Powered By Blogger

Friday, September 10, 2021

கொழுக்கட்டையோடு காமிக்ஸ் !

 நண்பர்களே,

வணக்கம். விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ! கொழுக்கட்டைகளை கும்மியெடுக்கும் கையோடு, ஆத்தாக்குள்ள கூழ்பாக்கிகளை செட்டில் செய்திடவும் மெனெக்கெட்டால், இன்றைக்கே கூரியர்வாலாக்கள் உங்கள் இல்லக்கதவுகளைத் தட்டும் வாய்ப்புகள் இருக்கக்கூடும் என்பேன் ! Becos நேற்று மதியம் (9th.Sept) செப்டெம்பரின் இதழ்கள் நான்கும் இங்கிருந்து புறப்பட்டு விட்டன ! And நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்கும் கூரியரார் - இந்த விடுமுறை வாரயிறுதிக்கென வெவ்வேறு ஆப்ஷன்கள் தந்துள்ளனர் : 

Option A : "புள்ளையார் சதுர்த்தியாச்சுங்களே ....டெலிவரி பண்ண மாட்டோம் ; வந்து வாங்கிக்கிட்டா குடுப்போம் !!"

Option B : "கிட்டக்க இருந்தா பட்டுவாடா பண்ணிப்புடுவோம் !"

Option C : "பச்ச்ச்ச் ....பண்டிகைங்க....!! நாளைக்கு டெலிவரியும் லேது ; புக்கிங்கும் பண்ணில்லா !!"

Option D : "இங்கேர்ந்து கிளம்பற லோடு - மதுரையிலே sorting ஆகுறதைப் பொறுத்துத் தான் சொல்ல முடியுமுங்க !!"

ஆக - பண்டிகை தினமான இன்னிக்கே கிடைக்கலாம் ; நாளைக்குக் கிடைக்கலாம் ;  திங்கள்கிழமை கூட கிடைக்கலாம் ; அட.....ஆயுதபூசைலாம் முடிஞ்சா பின்னே கூடக் கிடைக்கலாம் - என்பதே இங்கு சேகரிக்க சாத்தியப்பட்ட தகவல்கள் ! So மேற்கண்ட நான்கு ஆப்ஷன்களுள் உங்களுக்கு எது பொருந்துகிறது என்பதைப் பார்ப்பதே, அடுத்த சில நாட்களின் பொழுதுபோக்காய் இருக்கவுள்ளது ! எது எப்படியோ - தொடரும் தினங்களில் புக்ஸ் அனைவரையும் எட்டிடும் வரையிலும், நம்மாட்களின் நாக்குகள் தரையைக் கூட்டவுள்ளது மட்டும் உறுதி !

And இதோ, இம்மாதத்து இதழ்களுள் நீங்கள் இன்னமும் பார்த்திரா கார்ட்டூன் இதழின் ப்ரிவியூ :


ஒரிஜினல் அட்டைப்படம் ; பின்னணி வர்ணங்களில் மட்டுமே லேசான மாற்றங்களுடன் ! And உட்பக்கங்கள் வழக்கமான பளீர் '70s கலரிங்கில் ! In fact இம்முறை வழக்கத்தைக் காட்டிலும் கலர்கள் பளீரோ - பளீர் ! கதையைப் பொறுத்தவரைக்கும் வழக்கமான அந்த 1920's ரகளைகள் - இம்முறை கொஞ்சம் அழுத்தமான கதையோடு ! அப்புறம்  இந்த ஆல்பத்தின் தலைப்பு எத்தனை பொருத்தமென்பதையும் ; பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னமே இதனைத் தேர்வு செய்து பெயர்சூட்டிய பெரும் புலவர் முத்துவிசயனாரின் மேதாவிலாசத்தையும் - ஆல்பத்தை படித்து முடிக்கும் போது உணர்ந்திடுவீர்கள் ! அதை நினைவில் இருத்தியபடிக்கே இம்மாதத்தை நகற்ற முயன்றீர்களெனில் - தலை சன்னமாய்த் தப்பிக்கும் ! 

Becos - இம்மாதத்து ஜம்போ கொணரவுள்ள ரியாக்ஷன்ஸ் பலான பலான மாதிரியிருக்கக்கூடும் என்பது முடித்த இதழாய் அதனைக் கையில் ஏந்திப் புரட்டும் போது தான் புரிகிறது ! ஒரு ஆல்பத்தினில் பணியாற்றும் போதும், அது நிறைவுற்ற பொருளாய்க் கையில் தவழும் போதும், முற்றிலும் மாறுபட்ட  இரு வேறு பரிமாணங்களில் தென்படுவதைப் பல தடவைகள் பார்த்திருக்கிறேன் ; உணர்ந்திருக்கிறேன் ! And இதுவும் அத்தகையதொரு வேளையே ! Content ; கதையினை நகற்றியுள்ள விதம் ; கிளைக்கதைகள் என சகலத்திலுமே நிறைய கி.நா.ஜாடை இருப்பது இப்போது புரிகிறது ! ஆனால் இதனுள் பணி செய்த போதோ நிலவரமே வேறு ! சமீப பொழுதுகளின் அதே routine தான் - இன்னொரு தபா ! எடிட்டிங்குக்கென முந்தைய ஞாயிறன்று க(த்)தையைக் கையில் எடுத்து, மேலோட்டமாய்ப் படித்த போது தான் இதுவொரு க்ரைம் த்ரில்லர் என்பதைவிடவும், 'சைக்கோ-த்ரில்லர்' என்பதே சரிப்படுமென்பது புலனானது ! கதையின் நாயகன் வாய் திறந்து பேசுவதே ஆல்பத்தின் முழுமைக்கும் நஹி ! முழுக்க முழுக்கவே மைண்ட் வாய்ஸ் ; voiceover என்பதான பாணியிலேயே கதையினை நகற்றி இருந்ததைக் கவனித்தேன் ! And ரொம்பவே சம கால time frame-ல் கதை நிகழ்வதாய் இருக்க - என் முன்னிருந்த பக்கக் குவியலுக்கு, கருணையானந்தம் அவர்களின் க்ளாஸிக் நடை சுகப்படாது என்பதை தீர்மானித்த நொடியே புரிந்தது - மறுக்கா ஒரு சாக்கு ரேஸ் ஓட வேண்டியிருக்குமென்று ! To cut a tiring story short - ஒரிஜினலின் 10% ஸ்கிரிப்டை மாத்திரமே இருத்திக் கொண்டு, பாக்கி தொண்ணூறை அடுத்த 4 நாட்களுக்குள் புதிதாய் எழுதி ; புதிதாய் டைப்செட் செய்து ; அப்புறமாய் எடிட்டிங் செய்து - அச்சுக்குத் தயார் செய்வதற்குள் நமது டெஸ்பாட்ச் தேதி நெருங்கி விட்டிருந்தது ! So முழுமையாய் நிதானித்து, அவதானிக்க சாத்தியப்பட்டுள்ளது இன்றைக்கே - கையில் கலரில் மிளிரும் ஆல்பத்துடன் ! Anyways, கதையினில் இழையோடும் வன்முறையினையோ  ; அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரங்களையோ கைவைக்க எனக்கு அதிகாரம் தந்திருக்கவில்லை என்பதால் எனக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் இருந்திருப்பினுமே, நான் பெருசாய் பிடுங்கியிருக்கக் கூடிய ஆணி எதுவும் இருந்திராது தான் ! இருந்தாலும் a word of caution people : please make sure this book stays with you ! 

பற்றாக்குறைக்கு ஒரே மாதத்தில் Deadwood Dick & இந்த ஜம்போ என அமைந்து போக, இரண்டிலுமே monologue பாணிகள் பிரதானமாயிருக்க, இரு கதைகளின் ஒரிஜினல் ஸ்கிரிப்ட்களுமே melodramatic ஆகயிருக்க, வழக்கமான வாசிப்பிலிருந்து இந்த 2 இதழ்களின் பாணிகள் சற்றே விலகி நிற்பதை உணர்ந்திடவுள்ளீர்கள் ! அதுவும் Deadwood Dick-ன் ஸ்கிரிப்ட் ரொம்பவே கோக்கு மாக்காக இருந்தாலும், அந்த நாயகரை நமக்கு அறிமுகம் செய்திட கதாசிரியர் எண்ணிடுவது இவ்விதமே என்று புரிந்தது ! So மூக்கை அவர் முன்னூறு சுற்று சுற்றித் தொட்டிருந்தால், நானும் அதே முன்னூறு சுற்றுக்கள் சுற்றியுள்ளேன் ! ஆகையால் இரு இதழ்களுக்கும் தர அவசியப்பட்டுள்ள டீரீட்மென்ட் நாம் பழகி விட்டிருக்கும் மாமூல்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது ; and அதன் பொருட்டு எனக்குக் காத்துள்ள "ட்ரீட்மெண்ட்" எவ்விதமிருக்கும் என்பதை அறிவதே எனது அடுத்த 2 வாரங்களின் highlight ஆக இருக்கப் போவது உறுதி !! ஒரு முன்ஜாக்கிரதையாய், கண்ணில் தட்டப்படும் முட்டுச் சந்துக்களிலெல்லாம் ப்ளீச்சிங் பவுடரை தூவ  ஆள் அனுப்பியுள்ளேன் ; 'ஸ்வச் பாரத்' முக்கியமில்லீங்களா ? 

