Powered By Blogger

Saturday, October 23, 2021

சின்னச் சின்ன ஆசைகள் !!

 நண்பர்களே,

வணக்கம். சான் பிரான்சிஸ்கோவுக்கும், லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ! "இவன் எப்போ மூட்டையைக் கட்டிக்கினு கிளம்பினானோ ?" என்று விழிக்க வேணாமே - எனது பயணம் குந்திய இடத்திலிருந்தே சாத்தியப்பட்டு வருகிறது - "ஒற்றை நொடி...ஒன்பது தோட்டாக்கள்"ஆல்பத்தின் புண்ணியத்தில் ! 

கதாசிரியர் இங்கே இருபதடி பாய்கிறாரெனில் - ஓவியரும் கலரிங் ஆர்டிஸ்ட்டும் நூற்றி இருபதைத் தாண்டிக் காட்டுகின்றனர் ! அதிலும் ஆக்ஷன் பிரேம்களில் 'ஆ.உஸ்கா...ஆ டிஷ்க்கா...!!" என்று குரல் கொடுக்காதது மட்டும் தான் பாக்கி ; மற்றபடிக்கு பராக்குப் பார்ப்பவனுக்கே - கேப்டன் பாணியில் லெப்ட்டை செவத்துலே ஊன்றி ரைட்டால் யாரையாச்சும் ஒரு போடு போட தோன்றுகிறது !! (சில புஷ்டியான இளவரசர்கள் முயற்சிக்க வேணாமென அறிவுறுத்தப்படுகிறது ; செவருக்கோ - சுற்றியிருப்போருக்கோ சீரியசான சேதாரம் நேரக்கூடுமென்பதால் !) நிறைய த்ரில்லர்ஸ் பார்த்திருக்கோம் தான் ; ஆக்ஷன் ஜானர் நமக்குப் புதிதே அல்ல தான் & ஏகப்பட்ட நெடும் சாகசங்களுக்கும் பரிச்சயம் கண்டவர்களே நாம் - ஆனால் இந்த 270 பக்க த்ரில்லர் முற்றிலும் வேறொரு லெவல் guys !! இது பற்றி அவ்வப்போது பதிவிட்டுள்ளேன் தான் ; ஆனால் ஈரோடு 2020 க்கென போன வருஷ மார்ச்சில் இதற்குப் பேனா பிடிக்கத் துவங்கியவன், அந்த முதல் நீண்ட லாக்டௌன் குறுக்கிட்ட போது, "ரைட்டு...அப்பாலிக்கா பாத்துக்கலாம் !!" என்றபடிக்கே இரண்டரை பாகங்களோடு மூலை சேர்த்திருந்தேன் ! ஒரு லாக்டவுனும் முடிந்து, இரண்டாவதும் முடிந்து - இனி தள்ளிப்போட வாய்ப்பே இல்லை என்றாகியுள்ள நடப்பினில், மொத்த 270 பக்கங்களையும் எடுத்து மறுக்கா வாசிக்க ஆரம்பித்த போதே ஜிவ்வென்று அந்தப் பரிச்சயமான பரபரப்பு தொற்றிக் கொண்டது ! பக்கங்களின் ஓட்டத்தோடு எனக்குள்ளான அங்கலாய்ப்புமே கூடிப் போனது !! இத்தனை தெறிக்கும் த்ரில்லரை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாய் அடைகாக்கும்படி ஆகிப் போனதே என்ற கவலை தான் அது ! Anyways better late than never என்று சொல்லிக்கொண்டே பாகம் 4 -ன் இறுதியினை எட்டிப் பிடிக்க முனைந்துகொண்டிருக்கிறேன் ! ஒரிஜினலாய் இந்த 5  பாக சாகஸத்தின் அட்டைப்படங்கள் மட்டும் ரொம்பவே மொக்கை ரகம் ; நம்மவர்கள் கொஞ்சமாச்சும் மெருகூட்ட இயன்ற பல்டிக்களை அடித்து வருகின்றனர் ! அட்டைப்படம் மட்டும் அழகாய் அமைந்துவிட்டால் FFS -ன் புக் # 2  ரொம்ப காலத்துக்குப் பேசப்படும் இதழாய் அமைந்திடுமென்பது உறுதி ! நமது டிசைனிங் டீமுக்கு புனித மனிடோ ஆற்றல் தருவாராக ! 

Moving on - ஆளாளுக்கு மூணு லட்டு ; நாலு லட்டு எனும் மோகங்களில் பிசியாக இருக்க, கூப்பிடு தொலைவிலுள்ள "ரவுண்டு பன் வேலை" பற்றிய எண்ணம் என்னுள் ஓடி வருகிறது ! "தீபாவளிக்கொரு ரவுண்டு பன்" என்று ஏற்கனவே அறிவித்திருக்க, பன்னும், புக்ஸும் போட்டி போட்டு ரெடியாகி வருகின்றன ! மூன்று முரட்டு புக்ஸ் நவம்பருக்கு எனும் போது பயந்து, பவ்யமாய்ப் பணிகளுக்குள் புகுந்திருந்ததன் புண்ணியத்தில் 'தல' பிரின்டிங் இவ்வாரத் துவக்கத்திலேயே நிறைவுற்றிருக்க, பைண்டிங்கில் தற்சமயம் பிஸியாய்ப் பணிகள் ரன்னிங் ! And "ஒல்லித் தல' இதோ, இன்று அச்சு நிறைவுற்ற நிலையில், திங்களன்று பைண்டிங் ஆபீசுக்குப் புறப்படவுள்ளார் ! ஹெர்மனின் புது வரவு ட்யூக் கடாசியாய் அச்சுக்குச் செல்லவுள்ளார் - திங்களன்று ! So ஏதாவது எதிர்பாரா இடர் குறிக்கிடா பட்சத்தில் வரும் விசாலக் கெயமை (28th அக்டோபர்)   புக்ஸ் இங்கிருந்து புறப்பட்டிட வேணும் ! தட்டுத் தடுமாறி "மாதத்தின் துவக்கத் தேதிக்கு புக்ஸ்" என்ற schedule-க்கு திரும்பிட முனைகிறோம் ! தெய்வமே...."கொரோனா டெல்டா sub-variant ; சூப்பரின்டென்டென்ட்" என்று மறுக்கா ஆங்காங்கே ஒலிக்கும் ஏதேதோ பூச்சாண்டிகள் நம்மூர்களுக்கு ஒரு ரவுண்ட் வராதிருக்கச் செய்யுங்களேன் - simply மிடிலே !! 

கொரோனா என்ற பெயரைச் சொல்லி மார்கெட்டில் பொதுவான விலைவாசிகள் எல்லாமே தீயாய், பேயாய் எகிறி வருவதில் ரகசியங்களில்லை தான் ; ஆனால் கடந்த முப்பது நாட்களுக்குள் பேப்பர் & அச்சுத் துறையினில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கிறுக்குத்தனங்களை சுத்தமாய் சகிக்க முடியலை !!  (நடப்பாண்டின்) பிப்ரவரி to அக்டோபர் என்ற இந்த 8 மாதங்களில், ஆர்ட்பேப்பர் விலைகள் அப்படியே இரு மடங்காகி விட்டுள்ளன ! அதுவும் கடைசி 20 நாட்களில் டன் ஒன்றுக்கு ரூ.20,000 எகிறியுள்ளது ! "சைனாவிலிருந்து சரக்கு no coming ; கண்டைனர் no getting ; உள்ளூர் மில்களுக்கு பேப்பர் செய்யும் உட்பொருட்கள் விலை climbing ; so வேணும்னா இந்த விலைக்கு இப்போ வாங்குறான் - வாங்காட்டி இடத்தைக் காலி பண்றான் - காத்தாவது வர்றான் !!" என்று சேட்டு முதலாளிகள் நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமின்றி போனில் candy crush ஆடியபடிக்கே சொல்லும் போது நம்பள்க்கு பேதி தான் வர்றான் ! "ரைட்டு, சேட்டு சார் அப்டி தான் பேசுவார் ; நம்ம ஊர்க்காரனுவ நம்மளைக் கைவிட மாட்டானுங்க !!"என்றபடிக்கே அட்டைப்படங்களுக்கு நாம் பயன்படுத்தும் போர்டு வாங்கப் போனால், அங்கே முதலாளி மௌன விரதத்தில் இருந்தார் ! ஒரு காகிதத்தை மட்டும் தூக்கி நீட்டினார் ! "என்னது சார் ?" என்று கேட்டால் - "ம்ம்...படிங்கோ !!" என்பதையும் சைகையிலேயே சொல்ல - நானும் வாசிச்சேன் ! "உபயகுசலோபரி ; இப்போவும் திங்கள் முதல் எல்லா அட்டை விலைகளும் டன்னுக்கு ரூ.5500 கூட இருப்பதால், புது விலைப்பட்டியல் வரும் வரைக்கும் புதிதாய் ஆர்டர் எதுவும் எடுக்க வேண்டாம் என அன்போடு, பண்போடு, பாசத்தோடு, நேசத்தோடு, கேட்டுக் கொள்ளையடிக்கப்படுகிறது....சாரி..கொள்ளப்படுகிறது  ! - இப்படிக்கு மொள்ளை போடும் மில் முதலாளி !!" என்றிருந்தது !! நிமிர்ந்து பார்த்தால் சாந்தம் வழியும் முகத்தில் ஒரு புன்னகையோடு - "கெளம்புறது ??" என்ற கேள்வியோடு உள்ளூர் முதலாளி வீற்றிருந்தார் ! சரியாய் இரண்டே வாரங்களுக்கு முன்னே தான் டன் ஒன்றுக்கு 3500 ஏற்றி இருந்தனர் என்பது இப்போது பேச்சுக்கான சமாச்சாரமே அல்ல என்பதை அவரது வதனம் அறிவுறுத்தியது !!

