Powered By Blogger

Monday, May 01, 2023

ஒரு மே தின குட்டிக்கதை 😎

 நண்பர்களே,

வணக்கம். அநேகமாய் கரைவேட்டிக்கார மேடைப் பேச்சாளர்களுக்கு  அப்புறமாய், தமிழ்நாட்டில் தொட்டதுக்கெல்லாம் ஒரு குட்டிக்கதை வைத்திருப்பது அடியேனாகத் தானிருக்கும் என்பேன் ! So இதோ - இந்த மே தினத்துக்கான  குட்டிக்கதையோடு ஆஜர் !

எல்லாம் ஆரம்பித்தது 1979-ல் ; நான் ஏழாப்பு படித்துக் கொண்டிருந்த கி.மு. காலமது ! அப்பாவின் பூர்வீகம் மதுரை என்பதால், அவரது தாயார் ரொம்பவே தளர்ந்து போன பின்னாட்கள் வரையிலும், மதுரையிலேயே தனியாக வசித்து வந்தார் ! ஊரின் நட்ட நடுவே ஒரு நெருக்கடியான சந்துக்குள் இடம் ; நடுவில் திறந்த முற்றம் ; மாடியில் விசாலமான, புராதன அறைகள், விளையாட ஏகமாய் இடம் - என்ற அந்தக் காலத்து வீட்டுக்கு ஏகப்பட்ட பேரப்பிள்ளைகளும் விடுமுறைகளில் போது மொய்யென்று படையெடுப்பது வாடிக்கை ! 

அப்படிப்பட்டதொரு காலாண்டு விடுமுறை விசிட் முடிந்த கையோடு, ஏதோ காரணத்தின் பொருட்டு, நான் மட்டும் ஒரு நாள் முன்னதாக ஊர் திரும்பிடுவதாக இருந்தேன். அப்போதெல்லாம் மதுரை பெரியாரில், 2 பஸ் நிலையங்கள் இருப்பதுண்டு ; ஒன்று - ரெகுலர் பஸ்களுக்கு and இன்னொன்று எக்ஸ்பிரஸ் பஸ்களுக்கு !! ஊருக்குத் திரும்பிடுவதற்கான பணத்தோடு அந்த கெத்தான (!!) நிலையத்தில் ஒரு மதியப்பொழுதினில் நின்று கொண்டிருந்தேன் ! சாதா பஸ்கள் அழுகாச்சி கி.நா.க்களைப் போல உருட்டோ உருட்டென்று உருட்டியே ஊர் கொண்டு சேர்க்கும் என்பதைத் தாண்டி,  அந்த எக்ஸ்பிரஸ் பஸ் ஸ்டாண்டைத் தேடிப் போவதற்கு என்னிடம் இன்னொரு காரணமும் இருந்தது ! அதற்கு அடுத்த வாசலில் சும்மா 'ஜே ஜே' என்று ஓடிக்கொண்டிருக்கும் "அசோக் பவன்" எனும் ஹோட்டலில், வெஜிடபிள் பிரியாணியானது வாசனையிலேயே ஆளை தூக்கும் ஆற்றல் கொண்டது. அங்கே ஒரு பிரியாணியை போட்டுத் தாக்கிய கையோடு, எக்ஸ்பிரஸ் ஸ்டாண்டுக்கு நடந்தால், அங்குள்ள கடையில் ரோஸ்மில்க் தேவாமிர்தமாய் ருசிக்கும் ! So ரெண்டையும் 'ஏக் தம்மில்' ருசிக்கும் மகத்தான திட்டத்தோடும், அதற்கான காசோடும், அங்கே ஆஜராகிய தருணத்தில் தான் விதி விளையாடியது ! ரோஸ் மில்க் விற்கும் கடையானது ஒரு புக் ஷாப்பும் கூட ! இங்கிலீஷில் புக்ஸோ, காமிக்ஸோ மதுரையில் வெகு சொற்பமான இடங்களிலேயே அந்நாட்களில் கிடைத்திடும் ! So அப்பாவோடு அத்தகைய இடங்களுக்கு விசிட் அடித்த அனுபவத்தில், ரோஸ்மில்க் கடையிலிருந்த சின்ன ரேக்கில் என்னென்ன  அடுக்கி வைக்கப்பட்டுள்ளன ? என்று கண்கள் ஆட்டோமேட்டிக்காக ஸ்கேன் செய்ய ஆரம்பித்தன ! அப்போது தான் "FLIGHT 714" என்றொரு பெரிய சைசிலான ஆல்பம் கண்ணில்பட்டது ! பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது - அதுவொரு காமிக்ஸ் இதழ் என்பது ! 

ஏனோ தெரியலை - ஆனால் சுக்கா ரோஸ்ட்டைப் பார்த்த கார்சனைப் போல,முதல் பார்வையிலேயே, அந்த இதழ் என்னை உன்மத்தம் கொள்ளச் செய்திருந்தது ! ஆசை ஆசையாய் புக்கை எடுத்துப் புரட்டினேன் ; அள்ளும் வண்ணத்தில், அட்டகாசமான, தெளிவான சித்திரங்களில் பக்கத்துக்கு பக்கம் சரவெடியாய் ஆக்ஷனும், சிரிப்பும் படையெடுப்பது தெரிந்தது ! செம ஸ்மார்ட்டாய் ஒரு ஹீரோ ; துணைக்கு சுவாரஸ்யமாய் பாத்திரங்கள் என்று கதை தெறிக்க விடுவதை அந்த முதல் புரட்டலிலேயே உணர முடிந்தது !பின்னட்டையைப் புரட்டினால், வரிசை ஒன்றுக்கு 4 இதழ்கள் வீதம், 5 வரிசைகளில் அதே நாயகனின் தொடரினில் கிட்டத்தட்ட 20+ ஆல்பங்களின் அட்டைப்படங்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தன ! 'ஆத்தாடி..இத்தனை புக்ஸ் உள்ளனவா இந்த ஈரோ கதையிலே ?" என்று மலைத்துப் போனேன் ! அது வரையிலும் வேதாளர் ; மாண்ட்ரேக் ; இந்த்ரஜால் காமிக்ஸ் ; மாலைமதி ; முத்துவின் Fleetway சரக்கு ; அப்புறம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்ட Gold Key காமிக்ஸ் என்பனவற்றைத் தாண்டி கலரில் இந்தத் தரத்தில் நான் எதையுமே பார்த்ததில்லை ! அது மட்டுமன்றி, கிட்டத்தட்ட 64 பக்கங்களுடன் அந்த FLIGHT 714 ஆல்பம் இருந்தது என்னை அசரடித்துக் கொண்டிருந்தது - becos எனது அதுவரைக்குமான வாசிப்பின் பாக்கிக் கதைகளெல்லாம், மித நீளங்களே ! நொடியில் பிரியாணி மோகமும் சரி, ரோஸ் மில்க் தாபமும் சரி, தடமேயின்றிக் காணாது போக, எனது மையல் முழுக்கவே அந்த காமிக்ஸின் மீதிருந்தது ! விலையைப் பார்த்தேன் - ரூ.72 என்று போட்டிருந்தது ! மிரண்டே போனேன் ; அந்நாட்களில் அதுவொரு ராஜாவின் சன்மானத்துக்குச் சமானமான தொகை ! பிரியாணி கட் ; ரோஸ் மில்க் nyet என்றாலுமே, புக்கை வாங்கிட என் கைவசமிருந்த  பணம் போதாதென்பது புரிந்தது ! ஊருக்குத் திரும்பும் நினைப்பே சுத்தமாய் அற்றுப் போக ; ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி நேராக விளக்குத்தூணுக்கே திரும்பினேன் ! கெஞ்சிக் கூத்தாடியாவது, அப்பாவிடம் அந்தக் காசைக் கேட்டு வாங்கிக் கொண்டு, புக்கை கொள்முதல் பண்ணிய பிற்பாடே சிவகாசி போவதென்ற வைராக்கியம் ! Surprise ...surprise ...கேள்வியே இன்றி காசைத் தர, அடுத்த இருபதாவது நிமிடத்தில் FLIGHT 714 இதழைக் கைப்பற்றியிருந்தேன் !  And அந்த ஆல்பத்தின் நாயகனின் பெயரோ - உலகெங்கும் எதிரொலிக்கும் டின்டின் !!

காமிக்ஸ் உலகினை கடந்த 94 ஆண்டுகளாய் ஆண்டு வரும் டின்டின் எனும் அசாத்தியனுடனான எனது முதல் பரிச்சயம் அது தான் ! And அந்த பெல்ஜிய ஜாம்பவான் விரைவிலேயே தமிழ் பேச உள்ளதே இந்த ஸ்பெஷல் பதிவின் சாரம் ! Oh yes - TINTIN in Tamil .....and pretty soon too !!

நெஞ்சோடு அணைத்திருந்த FLIGHT 714 இதழுடன் ஊருக்குப் புறப்பட்ட போது ஒரு நண்பனை உடன் அழைத்து செல்வது போலானதொரு உணர்வு தான் எனக்குள் ! அந்தக் காலத்து பஸ்கள் பெரிய சக்கரங்கள் கொண்ட மாட்டு வண்டிகளுக்கு இணையானவை என்பதால் சாவகாசமாகவே  ஊருக்குக் கொண்டு சேர்த்தார்கள் ! வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாய் பரபரவென்று டின்டின் புக்கினுள் மூழ்க ஆரம்பித்த போது - இதுவரையிலும் உணர்ந்திரா ஒரு வாசிப்பு ஆனந்தத்தை உணர முடிந்தது ! மெர்செலாக்கிய கதைக்களம் ; செதுக்கப்பட்டிருந்த கதாப்பாத்திரங்கள் ; செம clean சித்திரங்கள் ; அட்டகாசமான வசனங்கள் ; கலக்கலான கலரிங் என்று சகலமும் போட்டுத் தாக்கிட, அன்றைய தினம் முழுசையும் FLIGHT 714 சகிதமே செலவிட்டேன் ! And அதன் பின்னட்டையில் அச்சிடப்பட்டிருந்த இதர டின்டின் ஆல்பங்களைச் சேகரிப்பதே இனி வாழ்க்கையின் லட்சியம் என்பது போல் தோன்றியது ! மிகச் சரியாக அந்தச் சமயம் எங்களது பள்ளி லைப்ரரிக்கு புதுசாய் புக்ஸ் கொள்முதல் செய்யும் பணியும் துவங்கியிருந்தது ! "தெய்வமே....டின்டின் புக்ஸையும் எப்படியாச்சும் நூலகத்துக்குக் கொண்டு வந்து சேர்த்துப்புடுங்க - ப்ளீஸ்" என்று வேண்டிக் கொண்டேன் ! ஆனால் ஆண்டவனோ ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ஆல்பங்களை ஏகமாகவும், டின்டின் ஆல்பங்களைக் கொஞ்சமாகவும் லைப்ரரிக்கு கொண்டு வந்திருந்தார் ! பெருமாள்கோவில் வாசல் பண்டாரம் - "பன்னீர் 65 தான் வேணுமென்று" அடமெல்லாம் பிடிக்க முடியாதில்லையா ? So கிட்டிய அந்த 2 டின்டின் இதழ்களை மேயோ மேயென்று மேய்ந்து தள்ளினேன் ! தொடர்ந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள், கல்கத்தாவின் பழைய புக் சந்தைகளிலிருந்து ; டில்லியின் புத்தகக் கடைகளிலிருந்து ; சென்னையின் மவுண்ட் ரோடில் அந்நாட்களில் இருந்த கென்னெடி புக் ஷாப்பிலிருந்து என அப்பாவின் பயண உபயங்களில், டின்டினின் 21 ஆல்பங்களைச் சேகரித்திருந்தேன் ! 

தொடர்ந்த பத்தாண்டுகளில் அவற்றை எத்தனை நூறு தடவைகள் வாசித்திருப்பேன் என்ற கணக்கே இராது - ஒவ்வொரு ஆல்பமும் ஒரு அசாத்தியப் பயணத்தில் நம்மை இட்டுச் செல்வதை சலிப்பே இன்றி ரசித்திருக்கிறேன் ! அதிலும் டின்டினின் தோஸ்த்துகளாக பக்க வாத்தியங்களை இசைக்கும் க்வாட்டர் ரசிகரான கேப்டன் ஹாடாக் ; ஞாபக மறதிக்கார புரஃபஸர் கேல்குலஸ் ; கம்பிளிப்பூச்சி மீசைகள் வைத்துச் சுற்றித் திரியும் டிடெக்டிவ் ரெட்டையர்ஸ் தாம்ப்சன் & தாம்சன் - என அத்தனை பேருமே தத்தம் பாத்திரங்களில் மிளிர்வதை ஒவ்வொரு ஆல்பத்திலும் இமைதட்டாமல் ஆராதித்திருக்கிறேன் !   கதைகள் ஒவ்வொன்றும் தோண்டி எடுக்கப்பட்ட ரத்தினங்கள் என்பதில் உலகெங்கும் யாருக்குமே ஐயங்கள் லேது ! 

இங்கே சின்னதொரு interlude ! இங்கிலீஷில் டின்டின் சாகசங்களை ஏற்கனவே ரசித்திருக்கும் நண்பர்கள், தொடரும் சில பத்திகளை skip செய்திடலாம் : இது முழுக்கவே டின்டினுடன் பரிச்சயம் இல்லாத நண்பர்களுக்கோசரம் மட்டுமே ! 

