Powered By Blogger

Sunday, December 24, 2023

ஜாம்பவான்களின் ஜனவரி..!

நண்பர்களே,

வணக்கம். தொடும் தொலைவினில் புத்தாண்டும் ; சென்னைப் புத்தக விழாவும் காத்திருக்க, புது இதழ்கள் ; மறுபதிப்புகள் என்று ஆபீஸே அல்லோலகல்லோலப் பட்டுக் கிடக்கிறது ! கொட்டித் தீர்த்த மழையில் நாம்  சேதங்களின்றித் தப்பியிருப்பினும், பைண்டிங்கிலும், கூரியர் டப்பி செய்து தரும் நிறுவனத்திலும், இயந்திரங்கள் மழை நீரில் குளித்திருக்க, செப்பனிடும் பணிகள் முடிந்து, கொஞ்சம் கொஞ்சமாய் இயல்புக்கு இப்போது தான் திரும்பி வருகின்றனர் ! So ஏஜெண்ட் சிஸ்கோ + விங் கமாண்டர் ஜார்ஜ் வரும் வாரத்தில் புறப்பட்டு விடுவார்கள் ! மன்னிச்சூ ப்ளீஸ் ! And ஏதேதோ காரணங்களின் பொருட்டு 2023-ன் இரண்டாம் பாதி முதலாய்த் தொற்றியிருந்த தாமதப் பிசாசை, காத்திருக்கும் பிப்ரவரி முதலாய் துரத்தியடித்து விடலாம் என்பது உறுதி ! மாதத்தின் முதல் தேதியெனும் அந்த ஸ்லாட்டை இனி கோட்டை விட மாட்டோம் - that's a promise !

சென்னைப் புத்தக விழாவின் துவக்கம் ஜனவரி 5 என்றிருந்து, அப்புறமாய் ஜனவரி 4 ஆக மாறி, இறுதியில் ஜனவரி 3 க்கென தீர்மானமாகியிருக்க,ஓடோ ஓடென்று ஓடிக்கொண்டிருக்கிறோம் - ஆளுக்கொரு வண்டி வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு !! சும்மாவே ஒரு புது வருஷத்தின் முதல் மாத இதழ்களுக்கு நிரம்ப கவனம் தேவையாகிடும் & இம்முறையோ இரட்டிப்பு மெனக்கெடல் தேவையாகின்றது ! # One : ஒரு புது வாசிப்பு அனுபவத்திற்கான ப்ராமிஸுடன் 2024 க்கு துவக்கம் தந்திடவுள்ளோம் ! # Two : இந்த ஜனவரி ஜாம்பவான்களுக்கான ஜனவரி !! So முன்னெப்போதுமே இல்லாததொரு பட்டாம்பூச்சி நடனம் தொந்திக்குள் ! ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றல்ல - நான்கு (காமிக்ஸ் உலக) பெத்த தலைக்கட்டுகள் ஒரே நேரத்தில் களமிறங்கிடுகிறார்கள் எனும் போது, அவர்களுக்கான முதல் மரியாதைகளில் துளியும் குறைபாடு இருந்திடலாகாதே ! 

சந்தேகமின்றி ஜனவரியின் (நமது) highlight சாகசவீரன் டின்டின் தான் ! ஏற்கனவே இதைச் சொல்லியுள்ளேனா - தெரியவில்லை, ஆனால் உலகம் சுற்றும் இந்த ரகளையான நாயகரை தமிழுக்குக் கொணர கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகளின் முயற்சிகள் அவசியப்பட்டிருந்தன ! And நடப்பாண்டின் ஜனவரி இறுதியில், ஆங்குலேமில் இதற்கான ஜெயம் கிட்டிய போது, ஒரு முழு பிளேட் சுக்கா ரோஸ்ட்டை கண்ட கார்சனாட்டம் வாயெல்லாம் பல்லாச்சு எனக்கு !  'ஊருக்குப் போறோம், புக்கை ரெடி பண்றோம், ரவுசு விடறோம் !'  என்பதே உள்ளுக்குள்ளான உற்சாக மைண்ட்வாய்ஸ் -அந்த நொடியில் !! ஆனால் எனக்குத் துளியும் தெரிந்திருக்கவில்லை  - மெய்யான உசரம் தாண்டும் வைபவமே இனிமேல்தான் காத்துள்ளதென்பது ! 'அட, எம்புட்டு பதிப்பகங்களோட ; எத்தினி நாயகர்களோட பணி செஞ்சிட்டோம்.....இவரோடயுமே அன்னம், தண்ணீ புழங்க லேசா பழகிக்கலாம் !' என்று நினைத்திருந்தவனுக்கு அடுத்தடுத்த படிகளில் தான் புரிந்தது - மற்றவர்கள் - மற்றவர்கள் தான் & டின்டின் - டின்டின் தான் என்பது ! 

மொத்தமே 24 ஆல்பங்களைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை அசாத்திய வெற்றியோடு தாண்டுவதெல்லாம் ஜாம்பவான்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் சாத்தியமாகிடாதே ?! And ஒவ்வொரு தேசத்திலும், ஒவ்வொரு மொழியிலும் டின்டின் வெளியாகிக் கொண்டிருந்தாலும், மொழிபெயர்ப்புத் தரத்தில் ; ஒவ்வொரு கதாப்பாத்திரமும் கதைக்கும் பாணிகளில் ; தயாரிப்புத் தரத்தில் இம்மியூண்டு கூட வேறுபாடு இருந்திடலாகாது என்பதில் அத்தனை கவனமாய் உள்ளனர் ! தயாரிப்பின் ஒவ்வொரு அங்குலத்தினையும் நம்மோடு கரம்கோர்த்து அவர்கள் பார்வையிட்டு வந்தது மாத்திரமன்றி, தமிழாக்கத்தினையும் கவனமாய் பரிசீலித்து வந்தனர் ! இங்கே கேப்டன் ஹேடாக்கின் 'கடா முட' டயலாக்குகள் தவிர்த்த பாக்கியெல்லாம் பெருசாய் நெட்டி வாங்கும் ரகமல்ல தான் என்பதால் தம் கட்டி எழுதி முடித்து விட்டேன் ! ஆனால் கேப்டனின் வசை பாடும் வசனங்கள் பக்கமாய்ப் போன போது தான் வேடிக்கையே துவங்கியது ! 

இது குறித்து ஏற்கனவே இங்கொரு பதிவிட்டதும், நண்பர்களில் சிலர் தங்களுக்குத் தோன்றிய வரிகளை பரிந்துரை செய்திருந்ததும் நினைவிருக்கலாம் ! ஆனால் அந்த மாமூலான  "கிழிஞ்சது கிருஷ்ணகிரி" ; "கிழிஞ்சது லம்பாடி லுங்கி" போன்ற சமாச்சாரங்கள் கேப்டனுக்கு ஒத்துப் போகாதென்பதால் அவற்றை பயன்படுத்திட வழியிருக்கவில்லை ! மனுஷன் ஒரு மாலுமி ; ஒண்டிக்கட்டை ; கப்பல் பயணம் & விஸ்கி என்பதே அவரது வாழ்க்கை என்பதால், அவர் போடும் கூப்பாடுகளில் கடலும், கடல்சார் சமாச்சாரங்களுமாய் இருத்தல் பிரதான தேவை என்றாகியது ! So ஒரு 80 பக்க நோட்டையே போட்டு, சாமத்தில் தோணுவதையெல்லாம் கிறுக்கி வைக்க ஆரம்பித்தேன். இங்கு தான் நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் பங்களிப்பு நிரம்ப உதவியது ! அவருக்குத் தோணுவதையெல்லாம் எனக்கு அனுப்பிடுவார் & நன்றாக இருக்குதோ-இல்லியோ, சகலத்தையும் குறித்து வைத்துக் கொண்டேன். அதே போல எனக்குத் தோணும் வரிகளை அவரிடம் bounce செய்து பார்ப்பேன் ! "இன்ன இன்ன காரணங்களுக்காய் இவை நல்லாயில்லை !" என்று அவர் சொல்ல, "இது இதுலாம், இதுனாலே தேறலே !" என்று நான் சொல்ல, இந்தப் பரிவர்த்தனைகள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஓடி வந்தன ! 'அட புலவய்ங்களா....நீங்க எழுதுறது தேறுமா - இல்லையான்னு தீர்மானம் சொல்லப் போறதே நாங்க தான் ! அடங்குங்க !" என்று நடுவே படைப்பாளிகளின் பரிசீலனை டீம் சொல்ல, மாதங்கள் ஓட்டமாய் ஓட்டமெடுத்தன ! In essence கேப்டனின் கூப்பாடுகளில் அர்த்தம் ஏதும் லேது ; மனுஷன் கோபத்தில் கொப்பளிக்கும் போது வெளிப்படும் கச்சா முச்சா வார்த்தைகளே அவை ! சரி, இங்கிலீஷில் உள்ள template-ஐ பின்தொடரலாம் என்றால், அங்கே நின்றோரோ தஞ்சாவூர் பெரியகோவிலின் நந்தியினை விட பிரம்மாண்டமானோர் ! பிரெஞ்சிலிருந்த டின்டினை  ஆங்கிலப்பதிப்புக்கென மொழிமாற்றம் செய்திட 1958-ல் களமிறங்கிய Leslie Lonsdale Cooper & Michael Turner இந்தத் தொடருக்கே ஒரு புதுப் பரிமாணத்தை வழங்கினார்கள் என்றால் அது மிகையே ஆகாது ! So காலத்தை வென்ற அவர்களின் வரிகளுக்கு முன்னே நாம் எதை போட்டுப் பார்த்தாலும் மொக்கையாகவே தெரிந்தது ! நாட்களின் ஓட்டத்தோடு நிரம்ப நிரம்ப அடித்தல், திருத்தம், மறுதிருத்தம் என்ற கூத்துக்களுக்குப் பின்பாய் கொஞ்சம் ஸ்கிரிப்ட் finetune ஆகியிருந்தது போல் பட்டது ! 

படைப்பாளிகளும் அதனை approve செய்திட, நம் மத்தியில் ரெகுலராய் டின்டினை (சு)வாசிக்கும் நண்பர்களிடம் மேலோட்டமான அபிப்பிராயக் கோரல் ; "டின்டின் வீசம்படி எவ்வளவு ?" என்று கேட்டாலும் கார்ட்டூன்களை நேசிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் உரையாடல் - என்று சுற்றி வந்தோம் ! இறுதி stretch-ல் கார்த்திக் மறுக்கா தனது பங்களிப்பினை செம active ஆக செய்திட, மூன்று நாட்களுக்கு பட்டி-டிங்கரிங் ரணகளமாய்த் தொடர்ந்தது. கிட்டத்தட்ட 7 மாதங்களாய் நான் ஒருவனே, ஒரே கோணத்தில் பார்த்து வந்த  ஸ்கிரிப்ட் - வாசகப் பார்வைகளில்  / விமர்சகப் பார்வைகளில் எவ்விதம் எடுபடுகிறது ? என்று தெரிந்து கொள்ளவே இத்தனை கூத்துக்களும் ! தவிர, கேப்டனுக்கு நாம் இன்று செட் செய்திடும் template தான் இனி தொடர் முழுக்கத் தொடர்ந்திடும் எனும் போது இயன்றமட்டுக்கு முயற்சித்து விட்டோம் என்ற திருப்தி கிட்டும் வரை கண்ணில்பட்ட தூணிலெல்லாம் மண்டையை முட்டிக்க எனக்குத் தயக்கமே இருக்கவில்லை !  And எனது 40 வருஷ சர்வீஸில் ஒற்றை கதைக்கு இம்புட்டு நேரம் செலவிட்டதே லேது ; so பற்பல வகைகளில் ஒரு first ஆகிடும் (தமிழ்) டின்டின் உங்களிடமும் thumbs up வாங்கினால் ஒரு பெரும் பெருமூச்சு விட்டுக் கொள்வேன் ! FINGERS CROSSED !! Thanks a ton கார்த்திக் & inputs தந்த all நண்பர்ஸ் !! Of course உங்களிடம் யோசனைகள் கேட்டு விட்டு, லெப்ட்டுக்கா, ரைட்டுக்கா என்றெல்லாம் போய், புளிய மரத்தில் வண்டியை விடுவதையும் நான் செய்துள்ளேன் தான் ! நாம என்னிக்கி சொல்பேச்சு கேக்குற ஒழுங்குப் புள்ளையா இருந்திருக்கோம் ? 

