நண்பர்களே,
வணக்கம். அனுப்பியாச்சூ ; அக்டோபர் புக்ஸ் தாங்கிய உங்களின் டப்பிக்களைப் பத்திரமாய் மதியம் ஒன்றரைக்கெல்லாமே கூரியரில் சேர்ப்பித்தாச்சு ! Hopefully நாளைய பொழுதே பட்டுவாடாக்கள் பரவலாய் நிகழ்ந்திட வேண்டும் !! மூன்றே புக்ஸ் கொண்ட இம்மாதத்தினில் மார்டினின் கடைசி நிமிட ரிவர்ஸ் கியரின் புண்ணியத்தால் ஒரு கனமான வாசிப்புக் களம் குறைந்தது போல் முதல்பார்வைக்குத் தென்படலாம் தான் ; ஆனால் அந்த ஸ்லாட்டினை இட்டு நிரப்ப வந்திருக்கும் தாத்தாக்கள் ஏப்பைசாப்பைகள் அல்ல என்பதே எனது அபிப்பிராயம் !
ஏற்கனவே இந்தப் பெருசுகள் பட்டாளத்தைப் பற்றிய பில்டப்பெல்லாம் ஆச்சு தான் ; ஏற்கனவே செண்டா மேளமெல்லாம் முடிந்தமட்டும் அடிச்சாச்சு தான் ! But still - பொழுது விடிந்தால் இந்த கி.நா. உங்கள் கைகளில் எனும் போது, பிட்டுக்களை இன்னும் ஒண்ணு, ரெண்டு சேர்த்துப் போட்டு வைப்பதில் தப்பில்லை என்றே படுகிறது !! So அதன் ஒரு அங்கமாய் - இது யாருக்கான வாசிப்பு அல்ல என்பதைப் பற்றி தெளிவாய்க் கோடிட்டு விடுகிறேனே :
1. நமது இதழ்களை ரெகுலராக வாசிக்காது ; இங்கே ரெகுலராய் அரங்கேறி வரும் பரீட்சார்த்தங்களை தெரிந்திராது - casual ஆக வாசிக்க முனைவோரா நீங்கள் ? சார் - IPL பார்க்கலாமே ? இல்லாங்காட்டி பெரிய முதலாளியாச்சும் ? இந்த ஆல்பத்துக்கு ஒரு skip தந்திடலாமே ?
2. ஒரு சுவாரஸ்ய துவக்கம் ; நல்ல கதையோட்டம் ; க்ளைமாக்ஸ் ; நேர்கோட்டுக் கதைகள் ; ஆக்ஷன் - என்று பொம்ம பொஸ்தவங்கள் பயணிக்க வேண்டுமென்பதே உங்கள் எதிர்பார்ப்பா ? Sorry சார், ஆனால் இது வேணாமே உங்களுக்கு ? இங்கே நீங்கள் பார்த்திடவுள்ளது கதையினை அல்ல - வாழ்க்கையினை ! இங்கே எதிர்பாரா தருணங்களில், எதிர்பாரா நபர்கள் சோஷியலிசம் பேசுவார்கள் ; பூமியின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிய பகடிகள் இருக்கும் ! So "நான் கேட்டேனா ? இதெல்லாம் நான் கேட்டேனா ? என்ற கேள்வி கேட்டு உங்களையே வருத்திக் கொள்ள வாய்ப்பு தருவானேன் சகோ ?!
3. மொழிபெயர்ப்பினில் சாத்வீகம் ; பழகிய பாணிகள் ; எக்ஸ்டரா நம்பர்கள் போடாமை ; வரம்புகள் மீறாமை - இவையெல்லாம் எழுத்து நடை சார்ந்த உங்களின் எதிர்பார்ப்புகளா ? தப்பா நினைச்சுக்க வேணாமே சார் - இது நிச்சயமாய் உங்களுக்கு நெருடப் போகும் சமாச்சாரமே ?! Becos இது வரையிலுமான சில எழுதப்படா மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளை 'சும்மா போவியா ?!!' என்று வழியனுப்பியபடிக்கே - 'கட்டாணி & புட்டாணி' நடைகளுக்கு சரளமாய் இடம் தந்துள்ளேன் ! So பாதி வாசிப்பின் போதே என்னை துடைப்பங்களால் ஒற்றியெடுக்க நிச்சயமாய் உங்களுக்குள் ஆர்வங்கள் அலையடிக்காது போகாது ! எதுக்கு சார் வீணாய் சிரமம் ?
4. க்ளாஸிக் பாணிகளை மறுபதிப்பிடக் கோரி, அவற்றிற்கு நான் காது கொடுக்காமல் இருக்கும் 'காண்டில்' உள்ளோரா நீங்கள் ? அச்சச்சோ - நீங்க கொஞ்சமே கொஞ்சமாய்ப் பொறுத்துக்கோங்க ப்ரோ ; எப்புடியாச்சும் உருண்டு, புரண்டாச்சும் உங்கள் ஆராதனைக்குரிய நாயகர்களை ஏதாச்சுமொரு ரூட்டில், கண்ணில் காட்ட முயற்சித்துப் பார்க்கிறேன் ! தப்பித் தவறி, இந்தத் தாத்தாக்களை புரட்டிப்புடாதீங்க - அப்புறம் நீங்கள் கலாமிட்டி ஜான்களாகிட வாய்ப்புகள் பிரகாசமாகிப் போகும் !!
5. பொதுவாகவே ஒரு கையில் அம்மிக்கல்லும், இன்னொன்றில் பூரிக்கட்டையும் ஏந்தியபடி - "முழியான்கண்ணன் எப்போ வாய்ப்புத் தருவான் ? எப்போ நடு மண்டையில் நச்'ன்னு போடலாமென ?" காத்திருக்கும் டீமாங்க சார் நீங்க ? நமக்கு இன்னொரு வாய்ப்பு கிட்டாமலா போயிடும் - அப்போ சேர்த்து வைச்சு குமுறிக்கிடலாமில்லீங்களா ? தாத்தாக்கள்பாட்டுக்கு ஒரு ஓரமா குப்பை கொட்டிட்டுப் போயிடட்டுமே ?
6. "நான் சொல்லும் பொதுவான ஆலோசனைகளுக்கு காது கொடுக்குறதுக்கு உனக்கு தீர்றதில்லே ; இந்த விஷப் பரீட்சைல்லாம் வாணாம் ; கெட்டு, அழிஞ்சு.குட்டிச் சுவராகி, நாசமா போக வழி தேடுறே !!" என்ற விசனங்களை உள்ளுக்குள்ளோ, வெளியிலோ நெடு நாளாய் சுமந்திடும் நண்பரா நீங்கள் ? தேவையின்றி உங்கள் பிரஷரை ஏற்றிய புண்ணியம் தான் இங்கே பலனாகிடும் !! வேணாமே சார் - ப்ளீஸ் !
The bottomline is that - இது கி.நா.தடம் தான் ; "ரசனைகளில் முதிர்ந்தோருக்கு" என்ற tag சுமந்தே வந்திடுகிறது தான் ! ஆனாலுமே படித்த பின்னே உங்களின் மத்தியில் இந்த ஆல்பம் செம mixed ரியாக்ஷன்களை உருவாக்கிடாது போனால் தான் நான் ஆச்சர்யம் கொள்வேன் ! உங்களை நான் எச்சரிக்கவில்லை என்று மட்டும் சொல்லி விடாதீர்கள் - you have been well informed !! ஆகையால் let the game begin !!
And கிளம்பும் முன்னே ஒரு வேண்டுகோள் ப்ளீஸ் : இம்மாதம் தாத்தாஸ் & க்ளிப்டன் ஆல்பங்களை உங்கள் வாசிப்பினில் & அலசல்களில் முதல்வர்களாக்கிடுங்களேன் ?!
And another request too : "இது இன்ன மேரியான விஷப் பரீட்சைன்னு தெரிஞ்சுமே லிஸ்டில் சேர்க்க உன்க்கு இன்னா லொள்ளு மேன் ? இதெல்லாம் எதுக்கு ?????" என்ற கேள்வி உங்களுக்குத் தோணும் பட்சத்தில் - hold on to it for awhile ப்ளீஸ் ! நிச்சயம் பேசுவோம் அது பற்றி - இதழ் உங்கள் மத்தியினில் புழங்கியான பின்பாய் !
ஆன்லைன் லிஸ்டிங்ஸ் போட்டாச்சு :
https://lioncomics.in/product/october-pack-2021/
https://lion-muthucomics.com/latest-releases/871-october-pack-2021.html
Bye all !! See you around !!
ஹை தாத்தா
ReplyDeleteதாத்தாவும் நானே ; (சாத்து வாங்கவுள்ள) தாதாவும் நானே !!
ReplyDelete1000% உண்மை
Deleteவணக்கம்.
ReplyDeleteமுதன் முறை பத்துக்குள்ளே!!!☺☺
ReplyDeleteயாராவது இருக்கிறார்களா
ReplyDeleteவந்தாச்சி...
Deleteநானும் வந்துட்டேன்
Deleteஉள்ளேன் ஐயா.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteவணக்கம்
ReplyDeleteநமஸ்காரம் அந்திரிக்கு
ReplyDeleteஎப்ப
ReplyDeleteதித்திக்காத தீபாவளி...
Deleteதாத்தா...வாங்கித்தா...
கொரில்லா சாம்ராஜ்யம்.வருஷம் ஞாபகமில்லை.தீபாவளிக்கு கலர்ல ரிலீஸ்.
புது சட்ட...(அப்ப பெர்லின் சட்ட ஃபேமஸ்)
புது டௌசர்...
புது காமிக்ஸ்...க்கும்...கலக்கல சந்துரூ...
முடியல.
வாங்க முடியல. வெல ஜாஸ்தி...செந்தூராங்கட அண்ணாச்சி போறப்ப வாரப்பல்லாம் வாங்கலியா தம்பீன்னு உசுப்பேத்தீட்டே இருப்பாரூ.
ஒருநாள் எங்க தாத்தா பென்ஷன் பணம் வாங்குன கையோட பீடி வாங்கீட்டு வரச் சொன்னாரூ.அந்த ஈஸ்ட்மென் கலரூ பத்து ரூவா நோட்டூ என்ட்ட குடுத்தாரூ...பல்லடம் குயில் பீடி ஒரு கட்டு வாங்கீட்டு வரணும்.பாட்டிக்கு வெத்தலை கொட்டை பாக்கு மாதிரி - தாத்தாவுக்கு பீடி மூக்குப் பொடி.ரெண்டு பேருக்கும் வாங்கீட்டு வந்து குடுத்துட்டு வெளயாட போய்ட்டேன்.
இதுல முக்கியமான விஷயம் மீதி பணம் டௌசர்லயே இருந்தது.தாத்தா மறந்துட்டாரூ கேக்கல.நானுமே அத மறந்துட்டேன்.
மைக்கா நாளு பள்ளிகூடத்துல டௌசர்ல கைய விட்டா ஒம்பது ரூவாயும் மிச்ச காசும் தட்டுப்பட்டுச்சு.
