நண்பர்களே,
வணக்கம். இந்த மாதத்து இதழ்களின் முதற்கட்ட ரியாக்ஷனஸைப் பார்க்கும் போது - சரத்குமாரும், வடிவேலும் நடித்த காமெடி தான் நினைவுக்கு வருகிறது !! தவணையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் சரத், மொக்கைச்சாமி அஸிஸ்டண்ட்டோடு ஒரு பாட்டீம்மா வீட்டுக் கதவைத் தட்ட, அவரும் உள்ளாற கூட்டிப் போய் உட்கார வைத்து, அப்புறமாய் வீட்டிலுள்ள மிக்சி, கிரைண்டர் இத்யாதிகளையெல்லாம் காட்டி விட்டு, "பாத்துட்டீங்கள்லே ? ஒண்ணும் வேண்டியதில்லை.....நடையைக் கட்டுங்க !!" என்று சொல்லும் போது சரத் கெக்கெக்கெக்கே என்று சிரிப்பார் ! "ஏண்ணே சிரிக்கிறீங்க ?" என்று அசிஸ்டண்ட் கேட்கும் போது - "ரெண்டு பேரா வந்திருக்க நமக்கே இந்த ஏரியாவில் இந்தப் பாடுன்னா, தனியாய் போயிருக்கிற வடிவேலின் நிலைமையை யோசிச்சேன் - சிரிச்சேன் !" என்பார் ! இங்கேயோ - நம்ம க்ளிப்டனை நினைச்சேன் - சிரிச்சேன் !! கெத்தா, மாசானதொரு அட்டைப்படத்தோடு ஆரவாரமாய் ஆஜராகியிருக்கும் 'தல'யே முத நாள் ஷோவில் 3 தாத்தாக்களிடம் ஜகா வாங்கிக் கொண்டிருக்க, பாவப்பட்ட கேரட்மீசைக்காரரை கொஞ்சம் நினைச்சுப் பாருங்களேன் ? 'அப்டி ஓரமாய் போயி வெளயாடிக்கோங்க நைனா !!" என்று சொல்லாத குறை தான் !!
Very very early days yet ; சிறுவட்டமே ஆயினும், ஒன்றரை நாட்களின் எண்ணப்பகிர்வுகள், அதன் முழுமையின் பிரதிபலிப்பாகிடாது தான் ! And தொடரும் நாட்களில் நிலவரம் உல்டாவாகிடவும் கூடும் தான் ! ஆனால் 'தல' வரும் மாதங்களில் ஆனானப்பட்ட லக்கி லூக்கே பம்முவது தான் வாடிக்கை என்ற நிலையில் - இந்த 3 பெருசுகள் குஷாலாய் அறிமுகமாகி, சூட்டோடு சூடாய் ஒளிவட்டத்தைக் கவர்ந்து நிற்பது விளையாட்டுக் காரியமே அல்ல என்பேன் ! 'தல' படமொன்று ரிலீசாகும் அதே நாளில் மூஞ்சி பெயர் தெரியாத மூணு டி.வி. சீரியல் பழங்கள் நடித்த படமும் ரிலீசாகி, பின்னது வசூலில் முந்திடுவது நிகழ்ந்தால் வாய் பிளந்து வேடிக்கை பார்ப்பதில் தப்பில்லை தானுங்களே ? So 'தல' & கேரட் தாத்தா - இம்மாதம் ஓரமாய் நின்று காதினுள் புகை விடுவதே முதற்கட்ட நிலவரம் !!
அந்தியும் அழகே...! 2 நாட்களுக்குள் குறைந்த பட்சம் 2 தடவைகளாவது தாத்தாக்களுடனான பயணம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடம் தருகின்றன, உங்களின் அலசல்களின் வீரியங்கள் ! ஏற்கனவே நான் குறிப்பிட்ட விஷயம் தான் ; doubtless இது நம் பயணத்தினில் ஒரு ஜாலியான குட்டி landmark !! இது வரைக்கும் நிறைய "கதையே நாயகன்" பாணியிலான கிராபிக் நாவல்களை பார்த்திருக்கிறோம் தான் ; அவற்றுள் ஏகப்பட்ட offbeat கதைகளையும் ரசித்துள்ளோம் தான் ! ஆனால் முதன்முறையாக offbeat கதைகளில் ஒரு ஹீரோ கும்பல் கண்ணில் தட்டுப்பட்டிருப்பது இம்முறையே ! And அந்த கும்பலுக்கு இளமை ஊசல் ஆடோ ஆடென்று ஆடுவது தான் விசித்திரமுமே ! So ஒரு உருப்படியான படைப்பாளி டீம் கிட்டினால் - எந்தக் களிமண்ணும் சோடை போகாதென்பது புரிகிறது ! Hail Lupano !!
"அதெல்லாம் செர்த்தேன் ; இதையெல்லாம் எதுக்கு தேர்வு பண்ணிக்கிட்டு ? எங்க ரசனைய ஒசத்தறதா நெனப்பாக்கும்டா தம்பி ? ஒன்னோட போதைக்கு சிக்குன ஊறுகா நாங்க தானாக்கும் ?" என்ற எண்ணங்களும் ஆங்காங்கே எழாதிராது என்று பஜ்ஜியோ, வடையோ காதில் சேதி சொல்லாமலில்லை ! So 'இந்த விஷப்பரீட்சையினில் தலை தப்பிச்சிட வாய்ப்புகள் பிரகாசம் !!" என்ற தோன்றும் நொடியில் - "Why தாத்தாஸ் ?" என்று என்னை நானே கேட்பதில் தப்பில்லை என்று பட்டது !
Primarily - ரசனைய உசத்துறேன் ; வடாம் காயப்போடுறேன் என்ற ரீதியிலான கற்பனைகள் எனக்கு ஒருநாளும் கிடையாது ! இங்கு பதிவாகும் பின்னூட்டக் கூட்டாஞ்சோறில் ஒரேயொரு சட்டுவத்தைப் பரிமாறிச் சாப்பிட்டுப் பார்த்தாலே புரியும் - இதனை ஆக்கும் அசகாயர்கள் ஒவ்வொருவரின் ஆற்றலும் என்னவென்று ! So ஏற்கனவே ஏதேதோ உச்சங்களில் உள்ள உங்களின் ரசனைகளை ஒரு சிவகாசி ஆந்தையன் அவதரித்துத் தான் புதுசாய் ஒசத்தி விட்டாகணும் என்று நினைத்திருப்பேன் எனில், (நடப்பு) கேரன் செர்வியாவை விடவும் பெரிய பிராந்தனாய் நான் இருந்திட வேண்டும் ! இப்போவரைக்குமாவது - அண்ணாச்சியையும், ஆபீஸ் சேச்சிகளையும் அடையாளம் காண்பதில் எனக்குச் சிரமங்கள் இல்லையெனும் போது - கேரன் செர்வியாவாகிட maybe இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்கக்கூடும் என்று படுகிறது ! So கேள்வி தொக்கியே நிற்கிறது - "why இந்த ரீதியிலான விஷப்பரீட்சைத் தேடல்கள் ??"
பிரதான காரணம் - 1984 முதலாகவே என்னுள் பொங்கிடும் அந்தக் கதை பகிர்ந்திடும் அவா !! எனக்கு ரசித்திடும் ஏதேனும் ஒரு படைப்பை உங்களோடும் பகிர்ந்து, நீங்களும் அதனை ரசித்திடும் பட்சத்தில் ஒரு கொயந்த புள்ளைத்தனமான சந்தோஷம் அலையடிப்பதை முதன்முதலில் நான் உணர்ந்தது ஸ்பைடரின் "எத்தனுக்கு எத்தன்" புண்ணியத்தில் ! வருஷங்களாய் பீரோவுக்குள் கிடந்த கதை ; யாருக்கும் பிடித்திருக்காத கதை ; ஆனால் என்னை ரசிக்கச் செய்த கதை !! மாடஸ்டியின் ஆரம்ப விற்பனை மொக்கைகள் தந்த கும்மாங்குத்தில் கிறங்கிக் கிடந்தவனுக்கு அன்றைக்கு "ஸ்பைடர் " ஒரு தேவ தூதனாயத் தென்பட்டதில் no surprises ; ஆனாலும், 'அதெப்புடி நமக்கு இவ்ளோ ரசிக்கும் ஒரு கதையானது வாசகர்களுக்கும் ரசிக்காம போகும் ??" என்ற குடைச்சல் தான் காதுக்குள் அன்றைக்கே பலமாக இருந்தது !
முத்து காமிக்சிற்கு அந்தக் கதைக்கான காசையும் தராது லவட்டிப் போய்ப் போட்டு விட்டு , அது சூப்பர்ஹிட் அடித்த போது நான் குதூகலிக்க காரணங்கள் இரண்டிருந்தன : முதலாவது - "ஹை....காசு மிச்சம் !!" என்பதே ! அந்நாட்களில் சீனியரின் கூட்டு வியாபாரத்துக்கு "அதள பாதாள போராட்டம்" என்று பெயரிட்டிருக்கலாம் ; சிக்கலெனில் சொல்லி மாளா சிக்கல்கள் ! So அன்றைய தினத்தினில் நான் அந்தக் கதையை ஆட்டையைப் போடுவது மட்டும் சீனியருக்குத் தெரிந்திருந்தால், சர்வ நிச்சயமாய் அதற்கான பணத்தை என்னிடமிருந்து கேட்டு வாங்கிப் போக ஆள் அனுப்பாது விட்டிருக்கவே மாட்டார் - becos அந்தச் சிக்கலான பொழுதுகளில் பணம் சார்ந்த உரசல்கள் எங்கள் மத்தியில் ஒரு புது விஷயமாகவே இருந்திருக்கவில்லை ! மாட்டு வண்டியில் காலண்டர்கள் ; டயரிகள் ; நோட்புக் ராப்பர்கள் இத்யாதி..இத்யாதி...என ஏகப்பட்ட பண்டல்கள் மொத்தமாய் ஏற்றப்பட்டு, ரயில்வே ஸ்டேஷனுக்கு புக்கிங்குக்கோசரம் சீனியரின் ஆபிசிலிருந்து அடிக்கடி போகும் ! நமது காமிக்ஸ் பண்டல்கள் நாலோ, ஐந்தோ அன்றைக்கு ரயிலுக்குச் செல்ல வேண்டி இருந்தால், சத்தமின்றி அதே மாட்டு வண்டியில் ஏற்றி அனுப்பி விடுவேன் நான் ! ஒரு நாள் அதுவே கூட சீனியருக்கும், எனக்கும் மத்தியினில் ஒரு லடாக்ஹ் பாணி லடாய்க்குக் காரணமானது என்பது இஸ்திரி !! சகோதரருடனான கூட்டுத் தொழிலில், புள்ளைக்கோசரம் காட்டும் சகாயம் கூட சுகப்படாது - என்ற அவரது நேர்மையும், அன்றைக்கிருந்த இக்கட்டில், அவரைக் குறை சொல்லிட வழிகள் லேது என்பதும் இன்றைக்குப் புரிகிறது ; ஆனால் "மிச்சம் பிடிக்கும் ஒவ்வொரு அணாவும், சம்பாதிக்கும் புது அணா" - என்று வயிற்றைக் கட்டி, ஆபீஸ் நடத்தி வந்த 17 வயது பம்பை மண்டையனுக்கு அந்நாட்களில் காது வழியே புகை சிக்னல்களே வெளிப்பட்டன !!
1984-ல் நான் குதூகலித்த காரணம் # 2 தான் இன்றுவரைக்கும் இது போன்ற விஷப்பரீட்சைகளுக்குள் என்னை திளைக்கச் செய்வது !! எனது ரசனையும், உங்களின் ரசனைகளும் ஒரே பக்கத்தில் பயணிக்கும் நாட்கள் ஒவ்வொன்றுமே செம ரம்யமாய்த் தெரிந்திடும் மேஜிக் தான் அது ! "ஆத்தா....வாசகர்களின் ரசனைத் தேர்விலே நான் பாஸாயிட்டேன் !!" என்று 1984-ல் கூவிடத் தோன்றியது இன்று வரைக்கும் ஓய்ந்த பாடில்லை என்பதால் அந்த த்ரில்லை எதிர்பார்த்தே தேடல்கள் இன்று வரையிலும் தொடர்கதையாகின்றன ! தர்ம அடி விழவும் கூடுமென்று தோன்றினாலும் கூட, அந்தக் களத்தினில் நான் ரசித்த ஏதோவொன்று உங்களையும் ரசிக்கச் செய்யாது போகாதென்ற நம்பிக்கை தலைக்குள் சிறுகச் சிறுக ஒரு ஆர்ப்பரிப்பாகவே உருமாறிடும் போது - எனது தீர்மானங்கள் auto pilot க்கு மாறிப் போய்விடுவதுண்டு ! அந்த லாஜிக் உணரா உத்வேகம் தான் உங்களின் அம்மாதத்துத் தொண்ணூறு ரூபாய்களையும் ; அதற்கான நமது ஒண்ணரை லட்ச ரூபாய்களையும் அந்தந்த இதழ்களினில் பணயமாக்கிடும் கொழுப்பை உருவாக்கிடுகின்றது ! Make no mistake guys - ஒவ்வொரு விஷப்பரீட்சையின் போதும் நான் சுடுவது உங்கள் காசிலுமான வடைகள் என்றாலும், கையோ, வாயோ பொத்துப் போகும் பட்சத்தில், எங்களது பாக்கெட் பொத்தல்கள் செமத்தியாக இருக்குமென்பது தான் bottom line ! So நன்றாகவே தெரிந்தது தான் - தாத்தாக்களின் சமாச்சாரத்தில் சொதப்பலுக்கு வாய்ப்புகள் பாதிக்குப் பாதி என்பது !! இருந்தாலும் கதாசிரியர் லுபானோவின் அந்த தில் ; அவரது படைப்பின் உருப்படிகள் ஒவ்வொன்றோடும் ஏதோ ஒரு விதத்தினில் என்னால் relate செய்து கொள்ள முடிந்தமை ; கதையில் பெருசெல்லாமே devil may care தோரணையில் சுற்றி வந்தது ; சிறுசுகளெல்லாம் சாக்ரடீஸ் ரேஞ்சில் தத்துவம் பேசுவது - என்று நிறைய விஷயங்கள் என்னை உசுப்பி விட்டுக் கொண்டேயிருந்தன ! On the flip side - ஏற்கனவே "ஒரு தோழனின் கதை" யில் நிகழ்ந்தது போலவே ஒருசாராருக்கு செமையாகவும், இன்னொரு சாராருக்கு சுமையாகவும் தோன்றிட வாய்ப்புகள் இல்லாதில்லை என்பதும் புரிந்தது ! ஆனால்...ஆனால்...அந்த "ஆத்தா நான் பாஸாயிட்டேன்" moment சார்ந்த தேடல் குடிகொண்டான பின்னே லாஜிக் ஜன்னல் வழியே போய்விடுவது வாடிக்கை தானுங்களே ? And இதோ - இங்கே நிற்கிறோம் - பெருசுகளை நம் அணிவகுப்பிற்குள் வரவேற்கும் சந்தோஷத்துடன் !! இங்கே நான் பெருசாய் எதையோ சாதித்து விட்டதாகவெல்லாம் நான் நினைக்கவில்லை ; மாறாக - ஒரேயொரு விஷயத்தை மட்டும் கூரையில் ஏறி நின்று கூவ தோன்றுகிறது ! அது இந்தப் பதிவின் கடைசி வரியில் இருக்கும் !