நான் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடும் 

இந்த டின்டின் யார்

இவரது கதை பாணி என்ன

கதைகளில் அப்படி என்ன தான் ஸ்பெஷல் ? 

என்ற கேள்விகள் உங்களுக்குள் எழுவது இயல்பே ! So here goes :

1.யாரிந்த டின்டின் ?

டின்டின் ஒரு இளம் பெல்ஜிய பத்திரிகை ரிப்போர்ட்டர் ! ஸ்நோயி என்றதொரு க்யூட்டான குட்டி நாய் இவரது இணைபிரியா கூட்டாளி ! நம்ம ஜாலி ஜம்ப்பர் பாணியில் அவ்வப்போது ஸ்நோயிவுமே யோசனைகள் சொல்லும் ; மனசாட்சியோடு மல்லு கட்டும் ! தனது பணி நிமித்தம் டின்டின் புலனாய்வுகள் பல செய்திட அவசியமாகிட, சாகசங்களும், ஆபத்துக்களும் அவரை விடாப்பிடியாய்த் துரத்துவது வாடிக்கை ! ஒழுக்கமான மனுஷன் ; எப்படிப்பட்ட சிக்கல்களிலும் கலங்காதவர் ! பார்க்க குட்டிப் பையனாட்டம் 'சிக்'கென்று இருந்தாலும் செம தில் பார்ட்டி !

2.இவரது கதை பாணி ஆக்ஷனா ? கார்ட்டூனா ? 

Without a doubt - இவை சகலமும் அதிரடி ஆக்ஷன் மேளாக்களே ! இந்தியாவுக்கு பயணமாகி, டில்லியில் கால்பதித்து, தொடர்ந்து திபெத்தில் சாகஸத் தேடல் ; ஸ்காட்லாந்தின் ஆள் அரவமற்ற தீவினில் புலனாய்வு ; ஆழ்கடலுக்குள் புதையல் வேட்டை ; தென்னமெரிக்க இன்கா பூமியில் அசாத்திய அதிரடிகள் ; நிலவுக்குப் பயணமாகும் சாகசம் etc etc என இங்கே அடுக்கிக் கொண்டே போகலாம் ! ஆனால் கதைகளை செம தரமான நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பதே இந்தத் தொடரின் இமாலய வெற்றியின் பின்னணி ! டின்டினின் உற்ற நண்பரான கேப்டன் ஹாடாக் ஒரு உற்சாக பானப் பிரியர் & முணுக்கென்றால் மூக்கின் மேல் கோபம் வரும் சூடான பார்ட்டி ! அவர் அடிக்கும் லூட்டிகள் இந்தத் தொடரின் highlights என்றால் மிகையாகாது !! நிலாவுக்குப் பயணமாகும் ராக்கெட்டில் புறப்படும் மனுஷர் போகும் வழியிலேயே செம்மையாய் சுதி ஏற்றுக் கொண்டு, 'ஏய்..கதவை திறங்கப்பா...வாக்கிங் போகணும் !' என்றபடிக்கே விண்வெளியில் குதித்து, பாட்டுப் பாடிக் கொண்டே சுற்றிச் சுற்றி வருவதையெல்லாம் முதன்முறையாக ரசித்திடவுள்ளோர் கேப்டனுக்கு ரசிகர் மன்றம் வைக்கத் தீர்மானித்தால் வியப்பே கொள்ள மாட்டேன் ! அதே போல எந்நேரமும் ஆராய்ச்சியும், கையுமாய்த் திரியும் புரஃபஸர் கால்குலஸ் திடீரென்று கோபமாகி 'என்னோட ஜூடோ கலையைப் பாக்குறியா ? பாக்குறியா ?" என்று எகிறும் sequence நரசிம்ம ராவ்காருவைக்கூட நகைக்கச் செய்து விடும் ! கேப்டன் ஹாடாக் அடிக்கும் உயர்தரச் சரக்கை லேசாக நக்கிப் பார்த்த பின்னே, மனசாட்சியோடு போராட்டம் நடத்தி விட்டு "தீர்த்தத்தில்" குளித்து விட்டு, குத்தாட்டம் போடும் ஸ்நோயியை வாரி அணைக்கத் தோன்றாது போயின் ஆச்சர்யம் கொள்வேன் ! 'துப்பறிகிறோம் பேர்வழி' என்று முக்குக்கு முக்கு பல்ப் வாங்கும் டிடெக்டிவ் ரெட்டையர்கள்  தாம்ப்சன் & தாம்சன் (பெயர்களில் ஒரு "ப்" மட்டுமே வேறுபாடு) ; கோடீஸ்வர சுல்தானின் மகனான சேட்டைக்கார அப்துல்லா - என்று இந்தத் தொடரின் கதைமாந்தர்கள் ஒவ்வொருவருமே தத்தம் பாணிகளில் செம நேர்த்தியாய் காமெடி கலவையுடன் கதைகளை நகர்த்திட உதவி இருப்பதைக் காண முடியும் ! 

3.சரிப்பு....இந்த 24 ஆல்ப தொடரானது அப்படி எந்த வகையில் உலகத்தை ஆளும் ஒரு தொடராக சிலாகிக்கப்படுகிறது ? What is so special about it ?

இதோ - சிலபல தகவல்களை பகிர்ந்திடவா ? 

**எனது ஞாபகம் சரியாக இருக்கும் பட்சத்தில் இது வரையிலும் 128 உலக மொழிகளில் டின்டின் பிரசுரிக்கப்பட்டுள்ளது ! We must be # 129 !!

**உலகெங்கும் இது வரையிலும் தோராயமாய் 30 கோடி பிரதிகள் விற்றுள்ளன !

**மனிதன் நிலாவில் கால் பாதித்தது 1969-ல் ! ஆனால் டின்டினின் கதைகளில் நிலாப்பயணம் தத்ரூபமாய்க் காட்சிப்படுத்தப்பட்டது அதற்கு 16 ஆண்டுகளுக்கு முன்னமே (in 1953 !!)

**2006-ல் தலாய் லாமாவிடம் "திபெத்தின் மெய் உணரும்" உச்ச விருதினை பெற்ற பெருமை டின்டினுக்கு உண்டு !

**காமிக்ஸ் நாயகராய் மட்டுமன்றி, தொலைக்காட்சித் தொடர்களாய் ; அனிமேஷன் திரைப்படங்களாய் ; 5 திரைப்படங்களாக  டின்டின் கோலோச்சியுள்ளார் ! (ஸ்டீவன்  ஸ்பீல்பெர்கின் கைவண்ணத்தில் ஹாலிவுட்டில் உருவான கடைசிப் படம் மொக்கை என்பது வேறு கதை !!) 

**டின்டினின் நிலாப்பயணம் ; திபெத் பயணம் ; இன்கா பூமிப் பயணமெல்லாம் செம popular வீடியோ கேம்களாக ரிலீஸ் ஆகியுள்ளன ! இதோ - நடப்பாண்டில் கூட டின்டின் இந்தியா வரும் சாகசம் வீடியோ கேமாகிடவுள்ளது !

**கடிகாரங்களில் ஆரம்பித்து, காப்பி குடிக்கும் mug ; சாக்லேட் ; கீ-செயின் ;  டி-ஷர்ட் ; வாட்ச் ; வாட்டர் பாட்டில் etc etc என்று டின்டினின் உருவத்தைத் தாங்கி நிற்கும் பொருட்கள் எக்கச்சக்கம் ! பெல்ஜியத்தில் போய் இறங்கினால், மூன்று விஷயங்கள் தவிர்க்க இயலா அத்தியாவசியங்களாகிடுவதை நானே உணர்ந்திருக்கிறேன் ! முதலாமவது  பெல்ஜிய சாக்லேட் ; இரண்டாவது : உருளை கிழங்கில் அவர்கள் செய்யும் fries (இது french fries என்று அழைக்கப்பட்டாலும் தாய்வீடு பெல்ஜியமே !!) மூன்றாவது : டின்டின் !

**எண்ணற்ற தபால்தலைகள் டின்டினை கௌரவிக்க வெளியிடப்பட்டுள்ளன !அது மாத்திரமன்றி, பெல்ஜிய நாணயங்களிலும் டின்டினின் வதனம் பொரிக்கப்பட்டுள்ளது !

**1929-ல் முதன் முதலாய் உலகினை டின்டின் பார்க்க நேரிட்டது ஒரு பெல்ஜிய தினசரியின் சிறுவர் மலர் இணைப்பினில் !  "ஹெர்ஜ்" என்ற புனைப்பெயரில் அதனை உருவாக்கிய ஜாம்பவானின் நிஜப் பெயர் Georges Prosper Remi

**80 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான சாகசம் கூட இன்றைக்கும் இம்மி கூடப் புராதன நெடியின்றி தெறிக்க விடுகிறது !

**ஒரு ஆல்பத்தின் அட்டைப்படத்துக்கென ஹெர்ஜ் உருவாக்கி, அப்படியே கிடந்து போனதொரு ஓவியம் 2021-ல் இருபத்தியெட்டுக் கோடி ரூபாய்களின் இணையான தொகைக்கு ஐரோப்பாவில் ஏலம் போயுள்ளது ! உலகிலேயே மிக காஸ்ட்லியான காமிக்ஸ் சித்திரம் என்ற பெருமையை இது ஈட்டியுள்ளது ! 

**உலகளாவிய மொத்த விற்பனை எண்ணிக்கைகளில் நமது லக்கி லூக் ; சுஸ்கி & விஸ்கி - டின்டினுக்கு tough தரும் ஆற்றல் கொண்டிருப்பதாய்த் தெரியலாம் தான் ! ஆனால் பெரியதொரு வித்தியாசமுண்டு - becos வெறும் 24 ஆல்பங்களைக் கொண்டே டின்டின் சாதித்திருப்பதை மற்ற தொடர்கள் மிக மிகக் கூடுதலான ஆல்பங்களின் எண்ணிக்கைகளோடே சாதித்துள்ளன ! 

**ஹெர்ஜின் அந்தத் தெளிந்த நீரோடை போலான சித்திர பாணி பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகினில் ஒரு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது ! Ligne Claire என்று அழைக்கப்படும் இவரது இந்த கிரிஸ்பான சித்திர பணியினை பின்னாட்களில் கணிசமான ஓவியர்கள் பின்பற்றியுள்ளனர் !

இப்போது சொல்லுங்களேன் guys - இந்த நாயகர் நமது சிலாகிப்புகளுக்கு உகந்தவரா ? இல்லையா என்று ?!

ரைட்டு....'ரமணா' mode-ல் இருந்து, மறுபடியும் முழியாங்கண்ணன் mode-க்குத் திரும்பிடலாமா ? டின்டின் எனும் ஜாம்பவானை தமிழில் உலவச் செய்ய வேண்டுமென்பது துவக்க நாட்கள் முதலே எனது கனவென்பதில் no secrets ! 1985-ல் பிராங்கபர்ட் புத்தக விழாவினில் - திறந்த வீட்டுக்குள் எதுவோ நுழைந்தது போல, டின்டின் பதிப்பக ஸ்டாலில் புகுந்து ரைட்ஸ் கேட்டு, செம பல்பு வாங்கியதைப் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் தானே ? "பல்பு படலம்" அத்தோடு ஓய்ந்திருக்கவில்லை என்பது தான் மேட்டரே ! நமது இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய பிற்பாடு, தரத்தில், கலரில், கணிசமான  முன்னேற்றங்களுடன் உலவிடுகிறோமே என்ற தகிரியத்தில் டின்டின் என்ற மாமரத்தினை நோக்கி கல் வீசினால் நிச்சயமாய் மடியில் பழம் விழும் என்ற குருட்டு நம்பிக்கை எப்படியோ உள்ளுக்குள் குடியேறி இருந்தது ! So 2016-ன் ஒரு சுபயோக சுபதினத்தினில் ஜூனியர் எடிட்டரும், நானுமாய் படைப்பாளிகளின் முன்னே ஆஜராகியிருந்தோம் ! 

'நேரா போறோம்...நம்ம புக்ஸ காட்டுறோம்...பேசறோம்....full cash அஞ்சே நிமிஷத்தில் வாங்கிட்டு திரும்பறோம் !" என்று செம கெத்தாய் ஜூனியரிடம் பில்டப்பெல்லாம்  தந்து வைத்திருந்தேன் ! அங்கே பொறுப்பிலிருந்த டாப் நிர்வாகி எனக்கு ஏற்கனவே  பரிச்சயமானவர் என்பதால் நிச்சயம் காரியம் ஜெயமாகிடும் என்ற நம்பிக்கை ! அன்பாய் வரவேற்றார் ; நட்பாய்ப் பேசினார் தான் ; ஆனால் தான் நிர்வகிக்கும் டின்டின் பத்தோடு பதினொன்று ரகமல்ல என்பதால் ஹெர்ஜ் அவர்களின் எஸ்டேட் உலகெங்கும் விதித்திடும் கணிசமான நிபந்தனைகளுக்கு ; தரம் சார்ந்த எதிர்பார்ப்புகளுக்கு ஈடு தந்திட இயன்றாலொழிய உரிமங்கள் சாத்தியமே ஆகாதென்று கண்ணியமாய்ச் சொன்னார் ! அந்த நொடியில் நமது உசரமென்ன ? என்பது மெய்யாலுமே எனக்குப் புரிந்தது ! உள்ளூரில் நாம் பெத்த சண்டியர் என்றாலும், அசலூர்களின் ஒப்பீட்டில் நாம் இன்னமுமே பச்சை மண்களே என்பதை மறுக்க முடியவில்லை !  நண்பரின் பேச்சிலிருந்த நயமான லாஜிக் ; நியாயம் எல்லாமே ஸ்பஷ்டமாக மண்டையில் ஏறியது ! அந்த நொடியினில் வீராப்பாய்ப் பேசி உரிமைகளுக்குத் துண்டைப் போட்டிருக்கலாம் தான் ; but எனக்கே அந்தத் தருணத்தினில் நாமின்னும் டின்டினுக்கு ரெடியாகவில்லை என்பது புரிந்தது ! So இன்னமும் உரம் சேர்த்துக் கொண்டதொரு பின்னாளில் மீண்டும் வருகிறோமென்று சொல்லி விட்டு விடைபெற்றோம் ! 

