நண்பர்களே,
வணக்கம். வருஷத்தில் கடைசி தினம் ! நல்லா வடிவேலை போல ஒரு பொசிஷனில் டர்ன் பண்ணி நின்று கொண்டு கடந்துள்ள ஆண்டினை சித்தே திரும்பிப் பார்க்க முனைவோமா ? ஆனால் flashback mode-க்குள் நுழைந்திடும் முன்பாய் இந்த டிசம்பர் பற்றி கொஞ்சம் பேசி விடுகிறேனே !
4 இதழ்களை டிசம்பரின் துவக்க வாரத்தில் அனுப்பியதெல்லாமே ஏதோவொரு காலத்தின் நினைவாட்டம் உள்ளது உள்ளுக்குள் - simply becos அவற்றைத் தொடர்ந்து இங்கு அரங்கேறி வந்துள்ள கூத்துக்கள் ஒரு கோடி ! ஏற்கனவே சொல்லியிருந்தேன் தான் - விங்-கமாண்டர் ஜார்ஜின் ஸ்பெஷல் தொகுப்பின் பணி இடர்கள் பற்றி ! In hindsight - ஜார்ஜை டிசம்பருக்குள் நுழைக்க நினைத்ததே எக்கச்சக்கச் சுணக்கங்களுக்கு துவக்கப்புள்ளி என்பது புரிகிறது ! சென்னைப் புத்தக விழாவின் தேதிகள் அறிவிக்கப்பட்ட கையோடு நமது ஆட்கள் bookfair முஸ்தீபுகளில் இறங்கியவர்களாய் என்னிடம் நீட்டிய ஓலையில் குறிப்புகள் இவ்விதமிருந்தன :
- மாயாவி புக்ஸ் - பூஜ்யம்
- லாரன்ஸ்-டேவிட் புக்ஸ் - பூஜ்யமோ பூஜ்யம்
- ஜானி நீரோ - லேது
- ஸ்பைடர் - ஒண்ணே ஒண்ணு
- லக்கி லூக் - மூணே மூணு
- கதை சொல்லும் காமிக்ஸ் புக்ஸ் - சொற்பம்
சென்னைப் புத்தக விழாக்களுக்கு மாயாவி மாம்ஸும், லாரன்ஸ் சித்தப்ஸும், ஜானி நீரோ மச்சான்ஸ்சும் இல்லாது போய் கடை விரித்தால் என்ன மாதிரியான துடைப்பக்கட்டைச் சாத்துக்கள் விழும் என்பதை கண்கூடாய் நேரில் பார்த்தவன் என்ற முறையில் அவசரமாய் நிலவரங்களை சரி செய்திட வேண்டும் என்பது புரிந்தது ! ஜவ்வு மிட்டாயாய் ஜார்ஜ் இழுத்துக் கொண்டே போக, மழைகள் சார்ந்த இடர்களும் கோர்த்துக் கொள்ள, எனக்குள் பதட்டமும் தொற்றிக் கொண்டது ! இன்னொரு கொடுமை என்னவெனில் நடப்பாண்டில் சிவகாசிக்கு கிட்டியுள்ள காலெண்டர் & டயரி ஆர்டர்கள் வரலாறு கண்டிரா ஒரு புது உச்சம் !! அதை எண்ணி மகிழலாமென்றால் - ஊருக்குள் உள்ள சகல பைண்டிங் நிறுவனங்களும், தினசரி காலண்டர்களுக்கு படங்களை அட்டை மீது ஒட்டித் தரும் பணிகளுக்கும், மாதாந்திரக் காலண்டர்களுக்கு மேலே டின் அடித்துத் தரும் பணிகளுக்கும் ஆட்கள் போய்விட்டார்கள் என்று கையைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்கள் ! இன்னொரு பக்கமோ டயரிகளின் பணிகள் பிசியோ பிசி ! ஆண்டுதோறும் டிசம்பரில் அரங்கேறிடும் நிகழ்வுகளே - ஆனால் இந்தாண்டின் ஆர்டர்கள் ஒரு புது உச்சம் ! So நம்மளைப் போலானோரை - 'அப்டி ஓரமா நின்னு வெளாடிட்டு இருங்க தம்பி !' என்று ஓரம்கட்டி விட்டார்கள் !
நானோ ஒரு டஜன் மறுபதிப்புகளுக்கு லிஸ்ட் போட்டு வைத்து விட்டு, இன்னொரு பக்கம் ஜனவரியின் புது புக்ஸ் நான்கினையும் வேக வேகமாய் பணிமுடித்து அச்சுக்குக் கொண்டு செல்லும் முனைப்பில் இருந்தேன் ! கடைசி 10 தினங்களில் எனக்கும் சரி, நமது டீமுக்கும் சரி, எங்கிருந்து இத்தனை ஆற்றல் கிட்டியதோ, சத்தியமாய்த் தெரியாது, ஆனால் பிசாசுகளாட்டம் தினமும் ஒரு புக்கை முடித்து பிரிண்டிங்குக்கு அள்ளி இறைத்துக் கொண்டிருந்தோம் ! And மறுபதிப்பு தானே - அப்டியே இருக்கட்டும் என்று விடவும் மனமின்றி, ஒவ்வொன்றிலுமே இயன்ற திருத்தங்களை செய்திடத் தவறவில்லை ! அதிலும் குறிப்பாய் லக்கி லூக் மறுபதிப்பு லிஸ்டானது ஒன்றிலிருந்து இரண்டாகி, இரண்டிலிருந்து மூன்றாக முன்னேற்றம் கண்டிட, முன்னாட்களில் நமது கார்ட்டூன் மொழியாக்கங்கள் எத்தனை பெத்த மொக்கைகளாய் இருந்து வந்துள்ளன என்பது புலனாகியது ! செம க்ளாஸிக் கதைகளுக்கு மொழியாக்கத்தில் மெருகூட்டிடாது அப்டிக்கா தொடர்ந்திட கிஞ்சித்தும் மனம் ஒப்பவில்லை & கிட்டத்தட்ட 3 ஆல்பங்களுக்குமே 50% க்கும் அதிகமாய் மாற்றி எழுத வேண்டிப் போனது !
To cut a hugely long story short - ஏஜெண்ட் சிஸ்கோ + விங் கமாண்டர் ஜார்ஜ் ஸ்பெஷல் + விலையில்லா கலர் டெக்ஸ் இதழ்களை டெஸ்பாட்ச் முடித்து விட்டு ; டின்டின் புக்ஸ்களை அட்டகாசமாய் ரெடி பண்ணி வாங்கி விட்டு, லார்கோவை தெறிக்கும் கலரில் அசாத்தியமான அழகில் அச்சிட்டு விட்டு, வேதாளரையும் கலரில் போட்டுத் தாக்கிவிட்டு, இளம் டெக்ஸை அட்டகாசமானதொரு புதுக் காகித ரகத்தில் அச்சிட்டு விட்டு, மறுபதிப்புகளில் 8 இதழ்களை (இது வரையில்) பிரிண்ட் பண்ணி விட்டு, பிடித்திருந்த செம ஜல்ப்புக்கு மாத்திரைகளை விழுங்கி விட்டு நேற்றிரவு கட்டையைச் சாத்திய போது மிதப்பது போலிருந்தது ! மாத்திரைகளின் effect ஆ ? கடைசி 6 நாட்களில் நம்மாட்கள் தாண்டியுள்ள புது உசரங்களின் பெருமிதமா ? சொல்லத் தெரியலை - ஆனால் இதோ, ஞாயிறு காலையில் லேட்டாக கண்முழிக்கும் போதுமே மனசுக்குள் ஒரு இளையராஜா டியூன் ஓடிக்கொண்டிருந்தது !
ரைட்டு....இனி நடப்பாண்டின் ரிப்போர்ட் கார்ட் பக்கமாய்ப் போகலாமா ? Truth to tell - தீவிர, அதி தீவிர வாசக நண்பர்களை தவிர்த்த பாக்கிப் பேர் நடப்பாண்டின் ஒரு பாதியை வாசித்திருந்தாலே பெருசு என்று தான் நினைக்கிறேன் ! 'பொம்மை பாக்க' மட்டுமே நேரம் இருந்திருக்கும் நண்பர்களுக்கு 2023-ன் பயணத்தினை நினைவூட்டும், விடுபட்ட இதழ்களை வாசிக்க ஊக்குவிக்கவும் இதோ - இந்த அட்டைப்படங்களின் தொகுப்பு உதவினால் செம !
மேற்படி இதழ்களை நீங்கள் ஆராமாய் அசை போட்டுகொண்டு இருங்க guys ; ரிப்போர்ட் கார்டை ரெடி பண்ணி விட்டு ஒரு மணி நேரத்துக்குள் தொடர்கிறேன் ! இதில் எத்தனை வாங்கினீர்கள் ? வாசித்தீர்கள் ? என்று பதிவிட்டால் will make for interesting reading !
Part 2 :
வழக்கம் போல, நாம் ஆரம்பிக்கப் போவது TOP OF THE YEAR 2023 - ஆண்டின் டாப் 3 இதழ்கள் தேர்விலிருந்து ! Please note - இவை முழுக்க முழுக்க எனது தனிப்பட்ட அபிப்பிராயங்களே அன்றி, எவ்வித தீர்ப்பும் அல்ல ! So உங்களது யூகங்களோடு நான் ஒத்துப் போயிருக்காவிடின், chill.....ப்ரீயா விடுங்க !
எனது பார்வையில் 2023-ன் இதழ் # 1 - இளம் டெக்ஸ் ஒரு 6 பாக அதிரடியில் பின்னிப் பெடலெடுத்த "THE சிக்ஸர் ஸ்பெஷல்" தான் ! நாமெல்லாம் எப்போதுமே 'தல' பின்னால் அணி திரளும் ரசிகக்கூட்டம் தான் என்றாலுமே, இந்த அட்டகாசமான கதைச் சுற்றில் ஒரு அட்டகாசமான தீபாவளி விருந்தின் திருப்தி கிட்டிடாது போயிருக்காது என்பது எனது நம்பிக்கை ! Yes - கலரில் இது சாத்தியமாகியிருந்தால் இன்னும் மிரட்டலாக இருந்திருக்கும் தான் ; ஆனால் கலரோ, கறுப்போ - அந்த அனல் பறக்கும் கதைக்களத்தை வீரியம் scores big !!
