Powered By Blogger

Sunday, May 28, 2023

குல்லா போடும் கணமிது !

 நண்பர்களே,

வணக்கம்.  நட்சத்திரங்கள் 'பளிச்' என்று வலம் வரும் படங்களில்  யாரேனும் ஒரு புதுமுகமும் அறிமுகம் ஆகும் பட்சத்தில், ஒளிவட்டத்தின் சின்ன பகுதி கூட  புதியவர் மீது பொதுவாய் விழுவதில்லை ! "ஒரு ஓரமாய் நின்னுப்புட்டு போய்க்கோடே !!" என்று சொல்லாத குறையாய் மூலை சேர்த்திடுவது வாடிக்கை ! ஆனால் திரையிலோ அந்தப் புது வரவு சத்தம் காட்டாமல் பின்னியெடுத்து விட்டு, அதிரடியாய் கைதட்டல்களை அள்ளிச் செல்வதும் உண்டு ! Flying under the radar என்று சொல்வார்களல்லவா - பெருசாய் கவனத்தை ஈர்க்காமலே காரியம் சாத்தித்துச் செல்வோரை - அத்தகைய நிகழ்வே மே மாதத்தின் ரெகுலர் இதழ்களின் மத்தியினில் என்பேன் ! மூன்றே புக்ஸ் கொண்டதொரு மாதம் ; அதனில் ஒன்றிலோ 'தல' டெக்ஸ் கலக்கல் கலரில் - so உத்திரவாத வெற்றி உறுதி ! இன்னொருவரோ புது அவதாரிலான ஏஜெண்ட் ராபின் - டெக்ஸ் ரேஞ்சுக்கான அப்பாட்டக்கராக இல்லாத போதிலும் ஒரு established நாயகர் & குறைந்தபட்ச வசூலுக்கு கியாரண்டி தரும் ஹீரோ ! So இங்கேயும் பிரச்சனைகள் லேது ! மாதத்தின் மூன்றாவது புக்கில் தான் நமக்கான வாழைப்பழத் தொலி காத்திருக்கக்கூடும் என்ற பயம் எனக்குள் இருந்தது !

"புதிருக்குள் பெரும் பயணம்" ! வன்மேற்கின் நதிமூலங்களை நிறைய வரலாற்று நிஜங்களோடும், கொஞ்சம் கற்பனைகளோடும் குழைத்தடிக்க முயன்றிடும் ஒரு நெடும் தொடரின் துவக்கப் புள்ளி ! நமக்கு தாராபுரம் எங்கே இருக்கிறதென்பது தெரியுமோ-தெரியாதோ ; டெக்ஸஸ் எங்குள்ளதென்பது தெரியும் ! அரவக்குறிச்சி பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோமோ, இல்லையோ - அரிசோனா பற்றி நன்றாகவே தெரிந்திருப்போம் ! நீடாமங்கலம் போயிருப்போமோ இல்லியோ - ஒரு நூறு தபா குதிரைகளில் ஏறி நியூ மெக்சிகோ சென்றிருப்போம், நமது wild west நாயகர்களுடன் ! ரொம்பவே பரிச்சயமான அந்த மண்ணுக்குள், இது வரையிலும் நாம் டிராவல் செய்திருப்பதெல்லாமே தெறிக்க விடும் அதிரடி நாயகர்களோடு தான் ! மூக்கில் குத்தும் 'தல' ; மூக்கே நெளிஞ்சு கிடந்தாலும் சாதிக்கும் 'தளபதி' ; மௌனமாகவே காலனின் ஏஜெண்டாகச் செயல்படும் ட்யுராங்கோ என்று அடுக்கிக் கொண்டே போகலாம் ! ஆனால் மொதவாட்டியாய்  கிஞ்சித்தும் மெகா heroism இல்லாததொரு யதார்த்தமான நாயகனுடன் கொஞ்சம் டாகுமெண்டரி ஜாடையில் நகர்ந்திடும் கதையுடன், இங்கே நாம் பயணிக்க இருப்பதை நான் உணர்ந்த நொடி ரொம்பவே லேட்டானது தான் ! இந்தக் கதையின் மொழிபெயர்ப்பினை நான் செய்திருக்கவில்லை ; சில பல மாதங்களுக்கு முன்பாகவே  நமது கருணையானந்தம் அவர்களிடம் ஒப்படைத்திருந்தேன் என்பதால், கடைசி நிமிடத்தில் எடிட்டிங்குக்கோசரம் எடுத்து அமர்ந்திடும் வரை மேலோட்டமானதொரு glimpse தாண்டி எதுவும் தந்திருக்கவில்லை ! And டின்டினின் வேலைகள் மண்டையை முழுசுமாய் ஆக்கிரமித்து ஓடிக்கொண்டிருந்த தருணத்தில் "புதிருக்குள் பெரும் பயணம்" பணியினை கையில் எடுத்திட, இங்கே ஒரு star நாயகர் இல்லாத குறை எனக்கு ஒரு மிடறு தூக்கலாய் தென்பட்டது ! பற்றாக்குறைக்கு வரலாற்றுப் புள்ளிகளையும் இங்கே சிறுகச் சிறுக கதையெனும் ரங்கோலிக்குள் புகுத்துவதை வாசித்த வேளையில் லைட்டாக வவுத்தைக் கலக்கியது ! 'ஆஹா....நல்ல காதலோ, நொள்ளை காதலோ - அதனை சேர்த்து வைக்க 'தல' சிலம்பமாடி விட்டுப் போகும் ஒரு கலர்புல் மாதத்தில் இந்த புக்கைத் தெரியாம திட்டமிட்டுப்புட்டோமே !! சாத்து இன்னும் சித்தே தூக்கலாக அமையுமே' என்ற பயமும் சேர்ந்து கொண்டது ! அதையும் விட மெகா 'டர்' தந்தது - இதுவொரு நெடும் தொடர் & நாம் இந்த ஆல்பங்களை தொடர்ச்சியாய் வெளியிடும் ஏற்பாடுகளை படைப்பாளிகளுடன் செய்து வைத்திருக்கிறோம் - என்பதே ! "ஆரம்பத்திலேயே சாத்து வாங்க நேர்ந்தால், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு பாக்கி இதழ்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பதாம்  ? கையிலேயே இன்னும் 3 ஆல்பங்கள் வேறு உள்ளனவே ..?!!" என்ற குயப்பமும் கைக்கோர்த்துக் கொண்டது ! 

புக்ஸ் ஓசையின்றி வெளிவந்த பிற்பாடு, எதிர்பார்த்தது போலவே 'தல' செமத்தியான reviews பெற்றதை காண முடிந்தது & surprise ...surprise ....நண்பர் அறிவரசு ரவியின் அழகான விமர்சனத்தில் "பு.ஒ.பெ.ப." இதழினை சிலாகித்திருப்பது கண்ணில்பட்டது ! 'அட'...என்றபடிக்கே நகர்ந்தால் முத்து நகரின் பள்ளித்தாளாளரும், தீரா காமிக்ஸ் காதலருமான நண்பரிடமிருந்து குறுந்தகவல் : "அற்புதமான படைப்பு ! இதனில் 100 புக்ஸ் வாங்கி, எங்கள் பள்ளியின் உயர்வகுப்பு மாணாக்கரின் மத்தியில் விநியோகிக்கப் போகிறேன் !!" என்று ! 'டேய் ராயப்பா...நான் நான் தானா ? நீ நீ தானா ?" என்று கவுண்டர் ரேஞ்சுக்கு எனக்கு வியப்பு ! சரி, ரைட்டு என்றபடிக்கே நகர்ந்தால் FB-ல் நண்பர் ராஜ்குமாரின் இந்த ஆல்பம் குறித்த நெடும் பதிவு ; பாராட்டுக்கள் & அலசல்கள் ! டெபாசிட் தேறினால் "வெற்றி...வெற்றி..மகத்தான வெற்றி !" என்று போஸ்டர் ஒட்டி சுவற்றையெல்லாம் நாஸ்தி பண்ண ரெடியாக இருக்கும் வேட்பாளருக்கு, திடு திடுப்பென வாக்கு எண்ணிக்கையில் லீடிங் கிடைத்தால் என்ன ஆகுமோ, அதுவே நிகழ்ந்தது எனக்கும் ! சரி, லீடிங்கிலே இருந்தாலும் ஒரு ஓரமா பம்மிக்கிட்டே ரிஸல்ட்களை பாத்துக்கலாம் என்று பவ்யமான அமாவாசையாக நின்று கொண்டிருந்தால், பொருளாளரின் நெடும் அலசல் கலந்த சிலாகிப்பு & அடுத்தடுத்து உங்களின் பாராட்டுக்கள் ! அமாவாசை அப்டியே  சோழர் பரம்பரையின் கடைசி வாரிசான நாகராஜ சோழனாக உருமாறியது போல் உள்ளுக்குள் ஒரு 'ஜிவ்' ! (அதுக்கோசரம் ஊட்டிக்கு கிளம்ப போறீகளான்னு ? இங்கே ஒரு ஆளுக்கு கேள்வி முட்டிக்கினு வரும் என்பது தெரியும் தான்) ஆனால் தெரியாதது - உங்களின் வாசிப்புலகுகளின் முழுமையான பரிமாணங்களே ! இன்னும் எத்தினி கழுதை வயசானாலுமே உங்களின் ரசனைகள் எல்லைகளை கிரகிக்க ஆகாது போலும் ! தானைத் தலீவரின் "விண்வெளிப் பிசாசு" என்ற பேச்செடுத்தாலும் பிகில் பறக்குது ; இதோ - இப்படியொரு க்ளாஸிக் படைப்புக்கும் சிலாகிப்புகள் தெறிக்குது ! "30 நாட்களில் அகம் அறிவது எப்புடி ?" என்று ஏதாச்சும் பொஸ்தவம் கிடைக்கிறதா என்று தேட உத்தேசித்துள்ளேன் ! Thanks guys & இந்த வன்மேற்கின் துவக்க அத்தியாயமானது செம ஆரம்பம் கண்டிருப்பது, இத்தொடருக்குள் இனி தைரியமாய் பயணிக்கும் ஆற்றலை நமக்குத் தந்திடும் ! இத்தாலியில் பெரும் வெற்றி கண்ட தொடர்களுள் இது முக்கியமானதெனும் போது - we are on a good wicket here !! 

Moving on, காத்திருக்கும் ஜூன் மாதத்தின் highlight - சந்தேகமே இன்றி "சம்மர் ஸ்பெஷல்" தான் ! இந்தப் பெயரை சொல்லும் போதே எனக்கு தலைக்குள் ஓடுவது 1988 (or 1989 ??)-ல் நாம் மினி-லயனில் போட்டுத் தாக்கிய 2 கலர் + black & வைட்டிலான செம ஜாலியான இதழ் தான் ! இன்னமுமே நினைவுள்ளது இந்த இதழின் மின்னல்வேகத் திட்டமிடலும், அந்நாட்களில் அது ஈட்டிய அட்டகாச விற்பனையும் ! நியூஸ்பிரிண்ட் தான் ; சூப்பர் பைலட் டைகர் தான் அட்டைப்படத்தினில் என்று நினைக்கிறேன் ; அந்த வயதுக்கான ரசனைக்கேற்ற ஜாலியான சமாச்சாரங்கள் நிரம்ப இருந்ததால் it went on to be a smash hit ! (அந்த புக்கினை படித்திருக்கக்கூடிய 90's kids ஆரேனும் இங்குண்டோ ?) இதோ - இன்றைய நமது ரசனைகளுக்கேற்ப புதுயுக நாயகர்களின் கூட்டணியில் காத்துள்ள சம்மர் ஸ்பெஷல் '23 கூட அதே போலான வெற்றி கண்டால் சூப்பராக இருக்கும் !  நாற்கூட்டணி இதழிது - 

*CIA ஏஜெண்ட் ஆல்பா 

*லோன்ஸ்டார் டேங்கோ

*டிடெக்டிவ் ரூபின்

*சிரிப்பு போல்ஸ்கார் டாக்புல் & கிட் ஆர்டின் 

இதோ - அதன் அட்டைப்பட preview ! சமீப புது வரவு நாயகர்களுள், வித்தியாசமான கதை சொல்லும் பாணியினாலும் சரி, சித்திர அதகளங்களாலும் சரி, உச்சத்தில் இருக்கும் டேங்கோ அட்டைப்படத்தினில் இடம்பிடித்திருப்பதில் no surprises ! நான் தற்போது பணியாற்றி வருவதும் இந்தக் கதையினில் தான் ; பனாமா சிட்டி என்று நாம் இதுவரைக்கும் அதிகம் பார்த்திரா மண்ணின் யௌவனத்தை வாய்பிளந்து ரசித்துக் கொண்டே எழுதி வருகிறேன் ! கதையும் பட்டாசு ரகம் ; சித்திரங்களும் டைனமைட் என்பதால் டேங்கோவின் சாகசம் # 3 நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று தோன்றுகிறது ! இன்னமும் ரூபினுக்கு பேனா பிடிக்கும் பணி மட்டும் சம்மர் ஸ்பெஷலில் காத்துள்ளது & கேரட் கேசத்து டிடெக்டிவ் அம்மணியும் கதைக்களத்தில் மிரட்டியுள்ளதாய் நமது பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார் ! So must be a good read ! ஹார்ட்கவர் முழு வண்ண இதழ் ; so எக்கச்சக்க நகாசு வேலைகளுடன் அட்டைப்படமும் மினுமினுக்கிறது ! பணிகளை விரைந்து முடிக்க புனித மனிடோ ஆற்றல் தருவாராக !

