Powered By Blogger

Friday, October 15, 2021

The Day After ....

 நண்பர்களே,

வணக்கம். 5273 !! நேற்றைய ஒற்றை நாளின் நமது தளப்பார்வைகளின் எண்ணிக்கை இது !! Phew !!! விடுமுறை தினமே என்றாலும், நமக்கென இத்தனை நேரம் தந்திருப்பது மெய்யாகவே ஜிலீரென்கிறது !! 

அட்டவணை 2022 !! கிட்டத்தட்ட ஐந்தரை மாதங்களுக்கு முன்னே துவக்கம் கண்ட பணிகளின் பலன்களை நேற்றைக்கு உங்களிடம் ஒப்படைத்தது in many ways இந்தப் பயணத்தின் சுலபமான பகுதி ! இனி காத்திருக்கும் நடைமுறைப்படுத்தும் அத்தியாயமே சவாலானது ! எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதும் ; ஒவ்வொரு படைப்புக்கும்  நியாயம் செய்வதுமான நடைமுறைகள் எங்களது 2022-ஐ சுவாரஸ்யமான சவால்களாக்கிடவுள்ளது !!  

அட்டவணையின் பின்னணியிலான திட்டமிடல்களைத்  துவங்கிய வேளையில் எனக்குள் மூன்று விஷயங்கள் முக்கியமோ, முக்கியமென்று கோவில் மணியாட்டம் ஒலித்துக் கொண்டிருந்தன ! 

1 . முத்து ஆண்டுமலர் # 50 சர்வ நிச்சயமாய் அனைவரையும் கவர்ந்திழுக்கும் காந்தமாய் அமைந்திட வேண்டுமென்பது எனது முதல் குறிக்கோளாக இருந்தது ! சென்டிமென்ட்களிலும், பழமையினைப் போற்றுவதிலும் சரி, செம strict ஆபீசர்களான உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த இதழும் சரி, இந்தத் தருணமும் சரி, எத்தனை மகத்தானது என்பது புரிந்த நொடியில், FFS மீதான பொறுப்பு அந்தமட்டிற்கு ஜாஸ்தி ஆனதாய்ப்பட்டது ! And இங்கே என்ன தான் கடந்த 35 ஆண்டுகளாய் இன்ஜின் ட்ரைவராய் நான் பணியாற்றி வந்தாலுமே, இது சீனியரின் ரயிலே என்பதை நான் ஒருபோதும் மறந்திருக்கவில்லை ! So நம்ம வண்டியை கொஞ்சம் முன்ன பின்னே ஒட்டி புளிய மரத்திலே இடிச்சுக்கிட்டாலுமே பரவால்லே ; ஆனால் பொறுப்புத் தரப்பட்டிருக்கும் வண்டியை பத்திரமாய்ப் பார்த்தாக வேணுமே என்ற பயமும் ஒருபுறம் ! ஏற்கனவே 25 வருஷங்களுக்கு முன்னே செய்த பைத்தியக்காரத்தனங்களின் வடுக்களைக் காலம் முழுக்கச் சுமந்து திரியும் நிலையில், இந்த மைல்கல் நொடியினைச் சரியாகக் கையாள்வது காலத்தின் கட்டாயம் என்று புரிந்தது !

2. அழுத்தமாய் எனக்குள் அலையடித்த எண்ணம் # 2 - அந்த Feel Good Factor பற்றியானது ! கிராபிக் நாவல் ரசிகர்கள் அந்த அவலச் சுவைகளில் ; மாறுபட்ட களங்களில் பெரும் மகிழ்வைக் கண்டு வந்தாலும், ரெகுலர் நண்பர்கள் - "என்னமோ சொல்லுறே ; நாங்களும் கேட்டுக்குறோம் !!" என்ற ரீதியில் பின்தொடர்வதாகவே எனக்குப் பட்டு வந்தது ! கிராபிக் நாவல்களில் என்றைக்குமே ஒரு set pattern இருப்பதில்லை ; எந்த இரண்டு கதைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை ; so இங்கு கதைத் தேர்வுகள் என்றென்றுமே ஒரு potential டைம்பாம் தான் - அதகளமும் செய்திடக்கூடும் ; மூஞ்சியிலேயே வெடித்தும் வைக்கக் கூடும் ! அவ்வித மூஞ்சியில் வெடிக்கும் தருணங்களில் முதல் சேதாரம் எனது வதனத்துக்கே என்றாலும், ரெகுலர் வாசகர்களின் உள்ளங்களில் அந்த நொடிகளில் ஓட்டமெடுக்கும் கடுப்ஸ் of இந்தியாக்களை யூகிக்க நானொரு அறிவுஜீவியாக இருக்க வேண்டுமென்பதில்லையே ?! "இந்த இழவுக்குப் பதிலா நான் கேட்ட அந்த மறுபதிப்ப போட்ருக்கலாமே ?" ; "இதெல்லாம் போட்டு சீவனை வாங்கறே நேரத்துக்கு  - ஒரு மெபிஸ்டோவைப் போடலாமே ?" என்ற ரீதியில் பொங்குவதில் வியப்புகளில்லை தான் ! Of course - ஒரு அணியாய் நாம் காமிக்ஸ் கடலின் பன்முகத்தன்மைகளை ரசிக்க இயன்றால் செமத்தியாக இருக்குமென்ற அவா தான் டைம்பாம் என்று தெரிந்திருந்தாலுமே கி.நா.க்களின் பின்னே என்னை ஓடச்செய்தன ; ஆனால் ஒரு கட்டத்தில் இந்தப் பரீட்சார்த்தங்கள் சார்ந்த அயர்வுகள் உங்கள் குரல்களில் அப்பட்டமாய் ஒலிப்பது கேட்க ஆரம்பித்த போது - மாற்றம் ; முன்னேற்றம் தேவைப்படுவது வண்டியின் பயணப்பாதையினில் தான் என்பது புரிந்தது - at least for now !! ஆக, இந்த 2022-ன் அட்டவணையினில் பத்தாண்டுகளுக்கு முன்னே உங்களிடம் ஏகோபித்து அலையடித்த அதே ஆர்வங்களையும், எதிர்பார்ப்புகளையும் மீட்டிட முயற்சிக்கும் முனைப்பு பிரதானமாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்தேன் !

3 The New Normal எனப் பற்பல மாற்றங்களுக்கு வாழ்க்கை நம்மை பழக்கியிருக்க - இனி வரும் காலங்களில் நாம் மட்டும் அதற்கொரு விதிவிலக்காக இருத்தல் அசாத்தியம் என்பது புரிந்தது  ! எந்நேரம் ; என்ன இடர் ; என்ன மாதிரியான சக்கையைக் குறுக்கே நுழைக்குமோ என்பது ஆண்டவன் மாத்திரமே அறிந்த புதிராய் தொடரவுள்ள பொழுதுகளில் - நமது காமிக்ஸ் திட்டமிடல்களில் ஒரு கணிச மாற்றத்தைக் கொணர்வது அவசியமென்று பட்டது ! அது தான் "குண்டு புக்ஸ்" சார்ந்த shift in thought process !! "மாசா மாசம் நாலு புக்கா ? ஹை...செம !! செம !!" என துவக்கத்தில் துள்ளிக் குதித்த நாட்களின் அதே துள்ளல் இன்றும் தொடர்கிறதா ? என்பது கேள்விக்குறி தானுங்களே ? (Of course - பத்தாண்டுகளில் தேய்ந்திருக்கக்கூடிய மூட்டுகளை வைத்துக் கொண்டு துள்ளிக் குதிப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் !!) "ஆங்....4 புக்கா ? அட்டைப்படம்லாம் படா ஷோக்கா கீதே..? ச்சே..கலர்லாம் சும்மா அள்ளுதே ; ப்ப்பா...மசி வாசனை நாசியைத் துளைக்குதே....சூட்டோடு சூடா படிச்சுப்புடனும்டோய் " என்று சொல்லிய கையோடு குப்புறப் படுத்துத் தூங்குவோர் நம்மிடையே கணிசம் என்பது எனது யூகம் ! ஆண்டினில் 40 / 50 புக்ஸ் என்று போட்டுத் தாக்குவதில், குறைந்த பட்சமாய் முதல் புரட்டலைத் தாண்டியிரா இதழ்களின் எண்ணிக்கை குறைந்தது 15 தேறும் என்பதுமே எனது அனுமானம் ! So நம் மீதும், காமிக்ஸ் மீதும், சேகரிப்பின் மீதுமான வாஞ்சைகள் இத்தனை தூரம் நம்மைக் கரம்பிடித்துக் கூட்டி வந்துள்ளன என்றாலும் - இதுவொரு ஆரோக்கிய வழிமுறையாய் இருந்திட இயலாதென்ற உறுத்தல் எனக்குள் இருந்து கொண்டே வந்தது ! Of course - "எனக்கு கல்லா கட்டியாச்சு ; இனி உங்க பாடு தெய்வங்களா !!" என்று சொல்லிக்கொண்டே நான் நகரலாம் தான் ; ஆனால் அந்த முட்டாள்களின் சொர்க்கத்தில் அதிக காலம் வாசம் செய்ய சாத்தியமாகாதே !! பணம் உங்களதாக இருந்தாலுமே, அதற்கான பிரதிபலன்கள் உங்களை முழுமையாய்ச் சென்றடையாத நிலையினில் - எனக்கு உங்களை short change செய்வதாகவே ஒரு உறுத்தல் !! So நம்பர்களில் இனியில்லை எதிர்காலம் ; குறைவான எண்ணிக்கையே ஆனாலும், நிறைவான இதழ்களிடமே இனி வரும் காலங்கள் இருக்க முடியுமென்பது பட்டது ! அதன் பலனே இந்த அட்டவணையினில் அதிரடியாய் எண்ணிக்கையினில் cut & குண்டு புக்சினில் jump !! Oh yes - மாதா மாதம் புக்ஸ் வந்த ரெண்டாம் நாளுக்குள்ளாகவே அத்தனையையும் வாசித்துக் கரைத்துக் குடிக்கும் நண்பர்கள் இதன் பொருட்டு கவலை கொள்ள நேரிடும் என்பதும் புரிந்தது தான் ; ஆனால் மாதம் 2 புக்ஸ் ; but செம த்ரில்லான வாசிப்புகள் ; செம நீள வாசிப்புகள் என்ற அனுபவத்தினை உணர்ந்திடும் முதல் நொடியினில் அவர்களது வருத்தங்கள் விலகிடும் என்று எனக்கு நானே தைரியம் சொல்லிக் கொண்டேன் !

So மேற்படி 3 சமாச்சாரங்களுக்கும் நிரம்ப வெயிட் தந்தபடிக்கே தேடல்களில் புகுந்தேன் and இதோ இங்கு நிற்கிறோமின்று !! "FFS இதழில் அத்தினியும் புதுசா ?? செம தைரியம் தான் !!" என்ற கருத்துக்கள் உங்களிடையே நிறையவே பார்த்திட முடிந்தது guys !! பலப்பல ஊர்களின் பலப்பல மு.ச. & மூ.ச. க்கள் தந்த திடம் ஒருபக்கமிருக்க - இந்தத் தீர்மானத்தினை யதார்த்தங்களே அவசியப்படுத்தின என்பன !! இப்படிப் பாருங்களேன் - முத்துவின் டாப் நாயகர்கள் யாரெல்லாம் என்று :

மாயாவி

CID லாரன்ஸ் டேவிட்

ஜானி நீரோ 

மேற்படி மூவரின் கதைகளை காவிரியில் பெருக்கெடுக்கும் முதல் நீர்வரத்தைப் பார்க்கும் வண்ணானை விட ஜாஸ்தியாய் நாம் துவைத்துத் தொங்கப்போட்டாச்சு !! இனியும் அவர்கள் முதுகுகளில் சவாரி செய்ய நினைத்தால் அடுக்குமா ?

வேதாளன்

ரிப் கிர்பி

மாண்ட்ரேக்

காரிகன் 

மேற்படி நால்வருமே SMASHING 70 'ஸ் புண்ணியத்தில் ஒரு full round அடிக்கவுள்ளனர் எனும் போது இங்கே அவர்களுக்கு ஜோலிகளே நஹி !

கேப்டன் டைகர் 

லார்கோ வின்ச் 

நிறையவே பேசியாச்சு ;  எஞ்சியுள்ள இவர்களது புதுக் கதைகளின் நிலைகள் பற்றி !! Truth to tell - 3 நாட்களுக்கு முன்வரைக்கும் "இளம் டைகர்" கதைகளை புரட்டோ, புரட்டென்று புரட்டினேன் தான் ! ஆனால் அங்கே மைக் டோனோவன் எனும் பிங்கர்டன் ஏஜெண்டைத் தான் கண்ணில் பார்க்க முடிந்ததே தவிர, நாம் காலமாய்ப் பார்த்துப் பழகிய டைகரை அல்ல !! So in effect இந்த நொடியினில் கவனத்தை ஈர்க்கும் ஒரு மாஸ் ஹீரோ என முத்துவில் யாருமே இல்லை என்பதே bottomline !! இது போலான வேளைகளில் தான் 'தல' டெக்சின் மகிமை இன்னமும் அழுந்தப் புரிகிறது !! Maybe இன்னுமொரு பத்துப் பதிமூன்று ஆண்டுகளுக்கு அப்பால், லயனின் ஐம்பதாவது ஆண்டுமலருக்குமே திட்டமிடும் இடத்தினில் ஆண்டவன் என்னை வைத்திருப்பாரெனில் - "ஆங்...அந்த 500 பக்க டெக்சிலே ஒண்ணு ; புதுசா வந்திருக்க MAXI டெக்சில ஒண்ணு ; classic மறுபதிப்பிலே ஒண்ணு ; இளம் டெக்சிலே ஒண்ணு !!" என்று சிம்பிளாக சோலியை முடித்திட முடிந்திடும் ; and துளி நெருடலுமின்றி கொண்டாடிடவும் சாத்தியப்படும் ! ஆனால் அந்த வசதி முத்துவில் நஹி என்ற போது தான் 2 தீர்மானங்கள் அவசியமாகின !! 

