Powered By Blogger

Tuesday, October 12, 2021

இன்னொரு கேள்வியுமே..!

நண்பர்களே,

வணக்கம். இன்னொரு கேள்வியுமே !! In fact - நிரம்ப முக்கியமானதும் கூட !! So உங்களின் கவனங்களைப் பெற்றிட வேண்டுமெனும் பொருட்டு, தனிப்பதிவாக்கிடுகிறேன் ! விஷயம் இது தான் :

இது வரையிலுமான முத்து காமிக்சின் அட்டைப்படங்களை (1 to 457) மொத்தம் 52 பக்கங்களுக்குள் அடக்கி, முத்து ஆண்டுமலர் 50-ல் இணைத்திட எண்ணியிருந்தேன் ! ஆனால் திடீரென அதனில் சந்தேகம் எழுந்தது - "இதையெல்லாம் பாத்து நான் என்ன சாதிக்கப் போறேன் ? ஒரு கதையைப் போடுற இடத்திலே காசை கரியாக்கிப்புட்டியே ?!" என்ற விசனங்களும் எழக்கூடுமே என்று ! So எனது கேள்வி ரொம்ப சிம்பிள் :

அட்டைப்பட அணிவகுப்பு வேணுமா ? வேணாமா guys ?

வேணாமெனில் அதனிடத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்யும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் ; so "வேணும் / வேணாம் !" என்ற பதில்களே எனக்கு மதி !!


And இதோ - போன பதிவிலிருந்தான கேள்விகள் again :

1.2022 : ஆண்டுச் சந்தா எவ்வளவுக்குள் இருந்தால் நலமென்று நினைக்கிறீர்கள் ? (ஜம்போ சந்தா பற்றி இப்போதைக்கு இணைத்துக் கணக்கிட வேண்டாம் ; அதனை ஏப்ரல் 2022-ல் பார்த்துக் கொள்ளலாம் !) 

2.புத்தாண்டின் highlight முத்து ஆண்டுமலர் # 50 தான் என்பதில் ரகசியங்கள் லேது ! அந்த இதழின் பட்ஜெட் என்னவாக இருக்குமென்று நடைமுறை சாத்தியத்துடனான ஒரு நம்பர் ப்ளீஸ் ?  ஐஞ்சாயிரம் ; பத்தாயிரமென்று இரும்புக் கவிஞர் பாணியில் இறங்கிடாது - யதார்த்ததுடன் ஒத்துப் போகும் விதமான விலை யூகம் ப்ளீஸ் ?

3.முத்து ஆண்டுமலரில் நாயக - நாயகியர் என யார் இடம் பிடிப்பர் ? என்பது பற்றிய உங்களின் யூகங்கள் ப்ளீஸ் ? Again a realistic list please ?

4.யாருக்கெல்லாம் 2022-ல் இடம் இராது ? என்று நினைக்கிறீர்கள் ?

5.Inevitably - 'தல' சார்ந்த கேள்வியுமே  : ஆண்டினில், எத்தனை 'தல' ஆல்பங்கள் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது ? 

PLEASE NOTE : இந்தக் கேள்விகள் - உங்களின் எண்ணவோட்டங்களும், எனது தேர்வுகளும் எந்த மட்டிற்கு நெருங்கி நிற்கின்றன ? அல்லது என்ன மாதிரியான இணைகோடுகளாய் விலகி ஓடுகின்றன ? என்பதை கிரகிக்க நினைக்கும் முயற்சி மாத்திரமே ! So "கருத்து கேட்டேல்லே வெண்ணெய் ; அப்புறம் ஏன் அட்டவணையிலே சேர்க்கலை?ன்னு" இன்னொரு ஆலமரத்தடியினைத் தேடிட முற்பட வேண்டாமே - ப்ளீஸ் ?! (கொஞ்ச மாசங்களுக்கு ஆல மர, அரச மரத்தடிகளையும் "தடை செய்யப்பட பகுதிகளாய்" அறிவிக்கக் கேட்டு அரசுக்கு மனு போடலாமென்று இருக்கேன் !!)

So இந்த இறுதி நிமிட rapid fire கேள்விகளுக்கு பதில்ஸ் ப்ளீஸ் ? 

Bye all...See you around !!

398 comments:

 1. விஜயன் சார், அட்டைப்படம் தொகுப்பு எனக்கு வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. வராம இருந்தா நல்லாயிருக்கும் சார் :-)

   Delete
 2. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 3. உள்ளேன் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼
  .

  ReplyDelete
 4. அட்டை படங்கள் PDF File ஆக ஷேர் பண்ணினாலே போதும் என்பது எனது கருத்து

  ReplyDelete
 5. // "கருத்து கேட்டேல்லே வெண்ணெய் ; அப்புறம் ஏன் அட்டவணையிலே சேர்க்கலை?ன்னு" இன்னொரு ஆலமரத்தடியினைத் தேடிட முற்பட வேண்டாமே - //

  ஆசை தோசை அப்பளம் வடை :-)

  ReplyDelete
 6. // so "வேணும் / வேணாம் !" என்ற பதில்களே எனக்கு மதி !! //
  வேண்டவே வேண்டாம்னு சொல்லலாமா சார் ?!

  ReplyDelete
  Replies
  1. வராம இருந்தா நல்லாயிருக்குமேன்னும் சொல்லலாம் ; வந்தா நல்லாயிருக்காதேன்னும் சொல்லலாம் !

   Delete
  2. என்னைக் கேட்டால் இதை நீங்கள் கேட்டிருக்கவே தேவை இல்லை சார்,ஆனா நீங்க கேட்டதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம்,இருப்பினும் இதற்கு பதிலாக முத்து 50 உடன் ஒரு குட்டி கலர் பொஸ்தகத்தை கூடுதல் (இலவச) இணைப்பாக தந்து எங்கள் மனதை குளிர வையுங்கள் சார்...

   Delete
 7. இப்பத்தான் பழைய பதிவ ஃபுல்லா படிக்கலாம்ன்னு வந்திருக்கேன் அதுக்குள்ள புது பதிவு..

  ReplyDelete
 8. // அட்டைப்பட அணிவகுப்பு வேணுமா ? வேணாமா guys ? //
  வேண்டாம்...

  ReplyDelete
 9. வேணும். ஆனால் தனி புத்தகமாக வரவேண்டும்... .. காமிக்ஸ் வெளிவந்த புத்தகத்தின் size லேயே ஒவ்வொரு அட்டைப்படமும் வரவேண்டும்...Thumbnailல் வருவதாக இருந்தால் வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. நடைமுறை சாத்தியங்களை யோசிக்கவும் முயற்சியுங்களேன் நண்பரே ! தோராயமாய் நானூற்றுச் சொச்சம் பணம் தேவை - உங்கள் அவாவைப் பூர்த்தி செய்திட !

   Delete
  2. +1111

   Thumb nail print வேண்டாம். முழு ஒரிஜினல் அளவில் தனிப் புத்தகமாக வந்தால் மிக நல்லது. தனியாக விலை கொடுத்து வாங்கும் படி

   Delete
  3. //தோராயமாய் நானூற்றுச் சொச்சம் பணம் தேவை - உங்கள் அவாவைப் பூர்த்தி செய்திட !//
   Deal Okay, Sir... Please release whenever it is possible.

   Delete
 10. வேண்டாம் சார்.

  ReplyDelete
 11. 1.4500
  2.750
  3.New Heros + Steel Claw
  4.Mumoorthykal
  5.Every Month

  ReplyDelete
 12. கண்டிப்பாக வேண்டும்.

  சார் மற்ற கேள்விகளுக்கு போன பதிவிலேயே பதில் சொல்லிவிட்டேன் இங்கு மீண்டும் உங்களுக்கு தேவை படுமா ஒரே இடத்தில் அனைத்து பதில்களும் என்ற முறையில் 😀

  ReplyDelete
 13. வேண்டாம்!!

  (இந்த அட்டைப்பட சமாச்சாரத்தை எப்படி உங்களிடம் சொல்வது என்ன எண்ணி இருந்தேன், நீங்களே கேட்டு விட்டீர்கள்.நன்றி.)