அப்புறம் கிளம்பும் முன்பாயொரு reminder !! காலாவதியாகி வரும் நமது கார்ட்டூன் அணிவகுப்பில் தற்சமயம் இடம் பிடித்து நிற்கும் மேக் & ஜாக் ஜோடிக்கு - இது இந்திய அணியினில் அஜின்கிய ரஹானேக்கான எதிர்காலம் மாதிரியான நிலவரம் ! இம்முறை சாதிக்காவிட்டால், சதமடிக்காவிட்டால் - வூட்டாண்ட குப்பை கொட்ட வேண்டிப் போகும் - ரஹானேவும், மேக் & ஜாக்கும் ! என்ன ஒரே வித்தியாசம் - அங்கே ரஹானேயின் இடத்தைக் கபளீகரம் செய்திட லைனாய் ஆட்டக்காரர்கள் வெயிட்டிங் ! இங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஈயோ ; காக்காயோ காணோம்  ! So கொஞ்சம் பார்த்து, அனுசரிச்சு மார்க் போடுங்க தர்ம துரைஸ் ; கார்டூனுங்கய்யா,,,,லெமூரியா கண்டமாட்டம் காணாது போய்விடக் கூடுமய்யா !! Fingers crossedங்கய்யா  !!

ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி folks !! இந்த வாரயிறுதியினில் ஆர்டர் செய்திட மறவாதீர்கள் ப்ளீஸ் :

https://lion-muthucomics.com/latest-releases/865-september-pack-2021.html

or

https://lioncomics.in/product/september-pack-2021/

Bye all....see you around ! Have a festive long weekend !

340 comments:

  1. ஐ யாம் தி பர்ஸ்டு!

    ReplyDelete
  2. ஆசிரியருக்கும் நண்பர்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. /// அடுத்த 4 நாட்களுக்குள் புதிதாய் எழுதி ; புதிதாய் டைப்செட் செய்து ; அப்புறமாய் எடிட்டிங் செய்து - அச்சுக்குத் தயார் செய்வதற்குள் நமது டெஸ்பாட்ச் தேதி நெருங்கி விட்டிருந்தது ! So முழுமையாய் நிதானித்து, அவதானிக்க சாத்தியப்பட்டுள்ளது இன்றைக்கே ////

    ப்பா!! என்னவொரு டெடிகேஷன்!!!

    ReplyDelete
    Replies
    1. ஜம்போ தான் இந்த மாத பேசு பொருள் ஆக இருக்கும் போலவே

      Delete
    2. ஈவி@ யெஸ்...+1

      KS@ டெபெனெட்லி...!!!

      Delete
  4. ///இங்கே கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் ஈயோ ; காக்காயோ காணோம் ! So கொஞ்சம் பார்த்து, அனுசரிச்சு மார்க் போடுங்க தர்ம துரைஸ் ; கார்டூனுங்கய்யா,,,,லெமூரியா கண்டமாட்டம் காணாது போய்விடக் கூடுமய்யா !! Fingers crossedங்கய்யா !!////

    +1000000

    கார்டூன்களை காப்பாற்றுங்கள் கணவான்களே!

    ReplyDelete
    Replies
    1. //கார்டூன்களை காப்பாற்றுங்கள் கணவான்களே // +1000

      Delete
    2. ஆதரவை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் சிறப்பாக தந்திடுவோம்.
      .

      Delete
    3. // கார்டூன்களை காப்பாற்றுங்கள் கணவான்களே! //
      இந்த நேரத்தில் ஆசிரியருக்கு ஒரு கோரிக்கை,
      டிசம்பர் மாதத்தில் லக்கி 75 ஸ்பெஷல் வருவதான அறிவிப்பில் ஹார்ட் பைண்டிங் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை,
      சாதரண அட்டையில் வெளியிடுவதான முடிவில் இருந்தால் ஆசிரியர் முடிவை மாற்றிக் கொண்டு ஹார்ட் பைண்டிங்கில் வெளியிட்டால் கார்ட்டூனுக்கும்,லக்கிக்கும் கூடுதல் சிறப்பு செய்தால் போல் இருக்கும்...

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நான் முதல் முறையாக in Top Ten !!
    😍😍😍
    கார்ட்டூன்களுக்கு ஆதரவு உறுதி!!

    ReplyDelete
  7. பெரும்பாலான முட்டுச்சந்துகள் உள்நோக்கமும் வன்மமும் கொண்டு இன்டெக்ரிட்டி இல்லாமல் செயல்படுவதால் அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லையோ🤔

    ReplyDelete
  8. அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. ஆசரியருக்கும் ,நண்பர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  10. இதழை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்...!

    ReplyDelete
  11. // ஒரு முன்ஜாக்கிரதையாய், கண்ணில் தட்டப்படும் முட்டுச் சந்துக்களிலெல்லாம் ப்ளீச்சிங் பவுடரை தூவ ஆள் அனுப்பியுள்ளேன் ; 'ஸ்வச் பாரத்' முக்கியமில்லீங்களா ? //

    :-)

    நீங்கள் காமிக்ஸ் விஐபி அல்லவா அதனால் நன்றாக ப்ளீச்சிங் பவுடர் தூவி வைப்பார்கள் விஜயன் சார் :-)

    ReplyDelete
  12. சும்மா கார்ட்டூன் தானே என்று நாலு டயலாக் சிரிப்பா இருந்தா போதும் பார்த்துக்கலாம் என்றில்லாமல் மேக்&ஜாக் படைப்பாளிகள் ஒவ்வொரு பிரேமிலும் காட்டும் உழைப்பு பிரமிக்க வைக்கிறது நமது கார்ட்டூன் வரிசையில்பெஸ்ட் ஓவியங்கள் இதனில்தான்என்பேன். கரூர் ராஜ சேகரன்.

    ReplyDelete
    Replies
    1. Super ராஜசேகரன். சரியாக சொன்னீர்கள்.

      Delete
  13. பாவை மிரண்டால் பார் கொள்ளாது அட்டைப்படம் கதையின் தலைப்புக்கு பொருத்தமாக உள்ளது. கதையின் தலைப்பு மற்றும் உட்பக்க டீசர் செம காமெடி விருந்து உள்ளது என சொல்கிறது. என்றும் திகட்டாத காமெடி விருந்தை சுவைக்க தயாராக உள்ளேன்.

    ReplyDelete
  14. இன்று புத்தகம் வந்தே சேரும். I'm waiting

    ReplyDelete
  15. ஹைய்யா புதிய பதிவு...
    ஒருவழியா பதிவு வந்துடுச்சி...

    ReplyDelete
  16. அனைவருக்கும் விநாயக சதுர்த்தி தின நல்வாழ்த்துக்கள்.
    வெண்ணிலாவும், வானும் போல கொழுக்கட்டையும், கொரியர் டப்பியுமாய் இன்று இணைபிரியாமல் இருக்க வாழ்த்துக்கள்.
    நிர்மலா பெரியசாமி வாய்ஸ் மாடுலேஷன்ல , தலைப்புச் செய்திகள ரேஞ்சுக்கு , பதிவுல முதல்லயே இடம் பிடிக்கிற அளவுக்கு போயிடுச்சே கூழ் பாக்கி சங்கதி. சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆத்தா ஒருநாள் கிழவரசரை குப்புறப் போட்டு வேலால் நங்கு நங்குன்னு நாலு குத்து குத்தினாலும் ஆத்தாக்கு கூர் பாக்கி செட்டிலாகுமா என்பது சந்தேகமே.

      Delete
    2. ///ஆத்தா ஒருநாள் கிழவரசரை குப்புறப் போட்டு வேலால் நங்கு நங்குன்னு நாலு குத்து குத்தினாலும்///

      ஆத்தா இதையெல்லாம் நேரில் வந்து செய்வதில்லை! அவ்வப்போது வூட்டம்மாவை ஏவி விட்டு நங்கோ நங்குதான்!

