Powered By Blogger

Thursday, October 14, 2021

ஒரு அட்டவணைத் திருவிழா !!

நண்பர்களே,

வணக்கம். பக்கத்து வீட்டுப் பசுமாடு கன்று போட்டாலே 14 பத்தி எழுதுபவனுக்கு, ஆண்டின் இந்த “அட்டவணை மேளா” சிக்கும் போது சொல்லவும் வேணுமா – உற்சாகத்துக்கு ? வெல்கம் guys – கடந்த பத்தாண்டுகளாய் அக்டோபர்களில் அரங்கேறி வரும் “வாத்திக்கொரு தேர்வு” ரகளையின் லேட்டஸ்ட் பதிப்புக்கு !

2022 !! பேரிடர்களின் சம்மட்டியடிகளைக் கடந்து நம்பிக்கை நட்சத்திரமாய் மிளிரும் ஆண்டு ! "அலையடிக்கும்.....புயலடிக்கும்" என்ற doomsday கொரோனோ ஆரூடங்கள் இன்னமும் புழக்கத்தில் இருந்து வந்தாலும், ஏதோ ஒரு மூலையில் மனசில் நம்பிக்கை ததும்புகிறது – காத்திருக்கும் ’22 நிச்சயமாய் காவு வாங்கிடாது ; காலை வாரிடாது என்று ! நித்தமும் கோடிகளில் நடந்து வரும் தடுப்பபூசிப் படலம் தரும் தைரியமா அது? இயற்கையின் கனிவின் மீதான நம்பிக்கையா? அல்லது அசட்டுக் கற்பனையா? என்று சொல்லத் தெரியவில்லை – ஆனால் அதள பாதாளங்களைப் பார்த்து விட்டான நமக்கு, இனியும் ஒரு bigger படுகுழியினைப் பார்க்க அவசியமிராது என்றே உள்ளுக்குள் சொல்லுகிறது! அந்த நம்பிக்கை நிஜமாகிட பெரும் தேவன் மணிடோவிடம் வேண்டியபடியே விஷயத்துக்குள் குதிக்கலாம் !

Oh yes – ஒவ்வொரு அட்டவணையின் போதும். வெளிச்ச வட்டத்தை ஆக்ரமித்திட டாப் நாயக / நாயகியர் மத்தியில் போட்டிகள் இருப்பதுண்டு தான் ! உச்சமாய் தல Vs. தளபதியின் மல்லுக்கட்டுக்களையும் பார்த்தவர்கள் தானே நாமெல்லாம்?! ஆனால் இந்த 2022-ல் நிலவரமே வேறு! துளிச் சந்தேகமுமின்றி இந்தப் 12 மாதங்களுக்குமே, தனது ஐம்பதாவது ஆண்டினைத் தொட்டு நிற்கும் நம் முத்து காமிக்ஸ் மீதும், அதன் பிதாமகரான சீனியர் எடிட்டர் மீதும், ஒளிவட்டம் நிலைத்திடுவது தானே பொருத்தமாக இருக்க முடியும்?! அரை நூற்றாண்டென்பது ஊடகத் துறையினில் ஒரு அசாத்திய மைல்கல்லாக இராது போகலாம் தான்; ஆனால் கொயந்தப் பசங்க படிக்க வேண்டிய பொம்ம புக்குகளோடு மட்டுமே 600 மாதங்களாய்க் குடித்தனம் செய்து வந்திருப்பது எத்தனை ரகளையான அனுபவமென்பது மெதுமெதுவாய் எனக்கே புரியத் துவங்குகிறது!

உள்ளதைச் சொல்வதானால் – ஒரு மாதத்துப் பணியிலிருந்து அடுத்த மாதத்துக்கென குரங்காட்டம் கடந்த பத்தாண்டுகளாய்த் தொடர்ந்து தாவி வந்திருக்கும் எனக்கு இந்தத் தருணத்தின் நிஜமான பரிமாணம் புரிந்திருக்கவில்லை தான் ! ”அடக்கமாய் ரூ.500/- விலையில் ஒரு ஸ்பெஷல் இதழ்“ என்பதே எனது ஒரிஜினல் திட்டமிடலாய் இருந்தது! ஆனால் நடப்பாண்டின் லாக்டௌன் தினங்களது தினப்படிப் பதிவு ரகளைகளின் போது உங்களின் வானளாவிய எதிர்பார்ப்புகள் அழுத்தம், திருத்தமாய் வெளிப்பட்ட போது, வேக வேகமாய்க் கோடுகளை அழித்து விட்டு, முதல்லேர்ந்து திட்டமிடத் திரும்பினேன்! எது எப்படிப் போனாலும் காத்திருக்கும் அட்டவணையின் highlight அந்த ஆண்டுமலர் #50 ஆகத்தானிருக்க முடியுமென்பதும் புரிந்தது! அதே சமயம் நடைமுறை யதார்த்தம், பட்ஜெட் சார்ந்த கட்டுப்பாடுகள்; இன்னமும் நார்மலுக்குத் திரும்பியிரா ஜீவனங்கள், என்ற சுடும் நிஜங்களுக்கும் மரியாதை தந்திட வேண்டுமென்ற புரிதலும் இல்லாது போகவில்லை! So நம்ம ஸ்டீல் அள்ளிவிடுவதைப் போல ”அஞ்சாயிரத்துக்கு பெஷல் புக்“ என்ற பகற்கனவில் திளைத்திடாது – சமீப ஆண்டுகளின் சந்தா பட்ஜெட்டுக்கு எகிறிடாது, அதற்குள்ளாகவே சகலத்தையும் அடக்கிட வேண்டுமென்பதே எனது முதல் இலட்சியமாயிருந்தது! அதனில் வெற்றி காண முடிந்தது எனக்கொரு சன்னமான திருப்தியை தந்த முதல் factor!

இரண்டாவதான ”திருப்தி factor“ வேறொரு மார்க்கத்தினில் ! 2012-ல் நாம் மறுவருகை செய்த போதே எனக்குள் ஒரு சிறுகுறிப்பைப் போட்டு வைத்துக் கொண்டேன் – “இனி வரக்கூடிய ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் நம்மை நாமே reinvent செய்திட வேண்டும்!” என்று ! சாணித் தாள்; கறுப்பு-வெள்ளை; தாமதத்துடன் கூட்டணி என்று இலக்கின்றித் திரிந்த நமக்கு – கடந்த 10 ஆண்டுகள் ஒரு மாற்றத்தைக் கண்ணில் காட்டியுள்ளதில் இரகசியங்கள் லேது! “ஹி…ஹி…ஆங்…” உங்க வேகம்லாம் ரெண்டு, மூணு மாசத்துக்குத் தொடருமா சார்? அப்பாலிக்கா பழைய முருங்கை மரத்தில் ஏறிடாமலா போவீர்கள்? என்று என் காதிலேயே நண்பரொருவர் ஓதிடும் அழகில் தான் இருந்தது – பத்தாண்டுகளுக்கு முன்பான நமது credibility ! But நல்ல பொழுதுகள்; கஷ்ட வேளைகள்; சந்தோஷத் தருணங்கள்; சங்கட நாட்கள்; புயல்கள்; வெள்ளங்கள்; பேரிடர்கள் என்று அத்தனைக்கும் மத்தியிலும் சொன்னதைச் சரியான நேரத்தில் செய்து காட்ட நமக்குமே முடியும் என்பதை இந்தப் பத்தாண்டுகளில் பிரதானமாய் எனக்கு நானே நிரூபித்துக் காட்டிக் கொண்ட திருப்தியுடன் – காத்திருக்கும் அடுத்த தசாப்தத்தில் செய்திடத் தேவைப்படக்கூடிய மாற்றம் என்னவாக இருக்கக்கூடுமோ? என்று யோசிக்க முனைந்தேன் ! கலரில் டீசன்டான தரத்தில் தற்போது கால்பதித்து நிற்பதால், அந்த திக்கில் எதுவும் நோண்ட பெரிதாய்த் தோணலை! வேறென்ன செய்யலாமென்று யோசித்த போது உறைத்தது தான் – நமது பொதுவான பயண திசையினில் சன்னமாய் – ரொம்ப சன்னமாய் மட்டும் செய்திடத் தேவைப்படக் கூடிய திசைமாற்றம் பற்றி! 2012-ல் பழைய பாணிக் கதை தேர்வுகளோடே ஆரம்பித்த நாம் – மெதுமெதுவாய் ஜானர்களில் பன்முகத்தன்மைகளை பரீட்சார்த்த முயற்சிகளாய் தொட்டு உரசிப் பார்க்க ஆரம்பித்தோம்! “கதையே நாயகன்” என்றாலுமே அவை கரை சேர்ந்திடும் என்ற நம்பிக்கையில் வெளியானவை தான் கீழ்க்கண்ட சிலபல கி.நா.க்கள்:

- சிப்பாயின் சுவடுகளில்

- வானமே எங்கள் வீதி

- தேவ இரகசியம் தேடலுக்கல்ல

- இரவே… இருளே… கொல்லாதே!

- க்ரீன் மேனர்

- Black & White கிராபிக் நாவல்கள்

- ஒரு தோழனின் கதை

etc… etc… etc…

அதன் லேட்டஸ்ட் அத்தியாயமாய் இதோ போன வாரம் வெளிவந்திருக்கும் ”அந்தியும் அழகே!“ இவற்றுள் நிறைய பிரமாதமாய் வெற்றி கண்டுள்ளன & சம அளவிற்குச் சாத்துக்களும் பெற்றுள்ளன! விழுந்தால் அடிபடுமே என்ற பயத்தோடே நடமாடினால் உயரங்களைத் தாண்டிக் குதிக்க முடியாதே! என்பதே எனது சித்தாந்தமாய் இருந்து வந்தது – இந்தத் தேடல்களின் பின்னணியில்! ஆனால் a good 120 months down the line – ஒற்றை விஷயம் ரொம்பவே, ரொம்ப ரொம்பவே தெளிவாய்ப் புரிந்துள்ளது! அது தான் உங்களின் ரசனைகளின் ஸ்திரத்தன்மை!! இதோ இந்தக் கையிலொரு லேட்டஸ்ட் கி.நா. & மறு கையில் ஒரு வேதாளன் மறுபதிப்போ ; சுஸ்கி விஸ்கி மறுபதிப்போ எனில் – பத்துக்கு ஒன்பது பேராவது எதை அள்ள வேகம் காட்டுவார்களென்பதில் இரகசியங்கள் இல்லையே?! And 2 ஆண்டுகளைத் தொடப் போகும் இந்தப் பேரிடரின் தாக்க நாட்களின் நீட்சியாக – இருண்ட களங்கள் ; offbeat பாதைகள்; அழுகாச்சிப் படலங்கள் என்பனவெல்லாமே சற்றே விலகி நிற்க வேண்டிய சமாச்சாரங்களாய்த் தென்படுவதன் லாஜிக்கும் தெளிவாய்ப் புரிகிறது! கொஞ்ச காலத்துக்காவது feel good கதைகள்; கமர்ஷியல் கதைகள்; பாஸிட்டிவான உணர்வுகளை விதைக்கும் கதைகளே உங்களின் தேடல்களில் முக்கிய இடம்பிடித்திடும் என்பது புரிகிறது ! So காத்திருக்கும் அடுத்த கொஞ்ச ஆண்டுகளில் உங்கள் மனம்கவர் feel good நாயக / நாயகியரே நம் மத்தியினில் தூக்கலாய் இடம்பிடிப்பர்! “எனக்கு நேர்கோட்டுக் கதைகளே போதுமே!“ என்று நீங்கள் நெளிய நெளிய – நான் மூக்கை முன்னூறு தபா சுற்றும் கதைகளையாய் போட்டுத் திணறடிப்பது வரும் காலங்களில் ரெகுலர் சந்தாக்களின் அங்கமே ஆகிடாது! பரீட்சார்த்த முயற்சிகள்; கிராபிக் நாவல்கள் etc… ஒட்டுமொத்தமாய் ஓரம்கட்டிடப்படாமல் – கிடைக்கும் ஆன்லைன் புத்தகவிழாத் தருணங்களில்; முன்பதிவுப் பதிப்பு ரூட்களில் மட்டுமே சின்னதொரு சதவிகிதத்தில் களம் கண்டிடும்! அதுக்காக “எட்றா சம்முவம் வண்டிய… போடுறா ஸ்பைடர் கதையை!” என்று ரிவர்ஸ் கியரெல்லாம் அடிக்கும் எண்ணமில்லை! And இது பற்றி நான் வாயால் சுடும் வடையைக் காட்டிலும், காத்திருக்கும் அட்டவணையானது ஒரு யதார்த்த விளக்கமாக இருந்திடக்கூடும்! So let’s get started!!

The Fifty & Forever Special ! சீனியர் எடிட்டரின் (இந்தப் பெயர்த் தேர்வே) புத்தாண்டினை நமக்கு அதிரடியாய்த் துவக்கித் தரவுள்ள முத்துவின் பொன்விழா ஆண்டுமலருக்கான பெயர் ! And லோகோவுமே சீனியரின் தேர்வுக்கே விட்டிருக்க அதற்கான வேலைகள் ஓடி வருகின்றன ! So பெயர் சார்ந்த விவாதங்களுக்குள் புகுந்திடாமல், கதைகள்; அமைப்பு பற்றியெல்லாம் பார்ப்போமா?

முதல் நாள் முதலாக - "ஒரே குண்டு புக்; NBS போலான கதம்ப ஸ்பெஷல்” என்பதே உங்களின் பெரும்பான்மையான அவாவாக இருந்து வந்துள்ளது! படைப்பாளிகள் இந்தக் கூட்டணியாட்சிகளுக்கு இப்போதெல்லாம் ‘தடா‘ போடுவதால் நானுமே “முடியாது… முடியாது… நஹி… not possible !!” என்றபடிக்கே சுற்றி வந்து கொண்டிருந்தேன்! So தனித்தனி இதழ்களாய் வெளியிட்டு, ஒரு ஸ்லிப் கேசில் மொத்தத்தையும் அடுக்கும் விதமாய் அமைக்கத் தான் வேண்டி வருமென்று நினைத்திருந்தேன்! ஆனால் மே மாத இறுதிவாக்கில் – “திசைக்கொன்றாய்க் கோரிக்கைகளை வீசித் தான் பார்ப்போமே… கிட்டினால் ஜெயம்; இல்லாங்காட்டி ‘மூச் காட்டாது ஸ்லிப் கேசில் ஐக்கியம் !‘ என்ற அசட்டு எண்ணம் தோன்றியது! அந்த ராத்திரிக்கே எழுந்து நமது பிரதான பப்ளிஷர்களுக்கெல்லாம் ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் – Of course போனெல்லி நீங்கலாக! இத்தாலிய ஜாம்பவான் TEX – லயனின் பிள்ளை எனும் போது, அவரில்லாத பாக்கி நாயகர்களைக் கொண்டு திரட்டும் ஸ்பெஷல் இதழில் பெருசாய் வலு இராதென்பதால் இந்த ஆட்டத்துக்கு ப்ரெஞ்சு நாயக /நாயகியரை மட்டுமே சேர்த்துக் கொண்டிருந்தேன்!

