நண்பர்களே,
வணக்கம். இந்த ரெண்டு நாள் ரகளைகள் மத்தியில் ஒற்றை விஷயம் யாருக்கும் புலப்பட்டது போலத் தெரியக்காணோம் என்பதே எனக்கு செம ஆச்சர்யம் ! அது வேறொன்றுமில்லை - "டெக்ஸ்" எனும் அசாத்தியனை முன்னெப்போதையும் விட நான் ரொம்ப miss பண்ணியது நேற்றைக்குத் தான் ! 'அட..இது என்ன சொட்டை மண்டைக்கும்..முட்டிங்காலுக்குமான முடிச்சு ?" என்கிறீர்களா ? இருக்கே ...வல்லிய சம்பந்தம் இருக்கே ! சின்னதாய் ஒரு கிரிக்கெட் உவமானத்தைச் சொல்ல முற்படுகிறேனே - எனது பாயிண்டை விளக்க !
நமது இந்திய அணியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஸ்டார்ஸ் இருப்பர் ! எழுபதுகளில் கவாஸ்கர், விஸ்வநாத்..கபில் தேவ் ! எண்பதுகளில் ரவி ஷாஸ்த்ரி ; அசாருதீன் ; ஸ்ரீகாந்த் ! தொண்ணூறுகளில் சச்சின் ; காம்பிளி ; ஸ்ரீநாத் ; அணில் கும்ப்ளே ; இரண்டாயிரத்தில் டிராவிட் ; கங்குலி ; லக்ஷ்மன் ; இப்போது கோஹ்லி ; ரோஹித் ; பும்ராஹ் என்று ! ஆனால் நியூசிலாந்து அணியைப் பார்த்தால் உலகை மிரட்டும் அதிரடியாளராய் யாருமே அங்கே இருக்க மாட்டார்கள் ; ஒரு யுகத்துக்கு ஒருவாட்டி ரிச்சர்ட் ஹேட்லீ ; மார்ட்டின் க்ரோ ; கேன் வில்லியம்சன் என்ற பெயர்கள் அடிபடும் ! ஆனாலும் கலந்து கொள்ளும் ஒவ்வொரு போட்டியிலும் செம்மையாய் மல்லுக்கட்டுவார்கள் ! So வெளியிலிருந்து பார்க்கும் போது star power என்று கெத்தாய் எதுவும் தெரியாதுமே வேலையைச் செய்து முடிக்கும் திறனுண்டு அவர்களுக்கு !
சரி, இந்தப் பெனாத்தல் எதற்கென்கிறீர்களா ?
இன்றைய முத்து காமிக்ஸ் கிட்டத்தட்ட நியூசிலாந்தின் கிரிக்கெட் அணியைப் போல காட்சி தருவதே இன்றைய இந்தக் கரைச்சல்களுக்கு மூல காரணம் என்பதில் எனக்கு ஐயமே இல்லை ! ரிப்போர்ட்டர் ஜானி ; தோர்கல் ; SODA ; சிக் பில் ; மார்ட்டின் ; ராபின் - என்ற பெயர்கள் காதில் விழும் போது நம் முகங்களில் ஒரு சன்னப் புன்னகை பூத்திடலாம் ! ஆனால் அதே சமயத்தில், "டெக்ஸ் வில்லர்" என்று மட்டும் உச்சரித்துப் பாருங்களேன் ! மின்சாரம் பாய்ந்தது போல - சம்சாரம் தந்த கழனித்தண்ணியையும் ஓரம் கட்டி விட்டு எழுந்து நிற்கத் தோன்றும் ! இன்றைக்கு மட்டும் 'தல' முத்து காமிக்ஸின் நாயகராய் இருப்பின் - "மக்கா..ரெண்டாயிரம் பக்கத்துக்கு ஒரே புக்குலே ! என்ன - ஓ.கே.வா ? ..சரி..ரைட்டு...ரெண்டாயிரத்து ஐநூறா ? போதே..போதே.. வைச்சுக்கோ ! சரிதானுமலே ?" என்றபடிக்கே தோராயமாய் 2 கிலோ எடைக்கு ஒற்றை டெக்ஸ் வில்லரை உங்களிடம் ஒப்படைத்து விட்டு ஜாலியாய் நடையைக் கட்டியிருக்க மாட்டேனா ? And நீங்களும் என்னைக் கொண்டாடித் தீர்த்திருக்கமாட்டீர்களா - இன்றைக்குத் தீர்த்து விட்டுக் கொண்டாடுவதற்குப் பதிலாக ?
WE MISS A REAL SUPER STAR in MUTHU COMICS today & that is the bottomline !
- மாயாவி - தொடர் முடிஞ்சு ஒரு யுகமாச்சு !
- லார்கோ - தொடர் முடிஞ்சதோ, இல்லியோ - அதன் மீதான ஈர்ப்பு முடிஞ்சது !
- கேப்டன் டைகர் - தொடர் முடிஞ்சதோ, இல்லியோ - அதன் மீதான ஈர்ப்பு முடிஞ்சது !
- ட்யுராங்கோ - தொடரே முடிஞ்சது !
- தோர்கல் - At best இவரொரு கேன் வில்லியம்சன் ! ஆனால் கணிசமாய் டிக்கெட்டுக்குப் பணம் தந்து மேட்ச் பார்க்க வருவோர் தேடக்கூடியது ஒரு விராத் கோஹ்லியையே தவிர வில்லியம்சனை அல்ல !
- சிக் பில் - ஆதர்ஷங்களுக்குரியவர் தான் ; ஆனால் உலகை அசைக்கப் போகிறவரல்ல !
So சொல்லவும் தெரியாது, மெல்லவும் முடியாது - 'இன்னாமோ குறையுதே..இன்னாமோ குறையுதே !' என நம்மில் பெரும்பான்மை புலம்புவது இந்த ஒற்றைக் காரணத்தின் பொருட்டே என்பதில் சந்தேகங்களும் இருக்க இயலுமா ? இதோ - இந்நேரம் "இளம் டைகர்" தொடர் மட்டும் தீயாய் இருப்பின் - இந்தப் பஞ்சாயத்தே கூடியிருக்குமா என்ன ? இதோ, இன்னமும் ட்யுராங்கோ தொடரில் கதைகள் பாக்கியிருப்பின், இப்படி முழிக்க அவசியப்பட்டிருக்குமா ? அவற்றிற்கு சாத்தியமில்லை எனும் போது தான் தடுமாறுகிறோம் !
