நண்பர்களே,
வணக்கம். ஒற்றை வாரத்துக்குள் மின்னும் மரணத்தின் புண்ணியத்தில் ஒரு திருவிழாவை வாழ்ந்து பார்த்ததொரு அனுபவத்தோடு தரைக்குத் திரும்புகிறேன் - இந்தப் பதிவோடு ! ஆனால் பாருங்களேன் - இதுவும் கூட விண்ணில் எழும்பும் ஒரு சுகமான அனுபவத்தைப் பற்றியது என்பதால் - காற்றில் மிதக்கும் பாக்கியம் அடியேனுக்கு இன்னும் கொஞ்ச காலம் தொடர்கிறது! தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது மே மாதத்து விண்ணில் ஒரு வேங்கையின் முன்னோட்டத்தின் பொருட்டே என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்திருப்பீர்கள் என்பதால் - let's get into it guys !
LADY SPITFIRE என்பது தான் நாம் இம்மாதம் காணக் காத்திருக்கும் பிரெஞ்சுக் கதைத்தொடரின் ஒரிஜினல் பெயர். இது இரண்டாம் உலக யுத்தத்தின் களத்தை மையமாகக் கொண்டதொரு பெண் பைலட்டின் சாகசம் ! கிராபிக் நாவல்கள் பாணிகளில் நிஜக் கதைகளின் தழுவல்களாக இல்லாது வழக்கமான மசாலாத் தூவல்களோடு, அட்டகாசமான சித்திரங்களோடும், அதிரடி ஆக்ஷனோடும் இருந்திடும் ! அதெல்லாம் சரி, உலகயுத்தக் கதை பற்றியதொரு முன்னோட்டப் பதிவின் தலைப்பில் "பால்யங்களுக்கு" வேலை என்னவோ என்ற கேள்வி உங்களைக் குடையும் பட்சத்தில் இதோ அதற்கான 'ஹி..ஹி..' ரகத்திலான பதில். உங்களது இளமைக்காலத்து காமிக்ஸ் நினைவுகள் கரெண்ட் கம்பிகளைத் தேடித்திரியும் இரும்புக்கையார்களையும், ஏற்நெற்றி கொண்ட சிலந்தி மனிதர்களையும் ; பயர் இஞ்சினுக்கு அடித்ததின் மிச்சப் பெயிண்டில் மூழ்கி எழுந்த உலோகத் தலையர்களையும் சுற்றிப் பிணைந்திருப்பின், அடியேனின் soooooooooooooooo loooooooooooooong ago பால்யத்தின் காமிக்ஸ் கனவுகளில் ஒரு பெரும் பகுதி இரண்டாம் உலக யுத்த களத்தில் தீரங்கள் பல செய்த மனிதர்களையும், மிஷின்களையுமே சார்ந்து இருந்து வந்தன ! எழுபதுகளில், நான் வளர்ந்த நாட்களில் - இங்கிலாந்தில் காமிக்ஸ் பிரவாகமெடுத்துப் பொங்கிக் கொண்டிருந்ததொரு தருணம் என்பதைப் பின்னாட்களில் உணர்ந்து கொள்ள முடிந்தது. கார்டூன்கள் ; புட்பால் கதைகள் ; சாகசக் கதைகள் ; ரொமான்ஸ் கதைகள் ; பெண்களுக்கான கதைகள் ; திகில் கதைகள் ; பாக்கெட் சைஸ் இதழ்கள் ; ஆல்பம்கள் ; வாரப் பத்திரிகைகள் ' ஆண்டுமலர்கள் என்று ரவுண்ட் கட்டி FLEETWAY & DC THOMSON பதிப்பகங்கள் அடித்து வந்தன golden age அது ! அன்றைய விலைகள் மிகவும் குறைச்சல் என்பதால் இவை இங்கிலாந்திலிருந்து சரளமாய் இறக்குமதி செய்யப்பட்டு, இந்தியப் பெருநகரக் கடைகளில் ஆரம்ப நாட்களிலும், ஒரு இடைவெளிக்குப் பின்னே பழைய புத்தகக் கடைகளிலும் கிடைப்பதுண்டு. என் தந்தையின் புண்ணியத்தில் எங்கள் வீட்டில் சதா நேரமும் ஒரு லாரி லோடு காமிக்ஸ் கிடக்குமென்பதால் - எனது நேரங்களில் பெரும்பங்கு அந்தக் கத்தைக்குள் குடியிருப்பதிலேயே செலவாகிடுவது வழக்கம்.
PHANTOM கதைகள் மீது அதீத மையல் கொண்டு வளர்ந்தவன், ஒரு கட்டத்துக்கு மேலே கொஞ்சம் கொஞ்சமாய் இந்த யுத்தகளக் கதைகளுக்குள் ஐக்கியமாகத் தொடங்கினேன். அதிலும், விமான யுத்தக் கதைகளில் ஏனோ தெரியவில்லை அப்படியொரு பிரமிப்பு தோன்றுவது வழக்கம். ரொம்பச் சீக்கிரமே அந்நாட்களது பிரிட்டிஷ் ; ஜெர்மானிய ; அமெரிக்கப் போர்விமானங்களின் பெயர்கள் எல்லாமே அத்துப்படியாகியது ! இன்றைக்குப் போல நொடியில் கூகிள் தேடல்களுக்கு வழியில்லாத சமயம் அதுவென்பதால் இது போன்ற offbeat தேடல்களுக்கு அவ்வளவாக வழி கிடையாது என்பதால் - you just had to read more to know more! அந்தப் பசியில், அந்தத் தேடலில் பிறந்தது தான் பிரிட்டிஷ் விமானப் படையில் ஒரு பாயும் புலியாய் செயல்பட்டு அசாத்தியமாய் சாதித்து வந்த ஸ்பிட்பயர் ரக விமானத்தின் மீதான காதல் ! நான் கண்ணிலே பார்த்திருக்கவே வாய்ப்பிலாததொரு உலகம் ; எனக்குத் துளி கூடப் பரிச்சயம் இல்லா மாந்தர்கள் ; கிஞ்சித்தும் தொடர்பில்லா ஒரு யுத்த களம் - ஆனால் அதற்குள்ளும் சுவாரஸ்யமாய் புகுந்திட முடிந்ததெனில் - அது அந்நாட்களது பிரிட்டிஷ் கதை சொல்லும் பாணிகளுக்கு ஒரு பறைசாற்று ! ஒவ்வொரு கதையிலும் வரும் விமானிகளோடு எனக்கு ஏதோ ஒரு நேசம் தோன்றியது ; ரட்-டட்-டட்-டட் என விமானத்தின் மிஷின்கன்கள் நாஜிக்களின் விமானங்களை நோக்கிச் சீறும் போது, அந்த விசையில் இருப்பது என் விரல்கள் என்பது போல் தோன்றும் ! "சொய்ன்ன்ன்ங்க்" என்று ஜெர்மானிய விமானங்கள் குண்டடிபட்டு சமுத்திரத்தை நோக்கி வீழும் போது 'செத்தாண்டா சைத்தான்!' என்ற உற்சாகம் பொங்கியெழும் ! ஜெர்மானியர்கள் என்றாலே எதிரிகள் என்பது போலான mindset சின்னவயதில் தோன்றியதாலோ-என்னமோ முதன் முதலாய் பிரான்க்பர்டில் புத்தக விழாவினில் பங்கேற்க ஜெர்மனி சென்ற போது கூட - வில்லன்களின் தேசத்துக்குப் போவது போலொரு லேசான உணர்வு இருந்தது !! காமிக்ஸ் வெளியிடத் தொடங்கிய பின்னர் யுத்தக் கதைகளை உங்கள் தலைகளில் 'பர பர' வென சுமத்தும் ஆர்வம் எனக்குள் மலையாய் இருந்தது தான் ! ஆனால் அந்தக் கதைவரிசைகளில் பெரும்பகுதி one -shots என்பதால் ஒரு நிலையான நாயகன் ; ஒரு அணி என்று இருப்பதில்லை ! So தெளிவான hero-oriented கதைகளுக்குப் பழகியிருந்த நமக்கு இது போன்ற random கதைகள் சரிப்படாது என்று மனதுக்குப் பட்டதால், "பெருச்சாளிப் பட்டாளம்" ; "மின்னல் படை" போன்ற ஹீரோக்கள் கொண்ட கதைத்தொடர்களைத் தாண்டி வேறு களங்களுக்குள் வேகமாய் டைவ் அடிக்கும் தைரியம் இருந்திருக்கவில்லை ! (தப்பிச்சோம்டா சாமி என்ற மைண்ட் வாய்ஸ் கேட்குது !!) ஒரு மாதிரியாக எங்கெங்கோ நம் தேடல்கள் இட்டுச் சென்ற பின்னே, இந்த யுத்தக் கதைகள் மீதான ஒரு வேட்கை சன்னமாகிப் போனது ! அவ்வப்போது ஏதேனும் war backdrop -ல் கதைகள் தட்டுப்படும் பொழுது அவற்றைக் கொஞ்சம் கூடுதல் வாஞ்சையோடு பரிசீலனை செய்வேன் ; ஆனால் கதைகளில் ஒரு சுறுசுறுப்பு தட்டுப்படாவிட்டால் சத்தம் காட்டாமல் ஓரம் கட்டிவிடுவது வாடிக்கை. "வானமே எங்கள் வீதி" கதையிலும் வலுவாக இருந்ததால் சந்தோஷமாக அதனைத் தேர்வு செய்தேன் ! அந்த சமயம் தான் ஜூனியர் எடிட்டரின் தேடல்களில் இந்த LADY SPITFIRE கதை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது !
