Powered By Blogger

Thursday, October 21, 2021

மூணு லட்டு தின்ன ஆசையா ?

 நண்பர்களே,

வணக்கம். பதிவு நம்பர் : 800 !! இப்போதெல்லாம் ஒரு ரவுண்டு பன்னைப் போட்டுத் தாக்கும் நேரத்தை விடவும் குறைச்சலான சமயத்தில் பதிவுகளைப் போட்டு வருகிறோம் எனும் போது 800...900...என நம்பர்கள் ஓட்டமெடுப்பதில் வியப்பில்லை தான் ! And நடப்பாண்டில் ஏற்கனவே பதிவுகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டி விட்டுள்ளதெனும் பொழுது, புத்தாண்டு பிறப்பதற்குள் அங்கும் ஏதேனுமொரு பெரிய நம்பரைத் தொட்டு நிற்போம் என்றே படுகிறது !! 

Talking of "பெரிய numbers" - இந்த உப பதிவே பிறிதொரு களத்தில் நீங்கள் தொட்டுள்ள எண்ணிக்கையினைப் பற்றியே !! And அது நமது SMASHING '70s முன்பதிவு சார்ந்த சமாச்சாரமே !! கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்குள் சாத்தியப்பட்டுள்ள புக்கிங்ஸ் - இந்தத் திட்டமிடலை அழகாய்த் துவக்கிடும் உத்வேகத்தினைத் தந்துள்ளன என்று சொல்லலாம் ! And நண்பர்களின் கணிசமானோர் இந்த முன்பதிவுக் காலக்கெடுவை சற்றே நீட்டிக்கக் கோரியுள்ளதால் - புதிய deadline ஆன நவம்பர் 15-க்குள் முன்பதிவுகள் இன்னமுமே ஆரோக்கியமான நம்பராக இருந்திடுமென்ற நம்பிக்கை திடமாயுள்ளது !! Thanks as always guys !! 

ரைட்டு....SMASHING '70s முதல் இதழான  "வேதாளன் ஸ்பெஷல்" பற்றி கொஞ்சமாய் தகவல்களை கசிய விடும் நேரமிது என்று தோன்றுகிறது !! For starters - வேதாளனின் இந்த இதழுக்காக அட்டைப்படத்தினை மாத்திரமன்றி, தொடரக்கூடிய அனைத்து PHANTOM கவர்களையும், செம ஸ்டைலிஷ் ஆன ஐரோப்பிய ஓவியர் ஒருவரே செய்திடுகிறார் ! அது மட்டுமன்றி சூப்பராய் சில வேதாளன் போஸ்டர்களும் அவரது கைவண்ணத்தில் காத்துள்ளன !! And அவை நமது முன்பதிவு நண்பர்களுக்கு, நமது அன்புடன் (விலையின்றி) இருந்திடும். As advertised - இந்த முதல் ஆல்பத்தில் மொத்தம் 9 முழுநீள சாகசங்கள் இடம்பிடித்திடவுள்ளன !! And அந்த MAXI சைசில் 208 பக்கங்கள் கொண்டதொரு hard cover மாதிரியையும் ரெடி பண்ணிப் பார்த்தாச்சு ; செம கம்பீரமாக உள்ளது தான் !! So FFS சார்ந்த பணிகளுக்கு இறுதி வடிவம் தந்த பின்னே வேதாளரோடு டென்காலி கானகத்தினுள் உலாற்ற உள்ளேன் ! 

அப்புறம் இந்த க்ளாஸிக் நாயகர்களின் ஒட்டுமொத்த மறுவருகையினை சாத்தியப்படுத்தியுள்ள முன்பதிவு நண்பர்களுக்கொரு ஸ்பெஷல் நியூஸுமே !!  

ஆளுக்கொரு favorite இருந்திடும் போது, மறுபதிப்புக் கோரிக்கைகளினில் ஆளுக்கொரு ஆதர்ஷ நாயகர் இருப்பதிலும் no secrets ! வேதாளர் ஒரு ஏகோபித்த தேர்வாய் இருக்கலாம் ; பாக்கி மூவருக்கும் ஒரு லெவல் குறைச்சலான எதிர்பார்ப்புகள் இருக்கக்கூடும்   என்பதை யூகம் பண்ண பெரிய சிரமமெல்லாம் இருந்திருக்கவில்லை ! And ஒருக்கால் நான் வேதாளன் கதைகளுக்கு மாத்திரமே உரிமைகள் வாங்கியிருப்பின் - "ரிப் கிர்பி கிடையாதா ? காரிகன்லாம் கண்ணுக்குத் தெரிலியா ? மாண்ட்ரேக்லாம் மனுஷனா தெரிலியா ?" என்ற கேள்விகள் சர்வ நிச்சயமாய்த் தொடர்ந்திருக்கவே செய்யும் என்றும் தோன்றியது ! So 'ஏக் தம்மில்' 4 நாயகர்களும் என்ற போது - ஒரு பெரும் குழுமத்திடம் உரிமைகள் வாங்குவதற்கு வழி பிறந்தார் போலவும் ஆச்சு ;   'இவர் இல்லியா ? அவர் இல்லியா ?' என்ற கேள்விகளுக்கு அவசியமின்றிச் செய்தது போலவும் ஆச்சு ! In effect  - வேதாளரின் வருகைக்கு சாலையமைத்துத் தந்துள்ளோர் - இதர 3 நாயகர்களும் ; தயங்காது  முன்பதிவு செய்து இந்தத் திட்டமிடலுக்குக் கரம் நீட்டியுள்ள நீங்களும் தான் !! And அந்த அன்புக்கு நிச்சயமாய் நம் சக்திக்கு உட்பட்ட நன்றி நவிலல் அத்தியாவசியமே !! 

So -  காத்துள்ள ஒவ்வொரு SMASHING '70s  ஆல்பத்துடனுமே வண்ணத்திலானதொரு சர்ப்ரைஸ் booklet முன்பதிவு செய்திருக்கும் நண்பர்களுக்கு நமது அன்புடன் வழங்கப்படும் ! அவற்றின் content என்னவாக இருக்கும் என்பதை வேதாளரும், ரிப் கிர்பியும், மாண்ட்ரேக்கும், காரிகனும் உரிய வேளையினில் உங்களுக்கு சொல்லிடுவார்கள் !! இந்த 4 சர்ப்ரைஸ் இதழ்களும் பின்னாட்களில் ஒரு  தொகுப்பாகி, ஏதேனுமொரு புத்தக விழாவின் போது விற்பனைக்குக் கிட்டிடும் !! இது அறிவிப்பு # 1 !

And 'ஒரு லட்டின் இடத்தினில் 2 லட்டுக்கள் இருந்தால் சிறப்பே' என்பதை பேரறிஞர் பவர் ஸ்டாரின் திரைப்படம் நமக்கு போதித்திருப்பதால் அதனையும் உதாசீனப்படுத்த இயலாதன்றோ ? So here you go with அறிவிப்பு # 2 !

FFS இதழின் அறிவிப்பும் ஆச்சு ; ALL NEW நாயகர்களின் ராஜ்ஜியம் இது என்பதும் உங்கள் மத்தியில் இப்போது தெரியும் ! ஒரு ரொம்பச் சின்ன நோஸ்டால்ஜியா அணி நண்பர்களைத் தாண்டி, பாக்கி அனைவருமே இந்தத் திட்டமிடலை குஷியாய் ஏற்றுக் கொண்டிருப்பது மெய்யாலுமே உற்சாகம் கொள்ளச் செய்கிறது ! இத்தகையதொரு மைல்கல் இதழினில் களம் காணவுள்ள  புதியவர்களையும் இம்மித் தயக்கங்களுமின்றி வரவேற்கத் தயாராகியுள்ள உங்களின் உத்வேகங்களுக்கு சின்னதொரு பரிசின்றிப் போனால் எப்புடி ? 

