Powered By Blogger

Thursday, September 23, 2021

காத்திருக்கும் 100 !!

 நண்பர்களே,

வணக்கம். நூறே நாட்கள் எஞ்சியுள்ளன - புத்தாண்டுக்கும், நமது முத்து காமிக்சின் 50 வது ஆண்டுமலருக்கும் !! So எனக்கு நானே - "on the double" என்று சொல்லிக் கொண்டு உசைன் போல்ட்டுக்கு ஒண்ணு விட்ட பெரியப்பா மாதிரியாவது பணிகளில் வேகமெடுக்க, இந்த நாளையும் சரி, தொடரவுள்ள தொண்ணூற்றி ஒன்பதையும் பயன்படுத்திட நினைக்கின்றேன் ! எப்போதுமே கழுதைக்கு முன்னே இலக்கென்றொரு   கேரட் தொங்கும் போது, ஓட்டத்தில் ஒரு ஜூவாரஸ்யம் ஏறிடுவதை அனுபவத்தில் உணர்ந்தவன் நான் ! இம்முறையும் அதனில் மாற்றமிராதென்றே நம்புவோம் !

And most importantly, இந்த "100 DAYS TO GO" பயணத்தின் ஒவ்வொரு நொடியினிலும்  உங்கள் ஒவ்வொருத்தருக்குமே பங்கிருப்பதாய் எனக்குப்படுகிறது :  

  • இன்றைக்கு முதலாய் நமது Facebook பக்கத்தினிலும் ; Insta பக்கத்தினிலும் - அடுத்த 100 நாட்களுக்கு தினசரி, சின்னச் சின்னதாய், ஏதேனுமொரு முத்து காமிக்ஸ் இதழ் பற்றிய பதிவிருந்திடும் ! 
  • அவை  முந்தைய இதழ்கள் பற்றிய குட்டியூண்டு நினைவுப் பகிரல்களாய்  இருக்கலாம் ; உங்களுக்கான கேள்விகளாய் இருக்கலாம் ; ஏதேனும் quiz ஆக இருக்கலாம் ; அல்லது முன்னாட்களது சுவாரஸ்ய நிகழ்வு பற்றிய பதிவாகவும் இருக்கலாம் ! Whatever they are - they will be short n ' crisp !
  • அவற்றினில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கலந்து கொண்டு, உங்களின் "முத்து best moments" பற்றி ; முத்துவுடனான உங்களின் முதல் பரிச்சயம் பற்றி ; நாம் கோரிடும் கேள்விகளுக்கான பதில்கள் பற்றி ; உங்களிடமுள்ள "முத்து சேகரிப்பு" பற்றியெல்லாம் எழுதிடலாம் ! 
  • தவிர, இந்த மைல்கல் ஆண்டுமலருக்கு மெருகூட்ட ; காத்திருக்கும் ஆண்டுக்கு சிறப்பு சேர்க்க உங்களின் ஆலோசனைகளும் most welcome ! அவை சுவாரஸ்யமான முன்மொழிவுகளாய் இருந்து ; நடைமுறை சாத்தியங்களுக்குள்ளும் இருந்து, அனைவருக்கும் ஏற்புடையதாய் அமைந்திடும் பட்சத்தினில், நிச்சயமாய் நிறைவேற்றப்படும் ! 
  • இங்கே நமது ப்ளாகிலோ ; அல்லது FB பக்கத்தினிலோ நீங்கள் பதிவிடும் அழகான நினைவலைகள் ; அலசல்கள் ; போட்டோக்கள் - முத்து ஆண்டு மலர் 50-ல் இடம் பிடித்திடும் ! So ஒரு மறக்கவியலா தருணத்தினில் உங்களின் முத்திரைகளைப் பதிக்க காத்திருக்கும் இந்த 100 நாட்கள் பிரயோஜனப்படக்கூடும் !
  • உங்கள் கரம் பிடித்தபடிக்கே நாற்பத்தியொன்பதுச் சொச்ச ஆண்டுகளைக் கடந்திருக்கும் நமக்கு, அடுத்த 100 நாட்களின் ஓட்டத்தினில் உங்களின் வழிகாட்டல்கள் முன்னெப்போதையும் விட ரெம்பவே அவசியம் என்பேன் ! So அடுத்த 2400 மணி நேரங்களில் நமக்காகவும் சிந்திக்கக் கொஞ்சம் மெனெக்கெடுங்களேன் - ப்ளீஸ் folks ? 
To kickstart things - இதோ, நமது ஐம்பதாவது ஆண்டின் ஸ்பெஷல் லோகோவுக்கென இது வரைக்கும் நம்மவர்கள் போட்டுப் பார்த்து வரும் டிசைன்கள் !! இவை எதுவுமே இன்னமும் இறுதி பெற்றிருக்கவில்லை ; these are just some attempts !! குறிப்பாய் அந்த கிரீடம் போல "M" மேலே குந்தியிருப்பதை அகற்றச் சொல்லியுள்ளேன் !










  • இவற்றுள் ஏதேனும் அழகாய்த் தென்பட்டு, இன்னும் கொஞ்சம் மெருகூட்டினால் தேறிடும் என உங்களுக்குத் தோன்றும் பட்சத்தில் - அதனைச் சுட்டிக்காட்டிப்  பதிவிடலாம் ! 
அல்லது 
  • உங்களின் கைவண்ணங்களில் ஏதேனும் புதுசாய் உருவாக்கிட இயலுமெனில், sure - give it a try guys !! உங்களின் படைப்பு அழகாய் அமைந்து தேர்வாகிடும்  பட்சத்தினில் - 2022-ன் முழுமைக்கும் அது நமது இதழ்களினில் பயன்படுத்தப்படுவதோடு - ரூ.2000 சன்மானத்தினையும்  ஈட்டித் தந்திடும் உங்களுக்கு !  

And ஆங்காங்கே க்ரூப்களை ; FB பக்கங்களை நிர்வகித்து வரும் நண்பர்கள் நோக்கியோரு வேண்டுகோளும் : 

நமது தினசரிப் பதிவுகளில் உங்களுக்குத் பிடித்தவற்றைத் தூக்கி உங்களது பக்கங்களிலும் போட்டுத் தாக்கலாம் ! Ultimate aim - "சிவாஜி செத்துப் போயிட்டாரா ?" என்ற ரீதியில் தகவல் பரிமாற்றத்தில் இடைவெளி விழுந்து போயிடாது பார்த்துக் கொள்வதே !! 

இதோ - கண் முன்னேயே அதற்கான உதாரணத்தைப் பார்க்கிறோமே ?! ஒண்ணேகால் ஆண்டுகளாய் நாம் கூவிக் கூவி "இரத்தப் படலத்தை" விற்க தம் கட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் பிசியாக இருந்து விட்டு, இன்றைக்கு புக் வெளியான ஒண்ணேகால் மாதத்திலேயே கூசாது ரூ.10,000 கோரும் "ஆர்வலர்கள்" போடும் லிஸ்டிங்குகளை கண்கள் வியர்க்கப் பார்த்து வரும் நண்பர்களுக்கா பஞ்சம் ??  A piece of advice guys : இந்த "6000 ; 10000 ; multiple copies available" கூத்துக்களைப்  பார்த்து பணங்களை விரயம் செய்யாதீர்கள் ! நியாயமான விலைகளெனில் வாங்குங்கள் ; இல்லாத பட்சங்களில் சற்றே பொறுமை ப்ளீஸ் : இதெற்கென ஒரு ஏற்பாடு செய்து விடுவோம் !  So - hold on to your money !!

ஆங்காங்கே கையில் உள்ள பழைய இதழ்களை premium விலைகளுக்கு விற்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணைகளும் லேது ; உலகெங்கும் காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு அங்கமது என்பது தெரிந்தது தானே ?! ஆனால் புக் வெளியான மறு மாதங்களிலேயே அபத்த விலைகளில் விற்பதற்கென்றே வாங்கிப் பதுக்கும் :தொழில்களை" செழித்திட அனுமதிப்பதென்பது - long term-ல்  ஒட்டு மொத்தமாய் காமிக்ஸ் மீதே வெறுப்பினை உருவாக்கக் கூடிய விஷப் பழக்கமாய்த் தோன்றுகிறது ! So this will not find favor with us ! 

அதே போல டெக்ஸ் வில்லர் இதழ்களையுமே அர்த்தம் கெட்ட விலைகளில்  வாங்கிடவும் வேகம் காட்டாதீர்கள் நண்பர்களே !   காத்திருக்கும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவோ ; நமது ஆன்லைன் புத்தக விழாவோ - ஏதோவொன்றின் பெயரைச் சொல்லி சமீப out of stock டெக்ஸ் இதழ்களை மறுக்கா ரெடி பண்ணிடவுள்ளோம் ! And அதன் முதல்கட்டமாய் நடப்பாண்டில் வெளியாகி, வெளியான வேகத்துக்கே சில பல வளைகளுக்குள் பதுங்க நேரிட்டிருக்கும் 3 இதழ்களுமே அக்டொபரின் மத்தியில் நம்மிடம் ஸ்டாக்கில் இருக்கும் ! And அவை முகவர்களுக்கும் அனுப்பிடப்படும் என்பதால், கடைகளிலேயே கூட நீங்கள் வாங்கிட வசதிப்படும் ! So relax please !!

"தொழில்" பாதிக்கும் முதல் நொடியினில் நம்மளுக்கு "முதல் மருவாதை" செய்திட ஆங்காங்கே முனைப்பு தலையெடுக்கும் என்பது தெரியாதில்லை தான்  ; ஆனால் என்றைக்கு நமக்குக் கிரீடம் காத்திருந்தது - இன்றைக்கு விளக்குமாற்றைக் கண்டு அஞ்சிட ? So கொஞ்சம் ப்ளீச்சிங் பவுடரையும், சானிடைசரையும் கையில் வைத்துக் கொண்டால் போச்சு - மு.ச.க்களை எதிர்நோக்கி !  

Bye all....செப்டெம்பரின் அலசல்கள் தொடரட்டும் &!

And மறவாதீர்கள் ப்ளீஸ் - நூறே நாட்கள் !! Just 100 days to go !!

And before I sign out : 😀😀😁😁





MEMES by : MKS !!

227 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. எதிர்பாராத பதிவு சார். FB மற்றும் insta வில் தினமும் ஒரு update தருவது இந்த ஆர்வத்தை தக்க வைக்கும். இன்னும் 21 நாட்களே நமது 2022 அட்டவணை வர இதையும் கணக்கில் வையுங்கள் சார்.

    இன்னும் ஒரு கேள்வி சார் அக்டோபர் மாத புத்தகங்கள் எப்போது சார் கிளம்பும்???

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. எனக்கென்ன சந்தேகம்னா அக்டோபர் 15 2022 அட்டவணை எனில் அக்டோபர் 14,15 விடுமுறை நாட்கள்,அப்ப அதுக்கு முந்தியே 11 ஆம் தேதி அனுப்பினால்தான் 13 ல் கிடைக்கும்,அப்ப அக்டோபர் இதழ்களோடு அட்டவணை வராதா ?!
      இல்லைன்னா அட்டவணை 15 ஆம் தேதி வந்தவுடன்தான் இதழ்கள் கிளம்புமா ?!