பிராசசிங் ; அச்சு ; பைண்டிங் - என எதையுமே நாம் கையாளாமல், டாப் பதிப்பகங்களுக்கு புக்ஸ் தயார் செய்து ஏற்றுமதி செய்திடும் ஒரு அசலூர் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம் ! அவர்களின் பரிந்துரைப்படி செம திக்கான ; செம செம திக்கான பேப்பரில் இந்த இதழ் அச்சாகிடவுள்ளது ! அடுத்த சில நாட்களில் புக்கை ரெடி செய்து தந்து விடுவதாக ப்ராமிஸ் செய்துள்ளனர் ; so 'பதக்' பதக்' என்று அடித்துக் கொள்ளும் நெஞ்சோடு காத்துக் கிடக்கின்றோம் !! 

Moving on, ஜனவரியின் next ஜாம்பவான் நம்ம கோடீஸ்வரகாருவே தான் ! கதாசிரியர் வான் ஹாம் போட்டுத் தந்தவொரு வெற்றிகரமான பார்முலாவை அதன் ஓவியரும், புதுக் கதாசிரியரும் லார்கோவோடு தொடர்கிறார்கள் ! எப்போதுமே லார்கோ கதைகள் மேற்கே ஆரம்பிச்சி, தெற்கே குட்டிக்கரணமடித்து ; வடக்கே வடை சுட்டு ; கிழக்கே க்ளைமாக்ஸை கொணர்வது வாடிக்கை ! And முடிச்சுக்கு மேல் முடிச்சை போட்டு நம்மை பிரமிக்க வைப்பார் வான் ஹாம் ! அதே வீச்சை ; அதே வேகத்தை ; அதே லாவகத்தை புதியவருமே கொண்டிருத்தல் சுலபமே அல்ல தானே ; so வான் ஹாம் 'டச்' எங்கே ? என்ற தேடலின்றி கதையினூடே பயணித்தால் சும்மா தீயாய் பறக்கிறது "இரவின் எல்லையில்" !! And இதுவரைக்கும் லார்கோ கதைகளில் நாம் பார்த்திராத களமாய் - வான்வெளிக்கே நம்மை இட்டுச் செல்கின்றனர் ! சித்திரங்களும் சரி, அந்த டிஜிட்டல் கலரிங்கும் சரி - பட்டாசு தான் !  இதோ - ஒற்றை மாதம் கூட ஆகியிருக்கவில்லை பிரெஞ்சில் இதன் ஒரிஜினல் வெளியாகி ; அதற்குள்ளாக தமிழில் நமக்கு வாய்ப்பு கிட்டியிருப்பது செம லக் என்பேன் ! பொதுவாய் லார்கோ கதைகளுக்குப் பேனா பிடிப்பது குடலை வாய்க்குக் கொண்டு வரும் பணியாக இருப்பதுண்டு தான் ; but நாட்களின் ஓட்டத்தோடு நமது ரசனைகளிலும் கணிச மாற்றங்கள் நிகழ்ந்து, CIA ஏஜெண்ட் ஆல்பா ; சிஸ்கோ ; டேங்கோ போன்ற சமகால நாயகர்களோடு நாம் தோள் உரச ஆரம்பித்து விட்டதாலோ - என்னவோ, இம்முறை எனக்குப் பெரிதாய் கஷ்டங்கள் தோணலை ! In fact - இதற்கு முன்பாய் எழுதிய "கலாஷ்னிகோவ் காதல்" (சிஸ்கோ) - கணிசமாக நாக்கைத் தொங்கச் செய்திருந்தது !! And இதோ - ஒரிஜினல் டிஸைனுடன் preview !!


Next ஜாம்பவானுமே கலரில் கலக்கக் காத்திருக்கிறார் ! And இவரோ ஒரு கிளாசிக் நாயகர் ! 1936-ல் உருவானவர் எனும் போது இவருமே கிட்டத்தட்ட தொண்ணூறு அகவைகளைத் தொடக் காத்துள்ளார் ! "மரணம் அறியா மாயாத்மா" டென்காலி கானகத்தில் உலவுவதை இம்முறை கலரில் நம்ம V காமிக்சில் ரசித்திடவுள்ளோம் ! If I'm not mistaken - ஒரிஜினலாய் இந்த இதழ் மலையாளத்தில் ; ஹிந்தியில் ; இங்கிலீஷில் பிற பப்ளீஷர்ஸ் வெளியிடுவது போல பெரிய சைஸிலேயே திட்டமிடப்பட்டிருந்தது ! In fact வேதாளனின் கலர் கதைகளுக்காக படைப்பாளிகளிடம் பேசும் முன்னே என்னிடம் அது  பற்றி discuss செய்து கொண்டிருந்த சமயம் கூட "ரீகல் காமிக்ஸ்" சைஸ் தான் என்று இருந்தது template !  ஆனால் "ஒரு பக்கத்துக்கு இம்புட்டு படம் இருந்தா படிக்க ரசிக்க மாட்டேங்குது ஓய் !" என்று நீங்கள் SUPREME 60s க்கு எழுப்பிய புகார் குரல்கள் எனது காதுகளில் மாத்திரமன்றி, புள்ளையாண்டரின் காதுகளிலும் ஒலித்திருக்குமோ என்னவோ - reset செய்து டெக்ஸ் வில்லர் சைசுக்கே தயார் செய்து வருகிறார் V காமிக்சின் எடி ! And எழுத்துக்களும் நல்லா பெருசா ரெடியாகிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ! So கண்ணாடியை வீட்டுக்குள் தொலைத்து விட்டுத் தேடுவோர் சங்கத்தில் நீங்களும் அங்கத்தினராய் இருந்தால் கூட no worries என்று சொல்லலாம் போலும் ! இதோ - நாம் ரெகுலராய் பயன்படுத்தி வரும் துருக்கிய ஓவியரின் கைவண்ணத்திலான அட்டைப்படத்துடன் "வீரனுக்கு மரணமில்லை !" preview : 


Oh yes - மறக்கும் முன்பாய்ச் சொல்லி விடுகிறேனே - எழுத்துருக்கள் உபயம் வழக்கம் போல நண்பர் ஜெகத் தான் ! அட்டவணையில் உள்ள அத்தனை தலைப்புகளுக்கும் தனது தெறி ஸ்டைலில் டிசைன் செய்து அனுப்பியுள்ளார் ! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஜெகத் !! 

ஜாம்பவான் # 4 - "இளம் டெக்ஸ்" !! ஜனவரியின் ஒரே black & white இதழில் இந்த யூத் சாகசச் சங்கிலி தொடர்கிறது ! And நமக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயமுள்ள சாம் வில்லரும் கதையில் இடம்பிடிக்கிறார் ! விடலைப் பருவத்தில் பெண்களை டாவடிப்பது ; கடலை போடுவது என்ற சம்பிரதாயச் சமாச்சாரங்களை 'தல' யுமே செய்துள்ளார் என்பதை "கண்ணீருக்கு நேரமில்லை" நமக்குக் காட்டிடவுள்ளது ! 128 பக்கங்களே ; செம crisp சாகசம், with செம crisp சித்திரங்கள் ! So ஜனவரியில் no அழுகாச்சீஸ் ; no இழுவைஸ் ; no மொக்கைஸ் - ஆல் racy த்ரில்லர்ஸ் ! இன்னும் சொல்லப் போனால் வேதாளரின் ஆல்பத்தில் கூட கதைக் காலம் ரொம்பவே வித்தியாசமாய் இருக்கும் போலும் ; DTP பணிகள் ஓடிக்கொண்டிருக்கும் போது கொஞ்சப் பக்கங்களை மட்டும் பார்த்த போதே - புராதனம் கொஞ்சி விளையாடும் களமாகத் தெரியவில்லை ! 

ஒற்றை நாயகர் ஜாம்பவானாய் அமைந்தாலே தெருவெல்லாம் பந்தல் போட்டு பீப்பீ ஊதுபவனுக்கு, நால்வர் ஒரே சமயத்தில் அமைந்தால் ???? குட்டிக்கரணம் அடித்தே போய் வருகிறேன் ஆபீசுக்கு ! So சந்தா எக்ஸ்பிரஸ் 2024 ல் உங்களை வரவேற்கக் காத்திருக்கும் ஜாம்பவான்களை இதோ பார்த்த கையோடு - G Pay ஒன்றினைத் தட்டி விடலாமே - ப்ளீஸ் ?  


சொல்லுங்களேன் guys - இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு எந்த வரிசையில் இருக்குமென்று ? 

Before I sign out - புத்தக விழா update ! வழக்கம் போல் ஸ்டாலுக்கு விண்ணப்பித்து விட்டு நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் ! மாத இறுதியில் உறுதியாகி விட்டால், ஜனவரி 3 முதல் ஜனவரி 21 வரை நமது கேரவன் சென்னையில் தான் நிலைகொண்டிருக்கும். முதல் வாரத்தின் இறுதியில் (6 & 7 - சனி & ஞாயிறு) தேதிகளின் மாலைகளில் நமது ஸ்டாலில் வந்து பராக்குப் பார்க்க உத்தேசித்துள்ளேன் ! நண்பர்கள் எட்டிப் பார்த்திட்டால் வழக்கம் போல அரட்டையைப் போடலாம் ! Please do drop in folks !! 

Bye all....see you around !! "இளம் தல" எடிட்டிங் வெயிட்டிங் !! And Merry Christmas all ! 

271 comments:

  1. வணக்கம் அனைவருக்கும்.

    ReplyDelete
  2. அனைவருக்கும் வணக்கம்...

    ReplyDelete
  3. ஹை....சாமக் கோழிகள் இம்புட்டு உள்ளனவா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்க தான் டைம் சொல்லிட்டீங்க அதனால் all வெயிட்டிங்

      Delete
  4. வணக்கமுங்க எல்லாருக்கும் 🙏

    ReplyDelete
  5. வேதாள மாயாத்மா கலரில் ஜொலிக்கிறார்..😍😍😍

    ReplyDelete
  6. லார்கோ சாகசம் இம்முறை சந்திரமண்டத்திலா.. அல்லது செவ்வாய் கிரகத்திலா..!?

