Powered By Blogger

Thursday, June 01, 2023

வியாழனின் வாக்குறுதி !!

 நண்பர்களே,

வணக்கம்.  "விசாலக்கியமையே அடுத்த பதிவு வந்துப்புடும் !" என்று கெத்தாய் அள்ளி விட்ட போது, இடையினில் முழுசாய் நாலைந்து நாட்கள் இருப்பது போலவே இருந்தது ! ஆனால் CSK வெற்றியின் புண்ணியத்தில் ஒரு திங்கள் முழுக்கவே சிவராத்திரியாகிப் போயிருக்க, ராவிலே தூங்காம செவ்வாய் முழுக்க ஆபீசில் சாமியாடிக்கினே இருந்து விட்டு, புதனன்று முட்டைக்கண்களை அகல விரித்துப் பார்த்தால் - 'இன்னும் ஒரே நாளில் வெசாழன் புலர்ந்திடும் மாப்பு !!' என்று காலெண்டர் கூவியது ! "ஆஹா...நமக்கு மொத எதிரி நம்ம முந்திரிக்கொட்டை வாய் தான்" என்பதை நானூற்றி அறுபத்தி ஆறாம் தபாவாய் உணர்ந்த நொடியினில், என் முன்னே கிஞ்சித்தும் எதிர்பார்த்திரா ஒரு மண்டை காயச் செய்யும் முரட்டுப் பணி காத்திருப்பது உறைத்தது !! 

'நீ டின்டினுக்கு டான்ஸ் ஆடுவியோ, ஈரோட்டுக்கு இங்கி-பிங்கி-பாங்கி போடுவியோ தெரியாது ; ஆனா அதுக்கெல்லாம் முன்பாக மூஞ்சிக்கு முன்னே காத்திருக்கும் "சம்மர் ஸ்பெஷல்" இதழுக்கொரு பதில சொல்லுடியோய் !!" என்று அட்டவணையானது என்னிடம் கூவுவது போலிருந்தது !! மொத்தம் 4 சாகசங்கள் கொண்ட இந்த ஹார்ட்கவர் இதழினில், ஆல்பா & சிக் பில் கதைகளுக்கு DTP பணிகள் முடிந்து என் மேஜையில் கிடக்க, டேங்கோ & டிடெக்டிவ் ரூபினுக்கு நான் பேனா பிடிக்க வேண்டியவன் ! 54 பக்கங்கள் டேங்கோ + 46 பக்கங்கள் ரூபின் என மொத்தம் 100 பக்கங்கள் காத்திருந்தன ! டின்டினுக்கு வசனங்களை finetune செய்திடும் பணியானது ஆஞ்சநேயரின் வால் போல நீண்டு கொண்டே சென்றிட, அதற்குள் கொஞ்ச நேரம், டேங்கோவுடன் கொஞ்ச நேரமென நேரத்தினை செலவிட்டதில் 2 நாட்களுக்கு முன்னே டேங்கோவுக்கு 'சுபம்' போட இயன்றது ! ரைட்டு....ஒரே மட்டுக்கு சம்மர் ஸ்பெஷலின் பணிகளை முடித்து விடலாம் என்றபடிக்கே டிடெக்டிவ் ரூபினின் "96 மணி நேரங்கள்" கதையினை எடுத்து வரச் சொன்னேன் மைதீனிடம் ! பட்ஜெட் தாக்கல் செய்யப்போகும் நாளில், நிதி அமைச்சகத்திலிருந்து பண்டல் பண்டலாய்க் காகிதங்களை வண்டியில் ஏற்றுக் கொண்டு போவார்களே ; அது போலானதொரு பண்டலோடு ஆஜரானான் மைதீன் ! "இல்லேப்பா...மற்ற கதைகளையெல்லாம் நான் அப்புறமா பாத்துக்குறேன் ; இப்போதைக்கு ரூபின் மட்டும் எடுத்திட்டு வா - போதும் !" என்றேன் ! அவனோ தயங்கியபடியே "இது ரூபின் கதை மட்டும் தான் அண்ணாச்சி !" என்றான் ! மலங்க மலங்க முழித்தேன் - அவன் மேஜையில் வைத்திருந்த கத்தையின் பரிமாணத்தையும், பருமனையும் பார்த்து ! நமது பிரெஞ்சு to இங்கிலீஷ் மொழிபெயர்ப்பாளரை நானிங்கு நிரம்பத் தடவைகள் சிலாகித்துள்ளேன் தான் ; ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏதேனுமொரு தருணத்தில் என்னை விக்கித்துப் போகச் செய்ய அவர் தவறுவதே கிடையாது ! ரொம்பச் சமீபத்தில் 70 அகவைகளைப் பூர்த்தி செய்தவர் ; வீட்டில் பேரப்பிள்ளைகளைக் கொஞ்சி மகிழ்ந்து அக்கடாவென்று ஓய்வினை கழிக்க ஆண்டவன் எல்லா வசதிகளைத் தந்திருந்தும், கடமையே கண்ணாய் கடந்த 22 ஆண்டுகளாய் நாம் தரும் பட்டாணிக்கடலை சன்மானங்களை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டு, வண்டி வண்டியாய் மொழிபெயர்ப்பினை செய்து வருபவர் ! And அவரது சர்வீஸுக்கே கூட இம்முறை ரூபின் ஒரு செமத்தியான சவாலாக இருந்திருக்க வேண்டுமென்பேன் !! Simply becos - "96 மணி நேரங்கள்" ஒரு சிம்பிளான கதையாகவே இருக்கவில்லை & அதன் இங்கிலீஷ் ஸ்கிரிப்ட் இருந்தது - அப்படியொரு தடிமனில் !!! கோடு போட்ட பரீட்சை தாளில் அழகாய், அடித்தல், திருத்தம் இல்லாத கையெழுத்தில் மொத்தம் 50 பக்கங்கள் இருந்தது ஸ்கிரிப்ட் !!

ஏற்கனவே சொன்னது தான் - செம சோம்பேறி மாடன் என்பதால் எழுதும் எந்தக் கதையையும் நான் துவக்கத்திலேயே முழுசுமாய் படிக்க நேரம் எடுத்துக் கொள்வதில்லை ! உங்களை போலவே பக்கம் பக்கமாய்ப் பயணிப்பதே எனக்கும் வழக்கம் ! So மைதீன் மேஜையில் வைத்துப் போயிருந்த கதையின் ஒரிஜினல் பக்கங்களை எடுத்து மொள்ளமாய்ப் புரட்டினேன் - கதையின் ஓட்டம் எவ்விதமுள்ளதென்று பார்க்க ! நிரம்ப ஆக்ஷன் கண்ணில்பட்டது தான் ; but பக்கத்துக்குப் பக்கம் பேசுறாங்க...பேசுறாங்க..பேசிட்டே போறாங்க பாரு மக்கா, நம்ம ஸ்டீலெல்லாம் வெறும் கொயந்தைபுள்ளை என்று சொல்லும் ரேஞ்சுக்குப் பேசுறாங்க ! பொதுவாய் டெக்ஸ் கதைகளில் ஆக்ஷன் sequences-ல் எனக்கு வேலையே இராது...டமால்..டுமீல் என்று குறிப்பதைத் தாண்டி ! டேங்கோவில் கூட வசனங்களை கணிசம் தான் என்றாலும், சித்திர ஜாலங்களில் நாம் மெய்மறந்திட நேர்ந்திடும் பக்கங்களிளெல்லாமே வசனங்களை ஒரு மிடறு குறைவாகவே இருந்திடும் ! So ஒரு மாதிரிச் சமாளித்து விட்டிருந்தேன் ! ஆனால் இங்கேயோ புரட்டப் புரட்ட, கண்ணில்பட்ட பக்கங்களிளெல்லாமே மூச்சு விட நேரமின்றி கதை மாந்தர்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் ! பொதுவாய் இது போலான கதைகள் ஒருவித அயர்ச்சியினை ஏற்படுத்திடுவதே வழக்கம் ; ஆனால் இங்கேயோ ஒரு இனம் புரியா வசீகரம் ! இன்னதென்று சொல்லத் தெரியாத ஏதோவொன்று, என்னைக் கையைப் பிடித்து இந்தக் கதைக்குள் நுழைக்க முனைவதை உணர முடிந்தது ! 

'டேங்கோ'வுக்கு சுபம் போட்ட முப்பதாவது நிமிடமே ரூபினுக்குள் புகுந்தால் - oh wow !! இந்தப் பதிவினை டைப்பும் தருணத்தில் நான் தொட்டிருப்பது 12-ம் பக்கத்தைத் தான் ; and கதையின் பிற்பகுதி எவ்விதம் இருக்கவுள்ளதோ - no idea at all !! ஆனால் இது வரைக்குமான பக்கங்களில் ஒரு க்ரைம் த்ரில்லருக்கான பரபரப்பு சும்மா தீயாய் இழையோடுகிறது ! ஒரு வசதியான குடும்பத்து அம்மணி, வாழ்க்கையில் மொத தபாவாய் ஆத்துக்காரனுக்கு துரோகம் செய்திடும் முனைப்பினில் காட்டுக்குள் இருக்கும் ஒரு காட்டேஜில் தனது கள்ளக்காதலனைச் சந்திக்கிறாள் ! "இதென்ன ஒரே குஜால்ஸ் பார்டீஸ் சீசனா கீதே...?? இது நல்ல லவ்சா ? நொள்ளை லவ்சா ? என்ற ஆராய்ச்சி பண்ண மறுக்கா நம்மாட்கள் களமிறங்கணுமோ ? " என்றபடிக்கே கதையோடு நகர்ந்தால், நாலாம் பக்கத்திலேயே நான்கு தோட்டாச் சத்தங்கள் கேட்கின்றன & Mr.க.கா. காலுக்குள் கிடக்கிறான் பாடியாய் !!  ஒரு கொலை விழுந்த நொடி முதலாய் பறக்க ஆரம்பிக்கும் இந்த சாகசத்தில் கதாசிரியர் வைத்துள்ள முடிச்சுகள் என்னவோ - இன்னமும் எனக்கே தெரியாது தான் ! But சர்வ நிச்சயமாய் இதுவொரு வித்தியாசமான த்ரில்லராகவே இருக்குமென்று உளுந்தவடை சொல்கிறது ! பொதுவாகவே இதுபோலான பணிகளிலிருந்து, பின்னங்கால் பிடரியிலடிக்க ஓட்டமெடுக்க விழைந்திடும் எனக்கே இதன் கதைக்களம் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், பணியின் கடுமை கண்ணில் தெரிய மாட்டேன்கிறது ! So அடுத்த சில நாட்களுக்குள் நமது  70 வயது மொழிபெயர்ப்பாளர் போட்டுத் தாக்கிய கதையினை, இந்த 56 வயது இயைஞன் பிறாண்டியெடுக்கக் காத்திருக்கிறான் ! For all you know , பிற்பாதியில் கதை பப்படமாக இருந்து, எனக்கு செம பல்பு தரவும் வாய்ப்புண்டு தான் ; but இப்போதைக்கு I'm loving it !