வேறொரு பணி தொடர்பாய் மஞ்சள் நகருக்கு நானும் ஜுனியரும், ஒரு செம குட்டி விசிட் அடிக்க நேர்ந்தது சில தினங்களுக்கு முன்பாய் ! கடைசியாய் 2019-ல் அங்கே கால் வைத்தது !! நடப்பாண்டின் ஈரோட்டுப் புத்தக விழாவின் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இம்முறையேனும் ஆண்டவன் புண்ணியத்தில் நமது வாசக சந்திப்பு சாத்தியமாகிடுமென்ற நம்பிக்கை உள்ளது உள்ளுக்குள் ! And நமது முத்து காமிக்சின் 50-வது ஆண்டினில் சந்திப்பு சாத்தியப்பட்டிருக்கவில்லை எனும் போது, அதன் நீட்சியாக இந்தாண்டைப் பார்த்திடலாம் என்பீர்களா guys ? இந்த சந்திப்பின் focus என்னவாக இருக்கலாமோ ? Suggestions please ? அப்புறம் சந்திப்பு எனும் போதே "ரவுண்டு பன் தவிர்த்து என்ன ஸ்பெஷல் ?" என்ற கேள்வி எழுமென்பது புரிகிறது ! Of course கவிஞர் ஒரு நாலாயிர திவ்ய பிரபந்தம் ரேஞ்சுக்கு லிஸ்ட் போடுவார் தான் ; but நடைமுறைகளுக்கு ஏற்றா மாதிரி ஸ்பெஷலாக என்ன திட்டமிடலாம் ? என்ற உங்களின் அவாக்களை வெளிப்படுத்திடலாமே folks ? மாக்ஸிமம் 2 இதழ்களுக்கு மிகாது உங்களின் பரிந்துரைஸ் for Erode ப்ளீஸ் ? 

Oh yes - "திபெத்தில் டின்டின்" ஆகஸ்டுக்கான திட்டமிடலில் உச்சத்தில் உள்ளார் தான் ; ஆனால் படைப்பாளிகளின் ஒப்புதல் process எத்தனை அவகாசம் பிடிக்கக் கூடுமென்பது நாம் இன்னமும் அறிந்திரா விஷயமே ! So நம்மளவிலான டின்டின் பணிகளை பூர்த்தி செய்து ஜூன் 1-ம் தேதிக்கு அட்டைப்படம் ; உட்பக்கங்கள் - என சகலத்தையும் பெல்ஜியம் அனுப்பிடவுள்ளோம் ! 45 நாட்களின் அவகாசத்துக்குள் ஒப்புதல்கள் கிட்டி விட்டால், ஈரோட்டில் டின்டின் ஆஜராகியிருப்பார் ! Fingers crossed big time ! And இன்னமும் 4 நாட்கள் அவகாசம் இருப்பதால், நண்பர் கார்த்திக் சோமலிங்கா போன பதிவினில் தந்திருந்த சூப்பர் ஐடியாக்களை போல இன்னமும் நீங்கள் யோசித்து அனுப்பிடலாம் ! இயன்றவற்றை உட்புகுத்தி விட்டு, படைப்பாளிகளின் ஒப்புதலுக்கு காத்திருக்கலாம் ! So give it another shot all ! 

ஜூன் முதல் தேதிக்கு டின்டினை பெல்ஜியத்துக்கு அனுப்பிய கையோடு - ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்கள் பற்றிய அறிவிப்பினையும் செய்திட்டால் தான் முன்பதிவுகளுக்கு போதிய அவகாசமிருக்கும் என்பதால் - அடுத்த பதிவு வியாழன் இரவுக்கே வந்து விடும் ! இப்போதைக்கு நான் டேங்கோவுடன் பனாமா சிட்டி புறப்படுகிறேன் ; நீங்கள் ஈரோட்டுக்கான திட்டமிடல் குல்லாக்களையும், டின்டின் குல்லாக்களையும் போட்டுக்கினு இங்கே இயன்றமட்டுக்கு விரைவாய் உங்களின் ஐடியாக்களைப் பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ? Bye all...have a good Sunday ! See you around !

278 comments:

  1. கறி வாங்கக் காத்திருக்கும் கனவான்களுக்கும், கோழி கொள்முதல் பண்ண லைனில் நிற்கும் லயன் ஆர்வலர்களுக்கும், கறிகாய் வாங்க மார்க்கெட்டில் ரவுண்டடிக்கும் முத்து ரசிகர்களுக்கும் அநேக நமஸ்காரா !

    ReplyDelete
  2. அட..
    பத்துக்குள்ள..

    ReplyDelete
  3. அட..
    அஞ்சுக்குள்ள..
    மொத தடவையா..

    ReplyDelete
  4. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
  5. Me present எடிட்டர் அய்யா..🙏

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. இரண்டே இரண்டு புக் தான் என்றால்

    1. தலயின் மறுபதிப்பு. வண்ண மறுபதிப்பு. மறுபதிப்பு என்பதால் கொஞ்சம் எளிதா இருக்கும் என்ற காரணத்தால்.

    2. கிடப்பில் போட்டு வைத்துள்ள பவுன்சர் அல்லது ரூட் 66 மாதிரியான புத்தகங்களில் ஏதாவது ஒன்று. எங்கே எப்போது பட்டியலில் உள்ள கதைகளில் ஏதேனும் வந்தாலும் ஓகே. சுஸ்கி விஸ்கி வந்தாலும் சூப்பரே.

    ReplyDelete
  8. *டெக்ஸ் மறுபதிப்புக்கான கதைகளின் புதுப்பிக்கப்பட்ட விருப்பப் பட்டியல்...*

    *இரத்த முத்திரை*
    *அதிரடிக் கணவாய்*
    *எமனுடன் ஒரு யுத்தம்*
    *இரும்புக் குதிரையின் பாதையில்*
    *நள்ளிரவு வேட்டை*
    *இரத்த நகரம்*
    *எல்லையில் ஒரு யுத்தம்*
    *மரண தூதர்கள்*
    *மெக்ஸிகோ படலம்*
    *தனியே ஒரு வேங்கை+ கொடூர வனத்தில் டெக்ஸ்+துரோகியின் முகம்*
    *ஓநாய் வேட்டை& இரத்த தாகம்*
    *சாத்தான் வேட்டை*
    *கபால முத்திரை + சதுப்பில் ஒரு சதிகார கும்பல்*
    *இரத்த ஒப்பந்தம், தணியாத தணல்& காலன் தீர்த்த கணக்கு*
    *மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு & எமனின் எல்லையில்*
    &&&&&
    *கார்சனின் கடந்த காலம்*...
    3ஆம் பதிப்பு--வசனம் & பாடல்கள் மாற்றாமல்.

    ReplyDelete
  9. 1. எங்கேயும் எப்போதுமில் அறிவித்திருந்த பௌன்சர். மொழிபெயர்ப்பு முடிந்து தயாராக இருப்பதாக நீங்கள் சொன்ன நினைவு.
    2. டெக்ஸ் மறுபதிப்பு .. 75 வது வருடத்தில் கார்சனை கௌரவிக்க "கார்சனின் கடந்த காலம்" . பெரிய பேனல்களில் :)

    ReplyDelete
  10. ரஊட்66. ட்யுராங்கோ பாணியிலான. ஒரு தொடர். போன. பதிவில் சொல்லியிருந்திங்கள் சார் இது பர்ஸ்ட். ஆப்சன் அடுத்தது. பத்து புத்தகம் செட். அல்லது மினி காமிக்ஸ் சில புத்தகங்கள்

    ReplyDelete
  11. ஹைய்யா புதிய பதிவு.....

    ReplyDelete
  12. வணக்கம் ஆசிரியர் சார்.

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே

    ReplyDelete
  14. வணக்கம் நண்பர்களே 🙏💐

    ReplyDelete
  15. ஈரோடு ஸ்பெஷல் ரெண்டு புக்கும் புதுசா போடுங்க சார்! மறுபதிப்புன்னாலே 'டர்'ங்குது.

    ReplyDelete
    Replies
    1. ஹா,ஹா...
      எடிட்டர் மைண்ட் வாய்ஸ் :ஆனா மறுபதிப்புதானே விற்பனையில் முந்திகிட்டு போகுது...

      Delete
  16. கேப்டன் டைகர் எதுனா தட்டி விடுங்கள்

    ReplyDelete
  17. // இந்த வன்மேற்கின் துவக்க அத்தியாயமானது செம ஆரம்பம் கண்டிருப்பது, இத்தொடருக்குள் இனி தைரியமாய் பயணிக்கும் ஆற்றலை நமக்குத் தந்திடும் ! //
    ஒரு நல்ல படைப்பை வாசிக்கும்போது அது தரும் உணர்வானது அலாதியானது சார்,சில பல நாட்களுக்கு அந்த படைப்பு மண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும்,அதன் தாக்கம் கொஞ்ச நாட்களுக்காவது நீடிக்கும்...
    அத்தாக்கம் வாசிப்பாளனின் பல கேள்விகளை பிறக்க வைக்கும்,அக்கேள்விகளுக்கு பதில்களையும் வாசிப்பாளனின் மனமே உதிர்க்கும்...
    இது ஒரு ஆனந்தமான,அலாதியான அனுபவம்...
    ஒரு தியானிப்பவனின் மனநிலையது...
    இது போன்ற நல்ல படைப்புகளை நாங்கள் வாசிக்க தாங்கள் ”மூலமாய்” இருப்பது மகிழ்ச்சி சார்...
    விற்பனை,வியாபாரம் என்பதை எல்லாம் தாண்டி ஆத்ம திருப்தி என்பதும் முக்கியம் தானே சார்...

    ReplyDelete
    Replies
    1. செம்ம அண்ணா செம்ம view.

      Delete
  18. கோடை மலர் அட்டைப்படமே சொல்லுது நீங்க மஞ்சமா நகர்வலம் போனது....கோடைக்கேற்றார் போல சுட்டெரிக்க கண்கூச கதிரவனுக்கு துணையாய் கீழே டேங்கோ நீர்நிலையருகை கூலாய் ஜீஸ் குடிக்க ...துப்பாக்கி பிடிக்க...துடிக்க துடிக்க பக்கங்கள புரட்டும் மனதை கட்டுப்படுத்தி....பின்னர் டைம் பாத்தா செம கலக்கலாய் கூலான நான்கு கதை சுட்டிகள் 80 களுக்கு ஏனோ அழைத்துச் செல்ல....கிட் ஆர்ட்டின்...ஆல்ஃபாவும் மலர....கோடை மலர் வெகு ஈர்ப்பாய்..... அன்றைய கதம்பத்தை நினைவுறுத்த...80 கள போலவே ஸ்பைடர் ஆர்ச்சி லாரன்ஸ் நடுவே வேண்டா வெறுப்பாய் வந்து வெற்றி பெறும் மாடஸ்டி போல இந்த அக்காவும் வெற்றி பெறுவார் என நம்புவோமாக....இந்தக்கா கதைகளை இம்மாதம் படிக்கனும்...அட்டைப்படம் ஹார்டு கவர்...ஜிகுனா என கலக்கப் போவதுறுதி


    ReplyDelete
  19. சம்மர் ஸ்பெஷல் வாசிக்க ஆவலாய் உள்ளேன்,ஆல்பாதான் எப்படி இருக்கும்னு தெரியலை...

    ReplyDelete
  20. சம்மர் ஸ்பெசல் பைலட் என்பதால் ஈர்த்த இதழ்....படித்ததுறுதி ஆனா சுத்தமா படித்த கதைக நினைவில்லை...அது அப்படியே போட்டுத் தாக்குனா நல்லாதானிருக்கும்

    ReplyDelete
  21. // "அற்புதமான படைப்பு ! இதனில் 100 புக்ஸ் வாங்கி, எங்கள் பள்ளியின் உயர்வகுப்பு மாணாக்கரின் மத்தியில் விநியோகிக்கப் போகிறேன் !!" //
    அருமையான நகர்வு...

