Saturday, September 04, 2021

ஒரு சில்லென்ற செப்டெம்பர் !

 நண்பர்களே,

வணக்கம். ஒவ்வொரு மாதமும் அமைந்திடும் கூட்டணிகள் எனக்கே அவ்வப்போது ஆச்சர்யமூட்டும் புதிர்களாகி விடுவதுண்டு ! And இந்த செப்டெம்பர் அதனில் சேர்த்தி ! 

ஓராண்டின் திட்டமிடல் சுலபமே அல்ல என்றால், அந்த அட்டவணையின் இதழ்களுள் எவற்றை எங்கெங்கு place பண்ணுவதென்ற கணக்கு அதற்கு அண்ணன் !  

*டெக்ஸ் இருக்கிற  மாசத்தில், ஏப்பை சாப்பையான பார்ட்டிகள் இருக்கலாகாது !

*ஓவரா கி.நா.பாணிக் கதைகளை ஒரே மாதத்தில் அண்ட விடப்படாது !

 *கார்ட்டூன்களை வருஷத்தின் முழுமைக்கும் நிரந்து விநியோகிக்கணும்  !

*விலை கூடின இதழ்களை வறட்சியான மாதங்களில் கண்ணில் காட்டப்படாது !

*இரண்டாம்நிலை நாயக நாயகியரின் வெளியீட்டு மாதங்களில், வெளிச்சத்தின் வட்டம் அவர்கள் பக்கம் சித்தே தூக்கலாய் இருக்கச் செய்ய வேணும் !

*புத்தக விழாக்களோடு இசைந்து செல்லும் மாதங்களில் கொஞ்சம் பெரிய பட்ஜெட் இதழ்களைக் களமிறக்க வேணும் ! 

*கதைகளோ ; மொழிபெயர்ப்போ தாமதப்படக்கூடிய சூழல்களில், அந்த இதழ்களை இயன்ற மட்டுக்குப் பின்னே தள்ளணும்.  

*சிறு தொடர்களின் முதல் இதழாக இருப்பின், அதனை வருஷத்தின் இறுதிக்குக் கொண்டு போய் விட்டு, தொடரும் வருஷ அட்டவணையினில் பாக்கி இதழ்களுக்கு ஜனவரி / பிப்ரவரியில் இடம் ஒதுக்கிடணும் !  

*ஆண்டுக்கொருவாட்டி மட்டுமே தலைகாட்டும் நாயகர்களெனில், நடப்பாண்டின் அவரது சாகசத்தை ஜனவரியிலும், அடுத்தாண்டில் டிசம்பரிலும் அமைத்தால், கிட்டத்தட்ட 23 மாத கேப் ஆகிப் போகுமெனும் போது, அந்த மெரி தப்புகளைச் செய்யப்படாது !

*ஒவ்வொரு மாசத்தின் மொத்த பட்ஜெட்டும் ஓரளவுக்கு சீராக இருக்க பண்ணனும் !

இது போல இன்னும் கணிசமான எழுதப்படா விதிகளுண்டு & அவற்றின் மத்தியில் தான் இதழ்களை இங்கும் அங்குமாய் பொருத்திட முயற்சிப்பேன் ! சில நேரங்களில் அந்த இங்கி-பிங்கி-பாங்கி ஆட்டம் பிரமாதமாய் செட் ஆகிடுவதும் உண்டு ; சில நேரங்களில் முரட்டு மொக்கையாகவும் சொதப்பிடுவதுண்டு ! லாஜிக்படி மேற்படி கண்டிஷன்களை பவுசாய் நான் போட்டுக்கிட்டாலும், பின்னே ஏதேனும் தயாரிப்பு சார்ந்த காரணங்களினாலோ ; டப்பு புரட்டுவதில் நேரும் தாமதங்களினாலோ - ஆட்டைத் தூக்கிக் குட்டியோடும் ; குட்டியைத் தூக்கிக் குடவுனிலும் போடும் கூத்துக்களும் நிகழ்வதுண்டு !  So அவ்விதமான தட்டாமாலைகளுக்குப் பின்னேயும் சில மாதங்களில் ஏதேனும் சுவாரஸ்யம் நிகழும் போது - 'அட' என்றிருக்கும் ! காத்திருக்கும் செப்டெம்பர் அந்த மாதிரியானதொரு 'அட' மாதம் என்பேன் - for a different reason !! 

இதழ்கள் நான்கும் உங்களை எட்டிப் பிடித்து, நீங்கள் அவற்றை வாசிக்க நேரம் ஒதுக்கி ; அப்பாலிக்கா அலசிட அவகாசமும் எடுத்துக் கொள்ளும் வரையிலும், 'சூப்பரா ? சொதப்பலா ?' என்று தெரிந்திருக்காது தான் ! Moreso becos இந்த மாத நாற்கூட்டணியினில் யாருமே மஞ்சச் சொக்காய் போட்டிருக்கவில்லை ; மூக்கைச் சேதமாக்கி இருக்கவுமில்லை ; சம்மர் அடித்த மண்டையோடு, ஒரு குவியல் பணத்தை முறைத்துப் பார்த்து நிற்கவுமில்லை எனும் போது - நானாய் எவ்விதக் கற்பனைகளுக்குள்ளும் குதிப்பது கூமுட்டைத்தனம் என்பது obvious ! ஆனால் நான் 'அட' போட்டது வேறொரு காரணத்தின் பொருட்டு ! அது இந்த மாத இதழ்களுக்குள் நான் பார்த்ததொரு தற்செயலான ஒற்றுமையினால் & விதிவசமாய் அந்த ஒற்றுமையினைச் சுமந்து நிற்கும் 3 இதழ்களும் ஒரே மாசத்தினில் அமைந்து போனதால் ! 

டிரெண்ட் ! இந்த சிகப்புச் சட்டை கனேடிய காவலர் எப்போதுமே அதிர்ந்து பேசாத ரகம் ! தானுண்டு ; தன் பனிவன வேலையுண்டு ; தன்னோட ஹட்ச் டாக் உண்டு ; ஆக்னெஸ் மீது 'இதயம்' முரளி ரகத்திலான காதலுண்டு - என்று சுற்றி வருபவர் ! So பொதுவாய் அவரது கதைகளில் சள சள வென்று பேசித் திரிய ஆட்கள் நிறைய இருப்பதில்லை ! And கதைகளின் பெரும்பான்மை நிகழ்வது ஆளரவிமில்லாத கனேடிய சிகரங்களில் எனும் போது - டிரெண்ட் தனக்குத் தானே பேசிக் கொள்வது போலவோ ; அல்லது voice over-ல் கதாசிரியரே விவரிப்பினைக் கையில் எடுத்திடுவது போலவோ -  ஒரு monologue பாணியிலேயே நிறையப் பகுதிகள் இருப்பதைப் பார்த்திருப்போம் !  நான் குறிப்பிடும் அந்த "ஒற்றுமை" இந்த monologue பாணி சார்ந்ததே !!

"பகலறியா பூமி" !!

டிரெண்ட் தொடரின் ஆல்பம் # 6 ! இன்னமும் இரண்டே கதைகளோடு "சுபம்" போடப்படவுள்ள தொடர் ! நீங்கள் மனசு வைத்தால் அடுத்த ஒன்றோ, இரண்டோ ஆண்டுகளில் கரை சேர்ந்திருப்பார் மனுஷன் !! மாமூலான அதே template-ல் பயணிக்கும் ஆல்பமே இது என்றாலும், இம்முறை இங்கே சுவாரஸ்யமும், சென்டிமென்ட்டும் ஒரு மிடறு தூக்கல் ! And எப்போதும் போலவே சித்திரங்களும் ; கலரிங்கும் வேற லெவெலில் மிரட்டுகின்றன இங்கே ! நவம்பரில் துவங்கி சில மாதங்களுக்கு நித்ய இரவாகவே இருக்கும் வட துருவத்தில் துவங்கிடும் கதையானது,  இருளிலேயே டிராவல் செய்து, சிறுகச் சிறுக கதிரவனைக் காணும் பிரதேசத்துக்கு நகரும் போது ஓவியரும், கலரிங் ஆர்டிஸ்ட்டும் செய்துள்ள ஜாலங்கள் ஷப்பா....breathtaking !!!! பொதுவாய் நாம் பார்த்திருக்க வாய்ப்பே இல்லாத சூழல்களில் அரங்கேறிடும் கதைக்களங்களை நாம் மேலோட்டமாய்த் தாண்டிடுவதுண்டு ! அங்கே ஜாகஜம் செய்யும் நாயகரைக் கவனிப்பதோடு ; கதையினை நோக்குவதோடு நகன்றிடுவோம் ! At least நான் அப்படித்தான் ! ஆனால் இம்முறையோ, எனது curiosity என்னைக் கொஞ்சமாய் மெனெக்கெடச் செய்தது !! மனுஷ நடமாட்டமே இருந்திரா ஒரு இருள் காட்டினில் வாழ்க்கை எவ்விதம் இருந்திருக்குமோ ? மருந்துக்கும் வெளிச்சத்தைப் பார்க்க முடியாத பொழுதுகள் என்ன மாதிரி இருந்திருக்குமோ ? என்று google புண்ணியத்தில் தேடிப் பார்த்தேன் ; பார்க்கப் பார்க்க - படிக்கப் படிக்க, திகைப்பாய் இருந்தது ! பத்து நிமிஷம் கரெண்ட் கட்டானால் - கலாமிட்டி ஜேனை ஒழுக்கசீலியாக்கும் ரகத்தில் வாயில் வார்த்தைகள் பிரவாகமெடுக்கும் நம்மையெல்லாம், நவம்பர் to ஜனவரி வரைக்கும் சூரியனே உதிக்காதெனும் அந்த மண்ணில் கொண்டு போய் விட்டால் என்ன செய்திருப்போமென்று கற்பனை பண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை ! Anyways - அந்த மாதிரியானதொரு பின்புலத்தினை தேர்வு செய்த கதாசிரியருக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு, சுளீரென்று வெயிலடிக்கும் சிவகாசியின் யதார்த்தங்களுக்குத் திரும்பினேன் !! 

கவர் : நமது சென்னை ஓவியர் !

இந்த monologue பாணியில் கதை சொல்லும் யுக்தியானது போன வாரத்து டிரெய்லரில் இடம்பிடித்திருந்த டெட்வுட் டிக் ஆல்பத்துக்குமே பொருந்தும் ! அங்குமே கணிசமான இடங்களில் கதை மாந்தர்கள் தத்தம் அனுபவங்களை ; எண்ணங்களை தாமாய் விவரிப்பதைப் பார்த்திடவுள்ளோம் ! So that makes it # 2 for the month !!

And # 3 கூட உள்ளது - இம்மாதத்து ஜம்போ சீசன் 4-ன் உபயத்தில் !

"சித்திரமும் கொலைப்பழக்கம்" 

இன்னொரு பிரான்க்கோ-பெல்ஜியப் படைப்பு & படைப்பாளிகளின் சிபாரிசோடும் இது வந்திருப்பது - சன்னமான highlight ! ஒரு காது குடையும் தம்மாத்துண்டுச் சீட்டில்  இதன் கதையினை எழுதிடலாம் தான் ; உலக சினிமாக்களையெல்லாம் நெட்ப்லிக்சிலும், இன்ன பிற தளங்களிலும் போட்டுத் தாக்கி வரும் உங்களுக்கு இக்கட கதையினை யூகிப்பதில் பெருசாய் சிரமங்களும் இராது தான் ! ஆனால் காமிக்ஸ்சுக்குப் புதிதானதொரு நாயகர் ; பெரும்பான்மைக்கு monologue கதை சொல்லல் ; பாரிஸ் நகரின் பின்னணியில் அரங்கேறும் சடுகுடு ; கொஞ்சம் அடல்ட்ஸ் ஒன்லி சமாச்சாரம் ; க்ளைமாக்சில் மிரட்டும் வன்முறை - என்று ஒரு முழு நீள க்ரைம் கிராபிக் நாவலாய் இது வித்தியாசமாய்த் தெரிவதாக எனக்குப்பட்டது ! இங்கே நாயகனுக்கு பெயரே கிடையாது & அவர் வாயைத் திறந்து பேசுவதும் சொற்பம் ! So இம்மாதத்தின் monologue பாணி # 3-க்கு இவர் பிரதம வேட்பாளராக்கிடுவதில் வியப்பில்லை தான் ! இதோ - அட்டைப்படம் & சந்திரமுகி பாணியிலான க்ளைமாக்சின் டிரெய்லரும் !!