In hindsight - அதுவே சரியான தீர்மானம் என்பது புரிகிறது ! தயாரிப்பின் டெக்னிக்கல் விஷயங்களில் கணிசமான முன்னேற்றங்கள் இடைப்பட்டிருக்கும் இந்த 7 ஆண்டுகளில் அரங்கேறியுள்ளன ! And அவற்றை நடைமுறைப்படுத்திட ஏற்ற தொழில் நுணுக்கங்கள் நம்மிடம் உள்ளனவா ? இல்லையா ? என்று பகுத்தாய்ந்திடவும் இந்த ஏழாண்டுகள் உதவியுள்ளன ! So தெளிவானதொரு திட்டமிடல் சகிதம், போன ஆண்டினில் டின்டின் குழுமத்தின் முன்னே மறுபடியும் ஆஜரானேன் ! இடைப்பட்ட காலங்களில் நாம் என்ன செய்து வருகிறோம் ? எந்தெந்த பதிப்பகங்களோடெல்லாம் கரம் கோர்த்து வருகிறோம் ? என்பதை அவர்களுமே கவனித்து வந்துள்ளனர் ! நிறைய பேசினோம் ; நிறைய கேட்டுக் கொண்டேன் ; நிறைய புரிந்தும் கொண்டேன் ! And இறுதியாய், கிட்டத்தட்ட 5 மாதங்களின் பிரயத்தனங்களின் பின்பாய், அவர்களின் இசைவும் கிட்டியது ! இந்த பிப்ரவரியில் ராயல்டி தொகையினையும் செலுத்தி கோப்புகளை வாங்கிய நொடியில் எனக்குள் ஏதேதோ நினைவுகள் - கலவையாய் !

17 வயதான பொடிப்பயலாகக் காமிக்ஸ் உலகினுள் கால்பதித்த வேளையில் உலகைத் தூக்கி நிறுத்தப் போகிறோமென்ற உத்வேகமோ ; கடைசி வரைக்கும் இந்தத் துறையினில் தொடர்வோமேன்ற கனவுகளெல்லாம் என்னுள் இருந்ததில்லை ! பத்திரிக்கை துறையினில் காலம் தள்ள வேண்டுமென்ற லட்சியமெல்லாம் அது என்னவென்று தெரியாமலே இருந்தது தான் ; ஆனால் படித்து, முடித்து, ஆபீசில் அமர்ந்த பிற்பாட்டுக்கு அதெல்லாம் தானாய் நிகழும் என்றே எண்ணியிருந்தேன் ! But 'அம்போ'வென நட்டாற்றில் விடப்பட்டிருந்த 1983-ல் - "காலேஜ் போகாமல் வெட்டியாய் ஊரைச் சுற்றித் திரிகிறானே" - என்ற பரிகாசத்துக்கு ஆளாகிடப்படாதே !! காலேஜ் போவதைக் காட்டிலும் எனக்கு முக்கியமான ஒரு புழைப்பு உள்ளதென்று" என் நண்பர்களிடம் சொல்லிக் கொள்ள ஒரு முகாந்திரம் மட்டுமே பிரதானமாய்த் தேவைப்பட்டிருந்தது ! ஆக ஏதோவொரு நோக்கில் ; ஏதோவொரு கட்டாயத்தில், 1984-ல் இத்துறையினுள் அமிழ்ந்திட நேர்ந்தது என்பதே நிஜம் ! So "அன்றைக்கே டின்டின் போடணும் ; சூப்பர்மேன் போடணும் ; மிக்கி மவுஸ் போடணும் ; டெக்ஸ் வில்லர் போடணும் என்றெல்லாம் நெற்றியில் வீரத் திலகமிட்டு வீர சபதம் எடுத்தேன் ; சூளுரைத்தேன் " என்று சினிமா பாணியில் அள்ளி விட என்னிடம் flashback லேது ! 

எனது பால்யங்களை வண்ணமயமாக்கிய கதை நாயகர்களை உங்களிடமும் காட்டிட வேணும் ; அந்த முயற்சியில் கெளரவமாய் ரெண்டு காசு சம்பாதிக்க முடிந்தால், வீட்டிலிருந்த கஷ்டங்களுக்கு சன்னமாகவாச்சும் நிவாரணம் கிடைக்குமே ?! என்பதே அந்த நேரத்தின் சிம்பிளான கனவாக இருந்தது ! என் தாத்தாவின் ரூபத்தில் ஆண்டவன் துணை நின்றார் ; ஏதேதோ செய்தேன் ; ஸ்பைடர் கைகொடுத்தார் ; ஆர்ச்சி அடுத்த படியேற உதவினார் ; டெக்ஸ் வில்லரெனும் ஜாம்பவான் தனது குதிரையின் ஓரத்தில் தொற்றிக் கொள்ள வாய்ப்புத் தந்தார் ; ஜாலி ஜம்பருக்குப் போட்ட தீவனத்தில் ஒரு கையை நமக்கும் போட்டார் லக்கி லூக் ; பிராங்கோ-பெல்ஜிய காமிக்ஸ் உலகு நம்மை தத்தெடுத்துக் கொண்டது ; இத்தாலிய காமிக்ஸ் உலகம் குளிர் தெரியாதிருக்கப் போர்வை தந்தது ; பசி அறியாதிருக்க அன்பானதொரு வாசக வட்டம் வாய்த்தது - and இதோ 39 ஆண்டுகளுக்குப் பின்பாய் டின்டின் எனும் சிகரத்தினை தொட்டுப் பார்க்கும் அண்மையில் நிற்கின்றோம் ! 

'அட...நாம பாக்காத காமிக்சா ? வாரம் ஒரு புதுத் தொடரெல்லாம் பார்த்தவுக தானே நாமெல்லாம் ? இதிலே சிகரம்...தகரம்னுலாம் திடீர் செண்டிமெண்ட் சப்போட்டாவைப் புளியோ புளியென்று புளிவானேன் ?' என்ற உங்களின் மைண்ட்வாய்ஸ் எனக்குக் கேட்கிறது guys ! My answer is pretty simple : 

பெர்சனலான ஒரு பெரும் கனவு நனவாகிடுவதன் மகிழ்வு மாத்திரமே இது ! நிறைய பயணித்துள்ளோம் ; நிறைவாய்ப் பயணித்தும் உள்ளோம் ; ஏகப்பட்ட கதை நாயகர்களோடு அன்னம்-தண்ணீரெல்லாம் புழங்கியும் உள்ளோம் தான் - but உங்களுக்கெல்லாமே ஸ்பைடர் மீது ; மாயாவி மீது ; சுஸ்கி-விஸ்கி மீதென்ற மறக்க முடியா பால்யக் காதல்கள் உள்ளதைப் போல எனக்குமே 4 மெகா காதல்கள் இருந்ததுண்டு ! And இத்துறைக்குள் நீடிக்கும் வரம் கிட்டிய பிற்பாடு, அவற்றை உங்களோடும் பகிர்ந்திடும் பெரும் கனவிருந்து வந்துள்ளது ! வேதாளர் எனது காதல் # 1 என்றால், டெக்ஸ் வில்லர் கனவு # 2 !  And காதல் # 3 - ஆஸ்டெரிக்ஸ்  & காதல் # 4 - சாட்சாத் டின்டின்னே தான் ! 

இங்கே ஐயமின்றி முடி சூடிய சக்கரவர்த்திகள் ஆஸ்டெரிக்ஸ் & ஒபெலிக்ஸ் ஜோடியே ! ஆல்பம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 45 லட்சம் புக்ஸ் விற்பனையாகின்றன இன்றைக்கு ! இதோ, காத்திருக்கும் அக்டொபரில் அடுத்த ஆல்பம் வரவுள்ளதாம் ; பிரெஞ்சு புத்தக விற்பனையாளர்கள் அத்தனை பேரும் சப்புக் கொட்டிக்கொண்டு காத்துள்ளனர் ! And இங்கே ஒரு கொடுமை என்னவென்றால் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரைக்கும் ஆஸ்டெரிக்ஸ் தொடருக்கான உரிமைகளை சந்தை செய்து வந்தது நமக்கு ரொம்பவே பரிச்சயமான நிறுவனம் தான் & அந்த நாட்களில் இந்தத் தொடரின் விற்பனைகளும் இத்தனை அசாத்திய உச்சங்களில் இருந்திருக்கவில்லை ! So நாம் நியூஸ்பிரிண்ட்டில் குப்பை கொட்டிக் கொண்டிருந்த காலகட்டங்களில் சீரியஸாக முயன்றிருந்தால் maybe ஆஸ்டெரிக்ஸ் தமிழ் பேசி இருக்கக் கூடும் ! ஆனால் இந்தக் கதைத் தொடரின் முதுகெலும்பே மொழிபெயர்ப்பும், பெயர்களை வைத்துச் செய்திடும் பகடிகளும், பிரெஞ்சு மண் சார்ந்த வட்டார வழக்கிலான காமெடிகளிலுமே எனும் போது - இவற்றை மொழிமாற்றம் செய்து அதே ரீதியிலான வெற்றிகளை ஈட்ட முடியுமா ? என்பதில் ஒரு நூறு சந்தேகங்கள் இருந்தன & இருக்கின்றன ! So ஜாம்பவான்களை அண்ட ஒரு வித பயம் இருப்பதே நிஜம் ! 

எஞ்சியிருந்த 3 கனவுகளில் டெக்ஸை வெகு காலம் முன்பே நனவாக்கியாச்சு & வேதாளரை சமீபத்தில் ! So டின்டின் மட்டுமே எட்டா உயரத்தில், எட்டா கனவாகவே தொடர்ந்திட, அவரை அண்டும் ஆவல் மட்டும் உள்ளுக்குள் கனன்று கொண்டே இருந்தது ! And இதோ - தொடும் தூரத்தினில் அந்தக் கனவுமிருக்க, விக்கிரமன் பட பாணியினில் சென்டிமென்டை பிழிவதைத் தவிர்க்க இயலவில்லை guys ! "உயிரைத் தேடி" போலான உங்களின் பால்யத்துக் கனவொன்று நனவாகிடும் வேளையில், நீங்கள் கொள்ளும் உற்சாகத்துக்கு ஈடாக இதைப் பார்த்து விட்டு மன்னிச்சூ ! ஏழு கழுதை வயசான பின்னேயும் எப்போதாச்சும் ஒரு உற்சாகத் துள்ளலில் தப்பில்லீங்களே ? 

So இதுவே நிலவரம் ! கிட்டத்தட்ட இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே உரிமைகளை வாங்கிய பிற்பாடு, வாகானதொரு தருணத்தினில் அறிவிக்கும் பொருட்டு வாய்க்கு பெவிகால் போட்டு வைப்பதற்குள், போதும்- போதுமென்றாகிப் போச்சு ! இனியும் தாமதித்தால் மண்டை தாங்காதென்பதால் சொல்லியாச்சு ! இனி திட்டமிடலைப் பற்றியும் சொல்லிடடுங்களா ? 

*உலகெங்கும் வெளியாகிடும் அதே சைசில் ; அதே அமைப்பில் ; அதே அட்டைப்படங்களுடன் இங்கும் வந்திட வேண்டுமென்பது அவசியம். So மேக்சி சைசில் 64 பக்கங்களுடன் முழு வண்ணத்தில் டின்டின் உங்களை சந்திக்கவுள்ளார் ! 'இந்த லே-அவுட் லுச்சாவா இருக்கு ; இந்த சைஸ் பேஜாரா கீது ; இதுக்கு பாக்கெட் சைஸ் தான் குன்சா இருக்கும்' போன்ற அபிப்பிராயங்களுக்கு துரதிர்ஷ்டவசமாய் இங்கே இடமிராது ! Sorry guys ! 

*இதன் தயாரிப்புப் பணிகளுக்கு நம்மிடமுள்ள திறன்கள் போதாதென்பதால், அடுத்தகட்ட தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கும் வெளிமாநில அச்சுக் கூடத்திடமே பணிகளை ஒப்படைக்கவுள்ளோம் ! 

*சந்தாவினில் இடம்பிடித்திருக்கா இதழ் எனும் போது - இது முன்பதிவுக்கென்ற ரூட்டில் தான் பயணித்திட வேண்டியிருக்கும் ! 

