Powered By Blogger

Saturday, November 25, 2017

ஒரு பொடிப் பதிவு..!

நண்பர்களே,

வணக்கம். நாட்கள் தட தடக்கின்றன ;  தூரத்துப் புள்ளியாய்த் தெரிந்ததொரு நாள் கிட்டே நெருங்க நெருங்க. 'லப் டப்'களுமே தட தடக்கத் துவங்கி விட்டன ! And  நவம்பர் 30 ஜுனியரின் திருமண தினமாக மாத்திரமன்றி  , நமது டிசம்பர் வெளியீடுகள் தயாராகிடும் தருணமாகவும் இருந்திடவுள்ளது என்பதும் - adds to the fun  ! அடிக்கின்ற குட்டிக் கரணங்களோடு கூடுதலாய் ஒன்றை சேர்த்து அடித்து வைத்து, ஒரு நாள் முன்பாக இதழ்களைத் தயார் செய்திட ஆன மட்டிலும் முயன்று வருகிறோம் ! நீலப் பொடியர்களின் அச்சு வேலைகள் மாத்திரமே பெண்டிங் இருக்க, இதர இதழ்கள் சகலமும் பைண்டிங்கில் மையம் கொண்டுள்ளன !

And இம்மாதத்தின் most expected இதழாய் இருக்கப் போகும் "கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷல்" வண்ணத்தில் சும்மா கண்ணைப் பறிக்கிறது ! பற்றாக்குறைக்கு கமான்சேவின்வண்ணப் பக்கங்களும் அடர் கலரிங்கோடு  டாலடிக்கின்றன !  அவ்வப்போது ஆபீஸ் பக்கமாய் எட்டிப் பார்க்கும் தருணங்களில் - ஓவியர் ஹெர்மனின் ஒட்டு மொத்தப் பரட்டைப் பார்டிகளும் ஒன்றிணைந்து நமது அச்சுக் கூடத்தை  ஒரு கலக்கலான ரங்கோலியாய் மாற்றி வருவதை பார்க்கும் போது - ஜீனியஸ் smurf போல ஆட்காட்டி விரலை உசத்திக் கொண்டே - "கலர்லே கலக்கலாப் பொடியுறது நல்லது !! " என்று சொல்லிப் பார்க்கும் ஆசை உள்ளுக்குள் கொப்பளிக்கிறது  !  

So சூப்பர் 6-ன் இறுதி இதழும், நல்லதொரு முகாந்திரத்தின் பொருட்டு நினைவில் நிற்கும் ஒரு இதழாய் அமையுமென்ற நம்பிக்கை  இப்போது நிறையவே எனக்குள் ! 12+ மாதங்களுக்கு முன்பாய் "சூப்பர் 6" என்றதொரு தடத்தை நிறுவ முயன்ற நாட்களையும். ; அன்று என்னுள் நிலவிய சன்னமான பயத்தையும் ; உங்களிடையே இழையோடிய மெல்லிய அவநம்பிக்கையையும்  இப்போது நினைவுகூர்ந்திடும் போது  - இந்தத் தடத்தின் மீதான பயணத்தின் த்ரில் எத்தகையதாக இருந்துள்ளதென்பதை  முழுசாய் உணர்ந்திட முடிகிறது ! தொடரவிருக்கும் புத்தாண்டினில்,  இந்த "சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த "பழசு + புதுசு" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை ! பார்ப்போமே - காத்திருக்கும் காலங்கள் நமக்கு என்ன வழங்கவிருக்கின்றன என்று !  

And இதோ - டிசம்பரின் பொடியர் பட்டாளத்தின் அட்டைப்பட முதல் பார்வை :  
எப்போதும் போலவே - அட்சர சுத்தமாய் ஒரிஜினல் டிசைனேயே பயன்படுத்தியுள்ளோம் - படைப்பாளிகள் உருவாக்கித் தந்திருக்கும் அந்த ஸ்மர்ப்ஸ் லோகோவுடன் ! கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் ! ஒன்று : "ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது !" என்று சொல்லக்கூடிய அணி ! இரண்டாவதோ - "ஹை...சூப்பரப்பு ! கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி !" என்றிடும் அணி ! So நான் பில்டப் தந்தாலும் சரி, தராது போனாலும் சரி - அவரவரது நிலைப்பாடுகளை பெரிதாய் மாற்றிக் கொள்ளப் போவதாய் எனக்குத் தோன்றவில்லை ! ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம்  புதிதாய் ரசிக்கலாம் போலும் ! And "விண்ணில் ஒரு பொடியன்" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் ! செமத்தியான கதைக் களம் ; பற்றாக்குறைக்கு "பொடி" பாஷைக்குப் போட்டியாய் ஒரு சமாச்சாரமும் இருப்பதைக் காணப் போகிறீர்கள் ! கொஞ்சமே கொஞ்சமாய் இந்தப் பொடியர்கள் உலகினை ரசிக்க நேரமெடுத்துக் கொள்ள முடிந்தால் - ஒரு அற்புத வாசிப்பு நிச்சயம் என்பேன் ! Give it a try guys ?
தொடரும் ஆண்டினில் இவர்களுக்கு slots மிகக் குறைவே என்பதால் - காத்திருக்கும் இந்த இதழினை நீங்கள் ரசிக்கும் பாங்கைப் பொறுத்து  அதன் மறு ஆண்டினில் நீலர்களின் பங்கீடுகளைச் செய்திட வேண்டி வரும் ! So இது நிரம்பவே முக்கியத்துவம் கொண்ட இதழ் என்பேன் !

நடப்பாண்டினில் எஞ்சி நிற்பது "நிஜங்களின் நிசப்தம்" கிராபிக் நாவல் மட்டுமே என்பதால் - effectively 2017-ன் main stream அட்டவணையினைப் பூர்த்தி செய்திடுகிறோம் ! ட்யுராங்கோவோடு வருஷத்தைத் துவக்கியது நேற்றைக்குப் போலிருப்பினும், மாதங்கள் 12 அசுர கதியில் பயணத்திருப்பது புரிகிறது ! கிர்ரென்று சுற்றிக் கொண்டிருக்கும் தற்போதைய எனது தலைக்கு - வீட்டுக்குப் போகும் பாதையே சரியாய் நினைவில் இல்லையெனும் பொழுது - நாம் தாண்டி வந்துள்ள ஒரு வண்டி ஆல்பங்களை நினைவு கூர்ந்திடக் கோரினால் "பிதாமகன்" விக்ரம் போல முழிக்க மட்டுமே முடிகிறது ! ஆனால் மெது மெதுவாய் நிதானமும், இயல்பு வாழ்க்கையும் திரும்பிடும் ஒரு நேரத்தில் -2017 ன்  ்இந்தப் பயண அனுபவத்தை  நிதானமாய் அசை போட்டுப் பார்க்கும் ஆசை ததும்புகிறது எனக்குள் ! ஒவ்வொரு ஆண்டும் நிறைய குட்டிக்கரணங்கள் போட்டது போலவே தோன்றுவது வாடிக்கை தான் ; ஆனால் இம்முறை ஆண்டின் 'ஹிட்' எண்ணிக்கை வழக்கத்தை விட சற்றே அதிகம் என்ற உணர்வு தலைதூக்குகிறது ! உங்கள் பார்வைகளில் தென்படும் கருத்தே பிரதானம் எனும் பொழுது -  டிசம்பரின் நடுவாக்கில் உங்களைக் கருத்துச் சொல்லக் கோரிட நினைத்தேன் !  "தொடரும் ஆண்டின் அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் - தற்போதைய performance பற்றிய அபிப்பிராயங்களால் பெருசாய் என்ன பிரயோஜனம் இருக்கப் போகிறது ?" என்ற கேள்வி எழலாம் தான் ! ஆனால் கதைத் தேர்வுகள் என்ற பரீட்சையில் நான் வாங்கியுள்ள மதிப்பெண்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு இக்ளியூண்டு ஆர்வமும் ; உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு எத்தனை தூரம் நியாயம் செய்துள்ளோம் என புரிந்து கொள்ளும் உத்வேகமும் என்று வைத்துக் கொள்ளுங்களேன் ! So டிசம்பரில் ஒரு வண்டிக் கேள்விகளோடு உங்கள் குடல்களின் நீள, அகலங்களை ஆராய்வதாய் உத்தேசம் ! தயாராகிடுங்களேன் ப்ளீஸ் ? (ஏதேனும் மணிப்பூர் , மிசோரம்  பக்கமாய் டிரிப் அடிக்கும் எண்ணங்கள் இருப்பின் - டிசம்பர் அதற்கொரு உருப்படியான பொழுதாய் அமைந்திடலாம் ! )

புத்தாண்டைப் பற்றி ; புதிய திட்டமிடல்களைப் பற்றி நிறைய பேசவுள்ள போதிலும், அவற்றை தொடரும் வாரங்களுக்கென வைத்துக் கொள்வோமே என்று நினைத்தேன் ! இப்போதைக்கு என் முன்னே நிற்கும் ஒரு அழகான மெகா பொறுப்பை செவ்வெனே நிறைவேற்றிட ஆண்டவனின் ஆசிகளும், உங்களின் வாழ்த்துக்களும் அவசியம் என்பதால் - அவையிரண்டின் பொருட்டும் கைகூப்பி நிற்கிறேன் ! உங்கள் முன்னே வளர்ந்த பிள்ளையை நேரிலோ, தொலைவிலிருந்தே மானசீகமாயோ வாழ்த்தவிருக்கும் ஒவ்வொரு அன்புள்ளத்துக்கும் எனது அட்வான்ஸ் நன்றிகளும் ! And சின்னதொரு அட்வான்ஸ் வேண்டுகோளும் : தயைகூர்ந்து திருமண விழா சார்ந்த புகைப்படங்களை FB-ல் ; வலைப் பதிவுகளில் ;  வாட்சப் க்ரூப்களில் என்று பகிர்ந்திட வேண்டாமே ப்ளீஸ் ? மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy  மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே  ! Hope you understand folks !!