எனது பார்வையில் நடப்பாண்டின் இதழ் # 2 - ஏப்ரலில் வெளியான XIII spin -off - "எந்தையின் கதை" தான் ! பொதுவாகவே ஒரு ஜாம்பவான் கையாண்ட தொடருக்குள் அடுத்த தலைமுறையினர் தலைநுழைக்கும் போது - மாற்றங்கள் பளீரென்று தென்படாது போகாது ! கேப்டன் டைகர் தொடரில் கதாசிரியர் சார்லியேவுக்குப் பின்பான அத்தனை பேரும் தலைகீழாய் நின்று தண்ணி குடிச்சாலும் அவரது உச்சங்களை நெருங்கக் கூட முடியவில்லை ! கோசினி & மோரிஸுக்குப் பின்பாய் லக்கி லூக்கை அந்தப் பழைய அற்புதத்தில் ரசிக்க இயலவில்லை ! XIII தொடரிலேயே பிதாமகர் வான் ஹாமுக்குப் பின்பான படைப்பாளிகளின் எல்லைக்கோடுகள் எவையென்பதை பார்த்தும் விட்டோம் ! அப்படிப்பட்டதொரு சூழலில், XIII-ன் spin off தொடரினில் புதுசு புதுசாய் படைப்பாளிகள் களமிறங்கிய போது results were a mixed bag என்பதில் வியப்பிருக்கவில்லை ! "விரியனின் விரோதி" மங்கூசின் flashback போன்ற செம ஆல்பங்களும் உண்டு ; "பெட்டி பார்னோஸ்வ்க்கி" போன்ற சுமார்களும் உண்டு என்ற புரிதல் கிட்டிய பின்னே தான் இத்தொடரில் ரொம்பவே selective ஆக இருத்தல் அவசியம் என்று தீர்மானித்தேன் ! அதன் பின்பான "சதியின் மதி" (கால்வின் வாக்ஸ் flashback) அழகான ஆல்பமாய் அமைந்ததெனில், இந்தாண்டில் வந்திருக்கும் "எந்தையின் கதை" உறுதியான சிக்ஸர் என்பேன் ! ஒரு மிதமான வெற்றித் தொடருக்கே spin off எழுதுவதென்பதே நாக்குத் தொங்கச் செய்யும் சமாச்சாரம் ! ஆனால் XIII போன்றதொரு செம சூப்பர் ஹிட் தொடருக்கு, அத்தனை குழப்பங்களுக்கு இடையேயும், துளியும் நெருடல்களின்றி ஒரு பின்கதையினைப் புனைவதென்பது இமாலயப் பணி ! அதைக் கச்சிதமாய்ச் செய்து ; சித்திரங்களிலும், கலரிங்கிலும் கலக்கியிருந்த டீமுக்கு hats off !! துளியும் சந்தேகங்களின்றி இந்தாண்டின் best # 2 !
மூன்றாமிடத்தினை பிடிக்க மூன்று இதழ்களுக்கு மத்தியில் போட்டி என்பேன் !
- சம்மர் முடிந்து மழை தலைகாட்ட ஆரம்பித்த நேரத்தில் வெளியான "சம்மர் ஸ்பெஷல்"
- இரவுக் கழுகாரின் 75 வது பிறந்தநாள் மலரான The SUPREMO ஸ்பெஷல்"
- தாத்தாஸ் - துள்ளுவதோ முதுமை !
- கார்சனின் கடந்த காலம்
- காலனின் கால்தடத்தில் (!!!!!!!!!!)
- தி சிக்ஸர் ஸ்பெஷல்
- TEX - தி சுப்ரீமோ ஸ்பெஷல்
- The Big Boys ஸ்பெஷல்
- குற்ற நகரம் கல்கத்தா
- சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் # 2
- உயிரைத் தேடி - black & white தொகுப்பு
- நெவாடா
Hi
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே உங்களுக்கு...
Deleteஅனைவருக்கும் வணக்கம்
ReplyDeleteவந்துட்டேன்
ReplyDeleteMe too
ReplyDeleteVANAKKAM
ReplyDeleteHello sir
ReplyDeleteHello friends
Good morning 🌞
// லக்கி லூக் மறுபதிப்பு லிஸ்டானது ஒன்றிலிருந்து இரண்டாகி, இரண்டிலிருந்து மூன்றாக முன்னேற்றம் கண்டிட, //
ReplyDeleteSupeeeeeeerb
Happy always happy,💥💥💥💥
Deleteஆமா.. மீ டூ ஹாப்பி...
Deleteவணக்கம்
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDelete// கடைசி 6 நாட்களில் நம்மாட்கள் தாண்டியுள்ள புது உசரங்களின் பெருமிதமா ? //
ReplyDeleteAwesome. Hats off to everyone. Good team work.👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐💐💐💐💐💐💐
சூப்பர் சார்....கழுகுப் பார்வை தாள்கள் அட்டகாசம்...அந்த மறுபதிப்பு கள பாக்க ஆவல்...அப்ப லார்ண்ஸ் டேவிட்...மாயாவி...ஸ்பைடர் ...மிச்ச கதைகள் விடலாமே
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDelete12வது பாஸ்ங்கோ...
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவாங்கியவை 54
ReplyDeleteவாசித்தவை 54
காமிக்ஸ் எனும் கனவுலகம்
ReplyDeleteவிமர்சனப் போட்டி......!!!!
பி. சரவணன் ,
சின்னமனூர்.
விமர்சனம் -3.
"ஜானிக்கொரு தீக்கனவு "....!!!
கதை -A .P.துஷாதொ.
ஓவியம் - திபெத்.
முத்துகாமிக்ஸ் 482வது இதழ் இது.
.. சிறுவயதில் காமிக்ஸ் படிக்க ஆரம்பித்த போது வேதாளர் , இரும்புக்கை மாயாவி ,லாரனஸ் டேவிட் ,ஜானி நீரோ மற்றும் ஸ்பைடர் & டெக்ஸின் சாகஸக் கதைகளே என்னைக் கவர்ந்தது. முதன் முறையாக லயன் சூப்பர் ஸ்பெஷலில் வெளியான ஊடு சூன்யம் கதை ஜானி மேல் ஒரு இனம் புரியாத பரிவை ஏற்படுத்தியது. தொடர்ந்து திகில் காமிக்ஸில் வெளியான ரிப்போர்ட்டர் ஜானி கதைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தின. அன்று ஏற்பட்ட பந்தம் இன்றும் தொடர்கிறது.
.. ரி ஜானியின் கதைகள் இடியாப்பச் சிககல்களாகவே இருக்கும். அந்த இடியாப்பச் சிக்கல் கதைகளுக்கு அடியேன் பரம ரசிகன் . க்ரைம் கதைகளின் ராணி என அறியப்படும் அகதா கிறிஸ்டியின் நாவல்களில் கடைசிப் பக்கங்களில் கதையின் மர்ம முடிச்சு அவிழும். கொலையாளி யார் என்பது கடைசியிலேயே தெரியவரும். அதே முறை தான் ஜானியின் கதைகளுக்கும் அமைக்கப்பட்டிருக்கும் விதம் ரசிக்கத் தக்கதே. ஜானிக்கொரு தீக்கனவும் இதே பாணி தான்.
.. பாரிஸ் மத்திய போலீஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள ரகசிய ஆவணங்கள் திருடு போகின்றன என்பதிலிருந்து கதை ஆரம்பிக்கிறது. அங்கே இருந்தவர்கள் கமிஷ்னர் போர்டன் , ஜானி, லார்சன் ,தியரி மற்றும் லெட்ரூ ஆகியோர். பெட்டகத்திலுள்ள ரகசிய கேமிரா குற்றவாளியை படம் பிடித்துள்ளது.குற்றவாளி ஜானி என கேமிராப் படம் சொல்கிறது. அப்புறம் என்ன ? தீப்பறக்கும் ஆக்சனும் துரத்தலும் ஆரம்பமாகின்றன.
.. நாயகன் ஜானி வில்லனாகும் மர்மம் என்ன ? காவல் துறையில் உள்ள கறுப்பு ஆடு யார் என்பதை மூச்சிறைக்கச் செய்யும் பயங்கர விறுவிறுப்புடன் 48 பக்கங்களை பரபரப்புடன் பார்க்க படிக்க வைக்கிறது.
.. இது ஒரு அக்மார்க் துப்பறியும் த்ரில்லர் கதை. இந்தக் கதையின் தெளிவான வண்ணக் கலவையுடன் மிளிர்ந்திருக்கும் ஓவியங்கள் திரைப்படம் பார்த்த உணர்வைத் தருகிறது. கதைக்கு உயிரோட்டமான மொழிபெயர்ப்பு உயிர் தந்திருக்கிறது. ஹாட்ஸ் ஆப் விஜயன் சார். ஜானி கதைகள் வராதோ என்று பயந்திருந்தேன். ஓட்டெடுப்பில் ரிப்போர்ட்டர் ஜானி க்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து காமிக்ஸ் காதலர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
.. பாரிஸ் ரபேல் ஜானி போர்டன் லெட்ரூ நாடின் என்ற வார்தைகள் என்றென்றும் என் மனதில் நிறைந்திருக்கும்.
Nice review
Deleteஎல்லாம் வாங்கினேன். போன டிசம்பரிலிருந்தே படிக்க வில்லை. வரும் ஜூன் மாதம் படிக்க ஆரம்பித்து விடுவேன்.
ReplyDeleteமறுபதிப்புகளின் பட்டியலை போட்டால் எது எது வாங்க வேண்டும் என்று சென்னை செல்லும் நணபர்களிடம் சொல்ல வசதியாக இருக்கும்.
வந்தாச்சு 🙏
ReplyDeleteஅனைத்தும் வாங்கியாச்சு அனைத்தும் வாசிச்சும் ஆச்சு
ReplyDeleteசூப்பர் குமார்....பொற்காலம் எப்போதும் ...அப்போது போல உங்களுக்கு
Deleteஎப்பொழுதுமே நமது லயன் வந்தாலே பொற்காலம் தான். ஸ்டீல்
Delete27 முழுசும் நான்கு தொகுப்பில் சில கதைகள் படிச்சிருக்கேன்
ReplyDeleteGood morning to all
ReplyDeleteவாங்கியவை 58
ReplyDeleteவாசித்தவை 55
Supremo Special, Tiger Special and Vedhalar pending
Advance happy new year wishes to editor sir and family, lion office colleagues and all our comics loving friends.
ReplyDeleteHi..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete// மாயாவி புக்ஸ் - பூஜ்யம்
ReplyDeleteலாரன்ஸ்-டேவிட் புக்ஸ் - பூஜ்யமோ பூஜ்யம்
ஜானி நீரோ - லேது
ஸ்பைடர் - ஒண்ணே ஒண்ணு
லக்கி லூக் - மூணே மூணு
கதை சொல்லும் காமிக்ஸ் புக்ஸ் - சொற்பம் //
அட்ராசக்க அட்ராசக்க இதுதான் டாப். I am happy. Super
வாங்கியவை 20 வாசித்தவை 20
ReplyDeleteElla booksum vaanginen.padithum vitten.
ReplyDelete// கடைசி 10 தினங்களில் எனக்கும் சரி, நமது டீமுக்கும் சரி, எங்கிருந்து இத்தனை ஆற்றல் கிட்டியதோ, சத்தியமாய்த் தெரியாது, ஆனால் பிசாசுகளாட்டம் தினமும் ஒரு புக்கை முடித்து பிரிண்டிங்குக்கு அள்ளி இறைத்துக் கொண்டிருந்தோம் //
ReplyDeleteஎல்லாம் இறைவன் செயல் Sir. We have very good team which understand and executes your plan very well sir.
செமல
Delete// மறுபதிப்புகளில் 8 இதழ்களை (இது வரையில்) பிரிண்ட் பண்ணி விட்டு //
ReplyDeleteஆஹா ! ஜனவரி மாத இதழ்கள் மொத்தம் எத்தனை என்பதை எண்ணுவதற்கு இரண்டு கை விரல்களும் போதாது போல தெரிகிறதே 👏🏻👏🏻👏🏻
மறுபதிப்பு இதழ்களின் பெயர்களை சொல்ல முடியுமா சார்?