      இள..இள!! 🤥😠😠

      Delete
    3. ////பதிவுல முதல்லயே இடம் பிடிக்கிற அளவுக்கு போயிடுச்சே கூழ் பாக்கி சங்கதி. சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப படுகிறது.////

      க்கும்! நானே கஞ்சிக்கு இல்லாம உட்கார்ந்துட்டு இருக்கேனாம். இதுல ஆத்தாக்கு கூழ் வேற!!

      பாக்கி - பாக்கியாகவே தொடரும்!


      Delete
    4. // ஆத்தா இதையெல்லாம் நேரில் வந்து செய்வதில்லை! அவ்வப்போது வூட்டம்மாவை ஏவி விட்டு நங்கோ நங்குதான்! //

      நம்ப முடியவில்லையே :-) கோவைசரளா மாயி படத்தில் பறந்து பறந்து வடிவேலை அடிப்பது போல் சுவாரசியமாக இருக்கும் போல் தெரிகிறது :-) நேரடி ஒளிபரப்பு எப்போது என சொல்ல முடியுமா? :-)

      Delete
    5. ///நேரடி ஒளிபரப்பு எப்போது என சொல்ல முடியுமா? ///

      வீட்டுக்கு வாங்க!

      Delete
    6. // வீட்டுக்கு வாங்க //

      கோரொனா நேரம் ஸோ சாரி :-)
      யூடியூப்பில் லைவ் செய்ய முடியுமா :-)

      Delete
  17. // ஆக - பண்டிகை தினமான இன்னிக்கே கிடைக்கலாம் ; நாளைக்குக் கிடைக்கலாம் ; திங்கள்கிழமை கூட கிடைக்கலாம் //

    நல்ல நாளிலேயே நமக்கு லேட்டாதான் வரும்,இது வேறயா ???!!!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி அண்ணா நமக்கு புக் சிவகாசியில் இருந்து கிளம்ப வேண்டும். அவ்வளவு தான்

      Delete
    2. அண்ணனும் தம்பியும் நல்லா சிரிச்சி சிரிச்சி வெளையாடுங்ப்ப்பா....😜😆😆😆

      Delete
    3. ஹிஹிஹி,ஹாஹாஹா,ஹோஹோஹோ...

      Delete

  18. "ஆத்தா இதையெல்லாம் நேரில் வந்து செய்வதில்லை! அவ்வப்போது வூட்டம்மாவை ஏவி விட்டு நங்கோ நங்குதான்!"

    செம்ம விஜய்! விழுந்து சிரிக்கும் படங்கள் நூறு.

    ReplyDelete
  19. சார் கொழுக்கட்டைக்கு ஆவலுடன் வைட்டிங்.
    3 க்கும் உண்டான முன்னெச்சரிக்கைகள் ஆவலை தூண்டுகிறது.

    கிடைத்து படித்துவிட்டு அடுத்த பதிவிடுகிறேன் 🙏🏼

    ReplyDelete
  20. சூப்பர் சார்.. கொழுக்கட்டைக்கு வெய்ட்டிங்..

    ReplyDelete
  21. டியர் எடி,

    விதாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் உங்களுக்கும், உங்கள் குழு அனைவருக்கும். காமிக்ஸ் ரூபத்தில் வரபோகும் கொலுகட்டைகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். கார்ட்டூன் கலாட்டா, சைக்கோ த்ரில்லர் என்று கதம்ப தோரணை, முக்கியமாக மேக் அண்ட் ஜாக் வெல்வார்கள் என்ற நம்பிக்கையுடன்.

    ReplyDelete
  22. அனைவருக்கும் விதாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    ReplyDelete
  23. ///Option C : "பச்ச்ச்ச் ....பண்டிகைங்க....!! நாளைக்கு டெலிவரியும் லேது ; புக்கிங்கும் பண்ணில்லா !!"////

    ---- நமக்கு இந்த ஆப்சன் கெடைச்சதுங்கோ.....!!!

    வெல்லனே 10மணிக்கிலாம் கிளம்பி, 10.15க்கு குரியர் ஆபீஸ் போனால்.....பூட்டிய ஷட்டர் நான் ஆப்சன் C ங்கோனு சொல்லுச்சி....


    வாட்ஸ்ஆப்பில யாரும் இந்நேரம் அட்டைபடம், ஹாட்லைன், அடுத்த மாச இதழ்கள் போட்டு இருப்பாங்க... ஆனாக்கா இதுவரை அதுலயும் ஒரு சேதியும் இல்லைங்கோ....


    சோ, எல்லா ஆப்சனும் கலந்து கட்டி எல்லா பக்கமும் சாத்துதுங்கோ.....!!!!


    ReplyDelete
  24. ////நல்ல நாளைக்கே நாழிப் பால் கறக்கும் கூரியரார்//

    ---மதுரையிலயே பெரிய ஹால்டு போல... !!


    எடிட்டர் சார்@ தாங்களே பதிவுல அப்டேட் பண்ணினாத்தான் உண்டு...

    கொஞ்சம் கருணை வையுங்க... அடுத்த மாச இதழ்கள் & ஹாட்லைன் போடுங்க சார்.... 🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. இது குழப்பமான வாரம்...
      அதுக்குத்தான் நானும் என்ட்ர தம்பியும் முன்னயே சொன்னோம்,கேட்டீகளா யாராவது கேட்டீகளா...!!!

      Delete
    2. அறிவரசு @ இதுக்கு தான் நான் நிதானமாக அடுத்த வாரம் அனுப்பச் சொன்னேன் அண்ணன் தம்பி இரண்டு பேரும் கேட்டிங்களா? :-) சொன்னதை கேட்காமல் அடம்பிடித்து இப்பாருங்க ST courier காரங்க நம்பள திரிசங்கு சொர்கத்தில் விட்டுவிட்டார்கள் :-)

      Delete
    3. // இது குழப்பமான வாரம்... //

      என்க்கு குழப்பம் இல்லாத தெளிவான வாரமிது அறிவரசு :-)

      Delete
  25. ///In fact இம்முறை வழக்கத்தைக் காட்டிலும் கலர்கள் பளீரோ - பளீர் !//

    ---ஆமாம் டிடெக்டிவ் ஆபீஸை பார்த்தாலே தெரிகிறது...கலரோ கலரு..😍😍😍💕

    ReplyDelete
  26. ///இருந்தாலும் a word of caution people : please make sure this book stays with you ! ///

    ----புயல் எச்சரிக்கை!!!!

    ReplyDelete
    Replies
    1. இப்படி தான் ஆசையை காட்டி பெயின்ட் அடிச்சி விடுவாங்கோ..

      Delete
  27. Happy விநாயகர் சதுர்த்தி

    ReplyDelete
  28. அனைத்து காமிக்ஸ் உள்ளங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

    ReplyDelete
  29. இதுவரை வந்துள்ள மேக் & ஜாக் கதைகள் அனைத்தும் பிரமாதமாகவே எனக்கு தெரிகிறது. ஆனால் பெரும்பான்மை ரிசலட் வேறு மாதிரி இருப்பது ஆச்சர்யமூட்டுகிறது. பிடிக்காத நண்பர்கள் கொஞ்சம் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். கார்டூன்கள் நமது பன்முக ரசனையின் முக்கிய அங்கம். கைகொடுத்து கரை சேர்த்திட வாரீர்

    ReplyDelete
    Replies
    1. #பிடிக்காத நண்பர்கள் கொஞ்சம் மீண்டும் முயற்சி செய்து பாருங்கள். கார்டூன்கள் நமது பன்முக ரசனையின் முக்கிய அங்கம். கைகொடுத்து கரை சேர்த்திட வாரீர்#
      எனக்கு கார்ட்டூன் கதைகள் பிடிக்கும்.ஆனால்,கார்ட்டூன் கதைகளில் ஆசிரியர் சாரால் தற்போது தமிழ் சினிமாக்களிலிருந்து எடுத்து கையாளப்படும் வசனங்கள் (மொழியாக்கம்)ரசிக்க விடாமல் தடுக்கிறது.
      உம்:லியனார்டோ கதையில் மாங்குயிலே பூங்குயிலே பாடல்
      அப்புறம்,இப்போது டெக்ஸ் கதைகளில் கூட தமிழ் சினிமா வசனங்கள்...
      உம்.பீம்பாய் (மை.ம.கா.ராஜன்)
      ஜித்தன் (சார்பட்டா)
      நீதான் தைரிய சாலியாச்சே? (சூனாபானா)
      அப்புறம் இந்த சார்வாள், ப்ரோ...
      விஜயன் சாருக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து சிகப்பாய் ஒரு சிலுவை,மறுவருகைக்கு முன் வந்த கார்ட்டூன் இதழ்களில் வந்தது போல தமிழ் சினிமாக்கள் பாதிப்பில்லாமல் இயல்பான மொழி பெயர்ப்பை கையாளுங்களேன்...ப்ளீஸ்!

