Powered By Blogger

Monday, October 18, 2021

சில ஆணிகளும், ஒரு நேசமணியும் !!

 நண்பர்களே,

வணக்கம்.  "நெதத்துக்கும் ஒரு பதிவு" என்ற லாக்டௌன் தின ரவுசுகளின் போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாச்சும் டைப்படித்துத் தயாராக வைத்திருப்பதுண்டு - அவசியப்படும் வேளைகளில் பொசுக்கென்று upload செய்து விடலாமே என்ற எண்ணத்தில் ! போகிற போக்கில் அதனை இப்போதும் கூட தொடர்கதையாக்கிட்டால் தேவலாம் போலும் - நீங்கள் தெறிக்க விடும் விறுவிறுப்பைப் பார்க்கும் போது ! இப்போதெல்லாம் நான் கதைகளுக்கு நேரம் செலவிடுகிறேனோ - இல்லியோ, இங்கே செய்து வரும் காலட்சேபங்களின் பொருட்டு ஏகமாகவே நேரங்களை செலவிட்டு வருகிறேன் !! 

Anyways - உப பதிவு என்பதால் Insta Reels சைசில் குட்டியாய் ஒரு பதிவைப் போட்டுத் தாக்கிய கையோடு நவம்பர் இதழ்களின் last minute பணிகளுக்குள் குதித்திடவுள்ளேன் ! And காத்திருக்கும் Fifty & Forever ஸ்பெஷல் இதழின் loose ends-களை சரி செய்திட இந்த "உ.ப" வை பயன்படுத்திடலாமா folks ? கதைகள் தேர்வு ஆச்சு ; பணிகள் தடதடத்து வருகின்றன ; விலைகள் நிர்ணயம் செய்தாச்சு ; உட்பக்கங்களின் contents பற்றியும் பேசியாச்சு ! எஞ்சியிருப்பன இரண்டே சமாச்சாரங்கள் மட்டுமே  : 

1 .முத்து காமிக்சின் அந்த 1 to 457 அட்டைப்பட thumbnail அணிவகுப்பை தயார் செய்வதாயின் - 52 பக்கங்கள் - ரூ.60 என்ற விலையினில் இருந்திடும் !

2 .முத்துவின் முதல் இதழை அதே சைசில் ஒரு அச்சு அசல் வார்ப்பாய் மறுபதிப்பு செய்வதாயின் - 128 பக்கங்கள் - black & white - ரூ.90 விலை என்று அமைக்க வேண்டி வரும் !

So அட்டைப்பட அணிவகுப்பு + முதல் இதழின் replica : ஆக மொத்தம் ரூ.150 என்றாகிடும் !! அதாவது - ஒரு நார்மலான எண்ணிக்கையினிலான நண்பர்களாவது (around 500 at least) இதனை வாங்கிட ஆர்வம் காட்டிடும் பட்சத்தில் ! வெறும் ஐம்பதோ - நூறோ பேர் தான் இதற்கு இசைவு சொல்வார்களெனில், விலைகள் எகிறி விடும் & அத்தகைய சூழலில் இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதில் அர்த்தமே இராதும் தான் ! 

இதனை சந்தாவில் நான் நுழைக்கத் திட்டமிட்டிருக்கவில்லை & திட்டமிடுவதாய் எண்ணிடவுமில்லை - becos "எவன் கேட்டான் இதையெல்லாம் ? இந்தக் காசுக்கு அழகாய் ஒரு டெக்ஸ் புக்கை போட்டுட்டுப் போயிருக்கலாமே ?" என்ற கண்சிவத்தல்கள் தொடர்ந்திருக்கும் என்பதை நீங்களும் அறிவீர்கள் ; நானும் அறிவேன் ! So  "தேவையெனில் வாங்கிக்கோங்கோ" - என்ற option-ல் மட்டுமே இது இருக்க சாத்தியமாகிடும் ! நிஜத்தைச் சொல்வதானால் - இது முழுக்கவே ஒரு அலங்காரச் சமாச்சாரமாய் இருக்குமே தவிர்த்து, இதனில் வாசிப்புக்கென புதிதாய் ஏதும் இராது தான் ! ஆனால் நோஸ்டால்ஜியா பிரியர்களான உங்களுக்கு இது அவசியமென்று படும் பட்சத்தில் மட்டுமே திட்டமிடலாம் !! 

So சொல்லுங்கண்ணே - இது பிடுங்க அவசியப்படும் ஆணியா ? அல்லது இங்கே நேசமணி கான்டிராக்டருக்கு ஜோலியே இல்லியா ?

"அவசிய ஆணி" அணியினர் - "A - AA -1"  (Avasiya AAni)

என்றும் ;

"அவசியமில்லை" அணியினர் - "NO-NE -1" (நோ நேசமணி) 

என்றும் பதிவிடலாம் !!

அப்புறம் இந்தப் பதிவின் கேள்வி # 2 & ஒரு விதத்தில் ரொம்பவே அவசரமாய் உங்களின் பதில்களைக் கோரிடுவதுமே :

காத்திருக்கும் லக்கி லுக் டபுள் ஆல்பத்தில் - "தாயில்லாமல் டால்டனில்லை" கிளாசிக் மறுபதிப்பும் உண்டென்பதை அறிவீர்கள் ! அதன் எடிட்டிங் தான் இன்றிரவுக்கான எனது பணி ! வாசிக்கும் போது - ஹ்யூமர் content இன்னும் சற்றே மேம்படுத்தப்படலாம் என்றும் ; ரின்டின் கேனின் வசனங்களை கணிசமாகவே improve செய்திடலாம் என்றும் தோன்றியது ! உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ, அது எனக்குத் தெரியாது - ஆனால் post comeback , லக்கியின் கதைகளினில், ஜாலி ஜம்பரின் வசனங்களுக்கும், ரின்டின் கேனின் வரிகளுக்கும் ரொம்பவே கவனம் தந்து வந்திருக்கிறேன் ! இதனில் ரெண்டுவிதமான கருத்துக்கள் உண்டென்பதில் ரகசியங்களில்லை தான் ; "உன்னை இதெல்லாம் செய்யச் சொல்லிக் கேட்டேனா ?" என்று குரல் உசத்த ஒரு அணியுண்டு என்பதிலும் no secrets !! இதுவொரு புது ஆல்பத்தின் பணியாக இருப்பின், குரலை உசத்தினாலும் சரி, துடைப்பத்தை உசத்தினாலும் சரி, makes no difference to me என்றபடிக்கே எழுதிக் கொண்டே நகர்ந்திருப்பேன் ! ஆனால் "நான் 11 வயசிலே டியூஷனிலே ஒளிச்சு வைச்சுப் படித்த புக் இது ; இதில் நீ மாற்றம் செஞ்சு சொதப்பிட்டியே !!" ; "பஜ்ஜி சாப்டுட்டே வாசித்த நினைவுகளை மறுக்கா வரச் செய்யும் புக் இது - பஜ்ஜி தான் இன்னிக்கு வராதுன்னா, வரிகளை மாத்திப்புட்டு, அந்த நினைவுகளையும் வராமல் பண்ணிப்புட்டியே படுபாவி !!" என்ற விசனங்களும் ஆங்காங்கே ஒலிப்பதால், இந்தக் கேள்வியினைக் கேட்டு வைக்கிறேன் ! 

