Powered By Blogger

Wednesday, April 05, 2023

புதுசாய் ஒரு சாயா !

 நண்பர்களே,

வணக்கம். பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதனில், கூரியர்களாச்சும்  உங்களுக்குக் காலத்தோடு கிடைத்தால் தேவலாம் என்பேன் ; நேற்றைக்கு முன்மதியமே டெஸ்பாட்ச் இவ்விடம் நிறைவுற்றது ! உங்களின் சந்தா தேர்வுகளுக்கேற்ப இம்மாதத்து கூரியர்களின் புஷ்டியும் அமைந்திருக்கும் என்பதை ஏற்கனவே கோடிட்டுக் காட்டியிருந்தேன் - so 'இன்னா கோவாலு....இந்த மாசம் புக் ஒயுங்கா போடலியா ?' என்றோ...."இன்னாமே பார்சல்லே புக் ஒண்ணே ஒண்ணு தான் கீது ?" என்றோ கண்சிவக்கும் முன்பாய், நீங்கள் இணைந்திடத் தவறியிருந்த சந்தாக்கள் உள்ளனவா ? என்பது குறித்து சரி பார்க்கக் கோருவேன் !

Doubtless - இம்மாதத்து மூன்று இதழ்களுமே தத்தம் பாணிகளில்  சிறப்பானவைகளே !  ஆனால் பருமனிலும், ஆக்கத்திலும் கண்ணைக் கவரவிருப்பது டிடெக்டிவ் சார்லி digest என்பதில் எனக்குப் பெரிதாய் ஐயங்கள் லேது ! படித்து ரசித்தாலும் சரி, 'பொம்ம' பார்த்து பக்கங்களைப் புரட்டினாலும் சரி ; தலைக்கு தாக்கான் கொடுக்கப் பயன்படுத்தினாலும் சரி  - இந்த குண்டு புக் நிச்சயம் உங்களுக்கு கணிசமான மகிழ்வைத் தந்திடாது போகாது folks ! MAXI சைஸின்  பாதியளவில் வெளியாகியுள்ள புக் எனும் போது, அது குறித்த அபிப்பிராய பேதங்களுக்குமே நிச்சயமாய் பஞ்சம் இருக்கப் போவதில்லை என்று ஸ்டீலின் பட்சிகள் சொல்லுகின்றன ! 'நான் கேட்டேனா ? உன்னே சைஸ் மாத்த சொல்லிக் கேட்டேனா ?' என்று ஒரு அணியும், "இத பண்ணச் சொல்லி தானய்யா தொண்டை தண்ணியெல்லாம் வத்துற மட்டுக்கு குரல் கொடுத்தேன் ?" என்று இன்னொரு அணியும் ஆஜராகின், நோ ஆச்சர்யம்ஸ் ! ஆளில்லா சமீப நாள் டீ-கடையில் யீ பஜ்ஜிகள் கொஞ்சம் சுவாரஸ்யங்களை ஏற்றினால் ஓ.கே. தான் ! கதைகளைப் பொறுத்தவரைக்கும் ஒரேயொரு மறுபதிப்பு நீங்கலாய் பாக்கி சகலமும் newbies ! So நீங்கள் க்ளாஸிக் ஜானர்களின் காதலர்களாக இருந்தாலுமே, பழைய கதைகளைக் கொண்டு அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் அவசியங்கள் இராது ! கதைகள் உருவான நாட்கள் பழசு ; பாணிகளும் பழசு ; குறைந்த பட்சமாய் கதைகளின் தேர்வுகளிலாவது அந்தப் பழமை மிளிராது போகட்டுமே என்று நினைத்தோம் ! பொறுமையாய், நிதானமாய் சார்லியோடு பொழுதுகளை நகர்த்தியான பின்னே உங்களின் அபிப்பிராயங்களை மறவாது பகிர்ந்திடுங்களேன் - ப்ளீஸ் ? 

இம்மாதத்தின் ஒரே கலர் இதழான "எந்தையின் கதை" - in many ways இம்மாதத்து எங்களது சொந்தக் கதையை உணர்த்துமொரு தலைப்பாகவுமே அமைந்து விட்டுள்ளது ! சீனியர் எடிட்டரின் சுகவீனப் படலம் தொடர்ந்து சென்றிட, மருத்துவர்களிடமும், படைத்தவரிடமும் கரம் கூப்பி நின்று வருகிறோம் ! நம் XIII மர்மத்தின் "எந்தையின் கதை" ஆல்பமோ - ஜானதன் பிளையின் கதையை ரொம்ப crisp ஆகச் சொல்லியுள்ளது ! நண்பர் பழனி எங்கிருப்பினும் நிம்மதியாய் இருக்க ஒரு சிறு வேண்டுதலோடு இந்த இதழினுள் புகுந்திடுவோமே ? 

And ஏப்ரலின் மூன்றாவது இதழான V காமிக்ஸ் பற்றி போன பதிவிலேயே நிறைய பேசி விட்டாச்சு என்பதால் அதனோடு இணைத்திட தற்சமயத்துக்கு புதுசாய் சேதிகள் நஹி ! So இரு இத்தாலிய இமயங்கள் இணைந்திடும் அழகை ரசிக்க மாத்திரமே request வைப்பேன் உங்களிடம் ! 

ஆன்லைன் லிஸ்டிங்ஸ் ரெடி guys ; கடைகளுக்கும் இன்று முதல் அனுப்புகிறோம் ! So சந்தாக்களுக்கு அப்பாலுள்ள நண்பர்கள் களமிறங்கவும் all is ready ! Bye all ....see you around ! Have a great week ahead !


P.S : வரும் ஏப்ரல் 8 முதலாய் 18 தேதி வரைக்கும் திருவண்ணாமலை நகரில் புத்தக விழா நடைபெறவுள்ளது & நாமங்கு இருப்போம் ! Please do visit us !


244 comments:

  1. Meyyalume firstuuu after long time

    ReplyDelete
  2. புத்தகம் இன்னைக்கு கிடைக்குமான்னு தெரியல..எப்பவுமே இரண்டாவது நாள் தான் கிடைக்கும்..

    ReplyDelete
  3. வணக்கமுங்கோ 🙏🙏

    ReplyDelete
  4. Tex & சாகோர் மல்டி starrer ஸ்டோரி கலக்குறீங்க editor சார்.

    ReplyDelete
  5. வணக்கம் சார் & நண்பர்களே.

    ReplyDelete
  6. ஆன்லைன் புக்பேர் அப்டேட்ஸ் எதும் இல்லையா Sir

    ReplyDelete
  7. சீனியர் எடிட்டரின் சுகவீனப் படலம் தொடர்ந்து சென்றிட, மருத்துவர்களிடமும், படைத்தவரிடமும் கரம் கூப்பி நின்று வருகிறோம்
    சிவனின் அருளால் நல்லதே நடக்கும் 🙏🙏

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சார் நல்லதே நடக்கும்.

      Delete
  8. கொரியர் அலுவலகமே சென்று இன்று இதழ் கிடைக்கவில்லை என்ற சேதியை அறிந்து கொண்டு வந்தாயிற்று சார்..நாளையாவது கிடைக்க வேண்டும்...:-(

    ReplyDelete
    Replies
    1. என்ன. இன்னு எங்க தானைத் தலைவருக்கு புக் அனுப்பலயா. இப்பவே சிவகாசி ஆபீஸ் முற்றுகையிடுறோம். தலைவர் கைல புக் ஒப்படைக்கிற வரைக்கும் போராடுறோம். அப்படியே என்னோட சந்தா புக்கையும் எடிட்டரே கொடுக்கணுமுன்னு தர்ணா பண்றோம். யார் யார் ஆர்பாட்டத்துக்கு வாரீங்க. சொல்லுங்க. இடம் புடிச்சி போடுறேன்.

      Delete
  9. சீனியர் எடிட்டரின் சுகவீனப் படலம் தொடர்ந்து சென்றிட, மருத்துவர்களிடமும், படைத்தவரிடமும் கரம் கூப்பி நின்று வருகிறோம்

    ####

    சீனியர் எடிட்டர் பூரணநலமடைய எங்களது மனம்கனிந்த பிரார்தனைகள் சார்..

    ReplyDelete
  10. Any dates finalised for online book fair sir? Eagerly waiting for the new books. What would be the budget for online book fair special books?

    ReplyDelete
  11. சீனியர் எடிட்டரின் சுகவீனப் படலம் தொடர்ந்து சென்றிட, மருத்துவர்களிடமும், படைத்தவரிடமும் கரம் கூப்பி நின்று வருகிறோம் !

    🙏🙏இறைவன் அருளால் விரைவில் நலம் பெற பிராத்தனை செய்கிறோம் 🙏🙏🙏

    ReplyDelete
  12. சீனியர் எடிட்டர் பூரணநலமடைய எங்களது மனம்கனிந்த பிரார்தனைகள் சார்..

    Reply

    ReplyDelete
  13. வணக்கம் ஆசிரியரே

    ReplyDelete
  14. வணக்கம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன் சார்!

