Powered By Blogger

Friday, May 28, 2021

கொஞ்சம் lucky ஆகலாமுங்களா ?

 நண்பர்களே,

வணக்கம். நமது ஐம்பதாவது ஆண்டு காத்திருக்க, ஐரோப்பாவிலோ ஒரு ஜாம்பவானின் 75-வது பிறந்தநாள் கொண்டாட்டம் காத்துள்ளது ! அந்த ஜாம்பவான் நமக்கும் ரொம்பவே பரிச்சயமானவர் ; பிரியத்துக்கு உகந்தவர் ! In fact நம்ம திடகாத்திர மஞ்சள்சட்டைக்காரருக்குக் கூட இக்ளியூண்டு எதிர்ப்பாளர்கள் இருந்திடலாம் தான் ; ஆனால் இந்த மனுஷனுக்கோ உலகினில் பகையே கிடையாது ! வேடிக்கை என்னவெனில் இவரும் மஞ்சள்சட்டையாளரே & இவரும் அதே வன்மேற்கை வலம் வருபவரே ! ஆனால் "லக்கி லூக்" என்ற பெயரைக் கேட்ட நொடியில் முகமெல்லாம் மலர்ந்திடாத காமிக்ஸ் வாசகர்களே இருக்க இயலாது ! Oh yes - இந்த அக்டோபர் வந்தால் நம்ம ஒல்லியாருக்கு 75 வயதாகிறது ! 'தல' டெக்ஸை விட ரெண்டு வயசு சீனியராக்கும் இவர் !


1987  முதலாய் நமது அட்டவணையினில் ஒரு நிரந்தர அங்கமாகியிருக்கும் லக்கியின் சாகசங்களில் இதுவரைக்கும் நாம் 37 ஆல்பங்களை வெளியிட்டுள்ளதாக என் கணக்கு சொல்கிறது ! ஆபீஸ் திறந்த பிற்பாடு சரி பார்த்தால் அதை ஊர்ஜிதம் செய்திட இயலும் ! நடப்பாண்டில் காத்திருக்கும் 2 கதைகளையும் சேர்த்தால் 39 ஆல்பங்கள் எனும் போது 78 இந்தத் தொடரின் சரி பாதியினைத் தொட்டிருப்போம் ! நம்முடனான அவரது பயணம் 34 ஆண்டுகள் நீண்டிடுவதென்றாலும், post 2012 தான் ஒழுங்காய் கலரில், ஆர்ட்பேப்பரில், பெரிய சைசில் வெளியிடத்துவங்கி லக்கிக்கு நியாயம் செய்யத் துவங்கியுள்ளோம் என்பது எனது அபிப்பிராயம் ! Of course - நியூஸ்பிரிண்ட்டில், சின்ன சைசில் ரூ.2 விலையில் வெளியான அந்த முதன்முதல் லக்கி லூக் ஆல்பமான "சூப்பர் சர்க்கஸ்" எனக்கு ஒரு ஆயுட்கால நினைவாகவே தொடரும் தான் ; but still இன்றைக்கு பழைய புக்ஸைப் புரட்டும் போது எனக்குள் நிறையவே நெருடுகிறது ! 

ரைட்டு...இன்றைய பொழுதையும், நாளையையும் இந்த ஜாலியான ஜாம்பவானை அலசுவதற்கென செலவிடுவோமா guys ? லாக்டௌன் தளர்த்தப்படுவதற்கான அறிகுறிகள் அத்தனை ஆரோக்கியமாய்த் தெரியக்காணோம் எனும் போது - இங்கே தான் போட்டுத் தாக்கிட வேண்டி வரும் போலும் !! So நகற்ற வேண்டிய நாட்களை எண்ணற்ற சந்தோஷ நாட்களை நமக்குத் தந்துள்ள ஒரு நாயகரோடு செலவிட்டால் என்ன guys ?

அலசல்களுக்கொரு திசைகாட்டியாய் எனது இந்தக் கேள்விகள் அமைந்திட்டால் சூப்பர் !!

1 .லக்கி லூக்கும் கார்ட்டூன் தான் ; இது வரையிலும் நாம் முயற்சித்து மண்ணைக் கவ்விய இதர சிரிப்புப் பார்ட்டிக்களுமே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளே ! ஆனால் what sets லக்கி லூக் apart ? இந்த மனுஷனை மட்டும் நமக்கு இத்தனை பிடித்திடக் காரணம் என்னவென்பீர்கள் ? Maybe முழுநீளக் கார்ட்டூன் என நம்மிடையே அறிமுகமான முதல் நாயகர் என்பதனாலா ? உங்கள் பார்வைகள் ப்ளீஸ் ?

2 லக்கி லூக் தொடரினில் focus நாயகரின் மீதே என்றாலும், உடன் பயணிக்கும் உப பாத்திரங்களுமே செம endearing !! அவர்களுள் உங்களின் favorite யார் ?

a ஜாலி ஜம்ப்பர்

b ரின்டின் கேன்

c ஜோ டால்டன்

d ஆவ்ரேல் டால்டன்

e மா டால்டன்

f கலாமிட்டி ஜேன்

g இவர்கள் அல்லாத வேறு ஒருத்தர் எனில் - யாரோ ?

3 உங்களின் மீள்வாசிப்புகளில் லுக்கி லூக்குக்கு இடமுண்டா ?

4 இது வரைக்குமான நமது லக்கி ஆல்பங்களுள் உங்களின் TOP 3 எவையோ ? பட்டியல் ப்ளீஸ் ?

லக்கியின் 75-வது ஆண்டினைக் கௌரவப்படுத்திடும் விதத்தில் பிரான்சில் நாணயங்கள், மெடல்களென அட்டாகாசப்படுத்தி வருகின்றனர் !! பாருங்களேன் : https://www.monnaiedeparis.fr/en/shop/lucky-luke 

வெறும் பொம்மை புக் தானே என்றில்லாது - பிரான்சில் என்னமாய் கொண்டாடுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது பெருமூச்சே விட முடிகிறது ! ம்ம்ம்ம்ம்ம் !!



அப்புறம் நமது கா.மு.க.ஏஜெண்ட் # 1-க்கு ஒரு assignment ப்ளீஸ் !! இதுவரையிலுமான நமது லக்கி ஆல்பங்களின் அட்டைப்படங்களை தமிழிலோ / Cinebook ஆங்கில பதிப்புகளிலிருந்தோ தேற்றி ஒரு போஸ்டர் போலாக்கிட இயலுமா நண்பரே கிரி ? அவற்றுள் எதெதெல்லாம் படித்தது - எவை படிக்காதது ? என்று நினைவுபடுத்திப் பார்த்திட நண்பர்களுக்கு உதவிடக்கூடும் ! Maybe if you find time today please ?

And இது நண்பர் அனுப்பிய latest graphics !!!! அந்த சிந்தனையாள செந்தில் படம் !!! !! 😁😁



கா.மு.க.ஏஜெண்ட் # 2 - நண்பர் வினேஷ், ஈரோடு : மேலேயுள்ளது போல "லக்கி லூக் 75 " என்று தமிழில் ஏதேனும் டிசைன் செய்திட முயற்சிக்கலாமா ப்ளீஸ் ? நமக்கொரு மின்னஞ்சல் தட்டி விட்டீர்களெனில் சில பல உயர் resolution images அனுப்பிடச் செய்கிறேன் !

அப்புறம் நமது கா.மு.க.ஏஜெண்ட் # 3 - பிரசாந்த் கார்த்திக் மீம்ஸ் போட்டுத் தாக்கிடக் கைதூக்கியுள்ளார் ! இதோ நேற்றைக்கு அவர் அனுப்பியது !! 