      Delete
    3. அட்டவணை தீபாவளி மலருடன் வரும் என்று நான் எதிர் பார்க்கிறேன்.

      Delete
    4. அக்டோபர் ல் வரும் என கூறியதாக ஞாபகம் நண்பரே..

      Delete
    5. இல்லை பழனி நான் சொல்வது printed அட்டவணை. எடிட்டர் சார் தான் அக்டோபர் 15ஆண்டு 2022 அட்டவணை ரிலீஸ் என்று சொல்லிவிட்டாரே

      Delete
    6. அண்ணன், தம்பி ஆட்டம் ஆரம்பம்...

      அக்டோபர் புக்குக்கு ஆப்பு ரெடி🤣🤣🤣

      தீபாவளிமலருக்கு பேசி தீர்த்துகிடலாம் சாமிகளா!!!

      Delete
    7. அக்டோபர் முதல் வாரத்திலேயே அக்டோபர் இதழ்கள்
      கைக்கு வந்திடும் 🙏🏼

      நவம்பர் இதழ்கள் வழக்கம் போல அக்டோபர் இறுதியில் நம் கிடைக்கும்படி செய்திடுவார் 🙏🏼🙏🏼🙏🏼

      தீபாவளி நவம்பர் 4
      2ம் தேதிக்கு பின்னர் கொரியர் கொண்டுவந்து தர வாய்ப்பு குறைவு (அக்டோபர் 26-28 புத்தகங்கள் கிளம்பனும்)
      அக்டோபர் இறுதிக்குள் நம்கைக்கு கிடைக்காவிடில் பஞ்சாயத்தாகிடும் 🤷🏻‍♂️

      அட்டவணை அக்டோபர் மத்தியில் வந்து
      நவம்பர் இதழ்களுடன் அனுப்பபடலாம் 🙏🏼
      .

      Delete
    8. விஜயராகவன் @ நம்ப சின்னத்தம்பி பெரியதம்பிங்க ஆட்டம் புத்தகங்கள் வந்த 10 நாட்களிலேயே ஆரம்பித்து விட்டது :-) நடக்கட்டும் நடக்கட்டும் :-) அவங்க அவங்க கவலை அவங்களுக்கு :-)

      Delete
    9. வணக்கம் சின்ன அண்ணே...

      Delete
    10. // தீபாவளிமலருக்கு பேசி தீர்த்துகிடலாம் சாமிகளா!!! //
      வணக்கம் பெரிய அண்ணே...!!!

      Delete
    11. // அட்டவணை அக்டோபர் மத்தியில் வந்து
      நவம்பர் இதழ்களுடன் அனுப்பபடலாம் //
      செமையான விளக்கம் சிபிண்ணா...!!!

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
  3. // நூறே நாட்கள் !! Just 100 days to go !! //
    அதெல்லாம் சடக்குனு போயிடும் சார்...!!!

    ReplyDelete
  4. //வெளியாகி, வெளியான வேகத்துக்கே சில பல வளைகளுக்குள் பதுங்க நேரிட்டிருக்கும் 3 இதழ்களுமே அக்டொபரின் மத்தியில் நம்மிடம் ஸ்டாக்கில் இருக்கும் ! And அவை முகவர்களுக்கும் அனுப்பிடப்படும் என்பதால், கடைகளிலேயே கூட நீங்கள் வாங்கிட வசதிப்படும் ! So relax please !!//

    Super sir, good process 👍👏👏

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அருமையான முடிவு. புத்தகம் வாங்காத நண்பர்களுக்கு நல்ல வாய்ப்பு.

      Delete
    2. Good thoughts Best wishes to be successful. I am also the one who missed those Tex books

      Delete
  5. We r waiting for முத்து காமிக்ஸ் 50..

    ReplyDelete
  6. Vijayan sir,
    ஐம்பதாவது ஆண்டின் ஸ்பெஷல் லோகோ all are good.
    But I like the 3rd and 5th one, they are simple and best!

    ReplyDelete
    Replies
    1. இதில் சில லோகோக்கள் கழுத்தில் போடும் செயின் டாலர் போல் உள்ளது :-) எனக்கு அவை பிடிக்கவில்லை :-)

      Delete
    2. இந்த லோகோவை எல்லாம் பார்க்கும் போது நமது பழைய ஒரு ரூபாய் நாணயத்தை மாடலாக வைத்து உருவாக்கியது போல் தெரிகிறது! ஆனால் செமையாக உள்ளது!

      Delete
  7. //வெளியாகி, வெளியான வேகத்துக்கே சில பல வளைகளுக்குள் பதுங்க நேரிட்டிருக்கும் 3 இதழ்களுமே அக்டொபரின் மத்தியில் நம்மிடம் ஸ்டாக்கில் இருக்கும் ! And அவை முகவர்களுக்கும் அனுப்பிடப்படும் என்பதால், கடைகளிலேயே கூட நீங்கள் வாங்கிட வசதிப்படும் ! So relax please !!//

    Good move! super sir!

    ReplyDelete
  8. 100 நாள் பறந்து போய்விடும் சார்...
    ஆவலுடன் முத்து 50 க்கு...

    ReplyDelete
    Replies
    1. எக்ஸாக்ட்லி... சடுதியில் பறந்துடும்...!!!

      Delete
  9. சித்திரமும் கொலைப்பழக்கமும்... கருப்பு வெள்ளையில் விலையை குறைத்து சிற்சில எடிட்டிங் செய்து வெளியிட்டு இருக்கலாம்... குறைகள் உண்டு தான், மற்றப்படிக்கு அதுவும் நாம் படிக்கவேண்டிய ஒரு காமிக்ஸ் தான்...

    ReplyDelete
  10. நியாயமான விலைகளெனில் வாங்குங்கள் ; இல்லாத பட்சங்களில் சற்றே பொறுமை ப்ளீஸ் : இதெற்கென ஒரு ஏற்பாடு செய்து விடுவோம் ! //

    இதுதான் அருமையான அறிவிப்பு சார்...செம..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இரத்தப் படலம் வாங்காத நண்பர்கள் கொஞ்சம் பொறுமை காக்கவும்.

      Delete
  11. ஹா..!ஹா..!ஹா...!
    மீம்ஸ்கள் அனைத்தும் செம!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் செம்ம மீம்ஸ் தம்பி ராம்.

      Delete
    2. அதுவும் லாஸ்ட் ஒன்...செம ரகம்..

      Delete
  12. வணக்கம் சார்...🙏
    ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...💞💕

    ReplyDelete
  13. காத்திருக்கும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவோ ; நமது ஆன்லைன் புத்தக விழாவோ - ஏதோவொன்றின் பெயரைச் சொல்லி சமீப out of stock டெக்ஸ் இதழ்களை மறுக்கா ரெடி பண்ணிடவுள்ளோம் ! And அதன் முதல்கட்டமாய் நடப்பாண்டில் வெளியாகி, வெளியான வேகத்துக்கே சில பல வளைகளுக்குள் பதுங்க நேரிட்டிருக்கும் 3 இதழ்களுமே அக்டொபரின் மத்தியில் நம்மிடம் ஸ்டாக்கில் இருக்கும் ! And

    அவை முகவர்களுக்கும் அனுப்பிடப்படும்

    மிக்க மகிழ்ச்சி சார்...

    ReplyDelete
  14. அப்படியே லயன் 400 கொஞ்சம் ரெடி பண்ணுங்க சார் முகவர்களுக்கு...

    ReplyDelete
  15. smashing 70 முகவர்களுக்கு இல்லை என வதந்திகள் உலாவருகிறது சார்...உங்களது பதிலுக்காக காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. இதுவிஷயமா எதுவும் சொல்ல மாட்டேங்கறாரே.....? எடிட்டர்....

      Delete
  16. லோகோக்கள் 2, 7,கிரீடம் தவிர்த்து அழகாக உள்ளது சார்...

    ReplyDelete
  17. 7 வது லோகோ கொஞ்சம் ஸ்டைலா இருக்கு,8 வது லோகோ கொஞ்சம் சிம்பிளா டிசைன் பண்ணப்பட்டு உள்ளது...

    ReplyDelete
  18. // செப்டெம்பரின் அலசல்கள் தொடரட்டும் //
    அலசி துவைச்சி தொங்க போட்டாச்சி சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. இன்னும் கொஞ்சம் பேர் இப்பத்தான் ஊற வைத்து உள்ளார்களாம்.😉

      Delete
  19. // காத்திருக்கும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவோ ; நமது ஆன்லைன் புத்தக விழாவோ - ஏதோவொன்றின் பெயரைச் சொல்லி சமீப out of stock டெக்ஸ் இதழ்களை மறுக்கா ரெடி பண்ணிடவுள்ளோம் ! //
    அடடே சூப்பரு...

    ReplyDelete
  20. // நமது தினசரிப் பதிவுகளில் உங்களுக்குத் பிடித்தவற்றைத் தூக்கி உங்களது பக்கங்களிலும் போட்டுத் தாக்கலாம் //
    அப்பப்ப முத்து 50 பற்றிய சிறப்பு தகவல்களையும் ஆங்காங்கே தூவி விடவும் சார்...!!!

    ReplyDelete
    Replies
    1. // அப்பப்ப முத்து 50 பற்றிய சிறப்பு தகவல்களையும் ஆங்காங்கே தூவி விடவும் சார்...!!! // ஆமா ஆமா 25 நாட்களுக்கு ஒரு முறை 4 தடவை போட்டல் கூட போதுமே

      Delete
  21. சித்திரமும் கொலைப்பழக்கமும் - இந்த கதையை டெக்ஸ் மினி சாகசம் போல் ஒரு 36 பக்கத்திற்குள் கதாசிரியர் அமைத்து இருந்தால் ஸ்மாஷ் ஹிட் ஆகி இருக்கும்

    ReplyDelete
  22. // "இரத்தப் படலத்தை" - இல்லாத பட்சங்களில் சற்றே பொறுமை ப்ளீஸ் : இதெற்கென ஒரு ஏற்பாடு செய்து விடுவோம் ! So - hold on to your money !! //

    The news of the day! GOOOOOOOOOOOOOOOOOOOOD MOVE!! I LIKE THIS VERY QUICK MOVE!!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பரணி. It's a great move

      Delete
    2. Yes Kumar.
      Vijayan Sir @ கடந்த சில வருடங்களாக இது போன்ற உடனடி அக்ஷன்ஸ் உங்களிடம் எதிர்பார்த்தேன், லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ஆக வந்தது சிறப்பு! இது போன்று அதிரடிகளை தேவைப்படும் போது உடனே தொடருங்கள் சார்!

      Delete
    3. Sir .. Hee Hee .. dont forget that Black and White, Hardcover, Single Volume, Thick Paper :-) :-) :-)

      Delete
    4. ///Hee Hee .. dont forget that Black and White, Hardcover, Single Volume, Thick Paper ////

      3D அட்டைப்படம்?!!