      Delete
  15. //சீனியர் எடிட்டரின் சுகவீனப் படலம் தொடர்ந்து சென்றிட, மருத்துவர்களிடமும், படைத்தவரிடமும் கரம் கூப்பி நின்று வருகிறோம்.//

    -சீனியர் எடிட்டர் நலம்பெற எல்லாம் வல்ல எம்பெருமானை பிரார்த்தனை செய்கிறேன் சார்🙏🙏🙏

    ReplyDelete
  16. @Edi Sir..😍😘

    சீனியர் விரைவில் நலம்பெற சாய்பாபா வை வேண்டி கொள்கிறேன்..🙏💐

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. // XIII மர்மத்தின் "எந்தையின் கதை" ஆல்பமோ - ஜானதன் பிளையின் கதையை ரொம்ப crisp ஆகச் சொல்லியுள்ளது !///

    ----மர்மத்தின் அடுத்த முடிச்சை காண ஆவலுடன் சார்.

    ReplyDelete
  19. ///இரு இத்தாலிய இமயங்கள் இணைந்திடும் அழகை ரசிக்க மாத்திரமே request வைப்பேன் உங்களிடம் ! //--- ரசித்திடுவோம்

    ReplyDelete
  20. ///8 முதலாய் 18 தேதி வரைக்கும் திருவண்ணாமலை நகரில் புத்தக விழா நடைபெறவுள்ளது & நாமங்கு இருப்போம்//--- நெருப்பாக சிவபெருமான் வீற்றுள்ள பூமியில் நமக்கு விற்பனை & வரவேற்பு சிறப்பாக இருக்கட்டும்,அவன் அருளால்...💐

    ReplyDelete
  21. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.
    அவரது அருகில் இருந்து கவனித்துக்கொள்ளுங்கள் சார்.
    காமிக்ஸ் சார்ந்த விஷயங்களை சிறிது நாள் ஒத்தி வைத்து விட்டு அவரது உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுவதற்கு முன்னுரிமை அளியுங்கள்.
    தங்கள் குடும்பநலனே இங்கே முக்கியம்.

    ReplyDelete
    Replies
    1. // காமிக்ஸ் சார்ந்த விஷயங்களை சிறிது நாள் ஒத்தி வைத்து விட்டு அவரது உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுவதற்கு முன்னுரிமை அளியுங்கள். //
      Yes sir!

      Delete
    2. ஆமாங்க ஆசிரியர் சார். சீனியர் சார் உடல் நலனே தற்போது மிக முக்கியம்

      Delete
  22. சீனியர் எடிட்டர் பூரணநலமடைய எங்களது மனம்கனிந்த பிரார்தனைகள் சார்!

    ReplyDelete
    Replies
    1. சீனியர் எடிட்டர் பூரணநலமடைய எங்களது மனம்கனிந்த பிரார்தனைகள் சார்! கவலை வேண்டாம் சார் நாங்கள் எல்லாரும் இருக்கிறோம்.

      Delete
  23. சீனியர் எடிட்டர் விரைவில் நலமடைய பிரார்த்தனைகள்

    ReplyDelete
  24. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.🙏

    ReplyDelete
  25. சார் சார்லி புக் சைஸ் சூப்பர்.S60 மீதமுள்ள புத்தகங்களை இதோ சைஸில் தொடருங்கள் ப்ளீஸ்...

    ReplyDelete
  26. சீனியர் எடிட்டர் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல ஈசனருளை வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  27. Courier received.
    First look , Charlie making super.excellent.

    ReplyDelete
  28. டியர் சார்.,
    நம் மதிப்பிற்குரிய சீனியர் எடிட்டர் -பூர்ண குணமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் சார்.
    தந்தை-வயது முதிர்வு ஏற்பட்டாலும்., அவர் இருக்கும்வரை நமக்கு கிடைக்கும் மரியாதையே தனிதான்..."

    ReplyDelete
  29. Pray for speedy recovery of senior editor!

    ReplyDelete
  30. உன்னைச் சொல்லி குற்றமில்லை

    என்னைச் சொல்லி குற்றமில்லை

    உன்னைச் சொல்லி குற்றமில்லை

    என்னைச் சொல்லி குற்றமில்லை


    காலம் செய்த கோலமடி

    கொரியர் செய்த குற்றமடி

    கொரியர் செய்த குற்றமடி



    உன்னைச் சொல்லி குற்றமில்லை

    என்னைச் சொல்லி குற்றமில்லை

    உன்னைச் சொல்லி குற்றமில்லை

    என்னைச் சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி

    கொரியர் செய்த குற்றமடி

    கொரியர் செய்த குற்றமடி



    மயங்க வைத்த ஜேசனுக்கு
    கதை முடிக்க இடமுமில்லை…

    மயங்க வைத்த ஜேசனுக்கு
    கதை முடிக்க இடமுமில்லை…



    படிக்க வைத்த விசயருக்கு

    முடித்து வைக்க நேரமில்லை…

    படிக்க வைத்த விசயருக்கு

    முடித்து வைக்க நேரமில்லை…



    உன்னைச் சொல்லி குற்றமில்லை

    என்னைச் சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி

    கொரியர் செய்த குற்றமடி

    கொரியர் செய்த குற்றமடி



    உனக்கெனவே நான் படித்தேன்

    எனக்கெனவா நீ வளர்ந்தாய்…

    உனக்கெனவா நான் படித்தேன்

    எனக்கெனவா நீ வளர்ந்தாய்…



    கணக்கினிலே! தவறு செய்த

    விசயர் செய்த குற்றமடி…

    கணக்கினிலே! தவறு செய்த

    விசயர் செய்த குற்றமடி…



    பல கதையை படிக்க வைத்தார்

    சில கதையை தவிர்த்து விட்டார்…

    பல கதையை படிக்க வைத்தார்

    சில கதையை தவிர்த்து விட்டார்



    பதிமூனு மீது குற்றமில்லை

    விசயர் செய்த குற்றமடி

    பதிமூனு மீது குற்றமில்லை

    விசயர் செய்த குற்றமடி



    உன்னைச் சொல்லி குற்றமில்லை

    என்னைச் சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த கோலமடி

    கொரியர் செய்த குற்றமடி

    கொரியர் செய்த குற்றமடி

    ReplyDelete
    Replies
    1. ஹலோ கோரியர் ஆபிஸ் ங்களா, கோவை கவிஞருக்கு புத்தகம் எப்போ வரும்
      புத்தக்கங்கள நினைச்சு இங்கனு பாட்டு பாடிகிட்டு இருக்காருங்க

      பாட்டு பாடுறத நிப்பாட்டிடு கொரியர் ஆபிஸ் வந்தா கிடைச்சுடுங்களா, சரிங்க
      சொல்லிடுறேன்

      Delete
    2. ஸ்டீல், கொரியர் ஆபீஸ்க்கு போறே கேப்புல ரெண்டு பாட்டு பாடிடுவாருங்க ரம்யா. (இதத்தான் சந்துல சிந்து பாடறதுங்கறதுன்னு சொல்லுவாங்களா')

      Delete
    3. பொன்ராஜ். உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல. நீங்க ஒரு பிறவிக் கலைஞன்.

      Delete
  31. கவலை வேண்டாம் சார், சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெறுவார். அரை நூறாண்டுக்கு மேலாக வெற்றி நடை போடும் ஒரு தமிழ் காமிக்ஸ் குழுமத்தை அடிகோலிய அவருக்கு, அதற்குரிய அங்கீகாரம் இந்த சிறு வட்டத்தைத் தாண்டி இன்னும் கிடைக்கவில்லை. அவர் நலம் பெற்றதும், வெப்பம் தணிந்த மாதமொன்றில், ஒரு வாசகர் சந்திப்பை ஏற்பாடு செய்து அவரை கௌரவிக்க வேண்டியது தமிழ் காமிக்ஸ் வாசகர்களின் கடமை

    ReplyDelete
    Replies
    1. நிஜமே கார்த்திக் ; ஒரு அங்கீகாரத்துக்கு..பாராட்டுக்கு சீனியர் எடிட்டர் ஏங்கிடவில்லை என்று சொன்னால் அது நிச்சயம் பொய்யாகிடும் !

      Deep inside அவருள் உறையும் குழந்தையானது craves for it என்பது எனக்குத் தெரியும் ! பார்ப்போமே அதற்கான தருணமாய் ஆகஸ்ட் அமைந்திடுமாவென்று ?!

