நண்பர்களே,
வணக்கம். கிட்டத்தட்ட 200 நண்பர்கள் பங்கேற்றதொரு poll, துளியும் குளறுபடிகளின்றி அழகாய் நிறைவுற்றுள்ளது !! நிறைய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை அந்த site சாத்தியப்படுத்தித் தந்ததால், முன் போல 'தென்னைமரத்திலே ஒரு குத்து ; பனைமரத்தில் ஒரு குத்து' என்ற டப்ஸாக்களை இம்முறை பார்க்க இயலவில்லை ! And thanks guys - உங்களின் காமிக்ஸ் கடமைகளை அழகாய் செய்து தந்தமைக்கு !!
MAXI-க்கே (எதிர்பார்த்த) ஜெயம் என்றாலும், அந்த வெற்றியின் margin நிஜமாகவே ஆச்சர்யமூட்டுகிறது ! பட்ஜெட்டை கருத்தில் கொண்டு நான் போட்ட வோட்டு கூட ரெகுலர் சைசுக்கே ; ஆனால் சந்தேகங்களுக்கு இடமே இல்லாததொரு வெற்றியினை MAXI தனதாக்கியுள்ளது ! So உங்களின் தீர்ப்பே கம்பெனியின் தீர்ப்பாகவும் இருந்திடும் ! இதோ - வாக்கெடுப்பின் இறுதி நிலவரம் :
To recap :
*ஈரோட்டில் ஆகஸ்ட் 4 to 15 தேதிகளில் நடைபெறவுள்ளது புத்தக விழா !
*And புனித மனிடோ மனம் வைத்தால் ஆகஸ்ட் 5 தேதியன்று (சனிக்கிழமை) காலையில் நமது சந்திப்பு ! இடம் விரைவில் அறிவிக்கப்படும் !
*2019-க்கு அப்புறமாய் நாம் சந்திக்கவிருப்பது இப்போது தான் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷலாய் ரகளைகள் செய்திட ஸ்பெஷல் புக்ஸ் திட்டமிட்டுள்ளோம் !
*இதோ - அவற்றின் பட்டியல் :
இதழ் # 1 : சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் II : ஒரு புத்தம் புதிய கதை + ஒரு க்ளாஸிக் மறுபதிப்பு ! கலரில்....மிரட்டும் தயாரிப்புத் தரத்தில்..ஹார்ட் கவர் இதழாய் - ரூ.330 விலையினில் !
இதழ் # 2 : The BIG BOYS ஸ்பெஷல் - ஸ்பைடர் + இரும்புக்கை மாயாவி + இரும்புக்கை நார்மன் என்ற கூட்டணியில் - க்ளாஸிக் கதைகளுடன் ! ஸ்பைடரின் "கொலைப்படை" கதை மட்டும் 2 வண்ணத்தில்....பாக்கி இரண்டும் black & white-ல் ! MAXI சைசில்...ஹார்ட் கவர் இதழ்...விலை.ரூ.300 !
இந்த இதழுக்கு Variant கவர்ஸ் option இருந்திடும் ! ஸ்பைடரின் அட்டைப்படம் ஒரிஜினலாக அமைந்திடும் ! யாருக்கேனும் தானைத் தலீவர் அட்டைப்படத்தினில் வேணாம் ; மாயாவி இருந்தால் தேவலாம் என்று தோன்றிடும் பட்சத்தில் ஆர்டர் செய்யும் போதே Variant 'M" என்று குறிப்பிட வேண்டி வரும் ! எதுவும் குறிப்பிடாது ஆர்டர் செய்வோருக்கு ஸ்பைடர் அட்டைப்படமே வந்திடும் !
இதழ் # 3 - "விதி எழுதிய வெள்ளை வரிகள் !" 112 பக்கங்கள் ; கருப்பு-வெள்ளையில்-ரூ.100 ! அழகானதொரு கிராபிக் நாவல் !
இதழ் # 4 - மார்ட்டின் in கலர் !! 64 பக்கங்கள் ; முழுவண்ணத்தில் மர்ம மனிதன் மார்ட்டினின் புது சாகசம் ; விலை : ரூ.85 !
இதழ் # 5 - மிரட்டும் MAXI சைசில் ; 336 பக்கங்களுடன் ; டாலடிக்கும் கலரில் ; உங்களின் மனம் கவர்ந்த ஒரிஜினல் ஆடல் + பாடல்களுடன் "கார்சனின் கடந்த காலம்" !! "தலையில்லா போராளி" போல ஒவ்வொரு பக்கமும் மெகா சைசில் அமைந்திடும் ! ஹார்ட் கவர் !
And முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு, இந்த இதழின் முதல் பக்கத்தில் நீங்கள் தந்திடும் போட்டோக்களை அச்சிட்டு இணைத்திடும் option உண்டு ! ஒரு disclaimer : கார்சனின் 'கபி..கபிக்களை' மனதில் வைத்துக் கொண்டு, நீங்க பாட்டுக்கு எசகுபிசகான போட்டோக்களை அனுப்பி வைத்து, அப்புறம் மாவுக்கட்டு போட புத்தூருக்குப் பயணிக்க நேர்ந்தால், பழி கம்பெனியை சாராது !
போட்டோக்கள் அனுப்பிட last date : ஜூலை 10 '2023 !
