மெயின் பதிவு இன்னிக்கு உண்டுண்ணே.....அது வர்ற வரைக்கும் நண்பர் கிரி உருவாக்கியிருக்க இந்த ரகளையைப் பாத்து ; படிச்சு ரசிங்கண்ணே !
ரசிச்சு போட்டதோடு கெளம்பிடாதீங்கப்பு !! அக்டோபர் 14-க்கு இன்னும் ரண்டே வாரம் தான் இருக்குப்பு ; முன்பதிவு மறந்துடாதீங்கோ !!
Me first
ReplyDeleteI paid for this Today early morning around 1.42 AM
ReplyDelete3rd
ReplyDelete4th
ReplyDeletePresant sir
ReplyDeleteஉள்ளேன் ஐயா🙏
ReplyDeleteHi..
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஒரே கொயப்பமா கீது வாத்யாரே....🙄🙄🙄🙄
ReplyDeleteகொய்யா பழம் சுகருக்கு ரொம்ப நல்லது :-)
Deleteஆசிரியர் குழப்பம் இல்லாமல் இருந்தால் போதும் பழனி :-)
Excellent கிரி.
ReplyDeleteநன்றி நண்பரே 🙏💕
Deleteஎன்ன பிரியாணின்னு நினைச்சா வந்தா.. பிரட்ஆம்லெட் வந்திருக்கு?!!
ReplyDeleteலெக் பீஸ் வேக வேணாமா ? ஐயோ...தெய்வமே..புரட்டாசி !!
Deleteவெறும் காஃபி விஜய்
Deleteஅட்டகாசமான அறுசுவை விருந்துக்கு காத்திருக்கிறோம் சார்...
Deleteஇது ஸ்டாட்டர்ஸ் மெயின் டிஷ் சுட சுட ரெடியாகி வந்து கொண்டு உள்ளது :-)
Deleteபட்டையக்கிளப்பிட்டீங்க கிரி!! அந்த 'ஈபில் டவருக்கு ஈயம் பூசிக்கிட்டு' வரியில கெக்கபிக்கே சிரிச்சுப்புட்டேன்! :):):)
ReplyDeleteஅது கண்ணன் அவர்களின் அடிஷன்.
Deleteயார் அந்த 'கண்ணன் அவர்கள்'?!!
Deleteசரி, யாரா இருந்தாலும் ஒரு வணக்கத்தை வச்சுப்போம்..!
"அய்யா கண்ணன் அவர்களே.. கும்புட்டுக்கறேனுங்க!"
இவரைத் தான் ஜமீன்ன்னு செல்லமாக அழைப்பீங்க
Deleteசெல்லமா அழைக்கறதே 'ஜமீன்'ன்னா.. நிச்சயம் பெரிய்ய்ய ஆளாத்தான் இருக்கணும்!
Deleteஎதுக்கும் மறுபடியும் ஒரு வணக்கத்தை வச்சுப்போம்..!
"அய்யா ஜமீன் அவர்களே.. மறுக்காவும் கும்புட்டுக்கறேனுங்க!"
நான் எதுக்கும் ஒரு வாரம் லீவ் போட்டுடுறேன்.!
Deleteகண்ணா @ நீங்க லீவில் இருப்பதை மறந்து விட்டீங்க போல தெரிகிறது:-)
Deleteலீவு நேத்துதான் முடிஞ்சது பரணி.! மறுக்காவும் ஒருக்கா போட்டுட்டு ஊட்டி கொடைக்கானல்னு போயிட்டு வாரேன்.!
Deleteஜமீன் அங்கிள்னு கூப்பிடுவீங்களே. அவரா கிரி?
Deleteவந்துட்டேன்
ReplyDeleteமுன்பதிவுக்கு மட்டும்!
ReplyDeleteமீண்டும் ஒரு முறை இந்தப் புத்தகமும் ரூபாய் ஐந்தாயிரம், பத்தாயிரம் என விற்பனைக்கு வந்தால் ஆசிரியரின் முடிவு எவ்வாறானதாக இருக்கும் என்று அறிய ஆவல்!
இரத்தப் படலம் புத்தகம் போன்ற நடைமுறையே மீண்டும் செயல்படுத்தப்படுமா?
Smashing 70's !!
அண்ணா...இன்னிக்கு ஆக வேண்டியதை பாத்துப்போமேங்கண்ணா ; நாளைக்கு ஆக வேண்டியதை நாளைக்கு பாத்துக்கலாமுங்கண்ணா !