தாத்தாக்களுக்கான Translation !
இங்கே நீங்கள் பார்த்திருக்கும் மொழி நடை நம்மட்டிற்காவது ஒரு first ! "ஒரு ஆணியையும் பிடுங்கப் போவதில்லை" என்று எழுதியிருக்கலாம் தான் ; மாறாக - "ஒரு மயிxxxxயும் பிடுங்கப் போவதில்லை !" என்று எழுதினேன் ! "டாய்லெட் பேப்பராகப் பயன்படுத்திய நாட்கள்" என்று சொல்ல முனைந்திருக்கலாம் தான் ; மாறாக - குxx துடைக்கும் பேப்பராகப் பயன்படுத்திய நாட்கள்" என்று சொல்லத் துணிந்தேன் ! "பேத்தியின் கர்ப்பத்துக்கு யார் காரணம் ?" என்று நாசூக்காய் மில்சே தாத்தாவைப் பேசச் செய்திருக்கலாம் தான் ; ஆனால் "பேத்திக் குட்டியை குட்டி போடச் செய்தது யாரு ?" என்று கூசாமல் பேச விட்டேன் தான் ! இந்த நடைக்கு for sure ஆதரவுமிருக்கும், எதிர்ப்புமிருக்கும் என்பதை யூகிக்கச் சிரமமே இருக்கவில்லை தான் ! இங்கொரு சிறு விஷயம் ! மொழிபெயர்ப்பினில் context என்றொரு சமாச்சாரத்துக்கும் சம முக்கியத்துவம் அவசியமே என்பது எனது நிலைப்பாடு ! ஒரே சூழலில் ரிப் கிர்பியும் ; கேப்டன் டைகரும் ; டெக்ஸ் வில்லரும் ; கலாமிட்டி ஜேனும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே ! அவர்கள் convey செய்திட வேண்டிய சேதி ஒன்றாகவே உள்ளதென்றும் வைத்துக் கொள்வோமே ! நீங்கள் தான் அவர்களது டயலாக்குகளை எழுதப் போகும் படைப்பாளிகள் என்றுமே உருவகப்படுத்திக் கொள்வோமே ?! ரிப் கிர்பியை casual ஆக, பாயிண்ட்டாகப் பேசச் செய்ய நினைப்போம் ! டைகரை ஒரு லேசான நக்கலோடு, குத்தலோடு பேசிட வைக்கப் பார்ப்போம் ! டெக்ஸ் பற்றிச் சொல்லவே வேண்டாம், வீரியமான வரிகளைத் தேடிடுவோம் அவருக்கு ! கலாமிட்டி ஜேனுக்கு ? என்னை நினைக்கும் போது அவ்வப்போது ஆங்காகே வெளிப்படும் *#@** பாணியிலான பாஷையினை கலாமிட்டிக்கு வழங்க முற்படுவோம் தானே ? சூழல் ஒன்றாகவே இருந்தும், தகவலும் ஒன்றாகவே இருந்தும், அவை பேசும் மாந்தர்கள் வேறுபடும் போது - பாணிகளும் drastic மாற்றம் காண்பது இயல்பு தானே ? இதுவே தான் இங்கே எனது பேனாவை இதன் பணியில் நான் பிஸியான அந்த முக்கால் நாளினில் வழிநடத்திய கோட்பாடு ! 'அட..இன்னிக்கி செத்தா இன்னிக்கே பால்" என்று தெறிக்க விடும் பெருசுகளுக்கு ; மனதில் படுவதை அப்பட்டமாய்ப் பேச தயங்கும் அவசியங்களைக் கடந்து விட்ட தாத்தாக்களுக்கு - வார்த்தைகளில் நகாசை விட ; எமோஷன்ஸ் தான் பிரதானம் என்று நினைத்தேன் ! அவர்களது குணங்களுக்கு அதுவே பொருந்துவதாகவும் எனக்குப்பட்டது ! So இது ஆபாசம் ; இது அசிங்கம் - என்று எனக்கு நானே அந்த ஞாயிறின் பகலினில் முக்காடு போட்டுக் கொள்ள முனையவில்லை ! தாத்தாக்களை, தாதாக்களாய் உலவ அனுமதித்தேன் ; and ரைட்டோ - தப்போ here we stand !!
அலசல்கள் தொடரும் ; ப்ளஸ்ஸும் வெளிப்படும், மைனஸ்களும் பேசப்படும் !! ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் ஒன்றே ஒன்று மட்டும் நூற்றி நாற்பத்தி ஆறாவது தபாவாய் ஊர்ஜிதம் கண்டுள்ளது ! And அதுவே நான் கூரையிலிருந்து கூவிட நினைத்த சமாச்சாரமும் !! வேறொன்றுமில்லை guys - இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 உண்டாம் ; முறையான அங்கீகாரம் இல்லா மொழிகளின் எண்ணிக்கை 121 ஆம் - wikipedia சொல்கிறது ! ஆனால் என் மண்டையில் மிஞ்சி நிற்கும் கேசத்தை பந்தயமாக்கிக் கூவிட நான் ரெடி !!! அந்த இருப்பதிரெண்டிலோ ; நூற்றி இருபத்தி ஒன்றிலோ - தமிழைத் தவிர்த்த வேறு எந்த மொழியிலும், எந்தவொரு வாசிப்பு வட்டத்துக்கும், இந்தத் தாத்தாக்களை வரவேற்கவோ, வாரி அணைக்கவோ சுட்டுப் போட்டாலும் தெரியாது / முடியாது என்பது எனது நம்பிக்கை !! 130 கோடி ஜனத்தின் மத்தியில் இந்த ஆயிரமும் தப்பிப் பிறந்த அதிசயப் பிறவிகளே !! நெசம் தானுங்களேண்ணா ? முகஸ்துதி இல்லா நெசமிது !
நான் இப்போ கெளம்பிப் போடுறேனுங்கண்ணா ; வேலை தலைக்கு மேலே கிடக்குது !! Bye all....enjoy the Sunday !! See you around !
?1st
ReplyDeleteYes!
Deleteலார்கோ வந்து ரொம்ப நாளச்சு ஏன்
Delete2nd
ReplyDeleteHi..
ReplyDeleteகண்ணே.. கொலைமானே.. - விமர்ச்சனம்
ReplyDeleteமனித சஞ்சாரமற்ற ஒரு பாழடைந்த நகரம். டான்சராக போய் விட்ட தன் தங்கையை தேடி அலையும் ஒரு அப்பாவி பாதிரியார். கொடூரமாக கொலைகளையும் கொள்ளையையும் செய்யும் ஒரு கொலைகார கூட்டம். இவர்களோடு நட்பு பாராட்டும் ஒரு செவ்வந்திய கூட்டம். அவர்களால் கடத்த பட்ட சில அப்பாவி இளைஞர், யுவதிகள் கூட்டம். இந்த கொள்ளை கும்பலை அழிக்க கிளம்பும் டெக்ஸ் மற்றும் அவரது மகன் கிட், இவர்களுக்குள் நடக்கும் போராட்டம் தான் "கண்ணே.. கொலைமானே...". இந்த மாத டெக்ஸ் கதை.
150 ரூபாயில் 223 பக்கங்களில் கருப்பு வெள்ளையில் வந்து இருக்கும் ஒரு சரவெடி பட்டாசு. அட்டை படமே அட்டகாசம். டெக்ஸ் போட்டு இருக்கும் பிரவுன் கலர் long கோட் சூப்பர் கலரில் மிரட்டுகிறது..
கிளைமாக்ஸ் சண்டை காட்சி தான் இந்த கதையின் மாஸ்டர் பீஸ். அதிலும் இறுதி சண்டையில் டெக்ஸ் அறிமுகம் ஆகும் காட்சி செம மாஸ். சினிமாவாக இருந்தால் இந்த காட்சிக்கு, எழுந்து விசிலடிக்க தோணும்.
மொழிபெயர்ப்பு மட்டும் கொஞ்சம் நெரிடுகிறது. வழக்கமான "சித்தே" உண்டு. செவ்விந்தியன் ஒருவன் ''ப்ரோ" என்று கூறுவதும், டெக்ஸ் "பிள்ளையாண்டன்" என்பதும் கடுப்படிக்கிறது. மற்றபடி கதை சூப்பர்.
நன்றி...
Express mode story ....depth and cinematic climax wow ...super...
Deleteசூப்பர்
Deleteவந்துட்டேன்
ReplyDeleteநானும்
ReplyDeleteஆத்மார்தமான பதிவு.. படிக்கவே சந்தோசமாயிருக்கிறது..
ReplyDeleteவணக்கம் வச்சிகிறேன் சபைக்கு...🙏
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteநான் 10..அந்தியின் அழகே ..ரொம்ப அழகு..
ReplyDelete///தமிழைத் தவிர்த்த வேறு எந்த மொழியிலும், எந்தவொரு வாசிப்பு வட்டத்துக்கும், இந்தத் தாத்தாக்களை வரவேற்கவோ, வாரி அணைக்கவோ சுட்டுப் போட்டாலும் தெரியாது / முடியாது என்பது எனது நம்பிக்கை !!///
ReplyDeleteநெம்பப் பெருமையா இருக்குங்க சார்!
//1984-ல் நான் குதூகலித்த காரணம் # 2 தான் இன்றுவரைக்கும் இது போன்ற விஷப்பரீட்சைகளுக்குள் என்னை திளைக்கச் செய்வது !! எனது ரசனையும், உங்களின் ரசனைகளும் ஒரே பக்கத்தில் பயணிக்கும் நாட்கள் ஒவ்வொன்றுமே செம ரம்யமாய்த் தெரிந்திடும் மேஜிக் தான் அது ! "ஆத்தா....வாசகர்களின் ரசனைத் தேர்விலே நான் பாஸாயிட்டேன் !!" என்று 1984-ல் கூவிடத் தோன்றியது இன்று வரைக்கும் ஓய்ந்த பாடில்லை என்பதால் அந்த த்ரில்லை எதிர்பார்த்தே தேடல்கள் இன்று வரையிலும் தொடர்கதையாகின்றன ///
ReplyDelete1.****யாருக்கு வயசு ஆகுதோ இல்லையோ, அவருக்கு ஆயிருச்சு! இனிமே இது மாதிரி நிறைய எதிர்பார்க்கலாம்!***
1.##### அவருக்கு வயசாகிட்டிருக்குன்றது உண்மை தான் சார்! ஆனால் அவருடைய காமிக்ஸ் ஆர்வமும், தேடலும் இன்னமும் ஒரு சிறுவனுக்குரிய துள்ளலோடுதான் இருக்கிறது என்பது என் தாழ்மையான கருத்து!####
முகநூலில் அ.அழகே பற்றிய விமர்சன பதிவு கமெண்ட்களில் ( எல்லாமே இதுவரை பாஸிட்டிவ் ரிவியூதான்) இரண்டாவது கமெண்ட் இளவரசரோடது..
தொடர்ந்து வாசிக்கக் கூடிய வாசகர்களின் பொதுவான மனநிலையைஇ.சி.ஈ.இளவரசரின் கருத்து பிரதிபலிப்பதாகவே உள்ளது
ஹிஹி! டேங்சுங்க செனா அனா!😇😇🙏
DeleteHonestly வயசுக்கும் எழுத்தாற்றலுக்கும், ரசனைகளுக்கும் சம்பந்தப்படுத்திய (சில) நண்பர்களின் சிந்தனைகள் frankly amusing !! நான் தாத்தாக்கள் கதை போட்டால் பாட்டையாவென்றால், நாளைக்கே "வாண்டு ஸ்பெஷல்" போட்ட கையோடு யூத்தாய் மாறிடவா போகிறேன் ?
DeleteAnd இங்கொரு கொசுறு :
போன வாரம் கருணையானந்தம் அங்கிள் போன் அடித்தார் ! "என்ன மாமா ? " என்றேன் ! ""கையிலே இருக்க தோர்கல் முடிஞ்சதுப்பா ; அடுத்து ஏதாச்சும் ஒர்க் இருந்தா அனுப்பிவிடேன் - ரொம்ப போரடிக்கிறது !!" என்றார் !!
சமீப நாட்களில் அவருக்கென நான் ஒதுக்கி வரும் கதைகளின் எண்ணிக்கை குறைவதால் கொஞ்சம் கேப் விழுந்திருப்பது புரிந்தது எனக்கு ! நீங்களும், நானும், நண்பர்களில் பலரும் ஒட்டு மொத்தமாய் இணைந்து எழுதியிருக்கக்கூடியதை விட, இந்த ஒற்றை மனுஷன் தனது வாழ்நாளில் எழுதியுள்ளது ஜாஸ்தி ! And எண்பது வயதை நெருங்கவுள்ள வேளையிலும் ஆர்வம் குன்றாது பேனா பிடிக்க வேட்கையுடன் உள்ளார் ! மலைப்பாக இருந்தது !!