மனசுல ஒரே குறுகுறுப்பு.தாத்தா கேக்கல தான.அமுக்கீட வேண்டியது தான்னு முடிவு பண்ணீட்டே
ன்.ஆனா மனசுல பயம்.மூணு நாளா அப்டியே கோழிமுட்ட அட காக்குற மாதிரி எடுக்குறது பாக்குறதுன்னே போச்சி...
நாலா நாளூ நேரா போயி கொரில்லாவ வாங்கீட்டேன்.கொரில்லாவுக்கு என்ன சாம்ராஜ்யம். நாம தா காமிக்ஸ் சாம்ராஜ்யத்துக்கே அதிபதிங்குற மதர்ப்புல திரிஞ்சேன்.
மாயாவி கலர்ல.அப்ப அது அதகளம்.புளகாங்கிதம்ன்னு சொல்லலாம்.படிக்காம அப்டியே வச்சிட்ருந்தேன்.மனசுக்குள்ள தாத்தா பணத்த கேட்ருவாரோன்னு பரிதவிப்பு இருந்துட்டே இருந்திச்சி அதனால படிக்கவே இல்லை.
மும்மூர்த்திகள் காலம் லாம் அனுபவிச்ச எங்களுக்குத் தான் தெரியும்.அடிச்சு சொல்வேன்.திரும்ப கெடைக்கவ கெடைக்காது.இப்ப ஐயாயிரம் சொச்சம் வருஷத்துக்கு கட்றோம்.ஆனா அந்த துடிப்புப - அந்த படபடப்பு - அந்த ஈர்ப்பு - கோடீ ரூவா கொடுத்தாலும் கெடைக்காது.மிச்சத்த கேளுங்க.
அப்ப எங்களுக்கு பாடஞ் சொல்லி குடுத்த வாத்தியாருங்கள்லாம் பொய் சொல்லக்கூடாதுன்னு தா மொதல்ல சொல்லிக்குடுத்துருக்காங்களா.இந்த சின்ன மனசாட்சி முழிச்சிக்கிடுச்சி. நேரா அண்ணாச்சிட்ட போயீ நின்னேன்.வியாபார மும்முரத்துல இருந்தாரூ.ஒரு மணி நேரத்துக்கும் மேல ஆயிடிச்சு.கடைசியா தைரியமா அவர்ட்ட புக் வேணாம்ணே.அப்பறமா வாங்கிக்கிறேன்."பணங் குடுத்திடுங்க திரும்ப" என்றேன்.மொதல்ல மாட்டேன்னாரூ.அப்பறமா நான் நின்னுட்டே இருக்குறத பாத்துட்டு "ஏன்" னாரு.
இருக்கவே இருக்குல்ல தீபாவளீக் காரணம்.பட்டாசு வாங்குனதுக்கு காயாம்பு கடைக்கி மொதல்ல காசு குடுக்கணும்.அதனால இத ஒரு மாசங் கழிச்சி வாங்கீடுவேன்னு வீர வசனம் பேசுனேன்.சரி இனிமே திருப்பி தந்தா வாங்க மாட்டேன்னு சொல்லிகிட்டே காசு திருப்பி தந்தாரூ...
அந்த முகவரூ அருப்புக்கோட்டை செந்தூரான் கடை அண்ணாச்சி இன்னிக்கும் முகவரா தொடர்கிறார்.
மறக்க முடியாத மனிதர்.
எல்லா காசையும் தாத்தாட்ட திருப்பி குடுத்து நல்ல பேரூ வாங்குனது தனிக்கதை. செம்பட்டை யங் கடைல நைட் பால் சாப்டப் போறப்ப தாத்தாவ நச்சரிச்சி அந்த கொரில்லாவ கைப்பத்துனது தனிக்கதை.
அப்பறமா மனசார அதப் படிச்சது தனிக்கதை...
இன்னும் ஒரு மாசத்துல தீபாவளி வரப் போகுது.காமிக்ஸ் தீபாவளி மலரூம் கலர்ல வரப் போகுது.அதே செந்தூரங்கடைய்ல தொங்க விடத்தான் போறாரூ.
ஆனா குயில் பீடி வாங்கீட்டு வரச் சொல்ல தாத்தா இல்ல...
காலங்களின் மனநிலை மாற்றம் மட்டுமே மிச்சம்.அந்த தொலைந்த சந்தோஷங்கள் எங்கே என்ற கனக்கின்ற மனத்தோடு...
J
சூப்பர்யா ஜனா.
Deleteநாங்களூந்தா கட்டாணி புட்டாணி பாணிய்ல வெளுத்து வாங்கீட மாட்டோம்...
Deleteஅருமை J ji! பக்கத்திலே உட்கார்ந்து கதை சொல்வது போலவே ஒரு எழுத்து நடை!! செம்ம!!
Deleteசனிக்கிழமை விருதுநகர் போனாலும் போவேன். முடிந்தால் இந்த புத்தக கடைக்கு ஒரு விசிட் அடிக்கப்பார்க்கிறேன் :-)
Deleteபழசெல்லாம் வச்சிருப்பாரூ...கேட்டுப்பாருங்க பரணி...
Deleteஅவரொரூ காமிக்ஸ் தங்க சுரங்கம்
11
ReplyDelete//மொழிபெயர்ப்பினில் சாத்வீகம் ; பழகிய பாணிகள் ; எக்ஸ்டரா நம்பர்கள் போடாமை ; வரம்புகள் மீறாமை - இவையெல்லாம் எழுத்து நடை சார்ந்த உங்களின் எதிர்பார்ப்புகளா ? தப்பா நினைச்சுக்க வேணாமே சார் - இது நிச்சயமாய் உங்களுக்கு நெருடப் போகும் சமாச்சாரமே ?! Becos இது வரையிலுமான சில எழுதப்படா மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளை 'சும்மா போவியா ?!!' என்று வழியனுப்பியபடிக்கே - 'கட்டாணி & புட்டாணி' நடைகளுக்கு சரளமாய் இடம் தந்துள்ளேன் ! So பாதி வாசிப்பின் போதே என்னை துடைப்பங்களால் ஒற்றியெடுக்க நிச்சயமாய் உங்களுக்குள் ஆர்வங்கள் அலையடிக்காது போகாது ! எதுக்கு சார் வீணாய் சிரமம் ?//
ReplyDeleteஅட்றா சக்க!! அட்றா சக்க!!
மொழி பெயர்ப்பு கோட்பாடுகள்???
ஆருங்க சார் கேட்டா அதெல்லாம்?
நீங்க எழுதியிருக்கறத படிச்சாவே ஜிவ்வுன்னு ஆவது...
கரை புரண்டு ஓடும் ஆறு தனக்குன்னு ஒரு பாதையை ஏற்படுத்திக்குறதும் அப்பப்ப நடக்குறதுதானே..
Off the beaten path - ங்குறது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்...
நாளைக்காக ஆவலோட வெயிட்டிங்..
மீ டூ செனா அனா ஜி!
Deleteடெக்ஸ் குத்து மாதிரி ஒரு கதை வருதுனா குஷியோ குஷி!
///Off the beaten path - ங்குறது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்...
Deleteநாளைக்காக ஆவலோட வெயிட்டிங்..///
நானும் நானும் நானும்!!
கதை அட்டகாசமான கதை. போன பதிவுல மொழிபெயர்ப்பு சேலஞ்சிங்னு சொன்னதுக்கான காரணம் அடல்ட் வசனங்கள். ஒரு குறிப்பிட்ட வயது தாண்டிய பின் ஆண்களுக்கு மத்தியில் சர்வ சாதாரணமாக பேசும் விதம் இருக்கும். அதை எடிட்டர்எப்படி பெயர்த்திருப்பாருன்னு பாக்க புத்தகம்அறிவித்த தினத்திலிருந்தே ஆவலோடு வெயிட்டிங். காமெடிக்கு நிறய ஸ்கோப் உள்ளதால் சரவெடியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
Deleteடெட்உட் டிக்கெல்லாம் பார்த்தான பின்னே , இங்கே எனக்குப் பெருசாய் மொக்கை போடலை சார் !Anyways நாளைக்கே தெரிஞ்சிடுமே வண்டவாளம் !
Deleteதாத்தா குட்டி, கிட்டியெல்லாம் இல்லையான்னு வசனம் பேசும் போதே தெரிந்து விட்டது, எடிட்டர் முட்டு சந்திற்கு முட்டுக் கொடுக்கத் தயாராயிட்டாருன்னு.
Delete///எடிட்டர் முட்டு சந்திற்கு முட்டுக் கொடுக்கத் தயாராயிட்டாருன்னு.///
Deleteஇப்போல்லாம் முக்கால்வாசி நேரம் முட்டுச்சந்துலதான் குடியிருக்காராம்! ரொம்பப் பிடிச்சிருக்காம்! வீட்டுக்கு வந்தாக்கூட கொல்லைப்புறத்துல முட்டுச் சந்துமாதிரியே போட்டிருக்கும் செட்'டில் தான் ரெஸ்ட் எடுக்கறார்னு ஊருக்குள்ள பேசிக்கிடறாய்ங்க!
சரி, மீதக் கால்வாசி நேரம்?!! வேறென்ன.. மூ.சந்துதான்!
// கொல்லைப்புறத்துல முட்டுச் சந்துமாதிரியே போட்டிருக்கும் செட்'டில் தான் //
Deleteஅதில் ஏசி வசதி எல்லாம் கூட செய்து இருக்கறாங்களாம் :-)
++++11111
Deleteஇந்த மாத புத்தகங்கள் மூன்றும் ஒவ்வொரு வகையில் எனக்கு ஆர்வத்தைக் கிளம்பி உள்ளது. வாசிப்பில் முதல் இரண்டு இடங்கள் தாத்தாவுக்கு அதன் பிறகே டெக்ஸ் தாதாவுக்கு :-)
ReplyDeleteடெக்சும் தாத்தா தான் பரணி
Deleteமகேந்திரன் அப்படித்தான் எழுத நினைத்தேன் :-) பதிவவின் தலைப்புக்கு ஏற்றமாதிரி பின்னூட்டம் இருக்கட்டும் என மாற்றி எழுதிவிட்டேன் :-)
DeleteS70 தேதி நீட்டிப்பு உண்டா ?1
ReplyDeleteஇல்லை .அக்டோபர் 14 கண்டிப்பாகக் கடைசி நாளா சார் ?
கொஞ்சம் தெரிவிக்க வேண்டுகின்றேன்.
அக்டோபர் 15 க்கு ரெகுலர் அட்டவணை லிஸ்ட ஆகிடும் சார் ! அதனால் தான் அக்டோபர் 14 என்று சொன்னேன். உங்களுக்கு கூடுதலாய் அவகாசம் தேவைப்படுமெனில் பார்த்துக் கொள்ளலாம் சார் !
Deleteநாளைக்கு புக்கு கெடைச்சா தாத்தாக்களுக்கே முதல் இடம் சார்!
ReplyDeleteதாத்தாக்களின் தரிசனம் கிட்டிட - எனக்கு
ReplyDeleteஆத்தாக்களின் கரிசனம் கிடைத்திட வேண்டும்!
கூழுத்தாம புக்கு கிடைக்கனுங்கற ஆசைக்கு பாலூத்து ஆத்தா…இ. சி. கி. க்கு உம்பேரை சொல்லி நாலு மொட்டையடிக்கிறேன்.