மாயாவி புக்ஸ் - பூஜ்யம்
ReplyDeleteலாரன்ஸ்-டேவிட் புக்ஸ் - பூஜ்யமோ பூஜ்யம்
ஜானி நீரோ - லேது
ஸ்பைடர் - ஒண்ணே ஒண்ணு
லக்கி லூக் - மூணே மூணு
கதை சொல்லும் காமிக்ஸ் புக்ஸ் - சொற்பம்
மகிழ்ச்சி சார்...
அப்படியே மறுபதிப்புக்கள் பற்றி......
ஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteலயன் 40 ஆண்டு விழா இதழ்கள் பொற்கால இதழ்களாருக்கும்
ReplyDelete// இதில் எத்தனை வாங்கினீர்கள் ? வாசித்தீர்கள் ? என்று பதிவிட்டால் //
ReplyDeleteஎல்லாமே வாங்கியாச்சி,எல்லாமே படிச்சாச்சி சார்...
அண்ணேன் டா ❣️
Deleteநன்றி தம்பி...
Deleteஎன்ன பழைய மொழிபெயர்ப்புகள் மொக்கையா! இதெல்லாம் சரியில்லைங்கய்யா! அதைப்படிச்சு தான் நானெல்லாம் தீவிர ரசிகனானேன்! புது மொழிபெயர்ப்பு நல்லா இருக்குன்னு சொல்லலாம்... (இந்த சார்வாள், சித்தே போன்ற வார்த்தைகளெல்லாம் அடிக்கடி ரிப்பீட் ஆகாமல் இருந்தால்)
ReplyDelete2023-ல் வெளியான புத்தகங்களில் 100 சதவீதம் படித்து முடித்திருக்கிறேன். கிட்டத்தட்ட 20-25 கதைகளுக்கு விமர்சனங்கள் கூட எழுதியாச்சு... சிஸ்கோவும், ஜார்ஜும் வந்தால் சிறப்பா செஞ்சுடுவோம். விமர்சனம் எழுதிய கதைகளில் பலவும் 10க்கு 9 அல்லது 8 என்ற வகையில் ரேட்டிங் கொடுத்திருப்பேன். அவையெல்லாம் என்னுடைய வாசிப்பில், விமர்சனம் எழுதத் தூண்டின.
ReplyDelete@Edi Sir..😍😘
ReplyDeleteMe in..😍😘😃
2024😍😘💐💐
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்..
❤💛💙💚💜
கடைசி மூன்று மாதங்களில் படிக்க நேரம் கிடைக்கவில்லை, தீபாவளி வரை 80% சதவீதம் படிச்சு, ஆனால் அதன் பின்னர் நெவாடா, Mr No & காலனின் கால் தடத்தில் மட்டுமே படித்தேன், தாத்தா பாதியில் நிற்கிறது
ReplyDeleteAll Books Buying,,,💥💥💥
ReplyDeleteAll Books Reading,,,,,,💥💥💥💥
😊😁
Deleteஅனைத்து புத்தகத்தையும் படித்தாயிற்று நல்லதொரு காமிக்ஸ் ஆண்டாக சென்றது மிகவும் பிடித்த இதழ்களென்றால் மறு பதிப்புகளென்றாலும்
ReplyDeleteகார்சனின் கடந்த காலம்
சுஸ்கி விஸ்கி ஸ்பெஷல் 1
கொலைப்படை
லக்கி மறுபதிப்புகள் மீதி இரண்டும் என்ன என்று சொல்ல முடியுமா சார்?
ReplyDeleteஅனைத்துமே வாங்கியாயிற்று....
ReplyDeleteஅனைத்துமே வாசித்தாயிற்று சார்...!
சூப்பர் தலீவரே
Delete:-)
Deleteலக்கி லூக்
ReplyDeleteமற்ற இரண்டு மறு பதிப்புகள்
எதுவாக இருக்கும்
பரலோகத்திற்கு ஒரு பாலம்
மேற்கே ஒரு மாமன்னர்
டால்டன் நகரம்
Part 2 என்று பதிவின் தொடர்ச்சி ஆச்சு !
ReplyDeleteசூப்பர்
Deleteஅந்த லக்கி லூக் மறு பதிப்புகள் என்னவென்று சொல்லவில்லையே ஆசிரியரே
Delete+1
Deleteடாப் 3.
ReplyDeleteபணிவனப் பிரியாவிடை - டிரெண்ட்
தாத்தாஸ்
எந்தையின் கதை - XIII
லாஸ்ட் 3
நெவாடா
மிஸ்டர் நோ
தி பிக் பாய்ஸ் ஸ்பெஷல்
மதிய வணக்கங்கள் 😊
ReplyDeleteமரணம் சொன்ன இரவு படிக்கலை இன்னும்...ஆனா டப்சால டெக்சின் இக்கதையா...என் லிஸ்ட்ல இதுக்கு இடமிருக்கும்.டாப்ல....
ReplyDeleteசுஸ்கி விஸ்கி என் மகன் தினமும் இரவு சில பக்கங்கள் புரட்டி யாதும் தூங்கும் அட்டகாச இதழஞ
இது வரை படித்ததில் எல்லா கதையும் டாப்
ReplyDeleteகார்சனின் கடந்த காலம் செமயான இதழ்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடப்சா 3
Delete1. உயிரை தேடி
2. மைக் ஹேமர்
3. யார் அந்த மாயாவி
டாப் 3
Delete1. எந்தையின் கதை
2. எல்லாம் கிழ மயம்
3. குற்ற நகரம் கல்கத்தா & மீண்டு வந்த மாயன்.
2023 அட்டைப்பட தொகுப்பு மிகவும் அருமை Sir. இதேபோல் 1985 ல் இருந்து வருடம் வாரியாக வெளியிட இயலுமா Sir? Collection complete செய்ய உதவியாயக இருக்குமே.
ReplyDelete2023 Santha books I have read 60-70%. Balance yet to be read.
2023 ஒரு பார்வை
ReplyDeleteமொத்தம் வெளிவந்த புத்தகங்கள் (இலவசங்களையும் சேர்த்து) - 61
அதில் மொத்த கதைகள் - 100
இனி வரும் சிஸ்கோ, விங் கமாண்டர் ஜார்ஜ் மற்றும் இலவச Tex சிறுகதை சேர்க்கப்படவில்லை.
படித்த புத்தகங்கள் - 61
படித்த கதைகள் - 100
படிக்காதது - 0
தொகுப்பாக வந்த Supreme 60's கதைகளை தனித்தனியே பிரிக்காமல் மொத்தமாக கணக்கில் எடுத்து கொண்டால், கதைகளின் எண்ணிக்கை 74. இந்த 74 கதைகளை எனக்கு பிடித்த வகையில் வரிசை படுத்தி இருக்கிறேன்.
//ஆஹா, ஓஹோ, தெறி, தூள், செம, வேற லெவல், போட்றா விசில, தரமான சம்பவம்பா (A+) Excellent.//
1. விதி எழுதிய வெள்ளை வரிகள்
2. கார்சனின் கடந்த காலம் - டெக்ஸ்
3. புதிருக்குள் பெரும் பயணம்
4. எந்தையின் கதை - XIII
5. மரணத்தின் நிறம் நீலம் - தோர்கல்
6. எல்லாம் கிழமயம் - தாத்தாஸ்
7. காலனின் கால் தடத்தில்
8 குற்ற நகரம் கல்கத்தா
9. வஞ்சம் மறக்கா வரலாறு - ஆல்பா (சம்மர் ஸ்பெசல்)
10.டால்டன்களோடு தக திமித - லக்கி
11. மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
12. THE தளபதி special
13. லக்கி லூக்கிற்கு கல்யாணம்
14. பனாமா படலம் - டேங்கோ
15. பனிவனப் பிரியாவிடை - ட்ரெண்ட்
16. மீண்டும் ஒரு அசுரன் - மார்டின்
17. தீதும் நன்றும் பிறர் தர வாரா - மேகி கேரிஸன்
18. மர்ம சாம்ராஜ்யம் - தோர்கல்
19. பின்விளைவுகள் ஜாக்கிரதை - Bluecoats
20. கொலை நோக்கு பார்வை - ராபின்
21. நதி போல ஓடி கொண்டிரு
22. The சிக்ஸர் Special - Tex
23. நானும் ரவுடி தான் - சுஸ்கி விஸ்கி ஸ்பெசல் 2
24. பள்ளத்தாக்கு படலம்
25. பகை பல தகிர்த்திடு - டெக்ஸ்
26. மரணம் சொல்ல வந்தேன் - மைக் ஹேமர்
27. கானம் பாடும் கம்பிகள் - லக்கி
//நல்லா இருக்குப்பா, தப்பு சொல்ல முடியாது (A) Very Good.//
28. 96 மணி நேரங்கள் - ரூபின்
29. ஜானிகொரு தீக்கனவு
30. நட்சத்திர வேட்டை - நெவாடா
31. சர்பத்தின் சின்னம் - டெக்ஸ் - Supremo Special
32. உங்களை கொன்றதில் மகிழ்ச்சி - டெக்ஸ்
33. கரையெல்லாம் குருதி - டெக்ஸ்
34. திக்கெட்டும் திகில் - டெக்ஸ் - Supremo Special
35. கைதியாய் கார்சன் - டெக்ஸ்
36. கலவர பூமியில் கனவைத் தேடி - டெக்ஸ் & Zagor
37. பேரிக்காய் படலம் - சுஸ்கி & விஸ்கி
38. சகோதரனின் சகாப்தம் - டெக்ஸ்
39. சென்று வா, கொன்று வா - Zagor
40. புரவிகளின் பூமி - Zagor
41.எல்லாம் அழகே
42. பனித்துளி இளவரசி
43. தப்பி சென்ற தேவதை - SODA
44. பிரியமுடன் ஒரு போராளி - Zagor
45. புதையலுக்கொரு பாதை - விங் கமாண்டர் ஜார்ஜ் Mini
46. யார் அந்த சிறுத்தை மனிதன் - Mini Book
//இதுவுந்தே நல்லா இருக்கு ஆனாலும் இங்க, அங்க கொஞ்சம் இடிக்குதே. (B) Good//
47. அமேசானில் அதகளம் - Mr. NO
48. கறை படிந்த கரன்சி - லேரி B மேக்ஸ்
49. வந்தார் வென்றார் - டெக்ஸ் - Supremo Special
50. ரிப்கிர்பி ஸ்பெஷல் - 2
51. உயிரைத் தேடி (Black & White)
52. உயிரை தேடி (Colour)
53. வேதாளர் ஸ்பெஷல் - 2
54. மரண நடை - டெக்ஸ்
55. பேய் புகுந்த பள்ளிக்கூடம் - டைலன் Mini
//திரிசங்கு நிலை, கொஞ்சம் சூப்பரு, கொஞ்சம் ஓவரு (C) Above Average (Un predictable)//
56. மீண்டு(ம்) வந்த மாயன் - டெக்ஸ்
57. சார்லி ஸ்பெஷல் - 1
58. கொலைப்படை - ஸ்படைர் (The Big Boys Special)
59. வேங்கையோடு மோதாதே - Mini Book
60. வல்லவனுக்கு வல்லவன் - Mini Book
//எந்த மலையையும் புரட்டி போடல, ஆனா தொய்வும் இல்லை, Average (D)//
61. பிளாக் மெயில் பண்ண விரும்பு - ராபின்
62. தேடல்களை கைவிடேல் - Zagor
63. தப்பு தப்பாய் ஒரு தப்பு - ராபின்