வயதும், மூப்பும் மனிதர்க்கே ; பேனாக்களுக்கல்ல - என்பதை அந்த நொடியில் உணர்ந்தேன் !
///நீங்களும், நானும், நண்பர்களில் பலரும் ஒட்டு மொத்தமாய் இணைந்து எழுதியிருக்கக்கூடியதை விட, இந்த ஒற்றை மனுஷன் தனது வாழ்நாளில் எழுதியுள்ளது ஜாஸ்தி ! And எண்பது வயதை நெருங்கவுள்ள வேளையிலும் ஆர்வம் குன்றாது பேனா பிடிக்க வேட்கையுடன் உள்ளார் ! மலைப்பாக இருந்தது !!
Deleteவயதும், மூப்பும் மனிதர்க்கே ; பேனாக்களுக்கல்ல - என்பதை அந்த நொடியில் உணர்ந்தேன் !///
நச் நச் நச்!!!
கருணையானந்தம் சார்.. உங்களுடைய பேனா பிடிக்கும் கைக்கு (லெஃப்டுல பிடிக்கமாட்டீங்கன்னு நம்பறேன்) என்னுடைய இச் இச் இச்!!
சார் நம்ம அந்தி அழகு கதை கூட இதைத்தான சொல்லுது...ஆற்றல் என்பது சந்தோசம் சார்ந்த விசயமல்லவா
Delete//வயதும், மூப்பும் மனிதர்க்கே ; பேனாக்களுக்கல்ல - என்பதை அந்த நொடியில் உணர்ந்தேன் !//
Deleteசூப்பர்!
13th
ReplyDeleteஉள்ளேன் ஐயா.!!
ReplyDeleteபல ஊர்களில் சில கிழவிகளை பார்துள்ளேன், அவர் பேசும் வார்த்தைகள் பச்சை பச்சையா இருக்கும். இந்த மொழிநடை இந்த தாத்தாக்களை இன்னும் ரசிக்க வைக்கிறது.
ReplyDeleteஇன்றிலிருந்து நீவிர் கிழவிகண்டகிரி என்று அன்போடு அழைக்கப்படுவீர்.!
Deleteஆமாமா
Deleteஓரு கதையில் "தேக்சா" கிழவி வருமே.....
Deleteஅதை படிக்கும் போது கொஞ்சம் கிர்ர்னு இருந்துச்சி....
இப்பத்தான் அந்த எழுத்துக்கள் என்ன மாதிரி பார்வையில் வைக்கப்பட்டு இருக்க வேணும் என புரிந்து கொள்ள முடிகிறது....
அந்த எழுத்தாளருக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழிபெயர்ப்பின் வெவ்வேறு நிலைப்பாடுகளை விவரித்தது சிறப்பு சார்.. விசித்திர ஆயிரத்தார்தான் தமிழ் காமிக்ஸ் வாசகர்கள்..Well said..
ReplyDeleteதிருத்தம் சார் :
Deleteவிசித்திர ஆயிரத்தார் அல்ல....
அதிசய ஆயிரத்தார் !
சூப்பர் சார்..
Delete
ReplyDelete(ஒரு இளம் பெண் அட்டர்னி ஜூனியர் பூர்ஸா வீட்டில் நுழைந்து )
இளம்பெண்: நான் லுசெட்டோட ப்ரண்ட் கேஸட்டோட பேத்தி..பேரு மாஃபியா...அவங்களும் கரன் செர்வியா கம்பெனில ஆறேழு வருஷம் வேலை பாத்தாங்க..அவங்க ஏதாவது உங்ககிட்ட கடுதாசி ஏதாச்சும் கொடுத்திருக்காங்களா?..இன்னிக்கு காலையில அவங்க செத்துட்டாங்க
பூர்ஸா: இல்லியேம்மா..
இளம்பெண்: சே! அந்த கெழத்துக்கு ஒரு துப்புமில்ல..நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான்..
😂😂😂😂😂
Delete/// இளம்பெண்: சே! அந்த கெழத்துக்கு ஒரு துப்புமில்ல..நான் கொடுத்து வச்சது அவ்வளவுதான் ///
Deleteசெனாஜி சூப்பர்.
" ஒரு யூரோவா, ரெண்டு யூரோவா, நூறு மில்லியன யூரோவாச்சே,தூறு மில்லியன் யூரோவாச்சே. அடே..செர்வியா..கோட்டு போட்ட செர்வியா..அவனில்லை. வரமாட்டான்."
ha... ha... ha... ROFL!
Delete///" ஒரு யூரோவா, ரெண்டு யூரோவா, நூறு மில்லியன யூரோவாச்சே,தூறு மில்லியன் யூரோவாச்சே. அடே..செர்வியா..கோட்டு போட்ட செர்வியா..அவனில்லை. வரமாட்டான்."///
Deleteஃப்ரான்ஸில் ஒரு தருமி
ha... ha... ha!!! சரவணகுமாரின் சிரிப்புச் சத்தம் கேட்டு இப்பத்தான் இதை கவனிச்சேன். இந்தமாதிரி கோக்குமாக்கா யோசிக்கறதுக்கெல்லாம் உங்களை அடிச்சுக்க ஆள் கிடையாதுங்க செனாஅனா! :))))))
Deleteஅடேயப்பா மெயின் கதையோட கிளைக்கதை பட்டாசா இருக்கும் போலயே....!!!
Deleteகேசட்டோட முழு கதையும் கிடைக்குமா??
அந்தியும் அழகே :-
ReplyDeleteபுரட்சிக்கார தாத்தா ஒருத்தரோட. பொண்டாட்டி பாட்டி.. செத்துப் போறப்போ சும்மா போகாம.. தன்னோட காதல் கணவனுக்கு உக்கார்ர இடத்துல ஆப்பு சொருகினா மாதிரியான சங்கதி ஒண்ணை லெட்டர் மூலமா சொல்லி வெச்சிட்டு செத்துப்பூடுது.!!
லெட்டர் சொன்ன சங்கதி என்னன்னா... தன் காதல் கணவனோட எதிரியான முதலாளிகிட்டதான் ரெண்டாவது புள்ளைய பெத்திருக்கு இந்த டகால்டி பாட்டி.!
இதைத் தெரிஞ்சிகிட்ட உடனே துப்பாக்கிய தூக்கிட்டு முதலாளி தாத்தாவை போட்டுத்தள்ள வெறிகொண்டு கிளம்புறாரு நம்ம புரட்சித் தாத்தா.!
இன்னிக்கோ நாளைக்கோ தானாவே சாகப்போற தாத்தாவை சுட்டுக்கொன்னுட்டு நண்பன் ஜெயிலுக்கு போயிடக் கூடாதேன்னு புரட்சித் தாத்தாவோட ரெண்டு நண்பர்களான தீவிரவாதி தாத்தாவும், ப்ளேபாய் மாலுமித் தாத்தாவும் தடுக்கக் கிளம்புறாங்க.! கூடவே புரட்சித் தாத்தாவோட புரட்சிப் பேத்தியும்.. (அதாவது வயித்துல இருக்குற புள்ளைக்கி அப்பா யார்னே தெரியாத அளவுக்கு புரட்சிகரமான பேத்தி) வேன் ஓட்டிக்கிட்டு போகுது.!
போன இடத்துல பாத்தா அந்த கள்ளக்காதல் தாத்தா எதுவுமே நினைவில்லாம சக்கர நாற்காலியில சக்கையா கிடக்கிறாரு..! ஆனா கள்ளக்காதலியை மட்டும் மறக்கலை.!(தன் கள்ளக்காதலியைப் பத்தின பெருசோட வர்ணனைகள் எல்லாம் அவ்வளவு ரசனையா இருக்கு.)
புரட்சித் தாத்தா பழிவாங்கினாரா.!? நட்புத் தாத்தாக்கள் தடுத்தாங்களா.!? புள்ளதாச்சி பேத்தி என்ன ஆனா.. அங்கே அவளுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம் என்ன.!? இதையெல்லாம் கதையைப் படிச்சி தெரிஞ்சிக்கோங்க மக்களே.!
கதைக்களத்திற்குப் பொருத்தமான மொழிபெயர்ப்பு மற்றும் நக்கல் தெறிக்கும் வசனங்கள் இரண்டும் கதையை படு சுவாரஸ்யமாக்குகின்றன.!
வழக்கமான காமிக்ஸ் டெம்ப்ளேட்டுகளில் இருந்து மிகவும் வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவம் கியாரண்டி.!
கதையில் ஆங்காங்கே ஏகப்பட்ட. மறைமுக காமெடிகள் குவிந்து கிடக்கின்றன.! (உதாரணத்திற்கு ரெண்டு : உடம்பு முழுக்கு வெறியோட தன் மனைவியோட கள்ளக்காதலனை போட்டுத்தள்ள எடுத்துக்கிட்டு போற துப்பாக்கியை., காம்பவுண்ட்டை தாண்டிக் குதிக்கவேண்டி அந்தப்பக்கம் தூக்கிப் போடும்போது.. அது சேத்துக் குட்டையில விழுந்து முழுகிப்போயிடுது.. நம்மாளு இறங்கி தேடிப்பாத்துட்டு பொக்குன்னு ஜட்டியோட நிப்பாப்ல.😂..!
மாலுமி தாத்தாவால உக்காந்தா சீக்கிரம் எந்திரிக்க முடியாது.! கார்ல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு இறங்க முய்ற்சி செஞ்சிகிட்டு இருப்பாரு.. அதே சமயத்துல புரட்சித் தாத்தா ஒருத்தனை மிரட்டிட்டு இருப்பாரு.! என் நண்பன் கீழே இறங்கினா என்ன நடக்கும் தெரியுமா.. உன்னை பொளந்துருவான் அதுஇதுன்னு பில்டப் பண்ணிட்டு இருப்பாப்ல.! நம்ம மாலுமி தாத்தாவும் கஷ்டப்பட்டு ஒரு வழியா காரை விட்டு கீழிறிங்கி நிப்பாப்ல..! அதே நொடி புரட்சித் தாத்தா சண்டையை முடிச்சிட்டு.. மாலுமி தாத்தாவை சரி கார்ல ஏறுடா கிளம்பலாம்னு சொல்லி கார்ல ஏறிக்குவாரு.. நம்மாளு திரும்பவும் முக்கி முக்கி கார்ல ஏறுவாரு..😂 )
கதையை படிச்சிட்டு இருக்கறப்போ பேத்தியை பத்தி பெருசுக பேசிக்கிற ஒரு வசனம் உறுத்தலா இருந்துச்சி.! உடனே நண்பர்களோட விவாதிச்சதிலேயும்.. ஒரிஜினல் வசனம் கிடைச்சதிலேயும்.. தமிழில் எவ்வளவோ டீசன்டா இருக்கேன்னு புரிஞ்சுது.🤣🤣)
அந்தியும் அழகே : அடுத்த ஆல்பம் எப்போ சார்.?
ரேட்டிங் 8.5/10
ஹா ஹா!! காட்சிகளை விவரிச்ச விதம் செம - கிட்!!
Deleteஇந்தமாதிரி ரசிக்கும்படியான நுணுக்கமான காட்சிகளை ஒவ்வொருத்தருமே கவனிச்சுப் படிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னா கார்ட்டூன் படைப்புகள் எல்லாம் எங்கயோ போயிடும்!!
செம செம!!
KoK இந்த ரெண்டு காட்சிய பத்தி நான் எழுதனும்னு இருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க. துப்பாக்கி கிடைக்காம கட்டையை தூக்கிட்டு வருவாரு. ஹீ.. ஹீ.. ஹீ..
Deleteநச் விமர்சனம் Kok அருமை.
Delete//
Deleteகதையில் ஆங்காங்கே ஏகப்பட்ட. மறைமுக காமெடிகள் குவிந்து கிடக்கின்றன.! (உதாரணத்திற்கு ரெண்டு : உடம்பு முழுக்கு வெறியோட தன் மனைவியோட கள்ளக்காதலனை போட்டுத்தள்ள எடுத்துக்கிட்டு போற துப்பாக்கியை., காம்பவுண்ட்டை தாண்டிக் குதிக்கவேண்டி அந்தப்பக்கம் தூக்கிப் போடும்போது.. அது சேத்துக் குட்டையில விழுந்து முழுகிப்போயிடுது.. நம்மாளு இறங்கி தேடிப்பாத்துட்டு பொக்குன்னு ஜட்டியோட நிப்பாப்ல.😂..!
மாலுமி தாத்தாவால உக்காந்தா சீக்கிரம் எந்திரிக்க முடியாது.! கார்ல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு இறங்க முய்ற்சி செஞ்சிகிட்டு இருப்பாரு.. அதே சமயத்துல புரட்சித் தாத்தா ஒருத்தனை மிரட்டிட்டு இருப்பாரு.! என் நண்பன் கீழே இறங்கினா என்ன நடக்கும் தெரியுமா.. உன்னை பொளந்துருவான் அதுஇதுன்னு பில்டப் பண்ணிட்டு இருப்பாப்ல.! நம்ம மாலுமி தாத்தாவும் கஷ்டப்பட்டு ஒரு வழியா காரை விட்டு கீழிறிங்கி நிப்பாப்ல..! அதே நொடி புரட்சித் தாத்தா சண்டையை முடிச்சிட்டு.. மாலுமி தாத்தாவை சரி கார்ல ஏறுடா கிளம்பலாம்னு சொல்லி கார்ல ஏறிக்குவாரு.. நம்மாளு திரும்பவும் முக்கி முக்கி கார்ல ஏறுவாரு..😂 )
//
அடேங்கப்பா... KOK அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்துட்டீங்க... ரொம்ப ரசிச்சேன்!!!