      Delete
  32. சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  33. சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  34. சீனியர் எடிட்டர் அவர்களு விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  35. கொரியர் இதுவரைக்கும் இன்னும் வரவில்லை.
    இதுவரைக்கும் சரியாக வந்து கொண்டிருந்த கொரியர் இந்த முறை தான் தாமதம்.
    நாளை நமதே என்று எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  36. சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெற பிரார்த்திக்கின்றேன் சார்....
    ஏப்ரல் இதழ்களை கைப்பற்றியாச்சி,பெட்டியை பிரிக்கும்போது என்னடா இது ஹார்ட் பைண்டிங்கில் டெக்ஸ் குண்டு புக் ஸைஸில் ஒரு புக் வெளியே வருது,சர்ப்பைஸ் வெளியீடா என யோசித்துக் கொண்டே எடுத்தேன்,அட இது சார்லி புக்கா....
    சார்லி இதழின் இந்த சைஸ் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,இதே தொடர்ந்தால் மகிழ்வேன்,உள்ளே பிரித்து படித்தால் தான் தெரியும் பேனல் சைஸ் எல்லாம் எப்படி இருக்குன்னு.....
    இந்த வார இறுதியில் ஏப்ரல் இதழ்களை படிக்க முடியும்னு நம்புகிறேன்...

    ReplyDelete
  37. @Edi Sir..😍😘

    #பொன் கிடைத்தாலும் கிடைக்காத புதனில், கூரியர்களாச்சும் உங்களுக்குக் காலத்தோடு கிடைத்தால் தேவலாம் என்பேன் ; நேற்றைக்கு முன்மதியமே டெஸ்பாட்ச் இவ்விடம் நிறைவுற்றது ! #


    நம்பிள்க்கு இன்னும் கூரியர் வர்லை..😑😶

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் வரல ஜம்பிங் தல...

      Delete
  38. எந்தையின் கதை வந்திருக்கு

    V காமிக்ஸ் வந்திருக்கு.

    சார்லி டைஜஸ்ட் வர்ல.

    சார்லி ஸ்மாஷிங் 60 ஸ் ல தானே வரும்?

    என் சந்தா எண் 6028.ஆனா வர்லியே!!!

    நாளைக்கு வருமா?

    இல்லாங்காட்டி நாளைக்கு ஆபிஸ்- க்கு போன் போட்டுருவோமா?

    ReplyDelete
    Replies
    1. // இல்லாங்காட்டி நாளைக்கு ஆபிஸ்- க்கு போன் போட்டுருவோமா? //
      Good to do this!

      Delete
  39. சீனியர் எடிட்டர் அவர்கள் விரைவில் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  40. சீனியர் எடிட்டரின் உடல்நிலை குறித்த தகவல் சற்றே வருத்தமளிக்கிறது.

    எனினும், நெஞ்சுறுதி மிக்க சீனியர் எடிட்டர் விரைவிலேயே மீண்டெழுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது!

    முத்து பொன்விழா ஆண்டு நிறைவு விழாவை உங்களுடன் ஆர்ப்பரித்துக் கொண்டாட ஆர்வமாய் காத்திருக்கிறோம் சீனியர் எடிட்டர் சார்.. சீக்கிரமாய் எழுந்து வாருங்கள்!

    ReplyDelete
  41. இன்று மாலை கொரியர் ஆபீஸுக்குச் சென்று எனக்கான கவரைக் கைப்பற்றினேன். நான் Supreme-60யின் சந்தாதாரன் அல்ல என்பதால்(!!) எனக்கு புத்தகங்கள் டப்பியில் வரவில்லை!

    இருந்த இரண்டு புத்தகங்களில் V-காமிக்ஸ் - அட்டைப்படம், புத்தக வடிவமைப்பு ஆகியவற்றால் இம்முறையும் மிக அதிக கவனக் கோரல்களைப் பெறுகிறது! சற்றே நெருக்கமான, அடர்த்தியான உள்பக்க சித்திரங்கள் எனக்கு பழைய 'பழிவாங்கும் புயல்' ஓவியங்களையும், புத்தக வடிவமைப்பையும் ஞாபகப்படுத்தின!

    'எந்தையின் கதை' அடர் வண்ண அட்டைப்படம் - மிரட்டுகிறது! வெளிர் பச்சை நிறங்களை அதிகமாகக் கொண்ட உள்பக்கச் சித்திரங்கள் நமது இந்த வெயில் கால வாசிப்புகளை இதமாக்கிடக்கூடும்!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. EV.. You are missing a super book in high quality making , as LMS.

      Delete

      Delete
    3. புரிகிறதுங்க பத்து சார்! பார்ப்போம்!!

      Delete

  42. ***சீனியர் எடிட்டரின் சுகவீனப் படலம் தொடர்ந்து சென்றிட, மருத்துவர்களிடமும், படைத்தவரிடமும் கரம் கூப்பி நின்று வருகிறோம்****

    சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன் சார்!

    Reply

    ReplyDelete
  43. சீனியர் எடிட்டர் விரைவில் நலம் பெற்று இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  44. Senior editor உடல் சுகவினதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்ததிக்கிறேன்

    ReplyDelete
  45. சீனியர் எடிட்டர் உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  46. தேங்க்ஸ் all ! உங்கள் அன்பும், பிரார்த்தனைகளும் வீண் போகவில்லை - அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து சீனியர் நேற்று மாலை வீடு திரும்பியாச்சு ! இனி சிறுகச் சிறுக தேறிடுவாரென்ற நம்பிக்கை உள்ளது !

    Fingers crossed !

    ReplyDelete
    Replies
    1. நல்லதுங் சார்🙏 எம்பெருமான் அருள் துணையிருக்கும்....

      சீனியர் சாரோடு விரைவில் உரையாடுவோம்... முத்து பொன்விழாவில் அவரோடு கொண்டாடுவோம்.💐💐💐

      Delete
    2. கடவுள் எப்போதும் நல்லவர்களை கை விட மாட்டார் கடவுளுக்கு நன்றிகள் சீனியர் சிங்கம் வெகு விரைவில் குணமடைந்து நம்முடன் இனைவார்🙏

      Delete
    3. நன்று ஆசிரியரே🙏

      Delete
    4. சீனியர் எடிட்டர் பல்லாண்டு நலமுடன் இருப்பார்..😍😘❤💐🌷

      Delete
    5. கடவுளின் கருணைக்கு நன்றி. சீனியர்எடிட்டர் பூரண குணமடைந்து முழு ஆரோக்கியத்துடன் திரும்ப பிரார்த்தனைகளை தொடருவோம்.

      Delete
    6. உங்கள் தந்தையின் ஆரோக்கியத்திற்காக, எங்களது மன்றாட்டுக்கள் அனு தினமும் இருக்கும் சார்.

      Delete
    7. இறைவனுக்கு நன்றிகள் சார்..

      Delete
  47. சார்லி புத்தகம் நன்றாக உள்ளது
    எனக்கு பிடித்திருக்கிறது

    ReplyDelete
  48. @Edi Sir..😍😃

    நம்பிள்கி வீட்டுக்கு பார்சல் வந்தாச்சு..😃💐😎

    உள்ளே இருக்கறதை நைட்டு போய்தான் சரிபார்க்கோணும்..😃🤝

    ReplyDelete
    Replies
    1. ஸோகோர் புக் வைக்காம விட்டுட்டாங்கனு காத்து வாக்குல ஒரு செய்தி பரவுச்சீங்களே ஜம்பிங்காரே...😜

      Delete
    2. என்னாது. சங்க தலைவருக்கே ஸோகோர் அனுப்பலையா. அப்ப இது எந்த வெளி நாட்டு சதின்னு கண்டு பிடிக்க சிபிஐ கூப்பிடுங்க.

      Delete
  49. புத்தகங்கள் V comics & கி.நா. வந்து கிடைத்தன சார்....

    S60இல்லாத சந்தா என்பதால் கவரில் வந்தது... ரொம்ப நாளைக்கு பிறகு கவரில் காமிக்ஸ்.... பழைய நினைவுகளை கிளறிட்டது!😍

    முதல் முதலில் சிவகாசிக்கு பணம் செலுத்தி காமிக்ஸ் வாங்கிய 1996 தீபாவளி மலர்-நள்ளிரவு வேட்டை..! தொடர்ச்சியாக 1997ன் சந்தா ரூ120 அல்லது ரூ135 செலுத்தி முதல்முறையாக சந்தாதாரர் ஆனது நினைவுல உள்ளது...

    ReplyDelete
  50. 3மாதமாக சன்னமான V comics, இம்மாதம் நல்ல புஷ்டியான சைசில். பேப்பர் வெளீர் மஞ்சள் கலரில் அருமையான பீலீங் தருது.

    க/வெ ஓவியங்களுக்கு ஒரு ஸ்பெசல் லுக் தருகிறது.... ஜம்போவின் முதல் இதழான "தலயின் காற்றுக்கு ஏது வேலி"?--போலவே இதுவும் ஓவியங்கள் பட்டாசு ரகம் சார்.

    சும்மா புரட்டலில் முதல் பக்க ஓவியமே சும்மா மிரட்டுது... அந்த புல்வெளியை ஊடுவிக்கொண்டு வரும் ஸோகோர் ஓவியம் அள்ளிடுது.. ஏகப்பட்ட ஓவியங்கள் அசரடிக்கிறது. ஓவிய ரசிப்பாளர்களுக்கு செம விருந்து வெயிட்டிங்....

