Powered By Blogger

Sunday, July 07, 2024

ஒரு ரவுண்டடிக்கும் பதிவு !

 நண்பர்களே,

வணக்கம். போன பதிவு இந்த சிறுவட்டத்தின் ஈர மனசை yet again வெளிச்சம் போட்டுக் காட்டியது என்றால் அது மிகையே ஆகாது !! 'போட்ட கதையையே  மறுக்கா போட்டிருக்கியே கோமுட்டித் தலையா ?' என்று தூக்கிப் போட்டு மிதித்திருந்தாலும், சத்தமே இல்லாது வாங்கியிருக்க வேண்டியவன் தான் ! அதே போல, "57 வயசிலே நோவுகள் இல்லாம ஒடம்பு முத்தமா கொஞ்சும்டா தம்பி ?" என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டே நீங்கள் நகர்ந்திருந்தாலுமே நான் சொல்ல எதுவும் இருந்திருக்காது ! ஆனால் பிழைக்குப் பெருந்தன்மையை பதிலாக்கி ; நோவுக்குப் பரிவை பரிசாக்கி வாயடைக்கச் செய்து விட்டீர்கள் ! Thanks from the bottom of my heart all !!  

ரைட்டு, சென்டிமென்டை கசக்கியது போதுமென்று நினைத்தீர்களெனில், let's get on with things !!  ஆனை-அம்பாரம் என்று நான் எதற்குள்ளாச்சும் புகும் முன்பாக - இதோ இந்தாண்டின் காமிக்ஸ் கிரிக்கெட் லீக் பற்றிய அறிவிப்பைப் பண்ணிவிடுகிறேனே !! போன வருஷம் இந்த முயற்சியினை நண்பர்கள் முன்னெடுத்த போது, மெய்யாலுமே இதெல்லாம் ஒரு தொடர்கதையாகிடும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை ! ஏதோ ஒரு வேகத்தில் இறங்கிப்புட்டாங்க ; புத்தாண்டுக்கு எடுக்கும் சபதங்கள் பொங்கலுக்கு முன்பாகவே காலாவதியாவதைப் போல, இந்த வைராக்கியங்களும் நிச்சயம் இந்த தபாவோடு புஸ்ஸாகி விடுமென்றே எண்ணியிருந்தேன் ! ஆனால் 4 டீம்களை உருவாக்கி, ஜூலை 2023-ன் ஒரு வாரயிறுதியில் அனைத்து மேட்ச்களையும் நடத்தி, அட்டகாசமாய் ஒரு அணி  கோப்பையைத் தட்டிச் செல்லும் சாகஸத்தையும் நடத்திக் காட்டிய போது 'அட' என்றிருந்தது ! ஈரோட்டு சந்திப்பின் போது அதனை வீடியோவிலும் பார்க்க நேர்ந்த போது 'அடேடேடேடே' என்றிருந்தது ! இதோ - சீசன் 2-ல் லீக் தொடரவுள்ளது - வரும் ஜூலை 21-ம் தேதியிலான போட்டிகளோடு ! இந்தவாட்டி சேலத்தில் மேட்ச்கள் நடைபெறவுள்ளன & அன்று மாலை தெரிந்து விடும், சுழற்கோப்பையை இந்த ஆண்டுக்கு எடுத்துச் செல்லவிருப்பது எந்த அணியென்று ?! நம்பினால் நம்புங்கள் guys - போனெல்லியின் CEO திரு டேவிட் போனெல்லி எந்த அணி வெற்றி பெறுகிறதென்று தெரிவிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார் !! So உங்களது வெற்றிகள் கடல் கடந்தும் கவனிக்கப்படுகின்றன என்ற உற்சாகத்தோடு போட்டுத் தாக்குங்கள் !! May the best men win !!  நமது ஆதரவுகளுடன் நண்பர்களை செமத்தியாக உற்சாகப்படுத்துவோமே folks ? ஜூலை 21 தேதிக்கு சேலம் செல்ல சாத்தியமாகிடும் நண்பர்கள் - please do drop in !! 

அப்புறம் நம்ம பொம்ம புக் சமாச்சாரங்கள் பக்கமாய் வண்டியை இனி விடுவோமா ? ஜூலை இதழ்களில் லக்கி லூக் எப்போதும் போல் கலக்கிடுவார் என்பதில் confident ஆக இருந்தோம் ; ஆனால் நம்ம தானைத் தலைவர் ஸ்பைடர் பட்டையைக் கிளப்பி, இம்மாத ரேஸில் முன்னணியில் இருப்பாரென்பதைத் தான் நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை ! அந்த அட்டைப்பட அலட்சிய smile தான் காரணமா ? அல்லது மெகா சைஸா ? அல்லது கலரில் வரும் ஸ்பைடர் கதை என்ற காரணமா ? சொல்லத் தெரியலை - but ஏஜெண்ட்களுமே இம்முறை "விண்வெளிப் பிசாசை" தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர் ! இதில் கொடுமைஸ் of இந்தியா என்னவெனில், கிட்டங்கியினை ரொப்ப வேண்டாமே என்ற முன்ஜாக்கிரதையில் தானைத் தலைவரின் பிரிண்ட் ரன்னை குறைவாகவே திட்டமிட்டிருந்தோம் ! So தொடரவிருக்கும் புத்தக விழா சீசனை ஆர்டினியின் முதலாளி தாண்டிட மாட்டார் என்றே தோன்றுகிறது ! காலச் சக்கரங்களைப் பின்னோக்கி ஓடச்செய்து - 1984-க்கே திரும்பி விட்டதாக உணர்வு உள்ளுக்குள் - 'எவன் எந்த மாசத்தில் வெளிவந்தாலும், அவனை போட்டு அமுக்கிட்டு நான் போய்க்கினே இருப்பேன் !!" என்று நம்ம கூர்மண்டையர் கொக்கரிப்பது போலான குரல் தலைக்குள் கேட்பதைத் தொடர்ந்து !! Of course - ஒரு வாரம் கூட இன்னும் ஆகவில்லை தான் ஜூலை புக்ஸ் வெளியாகி - so ஓவர் சவுண்டு ஒடம்புக்கு ஆகாது தான் ! ஆனால் இந்த நொடிக்காவது ஸ்பைடரின் ஹெலிகார் ஓவர்டேக் செய்திருப்பது - டைனமைட்டையும், ஜாலி ஜம்பரையும் எனும் போது, கொஞ்சம் குத்தாட்டம் போடாமலிருக்க முடியவில்லை !! 

And இம்மாத லக்கி லூக்கும் சாத்தி வருவது சிக்ஸர்களையே !! கார்ட்டூன் ஜானரில் இன்னமும் ஒல்லி கில்லியாய் ஏன் தொடர்கிறாரென்பதை yet again நிரூபித்து வருகிறார் ! சிம்பிளான நேர்கோட்டுக் கதைகள் ; கச கசவென்ற கதைமாந்தர்கள் நஹி ; கிட்டத்தட்ட பக்கத்துக்குப் பக்கம் சிரிப்பு வெடிகள் - என்று செல்லும் லக்கிக்கு டால்டன் சகோதரர்கள் செம பலம் என்பேன் ! அந்த நாலு கேடிப்பசங்க தலை காட்டிடும் அத்தனை சாகஸங்களுமே தொடரினில் சூப்பர்ஹிட்ஸ் எனலாம் ! Not to mention - ரின்டின் கேன் !! கதைபாட்டுக்கு கூடுவாஞ்சேரி நோக்கிப் போய்க்கினு இருந்தால், நம்ம நாலுகால் ஞானசூன்யமோ கும்பகோணம் நோக்கி வண்டியை விட்டுக் கொண்டிருப்பது வாடிக்கை !! Pity - ரி.டி.கே. சோலோ கதைகள் இதே தரத்தில் இல்லாது போனதே ! Yet - ஜூனியர்களின் வாசிப்புக்கு ரி.டி.கே. நிச்சயம் ரசிப்பானென்றே தோன்றும் ; ஆனால் நம்ம "என்றும் 16 " அணி தந்திடும் thumbsdown-ஐ நினைத்து ஷட்டரை சாத்தி விடுவேன் ! 