As always, வன்முறைக்கும், அடல்ட்ஸ் ஒன்லிக்கும் மண்டகப்படிகள் எனக்கு நிகழாது போனால் ஆச்சர்யம் கொள்வேன் ; இங்கே கதையின் அடித்தளத்தோடு அவையிரண்டும் கலந்திருப்பதால் கத்திரி தூக்க எனக்கு வழியிருக்கவில்லை ! Even otherwise - இதனில் கத்திரி போடவோ, தார் டப்பிக்களைக் கையிலெடுக்கவோ எனக்கு அனுமதி இருக்கவில்லை என்பது கூடுதல் தகவல் ! So படைத்தது போலவே பதிப்பு உங்களை எட்டிடவுள்ளது !


Before I sign out - ஒரு சங்கடமூட்டும் சேதி & ஒரு வேண்டுகோள் :

நமது நண்பர்  கோவை பிளைசி பாபுவின் 3 வயது மகனுக்கு வரும் செவ்வாய் கிழமையன்று (7/9/2021)  சிக்கலானதொரு இருதய அறுவைச் சிகிச்சையை எர்ணாகுளத்திலிருக்கும் Lisie hospital-ன் சிறப்பு மருத்துவர் குழுவொன்று மேற்கொள்ளயிருக்கிறது.  இந்த அறுவைச் சிகிச்சைக்கான செலவை கேரளஅரசு/மருத்துவமனை நிர்வாகமே ஏற்றுக்கொண்டு பாபுவின் பொருளாதாரச் சுமையை பெருமளவு குறைக்க இருக்கிறது. என்றாலும், மேற்கொண்டு ஆகும் மருந்து-மாத்திரைகளுக்கான செலவு, வாரக்கணக்கில் அங்கே தங்கியிருக்க ஆகும் செலவு போன்றவற்றைத் தாக்குப் பிடிக்கத் தற்போது பாபுவால் இயலாத நிலைமை!  கொரோனாவுக்கு பின்பான இந்தக் காலகட்டத்தில் கணிசமான வருமான இழப்பைச் சந்தித்துவரும் இவருக்கு நம்மால் இயன்ற சிறு பங்களிப்பும் பெரிதாய் உதவிடும் நண்பர்களே!

சிகிச்சை முடிந்து குழந்தை நலமோடு வீடு திரும்ப வேண்டிக்கொள்வோம் !

**** இயன்றவர்கள் இயன்றதை நேரடியாய்உதவிடுங்கள் நண்பர்களே ****  - please !!🙏 And of course - நமது பிரார்த்தனைகளும் அந்தக் குழந்தையுடன் இருக்கட்டுமே ? 

Babu
ICICI bank
Account number 001601550631
IFS Code ICIC0000016
Coimbatore Branch

GPAY : 9345758702

Moving on to slightly brighter topics - ஆகஸ்டின் ஆன்லைன் புத்தக விழாவின் உபயத்தில் நமது நெடுங்கால tenant ஆன லார்கோ வின்ச்சின் சில இதழ்கள் காலியாகி விட்டுள்ளன ! கோடீஸ்வரக் கோமகனாக இருந்தாலுமே, மனுஷன் கிட்டத்தட்ட ஆறேழு வருஷங்களாய் வாடகை கூடத் தராது நம் கிட்டங்கியின் ஒரு மூலையைத் தனதாக்கியிருந்தார் ! லேசாயொரு பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன் ! And நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரின் புதியதொரு ஆல்பம் காத்திருக்கும் நவம்பரில் வெளியாகிட உள்ளதென்பது இங்கே கூடுதல் தகவல் ! ஏற்கனவே நாம் முயற்சித்திரா ஒரு (புது) டபுள் ஆல்பம் இடையே உள்ளது தான் ; ஆனால் அதனில் சட்டையைக் கிழிக்க தம்மின்றி ஓரம் கட்டி விட்டிருந்தோம் ! Maybe இந்தப் புது வரவு கொஞ்சம் மிதமாய் சிண்டைப் பிய்க்க செய்யும் பாணியில் இருப்பின் - 2023 அட்டவணையில் பில்லியனரின் மறுவருகை இருக்கக்கூடும் !!

ஒரு பெரிய நாயகரிடமிருந்து இன்னொரு மெகா நாயகருக்குத் தாவிடுவோமா ? அவர் நம் 'தல'யன்றி வேறு யாராக இருக்க முடியும் ? இங்கே ஒரு மாசத்தில் ஒரேயொரு டெக்ஸ் இதழ் கூடுதலாய் வந்து விட்டாலே கூட ரவுசுகள் செமையாய்க் களை காட்டிடும் வேளையினில் - இத்தாலியில் போனெல்லி சூப்பர் TEX என்ற பெயரில் ஒரு மாதாந்திர 144 பக்க கலர் வரிசையினை அறிவித்துள்ளனர் ! And அதன் முதல் இதழில் நாம் ஏற்கனவே ரசித்துள்ள "ஓக்லஹோமா" ஆல்பத்தின் முதல் பாதி - வண்ணத்தில் வெளியாகிறது ! தொடரவுள்ள பொழுதுகளில் இதனில் கலர் மறுபதிப்புகள் மட்டுமே இடம் பிடித்திடுமா ? அல்லது புதுப் படைப்புகளும் ஆஜராகிடுமா ? என்பது தெரிய வரும் !

அப்புறம் இது போன மாதம் கலரில் மெகா சைசில் வெளிவந்துள்ளதொரு 52 பக்க கலர் டெக்ஸ் நாவல் !!! 

அதே போல, இதழ் # 200-ல் மங்களம் கண்டிருந்த நமது CID ராபின் தொடருக்கும் போனெல்லி ஒரு புதுத் துவக்கம் தந்துள்ளனர் ! And அந்த முதல் இதழுடன் ஒரு New York Police பேட்ஜ் போல ஏதோவொன்று தருகிறார்களாம் !! கலக்கிறார்கள் !!

செப்டெம்பரின் 3 கலர் இதழ்களுள் இரண்டு அச்சாகியாச்சு & பாக்கி 1 & 1 black & white இதழ் திங்களன்று அச்சுக்குச் செல்லும் ! So அடுத்த சில நாட்களில், பைண்டிங் நிலவரத்தைப் பார்த்த கையோடு டெஸ்பாட்ச் செய்யும் தேதி பற்றிச் சொல்லிடுவேன் ! இப்போதைக்கு ஒன்றன் பின் ஒன்றாய் அணிவகுத்து நிற்கும் முத்து ஆண்டுமலர் 50 சார்ந்த பணிகளினைத் தொடர்ந்திடக் கிளம்புகிறேன் guys !! 

 Bye all....see you around ! Have a cool sunday !

195 comments:

 1. சார் மேக் & ஜாக் உண்டுங்களா. அதுபற்றி எதுவுமே கூறவேஇல்லையே.. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 2. *சாத்தான் வேட்டை*

  முன் குறிப்பு 1: கதையோட டைட்டிலுக்கும் பள்ளிப்பாளையத்துக்காரருக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க.

  முன்குறிப்பு 2:
  இந்தக் கதை எனக்கு ஒரு விதத்தில் ஸ்பெசல். இந்தக் கதை தான் நான் முன்பதிவு செய்த வாங்கிய முதல் கதைன்னு நினைக்கிறேன். ரத்தப்படலம் ஜம்போ ஸ்பெசல் முன்பதிவு கூட இதுக்குப் பின்னால தான்னு நினைக்கிறேன். 2003 ல நெட்டு பேங்கிங் நொட்டு பேங்கிங்னு எல்லாம் பெருசா ஒண்ணும் கிடையாது. நான் சென்னைல இருந்த காலத்துல கமால்அப்துல் நாசர் என்னும் நண்பர் மண்ணடியிலிருந்து காமிக்ஸ் வாங்கிட்டு வந்து தருவார். அது போக திருவான்மியூரில் ஜெயந்தி தியேட்டர் (? தியாகராஜாக்கு எதிர்ல) பக்கத்துல இருந்த பெட்டிக்கடைல போய் வார வாரம் நோட்டம் விடுவேன். கட்டை மீசை வைச்சுட்டு காண்டாமிருகம் மாதிரி இருந்துட்டு இன்னுமா காமிக்ஸ் படிக்கறேங்கற மாதிரியா லுக்கு விட்டுட்டு கடைக்காரர் தருவார். இந்தப் புக்கிலிருந்து தான் முன்பதிவு, அல்லது பணத்தை ஒரு குத்து மதிப்பா ட்ராப்ட் மூலமா கட்டிட்டு, புக்கு வரும் போது அனுப்புங்க என்று சொல்வதெல்லாம் செய்ய ஆரம்பித்தேன். அந்த புக்கை நண்பர் ரபீக் முன்பதிவு செய்ய உதவி செய்ததும் ஞாபகம் இருக்கு. என்ன காரணத்தினால் அவரு கிட்ட கேட்டேன்கறது எனக்கு சுத்தமா ஞாபகத்தில் இல்லை.

  முன்குறிப்பு 3:
  இந்தப் புக்கை எனக்கு வந்தப்ப படிச்சிருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா செப்டம்பர் மாதமே மூட்டையெல்லாம் கட்டிட்டு விப்ரோ மூலமா லாங்டெர்ம் கொலம்பஸ் ஒஹையோக்கு போக வேண்டியது. திடீர்னு மலேரியா வந்து அதனால் 4 வாரம் கழிச்சு (அக்டோபர் 18 தான்) கிளம்பியதால் இந்தப் புக்கையும் கையோடு எடுத்துட்டுப் போக வாய்ப்பு கிடைச்சுது. அதுக்குமே வழியனுப்ப வந்த அம்மாகிட்ட மறக்காம எடுத்துட்டு வர கெஞ்சி திட்டு வாங்கினதும் நினைவிருக்கு. என்னோட முதல் யூ எஸ் ட்ரிப்லயே தல என்கூட வந்தாருங்கறதே பெரிய சந்தோசம்.

  சரி. சொந்தக் கதையை தூக்கிப் போட்டுட்டு வேட்டையாடப் போகலாம். கிளாடியோ நிஸ்ஸி மற்றும் ஜோ க்யூபெர் இணைந்து உருவாக்கிய ஒரு கிளாசிக் டெக்ஸ் வில்லர் சாகசம். ஆங்கிலத்துல லோன்சம் ரேஞ்சர்னு வந்துச்சு. இவங்க ரெண்டு பேரைப் பத்தியும் நான் பெருசா பேசப் போறதில்லை. நெட்லயே கொட்டிக்கிடக்கு. இல்லன்னா இந்தக் கதை மறுபதிப்பா வந்தா நம்ம துறையூர் மம்பட்டியார் அதெல்லாத்தையும் எழுதுவாரு. அப்ப படிச்சுக்குங்க.

  தன்னுடைய நண்பனை பார்க்க தல கிளம்பறாரு. அவரு கிளம்பின முகூர்த்தமோ என்னவோ அவரு போய் பண்ணைக்கு சேருவதற்கு முன்னேயே நான்கு வில்லன்கள் (பழய கமல், ரஜினி, விஜயகுமார் படங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல) நண்பர் குடும்பத்தையே சிதைச்சு பண்ணையையும் தீ வைச்சு அழிச்சிடறாங்க. அவங்க சமாதில நின்னு தல எல்லாத்தையும் போட்டுத் தள்ளிட்டுத்தான் மறுவேலைன்னு சத்தியம் பண்ணிட்டு குதிரையை எடுத்துட்டு டகுசிக்கு டகுசிக்குன்னு கிளம்பிடறாரு.