*சந்தாவோடயே சொல்றதுக்கு என்ன கொள்ளை உனக்கு ? பிரிச்சி பிரிச்சி பணம் அனுப்பிட்டே இருக்கணுமா ?" என்ற மைண்ட்வாய்சா ? Sorry folks ; certain things are not in my control ! சில தருணங்களில் நமது முயற்சிகள் காயாகி, கனியாகி, கூடைக்குள் விழுந்திட எத்தனை அவகாசம் பிடிக்குமென்பதை கணிக்க இயல மாட்டேங்குது ! போன வருஷத்தின் பிற்பாதியினில் துவங்கிய முயற்சிகள் இதோ - இந்த பிப்ரவரி வரைக்கும் எடுத்துள்ளது ! So முறையாய் அறிவிப்பு வரும் ; அதற்கேற்ப கணிசமான அவகாசம் தந்து முன்பதிவுகளைத் துவக்கிடுவோம் !

*நடப்பாண்டின் ஆகஸ்டில் - ஈரோட்டில் டின்டின் உங்களை சந்திக்க ரெடியாகிடுவார் என்பதே இந்த நொடியின் சிந்தனை ! And இந்தத் தொடரின் தெறிக்க விடும் top சாகசம், 2 பாக த்ரில்லராய் 'ஏக் தம்மில்'  வெளிவரவிருக்கின்றது   ! 7 CRYSTAL BALLS & PRISONERS OF THE SUN" என்ற பெயர்களில் இங்கிலீஷில் வெளியான டபுள் ஆல்பம்ஸ் - "7 ஸ்படிகப் பந்துகள்" + "கதிரவனின் கைதிகள்" என்று தமிழில் காத்துள்ளன ! 

*அதைத் தொடரவிருப்பன 2 தெறிக்கும் சிங்கிள் ஆல்பம்ஸ் ! ஆண்டொன்றுக்கு 4 ஆல்பங்கள் என்பதே திட்டமிடல் !


So தற்போதைய ஆன்லைன் மேளாவின் ஆர்டர்களை அனுப்பி முடித்த கையோடு விரைவிலேயே, டின்டின் முன்பதிவு குறித்த விபரங்களைப் பகிர்ந்திடுவோம் - எனது உற்சாகம் உங்களையும் தொற்றாது போகாதென்ற நம்பிக்கையில் !!! புனித மனிடோ எப்போதும் போலவே நம்மை வழிநடத்துவாராக ! 

Bye folks ..have a beautiful day ! ஆன்லைன் மேளா களை கட்டட்டும் !!

260 comments:

  1. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  2. நானும் இருக்கேன்

    ReplyDelete
  3. ஹைய்யா பெரிய கதை.... வாசித்துட்டு வர்றேன்...

    ReplyDelete
  4. அம்மாடியோவ்....ஆத்தாடியோவ்.....நான் என்னா செய்வேன்....காண்பது கனவா ?! நனவா ?! கையை கிள்ளிப் பார்க்கின்றேன். வலிக்கிறது. ஆக நனவு தான். டின் டின் தமிழில் வருகின்றதா ? ஒரு நீண்ட கனவு நனவாகிறது. உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது எனத் திகைக்கின்றேன் சார். உண்மையிலேயே 2023 நமது காமிக்ஸின் பொற்காலம் தான் சார். விரைவில் முன்பதிவை அறிவியுங்கள் சார். நன்றியோ நன்றி சார்.

    ReplyDelete
  5. அப்படிப் போடு அருவாள சரவணா . செம மிரட்டலான அசாத்தியமான செய்தி சார். கனவு கூட கண்டது இல்ல. எங்கள் கனவை நனவாக்கிய உங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும் சார்.

    ReplyDelete
    Replies
    1. ////எங்கள் கனவை நனவாக்கிய உங்களை எப்படிப் பாராட்டினாலும் தகும் சார்.////

      +55555

      Delete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சீனியருக்கே நேற்று தான் தெரியும் சார் :-)

      பெவிகால் பெரியசாமி ரொம்ப ஸ்டிக்டு !

      Delete
    2. டின் டின் அறிவிப்பு அருமையோ அருமை சார்,யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பு...
      நல்லதொரு நாளில் ஆஸ்டிரிக்ஸ் தொடரை வெளியிடும் நன்னாளும் புலப்படும் சார்,பிடியுங்கள் சார் பூங்கொத்தை...
      அடுத்தடுத்த முயற்சிகளும்,வளர்ச்சிகளும் மகிழ்வை அளிக்கின்றன...
      இதயாமார்ந்த வாழ்த்துகள் சார்...
      முன்னாளின் ஒரு மோட்டுவளை தருணத்தில் ஆங்கிலத்தில் வரும் காமிக்ஸ் எல்லாம் படிக்க நமக்கு பொறுமை பற்றாது,ஆசிரியர் சீக்கிரமே எல்லாத்தையும் தமிழ்ல வெளியிடுவார் கொஞ்சம் காத்திருன்னு எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்,அத்தருணம் புலப்பட்டது மகிழ்ச்சி...
      டின்டின் அறிவிப்பு பற்றி சீனியர் எடிட்டர் என்ன கருத்து சொன்னார் என்று அறிய ஆவல் சார்...

      Delete
  7. டின் டின் தமிழில்!!!

    ReplyDelete
  8. யாரும் கொஞ்சமும் எதிர்பாராத சர்ப்ரைஸ்.

    டின் டின் அனிமேசன் படம் பார்த்து இருக்கேன் இப்போது முதல்முறையாக தமிழில் காமிக்ஸாக...

    வாவ் 😮😁😍💐

    ReplyDelete
  9. wow, surprising and yet eager to meet my childhood favourite in TAMIL. And as you said about Asterix, me too always ponder about how to translate the name of each character without altering the meaning. But i really believe that you would have thought about it all these years and would have found a solution. Eager to see obelix to speak tamil too.

    ReplyDelete
    Replies
    1. Another peak....hopefully before my time's up...!

      Delete
  10. நடந்தே விட்டது ஐய்யா இதுக்கு மேல எனக்கு என்ன வேண்டும். இந்த டின்டின் சீரிஸ் தமிழில் வருவதை விடவும் சந்தோசமான செய்தி. வேறு எதுவும் உண்டா???

    கலக்குங்க சார். இது உங்கள் காமிக்ஸ் வாழ்வில் ஒரு மைல் கல் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..


    ஐய்யோ என்ன சொல்லறது என்றே தெரியவில்லை...


    என் கால் தரையில் படவில்லையே...


    On Cloud 9 Sir

    ReplyDelete
    Replies
    1. இப்படி ஒரு சந்தோசத்தை உணர்ந்தது இல்லை சார். அப்படியே திக்கு முக்காடி போய் விட்டேன்.

      உங்கள் பதிவுகளில் டாப் இதுவே...

      Delete
    2. கவிஞர் ரேஞ்சுக்கு போய்ட்டீங்க சார் ; அது சரி, பதிவு வர்ற வரைக்கும் கம்பு சுத்திக்கிட்டிருந்த கவிஞரைக் காணோமே ?

      Delete
    3. Kumar sir .. EBF ke tintin a .. Appo CBF ku ??

      Delete
    4. கவிஞர் ரேஞ்சுக்கு என்னை உங்களுடைய இந்த பதிவு ஆக்கி விட்டது சார். ஒரு குத்தாட்டமே போட்டு விட்டேன்.

      Delete
    5. கோடாலி சங்க டான் இன்னும் இங்க வரலை. என்ன செய்யுறாறோ. எங்க போனாரோ.

      Delete
    6. சார் ஊர்ல இருக்கேன்....பையன் ஆத்துக்கு கூட்டிப் போகச் சொல்ல.. எடுத்து பாத்தா பதிவு....ரசிச்சு படிக்க முடியாதே....அதான் வந்ததும் எடுத்தேன்...மலைத்தேன் ஆஸ்ட்ரிக்கும் வரும் காலம் தொலைவிலில்லையென

      Delete
  11. நீண்டநாள் காத்திருப்பில் கல்லும் கனியாகும்.... டின்டின் தமிழ்பேச காலம் கனிந்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி ஸார்... வரவேற்கிறேன்... ஆங்கிலத்தில் எனது மகள் டின்டின் படித்துவிட்டு.... அப்பா இதெல்லாம் தமிழ்ல வராதா என்று சில ஆண்டுகளுக்கு முன் கேட்டது இப்போது ஞாபகத்திற்கு வருகிறது .... விரைவில் டின்டின் தமிழ்பேசும் என்பதை மகளிடம் சொல்லி மகிழ்வேன்.... மிக்க மகிழ்ச்சி💐

    ReplyDelete
  12. மே தினத்தில் அட்டகாசமான அறிவிப்பு.நன்றி சார்

    ReplyDelete
  13. யா..ஹு ...ஈரோட்டுக்கு டின்டின் வாராரு...

    ReplyDelete
  14. வாவ்..
    டின்டின்..
    ரியலி சர்ப்ரைஸ் சார்..
    இதுவரை படித்திராத கதை..
    அந்த நாட்களில் என் தம்பி ஆங்கிலத்தில் வாங்கி வந்திருக்கிறான், என அண்ணன் மகளுக்கென.
    அப்போது பார்த்த நினைவுகள் மட்டுமே. படித்ததில்லை.

    ReplyDelete
  15. // நடப்பாண்டின் ஆகஸ்டில் - ஈரோட்டில் டின்டின் உங்களை சந்திக்க ரெடியாகிடுவார் என்பதே இந்த நொடியின் சிந்தனை ! And இந்தத் தொடரின் தெறிக்க விடும் top சாகசம், 2 பாக த்ரில்லராய் 'ஏக் தம்மில்' வெளிவரவிருக்கின்றது ! 7 CRYSTAL BALLS & PRISONERS OF THE SUN" என்ற பெயர்களில் இங்கிலீஷில் வெளியான டபுள் ஆல்பம்ஸ் - "7 ஸ்படிகப் பந்துகள்" + "கதிரவனின் கைதிகள்" என்று தமிழில் காத்துள்ளன ! // போடு வெடிய...

    ReplyDelete
  16. தமிழ் கூறும் காமிக்ஸ் உலகிற்கு டின் டின்னை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  17. டின் டின்!!!

    இட்ஸ் கிரேட் சார்!!!

    ReplyDelete
    Replies
    1. இந்த வருட செ.பு.வி யில் கூட முழு செட்டையும் எடுத்து திருப்பி திருப்பி பார்த்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே வந்தேன்...

      இன்று நிஜமாகி இருக்கிறது!!!

      Delete
    2. ////இந்த வருட செ.பு.வி யில் கூட முழு செட்டையும் எடுத்து திருப்பி திருப்பி பார்த்துவிட்டு ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே வந்தேன்.../////

      நானும் கூட சென்ற ஆண்டு மதுரை புக்பேர்- யும், இப்போ விழுப்புரம் புத்தக கண்காட்சியில் இதோட ஆங்கில புத்தகங்களை ஆசையா புரட்டி புரட்டி பாத்துட்டு வாங்காம பெருமூச்சு விட்டுட்டு வந்தேங்க.
      இந்த அரிய செயல் ஆற்றிய எடிட்டர் சாருக்கு, ஒரு விழா எடுக்கனுங்க. ஈரோடு விழாவில எங்க சங்க தலைவர், எடிட்டர் சார் அவர்களை கௌரவிக்க கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
    3. அரிய செயல் = சரித்திர நிகழ்வு

      Delete
  18. // ஏழு கழுதை வயசான பின்னேயும் எப்போதாச்சும் ஒரு உற்சாகத் துள்ளலில் தப்பில்லீங்களே ? // தப்பே இல்லீங்க சார்.

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு எழுபது வயசானாலும் துள்ளிக் குதிச்சுக்கிட்டே இருக்கணும்!! :)

      Delete
  19. Sir, unbelievable... No words to express my joy and happiness... We are making a mark in Comic World this year no doubt about it... My favorite hero is gonna talk Tamil, so stoked... Hats off sir, for this unbelievable feather in your cap... Kudos to your entire team...

    ReplyDelete
    Replies
    1. Feather மட்டுமில்லை சார்.. முழுப் பறவையையுமே தூக்கி தொப்பில வச்சுக்கிட்டமாதிரி இருக்கு!🥳🥳🥳🥳🥳🥳

      Delete
  20. குழந்தைகளுக்கான பொக்கிசம் மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. வயதான குழந்தைகளுக்குத் தானே ?!😀😀😀

      Delete
    2. தவறு நண்பரே ; மெய்யான 7 to 77 வாசிப்பு அனுபவத்துக்கு டின்டின்னே பிரதம உதாரணம் !

      Delete
    3. நான் இன்னும் வாசித்து கொண்டு தான் இருக்கிறேன்.

      Delete
  21. Alejandro jodorowskiயின் பிற காமிக்ஸ் வர வாய்ப்பு உள்ளதா? பவுன்சர் தவிர?

    ReplyDelete
  22. Fabulous news indeed.I am sure Asterix & Obelix speaks tamil soon

    ReplyDelete
  23. Maxi size என்றால் நம்ம வேதாளன் மாண்ட்ரேக் வந்த சைஸா ?

    ReplyDelete
  24. இன்னும் ஆஸ்ட்ரிக்ஸ் & ஓப்ளிக்ஸ் வந்தால் நமது ஜென்மம் சாபல்யமடையும் சார்.

    ReplyDelete
    Replies
    1. விரைவில் அந்தக் கனவும் மெய்ப்படும் என்று நம்புகிறேன்

      Delete
  25. உங்களுடைய கனவுகளோடு எங்களுடைய கனவுகளையும் சேர்த்தே நிறைவேற்றுகிறீர்கள் சார். ஆனால் எனக்கு பிடித்த படத்தை மொக்கை என்று சொல்லிவிட்டீர்களே 😪 அது தான் வருத்தம்.. ஈரோடு அதகளபட போகிறது.

