Powered By Blogger

Monday, May 22, 2023

இது டின்டினின் உலகம் !

 நண்பர்களே,

வணக்கம். சொல்லாமல் கொள்ளாமல் வாரயிறுதியினில் காணாமல் போனதற்கு காரணங்கள் இரண்டு ! இப்போதெல்லாம் எனக்கும் சரி, எனது சகோதரனுக்கும் சரி, பொழுதுகளில் கணிசம் செலவாவது ஹாஸ்பிடல்களில் அல்லது கோவில் குளங்களில் ! எதற்கு-எப்போது அவசியம் எழுமென்றே தெரியாத நிலை இந்த வாரயிறுதியிலும் ; so இங்கே அட்டெண்டன்ஸ் போட இயலா இக்கட்டு !! காரணம் #  இரண்டோ - நமது பணிகள் சார்ந்தது ; and அதுவே இந்த வாரநாளின் மினி பதிவின் சாரமுமே !!

டின்டின் ! இந்த ஜாம்பவானின் தமிழ் உரிமைகளை நாம் பெற்றிருப்பது பற்றியும், காத்திருக்கும் மாதங்களில் அவரது ஆல்பங்கள் வெளியாகிடும் என்றும் அறிவித்திருந்தது நினைவிருக்கும் ! ஒரு அறிவிப்பை பந்தாவாய் பண்ணுவது சுலபம் ; ஆனால் அதனை நடைமுறை காணச் செய்வது செம tough என்பதை ஏகப்பட்ட முறைகள் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன் தான் ! ஆனால் அவற்றுள் எதுவுமே இந்த "டின்டின் அனுபவத்துக்கு" கிட்டே கூட வர இயலாதென்பதை கடந்த சில வாரங்களில் புரிந்து வருகிறேன் ! "தமிழில் டின்டின்" என்பது ஒரு நெடுங்கனவு என்றும், அதனை நனவாக்கிப் பார்த்திட 2016 முதலே மொக்கை போட்டு வருவதைப் பற்றியுமே முந்தைய பதிவினில் எழுதியிருந்தேன் ! இதில் கொடுமை என்னவென்றால்,படத்துக்கு பைனான்ஸ் ; கதை என்றெல்லாம் எதுவுமே தயாராகி இருக்காத நிலையிலும், கழுத்தில் ஒரு ஸ்டில் கேமராவை தொங்கவிட்டுக் கொண்டு ஈரோயினி செலெக்ஷனுக்குள் பிஸியாகிடும் "காதலிக்க நேரமில்லை" நாகேஷ் போல, டின்டினுக்கான உரிமைகளை வாங்குவதற்கு முன்பாகவே கதைத் தேர்வு மட்டுமல்லாது, அதன் பூர்வாங்க மொழிபெயர்ப்புப் பணிகளையும் துவங்கியிருந்தேன் - 2016-ன் மத்தியப் பொழுதினில் ! "பிராங்க்பர்ட் போறோம் ; படைப்பாளிகளை சந்திக்கிறோம் ; ரைட்ஸ் வாங்குறோம் ; மொழிபெயர்ப்பெல்லாம் முன்கூட்டியே ரெடியாகிப்புட்டால் நல்லது தானே" என்ற 'தொலைநோக்குப் பார்வை' தான் அதன் பின்னணி ! ஆனால் பிராங்க்பர்ட்டும் புலர்ந்து ; சந்திப்பும் நிகழ்ந்து ; நமது மெய்யான உசரம் என்னவென்றும் புரிந்து ; டின்டின் எனும் ஜாம்பவானைத் எட்டிப் பிடிக்க நாம் கணிசமாய் காம்பிளான் குடித்து ஏகமாய் வளர்ந்திட வேண்டிய அவசியத்தினையும் உணர்ந்தபடியே ஊர் திரும்பிய பிற்பாடும் - அந்த டின்டின் மொழிபெயர்ப்பின் நோட்டை மட்டும் கடாசிடாது பத்திரமாகவே வைத்திருந்தேன் ! In fact - 7 வருடங்களுக்குப் பின்னேயும் அது எனது மேஜையின் ஓரத்தினில் உறங்கி வருகிறது ! 

Cut to the present : உருண்டு, புரண்டு உரிமைகளை வாங்கி விட்டு, முதல் ஆண்டினில் வெளியிடுவதற்கென நாம் தேர்வு செய்துள்ள கதைகள் 4 :

மாயப் பந்துகள் 7 (7 Crystal Balls)

&

கதிரவனின் கைதிகள் (Prisoners of the Sun)

திபெத்தில் டின்டின் (Tintin in Tibet)

எரிநட்சத்திரத்தைத் தேடி...! (The Shooting Star)

So டபுள் ஆல்ப சாகசமான "மாயப் பந்துகள் 7" + "கதிரவனின் கைதிகள்" கதையிலிருந்து பயணத்தினை துவக்கலாம் என்றே திட்டமிடவும் செய்திருந்தோம் ! பொதுவாய் அத்தனை சுலபமாய் வளையாத மேல், அவசரம் என்றால் மட்டும் டாப் கியரை போட சம்மதிப்பது கொஞ்ச காலமாகவே நடைமுறை ! So மெய்யான அவசரமெனில் ஒரு 44 பக்க பிராங்கோ-பெல்ஜிய ஆல்பத்தை இரண்டோ, மூன்றோ நாட்களில் போட்டுச் சாத்தி விட இயலுமென்ற நம்பிக்கை எனக்கு நிரம்பவே உண்டு ! அதுவும் இது டின்டின் ; ஒரு ஆயுசின் கனவு - எனும் போது "வேட்டியை மடிச்சு கட்டிக்கினு உள்ளே புகுறோம் ; அட்ச்சு ஒரு வாரத்திலே தூக்குறோம் !" என்ற தெனாவட்டே மிகுந்திருந்தது ! வீட்டில் என்னிடம் டின்டின் முழு கலெக்ஷனும் உண்டு & in fact ஜூனியர் எடிட்டர் அதனை வாரம் ஒரு தபா மனப்பாடம் செய்யாத குறையாய் மேய்ந்து தள்ளுவதால், கைக்குள்ளும், காலுக்குள்ளும் டின்டின் ஆல்பங்கள் கிடப்பதுண்டு ! So ஒரு சுபயோக சுப தினத்தினில் டபுள் ஆல்பத்தின் முதல் பாகத்தை எடுத்து வைத்துக் கொண்டு புரட்டினேன் ! ஏற்கனவே இதனிலிருந்து 4 பக்கங்களை 2016-ல் மொழிபெயர்த்து வைத்திருந்ததையுமே எடுத்துக் புரட்டினேன் ! முதல் நொடியிலேயே இரண்டு விஷயங்கள் புரிபட்டன : ஒவ்வொரு ஆல்பமும் 61 பக்கங்கள் கொண்டவை எனும் போது - நமது மாமூலான 44 பக்க பிரான்க்கோ-பெல்ஜிய அளவீடுகள் இங்கே செல்லுபடியாகாது - என்பது புரிதல் # 1. And புரிதல் # 2 - இங்கே பக்கமொன்றுக்கு குறைந்த பட்சமாய் 13 or 14 பிரேம்கள் இருக்கின்றன என்பதும், ஒவ்வொன்றிலும் இரண்டு பேர் குட்டியாய் டயலாக் பேசுவதாக வைத்துக் கொண்டாலும் பக்கத்துக்கு சுமார் 25 to 30 டயலாக்குகள் எழுத வேண்டியிருக்கும் என்பது !! கொஞ்சமாய் வியர்த்து விட்டது - என் முன்னே காத்திருக்கும் பணியின் பரிமாணத்தை முழுசாய்ப் புரிந்த போது ! And டபுள் ஆல்பம் என்றால், 122 பக்கங்கள் ; தோராயமாய் 2500 to 3000 வசனங்கள் !! ரைட்டு, இதையெல்லாம் உருண்டு, புரண்டு தாண்டி விடலாமென்றால் கூட - காத்திருந்த இன்னொரு அசுரத்தனமான சவால் கண்களை அ-க-ல-மா-ய் விரியச் செய்தன !  

And அது தான் படைப்பாளிகளின் மொழிபெயர்ப்பு approval குழு ! பொதுவாய் நமது மொழிபெயர்ப்பாளர்கள் அத்தனை பேருக்குமே என்னைக் கண்டால் டர்...கடுப்ஸ்...காண்டு...பீதி என்று அலையடிப்பதுண்டு ! ஒவ்வொரு கதையிலும் முதல் 10 பக்கங்களை எழுதி அனுப்பிடச் சொன்ன பிறகே, மேற்கொண்டு தொடர்ந்திட அனுமதிப்பேன் & அந்தப் பத்துப் பக்கங்களில் பத்தாயிரம் நொரநாட்டியம் சொல்வேன் ! அதிலும் சென்னையில் இருக்கும் ஒரு சகோதரிக்கெல்லாம் நான் வாட்சப்பில் பதில் டைப் செய்ய ஆரம்பித்து விட்டாலே குளிர் ஜுரம் வராத குறை தான் ! ஆனால்....ஆனால்...மொத வாட்டியாய் இந்த ஆந்தையனுக்குமே ஒரு litmus test காத்திருப்பது பல்ஸ் ரேட்டை கொஞ்சமாய் எகிறச் செய்தது ! டின்டின் ஒவ்வொரு உலக மொழியினில் வெளியாகிடும் போதிலும், அந்த முழுமையான மொழிபெயர்ப்பினை, அந்தந்த மொழியின் 5 திறன் வாய்ந்த வல்லுநர்கள் கொண்டதொரு குழுவின் ஒத்தாசைகளோடு பரிசீலித்து, மாற்றங்கள் / திருத்தங்கள் செய்திடப் பரிந்துரைப்பர் ! இது அவர்களின் உலகளாவிய பழக்கம் என்பது சிறுகச் சிறுகத் தெரிய வர, எனது மலைப்பு மீட்டர் எகிற ஆரம்பித்தது ! ரைட்டு, டின்டினின் உலகுக்குள் புகுந்து, அங்கே அன்னம் தண்ணீர் புழங்கிப் பழகிப் பார்த்துக் கொண்டு, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்திடும் ஆற்றல்களை நாம் வளர்த்துக் கொள்ளும் வரைக்கும் அடக்கி வாசிப்பதே உத்தமம் என்று புரிந்தது ! So எடுத்தயெடுப்பிலேயே டபுள் ஆல்பத்துக்குள் தலை நுழைப்பதற்குப் பதிலாய், சிங்கிள் ஆல்பத்தினுள் புகுந்தால் பணியும் சற்றே சுலபம் ; அவர்களின் எதிர்பார்ப்புகள் சார்ந்த புரிதலும் கிட்டிடும் என்று பட்டது ! So எனது alltime favorite ஆன "திபெத்தில் டின்டின்" இதழினை தமிழாக்கம் செய்திட அமர்ந்தேன் - 1980-ல் டில்லியில் வாங்கி, இங்கே காலிகோ பைண்டிங் போட்டு வைத்த அதே இதழுடன் !! "This book belongs to M.S.Srikanth Muthuvijayan" என்று அதன் index பக்கத்தில் எழுதியிருந்தது, 43 ஆண்டுகளுக்குப் பின்னேயும் தெளிவாய் புன்னகைக்க, கொஞ்ச நேரம் பழைய நினைவுகளுக்குள் நீந்தியபடியே புக்கை வெறிக்கப் பார்த்துக் கொண்டே இருந்தேன் ! And 3 வாரங்களுக்கு முன்பானதொரு இரவில் துவங்கினேன் பணியினை ! 

மனதுக்கு நெருக்கமானதொரு நண்பர் குழாமோடு பயணிக்கும் உணர்வே மேலோங்க, பரபரவென உட்புகுந்தேன் ! சுத்தமான உரைநடை பாணியா ? பேச்சு வழக்கு பாணியா ? - இந்தத் தொடருக்கு எது சுகப்படும் என்ற கேள்வி முதலில் எழுந்தது ! டின்டினுக்கு இரண்டுமே செட் ஆகும் தான் ; ஆனால் கேப்டன் ஹேடாக்குக்கு தூய தமிழ் அந்நியப்பட்டுத் தெரியும் என்று மனசு சொல்லியது ! But இரண்டையுமே முயற்சித்துப் பார்ப்போமே, என்றபடிக்கே முதல் 5 பக்கங்களை, இரண்டு பாணிகளிலுமே எழுதிப் பார்த்தேன் ! எனது gut feel சரி தான் என்றே புரிந்தது ; கரடு முரடான கேப்டனுக்கு தூய தமிழில் வசனங்கள் சுத்தமாய் ஒட்டவே இல்லை ! ரைட்டு, பேச்சு நடை, but without crude language என்று தீர்மானித்துக் கொண்டு பேனாவை பறக்க விட்டேன் ! 

ஒரு நூறு தடவைகள் படித்த அதே கதை தான் ; மனப்பாடமாய் அதன் வசனங்களும் தெரியும் தான் ; yet - அதே கதைக்குள் பணியாற்றும் போது தான் கதாசிரியர் Herge எத்தனை எத்தனை layer-களை இங்கே கட்டமைத்திருக்கிறார் என்பது புரிந்தது ! And ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் அவர் தந்திருக்கும் ஜீவன் எத்தகையது என்பதும் ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! உலகெங்கும் தலைமுறைகளைத் தாண்டி, கோடிக்கணக்கானோரின் மார்க்குகளை பெற்ற சாகசம் என்பதால் இங்கே கதைக்கு நாம் மார்க் போட முகாந்திரங்களே கிடையாது என்பது அப்பட்டம் ; நூறுக்கு நாலாயிரத்து நானூற்று எழுபது மார்க்குகள் போடலாம் ! சித்திரங்களுக்கும், கலரிங்குக்கும் அதே ; அதே - 4470 /100 ! So மொழிபெயர்ப்பெனும் ஜீவநாடியினை மட்டும் படைப்பாளிகளின் வழிகாட்டலோடு அழகாய் அமைத்து விட்டால், ஒரு பாகுபலி பாணியிலான அசாத்தியத்தை கண்முன்னே கொண்டு வர வாய்ப்பிருப்பது பணிக்குள் போகப் போக புரிந்தது ! And truth to tell - முன்னெப்போதும் நாமோ, வேறு யாருமோ, தமிழில் முயற்சித்திரா ஒரு எவரெஸ்ட் சிகரமிது என்பதுமே புரிந்தது ! நமது இதுவரையிலுமான சூப்பர் ஹிட்ஸ் பற்றி சிந்தித்துப் பார்த்தேன்.....மாயாவி...லக்கி லூக்....டெக்ஸ் வில்லர்...டைகர்....XIII ...என்ற ஜாம்பவான்கள் கண்முன்னே வந்து போயினர் ! ஆனால் அவர்களையெல்லாம் தாண்டிய இன்னொரு பரிமாணத்தில் டின்டின் இருப்பதாக எனக்குப்பட்டது ! Of course - இந்த அபிப்பிராயத்தில் உங்களுக்கு முரண்களிருக்கலாம் தான்... but trust me இதுவரைக்கும் நாம் பறந்திருக்காத ஒரு உசரம் டின்டினின் விமானத்துக்குத் தேவை என்பதை சீக்கிரமே நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் !

நகரும் ஒவ்வொரு பக்கத்தோடும், பிரெஞ்சில் இந்த ஸ்கிரிப்ட் கொண்டுள்ள ஆழத்தினையும், இங்கிலீஷ் மொழிபெயர்ப்பினில் அந்நாட்களில் அந்த ஜாம்பவான்கள் செய்திருக்கும் ஜால வித்தைகளையும் உள்வாங்கிட முடிந்தது ! டின்டின் கதைகள் சகலமும் இங்கிலீஷில் சரளமாய் கிட்டினாலுமே, ஒரிஜினல் பிரெஞ்சில் உள்ள ஏதேனும் குட்டி நுணுக்கத்தையும் மிஸ் செய்திடலாகாதே என்று நமது மொழிபெயர்ப்பாளரிடம் சொல்லி, பிரெஞ்சிலிருந்துமே எழுதி வாங்கியிருந்தோம் ! So இந்தாண்டை ஆங்கிலப் பதிப்பு...அந்தாண்டை ஆங்கில ஸ்கிரிப்ட்...and நடுவாக்கில் நான் என்று நாட்கள் ஓட்டமெடுத்தன !

கேப்டன் ஹேடாக் ! டின்டின் தொடரினை ஆராதிக்கும் அனைவருக்குமே தெரியும் - இந்த கடாமுடா கப்பல் கேப்டன் தான் இத்தொடரின் செல்லப்பிள்ளை என்பது ! முணுக்கென்றால் கோபம் கொள்ளும் மனுஷன் ; வாயைத் திறந்தாலே வசவுகள் அருவியாய் கொட்டினாலும், உள்ளுக்குள் சொக்கத் தங்கம் ! வெறும் வாசகனாய் இவரை ஓராயிரம்  தபா ரசித்திருப்பினும், இப்போதொரு கோமுட்டித் தலை எடிட்டனாய் ; முழியாங்கண் மொழிபெயர்ப்பாளனாய் தரிசிக்கும் போது, இந்தக் கதாப்பாத்திரத்தினை செத்துக்கிட Herge அவர்கள் எத்தனை மெனெக்கெட்டிருப்பார் என்பதை எண்ணி மலைக்காது இருக்க இயலவில்லை ! And இந்த மனுஷனின் வரிகளை ஒவ்வொரு உலக மொழியிலும் அமைத்திட,ஆங்காங்கே உள்ள மொழிபெயர்ப்பாளர்கள் எத்தனை அண்டா தண்ணீர் குடித்திருப்பார்கள் என்பதையும் எண்ணி மிரளாது இருக்க இயலவில்லை ! 