Delete@UDAYAKUMAR,குளிர் காய சுள்ளியா?
Delete17th
ReplyDeleteவணக்கமுங்கோ 🙏🙏🙏🙏🙏🙏🙏
ReplyDeleteநைட்டு தான் வரும்ன்னு நெனச்சேன், இது சர்ப்ரைஸ். நண்பர் கண்ணன் பிழைதிருத்தி மெருகேற்றி உதவினார்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஎன்பா, இந்த வேதளார் கதை மட்டும் வாங்க எதுவும் வழி இருக்கா?
Deleteபெட்றொமாக்ஸ் லைட்டேதான் வேணுமா???
2 installment options தர்விங்களா ஜி
ReplyDeleteI think the opinion is available.
DeleteSure...
DeleteExcellent ad.giri sir.congrats.
ReplyDeleteநன்றி நண்பரே 🙏💕
Deleteலால் பகதூர் சாஸ்திரி பிறந்த தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteபழைய காமிக்ஸ் ஹீரோக்களுக்கு பழைய காமெடி மீம்ஸ்.
சூப்பர் கிரி ஜி.
வணக்கம்
ReplyDelete
ReplyDelete// அக்டோபர் 14-க்கு இன்னும் ரண்டே வாரம் தான் இருக்குப்பு //
இருக்கட்டும் இருக்கட்டும். அதனால என்ன இப்படி முன்பதிவு நடக்குறதே தெரியவில்லை அப்படின்னு சொல்லிட்டு அதனால் வெளியே இரண்டு மூன்று மடங்கு விலை அதிகம் என்றாலும் அங்கு வாங்கிடுவோம்ல :-) எம்பு சரிதான :-)
நாங்கெல்லாம் smashing 70's முன்பதிவு பண்ணிட்டோம்.. அப்ப நீங்க..
ReplyDeleteகுட்.
Delete"ஜோபைடனுக்கு ஈஃபிள் டவருக்கு ஈயம் பூசிக்கிட்டிருந்தேனா"
ReplyDelete😀😀😀😀
கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன்ல நல்ல கற்பனைண்ணே!
மேலிருந்து பத்தாவது பலூன் செமண்ணே!
வாழ்த்துக்கள்ண்ணே!👍
நன்றிண்ணே!🙏
காமிக்ஸ் மாயக் கனவுலகம் " !!!.
ReplyDelete" வாழ்க்கையில் எல்லாமும் எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமாயிருக்க அதில் நான் மட்டும் என்ன விதி விலக்காக இருக்க முடியுமா ?!. 1987 .ஆறாம் வகுப்பு படிக்கையில் பக்கத்து வீட்டில் வசித்த ஆசிரியர் மகன் ஜெயசுந்தர் மூலம் சித்திரக் கதைப் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது.படக்கதைப் புத்தகத்தைத் தேடித் தேடித் தெருத் தெருவாக அலைந்த என் வேதனையை இன்றும் என் கால்கள் சொல்லும்.
எளிய குடும்பத்தில் வறுமையைப் பங்கு போட்டுக் கொள்ளப் பிறந்த எனக்கு , காமிக்ஸ்கள் வாங்கிப் படிக்கக் காசுகள் லேது.எனவே காமிக்ஸ்கள் வைத்திருக்கும் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பர்கள் இல்லங்களுக்குப் படையெடுப்பேன்.
நன்றாக நினைவுள்ளது ஆறாம் வகுப்பு படிக்கையில் நிகழ்ந்த சம்பவம்.அது ஒரு வெள்ளி மாலைப் பள்ளிவிடும் நேரம்.உடன் பயிலும் சக மாணவன் அஜ்மீர் தன் வீட்டில் ஒரு படக்கதைப் புத்தகம் இருப்பதாகவும் நாளை சனிக்கிழமைக் காலை தன் வீட்டிற்கு வந்தால் படிக்கத் தருவதாகவும் சொல்ல இரவெல்லாம் எனக்கு காமிக்ஸ் கனவுகள் கலர் கலராய் வந்தன.விடிந்தது.வழக்கம் போல் சாப்பிட காலை உணவு இல்லை.நண்பனின் வீட்டிற்குச் செல்லத் துடித்த என் கால்களுக்கு அப்பா உன்னை வீட்டில் இருக்கச் சொன்னார் என்று தடை விதித்தார் அன்பு அன்னை. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை தினங்களில் அப்பாவிற்கு உதவியாக அவருடன் வேலை பழகச் செல்வது உண்டு. கொஞ்சம் நண்பன் வீடு வரைக்கும் போய்ட்டு இப்ப வந்திடுறேன் அம்மா என்று கூறிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் காமிக்ஸ் காதல் இழுக்க ஓடினேன்.