    ReplyDelete
  26. Tin tin பக்கம் நம் போவதற்கான வாய்ப்பை இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். உங்களது தீவிர முயற்சியால் நினைவாக உள்ளது. 7 crystal balls and Prisoner of the Sun இந்த இரண்டு கதைகளின் அனிமேட்டட் சீரியஸ் பலமுறை பார்த்திருக்கிறேன். கிட்டத்தட்ட ரிப்போர்ட்டர் Jhonny கதைகளுக்கு இணையான மர்மங்கள் துப்பறியும் விதம் இருக்கும். என்ன ஜானி கதைகள் உலகம் எங்கும் சுற்றாமல் முடிந்துவிடும் கதை. But tintin ஜேம்ஸ்பாண்ட் மூவி போல உலகத்தையே சுற்றி வரும். ஐ அம் வெயிட்டிங்.
    அப்படியே அந்த ஆஸ்டிக்ஸ் அண்ட் ஒப்ளக்ஸ் அதையும் முயற்சி செய்து விடுங்கள். நன்றி

    ReplyDelete
  27. Wow - made my day sir. I too have a Grandpa story for Tintin. Shall narrate in the afternoon.

    ReplyDelete
    Replies
    1. ஐ! மதியம் இன்னொரு கதையா!!!

      சொல்லுங்க ராக் ஜி.. கதை கேட்கறதுன்னா எங்களுக்கு கிருஷ்ணா ஸ்வீட் சாப்பிடற மாதிரி! :)

      Delete
  28. Tintin is my all time favourite Belgian comic.

    ReplyDelete
  29. ஏழு கழுதை வயசானாலும் நம் மனசின் வயது எப்பொழுதும் பதினேழு தான் என்பதை நித்தம் நிறுபித்துள்ளது தங்களின் டின் டின்னின் நினைவு பகிர்வுகள் 🙏🙏🙏👍👍🎉🎉

    ReplyDelete
  30. 🤩🤩🤩🤩🤩🤩😍😍😍😍😍😍😍😍😍 டின்டின்🥰🥰🥰🥰🥰🥰
    தமிழில்😍😍😍😍😍😍😍😍😍
    ஈரோட்டில்🕺🕺🕺🕺🕺🕺🕺🕺😍😍😍😍😍
    இரட்டை ஆல்பம்🕺🕺🕺🕺🕺🕺🕺

    அட்டகாசம் சார்!! தூள் பண்றீங்க!!!😃😃😃😃😃😃😃

    என்னோட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை சார்!! ஏதோ ஒரு பெரிய கனவு நிறைவேறினாப்ல இருக்கு!! 🥰🥰🥰🫠🫠🫠🫠🫠🫠

    இது இது இதுதான் எங்க எடிட்டர்ன்றது!!🥳🥳🤩🤩🥳🥳🥰🥰🥰

    இந்தமாதிரி கனவுகளெல்லாம் கூட இந்தச் சிறு கூட்டத்துக்கு வசப்படுதுன்னா.. அது உங்களால் தான்!! நன்றிகள் கோடி - எடிட்டர் சார்!!🙏🙏🍫🍫🍿🍬🍨🍦💐🍿🍧

    சீக்கிரமே எங்க (+ உங்க) 3வது கனவும் நிறைவேறணும்னு இந்த நேரத்தில் சர்வ வல்லமை படைத்த புனித மனிடோவையும், உள்ளூர் ஆத்தாவையும் வேண்டிக்கொள்கிறேன்!!

    ReplyDelete
    Replies
    1. ஞானும் செயலர் சொல்படியே வேண்டிக்கொள்கிறேன்

      Delete
    2. எங்க தலைவரோடு இணைந்து சங்கமே, நாக்குல வேல் குத்தி இந்த வேண்டுதல் நிறைவேற புஷ்ப காவடி எடுக்குது. மதுரை மீனாட்சி அருள் புரியம்மா.

      Delete
    3. ///எங்க தலைவரோடு இணைந்து சங்கமே, நாக்குல வேல் குத்தி இந்த வேண்டுதல் நிறைவேற புஷ்ப காவடி எடுக்குது. மதுரை மீனாட்சி அருள் புரியம்மா.////

      😁😁😁😁😁 நம் அனைவரின் சார்பாக தலீவரே இதை செய்து முடிப்பார்!!

      Delete
  31. 7 crystal balls ஒரு கல்லறையில் இருந்து எடுக்கப்படும் mummy , அதைத் தொடர்ந்து மர்மங்கள் வரும் பிரச்சினைகள் என்பது மட்டும் நினைவில் உள்ளது

    ReplyDelete
  32. என் அண்ணன் jsk வின் தீராத ஆசை..
    டின் டின்ன தமிழ்ல படிக்கனும் என்பது..
    இன்று அது நிறைவேறப் போகிறது..
    ஆனால்....

    ஆத்மார்த்தமாய் அவன் இதை உணரப் போகிறான்..

    நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. JSKன் புன்னகையை கண்களை மூடி உணரமுடிகிறது!

      Delete
    2. சத்தியமாய் சொல்கிறேன் விஜய்..
      தற்போது வெளி வந்து கொண்டிருக்கும் உலகத் தரமான க்ளாசிக் இதழ்களை அவன் கண்டிருந்தால் வானத்துக்கும்,பூமிக்குமாய் குதித்திருப்பான்..

      ஒவ்வொரு க்ளாசிக் இதழ்களை கைகளில் ஏந்தும் போதும் சேர்ந்து படிக்க அவன் இல்லையே என்ற ஏக்கம் விழிகள் குளமாகிப் போவதை தவிர்க்க முடியவில்லை...
      இந்த சந்தோசத் தருணங்களை கண்டிப்பாய் அவனும் பார்த்துக் கொண்டுதான் இருப்பான்..

      Delete
    3. jsk அவர்கள் நம்முடன் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது அவரின் ஸ்பைடர் கதைகளின் விமர்சனம் இன்றும் உயிர்ப்புடனே இருக்கிறது

      Delete
    4. ///ஒவ்வொரு க்ளாசிக் இதழ்களை கைகளில் ஏந்தும் போதும் சேர்ந்து படிக்க அவன் இல்லையே என்ற ஏக்கம் விழிகள் குளமாகிப் போவதை தவிர்க்க முடியவில்லை...///

      உங்கள் உணர்வுகளைப் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது குணா! :(

      Delete
    5. நம் மனதில் இருந்த மறையாத எவரும் உண்மையில் மறைவதில்லை. எனவே JSKவுக்கு மறைவே கிடையாது.

      Delete
    6. //நம் மனதில் இருந்த மறையாத எவரும் உண்மையில் மறைவதில்லை. எனவே JSKவுக்கு மறைவே கிடையாது//

      ஆமாம் சகோ

      Delete
  33. உங்களுக்கு இறுக்கி அணைச்சி ஒரு உம்மா கொடுக்கனும் போல இருக்கு ஆசானே..

    ReplyDelete
    Replies
    1. வரிசையில நில்லுங்க குணா! :)

      Delete
    2. எனக்கு முன்னமே பெரிய க்யூ நிக்குது போல..

      Delete
  34. டின்டின் சந்தா எப்புட்டுன்னு சொல்லுங்க..
    சட்டுபுட்டுன்னு துண்ட போட்டு வப்போம்..

    ReplyDelete
  35. என் முதல் டின்டின் வாசிப்பே Prisoners of the Sunதான்... நான்காம் வகுப்புத் தோழனிடம் ஓசியில் வாங்கிப் படித்தேன்... மினிமம் ஒரு நூறு முறையாவது படித்திருப்பேன்... ஒவ்வொரு பேனலும் மறக்கவில்லை... வேடிக்கை என்னவெனில் அது இரண்டாம் பாகம்தான் என எனக்குப் புரியவே பல ஆண்டுகள் ஆகியது...

    நம் அன்பு லயனில் இந்த அற்புத கதையை படிக்கப் போகும் நாளை எண்ணி... ஆவலுடன் waiting...!!!

    ReplyDelete
    Replies
    1. எனது கனவு இதழ் இது. இந்த ஜென்மத்திற்குள் தமிழில் டின்டின் வராமல் போய் விடுமோ என்று நினைத்திருந்தேன். அது இன்று நிஜம் ஆகி விட்டது. உங்களது விடா தொடர் முயற்சிக்கு எனது நன்றிகள் சார்.

      Delete
  36. இன்று முதல் நீர் கனவுகளை நனவாக்கும் கர்ம வீர ஸ்வப்ன லோகாதிபதி என்று அன்போடு அழைக்கக் கடவீராக..

    ReplyDelete
    Replies
    1. இப்படி நா யோசிக்கலையே. நான் இதை வழி மொழிகிறேன் GUNA.

      Delete
  37. டின் டின் காமிக்ஸ் தமிழ் பேச வருவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஆசிரியர் விஜயன் சாருக்கு நன்றி

    ReplyDelete
  38. கனவை விடாமுயற்சியுடன் துரத்தி வெற்றி பெற்றதற்கு வாழத்துகள் சார்.. தமிழில் நிச்சயமாக இது ஒரு காமிக்ஸ் பொற்காலம்.. முதல் சுற்றில் இல்லாவிட்டாலும் இரண்டாம் சுற்றில் லயனுடன் பயணிக்க முடிவதில் truly blessed I am :)

    ReplyDelete
    Replies
    1. "கம்பேக் ஸ்பெஷல்" க்கு பின் லயன் காமிக்ஸ்ன் அடுத்த இன்னிங்ஸ் சார் இது.

      Delete
  39. "தாம்ப்சன் & தாம்சன்"

    அருமை... அருமை... மொழிபெயர்ப்பெல்லாம் முடிஞ்சிருச்சு போலேயே... !!!

    நல்ல வேளை மாஸ்க் போட்டுட்டு வேலை பாத்துக்கிட்டிருக்கேன்... இல்லைன்னா நானொரு இளிச்ச வாயன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சுரும்.... !!!!

    ReplyDelete
    Replies
    1. செம்ம Doc அந்த மாஸ்க் உதாரணம் செம்ம.

      எனக்கு இந்த பதிவை படித்ததில் இருந்து இப்போ வரை எங்கே இருக்கேன் என்றே தெரியவில்லை.

      Delete
  40. Wonderful Announcement sir,

    Tintin கதைகள் பெரும்பாலானவற்றை ஆங்கிலத்தில் படித்துள்ளேன் சேகரிப்பிலும் உள்ளது

    இருப்பினும் தமிழில் ரசிக்கும் ஆசை விடவில்லை ஆனாலும் இவற்றின் அதீத ராயல்டி விபரங்களை ஆசிரியர் தெரிவித்த பொழுது தமிழின் சிறிய Comics மார்க்கெட்டிற்கு இவை வருமென்ற நம்பிக்கை நீர்த்து போனது

    எதிர்பாராத இன்ப அதிர்ச்சி ( Secrets of Unicorn is my favorite )

    உங்கள் வசனநடையில் கேப்டன் ஹேடாக்கின் அழிச்சாட்டியங்களை படிக்க ஆர்வமாக உள்ளேன் Sir

    ReplyDelete
  41. பெவிகால் பெரியசாமி எங்களை ரொம்பவே மண்டை காய விட்டுவிட்டார். ஆனாலும் அதிலும் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கிறது.

    ReplyDelete
  42. Blistering Barnacles எப்படி எல்லாம் தமிழில் சொல்லலாம்???

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பிச்சு விடுங்களேன் சார்....அவரவர் கைவண்ணங்களை ரசிப்போம் !

      Delete
    2. நாத்தம்புடுச்ச நாறவாயன்கள்

      Delete
  43. இத்தனை அட்டகாசமான பதிவுல டின்டின்'னின் ஒரு பெரிய சைஸ் படத்தைப் போட்டிருந்தாத்தான் என்னவாம் - எடிட்டர் சார்?!!😼

    ReplyDelete
    Replies
    1. அதுக்கும் ஒரு குட்டிக் கதை கீது....பரால்லியா ?

      Delete
    2. பரவாயீல்லியா சொல்லுங்க சார் தங்களிடம் கதை கேட்க காத்து கொண்டே இருக்கும் கூட்டம் இது

      Delete
    3. உண்மை தலைவரே

      Delete
    4. சொல்லிங்க ஆசிரியரே
      கேட்க ஆவலாய் உள்ளோம்

      Delete
    5. அடுத்த பதிவா சொல்லுங்க சார்.

      Delete
    6. கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது எடிட்டர் சார்.. 'ம்' கொட்ட நாங்க ரெடி!!

      Delete
  44. நீண்ட கால கணவான வேதாளரை
    முத்து காமிக்ஸ் ல் பாத்தாச்சு

    இப்ப டின் டின்

    காமிக்ஸ் வாசகர்களுக்கு இதை வி வேறு என்ன வேனும்

    நன்றிகள் சார்

    ReplyDelete

  45. நாம் படிக்காதவற்றை படிக்கப் போகிறார்கள் என்பதும், நாம் காணா உயரங்கள் நம் வாரிசுகள் காண்பார்கள் என்ற நம்பிக்கையும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    சிறப்பு மகிழ்ச்சி நன்றி
    கனவுகள் மெய்யாகி நல்வெற்றி ஈட்டுவோம்.