டின்டின் ரசிகர்களுக்குத் தெரியும் - அவரது Billions of blue blistering barnacles ; Thundering typhoons ...இத்யாதி இத்யாதிகளின் தாக்கம் என்னவென்று ! இவைகள் ஒரு மாலுமியின் கரடுமுரடான மொழியின் பிரதிபலிப்பு ; கோபத்தின் வெளிப்பாடு ; அதே சமயம் துளியும் நிஜ அர்த்தம் கொண்டவை அல்ல ! இவற்றை தமிழாக்கம் செய்ய ஆரம்பித்த போது தான் தலைவர் ரஜினி அடிக்கடி இமய மலைப்பக்கம் ஏன் போய்க்கொண்டிருந்தாரென்பது புரிந்தது ! ஒரு தனி நோட்டே போட்டேன் - கேப்டனின் இந்த கூக்குரல்களுக்குப் பொருந்தக்கூடிய தமிழ் வரிகளை எழுதி வைக்க ! கதைக்குள் போகப் போக, நேபாலிலும், பனிபடர்ந்த திபெத்திலும் டின்டின் & கேப்டன் & ஸ்நோயி செய்யும் பயணமானது என்னையும் இணைத்துக் கொண்டது போலவே தோன்றத் துவங்கியது ! Trust me guys - மூச்சா போக மூணு மணிக்கு எழுந்த கையோடு, கேப்டனின் வரிகளில் பட்டி டிங்கரிங் செய்த இரவுகள் கடந்த 3 வாரங்களில் அநேகம் ! நாட்கள் ஓட ஓட - இதுவொரு வித obsession போலானது ! லேமினேஷனுக்கோ, பிரின்டிங் இங்குக்கோ பேமெண்ட் கேட்டு மனுஷர்கள்  என் முன்னே அமர்ந்திருக்க, என் மண்டைக்குள்ளேயோ கேப்டன் ஹேடாக் "இப்புடி திட்டுவாரோ..? அப்புடி சவுண்டு விடுவாரோ ?" என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருக்கும் ! மைண்ட்வாய்ஸ் என்று எண்ணி நான்பாட்டுக்கு அவற்றை உரக்க உச்சரித்திருப்பின், பணம் கேட்டு வந்தவர்கள் என் சில்லுமூக்கை சிதறடித்திருப்பது நிச்சயம் ! போகப் போக, கதைக்குள் பயணிக்கப் பயணிக்க, கேப்டனோடு ரொம்பவே நெருங்கிடுவதாய் ஒரு பீலிங் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை ! And ஆங்காங்கே colorful வசவுகளை உருவகப்படுத்திட கொஞ்சம் கொஞ்சமாய் இயன்ற மாதிரிப் பட்டது ! சுத்தமாய் 18 நாட்கள் எடுத்தது - 61 பக்கங்கள் கொண்ட இந்த சாகசத்தினை எழுதி முடிக்க ! And நான் எழுதும் வேகத்துக்கே DTP பணிகளும் முடிந்திட, முந்தைய பொழுதின் பணியினை மறுநாளே திருத்துவது சாத்தியமானது ! ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாய் திருத்தங்கள் தலைக்குள் தோன்றும் and நம்மாட்களும் தினம்தோறும் corrections போட்டுப் போட்டே இளைத்துப் போகாத குறை தான் ! நம்பினால் நம்புங்கள் guys - இன்று மாலை என் மேஜைக்கு வந்திருப்பது டின்டினின் 7-வது செட் பிரிண்டவுட் ! இவ்வார இறுதி வரையிலும் பொறுமையாய் பரிசீலனை செய்தான பிற்பாடு, படைப்பாளிகளுக்கு ஒப்புதலுக்காக அனுப்பிட திட்டமிட்டுள்ளேன் ! And அங்கே தான் நீங்க வரீங்கோ - பிக்ச்சருக்குள் ! 

உங்களில் எத்தனை பேர் TINTIN fans என்பது எனக்குத் தெரியாது தான் ; இதோ - இந்த சந்தர்ப்பத்தில் அதனை தெரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது ! நீங்களொரு TINTIN ரசிகராக இருந்து, அவரது ஆல்பங்களை (சு)வாசித்திருக்கும் பட்சத்தில் - இக்கட கைதூக்கிக் காட்டுவதோடு, கேப்டன் ஹேடாக்குக்கு பொருத்தமான அந்த க்ளாஸிக் வரிகளை மட்டும் வடிவமைத்தும் காட்டிடலாமே ப்ளீஸ் ? "அட...இது கூட செமையா இருக்கே !" என்று எண்ணச் செய்திடும் வரிகள் இங்கே கிட்டிடும் பட்சத்தில், ஓசையின்றி அவற்றை எனது ஸ்கிரிப்டில் இணைத்து, படைப்பாளிகளுக்கு அனுப்பிடுவேன் ! Once அவர்களின் approval கிட்டியான பின்னே - உங்கள் வரிகளில் எவையேனும் பயன்பட்டிருப்பின், அதனை இக்கட அறிவிக்கலாம் ! So டின்டின் fans...உங்களின் கற்பனைக் குதிரைகளை சித்தே கிளப்பி விடுங்களேன் ? And டின்டினுக்கு இதுவரையிலும் புதியவர்களான நண்பர்கள் - எனது இந்த பில்டப்பை பார்த்து, லைட்டான புன்சிரிப்பொன்றை உதிர்த்தபடிக்கே தூங்கப் போகலாம் ! 

Bye folks....காத்திருப்பது டின்டினின் உலகம் ! என் மேஜையினில் நடுநாயகமாய்   சலசலத்துக் கொண்டிருக்கும் இந்த 61 பக்கங்களை இது வரைக்கும் எத்தனைவாட்டி படித்திருப்பேன் ; இன்னமும் எத்தனைவாட்டி படிக்கப் போகிறேன் என்று சொல்லத் தெரியவில்லை ! But இந்தக் காக்கைக்கு பொன்குஞ்சாகவே இப்போது வரை தென்பட்டிடும் இந்த ஸ்கிரிப்ட் படைப்பாளிகளிடமும் ஒரு thumbs up பெற்று விட்டால் - ஒரு லோடு ரவுண்டு பன்களோடு, ரெண்டு லோடு ஸ்பாஞ் கேக்குகளையும் ஈரோட்டுக்கு இறக்கி விடலாம் ! Fingers crossed & God be with us !!   See you around ! Have a great week !

And TINTIN fans - உங்களின் சிந்தனைக் குல்லாக்களை போட்டுக் கொள்ளலாமே - ப்ளீஸ் ? இங்கே அனுப்பிட வேண்டாமே என்று எண்ணினால் lioncomics@yahoo.com க்கு மின்னஞ்சலிலும் அனுப்பலாம் ! Thanks in advnce !

And மே மாத ரெகுலர் இதழ்கள் சார்ந்த அலசல்களும் இங்கே தொடரட்டுமே - ப்ளீஸ் ?


196 comments:

  1. Replies
    1. வாழ்த்துக்கள் சகோதரி...

      Delete
    2. வாழ்த்துகள் சகோதரி...💐

      Delete
    3. அடடே....சூப்பர் சகோதரி 😊😊😊

      Delete
  2. வந்துட்டேன்...

    ReplyDelete
  3. And மே மாத ரெகுலர் இதழ்கள் சார்ந்த அலசல்களும் இங்கே தொடரட்டுமே - ப்ளீஸ் ?

    ReplyDelete
    Replies
    1. வரேன் வரேன் விமர்சனத்துடன் நாளை காலை வருகிறேன்...

      Delete
    2. மே மாசம் தல மாசம்....
      நாளை தல விமர்சனம் உடன்....
      தலையை வாசித்தது முதல் ஊற்றடிக்குது உற்சாகம்...

      Delete
  4. காத்து இருந்தது வீண் போகவில்லை. அட்டகாசமான ஒரு பதிவு சார். வாத்தியார் எழுதிய தேர்வுக்கு கிடைக்கப் போகும் மதிப்பெண் என்ன என்று உங்களைப் போலவே நானும் ரொம்ப ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் இந்த பதிவை குடுத்ததுக்கே 100/10 மார்க்.
      அது வெளிவந்தப்புறம் 1000/ 10 மார்க்.
      டின்டின் படிச்சப்பிறகு 10,000/10 மார்க்.
      5 பக்கத்துக்கு குறையாக விமர்சனம் போடுறோம்,,

      Delete
  5. Thundering Typhoons - தலையில இடிவிழ

    ReplyDelete
  6. செந்தூரானை நானும் வேண்டுகிறேன் சார்....


    இந்த டின்டின்னுக்காக பல இதழ்கள் பின் தங்குமோ என அஞ்சுகிறேன்....இருந்தாலும் கனவு இதழ் கலக்கலாய் வரட்டும் ...காத்திருப்போம் சார்

    ReplyDelete
    Replies
    1. என்னப்பா பெசுக்குன்னு இப்படி சொல்லி புட்டீங்க. எல்லாத்தாத்தையும் வாங்குறோம். எல்லாத்தாத்தையும் படிக்கிறோம்...
      ஜெய் மாதா காளி...

      Delete
  7. உங்கள் சிரமத்தை, நீங்கள் தமாசாக சொன்னாலும் ஒரு
    காமிக்ஸ் ஆல்பம் உருவாக்குவதன் பின்னணியும், எவ்வளவு கடினம் என்பதும் இப்போது எனக்கும் புரியுதுங்க sir.. சினிமா கூட சீக்கிரமா எடுத்திடலாம் போல... என்னால் உணர முடிகிறது... வாழ்த்துக்கள்.. நன்றி sir... ❤️

    ReplyDelete
  8. வணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே.

    ReplyDelete
  9. Thundering typhoons.. அடங்
    கொப்புறான...2. அடங் கொய்யால.. 😄

    ReplyDelete
  10. பண்ணாட.. பாடையில போவ.. 😄

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சிறப்பா எதிர்பார்க்கிறேன் தோழரே. அந்த வசவ கேக்க முடியாம, காதை இறுக பொத்தினாலும், அதையும் பொழக்குற மாதிரி சொல்லுங்க.

      Delete
  11. வாசித்து முடிச்ச போது மூச்சிரைச்சது. அவ்வளவு ஸ்பீடு பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வயசானதுனால மூச்சிரைச்சிருக்கும்.. இங்கே வந்து வாசிச்சதாலன்னு கதை விட்டுக்கிட்டு இருக்கே..!

      Delete
    2. உனக்கென்னப்பா…கண்ணுத்தெரியாததால நிதானமா தட்டுத் தடுமாறி படிப்பே…நடப்பே…வேகமாக இருக்கறவங்க சிரமம் உனக்குத் தெரியாது.

      Delete
  12. . நம்ம வைகைப்புயல் வடிவேலு பாஷை மாதிரி ஹேடாக் பாஷை (நம்ம வட்டத்துக்குள் ஆவது)உருவாகப் போகுதுங்க சார்.

    ReplyDelete
  13. Thundering typoons. இங்கேயே ஆரம்பிச்சாச்சா.இப்படித்தான்தோர்கல மிஸ் பண்ணிட்டேன் என்ன நடக்குதுனே புரியாம. கனவலகம் குரூப்ல போட்டி நடந்ததுக்கப்றம்தான்தோர்கலோட லெவலே புரிஞ்சது

    ReplyDelete
  14. உங்களின் இந்த ஆழமான பதிவு டின் டின் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் எகிறச் செய்கிறது.

    24 (23) டின் டின் கதைகளையும் தமிழில் சுற்றிலும் வைத்து திளைக்கும் நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

    குறிப்பிட்டு கேப்டன் ஹேடாக் வசனங்களை சொன்னீர்களெனில் முயற்சிக்க ஏதுவாக இருக்கும்.

    More miles to go...

    டின்டின் மிகப்பெரும் சாதனை படைக்க நல்வாழ்த்துகளுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  15. டின் டின் கதைகளை படித்ததில்லை.. ஆனால் சினிமாவில் பார்த்து வியந்தது உண்டு..

    ஆவலோடு ஈரோடு புத்தக விழா வாய்ப்பிற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..

    ReplyDelete
  16. // நீங்களொரு TINTIN ரசிகராக இருந்து, அவரது ஆல்பங்களை (சு)வாசித்திருக்கும் பட்சத்தில் - இக்கட கைதூக்கிக் காட்டுவதோடு //

    இவரின் கதைகளை நான் படித்து இருக்கிறேன் சார்!

    ReplyDelete
    Replies
    1. உங்களது தன்னடக்கம் புரிகிறது தோழரே...

      Delete
    2. நச்சுன்னு நாலு வரில, நீங்க ரசிச்சதை சொல்லுங்க சார்.

      Delete
  17. டின் டின் கேள்விப்பட்டிருக்கிறேன்.அவ்வளவுதான். தோர்கலைப்போன்ற பிரம்மாண்டம் என்பது புரிகிறதுஆசிரியரின் சிலாகிப்பில்.ஆவலுடன் வெய்ட்டிங்

    ReplyDelete
  18. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  19. எடிட்டர் அய்யா..🙏

    Me present..😎

    ஸ்ரீபாபு,நாமக்கல்.

    ReplyDelete
  20. புதிருக்குள் பெரும் பயணம் :
    பிரெஞ்சுக்காரர்கள் வசமிருக்கும் மிஸிஸிபியின் மேற்கே உள்ள பெரும் நிலப்பரப்பை பெரும் தொகை கொடுத்து அமெரிக்க அரசின் வசம் மாற்ற கிடைக்கும் வாய்ப்பை முழுமையாக்க செல்லும் ஆராய்ச்சிக் குழுவின் சவலான ஒரு வரலாற்றுப் பயணமே புதிருக்குள் பெரும் பயணம்...

    தலைப்பைப் பார்த்தவுடன் மார்ட்டின் கதை மாதிரி போகுமோன்னு நினைச்சேன்,அப்படி இல்லைன்னாலும் சுவாரஸ்யமான கதை நகர்வுதான்...

    கதையின் பலமே கதை முழுக்க,முழுக்க பயணத்தில் நகர்ந்து கொண்டே இருப்பதுதான்,இரு நூற்றாண்டுகளுக்கு முன்பான களம் நம்மை சுழல் போல உள்ளே ஈர்த்துக் கொள்கிறது...

    என்னைக் கவர்ந்த கதைப் பாத்திரம் ப்ரெட் மாக்டொனால்ட் தான்,தொடக்கத்தில் சாதாரணமாக அறிமுகமாகும் ஒரு பாத்திரம் கதையின் போக்கிற்கு ஏற்ப தன்னைக் கட்டமைத்துக் கொள்வது அசாத்தியமானது,ப்ரெட் பாத்திரமானது "Survival of the Fittest" என்பதற்கேற்ப உள்ளது தனிச் சிறப்பு...

    பயணத்தில் ப்ரெட்,ஸாகாகவிக்கு இடையில் ஏற்படும் நட்பும்,அடுத்து மலரும் காதலும் அழகான ஒரு பூவின் மலர்ச்சி போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது...

    வரலாறு சார்ந்த ஒரு பயணத்தில் காதல்,மோதல்,அன்பு,ஏமாற்றம்,
    போராட்டம் என கலைவையான உணர்வுகளோடு "Commercial Elements" மிகச் சிறப்பாக கதையின் ஓட்டத்தில் கோர்க்கப்பட்டுள்ளது...

    வண்ணத்தில் இருப்பது கதையில் கூடுதல் சிறப்பு...

    வரலாறு என்பது எப்போதும் சுவராஸ்யமூட்டுவதாகும்,
    புதிருக்குள் பெரும் பயணம் வரலாற்றின் அழகானதொரு பயணக் குறிப்பு,வாசிப்பாளனுக்கு கோடையில் ஒரு பயணம் போன உணர்வு கிடைக்கும்...

    வழக்கம் போல செவ்வியந்தியர்களின் வாழ்க்கை முறையும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது...

    எப்போதும் வரலாறு நமக்கு நிறைய பாடங்களைக் கற்றுத் தருகிறது...

    சில சம்பவங்கள் கொஞ்சம் சினிமாத்தனமாக அமைக்கப்பட்டு உள்ளதோ எனத் தோன்றினாலும் கதையின் போக்கை பெரிதாய் பாதிக்கவில்லை...

    ஆராய்ச்சிக் குழு ஒரு இடர்ப்பாடை சந்திக்கும்போது அடுத்தடுத்த நிகழ்வுகளில் கவனமின்றி அசட்டையாக இருப்பது கொஞ்சம் உறுத்தலானது...

    ரொம்பவே இரசித்து படிக்கவும்,மகிழ்ச்சியை உணர வைக்கவும் செய்தது இக்கதை...

    எமது மதிப்பெண்கள்-9/10...

    ReplyDelete
  21. ஒரு கெளபாயின் காதலி :

    டெக்ஸ் & கார்ஸன் காதலுக்கு மரியாதை செய்து மீட்பராக மாறும் களமே கதைக்கரு...
    வண்ணத்தில் கதை பட்டையைக் கிளப்புது,வழக்கம் போல் டெக்ஸ் கதையில் என்ன நடக்குமோ அதுதான் இங்கேயும் நடக்குது,அடுத்து என்ன நடக்கும்னு எதிர்பார்க்கிறோமோ அது பெரும்பாலும் நடந்து விடுகிறது...

    காலம்,காலமாய் தமிழ்ச் சினிமாவில் அடித்து துவைக்கப்பட்ட கதைதான், ஆனாலும் விறுவிறுப்பு குறையாமல் போகிறது,சோர்வில்லாமல் பயணிக்கிறது,இதுதான் டெக்ஸ் மேஜிக்கோ...

    வழக்கம் போலான கார்ஸனின் புலம்பல்களும்,எதிர்வினையாக டெக்ஸின் நக்கல்,நையாண்டி பதில்களும் நம்மை ரொம்பவே இரசிக்க வைக்குது...

    ஒரு கெளபாயின் காதலி-வண்ணத்தில் ஒரு ஆக்‌ஷன் மேளா,மையப் புள்ளியாக ஒரு ஜோடியின் காதல் ரீங்காரமும்...

    எமது மதிப்பெண்கள்-9/10...

    ReplyDelete
  22. I'm a fan... சின்ன வயசில் நம் மனதில் பங்க் என்று ஒட்டி கொண்டு பசுமையாக சில காட்சிகள் தங்கிவிடும், 30+ ஆண்டுகளுக்கு முன்
    தலையில் மீன் ஜாடி மாதிரி கண்ணாடி ஹெல்மெட், விண்வெளி உடையுடன் குட்டி வெள்ளை கலர் snowy, டின் டின் & ப்ரோஃபஸர் கால்குலஸ் இருக்க எதிரே செஸ் போர்ட் மாதிரி ஒரு ராக்கெட் நிற்க்கும்.
    இதை பார்த்த Moonக்கு போகனும் ஆசை வந்துச்சு, மூனுக்கெல்லாம் போக முடியாது ரெண்டு க்கு தான் போக முடியும் ன்னு கலாய்க்க பட்டது அப்ப புரியலை இப்ப புரியுது :) :) :)

    ReplyDelete
    Replies
    1. //செஸ் போர்ட் மாதிரி ஒரு ராக்கெட் நிற்க்கும்.
      இதை பார்த்த Moonக்கு போகனும் ஆசை வந்துச்சு///

      அந்த கதை கூடவே பயணம் போய் நிலால சாகசம் பண்ணலாம்கிறேன்...

      Delete
  23. ராபினும் முடிச்சாச்சி,தப்பு தப்பாய் ஒரு தப்பு போராடிக்காத வாசிப்பு,கதையின் முடிவு முற்று பெறாமல் முடிந்ததாய் ஓர் உணர்வு...
    இருப்பினும் பரபரப்புக்கு பஞ்சமில்லை..அட்டைப் படமும் கலக்கல்...

    ReplyDelete
  24. ஒரு
    அசாத்தியப் படைப்பினை
    அட்டகாசமான மொழிபெயர்ப்புடன்
    ஆனந்தமாய் படித்திட
    ஆகஸ்டு மாதத்துக்காண்டி
    ஆவலோடு வெயிட்டிங்...

    ReplyDelete
    Replies
    1. ஈரோடு பாணியில்
      விஜய் கவிதை எழுதிட
      அதை
      செந்தில் சத்யா ரசித்திட
      பொன்ராஜ்
      இங்கு திகைத்து நின்றிட
      விஜயன் அவர்கள்
      கவிஞரை தேடிட...
      இதோ வருகிறது
      பாடல் வரிகள்...

