நண்பர்களே,
வணக்கம். ஒவ்வொரு அட்டவணையும் ரெடியாகிடும் போது, நீங்கள் அதனைப் பார்த்திடுவது ஒரு பாணியிலென்றால், அதையே நான் பார்த்திடுவது முற்றிலும் வேறொரு கோணத்திலிருக்கும் ! "இதிலே ரெம்போ சுலபமான பணியா எது இருக்கப் போகுது ? எது உறுதியான ஹிட்டடிக்கப் போகும் புக் ? எது கணிசமான சர்ச்சையினை உண்டாக்கப் போகும் புக் ? எது நம்ம குறுக்கை கழற்றப் போகும் புக் ?" என்ற ரீதியினில் ஆராய முனைவேன் ! நாளாசரியாய், கி.ந. தடமானது சுருங்கிப் போன பிற்பாடு, சர்ச்சைக் களங்களும் குறைந்து விட்டன ; so இப்போதெல்லாம் அவற்றை எண்ணி பெருசாய் மொக்கை போடும் அவசியங்களும் இருப்பதில்லை ! Therefore இப்போதெல்லாம் புருவங்களை சுருங்கச் செய்வது - "நடப்பாண்டில் எந்த ஆல்பத்தில் வேலை நொங்கை எடுக்கக் காத்துள்ளதோ ?" என்ற கேள்வி மாத்திரமே !
ஒவ்வொரு ஆண்டும் திட்டமிடும் போதெல்லாம், "சொந்த காசிலே சூனியம் வைச்சுக்காம, சுலபமா பிளான் பண்ணனும்" என்ற மகாசிந்தனை எழும் தான் ; ஆனால் அட்டவணைக்குள் பணியாற்றப் புகுந்திடும் போது, "அத்தாச்சிக்கு இடமில்லைன்னு சொல்லப்படாது ; இங்கே நொழைச்சிடுவோம் ! அப்புச்சிக்கு ரெகுலர்ல சீட் இல்லே ; அவரையும் இந்த பொந்திலே புகுத்திடுவோம் !" என்ற கதையாய் சிக்கலான பார்ட்டிக்களையும் எங்கெங்கேயாச்சும் இணைத்து விடுவது வழக்கம் ! And கேட்லாக் பிரிண்ட் ஆகும் போதே தெரியும் - இன்ன இன்ன இதழ்கள் வெளியாகிடவுள்ள மாதங்களிலெல்லாம் seven and a half வெயிட்டிங் என்று !
இந்த 7 + 1/2 சிரமங்களிலேயே இரண்டு விதங்கள் உண்டு !
ஒன்று - எக்கச்சக்கப் பக்கங்கள் கொண்ட ஸ்பெஷல் இதழ்கள் - இதோ காத்துள்ள 'தல' டெக்சின் THE SUPREMO ஸ்பெஷல் போல ! வண்டி வண்டியாய் முடித்துத் தள்ளினாலும், அங்கே மேற்கொண்டும் மேற்கொண்டும் வேலைகள் துளிர்விட்டுக் கொண்டே இருப்பதுண்டு ! ஆனால் இங்கொரு flip side-ம் உண்டு தான் - நேர்கோட்டுக் கதைகளே எனும் போது பிட்டத்துக்கு பசை போட்டு பணியாற்ற ஆரம்பித்தால், கரை சேர்ந்து விடலாம் தான் !
சிரமத்தின் விதம் # 2 தான் நாக்காரை மெய்யாலும் தொங்கப் பண்ணும் ரகம் ! இங்கே கதைகளே செம அடர்த்தியாய் இருப்பதுண்டு ! முதல் வாசிப்பில் முழுசையும் புரிஞ்ச பிழைப்பே இருக்காது ; 'காதல்' பரத்தையும், 'சேது' விக்ரமையும் ஒன்றாய் புடிச்ச மாதிரி காட்சி தருவோம் ! And கூகுளாண்டவர் ஆசிகளின்றி உள்ளுக்குள் பயணம் பண்ணினால், பூசணிக்காய் சைஸ்களுக்கு செமத்தியாய் பல்புகள் சல்லிசாய் வாங்கிடலாம் ! And இவற்றுக்குள் பேனாவோடு பயணிப்பதென்பது, வெறுங்காலோடு கோடைகாலத்துக் காவிரிப் படுகையில் நடப்பதற்கு சமானம் ! மார்ட்டினின் "கனவுகளின் குழந்தைகள்" ; "இனியெல்லாம் மரணமே" ; அர்ஸ் மேக்னா ; டெட்வுட் டிக் ; தாத்தாஸ் - போன்ற பணிகளை இந்த லிஸ்ட்டில் சொல்லலாம் !
சில தருணங்களில்.........ரொம்பவே சில தருணங்களில்.......... சிரமம் # 1 & சிரமம் # 2 கூட்டணி போட்டுக் கொள்வதுண்டு - "ஏகப்பட்ட அடர்த்தியான கதைகள் ஒரே ஆல்பத்தில்" என்ற குண்டு புக்காய் ! அங்கே சர்வ நிச்சயமாய் சட்னி என்பது முன்கூட்டியே உணர முடியும் ! இதற்கொரு prime உதாரணம், சென்றாண்டின் The FIFTY & FOREVER ஸ்பெஷல் ! CIA ஏஜெண்ட் ஆல்பா - 3 பாக த்ரில்லரில் ; புது வரவு சிஸ்கோ - 2 பாக த்ரில்லரில் ; டேங்கோ - நெடும் சோலோ த்ரில்லரில் ; "ஒற்றை நொடி..ஒன்பது தோட்டாக்கள்" - 5 பாக ஆக்ஷனில் etc etc என்ற திட்டமிடல் - ஆஸ்திரேலியவுக்கு எதிரான டெஸ்ட் மேட்சை டிரா பண்ண நம்மாட்கள் படப்போகும் கஷ்டத்தை விடவும் கூடுதலானதொன்று ! ஆனால் கொரோனா லாக்டௌன் # 2-ன் புண்ணியத்தில் அந்த ராட்சஸப் பணிகளை ஒப்பேற்ற முடிந்தது !
"சரி, இதெல்லாம் இப்போ எதுக்குடாப்பா ?" என்கிறீர்களா ? இருக்கே...காரணம் இருக்கே....சிரமம்ஸ் # 1 & 2 ஒன்றிணைந்ததொரு இதழாய் நடப்புச் சந்தாவில் "சம்மர் ஸ்பெஷல்" உள்ளதே !! காத்திருக்கும் அந்த blockbuster சார்ந்த எனது புலம்பல்களே இந்தப் பதிவு !
சம்மர் ஸ்பெஷல் ! இந்தப் பெயரைக் கேட்டாலே அப்படியே ஜெல்லி ஐஸ்க்ரீம் தொண்டைக்குள் நழுவும் இதம் தான் நினைவுக்கு வருவதுண்டு ! மினி-லயன் வெளிவந்து கொண்டிருந்த நாட்களின், கோடை விடுமுறைகளில், கைக்குச் சிக்கிய ஜாலியான கதைகளுடன், ஜாலியான சைஸ்களில் தயாரித்திடும் அந்த "சம்மர் ஸ்பெஷல்" இதழ்கள் அத்தனை ரம்யமானவை ! அந்த நினைப்பினில் நடப்பாண்டில் ஒரு "சம்மர் ஸ்பெஷல்'23" இதழைப் போட்டுத்தாக்கிடலாம் என்ற எண்ணம் தோன்றியது ! And ஒரு கதம்ப குண்டு இதழுக்கு போன வருஷத்தைப் போலவே பிரத்தியேக அனுமதி வாங்கி வைத்திருக்க, ஆல்பா ; டேங்கோ ; ரூபின் & சிக் பில் என்ற கூட்டணியினைக் கொண்டு, சம்மரை ஸ்பெஷலாக்கிடலாம் என்று திட்டம் !
அட்டவணையும் ரெடி ; கதைகளும் ரெடி ; ஆனால் இது எப்படியும் பெண்டைக் கழற்றாது விடாதென்ற உணர்வுமே உள்ளுக்குள் ரெடியாக இருந்தது ! பொதுவாய் இது போல் சிக்கலான வேலைகள் எந்தெந்த இதழ்களில் இருக்குமோ, அவற்றையெல்லாம் நான் வருஷத்தின் கடைசிக்குத் தள்ளி விடுவது வாடிக்கை ! ரிப்போர்ட்டர் ஜானி ; மார்ட்டின் ; டெட்வுட் டிக் ; தாத்தாஸ் போன்றோர் கடைசி க்வாட்டர்களில் பெரும்பாலும் தலைகாட்டுவதன் பின்னணிக் காரணமே இது தான் ! ஆனால் இதுவோ பெயரிலேயே "சம்மர்" என்று கொண்டிருக்கும் இதழ் ; சோம்பல்பட்டு இதனையுமே நான் டிஸம்பர்க்குக் கொண்டு போக நினைத்தேனென்றால், 50-50 என்ற சந்தேகத்தில் இருப்போர் கூட - "ஈ ஆள் confirm ஆயிட்டு பிராந்தன் தன்னே !!" என்று தீர்மானித்து விடுவர் என்று தோன்றியது ! So கோடை காலத்தின் முடிவுக்குள் கொணர வேண்டிய நிர்ப்பந்தம் !
கதைகள் நான்கு ! நான்கில் ஒன்று சிக் பில் கார்ட்டூன் ; நேர்கோட்டுக் கதை & ரொம்ப காலமாய் கருணையானந்தம் அங்கிள் எழுதி வரும் கதையும் கூட ! So ஒன்றை அவரிடம் ரொம்ப முன்னமே தள்ளிவிட்டிருந்தேன் ! One down ...three to go & இந்த மூன்றையும் நானே கையாள்வதென்று மூலை சேர்த்து வைத்திருந்த நிலையில் நமது டீமில் சமீபமாய் இணைந்திருந்ததொரு சகோதரி ALPHA-க்கு சரிப்படுவாரோ ? என்ற கேள்வி எனக்குள் இருந்த சோம்பேறித்தடியனுக்கு எழுந்தது ! அவர் ஒரு எழுத்தாளரும் கூட ; நாவலொன்றை தமிழில் எழுதி அது பப்லிஷ் ஆகவும் செய்திருந்தது ! பற்றாக்குறைக்கு இந்த ALPHA ஆல்பம் Cinebook இங்கிலீஷிலும் வெளியிட்டிருந்ததொன்று எனும் போது, தமிழாக்கத்துக்கு ரொம்பவே உதவிடும் என்று நினைத்தேன் ! So அவருக்கு ஒரு 4 பக்கங்களை அனுப்பி வைத்து மொழிபெயர்க்கச் செய்து பார்த்தேன் ; மோசமில்லை என்பது போலிருந்தது ! ரைட்டு...சிக் பில் & ஆல்பா - என ரெண்டையும் தள்ளி விட்டுவிட்டால், ரெண்டு மாத்திரமே நமக்கு ! என்றபடிக்கு காலாட்டியபடியே டின்டின் மொழிபெயர்ப்புக்குள் பிசியாகி இருந்தேன் ! ஆனால் நாட்களின் ஓட்டம் மின்னலாய் இருக்க, "மழை காலம் ஆரம்பிக்கும் முன்னே சம்மர் ஸ்பெஷலை கண்ணிலே காட்டிடணும்டா ராசா !" என்று பட்டது !