முதலாவது - புதியவர்களை நோக்கிய ஓட்டம் ; தேடல் !! இந்த ALPHA ; SISCO ; TANGO முக்கூட்டணியானது அடுத்த கொஞ்ச காலத்துக்காவது நம் மத்தியில் அதிரடி நாயகர்களாய் வலம் வருவர் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உள்ளது ! 

இரண்டாவது - ZAGOR நோக்கிய நகர்வு !! இவரும் போனெல்லியின் துருப்புச் சீட்டே ; எழுநூற்றி சொச்சம் தொடவுள்ளது இவரது ஆல்பங்களின் எண்ணிக்கை ; கலரில் / black & white -ல் ரவுண்டு கட்டி அடிப்பவர் ; pure commercial நாயகர் ! So ஒரு மார்ட்டின் கதையினில் பயந்து பயந்தே உட்புகுவது போலோ ; டைலன் டாகின் சமாச்சாரத்தில் தயங்கித் தயங்கி தலைநுழைப்பது போலோ ; மேஜிக் விண்டின் ஆல்பத்தினில் திரு திருவென்று முழிக்கும் அவசியங்கள் இராதென்றே  எனக்குப் பட்டது ! Fingers crossed !!

ஐந்தரை மாதங்களாய் தலைக்குள் அடை காத்த சமாச்சாரங்களை பகிர்ந்திட்டத்தில் ஒருவித relief உள்ளுக்குள் ; and அவற்றை நீங்கள் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டிருப்பது icing on the cake !! Thanks a ton folks ; இனி இவற்றை அழகாய், ரசிக்கும் விதங்களில் செயல்படுத்திடும் பொறுப்பு எனதாகிறது !! ஜெய் பாகுபலி ; பிரார்த்தனைகள் புனித மனிடோ !! இன்னும் ஏதேதோ ஓடுகின்றது தலைக்குள் ; ஆனால் காத்திருக்கும் தீபாவளி மலரின் பணிகள் அழைப்பதால் அங்கே ஓட்டமெடுக்கப் புறப்படுகிறேன் !! Have a relaxed day all !!







Memes by MKS Ramm 😀😀😀

371 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் டாப் 3...

      Delete
    2. இங்கேயே இருப்பீகளோ பெரிய அண்ணன், சின்ன அண்ணன் இருவரும்... டாப்பிலயே வர்றீங்களே!

      Delete
    3. அவிங்க ரெண்டுபேரும் அந்தப் பதிவுலயே துண்டு போட்டு வச்சிட்டாங்கய்யா..

      Delete
  2. வந்திட்டேன் சார் 🙏🏼
    .

    ReplyDelete
  3. எடிட்டர் சார்,
    பழமையும், புதுமையும் கலந்த கலவையாய் , முத்துவின் பொன்விழா ஆண்டை கொண்டாட முடிவு செய்திருப்பது மிகச்சிறப்பு!
    மிகப்பிரமாதமாய் அமையும். பெரிய வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துகளும்.ப்ரார்த்தனைகளும்!

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
  5. Edi Sir.. முத்து எங்கள் சொத்து.. பொன்விழா ஆண்டினை ஜமாய்ச்சுடுவோம்..

    ReplyDelete
  6. முழுச் சந்தா வேண்டும். மூன்று தவணைகளில் செலுத்த வழியுண்டா சார் ?

    ReplyDelete
    Replies
    1. பண்ணிடலாம் சார் ; எப்போது தயாராவீர்களோ அப்போது ஆபிசுக்கு போன் அடித்து சொல்லுங்கள் - உதவிடுவார்கள் !

      Delete
  7. // இந்த ALPHA ; SISCO ; TANGO முக்கூட்டணியானது அடுத்த கொஞ்ச காலத்துக்காவது நம் மத்தியில் அதிரடி நாயகர்களாய் வலம் வருவர் //
    இவர்களில் முத்து 50 க்குப் பிறகு கதைகள் தொடர்ச்சியா,வேறு வேறு களங்களா சார்...!!!

    ReplyDelete
  8. //ஆங்....4 புக்கா ? அட்டைப்படம்லாம் படா ஷோக்கா கீதே..? ச்சே..கலர்லாம் சும்மா அள்ளுதே ; ப்ப்பா...மசி வாசனை நாசியைத் துளைக்குதே....சூட்டோடு சூடா படிச்சுப்புடனும்டோய் " என்று சொல்லிய கையோடு குப்புறப் படுத்துத் தூங்குவோர் நம்மிடையே கணிசம் என்பது எனது யூகம்//



    :))))

    ReplyDelete
  9. கடைசி meme செம உண்மையா தான் இருக்கும் போல.

    ஒவ்வொரு வருடமும் அட்டவணையின் உங்களது உழைப்பு மலைக்க செய்கிறது சார்.

    அனைவரையும் திருப்தி படுத்துதல் கடினம் என்றாலும் உங்களது அதை சார்ந்த முயற்சிக்கு ஒரு பாராட்டு சார்.

    இம்முறை அதை நீங்கள் சாதித்துவிட்டதாகவும் தோன்றுகிறது வாழ்த்துக்கள் சார்.

    தாத்தாவுக்கு மட்டும் கொஞ்சம் எதிர்ப்பு குரல்களும் இருக்கும் போல தெரிகிறது. மற்ற அனைத்திற்கும் வெற்றி சின்னம் தான்.

    ReplyDelete
    Replies
    1. இந்தத் தாத்தாவுக்காக அந்தத் தாத்தாக்களைப் பொறுத்துக் கொள்ளச் சொல்லிக் கோருவோம் கிருஷ்ணா ! இன்று வேலையா ?

      Delete
    2. திருஷ்டி பொட்டுக்கு ஏதும் இருக்கணும்ல...அதான் தாத்தா+ 007ஓல்டுனு ரெண்டு....!!!(மாடஸ்தியை சொன்னா சில பல டாக்டர்கள் மாத்திரையை மாத்தி கொடுத்து விடும் அபாயம் உண்டே....😉)

      Delete
    3. 007 இம்முறை THE LIVING DAYLIGHTS திரைப்படக் கதை சார் ; so சொதப்பிடாது !

      Delete
    4. ஆஹா...சூப்பர் சார்..:-)

      Delete
    5. ஆம் சார்..... வீ ஆல் நோ இட்.... இந்த தங்களின் பதில் நம்ம நண்பருக்காக பெறப்பட்டது....

      Delete
  10. வணக்கம் 🙏

    விஜயதசமி வாழ்த்துகள்...💐

    ReplyDelete
  11. மீம்கள் அனைத்தும் அருமை....

    ReplyDelete
  12. ////"ஆங்....4 புக்கா ? அட்டைப்படம்லாம் படா ஷோக்கா கீதே..? ச்சே..கலர்லாம் சும்மா அள்ளுதே ; ப்ப்பா...மசி வாசனை நாசியைத் துளைக்குதே....சூட்டோடு சூடா படிச்சுப்புடனும்டோய் " என்று சொல்லிய கையோடு குப்புறப் படுத்துத் தூங்குவோர் நம்மிடையே கணிசம் என்பது எனது யூகம் !////

    அப்ஜெக்சன் யுவர் ஆனர்! பல்வேறு வேலைகளின் நடுவிலே படிக்கத் தோதான ஒரு வேளையை எதிர்பார்த்துக் கிடப்பதே தாமதத்திற்குக் காரணமே தவிர குப்புறப் படுத்துத் தூங்குவதல்ல!

    தவிர, கையருகில் விருந்தை வைத்துக் கொண்டு அதையே சுற்றிச்சுற்றி வருவதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது! வேண்டுமானால் உங்கள் வீட்டுப் பூனையைக் கேட்டுப்பாருங்கள் - அது சொல்லும்!

    ReplyDelete
    Replies
    1. So you do have enough strength and courage to revolve round even now.

      Delete
  13. ஜம்போ இல்லை என்றால், ஜேம்ஸ் 2.0 & அண்டர்டேக்கர் வரமாட்டார்களா?

    ReplyDelete
    Replies
    1. சந்தவாவில் 9டெக்ஸ் புக்தான்... ஆனா மாதம் ஒரு டெக்ஸ் உத்திரவாதம்ல இருக்கே.....
      காத்திருப்போம் நீரையும் ஜல்லடையில் எடுத்துப்போகும் நாளுக்கு....

      Delete
    2. அண்டர்டேக்கரில் புதுக் கதைகள் உருவானால் தான் ; அடுத்த ஜம்போவான "வெள்ளை செவ்விந்தியன்" இதுவரைக்குமான கதைகளை பூர்த்தி செய்திடுகிறது !

      Delete
  14. மீம்ஸ் கலக்குகிறது...:-)))

    ReplyDelete
  15. மாயாவி

    CID லாரன்ஸ் டேவிட்

    ஜானி நீரோ

    மேற்படி மூவரின் கதைகளை காவிரியில் பெருக்கெடுக்கும் முதல் நீர்வரத்தைப் பார்க்கும் வண்ணானை விட ஜாஸ்தியாய் நாம் துவைத்துத் தொங்கப்போட்டாச்சு !! இனியும் அவர்கள் முதுகுகளில் சவாரி செய்ய நினைத்தால் அடுக்குமா ?


    #######


    :-)))))

    ReplyDelete
  16. மாதம் 20 புக் படிக்கிறேன். நீங்க என்னான 4 புக் படிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்ளே சார்

    ReplyDelete
  17. //ஆங்....4 புக்கா ? அட்டைப்படம்லாம் படா ஷோக்கா கீதே..? ச்சே..கலர்லாம் சும்மா அள்ளுதே ; ப்ப்பா...மசி வாசனை நாசியைத் துளைக்குதே....சூட்டோடு சூடா படிச்சுப்புடனும்டோய் " என்று சொல்லிய கையோடு குப்புறப் படுத்துத் தூங்குவோர் நம்மிடையே கணிசம் என்பது எனது யூகம்//

    தெரிஞ்சிடுச்சா சார். இந்த ரகசியத்தை உங்க மனசு கஷ்டபடுமேனு பொத்தி பொத்தி இல்ல பாதுகாத்தோம். எந்த பய புள்ளையோ உண்மையை ஒடச்சிடுச்சி போல.. :)))

    ReplyDelete
  18. புதியவர்களை நோக்கிய ஓட்டம் ; தேடல் !! இந்த ALPHA ; SISCO ; TANGO முக்கூட்டணியானது அடுத்த கொஞ்ச காலத்துக்காவது நம் மத்தியில் அதிரடி நாயகர்களாய் வலம் வருவர் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உள்ளது !


    #####


    சித்திரங்களை பார்க்கும் பொழுதே பட்டாஸாய் இருக்கிறது சார்...

    ஆவலுடன் வெயிட்டிங்..

    ReplyDelete
  19. இரண்டாவது - ZAGOR நோக்கிய நகர்வு !! இவரும் போனெல்லியின் துருப்புச் சீட்டே ; எழுநூற்றி சொச்சம் தொடவுள்ளது இவரது ஆல்பங்களின் எண்ணிக்கை ; கலரில் / black & white -ல் ரவுண்டு கட்டி அடிப்பவர்

    ####

    திடீர் என பார்த்தால் ஒரு சாயலில் டெக்ஸ் வில்லரோ என நினைக்க வைக்கிறார்...அவரை போலவே இவரும் வெற்றிநடை நாயகராய் மின்ன வாழ்த்துக்கள்...:)

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட் தலீவரே! எனக்கும் அப்படித்தான் தோனுச்சு!

      Delete
    2. 700 numbers. Why he is not considered till now , I wonder?

      Delete
  20. கிராபிக்...

    இங்கு கதைத் தேர்வுகள் என்றென்றுமே ஒரு potential டைம்பாம் தான் - அதகளமும் செய்திடக்கூடும் ; மூஞ்சியிலேயே வெடித்தும் வைக்கக் கூடும்


    #####


    அது வேணா உண்மை தான் சார்...:-)

    ReplyDelete
  21. // வணக்கம். 5273 !! நேற்றைய ஒற்றை நாளின் நமது தளப்பார்வைகளின் எண்ணிக்கை இது !! // நான் எல்லாம் பாய் விரிச்சு இங்கேயே படுத்து இருந்தேன்.

    ReplyDelete
  22. அன்பு ஆசிரியருக்கு...
    அன்பு ஸ்நேகங்களுக்கு 🙏...