மீண்டும் சந்திப்போம் !! Have a great weekend !!

P.S : சமீபமாய் கண்ணில் பட்டதொரு படமிது ! பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது ! சுவாரஸ்யமாய் ஒரு கேப்ஷன் எழுதுங்களேன் !

286 comments:

 1. Replies
  1. ///இரண்டாவதோ - "ஹை...சூப்பரப்பு ! கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி !" என்றிடும் அணி///

   Je suis deuxième

   Delete
 2. ஸ்மர்ப்ஸ் அட்டையில் உள்ள வண்ணம் வித்தியாசமாக அருமையாக உள்ளது. அட்டைப்படம் கலக்கல்.

  எனக்கு பிடித்த இந்த பொடியர்கள் இந்த முறை அனைத்து வாசகர்களையும் கவர்ந்தது விற்பனையில் சாதனை படைப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வண்ணத்தில் மட்டும் அல்ல உங்களின் எண்ணத்தின் வெளிப்பாடும் மிக ஆழகாக உள்ளது பரணி....

   நமது காமிக்ஸ் விற்பனையில் சாதனை படைக்கும்... 👍


   Delete
 3. நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. Replies
  1. கிட் கார்சன் கேப்ஷன்:

   ஜூ.எ-யின் கல்யாணத்துக்குப் போகணும்... உருளைக்கிழங்கும் வறுத்த கறியும் கட்டாயம் உண்டுன்னு சொல்லிட்டாங்க... டெக்ஸாஸ் டு சிவகாசி டிக்கெட் போடப்போன டெக்ஸ் பயலக் காணோமே..?

   Delete
 5. நண்பர்கள் அனைவருக்கும் விடுமுறை தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. Replies
  1. கார்சன் @ என்ன கொடுமை டெக்ஸ்.. வருடத்தின் கடைசி மாதம் நம்ப கதை இல்லை. இதான் ஓவர் பெர்பாமன்ஸ் பண்ணாதே என்று நான் சொன்னத நீ கேட்டால் தானே.

   Delete
 7. கார்சன் @ ஐயோ கறிச்சாப்பாடு போச்சே போச்சே... நம்ப ஜூனியர் கல்யாண பத்திரிக்கை எனக்கு மட்டும் வரவில்லையே. இத டெக்ஸ் பயல்கிட்ட சொன்னா நம்மள இன்னும் கேவலமாக பார்ப்பானே.. என்ன செய்ய.. யார்கிட்ட சொல்ல. நம்ப எடிட்டர் எனக்கு மட்டும் பத்திரிகை அனுப்பாமல் இப்படி தனியாக புலம்ப வைத்து விட்டாரே.

  ReplyDelete
 8. இரவு வணக்கம் நண்பர்களே....

  ReplyDelete
 9. விஜயன் சார், தற்போது விக்ரமின் கல்யாணம் வேலையில் மட்டும் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அதுதான் முக்கியம். இந்த அனுபவம் ஒரு முறை தான் கிடைக்கும்.

  நமது விக்ரமின் திருமணம் சிறப்பாக நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்.

  நமது காமிக்ஸ் விக்ரமின் திருமணம் முடிந்த மறு வாரம் வந்ததாலும் எங்களுக்கு சந்தோசம் தான்.

  ReplyDelete
 10. ஸ்மர்ஃப்ஸ் அட்டைப்படம் செம்ம கலக்கல்.! விண்ணில் ஒரு பொடியன் டைட்டிலும், பின்னட்டையில் இருக்கும் ராக்கெட்(அல்லது விண்கலம்னு சொல்லவேணுமா ?) போன்ற வாகனமும் எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் எகிறவைக்கின்றன.! நம்ம பொடியர்கள் விண்வெளியிலும் கொடிநாட்டப் போகிறார்களா என்ன?!? ஆவலை அடக்கவே முடியவில்லை ..!

  சீக்கிரம் வாங்கோ பொடியர் ..! 😍

  ReplyDelete
  Replies
  1. ஒரு பொடியனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, அணைத்து பொடியார்களும் கைகோர்க்கோம்/மெனக்கெடும் அருமையான சித்திர விருந்து...

   Delete
  2. Dasu Bala @

   வாவ். ..அப்படீன்னா செம்மயான விருந்தா இருக்கும்னு நம்பலாம். .!!

   👌👌👌👌👌👌😍

   Delete
  3. தகவலுக்கு நன்றி பாலா.

   Delete
 11. இறைவனின் ஆசிர்வாதத்தோடு விக்ரமின் திருமண விழா இனிதே நடந்தேற வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 12. அந்திரிக்கி நமஸ்காரம்

  ReplyDelete
 13. மணமக்களுக்கு முன்கூட்டிய தி௫மண நல் வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
 14. நீலப் பொடியர்கள் என் மனம் கவர்ந்தவர்கள்.அது ஒ௫ தனி உலகம்.

  ReplyDelete
 15. ஜூனியர் எடிட்டர் விக்ரம் க்கு அட்வான்ஸ் இனிய திருமண நன் நாள் வாழ்த்துக்கள் . சகல வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று என்று வாழ்த்துகிறேன் .

  ReplyDelete
  Replies
  1. மணமக்கள் பதினாறுபேறுகளையும் பெற்று பெருவாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். !

   Delete
 16. கார்சன் கேப்ஷன்
  "ம்....
  எல்லாரும் ஜூனியர் கல்யாணத்துக்கு
  புறப்பட்டு போறாங்க..
  இன்னும் கொஞ்ச நாள்ல
  கிட்டுக்கும் கண்ணாலம் ஆயிடும்..
  ம்....
  நம்ம வாழ்க்கையிலும் கண்ணாலம்
  காட்சின்னு..
  ம்ஹூம்..
  புலம்ப உட்டாங்களே...."

  ReplyDelete
  Replies
  1. Parani Anna
   Senthil Anna
   Thanks brothers
   Sivakasikku eppo varreenga?

   Delete
  2. வியாழக்கிழமை காலையில் விருதுநகரில் இறங்கி எனது அக்கா வீட்டுக்கு சென்று அங்கு இருந்து கிளம்பி சிவகாசி வருவேன், 9-9.30 சிவகாசியில் இருப்பேன்.

   கடைசி நேரம் ஏதவாது மாறுதல் இருந்தால் எனது பயணம் ரத்து செய்யப்படும் :-)

   Delete
 17. I always like smurffs and eagerly waiting for prince & co,my hearty wishes to junior editor's marriage sir and hope everybody would respect your request about privacy,

  ReplyDelete
  Replies
  1. +1.
   என் மனதில் உள்ளதை அப்படியே பிரதிபலித்துவிட்டீர்கள் நண்பரே!!.
   நன்றிகள்.

   Delete
 18. எனக்கு டீ கெடச்சாச்சு

  ReplyDelete
 19. ஒரு பொடி பதிவு "" என்ற தலைப்பை கண்டதும் ஞாயிறும்" பொடி "பதிவா என முகம் மாற படித்தவுடன் தான் ஓ.... " பொடி பதிவா " என இயல்பு நிலைமைக்கு மாறியது.இந்த முறை காணும் பொடியர்களின் அட்டைப்படம் இது வரை கண்டதை விட மிக அழகு .கதையும் அவ்வாறே அழகாக அமையும் என நம்புகிறேன் .

  ச்சே ..இந்த பொடியர்களே பிடிக்காது " என்ற நிலையில் இருந்து படிப்படியாக நான் பொடியர்களை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக விரும்பி நகர்வதை உணர முடிகிறது.இதில் தொடர்ந்து ஏமாற்றம் இல்லாமல் இருப்பின் பல நண்பர்களும் அவர்களை நோக்கி நடை போடலாம் என நம்புகிறேன் .

  ReplyDelete
  Replies
  1. தலைவரே!

   வணக்கம். ! கொஞ்ச நாளாக உங்களை காணமல் வருத்தம். !

   Delete
  2. வணக்கம் ஆர்மி கேப்டன் .நீங்கள் நலமா ? அலைபேசி அலையில் விழுந்த காரணத்தால் கொஞ்சம் சிக்கல் .இப்பொழுது கூட கஷ்டபட்டு தலைகீழாக நின்று தான் பேசுகிறேன் .நேராக நின்றால் பேச முடிவதில்லை.எத்தனை நாள் தலைகீழாக நடந்தாலும் சரி என இருப்பிடம் தேடி ஓடி வந்து விட்டேன் .:-)

   Delete
  3. ///இப்பொழுது கூட கஷ்டபட்டு தலைகீழாக நின்று தான் பேசுகிறேன் ///

   தலைகீழா நிக்க, நீங்க படுற கஷ்டத்தைவிட, அதைப்பார்க்க நேருவோருக்கு ஏற்படும் கஷ்டம் ரொம்ப அதிகமாயிருக்குமே தலீவரே.!

   😱😱😱

   Delete
 20. // மணமக்கள் போட்டோ வை பகிர வேண்டாம். //

  ஹோ! ஏமாற்றம! திருமணத்திற்கு போக முடியவில்லை. நண்பர்கள் அனுப்பும் போட்டோவின் திருமண நிகழ்ச்சியை கண்டு மகிழலாம் என்று ஆவலுடன் எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம். !