      Delete
    2. மேக் & ஜாக் - so far the humor has been fine but the stories have been old and stale due to perhaps the time of original release ! Will try this one though. I am an avid cartoon supporter when it comes to Leonardo, Iznogoud, Lucky Luke, Chik-Bill even a bit older Herlock Sholmes but மேக் & ஜாக் just has not been so attactive - let us try one last time !

      Delete
    3. அதும் அந்த பெண்கள் வேசத்ல ஓவியமே விழுந்து விழுந்து சிரிக்கச்செய்யுமே

      Delete
  30. தூத்துக்குடியில் ST courier அராஜகம். சிவகாசியில் இருந்து நேற்று நமது காமிக்ஸ் புத்தகங்கள் கிளம்பி விட்டன என தெரிந்த பின்னரும் மூன்று திண்டுக்கல் பூட்டு போட்டு தங்கள் அலுவலகத்தை பூட்டிய ST courierஐ வன்மையாக கண்டிக்கிறேன் கோபால் :-)

    ReplyDelete
    Replies
    1. ஒரு பூட்டு ST ஆபிஸோடது,இன்னொன்னு தம்பி குமாரோடது,கடைசி பூட்டு என்னுதுலே...

      Delete
    2. இங்கிட்டுDTDC...இங்கனயும் பெரிய பூட்டு தொங்குது கோபால்...சோலி ஓவர்..ஓவர்!

      Delete
    3. சந்தோஷமாலே மக்கா :-)

      Delete
  31. எதிர்பாரா ஆச்சரியம் கொரியர் கைப்பற்றியாகிவிட்டது

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் கிருஷ்ணா.

      Delete
  32. P. F T. திண்டுக்கல் டிக் புத்தகத்துக்கே திண்டுக்கல் பூட்டா வன்மையாக கண்டிக்கிறோம்.. கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  33. நண்பர் கிருஷ்ணா அனைத்து புத்தகங்களின் தரிசனத்தை காண்பித்து விட்டார்....😍😍😍

    எல்லாம் மேக்கிங் கலக்குது...


    இனி இதழ்கள் மெதுவாக வரட்டும்....

    அடுத்த மாத இதழ்கள்..

    TeX---கண்ணே கொலை மானே
    டைலன்&மார்டின்---உலகத்தின் கடைசி நாள்& cid ராபின்--ஒரே இதழில்...304பக்க கருப்பு வெள்ளை குண்டு...

    கிளிப்டன்--மறந்தும் மறவாதே!


    என்ன, திங்கட்கிழமை அனுப்பி இருந்தா இந்த குழப்படிகள் தவிர்த்து இருக்கலாம்...!!!

    ஆனாக்கா இந்த கண்ணாமூச்சி விளையாட்டு கூட நல்லாத்தான் இருக்கு...!!!😉

    ReplyDelete
  34. hello friends
    Happay vinayaka chaturthi wishes to all

    ReplyDelete
  35. https://lioncomics.in/product/september-pack-2021/

    https://lion-muthucomics.com/latest-releases/865-september-pack-2021.html

    ஆன்லைன் லிஸ்டிங் ரெடி folks !!

    ReplyDelete
  36. அட்டைப்படம் அருமை சார்....பல எதிர்பார்ப்புகளை கிளம்பி விட்டுள்ளீர்கள்....ஆவலுடன் நாளையை எட்டிப்பிடிக்க இன்றைக்கு பயணிக்கப் போகிறேன் திருச்செந்தூரிலிருந்து

    ReplyDelete
  37. Replies
    1. நீ படிச்ச புத்தகங்களுக்கு எல்லோருக்கும் புரிகிற மாதிரி தொடர்ந்து விமர்சனம் எழுதுல :-)

      சும்மா அட்ட நல்லா இருக்கு பட்டயகிளப்புது என சொல்வதுடன் விமர்சனமும் எழுதுலே :-)

      Delete
    2. /* சும்மா அட்ட நல்லா இருக்கு பட்டயகிளப்புது */ - hahahaha :-) :-)

      Delete
  38. இன்று கொழுக்கட்டை மட்டும் தான் :-) ஆனால் சூ மந்திரகாளி காமிக்ஸும் படித்தேன். இப்ப பதிவின் தலைப்பையும் நம்ப பின்னூட்டத்தையும் ஒரு வழியாக இணைத்து விட்டாச்சு :-)

    ReplyDelete
  39. ஹம்ம்ம்ம்ம் இன்னமும் சிலர் வீட்டில் காமிக்ஸ் படித்தால் இலவசமாக கொழுக்கட்டைகள் கிடைக்குதாமே... நோ க்ராஸ் கொஸ்சின்ஸ் புளீஸ் ����

    ReplyDelete
    Replies
    1. அதைத் தான் நிம்பள் எடிட்டர் பதிவின் தலைப்பாக சூசகமாக சொல்லி இருப்பாரோ 🤔🤔🤔

      Delete
    2. பிரியரே@ அது பூரிக்கட்டை😉

      Delete
    3. @ STV பூரிக்கட்டையா??? அடப் பாவமே... நம்ம கதை தேவலாம் போல 🤐🤐🤔... Steel உபயத்தால் அடுத்த பதிவின் தலைப்பு ரெடி போல😁😁😁

      Delete
  40. " கொஞ்சம் பார்த்து, அனுசரிச்சு மார்க் போடுங்க தர்ம துரைஸ் ; கார்டூனுங்கய்யா,,,,லெமூரியா கண்டமாட்டம் காணாது போய்விடக் கூடுமய்யா !! Fingers crossedங்கய்யா "

    இன்னும் Suski wiski கேட்டு கெஞ்சுற Cartoon Comics வெறியர்கள் Sir நாங்க,
    எப்பவும் Cartoons க்கு 100/100 தான்,

    இனி நீங்கதான் மனசு வைச்சு Suski wiski ய கொண்டுவந்து Cartoon மறுமலர்ச்சிய உண்டு பண்ணணும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்கைய்யா அப்படியே நம்ம ஸ்பின் ஆப்.. மற்றும் புதிய XIII க்கு ஒரு இடம் போட்டுவைங்க சார்..

      Delete
  41. அடுத்தமாதம் அட்டவணை கை பரபரங்ங்குது இப்பவே.. tamilrockers la சொல்லி முன்னமே ரிலீஸ் செய்ய வைக்க முடியாதா., நண்பர்களே..

    ReplyDelete
  42. இன்று பொக்கிஷங்கள் கிட்டவில்லை.
    யாரோட சதி என்று இனிமேல் தான் கண்டுபிடிக்கணும்.

    ReplyDelete
  43. நரகத்திற்கு நடுவழியே!

    This comics is like a monster that hides in plain sight..
    An awesome and adorable monster..
    And it's very raw.
    To enjoy this comics wholesome
    "We must revolutionize our optical perception. We must remove the veil from our eyes."

    9/10

    ReplyDelete
    Replies
    1. ///We must remove the veil from our eyes///

      சரிங்க செனா அனா! நாளைக்கே cataract ஆப்பரேசன் பண்ணிக்கிடறேன்!

      Delete
    2. ///We must revolutionize our optical perception///

      நாளைக்கே கண்ணாடியையும் மாத்திடறேன்!

      Delete
    3. Retire ஆன கிழவரசர்னு சொன்னதை மறுபடி மறுபடி validate பண்ணும் இ. சி. ஈ. கி. க்கு நன்னிகள் பல.

      Delete
    4. வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம். அடி தூள். I'M வெயிட்டிங்

      Delete
    5. ///Retire ஆன **வரசர்னு//

      யாரங்கே? அந்த ஷெரீப்பை சுட்டுக் கொல்லுங்கள்!!

      ///வசிஷ்டர் வாயால் ///

      'வயதான சாமியார்'னு டைரக்டாவே சொல்லியிருக்கலாமே KS?

      Delete
    6. EV இந்த ஆட்டத்துக்கு நான் வரலை

      Delete
  44. கொழுக்கட்டை கிடைக்கப் பெற்ற நண்பர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்(க்ர்ர்ர்ர்ர்ர்ர்)

    ReplyDelete
  45. சார் இன்று பதிவுக் கிழமை

    ReplyDelete
    Replies
    1. சார் ..இன்னிக்கு புக் வாசிப்போர் நமக்கெல்லாம் கதை சொல்லும் நாள் !