    என்னங்க சார் இந்தவாரம் பதிவா போட்டு திணறடிக்கறீங்க?
    விடுமுறை தினம் என்று மட்டுமல்ல,
    சில சுவாரஸ்யமான விசியங்களை எதிர் பாத்திருந்தோம். அதுக்கு தகுந்த மாதிரி அட்டவணை பதிவு சிங்கத்தின் சிகரமாக அமைந்துவிட்டது.

    வாசகர்களுக்கு நேற்று மட்டற்ற மகிழ்ச்சி தான் போங்க. முகநூல்+ பகிரி தளங்கள் முழுவதும் இதே பேச்சுதான்.
    இதில் பெரும்பாலும் டவுட்டானது,"எப்பிடி மாசம் 1 டெக்ஸ் தருவார்?" என ஆளாளுக்கு ஒரு கருத்து.
    கடைசியில், 11:30 வரை விடை தெரியாம அனைவரும் மட்டையானது நிஜம்.
    காலையில் வந்தால் உங்கள் பதிவு.
    ஒரு "க்" வெச்சு மக்கள பிராந்து புடிக்க
    வெச்சுட்டீங்களே சார். நியாயமா?
    அடுக்குமா?.

    கிராபிக் நாவல்:-
    எப்படி சார், அப்படியே உண்மய புட்டு வெச்சுட்டீங்களே.
    சிலருக்கு மட்டுமே பிடித்த (கட்டாயமாக)
    இந்த க.நா. க்களை, விட வேறு போட்டிருக்கலாம் என பலரும் நினைத்தது நிஜமே. ஆனா 🐈 க்கு யார் மணி கட்டுவது?
    "எதுனா சொன்னா எங்க கேக்கறாரு. அவருக்குன்னே ஜால்ரா கோஷ்டீஸ் இருக்கும் அவங்க விடமாட்டாங்க" என
    பலரும் அதிருப்தி பட்டபோது, "எல்லாருக்கும் புடிச்ச மாரிதானே போடுவாரு? 30 வருடங்களுக்கு முன்.
    இப்ப என்னாச்சு" என யோசித்திருக்கிறேன்.
    அதை நீங்கள் வழிமொழிந்திருப்பது மிக மிக மகிழ்ச்சி. அட்டவணை தேர்வுகளுக்கு நிகராக,கொண்டு வாங்க சார் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க பலரும் தயார்.
    வாழ்த்துக்கள்.

    மாற்றங்கள்:-
    உண்மை சார்.
    காமிக்ஸை விட்டு விலகிய 30 வருடத்தில்,நிறைய்ய மாற்றங்கள் சார்.
    "காமிக்ஸ் படிக்கனுமா?" என தோன்றியதும் உண்டு. அதையும் மீறி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வர காரணம், மாறுபட்ட புதுமைகள் தான்.
    லயன் 400 ஆர்வத்தில் வாங்கியாச்சு.
    5 வது பக்கம் படிக்க தொடங்கிய போது, சுயநினைவே இல்லை.
    பலபல விசியங்களுக்கு புத்தி பழகிட்டதால்,
    மீண்டும் சிறுவயது ஆர்வத்தை,இந்த 40 வயதில் கொண்டு வருவது "பிரம்ம ப்ராயத்தமாக" இருக்கு.
    ஆனாலும் சில காமிக்ஸ் உள்ளே இழுத்து விடுகிறது. சாம்பிள் இந்த மாதம் வந்த"கண்ணே கொலைமானே".
    அதை தக்கவைக்கும் விதமாக உங்களின் இந்த முடிவு.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    காசுக்காக காமிக்ஸ் வெளியிடுபவரா நீங்க?. இதை செய்வதாக இருந்தால் எப்பயோ செஞ்சிருக்கலாமே சார்.
    எப்ப தரமான கதைகள் கொண்டு வந்தீங்களோ, அன்றே(80s) எங்களுக்கு புரிஞ்சிடுச்சு சார் உங்களபத்தி.

    எப்பமே உண்மையான காமிக்ஸ் வாசகர்களுக்கு உங்கள் மீது ஒரு "சாஃப்ட் கார்னர்" இருந்து கொண்டே இருக்கும் சார்.
    இந்த விசியத்தை மறைக்காமல் சொன்னதால், உங்கள் மீது இன்னும் கூடுதலாக "மரியாதை" என்னும் ஸ்டார் ஏறுகிறது.
    உங்களின் இந்த மாற்றத்திற்கு ஒரு "ராயல் சல்யூட்"🌹.

    இந்த மனம் திறந்த பதிவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் சார்.
    2022 லயன்+முத்துவுக்கு ஒரு புதிய பாதையாக மாறுவது உறுதி.
    வணக்கங்களுடன்.

    மீண்டும் அடுத்த பதிவில் 🌹...

    ReplyDelete
    Replies
    1. சிறப்பான கருத்துகள் சகோ!!!

      Delete
    2. அருமையா எழுதி இருக்கீங்க அண்ணா..

      Delete
    3. அருமை நண்பரே...வேற யாராவது பொழைக்கத் தெரிஞ்ச ஆளா இருந்தா ஸ்பைடர் மேனியா உச்சத்தை இருந்தப்ப சினிஸ்டர் செவன் வச்சிட்டு வெண்ணய்க்கு அலஞ்சிருப்பாரா....

      Delete
  23. முத்து 50 : என்னளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது இதழ். உங்கள் தரப்பு காரணத்தை தெளிவாக விளக்கிய போதும்.... என் மனதில் தோன்றும் காரணங்களை விளக்க கடமைப்பட்டுள்ளேன் ( காமிக்ஸை நேசிப்பவனாக )..…
    ஒரு ஆயுட்கால லேண்ட்மார்க் இதழ் இப்படி அமைந்ததில் மிகுந்த ஏமாற்றம். ஆலமரம் நம்பர் 1 ல் நீங்கள் எடுத்த தீர்மானம் தான் கடைசியில் ஜெயித்து உள்ளது. (1+1=11) வாழ்த்துக்கள். 50 ஆண்டுகளாக முத்துவில் சவாரி செய்த நாயக நாயகியர் யாருமே இல்லாமல் எல்லாமே புது ஹீரோக்களை கொண்டு இது போன்ற லேண்ட்மார்க் இதழை கொண்டு வர எப்படி நினைத்தீர்களோ.. ஆண்டவனுக்கே வெளிச்சம்.
    ஸ்பெஷல் இதழ் என்றாலே குண்டு புக்கு தான் என்பதை மெல்ல மெல்ல குறைத்து இரண்டு மூன்று புக்காக பிரிப்பதே எனக்கு சரியாக படவில்லை. ( இப்போது எல்லாம் 300 / 400 பக்க புக் எல்லாம் குண்டு புக்கே இல்லை. அதுவும் இதற்கெல்லாம் ஹாட் கவர் தேவையே இல்லை என்பது எனது எண்ணம் ).
    உங்கள் வியாபார நுணுக்கம் எல்லாம் எமக்குத் தெரியாது. ஆனால் எனக்கு தெரிந்த வியாபாரம் பற்றி சொல்ல நினைக்கிறேன் தவறு இருந்தால் மன்னிக்கவும். நேரு பிரதமராக இருந்த சமயம் இந்தியா சீனா போர் நடந்தது. இந்தியா போரில் பின்தங்கிய சமயம் காமராஜரிடம் நேரு சொல்லியுள்ளார். ராணுவ தளவாடங்கள் அமெரிக்காவில் வாங்கியாகிவிட்டது. ஆனால் அதை இந்தியாவிற்கு அனுப்ப எந்த அமெரிக்கா பேங்க் கேரண்டி கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்றார். காமராசர் ஐயா கேட்டார் அவன் கடை ஏதாவது இங்கு உள்ளதா என்று. ஆமாம் என்று நேரு சொல்லவும் உடனே அதை இழுத்து மூடு என்று சொன்னார். நேரு உடனே அதிர்ச்சியடைந்து அய்யோ! இன்டர்நேஷனல் பிரச்சனையாகும் என்றார் எந்த வெங்காயம் ஆகட்டும் நமக்கு உதவாத பேங்க் எதுக்கு இருக்கணும் என்று சொல்ல, நேருவும் உடனே இந்தியாவில் உள்ள அமெரிக்கன் பாங்கை கூப்பிட்டு உடனே மூடு என்று சொல்ல.... அதன் பிறகு நடந்த கூத்துக்களில் நான்கைந்து நாட்களில் இராணுவ தளவாடங்கள் இந்தியாவிற்கு வந்தது. ஒரு கடையில் வடை சுட்டு விற்பதோடு அவன் வேலை முடிந்தது. அதை சாம்பாரில் ஊற வைத்தோ, வடகறி ஆக செய்தோ அல்லது எலிக்கு போடுவதோ வாங்கியவரின் உரிமை. இல்லை அதை வடையாகத் தான் சாப்பிடவேண்டும் என்று சொன்னால் அந்த வடை எதற்கு..
    அதுபோல்தான் நமக்கு ஒத்து வரவில்லை என்றால் அவர் கூட பிஸ்னஸ் எதற்கு... நமக்கு ஏற்ற மாதிரி பரிவும் பாசமும் காட்டும் இத்தாலி போனல்லி மட்டுமே போதும் என்பது என் தாழ்மையான கருத்து. தீபாவளி மலராக வந்த இரவே இருளே கொல்லாதே. 32வது ஆண்டு மலராக வந்த (பிரின்ஸ், ஜானி 13 spinoff )கூட்டுப் பொரியல் ஆக வந்த இந்த இதழ்களின் தாக்கத்தை தான் ஐம்பதாவது ஆண்டு மலர் ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..
    இப்போது சிலர் ஆகா ஓகோ என்று தலையில் வைத்து கூத்தாடினாலும்.. பிறிதொரு நாளில் உங்களை மிகவும் வருத்தப்பட வைக்கப்போகும் இதழ் இதுவாகத்தான் இருக்கும். வெறும் ரோஜாக்களில் பூர்த்தி செய்யப்பட்ட ரோஜா பூ மாலை தான் இது. அனைத்துப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கதம்ப பூ மாலைக்கு ஈடு இணை ஏது. இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கு... வேண்டாம்... என்னைப் பொறுத்தவரை முத்து 50க்கு இந்த இதழ் ஏற்றது அல்ல. மிகவும் ஏமாற்றம் அளித்த இதழ் 😭😭😭😭😭.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உங்களின் விசனங்கள் சகலத்துக்கும் நேற்றைய பதிவிலும், இன்றைய பதிவிலும் பதில்கள் உள்ளன நண்பரே ; திரும்ப அதையே repeat செய்திடப் போவதில்லை தான் ! அப்புறம் 'தல' ஏன் இங்கே வரலை ? வால் ஏன் அங்கே போகலை ? ' என்ற ரீதியிலான கேள்விகளுக்கு பதில்கள் தேவையா என்ன ?

      திரும்பிப் பார்க்கையில் எனது இந்தத் தீர்மானம் நான் வருந்தப்போகும் ஒரு தீர்மானமாக இருந்திடுமெனில் அதிலிருந்து ஒரு பாடம் படித்து விட்டுப் போகின்றேனே ; இந்த வயசிலும் ஒரு பாடம் படித்த திருப்தியாச்சும் கிட்டுமில்லையா சார் ? So எப்படிப்பார்த்தாலுமே பூரண நஷ்டம் என்றில்லையே !

      உங்களைப் பொறுத்தவரைக்கும் YCYU சந்தாவின் option உள்ளதெனும் போது , இந்த இதழுக்கு கல்தா கொடுத்து விட்டால் தொல்லை விட்டது ; so உங்கள் மட்டிலும் நஷ்டங்களில்லையே ?

      Delete
    3. போட்ட கருத்தை நீக்குவானேன் சரவணன் சார் ? உங்களுக்குப் பிடித்திருந்தால் தான் நான் ஆச்சரியமே கொண்டிருந்திருப்பேன் !

      Delete
    4. இல்லை சார்.என்னால் எந்த ஒரு பிரச்சினையும் உருவாவதை நான் விரும்பவில்லை சார் .
      மன்னிக்க வேண்டுகின்றேன். இத்தனை நாள் நான் எப்படி இங்கு இயங்கினேனோ அப்படியே கடைசி வரை இருக்க விரும்புகின்றேன் சார்.

      நீக்கிய பின்னூட்டம் இது தான் சார்.

      "எனக்கு ஏமாற்றம் உண்டு ".
      வரிக்கு வரி உடன்படுகின்றேன் .

      இது தான்.

      Delete
    5. நீங்கள் நீக்கும் முன்பே அதை வாசிக்கவும் செய்திருந்தேன் சார் ; அதனால் தான் "நீக்குவானேன் ?" என்றே கேட்டிருந்தேன் !

      Delete
    6. சரண் செல்வி மற்றும் சரவணன் - இருவரின் கருத்துக்களிலும் நியாயம் உள்ளது தான் சார். இவர்கள் முத்துவின் நெடு நாளைய வாசகர்களாய் இருந்திடக்கூடும். அந்தக் கண்ணோட்டத்தில் இந்த வருத்தம் நியாயமே.