  2.புத்தாண்டின் highlight முத்து ஆண்டுமலர் # 50 தான் என்பதில் ரகசியங்கள் லேது ! அந்த இதழின் பட்ஜெட் என்னவாக இருக்குமென்று நடைமுறை சாத்தியத்துடனான ஒரு நம்பர் ப்ளீஸ் ? ஐஞ்சாயிரம் ; பத்தாயிரமென்று இரும்புக் கவிஞர் பாணியில் இறங்கிடாது - யதார்த்ததுடன் ஒத்துப் போகும் விதமான விலை யூகம் ப்ளீஸ் ?

  ~800 - 1000 Rs

  3.முத்து ஆண்டுமலரில் நாயக - நாயகியர் என யார் இடம் பிடிப்பர் ? என்பது பற்றிய உங்களின் யூகங்கள் ப்ளீஸ் ? Again a realistic list please ?

  தோர்கள் தவிர என்ன இருந்தாலும் ஓகே.

  4.யாருக்கெல்லாம் 2022-ல் இடம் இராது ? என்று நினைக்கிறீர்கள் ?

  மேக் அண்ட் ஜாக் , Blue Coats, ஹெர்லோக் ஷோல்ம்ஸ் . நிறைய பேர் ப்ளூ coats சொல்லி இருப்பது ஆச்சரியமே.

  Time for suskie wiskie to come back

  5.Inevitably - 'தல' சார்ந்த கேள்வியுமே : ஆண்டினில், எத்தனை 'தல' ஆல்பங்கள் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது ?

  மாதம் ஒரு டபுள் album என்று 12 + specials + பிரீ மினி கலர் டேஸ் + etc

  ReplyDelete
  Replies
  1. //இந்த அட்டைப்பட சமாச்சாரத்தை எப்படி உங்களிடம் சொல்வது என்ன எண்ணி இருந்தேன், நீங்களே கேட்டு விட்டீர்கள்.//

   கதைத் தேர்வுகள் சார்ந்த சமாச்சாரங்களெனில் அதன் பின்னணியில் எனது அபிப்பிராயங்கள் வேறாக இருக்கக்கூடும் நண்பரே ; ஆனால் இது போன்ற நோஸ்டால்ஜியா சமாச்சாரங்களில் எனக்கென்று எவ்வித விருப்போ - வெறுப்போ நஹி சார் ! தயங்காது சொல்லலாமே !

   Delete
  2. வாசகர்கள் மற்றும் உங்கள் effort already இதுல invest ஆகி விட்டது. அதனால் தான்.....

   Delete
 14. 1.2022 : ஆண்டுச் சந்தா எவ்வளவுக்குள் இருந்தால் நலமென்று நினைக்கிறீர்கள் ?

  நெறைய புக்கு வேணும் சார்
  ரெண்டு வருசமா கொரோனவை காரணம் காட்டி நிறைய புக்கு வராம போயிடுத்து சார்
  அதனால இந்த வருஷம் அதெல்லாம் சேர்த்து போட்டு தாக்குங்க சார்

  2.புத்தாண்டின் highlight முத்து ஆண்டுமலர் # 50 தான் என்பதில் ரகசியங்கள் லேது ! அந்த இதழின் பட்ஜெட் என்னவாக இருக்குமென்று நடைமுறை சாத்தியத்துடனான ஒரு நம்பர் ப்ளீஸ் ?

  999/-

  3.முத்து ஆண்டுமலரில் நாயக - நாயகியர் என யார் இடம் பிடிப்பர் ? என்பது பற்றிய உங்களின் யூகங்கள் ப்ளீஸ் ? Again a realistic list please ?

  உங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை யுவர் ஆனர்

  4.யாருக்கெல்லாம் 2022-ல் இடம் இராது ? என்று நினைக்கிறீர்கள் ?

  Modesty
  Tiger
  இந்த ரெண்டு பார்ட்டிங்களும் அடிக்க வரதுக்குள்ள ஓடிடுவோம்


  5.Inevitably - 'தல' சார்ந்த கேள்வியுமே : ஆண்டினில், எத்தனை 'தல' ஆல்பங்கள் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது ?

  டெக்ஸ் ரெண்டு மூணு புக்கா சேர்த்து ஒரு குண்டு புக்கும்
  இளம் டெக்ஸ் 4-5 புக்கா சேர்த்து ஒரு குண்டு புக்கும்
  ஒரு மாசம் இவரு ஒரு மாசம் அவருன்னு மாத்தி போடுங்க சார்
  அது போதும்

  நன்றி சார்
  .
  ReplyDelete
  Replies
  1. டெக்ஸ் ரெண்டு மூணு புக்கா சேர்த்து ஒரு குண்டு புக்கும்
   இளம் டெக்ஸ் 4-5 புக்கா சேர்த்து ஒரு குண்டு புக்கும்
   ஒரு மாசம் இவரு ஒரு மாசம் அவருன்னு மாத்தி போடுங்க சார்
   அது போதும்....சூப்பர்

   Delete
 15. அட்டைப்படம் வேணும் ...நானெல்லாம் பல புக் பார்த்ததே இல்லை இந்த மாதிரி Digest special ல பார்த்தாதான் உண்டு ...இன்னைக்கு இங்க இருக்கிற Young தாத்தாக்ள் பேரப்பிள்ளைகளிடம்..'நான் இந்த புக் வாங்குறதுக்கு எங்க அப்பபா அம்மா விடம் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமான்னு' கதை சொல்லவாவது கண்டிப்பா உதவும்

  ReplyDelete
  Replies
  1. // இன்னைக்கு இங்க இருக்கிற Young தாத்தாக்ள் பேரப்பிள்ளைகளிடம்..'நான் இந்த புக் வாங்குறதுக்கு எங்க அப்பபா அம்மா விடம் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமான்னு' கதை சொல்லவாவது கண்டிப்பா உதவும் //

   E.V & SENTHAMPATTI TEAM'S
   எல்லாரும் எங்க போய்டீங்க
   உங்களைத்தான் சொல்றார் ...

   Delete
 16. கண்டிப்பாக வேண்டும்

  வந்தாலும் வரலாம்
  வராவிட்டாலும் வரலாம் ..

  முத்து 50 க்கு வேற என்ன புதுசா தேடி செய்திட முடியும் வாத்யாரே ??

  என்னைக்கும்
  முத்து மனசில நிக்கனும்ன்னா இந்த இராப்பர்ஸ் கண்டிப்பா வேணும் ..

  ReplyDelete
 17. அட்டைப்படம் வேண்டும் சார்

  ReplyDelete
 18. சார் பரவலாக வேண்டாம் என்று வரும் போல தெரிகிறது, நான் லயன் காலத்து ஆள், முத்து ஆரம்பகாலம் பார்த்தது கிடையாது ஆகையால் இது எனக்கு தேவை என்று படுகிறது.

  வேண்டாம் அதிகமாக இருந்தால் மொத்தமாக கிடைக்காதா அல்லது சிறு விலையுடன் வாங்கிக்கொள்ளலாமா?

  ReplyDelete
  Replies
  1. பார்ப்போமே கிருஷ்ணா ; நல்ல காலத்துக்குக் கேட்டு வைத்தேன் !

   Delete

 19. அட்டைப்பட அணிவகுப்பு வேணுமா ? வேணாமா guys ?


  வேணுமின்னு நினைச்சாலும்
  வேணாமுன்னு தோணுது சார்
  .

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் தெளிவா பதில் சொல்லுங்க பிரபாகர், இல்லை என்றால் ஓட்டு எண்ணிக்கையின் போது இது செல்லாத ஓட்டு ஆகிவிடும் :-)

   Delete
  2. வேண்டாம்னு சத்தமா சொல்லுங்க சித்தரே...

   Delete
 20. Sir -

  Option 1: Have it as a seperate print on demand edition. Those who want can pre-book it - others can discard.

  Option 2: Free book for subscribers of 2022.

  Option 3: Display as a seperate page here and add it to sidelines

  Option 4: Nail-E no pluck :-)

  ReplyDelete
  Replies
  1. Nopes sir ; Options 1 & 2 நடைமுறை சாத்தியங்களே அல்ல ! பேப்பர் விலைகள் வரலாறு காணா உச்சத்தில் நிற்கின்றன சார் !

   Delete
 21. விஜயன் சார்,
  இந்த அட்டைபட தொகுப்புக்கு பதில் மாடஸ்தியின் சிறுவயது கதையை வாய்ப்புகள் இருந்தால் மறுபதிப்பாக கலரில் கொடுக்கலாம்! இதனை ஏதாவது புத்தகத்துடன் இணைத்து கொடுங்கள்!