ஒரு மாதிரியாய் ரூபின் வண்டியை தக்கி முக்கியேனும் இந்த வாரயிறுதிக்குள் பூர்த்தி செய்து விடலாமென்ற நம்பிக்கை இருப்பதால் - மெதுவாக "வெசால கெழமை பிராமிஸ்" பக்கமாய் கவனங்களைத் திருப்பினேன் ! வீட்டில் எனது work desk-ல் உள்ளதொரு 48 பக்கக் கட்டுரை நோட் தான் இப்போதெல்லாம் எனது அட்சய பாத்திரம் ! நம் கைவசமுள்ள கதைகளின் லிஸ்ட் ; அவற்றுள் நெடும் துயில் பயிலும் கதைகள் எவை ? நமது ரேடாரில் இருக்கின்ற தொடர்கள் எவை ? என்ற முழு விபரங்களும் அதனில் உண்டு ! So அண்டா காக்கஸூம் ; குண்டா பாக்கசூம் என்ற உச்சாடனங்களுக்கெல்லாம் அவசியமே லேது ! பட்ஜெட் இன்னதென்று தீர்மானம் மட்டும் ஆகி விட்டால், சைஸ் சைஸாய் ; ரகம் ரகமாய் கதைகளுண்டு ! 

"ரைட்டு...இத்தினி சரக்கை பூதமாட்டம் காவல் காத்திக்கினு இருந்தும், இது போலான தருணங்களில் மறுபதிப்புகளையே கட்டி மாரடிப்பானேன்டா தம்பி ?" - என்ற உங்களின் ஒரு (சிறு) அணியின் குரல் காதுகளில் விழாதில்லை தான் ! இது ஏற்கனவே பதிவில் துவைத்துத் தொங்கப்போட்ட மேட்டர் தான் என்றாலும், இங்கேயும் ஒரு தபா சற்றே விசாலமாய் அலசி விடுவதில் தவறில்லை என்பேன் ! மறுபதிப்புகள் ஆபத்பாந்தவர்களாய் எனக்குத் தோன்றிட காரணங்கள் இரண்டு folks ! பிரதானமானது - உங்களின் பெரும்பான்மையின் மாற்றம் கண்டிடா பழமை மோகம் ! காமிக்ஸ்களுக்கும், பால்ய நினைவலைகளுக்கும் சொர்க்கத்தில் போட்ட முடிச்சோ என்னவோ - நம்மில் கணிசமானோருக்கு முன்னாட்களில் ரசித்த கதைகளோடே  மறுக்கா சவாரி செய்வதில் அலாதி ஆனந்தம் என்பதில் no secrets ! So உங்களின் அந்த அவாக்களும், அவற்றின் நீட்சியான விற்பனை உத்வேகங்களும் ஒன்றிணைந்து எனது காரணம் # 1 ஆகிறது ! And காரணம் # 2 - புதுசாய் ஒரு மொழியாக்கம் ; எடிட்டிங் ; அட்டைப்படம் இத்யாதி..இத்யாதிகளை செய்திடத் தேவை இல்லையே என்ற shortcut தான் ! Maybe நமது ரெகுலர் அட்டவணைகள் கொஞ்சம் லாத்தலாக இருப்பின், இடையில் புகுந்திடக்கூடிய ஸ்பெஷல் இதழ்களுக்கு உழைப்பைத் தருவது சாத்தியமாகிடலாம் தான் ! ஆனால் "பங்குனி ஸ்பெஷல்" ; "மங்குணி ஸ்பெஷல்" என்ற ரேஞ்சுக்கு எதையேனும் போட்டுச் சாத்தி வரும் சூழலில், அந்தந்த மாதங்களின் அட்டவணைகளுக்கு நியாயம் செய்வதிற்குள்ளேயே நாக்கார் மாத்திரமன்றி பல்லார், கடைவாயார் ; உண்ணாக்கார் - என வாய்க்குள் இருக்க வேண்டிய சகல அவயங்களும் தொங்கிப் போய் விடுகின்றன ! லைட்டா கரிச்சட்டிக்குள்ளாற மண்டையையும், மீசையும் ஒரு முக்கு முக்கியெடுத்த கையோடு, ஊரிலுள்ள தெய்வங்களையெல்லாம் வேண்டியபடிக்கே 'தம்' கட்டி தேரை ஒரு மாதிரி இழுத்து விட்டு, "நோவே இல்லியே...நம்பளுக்கு தேர் இழுப்பதெல்லாம் தேன்குழல் சாப்புடற மாதிரி....ரெம்போ ஷிம்பிள் !!" என்று அடித்து விட்டுக் கொண்டிருந்தாலும், உள்ளாற பார்ட் பார்ட்டாய்க் கழன்று ஓடுவதெல்லாம் அடியேன் மாத்திரமே அறிந்த இரகசியம் ! And ஞான் அள்ளிவிடும் பீலாக்களையும், நமது டீம் உருண்டோ, புரண்டோ ஒவ்வொரு முறையும் தயார் செய்து பந்திக்குக் கொண்டு வரும் பதார்த்தங்களையும் பார்த்து விட்டு - "இவனுக ஏதோ ராக்கெட்டுக்கு ஊத்துற பெட்ரோலை வாய்க்குள்ளாற ஊத்திக்கிறானுக போலும் ! மெய்யாலுமே சூப்பர்மேனுக்கு பக்கத்து ஊட்டுக்காரவுக தான்டோய் !" என்று என்ற நம்பிக்கை பரவலாகிப் போகிறது  ! இதோ நாலு நாட்களுக்கு முன்னே கூட வந்ததொரு சேதி நம்மை சூப்பர் தாத்தாக்களாக உருவாக்கப்படுத்தியதன் தொடர்ச்சியே !! "வன்மேற்கின் அத்தியாயம்" மொத்தம் 75 பாகங்கள் என்று பார்த்தேன் ! வருஷத்துக்கு ரண்டு பாகம்னு போட்டு நாம என்னிக்கி கரை சேருறது ? நண்பர்கள்கிட்டே கேட்டுப்புட்டு மெகா தொகுப்புகளா போட்டு மூணோ, நாலோ வருஷத்திலே முடிக்கிற வழியைப் பாக்கலாமே ?" என்றிருந்தது ! அழுவதா ? சிரிப்பதா ? என்றறியாத அந்தக் கணத்தில் புரிந்தது - சாயச்சட்டியின் உபயமெல்லாம் மெய்யென்றே நண்பர்களில் சிலர் கருதி வருவது !! நெசத்திலே நாம புல்தடுக்கிப் பயில்வான்கள் தான் என்பது தான் கூத்தே ! Maybe அடுத்தாண்டு முதலாய் திட்டமிடலை சற்றே சுலபமாக்கிட இயன்றால், இது போலான ஸ்பெஷல் வேளைகளில் மெய்யாலுமே மூச்சு வாங்காது தேர் இழுக்க சாத்தியப்படக்கூடுமோ - என்னவோ ?! So குறுகியதொரு கால சாளரம் மாத்திரமே திறந்திருக்கும் சமயங்களில், பெருசாய், புதுசாய் குட்டிக்கரணங்கள் அடிக்க மேலெல்லாம் நோவுவதே நிஜம் ! கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்வரையிலும் ஈரோட்டில் சந்திப்பு ஒரு நிச்சயமான நிகழ்வு என்றிருக்க, அதற்கென எதையேனும் அட்டவணையிலேயே இணைத்திட இயன்ற வந்தது ! ஆனால் கொரோனா புண்ணியத்தில், தொடராய் மூன்று ஆண்டுகளுக்கு சந்திப்புகளும் சாத்தியமின்றிப் போயிட, ஈரோட்டுக்கென நடப்பு அட்டவணையினில் பெருசாய் எதையும் கோர்த்து விட்டிருக்கவில்லை ! So எது திட்டமிட்டாலும் அது அட்டவணைக்கு வெளியே - என்றே இருந்திட வேண்டியதாகிறது ! And in any case - அட்டவணையில் குல்பி ஐஸ்க்ரீமே இருந்தாலும், அதற்கு வெளியிலாக ரெண்டு குச்சி ஐஸாவது வாங்கிச் சப்புவதில் தானே நமக்கெல்லாம் ஆனந்தம் ?! So இந்தாண்டுக்கென்றான குச்சி ஐஸ் பக்கமாய்ப் பார்வையை ஓட விட்டேன் !!

தேறியது பால் ஐஸா ? சேமியா ஐஸா ? கிரேப் ஐஸா ? இரவு பத்தரைக்கு திட்டமிடல் சார்ந்த விபரங்களோடு ஆஜராகிறேன் guys !! அதுவரைக்கும் மனசுக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதாயின் வால்யூமை மட்டும் கூட்டிப்புடாதீங்கோ ? விளம்பர images ஒரு பக்கம் ரெடியாகிட இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை & நான் டைப்படிக்கவுமே ! So சந்திப்போம் - அத்தியாயம் 2-ல் !!

வெசாழனின் வாக்குறுதி - Part 2 :

ஏற்கனவே ஆகஸ்டில் மூணோ, நாலோ ரெகுலர் புக்ஸ் உண்டென்பதால் கொச கொசவென ஏகப்பட்டதை மறுக்கா களமிறக்குவானேன் ? என்ற சிந்தனையில் தான் "ஈரோட்டுக்கு இரண்டே ஸ்பெஷல்" மாத்திரம் என்று வரையறுக்க விழைந்தேன் ! நோட்டைத் திறந்தாலோ "இதைப் போடலாமோ ? அதைப் போட்டாலென்ன ?" என்று ரவுண்டு கட்டிக் குழப்பும் கதைகளின் அணிவகுப்பு ! 

அவற்றின் மத்தியில் தேர்வான முதல்  ஸ்பெஷல் : சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் II தான் ! (நமக்கு) ஒரு புத்தம்புதிய கதை + ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு என்ற இந்த காம்போவில் பால்யங்களின் நினைவூட்டல்களும் இருக்கும், புதுசானதொரு வாசிப்பும் இருக்கும் என்பதால் இந்த ஆல்பத்தை ஈரோட்டின் முதல் சம்பவமாய்த் தேர்வு செய்திடத் தீர்மானித்தேன் ! தவிர 1989-க்குப் பின்பாய் ஒரு புத்தம் புதிய சு.& வி.சாகசத்தினை வாசிக்கும் வாய்ப்பினை இந்த ஆல்பம் நமக்குத் தந்திடவிருப்பதும் ஸ்பெஷல் என்றுபட்டது ! எல்லாவற்றிற்கும் மேலாக, ஹாலந்திலிருந்துமே சு.&வி.ரசிகர்கள் இந்த ஆல்பத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து வினவிய வண்ணமுள்ளனர் ! So 2022-ன் most succesful இதழான சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் 1 க்கு வாரிசாக ஆகஸ்டில் "நானும் ரவுடி தான்" வெயிட்டிங் ! அதே ஹார்ட்கவர் ; அதே தயாரிப்புத் தரம் ; அதே பாணியில் 2 கதைகள் & அதே விலை ! 