 • And அந்தப் பரிசு - "FFS-ல் க்ளாஸிக் பார்ட்டிகள் யாருமே கிடையாதா ?" என்ற ஆதங்கம் கொண்டுள்ள நண்பர்களைக் குளிர்விக்கும் ஒன்றாய் அமைந்திட்டால் ?? 
 • And அந்தப் பரிசே, FFS - புக் # 3 ஆக அமைந்திட்டால்  ??
 • And முத்துவின் முதல் நாயகனும், ஒரு காமிக்ஸ் தலைமகனுமான இரும்புக்கை மாயாவியின்றி எந்தவொரு கொண்டாட்டமும் முழுமை காணாதென்பதால் - கொஞ்ச காலம் முன்பாய் படைப்பாளிகள் உருவாக்கியிருக்கும் ஒரு புத்தம் புது மாயாவி சிறுகதையினை FFS -ன் புக் # 3 -ல் பிரதானமாக்கிட்டால் ??
 • And அவரை மட்டும் தனியாய் அனுப்பிடாது, பேச்சுத் துணைக்கு - லயனின் சார்பினில் ஒரு யுகத்தின் சாதனை மைந்தனான ஸ்பைடராரையும் , முழு வண்ணத்தினில் அதே இதழில் இணைத்திட்டால் ??
 • And க்ளாஸிக் முத்துவின் பிரதிநிதியாய் இன்னொரு நாயகரையுமே அதே இதழில் வலு சேர்க்க களமிறக்கிட்டால்..??
 • And அந்த நாயகர் ஒரு டிடெக்டிவ் ஆக இருந்து ; "செக்ஸ்டன் ப்ளேக்" என்ற பெயருக்குப் பதில் சொல்லிடுபவராகவும் இருந்திட்டால் ??
 • And "மறுக்கா பழம் பார்ட்டிகளோடு பழம் கதைகளா ?? ஹாவ்வ்வ்வ் !!" என்று கொட்டாவி விடக்கூடிய நண்பர்களைக் கூட லயிக்கச் செய்யும் விதமாய் இந்த புக் # 3-ன் கதைகள் அனைத்துமே புத்தியானவைகளாய் ; புதிதாய் இப்போது உருவாக்கப்பட்டவைகளாய் இருக்க நேர்ந்தால் ??
 • And ஒட்டுமொத்தத் திட்டமிடலின்படி :
 • **ஒரு புத்தம் புது மாயாவி black & white சிறுகதை சாகசம்
 • **ஒரு புத்தம் புது ஸ்பைடர் சிறுகதை சாகசம் - முழுவண்ணத்தில் !
 • **ஒரு புத்தம் புது முழு நீள black & white அதிரடி - with செக்ஸ்டன் ப்ளேக் !
 • **ஒரு புத்தம் புது மிரட்டலான முழுவண்ண செக்ஸ்டன் ப்ளேக் சிறுகதை சாகசம் என்று 68 பக்க வண்ணம் + black & white கூட்டணி இதழாய் இந்த புக் # 3 அமைந்திட்டால் ...?
 • And இந்த புக் # 3 நமது அன்புடன் 2022 சந்தாதாரர்களுக்கு உண்டென்று அறிவித்தால்...?
 • And சந்தாவினில் இணையாது போனாலும், FFS  இதழுக்கு நம்மிடம் முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்குமே இந்த புக் # 3 விலையின்றி இருந்திடுமென்று அறிவித்தால்..?
 • And ஒரு கொண்டாட்டத் தருணத்து இந்த இதழினை கடைகளில் வாங்கிக்கொள்வோருமே பெற்றிடும் வகையினில் ரூ.75 என்ற விலை நிர்ணயத்துடன் - விற்பனைக்கு அனுப்பிட்டால்.. ..?

சிறப்பாக இருக்குமென்று பட்டது !!! 

 • So FFS கொண்டாட்டத்திற்கென லட்டுக்கள் இரண்டல்ல - மூன்று !! (at least லட்டு # 4 என்று ஏதேனும் என் மண்டைக்குள் உதிக்கும் வரைக்கும் !!)
 • ஒரு சிறு அடையாளமாகவேனும் மாயாவியார் இந்த மைல்கல் இதழினில் இடம் பிடித்தார் போலவும் ஆச்சு ; க்ளாஸிக் செக்ஸ்டன் ப்ளேக் ஆஜரானது போலவும் ஆச்சு (நண்பர் Arvind : this one 's for you !!)
 • ஒரு அதிரடிப் புது முயற்சிக்குத் தோள் தரத் துளியும் தயக்கங்களின்றி முன்வந்திருக்கும் உங்கள் தில்லுக்குத் தலைவணங்கிய திருப்தியும் எங்களதாகியாச்சு !!
So பணிகளோடு பணிகளாய் இந்த 68 பக்க ஆல்பத்தையும் அதிரடியாய் தயார் செய்யும் முனைப்பினில் பிஸியாகிக்குவோம் !! (ஒரு landmark வேளைக்கென மெனெக்கெடாது வேறு என்ன ஆணியினைப் பிடுங்கப் போகிறேன் ?!!) SEXTON BLAKE - in color !!


Before I sign out - ஒரு வேண்டுகோள் !! சமீப நாட்களில் ஆங்காங்கே கூடி வரும் உஷ்ணங்களுக்கு மெய்யான பின்னணிக் காரணம் என்னவென்பதை நான் நன்றாகவே அறிவேன் தான் ! In fact கடந்த சில வாரங்களின் சில தென்னை மர தேள் கொட்டல்களுக்கு, பனைமர நெரிக்கட்டல் எதிரொலிகள் இராது போகாது  என்பதை எதிர்பார்த்திடவே செய்தேன் ! !! And இதோ இன்றைய இந்த FFS புக் # 3 சார்ந்த அறிவிப்பு கூட பாய்லரின் கொதிநிலையினை அடுத்த லெவெலுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் பிரகாசம் என்பதையும் யூகிக்க முடிகிறது - becos அதன் பின்னணியினில் உள்ள காரணம் அப்படி !  இந்த திரைமறைவு அபத்த சதிராட்டங்களெல்லாம் ஒரு தூரத்து நினைவாகிப் போகும் ஒரு பின்னாளில் இது பற்றி பேசிடலாம் guys ! தற்போதைக்கு எனது ஒரே கோரிக்கை : 

RELAX guys !!  வார்த்தைப் போர்கள் வெறும் அக்கப்போர்களே என்பது இந்தத் தருணத்திலிருந்து விலகி நகன்றிடும் வேளையினில் புரியாது போகாது & இன்று சிந்திடும் வார்த்தைகளை மீட்க அன்றைக்கு வழியும் இராது ! So நிதானம் ப்ளீஸ் ! அதிலும் ஒரு நண்பரின் ஈடு செய்திட இயலா இழப்புகளின் வலிகளையுமே பகடியாய் பொதுவெளியில் பகிர்வது நிச்சயமாய் அவலத்தின் உச்சம் !! நிஜ வாழ்வின் நிஜ இழப்புகளின் வலிகளைத் தாண்டிட நண்பருக்கு வலு தந்த இறைவன், இந்த வேளையிலும் அவரோடு இருக்க வேண்டிக்கொள்வேன் ! And நண்பரே : இந்த அட்டைக்கத்திப் போர்களுக்கு கொஞ்ச நாட்கள் விடுமுறை தந்து விட்டு வாழ்க்கையின் நிஜங்களுடன் ; உங்கள் உறவுகளுடன் கழியுங்கள் - அவையே நிரந்தரம் ! இந்தச் சோப்புக் குமிழ் கற்பனை யுத்தங்களல்ல தானே !! God be with you !!

Bye all !! See you around !! Have a cool Thursday !!

321 comments:

 1. ஐயாம் தி பர்ஸ்ட்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அட்டு சார்

   Delete
 2. ஆசிரியரே மாயாவி & ஸ்பைடர் & செக்ஸ்டன் ப்ளேக் மூன்று பேரும் ஒரே இதழிலா ப்பா உண்மையிலே செம்மையான லட்டுகள் ஒருவேளை நான் கனவு கான்கிறேனா நன்றி நன்றி மிக்க நன்றி ஆசிரியரே

  ReplyDelete
 3. நன்றி சார்.... பல மகிழ்ச்சியூட்டும் அதிரடி அறிவிப்புகள்... 2022's gonna rock...!!!!

  AKK

  ReplyDelete
 4. அய்யாடிக்கய்யாடிக்கய்யாடிக்கய்யாடியோவ்!!!!!!!

  எத்தனை அறிவிப்புகள்!!! எத்தனை உற்சாகங்கள்!!! எத்தனை கொண்டாட்டங்கள்!!!

  எல்லா அறிவிப்புகளையும் படிச்சுப்பார்த்து உள்வாங்கிடவே ஒரு நாழி ஆகும் போலிருக்கே?!!!

  ஒன்று மட்டும் உறுதியாய் தெரிகிறது! முத்து-50 கொண்டாட்டங்கள் எல்லாமே வேற லெவலில் அசத்தப்போகிறது!!!

  உய்ய்ய் உய்ய்ய்ய்..

  ReplyDelete
 5. 800 பதிவுக்கு வாழ்த்துக்கள் & நன்றி ஆசிரியரே கொஞ்சம் நீளமாக டைப் செய்தாலே கஷ்டமாக இருக்கிறது நீங்கள் வாசகருகளுக்காக எவ்வளவு சிரத்தையெடுத்திருக்கிங்க கஷ்டப்பட்டிருப்பிங்க எங்கள் முகத்தில் புன்னகையை பார்க்க நீங்கள் எடுத்துக்கொண்ட எல்லா முயற்ச்சிகளுக்கும் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் நன்றி ஆசிரியரே

  ReplyDelete
 6. 2022 செம செம செம்மையாக இருக்க போகிறது இது மீண்டும் கோல்டன் பீரியடாக இருக்க போகிறது

  ReplyDelete
 7. Edi.. Sir.. மாஸ்.. பக்கா மாஸ்..

  ReplyDelete
 8. //2022 செம செம செம்மையாக இருக்க போகிறது இது மீண்டும் கோல்டன் பீரியடாக இருக்க போகிறது//

  100% true

  ReplyDelete
 9. வணக்கம் நண்பர்களே...

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. செக்ஸ்டன் பிளேக் கலரில் அசத்துகிறது. அதிரடிகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை போல உள்ளது. நீங்கள் கொடுத்துக்கொண்டே இருங்கள் நான் வாங்கிக்கொண்டே இருக்கிறோம்.

  அப்போ அடுத்த உப பதிவு போன பதிவின் முடிவு அறிவிக்கும் பதிவாக இருக்குமோ.

  ReplyDelete
 12. அடேங்கப்பா... சார் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் எல்லா பந்தையும் சிக்ஸர் அடிச்சு பார்த்திருக்கோம்...
  அதுக்குன்னு இப்படி மேட்ச்ல எல்லா பந்தையும் சிக்ஸரா அடிச்சா இந்த காமிக்ஸ் உலகம் தாங்குமா???
  கலக்குங்க சாரே... 🎉🎊🎉🎊 அட்டகாசம்..‌‌அமர்க்களம் 👌👌👌👍🙏

  ReplyDelete
 13. Edi Sir..இன்னும் ஒரு லட்டு கிடைக்குமென்று பட்சி சொல்கிறது.. எதிர்பார்ப்புகளுடன்..