வித்தியாசமான சித்திரங்கள் ; எனது favorite ஸ்பிட்பயர் விமானங்களுக்கு கதையினில் ஒரு முக்கிய பங்கு ; பிரான்கோ பெல்ஜிய making என்ற விசிடிங் கார்டோடு இந்தக் கதை கைநீட்டிய பொழுது அந்தக் கரத்தைப் பற்றிக் குலுக்கும் ஆசையை தவிர்க்க இயலவில்லை. யுத்தப் பின்னணியில் பொதுவாக இங்கிலாந்தவர்கள் அல்லது அமெரிக்கர்கள் சாதிப்பது போல கதைகள் இருப்பதே பெரும்பான்மை ; ஆனால் இந்தக் களமோ - ஒரு பிரெஞ்சுப் பெண் பைலட் இங்கிலாந்தின் அணியில் இணைந்து சாகசம் செய்வது போன்ற கதையோட்டம் இருந்ததை ரசிக்க முடிந்தது ! தவிரவும், தடித் தடியான ஆம்பிளைப் பசங்களின் ஹீரோ அணிவகுப்புக்கு மத்தியில் ஒரு மென்மையான பெண் நாயகி அறிமுகம் ஆவதும் நம் கழகக் கண்மணிகளில் சிலருக்கு உற்சாகம் தரக் கூடும் என்றும் தோன்றியது ! So "விண்ணில் ஒரு வேங்கை" தமிழ் பேசும் நல்லுலக வானில் பறக்கத் தயாரானது இப்படித் தான் ! எங்கோ - எப்போதோ நடந்த யுத்தம் தான் எனினும், மனித குல வரலாற்றில் ஒரு மறக்க இயலா இரத்த அத்தியாயமாகிப் போன அந்த நாட்களை சிறிதேனும் தரிசிக்க முயற்சிப்பது வித்தியாசமான கதைத் தேடல்களுக்கு ஒரு குட்டிப் படியாகப் பார்ப்போமே ?
இதோ - "வி.ஒ.வே." இதழின் அட்டைப்படத்தின் first look ! ஒரிஜினலை முன்னட்டைக்கு அப்படியே பயன்படுத்தியுள்ளோம் - லேசான வர்ண முன்னேற்றத்தோடு ! பின்னட்டை நமது தயாரிப்பே ! படைப்பாளிகள் இந்த டிசைனைப் பார்த்து விட்டு ஒரு ஸ்மைலியை பதிலாக அனுப்பினார்கள் என்பதால் - I guess we got it right !
இதோ - இந்தத் தொடரின் படைப்பாளிகள் - கதாசிரியர் ; ஓவியர் ; கலரிங் ஆர்டிஸ்ட் என்ற வரிசையில் !
And, எப்போதும் போலவே - இதோ உட்பக்கங்களின் டீசரும் ! அந்த சித்திர பாணி ; வர்ணக் கலவைகள் டாலடிப்பதோடு - சமீப காலமாய் தவிர்க்க இயலாது போய் விட்ட "இச்சக்..பச்சக்" கலாச்சாரமும் தொடர்வதைப் பார்க்கலாம் ! பாருங்களேன் - இந்த "இ..ப.." வியாதி 'தல'யின் கதைகளைக் கூட விட்டு வைக்கவில்லை !! (அது சரி, 2012 முதலாய் இது வரை நாம் வெளியிட்டுள்ள கதைகளுள் "இ.ப" தலைகாட்டுவது எத்தனை இதழ்களில் (!!) என்ற கணக்கை எடுத்து வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்போமா ?)
காடு, மேடு, பள்ளமென தளபதியோடும், பௌன்சரோடும் சுற்றித் திரிந்த இடைவெளியில், விண்ணில் பறக்கும் இந்த அனுபவம் ரொம்பவே relaxed ஆக இருந்ததை உணர முடிந்தது ! மொழிபெயர்ப்பிலும், துளி கூடச் சிரமமின்றி , ஜாலியாய் சுற்றி வர முடிந்தது! தளபதியின் மெகா இதழ் அசுரத்தனமாய் நிற்கும் போது இது போன்ற நார்மல் இதழ்கள் துக்கடவாகத் தோற்றம் தருவது தவிர்க்க இயலாது தான் ; but I still have a feeling this Lady will do fine !!
அப்புறம் தளபதியின் ஸ்பெஷல் தடபுடலாய் தயார் ஆனது முதலாய் அடுத்த மண்டைக்குடைச்சல் குடி கொள்ளத் துவங்கி விட்டது - 'தல'யின் ஸ்பெஷல் துளியும் விடுதலின்றி தூள் கிளப்பியாக வேண்டுமே என்று ! இம்முறை தேர்வாகியுள்ள 3 டெக்ஸ் கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாப் பாணிகள் என்பதால் - மூன்றையும் ஒரு சேர வண்ணத்தில் பார்க்கப் போவது ஒரு அதிரடி அனுபவமாக இருக்குமென்பது உறுதி ! மூன்றிலுமே, டீம் டெக்ஸ் முழு பலத்தோடு பிரசன்னமாவதால், சுவாரஸ்ய மீட்டர் உச்சத்தில் நிற்பது நிச்சயம் ! And by the way - தல தாண்டவமாடும் இந்த லயன் இதழ் # 250-க்கு ஒரு பொருத்தமான பெயராக suggest பண்ணுங்களேன் ? ஏதேனும் ஒரு 'பளிச்' பெயர்சூட்டும் நண்பருக்கு ஒரு வித்தியாசமான பரிசு இம்முறை ! டெக்சின் கதாசிரியர் போசெல்லியிடம் ஆடோகிராப் பெற்றோரு டெக்ஸ் இதழை வரவழைத்துத் தருவதாக உள்ளோம் ! So அந்த சிந்தனைக் குதிரைகளை தட்டி விடலாமே guys ?
சென்ற பதிவின் பெரும்பான்மைத் தீர்மானம் கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமாவது இந்தாண்டுக்கே இருக்கட்டுமே என்றிருப்பதால் - OH YES !! என்று தலையாட்டுகிறேன் ! இந்தாண்டில் காமெடி கோட்டா சற்றே பலவீனமாய் இருப்பது நிஜமே என்பதால் - ஒரு ஜாலி-ஜாலி இதழைத் தயாரித்தால் போச்சு ! திட்டமிடலுக்கு அவகாசம் எடுத்துக் கொள்கிறேன் - அட்டகாசமான அறிவிப்போடு வரும் பொருட்டு ! அதன் மத்தியில் இந்த கார்ட்டூன் ஸ்பெஷல் இதழுக்கும் ஒரு பெயரை யோசித்து வையுங்களேன் ? See you around folks ! Have an awesome day!
PHANTOM கதைகள் மீது அதீத மையல் கொண்டு வளர்ந்தவன், ஒரு கட்டத்துக்கு மேலே கொஞ்சம் கொஞ்சமாய் இந்த யுத்தகளக் கதைகளுக்குள் ஐக்கியமாகத் தொடங்கினேன். அதிலும், விமான யுத்தக் கதைகளில் ஏனோ தெரியவில்லை அப்படியொரு பிரமிப்பு தோன்றுவது வழக்கம். ரொம்பச் சீக்கிரமே அந்நாட்களது பிரிட்டிஷ் ; ஜெர்மானிய ; அமெரிக்கப் போர்விமானங்களின் பெயர்கள் எல்லாமே அத்துப்படியாகியது ! இன்றைக்குப் போல நொடியில் கூகிள் தேடல்களுக்கு வழியில்லாத சமயம் அதுவென்பதால் இது போன்ற offbeat தேடல்களுக்கு அவ்வளவாக வழி கிடையாது என்பதால் - you just had to read more to know more! அந்தப் பசியில், அந்தத் தேடலில் பிறந்தது தான் பிரிட்டிஷ் விமானப் படையில் ஒரு பாயும் புலியாய் செயல்பட்டு அசாத்தியமாய் சாதித்து வந்த ஸ்பிட்பயர் ரக விமானத்தின் மீதான காதல் ! நான் கண்ணிலே பார்த்திருக்கவே வாய்ப்பிலாததொரு உலகம் ; எனக்குத் துளி கூடப் பரிச்சயம் இல்லா மாந்தர்கள் ; கிஞ்சித்தும் தொடர்பில்லா ஒரு யுத்த களம் - ஆனால் அதற்குள்ளும் சுவாரஸ்யமாய் புகுந்திட முடிந்ததெனில் - அது அந்நாட்களது பிரிட்டிஷ் கதை சொல்லும் பாணிகளுக்கு ஒரு பறைசாற்று ! ஒவ்வொரு கதையிலும் வரும் விமானிகளோடு எனக்கு ஏதோ ஒரு நேசம் தோன்றியது ; ரட்-டட்-டட்-டட் என விமானத்தின் மிஷின்கன்கள் நாஜிக்களின் விமானங்களை நோக்கிச் சீறும் போது, அந்த விசையில் இருப்பது என் விரல்கள் என்பது போல் தோன்றும் ! "சொய்ன்ன்ன்ங்க்" என்று ஜெர்மானிய விமானங்கள் குண்டடிபட்டு சமுத்திரத்தை நோக்கி வீழும் போது 'செத்தாண்டா சைத்தான்!' என்ற உற்சாகம் பொங்கியெழும் ! ஜெர்மானியர்கள் என்றாலே எதிரிகள் என்பது போலான mindset சின்னவயதில் தோன்றியதாலோ-என்னமோ முதன் முதலாய் பிரான்க்பர்டில் புத்தக விழாவினில் பங்கேற்க ஜெர்மனி சென்ற போது கூட - வில்லன்களின் தேசத்துக்குப் போவது போலொரு லேசான உணர்வு இருந்தது !! காமிக்ஸ் வெளியிடத் தொடங்கிய பின்னர் யுத்தக் கதைகளை உங்கள் தலைகளில் 'பர பர' வென சுமத்தும் ஆர்வம் எனக்குள் மலையாய் இருந்தது தான் ! ஆனால் அந்தக் கதைவரிசைகளில் பெரும்பகுதி one -shots என்பதால் ஒரு நிலையான நாயகன் ; ஒரு அணி என்று இருப்பதில்லை ! So தெளிவான hero-oriented கதைகளுக்குப் பழகியிருந்த நமக்கு இது போன்ற random கதைகள் சரிப்படாது என்று மனதுக்குப் பட்டதால், "பெருச்சாளிப் பட்டாளம்" ; "மின்னல் படை" போன்ற ஹீரோக்கள் கொண்ட கதைத்தொடர்களைத் தாண்டி வேறு களங்களுக்குள் வேகமாய் டைவ் அடிக்கும் தைரியம் இருந்திருக்கவில்லை ! (தப்பிச்சோம்டா சாமி என்ற மைண்ட் வாய்ஸ் கேட்குது !!) ஒரு மாதிரியாக எங்கெங்கோ நம் தேடல்கள் இட்டுச் சென்ற பின்னே, இந்த யுத்தக் கதைகள் மீதான ஒரு வேட்கை சன்னமாகிப் போனது ! அவ்வப்போது ஏதேனும் war backdrop -ல் கதைகள் தட்டுப்படும் பொழுது அவற்றைக் கொஞ்சம் கூடுதல் வாஞ்சையோடு பரிசீலனை செய்வேன் ; ஆனால் கதைகளில் ஒரு சுறுசுறுப்பு தட்டுப்படாவிட்டால் சத்தம் காட்டாமல் ஓரம் கட்டிவிடுவது வாடிக்கை. "வானமே எங்கள் வீதி" கதையிலும் வலுவாக இருந்ததால் சந்தோஷமாக அதனைத் தேர்வு செய்தேன் ! அந்த சமயம் தான் ஜூனியர் எடிட்டரின் தேடல்களில் இந்த LADY SPITFIRE கதை என் பார்வைக்கு வந்து சேர்ந்தது !