*5 இதழ்களையும் ஒட்டுக்கா புக் செய்திடும் நண்பர்களுக்கு ஸ்பெஷல் விலை : ரூ.1550 ப்ளஸ் கூரியர் கட்டணம் !
*ஈரோட்டில் நேரில் வாங்கிக் கொள்வதாயின் no கூரியர் கட்டணம்ஸ் !
*5 இதழ்கள் கொண்ட பார்சலின் எடை நெருக்கி இரண்டரை கிலோ வரும் என்பதால் - தமிழகத்தினுள் ரூ.150 & வெளி மாநிலத்துக்கு ரூ.200 கூரியர் கட்டணங்கள் வந்திடும் !
வழக்கம் போல கெத்தாய் கடை விரிச்சாச்சு - "இங்கு நல்ல கறிகாய் விற்கப்படும்" என்ற போர்டுடன் !! சுலபமான வேலை இந்த அறிவிப்பு portion தான் ; மெயின் பிக்ச்சர் ஆரம்பிக்கப்போவது இனிமேலே எனும் போது, அடுத்த 60 நாட்களுக்கு சரமாரியாக குட்டிக்கரணங்கள் அடிக்க ரெடியாகிட வேண்டும் !
So yet another புது முயற்சிக்குள் புகுந்து ஜெயம் கண்டிட, அந்த சந்தன கணேச பெருமானின் ஆசிகளைக் கோரியபடிக்கே விடைபெறுகிறேன் folks ! முன்பதிவுகள் ஆன்லைனிலும் ரெடி !! போட்டுத் தாக்கலாமா ?
P.S : ஈரோட்டுக்கு சீனியர் எடிட்டர் + கருணையானந்தம் அவர்களை வழக்கம் போல அழைத்து வர எண்ணியுள்ளோம் ! இயன்றால், நமது office டீமையுமே !!
ஆஜர்
ReplyDeleteவாழ்த்துகள்
Deleteசூப்பர் தோழரே
Deleteநன்றி 🙏🙏🙏🙏
DeleteMe present
ReplyDeleteஉள்ளேனுங்க
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteHi..
ReplyDelete
ReplyDeleteAnd முன்பதிவு செய்திடும் நண்பர்களுக்கு, இந்த இதழின் முதல் பக்கத்தில் நீங்கள் தந்திடும் போட்டோக்களை அச்சிட்டு இணைத்திடும் option உண்டு
சூப்பர் நன்றி ஆசிரியரே
கார்சனின் 'கபி..கபிக்களை' மனதில் வைத்துக் கொண்டு, நீங்க பாட்டுக்கு எசகுபிசகான போட்டோக்களை அனுப்பி வைத்து, அப்புறம் மாவுக்கட்டு போட புத்தூருக்குப் பயணிக்க நேர்ந்தால், பழி கம்பெனியை சாராது !
ReplyDeleteபோட்டோ அனுப்பும் எங்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் படி ஏதாவது கிராபிக்ஸ் பன்ன முடியாதா ஆசிரியரே
😝😝😝😝😝😝😝😝😝
Deleteஎல்லார் லைஃப்ல கபி கபி இருக்கும் என்ன செய்ய?
Delete😜😜😜😜
Deleteவணக்கம் நண்பர்களே 🙏
ReplyDeleteஈரோட்டுக்கு சீனியர் எடிட்டர் + கருணையானந்தம் அவர்களை வழக்கம் போல அழைத்து வர எண்ணியுள்ளோம் ! இயன்றால், நமது office டீமையுமே !!
ReplyDeleteமகிழ்ச்சி அப்படி எல்லோரையும் அழைத்து வர முடியவில்லை என்றால்
நண்பர் மைதீனை அழைத்து வாருங்கள் ஆசிரியரே
ஆஹா
ReplyDeleteபாட்ட காணோம்
Deleteநிப்பாட்டு.-உ+இயாச் கடல்
Deleteஇருக்கா
Deleteஈரோட்டில் புதிதாக மினி காமிக்ஸ் தலை காட்ட வழியுண்டா
ReplyDeleteஇந்திய தயாரிப்புகளான இன்ஸ்பெக்டர் ஆசாத் மாமன்னர் பீமா முகமூடி வீரன் பில்லி
போன்றவர்களை முயற்ச்சிக்கலாம்
மிகவும் பிடித்த தொடர்கள். ஒரிஜினல் கர்த்தாக்கள் மறைவுக்குப் பின் இதற்கான உரிமை இப்போது யாரிடம் இருக்கு என்றே தெரியவில்லை என்பதுதான் தகவல்.
Deleteஅதனால் ரீப்பிண்டில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது.
👍👍
DeleteHappy annachi
ReplyDeleteModesty Digest 😃😃
ReplyDeleteமாலை வணக்கம்..
ReplyDeleteமேக்ஸிஈஈஈஈஈ வணக்கமுங்கோ.....🙏
ReplyDeleteபோட்டு தாக்குவோம்...
ReplyDeleteமினி காமிக்ஸில் இன்ஸ்பெக்டர் கருடா கதைகளை வெளியிடலாம்
ReplyDeleteSuper satya sainathan..
Deleteஇன்ஸ்பெக்டர் கருடா செம்ம தேர்வு..