  ReplyDelete
 14. சத்தியமாகச் சொல்கின்றேன் சார்.
  இப்படி ஒரு அறிவிப்பை நான் எதிர்பார்க்கவே இல்லை. மனம் நிறைந்துவிட்டது. மனசெல்லாம் மகிழ்ச்சி நிறைந்து கிடக்கிறது. தானைத் தலைவன் ஸ்பைடர் - ரொம்ப சந்தோஷம் சார். நன்றிகளோ நன்றிகள் சார்.

  ReplyDelete
 15. ஆனாலும் பதிவின் கடைசி இரு பத்திகள் ஞான் புரிஞ்சில்லா பாரே🤔🤔🙄🙄😇😇

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் பதிவின் கடைசி இரு பத்திகள் ஞான் புரிஞ்சில்லா சாரே🤔🤔🙄🙄😇😇

   Delete
  2. எண்ட குருவாயூரப்பா....இ காமிக்ஸ் லோகத்தில் இது புரியா ஆள் உண்டெங்கில் - ஆயாள் வல்லிய யோகக்காரராக்கும் !! Stay blessed sir !!

   Delete
 16. Congrats on 800th blog sir

  Since its complementary, I welcome #3

  It will be a just an addition to my collection but I cant get any reading pleasure from it.

  If maayavi, spider and Sexton Blake uses cell phones instead of transmitters, if there are CCTV cameras everywhere and they talk like normal people, then it's ok. I cant tolerate spider s language. Nobody even psychos speak like that.

  ReplyDelete
  Replies
  1. :-)) we'll make SPIDER talk a bit more down to earth this time sir !!

   Delete
  2. I hope new translation will be there sir. "அடேய் அற்பப் பதரே. ஸ்பைடரின் எல்லையில்லா ஆற்றல்களை பாரீர்" என்பது போன்ற அரிய வசனங்கள் வேண்டாம் சார் :-)

   Delete
  3. சிறுகதை தான் சார் ; so மொழிபெயர்ப்பை நானே பார்த்துக் கொள்கிறேன் ; no worries !!

   Delete
  4. விஜயன் சார்...
   அந்த 4 வது சஸ்பென்சையும் உடையுங்களேன். பரபரன்னு இருக்கு.
   பிறகு இதுமாதிரி மாயாவி+ஸ்பைடைரை சிறு சிறு கதைகளாக தர முயற்சியுங்கள் சார். இதை செய்தால் எல்லா தரப்பினரும் மகிழும் லயனாக இருக்கும்.செய்வீர்களா? சார்?.ப்ளீஸ்

   Delete
  5. என்னாது ? ஸ்பைடர் வசனம் toned down-ஆ ? நெவெர் - முடியாது - கூடாது - அடுக்காது. எங்கே கோவைக்கவிஞர் ?? ஒரு புரட்சி பாட்டு எடுத்து விடுங்க - அண்ணன் ஸ்பைடரைப் பற்றி. "ஆர்டினி அற்பப் பதரே" போன்ற வசனங்கள் வந்தாக வேண்டும் சார் !

   Delete
  6. ///"ஆர்டினி அற்பப் பதரே" போன்ற வசனங்கள் வந்தாக வேண்டும் சார் !///

   ஆமாம் சார்!! இதுபோன்ற வசனங்கள் தான் ஸ்பைடரின் அடையாளங்கள்! மேலுள்ள வசனத்தை ஸ்பைடர் "பெருமதிப்பிற்குரிய எங்கள் அருமை ஆர்டினியே"ன்னு சொன்னா நல்லாவா இருக்கும்?!!

   Delete
 17. Even James bond in movies changes time to time. Nowadays James bond is not a gentleman. Oldie heroes must have their feet on earth.

  I welcome all ur newer books, but reprinting oldies really makes me tired.

  ReplyDelete
  Replies
  1. On a momentous occasion like this it is quite a one time agenda la Dr??? So let's join the party... 🙏

   Delete
  2. yes sir. u are right. I will go with the majority likes

   Delete
  3. As a kid I read spider for fun. Now I read it to ridicule it - which in a way is fun - so I would even welcome Sinister Seven just to have a go at it.

   Delete
 18. தானைத்தலைவன் எங்கள் குற்றச்சக்கரவர்த்தி கலரில் இதைவிட சிறந்த பரிசு வேறோன்றுமில்லை

  ReplyDelete
 19. //(at least லட்டு # 4 என்று ஏதேனும் என் மண்டைக்குள் உதிக்கும் வரைக்கும் !!)// பக்காவா கன்பர்ம் பண்ணியாச்சு சார். 😁

  ReplyDelete
 20. அறிவிப்புகள் அனைத்தும் அருமை.முத்து மைல் ஸ்டோன் இதழின் கொண்டாட்டத்துக்கு நீங்கள் நல்கிடும் மெனக்கிடல்கள் உண்மையாகவே விலைமதிப்பற்றவை. மனமார்ந்த பாராட்டுக்கள் சார்.

  ReplyDelete
 21. அட்டகாசமான அறிவிப்புகள் ..

  ஸ்பைடரை கலரில் பார்க்க மிகவும் ஆவல் டியர் எடி ..😍😍
  & செ. பிளாக்கையும்

  மற்றும் என் மீதான
  புரிதல்க்கு மிக்க நன்றிங்க டியர் எடி ... 💗💗💗

  ReplyDelete
 22. மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு எங்கள் மனங்களை குளிரச் செய்த எடிட்டர் வாழ்க !!! வாழ்க !!!

  இரும்புக் கை மாயாவியார் வாழ்க !!! வாழ்க !!!!

  தானைத் தலைவர் ஸ்பைடர் வாழ்க !!! வாழ்க !!!!

  பேய் வீரர் செக்ஸ்டன் பிளேக் வாழ்க !!!
  வாழ்க !!!!!

  ReplyDelete
 23. எனக்கு ஒரு சின்ன டவுட்டு. FFS க்கு தனியாக ஏதாவது முன்பதிவு இருக்கிறதா? விளக்கம் ப்ளீஸ்.

  ReplyDelete
  Replies
  1. இருக்கிறது சார். சந்தாவில் இணையாத நண்பர்களுக்காக இப்படி ஒரு முன்பதிவு உண்டு சார்.

   Delete
  2. இருக்கு 10 சார்...

   Delete
 24. நான் நேற்று வாட்ஸ்அப்'ல் தருமியின் தவிப்பை ஜனவரிக்கான எனது தவிப்பு போல gifஆக போட்டேன். அந்த தவிப்பு இன்னும் அதிகமாகிறது இப்போது.... ஆயிரம் பொற்காசுகள்... எனக்கே எனக்காக...

  ReplyDelete
 25. """""""800""""""

  ---பதிவுகள் என்ற அசாத்திய சாதனை பதிவிற்கு வாழ்த்துகள் சார்💐💐💐💐💐

  ReplyDelete
 26. சார் இதையெல்லாம் சேர்த்து ஒரு pamphlet புதுசா ரெடி பண்ணி அனுப்பி விடுங்கள் சார் இந்த மாத இதழ்களுடன் அனைவருக்கும் + முகவர்களுக்கும்... சந்தா எண்ணிக்கை அதிகரிக்க இது ஒரு காரணியாக கண்டிப்பாக இருக்கலாம்...

  ReplyDelete
 27. லட்டுகள் 3ஆஆஆஆஆ....


  ஆஹா...ஆஹா....ஒரு சாதாரண காமிக்ஸ் ரசிகனாக எனக்கே உற்சாகம் பிச்சிகிது... பழங்கதை ரசிகர்களுக்கு சும்மா....தெறிதான்

  ReplyDelete
  Replies
  1. விஜய் சகோ... சும்மா லஷ்மி வெடியா தெறிக்குது போங்க அறிவிப்பு.
   ஆசிரியர் கையில் கிடைச்சா....
   அவர் கையில் பாட்ஷா ஸ்டைல்ல ஒரு அன்பு முத்தம்.பல வருடங்களுக்கு பின் மெகா காமிக்ஸ் சந்தோஷம்.
   🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

   Delete
 28. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
 29. இரும்புக்கை மாயாவியின் விரல்கள் நம்மை நோக்கி வருவது போல் மிரட்டலான வண்ணச்சித்திரம். சூப்பர்.

  ReplyDelete
 30. //**ஒரு புத்தம் புது மாயாவி black & white சிறுகதை சாகசம்
  **ஒரு புத்தம் புது ஸ்பைடர் சிறுகதை சாகசம் - முழுவண்ணத்தில் !
  **ஒரு புத்தம் புது முழு நீள black & white அதிரடி - with செக்ஸ்டன் ப்ளேக் !//

  வாவ்.... கலக்கிட்டிங்க சார். மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. "மாயாவி, ஸ்பைடர், செக்ஸ்டேன் பிளேக்" 800 வது அட்டகாசமான தெரிவு.

   டேஞ்சர் டைபாலிக் இடத்திற்கு செக்ஸ்டன் பிளேக் சரியான தேர்வு. நீங்கள் இதுவரை வெளியிட்ட இவர் கதைகள் தரமானவை... உகந்த சைஸில் இவரது கோல்டன் BW கதைகளை மீண்டும் கொண்டு வாருங்கள் சார்.