    ReplyDelete
    Replies
    1. நீஈஈஈண்ட நாட்களுக்கு பிறகு வாசகர் கடிதம் பகுதியில் என் பெயரைக் கண்டு மனம் குதூகலிக்கிறது.

      Delete
    2. @விக்ரம் , Vcomics editor- ஆங் V comicsதயாரிப்பு தரம் நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே செல்கிறது..ஸ்பெசல் பாராட்டுகள்💐💐💐.

      காதைக்கொடுங்க,-லயனின் கதை வரிசைகள் அப்போது,முத்துவை விட லயனை விரும்பி வாசிக்க வைத்தன. தற்போது,மேக்கிங் ஆஃப்V, லயனை விட Vயை முதலில் எடுக்க வைக்கிறது....!!
      இது நமக்குள்! ஆசிரியருக்கு தெரிய காணும்!😉

      Delete
    3. அப்ப டெக்ஸ் ஓவியம் சுமாாகத்தான் உள்ளதா?ஜி
      நீங்களும் சகோர் கட்சிக்கு ஆதரவாக இருக்கீங்க.

      Delete
    4. டெக்சோட சித்தப்பாதாங்க ஜாகோர். எல்லாம் ஒரே கட்சி தாங்க.

      Delete
  51. வண்ண கி.நா. எந்தையின் கதை அட்டை அம்மாடி...செம தெறி ரகம் சார்...குக்ளக்ஸ் குளானின் எரியும் சின்னத்தில இருந்து கிளம்பும் புகை மண்டலம் டிஜிட்டல் வண்ணத்தில் செம.... துப்பறியும் எழுத்தாளர் ஜானதனின் அதிர்ச்சியை ஆயிரம் கதை சொல்கிறது.

    உள்பக்க ஓவியங்கள் ஆஹா.. செம செம பட்டாம்பூச்சிகள் ஆங்காங்கே , ஹி...ஹி...

    பழைய சம்பவங்கள் சொல்ல சற்றே வித்தியாசமான நிறத்தை ஓவியர் கையாண்டிருப்பது கூடுதல் வலு சேர்க்கும் போலிருக்கிறது.

    இங்கி பிங்கியெல்லாம் தேவையே இல்லை, சமீபத்திய ட்ரெண்ட் படி V comicsதான் முதலில்...!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. இனிமே எப்பவு இப்படிதான்.

      Delete
  52. "என் பெயர் லார்கோ" இனி வராதா

    ReplyDelete
  53. இம்மாத இதழ்கள் பெறப்பட்டன.
    ஒவ்வொன்றும் அற்புத தரத்தில் உள்ளன.

    நான் முதலில் தேர்ந்தெடுத்தது சார்லி ஸ்பெஷல்.
    இரண்டு கதைகளை அதிகம் எதிர்பார்த்தேன் ஒன்று கள்ளப் பருந்தின் கதை. இரண்டு சிறை மீட்டிய சித்திரக்கதை. இரண்டுமே இதில் இடம் பெறவில்லை.
    சார்லி ஸ்பெஷல் - இந்த புத்தக அளவே மிகச் சரியான அளவு.
    கைகளில் ஏந்தி படிப்பதற்கும் புத்தக அலமாரிகளில் சரியாக அடுக்கி வைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் சரியான அளவு.
    இந்த அளவினை பரிந்துரைத்த ஆசிரியருக்கு நன்றிகள் பல.
    I have mentioned my displeasure on the size of the 70s Special.
    Please continue in this size.

    ReplyDelete
  54. டிடெக்டிவ் சார்லி புத்தக சைஸ் அட்டகாசம்..!
    கையில் ஏந்திக்கொண்டோ.. படுத்தபடி வயிற்றின்மேல் (சரி.. சரி.. தொப்பையின் மேல்) வைத்துக்கொண்டோ படிக்க வெகு சுலபமாக இருக்கும்..!
    வேதாளர்.. ரிப் கிர்பி போல பெரிய சைஸ் புத்தகங்களை வயிற்றின் மேல் வைத்துக்கொண்டு படித்தபடி தூங்கிவிட்டால்.. புத்தகம் விழுந்து ஏற்படும் விளைவுகள் சார்லி சைஸில் கிடையாது..! எனவே தைரியமா படுத்துக்கொண்டு படிக்கலாம்.!

    எடிட்டர் சார்..

    அடுத்த ரிப் கிர்பி.. முடிந்தால் வேதாளர் உள்ளிட்ட எல்லா S60, S70 கதைகளையும் இதே சைசில் வெளியிட்டால் பயமின்றி படிப்போம்..😍

    ReplyDelete
  55. டெக்ஸ் vs ஸாகோர்..

    லாவகமாக கத்தி மேல் நடந்திருக்கிறார்கள்..!

    ReplyDelete
    Replies
    1. என்ன. அப்புட்டு தானா சார். அந்த கதையை படிச்ச பின்னாடி உங்களுக்கு எழுந்த உணர்வுகளை விவரிங்க. அது தா கதையை படிக்காத எங்களுக்கு மிகவும் தேவையானது.

      Delete
  56. டிடெக்டிவ் சார்லி ஸ்பெசல்-1

    மேக்கிங் ஆஃப் the supreme 60...

    S60ல வந்துள்ள சார்லி புக் சற்று முன் கைக்கு கிடைத்தது....

    மைன்ட் ப்ளோயிங் மேக்கிங்...👏👏👏👏👏👏

    ஆசிரியர் சார்@ பிடியுங்கள் 60பூங்கொத்துகளை....💐💐💐💐💐💐x10
    ஓப்பனாக சொல்லணும்னா சார்லி& கோ க்களை வாசிக்கும் எண்ணத்தில் நான் இல்லை...ஆனால் இந்த புத்தகத்தின் மேக்கிங் பார்க்கும் போது அதை மாற்றிக் கொண்டாவேனும் போல உள்ளது என்பதே நிலவரம்.

    ReplyDelete
    Replies
    1. மேக்கிங்கில் LMSக்கு அடுத்த இடத்தை இதற்கு வழங்கி சபாஷ் போட வைக்கிறது.

      #நன்கு உலர்ந்துள்ள உறுதியான ஹார்டு பைண்டிங்

      #புத்தகத்தின் முதுகே அதன் கனபரிமாணத்தை சொல்கிறது

      #கண்களை கூச வைக்காத வண்ணசேர்க்கையிலான அட்டைப்படம்

      #வரிவரியான சிவப்புநிற பின்னனியில் அடர் மஞ்சளில் எழுதப்பட்டுள்ள தகதகக்கும் பச்சை நிற லோகோ&டிடெக்டிவ் சார்லி ஸ்பெசல் 1"- என்ற மின்னும் டைட்டில்..

      #வசீகரிக்கும் நாயகன், அவனது பெயர் தான் சார்லி என அறிகிறேன்..😉(சார்லி ரசிகர்கள் மன்னிப்பார்களாக)

      #நீல வண்ண இரண்டு அடுக்கு போக்கர் விமானம்...

      ஆஹா.. 10/10 ஸ்கோர் பண்ணும் முன்னட்டை..

      Delete
    2. பின்னட்டை பழைய நாஷ்டால்ஜியாவை கொணரும் சார்லி& பழைய ரசிகர்களுக்கு...

      புத்தகம் பர்ஃபெக்ட் பைண்டிங் உடன் அசத்தல்..

      பழைமையை உணர்த்தும் லேசான வெளிர் மஞ்சள் நிற இலகுரக தாளில் இத்தனை பெரிய குண்டு புத்தகம் கையில் கனக்கவேயில்லை.. ஒரு பூங்கொத்தை ஏந்தியது போலத்தான் உள்ளது.

      வாசிக்க ஏற்ற ரெகுலர் டெக்ஸ் சைசில் கச்சிதமான பேனல் அமைப்பில் பட்டையை கிளப்புகிறது.

      "கண்ணை சுருக்க வைக்கும் நெருக்கமான பேனல்களை தவிர்க்க முடிந்துள்ளது"- இந்த சைஸின் மிகப்பெரிய பலமாக தெரிகிறது.

      தொடர்ச்சியாக இந்த பழமை நாயகர்கள் அணிவகுக்கும் S60 சீரியஸை இதே அளவில் வெளியிட்டால் விற்பனை & வரவேற்பு,மிக முக்கியமாக நாஷ்டால்ஜியா எஃபெக்ட்ஸ் அதிகம் இருக்கும் என தெரிகிறது சார்.

      பழங்காமீஸ் பிடிக்காத என்னையே இந்த சைஸ் அசத்திவிட்டது என்பதை இங்கே அனைவர் முன்னிலையிலும் ஒப்புக்கொள்கிறேன்.

      Delete
    3. ஸோகோர் மற்றும் கி.நா. வை வாசித்து விட்டு இந்த S0ஐ உறுதியாக வாசிப்பேன் என்று கூறிக்கொண்டு, கமான்சேக்களின் காட்டெருமை வேட்டியில் இணைந்து கொள்ள செல்கிறேன்!