  இந்த மாத காமிக்ஸ விட அதிக ஆவலுடன் எதிர்பார்த்தது ஜூனியரின் திருமண நிகழ்வுதான்.அடுத்த இதழில் , நீங்களாவது ஜூனியர் திருமணத்தின் ஆல்பத்தை வெளியிடுங்கள் ப்ளீஸ். !

  " வரலாறு முக்கியம் அமைச்சரே. !"

  ReplyDelete
 21. //கலரில் கலக்கலாய் பொடியுறது நல்லது.!//

  போன பதிவில் கலக்கல் படங்களை கவனித்தேன். !

  கலர் என்றதும் ஞாபகம் வந்தது,அடுத்த ஆண்டும் மாடஸ்டி காவியங்களில் ஒன்றை கழகு மலைக்கோட்டை போல் கலரில் வெளியிட்டு, அதிரிபுதிரி ஹிட் கொடுத்தால் நன்றாக இருக்கும

  ReplyDelete
 22. காலை வணக்கம் நண்பர்களே.
  கல்யாணத்துக்கு வர்ரவங்கல்லாம்
  கை தூக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் பொறுங்க கணேஷ்ஜி! வேட்டி கட்டிட்டு இருக்கேன். .! 😂

   Delete
  2. கொஞ்சம் பொறுங்கோ ஜி! இங்கே வேட்டி கட்டவா ஜீன்ஸ் போடவா என்ற குழப்பமா இருக்கிறது.:-)

   Delete
  3. //வேட்டி கட்டிட்டு இருக்கேன் //
   அதான் இருக்கே,ஒட்டிக்கோ,கட்டிக்கோ மாடல்,அப்புறம் என்ன கிளம்புங்க கடைக்கு.

   Delete
  4. ங்கா...நா குச்சு முட்ச்சு டவுசர் மாத்தியாச்.கை புச்சு கூட்டுட்டு போவ எந்த அண்ணா முதலா வர்றாங்கவோ ..தெரிலை .

   அண்ணா ..எய் ..அண்ணா.......

   Delete
  5. ///அதான் இருக்கே,ஒட்டிக்கோ,கட்டிக்கோ மாடல்,அப்புறம் என்ன கிளம்புங்க கடைக்கு.///

   அட கஷ்டகாலமே ..!!

   கணேஷ்ஜி கைத்தூக்கச் சொன்னாரில்லையா .., அதான் வேட்டி கட்டிட்டு இருக்கேன் ...கைதூக்குனா வேட்டி அவுந்துடும் ..கொஞ்சம் பொறுங்கோன்னு சொன்னேன்...!

   நமக்கெதுக்கு ஒட்டிக்கோ கட்டிக்கோ எல்லாம். . பதினாறுமுழ வேட்டியவே பதவிசா கட்டத்தெரிஞ்ச ஆளுகளாச்சே நாமெல்லாம். ..! 😂

   Delete
 23. இரத்தப் படலம் முன்பதிவு எப்படி சார் போய்கிட்டு இருக்கு,டைம் இருந்தா சொல்லுங்க சார்.

  ReplyDelete
 24. கார்ஸனின் கேப்ஷன் காலம்:சிங்கத்தின் தலைநரைத்தவயதில் யார் வேணா!எழுதுங்க,தம்பிகளா.உங்க தலயோட கணவா கணவாயசுத்துனதில தாடிநரச்சதுதான்மிச்சம்,இந்த செங்குரங்கு பயலுக வெள்ளி முடியார்னுனுகூப்டு தொலச்சதுல ஒருபய பொன்ணுதரலயே'போகட்டும் இந்த டைகர் பயலயும் தனியா பொலம்பவுட்டாங்கலே.நமக்கு வாச்சது அவ்வளவுதான். தம்பி ஒரு பிளேட் வருத்த கறி pls. "

  ReplyDelete
 25. ///தொடரவிருக்கும் புத்தாண்டினில், இந்த "சுவாரஸ்ய new look மறுபதிப்புகள் பாணி" நமது சந்தா D-ல் தொடர்கிறதென்றாலும் - இந்த "பழசு + புதுசு" limited edition பாணிக்கு ஒரு விசால எதிர்காலமுண்டு என்ற எண்ணத்தைத் தவிர்க்க இயலவில்லை ! பார்ப்போமே - காத்திருக்கும் காலங்கள் நமக்கு என்ன வழங்கவிருக்கின்றன என்று ! ///

  என்னவோ திட்டம் இருக்கும்போல ..!!

  அந்த வரிசையிலாவது ரி.ஜானி க்ளாசிக்ஸ்க்கு வாய்ப்பு கொடுங்கள் சார்.! :):):)

  ReplyDelete
 26. சார் நீலப்பொடியர்கள அட்டயும் சும்மா நீல வண்ணத்துல பறிக்குது..ஓநாயின் சங்கீதம்...மாயாவி...பிரின்ஸ் என அல்லாமே நீலமயம் மட்டுமின்றி இது வரை வந்த இதழ்களிலே இவ்வட்டய எவ்வட்டை மிஞ்சும்னு கேக்க வைக்க தவறவில்லை..வழக்கம் போலவே மிக நன்றே...

  ReplyDelete
 27. கார்சன் @ டெக்ஸோட நம்ப படத்தை போட்டு கேப்சன் எழுத சொன்னாலே நம்ப கண்மணிகள் பட்டையை கிளப்புவாங்க. நம்மள தனியா விட்டா பிரிச்சு மேய்ஞ்சிட மாட்டாங்க !

  ReplyDelete
 28. பொடியர்களின் அட்டை மிக பிரமாதம் இவ் வருடத்தின் டாப் அட்டைப்படம் தேர்வு செய்வது கடினமான ஒன்றாக போகிறது

  ReplyDelete
 29. கார்சன் கேப்ஷன் - "அடக்கடவுளே... அந்த வீடியோ நெஜமாமே.... ரிலீஸ் டைம்ல இந்த கடுவன் பூனை டெக்ஸ் கூட இருந்ததால சரியா பாக்காம உட்டுட்டேனே... இப்ப மறுபடியும் எப்படி பாக்கறதுக்கு கிடைக்கும்னு தெரியலையே.... ஹ்ஹ்ம்..."

  ReplyDelete
 30. கார்பன் கேப்சன் :

  குளித்து பல மாமாங்கம் ஆன அழுக்கு பயல்களையெல்லாம் (கௌபாய்) கலர்ல போடுராங்கோ ,அழகு சீமாட்டி மாடஸ்டி யை கலரில் வெளியிட்டால் குறைந்தா
  போயிடும்.????

  ReplyDelete
 31. ரசனையில் முதிந்தோர்க்கு என பல அற்புத படைப்புகளை படித்துவிட்டு smurfs பை எப்படி ரசிப்பது என்று சுத்தமாக தெரியவில்லை.வசனங்கள் பொடி பொடி என்று வார்த்தைக்கு வார்த்தை படுத்துகிறது.மாதா மாதம் 50 கிமீ பயணம் செய்து 4 புத்தகங்கள் வாங்கும் நிலையில் smurfs மாதம் மட்டும் பயணம் செய்யவே மனது வருவதில்லை.அதற்காக கார்ட்டூன் வேண்டாம் என்று சொல்லவில்லை இதற்கு ப்ளூகோட்ஸ் எவ்வளவோ தேவலாம்.ஏனென்றால் இது மிகவும் குழந்தைதனமாக உள்ளது.2 அல்லது 3 பக்கங்களுக்கு மேல் புரட்டவே முடியவில்லை.இதைப்போன்ற கதைகள் நமது ரசனையை முதிர்க்க செய்யுமா?இது எனது தனிப்பட்ட கருத்துதான் தவறு இருந்தால் மன்னிக்கவும்

  ReplyDelete
  Replies
  1. உங்கள் இங்கே கருத்தை பதிவிட்டதற்கு நன்றி.

   ரசனைகள் பல விதம் நண்பரே :-)

   Delete
  2. ரசனையில் முதிந்தோர்க்கு என பல அற்புத படைப்புகளை படித்துவிட்டு smurfs பை எப்படி ரசிப்பது என்று சுத்தமாக தெரியவில்லை.வசனங்கள் பொடி பொடி என்று வார்த்தைக்கு வார்த்தை படுத்துகிறது.மாதா மாதம் 50 கிமீ பயணம் செய்து 4 புத்தகங்கள் வாங்கும் நிலையில் smurfs மாதம் மட்டும் பயணம் செய்யவே மனது வருவதில்லை.அதற்காக கார்ட்டூன் வேண்டாம் என்று சொல்லவில்லை இதற்கு ப்ளூகோட்ஸ் எவ்வளவோ தேவலாம்.ஏனென்றால் இது மிகவும் குழந்தைதனமாக உள்ளது.2 அல்லது 3 பக்கங்களுக்கு மேல் புரட்டவே முடியவில்லை.இதைப்போன்ற கதைகள் நமது ரசனையை முதிர்க்க செய்யுமா?இது எனது தனிப்பட்ட கருத்துதான் தவறு இருந்தால் மன்னிக்கவும்////


   same blood nanba ...

   Delete
  3. கண்ணன் @

   உண்மைதான் , ஆனால் என்னைப்பொருத்தவரை ஜாலியாக இருக்கும் போது படிக்கின்றேன்.! அப்போது ஸ்மர்ப் உலகத்தில் சஞ்சாரிக்கின்றேன்.!

   எல்லாவற்றையும் மேலாக என்னுடைய மகனை மிகவும் கவர்கிறது. பக்கத்து வீட்டு வாண்டுகள் என் மகன் கையில் இருக்கும் ஸ்மர்ப்பை பார்த்து பொறாமை பார்ப்பது என் மகனுக்கு தலைகணத்தை உண்டாக்குகிறது. !நான் ஹேப்பி அண்ணாச்சி. !

