நண்பர்களே,
வணக்கம். செயற்கை நுண்ணறிவு (AI) எக்கச்சக்கத் துறைகளில் வூடு கட்டி அடித்துக் கொண்டிருக்க, கூடிய சீக்கிரமே வலைப்பதிவுகளையும் அதுவே எழுதித் தந்து விட்டால், நான்பாட்டுக்கு என்ன சப்ஜெக்ட் என்பதை மாத்திரம் சொல்லி விட்டு, ஜாலியாய் காலாட்டிக் கொண்டே உங்களோடு பின்னூட்டங்களில் ஐக்கியமாகி விடுவேன் ! அப்படியொரு நாள் புலரும் வரைக்கும், சனிக்கிழமைதோறும் லேப்டாப்பை லொட்டு லொட்டென்று தட்டும் நடைமுறை தொடர்ந்திடும் - இதோ சமீபத் தாமதங்களை ஈடு செய்திட, ஆபீஸோடு அடித்து வரும் குட்டிக் கரணங்களின் மத்தியில் இங்கே அடியேன் ஆஜராகியுள்ள பாணியினில்!
ஜூலை இதழ்கள் 6-ம் தேதிக்கு டெஸ்பாட்ச் செய்வதாய் வாக்குத் தந்துள்ளேன் என்பதால், pulling out all stops to get things done !! அதிலும் இம்மாதத்து "சம்மர் ஸ்பெஷல்" பைண்டிங்கில் சொதப்பியுள்ளதை ஈடு செய்திடும் விதமாய், "லயன்'s லக்கி ஆண்டுமலரை" upgrade செய்திடத் தீர்மானித்துள்ளோம் ! போன ஆண்டினைப் போலவே ரெகுலர் பைண்டிங் இதழாய் அறிவிக்கப்பட்ட இந்த இதழினை - அழகான ; உருப்படியான ஹார்ட்கவர் இதழாய் ஜூலையில் ஒப்படைக்கவுள்ளோம் ! அவசரகதியில் களமிறங்கி இந்த இதழிலும் கோட்டை விடலாகாது என்பதால், மின்னலாய் பணியாற்றி அச்சுப் பணிகளை முடித்து விட்டோம் ! So சாவகாசமாய் பைண்ட் செய்து ; புக்ஸ் முழுசாய் காய்ந்திட இம்முறை கணிசமான அவகாசம் இருக்கும் ! And வன்மேற்கின் அத்தியாயங்கள் # 2 & 3 ஜூலையில் வண்ண இதழ்களாய்க் காத்திருப்பதால், அங்கேயும் we are on target ! கடந்த 2 வாரங்களாக proof reading பணிகளில் நண்பர்கள் உதவி வருவதால், தெற்கேயும், வடக்கேயுமாய் பிரிண்ட்அவுட்கள் பயணித்து வருகின்றன - ஒவ்வொரு கதையினையுமே குறைந்த பட்சமாய் இருவராச்சும் சரி பார்த்திட வேண்டி ! ஆனால்...ஆனால்...அச்சில் எழும் எழுத்துப் பிழைகளை "printer's devils" என்று ஏன் அழைக்கிறார்கள் என்பதையுமே பார்க்க முடிகிறது - becos பிழைகளானவை அனைவருக்குமே இருட்டுக் கடை அல்வாவை சரளமாய் தந்து கொண்டிருப்பத்தைக் காண முடிகிறது ! Anyways - இறுதியாய் நானும் ஒருவாட்டி இந்த எழுத்துப்பிழைச் சைத்தான்களோடு குஸ்தி போட நேரம் தந்தும் வருகிறேன் ; so முன்னிருந்த அளவுக்கு நெருடல்கள் இராதென்று நம்பலாம் ! Fingers crossed & thanks our proof readers !! ஆகஸ்ட்டில் உங்கள் உழைப்புகளின் பலன் தெரியாது போகாது !
இம்மாதத்தின் வாசிப்புக் களம் பக்கமாய் கவனத்தினைத் திருப்பினால் - எனக்குத் தென்படும் முதல் சமாச்சாரம், 'பொம்ம புக்' களின் மத்தியினில் உள்ள "மலையும்..மடுவும்" மாதிரியான வேறுபாடு தான் ! இரவுக் கழுகாரும், இருள்வனத்து மாயாத்மாவும் படைத்திருக்கும் விருந்துகள் - முருகன் இட்லி கடை மெனுவினைப் போல சுலபமான ஒன்றென்றால், "சம்மர் ஸ்பெஷல்" பரிமாறி இருப்பதோ - சிம்மக்கல் கோணார் கடையின் மெனுவிற்கு நிகரான heavyweight !
வாசிப்புகளை நீங்கள் எந்த இதழிலிருந்து துவங்கிடுவீர்கள் என்பதை உங்களுக்கு சாத்தியப்படும் அவகாசங்களே நிர்ணயம் செய்திடும் என்பதால் அது பற்றிக் கேட்கப் போவதில்லை ! But எப்போதும் போலவே V காமிக்சில் துவங்கினால், நமது கிரிக்கெட் டீமின் டாப் ஆர்டர் நண்டு பிடிக்க முனைந்து விட்டு, அவுட் ஆகி வாபஸாகும் நேரமே இந்த இதழினை வாசித்து முடிக்க உங்களுக்குத் தேவைப்படக்கூடும் ! ஸாகோர் - இந்த தபா முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரில் என்பதால், அந்தக் கல்கதாயுதம் மண்டையைப் பிளக்கும் பிரேம்கள் கணிசம் ! எப்போதும் போலவே புது யுக ஓவியர்கள் சித்திர தரத்தில் பின்னியெடுத்திருக்க, அந்தச் சித்திர ரம்யத்தை ரசிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டால் தப்பில்லை என்று தோன்றுகிறது ! காத்திருக்கும் ஸாகோரின் அடுத்த ஆல்பத்துக்குப் பின்பாய் கொஞ்சம் நீளம் ஜாஸ்தியான கதைகளோடு இந்த ஜம்பிங் நாயகரை களம் காணச் செய்ய எண்ணியுள்ளோம் ! So போனெலியின் டாப் நாயகர்களுள் ஒருவரான இந்தச் சிவப்புச் சட்டைக்காரரின் அடித்து ஆடும் ஆட்டங்களை வரும் மாதங்களில் / ஆண்டுகளில் பார்த்திடவுள்ளோம் !
"கரையெல்லாம் குருதி" !! "சித்திரக்கதை வித்தைகளின் அத்தனை பரிமாணங்களும் எங்களுக்கு(ம்) அத்துப்படி" எனும் போனெலியின் statement ஆகவே இந்த இதழை நான் பார்க்கிறேன் ! "அது என்ன பிரான்கோ-பெல்ஜிய பாணி ? எங்கள் கதாசிரியர்களுக்கும் 44 பக்கங்களுக்குள் கதை சொல்லும் சூட்சமம் தெரியும் ; எங்கள் ஓவியர்களுக்கும் கலரில், பிரெஞ்சு ஆல்பங்களின் ஸ்டைலில் சித்திரங்கள் தீட்டத் தெரியும் ; எங்களது கலரிங் ஆர்டிஸ்ட்களும் உலகத் தரங்களே !!" என்று பறைசாற்றும் ஒரு தனித்தடத்தில் டெக்ஸை இறக்கி விட, அவர் பின்னியெடுக்கிறார் ! தெனாவட்டுப் பண்ணையார் ; சுபாவமான அவரது மகள் ; ஏழைத் தாயின் உத்தம புத்திரன் ; உள்ளூர் புரட்சி - என்று ஜாலியாய் நம்மூரின் கோலிவுட் பாணியில் நகரும் கதை என்றாலும், இரவுக் கழுகாரும், வெள்ளி முடியாரும் entry கொடுக்கும் போது, கதையின் canvas வசீகரம் பெற்று விடுகிறது !! செம breezy read என்பதோடு, பின்னணியில் இக்கட எனக்கு வேலை ரொம்பவே குறைவு என்பதால் இந்தத் தடத்தினில் நிறைய கதைகள் இருந்தால் சூப்பராக இருக்குமே ? என்ற ஆசை அலையடிக்கிறது ! அந்தோ - "இது ஊறுகாயாய் மாத்திரமே இருந்திட வேண்டிய ஐட்டம் தம்பி !!" என்று போனெல்லி தீர்மானித்துள்ளதால், விரல் விட்டு எண்ணி விடும் அளவிலான கதைகள் மட்டுமே உள்ளன ! Maybe அவற்றை இன்னும் கொஞ்சம் கூடுதலாய் கண்ணில் காட்டலாமோ ?
Finally - ஆல்பா...ரூபின்..டேங்கோ..சிக் பில் கூட்டணியிலான சம்மர் ஸ்பெஷல் !! சிக் பில்லின் காமெடி தோரணம் எப்போதும் போலவே வழுக்கிக் கொண்டு ஓடி விடும் என்பதில் ஐயங்களில்லை ! And லோன்ஸ்டார் டேங்கோவுமே சீரான நேர்கோட்டுக் கதை என்பதால் அந்த சமுத்திரத்தையும், பனாமாவின் அழகையும் ரசித்தபடிக்கே 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸை கதையினூடே ஒட்டி விடலாம் தான் ! அப்பாலிக்கா காத்துள்ள ரூபின் அம்மணியும், ஆல்பா அண்ணாத்தையும் தான் தத்தம் பாணிகளில் உங்கள் நேரங்களைக் கணிசமாய்க் கோரிட உள்ளனர் ! இரு கதைகளுக்குமே இன்னும் கொஞ்சம் பக்க எண்ணிக்கையினை கூட்டித் தந்திருந்தால், அரக்கப் பரக்கக் கதைகளை நிறைவு செய்யத் தேவை எழுந்திராது தான் ! But கடைசி 2 பக்கங்களில் தான் மொத்த முடிச்சுகளையும் அவிழ்க்க சுகப்படுமென்று கதாசிரியர் Mythic தீர்மானித்திடும் போது, பொறுமையாய் அந்தப் பக்கங்களை உள்வாங்கிக்கொள்ள நேரம் தருவதை மட்டுமே நாம் செய்திட இயலும் ! And முதல் வாசிப்பில் "புரிஞ்சா மெரியும் கீதுப்பா...பிரியாத மெரியும் கீதுப்பா...!!" என்ற உணர்வுகள் இங்கே தலைதூக்கினால் ஆச்சர்யமே கொள்ள மாட்டேன் ! So சொல்லுங்களேன் ப்ளீஸ் - முதல் வாசிப்பிலேயே ஜெயமா உங்களுக்கு ? என்று ?!!