      Delete
    5. ஆரம்ப காலங்களில் வந்தது போல டபுள் கலரில் ஒரு ஸ்பெஷல் எடிஷன் ' ரத்தப்படலம்' வருமா?

      "சாதா ஒண்ண்ணேய்ய்ய்..."

      Delete
  23. மிக மிக மிக மகிழ்ச்சியான பதிவு சார்....


    நன்றிகள்...வாழ்த்துக்கள்...:-)

    ReplyDelete
  24. விஜயன் சார், முத்து 50 லோகோ மூன்றாவது உள்ளதில் "M" மை சுற்றி இதுவரை வந்த முத்து நாயகர்கள் முகம் தெரிவது போல் அமைக்க முடியுமா? அந்த முகங்களை க்ரே கலரில் கொடுக்கலாமா.

    Just suggestion.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிடித்ததும் அந்த 3ஆவது லோகோ தான்.

      Delete
    2. நெல் மணிகளுக்கு பதில் நமது முத்து நாயகர்கள் முகம் அல்லது அந்த நெல் செடியை முழுவதும் எடுத்து விட்டு முத்து நாயகர்கள் முகம்.

      அதே போல் கருப்பு சிவப்பு வண்ணத்தை முடிந்தால் தவிர்க்கவும்.

      Delete
    3. அந்த கலர்கள் என்ன பாவம் பண்ணுச்சுங்க சார் ? Most vibrant of colors அவை தானே !

      Delete
    4. கருப்பு சிவப்பு இல்லேன்னா கூட பரவாயில்லை. காவி கலரில் எதுவும் வந்துடாம பார்த்துக்கங்க சார். ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கோம் ;)

      Delete
    5. யுவகிருஷ்ணா @
      // காவி கலரில் எதுவும் வந்துடாம பார்த்துக்கங்க சார். ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கோம் ;) //

      :-)

      // Most vibrant of colors அவை தானே ! //

      Agreed sir.

      Delete
    6. அடடே .. கருப்பு சிவப்பு .. காவி .. கமெண்டுகள் இந்தத் தளத்துக்கும் வந்தாச்சா ? :-) வேண்டாமே ப்ளீஸ் - இங்கே எல்லா வண்ணங்களுக்கும் ஆதரவாளர்கள் உண்டு. எல்லா வண்ணங்களினாலும் பாதிக்கப்பட்டவர்களும் உண்டே :-p ;-)

      Delete
    7. // அந்த கலர்கள் என்ன பாவம் பண்ணுச்சுங்க சார் ? Most vibrant of colors அவை தானே ! //
      எல்லா வண்ணங்களுக்கு மேலும் ஒரு முத்திரை குத்தப்பட்டு விட்டது சார்...
      இது பொது புத்தியில் உறைந்து விட்டது...

      Delete
    8. நான் கருப்பு (a negative colour) இது போன்ற சிறப்பு தருணங்களில் வேண்டாம் என்பதால் சொன்னேன். மற்றபடி வேறு காரணங்கள் இல்லை ராகவன்.

      Delete
  25. மூன்றாவது அழகாக இருக்கிறது. சார் சைத்தான் சாம்ராஜ்யம் கலர் reprint மறுபடியும் வருவதற்கு ஆவண செய்யுங்கள். 1000, 2000 என inbox dealing நடக்கிறது. ஒரே ஒருவர் 50 புத்தகங்களுக்கு மேல் வைத்து இருப்பதாக தகவல் :(

    ReplyDelete
  26. பாவை மிரண்டால் பார் கொள்ளாது

    இதுவன்றோ இந்த மாதத்தின் டாப் த்ரில்லர்.

    இந்த கதையை பொறுத்த வரையில், வில்லத்தனம் வீரியமாக உள்ளது. டான் அல் காபோனையே காலி பண்ணும் ட்விஸ்ட் இறுதி பக்கம் வரையில் உள்ளது!

    பாவைகள் மிரளவில்லை, மிரள வைத்தார்கள்! 😍😍

    ReplyDelete
    Replies
    1. // பாவைகள் மிரளவில்லை, மிரள வைத்தார்கள்! //

      +1

      Delete
    2. // பாவைகள் மிரளவில்லை, மிரள வைத்தார்கள்! //

      பாவை மிரட்டினால் பூபதியும் மிரளுவார்.

      Delete
  27. லோகோவின் சிகப்பு கட்சி கொடிகளை நினைவுபடுத்துவதாக எனக்கு ஒரு என்னம், தங்க கலர் சும்மா தக தகன்னு மின்னுது :)

    ReplyDelete
  28. தினமும் ஒரு அப்டேட் தினமும் ஒரு கேள்வி கலக்கும் ஐடியா. கோபால் back to 100% action. Super idea sir. 50000 சரவெடியை பற்ற வைத்து விட்டீர்கள் சார். சூப்பர் சூப்பர்.

    ReplyDelete
  29. அதே m மாறாது வரட்டும்.... முதலும் இரண்டாவதும் அருமை.....கிரீடத்தை கூட m லவ் போடலாம்

    ReplyDelete
  30. Replies
    1. தூத்துக்குடி லோகோவை சொல்லுறலே மக்கா:-) அடிக்கப்போறாங்க காப்பிரைட் காரணமாக:-)

      Delete
    2. எல தம்பி முத்துக்கு பதிலாக m நம்ம லோகோல....தங்கக் கலர்ல சிப்பி மின்ன...பால் கலர் சதைல நம்ம கருப்பு m

      Delete
  31. வணக்கம் நண்பர்களே...

    ReplyDelete
  32. 2 👍இதோ - கண் முன்னேயே அதற்கான உதாரணத்தைப் பார்க்கிறோமே ?! ஒண்ணேகால் ஆண்டுகளாய் நாம் கூவிக் கூவி "இரத்தப் படலத்தை" விற்க தம் கட்டிக் கொண்டிருந்த போதெல்லாம் பிசியாக இருந்து விட்டு, இன்றைக்கு புக் வெளியான ஒண்ணேகால் மாதத்திலேயே கூசாது ரூ.10,000 கோரும் "ஆர்வலர்கள்" போடும் லிஸ்டிங்குகளை கண்கள் வியர்க்கப் பார்த்து வரும் நண்பர்களுக்கா பஞ்சம் ?? A piece of advice guys : இந்த "6000 ; 10000 ; multiple copies available" கூத்துக்களைப் பார்த்து பணங்களை விரயம் செய்யாதீர்கள் ! நியாயமான விலைகளெனில் வாங்குங்கள் ; இல்லாத பட்சங்களில் சற்றே பொறுமை ப்ளீஸ் : இதெற்கென ஒரு ஏற்பாடு செய்து விடுவோம்👍👍💐💐

    ReplyDelete
  33. /////ஆங்காங்கே கையில் உள்ள பழைய இதழ்களை premium விலைகளுக்கு விற்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணைகளும் லேது ; உலகெங்கும் காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு அங்கமது என்பது தெரிந்தது தானே ?! ஆனால் புக் வெளியான மறு மாதங்களிலேயே அபத்த விலைகளில் விற்பதற்கென்றே வாங்கிப் பதுக்கும் :தொழில்களை" செழித்திட அனுமதிப்பதென்பது - long term-ல் ஒட்டு மொத்தமாய் காமிக்ஸ் மீதே வெறுப்பினை உருவாக்கக் கூடிய விஷப் பழக்கமாய்த் தோன்றுகிறது ! So this will not find favor with us/////


    மிக மிக நன்றி சார்...

    சில வாரங்களாகவே இந்த விஷயம் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது... தமிழ் காமிக்ஸ் என்ற வார்த்தை... மகிழ்ச்சி, குதூகலம் போன்ற புரிதல்களிலிருந்து.. பதுக்கல், குதர்க்க வியாபாரம், துஷ்பிரயோகம்... போன்ற அர்த்தங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக் கொண்டிருப்பதான ஒரு வருத்தமிருந்தது... இதை நம்மால் முடிந்தளவு சரி செய்வதே இந்த 50வது ஆண்டை சிறப்பிக்கும் செயலாக அமையும் என்பதே என் எண்ணம்...

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சரி செய்து விடுவோம் சார் !

      நண்பர்கள் தம் பங்குக்கு இது போன்ற அபத்த விலை அறிவிப்புகளை மௌனமாய்த் தாண்டிச் சென்றாலே சிக்கலில் பெரும்பங்கு குறைந்து விடும் ! அவர்களது சபலங்களே, இந்த வியாபாரங்களை வேரூன்றச் செய்யும் விதை நெற்கள் !

      Delete
    2. சூப்பர் சார்.

      உங்களுடைய இந்த மறுபதிப்பு அறிவுப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது.

      நான் சில நல்ல டெக்ஸ் வில்லர் புத்தகங்களை சில நண்பர்களுக்கு கொடுத்து விட்டேன். மறுபடியும் தேடும்போது கிடைக்கவில்லை.
      ட்ராகன் நகரம், வைகிங் தீவு மர்மம் போன்ற வண்ண புத்தகங்கள் திரும்ப வாங்க வேண்டும்.
      ஆனால் 1000, 2000, பிம்பிளிக்கா பிலிப்பி என்று விலைக்கு வாங்க மனம் வரவில்லை.

      எனக்கும் மட்டும் அல்லாமல் வாசிப்பு ஆர்வம் கொண்ட சக அலுவலர்களுக்கும் இந்த புத்தகங்களை பற்றி எடுத்து கூறி சில புத்தகங்களை கொடுத்து உள்ளேன். அவர்களும் சரியான விலையில் கிடைத்தால் வண்ண புத்தகங்களை வாங்குவார்கள்.

      ஒரு சிறு வேண்டுகோள் சார்.உங்களுக்கு சரி என்று பட்டால் மட்டும் செய்யுங்கள்.

      ஒரு சில மாதங்களுக்கு முன்பே இந்த இந்த மறுபதிப்பு புத்தகங்கள் இந்த கால கட்டத்தில் தோராயமாக "வருகிறது" என்ற லிஸ்ட் கொடுத்தால் மார்க்கெட்டில் டிமாண்ட் குறையும். விருப்பம் உள்ள நண்பர்களும் தேவை இல்லாமல் அதிக விலை கொடுத்து வாங்காமல் காத்திருந்து வாங்குவார்கள்.

      Delete
  34. மீம்ஸ் எல்லாமே கெக்கபிக்கே ரகம் Sriram! ரொம்பப் பொருத்தமாய் அமைந்து ரசிக்க வைக்கிறது!