Again இங்கே - "மாற்றங்கள், முன்னேற்றங்கள்" என்ற ஆணிகள் அவசியமா ? இல்லாங்காட்டி "NO PLUCKING NEEDED-ஆ" ? எனது ஆதங்கம் என்னவெனில், இன்றைக்கு இந்த ஆல்பத்தைப் புதுசாய்ப் படிக்கக்கூடிய ஒரு casual வாசகருக்கு - இந்த பிளாஷ்பேக் சுமைகள் ஏதும் இராதெனும் போது, maybe சற்றே மெருகூட்டப்பட்ட காமெடி இந்த இதழை கூடுதலாய் ரசிக்கச் செய்திடுமே ? என்பதே !! அதே போல வாசிக்கவுள்ள அனைவருக்குமே  அந்த நோஸ்டால்ஜியா மோகம் இருந்திடுமென்றும் சொல்ல முடியாது தானே ? அவர்களுக்குமே மாற்றங்களில்லா பழைய மொழிபெயர்ப்பு, சுமார் 25 வருஷங்களுக்குப் பின்னான வாசிப்பின் போது - "ப்ச்...இவ்ளோ தானா ?" என்று நினைக்கச் செய்திட வாய்ப்புண்டு தானே  ? So your பதில்கள் ப்ளீச் :

"மாற்றங்கள் ஓ.கே" அணியெனும் பட்சத்தில் - "A-AA -2

என்றும்

"ஈயடிச்சான் காப்பியே மதி " அணியெனில் - "NO-NE -2"

என்றும் பதிவிடலாம் !!

கேள்வி # 3 & இப்பதிவின் இறுதிக் கேள்வியுமே & இது தற்போதைய திட்டமிடல்களுக்கு எவ்விதத்திலும் சம்பந்தம் கொண்டதல்ல ! 

மாலையில் வேறேதோ ஒரு தேடலின் போது கண்ணில்பட்டது ஒரு புது திகில் தொடர் ! அக்மார்க் அமானுஷ்யம் ; பேய் ; பிசாசு ; hauntings ரீதியிலான ஆக்கமது & நமக்கு முற்றிலும் புதியதொரு பப்ளீஷரின் படைப்பு ! இந்த ரகக் கதைகளுக்கு நம் மத்தியில் ஒரு readership இருக்கிறதா ? இருக்கென்றால் பரவலா ? இம்மியூண்டா ? என்பதைத் தெரிந்து கொள்ள மட்டும் ஆர்வம் மேலோங்கியது ! ஏன் கேட்கிறேனென்றால் - புதுசாய் எதைப் பார்த்தாலும் நாவில் ஜலம் ஊரும் அந்த 'கொயந்த புள்ளை' ஆர்வம் எனக்கு மட்டுப்பட்டிருக்கவில்லை & என்னையாய் விட்டால், இந்நேரத்துக்கு அந்த பப்ளீஷரை குடலை உருவத் துவங்கியிருப்பேன் தான் ! ஆனால் நாம் அந்த ஜானரில் ஆர்வம் கொண்டிருப்போமா ? இல்லையா ? என்ற புரிதல் அதற்கு முன்பான அவசியமென்று சொல்லி எனக்கு நானே பிரேக் போட்டு வைத்திருக்கிறேன் ! Of course நீங்கள் ஓ.கே. சொன்னாலுமே அதனை 2023-க்கு முன்பாய் வெளியிட நம்மிடம் ஸ்லாட் லேது தான் ; but ஒரு அட்டவணையினை முடிச்ச கையோடே மண்டைக்குள் அடுத்த ரவுண்டுக்கான சக்கரங்கள் கரும்புச்சாறு மிஷினைப் போல சுழல்வது வாடிக்கையே ! So அதன் பொருட்டே இக்கேள்வி : 

பேய் வேணுமா ? வேணாமா ?

வாங்கலாமா ? வேணாமா ?

"வேணும்" எனில் - "A -AA 3"

என்றும்

"நீ படுத்துறே பாடே போதும், இதிலே புதுசா பேய் வேறேயா ?" அணியாய் நீங்கள் இருப்பின் - "NO -NE 3 "

என்றும் பதிவிடலாம் ! So இந்த "ஆணிகளும், நேசமணியும்" பதிவுக்கு அலைகடலெனத் திரண்டு வாரீர் - என்றபடிக்கே நான் கிளம்புகிறேன் ! Bye folks !! See you around !!

338 comments:

 1. வணக்கம் நண்பர்களே...


  வணக்கம் ஆசிரியர் சார்.

  ReplyDelete
 2. In fifty years 1 paisa's value has become 1 rupee :-)

  ReplyDelete
 3. A - AA -1
  A - AA -2
  NO -NE 3

  ஆனாக்கா பேய்க்கதைகளை சந்தாவில் சேக்காம தனியா வெளியிட்டேங்கன்னா நோ objection - நான் வாங்காம தப்பிச்சுருவேன் !

  ReplyDelete
 4. Replies
  1. அட டே வாங்கோ நண்பரே... ரொம்ப நாளாச்சி பார்த்து...

   Delete
 5. A - AA - 1,2,3

  முதல் கேள்வியில் 500 நம்பர்கள் குறுகிய காலத்தில் வருவது கண்டிப்பாய் கஷ்டம் என்று நினைக்கிறேன் சார்.

  ஆனால் முடிந்ததும் அது வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். முன்பதிவு இல்லாமல் ஒரு 500 புத்தகம் நீங்கள் தயார் செய்ய முடியுமா?

  இரண்டாம் கேள்விக்கு கண்டிப்பாக நகைச்சுவை மேம்படுத்த தேவை இருக்குமா வாய்ப்பு இருக்குமா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

  கண்டிப்பாக மற்ற genre போகலாம் சோக கதைகள் போர் கதைகள் மட்டுமே க்ராபிக் நாவல்கள் அல்ல நீங்களே அல்மோஸ்ட் பேய் போன்ற திகில் கதைகள் கொடுத்துள்ளீர்கள் அது வெற்றியும் கொண்டுள்ளது ஆகையால் கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.