And காலமாய் ஹீரோக்களை ஆராதித்தே நமது (காமிக்ஸ்) வாசிப்புகள் அமைந்திருக்க, one-shot தொடர்கள் எத்தனை வீரியமானவைகளாக இருந்தாலுமே - அவற்றின் பக்கம் இது போன்ற ஸ்பெஷல் தருணங்களில் ஒதுங்கிட நம்மில் ஒரு பகுதியினருக்கு உதறுகிறது ! So அத்தனை காமிக்ஸ் சாமுத்ரிகா லட்ஷணங்களும் இருக்கப் பெற்ற நாயகர் யாரேனும் திடு திடுப்பென நம் மத்தியில் விழுந்து வைத்தாலொழிய - இந்த S.J. சூர்யா பாணியிலான - "இருக்கு...ஆனா இல்லே..!" ரவுசுகள் ஓய்ந்திடவே போவதில்லை ! So புனித தேவன் மனிடோவுக்கு பெட்டிஷன் போட்ட கையோடு, தேடல்களை வேகப்படுத்துவதே இனி நமக்கிருக்கும் வழி !
ஒற்றை வரியில் சொல்வதானால் - டெக்சின் ஆற்றல் சராசரி நாயகர்களின் அண்மையில் தான் நிஜமான பரிமாணத்தில் புரிகிறது ! திருவிழா ரிலீசுக்கு ஒரு "பாட்ஷா" தேவையெனில் - அங்கே பாட்ஷாவாய் ; அண்ணாமலையாய் ; கத்தியாய் ; கில்லியாய் ; பில்லாவாய் ; வலிமையாய் நிற்கும் திறன் அந்த மனுஷனுக்கு மாத்திரம் தானே இன்றைக்கு உள்ளது ?!
'தல'.....பொலம்ப விட்டுப்புட்டியே தல ?!! 😁😁😁
புலம்பல் ஒருபக்கமிருக்க - இங்கு ஆக வேண்டிய பணிகளைப் பற்றிப் பேசிட்டால் மரம் நடும் படலம் இனிதே முடிந்தது போலிருக்கும் என்று நினைக்கிறேன் ! So let 's get on with it guys !!
பொறுப்பு # 1 : முதலில் இந்த இதழுக்கான பெயர் தேர்வு !! "ஐம்பதாவது ஆண்டு மலர்" என்று எழுதிக் கொள்ளலாம் தான் ; ஆனால் இன்னும் கெத்தாக ஏதேனும் தேறுமா என்று யோசியுங்களேன் all ? 'நச்'சென்ற பெயர் சூட்டுபவரின் போட்டோவுடன் அந்த ஸ்பெஷல் இதழில் credit வழங்கப்படும் ! So give it a shot guys !!
பொறுப்பு # 2 : நம் மத்தியிலுள்ள நண்பர்களின் டிசைனிங் ; கம்ப்யூட்டர் graphics ஆற்றல்கள் எத்தகையன என்பதை இதோ நண்பர் கிரிதரசுதர்சனின் ஆக்கங்கள் நிரூபித்து விட்டுள்ளன ! So முத்து காமிக்ஸ் லோகோவுடன் "50 ஆண்டுகளாய் உங்களுடன்" என்ற வாசகத்தை ஸ்டைலாக டிசைன் செய்து தந்திட உங்கள் சகாயங்களே தேவை guys ! இந்த logo 2022-ன் முழுமைக்கும் முத்து காமிக்ஸ் இதழ்களை அலங்கரிக்கும் ! And டிசைன் செய்து தரும் நண்பருக்கும் போட்டோ + credit இதழினில் இருக்கும் !
பொறுப்பு # 3 : ஒரு மைல்கல் இதழினில் பங்கேற்க விரும்பும் அனைவருக்குமே நமது கதவுகள் 'பப்பரக்கா'வென திறந்தே இருக்கும் ! இன்றைக்கு ஆளாளுக்கு சிலாகிக்கும் அந்த golden oldies நாயகர்களுக்கு இடமின்றிப் போனாலும், அவர்களுடனான உங்களின் மலரும் நினைவுகளுக்கு நிச்சயம் புக்கில் இடமிருக்கும் ! உங்கள் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கக்கூடிய classic சாகஸத்தைப் பற்றி ; அந்த இதழை நீங்கள் இன்னமும் ஆராதிக்கும் நினைவுகளை பற்றி அழகாய் எழுதி அனுப்பிடலாம் ! அவற்றுள் சுவாரஸ்யமானவற்றை சீனியர் எடிட்டர் தேர்வு செய்வார் & அவை இந்த ஸ்பெஷல் இதழில் இடம்பிடிக்கும் - again உங்களின் போட்டோக்களுடன் ! Of course - அதற்கு நேரமுள்ளது தான் ; October '21 வாக்கில் அனுப்பினால் போதும் ! (பி.கு. உங்களில் எத்தினி பேர் சும்மானாச்சும் பழைய புக்சின் தலைப்புகளை மட்டும் தெரிந்து வைத்துக் கொண்டு, "மூச்சிலே கலந்திருக்கு ; மூக்குப்பொடியிலே கலந்திருக்கென" பீட்டர் விட்டு வந்திருக்கிறீர்கள் ? எத்தினி பேர் மெய்யாலுமே அந்நாட்களில் அவற்றை ரசித்துள்ளீர்கள் ? என்பதையும் அறிந்திட இது உதவக்கூடும் என்ற நினைப்புலாம் நிச்சயமா கிடையாதுங்கோ !!)
பொறுப்பு # 4 : மனஸ்தாபங்கள், மாற்றுக் கருத்துக்கள், முரண்பாடுகள் ; அபிப்பிராய பேதங்கள் என ஏதேதோ காரணங்களின் பொருட்டு விலகி நிற்கும் நண்பர்களுமே இந்தக் கொண்டாட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ள முன்வந்தால், சர்வ நிச்சயமாய் வரவேற்றிட நாங்கள் காத்திருப்போம் ! பிரிந்தோர் கூடுவதற்கு இத்தகையதொரு once in a lifetime சமாச்சாரம் உதவிட்டால் அற்புதமாக இருக்காதா ? End of the day - விலகி நிற்போரின் வருத்தங்கள் என் மீதே தானன்றி - முத்து காமிக்ஸ் மீதோ ; அதன் கர்த்தாவான சீனியர் எடிட்டர் மீதோ அல்ல என்பதில் ஏது ரகசியம் ? காத்திருப்பது உங்கள் அபிமான இதழின் மைல்கல் தொடும் வேளை + அதன் பிதாமகரின் முயற்சியினை கொண்டாடும் வேளை எனும் போது - என் மீதான பிடித்தமின்மை உங்களை விலகி நிற்கச் செய்திடத் தேவையில்லையே ? So இந்த லோகோ டிசைனிங் ; பெயரிடல் ; நினைவலைகளை பகிர்தல் என சகலத்திலும் அவரவர் இயன்ற பங்கெடுத்திடலாமே guys ?