64. பூதம் காத்த புதையல் - டெக்ஸ் - Supremo Special
65. ஓநாய் வனத்தில் டெக்ஸ்
66. பறக்க மறந்த பறவைகள் - டெக்ஸ்
67. மந்திர மண்டலம் - டெக்ஸ்
68. குற்றத்தின் குரல் - டெக்ஸ் Mini
69. மனித எரிமலை - நார்மன் (The Big Boys Special)
//பிடிங்கினது எல்லாமே தேவை இல்லாத ஆணி, ஓவர் பில்டப்பு உடம்புக்கு ஆகாது - பல்பு (E) Below Average//
70. ஒரு கௌபாயின் காதலி - டெக்ஸ்
71. கிட் ஆர்டின் உஷார் - Summer Special
//மிடில, எடுத்தேன் பாரு ஓட்டம் (F) - Disaster//
72. ஆழ்கடலில் மாயாவி
73. யார் அந்த மாயாவி
74. கொலைகார குள்ளநரி
ஜொலிக்கும் அட்டைப்படங்கள்
ReplyDelete1. கார்சனின் கடந்த காலம்
2. The BIG Boys Special
3. வேதாளர் ஸ்பெஷல் - 2
4. லயன் லக்கி ஆண்டு மலர்
5. சம்மர் ஸ்பெசல்
6. The தளபதி ஸ்பெஷல்
7. பனிவனப் பிரியாவிடை
8. கரையெல்லம் குருதி
9. நட்சத்திர வேட்டை - நெவாடா
10. உயிரை தேடி Black & White
11. உயிரை தேடி கலர் (Cover Jacket)
12. அமேசானில் அதகளம்
13. விதி எழுதிய வெள்ளை வரிகள்
14. சகோதரனின் சகாப்தம்
15. மீண்டு(ம்) வந்த மாயன்
16. ரிப்கிர்பி ஸ்பெஷல் - 2
17. யார் அந்த மாயாவி
18. உங்களை கொன்றதில் மகிழ்ச்சி
19. காலனின் கால் தடத்தில்
20. பேய் புகுந்த பள்ளிக்க்கடம்
21. ஜானிகொறு தீக்கனவு
22. வல்லவனுக்கு வல்லவன்
மொக்கை அட்டைகள்
1. சார்லி ஸ்பெஷல்
2. மரணத்தின் நிறம் நீலம் - தோர்கல்
3. மீண்டு வந்த அசுரன் - மார்டின்
4. சுஸ்கி விஸ்கி - 2
5. தீதும் நன்றும் பிறர் தரவாரா
6. வேங்கையோடு மோதாதே
7. யார் அந்த சிறுத்தை மனிதன்
Best Making
1. கார்சனின் கடந்த காலம்
2. The தளபதி special
3. The BIG Boys Special - ஸ்பைடர் மட்டும்
4. உயிரை தேடி (Black & White)
5. லயன் லக்கி ஆண்டு மலர்
6. சம்மர் ஸ்பெசல்
7. பனிவனப் பிரியாவிடை
8. சகோதரனின் சகாப்தம்
Worst Making
1. புதையலுக்கொரு பாதை
2. மனித எரிமலை (The big boys special
Book for the Year - கார்சனின் கடந்த காலம்
Story for the year - விதி எழுதிய வெள்ளை வரிகள்
Best Find for the Year - வன்மேற்கின் அத்தியாயங்கள்
Best New Hero - Mr. No
குறைகள்
(-) டெக்ஸ் 75 ஆம் ஆண்டில் இருந்தாலும், ஒரு சில கதைகளை தவிர மற்றவை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட Supremo ஸ்பெஷலில் கூட அதே நிலை நிலைதான்.
(-) வருட வருடம் ஏதாவது ஒரு கதை பிரிண்டில் சொதப்புவது தொடர்கிறது. சென்ற வருடம் காரிகன் ஸ்பெஷல், இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மனித எரிமலை. கிடைத்த ஒரிஜினலே அப்படித்தான் என்றால் வெளியிடாமல் இருப்பதே நலம்.
(-) மேலும் கலர் பிரிண்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. சீரான வண்ணக்கலவை புத்தகம் முழுதும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 75% பக்கங்களில் சரியாகவும், மீதி 25%ல் அடர்த்தியாகவும், டல்லாகவும் மாறி மாறி இருப்பதை தவிர்க்க வேண்டும். இதை நான் come back கிற்கு பிறகு பல முறை குறிப்பிட்டு உள்ளேன். இது அனைத்து புத்தகங்களிலும் காணப்படுவது இல்லை. ஆனால் நிச்சயம் சரி செய்ய பட வேண்டிய ஒன்று. உதாரணம் : ஒரு கௌபாயின் காதலி, பள்ளத்தாக்கு படலம், நதி போல ஓடிக்கொண்டிரு, மரணத்தின் நிறம் நீலம். இக்கதைகளில் புரட்டினாலே தெரியும்.
(-) Black & White கதைகளுக்கு பயன்படுத்தபடும் காகிதங்கள். தரமான வெள்ளை காகிதங்கள் பயன்படுத்துவது படிப்படியாக குறைந்து இப்போது பயன் படுத்தும் காகிதங்கள் சுமார் ரகங்களே. ஆனால் இவை லயன், முத்து, லயன் கிராபிக் நாவல்களில் தான் இந்த மாற்றம். ஆனால் V காமிக்ஸில் அதே தரமான வெள்ளை காகிதங்கள் தான் பயன் படுத்தபடுகிறது. டிசம்பர் மாத இதழ்களை எடுத்து பார்த்தாலே புரியும்.
நிறைகள்
(+) வெளியான 74 கதைகளில், 55 கதைகள் நன்றாக score செய்திருப்பது ஆரோக்கியமான விசயம். 5 கதைகள் மட்டுமே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை (என்னளவில்). இது ரசனை சார்ந்தது, ஆளாளுக்கு வேறுபடும் என்றாலும், தாங்கள் தொட்டிருப்பது வெற்றியின் புது உச்சம்.
(+) புத்தகங்களின் எண்ணிக்கை . அதிக அளவில் புத்தகம் வெளிவந்த இந்த ஆண்டில், இந்த வெற்றி சதவீதம் நிச்சயம் கொண்டாட பட வேண்டிய ஒன்றே.
(+) கிராபிக் நாவல்களின் ரசனை சார்ந்த வெற்றி. வன்மேற்கையும் கணக்கில் எடுத்து கொண்டால், இந்த வருடம் வெளிவந்தவை மொத்தம் 9. என்னை பொறுத்தவரை இதுவே பெரிய வெற்றி தான். விற்பனையில் உறுதி இல்லை என அறிந்தும் தொடர்ச்சியாக கிடைக்கும் கேப்பில் எல்லாம் நுழைத்து, இப்போது அதற்கான பலனையும் அடைந்து உள்ளீர்கள். (காலனின் கால் தடத்தில் பாகம் இரண்டுக்கான ஓட்டெடுப்பின் முன்னணி நிலவரத்தை தாங்கள் சொல்லாமல் சொல்லியதில் இருந்தே புரிகிறது)
(+) V காமிக்ஸ் + மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்கிற சந்தா திட்டம். இதனால் தான் லயன், முத்துவில் சான்ஸ் கிடைக்காத ராபின், வன்மேற்கின் அத்தியாயங்கள் போன்ற கதைகளையும், திடீரென தோன்றும் கதைகளையும் நுழைக்க முடிந்தது. ஒருவித balance மற்றும் flexibility க்கு உத்திரவாதம் அளிப்பது ஆரோக்யம்.
(+) முத்து 50 ஆம் ஆண்டு கொண்டாட்டம் + ஈரோடு புத்தக விழா, One line புத்தக விழா, Cricket கொண்டாட்டம், புத்தக விழா ரிலீஸ்கள், பட்டிமன்றம் மற்றும் சமீபத்திய சேலம் புத்தக விழா என்று வருடம் முழுதும் களை கட்டிய காமிக்ஸ் உற்சவங்கள் காலத்துக்கும் மறக்க இயலா தருணங்கள்.
(+) இவையனைத்தும் காரணம் தங்களின் உழைப்பு, பதிதுக்கான தேடல் மற்றும் காமிக்ஸ் மேல் தாங்கள் கொண்ட தீரா தாகம். நன்றிகள் பல.
வளரட்டும் காமிக்ஸ் நேசம்.
மிக மிக மிக அருமை நண்பரே...
Delete@VT ji..😍😘
DeleteExcellent review ji..👍👌👌💐💐
அடேங்கப்பா....:-)
Deleteபயங்கரமான அலசல் நண்பரே,இதற்கான நேர ஒதுக்கீடு,இதழ்கள் சார்ந்த அலசலும்,அனைத்து தகவல்களை சிந்தாமல்,சிதறாமல் டைப்புவதுமாய் அப்பப்பா பெரிய பணிதான்,அதற்காகவே உங்களுக்கு எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்...
DeleteTop 3 மற்றும் டப்சா 3 முதல் மூன்றும், கடைசி மூன்றும்
ReplyDelete// நமது ஸ்டால் நம்பர்கள் : 364 & 365 //
ReplyDeleteGood news.
டாப் 3
ReplyDelete1. மீண்டு வந்த மாயன்.
2. SIXER SPECIAL AND தளபதி ஸ்பெஷல்
3. குற்ற நகரம் கல்கத்தா AND THORGAL ..
டப்சா 3:
1. MIKE HAMMER
2. உயிரை தேடி
3. SHORT STORIES OF ZAGOR IN V COMICS .. NEED FULL FLEDGED STORY OF ZAGOR LIKE THE FIRST ISSUE ..
// SHORT STORIES OF ZAGOR IN V COMICS //
Delete+1
Good to read since it’s not taking more time: but stories are not impressed.
மாயாவி மாம்ஸ், லாரன்ஸ் சித்தப்ஸ், ஜானி நீரோ மச்சான்ஸ்.... 😄😄😄 ❤️..
ReplyDeleteசிரிப்பை அடக்க முடியலங்க
Sir.. Beautiful.. ❤️😄😄.... ஏறக்குறைய நான் சின்ன வயதில் இப்படி நினைத்தே
படித்து வளர்ந்தேன்... (Yes..
"அண்ணா "... என்ற உறவு முறையில் ) நன்றிங்க sir... ❤️👍🙏...
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள் விஜயன் சார்
ReplyDelete23'ம் ஆண்டின் டாப் 3 :
ReplyDelete1. நெவாடா
2. ரூபினி
3. எந்தையின் கதை.
" தாத்தாஸ் " தொடரின் இந்த "சூப்பர் ஹிட்" டுக்கு, தாத்தாஸ் தான் காரணமா...? .