புடிச்சேன் பாருங்க ஒரு ஓட்டம் - சைக்கிள் ஓட்டப் பழகிய தினங்களில் நாய் துரத்திய போது சைக்கிளைக் கீழே கடாசி விட்டு ஓடியதை விடவும் வேகமாய் ஓடி - ஊரெல்லாம் தேடி, இறுதியில் ஜூனியர் எடிட்டரின் பள்ளி சீனியர் நடத்தும் பேப்பர் ஸ்டோரில் TNPL போர்டை புது விலைகள் அமலுக்கு வரும் முன்பான விலைக்கே வாங்க ஏற்பாடு செய்து மொத்தமாய் வாங்கிக் கொணர்ந்து குவித்தாச்சு !! நாம் இதுவரைக்கும் பயன்படுத்தி வந்தது இதர லோக்கல் மில் தயாரிப்புக்களே ! ஆனால் இன்றைக்குத் தேதிக்கு அந்த லோக்கல் சரக்கின் (புது) விலையும், TNPL மில்லின் போன வாரத்து விலையும் ஒன்றே என்றான பின்னே, "டாட்டா லோக்கல் மில்ஸ் !" என்று சொல்லி விட்டோம் ! So  ஜனவரி முதலாய் இனி TNPL அட்டையே 'ஜம்'மென்று தெறிக்க விடவுள்ளது !! 

ஏதேனும் ஒரு பெரும் அதிசயம் நிகழ்ந்து ; சர்வதேச வணிகத்தில் சைனா முன்போலவே தடையின்றிச் சரக்கு சப்ளை செய்திட வழிபிறந்து ; இங்குள்ள நடுமுதலாளிகள் தொந்திகளை இதற்கும் மேலாய்ப் பருக்கச் செய்திட வேணாமென்ற தீர்மானத்துக்கு வந்தாலொழிய - 2023 முதலாய் நாம் ஆர்ட்பேப்பருக்கு விடைகொடுத்துவிட்டு, நார்மல் தாள்களுக்கு மாற்றம் காண வேண்டியிருக்கும் !  காத்துள்ள புத்தாண்டுக்கு சிக்கல்களில்லை ; 2 மாதக் கடனில் கணிசமாய் பேப்பர் வாங்கி அடுக்கியாச்சு ; so 2022 திட்டமிட்டபடியே பயணித்திடும் ! ஏறிய விலைவாசிகள் ஏறிய வேகத்திலேயே இறங்கும் அதிசயம் நம் தேசத்துக்கு அந்நியமே என்பதால் "2023 & onwards in normal paper" என்ற மைண்ட்செட்டுக்கு நாம் சிறுகச் சிறுக மாறிக் கொள்ள வேண்டி வரும் ! For starters - புத்தக விழா ஸ்பெஷல் இதழ்களுக்கும், மறுபதிப்புகளுக்கும், நார்மல் காகிதத்தில் பழகிப் பார்க்கும் course-ல் முதல் பாகத்தை அமல்படுத்திப் பார்க்க வேண்டும் போலும் !!  Fingers crossed !

அடுத்த டிசம்பர் வரைக்குமாவது ஆர்ட்பேப்பர் தொடர்ந்திடும் என்பதால் - இதோ, தக தகக்கும் "ஒல்லித் தலையின்" preview :


ஒரிஜினல் அட்டைப்படம் - பின்னணிகளில் மட்டும் மாற்றங்களோடு ! And உட்பக்கங்கள் மோரிஸின் சித்திரங்கள், டிஜிட்டல் கலரினில் சும்மா தக தக வென மின்னுகின்றன ! ஜாலியான லக்கியின் template கதை எனும் போது மொழிபெயர்ப்பில் no நோவுகள் !! And இந்தவாட்டி "சார்வாள் ; சித்தே ; புள்ளையாண்டான் " போன்ற பதங்களுக்கு தடாவும் போட்டாச்சு ! So எப்படியும் அடுத்த batch "தடா தேர்வுகள்" சீக்கிரமே ரெடியாகிடுமென்று ஸ்டீலின் பட்சி சொல்கிறது ! வார்த்தைகளில் மாற்றங்கள் என்றான பின்னே "தாயில்லாமல் டால்டனில்லை" சாகசத்திலுமே களையெடுத்து விட்டாச்சு ! So hopefully வாசிப்பில் நெருடல்கள் இராதென்று நம்புவோம் !! இதோ - உட்பக்க previews :

மறுக்கா - லட்டுக்கள் திக்கில் திரும்பிட்டால் - "அந்த அட்டைப்பட அணிவகுப்பு + முதல் இதழின் replica முயற்சி" பற்றிய திட்டமிடல் பிரதானமாய் நிற்கிறது ! And  சமீபத்தைய உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் போல இங்கு ஓட்டெடுப்பில் "வேணும் !!" என்ற அணிக்கு landslide வெற்றி கிட்டியிருப்பதால் என் வேலை இலகுவாகிடுகிறது ! So அட்டைப்படங்கள் + "இரும்புக்கை மாயாவி" முதல் இதழ் என்ற முன்மொழிவு நிஜமாகிடும் ! ஆனால் அவற்றையும் ஜனவரிக்கே என்று போட்டுத் தாக்கி ஓவராய்த் திகட்டச் செய்ய வேண்டாமே என்று நினைத்தேன் ! காத்துள்ள 2022 முழுக்கவே நமது பொன்விழா ஆண்டு தான் எனும் போது FFS இதழ்களும், SMASHING '70s - வேதாளன் ஆல்பமும் வெளியான பிற்பாடு இதை களமிறக்குவோமே guys ? அவற்றில் படிக்கப் புதிதாய் ஏதும் கிடையாதெனும் போது, "சூட்டோடு சூடாய் வந்தே தீரணும் !" என்ற கட்டாயங்கள் கிடையாது தானே ? And இதற்கென முன்பதிவு, சைடுபதிவென்றெல்லாம் எதுவும் இருந்திடாது ; "புக்ஸ் ரெடி" என ஒரு நாள் காலையில் அறிவித்த பின்னே நீங்கள் ஜாலியாய் வாங்கிக்கொள்ளலாம் - simple as that !!

அப்புறம் "புலி லட்டு" ; "ஆனை லட்டு" என்ற பற்பல முன்மொழிவுகள் காற்றில் இங்கும் அங்கும் பறப்பதைக் காண முடிந்தது ! கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுமை guys - FFS பணிகளை முடித்துத் தந்தான பின்னே , காத்துள்ள டிசம்பரின் 4 கதைகளுள் மூன்று எனது பொறுப்பிலானவைகள் ! அவற்றையும் போட்டுத் தாக்கி விட்டால் - எனது மண்டைக்குள் குடியிருக்கும் அந்த "திருவாரூர் தேரிழுக்கும் முனைப்பு" சற்றே சமனப்பட்டிருக்கும் ! அந்த நொடியினில் ஒரு "லட்டு டிப்போ"வுக்கென  ஓசையின்றி ரெடியாகியுள்ள ஏற்பாடுகள் பற்றி வாய் திறக்கிறேன் ! Trust me guys - சர்க்கரை நோயுள்ள எனக்கே, நாவில் ஜாலம் ஊறச் செய்யும் சமாச்சாரமது ! So யூத்தான உங்களுக்கு விருந்து வெய்டிங் !! Before I sign out - இன்னொரு கேள்வியுமே !!

2022 முழுக்கவே உங்களுக்கான ஆண்டெனும் போது - உங்களின் கோரிக்கைகளை ; அவாக்களை இயன்ற மட்டிலும் நிறைவேற்ற இயன்ற பல்டிக்கள் அனைத்தும் அடித்திட தயாராய் இருப்போம் ! அதன் தொடர்பாய் ஒரேயொரு கேள்வி folks : 

"இந்த ஒரேயொரு விஷய(மு)ம்  நனவானால், இந்தப் பொன்விழா ஆண்டு என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்கவியலா ஆண்டாகிடும் !" என்று உங்களுக்குள் ஏதேனும் ரகசிய அவாக்கள் குடியிருப்பின் - அவற்றை பகிர்ந்திடுங்கள் ப்ளீஸ் !! உங்கள் "சின்னச் சின்ன ஆசைகள்" சாத்திய எல்லைகளுக்குள் இருந்து, அவை நம் நண்பர்களுக்கும் பிடித்திருக்குமென்ற நம்பிக்கைகளை விதைப்பதாக இருப்பின், அவற்றுக்கு சிறகுகள் தந்திட நிச்சயமாய் தயங்கிட மாட்டோம் ! 