பொறுப்பு # 5 : இது வரையிலான சுமார் 450+ இதழ்களின் பட்டியலைப் போட்டு விடலாம் தான் ! ஆனால் சில ஆலமரங்களுக்கு முன்பான பதிவினில் நண்பர் ஒருவர் கோரியிருந்தது போல - இதுவரையிலான இதழ்களின் அட்டைப்படங்களை தொகுத்து ஒரு booklet ஆக்கிட இயன்றால், ஒரு அட்டகாச walk down memory lane போலிருக்கும் தான் ! 2012-க்குப் பின்பான சுமார் 140+ இதழ்களின் ராப்பர்கள் டிஜிட்டலில் நம்மிடமே உள்ளதால், அவற்றை திரட்டுவது சுலபமே ! ஆனால் அதற்கு முன்பான அட்டைப்படங்களை திரட்டிட நீங்கள் கரம் கோர்த்தால் maybe சாத்தியப்படக்கூடும் ! நிறையவே அவகாசம் உள்ளது நமக்கு...இப்போதிலிருந்து இதற்குப் பொறுப்பேற்று நண்பர்கள் குழுவாய் செயல்பட்டால் & அந்த முயற்சியினில் ஜெயம் கிட்டினால் - அதனை ஒரு வண்ண புக்காக்க ready ! முழுவதும் விலையின்றி இந்த புக்கினை உருவாக்க லயன் காமிக்ஸ் ஆவன செய்திட ரெடி !Are you game for it people ?
And yes of course - இந்த முயற்சியில் ஈடுபடும் நண்பர்களுக்கு உரிய credits அந்த booklet-ல் தரப்படும் !
பொறுப்பு # 6 : கொஞ்ச காலமாகவே பேசிட எண்ணியது தான் ; ஆனால் ஒரு மாதத்துப் பணியிலிருந்து அடுத்த மாதத்துப் பணியென குதித்துக் குதித்து போவதிலேயே நாட்கள் கரைந்திருக்க, எதுவும் இயன்றிருக்கவில்லை ! Instagram ; FB ; உங்களின் தனிப்பட்ட வாட்சப் குழுக்கள் என இன்றைக்கு ஏகமாய் சமூக வலைத்தளங்களில் ரவுண்டடித்து வருகிறீர்கள் ! ரெகுலராய் அங்கெல்லாம் நாம் விளம்பரங்கள் செய்திட வேண்டுமென்பது சீனியர் எடிட்டரின் அவா ! நேற்றைக்கு நண்பர் கிரி அனுப்பியிருந்த கிராபிக்ஸ்களைப் பார்த்த போது - இந்தத் தரத்தில் அவ்வப்போது content + graphics உருவாக்கிட வேண்டியதன் அவசியம் ரொம்பவே அழுந்தப் புரிந்தது ! கரைவேட்டிக் கட்சிகளே இன்றைக்கு IT டீம்களென்று கலக்கி வரும் போது - நாமும் அந்த IT ஜோதியில் கலந்திட வேண்டிய வேளை புலர்ந்து விட்டதென்று படுகிறது !! So ஆர்வமுள்ள நண்பர்கள் மின்னஞ்சலில் கைதூக்கி தகவல் சொல்லிடும் பட்சத்தில், நமது சமூக வலைத்தளத் தேவைகளுக்கான graphics ; videos ; memes என உருவாக்கும் பொறுப்பினை ஒப்படைத்து விடலாம் ! (தமிழ்நாட்டில் வைகைப் புயலுக்கு அடுத்தபடியாக நிறைய content தந்திருக்கக்கூடிய ஆசாமிகளுள் அடியேன் பிரதானமாக இருப்பேன் எனும் போது memes போட கணிசமான நண்பர்கள் முன்வருவர் என்று நினைக்கிறேன் !!) எங்கே நமது பிரஷாந்த் கிஷோர் ? எங்கே..? எங்கே ?
So - அசோக சக்கரவர்த்தி காட்டிய வழியில், நம்மளின் மரம் நடும் படலம் இங்கே இனிதே நிறைவுறுகிறது ! இப்போதைக்கு நட்டியுள்ள மரங்களுக்கு இயன்ற நீர்ப்பாசனங்களை செய்திட்டிருப்போம் guys ; இடைப்படும் நாட்களில் நான் இந்த ஸ்பெஷல் இதழ்களுக்கான மேலதிகக் கதைத் தேடல் ; பணிகளென்று ஓசையின்றி இயங்கத் துவங்கிடுவேன் ! And ஆண்டவன் அருளுடன், இந்த மைல்கல் இதழ் ஜனவரி 2022-ல் அழகாய் வெளிவந்திடும் தருணத்தில் தான் நீங்கள் அதன் முழுமையான content என்னவென்பதைப் பார்த்திட இயலும் ! அக்டோபர் '21 -ல் வெளிவரக்கூடிய அட்டவணையில் கூட - "முத்து ஆண்டுமலர் # 50 ; இன்ன விலை" - என்று மட்டுமே இருந்திடும் ! என்ன கதைகள் ? என்ன திட்டமிடல் ? என சகலமுமே திரையின் பின்னேயே இருந்திடும் ! Sorry for that guys ; ஆனால் இது தவிர்க்க இயலா அத்தியாவசியம் என்பதை புரிந்து கொள்வீர்களென்ற நம்பிக்கை எனக்குள்ளது !
So உங்கள் ஒவ்வொருவரையும் இயன்ற விதங்களில் புளகாங்கிதமடையச் செய்ய (!!) ஏதாச்சும் சரக்கினைத் தேற்றி விட்டு, இன்றிலிருந்து 221 நாட்களில் உங்களிடம் அந்த ஸ்பெஷல் இதழை ஒப்படைப்பதே என் முன்னான சவாலாக இருக்கும் ! ஷெர்லாக் ஹோல்ம்ஸ் நாவலில் ஒரு வரியானது ரொம்பவே பிரசித்தம் ; களமிறங்க வாட்சனை அழைக்கும் போது - "Come Watson ...the game is afoot !!" என்பார் ஹோல்ம்ஸ் ! இந்த நொடியில் எனக்கு நினைவுக்கு வருவது அதுவே !!