நண்பரே...ரெண்டு மஞ்சச்சட்டைக்காரர்களையும் கொண்டு ஏதேனும் ஜாலியான மீம்ஸ் போட முடிந்தால் அனுப்புங்களேன் ? திடகாத்திர TEX & ஒல்லிப்பிச்சான் லக்கி 


Bye folks....see you around !! Let's have some Lucky Days !!! 

169 comments:

  1. Replies
    1. வரலாற்று சிறப்புமிக்க பதிவில் முதலிடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் 👏👏👏

      Delete
  2. Sir - Remaining 38 books please target at 4 books a year please .. as two double collects.

    ReplyDelete
  3. லக்கி ஐயாம்ம்

    ReplyDelete
  4. பத்துக்குள்ளே வந்தாச். தேங்க்ஸ்பூனையாரே..

    ReplyDelete
  5. வந்தாச்சு.. படிச்சுட்டு தூங்கப்போறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஙே.. இன்னிக்கு தூக்கம் போச்சு.. லக்கி கதையெல்லாம் எடுத்து மொத்தமா படிக்கனும்..

      Delete
  6. Jolly jumper my favourite and kalamity Jane unforgettable 😍😁😇

    ReplyDelete
  7. Kalamity Yoda cake cooking comedy innum appadiye pasumaiya nyabagam irukku ��������

    ReplyDelete
  8. கொஞ்சம் lucky ஆகலாமுங்களா ?//
    தாராளமாக ஆகலாம் ஆசானே...🤩🤩🤩

    ReplyDelete
  9. பூம் பூம் படலம்.. தஞ்சாவூரில் உறவினர் விசேஷத்துக்கு சென்றபோது இரயில்வே ஸ்டேஷனருகே வாங்கிய கதை.. தரமான சம்பவம்.. படித்து, வெடித்து சிரித்துப் புரண்டதில் கடுமையான வயிற்று வலியே வந்து விட்டது. நைட்ரோ கிளிசரின் நிரப்பப்பட்ட ட்ரெயினின் பயணத்தில் டால்டன்களோடு நாமும்.. செம்ம லூட்டியடிக்கும் கதை.. மறக்கவியலாத கதை இந்த பூம்..பூம்..படலம்.. ஜாலி ஜம்பர், ரின்டின் கேன் இருவருமே மிகப்பிடித்தமெனினும் ஜாலியுடைய கம்பீரத்துக்கு எக்ஸ்ட்ரா மார்க்ஸ்..

    ReplyDelete
  10. அனைத்து கதைகளும் பிடிக்கும் சார்.
    டாப் என்று வகைப்படுத்த முடியாவிட்டாலும்

    பூம் பூம் படலம்
    ஜெஸ்ஸி ஜேம்ஸ்
    ஒரு கோச் வண்டியின் கதை
    சூப்பர் சர்க்கஸ்
    பயங்கர பொடியன்

    பிடித்த கதாபாத்திரங்கள்

    ஜாலி ஜம்பர்
    பொடியன்
    சிறை சாலை தலைவர்
    கோச் வண்டி ஓட்டுநர்
    கலாமிட்டி ஜேன்
    ரின்டின்
    Aavrel
    ஜோ

    ReplyDelete
    Replies
    1. மீள் வாசிப்பு கண்டிப்பாக உண்டு

      Delete
    2. சர்க்கரை இனிக்கும் என்பதும் லக்கியை பிடிக்கும் என்பதும் ஒன்றுதான் ஜாலி யில் ஆரம்பித்து பேப்பர் போடும் சிறுவன் வரை அனைவரையும் பிடிக்கும் கதைகள் எல்லாம் பிடிக்கும் குறிப்பாக ஜெஸ்ஸி ஜேம்ஸ்.சூப்பர் சர்க்கஸ்.ஒரு கோச் வண்டியின் கதை.தாயில்லாமல் டால்டனில்லை

      Delete
    3. நல்ல உவமை சார் .. கண்டிப்பாக இன்று வரை அவர் மேல் உள்ள ஈர்ப்பு போகவில்லை

      Delete
  11. அட 20 குள்ள வந்தாச்சு... 👍👍👍

    ReplyDelete
  12. லக்கிலூக் ரெம்பப்பிடிக்க க் காரணம். 1.வன்மேற்கின் வளர்ச்சியையும் அதன் முறன்களையும்இன்ச்பை இன்ச்சாக இவ்வளவுநகைச்சுவையுடன் எந்த ஆல்பமும் கொடுக்கவில்லை. முற்றிலும் புதுமையான("பழமையான) கதைக்களத்தில் நிழலை விடவேகமாகசுடும் நாயகர். விதவிதமான ஆரம்பகாலவில்லன்கள் சாரைசார்லி,தங்கப்பல் ரீகன் அசந்துபோய்தலையில் தூக்கி வைத்தோம். இன்று வரை கீழேஇறக்கவில்லை. 2.லக்கியின் முதல்வில்லன் சாரைசாரெலிகையில் க்ளவுஸ் இல்லையென்றால் எதிரில்நிற்கும் யானையைக்கூடகுறிவைத்துசுடமுடியாது பயலால். 3.மீள்வாசிப்பில் லக்கி. புத்தகம் வரும் மாதங்களில்கீழேவைக்காமல் திரும்பத்திரும்பப் படிப்பதால்சிலமாதங்கள் கழித்து கையில்எடுத்தால் படிக்கமுடிவதில்லை. 4.டாப்3. 1.சூப்பர்சர்க்கஸ் 2.பயங்கரப் பொடியன் 3.கலாமிட்டிஜேன் இரண்டாம் பாகம். பேய்நகரம் கரூர்ராஜ சேகரன்

    ReplyDelete
  13. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  14. 1. காரணமெல்லாம் தெரியாது.. புடிக்கும்.. அவ்வளவு தான்..

    2. ஜாலி ஜம்பர் தான் ஃபேவரைட்..

    3. எத்தனை முறை படித்தேன் என கணக்கு வைக்கவில்லை..

    4. எல்லாக் கதைகளும் பிடிக்கும்.. ( லக்கி லூக்கை சுட்டது யார் கதையை தவிர.. ஆனா பிடிக்கலைன்னு சொல்ல முடியாது.. ரொம்ப பிடிச்சதுன்னும் சொல்லமுடியாது.. ஆனா திரும்ப படிக்க முடியும்ன்னு சொல்ல முடியாது.. )

    ReplyDelete
  15. லக்கியின் கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரமும் நகைச்சுவையாய் இருக்கும்.
    லக்கியின் கதையில் வரும் சக்கர நாற்காலியில் வரும் ஒரு வெண்தாடி தாத்தா அடிக்கும் லூட்டிக் கூட காமெடியாக இருக்கும்.
    எதை விடுவது எதை பார்ப்பது என்பது இல்லாமல் அனைத்தையும் பார்க்கவேண்டி இருக்கும். பயங்கர பொடியன் அதிரடி பொடியன் இரண்டுமே நகைச்சுவை வெடி.

    ReplyDelete
    Replies
    1. லக்கியின் கதையில் வரும் சக்கர நாற்காலியில் வரும் ஒரு வெண்தாடி தாத்தா அடிக்கும் லூட்டிக் கூட காமெடியாக இருக்கும்.
      எதை விடுவது எதை பார்ப்பது என்பது இல்லாமல் அனைத்தையும் பார்க்கவேண்டி இருக்கும். ...+1

      Delete
  16. பிடித்த கதாபாத்திரங்கள் பூம் பூம் படலத்தில் வரும் ஸ்டேசன் மாஸ்டர். தனிமை வேண்டும் என்று கதறிகதறி மூடப்பட்ட மலைஸ்டேசனுக்கு மாற்றல் வாங்கிச்சென்றால் அங்கும் நைட்ரோகிளிசரின் ரயில் மோதுவதால் மலை உடைந்துபுது பாதை உண்டாக என்னை ஏமாற்றிவிட்டார்கள்என்று கதறும்போதுசிரித்து சிரித்துவயிறுவலிக்கும்சார்.இன்னும் ஒவ்வொரு கதாபாத்திரம் வரிசையாக மனதில் வருகிறது கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  17. Meme இரண்டும் அட்டகசம்....