   Delete
  2. கொலைப்படை முதல் பதிப்பு 2 வண்ணத்தில் வெளிவந்தது. விண்வெளிப் பிசாசு திகில் காமிக்ஸ் தொடர்கதையில் ஸ்பைடரின் ஒரே பக்கம் மட்டும் முழு வண்ணத்தில் வெளிவந்தது. ஆக முதல் முறையாக முழுவண்ணத்தில் கெஸ்ட் ரோல் செய்ய வரும் தானைத்தலைவனை வருக வருக என்று வரவேற்கின்றேன்/றோம்.

   Delete
 31. // ஒரு புத்தம் புது ஸ்பைடர் சிறுகதை சாகசம் - முழுவண்ணத்தில் ! //
  வாவ்...!!!
  ஸ்பைடர் கலரில் வருகிறார்னு முதலில் அறிவிப்பை பார்த்தவுடன் பாட்டில் பூதம்தான் வருதோ நினைச்சேன் சார்...!!!

  ReplyDelete
 32. மிகவும் தரமான அறிவுப்புகள் சார். செம மகிழ்ச்சியான பதிவு. நன்றி.

  ReplyDelete
 33. அருமையான அறிவிப்புகள்,
  தெறிக்கவிடும் அறிவிப்புகள்,
  அட்டகாசமான அறிவிப்புகள்,
  பல இடங்களில் புகையை வரவழைக்கும் அறிவிப்புகள்...!!!

  ReplyDelete
 34. // பதிவு நம்பர் : 800 !! //
  அருமை,அருமை...
  1000 வது பதிவுக்கு ஏதாவது ஒரு ஸ்பெஷல் புக் போட்டுடுவோம் சார்...

  ReplyDelete
  Replies
  1. போற போக்கைப் பார்த்தாக்கா அதுவுமே ஜனவரிக்குன்னு வந்திடும் சார் !!

   Delete
  2. மொத்தத்துல ஜனவரி -22 தான் காமிக்ஸ் ரசிகர்களுக்கு பட்டாசான தீபாவளி என்பது உறுதியாகி விட்டது சார்..


   இப்பொழுதே மனம் அங்கே பறந்தோடி செல்கிறது...

   Delete
 35. செக்ஸ்டன் பிளேக் கதையா அதுவும் colour இலா அசத்துறீங்க எடிட்டர் சார். மிக்க நன்றி. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  ReplyDelete
  Replies
  1. அசத்துவது படைப்பாளிகள் சார் ; சைடில் ஒரு சர்வீஸ் லென் போடறது மட்டும் நாம சார் !

   Delete
  2. செ.பி அசத்துவாரா ?!

   Delete
  3. ரொம்பவே விறுவிறுப்பான சாகசம் சார் !

   Delete
 36. ### FFS கொண்டாட்டத்திற்கென லட்டுக்கள் இரண்டல்ல - மூன்று ### அருமையான அறிவிப்புகள் சார்

  ReplyDelete
 37. This comment has been removed by the author.

  ReplyDelete
 38. at least லட்டு # 4 என்று ஏதேனும் என் மண்டைக்குள் உதிக்கும் வரைக்கும் !!) - Texwiller 500 பக்க குண்டு புக் ஒன்று சார்

  ReplyDelete
 39. சார் படிக்கப் படிக்க பரவசத் துடிப்பு இந்தளவு இருந்ததில்லை இது வரை...நான் டாப் எனக் கருதிடும் எஃப் எஃப் எஸ்.கூட இந்த அளவு நீடிக்கலை....வந்தால் வந்தால் என நீங்க இழுக்க இழுக்க...இழுக்க இழுக்க இன்பம் மல்லிச் சேரி பீடிகள் என விளம்பரம் அல்ல இது என மனம் வழுக்கி வழுக்க...எழுந்து எழுந்து விழுகிறேன் சந்தோசம் தாங்காது...சூப்பர் சார்...நாலு என போட்டு நிலையிலான ஒரு கத்தை புக்க தாங்க அந்தப் பேய்க்கதையா....எல்லா ஜானரும் வந்துடுமே

  ReplyDelete
  Replies
  1. சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் வெளிவந்தப்பின், ஸ்பைடர் எதிர்ப்பு நிலவுகையில் +100000
   நாம் 2013 சென்னை புத்தக விழா சந்திப்பில் பேசிக்கொண்டதை நினைவில் வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். எல்லோரும் மறந்தாலும் பகடி செய்தாலும் ஓயாமல் ஸ்பைடர் என்ற நினைப்பை இங்கே பிளாகில் நிலைக்க, பதிய செய்த உங்களுக்கும் எங்கள் நன்றிகள் நண்பரே.

   Delete
 40. உண்மையில் மிக்க மகிழ்ச்சியான அறிவிப்புகள் சார்,தூற்றுவோர் தூற்ற,போற்றுவோர் போற்ற...
  பட்டையை கிளப்பிகிறீர்கள் சார்,நீங்கள் இப்படி முழு திறனுடன் செயலாற்றுவதும் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது....

  ReplyDelete
  Replies
  1. ////தூற்றுவோர் தூற்ற,போற்றுவோர் போற்ற...
   பட்டையை கிளப்பிகிறீர்கள் சார்,நீங்கள் இப்படி முழு திறனுடன் செயலாற்றுவதும் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது////


   யெஸ்!! யெஸ்!! யெஸ்!!!

   Delete
 41. தீபாவளி and புத்தாண்டு கொண்டாட்டம் இப்போவே start ஆனது போல இருக்கு.

  ReplyDelete
 42. அன்பு ஆசிரியருக்கு...
  காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு 🙏...

  இந்த தீபாவளியில் இருந்து,
  2022 தீபாவளி வரை, 3 தீபாவளி கொண்டாடிடும் சந்தோஷம் இந்த அறிவிப்பும், முத்து 50ம்.
  1000000 வாலா பட்டாசுத் தொடர் வெடி
  இந்த பதிவு.

  பிரமாதமாக வரும் முத்து 50ல், முக்கியமான "இ மாயாவி" இல்லாமல் இருந்தது சிலருக்கு நெருடல் தான். சரி பலரின் விருப்பங்களே முக்கியம் என்றான போது, இவருக்கு எங்கே இடமிருக்கும் என நினைக்க,
  மனசில் இருந்த அந்த சின்ன குறையையும் நீக்கிட்டீங்க சார்.

  1)முத்துவை தூக்கி நிறுத்திய
  "இ மாயாவி"யுடன்,
  2)லயன் காமிக்ஸை உயரத்தில் கொண்டு வைத்த "சிலந்தி மனிதரை"யும் முத்து 50 ல் கொண்டு வருவதும்,
  3)அதுவும் "புதிய கதை"யாக வருவதும், 4)அதுவும் "விலையில்லாமல்" வருவதும்,
  5)இது தவிர "(சஸ்பென்சாக கண்டிப்பாக எதேனும் வெச்சிருப்பீங்க)" அதுவும்
  ஆஹா...
  5 லட்டென்ன, "அண்டா லட்டு"க்கள் தின்பதற்கு சமம். நல்ல தேர்வுகள் 👏👏👏👏👏👏👏

  மாயாவியும், சிலந்தியும் சிறுகதையாக வந்தாலும், வந்ததில் சந்தோஷமே.
  வரவேற்பை பொறுத்து அவ்வப்போது அவர்களையும் களத்தில் இறக்குங்கள் சார்
  அனைத்து தரப்பினருக்கும் மகிழ்வாக இருக்கும்.
  பழசு+புதுசு என, அனைத்து வாசகர்களுக்கும் இது பெரிய கொண்டாட்டம் தான்.
  முக்கியமாக நமது "ஸ்பைடர் ஸ்குவாட்" நண்பர்
  "UDAY ADI"க்கு.

  படங்கள் மரண மாஸோ மாஸ்.
  எண்ணிலடங்க மகிழ்ச்சியை காலங்காத்தாலேயே தந்துவிட்டீங்க.
  💐❤️💐❤️💕💐💕❤️💐💕❤️💐💕❤️💐💕❤️💐💕❤️💐

  மீண்டும் அடுத்த பதிவில் 🌹🌹🌹

  ReplyDelete
  Replies
  1. Well said Sir.

   //"UDAY ADI"க்கு.//
   தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ

   Delete
  2. இந்த அறிவிப்பு வந்ததும் முதலில் என் ஞாபகத்துக்கு வந்தது நீங்கதான்.
   என்ஜாய்.

   Delete
  3. Thank You Sago. RTM என்று உலக மகா ஸ்பைடர் வெறியர் இருக்கிறார். நானெல்லாம் ஜுஜுபி சகோ... இன்னும் ஏராளம் ஸ்பைடர் வருகையை கொண்டாடும் உள்ளங்களும் உண்டு.

   Delete
 43. காமிக்ஸ் ன்னாலே உழைப்பு தான்..
  .

  என்ன ஒவ்வொரு புக்கா பிரிச்சி ஃபிரேம் பை ஃபிரேமா மேயணும்...

  இது கஷ்டம்...

  வந்த புக்கு எல்லாத்தையும் பத்திரமா பாச்சா உருண்ட போட்டு லேமினேஷன்லாம் பண்ணி காப்பாத்தணும்...

  இது கஷ்டம் கஷ்டம்.

  படிச்சிட்டோம்னு எல்லா குரூப்பு ஃபிளாக்லையும் டாம் டாம் அடிக்கணும் - சித்தம் ஆஹா/ ஓஹோ/ முடியல , இது அப்டீ/அது இப்டீன்னு அறிவு ஜீவியா கஷ்டப்பட்டு காட்டிக்கணும்...