எனது முயற்சியில் ஜெயம் கிட்டுமா ; அல்லது பறந்து வந்து மூக்கின் மீது லேண்ட் ஆகும் கிட் ஆர்டினைப் போல சொதப்புவேனா ? - 221 நாட்களுக்குப் பின்னேயே தெரியும் ; ஆனால் இயன்ற சகலத்தையும் முழுமூச்சுடன் செய்திட முனைவேன் என்ற மட்டுக்கு உறுதியாய் நம்பிடலாம் ! Trust me, The Game is well & truly afoot guys !!
Bye all !! See you around !!
வணக்கம்
ReplyDeleteம்ம்ம்..ஜஸ்ட் மிஸ்டு
Deleteஹை நாந்தான் ஃபர்ஸ்ட்
ReplyDeleteமன்னிக்கவும் நண்பரே இரண்டுநாளா நான் வீட்டுக்கே போகல ஆலமரத்தடியிலேதான் இருக்கேன்...
Deleteஓகே ஓகே இப்பவாச்சும் ஜமுக்காளத்தை மடிங்க நண்பரே 🙂😃
Deleteசொம்பு, துண்டு சகிதமாக.
Deleteபஞ்சாயத்து நல்லபடியாக முடிந்தது கெளம்பவேண்டியதுதான் நண்பரே...
Delete///இரண்டுநாளா நான் வீட்டுக்கே போகல ஆலமரத்தடியிலேதான் இருக்கேன்...///
Deleteபழனி... 😂😂😂
பழனி வேலே இனி ஆலமரத்தை விட்டு வீட்டை நோக்கி பறக்கும் வேலாக மாறுவீராக
Delete3
ReplyDeleteமாலை வணக்கம் நண்பர்களே
ReplyDelete5
ReplyDeleteஇதுவரையிலான இதழ்களின் அட்டைப்படங்களை தொகுத்து ஒரு booklet ஆக்கிட இயன்றால், ஒரு அட்டகாச walk down memory lane போலிருக்கும் தான் !//
ReplyDeleteசிறந்த பரிசாக இது அமையும்...ஆசானே.. நிச்சயமா நான் முயற்சிக்கிறேன்....
ஆறாவது.
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDelete.
9th
ReplyDeleteஉங்கள் முயற்சி ஜெயமாகட்டும் சார்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ஏகப்பட்ட பொறுப்புகளை அன்புடன் வழங்கியுள்ளீர்கள்...ஏற்றுக்கொண்டு பணியை துவக்க வேண்டியதுதான்.
ReplyDelete13
ReplyDelete🙏🙏
ReplyDelete// "டெக்ஸ் வில்லர்" என்று மட்டும் உச்சரித்துப் பாருங்களேன் ! மின்சாரம் பாய்ந்தது போல - சம்சாரம் தந்த கழனித்தண்ணியையும் ஓரம் கட்டி விட்டு எழுந்து நிற்கத் தோன்றும் !//
ReplyDeleteஆனாலும் உங்களுக்கு தகிரியம் ஜாஸ்திதான் சார் ...
என்னமோ போங்க....
Delete// 'தல'.....பொலம்ப விட்டுப்புட்டியே தல ?!! 😁😁😁 ///
ReplyDeleteஇப்போதைக்கு எங்கள் தானைத் தலைவர் ப்ரியாதான் இருக்கார் சார்,.. அவரை வெச்சு (எதுவும்) செய்ய முடியாதா ?
+1234
Deleteஅக்டோபர் '21 -ல் வெளிவரக்கூடிய அட்டவணையில் கூட - "முத்து ஆண்டுமலர் # 50 ; இன்ன விலை" - என்று மட்டுமே இருந்திடும் ! என்ன கதைகள் ? என்ன திட்டமிடல் ? என சகலமுமே திரையின் பின்னேயே இருந்திடும்//
ReplyDeleteஇதுதான் செம ட்விஸ்ட் ஆசானே... நிச்சயமா சிறப்பாக இருக்கும்....
வணக்கம் நண்பர்களே!
ReplyDelete18
ReplyDelete221 நாட்களுக்குப் பின்னேயே தெரியும் ; ஆனால் இயன்ற சகலத்தையும் முழுமூச்சுடன் செய்திட முனைவேன் என்ற மட்டுக்கு உறுதியாய் நம்பிடலாம் ! Trust me, The Game is well & truly afoot guys !!
ReplyDeleteஉறுதியாய் நம்புகிறோம் சார்... _/\_
Hi ..
ReplyDeleteகலக்குங்க சார் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ஐம்பதிலும் ஆசை வரும்
ReplyDeleteஆசையுடன் பாசம் வரும்....
Deleteஆண்டவன் அருளுடன், இந்த மைல்கல் இதழ் ஜனவரி 2022-ல் அழகாய் வெளிவந்திடும் தருணத்தில் தான்//
ReplyDeleteGodspeed Senior Editor, Editor, Junior Editor and Lion Muthu Team.
என்னைப் போன்ற காமிக்ஸ் ரசிகர்களின் வாழ்வில் இது ஒரு பொன்னான தருணமாக அமையப் போகிறது.
அப்புறம் நிறய இடத்தில் சிரிச்சு மாளலை. அதும் அந்த மூக்குப் பொடியோட கலந்துருக்கு. 🤣🤣🤣🤣
ReplyDeleteபுத்தகத்தின் பெயர் - "ஒளி குன்றா முத்தின் வயது 50" அல்லது "ஒளிரும் முத்தின் கீற்றுக்கள் 50" :)
ReplyDeleteவாழ்ந்துக்கள் சார்..
ReplyDeleteஆவலுடன் காத்திருக்கிறேன்..
வெற்றி மலர்.
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteடியர் விஜயன் சார், இந்த பதிவை படிக்கும்போது வெகு நாட்களுக்கு முன் வெளிவந்த காமிக்ஸ் புத்தகமொன்றில் வாசகர் கடிதத்திற்கு நீங்கள் பதிலளித்த நியாபகம் உள்ளது.
ReplyDeleteலயனில் எக்கச்சக்க ஹீரோக்கள் உள்ளனர்.முத்துவில் லயன் அளவிற்கு பேமஸான ஹுரோக்கள் கிடையாது. அதற்கு காரணம் லயன் நீங்கள் துவங்கியது.