வரிசையாய் – “சாரி… நோ!”; “ஊஹும்… இந்தக் கதாசிரியருக்கும், அந்த எழுத்தாளருக்கும் ஏழாம் பொருத்தம்; சம்மதிக்க மாட்டார்கள்!” என்ற ரீதியிலேயே பதில்கள் வந்தன! காற்றுப் போன பலூனாட்டம் ஆகிப் போன வேளையில் தான் நமது டாப் பப்ளிஷர்களுள் ஒன்றான லொம்பாவிலிருந்து பதில் கிட்டியது – ”சுவாரஸ்யமாய் தெரிகிறதே… கதைத் தேர்வுகளைப் பண்ணி விட்டுச் சொல்லுங்கள்; பார்க்கலாமே!” என்ற பதிலுடன்! சும்மாவே சாமியாடும் கோடங்கிக்கு இந்த ஊக்கம் போதாதோ – தொடர்ந்த பத்து நாட்களின் ராப்பொழுதுகளிலும் லொம்பா குழுமத்தின் படைப்புகளை அலசும் முனைப்பில் தூக்கங்களைத் தொலைத்தேன்! நமது தற்போதைய பட்டியலில் லொம்பா குழும நாயகர்கள் கீழ்க்கண்டவாறு:

- தோர்கல்

- ரிப்போர்டர் ஜானி

- சிக் பில்

- க்ளிப்டன்

So எனது ஆரம்பப் புள்ளி இவர்களிடமிருந்தே துவங்கியது! 2 தோர்கல் கதைகள் + ஒரு க்ளாஸிக் ஜானி + ஒரு புதுயுக ஜானி + ஒரு சிக்பில் + ஒரு கேரட் மீசைக்காரர் என்றபடிக்கே எழுதிவிட்டு அதை உற்று நோக்கிய போது எனக்கே பெருசாய் லயிக்கவில்லை ! தோர்கல் செம நாயகரே; வான் ஹாம் கற்பனைகளில் தெறிக்க விட்டு வருகிறார் தான்; ஆனால் நம் மத்தியில் இவர் இன்னமும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்திற்கு உசந்திருக்கவில்லை என்பது நிஜமே! கடைசி 24 மாதங்களின் “தோர்கல்” விற்பனை விபரங்களை ஜுனியர் எடிட்டரின் சகாயத்தோடு தோண்டியெடுத்த போது, எனது அந்த gut feel நிஜம் தானென்பது புரிந்தது! சந்தா வட்டத்தைத் தாண்டிய casual வாசக வட்டத்தினர் தோர்கல் பக்கமாய்ப் பெரியதொரு ஆர்வங்களைக் காட்டிடுவதேயில்லை என்பதைக் கையிலுள்ள இருப்பு நிலவரமும் சொன்னது! தவிர, புதுயுக ஜானியையுமே நீங்கள் வெறிக்க வெறிக்க அணுகுவது தெரிந்த சமாச்சாரம் என்பதால் அதிலுமே நெருடியது! And to top it all – க்ளிப்டன் அட்டவணையில் இடம் பிடித்தாலே தெய்வச் செயல் என்றாகியிருக்கும் நிலையில் அவருக்கு இந்த landmark இதழில் இடமாாா??? என்று எனக்கு ரொம்பவே உதைத்தது! So இந்த லிஸ்டிலிருந்து கிட் ஆர்டினும் டாக்புல்லும் மட்டுமே இருந்து பெரிதாய் பிரயோஜனங்களிராது என்பது புரிந்தது! 

கேப்டன் டைகரோ டார்கோ குழுமத்துச் சொத்து; ப்ளுகோட் & லார்கோவோ ட்யூப்பி குழும properties… and அவர்களெல்லாமே கூட்டணிக்கு ‘நோ‘ சொல்லிவிட்டிருந்தனர் ஏற்கனவே ! “ஆங்… இளம் டைகர் பாக்கி ஆல்பங்களையெல்லாம் திரட்டி ஒட்டேடடட புக்காக்கி அதகளம் பண்ணினாலென்ன?” என்ற மகாசிந்தனை அடுத்துத் தோன்றியது! வெவ்வேறு ஹீரோக்களை ஒன்று சேர்த்துக் கும்மியடிக்கத் தானே டார்கோ 'நோ' சொன்னார்கள் – இளம் டைகரை மட்டுமே தொகுப்பாக்கிட நிச்சயம் மறுப்பு இராதென்பதால் அந்த ரூட்டில் போகலாமென்றுபட்டது! பரபரவென நமது ப்ரெஞ்சு மொழிபெயர்ப்பாள மேடமுக்கு ஃபோன் அடித்தேன் – “இன்ன மாதிரி… இன்ன மாதிரி விஷயமுங்கோ… ஆகையால் அத்தியாயம் 9 to 21 வரைக்கும் மொழிபெயர்ப்பு பண்ணிடனுமே! என்று! கொஞ்ச நேரத்துக்கு மறுமுனையில் மௌனம்! “நல்லா யோசிச்சீட்டீங்களா விஜயன்?” என்று சுரத்தின்றிக் கேள்வி வந்த போதே எனக்குப் புரிந்து விட்டது! இடியாப்பச் சிக்கலான இரத்தப் படலக் கதைகளையோ; ஜானி கதைகளையோ; கிராபிக் நாவல்களையோ தயக்கங்களேயின்றிக் கையாண்டவருடன் ஒன்றரையாண்டுகளுக்கு முன்னமுமே இந்த இளம் டைகர் ஆல்பங்கள் பற்றிப் பேசியதும் நினைவில் இருந்தது! நாமோ பொழுதுக்கொரு புளியமரத்தில் ஏறும் வேதாளங்கள் எனும் போது, நமது ரசனைகளும், ரசனைசார் தீர்மானங்களும் வேளைக்கு வேளை மாற்றம் காண்பது சகஜமே! ஆனால் அவரோ இந்தப் பஞ்சாயத்துக்கெல்லாம் தலைநுழைப்பவரே கிடையாது; "இது ஓ.கே…. இது சுமார்…" என்பதோடு நிறுத்திக் கொள்வார்! So அவர் ஒன்றரையாண்டுகளுக்கு முன்னே சொல்லியிருந்த கருத்தையே இப்போதும் ஒப்பித்தார்: “பெருசாய் சுவாரஸ்யம் இல்லை; 12 பாகங்களை ஒட்டுமொத்தமாய்ப் படிப்பது எப்படி இருக்கும் என்பதை ஒரு தடவைக்கு ரெண்டுவாட்டி யோசித்துக் கொள்ளுங்கள்!“ என்று மட்டும் சொன்னார்… மறுக்கா பலூனில் காற்றுப் பிடுங்கப்பட்டது போலான உணர்வு தலைதூக்கியது! மறுக்கா நெட்டில் அலசல்கள் என்று நுழைந்த போது, தீவிர டைகர் ரசிகர்களுமே தங்களின் சங்கடங்களை இந்தத் தொடரின் பிற்பகுதியினில் வெளிப்படுத்தியிருப்பது உறுத்தலாய்க் கண்ணில் பட்டது! So maybe இன்னொரு தருணத்தில் முன்பதிவுக்கெனத் திட்டமிட்டு இந்த மீதக்கதைகளை மூன்றோ – நான்கோ இதழ்கள் கொண்ட தொகுப்புகளாய் வெளியிடுவதே வழி என்று தீர்மானித்தேன்!

மறுபடியும் ஆரம்பித்த இடத்திலேயே நிற்க; சாமி “குண்டு புக்“ வரம் கொடுத்துமே, கதைத் தேர்வெனும் பூசாரி சண்டித்தனம் செய்கிறாரே என்று பேய்முழி முழித்துக் கொண்டிருந்தேன்! அந்த நொடியில் தான், "புதுசு ; முற்றிலுமாய்ப் புதுசு" என்ற எண்ணம் லேசாய்த் துளிர்விட்டது ! எல்லா ஹீரோக்களுமே ஒரு காலத்தில் நமக்குப் புதியவர்களாக இருந்தவர்கள் தானே?! என்று மெதுமெதுவாய்த் தோன்ற ஆரம்பித்தது ! லார்கோ; ஷெல்டன் தொடர்களெல்லாம் effective ஆக நம்மளவில் ‘சுபம்‘ கண்டிருக்க, கௌபாய் அல்லாத ஆக்ஷன் நாயகர்களுக்கான வெற்றிடம் பெரிதாய் இருப்பதுமே புரிந்தது! கண்ணைச் சுழற்றிய தூக்கத்தை உதறிய கையோடு லொம்பா குழுமத்துக்கு ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் – ஒரு நீளமான லிஸ்டுடன்! அத்தனையுமே சமீப வருஷங்களில் அவர்கள் வெளியிட்டிருந்த ஆக்ஷன் ஆல்பங்கள்! அவற்றின் கோப்புகளைக் கோரியிருக்க, அடுத்த 2 நாட்களில் அத்தனையையும் அனுப்பி தெறிக்க விட – ஒரு வண்டிக் கதைகளின் கத்தை கையிலிருந்தது! சொற்பமாய் இங்கிலீஷில்; நிறைய ப்ரெஞ்சில் என்றிருக்க ஜுன் மாதத்தின் பெரும்பகுதி இந்த வாசிப்புக்கென ஓட்டமெடுத்திருந்தது! And ஒரு மாதிரியாய் அந்தப் பிரிண்ட்-அவுட் சமுத்திரத்திலிருந்து வெளிப்பட்ட போது காது to காது வரை ஒரு இளிப்பு விரவியிருந்தது என்னில்! To cut a hugely long story short – அன்றைய தேடலில் கிடைத்த totally fresh நாயக நாயகியரே காத்திருக்கும் FFS இதழின் முதுகெலும்பாகிட உள்ளனர்! இன்னும் சொல்லப் போனால், இவர்களது தொடர்கள் எல்லாமே சமகாலத்துத் தொடர்கள் & ஓரளவுக்குக் கணிசமான கதையிருப்பும் உள்ளதால் – அடுத்த சில ஆண்டுகளுக்காவது இந்தப் புதியவர்கள் நம் மத்தியில் உலாவிடும் வாய்ப்புகள் பிரகாசம் என்று படுகிறது! So இதோ அந்தப் புது வரவுககள்:

 • CIA ஏஜெண்ட் ஆல்ஃபா!
 • French Secret Service ஏஜெண்ட் சிஸ்கோ!
 • ஆக்ஷன் ஸ்டார் டேங்கோ!

ஆல்ஃபா ஒரு 3 பாக சாகஸத்திலும்; சிஸ்கோ ஒரு டபுள் ஆல்ப சாகஸத்திலும், டேங்கோ சிங்கிள் சாகஸத்திலும் கரம் கோர்க்கின்றனர் ! இந்த 312 பக்க - 6 பாக ALL NEW சாகஸ சங்கமத்தோடு - 

As always – ஒற்றை லட்டோடு நிறுத்திக் கொள்ளாமல், இரண்டாவதாயொரு லட்டைத் திட்டமிட நினைத்தேன் & அது நீங்கள் யூகித்திருந்த "ஒற்றை நொடி,..ஒன்பது தோட்டாக்கள்" தான் !! மொத்தம் 5 அத்தியாயங்கள் ; 270 பக்கங்கள் என அசுர வேகத்தினில் தட தடுக்கும் க்ரைம் த்ரில்லர் ! இது பற்றி ஏற்கனவே நிறையவே பில்டப் பண்ணியாச்சு எனும் போது, அது பற்றி மேற்கொண்டும் பாட்டுப் பாடிடத் தேவையிராதென்றே நினைக்கிறேன் !!

And of course - சீனியர் எடிட்டரின் தலையங்கம் ; சில சர்ப்ரைஸ் பக்கங்கள் ; உங்களின் மலரும் நினைவுகள் ; இதுவரையிலான இதழ்களின் பட்டியல் etc ..etc இடம்பிடித்திடவும் செய்யும், ஆல்பங்களுக்கும், இத்தருணத்துக்கும் அழகு சேர்க்கும் விதத்தினில் ! இரு hardcover ஆல்பங்களுமாய்ச் சேர்த்து மொத்தம் 582 பக்கங்கள் & ரூ.1199 விலை என்பதே திட்டமிடல் !

இந்த FFS இதழில் புதுவரவுகள் எல்லோருமே refreshingly different! எல்லோருமே சமகாலத்து நாயக / நாயகியர் & இன்றைய நவீன உலகில் சுற்றி வரும் சாகஸக்காரர்கள்! And for a change, யாருமே லொங்கு லொங்கென்று ‘குருத‘யிலே காடு, மேடு, பள்ளம், பாலைவனமென்று சுற்றித் திரியும் கௌபாய்களல்ல! அந்த Wild West கோட்டாவை நாம் துவையோ, துவையென்று துவைத்து விட்டதாகப் படுவதால் – இந்தப் புதுயுகத்தினருக்கு வாய்ப்புத் தந்து பார்ப்போமே என்று நினைத்தேன்! 

ஆல்ஃபாவின் 3 பாக சாகஸம் பாரிஸில் துவக்கி, மாஸ்கோவுக்குத் தடதடக்கிறது – செம ரம்யமான சித்திரங்களின் பின்னணியினில்! இரத்தப் படல இரண்டாம் சுற்றின் ஓவியரான Jigounov தான் இங்கே ஓவியர் & அசத்தோ அசத்தென்று மனுஷன் அசத்துகிறார்! அதிலும் கதை நெடுகப் பயணிக்கும் அம்மணி பாரிஸ் & மாஸ்கோவை செம கலர்புல்லாக்குகிறார்! காத்திருக்கும் வாரங்களில் ட்ரெய்லர்களில் பார்த்திடலாம்! 

ஆல்ஃபா C.I.A-வின் ஏஜெண்டெனில் – அடுத்த புதுவரவான வின்செண்ட் சிஸ்கோ ப்ரெஞ்ச் அதிகாரவர்க்கத்தின் அதிரடிக் காரியங்களை ஓசையின்றி நிறைவேற்றிடும் ஏஜெண்ட்! பாரிஸின் வீதிகளில் இவரோடு ஓடி முடிக்கையில் நம்ம ஜாம் பஜார் அளவுக்குப் பாரிஸுமே பரிச்சயமாகியிருக்கும்! கதையின் ஏதேனும் ஒரு இடுக்கில் நமது பாரிஸ் நண்பர்களை பார்க்க முடிந்தாலும் ஆச்சர்யப்படக் கூடாது போலும் - சும்மா பாரிஸை அங்குலம், அங்குலமாய் அளந்துள்ளனர் ! Very contemporary நாயகர் & very current தொடர்! 