Thanks sir
Deleteசார். பிற்கால சேம நல நிதிக்காக டெக்ஸ் மட்டும் தனியா வாங்கினாலும் 735 + குரியர் தானுங்களா?
ReplyDeleteNo sir
Deleteமஹீ - அந்த நிதித்தொகை டார்கெட் சேர்த்து அனுப்பிப்பாருங்க - தனி புக்குக்கு :-) :-) :-)
Deleteடெக்ஸ் புக் அதும் ஸபெசல் புக்கெல்லாம் தங்கப்பாளம் மாதிரிங்க. ஸ்டாக் அவுட்டாயிடுச்சுன்னா அவ்வளவு தான். சொய்ங்னு ஏறிடுது. அதும் பழசாக பழசாக இன்னும் wine மாதிரி கிக்கும் அதிகமாகுது வாசகர்களுக்கு.
Delete@Mahi : நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் சும்மாவா சொன்னாங்க 😁
Deleteமுன்பதிவு done. இனி போய் ஹார்ட் ட்ரைவ்ல ஃபோட்டோ தேடணுமே ;) ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே mode.
ReplyDeleteஅருமை... மிக அருமை சார்...
ReplyDeleteஇந்த ஆகஸ்ட் மாசம் ஜூன்னுக்கு அடுத்தே வந்தா எவ்ளோ நல்லா இருக்கும்.....
மாசக் காலண்டர் வைச்சிருந்தா டபக்குன்னு ஜூலைய கிழிச்சு சுருட்டி வீசிடுங்க.
Deleteஅருமை வந்தாயிற்று...!
ReplyDeleteP.S : ஈரோட்டுக்கு சீனியர் எடிட்டர் + கருணையானந்தம் அவர்களை வழக்கம் போல அழைத்து வர எண்ணியுள்ளோம் ! இயன்றால், நமது office டீமையுமே !!
ReplyDelete#####
வாவ்...சூப்பர் ஸார்
பணம் அனுப்பியாச்சுங்க சார்...
ReplyDeleteசூப்பர் சார்...
ReplyDelete//2019-க்கு அப்புறமாய் நாம் சந்திக்கவிருப்பது இப்போது தான் என்பதால் கொஞ்சம் ஸ்பெஷலாய் ரகளைகள் செய்திட ஸ்பெஷல் புக்ஸ் திட்டமிட்டுள்ளோம் !//
இன்னும் ஸ்பெசலாய் கூடுதல் புக்சா...
சார்
காககா போஸ்டர் செம....கார்சன் ஆவியார் மேலே...வண்டியில் இருவரும் சூப்பர்....லினாவ நீங்க போஸ்டர்ல போடாததற்கு காரணம் கார்சன் மனசுக்குள்ளார ஒளிச்சி வச்சதாலதான...
தலைமையாசிரியர் மும்....கருணையானந்தம் அவர்களையும் முத்து 50 தாமாண்டு விழா நாயகர்களாய் நாம் கௌரவிக்கனும் ...
டீம்ல 50ல் வரும் அனைவரையும் சேத்து
Delete// தலைமையாசிரியர் மும்....கருணையானந்தம் அவர்களையும் முத்து 50 தாமாண்டு விழா நாயகர்களாய் நாம் கௌரவிக்கனும் ... //
DeleteYES! YES! Kandipaka!
இந்த வருடத்தின் மூன்றாவது சந்தா .. :-) ஹி ஹி !! ;-)
ReplyDeleteI am waiting.
DeleteDecember ...
DeleteExactly Raghavan 😊
Deleteஅதென்ன
Deleteமீண்மொரு காமிக்ஸ் பொற்காலம்..
ReplyDeleteதிகட்ட திகட்ட இதழ்கள். .
திடிர் ஆன்லைன் ஸ்பெஷல் இதழ்கள்,
ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள்,
சம்மர் ஸ்பெஷல் இதழ்கள்,
கைக்கும் காசுக்கும் அடக்கமான 30ரூபாய் விலையிலும் இதழ்கள் என இந்தாண்டு அசத்தலாக செல்கிறது..
This comment has been removed by the author.
DeleteVery well said Siva
Deleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDelete// ஈரோட்டுக்கு சீனியர் எடிட்டர் + கருணையானந்தம் அவர்களை வழக்கம் போல அழைத்து வர எண்ணியுள்ளோம் ! இயன்றால், நமது office டீமையுமே !! //
ReplyDeleteSuper super. I am happy to hear this. Icing on the cake. I am happy
ஒரு பக்கம் காமிக்ஸ் அடைமழை சந்தோஷத்தை கொடுத்தாலும், ஒரு பக்கம் பட்ஜெட் வயிற்றறை கலக்க செய்கிறது ஜி
ReplyDeleteசெலக்ட் செய்து, இயலும் போதெல்லாம் வாங்கிக்கொள்ளுங்கள் சார் ! Maybe அந்தந்த மாதத்து சந்தா புக்ஸோடு ஒன்றோ, இரண்டோ என வாங்கிடுவதாயின் கூரியரிலும் ஏதாச்சும் மிச்சம் பண்ண முயற்சிக்கலாம் !