  இது ரெம்ப கஷ்டம்...

  அப்பறம் நானும் ரவுடி தான் னு ஃபிளாக்ல பின்னி எடுத்து சவுண்ட் விடணும்...

  இது அதவிட கஷ்டம்...

  மொத்தத்துல காமிக்ஸ் ரசிகனா இருக்குறது பயங்கர கஷ்டம்...

  ஆனா பாருங்க அனா ஆவன்னா க்கு அப்பறமா எழுத்துகூட்டி படிச்சதாலோ என்னமோ இதெல்லாம் ரெம்ப ரெம்ப ரெம்ம்ம்ம்ப இஷ்டம்..
  .

  ReplyDelete
  Replies
  1. இஷ்டத்துக்கு மேல இஷ்டமா வாரி விட்ற சிவகாசி காமிக்ஸ் பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...

   ஏகப்பட்ட உழைப்பு தேவைப்படும் போலுள்ளதே...

   உடல் நலனிலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி (தூங்கும் நேரத்தில் நன்றாக தூங்கி)உடலையும் மனதையும் உரமாக்கிக் கொள்ள வேண்டுகிறேன்...

   காமிக்ஸோடு இதுவும் தான் நான் வேண்டுவது ஐயா...

   கவனம் கொள்ளுங்கள்...

   ஐம்பது ஞாபகம் இருக்கட்டும்...

   வயசு திரும்பல...

   Delete
  2. தீபாவளி பலகாரங்கள் ரெடீ...

   Delete
  3. சாமி…வயசு ஒரு நம்பர் தான். அதை ஏன் அடிக்கடி ஞாபகப்படுத்தனும். ஓடியாடி வேலை செய்ய ஜூனியர் இருக்காரு. பேனா புடிக்க எடிட்டர் இருக்காரு. 90 வயசுல ஈஸ்ட்வுட் டைரக்ட் பண்ணி நடிக்கிறாரு. அதனால் வயசு நடையில்லை. ஓய்வெடுத்து ஆரோக்கியமா இருந்தா அந்தியும் அட்டகாசமே.

   Delete
 44. சார்..


  சார்..


  என்ன சார் இது....  இப்படி இன்ப அதிர்ச்சியை வாரி ,வாரி வழங்குறீங்களே...  படிக்க படிக்க துள்ளி குதிக்க சொல்லுது சார் மனசு...  ஆனா இது ஆபிசு எல்லோரும் வித்யாசமா பாப்பாங்க..


  அதனால் அடக்கி கொள்கிறேன்...


  யாரையாவது இறுக்கி அணைச்சு உம்மா கொடுக்கனும் போல இருக்கு.ஐயோ ஆண்டவா..  ருக்ககுகுகு...!

  ReplyDelete
  Replies
  1. எதுக்கும் இன்னொரு தடவ பதிவை படிச்சுட்டு வரேன் சார்..:-)

   Delete
  2. தலீவரே ; ஆபீசில் ஆரேனும் உண்டோ - நிங்கள் இதைச் சாக்காக்கி இறுக்கி அணைக்க ?

   Delete
  3. // தலீவரே ; ஆபீசில் ஆரேனும் உண்டோ - நிங்கள் இதைச் சாக்காக்கி இறுக்கி அணைக்க ? //

   // ருக்ககுகுகு //

   Delete
  4. //தலீவரே ; ஆபீசில் ஆரேனும் உண்டோ - நிங்கள் இதைச் சாக்காக்கி இறுக்கி அணைக்க ?//


   Sir! :-)))))))))

   Delete
  5. ///ருக்ககுகுகு///

   தலீவரே... 😡😡😡 ருக்கு என்ட ஆளாக்கும்! அதுகொண்டு நிங்கள் குறுக்கே வந்தெனில் ஞான் நிங்கள் ஓபீஸுக்கே வந்நு நிங்கள கொன்னு கழியும்!

   Delete
 45. உங்களாலே என் உச்சந்தலையில அடிபட்டிருச்சு சார்.. ஒண்ணுமில்ல..சந்தோஷத்துல துள்ளி துள்ளி குதிச்சேன்.மேல் சுவத்துல முட்டிக்கினேன்.

  ReplyDelete
  Replies
  1. வொய் பீலிங்..


   சேம் பீலிங்....:-)))

   Delete
  2. மண்டை புடைப்பதெல்லாம் என்க்கு புச்சே கெடயாது சார் ! என்ன - காரணங்கள் தான் மாறிடும் !

   Delete
 46. ஸ்பைடரும் மாயாவியும் வயித்தில் புளியை கரைக்கும் வியாதிக்காக ஒரு (ரெண்டு??)டாக்டருக்கு ஆப்ரேசன் பண்ணுவதில் தற்போது பிசியாக உள்ளதாக நம்ப தகுந்த வட்டராங்களில் இருந்து தகவல் வந்துள்ளது.. அதுவும் அனஸ்தீசியா தராமலே..

  ReplyDelete
  Replies
  1. யோசிக்கும் படங்கள் !

   Delete
  2. Rummi@ ROFL ..

   சாதாரண நேரத்துல அதுதான் உண்மை!!

   :-)

   ஆனா முத்து 50 நேரத்துல மனசு ரொம்ப சந்தோஷ மூடிலே elated ஆ இருக்கு..

   மாயாவி முதல் ரெப்ளிக் காவை கையில் ஏந்த ஆசையா இருக்கு..

   புது புக்கு லயன் , முத்து நாயகர்கள் புதுக்கதைகளை படிச்சு கொண்டாட ஆர்வம் ரொம்ப கிளம்புது..

   திருவிழா தருணம் ஆச்சே...

   Delete
  3. ///ஆனா முத்து 50 நேரத்துல மனசு ரொம்ப சந்தோஷ மூடிலே elated ஆ இருக்கு..

   மாயாவி முதல் ரெப்ளிக் காவை கையில் ஏந்த ஆசையா இருக்கு..

   புது புக்கு லயன் , முத்து நாயகர்கள் புதுக்கதைகளை படிச்சு கொண்டாட ஆர்வம் ரொம்ப கிளம்புது..

   திருவிழா தருணம் ஆச்சே...///

   சூப்பருங்க செனா அனா!!

   இது.. இது.. இதுதான் நம் எல்லோருக்கும் தேவை - குறிப்பாய் இந்தத் திருவிழா தருணத்தில் 'அத்தனைக்கும் குதூகலப்படு' என்பதே நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட கேப்ஷனாக இருந்திட வேண்டும்!!

   அதை நீங்க சரியாச் செய்வதில் இளவரசர் ஹேப்பி!!

   Delete
 47. பதிவு 800 க்கு உண்டான அதகள சிறப்பு பதிவு...சூப்பர் சூப்பர் சூப்பர் ...சார்..

  ReplyDelete
 48. Amazing announcement sir!

  This really shows you love and respect each and every one of these comic lovers with diverse tastes....

  Clap..clap..clap..

  ReplyDelete
  Replies
  1. ஒரு சந்தோஷ வேளையில் ஒரு அணியினர் சங்கடம் கொள்ள காரணமிருக்க வேண்டாமே என்று தோன்றியது சார் !

   Delete
  2. மாயாவி இல்லாமல் முத்து பொன் விழாவா என்று நினைத்தேன்.அந்தக் குறையும் நீக்கப்பட்டுவிட்டது. நன்றி சார்

   Delete
 49. சந்தா அறிவிப்பில, M50ல புதிய நாயகர்கள் மட்டுமே என மனம் கலங்கியிருந்த ஓரிரு நண்பர்களையும் ஆனந்த கண்ணீர் விட வைக்கும் பதிவு இது....!!!


  முத்து M50ன் அதிரடிகளாவன.....

  1.FFS....2மெகா புத்தகங்கள்

  2.ஒவ்வொரு SMASHING '70s ஆல்பத்துடனுமே வண்ணத்திலானதொரு சர்ப்ரைஸ் booklet

  3.லயன்-முத்து சூப்பர் ஸ்டார்கள் இரும்புகையாரும், வலைமன்னரும், செக்ஸ்டன் பிளேக் உடன் இணைந்து கலக்கும் காக்டெயில்....!!!

  4.................


  ---உண்மையிலயே இப்பவே தீபாவளி ஆரம்பித்துட்டதுங் சார்....

  ரகளையான அறிவிப்புகள்.....

  (🎶🎶🎶🎶🎶🎶🎶தொடர்ந்து விசில் போடும் படங்கள்......)

  மாஸ் நாயகர்கள்....

  முத்து M50....களைகட்டுதேய்....


  ஏதாவது ஒரு அதிசயம் நடந்து நாம ஒரு 200பேரு எங்கியாவது குழும, சனவரி1அன்னிக்கு இந்த புக்குகளை ரிலீஸ் பண்ணி ஓவ்வொன்றாக நம்ம மரியாதைக்குரிய சீனியர் எடிட்டர் சார் உயர்த்தி காட்டினா எப்படி இருக்கும்.....😍😍😍😍

  ReplyDelete
 50. // For starters - வேதாளனின் இந்த இதழுக்காக அட்டைப்படத்தினை மாத்திரமன்றி, தொடரக்கூடிய அனைத்து PHANTOM கவர்களையும், செம ஸ்டைலிஷ் ஆன ஐரோப்பிய ஓவியர் ஒருவரே செய்திடுகிறார் ! //

  **** தொடரக்கூடிய அனைத்து PHANTOM கவரகளையும்******
  இதுக்கு என்ன அர்த்தம்????????

  ReplyDelete
  Replies
  1. வேதாளருக்கு இருக்கும் வரவேற்புக்கு 2023மெயின் சந்தாவிலயே அவரை களம் இறக்க வாய்ப்பு இருக்கலாமோ??? அப்படி இருந்தா தானே இந்த வாக்கியம் சரி!

