நண்பர்களே,
வணக்கம். மழை பெய்து ஓய்ந்தது போலுள்ளது - ஐந்தரை மாதங்களாய் தலைக்குள் குந்திக்கிடந்த அட்டவணையினை ஒப்படைத்ததும் ; அதனைத் தொடர்ந்தான உங்களின் அலசல்களோடு பயணித்ததும் ! புனித மனிடோவின் புண்ணியத்தில் சிரத்துக்கு இம்முறை சேதாரம் சொற்பமே என்ற நிம்மதி ஒரு பக்கமும், புதுப் பயணப் பாதை சார்ந்த உங்களின் பாசிட்டிவான எண்ணங்களின் உற்சாகம் இன்னொரு பக்கமும் உரம் சேர்த்திட, விசில் போட காரணங்கள் கணிசமாகவே கிட்டி விட்டுள்ளன ! Anyways நான் தற்சமயத்துக்குச் செய்திருப்பது பணிகளின் சுலபப் பகுதியினை மாத்திரமே ; மெயின் பிக்சரில் தான் சவால்களே காத்துள்ளன என்பதை நான் மறந்திடவில்லை ! "Walking the talk" என்பார்கள் ; வாயால் சுடும் வடைகளை, செயலிலும் சுட்டுக் காட்ட வேண்டிய அவசியத்தினைக் குறிப்பிடும் விதமாய் ! 2022-ன் முழுமையிலும் நான் செய்திட வேண்டியது அதையே எனும் போது, "30 நாட்களில் மொறு மொறு வடை சுடுவது எப்படி ?" என்று ஏதாச்சும் புக் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன் ! நம் மத்தியிலுள்ள வடை மாஸ்டர்களும் இயன்ற ஒத்தாசைகளைச் செய்யலாம் !! (பருப்பு வடையா ? உளுந்து வடையா ? உளுந்து வடையெனில் ஓட்டையோடா ? ஓட்டையின்றியா ? எது போட தெரிஞ்சிருக்கணும்னு தெளிவா சொல்லலியேன்னு அலசல்கள் பின்தொடர்ந்திடுமோ ?? )
ரைட்டு....இனி எதை பற்றிப் பேசலாம் ? இந்த 2 இதழ்கள் கொண்ட அட்டவணையினில் உள்ள பின்னணி stats பற்றிக் கொஞ்சம் ரமணா ஸ்டைலில் பார்ப்போமா ?
- கதைகள்னு பார்த்தாக்கா - மொத்தம் 34 !!
- அதிலே அத்தியாயங்கள்னு பார்த்தால் - மொத்தம் 46 !!
- பக்கங்களோட எண்ணிக்கையோ - 3876 !!
- இதிலே கலரிலே ...1980 பக்கங்கள் !!
- Black & White-லே ...1896 பக்கங்கள் !!
- ஆக மாசம் ஒண்ணுக்கு சராசரியா நீங்க படிக்க வேண்டிப் போறது - 323 பக்கங்கள் !!
- இது கூட ஜம்போவோ ; அம்போவோன்னு புக்கு ஒண்ணு வருதே ......அதையும் சேர்த்துக்கிட்டா இந்த நம்பர் இன்னும் எகிறும் !!
- Smashing 70's ன்னு வரப் போறதையும் சேர்த்துக்கிட்டா - இந்த ரமணாவுக்கு கால்குலேட்டரிலே பேட்டரி மாத்தித் தர வேண்டி வரும் !!
- மாசாமாசம் முழுசையும் படிச்சுட்டாக்கா, யாரையாச்சும் நடுமூக்கிலேயே குத்த ரெடியாகிட்டீங்கன்னு அர்த்தம் !!
- பாதி மட்டும் படிச்சாக்கா குப்புறப்படுத்துக் குறட்டை விட ரெடியாகிட்டீங்கன்னு அர்த்தம் !!
- டப்பாவையே ஓடைக்காம மொத்தத்தையும் பரணிலே போட்டு வைச்சாக்கா - ஐஞ்சே வருஷத்திலே சென்னையிலே ஒரு வீடு வாங்க ரெடியாகிடுவீங்கன்னு அர்த்தம் !
Jokes apart, எண்ணிக்கையில் இம்முறை இதழ்கள் குறைவெனினும், அவை முன்னிறுத்தவுள்ள வாசிப்புகள் செம விசாலம் ! And கென்யா, பொலிவியா, மாஸ்கோ ; பாரிஸ் ; பனாமா ; அமெரிக்க மேற்கு மாகாணங்கள் ; என்றொரு செம டூருமே காத்துள்ளது !! அதிலும் ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள் ஆல்பத்தின் அமெரிக்க தரிசனம் awesome ரகம் !! முன்னெல்லாம் "இதயம் பேசுகிறது" என்றொரு பத்திரிகையினில் அதன் எடிட்டர் திரு. மணியன் அவர்கள் தேசம் தேசமாய்ப் பயணித்து, அந்த அனுபவங்களை பயணக்கட்டுரையாய் எழுதுவது ரொம்பவே பிரபலம் ! அநேகமாய் அடுத்தாண்டின் இறுதியினில் நீங்களுமே - "எது, நம்ம சிகாகோ போற பஸ்லாம் நிக்குமே, அந்த சான் பிரான்சிஸ்கோ முனையிலே நிக்கிறேன் மாப்பிள்ளை ...யெஸ்...யெஸ்...!!" என்று அலப்பறைகள் விட்டாலும் no ஆச்சர்யம்ஸ் !!
இந்த முறை அட்டவணையினில் எல்லாமே கமர்ஷியல் ரகங்கள் என்றாலும், நான் குறிப்பாய் எதிர்பார்க்கும் கதைகள் சிலவுள்ளன !!
அவற்றுள் முதலானது - நம்ம ப்ளூகோட்ஸ் கும்பலின் "களமெங்கும் காதல் !" யுத்தத்தில் சேதம் ரொம்ப ஆகுது ; சிப்பாய்களை தக்க வைக்க ஏதாச்சும் செய்தாகணுமே என்றெண்ணும் ஜெனெரல் ஒரு அழகான நர்ஸை களப்பணிக்கென நியமிக்கிறார் !! அப்புறமென்ன - நம்ம பயலுக அடிக்கும் லவ்ஸ் லூட்டிகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன !! இப்போதெல்லாம் டெக்ஸ் நீங்கலாக பாக்கி உருப்படிகளுக்கெல்லாமே - "ஆண்டுக்கொரு ஸ்லாட் மதி" - எனவொரு mindset க்கு நாம் வந்திருக்க, இது போன்ற திறமையான அணிக்கும் ஸ்லாட்களை ரேஷன் தான் செய்திட வேண்டிப் போகிறது ! இல்லாவிடின் ஸ்கூபி & ரூபி இன்னொரு சீட் பிடித்திருப்பார்கள் !!
அப்புறம் நமது மேக் & ஜாக் ஜோடியின் அந்த "ரீலா..? ரியலா..?" சாகசமுமே பேனா பிடிக்க இப்போவே நமைச்சலை உண்டாக்கும் கதை !! ஒரு ஹாலிவுட் ஈரோ சார் திரையிலே புலி ; நெசத்துலே சுண்டெலி ! அவருக்கு ஒரு ஆபத்தெனும் போது, அவரை மாதிரியே இருக்கும் நம்ம ஜாக்கை கூட்டிப் போய் அவருக்கு டூப் போட வைக்கிறார்கள் ! ஆனால் அந்த ஈரோ சாருக்கு அநியாயத்துக்கு பெண்பிள்ளை ரசிகைகள் இருந்து வைக்க, அம்புட்டும் நம்ம ஜாக்கை மொய்க்க ஆரம்பிக்கின்றன !! செம ஜாலி ஆல்பம் !!
And நம்ம லக்கியின் ஆல்பத்திலுமே அந்த "நில்..கவனி..சிரி"....சும்மா ரவுண்டு கட்டி அடிக்கிறது !! அதிலும் குறிப்பாய் அந்நாட்களின் பல்லை பிடுங்கும் அந்த டெக்னிக் - செமயோ செம ! டாக்டர் சுந்தர் கண்ணில மட்டும் இந்த ஆல்பத்தைக் காட்டப்படாது என்பேன் !!
'தல' என்றென்றும் ரவுசுப் பார்ட்டியே என்றாலும், இம்முறை அவரது ஆல்பங்களில் பல எனக்குள் பரபரப்பை ஏற்றி விட்டுள்ளன !! முதலாவதானது - கலரில் காத்துள்ள "காதல் யுத்தம்" !! Tex வெளியீடு # 575-க்கென உருவான ஆல்பமிது, ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தினில் !! காதலி / மனைவி லிலித்துடன் ஒரு பொறியில் சிக்கிடும் நம்மவர், அதனிலிருந்து விடுபட நடத்திடும் அதிரடிகள் தெறி மாஸ் ! And லிலித்துமே ஆக்ஷனில் சளைத்தவரல்ல என்பதை ரசித்திடவுள்ளோம் ! எதிர்பார்ப்பைப் தூண்டிய இன்னொரு ஆல்பம் - "புயலில் ஒரு புதையல் வேட்டை !" ஒரு தங்கத் தேட்டையின் தேடல்...கறுப்பின துவேஷ பூமியில் பயணம் என ஓட்டமெடுக்கும் கதையின் க்ளைமாக்சில், ஒரு சூறாவளியின் மத்தியில் நடக்கும் மோதல்கள் wow ரகம் !!
And of course - தாத்தாக்களுடனான பயணத்தைக் தொடரவுமே ஐ-யா-ம் வெயிட்டிங்க்க்க் !! ஆண்டின் confirmed துடைப்பக் கட்டைச் சாத்து வாய்ப்புகள் கொண்ட ஒரே ஆல்பம் எனும் போது எனது ஆர்வங்களும் இரு மடங்காகின்றன !! ஆண்டின் முதல் காலிறுதியிலேயே பெருசுகளை களம் காணச் செய்தாக வேண்டுமென எண்ணியுள்ளேன் !! பார்ப்போமே !
Moving on, சில updates !!
- SMASHING '70s முன்பதிவுகள் கடைசி வாரத்தினில் செம விறுவிறுப்பு !! And சில நண்பர்களோ, தீபாவளி வரைக்குமாவது இதற்கான அவகாசத்தினை நீட்டித்துத் தரக்கோரி தினமும் போன் செய்து வருவதாய் நம்மாட்கள் சொல்லி வருகின்றனர் ! ரெகுலர் சந்தா அறிவிப்பு அக்டோபர் 15 என்பதால் அதற்கு முன்னமே SMASHING 70's முன்பதிவுக் கடையினை மூடிவிட்டால் தேவலாம் என்ற எண்ணத்தினில் தான் நானிருந்தேன் ; but நண்பர்களின் கோரிக்கை definitely logical ! So நவம்பர் 15 வரைக்கும் SMASHING 70's முன்பதிவு அவகாசத்தினை நீட்டித்துக் கொள்வதில் நிச்சயமாய் சிரமங்களிராது !!
- புதுச் சந்தாக்களை 2 தவணைகளில் செலுத்திட ஏற்பாடுகளும் இப்போது open ! ஆன்லைனில் சந்தா கட்டிடும் நண்பர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் !!
- அப்புறம் ஆச்சர்யமூட்டும் விதமாய் அந்த "இ.ப" மறுக்கா மறுக்கா மறுக்கா தயார் செய்திடும் முனைவிற்கு தம்மாத்தூண்டிலும் தம்மாத்துண்டு கோரிக்கைகளே இதுவரையிலும் வந்துள்ளன ! அந்த எண்ணிக்கையே ஆளாளுக்கு ரெண்டு, மூணு - என்ற ரீதியில் கோரியுள்ளதால் மாத்திரமே தேறியுள்ளது ! அவ்விதமின்றி, ஆளுக்கு "ஒண்ணே ஒண்ணு" என்று ஆர்டர் செய்திருப்பின், இரண்டே பேரின் கைவிரல்களுக்குள் ஒட்டு மொத்தமும் அடங்கியிருக்கும் ! So இன்னும் கொஞ்சம் அவகாசமாளித்து விட்டுப் பார்ப்போம் !! நெட்டில் ஓடி வந்த பத்தாயிரம், எட்டாயிரம் விலைகளெல்லாம் கண்கட்டி வித்தை என்பதாகவே தோணுகிறது ! நிச்சயமாய் 'பன்னு வேணும்..வெண்ணை வேணும்...இ.ப. வேணும்னு' சுற்றித்திரிய பெரும் திரளெல்லாம் இனியும் இல்லவே இல்லை !!
- FFS இதழின் கதைகள் பாட்டை நான் முழுசுமாய்ப் பார்த்துக் கொள்வேன் தான் ; no worries on that !! ஆனால் இந்த மைல்கல் இதழினில் கதைகளைத் தாண்டி நீங்கள் பார்க்க விரும்பிடும் பக்கங்கள் என்னவாக இருக்குமோ ? இப்போதைக்கு நான் போட்டு வைத்துள்ள பட்டியல் பின்வருமாறு :
- சீனியரின் தலையங்கம்
- நமது கருணையானந்தம் அவர்களின் நினைவலைகள்
- அப்புறம் 2 சர்ப்ரைஸ் flashbacks !
- நமது மறைந்த ஓவியருக்கொரு tribute !
- நமது பழம் ஓவியர் சிகாமணி பற்றி !
- நமது தற்போதைய டீமின் போட்டோக்கள் !
- வாசக நினைவலைகள்
- என் பார்வையில் TOP 5 இதழ்கள் !
- 50 ஆண்டுகளின் புக்ஸ் பட்டியல் 1 to 457
- இந்த ஐம்பதாவது ஆண்டுமலர் நெருங்க நெருங்க எனக்கோ பணிகள் சார்ந்த பயத்தில் பட்டாம்பூச்சிகள் வயிற்றில் நாட்டியமாட, சீனியர் எடிட்டரோ - "நான் ஏதாச்சும் கட்டுரை எழுதட்டா ? நான் ஏதாச்சும் கவிதை எழுதட்டா ?" என்ற பரபரப்பில் வீட்டில் கிடக்கும் கோல புக்கின் ஓரஞ்சாரங்களில் கூட -"கண்மணி, அன்போடு - சீனியர் - நான் - எழுதும் கவிதையே !!" என்று எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் !! So அவரது ஆர்வத்துக்குத் தீனி போட முத்து காமிக்சின் துவக்க நாட்கள் சார்ந்த கேள்விகளாய் ஏதேனும் உங்களுக்கு இருப்பின், you can ask them !! இங்கே வேண்டாம் ப்ளீஸ் - நமது மின்னஞ்சலுக்கு (lioncomics@yahoo.com) - ASK THE SENIOR EDITOR என்ற தலைப்புடன் உங்கள் கேள்விகளை அனுப்பிடலாம் ! But "இதழ் நம்பர் 48-ல் பக்கம் நம்பர் 37-ல் அந்த படம் ஏன் ?" "புக் நம்பர் 16 க்கு அட்டைப்படம் போட்டது யார் ?" என்ற ரீதியிலான கேள்விகள் வேணாமே - ப்ளீஸ் ? அவரது வயதுக்கும், நினைவுத் திறனுக்கும் மதிப்பளிக்கும் கேள்விகளாய் இருப்பின் great !! சுவாரஸ்யமாய் கேள்விகளும், பதில்களும் அமைந்திடும் பட்சத்தில் அவற்றை FFS இதழினில் வெளியிடப் பார்க்கலாம் !!