Deleteஆத்தா நீ பணிஷ்மென்ட் கொடுத்து நாடு கடத்தப்பட்டவரின் வேண்டுகோளுக்கெல்லாம் செவி சாய்ச்சு டயத்தை வேஸ்ட் பண்ணாதே ஆத்தா! போய் தூங்கு.. விடிஞ்சதுமே ஏகப்பட்ட டப்பிகளை நீ டெலிவரி பண்ண வேண்டியிருக்கோல்லியோ?!!
Deleteஆத்தா வரும் போது பாரின் சரக்கோடு வரேன். வேல்ஸ் இளவரசரின் அண்ணன் ஈரோடு கிழவரசருக்கு புக்கு லேட்டாக் கிடைக்க ஆப்பு வையு ஆத்தா…
Deleteவழிமொழிகிறேன்...
Deleteமத்தவங்களின் ஆர்வத்தை புரிஞ்சு,நீங்க போடுற ரத்த படலத்தையும் குறையும், கேலியும் பண்றானுக கிறுக்கனுக. இதுல வேடிக்க என்னானா.... அதுல சிலபேரு லயன் ஏஜெண்ட்கள்..
ReplyDeleteதடித்த வார்த்தைகள் வேணாமே - ப்ளீஸ் ?
Deleteவிமர்சனங்களோ, பகடிகளோ எனக்குப் புதுசா - என்ன ? அதுபாட்டுக்கு ஒரு பக்கம் ; நான்பாட்டுக்கு இன்னொரு பக்கம் !
34
ReplyDeleteசெப்டுவஜெனேரியன்களை சந்திப்பதற்காக, இங்கொரு குவாட்ராஜெனேரியன் ஆவலுடன் வெயிட்டிங்..!
ReplyDeleteஇங்கே ஒரு வைஸ்னேரிய இளவரசரும் வெயிட்டிங்!!
Deleteநல்ல வேளை Teenager ன்னு சொல்லாமல் விட்டீங்களே...!?
Deleteதப்பா நினைச்சுக்காதீங்க். சார்லஸ் னு இங்கிலாந்துல ஒரு இளவரசர் இருக்காரு. அவரை விட இவரு 2 மாசம் தான
Deleteமூத்தவரு
மகேந்திரன் @ செம கலாய் :-)
Deleteஆஹா...நாளை புடிக்கிறோம்...மறுநா படிக்கிறோம்
ReplyDeleteசாரி இன்னைக்கு
ReplyDeleteதாத்தா தாத்தா தை..!
ReplyDeleteதாத்தா புக்குக்கு ஹை..!
Deleteஆமா தலீவரே..!
Deleteபாருங்களேன் - சின்னதாய் ஒரு ஒற்றுமையை!!
ReplyDeleteநாளை (அதாவது இன்னிக்கு) தாத்தாக்கள் ரகளை பண்ணயிருக்கும் ஒரு காமிக்ஸ் படைப்பு வெளியாக இருக்கும் அதே தினத்தில், நிறைய தாத்தாக்களும் பாட்டிகளும் நடித்து அசத்தியிருக்கும் 'அப்பாத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க'ன்னு ஒரு தமிழ்படமும் வெளியாகப்போகுது! (SonyLIV - live streaming)
இது தாத்தாக்களின் வாரம் போலிருக்கே!!
நீங்களும் நடிச்சிருக்கிங்களா.?
Deleteஇல்லை. இந்த படத்தோட சீகவெல் “கொள்ளுத்தாத்தாவை குப்புறப் போட்டு கும்மிட்டாங்க” ல வராரு.
Deleteதாத்தாக்கள் எல்லோரும் பேசிட்டு இருக்காங்க போல...நாம தாண்டி போயிருவோம்...!
Deleteஇந்த பந்தாக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை. குச்சியில்லாம உங்களால நடக்கவே முடியலைன்னு கேள்விப்பட்டேன். இதுல தாண்டிப் போறீங்களா? தவழ்நது வேணா போகலாம்
Deleteமகேந்திரன் :-) lol
Deleteஉண்மை தான்...குழந்தைகள் தவழ்ந்து தானே செல்ல முடியும்...:-)
Deleteஅட செம பதில் தலைவரே :-)
Deleteகுழந்தைகள் மட்டும் அல்ல தல. உங்களை போன்ற தாத்தாக்களும்.
Deleteதலீவரே... என்ன தலீவரே இது - உங்களை இந்த ஓட்டு ஓட்டிக்கிட்டிருக்காய்ங்க?!! வர வர பயமே இல்லாமப் போச்சுதே?!!
Deleteநீங்க மறுபடியும் பழைய பன்னீர்செல்வமா மாறணும் தலீவரே! அப்பத்தான் இவங்கள்லாம் சரிப்படுவாய்ங்க!
///நீங்க மறுபடியும் பழைய பன்னீர்செல்வமா மாறணும் தலீவரே! அப்பத்தான் இவங்கள்லாம் சரிப்படுவாய்ங்க!///
Deleteஅட போங்க பாசு..
புது பன்னீர் செல்வத்தை பயங்கரமா ஓட்டுறோம்னா..
பழைய பன்னீர் செல்வத்தை படு பயங்கரமா ஓட்டுவோம்.!
விடுங்க செயலரே...
Deleteபதுங்கு குழிக்குள்ள தூங்கிட்டு இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காங்க..ஆனா நா அங்கே பதுங்கி காத்துட்டு இருக்கேன்னு சமயம் வரும் பொழுது தெரிந்து கொள்வார்கள்...
Deleteபுது பன்னீர் செல்வத்தை பயங்கரமா ஓட்டுறோம்னா..
பழைய பன்னீர் செல்வத்தை படு பயங்கரமா ஓட்டுவோம்.!
#####
ஓட்டுபவர்களை ஓட வைக்கும் காலம் வரும் பொறுத்தருள்க ஆர்டின் அங்கிள்..!
// புது பன்னீர் செல்வத்தை பயங்கரமா ஓட்டுறோம்னா..
Deleteபழைய பன்னீர் செல்வத்தை படு பயங்கரமா ஓட்டுவோம்.! //
:-) :-)
தலீவரே..
Deleteஉங்க பதுங்கு குழி சாகசங்களை கேட்கும்போது..
சமீபத்துல வெளியான டிக்கிலோனா படத்துல வரும் காட்சிதான் நினைவுக்கு வருது.!
அதுல.. லொல்லுசபா மாறன் உங்களைமாதிரியேதான்.! உங்களுக்கு பதுங்கு குழின்னா.. அவருக்கு சுரங்கம்...
அவர் அடிக்கடி பேசுற டயலாக்கும் அப்படியே நீங்க பேசுறமாதிரியே இருக்கும்...! 😂😂😂😂
// பதுங்கு குழிக்குள்ள தூங்கிட்டு இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காங்க.. //
Deleteச்சே ச்சே! அப்படியெல்லாம் கிடையாது தலைவரே, நீங்க பயந்து போய் பதுங்குகுழியில் ஒளிந்து கொண்டு இருப்பதாகதான் பேசுறாங்க :-):-)
// நா அங்கே பதுங்கி காத்துட்டு இருக்கேன் //
Deleteதூக்கம் வருவதற்கு காத்துகொண்டு இருங்கீங்களா தலைவரே :-)
// நீங்க மறுபடியும் பழைய பன்னீர்செல்வமா மாறணும் தலீவரே! //
Deleteஆமாம் தலைவரே உங்கள் செயலாளருக்கு நீங்கள் இப்பொது தக்காளியால் அடிவாங்குவது போதாது என்று முட்டையால் அடிவாங்குவது தான் பிடித்து இருக்காம் :-) உங்கள் முதல் எதிரி செயலர்தான் என இன்னும் தெரியாமல் இருக்கீங்களே தலைவரே :-)
சுத்தி சுத்தி கேட்டு போடறாங்களே...நாம தூங்குற மாதிரியே இருப்போம்...
DeleteThis comment has been removed by the author.
Delete// சுத்தி சுத்தி கேட்டு போடறாங்களே. //
Deleteஆனாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை தலைவரே :-) உங்களுக்கு பட்டம் விடும் நூலில் கட்டுவதே அதிகம் தலைவரே :-)
நீங்க என்ன உங்க சரீரம் ரொம்ப பெரிசு என நினைப்பா தலைவரே :-) , செயலாளருக்குதான் கேட் கோட்டை எல்லாம் :-)
அன்பு ஆசிரியருக்கு 🙏,
ReplyDeleteகாமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 🙏.
என்ன சார் "சாது மிரண்டால்"ங்கறமாதிரி நச்சுனு நெத்தியடியாக இந்த பதிவு.
அருமை.
கடித போக்குவரத்து உள்ளவரை எல்லாமே நல்லா போச்சு. எப்ப இந்த தொலைத்தொடர்பு சாதனங்கள் வந்ததோ, அப்பவே தலைவலியும் சேர்ந்தே வந்தது. வாசகர்கள் என்ற போர்வையில் புல்லுருவிகளும்,வசை பாடுபவர்களும் காமிக்சை சின்னாபின்னப்படுத்துகிறார்கள்.
இவைகள் பழகியவர்கள் கடந்து போய் விடுவார்கள். புதியவர்கள் சற்று தடுமாறியே இவர்களை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
பிடித்தவர்கள் வாங்கலாம். பிடிக்காதவர்கள் ஒதுங்கி, பிடித்தவர்களுக்கு வழி விடலாம்.
யார் என்ன குறை சொன்னாலும்,திரும்பி பாராமல்,👂 கேளாமல் போய்விடுவதே நலம்.
என்று பழகி வருகிறேன்.
மனதில் இருந்ததை அப்படியே பதிவிட்டுள்ளீர்கள்👏👏👏👏.
புது முயற்ச்சிக்கு எப்பவுமே ஆதரவு தான் சார்
பின்பு...
திருப்பூரில் லயன் ஏஜென்ட் யாரென சொல்லுங்க சார்.
மீண்டும் அடுத்த பதிவில் 🌹...
திருப்பூரில் முன்னர் இருந்த ஏஜெண்ட் தற்சமயம் பணியாற்றுவதில்லை சார் ; அங்கே நடப்பில் முகவர் லேது !
Deleteசிவா சார்.. முடிந்தால் நீங்களே நமது திருப்பூர் ஏஜென்ட்டாக ஏன் செயல்படக்கூடாது? நீங்களும் பயன்பெற்று, நாம் விரும்பும் இந்தக் காமிக்ஸுக்கும் பயனளிக்க நல்லதொரு வாய்ப்பு!
Deleteஉங்கள் சூழ்நிலை தெரியாமல் நான் ஏதாவது எசகுபிசகாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்!
Erode VIJAY sir,
Deleteஎன்னசார் இது மன்னிப்பெல்லாம் என்று? வாசகர்களுக்குள்.ஆசைதான் தான் சார்.ஆனா அனுபவம் இல்லை.மேலும் பொருளாதார ரீதி ஒத்துழைக்காதுங்க.அந்த பகுதியெல்லாம் தாண்டியாச்சுங்க.