    ReplyDelete
  22. டின்டினை மின்னல் வேகத்ல தயாரிச்சாச் போல...சூப்பர் சார்...நண்பர்கள் போல அது என்ன அவ்ளோ அபாடக்கரா என ஏக எதிர்பார்ப்புகளுடன் நண்பர்களோடு நானுமே பார்த்த சில கதைகளால்

    ReplyDelete
  23. // கதையும் பட்டாசு ரகம் ; சித்திரங்களும் டைனமைட் என்பதால் டேங்கோவின் சாகசம் # 3 நிச்சயம் ஹிட்டடிக்கும் என்று தோன்றுகிறது ! //
    அருமை,அருமை...

    ReplyDelete
  24. // ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்கள் பற்றிய அறிவிப்பினையும் செய்திட்டால் தான் முன்பதிவுகளுக்கு போதிய அவகாசமிருக்கும் என்பதால் - அடுத்த பதிவு வியாழன் இரவுக்கே வந்து விடும் ! //
    சிறப்பு,சிறப்பு...
    1. வழக்கம்போல் டெக்ஸின் மறுபதிப்பு மகி ஜி சொன்னது போல் லிஸ்டில் நல்லதா ஒன்றோ,இரண்டோ அல்லது நீ என்ன சொல்றது நான் 3 கதையை சேர்த்து தான் போடுவேன் என்று அடம்பிடித்தாலும் பிரச்சனையில்லை,பெரிய புக்கா ஹார்ட் பைண்டிங்கில் சும்மா தகதகன்னு மின்னுகிற மாதிரி...
    2.சுஸ்கி,விஸ்கி அல்லது வேறு ஏதாவது வெயிட்டிங் லிஸ்டில் பல்க்கா இருக்கும் குண்டு புக்கில் ஏதாவது (சில பதிவுகளுக்கு முன்னால் சொல்லி இருந்திங்களே சார் குண்டு புக்ஸ் லிஸ்ட் ஒன்று அதில் ஏதாவது ???)
    அப்புறம் ஈரோடு புத்தக விழா சென்னை புத்தக விழாவிற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்தது ஆயிற்றே,தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை...
    முடிஞ்ச அளவுக்கு நிறைய புக்ஸை களத்தில் இறக்கினால் எல்லோருக்கும் மகிழ்ச்சியா இருக்கும்....

    ReplyDelete
  25. உள்ளேன் அய்யா

    ReplyDelete
  26. // இந்த சந்திப்பின் focus என்னவாக இருக்கலாமோ ? //
    லயன் 450,முத்து 500 ஸ்பெஷல்கள் இந்த ஆண்டில் வர வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்...
    எனவே,இவை 2024 இல் வருவதாய் இருப்பின் இதில் எந்த ஸ்பெஷல் கதைகளை நுழைக்கலாம்,எத்தனை கதைகள் விடலாம்னு கூட யோசிக்கலாம் சார்...

    ReplyDelete
  27. '1) பிரளயம்' ஈரோடு புக் ஃபேர்க்கு வெளியிடலாம் சார்.
    2) 'கார்சனின் கடந்த காலம் ' மேக்ஸி சைஸில், ஹார்டு பவுண்டில்,

    ReplyDelete
    Replies
    1. கார்சனின் கடந்த காலம் மறுபதிப்பில் வந்து விட்டதால்....இனி வரப்போவது மிக்கச் சிறப்பாக...ஜிகுனாக்களோட...மாபெரும் சைசில்....ஹார்டு பௌண்டில்....நமது அச்சு இயந்திரங்கள் ஓய்ந்திருக்கும் ஓர் நாளில்

      Delete
  28. // டின்டின் குல்லாக்களையும் போட்டுக்கினு இங்கே இயன்றமட்டுக்கு விரைவாய் உங்களின் ஐடியாக்களைப் பகிர்ந்திடலாமே //
    இதைப் பற்றிய பெரிய விவரங்கள் அறியாததால்,நண்பர் கார்த்திக் சோமலிங்காவின் சிறப்பான கருத்துகளைப் போல,மற்ற நண்பர்கள் சிறப்பான விவரங்களை முன்மொழிவார்கள் என்று நம்புகிறேன்...!!!

    ReplyDelete
  29. // பதிவு வியாழன் இரவுக்கே வந்து விடும் ! இப்போதைக்கு நான் டேங்கோவுடன் பனாமா சிட்டி புறப்படுகிறேன் //
    வியாழன் ஜூன் 1 ஆச்சே,அப்ப ஜூன் பெட்டிகள் கிளம்பிடுச்சின்னு கூடுதல் தகவலோடு பதிவு வரும்னு நம்பறேன்..

    ReplyDelete
    Replies
    1. Sorry sir, மே இதழ்கள் விற்பனையாகிக் கொள்ள கடைகளுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தர அவசியமாகிடும் !

      Delete
    2. அடடே,புரியுது சார்,பள்ளித் திறப்பை ஒரு வாரம் தள்ளி வைத்துள்ளதால் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரமிருக்கும்,கிடைக்கும் கேப்பில் ஜூன் கடாவை வெட்டிடலாம்னு பார்த்தேன்...
      சரி வரட்டும் காத்திருப்போம்...

      Delete
  30. 1, சுஸ்கி& விஸ்கி,
    2, மரண தூதர்கள்+
    எமனுடன் ஒரு யுத்தம்,
    இரண்டும் சேர்த்து
    ஒரே புத்தகமாக
    3, எங்கே எப்போது
    பட்டியலில்
    உள்ள ஒரு புத்தகம்,
    இந்த மூன்றில்
    எதவாது இரண்டு
    ok Sir.

    ReplyDelete
  31. ஞாயிறு வணக்கம் சார்...
    ஹாய் ப்ரெண்ட்ஸ்....

    புதிய தொடர் பெரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பதிவு பிரகாசிக்கிறது......

    அப்புறமென்ன புதிய புதிய தொடர்களை போட்டுவிடுங்க சார்..

    நாங்களும் ஆதிகால நாயகர்களையே பார்த்து பார்த்து தொய்ஞ்சி கிடக்கோம்....

    ReplyDelete
    Replies
    1. Nagarajsethupathi S@
      PfB@ என் முதல் கமெண்டே இதான்...

      பழைய நாயகர்கள் வேணாம்கிறதுதான் என் கருத்தும்கூட..


      ஆசிரியர் கேட்டதால் விருப்பமாக சொல்கிறோம்....
      அவர் உடனே போடப்போறது இல்லை...சோ சிம்பிள்...!

      Delete
  32. ///அற்புதமான படைப்பு ! இதனில் 100 புக்ஸ் வாங்கி, எங்கள் பள்ளியின் உயர்வகுப்பு மாணாக்கரின் மத்தியில் விநியோகிக்கப் போகிறேன் !!///

    கிரேட் நியூஸ் சார்... வாழ்த்துகள்...

    பாராட்டுகள் அந்த இனிய நண்பருக்கு...

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் ஒரு நன்றி சார்..
      அதிகாரி மெக்சிகோவில் கால் வைத்ததை பாராட்டததுக்கு...# அசால்ட் ஆறுமுகம்...

      Delete
  33. சம்மர் ஸ்பெசல் ஆண்டின் ஹைலைட்டாக இருக்கும் னு தெரிகிறது.... அட்டை அசத்தல் ரகம் சார்..

    ReplyDelete
  34. முத்து காமிக்சின் 50-வது ஆண்டினில் சந்திப்பு சாத்தியப்பட்டிருக்கவில்லை எனும் போது, அதன் நீட்சியாக இந்தாண்டைப் பார்த்திடலாம் என்பீர்களா guys ///

    நிச்சயமாக சார்

    Euro, ஒலிம்பிக், ஆசியன் கேம்ஸ்னு சகலத்தையும் ஓராண்டு ஒத்திவைத்து செலிபரேட் பண்றாங்க உலகம் முழுதும்..

    நாமும் "முத்து 50ன் கொண்டாட்டமாக"--இதை திட்டமிடவேணும் என்பதே அனைவரின் அவா....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் இதை முத்து 50 கொண்டாட்டமாகவே பார்க்க விரும்புகிறேன்

      Delete
  35. // நண்பர் அறிவரசு ரவியின் அழகான விமர்சனத்தில் "பு.ஒ.பெ.ப." இதழினை சிலாகித்திருப்பது கண்ணில்பட்டது ! '//
    தன்யனானேன் சார்,குற்ற நகரம் கல்கத்தா கூட சிறப்பான இதழ்,கதைக் கள அமைப்பும்,,கதை நகர்த்தப்பட்ட உத்தியும் மிக சிறப்பாய் இருந்தது,அது ஏனோ கூடுதல் கவனம் பெறவில்லை...

    ReplyDelete
    Replies
    1. ஆமா அண்ணா. குற்ற நகரம் கல்கத்தா, மேகி கேரிசன் இரண்டு இதழ்களும் அருமை.

      Delete
    2. மேகி கேரிசன்,யெஸ் அதில் உள்ள எள்ளல்,நக்கல்,கிண்டல் பாணி நல்லாவே இருந்திச்சி,மேகி கேரக்டர் பெருசா ரீச் ஆகாததாலோ என்னவோ அந்த வீரியத்தை பெரும்பன்மையானோரிடம் கடத்தவில்லை...

      Delete
    3. நாம் இதுவரையிலும் பரிச்சயப்பட்டுள்ளது பெண் புலிகளோடு சார் ; ஆனால் இங்கிருப்பதோ ஒரு லண்டன் புளிமூட்டை ! So நிறைய நண்பர்களுக்கு மனதளவில் ஒவ்வவில்லை போலும் ! But எனக்கு நிரம்ப பிடித்திருந்த கதாப்பாத்திரம் மேகி !

      Delete
    4. மேகியிடம் உங்களின் வார்த்தை விளையாட்டு ஜாலம் செய்திருந்தது சார்...

      Delete
  36. //இந்த சந்திப்பின் focus என்னவாக இருக்கலாமோ ?///

    --- முத்து 50

    ---முத்து 50

    ---முத்து 50

    ReplyDelete
  37. Tintin மேலிடத்தில் கண்டிப்பாக ஒப்புதல் கிடைத்துவிடும் எடிட்டர் சார்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாக்கு பலிக்கட்டும் சார் !

      Delete
  38. ///மாக்ஸிமம் 2 இதழ்களுக்கு மிகாது உங்களின் பரிந்துரைஸ் for Erode ப்ளீஸ் ?///

    ஜம்போ சந்தாதடம் நிறுத்தப்பட்டதால் வித்தியாசமான கதைகள் கேட்கதான் விருப்பம் சார்..ஆனா டின் டின் & தங்களின் அதீத பணிசுமை கருதி மனசு வர்ல...

    1. ஓரு டெக்ஸ் மறுபதிப்பு-கார்சனின் கடந்த காலம்-வசனம் பாடல்கள் மாறாமல் இருந்தால் பெருமகிழ்ச்சி- அல்லது டைகரின் "இளமையில் கொல்"- பாகங்கள் 2&3

    2.பெளன்சர் அல்லது ரூட்666போல ஏதாவது ஒரு புதியது..


    (இன்கேஸ் டின்டின் அப்ரூவல் கிடைத்துவிட்டால், focus should be on TinTin, எனவே 2வதையும் மறுபதிப்பாகவே போட்டுவிடலாம்) ஆனா முன்பதிவுக்கு வரும் 1ந் தேதி அறிவிக்கணும் என்பதால் ஒரு புதிய இதழ் அவசியமாகிடுது...

    ReplyDelete
  39. ஈரோடு புத்தகத் திருவிழாவிற்கு எனது சாய்ஸ் புதிய டெக்ஸ் கதை தடிமனான அட்டையுடன். தயவுசெய்து டெக்ஸ் மறுபதிப்பு ஈரோட்டில் மட்டும் வேண்டாமே சார்.

    ஈரோடுட்டில் இத்தாலி போல் ஒரு இத்தாலி பேக் டூ ஈரோடு என ஒரு டெக்ஸ் ஸ்பெஷல்.

    முடிந்தால் கார்டூன் ஸ்பெஷல் இதழ் இல்லையென்றால் புதிய ஆக்சன் கதை 120 பக்கங்களுக்கு மிகாமல் இருந்தால் மிகவும் சிறப்பு உங்களுக்கும் வேலைப் பளு குறையும்.

    ReplyDelete
  40. கேப்டன் டைகர் இளம் வயது சாகச தொகுப்பை வெளியிடலாம்

    ReplyDelete
    Replies
    1. அது தீபாவளி மலர் சார் !

      Delete
    2. பட்டாசோடு பார்சல் அனுப்புங்க... தங்க தலைவன் சார்...