Deleteகாமிரேட் சிக்பில்! ஈரோடு ஸ்பெஷல் -க்கான அட்வான்ஸ் புக்கிங்- க்கென உங்கள் பெயரில் பணம் செலுத்தப் பட்டு விவரம் எடிட்டர் சார் ஈமெயில்-க்கு அனுப்பப்பட்டு விட்டது.மேலதிக விவரங்களுக்கு எடிட்டர் சாரை ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும். அவரது வழிகாட்டலை பின்பற்றவும்.
DeleteGood to know this Selvam Abirami sir. I appreciate this.
Deleteரெத்த கோட்டை, மின்னும் மரணம் & என் பெயர் டைகர் வரிசையில்
ReplyDeleteதங்க கல்லறை'யும் ஹார்ட் பவுன்டில் வரும்... மேக்ஸியில், பழைய மொழி பெயர்ப்புடன் சீக்கிரம் வரும்
This comment has been removed by the author.
DeleteI hope “ Kandipaka varum by this year end 😊”
Deleteவரணும் கண்டிப்பா அடுத்த போராட்டம் அதற்கு தான்.
Deleteநான் காலத்தில் பின்னோக்கி செல்ல வாய்ப்பிருந்தால்....இந்த தவறுகளை திருத்துவேன்னு ஆசிரியர் பதிவு போட்டாரே நினைவிருக்கா
Deleteத.க. மேக்ஸி எப்ப வந்தாலும் முழு ஆதரவு உண்டு...
Deleteவாய்ப்பில்லே மாம்ஸ். அதிலயே அரிசோனா லவ்வும் எந்த வித எடிட்டிங்கும் இல்லாம வரும்னா ஆதரவு தரதை பத்தி யோசிக்கலாம்.
Deleteஅதகளமான ஸ்பெஷல்!
ReplyDeleteமெய்யாலுமே தங்க காலம் தான்.. !
வந்துட்டேன் நானும்
ReplyDeleteஈரோடு புக் ஃபேர் ஸ்பெஷலுக்கு 1700 amount கட்டியாச்சு.
ReplyDeleteGood to hear that sir
Deleteஅப்போ நீங்க ஈரோடு வரலயா பத்து சார்
Deleteவாய்ப்புகள் குறைவு சார்.
Deleteஅந்த வாரம் நான் கரூரில் இருந்து , திருவண்ணாமலை வீட்டிற்கு Shifting.
ஓகே ஓகே சார். அப்போ இனி திருவண்ணாமலை வந்தால் உங்களை பார்க்கலாம்.
DeleteYes.surely.
Deleteஈரோடு புத்தக திருவிழா 2023 ஸ்பெஷல் இதழ்களுக்கான முன் பதிவுத் தொகையை அனுப்பியாச்சே...!!
ReplyDelete2023 பழங்காமிக்ஸ்களின் பொற்காலம் என்றால் மிகையில்லை..
ReplyDeleteஆகஸ்டு 3-ம் தேதிக்கு இரும்புக் குதிரையில் பயணிக்க போன மாதமே முன் பதிவு பண்ணியாச்சு..
ReplyDeleteசந்திப்பு தேதி எப்போ சாரே..!
Good planning
Deleteஆகஸ்ட் 5. Confirm meeting
Delete1 to 4 மட்டும் எனில் எவ்வளவு (விலை + கூரியர்) செலுத்த வேண்டும்..
ReplyDeleteகா.க.கா நீங்கலாக?!
ReplyDeleteDial office - they will tell
Delete// பட்ஜெட்டை கருத்தில் கொண்டு நான் போட்ட வோட்டு கூட ரெகுலர் சைசுக்கே //
ReplyDeleteநீங்களாவது மைனாரிட்டி சைட் இருந்தீங்களே..... வெல்கம் டூ த வுட்டன் ஸ்பூன் க்ளப் 🥰
எது எப்படியோ, MAXI சைஸில் கார்களின் காலத்தை பார்க்க ஆவலுடன் வெயிட்டிங். போன சயமய் அவசரகதியில் பக்கங்கள் கட்டங்கள் நெருக்கிய வண்ணம் இருக்காது என்ற வகையில் நிம்மதியே.
பதிவு அன்றே முன்பதிவையும் செய்து விட்டேன்... ஈரோட்டில் நண்பர்களுடன் சேர்ந்து வாங்க ஆவல்.
Deleteபட்ஜெட்டை கருத்தில் கொண்டு நான் போட்ட ஓட்டும் ரெகுலர் சைசுக்கு .இப்பதான் ஆன்லைன் புக்பேர் சந்தோசமா கொண்டாடினேன் .ஆசுவாசப்படுத்திக் கொள்ள கொஞ்சம் அவகாசம் தேவை. எனவே கா.க.கா இப்பத்திற்கு கொஞ்சம் ஒத்திவைப்பு சிலநாட்கள் கழித்து வாங்குவேன்
ReplyDeleteSure sir..