    ReplyDelete
  35. //ஆங்காங்கே கையில் உள்ள பழைய இதழ்களை premium விலைகளுக்கு விற்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணைகளும் லேது ; உலகெங்கும் காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு அங்கமது என்பது தெரிந்தது தானே ?! ஆனால் புக் வெளியான மறு மாதங்களிலேயே அபத்த விலைகளில் விற்பதற்கென்றே வாங்கிப் பதுக்கும் :தொழில்களை" செழித்திட அனுமதிப்பதென்பது - long term-ல் ஒட்டு மொத்தமாய் காமிக்ஸ் மீதே வெறுப்பினை உருவாக்கக் கூடிய விஷப் பழக்கமாய்த் தோன்றுகிறது ! So this will not find favor with us ! //


    நியாயமான கவலை.





    ReplyDelete
  36. சார்.. பொன்விழா லோகோக்கள் எல்லாமே அருமை! பார்க்கும்போதே ஒரு பிரம்மிப்பும், பரவசமும் ஏற்படுகிறது!

    என்னுடைய தேர்வு - மேலிருந்து 3வது!

    ReplyDelete
    Replies
    1. இது வரைக்கும் நிறைய டிக் வாங்கியுள்ளதும் அந்த # 3 தான் !

      Delete
  37. //காத்திருக்கும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவோ ; நமது ஆன்லைன் புத்தக விழாவோ - ஏதோவொன்றின் பெயரைச் சொல்லி சமீப out of stock டெக்ஸ் இதழ்களை மறுக்கா ரெடி பண்ணிடவுள்ளோம் ! //


    அற்புதமான விடயம்.
    கண் மூடி முழித்து பார்க்கும் முன் புத்தகங்கள் தீர்ந்து விட்டன என்ற தெரிந்த பொழுது சங்கடமாக இருந்தது.

    Thanks a lot for bringing back those books again in October.


    மின்னும் மரணம்
    டிராகன் நகரம்
    வைகிங் தீவு மர்மம்
    டுராங்கோ முதல் இரு பாகங்கள்
    இந்த புத்தகங்களை தேடுவோரும் உள்ளனர்.

    தீபாவளிக்கு முன்பும் ஒரு ஆன்லைன் திருவிழா, அது முடியாது என்றால் ஒரு offline திருவிழாபோட்டு தாக்குங்கள் சார்.

    Offline திருவிழா:
    1. ஸ்டாக்கில் உள்ள புத்தகங்களை shelf - ல் உள்ளபடியே ஒரு வீடியோ எடுத்து தங்கள் facebook page மற்றும் youtube - ல் வெளியிடவும்
    2. புத்தகங்கள் வேண்டுவோர் whatzapp -ல் லிஸ்ட் அனுப்பினால் எவ்வளவு தொகை ஆகும் என்று உங்கள் team கணக்கிட்டு அனுப்பினால் பணம் செலுத்தி வாங்கி கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. Nopes ; Online or Offline - நிச்சயமாய் கொஞ்சம் பிரேக் தேவை சார் !

      தவிர ஏதேனும் புது இதழ்களையோ ; மறுபதிப்புகளையோ திட்டமிட்டுத் தயாரிக்கவும் அவகாசம் வேண்டி வரும் - அந்த முயற்சியினை எல்லோருக்கும் சுவாரஸ்யமாக்கிட ! இப்போதைக்கு முழி பிதுங்கும் அளவுக்குப் பணிகள் குவிந்து கிடக்க, அவற்றைக் கரை சேர்த்துக் கொள்கிறேன் சார் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Thanks for your reply sir!
      Now I understand the magnitude of the energy and man power needed for this.
      We will wait sir.
      Good things will take time to reach us and when it happens we will understand the worth of it.

      Delete
  38. லோகோக்கள் 1,2,4&5 டாப்ஸ்🤩🤩🤩🤩

    ReplyDelete
  39. மீம்ஸ்கள் எல்லாம் வேற லெவல்... அற்புதம் ராம்....👌

    ReplyDelete
    Replies
    1. அதிலேயும் அந்த விருமாண்டி மீம்ஸ் - ஷப்பா !!

      Delete
  40. டெக்ஸ் வில்லர் இதழ்களையுமே அர்த்தம் கெட்ட விலைகளில் வாங்கிடவும் வேகம் காட்டாதீர்கள் நண்பர்களே ! காத்திருக்கும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவோ ; நமது ஆன்லைன் புத்தக விழாவோ - ஏதோவொன்றின் பெயரைச் சொல்லி சமீப out of stock டெக்ஸ் இதழ்களை மறுக்கா ரெடி பண்ணிடவுள்ளோம் ! And அதன் முதல்கட்டமாய் நடப்பாண்டில் வெளியாகி, வெளியான வேகத்துக்கே சில பல வளைகளுக்குள் பதுங்க நேரிட்டிருக்கும் 3 இதழ்களுமே அக்டொபரின் மத்தியில் நம்மிடம் ஸ்டாக்கில் இருக்கும் ! And அவை முகவர்களுக்கும் அனுப்பிடப்படும் என்பதால், கடைகளிலேயே கூட நீங்கள் வாங்கிட வசதிப்படும் ! So relax please !! ////.


    மகிழ்ச்சியான செய்தி.


    ReplyDelete
  41. // நியாயமான விலைகளெனில் வாங்குங்கள் ; இல்லாத பட்சங்களில் சற்றே பொறுமை ப்ளீஸ் : இதெற்கென ஒரு ஏற்பாடு செய்து விடுவோம் ! So - hold on to your money !! //

    சிறப்பான முடிவு சார் 👌🏼👍🏼🙏🏼
    .

    ReplyDelete
  42. மீம்ஸ்கள் கலக்கல் ராம்ஜி 👌🏼👍🏼💐💐💐
    .

    ReplyDelete
  43. அக்டோபர் முதல் வாரத்திலேயே அக்டோபர் இதழ்கள்
    கைக்கு வந்திடும் 🙏🏼

    நவம்பர் இதழ்கள் வழக்கம் போல அக்டோபர் இறுதியில் நம் கிடைக்கும்படி செய்திடுவார் 🙏🏼🙏🏼🙏🏼

    தீபாவளி நவம்பர் 4
    2ம் தேதிக்கு பின்னர் கொரியர் கொண்டுவந்து தர வாய்ப்பு குறைவு (அக்டோபர் 26-28 புத்தகங்கள் கிளம்பனும்)
    அக்டோபர் இறுதிக்குள் நம்கைக்கு கிடைக்காவிடில் பஞ்சாயத்தாகிடும் 🤷🏻‍♂️

    அட்டவணை அக்டோபர் மத்தியில் வந்து
    நவம்பர் இதழ்களுடன் அனுப்பபடலாம் 🙏🏼
    .

    ReplyDelete
  44. 4th and 5th from TOP DOWN are excellent sir !

    ReplyDelete
  45. /* கூசாது ரூ.10,000 */

    Ennadhu - 10,000-aa? I have one extra copy - let me know after bid reaches 25,000 :-)

    ReplyDelete
    Replies
    1. :-) :-)

      அங்கே இல்லைன்னா எங்கிட்டே வாங்க பழசு ஒன்னு புதுசு ஒன்னு இருக்கு :-) (சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையா மாடுலேசனில் படிங்க)

      Delete
  46. /* கூசாது ரூ.10,000 *//

    அடேங்கப்பா!!! போகிற போக்கைப் பார்த்தால்

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், சௌராஷ்ட்ர தெருக்களின் மார்வாடி கடைகளிலும் ரத்தப்படல பிரதிகள் அடமானப் பொருட்கள் என அங்கீகாரம் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை போலும்!!!

    ReplyDelete
    Replies
    1. செல்வம் அபிராமி @ செம டைமிங். :-)

      Delete
    2. செனா அனா :))))))))

      பத்து இ.ப'க்களை அடமானம் வச்சா என்னோட அறுபதாங்கல்யாணத்தை சிறப்பா நடத்திடலாம் போலிருக்கே?!!
      நியூஸ் பேப்பர்ல விளம்பரம் கொடுத்து ருக்குவைத் தேடிப்பிடிக்கணும்!

      எடிட்டர் சார் அடுத்த இ.ப மறுமறுக்கா மறுமறுக்கா பதிப்புல எனக்கு ஒரு பத்து காப்பீஸ் பார்சேல்!!!

      Delete
    3. விரைவில்..அறுபதாம் கல்யாணம்...


      ஓகே செயலரே...:-)

      Delete
    4. பத்து இ.ப'க்களை அடமானம் வச்சா என்னோட அறுபதாங்கல்யாணத்தை சிறப்பா நடத்திடலாம் போலிருக்கே?!!//
      15 வருசத்துக்கு முன்னாடி தானே நடந்துச்சு. எத்தினி தபா அறுபதாங்கல்யாணம் பண்ணவீங்க?

      Delete
    5. ///15 வருசத்துக்கு முன்னாடி தானே நடந்துச்சு. எத்தினி தபா அறுபதாங்கல்யாணம் பண்ணவீங்க?///

      அது ச்சும்மா ஒரு ட்ரையல்ங்க! வீட்டுக்காரம்மாவோட பார்த்தேன்! உண்மையான அறுபதாங்கல்யாணம் கண்டிப்பா ருக்குவோட தான்!

      Delete
    6. அப்ப ருக்கு வேற வீட்டுக்காரம்மா வேறயா விஜய் 🤔 :-)

      Delete
  47. The M in the logo should be completely visible sir - it should not get overwritten by the ribbon !

    Also color should depend on the cover color sir - it should be complementary to the cover(s) of January Sir.

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு பேசுறீங்களே.. நீங்களே அந்த லோகோவை டிசைன் பண்ணித் தரக்கூடாதா? 2000ரூபாய் பரிசுவேற இருக்கே? இ.ப க&வெ சிங்கிள் வால்யூம் முன்பதிவுக்கு அதை அப்படியே யூஸ் பண்ணிக்கிடலாமே? ;)

      Delete
    2. இ.ப க&வெ சிங்கிள் வால்யூம் முன்பதிவு - is Lion Comics ;-) This is Muthu logo :-p

      Delete
  48. லோகோ இல் இரண்டாவதும், நான்காவதும் எனக்கு பிடித்துள்ளன. இன்றுதான் டெட்வுட் டிக் , சித்திரமும் கொலை பழக்கம் புத்தகங்கங்களை கைப்பற்றினேன். மீம்ஸ்கள் அருமை.

    ReplyDelete
  49. சித்திரமும் கொலைப்பழக்கம், மிக மிக மிக நன்கு. தரம், உலகத்தரம். விரைவில் விரிவான விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. உங்க விமர்சனத்துக்காக ஆவலாய் வெயிட்டிங் நண்பரே!

      Delete
    2. காத்திருக்கிறேன் நண்பரே...

      :-)

      Delete
  50. எனக்கு நான்காவது லோகோ பிடிச்சிருக்கு. M பாக்க கிராண்டா இருக்கு. மூன்றாவதில் M இருப்பதே தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. ///மூன்றாவதில் M இருப்பதே தெரியவில்லை///

      வயசானாலே இதெல்லாம் ஜகஜம் ஷெரீப்! படிச்சுக்கிட்டே இருப்போம்.. திடீர் திடீர்னு எழுத்துக்கள் காணாமப் போய்டும்! அதானே?
      எதுக்கும் நம்ம பல் டாக்டரை ஒருமுறை பாருங்க! அவராவது கண்ணுக்குத் தெரியறாரான்னு பார்ப்போம்!