வித்தியாசமான சித்திரங்கள் ; எனது favorite ஸ்பிட்பயர் விமானங்களுக்கு கதையினில் ஒரு முக்கிய பங்கு ; பிரான்கோ பெல்ஜிய making என்ற விசிடிங் கார்டோடு இந்தக் கதை கைநீட்டிய பொழுது அந்தக் கரத்தைப் பற்றிக் குலுக்கும் ஆசையை தவிர்க்க இயலவில்லை. யுத்தப் பின்னணியில் பொதுவாக இங்கிலாந்தவர்கள் அல்லது அமெரிக்கர்கள் சாதிப்பது போல கதைகள் இருப்பதே பெரும்பான்மை ; ஆனால் இந்தக் களமோ - ஒரு பிரெஞ்சுப் பெண் பைலட் இங்கிலாந்தின் அணியில் இணைந்து சாகசம் செய்வது போன்ற கதையோட்டம் இருந்ததை ரசிக்க முடிந்தது ! தவிரவும், தடித் தடியான ஆம்பிளைப் பசங்களின் ஹீரோ அணிவகுப்புக்கு மத்தியில் ஒரு மென்மையான பெண் நாயகி அறிமுகம் ஆவதும் நம் கழகக் கண்மணிகளில் சிலருக்கு உற்சாகம் தரக் கூடும் என்றும் தோன்றியது ! So "விண்ணில் ஒரு வேங்கை" தமிழ் பேசும் நல்லுலக வானில் பறக்கத் தயாரானது இப்படித் தான் ! எங்கோ - எப்போதோ நடந்த யுத்தம் தான் எனினும், மனித குல வரலாற்றில் ஒரு மறக்க இயலா இரத்த அத்தியாயமாகிப் போன அந்த நாட்களை சிறிதேனும் தரிசிக்க முயற்சிப்பது வித்தியாசமான கதைத் தேடல்களுக்கு ஒரு குட்டிப் படியாகப் பார்ப்போமே ?
இதோ - "வி.ஒ.வே." இதழின் அட்டைப்படத்தின் first look ! ஒரிஜினலை முன்னட்டைக்கு அப்படியே பயன்படுத்தியுள்ளோம் - லேசான வர்ண முன்னேற்றத்தோடு ! பின்னட்டை நமது தயாரிப்பே ! படைப்பாளிகள் இந்த டிசைனைப் பார்த்து விட்டு ஒரு ஸ்மைலியை பதிலாக அனுப்பினார்கள் என்பதால் - I guess we got it right !
இதோ - இந்தத் தொடரின் படைப்பாளிகள் - கதாசிரியர் ; ஓவியர் ; கலரிங் ஆர்டிஸ்ட் என்ற வரிசையில் !
Author : Sebastien Latour |
Artist : Vicanovic Maza |
Coloring Artist : Clement Sauve |
பிழை திருத்தங்கள் போடா பக்கமிது ! |
அப்புறம் தளபதியின் ஸ்பெஷல் தடபுடலாய் தயார் ஆனது முதலாய் அடுத்த மண்டைக்குடைச்சல் குடி கொள்ளத் துவங்கி விட்டது - 'தல'யின் ஸ்பெஷல் துளியும் விடுதலின்றி தூள் கிளப்பியாக வேண்டுமே என்று ! இம்முறை தேர்வாகியுள்ள 3 டெக்ஸ் கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாப் பாணிகள் என்பதால் - மூன்றையும் ஒரு சேர வண்ணத்தில் பார்க்கப் போவது ஒரு அதிரடி அனுபவமாக இருக்குமென்பது உறுதி ! மூன்றிலுமே, டீம் டெக்ஸ் முழு பலத்தோடு பிரசன்னமாவதால், சுவாரஸ்ய மீட்டர் உச்சத்தில் நிற்பது நிச்சயம் ! And by the way - தல தாண்டவமாடும் இந்த லயன் இதழ் # 250-க்கு ஒரு பொருத்தமான பெயராக suggest பண்ணுங்களேன் ? ஏதேனும் ஒரு 'பளிச்' பெயர்சூட்டும் நண்பருக்கு ஒரு வித்தியாசமான பரிசு இம்முறை ! டெக்சின் கதாசிரியர் போசெல்லியிடம் ஆடோகிராப் பெற்றோரு டெக்ஸ் இதழை வரவழைத்துத் தருவதாக உள்ளோம் ! So அந்த சிந்தனைக் குதிரைகளை தட்டி விடலாமே guys ?
சென்ற பதிவின் பெரும்பான்மைத் தீர்மானம் கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமாவது இந்தாண்டுக்கே இருக்கட்டுமே என்றிருப்பதால் - OH YES !! என்று தலையாட்டுகிறேன் ! இந்தாண்டில் காமெடி கோட்டா சற்றே பலவீனமாய் இருப்பது நிஜமே என்பதால் - ஒரு ஜாலி-ஜாலி இதழைத் தயாரித்தால் போச்சு ! திட்டமிடலுக்கு அவகாசம் எடுத்துக் கொள்கிறேன் - அட்டகாசமான அறிவிப்போடு வரும் பொருட்டு ! அதன் மத்தியில் இந்த கார்ட்டூன் ஸ்பெஷல் இதழுக்கும் ஒரு பெயரை யோசித்து வையுங்களேன் ? See you around folks ! Have an awesome day!
பதிவு... வந்திடுச்சு........ (சாரி சார். ரெஸ்ட் எடுக்கவிடாம பதிவு போட பண்ணிட்டோம்..)
ReplyDeletePodiyan : அட..ரெஸ்ட்டாவது ஒண்ணாவது ; தளபதி தந்துள்ள பூஸ்டில் நண்பர்களும், தளமும் முறுக்கேறி இருக்கும் வேளையில் தூக்கம் பிடிக்குமா ?! Let's cherish the moment !!
Deleteஅதானே.... காலை வணக்கங்கள் சார்.
Delete2..?. மேலே சென்று படித்துவிட்டு வருகிறேன்
ReplyDeleteயுத்த கதைகள் என்றாலே ஒருவித சோகம் இருந்தாலும், அது ஒரு வரலாறு.. நம்மால் பங்கு பெற முடியாமல் போனாலும் அவற்றை படிக்கும் போது நாமும் அதனுடன் கலந்து செல்வது போன்ற உணர்வுக்கு விலை இல்லை.. அதற்கென்று தனி ரசிகர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். எனவே இதனையும் வாசகர்களிடம் கேட்டுப் பார்க்கலாம்.
DeleteGood morning sir
ReplyDeleteMahesh : Good morning Mahesh ! Morning all !!
DeleteThe colours of front cover and the sea blue is mesmerizing, I am waiting to get this visual treat in hand ASAP.
DeleteRegarding the question I posted in last post:
Its hard to read or narrate these matured stories to my kids. They just bring those books to me and ask me to narrate the stories. The best stories I find to read them are Mayavi and spider which amazes them with their abilities.
The question was not raised just for a sake. Please consider publishing robot Archie, suski & viski, there was a car story, I forgot its name as reprints until u find good fantasy stories.
Triple Treat Special (TTS) - Tex story
DeleteSirikalam vaanga - cartoon special
Tex Triple Treat Special (TTT Special)
DeleteTexas Special
hi
ReplyDeleteGood morning..Eagerly waiting for the May Releases
ReplyDeleteAnd by the way - தல தாண்டவமாடும் இந்த லயன் இதழ் # 250-க்கு ஒரு பொருத்தமான பெயராக suggest பண்ணுங்களேன் ?
ReplyDelete"Thala ..ThangaRasu Special" on a lighter note....."Willer's Killer Collection" on a serious note
10த்
ReplyDeleteஎடி சார் காலை வணக்கம்
ReplyDeleteஇப்பொழுதுதான் முதல் தடவை பார்க்கிறேன்
என்ன அது?
டெக்ஸ்ன் ( ப்பச்சக் ) முத்தக்காட்சி
லயன்250 நாட்அவுட் ஸ்பெசல்,லயன் சம்திங் நியூ ஸ்பெஷல்,lion cracking diwali special....lion thousandwala special...லயன் டெக்ஸ் வெடி சிறப்பிதல், டெக்ஸ் நெவர் பிபோர் ஸ்பெசல்,
ReplyDelete//ஜெர்மானியர்கள் என்றாலே எதிரிகள் என்பது போலான mindset சின்னவயதில் தோன்றியதாலோ-என்னமோ முதன் முதலாய் பிரான்க்பர்டில் புத்தக விழாவினில் பங்கேற்க ஜெர்மனி சென்ற போது கூட - வில்லன்களின் தேசத்துக்குப் போவது போலொரு லேசான உணர்வு இருந்தது !! ///
ReplyDeleteநவீன ஜெர்மனி குறித்து நண்பர்கள் ஐயம் கொள்ள வேண்டாம் ...
neo nazism சிந்தனைகள் தோன்ற இப்போதைய ஜெர்மனி ஒத்து கொள்வது இல்லை ..
ஹோலோகாஸ்ட் ஜெர்மனி தேசத்தில் நடக்க வில்லை என வரலாற்றை மறுத்து கூறுவது ஜெர்மனி தேசத்தில் சட்டப்படி குற்றம் ..
நடந்த தவறுக்காக பகிரங்கமாக மன்னிப்பு ஏற்கனவே கேட்கபட்டு விட்டது ..
சமீபத்தில் ஒரு பள்ளியில் ஸ்வஸ்திக் பனியன் அணிந்த பள்ளி மாணவர்கள் ரகசிய கூட்டம் நடத்திய போது மீடியாக்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானது ..
இப்போதைய ஜெர்மானியர்கள் "உயர்ந்த ஆரிய வம்சம் " என்ற எண்ணத்தில் வளர்வது போல் தெரியவில்லை ..
Thalaiyin adhagala special , Thalaiyin Attagasa Special , Thalayin Amarkala Special ....
ReplyDeleteComedy special itself is a good title i think Sir ... Simple and neat ...
