நண்பர்களே,
வணக்கம். 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகளாட்டம் பணிகள் ஒன்றன் பின் ஒன்றாய்ப் படையெடுக்க - இந்த வாரமானது புலர்ந்ததும் தெரியக் காணோம் ; முடிவுக்கு வந்திருப்பதும் புரியக் காணோம் !! For that matter, ஒரு மாதத்துப் பணிகள் நிறைவுறுவது எப்போது ? ; அடுத்த மாதத்தின் வேலைகள் துவங்கிடுவது எப்போதென்றே தெரியாததொரு நிலையில் "உயிரைத் தேடி" கதையில் ஆங்காகே வலம் வரும் அந்த ஸோம்பிக்களைப் போலவே சுற்றி வருகின்றேன் ! பற்றாக்குறைக்கு இதுவொரு நெடும் வாரயிறுதி எனும் போது - காத்துள்ள மே தினத் திங்களின் ஆன்லைன் மேளாவுக்கும், அன்றைக்கான ஜாலி பதிவுக்கும் தயார் ஆகிக்கின வேண்டி கீது ! படா டமாஷ் தான் வாத்தியாரே ! இதன் மத்தியில் மே மாத புக்ஸ் மூன்றும் ரெடியாகி எனது மேஜையில் 'தேமே' என உறங்கிக் கொண்டிருக்கின்றன ! நல்ல காலத்துக்கு மூன்றிலுமே எனக்கான பணிகள் மித ரகமே என்பதால் அடுத்த சில நாட்களில் I should be able to breeze through them - hopefully !
And இப்போவே சொல்லிக்கிறேன் guys - மே மாதத்தின் ரெகுலர் இதழ்கள் உங்களை மே 10 தேதிவாக்கிலேயே வந்து சேரும் ! பைண்டிங்கில் தொடர்ந்து பணிமழை பொழியச் செய்துள்ளோம் எனும் போது , அவரும் கொஞ்சம் மூச்சு விட அவகாசம் கோரியுள்ளார் ! So "ஏப்ரலில் மே உண்டா நைனா ?" என்ற கவித்துவக் கேள்விகள் வாணாமே - ப்ளீஸ் ? ஆன்லைன் மேளாவின் புக்ஸ் despatch விடுமுறை முடிந்த மறுநாள் துவங்கிடும் என்பதுமே இங்கே கொசுறுச் சேதி ; தொடர்ந்து இந்த வாரம் முழுக்கச் சாத்தி வந்து கொண்டிருக்கும் மதிய / மாலை மழைகள் பைண்டிங் வேலைகளுக்கு செம இடையூறாகி வருகின்றன ! இதோ, இந்தப் பதிவினை டைப்பும் இந்த வேளையில் கூட வர்ண பகவான் வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார் ! கோடையில் வருண பகவானின் கொடையானது கொஞ்சமே கொஞ்சமாய் தாமதமாகிடும் பட்சத்தில், ஹார்ட் கவர் இதழ்கள் நன்றாகக் காய்ந்து விடவும், உங்களை எட்டிப்பிடித்திடும் வேளைகளில் கேக் டப்பிக்களைப் போல 'ஜம்'மென்று இருக்கவும் உதவிடும் ! Fingers crossed !
"மே 1 ஒரு நாளுக்கான ஆன்லைன் மேளா நீட்டிப்புக்கோசரம் புச்சா பொஸ்தவம் ஏதாச்சும் இல்லீங்களா ?" என்ற வினவல்களும் ஆங்காங்கே கண்ணில் படாதில்லை தான் ! ஏற்கனவே தயார் செய்திருக்கும் "பரபர 10" க்கே நாக்கு, மூக்கு, முழியாங்கண் என்ற சகல அவயங்களும் திசைக்கு ஒன்றாய்த் தொங்கி நிற்க, இது போதாதென இன்னும் புதுசாய் இழுத்து விட்டால், நம்மாட்கள் சொல்லாமல் கொள்ளாமல் சந்நியாசம் வாங்கிப்புடுவாங்க ! So ஜாலி பதிவைக் கொண்டு அந்த விடுமுறை நாளை அஜீஸ் பண்ணிக்கோங்க guys ! And இந்த நொடியில் இங்கொரு அன்பின் அடையாளத்தினை பகிர்ந்திடாது இருக்க இயலவில்லை ! சென்னையைச் சார்ந்த நண்பர் ; காமிக்ஸை செமத்தியாக லவ்வுபவர் - ஆன்லைன் மேளாவின் பொருட்டு நம்மாட்கள் திணற திணறப் பணியாற்றியுள்ளதற்குத் தனது பாராட்டினைத் தெரிவிக்கும் விதமாய், கிருஷ்ணா ஸ்வீட்சிலிருந்து மிரளச் செய்யும் தொகைக்கான இனிப்புகளையும், காரங்களையும் வாங்கி கூரியரில் அனுப்பியுள்ளார் ! நம் வீட்டுக்கு வாங்கவே நிர்மலா சீதாராமன் மேடம் ரேஞ்சுக்கு யோசித்து பட்ஜெட் போட அவசியமாகிடும் இந்நாட்களில், நண்பரின் இந்தப் பெரிய மனசு மலைக்கச் செய்கிறது ! டீம் சார்பில் பதினோறாயிரம் நன்றிகள் சார் ! இத்தகைய அசாத்தியங்களெல்லாம் நம்மூர்களின் வெகுஜனப் பத்திரிகைகளின் எடிட்டர்களுக்கு கூட அனுபவிக்கக் கிடைக்குமா ? என்ற கேள்வியே என்னுள் இந்த நொடியில் ஓடிடுகிறது ! Truly blessed !
ரைட்டு...மே புலர சொற்ப இடைவெளியே உள்ள தருணத்தினில் அவற்றின் previews-க்குள் நுழையலாமுங்களா ?