நாளைக்கு வந்திடும் Tex கண்ணே கொலைமானே பத்தி பேசாம தாத்தாவின் வருகைய பத்தி பேச்சுவார்த்தை ஓடுது அப்படின்னாவே.. தாத்தா ஜெயிச்சுட்டாருன்னு அர்த்தம்தானே..
ReplyDelete:+)
Delete50th
ReplyDeleteபதிவை படிச்சாச்சு.....
ReplyDeleteதாத்தாவை.....
மொத புக்கா படிச்சுதான் பாத்துருவோமே....:-)
டெக்ஸ் கதையை அனுப்பி வச்சுட்டு தாத்தாக்கள முன்னாடி படிக்கவாம் யாருகிட்ட. நாங்கள்லாம் டெக்ஸ்தான் முதல்லபடிப்போம். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteதாத்தாவுக்கு எல்லாம் தாத்தா டெக்ஸ்தானே :-)
Deleteஅக்டோபர் மாதம் சீனியர் சிட்டிசன் மாதம்
ReplyDeleteகி. நா தாத்தாஸ்
கிளாப்டன் தாத்தா
ரேஞ்சர் தாத்தாஸ்
எல்லாம் தாத்தாக்கள்தான்.
//பொதுவாகவே ஒரு கையில் அம்மிக்கல்லும், இன்னொன்றில் பூரிக்கட்டையும் ஏந்தியபடி//
ReplyDeleteஇதுக்கு வெப்பன் சப்ளையர் நம்ம STVRஆகதான் இருக்கும். அடிக்கடி ஸ்டீலில் செய்த இந்த கொடூரமான ஆயுதத்தை விளம்பரம் செய்திருக்கிறார்
சுடுதண்ணிஅபிசேகம்பற்றி மகிஜீ ஏற்கனவே ஒருமுறை எழுதியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்.சிலநாட்களுக்கு முன்னேகூட யோசிச்சுக்கிட்டிருந்தேன். ஏன்னா கண்ணாடிக்காரம்மா டீக்கடையிலே தொங்கிட்டிருந்தபின்னடிச்ச கிர்பியின்கதைஒன்றைஅப்படியேபரட்டிப் பார்க்கும்போதுகடைக்காரம்மா பச்சத்தண்ணிய என்மீது ஊத்தியிருக்காங்க ஆனாக்காஅதுமார்கழிமாசம்கிறதுதான்மேட்டரே. காலங்காத்தாலேமொதபோணியேநான்தான். நடுங்கிக்கிட்டேவீடுவந்துசேர்ந்தேன். கரூரின் மேற்கு எல்லையில் எனதுவீடு. கிழக்கு எல்லையில்இருக்கும்நண்பர் பசுபதிஎன்றமுரளிவீட்டுக்கு சனிக்கிழமையானால் எண்ணெய் தேய்த்துக் குளித்து ஆண்களின்உச்சபட்சமேக்கப்பான பவுடர் பூசி சற்றே பார்க்கும்படியான ஒருலுக்குக்குமாறிக்கொண்டுநானும்நண்பர்தங்கமுத்தும் கிழம்பிவிடுவோம். சனிக்கிழமை நாங்கள்வருவதால்லைப்ரரிபோல்அடுக்கிவைத்திருந்தபுத்தகஅலமாரியைசுத்தப்படுத்திவைத்திருப்பார் முரளி. ஆனாலும்இரண்டுமூன்றுசார்லிகதைகளைமட்டும்கண்ணுல்காட்டுவார்சந்தோசமாய்.நானும் தங்கமுத்தும்ஆளுக்குஒருபுறமாய்புத்தகத்தைப்பிடித்துக்கொண்டுநடந்துவரும்போதேபடித்துக்கொண்டுவீடுவருவதற்குள்படித்துவிடுவோம்.. வரும்வழியில் mhss schoolமுன்பு கரம்வாங்கி(2in1)சாப்பிட்டுவிட்டுமாலை4மணிக்கு வீடுதிரும்புவோம். ஞாயிறு மறுவாசிப்பு. படுக்கையைவிட்டுஎழாமல்புத்தகத்தைப்படிக்கும்அந்தநாட்கள்மீண்டும்வராதாஎன்றுபலநாட்கள்ஏங்கியுள்ளோம். இதோமுத்து50....அந்தநாட்கள்மீண்டும் . ஆசிரியருக்குகோடானுகோடிநன்றிகள். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஅருமையான நினைவுகள் ராஜசேகரன்.
Delete///நாங்கள்வருவதால்லைப்ரரிபோல்அடுக்கிவைத்திருந்தபுத்தகஅலமாரியைசுத்தப்படுத்திவைத்திருப்பார்///
Delete--- இது இப்போது கூட நடந்தேறிவரும், ஃபீல்டுல இருக்கும் ரகசியம்...
முக்கிய புக்ஸ்லாம் எடுத்து ஒளித்து வைத்துவிடுவது....
பார்வையிட வர்றவங்க முன்னாடி ஈயம் பூசுனா மாதிரியே தெரியாது...
அருமை ராஜசேகர் ஜி!
Delete///இது இப்போது கூட நடந்தேறிவரும், ஃபீல்டுல இருக்கும் ரகசியம்...
Deleteமுக்கிய புக்ஸ்லாம் எடுத்து ஒளித்து வைத்துவிடுவது....
பார்வையிட வர்றவங்க முன்னாடி ஈயம் பூசுனா மாதிரியே தெரியாது...///
நீ பொதுவாத்தானே மாமா சொல்ற..
என்னையவோ.. வேற யாரையுமோ குறிப்பிட்டு சொல்லலைதானே..!? 😉
// என்னையவோ.. வேற யாரையுமோ குறிப்பிட்டு சொல்லலைதானே..!? //
Deleteச்சே ச்சே அவரு மேச்சேரியில் உள்ள ரவி கண்ணனை சொல்லுறார் :-) உங்களை இல்ல கண்ணா!
பொதுவாக சொன்னது மாமா!
Deleteசமீபத்தில் கூட விற்பனை குழுவில் ஒரு நண்பர், அவரோட அனுபவமாக இதை குறிப்பிட்டு இருந்தார்....!!
நீதான் எனக்கும் நண்பர்களுக்கும் பீரோவையே தூக்கி கொடுத்தாயே...!! அத்தோடு நான் சேகரிப்பாளன் இல்லைனு நண்பர்கள் அனைவரும் அறிவர்... நண்பர்கள் கிட்டதானே பல அறிய புத்தகங்களின் போட்டோவை வாங்கி போடுறேன்...
'நீங்களும் நடிச்சுருக்கீங்களா? ' இல்ல இந்தப்படத்தோட சீக்வல் 'கொள்ளுத்தாத்தாவகுப்புறப்போட்டுகும்மிட்டாங்கல் 'லவாராரு.எப்பவுமே மகிஜீ, செயலர், kokகாம்பினேசன் கலக்கல்தான். அசத்துங்க பிரதர்ஸ்
ReplyDeleteஇதில் யாரு கவுன்டர், யார் செந்தில், யாரு வடிவேல்னு சொல்லீட்டிங்கனா....!!!
DeleteHi..
ReplyDeleteஇப்பத்தான் பார்த்தேன் போனபதிவில் கடைசியில் கலக்கியிருக்காரு ஸ்டீல். அதுவும்ஆசிரியர் கேப்டனுக்கு முடியரது நம்ம கவிஞருக்குமுடியாதா என்று அடியெடுத்துக் கொடுக்க அதேகேப்டனின் அதே வைதேகிகாத்திருந்தாலில் அசத்தியிருக்கிறார் ஸ்டீல் சும்மா சொல்ரக்கூடாது கவிஞரே. உங்களுக்குள்ள ஏதோ இருக்கு.. கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteவந்துட்டேன் வந்துட்டேன்
ReplyDeleteமுதலில் தாதாக்கள் தான் இந்த முறை. நீங்கள் சொன்ன வரிசையிலேயே வருகிறேன் சார் இந்த முறை.
ReplyDeleteஎல்லாரும் தாத்தா தானே🤔
Deleteஅது என்னவோ வாஸ்தவந்தானுங் இட்லி மாஸ்டர்!
Delete/// இங்கே ஒரு வைஸ்னேரிய இளவரசரும் வெயிட்டிங்///
ReplyDeleteவைஸ்னேரிய இளவரசரா, இல்ல வயசேறிய இள(?)வரசரா?..
பத்து சார்@ செம...செம....! எங்க வீட்ல இருந்து 3கி.மி.தொலைவில் உள்ள இளவரசர் வீட்டில் உடையும், "க்ளிங்"- சத்தம் எங்கூட்டுக்கே கேட்கிறது...
Deleteகிர்ர்ர்ர்...😾😾😾
Deleteஒரு கி.நா வைப் படிக்க இவ்வளோ pre-requisites தேவையா?
ReplyDeleteவிமர்சனம் எழுத வேண்டாமே ப்ளீஸ்!! அல்லது ஆகா ஓகோ என்று பாராட்டுங்கள் என்றோ நேரடியாக சொல்லமுடியாமல் இப்படி ஏகப்பட்ட pre-requisites அடுக்கியிருக்கிறீர்கள்போல அப்பட்டமாக தெரிகிறது ..
கவலைப்படாதீர்கள் சார்..விஜய் ரசிகர்கள் "சுறா"வை என்றும் கைவிடமாட்டார்கள்...
இவ்ளோ நேரமாச்சே ; இன்னமும் காணோமேன்னு தேடுனேன் சார் ! அடுத்து ஆக வேண்டியதை பாப்போம் - வாங்க ; வாங்க !
Delete:-)))))
Delete:-))))))))))
Delete@எடிட்டர் சார்! ரெகார்ட் ப்ரேக் சார்!
முன்னாடில்லாம் புக் வந்தப்பறம்தான் முட்டுச்சந்துக்கு போவீங்க!
இப்பல்லாம் முன் எச்சரிக்கை பதிவுக்கே மு.சந்துக்கு போறீங்க
பின்னே என்னங் சார்..? நீங்களே போய் சுவத்துல முட்டிக்கறீங்க.. நீங்களே தரையில் உருண்டு புரண்டு கதற்றீங்க.. நீங்களே சட்டை டவுசர்களை கிழிச்சுக்கறீங்க..
Deleteஅப்புறம் நாங்கல்லாம் இங்கே எதுக்கு இருக்கோம்னேன்?!!
வைத்தியர் இன்ன இன்ன தேதிகளில் இன்ன இன்ன ஊர்களுக்கு விஜயம்னு விளம்பரம் பண்ணுவாங்கள்லே ; அது போல ⁶⁶இப்போல்லாம் மு .ச. & மூ.ச. வாசல்களில் IN - OUT போர்ட் ஒண்ணு ரெடி பண்ணிடலாம்னு இருக்கேன் சார் !