TEX !! "பும்ரா சிறப்பாய் பந்து வீசினார்" என்பது எம்புட்டு சகஜமான தகவலாகிப் போனதோ - அதே அளவில் தான் "டெக்ஸ் போட்டுத் தாக்குகிறார்" என்ற சேதியும் !! எப்போதும் போலவே 💥💥!! இங்கே சின்னதொரு கேள்வி மக்கா - moreso காத்திருக்கும் நமது 2025-ன் அட்டவணையினையும் கருத்தில் கொண்டு :

"இளம் டெக்ஸ் தொடர் ஒரு மெரி அரைச்ச மாவையே அரைக்குது ; இளம் 'தல' ஓடுறார்...ஓடுறார்..ஓடிக்கினே கீறார்....! கொஞ்சம் பிரேக் விட்டாலென்ன ?" என்று நண்பரொருவர் வினவியிருந்தார் !! இத்தாலியிலோ இந்தத் தனித்தடம் புயலாய் சீறிப் பறந்து சென்று கொண்டுள்ளது ! நாம் ஓராண்டுக்கு பிரேக் விட்டால் கூட நமக்கும், அவர்களுக்கும் மத்தியிலான இடைவெளி கூடிக் கொண்டே போய்விடும் ! உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் folks ? எப்போதும் போலவே இளம் தல தொடரட்டுமா ? அல்லது ஓராண்டு பிரேக் தருவது மதியோ ?

இம்மாதத்தின் இன்னொரு surprise packet - ஏஜென்ட் ராபினின் "ஆரூடத்தில் நிழலில்" தான் ! Truth to tell - எனக்கே ராபினின் இந்த மீள்வருகை சீரிஸ் சின்னதொரு ஆச்சர்யத்தினைத் தந்து வருகிறது ! ரொம்பத் தெளிவான சித்திரங்கள் ; crisp கதைக்களங்கள் இந்த வரிசையினில் இலகுவான வாசிப்புக்கு உதவிடுவதாகப் படுகிறது !! And இங்கே நெஞ்சை நிறையச் செய்திடும் இன்னொரு சமாச்சாரம் நம்ம V காமிக்சின் இரண்டாம் பாதியின் சந்தாப் புதுப்பித்தல்கள் ராக்கெட் வேகத்தில் அரங்கேறி வருவது தான் !! மாதாமாதம் crisp வாசிப்பின் அடையாளமாக V உருவாகி வருவதில் செம ஹேப்பி !!

So ஒரு நிறைவான வாசிப்பு ஜூலையில் சாத்தியமென்ற சந்தோஷத்துடன், இதே மாதத்தில் வந்திருக்க வேண்டிய 3 பெருசுகளின் பக்கமாய் கவனத்தைத் திரும்புகிறேன் !! Yes - அவர்கள் நம்ம தாத்தாஸ் கூட்டணியே !! தொடரின் முதல் 3 ஆல்பங்களிலும் ஒவ்வொரு தாத்தாவை highlight செய்து கதாசிரியர் கதை நகர்த்தியிருந்தாரெனில் இந்த ஆல்பம் # 4-ல் focus இருப்பது பேத்தி சோஃபியாவின் மீதே !! முதல் ஆல்பத்தில் வயிற்றில் பிள்ளையைச் சுமந்து கொண்டிருக்க, இரண்டாவதில் கைக்குழந்தையை  ஏந்தி இருக்க, இந்த ஆல்பத்திலோ மெதுமெதுவாக பேசப் பழகிடும் மழலையோடு சோஃபியா ஆஜராகிறாள் ! And தாத்தாக்களுக்கு கொஞ்சமும் சளைக்காது பட்டாசாய்ப் பொரிபவள் சோஃபி என்பதை மறக்கவாச்சும் முடியுமா ? இத்தாலி போகும் பயணத்தின் மத்தியில் சில கிழட்டு டூரிஸ்ட்களை வாங்கு வாங்கென்று முதல் அத்தியாயத்தில் வாங்கும் உக்கிரமாகட்டும் ; ஒவ்வொரு தாத்தனின் தலையிலும் முட்டையை உடைச்சு பாடம் நடத்தும் அந்த மூன்றாம் பாகத்து தில்லாகட்டும் - எனக்கு நிரம்பவே பிடித்த கதாப்பாத்திரம் அவள் ! இம்முறை அவளைக் கொண்டு கதாசிரியர் ஒரு செமத்தியான ஒற்றைப்பக்க ஜாலத்தை நடத்தியிருக்கிறார் ! முதல் வேக வாசிப்பில் அதனிலிருந்த பெசல் ஐட்டத்தை கவனிக்கத் தவறியிருந்தேன் ; அதன் பலனாய் கொஞ்ச நேரத்துக்குப் புரியாது முழித்துக் கொண்டுமிருந்தேன் ! ஆனால் டியூப்லைட் மண்டைக்கு அந்தப் பின்னணி புரிந்த போது "wow" என்றே சொல்லத்தோன்றியது !  எப்போதும் போலவே வசன நடையில் கதாசிரியர் இம்மிகூட சமரசம் செய்து கொள்ளாத உரையாடல்களை முன்வைத்திருக்க, அவற்றை அப்படியே, அதே raw பாணியில் நானும் பரிமாறியுள்ளேன் ! By now - இங்கே என்ன எதிர்பார்ப்பதென்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் தான் ; yet எனது கடமை அதனை repeat செய்திடுவது : கொஞ்சம் sensitive ஆன வாசகர்கள் ஜாக்கிரதையாய் வாசித்தால் தேவலாம் என்பேன் ; வார்த்தைகளில் கணிசமான அராத்து குடிகொண்டிருக்கும் என்பதனால் ! இதோ சின்னதாயொரு சாம்பிள் பாருங்களேன் : So ஆகஸ்டில் ஆஜராவார்கள் தாத்ஸ் கும்பல் ! ஆல்பம் # 4-க்குள் புகும் முன்பாய் ஒருவாட்டி, முந்தைய மூன்று ஆல்பங்களையும் மேலோட்டமாய்ப் புரட்டிக் கொண்டால் நலமென்பேன் !! ஒருக்கால் டப்பி பிரிக்காது முந்தைய மூணு தாத்ஸ் ஆல்பங்களும் தேவுடு காத்து வரும்பட்சத்தில், இவர்களையும் அவர்கட்குத் துணையாக்கிடலே நலம் ! நீங்கபாட்டுக்கு நடுவாக்கிலிருந்து வாசிக்க ஆரம்பித்தால் இம்மி கூடப் புரியாதே ! 

Bye all...ஈரோட்டின் சந்திப்புக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அதற்கான ஏற்பாடுகளை நண்பர் குழு ஜரூராய் கவனித்து வருகிறது ! அவர்கள் கோரி வருவதெல்லாம் உங்களின் அந்த வீடியோ testimonials-களைத் தான் ! இயன்றமட்டுக்கு விரைவாய் அனுப்பிட முயற்சியுங்கள் ப்ளீஸ் ! See you around ! Have a beautiful Sunday !!

P.S : ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பாய் ஒரேயொருவாட்டி நெய்வேலி புத்தக விழாவினில் பங்கேற்றிருந்தோம் - மிக மிதமான விற்பனையே பலனாகியிருந்தது !! அப்புறமாய் கொரோனா காரணமாய் விழாவே நடந்திடவில்லை ! இம்முறை செம விமர்சையாக விழா ஏற்பாடுகள் அரங்கேறியிருக்க, சனிக்கிழமையின் ஒற்றை நாள் சேல்ஸ் மட்டுமே போனமுறையின் மொத்தப் பத்து நாட்களின் சேல்ஸையும் விஞ்சி விட்டிருக்கிறது !! Simply stunning !! புனித மனிடோ இதே அற்புதம் தொடர வாழ்த்துவாராக !! 

நினைவூட்டல்கள் : 

183 comments:

 1. ஆஹா... ஞாயிறு பதிவு...

  ReplyDelete
 2. வணக்கம் காமிக்ஸ் உறவுகளே🙏❤️

  ReplyDelete
 3. வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 4. எது இளம் டெக்ஸ்க்கு ப்ரேக் ஆ நோ..............கண்டிப்பாக இளம் டெக்ஸ் வேண்டும் இல்லையெனில் சிவகாசிக்கு நானும் STV குருநாதரும் சிவகாசிக்கு ஆபிஸ் முன் தர்ணாவில் அமர்ந்துடுவோம் பாத்துக்கோங்க😉😁

  ReplyDelete
  Replies
  1. கரெக்ட் எனது பார்வையில் யங் டெக்ஸ், ரெகுலர் டெக்ஸை விட பன்மடங்கு உசத்தி சார்.

   Delete
  2. இளைய தலை கண்டிப்பாக தொடரவேண்டும்

   Delete
 5. அனைவருக்கும் வணக்கம்...