ரைட்டு...! ஒரு குச்சி ஐஸ் தேர்வான கையோடு, அடுத்ததையும் தேர்வு பண்ணிப்புட்டால் வேலை முடிஞ்சதென்றபடிக்கே நடப்பாண்டு அட்டவணையின் "எங்கே ? எப்போது ?" பக்கங்களை நிதானமாய்ப் புரட்டினேன் ! பவுன்சர் மெகா இதழொன்று பிரதானமாய் கண்ணில்பட்டது & அதற்கான கோப்புகளும் தயாராய் இருப்பது நினைவிருந்தது ! ஆனால்...ஆனால்...கிட்டத்தட்ட 150+ பக்கத்து நெடும் சாகசம் எனும் போது இதனுள் புகுந்து, பணியாற்றி, கரைசேர்க்கும் வாய்ப்புகள் ரொம்பவே குறைச்சல் என்பது ஸ்பஷ்டமாய்ப் புரிந்தது ! In fact ஆகஸ்டின் நமது ரவுசுகளுக்குப் பிற்பாடு, ஒரேயொரு மாத இடைவெளியினில், டெக்சின் THE SUPREMO ஸ்பெஷல் & அதன் மறுமாதத்தினில் தீபாவளி மலராய் THE SIXER ஸ்பெஷல் காத்துள்ளதை எண்ணி இப்போதே லைட்டாய் வயிற்றைக் கலக்குகிறது ! இரண்டுமாய்ச் சேர்த்து கிட்டத்தட்ட 1000 பக்கங்கள் !! So ஆகஸ்டின் பணிகளைக் கரைசேர்த்த சற்றைக்கெல்லாமே அந்த ஆயிரம்வாலாவுக்கு பதில் சொல்லிட நமக்குத் தெம்பு எஞ்சியிருந்திட வேண்டி வரும் ! இருப்பதை முழுக்கவே இப்போதே ஆற்றி விட்டால், அப்புறமாய் 'சேது' விக்ரம் போல மலங்க மலங்கவே முழிக்க இயலும் என்பதால் பவுன்சருடன் கை கோர்ப்பது இப்போதைக்கு வேண்டாமென்று தீர்மானித்தேன் ! அதன் பின்னே கண்ணில்பட்டது ஸாகோர் ஸ்பெஷல் ! 2 முழுநீள முழுவண்ண சாகஸங்கள் எனும் போது அங்கேயும் கிட்டத்தட்ட 260 பக்கங்களுக்கான பணி அவசியமாகிடும் ! So பவுன்சருக்குச் சொன்ன அதே பதிலையே ஸாகோருக்கும் சொல்லிய கையோடு பக்கத்தைப் புரட்டினால் கண்ணில்பட்டது THE BIG BOYS ஸ்பெஷல் ! 

ஸ்பைடரின் கொலைப்படை (அதே ஒரிஜினல் 2 வண்ணங்களுடன்) ; மாயாவியின் கொலைகாரக் குள்ளநரி & இரும்புக்கை நார்மனின் "மனித எரிமலை" என்ற முக்கூட்டணி இதழ், Full MAXI சைசில், ஹார்ட்கவரில் என்ற திட்டமிடல் செம கூலானதாக எனக்குத் தென்பட்டது ! And சிலபல மாதங்களுக்கு முன்னமே அதே ஒரிஜினல் ஸ்பைடர் அட்டைப்படத்தினை நமது சென்னை ஓவியரிடம் போட்டு வாங்கியிருந்ததும் நினைவுக்கு வந்தது ; சும்மா தெறிக்க விட்டிருந்தார் ! So இவை 1985 ; 1986 காலகட்டங்களிலிருந்தான மறுபதிப்புகள் எனும் போது, கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பின்பான ரீபிரிண்ட் முயற்சியினில் நிச்சயமாய்த் தப்பில்லை என்றும்பட்டது ! ஒரிஜினலாக Fleetway-ல் இந்தக் கதைகள் வெளியான அதே சைசில் நாமும் இந்த இதழைத் திட்டமிட்டிருப்பதால், ரொம்பவே க்யூட்டாக இந்த இதழ் அமைந்திடுமென்று நினைத்தேன் !  "ஊஹூம்..இதுக்கு இந்த சைஸ் கொலை பாதகமாகிடும் ; இது பாக்கெட் சைசில் வந்தால் தவிர உருப்படவே உருப்படாது !" என்று ஆசீர்வதிக்க நண்பர்கள் காத்திருப்பர் என்பதில் இரகசியங்களில்லை தான் !  ஆனால் ஒரிஜினலின் சுவடுகளில்   வரவிருக்கும் THE BIG BOSS ஸ்பெஷல் - will be ஈரோட்டின் சம்பவம் # 2 ! Again ஹார்ட்கவர் ; இம்முறை VARIANT அட்டைகளுடன் ! ரொம்பச் சீக்கிரமே ஸ்பைடரின் அட்டைப்படத்தினையும், மாயாவியின் அட்டைப்படத்தினையும் கண்ணில்காட்டி விடுவேன் ! உங்களுக்கு எது ரசிக்கிறதோ, அதனை மாத்திரமே வாங்கிடக் கோருவேன் ! (பெர்சனலாய் எனது தேர்வு ஸ்பைடரின் அட்டையாகவே இருந்திடும் ! புத்தக விழா audience-ஐ மனதில் கொண்டு மட்டுமே மாயாவியார் ! (இரண்டையுமே நீங்கள் வாங்கிட வேண்டுமென்ற பேராசையெல்லாம் நிச்சயமாய்க் கிடையாது ; மாயாவி அட்டைப்படம் மிகக் குறைவாக மாத்திரமே ரெடி செய்திடவிருக்கிறோம் !







ரைட்டு....ரெண்டு பொஸ்தவமேன்று அறிவித்தோம் ; ரெண்டை தேர்வு பண்ணியாச்சு ! கடைக்கு ஷட்டர் போட்டுப்புட்டுக் கிளம்பலாமென்று பார்த்தால் மனசில் கொஞ்சமாய் நெருடல் ! பழமையினை ஆராதிக்கும் மெஜாரிட்டி நண்பர்களுக்கு, இந்த 2 தேர்வுகளிலும் தங்களின் நினைவலைகளை மீட்டெடுக்க கணிசமான ஐட்டங்கள் இருக்கக்கூடும் எனும் போது நிச்சயமாய் குஷியாகிடுவர் என்பது புரிந்தது ! அதே சமயம் சிறுபான்மையாக இருப்பினும், புது வாசிப்புகளுக்கு வழிகோலும் சமாச்சாரங்களை எதிர்நோக்கிடும் நண்பர்களுக்கு இங்கே ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிடும் என்பதும் உள்ளுக்குள் உறுத்தியது ! ஒரு சிறு வட்டத்தின் ஒவ்வொரு முகத்திலும் இயன்ற புன்னகையினை மலரச் செய்வதே நமது அபிலாஷை எனும் போது அவர்கட்கென என்ன செய்யலாம் ? என்று யோசிக்க ஆரம்பித்தேன் ! 

Of course படைப்பாளிகளின் ஒப்புதல் கிட்டின் - டின்டின் ஈரோட்டில் ஆஜராகிடுவார் தான் & அவர் ஏகோபித்த அபிமானத்தை ஈட்ட வல்லவர் என்பதும் தெரிந்த சமாச்சாரம் தான் ! ஆனால் படைப்பாளிகளின் ஒப்புதல் process நமக்கு இன்னமும் பரிச்சயமில்லா ஒரு விஷயம் எனும் போது, டின்டினை மாத்திரமே, why not something new ? எனும் அணியினருக்கான குச்சி ஐசாக்கிட மனம் ஒப்பவில்லை ! அப்பாலிக்கா என்ன ? "வண்டிய எட்றா சம்முவம் ! தூக்குறா அந்த கால ........அந்த கட்டவிரல வாய்க்குள்ளாற திணிறா !!" என்று அசரீரி கேட்டுச்சோ இல்லியோ, நாட்டாமை விஜயகுமாரின் மாடுலேஷனில் நம்ம மைண்ட்வாய்ஸ் கேட்டுச்சு ! மெகா இதழ்களாய் ரெடி செய்திட இயலாது போனாலுமே, "குற்ற நகரம் கல்கத்தா" ; "தீதும், நன்றும் பிறர் தர வாரா.." போன்ற இதழ்களின் ரேஞ்சுக்கு ஏதேனும் தயாரிப்பதில் நிச்சயமாய் நாம் தேய்ந்து விட மாட்டோம் என்று   தீர்மானித்தோம் !! So ஈரோட்டின் சம்பவங்களின் எண்ணிக்கை கூடுதுங்கோ !! 😎

PART : 3

ரைட்டு...புதுசாய் என்ன செய்யலாமோ ? என்ற யோசனை தலைக்குள் ஓடிக்கொண்டிருந்த வேளையில் நமது ஆன்லைன் மேளாவின் பார்முலா நினைவில் நிழலாடியது ! நிறைய ஜாலி இதழ்களுக்கு இடையே கொஞ்சம் சீரியஸான "குற்ற நகரம் கல்கத்தா" மிளிர்ந்தது போல, ஏதேனுமொரு கிராபிக் நாவலைக் களமிறக்கினாலென்ன ? என்ற மகாசிந்தனை துளிர்விட்டது ! And கைவசம் black & white கி.நா.க்கள் கணிசமாகவே இருப்பதால் அவற்றுள் ஒன்றை எடுத்து விட, இது அழகான தருணமாகிடக்கூடும் என்று நினைத்தேன் ! So மறுக்கா நோட்டை உருட்டினால் பளிச்சென்று தென்பட்டது "விதி எழுதிய வெள்ளை வரிகள் !" இதுவும் 1800-களின் காலகட்டத்தைப் பின்னணியாய்க் கொண்டதொரு ஆல்பம் ! To be precise 1812 !! ரஷ்யர்கள் மீது போர் தொடுத்து, தோற்றுப் போன பிரெஞ்சுப் படையில் மிஞ்சிய  ஒரு மிகச் சொற்பமான அணி தப்பி ஊர் திரும்ப பிரயத்தனம் மேற்கொள்கிறது ! ஆனால் அவர்களுக்கு முதல் எதிரியாய் நிற்பதோ மிரட்டும் ரஷ்ய பனிக்காலம் ! திரும்பிய திக்கெல்லாம் வெள்ளை வெளேரென பனிப்போர்வை விரவிக் கிடக்க, அதனூடே பயணிக்கும் மாந்தர்களின் பாடுகளை மிரட்டலான சித்திரங்களுடன் சொல்லியுள்ளனர் ! And artwork வேறொரு லெவல் !! So "விதி எழுதிய வெள்ளை வரிகள்" ஈரோட்டு சம்பவம் லிஸ்ட்டில் # 3 ஸ்பாட்டை பிடிக்கின்றது ! 