அந்த நடக்க இயலா மாலுமி தாத்தா வெறும் உடம்போட பச்சைய காட்டி நீச்சலடிச்சு அந்த சமையல்கார பெண்ண வளச்சத சத்தமில்லாம காட்டியிருப்பாக....பாத்தியளா....வேகம் என்பது மனம் சார்ந்த சந்தோசம்தானே...இவ்வரியும் ஒளிஞ்சிருக்கும்
Deleteஅருமை கண்ணா.
Deleteசெமத்தியான விமர்சனம் அங்கிள்..
Deleteகதையை ரொம்ப ரசிச்சி படிச்சிருக்காய் பேஸ் பேஸ்....!!
தீவிரவாதி தாத்தாவும், புரட்சி குட்டியும் பர்சேஸ் பண்ணிட்டு, மூச்சா போயிட்டு வரும்போது பிளேபாய் தாத்தா பொம்மலாட்டம் காட்டிட்டு இருப்பாரு....
பிளேபாய் தாத்தாவை அவுங்க முறைக்க.....
அந்த காட்சியும் செம...
நிறைய இடங்களில் இதுமாதிரி கதையோடவே காமெடி கலந்து கட்டி அடிக்குது....
// தீவிரவாதி தாத்தாவும், புரட்சி குட்டியும் பர்சேஸ் பண்ணிட்டு, மூச்சா போயிட்டு வரும்போது பிளேபாய் தாத்தா பொம்மலாட்டம் காட்டிட்டு இருப்பாரு....
Deleteபிளேபாய் தாத்தாவை அவுங்க முறைக்க.....
அந்த காட்சியும் செம... // ஆமா நான் ரொம்ப ரசிச்ச காட்சி, அதற்கு அடுத்த பணாலில் அந்த பொம்மலாடத்தை பார்த்துக் கொண்டு இருந்த குழந்தைகள் பாதியில் முடிந்து விட்டதால் அழுது அடம் பிடித்து பஸ்ஸில் வரமாட்டேன் என்று தந்தையிடம் அடம் பிடிக்கும் காட்சி அற்புதம்.
As a side note, I loved this month's Tex too. I am not usually a big fan of Tex books, but this month's story was spectacular. While அந்தியும் அழகே will definitely take the lead, I hope to see more Tex like this in future. Truly a great story that kept the tempo throughout.
ReplyDeleteஆவலை ஏகத்துக்கும் கிளப்பறீங்க! சீக்கிரமே படிக்கிறேன்!
Deleteதுவக்க பக்கங்கள் பத்தை படித்தேன்...கட்டிப் போடுது கதையின் நடை....முடிஞ்சா இன்னைக்கு படிச்சிரனும்...பயபுள்ள தூங்கயில
Delete///பாவப்பட்ட கேரட்மீசைக்காரரை கொஞ்சம் நினைச்சுப் பாருங்களேன் ? 'அப்டி ஓரமாய் போயி வெளயாடிக்கோங்க நைனா !!" என்று சொல்லாத குறை தான் !!///
ReplyDeleteநான்லாம் கர்னலின் கதையை முந்தாநேத்திக்கு படிச்சுட்டு, நேத்திக்கே விமர்சனமெல்லாம் போட்டாச்சுங்க சார்! தீவாளி பிஸில நீங்க கவனிக்காம விட்ருப்பீங்க!
மொழிப்பெயர்ப்பை மட்டுப்படுத்தியிருப்பின் தத்தாக்கள் நிச்சயம் எடுபட்டிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இந்த உரையாடலில்தான் அவர்களின் தனிப்பட்ட குணங்கள் அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. அதனால்தான் தாத்தாக்களை எங்களுக்கு பிடித்தும் போனது. மொத்தத்தில் தத்தாக்கள் அடுத்த ரவுண்ட் வலம் வரப் போவது உறுதி என்றும் கணிக்கிறேன்.
ReplyDeleteஅருமையா சொன்னீங்க நண்பரே!
Deleteஆமாமா...இருக்கலாம்...ஓவியங்க ஒளிபீச்ச ...பாஷைகள் தேன் பாய்ச்சியதோ
Deleteஅடுத்த 5வருடத்துக்கு 5ஸ்லாட் ஒதுக்கிடலாம்.... இதை பட்டுனு போட்டு தள்ளிட கூடாது... வருடம் ஒரு பார்ட்டுனு ரசிக்கனும்....!!!!
Delete// வருடம் ஒரு பார்ட்டுனு ரசிக்கனும்....!!!! //
Deleteஅதே,அதே...
மறந்தும் மறவாதே :
ReplyDeleteமுதல் பேனலிலேயே எத்தனை "பாவப்பட்ட" -வார்த்தைகள்...
மர்மமான முறையில் மாரடைப்பில் இறக்கும் முக்கிய பிரமுகர்களின் வழக்கை புலனாய்வு வரும் க்ளிப்டன் அவர் பாணியில் எப்படி வழக்கின் முடிச்சை அவிழ்க்கிறார் என்பதே கதைக் களம்...
"ஜேம்ஸ் பாண்டுக்கும் பேண்ட் அவிழும் தானே ?!"
"பீஸ் கொடுக்காம கம்பி நீட்ட நினைச்ச பயபுள்ளைகள் பல பேரைப் பார்த்த பலே ஸ்டெதஸ் கோப்பாக்கும் இது !"
-வசனங்கள் கிச்சு,கிச்சு இரகம்...
க்ளிப்டன் வெளியில் செய்யும் சாகஸத்தை விட,வீட்டில் அம்மணி மிஸ்.பாட்ரிட்ஜ் கர்னலை வெச்சி செய்யும் காமெடிகள் இரசிக்கின்றன...
-கொஞ்சம் காமெடி,கொஞ்சம் சீரியஸ்...
தமிழ் சினிமாவில் ஒரு பழக்கமுண்டு,காமெடி + ஹாரர் கதை எடுக்கறோம்னு சொல்லிட்டு எதுக்கும் கூட்டு இல்லாம எதையாவது எடுத்து வெப்பாங்க..
செமி கார்ட்டூனில் இருக்கும் பிரச்சனையே காமெடி+சீரியஸ் இரண்டையும் சரியான கலவையில் கலந்து கதைக் களத்தை நகர்த்துவதுதான்,
க்ளிப்டன் இக்கலவையில் இந்த முறை கொஞ்சம் பிசிறடித்து விட்டது போல் தோன்றுகிறது...
எனினும் ஒருமுறை வாசிப்பிற்கு ஏற்ற இதழ்...
ஒரு கொலைக் கணக்கு :
பக்க நிரப்பிகளுக்கு உண்டான அம்சங்களுடன் ஒரு கதை,நமக்கும் டைம் பாஸ்...
களம் இன்னும் கொஞ்சம் நன்றாக அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாய் அடித்து விளையாடி இருப்பாரோ கேரட் மீசைக்காரர் ???!!!
இருக்கும் கார்ட்டூன் வறட்சியில் கேரட் மீசையை அடுத்த தடவை வேண்டாம் என சட்டென சொல்லிட முடியாதுதான்...
எமது மதிப்பெண்கள்-7/10.
///இருக்கும் கார்ட்டூன் வறட்சியில் கேரட் மீசையை அடுத்த தடவை வேண்டாம் என சட்டென சொல்லிட முடியாதுதான்///
Deleteடேங்சுங்க அறிவரசு! கர்னல் தாத்தா கண்டிப்பாய் ஏமாற்றிட மாட்டார்!
கண்ணே கொலைமானே :
ReplyDeleteடெட்மேன் டிக் என அழைக்கப்படும் வழிப்பறிக் கொள்ளையனின் கும்பலை பின்தொடரும் டெக்ஸ் வில்லரும்,கிட் வில்லரும் பயண வழியில் நடக்கும் பல்வேறு சம்பவங்களின் தொடர்ச்சியே கண்ணே கொலைமானே...
"சத்தமும்,நிசப்தமும் மாறி மாறி இங்கே ஆட்சி செய்கின்றன"
"இரண்டுமே தீரா பயத்தை விதைத்து வருகின்றன எனக்குள்ளே"
"பயமென்பது ஒரு குளிர் நாளின் ஐஸ் குளியலைப் போலானது ! தலையில் துவங்கி,சர்வ நாளங்களையும் நொடியில் வியாபித்து விடுகிறது !"
"இந்தத் தனிமை வேறு நித்தமும் என்னைக் கொல்லாமல் கொல்கிறது"
"ஆனாலும்,இந்தத் தனிமையின் துணையை மனம் விரும்புவதேனோ ?"
"என்னதான் ஆயிற்று எனக்கு"
- தொடக்க காட்சிகளில் வரும் கி.நா வின் அம்சங்களுக்கே உரிய வசனங்கள் வித்தியாசமான துவக்கம்...
துவக்க காட்சியில் ஊதைக் காற்று எழுப்பும் வினோத சப்தங்களும்,திடுக்கென தெருவில் பந்தாய் உருண்டு வரும் உருவமும் மரண முள்-2 தான் வந்து விட்டதோ என்று நினைக்க வைத்து விட்டது...
ப்ளாக்பேர்ட்டுக்குமான வில்லருக்குமான சண்டைக் காட்சி ஏற்கனவே பார்த்த டெம்ப்ளேட்தான் என்றாலும் சூடு குறையாத காட்சியமைப்பு...
"வாய்ச் சவடாலால் வாள் சண்டைகள் தீர்மானிக்கப்பட்டதாகச் சரித்திரம் கிடையாது !"-சரியான டைமிங் பஞ்ச்...
" ஓசையின்றி பதுங்கும் கலையை நீ படித்த பள்ளிக்கூடத்தில் நான் தலைமை வாத்தியாராக்கும் ப்ளாக்பேர்ட்"...
"நம்பிக்கைகளை இதயம்தான் வழிநடத்துகிறது ! பகுத்தறிவு அல்ல"
-கதைக் களத்திற்கு வலுவூட்டும் வசனங்கள்...
கொலராடோ அழகி,கொலராடோ சலூன்,யெல்லோ ஸ்கை,யூட்ஸ் செவ்வியந்தியர்கள்னு சுவராஸ்யம் சேர்க்கும் செய்திகள் நிறைய...
ஓவியங்கள் நிறைவு,குறிப்பாக யெல்லோ ஸ்கை சார்ந்த காட்சியமைப்புகளும்,இயற்கையின் தாண்டவமும் சேர்ந்த காட்சிகள் திகில் மொமெண்டை கொடுத்தன...
பெரிசா யோசிக்காததால பைனல் ட்விஸ்டை எதிர்பார்க்கவில்லை...
இருப்பினும் இங்கே பகுத்தறிவிற்கு வேலையில்லைதான்...
மொத்தத்தில் கண்ணே கொலைமானே,நிறைவான வாசிப்பிற்கு உத்தரவாதம்...
ஆமா "கண்ணே கலைமானே" இந்த தலைப்புக்கு இன்னாபா அர்த்தம் ?!
எமது மதிப்பெண்கள்-9/10.
///ஆமா "கண்ணே கலைமானே" இந்த தலைப்புக்கு இன்னாபா அர்த்தம் ?!///
Delete---- //நெஞ்சே எழு//--வுலயே இன்னும் கதைக்கும் பெயருக்கும் என்னா சம்பந்தம்னு தெரியலங்களே ரவி! இதையும் வெயிட்டிங் லிஸ்டல வைங்க... 4வது வாரம் ஆராஞ்சிபுடலாம்...
ம்ம்ம்...
Delete// So இது ஆபாசம் ; இது அசிங்கம் - என்று எனக்கு நானே அந்த ஞாயிறின் பகலினில் முக்காடு போட்டுக் கொள்ள முனையவில்லை ! //
ReplyDeleteசமயங்களில் முரண்களும் அழகுதான் சார்...!!!
எல்லாமே அழகுதான் ...
Delete////தல' & கேரட் தாத்தா - இம்மாதம் ஓரமாய் நின்று காதினுள் புகை விடுவதே முதற்கட்ட நிலவரம் !!///
ReplyDelete---சன் டீவி டாப் டென் மூவீஸ் ஷோ தங்களின் ஃபேவரைட்டாங் சார்...!!!
இது இந்த வாரத்தோடு நிலைமைதான்; அடுத்த வார ரேட்டிங்கோடு உங்களை சந்திக்கிறோம் னு முடியும்போது அட டா ஷோ ஓவரானு தோணும்..... அதேபாணியில் காமிக்ஸ் நிலவரம்..செம செம சார்.
//மாசானதொரு அட்டைப்படத்தோடு ஆரவாரமாய் ஆஜராகியிருக்கும் 'தல'யே முத நாள் ஷோவில் 3 தாத்தாக்களிடம் ஜகா வாங்கிக் கொண்டிருக்க,///
ReplyDelete---அடி கொடுத்த கைப்புள்ளைக்கே இம்புட்டுனா அடிவாங்குனவங்க உசுரோட இருப்பாங்கிறங்க....???
டெக்ஸ் மைண்ட் வாய்ஸ்:-உசுப்பேத்தி...உசுப்பேத்தியே!
🙏🙏🙏🙏🙏🙏
ReplyDelete//) இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22 உண்டாம் ; முறையான அங்கீகாரம் இல்லா மொழிகளின் எண்ணிக்கை 121 ஆம் - wikipedia சொல்கிறது ! ஆனால் என் மண்டையில் மிஞ்சி நிற்கும் கேசத்தை பந்தயமாக்கிக் கூவிட நான் ரெடி !!! அந்த இருப்பதிரெண்டிலோ ; நூற்றி இருபத்தி ஒன்றிலோ - தமிழைத் தவிர்த்த வேறு எந்த மொழியிலும், எந்தவொரு வாசிப்பு வட்டத்துக்கும், இந்தத் தாத்தாக்களை வரவேற்கவோ, வாரி அணைக்கவோ சுட்டுப் போட்டாலும் தெரியாது / முடியாது என்பது எனது நம்பிக்கை !! 130 கோடி ஜனத்தின் மத்தியில் இந்த ஆயிரமும் தப்பிப் பிறந்த அதிசயப் பிறவிகளே !! ///
ReplyDeleteகூரையின் மேல் கூடவே நாங்களும், கையில் கொடியுடன்.