  ReplyDelete
  Replies
  1. தாயில்லாமல் டால்டனில்லை அந்நாட்களின் புக்கில் டீனேஜராய் கலக்குறீங்க கிருஷ்ணா ! :-)

   Delete
  2. அடக்கடவுளே! அந்தக் கதையில் டீனேஜ் டால்டன்களில் ஒருத்தராய் நம்ம கிருஷ்ணாவே ஆக்ட் கொடுத்திருக்காரா?!! :D

   Delete
  3. நன்றி சார் நினைவில் வைத்திருப்பதற்கு, +12 வரை பள்ளிக்கு நாமம் போட்டுக்கொண்டுதான் போகவேண்டும் என்று தாயார் கட்டளை முடியை நடுவகிடெடுத்து அதிகமாக ஹிப்பி போல வைத்திருப்பது அப்பொழுதைய ஆவல். இரண்டும் சேர்த்து புகைப்படமாக அந்த புத்தகத்தில் வந்திருக்கும் 🙏🏼🙏🏼🙏🏼

   மற்றவர்கள் பெயர் புகைப்படம் பார்த்து நப்பாசையில் எப்பொழுதோ எழுதிய கடிதம் புகைப்படம் அந்த புத்தகத்தில் வாசகர் அறிமுகமாக வந்தது. நினைவை மீட்டதற்கு நன்றிகள் சார் 🙏🏼🙏🏼🙏🏼😀

   Delete
  4. //அடக்கடவுளே! அந்தக் கதையில் டீனேஜ் டால்டன்களில் ஒருத்தராய் நம்ம கிருஷ்ணாவே ஆக்ட் கொடுத்திருக்காரா//

   நகைச்சுவையை இங்கிருந்தே ஆரம்பிக்கிறீர்களா 😀

   Delete
  5. காமிக்ஸ் க்ளப் பகுதியில் 18 வயது கட்டிளங்காளையாக அறிமுகப் படலம்.

   Delete
  6. //A - AA - 1,2,3

   முதல் கேள்வியில் 500 நம்பர்கள் குறுகிய காலத்தில் வருவது கண்டிப்பாய் கஷ்டம் என்று நினைக்கிறேன் சார்.

   ஆனால் முடிந்ததும் அது வேண்டும் என்பவர்கள் கண்டிப்பாக இருப்பார்கள். முன்பதிவு இல்லாமல் ஒரு 500 புத்தகம் நீங்கள் தயார் செய்ய முடியுமா?

   இரண்டாம் கேள்விக்கு கண்டிப்பாக நகைச்சுவை மேம்படுத்த தேவை இருக்குமா வாய்ப்பு இருக்குமா என்பதை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

   கண்டிப்பாக மற்ற genre போகலாம் சோக கதைகள் போர் கதைகள் மட்டுமே க்ராபிக் நாவல்கள் அல்ல நீங்களே அல்மோஸ்ட் பேய் போன்ற திகில் கதைகள் கொடுத்துள்ளீர்கள் அது வெற்றியும் கொண்டுள்ளது ஆகையால் கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.//

   +1

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
 6. A AA1

  A AA2

  A AA3

  1.பழசு வேணும்

  2. பழசு புதுசா வேணும்

  3. புதுசு வேணும்

  :-)

  ReplyDelete
  Replies
  1. 3 புதுசு பேயாய் வேணும்! ;)

   Delete
  2. நன்றி செனா அனா சார்.

   Delete
 7. ஆஹா..புத்தம்புதிய பதிவு...

  ReplyDelete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. A AA -1
  A AA -2
  A AA -3

  பேய் கதைகள் போட்டு விடுங்க சார்.

  ReplyDelete
 11. Edi Sirm.
  வாய்ப்பிருந்தா GA sir இப்ப "நந்தினி 440 volts" வெளியிட்ட மாதிரி பழைய முத்து/லயன் காமிக்ஸ்களை 3 கதை ரூ.300-450 விலையிலே வெளியிடுங்க. என்னை மாதிரி காமிக்ஸ் கலக்டருசுக்கு ரொம்ப உபயோகமா இருக்கும்.

  ReplyDelete
 12. A AA1

  A AA2

  A AA3

  1.பழசு வேணும்

  2. பழசு புதுசா வேணும்

  3. புதுசு வேணும்

  ReplyDelete
 13. பேய் வேணும்

  லக்கி அதே மொழி போதும்

  150 ஓகே

  ReplyDelete
 14. A AA -1
  A AA -2
  A AA -3

  பேஷ் பேஷ்.. பேய்னா எனக்கு ரொம்ப இஷ்டம்..

  ReplyDelete
  Replies
  1. பேய்னா.. இஷ்டமா?!!! புதுஷ்ஷா இருக்கு..!!😱😱

   Delete
 15. A AA1

  A AA2

  A AA3

  1.பழசு வேணும்

  2. பழசு புதுசா வேணும்

  3. புதுசு வேணும்

  இது முழுக்கவே ஒரு அலங்காரச் சமாச்சாரமாய் இருக்குமே தவிர்த்து/// ஐம்பதாவது வருசம் அன்னாடுமும் வர்றதில்லிங்களே.. அலங்காரம் பண்ணினா என்ன தப்புங்கறேன்..

  ReplyDelete
  Replies
  1. ///ஐம்பதாவது வருசம் அன்னாடுமும் வர்றதில்லிங்களே.. அலங்காரம் பண்ணினா என்ன தப்புங்கறேன்..///

   அப்படிக்கேளுங்க ரம்மி!!

   Delete
  2. வழிமொழிகின்றேன் .Thx ரம்மி.

   Delete
 16. பேய் வேணுமா ? வேணாமா ?

  கண்டிப்பா போடுங்க.. கடைசியா பேய்கதை பார்த்தது கலியாண ஆல்பம் பார்த்தப்போ தான்..

  ReplyDelete
  Replies
  1. ஹிஹி! நான் இப்பவரைக்கும் என் கல்யாண ஆல்பத்தை ஒருவாட்டிக்கூட முழுசா பார்த்ததில்லை!!

   Delete
  2. விஜய் @ பழகிய பிறகும் பயம் போகவில்லையா :+)

   Delete
  3. தொடர்ந்து உயிர்பிழைத்திருக்க இந்த பயம் அவசியமாகிறது, PfT! ;)

   Delete
 17. எப்பொழுதாவது நேரம் கிடைத்து,பழைய லக்கிலூக் இதழ்களையோ, சிக்பில் இதழ்களையோ புரட்டும்போது சில இடங்களிலாவது 'அட! இந்த வசனத்தில் இன்னும் கொஞ்சம் ஸ்கோர் பண்ணியிருக்கலாமே?!' என்று தோன்றியதுண்டுதான்!

  என்னைக் கேட்டால் பழைய கார்ட்டூன் கதைகளைக் காட்டிலும், தற்போது வெளியாகிடும் கார்ட்டூன் கதைகளில் நிறையவே ஹாஸ்ய எழுத்துநடையோடு நிறைவாய் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று உறுதியாய்ச் சொல்லுவேன்!

  ReplyDelete
  Replies
  1. //என்னைக் கேட்டால் பழைய கார்ட்டூன் கதைகளைக் காட்டிலும், தற்போது வெளியாகிடும் கார்ட்டூன் கதைகளில் நிறையவே ஹாஸ்ய எழுத்துநடையோடு நிறைவாய் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று உறுதியாய்ச் சொல்லுவேன்!//


   நாங்க தான் உங்களெல்லாம் கேக்க மாட்டோமே ?