முத்து தங்கள் தந்தையிடமிருந்து வந்ததால் மாற்றாந்தாய் மனபான்மையுடன் முத்துவை நீங்கள் அனுகுகிறீர்கள் என்று குற்றம் சாற்றியிருந்தார்.
அதற்கு தாங்கள் அழகான பதில் அளித்திருந்தீர்கள்...
அந்தநினைவுகள் ஏனோ இந்த பதிவினை பார்க்கும்போது நினைவுக்கு வருகிறது
அனைவருக்கும் வணக்கம் வைப்பது சின்னமனூர் சரவணர்ங்க...
ReplyDeleteமுத்து நாட் அவுட் கோல்டன் ஜூபிலி ஸ்பெஷல் !
ReplyDeleteMUTHU NOT OUT GOLDEN JUBILEE SPECIAL !
Muthu Golden Special ....MGS
Deleteபதிவின் இறுதியில் அனல் தெறிக்கிறது சார்! ஆனால் இந்தமுறை வேறுமாதிரியான அனல் - இது உற்சாக அனல்; உறுதிமொழி அனல்; உண்மையான உழைப்புக்கான அனல்!!!
ReplyDeleteஇன்னும் 221 நாட்கள் கவுண்ட்டவுனில் குதூகலமாகக் கழிந்திடப் போவதில் எங்களுக்கும் உற்சாகமே!!
உய்ய்ய்.. உய்ய்ய்.. உய்ய்ய்!!!
// முத்து ஆண்டுமலர் # 50 ; இன்ன விலை" - என்று மட்டுமே இருந்திடும் ! என்ன கதைகள் ? என்ன திட்டமிடல் ? என சகலமுமே திரையின் பின்னேயே இருந்திடும் ! //
ReplyDeleteஇதை மொதல்லயே பண்ணியிருக்கலாம் சார்...
யோசியுங்கள் சார் .பின்னணியிலிருக்கும் லாஜிக் புரியாது போகாது !
Deleteஇப்பதாங்க, ஒரு கிக்கே இருக்குது...
Deleteபொழுது போக்காக செய்த செயலுக்கு கிடைத்திருக்கும் பாராட்டுகளுக்கு மிக்க மிக்க நண்றி.
ReplyDeleteநமது காமிக்ஸ் முன்னேற்ற கழகத்திற்க்கு என்னால் ஆன உதவிகளை செய்ய தயார்.
கா.மு.க. ஏஜெண்ட் 1 - welcome on board !
DeleteInstagram ; FB ; உங்களின் தனிப்பட்ட வாட்சப் குழுக்கள் என இன்றைக்கு ஏகமாய் சமூக வலைத்தளங்களில் ரவுண்டடித்து வருகிறீர்கள் ! ரெகுலராய் அங்கெல்லாம் நாம் விளம்பரங்கள் செய்திட வேண்டுமென்பது சீனியர் எடிட்டரின் அவா !
ReplyDeleteஅஅனைவரும் ஒன்று சேர்வோம் சார். இது ஒரு ஸ்மாஷ் ஹிட்டாவது உறுதி.. நண்பர்கள் சார்ந்திருக்கும் அத்தனை குழுவும் தயார் நிலையிலேயே காத்திருப்பார்கள்..
:-) :-)
Deleteமுத்து 50 ல் இடம்பெறவிருக்கும் கதைகள் சீக்ரெட்டாக இருப்பதே சிறப்பு சார். ஹேப்பி டேஸ் வில் கம்..We believe in M-50
ReplyDelete// முதலில் இந்த இதழுக்கான பெயர் தேர்வு !! //
ReplyDelete1.The Legend-50,
2.Golden Special...
3.Muthu Chanceless Special-MCS
Delete4.Muthu Cocktail Special-MCS
EVERGREEN SPECIAL
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteNOT OUT SPECIAL
ReplyDeleteGOLDEN JUBLEE SPECIAL
ReplyDeleteமுத்துக்கு முத்தாக 50
ReplyDeleteஉண்மைதான் சார். எல்லா காமிக்ஸ் சாமுத்திரிகா லட்சணங்களும் கூடிய நாயகர் முத்துவில் தற்போது இல்லாத தின் நிதர்சனம் இப்போது புரிகிறது. முத்து காமிக்ஸ் இன் மூத்த வாசகர்கள் தாங்கள் ஆராதிக்கும் இதழ்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஐடியா - சூப்பர். என்னைப் போன்ற அவ்விதழ்கள் பலவற்றை தரிசிக்கா வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்.
ReplyDeleteமுத்து இளமைச் சிறப்பிதழ்
ReplyDeleteமுத்துமழை50
ReplyDeleteபொன் முத்துச் சிறப்பிதழ்
ReplyDeleteதங்கப் புதையல் சிறப்பிதழ்
ReplyDeleteநண்பா்களே, ஒவ்வொரு பின்னூட்டமாக பெயர்களை பதியாமல் ஒட்டுமொத்தமாகச் சேர்த்து பதிவிடுங்களேன்... ப்ளீஸ்.
ReplyDelete//இந்த மைல்கல் இதழ் ஜனவரி 2022-ல் அழகாய் வெளிவந்திடும்//
ReplyDelete--- முத்து 50 இமாலய வெற்றியடைய வாழ்த்துகள் சார்💐💐💐💐💐
ஜம்பதிலும் இனிக்கும் சிறப்பிதழ்
ReplyDeleteMFFS-Muthu Festive Fifty special or Muthu Fifty festival special,MGFS-Muthu golden festival Special
ReplyDeleteஅட்டகாசமான பதிவு சார். இதழில் வரும் கதைகள் புத்தகம் வரும் போது தான் தெரியும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. எப்போதும் போல ஆவலுடன் 50ஆவது ஆண்டு மலரை எதிர் நோக்கி.....
ReplyDeleteஇதே அனுபவத்தை NBS ன் வெளியீட்டின் போதுஅனுபவத்திருக்கிறோம் நாங்கள்..என்ன கதைகள்னு தெரியும் ஆனாலும் மறக்க இயலா அனுபவம்...அட்டைய கூட கண்ல காட்டல...