Delete///IN - OUT போர்ட் ஒண்ணு ரெடி பண்ணிடலாம்னு இருக்கேன் சார் !///
Deleteரொம்பவே காலம் கடந்த சிந்தனை சார்! அதான் இப்போல்லாம் '24X7 service'ல இருக்கீங்களே?!! :D
விஜயன் சார், நீங்கள்அடுத்த வாரம் எந்த ஊர் மூ.ச என சொன்னால் அதற்கு ஏற்ப நான் சிவகாசி வர வசதியாக இருக்கும் :-)
Delete### 100 !!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கு🙏,
ReplyDeleteகிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு பின் லயன் காமிக்ஸ் தீபாவளி மலர் விளம்பரத்தை பாக்கறது மனசுக்கு எத்தனை மகிழ்வா இருக்கு. கதைய படிப்பது 2 வது. முதல்ல பார்ப்பது இந்த விளம்பரங்கள் தான். 4 விளம்பரங்களுமே மிக அருமையாக போட்டு, எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி விட்டார்களே.
அருமைசார்.அருமை. காத்திருக்கிறோம் அந்த இதழ்களுக்காக..💕💕💕💕💕💕💕💕💕💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕💕❤️❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️❤️💕❤️💕💕❤️❤️💕💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️❤️💕❤️💕❤️💕❤️❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️
///லயன் காமிக்ஸ் தீபாவளி மலர் விளம்பரத்தை பாக்கறது மனசுக்கு எத்தனை மகிழ்வா இருக்கு. கதைய படிப்பது 2 வது. முதல்ல பார்ப்பது இந்த விளம்பரங்கள் தான்.///
Deleteஉண்மை உண்மை உண்மை!!
விளம்பரத்தைப் பார்க்கும்போதே ஒரு தீபாவளி கொண்டாட்ட மனநிலை கிடைத்துவிடுகிறது! டெக்ஸுடன் இந்தத்தபா தேஷாவும்!!
உய்ய்ய் உய்ய்ய் உய்ய்ய்!!!
கலர்ல ஒரு டெக்ஸ் கதை, கருப்பு-வெள்ளையில் ஒரு டெக்ஸ் கதை, ஒரு மினி கலர் டெக்ஸ் கதை - குண்ண்ண்டாய்.. தீபாவளி மலராய்!!
உய்ய்ய்ய் உய்ய்ய்ய் உய்ய்ய்ய்!
இந்த பதிவின் தலைப்புக்கும், தீபாவளி மலர் அறிவிப்புக்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா??
Deleteஇரண்டு மாதங்கள் உங்களுக்கு கொண்டாட்டம் தான் :-) அண்டாவை இறக்குங்க பாயாசம் போடுங்க கொண்டாடலாம் :-) ரம்மி அதிலும் அடுத்த மாதம் நீங்கள் ஒரு ஸ்பெஷல் பாயாசம் போடனும் :-)
Delete@Rummi XIII,
Deleteஇன்று காலையில் நண்பர்கள் பகிர்ந்ததை ஒரு சந்தோஷத்துக்காக பதிவிட்டேன் சார். தலைப்புக்கு மட்டுமே பதிவிட வேண்டும் என்றால், இங்கு பாதிப்பேர் காணாமல் போய்விடும். என் மகிழ்வை அனைவருடனும் பகிர ஆசைப்பட்டேன்.அவ்வளவே.
Erode VIJAY,
உங்களுடன் சேர்ந்து,இந்த வருட தீபாவளியை லயனுடன் கொண்டாட காத்திருக்கிறேன் சகா💕.
Parani from Thoothukudi,
கண்டிப்பாக சார். 👍
புக்கு வந்திடுச்சேஏஏஏய்ய்ய்...!!!!!🕺🏻🕺🏻🕺🏻🕺🏻
ReplyDelete
Deleteசேலம்,ஈரோடு பகுதி கூரியர் ஆபிஸூக்கு வந்த மெயிலின் காப்பி!
அந்த இரக்க சிந்தனை உள்ள இளவரசனுக்கு லயன் ஆபிஸிலிருந்து வர்ற பார்சலை உடனே டெலிவரி பண்ணி தொலைச்சிடுங்க..கூழ் பாக்கியில மொத கூழ் வந்து சேர்ந்துச்சு.
வூட்ல விட்டு செய்யாம ஆபிஸ் பின்னாடி மரத்துல மூணு கல்லு வச்சு இளவரசனே காய்ச்சின கூழு போல.. உப்பு கம்மி..காரம் ரொம்ப அதிகம்...வாடை வேற அதிகம்..மதுவிலக்கு பொம்பள போலிஸ் ஒண்ணு கள்ளச்சாராயம் குடிக்கிறதா நினைச்சு தொரத்த ஸிஸ்டர் வேட்டுவ காளியம்மன் வூட்ல - கோயில்ல ஒளிஞ்சிக்க வேண்டியதா போச்சு..
ராயல் ப்ளட் னு காரணம் சொல்லி மீதி பாக்கியெல்லாம் பைசல் பண்ண சொல்லிட்டேன்..( இனிமே தாங்காது)
இளவரசருக்கு உடனே டெலிவரி பண்லன்னா உங்களுக்கெல்லாம் அம்மை வந்துடும்..
வயித்து வலியுடன்
ஆத்தா...
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அல்டிமேட் செனா அனா ஜி!
Deleteபஸ்ஸுல கடைசி சீட்ல உட்கார்ந்து இதை படிச்சிட்டிருந்தேன்.. ஏற்கனவே பஸ் குலுங்கலோட என்னோட குலுங்கலும் சேர்ந்துக்கிட, பஸ்ஸின் முன் சக்கரங்கள் மேல்எழும்பாத குறைதான்!!
என்னாவொரு ஹியூமர் சென்ஸ்!! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
// பஸ்ஸின் முன் சக்கரங்கள் மேல்எழும்பாத குறைதான்!! //
Deleteஅப்ப பின் சக்கரங்கள் 2 அடியாவது கீழே இறங்கி இருக்கனுமே...!!!
இந்த ஏமாளி ஆத்தாவை நினைச்சா 😤😤😤😤😤
Deleteவியப்பிலும் வியப்பு,இன்னிக்கே புக்ஸ் வந்துடுச்சாம்,கூரியரிலிருந்து அழைப்பு...
ReplyDeleteசீக்கிரம் போகனும்...
நீங்க இந்த முறை புத்தகங்கள் என்னைக்கு அனுப்புவீங்க, இன்னைக்கு அனுப்புங்க அப்படிங்கற மாதிரி எதுவும் கேட்காததால் இருக்கும் அறிவு! :-)
Deleteஎப்படியோ ஒன்று வந்ததில் மகிழ்ச்சிபா...
Deleteவணக்கம் நண்பர்களே!
ReplyDeleteவந்ததே பார்சல், ஜூ பூம்பா லக் வந்ததே....🤩
ReplyDeleteவழக்கம்போல மனிடோவையும் ஓடினையும் துணைக்கி அழைச்சிட்டு கொரியர் ஆபீஸ் போனேன், 10மணிக்கு.. கொரியர் ஆபீஸ் இன்சார்ஜ்ம் பயங்கர பக்திமான் போல.. ஆபீஸ் லாக்டு... பூசைலாம் பண்ணிட்டு மெதுவாம வருவார்னு கடைக்கு போயிட்டேன்...
ஒரு 11.30மணிக்கு போன் அடிச்சது... சார், பார்சல் வந்திருக்குனு, அவர் போன் கட் பண்ணுவதற்குள் அவர் முன்னாடி போய் நின்றேன்.(ஒரு 600மீட்டர் தொலைவுதான்)
ஓடினுக்கு நன்றி சொல்லிட்டு பார்சலை வாங்கினேன், கொஞ்சம் ஒல்லியான பார்சல் தான்....
3மாதங்களில் முதல் நாளே கிடைச்ச பார்சல்...
காலையிலயே சென்னிமலை வாத்தியார் வாயிலாக அட்டைபடம், வருகிறது விளம்பரங்கள், தீபாவளிமலர் அறிவிப்புலாம் பார்த்தாச்சி!
அட்டைபடங்கள் நேரில் கலக்குது..3ல் டெக்ஸ்தான் டாப்....
அ.அ. ரன்னர் அப்!
சார் புத்தகத்த வாங்கியாச்
ReplyDeleteக்ளிப்டன் அட்டை வழக்கம்போல ரகம்...
ReplyDeleteஅ.அ.@ அட்டைபடம் கொஞ்சம் ஸ்டன்னிங் தான்....
3தாத்தாக்கள்....அவர்களின் பின்னாடி தூரத்தில் அந்தி கதிரவன்..
அதற்கடுத்து நீரில் கிரணங்கள் பிரதிபலிப்பு....
முதுமையை திளைத்து அனுபவிக்கிம் தாத்தாஸ்...,பிரவுன் நிற மண்சரிவில்...!!!
லாங்ஷாட்ல கலக்குது.....
புக்ஸ் எல்லாம் பிரிச்சி பார்த்தாச்சி...
ReplyDeleteஅடுத்த வெளியீடுகள் ஆர்வத்தை கிளப்புகின்றன...
தீபாவளி மலர் ஹார்ட் பைண்டிங்கிலா,வாவ்,அருமை,அருமை...
அப்படியே இன்னொரு மஞ்ச சட்டையாருக்கும் கெட்டி சொக்காயை மாட்டி விட்டிருக்கலாம்...
வருகிறது அறிவிப்பில் இளம் டெக்ஸ் (திக்கெட்டும் பகைவர்கள்) அறிவிப்பு மகிழ்ச்சி...
ReplyDeleteவழக்கம்போல் விற்பனையில் உச்சம் தொடும்...
தீபாவளி மலரில் 2 பெரிய கதை+ 1 குட்டி கதை,ஆக மொத்தம் 3 கதை...
இந்த தீபாவளி அசத்தல்தான்...
நேரம் குறைவாய் இருந்ததாலோ என்னவோ உலகத்தின் கடைசிநாள் விளம்பரத்தில் இப்போது விற்பனையில் அறிவிப்பு மறைக்கப்படவில்லை...
Smashing 70 பற்றிய அறிவிப்பு பலவகையில் இடம் பெற்றுள்ளது சிறப்பு,இது தேவையான விஷயமும் கூட...
அடுத்து இந்த இடத்தை முத்து 50 ஆக்ரமிக்கும்...
புத்தகங்கள் வந்து விட்டது. சாப்பிட்டு முடித்த பிறகு தான் பார்சலை பிரிக்க வேண்டும்.
ReplyDeleteStarted ready அ.அ :-)
Deleteவருகிறது விளம்பரங்கள்
ReplyDeleteஅடுத்த வெளியீடுகள்
ஹாட்லைன்
3ம் பார்த்து விட்டு தான் அடுத்த நடவடிக்கைகள்...
அதும் தீபாவளிக்கு முந்தைய மாதம்னா இந்த தீபாவளிமலர் அடுத்த இழலில்... என பார்க்கும் போது ஜிவ்வுனு இருக்கும்... அது இப்போதும்....!!!
3கதைகள் தீபாவளி மலரில்...லட்டு,ஜிலேபி& மைசூர்பா...(எத்தனை புதிய இனிப்புகள் வந்தாலும் இவைகளுக்கு நிகர் ஏது)
ஹார்டுகவர் என்ற பிரியாணியுடன்...