Delete80ஆவது
ReplyDelete//மாடஸ்டி டைஜஸ்ட்//திருச்சி விஜய். ஆகஸ்டெ கொண்டாட்டம் ஆரம்பிச்சதிலிருந்து கேட்கநினைச்சிருந்தேன். தூங்கிக்கிட்டிருக்கிற மாடஸ்கா ஸ்லிப்பர்செல்கள சுரண்டிவிட்டமாதிரி ஆயிருமேனு பேசாத இருந்துகுட்டேன். ஆசிரியர்சார் மாடஸ்டி we want.. டைஜஸ்டோசிங்கிள் ஆல்பமோகலரோ கருப்பு வெள்ளையோபில்லர் pageஓஅடிக்கடி கொட்ங்க. வருசம் ஒண்ணுணு ரேசன் வேண்டாம்
ReplyDeleteகார்சன் கடந்த காலம் வேண்டாம் சார் எனக்கு.....
ReplyDeleteஇதர இதழ்களுக்கு எவ்ளோ பணம் அனுப்ப வேண்டும்
ஆபிசுக்கு ஒரு போன் அடியுங்க மந்திரியாரே !
Deleteவணக்கம் நண்பர்களே!!
ReplyDeleteவெல்கம் மேக்ஸி காககா!!!
Deleteடீமோடு ஈரோடு...!!! சூப்பர் சார்! நம்ம கொண்டாட்டத்தை அவர்களும் நேரில் பார்க்கலாம்...! நம் கொண்டாட்டங்களுக்கு காரணமானோர்களை நாங்களும் நேரில் பார்க்கலாம்!!!
முயற்சிப்பேன் சார் ; அந்நேரத்து சூழலைப் பொறுத்தது !
DeleteAnd அவரவரது வீட்டு நிலவரங்கள் எவ்விதமென்பதையும் பொறுத்தது !
கார்சன் கடந்த காலம் வேண்டாம் சார் எனக்கு.
ReplyDeleteஇதர இதழ்களுக்கு எவ்ளோ பணம் அனுப்ப வேண்டும்.
I am in subscription for both Lion& Muthu and V Comics.
Call the office please sir...they will inform you the cost
Deleteஇந்த முறை எல்லா புத்தகங்களும் மாக்ஸி சைஸில் போடலாமே சார்..
ReplyDeleteநன்றி selvam abirami அவர்களே
ReplyDeleteIt's a pleasure sir!
DeleteMaxi C K K book will be true collectors edition. Thank you all for making this dream coming true.
ReplyDeleteLet us start the music for Thangak Kallarai Maxi request.
Apologies to the budget friends.
// Let us start the music for Thangak Kallarai Maxi request. // ஆமா போன வருடமே வந்திருக்க வேண்டிய இதழ் இது. முத்து 50
Deleteada pongayya .. evlo vaati kEkkuradhu .. Kezhavanin Kadantha Kaadhal dhaan varudhu :-)
Deleteவணக்கம் எடிட்டர்சாருக்கும் அன்பு காமிக்ஸ் உறவுகளுக்கும் வேலைபழு காரணமாக இங்கே வருவது குறைவு இருந்தாலும் அனைத்து பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது பார்த்துக் கொள்வேன் எடிட்டரின் பதிவும் நண்பர்களின் அரட்டையும் மனதிற்கு மகிழ்வைதரும் ஆகஸ்ட் வெளியீட்டில் சுஸ்கி விஸ்கி போதும் அது மட்டும் தான் எனக்கு எடுக்கக்கூடியதாக பட்ஜெட் இருக்கு Ok நன்றிகள்
ReplyDeleteஎனது சந்தா எண் 6.... செந்தூரான் வந்ருக்கார்
ReplyDeleteஎனது எண் 19. யார் வந்து இருக்காக என்று தெரியலையே.
Deleteநல்லா உத்து பாருங்க...தெரியும்
Deleteஈரோடு ஸ்பெஷல் பேக்கேஜில்
ReplyDeleteசு & வி மினிமலிஸ்டிக் டின் டின் போல் என்பதால் படிக்க ஆர்வம்.
பேரிக்காய் போராட்டம் படித்ததில்லை என்பதால் இரட்டை சந்தோஷம்.புதிய இதழ்களுக்கு எதிர்பார்ப்புடன் காத்திருப்பு. காககா சைஸை ரசித்து விட்டு அலமாரியில் வைத்து விட வேண்டும்.
இரட்டை பேக்கேஜ் பதிவு செய்தால் மாயாவி,ஸ்பைடர் வேரியண்ட் அட்டைகளை டிஃபால்ட் ஆக வைத்து விட ஒரு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட விண்ணப்பிக்கிறேன்.
பேத்தி, மகள் , மருமகன் சமீபத்திய HD போட்டோவுக்காக வெயிட்டிங் என்பதால் அடுத்த வாரம் அட்வான்ஸ் புக்கிங்.
( நம்பள் ஃபோட்டோ போடுறான்.
அல்லாரும் தலை தெறிக்க ஓடுறான் அப்டிங்கறதால).
// இரட்டை பேக்கேஜ் பதிவு செய்தால் மாயாவி,ஸ்பைடர் வேரியண்ட் அட்டைகளை டிஃபால்ட் ஆக வைத்து விட ஒரு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துவிட விண்ணப்பிக்கிறேன். // Such a good idea Sir. That's the reason mostly for booking double package.