   Delete
  2. ///நாங்க தான் உங்களெல்லாம் கேக்க மாட்டோமே ?///

   அப்படீன்னா மேலே நான் எழுதியிருப்பதில் 'என்னைக் கேட்டால்' என்பதை எடுத்துவிட்டு 'எனக்கு நானே ஏதாவது பிதற்றினால்' என்று மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

   Delete
  3. கேக்காட்டியும் சொல்லுவோம்!!!

   க்ளிப்டன்..

   பக்கம் 9

   ஸர் டெரன்ஸ்: ஸ்டீபன்! ஆத்திர அவசரங்களுக்குத் தோள் கொடுக்க இந்த ஆபிஸிலே உன்னை விட்டா வேற யாருமே கிடையாதுங்கறது உனக்குத் தெரியும்தானே

   இதுக்கு அப்புறம் வர்ற படம்..

   Finest example of your uncanny ability of translation..

   Sentence phrasing ,chosen words ..marvellous sir..

   படிக்கும்போது அப்படி சிரிப்பு வந்தது..   Delete
  4. பல நேரங்களில் அந்த பிரேம்களில் உள்ளோரின் ரியாக்ஷன்களே நம்மிடமிருந்து வரிகளை ஈர்த்து விடும் சார் !

   Delete
 18. A-AA 3.
  கருப்பு கிழவியின் கதை போல இருந்தால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 19. கண்ணே கொலைமானே 
   
  இந்தக்கதை முழுவதும் ஆவி உலகில் நடக்கிறது. சித்திரங்களிலும் Tex, Kid, மற்ற கதாப்பாத்திரங்கள் அனைவரும் பேயைப்போலவே வரையப்பட்டுள்ளனர். நடக்கும் ஊரும் ஒரு கோஸ்ட் டவுன் தான்.

  இக்கதையில் வரும் ஒரே மனுஷ ரூபம் Alice. காணாமல் போன தங்கையை தேடி ஒரு பேய் நகரத்துக்கு சில பேய்கள் வருகின்றன. வில்லன் பேய்கள் அங்கே முகாமிட்டுள்ளன. டெக்ஸின் ஆவியும் அவரது மகனின் ஆவியும் ...

  சாரி கைஸ் - கதையின் சித்திரங்களைப்பார்த்தால் தசாவதாரம் கமல் (ஹீரோ கமல் தவிர) தான் ஞாபகம் வருகிறார் - புஸ்தகம் முழுக்க அவ்வளவு பேய் முகங்கள் :-)

  பேய் வேகத்தில் பயணிக்கும் ஒரு பேய்க்கதை ! ஆவி பறக்கும் action !

  மதிப்பெண் : 9/10

  ReplyDelete
  Replies
  1. ///காணாமல் போன தங்கையை தேடி ஒரு பேய் நகரத்துக்கு சில பேய்கள் வருகின்றன. வில்லன் பேய்கள் அங்கே முகாமிட்டுள்ளன. டெக்ஸின் ஆவியும் அவரது மகனின் ஆவியும் ...///

   ஹிஹி! ஒருவகையில் இதுவும் சரிதான்!
   இதில் வரும் உண்மைப் பேய் உண்மையில் யாரையுமே துன்புறுத்துவதில்லை!

   ஆனால் அதில் வரும் மற்ற கேரக்டர்கள் (டெக்ஸ், கிட் உட்பட) அனைவருமே கொலை உள்ளிட்ட மாபாதகங்களைச் செய்து தள்ளுகிறார்கள்!

   எனில், உங்கள் கருத்து சரியானதே!

   Delete
  2. கவனச்சீங்களா....பேய்க்கு காலிருக்கா....ஆனா பேய்கள எனக்கும் பிடிச்சதாலோ என்னவோ இந்த ஓவியங்க கதையோட விறுவிறுப்பாக எனக்கு பிடிச்சது...மழையோடிழையும் கோடுகள் போலழகு

   Delete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. First : A - AA ONE

  Second : A - AA TWO

  Third : A - AA THREE

  ReplyDelete
 22. அன்பு ஆசிரியருக்கு...
  காமிக்ஸ் ஸ்நேகங்களுக்கு...

  அடிக்கடி பதிவுகள் பாக்கறது மகிழ்ச்சி.

  1)முத்துவின் முத்தான முதல் பதிப்பை வேண்டாம்னு சொல்லுவாங்களா? நம்ம நண்பர்கள்? குடுங்க சார்.
  காமிக்ஸ் வாசகர்களிடம் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்த முதல் புத்தகம்.
  அதுக்கும் ஒரு "க்" வெச்சிட்டீங்க
  500 பேர் கேட்டால் என. இல்லைனா முத்து50 கூட இணைத்து விடுங்கள் சார்.
  AAA1

  2) AAA2---பழைய பதிவை மாற்றினால் ஏற்கனவே படித்தவர்களும் படிக்க சுவையாக இருக்கும் தான். மாற்றாமலிருந்தால் பழையதை படித்தவர்களுக்கு புதிதாக படிக்க எதும் இருக்காது. புதுப்பித்தலே நல்லது.

  3) AAA3---இதை கொஞ்ச நாளாக எதிர்பார்த்தது தான்.
  பழைய திகில் காமிக்ஸ் கதைகளை மறுபதிப்பிட்டால் என்ன என்று?.
  ஆனால் நம் மக்கள் காட்டிய "ஆர்வத்தில்"
  மறுபதிப்புக்கள் வருவது மிகசிரமம் என புரிந்தது.
  நீங்க கேட்ட கேள்வி, திகில் காமிக்ஸ் புதிதாக தொடங்கப்பட்ட போது கேட்டது போலவே உள்ளது. ஆக்சன், த்ரில்லர்,கி.நா,கார்டூன் என தொடர்ந்து வருவதால் சற்று தொட்டுக்க ஊறுகாய் போல திகில் கதைகள் வருவது வரவேற்கத் தக்கதே சார். சற்று முன்னோக்கி செல்ல மாற்றங்கள் தேவை.
  2022ல்லேயே சற்று நெருக்கி இவைகளை கொண்டு வந்தால் மகிழ்ச்சியே.
  நம்ம மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
  அவர்களுக்கு...
  நீங்க திகில் காமிக்ஸ் கதைகளை மறந்திருக்க மாட்டீர்கள். அன்று வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற காமிக்ஸ். நல்ல தரமான கதைகள், சித்திரங்கள் என 3 ரூபாயில் வெளிவந்த இதழ்கள், நின்று விட்டது வருத்தமே. அதை தீர்க்கும் விதமாக,
  இந்த பமுயற்சியை தொடங்கிய ஆசிரியருக்கு உங்கள் ஒத்துழைப்பை தாருங்கள்.
  நல்ல கதைகளை வாசிப்போம்.
  காமிக்ஸை நேசிப்போம்.

