நகர்வு : 9/10
    வசனங்கள் : 10/10
    மை வாசம் : 10/10

    ReplyDelete
    Replies
    1. என்னாது மை வாசமா?
      மை வாசத்திற்கு பத்து மதிப்பெண்ணா?!

      Delete
    2. பேனல்களுக்கு மார்க் போட மறந்துட்டிங்க ஈ.வி.....!!!!!!

      Delete
    3. க்ளைமாக்ஸ் சீக்குவன்ஸ்க்கும் அப்படியே ஏதாவது பார்த்து செய்ங்க ஈவி....

      Delete
  63. நெஞ்சே எழு

    இப்போதுதான் படித்து முடித்தேன். இனி ப்ளஸ் மைனஸ்.

    ப்ளஸ்

    1. அட்டை படம் மற்றும் உள்பக்க சித்திரங்கள்.

    2. கதை மற்றும் டெக்ஸ் மட்டுமல்லாமல் அவர் குழுவினர் அனைவரும் சாகஸம் செய்வதுபோல் கதை நகர்வு.

    3. கதையில் அனைத்து பாத்திரங்களுக்கும் நம் மனதில் நிற்க்குமளவுக்கு டெக்ஸ் & கோவுக்கு இனையான வாய்ப்பு. (டெக்ஸே 23 ம் பக்கத்தில்தான் அறிமுகம் ஆகிறார்)

    4. 108 ம் பக்கத்தில் இருந்து 172 ம் பக்கம் வரை சிரிவாகுவாக்கள் செவ்விந்தியர்களுடன் டெக்ஸ் & கோ நடத்தும் அதிரி புதிரி சாகஸங்கள் சும்மா பட்டாசு ரகம்.

    5. மொழிபெயர்ப்பு.

    மைனஸ்கள் :

    1. பைண்டிங் - நடுவில் படங்கள் கொஞ்சம் பைண்டிங்கில் சிக்கிக்கொண்டதால், புத்தகத்தை விரித்து வசனங்கள் படிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது.

    2. க்ளைமாக்ஸ் சற்று சினிமாத்தனமாக தோன்றுவது.

    3. மெயின் வில்லன் ஹாரி லோகனுக்கு பின்புலம் பற்றிய விபரம் சற்று டீடைலாக இருந்திருக்கலாம்.

    4. கதைக்கு ஒட்டாத டைட்டில்

    மொத்தத்தில் இந்த மன உளைச்சல் சமயத்தில் சற்றே ரிலாக்ஸ் ஆக டெக்ஸ் வில்லரின் நெஞ்சே எழு நூறு சதவீதம் கேரண்டி.

    மார்க் 9.5/10

    ReplyDelete
    Replies
    1. //பைண்டிங் - நடுவில் படங்கள் கொஞ்சம் பைண்டிங்கில் சிக்கிக்கொண்டதால், புத்தகத்தை விரித்து வசனங்கள் படிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது.//
      எனக்குமே இது பிரச்சனையாகத் தோன்றியது,பக்கங்களின் ஓரங்கள் சற்று உள்ளே சென்றவாறு அமைந்து விட்டதால் தொடர்ச்சியான வாசிப்பிற்கு சிரமம் ஏற்பட்டது...
      அடுத்தடுத்த இதழ்களில் இந்த குறைகள் தவிர்க்கப்படும் என்று நம்புகிறேன்...

      ட்யுராங்கோ இதழ் கூட கெட்டி அட்டை நடுவில் அமுங்கியநிலையிலும்,ஓரப்பகுதிகளில் சற்றே தூக்கியவாக்கிலும் வந்துள்ளது...
      நிறைய இதழ்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அடுக்கும்போது வரும் பளுவினால் இது போன்றநிலை ஏற்படுகிறதா என்று தெரியவில்லை...