      Delete
  46. இன்று கொரியர் ஆபீஸுக்கு போயிருந்தேன். 'இன்னிக்கு உங்களுக்கு பார்சல் எதுவும் வரலை'னு சொல்லிட்டாங்க! என்னவொரு தைரியம் - ஒரு இளவரசரிடமே இப்படியெல்லாம் சொல்ல?!!
    கழுத்துவரை மண்ணில் இறக்கி யானைக்கால் கொண்டு இடறினால்தான் சரிப்பட்டுவருவாங்க போலிருக்கு! கிர்ர்ர்..

    ReplyDelete
    Replies
    1. சரி சரி நீங்க அந்த கண்ணாடியை சரியாக போட்டு போங்கள் நீங்கள் கீழே விழுந்து யானை உங்களை இடறி விடப்போகிறது.

      Delete
    2. இளவரசருக்கான பட்டுவாடாக்களை மகளிர் மட்டுமே செய்தாகணும் என்று புதுசா சட்டம் போட்டிருப்பதா அரசல் புரசலா சேதி வந்துச்சே ?

      Delete
    3. அதான் அவர் வீட்டு சமையலறையில் இருந்து பறக்கும் தட்டு சேவை நடப்பதை நீங்கள் கவனிக்க வில்லையா விஜயன் சார் :-)

      Delete
    4. ///இளவரசருக்கான பட்டுவாடாக்களை மகளிர் மட்டுமே செய்தாகணும் என்று புதுசா சட்டம் போட்டிருப்பதா///

      சார், சட்டம் அமலுக்கு வரும்வரை புத்தகங்களை அனுப்ப வேண்டாமே ப்ளீஸ்?
      எனக்கொன்னும் அவசரமில்லை!

      Delete
    5. ///நீங்கள் கீழே விழுந்து யானை உங்களை இடறி விடப்போகிறது.///

      அப்படியே நான் விழுந்தாலும் என்னை இடறிவிட வாய்ப்பில்லை ராஜா! யானைகள் தான் இடறிவிழும்!

      இளவரசரின் சாரீரம் மட்டுமல்ல ; சரீரமும் சற்று பெரியதே!

      Delete
  47. இன்றும் 2ம் நாளாக கொரியர் படையெடுப்பு...

    நேற்று பூட்டிய அதே பூட்டு தொங்கிட்டு இருந்தது... ஆனா அந்த ஆபீஸ்க்கு வந்திருந்த பெரிய மூட்டை வெளியே காத்திருந்தது... ஆபீஸ் அன்பர்கள் வர்ல.

    சரினு கடைக்கு போய்ட்டு இப்ப 11.00மணிக்கு போன் பண்ணி கேட்டேன், மூட்டையை பிரிச்சிட்டாங்களாம்...

    ஆனா,
    ஆனா,
    ஆனா,

    நம்ம பார்சல் வர்லை....🤧

    "சேலம் ஸ்டீல் கடை விஜயராகவனா வர்லீங்களே"--- என்ற பதில் ஏமாற்றத்தை அளித்தது.....!!!


    இதான் 2ம் நாள் ஆட்டம்....


    திங்கள் வந்துடும்.....!!!


    என்னா வீக் எண்ட், டெட்வுட் படிச்சிருக்கலாம்.... சரி இனி Monday பார்த்துகிடலாம்...!!!


    ஆசிரியர் சார்.... சரி வேணாம்....,
    இந்த கண்ணாமூச்சி ஆட்டமும் ஆண்டுக்கு ஒருதடவை இருக்கட்டும்...🤣🤣🤣🤣🤣

    ReplyDelete
    Replies
    1. // கொரியர் படையெடுப்பு... // நீங்கள் எப்ப அரசரானிங்க :-) படையெல்லாம் வச்சு இருக்கீங்க :-)

      Delete
    2. ஏற்கனவே ஒருத்தர் இளவரசர் ஆகிட்டாரு..... அமைச்சர் ஆல்ரெடி இருக்காரு..... காலியாயிருந்த அரசரை நான் எடுத்துகிட்டேன்....
      இன்னும் தளவாய், பிரதாணி, ராஜகுரு.... னு நிறைய காலி இருக்கும்போல... பிடிச்சதை அள்ளுங்க...😍


      ஆனா எனக்கு ஒருஆள் மேல தான் கண், கிருஷ்ணதேவராயரின் அடைப்பக்காரன்(அதாவது வெத்திலை பாக்கு மடிச்சி தர்றவன்)....அவனது சேவையை கண்டு ராயர், அவரது கொழுந்தியாலை அடைப்பாக்காரனுக்கு மணமுடிச்சி தந்தாரம்.... அவனும் பின்னாளில் பிரதம தளபதிகளுள் ஒருவனாகிட்டானாம்....

      Delete
  48. Replies
    1. பார்டா....இளவரசர்களை விட, கவிஞர்களுக்கு மவுசு ஜாஸ்தியுள்ளதே !

      Delete
    2. எடிட்டர் சார் செம்ம செம்ம ROFL

      Delete
    3. சார் ...சரஸ்வதி சபதம்....நீரோ என் பாட்டுக்கடிமை...
      திருவிளையாடல்...பாண்டிய நாடே பாட்டுக்கடிமை...
      எல்லாம் செந்தூரான் அருளே

      Delete
    4. இந்த இளவரசரும் ஒரு கவிஞர்தான்றதை மறந்துட்டு பேசிக்கிட்டிருக்கீங்க எல்லாரும்! எப்போ என் சினத்துக்கு ஆளாகி சின்னாபின்னமாகப் போறீங்களோ தெரியலை!

      Delete
  49. கொழுக்கட்டை வந்துவிட்டது

    ReplyDelete
  50. அன்புள்ள ஆசிரியரே இங்கு லொக்டவுன் வேலை இல்லை அதனால் பணம் சேர்த்து அனுப்பமுடியலே Smashing 70 புக்கிங் டேட் இன்னும் கொஞ்சம் நீடிக்க முடிமா - நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ லங்காவா நண்பரே ? கவலை வேணாம் ; உங்களுக்கு அவகாசத்தினை நீட்டித்து விடலாம் !

      Delete
  51. பகலறியா பூமி!
    எளிமையான , தெளிவான, முடிவில் சிறு திருப்பம் உள்ள கதை!
    மனம் மயக்கும் ஓவியங்கள்!

    8.75/10

    ReplyDelete
    Replies
    1. ஓவியங்கள் + கலரிங் சார் !

      Delete
    2. /// முடிவில் சிறு திருப்பம் உள்ள கதை!///

      ஆக்னஸ் இந்தவாட்டியும் ஆப்பு வச்சுட்டாளோ என்னமோ?!!

      Delete
  52. இன்று மதியம் கொரியரில் புத்தகங்கள் வந்துவிட்டன. வாழ்க கொழுக்கட்டை.

    ReplyDelete
  53. சித்திரமும் கொலைப்பழக்கம்:

    அட்டை படம் அருமை ரத்தம் தெரிக்கும் அட்டை நன்றாக இருக்கிறது.

    பெயர் கதைக்கு ஏற்று இருந்தது.

    ஆர்ட் ஒர்க் கலரில் நன்றாக இருந்தது.

    ஆனால் கதை கிராபிக் நாவல் என்பதற்காகவே தயார் படுத்திய கதை போல் உள்ளது.

    கதை எனக்கு அந்த அளவு அழுத்தமாக இல்லை.

    முக்கிய கதாபாத்திரம் நடந்துகொள்ளும்/கொல்லும் நிலைக்கு காரணம் அழுத்தமாக இல்லை, என்ன தான் இறுதி பேனல் ட்விஸ்ட் இருந்தாலும் அது போதுமானதாக இல்லை.

    ஸ்பாய்லர் அலர்ட்:
    கதை படிக்காதவர்கள் தொடராதீர்கள்.

    ஹீரோ 30 வருடம் கோர்ட்டில் படம் வரைந்து அங்கு நடக்கும் விசாரணையை பார்த்ததால் மட்டுமே அவருக்கு கொலை எண்ணம் வருமா, சரி மகள் போனதற்காக கொலையாளியை விட்டு மொத்தமாக வேறு மாற்றம் அதற்கு கடைசி ட்விஸ்ட் பதில் சொன்னாலும் அது மொத்த கதையை மேலும் வீக் தான் ஆக்குகிறது. அப்படி ஒரு நிகழ்வே நடக்காமல் ஏன் அவர் அப்படி மாறுகிறார்.

    போலீஸ் காதலி எங்கும் ஈசியாக போய் கொலை, சம்பந்தமே இல்லாமல் டெபுடி கொலை செய்வது பின் அவர் சுயரூபம், போலீஸ் கண்டுபிடிக்காததை சாமுராய் கண்டுபிடிப்பது என மொத்தமுமே சரியாக பதியவில்லை.

    எனது மதிப்பெண் 4/10

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சமாச்சும் நம்மாட்கள் புக்குக்குள் புகுந்து கொள்ளட்டும் நண்பரே ; அதன் பின்பாய் இதனை அலசுவோம் !