      Delete
  51. லோகா க்கள் அனைத்தும் தங்கத்தில் தக தக வென மின்னுகிறது ...அருமையாக உள்ளது சார் அனைத்துமே...இதில் எனக்கு சிம்பிள் ஆகவும் , அதே சமயம் கண்ணை கவரும் விதத்தில் இருப்பதும் ஏழாவது லோகா...

    ReplyDelete
  52. மீம்ஸ் அனைத்தும் அட்டகாசம் வாழ்த்துக்கள் நண்பரே....

    ஆனாலும் பொறுமையை சோதிக்காத அந்த ட்விஸ்ட் சித்திர கதைக்கு ஏன் இந்த தம்ஸ் டவுன் என்று தான் எனக்கு புரியவில்லை...:-)

    ReplyDelete
    Replies
    1. ஆமா தலீவரே! இவிங்க எப்பவுமே இப்படித்தான் நல்லாயிருப்பதை நல்லாயில்லைம்பாங்க...
      நீங்க வாங்க தலீவரே நான் வர்றேன் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணுவோம்....!!!

      சும்மா என்னா சீனு.... ரயில்வே டேசன்ல அவ தலையை ஒரே சீவா சீவியவுடன் ரத்தம் பார்த்தீங்களா சும்மா நீரூற்று மாதிரி மேல் நோக்கி பீச்சியடிக்கிறது....

      புவீஈர்ப்பு திசையை எதிர்த்து மனித இரத்தம் பாயும்னு ஃப்ரூப் ஆகுதுள்ள.....!!!

      இப்படி அறிவியல் உண்மைகளை எடுத்து சொல்வதால் அதும்மேல ஒரு பொறாமை....அக்காங்!

      Delete
  53. கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பு செய்வீர்களா எடிட்டர்ஜி

    ReplyDelete
  54. சொக்கா 2000 பரிசு ....



    நமக்கு இல்லை...நமக்கு இல்லை...நமக்கு இல்லை....

    ReplyDelete
    Replies
    1. ஆமா தலீவரே எனக்கும் இல்லை.

      Delete
  55. ஆங்காங்கே கையில் உள்ள பழைய இதழ்களை premium விலைகளுக்கு விற்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபணைகளும் லேது ; உலகெங்கும் காமிக்ஸ் சேகரிப்பின் ஒரு அங்கமது என்பது தெரிந்தது தானே ?! ஆனால் புக் வெளியான மறு மாதங்களிலேயே அபத்த விலைகளில் விற்பதற்கென்றே வாங்கிப் பதுக்கும் :தொழில்களை" செழித்திட அனுமதிப்பதென்பது - long term-ல் ஒட்டு மொத்தமாய் காமிக்ஸ் மீதே வெறுப்பினை உருவாக்கக் கூடிய விஷப் பழக்கமாய்த் தோன்றுகிறது..


    ########


    உண்மை....

    ReplyDelete
  56. இன்றைக்கு முதலாய் நமது Facebook பக்கத்தினிலும் ; Insta பக்கத்தினிலும் - அடுத்த 100 நாட்களுக்கு தினசரி, சின்னச் சின்னதாய், ஏதேனுமொரு முத்து காமிக்ஸ் இதழ் பற்றிய பதிவிருந்திடும் !


    #####


    நூறாவது நாளுக்காக இன்று முதலே வெயிட்டிங்...

    ReplyDelete
  57. M சுற்றிலும் ஹீரோக்கள் முகம் செம . கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  58. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  59. 2 வது லோகோ க்ரீடம் இல்லாமல் நல்லா இருக்கும். 8வது லோகோ M மற்ற லோகோவை போல் வளைந்து இருந்தால் நல்லா இருக்கும்

    ReplyDelete
  60. /காத்திருக்கும் ஜனவரியில், சென்னைப் புத்தக விழாவோ ; நமது ஆன்லைன் புத்தக விழாவோ - ஏதோவொன்றின் பெயரைச் சொல்லி சமீப out of stock டெக்ஸ் இதழ்களை மறுக்கா ரெடி பண்ணிடவுள்ளோம்/

    Best decision. எந்த புக் எல்லாம் சீக்கிரமாக விற்று விடுதோ, அதை ரெப்ரிண்ட் பண்ணுங்க.

    ReplyDelete
  61. முத்து காமிக்ஸின் மோதோ நாலு இதழ்களின் அட்டைப்படத்தைப் போட்டு 'யாரார்லாம் இந்த புக்கு வச்சிருக்கீங்க.. போட்டோ எடுத்துப் போடுங்க'ன்னு நேத்திக்கு முகநூல்ல கேட்ருக்காரு நம்ப எடிட்டர்! ஒரு லைக் மட்டும் போட்டுட்டு அப்படியே நழுவிட்டேன்!
    நான்லாம் பிறக்கறதுக்கு பலப்பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த சமாச்சாரம் அதெல்லாம்!

    யாராவது வச்சிருந்தீங்கன்னா போட்டா எடுத்துப் போடுங்க - புக்குல வருமாம்!

    ReplyDelete
    Replies
    1. சார்...இதை நல்ல கன்டிசனில் வைத்திருப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். நமக்கு தெரியாத, பலரிடம் இது இருக்கும்.

      Delete
  62. ராம் @ மீம்ஸ் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  63. Dear Vijayan,
    I like the second logo sir!
    It's not looking old, not looking simple and not looking too flashy, it looks pretty impressive in a laptop screen.
    Regards,
    Mahesh
    Beauty lies on eyes of beholders.

    ReplyDelete
  64. காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...
    அன்பு ஆசிரியருக்கு...🙏.
    50 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முத்துவுக்கு நல் வாழ்த்துக்கள்.

    நான் பிறப்பதற்கு 6 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த இந்த முத்து, பின்னாளில் இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ் &டேவிட், இவர்களை எனக்கு அறிமுகப்படுத்தியதில், பெரும்பங்கு இந்த நிறுவனத்திற்கு உண்டு.
    இந்த 50 வந்து ஆண்டு மீண்டும் மலரும் நினைவுகளை ஞாபகப்படுத்துவதில் மகிழ்ச்சி.

    இரண்டாவது லோகோ மிகப் பொருத்தமாக இருக்கும். முத்துவின் புத்தக லோகோவோடு, கிரீடம் வைத்த நல்ல டிசைனிங்.

    இரத்தப் படலம்:-
    இதில் உங்களிடம் சற்று குறையுள்ளது என்பது கோபமே.
    பல காரணங்களால் பலர் வாங்காமல் இருந்திருக்கலாம்,ஆனால் வெளி வந்த பின் படிக்க வேண்டும் என்று ஆவல் எழுவது சகஜமே.
    ஒரு 100 இதழாவது அதிகம் ஸ்டாக் வைத்திருந்தால், இப்பொழுது குழுக்களில் வந்துள்ள விலைகளை குறைசொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனா கேட்பவர்களுக்கு நீங்க ஒரு ஆறுதலாகவாவது, மறுபடியும் கிடைக்க ஏற்பாடு செய்வது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்த காத்திருப்பு சமயத்தில், குழுக்களில் விலை கூடுமே தவிர விலை குறையாது.
    இதை பயன்படுத்தி வியாபாரிகள் தங்களது விற்பனையை போட்டுள்ளனர்.
    உங்களிடம் ஸ்டாக் இருந்திருந்தால் இந்த விற்பனை வந்திருக்காது.
    ஆனால் அவர்கள் மேலுமே தவறுள்ளது,
    "எங்கே மறுபடியும் பதிப்பாகும் பட்சத்தில் தங்களிடம் உள்ள புக் விற்பனையாகாமல் போய்விடும்" என்று, உடனே மார்க்கெட்டில் தள்ளி விட்டார்கள். 3 மாதமாவது கழித்து போட்டிருக்கலாம்.
    ஆகவே ஆசிரியர் ஐயா,
    எதிர்பார்க்கும் புக்கிங்கை விட ஒரு 100 காப்பியாவது தங்களிடம் ஸ்டாக் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
    பல தர்மசங்கடமான விசியங்களை தவிர்க்க முடியும். நன்றி.

    படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு வரும் என் போன்ற வாசகர்களுக்கு,
    டெக்ஸ் கதைகளுக்கு அதிக விலை என்பது
    சற்று கவலைக்குரிய விஷயம்.
    இதனால் பல வாசகர்கள்,"காமிக்ஸே வேண்டாம்" என்று உள்ளதை முகநூல் பதிவுகளில் காண முடிகிறது.
    புத்தக விலையுடன் 3 மடங்கு விலை கொடுத்தே வாங்கி படிக்க முடிகிறது.
    படிக்க வேண்டும் என்ற ஆர்வம்,
    மீண்டும் கிடைக்காது என்ற நிலை,
    இந்த விலைக்கு வாங்க தூண்டுகிறது.
    பொருளுதாரம் உள்ள வாசகர்கள் வாங்கி படித்து சேமிக்கலாம், இல்லாதவர்கள் வாங்கி படித்து விட்டு ஏதோ ஒரு விலைக்கு விற்றுவிட்டு தங்கள் காசை சேமிக்கலாம்.
    இது தான் தொடர்ந்து வாங்காமல் விட்டு, திரும்ப வந்த இன்றைய வாசகர்கள் நிலை.

    நீங்கள் ஸ்டாக் வைக்க வேண்டும் என்றால்,
    எனக்கு தெரிந்து கீழ்க்கண்ட இதழ்கள் தான் நல்ல டிமான்ட்...
    1) மில்லெனியம் ஸ்பெஷல்,
    2)லயன் செஞ்சுரி ஸ்பெஷல்,
    3) டிராகன் நகரம்,
    4) லயன் ஜாலி ஸ்பெஷல்,
    5) லயன் மெகாட்ரீம் ஸ்பெஷல்,
    6) டாப் 10 ஸ்பெஷல்,
    7) வைக்கிங் தீவு மர்மம்,
    8) மின்னும் மரணம்,
    9)லயன் 300,
    10)டைனமட் ஸ்பெஷல்,
    11)கெளபாய் ஸ்பெஷல்.

    மற்ற சின்ன சின்ன இதழ்கள் விலை கூடவோ, குறையவோ, கொடுத்து வாங்கினாலும் மேற்கண்ட இதழ்கள் விலை கூடுதலே.
    இதை தாங்கள் கவனத்தில் கொண்டால் நலம்.

    மற்றபடி அடுத்த மாத இதழை வாங்கிட ஆவலோடு காத்திருக்கும் வாசகர்களில் ஒருவன்...நன்றி 🙏

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹...