  நிறைய இடத்துல தல வில்லனுககிட்ட பல்பு வாங்கறாரு. சலூன்ல போதையில் இருக்கற சைடு வில்லனுக கூட போதையில் இல்லாத தெளிவா இருக்கற தலயோட தலைல நாலு போடு போடறாங்க.

  இருந்தாலும் தனக்கெதிராக இருக்கற எல்லா சங்கதிகளையும் சமாளிச்சு எப்படி சபதத்தை நிறைவேத்தறாருங்கறது தான் கதை.

  இந்தக் கதை வந்தப்ப இந்த புக்கு டெக்ஸ் கதையே இல்லை அப்படின்னு எடிட்டரை முட்டுச்சந்துக்கு கூப்பிட்டுட்டுப் போய் நிறைய பேரு குமுறின சம்பவமெல்லாம் கூட அப்பவே நடந்துச்சு. வந்தப்ப முதல் தடவை படிச்சப்ப இந்தக் கதை என்னை அவ்வளவா கவரலை.

  இந்தக் கதையெல்லாம் வரதுக்கு முன்னாடி மெக்சிகோ படலம், ரத்த நகரம், மில்லேனியம் ஸ்பெசலு,மரண தூதர்கள்னு பட்டாசு கதையெல்லாம் வந்துருந்ததாலயோ என்னவோ.

  அதுக்குப் பிறகு இந்தக் கதையை எத்தனையோ தடவை படிச்சிட்டேன். சலிக்கவே இல்லை. இது என்னைப் பொறுத்தவரை தலயின் முக்கியமான கதைகளில் ஒன்று. Its a classic.

  நிறைய பேரிடம் இல்லாத இந்தக் கதை வண்ணத்தில் வர வேண்டும். வண்ணத்தில் வந்த ஆங்கில புத்தகங்களின் சில படங்களை இணைத்துள்ளேன். அதைப் பாத்தாலே ஓரளவுக்கு ஏஞ்சொல்றேங்கறது புரிஞ்சிடும்.

  பின் குறிப்பு 1 அல்லது ஏக்கம் 1:
  ஆங்கில சாத்தான் வேட்டை சைசுல அதே மாதிரி அட்லீஸ்ட் ஒரு டெக்ஸ் கதையாவது வந்தா நல்லா இருக்கும்.

  பின் குறிப்பு 2 அல்லது ஏக்கம் 2: அப்படி வரும் கதை கார்சனின் கடந்த காலமா இருந்தா இன்னுமே சூப்பரா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. அப்பறம் சொல்ல மறந்துட்டனே.

   மஞ்சச்சட்டை வாழ்க.

   Delete
  2. யாரப்பா அது, ராத்திரி 9 மணிக்கு (இங்ஙன) வாழ்,வாழ்ங்குறது.

   Delete
  3. 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

   Delete
 3. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 4. வணக்கம் சார்...🙏

  ஹாய் நட்பூஸ்...😍

  டியர் டெக்ஸ் குடும்ப சகோஸ்...💞

  ReplyDelete
 5. And of course - நமது பிரார்த்தனைகளும் அந்தக் குழந்தையுடன் இருக்கட்டுமே ?

  🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  ReplyDelete
 6. Edi ji..
  STV தலைமையிலே ஏற்கனவே நண்பர்களின் அணில் போன்ற உதவிகள் பிளைசி பாபுக்கு ஆரம்பிச்சாச்சுங்க.
  Edi Sir,மனசு வச்சா பெரிசா உதவி பண்ணலாம்..
  நீங்க இன்னேரம் உதவி பண்ணிருப்பீங்க ன்னு எங்களுக்கு தெரியும்.நீங்கதான் வலது கை கொடுக்கிறது இடது கைக்கு தெரிய கூடாதுன்னு நினைக்கிறவர் ஆச்சே.. நான் சொல்றது சரிதானே..

  ReplyDelete
 7. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 8. ///இயன்றவர்கள் இயன்றதை நேரடியாய்உதவிடுங்கள் நண்பர்களே///

  ---அப்படியே சார்.🙏🙏🙏🙏.

  ///And of course - நமது பிரார்த்தனைகளும் அந்தக் குழந்தையுடன் இருக்கட்டுமே ?///--

  --- எல்லாம்வல்ல எம்பெருமான் ஏழுமலையான் அருளால் அறுவைசிகிச்சை நல்லபடியாக நடந்து, குழந்தை நலமுடன் வீடுதிரும்புவான்🙏🙏🙏🙏


  ReplyDelete
 9. வணக்கம் நண்பர்களே..!

  ReplyDelete
 10. பாபுவின் செல்வனின் சிகிச்சை நல்லபடியாக முடிந்து நலமாக இல்லம் திரும்ப எல்லாம் வல்ல கடவுளின் இறையருளை வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.

  ReplyDelete

 11. 'பகலறியா பூமி' அட்டைப்படம் நமது சென்னை ஓவியரின் (?!!) உபயத்தில் ஜொலிக்கிறது! ட்ரெண்ட் இன்னும் யூத்தாய் தோற்றமளிக்கிறார். இந்தக் கதையிலாவது ஆக்னஸின் மனதை ஆட்டயை போடுகிறாரா பார்ப்போம் ( கவலைப்படாதேப்பா ட்ரெண்டு! கார்சனுக்கெல்லாம் அப்படியாப்பட்ட 'சம்பவம்' நடக்கும்போது உனக்கு நடக்காதா என்ன?!)

  ஒரு கதை முழுக்க இருளிலேயே நடக்கப்போகிறதா?!! ஆஹா!!! செமயா இருக்குமே?!! ஐ யாம் வெயிட்டிங்!!

  ReplyDelete
 12. ////Moving on to slightly brighter topics - ஆகஸ்டின் ஆன்லைன் புத்தக விழாவின் உபயத்தில் நமது நெடுங்கால tenant ஆன லார்கோ வின்ச்சின் சில இதழ்கள் காலியாகி விட்டுள்ளன ! கோடீஸ்வரக் கோமகனாக இருந்தாலுமே, மனுஷன் கிட்டத்தட்ட ஆறேழு வருஷங்களாய் வாடகை கூடத் தராது நம் கிட்டங்கியின் ஒரு மூலையைத் தனதாக்கியிருந்தார்////

  😁😁😁😁

  ReplyDelete
 13. ஜில்லுனு ஒரு வணக்கம்

  ReplyDelete
 14. Babu
  ICICI bank
  Account number 001601550631
  IFS Code ICIC0000016
  Coimbatore Branch

  GPAY : 9345758702


  இந்த GPAY NUMBER வேலை செய்யவில்லை சார்.. வேறு வழியில்லாமல் மேற்படி அக்கவுன்ட் நம்பரை Add செய்ய வேண்டியதாயிற்று. ்

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பிரச்சினை பற்றி இரண்டு மணி நேரத்திற்கு முன்பு பாபுவிடம்லபேசி Gpay appஐ அப்டேட் பண்ணச் சொல்லியிருந்தேன். அவரும் அப்டேட் செய்துவிட்டார். தற்போது பிரச்சினை சரியாகிவிட்டதென்றே தோன்றுகிறது!

   Delete
  2. உண்மை ஆனால் ரம்மி நீங்கள் ஆட் செய்ய தேவை இல்லை அதே Gpay இல் பேங்க் ட்ரான்ஸ்பார் ஆப்ஷன் உபயோகிக்கலாம் அக்கவுண்ட் நம்பர் கொடுத்து பணம் அனுப்பலாம். நான் அவ்வாறே செய்தேன்

   Delete
 15. 'சித்திரமும் கொலைப்பழக்கம்' அட்டைப்படத்தில் இரத்தம் தெறிக்கிறது! நிஜமான இரத்தம் போலவே இருக்கிறது! இந்தப் புத்தகத்தை திண்ணையில் வைத்துவிட்டு வீட்டுக்குள் செல்லவேண்டாம் என நண்பர்களிடம் அறிவுறுத்தப்படுகிறது! ஏனெனில் நாய்கள் நக்கிவிடும் வாய்ப்புகள் அதிகம்!

  ReplyDelete
 16. சென்னை 600028

  Highlights: இந்தப் படத்தில் வரும் ஒரு வசனம் மிகவும் ஃபேமஸ்!

  நொச்சிக்குப்பம் கோலி : லெக் சைடுலு போடாதடா, ஆஃப் சைடிலேயே போடுடா, அடிக்கிறாங்கனு தெரியுதுல்ல‌ :((

  காசிமேடு கும்ரா : மச்சி, எப்படி பால் போட்டாலும் அடிக்கிறாங்டா :((

  அது மேரி நாம எப்படிப் பதிவு போட்டாலும் நம்மள கட்டம் கட்டமாக கட்ராங்கப்பா :((

  அதுக்காக கமெண்ட் போடாமல் இருக்க முடியுமா என்ன?!

  இதோ..

  சோடா, வெட்டியான் - போன்ற நேர்க்கோட்டுக் கதைகளின் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்தத் தொடர் ட்ரெண்ட் டும் ஒன்று! காரணம் என்னவென்றால்,

  Courtesy ; credit ; நன்றி ; உபயம் என்று எல்லாமே - திரு. விஜயன் சார்!

  //டிரெண்ட் ! இந்த சிகப்புச் சட்டை கனேடிய காவலர் எப்போதுமே அதிர்ந்து பேசாத ரகம் ! தானுண்டு ; தன் பனிவன வேலையுண்டு ; தன்னோட ஹட்ச் டாக் உண்டு ; ஆக்னெஸ் மீது 'இதயம்' முரளி ரகத்திலான காதலுண்டு - என்று சுற்றி வருபவர் ! So பொதுவாய் அவரது கதைகளில் சள சள வென்று பேசித் திரிய ஆட்கள் நிறைய இருப்பதில்லை !//

  எனவே மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! நன்றி!


  மீண்டும் நாளை தொடரும்!

  ReplyDelete
 17. பாபுவின் செல்வன் விரைவில் நலம்பெற்றுவர இறைவனிடம் வேண்டுகிறேன்..

  ReplyDelete
 18. சிகிச்சை முடிந்து குழந்தை நலமோடு வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 19. தலைக்கு தனி தடம் கொடுத்தால் என்ன எடிட்டர் சார் ?

  ReplyDelete
  Replies
  1. இது பேச்சு
   தனி தடம் தனி சந்தா

   Delete
  2. அடுத்த வருஷம் தலை தனித் தடத்தில் வருவார் என்று நம்புவோமாக...

   Delete
 20. பகலறியா பூமி பற்றிய உங்களுடைய விவரிப்புகள் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்கின்றன... ட்ரெண்ட் வேண்டுமா? வேண்டாமா? என்று நீங்கள் கேட்ட போது, வேண்டும் என கை தூக்கியவர்களில் நானும் உண்டு!

  ReplyDelete
 21. பாபுவின் குழந்தை நலமுடன் பல்லாண்டு வாழ இறையருள் வேண்டுகிறேன்.

  ReplyDelete
 22. அருமை சார்...அட்டைப்படம் இது வரை வந்ததிலே டாப்....வண்ணமயம்...சித்திரமும் கொலைப் பழக்கமும் அட்டகாசம்.....
  எனக்கு கதாசிரியர் சொல்வது போல்...தனக்குத் தானே பேசி ....உலக வாழ்க்கய இயல்பா உணர்த்தும் கதைக ரொம்பப் பிடிக்கும்...இம்மாதம் எம்மாதத்திற்கும் மேல் டாப்பா எனக்கிருக்கும் என்பதில் ஐயமில்லே...