  ReplyDelete
 6. இரவு வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 7. இனிய இரவு வணக்கம் நண்பர்களே....

  ReplyDelete
 8. டெக்ஸ் வில்லருக்கு போட்டியாக இளம் டெக்ஸ் களம் கண்டு வருவது, இளம் டெக்ஸ் சற்று விறுவிறுப்பை தந்து வருகிறார்.
  என்னுடைய உதாரணமாக 2023 ஆம் ஆண்டில் டெக்ஸ் வில்லர் VS இளம் டெக்ஸ் கதைகளில் தீபாவளி வெளியிடான சிக்சர் ஸ்பெஷல் முதலிடம் வழங்குவேன்.

  நான் டெக்ஸ் வில்லரின் ஆரவாரமான ரசிகன் இல்லாவிடினும் இளம் டெக்ஸ் தொடர்ந்து வருவது வரவேற்பேன்
  ஓராண்டு இடைவெளி தவிர்ப்பதற்கு என் ஓட்டு.
  இளம் டெக்ஸ் கதைகளை இரண்டு, மூன்று பாகங்களை தொடர்கதைகளாக வேண்டாம் ஒரே தொகுப்பாக வந்தால் படிப்பதற்கு பாதுகாக்க வசதி.
  இளம் டெக்ஸ் கதைகள் தப்பி ஓடும் சாயலில் உள்ளதால் இது எந்த கதையின் தொடர்ச்சி இதனுடைய முந்தைய கதை எது என்ற குழப்பம் எனக்கு மட்டும் தானா?தெரியவில்லை.

  கண்ணீருக்கு நேரமில்லை

  பகைவருக்கு பஞ்சமேது!

  இதன் தொடர்ச்சி வரும்போது எதனுடைய தொடர்ச்சி என்பதற்கு இரண்டு புத்தகங்களையும் மீண்டும் எடுத்து வைக்க வேண்டும்.

  இளம் டெக்ஸ் எனது ரசனையில், விருப்பத்தில் முன்னணியில் உள்ளார்

  ReplyDelete
 9. V காமிக்ஸ் 2024 ஆம் வருட அட்டவணை படுத்தப்பட்ட கதைகள் அருமை.
  மாடஸ்டி, வேதாளர் உடன் ராபின் க்ரைம் கதைகளை ஆர்வமுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.
  மிஸ்டர் நோ பெரிதும் கவனத்தை பெற்று எதிர்பார்ப்பை உண்டாக்கி வருகிறார்.
  V காமிக்ஸின் இன்னொரு பலம் அதன் குறைந்த விலை . பலதரப்பு நண்பர்களுக்கு கை கொடுக்கும் விலையில் உள்ள விஷயம் மிகவும் முக்கியமானது சார்.
  ராபினுக்கு சத்தமே இல்லாத ஒரு ரசிகர் வட்டம் உள்ளது.

  ReplyDelete
 10. ""❤️போனெல்லியின் CEO திரு டேவிட் போனெல்லி எந்த அணி வெற்றி பெறுகிறதென்று தெரிவிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறார் !❤️""
  வாவ் ...👏👏👏👏👏👏
  காமிக்ஸ் எனும் படைப்பு தாண்டி இப்படியொரு விசியம் அவர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது நமக்கெல்லாம் எவ்வளவு பெரிய விசியம்.
  இந்த வார்த்தை நம் கிரிக்கெட் நண்பர்களை இன்னமும் உற்சாகப்படுத்தும்.

  """❤️அந்த அட்டைப்பட அலட்சிய smile தான் காரணமா ? அல்லது மெகா சைஸா ? அல்லது கலரில் வரும் ஸ்பைடர் கதை என்ற காரணமா ? சொல்லத் தெரியலை -❤️""
  சின்ன ரெகுலர் சைஸ்ல வெளியான ஸ்பைடர் கதைகளை விட,
  இந்த மெகா சைஸ்ல் வெளியான "கொலைப் படை"விற்பனை ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் வாசகர்கள் மத்தியில் க்ளாசிக் கதைகளுக்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி தந்துள்ளது.
  அதேதான் தற்போது வந்துள்ள இந்த "விண்வெளி பிசாசு"க்கும்,
  படங்கள், மொழிபெயர்ப்பு, படிக்க ஏதுவான பெரிய பேனல்கள் என
  அட்டகாசமான மேக்கிங்கில், இதழை கையில் ஏந்தும் போதே கடந்த காலத்தில் இருப்பது போன்ற உணர்வு.
  இனி வரும் காலங்களில் அனைத்து கதைகளையும் இதேபோல பெரிய சைசில் கொடுங்கள் சார் அல்லது யார் அந்த மாயாவி-? சைஸ்ல் வந்தாலும் சரி,
  அந்த பெரிய சைஸ்க்கு படங்கள் மிக கச்சிதமாக பொருந்துகிறது.
  படிக்கவும் நல்லாருக்கு.

  ""❤️எப்போதும் போலவே இளம் தல தொடரட்டுமா ? அல்லது ஓராண்டு பிரேக் தருவது மதியோ ?❤️""
  இந்த இளம் டெக்ஸ் மேல் அந்த நண்பருக்கு ஏன் இவ்வளவு சலிப்பு என தெரியவில்லை,
  இத்தாலியின் வேகத்துக்கு நாம் ஈடு கொடுக்க முடியலைனாலும் ஏதோ கொஞ்சமாவது நெருங்கலாம் என பலர் எதிர்பார்த்திருக்க, இப்படி குறுக்க கட்டைய போட்டால் எப்படி?.
  "இனி இதை இப்ப நிறுத்தினால் மீண்டும் எப்ப வரும் என தெரியாது நண்பரே,
  ஆகவே விரும்பி படிப்பவர்களுக்காகவாவது கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்களேன்?."

  "தி சிக்ஸர் ஸ்பெஷல்" மாதிரி இந்த இளம் டெக்ஸை வருடம் 4 புக் வர மாதிரி கொடுங்கள் சார் அல்லது 2 புக் தந்தாலும் சரி
  அல்லது 1 மாதம் விட்டு 1 மாதம் என்ற வரிசையில் தந்தாலும் சரி,
  ஆனால் தயவுசெய்து நிறுத்தி விடாதீர்கள்,
  இப்பதான் அதை கொஞ்சம் புரிந்து ஆர்வமாக பலர் படிக்க விரும்பியுள்ளனர்.
  இந்த நேரத்தில் நிறுத்தினால் அப்றம் ஒரு நல்ல தொடர் காணாமயே போயிரும்.

  ""❤️ஆகஸ்டில் ஆஜராவார்கள் தாத்ஸ் கும்பல்❤️""
  அடுத்து இவர்களது லூட்டி எந்த மாதிரி? என படிக்க ஆவலுடன்...
  படங்கள் மிகத்தெளிவாக உள்ளது அருமை,

  "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை"
  ஒற்றை வரியில் சொல்வதானால் "ஃபென்டாஸ்டிக்".
  கதையின் ஓட்டத்துக்கு ஏற்ப சித்திரங்கள் போட்டி போடுகின்றன.
  கார்சனில்லாத கதையில் டெக்ஸ் புகுந்து விளையாடியிருக்கிறார்.
  ஒரு நல்ல கதை மறுபதிப்பாக 40வது ஆண்டுமலரை அலங்கரித்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 11. V காமிக்ஸின் 2025 ஆம் வருட வருட அட்டவணையில் எங்கள் அபிமான ரிப்போர்ட்டர் ஜானியின் கதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள் சார். V காமிக்ஸின் புண்ணியத்தில் இரண்டு அல்லது மூன்று கதைகளாவது எங்களுக்கு கிடைக்கும்.

  ReplyDelete
 12. இளம் டெக்ஸ் கண்டிப்பாக வேண்டும். ஒரு முழு கதையை பிரித்து போடாமல் முழுவதுமாக வெளியிட்டால் மிகச் சிறப்பாக இருக்கும். இத்தாலி ரசிகர்களுக்கு வேண்டுமென்றால் சஸ்பென்ஸ் மாதம் மாதம் விட்டுவிட்டு வருவது அவர்களுக்கு பிடிக்கலாம். ஆனால் நமக்கோ அதை முழுவதும் படித்த பிறகு தான் மன நிம்மதி.ஆதலால் அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்காமல் முழு கதையும் ஒன்றாக வெளியிட வேண்டுகிறேன்.

  ReplyDelete
 13. இளம் டெக்ஸ் வேண்டும் .வேண்டும் .வேண்டும்.