I repeat - ஆளுக்கு ஒற்றை சின்னச் சின்ன ஆசை only !! And கல்யாண வீட்டு ஷாப்பிங் லிஸ்ட்கள் வேணாமே - ப்ளீஸ் !! Plus இல்லாதவற்றையோ, இயலாதென்று ஏற்கனவே சொல்லியுள்ளவற்றையோ கேட்டு மண்டையைச் சொறிய விட வேணாமே guys !! 

Bye all...அடுத்த பதிவில் 'தல' தீபாவளி மலர் பற்றி !! இப்போதைக்கு மறுக்கா சான் பிரான்சிஸ்கோ கிளம்பிடுகிறேன் !! See you around !!😃

375 comments:

 1. வணக்கம் காமிக்ஸ் காதலர்களே.

  ReplyDelete
 2. ஒரு வீரனின் கதை - அட்டகாசமான கிளாசிக். வெஸ்டர்ன். வண்ணத்தில் வர வாய்ப்பிருந்தால் அருமையாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. +11111
   செவ்விந்திய மற்றும் ராணுவத்துக்கு இடையே நடக்கும் யுத்த கதை தானே இது?

   Delete
  2. இந்த கதையில் வரும் ஒரு செவ்விந்தியன் கைகள் கட்ட பட்டு சிறை வைக்கப் பட்டு இருப்பான் அவனை பாதுகாக்கும் சிப்பாய் தூங்கும் போது தன் கைக் கட்டை அவிழ்க்க அந்த கைகளையே நெருப்பில் காட்டி தன்னை விடுவித்து கொள்வான்.

   அதன் பின் அவன் பேசும் வசனம் கூட வசனம் அருமையாக இருக்கும்.

   Delete
  3. கிளைமாக்ஸ் கூட அருமையாக முடியும்.போரிடும் இரு வீரர்களும் வீர மரணம் அடைந்து விடுவார்கள்.

   கதையின் தலைப்பு "ஒரு வீரனின் கதை" என்றாலும் இதில் இரு வீரர்களை பார்க்கலாம் என்று முடித்திருப்பார்கள் .

   ம்ம்ம்ம் மலரும் நினைவுகள்.

   Delete
  4. அந்தக் கதைதாங்க.

   Delete
  5. It was my long time wish sir. I think it was Custer s last stand. My Chinna chinna aasai is either oru veeranin kathai reprint or new James bond or leonardo thatha

   Delete
  6. எனக்கும் இப்ப தான் அந்த ஜெனரல் நமே நியாபகம் வருது. என்னிடம் இருந்து நான் தொலைத்த கதைகளில் இதுவும் ஒன்று.

   Delete
  7. This was a story I consciously tossed out as a kid :-) But now I would like to read - good choice !

   Delete
 3. Sir, Consider pros and cons for providing in digital platform to cut the paper cost.

  ReplyDelete
 4. லாரன்ஸ் - டேவிட் , ஜானி நீரோ கதைகள் வண்ணத்தில் வந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தலா ஒரு கதை கலரில் பார்க்க ஆசை.


   நடக்காத ஆசை என்று தெரியும்.ஆசிரியர் கேட்டதால் சொல்லிவிட்டேன்.

   Delete
  2. ஆமாம் ஜி.. B/W ல யே 3 கதைகள் குண்டுபுக்.. எப்படியிருக்கும்.. செம்மையாய் இருக்கும்ல..

   Delete
  3. எடிட்டர் ஒரு சாயப்பட்டறையும் ஆரம்பிக்கணும் போலிருக்கே :-)

   Delete
 5. கேப்டன் பாணியில் லெப்ட்டை செவத்துலே ஊன்றி ரைட்டால் யாரையாச்சும் ஒரு போடு போட தோன்றுகிற///
  வந்தாச்சேய்.. தங்க தலைவன் வந்தாச்சேய்...

  "இந்த ஒரேயொரு விஷய(மு)ம் நனவானால், இந்தப் பொன்விழா ஆண்டு என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்கவியலா ஆண்டாகிடும் !" என்று உங்களுக்குள் ஏதேனும் ரகசிய அவாக்கள் குடியிருப்பின் - அவற்றை பகிர்ந்திடுங்கள் ப்ளீஸ் !! உங்கள் "சின்னச் சின்ன ஆசைகள்" சாத்திய எல்லைகளுக்குள் இருந்து, அவை நம் நண்பர்களுக்கும் பிடித்திருக்குமென்ற நம்பிக்கைகளை விதைப்பதாக இருப்பின், அவற்றுக்கு சிறகுகள் தந்திட நிச்சயமாய் தயங்கிட மாட்டோம் ! ///
  அதான்.. அதே தான்.. இவ்வளவு சஸ்பெனஸ் வைக்கும் தலைவன் வர்றான்னு சொல்லிடுங்க.. கூரை பிச்சுக்கும்..

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. 200 ஆயிடிச்சேய் - இன்னும் 100 தான் !!

   Delete
 6. Normal paper is welcome sir (Tex quality). Art paper can be used for special issues alone from 2023. I hope normal paper usage aids to some kind of reduction in price as well which could help you increase print runs where needed.

  ReplyDelete
 7. ஒரேயொரு கேள்வி folks :

  "இந்த ஒரேயொரு விஷய(மு)ம் நனவானால், இந்தப் பொன்விழா ஆண்டு என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்கவியலா ஆண்டாகிடும் !"


  வேறென்ன கேட்கப் போகிறேன் ஆசிரியரே இரட்டை வேட்டையர்களை மீண்டும் லயனில் பார்த்துவிட்டால் சாவு கிடைத்தால் கூட ஜம்மென்று போவேன் அதுதான் என் கடைசி ஆசையாக இருக்கும் தங்களால் முடியதென்றாலும் பரவாயில்லை கிடைத்திருக்கும் லட்டுகளே தீபாவாளி கொண்டாடத்தை தருகிறது

  ReplyDelete
 8. ///"இந்த ஒரேயொரு விஷய(மு)ம் நனவானால், இந்தப் பொன்விழா ஆண்டு என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்கவியலா ஆண்டாகிடும் !"///


  கிட் ஆர்டின் & டாக்புல் கலக்கும்

  தலைவாங்கும் தேசம்
  மலையோடு மல்யுத்தம் + மிஸ்டர் மஹாராஜா
  இணைந்து ஒரு கிளாசிக் மறுபதிப்பு.!

  ReplyDelete
 9. சின்னச் சின்ன ஆசைகள்

  Either Thangakkallarai Hardcover with old dialogues or SPIDER - Sinister Seven :-) Greed would demand both but pragmatisim would accept either one.

  ReplyDelete
 10. நம் ஊரில் வியாபாரம் செய்யும் நபர்கள் வாய்ப்பு கிடைத்தால் விலைவாசியை பன் மடங்கு உயர்த்துவது மகா கொடுமை சார். நியாயமாக வியாபாரம் செய்ய என்று இவர்கள் மாறுவார்களோ.

  ReplyDelete
  Replies
  1. /* நம் ஊரில் */ No friend - it is the same abroad too. Monkeys all over the world have the same face !

   Delete
  2. ஒப்பு கொள்கிறேன்.🤣🤣😂😂😂

   Delete
 11. சின்னச் சின்ன ஆசைகள்

  ISO the above request if this is considered also (alone) the year would feel complete as well.

  5 Chick-bill stories in a hard cover edition - 2 new, 3 classics !

  ReplyDelete
 12. எத்தனையோ ஹீரோக்கள் முத்துக்காமிக்ஸில் வந்திருந்தாலும் முதன்முதலாய் தன் விசேட சக்தி மூலம் நமது டவுசர் காலங்களில் "ஏய்...எப்பா.. கரண்ட்டுல கை வெச்சா மாயமா மறையுராருப்பா..இரும்புக்கை மட்டும் தனியா வந்து சண்டைபோடுது.." என்று பிரம்மிக்க வைத்தவர் ஒரு ப்ளோ-அப் மூலமாய் பொன்விழா மலரோடு வந்தால்... அடடா..

  ReplyDelete
  Replies
  1. This is also good - blow up poster of Mayavi with 3D print (EV !)

   Delete
 13. நான் என்ன சார் கேக்க போறேன்...

  ஒரே ஒரு mega ஸ்பைடர் போஸ்டர் தான்

  (மாதம் ஒரு ஹீரோவோட மெகா போஸ்டர் விலைக்கு வெளியிட்டாலும் ஓகே தான்.)

  ReplyDelete
 14. ஒரு க்ளாசிக் டைஜஸ்ட்

  ஃபார்முலா x13
  ஜானி in லண்டன்
  ஸ்பைடரின் விண்வெளி பிசாசு

  ஒரே குண்டாக....

  ReplyDelete
  Replies
  1. வெடிச்சுரப்போவுது :-)

   Delete
 15. Edi Sir..2022 ஆண்டு கொண்டாட்டத்துக்கு நாங்க ரெடி ஆயிட்டோம்.எனக்கு ஆரம்ப கால முத்து காமிக்ஸ் ல வந்த சிஸ்கோ கிட் +பாஞ்சோ ஜோடியினரின் இரயில் கொள்ளை கதையினை மீண்டும் படிக்க ஆசை.வாய்ப்பிருந்தால் கலரில்..

  ReplyDelete
 16. Edi Sir..இன்னுமொரு ஆசை.. ஆரம்பகால டெக்ஸ்,ஸ்பைடர்,ஆர்ச்சி கதைகளை 3 கதைகளை சேர்த்து ஒரே குண்டுபுக்கா B/W ல வேணும்.