  ReplyDelete
  Replies
  1. லார்கோவ அந்த இதழும் சேத்து போடலாமே சார்....லார்கோ காலி இவ்வளவு நாள் கழிச்சி தான் என்பது வருந்தக்கூடிய விசயமா...மகிழக்கூடிய விசயமான்னே தெர்லயே

   Delete
  2. டெக்ச அடுத்த மாசம் மாதமிரு இதழாக்கிடுங்க//
   அருமை இரும்புகையரே.

   Delete
 23. அட்டை படங்கள் அருமை. அதுவும் ரெண்டின் அட்டை
  மிரட்டல் ரகம். சித்திரமும் கொலைப்பழக்கம் ரீசர் மிரட்டல் ரகம். ஆவலுடன் உஉ

  ReplyDelete
 24. //ஏற்கனவே நாம் முயற்சித்திரா ஒரு (புது) டபுள் ஆல்பம் இடையே உள்ளது தான்//

  தரமான நாயகருக்கு நம்மிடையே கிடைத்துள்ள வரவேற்பு வருந்த செய்கிறது. இந்த தொடர் முழுமையாக வெளிவர வேண்டுமென்று விரும்புகிறேன் ஐயா! 🙏🏼🙏🏼

  ReplyDelete
 25. சித்திரமும் கொலை பழக்கம் ஆவலை கிளப்புகிறது. இது போல் மாதம் ஒரு கதை அட்டவணையில் இடம் பிடித்தால் நலம். ட்ரெண்ட், டெட்வுட் டிக், மேக் & ஜாக் மீதும் மய்யல் உண்டு. பெரிய நாயகர் பட்டாளம் இல்லையென்றாலும் 4 புத்தகங்களுக்கான எதிர்பார்ப்பு எகிறி அடிக்கிறது.

  C.I.D. ராபின் மீள்வருகைக்கு சிகப்பு கம்பளம்

  லார்கோ சிறப்பாய் இருக்க அவா

  கிராபிக் டெக்ஸ் - விஷப்பரீட்சை வேண்டாம் சார்

  மிக விரைவில்

  TOP 40


  ReplyDelete
 26. Sep. டெக்ஸ் இல்லாமலேயே ஒரு கொண்டாட்டமான மாதம். அனைத்து புத்தகங்களுமே தெறிக்கவிடும் சித்திரங்கள். ட்ரெண்ட். மெல்ல, மெல்ல பெருவாரியானவாசகர்களின் ஆதர்சநாயகராகி வருகிறார். கரூர். ராஜ சேகரன்.

  ReplyDelete
 27. வெளிவராத அந்த இரண்டு ஆல்பங்களுடன் சேர்ந்து, லார்கோவின் மறுவரவை ஆவலுடன எதிர்பார்க்கிறேன்.
  லார்கோவின் ஆல்பங்கள் 18ம் (கணக்கு சரிதானா), எனக்கு மிகவும் பிடித்தமானவை.
  கதைகளில் நாடு விட்டு நாடு ஓடி டயர்ட்டாகிப்போனதால சில மாதங்கள் ஓய்வு தேவைபபட்டிருக்கு. கிட்டங்கியை காலி செய்துவிட்டு மறுபடி கிளம்பிவிட்டார் கோடீஸ்வரக் கோமகன்.
  Welcome back to largo.

  ReplyDelete
 28. சென்னை 600039

  ஆசிரியரின் பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் போது தான், ஒவ்வொரு புதிய வெளியீடுகளின் முன்னணி பின்னணி விவரங்கள் தெரிய வருகின்றன! கதைநாயகன் ; கதைக்களம் ; கதைமாந்தர்கள் ; காலகட்டம் ; முன்னோட்டம் - என எல்லாமே தெரிந்து கொள்ள முடிகிறது! ஹ்ம்ம்.. சில வருடங்கள் இந்த பிளாகில் இருந்து காணாமல் போன காரணத்தினாலோ என்னவோ - காமிக்ஸ் வாசிப்பு முடங்கிப் போய்விட்டது என்பதை மிகவும் தாமதமாக தான் அறிகிறேன்!

  டெட்வுட் டிக்:

  இங்கு சிலர் பட்டமரம், செத்த மரம் என்று கலாய்த்தாலும் - இம்முறை இது நிச்சயம் என் வாசிப்பு லிஸ்டில் இருக்கிறது! நிச்சயம் இது வடசென்னை கலாச்சாரத்தை ஒத்து இருக்கும் என்று தோன்றுகிறது!

  காமிக்ஸ் வாசிப்பு எனும் விருந்தில் - இந்தக் கதை பிடித்ததாக இருந்தால் மோர் ஆக ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவோம் ; பிடிக்கா விட்டால் உப்பாக மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம்! அதற்காக விருந்தை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை!

  ReplyDelete
  Replies
  1. சென்னை 600013

   சித்திரமும் கொலைப்பழக்கம் :

   மீண்டும் இந்த பிளாகை தவறவிட்ட ஒரு தருணம்! இது பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆசிரியரின் பதிவுகளைப் படித்ததாக ஞாபகம் இல்லை!

   ஒரு யூகமாக, காசிமேடு - சென்னை கலாச்சாரத்தைக் கற்பனை செய்து கொள்கிறேன்! வந்தவுடன் படித்துப் பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று!

   பிடித்து இருந்தால், இன்னொரு கரண்டிச் சாதத்தை காரக் குழம்பில் பிசைந்து சாப்பிடுவோம் ; பிடிக்காவிட்டால் நெய்யுடன் பருப்பை கலந்து ஒரு கவளம் விழுங்குவோம்!

   டெட்வுட் டிக் ஆக இருந்தால் என்ன ; சித்திரமும் கொலைப்பழக்கமுமாக வந்தால் என்ன - வந்தாரை வாழவைக்கும் சென்னை வாசிகள் நாங்கள்!

   குறையொன்றும் இல்லை!

   Delete
 29. இம்மாதத்து அறிமுகங்கள் முடிந்ததால் அடுத்து கொரியர் அனுப்பிய பதிவே வரும் என நினைக்கிறேன். வெள்ளி முன்பு கிடைக்க முயலுங்கள் சார் 🙏🏼

  சித்திரமும் கொலை பழக்கம் அட்டை பார்த்தவுடனே பிடித்துவிட்டது பகலரியா பூமி பார்க்க பார்க்க பிடிக்கிறது.

  தலையில்லாத மீண்டும் ஒரு மாதம். பொறுத்துக்கொள்கிறேன் 😀

  ReplyDelete
  Replies
  1. //தலையில்லாத மீண்டும் ஒரு மாதம். பொறுத்துக்கொள்கிறேன் 😀//--😍

   Delete
 30. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ஆசிரியரே..

  ReplyDelete
 31. // டிரெண்ட் தொடரின் ஆல்பம் # 6 ! இன்னமும் இரண்டே கதைகளோடு "சுபம்" போடப்படவுள்ள தொடர் ! //
  அடடே ட்ரெண்ட் ஆல்பம் முடியப் போகுதா...
  ட்ரெண்ட் கதைகள் மெல்லிய நீரோடை போல,எனக்கு பிடித்த தொடரும் கூட...
  ட்ரெண்ட் உட்பக்க டீசர் அருமை,ஒரு சித்திர விருந்து காத்துள்ளது...
  அட்டைப்படத்தில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று தோன்றுகிறது,ட்ரெண்ட் காய்ச்சலில் இருந்து எழுந்து வந்தவர் போல இருக்கிறார்...

  ReplyDelete
  Replies
  1. ///ட்ரெண்ட் காய்ச்சலில் இருந்து எழுந்து வந்தவர் போல இருக்கிறார்///

   கனடாவிலும் கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாமில்லையா?!! ;)

   Delete
  2. // கனடாவிலும் கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாமில்லையா?!! ;) //
   ஹா,ஹா,ஹா,ஒருவேளை சூரணம்,சூப் எல்லாம் குடிக்காம வந்திருப்பாரோ...!!!

   Delete
 32. சென்னை 600013

  சித்திரமும் கொலைப்பழக்கம்:

  மீண்டும் இந்த பிளாகை தவறவிட்ட ஒரு தருணம்! இது பற்றிய குறிப்புகள் அடங்கிய ஆசிரியரின் பதிவுகளைப் படித்ததாக ஞாபகம் இல்லை!

  ஒரு யூகமாக, காசிமேடு - சென்னை கலாச்சாரத்தைக் கற்பனை செய்து கொள்கிறேன்! வந்தவுடன் படித்துப் பார்ப்போம் எப்படி இருக்கிறது என்று!

  பிடித்து இருந்தால், இன்னொரு கரண்டிச் சாதத்தை காரக் குழம்பில் பிசைந்து சாப்பிடுவோம் ; பிடிக்காவிட்டால் நெய்யுடன் பருப்பை கலந்து ஒரு கவளம் விழுங்குவோம்!

  டெட்வுட் டிக் ஆக இருந்தால் என்ன ; சித்திரமும் கொலைப்பழக்கமுமாக வந்தால் என்ன - வந்தாரை வாழவைக்கும் சென்னை வாசிகள் நாங்கள்!

  குறையொன்றும் இல்லை!

  ReplyDelete
 33. // காமிக்ஸ்சுக்குப் புதிதானதொரு நாயகர் ; பெரும்பான்மைக்கு monologue கதை சொல்லல் ; பாரிஸ் நகரின் பின்னணியில் அரங்கேறும் சடுகுடு //
  சித்திரமும் கொலைப் பழக்கம் ஆவலைத் தூண்டுது சார், மூளைக்கு வேலை வைக்கும் கதைகளையும்,சிந்தனை தூண்டும் கதைகளையும் வாசிப்பதே ஒரு அலாதியான அனுபவம் தான்...

  ReplyDelete
 34. // உலக சினிமாக்களையெல்லாம் நெட்ப்லிக்சிலும், இன்ன பிற தளங்களிலும் போட்டுத் தாக்கி வரும் உங்களுக்கு இக்கட கதையினை யூகிப்பதில் பெருசாய் சிரமங்களும் இராது தான் ! //
  உண்மைதான் சார்,இந்த இரண்டு வருடங்களில் நிறைய வெப் சீரிஸ் தொடர்கள் பார்த்தாச்சி...
  எல்லாமே பார்த்து பார்த்து அடுத்ததை பார்க்கும்போது கதையின் முடிச்சு,சஸ்பென்ஸ் இப்படி இருக்குமோ,அப்படி இருக்குமோ என்று கணித்து பெரும்பாலும் அதில் ஏதாவது ஒன்று க்ளிக் ஆகிடும்...

  ReplyDelete
 35. // இத்தாலியில் போனெல்லி சூப்பர் TEX என்ற பெயரில் ஒரு மாதாந்திர 144 பக்க கலர் வரிசையினை அறிவித்துள்ளனர் ! //
  இந்த மனிதர் எத்தனை வடிவத்தில்தான் வந்து சாகஸம் செய்வாரோ...!!!

  ReplyDelete
 36. // Maybe இந்தப் புது வரவு கொஞ்சம் மிதமாய் சிண்டைப் பிய்க்க செய்யும் பாணியில் இருப்பின் - 2023 அட்டவணையில் பில்லியனரின் மறுவருகை இருக்கக்கூடும் !! //
  வாவ் உயர்ந்த மனிதருக்காக வெயிட்டிங்...

  ReplyDelete
 37. // அப்புறம் இது போன மாதம் கலரில் மெகா சைசில் வெளிவந்துள்ளதொரு 52 பக்க கலர் டெக்ஸ் நாவல் !!! //
  ஹும்,பெருமூச்சுதான் விடத் தோணுது...!!!

  ReplyDelete
 38. // அதே போல, இதழ் # 200-ல் மங்களம் கண்டிருந்த நமது CID ராபின் தொடருக்கும் போனெல்லி ஒரு புதுத் துவக்கம் தந்துள்ளனர் ! //
  அடடே...