   முத்துல வேதாளர் Vs லயன்ல டெக்ஸ்.... மோதிக்கலாம்🤜🤛🤜🤛🤜🤛

   Delete
 51. இந்த கொண்டாட்டங்களை கொண்டாட எங்கேயாவது get together போட்றலாமா...

  சிவகாசிய்லயே...போட்ருவமா...நண்பேன்டாஸ்...

  ReplyDelete
 52. ###இன்று சிந்திடும் வார்த்தைகளை மீட்க அன்றைக்கு வழியும் இராது ! So நிதானம் ப்ளீஸ் ! அதிலும் ஒரு நண்பரின் ஈடு செய்திட இயலா இழப்புகளின் வலிகளையுமே பகடியாய் பொதுவெளியில் பகிர்வது நிச்சயமாய் அவலத்தின் உச்சம் !! நிஜ வாழ்வின் நிஜ இழப்புகளின் வலிகளைத் தாண்டிட நண்பருக்கு வலு தந்த இறைவன், இந்த வேளையிலும் அவரோடு இருக்க வேண்டிக்கொள்வேன் ! And நண்பரே : இந்த அட்டைக்கத்திப் போர்களுக்கு கொஞ்ச நாட்கள் விடுமுறை தந்து விட்டு வாழ்க்கையின் நிஜங்களுடன் ; உங்கள் உறவுகளுடன் கழியுங்கள் - அவையே நிரந்தரம் ! இந்தச் சோப்புக் குமிழ் கற்பனை யுத்தங்களல்ல தானே####

  போட்டி சூழ் உலகு...
  வார்த்தை தோரணங்கள்,
  அபச்சாரத்தின் உச்சக்கட்டம்..

  இதை எப்போது சம்பந்தப்பட்ட நபர் புரிந்து கொள்வாரோ ?!!!

  ReplyDelete
 53. Never expected this gift from you sir. I'm excited by reading the words itself...

  Steel Claw, Spider & Sexton Blake in one book... What else to say...

  Advance Happy Birthday Muthu Comics 😍😍😍😍😍😍😍😍😍😍😍

  ReplyDelete
 54. பட்டாசு அறிவிப்புகள்

  ஜனவரி 2022 வருவதற்குள் எடிட்டர் இன்னும் என்னலாம் பட்டாசு கொளுத்தி போடப்போகிறாரோ. சத்தம் இங்கே வரை கேட்குது. வாசகர்களுக்கு குஷியோ குஷி...

  ReplyDelete
  Replies
  1. உண்மையோ உண்மை சார்..:-)

   Delete
 55. Editor sir,

  Very good & unexpected move to bring old goldies inside M50 celebrations to satisfy all readers...

  இன்னுமும் என்ன என்ன ஆச்சர்யமூட்டும் தகவல்கள் (அ) லட்டுக்கள் காத்திருக்கின்றனவோ...

  ReplyDelete
 56. இன்றைய பதிவை கிட்டத்தட்ட மூன்று தடவை படித்து ரசித்தேன்

  முத்து 50 கொண்டாட்டங்கள் அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கிறது சர்..

  ReplyDelete
  Replies
  1. அப்படியே வழிமொழிகிறேன்..:-))

   Delete

 57. ஆசிரியருக்கு ,

  புது புத்தக வரிசை SMASHING '70s பற்றி எனது சிறு கோரிக்கை.

  இந்த நான்கு புத்தகங்களுமே மாக்ஸி சைஸ் எனும் போது display பண்ண ரொம்ப அழகா இருக்கும் சார். டின்டின் hardcover எடிஷன் மாதிரி. நான் ஏற்கனவே சில பதிவுகளிலும் கேட்டிருக்கிறேன் னு நினைக்குறேன். அந்த spine டிசைன் மட்டும் எல்லா 'SMASHING '70s' collection லயும் ஒரே மாதிரி இருக்குமாறு செய்ய முடியுமா சார். ஷெல்ப் ல அடுக்கும் போது செம்மயா இருக்கும் சார்.

  Please consider.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் Sankar கேட்பது கிட்டதட்ட இதுமாதிரியான ஒரு spine designன்னு நினைக்கிறேன்.. ஏதோ பார்த்துப் பண்ணுங்க எடிட்டர் சார்!

   அடுத்த இ.ப. மறுமறுமறுமறுக்கா பதிப்புக்கும் இப்படியொரு டிசைன் ட்ரை பண்ணினா சந்தோசம் தான்! அப்புறம்.. அந்த 3D அட்டைப் படத்தை மறந்துடாதீங்க எடிட்டர் சார்!

   Delete
  2. நம்ம புக்கு இவ்வளவு குண்டா வருமா? வராதுன்னு நினைக்கிறேன்...

   Delete
  3. இளவரசரே,

   இவ்ளோ பெரிய டிசைன் ஒர்க் லாம் வேணாம். அதுக்காகவே ரொம்ப நேரம் செலவிடணும். நான் கேக்குறது ரொம்ப சிம்பிள் டிசைன்ங்க.

   reference 1

   reference 2

   Delete
  4. ///இவ்ளோ பெரிய டிசைன் ஒர்க் லாம் வேணாம். அதுக்காகவே ரொம்ப நேரம் செலவிடணும்////

   என்ன ஜி இப்படிச் சொல்லிட்டீங்க? எடிட்டர்ட்ட நாம ஒன்னு கேட்டு, என்னிக்கு அவர் தராம இருந்திருக்கார்? இது மாதிரி புது முயற்சிகளுக்கு நேரம் செலவிடறதெல்லாம் அவருக்கு ரொம்ம்ம்பப் புடிக்குமாக்கும்! நம்ம DTP டீம் பொன்னரையோ, கோகிலாவையோ கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை வாங்கியாவது கச்சிதமா முடிச்சிருவார் - நீங்க வேணா பாருங்களேன்!

   அ..அப்படித்தானுங்களே எடிட்டர் சார்?!!

   Delete
 58. முத்து 50 ஆம் ஆண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்தேன் சார்...
  ஆனால் கொண்டாட்டங்களை இந்த கணத்திலிருந்தே ஆரம்பிச்சு வெச்சுட்டீங்க... சூப்பர் சார்!

  நண்பர்களே வரும் ஜனவரிக்குள்ளே வருகிற உப பதிவுகள் எல்லாத்திலேயும் உற்சாக அறிவிப்புகள் இருக்கும்னு தோணுது... அதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால் இன்னும் அதிகளவு உபபதிவுகளை ஆசிரியர் போடச்செய்ய தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தாமதமின்றி துவக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்...

  டூ... கோவை கவிஞர், சேலம் குமார்... etc...

  ReplyDelete
 59. // சூப்பராய் சில வேதாளன் போஸ்டர்களும் அவரது கைவண்ணத்தில் காத்துள்ளன !! And அவை நமது முன்பதிவு நண்பர்களுக்கு, நமது அன்புடன் (விலையின்றி) இருந்திடும். As advertised - இந்த முதல் ஆல்பத்தில் மொத்தம் 9 முழுநீள சாகசங்கள் இடம்பிடித்திடவுள்ளன !! //

  Super! Super!!

  ReplyDelete
 60. கோவை ஸ்டீல் க்ளா,

  செந்தில் சத்யா,

  உதய்ஆதி,

  பூபதி,

  சின்னமனூர் சரவணன்,

  சரண்செல்வி,

  தலீவர்,

  ------

  ------

  ------

  ------

  இன்னும் இன்னும் அனைத்து ஸ்பைடர் ரசிகர்களுக்கும் வாழ்த்துகள்...!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி விஜய்.

   Delete
  2. நன்றி டெக்ஸ் எங்களை விட தீவிர ஸ்பைடர் வெறியர் R.T.முருகன் அவர்கள்

   Delete
  3. நான் ஸ்பைடர் ரசிகராய் மட்டுமல்ல டெக்ஸ்..மாயாவி ,ஆர்ச்சி ,ஸ்பைடர் ,மும்மூர்த்திகளில் என அனைவருமே ரசிகர்களாய் இருந்தது பல வருடங்களுக்கு முன்னரே..

   இப்பொழுது கொஞ்சம் அதில் தடுமாற்றம் இருப்பினும் இது செம செம செம மகிழ்ச்சியை அறவித்த பதிவு ..:-)

   Delete
  4. நன்றி விஜயராகவன்... இங்கே பிளாகில் பதிவிடாத ஏராளமான ஸ்பைடர் மும்மூர்த்தி ரசிகர்கள் இருக்கிறார்கள்...

   Delete
  5. மீ டூ நண்பர்களே....இரு கதைகளுக்கு.... கடத்தல் குமிழிகள்& பாட்டில்பூதம்!!!

   RTM sir ஐ பற்றி அறிவேன், அவர் இங்கே பதிவிடாத காரணமாக அவரை குறிப்பிடல.... நாங்க ஃபுட்பால் ரசிகர்கள், நாங்க பேசும்போது RTM sirக்கு வாழ்த்து தெரிவித்துடலாம்...!!!! அதேபோல ஸ்ரீதர் சொக்கப்பா ஜிக்கும்..... மிகப்பெரிய ஸ்பைடர் ரசிகர்..!