டேங்கோ ! தனிவேங்கை கதைகள் எப்போதுமே ஒரு மாறுபட்ட flavor கொண்டிருப்பது வாடிக்கை ! And இதுவோ சமுத்திரத்தின் மத்தியில் வாழ்ந்து வரும் ஒரு தனிவேங்கை எனும் போது, ரொம்பவே ஈர்த்தது ! பற்றாக்குறைக்கு இந்தத் தொடரின் சாகசங்கள் நிகழ்வதெல்லாமே நாம் (காமிக்ஸ்களில்) அதிகம் பார்த்திராத தேசங்கள் ; தீவுகள் என்ற போது, ஒரு எக்ஸ்டரா கிக் இருந்தது போல்பட்டது எனக்கு ! போன வருஷம் வெளியான அந்த முதல் ஆல்பம் செம ஹிட்டாகிட, அப்போதிலிருந்தே நான் இவருக்கு fan ! So தொடரின் ஆல்பம் # 3 - "பனாமா படலம்" பக்கங்களைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தேன் ! டேங்கோவின் மொழிபெயர்ப்பில் ஒரு வித்தியாச பாணியுண்டு ! கதையில் மாந்தர்கள் குறைவு என்பதால், கதாசிரியரும் ஒரு பங்கேற்று அவரது monologues வழியாக கதையை நகர்த்துவது இங்கே வாடிக்கை ! And இதில் சிக்கல் என்னவென்றால் ரொம்ப லேசாய் நாலைந்து வாக்கியங்களை ஒற்றை பிரேமுக்குள் அடக்கி விடுகிறார் ! And பிரெஞ்சில் எப்படியோ, தெரியலை - இங்கிலீஷில் நறுக்கென்று சொல்லி விடுகிறார்கள் ! ஆனால் அதையே நாமும் பின்பற்றினால் மணிரத்னம் பாணியாகத் தென்படும் ; so நீட்டி முழக்கி சொல்வதற்குள் நாக்கு தொங்கிவிடுகிறது ! ஒரு மொழிபெயர்ப்பாளனாய் இங்குள்ள பிரதான சவாலே - நாலைந்து வாக்கியங்களை ஒரே இடத்தில் இணைக்கும் போது, ஒவ்வொரு வரிக்குமிடையே ஒரு நூலிழையாச்சும் தொடர்பு இருப்பது போல, சீரான ஒரே டெம்போவில் சம்பாஷணையினை நகர்த்திட வேண்டும் என்பதே ! இம்முறை கதைக்களம் பனாமா ! And ரொம்ப ஆழமான கதை முடிச்சு என்றெல்லாம் கதாசிரியர் மெனெக்கெடவில்லை ; சிம்பிளானதொரு knot சகிதம் ஆக்ஷன் + சித்திர மேளாவாய் உருவாக்கியுள்ளார் ! டேங்கோ & மரியோ ஜோடி இந்தத் தொடரின் ரீல் நாயகர்களென்றால், நிஜ நாயகர்கள் கதாசிரியரும், ஓவியரும் தான் என்பேன் - இருவரும் அத்தனை ஒன்றிப் போய் கலக்கியுள்ளனர்!
ஒரு மாதிரி தக்கி முக்கி TANGO மொழிபெயர்ப்பினை முடித்து விட்டு ரூபின் பக்கமாய்த் திரும்பினால் - uffffff ....காத்திருந்தன ஒரு லாரி லோடில் பணிகள் ! ஏற்கனவே சொல்லியிருந்தேன் தான் - இந்தக் கேரட் கேச அழகியின் கதையின் பாணி ரொம்பவே complex என்று ! Mythic என்ற புனைப்பெயரில் கதையெழுதியுள்ள இந்தக் கதாசிரியருக்கு நம்ம ரிப்போர்ட்டர் ஜானியின் அந்த இடியாப்ப பாணியென்றால் ரொம்பவே இஷ்டம் போலும் ; ரூபின் கதைகளுக்குள்ளும் ஒரு வித்தியாச பயணப் பாதையினை வகுத்திருக்கிறார் ! And ரிப்போர்ட்டர் ஜானியுடனான ஒற்றுமை அத்தோடு முற்றுப் பெறவில்லை ; கடைசி ரெண்டு பக்கங்களுக்குள் அத்தனை மர்மங்களுக்குமான விடைகளையும், ஜானியின் ஸ்டைலில் போட்டு சரமாரியாய் இங்கேயும் தாக்கித் தள்ளுகிறார் ! "ரைட்டு...இந்த இடத்தில இப்புடி ஒரு ட்விஸ்ட் வரணுமே....? இந்தாள் ஏதாச்சும் லொள்ளு பண்ணனுமே ?" என்ற ரீதியில் கதையுடனான பயணத்தில் நமக்குத் தோன்றினால், நிகழ்வது நேர்மாறாக இருந்திடுகிறது ! அதிலும் இங்கே கைரேகைகளைக் கொண்டு ஆடும் ஒரு ஆட்டம், ரூபினை மட்டுமல்ல, நம்மையும் சிண்டை பிய்த்துக் கொள்ளச் செய்யும் ! And சோடா கதைகளை போலவே சித்திரங்களில் மெலிதான சில பல clues விதைக்கப்பட்டுள்ளன கதை நெடுகிலும் ! பர பரவென்று ஓட்டமெடுத்த எனக்கு, கிளைமாக்சில் ஏதோ உதைக்கிறதே ? என்ற உணர்வு தலைதூக்கியது ! கையிலிருந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பும் கதைக்கு நிகரான complex சமாச்சாரம் எனும் போது மறுக்கா, மறுக்கா படிச்சும் புரியலை ! அப்புறம் படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் ஆரம்பம் முதலாய் 'பொம்ம' பார்த்துக் கொண்டே வந்தால் தான் புரிந்தது - சித்திரங்களில் இருந்த சில clue-க்களை நான் கோட்டை விட்டிருந்த சமாச்சாரம் ! மண்டையெல்லாம் காயச் செய்தாலும், இது போலான கதைகளில் ஒரு இனம்புரியா வசீகரம் இருப்பதுண்டு ; 'நங்கு நங்கென்று' சுவற்றில் முட்டிக்கும் உணர்வு தோன்றினாலும், அதைத் தூக்கிக் கடாச மனசே வராது ! Same here !! தப்பான புரிதலோடு எழுதிப் போயிருந்த சுமார் 15 பக்கங்களைக் கிழித்துக் குப்பையில் போட்டுவிட்டு மறுக்கா பயணித்தேன் ! அயர்வாக இருந்தது தான் ; பக்கத்துக்குப் பக்கம், பிரேமுக்கு பிரேம், வண்டி வண்டியாய் இருந்த வரிகளை தமிழுக்குக் கொணர்வதற்குள் போதும் போதுமென்று ஆகி விட்டது தான் - ஆனாலும் சுவாரஸ்யம் மட்டும் குன்றிடவில்லை ! In fact இந்தக் கதை முழுக்க ருபினுமே என்னைப் போலவே மண்டையை பிய்த்துக் கொண்டே தான் பயணித்திருக்கிறார் ; "டிடெக்டிவ்" என்பதற்காக எட்டு ஊருக்கு ஊடு கட்டியெல்லாம் அடிக்கவில்லை ! ஒரு மாதிரியாய் கதையின் முடிச்சை புரிந்து கொண்டதால், கதையின் பளு ரொம்ப அழுத்தாதது போல் தோன்றிட, கதைக்கு "சுபம்" போட்ட சமயம் எதையோ உருப்படியாய் செய்து முடிச்ச பீலிங்கு !!
ரைட்டு...இனி ஆல்பா & அதுக்கப்புறம் சிக் பில் என்று எடிட்டிங் மட்டும் பண்ணிட்டாக்கா "சம்மர் ஸ்பெஷலுக்கு" மங்களம் பாடிடலாம் என்றபடிக்கே தெம்பாக ஆல்பாவுக்குள் புகுந்தேன் ! அடடே..அடடே... "இரத்தப் படலம்" இரண்டாம் சுற்றின் ஓவியரான Jigounov கைவண்ணத்தில், ஒவ்வொரு ஆளும், ஒவ்வொரு அம்மணியும், ஒவ்வொரு காரும், ஒவ்வொரு ஊரும் அழகோ அழகாய் காட்சி தந்தன(ர்) ! And செம விறுவிறுப்பாய் கதை ஆரம்பம் காண, வேக வேகமாய் பக்கங்களைப் புரட்டினேன் ! ஆனால் ஒரு ஏழோ எட்டோ பக்கங்களிலேயே தெரிந்து விட்டது, இது நான் எதிர்பார்த்திருந்த உரிச்ச வாழைப்பழம் அல்ல என்பது ! கதைக்கு கணிசமாகவே layers இருப்பது கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிய ஆரம்பித்த போது, கதாசிரியர் யார் ? என்று ஒருவாட்டி புரட்டிப் பார்த்தேன் ! Surprise ...surprise ...அதே MYTHIC சார் தான் இங்கேயும் பேனா பிடித்திருக்கிறார் ! In fact ஆல்பா தொடரினை துவக்கிய ஒரிஜினல் கதாசிரியர் மரித்துப் போனதைத் தொடர்ந்து ஆல்பம் # 3 முதலாகவே இங்கே இவர் தான் கதைகளை எழுதி வருகிறார் என்பது அப்போது தான் நினைவுக்கு வந்தது ! "ஆத்தீ..இவர் இடியாப்பத்தை, நூடுல்ஸோடு கலந்து, புது பாணியில் சமைக்கும் ஜாம்பவானாச்சே !!" என்ற உதறல் லேசாய் உள்ளுக்குள் எடுக்க ஆரம்பித்த வேளையிலேயே மொழிபெயர்ப்பிலும் உதறல் தென்பட ஆரம்பித்தது ! To cut a long story short - ரொம்பவே complex ஆன இந்தக் கதைக்குள் நம்மளவிற்கொரு புதியவரை இறக்கி விட்டது என் பிழையே என்பது புரிந்தது ! ஊஹூம்...இது பட்டி டிங்கரிங் பார்த்து செப்பனிடக்கூடிய சமாச்சாரமே அல்ல என்பது ரொம்பவே சீக்கிரமாய் புரிஞ்சு போன நொடியில் டயர் ரெண்டுமே பஞ்சரான வண்டி போல உணர்ந்தேன் ! 46 பக்கங்கள் with a complicated storyline - முழுசாய்க் காத்திருப்பது புரிந்தது !