    ReplyDelete
  18. வந்துட்டேன் நானும்

    ReplyDelete
  19. பிடித்ததாபாத்திரங்கள்பூம்பூம்படலத்தில்பாலத்திறப்புவிழாவின்போது, பாலத்தைசெப்பனிடராணுவம் வரும்வரைநேரத்தைநீட்டிக்கபைபிளைப்படிக்கும் மேயர் . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அந்த கதை பரலோகத்திற்கு ஒரு பாலம் ராஜசேகர் சார்.!.
      ரிப்பேர் முடியும்வரை பைபிளை வாசித்துக்கொண்டே இருப்பார்.😂😂

      Delete
  20. யோசித்துப்பார்த்தால் கார்ட்டூன் தலவெற்றிக்கு அதில் வரும்வுதவிதமானகதாபாத்திரங்களும் ஒருமுக்கியக்காரணம் என்பது புரிகிறது. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  21. சூப்பர் சர்க்கஸின் ஓனர்குடிகாரர் மோரிஸ் கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  22. எனக்கு பிடித்த லக்கி கதைகள். பூம்-பூம் படலம், பயங்கர பாலம்,சூப்பர் சர்க்கஸ், மேடையில் ஒரு மன்மதன், ஒரு கோச் வண்டியின் கதை, கௌபாய் எக்ஸ்பிரஸ், பயங்கர பொடியன், ஜேன் இருக்க பயமேன், ஜெஸ்லி ஜேம்ஸ் & ஒற்றர்கள் ஓராயிரம்.

    ReplyDelete
  23. 1 E. V. ஆளில்லாதடீக்கடையிலேயாருக்கங்சார் டீஆத்தரீங்க 2.எடிட்டர்:அங்க பாருங்கமஞ்ச சட்டைனதும் கொடிபுடிச்சுக்கிட்டு ஆரவவாரமீமாவற்றாங்க. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  24. பிடித்த கதாபாத்திரங்கள்: லக்கி கதைகளில் ஒரே ஒரு பிரேமில் வரும் கதாபாத்திரம் கூட சிரிக்க வைக்கும்படியே இருக்கும்.லக்கியின் நிழல் உட்பட அனைத்து கதாபாத்திரங்களும் பிடித்தவர்களே..

    ReplyDelete
  25. மெகா முத்துவில், மெகா டெக்ஸ் வரப்போறார் ஜாலிதான்..!!

    ReplyDelete
  26. g. வைரப்பபல் ரீகன். ஊளுக்குள் ஒழு காட்சி நடத்த விட மாட்டேன் பாள்

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
  28. ஐய்யா... லக்கி லூக்.
    நீங்க சொல்லுறத வச்சு பார்த்தா லக்கிய பாத்துதான் அதிகாரிய காப்பி அடுச்சிருப்பாங்களே????

    1. ஒரு காமடியை முழுசா ரசிக்க அந்த சூழலின் கலாச்சாரம் தெரிந்திருக்க வேண்டும், அவ்வகையில் லயன் & முத்து ரசிக்ர்களுக்கு தெரிந்த அளவுக்கு கூட சராசரி அமெரிக்கருக்கு தெரியுமா என்றால் சந்தேகமெ, லக்கி லூக் கதைகளில் வரும் உண்மையான கதாபாத்திரங்களும்,கதைத்தளங்கலுமெ காரணம்.
    லக்கி லூக்கில் படங்களும், வசனமும் சிரிக்க வைக்க ஒன்றோடு ஒன்று போட்டி போடும் என்பதே அதன் வெற்றிக்கு முழு முதல் காரணம். முதல்ல வந்தது அல்ல

    2. ஜாலி ஜமப்பர் தான், லக்கி 2ம் ஹீரோ தான், ஜாலிதான் உண்மையான ஹீரோ, லக்கி சைடுதான்... ரசிகர்கள் தப்பா புரிஞ்சுகிட்டாங்க.

    3. மீள் வாசிப்பில் முதல் இடம் இவர்தான், அடுத்து உடைந்த மூக்கார்.
    4. கௌ-பாய் எக்ஸ்பிரஸ் & புரட்ச்சித் தீ

    ReplyDelete
  29. லக்கி லூக் எனக்கு பிடித்த கதைகள்,

    சூப்பர் சர்க்கஸ்
    பூம் பூம் படலாம்
    ஜெஸ்ஸி ஜேம்ஸ்,
    பயங்கர பாலம்,
    பயங்கர பொடியன்,

    கதாபாத்திரங்களை பிடித்தது டால்டன் சகோதரர்கள், பொடியன் பில்லி, ஜூலி




    ReplyDelete
  30. கலாமிட்டி தேனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வரும் வாத்தியார்.

    ReplyDelete
  31. சூப்பர் சர்க்கஸ்
    புரட்சி தீ

    ReplyDelete
  32. பொடியன் பில்லி
    மா டால்டன் பிரதர்ஸ்.

    ReplyDelete
  33. 1. நான் கண்ட முதல் கார்டூன் நாயகர் & சிரிப்புக்கு உத்திரவாதம்.

    2. ஜாலி ஜம்பர்

    3. மீள் வாசிப்பு உண்டு

    4. A. பூம் பூம் படலம்
    B. ஒரு கோச் வண்டியின் கதை
    C. அதிரடி பொடியன்

    ReplyDelete
  34. சார் அருமை.... முதன் முதலாக வண்ணத்ல பாத்த கதை...அதுவும் அந்த சொரசொர அட்டைப் படம் ...அந்தக் கடைல தொங்கிக் கிடந்ததும்...நான் சந்தோசமா கை நீட்டி வாங்கியதும் நினைவில் ஆணியா பதிந்திருக்கு....முதன் முதலாக அதாவது சர்க்கச பாக்காத எனக்கு...பல வண்ண நோட்டீஸ்....இத கொண்டு வந்தா டிஸ்கவுண்ட் என விளம்பரங்க வாயிலாக கண்ட எனக்கு சிங்கம் நெல்சன்....சாரை சார்லி....ஜாலியின் ரோடியோ ரேஸ் என் வியக்க வைக்க...கத்தி வீச்சு சாகசம்....வைளப்பல் ரீகன் காட்சிகள் என வாய் மூடாம பார்த்தது நினைவில்...கதையோ வேர லெவல்...செவ்விந்தியர்...மறுக்கா மறுக்கா சர்க்கஸ் காட்டும் மோரிஸின் மனைவி...குடிகார மோரிஸ்...வியக்க வைத்த ஜாலியின் சாகசம் என அடுத்தடுத்து சாகசங்களுக்காக ஏங்கினேன்....
    அதன் பின்னர் வந்த கதைகளும் சலிக்க வைக்கவில்லை...
    இக்கதைகள் பிடிக்கக் காரணம் தொய்வில்லாம செல்லும் கதைகள்....பண்டய அமெரிக்க வரலாற்றினை காட்டும் கதைகள்...பில்லி ...ஜேன்...டால்டன்...ரின்டின்...ஜாலியோட சேட்டை பாகங்கள்....நிழல் விட வேகமான கௌபாய்....எல்லாத்துக்கும் மேல குதுர வீரன்... இதா அதான்னு எதைச் சொல்ல....எல்லாமே பிடிக்கும்....அதால நல்லாவே பிடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சர்கஸ் ஜாலியும் புன்னகை பூத்த லக்கியும் கயிற்றின் மேல் ஸ்கிப்பிங் செய்த வண்ணம் கால் பந்து உருட்டித் தள்ளிய படி(ஜாலி பல்லக்காட்டி சிரிக்குமோ)...அந்த சொரசொரப்பான முதலட்டை பாய்ச்சிய சந்தோச மின்னல் கீற்றுகள் தான் எத்துனை/ணை எத்துனை/ணை...இன்னமும் தூள் கிளப்புறார்...மகிழ்ச்சி