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் உண்மை சார்
      எடி சார் இந்த பதிவை
      கவனித்தில் எடுத்து
      கொள்ள வேண்டுகிறேன் 🙏🙏🙏

      Delete
    2. //இரத்தப் படலம்:-
      இதில் உங்களிடம் சற்று குறையுள்ளது என்பது கோபமே.
      பல காரணங்களால் பலர் வாங்காமல் இருந்திருக்கலாம்,ஆனால் வெளி வந்த பின் படிக்க வேண்டும் என்று ஆவல் எழுவது சகஜமே.
      ஒரு 100 இதழாவது அதிகம் ஸ்டாக் வைத்திருந்தால், இப்பொழுது குழுக்களில் வந்துள்ள விலைகளை குறைசொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனா கேட்பவர்களுக்கு நீங்க ஒரு ஆறுதலாகவாவது, மறுபடியும் கிடைக்க ஏற்பாடு செய்வது பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்த காத்திருப்பு சமயத்தில், குழுக்களில் விலை கூடுமே தவிர விலை குறையாது.
      இதை பயன்படுத்தி வியாபாரிகள் தங்களது விற்பனையை போட்டுள்ளனர்.
      உங்களிடம் ஸ்டாக் இருந்திருந்தால் இந்த விற்பனை வந்திருக்காது.//
      Same here, Vijayan Sir...
      We cannot change the business people who wants to make money through comics. But atleast

      2 பிரதிகள் நான் வாக்களித்த நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க கடமை பட்டேன்... என்னிடம் அதற்கு அப்போது பட்ஜெட் இல்லை. ஆனால் புத்தகம் வெளிவரும் மாதம் நிச்சயம் வாங்கி கொள்ள பணம் கிடைக்குமாறு திட்டமிட்டு இருந்தேன்... ஆனால் புத்தகம் ரிலீஸ்க்கு முன்பே பதிவுகளை நிறுத்தி விட்டு ஏஜெண்ட்களிடம் புத்தகம் வாங்கி கொள்ள சொல்லி விட்டீர்கள் சார். நீங்கள் நினைத்து இருந்தால் என் போன்ற வாசகர் பொருட்டும் கொரோனா லாக் டவுன் சூழ்நிலை கருதியும் கொஞ்சம் deadline போடாமல் தளர்வு செய்து இருக்கலாம்... அல்லது ஓர் 100 பிரதிகளாவது (ஏன் 50 பிரதிகளாவது) ஸ்டாக்கில் உள்ளவாறு பார்த்து கொண்டிருக்கலாம்.

      இதில் எனக்கு வேண்டிய ஒரு பிரதி எனக்கு கிடைக்காததால் நான் பட்ட அவஸ்தைகள் சொல்லி மாளாதவை. சமீபத்தில் இத்தனை கஷ்டம் எனக்கு எங்குமே அவசியமே படவேயில்லை... வாக்களித்த நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க நினைத்த லயன் காமிக்ஸ் XIII வெளியீடு அத்தகைய சூழல் உண்டு செய்து விட்டது.

      Delete
    3. நண்பர்களே, ஒரு கதையை அலசுகிறீர்களா - சூப்பர் ! ஒரு மொழிபெயர்ப்பை விமர்சிக்கிறீர்களா - சூப்பர் again ! இதை எடிட் செய்திருக்கலாம் ; அதனை எடிட் செய்யாதிருந்திருக்கலாம் என்கிறீர்களா - பின்புலங்களில் உள்ள அவசியங்களோ, கட்டாயங்களோ உங்களுக்குத் தெரியாது போனாலுமே ஓ.கே. தான் !

      ஆனால் -

      ஒரு பப்ளீஷராய் அவ்வப்போது அவதாரெடுக்க முனைகிறீர்களா - nopes not that isnt ஓ.கே . !!

      எனது சிரமங்கள் என்ன ?
      எனது நிதி நிலைமைகள் என்ன ?
      படைப்பாளிகளுடனான ஏற்பாடுகள் என்ன ?
      நான் இங்கு புகுத்திட வேண்டிய முதலீடு என்ன ?
      ஒவ்வொரு மாதத்தின் நிர்வாகச் செலவினங்கள் என்ன ?
      வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி என்ன ?
      எனது கையிருப்பின் அளவீடுகள் என்ன ?
      அவற்றின் மீது நாம் இழக்கும் தொகைகள் என்ன ?
      கிட்டங்கிகளின் விஸ்தீரணங்கள் என்ன ?
      ஒரு மாதம் அசல் தேறிட எத்தனை விற்க வேண்டும் ?
      ஒவ்வொரு இதழின் காஸ்டிங் என்ன ?
      விற்றாலும், விற்காவிடினும் நமது நிரந்தரச் செலவுகள் என்ன ?

      என்பது என் ஒருத்தனைத் தாண்டி, இங்கே ஐம்பதடி தொலைவில் உள்ள சீனியருக்கும் தெரியாது ; ஜூனியருக்கும் தெரியாதெனும் போது - ஐநூறு, அறுநூறு மைல் தொலைவுகளில் உள்ள உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் மெய்யாகவே இருப்பதாய் நீங்கள் நினைக்கிறீர்களா ? And அவ்வித உங்களின் யூகங்கள் சரியானவைகளாக இருக்குமென்றும் நம்புகிறீர்களா ? And உங்களுக்குத் தோன்றிடக் கூடிய தொழில்சார் சிந்தனைகள் இதனுள்ளேயே கடந்த 37 ஆண்டுகளாய் சுற்றி வருபவனுக்குத் தோன்றியிராதென்று தோன்றுகிறதா ?

      எந்த குல்லாயையும் இரவல் வாங்கிப் போட்டுக் கொள்ளுங்கள் guys ; ஆனால் பப்ளீஷர் குல்லாக்குள் மண்டையை நுழைக்க மட்டும் முயற்சிகள் வேணாமே - ப்ளீஸ் ? சத்தியமாய் ஊடகத் துறைகளின் ஒவ்வொரு பப்ளீஷருக்கும் மட்டுமே தெரியும் அதனுள் தலை நுழைப்பதில் உள்ள இன்னல்கள் என்னவென்று !

      Armchair எடிட்டிங் சாத்தியமே ; armchair translation சாத்தியமோ சாத்தியமே ; ஆனால் armchair publishing - ஊஹூம் !!

      Thanks for your understanding !!

      Delete
    4. Well said Sir !We should know the limits not to interfere in other's professional boundaries.

      The criticisms can be for ths story - sometimes as you said translations as well. May be not for editing but you have allowed that as well. Anything other than these boundaries is just freeloading !!

      Delete
    5. விஜயன் சார்...
      உங்கள் பதிவுக்கு நான் கருத்து கூறியுள்ளேன்.அவ்வளவே.இதை செய்யுங்கள்,அதை செய்யுங்கள் என நான் என்றுமே கூறியதில்லை. நீங்கள் சொன்ன முதலிவரிகளுக்குள் இருப்பதே எனக்கு போதும் சார்.அப்படித்தான் நான் என்றும் இருக்க விருப்பமேயன்றி, உங்கள் பப்ளிஷ் விசியத்தில் மூக்கை நுழைப்பது அநாகரீகம்.இது நீங்கள் பதிவிட்டதிலுள்ளவைகளுக்கு பதிலே அன்றி வேறெதும் இல்லை. உங்கள் சிரமம் புரியாமல் இல்லை. எனது எல்லை காமிக்ஸ் படித்து, பகிர்ந்து,மகிழ்வது மட்டுமேயன்றி உங்கள் அலுவல் விசியத்தில் மூக்கை நுழைப்பது அல்ல.நன்றி சார்🙏

      Delete
    6. ///என் ஒருத்தனைத் தாண்டி, இங்கே ஐம்பதடி தொலைவில் உள்ள சீனியருக்கும் தெரியாது ; ஜூனியருக்கும் தெரியாதெனும் போது - ஐநூறு, அறுநூறு மைல் தொலைவுகளில் உள்ள உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் மெய்யாகவே இருப்பதாய் நீங்கள் நினைக்கிறீர்களா ? And அவ்வித உங்களின் யூகங்கள் சரியானவைகளாக இருக்குமென்றும் நம்புகிறீர்களா ? And உங்களுக்குத் தோன்றிடக் கூடிய தொழில்சார் சிந்தனைகள் இதனுள்ளேயே கடந்த 37 ஆண்டுகளாய் சுற்றி வருபவனுக்குத் தோன்றியிராதென்று தோன்றுகிறதா ?//////

      நிச்சயமாக இல்லை சார்! உங்களுடைய சிரமங்களில் தக்கணூன்டாவது நாங்கள் அறிந்தே இருக்கிறோம்!

      புரிந்துகொள்ள முயற்சிப்பவர்கள் நாளடைவில் புரிந்துகொள்வர் ( எங்களைப் போலவே). புரிந்தும் புரியாத மாதிரி நடிப்பவர்களும், உங்களுடைய நடவடிக்கைகளால் வருமான இழப்பை(!!) சந்தித்தவர்களுமே இதுபோல தன் ஏமாற்றத்தை இங்கே வசவுகளாய் கொட்டிவருகின்றனர்!

      இவர்களை என்றைக்குமே திருத்த முடியாது! ஏனெனில், அவர்களது டிசைன் அப்படி!!

      Delete
    7. என்ன சொல்வதென்றே தெரியவில்லை சார்... உங்கள் சூழ்நிலை புரியாமல் பேச என்றுமே நினைத்தது இல்லவே இல்லை... இப்போது XIII புக்ஸ் இருக்கு, கைக்கெட்டாதா விலையில்... கொஞ்சம் கொஞ்சமாக திட்டமிட்டு பிரிண்ட் ரன் பக்காவாக நிர்ணயித்து உள்ளீர்கள் என்று அறிவேன்... அந்த ஆதங்கத்தை பதிவு செய்கிறேன் அவவளவே தான் சார். ஒருவேளை வரும் காலத்தில் திட்டமிடும்போது இதெல்லாம் கணக்கில் கொள்ள.

      Delete
  65. ஸ்ரீ அவர்கள் சொன்னது போல்
    அவர் குறிப்பிட்ட tex புத்தகங்களை
    எடிட்டர் சார் reprint செய்தால்
    என்னை போன்ற tex மிடில் கிளாஸ்
    வாசகர்கள் பயன் பெறுவார்கள்
    நன்றி sir....

    ReplyDelete
  66. 50 ஆவது ஆண்டு மைல்கல் பயணத்துக்கு வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  67. டெக்ஸ் கதைகள் மறுபடியும் கிடைத்தால் மகிழ்ச்சி அதிக விலை கொடுத்து புதிய புத்தகங்கள் வாங்கும் போது கொஞ்சம் வருத்தமாகதான் இருக்கிறது கண்டிப்பாக அடுத்த வருடத்தில் சந்தா கட்டிட வேண்டும் அட்டவணை எப்போது வெளியாகும் நன்றி

    ReplyDelete
  68. கோபமான தடித்த வார்த்தைகள் வேண்டாம்.

    நாம் நாகரீகத்தோடு கண்ணியம் காக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. என்னாச்சு Bro? ஒரே அட்வைஸா இருக்கு!