      Delete
    4. ரொம்ப ஆவலை தூண்டி விட்டீர்கள் தோழரே. ஏற்கனவே விழுப்புரம் புத்தக கண்காட்சியில் S70 பார்த்திலிருந்து, அதை வாங்க ஆர்வம் வந்து விட்டது. ஆனால் ஏதோ பரபரப்பில் வாங்க மறந்து விட்டேன். இப்பொழுது இது வேறா. அடுத்து அருகில் எங்காவது நிகழும் புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டியது தான். சார்லியை கிட்டத்தட்ட நான் மறந்து விட்டேன். அவரை பற்றிய எந்த நினைவும் இல்லை. ஜார்ஜ்யையும் இவரையும் போட்டு குழப்பி கொள்கிறேன். S60 யையும் போகஸ் பண்ண வைத்து விட்டீர்கள்.

      Delete
  57. கிளா'சிக்' சைஸ் செம்ம!!!

    ReplyDelete
    Replies
    1. 'சிக்-, கென்று சொல்லி விட்டீர்களே---

      Delete
  58. சீனியர் எடிட்டர் பூரண குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் இன்னும் ஆயிரம் லயன் காமிக்ஸ் புத்தகங்களை அவர் படித்து ரசித்து அனுபவிக்க வேண்டும் என்று ஆசையும் படுகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அதை அவருக்கு நிச்சயமாக அருள்வார் என்ற நம்பிக்கையும் உண்டு

    ReplyDelete
  59. எடிட்டருக்கு போட்டியாக "S "காமிச்சை சீனியர் எடிட்டர் ஆரம்பித்து அதில் செஞ்சுரி அடித்து எடிட்டர் உள்படஎங்களை எல்லாம் மகிழ்விக்க வேண்டும்,

    ReplyDelete
    Replies
    1. அட்றா சக்கை...அட்றா சக்கை...!

      Delete
  60. வெற்றிகரமாக பார்சலை கைப்பற்றி பிரித்து ,ரசித்து இரண்டு இதழ்களை வாசித்தும் முடித்தாயிற்று..

    பார்சலை பிரித்ததும் என்னை மிக மிக மிக மனம் கவர்ந்த இதழ் என்னவெனில் தி சுப்ரீம் 60 சார்லி ஸ்பெஷல் இதழ்தான் ...நீண்ட நாட்கள் கழித்து இந்த அளவில் இப்படி குண்ண்டாக இதழை பார்த்து நிரம்ப நாட்களாகி விட்டன ..அட்டைப்பட ஓவியம் சாதாரணமாக தெரிந்தாலும் செம அழகு..ஓவியங்களிலும் ,எழுத்துக்களிலும் வழுவழுவென வழுக்க ஸ்பெஷல் எழுத்துக்கள் பச்சைபளீரென மின்ன இதழ் செம அட்டகாசம் ..பைண்டிங்கும் பக்காவாய் அமைய இதழை பிரித்தால் கெட்டிதாளில் ,அழகான சித்திரங்களில் ,தெளிவான அச்சு எழுத்துக்களில் இதழ் பட்டையை கிளப்புகிறது..கண்டிப்பாக இனி வரும் இதழ்கள் பெரிய அளவில் இல்லாமல் இதே போல் வந்தாலும் கைகளில் ஏந்தவும் ,வாசிக்கவும் ,அடுக்கவுமே மிக சிறப்பானதாக இருக்கும்..எனவே கண்டிப்பாக இதே வடிவத்தில் இதழை கொண்டு வர வேண்டுகிறேன்..இந்த ஒரே இதழில் பத்து கதைகள் இருப்பதால் இந்த இதழை இறுதியாக ஒவ்வொன்றாக படித்து கொள்ள ஏதுவாக நாளை முதல் காத்திருக்கிறது..அட்டகாசமான இதழ் ..அட்டகாசமான தரம் ..இனி இவ்விதழ்களின் கதைகளை படித்து விட்டு...

    ReplyDelete
  61. வி காமிக்ஸ்..


    கலவர பூமியில் கனவை தேடி...

    இரு வெற்றிகரமான நாயகர்கள் அட்டையில் படு அசத்தலாய் போஸ் கொடுக்க உள்ளே சித்திரங்களும் ,கதையும் பட்டாசாய் பரபரக்கிறது..டைகர் கதைக்கான கனமான களம் போல் கதை அமைந்தாலும் டெக்ஸ்ம் ,ஸாகோரும் சந்தித்து கொள்ளும் இடத்தில் இருந்து தான் கதை பரபர,விறுவிறுவென செல்கிறது..அதிலும் ஸாகோர் டெக்ஸின் குணாதிசியத்தை பற்றி அறிமுக படலத்திலியே புட்டு புட்டு வைக்க ரகளையாய் மின்னுகறது...போன இதழில் வசனங்கள் குறைவாய் அமைய அதற்கும் சேர்த்தி இதில் வசனங்கள் அமைந்து உள்ளது விறுவிறுப்பான நடையிலேயே..இந்த முறை வி காமிக்ஸ் கனமாய் அமைந்து போனதிலும் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
    Replies
    1. கலவர பூமியில் குறுக்கை கழட்டின வசனப் பிரவாகம் தலீவரே !

      Delete
    2. இப்போவெல்லாம் வளவள வசனங்கள் நிறைந்த காமிக்ஸ்கள் படிப்பதற்கு புதுசா ஒரு technique follow பண்றேன் சார். நண்பர்கள் சிலரிடமும் சொல்லி பரிசோதிச்சாச்சு சார்.
      அதாவது ஒரு குண்டு பலூனில் இருக்கும் முதல் வரியை மட்டும் படித்துவிட்டு அடுத்த பலூனுக்கு தாவிடுவேன் சார். அப்படியே repeat for all balloons சார். 95% கதை புரிந்து விடும் சார். வேகத்துக்கு வேகமும் ஆச்சு சார்.

      ஹி ஹி ஹி :-) :-) :-)

      இப்படியே 2022 புக்ஸ் முழுக்க வாசிச்சு முடிச்சாச்சு சார் :-)

      Delete
    3. கலவர பூமியில் குறுக்கை கழட்டின வசனப் பிரவாகம் தலீவரே..

      ####

      உண்மை சார்..கதையை படிக்கும்பொழுதே புரிந்து கொள்ள முடிந்தது..:-)

      Delete
  62. எந்தையின் கதை...!

    இரத்தப்படலம் போல் ஒரு காமிக்ஸ் காவியம் அமைவது மிக மிக கடினம் என்பது உண்மை..அதே சமயம் இரத்தப்படலத்தின் ஸ்பின்ஆப் கதைகள் அந்த அளவுக்கு வலு இல்லை என்பதே எனது கருத்து..விறுவிறுப்பும்,பரபரப்பும் இல்லை என்பதோடு கதையின் முடிச்சை அவிழ்ப்பது என்பது இல்லாமல் அது குழப்ப வைத்தது என்பதே உண்மை..இதுவரை வந்த ஸ்பின்ஆப் இதழ்களில் மங கூஸ் ஒன்றே கதையும் சரி ,குழப்பம் இன றி ரசிக்க வைத்ததும் சரி ..இது ஒன்றே என்னை பொறுத்தவரை ஸ்பின்ஆப் கதைகளில் வெற்றிகரமான ஒன்று..அந்த வெற்றி வரிசையில் அடுத்த இதழாக இல்லை அதற்கும் மேலாக இந்த எந்தையின் கதை அமைந்து உள்ளது ..எந்த குழப்பமும் இன்றி இரத்தபடல கதைக்கு எந்த முரணும் ஏற்படாதவாறு அட்டகாசமாய் அமைந்து உள்ளது...இதன் முழு வெற்றி மொழிப்பெயர்ப்பாளரையே சேரும் என்பது உண்மை ..காரணம் சிறிது மாறுபட்டாலும் கதையின் போக்கும் தவறவிடும்..வாசிக்கும் நண்பர்களுக்கு கதையில் குழப்பமே மிஞ்சும்..அது எதுவும் ஏற்படாமல் எந்தையின் கதை பரபர சுறுசுறுவென விறுவிறுப்பாய் படிக்க வைத்தது..இது போல் ஸ்பின்ஆப் கதைகள் அமைந்தால் தான் அது இரத்தப்படலத்திற்கு ஈடு செய்யும் என்பது உண்மை..அது எந்தையின் கதை ஈடு செய்கிறது..அருமை

    ReplyDelete
    Replies
    1. தலீவரே... கதைக்களம் அழகாய் அமையும் போது, மொழிபெயர்ப்பாளனுக்கு எக்ஸ்டரா நம்பர்கள் போடும் அவசியமே எழுவதில்லை ! இங்கு நிகழ்ந்துள்ளதும் அதுவே ; ஒரிஜினலை வால்பிடித்துப் போனாலே கரை சேர்ந்துவிடுகிறது !