நண்பன் அஜ்மீர் வீட்டை அடைந்தால் அவன் வீடு முழுவதும் உறவினர் கூட்டம்.இறந்த தன் தாத்தாவிற்கு பார்த்தீயா ஓதுவதால் புத்தகத்தை இப்ப எடுக்க இயலாது , மாலை வந்து வாங்கிக் கொள் என்று கூறிவிட்டதால் எனக்கோ ஒரே குழப்பம்.வீட்டிற்குச் சென்றால் அப்பா வேலைக்கு அழைத்துச் சென்றுவிடுவார்.உள்ளம் குழம்பியது.மனது பரிதவித்தது.சுற்றும் முற்றும் பார்த்தேன்.அருகில் காளியம்மன் கோவில் ஒன்றிருந்தது.அங்கு போய்க் காத்திருக்க ஆரம்பித்துப் பொழுதைத் தள்ளினேன்.மாலை நான்கு மணிவாக்கில் வந்த நண்பன் தந்த பொக்கிஷத்தைப் பெற்றுக் கொண்டேன்.இடுப்பில் மறைத்து வைத்தேன்.பசியால் காதுகள் அடைக்க வீடு திரும்பினால் வாங்க ராசா என்று வரவேற்ற அன்னையின் குரலே வயிற்றில் புளியைக் கரைத்தது.ஏண்டா அப்பா உன்னை வீட்டில் இருக்கச் சொன்னாருடானு சொன்னதைக் கேட்காம எங்க கழுதை ஊர் மேய்ஞ்சிட்டு வர்றதுனு கேட்டுக் கொண்டே காதைத் திருகியதில் வலி உயிரையேத் தின்றது.அது மட்டுமில்லாமல் அன்னையின் ஆஸ்தான ஆயுதமான பருப்பு மத்தையால் என் உடம்பில் விளையாட ஆரம்பித்தார்கள்.முதுகிலும் உட்காருமிடங்களிலும் பருப்பு மத்தைத் தன் தடங்களைப் பதித்துச் சென்றது.ஆனாலும் மனதில் வலியே இல்லை , எப்போது கனவுலகத்தில் நுழைவோம் என்ற ஆவலே மேலோங்கியது.காலையிலிருந்து சாப்பிடாத சோர்வுடன் அன்னையின் அன்புத் தட்டல்கள் மற்றும் இரவில் அப்பா வேறு வந்து என் உடலுக்குப் பூசனைகள் செய்வாரோ என்ற பீதி வேறு சேர அடிவயிறே கலங்கியது.அன்று என் நல்ல அதிர்ஷ்டம் போலும்.தந்தை தண்டிக்கவில்லை என்னை.அன்று தொடர்ந்த நல்ல அதிர்ஷ்டத்தால் படிக்க சிம்னி விளக்கு வேறு கிடைத்தது.வீட்டில் எரிவதோ ஒரே குண்டு பல்பு தான்.அதுவும் இரவு ஒன்பது மணிக்கு அணைக்கப்படும்.பிறகு இரவு விளக்கான மண்ணெண்ணெய் சிம்னி விளக்குக்கு அண்ணன் அக்கா தம்பிகளிடையே ஒரு பெரும் போர் நடக்கும்.வெற்றி பெற்றவர் சிம்னி விளக்கைப் பயன்படுத்தலாம்.அன்றிரவு எனக்கு அடித்தது அதிர்ஷ்டம்.வீடே ஆழ்ந்த நிசப்தத்தில் இருக்க நான் மாய உலகிலே அடியெடுத்து வைத்தேன்.அன்றிரவு நண்பர் அஜ்மீர் தந்த "முத்து காமிக்ஸ் " சிஸ்கோ கிட் தோன்றும் "ரயில் கொள்ளை " படிக்கையில் வயிற்றுப் பசி மறந்தது;பெற்ற அடிகள் வலிகளின்றி குளுகுளுவென்றிருந்தன.அன்று சிம்னி விளக்கில் காமிக்ஸ் படித்து பிரபஞ்சத்தையே சுற்றி வந்தது போன்ற சுகத்திற்கு ஈடிணையேது?!.