      Delete
  41. டெக்ஸின் புதிய கதைகள் நிறைய இருக்கும் போது ஈரோடு போன்ற பெரிய புத்தகத் திருவிழாவில் மறுபதிப்பு வேண்டாம். ஈரோட்டில் எப்போதும் ஏதாவது புதிய வெளியிடுகள் இருக்கும் அதே பார்மூலா தொடரட்டும் சார். ஈரோட்டில் டெக்ஸ் மறுபதிப்பு என்று விழாவின் ஆர்வத்தை குறைத்து விடாதீர்கள் சார்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மறுபதிப்புகளுக்கு கொஞ்சம் முற்று புள்ளி வையுங்கள் சார். முடியல

      Delete
    2. சிகாகோவைக் கலக்கிய மாபியா டான் அல் கபோன் பற்றி நமக்குத் தெரியும் தானே சார் ? ஆனால் அவர் பற்றி தெரிந்திராத சில விஷயங்களும் உள்ளன ! இதோ - இந்த quote கூட அவர் உதிர்த்த, நாம் அறிந்திரா வரியே :

      I am like any other man ! All I do is supply a demand !

      ஏனோ தெரியலை - நமது கிட்டங்கி பக்கமாய்ப் போகும் போதெல்லாம் எனக்கு இது தான் தலைக்குள் ஓடுகிறது !

      2013-ல் வெளியான புது இதழ்கள் ; தரமான கதைகள் ; கிராபிக் நாவல்கள் இன்னமும் எடைக்குப் போகாது தாட்டியமாய் ஷெல்ப்களில் அமர்ந்துள்ளன ! அதே சமயம் போன மாதம் வெளியான "உயிரைத் தேடி" black & white இதழ் போயிண்டே ! Btw "உயிரைத் தேடி" கூட மறுபதிப்பே !

      Delete
    3. //ஈரோட்டில் டெக்ஸ் மறுபதிப்பு என்று விழாவின் ஆர்வத்தை குறைத்து விடாதீர்கள்//

      உசிரைக் கொடுத்து உழைத்த "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" ஈட்டியுள்ள சாதனை என்ன தெரியுமோ சார் ? - நம்மிடம் இருப்பதிலேயே ஆகக் கூடுதலான பிரதிகள் ஸ்டாக் உள்ள இதழ் என்ற dubious ரெக்கார்டை தான் ! சொல்லுங்களேன் - இதனில் கதை சோடையா ? தயாரிப்பு சோடையா ? or விலை அபரிமிதமா ? மாமூலான பிரதிகளே அச்சிட்டும் கிட்டத்தட்ட 6 வருடங்களாய் அது தேவுடு காத்து வரும் காரணத்தினை அறிந்திருந்தால் யாராச்சும் சொல்லுங்களேன் சார் எனக்கு ?

      And மறந்திருப்பின் நினைவூட்டுகிறேன் - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" 2017-ன் ஈரோட்டு ரிலீஸ் சார் !

      And yet again மறந்திருப்பின் இதையுமே நினைவூட்டுகிறேன் சார் - 2016-ன் ரிலீஸ் "ரத்தக் கோட்டை" ! 2018-ன் ரிலீஸ் "ரத்தப் படலம் !

      Delete
    4. மறுபதிப்புகள் எனது cup of tea அல்லவே அல்ல தான் ; ஓராயிரம் முறைகள் அதனை நான் பதிவும் செய்து விட்டேன் ! ஆனால் நண்பர்களின் பெரும்பான்மைக்கு பழமை மீதான மோகம் மட்டுப்படவில்லை எனில் ஒரு வியாபாரியாய் நான் என்ன தான் செய்திட இயலும் சார் ?

      "இது விற்கும்" என்பது உத்திரவாதமாய்த் தெரிந்த பின்னேயும் அந்தச் சரக்கை ரேஷனில் அளவாய் கூடத் தந்திடவும் கூடாதெனில், ஞான் அம்பானிக்கு அண்டை வீட்டுக்காரனாக இருந்திடல் அவசியமாகிடும் சார் ! Unfortunately that's not the case !

      Delete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. எனது பின்னூட்டம் வேறு திசையில் பயணிப்பதால் நீக்கி விட்டேன்.

      Delete
    3. // டெக்ஸின் புதிய கதைகள் நிறைய இருக்கும் போது //
      புதிய கதைகள் கூட நல்ல யோசனைதான்...நமக்கு புக் வந்தா சரி...

      Delete
    4. எனது பின்னூட்டம் சரியான புரிதலை உருவாக்கி விட்டதால் நானும் நீக்கிவிட்டேன்😜😉

      Delete
    5. எந்தவொரு குறிப்பிட்ட நாயகரது கதையையும் வேணாம்னா அதன் ரசிகர்களுக்கு அது ரசிக்காது என்பது இயல்பு... சோ........!!

      Delete
  44. ஈரோட்டுக்கு டின் டின் கண்டிப்பாக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது சார். டின் டின்னை அறிமுகப் படுத்த ஈரோடு தான் மிகச் சிறந்த களம் சார்.

    ReplyDelete
    Replies
    1. காசனின் கடந்த காலம் எல்லோருக்கும் பிடித்த கதையே.ஆனால் பிடித்திருந்தாலும் படித்ததையே மறுபடி படிக்க வேண்டாம் என்பதற்காகவே பரணி சார் அதை தவிர்த்து புது டெக்ஸ் புத்தகங்களை வெளியிடலாமே என்றும் கூறியிருந்தார்.

      Delete
  45. ஆன்லைன் புத்தகத் திருவிழாவில் வந்த பாக்கெட் சைஸ் புத்தகங்கள் மாணவ மாணவியரை நன்றாக கவரும். இவைகளை அவ்வப்போது புத்தகத் திருவிழாக்களில் வெளியிடுங்கள் சார்.

    எனக்கு தனிப்பட்ட முறையில் அந்த அளவுக்கு பிடிக்க வில்லை. மாணவர்கள் ரசிப்பதற்கு பல சிறப்புகள் உள்ளன. எனவே இவை தொடரட்டும் புத்தகத் திருவிழாவில் மட்டும்.

    ReplyDelete
  46. சார் நாலாயிர திவ்யத்தில் சில....
    ROUTE 66 - 234 pages ; ஐந்து பாக செம racy த்ரில்லர் இது !
    ஒரு செம க்ளாஸிக் 285 pages கௌபாய் தொடர் ! முற்றிலும் வித்தியாசமான ஈரோ சகிதம் !
    216 பக்க ட்யுராங்கோ பாணியிலான தொடர் - will make for 4 parts !
    ஒன்பது பாக black & white ஆக்ஷன் த்ரில்லர் !
    மூன்று பாக black & white spy த்ரில்லர் !‌...
    எங்கே எப்போதுல ஆறு மாதம் கழிந்தும் டெக்ஸ் மட்டும் வந்த நிலையில். ...நீங்க கேட்டது போல் அதிலிருந்து ஏதேனுமிரண்டு...கூட்டிப் பாத்து கழிக்காம போடுங்க

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. எல்லா லட்டும் நல்லாருக்கும் போலயே.. கொடுத்தா வேணாம்னா சொல்லப்போறோம்..?

      Delete
  47. ஈரோடு ஸ்பெஷல்

    சுஸ்கி விஸ்கி மற்றும் தாங்கள் அறிவித்த பெளன்ஸர் சார்..

    ReplyDelete
  48. 'புதிருக்குள் பெரும் பயணம்' ஒரு மெகா ஹிட் தொடர் ஆக உருவாகப் போகிறதென்று தோன்றுகிறது... 'மின்னும் மரணம்' தான் ஞாபகம் வருகிறது...

    ReplyDelete
  49. ஈரோட்டில் மறு பதிப்புகளை போட்டு தாக்கி விடாதீர்கள் சார். தாங்க முடியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. "பிஸ்டலுக்குப் பிரியாவிடை"
      "ஈரோட்டில் இத்தாலி"
      "பிழையில்லா மழலை"
      "கர்னல் ஆமோஸ்"

      இவற்றுக்குள் என்ன ஒற்றுமை ? என்று லைட்டாக மெனெக்கெட்டு தேடித் தான் பார்க்கலாமே சார் ?

      Delete
  50. Re entry க்கு அப்புறம் வந்த மொத்த கதைகளில் நாலில் ஒரு பங்கு மறு பதிப்பாக இருக்கும் போல..

    ReplyDelete
    Replies
    1. மிகைகள் மீது நமக்கு மோகம் எப்போதுமே அதிகம் என்பதில் ஏது ரகசியம் சார் ? கொஞ்சமே கொஞ்சமாய் மெனெக்கெட்டால் துல்லியமாய் தகவல்கள் கிட்டும் வாய்ப்பிருக்கும் போது, ஒரு sweeeping பொதுப்படையான ; பிழையான கருத்து சொல்வதில் என்ன லாபமிருக்கக்கூடும் ?

      Delete
  51. இரண்டு புத்தகங்கள் என்று லிமிட் செய்து விட்டீர்கள் .அதுவே கஷ்டமாகத்தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. சார்...அரசின் ரிட்டயர்மெண்ட் வயசுக்கு ரெண்டே அகவைகள் தான் குறைச்சல் அடியேனுக்கு ! அதை மறந்துப்புடாதீங்க !

      Delete
  52. 'ஈரோட்டில் 20' என்ற யுக்தி வேலை செய்யாதா??🙄

    ReplyDelete
    Replies
    1. இது பேச்சு....டைட்டில் கூட கலக்குது...

      ஈரோட்டில் T20-✖

      ஈரோட்டில் C20-✅

      Delete
    2. //ஈரோட்டில் 20 லட்சியம்....ஒரு டசன் நிச்சயம்//

      ரவுண்டு பன்னா ? தெய்வமே...வவுறும் தாங்காது ; கம்பெனி பட்ஜெட்டும் தாங்காது !

      Delete
  53. டியர் விஜயன் சார்,

    பிரெஞ்சு "Milli sabords"-ஐயும், ஆங்கில "Blistering barnacles" & "Thundering typhoons"-ஐயும் கலந்து கட்டி, ஒரு ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் ஐட்டம்!

    > ஆயிரம் அயிரமீனு
    > ஆயிரம் அவிச்ச அயிரமீனு (boiled barnacles என்று வரும் இடங்களில்)
    > ஆயிரம் பொரிச்ச அயிரமீனு (barbecued barnacles-க்கு மாற்றாக)
    > அறுபதாயிரம் அவிச்சுப் பொரிச்ச அயிரமீனு
    > சார சாரையா ஆயிரமாயிரம் அயிரமீனு 

    "நாசமாகப் போக" என்று திட்டும் பாணியில்,
    > இடி இடிச்சுப் புயல் அடிக்க!
    > பல கோடி இடி இடிச்சுப் புயல் அடிக்க!
    > இருபது கோடி இடி இடிச்சுப் புயல் அடிக்க!
    > இடி இடிச்சு, மின்னல் வெட்டி, மழை பேஞ்சு, புயல் அடிச்சு, சுனாமி வர!

    இரண்டையும் இணைத்து, ஒரே ஒரு எ.கா.:
    > ஆயிரமாயிரம் அயிரமீனு கூட்டத்துல, இடி இடிச்சுப் புயல் அடிக்க!

    பி.கு. 1:
    "அயிரை மீன் ஆத்து மீன் தானே?!" என்றெல்லாம் டெக்னிக்கலாக கேள்வி கேட்கக் கூடாது, அது கடலிலேயும் கிடைக்குமாம்!

    பி.கு. 2:
    "ஆயிரம் அயிரை மீன்கள்", "இடி இடித்து புயல் அடிக்கக் கடவது" என்றெல்லாம் டீடைலாக தமிழ் இலக்கண சுத்தம் எல்லாம் பார்க்க வேண்டிய கட்டாயம், நம்ம பிரெஞ்சுக் கேப்டனுக்கு இல்லையாக்கும்... அவ்வ்வ்! ;-)

    ReplyDelete
    Replies
    1. அயிரை மீன் அவ்ளவா எடுக்கலை கார்த்திக் ; வேற ஏதாச்சுமொரு மீனை தத்தெடுக்க பார்ப்போம் !

      அப்புறம் அந்த "இடி இடிக்க மேட்டர்" எற்கனவே எழுதியிருக்கிறேன் - ஹிந்தி மொழிபெயர்ப்பிலிருந்து லைட்டாய்ச் சுட்டு ! "தஸ் ஹசார் தட் தடாக்கே டூபான்" என்று எழுதியுள்ளனர் அங்கே !

      Let's keep trying a bit more !

      Delete
    2. "தஸ் ஹசார் தட் தடாக்கே டூபான் - good one sir !

      Delete
    3. கோடானு கோடி கடல் சிப்பிகள் கூட்டத்தில் இடி இடிக்க ...
      கோடானு கோடி கடல் சிப்பிகள் கூட்டத்தில் புயல் அடிக்க ...

      Just modified karthik's a bit to remove அயிரை மீன் ...