டேங்கோவோ வேறு மாதிரியானவர் & அவர் நமக்குக் கண்களில் காட்டிடவுள்ள பின்புலங்களுமே strikingly different! “என் பெயர் டேங்கோ” வில் தென்னமெரிக்காவின் பொலிவியா தேசமே பின்னணி! மாமூலான சீக்ரெட் ஏஜெண்ட் அல்ல இவர்; ஆனால் அதிரடிகளுக்குப் பஞ்சமே வைக்காதவர்! செம ரம்யமான சித்திரங்களும், கலரிங்கும் இந்த ஆல்பத்துக்கும் / தொடருக்கும் மெருகூட்டுகின்றன!

ஆக ஒருவழியாய் FFS சார்ந்த திட்டமிடல்கள் ஜுனில் இறுதிவடிவம் கண்டிருக்க, மொழிபெயர்ப்பினை யாரிடமும் ஒப்படைக்காது பகாசுரனாய் நானே பணியாற்றிடுவதென்று தீர்மானித்தேன்! So தொடர்ந்த ஒன்றரை மாதங்களில் தொலைந்து போன தூக்கங்களின் மத்தியில் TANGO  நீங்கலாக பாக்கி சகலப் பணிகளையும் நிறைவு செய்திட எப்படியோ சாத்தியப்பட்டது! And here we are now!!

மேற்படித் திட்டமிடல்களில் கதைகளிலோ; கதைத் தேர்வுகளிலோ எவ்வித மாற்றங்களும் இருந்திடப் போவதில்லை; they are set in stone ! ஆனால் இந்த அட்டைப்பட அணிவகுப்பு விஷயத்தில் தான் என்னுள் முழுசாய்த் தெளிவில்லை ! இது வரையிலுமான 456 அட்டைப்படங்களும் இதழினில் 52 பக்கங்களில் வைத்திட நினைத்திருந்தேன் தான் &அதன் பொருட்டு   நீங்களுமே என்னைப் போலவே ஆர்வமாக இருப்பீர்களென்று எண்ணியிருந்தேன் ! ஆனால் அதற்கென சமவிகித எதிர்ப்பு பதிவாகிட, அதனை புக்கினில் ஒரு அங்கமாக்கிடும் தீர்மானத்தை drop பண்ணியாச்சு ! அதே சமயம் "வேணும்" என்போரின்  மத்தியிலும் நிறையவே மாறுபட்ட எண்ணச் சிதறல்கள் !! "A4 சைசில் வேணும் ; ஒரிஜினல் சைசில் வேணும் ; முன்னும், பின்னும் சேர்த்தே வேணும் ; அட்டையில்லாத பக்குகளுக்கு இவற்றை ராப்பர்களாக்கிக் கொள்வோம் !" etc etc என்ற ரீதியினில் !! ஆனால் அதையெல்லாம் நடைமுறை செய்திட அபத்தமானதொரு பட்ஜெட் அவசியமாகிடும் என்பதால் - that's a total no - no too ! So 52 பக்க பிரத்யேக தனி இதழ் ; பக்கத்துக்கு 9 ராப்பர்கள் எனும் thumbnail format ; ரூ.60 விலை ' தேவையெனில் வாங்கிக் கொள்ளலாம் என்பதே திட்டமிடலாக இருந்திடும் ! So புக்கோடே சேர்த்தே இல்லியா ?? என்ற விநாவல்கள் வேணாமே - ப்ளீஸ் ?! நேற்றிங்கே பதிவான DEFINITE NO-க்களை உதாசீனம் செய்திட இயலாது தானே guys ? 

So 11 அத்தியாயங்கள் கொண்டதொரு பாகுபலி இதழின் திட்டமிடல் இதுவே! For sure, “ப்ச்ச்… இதுக்கு தான் துரைப்பாண்டி பில்டப்பாக்கும்?! ஐயே… இந்தக் கதைகள்லாம் ரொம்ப சுமாராச்சே? எனக்கு முன்னமே தெரியுமே!” என்று உதட்டைப் பிதுக்க ஆர்வலர்கள் ஆரவாரமாய் இன்று முதல் கிளம்பிவிடுவர் என்பது தெரிந்த சமாச்சாரமே ! More power to them! ஆனால் கலரில் இந்த ஆக்ஷன் அதகளங்களை – ரகரகமான தேசங்களின் பின்னணியில் பார்க்கும் அனுபவம் அட்டகாச ரகம் என்பது எனக்குத் தெரியும்; ஜனவரியில் உங்களுக்கும் தெரிந்திடும்! So நவம்பரின் நடுவாக்கிலேயே அச்சுக்குத் தயாராகி விடுவோம் – நடப்புப் பணிகளுக்குச் சேதங்களின்றி!

And முத்திரை பதிக்க விழையுமொரு ஆல்பத்தில் நமது முதுகெலும்பாகிய உங்களின் முத்திரையின்றிப் போனால் ரசிக்காதே?! So – சந்தாவினில் இணைந்திடும் சகல நண்பர்களும் தங்களது ஃபோட்டோக்களை அனுப்பி வைத்தால், இந்த hardcover ஆல்பத்தின் முதல் பக்கத்தில் அவற்றை அச்சிட்டுவோம்! It will be your very own souvenir on a landmark occasion! என்ன ஒரே விஷயம்: டிசம்பர் 5-க்கு முன்பாய் உங்கள் போட்டோக்கள் அவசியமாகிடும்!

"சந்தா கட்டாதவன்லாம் மனுஷனா தெரியமாட்டானா?" என்று உடனே குரல் உசத்த எண்ணும் புயச்சீப் புயல்களுக்கு சற்றே 'ப்ரேக்' தந்த மாதிரியும் இருக்குமென்பதால் – சந்தாவில் இணைய இயலா நண்பர்களுக்குமே இந்த ஆப்ஷன் உண்டு – இந்த இதழுக்கு மட்டும் ரூ.1299 (கூரியர் சேர்த்து) முன்பணம் அனுப்பி, முன்பதிவு செய்திடும் பட்சத்தில்! அவர்களுமே முன்பதிவு செய்திட இறுதித் தேதி டிசம்பர் 5 !

Phew!! ஒரு மாதிரியாய் ஒரு  டஜன் பக்கங்களில் ஒரு இதழை விவரித்து விட்டாயிற்று!! இனி let’s move on the rest of the stuff !

2022-ல் இன்னொரு highlight – “KENYA” இதழாகவே இருந்திடவுள்ளது என்பதில் எனக்குத் துளியும் ஐயங்களில்லை! கொரோனா இடர்கள் குறுக்கிட்டிராவிடின் 2 வருஷங்களுக்கு முன்னரே களம் கண்டிருக்க வேண்டிய தொகுப்பு இது; லேட்டானாலும் லேட்டஸ்டாய் கோடை மலராய் களம் காண்கிறது இந்த 230 பக்கத் த்ரில்லர்!

தொடரவுள்ள இதழ்களின் பெரும்பான்மை தம்மைத் தாமே தேர்வு செய்து கொள்கின்றன என்று தான் சொல்வேன்! ஆக்ஷன் ஜானரில்!

- க்ளாஸிக் ரிப்போர்டர் ஜானி

- தோர்கல்

- SODA

- ட்ரெண்ட்

- மார்ட்டின்

- மாடஸ்டி

- க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட்

- டெட்வுட் டிக்

ஆகியோர் தலா ஒரு ஸ்லாட்டைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்! ட்ரெண்ட் பற்றிய சந்தேகம் மெலிதாய்த் தலைதூக்கியிருந்தது தான்; ஆனால் “பகலறியா பூமி” தந்த ஊக்கம் இந்த சிகப்புச்சட்டை நாயகரை ஆட்டோமேடிக்காக உட்புகுத்திட உதவியது!

இளவரசி மாடஸ்டியின் ஸ்லாட்டுக்கோ ஒரு நெடுங்கால உத்திரவாதம் தந்துள்ளேன் & நடப்பாண்டின் “வெனிஸ் படலம்” சாகஸத்திலும் அம்மணி did well என்பதால் – அவரது தேர்வும் சுலபமானது! தவிர, ப்ளைசியையும், பாண்டையும் இணைக்கும் அந்த முயற்சியானது விற்பனையில் சோபித்த காரணத்தால் B&B ஸ்பெஷல் இனியொரு ரெகுலர் feature ஆகிடவுள்ளது! So க்ளாஸிக் ஜேம்ஸ் பாண்ட் 007 – இளவரசியின் தோள்களில் உப்பு மூட்டை!

டெட்வுட் டிக்கோ – “தேர்வு பண்றியா? சங்கைக் கடிக்கவா?” என்று மிரட்டும் தில்லை ஒரே இதழில் பெற்றிருக்க – “சரிங்க ஆபீஸர்!” என்று அவருக்கும் கேட்டைத் திறந்து விட்டாச்சு!

So ஆக்ஷன் ஜானரில் ட்யுராங்கோ நீங்கலாய் பாக்கிப் பேர் சகலமும் ஆஜர்! ட்யுராங்கோ தொடர் நிறைவுற்றதால் அவருக்கு இனி மனங்களில் மட்டுமே இடம் என்பதைச் சொல்லவும் வேணுமா – என்ன ?

கார்ட்டூனைப் பொறுத்தவரையிலும்:

- லக்கி லூக் 

- சிக் பில்

- ‘எலி‘யப்பா (who's this ?????)

- ப்ளூகோட்ஸ்

- மேக் & ஜாக்

ஆகியோர் மாத்திரமே இடம்பிடிக்கின்றனர்! க்ளிப்டன் தாத்தாவுக்கு இந்த ஒற்றை வருஷம் ப்ரேக் தந்து விட்டு, 2023-ல் மறுக்கா யோசிப்போம் அவரது தேர்வு பற்றி! ஹெர்லக் ஷோம்ஸ் தொடரிலோ ஒரேயொரு சிறுகதை மட்டுமே மீதமுள்ளது என்பதால் அவரை உள்ளே நுழைக்க வழியில்லை! So நடப்பாண்டினில் extra ஆகிடும் சிரிப்புப் பார்ட்டி - "எலியப்பா" மட்டுமே ! இவரொரு சர்க்கஸ் யானை !! அங்கிருந்து தப்பி ஊருக்குள் புகுந்திட, அதற்குத் தஞ்சம் தருகின்றனர் குட்டீஸ் சிலர் ! வீட்டுக்கே கூட்டிப் போய் எளியப்பாவைப் பாத்துக்கிட்டு, தொடர்ந்திடும் ரகளைகள் 6 பக்க குட்டி சிரிப்பு வெடிகள் ! And இவை ரெகுலர் தடத்தில் அல்லாது வருகின்றார் ! அது பற்றி பதிவின் இறுதியினில் ! 

இன்னொரு சுவாரஸ்யம் - இன்னொரு கதம்ப இதழுடனான "முத்து கோடை மலர்" !! இங்கே 1 புதியவர் & 2 பழகியவர்கள் !! புதியவரான  ரூபின் – சிகாகோ போலீஸ் டிபார்ட்மெண்டின் பெண் டிடெக்டிவ்! சித்திர பாணியில் சற்றே SODA-வைப் போல் இவர் காட்சி தந்தாலும், முழுக்க முழுக்கவே இவரொரு ஆக்ஷன் cop தான்! இவருக்குப் பின்னே ஒரு குட்டியூண்டு கொசுறு கதையும் உண்டு! ஆண்டுதோறும் பரிசீலனைகளுக்கென ஒரு குட்டி யானையில் ஏற்றும் அளவிற்கான புதுக்கதை printout-களை கோவையிலுள்ள நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் இல்லத்துக்கு அனுப்பி வைத்து, அவற்றை மேலோட்டமாய்ப் படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லக் கோரிடுவது வழக்கம். 2020-ன் இறுதியிலும் அதே வேலையைச் செய்திருந்தோம் – ஜனவரி & பிப்ரவரி வாக்கில் அவர் தரக்கூடிய inputs-களை தொடரும் இதழ்களில் நடைமுறைப்படுத்தலாமென்ற எண்ணத்தில்! துரதிர்ஷ்டவசமாய் அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமாகிப் போக, அதனில் பிசியாகி விட்டார்! And அந்த சிகிச்சையின் தொடர்ச்சி ரொம்பவே சிரமமானதாய் இருந்து போக, ஜுலை வரையிலுமே ரொம்பவே தடுமாறிப் போய் விட்டார். So இந்த இடைப்பட்ட நாட்களில் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்கென அவரை இம்சை பண்ணிடாமல் மாற்று ஏற்பாட்டினை செய்திருந்தேன்! அதன்படி ஒரு சென்னைப் பெண்மணி நமக்கு ஒத்தாசை செய்து வந்தார். ”ஆஹா… ஓஹோ..!” என்ற தரத்தில் இல்லாது போனாலும் மோசமில்லை என்றிருக்க, அதனைக் கொண்டே வண்டியோட்டி வந்தேன்! And அவருக்கு அனுப்பப்பட்டிருந்த கதைகளுள் ரூபீனின் இந்த சாகஸமும் சேர்த்தி! அவரும் எழுதியனுப்பியிருக்க, கடைசியாய் இதனில் பணியாற்ற எண்ணியிருந்தேன்! இதனிடையே நமது கோவை மொழிபெயர்ப்பாளர் நலம் பெற்றிருக்க, எனக்கு மெசேஜ் போட்டிருந்தார்! ”போர்… பெரும் அக்கப் போர்… எல்லாம் ஒருவழியாய் ஓய்ந்தது! எதையாவது எழுதணும் போலிருக்குதே!” என்றார்! எட்டும் தொலைவில் எழுபதைத் தொட்டிடவுள்ளவர்; ஆண்டவன் கருணையில் அற்புதமானமொரு குடும்பமும், அளப்பரிய செல்வமும் கொண்டவர்! நாம் தரும் பேரீச்சம்பழங்களுக்கென மாங்கு மாங்கென்று எழுதித் தள்ள சிஞ்சித்தும் அவசியமில்லாதவர்! ஆனால் கடந்த 22 ஆண்டுகளாய் இதனை ஒரு தவமாய் செய்து வரும் ஆற்றலாளர்!! ”புதுசா கதை அனுப்ப லேட்டாகும்னா சிரமப்பட வேணாம்; ஏற்கனவே என் கையிலே குவிஞ்சு கிடக்கிற புதுக் கதைகளிலேர்ந்து எதையாச்சும் எடுத்து எழுதட்டா?” என்று அவரே கேட்க; நான் ”ரைட்டு!” என்று மண்டையை ஆட்டி வைத்தேன்! மறுநொடியே – “அந்தப் பெண் போலீஸ் கதையை எழுதட்டுமா? ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது!” என்றார்! அவர் குறிப்பிட்டது ரூபீனைத் தானென்பது புரிந்தது & அந்த ஆல்பத்துக்கான மொழிபெயர்ப்பு ஏற்கனவே என் கைகளில் இருந்தது தான்! ஆனால் அவர் குரலிலிருந்த ஆர்வம் என் வாயை அடைத்தது! “ஓ.கே. மேடம்… அதைப் போட்டுத் தாக்குங்க!” என்று சொன்ன கையோடு, என்னிடம் ஏற்கனவேயிருந்த இங்கிலீஷ் ஸ்க்ரிப்டை ஓரம்கட்டி விட்டேன்! இதோ- இந்தப் பதிவுக்கு ஓரெயொரு நாள் முன்பாக கோவையிலிருந்து கூரியர் வந்துள்ளது !So இரண்டுவாட்டி மொழிபெயர்ப்பு கண்ட இந்த cop நமது மைல்கல் ஆண்டினில் மகளிர் கோட்டாவினை இளவரசியோடு திறமையாகப் பூர்த்தி செய்கிறார்!