செம தீபாவளியாக இருக்கப்போகிறது இம்முறையும்...💕💞
சார் அட்டைப் படங்கள் அருமை....டெக்ச விஞ்ச அட்டகளேது என அசந்து... கிளிப்டன் பரவால்லன்னபடி புரட்டுனா அந்தியும் அழகே திகைக்க வைக்குது நேரில்....வண்ணம் ஏதோ சொல்லொண்ணா எண்ணத்தைப் பகிருது...அட்டகாசம் சார்....டாப் அட்டை இதான்
ReplyDeleteஇருவண்ண 70ஸ் விளம்பரமும் என்பதுகளுக்கே அழைப்பது என்ன மட்டுந்தானா
ReplyDeleteஇளம் டெக்ஸ்....தீபாவளி மலர்...லக்கி...ட்யூக் என வருகிறது விளம்பரங்க அதகளம்
ReplyDeleteஎல்லோருக்கும் வந்துருச்சு....
ReplyDeleteசெயலருக்கு கூட வந்துருச்சு...
ஹூம்...அதான் எனக்கு வரல போல...:-(
எது தலீவரே..இரக்க சிந்தனையா ?
Deleteஅந்தியும் அழகே 18 பக்கங்கள் முடித்து விட்டேன் அட்டகாசமாக செல்கிறது. நெருங்கிய நண்பர்களுடன் தான் இது போல் மனதில் உள்ளதை மனதுக்கு தோன்றுவதை பேச முடியும் பலமுறை இதனை நான் அனுபவித்து இருக்கிறேன், இன்று கதையில் அமர்க்களம். கதைக்கு தேவையான இயல்பான மொழிபெயர்ப்பு இந்த நண்பர்களுக்கு அழகாக பொருந்துகிறது.
ReplyDeleteவெள்ளிக்கிழமை, வேலை நாள், பிற்பகல் 15:17:00 GMT+5:30
Delete//அந்தியும் அழகே 18 பக்கங்கள் முடித்து விட்டேன்//
ஓகோ, ஒர்க் பிரம் ஹோமா?! :)
இரண்டாவது வெள்ளிக்கிழமை 2 மணிக்கு மேல் விடுமுறை. (Wellness Friday)
Deleteஅட நீங்க வேற சீரியஸா பதில் சொல்லிகிட்டு! இங்கே மாதம் ஒரு முறை வெல்னஸ் டே... கவுந்தடித்து தூங்குவதோடு சரி! :)
Deleteநீங்க காமெடியாக எடுத்துக்கோங்க கார்த்திக். கடந்த மூன்று மாதங்களாக இரண்டாவது மற்றும் நான்காம் வெள்ளிக்கிழமை முழுவதும் விடுமுறை ஆனால் கவுந்தடித்து வேலை பார்த்து விடுமுறையை கடத்தினேன் :-) இந்த மாதம் முதல் அரைநாள் விடுமுறை :-)
Deleteஅது என்னவோ உண்மைதான், காமெடியாக பேசிக் கொண்டாலும், WFH-ல் வேலைப்பளு படு மோசமாகத்தான் இருக்கிறது.
Deleteவேலை பார்க்கும் நேரம் எது குடும்பத்துடன் எப்போது நேரம் செலவு செய்வது என தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது கார்த்திக் :-)
Deleteகா சோ , பரணி :
Deleteஅதுக்கு காரணம் நாமே - நாம தான் நேரம் காலம் தெரியாம வேலை பாக்கறோம். 2020ல் இப்படி நேரம் கழித்த நான் 2021ல் வேற லெவல்.
12:30க்கு தான் login செய்வேன். 9 00 PM க்கு பின்னால் ஒரு கோடி ரூவா குடுத்தாலும் No office work !
க்ளிப்டனின் அடடைக்கும்....அத்தியின் அழகு அட்டைக்கும் போட்டி...ஈவிக்காண்டி...
ReplyDeleteஇன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
கைகளில் ஆடுது அந்தியும் அழகே
க்ளிப்டனுக்கே கலவரமோ
புக்கதிறந்தா சுகம் வருமோ
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
கைகளில் ஆடுது அந்தியின் அழகே
விசயனார் சொன்னது முதுமையின்
மந்திரம் வாசகர் காதினிலே
தாத்தாவை தூவிய பக்கத்தில்
நல்கதை பூத்திடும் வேளையிலே
நாயகன் சிகரட் தொடவும்
வந்த புகையினை வெளி விடவும்
நாயகன் சிகரட் தொடவும்
வந்த புகையினை வெளி விடவும்
அட்டைதனிலே கரைய கரைய
சிகரெட் வாயில் குறைய குறைய
கதைகள் சுவைக்கும் இரண்டு விழிகளில்
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
கைகளில் ஆடுது அந்தியும் அழகே
கிழவரகளின் கதைவரமோ
பிடித்திருந்தால் கதை வருமோ
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
வானிலே தோரணம்
மாறிய வான்நிறம்
கிழவனின் புகைதிறமோ
ஆளிலையோ தொட ஆளில்லையோ
அதில் ஆடிடும் கதை பக்கமோ
நாயகனே பல்லிலியோ
அதில் தான் பல்வலியோ
நாயகனே பல்லிலியோ
அதில் தான் பல்வலியோ
மஞ்சத்திலே ஏது திறம்
இன்பத்திலா நூறு வரம்
மிதந்து மறந்து
மகிழ்ந்த நெஞ்சத்தில்
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
கைகளில் ஆடுது அந்தியும் அழகே
க்ளிப்டனுக்கே கலவரமோ
புக்கதிறந்தா சுகம் வருமோ
இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே
தாத்தாக்களா தாதாக்களா
Deleteவழியுது தக்காளிச் சட்னி ; மிடிலேய்யா தெய்வமே !
Delete///நாயகன் சிகரட் தொடவும்
Deleteவந்த புகையினை வெளி விடவும்
நாயகன் சிகரட் தொடவும்
வந்த புகையினை வெளி விடவும்
அட்டைதனிலே கரைய கரைய
சிகரெட் வாயில் குறைய குறைய
கதைகள் சுவைக்கும் இரண்டு விழிகளில்///
பட்டைய கிளப்பறீங்க ஸ்டீல் 🤣🤣🤣🤣
// வழியுது தக்காளிச் சட்னி //
Deleteஇரண்டு இட்லி தரட்டுமா தொட்டுச்சாப்பிட விஜய் சார் :-)
ஸ்டீல் :
Deleteஎப்புடி இப்பூடி ?! திரையுலகம் ஒரு உன்னத கவிஞரை இழந்துவிட்டது - விஜயன் சார் கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்து கொண்டிருக்கிறது :-)
***** அந்தியும் அழகே *****
ReplyDeleteசுடச்சுட இறந்துபோன பாட்டீம்மா தன் இறப்புக்குப் பின்னே தன் கணவரிடம் கொடுக்கச் சொல்லி ஒரு கடுதாசியை அவ்வூர் வக்கீலிடம் கொடுத்து வைத்திருக்க, கடுதாசியை வாங்கிப் படிக்கும் தாத்தா வெகுண்டெழுந்து துப்பாக்கியும் கையுமாக ரொம்ப தொலைவிலுள்ள ஒரு தனிமை பங்களாவில் முதுமை காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கும் தன் முதலாளியைத் தேடிப் போகிறார்.
தாத்தாவின் கோவத்துக்கு காரணம் இதுதான் : இந்தத் தாத்தாவும், பாட்டீம்மாவும் தங்கள் இளமை காலத்தில் திருமணத்திற்குப் பின்னே ஒரே கம்பேனியில் வேலை செய்திருக்க; யூனியன் வேலைகளையே சதாகாலமும் கவனித்துவந்த தாத்தாவுக்கு தன் இளம் மனைவியை கண்டுகொள்ள நேரமின்றி போகவே; விளைவு - பாட்டீம்மாவுக்கும், கம்பேனி ஓனருக்கும் கள்ளக்காதல்!
கடுதாசியில் பாட்டீம்மா தன் கணவருக்கு விட்டுச் சென்றிருந்த சேதியும் இதுதான்!
ரெளத்திரம் மேலோங்க,பழைய முதலாளியைப் போட்டுத்தள்ள துப்பாக்கியுடன் காரில் தனியே கிளம்பிய தாத்தாவைத் தேடி தாத்தாவின் நண்பர்கள் இருவரும், ஒரு நிறைமாத கர்பிணி பேத்தியும் ஒரே வேனில் பயணிக்கின்றனர்!
தாத்தா பழிவாங்கினாரா?
முதலாளியின் கதி என்ன?
பின்தொடர்ந்து சென்ற பேத்தி தன் தாத்தாவை தடுத்து நிறுத்தினாளா?
முதலாளியின் பங்களாவில் பேத்திக்கு காத்திருந்த அதிர்ஷ்டம் என்ன?
- என்பதுதான் மீதக் கதை!
நாம் நம் வீட்டிலே பார்க்கும் பாசமான, பணிவான, அன்பான, அடக்கமான தாத்தாக்கள் எல்லாம் தங்கள் நண்பர்களைச் சந்தித்து அளவளாவினார்கள் என்றால் அவர்களது உண்மை சொரூபம் எப்படியிருக்கும் என்பதை இக்கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்!!!
சித்திரங்களே சிறப்பு! வசனங்களே பலம்! சில பல இடங்களில் ராவான வசனங்கள் இடம்பெற்றிருந்தாலுமே கூட அவை அந்த காட்சிக்கேற்ற இயல்பான வசனங்களே! வசனங்களை கையாண்டிருக்கும் விதமும் அவ்வப்வோது ஆச்சரியப்படுத்துகிறது!
இந்தக் கதை ஒன்-ஷாட் போலவா அல்லது இந்தக் கதையின் தொடர்ச்சி அடுத்தத்த பாகங்களில் வரப்போகிறதா என்ற குழப்பம் மட்டும் க்ளைமாக்ஸில் கொஞ்சமாய்!!
பரபரப்பான கதையையோ, ணங் கும் சத்'களையோ எதிர்பார்த்திடாமல், முதியோர் இல்லத்தில் ஒருநாளை செலவிட மனதளவில் தயாராகி இக்கதையைப் படிப்பவர்களுக்கு காத்துள்ளது - ஒரு அழகான breezy reading அனுபவம்!
தாத்தாக்களின் வித்தியாசமான, ரகளையான உலகமிது!
9.5/10
மேலே கதையின் சாராம்சம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது என்பதால் நண்பர்களது வாசிப்பு அனுபவத்திற்கு தடையாக இருக்காது என்றே நம்புகிறேன்! எனினும்
Deleteஇந்தக் கதையை முழுமையாக அனுபவித்து படிக்க நினைப்பவர்கள் இந்த விமர்சனத்தை ஸ்கிப் செய்துவிடலாம் ப்ளீஸ்!
நல்ல விமர்சனம் சார்.💕 படிக்க வேண்டும் என்று நினைக்குமே தவிர,ஸ்கிப் செய்ய முடியாது.அருமைங்க
Deleteவேலைப்பளு காரணமாக பதிவு பக்கம் வரவில்லை. இன்று திடீரென்று கூறியதிலிருந்து கூப்பிட்டு உங்களது புத்தகம் பார்சல் வந்துவிட்டது என்று சொல்லி எனக்கு அதிர்ச்சி அளித்து விட்டார்கள். வெளியூரில் இருப்பதால் திங்கட்கிழமை தான் நான் புத்தகத்தை கைப்பற்ற வேண்டும்.