நானும் சேவலாய் செந்தூரான் அருளுடன்
Delete////ஒரு உருப்படியான படைப்பாளி டீம் கிட்டினால் - எந்தக் களிமண்ணும் சோடை போகாதென்பது புரிகிறது ///
ReplyDelete--- பாயாச பார்டிகளை பார்த்து ஏதும் சொன்னீங்களா சார்!!!
வணக்கம் நண்பர்களே!
ReplyDelete/// ஒரே சூழலில் ரிப் கிர்பியும் ; கேப்டன் டைகரும் ; டெக்ஸ் வில்லரும் ; கலாமிட்டி ஜேனும் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோமே ! அவர்கள் convey செய்திட வேண்டிய சேதி ஒன்றாகவே உள்ளதென்றும் வைத்துக் கொள்வோமே ! ///
ReplyDelete/// சூழல் ஒன்றாகவே இருந்தும், தகவலும் ஒன்றாகவே இருந்தும், அவை பேசும் மாந்தர்கள் வேறுபடும் போது - பாணிகளும் drastic மாற்றம் காண்பது இயல்பு தானே ? இதுவே தான் இங்கே எனது பேனாவை இதன் பணியில் நான் பிஸியான அந்த முக்கால் நாளினில் வழிநடத்திய கோட்பாடு ///
/// மனதில் படுவதை அப்பட்டமாய்ப் பேச தயங்கும் அவசியங்களைக் கடந்து விட்ட தாத்தாக்களுக்கு - வார்த்தைகளில் நகாசை விட ; எமோஷன்ஸ் தான் பிரதானம் என்று நினைத்தேன் ! அவர்களது குணங்களுக்கு அதுவே பொருந்துவதாகவும் எனக்குப்பட்டது !///
/// So இது ஆபாசம் ; இது அசிங்கம் - என்று எனக்கு நானே அந்த ஞாயிறின் பகலினில் முக்காடு போட்டுக் கொள்ள முனையவில்லை ! தாத்தாக்களை, தாதாக்களாய் உலவ அனுமதித்தேன் ; and ரைட்டோ - தப்போ here we stand ///
உண்மையில் எனக்கு அந்த வார்த்தைகள சிறிது நெருடலாகத் தான் இருந்தது சார்..
இந்த வார்த்தைகளைத் தவிர்த்து, வேறு வார்த்தைகளைபயன்படுததி இருக்கலாமே என்றும் தோன்றியது.
ஆனால் உங்கள் பதிவைப் படித்ததும் தங்கள் முடிவு சரியே என்று புரிகிறது.
/// கதையில் பெருசெல்லாமே devil may care தோரணையில் சுற்றி வந்தது ; சிறுசுகளெல்லாம் சாக்ரடீஸ் ரேஞ்சில் தத்துவம் பேசுவது - என்று நிறைய
விஷயங்கள் என்னை உசுப்பி விட்டுக் கொண்டேயிருந்தன///
இதுவும் என்னை வியக்க வைத்த விஷயமே.
வழக்கமாக பெருசுகள் தான் தத்துவ, உபதேச மழை பொழியும். சிறுசுகள் ரவுசு கட்டும். இங்கே அப்படியே நேர்மாறாக இருக்கிறதே என்றும் எண்ணத் தோன்றியது. இதுவே என்னை இந்த கதையை ரசிகக வைக்கும் ஒரு காரணியாகவும் இருந்தது.
Anyhow தாத்தாகள முதல் இடத்தை ஸ்கோர் செய்ததில் மகிழ்ச்சியே.
எனக்கு இயல்பா தோணிச்சு...சிறு வயசுல....
Deleteதை தக்கட தை....
தாத்தம் பொ@&ல நெய்னு ...கம்பெடுத்து வீசுவது போல பொண்டாட்டி பயவுள்ளைவளா என சிரித்தபடி விரட்டிய எங்க தாத்தாவ
கூப்பாடு போட்டு தெருல நண்பர்களோட யாரையும் கண்டுக்காம குதிச்சு கும்மாளமிட்ட ஆறு வயசு மழலைப் பட்டாளம் நாங்க...
நமக்கு இந்த சச்சரவு, கிய்யாமுய்யா ஸ்டைல்லாம் சின்ன வயசுல இருந்தே நல்ல பரிட்சயம், பத்து சார்...
Deleteஅதனால் இந்த ஃப்ரீ புளோ ரைட்டிங் உடன் ஒன்றியாச்சி....!!!🤩
ஒரிஜினல் படைப்பாளிகளின் மூல வசனத்தை பார்த்தா நம்புள்து கொஞ்சம் நாசூக்காவே இருக்குனு தோணுது...
நைட் மேட்ச் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எப்படியாச்சும் கர்னல் ஹெரால்ட் கப்கேக் க்ளிப்டனை படிச்சிறோனும்.!
ReplyDeleteதல..
வழக்கம்போல கடேசியா ஆறஅமர ரசிச்சி படிச்சிக்கலாம்.!
////ஒரு உருப்படியான படைப்பாளி டீம் கிட்டினால் - எந்தக் களிமண்ணும் சோடை போகாதென்பது புரிகிறது ///
ReplyDeleteஅரைமில்லியனில் ஒரு வார்த்தை.!
ஹா...ஹா... அந்த அரைமில்லியன் புதையல் பார்டியை சொல்றேனு தெரிஞ்சிட்டது...
Deleteஅவருக்கு அமைஞ்சது அவ்வளவுதான்...!!!
இன்னும் நல்லபடைப்பாளிகள் தொடர்சள அமைஞ்சிருந்தா அந்த அண்டா பார்டிகளை கையிலயே பிடிக்க இயலாதே...
/// இந்த ஒற்றை மனுஷன் தனது வாழ்நாளில் எழுதியுள்ளது ஜாஸ்தி ! And எண்பது வயதை நெருங்கவுள்ள வேளையிலும் ஆர்வம் குன்றாது பேனா பிடிக்க வேட்கையுடன் உள்ளார் ! மலைப்பாக இருந்தது !! ///
ReplyDeleteAmaying. உண்மையிலேயே பிரமிக்க வை
க்கிறார். வெகுசிலருக்கு மட்டுமே இது அமையும்.
சிரம் தாழத்தி வணங்குகிறேன் கருணையானந்தம் சார்..
என்னுடைய வணக்கங்களும்🙏🙏🙏
Delete/// !! கெத்தா, மாசானதொரு அட்டைப்படத்தோடு ஆரவாரமாய் ஆஜராகியிருக்கும் 'தல'யே முத நாள் ஷோவில் 3 தாத்தாக்களிடம் ஜகா வாங்கிக் கொண்டிருக்க, பாவப்பட்ட கேரட்மீசைக்காரரை கொஞ்சம் நினைச்சுப் பாருங்களேன் ?///
ReplyDeleteஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை சார்.! தாத்தா அடுத்த ஆல்பம் வரும்போது இதே மாதிரி முன்னுரிமையெல்லாம் கிடைக்காது.!
புதுசா வருதே.. எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோன்ற ஆர்வம்தானே தவிர டெக்ஸை ஜகா வாங்க வெச்சிடுச்சி என்பதையெல்மாம் ஏத்துக்க முடியாது.. ஆம்மா.!
அட்டைய பாருங்க உத்து...என்னமோ இருக்கு....இனம் புரியாத இன்பம்பாவளே அதுவா
Delete////// இந்த ஒற்றை மனுஷன் தனது வாழ்நாளில் எழுதியுள்ளது ஜாஸ்தி ! And எண்பது வயதை நெருங்கவுள்ள வேளையிலும் ஆர்வம் குன்றாது பேனா பிடிக்க வேட்கையுடன் உள்ளார் ///
ReplyDeleteதலைவணங்குகிறேன்..!!
நானும்
Deleteஅருமையான பதிவு சார்....தாத்தாக்கள விட்டு அசத்திட்டீங்க....ஆனா ஸ்பைடர் கதய தாத்தா காலத்துக் கதைன்னு (முதியோர்) இல்லத்லயே இன்னும் வச்சாக்கா எப்புடி...
ReplyDeleteஉங்க சந்தோசம் தேடலில் தருவது....இந்த முறை தந்ததே டாப்...வண்ணம் ஓவியம் வசன நடை அதகள டாப்...டாப்புக்கே டாப்...நீங்க சொன்ன வார்த்தைக முகம் சுளிக்க செய்யல
ReplyDeleteஇன்னும் 5 நாட்களில் அட்டவணை உற்சாக மீட்டர் ஏறிக்கொண்டே போகிறது
ReplyDelete//'அட..இன்னிக்கி செத்தா இன்னிக்கே பால்" என்று தெறிக்க விடும் பெருசுகளுக்கு ; மனதில் படுவதை அப்பட்டமாய்ப் பேச தயங்கும் அவசியங்களைக் கடந்து விட்ட தாத்தாக்களுக்கு - வார்த்தைகளில் நகாசை விட ; எமோஷன்ஸ் தான் பிரதானம் என்று நினைத்தேன் ! அவர்களது குணங்களுக்கு அதுவே பொருந்துவதாகவும் எனக்குப்பட்டது ! So இது ஆபாசம் ; இது அசிங்கம் - என்று எனக்கு நானே அந்த ஞாயிறின் பகலினில் முக்காடு போட்டுக் கொள்ள முனையவில்லை ! தாத்தாக்களை, தாதாக்களாய் உலவ அனுமதித்தேன் ; and ரைட்டோ - தப்போ here we stand !! //
ReplyDeleteஉண்மையில் வசனங்களில் நாசூக்கை கையாண்டிருந்தீர்களேயானால் தாத்தாக்கள் மொக்கையாகி இருப்பார்கள் சார்! 100% சரியான நிலைப்பாடு...
நன்றி சார் ! லைட்டாய் ரிஸ்க் என்பது புரிந்தது ; ஆனால் அதுவே என்னை ஈர்க்கவும் செய்தது !
Deleteஇவ்வட்டைப்பட அழகுக்கு காரணம்..தலைப்பும் ...தலைப்புக்கேற்ற வான் நிறமும்...நிற்கும் தாத்தாக்களின் இயல்பான போஸ்களும்...கடலிலிருந்து கரைக்கு வரும் பொம்மை கொண்ட மாலுமி நடையுமே
ReplyDeleteஅப்புறம் அந்த லோகோவும் கடற்கரை மணலும்
Deleteஇன்னும் புத்தகங்கள் வந்து சேரவில்லை சார். கூரியர்காரர்கள் வயிற்றெரிச்சலை கிளப்புகின்றனர்.
ReplyDeleteநாளை வந்து விடும் சார். உங்கள் விமர்சனம் பிளீஸ். புத்தகம் கிடைத்தவுடன்.
Delete// இந்த ஒற்றை மனுஷன் தனது வாழ்நாளில் எழுதியுள்ளது ஜாஸ்தி ! And எண்பது வயதை நெருங்கவுள்ள வேளையிலும் ஆர்வம் குன்றாது பேனா பிடிக்க வேட்கையுடன் உள்ளார் //
ReplyDeleteகருணையானந்தம் சார் தலை வணங்குகிறேன். I love you sir.
udane vaangividugiren ANTHIYUM AZHAGE...
ReplyDelete:-)
Deleteஅந்தியும் அழகே!
ReplyDeleteஅல்சைமரின் பிடியில் தன் சொந்த மகன்களையே மறந்து நாட்களை நகர்த்தும் ஒரு பில்லியனர் முதலாளி கேரன் செர்வியாவுக்கு மறக்காத ஓர் நினைவு…
ஆனால் அரைநூற்றாண்டு கூட வாழ்ந்தபோதும், அன்போடு கூடி பேச முடியாத அளவு அலுவல்கள் கொண்ட முதியவர் யூனியன் லீடர் தாத்தா அண்ட்வான்…
கையில் இருக்கும் மலரின் வாசமறியா குரங்கு ஞாபகம்தான் வருது!!
அதை அவரே புரிந்துகொள்ளவும் செய்கிறார்… ஆனாலும் ஆற்றாமை, கோபம்…, தனக்கு சமமாக எண்ணிய முதலாளி தன்னை எப்படி கேலியாக பார்த்திருப்பான் என்ற தன்மான குறுகுறுப்பு… துப்பாக்கியுடன் கிளம்பச் செய்கிறது. துப்பாக்கி சேற்றில் விழுந்துவிட கட்டையை கெட்டியாக பிடித்தபடிக்கு கணக்குத் தீர்க்கப் போனால் அங்கோ ’கடுதாசீத் தலீவர்’ என்று பல்பு வாங்குறார்…
உலகையே சுற்றிவந்த மாலுமி; செமத்தியான ரக்பி பிளேயர்; ஆறு பசுபிக் தீவு மொழிகள் பேசத்தெரிந்த எமிலி மில்சே; உண்மையில் இவர்தான் பிளேபாயா இருந்திருக்க வேண்டும்; உடம்பெல்லாம் பச்சைக்குத்திக் கொண்டிருக்கும் இவரைப் பற்றி ஆரம்பத்தில் குண்டுதாத்தா என்று லேசாக நினைத்து விடுகிறோம்… அங்கங்கே பேச்சிலேயே தெரிந்து விடுகிறது ஆள் பலே கில்லாடி என்று… வரவிருக்கும் ஆல்பங்களில் பார்த்து விடுவோம்…
பியரோ மேயோ! ‘பார்வை இல்லை… பாதை உண்டு…’ என்னும் பெயர் கொண்ட கண் தெரியாத போராட்டக் குழுவின் தலைதான் இந்த புரட்சி தாதா… பலே தாத்தா… கொஞ்சம் துடுக்குத்தனமும் கூடத்தான்; இந்த வயசிலும் அவர் காரோட்டும் விதம் ஊரையே கதிகலங்க செய்கிறது.