"சரி....ஒரு கி.நா.வை களமிறக்க ரெடியாகியாச்சு ! எண்ணிக்கைக்கு மூணு பொஸ்தவமாச்சு ! இது போதாதா ?" என்றபடிக்கே மோட்டை கொஞ்ச நேரம் வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தால், "இவ்ளோ வந்தாச்சு, இன்னும் ஒண்ணோ, ரெண்டோ கூடுச்சுனா என்ன குடியா  முழுகிடப் போகுது ?" என்ற கேள்வி ஓடியது உள்ளுக்குள் ! ரைட்டு - கமர்ஷியல் ரசிகர்களுக்கும் புடிச்சிருக்கணும், கி.நா.பிரியர்களுக்கும் புடிச்சிருக்கணும் ! அப்படியொரு கதையா செலெக்ட் பண்ணுனா எது தேறும் ? என்று யோசித்தால் ஆர்வமாய்க் கை தூக்கி நின்றார் மர்ம மனிதன் மார்ட்டின் !! Classy நாயகர் ; கமர்ஷியல் கிட்டும் தர வல்லவர் ; சிண்டைப் பிய்த்துக் கொள்ளச் செய்யும் ஆற்றலும் கொண்டவர் ! எல்லாம் சரி தான், but இவரை தான் ரெகுலர் தடத்தில் அவ்வப்போது பார்க்கிறோமே, what can be special now ?? என்ற கேள்வி எழுந்தது ! அப்போது தான் நினைவுக்கு வந்தது மார்ட்டின் தொடரில் கலக்கும் கலரில் உள்ள ஒரு மித நீள சாகசம் ! உருவாக்கப்பட்டதே கலரில் ; 64 பக்கங்களுக்குள்ளான racy சாகசம் ; so கட்டுக்குள் வைக்கக்கூடியதொரு விலையும் இங்கே சாத்தியமாகும் ! Maybe 2024-ன் அட்டவணையில் மார்டினின் கலர் அவதாரைக் கண்ணில் காட்டிடலாமென்று எண்ணியிருந்தேன் ; but இப்போதே செய்யக்கூடியதை அடுத்தாண்டு வரைக்கும் ஒத்திப் போடுவானேன் ? என்று தோன்றியது ! So மார்ட்டின் in கலர் - ஈரோட்டு சம்பவம் # 4 !! 

PART 4 :

ஆச்சு...மாயாவி, ஸ்பைடர் என்று கமர்ஷியல் மறுபதிப்ஸ் ; கார்ட்டூனில் பிரியமான சுஸ்கி & விஸ்கியும்....கி.நா. ஜானருக்கு ஒரு ஆல்பம்....ஆக்ஷன் கலந்த மர்ம த்ரில்லருக்கு மார்ட்டின் - அதுவும் கலரில் !! ஆனால் இன்னமும் ஏதோவொன்று..ஏதோவொன்று குறையுறா மெரியே ஒரு பீலிங்கு !! கிடாவெட்டுக்கு வந்திட்டு பந்தியில் சைவ பிரியாணியை பரிமாறினால், பாவப்பட்ட சப்ளையரின் கையைக் கடிக்கணும் போலவே தோணுவது எனக்கு மாத்திரமே இருக்காது என்று உறுதியாய் பட்டது !! அதுவும் ஒரு 'தல' landmark ஆண்டினில் தலையின்றி ஒரு கொண்டாட்டமா ? என்ற கேள்வி உள்ளுக்குள் உறுத்தியது ! ரைட்டு....அடுத்த பதிவினில் இது பற்றித் தீர்க்கமாய்த் தீர்மானிப்போம் என்றபடிக்கே இந்தப் படத்தை மட்டும் போட்டுக்கினு கிளம்புறேன் guys ! வியாழன் வாக்குறுதி வெள்ளி வரை நீண்டுப்புடலாகாதில்லையா ? So சொல்லுங்களேன் உங்களின் அபிப்பிராயங்களை !! Bye for now !! See you around !!


222 comments:

  1. Replies
    1. Retirement lifeன் முதல் நாள், முதல் கமெண்ட்..

      Delete
    2. வாழ்த்துக்கள் பத்து சார்ம் இனி எல்லாம் ஜெயமே...

      Delete
    3. அட டே பத்து சார் வாழ்த்துகள்💐

      Delete
  2. ஹைய்யா புதிய பதிவு...

    ReplyDelete
  3. எதே அத்தியாயம் 2 ஆ ஆ ஆ???? ஆகா ஆகா ஏற்கனவே எங்கேயோ போய்ட்டு இருக்கேன்...

    ReplyDelete
  4. குற்ற நகரம் கொல்கத்தா அருமையான படைப்பு. வெள்ளையர் எழுதும் இந்திய நாவல் என்றால், பாம்பு, பக்கிரி என இருக்கும் என நினைத்தேன். இப்படி பரபரப்பாக இருக்கும் எனத்தெரியாது. Greenmanor club, zaroff, தேவ ரகசியம் தேடலுக்கல்ல, பாரகுடா போன்ற மைல் கல் இதழ் இது.

    detective rubin-வழக்கமான எள்ளல், அசால்டு என ஓடுகிறது. மறுபடி முதல் பாகத்தை படித்து விட்டு, இதை திரும்ப படிக்க வேண்டும். சென்ற மாத டெக்ஸ் சாகசமும் அசத்தல் ரகம். ஆக மொத்தம் கலக்கலான சம்மர்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக மைல் கல் இதழ் தான் சார். இந்த வருடத்தின் டாப் இதழ்களில் ஒன்று...

      Delete
  5. Rub Ne - ஷாருக்கான் நடித்த ரப் னே பனாதி ஜோடி யா?

    ReplyDelete
  6. Thank you for the post. Take care of your health first sir

    ReplyDelete
  7. வணக்கம் நண்பர்களே!!!

    ReplyDelete
    Replies
    1. வெயிட்டிங் பார் பார்ட் 2

      Delete
  8. வணக்கம் நண்பர்களே🙏🙏

    ReplyDelete
  9. ரூபின் preview சும்மா தெறிக்குதே. தொட்டால் தெறிக்கும் போலவே இதுவும் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது உறுதி. இந்த வருடமும் போன வருடம் போலவே சம்மர் ஸ்பெஷல் தெறிக்க போகிறது...

    ReplyDelete
  10. ஈரோடு அறிவிப்பு வந்துவிட்டது என்று சந்தோசமா படிச்சா மறுக்கா வெய்ட்டிங்.மறுக்கா வந்து பார்ப்போம்

    ReplyDelete
  11. பத்தரைக்கு வெய்டிங் ஸார்.

    ReplyDelete
  12. வணக்கம் ஆசிரியரே

    ReplyDelete
  13. ஆஹா...மீண்டும் தொடருகிறதா.... :-)

    பத்தரைக்கா.... :-(

    ReplyDelete
  14. காத்திருக்கறதும் சொகந்தேன். ஆனா அதுக்குத் தகுந்த மாதிரி லிஸ்ட் வெயிட்டா இருக்கனும் இப்பவே சொல்லுப்புட்டேன்.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. போனதோ சித்திரை!
    கண்ணிலே நித்திரை!
    எப்ப வரும் பத்தறை?
    அந்த பதிவில் இருக்குமா அளப்பரை???

    ReplyDelete
    Replies
    1. தாறுமாறு தக்காளி சோறு

      Delete
    2. நீ ஏன் தவளை போல் கத்துற
      என நீங்கள் நினைத்தால், உங்களுக்கு உள்ளேயும் ஒரு கவிஞன் இருக்கான்

      Delete
  17. ///வாழ்க்கையில் மொத தபாவாய் ஆத்துக்காரனுக்கு துரோகம் செய்திடும் முனைப்பினில் காட்டுக்குள் இருக்கும் ஒரு காட்டேஜில் தனது கள்ளக்காதலனைச் சந்திக்கிறாள்//

    ---ஆஹா மாசாமாசம் ஒரு க.கா.லா...!!

    ReplyDelete
  18. ///கதையோடு நகர்ந்தால், நாலாம் பக்கத்திலேயே நான்கு தோட்டாச் சத்தங்கள் கேட்கின்றன & Mr.க.கா. காலுக்குள் கிடக்கிறான் பாடியாய் !! ...

    என்னஅஅஅஅஅஅஅஅஅ...போச்சாஆஆஆஆஆஆஆஆஆஆ

    ReplyDelete
  19. ///சர்வ நிச்சயமாய் இதுவொரு வித்தியாசமான த்ரில்லராகவே இருக்குமென்று உளுந்தவடை சொல்கிறது//--போடு வெடியை... செமங் சார்... சம்மர் ஸ்பெசல்ல வீக் லிங்கே பிரமாதப்படுத்தினா மத்ததுலாம் ஜாக்பாட்தான்....

    ReplyDelete
    Replies
    1. எது வீக் லிங்க் போங்க அந்தப் பக்கம்

      Delete
    2. நானும் கூட ரூபினி ரசிகன்தால
      ங்க.... காளை காளை முரட்டு காளை னு செமயா டேன்ஸ் போடும்....😍

      Delete
    3. "சிவராத்திரி .. தூக்கம் ஏது.." நீங்க இதை விட்டுட்டீங்க ..

      Delete
  20. ///56 வயது இயைஞன் பிறாண்டியெடுக்கக் காத்திருக்கிறான்///

    //For all you know , பிற்பாதியில் கதை பப்படமாக இருந்து, எனக்கு செம பல்பு தரவும் வாய்ப்புண்டு தான் ///

    ///அண்டா காக்கஸூம் ; குண்டா பாக்கசூம் என்ற உச்சாடனங்களுக்கெல்லாம் அவசியமே லேது ! ///

    ///இத்தினி சரக்கை பூதமாட்டம் காவல் காத்திக்கினு இருந்தும், இது போலான தருணங்களில் மறுபதிப்புகளையே கட்டி மாரடிப்பானேன்டா தம்பி ?" //

    ///பங்குனி ஸ்பெஷல்" ; "மங்குணி ஸ்பெஷல்" //

    ///நோவே இல்லியே...நம்பளுக்கு தேர் இழுப்பதெல்லாம் தேன்குழல் சாப்புடற மாதிரி....ரெம்போ ஷிம்பிள் !!///

    ///சாயச்சட்டியின் உபயமெல்லாம் மெய்யென்றே நண்பர்களில் சிலர் கருதி வருவது !! நெசத்திலே நாம புல்தடுக்கிப் பயில்வான்கள் தான் என்பது தான் கூத்தே ///

    ///குல்பி ஐஸ்க்ரீமே இருந்தாலும், அதற்கு வெளியிலாக ரெண்டு குச்சி ஐஸாவது வாங்கிச் சப்புவதில் தானே நமக்கெல்லாம் ஆனந்தம் ?!..//

    ////மனசுக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதாயின் வால்யூமை மட்டும் கூட்டிப்புடாதீங்கோ ? ///

    -----ஹா....ஹா...🤣🤣🤣🤣 இந்த இந்த ஸ்பான்டேனியஸ் சுயபகடி வெடிச்சிரிப்பு ஸ்டைலுக்காகத்தான் சார் மணிக்கணக்கில் காத்துள்ளோம்..
    அக்மார்க் நையாண்டி பதிவுங் சார்.