      இதுக்கு மேல
      வருகிறது
      ஸ்டீல்கிளாவின்
      காட்டாற்று வெள்ளம்____

      Delete
    2. சார் சோக்கா ஸ்டீல் க்ளா விடம் கோத்து விட்டுட்டிங்களே😃😃😃

      Delete
  25. //டின்டின் எனும் ஜாம்பவானைத் எட்டிப் பிடிக்க நாம் கணிசமாய் காம்பிளான் குடித்து ஏகமாய் வளர்ந்திட வேண்டிய அவசியத்தினையும் உணர்ந்தபடியே ஊர் திரும்பிய பிற்பாடும் - அந்த டின்டின் மொழிபெயர்ப்பின் நோட்டை மட்டும் கடாசிடாது//

    சோனமுத்தா போச்சு என ஒரு செகண்ட் பீதிய கிளம்பிட்டாங்களே...

    ReplyDelete
  26. இனிய காலை வணக்கம் 😊

    ReplyDelete
  27. Thundering typhoons பெரும்பாலும் தலையில் இடி வில என்றே நினைத்து கொள்வேன்

    Billions of blue blistering barnacles
    மண்டையை சுற்றி ஒரு கோடி நட்சத்திரங்கள்

    ReplyDelete
  28. Replies
    1. Billions of blue blistering barnacles என்பதை எப்படி எழுதுவீங்க ஸ்டீல் ?
      கொப்புரானே கோடி தாமரையை தாமிரவருணியில  தலைமுழுக என்றா ?
      :-) :-p 

      Delete
  29. நான் டின்டின் வாசித்தது இல்லை சார்...ஆனால் உங்களின் டின்டின் பதிவுகள் "அடேங்கப்பா " என்ற தோன்றவும் வைக்கிறது எங்க டெக்ஸ் விட இவர் அவ்வளவு பெரிய அப்பாடக்கரா என மலைக்கவும் வைக்கிறது... இதழ் வரட்டும் சார் காத்திருக்கிறேன்..:-)

    ReplyDelete
    Replies
    1. என்ன தலைவரே நீங்களே இப்பிடி சொல்லலாமா. நீங்களு நாலு வார்த்தையை சொன்னா எங்களுக்கு பெருமையா இருக்கும். உங்ககிட்ட நாங்க ரொம்ப எதிர்பார்க்கிறோம் தலைவரே.

      Delete
    2. தலைவர்@ +100

      ஆசிரியர் பதிவு பார்த்து எனக்கும் தோன்றிய கேள்வி இதான் தலைவரே... அந்த டின்டின் என்ன அம்புட்டு பெரிய அப்பாடக்கரான்னு ஆகஸ்டு விழாவில் பார்த்துடுவோம்...

      800கதை உள்ள டெக்ஸ், ஸோகோர்லாம் தேமேனு வந்து போறாங்க.... 23ரை கதையை வெச்சிகிட்டு ஓவர் அலப்பறையா கீது...

      Delete
  30. ஒரு கெளபாயின் காதலி

    வழக்கமான அறிந்த ,வழக்கமான கடத்தல் கமர்ஷியல் பாணி கதைதான் ..ஆனால் அந்த கதையின் நாயகர் டெக்ஸ் எனில் எப்படிதான் இப்படி படு விறுவிறுப்பாய் ,படு வேகமாய் ,படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் கீழே வைக்க கூடாது என்று தோன்றவைக்கிறதோ தெரியவில்லை..அவ்வளவு சுவையாக விறுவிறுப்பாக கதை நகர்ந்து செல்கிறது..அதிலும் சித்திரமும் ,வண்ணமும் செம அழகு ..

    டெக்ஸ் டெக்ஸ் தான் என்று வழக்கம்போல் நிரூபித்த மற்றொரு படைப்பே "ஒரு கெளபாயின் காதலி".

    ReplyDelete
  31. // எனக்கும் சரி, எனது சகோதரனுக்கும் சரி, பொழுதுகளில் கணிசம் செலவாவது ஹாஸ்பிடல்களில் அல்லது கோவில் குளங்களில் ! //

    We can understand the situation sir. Don’t worry all will become normal soon. I will pray for your parents to recover soon sir.

    ReplyDelete
  32. ஒரு கெளபாயின் காதலி....

    நாம இலக்கியங்களில் பார்த்த முதன்முதல் கசமுசா காதல் "பாரிஸ் vs ஹெலன் ஆஃப் ஸ்பார்டா"-(உலகிலேயே மிகவும் அழகான பெண்)....!!! அந்த காதலை சுற்றி ஹோமர் தன்னுடைய படைப்பை விஸ்வரூபம் எடுக்க செய்திருப்பார்.... அந்த காதலை சுற்றி சாம்ராஜ்யங்களின் மோதல், மாவீரர்களின் ஆக்ரோசங்களை உணர்வு பூர்வமாக உணர்ச்சிகரமாக கவர்ச்சிகரமாக கவரும் விதத்தில் கட்டமைத்து இருப்பார்...

    கிமு காலத்திய அந்த கசமுசா காதல்தான் இம்மாத கெளபாயின் காதலியோட கதையும்......

    போனெல்லியும் அந்த காதலை சுற்றி இத்தனை அழுத்தமான கதையமைப்பை கட்டமைத்ததோடு தல டெக்ஸ்ஸை கச்சிதமாக உலவ விட்டுள்ளார்கள்...

    தலயோடு சேர்ந்து நாமுமே இந்த காதல் ஜோடி டாம்& ரூபியை சேர்த்து வைக்க போராடுவோம்.

    முதல் மோதலிலேயே தலை நுழைக்கும் டெக்ஸ்& கார்சன் ஜோடி இம்முறை ஃப்ரீ ப்ளோயிங் ஆக பட்டையை கிளப்புறாங்க...

    ரொம்ப நாளைக்குப்பிறகு மனசை இலவம் பஞ்சாக மிதக்க வைத்த கதை...

    உருவாக்கியதே அசத்தலான கலரிங் என்பதால் சும்மா டாலடிக்கிறது பிரிண்டிங்கில...

    கலரிங்கும் ஓவியங்களும் கதைக்கு கூடுதல் வலுசேர்க்கின்றன...

    ஆங்காங்கே தெறிக்கும் ஆசிரியர் சாரோட இளமையான பஞ்சிங் வசன நடை உற்சாகமீட்டரை ஒரு பக்கம் எகிறச் செய்கிறது...

    ஒன் ஆஃப் த ஆல்டைம் பெஸ்ட்ஸ் ஆஃப் டெக்ஸ் லிஸ்ட்ல கெளபாயின் காதலி இடம்பிடிப்பது உறுதி...

    ReplyDelete
    Replies
    1. // உருவாக்கியதே அசத்தலான கலரிங் என்பதால் சும்மா டாலடிக்கிறது பிரிண்டிங்கில... // ஆமா அட்டகாசமான வாசிப்பு அனுபவம்..

      அடுத்த வருடம் இது போல 250 விலையில் 4 கலர் டெக்ஸ் ஆவது வேண்டும் ஆமா....

      Delete

    2. கதைக்கு ஈடுசெய்யும் சித்திரங்களை தெறிக்க விட்டுள்ளார் ஓவியர் Scascitelli....

      துவக்க பேனலே அதற்கு அத்தாட்சி....
      மெக்ஸிக பாலைவனங்கள், பாறை முகடுகள், காற்றாழைகள்,குதிரைகள், மெக்ஸிகோ தொப்பிகள், ரியோ க்ராண்டே....என எல்லாமே நேரில் பார்ப்பது போன்ற நேரத்தியான ஓவியங்கள்... அந்த ஓவியங்களின் அழகை கண்கவரும்படி கச்சிதமாக அமைக்கப்பட்ட கலரிங்பாணி தான் உச்சம்...

      துவக்க பேனலில் அசத்தும் ஓவியப்பாணி...,தெறிக்கும் பாலைவன புழுதியில் ஆரோகணிக்கும் புரவிகள்...அசத்தும் மெக்ஸிகன்களின் முகபாவனைகள்.. மயக்கும் அழகி ரூபியின் வதனம் என கதை முழுதும் கவருகிறது....

      63ம் பக்க பச்சைக்கல் கிராம காட்சி சான்சேயில்லை..மரணமாஸ்..

      91&94 பக்க வல்ரோசா பாசறை லாங் ஷாட் காட்சிகள் நெடுநேரம் பக்கத்தை திருப்ப விடாமல் கட்டிப்போடுகின்றன...

      107ல மெக்ஸிக காவலர்களை டான் சந்திக்கும் காட்சி..

      110ல டெக்ஸ் & கோ அப்படியே வளைவில் திரும்ப எதிர்படும் ரியோ கிராண்டே ஆறு ஆஹா அள்ளிடுது மனசையும் மதிப்பெண்களையும்...

      122 டூ 125 டெக்ஸ்& கோ--ஒரு சைடு, டான் கோஷ்டி அவுங்களை நெருங்க வரும் காட்சிகள்லாம் செதுக்கப்பட்டு இருக்கும்...

      131&132 ல ரூபியைக் காப்பாற்ற க்ராண்டேயின் நீரில் பாயும் டாமின் உணர்வுகளோடு கதையோட்டமும் ஓவியமும் இணையும்போது அதகளம்....

      147ல பழைய மிஷினில் நுழைவாயிலில் கயிறில் தொங்கும் டாம், அவனை பார்த்தபடி பொங்கும் ரூபி---இரவில் அப்படியே போர்ட்ராய்டாக வரைந்துள்ளார், செம..

      155ல டாமின் கயிறை சுட்டு வீழ்த்தும் பழைய காதல் நெஞ்சன் கார்சன்னா நினைச்சீங்கே, சாட்சாத் நாமே...கதையும், ஓவியமும் அப்படி ஈர்த்து விடுகிறது அங்கே...

      கதையின் கடைசி பக்கத்தில டெக்ஸ் சொல்லும் கார்சனின் காதல் மனசு அவரைமட்டுமல்ல நம்மையும் ஒரு நொடி பன்னாக், பாடகி லீனானு சிறகடிக்க வைக்கிறது.....

      Delete
    3. ////அடுத்த வருடம் இது போல 250 விலையில் 4 கலர் டெக்ஸ் ஆவது வேண்டும் ஆமா....///

      +10000000000

      ஆமா உறுதியாக வேணும்

      Delete
    4. நா இன்னும் டீ குடிக்கல. அதனால ஜம்ப் செய்து போறேன். But i am waiting to see ur words ...it's may be on this weekend ...

      ////அடுத்த வருடம் இது போல 250 விலையில் 4 கலர் டெக்ஸ் ஆவது வேண்டும் ஆமா....///

      +10000000000

      புரோ நீங்க கணக்குல வீக்கு.

      4 ன்னா
      400000000000000 ல வரணும்.

      Delete
  33. ///அந்த டின்டின் மொழிபெயர்ப்பின் நோட்டை மட்டும் கடாசிடாது பத்திரமாகவே வைத்திருந்தேன் ! In fact - 7 வருடங்களுக்குப் பின்னேயும் அது எனது மேஜையின் ஓரத்தினில் உறங்கி வருகிறது ! ///

    ஞானி சார் நீங்கள். எப்படியோ இன்னும் 3 மாசத்துல டின்டின் படிச்சிரலாம். நானும் டின்டின் அட்வான்ஸ் புக்கிங்ன்னு நேத்தே செக் அனுப்பியாச்சு. எ பேரு தா புக்கிங்ல முதல்ல .ஹய்யா ஜாலி ஜாலி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் நண்பரே...

      Delete
  34. ////அவற்றுள் எதுவுமே இந்த "டின்டின் அனுபவத்துக்கு" கிட்டே கூட வர இயலாதென்பதை கடந்த சில வாரங்களில் புரிந்து வருகிறேன் !///?

    முழுக்க முழுக்க உண்மை சார். சிறு வயதில் முத்து காமிக்ஸ் கண்டு, பைத்தியமாய் அலைந்திருக்கிறேன். பழைய பேப்பர் கடைக்கு தினமும் அலைவேன். படிக்க விடுபட்டு போன காமிக்ஸ் கம்மி விலையில் வாங்குவேன். அந்த கால கட்டத்தில் தான் உள்ளுர் பென்னிங்டன் லைப்ரேரியில் டின்டின் கதை கண்டு வாய் பிளந்து ரசித்திருக்கிறேன். என்ன மொழி என்று தெரியாது. படங்களை கண்டு கதையை கிரகித்து என்னை போல நண்டு பசங்களோட கதை சொன்ன காலம் ஒன்று உண்டு. அந்த வண்ணங்களில் கொண்ட மயக்கம் இன்னும் இருக்கிறது. நமக்கு புரிகிற பாஷையில் என்னைக்கு தா வருமோ என்று தவியாய் தவித்திருக்கிறேன். எனக்கு 6ஆப்புல படிக்கிறப்போதா இங்கிலீசுபீஸ் புரியவே ஆரம்பிச்சுது. அப்போ தா இங்கிலீசுதா லீவு லெட்டர் எழுதணும்.அப்புறமா இப்ப எல்லா புக்கையும் புரட்டியிருக்கேன்.சில கதையை படிச்சுருக்கேன். என்னதா இருந்தாலும் தாய் மொழியுல படிக்கிற சுகம் இருக்கே. அது அலாதிங்க. என்னோட கலைக்சன் எ கண்ணு முண்ணாடி இருக்குது. அப்புறமா இதை போல இன்னொரு க்ருப் இருக்குது. அவுகளையு தமிழ்ல பாத்துட்டா எ பிறப்போட பயனை அடைஞ்சுருவேன்.

    ReplyDelete
  35. ////டின்டின் ஒவ்வொரு உலக மொழியினில் வெளியாகிடும் போதிலும், அந்த முழுமையான மொழிபெயர்ப்பினை, அந்தந்த மொழியின் 5 திறன் வாய்ந்த வல்லுநர்கள் கொண்டதொரு குழுவின் ஒத்தாசைகளோடு பரிசீலித்து, மாற்றங்கள் / திருத்தங்கள் செய்திடப் பரிந்துரைப்பர் !///

    லயன் காமிக்ஸ்ன் மிக சிறந்த மைல்கல் சார் இது. டின்டின் வந்தபிறகு, லயன் காமிக்ஸ்ன் வாசகர் வட்டம் மிக பெரிய அளவில் விரிவடையும்.

    ReplyDelete
  36. ///உலகெங்கும் தலைமுறைகளைத் தாண்டி, கோடிக்கணக்கானோரின் மார்க்குகளை பெற்ற சாகசம் என்பதால் இங்கே கதைக்கு நாம் மார்க் போட முகாந்திரங்களே கிடையாது என்பது அப்பட்டம் ;////

    ஆமாம் சார். இது ஒரு காவியம். ஓர் முறை அல்ல, ஓராயிரம் முறை தாண்டி படித்தாலும், அன்றும் அது புதிய கதையாய் அதன் ஊடே நம்மை பயணிக்க செய்யும்.

    ReplyDelete
    Replies
    1. //உலகெங்கும் தலைமுறைகளைத் தாண்டி, கோடிக்கணக்கானோரின் மார்க்குகளை பெற்ற சாகசம் என்பதால் இங்கே கதைக்கு நாம் மார்க் போட முகாந்திரங்களே கிடையாது என்பது அப்பட்டம் ;////

      ஒரு பொதுவெளி படைப்பு என்றாகியபின் எதிர்மறை விமர்சனங்கள் வருவதையும் தடுக்க இயலாது சார் !

      TINTIN IN CONGO - நூலின் மேல்

      இனவாதம் ( Racial Discrimination)

      காலனியாதிக்க மனோபாவம் ( colonial intent)

      மிருகவதை ( cruelty against Animals)

      போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

      பொது நூலகங்கள் சில இந்த நூலை குழந்தைகளுக்கான பகுதியிலிருந்து அகற்றி கிராபிக் நாவல் பகுதியில் வைத்தன.(உதாரணம்: புரூக்ளின் நூலகம் - நியூயார்க்-2007)

      ( பூட்டி வைக்கப்பட்ட இப்புத்தகம் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கி மட்டுமே படிக்க அனுமதிக்கப்பட்டது)

      செப்டம்பர் 2011- ல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் குழந்தைகளுக்கான பகுதியிலிருந்து இப்புத்தகம் நூலகத்தினால் அகற்றப்பட்டது.இச்சம்பவம் # TINTINGATE என அனைத்து ஊடகங்களாலும் விவாதப் பொருளாக மாறியது.

      கனடாவில் வின்னிபெக் நகர நூலகம் அமெரிக்க பழங்குடியினரை TINTIN IN AMERICA மோசமாகச் சித்தரித்திருப்பதாக கூறி 2006-ல் நூலை அகற்றியது.

      பகுப்பாய்வு விமர்சனம் படைப்புக்கு வந்தே தீரும்.
      அது ஆரோக்கியமானதுதான்.

      Delete
    2. அபிராமி சார்,
      "காயின்" என்று ஒன்று இருந்தால்,
      ஓளி என்று சொன்னால் அதன் உள்ளே இருளும் பதுங்கி இருக்கும்.
      இது நிஜமே.
      எப்படி எனில் அவரவர்க்கு அவரவர் மதம் உன்னதம் என்பது போல.
      ஹிட்லர் ஓர் இனத்திற்கு தலைவராய் கொண்டாட பட்டார். ஆனால் உலகமோ அவர் எழுச்சியை கண்டு ஓர் அணியாய் திரண்டு எதிர்கொண்டு போரிட்டது.
      .....
      எப்படியானாலும் 23 புக்அ வாங்கி கரை சேக்கிறது முதல் வேலை.

      Delete
    3. அட்டகாசம் செனா அனா ஜி!

      காசு கொடுத்து வாங்கும் எதுவும் விமர்சனத்துக்கு உட்பட்டதே!

      நாங்க மார்க்கு போட்டே தீருவோமாக்கும் - ஹோ ஹோ ஹோ!!

      Delete
    4. நா அந்த காலத்திலிருந்து
      [ Blueberry ] கேப்டன் டைகர் ரசிகருங்க.
      தங்க கல்லறையை குறைஞ்சது ஓராயிரம் தடவை படிச்சிருப்பேன். தங்க கல்லறை முதல் பாகம் B/w வந்த போது படிச்சு மிரண்டு போயிட்டேன். இதை சேலம் பஸ் ஸ்டாண்டுல வாங்கினேன். Second part வந்த போது Bangalore ல வேலை செய்தேன். கடைசி வரைக்கும் அது எனக்கு கிடைக்கவே இல்லை. அப்புறம்
      மின்னும் மரணம் , பரலோக பாதை
      B/ w, என்னோட கலைக்சன்ல உள்ளதுலேயே சிறந்த புத்தகங்கள். அதன் பின்பு வந்த Color புக்கான தங்க கல்லறை, மின்னும் மரணம், என் பெயர் டைகர்
      ...அப்படி வந்த அனைத்தும் மறக்க முடியாதவை.