      Delete
    4. ஆமாம் சார், பொருத்தமான வரிகள் அமைய மாட்டேன் என்கிறது, ஆங்கிலத்தில் உள்ள பஞ்ச் இவற்றில் மிஸ்ஸிங்! 

      > பிம்பிளிக்கி பிளாப்பி
      > கோடி தபா பிம்பிளிக்கி பிளாப்பி
      > பத்து கோடி தபா பிம்பிளிக்கி பிளாப்பி 

      என்று எதையாவது உளறி வைத்தால் தான் சரியாக வரும் போல!

      Delete
    5. வாங்க..வாங்க...கடந்த ஒரு மாசமாய் அக்னி நட்சத்திர வெயிலைக் காட்டிலும் கூடுதலான மண்டைக்காய்ச்சலை எனக்குத் தந்து கொண்டிருக்கும் புதிருக்கு வெல்கம் !!

      Delete
    6. வேறு துறையினருடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான வருவாயே ஈட்டித் தரக்கூடிய ஒரு தொழிலில், சில நூறு காப்பிகளே விற்கும் இந்த பரிதாபகரமான தமிழ் காமிக்ஸ் சந்தையில், ஆண்டுக் கணக்கில் விற்காமல் அலமாரி காக்கும் அச்சிட்ட காமிக்ஸ் குவியலின் நடுவே, டின்டின் போன்ற மெகா சைஸ் ரிஸ்க்குகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, அவ்வப்போது கைதூக்கி விடும் கமர்ஷியல் மற்றும் கிளாசிக் மறுபதிப்புகளை வெளியிடுவதற்கு கூட, இங்கே ஆயிரமாயிரம் வரிகளில் விளக்கம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் உங்களுக்கு, கேப்டன் ஹேடாக்கிற்கான குடாக்கு வசனங்களை எழுத வேண்டிய ஒரு கில்பான்ஸ் நிலைமை வேறு, ஆல் த பெஸ்ட் சார்! பார்க்கலாம், வேறெதாவது வரிகள் சிக்குகின்றனவா என்று!

      Delete
  54. புதிருக்குள் பெரும் பயணம் : வெள்ளையர்களுக்கு உதவி செய்யும் செவ்விந்தியர்களுக்கு தாங்கள் ஒட்டுமொத்தமாக அழிந்து போவோம் என்று உண்மை அப்போது தெரியாதது பரிதாபம்தான்..

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் அனுபவித்த துரோகங்கள் இன்னும் கணிசம் சார் ; தொடரும் பாகங்களில் அவற்றை கண்முன்னே காட்டிடுகிறார்கள் !

      Delete
  55. 1. இப்ப விட்டால் வேறு எப்ப சார்,
    பணிகள் முடிந்து காத்திருக்கும் "பிரளயம்" கண்டிப்பாக வேண்டும்.

    2. ரூட் 666 - 5 பாக சரவெடி

    தயவு செய்து மறுபதிப்புகளையோ, கிளாசிக் பார்டிகளையோ இதிலும் கோர்த்து விடாதீர்கள்.

    நீண்ட நாள் கோரிக்கையான "The BOMB" எப்போது சார்

    ReplyDelete
    Replies
    1. "பிரளயம்" கதையினை அறிந்திருப்பின் கோரிக்கை பட்டியலில் அதனை இணைத்திருக்க மாட்டீர்கள் என்பேன் சார் !

      கற்பனையே என்றாலும், மருத்துவர்களை ஆகக் கண்றாவியாய் சித்தரித்திருக்கும் ஒரு படைப்பை இங்கு கண்ணியமான பல டாக்டர்களின் மத்தியில் களமிறக்க மனசு ஒப்ப மறுக்கிறது !

      Delete
    2. இனி மருத்துவ நண்பர்களின் கையில் தான் உள்ளது, இவ்விதழின் எதிர்காலம். மனது வைப்பீர்களா

      Delete
    3. சார் கதை நல்லாருந்தா...ஈர்ப்பிருந்தா வரட்டுமே
      ...கதை தானே
      ....அண்டர் டேக்கர் டாக்டரே பாத்தமே

      Delete
    4. கவிஞரே...ஆஸ்பிடலில் நர்சைக் கட்டாயப்படுத்தி, வாய்வழிப் புணர்ச்சி செய்ய வைக்கும் கதாப்பாத்திரமாக அண்டர்டேக்கர் சித்தரிக்கப்பட்டிருந்தாரா ?

      Delete
    5. வேண்டாம் சார்...அது போல காட்சிகள் நீக்க முடிந்தா வரட்டும்...கடலில் லா மீன்களா

      Delete
    6. வேண்டாம் சார், காமிக்ஸ் தளத்தில் பிரளயம்..

      Delete
  56. வியாழன் விசாகப் பதிவு போல ....செந்தூரான் உங்க கனவுல வந்து பன்னிரு கரங்களுக்கும் பன்னிரு கதை கேட்டு பன் பாட ..‌..என் கனவில் பன்னிரு பன்னோட நீங்க ஓட அருளனும்

    ReplyDelete
  57. வணக்கம் sir. இந்த மாத டெக்சின் கௌபாய் காதலி நேற்றிரவு தான் வாசித்தேன். சித்திரங்கள், வண்ணச் சேர்க்கை, அச்சுத்தரம், மற்றும் பைண்டிங் என அனைத்துமே அம்சமாக உள்ளது.... ஆனால் இந்தக் கதை.. இந்தக் கதையேனும் வஸ்துதான் மிகவும் அலுத்துப் போன ஏரியாவாக இருந்தது. மற்றும் மிகுதியான வஜனங்கள் கர்ண கொடூரம். ஒவ்வொருத்தனையும் துப்பாக்கி முனையில் வைத்துக் கொண்டு பரோலோகம் அது இதுவென்று மீட்டர் நீளத்துக்கு டெக்ஸ் பேசும் வஜனங்கள் சகிக்க வில்லை. ஓவர் ஹீரோயிஸ தூக்கல் நெடி தான் புத்தகமெங்கும். கிட்டத்தட்ட நம்மூர் விஜய், அஜித் ரேஞ்சுக்கு டெக்ஸ் சென்று விட்டதாக தோன்றுகிறது. அவரின் தீவிர விசிறிகள் தவிர்த்து மற்றவர்கள் "அதில் விஷயம் ஒன்னுமில்லை தூக்கிப்போட்று" எனும் அளவிலேயே தான் இப்போது வரும் டெக்ஸ் கதைகளும் அதன் தமிழாக்கம் உள்ளது. டெக்ஸ் முன்னணி ரேஞ் நாயகர், மற்றும் உடனடியாக விற்று தீருபவர் என்பதால் அவரை இன்னும் கூட உயர்த்தி பிடித்தல் வேண்டும் என்பது போலவே உள்ளது.

    அந்நாளில் வந்த டிராகன் நகரம், இரத்த வெறியர்கள், கழுகு வேட்டை, எல்லாம் என்ன மாதிரி இருந்தது. நானெல்லாம் அவற்றை வாசித்து சுமார் 28 ஆண்டுக்கு மேலாக இருக்கும். அவ்வளவு ஏன்?.. இருளின் மைந்தர்கள், சாத்தான் வேட்டை போன்றவை கூட இன்னும் அதன் கதைகள் வசனங்கள் சார்ந்த லயிப்புகள் எல்லாம் என் மனதில் உள்ளது. சமீப வருடத்தில் வந்த டெக்ஸ் கதைகள் எதுவும் இவ்வாறு காலத்திற்கும் நீடித்து நின்று மனதில் தங்கும் வகையில் இல்லை. கதைகள் எங்கும் க்ளிஷே மற்றும் மசாலா வாடை தூக்கலாக தான் படைக்கிறார்கள் என்றாலும் அதன் தமிழ் வஜனம் இன்னும் 10 மிடறு கூடுதலாக தூவப் படுவதாக தெரிகிறது. ஒரு சிலர் கைதட்டல் மற்றும் விசிலடிக்கிறார்கள் என்பதற்காக எடிட்டர் ஸார் இன்னும் உற்சாகமாக இதே பன்ச் டயலாக் மற்றும் ஹீரோயிஸ தொனியில் தமிழ் படுத்துவதாக தெரிகிறது. அதை மாற்றிக் கொள்ளுதல் நலம். இத்தாலியில் உள்ளது உள்ளபடியே கூட கொடுக்க முயலலாம்.

    டெக்ஸ் கதைகளில் ஹீரோயிசம் ஓவர் தூக்கல் என்று அறிந்தும், அதெல்லாம் இனி மாற்ற முடியாது என்று தெரிந்தும் இந்த பதிவை எழுதும் காரணம் உண்டு. பிளாக்கில் உள்ள மெஜாரிட்டி வாசகர்கள் டெக்ஸ் கதைகளின் ஹீரோயிஸ தமிழை ரசித்து கைதட்டி விட்டார்கள் என்று.. ஓ.. இதுதான் நம் காமிக்ஸ் வாசகர் விரும்புவது போலும் என்றெண்ணி.. இவ்வருடத்தில் வருவதாக இருக்கும் எங்களின் தங்கத் தலைவர் டைகர் கதைகளையும் இவ்வாறு ஹீரோயிஸ பாணிக்கு மாற்றிட முயற்சிக்க வேண்டாம் ஸார். டைகர் கதைகளை ஒரிஜினாலிட்டி மாறாது தயவுசெய்து அப்படியே அருமையான தமிழில் கொடுங்கள் sir என்று கேட்டுக் கொள்ளவே இந்தப் பதிவு.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே....உங்கள் கோரிக்கை புரிகிறது ! ஆனால் 2 புள்ளிகளில் நான் முரண்படுகிறேன் :

      1.ஒரிஜினலையும் படித்திருந்து, நீங்கள் இப்பதிவினை இட்டிருந்தீர்களெனில் அதன் சாரத்துக்கு வலு கூடுதலாக இருந்திருக்கும் ! ஆனால் ஒரிஜினலை பரிசீலிக்கும் வாய்ப்பின்றி, தமிழ் ஸ்கிரிப்ட் மீது தீர்ப்பெழுதுவதில் எனக்கு உடன்பாடில்லை ! ஒரு ஓய்வான பொழுதினில் இதே கதையினில், டெக்ஸ் & கார்சனுக்கு இடையிலான ஒரிஜினல் சம்பாஷணைகளை இங்கு இங்கிலீஷில் பதிவிட முயற்சிக்கிறேன் ! படித்துப் பாருங்கள் ; and அப்புறமாய் சொல்லுங்கள் எக்ஸ்டரா நம்பர்ஸ் தேவையா ? இல்லையா என்று !

      மலையாளத்தில் வந்த சூப்பர்ஹிட் "திரிஷ்யம்" ; தமிழில் "பாபநாசம்" ஆன போது, கதையின் வரைமுறைகளை கடைப்பிடித்திருந்தார்களே அன்றி, frame by frame ஒரிஜினலின் வார்ப்பாகவே இருந்திட வேண்டுமென்ற கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ளவில்லை என்பதை நாமறிவோம் தானே சார் ? மேக்கப்பே போடாது வந்து நடிப்பது மலையாள சினிமாவின் முத்திரை & மோகன்லால் சாரின் understated பாணி அவர்கட்கு செட் ஆனதொரு template ! ஆனால் அதே ரோலில் உலகநாயகன் இங்கே perform செய்திடும் போது, அதே க்ளைமாக்சில் தான் எத்தனை வேற்றுமை ? மோகன்லால் சாரின் ரசிகர்களுக்கு, கமல் சாரின் நடிப்பில் மிகை தெரியலாம் ; உலகநாயகனின் ரசிகர்களுக்கு லாலேட்டனின் பாணியில் காரம் குறைவாய் தெரியலாம் ! It's all in the perspective sir !

      2 .நான் உங்களோடு முரண்படும் இரண்டாம் புள்ளி - இங்கு கைதட்டுவோரை மாத்திரமே நான் கருத்தில் கொள்கிறேன் என்ற உங்களின் அனுமானம் ! இங்கே அனைவருக்கும் சம வாய்ப்புகளும், குரல்களும் உண்டு ! அவ்விதமிருக்கும் போது கை தட்டும் ஓசைகள் மாத்திரமே கேட்கிறதெனில், அது அவர்களின் பிழையாகாது சார் !

      Moreover "மௌனமே எங்களுக்கு வசதி" என்று தம் அபிப்பிராயங்களைத் தம்மோடே இருத்திக் கொள்வோரின் அபிப்பிராயங்கள் இங்கு ஒலிக்கும் குரல்களுக்கு நேரெதிராகவே தான் இருக்கக்கூடும் என்று கருதிடத் தான் வேணுமா ? For all you know - அவர்களுக்குமே இந்த பாணியே ஏற்புடையதாகவும் இருக்கலாம் தானே ? இங்கே குரல் தருவோர் மௌன நண்பர்களின் விரோதிகளும் அல்லர் ; அவர்களின் வாய்ப்புகளை மறுதலிப்போரும் அல்லர் என்பதே bottomline நண்பரே !

