நண்பர்களே,
வணக்கம். இந்தப் பதினொன்று plus ஆண்டுகளில், இங்கே பதிவுப் பக்கத்தில் ரணகள WWF நடந்து கொண்டிருந்த தருணங்களில் கூட, தலைகாட்ட நான் தயங்கியதில்லை ! ஆனால் முதன்முறையாக ஒரு இமாலயத் தாமதம் நிகழ்ந்துள்ள இந்த நொடியில் உள்ளுக்குள் ஓராயிரம் உறுத்தல்கள் ! காரண காரியங்கள் பற்றிய கதைக்குள் புகுவதற்கு முன்பாய் தகவல் சொல்லிவிடுகிறேனே - "சம்மர் ஸ்பெஷல்" hardcover புக் என்பதால் பைண்டிங்கில் சற்றே காய்ந்திட வேண்டியுள்ளது ! So நாளை (திங்கள்) or in the worst case செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடும் ! கொஞ்சமே கொஞ்சமாய் இந்த ஒற்றை மாதம் மட்டும் பொறுத்துக் கொள்ளக் கோருகிறேன் folks ; ஜூலை இதழ்கள் டாணென்று ஜூலை 6-க்கு டெஸ்பாட்ச் கண்டிடும் & ஆகஸ்டிலிருந்து மறுபடியும் முதல் தேதிகளுடனான உறவினைப் புதுப்பித்திருப்போம் ! ஓராயிரம் apologies all !
தாமதத்தின் நதிமூலம் ஆன்லைன் மேளாவின் 10 எக்ஸ்டரா புக்ஸ் எடுத்துக் கொண்ட நேரம் என்று தோன்றிடலாம் தான் ; ஆனால் நிஜம் அதுவல்ல ! In fact அந்தப் பத்தை சுலபமாய் ஊதித் தள்ளியிருந்தோம் தான் ! தாமதத்தின் மெய்யான துவக்கப்புள்ளி டின்டின் சார்ந்த பணிகளே ! ஒரு சர்வதேச ஜாம்பவானை ஓராயிரம் இடர்களுக்கு இடையே தமிழுக்குக் கொண்டு வந்துள்ள நிலையில், அவருக்கான மொழிபெயர்ப்பினில் எவ்வித சமரசங்களும் இருந்திடக்கூடாதே என்ற ஆர்வமானது கிட்டத்தட்ட தலைக்குள் ஒரு obsession ஆகவே உருமாறியிருந்தது ! ஏற்கனவே இது குறித்தான குட்டிக்கரணங்களை முந்தைய பதிவினில் விவரித்திருந்தேன் தான் ; but படைப்பாளிகளின் பரிசீலனைக் குழுவானது நமது ஆக்கத்தினை கையில் எடுக்க கொஞ்சம் அவகாசமாகிடும் என்று அதற்குப் பின்பாகத் தெரிய வந்தது ! So கிடைத்திருந்த கூடுதல் அவகாசத்தினில் ஸ்கிரிப்டை இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டிக் கொள்ளலாமே ?! என்று தோன்றிட, மறுபடியும் அதனுள் மூழ்கிப் போயிருந்தேன் ! So காரணம் # 1 அதுவே !