   அதேபோல இங்கே பதிவிடாத மெளன வாசகர்களில் ஸ்பைடர் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்!💐💐💐💐

   "ஸ்பைடர்"- முத்து 50ல் என்பது உண்மையில் வேறு லெவல் நன்றியுரைத்தல் ஸ்பைடருக்கு என்பதே சாலப் பொருத்தம்...!!!


   "செல்லகுட்டி" லயன் சூப்பர் ஸ்பெசல்ல டெக்ஸ்க்கே இடம் கிடைக்கலயே!

   (குறிப்பு:- "செல்லகுட்டி" என்பது லயன் சூப்பர் ஸ்பெசலுக்கு நாங்க வாட்ஸ்ஆப்ல வைத்துள்ள செல்ல பெயர்🤩)

   Delete
  6. நன்றி STV அவர்களே!

   Delete
 61. 800 பதிவுகள்.

  மிகப் பெரிய சாதனை.

  வாழ்த்துகள் & பாராட்டுக்கள் ஆசிரியர் சார்.

  ReplyDelete
 62. at least லட்டு # 4 என்று ஏதேனும் என் மண்டைக்குள் உதிக்கும் வரைக்கும் !!)

  - Zagor ?

  ReplyDelete
 63. சூப்பராய் சில வேதாளன் போஸ்டர்களும் அவரது கைவண்ணத்தில் காத்துள்ளன !! And அவை நமது முன்பதிவு நண்பர்களுக்கு, நமது அன்புடன் (விலையின்றி) இருந்திடும்

  ####

  சுவற்றிற்கு இப்பொழுதே அட்வான்ஸ் புக்கிங் செய்து விடுகிறேன்..:-))

  ReplyDelete
 64. போன பதிவுகல்ல,
  எங்கடா எதுல அவலு மாட்டும்னு எதிர்பாத்து, பழய நாயகர்கள போடலீன்னதும், சகட்டுமேனிக்கு சிங்கத்த பொரன்டுனாங்க மோருல.
  கூடவே மந்திர வித்தகரும்.

  இப்ப சட்டுன்னு இந்த மாற்றத்த பாத்ததும்
  அந்த "பிரகஸ்பதிகளுக்கு" நவ துவாரங்கலும் பொகையா போகும்.
  ஒன்னு மாட்டுச்சு அதும் போச்சே
  இனி எத மெல்றதுனு, ஊருக்கு "ஒதுக்கு பொறமா", துண்டுபீடிய ஊதிட்டு, கூடாலோஜன போட்டுடுட்டு இருப்பாய்ங்க.
  வந்ததும் நாம சொல்லிதா இந்த முடிவ சிங்கம் எடுத்துதுனு வாயீ 4 கீழிய கதறுவாய்ங்க அய்யோடா...

  இப்புடி அவுக வாயில ஒருடஜ்ஜன் லாரி மண்ணள்ளி போட்டுட்டீங்களே சாரே...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 65. சார் Spiderன் பலமே அந்த திமிர் பேச்சு தான். ஸ்பைடர் Woke Cultureக்கு வெளியில் இருப்பதே நல்லது சார். Spiderin languageஐ tone down செய்ய வேண்டாம் ப்ளீஸ்!!

  ReplyDelete
 66. நான்காவது லட்டையும் ரெடி பன்னுங்கோ

  ReplyDelete
 67. இந்த மகிழ்வான பதிவில் இறுதியில் ஒரு வருத்த பதிவு...

  இதைப்பற்றி ஒன்றை ஒன்று மட்டுமே சொல்லிக்கொள்கிறேன்..


  மிகப்பெரிய அலைகளோடு ஓடும் கடலில் அந்த கடலை என்ன செய்ய போகிறேன் பார் என சிலர் கற்களை கொண்டு தூக்கி தூக்கி எறிந்து கடலில் வீசினார்களாம் கடலை ஒழித்து கட்ட.


  இங்கே ஆசிரியர் கடலாய் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருக்க விமர்சனம் என்ற போர்வையில் கடலை நோக்கி கற்களை எறிந்து கொண்டே இருப்போர் ஒன்றை மட்டும் அறிந்து கொள்ளுங்களேன்...


  கடலில் எவ்வளவு கற்களை எறிந்து வீசினாலும் காணாமல் போகப்போவது அந்த கற்கள் தானே அன்றி கடல் அல்ல..

  ReplyDelete
  Replies
  1. செம தலீவரே!

   இது அந்த கல்லுகளுக்குப் புரிஞ்சா தேவலை!!

   Delete
  2. செம செம செம செம தலீவரே!

   Delete
 68. வாவ் அட்டகாசமான பதிவு சார். மிக்க மகிழ்ச்சி அளித்த பதிவுகளில் ஒன்று இது. உங்களது உற்சாகம் கரை புரண்டு ஓடுவதை உணர முடிகிறது. I'm so ஹேப்பி.

  ReplyDelete
 69. சந்தோசத்தில் திக்கு முக்கு ஆடவைத்துவிட்டீர்கள்

  ReplyDelete
 70. வணக்கம் சார் முத்து 50 என்னும் இந்த மைல்கல் வருடத்தை சிறப்பாக்க உங்களளவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் முயற்ச்சிக்கிறீர்கள் சார். நன்றிகள். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 71. ஒரு கொண்டாட்டமான மனநிலை,வானத்திலிருந்த பூமழை பொழிவது போல் ஒரு சந்தோசமான உணர்வு தேங்க்ஸ் சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
  Replies
  1. ///வானத்திலிருந்த பூமழை பொழிவது போல் ஒரு சந்தோசமான உணர்வு ///

   அருமையா சொன்னீங்க ராஜசேகர் ஜி! நண்பர்கள் பெரும்பான்மையினர் மனநிலையும் இப்படித்தான் இருக்கும்!

   "உன்னை ஒரு பூ கேட்கவே ஓடிவந்தேன் இங்கே..
   பூந்தோட்டமே சொந்தம் என்றால் நான் போவது எங்கே?"

   ஒலித்த இந்தப் பாடல் சித்ராவின் குரலில் மனிதனின் மறுபக்கம் படத்திற்காக!

   இளவரசர் இப்போது முக்கி முனகிக்கொண்டிருக்கும் பாடலும் இதுவே!

   Delete
 72. இன்னும் ஜனவரிக்குள் என்னென்ன இன்ப அதிர்ச்சிகள் காத்துக்கொண்டிருக்கிறதோ

  ReplyDelete
 73. சோ 1. S70 முன்பதிவாளர்களுக்கு போஸ்டர்ஸ், நாலு கலர் இதழ் ப்ரீ. 2. FFS முன்பதிவாளர்கள் மற்றும் சந்தாதாரர்களுக்கு அந்த 75 ரூபா புக்கு ப்ரீ. கரெக்டா? தூங்கி எந்திருச்சு படிச்சதால இன்னும் மசமசன்னு இருக்கு. கரீக்டு தானே பேசறேன்? அப்ப மூனு லட்டாச்சே?

  ReplyDelete
 74. ஊய் ஊய் ஊய் .சந்தோஷத்தில் திக்கு முக்காட வைக்கின்கிறீர்கள் . சூப்பர் சூப்பர் சார். கால் கட்டை விரல் இனை மட்டுமில்லை, இம்முறை முழு காலையும் வாயுக்குள் திணித்தது போல உள்ளது . நிஜமாக்கிட எத்தனை குட்டி கரணங்கள் அடிக்க போறீங்களோ தெரியாது .மலைப்பாக உள்ளது சார். ஜமாயுங்கள் சார்!

  ReplyDelete
 75. 800 என்பது வெறும் இலக்கம் இல்லை சார். இது 1000, 1500 என்று போகும் சார். வாழ்த்துக்கள் சார். சுவாரசியமான உங்கள் எழுத்து நடை முக்கிய காரணம் என்பது என் தாழ்மையான கருத்து .

  ReplyDelete
  Replies
  1. எழுத்து நடைய விடுங்க நண்பரே...அந்த சந்தோசப் படுத்தி பாக்கும் எண்ணமிருக்கே அதான் .....

   Delete
 76. This comment has been removed by the author.

  ReplyDelete
 77. ****** சந்தா படலம் - ஒரு திருத்தப்பட்ட மறுபதிப்பு ***** (ஏன் மறுபதிப்பெல்லாம் சிவகாசிக்காரவுக தான் போடணுமா?! நாங்களும் போடுவோம் 😌😌)

  Rs. 1,015

  இது 2022க்கான சந்தாவில் இணைவதன் மூலம் தோராயமாக நாம் சேமிக்கயிருக்கும் தொகை!

  எப்படி என்று பார்ப்போம்..

  நாம் அடுத்தவருடம் பெறப்போகும் 25 பொம்மை பொஸ்தகங்களுக்கான அடக்கவிலை= ரூ.5080

  நாம் செலுத்தப் போகும் சந்தாத் தொகை = ரூ.5100

  ஆக, வெறும் 20 ரூபாயை மட்டுமே கொரியர் & பேக்கிங் சார்ஜாக நாம் கொடுக்கிறோம்!

  ஒரு வருடத்திற்கு ஆகும் கொரியர் & பேக்கிங் செலவு தோராயமாக ரூ.600
  நாம் ரூ.20 மட்டுமே செலுத்துவதால் நம் சேமிப்பு சுமார் 580 ரூபாய்!