And here is the விண்ணப்பம் :
இது பொதுவானதொரு சமாச்சாரம் ! "விமர்சனம்னா காரமா தானிருக்கும் ; இங்கே உனக்கு பல்லாக்கு தூக்குறவங்களுக்கு தான் இடம் !! நல்லதுக்கு சொன்னா உனக்கு காதிலே ஏறாது !! கெட்டு, குட்டிச்சுவராகி தான் போவே " இத்யாதி..இத்யாதி என்ற அபத்தங்களோடு அவ்வப்போது யாரேனும் ஆஜராவது காலமாய் இங்கொரு தொடர்கதையாகவே இருந்து வருவதில் இரகசியங்களில்லை ! ஒரு செயலில் ; ஒரு கருத்தில் உடன்பாடில்லா முதல் நொடியில் ஆளாளுக்கு கண் சிவப்பதென்பது இப்போதெல்லாம் மாஸ்க் போடுவதைக் காட்டிலும் சுலபமாகிப் போய்விட்டுள்ளது ! And "கரடியாய்க் கத்தினாலும், செவிடன் காதிலே ஊதிய சங்காட்டம் இருக்கே !!" என்ற கடுப்பில் இன்ன பிற தளங்களில் போய் தங்கள் ரௌத்திரங்களுக்கு வடிகால் தேடுவதுமே தொடர்கிறது ! ராத்திரியே இது மாறிடவும் போவதில்லை ; ராத்திரியே என்னை யோக்கியனென்று ஏற்றுக் கொள்ளவும் போவதில்லை என்றாலும் ஒரு சின்ன நினைவுப் பகிரல் - இக்ளியூண்டு மாற்றத்தைக் கொணர உதவினாலும் நலமே என்ற எதிர்பார்ப்பினில் :
9 வருடங்களுக்கு முன்னே என்று நினைக்கிறேன் ! நமது மறுவருகை கொண்டாடப்பட்டு ; சமூக வலைத்தள புதியவனான நானும் சிலாகிக்கப்பட்டு, அப்பாலிக்கா பந்தாடவும்பட்ட நாட்களவை ! புள்ளையாண்டான் சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்க, இரண்டாம் ஆண்டின் நடுவாக்கிலிருந்து எனது வீட்டம்மா சிவகாசியில் பாதி நேரம், சென்னையில் மீதி நேரமென்று குப்பை கொட்டிக் கொண்டிருந்த நாட்கள் என்பதால், சிவகாசியில் வீட்டில் நானும், வேதாளங்களும் மாத்திரமே பெரும்பாலும் ஜாகை ! So வெறித்தனமாய் வேலை செய்து வருவேன் - வேளை கேட்ட வேளைகளிலும் !! கொஞ்சம் கொஞ்சமாய் நாம் சிறகுகள் விரித்து - "ஒரு சிப்பாயின் சுவடுகள்" என்ற கிராபிக் நாவலை முயற்சிக்கும் 'தகிரியத்தை' தேற்றியிருந்தோம் !
And எனது அந்நேரத்து அனுபவத்தில் செம complex பணி அது ! கருணையானந்தம் அவர்களே அதற்குப் பேனா பிடித்திருந்தார் & நான் எடிட்டிங் மட்டும் செய்திருந்தேன் - தெரிந்த மேம்போக்குப் பாணியினில் ! இதழும் வெளியாகியது ; நிறைய பேர் டிரௌசருக்குள் பூரான் புகுந்தது போல தெறித்து ஓடியதும், கொஞ்சப் பேர் மெய்மறந்து ரசித்ததும் நடந்தது ! அப்போதெல்லாம் வீட்டிலிருந்த அலுவல் அறையினுள் ஒரு பக்கம் கம்பியூட்டர் ஆன் ஆகியே கிடக்கும் - சதா சர்வ காலமும் ! நம்ம ஸ்டீல் கவிதைகளெல்லாம் பொழிய துவங்கியிரா நாட்களெனும் போது - நான்பாட்டுக்கு தைரியமாய் நமது பிளாக்கில் குடி கிடப்பேன் ; comments வர வர வாசித்தபடிக்கே ! ஒரு கல்யாண வீட்டையே சுத்தம் செய்யத்தேவைப்படக்கூடிய துடைப்பங்களையும் ; ஒரு டஜன் கல்யாண வீடுகளில் ஆட்டையைப் போடக்கூடிய எண்ணிக்கையிலான செருப்புகளையுமே அந்நேரத்துக்கு அடியேன் சேகரித்திருந்தேன் தான் என்பதால் உசிரைக் கையில் பிடித்தபடிக்கே தான் அலசல்களைப் பார்த்துக் கொண்டிருப்பேன் ! ஒரு மாதிரியாய் "சிப்பாயின் சுவடுகள்" பெரும் சேதாரங்களை ஏற்படுத்தாது நீங்கி விட்டதாய் நான் நினைத்துக் கொண்டிருந்த போது தான் - 'காமா சோமா ' என்ற பெயரிருப்பினும் 'தெளிவா - திருத்தமா ' எழுதக்கூடிய அந்த நண்பரின் ஒரு நெடும் பின்னூட்டம் பதிவாகியது ! படித்த நொடியினில் எனது முதல் ரியாக்ஷன் 'சுள்ளென்ற' எரிச்சல் தான் என்பது நினைவுள்ளது ! 'இவருக்கு வேற வேலையே கிடையாது - குறை சொல்றதைத் தாண்டி !' என்றபடிக்கு சிஸ்டத்தை ஆப் செய்து விட்டு போய்ப் படுத்து விட்டேன் ! ஆனால் தூக்கம் பிடிக்கவில்லை ; அந்தப் பதிவினை நான் அரைகுறையாய் மட்டுமே வாசித்திருந்த போதிலும், எனக்குள்ளே ஒரு நெருடலாகவே தொடர்ந்திட, ராத்திரி 3 மணிக்கு எழுந்து சிஸ்டத்தை மறுபடியும் போட்டு விட்டு பின்னூட்டத்தை நிதானமாய்ப் படித்தேன் ! அதன் சாரம் இது தான் :
சிப்பாயின் சுவடுகள் கி.நா.வின் இறுதிப் பக்கத்தினில் - அந்தக் கதையின் பிரதான மனுஷனான அந்த பிரெஞ்சு ஜர்னலிஸ்ட்டை போட்டுத் தள்ள அரசாங்கமே ஆட்களை அனுப்பியிருக்கும் ! ஒரு கார் வந்து நிற்க, கொலையாளி இவரது வீட்டு பெல்லை அடிக்க - அப்புறமாய் மீதத்தை நமது கற்பனைக்கு விட்டுவிட்டு END போட்டிருப்பார் கதாசிரியர் ! ஆனால் - நாமோ அதனை சரியாய் உள்வாங்கியிருக்காது, யாரோ ஒரு ஆள் வந்து பெல் அடிக்கிறான் போல என்ற ரேஞ்சில் கையாண்டிருந்தோம் ! நமது நண்பரோ, இந்தப் பக்கத்தின் ஒரிஜினலை இன்னொரு நண்பரிடமிருந்து வாங்கி, பிரெஞ்சின் அர்த்தத்தை அவருடன் சேர்ந்து அலசி - நாம் செய்திருந்த பிழையைச் சுட்டிக் காட்டியிருந்தார் !
ராத்திரி 3 என்றாலும் எனக்கு தூக்கம் சுத்தமாய் தொலைந்திருந்தது ! பர பரவென எனது மேஜையிலிருந்த அந்த ஆல்பத்தை ; அதன் பிரெஞ்சு to இங்கிலீஷ் ஸ்கிரிப்டை ; அப்புறம் அச்சான நமது புக்கை எடுத்து வைத்துக் கொண்டு - google translator சகிதம் பொறுமையாய் ஆராய்ந்தால் - நண்பரின் குற்றச்சாட்டு 'காமா-சோமா' அல்ல ; சாரம் மிகுந்ததே என்பது புரிந்தது ! கடைசிப் பக்கம் என்பதால் சரி பார்ப்பதில் சிரமம் இருக்கவில்லை ; so பிழை எங்கு நேர்ந்தது என்று தேடுவதும் சுலபமாகவே இருந்தது ! பிரெஞ்சில் இருந்தான ஆங்கில மொழிபெயர்ப்பு துல்லியமாய் இல்லை என்பது முதல் குறையென்று புரிந்தது ! And அதனை தமிழில் மொழிபெயர்க்கும் சமயத்தில் முற்றிலுமாய் கோட்டை விட்டிருப்பதும் புரிந்தது !!
கொஞ்ச நேரத்துக்கு காற்றாடி ஓடும் சத்தம் மட்டுமே எனக்குத் துணை ; நாலு மணிவாக்கிலேயே 'டிங்க டிங்க டிங்க' வென்று மணியடித்துக் கொண்டே பால் வண்டிகள் போகும் சத்தம் கேட்ட போது தான் தெளிந்தேன் ! நான் இதனை எவ்விதம் கோட்டை விட்டேன் ?' என்ற ஆராய்வுக்கு அவசியமே இருக்கவில்லை - simply becos அன்று வரையிலும் ஒவ்வொரு பிற மொழி ஆல்பத்து எடிட்டிங்கின் போதும் மூலத்திலிருந்தான இங்கிலீஷ் ஸ்கிரிப்டை நான் ஒரு நாளும் கையில் வைத்துக் கொண்டிருக்க மெனெக்கெட்டதில்லை ! 'சரியாகத் தான் எழுதியிருப்பார் ; பன்ச் வரிகளில் மாற்றங்கள் ; பிழை திருத்தங்கள் ; காமெடிக்குத் தேவையான மாற்றங்கள் மட்டுமே நம்ம வேலை !' என்பதான நினைப்பில் இத்தனை காலத்தை ஒட்டியிருந்தேன் எனும் போது, சுலப, நேர்கோட்டுக் கதைக்களங்களில் இது போலான புரிதல் சார்ந்த சிக்கல்கள் பெருசாய் எழுந்திருக்கவில்லை ! ஆனால் இதுவோ செம complex கி.நா & நமக்கொரு first எனும் போது, ஒட்டு மொத்தமாய் நமது டீமே சொதப்பியிருந்தது புரிந்தது ! யார் எது செய்திருந்தாலும், செய்யாது போயிருந்தாலும், எடிட்டர் என்ற முறையில் அந்தப் பொறுப்பு முழுக்கவே என்னது ; so அந்த சொதப்பலின் பொறுப்பும் என்னது என்பதை உணர்ந்த போது கீழ்வானம் சிவக்க ஆரம்பித்திருந்தது !
அன்றைக்கு அரம்பித்தவன் தான் ; இதே போலான பிழை இனியொருமுறை நிகழ அனுமதிக்கலாகாது என்ற வெறியில் - இன்றைய நொடி வரையிலும் ஒவ்வொரு பணியின் போதும் ஒரிஜினல் ; english script ; தமிழாக்கம் என அத்தனையையும் தூக்கி வைத்துக் கொண்டு, அவசியப்பட்டால் கூகுள் ட்ரான்ஸ்லேட்டரையும் துணைக்கு அழைத்துக் கொண்டே பணியாற்றி வருகிறேன் ! Not that I have been flawless ; ஆனால் இது மாதிரியான ஜீவநாடிச் சொதப்பல்களுக்கு இடம் தந்திருக்கவில்லை என்ற நம்பிக்கை எனக்குள்ளது ! அன்றைக்கு அந்த நண்பர் தனது பின்னூட்டத்தையுமே 'காமா-சோமா'வென அமைத்திருப்பின், maybe கடுப்பில் தாண்டிப் போயிருந்திருப்பேன் & தொடர்ந்த நாட்களில் அதை விடவும் மட்டமானதொரு குழியில் விழவும் செய்திருப்பேன் ! அன்றைக்கு அவரது பின்னூட்டத்தில் சம அளவிலான சாரமும், காரமும் இருந்ததால் புரிதலில் சிரமம் இருக்கவில்லை & அது இன்று வரையிலும் எனக்கு உதவியுள்ளது !
And அந்தப் பழக்கத்தின் பலனை போன வருஷத்து 2132 மீட்டர் (XIII ஆல்பம்) எனக்கு நிரம்பவே சுட்டிக்காட்டியது ! நமது வழக்கமான மொழிபெயர்ப்பாள மேடம் எழுதியதை ; கருணையானந்தம் அவர்கள் தமிழாக்கம் செய்திருந்தார் ! ஆனால் எனக்கோ நெருட, Cinebook ஆங்கிலப் பதிப்பின் pdf கோரி ஒரு மின்னஞ்சலைத் தட்டி விட்டேன் & லொஜக்கென வந்து சேர்ந்தது ! ஒரு பிரெஞ்சு பிரஜை எழுதுவதற்கும், பிரெஞ்சைக் கற்றுக் கொண்டவர் எழுதுவதற்கும் மத்தியிலான வேறுபாட்டை அன்றைக்குத் தான் பிடரியில் அறைந்தது போல உணர்ந்தேன் ! நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளரின் ஸ்கிரிப்ட் 90% சரியே ; ஆனால் இ.ப. போலொரு complex கதைக்கு நூற்றுக்கு நூறு இன்றிப் போனால் நொண்டியே அடிக்கணும் என்பது புரிந்திட, நான் Cinebook ஒரிஜினலைக் கையில் கொண்டு முழுசையும் மாற்றி எழுத நேரிட்டது ! So இங்கும் நான் உணர்ந்த பாடங்கள் இரண்டு !! ஒரு துளி ஆக்கபூர்வம் ஒரு ஆயுட்கால பலன் தரவல்லது ; அதே சமயம் காதிலே புகை உமிழ்ந்தபடியே கொட்டும் உஷ்ணங்கள் அடுத்த பொழுதில் காற்றோடு போகவல்லது என்பது பாடம் # 1 ! So உங்களின் சுவடுகள் எவ்விதம் தங்கி நிற்பது நலமென்ற தீர்மானத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன் ! And பாடம் # 2 : இ.ப. புது ஆல்பங்களை பொறுத்தவரையிலும் இனிமேல் Cinebook ஆங்கிலப்பதிப்பு வெளியாகிடும் வரையிலும் நாம் தமிழில் முந்திடும் எண்ணம் நஹி !!
விமர்சனத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல ; பிழைகளுக்குமே தான் ! ஆனால் என்னைப் பார்த்த நொடியினில் ; என்னோடு உடன்படா முதல் தருணத்தினில் - 'போட்றா தூக்கிலே !' என்று பாய்ந்திடும் முனைப்புகள் தான் சிக்கலே ! ஒரு கொலைக்குற்றவாளிக்குக் கூட சந்தேகத்தின் பலனைத் தரும் தேசத்தில் - ஒரு மாறுபட்ட எண்ணத்துக்கு இத்தனை பகடிகளும், ரௌத்திரங்களும் எழும் போது, அவற்றின் பின்னணியினில் உள்ளது உங்களின் காமிக்ஸ் நேசம் மட்டுமே தானா ? என்பது கேள்வியாகிடுகிறது ! உங்களின் அவாக்கள் மெய்யாகவே நமது நலன் சார்ந்தவைகளாக இருப்பினும், இந்த மூத்திரச் சந்துக்கு இட்டுச் செல்லும் ஆத்திரப்பாய்ச்சல்கள், அவற்றிற்கு வேறு மாதிரியான சாயம் பூசி விடுகின்றன & end of the day - செவிடன் காதில ஊதின சங்கு மட்டுமே பலன் !
இதோ இன்றைக்கும் நண்பர் இங்கு அவ்வப்போது வந்து போகிறார் தான் ; தெரிந்த மார்க்கங்களிலெல்லாம் வாரிடவும் செய்கிறார் தான் ! ஆனால் அவரை யாரும் கடிவதுமில்லை ; அவருக்கும் இங்கு வந்து செல்வதில் நெருடல்களுமில்லையே ? Constructive criticism ; ஆக்கபூர்வமான விமர்சனங்கள் அனைவருக்கும் நலம் பயக்கும் என்பதே இந்தக் கதையின் கருத்து !