Deleteஉண்மையில் அது நிஜம் இல்லை.
இந்த சீரிஸ் ஸ்டெப் ஃபை ஸ்டெப் மரண கிட்டுக்கு பின்புலம் இருப்பது
கதைகளில் பேசப்படும் உலகலாவிய விசயங்கள். அதை நய்யாண்டி முறையில் சொல்லி,
படிப்பவர்களுக்கு, ஓர் தாக்கத்தை தருகிறார் ரைட்டர்.
அவரது சொல்நடை.
அதோடு கதைகளில் காணப்படும் இதர துணை பாத்திரங்கள் அதற்கு வலு சேர்க்கிறது.
மற்றும்,
அந்த கதாபாத்திரங்களின் நிஜ வடிவங்கள்.
கடைசியாக வந்த அத்தியாயத்தில் தாத்தாக்களின் நிஜ நிறங்களை தோழுரித்து காட்டியதில், ரைட்டர் எதிலும் சமரசம் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
கதையின் உண்மையான நாயகன் யார் என்பதை நமது மனச்சான்றுக்கு விட்டு விடுகிறார்.
நீங்கள் இளகிய மனம் படைத்தவர் என்றால், ஃசோபியா அன்பு பாராட்டும், அந்த வயதான மூதாட்டி யை கொண்டாடுவீர்கள்.
உங்கள் வாழ்க்கையில் சந்தித்த துயர் நிறைந்த உடன் பயனாளியாக அவரை எண்ணுவீர்கள்.
நீங்களும் ஃசோபியாவுடன் இணைந்து, தாத்தாக்களை துவைத்து எடுப்பீர்கள்.
(அ)
உலக நேயம் குறித்து கவலை கொண்டால், கார்ப்பரேட் நிறுவனங்களின் அடாவடித்தனத்தை நினைத்து பொங்கி எழுவீர்கள்.
"என்டர்டைமண்ட்" போதும் என்றால், கதையை ரசித்து விட்டு போய் கொண்டு இருக்கலாம்.
மற்ற படி,
Deleteகுறை சொல்ல ஒன்றுமே இல்லையா...
இருக்கிறது.
அதன் அட்டைப் படங்கள்.
சுமார் ரகம் தான்.
கசமுசா ஓவியங்கள்.
இந்த அட்டைப்படத்தில் தாத்தாஸ் தாண்டி, இந்த கதையில் வேறு பாத்திரங்களே இல்லையா.
ஏன் ஃசோபியாவை ஓர் முறை அட்டையில் போடுங்களேன்.
நான் கூட இந்த நாவல் களை ரசிக்கிறேன் என்றால், அனைத்து கீர்த்திகளும " ரைட்டரையே" போய் சேரும்.
எனக்கு இந்த நாவல் தொடர் ன் பிடித்த சிறந்த மெயின் பாத்திரங்கள் சோஃபியா மட்டுமே.
மீதமுள்ள கதைகள்,
ஓர் தண்டி புத்தகமாக வருவதையே விரும்புகிறேன்.
ஏனெனில், முதலில் வந்த கதைகள், படித்து முடித்த மறுகணமே லைப்ரரி க்கு டொனக்ட் செய்து விட்டேன்.
கடைசியாக வந்த புத்தகம் மட்டுமே கையில் இருக்கிறது.
அடுத்து எனக்கு இருக்கும் வேலை.
இதுவரை வந்த அத்தியாயங்களை, "ஒன் சாட்"டில்
படிக்க வேண்டும்.
அதற்கு மீண்டும் அந்த முதல் இரண்டு அத்தியாயங்கள் வாங்க வேண்டும்.
அட்டை படங்களை கழற்றி விட்டு "பைண்டிங்" செய்ய வேண்டும்.
எனது கலெக்ஷன் ல் சேர்க்க வேண்டும்.
...பாத்திரம்...
Delete23'ம் ஆண்டின் டாப் :
Delete4 ..தீதும் நன்றும் பிறர் தர வாரா - மேகி கேரிஸன்
தாத்தாஸ் கதைகளின் இரு துருவங்களையும் குறிப்பிட்டு உள்ளீர்கள் ஒளிர் தோழரே...
Deleteஅருமையான விமர்சனம்...
அனைத்தும் உள்ளது தாத்தாஸ்ல...
இடையிடையே வரும் மென் காதல்கள் கூடுதலாக சிறப்பு சேர்க்கின்றன....
Excellent sir
Deleteவாங்கியவை 54
ReplyDeleteபடித்தது 27 😇😁
*ஜானிக்கொரு தீக்கனவு*
ReplyDeleteபொதுவா ஆட பொறியில வைச்சு புலிய புடிப்பாங்க, ஆனால் இங்கேயோ ஒரு (துப்பறியும்) புலிய வைச்சு (ஒரு கருப்பு) ஆட புடிக்கறாங்க.
யாராலும் உடைத்து திறக்க முடியாத ஒரு அதிநவீன லாக்கரிலிருந்து ரகசிய ஆவணத்தை திருடுனதா ஜானி மீது ஆதாரபூர்வமாக ஒரு குற்றம் சுமத்தப்பட அதனால போலீஸ் ஜானிய கைது பண்ண முயலும்போது இது திட்டமிட்ட சதின்னு சொல்லி ஜானி போலிஸ்கிட்ட இருந்து தப்பிக்கறாரு.
அவர் தப்பிச்சு போகும் போது அவரை மடக்குற வேறொரு கும்பல் ஜானிய கடத்தி அவர் தான் குற்றவாளின்னு நிரூபிக்கும் விதமா ஆதாரங்களை ஏற்படுத்தி அவரை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்குறாங்க.
தான் நிரபராதின்னு நிரூபிக்க வேண்டிய நிலையில ஜானி கடத்தல்காரங்க கிட்ட இருந்து தப்பிக்கறாரு.
பொறியில் சிக்கிய எலி போல ஒரு பக்கம் போலீசும் மறுபக்கம் கடத்தல் காரங்களும் துரத்த.
அவங்கிட்ட இருந்து எப்படி தப்பிச்சு தான் நிரபராதின்னு நிருபிக்க யத்தனிக்கிறாரு & உண்மையான குற்றவாளிய கண்டுபிடிக்க ஜானி திட்டம் போடும் இடங்கள் அருமை.
இறுதியில் ஜானி தன் மீது போடப் பட்ட பழியில் இருந்து தப்பித்தாரா & குற்றவாளி பிடிபட்டானா என விறுவிறுப்பாக செல்கிறது.
வழக்கமான இடியாப்ப குழப்பம் இல்லாமல் தெளிவான கதைக்களமாக இருந்தாலும் நல்ல சுவாரஸ்யமான கதை.
ஜானி எப்போதும் வரவேண்டும் என்பது எனது விருப்பம்.
Very good review
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteநமது எடிட்டர் விஜயன் sir மைக் ஹேமர் குறித்து சொன்னதால் முன்பு எழுதிய மீள் பதிவு.
ReplyDeleteமைக் ஹேமர்
இம்மாதம் வந்த மைக் ஹேமரை ஓவர்கோட் மற்றும் தொப்பிச் சகிதம் இவரைக் காணும்போது விபரீத விதவையில் வந்த டிடெக்டிவ் சார்லஸ் ரேஞ்சுக்கு இருக்கும் என்று தப்புக் கணக்கு போட்டு முதலில் வசிக்க ஆரம்பித்து மைக் ஹேமரிடம் வசமாக சிக்கிக் கொண்டேன். விவரித்து சொல்லும் தகுதி இல்லாத கதை என்பதால் கதை விவரிப்பை ஸ்கிப் செய்து விடலாம்.
முதலில் காமிக்ஸில் நம்மை ஈர்ப்பது சித்திரம் தான் அல்லவா? ஆனால் இங்கு அது சுத்தமாக வொர்க் ஆகவில்லை. பெயிண்டிங் தனமான சித்திரங்கள் இந்தக் கதை எனும் வஸ்துவுக்கு பொறுத்தமில்லாதது போல உள்ளது. ஒரு நல்லச் சித்திரக்கதையின் முதல் பேனல் சித்திரமே நம்மை ஈர்த்து உள்ளிழுக்க வேண்டும் அல்லவா? அதை இந்தக் கதை செய்யத் தவறுகிறது. 50 பக்கம் வரை வாசித்தும் ஹேமரின் உணர்ச்சியற்ற மூஞ்சி போல எவ்வித உணர்வெழுச்சியும் இன்றி ஜடமாக நகர்கிறது கதை.
இதற்குமுன் லயன் கிராபிக் நாவல் வரிசையில் வந்திருந்த 'நில் கவனி வேட்டையாடு!' கதையும் இதேப் போல அடர் பச்சைக்கொண்ட பெயிண்டிங் சித்திரங்கள் தாம். அந்த அற்புதமான சித்திர விருந்தும், கதை சொல்லப்பட்ட விதமும், தரமான தமிழ் மொழிபெயர்ப்பும் என அனைத்து அம்சங்களும் மிகப் பிரமாதமாக அமைந்திருந்தது. அந்தப் புத்தகம் என்னை வெகுவாக ஈர்த்திருந்தது, ஒவ்வொரு பேனல் சித்திரத்தையும் மிகவும் ரசித்து வாசித்தேன். ஆனால் அதனுடன் இந்த மைக் ஹெமரை ஒப்பிட்டால் நில் கவனி வேட்டையாடு! வின் ஒரு பேப்பருக்கு கூட ஈடாகாது.