அப்புறம் கிராபிக் நாவல் ஜானரினில் தாத்தாக்களின் ஒற்றை ஆல்பம் மாத்திரமே !

தாத்தாக்களின் தேர்வு உங்களின் வெகு சமீபத்தை வோட்டுக்களின் பலனே guys! ஓரிரு பிசிறடித்த குரல்கள் நீங்கலாகப் பாக்கிப் பேர் தாத்தாக்கள் அணிவகுப்பிற்கு வலு சேர்ப்பித்திருப்பதால், இந்தக் கிழ இளவரசர்கள் உட்புகுகின்றனர் – நம் மத்தியிலான இளவரசர்களுக்குப் பிடித்திருந்தாலும், இல்லாது போனாலும் ! கொஞ்ச காலத்துக்கேணும் அழுகாச்சிகள்; dark கதைகள் வேணாமே என்ற உங்களின் அபிப்பிராயங்களில் எனக்குமே உடன்பாடென்பதால் – கொஞ்ச காலத்துக்காவது கி.நா.தனித்தடம் will be on the backburner ! So கி.நா. ரசிகர்கள் மன்னிச்சூ !

So that leaves us with – TEX!!! தலைவாழை விருந்தின் நளபாகமே மஞ்சள்சட்டையார் தானெனும் போது, அவருக்கு எத்தனை ஸ்லாட்கள் என்பது மாத்திரமே கேள்வி! நீங்களே எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்களேன் guys! இளம் டெக்ஸ் கதைவரிசையும் தொடர்கிறது & அதன் அடுத்த ஸ்டாப் மெபிஸ்டோவுடனான மோதல் சாகஸமே எனும் போது, 2022-ன் தீபாவளி highlight அதுவாகவே இருக்கவுள்ளது – in color!! மாதமொரு டெக்ஸ் இல்லியா??? என்ற கேள்வி தொடரும் என்பது இந்த நொடியில் எனது யூகம்! And அதற்கான பதில் – பதிவின் back end-ல் உள்ளது! புத்தாண்டின் முழுமைக்கும் மாதமொரு TEX உண்டு என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிடுகிறேனே ?!

ஆக காத்திருக்கும் புத்தாண்டின் திட்டமிடல்கள் இவையே! நிஜத்தைச் சொல்வதானால் FFS தேர்வுகள் நடந்தான நொடியே அட்டவணையின் 90% முடிந்த மாதிரியிருந்தது – simply becos அதற்கொரு 1200 ரூபாய்; KENYA இதழுக்கொரு 500 ரூபாய்; அப்புறமேட்டுக்கு டெக்ஸ் இதழ்களுக்கென சுமார் ரூ.1600 எனும் போதே பட்ஜெட் மூவாயிரத்தைத் தாண்டி விட்டது! So பாக்கியிருக்கக்கூடிய ரூ.1800/-ல் சுடக் கூடிய வடைகளும் ஜாஸ்தியிருக்க முடியாது & அந்த வடைகளுமே பெரும்பாலும் தம்மைத் தாமே தேர்வு செய்து கொண்டு விடுகின்றன! Maybe “எந்த SODA ஆல்பத்தை தேர்வு பண்றது? எந்த லக்கி லூக்கைப் போடறது ?” என்ற ரீதியிலான கேள்விகள் மாத்திரமே எனக்கென எஞ்சி நின்றன! So பல விதங்களில் சுலபமான பணியே இம்முறை!

And சற்றே நிதானித்துப் பார்த்தால் – மாமூலான எனது ரிஸ்க் எடுக்கிற ரஸ்க் சமாச்சாரங்கள் இந்த அட்டவணையினில் மருந்துக்கும் இராதென்பது புரியும்! Of course – FFS-ன் முழுமையுமே புது வரவுகளே எனும் போது அவர்களின் தேர்வுகளின் பின்னணிகள் ரிஸ்க் இல்லாது போகாது தான்! ஆனால் அவை எல்லாமே நவீன யுகத் த்ரில்லர் படைப்புகளே எனும் போது – காலமாய் நாம் ரசித்து வரும் ஆக்ஷன் ஜானரினுள் ஐக்கியமாகிடச் சிரமங்களிராது என்பதே எனது யூகம்! மாறாக – பரீட்சார்த்தக் களங்கள் என்று சொல்லும் விதத்தினில் இந்த அட்டவணையினில் ஏதுமிராது என்பதே நான் அடிக்கோடிட விரும்பிய விஷயம்! இது பலருக்கு “ஷப்பாடி!” என்ற நிம்மதிப் பெருமூச்சையும், சிலருக்கு “ஷ்ஷ்ஷ்” என்ற ஏக்கப் பெருமூச்சையும் வரச்செய்திடும் என்பது புரிகிறது தான்! ஆனால் அடிப்படையில் ‘அண்ணனை எப்போ திண்ணையிலிருந்து கிளப்பலாம்? என்று ஏதேதோ காரணங்களின் பொருட்டு உஷ்ணங்கள் உலா வரும் வேளைதனில், அவர்கள் சுடப் பட்டாணிக் கடலைகளை நாமே வழங்குவானேன்? தவிர, ஒரு மைல்கல் ஆண்டின் பொழுதுகளை இயன்றமட்டுக்கு ஜாலியானதாய் அமைத்துக் கொள்ள – tried & tested ஆக்ஷன் ஜானரையே  பிரதானமாய் பயன்படுத்திக் கொள்வோமே என்று நினைத்தேன்! Of course – ஆன்லைன் புத்தக விழாக்கள் இருக்கவே இருக்கின்றன – ரெகுலர் தடத்திற்குத் தொந்தரவுகள் இன்றி எனது பல்டிகளை முயற்சித்துப் பார்க்க!


ரைட்டு… இனி வழக்கம் போலவே அந்தக் கேள்வியும் நானே… பதிலும் நானே segment!

1. இரத்தப் படலம் அடுத்த ஆல்பத்தைக் காணலியே?

- புதியது அக்டோபர் 2022ன் இறுதியில் தான் ரிலீசே ஆகிறது! So அது வரும் முன்பாய் நான் அறிவித்து வைத்து, அப்புறமாய் படைப்பாளிகளின் அட்டவணையில் தாமதம் ஏதேனும் நேர்ந்தால், இங்கே போராட்டக்களத்திற்கு ஆர்வமாய் ஆள் சேருவது தொடர்கதையாகிடும்! So அவர்கள் வெளியிடட்டும் முதலில்!

2. மாசமொரு TEX ஏன் இல்லே?

- பொறுமை ப்ளீஸ்… மாதமொரு டெக்ஸை நீங்கள் தரிசிக்காது, போக மாட்டீர்களென்பது எனது உத்தரவாதம்! எப்படி – எவ்விதம் என்ற பாடுகளை என்னிடம் விட்டு விடுங்களேன் guys! Have a set of plans in place for that !! உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையம் வித விதமாய் interpret செய்யப்படும் வேளைகளில், பேச்சைக் குறைப்பதில் தப்பில்லை தானே? So செயலில் பார்த்து விட்டுப் போவோமே ?

3. கார்ட்டூன் அம்புட்டுத் தேனா?

துரதிர்ஷ்ட நிஜம்! தொடரும் காலங்களில் லக்கி; சிக் பில்; ப்ளூகோட்ஸ் & மேக் & ஜாக் என்ற வட்டத்துக்குள் மட்டுமே நீச்சலடித்தாக வேண்டும்! முட்டி, மோதிப் பார்த்து விட்டேன் guys கடந்த 10 ஆண்டுகளில் !! இதற்கு மேல் வலுவில்லை என்னில் !!

4. க்ளாஸிக் நாயகர்கள் யாருமே கிடையாதா?

Smashing 70’s ஒரு கணிசமான கதைக்களஞ்சியமாய் உலா வரவுள்ளது 2022 & 2023-ல்! அங்கே மறுபதிப்புகள் + புதுசு என்று எல்லாமே இருந்திடும் – solid ஆன க்ளாஸிக் நாயகர்களுடன்! ஆகையால் பிரிட்டிஷ் க்ளாஸிக் நாயக உலாவிலிருந்து அமெரிக்கக் க்ளாஸிக் நாயக உலாக்களுக்கு for a change மாறித் தான் பார்ப்போமே?!

5. மாயாவி???

முதல் முத்து காமிக்ஸ் இதழான “இரும்புக்கை மாயாவி” ஆல்பத்தை அதே சைஸில் வெளியிடலாமா? என்று சில காலம் முன்பாகக் கேட்டிருந்த போது செம lukewarm response! யாருமே கண்டுகொண்டதாகவே தெரியவில்லை!

இதுவரையிலும் மறுபதிப்பு கண்டிராத “ஒற்றைக் கண் மர்மம்”; “ப்ளாக்மெயில்”; “பறக்கும் பிசாசு” போலான மாயாவி கதைகளின் ஒரிஜினல்களைப் படைப்பாளிகள் ரெடி செய்து முடிக்கும் வரையிலும் அவற்றை மறுபதிப்பிட வழியில்லை! So மாயாவியைப் பார்க்க வேண்டுமெனில் – ஏற்கனவே மறுபதிப்பு கண்டவற்றுள் இருந்தே தான் நமது தேர்வுகள் இருந்தாக வேண்டும். So அரைத்த மாவையே மேற்கொண்டும் அரைக்க வேண்டாமே?! But ஒரு மைல்கல் தருணத்தினில் மாயாவி வேணுமே....என்று நினைப்பீர்களெனில், முதல் மாயாவி புக்கை ரெடி செய்திட வேணும் தான் ! What say folks ?

6. ஜேம்ஸ் பாண்ட் 2.0???

ஒற்றை டபுள் ஆல்பம்; ரூ.250/- விலையில் என்பதே இவருக்கான திட்டமிடலாக இருக்க முடியும்! ஆனால் நடப்பு அட்டவணையில் இவரை நுழைப்பதாயின் – குறைந்தபட்சம் 3 ரெகுலர் இதழ்களையாவது கழற்றி விட வேண்டி வரும்! ஏற்கனவே இதழ்களின் மொத்த எண்ணிக்கை குறைச்சலாக உள்ள இந்த வேளையில் மேற்கொண்டும் குறைந்திட வேண்டாமே என்று ஜேம்ஸ் கதைகளை கையில் இறுகப் பிடித்துக் கொண்டு காத்துள்ளோம் – 2023-க்கென!

7. உயிரைத் தேடி…???

“உயிரைத் தேடி” கலரில் தயாராகி வருகிறது! தயாரான முதல் தருணத்தில் மொட்டை மாடியில் ஒரு புக் ஃபேர் போட்டுத் தாக்கிடலாம்! Again 2022-ன் agenda-வில் தவறாது இடம்பிடித்திடும்!

8. ஜம்போ சீஸன் 5??

அநேகமாய் Smashing 70’s நிறைவுறும் வரையிலும் ஜம்போவின் அடுத்த சீஸன் on hold இருந்திட வேண்டி வரும்! பணியாற்றவும் சரி; படிக்கவும் சரி; செலவிடவும் சரி 2022-ன் அறிவிப்புகளே தேவைக்கதிகம் என்ற எண்ணம் எனக்கு!

9. சந்தாப் பிரிவுகள்?

- எப்போதும் போலவே ஒரு `all-in` சந்தா!

- டெக்ஸ் இல்லாததொரு சந்தா!

என 2 பிரிவுகள் இருந்திடும்! இது தவிர-

“இல்லே… எனக்கு இதெல்லாம் சுகப்படாது; இஷ்டப்பட்டதை மட்டுமே நான் வாங்கிக்கணும்!” என்பது உங்களின் ஆசையா? பிரச்சனையே இல்லை தான்; ரூ.3000/- அனுப்பி வையுங்கள் – உங்கள் கணக்கில் வரவு செய்து, சந்தா  நம்பர் ஒன்றையும் தந்து விடுவார்கள்! அந்தந்த மாதங்களில் நீங்கள் சாவகாசமாய் ஃபோன் செய்து “இது வேணும்; இது வேணாம்!” என்று சொன்னால் போதும்; புக்ஸ் அதற்கேற்ப அனுப்பிடப்படும்! உங்கள் கணக்கிலும் புக் கிரயங்கள் + கூரியர் கட்டணங்கள் கழிக்கப்பட்டு மீதத் தொகை முன்எடுத்துச் செல்லப்படும்! So “பிடிக்காததைத் தலையிலே கட்டிப்புட்டானுங்க” என விசனங்களுக்கு அவசியங்கள் இராது!

என்ன ஒரே கண்டிஷன் – ரெகுலர் டெஸ்பாட்ச் தினத்தன்றே இதனையும் செய்திடல் சாத்தியமாகிடாது! அது நிறைவுற்ற மறுநாளில் இந்தச் சந்தா கையில் எடுக்கப்படும்!

10.சீனியர் எடிட்டர் ???

"அந்தியும் அழகே.." என்று புத்தாண்டின் 12 மாதங்களுக்கும் சீனியர் எடிட்டர் தனது நினைவுகளைத் தட்டித் தர முயற்சிக்கவுள்ளார் - விலையில்லா சிறு இதழினில் ! 

ரைட்டு… இதற்கு மேலும் எழுதிக் கொண்டே போனால், டைப்படிப்பவர் சட்டையைக் கிழிப்பதும், வாசிப்போர் பாயைப் பிராண்டுவதும் நிகழக்கூடுமென்பதால் இங்கே ‘சுபம்‘ போட்டு விட்டுக் கிளம்புகிறேன்!

Of course – தொடரும் பொழுதுகளில் இந்த அட்டவணையின் நிறை + குறைகள் Surf எக்செல் போட்டு அலசிடப்படும் என்பதில் ஐயங்களில்லை எனக்கு! பார்வைக் கோணங்களுக்கேற்ப அவை ஏற்படுத்தக் கூடிய தாக்கமும் மாறுபட்டிடும் என்பதும் புரிகிறது! So உங்களின் take எதுவாகயிருப்பினும் – உஷ்ணமின்றிப் பதிவிடுங்களேன் guys!