Deleteஒளிரும் தங்கச் சிறப்பிதழ்
ReplyDeleteஅன்புடன் 50 சிறப்பிதழ்
ReplyDeleteMUTHU MILESTONE SPECIAL (MMS)
ReplyDeleteMUTHU GOLDEN JUBILEE MILESTONE SPECIAL (MGJMS)
MUTHU GOLDEN JUBILEE NOT-OUT SPECIAL (MGJNS)
///MUTHU MILESTONE SPECIAL (MMS)///
DeleteSimply superb!!
Thanks Ji :-)
DeleteMUTHU GOLDEN SPECIAL
ReplyDeleteMUTHU FIFTY GOLDEN SPECIAL(MFGS)
ReplyDeleteMUTHU MEGA MILESTONE SPECIAL (MMMS)
ReplyDeletegood one!! we can call it as 'triple-M special'!
DeleteMuthu golden jubilee edition
ReplyDelete50Th year annual Smash hits.
ReplyDeleteMuthu golden edition
ReplyDeleteMuthu comics golden jubilee
ReplyDeleteMCGJ
Or
Muthu Golden Special MGS
முற்று பெறாத முத்துக்கள் 50
ReplyDeleteவாழத்துக்கள் சார்
ReplyDeleteமுத்து 50
ஆவலுடன் காத்திருக்கிறேன்..
MUTHU NON-STOPABLE SPECIAL (MNS)
ReplyDeleteMUTHU GOLDEN JUBILEE NON-STOPABLE SPECIAL (MGJNS)
MGM-50 SPECIAL (MUTHU GOLDMINE "50" SPECIAL)
ReplyDeleteமுத்து 50 நாட்அவுட் ஸ்பெஷல்..
ReplyDelete///அக்டோபர் '21 -ல் வெளிவரக்கூடிய அட்டவணையில் கூட - "முத்து ஆண்டுமலர் # 50 ; இன்ன விலை" - என்று மட்டுமே இருந்திடும் ! என்ன கதைகள் ? என்ன திட்டமிடல் ? என சகலமுமே திரையின் பின்னேயே இருந்திடும்...//
ReplyDelete--- ஙே.ஙே.ஙே..!!
தங்களது திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே முழு மனதுடன் ஆதரித்து வந்தவர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்வதுனு தெரியலயே சார்!!!????
1990ல் காமிக்ஸ் உலகில் நுழைந்து ஓரிரு ஆண்டுகளில் இருந்து தங்களோடு பயணித்து வந்துள்ளேன்.
1994ன் லயன் சென்சுரி ஸ்பெசல் நான் லைவாகப் பார்த்த முதல் மைல்கல் இதழ்..
அன்று முதல் ஒவ்வொரு மைல்கல் இதழும் அறிவிப்பு செய்யபட்டது... மாற்றங்கள்... வெளியீடுகள் என சகலமும் மனப்பாடம்!
28 ஆண்டில் முதல் முறையாக ஒரு இதழ் என்னவென்றே தெரியாமல் திரைமறைவில்...!!!
இது எப்படி எதனால் இருந்தாலும், நடந்திருக்க கூடாத நிலை...
மெச்சூரிடி ஆவதற்குப் பதில் தலைகீழாக போவதைப் பார்க்க சங்கடமாக உள்ளது!
எனி ஹவ் தங்களின் முடிவில் பூரண சம்மதம்! தங்களின் பின்னே எப்போதும் போல தொடர்கிறேன்!
வழக்கம் போல தங்களது முயற்சி முழு வெற்றியடைய புனித மனிடோ அருளட்டும்.
வெயிட்டிங் பார் த 221 st day!!!😍
// சம்சாரம் தந்த கழனித்தண்ணியையும் ஓரம் கட்டி விட்டு எழுந்து நிற்கத் தோன்றும் ! //
ReplyDelete:-)
சம்சாரம் தந்த கழனித்தண்ணியையும் ஒரே கல்பில் குடித்துவிட்டு விட்டு எழுந்து நிற்கத் தோன்றும் என சொல்லுங்க சார்! :-)
ஞான் காப்பி ; டீயே குடிக்கிறதில்லீங்கோ !
Deleteஅப்ப எப்படி தெரியும் சாரே :-)
Deleteமுத்தம் 50
ReplyDelete///'நச்'சென்ற பெயர் சூட்டுபவரின் போட்டோவுடன் அந்த ஸ்பெஷல் இதழில் credit வழங்கப்படும் ! So give it a shot guys !!///
ReplyDelete"நச்" ஷ்பெசல்
சார் நீங்க சொன்னமாதிரியே நச் சுன்னு பெயர் சூட்டிட்டேன்.. நாந்தானே வின்னரு.!?
முட்டுச் சந்துக்குள்ளாற விட்டு "நச்சிட"போறாங்க !
DeleteMUTHU GOLDEN JUBILEE DYNAMITE
ReplyDeleteஅவ்வளவுதான் தம் கட்ட முடிஞ்சது. நாளைக்கு விடிஞ்சப்றம் வாரேன். அட "விடியல் ஸ்பெஷல்" அப்டினுகூட வச்சிக்களாமே. :-))
Deleteமுத்து பொன்விழா மலர்
ReplyDeleteMUTHU GOLDEN ANNUAL SPECIAL (MGAS)
ReplyDeleteTHE MUTHU GOLDEN SPECIAL
ReplyDeleteMUTHU ""50""SPECIAL
ReplyDeleteMuthu 50/50 - நீங்க எதை செய்தாலும் சிறப்பாகவே இருக்கு சார் ...Advance wishes sir
ReplyDeleteMuthu stunning 50- siver jubilee edition
ReplyDeleteMuthu magnificent special - silver jubilee edition
ReplyDeleteSry golden jubilee ..manichu
Delete
ReplyDeleteGEM Special (GOLDEN ERA of MUTHU SPECIAL)
Nice
Deleteதங்க முத்து ஸ்பெஷல் (TMS) 😛
DeleteVinesh.. 😝😝😝
DeleteMUTHU SWEET FIFTY SPECIAL
ReplyDeleteமுத்து பொன்விழா சிறப்பிதழ்
ReplyDeleteமுத்து தங்கச் சிறப்பிதழ்
ReplyDeleteMuthu Awesome 50
ReplyDeleteGOLDEN MUTHU SPECIAL (G M S )
ReplyDeleteTHE GOLDEN MUTHU SPECIAL
ReplyDelete"முத்து பவள விழா சிறப்பிதழ்"
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை முத்துபவள விழாவே...........
Deleteபவளவிழா என்பது 75 ஆம் ஆண்டுக்கு.
Deleteஇது 50 ஆம் வருடம். பொன்விழா.