      இந்த கால கட்டத்தில் டெக்ஸ் வில்லரும் காமிக்ஸ்-ல் அட்டகாசம் செய்தவர். தீபாவளி மலர்,Pocket size என முழு கதைகளாக வந்தபோது, அடித்து பிடித்து வாங்கியிருக்கேன். ஓர் கட்டத்தில் ஜாங்கிரியை ஒரே வாயில் முழுங்கிறவனிடம் அதை பிட்டு பிட்டு கொடுத்த போது தெரித்து ஓடி விட்டேன். ஆனால் இப்பொழுது பாருங்கள். டெக்ஸ் கதை வெளி வராத மாதங்களில், காண்டு தான் அதிகமாக வருகிறது. என்னமோ போங்க.

      Delete
  37. V comics 5ஆவது இதழ்

    தப்பு தப்பாய் ஒரு தப்பு

    Agent ராபின் அக்மார்க் ராபின் கதை. ஆனால் இம்முறை நிறைய இடங்கள் மனதை தொட்டு விட்டன. தனது Girl ப்ரெண்ட் உடன் உணவருந்த ராபின் ஒரு உணவகம் செல்ல அங்கே துப்பாக்கியுடன் நுழையும் மனிதன் அந்த உணவகத்தில் உள்ள அனைவரையும் பிணை கைதிகளாக பிடித்து வைக்க, அவனுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடும் ராபின் அவன் தவறான இடத்தில் மாட்டிக்கொண்ட ஒருவன் என்பதை கண்டுபிடிக்க, அதற்குள் அங்க நுழையும் SWAT team அவனை கொன்று விட, சாகும் தருவாயில் அவனது Girl ப்ரெண்ட் இருக்கும் இடத்தை ராபினிடம் கூறி அவளை காப்பாற்ற வேண்ட அதற்கு பிறகு ஜெட் வேகத்தில் செல்கிறது கதை. ராபின் ஏன் இன்னும் தனிக்கட்டையாகவே இருக்கிறார் என்ற கேள்விக்கு விடையும் கிடைக்கிறது.
    மார்வின் முதல் முதலாக ராபினின் பார்ட்னர் ஆவது இந்த கதையில் தான்.

    எப்போதும் போல இந்த V காமிக்ஸ்சும் Hit the Spot.

    எனது மதிப்பெண் 9.5/10

    ReplyDelete
  38. மற்ற இரண்டு கதைகளின் விமர்சனம் மாலையில்...

    ReplyDelete
    Replies
    1. எனது வாட்அப் நம்பருக்கு அனுப்புங்கள் தோழரே. கேரளாவில் இருப்பதால் இன்னும் புத்தகத்தை அனுப்ப சொல்லவில்லை. [கடந்த 2 மாத புத்தகங்கள் மே 10 ] இந்த வார கடைசியில் தான் விடுமுறை கிடைக்கும். அப்போது தான் அனுப்ப சொல்ல வேண்டும் கதையை படித்து விட்டு உங்களின் விமர்சத்தை படிக்க விருப்பம் கொண்டிருக்கிறேன்.
      9487309782

      Delete
    2. நன்றி நன்றி நண்பரே..

      What's app அனுப்புகிறேன்.

      Delete
  39. ////இக்கட கைதூக்கிக் காட்டுவதோடு, கேப்டன் ஹேடாக்குக்கு பொருத்தமான அந்த க்ளாஸிக் வரிகளை மட்டும் வடிவமைத்தும் காட்டிடலாமே ப்ளீஸ் ?/////

    இப்போ எ கிட்ட ஒரே புக்கு தா அட்டபழசா இருக்குது. அதனால தா யாரும் எடுத்துட்டு போல. பேக் பண்ணி இருக்குற அட்டை பாக்ஸ்ல இருக்குது. இன்னைக்கு லீவு போட்டாச்சு.அதை தேட போறேன்.கண்டு பிடிச்சு அதுல போய் முத்து குளியல் போட்டுட்டு வர்றேன்.

    ReplyDelete
  40. //அந்தந்த மொழியின் திறன்வாய்ந்த5வல்லுனர்கள் குழு//நமது முதல் புத்தகத்தை மட்டுமேஆழ்ந்து ஆராய்வர்.இரண்டாம் புத்தகத்தின் போது நமது ஈடுபாட்டை உணர்ந்துஅவர்கள் படித்துப் பார்க்காம லே ஒப்புதல் அளித்துவிடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதே தான். அதும் யாருகிட்ட நாங்க எல்லாம் தப்பு இல்லாமல் தமிழ் படிக்க எழுத காரணமாக இருந்த வாத்தியார் கிட்ட

      Delete
  41. குமார் சார் வழக்கமான எழுத்துநடையில் விமர்சனம் எழுதாமல்வித்தியாசமாக எழுதியுள்ளீர்கள் .நன்றாக உள்ளது .தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி சார் உங்களைப் போல காமிக்ஸ் காதலர்களிடம் இருந்து வரும் வாழ்த்து மிகவும் மதிப்பு வாய்ந்தது.

      Delete
  42. ஒரு கௌபாயின் காதலி

    ஆகச் சிறந்த பொழுதுபோக்கு வண்ணச் சித்திரக் கதை!!

    9/10

    தப்பு தப்பாய் ஒரு தப்பு

    வழக்கமான ஒரு ராபின் கதை!

    பரவாயில்லை ரகம்!

    8.5/10

    ReplyDelete
  43. இப்பிடி குடாக்குத்தனமா பேசாதடா புடாக்கு.. (கெட்ட வார்த்தை மாதிரியும் ஆச்சு.. கடைசி வார்த்தைய தப்பா படிச்சீங்கன்னா கெட்ட வார்த்தையாவும் ஆச்சு)

    ReplyDelete
  44. எடிட்டர் சார்,

    சிறுவயதிலிருந்தே நான் Tintin னின் diehard fan.

    Thundering typhoons : ஒரிஜினல் ஆக்கம் : Tonnerre de Brest
    Tonnerre என்பது இடியை குறிக்கும் சொல் Brest என்பது பிரான்சில் இருக்கும் ஒரு கடலோர நகரம்.

    இதற்க்கு பலவித கதைகள் சொல்லப்படுகின்றன :

    கேப்டனின் "Tonnerre de Brest" என்ற வெளிப்பாடு, இடியிலிருந்து அல்ல, பிரெஸ்ட் கோட்டையின் பீரங்கியின் ஒலியைக் குறிக்கிறது, இது ஆயுதக் களஞ்சியத்தைத் திறக்கும் மற்றும் மூடும் போது ஒவ்வொரு நாளும் ஒலித்ததாக சொல்கிறார்கள்.


    மற்றுமொரு விளக்கம் : 1751 மற்றும் 1858 க்கு இடையில் ஒரு குற்றவாளி தப்பிக்கும் போது பாரம்பரியமாக ப்ரெஸ்ட் சிறைச்சாலையில் சுடப்பட்ட பீரங்கி குண்டுகளைக் குறிக்கிறது என்றும் சொல்வதுண்டு

    ReplyDelete
    Replies
    1. அருமை Radja சார். செம்ம விளக்கம்...

      Delete
    2. டின்டின் & ஹேடாக் சார்ந்ததொரு மெகா ஆராய்ச்சியே செய்யாத குறையாக நெட்டில் தேடி தகவல்களைச் சேகரித்துள்ளேன் சார் ! And yes - கையில் பிரென்ச் மொழிபெயர்ப்பினையும் நான் வைத்திருப்பதே இதற்காக தான் !

      ஆனால் இங்கிலீஷ் மொழிபெயர்ப்பாளர்கள் காட்டியிருக்கும் பாதையானது தான் practical என்பதில் எனக்கு ஐயங்களே இல்லை ! ஒரு பிரெஞ்சு குறியீடு, பிரான்ஸ் அல்லாததொரு நாட்டிலும்,பிரெஞ்சு அல்லாததொரு மொழியிலும் அதே அளவிலான தாக்கத்தையோ, புரிதலையோ, நகைச்சுவையினையோ கொண்டு வரப் போவதில்லை என்பதை உணர்ந்து, தங்கள் வாசகர்களுக்கேற்ற பாணியில் எழுதியிருந்தனர் ! நமக்கும் இதுவே தாரக மந்திரமாகிட வேண்டி வரும் என்பேன் - becos டின்டின் யாரென்றோ ; ஹேடாக் யாரென்றோ அறிந்திருக்கா நம் வாசகர்களுக்குமே புரியும் பாணியில் ; ரசிக்கும் விதங்களில் வரிகளை அமைப்பது அவசியம் !

      End of the day, கேப்டனின் கூக்குரல்களுக்கு நிஐ அர்த்தம் என்று பெரிதாய் ஏதும் கிடையாது எனும் போது - அந்த உணர்வுகளை தமிழுக்குக் கடத்துவதே பிரதானம் - வார்தைகளை அல்ல தானே சார் ?!

      Delete
    3. ////டின்டின் யாரென்றோ ; ஹேடாக் யாரென்றோ அறிந்திருக்கா நம் வாசகர்களுக்குமே புரியும் பாணியில் ; ரசிக்கும் விதங்களில் வரிகளை அமைப்பது அவசியம் !///

      ---- டின்டின் போன்ற உலக அப்பாடக்கரை பற்றி கிஞ்சித்தும் அறியாத எம்போன்ற ரசிகர்களின் நிலையை எண்ணி,நாங்களும் ரசிக்கனும்னு எடுக்கும் தங்களது சிரத்தைக்கு தலைவணங்குகிறோம் சார்🙏🙏🙏

      இனி டின்னாரை நாங்களும் ரசிக்க இயலும்னு நம்பிக்கை வந்திட்டது...

      Delete
    4. // End of the day, கேப்டனின் கூக்குரல்களுக்கு நிஐ அர்த்தம் என்று பெரிதாய் ஏதும் கிடையாது எனும் போது - அந்த உணர்வுகளை தமிழுக்குக் கடத்துவதே பிரதானம் - வார்தைகளை அல்ல தானே சார் ?! // 100 க்கு 100 சரி தான் சார்.

      Delete
    5. //End of the day, கேப்டனின் கூக்குரல்களுக்கு நிஐ அர்த்தம் என்று பெரிதாய் ஏதும் கிடையாது எனும் போது - அந்த உணர்வுகளை தமிழுக்குக் கடத்துவதே பிரதானம் - வார்தைகளை அல்ல தானே சார் ?!// Absolutely correct sir !

      Delete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. என்னைக் கவர்ந்த கதைப் பாத்திரம் ப்ரெட் மாக்டொனால்ட் தான்,
    /தொடக்கத்தில் சாதாரணமாக அறிமுகமாகும் ஒரு பாத்திரம் கதையின் போக்கிற்கு ஏற்ப தன்னைக் கட்டமைத்துக் கொள்வது அசாத்தியமானது,ப்ரெட் பாத்திரமானது "Survival of the Fittest" என்பதற்கேற்ப உள்ளது தனிச் சிறப்பு...

    பயணத்தில் ப்ரெட்,ஸாகாகவிக்கு இடையில் ஏற்படும் நட்பும்,அடுத்து மலரும் காதலும் அழகான ஒரு பூவின் மலர்ச்சி போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது...//

    //என்னைக் கவர்ந்த கதைப் பாத்திரம் ப்ரெட் மாக்டொனால்ட் தான்,//

    ஹா!ஹா!ஹா! கற்பனைதான் உண்மையைக் காட்டிலும் எவ்வளவு வலிமையானது!

    நான் குறிப்பிடப்படும் நபரும் ஒரு கதாபாத்திரம்தான்!

    1959-ல் ஒஹ்லஹோமா நகரில் தேசிய .... அருங்காட்சியகத்தில் ஹால் ஆஃப் ஃபேமில் இவர் இடம் பெற்றார்.

    1976-ல் ஃபோர்ட் வொர்த்,டெக்ஸாஸ் -இல்
    தேசிய .... அருங்காட்சியகத்தில் ஹால் ஆஃப் ஃபேமில் இவர் இடம் பெற்றார்.

    2001-ல் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் இவரை -இவர் இறந்து சுமார் 189 ஆண்டுகளுக்குப் பின்னர் -அமெரிக்க ராணுவ கௌரவ சார்ஜண்ட் பட்டமளித்தார்.

    2003-ல் அமெரிக்க தேசிய.......க்கான அருங்காட்சியகத்தில் இவர் பெயர் இடம் பெற்றது.

    2000-ல் இவர், இவருக்கு நெருக்கமான இன்னொருவர் அமெரிக்க டாலர் நாணயத்தில் இடம் பெற்றனர்.

    ReplyDelete
    Replies
    1. இவர் பெயரில்

      வட டகோட்டா -வில் ஏரி

      கதையில் வரும் லெஹ்மி கணவாய் அருகே நினைவிடம்

      வயோமிங் ப்ரெமாண்ட் பகுதியில் ஒரு மலைச் சிகரம்

      வாஷிங்டன் டிரை-சிட்டீஸ் பகுதியில் இருசக்கர வாகன பாதை

      வீனஸ் கிரகத்தில் ஒரு பள்ளம்

      அமெரிக்க கடற்படை கப்பல்

      ஒரேகான்,மாண்ட்டானா,இடாஹோ பகுதிகளில் உள்ள மலை முகடுகள்

      மாண்ட்டானா -வில் ஒரு ஆறு

      வாஷிங்டன் பாஸ்கோ பகுதியில் ஒரு பூங்கா

      ஆகியவை உள்ளன.

      இவரது கற்சிலைகள், உருவப்படங்கள் உள்ள இடங்கள் எழுதி மாளாது.


      இவர் வெண்கலச் சிற்பங்கள் ஒரேகான், வயோமிங், இலினொய்,வட டகோட்டா, தென் டகோட்டா, மாண்ட்டானா, இடாஹோ, வர்ஜீனியா, வாஷிங்டன், டெக்ஸாஸ், கன்சாஸ், செயின்ட் லூயிஸ் ஆகிய இடங்களில் உள்ளன.

      Delete
    2. பல நூல்கள் இவர் பெயரில் வெளிவந்துள்ளன.

      பல திரைப்படங்களில், தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் இடம் பெற்றுள்ளார்

      இவரையும் இவருக்கு நெருக்கமானவரையும் ஆராய்ச்சி கப்பலில்
      பார்த்து மூர்க்கத்தனமான செவ்விந்திய குழு கூட வியப்பிலாழ்ந்து தாக்க முற்படவில்லை.

      உண்மையில் இவர் கதையில் சித்தரிக்கப்பட்டவர் போல் கிடையாது.

      சுவாரஸ்யம் கருதி இப்படி அவர் சித்தரிக்கப்படுவது முதல் முறையும் அல்ல.

      அவர் நிஜத்தில் யாரென்று அறிந்தால் கொஞ்சம் மயக்கம் & அதிர்ச்சி வரும்.

      *******""*************************
      ஆனால் ப்ரெட் உங்கள் மனதைக் கவர்ந்தது கதாசிரியர் - க்கு கிடைத்த வெற்றி என்று சொல்ல வேண்டும் ரவி!!!!!!

      Delete
    3. அண்ணன் அறிவரசு ரவி அவர்கள். மேலே அவரது விமர்சனம் உள்ளது.

      Delete
    4. செனா அனா சார் // அவர் நிஜத்தில் யாரென்று அறிந்தால் கொஞ்சம் மயக்கம் & அதிர்ச்சி வரும். // அந்த நிஜத்தை எப்போது சொல்லப் போறீங்க???

      Delete
    5. ப்ரெட் பாத்திரம் கற்பனையா,அடடே தகவலுக்கு நன்றி செனா அனா ஜி,உண்மையும்,புனைவும் வரலாற்றில் ஊடும்,பாவுமாய் உறுத்தல் இன்றி சொல்லப்பட்டிருப்பது நீங்கள் சொல்வது போல் கதாசிரியரின் வெற்றிதான்....
      அவரின் நிஜ முகம் உங்கள் வாயிலாக அறிய ஆவல்...

      Delete
  47. Facebookல் இட்ட பதிவு இங்கும்.

    புதிருக்குள் பெரும் பயணம்...! (லயன் #432)

    கொஞ்சம் நிஜ வரலாறு.

    அமெரிக்கா எனும் செழிப்பு மிக்க கண்டத்தை கண்டறிந்ததோடு ஐரோப்பிய அரசுகள் கேக்குத் துண்டை போல அந்த பரந்த நிலப்பரப்பை தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர். 1800 களில் அமெரிக்கா (யுனைடெட் ஸ்டேட்ஸ்) எனும் நாடு உருவாகி வந்த வேளை அது. பிழைப்பை தேடி அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து வந்தனர் எண்ணற்ற ஐரோப்பியர். அதுவரை பெரும்பாலான மக்கள் கிழக்குப் பகுதியில் மட்டுமே வசித்து வந்தனர். மேற்குப் பகுதியில் பூர்வகுடிகளே வசித்து வந்தனர்.. மற்றும் தோல் (வெள்ளையர்) வேட்டையர்கள் அந்த அடர்ந்த பிரதேசத்திற்கு செல்வதுண்டு.

    அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்சன் தமது நாட்டை மென்மேலும் விரிவு படுத்த எண்ணி பிரான்சிடமிருந்து மேற்குப் பகுதி லூசியானவை விலைக்கு வாங்கினார். மனிதக் காலடியே படாத அந்தப் பரந்த பிரதேசத்தை ஆராயவும் மற்றும் வரைபடம் உருவாக்கவும் தாமஸ் ஜெபர்சனால் உருவாக்கப்பட்டதுதான் Lewis and Clark Expedition எனும் ஆராய்ச்சி பயணம். அந்தக் குழுவுக்கு தலைமை தாங்கி வழிநடத்தியது Meriwether Lewis மற்றும் William Clark. 1804 மே 14ல் துவங்கிய பயணம் சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்தது.. இறுதியில் மேற்கின் பசிபிக்கை வெற்றிகரமாக அடைந்த குழுவினர் 1806 மார்ச் 23ல் திரும்பி வந்து சேர்ந்தனர். இந்த பெரும்பயணத்தில் குழுவினருக்கு அந்த நிலவெளி அமைப்பை குறித்து சொல்லி பெரும் உதவியாக இருந்தது Sacagawea என்ற பதின்ம வயது பூர்வகுடி பெண்மணி.

    முன்பு லயனில் வந்த இரத்தபூமி எனும் புத்தகத்தில் எடிட்டர் விஜயன் அவர்களால் ஒரு வன்மேற்கு கட்டுரை துவங்கப்பட்டது. அக்கட்டுரையில் இந்த எக்ஸ்ப்ளோர் பயணத்தைதான் கட்டுரையாக சொல்ல முனைந்தார் என்று நினைக்கிறன்.

    இனிக் கதை சுருக்கம்.

    மேற்படி நிஜ வரலாற்றை சற்றே கற்பனை கலந்து மிகவும் அருமையாக கதை சொல்லியுள்ளார் Gino D'Antonio. கூடவே ரசிக்க தக்க விதமாக ஒரு மெல்லிய காதலும் உள்ளது கதையில்.