-தொடர்வேன் நினைவலைகளை -.
மீம்ஸ் அனைத்தும் அருமை கிரி சார்.
ReplyDelete👍👍👍❤❤❤🙏🙏🙏🙏
காமிக்ஸ் "- மாயக் கனவுலகம்" !!!.
ReplyDeleteதொடர்கிறது.
நானும் என் காமிக்ஸ் காதலும் வளர்ந்தது போலவே காலமும் படுவேகமாகச் சென்றது.ஆறாம் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றதற்கு தலைமையாசிரியர் கையால் பரிசில்கள் பெற்றேன்.நல்ல மாணவன் என பள்ளி மேடையில் புகழ்ந்தார் வகுப்பாசிரியர்.இதனால் பள்ளிப் பிரபலமான எனக்கு சில சீனியர் மாணவர்களின் அன்பும் சில அரிய காமிக்ஸ் புத்தகங்களும் கிடைத்தன. பக்கத்து வீட்டு அண்ணன் செல்வம் என்பவர் பெரிய காமிக்ஸ் கலாரசிகர்.இவரிடம் முத்துக் காமிக்ஸ்கள் கொட்டிக் கிடந்தன.இவர் மூலமே முத்து காமிக்ஸ் மேல் நானும் பெரும் காதல் கொண்டேன்.மாயாவி , வேதாளன் , காரிகன் , மாண்ட்ரேக் , சார்லி புஷ்சாயர் ,சிஸ்கோ கிட் , லாரன்ஸ் டேவிட் , செக்ஸ்டன் பிளேக் , ஜார்ஜ் , ஜானி நீரோ என்று பழைய முத்து நாயகர்களின் பழைய இதழ்களைப் படித்துத் தள்ளினேன்.வாழ்க செல்வம் அண்ணன்.
ஏழாம் வகுப்பில் தான் அப்துல் ரஹீம் என்ற காமிக்ஸ் வெறியர் நண்பராகக் கிடைத்தார்.தன்னிடமிருந்த சில கதைகளைப் படிக்கத் தந்தார்.அப்துல் ரஹீம் மூலம் சிராஜூதீன் என்ற மற்றொரு காமிக்ஸ் பிரிய நண்பர் கிடைத்தார்.எங்களுக்கு ஜூனியரான சிராஜூதீன் நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.ஏழைகளான எங்களுடன் அடிக்கடி அவர் காமிக்ஸ் வேட்டையாட வரமாட்டார்.நானும் அப்துல் ரஹிமும் ஏழைப் பங்காளர்களாதலால் சனி ஞாயிறுகளில் காமிக்ஸ் வேட்டைக்குக் கிளம்பிவிடுவோம்.இன்று ஊருக்கு ஒருவர் காமிக்ஸ் படிப்பது அரிது.ஆனால் அன்று காமிக்ஸ் படிப்பவர்கள் அதிகம்.என்ன இலவசமாகப் படிக்கக் கேட்டால் கொடுக்கத் தயங்குவார்கள்.யோசிப்பார்கள்.சிலர் இகழ்ச்சியும் செய்வார்கள்.நாங்களே சில நண்பர்களின் வீட்டிற்குச் சென்று காமிக்ஸ் கேட்காமலே திரும்பியிருக்கின்றோம்.ஓசியில் படிக்கச் சங்கடப்பட்ட நிலையில் தான் நண்பர் ஒருவர் மூலம் காமிக்ஸ்கள் நாள் வாடகைக்கு கிடைப்பதை அறிந்து மகிழ்ந்தோம்.வாடகைக்குத் தருபவரின் விவரமும் அறிந்து கொண்டோம்.ஒரு புத்தகத்திற்கு 25 பைசா நாள் வாடகை என்று அறிந்து காசை சேமிக்க முடிவு செய்தோம்.என் அப்பா தினமும் பள்ளிக்குச் செல்ல 10 பைசா பாக்கெட் மணியாகத் தருவார்.அதை அப்படியே பொத்தி பொத்தி சேமித்து வைத்துவிடுவேன்.சக மாணவர்கள் பப்ளிமாஸ் , பாயாஸம் , கடலை மிட்டாய் , ஜஸ் கிரீம் என்று தின்பதைப் பார்த்து நாக்கில் ஜலம் ஊறும்.ஆனால் ஜல ஊறலை கட்டுப்படுத்தி வைத்துவிடுவேன். பொத்திப் பொத்திச் சேமித்த 50 பைசாவை எடுத்துக் கொண்டு வாடகைக்கு காமிக்ஸ் வாங்க ராஜா என்பவர் வீட்டையடைந்தோம்.