    அந்த சுய எள்ளல்களில் தெறிக்கும் ரியாலிடி..சான்ஸே இல்லை சார்..

    காமிக்ஸின் தோனியே சாட்சாத்!
    .

    ReplyDelete
    Replies
    1. அப்போ சச்சின்?

      Delete
    2. முக்கிய மேட்சுகளில் ஆடமாட்டரே!

      வேல்டுகப் அவருக்குமே தோனிதான் வின் பண்ணி தர வேண்டியதாச்சி.

      Delete
    3. தோனிக்கே ஜடேஜாதானே விண் பண்ணி கொடுத்தாரு..

      Delete
  21. 10.30 தாண்டிருச்சு .... டியர் எடி .... 🥰

    ReplyDelete
  22. சண்டேன்னா ரெண்டுன்றது இப்ப வியாழன்னா ரெண்டு (பதிவு) ஆயிடுச்சு 😍🤩

    ReplyDelete
  23. ஊப்பர் தேகியே ஜி !

    ReplyDelete
    Replies
    1. I first போடலாம்னு பாகர்ல ரிப்ரெஸ் பண்ணிட்டிருந்தேன். நல்லவேளை அந்தர்ல வந்து பாத்தேன்.

      Delete
    2. வாத்யாரே..
      செம்ம..செம்ம...
      மாயாவி மாமா+தானைத் தலைவன்+நார்மன் சித்தப்பா...!!

      கலக்கல் காம்போ..!!!!

      Delete
  24. வாரே வா... எப்போ continue????

    ReplyDelete
  25. பதிவு பார்க்காம யாரும் தூங்க போக மாட்டாங்க....
    🥱😴🍵☕☕🍵

    ReplyDelete
  26. அட்டகாசமான அறிவிப்பு சார்.

    1. சுஸ்கி விஸ்கி
    2. Big Boys ஸ்பெஷல்

    இரண்டுமே அருமை..

    அடுத்து என்ன என்பது தான் இப்போது என்னை போன்ற புதுமை விரும்பிகளுக்கு ஆன கேள்வி

    ReplyDelete
    Replies
    1. அட்டகாசமான அறிவிப்பு சார்.

      1. சுஸ்கி விஸ்கி
      2. Big Boys ஸ்பெஷல்

      இரண்டுமே அருமை..

      புதிய கதை என்ன என்பதை அறிய ஆவல்...

      Delete
  27. அடடே அட்டகாசமான கதைத் தேர்வுகள்.

    கார்ட்டூனும் உண்டு & க்ளாசிக் ஆக்சன் கதைகளும் உண்டு.

    சூப்பர்....

    இப்போதே திருவிழா களைகட்ட ஆரம்பிச்சுடுச்சே 😍🤩😁😁

    ReplyDelete
  28. பிக் பாய்ஸ் சப்போர்ட் பன்னியிருந்தேன் அதுவே தேர்வானது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது

    ReplyDelete
  29. ஆஹா. ஈரோடு புக் ஃபேர் தீபாவளி திருவிழாதான்.❤️💥💥💥

    ReplyDelete
  30. ஆசானே...
    ஆயிரம் முத்தங்கள் வெறியோடு....!!!!

    ReplyDelete
    Replies
    1. பார்த்து ஜி,உதட்டை கடிச்சி வெச்சிறாதிங்க...!!!

      Delete
    2. அறிவரசண்ணே..
      இது அந்த வெறி இல்லண்ணே..

      அதையும் தாண்டி புனிதமானது..!

      Delete
  31. சு.வி.2

    கொலைப்படை.. ஆஹா... ரெண்டும் மெகா ஹிட் ஆவப்போவது உறுதி😍😍😍😍😍

    ReplyDelete
  32. சம்பவங்கள் பரவசப்பட்டுத்துகின்றன

    ReplyDelete
  33. அட்டகாசம்.. பேரிக்காய் போராட்டம் எனது முதல் காமிக்ஸ்... :) ஏகப்பட்ட memories.. கணக்கு நோட்டில் வலது பக்க காலி மார்ஜின் எல்லாம் பேரிக்காய் குள்ளர்களை வரைந்து வைத்து அடி வாங்கியது நேற்று போல் இருக்கிறது...

    ReplyDelete
  34. ஆனா..
    தலைப்பு வச்சிருக்கீங்க பாருங்க...

    சம்பவம்~01
    சம்பவம்~02

    இதாங்க தரமான சம்பவம்!!!

    ReplyDelete
  35. வணக்கம் தோழர்களே...

    ReplyDelete
  36. வணக்கம் ஆசிரியர் ஸார்

    ReplyDelete
  37. Replies
    1. மேலே பாருங்கோ !!

      Delete
    2. ஆகா பாகம் 4 வேற இருக்கா?? இப்போதே 4 புத்தகம். எப்படியும் அரை டஜன் வந்துடும்.

      Delete
  38. இன்னிக்கு நைட்டு தூக்கம் போச்சே...
    ரெண்டு இரும்புக் கை ஆசாமிகளும்,அந்த சிலந்திப் பயலுமே கனவுல வருவாங்களே..

    ReplyDelete
  39. விசில் பறக்கற சத்தம் கேக்குதா?

    ReplyDelete
    Replies
    1. நல்லாவே கேட்குது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் அதிர் வேட்டு சத்தமும் கேட்கும் போல

      Delete
    2. ஒரு பதிவ போட்டு பலரையும் சந்தோசத்துல தூங்க விடாமல் செய்ய உங்களால் மட்டுமே முடியும்.

      ஈரோடு வரும் போது ஒரு லாரியும் வாடகைக்கு எடுக்கனும் போல 😍🤩

      இதுல சஸ்பென்ஸ் நாவலோட அடுத்த அத்தியாயம் போல ஆர்வத்தை தூண்டுறீங்க 😁😍🤩

      Delete
    3. இல்லியா பின்ன மாப்பு....புதிய கி.நா... அதும் பின்னனியே அசத்தது....
      இதைதான் முதல் ரீடிங் ஆக எடுக்கணும்

      Delete
  40. பாகம்4ல என்னவோ?????

    தலயா???

    தளபதியா???

    காத்திருப்போம்....

    திங்க கிழமை CSKவுக்கு..

    வியாழக்கிழமை ஈரோடுக்கு...

    ReplyDelete
  41. @செனா அனா ஜி
    @திருநாவுக்கரசு

    விதி எழுதிய வெள்ளை வரிகள்" ஈரோட்டு சம்பவம் லிஸ்ட்டில் # 3
    & மர்ம மனிதன் மார்டின்

    சந்தோசமா?? கொண்டாடுங்க💐💐💐

    ReplyDelete
    Replies
    1. PART 4 உசக்கே சார் !

      Delete
    2. *யாஆஆஆஆஆஆஆஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈ தலயேதான்*🤩🤩

      ஆஹா....ஆஹா... தன்யனானோம் சார்...தல ரசிகர்கள்...

      Delete
    3. வெள்ளி புலர்வதற்கு ஒற்றை நிமிடம் முன்னே பதிவை நிறைவு செஞ்சாச்சு !

      Delete
    4. தங்களின் இந்த ஆதீத பனிசுமைக்கு இடையே புதிய தலை கதை வேணாம் சார்.. பழசே போட்டுவிடலாம்...

      இருக்கவே இருக்கு ஓநாய் வேட்டை& இரத்ததாகம்...

      சின்னதாக போதும் னா அதிரடிக்கனவாய் அல்லது
      யமனுடன் ஓரு யுத்தம்..இரண்டும் சிங்கிள் ஆல்பம்தான்.. தங்களுக்கு இலகு!

      Delete
  42. So far the list is good sir - one TEX-75 celebration album added would be good too. Another option can be a cartoon album sir - too dry with so much action all around !

    ReplyDelete
    Replies
    1. Tintin if approved in time would add to the flavor & color sir...

      Delete
  43. பனியில்லாத மார்கழியா?
    தலையில்லாதா ஈரோடா.......😍😍😍😍😍😍😍😍😍

    ராவு 12மணிக்கும் அதுகளப்படுத்த தங்களால் தான் சார் இயலும்...

    ரொம்ப மகிழ்ச்சி!!!

    ReplyDelete
    Replies
    1. ஹி..ஹி..11-59 க்கு !

      Delete
    2. ஆமாங்க. தலயில்லேன்னா ஈரோடு இனிக்காது. சரமா வெடிக்காது. அதனால தல கலர் ஸ்பெசல் ஒண்ணு கண்டிப்பா வேணும். எம்புட்டு செலவானாலும் பரால்லை.

      Delete
  44. முடிவு பன்ச் தலையுடன் செய்கை சார்.

    ReplyDelete
    Replies
    1. அட, நீங்களும் முழிச்சு தானா கிருஷ்ணா ?

      Delete
    2. நான் கூட முழிச்சு

      Delete
    3. ஓகே இதற்கு மேல முழிச்சினா தேக நலத்துக்கு நல்லதில்லை... பாகம்1, 2, 3,4...மாதிரி முறைப்பு 1,2,3னு.....ஹி..ஹி..

      Delete
    4. நீங்க தூங்க விடுவதில்லை சார் 😁 உங்களுடன் இரவு பதிவு பயணம் செய்வதே சுகம் தான் சார் 🙏🏻

      Delete
    5. ரொம்ப நாளாச்சில்லியா கிருஷ்ணா - இந்த ராக்கூத்துக்கள் அடிச்சு ? இன்னும் இதெல்லாம் நமக்கு முடிகிறதாவென்று பார்க்க ஒரு மைக் டெஸ்ட்டிங் !!

      Delete
  45. அட்டகாசமான அதிரடி அறிவிப்புகள் சார். பேரிக்காய் போராட்டம் சிறுவயதில் படித்திருந்நும் புத்தகம் இல்லை. அந்தக்குறை நீங்கப்போகிறது. “விதி எழுதிய வெள்ளை வரிகள் “ - சித்திரங்கள் அட்டகாஷ்.