      Delete
    2. //ட்யுராங்கோ இதழ் கூட கெட்டி அட்டை நடுவில் அமுங்கியநிலையிலும்,ஓரப்பகுதிகளில் சற்றே தூக்கியவாக்கிலும் வந்துள்ளது...//--

      ஆம் ரவி... என் புத்தகமும் வளைந்தே வந்துள்ளது.. வெயிட் வைத்து சரிப்படுத்தி விட்டேன்... புதிய அட்டைகள் உலராமல் ஈரமாக இருந்தன...

      லாக்டவுன் வருவதற்குள் அனுப்பு வைக்க வேண்டி இருந்ததால் காயவைக்க நேரம் இருந்து இருக்காது...!

      ஓவர் டூ ஆசிரியர் சார்.

      Delete
  64. கொரில்லா சாம்ராஜ்யம்: டிரான்ஸ்பர் ஆல்பா என்ன இது? யார் இந்த சக்கரவர்த்தி? இந்த கதையில் கொரில்லாவுக்கு என்ன வேலை என்பதை நெஞ்சை படபடக்க செய்யும் சித்திரங்கள் மற்றும் சம்பவங்களுடன் தட தடக்கும் வேகத்தில் முதல் பக்கத்தில் இருந்து கடைசி வரை செல்லுகிறது. மாயாவி தனியாளாக அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்து உலகை காக்கும் விதம் வழக்கமான template என்றாலும் கதையின் வேகம் மறக்க செய்கிறது.

    புத்தகத்தின் அட்டை படம் செம, ஓவியருக்கு பாராட்டுக்கள்; அதே போல் கதையின் தலைப்பில் கொரில்லாவின் முகத்தை சேர்த்து வரைந்த விதம் சூப்பர்; தன்னை வடிவமைத்தவருக்கும் பாராட்டுக்கள். புத்தகத்தை முதலில் புரட்டும் போது என்னடா இது இப்படி பச்சை கலர் சிகப்பு கலர் சிங்குஜா என உள்ளது யோசனையுடன் படிக்க ஆரம்பித்தவுடன் கதையின் வேகம் இந்த குறையை பின்னுக்கு தள்ளி விட்டது!

    புத்தக வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்த சைஸ் (சிகப்பாய் ஒரு சொப்பனம்).

    குறை என்று தோன்றியவை: கதையின் வண்ணத்தை கொஞ்சம் டீசென்ட்-ஆக கொடுக்கலாம் (ஒருவேளை ஒரிஜினலில் இப்படி இருந்தால் எனது கமெண்ட்-ஐ திரும்ப பெற்று கொள்கிறேன்); ஆர்ச்சி கதையில் இதுபோன்ற வண்ணம்கள் தான் ஆனால் அது பெரிய சைஸ் என்பதால் கண்களை பெரியதாக உறுத்தவில்லை. அட்டைப்படம் ஒட்டிய விதம், பின் பக்க அட்டை புத்தகத்தில் இருந்து தனியாக வெளிவர ஆரம்பித்து விட்டது.


    கொரில்லா சாம்ராஜ்யம்: மாயாவியின் சாம்ராஜ்யம்.

    ReplyDelete
    Replies
    1. கதையின் விறுவிறுப்பு புத்தகத்த வைக்க விடல...வண்ணம் தானல பெரிய ப்ளஸ் மக்கா...ரோஸ் ஆரஞ்சு சிவப்பு பச்ச ஊதான்னு கலக்கிட்டார் ஓவியர்

      Delete
    2. // புத்தக வடிவமைப்பு எனக்கு மிகவும் பிடித்த சைஸ் (சிகப்பாய் ஒரு சொப்பனம்) //
      சிகப்பாய் ஒரு சொப்பனம் நார்மல் டெக்ஸ் சைஸ் தானே PFB...!!!

      Delete
    3. நள்ளிரவு வேட்டை? டெக்ஸ் கதை இந்த சைஸ் என நினைக்கிறேன் அறிவரசு. மன்னிக்கவும்.