    ராக்கெட்டுல போறாகளே...😯

    ReplyDelete
    Replies
    1. டெமெட்ரியா..டெமெட்ரியான்னு ஒரு அம்மணி வாராகோ பாருங்க !! ஆங்...நீங்க சந்திர மண்டலம் பத்தி கேட்டீங்களோ ?

      Delete
    2. அம்மணியோட முக மண்டலம் சநதிர பிம்பமோ

      Delete
  7. ஜானிக்கொரு தீக்கனவு

    இந்த மாதம் வெளியான ஜானியின் கதையின் மீது இன்று அதிகமாக வெளிச்சம் படவில்லை என்று நினைக்கிறேன். அதற்கு காரணமாக இந்த மாதம் வெளியான டெக்ஸ் கதையும், கிராஃபிக் நாவலும் பட்டை கிளப்பியதை சொல்லலாம்.

    ஆனால், அந்த கதைகளுக்கு சற்றும் சளைக்காத இடியாப்ப கதை நம்ம ரிப்போர்ட்டர் ஜானியின் தீக்கனவு என்றால் தகும்.

    துரோகியை கண்டறிய, துரோகியாக மாறி, துரோகியாக தேடப்பட்டு, மண்டை, கை, கால் எல்லாம் வீக்கம் பெற்று சாகசம் செய்துள்ளார் ஜானி.

    ஜானியின், கமிஷனரும் ஒவ்வொரு முறை போடும் திட்டமும், செக்சன் நார்த்தினால் சமயோசிதமாக முறியடிக்கப்படுவதும், எப்படி யோசித்தாலும் ஜானி துரோகி என்றே யோசிக்கச் செய்வதில் வில்லர்கள் வென்று விட்டார்கள்.

    இந்த முறை, ஜானியுடன் சேர்த்து கமிஷனருக்கும் மொத்து விழுகிறது. கதையின் பாதி பேனல்களில் அரை மயக்கத்திலேயே ஜானி வலம் வருகிறார்.

    வழக்கமாக கதை நெடுகிலும் பின்னப்படும் இடியாப்ப குழப்பம், இங்கேயும் தொடர்கிறது. ஆனால், முடிச்சு அவிழ்ந்த மாதிரி தோன்றினாலும், இறுதிப் பக்கம் வரை துரோகியாக சித்தரிக்கப்படும் ஜானி, ஒரிஜினல் துரோகியை கண்டுபிடிக்க முடியாமல் திணருகிறார் என்பதிலேயே இது வேறு மாதிரியான கதை என்று அசத்துகிறது.

    அதிலும், டைரக்டர் வலை விரித்த போதும் கூட, வில்லனின் முகமூடி கிழியாமல் இருப்பது மாஸ்டர் ஸ்ட்ரோக்...

    வருடம் தோறும் கண்டிப்பாக ஒரு ஜானி கதையாவது வேண்டும் என்பதை, இந்த கதையும் வலியுறுத்தி விட்டது...

    நன்றி!

    ரேட்டிங்: 9/10

    ReplyDelete
    Replies
    1. பொதுவாய் ஜானியை எடிட்டிங்குக்கு கையில் ஏந்தும் போது கொஞ்சம் பேஸ்தடித்தே நிற்பேன் சார் ! ஆனால் இம்முறை எழுதிக் கொண்டிருக்கும் போதே உணர முடிந்தது - இந்த ஆல்பம் நிச்சயம் ஒரு cool வாசிப்புக்கு உரமிடும் என்று !

      Delete
    2. இந்த மாத இதழ்களில் ஜானி தான் சார் டாப். ராபின் very close Second, கி. நா 3, டெக்ஸ் 4

      Delete
    3. //இந்த மாத இதழ்களில் ஜானி தான் சார் டாப். //
      நானும் இதேதான் சொன்னேன் நண்பரே

      Delete
    4. இந்த மாத இதழ்களில் ஜானி தான் டாப். ராபின் very close Second, டெக்ஸ் 3

      Delete
  8. அட அட அட ஜனவரி சும்மா பட்டையை கிளப்பப் போகிறது. டின்டின் கண்டிப்பாக Distinction வாங்குவார் சார்.

    ReplyDelete
    Replies
    1. சேலத்துக்கு ரெண்டு கிலோ சர்க்கரை பார்சல்லல்ல்ல்ல்ல் !!!

      Delete
  9. ***சொல்லுங்களேன் guys - இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு எந்த வரிசையில் இருக்குமென்று ? ***

    1)லார்கோ
    2)டின்டின்
    3)டெக்ஸ்
    4)வேதாளர்

    ReplyDelete
    Replies
    1. நமது புது ஸ்டைலுக்கு, புது லார்கோ அளவெடுத்துச் செய்தது போல் பொருந்துகிறார் சிவா !! செம breezy read !

      Delete
  10. முதலில் வேதாளர் தான். இரண்டாவது டின் டின். மூன்றாவது லார்கோ. நான்காவது தல.

    ReplyDelete
  11. ///உலகம் சுற்றும் இந்த ரகளையான நாயகரை தமிழுக்குக் கொணர கிட்டத்தட்ட ஐந்தரை ஆண்டுகளின் முயற்சிகள் அவசியப்பட்டிருந்தன ! ///

    இன்னும் கூட நம்பமுடியவில்லை.. டின்டின்னை நாம் தமிழில் வாசிக்கப்போகிறோம் என்பதை...😍😍😍
    எத்தனை நாட்களின் கனவு சார்.. எங்களின் கனவை ஐந்தரை ஆண்டுகள் போராடி நிறைவேற்றியதற்கு ஐந்தரை கோடி நன்றிகள் சார்..😍😍😍

    ReplyDelete
    Replies
    1. 1985-ல் துவங்கிய கனவு சார் எனக்கு ! 39 ஆண்டுகள் பிடித்துள்ளது நனவாகிட !

      Delete
    2. முதலில் டின்டின்
      அடுத்து வேதாளர்,
      லார்கோ
      டெக்ஸ்

      Delete
    3. டெக்ஸுக்கு வந்த சோதனையைப் பாருங்களேன் !!

      Delete
    4. இதுல என்ன ஒரு சோதனை என்றால் எனக்கு யங் டெக்ஸ் ரொம்பவே பிடிக்கும். ஆனால் வேற வழி இல்லை சார். மிட்டாய் கடையில் நுழைந்த சிறுவன் போல ஜனவரி பார்சல் வந்த பிறகு முழிக்கப் போகிறேன்.

      Delete
  12. ஜனவரி இதழ்களை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  13. வேதாளரின் முன்னட்டையை விட பின்னட்டை அட்டகாசமாக இருக்கு என்னளவில்

    ReplyDelete
    Replies
    1. மங்கா காமிக்ஸ் மாதிரின்னு நினைச்சுக்கோங்க சார் ; பின்னட்டை முன்னட்டையாகிடும் !

      Delete
    2. அந்த மண்டை ஓட்டு மாளிகையும் வேதாளரின் கம்பீரமும் அட்டகாசம்

      Delete
    3. அது குகை சார் - கபாலக் குகை !!

      Delete
    4. குகை தான் சார், வேதாளர் ஆட்சி செய்வதால் அதை மாளிகை என்ற ரீதியில் குறிப்பிட்டேன்

      Delete
  14. மூன்று கலரில் வேதாளர் 🤩

    ReplyDelete
  15. சென்னை புத்தக விழா ஸ்பெஷல் வெளியீடு ஏதும் உண்டாங்க சார் ?

    ReplyDelete
    Replies
    1. சந்தா சேகரிப்புக்கு மத்தியில் புதுசாய் குழப்பிடப் போவதில்லை நண்பரே ! புத்தக விழா விற்பனைக்கென மறுபதிப்புகள் மட்டுமே கணிசமாக இருக்கும் !

      Delete
    2. மறுபதிப்பில் டெக்ஸும் ரகசியமா வந்து குதிப்பார்னும் ஊருக்குள்ளே அரசல்,புரசலா ஒரு பேச்சு ஓடிகிட்டு இருக்கு சார்...

      Delete
  16. டின் டின் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது சார்.

    ReplyDelete
  17. 2024 இல் முதல் மாதமே சரவெடி, அதிர்வெடி இதழ்களாக நான்கு படைப்புகள் உள்ளன.

    நான்கு புத்தகங்களையும், ஒன்றுக்கு மேற்பட்ட இதழ்களை வாங்க இப்பொழுதே மனது பரபரக்கிறதே...

    ReplyDelete
  18. வேதாளரின் அட்டைப்படம் இந்த வருடத்தின் மிகச் சிறந்த அட்டைப் படமாக உள்ளது சார். அட்டைப் படத்தைப் பார்க்கவே பரவசமாக உள்ளது சார்.

    ReplyDelete
  19. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
  20. மூன்று வண்ண இதழ்கள் ஒரு க/ வெள்ளை இதழ். ஜனவரி இதழ்களை நினைத்து இப்போதே குத்தாட்டம் போடத் தோன்றுகிறது.

    ReplyDelete
  21. 3 அட்டைப் படங்களும் சும்மா தெறிக்கிறது. 2024 அட்டகாசமாக இருக்கும் போலவே.

    ReplyDelete
    Replies
    1. வருடத்தின் துவக்கமே அருமையாக உள்ளதே போகப் போக இன்னும் வேண்டும் என்று மனம் ஆனந்த கூத்தாடுகிறது.

      Delete
    2. இதில் எதை முதலில் படிப்பது என்று போட்டியே வரும் போலயே.

      நான் முதலில் டின் டின் அப்புறம் வேதாளர்னு பிளான்

      Delete
  22. ஜனவரி 2024 வெளியீடுகளுக்கு ஒரு மாஸ் வெற்றி மாதமாக அமைவது உறுதி...

    ReplyDelete
  23. V Comics வேதாளர் புத்தக விழாவை தாண்டியும் ஸ்டாக் இருக்க வாய்ப்பே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை ஜனவரியில் வெளியாகும் அனைத்து இதழ்களும் மாதம் முடிவதற்குள் விற்று தீர்ந்தது விடும் என்று பட்சி சொல்கிறது.

      Delete
    2. // மாதம் முடிவதற்குள் விற்று தீர்ந்தது விடும் என்று பட்சி சொல்கிறது. //

      என் கணிப்பு 15 நாட்களுக்குள்...

      Delete
    3. கண்டிப்பாக நான்கு இதழ்களும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு கொண்டு இடத்தை காலி செய்வார்கள்
      வேதாளர்
      டின் டின்
      டெக்ஸ்
      லார்கோ
      இந்த வரிசையில் விற்று தீரூவார்களென நினைக்கிறேன் நண்பரே

      Delete
    4. // இந்த முறை ஜனவரியில் வெளியாகும் அனைத்து இதழ்களும் மாதம் முடிவதற்குள் விற்று தீர்ந்தது விடும் என்று பட்சி சொல்கிறது. //
      இது நடக்கவில்லை என்றால் தான் ஆச்சர்யம்...!!!

      Delete
  24. அட்டைப்படங்கள் எல்லாமே அசத்தல் ரகம்!! 'ஜாம்பவான் ஜனவரி' - இதுவரை கண்டிராத ஒரு பிரம்மாண்ட மாதமாக அமைந்திடுமென்பது உறுதி!