  எந்த ஒரு இலவச புத்தகமாக நீங்கள் கொடுக்க நினைத்தாலும் அதனை ஏதவாது ஒரு ரெகுலர் புத்தகத்தில் இணைத்து கொடுங்கள்! தயவு செய்து தனிப்புத்தகமாக கொடுக்க வேண்டாம் ப்ளீஸ்.

  ReplyDelete
 22. நாளைக்கு இன்னும் ஒரு உப பதிவு இருக்கும் போல தெரியுது அதன் பெயர் அநேகமாக "கடைசியா இன்னும் ஒரு கேள்வி" :-)

  ReplyDelete
  Replies
  1. மறுக்கா மறுக்கா இன்னொரு கேள்வி,இது ஓகேவா...

   Delete
  2. இம்புட்டு கேள்வி கேட்டவரு,அட்டவணை பதிவு என்னிக்கு,எந்த நேரம்னு இன்னும் சொல்லலை...
   நோட் தி பாயிண்ட்...

   Delete
  3. // இம்புட்டு கேள்வி கேட்டவரு,அட்டவணை பதிவு என்னிக்கு,எந்த நேரம்னு இன்னும் சொல்லலை... //

   நீங்க அடுத்து இந்த கேள்வியைத்தான் கேட்பீங்க என தெரியும் அறிவரசு :-) நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை :-)

   // இம்புட்டு கேள்வி கேட்டவரு,அட்டவணை பதிவு என்னிக்கு,எந்த நேரம்னு இன்னும் சொல்லலை... //

   ஆசிரியரின் அடுத்த பதிவில் முக்கிய விஷயமே இந்த கேள்விதான் அறிவரசு :-)

   Delete
  4. அட..நீங்களே சொல்லுங்களேன் சார் - எப்போ பதிவைப் போடலாம்னு ?!

   IPL மேட்ச் நேரத்திலே ஈ-காக்காய் கூட இங்கு இராதென்பதை நினைவில் கொண்டு ஒரு நேரத்தைச் சொல்லுங்க !

   Delete
  5. நாளைக்கு நீங்கள் போட போகும் உ ப பதிவில் பதில சொல்கிறேன் சார் :-)

   Delete
  6. அப்போ 15 காலை அல்லது மதியமே பதிவை இடலாமே சார். நான் IPL பார்ப்பதே இல்லை சார். ஆனால் நான் மிகச் சிறுபான்மை என்பதும் தெரியும்.

   Delete
 23. வேண்டும் சார் இதை நீங்கள் 32 பக்க டெக்ஸ் இணைப்பு போன்று தனியாக தந்து விடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஒரு பக்கத்துக்கு சுமார் 15 ராப்பர்களை வைத்தாகணும் நண்பரே - 32 பக்கங்களில் அடக்குவதெனில் !

   Delete
 24. வேணும்னு மனசு சொல்லுது. ஆனா புத்தி…நான்புத்தி சொல்றதை கேக்கறதில்லீங்க.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் தெளிவா பதில் சொல்லுங்க மகேந்திரன், இல்லை என்றால் ஓட்டு எண்ணிக்கையின் போது இது செல்லாத ஓட்டு ஆகிவிடும் :-)

   Delete
 25. அட்டைப்பட அணிவகுப்பு வேணுமா ? வேணாமா guys ?

  கண்டிப்பாக வேண்டும் ஆசிரியரே

  ReplyDelete
 26. அன்பு ஆசிரியருக்கு 🙏,
  காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 🙏,
  மறுபடியும் ஒரு பதிவு பாத்தது மகிழ்ச்சியே.

  முத்து காமிக்ஸ்ல் வெளிவந்த, அனைத்து புக் லிஸ்ட் இருப்பதால்,இந்த அட்டைப்படம் தேவையில்லை என்பது என் எண்ணம்.
  மேலும் பல வலை தளங்களிலும் இது உள்ளது.
  அந்த இடத்தை,
  ஐயா செளந்தரின், முத்துவை தொடங்கிய ஆரம்ப கால அனுபவங்களை நிரப்பலாம்.
  தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் காலத்திற்கும்.
  இது முடியவில்லை என்றால்...
  இதுவரை வராத கதை ஒன்று போடுங்கள்.
  அது உங்கள் விருப்பம்.
  மீண்டும் அடுத்த பதிவில் 🌹...

  ReplyDelete
  Replies
  1. // முத்து காமிக்ஸ்ல் வெளிவந்த, அனைத்து புக் லிஸ்ட் இருப்பதால்,இந்த அட்டைப்படம் தேவையில்லை என்பது என் எண்ணம் //

   +1 Excellent.

   Delete
  2. நிறைய ஸ்கேனிங் சுற்றிட்டு இருக்குங்க.

   Delete
 27. டியர் எடி,

  அட்டைபட தொகுப்பு 50வது இதழை விட, தனியாக ஒரு தொகுப்பாக முன்பதிவுக்கு மட்டும் வருவதே சிறப்பு... அவ்விதம் வந்தால் பக்கத்திற்கு ஒரு அட்டை, என்று ஒரு ஹார்டுபவுண்ட கலெக்‌ஷனாக வெளியிடுங்கள். 300 பதிவிற்கு என்ன விலையோ அறிவியுங்கள்.

  1. 2022 பட்ஜெட் 4000-5000 த்துக்குள் இருந்தால் தேவலம்.

  2. 50வது இதழ் 1000-1500 விலையில் இருக்கலாம்.

  3. ஸ்டீல் க்ளா, டைகர், ஒரு கார்டூன், ஒரு நவநாகரிக நாயகர் என்ற வகையில் இருக்கலாம்.

  4. அனைத்து கதைகளையும் நான் படிக்கவில்லை என்பதால், Pass

  5. டெக்ஸ் எண்ணிக்கை 12 ஐ தாண்டாத வரை மதி. மாதா மாதம் ஒன்றே சரியான அளவுகோள்.

  ReplyDelete
 28. மொத்தமாக ஒரு collector special ஆக அட்டைப்படத் தொகுப்புகளைப் பார்க்க ஆசை இருந்தாலும், இவ்வளவு பெரிய milestone புத்தகத்தில் கதையில்லாமல், அட்டைப்படங்களின் அணிவகுப்பு வராமல் இருந்தால் நன்றாக இருக்கும் சார் :) தனியாக வருவதற்கு வாய்ப்பில்லை என்பதும் புரிகிறது சார்.

  ReplyDelete
 29. அட்டைப்படம் தொகுப்பு வேண்டாம் சார்.

  பலருக்கு இந்த புத்தகங்கள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கத்தையும் . அதன் பின்விளைவாக தேவையற்ற மறுபதிப்பு கோரிக்கைகளையும் . அது சார்ந்த சச்சரவுகளையும் ஏற்படுத்தக் கூடிய அபாயம் இதில் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமால்லே !! செம பாய்ண்ட் சார் ! அவ்வப்போது எட்டிப் பார்த்து இது போல் புதுப் பார்வைக் கோணங்களைத் தந்திட நேரம் எடுத்துக் கொள்ளுங்களேன் சார் !

   Delete
  2. >>>பலருக்கு இந்த புத்தகங்கள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கத்தையும் . அதன் பின்விளைவாக தேவையற்ற மறுபதிப்பு கோரிக்கைகளையும் . அது சார்ந்த சச்சரவுகளையும் ஏற்படுத்தக் கூடிய அபாயம் இதில் இருக்கிறது.


   Ithuvum oru reason naan vendaam endru solvathrarkku....


   Delete
  3. ///பலருக்கு இந்த புத்தகங்கள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கத்தையும் . அதன் பின்விளைவாக தேவையற்ற மறுபதிப்பு கோரிக்கைகளையும் . அது சார்ந்த சச்சரவுகளையும் ஏற்படுத்தக் கூடிய அபாயம் இதில் இருக்கிறது.///

   ஏற்கானவே பல இடங்களில் நடந்துகொண்டிருக்கும் சம்பவம்தான் அது சாத்தைய்யா.! புதிதாக எந்த மாற்றமும் நேர்ந்திடப் போவதில்லை.!

   Delete
 30. சார்

  பழைய முத்துவின் அட்டைகள் படு அழகாக இருக்கும்... நான் அவற்றுக்கு பரம விசிறி..

  தனியாக paperbackல் அனைத்து அட்டைகளையும் போட்டால் அற்புதமாக இருக்கும்... ஆனால் money restraints இருப்பதால்... பிறிதொரு காலத்தில் plan பண்ணி செய்யலாம்...