  மீண்டும் அடுத்த பதிவில் 🌹..

  ReplyDelete
 23. A-AA1
  A-AA2
  A-AA3
  கறுப்பு கிழவி இல்லாத குறையினை இது தீர்க்கும் சார் . உங்களுக்கு புண்ணியமா போகும் அண்ணாச்சி . போடுங்க அண்ணாச்சி போடுங்க .

  ReplyDelete
 24. முதல் கேள்விக்கு A-AA-1

  இரண்டாவது கேள்விக்கு A-AA-2
  தாயில்லாமல் டால்டனில்லை முதல் பதிப்பு பெரும்பான்மை வாசகரிடம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.. ஆகையால் பழைய வசனம்தான் வேண்டுமெனில் அதை வாசித்து கொள்ளலாம்.

  அந்த கோஸ்ட் கதைக்கு A-AA-3

  ReplyDelete
 25. கேள்வி #1 - A-AA-1
  கேள்வி #2 - A-AA-2
  கேள்வி #3 - A-AA-3

  ReplyDelete
 26. A-AA-1
  A-AA-1
  A-AA-1


  "காண்டிராக்ட்காரார் நேசமணிக்கு" நச்சுன்னு மண்டையில சுத்தியலால போட்ட மாதிரி, காமிக்ஸ் படிக்கறவங்க எல்லாருமே இன்னும் "கொயந்த புள்ளைங்கதான்" இந்த பதிவு உணர்த்தறது ஆபிஜர்..

  ReplyDelete
 27. 1. NO-NE -1-(அட்டைப் படத்தில் பெரிதாய் ஆர்வமில்லை,மாயாவி சிங்கிள் சிங்கமாய் வந்தால் மகிழ்ச்சி,எனினும் இறுதி முடிவு பெரும்பான்மையைப் பொறுத்துதானே முடிவெடுப்பீர்கள்).
  2.A-AA -2"-(பட்டி டிங்கரிங் தேவை)
  3.NO -NE 3 -(பெரிதாய் ஆர்வமில்லை,தமிழ் சினிமா பேய்கள் காமெடி பீஸ்கள் ஆகி விட்டன,இது எப்படியோ தெரியலை)

  ReplyDelete
 28. Even now we like aranmanai, kanchana, Annabelle, conjuring and some horror series in netflix.

  Editor s humor sense has kept on increasing. Example this post itself was very humorous. Deadwood dick, current lucky translations, Carson s oneliners, smurfs, and various cartoon translations are so funny. It's way funnier and refreshing than 80s and 90s translations.

  Wrappers ok as separate book. Everyday my car drinks 300 rupees petrol. 150 is nothing in today s world.

  First mutually, I have no interest. I nowadays find classics so so boring. But since it's a combo with wrappers, I say yes.

  So here goes my choices

  AAA1
  AAA2
  AAA3

  ReplyDelete
 29. 3 கேள்விக்குமே யெஸ் என்பதே பதில் . கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 30. ஏஜண்ட் சிஸ்கோ. சத்தமாயொரு மௌனம். ஜேஸன் ப்ரைஸ் & arsமேக்னா ஓவியராங்க சார். கரூர் ராஜ சேகரன்

  ReplyDelete
 31. புது மொழிப்பெயர்ப்பை தாராளமாக படைக்கலாம் சார்...நோ ப்ராப்ளம்..


  பேய் கதை முயற்சிக்கலாம் சார் ..நோ ப்ராப்ளம்..

  ReplyDelete
 32. முதல் வினாவிற்கு ரெண்டு பக்கமும் மனசு போய்ட்டு வருது ...எனவே தீர்ப்பின் படி எனது சாயல்..:-)

  ReplyDelete

 33. A AA1

  A AA2

  A AA3

  1.பழசு வேணும்

  2. பழசு புதுசா வேணும்

  3. புதுசு வேணும்... ( ஆனாக்க பேய் புக்க படிக்க தான் பயம்.. மற்றபடி I Love பேய்.. )

  ReplyDelete
 34. மறுபதிப்பு , மறு மறுபதிப்பு.
  இ கை மாயாவி ஏற்கனவே மறுபதிப்பாயிருச்சேங்க. மறுபடியும் மறுபதிப்பா? வேறகதை குடுங்க சார்.
  பிறகு முத்து 50 1200க்கு வாங்கறோம்.
  அதுகூட முத்துலிஸ்ட இலவச இணப்பா குடுத்தா என்ன? அதுக்கு தனியா 60?.
  ஒரு சிறப்புமலர் வருது, அதை தனித்தனியா இப்படியா பிரிச்சு போடூவீங்க? 1200கூட 100ரூபா சேத்து எல்லாத்தையும் மு50 லயே கொண்டு வந்தால் கூட போதுமே.

  ReplyDelete
 35. "மாற்றங்கள் ஓ.கே" அணியெனும் பட்சத்தில் - "A-AA -2

  இந்த புக்க இப்போத்தான் படிக்கப்போறேன்..Im fine with மாற்றம்/முன்னேற்றம்.

  நம்மூர் style la decent ஆ வர பேய்ன்னா Ok ...English படத்துதுல வரமாதிரி உடம்பெல்லாம் கிழிச்சகிட்டு அங்கங்க ஒழுகிட்டு ...உடம்பெல்லாம் புழுவோட வர்ர பேய்னா ...வானாம் சார்.

  ReplyDelete
  Replies
  1. மாயயாவி புக் நோ Comments....வெளியிட்டால் காசுகொடுத்துத வாங்கி படிப்பேன் ...இல்லைன்னாலு என் மட்டில் பெரிய ஏமாற்றம் இருக்காது ...Hence my vote is ' இங்க ஒரு குத்து ...அங்க ஒரு குத்து '

   Delete
  2. ///நம்மூர் style la decent ஆ வர பேய்ன்னா Ok ...English படத்துதுல வரமாதிரி உடம்பெல்லாம் கிழிச்சகிட்டு அங்கங்க ஒழுகிட்டு ...உடம்பெல்லாம் புழுவோட வர்ர பேய்னா ...வானாம் சார்.////

   கல்யாணமாலை நிகழ்ச்சில மணமகன் தன்னோட எதிர்பார்ப்பைச் சொல்ற மாதிரியே சொல்றீங்களே சரவணன்?!!😁😁😁

   Delete
  3. //கல்யாணமாலை நிகழ்ச்சில மணமகன் தன்னோட எதிர்பார்ப்பைச் சொல்ற மாதிரியே சொல்றீங்களே சரவணன்?!!//

   :-)))))

   Delete
  4. ///
   நம்மூர் style la decent ஆ வர பேய்ன்னா Ok ...English படத்துதுல வரமாதிரி உடம்பெல்லாம் கிழிச்சகிட்டு அங்கங்க ஒழுகிட்டு ...உடம்பெல்லாம் புழுவோட வர்ர பேய்னா ...வானாம் சார்.///

   ---ஆம்...அதை பார்க்க ஒரு மாதிரியா இருக்கும்.. அதான் நானும் வேணாம்னு வாக்களித்துள்ளேன்...