   Delete
  4. தலைக்கணத்தை உண்டாக்கும் ஒரு இதழ் நமக்கு தேவையா அண்ணாச்சி?

   Delete
  5. காா்ட்டூனை ரசிக்காமல் நாமெல்லாம் ரசனையில் முதிா்ந்தவா்கள் என்பது தான் தலைக்கணம்!

   குழந்தைகள் மகிழ்ச்சி கொள்ளும்!
   பெருமை கொள்ளும்!

   அதைக் காணும் ரசனையில் முதிா்ந்தோா் வேண்டுமானால் தலைக்கணம் என நினைத்துக் கொள்வா்!

   Delete
  6. காா்ட்டூனுக்கு நிகா் வேறு எதுவும் கிடையாது!

   காா்ட்டூனை ரசிக்க நல்ல புாிதலும், அறிவும் வேண்டும்!

   காா்ட்டூன் சொல்லும் சங்கதியை புாிந்து கொள்ளும் ஆற்றலும், விஷய ஞானமும் வேண்டும்!

   அல்லாமல் அதைப் படிக்க முற்படின் யாதொரு பயனும் இல்லை!

   மேலும் action கதைகளை ரசிக்க எந்த அறிவும் வேண்டியதில்லை!

   என்றால் உண்மையில் "ரசனையில் முதிா்ந்தோா்" காா்ட்டூனை ரசிப்போரே!

   Delete
  7. ///காா்ட்டூன் சொல்லும் சங்கதியை புாிந்து கொள்ளும் ஆற்றலும், விஷய ஞானமும் வேண்டும்! ///

   ///மேலும் action கதைகளை ரசிக்க எந்த அறிவும் வேண்டியதில்லை!///

   :D செம & உண்ம!

   Delete
  8. ///காா்ட்டூனை ரசிக்க நல்ல புாிதலும், அறிவும் வேண்டும்!

   காா்ட்டூன் சொல்லும் சங்கதியை புாிந்து கொள்ளும் ஆற்றலும், விஷய ஞானமும் வேண்டும்!

   அல்லாமல் அதைப் படிக்க முற்படின் யாதொரு பயனும் இல்லை!///

   உண்மை ..!

   ///
   மேலும் action கதைகளை ரசிக்க எந்த அறிவும் வேண்டியதில்லை!

   என்றால் உண்மையில் "ரசனையில் முதிா்ந்தோா்" காா்ட்டூனை ரசிப்போரே!///


   இதுவும் உண்மையே..!!

   பிடிபடாத சங்கதி பிடிக்காமல் போவது இயல்புதானே??

   Delete
  9. ///இது எனது தனிப்பட்ட கருத்துதான் தவறு இருந்தால் மன்னிக்கவும் ///

   @ sachin kanmani

   உங்களுடைய கருத்தை இங்கே மிகவும் நாகரீகமாகவே சொல்லியிருக்கிறீர்கள் சார்.! அதற்கான தளம்தானே இது.!தவறொன்றும் இல்லை .! தொடருங்கள் சார்.!

   Delete
  10. கனமான களங்களாக கருதப்படும், சிப்பாயின் சுவடுகளில், இரவே இருளே கொல்லாதே, தேவரகசியம் தேடலுக்கல்ல, பிரளயத்தின் பிள்ளைகள், பவுன்சர், அண்டர்டேக்கர் மற்றும் சமீபத்திய முடியா இரவு, சித்தம் சாத்தானுக்குச் சொந்தம், கனவுகளின் கதையிது போன்றவற்றை சிலாகித்து கொண்டாடுவதில் என்னைப்போன்ற கார்ட்டூன் ரசிகர்களும் நிறையபேர் உண்டே நண்பரே.!

   ரசனையில் முதிர்ந்தோர் என்ற வரையறையை இப்போது எப்படி நிறுவமுடியும்.!

   ரின்டின், லக்கி, ஸ்மர்ஃப் போன்ற கதைகளில் சித்திரங்களே பெரும்பாலும் சேதி சொல்லும். !
   அதனைப்புரிந்து கொள்ள நிச்சயம் ரசனைமுதிர்ச்சி தேவைதான் நண்பர்களே.!

   Delete
  11. +1111111111111111
   செம கிட் ஆர்டின் கண்ணன்.
   உங்கள் ஒவ்வொ௫ வார்த்தையும் என் மனப் பிரதிபலிப்பே.
   நன்றிகள் பல நண்பா?

   Delete
  12. மிதுன் புரிதலும் அறிவும் இல்லாமலா லக்கி லூக் யையும். டாக்புல் ஆர்ட்டினையும். பென்னியையும்.
   ரின் டின் கேனையும். ரசிக்கிறேன் கார்ட்டுன் எல்லாவற்றையும் வெறுக்க வில்லையே அறிவில்லாமல் படிக்கும் ஆக்சன் கதையில் கூட சில நாயகர்கள் டயபாலிக். போன்றோரை பலருக்கு பிடிக்கவில்லை எல்லாவற்றையும் எல்லோராலும் எப்போதும் எற்றுக் கொள்ள முடியாது மிதுன் நண்பரே

   Delete
  13. நண்பரே செந்தில் சத்யா,
   லக்கிலூக் கதைகளுக்கு பிறகு சமூக பிரச்சனைகளை, மனித மனங்களை தெளிவாக பகடி செய்வதே "ஸ்மா்ப்" கதைகள் தான்!

   அது குழந்தைகள் உலகத்தை அல்ல நமது உலகத்தைத் தான் பகடி செய்கிறது.

   ஆண்கள் மட்டும் இருக்கும் ஊரில் ஒரு வந்தால், இக்கதை நம் மனதில் உண்டாகும் முதல் காதலை பகடி செய்கிறது!

   பெச்சுரலாக இஷ்டம் போல் வாழ்க்கை நடத்தி வந்தவருக்கு, (திருமணத்திற்கு பின்) ஒரு குழந்தை வளா்ப்பை எப்படி அணுகுவான் என்பதை பகடி செய்கிறது ஒரு கதை!

   பல ஆயிரம் வருடங்களாக இருந்த மன்னராட்சி முறையை மாற்றயமைத்த ஜனநாயகத் தோ்தல் முறையின் அவலங்களையும், அது சாா்ந்த மக்களின் மனநிலையையும் பகடி செய்கிறது மற்றொரு கதை!

   அதேபோல மருத்துவ துறையின் தகிடு தத்தங்களை போட்டுடைக்கிறது மற்றொரு கதை!

   திருமணம், குழந்தை வளா்ப்பு, தோ்தல், மருத்துவம், "எதிா்வரும் விண்வெளி ஆராய்ச்சி கதை" இவற்றையெல்லாம் பற்றி நகைச்சுவையோடு சொல்லும் கதையை சிறுவா் கதை என்று சுருக்கிப் பாா்ப்பதும், அதைப் புாிந்து கொள்ளாததும், புாிந்து கொள்ள முயற்சிக்காததும், சில நண்பா்கள் முழுவதும் படிக்காமலே அதை தவறாக விமா்சனம் செய்வதும் நியாயந்தானா நண்பரே!

   Delete
  14. ////ஆண்கள் மட்டும் இருக்கும் ஊரில் ஒரு வந்தால்,////

   "ஒரு பெண் வந்தால்" என படிக்கவும்

   Delete
  15. என்னை பொருத்தவரை லக்கி, சிக்பில்க்கு பிறகு மூன்றாமிடம் "ஸ்மா்ப்ஸ்" களுக்குத் தான்!!

   Delete
  16. நண்பா் கிட்ஆா்டின் கண்ணன் சொன்னதுபோல, காா்ட்டூனும், கிராபிக் நாவல் கதைகளும் தான் என்னை மிகவும் கவா்ந்தவை!

   Delete
  17. எனது பதிவில் நான் குறிப்பிட்டது smurfs பை மட்டுமே.ஒட்டுமொத்த கார்ட்டூனை அல்ல. ஒரே ஒரு லக்கி லூக்.ஒரே ஒரு டாக்புல்.ஒரே ஒரு ப்ளூகோட்ஸ்.ஒரே ஒரு.....இதழுக்காக அதே 50 கிமீ பாத யாத்திரை செல்லவும் தயார் நண்பரே.

   Delete
  18. ///. ஒரே ஒரு லக்கி லூக்.ஒரே ஒரு டாக்புல்.ஒரே ஒரு ப்ளூகோட்ஸ்.ஒரே ஒரு.....இதழுக்காக அதே 50 கிமீ பாத யாத்திரை செல்லவும் தயார் நண்பரே.///

   சூப்பர் ..👏👏👏👏👏👏

   Delete
  19. Mithun@ //லக்கிலூக் கதைகளுக்கு பிறகு சமூக பிரச்சனைகளை, மனித மனங்களை தெளிவாக பகடி செய்வதே "ஸ்மா்ப்" கதைகள் தான்!
   .
   .
   .
   திருமணம், குழந்தை வளா்ப்பு, தோ்தல், மருத்துவம், "எதிா்வரும் விண்வெளி ஆராய்ச்சி கதை" இவற்றையெல்லாம் பற்றி நகைச்சுவையோடு சொல்லும் கதையை சிறுவா் கதை என்று சுருக்கிப் பாா்ப்பதும், அதைப் புாிந்து கொள்ளாததும், புாிந்து கொள்ள முயற்சிக்காததும், சில நண்பா்கள் முழுவதும் படிக்காமலே அதை தவறாக விமா்சனம் செய்வதும் நியாயந்தானா நண்பரே!//
   சூப்பர்...👏👏👏👏👏👏

   Delete
  20. ///. ஒரே ஒரு லக்கி லூக்.ஒரே ஒரு டாக்புல்.ஒரே ஒரு ப்ளூகோட்ஸ்.ஒரே ஒரு.....இதழுக்காக அதே 50 கிமீ பாத யாத்திரை செல்லவும் தயார் நண்பரே.///

   சூப்பர் ..👏👏👏👏👏👏

   சச்சின் அடித்த கார்ட்டூன் சிக்ஸர்!!