      Delete
    2. விஞ்ஞானம் at play சார் ...ஒவ்வொரு வினைக்கும், ஒரு எதிர்வினை உண்டென்று படித்துள்ளோமில்லையா ? அதன் செயல்முறை விளக்கங்கள் நடைமுறையாகின்றன ! நேற்றைய அறிவிப்பு(கள்) & இன்றைய ரியாக்ஷன்கள் !

      Delete
    3. ///கோபமான தடித்த வார்த்தைகள் வேண்டாம்.

      நாம் நாகரீகத்தோடு கண்ணியம் காக்க வேண்டும்///

      உண்மை!! மோசமான வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்ப்பது நல்லது!

      Delete
    4. J அண்ணா மிகச்சரியான கருத்து.

      Delete
    5. ///நேற்றைய அறிவிப்பு(கள்) & இன்றைய ரியாக்ஷன்கள் !///

      ஹா ஹா! ஒற்றை வார்த்தியில் நறுக்குன்னு சொன்னீங்க சார்!

      Delete
  69. திடீரென்று பல பின்னூட்டங்களைக் காணவில்லையே.


    நாகரீகமற்றப் பின்னூட்டங்கள் காணாதது சரியே.

    ReplyDelete
    Replies
    1. பின்ன... ஐயர் தேவையில்லாம பேசுனா?

      Delete
  70. விடுங்கள் சார். கொண்டாட்டமாகக் கழியவேண்டிய தருணங்களை சங்கடத்துக்குள்ளாக்குவது பலருக்குக் கைவந்த கலை. ஒவ்வொரு முறை நீங்கள் யதார்த்தங்களை முன்வைக்கும்போதும் கல்லெறிவது வழக்கமாகிவிட்ட ஒன்றுதானே? கடல் கடந்திருக்கும் எம்மைப் போன்றவருக்கே உங்களது அணுகுமுறைகளும், காமிக்ஸ் காதலும் தெள்ளத்தெளிவாகத் தெரிந்திருக்கும்போது பெரும்பாலான நண்பர்களுக்கும் அது நன்கு புரிந்தேயிருக்குமென்று நம்புகிறோம்.

    குற்றமுள்ள நெஞ்சுகள் குறுகுறுப்பதற்கு உங்களது இப்படியான பதிவுகளும் அவ்வப்போது அவசியம் சார்!

    ReplyDelete
  71. //நேற்றைய அறிவிப்பு(கள்) & இன்றைய ரியாக்ஷன்கள் !//
    யெஸ் சார்... புரிகிறது.

    ReplyDelete
  72. எடிட்டர் சார்.தளத்தை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்துவிட்டீர்கள் போலிருக்கு. நன்றி.
    உண்மையில் படிக்க இயலாத வார்த்தைப் பிரயோகங்களால் சங்கடமாக இருந்தது.
    ஏன் இப்படி என்று சத்தியமாகப் புரியவில்லை.
    வாசிப்பை வாசிப்பாக மட்டுமே எடுத்துக்கொண்டால மட்டும் போதுமே. வன்மம் எதற்கு.
    காமிக்ஸ் எனும் சந்தோஷத்தை கரடுமுரடான வார்த்தைகளால் இழந்து விட நேரிடும் என்பதை மறந்து விட வேண்டாம் நண்பர்களே.

    ReplyDelete
  73. ஏதாவது "மெகா இதழ்கள் " வரும் சமயம் எல்லாம் தவறாமல் ஏதாவது கலவரம் வந்து விடுகிறதே...


    இது "காமிக்ஸ் மெகா ராசியா "..!

    ReplyDelete
    Replies
    1. அது தலீவரே 
      மெகா புக்கு வர சமயம் பார்த்து பதுக்கல் பார்ட்டிகள் 1க்கு 10ஆ வாங்கி வெச்சு முன்னவெல்லாம் சில மாசங்களுக்கப்பால வெலை ஒசத்தி வித்துகிட்ருந்தாங்கோ. இப்போ editor 'நான் பிரிண்ட் ரன் கொறச்சிட்டேனே மம்மீ' என்று நம்ம வரைக்கும் சொல்லப்போக பதுக்கல் பார்ட்டிகள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா காப்பி வாங்கி (இப்போ ஒரிஜினல் வெலையே  கொஞ்சம் ஜாஸ்தி இல்லீங்களா?) அடுத்த மாசமே விக்கப் பாக்குறாங்க. ஆனால் அவர்களுக்கு தெரியாதது Editor இப்போ extra காப்பிகளுக்கு பிளான் போட்டுக்கிட்டிருக்கார்னு. அவிங்க சேமிப்பு மற்றும் வருமானம் பனாலாகிருச்சு - என்ன பண்ணுவாய்ங்க பாவம்? எடிட்டர் தான காரணம்.

      இவுரு பேசாம மாசம் 1000 காப்பி அடிச்சு எல்லாத்தையும் அவிங்க கிட்ட அனுப்பிச்சிட்டா problem solved ;-) அவிங்களுக்கும் 50% கெடச்சுரும் .. நமக்கும் காமிக்ஸ் கிடைக்கும் !!

      Delete
    2. ராகவன் சார்...

      :-)))))

      Delete
  74. என் ஒருத்தனைத் தாண்டி, இங்கே ஐம்பதடி தொலைவில் உள்ள சீனியருக்கும் தெரியாது ; ஜூனியருக்கும் தெரியாதெனும் போது - ஐநூறு, அறுநூறு மைல் தொலைவுகளில் உள்ள உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்புகள் மெய்யாகவே இருப்பதாய் நீங்கள் நினைக்கிறீர்களா ? And அவ்வித உங்களின் யூகங்கள் சரியானவைகளாக இருக்குமென்றும் நம்புகிறீர்களா ? And உங்களுக்குத் தோன்றிடக் கூடிய தொழில்சார் சிந்தனைகள் இதனுள்ளேயே கடந்த 37 ஆண்டுகளாய் சுற்றி வருபவனுக்குத் தோன்றியிராதென்று தோன்றுகிறதா ?////


    உண்மை...உண்மை...உண்மை...

    ReplyDelete

  75. உல்டா செய்யப்பட்ட நீதிக்கதை

    திருப்பூர் செல்வனும் சித்திரகுப்தனும்

    எமதர்மலோகத்தில் சாமரம் வீசும் பணிப்பெண்ணின் ஆடை விலகியதை அகஸ்மத்தாக சித்திரகுப்தன் பார்க்க நேரிட்டுவிட்டது.
    இதை மற்றொரு பணிப்பெண் சி.குப்தனின் மனையாட்டியிடம் போட்டுக் கொடுத்துவிட பின் நடந்த வரலாற்று சம்பவங்களின் தொடர்ச்சியாக ( ஈரேழு பதினான்கு லோகங்களிலும் கணவன்மார்களின் தலைவிதி இம்மாதிரி விஷயங்களில் ஒரேமாதிரிதான். சர்க்கரை வியாதி இருப்பின் இனிப்பு பண்டங்களின் விலைப்பட்டியலை பார்ப்பது கூட தவறு என்பது போன்ற யதேச்சதிகார மனைவியர் மனோபாவம்) சி.குப்தனுக்கு தேவ வைத்தியம் செய்த அஸ்வினி குமாரர்கள் (தாடை திருப்பப்பட்டு இருந்ததால் ) அமிர்த ஔதஷத்தை அவசர சிகிச்சையாக ஐவி லைனில் செலுத்த வேண்டிய நெருக்கடி..

    சி.குப்தனால் சில மணிநேரம் வேலை செய்ய முடியாத நிலை..

    எமதர்ம லோகத்தில் அப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று கொண்டு இருந்ததால் எமதர்மனால் உள்ளூர்வாசிகளை பணி நியமனம் செய்ய முடியாத சூழ்நிலை..

    நெற்றியில் சுருக்கத்துடன் வெளிவந்த தர்மராஜன் முன் புவியில் அப்போது இரவு நேரம் என்பதால் வண்ணமுடைய வண்ணமற்ற திரவங்களின் உதவியோடு பூமி விட்டு வான்வெளி வாசம் செய்து பறந்து கொண்டிருந்த புவி மாந்தர் சிலர் கண்ணில் பட்டனர்..


    அதில் களையான முகத்துடன் தென்பட்ட திருப்பூர் குமரனை அணுகி சி்.குப்தனின் பணியினை சில மணி நேரம் செய்ய இயலுமா எனக் கேட்டார்..


    ஊதியம் அப்படி ஒன்றும் பிரமாதமில்லை எனினும் பணிமுடிந்தபின் பல பேரல் சோமபானம்
    இலவசமாக கிடைக்கும் என்ற சேதி தி.குமரனுக்கு ஊக்கமூட்டியது.( இலவசங்களுக்கு தர்ம லோகமும் விதிவிலக்கல்ல போலும்).


    விண்ணுலகப் பிராப்தி பெற்ற பலர் மெல்ல வரத் துவங்கினர்.

    இன்றைக்கும் உப்புமாவா? என்ற அதிர்ச்சி தோய்ந்திருந்த சில தமிழ் முகங்களும் யங் டைகர் ,சித்திரமும் கொலைப்பழக்கம் மூல மொழிகளில் அப்போதுதான் வாசித்து முடித்திருந்த சில அயல்நாட்டு முகங்களும் அவர்களூடே தென்பட்டன.

    அதிர்ச்சியூட்டும் வகையில் டைகர் , லக்கி லூக், டெக்ஸ் வில்லர் மூவரும் இவ்வரிசையில் இடம் பெற்று இருந்தனர்.

    டைகரை கண்டவுடன் திருப்பூர் குமரனின் முகம் -அசந்தர்ப்ப சூழ்நிலையெனினும் - முத்து 50 பொன்விழா ஆண்டுமலரை மற்ற வாசகர்கள் பெறுவதற்கு ஒரு வாரம் முன்பே பெற்ற உண்மை வாசகனின் நெஞ்சம் போல பொலிர்ந்தது...

    "ஸில்க்' னிலான சிவப்பு விரிப்புடன் ஸ்வர்க்க லோக கதவுகள் டைகருக்காக தி.குமரனின் கடைக்கண் பார்வையில் அகலத் திறந்தன...சில விநாடிகள் கழித்து லக்கி லூக்குக்கும் மோட்ச வாயில் திறப்பு அறிவிக்கப்பட்டது..


    டெக்ஸ் வில்லரை ஒரு பார்வை பார்த்த தி.குமரன் நரக வாயிலை திறக்க உத்தரவிட்டார்...

    ஸ்வர்க்க வாசல் நோக்கி நடந்து கொண்டிருந்த டைகரும் லக்கியும் இதைக் கேட்டு மனம் பதைத்து தி.குமரனிடம் வாதிட்டனர்..

    தி.குமரன் டைகரை நோக்கி உங்களுக்காக எனது முடிவை மறுபரிசீலனை செய்கிறேன் ்..உங்கள் மூவருக்கும் ஒரு போட்டி வைக்கிறேன்..அதில் வெற்றி பெறுபவர் ஸ்வர்க்கம் செல்லலாம் என்றார் புன்னகைத்தபடி..