  Thumbnail gallery தயவு செய்து வேண்டாம்...

  AKK

  ReplyDelete
  Replies
  1. +1111

   Thumb nail print வேண்டாம். முழு ஒரிஜினல் அளவில் தனிப் புத்தகமாக வந்தால் மிக நல்லது.

   Delete
 31. அட்டைகள் வேண்டாம்

  ReplyDelete
 32. முத்து ஆண்டுமலர் பட்ஜெட் ₹1000-1500.ok.

  ReplyDelete
 33. டெக்ஸ் மாதம் ஒன்று போதும்.. வேண்டும் என்றால் குறைத்து கொள்ளவும்.

  ReplyDelete
 34. வேணும் சார். நானெல்லாம் முத்து காமிக்ஸ் ரசிகன் எடி சார்.வாழ்க்கையிலே முதல்முதலா படிச்ச காமிக்ஸ் னா அது முத்துகாமிக்ஸ்தான்.மறக்கமுடியாத நினைவுகள்.எனக்கு வேணும் சார்..
  என்னைபோல் இருக்கும் முத்து பிரியர்களுக்கும், தற்போதைய லயன் பிரியர்களுக்கும் ஒரு மறக்க இயலாத நினைவாக இருக்க வேண்டும்.
  இனிமேல் இப்படி ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைக்குமா என்பது தெரியாது.எனவே வேண்டும் முத்து காமிக்ஸ் அட்டைபட வரிசை..

  ReplyDelete
 35. முத்து காமிக்ஸ் வரிசையை எழுத்தாக பார்ப்பது ஒரு சுகம்னா, அதை அட்டை படத்துடன் பட வரிசையாக பார்ப்பது வேற மாதிரி சுகம் சார்.. நாமெல்லாமே படக்கதை ரசிகர்கள்தானே.. வேணும் சார் ..எங்களுக்கு வேண்டும்..

  இப்படிக்கு
  முத்து காமிக்ஸ் ரசிகர் பட்டாளம்

  ReplyDelete
 36. இந்த மைல்கவ் தருணத்தில் கூட அட்டை படங்கள் அணிவகுத்து வரவில்லை என்றால் அது நிறைவை தராது! வரவில்லை என்றால் அது முழுமையாக இருக்கவே இருக்காது சார்.

  ReplyDelete
 37. Thumbnail list எனில் கண்டிப்பாக வேண்டாம் sir...

  ReplyDelete
 38. நம்கிக்கு பேக்கு..

  ReplyDelete
 39. வணக்கம் 🙏 சார்.

  முத்துவின் நாயகர்கள் முத்து 50வதுஆண்டு சிறப்பிதழ்களில் வருவதே சிறப்பு.ஆரம்ப கால நாயகர்களின் அட்டவணைகள் முத்துவின் ஆண்டு மலரில் வந்தால் அவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. யார் யாரையும் பிரிக்க வேண்டாம் இணைத்தே வருவது சிறப்பு 🙏

  ReplyDelete
 40. அட்டை படங்கள் தனியாக வந்தால் மகிழ்ச்சி கொள்வேன்.

  வேண்டும்
  வேண்டும்
  வேண்டும்

  ReplyDelete
 41. வணக்கம் சார்! வணக்கம் நண்பர்களே!!

  பிறிதொரு சந்தர்ப்பமாக இருந்தால் இதற்கு பதிலாக ஒரு கதை கேட்டிருப்பேன் சார், ஆனால் இந்த மைல்கல் தருணத்தில் இது முத்து காமிக்சின் பரிணாம வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் அமையும்... எனவே 50 ஆவது ஆண்டு மலரில் அட்டைப்பட அணிவரிசை நடக்கட்டும்! இது நாம் காட்டும் மரியாதையும் கூட...

  மற்ற வினாக்களுக்கு முந்தைய பதிவில் விடையளித்து விட்டேன்...

  நன்றிகள் சார்!

  ReplyDelete
  Replies
  1. ////பிறிதொரு சந்தர்ப்பமாக இருந்தால் இதற்கு பதிலாக ஒரு கதை கேட்டிருப்பேன் சார், ஆனால் இந்த மைல்கல் தருணத்தில் இது முத்து காமிக்சின் பரிணாம வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் அமையும்... எனவே 50 ஆவது ஆண்டு மலரில் அட்டைப்பட அணிவரிசை நடக்கட்டும்! இது நாம் காட்டும் மரியாதையும் கூட...////

   மிகச் சரியான கருத்து @Saravanakumar

   நானும் இதையே நினைத்தேன். ஆனால் உங்களைப்போல சரியான வார்த்தைகளால் நிரப்பிடத் தெரியவில்லை!

   தவிர, இத்தருணத்தை விட்டால் இந்த அட்டைப் படங்களை எல்லாம் ஒரு தொகுப்பாய் வெளியிட்டிட வேறோரு தருணம் வாய்ப்பதெப்போது?!!

   இப்ப இல்லன்னா - இனி எப்பவும் இல்ல!

   எடிட்டர் சமூகம் இதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்!

   Delete
 42. Sir -

  If publishing is not possible you can release as PDF with each cover in a single page - color - original sized scale document sir - with your Emblem and a mild water mark.

  You can mail to readers requesting for it and also subscribers - as a Diwali gift !

  ReplyDelete
 43. தனி புத்தகமாக போட்டுவிடுங்கள் முன்பதிவிற்கு என்று, உங்கள் முன் பதிவு இலக்கை எட்டினால் வெளியிடுங்கள். நவம்பர்-டிசம்பர் இரண்டு மாத காலம் அவகாசம் தரலாம்.

  ReplyDelete
  Replies
  1. +1111

   Thumb nail print வேண்டாம். முழு ஒரிஜினல் அளவில் தனிப் புத்தகமாக வந்தால் மிக நல்லது. தனியாக விலை கொடுத்து வாங்கும்படி

   Delete
 44. ///அட்டைப்பட அணிவகுப்பு வேணுமா ? வேணாமா guys ?

  வேணாமெனில் அதனிடத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்யும் வேலையை நான் பார்த்துக் கொள்கிறேன் ; so "வேணும் / வேணாம் !" என்ற பதில்களே எனக்கு மதி///

  வேணும் சார்.!

  நீங்க போடலைன்னா வேற யாராவது போட்டுட வாய்ப்பிருக்கு.! ஆகவே முந்திக்கிறது பெட்டர்.!

  ReplyDelete
  Replies
  1. KOK -

   Avaru pOttAlum adhai scan panni podradhu easy thala. He can save a few hours and publish another album. He can mail it as PDF.

   Delete
  2. ///Avaru pOttAlum adhai scan panni podradhu easy thala. He can save a few hours and publish another album. He can mail it as PDF.///

   Really a valid a point that needs to think a bit Rag ji..!

   O.k sir..! We need some other album insteed of that cover collection.!

   Delete
  3. ////பிறிதொரு சந்தர்ப்பமாக இருந்தால் இதற்கு பதிலாக ஒரு கதை கேட்டிருப்பேன் சார், ஆனால் இந்த மைல்கல் தருணத்தில் இது முத்து காமிக்சின் பரிணாம வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் அமையும்... எனவே 50 ஆவது ஆண்டு மலரில் அட்டைப்பட அணிவரிசை நடக்கட்டும்! இது நாம் காட்டும் மரியாதையும் கூட...////

   அதனால... வேணுங்க..!

   Delete
  4. ///பலருக்கு இந்த புத்தகங்கள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கத்தையும் . அதன் பின்விளைவாக தேவையற்ற மறுபதிப்பு கோரிக்கைகளையும் . அது சார்ந்த சச்சரவுகளையும் ஏற்படுத்தக் கூடிய அபாயம் இதில் இருக்கிறது.///


   அதனால... வேண்டாங்க.!

   Delete
  5. ///தவிர, இத்தருணத்தை விட்டால் இந்த அட்டைப் படங்களை எல்லாம் ஒரு தொகுப்பாய் வெளியிட்டிட வேறோரு தருணம் வாய்ப்பதெப்போது?!!

   இப்ப இல்லன்னா - இனி எப்பவும் இல்ல!///

   அதனால... வேணுமுங்க..!