Deleteதளம் எங்கும் அன்பும் கருணையும் நட்பும் கொடையும் பெருக்கெடுத்து ஓடுகிறது.பட்ஜெட்டை நினைத்து நண்பர் சிக்பில் அவர்கள் தயங்க உங்கள் பெயரில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பொருளர் ஜி பதிவிடுகிறார்.பட்ஜெட்டிற்கு தயங்கி11.30க்குநான் பதிவிட்டேன்.ஆனால் 11மணிக்கே எனது இன்னொரு நம்பருக்கு நண்பர் உங்களுக்கு நான் பணம் கட்டிவிடுமகிறேன்என்றுwatsappல்தகவல் தெரிவித்துள்ளார்.இந்த உலகத்தில் இப்படியெல்லாம் நல்ல மனிதர்கள் உள்ளனரா.?உலகில் உள்ள நல்லவர்கள் எல்லாம் நமது தளத்திற்குள்தான் உள்ளனர்
ReplyDeleteநல்ல உள்ளங்களுக்கு🙏🙏🙏🙏🙏
Deleteஅன்பு பரிசு பெற்ற நண்பர்களுக்கு💐💐💐💐💐
இணைக்கும் ஆசிரியர் சாருக்கு🌹🌹🌹🌹🌹
எல்லா புகழும் காமிக்ஸிற்கே💞💞💞💞💞
இந்த தளத்தில் ஒரு உறுப்பினர் ஆக இருப்பதற்கு...💪💪💪💪💪
108th
ReplyDelete***** ப்ளாக்மெயில் பண்ண விரும்பு *****
ReplyDeleteஒரு டிடெக்டிவ் த்ரில்லருக்கான எல்லா அம்சங்களும் 100% அமைந்த - ஏஜென்ட் ராபினின் அமர்க்களமான சாகஸம்!!
குள்ள இன்ஃபார்மர் ஆல்ஃபியின் உதவியுடன் கேஸுக்கான முடிச்சுகளை ராபின் ஒவ்வொன்றாக அவிழ்ப்பதில் ஆரம்பித்து, இறுதியில் குற்றவாளியை கூண்டிலேற்றும் சம்பவங்கள் வரை - கதையை நகர்த்திய பாணி கதாசிரியரால் மிக நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கிறது! சித்திரங்களும் அட்டகாசம்!!
ராபினின் சகா ரிச்சர்டின் கல்யாண ஃபோட்டோவில் ஆரம்பிக்கும் கதை - இறுதியில் அந்த ஃபோட்டோ எடுக்கப்பட்ட சூழலில் வந்து முடிவது - கதாசிரியர் எழுதிய கவிதை.. கவிதை!!
ப்ளாக்மெயில் பண்ண விரும்பு - தரமான சம்பவம்!!
10/10
Yes 100/💯
DeleteNice review
Deleteதலைப்பு
Deleteதப்பு தப்பாய் ஒரு தப்பு
///தலைப்பு
Deleteதப்பு தப்பாய் ஒரு தப்பு///
இல்லீங்க sridharan ji! தலைப்பு சரிதான்.. என்னோட விமர்சனம் தான் லேட்!!
ஆனாப் பாருங்க நீங்க சொன்னதுக்கப்புறம் தான் கவனிச்சேன்.. இதே விமர்சனத்தை 'த.த.ஒரு.த' கதைக்கு எழுதியிருந்தாலும் கிட்டத்தட்ட சரியாகத்தான் இருந்திருக்கும்! :)
ஆனால் என்னளவில் 'த.த.ஒ.த'வை விட பலமடங்கு நல்லதொரு ஆக்கம் இந்த 'ப்ளாக் மெயில் பண்ண விரும்பு'!
நல்ல டிடெக்டிவ் கதைகளை விரும்பும் ரசிகர்கள் மிஸ் பண்ணக்கூடாத படைப்பு!
ஒளிமயமான கதைகளெல்லாம் நம் ஈரோட்டில்ல் வருகிறது
ReplyDeleteஇந்த உலகம் தேடும் டின்டின் ஓசை காதில் விழுகிறது
ஒளிமயமான கதைகளெல்லாம் நம் ஈரோட்டில்ல் வருகிறது
இந்த உலகம் தேடும் டின்டின் ஓசை காதில் விழுகிறது
மூவிரு இதழும் முப்பதுகோடி வாசகரும் வருகின்றார் - அந்த விசயன்
நாமும் கேட்டவாறே கதைமழை பொழிகின்றார்
மூவிரு இதழும் முப்பதுகோடி வாசகரும் வருகின்றார் - அந்த விசயன்
நாமும் கேட்டவாறே கதைமழை பொழிகின்றார்
மாலை சூடி எங்தள் முத்தாய் சௌந்தரனார் வருகின்றார்
வருக வருக பணியாழத்தோழர் வருக என்றிவர் பாடுகின்றார்
ஒளிமயமான கதைகளெல்லாம் நம் ஈரோட்டில்ல் வருகிறது
இந்த உலகம் தேடும் டின்டின் ஓசை காதில் விழுகிறது
காமிக்ஸின்விதையே விழாவின் தலையே சௌந்தரனாரே வருக - கதையின்
வரியில் வாழும் எழுத்து துணைவன் கருணையானந்தே வருக
காமிக்ஸின்விதையே விழாவின் தலையே சௌந்தரனாரே வருக - கதையின்
வரியில் வாழும் எழுத்து துணைவன் கருணையானந்தே வருக
முத்தமிழ்அறிஞர் ஆசிரியகலைஞர் விசயனாரே வருக
நமது அரவிந்த் வளரும் வீயார் குண்டாய் தரவே வருக
கவிஞரின் கவிதைகளுக்கு லைக் பண்ணவே மூச்சு வாங்குதே.எப்படிங்க கவிஞரே.ஆட்டோ கரெக்சனே அழுதிருமே இருந்தாலும்.வாழ்த்துக்கள்
ReplyDeleteஎடிட்டர் அய்யா,
ReplyDeleteஇன்று ரூ.1700/- Gpay மூலம் "Erode Bookfair five special books" க்காக அனுப்பியுள்ளேன்.