    ஐரோப்பாவில் இருந்து பிழைப்பு தேடி அமெரிக்கா வரும் ப்ரெட் எனும் ஓவியன் ஒருவன், துறைமுகப் பகுதியில் ஒரு திருட்டுக் கும்பலிடம் இருந்து மெர்ரி வெதர் லூயி என்பவரை காப்பாற்றுகிறான். அவர் பிரதியுபகாரமாக தமது ஆராய்ச்சி பயணத்திற்கு அவனை உடனழைத்து செல்கிறார். வரைபடம் வரையும் வேலை பிரெட்டுக்கு.

    இந்த ஆராய்ச்சி பயணத்தை விரும்பாத (கதையில் ரஷ்யர் என்று சொல்லப்படுகிறது) சில எதிரிகள். முட்டுக்கட்டைப் போட முயல்கிறார்கள். அதாவது அமெரிக்கா தன் நிலப்பரப்பை மேற்கு வரை விஸ்தரித்து விட்டால் அங்கு இதுவரைக் கேட்பாரின்று தோலுக்காக வேட்டையாடி தம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் தடைபட்டு விடும், ஆகையால் இந்த எக்ஸ்ப்ளோர் பயணத்தை நிர்மூலம் ஆக்க சதி செய்கின்றனர்.

    ஒரு கட்டத்தில் எதிரிகளிடம் மாட்டி விடும் ப்ரெட்டை ஒரு இளம் செவ்விந்திய மங்கை காப்பாற்றுகிறாள். பின்னர் குழுவினரோடு இணைத்து கொள்ளும் அந்தப்பெண் பயணத்தில் எதிர்ப்படும் உள்ளூர் பழங்குடிகளுடன் இணக்கமாக பேசி குழுவினருக்கு உதவ வைக்கிறாள். இந்த நீண்ட பயணத்தில் பிரெட்டுக்கும் அந்தப்பெண் ஸாகாகாவீக்கும் காதல் அரும்புகிறது.

    ஸாகாகாவீ ஷோஷோன் எனும் பழங்குடியை சேர்ந்த தலைவனின் தங்கை. தன் தங்கையை ஒரு வெள்ளையன் விரும்புவதை அந்தப் பழங்குடியினத் தலைவன் ஏற்றுக்கொண்டானா? மற்றும் தோல் வேட்டையர் அமெரிக்க ஆராய்ச்சி குழுவினருக்கு என்ன இன்னல்கள் கொடுத்தனர் என்று "புதிருக்குள் பெரும் பயணம்" வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

    ...தொடர்ச்சி கீழே. பதிவு நீண்டு விட்டதால் போஸ்ட் ஆக மறுக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. 00

      கதை மற்றும் சித்திரம் Gino D'Antonio. இந்த வரிசை கதைகள் அனைத்தும் நிஜ நிகழ்வை எடுத்துக் கொள்வதால் லேசான டாக்குமெண்டரி தன்மை ஏற்படுவது தவிர்க்க இயலாது.. எனினும் தமது கதை சொல்லும் சாமர்த்தியத்தால் அதை இயன்ற வரை தவிர்க்க முயல்கிறார் கதாசிரியர். வன்மேற்கை உள்ளது உள்ளபடியே சித்தரிக்க வேண்டும் என்பது கதாசிரியர் நோக்கம் என்று கருதுகிறேன். சுமாராக 10 முறைக்கும் அதிகமாக மறுபதிப்புகள் கண்டுள்ள வெற்றித் தொடர். டெக்ஸ் போன்ற ஹீரோயிஸ நாயகர் போன்று ஏதும் இல்லாமலே வரலாற்று பின்னணியில் சுமார் 75 கதைகளை உருவாக்கி பெரும் வெற்றியை எட்டியது கதாசிரியர் திறமைக்கு சான்று. சித்திரம் பொறுத்தவரை அப்படியே அந்த காலகட்ட நிலவெளிகளை படம் பிடித்தார் போல அமைத்துள்ளதால் அமெரிக்காவின் அந்த இயற்கை எழில் கொஞ்சும் அழகை தரிசிக்க முடிகிறது. தற்போது லயன் வெளியிட்டுள்ளது போனெல்லியின் நவீன டிஜிட்டல் கலரிங்கில் வந்து கொண்டிருக்கும் பதிப்பை. நவீன வண்ணச்சேர்க்கை சித்திரங்களை இன்னும் கூடுதல் அழகோடு வெகுவாக ரசிக்க வைக்கிறது.

      தமிழில் மொழிபெயர்ப்பு வெகு சிறப்பாக அமைந்துள்ளது. கதையை எங்கும் சிதைக்காமல் நன்குணர்ந்து அபாரமாக மொழிபெயர்த்துள்ளனர். புது நிலத்தில் வந்திறங்கும் இளைஞன் ப்ரெட்டை.. "தூய காலைக் காற்றில் விரவி நின்ற சுகந்தம் நெஞ்சை வருடியது" என்ற அழகிய வர்ணணையுடன் அமெரிக்கா வரவேற்கிறது. கதையை வாசிக்க துவங்கும் என்னை வரவேற்பதாக தோன்றியது.
      இந்த உரைநடை பாணி மொழிபெயர்ப்பு தான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து அவ்வாறே வழங்கிய எடிட்டர் விஜயன் சாருக்கு மிக்க நன்றிகள்.

      புத்தகம் அச்சு தரம் எல்லாமே அருமை. ஆனால் ஓவராக டார்க் அடிக்கிறது, அடுத்த வெளியீட்டில் இந்த குறையை சரி செய்தால் நன்று. இன்னும் டெக்சின் கள்வனின் காதலி வாசிக்க வில்லை அதும் இப்படித்தான் டார்க்காக உள்ளதா என்று தெரியவில்லை.

      பைண்ட் தரம் சுமார்தான். (எனக்கு வந்த புக் முதல் பக்கத்தில் பைண்டிங் பின் உள்ள பகுதியில் கிழிந்து வந்துள்ளது.) மாதாந்திர புத்தகங்கள் நடுவே ஆன்லைன் மேளா என்று "பரபர பத்து" வெளியீடுகள் நுழைந்ததால் பைண்டிங் தரப்பில் கூடுதல் சுமை நிகழ்ந்திருக்கும் போலுள்ளது, ஆகையால் இம்முறை பைண்டிங் சுமார் தான். சமீபத்தில் வந்த கலர் உயிரைத் தேடியும் பைண்டிங் டேமேஜாக வந்து ரிட்டர்ன் அனுப்பி வேறு பிரதி பெற்றேன். எடிட்டர் இதை கவனத்தில் கொண்டால் நன்று.

      நதிப்போல ஓடிக் கொண்டிரு..! வன்மேற்கு வரலாறு வரிசையின் புத்தகம் இரண்டுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

      வன்மேற்கின் வரலாறு.
      Storia del West
      VERSO L'IGNOTO

      கீழே கொஞ்சம் வரலாற்றுப் படங்கள் இணைக்கிறேன் பாருங்கள்.

      Delete
    2. Very nice writing and interesting to read

      Delete
    3. நீண்டதொரு பதிவுக்கு நன்றி சார் ! இக்கட ஒரு கொசுறுச் சேதியுமே.....!!

      இந்த இதழைப் படித்து விட்டு ரொம்பவே ரசித்திருக்கும் நமது நண்பர்களுள் ஒருவர், முத்துநகரில் ஒரு தொழிலதிபரும், பெரும் பள்ளியின் தாளாளரும் கூட ! அடிக்கடி பள்ளி நூலகத்துக்கு நமது இதழ்களை வாங்கி காமிக்ஸ் வாசிப்பினை ஊக்குவிக்க முயற்சித்து வருபவர் ! "புதிருக்குள் பெரும் பயணம் " இதழில் மட்டும் 100 பிரதிகள் வாங்கி மாணாக்கரின் மத்தியில் விலையின்றி விநியோகிக்க தீர்மானித்துள்ளார் !!

      Delete
    4. செல்வம் அபிராமி மற்றும் ராஜ்குமார் அவர்களுக்கு,

      தங்களது " வன்மேற்கின் அத்தியாயங்கள் " கதை சார்ந்த தகவல்களின் தொகுப்பு, அந்த கதையை விரைவில் மற்றும் முதலாவதாக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டிக்கிறது. உங்களை பாராட்டுவது எனது கடமை ஆகும். அற்புதம்.

      Delete
  48. இம் மாத சஸ்பென்ஸே புதிருக்குள் பெரும் பயணம்தான் கதைதான் ஹீரோ ஒரு பக்கம் படிக்கும் போதே அடுத்த பக்கத்திற்கு கடத்தி செல்லும் ஈர்ப்பு இக் கதைக்குள்ளது டெக்ஸ் மற்றும் ராபின் இவர்களுடன் வந்து முதலிடத்திற்க்கு போட்டி போடுமளவிற்க்கு தரமான கதை

    ReplyDelete
    Replies
    1. Thank u sir. உங்களது எழுத்துக்கள், இந்த மாத புத்தகங்களில், "புதிருக்குள் பெரும் பயணத்தையே" முதலாவதாக படிக்க தூண்டுகிறது...

      Delete
  49. Online book fair books Uyirai thedi, Calcutta kutram, thethum nanrum pirarthara vara waiting for me to read.other books complete the reading. Almost may month books may be read in June only

    ReplyDelete
  50. அவர் நிஜத்தில் யாருங்க ஜி. சொல்லுங்க .அமெரிக்கா முழுதும் பல கிளைகளுடன் உள்ள உணவகங்களை ஆரம்பித்தவரா .அல்லது ட்ரம்பஇன் மூதாதையரா

    ReplyDelete
  51. புதிருக்குள் பெரும் பயணம்!

    9.2/10

    அந்த நபர் ஸாகாகாவீ !!!!!

    பக்கம் 8 அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெஃபர்ஸன் அறையில்
    இருப்பவர்கள் யார்?

    மெர்ரி வெதர் லூயி வர்ஜூனியாவில் பிறந்தவர்.ராணுவத்தில் செகண்ட் லெப்டினன்ட் ஆக இருந்து கேப்டனாகி அதில் இருந்து விலகி சுமார் இரண்டாண்டுகளாக ஜனாதிபதி மாளிகையிலேயே இருந்து வந்தவர். ஜெபர்ஸனும் வர்ஜீனியாவில் பிறந்தவர்.முதலில் வக்கீல் பின் அரசியலில் ஈடுபட்டபோதும், ஜார்ஜ் வாஷிங்டன் கீழ் செகரட்டரி ஆஃப் ஸ்டேட் ஆக பணிபுரிந்த போதும், ஆடம்ஸ் கீழ் உதவி ஜனாதிபதியாக பணிபுரிந்த போதும் லூயி அவருடன் நெருங்கிய நட்பில் இருந்தார்.

    மிசௌரி ஆராய்ச்சி பயணம் முடிந்தபின் லூசியானாவின் கவர்னராக மெர்ரிவெதர் லூயியை நியமனம் செய்தவர் ஜெபர்ஸன்.

    கவர்னராக இருந்தபோது அபாண்டமாக ஊழல் குற்றச்சாட்டுகள் உள்குத்து அரசியலால் அவர் மேல் சுமத்தப்பட்டபோது தற்கொலை செய்துகொண்ட லூயியின் எஸ்டேட்டினை சட்ட சிக்கல்களை அகற்றி அவரது குடும்பத்திடம் ஒப்படைத்தவர் ஜெபர்ஸன்.

    லூயியின் மேல் மிகவும் அன்பு பாராட்டியவர் ஜெபர்ஸன்.


    அடுத்த நபர் வில்லியம் கிளார்க்
    லூயி ராணுவத்தில் பணியாற்றியபோது அவரது கமாண்டிங் ஆபிஸர்களில் ஒருவர்தான் கிளார்க்.அப்போதே லூயியின் நம்பிக்கையை சம்பாதித்தவர்.

    ReplyDelete
    Replies
    1. மூன்றாவது நபர் டௌஸாண்ட் சார்போன்னியே..ஒரு வேட்டையன்.( trapper / hunter)

      பெயர் வித்தியாசமாக இருக்கிறதல்லவா? கனடியர். பிரெஞ்சு தந்தைக்கும் இராக்குஸ் தாய்க்கும் பிறந்தவர்.

      இரு ராணுவ அதிகாரிகள் ஜனாதிபதி அறையில் இருப்பது ஆச்சரியமல்ல! ஒரு கனடிய வேட்டைக்காரன் ?????

      ஏனெனில் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை....

      டௌஸாண்ட் உண்மையில் ஸாககவீயின் கணவன்

      ஆம்! பெர்ட் ஒரு கற்பனை பாத்திரம் .
      காதல் பறவைகள் சிறகடித்தால் கதைப் போக்குக்கு அது சுவாரஸ்யம் கூட்டும் என்பதற்காக கதாசிரியர் கதா சிந்தனை குதிரையை தட்டிவிட்டிருக்கிறார். படைப்பு சுதந்திரம் என்பதற்கும் வரலாற்று திரிபு என்பதற்கும் ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது.

      பல நூல்களிலும் ஸாககவீயின் காதல் புராணம் இடம் பெற்றுள்ளது.

      1955-ல் வெளியான FAR HARIZONS என்ற படத்தில் வில்லியம் கிளார்க் - க்கும் ஸாககவீக்கும் காதல் மலர்வதாக கதை செல்லும்.

      ஆனால் கதையில் சொல்லப்படுவது போல் இடாகோ- மாண்ட்டானா எல்லைப் பகுதியில் ஷோஷோன் வம்சத்தில் பிறந்த ஸாககவீ தனது
      12-ம் வயதில் ஹிடாட்ஸா பிரிவினரால் கடத்தப்பட்டு 13-ம் வயதில் டௌஸாண்ட் சார்போனியே விடம் விற்கப்பட்டாள்.இதே வயதுடைய otter woman எனும் ஷோஷோன் பெண்ணும் டௌஸாண்ட்டிடம் விற்கப்பட்டாள்.

      கிளார்க்கும், லூயியும் மாண்டன் பகுதியில் கோட்டை கட்டிக்கொண்டிருந்தபோதுதான் டௌஸாண்ட் மற்றும் அவனது மனைவிகளை சந்தித்தனர்.

      ஃபோர்ட் மாண்டனில் ஸாககவீக்கு
      ஆண் குழந்தை பிறந்தது. ஜீன் பாப்டிஸ்ட் சார்போன்னியே என்ற பெயரிடப்பட்டது.

      Delete
    2. டௌஸாண்ட் ஒரு நம்பகத்தன்மையற்ற மனிதன்.
      தனிப்பட்ட முறையில் பாலியல் வக்கிரம் உள்ளவன்.பதிவேடுகளில் உள்ளபடி அவனது ஐந்து மனைவிகளும் பழங்குடியின சிறுமிகள்.கடைசி மனைவி ASSINIBOINE இன 14 வயது சிறுமியை அவன் 1837-ல் மணந்த போது அவனுடைய வயது 70.

      மானிட்டோபா பகுதியைச் சேர்ந்த portage LA prairie சிறுநகரில் saultier இன பழங்குடி சிறுமியை வண்புணர்ச்சி செய்ய முயன்றபோது அப்பெண்ணின் தாயாரால் படகு தோலை குத்த பயன்படும் குத்தூசியால் பயங்கரமாக குத்தப்பட்டு படுகாயமடைந்தான்.

      ஆனால் ஸாககவீ லூயி, கிளார்க் இருவரின் நன்மதிப்பைப் பெற்ற பெண்ணாக விளங்கினாள்.

      பழங்குடியின மொழிபெயர்ப்பாளராக,கடினமான பாதைகளை விடுத்து எளிதில் செல்ல பாதைகளை தேர்ந்தெடுத்து வழிநடத்தியாக , பல முறை குழுவை ஆபத்திலிருந்து காப்பாற்றியவளாக , ஆவணங்கள் நீரில் விழுந்து சேதமடையாமல் காத்தவளாக இருந்திருக்கிறாள்

      லூயி, கிளார்க் இருவருமே அதைப்பற்றியெல்லாம் நெடும் குறிப்புகள் எழுதியுள்ளனர்.

      அதனாலேயே ஸாககவீக்கு பெரும் அங்கீகாரம் கிடைத்தது.

      ஆராய்ச்சி படகில் கைக்குழந்தையோடு ஸாககவீ நிற்பதை பார்க்கும் அப்பகுதி பழங்குடியின மக்கள் கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணை பகையுணர்ச்சியோடு வரும் எதிரிகள் அழைத்து வரமாட்டார்கள் என்பதால் அனைவரும் குழுவை நேச பாவத்துடன் அணுகினர்.

      இன்னும் எழுதலாம் எனினும்

      இரண்டாம் பாகம் வருவதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

      Delete
    3. இரண்டாம் பாகம் வந்த பிறகு மறுபடியும் எழுதுங்கள் சார்.

      Delete
    4. இதை படித்த பிறகு ஸாகாகாவி உடைய விசிறி ஆகி விட்டேன். செம்ம செம்ம

      Delete
    5. அருமை அருமை செல்வம் அபிராமி சார்!

      Delete
  52. மிஸிஸிபி ஆராய்ச்சி குழுவை ரஷ்ய மன்னர் தடை செய்ய விரும்புவதாக கதாசிரியர் எழுதியிருக்கிறார்.இது கொஞ்சம் எல்லை கடந்த கற்பனையாக மனம் எண்ணுகிறது.

    சைபீரியாவில் விலங்கு ரோமங்கள் கிடைப்பது குறைந்துவிட்டதால் ரஷ்யர்கள் வட அமெரிக்கா நோக்கி பெரிங் தலைமையில் வந்தார்கள் என்பது உண்மை . அலாஸ்காவை அடைந்தார்கள் பெரும் முயற்சி செய்து.பின்னாட்களில் பசிபிக் பிராந்தியத்தின் பேரில் உரிமை கோர முயன்றதும் உண்மை.

    ஆனால்
    அலாஸ்காவின் TINGIT. இன பழங்குடியினர் ரஷ்யர்களை கடுமையாக எதிர்த்தனர்.

    நமது கதை நடக்கும் 1804-ல் BATTLE OF SITKA என TINGIT இனத்தவர்களோடு போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் ரஷ்யர்கள்.

    லூஸியானா பகுதியை பிரான்ஸ் விற்க காரணம் நெப்போலியன் துவக்கியிருந்த போர்ச்செலவுகளுக்காகவே.( Napoleonic wars)

    1803-ல் போர் துவக்கிய நெப்போலியனின் ஆரம்ப கால வெற்றிகள் அனைவரையும் கதிகலங்கச் செய்திருந்தன.

    போலந்தின் மீதான ரஷ்யாவின் ஆதிக்கத்திலிருந்து போலந்தை விடுவிப்பதுதான் நோக்கம் என அதிகாரப்பூர்வமாகச் சொன்னாலும் பிரிட்டன் உடனான மறைமுக வணிகத் தொடர்புகளைத் துண்டிக்காவிட்டால் ரஷ்யாவைத் தாக்குவோம் என்பதே நெப்போலியனின் செய்தி.