  ReplyDelete
 17. எனது சின்ன சின்ன ஆசை பாக்கியுள்ள இளம் டைகர் கதைகள் தளபதி

  ReplyDelete
 18. தலையின் மறுபதிப்பு ஹிட்டான பழைய கதைகள் வண்ணபதிப்பில்!

  ReplyDelete
 19. பொசுக்குன்னு உங்க ஆசையை சொல்லுங்கள்னு சொல்லிடீங்க டக்குனு ஒன்னும் வர மாட்டேங்குது.

  நீண்ட நாள் குறையாய் இருக்கிற காரசனின் கடந்த காலம் மாக்ஸி சைசில் கேக்கறதா

  டைகர் தங்க கல்லறை கேடக்கறதா

  மேலே மகி ஜி சொல்லி உள்ள ஒரு வீரனின் கதை கேட்பதா

  மீதம் இருக்கும் Mr.ஜெட் கதை கேட்பதா

  அல்லது முத்துவின் எனது விருப்ப இதழ் பயங்கர பன்னிரெண்டு சூப்பர் கார் கதை கேட்பதா

  இல்லை மொத்தமாக அனைத்தையும் கேட்பதா தெரியவில்லை

  பார்த்து ஏதாவது செய்யுங்கள்

  ReplyDelete
 20. லயனில் பலவித கதைகள் உண்டு..முத்துவில் ஆக்ஷன் ஹீரோக்கள் ப்ரதானம்..

  கார்ட்டூன் வறட்சி உள்ள நேரத்தில் முத்துவில் நகைச்சுவை புதிய நாயகன்/ நாயகி அறிமுகம் செய்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை.இவை கார்ட்டூன்களாக இருக்கவேண்டிய அவசியம்
  இல்லை..

  புதிய சகாப்த நகைச்சுவை காமிக்ஸ்களாக/ அமெரிக்க / சர்வதேச அரசியல்,சமூக நிகழ்வுகளின் நையாண்டியாக இருக்கலாம்.

  கிராபிக் நாவல் பார்மட்டில் கூட இருக்கலாம்..
  முத்து முத்திரை தாங்கி வரவேண்டும்..

  ReplyDelete
  Replies
  1. // கார்ட்டூன் வறட்சி உள்ள நேரத்தில் முத்துவில் நகைச்சுவை புதிய நாயகன்/ நாயகி அறிமுகம் செய்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை.இவை கார்ட்டூன்களாக இருக்கவேண்டிய அவசியம்
   இல்லை..

   புதிய சகாப்த நகைச்சுவை காமிக்ஸ்களாக/ அமெரிக்க / சர்வதேச அரசியல்,சமூக நிகழ்வுகளின் நையாண்டியாக இருக்கலாம் //

   +1

   Delete
  2. ஓ .. முத்து முத்திரைன்னா சொன்னீங்க .. ஓகே !

   Delete
 21. புதிய பதிவு வந்துடுச்சு :-)

  ReplyDelete
  Replies
  1. அதுக்குதான் கோவை மாயாவி மாதிரி மாறி ட்ரை பண்ணிக்கிட்டிருக்கேன் ! :-)

   Delete
 22. சின்னச் சின்ன ஆசை
  மாயாவி மற்றும் ஸ்பைடர் லட்டுக்களை நீங்கள் கொடுத்து விட்டதால் கிருஷ்ணா ஸ்வீட் மைசூர்பாக் கடை பக்கம் உள்ள எனது ஆசை இதோ :-)
  ஆசை 1. முத்து நாயகர்கள் படம் கொண்ட 12 பக்க மாதக் காலெண்டர். இதில் முத்து 50 வது பொன்விழா ஆண்டு என எல்லா மாதங்களிலும் பிரிண்ட் செய்யப்பட்டது இருக்க வேண்டும்.

  ஆசை 2: சிக்-பில் கிட் ஆர்டின் புதிய கதை வண்ணத்தில்.

  ஆசை 3: இல்லப்பா நீ ரொம்ப ஆசைப் படுகிறாய் (ஆசை 2) என நீங்கள் நினைத்தால் 3 கதைகள் கொண்ட முத்து கார்டூன் ஸ்பெஷல் முற்றிலும் புதிய கதைகளுடன்.

  ஆசை 4: சரி எனது ஆசை 2 & 3 ரொம்ப ரொம்ப ஜாஸ்தி என்றால் லியார்டினோ தாத்தா மற்றும் அல்லக்கை இணைந்து கலக்கும் ஒரு கதை மட்டும் போதும்.

  ஆசை 5: சரி விடுங்க பல நண்பர்கள் ஆவலுடன் கேட்கும் சுஸ்கி விஸ்கி (எம்பா பெயரை நான் சரியாக தான் சொல்கிறேனா :-)) கதை ஒன்று மட்டும்.

  ஆசை 6: டைகரின் கிளாசிக் சாகசம் குண்டு புக். டைகர் ரசிக கண்மணிகளை விண்ணில் பறக்கச் செய்ய அருமையான சந்தர்ப்பம். (நாங்களும் உட்கார்ந்த இடத்தில் இருந்து பறப்போம்ல :-))

  ஆசை 7: எங்கள் வீட்டுச் செல்வங்கள் வரைந்த நமது காமிக்ஸ் நாயகர்கள் படங்கள் நமது புத்தகத்தில் வந்தால் அவர்களை மேலும் காமிக்ஸ் படிக்க தூண்டும்.

  ஆசை 8: இளவரசியின் சிறுவயது ஃப்ளாஷ் பேக் கதை (கண்டிப்பாக நமது டாக்டர் நண்பர்கள் மற்றும் தொழில் அதிபர்களை மீண்டும் மீன் பிடிக்க தூத்துக்குடி பீச்சுக்கு கூட்டிச் செல்லும்)

  ஆசை 9: 2023 முதல் தோர்கல் 5 கதைகளை கொண்ட குண்டு புத்தகமாக போட்டால் கொல்கத்தா ரசகுல்லா கிடைத்தது மாதிரி ஜிவ்வென்று இருக்கும் :-)

  ஆசை 10: மீண்டும் தூங்க போகிறேன். காலையில் வந்த விட்டுப் போன ஆசைகளை சொல்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சுஸ்கி விஸ்கி வந்தா பட்டய கிளப்பும்...செல்வங்களுக்கும் பிடிக்கும்...ரசிக்கும் பாத்து சிரிக்கும்

   Delete
  2. எனக்கு ஒரு கூட்டணி இருக்கா இங்க? சூப்பர்

   Delete
  3. வெறும் விஸ்கி வந்தா? :-)

   Delete
 23. “தவளை மனிதர்கள்” மீண்டும் மறுபதிப்பாக வரமுடியுமா சார்? மேலும் இளவரசியின் கடந்தகால கதைகள் ஏதாவது வரமுடியுமா சார்? ஏதோ சின்ன அசன் ஆசைகள். பார்த்து செய்யுங்க.

  ReplyDelete
  Replies
  1. முதிர் கன்னி மைத்துனர்கள் நெறய பேர் இருக்காங்க போலிருக்கே :-)

   Delete
 24. அருமையான பதிவு சார்...அட்டைப்படம் இது வர வந்ததிலே வேற லெவல் டாப் இதான்....வண்ணங்கள் உள்பக்கம் போலவே தெறிக்கே...லக்கி ஜாலிநீல நிறம்...புத்தகத்தின் பாட்டில் குப்பியின் வாடாமல்லி நிறம்...அந்தப் பின்னணி ஃப்ளோரசண்ட் பஞ்சு மிட்டாய் பச்சை நிறம்...நீதிபதியின் சட்டை கையின் வித்தியாச நிறம்( என்ன கலரோ) ...நீதிக்கு தலை வணங்கு அல்ல தலைப்பு என மீண்டுமோர் முறை படிக்கச் செய்யும் லக்கி காலுக்குக் (நிதிக்கு முன்னால கட்டித்தான போடனும்)காப்பு... என் பத்து பொருத்தமும் பக்காவா வர...இது வரை வந்த லக்கி என்ன லக்கி இதுவரை வந்த கதைகளிலை டாப் பட்டை இதான்னு சத்தமா திருத்திய படியே பாய்கிறேன் ஐனவரிக்கு

  ReplyDelete
  Replies
  1. ஒநொஒதோ இரத்தப்படலத்தை அழகா சுருட்டி வாய்க்குள்ளார தள்ளிடும் போலவே...எதிர் பார்ப்பதும் எகிறிடுது....அட்டைப் படம் வண்ணத்துல தெறிக்க விடுவார்கள் நண்பர்கள் என்பதற்குதாரணம் இதோ கண்ணில் காட்டிய லக்கியட்டை...பிண்ணனி பிரம்மாதமா ஒரிஜினலில் இல்லாத பட்சத்தில் முத்து பொன்விழாவ நினைவு படுத்தும் வகைல...நமதாட்கள் கைவண்ணத்ல பிரம்மாண்டமா வர செந்தூரான் அருளனும்

   Delete
  2. சார் இரும்பு விலை ...அது இதுன்னு கூடிட்டை போவுது மூலப் பொருள் தட்டுப்பாட்டால்...இந்த ஆர்ட் பேப்பர் விலையுயர்ந்தால் வராதென்பது ஓர் வகையில் சந்தோசமே...நீரில் நனஞ்சா ஒட்டிக்குது...அதனால் நல்ல சாதாத் தாள்ல மின்னாம நின்னாலும் மகிழ்ச்சியே...