To start off - மே மாதத்தின் பிரதம நாயகர் நமது இரவுக் கழுகாரே தான் ! வெள்ளி முடியாரும் உடனிருக்க, பரந்த புல்வெளிகளில் ஒரு காதல் யுத்தத்தில் பஞ்சாயத்துப் பண்ணும் பொறுப்பேற்கிறார்கள் - தெறிக்கும் ஆக்ஷனுடன் ! இது உருவாக்கப்பட்டதே கலரில் என்பதால், செம அழகான வர்ணங்களில் பக்கங்கள் மிளிர்கின்றன ! எனது ஞாபகம் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த ஆல்பம் பற்றி நாம் முதலில் பேசியது 2021-ன் (இரண்டாம்) லாக்டௌன் சமயத்தில் ! "தினத்துக்குமொரு பதிவு" என்று ஏதேதோ லூட்டியடித்த அந்த நாட்களின் போது shortlist செய்யப்பட கதை இது ; கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பின்பாய் வெளிச்சத்தைப் பார்த்திடவுள்ளது ! எங்கோ வாசித்த நினைவுள்ளது - "கொரியன் சினிமாக்கள் அப்படியே நமது சென்டிமென்ட்ஸ் ; நமது உணர்வுகளைப் பிரதிபலிக்கும் விதமிருப்பதால் தான் நம்மாட்கள் அங்குள்ள சீரியல்களை, திரைப்படங்களை inspiration ஆக அடிக்கடி எடுத்துக் கொள்கின்றனர்" என்று ! Maybe டெக்சின் உலகமுமே பல விதங்களில் நம்ம கோலிவுட் படைப்பாளிகளுக்கான inspiration ஆக இருந்திடுமோ - என்னமோ ; சூப்பராய் நாலு பாட்டு, ஐட்டம் டான்ஸ் என்று மட்டும் இக்கதையுடன் சேர்த்து ரெடி பண்ணினால், சில்வர் ஜூப்ளி confirmed ! இதோ - இந்த கலக்கல் கலரிலான ஆல்பத்தின் preview :
ஒரிஜினல் அட்டைப்படமே ; சின்னதான வர்ண மெருகூட்டலோடு ! And அந்த எழுத்துரு - உபயம் நண்பர் ஜெகத் !
And புதியதொரு ஓவிய பாணியில் உட்பக்கங்கள் செம தெளிவாய் இருப்பது, தெளிவான இந்தக் கதையோட்டத்துக்கு உரம் சேர்ப்பதாய் நினைத்தேன் ! இதோ - பாருங்களேன் :
First
ReplyDeleteAfter long time
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநானும் இருக்கேன்
ReplyDeleteமாற்று புக் 2 தினங்களுக்கு முன்னமே அனுப்பி, உங்களிடமும் நேற்றைக்குப் பேசி, புக் சாயந்திரம்வாக்கில் கொண்டு வருவார்களென்று நீங்களும் சொன்ன பிற்பாடு, இன்னமும் புக் வந்து சேரவில்லையெனில் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் சிவகாசி ஆந்தையன் !
Deleteநீளளளமான.ஐடியைப் பார்த்து ஸ்டீல்னு நினைச்சிட்டேன்.:-)
Deleteஅட நானுந்தா
Deleteஆத்தீ..
Deleteஇம்புட்டு நீளமான பேரா...
Shrinabu @ don’t worry. Books will reach you soon.
Deleteஆசிரியர் அய்யா..
Delete27.4.23 அன்று தங்களால் அனுப்பபட்ட கூரியர் பார்சல் (மாற்று புத்தகம்) மட்டும் 28.4.23 அன்று மாலை கிடைக்கப் பெற்றுள்ளது. நன்றிகள் 🙏
ஆனால் எனக்கு சென்ற வெள்ளி அன்று (21.4.23) தங்களால் கூரியரில் அனுப்பபட்ட புக்பார்சல் இன்னும் கிடைக்கப் பெறவில்லை.😔
அந்த கூரியர் அனுப்பபட்ட ரசீது நகலை அனுப்பி வைத்தால் அந்த கூரியர் நிறுவனத்திடம் *ஏன் இதுவரை டெலிவரி செய்யவில்லை/ அந்த பார்சல் என்ன ஆனது* விளக்கம் கேட்க எண்ணியுள்ளேன்.
எனவே முதலில் புக் அனுப்பிய கூரியர் ரசீது நகலினை/எண்ணினை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்..🙏
யாராவது ஒருவர் இப்படி லேட்டாக டெலிவரி செய்யும் கூரியர் நிறுவனத்தினை கேள்வி கேட்டால்தான் சரியாக இருக்கும்.
அன்புடன் காமிக்ஸ் ரசிகன்..
நாமக்கல் ஸ்ரீபாபு.
9486785447
7904540866
10க்குள்ள
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDeletePresent sir
ReplyDeleteவணக்கம் நண்பர்களே....
ReplyDeleteSoda 7.5 / 10.
ReplyDeleteடேங்கோ 10/ 10.
ReplyDeleteசிஸ்கோ 9.5 /10
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteSoda - 8/10 ..
ReplyDeleteTango - 8.5 /10 ..
Cisco - 9/10 ..
Horror genre depends on the stories ..
The question is more about Horror as a genre sir....!
DeleteHorror genre v can try sir .. OK for me ..
DeleteSODA - 5 /10
ReplyDeleteடேங்கோ - 10/10
ஏஜெண்ட் சிஸ்கோ : 8/10
ஸ்பைடர், லார்கோ மற்றும் மாயாவி அப்டேட் ஜில் நியூஸ்!
டெக்ஸ் வண்ணம் தெறி!
மன்னிக்கவும்!
DeleteSODA - 8.5 /10 என்பது, தவறுதலாக 5/10 என பிழையாக டைப் ஆகி விட்டது...
Horror - not interested but i read or watch just for fun
ReplyDeleteSoda 8/10
Tango 10/10
Cisco 9/10
செக்கச் சிவந்த வானத்தின் தீற்றல் அட்டைப்படம் முழுதும் ஆக்ரமித்தபடி டெக்ஸின் மஞ்சச்சட்டையில் ஒட்டியபடியா ஸ்டில் ரெம்ப நல்லாயிருக்கு..
ReplyDeleteபொதுவா டெக்ஸ் கலரை விட கருப்பு வெள்ளையில் இலட்சணமாகத் தெரிகிறார் என்பது என் கருத்து.
ஓவியர்களின் கைவண்ணங்களே டெக்சின் அழகை நிர்ணயிக்கின்றன சார் ; வண்ணமோ - வண்ணமின்மையோ அல்ல !
Deleteஒன்றிரண்டு ஓவியங்களைத் தவிர..மற்றவற்றில் டெக்ஸ் ஏதேனும் வகையில் ரசிக்கவே செய்கிறார்.சார்.