  ReplyDelete
 39. // செப்டெம்பரின் 3 கலர் இதழ்களுள் இரண்டு அச்சாகியாச்சு & பாக்கி 1 & 1 black & white இதழ் திங்களன்று அச்சுக்குச் செல்லும் //

  மொத்தம் நான்கு இதழ்களா சார் ???!!!

  // So அடுத்த சில நாட்களில், பைண்டிங் நிலவரத்தைப் பார்த்த கையோடு டெஸ்பாட்ச் செய்யும் தேதி பற்றிச் சொல்லிடுவேன் ! //
  8 ஆம் தேதி அனுப்பினால் கூட போதும் சார்,விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி நாட்களில் நம் இதழ்களுடன் கொண்டாட வசதியாக இருக்கும்...

  அடுத்து தம்பி குமாரின் பதில்:நானும் இதையே சொல்ல நினைத்தேன் அண்ணா.....

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணு கூடிட்டிங்களா அண்ணனும் தம்பியும்.....!!!

   சார், அவசரம் இல்லை மெதுவாக அடுத்த வாரம் அனுப்பி வைக்கவும்.😉😜

   Delete
  2. விஜயன் சார், அவசரம் ஏதும் இல்லை மெதுவாக பிள்ளையார் பண்டிகை முடிந்த பின்னர் அனுப்பி வைக்கவும்.:-) புத்தகங்கள் பைன்டிங் எல்லாம் உங்களுக்கு திருப்தி என்ற பிறகு அனுப்பி வையுங்கள் :-) அப்புறம் நமது புத்தக முகவர்கள் போன மாத புத்தகங்களை விற்பனை செய்ய சரியான இடைவெளி இருக்கும் என நினைக்கிறேன் :-)

   விஜயராகவன் எப்பூடி :-) அண்ணன் தம்பி வரதுக்குள்ள சிவகாசி காமிக்ஸ் குடொனில் ஒளிந்து கொள்ளலாம் :-)

   Delete
  3. தோ வரோம்ல தூத்துக்குடிக்கு...

   Delete
  4. ஏலே வாலே ஊருக்குள்ளே :-) சிற்ப்பாக செய்து விடாலாம்லே :-)

   Delete
 40. // சிகிச்சை முடிந்து குழந்தை நலமோடு வீடு திரும்ப வேண்டிக்கொள்வோம் ! //

  கண்டிப்பாக சார்...

  // இயன்றவர்கள் இயன்றதை நேரடியாய்உதவிடுங்கள் நண்பர்களே **** - please !!🙏 And of course - நமது பிரார்த்தனைகளும் அந்தக் குழந்தையுடன் இருக்கட்டுமே ? //

  தேவையான உதவிகளும்,சரியான பிரார்த்தனைகளும் கிடைக்கப் பெற்று எல்லாம் வல்ல பரபிரம்மத்தின் ஆசியுடன் அந்த குழந்தை மீண்டு வருவான் என்று நம்புவோமாக......

  ReplyDelete
 41. எனது நிரந்தர ஆசிரியருக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்💐💐💐💐💐💐

  ReplyDelete
 42. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார் உங்களுக்கும் ஜூனியருக்கும்.

  ReplyDelete
 43. மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் சாருக்கும் ஆசிரிய பெருந்தகைகளுக்கும், ஆசிரியர் தின வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏

  எடிட்டர் சரா் & ஜூனியர் எடிட்டருக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்💐💐💐💐💐💐

  ReplyDelete
  Replies
  1. "ராகவா...நீ பொரோட்டா மாஸ்டர் ; கராத்தே மாஸ்டரில்லே !!" வடிவேலின் டயலாக் தான் இங்கே ஞாபகத்துக்கு வருது சார் !

   மெய்யான ஆசிரியப் பெருமக்களுக்கான இந்த தினத்தில் நாமளும் லைனிலே சேர்ந்துக்கிறது பொருத்தமாகாது !

   Delete
  2. எதுக்கு சார் நம்ப சென்னை ராகவனை கூப்பிடுறிங்க :-)

   Delete
  3. "ராகவா...நீ பொரோட்டா மாஸ்டர் ; கராத்தே மாஸ்டரில்லே !!" வடிவேலின் டயலாக் தான் இங்கே ஞாபகத்துக்கு வருது சார் !

   மெய்யான ஆசிரியப் பெருமக்களுக்கான இந்த தினத்தில் நாமளும் லைனிலே சேர்ந்துக்கிறது பொருத்தமாகாது

   எங்களுக்கு நீங்கதான் கராத்தே மாஸ்டர்

   Delete
 44. விஜயன் சார், டிரெண்ட் எனக்கு மிகவும் பிடித்த நாயகர். இந்த முறை டீசர் பக்கங்களை பார்க்கும் போது வழக்கமான கதையில் இருந்து இது கொஞ்சம் வித்தியாசமான கதை என தெரிகிறது. மிகவும் ஆர்வமுடன் உள்ளேன் இந்த கதையை படிக்க.

  அட்டைப்படம் இன்னும் சிறப்பாக இருக்கலாம், டிரெண்ட் முகத்தை இன்னும் கொஞ்சம் சரி செய்து இருந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 45. சித்திரமும் கொலைப்பழக்கம் அட்டைப்படம் படம் முதல் உட்பக்க டீசர்வரை இந்த கதை எனது படிக்கும் ஆவலை பன்மடங்காக ஆக்கிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் பன்(னு)மடங்கு ஆவலே!

   இம்முறையாவது ட்ரெண்ட் கொஞ்சம்
   ட்ரெண்டியாகத் தன் காதலை வெளிப்படுத்துவாரா..
   அல்லது
   ஆக்னெஸிடம் தன்
   வீக்னெஸைத் தொடருவாரா என்று
   பார்த்திட ஆவல்!

   Delete
  2. இதயமே.....என் இதயமே....

   Delete
  3. உங்களை இனி பன் இளவரசர் என கூப்பிடலாம்.

   Delete
  4. அப்ப இந்த கதையிலும் காதலை சொல்ல போவதில்லை என சொல்லுங்கள் விஜயன் சார்.

   Delete
  5. அடுத்த ஆல்பம் வரைப் பொறுங்கோ சார் !

   Delete
  6. இவரின் கதை இன்னும் இரண்டுதான் உள்ளது என்றால் அடுத்த வருடம் இரட்டை ஆல்பமாக வெளியிட முடியுமா சார்? கிட்டங்கியை இவர் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருந்தால் முயற்சி செய்யலாம் சார்.

   Delete
 46. விஜயன் சார், லார்கோ நமது கிட்டங்கியை விட்டு கிளம்பி விட்டார் என்பது மகிழ்வாக உள்ளது.

  புதிய லார்கோ நிதானமாக உங்களுக்கு இந்த கதை சரிபடும் என்றால் வெளியிடுங்கள். லார்கோவின் முதல் 6 கதைகள் என்னை மிகவும் கவர்ந்தது ஆனால் அதன் பின்னர் உள்ள கதைகள் அந்த அளவுக்கு என்னை ஈர்க்கவில்லை.

  ReplyDelete
 47. சார் வணக்கம் எனக்கு ஒரு ஆசை... ராணி காமிக்ஸ் புத்தகங்கள் உங்களால் மறுபதிப்பு பண்ண முடியுமா சார்... இன்றும் என்றும் எப்பொழுதும் முத்து காமிக்ஸ் மற்றும் லயன் காமிக்ஸ் பிரியன்

  ReplyDelete
  Replies
  1. பதிலும் தெரியும் ; ஆனாக்கா அதே கேள்வியை கேட்கிறதிலே உங்களுக்கோர் ஆனந்தம் ! விடாதீங்கோ ; போட்டுத் தாக்குங்கோ !

   Delete
  2. சார்.. அப்படியே அந்த பைக்கோ க்ளாசிக்ஸ் கதைகளையும் மறுபதிப்பா போட்டுடுங்க சார்! குறிப்பா டான் குவிஸாட், கால யந்திரம், கிட்நாப்டு, டாம் ஸாயர் கதைகள்லாம் எனக்கு உங்க மொழிபெயர்ப்பில் படிக்க ஆசையோ ஆசை!

   Delete
  3. பார்வதி பப்ளிகேஷன்ஸ் கதைகளை விட்டுட்டீங்களே.

   Delete
  4. Erode Vijay -

   /* டான் குவிஸாட், கால யந்திரம், கிட்நாப்டு, டாம் ஸாயர் */

   Now being re-published in Malayalam and English. 45 INR per book. They are having ideas to extend to Tamizh as well as they are getting many queries. I am buying the English ones for my daughter. 5-6 albums already released !!

   Delete
  5. ///Now being re-published in Malayalam and English///

   அடடே!! உற்சாகமூட்டும் செய்தியா இருக்கே!!!

   நாளைக்கே யாராவது மலையாள டீச்சரைத் தேடிப் பிடித்து ட்யூஷன் சேர்ந்துக்கிடலாம்னு இருக்கேன்! :)

   Delete
 48. ராணி காமிக்ஸ்தான் மறுபதிப்பு வராது. கமெண்டாவது மறுபதிப்பு வரட்டுமே.

  ReplyDelete
 49. பகலறியா பூமி -எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாய் ஏற்றிவிட்டது.சித்திரங்கள் உண்மையிலேயே அதகளம் தான். சீக்கிரம் இதழைக் காண ஆசையோ ஆசை.

  ReplyDelete
 50. யார் சார் இந்த ட்ரெண்ட் அட்டைப்படத்தை வரைந்தது? வழக்கமா அப்படியே ஒரிஜினல் கவரைத்தானே பயன்படுத்துவீர்கள்? இதில் மட்டும் ஏன் மாற்றம்? (ஏமாற்றம்!!)

  ReplyDelete
  Replies
  1. சென்னை ஓவியர் வரைந்து. எனக்கும் ஏமாற்றமே. கொரில்லா சாம்ராஜ்யம் அட்டைபடத்தை அட்டகாசமாக வரைந்து இருந்தார். டிரெண்டை இன்னும் கொஞ்சம் சிறப்பாக வரைந்து இருக்கலாம்

   Delete
  2. அது சென்னை ஓவியரின் பிழையல்ல நண்பர்களே! உண்மையில் அவர் ஒரிஜினலை விடவும் நன்றாகவே வரைந்திருக்கிறார். ஓரிஜினலோடு ஒப்பிட்டால் இது எவ்வளவு பெட்டர் என்பதைத் தெரிந்துகொள்ள 'இங்கே க்ளிக்குங்க பாஸு'

   Delete
  3. சென்னை ஓவியர் வரைந்தது..

   It shows he is wise;the original art is otherwise.

   Delete
  4. யார் சார் அது சென்னை ஓவியர்? அப்படியொரு பேரா? பெயர் தெரியுமா? அவரது ஏனைய படைப்புகளையும் பார்க்க உதவியாக இருக்குமே?

   Delete
  5. உண்மை தான் விஜய். இந்த முறை ஓரிஜினலே இப்படிதான் எனும் போது ஓவியர் வரைந்த இந்த அட்டைப்படம் பற்றிய எனது கருத்தை வாபஸ் வாங்கி கொள்கிறேன்.

   Delete
 51. //அப்புறம் இது போன மாதம் கலரில் மெகா சைசில் வெளிவந்துள்ளதொரு 52 பக்க கலர் டெக்ஸ் நாவல் !!! //

  கொரோனா இந்த அளவுக்கு டெக்ஸை பாதிக்கும்னு எதிர்பார்க்கல சார். இப்டி எலும்பும் தோலுமாயிட்டாரே மனுசன்!

  ReplyDelete
 52. Snakeman!!!!

  பாம்புத்தீவு,சர்ப்பங்களின் சாபம், சர்ப்பத்தின் சவால் வரிசையில் மற்றுமோர் ஸ்நேக்பாபு:-)
  தலைப்பு என்னவாக இருக்கும்?