   Delete
  3. சின்ன சின்ன ஆசை...
   1. மாயாவி ரிப்ளிகா போல அந்த இருவண்ண கொலைப் படை...பளபள வண்ணத்ல கதைக பார்த்தாச்சு ...அந்தக்கால பயணத்துக்கு உதவியாய்...
   2. டெக்சின் பழிக்குப் பழி
   3. இங்க முன்ன காட்டிய அந்த மூளைவளர்ச்சியற்ற கூன் முதுகு அங்கிளோட சிறுவனின் சாகசக்கதை
   4.வாய்ப்பிருந்தா உயிர்த் தேடிய இவ்வருடமே
   5.சினிஸ்டர் செவன்
   6. மெபிஸ்டோ
   7. அந்த ஆயிரம் பக்க கௌபாய் கதை..
   8.. முன்னர் காட்டிய அந்த சிறுவர்களுக்கான மாயாஜாலக் கதை
   9.யாரந்த மினி ஸ்பைடர்...நீதிக் காவலன் ஸ்பைடர்...
   10. விண்வெளிப் பிசாசு
   11. பாட்டில் பூதம்


   இந்த 11ல் ஏதேனும் ஒன்று

   Delete
  4. சார் மாயாவி முதல் கதை எஃப்எஃப்எஸ்ஸோட வந்தால்தான களைகட்டும்...சாதக பாதகங்கள் அலசிப் போடுங்க ...எனக்கு எப்படி வந்தாலும் சரியே

   Delete
  5. repeat - ஆளுக்கு ஒற்றை சின்னச் சின்ன ஆசை onl

   ######

   நல்ல வேளை இதை சொன்னதால ஸ்டீல் இதோட முடிச்சுட்டாரு ..இல்லீன்னா என்னா ஆயிருக்கும்...:-)

   Delete
  6. // 11. பாட்டில் பூதம் //
   தலைவா நீங்க வேற லெவல்...!!!

   Delete
  7. இந்த வாட்டி நம்பில் நிம்பில் கிட்டே கமெண்ட் மேலே போட்டி போடறான் - 300 சீக்ரம் தொடறான் !!

   Delete
 25. அன்பு ஆசிரியருக்கு...
  காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...

  உங்களின் ஜரூரான வேலை உற்சாகம், எங்களுக்கும் எனர்ஜிதான். தீபாவளிக்கு கையில் லயன் இருக்கும்ன்னு நெனைக்கிறப்ப அடடா அட்ட்ட்டடடடா...

  முத்துவின் முதல் இதழ்+ அட்டைப்பட தொகுப்பு என தேனின் சுவையை சொட்டு சொட்டாக
  சுவைத்த போது,"அதை விடுங்க இந்தாங்க" என,இந்தாங்கப்பா என ஒரு குண்டா நெயற இனிப்பை தந்தீர்கள்.
  அந்த இனிப்பின் சுவையில், முத்துவின் முதல்
  இதழ் ஆர்வத்தை சற்று மறந்தது நிஜமே.
  எங்களுக்கு தேவை விதவிதமான காமிக்ஸ் கதைகள்.அதை நீங்க அறிவித்த போது, இந்த முதல் மாயாவியின் மறு மறு பதிப்பின் மீதிருந்த ஆர்வம் குறைந்தில் வியப்பே இல்லை.

  ஆனாலும் எங்களைவிட நீங்கள் இன்னும் அதிகமான ஆர்வத்துடன் இருப்பது,
  மீண்டும் எங்களை 80sன் நினைவுகளுக்கே கொண்டு செல்கிறது சார்.
  இந்த காமிக்ஸ் பொறுத்தவரை(லயன்&முத்து)
  ஸ்பெஷல் இதழ் என்றாலே எத்தனை கொடுத்தாலும் போறாது என்பதற்கு உங்களின் இந்த பதிவு உதாரணம். உண்மைதான் சார்.
  அதற்காக நீங்கள் மெனக்கெடுவது எங்களுக்கு இன்னும் உற்ச்சாகமே சார்.

  அட்டைகளின் விலையுயர்வு எல்லா இடங்களிலும் இருக்கு சார்.திருப்பூரிலும்.
  ஹாட்ர்ட் பவுண்ட் அட்டைகள் என்பதை ஸ்பெஷல் இதழ்களுக்கு மட்டும் போட்டுதாங்க சார். மத்தபடி மாதா மாதம் சாதா அட்டைகளே போதும் சார்.(விலை கொஞ்சம் குறையுமே.அனைவரும வாங்க ஏதுவாக).
  காமிக்ஸ் வருவதே திருப்தி. இதில் அட்டைகள் இரண்டாம் பட்சம்தான் சார்.

  "வேறு ஏதாவது இனிப்பு வேண்டுமா?" என கேக்கறீங்க ஆஹா.
  முத்து-50ல் தரமான 4 கதைகள் சரி,
  இலவச இணைப்பாக 4 கதைகள் அதும் சரி,
  சஸ்பென்சாக ஒன்னு இருக்குனு சொன்னீங்க சூப்பர்.
  இனி என்ன????

  **2022 ஜனவரி மாதம் இந்த 50வது ஆண்டு மலர் கொண்டாடப்படுவதால்,
  முத்துவின் நாயகர்களையோ,அல்லது அட்டைப்படங்களையோ போட்டு,வருடம் முழுவதும் தினமும் ரசிக்கும்படியாக,
  "பெரிய சைஸ் மாத காலண்டர்" தாங்க சார்**
  போதும். இது சில மாத ஆசை.
  கிடைத்தால் மகிழ்ச்சி.

  மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

  ReplyDelete
  Replies
  1. இதுல விசயமென்னன்னா எனக்கு 2 புது இதழ்களே திருப்தி....கூட வேதாளர் வருவதால் பழம் நாயகர்கள பெருசா நினைக்கல...ஆனா லட்டு மூன அது மட்டுமான்னு விரிக்க விரிக்க திடுமென கரை புரண்டு வந்த உற்சாகத்த விவரிக்க இந்த லோகத்ல வார்த்தைகளேது...லேது

   Delete
  2. முத்துவின் நாயகர்களையோ,அல்லது அட்டைப்படங்களையோ போட்டு,வருடம் முழுவதும் தினமும் ரசிக்கும்படியாக,
   "பெரிய சைஸ் மாத காலண்டர்" தாங்க சார்**

   #####

   +1

   Delete
  3. ஹாட்ர்ட் பவுண்ட் அட்டைகள் என்பதை ஸ்பெஷல் இதழ்களுக்கு மட்டும் போட்டுதாங்க சார். மத்தபடி மாதா மாதம் சாதா அட்டைகளே போதும் சார்.(விலை கொஞ்சம் குறையுமே.அனைவரும வாங்க ஏதுவாக).

   #####

   +1

   Delete
  4. Calender is a great idea sir - but not sure if all your publishers would agree to be co-hosted in the same 12 sheeter!

   Delete
 26. All Thorgals in a single bind...........:)))

  ReplyDelete
 27. முத்து 50 என பொறித்து, அட்டை படங்கள் கொண்ட 2022ன் மாத காலண்டர் (அ)
  முத்து ஆண்டுக்காக ஒரு மினி டைரி.
  இதில் எதுனாலும் ஒகே.

  ReplyDelete
  Replies
  1. முத்து 50 என பொறித்து, அட்டை படங்கள் கொண்ட 2022ன் மாத காலண்டர்

   #####

   நல்ல ஐடியா ...சிறிய தினசரி காலண்டர் எனில் இன்னமும் சிறப்பு என்பதும் உண்மையாக இருக்கலாம் :-)

   Delete
  2. தினசரி கிழிச்சப்புறம் குப்பைக்கு போய்டும் தலீவரே - மாசக் காலண்டர் சிறந்ததுன்னு தோணுது !

   Delete
 28. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 29. நானும் வந்துட்டேன்.

  ReplyDelete
 30. என்னுடைய ஒரே ஆசை....


  சிங்கத்தின் சிறு வயதில் தொடர் பாதியில் முடிந்தாலும் இதுவரை வந்த கட்டுரை தொகுப்பை மட்டுமாவது ஒரு தொகுப்பாக வெளியிட்டால் போதுமானது சார்...

  ( தொடர் மீண்டும் தொடர்ந்தால் அதுவும் மற்றொரு லட்டுக்கு சமானமே..)

  ReplyDelete
  Replies
  1. லயன் வரலாறும் ஒரு "முத்தான" ஆசையே ்என்பதால் இதை ஆவணப்படுத்தலாம் என்பதும் ஓர் பின்குறிப்பு சார்..

   Delete
 31. ஒரிஜினலாய் இந்த 5 பாக சாகஸத்தின் அட்டைப்படங்கள் மட்டும் ரொம்பவே மொக்கை ரகம் ; நம்மவர்கள் கொஞ்சமாச்சும் மெருகூட்ட இயன்ற பல்டிக்களை அடித்து வருகின்றனர்

  #####

  சார் ஒரிஜினல் அட்டைகள் சுமாராக இருந்தால் இந்த முறை முன்னர் போல தாங்கள் நமது ஓவியர்களை கொண்டு ரகளையான ஓர் அட்டைய உருவாக்கலாமே..