      அப்புறம் அடுத்த XIII spin-off வெளிவரவிருக்கும் 2025-ல் உங்க பிஞ்சு மனச சித்தே திடமாக்கிக்கோங்கோ ! "ஜூடித் வார்னரு ...வார்னருன்னு ஒரு புள்ளையோட கத காத்திருக்குது ! சும்மா ஜிலோ ரகம் தான் !

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  63. ஐயா ஏன் 2025 வரை 2024 என்ன பாவம் செய்தது?.🤔🤔🤔

    ReplyDelete
    Replies
    1. 2024-ல் இரத்தப் படலம் மெயின் தொடரின் புது ஆல்பம் காத்துள்ளது நண்பரே !

      Delete
  64. டியர் எடிட்டர் சார் - சார்லி மேக்கிங் அட்டகாசம்.. Packing, paneling எல்லாமே அருமை.. 'இட்லி கன்னன்' படிக்கவும் நல்லா இருக்கான். இந்த format மத்த S60 புத்தகங்களுக்கும் தொடரலாமே சார்.. கிளாஸிக் + குண்டு புக் காம்போ அள்ளுது.. அப்படியே இரும்புக்கையாரையும் என்னிக்காச்சும் இதே சைஸ்ல காமிச்சிட்டீங்கன்னா ஜென்மம் சாபல்யம் அடஞ்சிரும் :)

    ReplyDelete
  65. ஆசிரியர் சார்@

    இன்றைய சார்லி ஸ்பெசல்1 பார்த்து விட்டு கிளம்பிய ஆவல், ஆசை,உந்துதல் எப்படி வேணா சொல்லலாம்....

    இந்த கைக்கு அடக்கமான சிக் சைசில் "காமிக்ஸ் உலக தலைமகன் இரும்புக்கையாரின் தொகுப்பை" இந்த ஆண்டே காண விழைகிறோம்!

    ஹார்டு கவர்ல இந்த சைஸ் மேட்டர்ஸ்...ஏகப்பட்ட உற்சாக ஊற்றுகளை கிளப்பிட்டது.

    ஏகப்பட்ட மைனஸ்களை கொண்டு இருந்தது மேக்ஸு சைஸ்....
    அதையெல்லாம் இந்த புதிய சைஸ் களைந்துள்ளது.

    இந்த சைசில் இரும்பு கையார் ஸ்பெசல் அட்ராக்சனை கொண்டு வருவார்.

    வரும் ஆகஸ்டு முத்து காமிக்ஸ் பொன்விழா கொண்டாட்டத்தில் இந்த இரும்புக் கையில் ஸ்பெசலை வெளயிடுமாறு அனைத்து குண்டுபுக் ரசிகர்கள் சார்பை கேட்டுக்கொள்கிறோம்😍😍😍

    50ஆம் ஆண்டுவிழா கொண்டாட்டத்தை சிறப்பிக்க இதைவிட வேறொன்று இருக்க இயலாது என்பது திண்ணம்!


    ReplyDelete
  66. "என் பெயர் லார்கோ" நமது வெப்சைட்டில் தற்போது அவைலபிள் இல்லை இனி வர வாய்ப்பு இருக்கிறதா..?

    ReplyDelete
    Replies
    1. ஏதாச்சுமொரு புக் ரகம் ஸ்டாக் தீர்ந்து போயின் , அன்னிக்கி ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிட்டுக் கொண்டாடுவோம் நாங்க ! அதுக்கு வெடி வைக்கணுமா இளம் ப்ரோ ?

      Delete
    2. அய்யய்யோ 😁😁 புத்தகம் தீர்ந்ததில் சந்தோசம் தான் எனக்கும் கிடைச்சிருந்தா இன்னும் கொஞ்சம் சந்தோஷம்😁😄

      Delete
  67. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. வெல்கம் டூ லயன் ப்ளாக்💐💐💐

      Delete
    2. Welcome sir....நேரம் கிட்டும் போது உங்கள் எண்ணங்களை எழுத்தாக்கிடுங்கள் !

      Delete
    3. வணக்கம் நண்பா

      Delete
  68. செ.அ: ஆஹா! என்ன கனிவான வார்த்தைகள்! அன்பான குரல்!

    அவர்: யாருங்க?

    செ.அ: சகோதரிதான்!

    அவர்: பெரிய அக்காவா? நடு அக்காவா? சின்னவங்களா?

    செ.அ: இவங்க சிவகாசி லயன் ஆபிஃஸ் சகோதரி.இப்படி கனிவா பேசுனா புக் ஒரு மாசம் கழிச்சு வந்தா கூட கஷ்டம் தெரியாதே!

    அவர்: புக் இன்னும் வரலியா?

    செ.அ: புக்கு மதியமே வந்துடுச்சு .
    ஆனா காதுல தேன் இன்னும் மிச்சமிருக்கு.

    அவர்: லயன் ஆபிஸ்- க்கு இது மூலமா நன்றி தெரிவிக்கிறீங்க. சரி!
    அப்புறம்?

    செ.அ: சிறப்பான வாசகர் சேவையை பாராட்டுற விதமா ஸ்மாஷிங் 60ஸ் - க்கு இன்னும் ஒரு சந்தா இதோ கட்டப் போறேன்.

    அவர்: அதுவும் சரிதான்.!!!

    ReplyDelete
    Replies
    1. ஸ்டெல்லாவுக்கு நாளை ஒரு கேக் டப்பா !!!

      Delete
    2. செனா அனா சார், எடிட்டர் சார் செம்ம

      Delete
    3. Cake dabba koduthu vittengala editor sir 😊

      Delete
  69. சார் அட்டைப் படம் மூன்றும் அள்ளுது....இது வரை வந்ததிலேயே இந்த மூனுந்தா டாப்.....மூனுக்குள்ள எது டாப்னு சத்தியமா தெரியல....எந்தையின் கதை அட்டைப்படம் பல வண்ணத்ல விளையாடி டாலடிக்க சந்தோச மின்னல் கீற்று மனதில் பாய....பின்னட்டை ஏனோ தங்களையும் தந்தையாரையும் நினைவுறுத்த ....சைக்கிளில் பாயும் மூன்றாம் பக்கம் தாங்களே நினைவில்....டெக்ஸ் முன்னட்டை அதகளம் படுத்த பின்னட்டைஇரு வண்ணக் கதைகளின் நீலப்பக்கத்தை காட்ட....உள் பக்கம் விரியும் முதல் பக்கமும் தாளின் பளிச்சிடும் தன்மையும் சான்சே இல்லை....
    சார்லியோ வழு வழு என ஹார்டு பவுண்டில் அசத்த பின்னட்டை சுமாராய் அமைய ...உள் பக்கம் பேனல்கள் அழகாய் குந்த.... மேக்சி ரசிகரான என்னையும் அசைத்துப் பார்க்கிறார் சார்லி....சார்லியில் மினி லயன் கதையும்....ரோஜா மாளிகை ரகசியமும் மட்டுமே படித்து ஸ்பைடரால் இவர் மறைய....சில கதைகளை பின்னாட்களில் படிக்க....நண்பர்களின் சிலாய்ப்புகளால் ஆவலுடன்....

    ReplyDelete
    Replies
    1. கவிஞர்வாள் : ரோஜா மாளிகை ரகசியம் - ரிப் கிர்பி சாகசம் !

      Delete
    2. ஹிஹிஹி கவிஞர் ஒரு flow ல போகும் போது tongue ரோல் ஆவது ஜகஜம் தானே சார்.

      அதை நீங்க தான் சரியாக புரிந்து கொள்ளவேண்டும்.

      Delete
  70. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. கலவர பூமியில் கனவைத் தேடி - கனமான கதைக்களம் இரண்டு அற்புதமான நாயகர்கள், அருமையான துணை கதாபாத்திரங்கள் மற்றும் அட்டகாசமான கதை சொல்லும் படங்கள் என சிறப்பான வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது இந்த கதை. டெக்ஸ் மற்றும் ஜாகோர் அறிமுக காட்சிகள் தெறி ரகம். கதாசிரியர் இரண்டு மெகா ஸ்டார்களை சரிசமமாக கையாண்டது சிறப்பு, இருவரையும் அவரவர் பாணியில் உலாவிட்டது அதற்கு ஏற்றபடி வசனம் எழுதிய நமது ஆசிரியருக்கு பாராட்டுக்கள். ஓவியங்கள் பல இடங்களில் வாயைப் பிளக்கச் செய்தது,

      வி-காமிக்ஸில் முதல் முதலாக கனமான கதைக்களம் கொண்ட சிறப்பான கதை.

      இந்த புத்தகம் வெகுவிரைவில் குடோனை காலி செய்ய வாய்ப்புகள் அதிகம்.

      Delete
    2. I don’t want to disclose the story in details since many of friends not even received the parcel.

      Delete
  71. சார் நேற்று பொக்கிஷப் பெட்டி கிடைத்து விட்டது. 3 புத்தகங்களும் இருந்தது. ஒரு அழகான ராபின் புக் மார்க் உடன்.