And “எண்ணிக்கை ரொம்பக் குறைச்சல்; ஏமாந்து போனேன்!” என்ற ரீதியிலான பதிவுகள் வேணாமே ப்ளீஸ்? காத்திருப்பது கலரில் 2000+ பக்கங்கள் + black & white-ல் 2000+ பக்கங்கள் எனும் போது, மாதந்தோறும் சராசரியாய் 333 பக்கங்கள் காத்துள்ளன – உங்கள் வாசிப்புக்கென! அவற்றோடு ஜம்போ சீசன் 4 -ல் எஞ்சியுள்ள இதழ்கள் ; Smashing 70`s இதழ்கள்; திடீர் திடீரென்றான புக்ஃபேர் இதழ்கள் என்பனவற்றையும் சேர்த்துக் கொண்டால் இன்னமும் எண்ணிக்கை எகிறும்! இம்முறை புத்தக எண்ணிக்கை குறைவென்றாலும் பெரிய புக்ஸ்; குண்டு புக்ஸ் கணிசமோ கணிசம்! So ஆண்டவன் அருளோடு அடுத்த பயணத்துக்கு ரெடியாகிக் கொள்வோமா folks?

And before I sign out, எலியப்பா பற்றி !! இதோ - நீங்களே பார்த்துக் கொள்ளுங்களேன் !! 

Bye all! See you around!! And thanks for reading this !! 

சந்தாக்களின் ஆன்லைன் லிஸ்டிங்களும் போட்டாச்சு : And புறப்படும் முன்பாய் இதோ :

322 comments:

 1. ஐயாம் தி பர்ஸ்ட் ஆப் த பர்ஸ்ட் ஆப் த பர்ஸ்டு!😁

  ReplyDelete
 2. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 3. Replies
  1. அனுப்பீட்டேங்க போட்டோவ...

   Delete
  2. 5300/-ன்னு நெனச்சேன்...

   5100/- .

   Delete
  3. அனைவரையும் விடாம கைய புடிச்சி கூட்டீட்டு போறீங்கன்னு நெனைக்கிறேன்...

   இச்சிறு வட்டத்தில் யாருமே போகவிட்றாத உங்க பண்பான அன்புக்கு நெஞ்சார்ந்த நன்றி...

   வயசாயிடிச்சோ சார்...

   ரெம்ப...நிதானம்...

   இது தானத்தை விட பெரியது...

   Keep it up my dear sir...

   J

   Delete
  4. Absolutely - all are friends in this small world of Tamil Comics !!

   Delete
  5. ஆனா...

   நெறைய நாளைக்கி முந்தியே Wish as you buy முடிவு பண்ணீட்டு... கெக்கெ பிக்கேன்னு இருந்துருப்பாப்டீ நம்மாளு...

   Delete
  6. ட்டூ நாட் ட்டூ ட்டூ...

   டுட்டுடு டுட்டு ட்டூ ட்டூ...

   2022

   Delete
  7. கென்யா...எதிர்பார்த்த சப் ரைஸ் தான்...நாட் ஸர்ப்ரைஸ்...

   Delete
 4. யாஹூ 💃🏻💃🏻💃🏻
  .

  ReplyDelete
 5. ஹைய்யா மெஃபிஸ்டோ..😍😍

  ReplyDelete
 6. ஸாகோர் -நான் எதிர்பார்க்கவே இல்லை.

  நன்றி சார்.

  ReplyDelete
 7. *இரு hardcover ஆல்பங்களுமாய்ச் சேர்த்து மொத்தம் 582 பக்கங்கள் & ரூ.1199 விலை என்பதே திட்டமிடல் !*

  Yahoo 💃🏻💃🏻💃🏻

  ReplyDelete
 8. ஸ்டீலுக்கு பாட்டுக்கு இன்னா ஒரு சக்தி. படிச்சிட்டு வரேன்.

  ReplyDelete
 9. எவ்வளவு பெரிய பதிவு ..
  படிச்சிட்டு வரேன் சார்..

  ReplyDelete
 10. *And முத்திரை பதிக்க விழையுமொரு ஆல்பத்தில் நமது முதுகெலும்பாகிய உங்களின் முத்திரையின்றிப் போனால் ரசிக்காதே?! So – சந்தாவினில் இணைந்திடும் சகல நண்பர்களும் தங்களது ஃபோட்டோக்களை அனுப்பி வைத்தால், இந்த hardcover ஆல்பத்தின் முதல் பக்கத்தில் அவற்றை அச்சிட்டுவோம்! It will be your very own souvenir on a landmark occasion! என்ன ஒரே விஷயம்: டிசம்பர் 5-க்கு முன்பாய் உங்கள் போட்டோக்கள் அவசியமாகிடும்!*

  செம்ம சார் ஸ்டார்ட் மியூசிக் 💃🏻💃🏻💃🏻
  .

  ReplyDelete
 11. சந்தா 5100 கட்டியாச்சுங்கோ. ஸ்வீட் எடு. கொண்டாடு.

  ReplyDelete
 12. // தாத்தாக்களின் தேர்வு உங்களின் வெகு சமீபத்தை வோட்டுக்களின் பலனே guys! ஓரிரு பிசிறடித்த குரல்கள் நீங்கலாகப் பாக்கிப் பேர் தாத்தாக்கள் அணிவகுப்பிற்கு வலு சேர்ப்பித்திருப்பதால், இந்தக் கிழ இளவரசர்கள் உட்புகுகின்றனர் //

  செயலரைப்பற்றி நீங்க சொல்லவில்லைதானே சார் 🤷🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️
  .

  ReplyDelete
  Replies
  1. சொல்லலியே....நான் சொல்லவே இல்லியே !

   Delete
 13. I have sent the payment of Rs.5100 @ 19.28 PM via GPAY. HAVE A WONDERFUL HOLIDAYS..REGARDS S.GOPINATH

  ReplyDelete
 14. முத்து fiftyயில்... பழைய ஹீரோக்கள் இல்லாத்தில் வருத்தமே..் இருப்பினும் S70யை நினைத்து ஆசுவாசபடித்திக் கொள்கிறேன்...

  என் பெயர் டேங்கோ.... என் பெயர் லார்கோ... போலவே உள்ளதே...!!!
  இதை சற்றே மாற்ற முடியாதா...!!?

  AKK

  ReplyDelete
  Replies
  1. தோர்கல் ; ஜானி ; சிக் பில் தாண்டிய பழைய நாயகர்கள் என யார் உள்ளனர் சார் ? மாயாவி & லாரன்ஸ் டேவிட் தாண்டி ?

   Delete
 15. ஹைய்யா...

  ஸாகோர் வருகிறாரா.!?

  😍😍😍😍😍😍😍

  ReplyDelete
 16. மெஃபிஸ்டோ!
  இன்ப அதிர்ச்சி!!

  ReplyDelete
 17. முத்து 50 ல் புதிய நாயகர்கள்!
  இதுகூட நல்லாருக்கே!!

  ReplyDelete
 18. எடிட்டர் சார்...

  பதிவை முழுதாகப் படித்துவிட்டேன்.! பரம திருப்தியானதொரு அட்டவணை.!

  ஒரேயொரு சிறு வருத்தத்தைத் தவிர.. உங்களுக்கே தெரியும்.. கார்டூன் எண்ணிக்கைதான் அந்த வருத்தம்..! ஆனால் யதார்த்த நிலவரம் புத்திக்கு உறைப்பதால்.. ஏற்றுக்கொள்கிறேன்.!

  மொத்தத்தில் திருப்தியானதொரு அட்டவணை சார்.!

  தொப்பித் தூக்கல்கள்....!

  ReplyDelete
 19. டியர் எடிட்டர் 

  நண்பர் யாழிசை செல்வா அவர்களின் கருத்துக்களின் சாரத்தை உள்வாங்கி (அதனால்தான் என்று சொல்ல வரவில்லை) அனைத்துப் பிரிவினரும் மகிழும் வண்ணம் 3000 ரூபாயில் என் - காமிக்ஸ் - என் உரிமை சந்தா அறிமுகப்படுத்தியதற்கு - hats off !

  அனைவரின் கருத்துக்களும் உள்வாங்கப்படுகிறது என்பதை நண்பர்கள் உணர்ந்தால் சரி !

  ReplyDelete
  Replies
  1. நண்பர் யாழிசை செல்வா 
   உங்கள் பக்கமிருந்து உங்கள் புரட்சி வென்று விட்டதாயும் எடுத்துக்கொள்ளலாம் :-)

   Delete
  2. என்னோட தீர்க்க தரிசனம் பற்றி mention நஹியா சார் ? புரட்சிக்கு ஒரு மாசம் முன்னமே சந்தாப் பிரிவோடு தயார் ஆகிட்டோமே !!

   Jokes apart - "ஒரு தோழனின் கதை" நிறைய பாசிட்டிவ் & நிறைய காரம் கொண்ட விமர்சனங்களை ஈட்டிய பொழுதே தீர்மானித்திருந்தேன் - இது போலொரு buy as you please சந்தாவினை அறிமுகம் செய்திட ! In fact அதற்கென ரூ.999 ; ரூ.1999 ; ரூ.2999 - என 3 வெவ்வேறு லெவெல்களும் தந்திட விரும்பினேன் ! ஆனால் நம்மாட்கள் நொந்து நூடுல்ஸ் ஆகிப் போய்விடுவார்கள் என்பதால் - ஒரே லெவல் போதுமென்று தீர்மானித்தேன் !

   Delete
  3. // அனைவரின் கருத்துக்களும் உள்வாங்கப்படுகிறது என்பதை நண்பர்கள் உணர்ந்தால் சரி ! //
   அதே,அதே...

   Delete
 20. மொத்தத்தில் செம்ம சார் அனைத்து தரப்பினரையும் மனதில் வைத்து யோசித்தி களமிறக்கியிருக்கீர்கள் 👌🏼👍🏼🙏🏼💐💐💐

  கடேசியா அந்த எலியப்பாவும் ஸாகோரும் பைனல் டச்சா கலக்குறாங்க 💃🏻💃🏻💃🏻

  மி ஹேப்பி அண்ணாச்சி 💃🏻💃🏻💃🏻
  .

  ReplyDelete
 21. எடிட்டர் சார். சந்தா 5100 கட்டிவிட்டு, வாட்ஸ்அப்பிலும் மெஸேஜ் அனுப்பிவிட்டேன். verify செய்து கொள்ளவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்குப் பிடித்ததையும் , பிடிக்காததையும் சுட்டிக் காட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் சார் !

   Delete
  2. நான் இன்னும் பதிவை முழுமையாக படிக்கவில்லை சார். சந்தாத் தொகை அட்டவணையை மட்டும் முதலில பார்த்துவிட்டு பணம் அனுப்பினேன். இன்று Night Shift duty. எனவே அப்போது தான் நிதானமாக படிக்க வேண்டும். மேலும் தங்கள் வெளியீடுகளில் எனக்குப் பிடிக்காதது என்பதே கிடையாது.

   Delete
 22. செம்ம Edi Sir..கலக்கிட்டீங்க..

  ReplyDelete
 23. டியர் எடிட்டர் 

  நடப்புக்காலத்துக்கேற்ற சந்தா என்பதில் சந்தேகமில்லை !
  பெரும்பாலானோரைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

  Winning Strike is the YCYU option regardless of the toll it nets.

  Alfa ஆல்பங்கள் சற்றே தூக்கலான எண்ணிக்கையில் உள்ளது - பதிப்புலக நியாயங்கள் எனக்குத் தெரிந்திருக்க அவசியமில்லைதான். மற்றபடி - repeating again - காலத்துக்கேற்ற திட்டமிடல் !

  Way to go !

  ReplyDelete
  Replies
  1. Alpha முதல் சாகசம் 3 அத்தியாயங்கள் கொண்டது சார் ; so in effect 139 பக்கங்கள் ஒற்றைக் கதையே !

   அதற்குப் பின்பான சிங்கிள் ஆல்பம் 46 பக்க சிங்கள் ஷாட் மட்டுமே !

   Delete
 24. // இந்த FFS இதழில் புதுவரவுகள் எல்லோருமே refreshingly different! //
  எதிர்பார்க்கவே இல்லை சார்,முத்து 50 ஸ்பெஷலிற்கு முற்றிலும் புதிய நாயகர்களா...
  எப்படி பிஸ்டலுக்கு பிரியா விடை எதிர்பார்ப்பில்லாமல் வந்து அதிரிபுதிரியா வந்து கலக்குச்சோ அதே மாதிரி இதுவும் கலக்கும் என்று நம்புகிறேன்,தில்லான முடிவு சார்,வாழ்த்துகள்...

  ReplyDelete
 25. Dear Editor,
  U are inspiring as always!
  Just like how u brought new vision to lion comics while muthu was going strong, u have made bold choices for FFS( first month first show special😀) instead of relying on old but fading heroes.AM ALL IN For ONOC sandha and have just made money transfer noe.Supporting u always with no prejudices.Happy to see fresh look of 2022 comics with fresh blood infused along with regular good performers.Only 6 tex books.Seems low but u have promised 6 more .Happy about it.Eager 2 read ONOT, Kenya.Long awaited though.Eager to know Uyirai thdei release.Zagor seems fresh and good, waiting to know when it will come.2022 - Golden jubilee year choices
  are great.All the best.
  Regards
  Arvind

  ReplyDelete
 26. Dear Editor,
  Sexton blake stories and wing commander george stories often quoted by other comic lovers - is there a chance of reprint?
  I was a fan of manidha erimalai irumbu kai norman, any chance there too?
  Just a query.
  Regards
  Arvind

  ReplyDelete
  Replies
  1. Sexton Blake is possible there ; there have been 2 stories published recently.

   Wing Commander maybe after we see how Smashing 70's fare !

   Delete
 27. அறிமுகங்கள் அருமையான அணிவகுப்பு சார் சூப்பர்..கதைதேர்வுக்கு அதிக சிரத்தை எடுத்தது கண்கூடாக தெரிகின்றது சார்.. நன்றிகள்...

  ஏதாவது ஒரு ஸ்பின் ஆப் வரும் என எதிர்பார்த்தேன் சிறிய ஏமாற்றம்.

  தீபாவளி மலர் மெபிஸ்டோவுடன் வண்ணத்தில் அருமை.

  முத்து 50 செம்மையான விருந்து
  smashing 70 + புதுமைக்கூட்டணி நிச்சயம் வெல்லும்

  மொத்தத்தில் என்னைப்பொறுத்தவரை திருப்தியாக உள்ளது...

  சீனியரின் மாதமாத சந்திப்பு அதற்க்காகவே ஒரு ராயல் சல்யூட் அவருக்கு...