சென்ற பதிவின் பெரும்பான்மைத் தீர்மானம் //கார்ட்டூன் ஸ்பெஷல் மட்டுமாவது இந்தாண்டுக்கே இருக்கட்டுமே என்றிருப்பதால் - OH YES !! என்று தலையாட்டுகிறேன்//
ReplyDelete:-)
அப்பாடா ...படிச்சுட்டு வர்றேன் சார் ...:)
ReplyDeleteதலீவரே கன்கிராடஸ்
Deleteலயன் கில்லர் ஸ்பெசல் (LKS )
ReplyDeleteயார் ஜெயித்தாலும் பரிசை என்னிடம் தந்து விடுங்கள் நண்பர்களே ..ஹி..ஹி..
Deleteகார்ட்டுன் ஸ்பெஷல் குண்டாக இருக்கனும்
ReplyDeleteஆமாம் .செம குண்டா இருக்கோனும்.
Deleteஎடிட்டர் சார் ...கார்ட்டூன் ஸ்பெஷலுக்கு ஏற்கனவே நிறைய தலைப்பு சொல்லி விட்டோமே ????!!!!!!!?????!!!!
ReplyDelete:)
Deleteஅதனாலென்ன? கோட்டையெல்லாம் அழிச்சுட்டு மறுபடியும் புரோட்டா சாப்பிட வேண்டியதுதான்! ;)
Deleteபுது போட்டோ அருமை.
Deleteகாலை வணக்கம் எடி சார் & நண்பர்களே.
ReplyDeleteலயன் ஆர்ப்பாட்ட ஸ்பெஷல் (LAS)-அடிக்க வராதீர்கள் நண்பர்களே , ஏதுவாயினும் பேசி தீர்த்துக்கலாம்.
ReplyDeleteவிண்ணில் ஒரு வேங்கை back cover looks good Edit sir!, i am not sure about front cover let me see the book in hand and say abt front cover!
ReplyDeleteLion not for end special, lion golden special.,இந்த தலைப்பு நல்லா இருக்கா நண்பர்களே அனைத்து நண்பர்கள்+ஆசிரியருக்கும் இனிய காலை வணக்கங்கள்
ReplyDeleteLion non stop super star .லயன் அல்டிமேட் ஸ்டார் ஸ்பெஷல்
ReplyDeleteTriple tex spcl
ReplyDeleteகாலை வணக்கம் எடி சார்
ReplyDeleteபுது தொடருக்கு சந்தோச வரவேற்புகள்
ஹென்னா ரிட்ச் என்னவானார் சார்?
அமாம்.அந்த அழகு பெண் என்னவானார்?
DeleteLion action special.. lion ever never special... லயன் லஷ்மி வெடி ஸ்பெசல்:-),, Lion ever never action special,,
ReplyDeleteஅன்பு ஆசிரியரே....
ReplyDeleteநேற்று என் ஸ்கூல் ஆசிரியரிடம் மின்னும் மரணம் வாசிக்க கொடுத்தேன்.(மாதா மாதம் நமது இதழ்களை கொடுப்பது வழக்கம்)வியந்து போயவிட்டார். இதைப்போல் ஒரு பிரமாண்டமான காமிக்ஸ் புக் பார்த்ததில்லை என அவர் வீட்டாரிடம் சொல்லி மகிழ்ந்தது பூரிப்பாக இருந்தது.
சொல்லி மாளா உழைப்பு ..தமிழ் சரித்திரத்தில் தனி இடம் பெறும் இந்த படைப்பு.
இன்னொரு விஷயம் ஆசிரியரே ....
பல அத்தியாயங்களைக கொண்ட ஒரு கதையை ஒருங்கிணைத்து ஒரு குறிப்பிட்ட பக்கங்களுக்குள் ஒரே புத்தகமாக கொண்டு வரும்போது பல Panel களை கத்திரி போட்டும் சுருக்கி கட்டிங்/பேஸ்டிங் என பல பல்டிகள் அடித்து தான் தயாரித்தாக வேண்டும்.
வேறு வழியேயில்லை என எனக்கும் தெரியும்.குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.
இரண்டிரண்டு பாகங்காளாக எந்த சேதாரமுமில்லாமல் அதன் ஒரிஜினல் வடிவில் முழுமையாக ரசிக்கலாமே....
AHMEDBASHA TK : ????
Deleteஎந்தக் கதையைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே ? மின்னும் மரணம் மெகா இதழைப் பற்றியா ?? அதனில் ஒரு சிங்கிள் frame -ல் கூடக் கத்திரி போடவில்லையே ? போடும் அவசியமும் எழவில்லையே ?
I think he stats about 'iratha padalam'
Deleteமன்னிக்க வேண்டும் சார்...இந்த்கதையின்
Deleteவண்டி வண்டியான வசனங்கள் /பலூன்கள் நமது இந்த சைஸ் ஃபரேம்களின் ஏகப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து உள்ளதால் எனக்கு அப்படி தோன்றுகிறது .மற்றபடி ஒன்றுமில்லை.
எதிர்காலத்தில் நம் பேப்பர் சைஸ் மாறும் நாள் நிச்சயம் வரும்.
Sorry, iratha padalam coller collection'
Deletecollection'!
Tex Terminator spcL
ReplyDeleteகாலை வணக்கம் எடி சார்
ReplyDeleteபுது தொடருக்கு சந்தோச வரவேற்புகள்
ஹென்னா ரிட்ச் என்னவானார் சார்?
Lion terminate spcl
ReplyDeleteLion's special
கில்லர் வில்லர் ஸ்பெஷல்
ReplyDeleteLion actionmela spl,லயன் டமால் டுமீல் ஸ்பெசல்,லயன் மெகா ஆக்சன் ஸ்பெசல்,
ReplyDeleteவில்லர் கில்லர் ஸ்பெஷல்
ReplyDeleteTriple Treat Tex Special
ReplyDeleteTTT Special
TEX Splendor collection
ReplyDeleteTEX Triple Spark ( The collection )
LionComics-250, TEX Triple Spark
TEX Trio Collection
Rifles Spark edition( Tex Complete Action)
TEX Ultimate collection
TEX The Ultima (Ultima / Ultimate- the farthest point; )
Willer Grand Collection
DeleteWiller Grand Special (Grand- denoting the largest or most important item of its kind.)
TEX Willer Reloaded (All new triple action)
DeleteTEX Gang of fire
லயன் டிரிபிள் டமாக்கா ஸ்பெஷல்.லயன் அட்வெட்ஞ்சர் ஸ்பெஷல்.லயன் அன்லிமிடேட் ஸ்பெஷல்
ReplyDeleteUltimate King special
ReplyDeleteகார்டூன் ஸ்பெஷல் பெயர் புதுசா சொல்ல ஒன்னுமில்லையே எடி சார் பழைய பதிவுகளை புரட்டினாலே நிறைய பெயர் கிடைக்குமே சார்ர்ர்
ReplyDeleteAwesome trio special
ReplyDeleteலயன் டிரிபிள் ஷாட் ஸ்பெஷல்.
ReplyDeleteநாங்களும் யோசிப்போம்ல.
தல ஸ்பெஷல் 250
ReplyDeleteவில்லர் ஷோலோ ஸ்பெஷல்
சார் ...வருகைக்கு மிக மிக பெரிய நன்றி சார் ...
ReplyDeleteஎனக்கு என்னவோ ஆரம்பத்தில் இருந்தே போர் கதைகள் மனதை கவராமலே போய் விட்டது சார் .(ஆனால் அதிரடிபடை ஜான் வெஸ்ட் ..ஹென்றி. குழு..பிறகு அதில் மாற்றம் கண்ட சாகஸ தலைவி மனதை கவர்ந்தது இப்போது வரை )இம்முறை இந்த தலைவி மனதை கவரும் என்றே நம்புகிறேன் ...(காரணம் நானும் இப்போது அடிக்கடி போர்க்களத்தில் சிக்குகிறேன் அல்லவா .ஹிஹி ..)
இந்த வருடமே "கார்ட்டூன் ஸ்பெஷல் "வருகைக்கு போராட்ட குழுவின் சார்பாகவும்..டைகர் ரசிகர்கள் சார்பாகவும் மனம் கனிந்த நன்றி சார் ...:)
டெக்ஸ்..டீஸர் பக்கங்கள் 4,5கொடுத்தால் இப்படி வெறுங்காற்றில் கத்தி வீச வேண்டிய அவசியம் இல்லையே சார் ..
ReplyDelete//பயர் இஞ்சினுக்கு அடித்ததின் மிச்சப் பெயிண்டில் மூழ்கி எழுந்த உலோகத் தலையர்களையும் ///
ReplyDeleteஹாஹாஹா! தங்கத் தலைவன் ஆர்ச்சிக்கு இப்படியொரு வர்ணனையா! :)))
நீல வானத்தின் பின்ணனியில் அட்டைப்படம் அழகு!
மி.ம அட்டைப்படத்தில் முத்து காமிக்ஸின் லோகோ முதன்முறையாக (நான் சரியாத்தானே பேசுறேன்?) வண்ணத்தில் அச்சிடப்பட்டு அசத்தியிருக்கிறதே... 'லயன் 250'யில் லயனின் லோகோவும்....
அப்புறம்... மி.ம ஏற்படுத்தவிருக்கும் ரெக்கார்டு என நீங்கள் குறிப்பிட்டது எதை, எடிட்டர் சார்? இன்னும் கண்டுபிடிக்க முடியலயே...
//அப்புறம்... மி.ம ஏற்படுத்தவிருக்கும் ரெக்கார்டு என நீங்கள் குறிப்பிட்டது எதை, எடிட்டர் சார்? இன்னும் கண்டுபிடிக்க முடியலயே...
Delete//
கண்டுபிடிக்க முடியலயே...!
Editor mentioned somewhere that the record is this story has maximum dialogues compared to any other book
DeleteHELLO VIJAYAN SIR... MY TWO REQUESTS:
ReplyDelete1. இரத்தப் படலம் COLLECTORS SPL ILLAI YENDRALUM PARAVAYILLAI, இரத்தக் கோட்டை -YAVADHU PODUNGAL.
2. டெக்ஸ்வில்லர்'in தனியே ஒரு வேங்கை+கொடூர வனத்தில் டெக்ஸ்+துரோகியின் முகம். OREY BUTHAGAMAGA COLOURIL MARUPADHIPPU SEYYUNGAL.