And இதோ ஓரிரு தினங்களுக்கு முன்னே கூட நண்பரொருவர் இம்மாதத்து புக் சார்ந்த ஏதோவொரு விமர்சனத்தினில் "சித்தே" ' சித்தே " தொடர்கிறது என்று எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது ! எழுத்தென்பது அவரவரது formative years களில் அவரவரது வாசிப்புகள் தாக்கங்களோடு பயணிப்பது என்பது எனது கருத்து ! So maybe நான் அந்நாட்களில் வாசித்த சமாச்சாரங்களுக்குள் இந்த "சித்தே" வார்த்தைப் பிரயோகம் இருந்திருக்கலாம் & அதுவே இன்றைக்கு எனது பேனாவின் வெளிப்பாட்டிலும் பிரதிபலித்திருக்கலாம் ! யோசித்துப் பார்க்கும் போது, இந்த வார்த்தை நமது சிறு வட்டத்துக்கு நெருடும் பட்சத்தில், அதனிடத்தில் வேறொரு பதத்தை நுழைப்பதொன்றும் கம்பு சுத்தும் சிரமமல்ல என்பது புரிந்தது !! ஏற்கனவே கருணையானந்தம் அவர்கள் பயன்படுத்தும் "சாக்கடைப் புழுவே " ; "அப்பனே" ; "பிரமணமாய்" போன்ற வார்த்தைகளை கண்ணில் காட்டுவதில்லை இப்போதெல்லாம் ! அந்த லிஸ்டுக்கு "சித்தே" வையும் pack up செய்தால் போச்சு !So சித்தே பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பரே ; ஏற்கனவே ரெடியாகி விட்டுள்ள புக்சில் அந்த வார்த்தை தென்பட்டால் சித்தே பல்லைக் கடித்துக் கொள்ளுங்கள் ; இனி வரவுள்ள பணிகளில் அந்த வார்த்தைக்கு பை-பாஸ் போட்டுத் தாண்டிச் செல்ல சித்தே அல்ல ; நிரம்பவே முயற்சிப்பேன் !!
இதையும் வரி விடாமல் படித்து விட்டு, இன்றிரவே க்ரூப்களில் "கெக்கெக்கே.... முழியாங்கண்ணனை கடுப்பேத்த நாளைக்கு உன் turn மாப்பு ; ரெடியாகிக்கோ !!" என்ற பகடிகள் நிகழும் என்பதை அறியாதவனல்ல நான் ! But end of the day - இங்கு நிலவும் சந்தோஷத்தினையும், நட்பினையும் எதுவும் அசைக்காதென்பதை ஆண்டவன் சொல்றான் ; ஆந்தைவிழியன் 'ஆமாம்' போடறான் !! இப்போ நடையைக் கட்டுறான் !! Bye all ...see you around !!
And oh yes - சந்தாக்களை தெறிக்க விடத்துவங்கி விட்டீர்கள் முதலிரு தினங்களிலேயே !!! And surprise ...surprise ....95 சதவிகிதம் :ஒரே நாடு-ஒரே காமிக்ஸ்" சந்தாப் பிரிவுக்கே !! Thanks a ton folks !! விசில் போடுறேன் உங்கள் நேசங்களுக்கு !! Been a fantastic start !!!!
மீ!!
ReplyDeleteFT news on Benos: sharing our sentiments too :)
Delete“You cannot beat the nostalgia of these comics if you want to buy back the innocence of youth,” says Phillips. Holden agrees; curating the collection for Somerset House has been a labour of love. “The Beano is tied into that time when you are going out into the world on your own,” he says. “It’s a bible of that time.”
2nd
ReplyDeleteHi
ReplyDeleteYes
ReplyDelete5வது
ReplyDeleteHi..
ReplyDeleteபத்துக்குள்ள..
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteநானும் வந்துட்டேன்
ReplyDeleteஎன் பார்வையில் TOP 5 இதழ்கள் !
ReplyDeleteஇதுவே எனது சாய்ஸ் உங்கள் பார்வையில் ஆச்சரியப்படுத்திய அசத்திய சிந்திக்க வைத்த கை தட்ட வைத்த விசிலடிக்க வைத்த இதழ்களை உங்கள் வாயால் கேட்க ஆசை
Sir,
ReplyDeleteசீனியரின் தலையங்கம்
நமது கருணையானந்தம் அவர்களின் நினைவலைகள்
அப்புறம் 2 சர்ப்ரைஸ் flashbacks !
நமது மறைந்த ஓவியருக்கொரு tribute !
நமது பழம் ஓவியர் சிகாமணி பற்றி !
நமது தற்போதைய டீமின் போட்டோக்கள் !
வாசக நினைவலைகள்
என் பார்வையில் TOP 5 இதழ்கள் !
50 ஆண்டுகளின் புக்ஸ் பட்டியல் 1 to 457
All the above are important and needed .. and just about enough !!
எனது கருத்தும் இதுவே.
Deleteஎதும் விட்டுப் போகாட்டி சூப்பர் தான் சார் !
Deleteஇது அனைத்துமே வேண்டும்
Deleteநில்..கவனி..சிரி will be top class.
ReplyDeleteI had purchased in the first web fair sir - hilarious fare ! Lucky fans will thoroughly enjoy this ! (English Title: O K Carrol)
O.K.Corral sir...
DeleteYep !
Deleteபேக் டூ பாஸ்ட்... தங்க தலைவன் முத்து ஐம்பதில் இல்லைன்னு நினைக்கும் போது..
ReplyDeleteரம்மி: ஒரு கதை சொல்லுட்டுங்களா??
வைத்தி: என்ன கதை தங்க கல்லறை தான் முத்துவிலே டர்னிங் பாயின்ட்டு, ஒரு பது உலகத்துக்கு இட்டு போச்சுன்ற கதை தானே..
ரம்மி: இன்னிக்கு வரைக்கும் ஒரு மைல் ஸ்டோன்னா அது மின்னும் மரணம் தானுங்களே..
வைத்தி: அதுக்கு மேலே ஒரு உருப்படயா ஒன்றும் இல்லைன்னு வாத்தியார் சொல்றாரே..
ரம்மி: ஆகாத காயத்துக்கு கட்டு போட தேவையில்லையின்னு உங்களுக்கு தெரியாததா??.. பறவையை பறக்க விடு .. வாழ்வு சாவான்னு அது முடிவு பண்ணட்டன்னம்ன்னு அது முடிவு பண்ணட்டும்ன்னு தலைவரே சொல்லயருக்காறே..
பென்குவினை பறக்க விட என்ன பண்ணனும்னு அதே தலைவர் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுப்புடுங்களேன் ? ஏன்னா - அதுவுமே பறவை தானுங்களே ?
Deleteமத்த பறவைகளை விடஙும் அருமையாக நீந்துமே சார்..
Deleteஅதனால தான் தொட்டிக்குள்ளேயே விட்டு வைச்சிருக்கோம் - அதுபாட்டுக்கு நீந்தட்டுமே என்று !
Deleteஎடிட்டர் சார் & ரம்மி
Delete🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சு முடியலை!! 🤣🤣🤣🤣
எடிட்டர் சார் & ரம்மி
Delete🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சிரிச்சு முடியலை!!
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஹஹஹஹ....இந்நேரத்ல சிரிப்ப அடக்க முடியல..
Deleteஅதுக்கு பாட்டு பாட என்னால் முடியல சார்
Deleteரம்மி @ செம செம.
Deleteவிஜயன் சார், செம கலாய்
ஸ்லீப்பர் அன்ட் ஆசிரியர் சார்...
Deleteஹாஹாஹா....:-))))
Sir,
ReplyDeleteMayavi replica + covers - pkease ask for vote sir !
Have some loose ends to tie up on that sir ; in the next few days...
DeleteYes Edi Sir..
Deleteஐயோ, இந்த பஞ்சாயத்து இன்னுமா முடியலை..? ஒரு பதிவு பூராவும் அலசி காயப்போட்டாச்சே.. திரும்பவுமா? முடியல, நான் இப்பவே சொல்லிடுறேன். வேண்டாம்.
Deleteஅருமை சார்....காலமெல்லாம் உங்களோடே....சார் கருணையானந்தமுமா சூப்பர்....கேள்விக்கணைகளோட வரேன்
ReplyDeleteஎங்களின் 95% வாசகர்களின் தேர்வு எப்பவுமே ஒரே நாடு ஒரே காமிக்ஸ் தான் ஆசிரியரே இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை... வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ தங்களின் படைப்பு அப்படி ❤❤❤❤
ReplyDeleteசூப்பர் நண்பரே
Delete50 ஆண்டுகள் வெளியான மாதத்தயும் எந்த மாதம் வந்ததுன்னு போடுங்க...நினைத்தால் இனிக்கும்...அப்புறம் அந்த காலணா எட்டனா கதை அட்டைகளையும் விட்டுராதீங்க...முத்துவின் ரெண்டாம் ரவுண்டுல வந்த எங்களுக்கு அதெல்லாம் பாக்க வாய்ப்பில்லை
ReplyDelete600 மாசங்களிலே வெளியாகி இருக்கதே 457 தானே தெய்வமே ? இதிலே மாசம் , தேதி , நட்சத்திரங்களுக்கு எங்கே போறது ?
Deleteபரவால்ல சார்
Deleteஎனது பார்வையில் டாப் ஃபைவ் முத்து :
ReplyDelete1.மின்னும் மரணம்: கௌபாய் தொடரில் இப்படிப்பட்ட ஒரு வீரியமான கதை தொடரை இத்தனை வருடத்தில் படித்ததே இல்லை. இனியும் இது போல ஒரு தொடர் படிக்க முடியுமா கேள்விக்குறிதான்???
2. தங்கக் கல்லறை : மீண்டும் ஒரு கௌபாய் தொடர். விறுவிறுப்புக்கு சற்றும் சளைக்காத தொடர்.
3. கழுகு மலைக்கோட்டை : ஆண் பெண் நட்பில் இப்படி ஒரு வினோத வீரியம் இருக்கும் என்று நிரூபித்த கதை.
4. லார்கோ தொடர் : இதைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத கதை
5. இரும்புக்கை மாயாவியின் விண்வெளிக் கொள்ளையர் : மாயாவின் கதை தொடரிலேயே அவரது அபரிமிதமான சக்திக்கு சரியான தீனி போட்ட கதையாக நான் நினைப்பது.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அருமையான தேர்வுகள் நண்பரே!
Delete🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹
Deleteஅருமையான தேர்வுகள்....💐💐💐💐
Delete///3. கழுகு மலைக்கோட்டை : ஆண் பெண் நட்பில் இப்படி ஒரு வினோத வீரியம் இருக்கும் என்று நிரூபித்த கதை.///
👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
ப்ளஸ் ஒன்...
Deleteகண்டிப்பாக மாயாவியும், அட்டைப்படங்களும் வேணுங்க..
ReplyDeleteநீண்ட பதிவு. நன்றி சார். மீண்டும் ஒருமுறை படித்து விட்டு பின்னூட்டம் இடுகிறேன்.
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஎடிட்டர் சார்..
ReplyDeleteமேலே உள்ள ஆல்ஃபா அட்டைப்பட ஓவியம் - அபாரம்!
குறிப்பாக அந்த நவநாகரீக யுவதியின் விழிகளில் தெரியும் மெல்லிய மருட்சியும், முகத்தில் ஒட்டுமொத்தமாகத் தெரியும் ஒருவிதக் கேள்விக்குறியும், முகத்தில் விழும் ரம்யமான லைட்டிங்கும், வண்ணக் கலவைகளும்.. அப்பப்பா!!
நண்பர் 'காமா சோமா' பற்றியும், அவர் உங்களிடம் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் நீங்கள் எழுதியிருப்பது அருமை!! சற்றே முகத்திலரைந்தாற் போல அவரது பின்னூட்டச் செய்திகள் இருந்திடுமென்றாலும், அவருடைய அந்த Constructive criticism எல்லாமே நிறைய நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்ததென்பதை மறக்கவோ, மறுக்கவோ இயலாது தான்! அபார எழுத்துத் திறமையும், நிறைய்ய்ய ஹாஸ்யமும், நிரம்பி வழியும் மேல்மாடியும் கொண்ட நல்லதொரு நண்பர்!
மனிதரின் சிறுவயதில் சிலகாலம் ஈரோட்டிலும் இருந்தவரென்பதால் மேற்கூறிய நற்குணங்கள் அவரிடம் இருப்பதில் வியப்பொன்றுமில்லை தான், இல்லையா? ஹிஹி!
அதனாலே தான் வியப்பே!!! ஒரு வேளை சில காலம் என்பதால் தான் நற்குணங்களோ 😉
DeletePoint MP!
Delete///அதனாலே தான் வியப்பே!!! ஒரு வேளை சில காலம் என்பதால் தான் நற்குணங்களோ //
Delete:-)))))
பொறாமை!! இளவரசர்னா இளமை, அறிவு, நற்குணங்கள் - இதெல்லாம் குடிகொண்டிருப்பது சகஜம்!! இதற்கெல்லாம் பொறாமைப்பட்டு ஆகப்போவது என்ன?!!
Deleteஉண்மை...
Deleteஈரோட்டு மேட்டரை தவிர...:-)
ஒரே நாடு.. ஒரே காமிக்ஸ் ..ன்னாலே அது முத்து/லயன் காமிக்ஸ் மட்டும்தான் Edi Sir
ReplyDeleteகாசோவின் கருத்து வெளிப்படுத்தும் திறனும், ஹாஸ்ய உணர்வும் டிஎன்ஏ-வின் இரு இழைகளைப் போல பின்னிப் பிணைந்தவை..
ReplyDelete( இளவரசருக்கு பிடித்தவண்ணம் சொல்லவேண்டுமாயின் நீண்ட நாள் கழித்து சந்தித்துக் கொண்ட காதலர்களைப் போல் தழுவிக் கொண்டு இருப்பவை..)
நாற்பதுகளின் இயல்பான சலிப்புணர்வு நண்பரை ஆட்கொண்டிருப்பது தளத்திற்கு பெரிய இழப்பாகும்..விரைவில் அதனின்று மீண்டு வர விருப்பம் ..
டிஎன்ஏ'ன்னு நீங்க ஏதோ சொன்னப்ப கொஞ்சம் மசமசன்னு இருந்துச்சு.. ஆனா அதுக்கப்புறம் ஒரு உதாரணத்தை எடுத்து வச்சீங்க பாருங்க.. ச்சும்மா ஜிவ்வுனு ஆகிடுச்சு போங்க!
Delete/* நாற்பதுகளின் இயல்பான சலிப்புணர்வு நண்பரை ஆட்கொண்டிருப்பது தளத்திற்கு பெரிய இழப்பாகும்..விரைவில் அதனின்று மீண்டு வர விருப்பம் ..*/
DeleteYep - will be alright by 44 usually !
அப்ப 60 தாண்டிட்டா ஈவி மாதிரி தளத்திலயே தான் இருப்பாருன்னு சொல்லுங்க.
Delete:-))
Deleteகோல புக்கின் ஓரஞ்சாரங்களில் கூட -"கண்மணி, அன்போடு - சீனியர் - நான் - எழுதும் கவிதையே !!" என்று எழுதிப் பார்த்து//
ReplyDeleteஉங்க குசும்புக்கு அளவே இல்லியா 🤣🤣🤣
🤣🤣🤣 இதைப் படிச்ச சீனியர் எடிட்டரின் ரியாக்ஷன் எப்படியிருந்திருக்கும்னு பார்க்க ஆசை! 🤣🤣🤣
Deleteவர வர நம்ப ஆசிரியர் எல்லாவற்றையும் நல்லா கலாய்கிறார் ;-)
Deleteபுதுச் சந்தாக்களை 2 தவணைகளில் செலுத்திட ஏற்பாடுகளும் இப்போது open ! ஆன்லைனில் சந்தா கட்டிடும் நண்பர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் !!//
ReplyDeleteசார். பிராக்டிகலா உங்களுக்கு எவ்வளவு சிரமம்னு தெர்ல. சில நண்பர்கள் மூன்று தவணையில் செலுத்த வாய்ப்புண்டா என்று கேட்டிருந்தார்கள். வாய்ப்பு இருக்குமுங்களா சார்.
He already said yes to someone - in the 2022 books post !
Deleteயெஸ் ராக் ஜி!! நண்பர் சரவணனுக்கு! லயன் ஆபீஸுக்கு ஃபோன் போட்டு 3 தவணையாகச் செலுத்தும் விதத்தைப் பற்றி கேட்டுக்கொள்ளச் சொன்னார்!
Deleteஆனால் இது அனைவருக்கும் பொருந்துமா எனத் தெரியவில்லை!