   அந்த ஏலியன் படங்களும் அதுதான்...ஜல்லு ஒழுகிட்டு பார்க்கவே உவ்வேனு....

   Delete
  5. பொத்தம் பொதுவா வேணான்னு சொல்றத விட செலக்டிவான கதைகளை போடலாம் ...சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த 'தனியே தன்ன்னந்தனியே' மாதிரி. நான் சின்ன வயதில் இது மாதிரி கதைகள் 4 இல்லேன்னா 5 பக்கங்களில் நறுக்கு தெறித்து போல் எதிர்பாராத Climax twist டோடு இருக்கு ...அது போல அமானுஷ்ய கதைகள் வந்தால் நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.

   Delete
 36. This comment has been removed by the author.

  ReplyDelete
 37. முதல் கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை.. இரண்டாவது கேள்விக்கு A AA2 (ஏன்னா நானெல்லாம் புதுவரவாச்சே..) மூன்றாவது கேள்விக்கும் A AA3 தான்.. எவ்ளோ நாள் மண்டை பொளக்கும் வன்மேற்கில் திரிவது.. கொஞ்ச நாள் பேய் சகவாசம் வெச்சு பாக்கலாம்.. 😁😁

  ReplyDelete
  Replies
  1. // கொஞ்ச நாள் பேய் சகவாசம் வெச்சு பாக்கலாம் //

   :-):-) பேச்சிலர் என்ற தைரியம் :-)

   Delete
 38. தாயில்லாமல் டால்டன் இல்லை மூன்று மாதங்களுக்கு முன்னர் மறுவாசிப்பு செய்து எனது குழந்தைகளுக்கு கதை சொன்னேன். பக்கத்துக்கு பக்கம் சிரிப்புக்கு உத்திரவாதம் உள்ள கதை. செம கதை. படிக்கும் போது ஆசிரியர் இதனை இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாம் என பல இடங்களில் தோன்றியது.

  இதன் டயலாக்குகளை நீங்கள் மெருகேற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் மேலும் புதிதாக படிப்பவர்களுக்கு இன்னும் நன்றாக இருக்கும்.

  "மாற்றங்கள் ஓ.கே" அணியெனும் பட்சத்தில் - "A-AA -2"

  ReplyDelete
 39. பேய் கதை - "வேணும்" எனில் - "A -AA 3"

  ReplyDelete
 40. 1 : A - AA -1 அவசிய ஆணி!

  2 : PASS

  3 : A - AA -3 பேய் வேணும்!


  பேய் வேணுமா ? வேணாமா ?

  எனக்குப் பேய் கதைகள் என்றால் உயிர்! செத்தப் பிறகு, நம் உயிரும் சிறிது காலம் பேயாகத் தானே மாறுகிறது?! ஹி.. ஹி..

  இப்போதெல்லாம் பேய்களை ஆங்காங்கேப் பார்க்க முடியாவிட்டாலும் - இவ்வுலகில் பேய்கள் இருப்பது உண்மையோ உண்மை!

  என் சிறுவயதில் பேய்கள் என்றால் அவ்வளவு பயம் எனக்கு! இதுவரை பேய்களைக் கண்கூடாகப் பார்க்காவிட்டாலும், அச்சம் தரும் நேரிடையான சம்பவங்கள், அனுபவமாக குவிந்து இருக்கிறது! நிம்மதி இழந்து பரிதவித்த இளவயது பெண் பேய்கள் முதல், உயிர் காவு வாங்கும் கிணற்றுப் பூதங்கள் வரை - உண்மைச் சம்பவங்கள் எனக்குள் புதைந்து கிடக்கின்றன!

  இத்தனைக்கும் நான் கிராமத்தில் வசித்தவன் அல்ல, மெட்ரோ சிட்டியான சென்னை சாலிகிராமம் தான் எனது ஊர்!

  அமானுஷ்யக் கதைகளில் வரும் பயம் கலந்த ஈர்ப்பும், மெய்மறந்த இலயிப்பும் நமது காமிக்ஸ் வாசிப்பை - இன்னொரு தடத்தில் வெற்றிகரமாக அழைத்துச் செல்லும் - பேய் கதை வேணும் என்பவர்களால்!

  ReplyDelete
 41. A-AA -1 (முத்து முதல் இதழ் மட்டும். வெறும் அட்டைப்படங்கள் மட்டும் எனக்கு ஏற்புடையது அல்ல. படிக்காத கதைகளை பார்த்து ஏக்கம் வரும். ஆனால் முதல் இதழை இழக்க விரும்பவில்லை. 😊 )
  A-AA-2
  A-AA-3

  ReplyDelete
 42. மாயாவி கதை ஓகே ஆனால் அட்டைப்படம் thumbnail size வருவது பெரிய ஆர்வத்தை கொடுக்கவில்லை. இதில் ஏதேனும் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும்.

  நமது நண்பர்களுக்காக ஓகே A - AA -1

  ReplyDelete
  Replies
  1. விஜயன் சார்,
   மாயாவியின் மறுபதிப்பு காணாத கதைகளை பார்க்க ஆவல், ஆனால் அதிலுள்ள சிரமங்களை சொல்லி இருந்தீர்கள், ஒருவேளை டிசெம்பருக்குள் மறுபதிப்பு காணாத கதைகள் கிடைத்தால் அதனை வெளிஈடுங்கள் இல்லை என்றால் மாயாவியின் முதல் கதையை கொடுங்கள்!

   ஒருவேளை நண்பர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருப்பதற்கு தயார் என்றால் இதுவரை மறுபதிப்பு செய்யாத கதைகள் அடுத்தவருடம் தயாரானவுடன் எங்களுக்கு கொடுங்கள்! மாயாவி பிடிக்கும் ஆனால் மறுபதிப்பு செய்யாத கதைகள் கிடைத்தால் மெகா கொண்டாட்டமாக அமையும்!

   Delete
  2. எல50ம் ஆண்டில் முதலாமாண்டை முடிச்சுப் போடும் நினைவுத் திட்டம் இது ....சலம்பாம வாங்கிப் போடு...மறுபதிப்பு காணா கதைவள பொறவு பாம்பம்ல...அதான்70ல மறுபதிப்பே காணா கதைல வருத

   Delete
 43. ஆண்கள் - பேய்கதைகளை விரும்பிட ஒரு காரணமுண்டு! இதுபோன்ற கதைகளைப் படித்து அவர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர்!

  பெண்கள் - பேய்கதைகளை விரும்பிட ஒரு காரணமுண்டு! இதுபோன்ற கதைகளைப் படித்து அவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்கின்றனர்!

  ReplyDelete
 44. வணக்கம் நண்பர்களே!