    வாழ்க்கையில் ஒருமுறையாவது டின்டின்னை தமிழில் - குறிப்பாய் வண்ணத்தில் - படித்துவிடமாட்டோமா என்ற பலவருட ஏக்கம் தணிந்திட விரல்விட்டு எண்ணிடும் நாட்களே பாக்கியிருப்பது - உள்மனசில் ஒரு பிரபுதேவாவை உருவாக்கியிருக்கிறது!

    வண்ணத்தில் வெளிவரும் வேதாளரும் சக்கைப்போடு போடப்போவது உறுதி - குறிப்பாய், பள்ளி மாணவர்களிடத்தில்!! பிரீமியம் விலைகளில் அல்லாது; மாணவர்களும் வாங்கிடும் விலையிலேயே வெளியாக இருப்பது கூடுதல் சிறப்பு!

    சந்தாவில் இணைந்துவிட்டேன்..
    சந்தோசமாய் காத்திருக்கிறேன்..
    ஜாம்பவான்களே.. வருக வருக!!

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இதுவரை சந்தா செலுத்தாத நண்பர்கள் உங்களால் முடியும் பட்சத்தில் இந்த மாதம் சம்பளம் வந்த உடன் சந்தா செலுத்த வேண்டுகிறேன்.

      இரண்டு தவணையிலும் சந்தா செலுத்த முடியும்.

      சந்தா கட்டுங்க சந்தோசமா படிங்க.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. //சந்தாவில் இணைந்துவிட்டேன்..
      சந்தோசமாய் காத்திருக்கிறேன்..
      ஜாம்பவான்களே.. வருக வருக!!//

      நானுமே ஆவலுடன் வெயிட்டிங் ஃபார் ஜனவரி :-)))

      Delete
    4. // நண்பர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இதுவரை சந்தா செலுத்தாத நண்பர்கள் உங்களால் முடியும் பட்சத்தில் இந்த மாதம் சம்பளம் வந்த உடன் சந்தா செலுத்த வேண்டுகிறேன். //

      +1

      Delete
    5. // உள்மனசில் ஒரு பிரபுதேவாவை உருவாக்கியிருக்கிறது! //

      Ithu veraiya 🤩

      Delete
    6. // பள்ளி மாணவர்களிடத்தில்!! பிரீமியம் விலைகளில் அல்லாது; மாணவர்களும் வாங்கிடும் விலையிலேயே வெளியாக இருப்பது கூடுதல் சிறப்பு! //

      Yes yes

      Delete
  25. // பிராசசிங் ; அச்சு ; பைண்டிங் - என எதையுமே நாம் கையாளாமல், டாப் பதிப்பகங்களுக்கு புக்ஸ் தயார் செய்து ஏற்றுமதி செய்திடும் ஒரு அசலூர் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம் ! அவர்களின் பரிந்துரைப்படி செம திக்கான ; செம செம திக்கான பேப்பரில் இந்த இதழ் அச்சாகிடவுள்ளது ! அடுத்த சில நாட்களில் புக்கை ரெடி செய்து தந்து விடுவதாக ப்ராமிஸ் செய்துள்ளனர் ; so 'பதக்' பதக்' என்று அடித்துக் கொள்ளும் நெஞ்சோடு காத்துக் கிடக்கின்றோம் !! // அட்டகாசமாக உருவாகிறது சார். புத்தகம் கைக்கு வந்ததும் ஒரு you Tube video அப்லோட் செய்யுங்கள் சார். நன்றி

    ReplyDelete
  26. இந்த வாரம் விங் கமாண்டர் ஜார்ஜ், சிஸ்கோ வரப் போகுது. அடுத்த வாரம் டின்டின், டெக்ஸ், லார்கோ, வேதாளர் வரப் போகிறது. இதெல்லாம் காமிக்ஸ் பொற்காலம்.

    ReplyDelete
  27. டின்டின்,வேதாளர்,லார்கோ மற்றும் இளம் தல. இதுவே எனது வாசிப்புக்கான விருப்ப வரிசை.

    ReplyDelete
    Replies
    1. அதே வரிசை நண்பரே எனக்கும்.

      Delete
  28. "Blistering barnacles & Thundering typhoons" லாம் எப்படி மொழிமாற்றம் செய்திருப்பீர் என்று பார்க்க காத்துஇருக்கிறோம் சார்.

    ReplyDelete
  29. இந்த நேரத்தில் டின்டினும் நானும் என்று ஒரு கட்டுரை நாளை எழுதுகிறேன். நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்கி.

    ReplyDelete
    Replies
    1. /// டின்டினும் நானும் என்று ஒரு கட்டுரை நாளை எழுதுகிறேன்///

      எழுதுங்க! ஆனா 'டின்டின்னும் நானும் மூனாப்பு படிச்சிட்டிருந்தப்போ'ன்னு ஆரம்பிச்சீங்களோ.. தெரியும் சேதி!! :)

      Delete
  30. ஆஹா... புத்தாண்டு அட்டகாசமாக ஆரம்பிக்கிறது... தொடரும் மாதங்களிலும் ஆர்ப்பரிக்க நல்வாழ்த்துகள்.

    முதல் வாசிப்பு டின் டின் தான்..

    எனக்கு இங்கே வர 15-20 தேதிகளாகிடும்...

    மிஸ்ஸிங் யூ சென்னை புக்ஃபேர்...

    ReplyDelete
  31. வேதாளரின் உட்பக்க வண்ணமும் அமைப்பும் அருமையாக உள்ளது... இரண்டாவது வாசிப்பு இவர்தான்

    ReplyDelete
  32. கடும் போட்டியாக இருந்தாலும், நாலவரில் லார்கோ முந்துவார் என்பது என் கணிப்பு

    ReplyDelete
  33. //புத்தக விழா விற்பனைக்கென மறுபதிப்புகள் மட்டுமே கணிசமாக இருக்கும் !//
    சமீபகாலமாக வந்த மறுபதிப்புகளா இல்லை புதிதாக ஏதாவது மறுபதிப்பு வருகிறதா ஆசிரியரே

    ReplyDelete
  34. வருடம் ஒரு தீபாவளி போய், வருடம் 2 அல்லது 3 தீபாவளி என்பது நமது லயன் காமிக்ஸ் குழுமத்துக்கு மட்டுமே பொருந்தும்.
    அட்டகாசமான 4 புக், குண்டு புக் என வந்தாலே மனசு பரபரங்கிறது. தீபாவளியின் தித்திப்பே இன்னும் மாறாத போது, தற்போது புத்தாண்டில் வெளிவரும் இதழ்களும் தேனில் ஊறவைத்த பலாச் சுளைகள்தான்.

    //இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு எந்த வரிசையில் இருக்குமென்று ? //

    டின்டின் திரையில் மட்டுமே ரசித்தவர்தான்,
    காமிக்ஸ் வடிவில் வரப்போகிறவரை வரவேற்க தயாராக இருக்கிறோம் தான்...
    ஆயினும்,
    வேதாளர் நம் சிறுவயதில் கொண்டாடிய ஹீரோ மற்றும் அவரை ரசித்தும் பல வருடங்களாயிற்று ஆகவே
    "முதல் வாசிப்பு வேதாளருக்கே."
    அடுத்து டின்டின்,
    மூன்றாம் இடம் டெக்ஸ்,
    கடைசியாக லார்கோ.
    இந்த 4 அட்டைப்படங்களும், உட்பக்க படங்களும் பளீர் ரகங்கள்.

    Waiting sir....

    ReplyDelete
  35. டின் டிடிங்...
    லார்கோ லாருகோ லாருகோயீ
    மாயாதாத்மா
    டெக்குஸ்

    ReplyDelete
  36. அதகள புத்தாண்டு...
    வேதாளருக்காக வெறி கொண்டு வெய்ட்டிங்..😋😋😋

    ReplyDelete
  37. லார்கோ😍
    லார்கோ😍😍
    டின் டின்😍😍😍
    வேதாளர்😍😍😍😍
    டெக்ஸ்😍😍😍😍😍

    2024ன் முதல் மாத புத்தகங்கள் & கதைகளின் தர அளவுகோல்களே இந்த வருடத்திற்கான எதிர்பார்ப்புகளை எகிற செய்கின்றன..

    2024 சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..🙏🙏🙏

    ReplyDelete
  38. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  39. ***சொல்லுங்களேன் guys - இதழ்கள் கைக்கு வந்த பின்னே உங்களின் வாசிப்பு எந்த வரிசையில் இருக்குமென்று ? ***

    1)டின்டின்
    2)லார்கோ
    3)டெக்ஸ்
    4)வேதாளர்

    ReplyDelete
    Replies
    1. என்னை போலவே யோசிக்கிறீர்கள் தோழரே.
      எனது வரிசையும் இதுதான்.

      Delete
    2. மகிழ்ச்சி நண்பரே...

      Delete
  40. ...ஜொலிக்கும் ஜனவரி ..
    கலரில் அட்டை, மற்றும் உட்பக்கங்களில் வேதாளரை காணக் கண் கோடி வேண்டும்.
    அசத்தல் ரகம்.
    வேற லெவல்.
    வாசிப்பில் முதல் இடம் வேதாளருக்கே.
    இரண்டாவது டின்டின்.
    பெயரை மட்டுமேகேள்விப்பட்டிருக்கிறேன். படிக்காத கதைகள். ஆவலுடன் வெயிட்டிங்.
    மூன்றாவது இடத்தில் நிற்பவர் நீண்ட வருடங்களுக்குப்பின் வரும் லார்கோ வின்ச்.
    My favorite hero.
    லார்கோ கதைகளை படிப்பதே தனி சுவாரஸ்யம்.
    பலமுறை மறுவாசிப்புக்கு என்னால் எடுக்கப்பட்ட கதை நாயகர்.
    லார்கோவின் அட்டைப் படம் வசீகரிக்கிறது.
    நான்காவதாக டெக்ஸ்.
    எப்போதும் நின்று ஆடுபவர். இவருக்கு இடமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
    குன்றிலிட்ட விளக்கு தூரத்திலிருப்பது போல் தெரியலாம்.
    ஆனால் அதன் பிரகாசம் அளப்பரியது.
    டெக்ஸ் அந்த வகை.
    காத்திருக்கிறேன்., பரபரக்கும் விரல்களுடன்.

    ReplyDelete
    Replies
    1. // லார்கோ கதைகளை படிப்பதே தனி சுவாரஸ்யம். //
      உண்மை 10 சார்...

      Delete
    2. நான்காவதாக டெக்ஸ்.
      எப்போதும் நின்று ஆடுபவர். இவருக்கு இடமெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.
      குன்றிலிட்ட விளக்கு தூரத்திலிருப்பது போல் தெரியலாம்.
      ஆனால் அதன் பிரகாசம் அளப்பரியது.
      டெக்ஸ் அந்த வகை.////

      செம செம பத்து சார்.....

      கொஞ்சம் கிர் ஆனது தங்களின் கமெண்ட் வாசித்தபின் தெம்பாக உள்ளது.....