      Delete
    2. பிடித்த உப பாத்திரம் ஜாலிதான்...அது என்ன சாகசம் புரியும்னு தேடுவது நினைவில்...எத்தனை முறை குதித்தார் என கேட்க அது 69 என எண்ணால் எழுத லக்கி சலித்தவாறே கவனியாம இது சரிப்படாது என செல்வாரே...அடடா

      Delete
  35. லக்கியின் சூப்பர் சர்கஸை என் வாழ்வில் ஒரு போதும் மறக்கவே முடியாது. 1999ம் ஆண்டில் நண்பர்களோடு திருமூர்த்தி மலை சுற்றுலா சென்று தண்ணீர் பொங்கி கொட்டிக் கொண்டிருந்த அருவியின் மேல் பகுதி பாறையில் நீராடிக்கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து விட்டேன். பலத்த அடிப்பட்டிருந்த என்னை என் நண்பர்கள் பக்கத்திலுள்ள தளி எனும் கிராமத்திற்கு எடுத்து சென்று வைத்தியம் பார்த்து, இரவு 9 மணியளவில் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ந்தனர். என் அம்மா முகம் முழுதும் கட்டுகளுடன் வந்து சேர்ந்த என்னைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடைந்து அழ ஆரம்பித்து விட்டார். தொடர்ந்த வாரங்களில் எனக்கு நிறைய நெகட்டிவ் எண்ணங்கள், பிறருக்கு பாரமாக சுமையாக இருக்கிறோமே என்றும் இன்னும் ஏதேதோ எண்ணங்கள். போதாக்குறைக்கு மருத்துவ செலவுகள் வேறு. என் வாழ்வின் இந்த நெருக்கடி சமயத்தில் எனக்கு மிகவும் கை கொடுத்தவர்கள் நான்கே பேர். முதலாவது என் அம்மா, என் நண்பர்கள், மற்றும் லக்கி லுக், சிக் பில்.

    நெகட்டிவ் எண்ணங்கள் மனதை ஆக்கிரமித்த தருணத்தில் எனக்கு வடிகாலாய் இருந்தது லக்கியின் சூப்பர் சர்க்கஸ் மற்றும் சிக்பில்லின் இரும்பு கௌபாய் புத்தகங்களே. அந்த ஒரு மாதத்திற்கு தொடர்ந்து இந்த 2 புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசித்து வலியை மறந்து சிரித்தேன். என் நெகட்டிவ் எண்ணங்களை இந்த 2 புத்தகங்கள் சுத்தமாக்கியது.

    I love Lucky luke.

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான மலரும் நினைவுகள் ராஜ் குமார் சார். நீங்கள் அருமையாக எழுதுகிறீர்கள். பிளீஸ் continue

      Delete
  36. கிரதரசுதர்சன் & மீம்ஸ் பிரசாந்த் அருமை நண்பர்களே!

    வாழ்த்துகள்💐💐💐

    தொடருங்கள்... தொடர்கிறோம்!


    வினீஸ்ம் கலக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. 1. பிடிக்காததற்கு பல காரணங்கள் சொல்லலாம்... பிடிப்பதற்குத்தான் காரணம் தேட வேண்டியுள்ளது... என்னைப் பொருத்தவரை இளவயதிலேயே நம்முடன் அறிமுகமானதால்... அந்த characterகள் நம்மோடு ஒன்றிவிட்டார்கள்... ஜாலி என்ன சொன்னாலும் புன்னகை வரும்... ஆவ்ரெல்லை பார்த்தாலே சிரிப்பு வரும்... இந்த அன்னியோன்யம்... என்னைப் பொருத்தவரை மற்ற நகைச்சுவை கார்டூன்களில் missing... மேலும் என்னைப் பொருத்தவரை லக்கி கதைகளில் history வெகு இயல்பாக நகைச்சுவையோடு.. ஒரு asterix போல்.. inside jokes/digs நிரவியிருக்கும்.. படங்களின் அழகும் ஒரு காரணம்...

    2. ஜாலி ஜம்பர் / ஆவ்ரெல் டால்டன்... இருவரில் ஜாலி சற்றே முந்துகிறார்..

    3. மீள் வாசிப்புகள் என்றாலே லக்கிக்குத்தான் முதலிடம்...

    4. லக்கி லூக்கின் எல்லா கதைகளும் பிடிக்கும்... குறிப்பிட்டு சொல்லவேண்டுமெனில்...

    சூப்பர் சர்க்கஸ்
    பயங்கரப் பொடியன்
    பூம் பூம் படலம்





    ReplyDelete
    Replies
    1. Totally agreed. This is my opinion too.

      Delete
    2. ///மீள் வாசிப்புகள் என்றாலே லக்கிக்குத்தான் முதலிடம்...///

      +111

      Delete
  38. சார் அந்த நாணயங்க அது இது....மேலெல்லாம் ஈடுபாடு வயது தாண்டி விட்டது...ஐந்து கதைகள் ஒன்னா குண்டா விடும் நாளுக்காக ஏங்கி....
    750 பதிவுகள்....சாதனைப் பார்வைகள்...ஐம்பதாமாண்டு பொன் விழா...லக்கி எழுபத்தைந்து...டெக்ஸ் எழுவது ....இப்படி கொண்டாட்ட வரிசைக் காத்திருக்க....அற்புதக் கதைகள கையில் வைத்தும் நுழைக்க முடியாம செலவு அதிகமாயிடுமோ எனும் தங்கள் அநாவசிய கவலைக்கேத்தவாறு இப மறுமறுபதிப்பு(இதெல்லாம் கணித்து இரு வருசத்துக்கு தள்ளி வச்சிருந்திருக்கனுமோ)...கொரனா என பயணிக்கிறோம்...அடுத்த வருடமாவது எல்லாம் சரியாகி வருடம் நூறு கதைகள்...சிறப்பிதழ்கள்னு சளைக்காம இந்தா பிடின்னு தரும் தெம்பையும் எங்கள் அனைவருக்கும் எதையும் வாங்கும் வல்லமையையும் தரனும்னு செந்தூரான் அருளை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  39. லக்கி எப்போது வாசிக்க ஆரம்பித்தனே நினைவில்லை..

    ஆனா 007, டெக்ஸ்வில்லர் இவர்களுக்கு இடையே ஏதோ ஒரு கணத்தில் உள்ளே நுழைந்திருப்பாரு....


    இரு சீரியஸான மெயின் ஹீரோவுக்கு நடுவே பிரசர் ரிலீஸ் ஆக இருந்த லக்கி கொஞ்சம் கொஞ்சமாக தனக்கென ஒரு இடத்தை ரிசர்வ் பண்ணிகிட்டாரு.

    அவர், இவர்களுக்கு இணையாக விஸ்வரூபம் பெற்றது பூம்..பூம்...படலத்தின் போதே!

    ஒவ்வொரு பேனலும் சிரிப்பு காட்டியது...

    இயற்கையான கதையோட்டம்...
    கதையோட்டத்தின் ஊடே வெடிச்சிரிப்பு காமெடி!!

    ஒவ்வொரு ஸ்டேசனாக பணிமாறும் அந்த ரயில்வே ஊழியர் தான் ரொம்ப பிடிச்ச ஜீவன்.

    அதிக முறை படித்த லக்கி கதையும் இதுதான்.

    ReplyDelete
    Replies
    1. ///பூம்..பூம்...படலத்தின் போதே!///

      +111

      Delete
  40. டாப் 3 ஆஃப் லக்கி....

    1.பூம்..பூம்..படலம்!