மெய்யாலுமே வியர்த்து விட்டது கொஞ்ச நேரத்துக்கு ! இந்தக் கதையையே இப்போதைக்கு ஓரம்கட்டி விட்டு வேறு எதையாச்சும் உள்ளே புகுத்தலாமா ? என்றெல்லாம் யோசிக்கும் அளவிற்குப் போயிருந்தேன் ; ஆனால் பின்னட்டையில் மூன்றில் ஒரு பங்கு இடத்தினை ஆல்பா ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, இங்கே என் சுந்தர வதனத்தை ஸ்டிக்கராக்கி ஓட்டினால் கூட முழுசையும் மறைக்க முடியாதென்று தோன்றியது ! தம் கட்டிக்கொண்டு ஆரம்பித்தேன் - ஹங்கேரியிலிருந்து துவங்கிய அந்தக் கதையினை and உள்ளே போகப் போகத் தான் புரிந்தது, சமகாலக் கதைகளின் உருவாக்கத்தில் எத்தனை அரசியல்..எத்தனை வரலாறு கலந்துள்ளதென்று ! இங்கே இன்னொரு நோவு இருந்தது - ஓவியரின் சித்திர பாணி காரணமாய் ! ஹீரோவையும், ஈரோயினியையும் தவிர்த்த பாக்கிப் பேரையெல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரி ஓவியர் வரைந்திருக்க, "இந்த ஆள் M .N .நம்பியாரா ? A.V.M ராஜனா ? இந்தக்கா சொர்ணக்காவா ? சொர்ணமால்யாவா ?" என்ற ரீதியில் சந்தேகங்கள் எழுந்தன ! CIA தலைவரும், ஒரு முன்னாள் ஏஜெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தோற்றம் தர, ரெண்டு பேருக்கும் மத்தியிலான 6 வித்தியாசங்களைத் தேடிக் கண்டுபுடி ! என்ற போட்டியெல்லாம் வைக்காத குறை தான் ! கதையின் ஓட்டத்தோடு செப்டம்பர் 1 ..2 ..3 என்று தேதிகளை வரிசைக்கு கொடுத்துக் கொண்டே வந்திருந்தனர் ! சும்மா ஏதோவொரு அலங்கார detail இது என்றபடிக்கே உதாசீனப்படுத்தி விட்டுப் போனால், க்ளைமாக்சில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறியீடு இருப்பது புரிந்தது !! And கூகுளுக்குள் புகுந்து இம்மியூண்டு விஷயத்துக்குக் கூட சோம்பல்படாது தேடினால் தான் கதாசிரியரின் முழு வீச்சைப் புரிந்து கொள்ள முடிந்தது !
இணை தடங்களாய் மெயின் கதை ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க, அதே வாஷிங்டனின் இன்னொரு பக்கத்தில், இன்னதென்று புரியா கொலைகள் அரங்கேறி வருகின்றன ! பற்றாக்குறைக்கு 12 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு மெகா நிகழ்வு & அதிலிருந்து 9 ஆண்டுகளுக்கு அப்புறமான இன்னொரு நிகழ்வு ! இவை சகலத்தையும் க்ளைமாக்சில் ஒன்றிணைத்து தெறிக்க விட்டிருக்கிறார் Mythic !! And புத்தம் புது புல்லெட்டில் அவர் பறந்து போயிருக்கும் அதே பாதையில், 'கரையாண்டி சைக்கிள் கடையில்' எடுத்த சைக்கிளை மிதித்தபடிக்கே நான் பின்தொடர்ந்த காமெடி தொடர்ந்த நாட்களில் அரங்கேறியது ! And yes - இங்கேயும் ஒவ்வொரு படத்தினையும் உன்னிப்பாய்க் கவனிக்காது, வாசித்தபடிக்கே நகர்ந்திடும் தப்பை மட்டும் செய்து விடாதீர்கள் folks ; அப்புறம் உங்களிடம் வண்டை வண்டையாய் திட்டு வாங்கி மாளாது எனக்கு ! இதோ, அச்சுக்குச் செல்லவிருந்த இந்தக் கதையின் ஓரிடத்தில் ஒரு பிழை இருப்பது இன்று காலை குளித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று உறைத்தது !! துண்டை கட்டிக்கொண்டே மைதீனுக்கு போன் பண்ணி அந்தப் பக்கத்தினை அனுப்பப் சொல்லி திருத்தம் போட்டேன் ! Phewwwwww !! இங்கேயுமே கடைசி 2 பக்கங்களில் கதாசிரியர் அடிக்கும் twist சத்தியமாய் அந்நாட்களில் ரவிச்சந்திரனும், ஜெமினி கணேசனும் ஆடியிருக்காத twist !! அது வரைக்கும் கதை இது தான் என்றபடிக்கே பயணிப்போரின் முகங்களில் ஒரு வாளி தண்ணீரை சலோர் என்று தெளித்திருக்கிறார் !! நம்பினால் நம்புங்கள் guys - கடைசி 2 பக்கங்களை மூணு வாட்டி எழுத வேண்டியதாகியது ! எத்தனை விளக்கம் சொல்ல முனைந்தாலும் அப்புறமுமே ஏதேனுமொரு loose end தொங்கிக்கொண்டிருப்பதாய் படும் ; அடித்து விட்டு மறுக்கா முயற்சிப்பேன் ! எது எப்படியோ - ஒரு crackerjack த்ரில்லர் காத்துள்ளது guys & கொஞ்சம் பொறுமையாய் க்ளைமாக்ஸை நீங்கள் அணுகிட வேண்டியிருக்கும் தான் ! ஆனால் அந்தப் பொறுமைக்குப் பலனின்றிப் போகாது !! Trust me on that !!
ஷப்பா...போட வேண்டிய மொக்கையெல்லாம் போட்டாச்சு ; இனி சிக் பில் மட்டும் தான் ! "முடிஞ்சமட்டுக்கு எழுத்துப் பிழைகளை மட்டும் பாத்திட்டு தந்துடறேன் மைதீன் !" என்று வியாழன் இரவு சொல்லிவிட்டு, "கிட் ஆர்டின் ஜாக்கிரதை" கதைக்குள் புகுந்தேன் ! சமீபத்து நமது தேர்வுகள் எல்லாமே டாக்புல் அல்லது ஆர்டினுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாகவே இருந்து வந்துள்ளன & இங்கே நம்ம ஆர்டின் சார் தான் பிரதான பாத்திரம் ! ஜாலியாய் உள்ளே நுழைந்தால் "ஹி..ஹி..ஹி.." என்றொரு இளிக்கும் ஓசை மட்டும் கேட்டது போலிருந்தது ! "யார்டா இந்நேரத்துக்கு ? ஊரே அடங்கிடுச்சி...?" என்றபடிக்கே பக்கத்தை இன்னும் லைட்டாய்ப் புரட்டிய போது தான் புரிந்தது - அந்த இளிப்புச் சத்தம் வேறெதுவுமல்ல - விதி என்னைப் பார்த்துக் கெக்கலித்த ஓசை தான் என்பது !! கிட்டத்தட்ட கடந்த 2 ஆண்டுகளாய் க்ளாஸிக் கதைகளைத் தவிர்த்து வேறெதற்கும் பேனாவே பிடித்திருக்காத அங்கிள் இங்கே சிக் பில்லுக்கு இலக்கண நடையில் மொழிபெயர்ப்பை பிளந்து கட்டியிருந்தார் !! விக்கித்துப் போனேன் - ரெண்டே பக்கங்களைப் படித்து முடிப்பதற்குள் !
'பேச்சு வழக்கு நடை தான் கார்ட்டூன்களுக்கு சுகப்படும்' என்பதைத் தீர்மானித்து - கடந்த 11 ஆண்டுகளாய் அத்தினி கார்ட்டூன்களுக்கும் ஒரே சீராய் அந்த பாணியையே தந்தும் வந்திருக்கிறோம் ! நடுநடுவே ஏதேனும் கார்ட்டூன் மறுபதிப்புகள் வரும் போது தான், அந்நாட்களில் நாம் உபயோகம் செய்திருந்த உரைநடை பாணிகள் எட்டிப்பார்த்து பல்லெல்லாம் ஆடச் செய்வதுண்டு (லக்கி லூக்குக்கு கல்யாணம் இதழில் போல!!) And அங்கிள் நமது தற்போதைய template-ஐ சுத்தமாய் மறந்திருந்தது மட்டுமல்லாது - மருந்துக்கும் கூட நகைச்சுவை பக்கமாய் போயிருக்கவில்லை ! இதில் கொடுமை என்னவென்றால், ஒரிஜினலின் டயலாக்களிலும் ஹியூமரை வலை வீசித்தான் தேட வேண்டியிருந்தது !! "எக்ஸ்டரா நம்பரே போடாதடா அம்பி ; ஒரிஜினலில் உள்ளதையே போடு - போதும்" என்று கொடி பிடிக்கும் நமது நண்பர்களிடம் இந்த ஆல்பத்தின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பினை தந்து ஒருவாட்டி வாசித்துப் பார்க்கச் சொல்லும் ஆசை அலையடித்தது ! அவர்கள் அந்த வாசிப்பினில் ஈடுபட்டிடும் வேளையினில், கிட்டக்கவே ஒரு ஆளை சம்பளம் தந்து அமர்த்தி, நாள் முழுக்க கிச்சு கிச்சு மூட்டச் சொல்லி முயற்சித்தாலும் - ஊஹூம் !! பலன் இராது - because மற்ற மொழிகளில் அவர்கள் பழகியுள்ள கார்ட்டூன் ரசனைகள் நம்மிடமிருந்து மாறுபட்டவை ! நமக்கு இங்கே லட்சுமி வெடிச்சிரிப்புகள் இல்லாங்காட்டியும், ஊசிவெடிச் சிரிப்புகளாவது இன்றியமையா சமாச்சாரங்கள் ! அதற்குமே வாய்ப்புகள் குறைவெனில், உப்பு குறைவான சமையலாகவே பார்த்திடுகிறோம் !