    ReplyDelete
  46. அன்புள்ள ஆசிரியர் விஜயன் ஸாருக்கு வணக்கம். இனி இங்கு பின்னூட்டம் இடக் கூடாது என்றே இருந்தேன்.. ஆனால் இந்த டின் டின் பதிவு மனதை மாற்றி விட்டது.

    //*உலகெங்கும் வெளியாகிடும் அதே சைசில் ; அதே அமைப்பில் ; அதே அட்டைப்படங்களுடன் இங்கும் வந்திட வேண்டுமென்பது அவசியம். So மேக்சி சைசில் 64 பக்கங்களுடன் முழு வண்ணத்தில் டின்டின் உங்களை சந்திக்கவுள்ளார் ! 'இந்த லே-அவுட் லுச்சாவா இருக்கு ; இந்த சைஸ் பேஜாரா கீது ; இதுக்கு பாக்கெட் சைஸ் தான் குன்சா இருக்கும்' போன்ற அபிப்பிராயங்களுக்கு துரதிர்ஷ்டவசமாய் இங்கே இடமிராது ! Sorry guys ! //


    வாசகர் யாரும் சைஸ் மாற்றுங்கள் என்று மன்றாட போவதில்லை, அப்படியே மன்றாடினாலும் முடிவுகள் எடுப்பது உங்கள் கையில் தானே உள்ளது. சுப்ரிம் இதழ்கள் துவங்கும் போதும் இப்படித்தான் அனைத்து இதழ்களும் மேக்சி சைஸில் வரும் என்று வாக்குறுதியாக அறிவித்து விட்டு அந்த வரிசையின் ஆறாவது இதழின் சைஸை மாற்றி விட்டீர்கள். அது போல மேக்சி சைஸ் என்று இப்ப டின் டின்னை அறிவிப்பு செய்து விட்டு பின்னாளில் சைஸை மாற்றலாமா என்று ஒரு ஓட்டெடுப்பு நிகழ்த்தி மாற்றி விடாமல் இருந்தால் சரிதான்.

    தங்களிடம் 2014 ஈரோட்டில் புத்தக விழா சந்திப்பின் போது டின்டின் தமிழில் எப்போது பேசுவார் என்று கேட்டிருந்தேன். இதோ அதற்கான அழகிய வேளை புலர்ந்துள்ளது. மிக்க மகிழ்ச்சி sir.

    ReplyDelete
    Replies
    1. மேகக்கோட்டை மர்மம் என்ற லயன்காமிக்ஸ் இதழில் வாசகர் ஹாட்லைனில் டின்டின்,ஆஸ்ட்ரிக்ஸ் & ஒபிலிக்ஸ் ஆகியோரின் கதைகள் தமிழில் வர வாய்ப்புள்ளதா என கேட்டி ருந்த ராஜ்குமார் நீங்கள்தானா நண்பரே..

      Delete
    2. நண்பரே...ஒரு வாசகராய் ...அப்புறம் ஒரு விமர்சகராய் உங்களுக்கு maximum டபுள் ரோல் மட்டுமே ! ஆனால் என் நிலை அதுவல்ல !

      *ஒரு சுய விமர்சகனாய்
      *விமர்சனங்களுக்கு பதில் தர வல்லவனாய்
      *விற்பனைகள் சார்ந்த தீர்மானங்கள் எடுக்கும் பப்லிஷராய்
      *கதைகளினில் களமாடும் எடிட்டராய்
      *படைப்பாளிகளுக்கு பொறுப்பான லைஸென்சீயாய்
      *எல்லாவற்றுக்கும் மேலாய் ஒரு சின்னஞ்சிறு வட்டத்தின் கனவுகளை, அபிலாஷைகளை மெய்யப்படுத்த முயலும் சேவகனாய்

      எனக்கான ரோல்ஸ் கணிசம் !

      ஒரே நொடியில் மேற்படி அத்தனைக்கும் நியாயம் செய்ய நான் முனையும் போது நேரிடும் இடர்களுள் ஒன்று தான் சில முடிவுகள், மாற்றங்கள் உங்களை போன்றோருக்கு ஏற்படுத்தும் விசனங்களும், வருத்தங்களும் !

      Sorry சார்....வெளிப்பார்வைக்குத் தென்படுவது போல எனது இடம் சொகுசானதொரு குஷன் மட்டுமே அல்ல !

      Delete
    3. உண்மை தான் சார்..

      ஆனால் அனைவரையும் திருப்தி படுத்த அந்த ஆண்டவனால் கூட முடியாத பொழுது தாங்கள் என்ன செய்வீர்கள்..

      Delete
    4. நானும் மேக்சி ரசிகனே நண்பரே ....ஆனா சார்லி சைஸ் ஈட்டிய வெற்றி....ஆசிரியரும் மேக்சி ரசிகரே....நான் பிடிச்ச முயலுக்கு மூனு கால்னு ஆசிரியரும் நின்னா மேக்சி நிச்சயம்...ஆனா வெற்றி

      Delete
  47. சூப்பரோ சூப்பர்
    அருமையான நியூஸ்
    🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

    ReplyDelete
  48. இன்றைய பதிவை படித்துவிட்டு நான் ஆஹா ... ஓஹோ.. என்றெல்லாம் உங்களை புகழப்போவதில்லை அன்புமிக்க எடிட்டர் சார். தாங்கள் இதை சாதிப்பீர்கள் என்று எனக்கு முன்பே யூகித்திருந்தேன். எனென்றால் ஒவ்வொரு பந்தையும் சிக்சர்,பவுண்டரி சொல்லப்போனால் அடித்து வரும் நீங்கள் சர்ப்ரைஸ் என்று பொடி வைத்தாலே நான் இந்த டின்டின் கதைகளைத்தான் மனதில் எழும்.ஒரு திருக்குறள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. "இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்தன் விடல்"

    ReplyDelete
    Replies
    1. ///ஒரு திருக்குறள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. "இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன்தன் விடல்"///

      சூப்பர்!!

      Delete
  49. டின்டின் தமிழ்லயா! பகவானே நான் என்ன பண்ணுவேன்.. கையும் ஓடல.. காலும் ஓடல..

    அவா என்ன சைசில் சொன்னாளோ அதே சைசில் போட்டுக்கோ..

    முன்பதிவு எப்பஓன்னஉ சொல்லுங்கோ.. மொத்தமாவே கட்டினேன்...

    ReplyDelete
  50. பொதுவாக விடலை வயதுகளில் முளைக்கும் காதல்(கள்..😜😜😜) எல்லாம் பெரும்பாலும் தோல்வியில் முடியும்.ஆனால் தங்களுக்கோ நான்கு காதலில் மூன்றை வெற்றிகரமாக வசப்படுத்தி இருக்கிறிர்கள்.மீதமுள்ள காதலையும் நீங்க வெற்றிகொள்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு 100 சதவீதம் உண்டு. (அப்புறம் என்ன. கேட்டீங்க ... விடலை வயதில் உங்களுக்கெல்லாம் காதல் இல்லியா.. காதல் தோல்வி இல்லியா'ன்னா கேட்டீங்க .. "லாரி பின்னாடி நிக்குது தம்பி")

    ReplyDelete
  51. 30, 40 வருடமாக நூற்றுக்கணக்கான புக்ஸ் படிக்கிறாங்க.....அவுங்கவுங்களுக்கு பிடிச்சதை கொண்டாடுறாங்க...
    மற்ற ஹீரோக்களையும் வாசிக்கிறாங்க..

    ஆனா,
    ஆனா,
    ஆனா..

    ஒரு புக், ஒரே புக் ஜஸ்ட் ஓரேயார் புக் அவுங்க நினைச்சது போல வர்லனா உலகமே அத்தோடு முடிஞ்சிடுதுனு ஒரு எல்லையை பிக்ஸ் பண்ணிகிடுறாங்க....

    ///இத்தனை நாள் கொண்டாடிய ஆசிரியர் வேணாம், புக்ஸ் வேணாம்..எதுவும் வேணாம்...ஜஸ்ட் த்ரோன் இட் அவே!!///

    என்னய்யா இது லாஜிக்???

    ஹூம்...பெரிய பெரிய படிப்பு படிச்சவங்களும் கூட விதிவிலக்கல்ல போல...

    எத்தனை கல்வியும்,வாசித்தலும் பண்படுத்தவில்லையே...!!!ஹூம்..

    ReplyDelete
    Replies
    1. ஆமோததிக்கிறேன் சகோ
      ஆதங்களை கொட்ட இது நேரமல்ல

      டின்டின் கதையினை தத்தம் சிறுவயதில் படித்த ஞாபகம் வரவில்லையா
      ஆசிரயரின் நினைவுகள் படிக்கும் போது என் கற்பனையில் வெஜிடபிள் பிரியாணியின் வாசனை பிடித்தேன்
      அப்புறம் ரோஸ்மில்க் படித்தவுடன்
      ரோஸ்மில்க் குடிக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளேன்

      அதைபோல் இதையெல்லாம் மறக்க வைத்த காமிக்ஸ் காதல்

      நானுமே காமிக்ஸ் காதலால் இது போன்று செய்து உள்ளேன்😁😁😁

      காமிக்ஸ் காதலரால் காமிக்ஸ் காதலர்களுக்கு கிடைத்திருக்கும் பலகாரம்.... (ஆக்ஷன், டிக்டெக்டிவ் ஜான்ரா அப்பறம் காமெடி மிக்ஸ்)
      கொண்டாட வேண்டிய தருணம்

      Delete
    2. ஆசிரியரின் காமிக்ஸ் காதல். முன்னால் எப்படிபட்ட நண்பர்னாலும் கோபம் தவிடு பொடியாகத்தான வேணும்

      Delete
    3. ///ஆசிரயரின் நினைவுகள் படிக்கும் போது என் கற்பனையில் வெஜிடபிள் பிரியாணியின் வாசனை பிடித்தேன்
      அப்புறம் ரோஸ்மில்க் படித்தவுடன்
      ரோஸ்மில்க் குடிக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளேன்///

      நல்லவேளையா நம்ம எடிட்டருக்கு பீர், பிராந்தி குடிக்கற பழக்கமெல்லாம் இல்லை!! :D

      Delete
  52. வாவ்..வாவ்...சார் சத்தியமாய் எதிர்பார்க்க வில்லை...டின்டின் தமிழில் வருவார் என ..எனக்கு அவர் அறிமுகம் இல்லாதவரே...ஆனால் நிறைய இடங்களில் கேள்விப்பட்ட நபர்..போன வருடம் ஷெரீப் அய்யா எனது வாரிசுகளுக்காக இதே டின்டின் ஆங்கில் இதழை பரிசளித்து இருந்தார்..அப்பொழுது நானும் மிக ரசித்தேன்..இப்பொழுது தமிழிலும் தங்கள் மூலம் சூப்பர் சூப்பர் சூப்பர்..இந்த பதிவை நீங்கள் எவ்வளவு கொண்டாட்டததுடன் ,மகிழ்வுடன் எழுதியுள்ளீர்கள் என்பதை வாசிக்கும் பொழுத உணரமுடிகிறது மட்டுமல்ல சார் அதே கொண்டாட்டா மகிழ்ச்சி எங்களுக்குமே..உண்மையிலேயே எதிர்பாரா சர்ப்ரைஸ் சார் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  53. இதுவல்லவா சர்ப்ரைஸ்... அருமையான செய்தி சார். பல வருட கனவு நிஜமாகவே நடக்கப் போகிறது என்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்.

    மேலும் பல கனவுகள் மெய்ப்படட்டும்.

    தொடரட்டும் நமது தேடல்கள்.

    ReplyDelete
  54. டியர் எடி,

    இந்தியாவில் ஹிந்தி, பெங்காலிக்கு பிறகு தமிழில். டன் டணக்கா, டணக்கு நக்கா... இனி டின் டின் மணியோசை தான் ஒலிக்கும்.

    பல மேடைகளுக்கு நமது தமிழ் காமிக்ஸை கொண்டு செல்லும் இந்த முயற்சி என்பதில் எந்த ஐயமுமில்லை.

    டிங் டாங்.... கிற்கு பிறகு இனி டின் டின் தான்.

    ReplyDelete
  55. மே தின அறிவிப்பு இன்னோரு புது ஹீரோ அறிமுகமாக இருக்கும் என்று நினைந்திருந்தேன்

    எங்கள் எல்லாரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி விட்டீர்கள்🥰🥰🥰🥳🥳🥳🥳

    நன்றிகள் ஆசிரியரே 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

    ReplyDelete
  56. ////அதற்கு அடுத்த வாசலில் சும்மா 'ஜே ஜே' என்று ஓடிக்கொண்டிருக்கும் "அசோக் பவன்" எனும் ஹோட்டலில்///

    எனக்கும் சின்ன பிள்ளையிலேயே இந்த ஹோட்டல் தான் பேவரேட்.

    ReplyDelete
  57. தான் காணும் கனவு தனக்கு மட்டுமே மகிழ்ச்சி தந்தாலும் அந்த கனவை மற்றவரின் மகிழ்ச்சிக்காகவும் அதை நனவாக்க கடும் பிரயத்தனம் பட்டு அதை மகிழ்ச்சியுடன் மற்றவருடன் பகிர்ந்துக்கற அந்த நல்ல மனசு இருக்கே யாருக்கு வரும். 💐🙏

    ஆவலுடன் காத்திருக்கிறோம் சார்.