///2. டெக்ஸ்வில்லர்'in தனியே ஒரு வேங்கை+கொடூர வனத்தில் டெக்ஸ்+துரோகியின் முகம். OREY BUTHAGAMAGA COLOURIL MARUPADHIPPU ///-- டியர் ஜெகத் இது முந்தாநாள் வந்த கதை . 30வருடம் முன்பு வந்த பவள சிலை மர்மம் , பழிக்குப் பழி, டிராகன் நகரம் , பழிவாங்கும் புயல் , கழுகு வேட்டை , இரும்புக்குதிரையின் பாதையில் ....என கோல்டன் டெக்ஸ் கதைகளே இன்னும் மறுபதிப்பு ஆகாமல் நமக்காக வெயிட்டிங்ல இருக்கு.
Deleteநீங்கள் குறிப்பிட்ட கதைகள் அனைத்தும் சூப்பர்கதைகள் .எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது.
DeleteTO SALEM TEX VIJAYARAGHAVAN....
DeleteANDHA KADHAI LION'IL VANDHU 13 VARUSHAM ACHU. RANI COMICS'IN THEEVIRA RASIGARAGA IRUNDHA ENN APPA PADITHU, RASITHU, POORITHU POY PARATTIYA KADHAI. 17 VARUSHAM RANI COMICS'LA KOODA IPPADI ORU ARPUDHAMANA KADHAI PADICHADHILLA. ARNOLD'ODA PREDATOR PADAM PARTHA MADHIRI OREY THRILLINGA IRUNDHUCHIDA ENDRU APPODHU AVAR SONNADHU INDRUM NINAIVIRUKKU. ANDHA KADHAIYAI COLOUR'IL PADIKKANUM'NU AASAI.
ஓ அது வந்து 13வருடங்கள் ஆயிட்டதா! எனக்கு இன்னும் போன வாரம் படித்த பீலிங் ,அதாவது அந்த அளவு அற்புதமாகவும் ஆழமாகவும் மனசிலே பதிஞ்சு இருக்கு. உங்க தந்தை பாராட்டியது சூப்பர் நியூஸ் . இன்னும் நான் சொன்ன மிகப்பழமையான கதைகள் வெயிட்டிங்ல இருக்குது என்றால் இது வர இன்னும் கொஞ்சம் நாள் காத்து இருக்கனும் போல தோன்றுகிறது . மேலும் தல மறுபதிப்பு பற்றி சென்னையில் கேட்டபோது ஆசிரியர் வாயை திறக்கவே இல்லை . ஒருவேளை தேவையான வாக்குகள் இன்னும் தலை வாங்கவில்லையோ என்னவோ????. ஆனாலும் ஆகஸ்டு ல ஆசிரியர விடுவதாக இல்லை.
Deleteபுத்தகம் வந்து 13 வருடங்கள் ஆனாலும்,கடந்த 3வருடங்கள் வரை எடிட்டரின் குடோனில் ஸ்டாக் இருந்தது.அதனால் நமக்கு நீண்டகலமாக தோன்றவில்லை.
Deleteநம்ம குழந்தைகளுக்கு பேர் வைக்கக்கூட இவ்வளவு மெனக்கெட்டிருக்க மாட்டோம்னு நினைக்கிறேன்....
ReplyDeleteமாஸ் டெக்ஸ் (தல) ஸ்பெஷல்
ReplyDeleteரேஞ்சர் ஸ்பெஷல்
Delete'டெக்ஸ்'ஸாஸ் ரேஞ்சர்ஸ் ஸ்பெஷல்
Deleteஸ்டன் கன் ( டெக்ஸ் ) ஸ்பெஷல்
Deleteவெற்றி பெற மாட்டேன்னு தெரியும் சார் ...இருந்தாலும் டெக்ஸ் அவர்களுக்காக களம் இறங்குகிறேன் ...
ReplyDeleteடெக்ஸ் டைனமட் ஸ்பெஷல் ..
அதிரடி ஆக்ஷன் ஸ்பெஷல் ...
3 இன்1 ஆக்ஷன் ஸ்பெஷல் ...
"lion. " டெக்ஸ் ஸ்பெஷல் ...
டெக்ஸ். "gun"ஸ்பெஷல் ....
250 .....golden special......
கெளபாய் கிங்ஸ் ஸ்பெஷல் ..
காமிக்ஸ் டெர்மனட்டர் ஸ்பெஷல் ....
டெக்ஸ் ஜூப்ளி ஸ்பெஷல் ...
மீண்டும் தொடரும் ....
Hello Editor Sir, I am Manoj from trichy this is my first post past one year onwards I read this blog weekly basis past 2 months back I got job in America every week I read your blog atleast 7 to 10 Times including comments too I love comics my mother makes me as a comic reader because I am a matriculation Student Tamil is a tough language for me on my childhood my mother give me a comic book (lion comics) nothing she said to read or not my own self having a interest to read comic book after some months my Tamil also became good I still remember the golden days - here if I feel alone I start to read your blog I can't explain but I get happiness while reading your blog I am coming to India on November only I miss the Minnum Maranam book celebration Because I am also a tiger fan " TEAM TIGER " & Thank you
ReplyDelete...ம்...கிளப்புங்கள்.!!!
ReplyDeleteLion action rangers spl, ஆக்சன் நெவர் என்ட்ஸ் (lion action never ends spl),Lion action crackers spl,லயன் அல்டிமேட் ஆக்சன் ஸ்பெசல், லயன் ஆக்சன் ரிவால்வர் ஸ்பெசல்,
ReplyDeleteலயன் ஆக்சன் ரிவால்வர் ஸ்பெசல்
Deleteஅட இது நல்லார்க்கே
லயன் one lakh wala special.
ReplyDeleteலயன் வேட்டையாடு விளையாடு ஸ்பெஷல்.
லயன் action mela ஸ்பெஷல்.
கடைசி டைட்டில் க்கு சுந்தர் ஜி மன்னிச்சு.
Delete"TASMAC" special ( Texas Action Superstar's Mega Action Combo special)
ReplyDeleteபேரக் கேட்டாலே ச்சும்மா ஜிவ்வுனு ஏறும்ல?! ;)
ஏழிசை வேந்தரே எப்படி இப்படி ?
Deleteஇப்படியொரு தலைப்போட, ஏதாவது ஒரு புத்தகக் கண்காட்சியில் சரியா 10 மணிக்கு விற்பனையை ஆரம்பிச்சோம்னா மக்கள் க்யூல நின்னு வாங்கிட்டுப் போவாங்க! ;)
Deleteஹாஹாஹா ஹிஹிஹி ஹூஹூஹூ.!!!!
Deleteஅந்த கியூல மொத ஆளே நீங்கதான் பூனையாரே
DeleteKalayilayay pottukittay yosipingalo?
Deleteவிஜய் .....ஹா ..ஹா ....ஹா ...
Deleteகூடவே கார்ட்டூன் ஸ்பெஷலும் வெளியிட்டு "சிரிப்பு ஊறுகாய் "அப்படின்னு பேரு வச்சிட்டா போதும்
:))
Deleteஇதோட ஊறுகாய் பாட்டில் ஃபிரி என்று வச்சாக்கா, கலக்சன் பிச்சிக்கும்:)
Lion Amazing Special
ReplyDeleteலயன் அதிரடி சரவெடி ஸ்பெஷல்.
லயன் Non Stop Action Special.
Cowboy king collector special
ReplyDeleteVillar'S vintage special
Cartoon galatta special
Comedy galatta special
விண்ணில் ஒரு வேங்கை-ஒரு வித்தியாசமான சாகசத்துக்கு தயாராக வேண்டும்.
ReplyDeleteவிண்ணில் ஒரு வேங்கை டீசர் திருப்திகரமாக உள்ளது சார்.
ReplyDelete//2012 முதலாய் இது வரை நாம் வெளியிட்டுள்ள கதைகளுள் "இ.ப" தலைகாட்டுவது எத்தனை இதழ்களில் (!!) என்ற கணக்கை எடுத்து வரலாற்றுக்குப் பெருமை சேர்ப்போமா ?)//
ReplyDeleteany one notice the request from Editor ....! :P
ரொம்ப சுளுவான வேலை! எல்லாப் புத்தகங்களையும் எடுத்துவச்சு மொடமொடன்னு இருக்கும் பக்கங்களை ( ஜொள்ளு) எண்ணினாலே போதும்! ;)
DeleteYup, it seems he is in romantic mood, may be we can expect a Romantic Special from him very soon.
Deleteyeah :D.....
Deletethese rainy summer .............
லயன் டெக்ஸ் ஸ்பெஷல் (LTS )
ReplyDeleteடெக்ஸ் தன்டர் ஸ்பெஷல் (TTS )
டெக்ஸ் தன்டர் தமாக்கா (TTD)
கிராக்ளிங் சம்மர் ஸ்பெஷல் (KSS)
Deleteஇந்த லயன் இதழ் # 250-க்கு ஒரு பொருத்தமான பெயர் "STUNNER SPECIAL"
ReplyDeleteசும்மா நச்சுன்னு இருக்கு ஜெகத்குமார் சார்
DeleteTHANKS JAYA SEKHAR SIR.
Deleteஅனைவருக்கும் வணக்கம். வழக்கம்போல் அட்டைப்படம் அருமை. வா.எ.வீ கடைசி பாகம் எப்போது வருகிறது.
ReplyDeletericky_tbm Ramesh : பாகம் 3-ஐ மே இறுதியில் தான் பிரான்சிலேயே வெளியிடுகிறார்கள்..
DeleteNOT OUT SPECIAL
ReplyDeleteThala 250 - NOT OUT SPECIAL
ReplyDeleteடெக்ஸ் DAZZLING ஸ்பெஷல்
ReplyDeleteடெக்ஸ் TRIO ஸ்பெஷல்
வில்லர் வின்னர் ஸ்பெஷல்
இது வேங்கையின் வேளை ஒரு NON ஸ்டாப் ACTION ஸ்பெஷல்
டெக்ஸ் ..டேக் ஆப் ஸ்பெஷல்
கலா ட்டூன் காமெடி ஸ்பெஷல்
எவர்க்ரீன் காமெடி ஸ்பெஷல்
டெக்ஸ் கதைக்கு பெயர் வைக்க ரொம்ப யோசிக்காம நம்ம பழய கார்டூன் கதைகளின் பெயர்களிள் இருந்தே ஈசியா எடுத்திடலாமே
ReplyDelete1) இரும்புக் கவுபோய்
2) விசித்திர ஹீரோ
3) மேற்கே ஒரு மாமன்னர் (டெக்ஸ் தான் கிங் ஆச்சே)
4) நற்புக்கு வயதில்லை
5) நிஜம் 1 நிழல் 3 (புக் 1 கதை 3)
6) நல்ல நைனா
7) ஒரு ஜென்டில்மேனின் கதை 3
8) மந்திரியும் டெக்ஸே மன்னவனும் டெக்ஸே
9) எக்ச்ப்ரெஸ் கவுபோய்
10)அப்புறம் மறையில்லா மன்னர் பெயரை இந்த லிச்ட்ல நான் சேர்க்கல (நான் வீடு போய் சேரனும்)
இதோட நிறுத்திகுவம்
எடிட்டர் வெற் கார்ட்டூன் ஸ்பெசலுக்கு வெற பெயர் கேட்டாரு. அதை பழய டெக்ஸ் ஒட கதைகளில இருந்து எடுத்துக்கலாமோ
அதை கறையில்லா மன்னர் என்று வச்சுடுவம் (எப்படியும் சட்டைல கறை படாதில்ல)
Delete@ niru
Deleteஹாஹாஹா! செம!! :)))
நிரு ...:-))
Deleteஇதப்பார்ராரா
Deleteவாட் நிருருருரு
கர்ர்ர்……………!