Anyways இங்கே டவுசர் சுத்தமாய் கழன்று தொங்குவது புரிந்தது ; ஆண்டுக்கு ஒரேயொரு சிக் பில் கதை ; அந்த ஒற்றை கதையும் இலக்கண நடையும், சீரியஸ் பாவனையுமாய் நகன்றால் "நம்மளை கொண்டே போட்டுப்புடுவாங்க" என்று தலைக்குள் பட்சி சொன்னது ! மொத்தம் 30 பக்கங்கள் ; முழுசையும் கார்ட்டூனுக்கான பாணியில் & இயன்ற இடங்களில் கொஞ்சமாச்சும் ஹியூமர் இழையோட மாற்றி எழுதிட எனக்கிருந்த அவகாசம் : முக்கால் நாள் ! இதோ, இந்தப் பதிவினை டைப்பும் சனி மாலைக்கு 3 மணி நேரங்கள் முன்னே தான் மொத்தத்தையும் முடித்து மறு DTP செய்து அச்சுக்கு ரெடி செய்து வருகிறோம் !
'நாக்கு தொங்கிப் போச்சு...பெண்டு நிமிர்ந்து போச்சு' என்றெல்லாம் அடிக்கொரு தபா சொல்லுவோம் தான் ; ஆனால் அதன் மெய்ப்பொருளை இந்த வாரத்தில் தான் உணர்ந்துள்ளேன் ! இந்த 39 ஆண்டுப் பயணத்தில் குட்டிக்கரணங்கள் நமக்குப் புதுசே அல்ல தான் ; ஆனால் இம்முறை அடித்திருப்பதோ ரொம்ப ரொம்ப மாறுபட்டவை ! ஒற்றை நாளிலும், ஒன்றரை நாளிலும் முழுசாய் எழுத அவசியப்பட்டுள்ள இந்தக் கதைகளை, நார்மலாய் எழுதினால் லேசாக ஒரு வாரமோ, பத்து நாட்களோ பிடிக்கும் ! ஆனால் அப்படியொரு குஷன் இல்லாத நெருக்கடியில் பணியாற்றியது நிஜமாகவே நமது பல்டி அளவுகோல்களுக்கே ரெம்போ சாஸ்தி என்பேன் !!
ஆனால் இந்தப் பணிகளை ஒட்டு மொத்தமாய் நிறைவு செய்து, இந்த 4 கதைகளையும் ஒருசேர மேஜையில் போட்டுப் புரட்டிடும் போது மனசுக்குள் ஒரு விவரிக்க இயலா நிறைவு ! Oh yes - இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பை-பாஸ் ரைடர் பஸ்ஸில் கூட போக மாட்டேன் தான் ; சிவனே என்று நேர்கோட்டில் பயணம் பண்ணும் டவுன் பஸ்ஸே போதும் என்பேன் தான் ! ஆனால், இந்த இதழ் உங்களை எட்டிடும் போது, நீங்கள் கதைகளையும், அவற்றின் பின்னுள்ள உழைப்புகளையும் ரசித்திடும் பட்சத்தில் "ஜெய் மூக்கை முன்னூறு தபா சுற்றும் கதைஸ் !!" என்று கோஷம் போடுவேனோ - என்னமோ ?! Whatever the hassles, this has been an immensely satisfying work !
And இந்த மாதிரியான தருணங்களில் தான் "மறுபதிப்புகள்" இருக்கும் திசை நோக்கி பெருசாய் நமஸ்காரம் சொல்லத் தோன்றுகிறது ! இடையிடையே அவை மட்டும் மூச்சு விட்டுக் கொள்ளவும், சக்கரங்கள் சுழன்றிடவும் உதவிடவில்லை எனில், கிழிஞ்சது கிருஷ்ணகிரி for sure !! மறுபதிப்பு எனும் போது - பர பரவென ஈரோட்டு ஸ்பெஷல்ஸ் இதற்கென ரெடி செய்திருக்கும் இன்னொரு டீமின் சகாயத்துடன் தடதடத்து வருகிறது ! And boy oh boy ...சும்மா சொல்லக்கூடாது - MAXI சைசில் "கார்சனின் கடந்த காலம்" பக்கங்களைப் பார்க்கக் கண்கள் கோடி வேணும் போலும் ! Simply stunning !! இதோ - டிரெய்லர் !!
- சுஸ்கி & விஸ்கி மறுபதிப்பு (பேரிக்காய் போராட்டம்) ரெடி !
- மாயாவி கதை ரெடி !
- இரும்புக்கை நார்மன் கதை ரெடி !
- ஸ்பைடர் சீக்கிரமே ரெடியாகிடும் !
- கா.க.கா. பாகம் 1 சீக்கிரமே ரெடியாகிடும் !
அட!
ReplyDeleteCongrats செனா அனா ஜி💐
DeleteMe two
ReplyDeleteஹிஹி! மீ3
DeleteME 2
ReplyDelete4வது பாஸ்ங்கோ
ReplyDeletePresent sir
ReplyDelete5 வது பாஸ் 😍😁
ReplyDeleteவணக்கம் நண்பர்களே🙏
ReplyDelete10 kulla
ReplyDeleteஆஜர்
ReplyDeleteவந்தாச்சுங்கோ
ReplyDeleteஆத்தீ...நாம தான் ஆந்தைன்னு பார்த்தாக்கா அம்புட்டும் ராக்கோழிகளா இருக்கே ?
ReplyDeleteகிரிக்கெட்+ காமிக்ஸ்=ஈரோடு"- ப்ளானிங் வேலையில் பிஸிங் சார். அப்படியே எட்டி பார்த்தா லீனா... பழைய பாடல் உடன்...ஆஹா
Delete//கிரிக்கெட்+ காமிக்ஸ்=ஈரோடு"- //
Deleteஇதென்ன புதுக் கூத்து ?
*_வருகிற ஆகஸ்ட் மாதம் ஈரோட்டில் நடைபெறவிருக்கும் புத்தகத் திருவிழாவில் காமிக்ஸ் நண்பர்கள் சந்திப்பு நிகழும்._*
Delete*_அத்தருணத்தில் காமிக்ஸை இன்னும் அதிகமான நபர்களை சென்றடைய விளம்பரம் செய்யும் விதமாக காமிக்ஸ் நண்பர்கள் இணைந்து கிரிக்கெட் விளையாட முடிவு செய்திருக்கிறோம்._*
பிளேயர்ஸ் ரிஜிஸ்ட்ரேசன்,
டீம் நேம் செலக்சன்..
ஜெர்ஸி டிஸைனிங்...னு பூர்வாங்க பணிகள் ஓடிக்கொண்டு உள்ளதுங் சார்..
அனைத்தும் முடிவான பின்னே முறையான அழைப்பு தங்களுக்கும் அனுப்ப இருந்தோம்..
லீனாவை பெரிய அளவில் பார்த்தவுடன் நாக்கு உளறிட்டது...ஹி...ஹி...!!💞
கர்த்தரே....!! உம் மந்தையினரை முழுசாய், சேதாரங்களின்றி, ஒட்டு, கட்டின்றி ஆகஸ்ட் 5 க்கு ஈரோட்டுக்கு கொண்டு வந்து சேர்ப்பீராக !
Delete😃😃😃😃😃
Deleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteMe present Sir..🙏
ReplyDelete🙏🙏💫
ReplyDeleteதவிக்குதே நெஞ்சம் தனிமையில்...
ReplyDeleteய்யாஆஹூஊஊ.....
அக்காங்....தவிக்கும்... தவிக்கும் ! கோடை காலாமில்லே...தொண்டை தவிக்கும் தான் !
Deleteதப்பியோடி காணத்துடிக்கிறேன்..
Deleteஅந்தச் சின்னப் பெண்ண என் அழகுச் சிலையை...
///அக்காங்....தவிக்கும்... தவிக்கும் ! கோடை காலாமில்லே...தொண்டை தவிக்கும் தான் !///
Deleteஅந்த அழகுச் சிலையை..
நான் பிரிந்துவந்த காதல் தேவதையை...😍
//அக்காங்....தவிக்கும்... தவிக்கும் ! கோடை காலாமில்லே...தொண்டை தவிக்கும் தான் !//
Delete😂🤣😃😂
சார் .அந்த க்ளூஸ் வரும்இடத்தில் ஒரு. *போட்டு கீழே அல்லது கடஐசஇபக்கத்தஇல் விளக்கம் கொடுங்க.
ReplyDeleteஅய்யய்யோ...என்னை தோலை உரிச்சு உப்புக்கண்டம் போடுறதுக்கா சார் ?
Deleteஇம்முறை சம்மர் ஸ்பெஷல் நான்கு கதைகளும் உங்களை பென்டை கழற்றி விட்டதே ஆசிரியரே
ReplyDeleteஈரோட்டில் காமிக்ஸ் கிரிக்கெட் போட்டி நடைபெற விடுக்கிறது விருப்பமுள்ள இளைஞர்கள்
ReplyDelete( தலையில் மை தடவிக்கொண்டு) கலந்து கொள்ளுங்கள்
எண்ட குருவாயூரப்பா !!
Deleteஒரு மாபெரும் மைல்கல் இதழ்கொண்டாட்டம் அருகினில்.
ReplyDeleteகா.க.கா. இன்னும் சில நாட்களில் கைகளில்
ஆம்.. ஜூலை 30 ஞாயிறு அன்று ஈரோட்டில்...
ReplyDeleteமாபெரும் (காமிக்ஸ்) கிரிக்கெட் டோர்னமென்ட்...
டெக்ஸ்
டைகர்
லக்கி
சாகோர்னு நாலு டீம்கள்..
நான் வந்து..
பெட்டி..
ஜூடித்..
பெலிசிட்டி..
லேடி S னுதான் டீம்களுக்கு நேர் வைக்கலாம்னு சொன்னேன்..
ஹூம்... சின்னப்பசங்க பேச்சை யார் வெச்சிக்கிறாங்க..!?