      To just quote a comparison :

      2034ல் லயன் 50ம் ஆண்டு மலர் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். அந்த சமயத்தில் Tex, Lucky Luke, ஸ்பைடர், சிக்-பில் கதைகள் இல்லாமல் ஒரு லயன் குண்டு புக் வந்தால் என்னைப்போன்ற லயன் வெறியர்களுக்கு மிகுந்த வருத்தமாகவே இருக்கும் சார். While it is true from the publishers point of view that sales and genres dictate the publications, as a fanatical supporter of Lion Comics, I would indeed be hugely disappointed.

      தற்போதைய Muthu 50 எனக்கு ஏன் பிடித்திருக்கிறது என்றால் பழைய (டப்ஸா) முத்து காமிக்ஸின் மேலே (சீனியர் எடிட்டர் மன்னிப்பாராக !) லயன் அளவு எனக்கு காதல் ஏதும் இருந்ததில்லை. எனவே நீங்கள் முத்துவில் லார்கோ, டேங்கோ, alfa அன்று புதிது புதிதாய்க் களமிறக்கும்போது எனக்கு லயன் காமிக்ஸ் மருவி வருவதைப்போல ஒரு feeling தவிர it does not emotionally connect to Classic Muthu comics sir !
      All said and done, எப்படி எவ்வகை தீர்மானங்கள் எடுக்கப்படவேண்டும் என்பது எப்போதுமே காலத்தின் கட்டாயமே சார் - அதனால் இந்த சந்தாவிற்கும், புதிய கதைகளுக்கும் என் ஆதரவு உண்டு சார் !

      Delete
    7. அது எப்படி சார் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று ஒரு அழகாக பதில் கூறச் சொல்லி விடுவீர்கள். உங்களின் ஒரு சிறு பேப்பர் கூட மிஸ் செய்யக் கூடாது என்று விரும்பும் வாசகர்களில்..அடியேனும் ஒருவன். அதனால் தயவு செய்து இனிமேல் இதுபோன்ற வார்த்தைகளை வைக்க வேண்டாம் ஆசிரியரே. என்னளவில் இது தரம் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம் அவ்வளவே மற்றபடி ஒன்னுக்கு ரெண்டா தான் வாங்க போறேன் ஆசிரியரே. உங்களிடமிருந்து பதிலை நான் எதிர்பார்க்கவில்லை என்னுடைய ஆதங்கத்தை தெரியப்படுத்தி உள்ளேன் அவ்வளவே... நன்றி

      Delete
    8. Saran,

      // அது எப்படி சார் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்று ஒரு அழகாக பதில் கூறச் சொல்லி விடுவீர்கள். //

      முடித்த அளவு உங்களுக்கு பலமுறை பல பதிவுகளில் உங்களுக்கு பதில் சொல்லிவிட்டார் இன்னும் புரியவில்லை என்றால் என்ன செய்ய முடியும்! அதன் வெளிப்பாடே இது போன்ற பதில்கள்! கொஞ்சம் அவர் இடத்தில் இருந்து சூழ்நிலையை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்களேன்! ப்ளீஸ்!

      Delete
    9. நண்பர்களே முத்து விழாவிற்காகத்தான இந்த வேதாளன்....காரிகன்...எல்லாம்....இந்த விழா இதழானது எல்லாரும் விரும்பும் வண்ணம் வரனும் விறுவிறுப்பாய் என ஆசிரியர் யோசித்ததில் தவறா...பழசு வேணாம்னு போராடியவர்கள் அதிகம் அறிவீர்களா....வேதாளர மொத்தமா எடுத்தால்தான் தருவார்கள் என கேட்டதால் தள்ளி வந்த ஆசிரியர்....காரிகன் விக்குமா என யோசித்த ஆசிரியர் அதையெல்லாம் மீறி இவ்வருடம் களமிறக்கக் காரணம் என்ன....இரு தரப்பினரயும் சந்தோசப்படுத்தத்தானே பிரிச்சு வந்திருக்கு வேண்டாம் என்போர் ஒதுங்கி மாற்றை வாங்கதான....எல்லாத்தையும் திணிச்சாகனும்னு கட்டாயபடுத்தலாமா...பிடிச்சா சந்தோசமா எல்லாத்தயும் வாங்குங்க....பிடிக்காதவங்க பிடிச்சது வாங்க அனுமதிங்க

      Delete

    10. புதிய புத்தகங்களை படித்துவிட்டு உடனே அதை வாட்ஸாப்ப் குழுக்களில் விற்பவர்களையே "லயன் ஆபிசில் ஸ்டாக் இருக்கும்போது ஏன் எப்படி உடனே விற்கிறீர்கள்" என்று கவலை கொள்பவர் saranselvi. அவரையே "வேண்டாம் என்றால் வாங்காதீர்கள்" என்று சொல்ல எப்படி முடிகிறதோ??

      Delete
    11. ஆனால் அட்டவணை சரியான திசையில் பயணப்படுவதாகத் தான் தெரிகிறது.

      Delete
  24. 2022 கேட்லாகில் தலையை ஓரமாக வைத்து புது ஹீரோவுக்கு முன்னுரிமை கொடுத்தது அவ்வளவு சிறப்பாக இல்லை.

    ReplyDelete
    Replies
    1. 2022 ன் இறுதியிலும் இதே எண்ணம் கொண்டிருப்பீர்களா என்று பார்க்க நான் மட்டுமில்லை - தளமும் காத்திருக்கும் நண்பரே ! மாதமொரு டெக்ஸுக்கு நான் உத்திரவாதம் தந்தான் பின்னேயும் உங்களுக்கு கவலையெனில் "ரைட்டு" என்றபடிக்கே நடையைக் கட்ட மட்டுமே எனக்கு சாத்தியமாகிடும் நண்பரே !

      Delete
    2. மாதமொரு டெக்ஸ் என்று குறிப்பிட்ட தாங்கள் அவரை தானேமுன்னிறுத்தி இருக்கவேண்டும் இதுதானே என் கேள்வி. இதற்கு ஏன்2022 கடைசி வரை காத்திருக்க வேண்டும். 🤔🤔🤔🤔

      Delete
    3. டிசம்பரில் தான் ஒட்டு மொத்தமாய் 12 டெக்ஸ் போடப் போகிறேனென்று எங்கயாச்சும் நான் சொல்லி வைத்து விட்டேனோ ? பதிவை எழுதினவன் நான் ; டைப் அடித்தவர் சொதப்பிட்டாரோ ? பார்த்துப்புடலாம் சார் !

      நீங்க பிரெஷா அடுத்த கேள்வி ரெடி பண்ணிட்டிருக்கிறதுக்குள்ளாற பார்த்திடறேன் !

      Delete
    4. கேட்ட லாகின் அட்டையை பாருங்கள் நண்பரே... நான் சொல்லவந்தது புரியும்

      Delete
  25. @ MKS RAMM

    ஹா...ஹா..ஹா..எல்லாமே கலக்கல் சார்!

    கடைசி மீம்....துள்ளுது மனசு..:)

    ReplyDelete
    Replies
    1. Sir ll am theva illa Ji .. Per solliye kupdunga ..

      Delete
  26. ஏபிசி என்று பிரிக்காமல் மொத்தமாக எங்களிடம் கொட்டியதற்கு நன்றி. ஆப்ஷன் b-tex தவிர்த்து சந்தா கட்டலாம் என்று கூறியுள்ளீர்கள். அதேபோல டெக்ஸ் மற்றும் ஒரு சந்தா பிரிவு அறிவித்து விடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. Saran Selvi,

      ஆனால் ஒரு வழியுள்ளது நண்பரே.

      MCMU - 3000 செலுத்தினீர்கள் என்றால் - அறிவிக்கப்பட்ட Tex இதழ்கள் சுமார் 1600 ஆகிறது. மிச்சத்தை 2023க்கு தள்ளி வைத்துவிடுங்கள். நீங்களும் ஜெயிக்கலாம் - கம்பெனியும் ஜெயிக்கும் !

      Delete
    2. என்ன பற்றிய தவறான புரிதல் நண்பரே. மீண்டும் ஒரு முறை பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிடும் ஒரு பேப்பரை கூட விடாதவன் இந்த அடியேன். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் 35 வருட காமிக்ஸ் சேகரிப்பில் லயன் முத்து திகில் மினி லயன் அதாவது நமது ஆசிரியர் வெளியிட்ட புத்தகத்தை தாண்டி வேறு புத்தகம் என் அலமாரியில் இல்லை. அப்படி ஒரு வெறியன் நமது ஆசிரியரின் மொழிபெயர்ப்பில்...

      Delete
  27. அது என்ன ஆசிரியரே டெக்ஸட்ஐ லைனுக்கு மட்டும் தாரைவார்த்துக் கொடுத்து விட்டீர்களா என்ன.. அப்படிப்பார்த்தால் சன் சைன் லைப்ரரி திகிலில் வந்த டெக்ஸ் முத்துவில் மட்டும் வரவிடாமல் தடுப்பது எதுவோ...????

    ReplyDelete
    Replies
    1. இயல்பான கேள்விகளாய்க் கேளுங்களேன் ப்ளீஸ் ; "எதையாச்சும் கேட்க வேண்டுமே" என்று வேணாமே ?

      Delete
    2. எனக்கு கூட சிலசமயம் தங்கள் பதில்கள் இதுபோல தான் தோன்றுகிறது ஆசிரியரே....

      Delete
    3. தப்பே இல்லையே !! அப்புறமா ....

      எப்போவாச்சும் மாயாவி ஏன் லயனில் வரலை ?

      சன்ஷைன் லைப்ரரியில் டெக்ஸ் நுழைந்த சந்தர்ப்பம் என்ன ?

      ஒரு flagship அடையாளமெனில் அதன் பிரத்யேகத்தன்மை என்ன ?

      போன்ற சமாச்சாரங்களை நீங்கள் யோசிக்க முயலுங்கள் ; இன்னும் சிறப்பாய் பதில் சொல்லும் கலையில் தேர்ச்சி பெற்றிட நான் முயற்சிக்கின்றேன் சார் !

      Delete
    4. நானும் நாகேஷ் போன்று கேள்வி கேட்பதில் தேர்ச்சி பெற முயற்சி செய்கிறேன் நன்றி ஆசிரியரே 🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹

      Delete
    5. மாயாவி லயனில் வரவில்லையா... சற்று யோசித்துப் பாருங்கள் ஆசிரியரே... லயன் கௌபாய் ஸ்பெஷல் இலேயே தலை காட்டியவர் ஆயிற்றே மாயாவி...

      Delete
    6. இப்படி பாருங்களேன் டெக்ஸ் தான் போதும் போதும்கிற அளவுக்கு வருதே....அத ஏன் முத்துல சேத்தேன்னு கேக்க மாட்டோமா

      Delete
  28. எப்பமே உண்மையான காமிக்ஸ் வாசகர்களுக்கு உங்கள் மீது ஒரு "சாஃப்ட் கார்னர்" இருந்து கொண்டே இருக்கும் சார்.
    இந்த விசியத்தை மறைக்காமல் சொன்னதால், உங்கள் மீது இன்னும் கூடுதலாக "மரியாதை" என்னும் ஸ்டார் ஏறுகிறது.
    உங்களின் இந்த மாற்றத்திற்கு ஒரு "ராயல் சல்யூட்"🌹.

    இந்த மனம் திறந்த பதிவுக்கு மீண்டும் வாழ்த்துக்கள் சார்.
    2022 லயன்+முத்துவுக்கு ஒரு புதிய பாதையாக மாறுவது உறுதி.


    #######


    அருமை நண்பரே...100 % உண்மை...

    ReplyDelete
  29. என் பெயர் லார்கோ...

    வெளிவந்த சமயம் பளீரென சுத்தமான வெள்ளை நிற டிசைனில் நாற்காலியில் அமைதியாய் உட்கார்ந்து போஸ் கொடுத்து கொண்டு உள்ளாரே...இவர் தேறுவாரா ..


    ஷெல்டன் அறிமுகம் ஆகும் பொழுது என்னய்யா இது வயசான ஹீரோ மாதிரி இருக்காரு ..முடி எல்லாம் நரைச்சு இருக்கு இவரு என்னத்த ஆக்‌ஷன் பண்ண போறாரு ஆக்‌ஷன் ஹீரோ ன்னு வேற விளம்பரம் பன்றாங்க ...


    என இவர்கள் புதிதாக அறிமுகமாகும் பொழுது எதிர்ப்பார்ப்பே இல்லாமல் மண்டைய சொறிந்த பொழுது....


    இதழ் வெளியாகி கதையை படித்து முடித்து இதோ இவர்களின் சாகஸமும் இனி இல்லை எனும் பொழுது இன்னும் இவர்கள் தலைகாட்ட மாட்டார்களா என ஏங்க வைத்து கொண்டு இருக்கிறார்களே ...



    அது போல் முத்து 50 புதுயுக நாயகர்களும் பட்டையை கிளப்புவார்கள் என்ற நூறு சதவீத நம்பிக்கையுடன்


    முத்தான முத்து ஆண்டு மலருக்காக..



    ஐயம் வெயிட்டிங்...!

    ReplyDelete
  30. ஒரு ஆண்டு முழுவதும் புதுக்கதைகளுடன் பயணிக்க ஆசைப்பட்டார் ஆசிரியர் .அவரது ஆசை 2022ல் 90 சதவீதம் நிறைவேறிவிட்டது என்று உணர்கின்றேன். சரிதானே சார் ?