பண்ணிக்கலாம் தான் சார் ; ஆனால் இரண்டாவது தவணைக்கு நினைவூட்டும் போதே நண்பர்களில் பலரும் காச்-மூச்சென்று கத்த ஆரம்பித்து விடுவதாக அலுவலகப் பெண்கள் கண்கள் வேர்க்க சொல்கின்றனர் ! அதனால் தான் மூணு , நாலு என்ற சலுகைகள் பற்றி வாய் திறப்பதில்லை ! அறிவித்து விட்டு நான் பாட்டுக்கு அடுத்த வேலைக்குள் புகுந்திடுவேன் ; ஆனால் பூசைகள் வாங்குவது பாவப்பட்ட பெண்களே !
Deleteசார் - சீனியர் எடிட்டர் அவர்களுக்கு கேள்விகளை அனுப்பியாச்சு. கோல புக்கு practiceக்கு இந்தக் கேள்விகளையே குடுத்துடுங்க. அப்புறம் மறக்காமல் ஒரு டஜன் kerchief அவருக்கு கொடுத்துவிடவும். 50 ஆண்டு நினைவுகள் என்பது சாதாரணமல்லவே !
ReplyDelete//நிறைய பேர் டிரௌசருக்குள் பூரான் புகுந்தது போல தெறித்து ஓடியதும்// மம்மீமீமீமீமீமீமீ... இந்த விஷயத்தை நெனச்சு கூட பார்க்க முடியல சார்😂😂😂
ReplyDeleteகா சோ வுடன் நடந்த அந்த கால பக்குவமான அனல் பறக்கும் வாக்குவாதங்கள் தெறி ரகம்... மிகவும் ருசிகரமான நாட்கள் அவை... கண்ணியக்குறைவாக அவர் என்றும் எங்கும் பதிவிட்டதே இல்லை... 👍👌🤝🙏
ReplyDeleteயெஸ். அவருடைய விமர்சனங்கள் தனி மனிதர்களை சேதாரம் பண்ணாது.
Delete///அவருடைய விமர்சனங்கள் தனி மனிதர்களை சேதாரம் பண்ணாது.///
Deleteஅப்படின்னா, கூட்டமா இருக்கறவங்வளை கொன்னு குவிச்சுடுமா?!!
ROFL :-)
Deleteசிங்கம் சிங்கிளா தானே வரும்?
DeleteFriends
ReplyDeleteசிப்பாயின் சுவடுகளுக்குத்தானே தலீவர் 5 பக்க ஒப்பாரி கடிதம் அனுப்பியிருந்ததாய் நினைவு? Refresh ப்ளீச்?
ஆமாம் ராக் ஜி!
Deleteஹீஹீ....!
Deleteஅதற்காக மட்டும் அல்ல ராக்ஜீ..அந்த சமயம் தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்களுக்கு கிராபிக் நாவலாகவே வந்த விளம்பரங்களினாலும் என்றும் சொல்லலாம்...:-)
Delete66th
ReplyDelete68th
ReplyDeleteவந்துட்டேன் !
ReplyDelete//மாசாமாசம் முழுசையும் படிச்சுட்டாக்கா, யாரையாச்சும் நடுமூக்கிலேயே குத்த ரெடியாகிட்டீங்கன்னு அர்த்தம் !!
ReplyDeleteபாதி மட்டும் படிச்சாக்கா குப்புறப்படுத்துக் குறட்டை விட ரெடியாகிட்டீங்கன்னு அர்த்தம் !!
டப்பாவையே ஓடைக்காம மொத்தத்தையும் பரணிலே போட்டு வைச்சாக்கா - ஐஞ்சே வருஷத்திலே சென்னையிலே ஒரு வீடு வாங்க ரெடியாகிடுவீங்கன்னு அர்த்தம் !//
சார்! உங்களின் ஹாஸ்யம் சூப்பர். இந்த எழுத்து நடைக்கு நான் ரசிகன் .
/
சீனியரின் தலையங்கம்
நமது கருணையானந்தம் அவர்களின் நினைவலைகள்
அப்புறம் 2 சர்ப்ரைஸ் flashbacks !
நமது மறைந்த ஓவியருக்கொரு tribute !
நமது பழம் ஓவியர் சிகாமணி பற்றி !
நமது தற்போதைய டீமின் போட்டோக்கள் !
வாசக நினைவலைகள்
என் பார்வையில் TOP 5 இதழ்கள் !
50 ஆண்டுகளின் புக்ஸ் பட்டியல் 1 to 457 //
பட்டியலில் எனக்கு திருப்தி சார்! full மீல்ஸ் சாப்பிட்டது போலுள்ளது .
வாழைப்பூ வடையை மறந்துட்டீங்களே
ReplyDelete//முன்னெல்லாம் இதயம் பேசுகிறது மணியன்//அதேமாதிரி தெலுங்குப்பட ஹீரோ லுக்குள நீங்க டீன் ஏஜ்ல காமிக்ஸ்தேடி வெளிநாடுகள்ள ரவுசு பண்ணிண கதைகளை சி. சி. வ. ங்கறபெயரில் அழகானபதிவுகளாக் குடுப்பீங்க. சமீபகாலங்களில் அந்த வழக்கமெ காணாமப் போயிருச்சுங்க சார். கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஆல்ஃபா அட்டை ஏதோ ஒரு விதத்ல பதிமூன நினைவு படுத்துதே
ReplyDelete
ReplyDeleteஇதோ கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான கவுன்டவுன் எனது ரசனையின் அடிப்படையில் சற்று தாமதமாக,
01. புத்தம் புது பூமி வேண்டும் + பனியில் ஒரு புது நேசம் - 9.25/10
02. நரகத்திற்கு நடுவழியே - 9.25/10
வாய் பிளக்கும் சித்திரமோ, கண்ணை கவரும் வண்ணமோ, ஆளை மயக்கும் தேஜஸோ, வசீகர முகமோ, நேர்மையோ, நாணயமோ, கண்ணியமான வார்த்தைகளோ எதுவும் இல்லை. ஆனாலும் அசரவைக்கிறார் இந்த அண்டப்புழுக சுயநலக்கார முரட்டு மனிதன் டெட்வுட் டிக். இந்த தொடரை பிசகாமல் அதே நடையில் அளித்த ஆசிரியரின் தைரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கோட்டை ஜெனரிலின் கதாப்பாத்திரம் மற்றும் யுத்த அவலங்கள் ப்ளூகோட்ஸ் பட்டாளத்தை நினைவூட்டுகிறது. அடிமையாக இருந்தும் முதலாளியின் மேல் நீக்ரோ பட்லர் வைத்திருக்கும் விஸ்வாசம் நெகிழ்வு. மொத்தமாக வந்திருந்தால் இதன் தாக்கம் பலமடங்கு கூடியிருக்கும். Warm welcome to deadwood tick.
03. சித்திரமும் கொலைப்பழக்கம் - 9.25/10
இக்கதையைப்பற்றி ஏற்கனவே விரிவான விமர்சனம் இத்தளத்திலேயே பகிர்ந்து விட்டேன் என்பதால் no more repeat. ஒற்றை வரியில் மட்டுமே விமர்சனம். "நிதானமாக கையாண்டால் நிச்சயமாய் நிற்கும் மனதில்."
04. சூ மந்திரகாளி - 9.25/10
05. சிகப்பாய் ஒரு சிலுவை - 9/10
06. லயன் ஜாலி ஆண்டு மலர் - 9/10
07. இனியெல்லாம் சுகமே - 9/10
08. கழுகு வேட்டை - 9/10
09. பகலறியா பூமி - 9/10
மிதமான கதைகள், ஆனால் கண்ணை கவரும் சித்திரங்கள் மூலம் மட்டுமே கவர்ந்து வந்த ட்ரெண்ட் இந்த இருட்டு பூமியின் உபயத்தில் ரொம்பவே நெருக்கமாகி விட்டார். கனடா பனிப்பிரேதசத்தின் இருளையும், தனிமையும் படிக்கும் போதே நமக்கும் உணரவைத்து விட்டார் ஆசிரியர். மொழிபெயர்ப்பில் தான் எத்தனை பரிமாணங்கள். இருளையும் அழகாக காட்டியிருக்கிறார் ஓவியர். கொஞ்சம் கவனித்து பார்த்தால் ட்ரெண்டின் நாய் ஒவ்வொரு தருணத்திலும் காட்டியிருக்கும் பாவனைகள் அசரவைக்கிறது. ட்ரெண்ட் குழந்தையிடம் காட்டும் பரிவு ரசிக்கவும், நெகிழவும் வைக்கிறது. மிக சிறந்த வாசிப்பு அனுவத்தை நல்கியிருக்கிறது இக்கதை. கொசுரு தகவல் - பின் அட்டையில் உட்பக்கத்தில் இருக்கும் சித்திரமும் கொலைப்பழக்கம் ட்ரெய்லரை பாருங்களேன். Breathtaking.
10. அசுர பூமியில் தோர்கல் - 9/10
11. ஒரு பிரளயப்பயணம் - 9/10
12. காற்றில் கரைந்த கலைஞன் - 9/10
13. பாவை மிரண்டால் பார் கொள்ளாது - 8.5/10
மேக் & ஜாக் கதைகளை மிகவும் ரசிப்பவன் நான். முந்தைய சாகஸங்கள் அளவு இக்கதை இல்லையென்றாலும் சிரிப்புக்கோ, வேகத்துக்கோ பஞ்சமில்லை. கதவை தட்டுவது யாரென்பதை பார்ப்பதில் தொடங்கிய சிரிப்பு மேக் பிரிந்து போகும் வரை தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் ஏமாற்றும் முறையாகட்டும் அதற்கு அல்கபோன் போடும் மாற்று திட்டமாகட்டும் கார்டூன்களுக்கே உண்டான தனி அழகு.
14. நெஞ்சே எழு - 8.5/10
15. ரௌத்திரம் கைவிடேல் - 8.5/10
16. ஒரு தோழனின் கதை - 8.5/10
17. நித்தமும் உந்தன் நிழலில் - 8/10
18. ஒரு தலைவனின் கதை - 8/10
19. நீரின்றி அமையாது உலகு - 8/10
20. B & B Special - 7/10
i). வெனிஸில் ஒரு வேங்கை - 8/10
ii) ஹாட் ஷாட் - 6/10
கொரில்லா சாம்ராஜ்யம் - மூச்.மார்க். நஹி.
அடுத்த மாதம் எந்த கதைகள் எந்த இடத்தை பிடிக்கிறது என பார்ப்போம். நன்றி.
சூப்பர் திருநாவுக்கரசு.
Deleteமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஆசிரியரிடமும் மற்றும் நண்பர்களிடமும்... சென்ற பதிவில் என்னுடைய கேள்வியில் ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டது... நண்பர் சங்கரின் பதில் மீண்டும் என்னை யோசிக்க வைத்தது எந்த இடத்தில் தவறு செய்தோம் என்று... அது இதுதான் : 2022 கேட்லாக் அட்டையில் தலையை ஓரமாக வைத்து புது ஹீரோவுக்கு வாய்ப்பு அளித்தது சிறப்பாக இல்லை. இதில் அட்டை என்ற வார்த்தை வராதது. மன்னிக்கவும் மன்னிக்கவும் மன்னிக்கவும்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅட்டவணையை பார்த்தவுடன் நான் எழுதிய வரிகள். அதை பார்க்காதவர்களுக்கு.. மீண்டும் ஒரு முறை ::::
ReplyDeleteதமிழ் காமிக்ஸை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மானசீக ஆசிரியர் அவர்களுக்கு என் முதற்கண் நன்றிகள்.
அட்டவணையை பார்த்தவுடன் மனதில் தோன்றியதை எழுத்தாக வடிக்கிறேன். ( இதை படிக்கும்போது முட்டு சந்தில் வைத்து கும்மாங்குத்து விடுவது போன்றோ அல்லது ஜால்ரா பாயாக தெரிந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல 😂😂😂😂).
நன்றி : இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என்று டிவியில் காலையில் சொல்வார்கள். கேட்கும் போது மகிழ்ச்சியாக தான் இருக்கும். ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வருடமும் சில நாட்கள்தான் முக்கியமாகவும் மகிழ்ச்சியையும் தர வல்லது. பிறந்த நாள் திருமண நாள் குழந்தை பிறந்த நாள்... அதுபோல் எனக்கு அட்டவணை நாளும் ஒன்று. அதுவும் ஆசிரியர் தரும் விளக்கத்தைப் படிக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை ஆதலால் இந்த நாள் மிக சிறப்பான நாள் ஆகிய தங்களுக்கு நன்றி நம்பர் 1.
நன்றி: எவ்வளவுதான் விற்பனையில் ஜெயித்தாலும் சில பாயாச பார்ட்டி களுக்காக( தல ) இல் கை வைத்து விடுவார்களோ என்று பயந்து கொண்டு இருந்தேன். ஆனால் டெக்ஸின் இடத்தை அழகாக நிரப்பிய தோடு இல்லாமல் ஒவ்வொரு மாதமும் எங்களை சந்திக்க வைப்பதாக சொல்லி மேலும் மகிழ்ச்சி படுத்தியதற்கு நன்றி நம்பர் 2. ( அவசரக்குடுக்கை தனமாக 9 டெக்ஸ் புக் வருகிறது மீதி மூன்று மாதங்களுக்கு 1. பாபுவின் குழந்தைக்காக தயார் செய்வதாக இருந்த ஒரு டெக்ஸ்.2. மறுபதிப்பாக ஒரு கலர் டெக்ஸ்.3. ஈரோட்டில் ஒரு டெக்ஸ். சரிதானா ஆசிரியரே.,
நன்றி: காமிக்ஸை வேற லெவலுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் என் சில நண்பர்களின் இருண்ட களத்தைவிட்டு கமர்ஷியல் பாணியை கையிலெடுத்த மைக்கு நன்றி நம்பர் 3. ( தொடரும்)
கடந்து செல்லுங்கள் நணபரே அனைத்தையும் மறந்து...
Deleteநேரில் பேசும் பொழுது வராத வார்த்தை பிரயோகங்கள் வரிகளில் எழுதும் பொழுது அதிகமாகவே தோன்றும் அதில் நாம் என்றுமே கவனமாக இருக்க வேண்டும் அது இன்னமும் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டாலே போதும்...
அதுவும் நமக்கு காமிக்ஸ் என்ற உணவை மாதந்தோறும் ஊட்டி வரும் ஆசரியருக்கு நாம் பதில் மரியாதை செய்யவிட்டாலும் பரவாயில்லை ..மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி வெறுப்பை விதைத்தால் பட்டினி கிடக்க போவது நாம் தான்..
( அதற்காக ஏங்கியும் பலர் உள்ளார்கள் தான் முககுழுவில் நீங்கள் அவர்களில் ஒருவர் அல்ல என்பதை அறிவோம் நண்பரே..தொடருங்கள் காமிக்ஸ் அன்னமிடுவருக்கு ஆதரவாக )
அதற்காக குறைகளை கண்டால் சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் அல்ல..(நயமாக சொன்னால் காசோ செயலர் அபிராமி போல )அந்த குறைகளும் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது என்பதையும் தளத்தில் தொடர்ந்து தொடர்வோர் அறிவார்கள்..
நட்புடன் தொடர்வோம்...
காமிக்ஸ் எனக்கு மூச்சு நண்பரே..... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Delete///காமிக்ஸ் எனக்கு மூச்சு நண்பரே..... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽///
Deleteஉங்கள் வருத்தம் புரிகிறது நண்பரே! உங்களது காமிக்ஸ் காதலுமே தான்!! இந்த காமிக்ஸ் குடும்பத்தில் இதெல்லாம் ஜகஜம்!
உணர்ந்து மன்னிப்புக் கேட்கும் மனம் இருக்கிறதே.. அதான் கடவுள்!
இயல்புநிலைக்குத் திரும்புங்கள்.. ரசித்துக்களித்திட நமக்கு நிறைய டெக்ஸ் கதைகள் காத்திருக்கிறது!
வாழ்க் அதிகாரி! வளர்க அவரது கீர்த்தி!!
@ Saran Selvi : சாரி சார் , நேற்றைய பொழுதின் பின்னூட்ட தொடர் யுத்தத்தினில் யதார்த்த நிலவரத்தைப் புரியச் செய்யும் முனைப்பு மட்டுமே என்னில் மேலோங்கியிருந்ததே தவிர, உங்களை மட்டம் தட்டும் வேகமல்ல ! மனதில் எதையும் வைத்துக் கொள்ளாதீர்கள் ப்ளீஸ் !