லயன் காமிக்ஸ் எடிட்டர் தான் போட்டியை தொடங்கி வைப்பதாகவும் போட்டியில் வென்ற டீமுக்கு அவர் கையாலேயே கோப்பை யை கொடுப்பதாகவும் பேச்சு அடிபட்டதே கண்ணன்
Deleteமாடஸ்டி டீம் மட்டும் இருந்திருந்தால் ஆசிரியரே கிரிக்கெட்டில் கலந்து கொண்டு கேப்டனாக இருந்து கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது
Deleteதெய்வமே....இதுக்கெல்லாம் சிக்க மாட்டான் இந்த முழியான்கண்ணன் !
Deleteஏதோ ரம்மி.. போக்கர்.. மூணுசீட்டுன்னா பரவால்லே.. 😂
Deleteகில்லி....பரமபதம்....அப்புறம் கோலிக்குண்டு...?
Deleteகில்லி தான் 🏏
Deleteமுழுசாய் 30 நிமிடம் பிடித்தது இந்தப் பதிவைப் படித்திட! அபாரமான உழைப்பு எடிட்டர் சார்!! ஒவ்வொரு மாதப் புத்தகங்களையும் ரெடி செய்திட சினிமா ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்டுகளைவிடவும் அதிக பல்டி அடிக்கிறீர்கள்! இந்த 'சம்மர் ஸ்பெஷல்'க்கு நீங்கள் அடித்திருப்பதோ அத்தனையும் அந்தர் பல்டிகள்! படித்துப் புரிந்துகொண்டு உங்கள் உழைப்பை உள்வாங்கிடும் வேளைக்காகக் காத்திருக்கிறோம்!
ReplyDeleteகடந்த 3 நாட்களில் எழுதிக் குவித்ததில் ரேகை அழியாத குறை தான் ; இன்றைக்கு பதிவுக்கு அல்வா கொடுப்போமா ? என்று கூடத் தோன்றியது சார் ! But எங்கிருந்து இதுக்கான 'தம்' கிட்டியதோ தெரியலை - சமாளித்து விட்டேன் !
Delete//// But எங்கிருந்து இதுக்கான 'தம்' கிட்டியதோ தெரியலை ////
Deleteநம்ம நண்பர்களிடமிருந்துதான் சார்! 'பதிவு எப்போ?'ன்னு நிமிஷத்துக்கு ஒருவாட்டி கேட்டு நச்சரிச்சுவோமில்ல?!!
வணக்கம் நண்பர்களே.....
ReplyDeleteஆஹா.. வண்ணத்தில் கார்சன் அசத்தலாய் இருக்காரே..
ReplyDeleteMAXI சைசில் அட்டைப்படத்தில் மிரட்டுறார் நம்ம வெள்ளிமுடியார் !
Delete///MAXI சைசில் அட்டைப்படத்தில் மிரட்டுறார் நம்ம வெள்ளிமுடியார் !///
Deleteகிட் கார்சனை கௌரவப்படுத்தியதற்காக...
*காதல் இளவரசன் கார்சன்*
ரசிகர் மன்றத்தினரின் கோட்டானு கோட்டி நன்றிகள் சார்..😍🙏
ஆமா ஆமா
Deleteவணக்கம் ஆசிரியர் சார்.
ReplyDeleteகதைகளை நீங்க விவரிக்கறதைப் பார்த்தால் வந்த உடனே படிச்சுடனும்ற ஆர்வத்தை தூண்டுது 😍😇
ReplyDeleteஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் மிளிர்கிறது நண்பரே ! Routine stuff கிடையாது இது !
Deleteபடித்து முடித்த போது மூச்சு வாங்கிவிட்டது ஆனால் அதை முழுவதும் அனுபவித்த உங்கள் நிலையை நினைக்கவே முடியவில்லை சார்.
ReplyDeleteஅனைத்து கதைகளின் அறிமுகங்களுமே ஆவலை தூண்டுகிறது.
கா க கா கலரில் அள்ளுகிறது. எப்படியாவது ஈரோடு வந்து வாங்கிவிடவேண்டும்.
சார் ஈரோட்டில் கா க கா விற்பனைக்கு இருக்குமா சனிக்கிழமை?
இருக்கும் கிருஷ்ணா !
Deleteவாங்க...வாங்க...most welcome !
Deleteநன்றி சார் கண்டிப்பாக இந்த முறை வந்துவிட வேண்டும்.
Deleteவாங்க கிருஷ்ணா இந்த முறை நேரில் சந்திப்போம்
Deleteகௌபாய் காதலி :-
ReplyDeleteமுரட்டுத்தனமான குதிரைப்பசங்களை வைத்துக்கொண்டு ஒரு உணர்வுபூர்வமான சென்டிமென்ட் மற்றும் காதல் கலந்த குடும்பக்கதையை கொடுத்திருக்கிறார்கள்.!
வழக்கம்போல எங்கேயோ போய்க்கொண்டிருந்த டெக்ஸ்+ கார்சன் ஜோடி "எங்களுக்குன்னே வருவீங்களாடா" ன்ற மாதிரி இந்தப் பிரச்சினைக்குள்ள சிக்கிக்கிறாங்க.!
டான் மேனுவலலை பார்த்தாலே தெரிகிறது.. இந்தக் கிறுக்கனோடு பத்து நிமிசம் கூட பேசமுடியாதுன்னு.! அப்படி இருக்கும் போது அந்த ரூபி புள்ள.. பாவம் எப்படி குப்பை கொட்டும்.!
இது கள்ளக்காதல்.. இதுக்குப்போய் டெக்ஸ், கார்சன் மாதிரியான பெரிய மனுசங்க சப்போர்ட் பண்ணலாமான்னு கேலி பேசினதா சொன்னாங்க..!
கள்ளக்காதல்னா என்னங்க..? மானுவலோட குடும்பம் நடத்திக்கிட்டே ரூபி யாருடனாச்சும் டச் வெச்சிக்கிட்டு இருந்தா அதுக்குப் பேரு கள்ளக்காதல்.. ஆனா அந்த புள்ள அதுமாதிரி எதுவுமே பண்ணலையே.!?
ஏதோ... பெரிய பணக்காரன்.. நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பி டாமை கழட்டிவிட்டுட்டு அவனை கட்டிக்கிச்சி..! அது தப்புன்னு புரிஞ்சதும் அங்கிருந்து வெளியேறத்தான் பாத்துச்சே தவிர.. பண்ணையாட்கள் எவனோடயும் தொடுப்பு வெச்சிக்கல.. இதுல.. எங்குட்டு வருது கள்ளக்காதல்ங்கிற வார்த்தை..!
தப்பிச்சி போயிடலாம்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருக்கும்போது எதேச்சையா டாம் அங்ஙே வருகிறான்.. எனக்கு துணைக்கு வரியான்னு கேக்குது.. இது கள்ளக்காதலா..?!
மானுவலை பிரிஞ்சி டாமை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு பேரு கள்ளக்காதல் இல்லீங்கோ.. அதுக்குப்பேரு மறுமணம்.!
சாட்டையால அடிச்சி சதையை பிச்சி எறிஞ்சாலும்.. கணவனே கண்கண்ட தெய்வம்.. மணாளனே மங்கையின் பாக்கியம்னு உளறிக்கிட்டு அவன் காலை அமுக்கிவிட்டு அவனோடயே இருக்கணும்னு சொல்ல வரிங்களா..?! சரியான மேல் சாவனிசமா தெரியலையா.! நம்ம வீட்டு பெண்களுக்கு டான் மானுவல் மாதிரி ஒரு கிறுக்கனை புருசனா இருந்தா.. அடிவாங்கி அங்கேயே சாகும்மான்னு சொல்லி விட்ருவோமா..!? இல்லை வேற ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சித் தருவோமா..?! இதைத்தானே டெக்ஸும் கார்சனும் செஞ்சாங்க... இதிலென்ன தவறைக் கண்டுட்டிங்க..!?
கௌபாய் காதலி - பெண்பாவம் பொல்லாதது
யாருப்பா அது 'கள்ளக்காதல்'னு சொன்னது? எங்க கிட்கண்ணனையே டென்ஷன் பண்ணிப் பாக்குறீங்களா? பிச்சிப்புடுவேன் பிச்சி!
Deleteஏழைக் கெளபாயான டாமின் உண்மையான அன்பைக்காட்டிலும் காசு பணம், வசதி வாய்ப்புகளே முக்கியம்னு அவனை உதறியெறிஞ்சுட்டு மனுவெலைக் கரம் பிடித்த குணவதியைப் பத்தி தப்பா பேசுறீங்களா? கொன்னுபிடுவேன் கொன்னு!
தன் கணவனான மனுவலைவிட்டுத் தப்பியோடி பழைய காதலன் டாமுடன் இணையும்போதுகூட பை நிறைய நகைகளை குதிரைச் சேனத்தில் கட்டி எடுத்துவந்திருந்த 'அன்புக்கு மட்டும் ஏங்கும்' அபலையைப் பத்தித் தப்பா பேசறீங்களாக்கும்? உருட்டிவிட்டுடுவேன் உருட்டி!
அதாவது, கணவன் வேண்டாம் - ஆனால் அவன் போட்ட நகைகள் மட்டும் மூட்டை மூட்டையாய் வேண்டும்னு ஒரு பெண் நினைச்சா அது தப்புன்றீங்களா? பிறாண்டிப்புடுவேன் பிறாண்டி!
மனுவலோடு முறைப்படி திருமணம் செய்துகொண்டவள் - திருமணமுறிவையும் முறைப்படி ஏற்படுத்திக்காம தன் பழைய காதலனோடு சேர்ந்துவாழ முயற்சிப்பதை 'கள்ளக்காதல்'னு யாராச்சும் சொன்னீங்களோ.. குதறிப்புடுவேன் குதறி!!
பணபலத்திலும் படைபலத்திலும் செல்வாக்கு மிக்க தன் கணவனிடமிருந்து தப்பியோடி வேறொரு இளைஞனுடன் இணைந்துகொள்வதன் மூலம் அந்த அப்பாவி இளைஞனின் உயிரையும் டீலில் விடுகிறோம் என்று நன்றாகத் தெரிந்துமே கூட தன் சுயநலத்துக்காக அதைச் செய்யத்துணிந்த இளகியமனம் படைத்த இளவரசியை யாராவது தப்பா பேசினீங்களோ.. பிரிச்சு மேஞ்சிடுவேன் பிரிச்சு!
ஓ இதுக்காக இரவு 3 மணிக்கு மேலும் முழித்து இருந்து பதிவிடும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் EV.