    ReplyDelete
  58. நெடுநாள் கனவு tintin தமிழில் கதைக்க வேண்டும் என்று. விரைவில் நிறைவேறும் என்பதில் மகிழ்ச்சி

    ReplyDelete
  59. செம சார்....நானும் ஃப்ளைட் 714 என படிக்கையில் எனது தந்தையார் பழைய புத்தகங்கள் புத்தக கொடோன்ல வித்துட்டு....பையன் படிப்பானேன்னு வாங்கி வந்த ஃப்ளைட் தாங்கிய அந்த லாரன்ஸ் டேவிட் கதைன்னு நெனச்சேன்....வண்ணத்துல பெரிய சைசுலங்கயில கூட யோசிக்கல... காமெடியான வரிகள் ஏனோ குறுகுறுக்க...அட நம்ம டின்டின்....நண்பர் சுஸ்கி விஸ்கி வாங்கித்தர பெரிசா ஈர்க்க...நீங்க சொன்னது போல லார்கோ ஸ்பைடர் மாயாவி ஷெல்டன் டெக்ஸ் இத்யயாதிகள விட பெஸ்டான்னு ஏற்க முடியலன்னாலும் இதுவும் தமிழில் தங்கள் மேலான பார்வையில்பட்டய கிளப்புவது உறுதின்னு தோணுது....சூப்பர் சார் ...இன்னும் மூனே மாதங்களில் நம்ம ஈரோட்ட கலக்க....நானும் ஒரு டசன் மீண்டும் ஈரோட்டை தெறிக்க விட கேக்க ஆசைப்பட..‌என் மகன் ரசிக்க அவன் பால்யத்த வண்ணமயமாக்க உதவிடும் உங்களுக்கு ஒரு கோடி நன்றிகள்....அந்த நாலாவது கனவு நிறைவேறுனா ஸ்பைடர் ஆர்ச்சி மாயாவி மாயாவி லார்கோவ தூக்கிச் சாப்பிடுவதுறுதி.....ஆஸ்ட்ரிக்ஸுக்கும் துண்டு போட முயற்ச்சியுங்கள்

    ReplyDelete
  60. இன்னொரு டின்டின்-தாத்தா படலம் 

    திருச்சி மாநகரில் எனது தந்தை வழித் தாத்தா பிரபல X Ray மற்றும் பொது மருத்துவராக இருந்தவர். 1918 முதல் 2018 வரை எங்களது மருத்துவமனை மெயின் கார்டு கேட் பஸ் நிலையம் எதிரில் இயங்கி வந்தது. கீழே மருத்துவமனை மேலே எங்கள் மனை. 

    தாத்தா அந்தக்கால காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜர் கண்ணதாசன் ஆகியோரின் நெருங்கிய நண்பர். திருச்சி நகரசபை துணைத் தலைவராக (Municipality Vice Chairman) ஆக இருமுறை பதவி வகித்தவர். பெயரெடுத்த இலவச மற்றும் இரண்டு ரூபாய் மருத்துவரும் கூட.

    கோடை விடுமுறைக்கு அடியேன் அங்கே 60 நாட்களும் மொத்தமாக 'டேரா' போடுவதுண்டு. முதல் பேரன் என்பதால் ரொம்பச் செல்லம். தினமும் செலவுக்கு 20 ரூபாய் கொடுப்பார் (எனக்கு மட்டுமே!). 84-85களில் 20 ரூபாய்க்கு தினமும் ஒரு பை நிறைய காமிக்ஸ் வாங்கலாம் (கை நிறைய அல்ல ... பை நிறைய ..). நான் ஒரு நாள் காமிக்ஸ் ஒரு நாள் ரஜினி படம் என்று தாத்தா காசைக் கரைப்பது வாடிக்கை. பக்கத்திலேயே தாய் மாமன் வீடு வேறு இருந்ததால் அவர் மகனும் (என்னை விட எட்டு வயது பெரியவன்) விடுமுறைக்கு அவனது பாட்டி வீட்டுக்கு வந்துவிட்டு தினமும் என்னைப் பார்க்க - காமிக்ஸ் படிக்க வந்துவிடுவான்.

    வீட்டெதிரில் இருக்கும் CSI க்கு சொந்தமான Chrisitian Book Centre-ல் மதம் சார்ந்த புத்தகங்கள் மட்டுமன்றி அனைத்து காமிக்ஸ்களும் அடுக்கி வைத்திருப்பார்கள். இதனில் ஒரு Tintin stack இருக்கும். ஒரு புத்தகத்தின் விலை 1984ல் 26 ரூபாய்கள். ஒரு முறை நானும் மாமா மகனும் காமிக்ஸ் வாங்கலாம் என்று செல்ல அங்கே கடைக்காரர் Tintin-ஐ எடுத்து நீட்டினார். என்னிடம் இருந்தது அன்றைய தினப்படியான 20 ரூபாய். புத்தகத்தின் விலையோ 26 ரூபாய். 

    நான் "ஹி ஹி .. தாத்தா இன்னிக்கி ஆறு ரூபாய் அதிகம் தர மாட்டாரு ! 20 ரூபாய்க்கு கிடைக்குமா?" என்று கேட்க பின்னம் பிடரியில் மடேர் என்று அடித்த என் மாமா மகன் "டேய் - அப்படியெல்லாம் சொல்லக்கூடாது ! தாத்தா ஊர் பெரிய மனுஷர் - இப்படியா அவரைப் பற்றி பேசுவ?" என்று சொல்லி தன பாக்கெட்டிலிருந்து ஒரு 5 ரூபாய்த் தாளும் ஒரு ஒற்றை ரூபாய் coinம் எடுத்து நீட்ட, அன்று நினைவான எனது முதல் கனவுதான் "King Ottokar's Skeptre" என்ற வெடிச்சிரிப்பு Tintin புத்தகம்.

    அதே கடையில் அதற்கு அடுத்த "பெரிய லீவில்" நான் வாங்கியது "Tintin in Tibet" என்ற இன்னொரு அதிரடி வெடிச்சிரிப்பு saga ! ஒரு வருடத்தில் 5 ரூபாய் விலை ஏறி இருக்க இம்முறை cousin அருகில் இல்லாததால் மறுபடி வீட்டுக்கு வந்து தாத்தாவையே அழைத்துக்கொண்டு போய் வாங்கிய நினைவுகள் !

    1986ல் தாத்தா இறைவனடி சேர, strict officer ஆன அப்பாவிடம் எப்படி 30,40 என்று கேட்பது என்றபடிக்கே எனது Tintin collection கனவுகள் ஊற்றி மூடப்பட - சென்னையில் லைப்ரரியில் சேர்ந்து மற்றவற்றை வாசித்து முடித்தேன்.

    10 வருடங்களுக்கு முன் அமேசானில் complete collection வாங்கி அடுக்கி வைக்க, சமீபத்தில் என் 11 வயது மகளும், 6 வயது மகனும் படிக்கும் பொது நானும் ஓவ்வொரு albumமாய் எடுத்து மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். 

    Incidentally, நேற்று ஆரம்பித்தது "Tintin and The Picaros".

    தமிழில் வெல்ல வாழ்த்துகள் ! மிக நுணுக்கமான வசனப் பகடிகளைக்கொண்டது என்றபடிக்கு கவனமாகக் கையாண்டிட வேண்டிய கதைகள். எடிட்டரின் passion should carry the day !!

    ReplyDelete
    Replies
    1. எடிட்டர் சார்,
      உங்களுக்கு நினைவிருக்கலாம் - திருச்சி பத்மா ஹோட்டல் வாசலில் இருந்த உங்கள் முகவரின் கடை. Was run by two brothers.இந்தியாவில் வெளியான அனைத்து ஆங்கிலம் மற்றும் தமிழிநாட்டில் வெளியான அனைத்து தமிழ் காமிக்ஸ்களும் தொங்கிக்கொண்டிருக்கும். எங்கள் கிளினிக் Trichy X Raysலிருந்து அங்கே நடந்து சென்று லயன், திகில், மினி லயன், ஜூனியர் லயன், ராணி, Tinkle, ACK, Spectrum, STAR Comics  என்று பை நிறைய வாங்கி வந்த நாட்கள் மறக்க முடியாதவை !! Those were the days indeed !!

      Delete
    2. Nice memories, thanks for sharing. @Ragh ji

      Delete
  61. காமிக்ஸ் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் டின் டின் நம்மிடையே.படிக்கயில்மனதில் சந்தோசம் பொங்குகிறது.இன்னம் ஈரோட்டில் இருக்குது கொண்டாட்டம். அப்பப்பாருங்க பட்டாச

    ReplyDelete
  62. டின் டின்னை தமிழில் வாசிக்கும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று தான் நினைத்திருந்தேன் .ஆனந்த அதிர்ச்சி தந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் சார்!!பட்டைய கிளப்புங்க!!! ஈரோட்டுக்கு முன்னாலேயே வராதா சார்? கருணை காமியுங்களேன்..

    ReplyDelete
  63. இங்கு சிவகாசியில் அச்சிட முடியாதுங்களா...? ஆத்தாடி..
    பிரமிக்கிறேன் sir... வாழ்த்துக்கள்.. நன்றி.. ❤️

    ReplyDelete
    Replies
    1. அச்சுத் துறையினில் சிவகாசி முன்னணியில் இருந்ததெல்லாமே மனித உழைப்பு முக்கியமாக இருந்த முன்னொரு காலத்தில் தான் சார் !

      படம் வரைய... டிசைன் போட ஓவியர்கள் ; புராஸஸிங்கிற்கு கலைஞர்கள் ; அச்சு முடிந்த பிற்பாடான நகாசு வேலைகள், பைண்டிங், இன்ன பிற finishing பணிகளுக்கு ஆட்கள் என்றெல்லாம் தேவைப்பட்ட போது தான் இந்தியாவின் மூலைகளிலிருந்தும் ஆட்கள் இங்கு தேடி வர அவசியமானது ! ஆனால் என்றைக்கு சகலமும் கணினிமயமானதோ ; என்றைக்கு கம்பியூட்டர்களே படம் போட, டிசைன் செய்ய ஆரம்பித்தனவோ ; என்றைக்கு finishing பணிகளுக்கெல்லாம் இயந்திரங்கள் வந்தனவோ - அன்றைக்கே அச்சுத் தொழில் இந்தியா முழுக்க வேரூன்ற ஆரம்பித்து விட்டது !

      பெங்களூரு ; ஹைதராபாத் ; மும்பை எல்லாம் இப்போது அப்பாடக்கர்ஸ் !

      Delete
  64. ஒரு பெரும்
    கனவு நனாவகிடும்
    மகிழ்வு இது
    மிக மிக
    மகிழ்ச்சியான செய்தி
    டின்டின் புத்தகங்களை
    பல முறை கண்களில்
    பார்த்தது உண்டு.
    எனக்கு
    ஆங்கிலம் பெரிய
    அளவில் படிக்க
    வாராது
    உங்கள் தயவில்
    தான் அரிய கனவு
    பொக்கிஷங்களை
    படித்து வருகிறேன்
    அதுவுடன் இதுவும்
    நன்றிகள் பல
    என்னுடைய
    Ever Green Hero
    விஜயன் Sir க்கு
    நன்றிகள் பல

    ReplyDelete
  65. Tin Tin in Tamil - Happy to hear this. Thanks a ton sir.

    ReplyDelete
  66. சார் மாபெரும் வெற்றியை பல நண்பர்கள்....புதிய நண்பர்கள் வரவால் காண்கிறோம்....சீக்கிரமா டின் டின்ன நாமளே அச்சிட உதவ செந்தூரனை வேண்டிக் கொள்கிறேன் செந்தூரிலிருந்து

    ReplyDelete
  67. கலையார்வம் கொண்டவர்களின் கனவுகள் ஒரு நாள் கண்டிப்பாக கைகூடும் என்பது காலத்தின் கட்டளை !

    டின் டின் தமிழ் பேச வருக வருக !

    ReplyDelete
  68. மே தின குட்டிக் கதைன்னு பெரிய கதையெடுத்து விட்டுட்டீங்க சட்டுபுட்டுன்னு..அப்படியே பல நண்பர்கள் கேட்ட ஆஸ்ட்ரிக்ஸும் வந்தா தளம் தாங்காது போல

    ReplyDelete
  69. சார்
    ஒரு சந்தேகம். இவ்வளவு பெரிய ஹிட் தொடரில் மொத்தம் 24 ஆல்பங்கள் மட்டுமே உள்ளதா. 24 ஆல்பங்கள் மட்டும் தான் எனில் ஏன் இந்த தொடர் தொடரவில்லை என்ற விபரம் தர முடியுமா.

    ReplyDelete
    Replies
    1. 23-ம் ஆல்பத்தின் பணிகள் பாதி நடந்து கொண்டிருந்த போதே மரித்து விட்டார் சார் !

      Delete
    2. டின்டின் கதாசிரியர் 1983-ல் தனது டின்டின் வரிசையின் 24 ஆல்பமான ALPH"ART கதையின் பாதி உருவாக்கத்திலேயே இறந்துவிட்டார்.இவரது உதவியாளர் Bob de moor கதையின் போக்கு தெரியுமாதலால் கதையை தானே முடித்து விடுவதாகச் சொன்னார்.
      வித்தியாசம் எதுவும் தெரிந்திருக்காதுதான். ஆனால் வாழும்போதும் சரி, உயிலிலும் சரி .தனக்கு பிறகு டின்டின் தொடர்வதை விரும்பவில்லை என கதாசிரியர் ஹெர்ஜ் தெளிவாக சொல்லியிருப்பதால் ஹெர்ஜின் சட்ட வல்லுநர்கள் குழுமம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை. டின் டின் ஏனைய கதாசிரியர்களால் தொடராமல் 23.5 என நின்றதற்கு இதுவே காரணம். 24 வதும் கூட வெறும் மானுஸ்கிரிப்ட்தான்.