Deleteஈ.வி., மணி வண்ணன் மாதிரி தெளிய வெச்சு அடிக்கிறீங்களே.. கடைசீல ..
Deleteஹிஹி! அடிக்கிற கைதானே அணைக்கும் பத்து சார்?!! ;)
Deleteஅருமை
Deleteஎன்ன சார் மன்னிப்பெல்லாம் கேட்டு நெளிய வைக்கிறீங்க. வேண்டாமே ஆசிரியரே. உங்களிடம் பிடித்ததே இந்த போர்க்குணம் தான் ஆசிரியரே. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🌹
Deleteநண்பர் சங்கர் அவர்களே தங்களது டெலிபோன் நம்பர் கிடைக்குமா??
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபொம்ம படிக்கிறதல இவ்வளவு பாலிடிக்ஸா..??
Deleteஇவ்வளவு இருக்கா ?
Deleteஅடேயப்பா....உண்மை எப்பவும் வெல்லும்...
Deleteமஞ்ச சட்டைய போட்டவங்க எல்லாருமே இப்படித்தான் போலிருக்கு! பாரபட்சமே இல்லாம ணங், கும், சத்-களை அள்ளி வழங்கியிருக்காரு!!
Delete///பெருவாரியான வாசகர்கள் தெளிவாயிட்டே வராங்க. போலி பிரச்சாரங்கள் இனி எடுபடாது தம்பிகளா.
Delete////
நெத்தியடி!!
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteவிடுங்க செனா...அவங்களும் மாறப் போவதில்லை...நாமளும் மாறப் போவதில்லை....
DeleteThis comment has been removed by the author.
Deleteஆனா உண்மைய உணராமலா போவார்கள்..நம்ம காமிக்ஸ் நண்பர்கள்....தாயை விட்டு கன்றை எப்படி பிரித்தாலும் தழைகள் நீங்கியதும் தாயைத் தேடித்தான வரும்
Deleteஒரு குடும்பத்தில் உறவுகளுக்கிடையே அபிப்ராய பேதம் ஏற்படும்போது மற்றவர்கள் வாளாவிருப்பது சரியல்ல..
Deleteஒரு இளைய மகன் தனது தந்தையை அனுபவ குறைவு காரணமாக கடுமையான வார்த்தைகளால் கேள்வி கேட்கையில் மற்ற புத்திரர்கள் அவன் செயல் சரியல்ல என சுட்டிக் காட்ட முயல்வது தவறல்ல.
#####
இந்த கருத்தை வழிமொழிகிறேன் செனாஅனா ஜீ...
ஓர் பத்து பேர் கூடியிருக்கும் இடத்தில் ஒருவரை ஒருவர் நல்லவன் என குறிப்பிடும் பொழுது அனைவரும் புன்சிரிப்புடன் அமைதியாய் இருப்பது அழகு தான் ..அதே சமயம் நீ கெட்டவன் என ஒருவன் கூக்குரல் இடும் பொழுது இல்லை இவர் நல்லவர் தான் என நாம் எடுத்துரைக்கா விட்டால் சுற்றி இருப்பவர்களும் அதை நம்ப தொடங்கி விடுவார்கள்..எனவே தேவையான பொழுது அமைதியையும் விட்டு கொடுக்க தான் வேண்டும்
அடேங்கப்பா.. மஞ்ச சட்டை மன்மதரே.. பின்னிட்டிங்க.! நடுநிலையா இங்கே ப்ளாக்குல நடக்குற சொற்ப தவறுகளையும் சுட்டிக்காட்டியது சிறப்பு.!
Deleteசெனா அனா..
பாத்திரமறிந்து பிச்சையிடு ன்னு சொல்வாங்க..! நான் உங்களுக்கு சொல்ற அளவுக்கு தகுதியில்லாதவன்.. மன்னிச்சூ..!
அதே சமயம் செனாஅனா ஜீ...
Deleteஇங்கே வரும் நண்பர்களையும் ,ஆசரியரையும் அங்கே கண்காணத இடத்தில் சிலர் தூற்றுவதும் ,வெறுப்பை உமிழ்வதும் நடந்து கொண்டு இருந்தால் ...
வினை விதைப்பானே வினை அறுப்பானேன்..!?
///பாத்திரமறிந்து பிச்சையிடு ன்னு சொல்வாங்க..! நான் உங்களுக்கு சொல்ற அளவுக்கு தகுதியில்லாதவன்.. மன்னிச்சூ..!///
Deleteஇதுவரைக்கும் நீங்க போட்ட கமெண்ட்லயே இதா பெஸ்ட் KOK!! செம்ம!!!
///இதுவரைக்கும் நீங்க போட்ட கமெண்ட்லயே இதா பெஸ்ட் KOK!! செம்ம!!!///
Deleteஅப்போ.. ஏழெட்டு வருசமா இங்கே நான் ஒப்புக்கு சப்பாணியா இருந்துட்டேனா குருநாயரே.!? :-)
உண்மையை உரக்க எங்கும் சொல்லலாம். அனாமதேய நண்பரின் பதிவு அவ்வளவும் உண்மை. சொதப்பல்கள் இருந்தாலும் ஆசிரியர் இல்லையென்றால் தமிழ் காமிக்ஸ் உலகமே படுத்துவிடும் என்பதும் உண்மை...ஆசைப்பட்டு கேட்கும் புத்தகம் கிடைக்காமல் காண்டாகி கத்தும் கூட்டம் என்று இதனைப் புறந்தள்ளிப் போகமுடியாது. ஆசிரியர் கூறியது போல இதற்கு அஜெண்டாக்கள் பல உண்டு..இதைப் புரிந்தாலே கமெண்டுகளின் நோக்கம் விளங்கிவிடும்.
Deleteஅந்தக்கால எழுத்தாளர்களின் கதைகளை படித்துவிட்டு அதன் தாக்கத்தில் சித்தே என்று மொழிபெயர்ப்பில் வருவதாக விளக்கமளித்து திருத்திக்கொள்வதாகவும் ஆசிரியர் கூறுவது மிகவும் பாராட்டுக்கூறியது.
தன்னைத்தானே செதுக்கிக்கொள்ள ஆசிரியர் தயாராக இருக்கும்போது விமர்சனங்களை வைப்பது லயன்முத்துவையும் செதுக்க உதவும் என்பதை "சோ-கால்டு" ஜால்ரா கூட்டம் புரிந்துகொள்ளவேண்டும்.
அஜீத்தையோ விஜயய்யோ வெறுக்க ஆரம்பிப்பது fanboys களின் செயல்பட்டால்தான் என்பதை உணரவேண்டும். ஆகவே "விமர்சன" கமெண்டுகளில் மூக்கை நுழைத்து தன் திறமையை காட்ட முற்படுவதையை fanboys தவிர்க்கவேண்டும். அதற்கு மெரிட் இருக்கும் பட்சத்தில் ஆசிரியர் பதில் சொல்லட்டும்..ஆமென்.
சுச்சோ.. சரி, இப்ப பாருங்கங்களேன்..
Delete1. இந்தப் பதிவுல இதுவரைக்கும் நீங்க போட்ட கமெண்ட்லயே இதா பெஸ்ட் KOK!! செம்ம!!!
2. இன்னிக்கு இதுவரைக்கும் நீங்க போட்ட கமெண்ட்லயே இதா பெஸ்ட் KOK!! செம்ம!!!
ரெண்டுல ஏதாவது ஒன்னை நீங்களே சூஸ் பண்ணிக்கோங்க KOK!
(அப்பாடா!!)
//கோவைக்கிழார் டீம் ஸ்கேன்லேசன் பிடிஎப் 6 மாதம் வித்து பார்த்து பெயிலியர் ஆயி உட்காந்துட்டிருக்கறதால திட்டிட்டு இருக்கு. அவங்க போடற ஓசி பிடிஎப்பை டவுண்லோட் செய்யற யாரும் படிக்கறதே இல்லைங்கற கடுப்பு வேற. அதனாலே வெளிநாட்டுக்கு மட்டும் 6 மாதம்னு விக்கறக்கு முயற்சி பண்ணி அதும் ஊத்திகிச்சு//
Deleteபட்..பாரக்குடா, பவுன்சர், அர்ஸ் மேக்னா, டாங்கோ போன்ற கதைகள் கோவையார் டீமிலிருந்தே தேற்றப்பட்டவை என்பதையும் கவனிக்கவேண்டும்..இனி வரப்போகும் "உயிரைத்தேடி" கூட ஒருவகையில் அவர்கள் புண்ணியத்திலேயே..
கண்டிப்பாக ... scanlation ஒரு வகை comic art which will not go away.
DeleteScanlatorகளால் நமக்கு நல்ல காமிக்ஸ் அறிமுகங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் பலவற்றை உரிமம் வாங்கி ஆசிரியரால் வெளியிட முடிந்திருக்கிறது. இந்த மட்டில் scanlatorகள் காமிக்ஸ் ரசனைக்கு உதவுபவர்களே.
ஆனால் அவற்றை பிரிண்ட் மற்றும் pdf மார்க்கெட்டிங் செய்வது - is a totally different thing ! நடைமுறை சாத்தியமற்றது.அதைப்பற்றி கருத்து கூறுவது நம் வேலையுமல்ல ...
முற்றிலும் தவறான தகவல் சார் ! ஸ்கேன்லேஷனில் உள்ள சமாச்சாரங்களில் Smurfs நீங்கலாய் இன்று வரைக்கும் நான் கண்ணில் பார்த்துள்ள ஒரே other ஆல்பம் - மார்ஷல் சைக்சின் "அந்தியில் ஒரு அத்தியாயம்" மட்டுமே ! And அதை பார்க்க நேரிட்டதே உரிமைகளெல்லாம் வாங்கி , விளம்பரமும் செய்தான பின்னே நண்பர் ஒருவரின் கிரஹப்பிரவேசத்துக்கு சென்றிருந்த வேளையில் தான் !
DeleteAnd பராகுடாவுக்கு வடை சுட்டிருப்பதே நீங்கள் இப்போது சொல்லித் தான் தெரியும் !
And "உயிரைத் தேடி" பஜ்ஜி இருப்பது தெரிந்தது தான் ; ஆனால் அதனை நான் பார்க்க நேரிட்டதோ - நாம் அதற்கான உரிமைகளை வாங்கியிருக்கும் தகவல் வெளியான மறு நொடியே இண்டு , இடுக்கு, சந்து , பொந்தென்றலாம் விநியோகிக்க ஆர்வல நண்பர் மணக்க மணக்க முனைந்த வேளையில் தான் ! நண்பர் அல்லாடியதை பார்த்த போது , இத்தனை சிரமப்படுவானேன் சார் - பேசாம நம்ம பிளாகிலேயே போட்றலாமில்லியா ? என்று சொல்ல கூட தோன்றியது !
நம்பினாலும் சரி, நம்பாது போனாலும் சரி, எனது தேர்வுகளின் பின்னணிகள் ஒருபோதுமே இவர்களின் பணிகளாய் இருந்ததில்லை ; இருந்திடவும் போவதில்லை ! முணு நாட்களுக்கு முன்னே சுட்ட டேங்கோ வடைக்கு நான் மாவு வாங்கியதோ ஜுனில் ! சொல்லுங்களேன் சார் - எனக்கு அவர்களின் மெனு தெரிந்திருக்க வாய்ப்புகள் ஏதென்று ?
Phew !! வெளியூரிலிருக்கும் உறவினருக்கு பட்டாசு வாங்கி அனுப்ப காலையில் சீக்கிரமே கிளம்பிப் போய்விட்டு இப்போது இங்கு எட்டிப் பார்த்தால் பட்டாசாய் ஏதேதோ பொரிந்திருப்பதைப் பார்க்க முடிகின்றது !! யார் ரைட்டு ? யார் தப்பென்ற ஆய்வுகளுக்குள் நாம் தலைநுழைப்பானேன் மஞ்சள் சட்டை நண்பரே ? பொதுவெளியினில் குட்டுப்படுவது ஒருபோதுமே ரசிக்கும் அனுபவமாக இருந்திடாதெனும் பொழுது - நிறைய பேரை சாத்தியெடுத்திருப்பதை ரசிக்க இயலவில்லை ! ப்ளீஸ் , பின்னூட்டத்தை நீக்கிடலாமே ? நான் களைந்தால் , பின்னுள்ள அத்தனையுமே போய்விடும் !
Deleteஎன்ன செய்ய....திருடர்களை திருத்த முயற்சிக்கலாம்...சீர்திருத்தவாதிகளாய் சித்தரிக்கும் முடியலாமோ
Deleteகண்ணன், இளவரசர், தலீவர், கோவைக் கவிஞர்@ எனது பதிவுகளுக்கு வருந்துகிறேன்..கள நிலவரம் ஏதுமறியாமல் அவை எழுதப்பட்டுவிட்டன.
Deleteஅவை நீக்கப்பட்டும் விட்டன..கவனமாக கையைப் பிடித்து நிறுத்திய கண்ணணுக்கு நன்றிகள் பல..
யானையின் கால்களாலோ அல்லது இ.சி.ஈ.இளவரசரின் சுட்டுவிரலாலோ இடறப்படவிருந்த உங்கள் தலை - கணநேரத்தில் தப்பியிருக்கிறது செனா அனா!😛😛😛
Deleteஹா..ஹா..ஹா.. இளவரசரின் சாரீரம் போதாதா இந்த சரீரத்தை சாய்ப்பதற்கு)
Delete:)
ஓஹோ!!🤨🤨🤨
Deleteஇதை மனசுல வச்சுக்கறேன்!
என்னிக்காச்சும் ஒருநாள் EBF சந்திப்புல மாட்டுவீங்கல்ல.. அப்ப இருக்குது உங்களுக்கு விடியவிடிய கச்சேரி! 🧟♂️🧟♂️
ஒருவேளை, மயங்கிச் சாய்வதைத்தான் அப்படிச் சொன்னீர்களோ... நான்தான் தப்பாப்புரிஞ்சுக்கிட்டேனோ?!!🤔🤔🤔
Deleteஅப்படித்தான் இருக்கும்!😌😌😌
செனா அனா ஒரு கலாரசிகர்!!
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம் நண்பர்களே...
ReplyDelete'தல' என்றென்றும் ரவுசுப் பார்ட்டியே என்றாலும், இம்முறை அவரது ஆல்பங்களில் பல எனக்குள் பரபரப்பை ஏற்றி விட்டுள்ளன !! முதலாவதானது - கலரில் காத்துள்ள "காதல் யுத்தம்" !! Tex வெளியீடு # 575-க்கென உருவான ஆல்பமிது, ஓவியர் சிவிடெல்லியின் கைவண்ணத்தினில் !! காதலி / மனைவி லிலித்துடன் ஒரு பொறியில் சிக்கிடும் நம்மவர், அதனிலிருந்து விடுபட நடத்திடும் அதிரடிகள் தெறி மாஸ் ! And லிலித்துமே ஆக்ஷனில் சளைத்தவரல்ல என்பதை ரசித்திடவுள்ளோம் #####
ReplyDeleteஓவியர் சிவிடெலியின் கைவண்ணத்திலா ?!
அட்டகாசமான அற்புதமான செய்தி சார்.
அதுவும் வண்ணத்தில்.சிவிடெலியின் ஓவியங்கள் வண்ணத்தில் கண்ணைப் பறிக்குமே.
இப்பவே படிக்க மனம் ஆவலாதி கொள்கிறது.ஜனவரியில் கொடுக்க முடியுங்களா சார் ?!
//இந்த மைல்கல் இதழினில் கதைகளைத் தாண்டி நீங்கள் பார்க்க விரும்பிடும்// உங்க ஆபிஸ் தான்...
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete//
ReplyDeletesurprise ...surprise ....95 சதவிகிதம் :ஒரே நாடு-ஒரே காமிக்ஸ்" சந்தாப் பிரிவுக்கே //
சூப்பர் சார். கடந்த சில வருடங்களாக நமது நண்பர்கள் எல்லா சந்தா பிரிவுக்கும் சந்தா செலுத்துவது சிறப்பு.