    ReplyDelete
    Replies
    1. ரஷ்யப் படைகள் இரு இடங்களில் நெப்போலியனிடம் தோற்று ஒருமுறை ரஷ்ய மன்னர் அலெக்ஸாண்டர் பிணையக் கைதியாக போய்விடுவாரோ எனும் அளவிற்கு நிலைமை மோசமாயிருந்தது.

      ஆஷஷ் தொடரைப் போல் 16-ம் நூற்றாண்டிலிருந்து ரஷ்யாவுக்கும் பாரசீகத்துக்குமிடையே இடையே அவ்வப்போது நடக்கும் போர் 1804-ல் இதே காலகட்டத்தில் துவங்கியது.

      ஆர்மினியாவின் பகுதிகள், தஜிஸ்தான் , தற்போதைய ஜார்ஜியா, அஜைர்பஜான் போன்றவற்றை ரஷ்யா முந்தைய உடன்படிக்கையை மீறி கைப்பற்றியதால் பாரசீகம் ரஷ்யாவின் மேல் போர் தொடுத்தது.

      இவ் வளவு சிக்கலில் வெறும் நீர்நாய் உரோமத்திற்காக ரஷ்யா இப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டின் ஒரு ஆராய்ச்சி குழுவை தடை செய்ய முற்படும் என்பது கொஞ்சம் far fetched theory - தான்.

      ( 1834-ல் கலிபோர்னியா வரை ரஷ்யர்கள் வந்தது உண்மை.ஆனால் 1853-ல் க்ரீமியா போர் துவங்கிவிட்டதால் அலாஸ்காவை அமெரிக்காவிடம் விற்று விட்டு சென்று விட்டனர்)

      ரஷ்யா உண்மையான எதிரியாகப் பார்த்தது பிரிட்டனைத்தான்.

      ஹட்சன் பே கம்பெனி மூலம் அப்பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வந்தது பிரிட்டன்.

      Delete
    2. வாவ் என்ன ஒரு Write up. செனா அனா சார். What a come back.

      நீங்க வெகு நாட்கள் கழித்து திரும்ப வந்து எழுதுவதற்காகவே புதிருக்குள் பெரும் பயணம் போன்ற கதைகள் வரவேண்டும் போலவே.

      Delete
    3. போட்டு தாக்கிட்டீங்க பொருளர் ஜி....செம செம.....

      தங்களின் அனைத்து பதிவையும் குறித்து வைத்துள்ளேன்...

      புத்தகத்தை வாசித்துவிட்டு இதில் குதிக்கிறேன்....

      இந்த ஸாகாகாவீ தானே Night At the museum படத்தில் வருவதும்????

      Delete
    4. அடடே செம்ம STV. ஆமா ஆமா

      Delete
  53. //நீங்கள் வெகுநாட்கள் கழித்து திரும்பவந்து எழுதுவதற்காகவே புதிருக்குள் பெரும்பயணம் போன்ற கதைகள் வரவேண்டும் போலவே//.உண்மை .குற்ற நகரம் கல்கத்தா படித்தபின்பு இதுபோலவே நினைத்தேன்

    ReplyDelete
  54. ஒரு கௌபாயின் காதலி...

    இரண்டாவதாக படித்த புத்தகம்.

    முதலில் சொல்லவேண்டியது புத்தகத்தின் கலரிங். ஒரிஜினல் புத்தகமே கலரில் உருவாக்கப் பட்டது என்பதால் சும்மா கண்ணில் ஒத்திக் கொள்ளும் வண்ணங்கள், ஓவியங்களும் கொள்ளை அழகு. ஏற்கனவே நண்பர்கள் சொன்னது போல ஒரு ரெகுலர் டெக்ஸ் கதையே.

    ஆனால் கதையை ரொம்பவே சுவாரசியம் ஆக்குவது நமது எடிட்டர் சாரின் மொழி பெயர்ப்பு தான் என்பதில் என்னளவில் சிறிதும் ஐயம் இல்லை. அதுவும் டெக்ஸ், கார்சன் இடையே ஆன Bantar என்னை பல முறை வாய் விட்டு சிரிக்க வைத்தது இந்த முறை.

    அதற்காகவே எனது மதிப்பெண் 10/10.

    அடுத்த வருடம் இந்த கலர் டெக்ஸ் 4 புத்தகங்களாவது வர வேண்டும் என்பது எனது வேண்டுகோள். நன்றிகள் சார்...

    ReplyDelete
  55. வணக்கம் நண்பர்களே!!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.... இப்பல்லாம் வாத்தியாருக்கு டெஸ்டு வைப்பதுதான் டிரெண்டு போல...

      Delete
    2. அந்த ஐவர் குழுவுக்கு நம்ம வாசகர் வட்டத்தின் நாடி தெரியுங்களா? இதென்ன வம்பா போச்சு...

      Delete
    3. கடந்த 12ஆண்டுகளில் நாம் வாசித்துள்ளவைகளை அவுங்க உற்று நோக்கினாலே எத்தகைய குழுவிடம் தம் படைப்பு போய் படைப்பு போய் சேர உள்ளதுனு தெரிந்துகிடுவாங்க நண்பரே...

      நம்ம தளத்தில் நாம் நிகழ்த்தியுள்ள ஆராய்சிகளை பார்த்தாவே நம்ம நண்பர்கள் வீச்சு புரிஞ்சிடும்...

      அதற்கு பிறகு எந்த கட்டுபாடையும் விதிக்க மாட்டாங்க....

      Delete
  56. புதிருக்குள் பெரும் பயணம்...!
    வன்மேற்கின் வரலாறு.

    'புதிருக்குள் பெரும் பயணம்' வாசித்த போது எனக்குள் கெவின் காஸ்டனர் இயக்கி நடித்த Dances with Wolves (1990) படக் காட்சிகள் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தது. படத்தில் சியோக்ஸ் பூர்வகுடிகளும் நாயகன் ஜான் டன்பரும் எருதுகளை வேட்டையாடும் காட்சி ஒன்று வரும், மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். ஜான் டன்பர் தமது அவுட் போஸ்டில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென்று நில அதிர்வு ஏற்படும். ஜான் டன்பரின் அவுட்போஸ்ட் அமைந்துள்ள பெரும் புல்வெளியில் பல லட்சக்கணக்கான எருதுகளின் வருகையினால் அப்பகுதியே மெல்ல அதிரும். எருதுகள் வருகைக்காக காத்திருக்கும் தமது தோழர்கள் சியோக்ஸுக்கு தகவல் கொடுத்து வேட்டையாட செல்வார்கள்.

    காலங்காலமாக அப்பகுதியில் வசித்து வரும் பூர்வகுடிகள் தமது குளிர்கால உணவு தேவைக்காக எருதுகளின் வருகைக்காக காத்திருந்து, வேட்டையாடி தமது குளிர்கால உணவுத் தேவையை பூர்த்தி செய்துக் கொள்வர். இவர்கள் எருதின் எந்த பாகத்தையும் துளிக்கூட விரயம் செய்யாது உணவு மற்றும் உடைக்காக (தோல்) பயன்படுத்தி கொள்வர். அங்கு நிகழும் கடும் குளிரை சமாளிக்க அங்குள்ள மனிதர்களுக்கு இயற்கை கொடுத்த பெரும் கொடை இந்த எருது மைக்ரேசன். ஆம் அந்த நீண்ட நிலப்பரப்பில் ஆண்டுதோறும் உணவு மற்றும் தண்ணீருக்காக பல நூறு மைல்கள் இடம்பெயரும் எருதுகள் அவை. (BBC ன் Nature's Great Events Documentary ல் The Great Migration எபிசோடில் ஆப்பிரிக்காவின் டான்சானியா செரங்கெட்டியில் எருதுகள் இடம் பெயர்தலை மிகவும் அற்புதமாக காட்சி படுத்தியிருப்பார்கள்.)

    இங்குதான் விஷயமே. அந்த பெரும் கண்டத்தை 1500 களில் கண்டிருந்த ஐரோப்பியர் பலரும் சிறுக சிறுக புலம்பெயர்ந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களில் மிருக வேட்டையரும் உண்டு. அவர்களுக்கு இங்குள்ள எருதுகள் அட்சய பாத்திரம் போன்று. தோல் மற்றும் நாக்குக்காக வேட்டையாடி (தோல் ok.. நாக்கை என்ன செய்வார்கள் என்று எனக்கு புரியவில்லை.) ஐரோப்பா சென்று காசு பார்ப்பது நல்ல தொழிலாக அப்போது விளங்கியுள்ளது. இவர்கள் தோல் மற்றும் நாக்கை எடுத்துக் கொண்டு பிற பகுதியை அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவர். அது அங்குள்ள பழங்குடியினருக்கு வெறுக்கத்தக்க செயலாக அமைத்துள்ளது. பின்னர் இருதரப்பினருக்கும் பகைமை உண்டாக இதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.

    மேற்படி படத்தில் சியோக்ஸ் வேட்டைக்கு செல்லும் போது எருதுகள் பல தோலுரிக்கப்பட்டு கிடப்பதை பார்த்து வருந்துவர். போலவே நம் தங்கத் தலைவர் கேப்டன் டைகரின் "இரும்புக்கை எத்தனில்" டைகரும், ரெட் உல்லியும் ஜெனரல் டாட்ஜை சந்திக்க செல்லும் வழியில் எருதுகள் மந்தை ஓடிவரும் காட்சியும், எருதுகள் தோலுரிக்கப்பட்ட காட்சியும் வரும்.

    ஆரம்பத்தில் புதிதாக வந்த வெள்ளையரை அங்குள்ள பூர்வகுடிகள் பலர் நேசபாவத்துடன் வரவேற்றதாகவே தெரிகிறது. "புதிருக்குள் பெரும்பயணம்" கதையும் அவ்வாறே சொல்கிறது. "இடத்தைக் கொடுத்தால் மடத்தை பிடுங்குவான்" என்ற முதுமொழிக்கேற்ப சிறுக சிறுக வந்த வெள்ளையர் அந்தப் பொன் கொழிக்கும் பூமியை நன்கு பயன்படுத்த தெரிந்தவராக இருந்த படியால் மெல்ல மெல்ல அந்த பெரும் கண்டத்தையே ஆக்ரமித்து ஆயிரமாண்டுகளாக அங்கு வசித்து வந்த பூர்வ குடிகளை இன்று காலி செய்து விட்டனர்.

    முந்தைய பதிவில் டைப் செய்து ரொம்ப பெரிதாக சென்ற படியால் இந்தப் பகுதியை கட் செய்து விட்டேன் இப்போது அதையும் பதிகிறேன். என் நீண்ட பதிவை வாசித்து நன்றி தெரிவித்த எடிட்டர் விஜயன் ஸார் மற்றும் Facebook வாட்ஸப் நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    வன்மேற்கு கதைகளை விரும்பி வாசிக்கும் நண்பர்கள் இயன்றால் முதல் பத்தியில் குறிப்பிட்ட Dances with Wolves (1990) படம் பாருங்கள். 1860 களில் இருந்த அமெரிக்கா நிலப்பரப்பை மற்றும் சியோக்ஸ் இனத்தவரை அவர்களின் குணாதிசயங்கள் என மிக அற்புதமாக காட்சி படுத்தியிருப்பார் கெவின் காஸ்டனர். பரபரப்பு காட்சிகள் அல்லாத சற்றே பெரிய படம் என்றாலும் நிச்சயமாக காணவேண்டிய ஒரு ஆகச்சிறந்த திரைப்படம்.

    முந்தைய பதிவின் லிங்க்:

    https://www.facebook.com/groups/2563733947186727/permalink/3908119772748131/?mibextid=Nif5oz

    ReplyDelete
    Replies
    1. செம்ம ராஜ்குமார் அவர்களே. ஒரு ஆராய்ச்சியே செய்து விட்டீர்கள் . நான் அந்த படத்தை பார்த்து விட்டு சொல்கிறேன். இந்த புத்தகம் நிறைய வாசகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

      அறிவரசு ரவி, செல்வம் அபிராமி, ராஜ்குமார் இவர்களின் விமர்சனங்கள் அட்டகாசம்...

      Delete
    2. பின்னி பெடல் எடுத்துட்டீங்க ராஜ்குமார்..... பெண்டாஸ்டிக்....

      Delete
    3. FBயில்.. என் பதிவை வாசித்த வாசக நண்பரின் கேள்வி :-

      "இன்று பழங்குடியினர் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனரா சார்? தப்பியவர் எவருமில்லையா ? நல்லதொரு பதிவு சார். வாழ்த்துகள்."

      பதிலாக:-

      "Thamarai Priyan Thamarai Priyan இருக்கிறார்கள், அமெரிக்கா அரசிடம் பென்ஷன் பெற்று வாழ்வாதாரம் ஒட்டும் நிலையில் என்று எங்கோ வாசித்த நினைவு, நாம் காமிக்சில் வாசிப்பது போல பெருமளவில் இப்போதும் இருப்பதாக தெரியவில்லை.. அவர்களின் தொன்மை மற்றும் கலாசாரம் போன்றவை எல்லாம் தற்போது தொலைந்து போயிருக்க கூடும். வெள்ளையரின் கலாசாரத்தோடு தற்போது இரண்டற கலந்திருக்க வாய்ப்புள்ளது.

      Selvam Abirami sir போன்றோர் இது குறித்து சற்றே ஆழமாக விளக்கமளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்."

      Delete
    4. நன்றி. தாமரைப் ப்ரியன் அடியேன் தான்.

      Delete
  57. முதலாம் பகுதி:

    டியர் விஜயன் சார்,

    ஹேடாக்கின் கிளாசிக் வசனங்களை நீங்கள் தமிழாக்கச் சொன்னதும், எனது புடைத்த மூக்கை உள்ளே நுழைக்கும் ஆவலைத் தவிர்க்க முடியவில்லை! ஆனால் அதற்காக டின் டின் ஆல்பங்களை எல்லாம் எடுத்துப் படிக்கும் பொறுமை தற்போது இல்லை என்பதால், ஞானப்பழத்தை ஷார்ட் கட்டில் வாங்கிய முருகன் கதையாய், நீங்கள் சொல்லியிருக்கும் அந்த சிந்தனைக் குல்லாவை தலையில் மாட்டிக்கொண்டு, இணையத்தை ஒரு சுற்று சுற்றி வந்தேன்!

    மகிழ்ச்சியில் கத்துவதற்கு, வியப்புக் கூக்குரல் இடுவதற்கு, கடுப்பில் காச்சு மூச்சென்று திட்டுவதற்கு - இப்படியாக, ஹேடாக்கின் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் ஏதாவது ஒரு சொல்லோ அல்லது சொற்றொடரோ தேவைப் படுகிறது. அவை சம்பந்தா சம்பந்தம் இல்லாமலும், குழந்தைகளின் மனதைப் பாதிக்காத வகையிலும், குறிப்பாக அந்நாளைய சென்சார் நடைமுறைகளை உறுத்தாத விதத்திலும் இருந்திட வேண்டும் என்று ஓரளவுக்கு புரிந்து கொண்டேன்.

    ஹேடாக் ஒரு கப்பலோட்டும் மாலுமி என்பதால், அவருக்கான தமிழாக்கத்தை கடல் சார்ந்த சொல் வளத்துடன் குறுக்கிக் கொள்ளலாம் என்று பார்த்தால், மூல மொழிப் பதிப்புகளில், பிரெஞ்சு/ஆங்கில/கிரேக்க/லத்தீன் மொழிகளில் இருந்து கலை/அறிவியல்/அரசியல்/வரலாறு சார்ந்த சொல்லாடல்களையும், குறிப்புகளையும்  கொண்டு இஷ்டத்திற்கு எழுதித் தீர்த்திருக்கிறார்கள்!

    அந்தப் பட்டியலைப் மேலோட்டமாக மேய்ந்த பின், "இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்லையே!" என்ற எண்ணம் எழ, குல்லாவை சொரிந்து கொண்டே மேற்கொண்டு மேய்ந்தால், இன்னொரு பக்கம் Mille milliards, Billions, Trillions என்று கடாமுடா சொற்களின் முன்னர் எண்ணிக்கையை இணைத்துத் திட்டுவதைப் பார்த்ததும், எனது முகம், "கோடானு கோடி ஆணி அடிச்ச தோணி" போலவும், "பத்தாயிரம் படி பாசி புடிச்ச பாய்மரம்" போலவும் பேஸ்தடித்துப் போனது.

    நீங்கள் கேட்டிருக்கும் பேச்சு நடையில், க்ளாஸிக் வரிகளுடன் ஓரளவுக்கேனும் பொருந்திப் போகும் வகையில், மெலிய புன்முறுவலையாவது பூக்க வைக்கும் விதத்தில், தமிழ்ப் "படுத்த" முயற்சித்திருக்கிறேன். எனக்கே கொஞ்சம் மொக்கையாகத் தான் தோன்றுகிறது, பொறுத்துக் கொள்ளுங்கள் - நீங்கள் சொன்னது போல், டின் டின்னின் டிசைன் அப்படி!

    பிரெஞ்சு:
    1) Mille Sabords = "பொத்தல் போட்ட கப்பல்" (அல்லது) "பொத்தல் போட்ட வத்தல் தொத்தல் கப்பல்"
    2) Tonnerre de Brest = "எம்டன் எரிகுண்டுகள்" (அல்லது) "பறங்கிப் பீரங்கிகள்"
    3) Mille millions de mille milliards de mille sabords de tonnerre de brest
    - பொத்தல் போட்ட கப்பல் மேல எக்கச்சக்க லச்சலச்சம் எம்டன் எரிகுண்டுகள்
    - பொத்தல் போட்ட வத்தல் தொத்தல் கப்பல் மேல லச்சலச்சம் லச்சோபலச்சம் எம்டன் எரிகுண்டுகள்
    - பொத்தல் போட்ட கப்பல் மேல பலபல பலபல பல கோடி பறங்கிப் பீரங்கி

    ஆங்கிலம்:
    1) Blue Blistering Barnacles = "பச்சப் பசேல் பாசிப் படலம்" (அல்லது) "வெள்ள வெளேர் வெண் சிப்பிகள்"
    2) Thundering Typhoons = "கடகட இடி புயல்" (அல்லது) "டம் டம் டம சூறாவளி" (அல்லது) "இடி மின்னல் சூறாவளி"
    3) Billions of bilious blue blistering barnacles in a thundering typhoon
    - பச்சப் பசேல் பாசிப் படலம் மேல பல நூறு பல கோடி டம் டம் டம சூறாவளி
    - பச்சப் பசேல் பாசிப் படலத்துல பலபல பலபல பல கோடி இடி மின்னல் சூறாவளி
    - லபலப லபலப லப லச்சம் கடகட இடி புயல்ல வெள்ள வெளேர் வெண் சிப்பிகள்

    குறிப்பு:
    - லப லப என்பதை வேகமாகச் சொன்னால், பல பல என்று வரும். "பலபல பலபல பல கோடி"-க்கு இணை மோனையாக, "லபலப லபலப லப லச்சம்".