  ? மஞ்ச சட்டை உறித்த சர்ப்பச் சட்டை

  ?கர்ப்பம் கலங்கிய சர்ப்பம்

  ?நாகம் அழிக்கவோர் யாகம்

  ? அரவமின்றி ஓர் அரவம்

  டெக்ஸ் மலைச்சரிவில் மாட்டிக் கொள்ள கிட்டும் ,டைகர் ஜாக்கும் இணைந்து ஸ்நேக்மேனை எதிர்கொள்வது போல் ப்ரோமோவில் போட்டிருக்கிறார்கள்..ஒருவேளை...ஒருவேளை ..அப்படியாயின் கிட்டுக்கு கிட்டுமா ஒரு காதல் தேவதை?

  ReplyDelete
  Replies
  1. "கிட்டின் கில்மா "

   இந்த டைட்டில் எப்புடி சார் ?

   Delete
  2. ///கர்ப்பம் கலங்கிய சர்ப்பம்///

   ///கிட்டின் கில்மா ///


   :)))))))

   Delete
  3. ஏன் சார் ஏன் கிட்டையும் ஒரு வழி செய்ய முடிவு பண்ணிவிட்டீங்களா? :-)

   Delete
  4. மஞ்ச சட்டை உறித்த சர்ப்பச் சட்டை

   ?கர்ப்பம் கலங்கிய சர்ப்பம்.
   வேற லெவல் டைட்டில்😀😀😀

   Delete
 53. ட்ரெண்டின் மோனோலாக்குகளில் பிரெஞ்சு, எத்தியோப்பிய,லத்தீன் அமெரிக்க கவிதை வரிகள் இடம் பெறாதவரை உத்தமம்..

  முடியல...

  ReplyDelete
  Replies
  1. Ha Ha - same boat - so much that post reviews I skipped second album of Trent - the one where the villain sings - which itself amounts to third degree murder :-D :-D

   Delete
  2. அடுத்தவாட்டி EBFக்கு வாங்க ராக் ஜி.. நம்ம சிஷ்யப்பிள்ளையை வச்சு கச்சேரி நடத்தறேன்.. அதுக்கப்புறமா உங்களுக்கு அந்த ரெண்டாவது ஆல்பம் ரொம்பவே அட்டகாசமா தோனப்போவது உறுதி!!

   செனா அனா - உங்களுக்குந்தேன்!!

   முடிஞ்சீங்க ரெண்டு பேரும்!

   Delete
  3. சனிக்கிழமை இரவு 10மணிக்கு பாகவதர்கள்லாம் பாட ஆரம்பிச்சாங்கனா 11மணி... 12மணினு நேரம் போறதே தெரியாதுன்னேன்....😍

   ஒருமணிக்குலாம் ஓவரா போயி அந்த "பச்சை குதிரை" தாண்டுவாங்க பாருங்க....அட டா.. அற்புதமான காட்சி....!!! அதுலு சினிமா பெயரை கரக்டா கண்டுவேற பிடிக்கனும்பாங்க...!!! ஷெரீப்பு உசரத்துக்கு நினைச்சி பாருங்க, அவரை தாண்டி குதிக்க முடியுமா....???

   ராக்ஜி@ & செனா அனா ஜி@ நீங்களாம் வந்தா மட்டும் போதும்...ஆமா வந்தா மட்டும் போதும்!!!😉😜

   ஆல்ரெடி சிவ்காசியில இருந்து ஓரு டோக்கன் போட்டு இருக்காங்க....!!!

   Delete
 54. பகலறியா பூமி!

  ம்ம்ம்..நீங்க சொல்றத பாத்தா ஹனிமூன் டெஸ்டினேஷன் மாதிரி இருக்கு..

  அக்னெஸ் இல்லாம ட்ரெண்ட் தனியா போய் என்னதான் பண்றாரு?

  ReplyDelete
  Replies
  1. க்கும்! அக்னெஸ் இருந்திட்டாமட்டும்..

   Delete
  2. //
   அக்னெஸ் இருந்திட்டாமட்டும்..//

   ஈவி@ அடுத்த பாகத்தில் விடை இருக்கு..😉

   ஆக்னெஸ்ஸை கண்ணாலம் முடிச்சி.....ட்ரெண்டுக்கும் ஒரு கனாகாலம்...!!!

   Delete
  3. ///ஆக்னெஸ்ஸை கண்ணாலம் முடிச்சி.....ட்ரெண்டுக்கும் ஒரு கனாகாலம்...!!!///

   அஹ்ஹா!! அப்படீன்னா எடிட்டர் அடுத்த மாசமே அடுத்த பாகத்தை போட்டார்னா நல்லாருக்கும்!! 😍😍😍

   Delete
 55. பகலறியா பூமி அட்டைப்படம் மிகவும் பொருத்தமாக அழகாக அற்புதமாக இருக்கிறது.

  சென்னை ஓவியர்க்கு வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

  ReplyDelete
 56. 🎉🎉🎉🎉💐🌹🌹🌹ஆசிரியர் தின வாழ்த்துகள் எங்களின் நிரந்தர ஆசிரியரே..🦸🦸🦸

  ReplyDelete
 57. மஞ்சச்சட்டை உரித்த சர்ப்பச் சட்டை. ஹா ஹா ஹா, இந்திரஜால் காமிக்ஸ் என்றால்இது சாத்தியமே சூப்பர் டைட்டில். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 58. சார் வாண்டுமாமாவின் கதைகள்நாம்வெளியிட வாய்ப்புண்டுங்களா அப்புறம் நம்ம அதிமேதை அப்பு ஒருதொகுப்பு புத்தகமாகவர முயற்ச்சிப்பீர்களா. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ஜி.. இதென்ன பிரமாதம்? இப்ப நான் கேட்கிறேன் பாருங்க!

   தினத்தந்தி 'சிந்துபாத்' கதையை மறுபதிப்பா வெளியிட நமக்கு வாய்ப்புண்டுங்களா சார்?

   Delete
  2. அட மலர்மதி, மலர், பொன்னி காமிக்ஸையும் சேர்த்துக்கொள்ளு(ல்லு)கள்

   Delete
  3. //தினத்தந்தி 'சிந்துபாத்' கதையை மறுபதிப்பா வெளியிட நமக்கு வாய்ப்புண்டுங்களா சார்?//

   😂Super Sir !!
   ஒரு வண்ண பதிப்பு, ஒரு b & w. !! குண்டு book.
   மேக்ஸி size.
   Hardcover
   முன்பதிவு மட்டுமே

   PS:.......இரண்டு குண்டு டெக்ஸ் வில்லர் புதிய பதிப்பு,, முன்பதிவு செய்பவர்களுக்கு இலவசம் !!
   😁😁😁


   Delete
  4. எனக்கு தேவில வந்த அந்த தங்க சிறகு பறவையும் முடிஞ்சா தினமணி சூப்பர் தும்பி

   Delete
 59. Edi ji, ஐம்பத்தி இரண்டு பக்க டெக்ஸ் கலரை வரும் வருடமே சூட்டோடு சூட்டாக போட்டு விடலாமே.

  ReplyDelete
 60. ட்ரெண்ட் வெளியீடு எண் 404 என்று இருக்கிறதே. எப்படி?

  ReplyDelete
  Replies
  1. இரத்தப்படலம் வண்ண மறுபதிப்பு2.0 ...401&402


   டெட்வுட் டிக்...403

   ட்ரெண்ட்......404

   Delete
 61. டெக்ஸ் இல்லையாம்ப்பா...

  ReplyDelete
  Replies
  1. எடிட்டர் சார் அனுபவமும் மேதமையும் உள்ளவர்..personally I feel relieved that there is no TeX for this month.லயன் -400 -ன் 300-க்கும் மேற்பட்ட பக்கங்கள்+ சி.ஒரு. சிலுவை- க்கு பிறகு இந்த இடைவெளி அவசியமாகிறது..

   Even Too much light could blind you..

   Delete
  2. செனா ஆனா...
   ஒரு பொருட் பன்னர்த்தம்...

   Delete
 62. டெட்வுட் இருக்காக....

  ட்ரெண்ட் இருக்காக...

  அண்ணன்க கூட மேக்&ஜாக் இருக்காக...

  ReplyDelete
  Replies
  1. எங்கே நிம்மதி

   Delete
  2. எல்லாம் இருக்காக...
   ஆனா...
   மின்னல் இல்லையே(டைகர்)

   Delete
  3. இல்லாத கதையை கேட்டா எங்கிட்டு கிடைக்கும்....!!! அதான் 28ம் வந்துட்டதே.

   Delete
  4. மின்னல் எப்பும் அப்படித்தான் சித்த நேரம் தான்மின்னும்; அப்பறம் மரணம் தான்.

   Delete
  5. ///எல்லாம் இருக்காக...
   ஆனா...
   மின்னல் இல்லையே(டைகர் ///

   வரும்ணே..!

   புதுசா ஆரம்பிச்சிருகாகளாம்..!

   வரட்டும்.. வரட்டும்...!

   Delete
 63. பாபு அண்ணாவின் மகன் குணமடைந்து நல்லபடியாக வீடு திரும்பிட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
 64. விஜயன் சார், என்னாது டெக்ஸ்க்கு கிராபிக் நாவலா :-) ஏற்கனவே வந்த அந்த மாக்ஸி சைஸ் கதையை இன்னும் நான் படித்து முடிக்கவில்லை! சொல்ல போனால் படிக்க முடியவில்லை! வேணாம் என்பது எனது கோரிக்கை! இப்போது வரும் டெக்ஸ் கதைகளை போல் உள்ள கதைகளை தொடர்ந்து வெளிஈடுங்கள். அடித்து விளையாடும் ரோஹித்தை சடகோபன் ரமேஷ் போன்று டெக்ஸ் ஆக்கி விடாதீர்கள் சார் :-)

  ReplyDelete
  Replies
  1. நீதானப்பா கிநா கதைகள சிலாகிச்சு எழுதுறது...படத்தை பாத்தியா பயங்கரமா இருக்கும் போல ...தலைப்பே மெர்சலா இருக்கே...ஒருவேளை இந்தக்கதை நல்லாருந்திச்சுன்னா

   Delete
  2. நான் டெக்ஸின் கிநா கதைகளை சொன்னேன்ல :-) ஒரு வேளை நீ கனவு கண்டு இருப்பல :-)

   Delete
 65. சுகந்தண்ணே சேட்டன்மாரே..

  சிவப்பாய் ஒரு சிலுவை
  சூ மந்திரகாளி

  ரெண்டும் ரெண்டு ரத்தினங்கள்.. செம்ம.!

  ReplyDelete
 66. லார்கோ புதிய கதைகளில் என்ன பிரச்சினை சார்
  குண்டக்க மண்டக்க ரக கதையாக இருந்தாலும் கட்டாயம் போடுங்கள் 🥰

  ReplyDelete
 67. எத்தனை பேர் படிச்சிருக்கிங்க.!?
  அலட்டல் இல்லாத அருமையான ஒரு கதை..😍

  பிழைப்பு தேடி ஓரிடம்விட்டு பிறிதோரிடம் செல்லும் குழு.. அதற்கு வழிகாட்டியாக வருபவன்தான் மாக்.. கதையின் நாயகன் போன்றவன். (ஆனால் இங்கே கதைதான் நாயகன்).

  இடையில் அவர்களுக்குள் ஏற்படும் குழப்பங்களால் மாக் குழுவினரால் விரட்டப்படுகிறான்.!

  மாக் இல்லாத குழு கொஞ்சம்கொஞ்சமாக அழிந்து போகிறது.

  வழியில் சந்திக்கும் ஒரு புரபொசரும் மாக்கும் சேர்ந்து தங்கத்தை கண்டறிகிறார்கள்.. அதையொட்டி அங்கே மக்கள் வெள்ளம் படையெடுத்து ஒரு புது நகரம் உருவாகிறது.!

  அதைத்தொடர்ந்து போக்கிரிகள்.. செவ்விந்தியர் பிரச்சினைகள்.. என மிகமிக யதார்த்தமான மிகைப்படுத்துதல் இல்லாத அருமையான கதை.!