  சாத்தியமிருப்பின்....

  ReplyDelete
 32. எங்களுக்கு லட்டுக்களை அள்ளிக் கொடுக்கும் உங்களது ஆர்வம், மெய்சிலிர்க்க வைக்கின்றன.. ஆனாலும் உங்களுக்கான வேலைபளுவை நீங்களே அதிகரித்து கொள்கிறீர்களோ என்ற கவலை தான் மிஞ்சுகிறது..

  PLEASE TAKE CARE SIR...

  ReplyDelete
 33. முத்துவில் வந்த முத்து(Pearl) 'சிக்குவாகுவா சில்க்'ன் ஆள் உயர போஸ்டர் தான் எனது சின்ன ஆசை. தங்கத்தளபதி டைக்ர் தான் வரலை இதாவது வந்து எங்களுக்கு ஆறுதல் தரட்டும்.

  *** இப்போதே நிறைவாக வருகிறது. இதுக்கும் மேல் எது கிடைத்தாலும் போனஸ் ***

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க சார். இது செம ஐடியா. அதுவும் அரிசோனா லவ்ல வர ஏதாவது ஒண்ணை போஸ்டராக்கிடலாம். ரம்மிக்கு மட்டும் டைகர் போஸ்டர் அனுப்பி வைக்கனும் ஆனா.

   Delete
  2. வீட்டுக்காரம்மா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டியா கிரி

   Delete
  3. :-))))


   ஆனா ரம்மிக்கு அனுப்பாதீங்க சார்...

   Delete
  4. சங்கர் அத்தான், வூட்டம்மா பர்மிஷனா... எனக்கு போஸ்டரே வேண்டாம். பிள்ளையார் கிருஷ்ணர் இல்லாட்டி முருகன் போஸ்டர் கொடுங்கள் அது போதும்

   Delete
  5. சிலுக்கு போஸ்டர் வந்திச்சின்னா கடைசி வரைக்கும் மடிக்கப்பட்டு 'உள்ளே' வைக்கப்படும் - அதுக்கு மாயாவியோ ஸ்பைடர் போஸ்டரோ வந்தால் வாங்கற திட்ட வாங்கீட்டு நாம செவத்துல ஒட்டிக்கலாம் - குறைந்த பட்சம் நம்ம பின்னாடி பக்கம் freeயா தானிருக்கும் :-)

   Delete
 34. எனக்கு எதுவும் ஆசை இல்லை சார். நான் கேட்டதற்கு மேலேயே நீங்கள் கொடுத்து விட்டதால்.

  ReplyDelete
  Replies
  1. இது முக்கியமான பாயிண்ட் சார் - அறிவித்தவை வந்தப்புறம் இந்த 'சில்பான்ஸ்'களை பாத்துக்கலாமோ ?!

   Delete
 35. மாடஸ்டி முதல்கதை. முடிந்தால் மாடஸ்டி ஒரு குண்டு புத்தகம். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. எனது ஆதரவு இதற்கு உண்டு ராஜசேகரன் :+)

   Delete
 36. Dear Editor,
  I would love to read
  Needhikkavalan spider or Manidha Erimslai( Irumbukkai norman)
  Regards
  Arvind

  ReplyDelete
 37. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 38. தோர்கல் மீதமுள்ள கதைகள் வெளியிடலாம் சார்.

  ReplyDelete
 39. மனித எரிமலை(இரும்புக்கை நார்மன் ) மாடஸ்டியின் கதை , இரட்டை வேட்டையர் எனதுஆசை யிலும். யோசிக்க யோசிக்க ஆசை அதிகமாகிட்டே இருக்கு. முத்து50வது ஆண்டில் (மாடஸ்டி குண்டுபுத்தகம்)....... கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 40. //உங்கள் "சின்னச் சின்ன ஆசைகள்"//

  பாண்ட் 2.0 (அ) டைகரின் "இளமையில் கொல்" மீதம் உள்ள பாகங்கள் (அ) வன ரேஞ்சர் ஜோவின் யானை கல்லறை, புதையல் பாதை, சிறுத்தைகள் சாம்ராஜ்யம் ஒரே ஹார்ட் பௌண்ட் இதழாக கலரில் (அ) TEX மந்திர மண்டலம் கலரில் ..

  ReplyDelete
  Replies
  1. யெஸ் வன ரேஞ்சர் ஜோவின் கதைகள் சூப்பரா இருக்கும்,யானைக் கல்லறை நல்ல கதை...!!!

   Delete
  2. பாண்ட் 2.0 கதையை இடைச் செருகலாக முடிந்தால் பண்ணிக் கொடுங்கள் சார்,யுவா மற்றும் சில நண்பர்கள் ஆசைக்காக...!!!

   Delete
 41. // சின்னச் சின்ன ஆசை //

  பாக்கெட் சைஸில் ஏதாவது..

  ReplyDelete
 42. லயன் முத்துகாமிக்ஸ் 2022க்குரிய வெளியீடுகள் படங்களுடன் Monthly காலண்டர் ஒரு குறிப்பிட்ட விலையில் ரொம்ப பெரிய சைசில் தாங்கள் வெளியிட்டால் பணம் செலுத்தி வாங்கி வீட்டில் தொங்கவிட்டு 2022 முழுவதும் பார்த்து மகிழ்வேன்.

  ReplyDelete
 43. நிதிக்கு தலை வணங்கு அட்டைப்படம் நன்றாக உள்ளது. அட்டையில் புத்தகம் படிக்கும் நபர் கையில் உள்ள புத்தகத்தை தலைகீழாக வைத்து படிப்பதை பார்க்கும் போது ஏதோ சிறப்பு உள்ளதாகத் தெரிகிறது :-) வரட்டும். வரட்டும். இந்த கதைக்கு பிறகு சிரிப்பு பார்ட்டிகளுக்கு அனைவரும் தலைவணங்கும் காலமாக மாறப்போகிறது. :-)

  ReplyDelete
  Replies
  1. அட்டைப்படம் கதை சொல்வது போல் உள்ளது :-) கதைக்கு ஏற்ற தலைப்பு என்பது அட்டைப்படம் சொல்கிறது.

   Delete
 44. Leonardo comics /
  Singaththin siruvayathil collection

  ReplyDelete
  Replies
  1. Leonardo comics - அப்படிச் சொல்லுங்க நவநீதன்.

   Delete
 45. ஆர்ட் தாள் இல்லை என்றால் பரவால்லீங்க சார். தலீவர்செயலர் கண்ணர் மாதிரியான பெருசுகள் ஏற்கனவே க்ளேர் அடிப்பதால் படிக்க முடியாமல் சிரம்ப்படுகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. நம்ப விஜய் கூட படிக்க முடியாமல், கண்ணாடியும் போட்டு படிக்க முடியாததால் படித்துக்காட்ட ஆயா ஒருவரை வேலைக்கு வைத்திருப்பதாக ஊருக்குள் பேசிக்கொள்கிறார்கள் :-)

   Delete
  2. ஹலோ ஷெரீப் நான் அணிவது சன் கூலிங்க்ளாஸ்...வயசானதால உங்களுக்கு சரியா தெரில..

   Delete
 46. தாயில்லாமல் டால்டன் இல்லை கதை முழுவதும் ரின் டின் கேனை லக்கி சுமந்து திரியும் சீக்குவன்ஸ் செம காமெடி ரகம், இதனைப் பார்த்து ஜாலி ஜம்பர் பொறாமையில் பேசும் வசனங்கள் செம. :-)

  ReplyDelete
 47. ரொம்பவும் சின்ன ஆசை தானுங்க எனக்கு.
  டைகரின் 'இளமையில் கொல்' மீதம் உள்ள பாகங்கள் + 'ஜேன் இருக்க பயமேன்' வண்ணத்தில்.

  ReplyDelete
  Replies
  1. ஜேன் இருக்க பயமேன் இன்று இல்லை என்றாலும் விரைவில் ஏதாவது ஒரு புத்தகத் திருவிழாவில் வர வாய்ப்புகள் அதிகம் ‌‌‌‌உள்ளது.

   Delete
 48. // So ஏதாவது எதிர்பாரா இடர் குறிக்கிடா பட்சத்தில் வரும் விசாலக் கெயமை (28th அக்டோபர்) புக்ஸ் இங்கிருந்து புறப்பட்டிட வேணும் ! //
  வாவ் சூப்பர் சார்...

  ReplyDelete
 49. இரும்பு மனிதன் கொலைப்படை சதிவலை இந்த மூன்று புத்தகங்களும் அதே பார்மட்டில் திரும்ப ஒருமுறை பப்ளிஷ் பண்ண வேண்டும்

  ReplyDelete
 50. // "இந்த ஒரேயொரு விஷய(மு)ம் நனவானால், இந்தப் பொன்விழா ஆண்டு என்னைப் பொறுத்தவரை ஒரு மறக்கவியலா ஆண்டாகிடும் !" என்று உங்களுக்குள் ஏதேனும் ரகசிய அவாக்கள் குடியிருப்பின் - அவற்றை பகிர்ந்திடுங்கள் ப்ளீஸ் !! //
  அப்படி எல்லாம் பெரிய ஆசை இல்லை சார்,உங்களால் முடிந்ததை பார்த்து பண்ணிக் கொடுங்க சார்...
  இந்த வருஷம் வர்ற மாதிரியே நிறைய குண்டு புக்ஸும்,ஹார்ட் பைண்டிங்குமாய் நிறைய வெரைட்டியில் ஒவ்வொரு வருஷமும் வரணும் சார்,அது நிறைவேறினாலே மகிழ்ச்சி...!!!