ReplyDeleteநீங்கள் DTDC-க்கு மாற்றினாலும் மாற்றினீர்கள், இம்மாத புத்தகங்கள் இம்மாதமே, அதுவும் இன்றைக்கே வந்து விட்டன! விடுபட்ட புத்தகமும் கடந்த வாரமே கிடைத்து விட்டது! மிக்க நன்றி சார்!
ReplyDeleteஅரசகவி ஸ்டீலுக்குப் போட்டியாக, ஆசிரியகவியின் தலைப்புத் தொகுப்பிலிருந்து உருவப்பட்ட ஒரு கொஷ்டூரக் கவிதை:
நரகத்திற்கு நடுவழியே வந்து
சித்திரமும் கொலைப் பழக்கம் என்ற
கண்ணே கொலைமானே இப்
பகலறியா பூமி தனில்
அந்தியும் அழகே அன்றோ
மறந்தும் மறவாதே கவிக்கோவை
ஒரு முறை கொன்று விடு வசிப்பிடம் கோவை
பாவை மிரண்டால் பார் கொள்ளாது பிளாகில்
ஸ்டீல் விடமாட்டார் பாடியே கொல்லாது!
அது சரி, இந்த பட்டாணி தெரியும், அது என்ன கட்டாணி & புட்டாணி?!
கரடு முரடான லாங்வேஜ்...!!! பேச்சு வழக்கை அப்படியே ராவாக கொண்டு வர்றது..
Deleteஅ.அ. படிங்க கார்த்திக்... கட்டாணி கழண்டு புட்டாணி பிதுங்குது....😜
அது வந்து கார்த்திக் .... திண்ணையிலே உட்கார்ந்தபடிக்கே பட்டாணி தின்னறச்சே ஒண்ணு ரெண்டு சொத்தையும் நடு நடுவே வருமில்லியா ?! பேச்சு சுவாரஸ்யத்தில் அதையும் கடைவாய் கிரஷருக்குள்ளே போட்டு கடக்குன்னு கடிக்க முனையும் போது பல்லோ ; பல்செட்டோ ஒரு ஜெர்க்கடிக்குமில்லையா - அந்த ஜெர்க் தான் எங்க ஊர்பக்கத்துக் கட்டாணி + புட்டாணி !
Deleteசங்க இலக்கியங்களிலே இது பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கு - என்பதை நம்ம செனா அனா சார் இன்றிரவு விளக்கிச் சொல்லுவார் !
அந்தியும் அழகே..!
ReplyDeleteவேலியோரம் நின்று தங்கள் பால்யத்தை தாங்களே திரும்பி பார்க்கும் சீன் பக், 16,17 ; செம்ம சார்...
முழு விமர்சனம் மறுவாசிப்புக்கு பின்னர்...
வலிமையான உங்கள் எழுத்துநடையில் இக்கதைக்கான விமர்சனத்தைப் படித்திட மிகவும் ஆவல் நண்பரே!
Deleteஇம்மாத புத்தகங்கள் வந்துவிட்டன.
ReplyDeleteதொட்டில் பக்கம் சுடுகாடு மட்டில்..ன்னு பழமொழி சொல்லுவாங்க.
அது நிஜம்தான்.
சின்ன வயதில் திருவண்ணாமலையில் கோவில் அருகில் முனிசிபல் ஆபீஸ் பக்கமாகவே எங்கள் வீடு. காலையில் எழுந்து காபி குடித்தவுடன், முதல் வேலை கோவில் அருகே நிற்கும், உயர்ந்த தேர் (முழுதும் தகர ஷீட்டால் மூடப்பட்ட) மீது ஒட்டப்பட்டு இருக்கும், வர இருக்கும் சினிமா பட விளம்பர போஸ்டர்களை பார்ப்பது தான்.அப்புறம்தான் ஸ்கூல் ஞாபகமே.
அது போல புத்தகங்களை பிரித்தவுடன், என் முதல் பாரவை வர இருக்கும் வெளியீடுகள் பற்றிய விளம்பரங்களையே. இன்றும் அப்படியே.
தீபாவளி மலர் அறிவிப்பு சூப்பர்.
இளம் டெக்ஸின் அறிவிப்பும் ஆவலை கூட்டுது.
(ஹும்ம்... இளம் டைகர்.. பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.)
///இளம் டைகர்.. பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்.///---2024ல போட்டு புடலாம் சார்....!!!
Delete// இளம் டைகர்.. பெருமூச்சு மட்டுமே மிஞ்சுகிறது. எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும். //
Deleteஒருவேளை வந்தாலும் பெருமூச்சு மட்டும் தான் மிஞ்சுமோ ???!!!
அந்தியும் அழகே:
ReplyDeleteஇந்த மாதிரி கதைக் களத்தை கொண்டு காமிக்ஸ் படைப்பை கொடுக்கவே கொஞ்சம் தைரியம் தேவைதான்...
ஜெண்டில்மேன் படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் வயதானவராக வரும் போலீஸ்காரர் நாயகனுக்கு இணையாக கொஞ்சநேரம் மல்லுகட்டுவார்,அந்த மாதிரி எல்லாம் ஆக்ஷன் பிளாக்கையெல்லாம் எதிர்பார்க்க முடியாவிடினும் அப்படியே நினைவுகளை அசைபோடுதலும்,நிகழ்காலத்தின் நக்கல்,நையாண்டி பேச்சுகளுமாய் பயணிக்கிறது கதைக்களம்...
பல்லு போன வாட்டி எதுக்கு பக்கோடான்னு சொல்லுவோம்,இந்த தாத்தா கூட்டணி பழமொழியை மாற்றி புதுமொழி எழுதியுள்ளது...
பொதுவில் வயது ஏற,ஏற பக்குவம் அதிகமாகும்,பேச்சிலும்,செயலிலும் ஒரு அமைதி குடிக்கொள்ளும்,இதுவே வயதானவர்களைப் பற்றி இருக்கும் பொதுப் பிம்பம்...
இவற்றை முற்றிலுமாய் மாற்றியமைக்கிறது இக்கதைக் களம்,அதே நேரத்தில் இதை நாம் மறுத்து விடவும் முடியாது தான்...
ஒருவேளை இந்த தாத்தா கூட்டணி ரொம்பவும் Rare கூட்டணியோ ???!!!
ஓவியங்கள் மிக நிறைவு,
தாத்தாக்கள் கூட்டணியின் உடல் வாகினை அருமையாக கொண்டு வந்துள்ளார் ஓவியர்...
பேச்சு வழக்கிலான,வரம்பிற்குள் அடங்காத மொழி பெயர்ப்பு சரியாகவே பொருந்தியுள்ளது...
தாத்தாக்களுக்கு வயசானாலும் அவர்களுக்கு வாழ்வின் இறுதிக்கட்டத்தைக் குறித்து எந்த பயமும் இல்லை என்பதற்கு இராவான வசனங்கள் துணை புரிகின்றன...
காட்சியமைப்புகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வர்ணச் சேர்க்கைகள் பல இடங்களில் அசத்தல்,குறிப்பாக தாத்தாஸ் கூட்டணி இறுதியில் நடைபோடும் அந்த கடற்கரைக் காட்சி அழகோ அழகு...
கேரன் செர்லியா லூசெட்டிற்கு கொடுக்கும் சர்ப்ரைஸ் எதிர்பாராதது...
கி.நா வில் வெளியாகும் அளவிற்கு சிக்கலான கதை அமைப்பு இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை, அதே நேரத்தில் ஒன்றிரண்டு காட்சியமைப்புகளை கொஞ்சம் திருத்தம் செய்திருந்தாலே போதும்,18+ ஐ தவிர்த்திருக்கலாம்,அந்தக் காட்சிகள் கதையின் ஓட்டத்திற்கு துணை புரிவதாகவும் தோன்றவில்லை...
மொத்தத்தில் அந்தியும் அழகே ரொம்ப ஈர்க்கவும் இல்லை,ரொம்ப போரடிக்கவும் இல்லை,எனினும் ஓகே இரகம்தான்...
எமது மதிப்பெண்கள்-8/10.
மிக நேர்த்தியான விமர்சனம் அறிவரசு அவர்களே!
Deleteஒரு கதையமைப்பு மட்டுமே அதன் லேபிலைத் தீர்மானிப்பதில்லை சார் ! So சிக்கலான கதைகள் மாத்திரமே கி.நா. திக்கினில் திசை திரும்பிடும் என்பதாகக் கிடையாது ! பழகிய பாணிகளிலிருந்து விலகி நிற்கும் ஆல்பங்கள் தனித்தடம் நோக்கி நகர்ந்திடுவதால் - அந்தியும் அழகே ரெகுலர் தடத்தின் அங்கமாகிடவில்லை !
DeleteAnd காட்சியமைப்புகள் இங்கே 18+ க்கான காரணியே அல்ல சார் ! கேரன் செர்வியா லுசெட்டைப் பற்றி , லுசெட்டின் வீட்டுக்கார தாத்தாவிடம் பேசும் இடங்களெல்லாம் இளவட்டத்துக்கான சமாச்சாரங்கள் ஆகிடாதே ! அதனை மாற்றி அமைப்பது சாத்தியமே இல்லா விஷயமும் தானே ?
DeleteAnd இங்கே கதாசிரியரும் சரி, ஒவியரும் சரி - ஒரு புள்ளி ; கோட்டைக் கூட மாற்றிட அனுமதிப்பதாக இல்லை !
In any case அடிப்படையில் முதிர்ந்த ரசனைகளுக்கானதொரு கதையைத் தேர்வு செய்த பிற்பாடு - அதனை வெகுஜன ரசனைக்கானதாய் மாற்ற முனைவானேன் சார் ?
ஓகே சார்...
Deleteஇன்னொரு சந்தேகம் என்னன்னா,மும்மூர்த்திகளின் (3 தாத்தாஸ்) குணநலன்கள் ஆரம்பம் முதல் இப்படித்தானா ?!
Deleteஇப்போதும் இப்படியே இருப்பது ஏன் ?!
இதற்கான அடிப்படைக் காரணங்களில் மற்ற தொடர்களில் சொல்லப்பட்டிருக்குமா ?!
மாலை ஆறு மணிக்கு கொரியர் வந்தாச்சு. Smashing 70's விளம்பர நோட்டிஸ்கள் பாடிகார்டாக இருந்ததால் இம்முறை புத்தக முனைகள் மடங்காமல் தப்பியது.(இதற்காவது smashing 70's உதவியதே - "மீம்ஸ்சாக மட்டும் இதனை கருதவும்"). முதல் பார்வையில் அட்டையிலும், சித்திரத்திலும் இரவுக்கழுகு முந்துகிறார்.
ReplyDeleteஅந்தியும் அழகே:
ReplyDeleteஎன்ன மாதிரியான படைப்பு எது?
மூணு எளவட்டக் கெழடுகள் போட்ற ஆட்டம் தான் கதை.எதார்த்ஊமான கதை .
மூணு பெரியவங்க .
நெட்டை - பியரோ மேயோ...லொட லொட ...
குண்டு குட்டை - மில்சே...
நடுத்தரம் - அன்ட்வான்.