அடுத்து கதை சொல்லல். 50 பக்கம் வரை வந்துமே கதைக்குள் என்னால் ஒன்ற முடியவில்லை. டார்க் அடர்வண்ண சித்திரம் மட்டும் இருந்து விட்டால் திரில்லர் தகுதி அடைந்து விடும் என்று காமிக்ஸில் ஏதும் புது வரையறை உள்ளதா என்று தெரியவில்லை. ஒரு நல்ல கதாசிரியருக்கு முதல் 5 அல்லது 6 பக்கங்கள் நகர்வதற்குள் கதையை சுவையாக சொல்லத் தெரிய வேண்டாமா? அட.. 20 பக்கம் கூட தாண்டியும் கொஞ்சமாவது சுவாரஸ்யம் வரவேண்டாமா..? இது திரில்லர் கதை என்று குறிப்பு வேறு. அப்படி அந்த திரில்லரை கதையின் 100 பக்கங்களில் எங்குதான் ஒளித்து வைத்துள்ளாரோ கதாசிரியர் என்று வினவும் அளவுக்கே சலிப்பாக உள்ளது.. கதையை விட்டு விட்டு அந்த திரில்லை "எங்க நைனா ஒளிச்சு வச்சிருக்க?" என்று தேடினால் கூட இந்தக் கதையில் சுவாரஸ்யம் காணமுடியாது போலிருக்கிறது. 50 பக்கம் வந்தும் மனம் ஒன்றவில்லை என்பதால் இந்த கதாசிரியருக்கும் நமக்கும் செட்டாகாது என்று வாசிப்பை கைவிட்டு விட்டேன். இதில் கோடிக்கணக்கான புத்தகம் விற்ற கதாசிரியர் என்ற பில்டப்பை பார்த்து வேறு பெருங்குழப்பம். கதையின் பாதி பக்கம் வரை வாசித்தும் ஏன் எனக்கு ஒன்றி போகவில்லை நமக்குதான் காமிக்ஸ் ரசனை ஏதும் காலாவதி ஆயிப்புடுச்சா? என்றெல்லாம் குழம்ப வைத்து விட்டார் கதாசிரியர். கடந்த தீபாவளியின் போது முத்துவில் வந்த டிடெக்டிவ் ராபின் கதையான 'நடுநிசி வேட்டை!' கதையை வெகுவாக ரசித்து வாசித்தேனே... ராபினின் மேற்படி கதையும் கூட க்ரைம் புலனாய்வு திரில்லர்தான்.. ஒரே வாசிப்பில் முடித்த அருமையான கதை இது. எனில் என் ரசனையில் எவ்வித மாற்றமும் இல்லை... உண்மையில் நல்ல கதைகள் எனில் நிச்சயமாக எனக்குப் பிடிக்கிறது. ஒரு நல்ல கதாசிரியர் வாசகனின் வாசிப்பு நேரத்தை ஈர்த்துக்கொள்ள வேண்டும். வாசகனின் சொந்த வேலையை கூட தள்ளிபோட வைத்து கதை சொல்லலில் வாசகனை கட்டிப் போட வேண்டும். உதாரனமாக கதாசிரியர் சார்லியரின் கேப்டன் டைகர் கதைகளை குறிப்பிடலாம். ஒரு தங்கக் கல்லறை ஆகட்டும் இரத்தக் கோட்டை தொடர் ஆகட்டும் இரும்புக்கை எத்தன் தொடர் ஆகட்டும் மின்னும் மரணம் தொடர் ஆகட்டும், எத்தனை அற்புதமான கதைகள் மற்றும் கதை விவரித்த பாங்கு எப்படி அற்புதமாக இருந்தது?! கதை சொல்லல் அப்படி இருக்க வேண்டும். ஒரு நல்ல கதை வாசகனின் மரணம் வரை அப்படியே மனதில் தங்கியிருக்க வேண்டும்.
மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பு. இது அடுத்த பெரும் இம்சை. நான் வாசித்த வரை கதை மாந்தர்கள் ஒருவித திமிர் நடையில் பேசுகின்றனர். எங்க 'தல' டெக்ஸ் வில்லர் மாதிரி பெரும் காமிக்ஸ் ஸ்டார்கள் இவ்வாறு பேசினாலும் கூட தகும், இங்கு அவ்வாறு வாசிக்கையில் ஹேமர் என்ன அம்மாம் பெரிய அப்பாட்டக்கரா ன்னுதான் தோணுச்சு. கதையெங்கும் ஒரே வசனப் பிரவாகம் வேறு போட்டு படுத்தி எடுக்கிறது. அந்த வெல்டாவை அறிமுகம் செய்யும்போது டெக்ஸ் வில்லர் வேறு தேவையில்லாது ஆஜர் ஆகிறார். மற்றும் தற்போதைய வழக்கமான அடையாளமான "சுகப்படாது, மெய்யாலுமா.. என்பது போன்ற வாசித்து சலித்து போன சொற்றொடர்களை ஆங்காங்கே மசாலா போல இம்முறையும் தூவ தவறவில்லை மொழிப்பெயர்ப்பாளர்.
(தொடர்ச்சி கீழே...)
மொத்தத்தில் சித்திரம், கதை, மொழிபெயர்ப்பு என எந்த அம்சமும் என்னைக் கவரவில்லை. மொக்கை கதைகளை வாசித்துள்ளேன் தான் ஆனால் இந்தளவுக்கு மொக்கை போடும் என்று நினைக்கவில்லை. ஒரு நீண்ட பதிவெழுதும் அளவிற்கு அருகதையற்ற கதை இது என்றாலும் நான் கூற முயல்வது சிவாஜி படத்தில் விவேக் கூறுவாரே... "பேசமா நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி!" என்பது போல ஹேமரை அங்கேயே இருக்க சொல்லுங்கள் என்று உரத்தக் குரலில் சொல்வதற்கே இந்தப் பதிவு.
Deleteபின்குறிப்பு:- ஒருபக்கம் ஹேமர் சொதப்பினாலும் நம்முடைய வேதாள மாயத்மாவின் வேதாளர் ஸ்பெஷல் 2 வெகு சிறப்பான மொழிபெயர்ப்புடன் அருமையான தரத்தோடு வெளிவந்து நமது முத்து காமிக்ஸின் பெருமையை தூக்கி நிறுத்துகிறது.
(ஜனவரியில் 2023, எழுதிய மீள் பதிவு.)
. ///ஒரு நல்ல கதாசிரியர் வாசகனின் வாசிப்பு நேரத்தை ஈர்த்துக்கொள்ள வேண்டும். வாசகனின் சொந்த வேலையை கூட தள்ளிபோட வைத்து கதை சொல்லலில் வாசகனை கட்டிப் போட வேண்டும்.
Deleteஒரு நல்ல கதை வாசகனின் மரணம் வரை அப்படியே மனதில் தங்கியிருக்க வேண்டும்.///
இந்த கதையை முழுசா படிச்சு,
இந்த கதை என்ன சொல்லுது ன்னு இன்னைக்கு வரைக்கும் யோசிச்சு கொண்டு இருக்கும் புண்ணியவான் -ல நானும் ஒருத்தன்.
Well said sir
DeleteThiru sir super sir
ReplyDeleteசுஸ்கி விஸ்கி ஸ்பெஷல் இன் விலை 330/ என்பதே ( 2 ஆல்பம்) அதன் விற்பனை தேக்கத்திற்கு காரணமோ என்று தோன்றுகிறது....
ReplyDeleteமுதல் புக்கின் விலையையும் ஒருக்கா பாருங்களேன் சார் ?
Deleteஎல்லா புத்தகங்களையும் வாங்கி ஆயிற்று... வாசித்தாயிற்று... (ரீ பிரிண்ட் களைத் தவிர ) எனக்கு டாஸ்மாக் லயன் காமிக்ஸ் தான்....
ReplyDeleteநான் வாங்க விரும்பாதவை:
ReplyDelete1.விதி எழுதிய வெள்ளை வரிகள்
2.காலனின் கால் தடத்தில்
3. குற்ற நகரம் கல்ல்கத்தா
குற்ற நகரம் கல்கத்தா
Delete2023 வருடத்தின்
மிக சிறந்த
கதைகளில்
ஒன்று
தவறவிடவேண்டாம்.
*உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி*
ReplyDeleteகதையின் தலைப்பே வித்தியாசமாக இருக்கு.
அதே போல டெக்ஸ் இந்த கதையில் *டிடெக்டிவ் டெக்ஸாக* வலம் வருகிறார்.
சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பு செய்பவர்களை ஒரு கூட்டம் பாகுபாடு பார்க்காமல் போட்டு தள்ளுது. நியாயப்படி இது சரின்னாலும் சட்டப் படி தப்புன்றதால கலிபோர்னியா போலீஸ் துறை அதிகாரி டெக்ஸ் & கார்சன் கிட்ட வர அவங்க இந்த கேஸை விசாரிக்க ஆரம்பிச்சதும் அடுத்தடுத்து கொலைகள் நடந்து குற்றவாளிகளை பின் தொடரும் தடத்தை அழிச்சு டெக்ஸ் & கோ வ திணறடிக்கறாங்க.
ஒவ்வொரு தடவையும் குற்றவாளிகளை நெருங்கும் போதும் அவர்களுக்கு பிடி கொடுக்காமல் குற்றவாளிகள் நழுவுவது நல்ல விறுவிறுப்பு.
ஆனாலும் விடாது இவர்களும் விசாரணையை இறுக்க, அதானால் திணறும் வில்லன் கும்பல் புலிக்கு வலை விரிக்க திட்டம் போட்டு புலிய புடிச்சுடறாங்க.
இறுதியாக வில்லன் தன் கைகளால் டெக்ஸ் & கார்சனை கொல்லாமல் ஒரு நீர்த் தொட்டிக்குள் சுறாக்களை விட்டு கொல்ல முயலுவது த்ரில்லான கட்டம்.
டெக்ஸ் & கார்சன் அங்கேயும் சுறாவுக்கு பெப்பே காட்டி எப்படி சுறாவையும் & வில்லனையும் ஜெயிக்கறாங்கன்றது சஸ்பென்ஸ்.
நியாயப் படி வில்லன் கோஸ்டி செய்யறது சரியான செயல் தான், ஆனாலும் டெக்ஸ் & கோ உள்ள புகுந்து அவங்களை போட்டுத் தள்ளுவது எப்படி சரின்றது 🤷🏻♂️🤷🏻♂️
// நியாயப் படி வில்லன் கோஸ்டி செய்யறது சரியான செயல் தான், ஆனாலும் டெக்ஸ் & கோ உள்ள புகுந்து அவங்களை போட்டுத் தள்ளுவது எப்படி சரின்றது 🤷🏻♂️🤷🏻♂️//
Deleteஇதுதான் இக்கதையின் பிரச்சனை,கதையின் மையப்புள்ளியே சரியானபடி இல்லாததால் வாசிப்பாளனிடன் கனெக்ட் ஆவதில் சிக்கல் எழுகிறது...
எடிட்டர் சார்
ReplyDeleteநீங்க சொல்ற அளவுக்கு மொக்க கிடையாது உங்களைக் கொண்டதில் மகிழ்ச்சி !
கதை ஆரம்பிக்கும்போது ஒரு முன் கதை சொல்லி அதை தான் டெக்ஸ் துப்பு துப்பு துலக்க போகிறார் என்று பார்த்தால் அதை விட்டுவிட்டு வேறு ஒரு கதையை கையில் எடுத்தது திரைக்கதையில் ஒரு ட்விஸ்ட்.
மேலே ஒரு நண்பர் குறிப்பிட்டது போல் வில்லன் கோஷ்டியும் ஒரு நல்ல வேலையை தான் செய்கிறார்கள் அதை ஏன் டெக்ஸ் அண்ட் கோ தடுக்க வேண்டும் என்று நினைக்கத் தோன்றியது.
ஒவ்வொரு முறையும் டெக்ஸ் வில்லன் ஆட்களை நெருங்கும் பொழுது எந்த பிடியும் கிடைக்காமல் அவர்கள் தப்பிப்பது கதையில் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்தது.
முப்பத்தொன்பதரை ஆண்டுகளை இன்றோடு லயன் நிறைவு செய்து, 40வது ஆண்டின் 2வது பாதியில் கால் பதிக்கும் வேளையில் லயனின் பயணம் பிரமிப்பூட்டுகிறது சார்...
ReplyDeleteவாழ்த்துகள்...💐💐💐💐
இந்த பயணத்தில் முதல் சில ஆண்டுகள் தவிர்த்து 34 ஆண்டுகள் இணைந்திருந்தது எனக்கு கிடைத்த பாக்கியமே....
இன்னும் பலப்பல ஆண்டுகள் லயனோடு பயணிக்கும் பேராவலோடு.....😍
......இந்த 39யரை ஆண்டுகளில் பலபலப்பல உச்சங்களையும் சோதனைகளையும் கடந்து வந்துள்ள லயனின் பயணம் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டிய ஒன்று... என்னுடைய ரிடையர்மென்ட்ல இந்த fan boyயும் ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுத முயற்சிப்பேன்....