    போட்டி துவங்கியது...

    திரைப்பட நடிகர்களின் பெயரை தவறில்லாமல் எழுதும் போட்டி ..

    முதலில் டைகருக்கு கொடுக்கப்பட்ட பெயர் RAJINI...அவர் அதை சரியாக எழுதிவிட்டார்.

    லக்கிக்கு கொடுக்கப்பட்ட பெயர் KAMAL
    அவரும் அதை சரியாக எழுதிவிட்டார்.

    டெக்ஸ்க்கு கொடுக்கப்பட்ட பெயர்

    ARNOLD SCHWARZENEGGER ..

    இன்று வரை அர்னால்டுக்கே தன் பேரை சரியாக எழுதவராதென்பதால் டெக்‌ஸாலும் எழுத இயலவில்லை..


    மறுபடியும் டைகரும் லக்கியும் தி.குமரனிடம் வாக்குவாதத்தில்- டெக்ஸூக்காக - ஈடுபட்டனர்.

    தி.குமரன் புன்முறுவலுடன் மறுபடி ஒரு போட்டி வைப்பதாக சொன்னார்.

    அமெரிக்க உள்நாட்டு போர் பற்றிய கேள்விகள்.. இதுதான் போட்டி

    டைகருக்கான கேள்வி..அமெரிக்க உள்நாட்டு போர் எந்த நாட்டில் நடந்தது?

    டைகர் உடனே அமெரிக்கா என விடையளித்தார்

    லக்கிக்கான கேள்வி: அமெரிக்க உள்நாட்டு போர் அணிகள் இரு திசைகளின் பெயர் கொண்டு அழைக்கப்பட்டன.. அவை கிழக்கு மேற்கு திசைகள் இல்லை..அப்படியாயின் அவை என்ன திசைகள்? லக்கி உடனே வடக்கத்திய , தெற்கத்திய படைகள் என பதிலளித்தார்.

    டெக்ஸூக்கான கேள்வி...அமெரிக்க உள்நாட்டு போரில் ஈடுபட்ட இருதரப்பு வீரர்களின் பெயர்கள் , முகவரிகளை பத்து வரிகளுக்கு மிகாமல் சொல்லவும்


    டைகரும் லக்கியும் திகைத்து போய் நின்றனர்.

    நீதி: ரத்தப்படலம் , நெஞ்சே எழு , ப்ரளயப் பயணம் ,லயன் 400 கிடைக்கப் பெறாத உண்மை வாசகர்களுக்காக நன்னெஞ்சத்தோடு இப்புத்தகங்கள் கிடைக்கப் பெற்ற நெடுநாள் வாசக சந்தாதாரர்கள் , எடிட்டர் சார் ஆகியோர் சீரிய முயற்சிகளை மேற்கொண்டாலும் கறுப்பு, பழுப்பு, சாம்பல் வண்ணத்தவர்கள் "ஸ்கெட்ச்"போட்டு அதன் பலனை தனதாக்கவே முயல்வர்.



    ReplyDelete
    Replies
    1. /* அமிர்த ஔதஷத்தை அவசர சிகிச்சையாக ஐவி லைனில் */

      ROFL :-D Hahahahahahah !!! மூலாதாரத்தில் அடி பலமா இருக்குமோ?!! :-D

      Delete
    2. 🤣🤣🤣🤣 செனா அனா...

      கதையை நம்ம காமிக்ஸுக்கு தகுந்தாப்ல அருமையா உல்ட்டா பண்ணி சிரிக்க + சிந்திக்க வச்சுருக்கீங்க!

      ரம்மியோட இன்ட்ரோ சீன் அருமை! டெக்ஸுக்கு அளிக்கப்படும் கேள்விகளெல்லாம் கெக்கபிக்கே ரகம்!!

      கிடைக்கற கேப்ல வீட்டம்மா குறித்த உங்க ஆதங்கத்தையும் பதிவு செஞ்சுட்டீங்களே!!! பலே!! 🤣🤣🤣🤣

      Delete
    3. ///இன்றைக்கும் உப்புமாவா? என்ற அதிர்ச்சி தோய்ந்திருந்த சில தமிழ் முகங்களும் யங் டைகர் ,சித்திரமும் கொலைப்பழக்கம் மூல மொழிகளில் அப்போதுதான் வாசித்து முடித்திருந்த சில அயல்நாட்டு முகங்களும் அவர்களூடே தென்பட்டன.////

      ரொம்ப நேரமா சிரிச்சுக்கிட்டே இருக்கேன்..🤣🤣🤣🤣🤣🤣

      Delete
  76. புரியல.. நான் கொஞ்சம் 'குழல்விளக்கு' சாரே.

    ReplyDelete
  77. ஒரு வரைகதை உலக வாசக குடும்ப குழந்தையின் ஜீவ மரண போராட்டத்துக்கு உதவும் ஓரிதழின் ப்ரிண்ட் ரன்னோடு வழமையான ப்ரிண்ட் ரன்னோடு ஒப்பிட்டு - ஒரு துன்பவியல் நிகழ்வை பேசுப்பொருளாக்கத் துணியும் சக வாசக பக்குவமற்ற மனப்போக்கு வருத்தமளிக்கும் செயல்.

    ReplyDelete
    Replies
    1. வழிமொழிகிறேன்...!

      Delete
    2. Yes - Absolutely Abominable Doc - காறி உமிழும்படியான செயல் ! இதில் தொழில் தர்மம் சார்ந்த போதனை வேறு :-( முற்றிய கலியின் கோலாகலம் - வேறென்ன ?!

      Delete
    3. உண்மை செல்வம் அபிராமி. சக மனிதனின் கஷ்டத்தை இப்படி பேசும் நபர்களை மனிதர்கள் என்று சொல்வதே பெரிய பாவம்.

      Delete
    4. ////ஒரு வரைகதை உலக வாசக குடும்ப குழந்தையின் ஜீவ மரண போராட்டத்துக்கு உதவும் ஓரிதழின் ப்ரிண்ட் ரன்னோடு வழமையான ப்ரிண்ட் ரன்னோடு ஒப்பிட்டு - ஒரு துன்பவியல் நிகழ்வை பேசுப்பொருளாக்கத் துணியும் சக வாசக பக்குவமற்ற மனப்போக்கு வருத்தமளிக்கும் செயல்.////

      வருத்தமளிப்பது மட்டுமல்ல - முகம்சுளிக்க வைக்கும்படியான செயலும் கூட!! :(

      Delete
  78. கொஞ்சமாகப் புரியுது சார்.
    மகாகவி காளிதாஸ் படத்தில வரும் கண்ணதாசன் பாடல்வரிகள்..
    காக்காய் உண்டு, நரியுண்டு..
    வரிக் கழுதைகள் உண்டு, புலியுண்டு..
    மனிதரில் இத்தனை வகையுண்டு, அவர்
    வாக்கினில் தெரியும் யாரென்று..
    எல்லாக காலத்துக்கும் பொருந்தும் வகையில் மனிதனின் குண இயல்புகளை சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. // பொறக்கும்போது பொறந்த குணம்
      போகப் போக மாறுது _ எல்லாம்
      இருக்கும்போது பிரிந்த குணம்
      இறக்கும்போது சேருது //
      பட்டுக்கோட்டையாரின் இந்த வைர வரிகள் கூட பொருந்துமோ ???!!!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. பாட்டுக்குப்பாட்டு..
      நண்பர்கள், பகைவரகள், யாரென்றும்,
      நல்லவர் கெட்டவர் யாரென்றும்
      பழகும் போதும் தெரிவதில்லை
      பாழாய்ப் போன இந்த பூமியிலே
      முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள்,
      முதுகுக்குப் பின்னால் சீறும்..
      முகத்துதி பேசும், வளையும், குழையும்,
      காரியம் ஆனதும் மாறும்.
      கவிஞர் வாலியின் வரிகள், நாடோடி படத்தில்

      Delete
  79. இலைமறை காயாக நமது புத்தகங்களை பதுக்கி வியாபாரம் செய்து வந்த ஒரு வியாபாரி தானாக வந்து நான் அந்த வியாபாரி என அனைவருக்கும் சொல்லி விட்டார். நண்பர்கள் இனியாவது கவனமாக இருங்கள், இவர்களை ஊக்குவிக்காதீர்கள்.

    அந்த அநாமனேய நண்பர் எழுதியதில் இருந்து எந்த அளவு இதுபோன்ற பதுக்கல் வியாபாரிகளால் பாதிக்கபட்டு இருக்கிறார் என உணர முடிந்தது; அவரின் ஆதங்கம் புரிந்தது. என்ன கொஞ்சம் நாகரிகமாக எழுதி இருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. கடவுளுக்கு அருகே இருக்கிறேன் என்பவர்கள் மிருகத்தை விட கேவலமாக நடந்துகொள்ளும் போது மற்ற மனிதர்கள் நாகரீகம் காப்பது எவ்வண்ணம் சரி? :(

      Delete
    2. புரிகிறது ராகவன்.

      Delete
  80. This comment has been removed by the author.

    ReplyDelete
  81. வர வர தவறான விஷயத்தையே சரின்னு வாதம் பண்ற நபர்கள் அதிகமாயிட்டாங்க...
    என்னமோ போடா மாதவா...!!!

    ReplyDelete
  82. அய்யா, நானெல்லாம் முத்து காமிக்ஸ் படிக்க ஆரம்பிச்சு வளர்ந்தவனுங்க.இன்னைக்கும் முத்து காமிக்ஸ் தான் என்னோட பேவரைட். இ.கை.மாயாவி,வேதாளர், ரிப்கெர்பி, காரிகன்.. இவங்கெல்லாம் என்னோட ஆல்டைம் பேவரிட்.
    லயன்-Tiger,Tex எல்லாம் அப்புறம் தாங்க.

    இப்ப இங்க என்ன நடக்குதுன்னு ஒண்ணும் புரியலிங்க. ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயங்க. இங்க நாமல்லாம் சேந்திருக்கிறதுக்கும், சண்டை போட்டுக்கிறதுக்கும் காரணம் அய்யா சௌந்திரபாண்டியன் அவர்களும், அவரது வாரிசுகளின் உழைப்பும் அர்ப்பணிப்பும் தான் காரணம் என்பதை யாரும் மறந்திட வேண்டாம் என்பதுதான் என் அன்பு வேண்டுகோள்.வாழ்த்துவோம் !வரவேற்போம்!!

    #முத்துகாமிக்ஸ்50#

    ReplyDelete
  83. முத்து பொன்விழா லோகோ முதல் லோகோ தான் எனக்கு பிடிச்சிருக்கு.. அந்த ரெட் & பிளாக் பேக்ரவுண்டுலதான் லோகோ அட்டகாசமா இருக்கு.

    ReplyDelete
  84. பத்து சார்.. பக்காவா ரெடியாகிட்டீங்க போலிருக்கே?!! ட்யூட்டில ஜாய்ன் பண்ணிட்டீங்களா?

    ReplyDelete