   Delete
  21. நண்பர் சொன்னது ஸ்மர்ப்ஸ் மட்டும் பிடிக்கவில்லை, கார்டூன் கதைகள் பிடிக்கவில்லை என சொல்லவில்லை.
   ஆனால் உங்கள் விவாதம் கார்டூன் கதைகளே பிடிக்கவில்லை என்று தவறான திசையில் பயணிப்பது ஏன் நண்பர்களே?

   Delete
  22. நல்லா கேளுங்க இளையராஜா சார்..:););)

   Delete
  23. @ PfB

   ///ஆனால் உங்கள் விவாதம் கார்டூன் கதைகளே பிடிக்கவில்லை என்று தவறான திசையில் பயணிப்பது ஏன் நண்பர்களே?///

   அடுத்த விவாதத்தின்போது ஆளுக்கு ஒரு காம்பஸ் கருவியை கையில வச்சுக்கிட்டோம்னா... இப்படி தவறான திசையில் பயணிக்காம தடுத்துடலாம் பாருங்க?! ;)

   Delete
  24. ////நண்பர் சொன்னது ஸ்மர்ப்ஸ் மட்டும் பிடிக்கவில்லை, கார்டூன் கதைகள் பிடிக்கவில்லை என சொல்லவில்லை.
   ஆனால் உங்கள் விவாதம் கார்டூன் கதைகளே பிடிக்கவில்லை என்று தவறான திசையில் பயணிப்பது ஏன் நண்பர்களே?////

   ஏனென்றால் காா்ட்டூன் வாிசையில் ஒரு மைல்கல் தொடா் "ஸ்மா்ப்ஸ்" என்பதால் தான்!

   லியனா்டோ தாத்தாவோ, மீசைக்கார மாமாவாகவோ இருந்தால் இவ்வளவு தேவையிருந்திருக்காது!

   ஸ்மா்ப்ஸ் கதைகள் ஒவ்வொன்றிலும், ஒரு சிறப்பம்சத்தை லக்கிலூக் கதைகளைப் போலவே உணர முடியும்!

   நண்பரே பரணி,
   எனக்கு ஒரு சந்தேகம்!
   லக்கி, சிக்பில், புளுகோட் கதைகளை ரசிக்க முடிந்து, ஸ்மா்ப்ஸ் கதைகளை ரசிக்க முடியவில்லை என்றால்,

   காா்ட்டூன் கதைகளிலும்,

   "டுமீல், டுமீல், தோட்டாவாலா" Wild West மெனியாவிலிருந்து வெளியே வர
   நம் நண்பா்களால் இன்னும் இயலவில்லையோ என்னவோ??!!

   Delete
  25. நண்பரே சச்சின்,

   இது காா்ட்டூனுக்கு ஆதரவான விமா்சனம் மட்டுமே!
   குறிப்பாக ஸ்மா்ப்ஸ்க்கும் கூட!

   தனிப்பட்ட உங்கள் கருத்துக்கான விமா்சனமாகக் கொள்ள வேண்டாம்!

   உங்கள் கருத்து முன்பும் சில நண்பா்களால் சொல்லபட்டது தான்!

   அவை எல்லாவற்றிற்கும் சோ்த்துதான்
   இந்த விவாதம்!

   இங்கு நடக்கும் விவாதங்களை கொண்டும் சில கதைகளை சோ்ப்பதும், நீக்குவதும் என ஆசிாியா் முடிவெடுக்க கூடும் என்பதால்,
   அதற்கான ஆதரவையும் அழுத்தமாக தொிவிக்க வேண்டுயுள்ளது.

   Delete
  26. // நண்பரே பரணி,
   எனக்கு ஒரு சந்தேகம்!
   லக்கி, சிக்பில், புளுகோட் கதைகளை ரசிக்க முடிந்து, ஸ்மா்ப்ஸ் கதைகளை ரசிக்க முடியவில்லை என்றால், //

   ரசனைகள் பலவிதம் அதனை புரிந்து கொள்வோமே! இதில் தவறில்லையே!

   கைகளில் உள்ள ஐந்து விரல்களும் ஒன்று போலா இருக்கிறது! அதே போல்தான் இதுவும் மிதுன்!

   Delete
 32. பொடியர்களோட அட்டைப்படம் எக்கச்சக்கமாக டாலடிக்கிறது.படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

  ReplyDelete
 33. கல்யாணத்தில் கலந்து கொள்ளும் ஆவலிலும், சமீபத்திய புந்தக விழாக்களை தவறவிட்டதால் நண்பர்களைக் காணும் ஆவலிலும் சிவகாசிக்கு செல்ல வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்.

  இரண்டு கேள்விகள்/ வேண்டுகோள்கள்:

  1. இதழ்கள் ஏதேனும் வாங்க விரும்பினால் அதற்கான ஏற்பாடு இருக்குமா? நண்பர்களிடம் இழந்த சில இதழ்களை வாங்க விரும்புகிறேன்.

  2. தங்கள்கை வசமுள்ள வின்டேஜ் இதழ்களை ஒரு சின்ன கண்காட்சி போல ஏற்பாடு செய்ய இயலுமா? தங்கள் வசமில்லாவிட்டாலும், நண்பர்கள் வசமிருக்கும் இதழ்களை கொண்டுவந்து, மீண்டும் எடுத்துச் செல்லலாமே? இயலுமா?

  ReplyDelete
  Replies
  1. //(ஏதேனும் மணிப்பூர் , மிசோரம் பக்கமாய் டிரிப் அடிக்கும் எண்ணங்கள் இருப்பின் - டிசம்பர் அதற்கொரு உருப்படியான பொழுதாய் அமைந்திடலாம் ! )//

   ஹி, ஹி, ஹி, ஹி, ஹி, ஹி , இந்த முறை சிவகாசி மட்டும்தேந் .. ஹி, ஹி, ஹி :)))))

   Delete
 34. 'விண்ணில் ஒரு பொடியன்' அட்டைப்படம் கலக்கல். தலைப்பே கதையைப்பற்றி விவரித்துவிடுகிறது என்பதால், இப்படியொரு லட்டு போன்ற கதைக்கருவைக் கொண்டு படைப்பாளிகள் வழக்கத்தைவிடவும் பட்டையைக்கிளப்பியிருப்பார்கள் என்று உறுதியாகக் கணிக்க முடிகிறது! ஊதாப் பொடியர்களோடு விண்ணில் ஒரு ரவுண்டு போய்வர ஆவல் எழுகிறது!

  இன்னும் இரண்டு தினங்களில் ( வாழ்க்கையில் முதன்முதலாக) சிவகாசிக்கு பயணிக்கவிருப்பதும், சிவகாசி சிங்கத்தின் குடும்ப விழாவில் கலந்துகொள்ளயிருப்பதும், நண்பர்கள் பலரையும் சந்திக்க மீண்டும் ஒரு வாய்ப்புக் கிட்டியிருப்பதும் - உற்சாக மீட்டரை ஏகத்துக்கும் எகிற வைத்திருக்கிறது!

  சிவகாசிக்கு வரச்சே அடுத்தமாத புத்தகங்களையும் கையோடு வாங்கிவர முடிந்தால் நல்லா இருக்குமேன்னு ஒரு ஆசை எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. என்றாலும், ஏற்கனவே படு பிஸியாக இருக்கும் நம் எடிட்டருக்கு இதன்பொருட்டு இன்னும் சிரமம் தர விருப்பமில்லாத காரணத்தால் அதைப்பற்றி இங்கே எழுதாமல் தவிர்த்திருக்கிறேன்! ஹிஹி!

  ReplyDelete
 35. ///சமீபமாய் கண்ணில் பட்டதொரு படமிது ! பார்த்த உடனே உங்களின் பேனாக்களுக்கு வேலை கொடுக்கத் தோன்றியது ! சுவாரஸ்யமாய் ஒரு கேப்ஷன் எழுதுங்களேன் !///

  எனக்கென்னவோ கொடுக்கப்பட்டிருக்கும் அந்தப் படம் நம்ம மாயாவி-சிவாவினுடையதோ என்ற டவுட் எழுகிறது. 'கேப்டன் பிரின்ஸ் ஸ்பெஷலில்' இடம்பெறச் செய்ய அவர் அனுப்பிய ஃபோட்டோதான் க்ரே-ஸ்கேலாக மாற்றப்பட்ட பிறகு இப்படி கார்ஸன் மாதிரி ஆகியிருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுகிறது! ;)

  அச்சச்சோ! நானும் போட்டோ அனுப்பியிருக்கிறேனே?!! அனேகமாக, என்னுடைய ஃபோட்டோ கோசைஸ் போன்றோ, சிட்டிங் புல் போன்றோ இருக்குமோ என்னவோ?!! ;)

  ReplyDelete
  Replies
  1. என்ன கொடும இது மாயாவி சார் ??