      Delete
    2. And நெருக்கி 40 வருஷங்களை இத்துறையினில் செலவிட்டான பின்னேயுமே, டெக்ஸுக்கு எந்த பாணி சுகப்படும் ? டைகருக்கு எந்த பாணி தோதுப்படும் ? என்பதை வேறுபடுத்தித் தீர்மானிக்கத் தெரிந்திராத ஒரு தத்தியாக நானிருப்பேன் ; அது சார்ந்த ரோசனைகளையும் நான் கோரிப் பெற்றிட வேண்டியிருக்கும் என்ற உங்களின் அனுமானம் எனக்கொரு reality check தான் சார் !

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. //கிட்டத்தட்ட நம்மூர் விஜய், அஜித் ரேஞ்சுக்கு டெக்ஸ் சென்று விட்டதாக தோன்றுகிறது// இன்னும் சிங்கம் சூர்யா, ஆக்சன் அர்ஜுன் எல்லோரையும் சேர்த்து கொள்ளுங்கள்....

      Delete

      Delete
    5. சூர்யா மும்பை போய் செட்டில் ஆகி விட்டார் ; ஆக்ஷன் கிங்குக்கு வயசாகிப்புடுத்து என்பதால் லிஸ்ட்டில் சேர்க்காதிருக்கலாம் நண்பரே ! Maybe தனுஷ் ? விஷால் ?

      Delete
  58. Erode List:

    - Sinister Seven - Half Maxi Size - hard bound
    - One chik-bill digest - Half Maxi - color - hard bound - 4 stories sir !!

    ReplyDelete
  59. சில மாத இடைவெளிக்கு பிறகு இப்போது தான் ஓய்வு...!

    மேகி கேரிஸன் - இனம்புரியாத ஈர்ப்பு கதைக்குள்ளே ஒன்றி போகச் செய்கிறது...! 9/10

    லக்கிலூக்கிற்கு கல்யாணம் - எத்தனை கதைகள் வந்தாலும் லக்கிலூக் படிக்கும் போது கிடைக்கும் சுகமே தனி...!

    சிறுத்தை டைகரை விட சிறப்பு...!

    குற்ற நகரம் கல்கத்தா - ஓவியங்கள் அற்புதம்...! 9/10

    மாயாவி கூட சூப்பர்...!

    கோடை இதழ்களில் அதிகாரி மட்டும் பென்டிங் (வழக்கம் போல)

    கார்ட்டூன் வறட்சி = காமிக்ஸ் வறட்சி

    ReplyDelete
    Replies
    1. உயிரைத் தேடி வண்ணத்தில் அட்டகாசம்...!

      டின்டின் - வருகை மகிழ்ச்சி

      Delete
    2. கார்ட்டூன் குடிநீர்த்திட்டமே வாணாம் என்று நண்பர்கள் சொல்லும் போது நாம் என்ன செய்ய முடியும் சார் - அந்த வறட்சியினை அனுபவிப்பதைத் தாண்டி ?

      Delete
  60. வாசகர் : ஓ... முத்து நல்ல முத்துதான்
    ஓ ஃபிஃப்ட்டியின்னா ஃபிஃப்ட்டி தான் (இசை)

    வாசகர் : ஓ... முத்து நல்ல முத்துதான்
    ஓ ஃபிஃப்ட்டியின்னா ஃபிஃப்ட்டி தான்
    வாசககுழு : : ஓ... முத்து நல்ல முத்துதான்
    ஓ ஃபிஃப்ட்டியின்னா ஃபிஃப்ட்டி தான்
    வாசகர் : ரெண்டிதழைக் காட்டி வாசகப் பையன்களை வாட்டி
    பல்லிதழை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா ஈரோட்டில் துள்ளாதே...

    வாசகர் : ஓ... முத்து நல்ல முத்துதான்
    ஓ ஃபிஃப்ட்டியின்னா ஃபிஃப்ட்டி தான்
    ***

    வாசகர் : காத்திருந்தா கண்மணியே சில கிடைக்கும்
    ஆண்குழு : கேட்டுவச்சா பொன்மணியே பல கிடைக்கும்
    வாசகர் : கேட்டு விடுவார் நம்மவரை ஆசிரியருந்தான்
    வாசககுழு : குரல்கொடுப்போம் நாங்களின்னும் மாணவர் தான்
    வாசகர் : டசன் மேல் நாங்கள் கேட்டாலே உனக்கேன் அச்சமே
    கதைக்கண் பார்வை பட்டாலே கிடைக்கும் மோட்சமே
    வாசககுழு : தரையிலொரு கதைச்சுரங்கம்
    வாசகர் : ஆ....
    ஆண்குழு : தவற விட்டால் சுதி இறங்கும்
    வாசகர் : உன்னை வாசகவட்டம் கூப்பிடுது வானவில்லே வா வா

    வாசககுழு : : ஓ... முத்து நல்ல முத்துதான்
    ஓ ஃபிஃப்ட்டியின்னா ஃபிஃப்ட்டி தான்
    வாசகர் : ரெண்டிதழைக் காட்டி வாசகப் பையன்களை வாட்டி
    பல்லிதழை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா ஈரோட்டில் துள்ளாதே...
    வாசககுழு : : ஓ... முத்து நல்ல முத்துதான்
    ஓ ஃபிஃப்ட்டியின்னா ஃபிஃப்ட்டி தான்
    வாசககுழு : லால லா..லலலால லால லா...
    லால லா..லலலால லால லா...
    லா லால லா... லல லா லால லா...
    லால லால லால லால லா....

    ***

    வாசககுழு : ஐம்பதினை நீ சுமக்கும் பருவமடி
    வாசகர் : ரெண்டை மட்டும் நீ சுமந்தால் பாவமடி
    வாசககுழு : பன்னிரண்டு கதை படிக்க நாங்க ரெடி
    வாசகர் : பூங்குயில் நீ அச்சடிச்சா போதுமடி
    வாசகர் : அடியே பீரோவினில் கதைதனைப் பூட்டாதே
    இடையில் காட்டிவிட்டே தான் அனலை மூட்டாதே
    வாசககுழு-1: தமிழ்சிரிப்பில் முத்திதழா
    வாசகர் : ஆ....
    வாசககுழு-1:வந்திருந்தும் கல் மனசா
    வாசகர் : ஐம்பதாச வெச்ச அன்பரெல்லாம்பூச வச்சோம் வா வா

    வாசககுழு : : ஓ... முத்து நல்ல முத்துதான்
    ஓ ஃபிஃப்ட்டியின்னா ஃபிஃப்ட்டி தான்
    வாசகர் : ரெண்டிதழைக் காட்டிச் வாசகப் பையன்களை வாட்டி
    பல்லிதழை ஆட்டி செல்லும் மஞ்சள் நிலா ஈரோட்டில் துள்ளாதே...
    வாசககுழு : : ஓ... முத்து நல்ல முத்துதான்
    ஓ ஃபிஃப்ட்டியின்னா ஃபிஃப்ட்டி தான்

    ReplyDelete
  61. ❤️.. "அட, உங்கப்பன் சட்டியோட திங்க.." 2. அட, உங்கப்பன் செத்த ஆடு திங்க..3. பண்ணாட பாடையில போவ... Blistering
    Burnaakals.. கிராபுரத்தில். பாட்டி, தாத்தாக்கள் இப்படி திட்டுவதை கேட்டுள்ளேன் sir.. 😄

    ReplyDelete
    Replies
    1. நந்தீஸ்வரன் சார்..இது திட்டலோ, வசவோ அல்லவே அல்ல என்பது தான் இங்கு ஹைலைட்டே !!

      Delete

  62. ஒரு கெளபாயின் காதலி...

    கதையின் இளமை, ஓவியங்கள், வர்ணஜாலம், வேகமான கதையோட்டம் இவைகளுக்கு இணையாக குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், "வசனங்கள்"...குறிப்பாக டெக்ஸ்& கார்சன் வரும் பல இடங்களில், குபீர்னு வாய்விட்டு சிரிக்க வைக்கிறது... நக்கல் ,நையாண்டி என
    ஆசிரியர் விஜயன் சார் ரொம்ப ஜாலியாக ரசித்து எழுதி உள்ளீர்கள்...

    #பக்கம்27..ரிகோ கோஷ்டியை சேர்ந்த இருவர் தப்பிஓட மலையைச்சுற்றி வந்து கார்சன்& டெக்ஸ், அவுங்களை அமுக்குவாங்க..

    கார்சன்: என் கணிப்பு எப்படி தம்பி?

    டெக்ஸ்: பெருசு...தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு நீ குறி சொல்லப் போகலாம்!


    #பக்கம்28..மடக்கப்பட்ட இருவரும் இவுங்களை நோக்கி சுட... அதில் ஒருவன் கார்சனை நோக்கி..

    செத்தோலி...

    கார்சன்: சாகிற வயசாடா எனக்கு?!.... மீசையையும் தாடியையும் பார்த்த நொடியிலேயே சங்கு ஊதும் வயசு தான் என்று நீங்களாகத் தீர்மானித்தால் எப்படியாம்?


    #பக்கம் 42ல டான் மனுவலின் மாளிகையில் ட்ரிங் தந்து உபசரிப்பாங்க...டான் ஒவராக அலட்டுவதை கண்டு, கார்சன்&டெக்ஸ் உரையாடுவது!

    #பக்கம் 45- தன் முன்னால் காதலன் டாமிடம் ஓவராக டானின் மனைவி ரூபி ஈசுவதைக் கண்ட, கார்சன், டாம்&ரூபிக்கு மத்தியில் ஏதோ ஒன்று உள்ளதோ என தன் ஐயத்தை டெக்ஸிடம் கேட்க,

    டெக்ஸ்:- பெரியவருக்குப் புகைகிறதோ?!


    #பக்கம்49- பச்சைக் கல் விடுதியில் செமத்தியாக உண்டபின்...
    டெக்ஸ்& கார்சன் உரையாடல் வழக்கமான வாரிவிடல் ரகத்தில் செம..

    #பக்கம் 53- அதே பச்சைக் கல் நகரில், டெக்ஸ்& கார்சன் விடுதி ரூமில் நையாண்டியான உரையாடல்..முத்தாய்ப்பாக,

    கார்சன்: சத்தியசோதனை....!

    #பக்கம்70- ரூபியை டாம் தள்ளிட்டு போன ஆத்திரத்தில் பச்சைக்கல் நகர விடுதியில் தங்கியிருக்கும் டெக்ஸ்& கோ வை அடித்து துவைக்க வந்த டானின் ஆட்களை இவுங்க இருவரும் புரட்டி எடுத்தபின் வரும் டெக்ஸ்& கார்சன் உரையாடல்கள்....& பக்கம்72- தொடரும் மோதலில்......

    #பக்கம்92-93:- வால்ரோசா பாசறையில் அடைக்கப்பட்ட டாம்& ரூபி தழுவிக்கொண்டு இருப்பதை அடுத்து சார்ஜெண்ட்டின் வசனம்...💞

    #பக்கம்97- டாம்& ரூபியை மீட்கும் டெக்ஸிடம் சார்ஜெண்ட் கொதிப்பதை அடுத்து டெக்ஸ்ஸின் நக்கலான வசனம்..

    #பக்கம்104-105:- டாமின் பாஸ் மோரிஸ், இப்படி இக்கட்டில் மாட்டிவிட்ட டாமை "அன்போடு" கவனிப்பதை அடுத்து கார்சன்...

    கார்சன்: என் நண்பனோடு கொஞ்ச நேரம் பழகியதிலேயே உங்கள் பாஸ் செமத்தியான சில்லுமூக்குச் சிதறடிப்பவனாக உருவெடுத்து விட்டாரே!? அமர்க்களம்!

    #ரியோ க்ராண்டேயில் டானின் ஆட்களோடு டெக்ஸ் பேசும் வசனங்கள், டெக்ஸை காக்க கார்சன் அடிக்கும் நக்கல் வசனங்கள் னு தொடருது....

    #பக்கம் 147- டானிடம் அகப்பட்டுக் கொள்ளும் ரூபி& டாமை மீட்க ரியோ கரையில் டெக்ஸ் சொல்லும் திட்டத்தை அடுத்து சரவெடியான கார்சன்& டெக்ஸ் உரையாடல்கள்....

    #பக்கம் 152- பழைய மிசனை அடையும் டெக்ஸ்& கார்சனை கண்டுகொள்ளும் டானின் ஆட்களில் ஓருவனை காலால் முகத்தில் எத்திவிட்டு கார்சன் அடிக்கும் நக்கலான வசனம் செம.....

    அடியாள்: ஹேய்! நீ ரஃபேல் இல்லை!

    கார்சன்: கூர்மையான மூளைக்காரச் செல்லம்... ஐ லவ் யூ..!!!