    முதலில் கவர்ந்தது சார்லி தான். Making அருமை. நண்பர் டெ வி சொன்னது போல அவ்வளவு பெரிய புத்தகம் கையில் ஏந்தும் போது வெயிட்டே இல்லை.

    அடுத்து நான் கவனித்தது டெக்ஸ் vs ஸாகோர் ஓவியங்கள் மிகவும் அருமையாக உள்ளது. 4 வது V காமிக்ஸ் தயாரிப்பு தரம் மற்றும் ஓவியங்கள் ஆஹா ரகம். இன்னும் கதையை படிக்கவில்லை இன்று இதையும் எந்தையின் கதையும் படித்து முடித்து விட்டு வருகிறேன்.

    நன்றிகள் சார்.

    நன்றி விக்ரம்.

    ReplyDelete
  72. Dear sir
    Charlie book size too good.
    Please in future use the size for classic titles.Thanks.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம் சார் ; ரிப் கிர்பியின் பாதிக் கதைகள் MAXI சைசில் தயாராகி உள்ளன !! Phew ....!

      Delete
    2. மேக்ஸி சைஸே தொடரட்டும் சார்.

      Delete
  73. இந்த. S 60 size and quality ல் இரும்பு மனிதன் ஆர்ச்சி வர கோருகிறேன் Sir

    ReplyDelete
    Replies
    1. சார்...சட்டித் தலையன் கிட்டங்கியில் ஒரு மூலையை ஏற்கனவே குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கிறான் !

      Delete
    2. சார்..கலரில் வந்த சட்டியுமா?

      Delete
  74. Xiii இரத்த படலம் வரிசை என்ன? ஸ்டாக் இல்லாதவை reprint வருமா?

    ReplyDelete
    Replies
    1. இரத்தப்படலம்-X 111- இரண்டாம் சுற்று..(அதாவது வேறு ஒரு கோணத்தில்-வேற கதாசிரியர் + வேற ஓவியர்) கூட்டணியில்)
      எனக்கு புத்தகத்திற்கு தலைப்பு எதும் நினைவில்லை-
      20& 21-அட்டையில் சிறைக்கம்பிகளுக்கு உள்ளே ஜோன்ஸ் இருபார்.
      22 & 23 - ஜேசன் + புது கதாநாயகி இருப்பது போல் அட்டைபடம். (அம்பின் பாதையில்? ii)
      24-தனி ஆல்பம் - ஜேசன் கையில் ஒரு சூட்கேசுடன் இருப்பார்.
      25- தனி ஆல்பம் - ஒரு டவர் மேல் துப்பாக்கியுடன் ஜேசன் ஏறுவார் - (2345 மீட்டர். ? i)
      26 தனி ஆல்பம் - நினைவோ ஒரு பறவை-அழகான தலைப்பு..
      புத்தக விழாக்களில்-அழகாக-வரிசையாக வைத்திருந்ததை பார்த்திருக்கிறேன்..
      .இந்த வரிசையை (கதைக்களத்தை) ஓவியத்தை ரசிக்கவே வாங்கலாம்-ஒவ்வொரு Frame-ம் சினிமா படத்தை போட்டோ ஆல்பமாக ரசிப்பது போல் இருக்கும்...
      (இன்னமும் காலம் தாழ்த்தாதீர்கள்..)

      Delete
    2. நன்றி நண்பரே

      Delete
    3. 20 க்கு முந்தைய கதைகள் படிக்கவில்லை என்றாலும் இது புரியும் அப்படி தானே

      Delete
    4. நண்பரே...XIII தொடரின் ஒரு ஈர்ப்பே கிடைப்பதைப் படித்து விட்டு, கிடைக்காததைத் தேடுவது தான் என்று சொல்லலாம் ! நிறைய XIII ரசிகர்களிடம் backissues தேடல் சார்ந்த கதைகள் கணிசமாகவே இருக்கும் !

      Delete
    5. நன்றி பல நண்பர்களே

      Delete
  75. //Welcome sir....நேரம் கிட்டும் போது உங்கள் எண்ணங்களை எழுத்தாக்கிடுங்கள் !//

    வணக்கம் எடிட்டர் சார்.. நன்றி..

    காமிக்ஸ் உலகில், பல வருடமாக ஊருக்கு வெளியே தொலைவில் ஒத்த ஓலை குடிசையில் தனியே வாழ்ந்து வந்த என்னை...
    புத்தக பார்சல் பெற்று கொள்ள சென்ற என்னை இரவு நேரம் என்றும் பாராமல், வலுக்கட்டாயமாக ப்ளாக்கில் தள்ளிவிட்ட பெருமை எல்லாம்.. நண்பர் சேலம் குமார் ரை சேரட்டும்.

    நடிகர் வி.கே.இராம சாமி, ஒரு படத்தில்.. "வாசலில் இன்று யாரு கோலம் போட்டது... பெரிவனா சின்னவனா.. ரொம்ப கேவலமா இருக்கு" என்பார்.

    பிளாக்கில் அழகான ரசிக்க தக்க பதிவுகளுக்கு இடையில் "பெரியவனா.. சின்னவனா" என்ற எண்ணம் தோன்றும் பதிவு இருந்தால் .. அது அடியேன் தான். இனி..


    அந்த கோலம் மாதிரி என் பதிவுகள்/ எண்ணங்கள் இருந்தால் பொறுத்து கொள்ளுங்கள் எடிட்டர் சார்...

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அடடே வெல்கம் to the Blog நண்பா. Be Careful. நான் என்னை சொன்னேன்.

      Delete
    2. அனாவில் எழுத ஆரம்பித்தால் பிறகு ஆர்ட்டிக்கிளே எழுதலாம் இந்த ப்ளாக்கில். ப்ரொசீட் நண்பரே.

      Delete
    3. வாங்க ரகுராமன் சார். பழகிக்கலாம்.

      Delete
  76. S60 - சார்லி
    இந்த சைஸ் ரொம்ப cute'a இருக்கு , நான் பெரிய சைஸ்க்குதான் ஓட்டு போட்டேன், Maxi size ஒரு premium effect தந்தாலும் படிக்க இந்த ரெகுலர் சைஸ் தான்‌ வசதியாக இருந்தது.

    முதல் கதையை கீழே வைக்காமல் படித்து முடித்தேன். முதல் பக்கத்தில் ஆரம்பிக்கும் சஸ்பென்ஸ் சீராக விலகி கடைசியாக அனைத்திற்கும் பதில் தெளிவாக கிடைக்கிறது. Simple & Superb. ரிப்போர்ட் ஜானி மாதிரி இடியாப்ப சிக்கல் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ரொம்பவே நன்றாக இருந்தது. முதல் கதை. நான் சின்ன size புத்தகத்திற்கு தான் Vote செய்தேன். இது படிக்க மிக வசதியாக உள்ளது. அட்டகாசமான ஹார்ட் பவுண்ட். ரொம்பவே நிறைவான ஒரு குண்டு புக். முதல் கதைக்கு மதிப்பெண் 10/10.

      Delete
    2. MAXI விக்கெட்கள் கணிசமாய் சாயுமோ ?

      Delete
    3. சார்லி ஸ்பெஷல புத்தகத்தின் வடிவமைப்பு நன்றாகவே இருந்தது.
      இருப்பினும் எனது விருப்பம், ஹார்ட் பவுண்டில் மேக்ஸி சைஸே. அது ஒரு வித்தியாசமான வாசிப்பு அனுபவம்.
      புத்தகத்தை படித்து முடித்ததும், அதை பாக்ஸில் வைத்து புத்தக அலமாரியில் பத்திரமாக வைக்க இடம் தேடுவது தனி சுகம்.

      Delete
    4. இப்போதும் எனது ஓட்டு மேக்ஸி சைசுக்கே.

      Delete
  77. கலவர பூமியில் கனவைத் தேடி..

    V காமிக்ஸ் 4ஆவது இதழ். ரொம்பவே நிறைவான இதழ். கதையும் சரி, ஓவியங்களும் சரி A1 ரகம். எப்போதும் 10இல் இருந்து 15 நிமிடங்களில் V காமிக்ஸ் படித்து முடிக்கும் நான் இம்முறை எடுத்துக் கொண்டது 1 மணி நேரத்திற்கும் மேல்.

    நிறைய வசனங்கள் ரொம்பவே தேவையான ஒன்று தான். இரண்டு பெரிய நாயகர்கள் எப்படி முதல் முறை சந்திக்கிறார்கள் என்பதை ரொம்பவே ருசிகரமாக சொல்லி இருக்கிறார்கள். ஓவியங்கள் ஒன்றோன்றும் அசத்தல்.

    இந்த இதழ் V காமிக்ஸ் மகுடத்தில் ஒரு வைரம். இனிவரும் V காமிக்ஸ் இதழ்களில் ஒன்று இந்த இடத்தை பிடிக்குமா என்பது தான் இப்போது நம் முன் இருக்கும் கேள்வி.

    உங்கள் மொழிபெயர்ப்பு எப்போதும் போல அட்டகாசம் சார். அதற்கு மட்டும் எனது மதிப்பெண் 100/10.