பாட்டியை நகலெடுத்து வைத்த பேத்தி! ஆனால் ஓர் பாரீஸ் பரோபகாரியின் கைவண்ணத்தால் கர்ப்பிணியாகிவிட… தன் பாட்டியின் முன்னாள் காதலனால் கிடைப்பதென்னவோ அதிர்ஷ்டம்! என்ன நடக்கும் அடுத்து?
தாத்தாக்கள் மூன்று பேரும் அந்த வேலியோரம் நின்று தங்கள் பால்யத்தை தாமே பார்ப்பது போன்ற ஓவியங்கள், அருமையான நாஸ்டால்ஜிக் உணர்வைத் தருகிறது. அட அந்த புதையல் ரகசியம்? கடல் கொள்ளையர் சின்னம், பாட்டிக்கும் பேத்திக்கும் மட்டும் தெரிந்த ஏதோ ஒன்று என நிறைய ஒபன் எண்ட்ஸ்… கதாசிரியர் எதை எங்கே போய் சேர்ப்பாரோ?
ஒரு கார்ட்டூனை விட சிரிக்க ஏகமான இடம்! ஹான்சல் அண்ட் கிராட்டல் கதையில் காய்கறி வீடு கட்டினது மாதிரி… அண்ட்ராயரோடு துப்பாக்கி தேடும் அண்ட்வான் தாத்தா… மனசு விட்டு சிரிக்க ரகளையான அனுபவத்தை தருது.
எடிட்டர் அப்படியே துள்ளி விளையாடி இருக்கார் நடையிலே… விட்டால் அவங்க கூடவே போயிடுவார் போல… செம்மையான சின்கிரனைசேஷன்! அருமை சார்!!
ஒட்டு மொத்தத்தில் இந்த வருடத்தின் டாப் கிளாஸ் கி.நா. எனக்கென்னவோ இது தொடராகத்தான் இருக்கும் போலத் தெரிகிறது. அடுத்த வருட ஸ்லாட்டில் டபுள் ஆல்பம் தாராளமாக கொடுக்கலாம்.
நீங்க தூள் கெளப்புங்க தாத்தாஸ்!
செம விமர்சனம்:-)
Deleteஅருமை
Deleteகலக்கலான விமர்சனம் நண்பரே SK!
Delete4,5 ரூட்களை கதாசிரியர் எப்படி இணைப்பாரோ என்ற ஆவல் மேலோங்கத்தான் செய்கிறது... அடுத்தடுத்த ஆல்பங்களை பார்க்க ஆவலோடு...
///ஒட்டு மொத்தத்தில் இந்த வருடத்தின் டாப் கிளாஸ் கி.நா. எனக்கென்னவோ இது தொடராகத்தான் இருக்கும் போலத் தெரிகிறது. அடுத்த வருட ஸ்லாட்டில் டபுள் ஆல்பம் தாராளமாக கொடுக்கலாம்.///
Deleteசெம செம செம!!
தாத்தாக்களின் அழிச்சாட்டியங்கள் - வாழ்க வாழ்க!!
//அண்ட்ராயரோடு துப்பாக்கி தேடும் அண்ட்வான் தாத்தா… //
Deleteஅந்த சகதியில் நிக்கிற சீன் simply hilarious !
For me the hilarity component was with the business magnate with alzheimers sir :-) Ultimate, nuanced comedy !
Delete//அந்த சகதியில் நிக்கிற சீன் simply hilarious !//
Delete"உன்னை தொனிக்க... ன்னு வசனம் வேற இதுல... சிரிச்சு வயிறு வலிச்சதுதான் நிஜம்!!
Super விமர்சனம்
ReplyDelete89th
ReplyDeleteஅந்தியும் அழகே - simply amazing ! சென்ற மாத 'அம்போ' காமிக்ஸில் வந்த கொலைக்கதையை படித்துவிட்டு சற்றே நொந்து போயிருந்த மனதிற்கு நல்லதொரு refreshing outlet.
ReplyDeleteசித்திரங்கள் பலவிடங்களில் ஜாலம் புரிகின்றன. உதாரணம் : பக்கம் 16 - இரு கால நிலைகளில் அந்த landscape காட்சி அபாரம். கடந்த காலத்தைப் புனையும் அனைத்து panelகளும் டாப் கிளாஸ்.
மொழியாக்கம் simply superb. நான் தமிழ் காமிக்ஸில் ரசித்த மொழிபெயர்ப்புக்களில் among the டாப் 3.
மதிப்பெண்கள் : 9/10
PS : அடுத்த ஆல்பங்களை ஒரே கலெக்ட்-ஆக வெளியிடவும் - 5-6 வருடங்களுக்கு நீட்ட வேண்டாமே ப்ளீச் !
நானும் கேக்க நினைத்தேன் நண்பரே ...ஏகப்பட்ட குண்டு புத்தகங்கள் சினிஸ்டர் செவன் தலைமைல வெய்ட் டிங்....என்ன பன்னப்போறாறோ ஆசிரியர்
Delete///மொழியாக்கம் simply superb. நான் தமிழ் காமிக்ஸில் ரசித்த மொழிபெயர்ப்புக்களில் among the டாப் 3.///
Deleteசூப்பர்!!
வெறும் முக்கால் நாளில் முடிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு - ஆத்தாடிக்காத்தாடிக்காத்தாடியோவ்!!
// சித்திரங்கள் பலவிடங்களில் ஜாலம் புரிகின்றன. //
Deleteஉண்மை...
ஒரே ஆல்பமாய் பாக்கி ஆல்பங்கள் அனைத்தும் - என்பது செம ஓவர் கில் ஆகிப் போகும் சார் ! தவிர, காத்திருப்பனவற்றுள் நிறைய அரசியல் ; நிறைய சித்தாந்தங்கள் என்றெல்லாம் உண்டு ; அவற்றை இயன்றமட்டிலும் நமக்கு அலுக்கா விதமாய்க் கொன்டு சென்றிட வேண்டி வரும் ! And ஒவ்வொரு ஆல்பமுமே ஒவ்வொரு திசையில் என்பதால் இதே சிங்கிள் ஆல்ப format தான் சுகப்படும் !
Delete//வெறும் முக்கால் நாளில் முடிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு//
Deleteஎல்லாப் புகழும் மார்டின் + டைலன் ஜோடிக்கே !! அவர்கள் காட்டுன காட்டில் தான், பிட்டத்தில் பசை போட்டுக் கொண்டு பணியாற்ற வேண்டிப் போனது !
//ஒரே ஆல்பமாய் பாக்கி ஆல்பங்கள் அனைத்தும் - என்பது செம ஓவர் கில் ஆகிப் போகும் சார் ! தவிர, காத்திருப்பனவற்றுள் நிறைய அரசியல் ; நிறைய சித்தாந்தங்கள் என்றெல்லாம் உண்டு ; அவற்றை இயன்றமட்டிலும் நமக்கு அலுக்கா விதமாய்க் கொன்டு சென்றிட வேண்டி வரும் ! And ஒவ்வொரு ஆல்பமுமே ஒவ்வொரு திசையில் என்பதால் இதே சிங்கிள் ஆல்ப format தான் சுகப்படும் !//
Deleteசரிதான் சார்... இந்த ஆல்பத்திலேயே பக்கத்துக்கு பக்கம் ஏதோ ஒரு விதத்தில் நிறைய கவனத்தை கோருகிறது. 2022க்கு ஒற்றை ஆல்பங்களாக இரண்டு ஸ்லாட்டுகள் தரலாம்.
அந்தியும் அழகே கதைக்கு வருகின்ற விமர்சனங்களை பார்க்கும்போது புத்தகத்தை இப்போதே படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் என்ன செய்வது இந்த மாசம் பார்த்து எந்த குருவியும் இங்கு வரவில்லை. தீபாவளிக்காக எல்லாம் இங்கிருந்துதான் அங்கு செல்கின்றன !
ReplyDeleteசார் ..தலைக்காவேரியில் இருக்கீங்க நீங்க ; நாங்க கடைக்கோடி நதிப்படுகையிலே இருக்கோம் சார் ! நீங்க ரசிக்க முடியாததையா நாங்க ரசிச்சுப்புடப் போறோம் இங்க ?
Deleteஎடிட்டர் சார்,
Deleteநீங்க ஆயிரம் சொல்லுங்க. என்ன தான் இங்கே பிரெஞ்சு மொழியில் பல கதைகளை படித்தாலும் அது நம்ம தாய்மொழி தமிழில் அதுவும் உங்க மொழிபெயர்ப்பில் படிக்கிற சுகமே அலாதிதான்.
உதாரணத்துக்கு டெக்ஸ் வில்லர் கதைகள் எடுத்துக்கங்க. நாம வெளியிடாத பல கதைகளை பிரெஞ்சு மொழியில் படித்திருக்கிறேன். தமிழில் நம்ம டெக்ஸ் பேசுற பஞ்ச் டயலாக், கார்சன் கூட அவர் பேசுற கேலி கிண்டல் டயலாக் இவையெல்லாம் பிரெஞ்சில் படிக்கும் பொழுது கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாகவே தோன்றும்.இவை எல்லாம் தமிழில் சுவாரசியம் ஆக்குவது உங்கள் மொழிபெயர்ப்புதான்
எக்ஸ்டரா நம்பர்ஸ் சார் !
Deleteஇதெல்லாம் ரொம்ப ஓவருங்க நண்பர்களே.
ReplyDeleteஎங்க தல டெக்ஸ் வில்லரையும் கிளிப்டனையும் கண்டுக்க ஆள் இல்லையா ?!.
தாத்தாக்கள் புகழ் ஓங்கி வருகின்றதே ?!
ஓங்கட்டும் !!! ஓங்கட்டும் !!!!
லேசா பொறாமையாத் தான் இருக்கு தாத்தாக்களைப் பார்த்து.
நாமும் முந்திக்கிடுவோம்.
அடுத்தாண்டு இரட்டை ஆல்பங்களாக தாத்தாக்கள் வரட்டும் :வெல்லட்டும்.
// எங்க தல டெக்ஸ் வில்லரையும் கிளிப்டனையும் கண்டுக்க ஆள் இல்லையா ?! //
Deleteஎப்பவுமே அடிச்சி விளையாடவரு தல,எப்பவாவது விளையாடறது தான் மத்தவங்க,மத்தவங்க ஆடறதுக்கும் அப்பப்ப வாய்ப்பு தரனும்ல,அப்பதானே ஆட்டம் களை கட்டும்...!!!
// அடுத்தாண்டு இரட்டை ஆல்பங்களாக தாத்தாக்கள் வரட்டும் :வெல்லட்டும் //
Deleteவருஷத்துக்கு ஒன்று ஓகே...!!!
தாத்தாக்கள் நற்பணி மன்றத்திலே சேர்ந்தாக்கா - கொ.ப.செ. சோபி கூட பொம்மலாட்ட ஷோ நடத்துற வாய்ப்பு உண்டாம் ! டீலா ? நோ டீலா ?
Deleteஆல்ரெடி ஹவுஸ்புல் போர்டு போட்டுருக்கனுமே...!!!
DeleteApplication form பிளாக்கிலே ஓடுதாமே ? யாரோ இறுக்க பேண்ட் போட்ட இளவரசர் முழுசையும் வாங்கிப்புட்டாராமே சார் ?
Delete#### 100 !!!
ReplyDeleteதளத்தின் பார்வைகள் ஐம்பத்தி இரண்டு இலட்சத்தை தாண்டி விட்டது,இன்னும் ஐம்பது இலட்சம் பார்வைகளுக்கான ஸ்பெஷல் அறிவிப்பு வரலை சார்...!!!
ReplyDeleteஏப்பா குமாரு இதெல்லாம் கேட்க மாட்டியாப்பா ?!
அது தானே ? தீயா வேலை செய்ய வேணாமா கொமாரு ?
Deleteபதிலு ப்ளீச் சார்...
Deleteஇவரே அவர்ர்ர்ர்ர்ர்ர்...அவரே இவர்ர்ர்ர்ர்ர்ன்னு எடுத்துப்போம் சார் !
Deleteஅண்ணா 50 லட்சம் பார்வைக்கான இதழை ஏற்கனவே கேட்டு இருக்கிறோம். சார் பார்த்து செய்யலாம் என்று சொன்னபோது தான் கொரோனா 2வது அலை வந்து எல்லாவற்றையும் பாழ் செய்து விட்டது. இல்லாவிட்டால் ஒற்றை நொடி ஒன்பது தோட்டா வோ , கென்யா vo, ரூட் லிஸ்ட் 66 ஒ, ஏதேனும் ஒன்று கண்டிப்பாக வந்து இருக்கும். ஈரோடு புத்தக விழாவில் எல்லாம் நம்முடைய நேரம்.
Deleteஅட்டவணை தேதி 15 எல்லாம் ஓகே தான்,அட்டவணை வெளியிடும் நேரத்தை முடிவு பண்ணியாச்சுங்களா சார்...!!!
ReplyDelete15 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நல்ல நாளு,காலையில 06.00 மணிக்கு சுக்கிரன் உலாவும் நல்ல நேரமாம்...
தலைவர் கூட முழிச்சிகிட்டு இருப்பாருன்னா பார்த்துக்குங்க சார்...!!!
ஏதாவது ஒன்னு அப்பப்ப கொளுத்தி போடுங்க சார்,இப்போதைய தேவை ஒரு வாரத்திற்கு பரபரப்பும்,சுறுசுறுப்பும்தான்...!!!
Deleteஅந்த "கடுதாசித் தலீவர்" portion-ஐ நம்ம தலீவர் படிச்சிருப்பாருங்கறீங்க ?
Delete// 15 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை நல்ல நாளு,காலையில 06.00 மணிக்கு சுக்கிரன் உலாவும் நல்ல நேரமாம் // ஆமா ஆமா. நமக்கு புக் வந்தாச்சு அடுத்து அட்டவணை தானே
Delete// அந்த "கடுதாசித் தலீவர்" portion-ஐ நம்ம தலீவர் படிச்சிருப்பாருங்கறீங்க ? //.அதெல்லாம் ஆச்சி சார் திவ்யமா...