      துணிந்து மோதுவார் டெக்ஸ்ம்💪💪💪

      Delete
  41. கலர் கலராக வரும் ஜாம்பவான்களைவிட கருப்பு வெள்ளையில் கலக்கப்போகும் தலையே முதல்வா சிப்பில் ,இரண்டாவது _வாழ்வின் முதல் ஹீரோ வேதாளர் மூன்றாமவர் நமது ஆதர்ச மில்லியனர் நான்காவதாக காமிக்ஸ் உலகின் சூப்பர் ஸ்டார் இனிநம்ம சூப்பர் ஸ்டாராக தலக்கப்போகும்டின் டின்

    ReplyDelete
  42. சார் லக்கி லூக் இன்னொரு மறுபதிப்பு சொல்லலிங்களே

    ReplyDelete
  43. Wing commander jeorge collection, வண்ணத்தில் Phantom, நீண்ட இடைவெளிக்கு பிறகு லார்கோ, TIN TIN , நியூ இயர் சந்தோஷமாக கொண்டாட இதுவே போதுமானது.

    ReplyDelete
  44. "டின் டின்னும் நானும்" வாசிப்பு சம்பந்தமான ஒரு சுவாரஸ்யமான கட்டுரைக்காக வெய்ட்டிங் .

    ReplyDelete
  45. எனது வாசிப்பில் முதலில்
    George
    TIN tin
    Phantom
    லார்கோ
    Bang bang tex

    ReplyDelete
  46. டின்டினும் நானும்

    எனக்கு மிகவும் பிடித்த டாப் 3 கதாநாயகர்களில் எப்போதும் ஒருவர். இவரை சிறு வயதிலேயே எனது அப்பா எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். அப்பா நிறைய படிப்பார். சேலம் சாமுண்டி சூப்பர் மார்க்கெட் தான் அப்போது மிகப் பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்று. அங்கே பொம்மை கடை, மளிகை, என்று கிடைக்காத பொருட்களே இல்லை. அங்கே ஒரு lending library இருந்தது. நிறைய ஆங்கில, தமிழ் நாவல்கள், சிறுவர்களுக்கான ஆங்கில படக் கதைகள் என்று எல்லாம் கிடைக்கும். அங்கே அப்பா மெம்பர். இன்றும் Bala's Celler என்ற பெயரில் அந்த Lending library இயங்கி வருகிறது. நேரம் கிடைத்தால் நண்பர்கள் ஒரு விசிட் செய்யுங்களேன்.

    இங்கே தான் முதன் முதலில் டின்டின் வாங்கிக் கொண்டு வந்து எனக்கு கதை சொல்வார் அப்பா. எனக்கு அந்த சிறுவனை பார்த்த உடனே பிடித்து விட்டது, அவன் செய்யும் சாகசங்கள், எப்போதும் அவனுடன் இருக்கும் நாய்(ஸ்நோயி), அவனது குடிகார நண்பரான கேப்டன் ஹேடாக், காது கேட்காத professor கால்குலஸ், டிடெக்டிவ் Thompson and Thomson, அப்துல்லா என்று ஒவ்வொரு கேரக்டரும் மறக்கவே முடியாத ஒன்று. அதும் அந்த புத்தகத்தில் எனக்கு மறக்கவே முடியாத காட்சி, காரில் தப்பிச் செல்லும் திருடர்களை பிடிக்க மரத்தின் மீது ஏறி காரின் மீது குதிக்க டின்டின் முயல டைமிங் மிஸ் ஆகி கார் வேகமாக சென்று விட டின்டின் கீழே விழுந்து அடிபட்டு கிடக்க திறந்து உள்ள கேட்டின் வழியே வரும் ஸ்நோயி இதற்குத் தான் நான் சர்க்கஸ் எதும் செய்வது இல்லை என்று சொல்லும். இது போல பல இடங்களில் நாம் நம்மை அறியாமலேயே சிரித்து விடுவோம்.

    அப்போது எனக்கு ஆங்கிலம் படிக்க தெரியாது எனவே Frame by Frame அப்பா தான் கதை சொல்வார், சில நாட்களுக்கு பிறகு அந்த படங்களை பார்த்தே என்ன நடக்கிறது என்று என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்பா கதை சொல்லி முடித்ததும் அந்த புத்தகத்தை எத்தனை முறை புரட்டுவேன் என்று எனக்கே தெரியாது.

    தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. அதற்கு பிறகு நான் மீண்டும் டின்டின் படிக்க தொடங்கியது பல வருடங்கள் கழித்து 2018 வாக்கில், Amazon தளத்தில் சும்மா Surf செய்து கொண்டு இருந்த போது நமது பழைய நண்பர் மீண்டும் கண்ணில் பட்டார் அப்போது தான் இதுவரை ஒரு டின்டின் புத்தகம் கூட நம்மிடம் இல்லையே என்ற உண்மை உறைத்தது. ஒவ்வொன்றாக ஆர்டர் செய்ய தொடங்கினேன். வரவர புத்தகங்களையும் படித்து விட்டேன்.

      உண்மையாகவே அருமையாக இருந்தது அந்த பயணம். அரை டவுசர் காலத்தில் படித்த அதே ஃபீலிங் இப்போதும் தொடர்கிறது அது தான் Herge மேஜிக். எத்தனை வருடம் கழித்து படிக்கும் போதும் புராதனமான கதை என்று எப்போதும் தோன்றாது. அந்த ஓவியங்கள் ரொம்பவே சிம்பிளாக அழகாக இருக்கும், வாசிப்பவர்களை கதையோடு ஒன்ற வைத்து விடும் எளிதாக, கதைகளிலும் பெரிய திருப்பம் எல்லாம் வராது ஆனால் விறுவிறுப்பாக செல்லும். உங்கள் வீட்டில் ஒரு உறுப்பினர் போல டின்டின் சீக்கிரம் ஆகி விடுவார்.

      இத்தனை வருடங்கள் கழித்து தமிழில் டின்டின் வருவது வானில் மிதப்பது போன்ற உணர்வை கொடுத்தது. நமது ஆசிரியரின் மொழி நடையில் அதே ஃபீலிங் கட்டாயம் கிடைக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை.


      இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் இதுவே ரொம்ப பபெரிய கட்டுரையாக உள்ளதால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.

      Delete
    2. குமார் ஜி,
      நானும் 8 அல்லது 9 வயதில் டின்டின் ஆங்கில வண்ண புத்தகத்தை கேரளாவில் இருந்த அண்ணன் வீட்டில் முதன் முதலாக பார்த்தேன். ஆங்கிலத்தில் இருந்ததால் புரட்டி புரட்டி பார்த்து விட்டு வைத்து விடுவேன். தமிழில் இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்ததுண்டு. அதனால் அதை விட்டு விட்டு தமிழில் இருந்த ராணி காமிக்ஸின் ஜேம்ஸ்பாண்ட் தோன்றிய ரத்தக்காட்டேரி யை எடுத்து வந்தேன். அது இன்னும் பத்திரமாக உள்ளது. உங்கள் பின்னூட்டத்தில் பலனாக பழைய நினைவுகள் பசுமையாக வந்து போகிறது.

      மேலும் டின்டின் பற்றிய உங்கள் விமர்சனம் புத்தகத்தின் மேல் உள்ள ஆர்வத்தை அதிக படுத்துகிறது.

      Delete
    3. சூப்பர் KS! உங்களை இத்தனை பெரிதாக எழுதத் தூண்டிய அந்த நண்பருக்கு நன்றி!

      ///இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் இதுவே ரொம்ப பபெரிய கட்டுரையாக உள்ளதால் இத்தோடு முடித்துக் கொள்கிறேன்.///

      கூச்சப்படாம எழுதுங்க பாஸ்! வேணும்னா நம்ம ஸ்டீல்கிட்ட கொஞ்சம் ட்ரெயினிங் எடுத்துக்கோங்க! :)

      Delete
    4. சிறப்பு KS..

      சின்ன வயசு நினைவு அருமை....

      ஒரு ஒற்றுமையை பாருங்களேன் உங்களையும் உங்க சிறுவயசுல டின்டின் கவர்ந்தாரு.. என்னையும் என் சின்னவயசுல கவரபோறாரு...😻

      Delete
    5. // நமது ஆசிரியரின் மொழி நடையில் அதே ஃபீலிங் கட்டாயம் கிடைக்கும் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. //
      அதே,அதே...

      Delete
    6. // ஒரு ஒற்றுமையை பாருங்களேன் உங்களையும் உங்க சிறுவயசுல டின்டின் கவர்ந்தாரு.. என்னையும் என் சின்னவயசுல கவரபோறாரு...😻 // ஆமா இந்த விஷயம் உங்க பேரனுக்கு தெரியுமா?

      Delete
    7. டின் டின் உடன் உங்கள் பயணம் அருமை குமார் நண்பரே சுவாரஸ்யமான எழுத்து நடை

      Delete
    8. நன்றி நண்பர்களே... மிக்க நன்றி

      Delete
    9. அருமையாக எழுதி உள்ளீர்கள் குமார் சார்.

      எனக்கு சிறுவயதில் படித்த மாயாவி (வேதாளர்) கதைகளே பசுமையாக நினைவில் உள்ளது.

      டின் டின் இதுவரை படித்ததில்லை முதல் முறையாக நம் தாய் மொழியில் படிக்க மிக ஆவல்.

      Delete
    10. நண்பரே... சிறு வயது இனிய நினைவுகளுக்கு மதிப்பு அளவிட முடியாது. அது தரும் சந்தோஷத்தை வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

      டின் டின் உடன் உங்கள் ஆரம்பப்பயணம் அருமை... உங்கள் அப்பாவுக்கும் , லெண்டிங் லைப்ரரிக்கும் நன்றி..

      டின் டின் பற்றி அமர்க்களமாக கட்டுரை எழுதி என்னைப் போன்ற முதல் முறையாக வாசிக்க உள்ள நண்பர்களுக்கு, அனுபவ அறிமுகம் உண்டாக்கிய தங்களுக்கும் எனது நன்றி..

      Delete
    11. அருமை குமார்...நானும் நண்பன் சுஸ்கி விஸ்கி அருளால் வாங்கி பாத்தேன்....ஆங்கிலம் என்பதால் படிக்க முயற்சித்தேன்...அவ்வளவா ஈடுபாடில்லை...இதென்னடா பெரிய ஓவியங்கள்னு தோணியது...நம்ம லயன் முத்து...ஏன் ஜுனியர் லக்கிய விடவா ...இதெப்படி அவ்ளோ ஃபேமஸ்னு தோண...பிறகு பாக்கலாம்னு அந்த திரைப்படத்த எடுத்து வச்சதோட சரி...

      மீண்டும் ஆசிரியரின் பிரம்மாண்ட தயாரிப்பு முயற்ச்சிகள் ...தமிழ் பேசப்போகும் நம்ம லயன் டின்...அந்த குடிகார கேப்டன் பாஷை சிலாப்புகள் என்னையும் கட்டிப் போடுமா...வேதாளம்...லார்கோ...இளம் டெக்சயும் மீறுமா என அறிய பேராவல்

      Delete
    12. நன்றி நண்பர்களே சிவலிங்கம், ரகுராமன் மற்றும் ஸ்டீல்.