  ReplyDelete
  Replies
  1. இந்த கதையின் பெயர் ..... பூமி!

   ( அந்த வார்த்தைய எழுத கொஞ்சம் அலர்ஜியா கீதுப்பா)....:)

   Delete
  2. ///இந்த கதையின் பெயர் ..... பூமி!

   ( அந்த வார்த்தைய எழுத கொஞ்சம் அலர்ஜியா கீதுப்பா)....:)///

   ஏன் செனா... மறுபதிப்பு கேட்ருவாங்கன்னா.!?
   😂😂😂😂

   Delete
  3. 'முத்த பூமி' எனும் தலைப்பில் ஏதாவது கதை வந்தால் என்னைப் போன்ற இளவரசர்கள் (ஷெரீப்.. இள.. இள!) அந்தப்புரத்தில் அமர்ந்து படிக்க வசதியாக இருந்திடும்!

   Delete
  4. ///என்னைப் போன்ற இளவரசர்கள்///


   நாதஸ் முன்னமாதிரி இல்லப்பா, திருந்திட்டான்..

   யாரு சொன்னா..

   நாதஸே சொன்னான்..


   அப்பிடி இருக்கு குருநாயரே..!

   Delete
  5. ///முத்த பூமி' எனும் தலைப்பில் ஏதாவது கதை வந்தால் என்னைப் போன்ற இளவரசர்கள் (ஷெரீப்.. இள.. இள!) அந்தப்புரத்தில் அமர்ந்து படிக்க வசதியாக இருந்திடும்!///


   :-))))

   Delete
  6. //அப்பிடி இருக்கு குருநாயரே..!//

   அந்தப்புரத்துக்குப் போய் யாருடி நீ மோகினின்னு பாடி ஆடாம கதை படிக்கறேன்னு சொன்னப்பவே இளவரசர் அல்ல; ரிடையர்ட் ஆன கிளவரசர்னு தெரிஞ்சிருச்சே மச்சான்.

   Delete
  7. அதெல்லாம் பாடி ஆடி சர்வநாடிகளும் ஓய்ஞ்சதுக்கப்புறம் ரெஸ்ட் எடுக்கும்போதுதானுங்க கதை படிக்கிறதே!

   இள.. இள! கிர்ர்ர்ர்..

   Delete
  8. /* ( அந்த வார்த்தைய எழுத கொஞ்சம் அலர்ஜியா கீதுப்பா)....:) */

   ஆங் .. எடிட்டர் சார் 
   அந்த black and whiteல - நல்ல thick தாளில் ஒரே எடிஷனா '....... படலம்' எப்போ முன்னறிவிப்பு சார்? ஜனவரி வருதே !!

   Delete
 68. ///அடித்து விளையாடும் ரோகித்தை சடகோபன் ரமேஷ் போல ஆக்கிவிடாதீர்கள்சார்///பரணிfromதூத்துக்குடி+11111111 111 111. கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 69. சிவகாசியில் இன்னிக்கு ஒரே பரபரப்பாமே...!!!

  ReplyDelete
  Replies
  1. அண்ணே நான் வந்தேன் அதற்கு முன் நீங்கள் முந்தி விட்டீர்களே.

   சார் இந்த வாரம் புத்தகங்கள் கிளம்ப வாய்ப்பு உண்டா சார்? வெள்ளி அனுப்பினால் கூட போதும்.

   Delete
  2. யாரு கேட்டா என்ன தம்பி நமக்கு பிரசாதம் கிடைச்சா சரி...

   Delete
  3. ஆமண்ணா. பிரசாதம் வந்தால் சரி

   Delete
 70. ஆனா நம்ம சிங்கமுத்து வாத்தியார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல,ஆபிஸுக்கு போன் பண்ணி கேட்டா சொல்லவே மாட்டேங்கறாங்க...
  அடிச்சி கூட கேப்பாங்க அப்பவும் சொல்லுறாதிங்கன்னு சொல்லிட்டாரு போல...

  ReplyDelete
 71. !அ. ரவி சார் இப்பயாராவது உங்களுக்கு போன்போட்டு எனக்கு புத்தகம் வந்துருச்சு உங்களுக்கு இன்னும் வரலையான்னு கேட்டா எப்படி இருக்கும். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. வொய் திஸ் கொல வெறி சாரே...

   Delete
 72. ஹைய்யா புதிய பதிவுன்னு சொல்லலாம்னு வந்தா.....!!!

  ReplyDelete
  Replies
  1. வந்துடும் வந்துடும் இன்னைக்கு கண்டிப்பா வந்துடும்

   Delete
  2. புக்கு வரும் பின்னே - புதுப்
   பதிவு வரும் முன்னே!
   காத்திருப்போம் கண்ணே - கைசேர்ந்ததும்
   தந்தானத் தன்னே!

   Delete
 73. எடிட்டர் திருS.விஜயன் சாருடனான என் முதல் சந்திப்பு....

  *இன்று தேதி 09/09... சரியாக 9ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில் என்மனங்கவர் டெக்ஸை அறிமுகப்படுத்திய நம் உளங்கவர் ஆசிரியர் அவர்களை முதன்முறையாக சந்திக்கும் வாய்ப்பு அமைந்த நாள்.... ரொம்ப ரொம்ப விசேசமான நாள், என் காமிக்ஸ் டைரியில் இன்று... அந்த நாளை அப்படியே நினைவுபடுத்திப் பார்க்கிறேன் இன்று...

  *இந்த காமிக்ஸ் உலகம் வலையால் கட்டுண்ட பிறகு நடந்த நிகழ்வுகளில், மறக்க இயலா நினைவுகள் பல உள்ளன. நண்பர்களுடன் உற்சாகமாக செலவிட்ட நிமிடங்கள் நினைவில் நீங்கா காலப்பொக்கிசங்கள்.

  *1990களின் பிற்பகுதியில் இருந்து பழைய புத்தக கடையில் அறிமுகமான சிலபல நண்பர்களுடனான தொடர்பு 2000 ஆண்டுவரை தொடர்ந்தது! லயன் காமிக்ஸ் புக்மார்கெட் பகுதி பல பேனா(வாசக) நட்புகளைப் பெற்றுத் தந்து இருந்தது. அந்த நட்புகளும் நாளடைவில் குறைந்து ஒரு கட்டத்தில் நின்று போனது. புத்தக வரத்து குறைந்த பின்னர் நட்புகளும் ஒருவித சலிப்பு&சோர்வு நிலைக்கு போச்சுது.

  *2012 கம்பேக்கிற்கு பிறகு நேரில் காமிக்ஸ் நண்பர்களை சந்திப்பது தொடக்கம் பெறாத காலம் அது. லயன் வலைத்தளத்தில் உலாவந்த சிலரை எல்லோருக்கும் போல வெறும் பெயர்களாக மட்டுமே எனக்கும் தெரியும்.

  *கம்பேக் ஸ்பெசல், சர்ப்ரைஸ் ஸ்பெசல், டபுள் த்ரில் ஸ்பெசல்... என ரெகுலர் புத்தகங்களே சிறப்பு மலர்களாக வெளியாகி சக்கைபோடு போட்டு வந்தன. ஒரு மாசத்துக்கே ஒரு புத்தகம் தான் எனும் போது விமர்சனங்கள் வரிசை கட்டின. மாசம் பூரா நிறை,குறை...என வெச்சி செஞ்சு வந்தாங்க.

  *அப்பத்தான் 2012 சம்மர் இறுதியில் ஒரு நாளில்.....

  "பெங்களூரு காமிக்கான் செப்டம்பர் 8-9, 2012--அனைவரும் வாரீர்; ஆதரவு தாரீர். உங்களை வரவேற்பது:உங்கள் எடிட்டர் விஜயன்" ---- என்ற அறிவிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது....!

  (தொடர்கிறேன்.....)

  ReplyDelete
  Replies
  1. *டெக்ஸ் கதைக்கு அடுத்து ஹாட்லைன் தான் ரொம்ப பிடிச்ச பகுதி. "எடிட்டர் S.விஜயன்" என ரொம்ப நாளாகவே பார்த்து பார்த்து பரிச்சயம் ஆன பெயர்; இவரது வசனங்கள் வாயிலாக ரொம்பவே இம்ப்ரஸ் செய்திருந்தார். தொலைவு காரணமாக சிவகாசி போய் நேரில் சந்திக்க எண்ணியது கிடையாது என்றுமே.

   *இப்ப பெங்களூரில் காமிக்ஸ் விழா, "அட பெங்களூரு சேலத்தில் இருந்து பக்கம் தானே போய் பார்ப்போம்" என்ற எண்ணத்தை ஸ்பார்க் பண்ணிச்சு இந்த அறிவிப்பு!

   *பெங்களூரா நாங்களும் வருவோம்னு வீட்டில் தொற்றி கொண்டார்கள். "விஜயன் சாரை பார்க்க போறம்மா, காமிக்ஸ் விழா"- என சொல்லி கழட்டி விடபார்த்தும் பாச்சா பலிக்கல.

   (எப்பாடு பட்டாவது கழட்டி விடாம போனதற்கு என்னை நானே நொந்து கொண்டேன். காரணம் நம்ம இரத்தப்படலம் பழனிவேல் அங்கே எடுத்து கொண்ட போட்டோக்கள். ஒவ்வொன்றும் சும்மா "அப்படி💘💘💘"! பிற்பாடு போட்டோ பார்த்துட்டு போச்சே போச்சேனு புலம்பத்தான் முடிஞ்சது☹️☹️☹️.)

   *காமிக்ஸ் வாங்கப் போறம்னு தெரிஞ்சதும் என் தங்கை பையன் அவுங்க தெரு நண்பனோட அப்பாவுக்கு சில காமிக்ஸ் வாங்க வேணும் என இணைந்து கொண்டான். (பிறகு அவரோட அறிமுகம் கிடைத்து, பழைய ரசிகர் என தெரிந்து கொண்டேன். 2013 முதல் இன்றளவும் லயன்-முத்து சந்தாவில் லஷ்மன பெருமாள் எனும் அவர் தொடர்கிறார். என்றாவது ஈரோடு விழாவிற்கு அழைத்து வர்றேன்)
   ........

   Delete
  2. *பெங்களூரு போக ட்ரெயின் தேர்ந்தெடுத்தேன். ஹோசூர் தாண்டி கர்நாடகாவில் எண்ட்ரியாகி, எங்கயோ ஹீலாலிகேவுல இறங்கி, ஷேர் ஆட்டோ பிடித்து மெயின் ரோடுவந்து, டவுன்பஸ்ஏறி பெங்களூரு மெட்ரோபாலிடனுக்குள் வந்து, செயின் ஜான்ஸ்ல இறங்கி, மறுபடியும் ஆட்டோ பிடிச்சா விழா நடக்கும் ஸ்டேடியம் போய் விடலாம்னு தகவல்களை திரட்டியாச்சுது.

   *சேலம் டூ பெங்களூரு ட்ரெயின் அதிகாலை 5மணிக்கு போல. போய் சேர 10மணி ஆகிடும். பிறகு அந்த லோக்கல் ட்ராவலிங் இன்னும் நேரம் எடுக்கும், பொடியனை வெச்சிகிட்டு டிபனுக்கு எங்கே தேடுவதுனு ரோசனை. நானுமே பசி தாங்க மாட்டேன்... ஹி.. ஹி...!! பைனலி ஆண்டாண்டு காலமாக மக்கள் செய்வது தான், கட்டுச்சோறு!

   *சோறெல்லாம் எம்பையன் காலைல சாப்பிட மாட்டான்னு தங்கை சொல்ல, ஒரு வழியாக பூரி+ உருளைகிழங்கு குருமானு முடிவாச்! சரி, மொத மொத எடிட்டர் சாரை பார்க்க போறோம்; வெறுங்கையாகவா போறதுனு என் சிற்றறிவுக்கு ஏற்ப ஒரு சின்ன கிஃப்ட் வாங்கினேன். என்ன அதுவென பின்னர்....!