  ReplyDelete
 14. இளம் டெக்ஸ்க்கு அமுத்த வேண்டியது ப்லேக்கை அல்ல; ஆக்சிலரேட்டரை.

  ReplyDelete
  Replies
  1. ஆம் மஹேந்திரன்... இளம் டெக்ஸ்.. அட்டாகாசமாய் உள்ளது.. No break... ஓவியங்கள், கதையமைப்பு
   Amezing... ❤️👍

   Delete
 15. காமிக்ஸ் கிரிக்கெட் மூலம் புதிய வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்பதே எய்ம்.ஆனால் அதையும் தாண்டி காமிக்ஸ் பிதாமகர் களையே எட்டியிருப்பது மிக மிக கொண்டாட்டமான நிகழ்வு. காமிக்ஸ் கிரிக்கெட் பற்றி யோசித்து நம்மிடையே செயல் படுத்திய நண்பர்களுக்கு கோடி கோடி நன்றிகள்.கிரிக்கெட்டில் பங்கு பெறும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete

 16. //காலச் சக்கரங்களைப் பின்னோக்கி ஓடச்செய்து - 1984-க்கே திரும்பி விட்டதாக உணர்வு//

  I thought only your shoulder has frozen. Now your time too has frozen? 😊

  ReplyDelete
 17. "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" .டெக்ஸ் முரட்டுக் குதிரையை மெல்ல மெல்ல பழக்குவது ரசிக்க வைக்கிறது

  ReplyDelete

 18. //உங்கள் அபிப்பிராயங்கள் ப்ளீஸ் folks ? எப்போதும் போலவே இளம் தல தொடரட்டுமா ? அல்லது ஓராண்டு பிரேக் தருவது மதியோ ?//

  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில் சிதைத்தல், சிறுபறை முழக்கம், சிறு தேர் உருட்டல் என பத்து பருவங்களோடு காளை வளர்த்தல், பரியேறுதல், சுருள்கயிறு வீசுதல், ஏறு தழுவுதல் என டெக்ஸ்க்காக பிள்ளைத் தமிழ் கதைகளையே வெளியிடலாம் நன்றாக போய்க் கொண்டிருக்கும் இளம் டெக்ஸ் கதைகளை தற்காலிகமாக கூட நிறுத்த முயற்சி செய்தல் வேண்டாம் சார்.

  ReplyDelete
  Replies

  1. கூடவே மாடஸ்டிக்கு நீராடல், அம்மானை, ஊஞ்சல் அதற்குப் பின்வரும் பருவங்களுக்கும் பிள்ளை த் தமிழ் கதைகள் கொண்டு வந்தாலும் வரவேற்கப்படுகிறது. 😄

   Delete
  2. 😍😍😍😍😍😍

   இளம் டெக்ஸும் இளம் இளவரசியும் தொடர வேண்டும்..

   Delete
  3. /* கூடவே மாடஸ்டிக்கு நீராடல், அம்மானை, ஊஞ்சல் அதற்குப் பின்வரு*/ Hee Hee !! One warning - changes to original pictures not allowed Sir :-D

   Delete
 19. //இளம் டெக்ஸ் க்கு அழுத்த வேண்டியது பிரேக்கை அல்ல .ஆக்ஸிலேட்டரை.//ஆமாம் 2016போல் தனித்தடமே அமைத்து பைபாஸில் சீற் வேண்டிய நேரம் இது.(போனெலிக்கு ஈடு கொடுக்க வேண்டுமல்லவா)

  ReplyDelete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. Hi all
  Young TEX is must. If possible , it should be regular monthly books.

  ReplyDelete
 22. நெய்வேலி புத்தக விழாவில் சனிக்கிழமையின் ஒற்றை நாள் சேல்ஸ் மட்டுமே போனமுறையின் மொத்தப் பத்து நாட்களின் சேல்ஸையும் விஞ்சி விட்டிருக்கிறது .தொடர வாழ்த்துக்கள் சார்!! 💐💐💐💐💐

  ReplyDelete
 23. காலை வணக்கம் காமிக்ஸ் சொந்தங்களே.. ❤️❤️

  ReplyDelete
 24. இளம் டெக்ஸ் வேண்டும்.. வேண்டும்.. வேண்டும்..

  ReplyDelete
 25. தானைத் தலைவன்னா சும்மாவா...!!

  💪🏼♥️🔥💪🏼♥️🔥💪🏼♥️🔥💪🏼♥️🔥

  ReplyDelete
 26. ஆவலுடன் waiting for தாத்தாஸ்...!!

  🥹🌹🥹🌹🥹🌹🥹🌹🥹🌹🥹🌹

  ReplyDelete
 27. இளம் டெக்ஸூக்கு பிரேக்கெல்லாம் வேண்டாம் ஆக்ஸிலேட்டரை மிதியுங்கள்

  ReplyDelete
 28. இளம் டெக்ஸ்க்கு ப்ரேக்கா... என்ன கொடுமை சார்...இது.. இளம் டெக்ஸ் ஓடி கொண்டு தான் இருக்கிறார்...ஆனால்..டெக்ஸை மிஞ்சும் அளவிற்கு இளம் டெக்ஸ் ஓடி கொண்டு இருக்கும் பொழுது அவருக்கு தடை போடுவது ஏற்று கொள்ள முடியாத ஒன்று சார்..

  மாதம் ஒரு இளம்டெக்ஸ் என்றாலும் எனக்கு ஓகே தான்..

  ReplyDelete
  Replies
  1. முழு கதையா...பிச்சி பிச்சி போடுறது ..
   எதுக்கு உங்க ஆதரவு என்று தெளிவா சொல்லுங்க.
   உங்க கூட நான் இருக்கலாமா, இல்லை எதிர் அணிக்கு நான் போக வேண்டாமா ...
   என்பதை தெளிவு படுத்திக் கொள்ளத் தான்

   Delete
 29. Rintincan's priyamudan pinaikaithi is best laugh riot.

  ReplyDelete
 30. எப்போதும் போலவே இளம் தல தொடரட்டுமா ? - தொடரட்டும் சார்.

  ReplyDelete
  Replies
  1. விற்பனையில் சாதிக்கும் இவருக்கு இந்த கேள்வியே தேவையில்லை சார்.

   Delete
 31. எனது கருத்து இளம் டெக்ஸ் கதைகளை ஒரேயடியாக நிறுத்த வேண்டாம். ஆனால் தாராளமாக குறைத்து கொள்ளலாம்.
  இளம் டெக்ஸ் கதைகளில் ரெகுலர் டெக்ஸ் போல் variety இல்லை. விரைவில் போரடித்து போய் விடும். எனக்கு இப்போதே அந்த மாதிரி தான் தோன்றுகிறது. பிரித்து வெளியிடாமல் சேர்த்து தொகுப்பாக வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டாக வெளியிட்டால் overdose ஓட்டம் மட்டுப்படும்

  ReplyDelete
 32. டியர் விஜயன் சார்,இளம் டெக்ஸை ஒரு வருசம் பிரேக் விடலாம் என்ற அரிய யோசனையை தந்த நண்பரின் விலாசம் ப்ளீஸ்...
  சும்மா குசலம் விசாரிக்கத்தான்:-)

  ReplyDelete
  Replies
  1. Yes, எனக்கும் ஆர்வமாக இருக்கிறது அந்த நபரை தெரிந்து கொள்ள.

   Delete
  2. சினிமாவில் வருவது போல் ,
   தன்னுடைய மனசாட்சி நேரில் வந்து பேசியதாக எடிட்டர் சார் சொல்லிவிட்டால்... ,,

   Delete
  3. எடிட்டர் தான் நமது எண்ண ஓட்டங்களை தெரிந்து கொள்ள இது மாதிரி ஒரு கேள்வியை கேட்டிருப்பார் என்று எனக்கும் தோன்றுகிறது.

   Delete
 33. இளம் டெக்ஸ் கண்டிப்பாக வேண்டும் சார்

  ReplyDelete
 34. This comment has been removed by the author.

  ReplyDelete
 35. Sir - Young Tex can be done as a 6 in 1 collection per year? That way it comes only once a year for us and does not drag with the same plot line over and over - read and get done with it once and for all !