    2.ஜெஸ்ஸி ஜேம்ஸ்!

    3.பயங்கரப் பொடியன் 1&2!

    (சூப்பர் சர்க்கஸ் & புரட்சி தீ 2ம் டாப்5 ஐ கம்ப்ளீட் பண்ணுது)

    ReplyDelete
  41. பதுயுகத்தில்....

    1.தரைக்கடியில் தங்கம்.

    2.மேற்கு ஒரு சுட்டிப்புயல்.

    3.ஓரு ஜென்டில்மேனின் கதை.

    ReplyDelete
  42. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  43. லக்கி புக் வருதுன்னாலே நாம் லக்கின்னு நெனச்சிக்குவேன்...

    பிடிச்சுதுன்னா...

    கலாமிட்டீ ஜேனுக்கு கிளாஸ் எடுத்த புரபசரே கடேசில பொளந்து கட்டுவாறே...அது...

    அந்த பாலங்கட்ற கதை இருக்கே நூறு வாட்டி படிச்சிருப்பேன்...

    ReplyDelete
  44. லக்கிலூக்கிற்கு விலையில்லா (மதிப்புமிக்க) பணத்தாள்களையும்,தபால் தலைகளையும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூடுதல் தகவல்..

    அடியேனிடம் அந்த 0 யூரோ பணத்தாள்,ஒரு சிலபொம்மைகளும் உள்ளதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ///அடியேனிடம் அந்த 0 யூரோ பணத்தாள்,ஒரு சிலபொம்மைகளும் உள்ளதை பெருமையுடன் கூறிக்கொள்கிறேன்.///

      பிரமாதம்! சூப்பர்!!

      Delete
  45. பிரசாந்த் கார்த்திக் @ மீம்ஸ் Super!
    கிரி @ naming ceremony picture Super!

    Good job guys!

    ReplyDelete
  46. 1) லக்கி லூக் ஆரம்ப காலம் முதலே வெளிவந்து, அவரை பற்றி எமது மனதில் ஒரு இமேஜ் உருவாகியத காரணமாய் இருக்கலாம். மற்றைய சிரிப்பு பார்ட்டிகளுக்கும் நான் ரசிகனை. .... மனதை இலகுவாக்குவது கார்டூன் பார்டிகளே,.... ஹூம் கால மாற்றத்தின் கோலம்

    2) எனது Favorite

    கண்டிப்பாக எல்லோரும்தான்
    a) ஜாலி ஜம்பர் , b) நாலு கால் ஞான சூனியம் ,c) டால்ரன் சகோதர ர்கள் d) கலாமிட்டி ஜேன் e) பொடியன் பில்லி

    3) என்னுடைய மீள் வாசிப்பில் கண்டிப்பாக லக்கி இடம்பிடிப்பார். மனது கனமாக இருக்கும்போது மூட்டை மாற்ற லக்கி, புளூ கோட் பார்டிகள், ஸ்மர்ப் பெரிதும் உதவுகின்றன

    4) லக்கியின் ஆல்பங்களில் எனது TOP 4 - a) The Daily Star b) பயங்கர பொடியன் c) சூப்பர் சர்க்கஸ் d) கலாமிட்டி ஜேன்

    நண்பர் கிரிதரசுதன் - அருமை .
    நண்பர் கார்திக் - செம மீம்ஸ் - தொடருங்கள் . எமது fb இல் பகிர்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. ///லக்கி, புளூ கோட் பார்டிகள், ஸ்மர்ப் பெரிதும் உதவுகின்றன///

      லக்கி & ஸ்மர்ப் சூப்பர்!

      Delete
  47. ஆங் இப்பதான் ஞாபகம் வந்தது The Daily Star - புரட்சி தீ

    ReplyDelete
  48. g இவர்கள் அல்லாத வேறு ஒருத்தர் எனில் - யாரோ ?

    பொடியன் பில்லி

    ரின்டின்கேன் மற்றும் டால்டன்கள் இருக்கும் ஜெயில் வார்டன்

    ReplyDelete
    Replies
    1. //பொடியன் பில்லி//

      மீ.. டூ..

      Delete
  49. 1.லக்கி லூக்கும் கார்ட்டூன் தான் ; இது வரையிலும் நாம் முயற்சித்து மண்ணைக் கவ்விய இதர சிரிப்புப் பார்ட்டிக்களுமே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளே ! ஆனால் what sets லக்கி லூக் apart ..

    லக்கி கார்ட்டூன் genre என்றாலும் கொஞ்சம் matured ஆக இருக்கும் ..REAL LIFE REFERENCES இருக்கும் .. அந்தந்த சூழலில் இருக்கும் அவலங்களை பகடி பண்ணி இருப்பார்கள் ..SMURFS DID IT TOO .. BUT LUCKY DID IT IN A MORE MATURED MANNER .. ALSO FIRST படிச்ச கார்ட்டூன் லக்கி தான் IN OUR காமிக்ஸ் ..

    2.லக்கி லூக் தொடரினில் focus நாயகரின் மீதே என்றாலும், உடன் பயணிக்கும் உப பாத்திரங்களுமே செம endearing !! அவர்களுள் உங்களின் favorite யார் ?
    1.ஜாலி ஜம்ப்பர் ..
    2.ஜோ AND ஆவ்ரேல் டால்டன் (ALL 4 DALTONS)
    3.கலாமிட்டி ஜேன் ..
    4.கோச் வண்டி ஓட்டுநர் ஹாங்க் ,ஓரு ஜென்டில்மேனின் கதை-செவ்விந்தியன் சாம் ,ஜேனுக்கு கிளாஸ் எடுக்கும் அந்த வாத்தியார் ..

    3 உங்களின் மீள்வாசிப்புகளில் லுக்கி லூக்குக்கு இடமுண்டா ?- YES ..

    4.இது வரைக்குமான நமது லக்கி ஆல்பங்களுள் உங்களின் TOP 3 எவையோ ?

    1.பூம்-பூம் படலம்..
    2.ஒரு கோச் வண்டியின் கதை
    3.ஜேன் இருக்க பயமேன்..

    ReplyDelete
    Replies
    1. ///லக்கி கார்ட்டூன் genre என்றாலும் கொஞ்சம் matured ஆக இருக்கும் ..REAL LIFE REFERENCES இருக்கும் .. அந்தந்த சூழலில் இருக்கும் அவலங்களை பகடி பண்ணி இருப்பார்கள் ..SMURFS DID IT TOO .. BUT LUCKY DID IT IN A MORE MATURED MANNER .. ALSO FIRST படிச்ச கார்ட்டூன் லக்கி தான் IN OUR காமிக்ஸ்///

      மீ.. டூ..

      Delete
  50. 1. மத்த கார்ட்டூன்களில் எல்லாம் இல்லாத க்ளெவர்னஸ். யதார்த்த சிரிப்பு. அப்புறம் அவரோட மொழிபெயர்ப்பு.

    2. ஜாலி ஜம்பர் & RTK தான் ஃபேவரைட்..

    3. எத்தனை முறை படித்தேன் என கணக்கு வைக்கவில்லை.. அந்த மஞ்ச சட்டையை விட இந்த மஞ்ச சட்டை தான் அதிக மறுவாசிப்புக்குள்ளாகும்.

    4. எல்லாக் கதைகளும் பிடிக்கும்.. ( லக்கி லூக்கை சுட்டது யார், பாரிசில் ஒரு கவ்பாய் கதையை தவிர.. ஆனா பிடிக்கலைன்னு சொல்ல முடியாது.. ரொம்ப பிடிச்சதுன்னும் சொல்லமுடியாது.. ஆனா திரும்ப படிக்க முடியும்ன்னு சொல்ல முடியாது.. ). குறிப்பா சொல்லனும்னா பயங்கர பொடியன் , பயங்கர பாலம், புரட்சித்தீ, டால்டன் கதைகள் எல்லாம் நெம்ப பேவரைட்.