    இன்னும் ஒரு வெற்றி V காமிக்ஸ் க்கு, V என்றாலே வெற்றி தான் போல.

    ReplyDelete
  78. கலவர பூமியில் கனவைத் தேடி !

    வலுவான கதையமைப்பு உள்ள களம். கதையை குறைந்தது 300 பக்கங்களுக்கு மேல் கொண்டு செல்லவும், கோடை மலராக அல்லது தீபாவளி மலராக வெளி வர அனைத்து அம்சங்களும் அடக்கம். 128 பக்கங்களில் முடிப்பதற்கு மிகுந்த சிரத்தை தேவை. அபாரம்.

    வசனநடை தெளிவாக இருக்கிறது மொழிபெயர்ப்பு அட்டகாசம் .

    என்னளவில் ஸாகோர் க்கு அழுத்தமான வசனங்கள். வசனங்களின் அழுத்தம் நிறைவாக இருந்தன.
    2 மணி நேரம் தேவைப்பட்டது படித்து முடிக்க. ஆனால் நேரம் போனதே தெரியவில்லை. V காமிக்ஸ்க்கு நன்றி...


    ReplyDelete
    Replies
    1. அடடே முதல் விமர்சனமே ரொம்ப நல்லா இருக்கே. உண்மையாக இந்த கதையை இன்னும் 200 பக்கங்களுக்கு கொண்டு சென்று இருக்கலாம். ஸாகோரின் வசனங்கள் பற்றி விமர்சனத்தில் சொன்னது அருமை.

      சிறுவயதாக இருக்கும் போது பெரியவர்கள் பேசுவது நமக்கு கிண்டலாகதான் தெரியும். நாம் அந்த வயதுக்கு வரும் போது தான் அந்த வார்த்தைகளின் அர்த்தம் பிடிபடும். அதை அட்டகாசமாக எழுதி இருக்கிறார் நம்ம எடிட்டர். பிடியுங்கள் சார் பூங்கொத்தை.

      Delete
    2. வடமலை&KS@ இருவரும் கவனிச்சிருப்பீங்க 33ம் பக்கத்தில் க்ரே உல்ஃப் ன் பிள்ளைகளை சிறையில் இருந்து மீட்ட கதை பிற்பாடு சொல்லப்படும் என்ற குறிப்பு சிறு பெட்டியில் இருந்ததை....
      அதையும் விலாவரியாக சொல்லி இருந்தா இன்னொரு 50பக்கங்கள் சேர்ந்திருக்கும்..

      அதேபோல க்ளைமாக்ஸில், இந்தக் கதை இன்னும் முடியல
      குவானாவின் தாயை மீட்டுத்தருவதாக வாக்களித்துள்ளேன்'"-
      என ஸோகோர் சொல்வதை பார்த்தோம் னா அது ஒரு 110பக்க கிளைசாகசம் ஆக அமையும் வாய்ப்பு பிரகாசம்..

      மொத்தமாக 220+50+110=380 பக்கங்களில் இந்த நீஈஈஈஈஈண்ட சாகசம் சொல்லப்பட்டு இருக்க வேணும்...

      செமத்தியான குண்டுபுக் ஆக அமைந்து இருக்கும்...

      Delete
    3. ஆமாங்க டெக்ஸ். சும்மா ரெண்டு வருசத்துக்கு டாப் ஆக இருந்து இருக்கும் அப்படி வந்து இருந்தா.

      Delete
    4. பொசெல்லி எழுதட்டும் சார் ; சூட்டோடு சூடாய்ப் போட்டு விடுவோம் !

      Delete
    5. //ஸாகோர் க்கு அழுத்தமான வசனங்கள். //

      நிஜம் தான் சார்...! கதை சொல்லப்படுவதே ஸாகோரின் பார்வையில் தான் & இங்கே அவரே சீனியரும் ! So டெக்ஸைப் பார்த்ததும் கதாயுத மாயாத்மாவை டீலில் விடும் சபலத்தினை மௌரோ போசெல்லி தவிர்த்திருக்கிறார் & பாத்திரங்களுக்கேற்ற அழுத்தத்தினை தந்துள்ளார் !

      Delete
  79. எந்தையின் கதை.

    கதையை படித்து முடித்ததும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கிறது. அதுவும் பல இடங்களில் அடே போடவைக்கும் வசனங்கள். உண்மையும், பொய்யும் உலகில் பெறும் இடங்கள். ஜானதன் ப்ளையின் உண்மையும், JK வின் பொய்யும். சதியின் மதிக்கு அடுத்து இந்த ஸ்பின் ஆஃபும் அருமை.

    ரொம்பவே Touching ஆன கதை. இந்த கதைக்கும், மொழிபெயர்ப்புக்கும் மதிப்பெண் எல்லாம் கொடுக்க முடியாது சார். மகத்தான வெற்றி

    எனது நன்றிகள் சார் தங்களுக்கு இந்த கதையை வெளியிட்டதற்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பழனிவேலுக்கு உரித்தானவை சார் !

      Delete
    2. அதுவும் வேட்டை முடிந்து JK கிரீன் பால்சுக்கு திரும்பும் போது அவரிடம் ஜானதன் கேட்கும் கேள்விகளும், இதற்கு ஜேசன் விடை அளிப்பான் என்று JK சொல்ல, அதற்கு ஜேசன் கொடுக்கும் விடையும் அப்பா என்ன ஒரு உணர்வு பூர்வமான இடம். உங்கள் வசனங்கள் இந்த இடத்தில் ரொம்பப் பொருத்தம் சார்.

      Delete
    3. நன்றி சார் ...! எனக்குப் பிடித்திருந்தது ஜேசன் ஸ்கூலுக்கு எழுதிடும் கட்டுரையில், தனது தந்தையை முதல்வாட்டி சந்திக்கும் பொழுதினை விவரிக்கும் அந்த flashback sequence !

      ஒரு உலகமறியா பாலகனின் பார்வையிலான வரிகளை கதாசிரியர் அழகாக வடித்திருந்தார் என்று பட்டது எனக்கு !

      Delete
    4. பழனிக்கு எப்போதுமே நமது நன்றிகள் உரியவை சார். 🙏

      Delete
  80. @Kumar ji..😍😘

    "புதுசாய் ஒரு சாயா" வந்துட்டதுனால நாளை சனிக்கிழமை "புதிய பாயா"😃.. சாரி..
    "புதிய பதிவு"..
    வர வாய்ப்புகள் உண்டுங்களா ஜி..😍😘

    ReplyDelete
    Replies
    1. ஜம்பிங் ஜி...பயணத்தின் களிப்பில், பயணத்தின் நோக்கத்தை மறக்கலாமோ ?

      Delete
    2. ஜம்பிங் தல இன்று பதிவுக் கிழமை...

      Delete
  81. அடுத்த வருடத்தில் கிளாசிக் கதைகள் சார்லி சைஸிலேயே வந்தால் நல்லாருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. நல்லா தான் இருக்கும்.

      Delete
  82. //வாங்க ரகுராமன் சார். பழகிக்கலாம்//

    நன்றி சார் ! என்னை கிட் ஆர்ட்டின் யாகவோ, ஜிம்மி, கிட் கார்சன், வில்லி கார்வின்,.. etc ஏதாவது ஒரு துணை பாத்திரமாக வைத்து கொள்ளுங்கள்... வாங்க பழகலாம் சார்

    போட்டி இல்லாத சாதகமான இடம் போதும்

    ReplyDelete
  83. திரு. ராய் க்ரேன் .. ஒருவேளை தன்னையே மாடலாக வைத்து சார்லி யை வரைந்திருபாரோ ? இல்லை தூக்கம் கெட்ட நேரத்தில் என் கண்களுக்கு அப்படி தெரிகிறதா ?

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அவருடைய ஃபோட்டோவை பார்த்ததும் அப்படிதான் தோன்றியது.

      Delete
  84. This month XIII spinoff was amazing. I think mongoose, Jones, Jonathan fly spinoff all were good. Edgar j hoover, the founder and first director of FBI was such a bad person only. Please see the movie J EDGAR available in OTT. then only we can understand the beautiful prequel of Jonathan fly

    ReplyDelete
  85. . பனியில் ஒரு பித்தலாட்டம். ஆரம்பகால, அதாவது 80களின்ராஜேஸ் குமாரின் க்ரைம் நாவல்படித்த திருப்தி "ஒருகாதலின் கதை" போக்கிரியோடு பார்ட்னர்ஷிப், தத்தெடுத்த தறுதலைஅனைத்துமே உணர்வுகளின் குவியல். சார்லியை தமிழுக்கு கொணர்ந்த சீனியர்உண்மையில்பொம்மபுத்தகத்தில் ஒரு புரட்சியே செய்திருக்கிறார் குண்டு புத்தகம் என்பதற்கு மெர்சலான அடையாளம் சார்லியே.

    ReplyDelete
  86. ரகுராம் சேலம். வெல்கம். அருமையாக எழுதுகிறீர்கள். சூப்பர்

    ReplyDelete