      Delete
  47. ராத்திரி முழித்திருக்க ரேடியோ கேட்டு கொண்டிருக்க அப்படியே தூங்கியாச்சு

    முழித்து முதலில் பார்த்து நம் பதிவு அட்டைபடங்கள் ஜொலிக்குது🤩🤩🤩💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
    டின்டின் தமிழில் படிக்க ஆவலுடன்
    ரொம்ப நாள்கள் கழித்து வரும் கோமான் லார்கோ
    வேதாளர் அட்டைப்படம் டாப் என்ளு பார்த்தால், இளம் டெக்ஸ் அதிரடி பட்டாசாக தெறிக்கிறார்

    ReplyDelete
    Replies
    1. ராத்திரி முழித்திருக்க ...ரேடியோ கேட்டு கொண்டிருக்க.... அப்படியே தூங்கியாச்சு...


      கவித கவித

      Delete
  48. Me..😍

    Jan 2024 reading..😘😘


    வேதாளர்..😘😍😘
    வேதாளர்..😘😍😘

    டின்..டின்..😍😘😃
    டின்..டின்..😍😘😃

    லார்கோ..😃😍😘

    Tex..😍😃😀

    ReplyDelete
  49. 1. வேதாளர் (Evergreen no 1)
    2. டெக்ஸ் (Best Entertainer)
    3. லார்கோ (Awesome Billionaire)
    4. டின் டின் (Save the best for last)

    ReplyDelete
  50. 😻😻😻வ்வ்வாவாஆஆஆஆஆவ்வ்....😻😻😻

    டின்டின்...

    லார்கோ...

    வேதாளர்...

    டெக்ஸ்...

    அதகளம் பண்ணுகிறதுங் சார்....

    அந்த கமல் பாட்டு உப்பவே ஒலிக்கிறது....

    டன்ட டைன்....டன்ட டைன்...

    ஏஏஏஏஏப்பி நியூயூயூ இயர்...

    ReplyDelete
  51. லயன்- முத்து னு சொல்வது வழக்கமான இந்த நாட்களில் இம்மாதம் மட்டுமே அது
    லயன் vs முத்து னு ஆகிடும் போல.....🤔🤔🤔

    லயன் vs முத்து...

    டெக்ஸ்...vs லார்கோ

    டின்டின்.. vs வேதாளர்

    சின்ன வயசுல சென்னை தொலைக்காட்சி மண்டல ஒளிபரப்புல சின்னஞ்சிறுBPL கறுப்பு வெள்ளை டிவியில கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் செமி பைனல்& பைனல் மட்டுமே சனி& ஞாயிறு மாலைகளில் காட்டுவாங்க.... அதுதான் டென்னிஸ்ன் மொத்த போட்டியேனு அப்போது நினைத்திருந்தேன்.

    ஒரு முறை செமிலைன்ஸ் அப்புல...4சூப்பர் ஸ்டார்கள் மோதினார்கள்..


    மேற்கண்ட லயன்-முத்து லைன்ஸ் அப்பை பார்க்கும் போது அந்த நினைவுவுகள் வந்து போகுது....

    4சூப்பர் ஸடார்களும் அட்டையில் பார்க்க பார்க்க கண்ணை பறிக்கின்றனர்...

    எந்த சூப்பர் ஸ்டாரை முதலில் ரசிப்பது?????

    த டஃபஸ்ட் டிஸிஸன் இன் மன்த்ஸ்....


    குறிப்பு.. 4பேரையும் மாறி மாறி பார்க்கும் போது டெக்ஸ்து இளம் டெக்ஸ் தான்.. கொஞ்சம் லைட்டா ஒரு பயம் எடுக்கத்தான் செய்யுது....
    மற்ற 4வரும் உலக ஜாம்பவான்ஸ்.. இவர்களுக்கு முன்னாடி நம்ம சின்ன தல ஈடு கொடுப்பாரா??? கடுமையான போட்டி காத்துள்ளது..

    ReplyDelete
  52. // பிப்ரவரி முதலாய் துரத்தியடித்து விடலாம் என்பது உறுதி ! மாதத்தின் முதல் தேதியெனும் அந்த ஸ்லாட்டை இனி கோட்டை விட மாட்டோம் - that's a promise ! //
    அப்ப ஜனவரியில் தாமதம் தவிர்க்க முடியாதோ ?!

    ReplyDelete
    Replies
    1. ஜனவரியில் 5,6 தேதிகளில் புத்தகம் வந்தால் போதும் அதற்குள் இந்த மாதம் புத்கம் இருக்கே

      Delete
    2. இருந்தாலும் தம்பி குமாரின் ஸ்பீடை பார்க்கும்போது...

      Delete
  53. // நான்கு (காமிக்ஸ் உலக) பெத்த தலைக்கட்டுகள் ஒரே நேரத்தில் களமிறங்கிடுகிறார்கள் எனும் போது, //
    இந்த மாதம் போட்டி பலமா இருக்கும் போல...

    ReplyDelete
  54. வேதாளர் வண்ணத்தில் பட்டையைக் கிளப்பும் போல,லார்கோவும் சளைத்தவரில்லை,டின் டின் சொல்லவே தேவை இல்லை,இளம் டெக்ஸ் என் வழி தனி வழி என க & வெ யில் வந்தாலும் ஆக்‌ஷனில் பட்டையைக் கிளப்பும்னு தோணுது...
    கதையளவில் எந்த இதழ் மற்றவைகளுக்கு வலுவான போட்டியைக் கொடுக்கும்னு இதழ்கள் வந்தாதான் தெரியும்,ஜனவரி புத்தக திருவிழா,ஆண்டின் முதல் மாதம் என கோலகலமாய் எதிர்பார்ப்பை கிளப்பும் விதமாய் இதழ்கள் வருவது மகிழ்ச்சி....
    அதே நேரத்தில்,இதே காரணங்களை முன்னிலைப்படுத்தி இளம் டெக்ஸிற்கு வேறு கலர் டெக்ஸ் அல்லது ரெகுலர் டெக்ஸில் வேறு இதழை ஜனவரிக்கு முன்னிலைப்படுத்தி இருந்தால் போட்டி இன்னும் சுவராஸ்யமா இருந்திருக்கும்,இன்னும் பலவிதங்களில் உதவியா இருந்திருக்கும்னு ஒரு எண்ணம் எழத்தான் செய்யுது...!!!

    ReplyDelete
    Replies
    1. இளம் டெக்ஸ் வேற லெவல் நண்பரே...என்ன வண்ணமாக தேடி எடுத்திருக்கலாம்...ஆனா ஆசிரியர் விறுவிறுப்ப தேடி அலசி இருப்பார்...முதல் மாதம் எதைப் படிக்கிறோமோ அதுதான் பெஸ்ட்னு தோணப் போவுது...

      Delete
  55. // பிராசசிங் ; அச்சு ; பைண்டிங் - என எதையுமே நாம் கையாளாமல், டாப் பதிப்பகங்களுக்கு புக்ஸ் தயார் செய்து ஏற்றுமதி செய்திடும் ஒரு அசலூர் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம் ! //
    புத்தகத்தின் தரத்தில் எந்த வித சமரசமும் இருக்காது என்பதில் ஐயமில்லை சார்,கார்சனின் கடந்த காலத்தை தான் பார்த்தோமே...

    ReplyDelete
  56. /// And எனது 40 வருஷ சர்வீஸில் ஒற்றை கதைக்கு இம்புட்டு நேரம் செலவிட்டதே லேது ; so பற்பல வகைகளில் ஒரு first ஆகிடும் (தமிழ்) டின்டின் உங்களிடமும் thumbs up வாங்கினால் ஒரு பெரும் பெருமூச்சு விட்டுக் கொள்வேன் ! FINGERS CROSSED !! ///

    --- தங்களின் உழைப்பு நிச்சயமாக நல்ல பலனைத் தரும் சார்..

    இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற நெடிய பணியை கோரிய முதல் தொடர் எனும்போது அதைக்காணும் புதிய வாசகனாக ரொம்ப ஆவலுடன் இதழுக்காக காத்துள்ளேன்...

    இத்தனை நாள் இங்கே தென்பட்டுவரும் அனைத்து வார்த்தைகளும் டின்டின் மேல ஒரு ஆர்வத்தை கிளப்பியுள்ளன...

    புத்தாண்டின் முதல் இதழாக எதை தேர்ந்தெடுக்கணும்னு தெரிஞ்சிட்டது....

    ReplyDelete
    Replies
    1. டின் டின் நம்ம காமிக்ஸுக்கும்...காமிக்ஸ் ஆர்வலர்களின் ஒளியை பாய்ச்சினால் சரி

      Delete
  57. ஆஹா.....அட்டைப்படங்களே கலக்கி எடுக்கிறது....ஜனவரி எப்பொழது பிறக்கும் என்ற ஆர்வமும் கூடிக்கொண்டே போகிறது...

    என்னை பொறுத்தவரை மிக மிக பிடித்த இதழ்களை கடைசியாக படிப்பதே பெரும்பாலும் வழக்கமான ஒன்று...இந்த முறை எனது குழப்பம் எதை கடைசியாக படிப்பதே என்பது தான்...

    கொண்டாட்டமான திண்டாட்டாம்...!:-)

    ReplyDelete
  58. /////பிராசசிங் ; அச்சு ; பைண்டிங் - என எதையுமே நாம் கையாளாமல், டாப் பதிப்பகங்களுக்கு புக்ஸ் தயார் செய்து ஏற்றுமதி செய்திடும் ஒரு அசலூர் குழுமத்திடம் ஒப்படைத்துள்ளோம் ! அவர்களின் பரிந்துரைப்படி செம திக்கான ; செம செம திக்கான பேப்பரில் இந்த இதழ் அச்சாகிடவுள்ளது ! அடுத்த சில நாட்களில் புக்கை ரெடி செய்து தந்து விடுவதாக ப்ராமிஸ் செய்துள்ளனர் ; so 'பதக்' பதக்' என்று அடித்துக் கொள்ளும் நெஞ்சோடு காத்துக் கிடக்கின்றோம் !! ///

    அடேயப்பா டின்டின் என்ன பெரிய மேனிட்டி சீமாட்டியோ...!!!!!

    ReplyDelete
  59. சார் காலைல பதிவ பாத்ததும் படிக்க உக்காந்தவனுக்கு தலை கால் புரியல ...லார்கோ அட்டை
    பட்டாசா வெடிக்க அடடா பின்னட்டை வண்ணம் நேர்ல பாக்கல இன்னும் திகைப்பாருக்குமே என புஸ்வானமாய் சிதற ... நம்ம கண்ணாடி அட்டைகள கண்ல போட்டுக் கொள்ளும் எனக்கு......
    ஊருக்கு பஸ்ஸ பிடிக்கனுமேன்னு ஏழு மணிலருந்து அரக்க பறக்க பாய்ந்து திருச்செந்தூர் பஸ்ல ஏறி அமர...பொடுசுக தூங்குன பிறகு ரசிச்சு படிக்கலாம்னு விட...

    ஒட்டஞ்சத்ரத்த தாண்டிய பிறகே அந்த வசந்தமும் வந்தது...மேக மூட்டத்தில் வெயில் படாத பிரதேசத்தினூடே பயணிக்கையில் ஒன்றல்ல இரண்டல்ல நான்கு ஜாம்பவான்களுடன் என்ற வார்த்தைகளே எகிறியடிக்க ...மதுரை பஸ்டாண்ட் எப்ப வரும்னு கோடையில் தாயாருடன் கோடை மலர் ஏக்கத்தோடு போனது போல அதே ஆர்வத்தை நான்கு ஜாம்பவான் வார்த்தைகளும் தூண்ட.