   ( தலையில் அடித்துக் கொள்ளும் படங்கள் நூத்தி ஒன்னு ;))))) )

   Delete
 36. கார்சன் கேப்சன் :
  அடப்பாவி டெக்ஸ், சிங்கமுத்து குடும்ப கல்யாண விழாவுக்கு வந்தா, குற்றாலத்து பார்டர் கடைல சிக்கன் ரோஸ்ட் வாங்கிதர்ரேன்னு சொல்லிட்டு, சிங்கமுத்துவோட கதை பேசிட்டிருக்கியே. இப்பதான் தலைவாங்கி குரங்குல இருந்து ரத்தமுத்திரை சாகசம் வரைக்கும் பேசியிருக்கீங்க. சேந்தம்பட்டி குழுவேற குற்றாலத்து பார்டர் கடைக்கு நாலு கால் பாய்ச்சல்ல போயிருக்காங்களாம். நீங்க மாசமொரு டெக்ஸ் வரைக்கும் பேசி முடிக்கறதுகுள்ள, ஆளுக்கொரு கோழி ரோஸ்ட் கிடைக்குமான்னு தெர்லயே :-)

  ReplyDelete
 37. அடேய் கிட், சிவகாசி சிங்கமுத்து அவரோட ஜீனியருக்கு, திருமணம் செய்து வைக்கிறாரு, எனக்கு எப்ப என் அப்பா டெக்ஸ் திருமணம் செய்து வைக்கபோறாருன்னு, உங்கப்பன்கிட்ட கேக்க வேண்டிய கேள்வியை என்கிட்டே கேட்டதைகூட ஏத்துகுவேன். அதை என் பிளேட்ல இருந்த வறுத்த கறியை எடுத்து சாப்பிட்டுகிட்டே கேட்டதை ஏத்துக்கவே முடியாது.

  ReplyDelete
  Replies
  1. ஹா.ஹா.செம . டாக்டர் சார் .

   Delete
 38. கார்சன் : கார்சனுக்கு பொண்ணு கேட்டு வாடானு இந்த டைகர் பயலை அனுப்புனா வெள்ளி முடியாருக்கு பொண்ணு வேணும்னு அங்க போய் கேட்டுருக்கான். எவன் கொடுப்பான்? நான் என்னோட கடந்த காலத்தை கலர்ல நினைச்சு சந்தோழ பட்டுக்க வேண்டியதுதான்.வோ வேர் ன்னு சொல்லிட்டு போயி கல்யாணத்தில் இருந்தே என்னை ஒரங்ககட்டிட்டிடானே. ஒ... ஒ.. இது வேற ஒ

  ReplyDelete
 39. என்னை பொறுத்தவரை ஆக்‌ஷன் கதைகள் படிக்க அறிவு தேவை..கார்ட்டூன் கதைகளை படிக்க அறிவு தேவை என்ற வரையறைகள் ஓவராக தோன்றுகிறது .ஒரு குறிப்பிட்ட ஜானர் இதழ்களை ஒவ்வொருவருக்கும் பிடித்து போவதற்கும் ..பிடிக்காமல் போவதற்கும் காரணம் அறிவை விட ஆர்வமே முக்கியமாக படுகிறது .காமிக்ஸ் படிக்கும் அனைத்து நண்பர்களுமே அறிவு மட்டுமல்ல ஆற்றலும் அதிகமாக உடையவர்கள் என்பதை பலமுறை நிரூபித்த சமயங்கள் உண்டு .


  ஆக்‌ஷன் பிரியர்களுக்கு கார்ட்டூன் ஒரு படி குறைவாக தோன்றுவது எவ்வாறு இயல்பானதோ அவ்வாறே கார்ட்டூன் பிரியர்களுக்கும் .ஆக்‌ஷன் கதை பிரியர்கள் அனைத்து நாயகர்களின் ஆக்‌ஷன் கதைகளும் பிடித்து போவதில்லையே .ஆரம்பத்தில் கார்ட்டூன் கதைகளில் எனது முதலிடம் லக்கி .ஆனால் இப்பொழுதோ சிக்பில்லை விட லக்கி ஒரு படி கீழே உள்ளதாக தோன்றுவது ரசனையின் மாற்றே அன்றி அறிவின் மாற்றமன்று...


  டயபாலிக்கை தூக்கி வைத்து கொண்டாடிய ஆக்‌ஷன் ரசிகர்கள் பிறகு அவரை இறக்கி வைத்ததையும் ..கார்ட்டூனை கொண்டாடும் அதே ரசிகர்களில் சிலர் ப்ளூகோட் பட்டாளம் போர் வீர்ர்களை பகடி செய்கிறது என வருந்தி எழுதுவதையும் நாம் கண்டுள்ளோமே .இந்த வருடம் வந்த அனைத்து லயன் கிராபிக் நாவலையும் மிக மிக விரும்பியவன் நான் என்றாலுமே கூட அதற்காக இப்போது என்னால் சிப்பாயின் சுவடுகளை ரசிக்க முடியுமா என்றால் கேள்விகுறியே ..?

  இறுதியாக ஆக்‌ஷன் கதைகளை வெறுப்புவர்களை கூட ஒரு ஆக்‌ஷன் கதையை விரும்பி ரசிக்க வைக்கும் அளவிற்கும்...கார்ட்டூனை வெறுக்கும் நண்பர்களை கூட ஒரு கார்ட்டூன் கதையை ரசிக்கும் அளவிற்கும் படைப்புகளை கொண்டு வர அதனதன் படைப்பாளிகளுக்கு தான் அதிகம் அறிவு தேவைப்படும் நண்பர்களே ..இப்பொழுது நம் அனைவருமே அறிவுள்ளவர்களே சிற்சிறு ரசனை மாற்றங்களோடு ..

  ReplyDelete
  Replies
  1. உண்மையை உரக்கச் சொல்லி விட்டீர்கள் தலைவரே.அருமை.

   Delete
  2. +111

   காா்ட்டூனை அறிவோடு சோ்த்துப் குறைத்து மதிப்பிடும் போது ஒப்பீடு அவசியமாகிறது!

   காமிக்ஸ் முழுவதுவே ரசனையின் வெளிப்பாடு தான்!

   புாிதலில் குறைபாட்டை வைத்துக் கொண்டு காா்ட்டூனைக் குறை சொல்வது நியாயந்தானா என்பதே என் கேள்வி!

   Delete
  3. பின்னிப் பெடலெடுத்துட்டீங்க தலீவரே!!

   உங்களின் எழுத்துக்களுக்கு ஏன் எதிரணித் தலைவர்ல்லாம் மிரண்டு போறாங்கன்னு இப்பத்தான் புரியுது!

   Delete
  4. சூப்பர் தலைவரே....

   Delete
  5. தலைவரே செம,அசத்தறிங்க போங்க.

   Delete
  6. ரசனைகள் பலவிதம்,ஒவ்வொன்றும் ஒருவிதம்,இதுதான் சரியான இரசனை என்று அறிவின் துணைகொண்டு மதிப்பீடு செய்வதே சரியான செயல் என்று தோன்றவில்லை.

   Delete
  7. தலீவரே தலைகீழாக நின்னுகிட்டு
   ரொம்ப சூப்பரா எழுதிஇருக்கீங்க.

   Delete
 40. //என்னை பொறுத்தவரை ஆக்‌ஷன் கதைகள் படிக்க அறிவு தேவை..கார்ட்டூன் கதைகளை படிக்க அறிவு தேவை என்ற வரையறைகள் ஓவராக தோன்றுகிறது .ஒரு குறிப்பிட்ட ஜானர் இதழ்களை ஒவ்வொருவருக்கும் பிடித்து போவதற்கும் ..பிடிக்காமல் போவதற்கும் காரணம் அறிவை விட ஆர்வமே முக்கியமாக படுகிறது .காமிக்ஸ் படிக்கும் அனைத்து நண்பர்களுமே அறிவு மட்டுமல்ல ஆற்றலும் அதிகமாக உடையவர்கள் என்பதை பலமுறை நிரூபித்த சமயங்கள் உண்டு .//
  +1

  ReplyDelete
 41. 29 தேதி மதியம் 3:00 மணிக்கு கரூரில் இருந்து திருமணத்திற்கு செல்கிறேன் நண்பர்கள் யாரும் வருகிரீர்களா ?
  9789214198

  ReplyDelete
  Replies
  1. ஏன் பழனி வூட்டம்மாவ இட்டார்லயா?

   Delete

 42. Mithun Chakravarthi27 November 2017 at 11:29:00 GMT+5:30
  +111

  காா்ட்டூனை அறிவோடு சோ்த்துப் குறைத்து மதிப்பிடும் போது ஒப்பீடு அவசியமாகிறது!

  காமிக்ஸ் முழுவதுவே ரசனையின் வெளிப்பாடு தான்!

  புாிதலில் குறைபாட்டை வைத்துக் கொண்டு காா்ட்டூனைக் குறை சொல்வது நியாயந்தானா என்பதே என் கேள்வி!////


  சார் நல்லா இன்னொரு தடவ மேல போயி என்னா எழுதியிருக்கிறார் னு படிச்சிட்டு வாங்க..நாங்க யாரும் கார்டூனே பிடிக்கல. வேணான்னு சொல்லல...ஸ்மர்ப மட்டும் தான் ரொம்ப குழந்தை தனமாக உள்ளது என்று தான் கூறினோம் ....ஏன் மற்ற கார்ட்டூன்களை நாங்கள் ரசிக்கவில்லையா என்ன.? அதற்காக சும்மா கார்டூனை ரசிக்க அறிவு வேணும்..புத்தி வேணும் ..ரசனை வேணும்னுகிட்டு சொல்வது எல்லாம் செம காமடியா இருக்கு...பரவாயில்ல ஸ்மர்ப் ப ரசிக்கிற நீங்க எல்லாருமே அறிவாளியாக இருந்துக்கோங்க...அத பிடிக்காத நாங்க முட்டாளாகவே இருந்துக்கிறோம்....

  ReplyDelete
  Replies
  1. நீங்களும் கொஞ்சம் மேல படியுங்க நண்பரே!

   அதே ஸ்மா்ப்ஸைத் தான் லக்கிலூக் கதைகளுக்கு நிகரானதுன்னு சொல்றோம்!