DeleteLion golden hits special
ReplyDeleteதீயா வேலை செய்றீங்க டெக்ஸ்..ட்ரிப்பிள் ஸ்பெஷல் ...
ReplyDeleteஞானும் கிட்டும் கார்ஸனும் பின்னே டைகர் ஜாக்கும் ...(முல்லை பெரியார் தண்ணீர் வர சான்ஸ் இருக்கு )
//ஞானும் கிட்டும் கார்ஸனும் பின்னே டைகர் ஜாக்கும் ...(முல்லை பெரியார் தண்ணீர் வர சான்ஸ் இருக்கு ) ///
Deleteஹாஹாஹா! செம்ம்ம்ம! :)))
1.Dangerous Rangers Special....(pure action nothing else)
ReplyDelete113 வது. அட பதிவோடு ஆஐர்ரகி விட்டீர்களேஸர்ர். கரலை வணக்கங்கள்.
ReplyDelete2.Super star special. ( 3 stories 3 Faces). 3.RANGER returns. ( Tex collections). 4.TeX Triple Treat special . 5. THALA special ( I am Back).
ReplyDeleteவணக்கம் சார்! Avengers2 USAல் இந்த மாதம் இறுதியில்தான் வெளியாகிறது ! ஆனால் இந்தியாவில் தமிழ் டப்பிங் உட்பட சென்ற 24ம் தேதியே வெளியாகிவிட்டது. அதுபோல நமது காமிக்ஸ்க்கு வசதி வாய்ப்பு இல்லாவிடினும் atleast Original மொழியில் வெளிவரும் அன்றே நமக்கும் book publishஆக வாய்ப்புள்ளதா? உதரணமாக வானமே எங்கள் வீதி 3 வெளியகிரபோதே தமிழிலும் வெளிவந்தால் எப்படி இருக்கும் !!
ReplyDeleteகி.நா நானே கஷ்டப்பட்டு ,புரிந்து,படித்து ரசித்த அருமையான கதை.3 ஆம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்கின்றேன்.
Deleteசார்,டெக்ஸின் டீசரை பார்த்தவுடன் என்னை அறியாமலே பரவசம் அடைந்தேன்.அப்படி காய்ந்து போய்க்கிடக்கிறோம்
ReplyDeleteஉலக யுத்த கதைகள் நாம் மேலும் முயற்சிக்கலாம் ,Tex Specialக்கு எனது தேர்வு அதிர்வெட்டு ஸ்பெஷல் ! Cartoon Specialக்கு நகைச்சுவை தோரண சிறப்பிதழ் !
ReplyDeleteLion Silver Special!
ReplyDeleteலயன் கோல்டன் ஸ்டார்ஸ் ஸ்பெஷல்
ReplyDeleteTex top three special
ReplyDeleteTex thunder spl
Master blaster spl
Triple thrill spl
Manjal sattai maaveeran spl or malar
king of cowboy's spl
உலகப்போரில் ஆர்ச்சி -அளவுக்கு இந்த கதை அசத்துமாங் சார் ?
ReplyDelete'வறுத்தகறி - வரக்காப்பி ஸ்பெஷல்'
ReplyDeleteதிடீரென தேசபக்தி பொங்கி வருது ....
ReplyDeleteகார்கில் யுத்தம் நீதி நிலை நாட்ட நடந்தது ..
டெக்ஸ் &கோ செய்யறதும் இதைத்தானே .
எனவே ......
......
கேப்ஷன் .டெக்ஸ் டிரிபிள் டிலைட் ....
டைட்டில்
Deleteமேற்கில் ஒரு கார்கில் ......
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅட்டை படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது ஸர்ர். லயன் 250 டெக்ஸ் டிபிள் ஸபெஸல்
ReplyDeleteLion dinamite action spl, lion dream action spl, tex bullets never end spl,lion surprise action spl,
ReplyDeleteஇம்முறை தேர்வாகியுள்ள 3 டெக்ஸ் கதைகளுமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாப் பாணிகள் என்பதால்....
ReplyDeleteஆனா உங்க நேர்மை புடிச்சிருக்கு....
லயன் ஒரே மாதிரி கதைகள் ஸ்பெசல்
ReplyDeleteலயன் வயதானவர்களின் கதை ஸ்பெசல்
லயன் லட்டு வில்லன்கள் ஸ்பெசல்
லயன் பேரை கேட்டதும் சாகும் வில்லன்கள் ஸ்பெசல்
லயன் அதிர்ஷ்ட தேவதை ஸ்பெசல்
லயன் லக்கி ஸ்பெசல்
லயன் நோ ஏக்சன் ஸ்பெசல்
லயன் வறுத்த கறி ஸ்பெசல்
போன பதிவுல என்னோட சென்னை பயண கமெண்ட்ஸ் படிங்க ரம்மி . நாங்கள் தலை ஆளுக எவ்வளவு பக்குவமாக தளபதியையும் பாராட்டினோம் . அந்த பெருந்தன்மை இல்லாத ஆளுகதான் சைபரு (டைகரு ) ரசிகர்கள் என நிரூபித்து விட்டீர்கள். நல்லது .
Deleteரம்மி ,கர்ர்………€|¢¿><₹®^€£©÷×±~@$$%&-;:'"!/?ள
Deleteவிடுங்க ...ஏதோ பழைய நியாபகத்திலே தப்பு நடந்து போச்சு....
DeleteTriple trouble special
ReplyDelete( TTS)
லயன் உருவிய துப்பாக்கியும் தீராத குண்டுகளும் ஸ்பெசல்
ReplyDeleteTriple Thread Action Special
ரம்மி ...:-))
Deleteரம்மி ஜி தளபதி வந்தவுடன் எல்லாத்தையும் மறந்துட்டிங்களே,
Deleteஇது நியாயமாரேரேரே,
என்ன ஜி இப்படி பண்றிங்களே ஜி.
Editor Sir,
ReplyDeleteHearty congratulations for the success of Minnum Maranam. Unfortunately I couldn't come for the book release. Hope I will be presenting myself at Erode.
To be frank, there was much happiness when the books were not released in time, may be once in 3 or four months.. The thrill of getting a new book after a long wait (especially to read Hot-Line & Comics-Time.!) is obviously low now as the quantity is in abundance. There was a reader's letter (Mani, Jallipatti, if I am not wrong) published in Lucky Luke's பரலோகத்திற்கொரு பாலம் saying that his brother bought a new comic for him and he couldn't describe his happiness at that time. I too, experienced similar joy when I received those small packets from post man in those days. But now, sadly the excitement level has come down even though I get big big packets month afer month.
I do enjoy the flagship stories like Tex, Lucky Luke, Rip Kirby, Chick-bill, Tiger and the recent Largo, Dylan & Shelton (in that order!) but not able to enjoy the graphic novels including the recent horror & bouncer stories fully. The only exception was the Wild west special which I thoroughly enjoyed!
As of now, I'm eagerly awaiting for the Tex & Cartoon specials.! Please ensure that the cartoon special will have Lucky Luke & Chick Bill stories. And yes, pelase do consider the following names for the Tex special. Considering the fact that our special issues always had a english word, these may look apt.!
1. (T)extravaganza special
2. Tex bonanza special
And finally a request: Please do consider printing the detective special with those four golden oldie stories. I personally loved this and the reason why I immediately subscribed to +6 was because of this books' announcement. Kindly consider printing this, at least in 2016.
Pardon me for not writing in Tamil as the Google translate tool takes a long time to load on my slow (1G!) internet. :-)
விஜயன் சார்,
ReplyDelete//கார்ட்டூன் ஸ்பெஷல் இதழுக்கும் ஒரு பெயரை யோசித்து வையுங்களேன் ? See you around folks ! Have an awesome day! //
கார்ட்டூன் ஸ்பெஷல் பற்றி பேசிய முதல் பதிவில், இதே கேள்வியை கேட்டு இருந்திங்க! நண்பர்கள் பலர் அதற்கு பதில் சொல்லி இருந்தார்கள். முடிந்தால் நண்பர்கள் சொன்ன பெயரில் இருந்து ஒரு பெயரை தேர்வு செய்யலாமே?
இது தான் அது பற்றிய பதிவு http://lion-muthucomics.blogspot.in/2015/01/blog-post_11.html
Deleteமின்னும் மரணம் வெளியீட்டு விழா பற்றிய ராஜ் முத்துக் குமாரின் சுவையான பதிவுக்கு இங்கே க்ளிக்குங்க பாஸு!
ReplyDeleteநன்றி இத்தாலி விஜய் அவர்களே.
Deleteலயன் 250 ஒன்லி டெக்ஸ் ஸ்பெசல்
ReplyDeleteடெக்ஸ் த்ரீ இன் ஒன் தமாக்கா ஸ்பெசல்
லயன் 250 ஆல் நியூ டெக்ஸ் ஸ்பெசல்
லயன் 250 டெக்ஸ் ஜிகர்தண்டா ஸ்பெசல்
டெக்ஸ்&கோ நிறைய பாவிகளை இந்த இதழில் ஒழித்து கட்டுவதாக இருந்தால்
ReplyDeleteதலையுதிர் காலம் ....