Deleteவணக்கம் குருநாயரே...
Deleteநீங்கதானா அது..
குருநாயரே.. மனிதர்கள் என்பவர்கள் தவறுகளும் நியாயங்களும் சரிவிகிதத்தில் கலந்த கலவைதான்..!
நீங்க நினைக்கிற மாதிரி நூறு சதவீத பர்ஃபெக்ட் மென் சினிமாவில் அதுவும் அந்தக்கால சினிமாவில் மட்டுமே போலியாக காட்டப்படுவாங்க.!
ரூபி.. நகை எடுத்துக்கிட்டு போனதுல என்ன தப்பு..! யோக்கிய சிகாமணி மானுவல்கிட்ட இருந்து எதை எடுத்துக்கிட்டு போனாலும் தப்பில்லே..! அந்தமாதிரி ஒரு குரூரரனுக்காக பரிந்து பேச எப்படி மனசு வருது உங்களுக்கு..?
டாமுடையது உண்மைக்காதல்னு யாருங்க சொன்னாங்க உங்ககிட்ட.?
அடுத்தவன் பொண்டாட்டின்னு தெரிஞ்சும் காதல் படுத்தும் பாடுன்னு சொல்லிக்கிட்டு நடுராத்திரியில சந்திக்கப் போறவ.தான் உத்தமபுத்திரனோ..!? ரூபீ மாதிரி அவனுக்கும் பெரிய இடத்து சகவாசம் கிடைச்சிருந்தா விட்டுட்டு ஓடியிருப்பான்.!
ஏன்.. இப்பவே கூட தான் ரூபியோட போயிட்டா.. தன்னோட நண்பர்களுக்கும் முதலிலாளிக்கும் உயிரே போய்விடும் ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சிதானே போறான்.. So.. டாமும் சந்தர்ப்பவாதிதானே... வேற பணக்கார பிகர் கிடைச்சிருதா ரூபியை விட்டுட்டு ஓடமாட்டான்னு என்ன நிச்சயம்.?
ஆம்பளைங்க எல்லாம் சுயநலமா இருக்கலாம்.. பொம்பளைங்க மட்டும் அவங்களை சகிச்சிக்கிட்டு டீவி சீரியல் தியாகிகளா வாழணுமா குருநாயரே..?! இது பழங்கால ஆணாதிக்க சிந்தனை இல்லிங்களா..?!
கணவன் வேண்டாம்.. நகை மட்டும் வேண்டூமா////
Deleteஅருமையான கேள்வி குருநாயரே..!
முதல்ல அந்த மானுவல் மனுசனே கிடையாது..இதுல கணவனா...😂
,ரூபி வெளியே போய் பணமில்லாம என்ன பண்ணுவா..? யார் அவளுக்ககு துணை..!?
டாம் வருவானான்னு உறுதியாவும் தெரியாது.. இத்தனை நாட்கள் மானுவல்கிட்ட இருந்ததுக்கும்.. அவனால பட்ட கஷ்டத்துக்கும் காம்பன்சேசனா அந்த நகைகள்..!
முறைப்படி விவாகரத்து... .மானுவல் மாதிரி ஒரு மிருகத்துக்கிட்ட முறைப்படி விவாகரத்து வாங்கிட முடியுமா.... அதுவும் அவனோட ஊருல...!
அதுவும் அந்த வைல்ட் வெஸ்ட்டுல...!
கறிக்கடைக்கு.. வீட்டுக்குன்னு மாத்தி மாத்தி போயிகிட்டு.. பிட்டுபிட்டா டைப் பண்ண வேண்டியிருக்குங்க..😆
Delete"///"அன்புக்காக ஏங்கும் அபலை"///
மறுக்கி ஒருக்கா படிங்க குருநாயரே.. எந்த இடத்துல நான் அப்படி சொல்லியிருக்கேன்..! ஏதோ.. பணக்காரனை கட்டிக்கிட்டா சொகுசா இருக்கலாமேன்னு மானுவலை கட்டிக்கிட்டா..! அது தப்புன்னு தெரிஞ்சதும் வெளியே வர விரும்புறா..! டான் மானுவலின் செல்வாக்கில இருந்து தப்பிக்கணும்னா கொஞ்சமாச்சும் பணம் வேணாமா.? அதுக்காக நகை.. அது நஷ்டஈடுன்னு முன்னாடியே சொல்லிட்டேன்.!
அடுத்து.. டாம்..! அந்த உத்தமபுத்திரன் தன்னோட விருப்பம் இருந்தா வரலான்னுதான் சொல்றா..! முதலில் ரூபி மேல இருக்குற கோவத்துல மறுக்குற டாம்.. அப்புறம் அவ கஷ்டத்தையும் பைநிறைய இருக்கும் நகையையும் பாத்துட்டு அவகூடவே ஒட்டிக்கிறான்.. அவன் வரலைன்னாலும் ரூபி கிளம்பியிருப்பா..!
டாம் அல்பத்தனமா நடந்துக்கலாம்..!
மானுவல் மிருகத்தனமா நடந்துக்கலாம்..!
ரூபி மட்டும் உத்தமியா இருக்கணும்.. என்ன நியாயம் இது குருநாயரே..?!
ஜேம்ஸ்பாண்டு கதைக்கு ஒரு குட்டியோட கூத்தடிக்கிறதை ரசிக்கிற நம்ம மக்க... அதையே மாடஸ்டி பண்ணினா கேலி பண்ணுவாங்க.. இதுதான் ஆணாதிக்க மனநிலை.. அதன்படி யோசிச்சா ரூபி மானுவலின் காலையே காலம்பூரா கழுவிட்டு இருக்கணும்னுதான் சொல்விங்க..!
இனிமே சாய்ங்காலம்தான் இங்கே எட்டிப்பாக்க முடியும்...!
Deleteசமைக்கணும்.. புசிக்கணும்..
தூங்கணும்..!
@KOK uncle
Deleteஉண்மையின் தத்துவமே....
நீதியின் விடிவெள்ளியே...
ஞாயத்தின் மொத்த உருவே...
தர்மத்தின் தாரக மந்திரமே....
நேர்மையின் சிகரமே....
தியாகத்தின் பிறப்பிடமே....
உன்னதமான தீர்ப்பு தந்தாய் மறுதாயே.....
அன்பு மாமா அருமை.....அருமை...அருமை💞💞💞💞💞💞💞
நாட்டாமை விஜயகுமார், சரத்குமார் நாட்டாமைனு இரு நாட்டாமைகளின் சேர்ந்து செய்த கலவையின் தீர்ப்புக்கு இணையான தீர்ப்பு....
This comment has been removed by the author.
Deleteகண்ணா @ ரூபி உங்களுக்கு பிடித்து இருக்கிறது உங்கள் குருநாயருக்கு ரூபியை பிடிக்க வில்லை. இது தான் வித்தியாசம் 😁
Delete😅😅😅
Delete51வது
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteமேலும் மேலும் ஆவலூட்டும் தகவல்கள். ஈரோட் களைகட்ட போகிறது.
காமிக்ஸ் கலவரத்தில் மட்டும் கலந்துக்க ப்ளான். கிரிக்கெட் சேதாரத்தியிருந்து தப்பித்து 😁
ஆமாம், இரும்புக்கை அட்டை காட்டுறதா சொன்னீங்க.. எங்க இது ?!
வந்துட்டேன்.
ReplyDeleteஎடிட்டர் சார் நீங்கள் பட்டபாடு இந்த மாதம் கொஞ்ச நஞ்சம் இல்லை. ஆனால் சம்மர் ஸ்பெஷல் கையில் கிடைக்கும் போது நீங்கள் பட்ட கஷ்டம் வீண் போகாது என்பது எனது நம்பிக்கை. One of the most expected books of this year at least for me. அதும் ரூபின் மற்றும் டேங்கோ இருவரும் எனக்கு மிகவும் பிடித்த பாத்திரங்கள். ஆல்ஃபா இந்த முறை எப்படி இருக்கும் என்று பார்க்கலாம். என்னை பொறுத்த வரையில் அவர் Above average ஹீரோ இந்த முறை Distinction வாங்குவாரா என்று பார்க்கலாம். சிக் பில் எப்பொழுதுமே நன்றாக இருக்கும்.
ReplyDeleteரொம்பவே ஆவலுடன் வெயிட்டிங்.
கார்சனின் கடந்த காலம் preview simply Stunning Maxi சைசில் இந்த புத்தகம் ஒரு மைல் கல் இதழாக இருக்கப் போகிறது. ஈரோட்டில் அந்த புத்தகத்தை கையில் ஏந்தும் தருணத்திற்கு ❤️❤️❤️
ஓ இதுக்காக இரவு 3:40 மணிக்கு மேலும் முழித்து இருந்து பதிவிடும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் KS! :)
Delete;-)))))
DeleteWell said Kumar
Delete🙏🙏
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜூலை 30 கிரிக்கெட் போட்டி மைதானம் எங்கே . பார்வையாளர்கள் வரலாமா.டெக்ஸ் டைகர் ஸ்கோர் லக்கி. 4 டீம்.மாடஸ்டி பேர்ல ஒரு டீம் ஆரம்பிக்கனும்னு இளவரசி பேரவையின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்
ReplyDeleteஎப்பூடி
Deleteஅதான் ஆரம்பிச்சுட்டீங்களே.. பார்வையாளர்கள் டீம்...அப்படியே அழைக்கப்படும்.
DeleteHi..
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteஉங்கள் பதிவை படித்ததும் சம்மர் ஸ்பெஷல் இதழை எப்பொழுது காண்போம் என்ற ஆவல் பரபரக்கிறது சார்..
ReplyDeleteAny updates on the Tintin approval process sir?
ReplyDeleteஇனிய காலை ஞாயிறு வணக்கங்கள்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!
ReplyDelete//நமக்கு இங்கே லட்சுமி வெடிச்சிரிப்புகள் இல்லாங்காட்டியும், ஊசிவெடிச் சிரிப்புகளாவது இன்றியமையா சமாச்சாரங்கள் ! அதற்குமே வாய்ப்புகள் குறைவெனில், உப்பு குறைவான சமையலாகவே பார்த்திடுகிறோம் !//
Deleteசிக்பில்லிலே சிரிப்பே இல்லைன்னாலும் இந்த பதிவில் நீங்க பட்ட பாட்டை நினைச்சுக்கிட்டாலே பக்கத்துக்குப் பக்கம் குபீர் சிரிப்பில்லே வரும்!!!