    ReplyDelete
    Replies
    1. மனச்சாட்சிக்கு விரோதமின்றி ஒரேயொரு உபகாரம் செய்யுங்களேன் சார் :

      உங்கள் பார்வையில் - பழையவர்களை கொண்டு என்ன மாதிரியான ஒரு இதழைத் தயாரித்திருக்க வேண்டும் என்ற திட்டமிடலை முன்மொழியுங்களேன் ப்ளீஸ் ? அது சிறப்பாய் இருந்து , நண்பர்களும் சிலாகிக்கும் பட்சத்தில் அதனை 2022 ல் என் சொட்டைத் தலையை அடகு வைத்தாவது வெளியிட்டு விடுகின்றேன் !

      இரு வெவ்வெறு படைப்பாளிகளின் குழுமப் படைப்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கும் அபத்த முன்மொழிவுகளை மட்டும் செய்திடாது, பாக்கி என்ன கூட்டணியோ - அதை நண்பர் சரண் செல்வியுடன் சேர்ந்து ஆலோசித்துப் போட்டுத் தாக்குங்களேன் ? ஆவலாய்க் காத்திருப்போம் !

      Delete
    2. And மெய்யாலுமே அவ்விதமொரு அசாத்தியத் திட்டமிடலை நிஜமாக்கிடும் பட்சத்தில் - உங்களிருவருக்குமே அந்த இதழில் எடிட்டோரியலில் பொறுப்பேற்கும் வாய்ப்பினை வழங்கிட ரெடி !

      Delete
    3. எல்லா தருணங்களிலும் எனக்கு எல்லாமே சரியாய்த் தெரிந்திருந்தாக வேண்டுமென்பதில்லையே சார் ? So நிஜமாகவே ஒரு அழகான மாற்றுத் திட்டமிடலை சுட்டிக்காட்ட சாத்தியப்பட்டால் கைதட்டி வரவேற்க ரெடி சார் !

      But மறுக்கா சொல்கிறேன் - "மாயாவி ; அப்புறமா டைகர் ; அவங்களோட டெக்ஸ்" என்ற ரீதியிலான சாத்தியங்களே இல்லாத கூட்டணிகள் வேணாமே ப்ளீஸ் ?

      Delete
    4. சார் இந்தப் பின்னூட்டம் உங்கள் பதிவுகளில் நீங்கள் சொன்ன பரிசோதனை முயற்சி மற்றும் ஆசை நிறைவேறிவிட்டதாகத் தான் சொன்னேனே தவிர வேறு உள்நோக்கம் ஏதுமில்லை சார்.

      Delete
    5. சார் ...எனக்கும் வருத்தங்களோ, கோபமோ நஹி ! சொல்லப் போனால் பழமை விரும்பிகள் முகம் சுளிப்பர் என்பதினை எதிர்பார்க்கவே செய்தேன் ! மாற்றாக என்ன செய்திருக்கலாம் ? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே எனக்கு !

      Delete
    6. நண்பர் சரவணன் ஆசிரியர் நமது எண்ணத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஆதலால் இதைப் பற்றி பேசுவது மனக் கஷ்டத்தை உண்டாகும். இதை இப்படியே விட்டு விடுவோம்... நன்றி வணக்கம்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹

      Delete
    7. என்ன ஒரு வருத்தம் என்றால் ராகவன் நண்பரை தவிர வேறு யாராவது இங்கு வந்து உள்ளார்களா பாருங்கள்....

      Delete
    8. ஆசிரியரிடம் ஒரே ஒரு விண்ணப்பம் தான். கதம்ப இதழுக்கு அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் ஏன் வம்படியாக இந்த இதழில் தேர்ந்தெடுக்க வேண்டும் அவர்களை. அதற்கு பதிலாக கதம்ப கதைகளுக்கு ஓகே சொல்லும் பாட்டிகள் உடன் ஜோடி சேர்ந்து திகில் காமெடி ஆக்ஷன் கௌபாய் இப்படி கலந்து கட்டி கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று விருப்பம் அவ்வளவே..

      Delete
    9. ஒரு கருத்துக்கு உடன்பாடு தெரியக் காணோமெனில் அந்தக் கருத்து தவறானதாகக் கூட இருக்கலாமில்லியா ?

      எனது தீர்மானம் தீர்க்கமாய்த் தவறென்று உங்களுக்குத் தோன்றும் அதே பாணியில் - உங்களின் சிந்தைகள் தவறென்று அவர்கட்குத் தோன்றியிருக்கலாம் தானே ?

      அல்லது நான் சொன்ன பதில்களே போதுமானதென்று அவர்கள் நினைத்திருக்கலாமில்லையா ? சாப்பிட்டு விட்டு உறங்கிக்கொண்டிருப்போரை தட்டி எழுப்ப எண்ணுவானேன் ?

      Delete
    10. பொத்தாம் பொதுவாய் வடைகள் சுட இயலாது சார் ; உளுந்து ... வெங்காயம் ... பருப்பு என்று பெயர் சொல்லி மளிகைக்கடையினில் வாங்கிட வேணும் ! அதே போலவே - இன்ன இன்ன திகில் நாயகர் ; இன்ன இன்ன காமெடி நாயகர் ; இன்ன இன்ன கௌபாய் ஹீரோ - என்று குறிப்பிட்டுக் கோடி காட்டுங்களேன் ப்ளீஸ் ?

      உங்க ஆசைக்கு டெக்ஸ் என்றால் அவரோடு கதம்ப இதழில் ஜோடி சேரக்கூடியோர் மார்டின் ; ஜூலியா ; டிலான் டாக் ; மேஜிக் விண்ட் ! சொல்லுங்களேன் - இதுவே காலத்தை வென்றிருக்கும் இதழாக ஆகியிருக்குமா என்று ? And இங்கே காமெடிக்கு யாரைக் கூப்பிட்டுக் கொள்வது சார் ?

      எனது புரிதலில் பிழை என்கிறீர்கள் ; a definite possibility ! சுட்டிக் காட்டுங்கள் புரிந்து கொள்கிறேன் என்கிறேன் - அவ்வளவே !

      Delete
    11. நண்பரே உங்களின் வினாவிற்கு எடிட்டர் பதில் சொல்வது தான் சரி என்பதால் மௌனம் காத்தோம். சாத்தியக்கூறுகள் இருந்திருப்பின் எடிட்டர் அதை செயல்படுத்தாமல் இருந்திருக்க மாட்டாரே என்ற எண்ணமும் உண்டு தானே அனைவருக்கும். எனினும் உங்களின் ஆதங்கத்தை சரியாகவே புரிந்து கொள்ள முடிகிறது நண்பர்களே... 🙏

      Delete
    12. வருஷத்துக்கு 12 டெக்ஸ் ஏன் போடலே ?

      வருஷத்துக்கு 12 டெக்ஸ் உண்டு ; நம்புங்க ! 9 அட்டவணையில் இருக்கு ; பாக்கி 3 க்கு வேற திட்டமிடலும் இருக்கு !

      அதெப்புடி டெக்ஸ் முன்னிலைப்படுத்தாம போச்சு ?

      12 டெக்சுக்கு நாங்க கியாரண்டி !

      ஊஹும் ...அதுலாம் ஏத்துக்க முடியாது ! இது வரலாற்றுப் பிழை !

      இல்லீங்க - எல்லா மாசமுமே டெக்ஸ் இருக்கும் ! பிராமிசா !

      அது எப்புடி ? இல்லே ..இல்லே ..இது ஆகுறதில்லே !

      Delete
    13. // சாத்தியக்கூறுகள் இருந்திருப்பின் எடிட்டர் அதை செயல்படுத்தாமல் இருந்திருக்க மாட்டாரே என்ற எண்ணமும் உண்டு தானே அனைவருக்கும். //

      +1

      Delete
    14. LMS காலத்தை கடந்து தானே உள்ளது... இன்னமும் எங்கள் நெஞ்சில்

      Delete
    15. டெக்ஸ் ஐ பற்றி நான் கேள்வி ஏதும் எழுதவில்லையே 🤔🤔🤔🤔🤔

      Delete
    16. Lms... ஷெல்டன் .....லார்கோ என புதிய நாயகர்களால்தானே வெற்றி....இப்பவும் அதைப்போல அதிரடி நாயகர்கள் மற்றும் பழசுக்கு வேதாளர்....கொண்டாடுங்க நண்பரே

      Delete
    17. LMS ல் ஏதுங்க லார்கோ ஷெல்டன் 🤔🤔🤔🤔

      Delete
  31. ஆசிரியரிடம் நிஜமாகவே உங்களிடம் ஒரு சின்ன விண்ணப்பம். கதம்ப ஸ்பெஷலுக்கு ஓகே சொல்லு நிறுவனத்தாரின் ஹீரோக்களின் பெயர்களை நீங்கள் தந்தால் என்னால் முடிந்த அளவிற்கு ஒரு கதம்ப ஸ்பெஷல் தயார் செய்ய முடியுமா என்று முயற்சித்துப் பார்க்கிறேன். ஒரு நாள் முதல்வர் போன்று 😂😂😂😂

    ReplyDelete
    Replies
    1. ஒரு நாள் தெய்வமே - நேத்தைய பதிவை கொஞ்சம ஆற அமர படியுங்க !

      அப்புறமாய் ஒருக்க திருவிளையாடல் படத்தையும் பார்த்திடுங்க - குறிப்பா அந்த தருமி போர்ஷனை !

      அப்பறமா ஒரு நாள் முதல்வர் எதுக்கு - ஸ்ட்ரெய்ட்டா ஒரு நாள் பிரதமராகவே மாறிடலாம் !

      Delete
    2. நாம் வெளியிட்டு வரும் கதைகளின் ஒரிஜினல் பதிப்பகங்கள் ஒவ்வொருவரின் - நாயக / கதைப் பட்டியல் தோராயமாய் ஒரு பத்தாயிரம் தேறும் ! அவற்றை சேகரம் பண்ண நான் இன்றைக்கு ஆரம்பித்தால் லயன் ஐம்பதாம் ஆண்டுமலருக்கான நேரம் புலர்ந்திருக்கும் ; and அதற்குள்ளாக அவர்கள் இன்னொரு பத்தாயிரத்தை ரெடி பண்ணியிருப்பார்கள் !

      Delete
    3. கருத்துப் பரிமாற்றம்....நல்லபடியாக அமைந்ததில் மிக்க சந்தோஷம் ஆசிரியரே... உங்கள் மனதை சற்று சஞ்சலப் படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹

      Delete
  32. Replies
    1. சார் ...தக்காளிச் சட்னி ரசிக்கும் ஆர்வலர்கள் தானே சார் நாமெல்லாம் !

      Delete
    2. ஸ்மாஷிங் 70 என்பது முத்துவின் ஆரம்பகால சில நாயகர்களை நமக்கு கொடுக்கவே உருவாக்கபட்டது, அதற்கு ஒதுக்கிய பட்ஜெட் முத்து 50ஐ விட அதிகம், கதைகளும் அதிகம்! நண்பர்கள் மாயாவி கண்டிப்பாக வேண்டும் என்றால் முத்து 50ஐ உடன் வெளிஇட சரி சொல்லிவிட்டார்!

      ஆலமரத்தடியில் இதே போன்ற கருத்துக்களை நண்பர்கள் பதிவிட்டு இருந்தார்கள், அங்கு முடிந்த அளவு ஆசிரியர் நண்பர்களுக்கு பதில் அளித்து விட்டார், அட்டவணை அறிவித்த பின்னர் மீண்டும் பழமை பற்றி கருத்துக்கள் வருவது வருத்தமாக உள்ளது அதே நேரம் உங்களில் பழமை மீதான ஆர்வம் புரிகிறது!

      நம்மை எல்லாம் புரிந்து தேவையானதை கொடுத்து வரும் ஆசிரியரையும் கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்.

      அதே நேரம் உங்களுக்கு முத்து 50 கதை தொகுப்பு பிடிக்கவில்லை என்பதற்காக அது வெற்றி பெறாது பின்னாளில் நீங்கள் வருந்துவீர்கள் என சொல்வது என்ன நியாயம் அது ஆசிரியரை எந்த அளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை அவர் நிலையில் இருந்து கொஞ்சம் யோசியுங்கள்!

      ஆசிரியர் நம்மை மதித்து பதில் சொல்கிறார் என்பதற்காக அவரை காயப்படுத்தும் கேள்விகளை கேட்கவேண்டாமே! அவரின் பொறுமையை நாம் சிலநேரம் அதிகம் சோதிக்கிறோம்!

      மேலும் மேலும் இதனை பற்றி பேசுவது மனகாயங்களை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளது எனவே இத்துடன் நிறுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே! இது கொண்டாட வேண்டிய தருணம் கொண்டாடுவோம் ஒரு உண்மையான காமிக்ஸ் ரசிகனாக வாசகனாக!!