Delete//செக்கச் சிவந்த வானத்தின் தீற்றல் அட்டைப்படம் முழுதும் ஆக்ரமித்தபடி டெக்ஸின் மஞ்சச்சட்டையில் ஒட்டியபடியா ஸ்டில் ரெம்ப நல்லாயிருக்கு..//
Deleteநல்ல வர்ணிப்பு சகோ 👌👌👌
1. விண்வெளிப் பிசாசு - டபுள் யெஸ்
ReplyDelete2. ஒ. க. ம. & பறக்கும் பிசாசு - (டபுள் யெஸ்) (டபுள் யெஸ்)
அப்போ டாக்டர் சாரை லாக் பண்ணிப்புடலாமா ?
Deleteஅவரு தப்பிச்சு எங்காவது ஓடறதுக்கு முன்னாடி பண்ணிடனுங்க சார்.
Deleteஅவருக்கு பிறந்தநாள் பரிசு இத விட வேறேது
Delete// அப்போ டாக்டர் சாரை லாக் பண்ணிப்புடலாமா ? //
DeleteEditor ji please lock him😁
ஹாரர் ஜானர் மதிப்பெண் 10/10.
ReplyDeleteசும்மா போட்டுத் தாக்குங்கள் சார். நாங்கள் இருக்கின்றோம்.
தானைத் தலைவரையும் மாயாவியாரையும் சுடச் சுடப் போடுங்கள் சார்.
வீடியோவில் வெடிகுண்டு ராபின்..மீண்டும் வெகுண்டு எழுவது போலான ஓவியங்கள் செம ஸ்பீடாகப் பறக்கிறது..ராபின் விட்ட இடத்தைப் பிடித்துவிடுவார் போல.
ReplyDeleteஅனல் பறக்கும் சாகசம் சார் இது !
Deleteஹாரர்- வெல்கம்.
ReplyDeleteசோடா, டாங்கோ. சிஸ்கோ - 9/10. ஆல்பாவைக் காணோம் ☹️
// ஹாரர்- வெல்கம்.
Deleteசோடா, டாங்கோ. சிஸ்கோ - 10/10 //
இதுவே எனது மதிப்பெண்
நன்றி ஷெரீஃப்
ஆஹா...தானைத் தலைவரின் விண்வெளிப் பிசாசா போடுங்கள் சார். சும்மா தெறிக்கும் சார்.
ReplyDeleteஆமா ஆமா நானும் பல வருடங்களாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன் சார்.
Deleteசோடா 8/10
ReplyDeleteடேங்கோ 8/10
சிஸ்கோ 5/10
மாயாவியாரின் ஒற்றைக் கண் மர்மம் செமத்தியான மிரட்டலான கதை சார். ஒற்றைக் கண் உருண்டு வருமே .காணக் கண் கோடி வேண்டுமே. வண்ணத்தில் விட்டால் சும்மா நச் சென்றிருக்கும். பறக்கும் பிசாசு படிக்காத கதை. இரண்டையும் ஒரே தொகுப்பாகத் தந்தால் விற்பனையில் பட்டயக் கிளப்புமே சார்.
ReplyDeleteDefinitely definitely
Deleteஅங்கே ரெடியாகட்டும் சார் ; போட்டுத் தாக்கிடலாம் !
Deleteவன்மேற்கின் அத்தியாயம் ஆவலைத் தூண்டுகிறது..
ReplyDeleteநான் இந்த வருடம் மிகவும் எதிர்பார்க்கும் இதழ்களில் ஒன்று இது.
Deleteஹாரர் கதைகளுக்கு ஒரு பூச்செண்டு.
ReplyDeleteஎன் சார்பில் ஒன்று
DeleteSODA - 8.5/10
ReplyDeleteடேங்கோ - 9.0/10
ஏஜெண்ட் சிஸ்கோ : 8.5/10
வணக்கம் ஆசிரியரே
ReplyDeleteசோடா 9/10
ReplyDeleteடேங்கோ 10/10
சிஸ்கோ 9/10
ஹாரர் கதைகளை ஆவலுடன் வரவேற்கிறோம்.
கருப்புக் கிழவி கதைகள் மறுபடியும் வந்தால் மகிழ்ச்சி.
// ரொம்பவே மகிழ்ச்சி//
Deleteஹாரர் 10/10
ReplyDeleteSoda - 8/10
ReplyDeleteTango - 10/10
Cisco - 10/10
Eager for Horror stories. Grimm stories were my favourite.
DeleteSODA - 7 /10
ReplyDeleteடேங்கோ - 5 /10
ஏஜெண்ட் சிஸ்கோ : 5 /10
ஹாரருக்கும் டபுள் ஓகே.... ஓகே 🥰
+55555
Deleteசார்... சூப்பர் சார்... விண்வெளி பிசாசு சார்.... வாவ்... வாவ்... வாவ்....
ReplyDeleteஇந்த மாதிரி கம்பேக்தான்... தானைத் தலைவருக்கு ஏற்றது...
I'm all for it... Count me in Sir...
சூப்பர் நண்பரே ...சட்டுபுட்டுன்னு சினிஸ்டரயும்
Deleteஅடடே டாக்டர் சார் மறுபடியும் வண்டியில் எறிட்டாரே!!!
Deleteவாழ்த்துக்கள்
வாண்டனா வண்டியிலே ஏறுற moment #
Deleteஹாரர் கதைகள் ப்ளீஸ்...ஆனால் கொஞ்சம் டீசண்ட் பிக்ச்சர்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும்
ReplyDeleteஎங்கள் எரியா சிறார்கள் டெக்ஸ்க்கு அடுத்து கேட்டது ஹாரர் கதைகள்
அதே போன்று புத்தக விழாவினில் பத்து வயதுக்கு மேற்பட்ட பாதி சிறார்கள் ஹாரர் கதைகள் வேண்டிம் என்று கேட்டனர்
டீசெண்டா ரத்தம் குடிக்கும் காட்டேரியைத் தேடணும் போலிருக்கே ரம்யா ?