சம்மர் ஸ்பெசல் எப்பவுமே கொண்டாட்டம்தான் .என்றாலும் இதுபோன்று முழுமையான கலர் ஸ்பெசல். ரொம்ப ரொம்ப கொண்டாட்டம்.
ReplyDeleteசார் மாடஸ்டி டைஜஸ்ட்
ReplyDeleteஆல்ஃபாவும் டேங்கோவும் எகிறி அடிக்கப் போகும் சிக்ஸர்களுக்காக மூச்சை பிடித்துக் கொண்டு காத்திருக்கிறேன் !!!!!
ReplyDeleteரூபீனுமே சார் !
DeleteSir
ReplyDeleteமொழி பெயர்ப்பில்
தாங்களின்
பங்களிப்பு
எங்களுக்காக
தாங்கள்
தரும் கடுமையான
உழைப்பு, பதிலுக்கு உங்களுக்கு
நாங்கள் தருவது
நன்றிகள் மட்டுமே, ஆனால் உங்களுக்கு
நாங்கள்
கடன் பட்டு உள்ளோம்,
எங்கள் கடனை அடைக்க என்ன செய்ய....
உண்மை நண்பரே. அதுவும் அந்த மொழி பெயர்ப்பு தரம் உலகத் தரம்.
Deleteதொடர்ந்து வாசியுங்கள் நண்பரே ; அதற்கு மேலென்ன கேட்டிட போகிறேன் ?
Deleteகுமார் சார் ...உலகத் தரமென்பதெல்லாம் த்ரீ மச் ; "honest ஆன முயற்சிகள்" என்று சொல்லுங்கள் - பொருத்தமாக இருக்கும் !
Deleteஇல்லை இல்லை சார். உங்கள் மொழிபெயர்ப்பு தான் Yard Stick சார். எத்தனை காமிக்ஸ் வந்த போதும் இன்று வரை நாங்கள் தொடர காரணம் உங்கள் மொழிபெயர்ப்பு தான். இனி எத்தனை புது காமிக்ஸ் தமிழில் வந்தாலும் லயன் காமிக்ஸ் உடன் Comparison இருந்து கொண்டே தான் இருக்கும்.
Deleteஉங்கள் லெவலை எட்டி பிடிப்பது தான் சாவலே. You are a Pioneer in this Tamil Comics World and History Will always remember Your Contribution Sir.
குமார் சார் .. எடிட்டர் சார்தான் தமிழ் காமிக்ஸின் ராக்கி பாய்னு சொல்றீங்க ..
Deleteராக்கி பாயா ? ராக்கி தாத்தான்னு சொல்லுங்க !
Deleteராக்கி தாதா...
Deleteவிஜயன் சார் @ மீண்டும் ஒரு அற்புதமான மிக நீளமான பதிவு. நீங்கள் இந்த இதழ்களுக்கு போட்ட உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட் சாதாரண மனிதர்களால் இது முடியாது; உங்களைப் போன்ற காமிக்ஸ் காதலரால் மட்டுமே இது சாத்தியம். உங்களின் இந்த ஈடுபாடு இந்த இதழின் வெற்றியை இப்போதே உறுதி செய்து விட்டது. உங்கள் காமிக்ஸ் காதலுக்கு மீண்டும் தலை வணங்குகிறேன் சார்.
ReplyDeleteTruth to tell - தமிழ் தவிர்த்த வேறெந்த இந்திய மொழியிலும், ஆல்பாவையோ, ரூபினையோ கையாள எந்தவொரு எடிட்டருக்கும் தில் இராது - simply becos இந்தத் தரத்தினை உள்வாங்கிடும் ஆற்றல் கொண்ட வாசக வட்டம் வேறெங்குமே கிடையாது !
DeleteSo நல்லதொரு உசரத்தில் நிலைகொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளுக்கு நியாயம் செய்திடல் அத்தியாவசியமாச்சே சார் ?! அதற்கென மெனக்கெட, கணிசமாய் 'ஆட்றா ராமா ...தாண்ட்றா ராமா' அவசியப்பட்டால் - so be it !
// simply becos இந்தத் தரத்தினை உள்வாங்கிடும் ஆற்றல் கொண்ட வாசக வட்டம் வேறெங்குமே கிடையாது ! //
DeleteTrue sir.
// தமிழ் தவிர்த்த வேறெந்த இந்திய மொழியிலும், ஆல்பாவையோ, ரூபினையோ கையாள எந்தவொரு எடிட்டருக்கும் தில் இராது //
Delete100% True sir
நீங்கள் தான் எங்களுடைய ரசனைகளை உயர்த்திக் கொண்டே போறீங்களே சார். Sky is the limit.
DeleteAthey athey Kumar
Delete////நீங்கள் தான் எங்களுடைய ரசனைகளை உயர்த்திக் கொண்டே போறீங்களே சார். Sky is the limit.////
Deleteசரியாச் சொன்னீங்க KS! நமக்குள்ளே இம்புட்டு ரசணை கொட்டிக் கிடக்கும் சமாச்சாரமே எடிட்டர் வெளியிடும் கதைகளைப் படித்தால்தான் தெரிகிறது!
அவரோட தேடல் தான் நம்ம ரசணைகளை உயிர்ப்போட வச்சிருக்குன்னும் சொல்லலாம்!
இப்படியொரு எடிட்டர் (நம்மிடம் வசமாய் வந்து) வாய்க்க நாமெல்லாம் வரம் வாங்கி வந்திருப்பவர்களாகிறோம்!
// சரியாச் சொன்னீங்க KS! நமக்குள்ளே இம்புட்டு ரசணை கொட்டிக் கிடக்கும் சமாச்சாரமே எடிட்டர் வெளியிடும் கதைகளைப் படித்தால்தான் தெரிகிறது! //
Delete+1
// இப்படியொரு எடிட்டர் (நம்மிடம் வசமாய் வந்து) வாய்க்க //
ROFL
ஆல்
Delete+
Hii
ReplyDelete
ReplyDeleteDeath note , naruto , manga நம்ம தமிழ்ல வர நிறைய காலம் ஆகுமோ..?😉
கதாசிரியர் .mythic.ஒரே கதாசிரியரின் இரண்டு கதைகள் ஒரே மாதத்தில் வருவது இதுதான் முதல் முறையாக இருக்கு மென்று நினைக்கிறேன்
ReplyDeleteஎன்னங்க நடக்குது இங்க
ReplyDelete.k.o.k.இளவரசர் போலவும் இளவரசர் k.o.k.போலவும் பதிவு போடறாங்க.வழக்கமாஇளவரசர் இதுமாதிரியான காதலுக்கு ஆதரவு தருவார்.k.o.k. மாடஸ்டி கதைகளின் போது இந்த அக்கா தப்பு செய்யுது அப்படிங்கற மாதிரி சொல்லுவார் இன்னைக்கு இந்த காதலுக்கு ஆதரவு தருகிறார் ஒண்ணுமே பரியலையே
ராஜசேகர் ஜி.. இளவரசர் எப்பவுமே நல்ல காதலுக்குத்தான் ஆதரவு தருவார்! ஹிஹி!
Deleteராஜசேகர் சார், கண்ணனுக்கு ரூபியை மிகவும் பிடித்து விட்டது! அவ்வளவு தான் :-) சிம்பிள்! :-)
Deleteயார் அந்த மாயாவி: இந்த கதையை சிறுவயதில் படித்து இருக்கிறேன் மீண்டும் இந்த கதையை படித்த போது ஒரு இனம்புரியாத பரபரப்பு தொற்றி கொண்டு கதையை பரபரவென்று ஒரு நாள் காலையில் காபி குடித்து கொண்டே படித்து முடித்தேன்! டுயூக்ஸ் என்ற மனிதர் கொடூர மனிதனாக மாறி மாயாவியை தண்ணி கூட குடிக்க முடியாத படி ஓட வைத்தது, மாயாவி ஒவ்வொரு முறையும் டுயூக்ஸ் மற்றும் போலீசிடம் மாட்டிக்கொண்டு எப்படிடா தப்பிக்க போகிறார் என்று நம் நகம்களை கடிக்க வைத்து விட்டார் கதாசிரியர், மாயாவி தப்பிப்பது இயல்பாக இருந்தது, பூச்சுற்றல் கொஞ்சம் குறைவே! ஒரு இடத்தில் இரண்டு மாயாவிக்கும் இருவேறு கரம் இரும்புக்கையாக இருப்பதை கொண்டு வங்கியை கொள்ளை அடித்தது நமது இரும்புக்கை மாயாவி இல்லை என முடிவு எடுக்கும் அடுத்த நிமிடத்தில் அதே கையை வைத்து இல்லை இவைகளை செய்தது நமது இரும்புக்கை மாயாவிதான் என அவரை மீண்டும் விரட்ட ஆரம்பிப்பது செம திருப்பம்!
ReplyDeleteமொத்தத்தில் சமீபத்தில் மிகவும் ரசித்து படித்த ஒரு கிளாசிக் கதை!
விஜயன் சார், ஒவ்வொரு முறை மொழிபெயர்ப்பில் நீங்கள் அடிக்கும் குட்டிகரணம் அதனை மறக்காமல் அப்படியே எங்களிடம் சொல்லுவது (இவ்வளவு வேலை பளுக்கிடையில்) அதுவும் நகைச்சுவையுடன் சொல்லுவது எல்லாம் உங்களை விட்டால் வேறு எவராலும் முடியாது, நல்ல கதையை தரவேண்டும் என நினைப்பது அதே நேரம் அந்த கதையை கொடுக்க நீங்கள் படும் சிரமம்கள் எல்லாம் வேற லெவல் சார், ஒரு சிறந்த காமிக்ஸ் காதலர் எங்கள் எடிட்டராக கிடைத்தது எங்கள் பாக்கியம் சார்
ReplyDeleteஅருமைல
DeleteOn the flipside, இத்தனை காலமாகியும் இம்மாம் ஜனமுள்ள தமிழ்நாட்டில் உருப்படியாய் புது மொழிபெயர்ப்பாளர்களைத் தேற்ற முடியலியே என்றுமே பார்க்கலாம் தானே சார் ?!
Deleteவிரைவில் AI ஏதாச்சும் மாயம் நிகழ்த்துகிறதா ? என்று பார்க்கணும் !