Deleteஆயிரத்தில் ஒருத்தனம்மாநான் என்று கூவத்தோணுகிறது. .ரசனைகளில் முதிர்ந்த இந்த குறுகியவாசகர் கூட்டத்தில் நானும் ஒருத்தன்என்பதில் பெருமை (அப்படியே பெருமை ங்கிற இடத்தில நம்ப பரட்டைத்தலை சிங்கராஜாவின் படம்) . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteமுதல் அறிமுகத்தில் மில்சே தாத்தாசோபாவிலிருந்து எழுந்திருக்க எடுக்கும்முயற்சி. இதுஓவியங்களில் எதுமாதிரியும் இல்லாதபுதுரகம் என்பதைஆரம்பத்திலேயேசொல்லிவிடுகிறது. ஓவியங்களும் மொழியாக்கமும்ஒவ்வொருபேனலிலும்தெறிக்கவிடுகிறது. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஅட்டவணையை 14 ந்தேதி இரவு அதாவது 15 ந்தேதி வாக்கில் போட்டால் இரவு முழுக்க சந்தோஷமாகப் பின்னூட்டங்களைப் போட்டுத் தாக்கிப்புடலாம்.
ReplyDelete14th is Thursday - 15th Friday night would be more comfortable - relax mood and then read, read, read and re-read ...!
Deleteஅட்டவணைகளை ரசித்திட இரவுப் பொழுதே உகந்தது! 14th or 15th இரவு சுமார் 9 மணியளவில் வந்தால் இரவு 12 வரை ஒரு குத்தாட்டம் போட்டுவிட்டு களிப்பில்+களைப்பில் உறங்கச் செல்லாம்!
Delete15 ஆம் தேதி மாலை அல்லது இரவு எப்போது அட்டவணை வந்தாலும் மகிழ்ச்சியே.
Deleteஇனிமே தான் டைப்படிக்கவே ஆள் தேடணும் சார் ; அக்டோபர் ஆகிட்டால் கன்னத்திலே மரு ஓட்டிப்பார் நம்ம DTP நண்பர் !
DeleteSo பார்ப்போமே !
இப்ப இருந்தே ஆரம்பிச்சிடுங்க சார்,ஒத்தாசைக்கு நான் கூட வர்றேன் சார்...(எதுக்கும் ஒரு துண்டை போட்டு வெப்போம்)
Deleteநானும் நானும்.... பிழை திருத்தம் கடைசி நேர மாற்றம் etc etc
Deleteமறந்தும் மறவாதே - கிளிப்டன்
ReplyDeleteஓர் ஓய்வான ஞாயிறு கழிக்க உதவும் லைட் ரீடிங் - ஆங்காகே சிரிப்புத்தூவலுடன் ! அந்த வித்யாசமான டாக்டர் treatment கிளிப்பிடனுக்கு புதுசு.
மதிப்பெண்கள் : 8/10
///மறந்தும் மறவாதே///
Deleteஇந்த டைட்டிலுக்கும் கதைக்கு என்ன சம்பந்தம்னு யாராவது விளக்குங்களேன்?
SPOILER ALERT
DeleteEV:
ஊசி போட்ட ஒடனே நினைவுகள் மறந்து அந்த விசித்திரங்கள் ஞாபகம் வரும். ஆனால் கிளிப்டன் தன்னை மறக்க கூடாது என்பதை சுட்டிக் காட்டும் டைட்டில்.
செம்ம ராகவன் சார். 👍
Delete"மறந்தால் மரணம் " என்பது தான் ஒரிஜினலாய் வைத்த டைட்டில் சார் ; ஆனாக்கா தாத்தாவின் கார்டூனுக்கு மரணம் , கிரக்கணம்னு பெயர் வேண்டாமே என்று மாற்றி விட்டேன் !
Deleteராக் ஜி & எடிட்டர் சார்
Deleteவிளக்கங்களுக்கு நன்றி! ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது மாதிரியே ஒரு பீலிங்!!
அது சரி .. மஞ்சளாய் ஒரு மர்மம் , பச்சையாய் ஒரு பிக்பாக்கெட் எல்லாம் இத்தனை வாட்டி படிச்சதில்லை E V ? இப்போ மட்டும் என்ன ஆராய்ச்சி ? :-)
Deleteஅது தானே ?
Deleteஇன்னா மேட்டர்னு ருக்கு கிட்டேயே கேட்டுட வேண்டியது தானோ ?
///இன்னா மேட்டர்னு ருக்கு கிட்டேயே கேட்டுட வேண்டியது தானோ ?///
Deleteஆஹான்!! என்ன எல்லாரும் ருக்குட்ட கேட்டுக்கலாம்.. ருக்குட்ட கேட்டுக்கலாம்னு கிளம்பிட்டீங்க?!! ருக்குவை யாருக்கும் தெரியாம அஸ்கார்ட் உலகத்துக்கு கூட்டிப்போய் குடிவச்சாத்தான் சரிப்படும் போலிருக்கே?!!
இப்போது தான் கிளிப்டன் படித்து முடித்தேன். அட்டகாசம் நிறைய இடத்தில் எனக்கு சிரிப்பு வந்தது. அதுவும் அந்த கன்பூசியஸ் example அட்டகாசம். இந்த முறை plain and simple ஸ்டோரி என்பதால் எனக்கு ரொம்பவே பிடிததிருந்தது. வருடம் ஒரு ஸ்லாட் தாராளமாக கொடுக்கலாம்.
ReplyDeleteஎனது மதிப்பெண் 8/10.
நேற்றே அந்தியும் அழகே படித்து விட்டேன். நண்பர்கள் ஏற்கனவே மொத்த கதையையும் அலசி விட்டதால் என்னை கவர்ந்த விசயங்களை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கதை முழுவதும் ஓவியரின் வர்ண ஜாலம் வேறு லெவல்.
ReplyDeleteதாத்தாக்களின் ஃபிளாஷ் பேக் கின் போது அப்படியே கலரில் இருந்து கருப்பு வெள்ளைக்கு மாறும் அந்த கட்சி, கடல் கொள்ளையர்கள் ஆக அந்த குழந்தைகள் விளையாடும் போது அவர்களின் முகத்தில் தெரியும் சந்தோசம், இறுதி சடங்கில் சேற்றில் விளையாடும் இரண்டு குழந்தைகள் அவர்களை மிரட்டும் தந்தை, காரில் இருந்து இறங்க முயற்சிக்கும் தாத்தா, துப்பாக்கியை சேற்றில் தேடும் தாத்தா, இன்னும் நிறைய இருக்கு. நீங்கள் எழுதிய வசனங்கள் எனக்கு odd ஆக எந்த இடத்திலும் தோன்றவே இல்லை சார்.
எனது மதிப்பெண் 8/10.
அல்ஸைமர் பெரூசுக்கு பாஸ்வேர்டு மட்டும் எப்டீ ஞாபகம் வருதோ...
ReplyDeleteஆனா எந்திரிச்சி வேற நிக்கிறாரூ...
அதுக்கு முன்னாடி வர்ற வசனங்கள் பாத்தா பெருசு ஏதோ நடத்துதுன்னு யூகிக்க வேண்டிருக்குமோ?
எனக்கும் அந்த சந்தேகம் இருந்துச்சு... ஆனால் பேத்தியை பாட்டியா நினைச்சி பாஸ்வேர்டு தரதால உண்மை ன்னு ஒத்துகிட்டேன். லூசெட் பத்தின ஞாபகங்கள் மட்டும் மறக்காம இருக்காரே... அதில இந்த பாஸ்வேர்டும் ஒன்னு போல...
Deleteஒரு குறிப்பிட்ட நபரின் நினைவுகளை மட்டும் மறக்காமல் இருக்கும் வாய்ப்பு பற்றி மருத்துவ நண்பர்கள் யாராச்சும் சொல்லுவாங்க...
Those with Alzheimer's disease may have impairments in short-term memory, however remote memory can be left relatively intact. So they're able to remember public and personal events many decades ago, but unable to recall what happened earlier that day.
DeleteWhy do people with Alzheimer's remember certain things ?
DeleteThe best explanation is that Alzheimer's affects recent memories first, debilitating retention of new information.
Memories of childhood or from long ago are well encoded since the person has had longer to process and remember specific events.
அய்யய்யோ... எனக்கும் ரீசன்டா வீட்டம்மா சொல்லி அனுப்பற லிஸ்ட் எல்லாம் மறந்து போகுதே... ஆனால் முன்னாடி படிச்ச காமிக்ஸ் புக்கெல்லாம் ஞாபகம் இருக்கே... இது எந்த வகையில் சேர்த்தி...?
Delete
DeleteJ! & SK
அல்ஸைமர் நம்ம கதையில வர்றதை பத்தி மட்டும் எளிமையா சொல்லிடறேன்..
நம்ம கதையில வர்ற சம்பவம் சாத்தியமா?
அறிவியல்பூர்வமா சாத்தியம்..
அல்ஸைமர் நோயை
ஆரம்பம்-1
நடுத்தரம்-2
மோசம்- 3
அப்டினு பிரிச்சிருக்காங்க..
இதில நம்ம கரன் செர்வியா முதல் ரெண்டு ஸ்டேஜ்ல எதுவா இருந்தாலும் கதையில நடக்குறது சாத்தியம்தான்..
அல்ஸைமர் நோயாளிகள் பொதுவா ரீசன்ட் மெமரியை- சமீப கால நினைவுகளைத்தான் முதல்ல இழப்பாங்க..
காலைல சாப்பிட்டது என்னங்கறது கூட நினைவுக்கு வராது..
ஆனா 10 வது படிக்கறப்ப இறுதி வருட போட்டோ எடுத்தப்ப ஹெட் மிஸ்ட்ரஸ் சவுரி முடி அவிழ்ந்து விழுந்தது ஞாபகம் இருக்கலாம்...இது ரிமோட் மெமரி..
ரீசண்ட் மெமரி சேகரிக்கப்படும் இடம் ஹிப்போகாம்பஸ்...அல்ஸைமர்ல ஆரம்ப கட்டடத்துலேயே இது பாதிக்கப்படுதுகிங்கறதால ரீசன்ட் மெமரியை இழக்கறாங்க
ரிமோட் மெமரி முதல்ல ஹிப்போகாம்பஸில புராஸஸ் ஆகி பின்னாடி கார்டெக்ஸ் ( white matter) வசம் போயிடும்..
கார்டெக்ஸ் நோயின் இறுதி கட்டத்துல பாதிக்கப்படுறதால ரிமோட் மெமரியை தாமதமாத்தான் இழப்பாங்க..
சொல்லப் போனா நோயின் முதல் ரெண்டு ஸ்டேஜ்ல இவங்க பழைய காலத்துலேயே வாழ்ந்தாலும் வாழ்வாங்க..
சொந்த பையனை அடையாளம் கண்டுக்க முடியாட்டாலும் அந்த காலத்துல வாழ்ந்த ஸ்கூல் டீச்சரை அதே வயசு அதே உடலமைப்பில் வந்தால் அடையாளம் கண்டுபிடிக்கலாம்.. ( impossible...கதையில அதுக்கான சூழ்நிலைகள் கச்சிதமா ஏற்படுத்தியிருக்காங்க)
45 வருஷமா சேலத்துலடாக்ஸி ஓட்டிட்டுருந்த ஒரு அல்ஸைமர் நோயாளி காலைல குளிச்சீங்களா அப்டிங்கற ஒரு எளிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாது..
ஆனா சேலத்தோட அவருக்கு பழக்கமான சேலத்தின் சந்து பொந்துகளை தெளிவாக சொல்ல முடியலாம்.. வாலிப இளவரசர் சாரதா காலேஜ் முன்னாடி நின்னுகிட்டு இருந்தது முதல் கொண்டு..
அவங்களோட மெமரி பேட்டர்ன் அப்படி..
காக்னிட்டிவ் இம்பேர்மெண்ட் , மத்த விஷயங்கள் பத்தி குழப்பாம கதையோட தொடர்புள்ளது மட்டும் சொல்ல பாத்திருக்கேன்..
லுசெட்டை உரிச்சு வச்சு மாசமாவும் இருக்கற ஸோஃபியாவை பாத்து கரன் சேர்வியா நடந்துக்கற விதம் அறிவியல் எல்லைக்குள்ள நடக்கலாம்தான்..
வூட்டுக்காரம்மாக்களும் ஒருவகையில் குவாட்டர் அல்ஸைமர் நோயாளிங்க மாதிரிதான்.இந்த தீபாவளிக்கு எடுத்து கொடுக்கற பட்டுப்புடவை ஞாபகம் வராது .. பத்து வருஷம் முன்னாடி ஏதோ கஷ்டத்துல தீபாவளிக்கு வாயில் புடவை எடுத்து கொடுத்தது ஞாபகம் இருக்கும்
ஆஹா! சார் ! உங்க போஸ்டை என் கமெண்ட்டை பப்ளிஷ் பண்ணிட்டு பாக்கறேன்..
Delete///அய்யய்யோ... எனக்கும் ரீசன்டா வீட்டம்மா சொல்லி அனுப்பற லிஸ்ட் எல்லாம் மறந்து போகுதே...///
Deleteஅட நீங்க வேற.. எனக்கு வீட்டம்மா யார்ன்றதே அடிக்கடி மறந்துபோகுதாம்..!
///வாலிப இளவரசர் சாரதா காலேஜ் முன்னாடி நின்னுகிட்டு இருந்தது முதல் கொண்டு..///
Deleteஹிஹி! இளவரசரின் அரண்மனையே சாரதா காலேஜின் மிக அருகில்தான் என்பதால், பொழுதுபோகாத சமயங்களில் மாறுவேடம் பூண்டு இளவரசர் அந்தக் கல்லூரி வாசலின் அருகே நகர்வலம் போவதுண்டுதான்!
இது காமிக்ஸ்ஸைமர்ங்குற நோய் வகையை சேர்ந்தது.
Delete/// அட நீங்க வேற.. எனக்கு வீட்டம்மா யார்ன்றதே அடிக்கடிமறந்துபோகுதாம்///
Deleteருக்குமணி..ருக்குமணி.. அக்கம்பக்கம் என்ன சத்தம்.