Delete😂😂😂😂😂
Deleteரத்தம் எவ்வளவு இருந்தாலும் பிரச்சின்னை இல்லை ஆசிரியரே
ரத்தம் சொட்ட சொட்ட இருந்தா இன்னும் சூப்பர்
நான் குறிப்பிட்டது உடைகளிலும், வார்த்தைகளிலும், ஆசிரியரே😅😅😅
Soda 9/10
ReplyDeleteTango 9/10
Cisco 7/10
This comment has been removed by the author.
ReplyDeleteசோடா - 10/10
Deleteசிஸ்கோ - 8/10
டேங்கோ - 8/10
ஆல்பா - 10/10
Deleteஹாரர் - 10/10
சோடா 8/10
ReplyDeleteடேங்கோ 8/10
சிஸ்கோ 5/10...
ஹாரர் கதைகள் ஓகே,கறுப்புக் கிழவி கதைகள் மாதிரியா ?!
க.கி கதை வரிசையும்,க.கி யின் கிண்டல் தொனியும் பிடித்த ரகமே...
சிஸ்கோ பாதிக்கு பாதி மார்க் தான் வாங்குறாரா சார் ? ஐயகோ !
Deleteஎன்னைப் பொருத்தவரை டெக்ஸ் அட்டை படங்களின் அழகினாலேயே... பாதி மதிப்பெண்களையும்... Lot of eyeballsஐயும் ஸ்கோர் செய்து விடுகிறார்....
ReplyDeleteஇந்த அட்டைபடமும் விதிவிலக்கல்ல....
😍😍😍
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இருந்து பலகாரம் அளித்த காமிக்ஸ் சகோதரரர்க்கு நன்றிகள் 🙏🙏🙏👌👌👌👌
ReplyDelete// விண்வெளிப் பிசாசு" நெடும் ஜாகஜம் மறுபதிப்புக் கண்டுள்ளது ! //
ReplyDeleteவாவ்...
வாசகர்கள ஒருவழி ஆக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க. "படிக்க காமிக்ஸ் இல்ல இல்லனு" புலம்புனவங்கள,
ReplyDeleteகாமிக்ஸ் ஜீரா சின்டெக்ஸ்க்குள்ள போட்டு மூச்சு முட்ட முக்கி எடுக்கறீங்க இந்த மாசம். யப்பா உயிரைத்தேடி+மினி காமிக்ஸ் வந்த மயக்கத்தில் இருந்து மீளாதப்ப , "இந்தா புடின்னு" அடுத்த இன்ப அதிர்ச்சினு , விண்வெளிப் பிசாசு + ஒற்றைக்கண் மர்மம்+ பறக்கும் பிசாசு னு அறிவிப்பு போட்டு, திணறடிக்கறீங்க. உண்மையில் மிக ஆனந்தமாக உள்ளது சார்.தாரளமாக போடுங்க.
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
இந்த மாத புதிய பாணி சித்திரங்கள் அட்டகாசம்.
பார்த்தவுடன் கவர்ந்தது.
ஹாரர் கதைகள் திகில் காமிக்ஸ் ல் படித்தது , அதே ரக கதைகளாக/அதைவிட பெஸ்டாக இருப்பின் 10/10.
மிக மகிழ்ச்சியான பதிவு.
ஹை...ஜீரா சின்டெக்ஸ் டாங்க்கா ? கேக்கவே சூப்பரா இருக்கே சார் !
Deleteவழக்கமா பாயாச அண்டாதான் வரும்...
Deleteநம்மாட்கள் நிறைய வேலை குடுத்து விட்டோம் நாங்கள்
ReplyDeleteஅவர்களுக்கு நன்றிகள் பல
ஆமாம் சகோதரி.
DeleteHorror கதைகள் கண்டிப்பாக வேண்டும், அதுபோலவே ஸ்பைடர்-ம விண்வெளி பிசாசு கண்டிப்பாக வேண்டும் ஜி
ReplyDelete+100
Deleteஒரு வேளை horror கதையே அந்த விண்வெளிப் பிசாசு கதை தானோ சார் ? :-)
Deleteஹூர்ர்ர்ர்ரேரேரேய்ய்ய்ய்...
ReplyDeleteதானைத் தலைவன் is back...
திகில் கதைகளை இரு கரம் குவித்து வரவேற்கிறேன் ஆசிரியரே..
ReplyDeleteஆனாக்கா கொஞ்சம் ரத்தக் களறி இல்லாம பாத்துக்கோங்க..
நம் அலுவலக ஊழியர்களுக்கு கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தந்து மகிழ வைத்த நண்பருக்கு இரு கரம் கூப்பி நன்றி செலுத்துகின்றேன்..
ReplyDeleteஅப்பறம்..
ReplyDeleteஅந்த கறுப்பு கிழவி பாட்டிய கூட்டிட்டு வாங்களேன்..
வாழ்க்கையின் யதார்த்தங்களையும்,எப்படி வாழ வேண்டும்,எப்படி வாழக் கூடாது என்பதான அந்தக் கதைகளின் நியதிகள் அருமையானவை..
பாட்டி கூப்பிடற மாதிரியே "கண்ணுங்களா ' அப்டீங்கற உங்களோட வார்த்தைப் பிரயோகம் செம்மையா இருக கும் ஆசானே..
நம் இதழ்களில் லெளி வந்த ஹாரர் ஸ்பெஷல்,திகில் ஸ்பெஷல்,கறுப்புக் கிழவியின் கதைகள் அனைத்தையுமே ஒரே இதழாக வெளியிட்டால் அட்டகாசமாய் இருக்கும் சாரே....
வாய்ப்பிருக்குங்களா??!!
வரவேற்கின்றேன்.ஆமோதிக்கின்றேன்.
Delete+1000
Delete+1
Deleteமுழுக்க ரிவர்ஸ் கியரே போட்டாலே போதும் போலிருக்குதே ?! முன்னாடி போகவும் நாலைஞ்சு கியர்கள் உள்ளன folks ?!
DeleteThis comment has been removed by the author.
Deleteஎப்பவும் லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டு, ரைட்ல கைய காமிச்சு ஸ்ட்ரெய்டா வண்டி போகும். இப்ப ரிவர்ஸ்ல சார். இதுவும் நல்லாதானே போகுது.
Deleteஅதுவும், நிக்குறது மாயாவி,ஸ்பைடர் என்கிற போது , 'தப்பில்லே சார்.
'நாலு(காமிக்ஸ்க்கு)பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லே'
சதுரங்க வெறியன கொஞ்சம் களமிறக்குங்க வாத்யாரே..