    ஹேடாக்கும் ஒரு தாடிக்காரர் தான் என்பதால், அவர் எதுகை மோனையாக திட்டுவதில் தவறில்லையே?
    - பட்டுப் போன கட்டுமரமே 
    - சுக்கு நூறான சுக்கான்  
    - அடகு வச்ச படகே
    - பாழாய்ப் போன பாய்மரம்
    - மக்குக் கொக்கே
    - நாசமாப் போன நங்கூரம் 
    - புயலடிச்ச தடிப் பயலே
    - காஞ்ச கருவாடு 
    - பேயறைஞ்ச பாய்மரமே
    - நாற வாய் நாரை
    - பவளத்திட்டு மேல படகை ஓட்டுனவனே
    - முத்துக்குளிச்ச பித்துக்குளி

    ஹேடாக்கின் புலம்பல்களுக்கு, தமிழ் மரபுத் தொடர்கள் மற்றும் பழமொழிகளை சூழலுக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்!
    - உன் படகுல இடி விழ
    - கிழிஞ்சது பாய்மரம்
    - கிழிஞ்சது ஓராயிரம் கிளிஞ்சல்கள்
    - பட்ட படகுலயே படும், கவுந்த கப்பலே கவுழும் 
    - வலிக்கத் தெரியாதவன் துடுப்பு கோணல்னானாம்
    - பறந்து அடிக்கும் பறங்கிப் பீரங்கி

    வியப்புக் கூக்குரலிடுவதற்கு இருக்கவே இருக்கின்றன இரட்டைக் கிளவிகள்!
    - வெள்ளை வெளேர் சிப்பிக்குள்ள மினுமினு வெண்முத்துக்கள்
    - பளபள பவளப்பாறை
    - வழுவழு வழுக்குப்பாறை
    - தடதட இடி மழை

    (அடுத்த பதிவுடன் முடிகிறது!)

    ReplyDelete
    Replies
    1. முடிவுப் பகுதி:

      தேவைப்பட்டால், மீன்களின் பெயர்கள் கொண்டோ,
      - கீச்சான், ஓலைவாளை, ஜிலேபிக் கெண்டை, கானாங்கெளுத்தி, ஊசிக்கணவாய், கொடுவா

      வட்டாரச் சொற்களின் வாயிலாகவோ,
      - எத்துவாளி, கரட்டோந்தி  

      அல்லது நாட்டு மருந்துகளின் பெயர்களைச் சொல்லியோ,
      - திப்பிலி, சித்தரத்தை, வசம்பு

      ஹேடாக் இஷ்டத்திற்கு உளறிக் கொள்ளலாம்!

      தவிர, ஆங்கில மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் சில சொற்றொடர்களைத் தமிழுக்கோ அல்லது தமிங்கிலீஷுக்கோ நேரடியாக மாற்றிக் கொள்ளலாம்:
      - Misguided missiles = மிஸ்ஸான மிஸைல்கள்
      - Blabber-mouthed parakeet! - வளவள பச்சக் கிளி!

      நமக்குத் பரிச்சயமான, அதே சமயம் ஐரோப்பியத் தொடர்புடைய வரலாற்றுச் சுட்டல்களையும் ஹேடாக் சேர்த்துக் கொண்டால், படிப்பவரை உறுத்தாது தானே?
      - எழுபத்தி எட்டாயிரம் டம் டம் டமால் எம்டன்கள்

      வடமொழிச் சொற்களை விடுவானேன்?! ஹேடாக் ரைமிங்காக திட்டித் தீர்க்க இருக்கவே இருக்கிறது, நிஷ்டூரம்!
      - அடேய் நிஷ்டூர கஷ்டூரமே

      இப்படி என்னதான் வகைவகையாக எழுதி பார்த்தாலும், ஏனோ என் மனம் நிறைவடையவில்லை! மொழிபெயர்ப்பு ஆர்வலர்களை முழி பிதுங்க வைக்கும் இன்னொரு தொடரான Smurfs-ம், தமிழில் அதன் "பொடி ஸ்மர்பி" பாஷையும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது. முடிந்தால், ஓரிரு டின்-டின் கதைகளையாவது வாசித்து விட்டு, மீண்டும் முயற்சிக்க வேண்டும்!

      ஆனால், அதற்குள்ளாக டின் டின்னின் இருபத்து இரண்டாம் பாகத்தை நீங்கள் தமிழில் வெளியிட்டிருக்கக் கூடும் என்பதால், ஹேடாக்கை நீங்கள் எப்படி ஹேண்டில் செய்யப் போகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் காத்திருக்கிறேன்! :-)

      Delete
    2. பாராட்டுகிறேன் கார்த்திக்...

      Delete
    3. சும்மா கலக்கிறீங்க...

      Delete
    4. சூப்பர் கார்த்திக்...பல நண்பர்களுடன் நானும் களமிறங்க உதவியுள்ளீர்கள்....
      ஜங்கல புங்கல கிழி கிளி கிலி

      Delete
    5. சூப்பர் கார்த்திக் பல பஞ்ச் டயலாக்குகள் வாய்விட்டு சிரிக்க வைத்தன :-))))

      Delete
    6. வாங்க கார்த்திக்! நகைச்சுவையாக எழுதியுளீர்கள் :-)

      Delete
    7. உங்களின் இந்த பின்னூட்டமே ஒரு பதிவு போல உள்ளது கார்த்திக் :-)

      Delete
    8. மன்னிக்கவும், கடந்த பதிவுடன் முடியவில்லை :-)

      வாக்கிய அமைப்பை சற்றே மாற்றி அமைத்தால், தமிழ் வடிவில் உறுத்தலின்றி இருக்குமா என முயற்சித்துப் பார்த்தேன்...

      அடிப்படை வரிகள்:
      1) "பொத்தல் கப்பல்" (அல்லது) "வத்தல் தொத்தல் பொத்தல் கப்பல்"
      2) தடாலடிப் புயலிடி அதிரடிச் சரவெடி

      இவற்றை தனித்தும், இணைத்தும், நீட்டியும், முழக்கியும் - தமது உணர்வுகளை ஹேடாக் வெளிப்படுத்திக் கொள்ளலாம்!

      - தடாலடிப் புயலிடி அதிரடிச் சரவெடி
      - பொத்தல் கப்பல்
      - ஆயிரம் பொத்தல் கப்பல்
      - ஆயிரமாயிரம் பொத்தல் கப்பல்
      - வத்தல் தொத்தல் பொத்தல் கப்பல்
      - ஆயிரப் பல்லாயிரம் பொத்தல் கப்பல்
      - ஆயிரமாயிரம் ஆயிர இலட்சம்  பொத்தல் கப்பல்
      - ஆயிரமாயிரம் பலபல பலகோடிப் பொத்தல் கப்பல்

      தேவைப்படும்போது, தீவிரத்தைக் கூட்டுவதற்காக, "தடாலடிப் புயலிடி" மற்றும் "அதிரடிச் சரவெடி" என்ற வரிகளை முன்னேயோ பின்னேயோ இணைத்துக் கொள்ளலாம்!

      - அதிரடிச் சரவெடி, பொத்தல் கப்பலுக்கு, தடாலடிப் புயலிடி!
      - தடாலடிப் புயலிடி, பொத்தல் கப்பலுக்கு, அதிரடிச் சரவெடி!
      - அதிரடிச் சரவெடி, ஆயிரம் பொத்தல் கப்பலுக்கு, தடாலடிப் புயலிடி!
      - தடாலடிப் புயலிடி, பலபல பலகோடிப் பொத்தல் கப்பலுக்கு, பல்லாயிரம் அதிரடிச் சரவெடி!

      ரொம்ப நீளமாக திட்ட வேண்டுமென்றால் பொத்தலுக்கு முன் வத்தல் தொத்தலையும் சேர்த்துக் கொள்ளலாம்!

      - தடாலடிப் புயலிடி, வத்தல் தொத்தல் பொத்தல் கப்பலுக்கு ஆயிரமாயிரம் அதிரடிச் சரவெடி!

      இப்போதைக்கு இவ்வளவுதான்!

      பி.கு.: கருத்து தெரிவித்த நண்பர்களுக்கு நன்றி!

      Delete
    9. Nice bro.. Just try to imagine this dialogues coming form someone who is always drunk.
      That might add the garnish to your dialogues

      Delete
    10. @Navaneethan, உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

      பேச்சுத் தமிழில், "ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு, அஞ்சு, ஒம்போது" - இப்படி சிறிய எண்களுக்கான கொச்சைச் சொற்கள் உள்ளன. ஆனால், "ஆயிரம், கோடி" - என்று வரும் போது அவற்றிற்கான கொச்சை வடிவங்கள் எனக்குத் தெரிந்த வரையில் இல்லை, "லச்சம்" ஒரு விதிவிலக்கு! "நூறாயிரம், ஆயிரமாயிரம், பல்லாயிரம், பல நூறு கோடி" - இவற்றை எல்லாம் கொச்சையாகச் சொல்லவோ, எழுதவோ முடியாது. இதனால் தான், பேச்சுத் தமிழில் பேச வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நமது குடிகார ஹேடாக்கை, தூய தமிழ் எண்ணிக்கைகளைக் கொண்டு திட்ட வைப்பது கடினமாகிப் போகிறது!

      சரி, இந்த "ஆயிரமாயிரம்" என்பதை  எல்லாம் தூக்கிக் கடாசி விட்டு, எண்களின் துணையின்றி ஹேடாக்கின் வசனங்களை கொச்சையாக அமைக்கலாம் தான். ஆனால், Fondation Hergé-ம், அந்நிறுவனத்தின் மொழி வல்லுனர்களும் இந்த அடிப்படை மாற்றத்தை ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை! இந்தச் சிக்கலை எப்படித் தீர்க்கலாம் என்று பார்த்தால், அதற்கு நான்கு வழிமுறைகள் இருக்கின்றன! அவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகளை, என் முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன்!

      1) "லப லப பல லச்சம்" - இப்படி லச்சதை மட்டும் வைத்துக் கொண்டு, மிச்சத்தைக் கடாசி விடலாம்! 

      2) "ரெண்டாயிரத்து முன்னூத்தி அம்பத்தேழு டம் டம் டமால் எம்டன்கள்" - இது போல, குருட்டாம் போக்கில் ஒரு எண்ணிக்கையைப் போட்டுக் கொள்ளலாம்.

      3) "எக்கச்சக்க", "வத்தல் தொத்தல்" - என்று எண்களுக்கு பதிலாக, தீவிரத்தைக் கூட்டும் வேறு சொற்களைப் பயன்படுத்தலாம்.

      4) "முத்துக்குளிச்ச பித்துக்குளி, நீ உப்புத் தண்ணிய ஊத்திக் குளி " - இப்படி, எதுகை மோனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்!

      ஏற்கனவே சொன்னது தான்! வகை வகையாக முயற்சித்தும், ஹேடாகின் கிளாசிக் வசனங்களுக்கு ஒப்பான தமிழ் வடிவங்களில் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. விதிமுறைகளை மீறுவது ஓகே என்றால், இஷ்டத்துக்கும் போட்டுச் சாத்தலாம் தான்!

      உங்களுக்காக ஒன்று!
      //Just try to imagine this dialogues coming form someone who is always drunk. That might add the garnish to your dialogues//

      அந்த புகழ்பெற்ற இரட்டைத் சொற்றொடர்களுக்கு மாற்றாக:
      1) பீரடிச்ச சூறக்காத்து
      2) பொத்தல் கப்பல போட்டுச் சாத்து 

      இவை இணையும் போது:
      - பீரடிச்ச சூறக்காத்து, பொத்தல் கப்பல போட்டுச் சாத்து 

      கப்பலையே பிடித்து தொங்க வேண்டாமென்றால்,
      - பீரடிச்ச சூறக்காத்து, சுறாப்புட்ட போட்டுச் சாத்து 

      எப்படிப் பார்த்தாலும் அதே சிக்கல் தான், இவ்வரிகளுடன் ஒரு எண்ணிக்கையைச் சேர்த்து எழுதும் போது ரொம்பவே உறுத்துகிறது! :-(

      Delete
    11. டின்டின் வரிசையில் இருந்து, ஒரு கதையைக் கூட படித்துப் பார்க்காமல், கேப்டன் ஹேடாக்கிற்கு வஜனம் எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்பியதை என் மனம் ஒப்பவில்லை. தமிழில் முதல் இதழாக வரவிருக்கும்,, "Tintin in Tibet"-ஐ நேற்றிரவு படித்தேன். அனைவரையும் கவரக் கூடிய, எளிமையான கதை என்பதில் ஐயமில்லை. இதுவே டின்டின் தொடரின் டாப் கதை, இதைப் படைத்த ஹெர்ஜேவின் மனதுக்கு மிக நெருக்கமான கதையும் கூட - போன்ற தகவல் துணுக்குகள் இணையத்தில் இறைந்து கிடக்கின்றன!

      இந்திய மொழிகளில் ஹேடாக்கை எப்படி அணுகி இருக்கிறார்கள் என்ற ஆராய்ச்சியை கையில் எடுத்தேன். 2011-ல் வெளியான "The Adventures of Tintin" திரைப்படத்தின் இருவேறு தமிழ் வடிவங்கள் கிடைத்தன - Youtube மற்றும் Prime Video-வில். அவற்றில், ஹேடாக்கின் ட்ரேட்மார்க் வசனங்களை தமிழ்ப் படுத்த எந்த மெனக்கெடலும் எடுத்துக் கொள்ளவில்லை என்பது ஏமாற்றமாக இருந்தது, இந்தியில் பரவாயில்லை, கசமுசவென்று "kasam kulgulate kasmasate kachchuvon" இப்படி என்னத்தையோ ஹேடாக் கத்தினார்.

      சரி, பெங்காலியிலும், இந்தியிலும் தான் டின்டின் காமிக்ஸ் வெளியாகி இருக்கிறதே, அதில் என்ன செய்து வைத்திருக்கிறார்கள் என்று தேடினேன்...

      டின்டின்னை ஹிந்தியில் வெளியிட்ட, ஓம் புக்ஸ் நிறுவனத்தாரின்பதிப்பாசிரியர் திரு. அஜய் மாகோ, டின்டின் உரிமம் வாங்கியது மற்றும் மொழிபெயர்ப்பு கெடுபிடிகள் பற்றி ரொம்பவே புலம்பித் தள்ளி இருந்தார்! பரவாயில்லை, இங்கே எடிட்டர் விஜயனைப் புலம்ப விட்டது போலவே, அங்கே அந்த அஜயனையும், மொழிபெயர்ப்பாளர் புனீத் குப்தாவையும் பாரபட்சம் பார்க்காமல் பதறடித்து இருக்கிறார்கள் இந்த பிரெஞ்சுக்காரர்கள்!

      ஹேடாக் ஹிந்தியில் இப்படித் தான் பாத் பண்ணுகிறார்:
      > karodo karod kasmasate kaale kacchuve (millions and millions of squirming black turtles
      > dus hazaar tadtadate toofan (ten thousand thundering typhoons)

      டின்டின் அடிக்கடி சொல்லும் ‘great snakes’ ஐ "baal ki khaal” என்று மாற்றி இருக்கிறார்கள்!

      ஒரு சில பெயர்களையும் விட்டு வைக்கவில்லை!
      > Snowy = Natkhat
      > Thompson and Thomson = Santu and Bantu

      பிரெஞ்சு மூலத்தை ஒப்பிடுகையில் ஆங்கில வடிவில் கூட பெயரை மாற்றித் தான் இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். ஆனாலும், "ராமு சோமு" ரேஞ்சுக்கு எல்லாம் பெயர்களை மாற்றுவது கொஞ்சம் ஓவர் தான் இல்லையா?!

      (தொடரும்)

      Delete
    12. வங்காளிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம் - நம்மைப் போலவே மொழிப் பற்றும், காமிக்ஸ் மற்றும் இதர இலக்கியங்கள் மீது தீராத நாட்டமும் உடையவர்கள்! மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஆனந்த பஜார் பத்ரிகா குழுமத்தின் அந்நாளைய தலைமை எடிட்டர் திரு அவீக் சர்க்கார் அவர்கள், 1970-களில், இந்தியாவிலேயே முதன்முறையாக, டின்டின்னை வங்க மொழிக்கு கொண்டு வந்திருக்கிறார்!

      அதை மொழிபெயர்த்த திரு.நிரேந்திரநாத சக்ரவர்த்தி அவர்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற பெரும் கவிஞராம்! அவர், "Billions of blue blistering barnacles"-ஐ "Joto shob gneri guglir jhaank" என்று அமைத்து இருக்கிறார்! இதற்கு, "எக்கச்சக்கமாய் கடல் நத்தைகள்" என்பது போல ஏதோ ஒரு பொருள் என்பதை ஒரு பெங்காலி நண்பர் வாயிலாக தெரிந்து கொண்டேன்!

      ஒரு சில பெயர் மாற்றங்களையும் செய்திருக்கிறார்!
      > Snowy = Kuttush
      > Thompson and Thomson = Ronson and Johnson

      அன்னாரது மொழிபெயர்ப்பு பற்றிய ஃபேஸ்புக் விவாதங்களில், அவரைப் பாராட்டியும், குறை சொல்லியும் பலவித கருத்துக்கள் தென்பட்டன. பெங்காலிகள் காமிக்ஸ் ரசனையில் மட்டுமல்ல, அதைச் சார்ந்த அடிதடிகளிலும், நம்மைப் போலவே இருக்கிறார்கள்! :-)

      படம் மற்றும் காமிக்ஸ்கள் தவிர, 1991-ல் வெளியான "The Adventures of Tintin" என்ற TV தொடர், தமிழ் உள்ளிட்ட ஒரு சில இந்திய மொழிகளில் தூர்தர்ஷனில், பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பாகியதாகத் தெரிகிறது! ஆனால், எவ்வளவு தேடியும் அதன் தமிழ் பதிப்பு எங்கும் காணக் கிடைக்கவில்லை! 

      அப்புறம், கேப்டன் ஹேடாக் போல நம்மூரிலும் ஒருவர் இருக்கிறார், யூடியூப் பிரபலம் - உங்கள் மீனவன் என்று அறியப்படும் திரு,கிங்ஸ்டன் - இவரது வீடியோக்களைப் பார்த்தாலே போதும், கேள்வியே பட்டிராத கடல் சார்ந்த வட்டார வழக்குகளை சரளமாக கற்றுக் கொள்ளலாம்! இதோ ஒரு சாம்பிள் - "சென்னாக் கூனி" - இது ஒரு சிறிய வகை இறாலாம்! கேட்பதற்கு ஹேடாக் திட்டுவது போலவே இருக்கிறது தானே?

      சரி, இப்படி பலப்பல பல்லாயிரப் பதிவுகளின் வாயிலாக, முடிவாக என்னதான் சொல்ல வருகிறாய் என்கிறீர்களா?! :-)

      மேற்படி ஆராய்ச்சிகள் மற்றும் Tintin in Tibet புத்தகத்தை வாசித்த அனுபவத்தின் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது! அந்த இரண்டு புகழ்பெற்ற வசனங்களும், தமிழில் சும்மா நச்சென்று நறுக்குத் தெறித்தாற் போல அமைக்கப்பட வேண்டும்! இல்லை என்றால் சுத்தமாக எடுபடாது!