    "தடால்... ஒளச்"

    #பக்கம் 167- இணைந்த காதலர்கள் டாம்& ரூபியின் காதல் வசனங்கள்..💞💞💞 & அவர்கள் கிஸ் அடிப்பதைக் கண்டு,

    கார்சன்: கண்ணைக் கூசுதே!

    டெக்ஸ்: தாத்தா சார்! கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள். இல்லையேல் அந்தப் பாவப்பட்ட இதயம் பணாலென்று வெடித்து வைத்து விடும்...!

    *காமிக்ஸ் உலக அதிரடி நாயகனுக்கு இப்படி மசாலா தூக்கலான வசனங்கள் தான் சிறப்பு....

    தொடர்ந்து இப்படியே எழுத்து எங்களை மகிழ்விக்க விசில் அடித்து வேண்டுகிறோம்...

    உப்பு சப்பில்லாத பத்திய சாப்பாடு கேட்கிறவங்களுக்கு அப்படியே பரிமாறுங்க....கதையும் அப்படி இருக்கும், டயலாக்கிலயும் சரிபடுத்தலான கைதட்டல் அள்ளிடும்....
    அடுத்த 8பாகங்கள் போடவேண்டும் ங்குற வேலையே இராது...😉

    ReplyDelete
    Replies
    1. ஆளுக்கொரு ரசனை சார் !

      Delete
    2. ஆம் சார் அதை மதிக்கவும் செய்கிறோம்....

      டெக்ஸ் ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாகவே இருக்கட்டுமே...

      இந்த விசிலடிச்சான் குஞ்சுகளின் ரசனை யாருக்கும் சற்றும் சளைத்ததல்லவே...

      இந்த விசிலடிச்சான் குஞ்சுகள் யாருடைய ரசனையையும் என்னிக்கும் தாழ்த்தி சொன்னதில்லையே...

      என்னவோ டைகர் ரசிகர்கள் ரசனை உயர்ந்தது போலவும்,
      டெக்ஸ் விசிலடிச்சான் குஞ்சுகளின் ரசனை தீண்டத்தகாது போலவும், அருவருப்பானது போலவும் எழுத வேண்டிய அவசியம் என்ன???

      இது எங்க டெக்ஸ் விசிலடிச்சான் குஞ்சுகளின் ரசனையை மட்டும் மட்டம் தட்டல..அந்த விசிலடிச்சான் குஞ்சுகளை கைதட்டி கரகோசம் எழுப்ப வைக்கும் தங்களின் ரைட்டிங்கையும், வசனங்களையும் மட்டம் தட்டும் யுக்தி...

      Delete
    3. எங்களுக்கு போனெல்லியை தெரியுமா?
      காலப்பினியைத்தான் தெரியுமா?
      அட போசெல்லயைத்தான் தெரியுமா??

      எங்க டெக்ஸ் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு 38ஆண்டுகளாக தங்களின் வசனம் தானே தெரியும்...அந்த வசனங்கள் தானே டெக்ஸ் எனும் பிம்பத்தை ஆழ பதிய வைத்தது 38ஆண்டுகளாக....

      சாகாவரம் பெற்ற அந்த வசனங்களையும், அதை கைதட்டி கொண்டாடும் எங்க டெக்ஸ் விசிலடிச்சான் குஞ்சுகளின் ரசனையையும் மட்டம் தட்டி எழுதிய அந்த டைகர் ரசிகருக்கு அகில உலக டெக்ஸ் விசிலடிச்சான் குஞ்சுகளின் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறோம்....

      யாரோட ரசனையை வேணா எவ்வளவு உயரத்தில் வேணா வெச்சிகட்டும்...அவுங்கவுங்களுக்கு அவுங்கவிங்க ரசனை பெரிசாக இருக்கலாம். அதற்காக அடுத்த ரசிகரது ரசனையை அசிங்கப்படுத்தும் மட்டரகமனா வேலையை செய்ய வேணாமே!

      Delete
    4. இந்த 38ஆண்டுகளில் எத்தனையோ எத்தனையோ எண்ணில் அடங்கா அமரத்துவம் வாய்ந்த வசனங்களை டெக்ஸ்க்கு எழுதியுள்ளீர்கள்.. அங்கெல்லாம் போனெல்லி என்ன எழுதியிருப்பாங்கனு ஒண்ணும் தெரியாது...

      ஆனா தெரிஞ்சதெலாம் தொய்ந்து போன உள்ளத்தை தட்டி எழுப்பும் சரவெடியான விஜயன் சாரின் எழுத்துக்களே....

      டெக்ஸ் பேசுவதை டெக்ஸா பேசினார்?? சத்தியமாக இல்லை... சாட்சாத் தாங்களே அந்த உயிர்ப்பான வசனங்களை பேசி உற்சாகம் ஊட்டினீர்கள்....

      பழி வாங்கும் புயல்ல மார்டின் ப்ளாயிட் எனும் Galap despatchன் நியூஸ் ரிப்போர்டர் கிட்ட டெக்ஸ், அரிசோனாவுக்கு வந்து அங்கே நடப்பதை எழுத சொல்லி கேட்டுக்குவார்.

      ப்ளாயிட்டும், ஓ யுத்த நிருபர் போலவே... உங்களுக்கு பணிபுரியு நான் தயார். என்பார்.

      டெக்ஸ் அடிப்பாரு பாருங்க ஒரு வசனம். நடுராத்திரி 3மணிக்கு கூட நரம்புகளை தெறிக்க செய்யும்......

      """ !பணி புரியப் போவது
      எனக்கல்ல - சத்தியத்திற்கு""""

      இதைப்போல ஆயிரம் வசனங்கள் உள்ளது..
      இப்படி கேட்டு வளர்ந்தவங்க சார் இந்த டெக்ஸ் ரசிகர்கள்...!!


      எங்களுக்கு எல்லா ஹூரோவையும் வாழ வெச்சிதான் பழக்கம்...யாரையும் மட்டம் தட்டியல்ல..அந்த செயலை தலயும் செய்ய மாட்டாரு..நாங்களும்....!!!

      Delete
    5. சூப்பர் டெக்ஸ்....எல்லா ரசனையும் உயர்ந்ததே....பிச்சைக்காரனுக்கோர் ரசனை...பணக்காரனுக்கோர் ரசனை...சந்தோசம் என்பது இருவருக்குமே ....அவரவர் தேவைகளில்....


      அதும் இருளின் மைந்தர்களின் கார்சனை தப்ப வைக்க டெக்ஸின் வாக்கு மீறல்....தொடர்ந்த கார்சனின் சினம் கலந்த நக்கலான வரிகள் நட்புக்கு சிறப்பான செதுக்கல்...இன்னும் பல

      Delete
  63. ; சூப்பர் பைலட் டைகர் தான் அட்டைப்படத்தினில் என்று நினைக்கிறேன் ; அந்த வயதுக்கான ரசனைக்கேற்ற ஜாலியான சமாச்சாரங்கள் நிரம்ப இருந்ததால் it went on to be a smash hit ! (அந்த புக்கினை படித்திருக்கக்கூடிய 90's kids ஆரேனும் இங்குண்டோ ?)

    சூப்பர் பைலட் டைகர் அழகாக பறந்து கொண்டிருப்பார் அட்டையில் முதல் கதை லக்கிலூக்கின் ஒரு ஜோஸியனின் கதை அடுத்தது நம்ம டொனால்டு அப்புறம் ஒற்றைக்கண் ஜாக் குண்டன் பில்லி என் பட்டையை கிளப்பிய இதழ் அது இறுதிக்காலத்தில் எல்லோரும் தனது நினைவுகளை மறந்து விடுவார்களாம் என்னை பொறுத்தவரை இந்த நினைவுகள் நான் காற்றில் சாம்பலாகும் வரை என்னுள் பசுமையாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. சத்யா...வயதும், ஆரோக்கியமும் சாதகமாய் இருக்கும் தருணங்களின் சிந்தனைகள் ஒரு ரகம் ; அவை இரண்டுமே பாதகமாகிடும் நாட்களின் mindset வேறொரு ரகம் ! ஆண்டவன் புண்ணியத்தில் முதலாவது ரகத்திலேயே நீங்கள் தொடர்ந்திட வாழ்த்துக்கள் !

      Delete
  64. கென்யா விற்க்கு பின் அமேசான், நமீபியா போன்ற கதைகள் களம் காணும் என்றீர்களே Editor sir.... அவை எப்போது?

    ReplyDelete
    Replies
    1. கதைப் பரிசீலனைகளில் சில குறைந்தபட்ச அளவுகோல்களை அவை தாண்டிட வேண்டி வரும் நண்பரே ! "கென்யாவின் தொடர்ச்சி" என்ற ஒரே காரணம் போதாதல்லவா - அவை நமது வாசிப்புகளின் அங்கமாகிட ?

      Delete
  65. பலநூறு யுகங்கள் தாண்டி நடைபெறயிருக்கும் ஈரோடு வாசகர் சந்திப்பு முத்து பொன்விழாவை கொண்டாடும் வகையிலும், தமிழ்பேசயிருக்கும் டின்டின் மீது வெளிச்சவட்டம் விழும்படியாகவும் கோலாகலமாக நடைபெறவேண்டும் எடிட்டர் சார்!

    வழக்கமான சந்திப்புத் தளமான Hotel le-jardin தற்போது மராமத்துப் பணிகளுக்காக மூடப்பட்டிருப்பதால், வேறொரு தோதான இடம் குறித்து நாளை நண்பர் ஈரோடு ஸ்டாலினிடம் ஒரு முதற்கட்ட ஆலோசனை செய்துவிடுகிறேன் சார்..

    இந்தவாட்டி V-காமிக்ஸ் அதிபரையும் ஒரு 30 நிமிடம் சொற்பொழிவாற்ற வச்சிடலாம்னு இருக்கோம் ஹிஹி!

    ReplyDelete
    Replies
    1. V காமிக்ஸ் அதிபர் தான் ரவுண்டு பன் + ஸ்பாஞ் கேக் இன்-சார்ஜ் ! அவரை பகைச்சுக்கிட்டா பரால்லியா ?

      Delete
  66. கருத்துக்களை கேட்கும் போதெல்லாம் tex tiger பெயர் வருவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறை கூற வில்லை எனக்கும் அவர்களை பிடிக்கும் இருந்தாலும் பழைய கதைகள் ஏதேனும் இருந்தால் வெளியிடலாம். 1990 ku முன் வந்த புத்தகம் ஏதேனும்

    ReplyDelete
    Replies
    1. சார்..மறுபதிப்புகள் இருக்கும் திசை பக்கமே போக வேணாம் எனும் நண்பர்களுக்கு இப்போ தான் தம் கட்டி மேலாக்கப் பதில் சொல்லி விட்டு வருகிறேன் ! சித்தே உங்க தோளிலே தலைய சாய்ச்சுக்குறேன் ! Phew !!!

      Delete
    2. ஆசிரியரே ஈரோட்டில் பிக் பாய்ஸ் ஸ்பெஷல் வெளியிட முயற்சி செய்யுங்களேன்

      Delete
  67. Erodekku எங்கே எப்போது வில் இன்னும் 5 இதழ்கள் உள்ளன அதில் 2 வெளியிடலாம். எனது விருப்பம்
    1. ஸாகோர் கலர் இதழ்
    2. பவுன்சர்

    ReplyDelete
    Replies
    1. குற்ற நகரம் கல்கத்தா போல ஒரு கிராஃபிக் நாவல் வெளியிட்டாலும் மதி.

      Delete
  68. Erodekku எங்கே எப்போது வில் இன்னும் 5 இதழ்கள் உள்ளன அதில் 2 வெளியிடலாம். எனது விருப்பம்
    1. சுஸ்கி விஸ்கி ஸ்பெஷல் 2
    2. Bad Boys special

    ReplyDelete
  69. ///நண்பர்களின் பெரும்பான்மைக்கு பழமை மீதான மோகம் மட்டுப்படவில்லை எனில் ஒரு வியாபாரியாய் நான் என்ன தான் செய்திட இயலும் சார் ?

    "இது விற்கும்" என்பது உத்திரவாதமாய்த் தெரிந்த பின்னேயும் அந்தச் சரக்கை ரேஷனில் அளவாய் கூடத் தந்திடவும் கூடாதெனில், ஞான் அம்பானிக்கு அண்டை வீட்டுக்காரனாக இருந்திடல் அவசியமாகிடும் சார் ! Unfortunately that's not the case !///

    ---அப்பாடி பாலை வார்த்தீங்க சார்..🤩

    எங்கே தல மறுபதிப்பு இராதோனு ஒரு கணம் நினைச்ச நேரத்தில் தலை உண்டுனு சந்தோச கூவல் போட வெச்சிட்டீங்க..