      Delete
    3. நமது தளத்தை தொடர்ந்து பார்வையிடும் நண்பர்கள் மீண்டும் மீண்டும் இதே போன்று பதில் சொன்ன கேள்விகளை திரும்ப கேட்கும் போது கொஞ்சம் கவலையாக உள்ளது! ஆசிரியர் நமக்கு பதில் சொல்கிறார் என்றாலும் அவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்பது நலம், அது நமது உறவை மேலும் பலப்படுத்தும் என்பதை நண்பர்கள் புரிந்து கொண்டால் நன்று!

      Delete
    4. ////
      அதே நேரம் உங்களுக்கு முத்து 50 கதை தொகுப்பு பிடிக்கவில்லை என்பதற்காக அது வெற்றி பெறாது பின்னாளில் நீங்கள் வருந்துவீர்கள் என சொல்வது என்ன நியாயம் அது ஆசிரியரை எந்த அளவு காயப்படுத்தி இருக்கும் என்பதை அவர் நிலையில் இருந்து கொஞ்சம் யோசியுங்கள்!
      ///

      ----ஆம் பரணி... இது மிகவும் ஆபத்தான போக்கு... சரணுக்கு பிடிக்காத நொடியிலயே அது வெற்றி பெறாது என எண்ணம் எப்படி எழுந்தது... 35வருடமாக ஆசிரியர் சாரை பாலோ பண்ணி வந்துள்ளவருக்கு , நிதர்சனத்தை புரிந்து கொள்ள இயலாதது எங்ஙனம்...???

      அவருக்கு ஆகலனா இது ஊத்திக்கும் என்பது என்ன லாஜிக்குனே தெரியலயே... ரொம்ப சங்கடமாக உள்ளது..

      Delete
    5. // ஆசிரியர் நமக்கு பதில் சொல்கிறார் என்றாலும் அவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே நிற்பது நலம், அது நமது உறவை மேலும் பலப்படுத்தும் என்பதை நண்பர்கள் புரிந்து கொண்டால் நன்று! //
      மதிப்புமிக்க வார்த்தைகள் PFB,தலைமைப் பொறுப்பில் இறங்கி வருகிறார்கள் என்பதற்காக அவர்களின் பொறுப்பையும்,இடத்தையும் நாம் உணர்ந்து நடந்து கொள்ளுதல் நலம்...

      Delete
  33. "வழியனுப்பவந்தவன் " இரண்டாம் ஆல்பத்தை ஏதாவது புத்தகத் திருவிழாவில் வரும் வாய்ப்புகள் உண்டா சார் ?!

    ReplyDelete
    Replies
    1. December! நேற்றைய பின்னூட்டத்தில் இதற்கான பதில் உள்ளது

      Delete
    2. நன்றி பரணி சார்.

      Delete
  34. இங்கே ஏதாச்சும் பிரச்சினையா?!!

    நல்லது!

    நாம் சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்பது ஊர்ஜிதமாகிறது!

    ReplyDelete
    Replies
    1. கொறச்சு கழிச்சு சாரே! அவிட?

      Delete
    2. // நாம் சரியான பாதையில் தான் போய்க்கொண்டிருக்கிறோம் என்பது ஊர்ஜிதமாகிறது //

      Yes. Exactly :-)

      Delete
    3. நேற்றைய பட்டாணி சுண்டல் எல்லாம் காலியா விஜய் :-)

      Delete
    4. //ஆயி !///

      இது மலையாளமா, தமிழா சார்? :D

      Delete
    5. // ஆயி //

      எண்ட சாரே இப்படி எழுதி :-)

      Delete
    6. ///நேற்றைய பட்டாணி சுண்டல் எல்லாம் காலியா விஜய் :-)///

      ஆயி!

      (தமிழ்தான்!)

      Delete
    7. இக்கட சுண்டல் போட்டில்லா ! ஊன் மாத்திரமே ஆயின்னு ஞான் பரஞ்சூ !

      Delete
    8. இங்கு பட்டாணி சுண்டல் உள்ளது வேண்டுமா சாரே :-)

      Delete
    9. விஜய் @ காலையில் போகலையா :-)

      Delete

  35. பழைமை வாய்ந்த பள்ளி

    தலைமையாசிரியர் அறை

    ப்யூன் உள்ளே நுழைந்து

    ப்யூன்: சார்! அருண் - னு ஒரு பையன் உங்களை பாக்குணும்னு நிக்கறாரு சார்

    த.ஆசிரியர் : lkg லேர்ந்து இதே ஸ்கூல்ல படிச்சிட்டு இருக்கற பையன் ..ரொம்ப நல்ல பையன்னு முந்திய ஹெட் மாஸ்டர் வீர பாண்டியன் கூட சொல்லியிருக்காரு.
    வரச் சொல்லு...

    அருண் : ( வந்து) வணக்கம் சார்.

    த.ஆசிரியர் : என்ன விஷயம் அருண்?

    அருண் : பரீட்சை அட்டவணையில் ஒரு சந்தேகம் சார்..

    த.ஆசிரியர்: (வியப்புடன்) என்னன்னு சொல்லு..

    அருண்: நான் பத்தாவது வரைக்கும் படிச்சப்ப எந்த பிரச்சினையும் இல்ல சார்.ஆனா இப்போ இயற்பியல் பாடத்திலும் சரி, வேதியியல் பாடத்திலும் சரி கணித சமன்பாடுகள் கொடுத்து தீர்வு காணச் சொல்றாங்க..கணக்குக்குத்தான் தனியா பேப்பர் இருக்குல்ல..அப்புறம் எதுக்கு இயற்பியல், வேதியியல்ல கணக்கு வரணும்?

    த.ஆசிரியர் : ( புன்னகையுடன்) அருண்! நான் இயற்பியலில் முதுகலைப்பட்டம் பெற்றவன்..இயற்பியல் என்பதே கணித சமன்பாடுகளை அடிப்படையாக கொண்டதுதான்... வேதியியலும் கணித தரவுகளை சார்ந்து இருப்பதுதான்..

    அருண்: ( வருத்தத்துடன்) என்னோட நிலையை நீங்க புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க..

    த.ஆசிரியர்: ( கனிவான குரலில் ) இதுக்கு என்ன பண்ணலாம்னு நீ நினைக்கறே?

    அருண்: ( ஆர்வம் மேலிட) இயற்பியல், வேதியியலில் வரும் கணித சமன்பாடு தொடர்பான கேள்விகளை கணித பேப்பரில் சேர்த்துட்டால் போதும்..

    த.ஆசிரியர்: ( சிரித்து) இதுக்கு கல்வித்துறை ஒத்துக்க மாட்டாங்களே?

    அருண் : இதுக்கு ஒத்து வர கல்வித்துறை அதிகாரிகளை போடணும்னு கல்வி அமைச்சர் கிட்டேயே கேக்கணும் சார்

    த.ஆசிரியர் : ( புன்னகையுடன்) நீயே கல்வி அமைச்சர்னு நினைச்சுக்கிடுவோம்..அப்ப என்ன பண்ணுவ அருண்?

    அருண் : ( கட்டுக்கடங்காத ஆர்வத்துடன்)

    நானே கொஸீன் பேப்பர் எனக்கு புடிச்ச மாதிரி செட் பண்ணிடுவேன் சார்..

    த.ஆசிரியர் சிரிப்பொலி மட்டும் கேட்கிறது..


    ReplyDelete
    Replies
    1. சூழ்நிலையை அழகாக சொல்லி உள்ளீர்கள் செல்வம் அபிராமி! :-)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. ரசிக்கும்படி இருந்தாலும், வேண்டாமே என்று சொல்லத் தோன்றுகிறது.

      Delete
    4. நீங்க சொல்றதுக்காக அதை தூக்கறேனுங்க பத்து சார்.. இல்லேன்னா நடக்கறதே வேறங்க!! :D

      Delete
  36. சரண் செல்வி@

    இந்த முறை மிகப்பெரிய தவறான புரிதல்கள் கொண்டு உள்ளீர்கள் நண்பா!

    இந்த அலசல்கள், விவாதங்கள் எல்லாவற்றின் பயனே முத்து 50என்பது 2ஆக பிரிக்கப்பட்டு ஒரு பாதி பழைய ரசிகர்கள் விரும்பியவாறு Smashing 70ல வருகிறது..

    அடுத்த பாதியில் புதிய தலைமுறை ரசிகர்கள் மகிழ புதிய கதைகளோடு வருது... இதான் யதார்த்தம்...

    இன்னிக்கு வந்து மறுபடியும் பழைய பல்லவியையே பாடுறீங்களே???

    இது நியாயமா???

    அப்ப Smashing 70எதற்கு????

    காலம் முடிந்துபோன ஹீரோக்களை வைத்து எடிட்டர் சார் இத்தனை முயன்று உங்களை திருப்திபடுத்த முயல்வதே பெரியது..

    அந்த smashing 70 ஐயும் வாங்கிக் கொண்டு, அடுத்த செட் ஸ்பெசல் இதழ்களிலும் இடம் வேணும் என்பது பேராசை அல்லவா???

    கொஞ்சமாவது நிதர்சனத்தை உணர்ந்து கொள்ள முயலுங்கள் நண்பா!!!!


    அதேபோல மாதம் ஒரு டெக்ஸ் உண்டுனு எடிட்டர் சார் அறிவித்தபின்பும் அவரோடு விதண்டாவாதம் செய்வேன் என அடம்பிடிக்கின்றீர்கள்... சரியல்லவே!


    மற்ற ரசிகர்கள் அமைதி காப்பது,
    ///இங்கே யாரும் அவரவர் விருப்பத்தை பதிவி செய்ய கூடாதா?? அதற்கு உரிமையில்லையா//---

    என பேச்சு வந்ததாலயே.... இதை புரிந்து கொள்ளுங்கள்...

    உங்களுக்கு யாரும் பதில் சொல்லலனா உங்கள் கருத்து சரியென்றாகிடாது இதையும் புரிந்து கொள்ள முயலுங்கள்...!!

    நல்ல அருமையான சந்தா அறிவிப்பு, smashing 70, புதிய ஹீரோக்கள் என சகலருக்கும் தேவையான வற்றை கலந்து பரிமாறியுள்ளார்...

    இது என்சாய் பண்ணுவதற்கான நேரம்...

    கொண்டாடுவோம் நண்பா....😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள் விஜயராகவன்.

      Delete
  37. என்ன நண்பரே நல்லா கவனிங்க நான் எழுதியதை புதுக்கதை எதுவுமே வேண்டாம் நான் சொல்லவே இல்லையே எங்கேயும்.பழைய ஹீரோக்களையும் கலந்து கொடுத்து ஒரு குண்டு புக் தான் சொல்லி இருக்கேன் அதை கவனிச்சு பார்த்தீர்களா தனித்தனியா பிரித்தால் அது ஸ்பெஷலா வே தெரியவில்லை. அதைத்தானே நான் குறிப்பிட்டு உள்ளேன்.
    டெக்ஸ் ஐ பற்றி நான் அவரிடம் எதுவுமே கூறவில்லையே கேட்லாக் கில் டெக்சை ஓரத்தில் வைத்து விட்டீர்களே என்று சொன்னேன் அவ்வளவு தானே.
    என் போன்று 4 பேர்கள் நான்கு மூலையில் 400 முறையைக் கூறியதன் பலன் தானே smalshing 70 sஅதே மறப்பேனா.....
    கொஞ்சம் பின்னோக்கி சென்று ஆலமரம் ஆலமரம் ரெண்டு இதையெல்லாம் படித்தால் புரிந்து கொள்ளலாம் பின்னூட்டங்களை.... என்ன சரிதானே நண்பரே

    ReplyDelete
    Replies
    1. // பழைய ஹீரோக்களையும் கலந்து கொடுத்து ஒரு குண்டு புக் தான் சொல்லி இருக்கேன் //

      அதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பலமுறை பதிவுகளில் ஆசிரியர் சொல்லி இருக்காரே சரண்! அதனை நெடுநாளைய வாசகரான நீங்கள் புரிந்து கொள்ளவில்லையே என்பது எனது ஆதங்கம்!

      Delete
    2. அதே ஆலமரத்தில் என்னைக் கட்டி வைத்து படைப்பாளிகள் உரித்தெடுத்து விடுவார்கள் என்பதைத் தானே தொண்டை கிழிய செப்பி வருகின்றேன் சாரே ? ஒரே குழுமப் படைப்புகளுக்கே ஒருங்கிணைக்க யாரும் ஒத்துக்கவில்லை ; ஒ.கே சொன்ன ஒரே பதிப்பகம் லோம்பா மட்டுமே என்பதையும் நேற்றைக்கு பத்தி பத்தியாய் எழுதியிருக்கிறேனே ?

      இதில புதுசையும், பழசையும் கலக்க நான் எங்கே போவதாம் ?

      Delete
    3. பழைய ஹீரோக்கள் என்றால் 70'ஸ் 80's இல்லை நண்பர்களே நான் சொல்ல வருவது. 50 ஆண்டு காலமாக முத்துவில் பயணம் செய்த ஒரு ஹீரோக்கள் கூட இல்லாமல் வருகிறதே என்று ஒரு சின்ன ஆதங்கம். அதுவும் குண்டு புக்கு இல்லாமல் அவ்வளவே வேறு ஒன்றும் இல்லை. இதில் நான் வருத்தப்பட்டு ஒன்றும் ஆக போவதில்லை.