    திபெத் பெரிய லெவல்ல திக்கான தாள்கள்னு காலைல படிச்சத நினைத்தபடி பயணத்தோட தொடர்ந்த எனக்கு லார்கோ என்னையும் தலைகீழா நிக்க வைக்கும் போதே டின் டின் காத தூரம் சென்றது ஆச்சரியமல்ல..



    ஆனா ஆனா....பெரிய சைசுலதான்னு முடிவு பண்ணியிருந்தோம்...இன்னாது ன்னு வருத்தத்தோடு சோனமுத்தாய் பாய...பேனல்கள் குறைஞ்சா ... சுவாரஸ்யமில்லா வார்த்தைகள் நுனிப்புல் மேய...
    அந்த அட்டகாச அட்டையும் ஏதோன்னு கீழ் தள்ள அந்த மூன்று பேனல்கள் கண்ணில் பட்ட மாயம்தான் என்ன...மனதில் பட்டு காணாம போன காயம்தான் எங்க....லார்கோவ தூக்கிச் சாப்பிட்ட பக்கத்த பாத்தபடி துள்ளினேன் அந்த வான்வெளிக்கு லார்கோ துணையில்லாமலே....

    வி காமிக்ஸ் இது வரை வந்ததிலயே பெஸ்ட்னுலாம் சொல்ல மாட்டேன்...டின் டின் அச்சுக்காக காத்திருக்கீங்களே அத விட டாப்னு சத்தியம் செய்வேன் பார்க்காமலே செம சார்...மேல போனா நான்தான் டாப்புன்னு கருவிழியில்லா வேதாளர் புன்னகை வசீகரிக்க...


    சாம் வில்லரில். அசந்த எனக்கு இளம் டெக்ஸ் வில்லரோடு சாமுமா என அட்டையும் ஆர்வத்துக்கு தீனி போட ...எந்த அட்டை தான் டாப்புன்னு மறுக்கா ஒரு பயணத்த போட்டு பொற்காலத்துக்கும் போய் வாரேன்


    ReplyDelete
    Replies
    1. சார் சரியா இப்ப திண்டுக்கல்ல தாண்டி மதுரை நோக்கிய சிறுவயது ஏக்கங்கள் நிறேவேறிய சந்தோஷத்தோடு போய்க் கொண்டிருக்கிறேன் ...இம்முறை மதுரையில் தொங்கிய புத்தகங்க்ள் ஜனவரியில் தொங்கிக் கிடக்கும் நினைவுகள ரசித்தபடி...


      ஜ...ஜா..ஜ...ஜா..ஜ..ஜா..ஜ...ஜா..

      நண்பர் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்...அந்த புஜபலம் காட்டும்...கண்ணீர் வடிக்கும் எழுத்துருகீகளுக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஜகத்

      Delete
    2. தூள் கிளப்பு விக்ரம்...நான்கு ஜாம்பவ அட்டைகள விட
      வேதாளரின் பேனல்கதான் பேசு பொருளாருக்கப் போவுது செம....

      Delete
    3. நான்கில் எது முதலில்... ஏக எதிர்பார்ப்பில் லார்கோ இருந்தாலும் ..பல காரணிகளால் அன்றய மனநிலையில்தான் என் தேர்வு இருக்குமென்பதால் ...படிக்க படிக்க சொல்கிறேன் சார்

      Delete
  60. ///இதோ - நாம் ரெகுலராய் பயன்படுத்தி வரும் துருக்கிய ஓவியரின் கைவண்ணத்திலான அட்டைப்படத்துடன் "வீரனுக்கு மரணமில்லை////

    வேதாளரை கலரில் பார்க்கையில் அப்படியே அள்ளுதுங் சார்....

    V ediக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்கோ....

    இதுவரை கறுப்பு வெள்ளயில் கவராத வேதாளர் கலரில் என்னையும் வசீகரிக்கிறார்...

    மாயமுரசு,
    வெள்ளை இளவரசி
    க்கு அடுத்து 3வதாக வாசிக்க இருக்கும் வேதாளர் கதையிது....
    லுக் சோ நைஸ்....

    பின்னட்டை பார்த்துட்டே இருக்கலாம் போல உள்ளது..

    வேதாளரா லார்கோவோனா பார்த்தா வேதாளார் இப்போதைக்கு அட்டையில் கெலித்து ஸ்கோர் போர்டை துவக்கி உள்ளார்....

    ReplyDelete
  61. கார்த்திக்

    &
    ஜெகத்

    குட் ஜாப் ப்ரெண்ட்ஸ் வாழ்த்துகள்💐

    ReplyDelete
  62. டின் டின் தமிழில் நமது கைகளில் தவழும் நாட்களை எண்ணி கொண்டு உள்ளேன்! அதுவம் டின் டினின் ஒரு கதையை நமது மொழியில் வெளியிட ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிகள் அது போக வேறு ஒரு நிறுவனத்திடம் கொடுத்து பிரிண்ட் என அப்பப்பா என்ன போராட்டம், இது நமது காமிக்ஸ் வரலாற்றில் வெற்றியில் புதிய உயரத்தை கண்டிப்பாக தொடும். நண்பர் கார்த்திக் இது போன்ற கதைகளில் உங்களுடன் பணிபுரிவது மகிழ்ச்சியை கொடுக்கிறது :-)

    அதுவும் நீங்கள் அவரின் குடலை உருவி வேலை வாங்குவது இரட்டிப்பு மகிழ்ச்சி :-) ஓடுடா பரணி பெங்களூரை விட்டு :-) just joke!


    அவரின் பின்னூட்டங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து புரிந்து கொள்வேன், நிறைய விஷயங்களை சொல்லி இருப்பார்; இவர் டின் டின் கதையில் உங்களுக்கு உதவி செய்வது மகிழ்ச்சி!

    ReplyDelete

  63. செல்வம் அபிராமி சார் @ எப்படி இருக்கிறீங்க! உங்களின் பின்னூட்டங்களை தளத்தில் பார்த்து பல மாதங்கள் ஆகிறது! அனைவரும் நலம் என நம்புகிறேன்! நேரம் கிடைக்கும் போது இங்கு வந்து எங்களுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள்!

    ReplyDelete
  64. நமது காமிக்ஸில் ஜெகத் உங்களில் பங்களிப்பு பாராட்டுக்குரியது! கதையின் தலைப்புகளில் உங்களில் கற்பனை திறமையை நன்றாக வெளிபடுத்தி உள்ளீர்கள் மிகவும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  65. விஜயன் சார் @ இந்த மாத கதைகளில் காலனின் கால் தடத்தில் கதையை தவிர பிற கதைகளை படித்து விட்டேன்! இந்த முறை வாசிப்பு அனுபவத்தில் முதல் இடம் பிடிப்பது ஜானி கதையே; ஏற்கனவே இருமுறை சொல்லி விட்டேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை சந்தோசமாக பதிவு செய்கிறேன்!

    இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே மனதிற்கு சந்தோசம் தரும் கதைகளை மட்டுமே படித்து வருகிறேன்; மனதில் பல குழப்பங்கள் இப்போது எல்லாம் ஒவ்வொரு மணி நேரத்திலும் ஓடுவதால் இந்த முடிவு! எனவே காலனின் கால்தடம், உயிரை தேடி போன்ற கதைகளை இன்னும் படிக்கவில்லை, மனது தெளிந்த பிறகு கண்டிப்பாக இவைகளை படிப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. காதலனின் கால் தடத்ல உன் கால் தடத்த பொருத்துல...பிடிபடா பிரம்மாண்டத்தை அடுத்த புத்தகத்துக்காக ஆசிரியரிடம் மோதுவ

      Delete



    2. PfB@ ////மனதில் பல குழப்பங்கள் இப்போது எல்லாம் ஒவ்வொரு மணி நேரத்திலும் ஓடுவதால் இந்த முடிவு! எனவே காலனின் கால்தடம், உயிரை தேடி போன்ற கதைகளை இன்னும் படிக்கவில்லை, மனது தெளிந்த பிறகு கண்டிப்பாக இவைகளை படிப்பேன்!///

      இதுதான் சரி...
      உங்க குழப்பமான சூழலில் வாசிக்க உகந்தவை அல்ல.

      மனம் தெளிவான பிறகு அது இரண்டையும் வாசிக்கலாம்...

      Delete

  66. வன்மேற்கின் கதை வெளியான சமயத்தில் அவைகளை படிக்க முடியவில்லை, இந்த வாரம் நான்கு பாகம்களையும் அடுத்தடுத்த நாட்களில் தூங்க செல்வதற்கு முன் என இவைகளை படித்து முடித்தேன்! மிகவும் சிறப்பான கதை தொடர்! இந்த தொடர் கதையை தொடர்ந்து வெளியிட்டு ஒரே வருடத்தில் முடித்து வைத்தமைக்கு நன்றி சார்; உங்கள் தேடலில் இது ஒரு முத்து சார்!

    இந்த தொடரை நண்பர் ஒருவர் மொத்தமாக வாங்கி பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்ததாக நீங்கள் எழுதிய ஞாபகம்; அந்த நண்பர் என் இப்படி செய்தார் என்பதை கதையை படிக்க ஆரம்பித்த உடன் தெரிந்து கொண்டேன்; அற்புதமான கதை, மொழி பெயர்ப்பு, விறுவிறுப்பு, திடீர் திருப்பங்கள் என கதையே நாயகனாக மனதை கொள்ளைகொள்வதே காரணம்.

    ReplyDelete
  67. சீனியர் எடிட்டர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்ல வயது பற்றாததால் வணங்குகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼

    இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🎂🎂🎂💐💐💐🎉🎉🎉

    ReplyDelete
    Replies
    1. ஆஹா சீனியர் எடிட்டர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

      Delete
    2. // இந்த முறை வாசிப்பு அனுபவத்தில் முதல் இடம் பிடிப்பது ஜானி கதயே; ஏற்கனவே இருமுறை சொல்லி விட்டேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை சந்தோசமாக பதிவு செய்கிறேன்! //

      அருமை சார்... தங்களைப் போலவே எனக்கும் ஜானி தான் இந்த மாதம் வாசிப்பிலும், ரசனையிலும் முதலிடம்.

      Delete
  68. This comment has been removed by the author.

    ReplyDelete
  69. ஜனவரி 2024 இல் புத்தாண்டின் தொடக்கத்தில் நமது V காமிக்ஸ்சில் வேளாளர் புயல் வேகத்தில் வர்ணங்களில் சாகசம் புரிய உள்ளார்.

    நண்பர்களும் தங்கள் மகிழ்ச்சியை ஆரவாரமாக பதிவு செய்து வருகிறார்கள்..

    V காமிக்ஸ் எடிட்டர் சார் அவர்களின் கருத்துக்கள் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள துடிப்பாக உள்ளது.