பணம் செலுத்திய விபரங்களையும்,
எனது முகவரியினையும் அலுவலக Whatsapp எண்ணுக்கு அனுப்பியுள்ளேன் என்பதை அன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.
வெ.ஸ்ரீபாபு, நாமக்கல்.
9486785447
7904540866 (Whatsapp)
எடிட்டர் அய்யா,
Deleteவணக்கம் 🙏
1)எனது புக்கிங் எண்:37 என்று அலுவலகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றிகள் 🙏
2)கா.க.கா புக்கில் வெளியிடுவதற்காக எனது போட்டோவையும் அனுப்பியுள்ளேன்.
நன்றிகள் 🙏🙏
எடிட்டர் அய்யா,
ReplyDeleteஜூலை'23 முதல் செப்டம்பர்'23 வரையிலான அடுத்த காலாண்டுக்கான " V காமிக்ஸ்" சந்தா தொகை எவ்வளவு என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.🙏
ஸ்ரீபாபு, நாமக்கல்.
அடடே நானும் இதை கேட்க நினைத்தேன். ஆமா நம்ம விக்ரமின் பதிவு வர வேண்டுமே. I'm waiting
DeleteMy booking number is 12
ReplyDeleteசூப்பர் சூப்பர் ஒரு டஜன்....
Deleteகதைகளா
Deleteஇரவு கழுகு பெயரில் இன்னொரு நண்பர்
ReplyDeleteஊர் பெயரை சேர்த்துக் கொள்ளுங்க.. நாங்களும் எளிதாக தெரிந்து கொள்வோம்...
Deleteஎன்னைய எங்கண்ணன் ஆசையாக "சேலம் கழுகு" னு அழைப்பாரு.....🤩🤩🤩
Deleteதிருவண்ணாமலை கழுகு அப்படி னு போட்டால் நன்றாக இருக்காதே சகோ
ReplyDeleteதிருவண்ணாமலை கழுக போட்டாதா நல்லாருக்காது நண்பரே....திருவண்ணாமலை கழுகுன்னு போட்டா நல்லாருக்கும்
Deleteஈரோடுக்கு வருகை தரும் திரு.சீனியர் எடிட்டர் திருஎடிட்டர். திரு. ஜூனியர் எடிட்டர்&திரு கருணை ஆனந்தம்சார் அனைவரையும் மகிழ்வுடன் கரம் குவித்து வரவேற்கிறோம் .
ReplyDeleteமேலும் அலுவலக நண்பர்கள் அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்கிறோம்
ReplyDeleteகார்சனின் கடந்த காலம், சுஸ்கி விஸ்கி மற்றும் பிக் பாய்ஸ் ஸ்பெசல் இந்த மூன்று புத்தகங்கள் மட்டும் தேவை எனில் எவ்வளவு தொகை அனுப்ப வேண்டும்?🤔🤔🤔🤔🤔
ReplyDeletePlease call office
DeleteThank you sir
Deleteஆகஸ்ட் புத்தக விழால V Editor எதுவும் சிறப்பிதழ்கள் வெளியிடவில்லையா எனக் கேட்டவரால் திடீர் பரபரப்பு.
ReplyDeleteசபாஷ் சரியான கேள்வி. ஆமா ஷெரீஃப் V comics Special ஏதாவது வேண்டும் தானே. அது தானே முறை.
Deleteஅதான் அமேசான்ல அதகளம் புரிய மிஸ்டர் ஒருத்தர் கிளம்புனதா சொன்னாங்களே
Deleteஆகஸ்ட் புத்தகவிழாவில் மினி காமிக்ஸ் எதுவும் சர்ப்ரைசாக வருகிறதாங்கசார்.புத்தகவிழாக்களின்போது மாணவர்களுக்கான மினிமம் பட்ஜெட் புத்தகங்கள் வெளியிடுவது தானே நமதுபிளான்.ஆன்லைன்பத்தகவிழா மற்றும் ஈரோடு புத்தகவிழா ஸ்பெசல் ளின் தொடர்ச்சியான பணிகளின் காரணமாக மினிகாமிக்ஸ்புத்தகங்கள் இம்முறை எதிர்பார்க்க முடியாதுங்களாசார்.அப்பநாமக்கல் புக்பேர் மினிகாமிக்ஸ்வரலாம்.
ReplyDeleteநம்ம வீயார் ஏதோ புத்தகம் விடுவாராம்....