Deleteஎத்தனை எத்தனையோ சாதனைகளை இந்த பயணத்தில் லயன் பார்த்துள்ளது...
Deleteஇன்று மற்றோரு அசாத்திய சாதனையை லயன் அங்கம் வகிக்கும் பிரகாஷ் பப்ளிஷர்ஸ் நிகழ்த்தியுள்ளது...
ஒரு ஆண்டில் அதிகபட்ச வெளியீடு என்ற எவரெஸ்ட்டில் கால் பதித்துள்ளது...
இந்தாண்டு வெளியான இதழ்கள்...
"""61+ 4 இலவச இணைப்புகள்..."""
மலைக்கச் செய்யும் எண்ணிக்கை...
வாழ்த்துகள் மூன்று ஆசிரியர்களுக்கும்...💐💐💐💐
// மலைக்கச் செய்யும் எண்ணிக்கை.//
DeleteBig yes😊
// மலைக்கச் செய்யும் எண்ணிக்கை... //
Deleteயெஸ்,மீண்டும் வரவேண்டும் இந்த பொற்காலம்....
2025 இல் எதிர்பார்க்கலாமா ஆசிரியரே...!!!
Why not 2024 Arivarasu 😊
Deleteவெளியானவை 61...
ReplyDeleteவாங்கியவை 54...(S60,கதை சொல்லும் காமிக்ஸ் தவிர்த்து...)
வாசித்தவை 53..(கலாஷ்நிகோவ் காதல்- நாளைதான் கிடைக்கும்)
டாப் 3...
ReplyDelete1.சுப்ரீமோ ஸ்பெசல்
2.தளபதி ஸ்பெசல்
3.தாத்தாஸ்
டப்ஸா 3....
1.மைக் ஹாமர்
2.ஸோகோர் டார்க்வுட் சிறு கதைகள்
3.உயிரைத் தேடி
Sir top three 1. வன் மேற்கின் கதை series (நதி போல ஒடி கொண்டு இரு and etc) 2. குற்ற நகரம் கல்கத்தா 3. மீண்டு வந்த மாயன்
ReplyDeleteBottom 3
1. Big boy special
2. Zafor
3. ஒரு கௌபாயின் காதலி
எல்லா book கும் படிச்சாச்சு sir
டப்சா 3:
ReplyDelete1. ஸாகோர்
2. தப்பிச் சென்ற தேவதை (சோடா)
3. காலனின் கால் தடத்தில்
டாப் 3:
1. தளபதி ஸ்பெஷல் & ரிப் கிர்பி
2. சுஸ்கி விஸ்கி
3.கைதியாய் கார்சன் & எந்தையின் கதை
டப்ஸா 3....
ReplyDelete1.மைக் ஹாமர்
2. நெவாடா
3. ஒரு கௌபாயின் காதலி and ஸோகோர் டார்க்வுட் சிறு கதைகள்
ReplyDeleteடாப் 3:
1. தளபதி ஸ்பெஷல் & எந்தையின் கதை
2. சுஸ்கி விஸ்கி & Sixer Special
3. தாத்தாஸ் & ஜானிக்கொரு தீக்கனவு
6 வருதுங்கோ...!!!
Delete// சுஸ்கி & விஸ்கி தான் an area of concern ! முதல் ஆல்பத்தை தெறிக்க விடும் வகையில் வரவேற்றோம் ; ஆனால் அதற்கு கிஞ்சித்தும் சளைக்காத இரண்டாம் தொகுப்போ பாம்பு டான்ஸ் ஆடுவதை பார்க்கும் போது ஒண்ணுமே புரிலிங்கண்ணா ! வெறும் நோஸ்டால்ஜியா மோகம் தானுங்களா //
ReplyDeleteI too disappointed sir. I liked both the stories very much, and thought every year we will be having Suski Wiski special but the results are different. It’s looks like “ நோஸ்டால்ஜியா மோகம்” 😞
+1
Deleteஉங்களது TOP 3 எவை என்று பதிவிடுங்களேன் guys ?
ReplyDelete1.தி சிக்ஸர் ஸ்பெஷல்,
2.TEX - தி சுப்ரீமோ ஸ்பெஷல்,
3.வன்மேற்கின் தொடர்களாய் வந்த 4 கதைகளும்...
கூடுதல் இணைப்பாய் சிறப்பு பட்டியலில்,
1.எந்தையின் கதை (சரியான எமோஷனல் கனெக்ட் இதில் ஸ்பெஷல்),
2.குற்ற நகரம் கொல்கத்தா (கேரக்டர் டிசைனிங் இந்தக் கதையில் ஸ்பெஷல்),
3.ட்ரெண்ட்-பனிவனப் பிரியாவிடை (கலவையான உணர்வுகளை கொடுத்த கதை),
4.தி தளபதி ஸ்பெஷல் (எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பான களமாகவும்,அட்டகாசமான மேக்கிங்,கதையளவில் நிறைய வரலாற்று விவரங்கள் என அம்சமாய் பொருந்தியிருந்தது),
5.தோர்கல்-மரணத்தின் நிறம் நீலம் (எமொஷனல் கனெக்ட் இக்கதையில் நல்லா பொருந்தியிருந்தது)...
உங்களது டப்ஸா 3 எவை என்று பதிவிடுங்களேன் guys ?
1.நெவாடா,
2.மைக் ஹேமர்,
3.I R $.
Top-3
ReplyDelete1, IRS,
2, எந்தையின் கதை,
3, தளபதி ஸ்பெசல்&
குற்ற நகரம் கல்கத்தா
எனக்கு நிறைவை அளித்த...
ReplyDeleteடாப் 3 ...
1) டிடெக்டிவ் சார்லி ஸ்பெஷல் -1 /
ரிப் கிர்பி ஸ்பெசல் -2
2) ஜானிக்கொரு தீக்கனவு /
கொலை நோக்குப் பார்வை
3) மரணத்தின் நிறம் நீலம் /
அமேசானில் அதகளம்
டப்ஸா 3...
1) உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி
2) No comments
3) no comments
122nd
ReplyDeleteடப்ஸா 3...
ReplyDelete2,3 வாய்ப்பை புதிய வரவுகளின் ஒரே கதையின் மூலம் அவர்களின் தரத்தை குறைவாக மதிப்பீடும் அளவிற்கு இந்த "ராசுக்குட்டி" இன்னும் வளரவில்லை.
அடுத்த வருடம் என ஒன்று உள்ளதால் அப்பொழுது முழுமையாக பூர்த்தி செய்து கொள்கிறேன்.
124th
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகாமிக்ஸ் எனும் கனவுலகம் விமர்சனப்போட்டி
ReplyDeleteவிமர்சனம் - 2
பெயர் : ரம்யா (கடல்யாழ்)
ஊர் : கோயமுத்தூர்
மரணத்தின் நிறம் நீலம்
கடலின் சீற்றத்தினால் பிரிந்த தோர்கல் குடும்பம் அரெக்னியாவின் சாப விமோசனத்திற்கு பிறகு தீவில் ஒன்று சேர்கின்றனர். அங்கே தங்கிவிட வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் தோர்கல் வேறு புதிய இடம் தேட எத்தனித்து படகை செப்பனிட்டு கிளம்ப ஆயத்தமாகிறார். ஜோலனின் நண்பர்கள் அத்தீவிலேயே தங்கிவிட விருப்பம் தெரிவிக்க, கூடவே மப்ஃ பும் விட்டு செல்ல நேரிட, பிரிவின் வலியை முதல் முறையாக உணர்கிறான் ஜோலன். தீவின் மக்களின் அன்போடு விடைபெற்று பயணத்தை மேற்கொள்ளும் தோர்கல் குடும்பம்
பத்து நாளுக்கு பிறகு கண்ணில் படும் தனித்து விடப்பட்ட படகை ஆராய்கின்றனர். ஆபத்தை வாங்கிருக்கிறோம் என்றியறியாமல் அதனை கடந்து செல்ல கடற்கொள்ளையர்கள என அவர்கள் நினைக்கும் குள்ளர்களிடமிருந்து தப்பியோடும் முயற்சியில் ஜார்காஜ் என்னும் இளவரசனை சந்திக்கிறார்கள். அவன் அவர்களுக்கு தங்க இடமும், உணவும், ஓய்வு எடுக்கவும் வசதிகள் செய்து தருகிறான். தோர்கல் சந்தேக கண்ணோட பார்க்க, ஆரிசியா இளவரசனுக்கு நல்கிய குணம் என்கிறாள். படகை செப்பனிட்ட நேரமும் கிடைக்க பெற இளவரசனின் மாளிகையில் தங்கி பொழுதை கழித்து விட்டு கிளம்ப எத்தனிக்கிறார்கள். அப்பொழுது மறைந்திருந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக வெளிவர, அங்கிருக்கும் ஒவ்வொரும் நொடியிலும் மரணத்தின் நிறம் நீலமாக மாறும் என்பதை தெரிந்து கொள்கிறார்கள் தோர்கல் குடும்பம், மரணத்தின் பிடியிலிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றிட ஆபத்து நிறைந்த தடைகளை தாண்டி சென்று உதவி பெற்றிட விழைகிறார், தோர்கல். என்ன ஆபத்துகளை சந்திக்க போகிறார், அவைகளை முறியடித்து தன் உயிராக கருதிடம் குடும்பத்தை காப்பாற்றினார என்பது கதை.
ஒரு சாமன்யானாக தன் குடும்பத்தோடு நேசமுடன் வாழ்க்கையை வாழு விரும்பும் தோர்கல். அப்படி ஒரு இடம் புறப்படுகிறார், ஆனால் வழி நெடுகிலும் ஆபத்துகளுக்கு பஞ்சமில்லை.
பிரபஞ்சத்தின் புதல்வனே, அப்படியே போகும் வழியெல்லாம் தென்படும் துயரங்களை அழித்து நல்லது நடக்க துணை புரிவாயாக என்பதாக இருக்கிறது கடவுளர்களின் வரம்.
தங்களால் புரிந்து கொள்ளபடாத மாற்று மக்களை ஒதுக்கி வைப்பதில் சமூகம் என்றும் தவறியதில்லை, இங்கயும் அப்படியே உயரத்தில் குறைவு கண்டவர்களை விரட்டி விட்டதும் அல்லாமல், கெட்ட பெயரும் சேர்த்து பரப்பி விடபட்டுள்ளது. அந்த நல்ல மனிதர்களை சந்தித்து அவர்களின் உண்மையை அறிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கிறது தோர்கல்லுக்கு.
Deleteதோர்கல் தன் நோயோடு ஒவ்வொரு தடையாக தாண்டி சென்று கொண்டிருக்க, காத்திருக்கும் ஒவ்வொரு நாளும் கொடுமையானதாக போகிறது தோர்கல் குடும்பத்தினருக்கு. சக மனிதர்களின் இறப்பு காண நேரிடும் பரிதாபம், மற்றும் நாளொரு நாளாக வளர்ந்து வரும் நோயின் தீவிரம். மனவலி கவனித்துவிடவா அல்லது உடல்வலியை கவனிப்பதா என்ற இக்கட்டான சூழ்நிலை.