  ReplyDelete
 36. இளம் டெக்ஸ் வருடத்திற்கு 2 முறை (fixed ஆக ஆண்டு மலர் அல்லது கோடை மலர் போல் every year) சிக்ஸர் ஸ்பெஷல்
  போல் தொகுப்பாக வெளியிட்டால் குழப்பம் இல்லாமலும், மிகவும் திருப்தியாகவும் இருக்கும்👍

  ReplyDelete
 37. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
  ஒரு நபரின் கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
  வாசக நண்பர்களின் ஒட்டுமொத்த கருத்து எடுத்துக் கொண்டு அதன் பிறகு இளம் டெக்ஸை பிரேக் விடுவதா ?
  வேண்டாமா? என முடிவு செய்யலாம்.
  மேலே கண்ட கமெண்ட் பாக்ஸில் நிறைய நண்பர்கள் இளம் டெக்ஸ் நிறுத்தக்கூடாது தொடர்ந்து வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் எனது கோரிக்கையும் அதுவே.
  இரண்டு இரண்டு ஆல்பமாக வருவதற்கு பதிலாக சிக்ஸர் ஸ்பெசல் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று இருந்தால் நலம்.
  மற்றபடி இறுதி முடிவு தங்களது.
  லயன் காமிக்ஸ் பெரிய தலையையும் வீகாமிக்சில் இளம் தலையையும் தொடர்ந்து வர ஏற்பாடு செய்யுங்கள் நன்றி.
  இளம் டெக்ஸ் வாழ்க்கையில் எதார்த்தத்தை டெஸ்ட் கூடவே பயணித்து அனுபவிப்பது போல் உள்ளது அதனால் தான் நாங்கள் இளம் டெக்ஸ் மற்றும் தல டெக்ஸ் விரும்புகிரியோம்.

  ReplyDelete
 38. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 39. @Edi Sir..😍😘

  ஆனா..இப்படி Midnight ல சாயா குடிப்பீங்கன்னு எதிர்பார்க்கலை சார்...
  😃😃😃😃

  ReplyDelete
 40. சார் வயதான டெக்சுக்கு ஓய்வு கொடுத்து இளம் டெக்ச துரிதப்படுத்தலாமே...அவர் ஓடுற வழில சாகசமில்லையா...புதிய டெக்ஸ் தேடுகிறார் எல்லா கதையும் குற்றவாளிகள...அவர் ஓடுறார்னா வழில தேடுறார் ...இவர் தேடுவார் அவ்ளோதான்....ஒரு மாதம் இளம் டெக்ஸ் ...அடுத்த மாதம் இரு கிளம் டெக்சுன்னு தூள் கிளம்புங்க...அல்லது இரு இளம் டெக்ஸ் ஒரு கிழம் டெக்ஸ்..அல்லது ஒரு இளமை ஒரு கிழமைன்னு அதிரட்டும் மாதங்கள்

  ReplyDelete
  Replies
  1. ஒண்ணும் புரியலை

   Delete
  2. என்னது - வயசான Texக்கு ஓய்வா? மாசம் ஒரு டபுள் ஆல்பம் - காலாண்டுக்கு ஒரு ட்ரிபிள் ஆல்பம் - அரையாண்டுக்கு ஒரு 500 பக்க புக்கு வேணும் சொல்லிப்புட்டேன் ! 

   Delete
  3. ஏலே பொன்ராச ஓடிப்போய் விடுல

   Delete
  4. நல்லாத்தானே இருந்தீங்க ஸ்டீல்..
   இளம் டெக்ஸ்க்கு ப்ரேக்கு விடலாமான்னு ஆசிரியர் சொன்னதுல , பிஞ்சு மனசு நைஞ்சி போயிட்டுதோ?

   Delete
  5. தம்பி பொன்ராஜ் தயவு செய்து மதுரைக்கு வாங்க.
   உங்களுக்கு கோபம் இருந்தா, என்னை திட்டுங்க. எனக்கு அது சந்தோசம் தான்.
   ஆனா லட்டு "லட்டாவே" தாங்க. ஆனா அதை பூந்தி என்று அள்ளி தெளிச்சிறாதீங்க.
   இது எனது தெளிவான வேண்டுகோள்.

   Delete
  6. மூனு புத்தகம்..பன்னென்டு கதை நண்பரே...ராகவரே அத விட மாட்டாரு அதான் அப்படி சொன்னேன்...இளம் டெக்ஸ் வேணும்ன மிகைபடுத்தலது...எல தம்பி பிள்ளைவளுக்கு விண்வெளி பிசாச காட்டி ஈரேழு லோகத்துக்கும் டூரடில...
   குமார் நிதானமா படிங்க...
   பத்து பத்து கதையாவது வேணும்னே

   Delete
 41. இளம் டெக்ஸ் - கதைகள் மிகவும் சுவராஸ்யமாய் தான் இருக்கின்றன..
  அந்த ஓவிய நேர்த்தியும், - Tex-இன் அந்த இளமைக்கால அடாவடித்தனமும். - அவரை மெருகேற்றிக்கொள்ள சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும்
  என்று சுவராஸ்யமாகவே செல்கிறது..
  எனக்கு, சங்கடமாய் உள்ளது
  தற்போதைய CID ராபினின்
  கதைகளே.
  ஒவ்வொருவரும் அவரவர் துறை சார்ந்த நண்பர்களை இழந்து தவிப்பது ஆற்ற முடியாத துயரமாய் உள்ளது ..
  எனக்கு, கொரானா காலத்தில்,
  ஒரு நண்பர், கடந்த மாதம் 15ம் தேதி ஒரு நண்பர் என்று..
  ஜீரணிக்கவே முடியாத இழப்பாக உள்ளது.
  CID ராபின் - கதைகளும் ,பின்னோக்கிய சாகஸத்தில் -
  உறுதுணையாய் நின்றவர்கள் -
  அவர்களின் நினைவுகளோடு இறுதியில் கல்லறையில் மலர் வளையம் வைப்பதோடு முடிவது..
  அதை வெறும் கதையாக பார்க்க முடியவில்லை..
  எனவே, பழைய CID ராபின் கதைகளில் துப்பறியும் களத்தில் உள்ளவைகளாக தேர்ந்தெடுத்து வெளியிடும்படி கே ட்டுக் கொள்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. எனக்கும்,
   இது சோகத்தை தருகிறது.
   ஏன் ஓர் Love story ( அ) ஓர் மாங்கா தேங்கா வெளியிட்டால்,
   புடிச்சுருக்கு, இது ஆவாது என சொல்லி, தெளிந்து விடுவோம் அல்லவா.
   இது வரைக்கும் நீங்க வச்ச டெஸ்ட்ல,
   நாங்க பாசானோமா இல்லையா.

   Delete
 42. குற்றம் பார்க்கின்‌ சுற்றம் இல்லை கலர் வெர்சன் அருமை. இனிமே முடிந்தளவுக்கு டெக்ஸ் கதைகளை கலர் வெர்சனிலே போட முயற்சி செய்யுங்கள்.

  ReplyDelete
 43. ஈரோடு‌ ஸ்பெஷலுக்கு ஒரு மெபிஸ்டோ கலர்‌கதையை போட்டு தாக்குங்க‌.

  ReplyDelete
  Replies
  1. தெய்வமே,
   யார் நீங்க,
   இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க.
   நீங்க எங்க இருந்தாலும், அத்திசை நோக்கி, கோயில் கட்டி, உங்களை கொண்டாடுறேன்.

   Delete
 44. தேடப்படும் குற்றவாளி கதைகளை தள்ளி போடலாம்... ஓடினார் ஓடினார் அமெரிக்காவின் எல்லையையும் தாண்டி ஓடிக் கொண்டே இருக்கிறார்..

  ReplyDelete
  Replies
  1. இளம் tex ஓட ஓடத்தான் அமெரிக்க மாகாணங்களின் மேப் விரிவடைந்தது என்று நினைக்கிறேன் :-) 1800களில் இவ்வளவு ஊரு அமெரிக்காவில் இருந்திருக்குமா ? :-) (டாக்டர் சார்வாள் வந்து விக்கி பதிவு போடப்போறாரு !!)

   Delete
  2. ரம்மி @ நம்ப மகேந்திரனதான சொல்லுறீங்க 😁

   Delete
 45. // எப்போதும் போலவே இளம் தல தொடரட்டுமா ? அல்லது ஓராண்டு பிரேக் தருவது மதியோ ? //
  எப்போதும் போல் தொடரலாம் சார்...

  ReplyDelete
 46. // மாதாமாதம் crisp வாசிப்பின் அடையாளமாக V உருவாகி வருவதில் செம ஹேப்பி !! //
  சிறப்பு,சிறப்பு...