    ReplyDelete
    Replies
    1. ///மத்த கார்ட்டூன்களில் எல்லாம் இல்லாத க்ளெவர்னஸ். யதார்த்த சிரிப்பு. அப்புறம் அவரோட மொழிபெயர்ப்பு.///

      சூப்பர்!

      Delete
  51. லக்கி யைப் படித்தது 8 வயதில் சூப்பர் சர்க்கஸ். எனக்கு அந்த கதையை விட நீங்கள் லக்கி, ஜாலி பற்றி எழுதிய அறிமுகம் இன்று வரை ஞாபகம் உள்ளது. நிழலை விட வேகமாக துப்பாக்கி சுடும் வீரன். அப்போது வீட்டில் டிவி கிடையாது, ஞாயிறு போடும் கார்ட்டூன் பார்க்க தெருத்தெருவாக அலைய வேண்டும். எனவே கார்ட்டூன் காமிக்ஸ் பார்த்த சந்தோசத்தை சொல்லவும் வேண்டுமா??? அன்றில் இருந்து இன்று வரை லக்கி இருப்பது டாப் ஸ்பாட் மட்டுமே.

    என்றுமே லக்கி யின் உற்ற நண்பன் ஜாலி தான்.

    எனக்கு பிடித்த லக்கி கதைகள்

    1. அன்றும் இன்றும் என்றும் சூப்பர் சர்க்கஸ்
    2. புரட்சி தீ
    3. பயங்கர பொடியன்

    ReplyDelete
    Replies
    1. ///அன்றில் இருந்து இன்று வரை லக்கி இருப்பது டாப் ஸ்பாட் மட்டுமே.///

      மீ.. டூ..

      Delete
    2. மீள் வாசிப்பு ஒவ்வொரு லக்கி கதையையும் குறைந்தது 10 முறையாவது படித்து இருப்பேன். சூப்பர் சர்க்கஸ், புரட்சிதீ எல்லாம் எத்தனை முறை படித்தேன் என்றே கணக்கில் இல்லை.

      Delete
  52. லக்கியின் மிக மிக பிடித்த ஆல்பங்கள் எனில்


    சூப்பர் சர்க்கஸ்..

    புரட்சி தீ..

    பூம்பூம்படலம்..


    இப்.பொழுதும் எனது மறுவாசிப்பில் பலர் இடம் பெற்றாலும் எண்ணிக்கையின் படி டெக்ஸ் முதலிடத்திலும் லக்கி இரண்டாம் இடத்திலும் சிக்கல் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள் சார்..


    மேலும் லக்கியின் மறுவாசிப்பில் நான் கண்ட மாறுபட்ட அனுபவம் என்னவெனில் முதல் தடவை படிக்கும் பொழுது லக்கியின் சாகஸங்கள் சுமாராக தோன்றியவை எல்லாம் மறுவாசிப்பில் நன்கு ரசிக்க வைத்தன...

    ReplyDelete
    Replies
    1. ///லக்கியின் மறுவாசிப்பில் நான் கண்ட மாறுபட்ட அனுபவம் என்னவெனில் முதல் தடவை படிக்கும் பொழுது லக்கியின் சாகஸங்கள் சுமாராக தோன்றியவை எல்லாம் மறுவாசிப்பில் நன்கு ரசிக்க வைத்தன...///

      +111

      Delete
  53. சூப்பர் சர்க்கஸ் மேட் ஃபினிஷ் அட்டையில் முதன்முதலாக லக்கியையும், ஜாலிஜம்பரையும் பார்த்த தருணத்திலயே ஃஸ்கிப்பிங் ஆடிக்கொண்டே மனசுக்குள் புகுந்து விட்டனர்.

    நீதி வெல்லும் என்ற old is (forever) gold கான்செப்ட்டை ஜாலியாக ஜாலியுடன் லாலி பாடிக்கொண்டும், சிரித்துக் கொண்டே நிலைநாட்டுவதால் சட்டென பிடித்து விடுகிறது.

    ஜாலிஜம்பரை எனக்கு மிகப்பிடிக்கும். அவ்வப்போது கவுண்டமணியாக மாறி ஜாலி கொடுக்கும் கவுன்ட்டர் பஞ்ச்கள் அட்டகாஷ் லெவலில் இருக்கும். (எடிட்டர் அவர்களுக்கு டபுள் சல்யூட்)

    சூப்பர் சர்க்கஸ்
    புரட்சித்தீ
    பூம்பூம் படலம்

    மீள்வாசிப்பு - ஆமா ஆமா..

    ReplyDelete
    Replies
    1. ///நீதி வெல்லும் என்ற old is (forever) gold கான்செப்ட்டை ஜாலியாக ஜாலியுடன் லாலி பாடிக்கொண்டும், சிரித்துக் கொண்டே நிலைநாட்டுவதால் சட்டென பிடித்து விடுகிறது.///

      +111

      Delete
  54. அதே போல் லக்கியின் கதாபாத்திரங்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் ( கள் ) டால்டன் சகோதர்ர்களே...அவர்கள் வில்லனாக சாகஸம் புரியும் கதைகளங்கள் அனைத்துமே நகைச்சுவையில் மேலும் பலத்தை சேர்க்கிறார்கள் என்பது எனது எண்ணம்..

    ReplyDelete
  55. மீம்ஸ் படைத்த நண்பர்கள் செமயாக கலக்கி உள்ளார்கள்..செம நண்பர்களே..

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  56. லக்கிய ஏன் பிடிக்குதுன்னா, நகைச்சுவை வசனங்களுடன் படங்களும் சிரிப்பை வரவைப்பவை. படங்களில் வரும், மாடு, குதிரை, செவ்விந்தியர் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு ஒரு மோனநிலையிலேயே இருக்குமாறு படங்கள் வரையப்பட்டிருக்கும். அதைப் பார்த்தாலே சிரிப்பு தானாக வரும்.

    நிழலைவிட வேகமாக சுடுவது - இந்த கான்செப்ட் ரொம்ப புதுசாகவும் அருமையாகவும் இருந்ததது, இவர் அறிமுகமான சமயத்தில் !

    எனக்கு ரிண் டின் கேன் தான். அதை பார்த்தாலே சிரிப்பு வரும்

    படித்ததில் பிடித்தது : எல்லா லக்கி கதைகளும் (லக்கியை சுட்டது யார் தவிர)
    மிகவும் பிடித்தது

    பயங்கர பொடியன்
    சூப்பர் சர்க்கஸ்
    பூம் பூம் படலம்

    ReplyDelete
    Replies
    1. ///படங்களில் வரும், மாடு, குதிரை, செவ்விந்தியர் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு ஒரு மோனநிலையிலேயே இருக்குமாறு படங்கள் வரையப்பட்டிருக்கும்.///

      வாவ்! சூப்பர்!

      Delete
  57. லக்கி லூக்கில் பிடித்தது;

    1.சூப்பர் சர்க்கஸ்.

    2.புரட்சித் தீ

    3.ஒரு பட்டா போட்டி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு பட்டா போட்டி.

      மை ஃபேவரிட்!

      Delete
  58. Podiyan billy ..unforgettable imprint in my life

    ReplyDelete
  59. எனக்கு மிகவும் பிடித்த கதை

    ஒரு கோச்வண்டியின் கதை
    பூம் பூம் படலம்
    புரட்சி தீ...