    ReplyDelete
  46. கார்சன் பாட்டு என்று சொல்வதால் கார்சனின் கடந்த காலமாக இருக்குமோ

    ReplyDelete
  47. அருமையான ஆரவாரமான அறிவிப்புகளை சத்தமின்றி செய்து விட்டீர்கள் ஐயா!

    நன்றிகள்!

    ReplyDelete
  48. அடுத்த பதிவு எப்பங்க ஆபிசர்?

    ReplyDelete
    Replies
    1. மஹி ஜி...
      🤣🤣🤣🤣🤣🤣🤣

      Delete
    2. இருங்க...இன்னிக்கி பக்கத்து ஊட்டு பாத்திரங்களையும் சேர்த்து வாங்கியாற சொல்றேன் ; தேய்க்க விட்டா தான் சரி வருவீங்க !

      Delete
    3. 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

      Delete
  49. மார்ட்டின் கலரிங் அள்ளுது

    ReplyDelete
    Replies
    1. 2020 -ல் உருவான ஆல்பம் சார் ; புதுயுக கலரிங் !

      Delete
  50. இதோ, 3 நாளைக்கு முன்பு தான் நடுராத்திரியில் சந்தோஷத்துல ஓ ஓ ஓ வென்று கத்தினேன். இப்போது, அதைப் போல ஓ ஓ வென்று கத்த வேண்டியதாகி விட்டது பதிவைப் படித்ததும். என்னவொரு அறிவிப்பு, செம்ம. உற்சாகம் சும்மா கரைப் புரண்டு ஓடுகிறது சார்.

    ReplyDelete
    Replies
    1. நம்மோடு பயணிக்கும் முக்கியமானவர்கள் எல்லோருமே 'தல' என்ற அடைமொழிக்காரர்கள் தானே சார் ?! திங்கள் இரவின் குதூகலத்துக்காக வியாழனின் குஷி !

      Delete
  51. Replies
    1. வேல்..வேல்...!!

      Delete
    2. வெற்றி வேல்

      Delete
    3. செம சூப்பர் சார்...என்னோட செல் சார்ஜ் இல்லை....அதான்....கோவில் வந்து சேர இவ்வளோ நேரமாச்சு....எவ்ளோ அனுப்பும் மொத்தமா கொரியருடன் கொலைப் படை வேரியண்ட் கவர் இரண்டுக்கும்னு சொன்னா செந்தூரான் அருளுடன் பணத்தை அனுப்பிடலாம்

      Delete
    4. எல்லா புத்தகங்களுக்கும் சேத்து

      Delete
  52. Super sir..I am a big fan of Super Star. Whenever I see him in screen, I feel joyful, happiness, pleasure, delight, cheerful etc , Even though so many actors or person are there in cine field, he is the only person continue to bring smile on the face of all from 3-60's, just by seeing him. I am getting same feeling whenever I read your blog. This summer announcement are extremely superb, and this year is going to be one of the memorable year in Tamil Comics history. Continue your great work Sir, and we will be greatful to you. We wish you all the best, Stay blessed...😊

    ReplyDelete
  53. புதிய டெக்ஸ் கதை, ஒரு மெகா சைசில்

    ReplyDelete
  54. திருச்செந்தூரிலிருந்து ஸ்டீல்க்ளா.....
    செம் சூப்பர் பதிவு சார்....படிக்க படிக்க திகைப்பு...மகிழ்ச்சி...ஓசி செல் ...சார்ஜ் ஏற்றி நாளை வருகிறேன்...நன்றிகள் பல கோடி

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. வணக்கம் சார்.
    தங்கள் தகப்பனார் நலம் பெற வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //"ஊஹூம்..இதுக்கு இந்த சைஸ் கொலை பாதகமாகிடும் ; இது பாக்கெட் சைசில் வந்தால் தவிர உருப்படவே உருப்படாது !"//

      @ ஆசிரியர் விஜயன் சாருக்கு மட்டுமேயான எனது கருத்து...

      2007ம் வருடம் என்று நினைக்கிறேன். உங்களுக்கு நமது 10 ரூபாய் காமிக்ஸ் வெளிவருகையில், ஒரிஜினல் லே அவுட்டு மாற்றாதீர்கள்... நல்ல தரமான பேப்பரில் ஒரிஜினல் லே அவுட்டு மாற்றாமல் வெளிநாட்டு தரத்துடன் தாருங்கள், என்று அப்போதே ஒரு இமெயில் அனுப்பி இருந்தேன். எப்போதுமே சைஸ் விஷயத்தில் எனது கருத்தினை அழுத்தமாக இங்கே பிளாகிலும் சொல்லி கொண்டு தான் வந்திருக்கிறேன்...

      நீங்கள் முன்பு போல் லே அவுட் ஆர்ட்டிஸ்ட் யாரும் இல்லாத நாட்களில் best of all classic சார்லி இதழின் லே அவுட்டினை கன்னாபின்னாவென்று கிராப் செய்து சிதைத்து இருப்பதை ஒரு 1986 திகில் காமிக்ஸ் ரசிகனாக என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நாட்களாக வேண்டி வருவதை தரமற்ற முறையில் சிதைத்து இருப்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை.

      காமிக்ஸை பின்னோக்கி இழுக்கும் சிறுபிள்ளை வேண்டுகோள்களை செவிமெடுத்து ஒரு 100 பேருக்கு பிடித்திருந்தால் தரத்தில் பின்னோக்கி செல்வீர்களா என்ன, சார்? அது எப்படி காமிக்ஸ் வளர செய்விக்கும்?

      ப்ளோ அப் செய்திட்ட ஸ்பைடர் கொலைப்படை 1985 அட்டைப்படத்தை 1989ல் முதன் முறையாக கண்டபோது சிலையாக நின்ற தருணம் இப்போதுள்ள ரசிகர்களுக்கு புரிய வைக்க இயலாது...

      காதில் அளவுக்கு அதிகமான சினிஸ்டர் செவேன் போன்ற கதைகளுக்கு மட்டுமே தேவையான எடிட் செய்து அது நிச்சய வெற்றி பெற பாக்கெட் சைஸ் போன்ற மாற்றம் தேவை என்பேன்.

      மற்றபடி எப்போதுமே ஒரிஜினல் லே அவுட் அபிமானி நான்.
      நான் சொல்ல நினைப்பதை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை... எனினும் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

      Delete
    2. 10 ரூபாய் புக் வரும்போதே 50 ரூபாய்க்கு மாற்றி ஒரிஜினல் தன்மை மாற்றாமல் தரமான பேப்பரில் வெளியிட கோரிக்கை வைத்தவன் தானே நான்... இப்போது எனது கருத்தினை நாகரிகமான வார்த்தைகளில் சொல்வது தவறாகும்?

      Delete
  57. கார்சனின் கடந்த காலம் மறுக்கா வருவதற்கான அறிகுறி பலமா இருக்கே? தாத்தா தொட்டில உக்காந்துட்டு குளிக்கறதோட இல்லாம பாட்டு வேற பாடறேங்கறாரு. கண்டிப்பா அப்ப கார்சனின் கடந்த காலந்தான். அடுத்த பதிவுல தீர்மானமா சொல்லி முன்பதிவு தொகையை சொல்லிட்டா உடனே அனுப்பிடுவோமே. 😍😍😍😍

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா. பட் என்று சஸ்பென்சை உடையுங்கள் சார். ஆக மொத்தம் 5 புத்தகங்கள் இது வரை. கார்சனின் கடந்த காலமாக இருந்தால் நான் ரொம்ப ஹேப்பி.

      இரவு தூங்க சென்றால் கலர் கலராக காமிக்ஸ் கனவுகள். நம்ம குணா கரூர் சொன்னது போல தூக்கமும் போச்சு. நாளைய பதிவில் எவ்வளவு பணம் அனுப்ப வேண்டும் என்று சொல்லுங்கள் சார். அப்படியே அந்த டெக்ஸ் கதையும் என்னவென்று சொல்லி விடுங்கள். நன்றி நன்றி நன்றி

      Delete
    2. மேக்சிஸ் ஹார்டு பவுண்டுல ...சித்திரங்கள் இழுக்கப்படாம....மெக்சிகன் டாப் கதய நாமும் டாப்பா தரனும்....இது போல் இது வர வரலன்னு நம்ம டெக்சே கதறனும்

      Delete
  58. 1. பிக் பாய்ஸ் ஸபெசல் - 3 கதை
    2. சுஸ்கி விஸ்கி - 2 கதை
    3. விதி எழுதிய வெள்ளை வரிகள்
    4. மார்ட்டின்
    5. டெக்ஸ்
    6. டின்டின்
    7-10. மினி காமிக்ஸ்.

    ஈரோடு அதிரப் போகுது.

    ReplyDelete
    Replies
    1. 10 மினி காமிக்சுங்களா?? ☺️☺️☺️☺️

      Delete
    2. சிவகாசிக்காரரு ஏற்கனவே என்னை பாத்திரம் தேய்க்க அனுப்பலாமா இல்லே துணி துவைக்க அனுப்பலாமான்னு யோசிச்சுட்டு இருக்காரு. பத்து மினி காமிக்ஸ் கேட்டா அவ்வளவு தான்.

      Delete
    3. செம்ம ஷெரீஃப். டின்டின், 4 மினி காமிக்ஸ் ஆக மொத்தம் 10. நம்ம Target achieved. போதும் போதும்.

      Delete
    4. தப்பில்லே PFb. நாலுபேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லே..(நாயகன்)

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. பத்து சார் அது PFB ye இல்ல

      Delete
    7. இன்னுமோர் ஸ்பெசல் அறிவிப்பு இருக்கும்னே தோனுவது எனக்கு மட்டுந்தானா

      Delete
  59. வாத்யாரே....
    நேத்திக்கு நைட்டு தூக்கம் போச்சு...
    கண்ணு எரிச்சல் வேற இப்ப...
    இன்னிக்கு பொழப்பு சிரிப்பா சிரிக்கப் போவுது...🐵🐵

    ReplyDelete
  60. கிராபிக் .கிளாசிக் கார்ட்டூன். அட்வென்ச்சர். தல. ரவுண்ட் பன் ஆல் வெரைட்டிஸ். சலோ ஈரோடு

    ReplyDelete
    Replies
    1. அடடே ஆமா சலோ ஈரோடு

      Delete
  61. டெக்ஸ் புதுசு 2 பழசு 2

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஸ்டீலோட காத்து இங்கே கொஞ்சம் அடித்து இருக்கு போல

      Delete
    2. இருவரும் கோவைக்காரங்க தானே.... இப்படி கூட கேட்கலனா எப்படி??