  ReplyDelete
 47. // சனிக்கிழமையின் ஒற்றை நாள் சேல்ஸ் மட்டுமே போனமுறையின் மொத்தப் பத்து நாட்களின் சேல்ஸையும் விஞ்சி விட்டிருக்கிறது !! //
  மகிழ்ச்சியான செய்தி...

  ReplyDelete
 48. வீரமான வேகமான துடிப்பான இளம் டெக்ஸ் VS விவேகமான கீர்த்தி மிகு ரேஞ்சர் டெக்ஸ்

  கருத்துக்கணிப்பில் இளம் டெக்ஸ் வெற்றி பெற்று விடுவார் என தெரிகிறது.

  ReplyDelete
 49. ஒரே ஒரு வேண்டுகோள் சார். யங் டெக்ஸ் பிரித்து பிரித்து போடாமல் ஒரே புத்தகமாக வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  நண்பர்கள் சொன்னது போல கண்ணீருக்கு நேரமில்லை, பகைவனுக்கு பஞ்சமேது இது இரண்டையும் படித்து விட்டு இனி V காமிக்சில் வரும் டெக்ஸ் படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. இது புத்தக விழாவில் வாங்கும் நண்பர்களுக்கும் சிரமம். ஒரு புத்தகம் மட்டும் வாங்கி சென்று விட்டால் தலையும் புரியாது வாலும் புரியாது.

   Delete
  2. ரொம்ப சரி நண்பா, ரொம்ப அக்கறையுள்ள கருத்து புதிய நண்பர்களுக்கு..

   Delete
  3. அப்படி இல்லை நண்பரே நான் நினைக்கிறேன் இளம் டெக்ஸ்ல் பல தொடர்கள் இருக்கின்றன அவற்றில் இன்னொன்று தான் வீ காமிக்ஸ் வரப்போகிறது என நினைக்கிறேன் உதாரணமாக சகோர டெக்ஸும் மோதிய கதை வரிசையில் உள்ள கதை போன்று உள்ளது.

   Delete
 50. @Edi Sir..😍😘

  ஈரோடு புத்தக விழா -லயன் 40 கொண்டாட்டத்திற்கு இன்னும் ஒருமாதத்திற்கும் குறைவாகவே நாட்கள் உள்ளன..😍

  சிறப்பு வெளியீடுகள்/விலை / அட்வான்ஸ் புக்கிங் ..
  விபரங்கள் முழுமையாக தரவில்லையே சார்..😃😍

  ஒருவேளை நேரடியாக உரிய விலை செலுத்தி லயன் கொண்டாட்டத்தின் போது நேரில் பெற்றுக் கொள்ளலாமா சார்..
  😍😘

  ReplyDelete
 51. ஒரே மாதிரி ரியலிஸ்டிக்கான கதைகள் வரிசையில் ஸ்பைடர் கதை ஒரு refresher ஆக அமைந்திருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீர்கள் சார். விண்வெளி பிசாசு அபாரமான வெற்றி. நண்பர்கள் வெகு ஆண்டுகளாக எதிர்பார்த்த கதை.

   Delete
 52. // இளம் டெக்ஸ் தொடர் ஒரு மெரி அரைச்ச மாவையே அரைக்குது ; இளம் 'தல' ஓடுறார்...ஓடுறார்..ஓடிக்கினே கீறார்....! கொஞ்சம் பிரேக் விட்டாலென்ன ?" என்று நண்பரொருவர் வினவியிருந்தார் !! //

  வினவியிருந்த அருமை நண்பரை, எங்கிருந்தாலும் உடனடியாக விழா மேடை அருகே வருமாறு அன்புடன் விழா குழுவின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்...

  ReplyDelete
 53. இளம் டெக்ஸ்க்கு பிரேக் வேண்டாமே....மாதம் ஒரு இளம் டெக்ஸ் வந்தாலும் நன்றாகத்தான் இருக்கும்

  ReplyDelete
 54. சேலம் டெக்ஸ் விஜயராகவன் உடனடியாக மேடைக்கு வரவும்.

  ReplyDelete
 55. இளமtexஅடுத்த இதழில்- கார்சன் மற்றும் டெக்ஸ் வில்லர் முதன் முதலாக சந்திக்க இருக்கின்றனர்
  எடிட்டர் சார் ,இந்த நிகழ்வை கருத்தில்
  கொள்ளவும் ஒரு காவிய தரத்திற்கு உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.🙏

  ReplyDelete
 56. ஆயிரம் கதைகள் வந்து மறைத்து நின்றாலும், ஸ்பைடர் பெருமை மறைவதில்லை.
  ஓராயிரம் கதைகள் வந்து போனாலும், குற்றவியல் சக்கரவர்த்திக்கு நிகர் அவரே தான்..

  ReplyDelete
 57. விண்வெளிப் பிசாசு கதையின் துவக்க நரகக் கருவியாளன் பெயர் ஏதோ பட்டாலும் அடி தூள் கிளப்பும் துவக்கத்தில் ஸ்பைடரை படுத்த தொடரும் விண்வெளிப்பிசாசும்...மொழியாக்கமும் வண்ணத்தின் வீச்சும்...ஸ்பைடர் விண்வெளிப் பிசாசின் போராட்டமும் இறுதியாக முடிவுக்கு வருது இவ்வெளியீட்டால்....
  செமயான கதை சார்...அன்றைய மாயாஜாலக்கதைகளுக்கு போட்டியாயும்....சூப்பர் ஹீரோக்களுக்கு சவாலாகவும் வந்த கதை....
  நீதிமான் ஸ்பைடர் பாத்து லயிக்காத விண்வெளிபிசாசு லைப்ரரில லவட்டிய குற்றவாளிகள் ரசித்து படித்து வீசுவது ...அட்டகாச கற்பனை...ஜெஸ்ஸி யாக பின்னர் செங்கிஸ்கானா பல்லுறு பெருக்கமாவது எல்லாம் எந்திரன் சுட்ட காட்சிகளா....
  ஸ்பைடருக்கு சவாலா திருட்டுப் பொருள விரும்பாம சீண்டும் விண்வெளிப் பிசாசு குற்றச்சக்கரவர்த்தியா மாறி பழய ஸ்பைடர நினைவுறுத்துவதோடு அல்லாம ஸ்பைடராயும் மாறி தூள் கிளப்ப...ஸ்பிரிங்கா மாறி மோத...டெலஸ்கோபிக்கரம்....பின்பாதி முழுதும் விண்வெளித் திருடர்கள்...கடலரசன்...பாதாள மனிதர்கள் என வான் ...பாதாளம்...கடல் விண்வெளி என ஈரேழு அனைத்துலகிலும் ஆதிக்கம் செலுத்தும் ஸ்பைடர்...அதும் அந்த ரோஸ் நிற பக்கங்கள் தாங்கி வரும் விண்வெளித் திருடர் தாங்கிய பக்கங்கள் இருவண்ணத்தில் 80 எலக்ட்ரிக் ஸ்பெசல் வரும்னு வேண்டுகோள் வச்சா தொடரும் பக்கங்கள் வண்ணத்ல வேண்ட....ஆசிரியர் நெனச்சு பரிதாபப்பட்டு இருவண்ணமாவது வரட்டும்ங்குது என் மனது..நீதிக்கான தன் ஸ்பைடர் அட்டைப்படம் இதிலிருந்து சுட்டது போல...அந்த முழுபக்க கட்டம் அசத்த....33 ம் பக்க வண்ணமுழக்கமும் ஸ்பைடரின் முட்டி முழக்கமும் உற்சாகபடுத்த...தூள் கிளப்புது விறுவிறுப்பான துரத்தல்களால்.... அன்னைக்கே சங்கரின் எந்திரன் தரிசிச்சவங்க நாம்...செம சார்...மொழி பெயர்ப்பில் ஆசிரியரும் நண்பரும் அதகளபடுத்தியுள்ளீர்கள்...நன்றிகள் நண்பர்களே

  ReplyDelete
  Replies
  1. கச்சித புத்தக வடிவமைப்பு கார்சன் கடந்த காலத்துக்கான சரியான போட்டி...பாட்டில் பூதம் ஜிகு ஜிகு கலர்ல வாய்க்குமா

   Delete
 58. இளம் டெக்ஸ் தொடர வேண்டும். பிரித்து வெளியிடாமல் தொகுப்பாக வெளியிடவும். அப்புறம் ஈரோடு விழாவிற்கு என்னென்ன ஸ்பெஷல் இதழ்கள் அதன் விலைகள் என்ன என்பதை வெளியிடுங்கள்.
  விண்வெளி பிசாசு கதை அட்டகாசமாக இருந்தது. இது போன்ற நல்ல கதைகளை வெளியிட்டு தான தலைவரை தொடர்ந்து வெற்றி நடையை உறுதி செய்யவும்

  ReplyDelete
 59. "இளம் டெக்ஸ் தொடர் ஒரு மெரி அரைச்ச மாவையே அரைக்குது ; இளம் 'தல' ஓடுறார்...ஓடுறார்..ஓடிக்கினே கீறார்....! கொஞ்சம் பிரேக் விட்டாலென்ன ?" என்று நண்பரொருவர் வினவியிருந்தார்"

  நானும்தான், சோபியா கதை நான்கை, ஓர் குண்டு புக்காக வெளியிட கேட்டிருந்தேன்.
  நீங்கள் அதெல்லாம் ஆவாது என்று சொல்லி விட்டீர்கள்.
  இப்போ,
  சோபிக்கோசம் அடுத்த ஓட்டெடுப்பை நடத்த வேண்டுகிறேன்.
  அப்படி ஓட்டெடுப்பில், சோபியா ஜெயிக்க வில்லையெனில், காசி இராமேஸ்வரம் நான் சென்று விடுகிறேன்.