      Delete
    4. அது நிலவொளியில் நரபலி பரணி

      Delete
    5. நிலவொளியில் நரபலி @ Thank you Kumar for the correction! I liked the story very much! Very thrilled one!!

      Delete
    6. அட இதுக்குப் போய் மன்னிப்பா....
      விட்டுத் தள்ளுங்க PFB...

      Delete
    7. பரணி@ புத்தகங்கள் அளவு பற்றி கம்பேர் செய்து இருந்த போட்டோக்கள் போடுகிறேன்... சீ யுவர் வாட்ஸ்ஆப்.

      Delete
  65. பரணி ப்ரம் பேங்களூர் குறை நிறைகளைபாரபட்சமில்லாமல்விமர்சித்துள்ளீர்கள் சூப்பர்

    ReplyDelete
  66. கொரில்லா சாம்ராஜ்ஜியம். புத்த கத்தை இரண்டாம் முறையாக ஆர்டர் போட்டு கடைக்காரர் வாங்கிக் கொடுத்தார். சிறிய புத்தகம் பெரிய படங்கள்.அருமை!. நண்பர் சொன்ன துபோல் பார்டர் தாண்டிய வர்ணங்கள் குறிப்பாக செடிகொடிகளுக்கு...கொஞ்சம் உறுத்தல் தான்.... மற்றபடி மறக்க முடியாத பொக்கிஷம் இந்த இதழ்!

    ReplyDelete
  67. வணக்கம் ஆசிரியர் சார்.இரத்தப்படலம் முன்பதிவு எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது சார்?!

    ReplyDelete
  68. //ட்யுராங்கோ இதழ் கூட கெட்டி அட்டை நடுவில் அமுங்கியநிலையிலும்,ஓரப்பகுதிகளில் சற்றே தூக்கியவாக்கிலும் வந்துள்ளது...
    நிறைய இதழ்களை ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அடுக்கும்போது வரும் பளுவினால் இது போன்றநிலை ஏற்படுகிறதா என்று தெரியவில்லை...//

    +1

    தரமாக தயாரித்தும் கைக்கு கிடைக்கும்போது இவ்வகையில் இருந்தால் உங்கள் உழைப்புக்கும் உரிய பயன் இல்லை, வாங்கிய வாசகர்களுக்கும் திருப்தி இல்லை. ஆதலால் புத்தகங்கள் சேதமின்றி சென்றடைவது மிக முக்கியம். கவனிப்பீர்களா.

    ReplyDelete
  69. விஜயராகவன் @ டெக்ஸ் கதைகளின் புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் உங்களை பாராட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் ச்சே மஹி மண்டைலயே கொட்டும் அபாயம் இருப்பதால் சந்தோசம் பரணி😍😍😍😍

      Delete
  70. சார் இன்று பதிவுக் கிழமை....

    ReplyDelete
    Replies
    1. ஆமா.. சார்... லாக்டவுன் போட்டுபுட்டாங்க.. இனி இதான் நாங்க இளைப்பாறும் மரநிழல்.. வாரம் இருபதிவுகள் வரட்டும் சார்.🙏🙏🙏🙏🙏

      Delete
  71. B and Bஸ்பெசல். ரிவ்யூ ப்ளீஸ் சார். இன்றுபதிவுக்கிழமை. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. +1... மாடஸ்தியும் 007ம் புதிய சைசில் நல்லாவே இருக்கும்....

      Delete
  72. thalaiva... please captain tigerin "irumbukai ethan" FULL release please.. thanks, Naveen germany.

    ReplyDelete
    Replies
    1. கூடவே இளமையில் கொல்"--- பாகம்2&3 ஒரே இதழாக போட்டா டைகர் கம்ப்ளீட்டாக கலரில் இருக்கும்...ஆவண செய்யுங்கள் சார் ப்ளீஸ்....🙏🙏🙏🙏🙏

      Delete
  73. எடிட்டர் சாரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...!!!(ஈவிக்காண்டி)

    ReplyDelete