  இதுபோக சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சீனியர் எடிட்டரின் அனுபவக் கட்டுரையோடுகூடிய 16 பக்க 'எலியப்பா' இலவச வண்ண இணைப்பும் உண்டு! நம் வீட்டுச் சுட்டிகளைக் கவரயிருக்கும் இவ்விணைப்பின் விலை சுமார் 30 ரூபாய் என்று வைத்துக்கொண்டோமேயானால், 12 மாதங்களுக்கு = 12x30 = 360 ரூபாய்! இதுவும் சந்தாதாரர்களுக்கு மட்டும் இலவசமாகவே வழங்கப்படயிருக்கிறது!

  இதோடு, மிகச் சமீபமாய் எடிட்டர் அறிவித்துள்ள ரூ.75 மதிப்புள்ள 'நவீன கலர் ஸ்பைடர் + இரும்புக்கை மாயாவி + செக்ஸடன் ப்ளேக்' இதழ் சந்தாதாரர்களுக்கு எடிட்டர் சமூகத்தின் அன்பளிப்பாய் கிடைக்கப்போகிறது!

  ஆக, 580 + 360 + 75 = ரூ.1,015/-

  இதுமட்டுமா?
  அதுதான் இல்லை! smashing-70 இதழ்கள் ஒவ்வொன்றுடனும் ஒரு சர்ப்ரைஸ் புக்லெட்டும் இலவசமாகக் கிடைக்க இருக்கிறது!!

  கூடவே, வேதாளரின் வண்ணப் போஸ்டர்கள் சிலவும் இலவசமாகக் கிடைக்க இருக்கிறது!

  வேறென்ன வேண்டும் நண்பர்களே...
  அருமையான பொக்கிஷங்கள் நம் இல்லம் தேடி வர...

  சந்தாக் கட்டுவோம்!
  சந்தோசமா படிப்போம்!!

  ReplyDelete
  Replies
  1. இதை எத்தினி தபா இன்னும் திருத்தப் போறீங்களோ. ஆனா ஒன்னு குரியர் செலவு அமோன்ட் தப்பு. FFS க்கே குரியருக்கு 100.

   Delete
  2. அப்படீன்னா ஒரு வருசத்துக்கு கூரியர் சார்ஜ் எவ்ளோ ஆகும்னு எடிட்டரைச் சொல்லச் சொல்லுங்கோ.. ஒரு மறுமறுமறுக்கா பதிப்புப் போட்டுடலாம்!

   Delete
  3. கொரியர் சார்ஜ் ஆயிரத்தை தாண்டும்...!!!

   ஏகப்பட்ட குண்டுபுக்ஸ் சந்தாவில்.....!!!

   Delete
  4. எதிர்வரும் 2022 சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் ஆண்டுதான்.

   சந்தா செலுத்துவோம், ஜாக்பாட் 2022 ம் ஆண்டை சந்தோஷமாக கொண்டாடுவோம் ஆண்டு முழுவதும்!

   Delete
  5. கடைல எல்லாத்தையும் வாங்குனா கொரியர் ஜார்ஜ் வராதுதான்...ஆனா வாங்கப் போகும் செலவு அலைச்சல் கூடுதல்....மொத நாளே கிடைக்காது...இந்த இணைப்புகள் நமக்குத் தரும் மெகாப் புதையல்...இவை மேலும் நீடிக்க மொத்தமா சந்தா செலுத்துனா நெனச்சுப் பாருங்க...நெனச்சுப் பார்க்க இயலா பரிசுக குவிஞ்சிடாது...

   Delete
 78. Dear Editor,

  ஒரு ஐம்பதாண்டு காலப்பயணத்தின் மைல் கல் நிகழ்வினை உங்களால் முடிந்த அனைத்து வகையிலும் ஸ்வாரஸ்யப்படுத்த முயற்சிக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி சார். Going the extra mile to cater to all fans is laudable.

  ReplyDelete
 79. Very happy to hear on comeback of spider and Steel claw. Thank you very much Editor Sir...I was born on 25th November 1972...I am also entering in to 50th year and your announcement is very special to me. Generally, I will buy Diwali specials on my birthday, even if it is some delay..This year is going to be mega special one...I am working in a highly stressful environment, and this comics and writings of S.Ra gives me pleasure and make me to live in different world...Thank you and your team for doing such a wonderful service...long live Muthu, Lion, your self, your family members, staffs and all comic readers...

  ReplyDelete
 80. காமிக்ஸ் உலகம்..
  இது வேறுலகம்..
  தனி உலகம்..
  வட்டம் சிறியதுதான்.,
  ஆனால் இதன்
  ஆலவட்டம் பெரியது.
  ஒரு தம்மாத்துண்டு பொம்ம புஸ்தகம்
  இவ்ளோ சந்தோஷத்த, இவ்ளோ பேருக்கு
  கொண்டுவருதுன்னா, நிச்சயம் அதுல என்னவோ ஒண்ணு இருக்குதுப்பா.
  மூர்த்தி சிறிதாயினும், கீர்த்தி பெரிது.

  ReplyDelete
 81. எச்சூஸ் மீ..எடிட்டர் சார்..
  அந்த இரும்புக்கை படம் செமயாக இருக்கு.அதை வால்போஸ்டராக கொடுக்க முடியுங்களா?..

  ReplyDelete
 82. இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் ஆசானே.,. சூப்பர் சூப்பர்
  தேன் வந்து பாயுது காதினிலே என்பார்கள் ஆனால் மனதிற்கும் கண்களுக்கும் தேன் வந்து பாய்கிறது இந்த அறிவிப்பை பார்த்தபோது.. இதுபோன்ற கட்டவிரல் சாகசத்தை தான் உங்களிடம் எதிர்பார்த்தேன்.. பலித்ததில் மிகவும் சந்தோசம் அடைந்தேன்... அறிவிப்பு 4 அதுவும் கட்டைவிரல் காதலாக இருக்கும் என்று நினைக்கின்றேன்...
  சந்தாதாரர்களுக்கு மட்டும் இலவசம் என்று இல்லாமல் முத்து 50 முன்பதிவு செய்யும் நண்பர்களுக்கும் என்று அறிவித்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤❤❤❤❤❤

  ReplyDelete
 83. முத்து காமிக்ஸ் சொத்தான ஸ்பைடரை மீண்டும் முத்து காமிக்ஸ் 50 இதழில் முழுவண்ணத்தில் சேர்த்து மரியாதை செய்து விட்டார் ஆசிரியர். இன்ப அதிர்ச்சியாக இனிப்புகளை இணைப்புகளை அறிவித்து first priority சந்தாவிற்கு என முடிவெடுக்க செய்து விட்டார்... இந்நாள் எனக்கு ஒரு பண்டிகை மகிழ்ச்சியையும், சிறுப்பிள்ளை விளையாட்டு வாங்கின போது ஏற்பட்ட அந்த நாஷ்டால்ஜியா உணர்வையும் ஒரு சேர தந்து விட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆம் நண்பரே...நண்பரொருவர் லயனில் மாயாவிய விடலயான்னு எனக் கேட்டதுக்கு ...முத்துக்கு ஸ்பைடரும் வந்துட்டார்...விருந்தாளி...எப்பயோ புதிய ஸ்பைடர் மாயாவி கதைக வருதுன்னு சொன்னத இப்ப காட்டிட்டார்...நம்ம காட்ல மழதான்

   Delete
 84. Dear Editor,
  Great announcements.
  If people still suspect your dedication to comic lovers , then what can anyone say.By the way, i am a fan of spider and hence love this announcement a lot.Sexton blake 2 eagerly awaited.loved his kollaikara pisasu in childhood.
  Regards
  Arvind

  ReplyDelete
 85. கண்ணா..

  மூணு லட்டு தின்ன ஆசையா.!?

  ReplyDelete
 86. நண்பர்களே சந்தால அதிக அளவில் இணைந்தால் இன்னும் பல உற்ச்சாக அறிவிப்புகள் தொடரக் கூடும்

  ReplyDelete
 87. சார்...

  ரவுண்டு பன்னு உண்டா தீவாளிக்கி

  ReplyDelete
 88. அட்டகாசம் ஆசிரியர் சார்!! முத்து பொன்விழா FFS ஐ மற்றுமொரு மறக்க இயலா தருணமாக்க தாங்கள் உழைக்கும் உழைப்பிற்கு ஆளுயர மாலையும், பூங்கொத்தும்.
  மிக்க நன்றி!

  ReplyDelete
 89. நிறைய பத்திரிகை அலுவலகங்களில் எடிட்டர் என்றாலே எங்க வீட்டுப்பிள்ளை நம்பியார் போல விறைப்பாகவோ கொஞ்சம் முறைப்பாகவோ இருப்பார்கள்.ஆனால் நீங்களோ மௌன வாசகனாய் இருப்போரின் மனநிலையையும் புரிந்தவராய் அவர்களின் விருப்பத்தை புரிந்தவராய் இருக்கிறீர்கள் சார். உண்மையாகவே காமிக்ஸ் படிக்கும் நாங்கள் கொடுத்து வைத்ததவராக இருக்கிறோம்.ஒரு சிறப்புமிக்க சாதனை இதழில் எவர்கிரீன் ஹுரோக்கள் இல்லையே என்ற ஆதங்கம் லேசாக இருக்கத்தான் செய்தது.அதையும் இன்றைய அறிவிப்புகளில் போக்கி விட்டீர்கள்.மிக மிக மேலான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.ஒரு ஆசிரியர் கம் எடிட்டர் அனைவருக்குமே நண்பராய் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

  ReplyDelete