விஜயன் சார், அடுத்த வருட கதைகளுக்கான மூன்னோட்டங்களை எல்லாம் பார்க்கும் போது நீங்கள் இந்த முறை எல்லா கதைகளையும் நன்றாக படித்து தேர்வு செய்து இருப்பதை காட்டுகிறது.
ReplyDeleteசிறப்பான செயல்: முத்து 50க்கான இதழ்கள் அனைத்துக்கும் உங்களின் பெரும்பாலான பணிகளை முடித்து அச்சுக்கு தயாராக வைத்துள்ளது. மிகவும் மகிழ்ச்சி. அட்டகாசமான திட்டமிடல்.
சார் .. இளம் டைகர் இப்போதைக்கு வேணாம் என்பதால் "இளமையில் கொல்" மீதம் இருக்கும் பாகங்களை ஏதேனும் ஒரு புக் fair ஸ்பெஷல் ஆக போட முடியுமா சார் .. முத்து 50 celebrationல் டைகர் சார்பாக ..
ReplyDeleteGood suggestion sir .. please consider sir ..
Delete2022
Deleteஎதிர்பாராததை எதிர்பாருங்கள் !
///2022
Deleteஎதிர்பாராததை எதிர்பாருங்கள் !////
சார் நாங்க எல்லோருமே 'சூ.ஹீ.சூ.ஸ் - சீசன்2'வை ரொம்ப்ப்ப எதிர்பார்க்கிறோம் சார்!
(அப்பாடா!!)
எதிர்பாராததை எதிர் பாருங்கள்.... ஒவ்வொரு வருடமும் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது இதுவே. (கட்டை விரலை வாயில் வைப்பது)... பட்ஜெட் பட்ஜெட் என்று சொல்லி சுண்டு விரலை வாயில் வைப்பது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. 😭😭😭😭😭
Deleteஎதிர்பாராததை எதிர் பாருங்கள். உங்களிடம் எதிர்பார்ப்பது அதுதானே சார். என்ன இப்போதெல்லாம் பட்ஜெட் பட்ஜெட் என்று சொல்லி கட்டை விரலை வாயில் வைப்பதற்கு பதில் சுண்டு விரலை வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது மாற வேண்டும் பழைய பன்னீர் செல்வமா கவர வேண்டும் ❤❤❤❤❤
Delete// ஆனால் இந்த மைல்கல் இதழினில் கதைகளைத் தாண்டி நீங்கள் பார்க்க விரும்பிடும் பக்கங்கள் என்னவாக இருக்குமோ ? //
ReplyDeleteகடைசி தேர்வைத் தவிர எல்லாமே ஓகேதா சார்...
நான் தளத்திற்கு வந்த புதிதில் காமா சோமாவின் பின்னூட்டங்கள் நிறைந்து இருக்கும் யாருடா இது இவ்வளவு அறிவு பூர்வமாக கேள்வி கேட்கிறார் பரிந்துரை செய்கிறார் அதுவும் தமிழில் இப்படி சிரிப்பு நடையுடன் எழுதுகிறார் என வியந்தேன். உடனே அவர் ப்ளாக் சென்று பார்த்தால் அடேங்கப்பா அட்டகாசமான பதிவுகள் பிரமிக்க வைத்தது. என்னை ப்ளாக்கில் எழுத தூண்டியதற்கு இவரின் தமிழ் நடை ஒரு முக்கிய காரணம்.
ReplyDeleteஇவரின் எல்லா பின்னூட்டங்கள் ஓரளவு ஞாபகம் உள்ளது அதில் ஒரு பின்னூட்டத்தில் புத்தக அளவு என நினைக்கிறேன் அதனை மில்லி மீட்டர் சென்டி மீட்டர் என அளவுகளை எல்லாம் போட்ட பின்னூட்டம்.
நமது தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்த இவர் தனது பின்னூட்டங்களை குறைத்து கொள்ள காரணம் நேரமின்மை மற்றும் ஒரு/சில நண்பர்கள் தொடர்ந்து தளத்தில் இவரின் பின்னூட்டங்களை வைத்து இவரை வம்புக்கு இழுத்தது என நினைக்கிறேன்.
பிளேடுபீடியாவ மறக்க முடியுமா
Deleteஇவர் பதிவை பார்த்து தானே நானே ஒரு தளத்தை தொடங்கினேன்...
Deleteஆனால் இவரின் மேல் எனக்கு ஒரு காண்டு உண்டு...
அது அப்புறம்...:-)))
இவரின் பின்னூட்டங்களுக்கு பதில் பின்னூட்டம் இட ஒரு முறைக்கு பல முறை யோசிப்பேன், ஏதாவது ஒரு வழியில் கலாய்த்து பதில் தந்து விடுவார், ரசித்தேன் அவைகளை.
DeleteAlpha அட்டைப்படம் அருமை. சீக்கிரமா preview போடுங்க சாரே.
ReplyDeleteS70 முன்பதிவு கடைசி நாள் Nov-15 வரை நீட்டிப்பு நல்ல விசையம். சந்தாவுல் புக்ஸ் கம்மி பீலிங் உள்ளவர்களும், ஜம்பாவிற்கு பட்ஜட் தேவை, S70யை சாயிஸில் விட்டுவிடலாம் என்று நினைத்தவர்களும் இது நல்ல சாய்ஸ்.
ReplyDeleteநான் S70ல் வரும் எந்த ஒரு நாயகருக்கும் ஃபேன் கிடையாது, ரிப் மட்டுமே கொஞ்சம் பிடிக்கும், அப்புறம் ஏன் போஸ்டர் போடுற?? கவுண்டர் செந்தில் வச்சு விளம்பரம் பன்ற?? யாராவுது S70 பழசுன்னு சொன்னா முட்டு கொடுக்கிற??
ஏன்னா இந்த ஸ்டைல் என்னை ரொம்ப கவர்ந்துள்ளது. ஒரு கதை 25 பக்கங்கள் கிட்ட தான், பொறுமையாக படிக்கவும், ஒரு quick மறுவாசிப்புக்கு எற்றதாகவும் இருக்கும். இவர்கள் உலகெங்கும் ரிசிக்க பட்டவர்கள், குவிந்து கிடக்கும் கதைகளிருந்து 30+ கதைகள் தான் வரும், அதுவும் ஒரு புக்கிள் 8 கதைகள் என்றால் கண்டிப்பாக சுப்பர் கதைகளும் இருக்கும். எடிட்டர் வேறு கதைகளி பழைய நெடு இல்லைன்னு சொல்லிறுக்காரு.
நிறையா கதைகள் இருக்க புக்ஸை படிப்பதே ஒரு அலாதிதான்.
கமிக்ஸ் படிக்கா நண்பருக்கோ, இல்லை விட்டில் இருக்கும்/வரும் சிறுவர்கள் கெட்கும் போது எந்த நெருடலும் இல்லாமல் டக்கென்று எடுத்து கொடுக்க இந்த புக்ஸ் சூப்பர் சாய்ஸ். அடுத்த சந்ததிக்கு படிக்க கொடுக்க ஒரு சாய்ஸ்.
// நண்பருக்கோ, இல்லை விட்டில் இருக்கும்/வரும் சிறுவர்கள் கெட்கும் போது எந்த நெருடலும் இல்லாமல் டக்கென்று எடுத்து கொடுக்க இந்த புக்ஸ் சூப்பர் சாய்ஸ். அடுத்த சந்ததிக்கு படிக்க கொடுக்க ஒரு சாய்ஸ். //
DeleteYes. Well said.
//அடுத்த சந்ததிக்கு படிக்க கொடுக்க ஒரு சாய்ஸ்//
DeleteValid Point !!
ஒரே நாடு ...
ReplyDeleteஒரே காமிக்ஸ்...
ஒரே ஆசிரியர்.....
ஜெய் லயன்...:-)
இப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ... ;-)
Deleteஇன்னொரு காமிக்ஸும், இன்னொரு ஆசிரியரும் கூட வரட்டுமே!
Deleteவந்தாத்தான் நமக்கும், அந்த மற்ற கம்பெனிக்காரவுகளுக்கும் நம் எடிட்டர் அடித்துவரும் அந்தர் பல்டிகளின் அருமை புரியும்!
விஜயன் சார், கென்யா ஆப்ரிக்கா மாதிரி ஆல்பா, காமா, தீட்டா கதைகள் உண்டா?
ReplyDeleteகாமா கதைகள் உண்டு பரணி - ஆனா நம்ம காமிக்ஸ்ல வர்றதில்லை - சவிதா பாபி series படிக்கவும் ;-) :-)
ReplyDeleteஈரோடு விஜய் தான் ஓடோடி வந்து பதில் சொல்வார் என நினைத்தேன் :-)
Deleteராகவரே.. ஓவர் குசும்பு இதெல்லாம் 🤣🤣🤣🤣🤣
Deleteஒரே நாடு ஒரே காமிக்ஸ் ஒரே ஆசிரியர் ஜெய் லயன்.
ReplyDeleteகரூர் ராஜ சேகரன்
சீனியரின் தலையங்கம்
ReplyDeleteநமது கருணையானந்தம் அவர்களின் நினைவலைகள்
அப்புறம் 2 சர்ப்ரைஸ் flashbacks !
நமது மறைந்த ஓவியருக்கொரு tribute !
நமது பழம் ஓவியர் சிகாமணி பற்றி !
நமது தற்போதைய டீமின் போட்டோக்கள் !
வாசக நினைவலைகள்
என் பார்வையில் TOP 5 இதழ்கள் !
50 ஆண்டுகளின் புக்ஸ் பட்டியல் 1 to 457///////////
அனைத்தும் வேண்டும்.
இனி வேறு என்ன வேண்டும் எங்களுக்கு.
ஏதாவது காமிக்ஸ் சம்பந்தமான போட்டிகள் வைக்கலாம். பரிசாக ஸ்டாக்கிலுள்ள காமிக்ஸ் புத்தகங்களை பரிசளிக்கலாம்.
YSYU - YCYP !
ReplyDeleteதினமும் டீ, காபி, போண்டா, பஜ்ஜி, பப்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ளவன் நான்!
2020 வருட கொரோனா பரவல் காரணமாக மூன்று நான்கு மாதங்கள், டீ கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது அல்லது மூடப்பட்டது! அதுவே 2021 ல் இரண்டு மூன்று மாதங்கள் டீ கடைகள் மூடப்பட்டது அல்லது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது!
இக்காலகட்டத்தில் அதற்கு செலவாகி வந்த பணத்தை என்ன செய்வது என்று ஒரே குழப்பம்! இறுதியாக ஒரு நல்ல முடிவு தோன்றியது!
அதில் ஒரு பகுதியை தினமும் ரூபாய் 50 என கடந்த 16 மாதங்களாக, ஒரு சிறிய காமிக்ஸ் அட்டைப்பெட்டியில் போட்டு சேமித்து வந்தேன். ஒருநாள் முடியாவிட்டால் அடுத்த நாள் ரூபாய் 100 ஆக போட்டு வந்தேன். சென்ற வருட காமிக்ஸ் செலவினங்கள் போக தற்போதைய கையிருப்பு ரூபாய் 18000+ உள்ளது!
இதில் இந்த வருடம் சந்தா ரூபாய் 5100 செலுத்தி விட்டால் மீதம் ரூபாய் 13 ஆயிரம் இருக்கும்! அதுமட்டுமல்லாமல் இந்த மாதம் முதற்கொண்டே சேமிப்பும் சேர்ந்து கொண்டே வரும்!
நான் இரண்டு சந்தா செலுத்தும் பழக்கம் இல்லாதவன் - ஏனெனில் ஏற்கனவே காமிக்ஸ் சேகரிப்பு அட்டைப்பெட்டிகள் அதிகமாக வீட்டினுள் இருக்கிறது. இரண்டுக்கு இடப் பற்றாக்குறை மட்டுமல்ல - வேறு வாடகை வீடு பார்க்கும் போது இட மாற்றம் செய்வது மிகவும் கடினமாக போய்விடுவதும் ஒரு காரணம்!
போலவே, சந்தா தானமாக அளிக்கும் அளவுக்கு என் பொருளாதாரமும் / என் சின்னஞ்சிறிய காமிக்ஸ் மனமும் ஒத்துழைக்காது! எனது சேமிப்பு எனது உரிமை! எனது காமிக்ஸ் எனது பெருமை! என்று வாழ்ந்து வரும் சாமானியன் தான் நான்!
YSYU ; YCYP !
இடையிடையே நீங்கள் என்னதான் ஸ்பெஷல் அறிவிப்புகள் செய்தாலும் - பணம் மீண்டும் கையிருப்பில் இருந்து கொண்டேதான் இருக்கும்!
எனவே இதற்கு ஏதாவது வழி செய்யுங்கள்! Print on demand வழியாக;
Art paper
Large Size
457 Pages
Hard Bound
High Quality
தலைப்பு: The Fifty & Forever Special ! 457
அல்லது; Muthu Comics golden jubilee! 50 years of celebration! 457
வேண்டும் என்பவர்களுக்கு அட்டைப்படத் தொகுப்பை அந்தியும் அழகே - புத்தக ஸைசில் தனியாக ஏதாவது செய்ய இயலுமா?! இப்பொழுது இல்லாவிட்டாலும் பிறகு?! இந்தக் கோரிக்கை வருங்காலத்தில் லயன் காமிக்ஸ் அட்டைப் படங்களுக்கும் பொருந்தும்!
ஒவ்வொரு பதிவிலும் இல்லாததைத் தேடுவதே உன் வேலையாப் போச்சு - என்ற குரல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது! என்ன செய்வது சார், நான் தமிழ் காமிக்ஸ் ரசனைக்கு மீளவே முடியாத அடிமையாகிப் போய் விட்டேனே!
ஒருவேளை தங்கள் பார்வையில் நான், அந்தியும் அழகே - மில்சே தாத்தாவாக தெரியலாம் தான் - அதற்காக நீங்கள் பியரோ மேயோ'வாக மாறி கழுவி கழுவி ஊத்த வேண்டாமே ப்ளிஸ் !?
நீங்கள், 2014 - 2015 ல் பல கோரிக்கைகளுக்கு சாத்தியமே இல்லை ; இந்த ஜென்மத்தில் வாய்ப்பே இல்லை என்று பதிவு செய்து இருந்தீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்! அவை அனைத்துமே இன்று நிஜமாகி பல காலங்கள் ஆகி விட்டது என்பதுதானே உண்மை!
ReplyDeleteஅன்பு ஆசிரியருக்கு...
அருமை ஸ்நேகங்களுக்கு...
1)--FFS ல் சீனியரின் நினைவலைகள் கண்டிப்பாக தேவை சார்.
இந்த போட்டிகள் நிறைந்த உலகில்,
ஒரு காமிக்ஸ் வெற்றிகரமாக 50 வது ஆண்டு இதழை தொடுவதென்றால் அது சாமான்ய விசியமேயில்லை.
அற்புதமான விசியம். ஆகவேதான் அய்யாவின் நினைவுகள் தேவை.இது காமிக்ஸ் வாசகர்கள் பலரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.
2) கடந்த பதிவிலிருந்து சிலசில நல்ல மாற்றங்களை உங்களிடம் காண்கிறோம்.
வார்த்தை உபயோகங்கள்.
அந்தந்த கதைகளில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தினால் கதையின் ஒட்டத்துடன் செல்லலாம்.
அதை விட்டு, நமக்கு தோன்றும் சிற்சில வார்த்தைகளை பதிவிடுவதின் மூலம், அந்த வார்த்தைகளுக்கும்+ சொல்பவர்களுக்கும் சம்மந்தமே இருப்பதில்லை. (*புள்ளையாண்டான்*)
உங்களை எந்தளவுக்கு "வறுக்கி"றார்களோ, அந்தளவுக்கு உங்கள் காமிக்ஸ் மீதும் அவர்களுக்கு விருப்பமும் உண்டு.
ஒவ்வொரு பதிவிலும் இதை மறுபடி மறுபடி குறிப்பிடாமல் இருப்பதே நல்லது சார்.