இதுல அன்ட்வானோட சம்சாரம் - லுசெட் பெரோ போய் சேர்ந்ததுமில்லாம புருஷனுக்கு (அன்ட்வானுக்கு) மனசாட்சிய மையாக்கி தனக்கு பாஸ் அர்மாண்டு கூட இருந்த கூடா நட்பை அம்பல மாக்கீட்டு நிம்மதியா போயிட்றாங்க.
ஆனா அன்ட்வான் " எங்கே நிம்மதி"ன்னு பாடாம கொல வெறியோட அர்மாண்ட போட்டுத் தள்ள துள்ளி குதிச்சி புயலா கெளம்பீட்றாரு.
என்னங்கிறீங்க...உடனே அன்ட்வானோட அண்ட் கோ க்களுக்கு புஜம் துடிக்குது.அதிலயும் பியரோக்கு ஓவரா துடிச்சதா - போயீ அன்ட்வான் எங்க போறான்னு தெரிஞ்சிக்க பிஞ்சு வக்கீல ரெண்டு சாத்து சாத்துறாரூ. ஸ்விட்சர்லாந்துக்கு கெளம்புறாங்க. என்னமோ போங்க...கூட போறது அன்ட்வானோட பேத்தி...ஏழு மாசம் வேற.பாட்டி லூசெட் மாதிரியே கேரக்டர். அவளோட பாட்டியோட செகப்பு பொம்மலாட்ட வேன்ல சும்மா நெடுந்தூரம் பேசிக்கிட்டே பயணம் பண்றாங்க...
முடிவு என்ன...
கையில் கலர் காமிக்ஸ்ஸில் காண்க...
J
மொழியாக்கம் - கட்டாணி புட்டாணி...
Deleteஎதார்த்த மொழி நடை
எமோஷன்ஸ் சூப்பர்...
படங்கள் சும்மா பண்டைய கெளப்புது.கேய்யட் ஓவியரு வயசானவரோ என்னமோ... உணர்ச்சி ங்களா நல்லா பாவனைகள் வெளிப்படுத்தீருக்காரூ...
லுபனோ நல்லாவே கதைய நகர்த்தியிருக்காரூ...
Deleteசஸ்பென்ஸா இந்த பார்ட்ட புடிச்சிருக்காருங்க...
படிச்சு முடிச்சு நண்பர்கள் மிச்ச பார்ட்ஸ மொத்தமா குண்டா கேக்க போறது உறுதி...
"என்ன தவம் செய்தவனை சௌந்தரா...
ஈங்கிவ் விஜயனை எடிட்டராய் யாம் பெறவே"...
கதையை ராவாக அப்படியே கையாண்டமைக்கு வாழ்த்துக்கள்
Deleteஓடி விளையாட்றாங்க தாத்தா ஸ்..
Deleteஅந்தியும் அழகே.
ReplyDeleteவாசகர்களின் கையில் புத்தகம் கிடைத்து , படித்து முடித்த பின்னே,...
எடிட்டரை நினைச்சா, (என்னதான் டேக் டைவர்ஷன் போர்டெல்லாம் மாட்டினாலுமே),பிரபுதேவா மாதிரி " நெனச்சேன்.. சிரிச்சேன்.."ன்னு தான் சொல்லத் தோணுது.
என்னைப் பொறுத்தவரை கதை 0 K தான். ஆனா..ஆசிரியர இவ்ளோ அலர்ட் போர்டு மாட்டுகிற அளவுக்கு அவசியமே இல்லை.
வயசான பெரிசுகளின் ஜாலியான ரவுசு டயலாக்குகள் ரசிக்கும் படியாக கதை முழுக்க கொட்டிக் கிடக்குது.
பக்கத்துக்கு பக்கம், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், அடுத்து என்ன என்று ஆவலைத் தூண்டும் கதையை எதிர்பார்த்தீர்களானால் ஏமாந்து போவீர்கள்.
இயல்பான வசனங்களுடன் கூடிய கதையோட்டம். முடிவுதான் புரியவில்லை. இது தொடர் ஆல்பமா என்று குழப்புகிறது.
இந்த ரவுசுகளுக்கு அடுத்த ஸ்லாட்டும் தரலாம் தான்.
படிக்கவுள்ள வட்டத்தினுள் இளவட்டம் எத்தினி சதவிகிதம் ; கிழவட்டம் எத்தினி சதவிகிதம் என்பது தோராயமாவது தெரியும் தானே சார் ! So நமக்கு ஒ.கே .வாகத் தெரியக்கூடியது யூத்துக்கு எவ்விதம் ரெஜிஸ்டர் ஆகுமோ ? என்ற நினைப்பே take diversion பதாகைகளின் காரணம் !
DeleteAnd இந்தத் தாத்தாக்களின் வாழ்க்கைப் பயணங்கள் தொடர்கின்றன ! இந்த ஆல்பத்தின் அந்த open end முடிச்சானதற்கு பின்னே விடையிருக்கலாம் தான் ; மீத பாகங்களை வாசிக்க இன்னமும் நேரம் கிட்டவில்லை சார் !
And உங்களை யூத் அணியில் சேர்க்காததற்கு மன்னிச்சூ சார் !
Deleteபொட்டி இன்னும் வரலை...?!!!!
ReplyDeleteEditor Sir,
ReplyDeleteஅந்தியும் அழகே - சீனியர் எடிட்டரை படிக்க சொல்லி ஒரு விமர்சனம் வாங்கி எழுதுங்களேன் - காமிக்ஸ் உலகம் சார்ந்த அவரின் வயதுடையோரின் விமர்சனம் காண ஆவல் !
நிச்சயம் படித்திருப்பார் சார் - finished books முதல் பிரதிகள் போவது அவருக்கே !
Deleteஓ! சீனியர் எடிட்டரும் சந்தா கட்டறார் போல!!
Deleteஈ.வி ஹா,ஹா,ஹா...!!!
Deleteஅப்புறம் முக்கியமான விஷயம் இப்பத்தான ஞாபகத்துக்கு வருது.
ReplyDeleteஇந்தக் கதை தமிழ்ல ஏற்கெனவே படமாக வந்துவிட்டது. தமிழ்ப் பண்பாடு கருதி அந்த லெட்டர் ட்விஸ்ட்டுல மட்டும் சின்ன சின்ன மாற்றங்கள்.
படம்: பைலட் பிரேம் நாத்.
ஹீரோ: சிவாஜி கணேசன்.
என்ன இதுல தாத்தா மனைவியின் கடிதத்தை படித்து விட்டு அர்மாண்டை போட்டுத் தள்ள கிளம்புறார்.
அதுல சிவாஜி தன் மனைவியின் கடிதத்தை படித்து விட்டு, அதில் மனைவி சொன்ன தனக்குப் பிறக்காத வாரிசு யாருன்னு குழம்புவார். ஹு ஈஸ் த ப்ளாக் ஷீப்..ன்னு ..
அடடே! இந்தமாதிரி கசமுசா கதையெல்லாம் தமிழ்லேர்ந்துமான் பிரெஞ்சுக்குப் போயிருக்கணும்னு எனக்கு அப்பவே லைட்டா டவுட்டு வந்துச்சு! :)
Delete'அந்தியும் அழகே' படித்த பிறகு எஞ்சி நிற்கும் கேள்விகள் மூன்று!
ReplyDelete1. தாத்தாக்கள் சின்னவயசில் 'கடற்கொள்ளையர்' விளையாட்டின்போது கொள்ளையடித்து மறைத்து வைத்ததாகச் சொல்லப்படும் பொக்கிஷத்தின் கதி என்னவாயிற்று? அதை இறுதிப் பக்கங்களில் கூட தன் பேத்தியிடம் மறைக்கவேண்டிய காரணம் என்ன?!!
2. பேத்திக் குட்டியை - குட்டிபோட ஏற்பாடு பண்ணியது நிஜத்தில் யார்?
3. பேத்தி ஸோஃபி - கதையின் க்ளைமாக்ஸில் கடற்கரை மணலில் வரையும் (அபாயத்தைக் குறிக்கும்) எலும்புக் கூடு அவளது மனநிலையைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம் தான்! எனில் அவளது எண்ணவோட்டம் தான் என்ன?
உப கேள்வி : இந்தக் கேள்விகளுக்கான விடைகள் ஒருவேளை அடுத்தடுத்த பாகங்களில் தான் தெரியவருமா?
விடை தெரிந்தும் சொல்லாதிருப்போரின் தலைகள் யானை கால் கொண்டு இடறப்படும்!
// கடற்கரை மணலில் வரையும் (அபாயத்தைக் குறிக்கும்) எலும்புக் கூடு அவளது மனநிலையைக் குறிப்பதாக எடுத்துக்கொள்ளலாம் தான் //
Deleteஅது அனேகமாய் கடற்கொள்ளையர்களின் குறியீடாய் இருக்க வாய்ப்புண்டு ஈ.வி,அடுத்தடுத்த தொடர்களில் இதன் விளக்கங்கள் தெரிய வரலாம்,இதைத்தான் சிம்பாளிக்கா சொல்ல வர்றாங்களோ என்னவோ ?!
இப்போல்லாம் இ.சி.இ.க்கள் இன்னா அடம் புடிச்சாலும் ஆனைகள் சங்கத்தில் பணம் கட்டி, ரசீது வாங்காங்காட்டி பருப்பே வேகாதாம் ! அதுவும் தவிர, அவற்றை டெக்சஸ் வரைக்கும் அனுப்பவெல்லாம் முடியாதாம் !
Deleteஎனக்குத் தெரிந்த வரைக்கும் அந்த கிளைமாக்ஸ் முடிச்சு ஒரு open end மட்டுமே ; என்றைக்கேனும் அதற்கு திருப்பிடும் வாய்ப்பை மட்டுமே கதாசிரியர் அங்கே தக்க வைத்திருக்கிறார் !
தொடர்ந்திடும் அத்தியாயங்களில் ஒவ்வொரு தாத்தாக்களின் flashbacks ; நிறைய சமூகப் பகடிகள் ; அரசியல் நையாண்டிகள் ; சோஃபியின் வாழ்க்கை என்று வண்டி ஓடுகிறது !
Deleteகதையில் கேரன் செர்வியா கம்பெனி கணக்கில் குறையும் நூறு மில்லியன் யூரோவுக்கும், கடைசியில் அர்மாண்ட் பேத்தியிடம் கொடுக்கும் கெய்மான் பேங்க் அக்கவுண்ட் பாஸ்வேர்டை ஓபன் செய்துபார்க்கும் போது வரும் பேங்க் பேலன்ஸுக்கும் தொடர்பு இருக்கும் போல் தெரிகிறதே.
ReplyDeleteட்விஸ்டை ஓப்பன் பண்ணிட்டிங்களே 10 சார்...
Deleteஅந்த நம்பர்களை இப்போ தான் கூட்டிப் பாத்தீங்களா பத்து சார் !!
Deleteஒன் ஷாட் விமர்சனம்..
ReplyDeleteஅந்தியும்,..பெரும்பாலும்,.. அழகே.
Me 200
ReplyDelete/// அந்த நம்பர்களை இப்போ தான் கூட்டிப் பாத்தீங்களா பத்து சார்///
ReplyDeleteநான் கணக்குல கொஞ்சம (லாஸ்ட்) வீக்.