நடந்த நிகழ்வு மனதில் திரைப்படமாய் விரிகிறது.வாடகைக்கு காமிக்ஸ் தரும் ராஜா தன்னிடமிருந்த பெரிய டிரங்குப் பெட்டியைத் திறந்தார்.காண்பித்தார் பொக்கிஷங்களை.தங்கப் புதையல்கள் அந்துருண்டை வாசத்துடன் மணத்தன.முத்து , லயன் ,ராணி , மேத்தா ,இந்திரஜால் என்று தங்கமாய் ஜொலித்தன.என்னிடமிருந்த 5 பத்து பைசாக்களையும் பெட்டியையும் மாறி மாறிப் பார்த்தேன்.முதன் முதலில் நகரம் கண்ட கிராமத்தானாய் பட்டிக்காட்டானாய் நாங்கள்.டெக்ஸ் வில்லரின் பழி வாங்கும் பாவை மற்றும் கூர்மண்டையனின் சிறுபிள்ளை விளையாட்டை நான் தேர்ந்தெடுத்தேன்.அப்துல் மாயாவி , லாரன்ஸ் டேவிட் கதைகள் எடுத்துக் கொண்டான். அந்துருண்டை மணந்த புத்தகங்களை எங்களுக்குள்ளேயே மாற்றியும் படித்துக் கொண்டோம்.வாரம் 5 நாட்கள் பள்ளிப் படிப்பு சனி ஞாயிறு காமிக்ஸ் கனவுலக லயிப்புகள் என நாட்கள் றெக்கை கட்டிப் பறந்தன.அந்தப் பொற்காலத்தை இப்போது நினைத்தாலும் நினைவுகளில் இன்பமிருக்கக் காண்கின்றேன்.
-மாய கனவுலக நினைவலைகள் தொடரும் - !!.
காமிக்ஸ் -மாயக் கனவுலகம் " !!.
ReplyDeleteஓசியில் படித்தாயிற்று. வாடககைக்கு வாங்கிப் படித்தாயிற்று.ஆனாலும் ஏதோ ஒரு குறை.மனத்தவிப்பு.நணபர்கள் மூவரும் பரிதவித்தோம். அப்போது நண்பருக்கு நண்பர் ஒருவர் மூலம் எங்கள் ஊரான உத்தமபாளையத்திற்கு அருகே உள்ள சின்னமனூர் எனும் ஊரில் பழைய புதிய காமிக்ஸ்கள் விற்கப்படும் என்னும் தகவல் கிடைக்கப் பெற்றோம்.சின்னமனூர் செல்லத் திட்டமிட்டோம்.பணம் சேர்த்தோம் மூவரும்.அப்படி இப்படி என்று 20 ரூபாய் (அந்தக் காலத்தில் எம்மாம் பெரிய பணம் )சேர்த்தேவிட்டோம்.சின்னமனூர் சென்று வர பஸ் கட்டணம் 9 ரூபாய் வேண்டும்.மீதி 11 ரூபாயில் என்ன எத்தனைப் புத்தகங்கள் வாங்க முடியும் என்று ஒரே குழப்பம்.எனக்கொரு யோசனை உதித்தது.நடந்தே செல்லலாமே என்ற யோசனைக்குப் பயங்கர வரவேற்பு. பிறகென்ன ...ஒரு சுபயோக சுப தினத்தில் சனிக்கிழமை ஒன்றில் நடராஜா பஸ் சர்வீஸில் நடைப் பயணத்தைஆரம்பித்தோம்.போக வர 16 கிலோமீட்டர்கள் அலுக்கவே இல்லை.காமிக்ஸ் அலசல்கள் கற்பனைகள் என நேரம் சிறகடித்துப் பறந்தது.சின்னமனூர் சென்றோம்.வீரபத்ரன் கடை முதலாளி அன்போடு வரவேற்றார்.கடையின் இருபுறமும் கம்பி வளை கட்டியில் காமிக்ஸ் தங்கங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன .சொக்கத் தங்கங்கள் ஜொலித்தன.என் நாக்கில் தானாகவே ஜலம் ஊறியது."இரும்புக் கை மாயாவி " தோன்றும் "விண்வெளிக் கொள்ளையர்கள் " நான் காசு கொடுத்து வாங்கிய முதல் முத்து காமிக்ஸ் இதழ்.