  ReplyDelete
 51. டியர் எடி,

  பளபள காகிதங்கள் வாசிப்பு அனுபவத்தை, கணிணி உலக ஸ்கிரீன்களுக்கு நிலையாக உயர்த்தலாம். ஆனால், சென்னை பெங்களூர் போன்ற ஈரபதம் கொண்ட ஊர்களில், இவற்றை ஒன்றோடு ஒன்றாக ஒட்டாமல் பாதுகாப்பது மிகவும் கடினம்.

  தொடங்கிய காலம் முதற்கொண்டு இன்று வரை, சினிபுக் நார்மல் ஸ்டாண்டர்டு காகிதங்களையே உபயோகிக்கிறார்கள். எனவே, பளபள காகிதங்கள் ஒரு added supplement'ஏ தவிற essential இல்லை.

  விலையை கட்டுக்குள் வைக்க, முடிவெடுக்க தயங்காதீர்.

  100வது கமெண்ட் என்னும் :)

  ReplyDelete
  Replies
  1. வழிமொழிகறேன் ..

   +1

   Delete
  2. +2
   நானும் வழிமொழிகிறேன் சார்....

   கதையே பிரதாணம், மற்றவை தங்களது பட்ஜெட்& நடைமுறையில் சாத்தியமான எதுவும் ஓகே தான் சார்.

   Delete
 52. // For starters - புத்தக விழா ஸ்பெஷல் இதழ்களுக்கும், மறுபதிப்புகளுக்கும், நார்மல் காகிதத்தில் பழகிப் பார்க்கும் course-ல் முதல் பாகத்தை அமல்படுத்திப் பார்க்க வேண்டும் போலும் !! //
  என்ன கொடுமை சார் இது...!!!

  ReplyDelete
 53. // தெய்வமே...."கொரோனா டெல்டா sub-variant ; சூப்பரின்டென்டென்ட்" என்று மறுக்கா ஆங்காங்கே ஒலிக்கும் ஏதேதோ பூச்சாண்டிகள் நம்மூர்களுக்கு ஒரு ரவுண்ட் வராதிருக்கச் செய்யுங்களேன் - simply மிடிலே !! //
  ரஷ்யாவின் நிலை மீண்டும் கவலைக்குரியதாக உள்ளது,சீனாவிலும் ஆங்காங்கே சில தடுமாற்றங்கள்,என்ன நடக்கும்னு தெரியலை...!!!

  ReplyDelete
  Replies
  1. ஆம்...நிலை சற்றே யோசிக்க வைக்கும் விசயமே... ரஷ்யா எளிதில் எல்லையை குளோஸ் பண்ணிடுவாங்க...

   ஆனா சீனாதான் டேஞ்சரே, மீண்டும் பரப்பி உட்டானுகனா கலவரம்தான்...

   Delete
  2. சீன பரப்பி விட முடியாது நண்பரே - நமது கையில்தான் உள்ளது - social distancing and masking நாம் சரியாக செய்யாதவரை அடுத்தவரை சொல்லவே முடியாது - கூடாது !
   Vaccination also is important.

   Our back is ours to wash :-)

   Delete
 54. // 2022 முழுக்கவே உங்களுக்கான ஆண்டெனும் போது - உங்களின் கோரிக்கைகளை ; அவாக்களை இயன்ற மட்டிலும் நிறைவேற்ற இயன்ற பல்டிக்கள் அனைத்தும் அடித்திட தயாராய் இருப்போம் ! //
  2022 இல் பெரிய மலையளவு பொறுப்பை சுமப்பீர்கள் போல சார்...!!!

  ReplyDelete
 55. // அந்த நொடியினில் ஒரு "லட்டு டிப்போ"வுக்கென ஓசையின்றி ரெடியாகியுள்ள ஏற்பாடுகள் பற்றி வாய் திறக்கிறேன் ! //
  சூப்பர் அதிரடிகள் வெயிட்டிங்...!!!

  ReplyDelete
 56. For starters - புத்தக விழா ஸ்பெஷல் இதழ்களுக்கும், மறுபதிப்புகளுக்கும், நார்மல் காகிதத்தில் பழகிப் பார்க்கும் course-ல் முதல் பாகத்தை அமல்படுத்திப் பார்க்க வேண்டும் போலும் !! //

  #####

  சார் செலவு குறையுமெனில் வரும் வருடமே அதனை செயல்படுத்துங்கள் சார்..நோ ப்ராப்ளம்

  ReplyDelete
 57. ஒரு க்ளாசிக் டைஜஸ்ட்

  ஃபார்முலா x13
  ஜானி in லண்டன்

  ReplyDelete
 58. சார், நண்பர் ரபீக் அவர்கள் சொல்லியிருப்பதுபோல - இந்த பள பள காகிதங்களில் தண்ணீர் பட்டால் கோவிந்தாதான். ஒரு தடவை இலங்கைக்கு நீங்கள் அனுப்பிய புத்தகங்கங்களுக்கு நடந்தவையும் அதன் பின்னால் நீங்கள் செய்த பேருதவியும் உங்களுக்கு நினைவிருக்கக்கூடும். ஆர்ட் பேப்பரல்லாத தரமான காகிதம் எப்போதுமே பாதுகாப்பானதும் அழகானதும் சார். நிச்சயம் அந்த சுவிட்சிங்கிற்கு தயங்காதீர்கள்!

  ReplyDelete
 59. எடிட்டர் சார்,

  முத்து காமிக்ஸில் எவ்வளவு கதைகள் வந்திருந்தாலும், "யானைக்கல்லரை" மற்றும் "புதையல் பாதை" இதழ்களுக்கு கண்டிப்பாக தனி இடம் உண்டு. இதில் எது முன்னாடி வந்திருக்க வேண்டியது, எது பின்னாடி என்பதில் அனைவருக்குமே குழப்பம் இருக்கிறது. கதையும், சித்திரங்களும் சும்மா தெறிக்கவிடும். இதை அப்படியே கலரில் பெரிய சைஸில் பார்த்தால்... அப்பப்பா நினைக்கும்போதே செமையா இருக்கும். இந்த முத்து பொன்விழா ஆண்டில் இது வருமானால் மெஹா பிளாக்பஸ்டர் ஆவது உறுதி.

  எடிட்டர் எனது இந்த சின்ன ஆசை நிறைவேற்றும் சாத்தியக்கூறுகள் இருக்குமா என்பதை தயவுகூர்ந்து ஆலோசிக்குமாறு பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொண்டு அமர்கிறேன் நன்றி.

  யாராச்சும் சோடா குடுங்கப்பா. :))

  ReplyDelete
  Replies
  1. காளி மார்க் பன்னீர் சோடா அனுப்பி வைத்திருக்கிறேன் கார்த்திகேயன். :-)

   Delete
  2. Nothing beats Bovonto Parani - that too the south TN version is so tasty - Chennai version is very sugary, so yucky. Trichy, Kumbakonam versions are awesome !

   Delete
  3. ஆமா பவண்டோ தான் சகலத்திற்கும் உகந்தது....

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. உண்மை ராகவன். இங்கிருந்து பெங்களூர் செல்லும் போது எல்லாம் மறக்காமல் பவண்டோ 1 லிட்டர் கொண்டு செல்வது வழக்கம். கடந்த சில வருடங்களாக இதனை செய்வது இல்லை குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க ஆரம்பித்ததால் :-)

   Delete
  6. /* குளிர்பானங்கள் குடிப்பதை தவிர்க்க ஆரம்பித்ததால் */ - me too BUT when I visit Trichy Bovonto 200 ml bottles are exceptions - just no matching taste :-)

   Delete
 60. சின்னச் சின்ன ஆசைகள் - அவசியம் ஹாட் லைன் இருந்திடட்டும். ஒரு சில பக்கங்களை, முன்புபோல விச்சு-கிச்சு, குண்டன் பில்லி - மாதிரியான ஓரிரு பக்கப் படைப்புகளுக்கு ஒதுக்க வேண்டுகிறேன். நமது வீட்டு சுட்டிகளை வாசிப்புப் பக்கமாக ஈர்க்க அவை நிச்சயம் பயன்படும். வாசகர் படைப்புகளுக்கும் ஒரு பக்கமாவது கொடுத்தால் சிறப்பு!

  ReplyDelete
 61. A triple cowboy treat for Deepavali -

  a) Tex
  b) Lucky
  c) The new cowboy that looks like Captain Prince ;-)

  ReplyDelete
 62. ஜெஸ்லாங் இது வரை வெளிவந்த கதைகள் மற்றும் நண்டுக்குகை மர்மம்.
  தெளிவான சித்திரங்கள்,அலட்டல் ஆர்பாட்டமில்லா யதார்த்தமான கதைகள்.
  மேலும் தற்போதைய தரத்தில் செய்தாக இருக்கும்.