ReplyDeleteசெமத்தியான ஓவியங்கள் ச்சும்மா அள்ளிகிட்டு போகும்..
அதுக்குன்னு உடனே சர்ப்பத்தின் சவால் குடோன்ல தூங்குதுன்னு சொல்லாதீங்கோ..
Deleteசர்ப்பத்தின் சவால் ரெகுலர் டெக்ஸ் சைசுல வந்திருந்தா ஹிட்டாயிருக்கும்..
அடியோனோட கருத்து..
மன்னிச்சூ..
சுருக்குப் பைக்குள்ளாற வைக்குற சைசில் வந்தாலும், நீங்க வாங்குனா மட்டும் தான் ஹிட் நண்பரே ! வாங்காட்டி சொதப்ஸ் தான் !
DeleteHi..
ReplyDelete1 & 2 தகவல்கள்,
ReplyDeleteபழசு வேண்டாம் என கூறும் எனக்கு கூட எதிர்பார்ப்பு ஏற்படுத்துகிறது சார்..
தகவல் 3
இந்த படத்தை தமிழ் டப் பண்ணி பார்த்துக்கலாம் சார்..
தகவல் 4
10 மார்க் கன்பார்ம் சார்..
கேள்வி 5
SODA - 9/10
டேங்கோ - 9/10
ஏஜெண்ட் சிஸ்கோ : 9/10
//பழசு வேண்டாம் என கூறும் எனக்கு கூட எதிர்பார்ப்பு ஏற்படுத்துகிறது//
Deleteஅடடே...!
/////சென்னையைச் சார்ந்த நண்பர் ; காமிக்ஸை செமத்தியாக லவ்வுபவர்////
ReplyDeleteஅவர் இருக்கும் திசை நோக்கி இருகரம் கூப்புகிறேன்..
SODA - 8 /10
ReplyDeleteடேங்கோ - 7/10
ஏஜெண்ட் சிஸ்கோ : 5/10
அந்த சென்னை நண்பருக்கு என் அன்பான கனிவான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..
ReplyDeleteமீண்டும் மீண்டும் இந்த லயன்-முத்து நம்ம குடும்பம் என்பது நண்பர்கள் வாயிலாக நிரூபணம் ஆகிக் கொண்டேயிருக்கிறது..!!
சார் டெக்ஸ்....மேற்கு கதை...ராபின்னு ரசிச்சுட்டே வந்தா அத்தனையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது ஸ்பைடர் மாயாவி லார்கோ ....இத விட வேறென்ன சார் வேணும் பதிவுலே டாப்பிதுதான....
ReplyDeleteடெக்ஸ் அட்டைப்படம் வண்ணம் பார்க்குமிடமெல்லாம் சிதறிக் தூள் கிளப்பினாலும் ஆச்சரியமா வெளுத்து வாங்க உள் பக்கம் பிரிச்சு மேய இதான் இது வரை வந்ததிலே டாப்பென மனது தந்தியடிக்க...சிவப்பு வண்ணம் சுத்தி வந்து சுஸ்கி விஸ்கியை போல அந்த மேற்கத்திய அட்டை நானுமிருக்கேன்லன்னு போட்டி போட எது முதல்னு தடுமாற....ராபின் அட்டை நல்லாருந்தாலும் இவ்விரண்டு அட்டைகளுக்கும் ஈடுகொடுக்க ஏலாமல் ராபினைப் போல ஓடுவதாய்த் தோண....
மூச்சிரைக்கச் செய்யுது ராபின் ஓட்டத்தை விட அதிகமாய் அதற்கு கீழான வரிகள்....
ஸ்பைடர் விண்வெளிப் பிசாசு ...இதென்ன கேள்வி...அனைத்து ரசிகர்களின் கனவிதழல்லவா..
அடுத்து மாயாவி பறக்கும் பிசாசு அதே இருவண்ணம் வந்தா தெறிக்குமே ஜிபால்டி ஆவி போல....ஒற்றைக்கண் மர்மம் நானும் பார்க்கா இதழ் நண்பர்கள் பலர் கேட்டு வெறியேத்திய இதழ் வண்ணத்தில் வருமா
லார்கோ க்கும் டிக்கட் போட்ரலாமே ஆசிரியரே
ஹாரர் கதைகள் வந்து பீதி கிளப்பட்டும்
இதுக்கே தாங்க முடியல..மே அன்று என்ன அறிவிப்போ
Delete// இதுக்கே தாங்க முடியல..மே அன்று என்ன அறிவிப்போ // ஆமா ஆமா
Deleteலார்கோக்கு டிக்கெட் போட்ரலாம் தான் கவிஞரே ; but படைப்பாளிகள் முடிக்க வாணாமா ?
Deleteநல்ல படியாக முடியும் சார்...போடுங்க சுடச்சுட
Deleteடேங்கோ....சிஸ்கோ....நூறு பத்துக்கு....
ReplyDeleteசோடா...எட்டு
சார் ஆல்ஃபான்னு சிஸ்கோக்கு மார்க் போட்டுட்டேன்...இரண்டாம் கதை படிக்கல.... படிச்சதும்
Deleteஹாரர் ஸ்பெசல்-10/10,
ReplyDeleteSoDA-8/10,
டேங்கோ - 10/10,
ஏஜெண்ட் சிஸ்கோ
7/10
சிஸ்கோ 10/10
ReplyDeleteடேங்கோ 10/10
சோடா 6 /10
சிஸ்கோ 8/10
Deleteடேங்கோ 7.5/10
சோடா 9.5/10
SODA ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி ஸ்கோர் செய்திருக்கிறார் ; but டேங்கோ கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் தூள் கிளப்பியுள்ளார் ! Interesting !!
Deleteகாமிக் லவ்வருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள் ராக் ஜி
Delete// பைண்டிங்கில் தொடர்ந்து பணிமழை பொழியச் செய்துள்ளோம் //
ReplyDeleteROFL
சதுரங்க வெறியனையும்,விண்வெளிப் பிசாசையும் ஒரே இதழ்ல ஹார்ட் பவுண்ட்ல..