பதினாறு கிலோமீட்டர் நடந்த வலி எங்களுக்குத் தெரியவே இல்லை மனம் முழுவதும் நிரம்பியிருந்த காமிக்ஸ் காதலால்.காலையில் சென்று மாலையில் வீடு வந்து அன்னையிடம் வழக்கமான பூசனைகள் பெற்றதெல்லாம் தனிக்கதை. இன்னும் சொல்ல எவ்வளவோ அனுபவங்கள் மனக் கடலில் அலையாக மோதிக் கொண்டே இருக்கின்றன.அன்றிருந்த காமிக்ஸ் மீதான ஆர்வமும் காதலும் இன்று வரை குறையவே இல்லை.என் காமிக்ஸ் மீதான காதல் அப்படியே தானுள்ளது.காமிக்ஸால் வாழ்ந்த வளர்ந்த எனக்கு காமிக்ஸை மறக்கத் தான் முடியுமா ? காமிக்ஸ் நாயகர்கள் தந்த மனபலத்தால் தான் என் வாழ்க்கையில் வீசிய இடர்களை ஊதித் தள்ளியிருக்கின்றேன்.வாழ்க்கையில் பெருமித நடைபோடுகின்றேன் நெஞ்சம் நிமிர்த்தி.மாறாத காதல் காமிக்ஸ் மீதான காதல்.
///காமிக்ஸ் நாயகர்கள் தந்த மனபலத்தால் தான் என் வாழ்க்கையில் வீசிய இடர்களை ஊதித் தள்ளியிருக்கின்றேன்.வாழ்க்கையில் பெருமித நடைபோடுகின்றேன் ///
Deleteநம் நண்பர்களில் இன்னும் நிறையப் பேருக்கும் இதுபோலவே மிகச் சிரமமான காலகட்டங்களில் காமிக்ஸே துணையாக இருந்திருக்கிறது! இடர்களிலிருந்து வெளியே வரத் தேவையான மனோபலத்தையும் அது கொடுத்திருக்கிறது!
+1
Delete:00 GMT+5:30
ReplyDeleteஎன் முத்து காமிக்ஸ் நினைவலைகள் மற்றும் நண்பர்களின் நினைவலைகளைப் படித்த நண்பர்கள் தங்கள் நினைவலைஎளையும் எழுதினால் நன்றாக இருக்கும்.ஆசிரியரால் தேர்ந்தெடுக்கப் பட்ட நினைவலைகள் முத்து பொன்விழாச் சிறப்பிதழில் இடம் பெறும்.
என் நினைவலைகள் தேர்ந்தெடுக்கப்படுமா என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
Selected sir...
Deleteவாழ்த்துகள் சரவணன்!
Deleteவாழ்த்துக்கள் சரவணன்.
Deleteவாழ்த்துகள் சரவணாரே💐
Deleteநன்றிகள் பல ஆசிரியர் சார்.
Deleteநன்றிகள் பலப்பல நண்பர்களே.
Deleteஉள்ளேன் ஐயா.!!
ReplyDelete(All rights reserved..😜 )
ஆஹான்...😉
Deleteசரி. நான் லெப்டை ரிசர்வ் பண்ணிக்கறேன்.
Delete###### 50 !!
ReplyDelete58வது
ReplyDeleteஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே...
ReplyDeleteஅசத்தல் நண்பர் கிரி. கவுண்டர்- செந்தில் மாடுலேசன் நீண்ட காலத்தின் பின், அதுவும் “ஜோ பைடனுக்கு செகரட்ரீயாகவோ, இல்ல குயீன் எலிசபெத்துக்கு பாடிகர்ட் ஆகவோ, இல்ல ஈபிள் டவருக்கு ஈயம் பூசிக்கிட்டோ” கெக்கே பிக்கே என்று சிருச்சு மாளல. சூப்பர்.
ReplyDelete👏👏👏👏😿
63rd
ReplyDeleteகிரி பட்டைய கிளப்பிட்டீங்க…
ReplyDeleteஈபில் டவருக்கு ஈயம் பூசிக்கொண்டோ 'பட்' டென்று சிரிப்பு வந்துவிட்டது. செம கிரி சார். கரூர் ராஜ சேகரன்
ReplyDelete71
ReplyDeleteவழக்கம் போலருமை கிரி
ReplyDelete