காரணம் # 2 - "சம்மர் ஸ்பெஷல்" ஆல்பங்களுள் எனக்கு காத்திருந்த பணியினை நான் குறைத்து மதிப்பீடு செய்து விட்டிருந்தேன் என்பதே ! "ரொம்பவே அவசரம்" என்றால் ஒரு 44 பக்க பிரான்க்கோ-பெல்ஜிய ஆல்பத்தை ஒன்றரை நாட்களில் தட்டித் தூக்கி விட முடியும் தான் ! இதோ - ஆண்டுமலருக்கான லக்கி லூக் சாகஸத்துக்கு சரியாக இரண்டே தினங்களே அவசியப்பட்டன ! அதே மெத்தனத்தில் தான் டின்டினுக்குள் கூடுதலாய் நேரத்தை செலவிட்டு விட்டேன் போலும் ! And சம்மர் ஸ்பெஷலின் பணிகளைக் கையிலெடுக்கும் வேளையில் தான் புரிந்தது - இங்குள்ள நாலு நாயக / நாயகியருமே வெவ்வேறு விதங்களில் சக்கையாய் பிழிந்தெடுக்கும் ஆற்றலாளர்கள் என்பது ! So அந்தத் தப்புக் கணக்கே சிக்கலை பெரிதாக்கி வைத்தது ! அப்புறமாய் அச்சுக்கு அடித்துப் பிடித்துப் போனால் அங்கே 2 நாட்களுக்கு மிஷின் break down ! பல்லைக்கடித்துக் கொண்டு, மெஷினில் பழுநீங்கிய பிற்பாடு பிரின்டிங் முடித்து பைண்டிங்குக்கு ஓடினால், அங்கே செம ரஷ் ! பள்ளிகள் திறக்கும் தருணம் என்பதால், பாடநூல் ; நோட்ஸ் ; கைடு ; ஸ்கூல் டயரி என்று வரிசை கட்டி வேலைகள் குவிந்து கிடக்கின்றன & அந்தந்த ஊர்ப் பள்ளிகளிலிருந்து யாரேனும் ஒரு பிரதிநிதியை பைண்டிங்கில் தேவுடு காக்கச் செய்துள்ளனர் ! மிகச் சரியாக இந்த வேளையில் நமக்கோ hardcover புக் - which means loads of binding work !! பைண்டிங்கில் அவரையும் கோபித்துக் கொள்ள வழியில்லை ; அவரது பிழைப்பையும் பார்த்தாக வேண்டும் தானே ? So என்னை நானே ஜோட்டாவால் அடித்துக் கொள்வதைத் தாண்டி வேறு எதுவும் செய்திட மார்க்கமிருக்கவில்லை ! இத்தனை களேபரங்களுக்கு மத்தியில், நாளைக்கும் வேலை வைத்து, திங்களின் டெஸ்பாட்ச்சுக்கு இயன்ற மட்டிலும் மூன்று இதழ்களையும் தந்திட பைண்டிங் நண்பர் வாக்குத் தந்துள்ளார் ! So fingers crossed !!
இந்தத் தாமதமும் சரி, பணிகளில் போட நேர்ந்த மொக்கைகளும் சரி, ஒரு விதத்தில் Surf Exel போல நல்லதுக்கே என்றும் தோன்றுகின்றது ! நானே அறியாமல் என்னுள் ஒருவித சோம்பல் குடியேறியிருந்துள்ளது இப்போது புரிகிறது ! டின்டின் போலான ஒரு மாஸ் நாயகரின் சவால் என்றவுடன் அகல விரிந்த அண்டா கண்கள், நார்மலான பணிகளுக்கு அதே போலான ஆர்வம் கொண்டிருக்கவில்லை தான் ! So இப்போது நிகழ்ந்துள்ள இந்தத் தாமதப் படலம் அந்த அரூப சிலந்திவலைகளை போட்டுத் தள்ளியுள்ளது அப்பட்டமாய்ப் புரிகிறது ! இங்கே இன்னொரு சமாச்சாரமுமே உள்ளது ! இந்தப் பதினொன்றரை ஆண்டுகளில் நம்மவர்கள் உங்களிடம் எதெதெற்கோ சாத்து வாங்கியிருப்பர் தான் ; ஆனால் "புக்ஸ் லேட்" என்று யாரிடமும் குட்டு வாங்கியதாய் எனக்கு நினைவில்லை ! ஆனால் இந்த வாரத்தின் முழுமையிலும் அவர்கள் ஒவ்வொரு போனுக்கும் நெளிவதைப் பார்த்த போது ரொம்பவே சங்கடமாகிப் போனது !
So ஜூன் இதழ்களை முடித்த மறுநொடியே ஜூலை இதழ்களின் பணிகளை பிசாசாய் துவக்கினோம் & bingo - வரும் வாரத்தில் அவை நான்குமே அச்சுக்கு செல்லவுள்ளன ! And அதே வேகத்தில் ஆகஸ்ட் இதழ்களையும் போட்டுத் தாக்கி விட்டால், we would be back on track ; ஆகஸ்ட் இதழ்களை ஆராமாய் முதல் தேதிக்கு அனுப்பிட சாத்தியப்படும் !