Moving on, ஒண்ணரை மாத தொலைவினில் காத்துள்ள ஈரோட்டு புத்தக விழா சந்திப்பின் ஏற்பாடுகள் பொருட்டு உங்களுக்கு ஒரு கேள்வி folks ! வழக்கமாய் நாம் சந்திக்கும் அந்த Le Jardin ஹோட்டலானது முழுசாய் மராமத்துக்காக பூட்டப்பட்டுள்ளதால் வேறொரு இடம் தேடிட வேண்டியுள்ளது ! ஈரோட்டுக்கு AUGUST 5 தேதிக்கு ஒரு எட்டு வந்து போக உங்களில் எவ்வளவு பேருக்குத் தோதுப்படும் என்பதை உத்தேசமாய் கணக்கிட முடிந்தால் அதற்கேற்ப ஹால் பிடிக்க முயற்சிக்கலாம் ! So இதோ உள்ள இந்த லிங்க்கில் போய் உங்களின் பதில்களை பதிவிடலாமே - ப்ளீஸ் : https://strawpoll.com/GeZAOwWAEnV
புறப்படும் முன்பாய் - இதோ ஒரு sneak preview !!
Nanbargal anevarukkum vanakkam
ReplyDeleteஅடடே வாழ்த்துக்கள் நண்பா
Deleteஅடடே... ரகு..!
Delete//அடடே//
Deleteலக்கி அணி வீரர் என்றால் சும்மாவா கேப்டன்
This comment has been removed by the author.
Deleteஇதே மாதிரி டூர்னமென்டையும் அடிச்சு தூள் கிளப்புங்க ரகுராமன்.
Deleteமீ!
ReplyDeleteட்டூஊஊஊஊ
Deleteமேலே சற்று விளையாடிவிட்டு வருகிறேன்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteவந்து விட்டேன்.
ReplyDeleteசிக்ஸரு
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteபதிவுல ஏதோ ஒன்னு மிஸ்ஸாகிற மாதிரியேஏஏ இருக்குங்களே?!!
ReplyDelete///பதிவுல ஏதோ ஒன்னு மிஸ்ஸாகிற மாதிரியேஏஏ இருக்குங்களே?!!///
Deleteமிஸ் லினா தான்..
எனக்குந்தா
Deleteஏஐ எழுதிகுடுத்துருச்சோ
Deleteஆமாம் சகோ, அதே பீலிங், ஆனால் இதுதான் என்று சொல்ல முடியல
DeletePresent sir
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 🙏
ReplyDeleteமிஸ் ஆனது என்னாங்க புரியலையே.
ReplyDeleteவெயிட் பண்ணுங்க ராஜசேகர் ஜி.. நாளைக்குள் புரியும்னு நினைக்கிறேன்!
Deleteவணக்கம் ஆசிரியர் சார் & நண்பர்களே....
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteMe present Sir
ReplyDelete16th
ReplyDeleteசாகோர்அடிக்கும் ஒவ்வொரு அடியும் நம்ம நடுமண்டையில் நச்சென விழுவது போல் feeling.பொறிபறக்குது.
ReplyDeleteநீங்க படிக்கும்போது உங்க பின்னாடி வூட்டுக்காரம்மா நின்னுக்கிட்டிருந்ததை நீங்க கவனிக்கலேன்னு தோனுது!
Deleteராஜசேகர் சார் நீங்கள் சொல்வது உண்மை தான். அடி ஒவ்வொன்றும் சும்மா இடி போல இறங்குகிறது.
DeleteEV ஹிஹிஹி:-))))
@Erode Vijay Sekar சிரிச்சிக்கிட்டே இருக்கேன்... செம்ம... 😁
Deleteபொறி பறக்குதுனா அது லேசாக தானே இருக்கும் 🙂🙂🙂🙂🙂
Delete🙏🙏🙏
ReplyDelete/// And வன்மேற்கின் அத்தியாயங்கள் # 2 & 3 ஜூலையில் வண்ண இதழ்களாய்க் காத்திருப்பதால், ///
ReplyDeleteஆத்தி... அதுக்குள்ள முதல் அத்தியாயத்தை படிச்சாகணுமே....
🏃🏃🏃🏃🏃
இந்த மாதம் டாப் இதழ் சம்மர் ஸ்பெஷல் தான். Hands Down
ReplyDeleteJuly மாதம் ஈரோடு special பணம் செலுத்த உள்ளேன்
ReplyDeleteஎடிட்டர் சாருக்கு,
ReplyDeleteநான் ஈரோடு புக் பேருக்கு வர இயலாத சூழலில் உள்ளேன். ஆனால் யூத் கிரிக்கெட் டூர்னெமென்டுக்கு நான் வருகிறேன்,
ஆனால் உங்கள் மேல் வருத்தத்தில் உள்ளேன்.
Proof reading செய்ய நான் விரும்பியும், என்னை நீங்கள் கண்டு கொள்ளவே இல்லை. இது பெரிய விசயமில்லை என்பதையும் நான் அறிவேன்.இது பெரிய மேட்டரே அல்ல.ஆனால் எனது தமிழ் புலமைக்கு எழுந்த சவால் என்பது என்னை பொறுத்த வரை மட்டுமே. இது எனது சின்ன வருத்தமே. நான் ஒன்றும் பெரிய அப்பாடக்கர் இல்லை என்பது உலகு அறிந்த விசயமே.இதை பெரிதாய் நினைத்துக் கொள்ள வேண்டாம் என வேண்டுகிறேன். அதோடு ஈரோடு புக் பேருக்கு நான் எதையும் புக் செய்ய வில்லை என்கிறபோது, நான் பேச உரிமை இல்லையே.
வருத்தம் வேண்டாம் சகோதரரே, வாய்ப்புகள் அடுத்த தடவை கிடைக்கலாம்.
Deleteஈரோடு புக் ஃபேர் புத்தங்கள் புக் பண்ணதாதல் பேச கூடாது என்று இல்லை, சகோதரரே.
//யூத் கிரிக்கெட் டூர்னெமென்டுக்கு நான் வருகிறேன்//
Deleteகாமிக்ஸ் படிக்கும் நாம் அனைவரும் யூத் தான் 😁😁😁😁😁
😁
Deleteருபின் - loved it.
ReplyDeleteYes. ரூபினின் இரண்டு கதைகளுமே அட்டகாசம். தொட்டால் தெறிக்கும் ஒரு விதம் என்றால் 96 மணி நேரம் இன்னொரு விதம். சோடா போலவே கார்ட்டூன் பாணி ஓவியங்கள் ஆனால் ரொம்பவே சீரியஸ் ஆனா கதை. ரூபின் is here to stay.
Deleteஓவியங்கள் & கலரிங் செம்மயா இருக்கு.
Deleteகதையும் பல எதிர்பாரா திருப்பங்களோடு போகுது.
தங்களை சந்திக்க வேண்டும் என்பது நீண்ட வருட கனவு. கண்டிப்பாக கலந்து கொள்வேன்❤️.
ReplyDeleteஇந்த மாதம் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. தாங்கள் கூறியது போல இந்த முறை வந்த "சம்மர் ஸ்பெஷல் புக்" பைண்ட் படுமோசமே.
பல நண்பர்களுக்கு புக்ஸ் பிரிந்து விட்டதென வாட்சப்பில் ஃபோட்டோ போட்டபோது கொஞ்சம் சங்கடமே.
இதுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும்,
ஆசையாக 500 ரூபாய் கொடுத்து வாங்கியவர்களுக்கு ஏமாற்றமும் வருத்தமும் என்பதை கண்கூடாக தெரிந்து கொள்ள முடிகிறது. உங்களிடம் கேட்பது ஒரே ஒரு ரிக்வெஸ்ட் தான்.
தயவுசெய்து லேட் ஆயினும் பரவாயில்லை,
நிதானமாகவே புத்தகம் முழுமையாக ரெடியானதும் அனுப்புங்கள்.
எல்லாருமே உங்கள் மீது அபிமானமுள்ளவர்தான் யாருமே அவசரப்படவும் மாட்டார்கள்,
லேட் ஆனாலும் பொறுத்துக் கொள்பவர்கள் தான். அவசரமாக அனுப்பி, அவர்களை வருத்தப்பட வைப்பதை விட, நிதானமாக அனுப்பி நிறைவுற செய்யலாம்.
4 குட்டி புக்கில் 1ல் இந்த குறை இருந்தால் தேவலை. அழகாக பாதுகாக்க வேண்டிய ஸ்பெஷல் புத்தகம் இப்படி பிரிந்து அலங்கோலமாக இருப்பதை பார்த்தால்,
அடுத்த முறை எப்படி வருமோ என்ற கேள்விதான் அனைவருக்கும்.
ஆகவே லேட் ஆனாலும் பொறுத்துக் கொள்ள நாங்க ரெடி.
புத்தகங்கள் முழுமையாக ரெடியானதும் அனுப்ப வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.🙏❤️.
👍👍👍
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete///அதிலும் இம்மாதத்து "சம்மர் ஸ்பெஷல்" பைண்டிங்கில் சொதப்பியுள்ளதை ////
Deleteஎங்களை பொறுத்த வரை அது, பெரிய மேட்டரே அல்ல எடிட்டர் சார்.
கிட் ஆர்டின் கசங்கிய பக்கங்களை கண்டு காண்டு ஆகி போனாலும், ரீபினியை கண்டதும், மைன்டு சும்மா கூல் ஆயிருச்சு. கோடை மலரை சும்மா அடுத்த மாசம் கூட வெளியிட்டிருக்கலாம். உங்களுக்கு நாங்கள் என்றும் அழுத்தம் கொடுத்ததே இல்லை.
ஆஜர்
ReplyDeleteHiii
ReplyDeleteசம்மர் ஸ்பெசல் - பைண்டிங் தரம் மிகவும் சங்கடப்படுத்துகிறது
ReplyDelete500 ரூபாய் புத்தகம் கதை அதற்குரிய தரமாக இருக்கலாம் ஆனால் பைண்டிங் அதற்குரிய தரம் இல்லை,
Please assure minimum quality checking sir
Well said
Deleteஇனி இது போல நிகழாது சார் ! சாரி !