      Delete
  58. அப்படியே g.p.முத்துவின் செத்த பயலுகளா போன்ற பேஸ்புக் தமிழையும் கலந்துக்கலாம். எது எப்படியாயினும் முதல் புள்ளியை ஆசிரியர் ஆரம்பிக்க பிறகு நாம் அதன்மேல் கோடு போடலாம் .

    ReplyDelete
  59. *தப்பு தப்பாய் ஒரு தப்பு*

    அன்று படித்த ராபினின் சாகஸங்களை விட இன்று அவரின் நினைவோட்டத்தின் மூலம் அன்று நடத்திய சாகஸங்கள் உண்மையிலேயே இன்னமும் வெகு அழகாய் மனதினுள் சப்பணம் இட்டு அமர்கிறது..ராபனும் ,பார்ட்னர் மார்வினும் காதோரம் நரையோடிய வயதினுள் தங்கள் அனுபவங்களை அசை போடுவது கதையின் நிஜத்திற்குள் நம்மை இன்னமும் நெருக்கமாய் கொண்டு செல்கிறது...வி காமிக்ஸ்ன் ஏஜெண்ட் ராபின் கண்டிப்பாக தொடந்து வெற்றி நடை போடுவார் என்பதை இந்த தப்பு தப்பாய் ஒரு தப்பு சாகஸம் சரியாக சொல்கிறது ..அட்டைப்படத்திலியே வெளியீட்டு எண் பெரிதாக குறிப்பிட்டு வருவது சேகரிப்பு இதழ்களுமாகவும் ,வரிசைகரமாக சேகரிக்கவும் எளிமை ஆக்குகிறது அருமை .

    அழகான அட்டைப்படம்..தெளிவான அழகான சித்திரங்கள் ,எளிமையான சிறந்த மொழி ஆக்கம் ,இந்த விலையில் இத்தனை பக்கங்கள் வி காமிக்ஸ் என்றுமே *WIN* காமிக்ஸே....

    ReplyDelete
  60. *புதிருக்குள் பெரும் பயணம்*

    அதுதான் நீங்களே சொல்லிவிட்டீர்களே வன்மேற்கின் யதார்த்த முகம் என்று...கதை வாசிக்க ஆரம்பித்தில் இருந்து முடியும் வரை அந்த ஆராய்ச்சி குழுவின் அங்கத்தினரில் நானும் ஒருவனாகி பயணம் செய்தேன் என்பதே உண்மை...ப்ரெட் மட்டுமல்ல கதையில் வரும் பல மாந்தர்களும் மனதினுள் நிற்கிறார்கள்..வண்ணத்தில் இன்னும் நெருக்கமாய் அமைவதும் உண்மை..இவர்களின் அடுத்த சாகஸ பயணமான நதி போல் ஓடி கொண்டிரு இதழுக்கு இப்பொழுதே இருந்தே காத்து கொண்டு இருக்கிறேன்..

    இந்த மே மாதம் வந்த லயனின் ஒரு கெளபாயின் காதலி...,புதிருக்குள் பெரும் பயணம் மட்டுமல்ல வி காமிக்ஸின் தப்பு தப்பாய் ஒரு தப்பு இதழுமாய் மூன்று இதழ்களுமே எந்த குறையும் இல்லாத அழகான வாசிப்பு களங்கள்...இனி அடுத்த மாத இதழுக்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. // இனி அடுத்த மாத இதழுக்கு ஆவலுடன் காத்து இருக்கிறேன்.. // நீங்க நம்ம கட்சி தலீவரே. நானும் உங்களுடன் சேர்ந்து வெயிட்டிங்....

      Delete
  61. சென்றவார
    QUESTION # 1 :
    வேதாளர் தனித்துவமானவர். அவர் மட்டும் முத்துவின் மைல்கல் ஸ்பெஷல் இதழ்கள் தவிர்த்து ஏனையவற்றில் தனியாகவே வரட்டும் சார். மற்றவர்கள் வேண்டுமானால் கலவையாக வரட்டும்.
    Question # 2 :
    ஸ்டெல்லாவும் அவங்க பாஸும்
    Question # 5 :
    உற்சாகம்

    ReplyDelete
  62. This comment has been removed by the author.

    ReplyDelete
  63. தப்பு தப்பாய் ஒரு தப்பு - ராபின் ஒரு உணவகத்தை கடக்கும் போது பழைய நினைவுகளில் ஆரம்பிக்கிறது கதை, தனது காதலியுடன் ராபின் உணவருந்தும் போது அங்கே ஒருவர் துப்பாக்கியுடன் உள்ளே நுழைய அவர் யார் அவரின் நோக்கம் என்ன என்ற ஆவலில் நானும் அந்த ரெஸ்டாரண்டுக்குள் குதித்தேன் வந்தவர் தவறு செய்யவில்லை அவரை தவறு செய்ய கட்டாயப்படுத்தபடுத்தி உள்ளார்கள் என தெரிய ஏன் என்ற அடுத்த கேள்வி அதற்கு விடையை பர பரவென அட்டகாசமான சித்திரங்களுடன் விறு விறுப்பாக சொல்லி உள்ளார்கள்! ஒரு தவறும் செய்யாத இவரை தப்பானவர் என போலீஸ் சுட்டு கொள்ளும் போது மனது கனக்கிறது! கதை ஒரு மென் சோகம் இலையுடும் விதத்தில் உள்ளது, இடையே ராபின் தனது காதலியின் காதலை ஏன் ஏற்கவில்லை என சொன்னவிதம் அருமை! வசனங்கள் அருமை!

    இந்த கதையை படித்து முடித்தவுடன் கலவையான மனநிலை, இது துப்பறியும் கதையா அல்லது சென்டிமென்ட் கதையா என, எனது எண்ணம் இது ஒரு துப்பறிவாளின் கதை :-)

    தப்பு தப்பாய் ஒரு தப்பு - மிகவும் சரியான தலைப்பு!

    8/10

    ReplyDelete
    Replies
    1. // இது துப்பறியும் கதையா அல்லது சென்டிமென்ட் கதையா என, எனது எண்ணம் இது ஒரு துப்பறிவாளின் கதை :-) // செம்ம செம்ம பரணி. ஆனால் ஏன் மதிப்பெண் வெறும் 8?

      Delete
    2. Kumar @ கதையில் சோகம் அதிகம், டார்க் கதை போல் இருந்தது அதே நேரம் கதை முழுமையாக இருந்தது போல் இல்லை!

      Delete
    3. வாழ்க்கையே அப்படித்தானே பரணி.

      Delete
  64. ///இன்று பழங்குடியினர் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டனரா சார்? தப்பியவர் எவருமில்லையா ?////

    ---- உலகம் முழுக்க அந்தந்த நாட்டின் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர், இத்தனை துயரங்களை தாண்டியும்...

    அமெரிக்காவில் இந்திய பழங்குடியினர் என அழைக்கப்படும் மண்ணின் மைந்தர்கள் தனிதனி இனமாக 37லட்சம் பேரும், கலப்பின மக்களில் 60லட்சம் பேரும் இருப்பதாக 2020சென்சஸ் தெரிவிக்கிறது....

    நம்ம டெக்ஸின் நவஜோ இனமும் குறிப்பிடத்தக்க அளவு தனிஇனமாக, நவஜோ நேசன் எனும் தனித்த ஒரு பகுதியில் கும்பலாகவும், நாடுமுழுவதும் கலந்தும் வாழ்ந்து வருகின்றனர்....

    ReplyDelete

  65. ஒரு கெளபாயின் காதலி...

    கதையின் இளமை, ஓவியங்கள், வர்ணஜாலம், வேகமான கதையோட்டம் இவைகளுக்கு இணையாக குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், "வசனங்கள்"...குறிப்பாக டெக்ஸ்& கார்சன் வரும் பல இடங்களில், குபீர்னு வாய்விட்டு சிரிக்க வைக்கிறது... நக்கல் ,நையாண்டி என
    ஆசிரியர் விஜயன் சார் ரொம்ப ஜாலியாக ரசித்து எழுதி உள்ளார்...

    #பக்கம்27..ரிகோ கோஷ்டியை சேர்ந்த இருவர் தப்பிஓட மலையைச்சுற்றி வந்து கார்சன்& டெக்ஸ், அவுங்களை அமுக்குவாங்க..

    கார்சன்: என் கணிப்பு எப்படி தம்பி?

    டெக்ஸ்: பெருசு...தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு நீ குறி சொல்லப் போகலாம்!


    #பக்கம்28..மடக்கப்பட்ட இருவரும் இவுங்களை நோக்கி சுட... அதில் ஒருவன் கார்சனை நோக்கி..

    செத்தோலி...

    கார்சன்: சாகிற வயசாடா எனக்கு?!.... மீசையையும் தாடியையும் பார்த்த நொடியிலேயே சங்கு ஊதும் வயசு தான் என்று நீங்களாகத் தீர்மானித்தால் எப்படியாம்?


    #பக்கம் 42ல டான் மனுவலின் மாளிகையில் ட்ரிங் தந்து உபசரிப்பாங்க...டான் ஒவராக அலட்டுவதை கண்டு, கார்சன்&டெக்ஸ் உரையாடுவது!

    #பக்கம் 45- தன் முன்னால் காதலன் டாமிடம் ஓவராக டானின் மனைவி ரூபி ஈசுவதைக் கண்ட, கார்சன், டாம்&ரூபிக்கு மத்தியில் ஏதோ ஒன்று உள்ளதோ என தன் ஐயத்தை டெக்ஸிடம் கேட்க,

    டெக்ஸ்:- பெரியவருக்குப் புகைகிறதோ?!


    #பக்கம்49- பச்சைக் கல் விடுதியில் செமத்தியாக உண்டபின்...
    டெக்ஸ்& கார்சன் உரையாடல் வழக்கமான வாரிவிடல் ரகத்தில் செம..

    #பக்கம் 53- அதே பச்சைக் கல் நகரில், டெக்ஸ்& கார்சன் விடுதி ரூமில் நையாண்டியான உரையாடல்..முத்தாய்ப்பாக,

    கார்சன்: சத்தியசோதனை....!

    #பக்கம்70- ரூபியை டாம் தள்ளிட்டு போன ஆத்திரத்தில் பச்சைக்கல் நகர விடுதியில் தங்கியிருக்கும் டெக்ஸ்& கோ வை அடித்து துவைக்க வந்த டானின் ஆட்களை இவுங்க இருவரும் புரட்டி எடுத்தபின் வரும் டெக்ஸ்& கார்சன் உரையாடல்கள்....& பக்கம்72- தொடரும் மோதலில்......

    #பக்கம்92-93:- வால்ரோசா பாசறையில் அடைக்கப்பட்ட டாம்& ரூபி தழுவிக்கொண்டு இருப்பதை அடுத்து சார்ஜெண்ட்டின் வசனம்...💞

    #பக்கம்97- டாம்& ரூபியை மீட்கும் டெக்ஸிடம் சார்ஜெண்ட் கொதிப்பதை அடுத்து டெக்ஸ்ஸின் நக்கலான வசனம்..

    #பக்கம்104-105:- டாமின் பாஸ் மோரிஸ், இப்படி இக்கட்டில் மாட்டிவிட்ட டாமை "அன்போடு" கவனிப்பதை அடுத்து கார்சன்...

    கார்சன்: என் நண்பனோடு கொஞ்ச நேரம் பழகியதிலேயே உங்கள் பாஸ் செமத்தியான சில்லுமூக்குச் சிதறடிப்பவனாக உருவெடுத்து விட்டாரே!? அமர்க்களம்!

    #ரியோ க்ராண்டேயில் டானின் ஆட்களோடு டெக்ஸ் பேசும் வசனங்கள், டெக்ஸை காக்க கார்சன் அடிக்கும் நக்கல் வசனங்கள் னு தொடருது....

    #பக்கம் 147- டானிடம் அகப்பட்டுக் கொள்ளும் ரூபி& டாமை மீட்க ரியோ கரையில் டெக்ஸ் சொல்லும் திட்டத்தை அடுத்து சரவெடியான கார்சன்& டெக்ஸ் உரையாடல்கள்....

    #பக்கம் 152- பழைய மிசனை அடையும் டெக்ஸ்& கார்சனை கண்டுகொள்ளும் டானின் ஆட்களில் ஓருவனை காலால் முகத்தில் எத்திவிட்டு கார்சன் அடிக்கும் நக்கலான வசனம் செம.....

    அடியாள்: ஹேய்! நீ ரஃபேல் இல்லை!

    கார்சன்: கூர்மையான மூளைக்காரச் செல்லம்... ஐ லவ் யூ..!!!

    "தடால்... ஒளச்"

    #பக்கம் 167- இணைந்த காதலர்கள் டாம்& ரூபியின் காதல் வசனங்கள்..💞💞💞 & அவர்கள் கிஸ் அடிப்பதைக் கண்டு,

    கார்சன்: கண்ணைக் கூசுதே!

    டெக்ஸ்: தாத்தா சார்! கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் அந்தப் பாவப்பட்ட இதயம் பணாலென்று வெடித்து வைத்து விடும்...!


    (குறிப்பு:-3ம் முறை வாசித்தாச்சு, அடுத்த புக்கை எடுத்தாக் கூட இதுவே மீண்டும் என்னை வாசினு அழைக்குது😉)

    ReplyDelete
    Replies
    1. அழைக்கும் அழைக்கும்...

      Delete
    2. ஹி..ஹி... இன்று 4வது முறையாக வாசிக்கலாம்னு.......😉

      Delete
  66. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
    Replies
    1. ஆமா... ஆண்டு மலர் ப்ரீவியூ நேரம்..🤩

      Delete
  67. **** புதிருக்குள் பெரும் பயணம் ****

    எல்லாமே கச்சிதமாக அமைந்த ஒரு இதமான பயணம்!


    10/10



    **** ஒரு கெளபாயின் காதலி!****

    இதுவரை விதவிதமான எத்தனையோ சாகஸங்கள் செய்துவந்த டெக்ஸ் குழுவினர் இம்முறை கள்ளக்காதலுக்காகவும் களமிறங்கி களேபரம் செய்துள்ளனர்!

    கதை - 6/10
    சித்திரம், வண்ணக்கலவை & தயாரிப்புத் தரம் - 10/10
    அட்டைப்படம் - 8/10
    வசனங்கள் - 9/10

    ReplyDelete
    Replies
    1. அது கள்ளக்காதல் அல்ல!
      டாம் துவக்கத்தில் இருந்தே அவளை மறுதலித்து கொண்டுதான் இருக்கிறான்.

      பக்கம் 81 - ல் ரூபி தனது கணவனின் சாட்டைத் தழும்புகளை காண்பிக்கும்போதுதான் மனம் தடுமாறுகிறான்.

      81-83 பக்கங்களில் இடம் பெறும் வசனங்கள் டாமின் மனதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன.

      பின்னர் இளமை, பழைய காதல் நினைவுகள், சூழ்நிலை ஆகியவை இருவரையும் பிணைக்கின்றன.

      டாமின் வருகைக்கு முன்பாகவே ரூபி தன் கணவனை விட்டு ஓடிப் போகும்
      எண்ணத்தில்தான் இருக்கிறாள்.

      ரூபி என்ன பூரிக்கட்டையால் , பாத்திரங்களால் தாக்குதலுக்கு உள்ளானாலும் துணையை விட்டு பிரியாதிருக்கும் செஅவா?,
      இசிஈஇளவரசரா? மே கண்ணனா? -

      Delete
    2. // ரூபி என்ன பூரிக்கட்டையால் , பாத்திரங்களால் தாக்குதலுக்கு உள்ளானாலும் துணையை விட்டு பிரியாதிருக்கும் செஅவா?,
      இசிஈஇளவரசரா? மே கண்ணனா? //

      ROFL

      Delete
    3. ///அது கள்ளக்காதல் அல்ல///

      அப்ஜெக்சன் யுவர் ஆனர்!

      ரூபி முன்பு ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டே டாமின் காதலை உதறியெறிந்துவிட்டு அந்தத் தொழிலதிபரை மணந்துகொண்டாள்! மணவாழ்க்கை ரணமானதை உணர்ந்தபிறகுதான் மீண்டும் டாமின் ஞாபகம் வந்திருக்கிறது! டாமை சந்திக்காவிட்டாலுமே ஒரு ராமையோ, பீமையோ உஷார் படுத்திக்கொண்டு ஊரைவிட்டு எஸ்கேப் ஆகியிருப்பாள்!

      மணவாழ்க்கையை மீறிய எந்தவொரு பந்தமும் 'கள்ளக் காதல்' என்றே அழைக்கப்படும்! நீங்க இந்தமாதிரியான சப்ஜெக்ட்டுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க.. செனாஅனா - இந்தமாதிரி சப்பை மேட்டரையெல்லாம் நாங்க பாத்துக்கிடறோம்.. தெர்மா மீட்டர்னு நினைச்சு யார் வாயிலாவது சொருகிடுவதற்குமுன் அந்தப்பூரிக்கட்டைய கொண்டுபோய்கிச்சன்ல வையுங்க!

      Delete
    4. // தெர்மா மீட்டர்னு நினைச்சு யார் வாயிலாவது சொருகிடுவதற்குமுன் அந்தப்பூரிக்கட்டைய கொண்டுபோய்கிச்சன்ல வையுங்க! /:
      LOL

      Delete
  68. //கள்ளக்காதலுக்காகவும் களமிறங்கி களேபரம் செய்துள்ளனர்.// செயலரின் பார்வையே தனி. வசனங்களுக்கும்10/10தரலாமே

    ReplyDelete
    Replies
    1. ///வசனங்களுக்கும்10/10தரலாமே///

      ராஜசேகர் ஜி.. அனல் பறக்க வேண்டிய சில பஞ்ச் டயலாக்குகளில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார் நம் 'வசனகர்த்தா"! கள்ளக்காதல் கதைக்கு இதுபோதும்னு நினைத்தாரோ என்னவோ!!

      Delete
  69. சார் நண்பர்களை ஏகமாய் கவர்ந்த வன்மேற்கு ஆகஸ்டுக்குண்டா....ன்னு பதிவு வருமா

    ReplyDelete
  70. //மணவாழ்க்கையை மீறிய எந்த ஒரு பந்தமும் கள்ளக்காதல் என்றே அழைக்கப்படும்.//ஆழ்ந்த சிந்தனை தெளிவான கருத்துக்கள்.செயலர்ஜி .இந்தமாதிரி மேட்டர்னா செமயாஉற்சாகமா கலக்கறிங்க.

    ReplyDelete
  71. பயணம் முடித்து ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறேன் guys ; பதிவோடு காலையில் ஒன்பதரைவாக்குக்கு ஆஜராகிடுவேன் !

    ReplyDelete
  72. எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!

    ReplyDelete