   Delete
 45. ///1.2022 : ஆண்டுச் சந்தா எவ்வளவுக்குள் இருந்தால் நலமென்று நினைக்கிறீர்கள் ? (ஜம்போ சந்தா பற்றி இப்போதைக்கு இணைத்துக் கணக்கிட வேண்டாம் ; அதனை ஏப்ரல் 2022-ல் பார்த்துக் கொள்ளலாம் !)

  2.புத்தாண்டின் highlight முத்து ஆண்டுமலர் # 50 தான் என்பதில் ரகசியங்கள் லேது ! அந்த இதழின் பட்ஜெட் என்னவாக இருக்குமென்று நடைமுறை சாத்தியத்துடனான ஒரு நம்பர் ப்ளீஸ் ? ஐஞ்சாயிரம் ; பத்தாயிரமென்று இரும்புக் கவிஞர் பாணியில் இறங்கிடாது - யதார்த்ததுடன் ஒத்துப் போகும் விதமான விலை யூகம் ப்ளீஸ் ?///

  1. ₹5500 - ₹6000


  2. ₹1000

  ReplyDelete
 46. வேண்டாம் சார்....!

  ReplyDelete
  Replies
  1. வாங்க தல வாங்க தல நீங்க நம்ம கட்சி.

   Delete
  2. ஷோக்கா சொன்னிங்க தல...

   Delete
 47. ///3.முத்து ஆண்டுமலரில் நாயக - நாயகியர் என யார் இடம் பிடிப்பர் ? என்பது பற்றிய உங்களின் யூகங்கள் ப்ளீஸ் ? Again a realistic list please ?

  4.யாருக்கெல்லாம் 2022-ல் இடம் இராது ? என்று நினைக்கிறீர்கள் ?

  5.Inevitably - 'தல' சார்ந்த கேள்வியுமே : ஆண்டினில், எத்தனை 'தல' ஆல்பங்கள் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது ?///

  3. சிக்பில்
  (வேறெதுவும் யூகிக்க முடிய்வில்லை சார்.!)

  4. மும்மூர்த்திகள், ஸ்பைடர், ஆர்ச்சி, பாண்ட்..!

  5. குறைந்தது 12.. அதிகபட்சம் 24.. அதற்கு குறைந்தும் கூடாது.. மிகுந்தும் கூடாது.!

  ReplyDelete
 48. கண்ணே கொலைமானே :

  செம்ம விறுவிறுப்பான ஆக்சன் ப்ளாக்.! கொட்டாவி விட்டுக்கொண்டே.. ஒரு பத்திருபது பக்கம் படிச்சிட்டு தூங்கலாம்னு கையில் எடுத்தா.. முடிக்கிறவரைக்கும் தூக்கமே வரலை.!

  ஒரு கொள்ளை கும்பலை பின்தொடர்ந்து.. கைவிடப்பட்ட ஒரு பாழடைந்த நகருக்கு தன்னந்தனியாக வருகிறார் கிட் வில்லர்.! அங்கே யாரோ ஒரு பெண் இருப்பதான உணர்வு ஏற்படுகிறது கிட்டுக்கு.. நமக்கோ ஒரு பெண்ணே தெரிகிறாள்.!

  மறுநாள் அதே பெண்ணை தேடிக்கொண்டு.. ரெவரண்டான அவளது சகோதரன் அந்த பகுதிக்கு வருகிறார்.! தற்தெயலாய் டெக்ஸும் கிட்டும் அவருடன் பயணிக்க வேண்டி வருகிறது.! கொள்ளை கும்பலை தேடிக்கொண்டே ரெவரண்டின் தங்கையை கண்டறியவும் உதவி செய்கின்றனர்.!

  டெக்ஸ் அண்ட் கிட்.. கொள்ளை கும்பல்.. பூட்ஸ் செவ்விந்தியர்கள்.. ரெவரெண்ட்.. அந்த பாழடைந்த நகரில் தென்பட்ட பெண்.. இவை அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து செம்ம விறுவிறுப்பாக சொல்லப்பட்ட கதை.!

  இன்ட்ரஸ்டிங்கான வாசிப்புக்கு நூறு சதவீத உத்திரவாதமான கதை கண்ணே கொலைமானே.!

  ரேட்டிங் 9/10

  ReplyDelete
  Replies
  1. ///ஒரு மார்க்க எங்க வுட்டீங்க///

   அங்கேயேதான் வுட்டிருக்கேன் ஸ்டீல்.!

   விட்டுப்போன ஒரரு மார்க்.. சித்திரக்கலவைக்கு.. சில இடங்களில் (லெகுசில இடங்களில்) கொசகொசவென இருந்ததாக தோன்றியதால்.!

   Delete
 49. சார்,
  ஆண்டு மலரில் அட்டை படங்கள் அவசியம் வேண்டும்.மலரும் நினைவுகளை
  உயர்த்தி பிடிக்கும் உன்னத தருணங்கள்.

  ReplyDelete
 50. கண்ணே கொலையானே சரியா இருக்குமோ என யோசிச்சா...கண்ணே கொலையான மானே அணிகளில் வருமோ கொலைமானே என தொக்கி...கதை துவக்கமே அசத்துது...முள்பந்து உள்ளே கதைக்குள் வர...கிட் பார்த்தும் பாக்காம போக...அவங்க வந்ருவாவளோ என அழகி பயப்பட...நம்மையும் தவிக்க வைத்து கொதிக்க ஆரம்பிக்குது சூடு பிடிச்ச கதை ....வேகம்...வேகம்....வேகம்....அட்டகாசமான சண்டைக் காட்சிகள்...மழை...மின்னல்..கூட கதாபாத்திரங்கள் அனைத்தும் கலக்க பரபரக்குது கதை...முடிவு நினைச்சே பாக்க முடியல....டெக்ஸ் தொடாத கதை எல்லைகள் தான் ஏது...
  எல்லா நேரங்களிலும் புத்தி சொல்வதையே ஏற்று நடக்க வேண்டுமென்பதில்லை மார்க்...சில வேளைகளில் நம்பிக்கைகள் துளிர்ப்பது இதயத்திலிருந்து...நம்பிக்கைகளை இதயம் தான் வழிநடத்துகிறது...பகுத்தறிவு அல்ல...டாப் க்ளாஸ் வரிகள் ...கடைசி பக்கம் வரை திக் திக்...விடை அறிய...யூகிக்க இடமே தரா ட்விஸ்டுகள்...சூப்பர் சார்...

  ReplyDelete
  Replies
  1. இப்போல்லாம் உங்க பின்னூட்டங்களில் செம தெளிவு கீது ஸ்டீல் ; புரியுது ; தந்தி பாஷையைக் காணோம் ; நிறுத்தி, நிதானமாய் எழுதறீங்க !! குட்டிப் பையனின் மகிமை போலும் !!

   Delete
  2. சார்.. ஸ்டீல் பக்கத்துவீட்டு ஸ்கூல் பையன்ட்ட மொபைலைக் கொடுத்து டைப் அடிச்சிருப்பாருங்க சார்!

   Delete
 51. வேண்டாம் சார்

  1. 5000
  2. 1000
  3. ரிப்போர்டர் ஜானி, சிக்பில், தோர்கல், புதுமுகங்கள் 2 + கென்யா or ரூட் 666
  4. மும்மூர்த்திகள், ஸ்பைடர், ஆர்ச்சி, கிளாசிக் பாண்ட்
  5. 12

  ReplyDelete
 52. வேண்டாம் சார்.

  ReplyDelete
 53. சார்,

  தங்களின் கேள்விக்கு என் பதில்.

  PDF கண்டிப்பாக தேவை.
  High resolution PDF and a link to download it.

  முத்து 50 ஆண்டு மலரில் தேவை இல்லை

  ReplyDelete
 54. சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அட்டவணை ரிலீஸ் வைத்துக்கொள்வோம் சார். வாரப்பதிவை போட்டது போலவும் ஆச்சு. இரவு தொடங்கும் கொண்டாட்டம்/அலசல்க்ள், விடுமுறை நாளான ஞாயிரிலும் களைகட்டும்.

  மேலும் இறுதி ஆட்டத்தில் கால் பதித்திருப்பது சென்னை. ஒரே நாளில் இரண்டு திருவிழாக்கள் வேண்டாமே சார். இது எனக்கு தோன்றிய எண்ணம். மற்றபடி தங்களின் முடிவு எதுவாயுனும் ok

  ReplyDelete
  Replies
  1. சென்னை டீம்ல தமிழர் யாருமே விளையாடறதில்லை - எனவே CSK சப்போர்ட் பண்ணுவதே இல்லை இப்போவெல்லாம் ... KKR விளையாடினா தினேஷ் கார்த்திக் , வருண் சக்கரவர்த்திக்காக சப்போர்ட் ... டெல்லி வெளயாடினா அஸ்வின்க்காக சப்போர்ட்... சென்னை என்ற பெயர் வைத்ததால் அந்த டீமை சப்போர்ட் பண்றது வேஸ்ட்ங்க ...