Deleteசார் சாரி எல்லாம் வேண்டாம்,
Deleteyou are an idol to me since my childhood days,
தங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தோம் Sir அவ்வளவே,
Sorry sir if i hurt you
சார் களவானிகளோடு கார்சன்....சூப்பர் தான் பூன்....ரோஜர்...க்ளெமண்ட்ஸ்லாம் எதிர்பாக்கிறேன்
ReplyDeleteசார் பைண்டிங் பிரச்சனைக்கு பல அழுத்தங்கள்...அதிக புத்தகங்கள்...மருத்துவமனைன்னு.... நீங்க அனுபவிச்சதும் காரணமே....
ReplyDeleteஃப்ரீயா உடுங்க ...சரியாயிடும்...ஈரோட்டுக்கு நிச்சயமா வருவேன்.
// ஃப்ரீயா உடுங்க ...சரியாயிடும்...ஈரோட்டுக்கு நிச்சயமா வருவேன். // அவ்வளவு தான்.
Delete😊😊😊😊😊
Deleteஒரு பாட்டு அப்படியே எடுத்து விடுங்க ...
Deleteடியர் எடி, சம்மர் ஸ்பெஷலுடன் புதிய புத்தகங்கள் வந்து சேர்ந்தது..
ReplyDeleteUnboxing இங்கே https://youtu.be/sCjWzxKVnFg
பைண்டிங் தான் இந்த முறை சொதப்பிவிட்டது,.
அங்கங்கு ஈர பைண்டிங் சுருங்கி இருக்கிறது... தையல்கள் இளுவையாக தெரிகின்றது ....
காலம் செல்லச் செல்ல பக்கங்கள் கிழிவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
அடுத்த முறை இன்னும் கொஞ்சம் நாட்கள் ஆனாலும் காய்ந்த பிறகு பைண்டிங் அனுப்ப ஏற்பாடு செய்தால் எல்லாம் சுகமே.
15க்குள் அனுப்ப வேண்டும் என்று அவசரப்பட வேண்டாம்... நல்ல தரத்திற்கு மாதம் முழுவதும் காத்திருக்கலாம். No Problems.
This comment has been removed by the author.
Deleteபுத்தி கொள்முதல் சார் ! இனி இது போல நிகழாது !
Deleteஆபிசுக்கு போன் பண்ணி, "புக் இன்னுமா அனுப்பலை ?" என்று தாண்டவம் ஆடியோர் கணிசம் ! நம்மாட்கள் வாங்கி வந்த ஏச்சுக்களை பார்க்க சகிக்காமலே அவசரத்தில் அனுப்பினோம் சார் ! No excuses...I should have known better !!
நல்ல முடிவுங்க சார். ஒவ்வொரு இதழ்களும் பெரும்பாலான நண்பர்களுக்கு பொக்கிசங்கள் போல. இந்த மாதிரி குறைபாடோடு வரும்போது மிகுந்த frustration க்கு உள்ளாகிறார்கள். தாமதம் பெரிய விசயமில்லீங்க சார். ரெகுலர் சந்தாவிற்கு மாதம் ஒரு புத்தகம் கண்டிப்பாக வேண்டும். ஆனால் அதே சமயம் இது போன்ற குறைபாடுகள் இல்லாமல் வரவேண்டும்.
Delete///தையல்கள் இளுவையாக தெரிகின்றது ....///
Deleteதையல் முறையாக செய்யப்பட வில்லை.
துவக்க பக்கங்கள் கசங்கி இருந்தன. இதை பற்றிய தகவல் முன்பே தெரியும் ஆதலால், எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
இதை பாதுகாப்பது சவாலான விசயமாய் இருக்கும்.
யாருக்கும் படிக்க கொடுக்க ரொம்ப யோசிக்க வேண்டும். கதையை படிக்கும் போது, நாசுக்காய் பக்கங்களை புரட்ட வேண்டும்.
மயில் இறகுகளால் பின்னப்பட்ட வண்ண பக்கங்களாக எண்ணிக்கொண்டு இதமாய் பதமாய் காற்றால் ஊதி பக்கங்களை திருப்ப வேண்டும்.
டாப் ஹீரோக்களுக்கு & 300 மேல் பக்கங்கள் வரும் போது இந்த ஹார்டு கவர் பைண்டிங் செய்தால் ஓர் வசீகரம் தரும்.
டியர் எடி,
Deleteஇனி அவர்கள் சீக்கிரம் அனுப்புங்கள் என்ற கோரிக்கைகளை புறம்தள்ளுங்கள் எடி...
புத்தகம் நேரத்திற்கு வரவில்லை என்று வம்பளக்கும் பல பேர் அவற்றை பாதுகாப்பதே இல்லை ... மீள் படிப்பதும் குறைவுதான்.
உண்மையான காமிக்ஸ் ரசிகர்கள் புத்தகங்கள் நேரத்துக்கு வர வேண்டுமென்று எண்ணுவதை விட ...
அது நல்ல தரத்துடன் வரும், பாதுகாக்க கலெக்ஷன் சேர்க்க சரியாக இருக்கும் என்று தான் நினைப்பார்கள்.
நாங்கள் இதில் உங்களுக்கு துணையாக நிற்போம்.
Deleteஈரப்பதமாய் வந்துசேர்ந்த கோடை மலரைக் கண்டு நண்பர்களின் மண்டைக்குள் ஏகமாய் சூடு எகிறிக்கிடக்க - நீங்களோ கூலாய் ஒரு 'சாரி'யைச் சொல்லிவிட்டு கறிக்கடைக்கு நடையைக் கட்டுவதில் கொஞ்சம்கூட நியாயமில்லீங்க எடிட்டர் சார்!
பிராயச்சித்தமாக, கொஞ்சம் கம்மியான விலையில் (அல்லது சந்தாதாரர்களுக்கு மட்டும் ஸ்பெஷல் டிஸ்கவுண்டு விலையில்) 'கூல் டவுன் ஸ்பெஷல்'னு ஒரு குண்டு புக் அறிவிப்பு செஞ்சீங்கன்னா சிதறிக்கிடக்கும் எங்க மனசை பசை போட்டு பைண்டு பண்ணாப்ல இருக்கும்!
Amanga appadiye pannidunga
Deleteஅந்த 500+ பக்க டெக்ஸ் கதையை, கருப்பு/வெள்ளையில் குண்டு புக்கா கொடுத்தீங்கன்னா, அதை படிச்சிகிட்டே ஆறுதல் அடைஞ்சுருவோமுங்கண்ணா...
Deleteமனசு இரங்குங்கோ..
எடிட்டர் அய்யா...
நான் போன் பண்ணி எல்லாம் அலுவலக சகோக்களை தொந்தரவு செய்வதில்லை சார்,இங்கே கேட்பதோடு சரி...
Deleteஎனக்கு வந்த இதழின் நிலையும் இதுவே...
வரும் காலங்களில் குறைகள் களையபடட்டும்...
அந்த ஆஸ்ட்ரிக்ச
Delete❤️..
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகரையெல்லாம் குருதி
ReplyDeleteபிரான்கோ பெல்ஜிய ஸ்டைலில் ஒரு டெக்ஸ் கதை. ஆரம்பித்ததும் தெரியவில்லை முடித்ததும் தெரியவில்லை. ஒரே நாளில் ஸாகோர், டெக்ஸ் இரண்டும் படித்து விட்டேன். சின்ன சின்ன டுவிஸ்ட் கதை முழுக்க ஆனால் கடைசி டுவிஸ்ட் நான் எதிர்பாராதது. கதை இப்படி முடிந்தது எனக்கு வருத்தமே. நீங்கள் ஹாட்லைன் இல் இதைப் பற்றி சொல்லி இருந்ததாலும் எனக்கு மனம் கேட்க வில்லை.
எனது மதிப்பெண் 9/10.
இதே பாணி கதைகள் இருந்தால் அது எல்லாவற்றையும் சீக்கிரமே வெளியிட வேண்டுகிறேன். நன்றி
👌👌👌
Deleteவணக்கம் ஆசிரியரே
ReplyDeleteவணக்கம் சகோதரர்களே
வணக்கம் சகோதரி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteசம்மர் ஸ்பெஷல்
ReplyDeleteஇந்த வருடத்தின் டாப் இதழ்களில் ஒன்று. 4 முத்தான கதைகள் நமது முத்துவில்.
சிக் பில் ஒரு ஆள் மாறாட்டம் அதனால் ஏற்படும் குழப்பங்கள். வழக்கம் போல் கிட் சிக்கலில் மாட்டிக் கொள்ள என்ன ஆனது என்பதை ரொம்ப ஜாலியாக சொல்லி இருக்கிறார்கள். அதும் சிக் அண்ட் கிட் எதிரெதிரே நிற்க செம்ம முடிவு.
எனது மதிப்பெண் 9/10.
ரூபின் சமீப கால அறிமுங்களில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்த ஆட்களில் ஒருவர். கதையின் ஆரம்பத்தில் ஒரு கொலை நடக்க, அந்த கொலையாளி கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப் பட, அவளை அழைத்து செல்லும் விமானம் விபத்துக்கு உள்ளாகி பனி மலையில் மோதி நொறுங்கி விடுகிறது. இது நடந்து சில வருடங்கள் கழித்து மேயர் வீட்டில் அந்த கொலையாளியின் கைரேகை கிடைக்க அதனை தேடி செல்கிறார் ரூபின். சில பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரொம்பவே அழகாக கதை முடிகிறது. மிகச் சிறந்த முடிவு.
எனது மதிப்பெண் 10/10.
அடுத்து ஆல்ஃபா இந்த முறை விளாசியது சிக்ஸர். போன இரண்டு ஆல்ஃபா கதைகளும் எனக்கு அந்த அளவுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த முறை ஓவியங்களும் சரி கதையும் சரி அருமை. தொடர் கொலைகள் நடந்து கொண்டே இருக்க, CIA வை சேர்ந்த ஏஜெண்டுகள் அடுத்தடுத்து கொல்லப் பட அந்த இடங்களில் எல்லாம் Grifin படமோ, டாலரோ விட்டு செல்லப் படுகிறது. இதனை ஆராய உள்ளே புகும் ஆல்ஃபா என்ன கண்டு பிடித்தார் என்பது தான் கதை வேகம் வேகம். நாம் ஒருவரை சந்தேகப் பட ஆனால் அந்த நபர் குற்றம் அற்றவராக இருக்க, கடைசியாக ஆல்ஃபா எல்லாவற்றையும் விளக்கும் போது தான் புரிகிறது.