    ReplyDelete
  60. ///1 .லக்கி லூக்கும் கார்ட்டூன் தான் ; இது வரையிலும் நாம் முயற்சித்து மண்ணைக் கவ்விய இதர சிரிப்புப் பார்ட்டிக்களுமே கார்ட்டூன் ஜானரின் பிரதிநிதிகளே ! ஆனால் what sets லக்கி லூக் apart ? இந்த மனுஷனை மட்டும் நமக்கு இத்தனை பிடித்திடக் காரணம் என்னவென்பீர்கள் ? Maybe முழுநீளக் கார்ட்டூன் என நம்மிடையே அறிமுகமான முதல் நாயகர் என்பதனாலா ? உங்கள் பார்வைகள் ப்ளீஸ் ?///

    1. லக்கி லூக்
    2. சிக்பில்
    3. ஸ்மர்ப்ஸ்
    4. மதியில்லா மந்திரி
    5. ரின்டின்கேன்

    இவை தவிர வேறு கார்ட்டூன்கள் மேல் எனக்கு பெரிய ஈர்ப்பு இல்லைங்க!

    அதிலும் ஸ்மர்ப்ஸ், மதியில்லா மந்திரி நின்று போனது மிகவும் வருத்தமே!

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்க மக்களின் வாழ்வியலை விமர்சிப்பது போல இன்றைய நமது சமகால நிகழ்வுகளையும் இவ்வளவு அற்புதமாக சிரிப்போடு சிந்திக்கவும் வைப்பதில் வங்கிக்கு நிகர் லக்கி மட்டும் தான்!

      Delete
    2. என்னளவில் உயர்தர ரசனை என்பது கார்ட்டூன் தான்! ஆனால் எல்லா கார்ட்டூன்களும் உயர்தரமானவை அல்ல!

      கார்ட்டூனை குழந்தைகளுக்காக உருவாக்க ஆரம்பித்தது தான் பெரிய சிக்கலே! உண்மையில் கார்ட்டூன் பெரியவர்களுக்கானது! கருத்தியல் பேசுவதற்கானது!

      வேறெந்த கார்ட்டூன் தொடர்களை விடவும் "லக்கி லூக்" படைப்பாளிகள் அதை திறம்பட செய்திருக்கிறார்கள்!

      Delete
    3. பிரெஞ்சுக்காரர்களுக்கு அமெரிக்கர்களை கேலி செய்வதில் உள்ள அலாதி இன்பம் தான் லக்கி லூக் வெற்றிக்கு அடிப்படை காரணம் என்பது என் எண்ணம்!

      Delete
    4. ஜனநாயகம், பேஷன், உணவு, உலக சினிமா உள்பட பல்துறைகளிலும் முன்னோடி பிரெஞ்சு!

      ஆனால் அதையெல்லாம் காசாக்கியது இங்கிலிஷ் நாடுகள்! அதுவும் குறிப்பாக அமெரிக்கா!

      இவையெல்லாமே அமெரிக்காவை பகடி செய்யக் காரணமாக இருக்கலாம்!

      Delete
    5. லக்கி லூக் கதைகளின் பல நுணுக்கமான விஷயங்களை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்!

      நேரம் கிடைக்கும் போது அவற்றை ஒரு தொகுப்பாக்கி பாதுகாக்க வேண்டும்!

      Delete
    6. உங்களுக்கு புடிச்ச கார்டூன் பதிவுன வுடன் பதிவுகள் பறக்குதே மிதுனரே😉😉😉

      நடக்கட்டும்...



      Delete
    7. அட்டகாசமான write up மிதுன். நீங்கள் எடுத்து வைத்த குறிப்புகளை எங்களுக்கும் பகிருங்கள். நன்றி

      Delete
  61. காரணம் புரியாமலே மே லக்கி லூக் மீது ஈர்ப்பு வந்தது இன்னும் அது குறையவில்லை

    ReplyDelete
  62. ஜாலி ஜம்பருக்கே முதல் ஓட்டு இரண்டாவது சாய்ஸ் இருந்தால் ரின்டின்கேன்

    ReplyDelete
  63. நேரம் இருக்கும்போது கலாமிட்டி ஜேன் பார்ட் 2 பேய்நகரம் படித்துப்பாருங்கள் நண்பர்களே. ஏனோ இந்தக்கதை அதற்குண்டான இடத்தைப்பெறத் தவறிவிட்டது. கோச்சு வண்டியில் வரும் பெண்களுக்கு உதவுகிறேன் என்றுஒரு குள்ளமான செனட்டர் சீன் போடுவதும் அவரேஅறியாமல் அவரது சீன்களை லக்கியும் கலாமிட்டியும் மெய்யாக்குவதும் அசந்து போகும் பெண்கள்செனட்டரை பகழும் போது செனட்டர்சீன் போடுவதும் அசத்தல்.திருடர்கள் கோச்வண்டியை கடத்துவார்கள்என்று கலாமிட்டி எதிர்பார்த்திருக்க அவர்களோ நாங்க ரெம்ப நாணயமான திருடர்கள் கடத்தவெல்லாம் மாட்டோம். கொஞ்சமாகதிருடிட்டு விட்டுருவோம் என, கலாமிட்டி கடுப்பாவதும் அடுத்தகாமெடி சீக்வன்ஸ். சலூன் உரிமையாளர் கலாமிட்டி யிடமே கலாமிட்டியின் ஆவிபற்றியகதையைக் கூறுவது அடுத்தசீக்வன்ஸ். செவ்விந்திய தலை கலாமிட்டியைபேய் என்று நினைத்து என்னை நாஷ்டா பண்ணிக்கோ என்று கடுப்பேற்றுவதுஅடுத்தசீக்வன்ஸ் என நான்ஸ்டாப்சிரிப்புத்தோரணமாகபட்டையைக் கிளப்பும். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  64. '"கதையில் வரும் மாடு குதிரை செவ்விந்தியர்கள் என அனைதெத்ம் கண்களைமூடியபடி ஒர் மோனநிலையிலயே வரையப்பட்டிருக்கும்" அட, இத்தனை வருசமா இதக்கவனிக்கலையே கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  65. அண்ணனிடமிருந்து, காமிக்ஸ் அறிமுகமாகி நான் தொடர்ச்சியாக காமிக்ஸ் வாங்க ஆரம்பித்து, வீட்டில் அண்ணன், அம்மா தம்பிகள் படித்தாலும் - அது வழக்கமான படக்கதை புத்தகம் என்றே பார்க்கப்பட்டது.
    அந்த "ஜீனியர் லயன் காமிக்ஸ்" என்று முழு வண்ணத்தில் - லக்கிலூக்கின் "சூப்பர் சர்க்கஸ்" - அந்த வண்ணக்கலவை, கதைக்களம்- காமெடி, ஒட்டு மொத்தமாக படக்கதை என்ற சாதா இமேஜையே மாற்றிவிட்டது.
    மற்ற கதைகள்-தமிழ் புத்தகமாகவே பார்க்கப்பட்ட ேபாது - லக்கிலூக் தான் ஆங்கிலப்புத்தகம் (காமிக்ஸ்) போல் தனித்தன்ைமையுடன் தெரிந்து-காமிக்ஸ் படிப்பது சிறுபிள்ளைச்சமாச்சாரம் அல்ல. அதற்கு தனி ேமேதாவித்தனம் ேவண்டும். என்பதுபோல் கெத்து காட்ட ஆரம்பித்தது அப்ேபாதிலிருந்துதான்.
    எனவே, லக்கிலூக்-மற்ற கார்ட்டூன் நாயகர்களை விட எனக்கு ஸ்பெஷல்தான்..

    ReplyDelete
  66. . நீங்கள் சொல்லுபவர்கள் போக-லக்கிலூக்கின் ஒவ்ெவாரு கதையிலும், சுவராஸ்யமான ேகேரட்டர்கள் உண்டு.
    எனக்கு மறக்கவே முடியாதவர்-"பயங்கர பொடியன்" - யில் வரும் கதை சொல்லும் தாத்தா தான்.பில்லிக்கு பயந்து. பயந்து கதை சொல்பவர் - கடைசியில் - ேகார்ட்டில் பயம் தெளிந்து-"அச்சுறுத்தப்பட்ேடன் யுவார் ஆனர்" என்று ரிலாஸ்ஸாக ேசாரில் அமர்ந்து சாட்சி சொல்லும் காட்சி எப்ேபாதும் எனக்கு மறக்காது.
    தற்ேபாது மறுவாசிப்பு செய்தவைகள் - லூட்டி வித் லக்கி - டால்டனின் இரண்டு கதைகள்.
    அடுத்து - தாயில்லாமல் டால்டன் இல்லை.