ReplyDelete+10000
Delete+10001
Deleteசூப்பர்
Delete80th
ReplyDeleteSODA - 9/10
ReplyDeleteடேங்கோ - 8/10
ஏஜெண்ட் சிஸ்கோ : 9/10
ஹப்பாடி
Delete// ஹாரர் சிறுகதைத் தொடரின் உரிமங்கள் வாங்கிட ரெடியாகி வருகிறோம் ! //
ReplyDeleteGood news. Let’s bring them soon under our logo sir.
May month book’s cover and previews are super sir.
ReplyDeleteDear Vijayan sir, how is our senior editor doing? How is your mom now. sir? I pray for them to get well soon sir.
ReplyDeleteWe are on a prayer too sir...
DeleteWe are with you Sir
Deleteசெந்தூரானும் ஆசிரியரே
DeleteWe are with you sir.
Deleteபோன வாரம் புக் செய்தவை திங்கள்கிழமை கிளம்பிடுமா சார்
ReplyDeleteசெவ்வாய் முதற்கொண்டு நண்பரே ; திங்களன்று இரண்டே பேர் தவிர்த்து வேறு யாரும் ஆபீசில் இருக்க மாட்டார்கள் ! பொது விடுமுறையல்லவா ?
Deleteமகிழ்ச்சி சார்
Deleteவந்துட்டேன்...
ReplyDeleteடெக்ஸ் அட்டைப்படம் - அருமை!! 'காதலி'க்கு கயிரை எழுத்துருவாக்கி, கடைசியில் ஒரு சுருக்கையும் தொங்கவிட்ட நண்பர் ஜெகத் குமாரின் கற்பனையும், வடிவமைப்பு ஆற்றலும் - அபாரம்!!
ReplyDelete'வன்மேற்கின் கதை'கள் ஆவலை எகிறச் செய்கின்றன!
தொப்பையின் அளவில் என்னைவிட ஒன்னரை இன்ச் குறைச்சல் தான் என்றாலும், பரந்த மனதால் பன்மடங்கு பெரியவரான அந்த 'கிருஷ்ணா ஸ்வீட்' பொம்மைபொஸ்தவ லவரின் நல்ல மனதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை!
ஹாரர் கதைகளுக்கு ஜே! தரமான கதைகளுக்கு 9.99 மார்க்குகள் கொடுக்கலாம்!!
காஜூ கத்லி ; நெய் மைசூர்பா & ஸ்பெஷல் மிக்சர் - ஒரு சீர் வரிசை டப்பி போலான செம க்யூட் பேக்கிங்கில் !
Deleteபாழாய்ப்போன சக்கரை வியாதி என்னை வாய் பார்க்க மட்டுமே அனுமதித்தாலும், நம்மவர்களின் முகங்களில் மலர்ந்த ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் மனதை நிறைத்தது !
மகிழ்ச்சிகள் ஆசிரியரே
Delete😊😊😊😊😊
எதுக்கு ரம்யா - முட்டாய்களை நான் வெறுமனே வாய் மட்டும் பார்த்ததற்கா ? :-)
Deleteசார் ஹிஹிஹி...
Deleteஹி...ஹி...விடுங்க சார். சகோதரி ரம்யா தெரியாம சொல்லிப்புட்டாங்க.
Deleteமன்னிக்கவும் ஆசிரியரே
Deleteதங்களை தாண்டி
நம்மவர்கள் பற்றி அதிகம் யோசித்தில்லை
அவர்களுக்கும் சேர்த்து மகிழ்வூட்டியதால் மகிழ்ச்சி என்றேன் ஆசிரியரே
அப்புறம் நான் ஸ்வீட்ஸ் 1% அளவே பிடிக்கும்
Deleteகார வைகைகளே பிடிக்கும்
ஆகையால் நானும் தங்கள் கட்சி தான்😊
நோ ஸ்வீட்ஸ்
@Psaravananpsaravanan
Deleteஆமாம் சகோ...தவறு,,,வார்த்தைகளில் கவனத்துடன் இருப்பேன்
நன்றிங்க
Soda 9/10
ReplyDeleteTango 9.5/10
Cisco 8/10
சார் உங்க பாணியில் ஒரு ஃப்ரீ flowing பதிவு...
ReplyDeleteரொம்பவே ரசித்தேன். மே மாத இதழ்களின் preview அட்டகாசம். வரட்டும் சார் மே முதல் வாரத்தில் தான் OBF புத்தகங்கள் வருகிறது. அதை படித்து முடித்துவிட்டு மே மாத ரெகுலர் இதழ்களுக்கு வந்தால் போதும்.
V காமிக்ஸ் ரொம்பவே அருமையாக வந்துள்ளது. கலர் டெக்ஸ், வன் மேற்கின் கதை இரண்டுமே வண்ணத்தில் ரொம்ப அழகாக இருக்கிறது.
மே 1 அன்று ஜாலி அறிவிப்புக்கு ஆவலுடன் வெயிட்டிங். மே 1 புத்தக விழாவிலும் கலந்து கொள்ள plan.
மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றிகள் சார்.
ஹாரர் கதைகளுக்கு 10/10
ReplyDelete❤️
ReplyDeleteSODA - 9/10
ReplyDeleteடேங்கோ - 9/10
ஏஜெண்ட் சிஸ்கோ : 9/10
என்னைப் பொருத்தவரை மூவருமே ஒவ்வொரு வகையில் நன்றாகவே உள்ளனர். விற்பனையைப் பொருத்து எத்தனை ஸ்லாட் என்று நீங்களே முடிவெடுங்கள் சார்.
Soda. _9/10. டேங்கோ. 9/10. சிஸ்கோ8/10. கலரில்க்ளாசிக் நாயகர்கள் இருவரும். அவசியம் வேண்டும்.டெக்ஸ் அட்டகாசம்
ReplyDeleteஹார்ட்: 8/10
ReplyDeleteஸோடா :9/10
டேங்கோ : 8/10
சிஸ்கோ: 7//10
ஹாரர்:8/10
Delete138வது
ReplyDeleteதிகில் கதைகள் - வெகு நாட்களாக இந்த ஜெனர் மட்டும் மிஸ்ஸிங்... கண்டிப்பாக ஆதரவு உண்டு...
ReplyDeleteகருப்புக் கிழவியும் வர வேண்டும், புதிய கதைகளும் வேண்டும்...
+9
Deleteஎந்த Horror வந்தாலும் எனக்கு ஓகே. ஆனா Horror வரணும்.