   Delete
  2. நெறைய நண்பா்கள் புக்கையே திறந்து பாா்க்காமல், இது கொழந்தைகள் புக் என்று சொல்லும் போது, இல்லையில்லை இது நம் போன்ற முதியோா்களுக்கும் உகந்தது என்று சொல்ல வேண்டியுள்ளது!

   Delete
  3. ஹப்பா மிதுன் முதியவர்னு ஒத்துக்கிட்டார்

   இனிமே என்னை மாதிரி சின்ன பசங்களுக்கு நிறைய கதை சொல்லுவார்.

   Delete
  4. மிதுன் ஸ்மர்ப் லக்கி லூக்குக்கு நிகர் என்பது உங்கள் கருத்து அதனை மற்றவர்களும் அமோதிக்க தேவையில்லையே ஸ்மர்ப்பை விட லக்கி லூக்கும் சிக்பில்லுமே மேல் மேல் என எனக்கு தோன்றுகிறது இது எனது கருத்து இதனை மற்றவர்கள் மீது நான் தினிக்க மாட்டேன் இத்துடன் இவ் விவாதத்திற்க்கு தற்காலிகமாக விடை கொடுக்கிறேன் கல்யாணத்துக்கு கிளம்பனுமில்ல

   Delete
 43. ////எப்போதும் போலவே - அட்சர சுத்தமாய் ஒரிஜினல் டிசைனேயே பயன்படுத்தியுள்ளோம் - படைப்பாளிகள் உருவாக்கித் தந்திருக்கும் அந்த ஸ்மர்ப்ஸ் லோகோவுடன் ! கதையைப் பொறுத்தவரைக்கும் நான் பெரியதொரு பில்டப் எல்லாம் தரத் தேவையிராதென்று நினைக்கிறேன் - simply becos இந்த நீலப் பொடியர்களின் சமாச்சாரத்தில் இரண்டே அணிகள் நம்முள் ! ஒன்று : "ச்சை...எனக்கு ப்ளூ கலரே புடிக்காது ; அதிலும் சுண்டுவிரல் பொடியர்களே புடிக்காது !" என்று சொல்லக்கூடிய அணி ! இரண்டாவதோ - "ஹை...சூப்பரப்பு ! கார்டூனே ஜாலி ; இதில் smurfs என்றால் ஜாலியோ ஜாலி !" என்றிடும் அணி ! So நான் பில்டப் தந்தாலும் சரி, தராது போனாலும் சரி - அவரவரது நிலைப்பாடுகளை பெரிதாய் மாற்றிக் கொள்ளப் போவதாய் எனக்குத் தோன்றவில்லை ! ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் ! And "விண்ணில் ஒரு பொடியன்" - SMURFS கதைகளுள் முற்றிலும் ஒரு புது உச்சம் என்பேன் ! செமத்தியான கதைக் களம்////

  ReplyDelete
  Replies
  1. ////என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் !////

   +1111111

   Delete
  2. /// ஆனால் என்னளவிற்குத் தோன்றும் விஷயம் ஒன்றே : இந்தச் சுண்டுவிரல் ஆசாமிகளைக் கொண்டு வாழ்க்கையின் அழகான விஷயங்கள் ஒரு நூறை நாம் புதிதாய் ரசிக்கலாம் போலும் !///

   + 999 999 999

   பிடிக்கவில்லை என்பதில் தவறில்லை. . ஏனெனில் அது தனிப்பட்ட விருப்பம். .!
   எது ரசனைமுதிர்ச்சி என்ற பேச்சு வந்ததாலேயே விளக்கம் தரப்பட்டது.!

   Delete
 44. **** சிவகாசி - சிறப்புக் கட்டுரைப் போட்டி ****

  கூடாது இந்தக் கோபம்கள்
  தேவை - ஆரோக்கிய விவாதம்கள்!
  படித்திடுவோம் காமிக்ஸ் புத்தகம்கள்
  அடைந்திடுவோம் கோடி இன்பம்கள்!
  நாமெல்லாம் காமிக்ஸ் கொடுத்த சொந்தம்கள்
  என்றென்றும் தொடரட்டும் இந்த பந்தம்கள்!

  அனைவருக்கும் என் வணக்கம்கள்!

  ( மேற்கூறிய கவிதை(?)யை நம் நண்பர் ஒருவர் எழுதியிருந்தால் இப்படித்தான் எழுதியிருப்பார். யார் அந்த நண்பர்? சரியான பதில் அளிப்பவர்க்கு நாளை மறுநாள் சிவகாசியில் பன்-டீ பரிசு காத்திருக்கிறது!) ;)

  ReplyDelete
  Replies
  1. "சே, எனக்கு இந்த பன்-டீ பாிசே புடிக்காது" புடிக்காது ஸ்மா்ப்

   Delete
  2. அப்போ

   தூத்துக்குடி தம்கம்

   இப்போ

   பெங்களூர் சிம்கம்

   நம்ம பரணி தானே ..?😁

   Delete
  3. அதென்ன ///கவிதை(?)யை///

   ஹாஹாஹா

   Delete
  4. அவரு பேரு ஞாபகம் இல்ல, ஆனா சிாிப்பு நல்லா ஞாபகமிருக்கு!!

   Delete
  5. ///கோவை நண்பா் ///

   தவறான பதில் மிதுன்.! ☺

   Delete
  6. ///தவறான பதில் மிதுன்.!///

   அலோ... அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்னேன்?

   Delete
  7. ஈ வி
   கட்டுரை போட்டியில் கவிதை எழுதிய நீர்
   இன்றுமுதல்

   கட்டுரைகவிஞர் என்று
   அன்போடு அழைக்கப்படுவீராக.

   Delete
  8. நம்ப கணேஷ் k.v தான் இப்படி எழுதுவார்.;-)

   Delete
  9. நம்மள கலாயாச்ச வங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படி என்று புத்தகம் எதாவது இருக்கா? :-)

   Delete
  10. ஆனாலும் நம்ப எழுத்த ரொம்பவும் தான் ரசிகிராய்ங்கய்யா:-)

   Delete
  11. நம்ம கோவை ஸ்டில் க்ளாவை தவிர வேறு யார் ?

   செயலரே இவ்வளவு பெரிய பரிசை சங்கத்து பணத்தில் எடுக்க வசதிபடாது .எனவே உங்கள் கை காசை போட்டு பரிசை எனக்கு பார்சலில் அனுப்புவும்...

   Delete
  12. ///நம்மள கலாயாச்ச வங்ககிட்ட இருந்து தப்பிப்பது எப்படி என்று புத்தகம் எதாவது இருக்கா? :-)///


   புத்தகமெல்லாம் இல்ல பரணி சார்.

   அப்படி தப்பிக்கிறதுக்கு ஒரு வழி இருக்கு.என்னான்னா யாராச்சும் கலாய்க்கிறப்ப, அவங்களைப் பாத்து லைட்டா கொஞ்சம் ஸ்டைலா சிரிக்கணும்.
   அதைப் பாத்து கலாய்ச்சவர் 'டர் 'ராகி, 'டரியல் 'லாகி டென்ஷனாயி "யப்பா ...லைட்டா கலாய்ச்சதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா " எஸ்கேப் ஆயிடுவார்.அவ்ளோதான்.

   பி.கு
   நாமெல்லாம் சிரிக்கிறப்ப ஒரு மார்க்கமா இருப்பதால, இதுவே நல்ல வழிமுறை 'னு தோணுது.

   Delete
  13. பி.கு 1.

   இந்த டெக்னிக்கை வீட்டில் பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

   Delete
  14. // இந்த டெக்னிக்கை வீட்டில் பயன்படுத்த வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். //

   நல்லவேளை இத சொன்னீங்க!

   Delete
  15. போட்டி முடிவு :

   PfB (aka) Parani from Bangalore

   சரியான பதிலளித்து இன்னும் சற்றுநேரத்தில் சுடச்சுட டீ + ஆறிப்போன பன் பரிசுபெறவிருக்கும் அந்த அதிர்ஷ்டஜாலி நண்பர் - திரு.KOK

   வாழ்த்துகள் KOK!

   Delete
  16. கண்ணா @ என்ன ஒரு பரிசு. :-) போன வருசம் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் மிஞ்சியது என கேள்விப்பட்டேன்; அவசரப்பட்டு சாப்பிட்டு வயித்துக்கு ஏதும் கஷ்டம் கொடுக்க வேண்டாம்.

   Delete
 45. // மணமக்களின் privacy & குடும்பத்தினரின் privacy மதிக்கப்பட வேண்டியதொன்று என்பது, எனது மற்றும் சீனியர் & ஜுனியர் எடிட்டரின் அவாக்களுமே ! Hope you understand folks !! //

  Valid concern, understood. We will not share.

  ReplyDelete
 46. முத்து பெற்ற சிங்ககுட்டி
  பெற்றெடுத்த தங்ககட்டி
  கண்ணாலம் கட்டிக்கிட்டு
  வாழப்போகுது.
  அவர்கள் நூறாண்டு வாழ
  வாழ்த்த வாருங்கள்.
  பொம்மகத புத்தகத்த
  பூவுலகில் வாழவைக்க
  புதிய சிங்கம் வருகுது.
  அவர் புதிய முயற்சி
  முன்னெடுக்க வாழ்த்த
  வாருங்கள்.
  முயற்சியில் தளரா
  விக்ரம்
  புது வாழ்க்கையிலும்
  புதிய படைப்புளும்
  வெற்றி பெற நாம்
  துணையிருப்போம்.