:-)
DeleteLION TEX SUPER SPECIAL (LTSS)
ReplyDeleteTEX TRIPLE TREAT SPECIAL (TTTS)
TWOFIFTY-TEX-TREBLE SPECIAL (TTTS)
//தடித் தடியான ஆம்பிளைப் பசங்களின் ஹீரோ அணிவகுப்புக்கு மத்தியில் ஒரு மென்மையான பெண் நாயகி அறிமுகம் ஆவதும் நம் கழகக் கண்மணிகளில் சிலருக்கு உற்சாகம் தரக் கூடும் என்றும் தோன்றியது.//
ReplyDeleteஹிஹி.! சார்.,
இந்த கருத்தை, என்னை மனசுல வெச்சிகிட்டு சொல்லியிருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். :):)
எடிட்டர் சார்.,
ReplyDeleteவி.ஒ.வேங்கை., ஒரிஜினல் அட்டைப்படத்தை விட நம்முடையது பளிச்சென்று இருக்கு சார்.
நீல நிற ஆகாயத்தில் சில்வர் நிற விமானம் டைவடிக்கும் காட்சி. அடடா அற்புதமாக உள்ளது.
சித்திரங்களும் நம்முடைய வழக்கமான பாணியில் இருந்து வித்தியாசமாக இருக்கும் போல் தெரிகிறது.
(இதையெல்லாம் ஏதோ அந்த ஹீரோயினுக்காக எழுதுவதாக எண்ணிவிடாதீர்கள்.)
ReplyDeleteஎடிட்டர் சார்,
எம்பட பேரு டைகரு. கதைய தூக்கி அடுத்த வருசத்துக்கு கடாசிப் போட்டது கன்ஃபார்ம் ஆயிடுச்சி.
ஆனா முத்து 350., அப்படீங்குற மைல் கல் இதழை சராசரியான இதழுடன் கடப்பது கொஞ்சம் சங்கடமான சங்கதியாக தோணுது சார்.
சோழிகளை திரும்பவும் குலுக்கிப்போட்டு ஏதாச்சும் ஸ்பெசல் இதழா வெளியிட வாய்ப்பிருக்கான்னு பாருங்க சார்.!!
ரவுண்ட் ஃபிகர்னாவே நமக்கெல்லாம் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் தானாவே வந்திடுதே சார். (தப்பா நினைக்காதிங்க நண்பர்களே 350 ஐத்தான் ரவுண்ட் ஃபிகர்னு சொன்னேன்.)
//ரவுண்ட் ஃபிகர்னாவே நமக்கெல்லாம் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் தானாவே வந்திடுதே சார். (தப்பா நினைக்காதிங்க நண்பர்களே 350 ஐத்தான் ரவுண்ட் ஃபிகர்னு சொன்னேன்.) ///
Deleteஹாஹாஹா! :))
சூப்பர் ஜி..
Delete"எம்பட பேர் டைகர்' ஹாஹா....
Delete@ திரு விஜயன் அவர்களுக்கு,
ReplyDelete'TWO FIFTY' என்ன ஒரு வசிகர சொல்..! இந்த இலக்கை அடைய லயன்காமிக்ஸ் கடந்த பாதை மிக கரடு
முரடானவை..! இந்த எண்ணுக்கு 'நாமும் ஒரு பெயரை சூட்டி பார்ப்போமே' என முயற்சித்து பார்த்ததில்...அதற்கு உருவம் கொடுத்து பார்த்ததில்...ஒரு வித்தியாசமானகருத்து தோன்றியது. குட்டி சிங்கத்திற்கு இந்த காட்டின் எதிர்கால 'ராஜா' நீ தான் என உணர்த்த கிரீடம் சூட்டி அழகு பார்க்கலாம், ஆனால் வளர்ந்த சிங்கத்தின் பார்த்தாலே அதன் கம்பீரம் 'காட்டுக்கு ராஜா' என பறைசாற்றும்..! அதற்கு கிரீடம் வைத்து அடையாளப்படுத்துவது ஒருவகையில் திரைமறைப்பே..! 'லயன் two fifty ஸ்பெஷல்' சொல்லிப்பார்த்தால் மட்டுமல்ல... கண்ணால் பார்த்தாலும் அதன் கம்பீரம் மனதை அள்ளுகிறது..! இதை வேறு எந்த அடையாளமும் பெருமை படுத்துவது கடினமே, இதை கண்ணால் பார்த்தால் 'பளிச்' என பிடிபடும்...இதோ... இங்கே'கிளிக்'
ஆகா... அட்டகாசம் ஜி...
Deleteபரிசு போச்சே....
அசத்தலாய் இருக்கிறது மாயாவி அவர்களே...
Delete'லயன் 250 - டெக்ஸ் ஸ்பெஷல்' என்றிருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லாயிருக்குமோ?
அப்புறம்... கிட்வில்லரை விட்டுட்டீங்களே?
ஜூப்பரு.! .!! மாயாத்மா.!!
Deleteமாயாவி சார்,இமெயில் அட்ரஸ் உங்கள் செல்லுக்கு அனுப்பினேன் சார்.இளவரசி போஸ்டர் அனுப்பவில்லையே சார்.
Delete//Erode VIJAY has left a new comment on the post "வேங்கையின் விஸ்வரூபம் !":
Deleteகொஞ்சம் பொறுமையா இருங்க வெங்கடேஸ்வரன் சார்! மாயாவி எதையும் புதுமையா செய்யக்கூடியவர்! அவரே இளவரசி வேஷத்துல வந்து உங்க முன்னாடி நிக்கவும் வாய்ப்பிருக்கு! //
எங்க கோஷ்டி மேக்கப் மேனுக்கு ஒரு வாரமா கடுமையான வயிற்றுப்போக்கு . அதனால மாயாவிக்கு மாடஸ்டி கெட்டப் போட கொஞ்சம் தாமதமாகும். மன்னிச்சுக்கோங்க சார்.
அப்புறம்.,
இளவரசி மேல உங்களுக்கு அம்புட்டு பிரியமா.??
அப்போ இனிமே உங்க பேரு மடிப்பாக்கம் அல்ல மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.! ! :)
லயன் 250-ல் தல முக்கிய பங்கு வகிப்பதால், இவ்விரண்டையும் இணைக்கும் விதமாக "The Lion & King Special', எப்படி...?
Deleteஇது சேம்பிள் தானே இத்தாலி விஜய் ..
Deleteவெங்கடேஷ்வரன் நீங்கள் கேட்டது உண்மையான போஸ்டர் ! நான் தர நினைப்பதும் அதுவே ! அதற்கு உங்கள் முகவரியல்லா கேட்டேன் ...!
சிவா, நல்ல யோசனை! நமது 250 & 350 பிரதானமாக தெரியும் போது சிறப்பு பெயர்கள் எதற்கு?
Delete@ பரணி
Delete300 என்ற அடுத்த இலக்கை தொட நான்கு வருடங்கள் காத்திருக்கவேண்டும்.----ஸ்பெஷல்,-----ஸ்பெஷல்
என பெயர் வைக்க லயன்,முத்து,திகில் தலா வருடம் இரண்டு பெயர் வைத்தாலும் இரண்டு 'டஜன்' வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பது நிதர்சனம்..! ஆனால் two fifty என்ற கிரீடத்தை ஒரேயொரு ஒற்றை படைப்புக்கு மட்டுமே சூட்டமுடியும்..!
@ MH மெய்தீன்
Delete'லயன் தி கிங் ஸ்பெஷல்' ஏற்கனவே வந்துவிட்டனனே..!
சிவா, 350 என்பது முத்துவிற்கு!
Deleteபரணி நான் சொன்னது லயன் 300 என்ற இலக்கை தொட நான்கு வருடங்கள் ஆகும் என்பதை குறிக்கும்..!
Delete////ஞானும் கிட்டும் கார்ஸனும் பின்னே டைகர் ஜாக்கும் ...(முல்லை பெரியார் தண்ணீர் வர சான்ஸ் இருக்கு ) ////
ReplyDeleteஹாஹாஹா.! செல்வம்.!
இதோ "தண்ணி "க்காக நானும் (முல்லைப் பெரியாறு தண்ணிதான்)
த்ரீ ஸ்யம்.
மூணு கதைகள் வருதில்லையா.!!!
டெக்ஸாஸி பட்டணம்.
ஏனுங்க.!மி.மரணத்தின் அட்டையில் இருப்பது டைகர்னு சொன்னா அதை டைகரும் நம்ப மாட்டாப்புடி.!அவனை பெத்த ஆத்தாவும் நம்ப மாட்டாங்க.!கவிதை போட்டி வைச்ச நீங்க அட்டை படத்தை பார்வைக்கு வைத்து ஒட்டெடுப்பு நடத்தியிருக்கலாமே.?அருமையான கதையை பிட்டு பிட்டா பிரிச்சு நீண்ட இடைவெளியில் போட்டு தளபதியின் கெத்தை குறைச்சிட்டீங்க.முழுசா படிக்கும் போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் டைகர்.இரத்தபடலத்தின் நியூ வெர்சனையும் நீண்ட இடைவெளியில் வெளியிடாமல் தொடர்ச்சியாக வெளியிடுமாறு கேட்டு கொள்கிறேனுங்க.!நீண்ட நாள் சஸ்பென்ஸ் நமத்து போய் சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது.
ReplyDeleteஉடைந்த மூக்கோடு பார்த்தால் பார்க்க சகிக்காது என்று எடிட்டர் மூக்கை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விட்டார்.இது தவறா?.
Deleteசரியாச் சொன்னீங்க வெங்கடேஸ்வரன் சார்!
Deleteஅவ்வளவு க்ளோஸ்அப்'ல டைகரின் ஒரிஜினல் முகத்தைப் போட்டிருந்தா வீட்ல குழந்தைகளுக்கெல்லாம் காய்ச்சல், வாந்தி, பேதி ஆகியிருக்காது? பல ஆயிரங்கள டாக்டர் ஃபீஸா கட்ட நான் தயாரா இல்லை!
குடும்ப நலன் கருதி சமயோஜிதமா யோசிச்சவரைப் பாராட்டாம....
விஜயன் சார், எனக்கு என்னமோ வர இருக்கும் லயன் 250, மற்றும் முத்து 350 சிறப்பு இதழ்களுக்கு சிறப்பு பெயர் வைக்காமல், நண்பர் (மாயாவி) சிவா சொன்னது போல் லயன் 250 மற்றும் முத்து 350 வைப்பது சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteஅல்லது
லயன் 250 Not Out Special
முத்து 350 Not Out Special
என வைக்கலாம்.
எனக்கு என்னவோ 250,350 ஸ்பெஷல் இதழ்களில் ஆசிரியர் பக்கம் சிசி வயதில், இவற்றோடு அன்றைய காலத்து
ReplyDeleteஹிட் இதழ்களைப்பற்றிய செய்திகளுடன், ஒருபகுதியை சேர்க்க வேண்டும் என தோன்றுகிறது.
பகுதியின் பெயர் பொக்கிஷம் என்று இருக்கலாம்.