எனது மதிப்பெண் 10/10.
கடைசியாக டேங்கோ எனது ஃபேவரைட் ஹீரோக்களில் ஒருவர். இந்த கதைக்கு Monologue எழுதும் போது மட்டும் எடிட்டரின் பேனாவுக்கு எங்கிருந்து மை கிடைக்கிறது என்று தெரியவில்லை சார் நீங்க தேவுடு. அப்படியே அந்த பனாமாவின் அழகை ரசித்து கொண்டே செல்ல வேண்டியது தான். இந்த கதையில் டேங்கோவுக்கு பெரிதாக வேலை இல்லை.
எனது மதிப்பெண் 9/10.
மொத்தத்தில் சம்மர் ஸ்பெஷல் செம்ம இதழ் ஓவர் ஆல் மதிப்பெண் 9.5/10
Delete
Deleteநேத்து பார்சல் வந்தாச்சு. ஒரு முறை புரட்டி பாத்தாச்சு. மெல்ல படிக்கலாம்.
ரூபி எனது முதல் சாய்ஸ்.
அப்புறமா டெக்ஸ்
டாங்கோ
கிட் ஆர்டின்
ஆல்பா தா கடைசியில்
அப்புறமா ஒரு நல்லநாள் பார்த்து
///எந்தையின் கதை///.
கதை அழுவாச்சியா இருக்குமோ...?
கார்ட்டூன்களும் ஹை டெக் பாணிக்கு மாறியிருப்பதை "கிட் ஆர்டின் உஷார்"ஓவியங்கள் உணர்த்துகின்றன.32,33ம்பக்க ஓவியங்கள் ஒரு கார்ட்டூன் கதைக்கு என்னமாய் மெனக்கெடுகிறார்கள் என்று வியப்படைய வைக்கின்றன.அதுவும் அந்த டாப் ஆங்கிள் ஓவியங்கள் அசத்தல் .
ReplyDelete// காத்திருக்கும் ஸாகோரின் அடுத்த ஆல்பத்துக்குப் பின்பாய் கொஞ்சம் நீளம் ஜாஸ்தியான கதைகளோடு இந்த ஜம்பிங் நாயகரை களம் காணச் செய்ய எண்ணியுள்ளோம் !// V காமிக்ஸ் இன் டாப் ஸ்டார் என்றால் சும்மாவா? அந்த 134 பக்க சாகசம், கலர் ஸாகோர் எப்போ சார் வரும்? நாக்கை சப்பு கொட்டிக் கொண்டு காத்து இருக்கும் படங்கள் 100
ReplyDelete3 புத்தகங்களையும் படித்தாயிற்று.
ReplyDeleteமொத்தம் 6 கதைகள்.
முதலில் படித்தது ஸாகோர் தோன்றும் Vcomics தான். ரொம்பவே எளிமையான கதை அப்படியே மின்னல் வேகத்தில். வில்லன்களை பழிவாங்க புறப்படும் ஸாகோர் அவர்களை கண்டு பிடித்து புரட்டி எடுக்க அவரிடம் இருந்து தப்பி செல்லும் வில்லனுக்கு என்ன ஆனது என்பதை ஒரு டுவிஸ்ட் உடன் சொல்லும் கதை.
எனது மதிப்பெண் 9/10
ஆமாம் இறுதியில் ஒரு பெரிய சண்டையை எதிர்பார்த்திருந்தேன்,,,😁😁😁
DeleteThis comment has been removed by the author.
Deleteஅடேங்கப்பா நண்பரே என்ன ஒரு ஆய்வு என்ன ஒரு விமர்சனம். அருமை அய்யா
Deleteதேடல்தனைக் கைவிடேல்!
Deleteஓர் ஆய்வு...
60+ பக்க கதை என்றாலும், கதையின் கரு வலுவானதாக இருக்கிறது,
இந்த கதையை படித்து விட்டு நாம் எளிதில் கடந்து விட முடியாது.
வாசிக்கப் பட்ட கதை, காட்சிகளாக நமது மனத்திரையில் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டே இருக்கிறது.
ஸாகோர் கதையின் கடைசி பக்கங்களில் தென்பட்ட அதிர்ச்சியான சம்பவம், எவரும் கணிக்கமுடியாத அசாதாரணமான காரியமாக நிகழ்ந்து விடுகிறது.
ஹாகோர் அங்கு உள்ள சூழலை கண்டு திகைத்து போகிறார் ஏன் நாமும் கூடத்தான்.
இதை போல சில
ட்விஸ்ட்-அ தான், இந்த Format-ல் வரும் ஹாகோர் கதைகளில் கதை ஆசிரியர் வைக்கிறார்.
ஸாகோர் கூட கதையில் வரும் துணை பாத்திரமாக காட்டப்படுகிறார்.
கதையின் துவக்கத்தில் காட்டப்படும் வழக்கமாக காட்சி,
கதையின் மேல் உள்ள ஆர்வத்தை எகிற வைத்து விடுகிறது.
மற்றும்
அந்த பாத்திரங்கள்
லூயி,
ஸாகோரை பற்றி இருளில் அமர்ந்து கொண்டு சம்பவங்களை சொல்லும் அந்த மனிதர்...
நாம் அந்த மனிதரை பற்றி அறிந்திருக்கிறோமா...
.
ஸாகோர் பற்றி ஆய்வு செய்யும் அந்த ஆய்வாளர்..
.
நாமும் இவர்களோடு அமர்ந்து, அந்த காட்சிகளுக்குள்ளாக உடன் பயணித்து விடுகிறோம்.
காட்சிகள் நிறைவு பெற்று அந்த ஆய்வாளர் வெளியே சென்று விடுகிறார்.
ஆனால் நாமோ அந்த காட்சிகளுக்குள்ளாகவே இருக்கிறோம்.
மீண்டும் அந்த ஆய்வாளர் வரும் தருணத்திற்காக காத்திருக்க வேண்டும் அடுத்த கதையை கேட்பதற்காக.
5.1 / 5.0
நண்பர் குமாருக்கு,
Deleteஉங்கள் விமர்சனம் மற்றும் சகோதரி கடல்யாழ் அவர்களின்
விமர்சனத்தையும் படித்த பின்பு, வேறு ஒரு ஆங்கிளில் எனது விமர்சனத்தை சொல்ல விரும்பினேன்.
கதை படித்த பின்பு எழுந்த உற்சாகத்தோடு, உங்கள் இருவரின் விமர்சனங்களை உள் வாங்கி, வேறோரு திசையில் பயணித்தேன் அவ்வளவு தான்.
அதற்காக உங்கள் இருவருக்கும் நான் நன்றி சொல்லி ஆக வேண்டும்.
என்னை எழுத தூண்டியதே நீங்கள் இருவரும் தான்.
// லயன்'s லக்கி ஆண்டுமலரை upgrade செய்திடத் தீர்மானித்துள்ளோம் ! போன ஆண்டினைப் போலவே ரெகுலர் பைண்டிங் இதழாய் அறிவிக்கப்பட்ட இந்த இதழினை - அழகான ; உருப்படியான ஹார்ட்கவர் இதழாய் ஜூலையில் ஒப்படைக்கவுள்ளோம் ! // கிரேட் நியூஸ் ரொம்ப நாட்களாகவே நாங்கள் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த முறை ஹார்ட் பவுண்ட் வருவது மகிழ்ச்சியே
ReplyDelete// வன்மேற்கின் அத்தியாயங்கள் # 2 & 3 ஜூலையில் வண்ண இதழ்களாய்க் காத்திருப்பதால், அங்கேயும் we are on target // வாரே வா போன இதழ் பெற்ற வரவேற்பை அடுத்து இந்த முடிவு சரியான ஒன்று.
ReplyDeleteஇது ஒரு
Deleteகோ-இன்சிடன்டாக நிகழ்ந்ததா. இப்படி தனி இதழ்களாக, ஒரே மாதத்தில் ஒரே நேரத்தில் எந்த ஒரு ஹீரோவின் கதைகள் வந்திருக்கிறதா.
எனக்கு தெரிந்து இல்லை சார்.
Deleteபுன்னகை ஒளிர்@ பல மாதங்கள்ல முன்பு இப்படி ஒரே ஹீரோ கதைகள் தனி தனி இதழ்களாக ஒரே மாசத்தில் வந்துள்ளன.
Deleteஇரத்தப்படலம் இருமுறை 2018&2021
சிக்பில், கிட் ஆர்டின் உள்ளிட்ட உட்சிடி கோமாளிகளின் கதையும் ஒரே மாசத்தில் இரு வேறு கதைகள் வந்துள்ளன...
டெக்ஸ் வில்லர்து சிலமுறை ஒரே மாசத்தில் இரு கதைகள் வந்துள்ளன.
இப்ப வரப்போற வன்மேற்கு அத்தியாயங்களில் என்ன புதுமைனா இரு கதைகளும் இருவேறு பேனர்களில் வருகின்றன.
குறிப்பு:- டைகரும் இப்படி வந்துள்ளார்... ஆனா "என் பெயர் டைகர்-" ஒரே கதை, கலரில்& க/வெ.யில்.. இரு வேறு தனி தனி இதழ்களாக ஒரே மாசத்தில்....
Deleteதகவலுக்கு நன்றி தோழரே.
Deleteகாமிக்ஸ் சார்ந்த அனைத்து தகவல்களை ஞாபகத்தில் சேர்த்து வைத்திருக்கிறீர்கள்.
நீங்கள் எங்களுக்கு களஞ்சியமாய் இருக்கிறீர்கள் ...
This comment has been removed by the author.
ReplyDeleteசாகோர் டெக்ஸ். ரூபின். கிட்ஆர்டின். இவர்களைத் தாண்டி வெளியே வரமுடியவில்லை .நான்குமே அருமை .மறு மறு வாசிப்புகளில் நான்குமே.இதுதான் சம்மர் வாசிப்பு .எண்பதுகளில் இப்படித்தான் அவசரமேஇல்லாமல் படித்ததை யே மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருப்போம்..சம்மர் ஸ்பெசல் அந்த காலத்திற்கு அழைத்து சென்று கொண்டுள்ளது. இனி. மெல்ல. டேங்கோ. அப்புறமா. ஆல்பா
ReplyDeleteசூப்பர் ராஜசேகர் சார்
Delete// And முதல் வாசிப்பில் "புரிஞ்சா மெரியும் கீதுப்பா...பிரியாத மெரியும் கீதுப்பா...!!" என்ற உணர்வுகள் இங்கே தலைதூக்கினால் ஆச்சர்யமே கொள்ள மாட்டேன் ! So சொல்லுங்களேன் ப்ளீஸ் - முதல் வாசிப்பிலேயே ஜெயமா உங்களுக்கு ? என்று ?!!// ரூபினில் ஜெயம் ஆல்ஃபா இன்னும் ஒரு முறை படிக்க வேண்டும் சார்.