      Delete
  62. எழுந்தவுடன் பரபரவென இங்கே வருகை தந்தாயிற்று...பட்டாஸான இதழ்கள் ஆகஸ்டில் ஆன்லைன் கொண்டாட்டம் போல மீண்டும் ஒரு கொண்டாட்டம் சார்..

    சூப்பர் சூப்பர் சூப்பர்..

    டெக்ஸ் இல்லாமல் ஒரு திருவிழாவா சீக்கிரம் அதையும் சொல்லி விடுங்கள் சார்..

    ReplyDelete
  63. இளம் டெக்ஸ் ஒரு 5 பாகம் அல்லது கொடூர வனத்தில் டெக்ஸ்.

    ReplyDelete
  64. சம்பவங்கள் அனைத்தும் அதிரி-புதிரியாக உள்ளதே.. ஆஹ்ஹா... ஆஹா...

    ReplyDelete
  65. All your selections are looking good sir. But it seems you are overloading yourself again sir. Take care. Waiting for next announcement on Tex.

    ReplyDelete
  66. Vijayan sir, please share the total price for these special books including Tex. Thank

    ReplyDelete
  67. டியர் விஜயன் சார்,

    சோக மூஞ்சியுடன், தலையை தொங்கப் போட்டுக்கொண்டு, ஸ்லோமோஷனில் நடக்கும் ஹீரோக்களான ஜான் சில்வர் (John Havoc) மற்றும் இரும்புக்கை நார்மன் (Gaunt) - இவர்கள் இருவருமே எனக்குப் பிடித்தமானவர்கள் தான். ஒரிஜினல் பெயருக்கேற்ப காண்டாகச் சுற்றும் நார்மனின் கதைகளைப் படித்து முப்பது வருடங்களுக்கு மேலிருந்தாலும், அவரின் அந்த கடுப்பு அப்படியே மனதில் பதிந்திருக்கிறது!

    கவர் வேரியன்ட் என்ற கான்செப்ட்டில் பெரிதாக உடன்பாடில்லை, இதற்குப் பதிலாக, மூன்று கதைகளையும் தனித்தனி அட்டைகளுடன் தனித்தனி இதழ்களாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும், அப்படியே அந்த பாவப்பட்ட இரும்புக்கை நார்மனுக்கும் ஒரு அட்டை கிடைத்தது போல இருக்கும்! இது முடியாது என்றால், மேற்சொன்ன இரண்டு ஹீரோக்களைப் போலவே, பேன்ட் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக் கொண்டு, கடுப்பாக நடைபயில்வதைத் தவிர வேறு வழியில்லை :-)

    ReplyDelete
    Replies
    1. // அந்த பாவப்பட்ட இரும்புக்கை நார்மனுக்கும் ஒரு அட்டை கிடைத்தது போல இருக்கும்! இது முடியாது என்றால், மேற்சொன்ன இரண்டு ஹீரோக்களைப் போலவே, பேன்ட் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக் கொண்டு, கடுப்பாக நடைபயில்வதைத் தவிர வேறு வழியில்லை :-) //

      ROFL

      Delete
    2. பின்னட்டையிலே நார்மனாருக்கும் இடம் குடுத்துப்புட்டா சிக்கல் தீர்ந்தது கார்த்திக் !

      Delete
    3. நடை பையின்று ஈரோடு வந்துருங்க நேர்ல கேட்டுக்கலாம்

      Delete
    4. நார்மன் பின் அட்டையில் வருவது உறுதியாகி விட்டதால் நம்ப கார்த்தியை நடை பையின்று ஈரோடு வந்து நேரில் வாங்கி கொள்ளலாம் என சொல்லுங்க கிருஷ்ணா :-)

      Delete
  68. அனைத்து அறிவிப்புகளும் அருமை சார்,, மார்ட்டின் மீள் வருகை என்னை திக்குமுக்காட செய்து விட்டது,, எங்கே இனி இவரின் கதைகளை இனி பார்க்க முடியாதோ என்று நினைத்து கொண்டு இருந்தேன்,, இதற்காகவே ஈரோடு வர திட்டமிட வேண்டும்,,,

    ReplyDelete
    Replies
    1. மார்டினை டிக் அடித்த போதே உங்களுக்கு ரசிக்குமென்ற ஞாபகம் வந்தது சார் ! Oh yes, welcome to Erode !

      Delete
  69. 1. டின் டின்!
    2. சுஸ்கி விஸ்கி!
    3. பிக் பாய்ஸ் ஸ்பெஷல் ! (2 வேரியண்ட் கவர்ஸ்)
    4.விதி எழுதிய வெள்ளை வரிகள் (கி.நா)
    5.மார்ட்டின் கலரில்..

    மேலும்....
    .
    .
    .
    .
    .

    6.டெக்ஸ வில்லர் (கா.க.கா ?!?!)
    7. மினி காமிக்ஸ் ( a set of 3 or 4)

    ReplyDelete
  70. இரும்புக்கை நார்மன் .... மார்டின் .... ஸ்பைடர் இரும்புக்கை.... கலக்கல் அறிவிப்புகள். ஈரோடு கலைக்கட்ட போகிறது.

    2023 தான் அதிகமான தமிழ் காமிக்ஸ் வெளிவந்த வருடமாக இருக்க போகிறது .... எடிட்டர் செம்ம மூடில் இருக்கிறார் .... 🥰

    அப்படியே, பிரியமான எடிட்டர் எந்த நாளில் ஈரோட்டில் இருப்பார் என்று தேதி குறித்து விட்டீங்கன்னா, டிக்கெட் போட வசதியா இருக்கும் .... 👍

    ReplyDelete
    Replies
    1. ஆகஸ்ட் 4 புத்தக விழா ஆரம்பம் சார் ; so ஆகஸ்ட் 5 க்கு சந்திப்பு - God willing !!

      Delete
  71. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. விஜயன் சார்,

      96 மணி நேரங்கள் - ரூபியின் முதல் கதை மிகவும் பிடித்து இருந்தது; அதுவும் அம்மணிக்கு நீங்கள் எழுதிய தெனாவட்டு வசனங்களை மிகவும் ரசித்தேன்! கடந்த வருட அறிமுகத்தில் இவர் எனக்கு மிகவும் பிடித்தவர்!
      ஆர்வமுடன் "96 மணி நேரங்கள்" கதைக்கு காத்திருக்கிறேன்!

      சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் - "பேரிக்காய் போராட்டம்" சிறுவயதில் பக்கத்துக்கு வீட்டில் வாங்கி படித்ததாக ஞாபகம் ஆனால் இப்பொது கதை சுத்தமாக ஞாபகம் இல்லை! "நானும் ரவுடி தான்" புதிய கதை! இரண்டு (பழையது + புதியது) கதைகளையும் படிக்க மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன்! இந்த கதைக்குகளுக்கு கடந்த முறை மொழி பெயர்ப்பு செய்த நண்பர்தான் இந்த முறையும் செய்கிறாரா சார்?

      2023 அட்டவணையில் "THE BIG BOSS ஸ்பெஷல்" என நீங்கள் அறிவித்த போது எப்போதுடா இந்த புத்தகங்கள் வரும் என்று ஆர்வமாக இருந்தேன், அது ஈரோட்டில் வருவது மகிழ்ச்சி! கொலைகாரக் குள்ளநரி முதல் முறையாக படிக்க போகிறேன்! "மனித எரிமலை" இந்த கதையை படித்து இருக்கிறேன், என்னிடம் இந்த புத்தகம் உள்ளது! மீண்டும் படிக்க ஆர்வமுடன் உள்ளேன்! ஸ்பைடரின் ரசிகன் நான் "கொலைப்படை" யை மீண்டும் படிக்க இப்போதே ரெடி சார்!

      "விதி எழுதிய வெள்ளை வரிகள்" கண்டிப்பாக படிப்பேன்! அதுவும் எதிரியாய் நிற்பதோ மிரட்டும் ரஷ்ய பனிக்காலம் ஆர்வத்தை கிளப்புகிறது சார்!

      மர்ம மனிதன் மார்ட்டின் கடந்த சில கதைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, இந்த முறை அனைவரையும் கவர்ந்து விடுவார் என நம்பிக்கை உள்ளது அதுவும் வண்ணத்தில் கூடுதல் சிறப்பு! இவரின் கதை இதுதான் முதல் முறையாக வண்ணத்தில் வருகிறதா சார்?

      டெக்ஸ் தல' landmark' ஆண்டினில் தலையின்றி ஈரோடு விழா களைகட்டாது எனவே ஒரு டெக்ஸ்&கோ வின் புதிய அல்லது பழைய கதையை போட்டு தாக்குங்கள் சார்!


      ஈரோடு விழாவில் சீனியர் எடிட்டர் ஐயாவை முடிந்தால் அழைத்து வாருங்கள், இல்லை என்றால் ஈரோட்டில் இருந்த படி அவருடன் ஒரு ஆன்லைன் உரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்கள் சார்!

      இந்த அறிவிப்புகள் எல்லாம் மகிழ்ச்சியை கொடுக்கிறது! அதே நேரம் நீங்கள் எங்களுக்காக அடிக்கும் குட்டிகரணம்களை நினைத்தால் கஷ்டமாக உள்ளது சார்! உடம்பை கவனித்து கொள்ளுங்கள்!

      மிக பெரிய பதிவு சார்! காமிக்ஸ் அட்டவணைக்கு உள்ளது போல ஒரு பெரிய பதிவு :-)

      Delete
  72. அருமை.. நன்றி சார்.. ❤️

    ReplyDelete

  73. ஒளவையாரின் தனிப்பாடல் ஒன்று வள்ளல் என்று தன்னைப் புகழ்ந்து கொள்ளும் கோரைக்கால் ஆழ்வான் கொடையைப்பற்றி இலக்கியச்சுவையுடன் எவ்வளவு அழகாக சித்தரிக்கிறது பார்ப்போமா?

    யானை ஒன்றை பரிசாக அளிக்கிறேன் என்று முதலில் சொன்ன அந்த கோரைக்கால் ஆழ்வான் பிறகு யானை தர இயலாது. குதிரை தருகிறேன் என்று வாக்களித்து பிறகு அதையும் மாற்றி எருது தருகிறேன். ஒரு சேலை வேண்டுமானால் தருகிறேன் என்று கீழே கீழே இறங்கி என் உள்ளங்கால் தேய, தேய அலைய விட்டானே தவிர, எதையுமே வழங்க அவனுக்கு மனம் வரவில்லை என்கிறார்.

    “கரியாய்ப் பரியாகிக் கார்எருவை தானாய்
    எருதாய் முழப்புடவை ஆகித்-திரிதிரியாய்
    கோரைக்கால் பெற்றுமிகத் தேய்ந்து கால் ஓய்ந்ததே
    கோரைக்கால் ஆழ்வான் கொடை.”