  ReplyDelete
 60. இளம் tex ஓட ஓடத்தான் அமெரிக்க மாகாணங்களின் மேப் விரிவடைந்தது என்று நினைக்கிறேன் :-) 1800களில் இவ்வளவு ஊரு அமெரிக்காவில் இருந்திருக்குமா ? :-) (டாக்டர் சார்வாள் வந்து விக்கி பதிவு போடப்போறாரு !!)

  மெய்யாலுமா.
  டெக்ஸ் ஓட ஓட, புதிதா நிலப்பரப்பு உருவாச்சா...

  ReplyDelete
  Replies
  1. "ஜி" க்கள், யாரும் பொங்கி எழ வேண்டாம். இது சும்மா கலாய்ப்புக்காக.
   நான் காமிடிக்காக எழுதிய விசயங்கள், பஞ்சாயத்தானது பல வரலாறு.

   Delete
 61. "சார் வயதான டெக்சுக்கு ஓய்வு கொடுத்து இளம் டெக்ச துரிதப்படுத்தலாமே...அவர் ஓடுற வழில சாகசமில்லையா...புதிய டெக்ஸ் தேடுகிறார் எல்லா கதையும் குற்றவாளிகள...அவர் ஓடுறார்னா வழில தேடுறார் ...இவர் தேடுவார் அவ்ளோதான்....ஒரு மாதம் இளம் டெக்ஸ் ...அடுத்த மாதம் இரு கிளம் டெக்சுன்னு தூள் கிளம்புங்க...அல்லது இரு இளம் டெக்ஸ் ஒரு கிழம் டெக்ஸ்..அல்லது ஒரு இளமை ஒரு கிழமைன்னு அதிரட்டும் மாதங்கள்"

  இப்படி இந்த ரூட்ல போனா, டெக்ஸ்
  வெகு சீக்கிரமா VRS. வாங்க வேண்டியது தான்.
  Reply

  ReplyDelete
  Replies
  1. நண்பரே தொகுப்பாளார் வேணும் இளம் டெக்ஸ்...பன்னென்டு கதைக வருடத்துக்கு...6+3+4...ன்னு மூனு புத்தகமா

   Delete
  2. லட்டு ன்னு ஓகே. அதை பூந்தி என்று ,எடிட்டர் சொன்னால், அது சிறு வருத்தம் அவ்வளவுதான்.

   Delete
 62. ராபின் கதையை படித்து முடித்தவுடன் அடுத்த பாகம் எப்போது வரும் என நினைக்க வைத்துவிட்டது; இந்த கதையின் தொடரை அடுத்த ராபின் இதழில் கொடுங்க சார்.

  இந்த ராபின் தொடரை படிக்கும் பொழுது மனதை கவனமாகச் செய்கிறது. ராபின் வயதானராக் கதையின் ஆரம்பத்தில் காட்டும் போது கதை என்பதையும் மீறி நமக்கும் வயதாகி விட்டது என்பதை நினைத்து கவலை கொள்ள செய்கிறது.

  ReplyDelete
  Replies
  1. கவனமாகச் செய்கிறதா? Something wrong

   Delete
  2. வயதானதுக்கு எல்லாம் கவலை பட முடியுமா என்ன பரணி?

   Delete
  3. கவனமாகச் -> கணமாக

   Delete
 63. சார் ஈரோட்டு புத்தக விழாவுக்கு இன்னும் என்னென்ன புத்தகங்கள் என்ற தெளிவான அறிவிப்பு வரவில்லை எனவே தங்களை ஆவன செய்யுமாறு வேண்டுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. @Raghuraman Salem

   ஆவன செய்தல் என்பது தேவையானதை செய்தல் என்று பொருள்.

   ஆவண செய்தல் என்பது நிலையான பதிவு(Documentation)என்பது பொருள்.

   நீங்களே சொல்லுங்கள் எது சரி என்று?

   Delete
  2. தமிழின் மீது தங்களுக்குள்ள பற்றினையும், புலமையையும் இவ்வுலகரிய செய்யவே யாம் நாடகம் ஆடினோம்..

   Delete
  3. இவ்வுலகரிய?
   Or
   இவ்வுலகறிய?

   😂😂😂😂😂

   Delete
  4. தம்பி இப்போ சொல்லு

   Delete
  5. @டின் டின் சார் ...
   @சேலம் குமார் அண்ணா ..

   சொல்கின்றேன்..

   இவ்வுலகறிய ? இவ்வுலகரிய ?

   இவ்வுலகரிய

   கரிய..

   பெரியது எது ? என்ற பாடல்

   பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
   பெரிது பெரிது புவனம் பெரிது
   புவனமோ நான்முகன் படைப்பு
   நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
   கரிய மாலோ அலைகடல் துயின்றோன்...

   கரிய..

   இவ்வுலகரிய

   இவ்வுலகத்தை காக்கும் கரிய மால் ஆகிய திருமாலே அறியும் படி என்ற பொருளின் படி... உரைத்தேன்)

   (நன்றி.. பாணப்பத்தர ஓணாண்டி புலவர்)

   Delete
  6. @ Raghunathan Salem
   😂😂😂😂😂😂😂

   Delete
  7. செம்ம நண்பா செம்ம. உம் கவியை மெச்சினோம்.

   Delete
 64. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

  பட்டியலில் இல்லாமலே வந்த புத்தகம்.

  மழை பெய்யாமலே வந்த வானவில்.

  9.2/10

  ReplyDelete

 65. விண்வெளி பிசாசு.

  நல்லவன் ஆன ஸ்பைடர் திடீரென கெட்டவனாகவும் பின்பு மறுபடியும் நல்லவனாகவும் மாற..

  நரக கருவியாளன் ( அட ராமா. வேற பேரு கிடைக்கலையா ) வந்த வேகத்தில் போவதும் பின்பு திரும்பி வருவதும்

  கெட்டவன் ஆன விண்வெளி பிசாசு திடீரென நல்லவனாகி மறுபடியும் கெட்டவன் ஆவதும்

  உபவில்லனாக கடல் தேவர் திடீரென உள்ளே நுழைவதும்

  அம்மம்மா!!!!!

  நாலாவது படிக்கும்போது கிளாஸ் டீச்சர்(ஒரே டீச்சர் தான். எல்லா பாடமும் அவங்க தான் எடுப்பாங்க )
  திடீரென மாணவர்களை பாட சொல்வார்கள். ரவிச்சந்திரன் என என் கூட படித்த மாணவன் பாடுவான். திருச்செந்தூரின் கடலோரத்தில் எனத் துவங்கும் அவனது பாடல் சூரியகாந்தி படத்தில் வரும் பரமசிவன் கழுத்திலிருந்து என்ற பாடலின் நடுவில் உள்ள ஏதாவது இரண்டு வரிகள், கௌரவம் படத்தில் கண்ணா நீயும் நானுமா பாடலில் நடுவில் வரும் ஏதாவது இரண்டு வரிகள்,வசந்த மாளிகை படத்தில் யாருக்காக பாடலின் ஏதாவது இரண்டு வரிகள் எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பாடுவான். எல்லோருக்கும் சிரிப்பு அடக்கவே முடியாது. ராகமாலிகா மாதிரி திரைப்படப் பாடல் மாலிகா. அதைப்போலவே இருக்கிறது விண்வெளி பிசாசும்.