AI பக்கம்லாம் போக வேண்டாம் கண்டிப்பாக மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பார்கள்
Deleteஈரோடு புத்தக திருவிழா புத்தகங்கள் 5-க்கும் எனது முன் பதிவு எண் 3 :-)
ReplyDeleteஅச்சுக்கு மே மூனுதானா
Deleteஅடடே வாழ்த்துக்கள் பரணி
Delete@Parani: முந்திகிட்டீங்க... நமக்கு 5வது இடம் தான் கிடைச்சது 🫡
Deleteஈரோட்டில் துண்ட போட்டு உங்களுக்கு மன்னாடி எப்படியாவது வாங்கிபுடனும்... 😁
இது வரை வந்ததிலே டாப் பதிவு....ஹஹஹா...கரையாண்டி கடை சைக்கிளானாலும் பயணமருமை....பயணத்தை சுளுவாக்கிக் கொள்ளுங்கள்...உங்கள் மெனக்கெடல் வீண் போகாது....கார்சனின் கடந்த காலம் தனியாக கார்சனிருந்தாலும்....மின்னும் மரண அட்டை போல மினுமினுத்தாலும்....வண்ணங்களை துணையாக்கி வாரியிறைக்க தவறாதீர்கள் கருப்பு வெள்ளை வாழ்க்கைன்னாலும்...ஏக .எதிர் பார்ப்பது ஸ்பைடர் சுஸ்கி மேலன்னாலும்....கார்சனின் கடந்த காலமோ அதுக்கும் மேலாயிற்று....5+ஒன்....டின் டின்....டினிங்கென விரைந்து வரட்டும் காலம் வண்ணங்களை நம் வாழ்வில் கலந்தபடி....மீண்டும் நன்றிகள் எமது உற்சாகங்களுக்கான முக்கிய மெனக்கெடல்களுக்காக.......டேங்கோ....உங்களை பாடாய் படுத்திய ஆல்ஃபா....சிக் பில்லியன் அற்புத மொழிமாற்றுக்கும் மொழி பெயர்ப்புக்கும்.... அந்த ரூபினை இன்று படித்து விட்டு ஓரிரு தினங்களில் வர உள்ள ரூபினுக்காக காத்திருக்கும்....இம்மாத இதழ்களுக்காக ஆவலுடன்...விதி எழுதிய வெள்ளை வரிகள் அட்டைக்காக பேராவலுடன்...
ReplyDeleteவண்ண மார்ட்டினுக்காகவும்...
Deleteமுதன் முறையாக ஐந்து ப்ளஸ் ஒன்னும் ஏக எதிர்பார்ப்பில்
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல காதலோ கள்ளகாதலோ அந்த கதய நம்ம எல்லோருக்கும் புடிச்சிருக்கு டெக்ஸ் வில்லருக்கு இதுவும் ஒரு மாஸ் ஹிட்டே.(ஒரு கௌபாயின் காதலி)
ReplyDeleteஈரோட்டில் ஒரு பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்தாலென்ன சார் - நல்ல காதலா ? நொள்ளைக் காதலா என்று ?
Deleteநிச்சமாக...
Deleteஈரோடு புக் பேர் ஸ்பெஷல், ஐந்து புத்தகங்களுக்கு கூரியர் 90 என்றார்கள்...மாயாவி வேரியண்ட் புத்தகத்தை சேர்க்கச் சொன்னால் கூரியர் 180 என்கிறார்கள்..கொஞ்சம் பாத்து செய்ய சொல்லுங்க சார்..
DeleteBy the way, the kids comics was good. Enjoyed the three books
ReplyDeleteCricket match youtube live unda? 😅😅
ReplyDeleteதேதி 12 ஆச்சு. இன்னும் புக் வரல. போன மாசமும் இப்படித்தான். சீக்கிரம் அனுப்பி வையுங்க .
ReplyDeleteWarm welcome
DeleteMythic...mythikiraaro(மிதிக்கிறாரோ).....ஹா ஹா.....
ReplyDeleteகரையாண்டி சைக்கிள
Delete?மாடஸ்டி டைஜஸ்ட் எப்போ?மாதிரியான அறிவுபூர்வமான விவாதங்களுக்கேநமக்கு நேரம் சரியாஇருக்கும் சார்.இடையில்.இந்த காதல் பத்தியும் பேசிடலாங்கசார்
ReplyDeleteசார் கென்யாவின் இரண்டாம் பாகம் எப்போது
ReplyDeleteசார் ஜுலை மாத இதழ்கள் ரெடியா
ReplyDeleteசார் கண்ல காட்டலாமே கார்சனட்டைய..
ReplyDeleteரெடின்னா ஈரோட்டு முன் கொண்டாட்டமா இம்மாத இதழ்களோடு வந்துட்டு போவட்டுமே
Deleteஈரோடு புக் பேர் ஸ்பெஷல், ஐந்து புத்தகங்களுக்கு கூரியர் 90 என்றார்கள்...மாயாவி வேரியண்ட் புத்தகத்தை சேர்க்கச் சொன்னால் கூரியர் 180 என்கிறார்கள்..கொஞ்சம் பாத்து செய்ய சொல்லுங்க சார்..
ReplyDeleteகடந்த பதிவில்
Deleteகொரியர் கட்டணம் பற்றி தெளிவாக குறிப்பிட்டு உள்ளனர்
அதன் விபரம்
கிழே தரப்பட்டுள்ளது.....
இதழ்களையும் ஒட்டுக்கா புக் செய்திடும் நண்பர்களுக்கு ஸ்பெஷல் விலை : ரூ.1550 ப்ளஸ் கூரியர் கட்டணம் !
*ஈரோட்டில் நேரில் வாங்கிக் கொள்வதாயின் no கூரியர் கட்டணம்ஸ் !
*5 இதழ்கள் கொண்ட பார்சலின் எடை நெருக்கி இரண்டரை கிலோ வரும் என்பதால் - தமிழகத்தினுள் ரூ.150 & வெளி மாநிலத்துக்கு ரூ.200 கூரியர் கட்டணங்கள் வந்திடும் !)
+ 150+30 = 180 என
கூறி இருக்கலாம் நண்பரே
This comment has been removed by the author.
Deletetrent seriesல் மொத்தம் எத்தனை வந்திருக்கிறது. அந்தியும் அழகே அடுத்த பாகங்கள் வந்திருக்கிறதா?
ReplyDeleteஇன்னும் ஒன்று மட்டும் இருக்கு #12 என்று நினைக்கிறேன்
DeleteYes. Last story of this Trent series.
Deleteஆகா வெப்சைட்டில் 2 புத்தகம் தான் இருக்கு
Deleteசார் பொட்டி கிளம்பி விட்டதா?
ReplyDeleteபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்கா நாளில் நண்பரே
Delete150.....
ReplyDeleteநேத்து எதேச்சையா ஐஆர்எஸ் ஐ மறுக்கா படிச்சா...
ReplyDeleteஇரவில் ரியலாக
லார்கோ தொடரின் வரிசை கூற முடியுமா..?🥰
ReplyDelete
ReplyDelete🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
கார்டூன் காதலரும்,
தனது பெயரிலேயே அவர்களை கொண்டவரும்,
பாசத்தின் புகழிடம்,
பண்பின் உறைவிடம்,
நேசத்தின் பிறப்பிடம்,
இன்சொல்லின் நிறைகுடம்,
நகைச்சுவையின் நேர்முகம்,
அன்பிற்கும்...
பாசத்திற்கும்...
உரிய இனிய நண்பர்...
அன்பு மாம்ஸ்...
KOKக்கு
பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
💐💐💐💐💐💐💐💐💐💐
🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
ஒரு ஷெரிபை மைத்துனராக இன்னொரு ஷெரிபை எஜமானராக கொண்டவர்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரேப
Deleteஅன்பு நண்பர் கிட் ஆர்டின் கண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Deleteமாம்ஸ் STV, அன்பு செனா அனா.. நம்ம குமார் மற்றும் ஸ்டீல் க்ளா..
Deleteநன்றிகள் பல நட்பூஸ்..😍🙏
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கிட் ஆர்டின் கண்ணன் சார்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் கிட் ஆர்டின் கண்ணன்.
ReplyDeleteஅப்படியே அந்த கிடா வெட்டி பிரியாணி விருந்து நடக்கிற அந்த தோப்பு எங்கேன்னு சொல்லிருங்க.
ஆப்பி பர்த் டே மச்சி..
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் கிட் ஆர்டின் கண்ணன் ப்ரோ.
ReplyDeleteஅருமை நண்பர்கள் சக்தி.. புன்னகை ஒளிர்.. சின்னமனூர் சரவணன்..
ReplyDeleteமற்றும்..
என் ஆசை மச்சான் மஹி...
நன்றிகள் நட்பூஸ்..😍🙏
June matham enna book ?
ReplyDeleteசம்மரே ஸ்பெசலா
ReplyDeleteடியர் எடி,
ReplyDeleteஇரும்புக்கை வேரியன்ட் கவர அடுத்த பதிவிலாவது காட்டுவீங்களா ?! 😎
கூடவே சம்மரோ சம்மர் ஸ்பெஷல் மற்றும் ஜுன் இதழ்கள் கிளம்பிட்டது என்ற அறிவிப்பும் வருமில்ல ?!?!
I am WAITING......
சார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteஇன்று பல கேள்விகளுக்கு விடை பதிவில் .எனவே எதிர்பார்ப்பில் இன்றைய பதிவுக்கிழமை
ReplyDeleteஆமா சாமி ஆமா
Deleteசார்
ReplyDeleteமாலை பதிவு மனதுக்கு நல்லதாம்
ReplyDeleteநைட் பதிவு நாட்டுக் நல்லது
Deleteதனி மனிதன் நல்லாருந்தா நாடும்...
Deleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
ReplyDeleteடியர் படி, சம்மர் ஸ்பெஷலுடன் புதிய புத்தகங்கள் வந்து சேர்ந்தது..
ReplyDeletehttps://youtu.be/sCjWzxKVnFg
பைண்டிங் தான் இந்த முறை சொதப்பிவிட்டது,.
அங்கங்கு ஈர பைண்டிங் சுருங்கி இருக்கிறது... தையல்கள் இளுவையாக தெரிகின்றது ....
காலம் செல்லச் செல்ல பக்கங்கள் கிழிவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆனாலும் காய்ந்த பிறகு பைண்டிங் அனுப்ப ஏற்பாடு செய்தால் எல்லாம் சுகமே
15க்குள் அனுப்ப வேண்டும் என்று அவசரப்பட வேண்டாம்... நல்ல தரத்திற்கு மாதம் முழுவதும் காத்திருக்கலாம். No Problems