///ருக்குமணி..ருக்குமணி.. அக்கம்பக்கம் என்ன சத்தம்.///
Deleteசார்.. எதுவானாலும் எங்கிட்டே கேளுங்க சார்.. என்ன சத்தம்றதையெல்லாம் ருக்குகிட்டே நான் கேட்டுக்கறேன்!
அளவா பாராட்டுங்க ப்ரோஸ்..ஆங்காங்கே வயத்தெரிச்சல்ல் ஒரே புகை மூட்டமா இருக்கு…
ReplyDeleteஅது எங்க சாரே ?
Delete///அது எங்க சாரே ?///
Deleteஇங்கே தவிர கிட்டத்தட்ட எல்லா இடத்திலுமே தான் சார்! எங்கே போனாலும் fog lamp தேவைப்படுது - அவ்வளவு புகை மூட்டம்!! :D
ஓஹோ !! நான் கூட தாத்தாக்களின் சிலாகிப்பில் 'தல' ரசிகர்கள் தான் காண்டில் உள்ளனர் போலும் என்று நினைத்துக் கொண்டேன் !
Delete//// நான் கூட தாத்தாக்களின் சிலாகிப்பில் 'தல' ரசிகர்கள் தான் காண்டில் உள்ளனர் போலும் என்று நினைத்துக் கொண்டேன் !////
Delete----ஹா....ஹா...!
வந்தாரை வாழவைத்து தானே பழக்கம் தல ரசிகர்களுக்கு.....
தலையின் பாரத்தை ஷேர் செய்ய யார் முன்வந்தாலும் இருகரம் விரித்து வரவேற்போம் சார்...!!
நல்ல படைப்பை பாரட்டுவதில் முதல்ல ஒலிப்பது எங்க தல ரசிகர்கள் குரல்தானே....குரல்தானே....🤩😍
என்ன சோதனை ...
ReplyDeleteகதையை பற்றி வரும் விமர்சனங்களை எல்லாம் தாண்டி தாண்டி வருகிறேன்...பொக்கிஷ பார்சல் இன்று தான் இல்லம் வந்து சேர்ந்துள்ளது. நானோ மாமியார் வீட்டு விருந்தில்...
நாளை நேரமாக கிளம்பி பொக்கிஷத்தை கைப்பற்றியாக வேண்டும்..:-(
மாமியார் வீட்டு விருந்தா ?!
Deleteகொடுத்து வச்சவர் நீங்க தலைவரே !!
ஊர்வன , பறப்பன , நடப்பன , நீந்துவன என புல் கட்டு கட்டியிருப்பிங்க ?!
ஜமாயுங்க தல !!!!!!
@Psaravananpsaravanan
Deleteஎனக்கென்னவோ நீங்க சொன்ன ஐட்டங்கள்ல கடேசி ஐட்டம் தான் தலீவருக்குக் கிடைச்சிருக்கும்னு நினைக்கிறேன்!
///புல் கட்டு ///
///ஜமாயுங்க தல///
Deleteஇதைக்கூட கொஞ்சம் மாத்தி 'ஜமேயுங்க தல'ன்னு சொல்லியிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்! :P
This comment has been removed by the author.
Deleteஜ மேயுங்க.. 😂😂😂😂
Delete156th
ReplyDeleteமறந்தும் மறவாதே :-
ReplyDeleteகொசு கடித்தமாதிரி ஒரு உணர்வு.. அடுத்த 6-7 நிமிடங்களில் பிரமைத் தோற்றங்களால் அதீத பீதிக்குள்ளாகி மாரடைப்பால் மரணம்.! இதே ரீதியில் ஊரின் பெரும் கோடிஸ்வரர்கள் அடுத்தடுத்து சிலர் மரணத்தை தழுவுகிறார்கள்.!
இது எப்படி நடக்கிறது.. இதன் பின்னனி என்ன என்பதை துப்பறியும் பணி நம்ம மஞ்ச மீசை கிளிப்டன் அண்ணாச்சியிடம் ஒப்படைக்கப்படுகிறது.! நம்மாள் எப்படி அந்த மர்மத்தை கண்டுபிடித்து அந்த கும்பலை கூண்டிலேற்றுகிறார் என்பதை சிரிக்க வைத்தும் ரசிக்கவைத்தும் சொல்லியிருப்பதே மறந்தும் மறவாதே.!(!?)
கண்ணை உறுத்தாத வண்ணக் கலவையில் கார்களும் சாலைகளும் நெஞ்சை அள்ளுகின்றன.!
கர்னல் கிளிப்டன் வைத்திருக்கும் கார் என்ன மாடல் என்று யாருக்காவது தெரியுமா.!? அந்தக்காரை பார்த்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.!
கிளிப்டன் அடிக்கடி தன்னை ஜேம்ஸ்பாண்டாடு ஒப்பிட்டு பேசிக்கொள்கிறார்.! ஜேம்ஸ்பாண்டின் கேஸினோ ராயலுக்கும் இந்தக் கதைக்கும் ஒரு லேசான ஒற்றுமை இருக்கிறது..!
இந்தக் கதையில் கிளிப்டனுக்கு அந்த விச ஊசியை போட்டுவிட்டு அடுத்த ஆறு நிமிடங்களில் அவர் கட்டாயம் இறந்துவிடுவார் என்று சொல்லிவிடுவார்கள்.. கிளிப்டன் தன் கைவசம் இருக்கும் பொருட்களை வைத்தே.. ஏதேதோ பண்ணி மருந்தின் வீரியம் தன்னைத் தாக்காமல் காத்துக்கொண்டு உயிர் பிழைத்துவிடுவார்.! அதே போல கேஸினோ ராயலில் சூதாட்ட மேஜையில் ஜேம்ஸ்க்கு மதுபானத்தில் கடுமையான விசத்தை கலந்து கொடுத்துவிடுவார்கள்.. பத்தே நிமிடத்தில் உயிர் போய்விடும் என்ற நிலையில்.. ஜேம்ஸும் அதேபோல நிபுணர்களை போனில் கலந்துகொண்டு தன்வசம் இருக்கும் பொருட்களை கொண்டே விசத்தை முறித்து பிழைத்துக்கொள்வார்.!
இந்த ஒற்றுமையால் க்ளிப்டன் இந்தக் கதையில் தன்னை அடிக்கடி ஜேம்ஸோடு ஒப்பிட்டு பேசிக்கொள்கிறாரா அல்லது அகஸ்மாத்தாக நடக்கிறதா என்று தெரியவில்லை.!
மிஸ் பாட்ரிட்ஜஜும் கிளிப்டனும் சந்தித்துக்கொள்ளும் இடங்கள் கலகலப்பு.! 33ஆம் பக்கத்தில் கிளிப்டனின் ஆக்சன் டெரிஃபிக்..! ஆனால் அடுத்த பக்கத்திலேயே செம்ம மொக்கையாக பல்பு வாங்குகிறார்..!
கண்ணைக் கவரும் ஓவியங்களுடன் நல்ல கலகலப்பான ஒரு கதை.!
கூடவே வந்திருக்கும் ஒரு கொலைக் கணக்கு சிறுகதையும் குறை வைக்கவில்லை..!
மொத்தத்தில் ஒரு நிறைவான கார்ட்டூன் இதழ்.!
ரேட்டிங் 9/10
//கர்னல் கிளிப்டன் வைத்திருக்கும் கார் என்ன மாடல் என்று யாருக்காவது தெரியுமா.!? அந்தக்காரை பார்த்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.!//
Deleteமோரிஸ் கம்பெனி செய்த TD வகை கார் ! இந்த லிங்க்கில் பாருங்க :
https://en.m.wikipedia.org/wiki/MG_T-type#TD
சூப்பர் நன்றி சார்.! அந்தக் கார் பொம்மையாவது வாங்கி வைக்க ஆசை.!
Deleteஉயிரைத்தேடி எப்போது வெளியிடுவீர்கள்
ReplyDeleteஅப்படிக் கேளுங்க நண்பரே! இது..இது கேள்வி!!
Deleteசென்னையிலிருந்து 2022 புத்தக விழா circuit துவங்கி விடுமென்று பேசிக்கொள்கிறார்கள் சார் ; ஆச்சென்றால் ஒவ்வொரு விழாவுக்கும் ஒரு ஸ்பெஷல் என்று களமிறக்கிடுவோம் !
Deleteகேட்கவே இனிமை. நன்று சார் நன்று
Delete///சென்னையிலிருந்து 2022 புத்தக விழா circuit துவங்கி விடுமென்று பேசிக்கொள்கிறார்கள் சார் ///
Deleteஅருமையான செய்தி சார்!! ஜனவரியிலேயே இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் - சென்னையின் உருக்கமான க்ளைமேட்டை சமாளிக்க இதுவே சிறந்த மாதம்!
///சென்னையிலிருந்து 2022 புத்தக விழா circuit துவங்கி விடுமென்று பேசிக்கொள்கிறார்கள் சார் ; ஆச்சென்றால் ஒவ்வொரு விழாவுக்கும் ஒரு ஸ்பெஷல் என்று களமிறக்கிடுவோம் !///
Deleteஅங்கே துபாயில் தல மீண்டும் ஃபினிசிங் ஃபார்முக்கு வந்த சந்தோசத்தோடு இங்கே எட்டிப்பாத்தா..
இங்கேயும் ஒரு சந்தோச சேதி.! போட்டுத் தாக்குவோம் சார்.!
அந்தியும் அழகே தாத்தாக்கள் பாஷையில் சொன்னா
ReplyDeleteASSOME -"ஆஸ்"ஸம்
😝😝😝😝😝😝
Deleteஆமா...ஆமா...ஆஸ் ஸம்!
Deleteஇம்மாத இதழ்கள்
ReplyDelete1. கண்ணே கொலைமானே..9.4/ 10
2. அந்தியும் அழகே...9.3/10
3. மறந்தும் மறவாதே..9.29999
தல டெக்ஸ் வில்லருக்கு முதல் மார்க் தந்த செனா அனா சாருக்கு ஒரு ராயல் சல்யூட் போடுகின்றேங்க !!!
Deleteமுத்து அறிமுகம் நான் பிறந்தது சேலம்
ReplyDeleteஎனது 3 வது வயதில் தந்தையை இழந்தேன் அப்பா இறந்த 7 மாதத்தில் 9 மாத குழந்தையான என் தங்கை இறந்தாள் நானும் அம்மாவும் மட்டுமே வீட்டில் அந்த காலகட்டத்தில் எனக்கு நண்பர்களும் இல்லை சொந்தங்களும் இல்லை
( சொந்தங்கள் அனைவரும் சென்னையில் செட்டிலாகி இருந்தனர்) அந்த சமயத்தில் தான் என் அம்மா மிகச்சிறந்த நண்பனை அறிமுகப்படுத்தினார் அவர்தான் முத்து காமிக்ஸ் எனும் சொத்து முத்து வில் முதல் முதல் படித்தது தலை கேட்ட தங்கப்புதையல் படித்தவுடன் புதையலே கையில் கிடைத்தது போல் இருந்தது எத்தனை முறை படித்திருப்பேன் என்று தெரியாது சாப்பிடும்போதும் ஒரு கையில் புத்தகம் மறு கையில் சாப்பாடு என்றுதான் இன்று வரை எனது பழக்கமாக மாறிவிட்டது காலையில் டிபனுக்கு அம்மா கொடுக்கும் ஒரு ரூபாயை சாப்பிடாமால் மிச்சம் பிடித்து முத்து காமிக்ஸ் வாங்கி படித்திருக்கிறேன் காமிக்ஸ் ருசி பசியறியாமல் செய்ததெல்லாம் மிகச் சிறந்த நினைவுகள் காமிக்ஸ் எனும் தனி உலகத்தில் மட்டுமே சந்தோஷமாக உலவிக்கொண்டிருக்கிறேன் இந்த நேரத்தில் இந்த காமிக்ஸ் புதையலை எனக்கு அறிமுகப்படுத்திய எனது தாயாருக்கும் தொடர்ந்து இந்த அமுதத்தை வழங்கிக் கொண்டிருக்கும் எனது நிரந்திர ஆசிரியர் முத்த அண்ணன் விஜயன் அவர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள்
///காமிக்ஸ் எனும் தனி உலகத்தில் மட்டுமே சந்தோஷமாக உலவிக்கொண்டிருக்கிறேன்///
Deleteஎத்தனை வலி மிகுந்த எழுத்துக்கள் இது, செந்தில் சத்யா!
///முத்த அண்ணன் விஜயன் ///
கொஞ்சம் கிளுகிளுப்பான அண்ணன்தான் போலயே?!! 😝😝
அருமையான நினைவுகள் செந்தில்.
Deleteநன்றி செயலரே அவர் கிளு கிளுப்பான அண்ணன் இல்லை மாதம் பிறந்ததும் புத்தகம் எனும் புதையலை அனுப்பி நம்மை கிளர்ச்சி அடைய செய்யும் அண்ணன் ,😀😀😀😀
Deleteநன்றி சரவணன் ஜி
Deleteஅருமை சத்யா.....பலவிதங்களில் காமிக்ஸ் நம் அனைவருக்கும் உற்ச்சாக பானம்தான் போலும்
Deleteஇ
ReplyDeleteன்
னு
ம்
மூ
ன்
றே
நா
ட்
க
ள்
அ
ட்
ட
வ
ணை
யை
த்
த
ரி
சி
க்
க !!!!
நானும் ஆவலோடு வெய்டிங்
Deleteஅடுத்த வருட சந்தா எவ்வளவு என அறிய ஆவல் .
ReplyDeleteS70ல் வேதாளர் தொகுப்பில் இடம் பெறும் கதைத் தலைப்புகள் அறிய ஆவல்.
தீபாவளிக்கு மூன்று குண்டு இதழ்கள் வரப்போவதை நினைத்தால் மனம் மகிழ்ச்சியில் சிறகடித்துப் பறக்கிறது.
ReplyDelete### 200 !!!!
ReplyDelete