சியாகுவா சில்க்ன்ற சின்ன பொண்ணுலருந்து குபி பால்மர் வரை ஆசைப்பட்ட ஆணழகன் எங்காளு டைகர்.குளிக்காம அழுக்கு டிரஸ்லயே தளபதிமேல ஆசப்படுவாங்க பொண்ணுங்க.!உங்க டைகரும்,கார்ஸன் கிழவனும் இத்தனை கதையில் வந்தும் ஆளுக்கு ஒரு பெண்ணைதான் கரெக்ட் பண்ணீருக்கானுக.எங்க தளபதி மி.மவில் சந்தித்ததில் ஒரு சதவீதம் கூட டெக்ஸ் குரூப் அனுபவித்ததில்லை.மைண்ட் இட்.!
ReplyDelete@ கார்த்திக்
Deleteநீங்க 'டெக்ஸ் குரூப்' ன்னு சொல்றது..கதையில் வருபவர்களையா..கதை படிப்பவர்களையா..? :D
மாயாஜீ ....கதை மாந்தர்கள் ஆக இருந்தாலும் ...கதை படிப்பவர்களாக இருந்தாலும் சரி ..இது எங்களுக்கு பெருமை தரும் விசயமே ..:)
Deleteதலீவா..நான் வழிமொழிகிறேன்..ஹீ..ஹீ...!
Deleteடெக்ஸையேதான்
ReplyDeleteஹலோ ..கார்த்தி ஜீ ...எங்கள் டெக்ஸ் "ஏக பத்தினி விரதன் "...
Deleteடைகர் "ஏராள பத்தினி விரதன் "...அதுக்காக நாங்கள் பெருமை படுகிறோம் ...
தலை குனிய வேண்டியது நாங்கள் அல்ல ..நீங்கள் ...:)
இப்பதான் ஒரு மிருகம்.(வானமே எங்கள் வீதி.)ஊருல பாதிய அழிச்சுட்டு போச்சு.மறுபடியும் ஒரு மிருகம்.(விண்ணில் ஒரு வேங்கை.)வருதா.?எல்லாரும் பாதுகாப்பான இடத்துல பதுங்குங்க.!ஸ்டாலின்ஜி! ஒரு புக்கோட ஆர்டர கம்மி பண்ணிக்கங்க.!
ReplyDeleteடெக்ஸின் மமனைவி யாரு.?பேரு என்ன? ஒண்ணும் தெரியாது.மோடி மாதிரி இக்கட்டான நிலையில் உண்மைய சொல்லுவீங்களோ.?மரணத்துடன் அடிக்கடி கை குலுக்கூம் ஒருவனுக்கு இது கூட இல்லீனா எப்பூடி.?
ReplyDeleteஎங்க தளபதி அமெரிக்கா பிரசிடெண்டை காப்பாத்துறான்,செவ்விந்தியர்களுடனான போரை நிறுத்துகிறான்.வெயில்,மழைன்னு பார்க்காமல் பாலைவனத்தில் திரிகிறான்.நாடே தேசதுரோகி என்றாலும் விசுவாசமாய் இருக்கிறான்.உங்க டெக்ஸ் எப்பவுமே ரேஞ்சர் பதவியிலேயே இருக்கிறார்.ஆனால் எங்காளு பதவி போய் சிவிலியனாக இருந்தாலும் அதகளம் செய்வான்.டெக்ஸால ரேஞ்சர் போஸ்டிங் இல்லாம எதையாவது சாதிக்கமுடியுமா.?டெக்ஸீன் மரியாதையே பதவியில்தான்.ரேஞ்சர் பதவி இல்லாமல் டெக்ஸ் பல் பிடுங்கப்பட்ட பாம்பு.எங்காளு பிறவியிலிருந்தே குமுறும் எரிமலை.அதை மூடி போட்டூ தடுக்க முடியுமா.?
ReplyDeleteமூக்கை லேசா பட்டி- டிங்கரிங் பார்த்து, கொஞ்சம் ரோஸ் பவுடர் போட்டு அட்டைப்படத்துல போட்டதுக்கே இவங்க தளபதியை இவங்களாலயே அடையாளம் கண்டுபிடிக்க முடியலைன்னா... அப்புறம் இவங்களையெல்லாம் என்னன்னு சொல்றது?!!!
ReplyDeleteசேத்துல விழுந்த சேணைக்கிழங்கு கணக்காவே எப்பவும் பார்த்துப் பழகிட்டு, திடீர்னு ரொம்ப டீசன்ட்டா காட்டினதை இவங்களாலயே ஏத்துக்க முடியலைன்றதுதான் நிஜம்! :D
எங்க தளபதி அமெரிக்கா பிரசிடெண்டை காப்பாத்துறான்,செவ்விந்தியர்களுடனான போரை நிறுத்துகிறான்.வெயில்,மழைன்னு பார்க்காமல் பாலைவனத்தில் திரிகிறான்.நாடே தேசதுரோகி என்றாலும் விசுவாசமாய் இருக்கிறான்.உங்க டெக்ஸ் எப்பவுமே ரேஞ்சர் பதவியிலேயே இருக்கிறார்.ஆனால் எங்காளு பதவி போய் சிவிலியனாக இருந்தாலும் அதகளம் செய்வான்.டெக்ஸால ரேஞ்சர் போஸ்டிங் இல்லாம எதையாவது சாதிக்கமுடியுமா.?டெக்ஸீன் மரியாதையே பதவியில்தான்.ரேஞ்சர் பதவி இல்லாமல் டெக்ஸ் பல் பிடுங்கப்பட்ட பாம்பு.எங்காளு பிறவியிலிருந்தே குமுறும் எரிமலை.அதை மூடி போட்டூ தடுக்க முடியுமா.?
ReplyDeleteவன்மேற்கின் கடைந்தெடுத்த கடைக்கோடி ரவுடி ஒருவனின் படத்தை டைகர்னு சொல்வது மனசாட்சியற்ற பேச்சு.முண்டாசுபட்டியில் வர்ரமாதிரி தொப்பி போட்டு தாடி வைத்தவனெல்லாம் டைகராக முடியாது.காய்கறிகளில் சேணைகிழங்கு நான்கு வருடத்திற்கு கெடாமலே இருக்கும்.எங்காளும் அப்படித்தான்.உங்க டெக்ஸ்க்கு 1000ரூ ஒரே கதை இருக்கா.?இல்லை.!இருக்காது.!அந்த குவாலிட்டி டைகருக்கு மட்டும்தானிருக்கு.!
ReplyDeleteஆரம்பிச்சிட்டிங்களா
Deleteநடத்துங்க
ஸ்ஸ்..... அப்பா.....
I seriously hope
ReplyDeleteTex Grand special
or Tex Reloaded (Lion 250) All new collection
will change the trend and match the quality, for comics lover's community sake! :)
also hope this Tex vs Tiger fight will help to strengthen the community, by holding every one together while enjoying the comics not abusing or comics character assassins !
+ fingers crossed!
அய்யய்யோ.!சதீஸ் தப்பா புரிஞ்சுகிட்டாரு.!நாங்க சண்டை போடுலீங்க.!சத்தமா பேசுனோம்.அம்புட்டுதான்.!எங்க விஜய்,மாயாவி வந்து சொல்லுங்கப்பா.!நானும் டெக்ஸ் ரசிகன்தானுங்கோ.!சத்தியமா நம்புங்கோ.!
ReplyDeleteதலீவா..எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்...! (நான் சொன்னா நீங்களே நம்பறதில்லையே கார்த்தி கார்த்தி..
Delete.அவீங்கோ எப்படிநம்புவாகோ...ஹீ..ஹீ..!)
:)
Deleteசண்ட போடவேண்டாம்னு சொல்லல நண்பா....
பிளாக்குல நிம்மதியா ஒரு சண்டைகூட போட முடியலீயே.!சண்டை ஆரம்பமாகும் முன்பே நாட்டாமைகள் சொம்போட வந்தர்ராங்க.!
ReplyDelete"Lion Ultimate Special" - For Thala.
ReplyDeleteலயன் ப்ளாக் பஸ்டர் ஸ்பெசல்.!
ReplyDeleteடெக்ஸ் பிளாக் பஸ்டர் ஸ்பெசல்,
டெக்ஸ் டூ இன் ஒன் ஸ்பெசல்,
Tip-Top Tex Spl.
ReplyDeleteTrigger-Happy Tex
மீண்டும் மீண்டும் Tex
தீவினை அகற்று
எங்கும் Tex மயம்
இன்றும் என்றும் Tex
எங்கெங்கும் Tex
திகட்டாத Tex
தித்திக்கும் Tex
திகட்ட திகட்ட Tex
Killer Tipple Tex Willer
வென்றார் Tex
வந்தார் வென்றார்
வந்தார் நின்றார் வென்றார்
Tripple Tex Delight
Texas மாவீரன் Tex
Texas சிங்கம் Tex
தோட்டாக்களின் திருவிழா
புழுதிபறக்க Tex
வல்லவனுக்கு வல்லவன்
சீர்மை மறவேல்
எப்போதும் Tex
இப்போதும் எப்போதும் Tex
Forever Tex Willer
_________
Ahimaz
25 வருஷத்துகப்புறம் கடேசியா ஒரு கெளரவம் கிடைச்சுட்டதுல (ஹார்டு பைன்டிங்கு, டஸ்டு கவரு, 1000ரூவா வெலை) தலைகால் புரியாமக் குதிக்கறாய்ங்க தளபதி ரசிகமணிக!
ReplyDeleteஎடிட்டர் சார், நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது... உடனே லயன்-250 'தல' ஸ்பெஷலை 1001ரூவாய்னு அறிவிச்சு... 7 கலர் கதைகள், ரெண்டு ஹார்டு பெளண்டு அட்டைகள்(ஒரே புக்குக்குத்தான்), 4 டஸ்டு ஜாக்கெட் , 2 டஸ்டு முண்டா பனியன், ஒவ்வொரு கதைக்கும் ஒரு புக்-மார்க்கு , அப்புறம் செவப்பு கலர்ல ஒரு கயிறு கட்டி நடுவால தொங்க விட்டிருப்பீங்களே... அதுல ஒரு நாலஞ்சு கயிறு (முடிஞ்சா தாயத்து கட்டி ஹிஹி)... - இத்தனைக்கும் சம்மதம் சொல்லி இன்னிக்கு ராவுலயே ஒரு பதிவு போடணும்னு 'தல' ரசிகர்கள் சார்பா கேட்டுக்கறேன்...