ReplyDelete// ஈரோட்டுக்கு AUGUST 5 தேதிக்கு ஒரு எட்டு வந்து போக உங்களில் எவ்வளவு பேருக்குத் தோதுப்படும் என்பதை உத்தேசமாய் கணக்கிட முடிந்தால் அதற்கேற்ப ஹால் பிடிக்க முயற்சிக்கலாம்// நான் கண்டிப்பா வரேன் சார்.
ReplyDeleteமஞ்சள் மாநகருக்கு
ReplyDeleteவருகை எப்பொழது எனது காத்திருக்கிறேன் சார்...
நானும் ரெடிங்கசார்.இதோகிளம்பிட்டேன்..ஓட்டும் போட்டாச்சு . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteHi..
ReplyDeleteஅட்டைப்படம் அசத்தல்... உண்மையான ஹீரோவுக்கு முன்னுரிமை அளித்திருப்பது மகிழ்ச்சி..
ReplyDeleteHa Ha :-)
Delete😋😋😋
Deleteரம்மி சார்,
Deleteபொடி வைச்சு பேசுறதுல உங்கள அடிச்சுக்க ஆளே இல்லை.
ரம்மி... நச்!! :)))
DeleteGood one Rummi
Deleteஆமா அதுல அவருதான் உண்மையான ஹீரோ
Deleteஆக்சுவல பிளாக்கில் பதிய (நேற்று) காலையில் டெக்ஸ் கதையை வாசித்த கையோடு எழுதியது. பின்னர் சுருக்கி பதிந்தேன். தற்போது முழு பதிவும். 👇
ReplyDeleteவணக்கம் sir. இம்மாத புத்தகங்கள் வந்தடைந்தது. முத்து 'சம்மர் ஸ்பெஷல்' தயாரிப்புத் தரம் மிக மோசம். 'கரையெல்லாம் குருதியில்' டெக்ஸ் சொல்வது போல "மூதாட்டியின் சருமத்தைப் போல" பேப்பர்கள் சுருக்கமோ சுருக்கம். ஈரம் காயத பேப்பர்களை ஏனோ தானோ வென்று பைண்டும் செய்துள்ளனர். மழை பெய்து விட்டது அதனால் காயவில்லை, ஸ்கூல் புக்ஸ் பைண்ட் செய்ததால் நம் புக்ஸ் அவசர கதியில் பைண்ட் ஆகிவிட்டது என்பது போன்ற காரணங்கள் இனி தவிர்க்க பட்டால் நன்றாக இருக்கும்.
'இவர்களுக்கு வேற வேலையே இல்லை எப்ப பார்த்தாலும் சும்மா எதையாவது குறை சொல்லிட்டே இருக்க வேண்டியது' என்று எடுத்துக்கொள்ளாது வாசகர் தரப்பில் நின்று புரிந்து கொள்ள வேண்டுகிறேன். அன்பு விஜயன் sir.. தாமதம் ஒன்றும் பெரிய விஷயமில்லை கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் லயன், முத்துவுடன் பயணிக்கிறேன். இந்த நீண்ட பயணத்தில் நம் லயன், முத்து வின் பல மாத தமாதங்களையே பார்த்தும் விட்டேன் என் போலத்தான் மற்ற வாசகரும். தற்போது இன்னும் சில வார தாமதம் பொறுக்க மாட்டோமா என்ன. எவ்ளோ தாமதம் ஆனாலும் பரவாயில்லை இயன்றவரை நல்ல தரமான புக்ஸ் வேண்டுமென்பதையும் இங்கு வேண்டுகோளாக வைக்கிறேன்.
டெக்ஸ் பிரெஞ்ச் இதழ்களின் சைசில் பார்க்க ரசிக்க மிகவும் அருமையாக உள்ளது. மற்றும் சம்மர் இதழின் குறைபாடு எதுவும் டெக்ஸ் இதழில் இல்லை என்பது ஒரு பெரும் ஆறுதல்.
என்றேனும் ஒருநாள் இதே சைசில் ஹார்டு பைண்ட் இல்லாது சென்டர் பின்னோடு 60 பக்கங்கள் எனப் பிரித்து நான்கு பாகங்கள் கொண்ட ஓரே தொகுப்பு ஆக டெக்சின் "சாத்தான் வேட்டை" வந்தால் மிகவும் நன்றாக இருக்கும். (வெளிநாட்டில் ஏதோ ஒரு பப்ளிஷர் இவ்வாறு நான்கு பாகம் நான்கு அட்டைப்படம் என வெளியிட்ட நினைவு.)
Spoiler Alert
ReplyDeleteஜாகோர் - தேடல்தனைக் கைவிடேல்!
ஓவியங்கள் அருமை.
கல்லாயுதத்தை வைத்து என்னமா அடிக்கிறார்....😨😨😨😨😨
அதுல அடி வாங்கனத்துப்புறம் மண்ட😖😖😖😖😖
கஷ்டப்பட்டு சம்பாதித்த 500 டாலர் கொள்ளையடித்து விட்டு, 8 பேரை கொலை செய்யும் பாவிகள்,
அதை குடிப்பதற்கு தாராளமாய் பயன்படுத்தறதை ரொம்ப ஜாலியாக பேசிக்கிற வில்லன்களை மண்டையில போடனும் தோணுச்சு, ஜாகோர் இருக்காரில்ல கவனிச்சுப்பாரு பார்த்த, வசீகா பயங்கரம், கொடுரன்களுக்கு சரியான முடிவே.
முதலில் அமைதியான அடிமையாக காட்டப்பட்டாலும் அவளிடத்தில் அவன்களை வெட்டி போட நேரம் பார்த்து இருக்கிறாள் என்றே தோன்றியது.
ஜாகோர் வரார்,இவர் தான் கவனிக்கனும் போல நினைத்தால், ட்விஸ்ட்.
9 வருடங்களாக காத்திருந்து கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்தி விட்டாள் என்று ஆறுதல் படவும் கஷ்டமாகவும் இருந்தது. இப்படியொரு காரியம் செய்ய எவ்வளவு இன்னல்களுக்கு ஆளானாலோ என்ற சிந்திக்க வைக்கிறது
தன் தாயருடன் எலிபெசத் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி
ரத்தகளறி பார்த்தவுடன் நல்லவேளை கலரில் இல்லை என்று ஆறுதல் கொண்டேன்
Deleteஓவியங்கள் மிக சிறப்பு
அழகான விமர்சனம் சகோதரி. எலிசபெத் பற்றி மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள். எனக்கு கண்டிப்பாக அவள் செய்த செயலை பார்த்து ஆறுதல் தான். ரொம்பவே நெகிழ்ச்சியான review
Deleteநன்றி சகோ
DeleteNice review
Deleteநன்றி சகோ😊
Deleteவித்தியாசமான விமர்சன பாணி சகோ!! தூள்!!
Deleteநன்றி சகோ 😊
Deleteசூப்பர் கடல்
Deleteநன்றி ஸ்டீல் சகோ
Deleteஇதை சொல்ல வருத்தமாக தான் இருக்கிறது. வர வர நமது வெளியீடுகளில் ஒரு அவசரம் தெரிகிறதே தவிர, நிதானம் இல்லை
ReplyDeleteஎழுத்து பிழைகள், பைண்டிங் தரம், புத்தகங்கள் வெளி வரும் மாதங்கள் திட்டமிடல் (ஒரு மாதம் ரெகுலர் சந்தாவில் ஒரு புத்தகம் கூட இல்லை)
ஸ்பெசல் இதழ்களில் (பைண்டிங் புக்) முன் அட்டைக்கு பின்பும், பின் அட்டைக்கு முன்பும் இருக்கும் திக்கான தாளில் உள்ள ஸ்டில்கள் ஏதோ ஒன்று இருக்க வேண்டும்/போட வேண்டும் என்று கடமைக்கு இருப்பது போல் உள்ளது (உதாரணம் - சம்மர் ஸ்பெசல் ஸ்டில்ஸ்).
இது டெக்ஸின் 75ஆம் ஆண்டு என்றால் நம்ப முடியவில்லை. இதுவரை வந்த இதழ்களில் ஒன்று கூட பிரமாதம்
என்று இல்லை (Jan to May), எல்லாமே average தான். ஒரு மைல்கல் ஆண்டில் ஒவ்வொரு கதையும் தெறிக்க விட வேண்டாமா.
சந்தா தான் நமது முதுகெலும்பு எனும் போது நிறைய கவனம் அதில் தேவை, ஆனால் அதை விட்டு விட்டு இந்த திடீர் இதழ்கள் மேல் அதிக focus விழுவது போல் தெரிகிறது. அதனால் தான் சம்மர் ஸ்பெசல், சம்மரை தாண்டி வந்துள்ளது.
மேலும் சந்தாவைக் கட்டுக்குள் வைக்க budget போட்டு விட்டு கதைகளை குறைத்தோம். ஆனால் இப்போது கிட்டதட்ட ஸ்பெசல் இதழ்கள் சந்தாவின் தொகையை நெருங்கி விட்டது.
ஒரே வித்தியாசம் விலை தான், இந்த ஸ்பெசல் இதழ்கள் ரெகுலர் தடத்தில் வந்திருந்தாள் விலையாவது குறைந்து இருக்கும்.
இவ்வாறாக நிறைய புத்தகங்கள் வந்தாலும், ஒரு வித rush தெரிகிறது. Quality of the output mattu படுகிறது. நமது புத்தங்களின் மிதும் உங்கள் மீதும் நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன்.
துதி பாடும் பதிவுகளுக்கு நடுவில் உண்மையான மற்றும் யதார்த்தமான பதிவு. நன்றி நண்பரே.👍
DeleteThis comment has been removed by the author.