   *2012,செப்டம்பர் 9 ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு 3மணிக்கு எழுந்து டிபன் கட்டிகிட்டு போய் சேலம் ஜங்சன்ல யஷ்வந்த்பூர் ட்ரெயின் ஏறி ஆச்சி. ட்ரெயின் விசிலை விட சத்தமாக என் மனசுக்குள் விசில் அடித்தது. டெக்ஸை நமக்கு தந்தவரை பார்க்க போறோம்னா சும்மாவா!!!
   .......

   Delete
  3. *ஓசூரில் அரை மணி நேரம் கட்டய
   போட்டு விட்டது ட்ரெயின்! எத்தனை ஆரவாரம் அங்கே! கூடை வியாபாரிகளிடம் இட்லி சாப்பிடும் மக்கள் ஒரு பக்கம், வேகவைத்த குச்சி கிழங்கோடு ஒரு கூட்டம், அவித்த கடலை விற்கும் பாட்டிம்மாவிடம் ஒரு 10பேர்...என கலவையான காலை! நாங்களும் பூரியை சாப்பிட்டுவிட்டு, சில ஸ்நாக்ஸ் வாங்கிட்டோம்.

   *மேலே சொன்னவாறு எல்லா வகை பிரயாணத்தையும் முடித்து அந்த ஸ்டேடியம் சென்று சேர்ந்தோம். இங்கே அதுமாதிரி எந்த விழாவும் நடக்கலயே என குண்டை தூக்கிப் போட்டான் செக்யூரிடி! திகைத்து போய் பேஸ்து அடிச்சிடுச்சி எனக்கு...!!!

   *செக்யூரிட்டியின் பதில் தூக்கிவாரிப்போட்டதை அடுத்த ஓரிரு நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு, ஸ்டேடியம் அருகே இருந்த ஆட்டோ ஸ்டேண்ட்ல விசாரித்தேன். விசயம் விளங்கிட்டது. பெங்களூருல கோரமங்களா என்ற பெயரில் 2 ஸ்டேடியங்கள் இருக்கும் போல. ஒன்று பெரியது அவுட்டோர்; மற்றது சிறிதான இன்டோர். காமிக்கான் நடப்பது இன்டோர்ல; நான் இருப்பது அவுட்டோர்ல என ஒருவழியாகப் புரிய போன உசுரு திரும்பிச்சு!

   *மொத ஆட்டோ ட்ரைவர் எங்கே காமிக்கான் நடக்குதுனு தெரியாமல் எங்களை பெரிய ஸ்டேடியம் அழைத்து சென்று விட்டார். மறுபடியும் வேறொரு ஆட்டோ. இம்முறை சரியான இடம். தூரத்திலயே "வெல்கம் டூ காமிக்கான்2012" போர்டுகள் வரவேற்றது. மீண்டும் என் மனசில ஒலித்த விசில் ஓசூர் வரை கேட்டு இருக்கும்.

   .........

   Delete
  4. *டிக்கெட் வாங்கிட்டு லைன்ல நிக்கவும், கையில் டேக் அடித்து விட்ட மினி ஸ்கர்ட்& கோட் யுவதியை பார்த்ததும் இது வேற லெவல் விழா என புரிந்து போனது.😍😍😍 11மணிக்கு தான் உள்ளே அனுமதி தந்தாங்க! 20நிமிட காத்திருப்பு மெதுமெதுவாக கரைந்தது. பின் இடுப்பில் என்னடா திடீர்னு வலிக்குதுனு யோசிச்சா, அந்த ஸ்கர்ட் யுவதியை நான் பார்த்த பார்வைக்கு பின்னாடி இருந்த என் வீட்டம்மா நறுக்குனு கிள்ளியிருக்கானு லேட்டாத்தான் புரிந்தது..😉😉😉

   *பேட்மிட்டன் உள்ளறங்கில் தடுப்பை வைத்து விழா ஸ்டால்களை அமைத்து இருந்தார்கள்.

   *எடிட்டர் சாரை பார்க்க போகிறோம் என்ற பரபரப்பை கஷ்டப்பட்டு அடக்கி கொண்டே ஒவ்வொரு ஸ்டால் ஆக பார்த்துகொண்டே போனோம். முத்து காமிக்ஸ் என இருந்த நமது ஸ்டால் கண்ணில் பட்டது. பில்லிங் டேபிளில் இருந்த பெரியவரிடம் (அவர் தான் திரு ராதாகிருஷ்ணன் அண்ணாச்சி என பின்னர் தெரிந்து கொண்டேன்) எடிட்டர் சார் எங்கே என கேட்டேன். பக்கத்தில் இருந்த குழுவை கை காட்டினார்.

   *வாங்க சார், வாங்க என எடிட்டர் சார் முன்னே வந்து கையை நீட்டினார். 22வருடங்களாக அவரது எழுத்துக்கள் வாயிலாக உள்வாங்கி இருந்த பிம்பத்தை நிஜமாக பார்த்தபோது நா உலற , உள்ளம் பதற சற்றே தடுமாறிப்போனேன். உள்ளத்தின் உதறலை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டு கை கூப்பினேன். சட்டுனு கைகளை பிடித்து குழுக்கினார். அவரை பார்க்க என்றே வந்துள்ளதாக சொன்னபோது லேசாக ஆச்சர்யம் காட்டினார். சேலம் டூ பெங்களூரு பக்கம், வருவது எளிது என அவரே சொன்னார்.

   ......

   Delete
  5. *"டெக்ஸ் வில்லரின் தீவிர ரசிகன் சார் நான்" என தட்டு தடுமாறி சொல்லியே விட்டேன். "கம்பேக் ஆகி இன்னும் டெக்ஸ் வர்ல; இப்ப வருவது சந்தோசம் சார்"-- என அம்மாத இதழ் வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்ல இருந்த டெக்ஸ் வருகிறது விளம்பரம் பற்றி சொன்னேன். "நிறைய டெக்ஸ் இனமே வருது சார் "--என பதில் தெரிவித்தார்.

   *அருகில் சில ரசிகர்கள் இருந்திருப்பார்கள் போல. சாரோடு போட்டோ எடுத்துக்கொண்டேன். என் பையன் பொடியனை, எடிட்டர் சார் அவரோடு சேர்த்து அணைத்துக் கொண்டு போஸ் தந்தது பெரு மகிழ்ச்சியை தந்தது.

   *எடிட்டர் சாருக்கு என வாங்கி இருந்த கிஃப்ட்டை என் மனைவி ஞாபகப்படுத்தினாள். சில மாதங்களில் வர இருக்கும் முத்து நெவர் ஸ்பெசல் வெற்றிக்கு முன்கூட்டிய வாழ்த்துகள் தெரிவித்தேன்.

   ####என்னுடைய வருகை& சிறு சந்திப்பை பற்றி தளத்தில் எடிட்டர் சாரின் விவரிப்பு...., ..

   .////மறு நாள் காலை பத்து மணிக்கு விழா துவங்கிய போது, பெங்களுரு நண்பர்கள் நமக்கு முன்பே ஆஜர் அங்கே ! ஞாயிறு என்பதால் கூட்டமும் ரொம்ப சீக்கிரமே அலைமோதியது ! சற்றைகெல்லாமே நம் ஸ்டாலில் முதல் நாளைப் போலவே (புதியதொரு) வாசகக் குழமம் ! முதல் நாளை விட இன்றைக்கு குடும்பங்களின் வருகை அதிகமாய் இருந்தது highlight ! அப்போது சேலத்திலிருந்து வந்திருந்த நண்பர் தம் புதல்வர் மூலம் ஒரு giftwrap செய்யப்பட்ட டப்பாவைத் தந்திட, அதன் மேல் அழகாய் ஒரு வாழ்த்துச் சேதி !! உள்ளேயோ ஒரு மைசூர்பாகு டப்பா ! டெக்ஸ் வில்லரின் அதி தீவிர ரசிகரான இந்நண்பர் நம்மை சந்திக்கவே குடும்பத்தோடு புறப்பட்டு வந்திருந்தார் !! இனிப்பாய் அங்கே கரைந்தது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நெய் மைசூர்பாகு மாத்திரமல்ல என்பதை நான் சொல்லிடத் தேவையும் உண்டா - என்ன ?////.....

   ####நான் அதிகம் முறை படிச்சது மேற்கண்ட வரிகளை தான். பின்னர் வந்த சூ.ஹீ.சூ.ஸ்பெசல்ல பிரிண்டிங்ல அந்த பதிவுல இருந்த இந்த வரிகள்& போட்டோக்களை அடுத்த ஓரிரு மாதங்கள் எங்க வீட்டுக்கு வருபவர்கள் எல்லோரிடமும் காண்பித்தேன்!

   Delete
  6. *சொற்ப நேரமே என்றாலும் நிறைவான சந்திப்பு. வைல்டு வெஸ்ட் ஸ்பெசல்ல சாரிடம் கையெழுத்து வாங்கி கொண்டு புறப்பட்டேன். மற்ற ஸ்டால்களை லேசாக நோட்டம் விட்டோம். ஒவ்வொரு ஹீரோவை போல வேடமணிந்த இளம் யுவதிகள் பட்டாம் பூச்சிகளை போல சுற்றித் திரிந்தனர். டோரோ, இன்னொரு பொம்மை உடன் என் மகன் போட்டோ எடுத்து கொண்டான். ஆனா....சரி வேணாம், சொல்லி என்ன ஆகப்போவுது.

   *மீண்டும் டவுன் பஸ் ஏறி கெம்பேகெளடா பஸ்நிலையம் வந்ததோ, அங்கிருந்த எண்ணிலடங்கா பேருந்துகளோ, நகரின் பிரமாண்டங்களோ, வெளியே இருந்த ஓரு ஓட்டல்ல சாப்பிட்ட பிரியாணியோ, யஷ்வந்த்பூரின் விஸ்தாரங்களோ எதுவும் மனிதில் நிற்கல. எடிட்டர் சாருடனான சொற்ப நேர சந்திப்பை மட்டுமே மனம் அசை போட்டது மறுபடி மறுபடி......!

   *சுவீட் பாக்ஸில் இருந்த இனிப்பை அங்கே குழுமி இருந்த நம்ம காமிக்ஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் தந்து மகிழ்ந்தார் எடிட்டர் சார். சாரின் எளிமையாக பழகும் விதம் கண்டு எல்லா நண்பர்களும் மலைத்து போனோம்.

   ---STV

   Delete
 74. நான் முதன் முதலில் ஆசிரியரை சந்திக்க ஈரோடு புத்தக திருவிழா போன போது நண்பர்கள் புடை சூழ ஆசிரியர் நின்று கொண்டிரிந்தார்.. தட்டு தடுமாறி ஆசரியரிடம் கை குலுக்கும் போது அறிமுக படுத்தி கொண்டேன் சார்.. நான் ரமேஷ் , திருப்பூரிலே இருந்து வந்து இருக்கேன்ங்க என்று.. உடனே சொன்னார்.. உங்க முகரையை பார்த்தாலே தெரியுது நீங்க தங்க தலைவன் ரசிகன்னு.. உங்க வீட்டுலே அண்டா பெரிசா இருக்கும்.. அதிலே தான் நீங்க அந்த அதிகாரிக்கு பாயாசம் காய்ச்சுஙீங்கன்னு..
  நான் திடிக்கட்டு கேட்டேன் யாரு சார் அதிகாரின்னு??.. அவர் சொன்னார்.. நீங்க அவரை பேரை சொல்ல புடிக்காமே ஒரு பேர் வைப்பீங்க, அது எல்லாருக்கும் புடிச்சு போகும் அந்த பேர் தான் அதிகாரின்னு..

  ReplyDelete
 75. எடிட்டரின் அடுத்த பதிவு உங்களுக்காண்டி காத்திருக்கிறது நண்பர்களே!

  ReplyDelete