// பொறுப்பு # 2 :
ReplyDelete// "50 ஆண்டுகளாய் உங்களுடன்" என்ற வாசகத்தை //
இதே வாசகம்தான் இடம்பெற வேண்டுமா?? இல்லை இதற்கு இணையான வாசகங்களாக மாறுதல் செய்து கொள்ளலாமா??
MUTHU GOLDEN GEYS SPECIAL ( M G G S )
ReplyDeleteMUTHU GOLDEN YEAR SPECIAL (M G Y S)
ReplyDeleteOne-n-only Muthu Golden Special(OMG Special)
ReplyDeleteMuthu Golden Milestone Special (MGM Special)
Muthu Iconic Treasure (MIT Special)
Fabulous n Fifty (FnF Special)
Fiftieth Anniversary Treasure (FAT Special- குண்டு புக்குக்கு ரொம்ப பொருத்தம் 😄)
I'm in for IT wing (Twitter especially) 🙏
Delete///I'm in for IT wing (Twitter especially) ///
DeleteGreat!! கலக்குங்க vinesh!!
முத்து தங்க விழாச் சிறப்பிதழ்
ReplyDeleteM 50 special,MFS. Shortly M50
ReplyDeleteMUTHU 50 - THE LEGACY SPECIAL ..
ReplyDeletetagline : celebrating 50 golden years of the pioneer in tamil comics ..
Deleteதமிழ் காமிக்ஸ் உலகின் முன்னோடியின் பொன் விழா கொண்டாட்டம் ..
விஜயன் சார்,
ReplyDeleteநானாக இருந்தால் நச்சென்று ஒரிஜினலாக என்ன இருக்கிறதோ அதையே பெயராக வைத்திருப்பேன்! அதனால்தான் நீ கமெண்ட் போடுகிறாய் என்று - யாருடைய மைண்ட் வாய்ஸோ சத்தமாக கேட்கிறது :)
முத்து Comics Golden Jubilee !
tag line : 50 years of celebration!
நன்றி!
முத்துக்கு முத்தாக..
ReplyDeleteமுத்துக்களோ முத்துகள்...
முத்து எங்கள் சொத்து.
முத்தான கண்ணே..
முத்துவின் முத்தம் ..
மொத்தமும் முத்து...
ஐம்பது முத்து
நீ தானே கண்ணே முத்து...
முத்துச்சரம்...
வெற்றி வெற்றி...
Deleteஎல்லா பரிசும் எனக்கே..
இருங்க இருங்க எங்க கோவை கவி வருவார் 300 பதிவுகளை தாண்டும் வகையில் பெயர்களாக பொழிவார்....
ReplyDeleteஸ்டீல் நீங்க எங்க இருக்கீங்க????
வந்திட்டார்.. வந்திட்டார்! கீழே பாருங்க!!
Deleteபார்க்காம இருப்பேனா???
Deleteஎன்னால் மிடில
DeleteTHE MUTHU LEGEND SPECIAL
ReplyDeleteMUTHU GOLDEN SUPER SPECIAL ( M G S S )
ReplyDeleteசார் அட்டகாசமான பதிவு...நம்ம முத்துவின் பழம் அட்டைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரனும்.மிகச்சிறந்த கதைகள் தாங்கி வரவுள்ள அடுத்தாண்டு முத்து ஐம்பதாம் வருட இதழ்கள் தூள் கிளப்பும் ...எழுத்துகள் ஒவ்வோர் வானவில் கலர்ல ஜொலிக்கனும் டைகரின் ரத்தக்கோட்டை அட்டைப்படம் போல
ReplyDeleteகோல்டன் கலர்ல ஐம்பதாமாண்டு மலரெழுத்துக்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும்
Deleteஅப்புறம் காமிக்ஸ் டைம்ல முத்துவில் இடம் பிடித்த அனெத்து நாயகர்களும் ...ஜெரோம் ..இரகசிய உளவாளி000 உட்பட அனைவரும் ஓரங்களில் மாலையின் தோரணங்களாய்...பவளச்சிலை மர்மத்தை போல இடம் பிடிக்கனும்...முடிஞ்சா பின்னட்டையில் லயன் தீபாவளி மலர் 87 போல அனைத்து ஹீரோக்களாலும் நிறையுனும்...மனசுல இடம் மட்டுமன்று சொல்லிர வேணாமே ப்ளீஷ்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபோச்சு! கவிஞர் களமிறங்கிட்டார்!! இனி இப்பதிவில் கமெண்ட்டுகளுக்கான threshold value என்னன்னு இன்னும் சித்தநேரத்துல தெரிஞ்சிடும்!
Deleteநண்பர்களே,
ReplyDeleteஎனக்கு சரியாக தெரியவில்லை இருப்பினும் ஒரு ஐயம், இது முத்து காமிக்ஸின் 50வது ஆண்டு மலர் மட்டுமா அல்லது "தமிழ் காமிக்ஸின் 50வது ஆண்டு மலரா". கூகுளில் சரியான தகவல் இல்லை 1971ல் முத்து காமிக்ஸை மைய படுத்தியே தகவல்கள் உள்ளது. அதற்கு முன்பு வெளியான காமிக்ஸ் பதிப்பகம் பற்றிய தகவல் ஏதும் இல்லை.
ஆகையால் நாம் ஏன் இத்தருணத்தை பயன்படுத்தி "தமிழ் காமிக்ஸ் 50" / "50 years of Tamil comics" என்ற ரீதியில் விளம்பரம் (ட்ரெண்ட்) செய்யலாமே.
புதியதாய் டிசைன் செய்யும் லோகோவில் "எந்த பெயர் தேர்வாகிறதோ" (உதாரணம் முத்து 50 வது ஆண்டு மலர்) அதனுடன் 50 years of Tamil comics என்கிற வாசகத்தையும் இணைத்தால் மேலும் சிறப்பாக இருக்குமே. 50 என்பதை பெரிதாக்கி அதனுடன் லோகோ மற்றும் இவ்வாசகங்கள் இருப்பின் ரீச் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் அபிமானம். கூடிய விரைவில் இப்புதிய லோகோவை உறுவாக்கி அதையே சோசியல் மீடியாவில் உலவ விட்டால் புத்தகம் வெளியாகும் தருணம் நல்ல ரிசல்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழ் காமிக்ஸ் 50 என்பதை நமக்கு கொண்டாட உரிமை இல்லை எனில் முத்துவை மட்டும் மையப்படுத்தலாம். சார் இது குறித்து தங்கள் அபிமானம்.