      Delete
  54. Hi I'm new here . Couple of my friends gifted me 20 + comics to get me started. I never knew tamil comics could be this much interesting and fun. I really love larco and tex . Thanks Sriram and Kannan for introducing me to this beautiful world

    ReplyDelete
    Replies
    1. நல்வரவு நண்பா...

      Delete
    2. சூப்பர் தினேஷ் வாங்க வாங்க. நண்பர்கள் கண்ணன் மற்றும் ஶ்ரீராம் இருவருக்கும் எனது பாராட்டுக்கள்.

      Delete
    3. Warm welcome Dinesh. Welcome to comics family.

      Delete
    4. நல்வரவு சார் ; காமிக்ஸிலும் , அதனை வாசிக்கும் வட்டத்திலும் சுவாரஸ்யங்களுக்குப் பஞ்சமே இராது !

      Delete
    5. அருமை நண்பரே...நல்வரவு...அருமை நண்பர்களே சரியான கதைகளை அளித்ததற்கும் பாராட்டுக்கள்

      Delete
    6. நல்வரவு நண்பரே!

      இளவரசரின் வந்தனங்கள்!_/\_

      Delete
    7. //இளவரசரின் வந்தனங்கள்!_/\//

      அவ்ளோதானா? பொற்கிழில்லாம் கிடையாதா?

      Delete
    8. இளவரசரே கிழிஞ்ச டவுசருடன் தான் சுற்றிக்கிட்டிருக்காராம்.. இதுல பொற்கிழி வேற!

      Delete
  55. நரகத்தின் நடுவழியே:

    ஒரு நல்ல அறிமுகம், இது அவரது ஆரம்பகால நிகழ்வே என்பதால் இனி வரும் கதைகளை பார்த்து இவரது எதிர்காலம் தீர்மானிக்கலாம்.

    அட்டை படம், ஆர்ட் ஒர்க் நன்றாகவே இருக்கிறது. கலரில் இருந்திருந்தால் எனக்கு பெர்சனலாக பிடிக்கும், ஒரிஜினல் கருப்பு வெள்ளை என்றால் ஒன்றும் செய்யமுடியாது தான்.

    கண்டிப்பாக ஒரு வித்தியாசமான ஹீரோ தான். எனக்கு ஹீரோவை விட அவரது தோழர் கல்லகன் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டதாக தோன்றுகிறது எனக்கு மட்டும்தானா?

    ஆனால் இறுதி பேனலில் சொன்னது போல அவரது பயணம் இப்பொழுதுதான் ஆரம்பம் தொடர்ந்து பார்ப்போம்.

    எனது மதிப்பெண் 6.5/10

    ReplyDelete
    Replies
    1. 4 பக்கங்கள் பிரிண்டிங் தெளிவில்லாமல் இரட்டையாக இருக்கிறது சார் எனது புத்தகத்தில்

      Delete
    2. மாத்திடுவோம் கிருஷ்ணா !

      Delete
  56. பொட்டி இன்னும் வரலை...
    கொழுக்கட்டை சாப்பிட்டுட்டு மெதுவாதான் வரும் போல...

    ReplyDelete
    Replies
    1. சார் ..கூரியரை ஒருவாட்டி மாற்றிப் பார்த்தாலென்ன ? உங்களுக்கு மாசா மாசம் ஆப்படிக்கிறாங்களே ?

      Delete
    2. அதெல்லாம் சரிப்படாது விஜயன் சார். வீட்டில் வாஸ்து ஒரு வேளை சரியில்லாமல் இருக்கலாம் எனவே இவரை வீட்டை மாற்றச் சொல்லலாம். :-)

      Delete
  57. "உலகத்தின் கடைசி நாளுக்காக" ஆவலுடன் வெயிட்டிங் சார்....

    ReplyDelete
    Replies
    1. அதிலே என்ன ஸ்பெஷலான எதிர்பார்ப்பு யுவா ?

      Delete
    2. //உலகத்தின் கடைசி நாளுக்காக" ஆவலுடன் வெயிட்டிங் சார்//

      ஒருவேளை யங் டைகர் கதைகளை படிக்கப் போறேங்கறதைதான் யுவா இப்படி சொல்றாரோ?

      Delete
    3. பல்லடத்தில் ஒரு ஆட்டோ புறப்பட ரெடியாகிறதாம் சார் !

      Delete
    4. அதிலே என்ன ஸ்பெஷலான எதிர்பார்ப்பு யுவா ?////


      எப்பவுமே எனக்கு ரொம்பவே பிடித்த ஹீரோ,"மார்ட்டின்" சார்.கூடவே டயலன் டாக்கும் சேர்ந்து கலக்கும் கதைனா எதிர்ப்பார்ப்புக்கு சொல்லவா வேணும் சார்...அதுவுமில்லாம, அந்த தலைப்பு வேற ஏகத்துக்கு ஆவலை தூண்டுதுங்க சார்.....படங்களிலேயே கூட டபுள் ஹீரோ படம்னா எனக்கு ரொம்பவே பிடிக்கும் சார்...அதான் சார் மார்ட்டின் & டயலன் இணைந்து கலக்கும்னு "உலகத்தின் கடைசி நாள்"னு 21ன் சந்தா புக்கில் ட்ரைலர பார்த்ததில் இருந்து பயங்கர எதிர்ப்பார்புடன் இருந்து வருகிறேன் சார்...அந்த எதிர்ப்பாற்ப்பு அடுத்த மாதம் நிறைவேறபோகுதுன்னு நினைக்கும்போது, யுவா ஹேப்பி (அண்ணாச்சி) சார் னு சொல்லத்தோனுதுங்க சார்..




      இணைந்த கைகள் படம்லாம் நியாபகத்துக்கு வந்து...வந்து போகுதுங்க சார்...

      Delete
    5. ஒருவேளை யங் டைகர் கதைகளை படிக்கப் போறேங்கறதைதான் யுவா இப்படி சொல்றாரோ?///


      செல்வம் அபிராமி சார்...செம டைமிங் சார்...ஹா..ஹா..ஹா..

      Delete
  58. நரகத்தின் நடு வழியே பயணித்துக் கொண்டு இருக்கிறேன், டெட் வுட் டிக்குடனும், அவரது தோழன் கல்லகனுடனும். ஆரம்பத்திலேயே டிக் என்னை ஈர்த்துவிட்டார். சரளமான, யதார்த்த வசன நடை. சுவாரஸ்யமாகவே இருக்கிறது..
    பயணம் தொடர்கிறது....

    ReplyDelete
  59. கல்லகன் அல்ல.. கல்லென்.

    ReplyDelete
  60. //உலகத்தின் கடைசி நாளுக்காக" ஆவலுடன் வெயிட்டிங் சார்//

    ஒருவேளை யங் டைகர் கதைகளை படிக்கப் போறேங்கறதைதான் யுவா இப்படி சொல்றாரோ?

    செனா ஜி... குசும்பு.

    ReplyDelete
  61. நரகத்தின் நடுவழியே..
    பாதி வழி தாண்டி விட்டேன். இதுவரை நரகம் எதுவும் கண்ணில் படவில்லை.
    சரளமான வசன நடை..சில சுவாரஸ்ய துளிகள்..

    "அதை ஊத நினைச்சா, உனக்கு சங்கு ஊதவேண்டிவரும்.."

    "பாவமன்னிப்போ, யோசனையோ சொல்ற தகுதி எனக்கு இல்லையே.

    " இப்போ தைரியம் சொல்றாரா, புளியை கரைக்கிறாரா?"
    பயணம் தொடர்கிறது..