And oh yes, கணிசமான நண்பர்கள் proof reading செய்திட முன்வந்திருப்பதால், "ஈரோடு ஸ்பெஷல்" இதழ்கள் தனி ஒரு தடத்தில் தடதடத்து வருகின்றன ! இங்கே எனக்கொரு சன்னமான சந்தோஷமும் ; சங்கடமுமே ! சந்தோஷத்தின் காரணத்தைக் கேட்டால், "அட லூசுப் பக்கி !! இதுக்கெல்லாமா சந்தோஷப்படுவாங்க ?" என்று உங்களுக்குத் தோன்றக்கூடும் தான் ! But அதுக்காண்டிலாம் இந்த மொக்கை போட்ட வாரத்தினில் யாம் லைட்டாக பல்லிளிக்கக் கிடைத்த காரணத்தை சொல்லாது இருக்க முடியுமா - என்ன ? ஹி..ஹி...வேறொன்றுமில்லை guys ...மொத்தம் 6 நண்பர்களுக்கு பிழை திருத்தம் செய்திட பக்கங்களை அனுப்பியிருந்தோம். ஐவர் முடித்து அனுப்பிவிட்டுள்ளனர் & ஒருத்தர் பாக்கியின்றி அத்தனை பேருமே ஆங்காங்கே கோட்டை விட்டுள்ளனர் தான் ! ஒற்றுப் பிழைகள் மிகக் கணிசம் ! So இந்த ஒற்றை விஷயத்தில் நாம் சொதப்பிடும் பாணிகள் நமக்கே நமக்காய் பிரத்தியேகமானவை அல்ல போலும் ; நண்பர்களும் நமக்குத் துணைக்கு இருக்கிறார்கள் தான் என்ற போது ரணகளத்திலும் பல்லைக்காட்டாது இருக்க இயலவில்லை ! Sorry folks, but I understand this is not easy at all !! ஒரு நாவலையோ, கட்டுரையையோ proofread செய்வதற்கும் நமது பாணியிலான படைப்புகளை proof read செய்வதற்குமிடையே நிரம்ப வேற்றுமைகள் உண்டு தான் ! ஒரு பக்கம் வரிசை கட்டும் படங்கள் கவனத்தைக் கோர, இன்னொரு பக்கம் ஒரே கட்டத்துக்குள் மூணு பேர் தம் கட்டி டயலாக் பேசுவது திணறடிக்க, பிறிதொரு பக்கமோ யார் பேசும் பலூன் யாருக்கு நேராய் உள்ளதென்ற யோசனைகளும் நம்மை அழுத்துவதை உணர முடியும் ! So நண்பர்கள் பார்த்துள்ள முதல் round பிழைகளைக் களைந்து, fresh பிரிண்டவுட் எடுத்து அடுத்த ரவுண்ட் proofread செய்திட அடுத்த batch நண்பர்களுக்கு அனுப்பிடவுள்ளோம் ! ரெண்டுவாட்டி பார்த்தான பின்னே எனக்கு மேலோட்டமான வேலைகளைத் தாண்டி வேறேதும் இராதென்ற நம்பிக்கையுள்ளது ! So ஈரோடு ஸ்பெஷல் இதழ்கள் ஜூலை கடைசிக்குள்ளாகவே ரெடியாகிக் காத்திருக்கும் என்பது உறுதி !
ஈரோடுக்கென நாங்கள் தயாராகி வருவது ஒரு விதமெனில், நம் மத்தியிலுள்ள "விளையாட்டுப் பிள்ளைகள்" வேறொரு விதத்தினில் தயாராகி வருகின்றனர் !! IPL ; உலகக்கோப்பைக்கான finals ; இப்போது Ashes என்று நெடுக முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் அரங்கேறி வருவதன் தாக்கமோ என்னவோ, "இம்புட்டு நாளா கோழி கடை வாசலிலே நின்னிருக்க நான் கோலி ஆக மாட்டேனா ? நேக்கும் தொப்பை கீது..ரோஹித்துக்கும் தொப்பை கீது...நாங்களும் அடிப்போம்லே ?" என்று வீறு கொண்டு பொங்கி கிரிக்கெட் மேளா ஒன்றிற்குத் தயாராகி வருகின்றனர் ! "காமிக்ஸ் & கிரிக்கெட் திருவிழா 2023" என்ற பெயரில் 4 அணிகளாய், ஆக்ரோஷமாய், ஆவேசமாய், நம்ம சிங்கங்கள் ஈரோட்டில் ஜூலை 30-க்கு களமிறங்குகின்றன ! Ashes தொடரை அன்னிக்கி ஒரு நாளைக்கு நிறுத்தி வைச்சுப்புட்டு, நம்ம டோர்னமெண்ட்டுக்கு காமெண்டரி செய்திடவும், Livestream பண்ணிடவும் Star Sports தயாராகி வருவதாய் நம்பத்தகுந்த வட்டாரங்களில் தகவல் !