I like the suggestion.
Deleteசூப்பர் நண்பரே
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteMilestone Special
ReplyDeleteLifetime Special
Onetime Special
Muthu Mass Special
Muthu Multi year Special
Muthu Onetime Special
Fabulous Fifty Special
Muthu Forever Special
Muthu FANtastic Special
// Muthu Mass Special //
DeleteGood!
MMS.. sounds good...👌👌👌
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசொல்றது தான் சொல்லறீங்க முத்து ஐம்பதாயிரம் விலை மலர் என்று சொல்லுங்க
DeleteKumar @ :-) :-)
DeleteThis comment has been removed by the author.
Deleteநீங்கள் போட்டு வரும் தொடர் மொக்கையில் வாத்து விட்டை கூட இடாது ஸ்டீல் !
Deleteமுத்துவின் தங்க விழா மலர்
ReplyDeleteகோரோனாவை வென்ற முத்துவின் தங்கமலர்
Golden victory special edition
முத்துவின் தங்க ஆண்டு வெற்றி மலர்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeletePfB....😆😆😆
DeleteNo comments
ReplyDeleteGOLDEN PEARL SPECIAL !
ReplyDeleteMID CENTURY SPECIAL !!
FIVE DECADES SPECIAL !!!
ஓகோ.. இதுக்கு மட்டும் கத்துதா இந்த பல்லி??
DeleteMUTHU UNBEATABLE SPECIAL
ReplyDeleteGOLDEN PEARL SPECIAL
ReplyDelete(GPS)
ஒரு மிடிலே ஸ்பெஷல் :-))
ReplyDelete200 வது கமெண்ட் ஸ்பெஷல் 😂
ReplyDeleteMUTHU INFALLIBLE MAGAZINE
ReplyDeleteMUTHU MARVEL SPECIAL (MMS)
ReplyDeleteநைஸ்👌👌👌
Deleteநன்றி அண்ணா..
DeleteMUTHU IMMORTAL MAGAZINE
ReplyDelete:-)
DeletePearl golden special. PGS.50
ReplyDeleteமுத்து மின்னல் மலர்
ReplyDeleteஅன்பு எடிட்டர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
ReplyDeleteமுத்துக்கு பெயர் பெற்ற பாண்டிய நாட்டில்
முத்து ஏற்றுமதி தொடர்பாக ஒரு விதி இருந்த்து.யவனர் எடை விகிதங்களில் 1/2
அரை சாக்கியோ எடைக்கு மேற்ப்பட்ட முத்துக்கள் ஏற்றுமதிக்கு அனுமதி கிடையாது.1/2 சாக்கியோ எடைக்கு மேற்ப்பட்ட முத்துக்கள் பாண்டிய மன்னரின் பொக்கிஷத்துக்குதான் போகவேண்டும்.
(சௌந்திர) பாண்டியனின் பொக்கிஷ முத்து 50
நண்பரே இப்பதா...சௌந்திரபாண்டியனார் ஸ்பெசல் ஐம்பதுக்கு பேர் போட யோசிச்சேன்
DeleteMUTHU UNIQUE SPECIAL
ReplyDeleteவிஜயன் சார், இந்த பெயர் வைக்கும் படலத்திற்கு ஒரு ஆளுக்கு 5 தலைப்புகள் மட்டும் என நீங்கள் சொல்லி இருக்கலாம்! பாருங்க நம்ப ஸ்டீல் போட்டு தாக்கிகிட்டு இருக்கான்! இன்னைக்கு நைட்குள்ள 1000 கமெண்ட் போட்டு தள்ள போகிறான் :-)
ReplyDeleteMUTHU SILVER JUBILEE SPECIAL
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteWhy this kolaveri EV...😂😂😂😂
Delete'MUTHU MEFISTO SPECIAL'
Deleteஇது கூட சூப்பரா தான் இருக்கு...ஆனா சாருக்கு தான் மெபிஷ்டோ னா அலர்ஜி ஆச்சே விஜய்....🤪🤪🤪🤪🤪
Vijay @ :-)
DeleteTHE PERFECT SPECIAL
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇல்லியே
DeleteHappy Birthday தலைவா..
ReplyDeleteF.F.S
ReplyDeleteபிஃப்டி ஃபயர் ஸ்பெஷல்
Nice!
Deleteமுத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஸ்பெஷல்
ReplyDeleteMUTHU MIRACLE MAGAZINE (MMM)
ReplyDeleteAWESOME MUTHU SPECIAL ( AMS )
ReplyDelete@ ALL :
ReplyDeleteநண்பர்களே,
பெயர் சூட்டுகிறேனென்று ஸ்டீல் ஒரு பக்கம் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருக்க, ஆளுக்கு ஒற்றை ஒற்றைப் பெயர்களாய்ப் பதிவிட்டு எண்ணிக்கையினை ஏற்றிட வேண்டாமே - ப்ளீஸ் ? புதிதாய் blog பக்கம் வரும் நண்பர்களுக்கு அயர்வே மிஞ்சும் ! பத்துப் பெயர்களை பதிவிடுவதாக இருந்தாலும் சிக்கவில்லை - ஆனால் ஒரே பின்னூட்டத்தில் சகலத்தையும் இணைத்து ஒற்றைப் பின்னூட்டமாக்கிடுங்கள் ப்ளீஸ் !
@ ஸ்டீல் : ஒரு முக்கிய தருணத்தில், ஒரு முனைப்பை உருவாக்க இங்கே நான் நாக்குத் தொங்க முயற்சிப்பதை உங்களின் சாவகாசமான "வாழைக்காய் ஸ்பெஷல்" ; வெண்டைக்காய் ஸ்பெஷல்" ரீதியிலான பின்னூட்டங்கள் முற்றிலுமாய் திசை திருப்பி வருகின்றன ! உங்கள் எண்ணங்களில் பிழைகளில்லை என்பது ஊருக்கே தெரியும் தான் ; ஆனால் சூழலுக்கேற்ப செயல்படவும் சற்றே பழகிக் கொள்ளல் தேவலாமே ?
Unachievable Tamil Comics Special
ReplyDeleteMuthu comics 50
Fifty Muthus special
Golden Jubilee Special
Young as Fifty special
Fifty & still special
Pearl & Golden special
Pearl @50 special
முத்துவின் தங்க ஸ்பெசல்
Fifty & Never out special
Muthu fabulous fifty special ..
ReplyDeleteMuthu 50th birthday celebration special