    ReplyDelete
  67. கௌபாய்கள் வெற்றிபெறுவது தான் கார்ட்டூனாக இருந்தாலும் சரி கமர்ஷியலாக இருந்தாலும் சரி உண்மை.

    ReplyDelete
  68. 90-களில் சன்டிவியில் பிரபலங்கள் ரசித்த காட்சி என்றொரு நிகழ்ச்சியில் ஒரு திரைப்படத்தில் தனக்கு பிடித்த காட்சியை வாரா வாரம் ஒரு பிரபலம் தொகுத்து வழங்குவார். அதைப்போல லக்கியின் எல்லா ஒரு குறிப்பிட்ட சம்பவம் நினைத்தாலே சிரிக்க வைக்கும். உதாரணமாக பயங்கர பாலத்தில் லக்கியும் ஜாலிஜம்பரும் மரக்கட்டையில் அனாயசமாக நின்றபடி தண்ணீரில் சறுக்கி வருவது, பூம்பூம் மாடு படலத்தில் ஸ்டேஷன் மாஸ்டரின் கிளைமாக்ஸ் அதிரடி, மேடையில் ஒரு மன்மதனில் சுரங்கத்தொழிலாளர்கள் சுத்தமாக குளித்தபடி அமர்ந்திருக்க அலர்களில் ஒருவராக காட்டிக்கொள்ள உடல் முழுதும் கரிபூசிக்கொண்டு (மாறுவேடமாம்)வரும் லக்கியை பார்த்து முகம் சுளிப்பது,ஜெஸ்லி ஜேம்ஸில் வில்லன் தன் சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் இவன்தான் மிஸ் பேசுனான் என போட்டுக்கொடுத்து பேர் வாங்குவது, ஜேன் இருக்க பயமேனில் ஜேனுக்கு நல்லொழுக்கம் போதிக்க வந்த வாத்தியார் கடைசியில் சுருட்டு சவைக்கிறீயா என கேட்டுவிட்டு கெட்டவார்த்தை பேசியடியே துப்பாக்கியை முழக்கிவிட்டு செல்வது,டால்டன் சகோதரர்கள் வரும்எல்லா கதைகளிலும் அந்த கழுகை வறுவல் சாப்பிட்டுட்டு போலாம்பா என ஆவ்ரெல் கேட்பதும் எதிரில் நிற்கும் மனிதரின் தலையை பிளேட்டில் சமைத்து வைத்ததை போல் கற்பனை செய்து பார்ப்பதும்.. இப்படி இன்னும் நிறைய... ...

    ReplyDelete
  69. ஹி..ஹி.. பூம்பூம் படலம் என வாசிக்கவும்.

    ReplyDelete
  70. 1. டெக்ஸைப் போலவே உண்மை மற்றும் நீதிக்காக போராடுவதால், "தனித்துவத்துடன், தன் தனிமையான வழியில்",

    2. ஜாலி ஜம்ப்பர், ரின்டின் கேன்

    3. Yes yes yes

    4. பூம்பூம் படலம், புரட்சித் தீ, ஒரு கோச் வண்டியின் கதை

    ReplyDelete
  71. சாரை சார்லி யும்

    ReplyDelete
  72. கேள்விேயே கேட்க்க கூடாது f e கண்டிப்பாக ேஜேன் இருக்கக் பயேமேன் ேபேய் நகரம் அதிரடிப் பொடியன்

    ReplyDelete
  73. சார் அடுத்த பதிவு எல்லார்க்கும்...வந்து பார்ப்போர்க்கும்...மறைந்து பார்ப்போர்க்கும் ஓர் பார்சல்

    ReplyDelete
  74. சார் ஒரு வேண்டுகோள். டெக்ஸ் 70ஆவது வருடம் கொண்டாட ஒரு டைனமைட் ஸ்பெஷல் வெளியிட்டு கொண்டாடியது போல, நமது டாப் நாயகர்களில் ஒருவரான லக்கி யை கொண்டாட ஒரு ஊசி வெடி ஸ்பெஷல் ஆவது இந்த ஆண்டில் வெளியிடலாமே. தயவுசெய்து மனது வையுங்கள் சார்.

    நண்பர்களே இதற்கு ஆதரவு தாருங்கள்....

    ReplyDelete
    Replies
    1. சார் ...நடப்பாண்டு போகிற போக்கைப் பார்த்தால் லக்கி லூக்கிடம் இரவல் வாங்க வேண்டி வரும் போல - அறிவித்துள்ள இதழ்களை, அறிவித்துள்ள காலகட்டத்திற்குள் முடிப்பதற்கான 'லக்கை !!'

      கொஞ்சமாக இயல்புக்குத் திரும்பியிருந்த புத்தகக்கடைகள் இனி மறுபடியும் என்றைக்கு வியாபார நார்மலுக்குத் திரும்பவுள்ளனவோ - ஆண்டவனுக்கே வெளிச்சம் ! And புத்தக விழாக்களும் ! மேற்படி இரண்டும் சிக்கலில் உள்ள வரைக்கும் புது முயற்சிகள் ஜெயம் காணும் சாத்தியங்கள் மிகக் குறைவே !

      Delete
  75. எனக்கு பிடித்த லக்பி கதைகள்
    1. கௌபாய் எக்ஸ்பிரஸ்
    2. புரட்சி தீ
    3. சூப்பர் சர்க்கஸ்
    4. பரலோகத்திற்க்கு ஒரு பாலம்
    5. பூம் பூம் படலம்
    6. சூ மந்திரகாளி
    7. ஒரு கோச்சு வண்டியின் கதை
    8. எதிரிகள் ஏராளம்
    9.பயங்கர பொடியன்
    மற்றும் வெளி வந்த எல்லா கதைகளுமே

    ReplyDelete
    Replies
    1. // மற்றும் வெளி வந்த எல்லா கதைகளுமே // I agree

      Delete
    2. எதிரிகள் ஏராளம் மாடஸ்டி கதைல்ல..

      நீங்கள் சொல்வது 'ஒற்றர்கள் ஓராயிரம் 'போல..

      Delete
  76. K. Sசார் லக்கிக்கு ஸ்பெசல்நாம் கேட்கவும் வேண்டுமா . லக்கியின் முதல் ரசிகரான ஆசிரியர் இந்நேரம் தீர்மானித்திருப்பார், எப்போது அறிவிப்பார் என்றே நாம் காத்திருக்கிறோம். கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
    Replies
    1. அப்படி சொல்லுங்கள் சார். +10000

      Delete
  77. லக்கி கதைகள் எல்லாமே புடிச்சதுதான்.

    ரொம்ப பிடித்தது என்றால்..

    பயங்கரப் பொடியன்.
    ஜெஸ்ஸி ஜேம்ஸ்.
    மேடையில் ஒரு மன்மதன் .
    கோச்சு வண்டியின் கதை.
    பூம் பூம் படலம்.
    கௌபாய் எக்ஸ்ப்ரஸ்.
    தாயில்லாமல் டான்டனில்லை.
    மனதில் உறுதி வேண்டும்.

    etc...

    ReplyDelete
  78. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete
  79. 1.Artwork..... Just looking itself its
    funny

    2. Jane is memorable

    3. Priority No.1

    4. Cowboy Express, Jane irukka bayamen, boom boom padalam

    ReplyDelete