உங்களால் அவர்களுக்கு பொழுது போகுதென்றால் போகட்டுமே சார்.
நீங்க அதை இங்கு குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை.
அது ஏன் சார் 457 வரை பட்டியல்?.மீதி?.
ஒரு *துண்டு* பேப்பராக இருந்தாலும்,
சந்தாதாரர்களுக்கு மட்டுமல்லாமல்,
சந்தா இல்லாதவர்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள் சார்.
முத்து 50வது ஆண்டு மலருக்காக,
அட்டகாசமாக...
2022 ம் வருட காலண்டர் போடுங்களேன் சார்.
மீண்டும் அடுத்த பதிவில் 🌹...
Total only 457 muthu comics in 600 months. Rest of the months it was not published I guess.
Deleteஅக்டோபர் மாத விமர்சனங்கள் : அந்தியும் அழகே!
ReplyDeleteமுதல் வாசிப்பில் பிரமாதமாகவும், நகைச்சுவையாகவும் தோன்றியது! அடுத்த நாளே இரண்டாவது வாசிப்பு செய்யும் அளவுக்கு இலகுவானதாகவும், ஈர்ப்புடையதாகவும் இருந்தது!
பல வசனங்கள் ரசிக்க வைத்தன அல்லது சிரிக்க வைத்தன! சுவாரசியமானக் கதை என்பதில் சந்தேகம் எதுவுமில்லை! மாறுபட்ட களம் ; சிலாகிக்க இங்கு ஏது நேரம்!
வரவேற்கத்தக்க புதிய முயற்சி!
டியர் விஜயன் சார்,
ReplyDeleteமுன்னாள் பதிவர் காமா சோமாவை இப்பதிவில் ஹைலைட் செய்து, என்னை சித்தே சங்கடத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்! :D இத்தனை நாள் கழித்து இதை பொதுவெளியில் பகிர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் உங்களுக்கு இல்லாத நிலையில், இதைச் செய்தது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நீங்கள் பதில் அளிக்கிறீர்கள் என்பதற்காக அவ்வப்போது நான் உட்பட, நம்மில் சிலர் ஓவராக பேசி விடுவது, சிறு வயதில் இருந்தே நம் காமிக்ஸ் மற்றும் ஹாட்லைன் படித்து வந்த உரிமையில், "நம்ம எடிட்டர்பா, எவ்ளோ அடிச்சாலும் தாங்குவார்..." என நினைப்பதால் இருக்கலாம்! :) அந்த உரிமை மெதுவே, "நான் சொன்னதைத் தான் நீங்க கேட்கணும்" ரக possessiveness ஆக மாறி, மானசீகமாக உங்களை எதிரியாக பாவிக்கும் மன நிலைக்கு தள்ளிவிடாத வரை சரிதான்.
"ஒரு சிப்பாயின் சுவடுகள்" என்றாலே, எனக்கு நமது வலைப்பூ நண்பர்கள் ரமேஷ்குமார் (நாட்டாமை) மற்றும் விஸ்கி சுஸ்கி (ரவி) நினைவுக்கு வந்துவிடுவார்கள். அதிலும் நான் ரமேஷ்குமாருடன், என்னுடைய வலைப்பூவில் ஒ.சி.சு. மற்றும் மேலும் சில விடயங்கள் குறித்து இடைவிடாது காரசாரமான கருத்து மோதல்களில் ஈடுபட்டதை எண்ணிப் பார்த்தால் எனக்கே சிரிப்பாக வருகிறது. எழுத்தாற்றல் மிக்க அவர்களைப் போன்ற பல பழைய நண்பர்கள் தற்சமயம் இங்கே தற்சமயம் தென்படாதது மிகவும் வருத்தமே! நேற்று கூட கனவுகளின் காதலன் மற்றும் இலுமினாட்டி பற்றி ராகவனிடம் கேட்டுக் கொண்டிருந்தேன்! உலகின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு, இந்தப் பின்னூட்டத்தை பழைய நண்பர்கள் மற்றும் வேண்டப்பட்ட விரோதிகள் படித்துக் கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு ஹாய்! :)
இங்கே என்னைப் பற்றி அன்புடன் நினைவு கூர்ந்து, கூடவே கலாய்த்தும் இருக்கும் ஒவ்வொரு நண்பருக்கும் எனது நன்றிகள். விட்டால், புனிதர் ரேஞ்சுக்கு என்னை ஏற்றி வைத்து, ஏதோ ஒரு மடத்திற்கோ, மடாலயத்திற்கோ பேக் செய்து விடுவீர்கள் போல! :D தனி மனிதர்களைப் பற்றி ஒருபோதும் பேசியதில்லை என்பதெல்லாம் தவறு! ஏதோ ஒரு நள்ளிரவு FB கும்மியில், நண்பர்கள் சிலரைப் பற்றி தேவையில்லாமல் குறிப்பிட்டு, அவர்களில் சிலர் கோபமுற்றத்தையும், சிலர் மனம் வருந்தியதையும் கண்டு, பின்னர் என்னை திருத்திக் கொண்டேன் என்பதே உண்மை! இங்கேயோ அல்லது வேறு தளங்களிலோ சர்ச்சைக்கு உள்ளான ஒவ்வொரு நண்பருமே, நேரில் பழகிப் பார்த்தால் அடிப்படையில் மிகவும் இனியவர்களாகவே இருப்பார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், நெருங்கிப் பழகினால், அவர்களின் சில குணங்கள் மற்றும் செயல்கள் நமக்குப் பிடித்திடாமல் போகும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. எனவே தான் யார் மீதும், எந்த ஒரு முன் முடிவையும் எடுத்திடாமல், அளவுடன் பழகி, இடைவெளியுடன் விலகி நிற்பதை வாடிக்கையாகி கொண்டிருக்கிறேன்.
இப்படித்தான் புனித சாத்தானுடன் என்ன ஆனது என்றால்... அது பற்றி அடுத்த பதிவில் (நாங்களும், சஸ்பென்ஸ் வைப்போம்ல!).... தற்போது பெங்களூர் நோக்கிய பயணத்தில்!
புனித சாத்தான் சார் என்றாலே அந்த "லுங்கியோடு தொங்கி " கும்மி தான் நினைவுக்கு வரும் !!
Deleteபு.சா. சார் மன்னிச்சூ !
And கவலையேபடாதீர்கள் கார்த்திக் ; இங்கு பங்கேற்காவிடினும் அனைவருமே still very much on the blog !So உங்க "ஹை "க்கு சீக்கிரமே ஹைக்கூ பதில்கள் கிட்டிடாது போகாது !
Delete/* மானசீகமாக உங்களை எதிரியாக பாவிக்கும் மன நிலைக்கு*/
DeleteSmall correction காமா சோமா,
அது எதிரியாக அல்ல - hotline பழக்கத்தின் மூலம் - தனக்கே உரித்தான தான் சொல்வது மட்டுமே கேட்க வேண்டிய காதலியைப் போன்ற possessiveness. அதன் வெளிப்பாடு தான் ஜோக்கர் போல எதிர்ப்பது !
///இங்கேயோ அல்லது வேறு தளங்களிலோ சர்ச்சைக்கு உள்ளான ஒவ்வொரு நண்பருமே, நேரில் பழகிப் பார்த்தால் அடிப்படையில் மிகவும் இனியவர்களாகவே இருப்பார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். ஆனால், நெருங்கிப் பழகினால், அவர்களின் சில குணங்கள் மற்றும் செயல்கள் நமக்குப் பிடித்திடாமல் போகும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. எனவே தான் யார் மீதும், எந்த ஒரு முன் முடிவையும் எடுத்திடாமல், அளவுடன் பழகி, இடைவெளியுடன் விலகி நிற்பதை வாடிக்கையாகி கொண்டிருக்கிறேன்.///
Deleteரொம்பவே பண்பட்ட வார்த்தைகள் கார்த்திக்! மிகச் சரியான புரிதல்!!
EV
Deleteஅவர் குறிப்பிட்ட நபர் யாரென்று தெரிகிறதா? இவர் யாரென்று புரிகிறதா ? ஹாஹா ஹீஹீ ஹோ ஹோ !! ;-)
அச்சச்சோ!!! நீங்க விதவிதமா சிரிக்கறதைப் பார்த்தால்... அ..அது நான்தானோ?!!😨😨😨
Deleteநான் காத்து வாங்க போனேன் ...ஒரு பல்பு வாங்கி வந்தேன்..!!
Deleteஅக்டோபர் மாத விமர்சனங்கள் : மறந்தும் மறவாதே!
ReplyDeleteமுதல் நாளே படித்து விட்டேன்! படித்து முடித்தவுடனே பதிவிடத் தூண்டிய சுவாரசியமானக் கதை! முதல் நான்கு பக்கங்களாக இருக்கட்டும் அல்லது மிஸ் பாட்ரிட்ஜ் மற்றும் கர்னல் க்ளிப்டன் உரையாடலாக இருக்கட்டும் - வாசிக்கும் போது புன்னகை பூக்கும் நம் முகம் மாறாமல் இருப்பதே ஒரு சுகம்தான்!
இவரின் அலட்டல் இல்லாத ; லாஜிக் உடனான காமெடி எனக்கு எப்பவுமே பிடித்தமான ஒன்று!
கார்ட்டூன் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்தமான கதைகளில் இவரும் ஒருவர்!
அக்டோபர் மாத விமர்சனங்கள் : கண்ணே... கலைமானே..!
ReplyDeleteமற்ற இரண்டு புத்தகங்களைப் போலவே இதையும் முதல் நாளே வாசித்து முடித்து விட்டேன்! டெக்ஸ் வில்லர் கதைகளில் வரும் அமானுஷ்யக் கதைகள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான வரிசை!
கதை மிகவும் சுவாரஸ்யம்! ஒவ்வொரு நான்கு பக்கங்களைக் கடக்கும் போதும் அந்தப் பெண்ணை இன்னும் ஏன் காப்பாற்றாமல் போகிறார்கள் என்று வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தேன்! கடைசிப் பக்கம் வரும் வரை நான் கதையின் முடிவை யூகிக்கவே இல்லை, கடைசியில் அந்தப் பெண் ஆவி தான் என்று தெரிந்தபோது நானடைந்த சோகத்திற்கு அளவே இல்லை!
இம்முறை இந்த டெக்ஸ் வில்லர் கதை எனக்கு எங்குமே போரடிக்கவில்லை! நல்ல விறுவிறுப்பு ; அருமையான சஸ்பென்ஸ்!
சுவாரசியமானதொரு காமிக்ஸ் வாசிப்பு!
//டெக்ஸ் வில்லர் கதைகளில் வரும் அமானுஷ்யக் கதைகள் எப்போதுமே எனக்கு மிகவும் பிடித்தமான வரிசை!//
Deleteஅடடே !
சார், முத்து 50வது ஆண்டு மலரில்-விச்சு&கிச்சு-கண்டிப்பாக இடம்பெறவேண்டும் சார். (ஓரிரு கதைகளாவது.)
ReplyDeleteஅதே போல Smasing 70-யிலும் விச்சு - கிச்சு இடம்பெறவேண்டும் சார்-அவை ஏற்கனவே வெளிவந்தவைகளாக இருந்தாலும் பரவாயில்லை.. தற்போதைய தரத்தில் இடம்பெறவேண்டும். சார்)
சாரி ஸார் , வாய்ப்பு நஹி ! லோம்பா தொகுப்பினில் "காமிக்ஸ்" என நான் வரையக்கூடிய படத்திற்கு கூட அனுமதி கிடையாது !
Deleteசார் சிங்கத்தின் சிறுவயதில்...
ReplyDeleteஇதை மொத்தமாக தொகுத்து 50 ஆம் வருட இதழுடன் இணைத்தால் நன்றாக இருக்குமே
அது ஏதோவொரு ஆர்வக்கோளாறில் அந்நாட்களில் எழுதியது சார் ; இப்போது தான் நாளுக்கொருவாட்டி உங்கள் முகங்களுக்கு முன்னே தாண்டவமாடிக் கொண்டு தானே இருக்கிறேன் ? அவை அந்நாட்களது நினைவுகளாய் மட்டுமே இருந்துவிட்டுப் போகட்டும் சார் !
Deleteஒருவேளை லயன் 50ஆவது வருடத்திற்கு இந்த இணைப்பு வருமோ?
ReplyDelete" சீனியரின் தலையங்கம்
ReplyDeleteநமது கருணையானந்தம் அவர்களின் நினைவலைகள்
அப்புறம் 2 சர்ப்ரைஸ் flashbacks !
நமது மறைந்த ஓவியருக்கொரு tribute !
நமது பழம் ஓவியர் சிகாமணி பற்றி !
நமது தற்போதைய டீமின் போட்டோக்கள் !
வாசக நினைவலைகள்
என் பார்வையில் TOP 5 இதழ்கள் !
50 ஆண்டுகளின் புக்ஸ் பட்டியல் 1 to 457 "
கதைகளை விட மேற்காணும் பட்டியலே எனக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன,
ஒரு வேண்டுகோள் 1 to 457 புத்தகங்களை வரிசைப்படுத்தும் போது மிகச்சரியான பட்டியல் வேண்டும், மாறுபாடுகள் இருப்பின் பட்டியலிலேயே சுட்டிக்காட்ட வேண்டும்,
காரணம் பெரும்பாலான என்னைப் போன்ற தீவிர ரசிகர்கள் தனியே நோட்டு போட்டு Serial number படி எழுதி வைத்துள்ளோம், ஆனால் பல சமயம் பட்டியலுக்கும் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வெளியீட்டு எண்ணிற்கும் மாறுபாடு உள்ளது. புத்தகம் வெளியான மாதம் வருடம் மட்டும் வெளியீட்டு எண் இல்லாமலே வந்த புத்தகங்களையும், இலவச இதழ்கள் அனைத்தையும் குறிப்பிட்டால் மகிழ்ச்சி Sir
சூப்பர் நண்பரே...சரியான மாதமுமிருந்தால் அனுப்பிடுங்கள்....சரி பார்க்க ஆசிரியருக்கும் உதவலாம்
DeleteSir, please add some info about முல்லை தங்கரசன் அய்யா in FFS muthu 50 years special. He is also one of the legends in Muthu comics.
ReplyDeleteவிஜயன் சார்,
ReplyDeleteFFS இதழில் அய்யா முல்லை தங்கராசன் பற்றி ஒரு பேட்டி செய்தியாவது போடுங்க.
He is also one of our legends in Muthu's history. From old fans perspective, he is synonym to "M" logo. Whatever reason in internal business/relationship, for fans sake அவரை இருட்டாடிக்க வேண்டாம் in this mile stone master piece. நன்றி.
இந்த விஷயத்தில் நிஜமும், யதார்த்தமும் அறிந்தோர் மொத்தமே 4 பேர் தான் உள்ளனர் பூமியில் ! அந்த நால்வருமே FFS இதழினில் இடம் பிடித்திடுவர் ! Period
Deleteகாதில் விழும் தகவல்களோடு பயணிக்கும் அவசியம், நிஜத்தோடு வாழ்ந்தவர்களுக்கும் தேவையென்று தோன்றுகிறதா சார் ?
And எங்களை பற்றிய நிஜங்களை எங்களை விடவும் சிறப்பாய் தெரிந்திருக்க யாருக்கு சாத்தியமாகிடுமோ சார் ? என்னை நம்புவானேன் - சீனியரிடமே கேட்டு விடலாமே ?
Delete#MeToo betrayed by my partner very recently in 2020. (20L loss for me 😭) கொரோனா காலம் showed me people only like to share prosperity but not adversaries.
ReplyDeleteBut I decided to forgive and move on. I did remove his name from all my business affairs. If I am successful again, would I give any credit to him for his initial contributions? I guess NO.
So, I can understand the sentiments here 100%.
Totally mistaken in your assessment sir !! Reality was completely different from what you visualise it to be !!