  ReplyDelete
  Replies
  1. அருமையான வரிகள்!! ( ஆனா கவிதையான்னுதான் தெரியல! ;) )

   Delete
 47. படைப்புகளும்

  ReplyDelete
 48. எனது தந்தையாா் மறைவினால் அதிகப்படியான விடுப்பு எடுத்துவிட்ட காரணத்தால், மேற்கொண்டு விடுப்பு கிடைக்காத காரணத்தால், நமது ஜூனியா் எடிட்டாின் திருமண விழாவில் கலந்து கொள்ள இயலாததை வருத்தத்தோடு தொிவித்துக் கொள்கிறேன்!

  எனவே புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை இத்தளத்தின் வாயிலாகவே தொிவித்துக் கொள்கிறேன்!

  Happy Married Life

  Mr & Mrs. Junior Editer

  🎶🎶🌹🌹🌼🌼🌺🌺🌻🌻🎶🎶

  ReplyDelete
 49. அட தேவுடா ..கல்யாணத்துக்கு நேராய் போக முடியாட்டாலும் ஒரு வாழ்த்து தந்தி கொடுக்கலாம்னு நினைச்சிருந்தேன் ..கடேசியிலேதான் ஞாபகம் வருது..தந்திக்கு சமாதி கட்டி ரொம்ப நாளாச்சுன்னு..சரி..புறா கால்லேயாவது கட்டி அனுப்பலாம்னு பார்த்தா இருந்த கடேசி புறாவையும் வறுத்த கறிக்கு ஆசைப்பட்டு ரோஸ்ட் பண்ணியாச்சு.சரிசரி புகை சமிக்ஞ்சை அனுப்பிட வேண்டியதுதான்

  ReplyDelete
 50. ஜுனியர் எடிட்டருக்கு,எனது மனமார்ந்த,இனிய திருமணவாழ்த்துகள்..நீடுழி வாழ்க.,

  ReplyDelete
 51. ஜுனியர் எடிட்டருக்கு,எனது மனமார்ந்த,இனிய திருமணவாழ்த்துகள்

  அன்புடன்,
  அமர்நாத். சேலம்

  ReplyDelete
 52. நாளை இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஜூனியர் எடிட்டரை முன்கூட்டியே வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

  ReplyDelete
 53. நண்பர்களுடன் சிவகாசியில் இன்றைய ஏகாந்தமான மாலைப் பொழுதில் ஜூ.எடியின் திருமண விழாவில் கலந்துகொண்டது ஒரு பரவசமான சந்சோச அனுபவம்!

  அத்தனை சொந்தம், பந்தம், தொழில்ரீதியான நண்பர்கள் மற்றும் பிஸியான வேலைகளின் நடுவிலும் நமது நண்பர்களிடம் தனிப்பட்ட அக்கறையோடு சீனியர் எடிட்டர், எடிட்டர் ஆகியோர் நமக்களித்த அன்பான உபசரிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பெருமை கொள்ளச் செய்கிறது!

  வாழ்வின் மறக்கமுடியாத சந்தோச நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக இருந்திடுமென்பது உறுதி!

  ReplyDelete
 54. திரு&திருமதி ஜூனியர் எடிட்டருக்கு இனிய திருமண நன்நாள் வாழ்த்துக்கள்.
  🎊🎆🎉🌹💐💝💏🎁

  ReplyDelete
 55. ஜுனியர் எடிட்டர் அவர்களுக்கு, இனிய மன நிறைவான திருமண நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 56. ஜுனியர் எடிட்டர் அவர்களுக்கு, இனிய மன நிறைவான திருமண நாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 57. JUNIOR Editor sir Happy wedding day &Best wishes for successful life with your wife. I pray to God for your successful &Happy life. 💐💐💐🎇🎇🎇🌹🌹🌹🌹🌹🌹🌹🌻🌻🌻🌻🌻🎁🎁🎁🎁🎂🎂🎂🎂🎂🎂🎂🎂😃😃😃😃😃👏👏👏👏👏👏🍨🍨🍨🍨💝💝💝💟💕💟💕💟💕💟💕💗💟💞💕👌👌👌🍇🍇🍇💍💍💍💍

  ReplyDelete
 58. மழை வருது மழை வருது....

  ReplyDelete
 59. ஜூனியருக்கும் , அவர்தம் நெடும் பயணத்துணைவியாருக்கும் மனம் நிறைந்த மணநாள் வாழ்த்துகள் !வாழ்க பல்லாண்டு எடுத்த முயற்சியெல்லாம் வெற்றி எனும் துணையோடு !

  ReplyDelete
 60. இன்று திருமணம் செய்து கொள்ளும் ஜுனியர் எடிட்டருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 61. 🎉🎉🎉🎉🎈🎈🎈🎈🎈🎁🎁🎁🎁🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹திரு&திருமதி ஜூனியர் எடிட்டருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
  ----விஜயராகவன் & தாமரைலட்சுமி & பொடியன் நிரஞ்சன்...🌹🌹🌹🌹🌹🎁🎁🎁🎁🎁🎉🎉🎉🎉🎉

  ReplyDelete
  Replies
  1. எங்கே நண்பரே ரொம்ப நாளாக ஆளேயே காணும்...

   Delete
 62. ஜூனியர் எடிட்டருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 63. இன்று இல்வாழ்வில் அடியெடுத்து வைக்கும் ஜூனியர் எடிட்டருக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள். நேரில் சென்று வாழ்த்திய நம் காமிக்ஸ் சொந்தங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 64. ஜூனியர் எடிட்டர் அவர்களுக்கு
  எனது இதயம் நிறைந்த திருமண நல்வாழ்த்துகள்.
  தாங்களும் தங்களது துணைவியாரும்
  அனைத்து செல்வங்களையும் பெற்று
  வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்.
  "மணமக்கள் நலமுடன் வாழ்க பல்லாண்டு"

  ReplyDelete
 65. வாவ்! புக் வந்தாச்சு!!

  ReplyDelete
  Replies
  1. என் போட்டோ பிாின்ஸ் புக்ல
   மல்டி கலா் பிாின்டிங்ல அசத்துது!

   வாவ்! What a surprise!

   Delete
  2. ஆஹா எனக்கும் வந்தாச்சாம்..நன்றி மிதுன்..கிளம்பிட்டேன்...

   Delete
 66. நமது இல்ல திருமணவிழாவினை நேரில் சென்று சிறப்பித்த நம் தோழர்களுக்கு
  எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.

  ReplyDelete
 67. 💐💐💐💐💐இருமணமும் ஒரு மனதாய் இணைந்த உள்ளங்களுக்கு எனது இனிய திருமண நல் வாழ்த்துக்கள். ..💐💐💐💐💐💐

  ReplyDelete
 68. December petti....vanthachu.cour thavagal kettachu!

  ReplyDelete
 69. சிங்கக்குட்டி செல்லத்துக்கு வாழ்த்துக்கள்.
  அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனின் அருள் புது மண தம்பதியர் மீதும்,குடும்பத்தார் மீதும் என்றென்றும் நின்று நிலைக்கட்டுமாக...!!

  ReplyDelete
 70. கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியாச்சி,
  மகிழ்ச்சி, மகிழ்ச்சி,மகிழ்ச்சி.
  😁😁😁

  ReplyDelete
 71. குரியர்ல ஏதோ பார்சல் வந்திருக்காம்°°°திறந்ததும் வெடிக்காம இருந்தா சரிதான்.

  ReplyDelete
 72. குரியர்ல ஏதோ பார்சல் வந்திருக்காம்°°°திறந்ததும் வெடிக்காம இருந்தா சரிதான்.

  ReplyDelete
 73. வாவ் வண்ணத்துல நம்ம புகைப்படம்...சும்மா மினு மினுங்குது....முருகன் அருளால் எனது தங்கை மகள் பெயரும்.... திருமணப்பரிசாய் எங்களுக்கும்...இதை விட சந்தோசம் இருக்குமா...நான்கு அட்டயும் நீல வண்ணத்தில் தகதகக்க..... என்னடான்னு கேக்காதீங்க கடல் பிரின்சுன்னா நீலம்தானே...நீலப் பொடியர்களும் மகிழ்ச்சியை கூட்ட....மகிழ்ச்சி மகிழ்ச்சி...மகிழ்ச்சியே...மனநிறைவுடன் மணமக்களுக்கு மீண்டும் மணநாள் வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. அப்புறம் காமிக்ஸ் ஃபேன்களில் சிறந்தவர் என சான்றிதழ்..நீரின்றி அமையாது காமிக்ஸ் என ஒரு வாழ்த்து ...

   Delete
 74. சும்மா பிரின்ஸ் அட்டை வழக்கம் போல அசத்த..உள் பக்கங்களை திறந்தால் பழைய அட்டைகள் மனதை மயக்க ..பக்கங்களை வேகமாக புரட்டினால் வண்ணம் மின்ன ... ஆனா...ஆனா..ஓநாயின் சங்கீதம் முதல் கட்டம் மயங்கச் செய்ய உள் பக்களை புரட்டினால் சும்மா வண்ணங்களை வாரி இறைத்திருக்கிறார்கள்...மயங்காத குறைதான்....அட்டைப்படம் வித்தியாசமான வண்ணச் சேர்க்கை அற்புதத்த வாரியிறைக்க....மாயாவி பதிப்பு சும்மா மிரட்ட...நம்ம பொஇயர்களை தெரியுமா என மனதை எங்கோ கூட்டிச் செல்லும் ஆசிரியரின் வைர வரிகளை மகிழ்வுடன் நோக்கி ..இரவே பொடியர்கள தரிசிப்போம்னு நிறைவு செய்கிறேன்....

  ReplyDelete
  Replies
  1. நண்பரே! எனக்கு இன்னும் புத்தகம் கிடைக்காததால் இதை கேட்கிறேன்... பார்சலில் "நிஜங்களின் நிசப்தம்" இருந்ததா?

   Delete