   Delete
  2. "A rose by any other name would smell as sweet" - William Shakespeare.

   கிரிக்கெட் is கிரிக்கெட்.
   யார் விளையாண்டாலும் சென்னை என்ற பெயர் கொண்டதால் மக்களுக்கு ஒரு attachment உண்டு.

   It's an another entertainment for us.
   It will take few hours of people time.
   இது உங்கள் கிரிக்கெட் சார்ந்த கேள்விக்கு மட்டுமே என் பதில்.

   வியாழக்கிழமை விடுமுறை தினம்.
   14 நள்ளிரவு அல்லது 15 மதிய நேரத்தில் 2022 Book List பதிவு வந்தால் மிகவும் மதிக்கப்பட்டு பலத்த வரவேற்புக்கு உள்ளாகும்.

   Delete
  3. Individually I also like the CSK players and the way some of them play. They are great as a team and among the most consistent in the competition.

   But would not support CSK just because it is named after Chennai and lacks any local or state player.

   FYI - me born, brought up and living in Chennai. Nothing beats this city for its warmth (and heat too ;-)).

   Delete
  4. :)
   Agreed and good to know.
   Yep, Chennai is hot and humid, but it has it's own unique attraction.

   Delete
 55. 6) அட்டைப்பட அணிவகுப்பு ?
  > வேண்டும்!  பக்கத்திற்கு 12 - 16 அட்டைகள் வர வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள் சார் (லாண்ட்ஸ்கேப்பில் கூட ஓகே தான்). அட்டைகளிலேயே கதையின் தலைப்பு இருப்பதால், அதை அடியில் மீண்டும் அச்சிடத் தேவையில்லை, மெல்லிய ஃப்ரேம் / பார்டர் இருந்தாலே போதுமானது. அப்புறம், முத்து காமிக்ஸ் குறித்த வாசகர் நினைவலைகளைத் தாங்கி வரப்போகும் பக்கங்களையும் கட்டுக்குள் வைப்பது நல்லது! 

  1) 2022 : ஆண்டுச் சந்தா எவ்வளவுக்குள் ?
  > ₹3000 - இது தவிர, முத்து ஆண்டு மலர், ஜம்போ சந்தா, 70ஸ் ஸ்பெஷல், புத்தக விழா மற்றும் திடீர் ஸ்பெஷல்கள் என பட்டியல் நீளுமில்லையா?

  2) முத்து ஆண்டுமலர் # 50 இதழின் பட்ஜெட் ?
  > நாற்பதாவது ஆண்டு மலரே 456 பக்கங்களில் (NBS) வந்ததை நினைவில் கொள்ளுங்கள் சார் :) இருப்பினும், மறுபதிப்புக் கோரிக்கைகள் மற்றும் ப்ளாக் மார்க்கெட் விற்பனைகளைச் சமாளிக்கும் வகையில், நீண்ட காலத்திற்கு கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், அதை ஈடு செய்யும் விலை மற்றும் பக்க விகிதத்தை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அது சரி, ஐம்பதாவது ஆண்டு மலர் 2022-ல் வருகிறதென்றால், நாற்பதாவது ஆண்டு மலர் 2013-ல் வந்தது ஏனோ?
  http://lion-muthucomics.blogspot.com/2013/01/blog-post_11.html

  3) முத்து ஆண்டுமலரில் நாயக - நாயகியர் ?
  > வெவ்வேறு காமிக்ஸ் நிறுவனங்களின் கதைகளை ஒரே இதழில் வெளியிடுவதை அவர்கள் விரும்புவதில்லை என்று நீங்கள் கூறியதாக நினைவு! என்னைக் கேட்டால், ஐம்பதாவது ஆண்டைச் சிறப்பிக்கும் விதமாக, 8 முதல் 12 பாகங்களுக்குள் முடிவடையும் ஒரு முழுநீளக் கதை மட்டும் வெளி வந்தால் சிறப்பாக இருக்கும்! இல்லை என்றால், லயனுக்கு ஒரு தொடர் வெற்றி நாயகராக டெக்ஸ் வில்லர் இருப்பதைப் போல, முத்துவுக்கு தற்சமயம் யாரும் இல்லை என்பதால், Zagor-ஐக் களமிறக்கலாம், பருமனான கதைகளுக்கும் பஞ்சமில்லை. நமக்கு பிடித்தமான வெஸ்டர்ன் வேறு. உங்களுக்குத் தெரியாததில்லை, Epicenter காமிக்ஸில் (https://www.facebook.com/epicentercomics), crowdfunding வாயிலாக, ஜாகோராக போட்டுத் தள்ளுகிறார்கள், அட்டைப் படங்கள் அள்ளுகின்றன!

  4) யாருக்கெல்லாம் 2022-ல் இடம் இராது ?
  > விற்காமல் தேங்கிய நாயகர்களைப் பார்த்து நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்!

  5) ஆண்டினில், எத்தனை 'தல' ஆல்பங்கள் ?
  > டெக்ஸ் வில்லரைக் கேட்கிறீர்களா? மாதம் ஒன்று!

  ReplyDelete
  Replies
  1. /* அது சரி, ஐம்பதாவது ஆண்டு மலர் 2022-ல் வருகிறதென்றால், நாற்பதாவது ஆண்டு மலர் 2013-ல் வந்தது ஏனோ? */

   அது 40ம் ஆண்டு நிறைவு மலர் - இது 50ம் ஆண்டு துவக்க மலர்?


   Delete
  2. ZAGOR ஆல்ப crowdfunding-ன் முக்கால்வாசி உபயம் - இத்தாலிய விசிறிகள் கார்த்திக் ! அங்கே நம்ம 'தல'க்கு சளைக்கா ரசிகர் வட்டமுள்ளது !

   Delete
  3. எபிசெண்டர்்வெளியிட்ட ஜாகோர் எல்லாம் படிச்சிருக்கேன். நிறைய அமானுஷ்யம் அல்லது பேண்டசி களங்களா இருக்கிறது. ஒரு வேளை ஆங்கிலத்தில் வெளியிட்ட ஆல்பங்கள் அப்படியோ என்னவோ. நம்மூர்ல விலை போகுமாங்கறது கொஞ்சம் சந்தேகந்தான்.

   Delete
  4. //முத்து ஆண்டுமலர் # 50 இதழின் பட்ஜெட் ?
   > நாற்பதாவது ஆண்டு மலரே 456 பக்கங்களில் (NBS) வந்ததை நினைவில் கொள்ளுங்கள் சார்// அருமை கார்த்திக்
   //அது 40ம் ஆண்டு நிறைவு மலர் - இது 50ம் ஆண்டு துவக்க மலர்?
   // அடடா சொல்லவேல்லயே ராகவரே

   Delete
  5. /* அது சரி, ஐம்பதாவது ஆண்டு மலர் 2022-ல் வருகிறதென்றால், நாற்பதாவது ஆண்டு மலர் 2013-ல் வந்தது ஏனோ? */

   ---முத்து காமிக்ஸ் ஆரம்பிச்சது 1972ல தான் என உறுதி படுத்தினார் சார், இதே சந்தேகம் முன்பு வந்தபோது....

   2012ல தான் முத்து 40வது ஆண்டு; மலரின் ப்ளானிங், புக்கிங்,தயாரிப்பு, இடைஇடையே அந்தர்பல்டிகள் எல்லாமே 2012மத்தியில் இருந்து சில மாதங்கள் நடந்தது... ரீலீஸ் ஆனது மட்டுமே சென்னை புத்தகவிழா 2013ல...!!!