DeleteOn ilne book mela,english book list,how to know
ReplyDeletehttps://lion-muthucomics.com/37-english-comics
Deleteஹாரர் பத்து பத்து டேங்கோ பத்து பத்து
ReplyDeleteஹாரர் கதைகளில் கருப்பு கிழவியின் கதைகள்.
ReplyDeleteராபின் கதை ஓவியங்களில் இரும்புக்கை நார்மன் சாயல் தென்படுகிறது.ஒரே ஓவியரோ
ReplyDeleteஇல்லை சார் !
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteSODA 8.5/10
DeleteTANGO 10/10
SISCO 6.5/10
Horror எனக்கு பிடிக்கும் சார்... அதிக அளவு Gore இல்லாமல் இருக்க வேண்டும்...
DeleteHorror என்று முடிவான பின்னே Gore எல்லாம் பாக்க முடியுமா சாரே???
Deleteஆமால்லே ?
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதானே தலைவன் மீண்டும் வரட்டும்.
ReplyDeleteஇரும்பு கையாறும் மீண்டு வரட்டும்.
ஹாரர் மீண்டும் வரட்டும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteசோடா 9/10
டேங்கோ 10/10
சிஸ்கோ 10/10
ஒரு வேலையாக வந்து வெளியூரில் மாட்டிக் கொண்டேன். போன மாதத்துக்கு புத்தகமே இன்னும் கூறியதில் இருந்து வாங்கவில்லை அதற்குள் இந்த மாத புத்தகம் வந்துவிட்டதே
ReplyDeleteநாளைக்கு வர இருக்கும் சூப்பர் டூப்பர் அறிவிப்பு என்னவாக இருக்கும்????
ReplyDeleteஇப்படி பாயை பிராண்ட வெச்சுட்டீங்களே சார்.....
ஏதாவது ஒரு அட்டகாசமான ஹீரோவுக்கு உரிமை கிடைத்து விட்டாதா?
அல்லது ஏதாவது ஒரு பெரிய பதிப்பகத்துடன் ஒப்பந்தம் ஏதாவது பேச்சு வார்த்தை வெற்றியா?
இல்லை உலகெங்கும் கோலோச்சி வரும் மாங்கா நமது காமிக்ஸில் வரப் போகிறதா?
ஏனுங்க சார் - நம்ம ஊர் பக்கத்திலே மாங்கா சீசன் இன்னமும் ஆரம்பிக்கலீயோ ? இங்கெல்லாம் பனாசா...சப்பட்டை ...பங்கனபள்ளின்னு களை கட்டிடுச்சே ?
Deleteசார் ஒரு hint ஆவது கொடுக்கலாமே சார்?
Deleteநாளைக்கி பதிவே வந்திடும் சார் ; IPL டபுள் ஹெடர் பாருங்க இன்னிக்கி !
DeleteThis comment has been removed by the author.
Deleteஇப்படி சஸ்பென்ஸ்ல வெச்சே எங்க தலையிலிருந்த முடியெல்லாம் கொட்டிருச்சி
Delete( என்ன புத்தகமா இருக்கும்னு யோசிச்சு யோசிச்சு) ஆசிரியரே
அதிரி,புதிரியா ஒரு அறிவிப்பு வருமோ...!!!
Deleteஅப்ப நாளைக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு உறுதி.
Deleteஅட, காலையில் பத்து மணிவாக்கில் வந்தால் சசுபென்ஸு இன்னாவென்று தெரிஞ்சிட போகுது !
DeleteDefinitely definitely நாளை காலை 10 மணி. I am வெயிட்டிங்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHorror - 8/10
ReplyDeleteசோடா - 5/10
டேங்கோ - 8/10
சிஸ்கோ - 9/10
பாதிரியார் 7/10
ReplyDeleteதேசாந்திரி 10/10
உளவாளி 8/10
கருப்பு கிழவியோடு கல்தா கொடுத்திருந்தீர்களே சார்.. கிராபிக்கில் வரும்போதும் கிறு கிறுத்ததே...மறுபடியுமா? மிடீல....
ReplyDeleteபுரியலையே சார் ? கருப்பு கிழவிக்கு கல்தா தந்தோமா ? அது alltime hit ஆச்சே ?
Deleteஎடிட்டர் அய்யா..🙏
ReplyDeleteநான் *உயிரைத்தேடி (கலர்) புத்தகத்திற்கும் 2.1.2023 அன்று பணம் அனுப்பியுள்ளேன்*.🙏
விடுதல் இன்றி அனுப்பி வைக்க வேண்டுகிறேன்..🙏🙏
ஸ்ரீபாபு,
நாமக்கல்.
9486785447
7904540866
( *ரெகுலர் ஆண்டு சந்தா எண்:1004*)
( *S 60 சந்தா எண்:6001*)
மே இதழ்கள் மூன்றின் அட்டைப் படங்களும் சும்மா தெறி ரகம். அதிலேயும் தல யின் அட்டைப் படம் ஒரு மிடறு தூக்கல் ரகம். எழுத்துருக்கள் மனதை டச் செய்கின்றன.
ReplyDeleteஅப்ப நாளை மறுநாளுக்கு மறுநாள் வண்ணத்துல வர உள்ள உயிரைத்தேடிக்கும் வண்ண டெக்ஸுக்கும் கடும் போட்டி நிலவுமோ
ReplyDeleteநண்பர் ஜெகத்தின் கொலைகாரக் காதலியின் எழுத்துறுமருமை.....
Deleteஹாரர் - 100/10. ஹாரர் ஜானர் லயனில் ரெகுலரா இந்த ஜென்மத்தில் வரவே வராதான்னு பேய் மாதிரி காத்திட்டிருந்தேன். இந்த கேள்வி என் வையித்திலே ரத்தத்தை வார்த்தது.
ReplyDeleteசோடா - 10/10 எல்லாமே ஸ்ட்ராங் கதைகள்
டேங்கோ - 8/10
சில சமயம் ஸ்லோவா போற மாதிரி இருக்கு ஆனா ஆர்ட் ஒர்க் பட்டையை கிளப்புது
சிஸ்கோ - 8/10
"பறக்கும் பிசாசு" & "ஒற்றைக்கண் மர்மம்" இந்த ரெண்டு புஸ்தகங்களை என் மாமாவின் நண்பர் லவட்டி கொண்டு போய் விட்டார். I am waiting for their reprint.