  ReplyDelete
 28. முத்து 50 இதழின் விலையை 1200 என கணித்திருந்தேன், ஒரு ரூபாய் குறைத்து 1199 என ஆசிரியர் நிர்ணயித்து விட்டாரே,

  ReplyDelete
 29. சார், YCYU சந்தாதாரர்களுக்கு மற்ற சந்தாவில் உள்ள benefits எல்லாம் கிடைக்குமா? eg small free booklets

  அதோடு, ஸ்மாஷிங் 70 date extend ஆகுமா?

  ReplyDelete
 30. Senior editor ன் நினைவலைகளுக்கு இப்போதே Waiting

  ReplyDelete
 31. அன்பு ஆசிரியருக்கு,
  அன்பு ஸ்நேகங்களுக்கு...

  ஹப்பா....மூச்சு வாங்குது சார்.
  பல ப்ளஸ்,பல மைனஸ்.
  சொல்லபோனா மைனஸை ப்ளஸ்ஸின் தேர்வு வென்று விட்டது சார்.

  கடந்த சில மாதங்களாக பதிவுகளில் நடந்த பல விவாதங்கள் அனைத்துக்கும் விடை சொல்லி விட்டீர்கள். "இதுதான் இப்படித்தான், மறுபடி மறுபடி அதேயே கேட்டு, மனுசன அடுத்த வேலைக்கு போகாம பண்ணீராதீங்கப்பு" என.

  புதிய அறிமுகங்கள் த்ரில்லராக,ஆக்சனாக வருவது மகிழ்ச்சியே.
  அட்டவணை தேர்வுகளுக்கு(ஒருசிலது தவிர) மற்றவைகள் எதிர்பார்த்ததை விட டாப்.
  இந்த வருடம் லயன்400 வந்தப்ப கூடவே மற்றவை(புக்ஃபேர் அது இது என) எப்படி மகிழ்வித்தனவோ, அதே போல முத்து 50++++++++ என அதிரடியான அறிவிப்புகள்.
  அருமை.

  சந்தாவில் வராதவர்களுக்கு,முத்து 50ல் ஃபோட்டோ இடம்பெறதா?

  கடைசி அறிவிப்பு அருமை.அந்த 3000 ரூபாய் ஆஃபர்.நல்ல சலுகை. வேண்டுமென்ற இதழ்களை மட்டும் பெற்றுக் கொள்ளலாம்.
  மீதியை எப்படி வேணாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
  நல்பதிவு+விபரங்கள்.
  மீண்டும் அடுத்த பதிவில் 🌹..

  ReplyDelete
  Replies
  1. //சந்தாவில் இணைய இயலா நண்பர்களுக்குமே இந்த ஆப்ஷன் உண்டு – இந்த இதழுக்கு மட்டும் ரூ.1299 (கூரியர் சேர்த்து) முன்பணம் அனுப்பி, முன்பதிவு செய்திடும் பட்சத்தில்! அவர்களுமே முன்பதிவு செய்திட இறுதித் தேதி டிசம்பர் 5 !//

   Delete
  2. அருமை சார்.💕💕💕💕💕

   Delete
 32. அட்டவணை ஸ்பெஷல் கவனத்தை உண்டுபண்ணுகிறது சார்.

  Fifty & forever special

  லயன் கோடை மலர்.

  லயன் ஆண்டு மலர்

  முத்து கோடை மலர்..

  தீபாவளி மலர்..

  ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா.

  அட..ஏகப்பட்ட சிறப்பிதழ்கள் உள்ளனவே..

  இது போக Smash 70ம் சேர.. 2022 ஸ்பெஷல் ஆண்டாக மாறிவிட்டது.

  ReplyDelete
 33. என்னது ....
  கார்ட்டூன் புது அறிமுகம் எதுவும் இல்லையா ??

  ReplyDelete
  Replies
  1. அந்தியும் அழகே தாத்தாக்கள் இதை சரிக்கட்டி விடுவார்கள்

   Delete
 34. // புத்தாண்டின் முழுமைக்கும் மாதமொரு TEX உண்டு என்று மட்டும் இப்போதைக்குச் சொல்லிடுகிறேனே ?! //
  ஏதேனும் ஒரு விதத்தில் இதை சரிசெய்து விடுங்கள் சார்...

  ReplyDelete
 35. அடுத்து ஆண்டு குண்டு புக் ஆண்டு...

  மெபிஸ்டோ
  ரொம்ப எதிர்பார்க்கிறேன் சார்..

  ReplyDelete
 36. பயங்கர இன்ப அதிர்ச்சி முத்து 50-ல் அவ்வளவும் புதுசுங்கறதுதான்...

  ஸ்மாஷிங் 70"s இருந்தாலுமே செம டேரிங் சார்...

  Totally unexpected ..appreciated with warmth

  ReplyDelete
  Replies
  1. பத்தாண்டுகளுக்கு முன்னே தயங்கியிருப்பின் லார்கோவே நமக்கு அந்நியமாகவே இருந்திருப்பார் தானே சார் ? அன்றைக்கே துணிந்தவன் இன்று துணியாது போவேனா சார் ?

   Delete
  2. Yes. Given the situation 10 years before, Largo was a daring initiative.

   Delete
 37. 2022 அட்டவணையை பொறுத்தவரை நிறைவாகவே உள்ளது சார்...

  ReplyDelete
 38. // தன் அடுத்த ஸ்டாப் மெபிஸ்டோவுடனான மோதல் சாகஸமே எனும் போது, 2022-ன் தீபாவளி highlight அதுவாகவே இருக்கவுள்ளது – in color!! //
  வாவ் மெபிஸ்டோவா,அருமை,அருமை...

  ReplyDelete
 39. எனக்கு கச்சிதமான கதம்பமாய் தெரிகிறது

  ReplyDelete
 40. பாலைவனத்தில் பிணம் தின்னிகள்,தலைப்பே டெரரா இருக்கு...
  அதில் டெக்ஸ் அமர்ந்திருப்பது போல் இருக்கும் ஸ்டில் ஏற்கனவே ஏதோ ஒரு சந்தா அட்டவணையில் பார்த்த மாதிரி இருக்கு...

  ReplyDelete
  Replies
  1. கதை புதுசு சார் !

   Delete
  2. சும்மா சொன்னேன் சார்,நானும் ஏதாவது சொன்ன மாதிரி இருக்கட்டுமேன்னுதான்,ஹி,ஹி,ஹி...

   Delete
 41. எல்லா தரப்பினரையும் திருப்தி பண்ணுவதில் நீங்க விஜயேந்திர பாகுபலிதான் என்பதை நிருபிச்சுட்டீங்க Edi Sir..

  ReplyDelete
  Replies
  1. கட்டப்பா மண்டையை வைத்துக் கொண்டு பாகுபலியாகிட முடியுமா சார் ? ஜாலியாக எல்லாரையும் மகிழ்விக்க முயன்று கொண்டே இருப்போம் சார் - பலன்கள் எவ்விதம் இருப்பினும் !

   Delete
  2. போற்றுவார் போற்றட்டும்.. புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்.. எல்லாம் அந்த இறைவன் செயல்.. நல்ல Strategy தான் Edi sir..

   Delete
 42. // ஜம்போ சீஸன் 5??

  அநேகமாய் Smashing 70’s நிறைவுறும் வரையிலும் ஜம்போவின் அடுத்த சீஸன் on hold இருந்திட வேண்டி வரும்! பணியாற்றவும் சரி; படிக்கவும் சரி; செலவிடவும் சரி 2022-ன் அறிவிப்புகளே தேவைக்கதிகம் என்ற எண்ணம் எனக்கு! //

  அடடே ஜம்போ சீஸன் 5 தள்ளிப் போகுதா...
  அதில் 2.0 ஜேம்ஸ்பாண்டை நுழைச்சிடுங்க சார்னு சொல்லலாம்னு நினைச்சேன்...

  ReplyDelete
 43. Dear Editor,
  U have told in detail that books are big and number of pages per month crosses 300 but still number count seems low.Used to the 4 book per month pre covid numbers.Hope some book fair specials and surprise releases make it up.
  Regards
  Arvind

  ReplyDelete
  Replies
  1. Assume 6 special book fair books for minimum AND Jumbo comics from April netting another 5 books - we are there to 3 per month. The issue is Editor has to carry all kinds of budgets in this small and passionate comics world.

   Delete
  2. கவலையே வேணாம் நண்பரே ; வாசிக்க நேரம் மட்டுமே ரெடி பண்ணுங்கள் - மீதத்தை பார்த்துக் கொள்கிறேன் !

   Delete
 44. வழக்கமான சந்தா வழியிலிருந்து கொஞ்சம் விலகி தனித்து தெரிகிறது சார்.
  புது முகங்களுக்கு M 50ல் இடம் கொடுத்தது ரிஸ்காக தெரிந்தாலும்..அதைச் சிறப்பாக தாண்டி வருவீர்கள் என்றே தெரியும்.

  முழுக்க முழுக்க ஆக்சன் ஜானரையே தேர்ந்தெடுத்திருப்பது நல்ல மாற்றம்..

  டெக்ஸ்ல் மெபிஸ்டோ வருவது சத்தியமாகவே இன்ப அதிர்ச்சி.தீபாவளி மலர் பேக்கேஸ் அற்புதமாக உள்ளது சார்.

  ஒ.நொ.ஒ.தோ..கென்யா 2022 ஜெகஜோதியாக மாற்றுவது நிச்சயம்.

  கார்டூன்கள் குறைந்திருப்பது காலத்தின் கட்டாயம்..அதையும் மீறி சம்திங் ஸ்பெஷலான அட்டவணையாக உள்ளது.

  ReplyDelete
 45. சந்தாவைப் பொறுத்தவரை 5,500/- அல்லது 6,000/- இருக்கும் என எதிர்பார்த்தேன்...
  5,100/- மட்டும் இருப்பது வியப்புதான்...

  அடுத்து தோர்கல் இருபாக சாகஸம் மட்டும் இடம்பெற்றிருப்பது சற்று ஏமாற்றமே,தோர்கல் குண்டு ஸ்பெஷலாக பார்த்தே பழகிடுச்சி...

  அடுத்து இளம் டெக்ஸ் இருபாக சாகஸம் மட்டும்தானா அடடே,முந்தைய வெளியிடுகள் 5 பாகம் 200/- என்று இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்...
  இவைகள் கடைசி நேர மாற்றத்திற்கு உட்பட்டவையாக இருப்பின் ஏதோ பார்த்து பண்ணுங்க சார்...!!!

  ReplyDelete
  Replies
  1. மெபிஸ்டோ 4 பாக இளம் டெக்ஸ் சார் !

   And நாம் படைப்பாளிகளின் ஒரிஜினல் வரிசையினில் பயணித்து வருகின்றோம் ! And இதுவே அவர்களின் தடம் !

   Delete
  2. அப்ப நான்கும் சேர்த்தே போட்டிருக்கலாமே சார் ?!

   Delete
  3. 64 பக்கங்கள் சார் ஒரு பாகம் ! போடுங்களேன் கணக்கை !!

   மெபிஸ்டோ 256 பக்கங்கள் !

   Delete
  4. ஒகே சார்...வரட்டும்,வரட்டும்...

   Delete
 46. கால மாற்றத்துக்கு தகுந்த மாதிரியான சந்தா. அடுத்த 2-3 வருடங்களுக்கு இந்த டிராக்கில் சென்று விட்டு அதற்குப் பிறகு ப்ரீட்சார்த்த முயற்சிகளை மறுபடித் தொடர முடிவு செய்தது அருமையான முடிவு.

  எங்கள் பொழுதுகளை இனிமையாக்கும் உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் என் unconditional support என்றும் உண்டு.

  மறுக்கா படிச்சிட்டு வரேன்

  ReplyDelete
  Replies
  1. பாதைக்கேற்ப பயணம் பண்ணப் பழகிக்க வேணும் தானே சார் !

   Delete
 47. Replies
  1. அதால ஏகப்பட்ட திடீர் ஸ்பெஷல்ஸ் உறுதீஈஈஈஈ...

   Delete
 48. // கால மாற்றத்துக்கு தகுந்த மாதிரியான சந்தா. அடுத்த 2-3 வருடங்களுக்கு இந்த டிராக்கில் சென்று விட்டு அதற்குப் பிறகு ப்ரீட்சார்த்த முயற்சிகளை மறுபடித் தொடர முடிவு செய்தது அருமையான முடிவு. //
  அதே,அதே...

  ReplyDelete
 49. அதே போல ஒற்றை நொடி ஒன்பது தோட்டா நீங்களும் நமது நண்பர்களூம் பெரிதாக சிலாகிப்பதால் மிகவும்
  எதிர்பார்க்கிறேன் சார்...


  நேற்றுதான் SMASHIIG70s சந்தா கட்டினேன் எனது அடுத்த வருட சந்தா தொகை தீபாவளிக்கு கட்டி விடுகிறேன் சார்.

  ReplyDelete
  Replies
  1. ஒற்றை நொடி ஒன்பது தோட்டா நிச்சயம் ஏமாற்றம் தந்திடாது நண்பரே !

   Delete
 50. யப்பா.. எதிர்பாக்காத அசத்தல் அறிவிப்புகள்.. சாகோர் படிச்சதில்லை போஸ்டர் மட்டும் பாத்ததுதான். ரொம்ப ஆர்வமா இருக்கு. சந்தா பிளானும் இந்த தடவை ரொம்ப எளிமையா இருக்கு. ஒருவழியா மேபிஸ்டோவும் வந்துட்டார்..மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. அதுக்காக மீம்ஸ் போடாம விட்டுப்புடாதீங்க பிரஷாந்த் !!

   Delete
 51. // 2022-ல் இன்னொரு highlight – “KENYA” இதழாகவே இருந்திடவுள்ளது என்பதில் எனக்குத் துளியும் ஐயங்களில்லை! லேட்டானாலும் லேட்டஸ்டாய் கோடை மலராய் களம் காண்கிறது இந்த 230 பக்கத் த்ரில்லர்! //
  அப்ப கோடை மலர் மொத்தம் இரண்டுங்களா சார்,ஹைய் சூப்பர்...!!!

  ReplyDelete
  Replies
  1. நம்மூரில் தான் வருஷத்தின் முக்கால்வாசி கோடை காலமாச்சே சார் ?!

   Delete
  2. எந்த மாசம்னாலும் போட்டுக்கலாமில்லியா ?

   Delete
  3. நானும் கவனித்தேன் அண்ணா. ஏப்ரல் மாதம் ஒன்று மே மாதம் மற்றது. கோடை மலர் எப்போது வந்தால் என்ன?

   Delete
 52. புதுமுகங்கள் கலந்து கட்டி அடிக்கிறார்கள். மிகவும் சந்தோசம்.

  நீண்ட காத்திருப்பிற்கு பிறகு ஓ நொ ஓ தோ மற்றும் கென்யா வருகிறது சிறப்பு.

  டெக்ஸ் கதைகள் தேர்வு அமர்க்களபடுத்துகிறது.