DeleteAnd in any case, FFS இதழினில் எடிட்டிங் & மொழிபெயர்ப்பைத் தாண்டிய எனது பங்கு பூஜ்யமாக மட்டுமே இருந்திடவுள்ளது ! So இங்கே மையம் சீனியரே ! அவருக்குத் தெரிந்த நிஜங்களை விடவா உங்களுக்கும், எனக்கும், இணையத்தில் உலா வருவோருக்கும் தெரிந்திருக்கப் போகிறது ? அவருக்கு தெரிந்திரா நியாயங்களா நமக்குத் தெரிந்திருக்கப் போகிறது ? யாரைக் குறிப்பிட வேண்டும் / வேண்டியிராதென்று அவருக்குத் தெரிந்திருக்குமென்று நம்புவோம் சார் !
DeleteAnd FFS புக் launch ஆன பின்னொரு தினத்தில் ZOOM Live-ல் சீனியரோடு நண்பர்கள் உரையாட ஏற்பாடு செய்திடவுள்ளேன் ; அவரிடமிருந்தே கேட்டுக் கொண்டால் தீர்ந்ததல்லவா பிரச்சனை ?
எது எப்படியோ - இன்றைக்கு நம் மத்தியினில் இல்லாதவரைப் பற்றிய நிறை / குறை சார்ந்த அலசல்கள் அநாகரீகமானவை என்பது புரிவதால், இப்போதெல்லாம் நான் இந்த சமாச்சாரத்தினில் எதுவும் சொல்ல முனைவதே இல்லை ! So அது சீனியரின் பாடு !!
DeleteSuper sir, great idea. Thanks 👍
ReplyDeleteஅனைவரின் விருப்பமும் (மெபிஸ்டோ) நிறைவேற்றப்படுகிறது. முடியாது, மாட்டேன் என்ற சொல்லைஎப்பொழுதும் கூறுவதில்லைஆசிரியர். கரூர் ராஜ சேகரன்
ReplyDelete***** சந்தா செலுத்தலாமா? அல்லது ஆன்லைனில் அவ்வப்போது வாங்கிக்கொள்ளலாமா? - என்ற யோசனையில் இருக்கும் நண்பர்களுக்காக - என் முகநூல் பதிவிலிருந்து ஒரு ரிப்பீட்டே!!*******
ReplyDeleteரூ.820/-
இது 2022க்கான சந்தாவில் இணைவதன் மூலம் தோராயமாக நாம் சேமிக்கயிருக்கும் தொகை!
எப்படி என்று பார்ப்போம்..
நாம் அடுத்தவருடம் பெறப்போகும் 25 பொம்மை பொஸ்தகங்களுக்கான அடக்கவிலை= ரூ.5080
நாம் செலுத்தப் போகும் சந்தாத் தொகை = ரூ.5100
ஆக, வெறும் 20 ரூபாயை மட்டுமே கொரியர் & பேக்கிங் சார்ஜாக நாம் கொடுக்கிறோம்!
ஒரு வருடத்திற்கு ஆகும் கொரியர் & பேக்கிங் செலவு தோராயமாக ரூ.600
நாம் ரூ.20 மட்டுமே செலுத்துவதால் நம் சேமிப்பு சுமார் 580 ரூபாய்!
இதுபோக சந்தாதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சீனியர் எடிட்டரின் அனுபவக் கட்டுரையோடுகூடிய 16 பக்க 'எலியப்பா' இலவச வண்ண இணைப்பும் உண்டு! நம் வீட்டுச் சுட்டிகளைக் கவரயிருக்கும் இவ்விணைப்பின் விலை சுமார் 20 ரூபாய் என்று வைத்துக்கொண்டோமேயானால், 12 மாதங்களுக்கு = 12x20 = 240 ரூபாய்! இதுவும் சந்தாதாரர்களுக்கு மட்டும் இலவசமாகவே வழங்கப்படயிருக்கிறது!
ஆக, 580 + 240 = 820/-
வேறென்ன வேண்டும் நண்பர்களே...
அருமையான பொக்கிஷங்கள் நம் இல்லம் தேடி வர...
சந்தாக் கட்டுவோம்!
சந்தோசமா படிப்போம்!!
ஆனாலும் இளவரசர் ருக்குவை ரூட் விடும் பிசியில் கணக்கு க்ளாஸ் பக்கமாய்ப் போனதில்லை போலும் !! 48 பக்கங்கள் கொண்ட புக்கின் விலை ரூ.90 என்றால், அதனில் மூன்றிலொரு பக்கங்கள் கொண்ட இணைப்பின் விலை என்னவாக இருக்குமோ ?
Deleteருக்கு கிட்டயே கேட்றணுமோ ?
சீனியர் எடிட்டரிடம் எதைக் கேட்பதென்றே தெரியவில்லை சார். அவர் தாமாகச் சொல்ல விரும்பும் விஷயம் நிச்சயமாக better ஆக இருக்கக் கூடும். வலைத்தளத்தில் வரவே வராத சீனியர் வாசகர்கள் சிலரை எனக்குத் தெரியும்.அவர்கள் ஏனோ 1970s உடன் எல்லாம் போச்சு என்றிருக்கிறார்கள். Comeback பாணி இதழ்களை சொந்த செலவில் வாங்கித் தந்தும் அவர்களை அசைக்க முடியவில்லை. நிச்சயமாக சீனியரின் மலரும் நினைவுகளை அவர்களுக்குக் காட்டப் போகிறேன்.
ReplyDelete- Padmalochan
//அவர்கள் ஏனோ 1970s உடன் எல்லாம் போச்சு என்றிருக்கிறார்கள்//
Deleteஇழந்த பால்யங்களை / இளமைகளை எண்ணிய கவலையினில் இருப்போருக்கு புதுசு ரசிக்காது சார் ! தவிர, காமிக்சுடனான தொடர்பு அறுந்து போவோருக்கு மறுபடியும் அந்த ஈர்ப்பைத் திரட்டுவது சுலபமே அல்ல ! "அந்தக் காலம் போல வருமா ?" என்ற விசனங்கள் உலகலாவியதொன்று தானே ?
நான் பல மாதங்களுக்கு பின் நம் ப்ளாகில் எழுதுகிறேன்.
ReplyDelete2022 அட்டவணை :
மூன்று புது கதாநாயர்கள், அவர்களின் சமகால ஆக்ஷன் த்ரில்லர்ஸ். இது கண்டிப்பாக ஹிட் அடிக்கும். சிஸ்கோ பற்றி லேசாக தெரியும். மற்ற இருவரும் கலக்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்த பதிவு முழுவதுமே, முத்து 50 இல், பழைய ஆதர்ஷ நாயகர்கள் ஏன் இணைக்க படவில்லை என்பது பற்றியே இருக்கிறது.
ஆசிரியர் பல வார ப்ளாக்கலில் இது ஏன் சாத்தியமில்லை என்று தெள்ள தெளிவாக அரைத்த மாவையே இன்னும் நைசாக அரைத்து சொல்லி வந்து இருக்கிறார்.
a ) பழைய கதை / புது கதை காம்பினேஷன் போட அனுமதி இல்லை.
b ) இருக்கும் பழைய நாயகர்கள் கதை இன்டெரெஸ்டிங்காக இல்லை.
c ) இன்டெரெஸ்டிங்காக இருக்கும் மறுபதிப்பிடாத இரும்புக்கை மாயாவி கதைகளின் டிஜிட்டல் பிரிண்ட் இல்லை
ஸ்மாஷிங் 70 's :
என்னுடைய குழப்பம் தீர்ந்தது, நான் இதற்கு சந்தா கட்டுவதா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருந்தேன். இப்பொழுது முகர்வர்களுக்கு நீங்கள் கொடுப்பதினால், நான் என்னுடைய உறவினர் கடையிலேயே 4 புத்தகங்களையும் பெற்று கொள்வேன்.
குண்டு புக்ஸ் :
இந்த வருடம் ஏகப்பட்ட hardbound கவர் கொண்ட காமிக்ஸ் வரப்போவதில் சரியான குஷி. ஏனெனில் என்னுடைய லைப்ரரி ரூம் Showcase இல் அடுக்கி வைத்து பார்க்க அழகாக இருக்கும். ஜெய் 2022
துணிவே துணை :
நான் கிராபிக் நாவல் fan என்று பதிவு செய்ய விரும்புகிறேன்.
தோழனின் கதை 3 வாரங்களுக்கு முன் தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. கதை படித்தேன் முடித்தேன்.. முடிந்தவுடன் ங்ங்கே ... என்று முழித்தேன். ஆனால் கடைசி பக்கத்தில் ஆசிரியருடைய பின்னுரை அப்படியே என் மனதில் என்ன ஓடியதோ (அதாவது படித்தவுடன் எல்லோருக்கும் அந்த மொக்கை உணர்வு வரும் என்று தெரிந்திருக்கிறது) அதை அனுமானித்திருந்தார். அந்த பின்னுரை என்னை சாந்த படுத்தியது. டேய்.. இது ஒரு வித்தியாசமான பரிச்சர்த்த முயற்சி என்று. ஆனால் ப்ளாகில் இது ஆபாசம் ஆ வூ என்று சலம்பியதை பார்த்து இது uncut AXA போல இருக்குமோ என்று நினைத்து இருந்தேன். ஆனால் கதை படிக்கும்போது எனக்கு எதுவுமே உறுத்தவே இல்லை. இதுக்கா இதனை சலம்பல் என்று நினைத்து புன்முறுவலிட்டேன்.
புரியாது புதிர் :
சித்திரமும் கொலைப்பழக்கம் எனக்கு ரொம்ப புடித்து இருந்தது. ஆன்டி கிளைமாக்ஸில் நான் முட்டாளாக உணர்ந்தது என்னோவோ உண்மை தான் ஆனால் அந்த ட்விஸ்ட் தானே அந்த கதையின் அடித்தளம். கதையின் நாயகன் பெரிய ஹீரோ என்று நினைத்து கொண்டு கதை முடியும்போது அவன் முதலில் இருந்தே ஒரு அரை லூசு என்று தெரியும் போது பெரும்பாலான வாசகர்களுக்கு அது பிடிக்காமல் போய் இருக்க கூடும் என்று நினைக்கிறேன்.
அரை லூசு அல்ல சார் அவன் ; schizophrenia மனநோயாளி ! இரண்டுக்கும் வேற்றுமை உண்டல்லவா ?
Deleteவருத்தங்கள் :
ReplyDeleteஅசுர பூமியில் தோர்கள் வந்திருக்கவே கூடாது. தோர்கள் இப்பொழுது எல்லாம் ஒரு குண்டு புக் format என்று செட் ஆகி இருக்க, continuity இருக்கும் ஒரு கதையை ஏன் சிங்கள் ஷாட் புத்தகமாக கொண்டு வந்தீர்கள். தயவு செய்து தோர்கள் என்றால் என்றுமே குண்டு புக் என்றே இருக்கட்டும். நான் ஷெல்ப்பில் தோர்கள் புத்தகங்கள் வைக்கும்போது குண்டு புக், குண்டு புக், ஒல்லி பிச்சான், குண்டு புக், ஒல்லி என்று வைத்தால் நன்றாகவே இருக்கிறது.
எனக்கு புடித்த நீங்கள் ஒரே சீராக நச்சென்று வந்த ஒரே சீரிஸ் டுரங்கோ தான். படிப்பதற்கு, ஷெல்ப்பில் வைப்பதற்கு நன்றாக இருக்கிறது. இது போலவே அனைத்தும் வந்தால் சாலை சிறந்தது. 5 வருடம், 5 குண்டு புக். டுரங்கோ ஓவர் அண்ட் அவுட்.
அடுத்தது மொழிபெயர்ப்பில் வரும் சில வார்த்தைகள் ரொம்பவே ஓவர் யூஸ் செய்யப்பட்டு வருகிறது. நன்றாக இருப்பதென்பதற்காக ஒன்றையே திரும்ப திரும்ப சொன்னால் முதலில் சிரிப்பு வருவது நின்று விடுகிறது அதன் பிறகு சலிப்பு வருகிறது, இப்பொழுது அந்த வார்த்தை வந்தால் எரிச்சல் வருகிறது.
1) சார்வாள் - எங்கும் சார்வாள் எதிலும் சார்வாள் . டெக்ஸ், கிராபிக் நாவல், டிடெக்ட்டிவ் எல்லா இடத்திலும் இந்த வார்த்தை வருவது இப்பொழுது என்னை பொறுத்தவரையில் ரொம்பவே உறுத்துகிறது. என்னை பொறுத்தவரையில், சார்வாள் டெக்ஸ் கார்சனை வாருவதற்கும், கார்ட்டூன்களில் மட்டும் வந்தால் உறுத்தாது.
2 ) கச்சேரி, வாத்தியம், வாசிப்பது, ராகம் பாட வைப்பது, தாளம் போட வைப்பது - அடி பின்னுவதற்கு டெக்ஸ் மற்றும் கார்ஸன் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை. இந்த பேண்ட் கச்சேரி வசனங்களை விடுத்து, இந்த சந்தர்ப்பங்களில் வேறு புதிதான வார்த்தைகளை புகுத்தினால் ரொம்பவே refreshingaga இருக்கும் என்று நினைக்கிறேன்.
3 ) ஜாகை, சித்தே மற்றும் இன்னும் சில வார்த்தைகள்.
இந்த வார்த்தைகளுக்கு பதில் அதே பஞ்ச் உள்ள வேறு வார்த்தைகளை உபயோகித்தால் படிக்கும் எங்களுக்கு புதுமையாக இருக்கும் என்று சொல்ல விரும்புகிறேன்.
ஒரு டவுட்டு :
"சந்தா கட்டாதவன்லாம் மனுஷனா தெரியமாட்டானா?" என்று உடனே குரல் உசத்த எண்ணும் புயச்சீப் புயல்களுக்கு சற்றே 'ப்ரேக்' தந்த மாதிரியும் இருக்குமென்பதால் – சந்தாவில் இணைய இயலா நண்பர்களுக்குமே இந்த ஆப்ஷன் உண்டு – இந்த இதழுக்கு மட்டும் ரூ.1299 (கூரியர் சேர்த்து) முன்பணம் அனுப்பி, முன்பதிவு செய்திடும் பட்சத்தில்! அவர்களுமே முன்பதிவு செய்திட இறுதித் தேதி டிசம்பர் 5 !"
எதற்காக சந்தாதாரருக்கு 1199 ரூபாய், சந்தா இல்லாதவர்க்கு 1299 ரூபாய் ?? எதற்காக அந்த 100 ரூபாய் அதிகம் என்று தெரிந்து கொள்ளலாமா ? நானும் 70 's kid தான். நான் சந்தாதாரர் அல்ல ஆனால் அணைத்து புக் கலெக்ட் பண்ணுவபவன் தான். சந்தாதாரன் இல்லாததினால் நான் காமிக்ஸ் பிரியன் இல்லை என்று அர்த்தம் இல்லை. நான் ஒரு pure கலெக்டர். வாங்கி வைத்து விற்பவனும் அல்ல.
போன முறை, கழுகு வேட்டை என்னிடம் ஏற்கனவே உள்ளது என்பதால் நான் வாங்கவில்லை, ஆனால் அதில் வாசகர்களின் போட்டோ வந்தது. இந்த முறை அந்த option மிஸ் பண்ண விரும்பவில்லை.
இது சந்தாதாரர்களுக்கான உரிமை என்றால் நான் மனமுவந்து ஏற்று கொள்கிறேன். 1299 கொடுத்து முன்பதிவு அந்த புத்தகத்திற்கு மட்டும் செய்து கொள்கிறேன். நன்றி.
//எதற்காக சந்தாதாரருக்கு 1199 ரூபாய், சந்தா இல்லாதவர்க்கு 1299 ரூபாய் ?//
Deleteபுக்கின் விலை ரூ.1199 ...கூரியர் கட்டணம் ரூ.100 ; ஆக மொத்தம் 1299 ! இதிலென்ன வியப்பின் முகாந்திரம் சார் ?
சந்தாக்களில் உள்ளோருக்கு கூரியர் கட்டணங்கள் என்றைக்குமே கிடையாது ; அந்த சலுகை சந்தாவில் அல்லாதோருக்கு என்றைக்குமே கிடையாது ! Simple !
இந்த வருடம் எந்த ரீ பிரிந்தும் இல்லை ... சூப்பர்
ReplyDelete