Deleteஇது TEX 75 ஆண்டாக தெரியவில்லை. நாங்கள் பாவமா அல்லது டெக்ஸ் பாவமா என்றும் தெரியவில்லை.ஃ🥺🥺🥺😮💨😮💨
Deleteஇப்பொழுது தான் ஜூன் மாத இதழ்கள் வாங்கி வந்தேன். எல்லோரும் சொல்லி விட்டார்கள், summer ஸ்பெஷல் பைண்டிங் ஒரு bummer . இனிமேல் தான் அனைத்தும் படிக்க வேண்டும்.
ReplyDeleteஎடிட்டரிடம் போன வாரமே கேட்ட கேள்வி தான், பதில் வரவில்லை. Big Boys specialin மாயாவியுடைய alternate cover பாத்து விட்டு தான் online book பண்ண முடியும் என்னால். ஏற்கனவே கொலை படையில் கூர் மண்டையனின் அதே போஸ் இருப்பதால், இந்த மறுபதிப்பில் மாயாவி கிடைத்தால் நன்றாக இருக்கும். ஆனால் மாயாவியின் alternate கவர் preview போடுங்கள் ப்ளீஸ்.
எனக்கெல்லாம் டான் என்று புக் வந்து விடுகிறது. நான் கைப்பற்றுவதற்கு தான் வேலை பளு காரணமாக லேட் ஆகிறது. ஒருவேளை புத்தகம் தாமதமாக வந்தாலும் அல்லது கொரியரில் எனக்கு போன் செய்யாவிட்டாலும் நான் ஃப்ரீயாக விட்டு விடுவேன். இதுவரை புத்தகம் அனுப்பியாச்சா என்று ஆபீசுக்கு போன் பண்ணி கேட்டதே இல்லை. கொரியரில் போன் வரும் வரை நான் புத்தகத்தையே நினைப்பதில்லை.
ReplyDeleteஎன்ன பண்ணுவது வேலைப்பளு காரணமாக இந்த வருடம் வந்த புக்கில் டெக்ஸ் மாறு மதிப்பு இதழ் மட்டுமே நான் படித்துள்ளேன். மற்ற இதழ்கள் இன்னும் உடைக்கப்படாமலேயே இருக்கிறது
Sir... கா க கா...கவர் பக்கத்தில் கார்சர் மட்டும் தான் கண்ணுக்கு தெரியராரு....லீனா வ கானோமே...இளமைக்கால கார்சர் + லீனா photo இருந்தால் மிகவும் மகிழ்வோம். Hope a longtime meaningful wait by us can be honoured by you. நன்றி.
ReplyDeleteதேடல்தனைக் கைவிடேல் -ஸாகோர் கதையை கையில் எடுத்ததும் தெரியவில்லை படித்து முடித்ததும் தெரியவில்லை. நல்ல விறுவிறுப்பு.V காமிக்ஸின் பலமே நறுக் சுறுக் கதைகளே என்பது மகிழ்ச்சி தருகிறது.
ReplyDeleteV comicsன் பலமே நறுக் சுருக் கதைகளேஎன்பது மகிழ்ச்சி தருகிறது
ReplyDeleteசில நண்பர்கள் புரிந்து கொள்கிறார்களான்னு தெரியலை..
ReplyDeleteஒரு முறை பைண்டிங் சொதப்பலுக்கு எல்லாமே இப்படிதான்னு முடிவு கட்டி விடுகிறார்கள்....தாமதமானதால் விரைவு படுத்த முயற்சித்ததுதான்னு ஆசிரியர் தெளிவு படுத்தி விட்டார்....அதற்கான காரணம் பல நண்பர்கள் கொண்டாட்ட காலத்திற்கு வேண்டிய இதழ்கள் அதிகப்படுத்தியது...டின் டின் ...பத்து ...இப்ப ஆறு ....ரெகுலர் சந்தாக்களை கூட்டினால் சிலரால் வாங்க இயலாது என்பதால்...எதையும் வாங்க விரும்புவோருக்காக இவை...
தரம் குறித்த கேள்விகள் ஆச்சரியமே.....
வி காமிக்ஸ் 300 என்பதால்தான் சில நண்பர்கள் எளிதாய் சந்தா கட்டி விடுகின்றனர்.....சிறப்பிதழ் களை அஎப்படியும் வாங்க தயாராயுள்ளோர்க்கு அவ்விதழ்கள்....
இன்னும் 450...500 ன்னு கொண்டாட்ட காலங்கள் காத்திருக்கே....
பதிமூன்று ஸ்பின் ஆஃப் இதழ் எடுத்துக்குவோம்...பாதிப் பேர் வெறித்தனமா தேடுவோம்....மீதி படிப்போர் வேண்டா வெறுப்பாய் வாங்கிடக் கூடாதுன்னா சிறப்பிதழ்களால்தான் முடியும்...
நண்பர்கள உற்சாகப்படுத்த வரும் இதழ்களால் உற்சாகம் குறையுதுன்னு வருந்துகிறார்களா....
அதே போல் இந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்....அவ்ளோ பெரிய குறையாக....கதையோட விறுவிறுப்புல இந்தக் குறை பெருசா தெரிஞ்சா அதுதான் குறையே....நிறைகள் பெரிதானால் குறைகள் சிறிதாய் கூட தென்படாது
Deleteமாணவர்கள் இத வச்சு படிச்சுதான் ஐஏஎஸ் எழுதுவார்கள் ஸ்பெல்லிங் மிஸ்டேக் பெருசான்னு கேட்டுராதீங்க யாரும்
Delete//நிறைகள் பெரிதானால் குறைகள் சிறிதாய் கூட தென்படாது//
Delete+999
V காமிக்ஸ் சந்தா கட்ட தளத்தில் சீக்கிரம் லிங்க் ப்ளீஸ் சார்...
ReplyDeleteதேடல்தனைக் கைவிடேல் :
ReplyDeleteஅநியாயத்துக்கு நேர்க்கோட்டுக் கதை,மிக இலகுரக வாசிப்புக்கு ஏற்ற கதை,வாசிக்க எளிதாய் இருப்பினும்,எந்த வித திருப்புமுனையும் இல்லாமல் நகரும் கதை நகர்வு சுவராஸ்ய இலக்கை சட்டென்று எட்டிவிடுவது இல்லை...
அநீதியைக் கண்டு பொங்கும் ஹீரோயிச பாணி டெக்ஸ்வில்லரை போல் அவ்வளவு எளிதாய் எல்லா ஹீரோவிற்கும் வசப்பட்டு விடுவது இல்லை...
ஸாகோர் நீண்ட பயணத்தில் அந்த நிலைப்பாட்டை உறுதிசெய்வார் என்று நினைக்கிறேன்...
எமது மதிப்பெண்கள்-7/10...
அனைவரும் டெக்ஸ் வில்லராக முடியாது. முயற்சி செய்தாலும் அது
Deleteசாத்தியம் இல்லை.
ரேஞ்சர் என்றால்,
அதற்கு முன்மாதிரியாக டெக்ஸ் வில்லர் ஒருவரை மட்டுமே நீங்கள் அடையாளம் காட்ட முடியும்.
தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் 30+ ஆண்டுகளாக [ சரியான ஆண்டுகள் எவ்வளவு என்று விஜய ராகவன் சொல்வார் ] வாசகர்களின் நெஞ்சங்களில் மிக பெரும் கோட்டையையே எழுப்பி உள்ளார்.
ஸாகோர் அவரது ஆட்சியை பெற்றிட காலங்கள் ஆகலாம்.
// ஸாகோர் அவரது ஆட்சியை பெற்றிட காலங்கள் ஆகலாம். //
Deleteஅதே,அதே...
கரையெல்லாம் குருதி :
ReplyDeleteஅக்மார்க் கமர்சியல் மசாலா,எளிதில் கணிக்கக் கூடிய திருப்பு முனைகள் கதைக்கு பலவீனமாய் இருப்பினும்,டெக்ஸ் & கார்ஸன் கூட்டணி கதைக்களத்திற்கு சுவராஸ்யம் கூட்ட முனைகின்றனர்...
இறுதிப் போராட்டத்தில் பெலிப்பின் தியாகம் கதையின் கனத்தை சற்றேக் கூட்ட உதவுகிறது...
வசனங்கள் நச்,
டெக்ஸ்:மூதாட்டியின் சருமத்தைப் போல இந்த நிலமே வறண்டு போய்க் கிடக்கிறது...
அடுத்து கார்ஸனின் டைமிங் டயலாக்: வறண்டு கிடப்பது என் தொண்டையும் தான்...
கதையின் பலவீனம்- வேறென்ன கதைதான்...
கதையின் பலம் -அட்டகாசமான ஓவிய பாணியும்,அசத்தும் வர்ணச் சேர்க்கைகளும் தான்,கலரில் ரொம்பவே அள்ளுகிறது கதை...
இந்த பிராங்கோ-பெல்ஜிய பாணி வரிசைகளை வரும் காலங்களில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
எமது மதிப்பெண்கள்-8/10...
///கதையின் பலம் -அட்டகாசமான ஓவிய பாணியும்,அசத்தும் வர்ணச் சேர்க்கைகளும் தான்,கலரில் ரொம்பவே அள்ளுகிறது கதை...////
Deleteசரியாக சொன்னீர்கள் நண்பரே....
ஜூன் மாத அலசல்கள்
ReplyDeleteகரையெல்லாம் குருதி: வழக்கமான டெக்ஸ் டெம்ப்ளேட். ஆனால் புரட்சி என்பதால் கொஞ்சம் சுவை அதிகம்
டேங்கோ:வழக்கம் போல அதிரடிக்கும் ஓவியங்கள். கதையும் மோசமில்லை. அடுத்து எங்கு போகிறார்கள் என்ற சஸ்பென்சோடு முடிக்கிறார்கள். Good read
ரூபின்: இவர் யாரென்றே மறந்து விட்டது. நம்ம புது லேடி ஜேம்ஸ்பாண்ட் அந்த குண்டுப பெண் அல்லவா. அப்புறம் ரூபின் ஞாபகத்துக்கு வந்தார். முதல் சில பக்கங்களில் அவரைக் காணோம். சூப்பர் டிடெக்டிவ் கதை. நாவல் போல மூன்று அடுக்குகளாக பிரித்து பின்னர் கிளைமாக்ஸ் சொல்லும் கதை. எதிர்ப்பார்க்காத சர்ப்ரைஸ் கதை இது
கிட் சிக்பில் அண்ட் கோ: வழக்கத்தை விட கூடுதல் காமெடி. நிறைவான கதை.