  சார் வருடத்திற்கு ஒரு முறை வரும் டெக்ஸ் மற்றும் லக்கி மறுபதிப்பு ஒரு புத்தகவிழா மலராக வருமா

  தாத்தாக்கள் தவிர வேறு க்ராபிக் நாவல் இல்லையா

  ReplyDelete
  Replies
  1. //தாத்தாக்கள் தவிர வேறு க்ராபிக் நாவல் இல்லையா//

   ரெகுலர் தடத்தினில் நஹி நண்பரே ; but சர்வீஸ் லேனில் ஓடவே செய்யும் !

   Delete
  2. போதும் இது போதும்.

   Delete
 53. Dear Editor
  I remember u showing us some great looking multiple format Tex books.10 types or Tex or something like that.Hope2 see some of those multi size multi format Tex books in 2022.Also a note onthat Tex love book for a childs welfare.
  Regards
  Arvind

  ReplyDelete
  Replies
  1. MAXI சைஸ் மாறுவதற்கே நம்மவர்கள் கண்சிவக்கிறார்களே !! டெக்ஸ் அந்த ரெகுலர் சைஸ் தாண்டி வேறெதில் வந்தாலும் nopes !

   Delete
 54. // அப்புறம் கிராபிக் நாவல் ஜானரினில் தாத்தாக்களின் ஒற்றை ஆல்பம் மாத்திரமே ! //
  2023 அல்லது 2024 இல் சூழல்கள் இயல்பாக திரும்பிய பின்னர் கிராபிக் நாவல்ஸை போட்டுத் தாக்கிடலாம் சார்...!!!

  ReplyDelete
 55. எனது அக்கா வீட்டில் பூஜையில் இருக்கிறேன். பதிவை 10 மணிக்கு மேல் தான் படிக்க முடியும். நன்றி. சந்தாவுக்கு பணம் இந்த மாதம் இறுதியில் செலுத்தி வழக்கம் போல் பயணிப்பேன்.நன்றி விஜயன் சார்.

  ReplyDelete
  Replies
  1. நமக்கும் சேர்த்து வேண்டிக்கோங்க சார் !

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. கண்டிப்பாக சார்! இதையெல்லாம் நீங்கள் சொல்லவே தேவையில்லை!
   நேற்றைய சிவகாசி கோவில் விசிடில் இதுவும் ஒரு காரணம்!

   Delete
 56. முத்து 50-க்கு சுவாரசியமான தேர்வுகள் சார், அருமை!

  சந்தா தொகை எதிர்பார்த்ததை விட சற்றே கூடுதல், ஆனால் அதில் TF&FS-ம் அடக்கம் என்பதால் ஓகே தான். வழக்கமான மாத இதழ்களின் விலையும் கூட்டப்படவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. 

  வணிக ரீதியாக உங்களை பாதிக்கக் கூடும் என்றாலும், தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொண்டு, மீதத் தொகையை அடுத்த வருடத்திற்கு முன்னெடுத்துச் செல்லும் ₹3000-க்கான சந்தா மிகச் சிறப்பான முடிவு. உங்கள் மேல் வைக்கப்படும் சிவகாசி தலக்காக்கட்டி விமர்சனங்கள் குறைந்தால் சரிதான்! இருந்தாலும் நான் மொத்த சந்தாவையும் கட்டிவிட்டு, அவ்வப்போது இங்கே வந்து கடுப்படிப்பேன், கண்டு கொள்ளாதீர்கள்! :)

  ஆங், அப்புறம்... குருவி உட்கார பனம்பழ விழுந்த கதையாய் ஸாகோர் அறிவிப்பு! மறக்காம கார்த்திக் ஸ்பெஷல்னு பேர் வெச்சிருங்க ;)

  ReplyDelete
  Replies
  1. எற்கனவே ஒரு "பவுன்சர் பனம்பழமும்" உங்க கணக்கில் உண்டு கார்த்திக் !

   Delete
 57. சந்தாக்களைப் பொறுத்த வரை முன்பு இருந்தது போல் ஏதேனும் லாயல்டி பாயிண்ட்ஸ் கொடுக்கப்படுமா சார் ?!

  அடுத்த ஆன்லைன் புத்தகத் திருவிழாவிலோ அல்லது சென்னை புத்தகத் திருவிழாவிலோ ஸ்லிப் கேஸ் பெறும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள் சார்...

  ReplyDelete
  Replies
  1. உப பதிவுக்குக் காத்திருங்க சார் !

   Delete
  2. சூப்பர் சார்...!!!

   Delete
 58. அட்டவணையை இயன்றால் தனியே அனுப்புங்கள் சார்...

  ReplyDelete
  Replies
  1. தீபாவளி மலரோடு அனைவருக்குமே உண்டு சார் !

   Delete
 59. அடுத்த ஈரோடு புத்தகத் திருவிழா ஸ்பெஷல் அறிவிப்புகள் தனியாகவா சார் ?!
  ஒருவேளை ஸாகோர் ?!

  ReplyDelete
 60. கதைத் தேர்வுகள் சந்தாவை மகிழ்ச்சியுடன், தொடர ஊக்க மளிப்பதாக உள்ளது.

  ReplyDelete
 61. சந்தா 2022 :

  எதிர்பார்ப்புகள் :

  1. MUTHU 50 S INTROS , KENYA..

  2.ஒற்றை நொடி ஒன்பது தோட்டா

  3.மாதம் ஒரு TEX (அந்த 32 பக்க கலர் சிறுகதைகள் குடுத்து மாதம் ஒன்று என்று சொன்னால் ஏற்று கொள்ள மாட்டோம் SIR ..SINCE U HAVE TOLD TO LEAVE IT TO U AM HAVING EXPECTATIONS FOR IT )

  4.ZAGOR

  ஏமாற்றங்கள் :

  1.NO TIGER (U HAVE ALREADY TOLD THE REASON .. I ACCEPT IT SIR.. இருந்தாலும் முத்து 50 CELEBRATION இல் TIGER இல்லாதது ஏமாற்றமே)

  2.NO OFF BEAT கி .நா (I UNDERSTAND UR REASON SIR ) ..

  3.BOND 2.0 .. மிக பெரிய ஏமாற்றம் இதுவே .. இந்த வருடமும் இல்லை . அடுத்த வருடமும் இல்லை .. ZAGOR நுழைத்த மாதிரி பாண்ட் 2 .௦ கும் SURPRISE ஸ்லாட் எதுவும் குடுக்க முடியுமா சார் ??

  PHOTOS IN MUTHU 50 IS A GOOD GESTURE SIR ..

  ReplyDelete
 62. நல்லவேளை ரிப்போர்ட்டர் ஜானியும்,மார்ட்டினும் ஒரு இடத்தை பிடிச்சிருக்காங்க...!!!

  ReplyDelete
 63. இரண்டு கண்கள் போதா

  ReplyDelete
 64. அதாகப்பட்டது இன்னும் 170 சொச்ச கமெண்ட்ஸ் போட்டுட்டா உப-பதிவு - அதுல இன்னும் கொஞ்சம் அறிவிப்பு இருக்குன்னு தோணுது. எல்லாரும் சீக்கிரம் வாங்கப்பா !

  ReplyDelete
  Replies
  1. நம்மகிட்ட ஸ்டீல்னு ஒரு பெரிய மாஸ் டிஸ்ட்ரக்சன் வெப்பன் இருக்கும் போது என்ன பிரச்னை.

   ஏலே ஸ்டீலு…பாட ஆரம்பிலே…

   Delete
  2. ஒரு Tomahawk மிஸைலை விட ஆபாத்தாச்சே நம்மாளின் கவித !

   Delete
  3. //அதாகப்பட்டது இன்னும் 170 சொச்ச கமெண்ட்ஸ் போட்டுட்டா உப-பதிவு//

   அதற்கு ஆசிரியரும் உதவுகிறார். அனைத்து பதில்களும் பதில் அளித்து.

   சீக்கிரம் தொட்டுவிடுவோம். நாளை உபபதிவு கண்டிப்பாக வரும் 😀

   Delete
 65. என்னது சீனியர் எடிட்டர் முத்து காமிக்ஸ் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறாரா? Wow!

  ReplyDelete
 66. Sir please add 2 times subscription payment option in online listing.

  ReplyDelete
  Replies
  1. சனியன்று போட்டு விடுவார்கள் சார் ; நாளை லீவு !

   Delete
 67. YCYU சந்தா நண்பரகள் எவ்வளவு நாட்களுக்குள் தேர்வை சொல்ல வேண்டுமென்பதை தெளிவுபட கூறி விடுங்கள் சார். 4 மாதம் கழித்து ஸ்டாக்கில் இல்லாத பொழுது தொடர்பு கொண்டால் மிகவும் சிரமம்.

  ReplyDelete
  Replies
  1. அதற்குமே திட்டமிடல்ஸ் in place சார் !

   Delete
 68. உலகத்தின் கடைசி நாளை ( after clarification)அடுத்த வருட ஏதோ ஒரு புக்பேஃர் ஸ்பெஷலா போட்டுவிட வேண்டுகோள் வைக்கிறேன் சார்!

  ReplyDelete
 69. இதழ்கள் 25,கதைகளா கிட்டத்தட்ட 32 கதைகள்
  Smashing 70`s யில் 4 கதைகள்,ஜம்போ சீஸன் 4 ல் எப்படியும் பாக்கி 2 புக்ஸ் இருக்கும்,
  அப்ப 25+4+2=31...
  கிட்டதட்ட32 கதைகள் வெச்சிகிட்டா மாசம் 3 தான்,ஆனால் பக்கங்கள் அதிகம்,அப்பப்ப ஆன்லைன் திருவிழா புக்ஸ் ஸ்பெஷல்...
  இதை எல்லாம் பேலன்ஸ் பண்ணி கரெக்டா பண்றது தான் சவாலான வேலையே...!!!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு நீங்கள் தரும் சம்பளமே அந்தச் சவால்களோடு சவாரி செய்வதற்குத் தானே சார் ?! சமாளிச்சிப்புடலாம் !

   Delete
  2. ஜம்போ சீசன் 4இல் இன்னும் 4 புத்தகங்கள் உள்ளது அண்ணா. இந்த இரண்டு மாதங்களுக்கு கிடையாது, ஜனவரி யிலும் முத்து 50 இருக்கு எனவே அப்போதும் வாய்ப்பு இல்லை. எனவே தான் அடுத்த வருடம் ஜம்போ அறிவிப்பு இல்லை என நினைக்கிறேன்.

   Delete
  3. இல்லை சார் ஜம்போ கடினம் தான் காரணம் ஸ்70 முடிந்து தான் அது ஆரம்பம் சொலிருக்கிறார் ஆனால் அடுத்த வருடம் முழுவதும் S70 இருக்கிறது.

   ஆகையால் வெட்டியான் சில்வர் பாண்ட் போன்ற ஜம்போ ஹீரோகள் இல்லாத வருடம்.

   புதுமுகங்களை வைத்து மேனேஜ் செய்துகொள்ள வேண்டும்

   Delete
  4. அண்டர்டேக்கரில் இனி புதுசாய் கதைகள் உருவாகும் வரையிலும் காத்திருக்கத் தான் வேணும் ; latest 2 பாகங்கள் தான் அடுத்த ஜம்போ வெளியீடான "வெள்ளைச் செவ்விந்தியன்" !

   Delete
 70. நல்ல அட்டவணை சார்,மகிழ்ச்சியும்,நிறைவுமாய் இன்றைய பொழுது அமைந்தது...!!!

  ReplyDelete
 71. டியர் எடி,

  ஜார்கோ, ஆல்ஃபா, சிஸ்கோ, போன்ற புதிய வரவுகள், முத்து 50 ஸ்பெஷல், சினியர் எடிட்டரின் நினைவலைகள், 2020 அறிவிப்புகள் களைகட்டுகின்றன. ஆர அமர மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு வருகிறேன்.

  ஆனால், அந்த முதல் ஸ்டீல் க்ளா Replica இதழ் கண்டிப்பாக வேண்டும்... அதை 50வது வருட இதழோடு துணையாக களம் இறக்குங்கள். சென்ற முறை அறிவித்தபோது இப்படி பதிவுக்கு நடுவில் கேட்டுவிட்டீர்கள் போல, அதனால் தான் கண்ணில்படாமல் போயிற்று... அதற்கு ஒரு தனி அறிவிப்பு போட்டால் வரவேற்பு கனகச்சிதமாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பதிவினிலேயே யாராவது ஆர்வம் காட்டுகிறார்களா என்று பார்ப்போம் சார் ! இம்முறை தெளிவாகவே எழுதியுள்ளேன் !

   Delete
 72. 007 க்கு இடம் கிடைக்காது என நினைத்தேன் அவர் இடம் பெற்றது மகிழ்ச்சி
  நன்றி ஆசிரியரே

  ReplyDelete
 73. ATR சாரின் கனிவான கவனத்திற்கு!

  முத்து 50 வெளிவரும் இப் பொன்னான தருணத்தில் மூத்த வாசகர்களில் தலையாய உங்களை ( முதல் மாயாவியை அதே ஆண்டில் அதே மாதத்தில் படித்தவரல்லவா) கனப்படுத்தும் விதத்தில் 2022 முழு சந்தா உங்களுக்கு பரிசாக அளிக்கவிருப்பதில் பெருமை கொள்ளவிருக்கிறேன்

  உங்கள் மொபைல் எண், முகவரியை abiramiselvam2@gmail.com - க்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்..

  ReplyDelete
  Replies
  1. அட்டகாசம் செனா அனா சார். மிக்க மகிழ்ச்சி

   Delete
  2. அலப்பறை தாங்கலைப்பா சாமீ !

   LOL :-) :-) :-)

   Best news of the day !

   வழக்கம்போல என்னோட இந்த கமெண்டை ATR தப்பா புரிஞ்சிக்கிட்டு பொலம்பப்போறாருன்னு பட்சி சொல்லுது !!

   Delete
  3. :-)


   வாழ்த்துக்கள் ஏடிஆர் சார்..


   பாராட்டுகள் செனாஅனாஜீ..

   Delete
  4. வாழ்த்துக்கள் ஏடிஆர் சார்.

   தரமான செயல் செல்வம் அபிராமி!

   Delete
  5. கற்ற பொழுதினும் பெற்ற பெரும் பேறு...

   Delete
 74. இந்த அட்டவணையில் 25 இதழ்கள் தான் என்பது நான் நினைத்தது தான். மாதம் இரண்டு புத்தகங்கள். கென்யா, ஒற்றை நொடி ஒன்பது தோட்டா இரண்டும் வருவது மிக்க மகிழ்ச்சி. கிராஃபிக் நாவல் ஒன்றே ஒன்று வருவது வருத்தமே. இருந்தாலும் மேலே சொன்ன இரண்டு இதழ்கள் இதை ஈடு செய்து விடும்.

  புதிய அறிமுகங்கள் 4 பேர் இந்த முறை திருவிழா தான். முத்து 50 பட்டையை கிளப்பும். இன்னும் இரண்டே மாதங்கள் மட்டுமே.