  ReplyDelete
  Replies
  1. ஆணி-1: அட்டைப்படங்களின் அணிவகுப்பை அவசியம் எதிர்பார்க்கிறேன். அதேசமயம் முத்து முதல் இதழ் பலமுறை மறுபதிப்பு ஆனதுதானே? Replica நண்பர்களின் ஆதரவுக்கு ஏற்ப...

   A-AA1

   ஆணி-2: காமெடி வசனங்களை காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவது அவசியம்தான் சார்! ஆனால் அதை டெக்ஸ் மறுபதிப்புகளில் அது அவசியமில்லை என்றே தோன்றுகிறது. (கார்சனின் கடந்த காலம் பாட்டுக்கு கொடி பிடிப்பவர்கள் மத்தியில் நானும் இருக்கிறேன் சார்! )

   A-AA2

   ஆணி-3: நமது வெளியீடுகளில் ஹாரர் ஜானருக்கு ஒரு வெற்றிடம் இருப்பதாகவே தோன்றுகிறது. அவசியம் முயற்சிக்கலாம்...
   (பேய்க்கதைகள்னா அமானுஷ்ய கதைகள் தானே சார்... இந்த ஜோம்பிகள்னா கொஞ்சம் தள்ளியே நின்னுக்கலாம். அப்புறம் டெக்ஸ் கதைகளிலேயே மோரிஸ்கோ எட்டிப் பார்த்தால் எனக்கு டபுள் குஷி)

   A-AA3

   Delete
 45. NO-NE1,

  (இரும்புக்கை மாயாவி மட்டும் வேணும்ங்கிற option உண்டுங்களா?)

  A-AA2,

  A-AA3.

  ReplyDelete
  Replies
  1. // (இரும்புக்கை மாயாவி மட்டும் வேணும்ங்கிற option உண்டுங்களா?) //

   Very simple! மாயாவி புத்தகத்தை நீங்கள் வைத்து கொண்டு, அட்டைப்பட அணிவகுப்பை ஏலம் போட்டு விடுங்கள் :-)

   Delete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. NO NE 1
  (Thumbnail size is sort of deal breaker sir. Sorry)
  A AA 2
  A AA 3

  ReplyDelete
 48. ####பேய் வேணுமா ? வேணாமா ?

  வாங்கலாமா ? வேணாமா ?#####

  பேய், பிசாசு, கறுப்பு கிழவி கதைகள் மாதிரி இல்லாம,
  ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி
  ( ஜேசன் ப்ரைஸ்) ஒரு மூனு பாக அமானுஷ்ய கதை வந்ததே அது மாதிரி வந்தா நல்லா இருக்கும் சார்..

  ReplyDelete
  Replies
  1. சரிதான்....ஆனா இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சக்கயரையாலைதான...கிழவியாதும் வரட்டுமேன்னு சபலமும் வருது...பேய பாத்தே ஆகனும்

   Delete
 49. A - AA -1

  லுக்கிலுக் இன்னும் வராத கதைகள் இருக்கும் போது,,திரும்ப வருவது OVERDOSE.

  A - AA -3

  ReplyDelete
 50. A - AA -1
  A - AA -2
  A - AA -3

  மறுபதிப்புகளில் நிச்சயமாக வசனங்களில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் சார். (டெக்ஸ் வில்லர் புத்தகங்கள் உட்பட)

  அமானுஸ்ய/பேய் கதைகள் எப்பொழுதுமே hit or miss ரகங்களே. நம்மிடம் தான் ஜம்போ தடங்கள் இருக்கின்றனவே. நம்மிடம் இல்லாத ஃப்ளேவர். புதிய முயற்சிகளுக்கு எப்பொழுதுமே Thumbs up. :)

  மாயாவி தாடையில் குத்து விடும் காமிக்ஸ்களை மட்டுமே அறிந்தவனுக்கு, ஒரு பள்ளி விடுமுறையில் திருமங்கலம் ரோட்டுக் கடை ஒன்றில் கறுப்பு கிழவி கதை மூலமாகவே லயன்/முத்து குழுமம் அறிமுகம். 12 வயதில் எனக்கு அது பெரிய தொகை. நீண்ட நேரமாக கடைவாசலில் நின்று வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு இருந்த மொத்த காசிற்கும், கிழவியாரையும் ரிப்போட்டர் ஜானியின் ஊடு சூனியத்தையும் வாங்கினேன். Never regretted since.

  ReplyDelete
 51. NO NE 1 - தனி தனியாக கிடைத்தால் அட்டை படத்திற்கு மட்டும் OK.

  A AA 2

  A AA 3 - ஒரு முறை முயற்சித்து பார்க்கலாமே

  ReplyDelete
 52. பேய் கதைன்னாலே ஆயா தான் ஞாபகத்துக்கு வரும்..

  சின்ன வயசுல ஆயா கதை படிக்கறப்ப பயமும் இருக்கும், தப்பு செஞ்சா தண்டனை உண்டு ன்னும் தெரியும்,

  ஆனா இப்போல்லாம் கான்ஜூரிங் பேய் படம் பார்த்தா கூட பயம் வர மாட்டேன் ங்குது..

  என்னடா இந்த பேய் சரியான லூசா இருக்குமோ ,
  ஜன்னல் ஸ்கீரின் ஆட்டுது,
  கதவ ஜன்னல் எல்லாம் படார் படார் ன்னு அறைஞ்சு சாத்துது,
  கரண்ட் பியூஸ் பிடுங்குது, இன்னும் என்னென்னவெல்லாமோ பன்ற பேய் நேர் ல வந்து சட்டுன்னு சோலிய மட்டும் முடிக்க மாட்டேங்குது ன்னு அலுப்பு வருது..

  அதனால தயவு செஞ்சு முழு நீள பேய் கதையாவும் அமானுஷ்ய கதையாவும் வெளியிட கோரிக்கை வைங்க மக்களே..

  பக்க நிரப்பி கதைகள் தயவு செஞ்சு போட வேண்டாம் சார்..
  அதெல்லாம் செம போர் இப்போ..

  ReplyDelete
  Replies
  1. இது அத்தனையும் நாம் தனியா இருக்கயில நடந்தா எவ்ளோ த்ரில்லா இருக்கும்....நெனச்சுப் பாருங்க....ஆனா பேய் வந்தா பாடியாயிடுவோம்ல....இது பேயோட லாஜிக்...பேயதந்திரம்

   Delete
 53. A -AA -1 (முத்து முதல் இதழ் மட்டும், not interested in அட்டைப்படங்கள்)
  A -AA -2
  NO -NE-3

  ReplyDelete
 54. இப்போ வர்ர பேய்ப் படங்களை பாத்தா பயமும் வரமாட்டேங்குது.. சிரிப்பும் வரமாட்டேங்குது..! பிடி சாமி.. கோட்டயம் புஷ்பநாத் கதைகளை படிக்கும்போது ஏற்பட்ட சிலீர் உணர்வு.. இந்த டிடிஎஸ் எஃபெக்டில் ஆஆஆஆன்ன்ஆஆன்ன்னு கத்துற பேய்படங்களில் சுத்தமா மிஸ்ஸிங்..! வெறும் கடுப்புதான் மிச்சம்.!