ஆல்பா: போன முறையும் பொறுமையை சோதித்தார், இந்த முறை இரண்டாம் முறை படித்து புரிந்து கொண்டேன். இவ்வளவு அதிக கேரக்டர்களை ஏன் கதாசிரியர் பயன்படுத்துகிராரோ. XIIIல் ஆயிரம் கேரக்டர்கள் இருந்தாலும், மிக நெடிய காமிக்ஸ் என்பதால் சமாளித்து விடலாம். ஆல்பா கொஞ்சம் பக்கங்களிலேயே முடியும் காமிக்ஸ். இதில் இத்தனை கேரக்டர்களை போட்டால் எப்படி? ஞாபக சக்தி இருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான ஆக்ஷன் டிடெக்டிவ் மேளா.
ஸாகோர்: இந்தாள் எதுக்கு கல்லை குச்சியில் கட்டியிருக்கிறான் என இந்த இதழில் தான் புரிந்தது. கொல்லாமல் Stun செய்ய நல்ல ஆயுதம் என்பது புரிந்தது. சென்ற இரண்டு இதழ்களில் பார்க்க காமெடியாக இருந்தது. டெக்ஸ், ஸாகோர் எல்லாம் ஒரே டெம்ப்ளேட் கதைகளாக இருக்கின்றன. அநீதிக்கு எதிரான 1970s தமிழ்பட ஹீரோக்கள். கதை நன்றாக இருந்தாலும், இந்த இருவரால் இருவருமே போரடித்து விடுவார்களோ என ஐயமாக உள்ளது.
பிகு: எல்லா இதழ்களும் அச்சுத்தரம் வழக்கம் போல நன்றாக இருந்தன.
Nice Reviews Sir.
DeleteGood review
Deleteமிக எளிதில் கடக்க க் கூடிய குறைகளையெல்லாம் குற்றங்களாய் நினைக்க வேண்டாம் நண்பர்களே இந்த மாதிரி புத்தகங்கள் வருவதே வரம் போல.அதில் தரத்தில் ஏற்பட்ட குறையை அன்புடன் பொறுங்கள்.
ReplyDeleteWell said. I like this mindset.
Delete,, என் முதல் பதிவுக்கு என்னை வரவேற்று, என் மூன்றாம் பதிவுக்கும் பதில் தந்த படக்கதை பண்பாளர் பரணி அவர்களுக்கு என் வந்த னங்கள்.
Deleteசார்! கார்சனின் கடந்த காலம் அட்டையில் இளவயது கார்சனின் இருந்தால் நன்றாக இருக்கும்!
ReplyDeleteஆமாம் நானும் இதை நினைத்தேன். பிளீஸ் Consider சார்.
DeleteHe is always youth Kumar :-) i.e Markandeyan :-)
DeleteSame feeling.
Deleteரூபின் முதல் கதையை படிச்சாச்....தொட்டால் தெறிக்கும் தலைப்புக்கேற்ப கதையும் தெறிக்கும் வேகம்...ஓவியங்கள் அழகோ அழகுன்னா வலம் வரும் பாப்பாக்கள் பேரழகு....பல ஓவியங்கள் உத்து பாக்க வைக்கிறார்கள்...மின்னலாய் தடதடக்கும் மொழி பெயர்ப்பு....அசரடிக்கும் வண்ணங்கள்னு கதையின் வேகத்துக்கு துணை சேர்க்க எடுத்ததும் தெரியல வைத்ததும் தெரியல...மாடஸ்டியா யாருக்கா அவருன்னு பதினாறடி பார்க்கிறார் இந்த அழகு நங்கை... அசால்டாக போட்டுத் தள்ளிட்டு போகுறார் செனட்டர்னும் பாக்காம....
ReplyDeleteஅழகா பணி மாற்றம் செய்யப்பட்டு காணமல் போனோரை அதாவது கடந்த காலத்தில் தேடுமிடத்துக்கு அமர....அவரையே தேடி வருகிறார் பறி கொடுத்தோரும் பரிதவிக்கும் மகளுமாய் இருவரும்...இதாருக்குமான்னு யோசிச்சா இல்லைன்னு காட்சிகளால் நம்ப வைத்து...கடைசில இதான்னு சொல்லுகிறார்கள் அழகான கதை நகர்த்தலால்....
மாடஸ்டி ...வான் ஹாம்மேவின் லேடி எஸ்....அந்த பென்சில் அழகில்லாம் ஓரமாய் போய் விளையாடுங்கடின்னு பந்தாடி வருது பாப்பா....
லார்கோ போல ஓர் இனம் புரியும் ஈர்ப்பும்...கதையின் வேகமும்...துப்பறியும் கதைக்கு , மகளிருக்கு தங்களின் இடைவிடாத் தேடலுக்கு எங்களுக்கு கிடைத்த துப்பறியும் நிகரில்லா நாயகியின் பரிசு இக்கதை...நமது இதழ்களில் தொடர்ந்து தெறிக்க ஓர் நாயகி....தொட்டால் தெறிக்கும் இவரின் கதையை அடுத்து தொடரும்...
படிக்க படிக்க ஏனோ ரிப்கிர்பி நினைவுக்கு வர ....அதும் நீங்க கால்ல வெந்நிய ஊத்திட்டு அரக்க பறக்க பாய... ரிப்ப காணமே இன்னும் ஆறு மாதமாச்சே ஓரிதழ்தான வந்திருக்கு என இரக்கமில்லாம டைப்பும் என் விரல்களயும் பரிதாபமா உங்களையும் பாக்குது மனசு சொல் பேச்சு கேளா மகனை பாத்து பரிதவிக்கும் தந்தைய போல...
Superla :-)
DeleteSowmiyan. பலரும் பதிவிட நினைத்து ,பதிவிட தயங்கிக்கொண்டிருக்கும் கருத்துக்களைமிகநாசூக்காக தெரிவித்துள்ளீர்கள் தேங்க்ஸ் .கரூர் ராஜ சேகரன்
ReplyDelete**** தேடல்தனைக் கைவிடேல்! ****
ReplyDeleteஒற்றைவரிக் கதை தான்! ஆனாலும் சிறப்பான ஓவியங்களாலும், மிரளவைத்திடும் சண்டைக்காட்சிகளாலும் தெறிக்க விட்டிருக்கிறார்கள்! க்ளைமாக்ஸ் - 'ஆத்தாடியோவ்' ரகம்!!
ரவுடிக் கும்பலால் கடத்தப்பட்டு - அடிமையாக்கப்பட்டு - கொடுமைகளே வாழ்க்கை என்றான ஒரு பெண்ணை ரவுடிக்கும்பலிடமிருந்து காப்பாற்றி, அவளது தாயிடமே கொண்டு சேர்த்திடும் ஸாகோரின் பணியானது க.காதலுக்கு துணை புரியும் ரேஞ்சர்களின் பணியைக்காட்டிலும் மேலானது எ.எ.க!
9.5/10
// ஸாகோரின் பணியானது க.காதலுக்கு துணை புரியும் ரேஞ்சர்களின் பணியைக்காட்டிலும் மேலானது எ.எ.க! //
DeleteROFL :-) Kanna @ Ready start the music :-)
'படக்கதை பண்பாளர் பரணி' அவர்களே.. அந்த 'கோகுலத்தில் கண்ணனை' இப்போ எதுக்கு அழைக்கறீங்க? ;)
Deleteஇப்போ நீங்க ஏன் ரேஞ்சர் காலை பிடிச்சு இழுக்குறீங்க, சகோ
Deleteரேஞ்சர் காலைப் பிடிச்சு இழுக்கறேனா?!!🤔
Delete'நல்ல கேஸா எடுத்து சாகசம் பண்ணுங்க ப்ளீஸ்'னு அவர் காலைப் பிடிச்சு கதறிக்கிட்டிருக்கேன் சகோ.. கதறிக்கிட்டிருக்கேன்! 😢😰
// அந்த 'கோகுலத்தில் கண்ணனை' இப்போ எதுக்கு அழைக்கறீங்க? ;) //
Deleteகுருநாயார் மற்றும் சிஷ்யர் இருவரின் எழுத்துக்களில் உள்ள காமெடியை மிகவும் ரசிப்பேன் :-)
///குருநாயார் மற்றும் சிஷ்யர்///
Deleteஅது 'நாயார்' இல்லீங்க.. 'நாயர்'... 'நாயர்'!😐
நீங்க கூட காமெடியாத்தான் எழுதறீங்க - நல்லா கோபம் வர்ற அளவுக்கு!😬😬
Sorry Vijay🙏 Google auto correction error which I missed it🙏
Deleteசரி விட்டுத்தள்ளுங்க.படக்கதை பண்பாளரே! 'கோகுலத்தில் கண்ணனுக்கு' விசயம் தெரிஞ்சா "கூகுளுக்கு தெரிஞ்சதுகூட நமக்குத் தெரியாமப் போச்சுங்களே பரணி"ன்னு ஃபீல் பண்ண ஆரம்பிச்சுடுவார்!
Deleteஉங்க கதறல் அவருக்கு கேக்காமல் இல்லை விஜய் சகோ
Deleteஇந்த மாச டெக்ஸ்க்கு பத்துக்கு பத்து போட்டு இருக்கீங்க...சூப்பர் தானே
//சரி விட்டுத்தள்ளுங்க//
Deleteஉங்கள விட்டுட்டு எப்பிடி தள்ளுறது சகோ ...ஒரு டவுட்...அவ்வளவே 😏😁
அது கள்ளக்காதல் அல்ல கொடுமைக்கார கணவரிடம் இருந்து தப்பிக்க எடுத்த தவறான முடிவுஎ.எ.க. . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteஇந்தமாத ஸாகோர் கதையிலும் கூட ஒரு பெண் தன் கொடுமைக்கார கணவனிடமிருந்து தப்பிக்க இறுதியில் என்ன செய்தாள் என்பதை நீங்களே படித்திருப்பீர்களே ராஜசேகர் ஜி! இவள் - பெண்! சிங்கப்பெண்!! போற்றுதலுக்குரிய பெண்!
DeleteThis comment has been removed by the author.
Deleteஇளவரசர் ஜி. அதே மாதிரி சாகோர் உதவப்போன ஒரு போராளிக் பொண்ணு உங்க ஞாபகத்துக்கு இருக்குங்களா அவங்க சிங்கப்பொண்ணா?
ReplyDelete_ அவங்களுக்கு உதவப்போய் அவங்களால் பாலியல்பலாத்காரத்துக்காளானசாகோர் எந்தவகையில் ரேஞ்சர்களைவிட உயர்ந்தவர்.