    அகிலம் முழுதும் மறுபதிப்புகளுக்கு ஆதரவு நல்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...💞💞💞

    அப்ப கார்சனின் கடந்த காலம் ரெடி😜😜😜(சும்மா காமெடி தான் பதட்டப்படாதீங்கப்பா யாரும்)

    ReplyDelete
    Replies
    1. பதட்டப்பட என்ன இருக்கு. கா. க. கா. வந்தால் குத்தாட்டமே போடலாம்.

      Delete
  70. யப்பா...! நீண்ட நெடுங்காலத்திற்கு பிறகு ஏக் தம்மில் படித்து முடித்த டெக்ஸ் கதை...!

    மாயாஜாலம், மந்திர தந்திரம் என இருந்தாலும் கதையின் வேகம் சகலத்தையும் மறக்கடித்து அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று பக்கங்களை புரட்ட வைக்கிறது...!

    போனெல்லி + காலெப்பினி கூட்டணி ஜாம்பவான்கள் ஜாம்பவான்கள் தான்..!

    பழிவாங்கும் புயலுக்கு பிறகு மறக்கவியலா வாசிப்பு அனுபவம்...!

    ஒரு மூன்று மணிநேரம் வேறொரு உலகத்தில் இருந்தாற் போன்ற அனுபவம்...!

    9/10

    ReplyDelete
  71. விற்பனை முகங்கள் சொல்லும் தீர்ப்புகளே இறுதித் தீர்ப்புகள். அதையே பின்பற்றுங்கள் சார். இடை இடையே எங்களுக்கு பிடித்த உங்களுக்கு பிடித்த காமிக்ஸ்களையும் போட்டுத் தள்ளுங்கள். Focussing on Cash Cow is important in any business to prop R&D. R&D மட்டுமே பண்ணிட்டிருந்தா சிரமம் கம்பேனிக்குத்தான்.

    நேரப்பற்றாக்குறை ஏற்படுத்தாத விற்பனையில் சிறக்கும் மறுபதிப்புகளும், பழங்காமிக்ஸ்களும் தொடரட்டும்.

    எருதின் நோய் எருதுக்கு மட்டுமே தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. +100000....

      எருதின் நோய் எருதுக்கு மட்டுமே தெரியும்//

      வெல்செட் மாப்பு

      Delete
  72. மறுபதிப்புக்கு என் ஆதரவு என்றும் உண்டு.

    ReplyDelete
  73. ///And மறந்திருப்பின் நினைவூட்டுகிறேன் - "பிஸ்டலுக்குப் பிரியாவிடை" 2017-ன் ஈரோட்டு ரிலீஸ் சார் !

    And yet again மறந்திருப்பின் இதையுமே நினைவூட்டுகிறேன் சார் - 2016-ன் ரிலீஸ் "ரத்தக் கோட்டை" ! 2018-ன் ரிலீஸ் "ரத்தப் படலம் !////

    ஆசிரியர் சார் @

    ஈரோடு ஸ்பெசல்ஸ்...

    2013-முதல் லயன் ஸ்டால்-சந்திப்பு மட்டுமே

    2014-லயன் மேக்னம் ஸ்பெசல்

    2015-கார்டூன் ஸ்பெசல்

    2016-ஈரோட்டில் இத்தாலி

    2017-இரத்தக்கோட்டை& கர்னல் ஆமோஸ்

    2018-இரத்தப்படலம் கலர் 1.0

    2019-பிஸ்டலுக்குப் பிரியாவிடை, டெமெக்ளிஸ்2-நித்தமொரு யுத்தம், பழிவாங்கும் பாவை-டெக்ஸ் & மனதில் உறுதி வேண்டும்-லக்கி.

    2020- விழா இல்லை
    2021-விழா இல்லை

    2022-சுஸ்கி விஸ்கி1

    பி.பி.வி. ரிலீஸ் ஆனது 2019ல என்றாலும் அதன் கதையின் வலிமைக்கும், அசாத்திய தயாரிப்பு தரத்துக்கும், அற்புதமான மொழி பெயர்ப்புக்கும் இன்னமும் ஸ்டாக் இருப்பது சங்கடமே...

    புதிய கதைகள் வெளியிட்டு ரிஸ்க் எடுப்பதை விட பழைய மறுபதிப்புகளை விட்டு விற்பனை & வரவேற்பை பெறுவதே சாலச் சிறந்தது சார்...

    இரும்புக்கையாரையும் கன்சிடர் பண்ணுங்க சார்.

    புதியவை வாசித்து நாங்க மட்டுமே சந்தோசமாக இருப்பதில் உடன்பாடு இல்லை...

    மை சஜஸன்ஸ்...

    1.தங்க கல்லறை/இளமையில் கொல்2&3

    2.கார்சனின் கடந்த காலம்-வசனம்& பாடல்கள் மாறாமல்

    3.இரும்புக்கையார் வண்ணத்தில்

    4.the big boys special

    5.சுஸ்கி விஸ்கி2

    6.ஸோகோர் கலர்2

    ReplyDelete
  74. டின்‌ டின் கதைகளை டெக்ஸ் கதைகள் சைஸில் போட முயற்சி செய்யுங்க. ஏன்னா அவிங்களே ரீ பிரிண்ட் அந்த சைஸில் தான் போடுறாங்க.

    அடுத்த மெபிஸ்டோ ஸ்பெஷல் எப்போ??

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் IVRS..பேரை மாத்தினாலும் மெபிஸ்டோ கொண்டை தெரிஞ்சிடுச்சு.. :)

      Delete
  75. டெக்ஸின் மரண தூதர்கள், அதிரடி கணவாய் , இரும்புக்குதிரையின் பாதையில் கலர்ல்ல மறுபதிப்பா போடுங்க ஜீ. முடிஞ்சா ஏக் தம்மா ஹார்ட் பவுண்ட்டுல.

    ReplyDelete
  76. அட்டை படம் சிறப்பு .டேங்கோ வும் ஆல்பாவும் கோடை மலர் இனை கலர்புள் ஆக ஆக்குவார்கள். அதுவும் ஹாட் கவரில் ஒரு கதம்ப இதழ் - ரொம்பநாளைக்கு அப்புறமாக - எமக்கு கொண்டாட்டம்தான்- இந்த கோடை விடுமுறையை கோடைமலர் உடன் கொண்டாடிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  77. ஜூனியர் லயனில் வந்த மங்கா காமிக்ஸ்......சிந்துபாத் என் choise சார்....

    ReplyDelete
  78. இந்த சந்திப்பின் focus என்னவாக இருக்கலாமோ//
    50 ஆண்டுகள் கண்ட முத்துவை தந்த சீனியர் எடிட்டரை கொண்டாடும் விதமாக இந்த விழா அமைய வேண்டும் என்பது என் ஆசை.

    ReplyDelete
  79. வாய்ப்பு அமையும் பட்சத்தில் ஈரோட்டில் ஒரு பத்து மினி காமிக்ஸ் இதழ்களையாவது வெளியிட முயற்சி செய்யலாம் சார்...

    ReplyDelete
    Replies
    1. பத்து இல்லாவிட்டாலும் அதில் பாதியாவது நிச்சயம் வேண்டும். அதன் வரவேற்பு எப்படி இருக்கிறதுங்க சார்?

      Delete
    2. ஜூனியர் லயன் கிடைத்தால் கொள்ளையாய் மினி லயன் கிடைத்தால் மகிழ்ந்து போவேன்

      Delete
  80. மறு பதிப்புகளின் மீது சில நண்பர்களுக்கு ஏன் இந்த வெறுப்பு

    பல மறுபதிப்பு இதழ்கள் லயன் லைப்ரரில் தான் வருகின்றன, ரெகுலர் சந்தாவில் அல்ல, எனவே தேவைப்படுவோர் வாங்கலாம்,

    விற்பனையில் சாதித்துக் காட்டினாலும் எனக்கு பிடிக்கல மறு பதிப்பு வேண்டாம் என்று கூறுபவர்களை என்னவென்பது

    மேலும் பழங்காமிக்ஸ் என்பதற்கும் இலக்கணம் என்ன

    லயன் முத்துவில் முன்பே வந்திருப்பது மட்டும்தான் அளவுகோலா இல்லை புத்தகம் வெளிவந்த காலம் அளவுகோலா

    Tintin எப்போது வெளிவந்தது, நானும் Tintin ரசிகனே,

    Tintin வந்தால் பாராட்டுவதும் அதே சமயம் இரட்டை வேட்டையர் கேட்டால் பழங்காமிக்ஸ் என்றூ கூறுவதும் ஏன்

    Editor sir, விற்பனைகளே எதையும் தீர்மானிக்கும், அதற்கே முன்னுரிமை அளியுங்கள் அதன் மூலமே சிலருக்கு மட்டுமே பிடித்த கதைகளும் வரும்

    ReplyDelete
    Replies
    1. நெத்தியடி நண்பரே.....

      லயன் லைப்ரரி என்ற தனிதடத்தில் மறுபதிப்புகள் வருது...பிடிச்சா வாங்குறோம்..பிடிக்கலனா ஸ்கிப் பண்ணிடபோறோம்..
      இதற்கு எதற்கு இத்தனை ஆர்ப்பாட்டம்னு புரியலயே..???


      தமக்கு பிடிக்காத எதையும் மற்றவங்களும் வாங்கிட கூடாது என்ற உயர்ந்த சிந்தனையின் பலனா???

      பழசு புதுசு என்னய்யா இலக்கணம்னு அருமையா கேட்டீங்க...

      *Tin tin first appeared in French on 10 January 1929,* in Le Petit Vingtième (The Little Twentieth), a youth supplement to the Belgian newspaper Le Vingtième Siècle (The Twentieth Century). The success of the series led to serialized strips published in Belgium's leading newspaper Le Soir (The Evening) and spun into a successful Tintin magazine. In 1950, Hergé created Studios Hergé, which produced the canonical versions of 11 Tintin albums.

      🤣🤣🤣🤣🤣1929 ல இந்தியா சுதந்திரம் வாங்காத போது வந்த டின்டின் புதுசாம்....


      உப்ப 1970லயும் 1980ம் வந்த தங்க கல்லறையும் கார்சனின் கடந்த காலமும் பழசாம்.🤭🤭🤭🤭

      நல்லா இருக்குப்பா ஞாயம்😜😜😜😜😜

      Delete
    2. அந்த நண்பர்களின் பார்வைக் கோணத்திலிருந்தும் இதனை அணுகினால், மறுபதிப்புகள் மீதான துவேஷங்களின் காரணத்தினை சுலபமாய்ப் புரிந்திடலாம் !

      "இந்த மறுபதிப்பு மட்டும் இல்லையெனில் அந்த இடத்தினில் ஒரு புது ஆல்பம் வந்திருக்கக்கூடுமே ! புதுசுக்கான இருக்கையினை பழசு ஆக்கிரமிக்கிறதே !" என்பதே அவர்களின் ஆதங்கங்கள் ! So அந்த ஆற்றமாட்டாமைகளின் வெளிப்பாடுகளே "நோ to மறுபதிப்ஸ்" என்ற குரல்கள் !

      மற்றபடிக்கு அந்ததந்த நாயகர்களின் மீதான வெறுப்பாய் நான் பார்த்திடவில்லை சார் !

      Delete
  81. கா.க.காலம் + // 10. மினி காமிக்ஸ் இதழ்கள் வெளியிட முயற்சி செய்யலாம்சார்.//வரவேற்கிறேன்சார். ஈரோட்டில் 10புத்தகங்கள் நீங்கள் வெளியிட அவற்றை அள்ளிக் கொண்டு நாங்கள் வெளியேற அந்தக் காட்சியை நினைத்தாலே வானத்தில் பறப்பது போலுள்ளதுங்க சார்(கனவு காணலாம்தானேங்க சார். )நனவானால் சந்தோசம்.

    ReplyDelete
  82. // ஜூன் முதல் தேதிக்கு டின்டினை பெல்ஜியத்துக்கு அனுப்பிய கையோடு - ஈரோட்டு ஸ்பெஷல் இதழ்கள் பற்றிய அறிவிப்பினையும் செய்திட்டால் தான் முன்பதிவுகளுக்கு போதிய அவகாசமிருக்கும் என்பதால் - அடுத்த பதிவு வியாழன் இரவுக்கே வந்து விடும் //

    அடடே இன்னும் 3 நாட்கள் மட்டுமே. வியாழன் இரவு என்ன அறிவிப்பு வரும்? அறிவிக்கப் படும் புத்தகங்கள் மட்டும் இல்லாமல் அறிவிக்கப் படாத புத்தகங்களும் வரும் ஈரோடு என்றாலே ஸ்பெஷல் தானே?

    ReplyDelete
  83. வணக்கம் நண்பர்களே!!!
    முத்து காமிக்ஸ் வெளியிடு எண் 475 என்ன புத்தகம்?? புத்தகத்தின் தலைப்பு என்ன???

    ReplyDelete