எவ்வழியும் இன்றி இறந்திடுவோம் என்று தெரிந்தும் நோய் முற்றி தீவிரம் அடையும் வரை காத்திருக்கும் மக்கள், ஜீவன் இருக்கும் வரை எதொவொரு வழி கிடைத்திடாத என்ற மானிடத்தின் நம்பிக்கையை காமிக்கிறது.
ஜாஜ்கார் மற்றும் ஜார்காஜ் இடம் மாறி அருந்தால் குணம் மாறி இருக்குமோ,
ஒருவேளை சகோதரர்கள் பிரிய நேரிடாமல் இருந்திருந்தால், குணங்கள் எவ்வாறு இருந்திருக்கும்
தோர்கல் அங்கே வராவிடில் அங்கு உள்ள மனிதர்களுக்கு விடிவு கிடைத்திருக்குமோ
இங்குதான் கடவுளர்களின் மேல் சந்தேகம், தோர்கல் மூலமாக மக்களுக்கு விடிவு கிடைக்க செய்வது. அவர் முழுதாக காரணம் அல்லை என்றாலும், ஒரு கருவியாக பயன்படுகிறார்.
இந்த ஆல்பத்தை வித்தியாசபடுத்தி காட்டிய ஒன்று ஜோலனை கதைசொல்லியாக காட்டியது. வளர்ந்து வரும் பதின் பருவத்து பார்வையில் தந்தையை காண்கிறோம். அது மட்டும் வளர்ச்சி பெற்று வரும் அவனது உணர்வுகளும். மாற்றம் கண்டு வரும் ஜோலனை காண்பிக்கிறார் ஆசிரியர். தந்தை போல் வளர கிரியபடும் அவற் காதலை சொல்ல மனத்திடமும், எதிரியை சண்டையிட்டு ஜெயிக்க உடல்திறனும் தன்னிடம் இல்லை என்றறிருந்து அமைதி காக்கிறான்.
ஸ்பிலிட் ஓவியங்கள், சாகாவரத்தின் சாவி கதையில் பார்த்தது, மறுபடியும் அக்கதையில் பயன்படுத்தி உள்ளனர். இங்கே தோர்கல் வெற்றி என்றறியாத முயற்சியில் இருட்டான ஆற்றின் அடியில் நீந்தி செல்வதை காமிக்க, இருட்டினுள் அவர் அருமையாக சித்திரபடுத்தி உள்ளனர்.
இங்கே இன்னொரு சித்திரத்தையும் பாராட்டியாக வேண்டும். ஜார்காஜ் மற்றும் ஜாஜ்கார் சித்தஅரங்களை உடல் மொழியில் வித்தியாசபடுத்தி காட்டி உள்ளார், ஏனென்றால் ஜாஜ்காரை பார்த்தவுடன் உருவத்தில் அவனை இளவரசனை போல் இருந்தாலும் இளவரசன் இல்லை என்பதை முதல் அறிமுகத்திலே புரிகிறது.
ஓவியங்கள் அருமையோ அருமை.
கதையும் சுவாரஸ்யமானதாக படைக்கபட்டுள்ளது. வான்ஹாம்மே வானஹாம்மே தான்
2014 பின் பாதியில் அறிமுகம் ஆன தோர்கல் மீது ஏற்பட்ட க்ரஷ் இன்று வரை தொடர்கறது😁😁😁
வான்ஹாம்மே பற்றி நான் தேடி தெரிந்து கொள்ள முக்கிய காரணமாக இருந்தவர் தோர்கல்.
👌👌👌👌
Delete👌👌👌
Delete2023 முடியப்போகுது..! இந்த வருசத்துல யாரையாவது ஏதாவது பேசி புண்படுத்தியிருந்தா.... அதாவது.. சும்மா என்னத்துக்கு புண்படுத்தப்போறோம்.. எதையாச்சும் நோன்டி ஒரண்டை இழுத்து வாங்கி கட்டியிருப்பாங்க..! அடுத்த வருசமும் இதையே தொடராலாம்னு இருக்கேன்..! Happy new year..🥰
ReplyDeleteகாமிக்ஸ் எனும் கனவுலகம் விமசர்னப்போட்டி
ReplyDeleteபெயர் : ரம்யா(கடல்யாழ்)
ஊர்: கோயமுத்தூர்
விமர்சனம் - 3
மிஸ்டர் நோ
ஒரு மினி ஹாலிவுட் ஆக்ஷன் படம் பார்த்த் ஃபீல்
உல்லாச பயணம் போய்ட்டு இருப்பாங்க, எதிர்பாராத ஒருவருடன் சந்திப்பு, முக்கியமான சாட்சி ஹீரோவிடம் தங்கிவிட, வில்லன் க்ருப் எவன்டா அவன், அட இவன்தானா வம்பு பிடிச்சவன் ஆனா பார்த்துகலாம், அப்பறமென்ன ஃபைட், சேஸிங், ஹீரோ ஜெயிக்க போலீஸ் வர, அச்சோ, வில்லனுடையா சப்போர்ட்டர், அப்ப ஹீரோவின் கதி, நோ வொரிஸ், கதாநாயகரின் தோழர்கள் தோள் குடுக்க வர, சுமுகமாய் முடிகிறது.
ஹீரோக்கு ஹீரோயின் கூட ரொமன்ஸ் செய்ய வாய்ப்பு கிடைக்கல.
ஹீரோ : எங்கிருந்து பாதி கதையில் அவங்கள ஊர் சுத்தி காமிச்சுட்டு இருந்தேன், மீதி கதையில சேஸிங், பைட்டுனு பிஸி
ஹீரோயின் : டூரிஸ்ட் கைடாக ையா செம கில்லாடி, சாதுர்யமாக என்னை காப்பதினாரு, அதுக்காக ரொமன்ஸ்லா, நோ சான்ஸ்
எதோ ஒரு பொய் சொல்லி ஏங்க காமிரா மாறி போச்சு, இந்தாங்க இங்க கேமிரா எங்க கேமிரா தாங்க என்று கேட்டா தந்து இருக்க மாட்டாங்களா
அதைவிட்டு 😩😩😖 வில்லன் க்ருப் தேவையே இல்லாம ஆளுங்கள கொலை பண்றது. அப்பறம் எப்படி எங்களை கெட்டவங்க ென்று கதையில காட்டனு சொல்லாம காட்ற வில்லன்ஸ்👿, இப்படிபட்டவங்க இருக்கவங்களோட திறமையான கைடாக இருக்கும் மிஸ்டர் நோ ஹீரோவாக களம் இறங்கி மோத வேண்டிய நிலைமை
முதல் கதையில் அறிமுகமாகம் சுற்றுலா கைட் மிஸ்டர் நோ, உல்லாசகமாக தன் நேரத்தை செலவிட நினைப்பவர்,
சாதுயர்சாலியாக தெரிகிறார், நன்கு சட்டை போட தெரியும், சாம்ர்த்தியசாலி😏😏😏, ரூமை சுத்தமாக வைத்து கொள்ள தெரியாதவர்😒😒😒, ஒரு டுரிஸ்ட் கைடாக நன்கு திறமையானவர்.
கதை ஷார்ட் அண்ட் க்ரிஸ்பாக இருந்தது
ஓவியங்கள் : சுமார், ஆனால் ஓகே
மிஸ்டர் நோ கதைகளை படிக்க கொஞ்மாய் ஆவலுடன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteHi
ReplyDeleteவாங்கியவை 54. வாசித்தவை 45.
ReplyDeleteதற்போது வெளியான அனைத்து இதழ்களையும் வாங்கினேன். தலயின் உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி தவிர மற்ற அனைத்து புத்தகங்களையும் படித்து விட்டேன். இதில் என்ன கூத்து என்றால் வேலை பளு காரணமாக அக்டோபர் வரை அதாவது ஈரோடு புத்தகத் திருவிழா நடைபெறும் வரை ஒரு புத்தகத்தை கூட படிக்கவில்லை. அதன் பின் வேலையின் இடைவேளையில் கொஞ்சம் கொஞ்சமாக படித்து இப்போது டிசம்பருக்குள் மற்ற இதழ்கள் அனைத்தையும் படித்து முடித்து விட்டேன். தலையின் புத்தகத்தை இன்று படித்து முடித்து விடுவேன். புதுப்பார்சலுக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இந்த வருடமாவது அதே மாதத்தில் படித்து முடித்து விட வேண்டும் என்ற சபரத்தில் இருக்கிறேன்.
ReplyDeleteஇந்த வருடத்தில் இதுவரை நான் படித்த அனைத்து இதழ்களுமே என்னை பொருத்தவரை அட்டகாசமாக இருந்தது. எந்த இதழ்களுக்கும் ரேட்டிங் தர நான் விரும்பவில்லை. 50 பிளஸ் இதழ்கள் வெளிவரும் போது ஓரிரு இதழ்கள் சொதப்புவது சகஜமே. அதற்காக அப்படிப்பட்ட இதழ்களை ஸ்கிப் செய்வது காமிக்ஸ் ஓட்டத்தில் தடைக்கல்லாக அமைந்து விடும். இது முழுக்க முழுக்க எனது அபிப்பிராயம். ஆகையால் நான் எனக்குப் பிடிக்கிறதோ பிடிக்கலையோ அனைத்து இதழ்களையும் வாங்கி விடுவேன். ஏன் எனக்கு 007 மற்றும் காரிகனைப் பிடிக்காது. ஆனாலும் காமிக்ஸ் வாழ வேண்டும் என்பதற்காக வாங்கி விடுவேன். உடனே நீங்கள் சொல்லலாம் நீ உன்னிடம் பணம் இருக்கிறதோ அதனால் வாங்குகிறாய் என்று. நிச்சயமாக அப்படி இல்லை. ஏனென்றால் இப்பொழுது கூட சந்தாவில் பாதி தொகை தான் கட்டியுள்ளேன். மீதி தொகையை ஜனவரி கடைசியில் தான் கட்ட முடியும். அதற்காக உங்களை அனைத்து புத்தகங்களும் வாங்குங்கள் என்று சொல்லவில்லை முடிந்த அளவுக்கு ஸ்கிப் செய்யாமல் இருங்கள். அது என்னவோ தெரியவில்லை எனக்கு பிடித்த கார்ட்டூனும் சரி கிராபிக் நாவல்களும் சரி ஏனோ மற்றவர்களுக்கு பிடிக்க மாட்டேன் என்கிறது.
ReplyDeleteஎடிட்டர் சமூகத்திற்கும், நண்பர்கள் அனைவருக்கும், சகோதர சகோதரிகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!
ReplyDeleteகுற்ற நகரம் கல்கத்தா உண்மையிலேயே மெர்சல் காண்பித்திருந்தது. அதன் வெற்றி நிச்சயம் தீர்மானிக்கப்பட்ட ஒரு வெற்றி எனலாம். அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteSir..🙏😀 Wish you a very Happy New year 2024 🎊💞💐🥰
ReplyDeleteசார், தங்கள் மொழிபெயர்ப்பில்என்ன இழவுடா இது,சனியன் போன்ற வார்த்தைகளை தவிர்க்கலாமே!
ReplyDelete