ராஜசேகர் ஜி..
Deleteஅதான் நீங்களே சொல்லிட்டீங்களே - 'பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானார்'னு! பச்சைமண்ணுங்க அந்த ஜாகோர்!!
அடுத்தவாட்டி ஒரு 'நல்ல' கேஸ் கிடைச்சு அதை நல்லபடியா முடிச்சு வச்சுட்டாங்கன்னா அதிகாரி கும்பலின் புகழ் மறுபடியும் உச்சத்துக்குப் போயிடும்றதுல சந்தேகமே இல்லை! நானே விசிலடிச்சு குத்தாட்டமெல்லாம் போடுவேனாக்கும்!
பெண்களைப் பற்றிய மதிப்பீடுகள் மற்றும் அவர்களின் உரிமைகளை பற்றிய கொள்கைச் சிந்தனைகள் நம்மிடையே வேறு வேறாக இருக்கிறது.
Deleteஅதை நேர்மை படுத்தும் விதமாக ரேஞ்சரையும் ஜாகோரையும் வம்புக்கிழுத்துக் கொண்டு இருக்கின்றோம்.
இது நமது உள்ளத்தின் வெளிப்பாடே.
ஆண் குலத்துக்கு மட்டுமே சோரம் போகும் உரிமை உண்டு.
அதுவே பெண்கள் செய்தால் அவமானம், தலைகுனிவு.
நன்றாக இருக்கிறது நமது நீதி...
ஒரு பெண்ணுக்கு, தனது கணவனை வேண்டாம் என்று சொல்லி விலகி செல்ல உரிமை உண்டு. இதை சமூகம் வரையறுத்து வைத்திருகிறது.
Deleteசும்மா இருந்தவனை இப்படி புலம்ப விட்டு விட்டீர்களே விஜய் சார்...
Deleteபுன்னகை ஜி..
Deleteஅதிகாரிக்கு கல்யாண வயசுல ஒரு பையன் இருக்கான். காலாகாலத்துல அவனுக்கு ஒரு கல்யாணம் காட்சியை பண்ணிப் பார்க்கறதை விட்டுட்டு யார்யாரு காதலுக்கோ வாண்டட்டா போய் ஹெல்ப் பண்ணிக்கிட்டிருக்காரேன்ற ஆதங்கம் தான்! மத்தபடி யார் - யார் கூட வேணாலும் ஓடிப்போகட்டும்.. எனக்கென்ன வந்ததுச்சாம்!
😑😑
((தம்பி கிட் வில்லர்.. உங்க அப்பா மறுபடியும் ஏதாவது பனிச்சரிவுல ஒரு பத்து-பதினஞ்சு நாட்களுக்கு மாட்டினாத்தான் கார்ஸன் அங்கிளுக்கு நடந்தமாதிரி உனக்கும் ஏதாவது சம்பவம் கிம்பவம் நடக்கும் போலிருக்கு!))
😃😃😃😃😃
Delete////தம்பி கிட் வில்லர்.. உங்க அப்பா மறுபடியும் ஏதாவது பனிச்சரிவுல ஒரு பத்து-பதினஞ்சு நாட்களுக்கு மாட்டினாத்தான் கார்ஸன் அங்கிளுக்கு நடந்தமாதிரி///
Deleteசென்ற ஆண்டு வெளிவந்த கதை என நினைக்கிறேன்.
தலைப்பு யாராவது சொன்னால் மறு வாசிப்பு போகலாம்.
நானே வஇசஇலடஇச்சஉ குத்தாட்டம் எல்லாம் போடுவேனாக்கும் ஆகஸ்ட் 5 உங்க குத்தாட்டத்துக்கான மேடை தயார்.ரசிக்கநாங்களும் தயார்.வாங்க ஜி. ரவுண்ட் பன்னுடன் கொண்டாடலாம்.
ReplyDeleteகுத்தாட்டத்துக்கான ஸ்பெசல் காரணம் கா.க .கா.ஒரிஜினல் ஆடல் பாடல் உடன்மேக்ஸி ஸைசில்.
ReplyDeleteகார்சனா வேஷம் போடப்போவதாரு
Deleteகிட் ஆர்டீன் உஷார். 10/10
ReplyDelete96 மணி நேரங்கள்...! . 9.6/10
வஞ்சம் மறக்கா வரலாறு 10/10
பனாமா படலம். 9.5/10
மொத்தமாக
கோடைமலர். 9.55/10
👌👌👌👌👌
Deletesuper ji
Deleteஅடடே செம்ம நண்பரே.
Deleteலயன் காமிக்ஸ்...
ReplyDeleteஇந்த ஆண்டில் மிக சிறந்த வெளியீடு
// எந்தையின் கதை///
எந்த விதத்திலும் சமரசம் கொள்ள முடியாத கதை... இரத்த படலத்தின் துவக்க புள்ளியாக இதை வைத்து கொள்ளலாம்.
மனதைக் கொள்ளை கொள்ளும் வலி நிறைந்த கதை.
நேற்று வாசிப்பு ஆகி விட்டது.
True!
Deleteஆல்பா
ReplyDeleteகதையின் ஆரம்த்தில் நடக்கும் இரு வேறு சம்பவங்களே கதையின் அடுத்தடுத்து நடக்கும் கொலைகளுக்கு காரணம். ஆனால் இவராக இருப்பாரோ இல்லை இல்லை இவர் தான் அந்த கொலைகளை செய்து இருப்பரோ என்று யூகம் பண்ணக் கூடும் அளவுக்கு கதையின் நகர்வும் அமையுது.
ஆனால், கதையின் இறுதியில் நமக்கு இருப்பதோ சற்றும் எதிர் பார்க்காத இரு ட்விஸ்ட்.
செம்ம விறு விறு கதை மற்றும் ஓவியங்கள் & கலரிங் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை தருகிறது.
Wow! Good to hear that!
DeleteThis comment has been removed by the author.
Delete///செம்ம விறு விறு கதை மற்றும் ஓவியங்கள் & கலரிங் ஒரு ஹாலிவுட் படம் பார்க்கும் உணர்வை தருகிறது.///
Deleteகதையில் அந்த "flow" தான்
செம ஜோரு.
டயலாக்ஸ் ரொம்ப பிரமாதமா இருக்கிறது.
சிவாஜி படம் மாதிரி ஒரு ஒரு பைட்டு தான். சும்மா நச்சுன்னு இருக்குது.
ரூபின்
ReplyDeleteஒரு அப்பாவி பெண்ணை சிக்கலில் சிக்க வைத்து அதன் மூலம் லாபம் ஈட்ட பார்க்கும் ஒரு சிறு கூட்டணியின் முகமூடியை பல முடிச்சுகள் சுவாரஸ்யங்கள் உடன் வெளிக் கொணருவதே கதை.
ரூபினின் 2 கதைகளுமே மிக அருமை.
அருமையான கலரிங் & ஓவியங்கள்.
கலரிங் ஆர்டிஸ்டுக்கு ஒரு தனி பாராட்டு விழவே எடுக்கலாம் போல.
இந்த சம்மர் ஸ்பெஷல் இதழ் மட்டும் பைண்டிங்ல சொதப்பாமல் இருந்து இருந்தால் இது ஒரு செம்ம ஹிட் புக்கு.
பலரும் தளத்துல விமர்சனத்தை தெறிக்க விட்டு இருப்பாங்க.
அடிச்சு புடிச்சு கஷ்ட பட்டு முடிச்ச ஒரு கதம்ப புக்கு ஒரு தவறினால் பரவலாக கொண்டாட முடியாமல் போனது வருத்தமளிக்குது.
Nice review!
Delete////ஒரு அப்பாவி பெண்ணை சிக்கலில் சிக்க வைத்து அதன் மூலம் லாபம் ஈட்ட பார்க்கும் ஒரு சிறு கூட்டணியின் முகமூடியை பல முடிச்சுகள் சுவாரஸ்யங்கள் உடன் வெளிக் கொணருவதே கதை.///
Deleteஅந்த பேதை பெண் பாவம் தான்....
ஆரம்பத்திலேயே அவனை சுடும்போது அவன் மேல இருந்து ரத்தம் வெளி வராது. அதை அந்தப் பெண் கவனிக்காமல் பதட்டத்தில் ஓடிடும்.
Deleteஅங்கு இருந்து அவள் ஓடிய ஓட்டத்துடன் விதியும் சேர்த்து கொண்டு, அவள் வாழ்க்கையை புரட்டிப் போட்டு விடுகிறது...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteடேங்கோ
ReplyDeleteஇந்த முறை பனாமவில் நடக்கும் கதை.
முன்பின் தெரியாத ஒருத்தருக்கு அவனே வந்து இவங்களோட உதவிய வலுக்கட்டாயமா பெற்று அவங்களை எப்படி சிக்கலில் மாட்டி விடறான் அப்புறம் அவங்க எப்படி அதில் இருந்து வெளிய வர்றாங்கன்றது தான் கதை.
டேங்கோ கதை இனி ஒரு புது கோணத்துல போகுமோன்ற மாதிரி கதை முடியுது
இலக்கிய மன்றங்கள் போல், ஓர் அமைப்பு நம்மிடையே இருந்தால், நாமும் ஒவ்வொரு கதையை [ காமிக்ஸ்] பற்றி ஓர் விவாதம் செய்யலாம். அதை ஒரு தொகுப்பாக ஆவண படுத்தலாம்.
Delete**** கரையெல்லாம் குருதி ****
ReplyDeleteடெக்ஸும் கார்ஸனும் போகிற வழியில் ஒரு பிரச்சினையை தீர்த்துவிட்டுக் கிளம்பும் வழக்கமான டெம்ப்ளேட் தான்! ஆனாலும், மாறுபட்ட புத்தக அளவினாலும், அடர்நிற அம்சமான வண்ணக் கலவைகளாலும், எதிர்பாராத க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டாலும் மொத்தமாய் ஈர்க்கிறார்கள்!
30 பக்கங்களில் வெளியான 'கலர் டெக்ஸ்' கதையை இன்னும் கொஞ்சம் கூடுதல் பக்கங்களோடு படித்த உணர்வு!
10/10
+1
Delete///30 பக்கங்களில் வெளியான 'கலர் டெக்ஸ்' கதையை இன்னும் கொஞ்சம் கூடுதல் பக்கங்களோடு படித்த உணர்வு!////
DeleteSame feelings...
200
ReplyDelete