Deleteசார் புயல் படலம்னு ஒரு கதை விட்டீர்களே....அந்த நாயகனை தொடர் வாய்ப்பில்லையா
ReplyDeleteபுயல் படலம் "dynamite ரெக்ஸ்" தானேங்கசார் ஹீரோபேரு
ReplyDeleteஆமா நண்பரே
DeleteBooked
ReplyDeleteRs 2030/-
Super
Delete🧡🥰
Delete1550 தானே
Deleteகார்சனின் கடந்த காலம் ஏற்கனவே கலர் மறுபதிப்பு வந்து விட்டதே?? மறுபடியும் மறுபதிப்பா??
ReplyDeleteஈரோடு ஸ்பெஷல் புத்தகங்களுக்கு இன்னிக்கு பணம் கட்டிட்டேன்!
ReplyDeleteஇது உங்களுக்குப் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க.. பெல் அடிங்க!
Super
Deleteட்டங்ங்ங்...,..ட்டங்ங்ங்.......ட்டங்ங்ங்
Delete👍
Deleteநானும் கட்டிட்டேனே. டிங் டிங் டிங்
DeleteGood to know
Deleteலைக்
Delete///ட்டங்ங்ங்...,..ட்டங்ங்ங்.......ட்டங்ங்ங்///
Deleteப்பா!! என்னா சவுண்டு!!! பிச்சுமணிக்கப்புறம் இந்த மணியை ஒழுங்க அடிக்கத்தெரிஞ்சவர் நீங்கமட்டும்தான் ஸ்டீல்!
////நானும் கட்டிட்டேனே. டிங் டிங் டிங்///
மான்ட்டனா மடாலய மணி சவுண்டு மாதிரி இருந்தாலும் ஒரு சாயல்ல நடுராத்திரி குல்ஃபி ஐஸ் வண்டியோட கிணிமணிச் சவுண்டு மாதிரியே இருக்கு!!
காத பிச்சதுக்கு மன்னிங்க
Deleteஇன்று பதிவுக்கிழமை ஆசிரியர் சார்.
ReplyDeleteசார் இன்று பதிவுக் கிழமை...
ReplyDeleteசார் இன்றய ஸ்பெசல் பதிவென்ன.....
ReplyDeleteபக்ஷ்க்ஷி பேச மாட்டேங்குது....
அறுபதே நாட்களில் அத களம் காண தயார்
ஜூன் புத்தகங்கள். ?
ReplyDelete12 நிச்சயம்....அதாவது 12 க்கு
Deleteஈரோடு ஸ்பெஷல் புத்தகங்களுக்கு இன்னிக்கு பணம் கட்டிட்டேன்!
ReplyDeleteCopy paste from EV
Good news
Deleteகா.க.கா. நம்புள்து புக்கிங் எண் 59...
ReplyDeleteலீனாவோட பாட்டைக் கேட்க ரெடியோ ரெடி....💞💞💞💞💞
சார் சாமப் பதிவா
ReplyDeleteசாமக்கோழி கூவியாச்சு
Deleteஊருசனமும் தூங்கியாச்சு..
வாங்க சார் ப்ளாக்கு பக்கம்
சார் நாங்(க) காத்திருப்போம்..
Vijay @ after long time it seems you are free 😁
DeleteI have this book.
Deleteவச்சுக்கோ
DeleteI will check and let you know where it is now. I will take some time.
Deleteஹஹஹா....சூப்பர் நண்பரே
DeleteAll old books are in boxes so very difficult to open it now
Deleteகுடுத்து தப்பிச்சுக்கல
DeleteIf I get the books I will give you
Delete///after long time it seems you are free///
Deleteஆமாங்க PfB! இங்கே வந்து ரவுசு பண்ணாத நாளெல்லாம் எதையோ இழந்தமாதிரி ஒரு ஃபீலிங்கு! :)
அப்ப உன்னோட பாக்ஸ்லயும் தூங்கிடுச்சுன்னுல
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteVijay @ naanum rowdey moment:-)
Deleteபிஸ்டலுக்கு பிரியாவிடை புத்தகம் பற்றி யாரும் விளக்க முடியுமா ஒரே கதையா? சிறுவர்களுக்கானதா?
ReplyDeleteVery good story and you will really enjoy it. But kids may not like it.
Deleteயெஸ்! ஒரே கதை!! சற்றே வித்தியாசமான கதை!! படித்தவர்களில் பலருக்கும் ஒரு பிரமிப்பை ஏற்படுத்திய கதை!! சிறுவர்களுக்கான கதை அல்ல! சற்றே உயர் ரசணை கொண்ட பெரியவர்களுக்கான கதை!!
DeleteGood full action story. Not for kids !
Deleteநன்றி நன்பர்களே
DeleteWaiting for new post sir
ReplyDeleteஇன்று பதிவில்லையா
ReplyDeletePeriya peyar sathya
DeleteIt’s 11 o’clock sir.
ReplyDelete201
ReplyDeleteசார்.. உங்கள் பதிவுக்காக வெயிட்டிங் ..
ReplyDeletePriyatels! எடிட்டர் சாரின் புதிய பதிவு ரெடி!!!
ReplyDeleteஎடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
ReplyDeleteஎடிட்டருக்கு ஒரு கேள்வி.
ReplyDeleteBig Boys Special இன் மாயாவியின் alternate wrapper காண்பித்தால் முடிவு செய்து முன்பதிவுக்கு சொல்ல முடியும். எப்பொழுது ரிலீஸ் செய்வீர்கள் ?