      Delete
    4. சரண் @ Smashing 70ஐ எந்த வகையிலும் சேர்க்க வேண்டும்.? அது நான்கு கதை நாயகர்களை வைத்து வருவது தானே. இந்த 50வது விழா கொண்டாட்டத்தில் மிகவும் முக்கியமான புத்தகம் இது பல புதிய மற்றும் பழைய காமிக்ஸ் ரசிகர்களுக்கு.

      Delete
    5. நேரம் கிடைக்கும் போது மாயாவி கதைகளை ஆசிரியர் வெளியிடுகிறார். அதே போல் நேற்றைய பதிவில் ஆசிரியர் மாயாவி கதை வேண்டும் என்றால் வெளியிடலாம் என தெளிவாக எழுதி இருந்தார்.

      நீங்கள் கேட்பது எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் அடுத்த வருடம் வர போகிறது சரண்.

      Delete
    6. ///// பழைய ஹீரோக்களையும் கலந்து கொடுத்து ஒரு குண்டு புக் தான் சொல்லி இருக்கேன் //


      ---ஹா...ஹா... இதற்கு வாய்ப்பு இருந்து இருந்தா தான் ஆலமரமே தேவையிராதே...

      M50 குண்டு ஸ்பெசல்....1, 2, 3னு ஏழெட்டு பார்மேட்களை தாக்கியிருப்பாரே சாரே!

      Delete
  38. ஆசிரியரின் ஒவ்வொரு இதழும் எனக்கு கொண்டாட்டம் தான் ❤❤❤❤❤❤

    ReplyDelete
    Replies
    1. கெட்டு, நாசமாய் போய் ,சீரழியப் போகும் இதழும் தானா சார் ?

      Delete
    2. தங்களின் படைப்பில் வரும் ஒவ்வொரு இதழ் மே எனக்கு சிறப்பு தான். எனது 35 ஆண்டு கால சேகரிப்பில் என்னிடம் இருப்பது தங்களின் படைப்பு மட்டுமே. இதை சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி எனது மானசீக ஆசிரியரே 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹

      Delete
    3. No way! It is gonna be a super duper hit.

      Delete
    4. // It is gonna be a super duper hit. //

      +1

      இந்த மாதிரி நீண்ட உரையாடல் நடக்கும் புத்தகங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது ஏற்கனவே. எனவே இனிதான ஆரம்பம். அனைத்தும் நன்மைக்கே.

      Delete
    5. //கெட்டு, நாசமாய் போய் ,சீரழியப் போகும் இதழும் தானா சார் ?//
      நல்லா வரும்

      Delete
  39. பழைய பதிவுகளை பாருங்க சார். ஆசிரியர் நிறைய சொல்லிட்டாரு publisher காம்பினேஷன்ஸ் இஸ்ஸுஸ் பற்றி..

    ReplyDelete
    Replies
    1. உண்மை பிரபு!
      நண்பர்கள் அனைத்தும் அறிவர்... ஆயினும் ஆசைக்கு ஏது எண்ட்???

      Delete
  40. நண்பர்களெல்லாம் இப்படி கேட்கறாங்களேன்னு எடிட்டரும் ஒரு வேகத்துல 'சூ.ஹீ.சூ.ஸ் - சீசன்2'வை களக்கிமிறக்க முடிவு பண்ணார்னா நம்ம கதி என்ன ஆகும்னு கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க?!!

    ஆத்தாடியோவ்!!!

    ReplyDelete
    Replies
    1. கூப்புடுங்க கவிஞரை !! ஸ்டீல் ..மக்கா !!

      Delete
    2. ஆமாம் சார். சூ.ஹி.ஸ்பெஷல் இரண்டாம் பாகம் எப்போது :-)
      தூத்துக்குடியை பார்த்து ஓடுடா பரணி :-)

      Delete
    3. ///ஸ்டீல் ..மக்கா ///

      அப்படித் தெரியலீங்க சார்! எனக்கென்னவோ அவர் புத்திச்சாலின்னு தான் தோனுது! :D

      Delete
    4. ஆமாம் ரொம்ப புத்திசாலி :-)

      Delete
    5. அப்புடீங்கிறீங்க ? ஆயுதத்தே வெளியே எடுத்தரணும் போலிருக்கே !!

      விண்வெளிப் பிசாசூ
      &
      சினிஸ்டர் 7

      இனி பாருங்க - காஞ்சனா பட ஆவி ஸ்பீடில் கவிஞர் பொழிய ஆரம்பிக்கிறதை !

      Delete
    6. மொட மொடவென
      வெட வெடக்கும்
      விண்வெளி பிசாச
      கட கடவென கதி கலங்கி
      பயந்து போடப் போறாரு ஏ ஏ ஏ

      குடு குடுவென ஆவலோடட
      திரும்பி திரும்பி கேக்குறோம்
      பட படவென கதை எடுத்து
      புக்கா போடு சினிஸ்டர

      அட ஸ்பைடர் படிச்ச நேசம்
      நீங்கிடாத மனசு
      லயன்ல ஸ்பைடர மறந்தயே
      கல்லு போல மனசு

      துள்ளி துள்ளி ஆடும்
      ஸ்பைடர் காலம் போச்சே
      ஸ்பைடர் தந்த லயன்க்கு
      டெக்சு கெடச்சு போச்சே

      அய்யா
      துள்ளாதே துள்ளாதே
      ரொம்ப ரொம்ப துள்ளாதே
      தள்ளாதே தள்ளாதே
      ஸ்பைடர இனி தள்ளாதே
      போய்யா ஓய் போய்யா ஓய்ய்

      தாயா தயானு கத்தி ஒன்ன
      கேக்கப்ப் போறேன்
      கதைய போடும் நேரம்தான்
      வந்தாச்சு



      மொட மொடவென
      வெட வெடக்கும்
      விண்வெளி பிசாச
      கட கடவென கதி கலங்கி
      பயந்து போடப் போறாரு ஏ ஏ ஏ

      குடு குடுவென ஆவலோடட
      திரும்பி திரும்பி கேக்குறோம்
      பட படவென கதை எடுத்து
      புக்கா போடு சினிஸ்டர

      ஆசிரியரே ஆசிரியரே
      ஸ்பைடர மறந்த ஆசிரியரே
      ஆசிரியரே ஆசிரியரே
      மறந்துபோன ஆசிரியரே
      வாயா யேய் வாயா யேய்

      லயனு கூட்டுல டெக்ச அள்ளி
      போட்டு புட்ட ஸ்பைடர் தன்ன நெனச்சிகூட
      பாக்கல பாக்கல பாக்கல பாக்கல

      மொட மொடவென
      வெட வெடக்கும்
      விண்வெளி பிசாச
      கட கடவென கதி கலங்கி
      பயந்து போடப் போறாரு ஏ ஏ ஏ

      குடு குடுவென ஆவலோடட
      திரும்பி திரும்பி கேக்குறோம்
      பட படவென கதை எடுத்து
      புக்கா போடு சினிஸ்டர

      Delete
    7. ஹிஹிஹி....ஸ்பைடர்க்கு வாய்ப்பு வராட்டி ஈவிய அனுப்பி பாடச் சொல்லிருவோம்....நேர்லயே...வேசம் போடாமயே

      Delete
    8. என்னா ஸ்பீடுல கவிதை வந்து கொட்டுது!!!

      Delete
  41. அருமை சார்....அட்டவணை பதிவைப் போல மனம் கவர் பதிவு....உபல டாப்னும் சொல்லலாம்...
    லயனுக்கு டெக்ஸ்
    முத்துக்கு சாகர்....சீக்கிரமா டார்சான அரை டசன்ல காட்டுங்க....கேட்டாலே இனிக்குது சார்.....ஆனாலும் கென்யா...ஒநொஒதோ போல கதைகள் நாயகராக நின்னாலே போதுமே

    ReplyDelete
  42. சார் முதலில் எனது வாக்கை திரும்ப பெற்றுக்கொள்கிறேன்.

    அனைவருக்கும் பிடித்தது போல அமைக்கும் அட்டவணை இந்த முறையும் கனவு தான் போல.

    ஒரு சில கதைகள் டேங்கோ உட்பட படித்ததால் சொல்கிறேன் கண்டிப்பாக 50வது ஆண்டுமலர் கதைகள் பட்டாசாக இருக்க போகிறது வருத்தப்பட்ட நண்பர்கள் பாராட்டும் காலம் வரும்.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரின் கதைத் தேர்வை எப்போதுமே குறை கூறவில்லையே.கண்டிப்பாக கதை நன்றாகத்தான் இருக்கும் அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

      Delete
  43. சென்ற பதிவில் எனது பின்னூட்டத்தை சற்று கவனிங்கள் நண்பர்களே...

    ReplyDelete
  44. /// சீக்கிரமா டார்சான அரை டசன்ல காட்டுங்க///
    ஒரு ஃப்ளோவுல , டார்சான அரை டவுசர்ல காட்டுங்கன்னு படிச்சுட்டேன் போல. மனசு திக்குன்னு ஆயிடுச்சு. அப்புறம் சரியாபடிக்கவும் மனசு லேசாயிட்டு.

    ReplyDelete
  45. ஆசிரியருக்கும், வழக்கமாக பின்னூட்டமிடும் நண்பர்களுக்கும்,
    அடுத்தவர் பஞ்சாயத்தில் தலையை நுழைப்பது இல்லை என்றாலும், ஒரே ஒரு வேண்டுகோள். இங்கே எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்விக்கும், பின்னூட்டத்திற்கும் நீங்கள் பதில் அளித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயங்கள் ஏதும் இல்லையே?! குறிப்பிட்ட ஒரு இதழ் அல்லது முடிவு குறித்து முன்கூட்டியே விலாவாரியாக விளக்கங்கள் அளித்த பின்னும், அவரவர் தத்தம் ஆதங்கங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார்கள் என்றால், இங்கே தேவைப்படுவது மேலதிகமான விளக்கங்கள் அல்ல! காமிக்ஸ் வாசகர்களுக்கே உரித்தான பிடிவாதத்தையும், ஏமாற்றத்தையும் புரிந்து கொண்டு அமைதியும் காக்கலாம். நீங்கள் காக்கும் அமைதி, அவர்களின் ஆதங்கங்களை மட்டுப்படுத்தப் போவதில்லை என்றாலும் மேற்கொண்டு தீவிரமாக்காது என்பது நிச்சயம்.

    இங்கே வழக்கமாக பின்னூட்டமிடும் நண்பர்கள், தங்களுக்கு பழக்கமில்லாத அல்லது அரிதாக பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு பதில் அளிக்காமல் தவிர்ப்பது நலம். நீங்கள் கருத்து கூறியே ஆக வேண்டும் என்றால்,  உங்கள் சார்பு அல்லது எதிர்ப்பு நிலையை தனியே பதிவிடுங்கள்! லயன் ப்ளாகில் கருத்து கூறினால், கும்மி எடுத்து விடுவார்கள் என்ற தவறான கருத்து மென்மேலும் வலுப்பட்டு வளர்வதை தவிர்க்க இது உதவும். அப்புறம் உங்கள் விருப்பம் :)

    ReplyDelete
    Replies
    1. சித்த இருங்கோ. இதுக்கும் ஒரு விளக்கம் ரெடி பண்ணிட்டு இருக்கிறார் எடிட்டர் ! :)))

      Delete
    2. @P.K.:
      நாட்டாமை கார்த்திக் சொம்பைத் தூக்கிக் கொண்டு ஸ்லோமோஷனில் ஓடுகிறார். திரை கீழிறங்குகிறது!

      Delete
    3. ////நீங்கள் காக்கும் அமைதி, அவர்களின் ஆதங்கங்களை மட்டுப்படுத்தப் போவதில்லை என்றாலும் மேற்கொண்டு தீவிரமாக்காது என்பது நிச்சயம்.////

      போயிண்ட் கார்த்திக்!

      ///லயன் ப்ளாகில் கருத்து கூறினால், கும்மி எடுத்து விடுவார்கள் என்ற தவறான கருத்து மென்மேலும் வலுப்பட்டு வளர்வதை தவிர்க்க இது உதவும். ///---

      போயிண்ட்2...

      (இதனால் தான் இப்ப பதில் சொல்லவே யோசிக்கிறதா இருக்கு... 99% ஜம்பிங் தான்....!!!!)

      போன 2020யின் சந்தா அறிவித்தலின்போது ஒருவாரம் லீவு எடுத்திருந்தன்னா பாருங்களேன்!😉

      Delete
    4. On the contrary கார்த்திக் ! சமீப காலங்களில் ஒரு நெருடலான டிரெண்ட் வளர்ந்து வருகிறது ! இங்கே ஒரு துளியாய் சிதறிடும் நீலம், இன்ன பிற தளங்களில், க்ரூப்களில் ராபின் ப்ளூ & உஜ்ஜாலா முழுபாட்டில் கலவைகளாய் ஊற்றப்பட்டு வருகிறது ! என்னால் ஓடுற ரயிலை ஒத்தைக் கையால் தடுத்து நிறுத்தவெல்லாம் முடியாது தான் ; ஆனால் அப்பட்டமான misinformation-க்கு இங்கும் மறுப்பு தெரிவிக்காது விடுவது ஆரோக்கியமானதாய் படலை !