    ReplyDelete
  70. 2024 க்கு இதைவிட Mass opening இருக்கவே முடியாது, சந்தா கட்டாதவர்களையும் கட்ட வைத்துவிடும் இந்த கலக்கல் கூட்டணி

    ReplyDelete
  71. அருமையான காம்பினேஷன் கொண்ட ஹீரோக்களை கொடுத்துட்டு, எதை முதலில் படிக்கப் போறே, என்று கேட்டுட்டு நமுட்டு சிரிப்பு சிரிக்கிரீங்களே இது நியாயமாய்யா!

    லார்கோ முதலில்
    டின் டின் அடுத்து
    வேதாளர் பிறகு
    டெக்ஸ் அப்புறமா

    இப்போதைக்கு இதுவே வரிசை...!

    ReplyDelete
  72. இனிய கிறிஸ்துமஸ் நாள் வாழ்த்துக்கள் நண்பர்கள் மற்றும் ஆசிரியர் அவர்களுக்கும்.

    ReplyDelete
  73. This comment has been removed by the author.

    ReplyDelete
  74. எனது வாசிப்பு வரிசை ஜனவரி...

    லார்கோ...
    வேதாளர்...
    டின் டின்...

    டெக்ஸ்...

    ReplyDelete
  75. Replies
    1. யெஸ்.... செம லுக்குல M50ஐ விட கூடுதலாக கலக்குது..😻

      Delete
  76. எனது சந்தா எண் 2010

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் இணைந்த ஒட்டுமொத்த சந்தா எனில் எப்போதும் 1001லிருந்து துவங்குவாங்க நண்பரே...

      உங்கள்து 1010 அல்லது 2010ஆ???

      2010எனில் நீங்கள்

      கி.நா. அல்லாத
      அல்லது V comics நீங்களாக என சிறப்பு வகை சந்தா கட்டியிருப்பீங்க...

      Delete
    2. // எனது சந்தா எண் 2010 //

      வாழ்த்துக்கள் நண்பரே...

      சந்தாவில் நண்பர்கள் மேலும் இணைய தங்களின் இந்த பதிவு சற்று ஊக்கம் பிறக்க வழி வகுக்கும்...

      Delete
    3. //கி.நா. அல்லாத //

      Delete
  77. *கொலை நோக்குப் பார்வை*

    கதையின் தலைப்பே வித்தியாசமாக உள்ளதேன்னு கதைக்குள் நுழைந்தால் கதையும் வித்தியாசமான குற்றப் பிணைப்பு கொண்டது.

    நிகழ் காலத்தில் நடக்கும் ஒரு கொலையை விசாரணை பண்ணப் போகும் ராபினுக்கு கடந்த கால குற்ற நிகழ்வு ஒன்று ஞாபகத்திற்கு வர நம்மையும் உடனழைத்துச் செல்கிறார்.

    முதலில் ஒரு கொலை, அடுத்து ஒரு கார் விபத்து போன்ற ஒரு ஜோடனை கொலை. இறந்த இரண்டு கொலையுண்டவர்களுக்கும் பொது எதிரி இல்லை & எந்த தொடர்பும் கூட இல்லை. கொலையாளியும் ஒரே நபர் இல்லை.

    இப்படி இடியாப்பச் சிக்கலாக இருக்க ஒரு சிறு துப்பு ஒன்று கிடைக்க அதை வைத்து ஒரு திட்டம் வகுக்கின்றனர்.

    அவர்களுடைய திட்டம் பலனளித்ததா கொலையாளி சிக்கினானா என எதிர் பாரா ஒரு திருப்பத்துடன் கதையை முடிக்கின்றனர்.

    கதையின் இறுதிப் பக்கங்களைப் படிக்கும் போது ஒரு அதிர்ச்சியை தருகிறது. சம்பந்தமே இல்லாத ஒருவன் தொடர்பே இல்லாத வேறொருவனை கொல்லவும் திட்டம் வகுக்கிறான். ஏன் ❓.
    அதிர்ச்சியான ஒரு அறிக்கையை தருகிறான்.

    கொலை செய்பவனை விட தூண்டுபவனே முதல் குற்றவாளியாகிறான் சட்டப் படி.


    ஒரு அருமையான க்ரைம் த்ரில்லர் இந்த ராபின் கதை. 👌🏻👏🏻

    ReplyDelete
  78. .ஆத்தூர்-மழை வெள்ளத்தில்
    மூழ்கியது..
    மாடி இருந்தும்- எனது இரண்டு ஆண்டுகால காமிக்ஸ் சேகரிப்புகள்-கீழே புக்-செல்ப்பில் இருந்தவை ஆற்றுநீரில் மூழ்கின..
    இரண்டு நாள்களாக தண்ணீரில் இருந்ததில் அனைத்தும் வீணாகிவிட்டன..(ஒரு நப்பாசையில் மொட்டைமாடியில் காயவைத்திருக்கிறேன்..,ஆனாலும் வண்ணப் புத்தகங்கள்- அனைத்தும் வீண்தான் என்று நினைக்கிறேன்..)
    பைண்டிங் புத்தகங்களின் அலங்கோலத்தைப் பார்க்க வேதனையாக உள்ளது..
    இதை எதற்கு தெரிவிக்கிறேன் என்றால்
    ,_ஆசிரியர் பைண்டிங் புத்தகங்கள் காயவில்லை அதனால் கொஞ்சம் காலதாமதம் ஆகிறது என்றால் நண்பர்களை
    கொஞ்சம் பொறுத்துக் கொள்ள
    வேண்டுகிறேன்.''
    நம்புத்தகம் அது நன்கு காய்ந்து தரமான இதழாக ஒன்றிரண்டு நாள் தாமதமாக வந்தால்தான் என்ன..
    எனவே, ஒன்றாம் தேதியே புத்தகத்தை எதிர்பார்க்கும்
    நமது மைண்ட்செட்டை கொஞ்சம்
    மாற்றிக் கொள்ள வேண்டுகிறேன்..நன்றி...il

    ReplyDelete
    Replies
    1. நண்பரே வண்ணபுத்தகங்கள தனித்தனி தாளா பிரிச்சு காய் வைங்க....ஆனா நெறய புத்தகங்க இருந்தா சிக்கல்தான்...முக்கியமான புத்தகங்கள முதல்ல இப்படி செய்ங்க

      Delete
    2. மொத்த எண்ணிக்கை 60-இதழ்கள் இருக்கும்.
      அதில் பாதி - வண்ண இதழ்கள் இருக்கும்-
      குறிப்பிட்ட புத்தகங்கள் -
      இரத்தபடலம் (9 பாகஇதழ்) - I, கென்யா, முத்து 50,2 இதழ்.
      சூப்ரிமோ-டைகர், லக்கிலூக், கோடை மலர்-2023 என்று..
      இதை காப்பாற்ற உட்கார்ந்தால் வீட்டுவேலை ஒன்றும் நடக்காது..
      சரி. விடுங்க..
      அது தான்-2024-அமர்க்களமாக ஆரம்பித்துவிட்டதே... |

      Delete
    3. 'இனி இப்படித்தான் திடீர் மழை - திடீர் வெள்ளம் இருக்கும்' என்று வானிலை நிபுணர்கள் எச்சரிப்பதைப் பார்த்தால் பகீர் என்கிறது!

      புக் ஷெல்ஃபுக்குப் பதிலாக ஒரு மிதவைப் படகு செய்து புத்தகங்களை அதற்குள் போட்டு வைப்பதுதான் நல்லதுபோல தெரிகிறது!

      Delete
    4. இரத்தப் படலமா....தேடிப் பிடிச்சரலாம்...
      கென்யா...சுப்ரிமோவ வாங்கிடுங்க திரும்ப...

      இபவ ....ஒன்றோடு ஒன்று ஒட்டிய பக்கங்கள பிரிச்சு வைங்க ...நட்டமா நிறுத்தியயடி...மாலைல வந்து இரு நாட்ககளுக்கு ஒரு தடவ பாருங்க...ஒட்டிருந்தா பிரிங்க
      சிவந்த மண்ண அப்படிதான் சரி செய்தேன்...

      ஈவி...நிச்சயமா நமது காலத்துக்குள்ள வராது...இருநூறு வருட சாதனைய முறியடிக்க வந்திடுச்சு...பிற்காலங்கள்ல டெக்னாலஜி எங்கயோ போய்ருக்கும்...ஸ்பைடர் நிசமாகியிருப்பார்

      Delete
    5. @Elango DCW bro..🙏

      நம் சொத்து நம் கண்முன்னே வீணாப்போவதை கையாலாகாமல் பார்ப்பது உச்சகட்ட சோகம்..😭😭😨😨

      அந்த புனித மானிடோதான் உங்களுக்கு மன ஆறுதலை தரவேண்டும்..🙏💐

      மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய கொஞ்ச நஞ்ச புத்தகங்களை காயவைக்க Hair dryer இருந்தால் பக்குவமாக பயன்படுத்தி பாருங்கள் ஜி..👍👌✊ All the best..👍

      Delete
  79. *** இளம் TEX - THE சிக்ஸர் ஸ்பெஷல் ****

    கொலைப்பழியோடு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த இளம் டெக்ஸ்; தன் நேர்மையாலும், திறமைகளாலும் படிப்படியாக 'நாயகன்' அந்தஸ்த்துக்கு உயர்வதை நேர்த்தியாகச் சொல்கிறது கதை! இதுவரை காணாத புதிய கதைக் களம். சம்பவக் கோர்வைகளால் மிக அருமையாகப் பின்னிப் பிணையப்பட்டு - இப்படியெல்லாம் கூட ஒரு கதையை நகர்ந்திச் செல்ல முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறது!

    இளம் டெக்ஸிடமிருந்து இத்தனை அழுத்தமாய் ஒரு கதையை நான் எதிர்பார்த்திடவில்லை தான்!!

    ஒரு முழுநீள திரைப்படமாக வெளியாகிட எல்லாத் தகுதியும் வாய்ந்த கதை!

    'THE சிக்ஸர் ஸ்பெஷல்' என்பதைத்தாண்டி இந்த 6 பாக அம்சமான கதைக்கு ஒரு பிரத்யேகத் தலைப்பு இல்லாமல் போய்விட்ட முரண்பாட்டால் - மனதுக்குள் ஒரு மென்சோகம்!

    10/10

    ReplyDelete
    Replies
    1. // இளம் டெக்ஸிடமிருந்து இத்தனை அழுத்தமாய் ஒரு கதையை நான் எதிர்பார்த்திடவில்லை தான்!! //

      உண்மை சார்...

      இளம் டெக்ஸ் க்கு என, அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஒருங்கிணைத்து ஒரு ரசிகர் வட்டம் எனது நண்பர்களின் வட்டத்தில் உருவாகி வருவதை கண்டு வருகிறேன்.

      Delete
  80. 1000 கைதட்டல்கள் ஜீ

    ReplyDelete
  81. டிசம்பரில் நான்கு இதழ்களுக்கு பின் வேறு இதழ்கள் வெளிவந்ததா. வேலைப்பளு காரணமாக தளத்துக்கு வர முடியவில்லை.மழை காரணமாக ஆபீசுக்கு போன் செய்யவில்லை

    ReplyDelete
    Replies
    1. எதுவும் வரவில்லை சார்.

      Delete
  82. டெக்ஸ் மாதிரி ஒரு ஆளுக்கு இந்த மாதிரி ஒரு சவாலான கதாபாத்திரத்தை வடிவமைத்தது கதாசிரியரின் வெற்றி.

    ReplyDelete