    இங்கோ ஆடு கிடைக்குமா என எதிர்பார்த்தால் இரண்டு யானையை கொடுக்கிறார் சிவகாசி வள்ளல். புகழ்ந்து எழுதிட ஔவை போல் தமிழ்ப் புலமை கைவசம் இல்லையே என்ற வருத்தமே மிச்சமாகிறது.

    கன்னத்தில் காதலியின் இதழ் போலே
    வண்ணத்தில் மின்னும் மார்ட்டின்.

    கிண்ணத்தில் அமுதைப் போலே
    எண்ணங்களைத் தூண்டும் கிநா.

    கல்லினுள் சிறு தேரைக்கும்
    கருப்பை அண்டத்து உயிர்க்கும்
    புல்உணவு அளித்துக் காக்கும்
    நம் நாதன் " என்பதற்கேற்ப

    சொற்ப எண்ணிக்கை என்றபோதும் மறுபதிப்பில் அவ்வளவாக விருப்பமில்லாதவர்களும் ஆனந்தமடைய வேண்டி அறிவிப்பு வெளியிட்டிருக்கும் எடிட்டர் சார் அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete
  74. சார் மீண்டும் பதிவு படிக்க படிக்க முகத்தில் விரவிய புன்னகை....எனக்கெல்லாம் வலிக்கலியே என மகனை தூக்கி வைத்தபடி ....17 என நினைத்து 25 கிமீ கடந்த பின் ...காலை எழுந்து கடலில் மூழ்கி செந்தூரானை கும்பிட்டு....வீடு வந்து எழ இவ்வளோ நேரம்....



    நேற்றிரவே படிக்க படிக்க....சித்திரக்கதையோ மொத்துர கதையோ வசனம் காது வரை விரவினாதான் மகிழ்ச்சி அணியிலிருக்கும் எனக்கு ரூபினின் தங்கள் பதிவு ஒரு கிலோ அல்வா துண்டுகளாய் பட ஒரே வாயில் விழுங்கிய படி பரபரக்க ...பாய....தொடரும் ஆகா நம்ம பய புள்ளைகளும் காத்திருந்து தான் படிக்கனும் போல என் அல்ப சந்தோசம் ஜில்லிட....நமக்கு அந்த கவலையில்லாம சுஸ்கி விஸ்கி நா கேக்கலன்னாலும் ஏக சந்தோசத்தை விதைக்க..இத விட பொருத்தமான கதை கிடைக்காதென கூவ ஆசை பட்டு சுற்றி கிடந்த சனங்களை பார்த்து கலவரத்தோடடக்கிய படி.....ஒரு மே மாதம் நானும் என் அண்ணனும் குரும்பூரிலிருந்து 4 கிமீ சுகந்தலை வரவர படித்து முடித்தது பசுமையாய் நினைவிலாட....அதே போல் நேற்றும் நடைபயணம் அதே கதைகளை படித்து போலிருந்த பால்யம் மீள....



    அடுத்து என கத்திய குரலை எனக்கே கேட்டு விடாம கண்ட்ரோல் செய்த படி பாய....
    பௌன்சர் வார்த்தை கலவரபடுத்த...பின்னால் வரட்டுமே ரூட்66 இருக்கே என எண்ண....ஆஹா இப்பல்ல...சாகோர் 200 பக்க சொச்சமும் கிடையாதா ...சரிதா ரூட் 66 கிடையாது என கன்ஃபார்மாக...இரு வண்ண வார்த்தை...குபீரென பல வண்ணங்கள் மனதில் பாய ....இப்ப நிச்சயமா இராதென நினைத்த எனக்கோ உங்க தலை மறைந்து அங்கே செந்தூரான் சிரித்த படி ...வேலால் எழுதுகிறான்....மேக்ஸி...ஹார்டு பவுண்டட்டை...இரு வித கவர்....அதே அட்டைப்படம்....மேக்சிஸ் இதான் பர்ஸ்ட்டு ஹார்டு பவுண்டென உணர்ச்சி வசப்பட மண்டையில் தட்டுது 60...70 அட்டைகள்....தலையைத் தடவியபடி 130 பக்கத்துக்கு இது முதல்முறையாக அட்டகாசமா இருக்குமே என சொறிகிறேன்.....
    ...
    நீண்ட நாள்...காத்திருப்பு ....ஏக்கங்கள் ஒருவராக முடிவுரை எழுதப்பட இதற்கு மேல் கேக்க என்ன இருக்கு தங்களிடம் இனி எதைத்தந்தாலுமே வாங்குவோம் என சந்தோசமாய் திருப்தியாய் நழுவ....அந்த 13 ஸ்பின் ஆஃப் கொத்து...வன் மேற்கு நீங்க சொன்ன 3 வருட கொத்து.....தோர்கள் கொத்து....என சலனமற்ற நீரில். ...பாய்ந்த கல் வட்ட அலைகளை தொடர்ந்திட....நாமும் அடங்கப் போவதில்லையே...என பரிதாபமாய் தங்களை பாக்க செந்தூரான் மறைய...அங்கே கலக்கமாய் சந்தோஷத்தோடு ஒரு முகம் தென்பட

    ReplyDelete
    Replies
    1. // எனக்கெல்லாம் வலிக்கலியே என மகனை தூக்கி வைத்தபடி ....17 என நினைத்து 25 கிமீ கடந்த பின் //

      Super Makka!

      Delete
    2. அதைத் தொடர்ந்து நிச்சயமா அரை டசனாவது வருமென்னு ....ஆவலாய் தொடர.... பனிக்கு பொருத்தமாய் ....கோடைக்கு மணி கட்டுவதாய்....விதி எழுதிய வெள்ளை வரிகள்...சூப்பர் சார்....ரூட் 66 ஆ அடுத்தென பாய...ராபின் வண்ணக் கதை....அருமை....அடுத்து டெக்ஸ் எல்லாம் சரிதான்....ஏதோ குறையுதேன்னு பாத்தா ரூட் 66 ....வாய்ப்பிருந்தா அதும் வருமென்று படி ....தொடர்கிறேன் அரை டசனை பிடிப்பீங்க என வழக்கம் போல...சென்ற முறை 10 தந்த போது கூட ஏதோ இருந்தும் இல்லாமல் பட்டது....இம்முறையோ எல்லாம் பெற்ற உணர்வு...சூப்பர் சார்

      Delete
    3. ஆஹா மர்மமனிதன் மார்ட்டினா....அதும் வண்ணத்தில்...சூப்பர் சார்....ராபின்னு நெனச்சேன்....போன மாதம்தா கனவின் குழந்தைகள் படிச்சிட்டு ....இன்னும் வந்தா நல்லாருக்குமேன்னு நினைத்தேன்...இன்ப அதிர்ச்சி...அதும் வண்ணத்ல

      Delete
  75. டெக்ஸாவது புதிய கதையை கொடுங்களேன் ப்ளீஸ் சார்

    ReplyDelete
  76. 50 வயதை தாண்டியவர்கள் மறு பதிப்பில் ஆர்வம் காட்டுகிறார்களா என்று தெரியவில்லையே?

    ReplyDelete
    Replies
    1. சார் என்னைப் போல் நிறைய புதியவர்களும் இருக்கோங்க.. எங்களுக்கு இது மறுபதிப்பு இல்ல.. ஒரு கிளாஸிக் ஹிட் புத்தகத்த படிக்கக் கிடைக்கிற மறுவாய்ப்பு.

      Delete
    2. டெக்ஸ் மட்டுமல்ல பிக் பாய்ஸ் ஸ்பெஷலில் இருக்கும் எந்த கதையையும் கூட படிச்சதில்லைங்க. பேரிக்காய் போராட்டம் தவிர எல்லாமே புதுசு தான் எனக்கு. என்னை மாதிரியும் நிறைய பேர் இருப்பாங்கன்னு நம்பறேன்.

      Delete
  77. அந்நாளில் டெக்ஸ் இவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக மனதில் பதியவில்லை .ஒரு பிடிச்சஹீ ரோ அவ்வளவுதான்.ஆனால்அவர்கதைகள் உயிரில் கலந்துள்ளது.கம்பேக்கின்போது மீண்டும் டெக்ஸ் கதைகள் என்பதேபெரிய கொண்டாட்டமாக இருந்தது. நான் மீண்டும் பழைய டெக்ஸ் கதைகளைகண்ணால் பார்த்தால் கூட போதும் என்று ஏங்கிய நிலையில் தற்போது அதே டெக்ஸ் மறுபடியும் கைகளில்அதுவும்கலரில். வெல்கம்மறுபதிப்ஸ் வெல்கம் டெக்ஸ்.கரூர் ராஜ சேகரன்

    ReplyDelete
  78. இன்னிக்கு பதிவு கிழமை தானே?

    ReplyDelete
  79. சார் இன்று பதிவுக் கிழமை...

    ReplyDelete
  80. அப்படியே அந்த டெக்ஸ் கதை என்னவென்றும் மொத்த தொகை எவ்வளவு அனுப்ப வேண்டும் என்றும் சொல்லிவிட்டால் , வேலையை முடித்து விடலாம் சார்.

    ReplyDelete
  81. எனக்கென்னவோ ஓரிரு தினங்கள் வெயிட் பண்ணினா டின்டின் பத்தியும் தெரிஞ்சுடும்னு நினைக்கிறேன். எனிவே ஈரோடு புத்தக விழா அதிரப் போகுது. நீங்க எல்லாம் அங்கிருந்து எஞ்சாய் பண்ணப் போறீங்கங்கறதை நினைச்சா கொஞ்சம் பொறாமையா இருக்கு. இந்த வருடம் வர முடியாத சூழ்நிலை. 😤😤😤😤😤😤

    ReplyDelete
    Replies

    1. அந்த ஊரின் கோவிலில் வெள்ளிக்கிழமை விசேச பூஜையில் செம கூட்டமாம்...அப்ப பார்த்து மகாராஜா சாமி தரிசனம் பண்ண வந்தாராம்..
      இவ்ளோ கூட்டத்தில எப்படி உள்ளே வரப்போறார்னு தர்மகர்த்தா&பூசாரி திகைக்க, கட்டியங்காரனின் குரல் கேட்டவுடன் கூட்டம் அப்படியே இரண்டாக பிளந்து இருபக்கமும் விலகி வழிவிட முதல் ஆளாக மகாராஜா தரிசனம் பண்ணி சாமியின் அருள் பெற்றாராம்...

      டின்டின் வர்றாருனு சேதி தெரிஞ்சாபோதும், மற்ற அனைத்தும் வழிவிட்டு, வரவேற்பையும் நல்கும்!😍😍😍

      டின்டின் வந்தா மட்டும் போதும்!

      Delete
  82. இன்றைய பதிவில். ஈரோடு பட்ஜெட். ப்ளிஸ் சார்

    ReplyDelete