   ராக் ஜி சொன்ன மாதிரியும் வெச்சிகிடலாம்.....!!! அது நிறைவு; இது தொடக்கம்...😉

   Delete
  6. @ராகவன் & சேலம் Tex விஜயராகவன்:
   //அது 40ம் ஆண்டு நிறைவு மலர் - இது 50ம் ஆண்டு துவக்க மலர்?//
   > ஆக, 2023 ஜனவரியில் முத்து 50ம் ஆண்டு நிறைவு மலரையும் எதிர்பார்க்கலாம் என்கிறீர்கள்? :)

   @ம.ப.:
   //அமானுஷ்யம் அல்லது பேண்டசி களங்களா இருக்கிறது. நம்மூர்ல விலை போகுமாங்கறது கொஞ்சம் சந்தேகந்தான்.//
   > ஜாகோரின் பெயர் அடிபடும் போதெல்லாம், எடிட்டரும் இதே கருத்தை இங்கே சொல்லி இருக்கிறார். ப்ரீவியூ பக்கங்களைத் தவிர்த்து ஜாகோரின் ஒரு கதையைக் கூட நான் படித்ததில்லை. மேஜிக் விண்ட் சற்றே டார்க் ரகம், ஜாகோர் முதல் பார்வைக்கு அப்படித் தெரியவில்லை. தவிர, ஸ்லீவ்லெஸ் ஷர்ட்டில் டெக்ஸைப் பார்ப்பது போலவே இருப்பதால் ஜாகோர் ஸ்கோர் செய்து விடுவார் என்றொரு குருட்டு நம்பிக்கை :)

   @எடிட்டர்:
   //crowdfunding-ன் முக்கால்வாசி உபயம் - இத்தாலிய விசிறிகள்//
   > தமிழிலும் ஜாகோர் என்ற தகவல் கசிந்தால், கணிசமான இத்தாலிய ஆர்டர்களும் ரெடி! சரி சரி விடுங்கள், நான் கதைகளை படித்தே பார்க்காமல் ஓவராக மார்க்கெட்டிங் செய்து கொண்டிருக்கிறேன்! அமானுஷ்யம் என்றாலே உங்களுக்கு பீதி கிளம்புவதை புரிந்து கொள்ள முடிகிறது :D

   Delete
  7. ஆங், ₹3000 என்று சொன்னதில் விலைவாசியை மறந்து விட்டேன்! 
   > ஜனவரி - முத்து 50 மட்டும் = ₹1000 (அதிகபட்சமாக)
   > பிப்ரவரி - டிசம்பர்: 11 * 3 இதழ்கள் * ₹100 = ₹3300 (ரெகுலர் சந்தா)
   > இடையிடையே ஜம்போ சந்தா, இதர ஸ்பெஷல்கள், லயன் 37வது ஆண்டு நிறைவு மலர் மற்றும் 38வது ஆண்டு துவக்க மலர் - இவற்றை எல்லாம் போட்டுக் கொள்ளுங்கள் :)

   Delete
  8. ///ஆக, 2023 ஜனவரியில் முத்து 50ம் ஆண்டு நிறைவு மலரையும் எதிர்பார்க்கலாம் என்கிறீர்கள்? :)///

   கார்த்திக்@ ஹா...ஹா...செம செம..

   எடிட்டர் சார் MV:-ஆஹா...இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

   உங்க ஐடியாக்கு வாய்ப்பு 70% இருக்கு... ஏன்னா ஈரோடு 2022கூட சிரமம் தான்....சோ, நம்ம அடுத்த சந்திப்புனா அது சென்னை2023தான்....
   அதை சிறப்பாக கொண்டாட,

   """""M50நிறைவுவிழா ஸ்பெசல்""""

   அவசியம்&அத்தியாவசியமே!

   ---இவன்:- குண்டுபுக் எண்ணியே பொழுதுதை ஓட்டுவோர் சங்கம்.

   Delete
 56. Sir,
  My reply for last post queries.

  1.2022 : ஆண்டுச் சந்தா எவ்வளவுக்குள் இருந்தால் நலமென்று நினைக்கிறீர்கள் ?

  Rs. 4450

  2.புத்தாண்டின் highlight முத்து ஆண்டுமலர் # 50 தான் என்பதில் ரகசியங்கள் லேது ! அந்த இதழின் பட்ஜெட் என்னவாக இருக்குமென்று நடைமுறை சாத்தியத்துடனான ஒரு நம்பர் ப்ளீஸ் ?
  Rs. 1000

  3.முத்து ஆண்டுமலரில் நாயக - நாயகியர் என யார் இடம் பிடிப்பர் ? என்பது பற்றிய உங்களின் யூகங்கள் ப்ளீஸ் ? Again a realistic list please ?
  தோர்கல்,
  ரிப்போர்ட்டர் ஜானி ,
  கேப்டன் டைகர்,
  கேப்டன் பிரின்ஸ்
  சிக் பில்,
  மாடஸ்டி பிளைசி,
  ஜான் சில்வர்,
  செக்ஸ்டன் பிளேக்,

  4.யாருக்கெல்லாம் 2022-ல் இடம் இராது ? என்று நினைக்கிறீர்கள் ?
  மார்ட்டின்,
  XIII
  டைலன் டாக்

  5.Inevitably - 'தல' சார்ந்த கேள்வியுமே : ஆண்டினில், எத்தனை 'தல' ஆல்பங்கள் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது ?
  10

  ReplyDelete
 57. வேண்டாம்

  1. சாந்தா 5000
  2. முத்து 50 1000

  ReplyDelete
 58. This comment has been removed by the author.

  ReplyDelete
 59. அட்டைப்பட அணிவகுப்புகள் கண்டிப்பாக
  வேண்டும் சார்...
  அது தரும் மகிழ்ச்சியே தனி.
  இந்த ஐடியா நிச்சயமாக சூப்பர் தான் சார். இந்த ஓட்டெடுப்பு கவிழ்த்தாலும் கூட
  முடிந்தால் அட்டைகளை அதனதன் ஒரிஜினல் அளவிலேயே ஐம்பது ஐம்பது அட்டைகளாக ஒரு ஸ்பெஷல் வெளியீடாக உங்களுக்கு கட்டுப்படியாகும் விலையில் தருவீர்களானால் அட்டைப்படமில்லாமல் புத்தகம் வைத்திருக்கும் என் போன்ற வாசகர்கள் பயன்பெறுவோம். டூப்ளிகேட் கலர் xerox எடுத்து அட்டைகள் ஓட்டுவதை விட முத்து நிறுவனமே பழம்பெரும் அட்டைகளை ஒரு சாமான்ய விலையில் தருவீர்களானால் மிகுந்த பயன்பெறுவோம், சார்.

  ReplyDelete
 60. வேண்டும்
  4000
  700

  மொக்கைகள் வேண்டாம்
  யுவர் சாய்ஸ்
  மாதம் ஒன்று

  ReplyDelete
 61. எடிட்டர் சார்,

  கட்டாயம் வேண்டும்.

  ReplyDelete
 62. 1.2022 : ஆண்டுச் சந்தா எவ்வளவுக்குள் இருந்தால் நலமென்று நினைக்கிறீர்கள் ?

  5000


  2.புத்தாண்டின் highlight முத்து ஆண்டுமலர் # 50 தான் என்பதில் ரகசியங்கள் லேது ! அந்த இதழின் பட்ஜெட் என்னவாக இருக்குமென்று நடைமுறை சாத்தியத்துடனான ஒரு நம்பர் ப்ளீஸ் ?

  2000


  3.முத்து ஆண்டுமலரில் நாயக - நாயகியர் என யார் இடம் பிடிப்பர் ? என்பது பற்றிய உங்களின் யூகங்கள் ப்ளீஸ் ? Again a realistic list please ?

  NO idea

  4.யாருக்கெல்லாம் 2022-ல் இடம் இராது ? என்று நினைக்கிறீர்கள் ?
  No idea

  5.Inevitably - 'தல' சார்ந்த கேள்வியுமே : ஆண்டினில், எத்தனை 'தல' ஆல்பங்கள் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது ?

  மாதம் ஒன்று :-)

  ReplyDelete
 63. குட்டியா கையளவுல...நம்ம அட்டவணை மொத தந்தீங்களே அந்த சைசுல விட்டா போதுமே

  ReplyDelete
 64. எடிட்டர் மற்றும் காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள். நீண்ண்ண்ட... நாட்களுக்கு பிறகு, எனது தனிப்பட்ட வாழ்வில் நடந்த சில கசப்பு, ரொம்பவே கம்மியான இனிப்பு அனுபவங்களுடன், மறுபடியும் நான் இங்கே.

  ஆசிரியரின் கேள்விகளுக்கான பதில்கள் 11 மணிக்கு.