  ராம் கூறியது போல பாண்ட் 2.0 இல்லாதது ஏமாற்றமே.
  இந்த முறை அனைவருக்குமே இந்த சந்தா திருப்தி தரும் என்று நினைக்கிறேன்.

  மகிழ்ச்சி சார் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 75. 2022 புதிய ஆக்சன் ஹீரோஸ் அறிமுகங்கள், கென்யா, உயிரைத் தேடி, 70s கிளாசிக் செலக்சன், ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள், நிறைய குண்டு புக்ஸ் மற்றும் ஸ்பெஷல் இதழ்கள்,
  Bonelli நிறுவனத்தின் புதிய கதாநாயகன், தேவையானவற்றை மட்டும் வாங்கிக் கொள்ளும் புதிய சந்தை வசதி.
  முத்துவின் 50ஆவது ஆண்டு சிறப்பு மலர்,
  தீபாவளி tex என்று அதகளம் செய்து வைத்துள்ளீர்கள் நன்றி நன்றி நன்றி.

  ReplyDelete
 76. சந்தா - 2022 !
  நன்றி சார் 🙏

  ReplyDelete
 77. S70 -2023ல் யார் யார் வருவார்கள்? கண்டிப்பாக வேதாளர் - பார்ட் 2 உண்டு

  ReplyDelete
 78. முத்து 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் நான் எதிர்பார்த்தது கிளாசிக் கதாநாயகர்களை மட்டுமே, ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையில் புதிய நாயகர்களை களம் இறக்கியது உண்மையில் நினைத்துப் பார்க்காத ஒன்று. அவருக்கும் சேர்த்து ஒரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 79. After this 133 to go!

  Editor sir - be ready with upa-padhivu pleech !

  ReplyDelete
 80. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் வாரிசு வேட்டை என்று ஒரு கதை இருக்குமே எடி ஜி, அருமையான காமெடி மேளா.

  ReplyDelete
 81. முத்துஸ்பெஷல் ,kenya ,"ஒத்தை நொடி ஒன்பது todda, Lion ஆண்டு மலர் என குண்டு புக்ஸ் + ஆல்பா +சிஸ்கோ +டேங்கோ என கலக்கல்களும் +தீபாவளி மலரில் மெபிஸ்டோ உம் முத்தாய்ப்பாய் சீனியர் எடிட்டர் இன் நினைவு பொக்கிஷங்களும் தரிசிக்க உள்ளதை எண்ணி நெஞ்சம் பூரிக்கின்றது . எம்மை திருப்திப்திப்படுத்த நிறைய குட்டிகரணங்கள் அடித்திக்கின்ரீர்கள்.மிக்க நன்றிகள் சார். எனக்கு பூரண திருப்தி . போதாக்குறைக்கு Sakor வேறு .கேட்கவும் வேணுமா ? சூப்பர் சார்.

  ReplyDelete
 82. அன்பு எடிட்டர்,மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

  சந்தா 5100 தான் எனில் ஜம்போ ஏன் இருக்க கூடாது சார். S70,சந்தா இரண்டுமே இந்த வருட budget allotment எனும்போது அடுத்த வருடம் வரும் அதுவும் மார்ச்க்கு பிறகு ....தாங்கிக்கொள்ள முடியும் சார்.ஜேம்ஸ்பாண்ட் 2.0ஐ அடுத்த வருடம்வரை தள்ளி வைப்பது கடினமான முடிவு சார்.மறு பரிசீலனை செய்யுங்கள்
  . ராபின் இல்லாதது சற்று வருத்தமே

  ReplyDelete
  Replies
  1. Jumbo is there friend. Editor said he will announce in March in one of the comments last week - April start !

   Delete
  2. ஜம்போ on hold for 2022 என்று சொல்லியுள்ளார் சார்

   Delete
 83. டியர் விஜயன் சார்,
  முதலில் 2022-அட்டவணை வெளியீட்டுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சார்..
  இனி பொறுமையாக பதிவில் உள்ள வெளியீடுகளை பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 84. மிக...


  மிக...


  பொறுமையாக பதிவை படித்து முடித்தேன்..


  மிக மிக மிக மிக மிக...


  மகிழ்ச்சியை விதைக்கும் அட்டவணை பதிவு...


  குறையொன்றும் இல்லாத செம தெளிவான ,அழகான திட்டமிடல்..


  படிக்கும் பொழுது ஒரே ஒரு குறையாக புத்தக எண்ணிக்கை தோன்றியது சார் ஆனால் அதற்கான பதிலையும் விளக்கத்தையும் தாங்கள் அறிவித்தவுடன் அதுவும் காணாமல் போயிற்று..


  முத்து ஸ்பெஷலில் அனைவருமே புது நாயகர்களாக எதிர்பார்க்கவே இல்லா சஸ்பென்ஸ் முடிவு சார்.. அனைவருமே புதிதாக இருக்கிறார்களே இவர்கள் சாதிப்பார்களா என சிறிதளவு சந்தேகம் படிக்கும் பொழுது ஏற்பட்டது..ஆனால் விளம்பர ட்ரையலர்களின் சித்திரத்தரத்தை பார்த்ததும் நூறு சதவீதம் இவர்கள் கலக்க போகிறார்கள் என்று மனம் இப்பொழுதே உறுதி செய்து விட்டது..


  மாதம் ஒரு டெக்ஸ்..உறுதிமொழி நிரம்ப நிரம்ப நன்றி சார்..


  இதை விட சந்தோஷம் சீனியர் எடிட்டரின் அனுபவ தொடர் அறிவிப்பு..


  உண்மையிலேயே 2022 காமிக்ஸ் ரசிகர்களின் ஆண்டாக அமைய போகிறது என்பது மறுக்க முடியாத நிஜம் சார்...


  மிக மிக மிக சந்தோசத்தை அளித்த பதிவு ,சந்தோசத்தை விதைக்கும் அறிவிப்புகள்..


  நன்றி நன்றி நன்றி சார்...

  ReplyDelete
  Replies
  1. தலீவரே....துணைக்கு யாரையாச்சும் கூட்டிட்டு வந்தீங்களா - இல்லியா ? இந்த நேரத்துக்கு நீங்க பாட்டுக்கு தனியா உலாத்துறீங்களே ?

   Delete
 85. Super Time Table. இளம் டெக்ஸ் இன்னும் கொஞ்சம் அதிகம் இருந்திருக்கலாம் இளம்டெக்ஸ்அதிகம் எதிர்பார்க்கிறோம் அதிகம் எதிர்பார்க்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. 2 + 4 = 6 இளம் டெக்ஸ் பாகங்கள் அட்டவணையினில் உள்ளன நண்பரே !

   Delete
 86. எனக்கென்னமோ என் பெயர் டேங்கோ பட்டைய கிளப்பும் என்று பட்சி சொல்கிறது.

  ReplyDelete
 87. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 88. அற்புதமான கதைத் தேர்வுகள் சார். இதன் பின்பான திட்டமிடலும் உழைப்பும் பிரமிக்க வைக்கின்றன. சிஸ்கோ நிச்சயம் இன்னொரு லார்கோ. சொல்லி அடிக்கக்கூடிய ஆக்‌ஷன் கதைத் தேர்வுகள். மாதமொரு டெக்ஸ், மாஸ் மூவ். கென்யாவின் சில பக்கங்கள் எப்படி கையாளப்படப் போகின்றன என இப்பொழுதே ஆர்வம். இந்த இரண்டு வருடக் காத்திருப்பு வாசகர்கள் தயாராவதற்கு என்றே தோன்றுகிறது. இவ்வளவு உழைப்பைப் பார்த்த பின் வழக்கம் போல் மௌன வாசகனாகக் கடந்து போகாமல் நானும் ஜோதியில் ஐக்கியமாகிறேன். தங்கள் விரல்களுக்கு கூடுதல் பலத்தை எல்லாம் வல்ல புனித மானிடோ அருளட்டும். :)

  ReplyDelete
  Replies
  1. சில மௌன தவங்கள் கலைய என் உழைப்பு உதவிடுமாயின், விடிய விடிய வேலை செய்ய நான் தயார் சார் !!

   Delete
 89. டியர் விஜயன் சார்,

  அருமையான அட்டவணை சார்... கதை தேர்வுகள், சந்தா பிரிவுகள் என அனைத்திலும் சிக்ஸர் அடித்து உள்ளீர்கள்...

  முத்து 50 இல் அனைவரும் புதுமுகம் என்றவுடனே முதலில் ஒரு தயக்கம் வந்தது உண்மையே...

  // பத்தாண்டுகளுக்கு முன்னே தயங்கியிருப்பின் லார்கோவே நமக்கு அந்நியமாகவே இருந்திருப்பார் தானே சார் ? அன்றைக்கே துணிந்தவன் இன்று துணியாது போவேனா சார் ?//

  ஆனால் ஒருகாலத்தில் டைகரும், டெஸ்சும் கூட நமக்கு புதியவர்கள்தானே என நினைத்தேன், உடனே அந்த சிறிய தயக்கம் காணாமல் போய் 2022 எப்பொழுது ஆரம்பிக்கும் என நினைக்க தோன்றுகிறது.

  திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
  Replies
  1. ஒரு வட்டத்தினுள் சுற்றுவதில் என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும் சார் ? சிறகுகளை விரிக்க முயல்வோமே ?!

   Delete
 90. சார், எனது காமிக்ஸ் எனது உரிமை சந்தா
  வரவேற்கிறேன்.பாராட்டுக்களுடன் நன்றியும்.

  ReplyDelete
 91. அடேயப்பாஆஆஆஆஆ.... செம மிக நீஈஈஈஈஈஈஈண்ட பதிவு.....!!!!

  சில ஆண்டுகள் கழித்து குடும்பத்தோடு சினிமாவுக்கு சென்றிருந்தேன்.... இப்பத்தான் வந்தேன்...

  பர்ஸ்ட்டு அட்டவணை பார்த்துடறேன்...😍😍😍😍

  ReplyDelete
 92. 2022 ம் ஆண்டுக்கான திட்டமிடல், கதைகள், இதழ்களின் எண்ணிக்கை அனைத்தும் 'நச்'னு இருக்கு. வாழ்த்துகளும் எனது ஆதரவும் எப்போதும்போல...

  ReplyDelete
 93. Smashing 70ல் வேதாளர் புத்தகம் மட்டும் வாங்குவதற்கு வழி செய்ய வேண்டும் சார்.

  ReplyDelete
  Replies
  1. சார்..மறுபதிப்புகள் கோரும் போது ஒரு ஹீரோ பாக்கியின்றி அத்தனை பேருக்கும் கொடி பிடிப்பது நம்மவர்களின் வழக்கம். அதன் அடிப்படையிலேயே 4 நாயகர்களையும் சேர்த்து வாங்க நேரிட்டது ! ஆனால் அதனில் selective ஆக மட்டுமே போதும் எனில் நான் என்ன செய்வது சார் ?

   Delete
 94. டியர் விஜயன் சார்,


  சிறிய வருத்தங்கள்:

  1) தோர்கள் 'குண்டு' புத்தகம் இல்லாதது (2023 இல் ஒரு பெரிய குண்டு புத்தகம் சார்)
  2) டைகர் இல்லாதது (உண்மையாகவே டைகரை மிஸ் செய்கிறோம்)
  3) கார்ட்டூன் கதைகள் - எண்ணிக்கை (என்ன செய்வது?)
  4) மர்ம மனிதன் மார்ட்டின் - ஒரு கதை மட்டுமே

  பெரிய சந்தோசங்கள்:

  1) ஒற்றை நொடி ஒன்பது தோட்டாக்கள்
  2) கென்யா
  3) புது அறிமுகங்கள்
  4) நமது போட்டோ வுடன் - முத்து 50 மலர்
  5) கதை தேர்வுகள் - ஒதுக்கீடுகள் (அருமையாக)
  6) இரண்டு கோடை மலர்(கள்)
  7) ஆண்டு மலர் + தீபாவளி மலர்
  8) சந்தா தொகை அதே அளவில் தொடர்வது...
  9) சீனியர் எடிட்டர் நினைவுகளில் - 12 மாதங்களும்...
  10) வருடம் தோறும் ஒரு சந்தா (ALL) மட்டுமே செலுத்தும் என்னை, 2022 க்கு இரண்டு சந்தா செலுத்தலாமா என யோசிக்க வைத்து விட்டீர்கள்...

  மொத்தத்தில் - 2022 அட்டவணை அருமை... அருமை... அருமை...

  திருப்பூர் ப்ளூபெர்ரி (எ) நாகராஜன்

  ReplyDelete
 95. மலைப்பான அட்டவணை சார்...💕💞🤩

  இதைத்தான் இதைத்தான் இதைக்காணத்தான் இத்தனை நாட்கள் காத்திருந்தோம்...

  காத்திருப்புக்கு 101%நியாயமான பேக்கேஜிங்....

  ஒன் ஆஃப் த பெஸ்ட் சந்தா....

  உள்ளம் பூரிச்சி போய்ட்டது....

  ReplyDelete
 96. சார் செம சார்...நீங்க க்ளிப்டன் ஜானி தோர்கள் சிக் எனும் போது ஐய்யோ என ஒரு பீதி மனதில்(பிடிச்சாலும்)....இல்லையா அப்பாடா என நிம்மதி....அடுத்து டைகர சொல்லும் போது இராதென நம்பிப் படிச்சதால் தாண்டினேன்.... அடுத்து சொன்ன நாயகர்கள் ஆவல தூண்ட உற்ச்சாக வெள்ளம் கரை புரண்டோட ....ஓவியர் 13ன் ரெண்டாம் சுற்று என்றதும் உற்சாகம் எவரெஸ்டின் உச்சானியில் ! நீங்க தந்த சிறந்த ஓவியர் எனும் விளக்கங்கள் தேவைப்படாவிடினும் உங்க எழுத்த ரசிச்சு படி தாவ ....அடுத்த நாயகர் குறித்த பார்வைகளும் எவரெஸ்டுக்கு மேல உச்சானியத் தேட நம்ம லயன் மேல் கம்பீரமா அமர்த்த...அடுத்த நாயகர் பொலிவியா என்றதும் சே குவேரா நினைவில் வர ... நாயகர் கிடக்கார் ...அந்த ஊருக்குள்ள வலம் வரலாம்னு கூடுதல் குதியாட்டத்தோட தாண்ட...அடுத்த புத்தகம் ஒநொஒதோ என கும்மாளமிட்டபடி....நம்ம அட்டைகள் இவ்வளோ குறைந்த விலைலயா வர உள்ளன....அடடா என தாண்ட கென்யாவ பாத்ததும் போதும் செந்தூரா இது போதும்னு கும்பிட்டபடி டைப்ப வந்துட்டேன்...கென்யாக்கு போய்ட்டு வாரேன்

  ReplyDelete