      மாடஸ்டி ஆசிரியரும் இதைப் போலவே தனக்கு பின் மாடஸ்டி தொடர்வதை விரும்பவில்லை.

      மற்ற கதைகள் பாப் கேன் மரணத்துக்குப் பின் பேட் மேன் தொடர்வதைப் போல் தொடரத்தான் செய்கின்றன.

      Delete
  70. டின் டின் பற்றிய தங்களின் பால்ய கால கனவு, காதல்....பதிப்பகராக தங்களின் அனுபவங்கள், கஜினி முகமது மாதிரியான தங்களின் படையெடுப்புகள், அது பலித்த விதம் என அனைத்தும் வாசிக்க வாசிக்க பல இடங்களில் ரோமக்கால்கள் குத்திட்டனங் சார்....

    டின் டின் யார்னு புரிந்து கொள்ள இயன்றது....

    வாட்ஸ்ஆப்களில் நண்பர்களது சிலாகிப்புகளும் சேர்ந்து உணர்த்தியவை இது காமிக்ஸ் உலகின் கோஹினூர் என்பதே..

    அந்த கோஹினூர்- லயன்-முத்து மகுடத்தை அலங்கரிப்பது தங்களின் அரிய சாதனைகளில் ஒன்றுங்சார்..👏👏👏👏👏

    தங்களின் கனவுகளில் 3வது நிறைவேறியமைக்கு வாழ்த்துகள் சார்.💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. 4வதும் விரைவில் பூர்த்தியாக முன்கூட்டியே வாழ்த்துகள் சார்....

      Delete
  71. ///**எனது ஞாபகம் சரியாக இருக்கும் பட்சத்தில் இது வரையிலும் 128 உலக மொழிகளில் டின்டின் பிரசுரிக்கப்பட்டுள்ளது ! We must be # 129 !!//----

    அடேயப்பா பெரிய சகவாட்டக்காரரோ இந்த டின் டின்...!!

    //**உலகெங்கும் இது வரையிலும் தோராயமாய் 30 கோடி பிரதிகள் விற்றுள்ளன !...///----என்னது 30கோ.கோ..கோ....கோடி பிரதிகளா....தொம்ம்ம்...!!!

    ReplyDelete
  72. ///*ஒரு ஆல்பத்தின் அட்டைப்படத்துக்கென ஹெர்ஜ் உருவாக்கி, அப்படியே கிடந்து போனதொரு ஓவியம் 2021-ல் இருபத்தியெட்டுக் கோடி ரூபாய்களின் இணையான தொகைக்கு ஐரோப்பாவில் ஏலம் போயுள்ளது ! உலகிலேயே மிக காஸ்ட்லியான காமிக்ஸ் சித்திரம் என்ற பெருமையை இது ஈட்டியுள்ளது///

    ---ஒரு ஓவியம் 28கோடிக்கா??? அதும் சும்மா கெடந்த்துக்கு...ஆத்தாடி ஆத்தாடியோவ்...

    பாணபத்திரர் கிட்ட ஒண்ணுத்துக்கும் ஆகாத இவனே இந்த போடுபோட்டா, நாளை பாணபத்திரர் வந்து---னு புலம்பும் ஷேமனாத பாகவதர் ஏனோ நினைவுக்கு வர்றாருங்கோ....!!!😇

    ReplyDelete
  73. ///*உலகளாவிய மொத்த விற்பனை எண்ணிக்கைகளில் நமது லக்கி லூக் ; சுஸ்கி & விஸ்கி - டின்டினுக்கு tough தரும் ஆற்றல் கொண்டிருப்பதாய்த் தெரியலாம் தான் ! ஆனால் பெரியதொரு வித்தியாசமுண்டு - becos வெறும் 24 ஆல்பங்களைக் கொண்டே டின்டின் சாதித்திருப்பதை மற்ற தொடர்கள் மிக மிகக் கூடுதலான ஆல்பங்களின் எண்ணிக்கைகளோடே சாதித்துள்ளன ! ///

    ஓஓஓஓஓவ்... இம்புட்டுதானுங்களா? இன்னும் ஏதும் உள்ளதுங்களா!!!

    டின்டின்டாரு காமிக்ஸ் உலக ப்ராட்மேனாருனு தெளிவாக தெரியுதுங்கோ!!!


    ReplyDelete
    Replies
    1. விற்பனை சார்ந்த புள்ளிவிபரங்களில் ஒரு செம கூத்தும் உள்ளது சார் ! நாம் ஓரம் கட்டி வைத்திருக்கும் டயபாலிக்காரும் உலகளவில் விற்பனை நம்பர்சில் ஒரு அப்பாடக்கராக்கும் ! இங்கே தான் அவருக்குப் பெருசாய் மவுசின்றிப் போய் விட்டது !

      Delete
  74. ///*இதன் தயாரிப்புப் பணிகளுக்கு நம்மிடமுள்ள திறன்கள் போதாதென்பதால், அடுத்தகட்ட தொழில்நுட்பங்கள் கொண்டிருக்கும் வெளிமாநில அச்சுக் கூடத்திடமே பணிகளை ஒப்படைக்கவுள்ளோம் ! //

    ----30கோடிகாரர்னா சும்மாவா!!!!!

    அடிச்சி தூள் பண்ணுங்க சார்!

    ReplyDelete
  75. ////*நடப்பாண்டின் ஆகஸ்டில் - ஈரோட்டில் டின்டின் உங்களை சந்திக்க ரெடியாகிடுவார் என்பதே இந்த நொடியின் சிந்தனை ! And இந்தத் தொடரின் தெறிக்க விடும் top சாகசம், 2 பாக த்ரில்லராய் 'ஏக் தம்மில்' வெளிவரவிருக்கின்றது ! 7 CRYSTAL BALLS & PRISONERS OF THE SUN" என்ற பெயர்களில் இங்கிலீஷில் வெளியான டபுள் ஆல்பம்ஸ் - "7 ஸ்படிகப் பந்துகள்" + "கதிரவனின் கைதிகள்" என்று தமிழில் காத்துள்ளன ! //

    எச்சூஸ்மி வல்னா கொஞ்சம் ஈரோடு2023ல உங்க ஓரோபோரஸ் மோதிரம் வாயிலாக ட்ராப் பண்றீங்களா??😉

    ReplyDelete
    Replies
    1. அட..நீங்க வேற ?!! இப்போவே பணி ஆரம்பிச்சாலும் மூணே மாசம் தான் இருக்கேன்னு இங்கே உடுக்கடிக்குது சார் !! பார்த்திருக்க மே பிறந்து விட்டதே !! Phew !!

      Delete
    2. ஈரோடு விழாவில் 200பேரை அந்த லீ ஜோர்தான் ஹால் கொள்ளாது... ம்ம்ம்...ஒரு கண்ணால மண்டபத்தை புடிக்க உள்ளூர் ஆட்டக்காரங்ககிட்ட சொல்லி வெச்சிடலாம்ங்க சார்.

      Delete
    3. ///மே பிறந்து விட்டதே//--
      ஆஹா... ஆமாங் சார் 100நாட்களுக்கும் குறைவாக வே உள்ளன... ஹைய்யா...!!!

      சார் தாங்கள் ஆஞ்சனேயர் மாதிரி தங்கள் பலம் தங்களுங்கே தெரியாது..ஜூலை 15க்லாம் டின்டின் ரெடியாக்டுவீங்க!!!

      Delete
  76. ஆஹா. ரின்ரின் தமிழில் வராக பராக் பராக். இது குட்டி கதை இல்லை சார்.தித்திப்பு கதை. ஒரு சாதனைக்கதை. ரொம்ப ரொம்ப நன்றி சார்.

    ReplyDelete
  77. டின்டின்னில் நான் படித்த முதல் கதை - The shooting star! சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய புத்தகக் கடையில் தரை ரேட்டுக்கு கிடைத்தது. மேக்ஸி சைஸ் வேறு! அட்வென்ச்சர், விஞ்ஞானம், ஃபான்டசி - எல்லாம் கலந்த கதை - பிரம்மிக்க வச்சது! அதன்பிறகு தேடிப்பிடிச்சு இன்னும் ரெண்டு மூனு கதைகள் படிச்சேன்! ஆனா என்ன கதைகள்னு இப்போ ஞாபகம் இல்லை!! 'இதெல்லாம் நம்ம லயன்ல எப்ப வரப்போகுதோ!'னு பெருமூச்சு விட்ட தருணங்கள் நிறையவே!

    2015-16 வாக்கில் நம்ம காமிக்லவர் ராக் ஜி ஒருமுறை அலுவல் வேலையாக ஈரோடு வந்திருந்தார். அப்போது 3 டின்டின் கதைகள் கொண்ட தொகுப்பை (டெக்ஸ் கதைகள் சைஸ்) பரிசாக அளித்து சந்தோசத்தில் ஆழ்த்தினார்!

    என்னதான் (கொஞ்சம் முக்கி முனகியபடியே) ஆங்கிலத்தில் படித்தாலும், தமிழில் படிப்பதைப் போன்ற ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கவில்லை என்பது குன்றின் மேல் விளக்கு!! அந்த ஏக்கங்கள் இப்போது நிறைவேறப்போவதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

    அப்படியே அந்த ஆஸ்ட்ரிக்ஸுக்கும், வால்ட் டிஸ்னியும் தமிழ் பேசுவதைப் பார்த்துவிட்டால் கிட்டத்தட்ட பிறவிப்பயனை அடைஞ்சமாதிரி ஆகிடும்!

    சார்........

    ReplyDelete
    Replies
    1. சேதி தெரியுமோ சார் - முதல் ஆண்டின் சிங்கிள் ஆல்பங்களுள் ஒன்று : The Shooting Star தான் !

      Delete
  78. Sir - next should be ....... BATMAN !!! :-)

    ReplyDelete
    Replies
    1. நினைச்சேன்… சொல்லிட்டீங்க. அதுவும் திகிலில் வந்த கதைகளை எல்லாம் சேத்தி ஒரு கலெக்டர் எடிசன். அப்பவே நாங்கெல்லாம் கில்லிங் ஜோக்கை தமிழ்ல படிச்சவன்னு இங்கே வந்த புத்சுல பீத்திகிட்டேன். இப்ப இருக்கற தரத்தில கலர்ல வந்தா என்னையெல்லாம் கையில பிடிக்க முடியாது.

      Delete
  79. ஆஹா…டின்டின் 😍😍😍😍😍

    என் வீட்டுக்கு மிக அருகாமையிலிருந்த பொது சிறுவர் நூலகத்தில் டின்டின் இருக்கும். எடுத்து படம் பார்த்து விட்டு வைத்துவிடுவேன். அப்ப எல்லாம் இங்க்லீஸ் படிச்சு புரிச்சுக்க முடியாது. பிறகு 2003 ல் இங்கே வந்த பிறகு கலெக்டர் எடிசன் பாக்ஸ் செட் மொத்தமாக வாங்கியது, அனைத்து டின்டின்அனிமேசன்களையும் பார்த்தது என்்ஆசையை தீர்த்துக் கொண்டேன்.

    Flight 714 ன்னு முதல் வரியை படிச்சவடனே கிடைச்சிடுச்சான்னு ஒரு கேள்வி; கிடைச்சிடுச்சுன்னு தெரிஞ்ச உடனே காலை காப்பி குடிக்காமயே தூக்கம் எல்லாம் கலைஞ்சு தெளிவாயிட்டேன்.

    இன்னும் உங்களுக்கு நிறைய காதல் இருந்து அதையெல்லாம் தேடிப் போனா எங்க காதல் எல்லாம் நிறைவேறும்.

    இருக்கு…இன்கல், மெடபோரான்ஸ், வலேரியன்னு இன்னும் நிறைய பேர் தமிழ் பேச வாய்ப்பிருக்கு…

    ReplyDelete
  80. 3 வது வாட்டி பதிவை படிச்சிட்டு வர்றேன். அடுத்த பதிவு வர்றதுக்குள்ள இன்னும் எத்தனை தடவை படிப்பேன்னு எனக்கே தெரியலை. நண்பர் ஒருவர் சொன்னமாதிரி ரொம்ப பெரிய கனவா காண்றேனோ. கையை கிள்ளினா கூட வலிக்கலையே.

    ReplyDelete
  81. ஆஹா! ஆச்சரியம்

    கடைசியாக எனக்குப் பிடித்த TINTIN தமிழில் லயன்/முத்து பேனரில் வருகிறது

    தமிழில் வருவதற்கான சிறந்த முயற்சி

    என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்
    வருடத்திற்கு ஆறு புத்தகங்களை உருவாக்குங்கள்

    ReplyDelete
    Replies
    1. //வருடத்திற்கு ஆறு புத்தகங்களை உருவாக்குங்கள்//

      தம்பி இனிகோ சொல்லும் ஏதாச்சுமொரு அயர்ன்மேனை ஒத்தாசைக்கு கூப்பிட வேண்டி வரும் சார் ; ஏற்கனவே உள்ள ஆண்டின் அட்டவணைக்கு மத்தியில் இந்த பல்டிகளெல்லாம் அடிப்பது கண்முழிகளைப் பிதுங்கச் செய்கின்றன !!

      Delete