கலரில் வந்தால் இன்னும் அசத்தலாக இருக்கும்
"விண்வெளிப் பிசாசு" - பிட்டு பிட்டாய் வந்த கதை தானே. முழுசாய் ஒரே இதழில் வந்தால் செமை.
அணைத்து அறிவிர்ப்பிற்கும் ஆவலாய் வைட்டிங்
1 .தானைத் தலைவர் இங்கிலாந்தில் மறுக்கா பட்டையைக் கிளப்பி வருகிறார் போலும் - "விண்வெளிப் பிசாசு" நெடும் ஜாகஜம் மறுபதிப்புக் கண்டுள்ளது ! நமது டாக்டர் சாரிடம் ஒரிஜினல் மொழிபெயர்ப்பினை மேம்படுத்தக் கோரி விட்டு இதனை களமிறக்கிப்புடலாமா கவிஞரே ?
ReplyDeleteவிண்வெளிப்பிசாசுக்கு டபுள் ஓகே சார்...
2. தலைவரைப் போலவே இரும்புக்கையாருமே அங்கே doing well போலும் ! வரிசையாய் கதைகளைத் தேர்வு செய்து, அட்வொர்க் மேம்படுத்தல் செய்து வெளியிட்டு வருகிறார்கள் ! சீக்கிரமே "பறக்கும் பிசாசு" & "ஒற்றைக்கண் மர்மம்" வரலாம் போலும் !
ReplyDeleteசார்லி சைசில் வருவதானால் பழையவை எதுனாலும் ட்ரிபிள் ஓகே சார்....
ஐ லவ் சார்லி சைஸ்...
இந்த 2யும் கொஞ்சம் குண்டா கொடுத்தா ரொம்ப சந்தோசம்...
3.நமது ப்ளூ ஜீன்ஸ் பில்லியனரின் புது சாகசத்தை க்ளைமாக்ஸ் பாகம் இந்தாண்டின் இறுதியில் வெளி வரவுள்ளது
ReplyDeleteஅடுத்த ஆண்டு லயன்ல தாக்கிடலாம் சார்... சீசன்1ஐ முத்துக்கு அளித்தீர்கள்..புதிய கதாசிரியர் கைவண்ணத்தில் வரும்போது எம்மை போன்ற இளைஞர்கள் விரும்பும் லயனில்...
4.புதியதொரு ஹாரர் சிறுகதைத் தொடரின் உரிமங்கள் வாங்கிட ரெடியாகி வருகிறோம் ! ஹாரர் உங்களுக்கு ரசிக்குமா guys ? ஒன்றிலிருந்து பத்து வரைக்குமான ஸ்கேலில் மார்க் போடுவதாயின் ஹாரர் ஜானருக்கு உங்களின் மதிப்பெண்கள் என்னவாக இருக்குமோ ?
ReplyDeleteமதிப்பெண் 8/10...
ஹாரர்ல குடல் குப்பிலாம் பிஞ்சி தொங்கும் கதைகளாக இல்லாமல் மைல்ட் ஆக இருந்தா ரொம்ப பிடிக்கும் சார்..
கறுப்பு கிழவி புராணமாக கேட்டு கேட்டு பாட்டியம்மாவை பார்த்துடலாம்ங்கிற எண்ணத்துக்கு வந்தாச்சுங் சார்..
SODA - 9 /10
ReplyDeleteடேங்கோ - 10/10
ஏஜெண்ட் சிஸ்கோ : 9/10
(ஆல்ஃபா-9/10)
/////2021-ன் (இரண்டாம்) லாக்டௌன் சமயத்தில் ! "தினத்துக்குமொரு பதிவு" என்று ஏதேதோ லூட்டியடித்த அந்த நாட்களின் போது shortlist செய்யப்பட கதை இது ; கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பின்பாய் வெளிச்சத்தைப் பார்த்திடவுள்ளது !///
ReplyDeleteநினைவு உள்ளதுங் சார் அந்த தினம் ஒரு பதிவு நாட்கள்... தொடர் டெக்ஸ் பதிவுகளாக போட்ட அந்த வாரத்தின் ஒரு நாளில் பார்த்த பதிவுல இந்த கதையை பற்றி சொல்லி இருந்தீர்கள்....
https://lion-muthucomics.blogspot.com/2021/05/blog-post_13.html?m=0
இந்த கதையின் குறிப்பு...
/// நெடுங்கதைகள் தெறிக்கச் செய்யும் வெற்றிகளைத் தர வல்லவை என்பது புரிந்த போது - எனது வாக்குச்சீட்டை எங்கே செலுத்துவதென்ற குழப்பமே இருக்கவில்லை ! 'அந்த லவ்ஸ் கதை இன்னா மெரி இருக்குமோ ? என்றதொரு குறுகுறுப்புமே நெடுங்கதைகள் அணிக்கு என்னை இழுத்துச் சென்றது என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; ஆனால் அதுவுமொரு காரணியாக இருந்திருப்பின் மகிழ்ச்சியில்லை என்று மையமாகச் சொல்லி வைக்கவுமே மாட்டேன் ! So COLOR TEX தொடரிலிருந்து முழுநீளக் கதைகளை பரிசீலனை செய்து பார்த்த பின்னே அவற்றுள் தரமான கதைகள் இருப்பதை ஊர்ஜிதம் செய்திட இயன்றால் 2022-ன் தீபாவளி மலரின் ஒரு சாகசம் அதுவாக இருந்திடும் !
//லவ்ஸ் கதையிலிருந்து//---என ஒரு அருமையான காட்யை போட்டு இருந்தீர்கள் சார்..அதே காட்சியில் இருந்த அழகி இன்று கதையில்... இம்மாதம் வரப்போகிறது..ஆஹா...💞💞💞
Soda : 06/10
ReplyDeleteTango : 08/10
Sisco: 9.5/10
Spider & Steel Claw classics are always welcome
ReplyDeleteLong waiting for Largo winch...
ReplyDelete200
ReplyDeleteHorror கதைகள் வேண்டும். Filler pages ஆக இல்லாமல் தொகுப்பாக முன்பதிக்கான இதழாகவோ அல்லது புத்தக விழா சிறப்பிதழாகவோ கொண்டு வரலாம்.
ReplyDelete