  ReplyDelete
 65. கவர் கதம்பம் தனி புக்காக வந்தால் நல்லா இருக்கும். முத்து 50 லோகவை அட்டைபடமாக்கி... எடிட்டர்கள் & அலுவலர்கள் வேலை செய்யும் நாஸ்டாலஜிக் புகைப்படங்கள் கடைசியாக. இது ஒரு collectable அந்தஸ்தை பெரும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே.. சீனியர் அவர்களின் அனுபவக்கட்டுரையோடு..பழைய புகைப்படங்கள் உடன்

   Delete
 66. ////பிறிதொரு சந்தர்ப்பமாக இருந்தால் இதற்கு பதிலாக ஒரு கதை கேட்டிருப்பேன் சார், ஆனால் இந்த மைல்கல் தருணத்தில் இது முத்து காமிக்சின் பரிணாம வளர்ச்சியை பறைசாற்றும் வகையில் அமையும்... எனவே 50 ஆவது ஆண்டு மலரில் அட்டைப்பட அணிவரிசை நடக்கட்டும்! இது நாம் காட்டும் மரியாதையும் கூட...////

  மிகச் சரியான கருத்து @Saravanakumar

  நானும் இதையே நினைத்தேன். ஆனால் உங்களைப்போல சரியான வார்த்தைகளால் நிரப்பிடத் தெரியவில்லை!

  தவிர, இத்தருணத்தை விட்டால் இந்த அட்டைப் படங்களை எல்லாம் ஒரு தொகுப்பாய் வெளியிட்டிட வேறோரு தருணம் வாய்ப்பதெப்போது?!!

  இப்ப இல்லன்னா - இனி எப்பவும் இல்ல!

  எடிட்டர் சமூகம் இதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. முத்து 50 உடன் வரலைன்னாக் கூட பரவாயில்லை. ஆகஸ்ட் ஈபுவி யில் வெளியிடலாம்.

   Delete
  2. முத்து-50 இதழுடன் வெளிவருதே சிறப்பு என்றாலும் வேறுவழி இல்லையென்றால் ஈபுவி'யிலாவது வெளியிடலாம்தான் ஷெரீப்!

   Delete
  3. முத்து 50 உடன் வரலைன்னாக் கூட பரவாயில்லை. ஆகஸ்ட் ஈபுவி யில் வெளியிடலாம்.//

   அனைவருக்கும் கிடைப்பது கடினம்...சார்

   Delete
  4. முத்து 50 விலையை கட்டுக்குள் வைக்கனும்னா வேற வழி இல்லீங்களே பழனி.

   Delete
  5. எப்படியும் ஒரு இலவச இணைப்பாக ஏதாவதுகதை தருவதாக ஆசிரியர் கூறியுள்ளாரே...ஏதோ ஒரு கதை வருவதற்க்கு இது ஒரு நினைவுப்புத்தகமாக இருக்கட்டுமே நண்பரே... இதைவிட ஒரு சிறந்த தருணம் வேறு இல்லை நண்பரே

   Delete
  6. அருமை நண்பர்களே...சார்...உங்க கதை வரிகளிலிருந்து....
   மனசு சொல்றத கேளுங்க....பகுத்தறிவ தாண்டிய ஆச்சரியங்கள் நிறைய...

   எத்தனையோ முறை விதிமுறைகளை மீறி சாதிச்சீங்களோ இல்ல சாதிக்கலயோ...
   ஆனா நிச்சயமா சந்தோசத்தை தந்த முயற்ச்சிகள் ஏராளம்...
   அது போல இது மேலயும் பெட் கட்டுவோம்...
   சிறப்பா வரட்டுமே

   Delete
  7. சிறப்பா வரட்டுமே//

   இது மட்டும் தான் வேண்டும்

   Delete
  8. //இதைவிட ஒரு சிறந்த தருணம்//+100

   Delete
 67. வேண்டும்
  வேண்டும்
  வேண்டும்

  அனைத்துப்புத்தகங்களும் இல்லாவிட்டாலும் அட்டைப்படத்தையாவது வைத்துக்கொள்கிறோம் சார்...ப்ரேம்கலின் சைச குறைத்து படங்களை சற்று பெரிதாக போட்டால் நல்லாருக்கு சார்..

  இலவச இணைப்பாக ஒரு கதை அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் இதை இப்போவிட்டா எப்பவும் செய்தால் அவ்வளவு சிறப்பா இருக்காது சார்...ப்ளீஸ் வேண்டும் வேண்டும் வேண்டும்

  ReplyDelete
 68. Replies
  1. ஈரோடு புத்தகத் திருவிழா நண்பரே..

   Delete
 69. நினைவலைகளை கொண்டு வருவதை காட்டிலும், முத்து-50 ல் வாசகர்களின் புகைப்படங்கள் வருவதே சிறப்பாய் இருக்கும். அவரவருக்கு அவரவர் புகைபடம் கொண்ட முத்து-50 காமிக்ஸ் இருக்கும்.

  ReplyDelete
 70. முத்து காமிக்ஸ் அட்டை படங்களை பாக்கெட் சைசில் 400+ பக்கங்களுடன் விலையுடன் வெளியிட முடியுமா சார். இது இலவசம் இல்லாமல் வரட்டும் சார். பட்ஜெட் ₹ 200/-.

  ReplyDelete
 71. அட்டைப்பட அணிவகுப்பு வேணுமா ? வேணாமா guys ?

  வேணும்.


  1.2022 : ஆண்டுச் சந்தா எவ்வளவுக்குள் இருந்தால் நலமென்று நினைக்கிறீர்கள் ?

  எனது அனுமானம்: ரூ.4600 இருந்து ரூ.5100

  2.புத்தாண்டின் highlight முத்து ஆண்டுமலர் # 50 தான் என்பதில் ரகசியங்கள் லேது ! அந்த இதழின் பட்ஜெட் என்னவாக இருக்குமென்று நடைமுறை சாத்தியத்துடனான ஒரு நம்பர் ப்ளீஸ் ?

  ரூ.900 - ரூ.1100

  3.முத்து ஆண்டுமலரில் நாயக - நாயகியர் என யார் இடம் பிடிப்பர் ? என்பது பற்றிய உங்களின் யூகங்கள் ப்ளீஸ் ? Again a realistic list please ?

  ஒ.நொ.ஒ.தோ மட்டும் கன்ஃபார்ம் எனத் தெரிகிறது. மற்றபடி நோ ஐடியா.

  4.யாருக்கெல்லாம் 2022-ல் இடம் இராது ? என்று நினைக்கிறீர்கள் ?

  விற்பனையில் சொதப்பியவர்கள் மற்றும் ஸ்டாக்கில் தேங்கியவர்கள் என நினைக்கிறேன்

  5.Inevitably - 'தல' சார்ந்த கேள்வியுமே : ஆண்டினில், எத்தனை 'தல' ஆல்பங்கள் இருக்க வேண்டுமென்று உங்களுக்குத் தோன்றுகிறது ?

  மாதம் ஒன்று மற்றும் ஸ்பெஷல் குண்டு இதழ்கள் குறைந்தது 3 இருந்தால் சூப்பர்தான்.

  ReplyDelete
 72. 1. 3000
  2. 750 to 1000
  3. யார் அந்த மாயாவி வண்ணத்தில் இருக்கலாம்! அப்புறம்...?
  4. நிச்சயம் டயபாலிக், லாரன்ஸ் டேவிட், ஜானி நீரோ. மீதி உங்கள் குடோனை விட்டு போகமாட்டேன்னு வருடக்கணக்கில் அடம் பிடித்துக் கொண்டிருந்தவர்களை வரிசைப்படுத்தி நீங்கள்தான் சொல்லவேண்டும்.
  5. மாதம் ஒன்று கறுப்பு வெள்ளையில் கண்டிப்பாக வேண்டும்.
  கூடவே குண்டு குண்டு ஸ்பெஷல்கள் வண்ணத்தில்.
  ( சந்தா தொகை 3000் மாம்!
  ஆனா ஆசையப்பாரு ன்னு உங்களோட மைண்ட்வாய்ஸ் கேட்கிறது எடிட்டர் சார். ஆசையிருக்கு தாசில் செய்ய. அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க ன்னு சொல்வார்கள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்!)

  ReplyDelete
 73. மேலே உள்ள அட்டைபடங்களை பார்க்கையில் அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே...!ன்னு பாடனும்போல இருக்குதே. ஆசையை வேறு கிளப்பிவிட்டு விட்டீர்கள். வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

  ReplyDelete