  ReplyDelete

 63. ஜெஸ்லாங் இது வரை வெளிவந்த கதைகள் மற்றும் நண்டுக்குகை மர்மம்.
  தெளிவான சித்திரங்கள்,அலட்டல் ஆர்பாட்டமில்லா யதார்த்தமான கதைகள்.
  மேலும் தற்போதைய தரத்தில் செமையாக இருக்கும்

  ReplyDelete
 64. ஆசிரியர் சார்@

  M50க்கு நிறையவே கொடுத்து விட்டீர்கள் சார்....

  இவைகளே முழு திருப்தியை அளித்துட்டன...

  மேலும் மேலும் பணிச்சுமையை தங்கள் தோள்மேல் ஏற்றிக்க வேணாம்...

  அறிவித்துள்ளவைகளே போதுமானது...

  "போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து"

  ReplyDelete

 65. (1)
  நண்பர்களே ,

  நேற்றைய பதிவில் உங்கள் நட்பு வட்டாரத்தில் காமிக்ஸ் links
  குறித்து What's app மூலம்
  பகிர்ந்து கொள்ள
  வேண்டுகோள் ஒன்றினை
  பதிவிட்டிருந்தேன்..

  உங்கள் முயற்சிகளின் பலன் குறித்து இங்கே அவ்வப்போது பதிவிடுங்கள்.

  நானும் எனது முயற்சிகளின்
  பலன் குறித்து சில தினங்களில் பகிர்ந்து கொள்கிறேன் !
  *************

  (2)

  சின்ன சின்ன ஆசை ! சிறகடிக்கும் ஆசை !

  எடிட்டர் சார், சில ஆண்டுகளுக்கு முன்பாக
  உங்கள் படத்துடன் தபால் தலை ஒன்றை வாசகர் ஒருவர் வெளியிட ஏற்பாடு செய்தார்.

  இந்த தருணத்தில் நமது முத்து
  காமிக்ஸ் இலச்சினையுடன்
  தபால் தலை ஒட்டி கவரில் உங்கள் கையெழுத்துடன்
  சந்தா செலுத்தியவர்களுக்கு
  அனுப்பினால் சிறப்பான பொக்கிஷமாக நாங்கள்
  வைத்திருப்போம் !


  *************

  (2)


  ஆசைகள் -2

  ஒரு சிறிய உள்ளங்கை அளவில் வர்ணம் தீட்டும் 16 பக்க புத்தகத்தில் 14 காமிக்ஸ் நாயகர்களின் line Drawing அச்சிட்டு வழங்கினால் நாளைய புதிய வாசகர்களைக்
  கவரலாம்!

  ஆசைகள் -3

  ஒரு சிறிய கைகுட்டையில் உங்கள் படத்துடன் உங்கள்
  தாத்தா, சீனியர் எடிட்டர் மற்றும்
  ஜூனியர் எடிட்டர் படங்களுடன்
  அனுப்பினால் சந்தாதாரர்கள் அனைவரும் நினைவு பரிசாக
  வைத்திருப்போம்.

  எல்லா ஆசைகளையும் ஜனவரி
  மாதமே நிறைவேற்ற வேண்டுமென்பதில்லை !
  2022 சந்தா பாக்கெட்டுகளில் அந்தந்த மாத அன்பளிப்பாக ஏற்றுக்கொள்வோம் !
  ஆசைகள் 4

  சிவகாசி என்றால் நினைவுக்கு வருவது பட்டாசுகளும் காலண்டர்களும்தான்.

  நமது இதழ்களின் 12 அட்டைப்பட டிசைன்களுடன்
  ஏப்ரல் to மார்ச் 2023 காலண்டர் ஒன்றை திட்டமிடுங்கள் !


  ReplyDelete
  Replies
  1. All ok except kerchief. Some of us will treasure it and save it. Others will Sali sindhify .. brrr ..

   Delete
  2. /* ஒரு சிறிய உள்ளங்கை அளவில் வர்ணம் தீட்டும் 16 பக்க புத்தகத்தில் 14 காமிக்ஸ் நாயகர்களின் line Drawing அச்சிட்டு வழங்கினால் நாளைய புதிய வாசகர்களைக்
   கவரலாம்! */

   Super Doc !! Editor can try this for sales too for kids !!

   Delete
 66. க்ரைம் நாவலில் முதல் பதிப்பில் உள்ளவாறே முதல் பக்கத்தில் இருந்து கடைசிப்பக்கம் வரை மூன்று இதழ்களை ஒன்றாக மறுபதிப்பு செய்கிறார்கள்...
  அதுபோல் நமது காமிக்ஸ்களை மறுபதிப்பு செய்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. அந்த மாதிரி கதம்ப இதழ்களை பதிப்பாளர்கள் ஒப்புக்கொள்வதில்லை என்று 3 பதிவுகளுக்கு முன் சொல்லி இருந்தாரே. ஆனா எடிட்டர் சார் - 3 modesty, 3 லக்கி luke, 3 tex - பழையன - இப்படி வருவதில் தடைகளில்லையே ?

   Delete
 67. This comment has been removed by the author.

  ReplyDelete
 68. மாயாவியோட முதலிதழ ரிப்ளிகான்னு பப்ளிக்கா கேட்டுட்டோம்...இல்லன்னா உயர்தர தாள்கள் வண்ணத்ல கேட்ருக்கலாம் ஆர்ட்பேப்பரில்லா முதல் முயற்ச்சியா

  ReplyDelete
 69. லயன் மற்றும் முத்துவில் எனக்கு ஒரு குறை உண்டு.
  புத்தகத்தின் முதல் பக்கத்தில் புக்கின் வெளியிடும் மாதமும், வருடமும் வெளியீடு என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும்.

  எடிட்டர் இதை பரிசீலனை செய்வாரா?!!

  ReplyDelete
  Replies
  1. இது பற்றி ஏற்கனவே எடிட்டர் சில வருடங்களுக்கு முன்பு சொல்லியுள்ளார். 2020க்கு முன் 5 ஆண்டுகளில் நமது வெளியீடுகளின் விற்பனையில் பல நகரங்களில் நடைபெற்ற bookfair கணிசமான பங்கு வகித்தது. அங்கு வருபவர்களோ month year என்பதை பார்த்தல் பழையதை விடுத்து புதியதை தேர்வு செய்திடும் சங்கடங்கள் ஏற்படலாம். கடைகளில் retail விற்பனைகளுக்கும் இது பொருந்தும்.

   Delete
 70. கடினமான Corona நாட்களை கடந்து பண்டிகை நாட்களை சந்திக்கவிருக்கிற்றோம்.
  தீபாவளி, கார்த்திகை தீபம், கிறிஸ்துமஸ் , புத்தாண்டு மற்றும் பொங்கல் என்று வரிசையாக வலம் வரும் தருணமிது.

  உங்கள் அன்பிற்குரிய அனைவருக்கும்
  உங்கள் வாழ்த்துக்களையும்
  பரிசுகளையும் வழங்கும் நேரம்.

  பரிசுகளை தேர்வு செய்யும்போது உங்கள் தேர்வுபுதிய ஆடை. அணிகலன்கள்
  இவற்றுடன் நமது காமிக்ஸ் இதழ்களும் இருக்கட்டுமே

  ReplyDelete
  Replies
  1. உங்க லிஸ்டில் நான் இருக்கிறேனா? :P

   Delete
 71. எடிட்டர் சார். தாங்கள். 25 வருடங்களுக்கு முன்பு. தாங்களே. கூறி. நிறைவேற்றாத மறுபதிப்பு கள். தான். என். ஆசைகள். 1'maaskovil. மாஸ்டர். (ஜான். மாஸ்டர்). 2 கொடைமலர் -86 3இரும்பு கை. நார்மன். மனித எரி மலை இவைகளுடன். செந்தில் சத்தியா. கூறியதை. போல. இரட்டை. வே. ட்டையர் கதைகளை. அதுவும். இந்தக். கால. ஆர்ட். பேப்பரில். கலர் ரில். பார்த்தால். அட்டகாசமாக. இருக்கும். வெளியிடு வீர்களா. வெளியிட்டால். ஜென்ம சாபல்யம். அடைவேன். Dekshnamoorthy. Thiruvarur

  ReplyDelete
 72. தங்க கல்லறை பழைய பாகம் 1&2 இதழை வண்ணத்தில் ஹார்ட் பௌண்டில் வெளியிட வேண்டும்

  ReplyDelete
 73. நிச்சயமாக முத்து வில் மைல்கல். இதழ். என்றால். டைகர். கதைகளுக்கு. அடுத்து. புதையல். பாதை. யானை கல்லறை. என்று. சொன்னால். யாருக்குமே மாற்று. கருத்து. இருக்கமுடியாது அதுவும். கலரில். ஆர்ட். பேப்பர் றில். முத்துவின். 50ஆண்டுக்கு. வெளியிட. பொருத்தமான. இதழ். Dekshnamoorthy. Thiruvarut

  ReplyDelete
 74. ஆயிரம் பக்கத்துல கௌபாய் கதையா...'தல'தானே..?

  ReplyDelete
 75. Rather than a wish, a suggestion for a new series: East of West.

  ReplyDelete