    ReplyDelete
  62. பயணம் முடிந்தது.
    டெட் வுட்டிக்கிற்கு வார்ம வெல்கம்.
    வழக்கமான ரோந்துப்பணிக்கு செல்லும் நீக்ரோ சிப்பாய்கள் படை, எதிர்கொள்ளும் செவ்விந்திய தாக்குதலிலிருந்து டிக்கும், கல்லெனும் தப்பிப்பது தான் கதையின் ஒன்லைன் ஸ்டோரி. ஹட்ச், கல்லென், டிக் என மூன்றே கதாபாத்திரங்கள். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை கதை மிக அருமையாக இருந்தது. ஜோவியலான வசனநடை.
    அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று த்ரில்லான சம்பவங்களுடன் கதையை எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.ஆனால் கதை ஓட்டம் ஆர்வமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.
    ஒரு சாதாரண நேர்கோட்டுக் கதை, வசனங்கள் மூலமாக விறுவிறுப்பாக செரல்லப்பட்டிருக்கிறது.
    இன்னதென்று சொல்லமுடியாத ஒரு வசீகரத்தை டிக் நம்முள்ளே ஏற்படுத்தி விடுகிறார்.
    ஒரு கருப்பினத்தவர் ஹீரோவாக அறிமுகமாகும் கதை இதுதான் முதல் தடவை என எண்ணுகிறேன்.
    முதல் ஆல்பத்திலேயே டிக் ஸ்கோர் செய்து விடுகிறார்.
    பெரிய ஹீரோத்தனமெல்லாம் இவரிடம் இல்லை.இருந்தாலும் நம்மை இவரின் அடுத்த ஆல்பத்தை எதிர்பார்க்க வைக்கிறார்.
    வழிப் பயணம் போகும் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்ளும் எதார்த்தமான காமெடி கலந்த வசனங்கள் நம்மை ரசிக்க வைத்து கதைக்கு சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.
    ஆசிரியருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை சார் எனக்கு அந்த வசனங்களில் பிடித்திருந்தது அடிமையாக இருந்து வெளியே வந்த பின்பு அதனால் சுக பட்டவர்கள் விட கஷ்டப்பட்டவர்களும் நிறைய என்பது உண்மை தானே

      Delete
    2. ஒரிஜினல் ஸ்கிரிப்ட் ரொம்பவே குசும்பானது சார் ; கதாசிரியர் deliberate ஆக இந்த பாணியினைக் கையில் எடுத்திருப்பது புரிந்தது ! தமிழில் வாசிக்கும் போது கொஞ்சம் டிராமா பாணியில் தெரியக்கூடும் என்பது புரிந்தது தான் ; ஆனாலும் அந்தக் கதாப்பாத்திரம் நம்மிடம் நெருங்கிட கதாசிரியரின் பாணியோடு ஒன்றிடுவதே சுகப்படுமென்று பட்டது ! So அதே கரடு + முரடு + ஹ்யூமர் என்று ஐக்கியமாகி விட்டேன் !

      Delete
  63. சார் புத்தக அட்டைகள் வழக்கம் போல அனைத்துமே ...அருமை இம்மாதமும் ...ஆனா எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடுது அந்த இருவண்ண ரோஸ் நிற நான்கு பக்கங்கள்...என்பதுகளின் வாசனை நாசியுள் நுழைந்து நுரையீரல் நிரப்பி ...இதயத்த மகிழ்வுடன் லப்டப் என தொடரச் செய்யுது...நிச்சயமா எனது மகிழ்ச்சிய எதிர்பார்த்திருப்பீர்கள்....அதனை விட மகிழ்வுடன் நீங்க தரும்
    ..எட்டுக் கதைகளை அதாவது ஓராண்டுக்கான கதைகள் ஒரே மாதத்துல...அதாவது நாம் சொல்லி மகிழும் பொற்காலத்தை விட அதிகமா இக்காலத்ல...இவ்வளோ குறைந்த விலைல...அருமை....இதுவரை தந்த இணைப்புகள்ல இந்த இரு வண்ண பக்கங்கள்தாம் டாப்னு உங்களுக்கே தெரியுமே நா சொல்லாட்டியுமே

    ReplyDelete
    Replies
    1. சித்திரமும் கொலைப் பழக்கம் கவரிங் வித்தியாசமா ஈர்க்க...முதலிரண்டு பக்கங்கள் கதை அட்டகாசமா இருக்குமென கட்டியம் கூற ....கடைசி பக்கம் அடுத்த ஜம்போ அண்டர்டேக்கர் என ஆனந்தக் கூத்தாட...70 கள் விளம்பரம் வண்ணமயமான அந்த நான்கு பக்க இணைப்புக்கு போட்டி போட...நமது கடந்த கால கருப்பு வெள்ளைக் கனவுக்குள் வண்ணமடிக்க முயற்ச்சிக்க...இந்த விளம்பரந்தான் டாப்போ என கேக்க...நினைவோ ஒரு பறவை விளம்பரம் அதைத் தாக்க...எத்தனை கோடி இன்பம் வைத்தாய் செந்தூரான்னு உங்களைப் பாத்து கேட்கச் சொல்ல...சத்தியமா இது வர வந்த அட்டைகள்ள நான்தா டாப்பு என்னத் தூக்குன்னு குதிக்க...தூக்குனா நழுவுவது வழவழப்பான அட்டைல ட்ரெண்ட்..

      Delete
    2. அட இந்த அட்டைக்கும் ரேகையான்னு பாக்க பச்சக்குன்னு பினணயுது என் ரேகையோடு நழுவ மறந்து ட்ரெண்டு என் ஃப்ரெண்டு...தனிமையை உணராதவரா படித்து உணர் என்று என்னை கேலியோடு பார்த்து...அதுக்கூட இனிமைதான்னு முதல் பக்கம் உணர்த்துவது... தான் போன போக்கில் நீல வண்ணத்த துணையாக்கி தனிமையே கிடையாது நண்பா உலகிலே என சிரித்தபடி ...படிக்க படிக்க அற்புதத்தை உணர்'வாய் என்றபடி தன்வாயால் சொல்லி....கடைசி பக்கம் அதே வரலாறு திரும்ப உள்ள வண்ணமய விளம்பரம்

      Delete
    3. பாமிபாகொ...மேக் ஜாக்...அட்டைப்படமே அதகளப் படுத்துது...ஆண்கள் கையிலுள்ள துப்பாக்கிக்கிணை...பெண்கள் கையிலுல்ல பாட்டில்கள் என இல்லத்தரசிகளின் பூரிக்கட்டைகளின் மகத்துவத்தை சொல்லாம சொல்லுது...பின்னட்டை அதகளம்

      Delete
    4. நரகத்துக்கு நடுவழியே...வித்தியாசமான அட்டை பின்புலப் பச்சைக்கு நடுவே...மனமீர்த்த இருவண்ண ஆரஞ்சு நிறம் நாயகனுக்கு அளிக்கபட...முதல் பக்கம் புள்ளிக் குதிரையில் விரட்ட...முன்னுரை ஆசிரியர் முன்னமே உரைத்ததால் அதேவித எதிர்பார்ப்போடு நுழைகிறேன் யாருமில்லா வீட்டிலிருந்து நானும் நரகத்திற்குள் தனியே தன்னந்தனியே

      Delete
  64. சார், புக்கு தான் வரலை..

    கொஞ்சம் ஆக்சன், கொஞ்சம் காமெடி, கொஞ்சம் சென்டிமென்ட், கொஞ்சம் காதல் - இதெல்லாம் கலந்து சுடச்சுட ஒரு பதிவாவது போடக்கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. ///சார், புக்கு தான் வரலை///

      எல்லாம் அந்த மாரியாத்தா பண்ற வேலை..!

      Delete
    2. ஆமா சார் எனக்கும் டீ வரல

      Delete
  65. டிக் அடிக்கடி கனவு கண்டு அலறுவது சூப்பர் காமெடி.
    பக்கத்துக்கு பக்கம் வசனங்கள் ரசிக்க வைத்தன.
    பல இடங்களில் வாய்விட்டு சிரிக்கவும் வைத்தன.

    ReplyDelete
  66. பகலறியா பூமி..

    செம breezy read.

    அட்டை படம் சூப்பர். முகம் மட்டும் சற்று வித்தியாசமாக உள்ளது ☺️

    ஆரம்பத்தில் சிறு தாடியுடன் அவர் தனிமையில் ஆரம்பித்தது நன்றாக இருந்தது. Martian படம் பார்த்த மாதிரி இருந்தது. மதியம் 12.30 கு அவ்வளவு இருட்டு .. அடுத்து சூரியன் பார்த்தவுடன் அவர் படும் சந்தோசம் என ஆர்ட் ஒர்க் நம்மை அப்படியே உள்ளே இழுத்துவிடுகிறது.

    வசனங்கள் மிகவும் அருமை குழந்தையுடன் அவர் பேசும் காட்சிகள் எல்லாம் சிரிப்புடனேயே கடந்தேன்.

    இறுதி ட்விஸ்ட் கூட நன்றாக தான் இருந்தது.

    நாமே அது போன்றதொறு பிரயாணம் சென்றது போல இருந்தது.

    எனது மதிப்பெண் 8/10

    ReplyDelete
    Replies
    1. டிரெண்டின் பலமே அந்த exotic பின்புலங்கள் தானே ?

      Delete
    2. அருமையான விமர்சனம் கிருஷ்ணா. Keep going

      Delete
    3. //டிரெண்டின் பலமே அந்த exotic பின்புலங்கள் தானே ?//

      உண்மை சார்

      Delete
  67. சொல்ல மறந்த ஒன்று.
    நரகத்தின் நடு வழியே..
    கதைக்கு சித்திரங்கள் கூடுதல் பலம்.
    கோட்டையில் டிக்கை அந்தக் குதிரை 'சாத்தான்' புரட்டி எடுக்கும் இடங்கள் செம ஆர்ட் வொர்க்.