      Of course அதன் பின்னேயும் ராபின் ப்ளூக்கள் புழக்கத்தில் இருப்பின், அது எனது பாடல்ல !

      Delete
    5. மாமூலான 'கையைப் புடிச்சி இழுத்தியா ?' பஞ்சாயத்துக்களைத் தாண்டியும் 3 அரூப agenda-க்கள் பிஸியாய் ஓடி வருகின்றன கார்த்திக் !! வெளித்தோற்றத்துக்கு சம்பந்தமில்லாது தென்படும் சில பல சமீபப் புள்ளிகளுக்கு காரணங்களும் அவையே ! பின்னொரு தூரத்து நாளில் உங்களுக்கும் மறக்காதிருந்து, எனக்கும் அல்சைஹ்மர்சில் மறக்காதிருப்பின் இது பற்றி சொல்கிறேன் !

      Delete
    6. //எனக்கும் அல்சைஹ்மர்சில் மறக்காதிருப்பின் இது பற்றி சொல்கிறேன் !//

      இளவரசரின் கனிவான கவனத்திற்கு!

      எடிட்டர் சாரின் லுசெட் alike பத்தி கேட்பதற்கு சரியான சந்தர்ப்பம் ..நோட் இட்...

      Delete
    7. Well said bro...
      The intentions of those replies are suppose to show their solidarity to our editor sir... Yet,sometimes it feels as though those replies are sort of self imposed obligations from their part.
      At the same time, some of those messages which expresses their dissapointments, slightly, mostly unintentionally I believe... tend to rub off Editor sir in wrong way.

      Whatever said and done, I'm here for comics. Period.

      Delete
    8. ///எடிட்டர் சாரின் லுசெட் alike பத்தி கேட்பதற்கு சரியான சந்தர்ப்பம் ..நோட் இட்...///

      ஹிஹி! ஏற்கனவே அப்படியொரு ஐடியா வச்சுருக்கேனுங்க செனாஅனா.. சரியானதொரு சமயம் வாய்க்கும்போது எல்லாத்தையும் கறந்துபுடலாம் விடுங்க! ஆரம்பிக்கும்போதே "அனுபவத்தில் முதிர்ந்தோருக்கு மட்டும்"னு தான் ஆரம்பிப்பாரு.. நினைக்கும்போதே கிளுகிளுப்பா இருக்கே!!

      Delete
    9. //3 அரூப agenda-க்கள் //

      1. ஸ்கேன்லெஷன் குழுக்கள்.
      2. உரிமம் பெறாத காமிக்ஸ் வெளியிடும் காமிக்ஸ் ஆர்வலர்கள்.
      3. அதிகவிலை வைத்து விற்பவர்கள்.

      Delete
    10. //ஆனால் அப்பட்டமான misinformation-க்கு இங்கும் மறுப்பு தெரிவிக்காது விடுவது ஆரோக்கியமானதாய் படலை !//

      சரியான நிலைப்பாடு சார்!!

      ரிக்வெஸ்ட் என்னன்னா

      Do it with a smile sir!

      You have unparalleled ,phenomenal sense of humour in your writings ..

      Use it fully while replying without any scent of frustration..

      After all most of the time who stand opposite to you are not opponents but who love and respect you with difference of opinions..

      Very few appear here with hatred and even them can be handled with manipulated defence & dwarfed offence


      Delete
    11. /* Do it with a smile sir! */

      Yes sir please - not just due to your humour skills alone sir. It's about age and the various physiological changes that come with it upon reacting emotionally sir.

      For the simple reason that we would need you to run an even longer marathon than now - and are here to hold hands !

      Delete
  46. எங்க ஊர்ல காற்று மழை. சற்று இளைப்பாறலாம் என இங்கே வந்தால் ஒரே அனாலாக இருக்கே. ஏம்பா மாயாவி, மாண்ட்ரேக் உங்க பவர் யூஸ் பண்ணி தளத்தை கூல் பண்றது :))

    ReplyDelete
    Replies
    1. ///எங்க ஊர்ல காற்று மழை. சற்று இளைப்பாறலாம் என இங்கே வந்தால் ஒரே அனாலாக இருக்கே.///

      இளைப்பாற நல்ல இடம் பாத்தீங்க போங்க - அதுவும் அட்டவணை வெளியாகியிருக்கும் நேரமாப் பாத்து! இரத்த பூமிங்க இது! :D

      Delete
  47. அட்டவணையில் 24 இதழ்கள் (படங்கள்) மட்டுமே உள்ளது. 25வது இதழ் பற்றிய தகவலை பகிரவும்.

    ReplyDelete
    Replies
    1. மொத்தம் 26 தனிப்புத்தகங்கள் வருது நண்பரே! முத்து50 ஸ்பெசல்-1&2-களை ஒரே புத்தகமாக கொண்டால் 25.


      சந்தா 2022....

      1.முத்து ஸ்பெசல்1- (1&2Rs1200)

      2.முத்து ஸ்பெசல்2-

      3.முத்து கோடைமலர்-300

      4.லக்கி & ஆண்டுமலர்2022-200

      5.டெக்ஸ் தீபாவளிமலர்-2022-500

      6.விடாது வஞ்சம்-Tex-150

      7.நிழல்களின் ராஜ்யத்தில்-Tex-150

      8.பாலைவனத்தில் பிணம்தின்னிகள்- Tex-150

      9.சிகாகோவின் சாம்ராட்-Tex-80

      10.சொர்கத்தில் சாத்தான்கள்-Tex-80

      11.மெளன நகரம்-Tex-150

      12.ஒரு காதல் யுத்தம்- Tex-135

      13.புயலில் ஓரு புதையல் வேட்டை-Tex-150

      14.கூண்டிலொரு கணவன்-தோர்கல்-200

      15.காலனோடு கூட்டணி-சோடா-90

      16.உதிரத்தின் நிறம் கறுப்பல்ல-டெட்வுட்-90

      17.களமெங்கும் காதல்-ப்ளூகோட்-90

      18.சிவந்தமண்-டேங்கோ-125

      19.காலனின் காகிதம்-Alpha-90

      20.தேவையில்லாத தேவதை-ட்ரெண்ட்-90

      21.the bond & blaise special2-மாடஸ்தி&பாண்ட்-90

      22.துள்ளுவதோ இளமை-தாத்தாஸ்-100

      23.சொர்கம் காத்திராது-மார்டின்-80

      24.உசார்...அழகிய ஆபத்து- சிஸ்கோ-200

      25.ரீலா..?ரியலா..?-மேக்&ஜாக்-90

      26.மர்மதேசம் கென்யா-500

      Delete
    2. நன்றி நண்பரே! முத்து ஸ்பெசல் புத்தங்களை சந்தாவில் இல்லாத தனி வெளியீடு என்று எண்ணி விட்டேன்

      Delete
  48. தளத்தில் நடக்கும் கருத்துப் பரிமாற்றங்கள் ஆசிரியரின் பதில்களை படித்தேன்,

    என்னைப் போன்ற நீண்ட நாள் வாசகர்களுக்கு Muthu 50 என்ற ஆதர்ச இதழில் மும்மூர்த்திகள், டைகர் போன்ற Super star கள் இல்லையென்றவுடன் வரும் இயல்பான ஏமாற்றமே நண்பர்களின் கருத்துக்கள், ஆனால் சற்றே யோசித்து பார்த்தால் ஆசிரியர் கிண்டல் செய்தாலும் Smashing 70 வாயிலாக நமது கோரிக்கையை முன்பே நிறைவேற்றி விட்டார்,

    எனவே இவற்றில் குறை கூற ஏதுமில்லை, S70 யை முத்து 50 ன் சிறப்பிதழ் என நினைத்துக் கொண்டால் பிரச்சினை தீர்ந்தது.

    மேலும் உலகில் இத்தனை மொழிகளில் உரிமம் பெற்று ஒரு மொழியில் வெளியிடும் நிறுவனம் நமது தமிழ் மொழிக்கு வாய்த்திருப்பது நம் பாக்கியமே,

    எல்லாவற்றிற்கும் மேலாக Editor ன் கதைத் தேர்வின் மேல் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது,

    எனது உள்ளப்பூர்வமான கருத்து தவறிருப்பின் நண்பர்களும் ஆசிரியரும் மன்னிக்கவும்,

    என்னைப் பொறுத்த வரை எனக்கு பிடித்த கதைகளை கோருவதும் அதற்காக கருத்து தெரிவிப்பதும் எனது உரிமை,( ஊசிப் போன உப்புமா, நாசியில் தூசி போன்ற கிண்டல்கள் வந்தாலும் சரி)

    அதே சமயம் முடிவெடுப்பது ஆசிரியரின் உரிமை, இத்தனை வருட காமிக்ஸ் அனுபவம் உள்ளவரிடம் போய் உங்களை விட நான் சிறப்பாக கதை தேர்வு செய்வேன் என்பதெல்லாம் சச்சினிடம் போய் நான் உங்களை விட சிறப்பாக Cricket விளையாடுவேன் என்பதற்கு சமம்,

    (இதை Type செய்யும் பொழுதே என்னை ஜால்ரா கோஷ்டி என்றா அல்லது Editor ன் எதிர் பார்ட்டி என்றா, என்ன விதமாக சொல்லுவார்களோ என்ற சிந்தனையும் வந்தது ☺☺☺)

    ReplyDelete
    Replies
    1. விமர்சனங்கள் ஒரு பின்னணியுடன் இருப்பின் பதில் சொல்லவோ, அவற்றை நடைமுறைப்படுத்திக் கொள்ளவோ என்னளவில் சங்கடங்களில்லை சார் ; ஆனால் "எனக்கு உடன்படா விஷயம் உருப்படாது" என்ற concept தான் ரசிக்கவில்லை !

      அப்புறம் சச்சின்லாம் தேவுடு ரேஞ் சார் ; நம்மளை ஒரு TNPL லீக் அட்டாக்காரரின் ரேஞ்சுக்கு ஒப்பிட்டாலே பெருமை தான் !

      Delete
  49. எடிட்டர் சார்,

    நல்ல வேளை, முத்து 50 ஸ்பெஷல் (FFS) இதழுக்கான கதைகளை முன்னாடியே அறிவித்து விட்டீகள். புத்தகம் வரும் வரை சஸ்பென்ஸ் வைக்கிறேன் என்று, வெளிவந்த பிறகு அனைவருமே புது முகங்கள் எனத் தெரியவந்தால், தளமே பற்றி எரிந்திருக்கும். இனி கவலை இல்லை. பழைய, பழகின ஹீரோக்களின் ரசிகர்கள் அசுவாசப்படுத்திகொண்டு தயாராக நேரம் இருக்கிறது. கண்டிப்பாக FFS வெளியான பிறகு அனைவரும் கொண்டாடுவார்கள் என்பது நிச்சயம்.

    ReplyDelete
    Replies
    1. :-))

      பற்பல மு.ச.க்கள் நம்மளை அந்தமட்டுக்குக் கூடப் பக்குவப்படுத்தாட்டி மு.ச.க்களுக்கே இழுக்காச்சே சார் !

      Delete
  50. Sir, சச்சினுக்கு நிகரான ஆட்டக்காரர்கள் உண்டு, இந்த சிறிய தமிழ் காமிக்ஸ் உலகில் நீங்கள்தான் நீண்ட நாள் ஒரே Super star,

    ReplyDelete
    Replies
    1. அவரை ஏறகனவே சட்னி அரைச்சுக்கிட்டிருக்காங்க - இப்போ ஸ்பெஷல் சட்னிக்கு தயாராகணும் போல :-)

      Delete
  51. அட டே, இப்பத்தான் எத்தனை புக்குனு லிஸ்ட் அவுட் பண்ணினேன்...

    மொத்த தனி புக்குகள்=26

    முத்துM50...இரு தனிபுக்குகளும் ஒரே விலை என்பதால், இதழ்கள்=25

    இதில் ஸ்பெசல்களே 5....

    1.முத்து M50 ஸ்பெசல்1&2

    2.முத்து கோடைமலர்

    3.லக்கி & ஆண்டுமலர்2022

    4.டெக்ஸ் தீபாவளிமலர்-2022

    5.கென்யா.

    ஒரே ஆண்டில் அதிகப்படியான ஸ்பெசல் புக்ஸ் வருவது இப்பத்தான் போல...????

    பொங்கல்மலர், கோடைமலர், ஆண்டுமலர் & தீபாவளி மலர்---னு இருந்த பழைய காலங்களின் நினைவுகள் வருகின்றன.


    2018ல தோர்கல் ஆண்டுமலர், டியூராங்கோ கோடைமலர், லக்கி ஆண்டுமலர், டைனமைட் ஸ்பெசல், தீபாவளிமலருக்கு பின் இப்பத்தான் ஹெவிவெயிட்ஸ் நிறைய இறங்குது....Smasing70ல ஒரு 4மெகா குண்டு....பூரா குண்டுபுக்களாக இருக்கப்போவுது....

    (குறிப்பு:- பாண்ட்&ப்ளைசி ஸ்பெசல்2-வை 6வது ஸ்பெசலாக எடுத்துக் கொள்ளாலாமா???---அடிக்கலாம் வரப்படாது சரியா?😉)

    ReplyDelete