  அதனால நம்ம காமிக்ஸ்லயாவது நல்ல பேய்கதைகளை போடலாம் சார்.!

  படிக்க த்ரில்லிங்கா இருந்தா மட்டும் போதும்.! லாஜிக்கெல்லாம் அவசியமே இல்லை சார்.!

  ReplyDelete
  Replies
  1. துண்டு கதைகளாக இல்லாமல் முழுநீளக் கதைகளாக இருந்தால் நல்லது சார்!

   Delete
 55. A - AA -1
  A - AA -2
  A - AA -3


  அவசியம் ஆணி பிடுங்கியே ஆக வேண்டும்... 🔨🔨🔨🔩🔩🔩🔧🔧🔧

  ReplyDelete
 56. This comment has been removed by the author.

  ReplyDelete
 57. This comment has been removed by the author.

  ReplyDelete
 58. ஹாலிவுட்ல எல்லாம் பேய் வேஷத்துக்கு ரொம்பவே மெனக்கெடுராய்ங்க. மேக்கப் போடறதுக்கே பல மணி நேரங்கள் ஆகுது. அப்புறமா அதைக் கலைக்கறதுக்கும் ரொம்ப நேரமாகுது. இதுக்கெல்லாம் ஏகப்பட்ட செலவு வேற ஆகுது!

  ஆனா, இந்தியப் படங்கள்ல பேய் சீன் எடுக்கறது ரொம்ப சுளு! செலவே கிடையாது! நடிகைக்கு எந்த மேக்கப்பும் போடலேன்னாலே பேய் எஃபெக்ட்ல பாதி வந்துடும். அப்புறம் ஒத்தை லைட்டை கீழேர்ந்து முகத்துக்கு அடிச்சாங்கன்னா முக்கால்வாசி பேய் எஃபெக்ட் ரெடி. அப்புறமா ஒரு டேபிள் ஃபேனை முகத்துக்கு திருப்பிவச்சாங்கன்னா முடியெல்லாம் பின்னாடி பறக்கும் - கிட்டத்தட்ட பேய் ரெடி! 'ந்தாம்மா.. நீ உன் புருஷனை பார்க்கற மாதிரி கேமராவைப் பாரு'ம்பாரு டைரக்டரு. அந்தம்மா பல்லைக்கடிச்சுக்கிட்டு சிவகாசிக்காரவுக மாதிரி கண்ணை ஒரு உருட்டு உருட்டுச்சோ.. ய்ய்ய்யீஈஈஈஈக்க்!!🧟‍♀️🧟‍♀️😱😱

  ReplyDelete
  Replies
  1. வீட்டுலதான் இருக்கீங்க போலிருக்கே ஈ.வி.

   Delete
  2. சொந்த அனுபவங்களையும் சுவாரஸ்யமாக சொல்வது என்பது ஒரு தனிக்கலை. அதுல ஈ.வி. எக்ஸ்பர்ட்

   Delete
  3. பத்து சார்.. ஹிஹிஹி 😁😁😁

   Delete
 59. A-AA-1
  A-AA-2
  A-AA-3
  காலைலயே ஒரே A வா இருக்கே...

  மு.பாபு
  கெங்கவல்லி
  சேலம்

  ReplyDelete
 60. அமானுஷ்ய கதைகள் என்றால் முதலில்
  ஜாவரின் உடல், பொருள், ஆனந்தி, அப்புறம் ரா.கி.ரங்கராஜனின் கோஸ்ட். மாஸ்டர் பீஸ் ஆன கதைன்னா எண்டமூரியின் துளசிதளம். அதிலேயே சயின்ஸ் கலந்த த்ரில்லர் என்றால் மீண்டும் துளசி. மற்ற கதைகளெல்லாம் அப்புறம் தான்.
  அது மாதிரியான கதைகள் காமிக்ஸில் வருமென்றால் டபுள் ok தான்.

  ReplyDelete
 61. நான் 4 மாதமாக தான் காமிக்ஸ் படிக்கிறேன். 41 புக் வாங்கி உள்ளேன். அதில் மிகவும் பிடித்தது பிரியமுடன் பிணைக்கைதி. அந்த வசனங்கள் சிரிப்பை வரவளித்தது.
  NO-NE-1
  A-AA -2
  A-AA -3

  ReplyDelete
  Replies
  1. வாங்க நண்பரே நல்வரவு

   Delete
  2. // மிகவும் பிடித்தது பிரியமுடன் பிணைக்கைதி. அந்த வசனங்கள் சிரிப்பை வரவளித்தது. //

   Super. Welcome to ரின் டின் கேன் ரசிகர்கள் மன்றம். மிகவும் சிறந்த நகைச்சுவை கதையது. முடிந்தால் ரின் டின் கேனின் நண்பேன்டா கதையை படியுங்கள், அதுவும் நன்றாக இருக்கும்.

   Delete
  3. ///Welcome to ரின் டின் கேன் ரசிகர்கள் மன்றம்///

   +1

   Delete
 62. பாவம்பா... கொற சொல்லும் கோஷ்டீஸ் குரூப்பு பசங்க.😆
  அதிரடியாய் அறிவிப்புகள் வரவர என்ன பேசருதுனே தெரியாம போஸ்ட போட்டு பொலம்புறாங்க.அதவிட,அதுக்கு ஆறுதலுங்கற பேர்ல கமன்டு போடறவங்கள பாத்தா அதவிட காமெடி. படிச்சா சிரிப்பே தாங்கல.
  நமக்கு நல்லா பொழுது போகுதுப்பா.
  ரெம்ப போரடிக்குதா?. சிங்கத்தோட குரூப்ப எட்டிபாத்தா போதும். அவங்க பொலம்பறத பாக்கறதே மரண காமிடியா இருக்கும்.😆😆😆😆😆

  ReplyDelete
 63. தமிழ்வாணன் அவர்களின் 'பேய் பேய்' தான் நாவலை யாராவது படித்திருக்கிறீர்களா நண்பர்களே. கிடைத்தால் அவசியம் படியுங்கள். அற்புதமான பேய்க்கதை. ஜில்லிட வைக்கும் க்ளைமாக்ஸ். காமிக்ஸ்ஸில் அது மாதிரி கதைகள் என்றால் அதுை டைலன்டாக் கதைகள்தான்.

  ReplyDelete
 64. Mayavi Replica Data:


  1:10 PM NELAVARAM:

  MAYVI REPLICA + COVER - A-A-1 - 62
  MAYAVI REPLICA + COVER - NO-NE-1 - 9

  ReplyDelete
 65. A -AA 2
  A -AA 3 --> Dear editor sir please give a chance to ghost stories. Young readers like me definitely want to read such stories in comics format

  ReplyDelete