    ReplyDelete
    Replies
    1. இந்த ஒவியர் CID ராபின் கதைகளுக்கு சித்திரம் போடுபவர் சார் ; டயபாலிக்குக்குமே !

      Delete
    2. அதுதானே பார்த்தேன். இந்த சித்திர பாணி ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கேன்னு நெனச்சேன். Super.

      Delete
  68. பாவை மிரண்டால் பார் கொள்ளாது :-

    சாதாரணமாக ஆரம்பிக்கிறது கதை.! சமூக சேவகிகள் மூவரின் உன்னத லட்சியத்துக்கு உதவிக்கு (அப்கோர்ஸ்..பீஸ் வாங்கிண்டுதான்) போகிறார்கள் ஜாக்கும் மேக்கும்..!

    அதன்படி ஊரில் கள்ளத்தனமாக நடத்தப்படும் பார்களை அடித்துநொறுக்குகிறார்கள்.! இதுவரை சிரிப்புக்கான சமாச்சாரம் பெரிதாக இல்லை..(சங்கேத வார்த்தைகளை சொல்லி பாருக்குள் நுழையும் சம்பவங்கள் லேசான புன்னகையை மட்டுமே வரவழைக்கின்றன.)

    அல்கபோன் செயலில் இறங்கியதும் கதை சூடுபிடிக்கிறது.! ஹீரோவும் வில்லனும் கூட்டுசேர்ந்து சதி பண்ணுவது காமிக்ஸ் வரலாற்றிலேயே இதுதான் முதல்முறையாக இருக்கும்.!

    க்ளைமாக்ஸ் யூகிக்க முடிகிறதென்றாலும்.. அந்த தில்லாலங்கடி சமூக சேவகிகள் இவர்கள் கையில் மாட்டாமல் எஸ்கேப் ஆகிவிடுவது வித்தியாசமான முடிவு.!

    கதையிலேயே அதிகம் சிரித்தது கடைசி பக்கத்தின் கடைசி பேனல்களில்.. அல்கபோன் எலியட் கூட்டணியின் செயலைப் பார்த்துதான்..🤣🤣🤣

    கதைக்கு இடையே மேக் அண்ட் ஜாக்கின் நட்புறவு அருமையாக வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.!

    எத்தனுக்கு எத்தன்.. ஜித்தனுக்கு ஜித்தன்கிற மாதிரி.. அல்கபோன், எலியட் , மேக் அண்ட் ஜாக் ஆகிய மூன்று குழுவினருக்கும் பட்டையாக நாமத்தை சாத்திய அந்த அழகிய ராட்சசிகளான மூன்று பாவைகளும் நினைவில் நின்றுவிட்டார்கள்..!

    ரேட்டிங் 9/10

    ReplyDelete
    Replies
    1. ஊர்ல இளவரசரைத் தவிர குடிமக்கள் எல்லாருக்குமே புக்கு வந்து சேர்ந்துடுச்சு போலிருக்கே?!!

      ஒட்டுமொத்த குடிமக்களையும் பீரங்கி கொண்டு தாக்க வேண்டும் போல் அப்படியொரு வெறி எனக்கு!

      Delete
    2. எனக்கு இன்னும் வரலயே. பீரங்கி தாக்குதலில் இருந்து தப்புவேனா?

      Delete
    3. ///ஊர்ல இளவரசரைத் தவிர குடிமக்கள் எல்லாருக்குமே புக்கு வந்து சேர்ந்துடுச்சு போலிருக்கே?!!///

      அது ஏன்னா..

      பார்சலை கையில வெச்சிக்கிட்டு உங்க தெருவுல வந்து இளவரசர் எங்கேன்னு கேட்டிருக்காங்க.. நீங்க கையூட்டு குடுத்து ஏற்பாடு பண்ணிவெச்ச ஆசாமி உங்களை நோக்கி கைகாட்டியிருக்காங்க..(கைகாட்டிய நபருக்கும் கையூட்டு பாக்கி வெச்சிருக்கிங்களாமே)..
      பார்சலை கொண்டுவந்த நபர், இவரா இளவரசர்னு கடுப்பாகி வேலையை விட்டே போயிட்டதா பேசிக்கிறாங்க.! போனவர் கையோட புக்கையும் எடுத்துக்கிட்டு கைலாசா பக்கம் போயிட்டதால.. இப்போதைக்கு உங்களுக்கு புக்கு வந்து சேராது.!

      Delete
    4. https://youtu.be/dPZ0eKuTsxY

      ஈவி இது உங்களுக்காக!

      Delete
    5. நீங்க வேற செனா..

      ஆத்தாவே நேர்ல வந்து கத்துக்கொடுத்தாலும் இவர் கூழ் பாக்கியை தீர்க்கப்போறதில்லை.!

      Delete
  69. இங்கன இன்னும் புக்கு வரல...

    ReplyDelete
    Replies
    1. இந்தா இருக்க மதுரைக்குமா ? நாசமாய்ப் போச்சு !

      Delete
  70. நான் போய் Deadwood Dickஐ படிக்கிறேன்.. அஞ்சிபாகம்னா பெருசா இருக்கணுமே.. சின்ன டிக் கா வந்திருக்கு.!?

    ReplyDelete
    Replies
    1. ஓவ்..சாரி.!
      ஏழுல ரெண்டுதான் வந்திருக்கு போல.. முன்னுரையை படித்ததும்தான் தெரிந்தது.!

      மல்லிச்சூ....🙏

      Delete
    2. ஒரு பதினைஞ்சி பக்கங்களை புரட்டின கையோடு இங்கே ஓடியாறேன்..!

      அமர்க்களமான ஆரம்பம்.. கதையும் சரி.. மொழிபெயர்ப்பும் சரி.. செம்ம ஓப்பனிங்..!

      ஏழு அத்தியாயங்களையும் ஒண்ணா சேத்தி குண்டு புக்கா போட்டிருந்தா.. மறக்கவியாலா இதழாக அமைந்திருக்குமென்பது உறுதியோ உறுதி..!

      Delete
  71. பாவை மிரண்டால் பார் கொள்ளாது...

    அவர்களை அவர்களே காப்பற்றிக்கொண்டார்கள் சார். இக்கதை வெற்றியை பொறுத்துதான் அவர்களது எதிர்காலம் என்று நீங்கள் சொன்னதை அவர் வெற்றி பெற்றுவிட்டார்கள்.

    எனக்கு பொதுவாக மேக் ஜாக் இல் கொஞ்சம் பிடிக்காதது அந்த repeation தான். நல்ல காமெடி கான்சப்ட் எடுக்கிறார்கள் ஆனால் அதே காட்சி மூன்றாம் முறை வரும்பொழுது கொஞ்சம் அயற்சியாகி விடுகிறது.

    ஆனால் இக்கதை செம காமெடியாக இருந்தது. அதுவும் அந்த இறுதி ட்விஸ்ட் மற்றும் காட்சியெல்லாம் சிரித்து முடியவில்லை.

    ரசித்த காட்சிகள்.

    ஜாக்கின் அவசர ஜென்டில்மேன் மாற்றம்
    மேக்கின் பென்னெடுக்கு மௌன அஞ்சலி
    கபோனுக்கு மேக் அனுப்பிய அன்பு
    பார்கள் கண்டுபிடிக்க அடித்த கூத்துக்கள்
    ஜாக்கின் மனமாற்றம்
    இறுதி ட்விஸ்ட்
    கபோன் போலீஸுடன் சேர்ந்து நடத்திய ரைட்

    செம

    எனது மதிப்பெண் : 9/10

    ReplyDelete
    Replies
    1. அடடே !! இம்மாத இதழ்கள் நான்கையும் மின்னல் வேகத்தில் படித்ததோடு சகலத்தையும் நடுநிலையாக விமர்சிக்கவும் செய்ததற்கு நான்கு ரவுண்டு பன்கள் உங்களுக்கு உரித்தாகட்டும் !

      எதுக்கும் ராசாமார் உலா போகாத இடமாய்ப் பார்த்து பாக்கெட்டைப் பிரியுங்க கிருஷ்ணா !

      Delete
  72. தூத்துக்குடிக்கு இன்னும் புத்தகங்கள் வரவில்லை என்பது கொசுறு செய்தி :-)

    புத்தகங்கள் கிடைத்தவர்களின் எண்ணிக்கையை விட இன்னும் கிடைக்காதவர்கள் எண்ணிக்கை குறைவு என்பது தற்போதைய நிலவரம் :-)

    ReplyDelete