  ரிப்போர்ட்டர் ஜானி கதைக்கு கமலும் விசுவும் சேர்ந்து கதை வசனம் எழுதியது போல 😄.

  But sometimes size does matter.
  Size of the book is not only intimidating but also captivating 🌹.

  8.2/10. For sheer size and making. 🎁

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் சார் இன்னும் சினிஸ்டர் செவன் இருக்கு.

   Delete
  2. எல்லாமே இருக்குன்னு செனாவே சொல்லிட்டார்...மார்க் போடறதுல ஸ்ட்ரிக்டு...ஸ்ட்ரிக்டு

   Delete
  3. ஏலே அவரு மார்க் கொடுத்தது மேக்கிங் மற்றும் size மதிப்பெண் கொடுத்து உள்ளார்.

   நீ ஒவ்வொரு எலெக்ஷன் போதும் ஒவ்வொரு கட்சி கூட வேலை பார்த்து அரசியல்வாதி மாதிரி நல்லா பேச பழகிவிட்டலே 🤣😂

   Delete
  4. கீழ பாருல தம்பி...இரண்டு ஆளுமைகள் விசுவும் கமலும் சேந்து....ஹிட்டுதாம்ல...ஆழம பாத்தாதாம்ல புரியும்..அதுக்குதாம்ல கடல காட்டியிருக்கோம்...கடலரசன காட்டியிருக்கோம் செனாட்ட ஒரு வாரம் ட்யூசன் போல... அப்பவாச்சும் புரிதான்னு பாப்பம்

   Delete
  5. @Parani சகோ
   @ஸ்டீல் சகோ
   😂😂😂😂😂

   Delete
  6. @டின் டின்
   ஒவ்வொரு தடவையும் தங்களது ஞாபகத்திலிருந்து ஒரு சம்பவம் இங்கே பகிர்வதில் அருமையோ அருமைங்க, சகோ

   Delete
 66. //ரிப்போர்ட்டர் ஜானி கதைக்கு கமலும் விசுவும் சேர்ந்து கதை வசனம் எழுதியது போல்//டாக்டர் சார்.@r o fl

  ReplyDelete
 67. *ஆரூடத்தில் நிழலில்* 

  ஏஜென்ட் ராபின் கதைகள், கொஞ்சம் கொஞ்சமாக தொடர் கதைகளுக்கு நம்மை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முடிவு தெரியாத கதைகள் எனக்கு ஈர்ப்பு இல்லை என்றாலும், இப்பொழுது வரும் ராபின் கதைகள் ஒரு விதமான மெல்லிய இழை கதைகளை சங்கிலித் தொடராக கொண்டு செல்வது படிக்க சுவாரசியமாக உள்ளது. 

  இந்த கதையின் முடிவு தெரிந்து விடும் ஆனால் இந்த கதைகள் நம்மை எங்கு அழைத்து செல்கிறது என்பது புரியாத புதிராகவே வைக்கப்பட்டுள்ளதா என்பது கதாசிரியருக்கே வெளிச்சம் என்பதால் கதைகளை ரசித்துக் கொண்டே நடை போடுவதில் எனக்கு ஆட்சேபனை இல்லை.

  இந்த கதையில் முக்கிய கதாபாத்திரம் ஏஜென்ட் ராபின் இல்லை என்பது மற்றும் ஒரு ஆச்சரியம். ஜிம்மி கார்னெட்டின் மற்றொரு முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது சுவாரசியம். 

  மனிதர்களின் மனங்களை படிக்க தெரிந்தவர்கள் அதீத வாசிப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்த கதையில் வரும் அரியானாவும் ஒரு சான்று.

  தி MENTALIST எனும் டிவி தொடரை கண்டவர்கள், ஜிம்மியின் வியாக்கணங்களுக்கு ஒத்துப் போக மாட்டார்கள். ஆனால் ஆர்ட் போன்ற திறமைசாலிகள் ஜிம்மியின் வியாக்கணங்களுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை கண்டுபிடிக்கும் பொழுது அட போட வைக்கிறது. 

  நடு நடுவே ராபினின் ஆக்ஷன் காட்சிகள் கதைக்கு உதவினாலும், நம்மை கதையை ஊகிக்க விடாமல் கடைசி வரை கட்டி கூட்டிச்செல்ல உதவுகிறது. ஜிம்மியின் மரணம் ஒரு கேள்விக்குறியுடன் முடிய, அடுத்த கதைக்காக WAITING. 

  கதை - 10/10

  ஓவியம் - 10/10

  மேக்கிங் - 8/10(அட்டைப்படம் கதையை படித்த பிறகு ஏற்றுக் கொள்ள முடியவில்லை)

  ReplyDelete
 68. *குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை*

  ஏற்கனவே படித்த கதை ஆனால் மறந்துப் போன கதை. வசனங்களும் புதிதாக எழுதி இருப்பதால் கதையை படிக்க சுவாரசியமாக இருக்கிறது. ஏற்கனவே கருப்பு வெள்ளையில் வந்த மொழியாக்கத்தை விட இந்த புத்தகத்தின் மொழியாக்கம் படிக்க இலகுவாக உள்ளது. 

  யார் குற்றவாளி யார் நிரபராதி என்பதை  இனம் கண்டு கொள்வதில் தான் இளம் டெக்ஸுக்கும், முதிர் டெக்ஸுக்கும் போட்டியே உள்ளது என்பதை இந்த கதை மீண்டும் நிரூபித்து உள்ளது. 

  சில இடங்களில் டெக்ஸ், கிழம் டெக்ஸ் போலவே காட்சி அளிக்கிறார். பார்க்க பரிதாபமாக உள்ளது. 

  மறுவாசிப்புக்கு சிறந்த கதையே. 

  கதை - 9.5/10

  ஓவியம் - 9/10

  மேக்கிங் - 9.5/10

  ReplyDelete
 69. இன்று பிறந்தநாள் காணும் நம்ம பாகுபலி செந்தில் சத்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்💐💐💐💐💐🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💐💐💐💐💐💐

  ReplyDelete
 70. இனிய நண்பர் செந்தில் சத்யா ,இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறேன்

  ReplyDelete
 71. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செந்தில் சத்யா ஜி

  ReplyDelete
 72. This comment has been removed by the author.

  ReplyDelete
 73. இனிய நண்பர் எப்போதும் எனது அன்புக்கு உரியவர் செந்தில் சத்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே உங்கள் அன்புக்கு உரியவனாய் இருப்பதில் பெருமையடைகிறேன்

   Delete
 74. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செந்தில் சத்யா ஸார் 💐💐💐🍰🍰🍰👑

  ReplyDelete
 75. சார். இதுவரை ஈரோடு ஸ்பெசல் பற்றிய அறிவுப்பு இன்னும் தெளிவாகவில்லை.
  மாண்ட்ரேக் rs 450, கபிஷ்(விலை அறிவிக்கப்படவில்லை)இரண்டு மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. நாட்கள் நெருங்கிவிட்டன.தயவு செய்து இவ்வார பதிவில் தெளிவு படுத்தி விடுங்கள்.🙏

  ReplyDelete
 76. இவை போதாது.யானை பசிக்கு சோள பொரியா(.லயன் 40 க்கு )இவ்வளவுதானா

  ReplyDelete
  Replies
  1. ஆமா இதெல்லாம் போதாது. லயன் 40 ஒரு அட்டகாசமான அறிவிப்பை எதிர் நோக்கி காத்து இருக்கிறோம்.

   Delete
 77. வணக்கம் ஆசிரியர் சார். இன்று பதிவு கிழமை ஆசிரியர் சார்.

  ReplyDelete
 78. சார் இன்று பதிவுக் கிழமை...

  ReplyDelete
 79. ஆமாங்க ஸார்.இன்று பதிவுகிழமை

  ReplyDelete
 80. சனிக்கிழமையான ஒரே வசனம் தாங்க ஆசிரியரே, காமிக்ஸ் அன்பர்கள் போரடிக்காமல் திரும்ப திரும்ப உச்சரிக்கும் வார்த்தைகள்
  இன்று பதிவுக்கிழமை என்பதே ஆசிரியரே😇😇😇

  ReplyDelete
 81. விஜயன் சார் வாராரூ... அறிவிப்புகளை தெறிக்கவிடப் போராரூ...

  ReplyDelete
 82. @ Editor, blog tonite with tea or morning with coffee sir ? :-)

  ReplyDelete
 83. நள்ளிரவு சுக்கு மல்லி கசாயத்துடன் காத்திருக்கின்றேன்...

  ReplyDelete
 84. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே

  ReplyDelete