மோதவிருக்கும் தங்கங்கள் 4 அணிகளில் தெறிக்க விடவுள்ளனர் !! பாருங்களேன் :
Jokes apart, அட்டகாசமான திட்டமிடல், அசத்தலான லோகோக்கள் and அனைத்துக்கும் மேலாய் நமது காமிக்ஸ் மீது கூடுதலாய் கவனம் பாய்ந்திட வேண்டுமென்ற அவா இம்முயற்சியின் பின்னிருப்பது கண்கூடாய்த் தெரிகிறது ! இந்த லோகோக்களை இத்தாலிக்கும், பிரான்சுக்கும் அனுப்பி நண்பர்களின் இந்த முயற்சி பற்றித் தகவல் சொன்ன போது அவர்களுக்கும் செம சந்தோஷம் !! "லோகோஸ் அட்டகாசம் !! And போட்டியில் யார் வெற்றி பெற்றார்கள் ? என்பதை மறக்காம சொல்லுபா !" என்று பதில் போட்டிருந்தனர் ! முதன்முறையாக நண்பர்களின் இந்த initiative வெற்றி காண நாம் இயன்ற ஒத்தாசைகளைச் செய்திடுவோமா folks ? வெற்றி காணும் அணிக்கான கோப்பையினை நம்ம லயனார் பார்த்துக் கொள்வார் ! ஆகஸ்ட் 5-ம் தேதியிலான நமது சந்திப்பின் போது வெற்றி கண்ட டீமுக்கு கோப்பையினை வழங்கிடலாமா ?
Bye all...see you around ! Have a fun weekend !
And இதோ - இது வரைக்கும் கண்ணில் காட்டியிருக்காத இம்மாதத்தின் இதர இதழ்களின் preview :
செமத்தியான yet another கோலிவுட் பாணியில் தல செய்யும் ரகளை இந்த 46 பக்க சாகசம் !! பிரான்க்கோ-பெல்ஜிய பாணிச் சித்திரங்கள் என்பதால் லக்கி லூக் சைசில் வருகிறது !! Don't miss it !!
And இதோ நம்ம V காமிக்சில் ஜம்பிங் நாயகர் !! ஆக்ஷன் த்ரில்லர் all the way !!
First
ReplyDeleteவாழ்த்துக்கள் Tex kit 🙏💐
DeleteFirsto first
ReplyDeleteWow super cricket match ellam irukkaa
ReplyDeleteErode festival semaya irukkum pola
ReplyDeleteTuesday worst case scenario means Thursday can collect books...
ReplyDeleteWow Tex and Zagor cover photos..
ReplyDeleteSema kalakkal nerla innamum semaya irukkum nu thonuthu
அடேடே பேச்சு வந்திருச்சோ
Deleteஸ்டீல் செம்ம
DeleteWithin Top 10
ReplyDeleteMe Within Top 15
ReplyDeleteMe present Sir..🙏
ReplyDeleteவணக்கம் சார்
ReplyDelete10வது பாஸ்
ReplyDeleteவந்துட்டேன்!!!
ReplyDeleteவணக்கம் நண்பர்களே 🙏
ReplyDeleteநானும் வந்துட்டேன்..
ReplyDeleteநானும்
ReplyDeleteஹைய்யா புதிய பதிவு...
ReplyDeleteநானும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteInteresting
ஈரோடுக்கென நாங்கள் தயாராகி வருவது ஒரு விதமெனில், நம் மத்தியிலுள்ள "விளையாட்டுப் பிள்ளைகள்" வேறொரு விதத்தினில் தயாராகி வருகின்றனர் !! IPL ; உலகக்கோப்பைக்கான finals ; இப்போது Ashes என்று நெடுக முக்கியமான கிரிக்கெட் போட்டிகள் அரங்கேறி வருவதன் தாக்கமோ என்னவோ, "இம்புட்டு நாளா கோழி கடை வாசலிலே நின்னிருக்க நான் கோலி ஆக மாட்டேனா ? நேக்கும் தொப்பை கீது..ரோஹித்துக்கும் தொப்பை கீது...நாங்களும் அடிப்போம்லே ?" என்று வீறு கொண்டு பொங்கி கிரிக்கெட் மேளா ஒன்றிற்குத் தயாராகி வருகின்றனர் ! "காமிக்ஸ் & கிரிக்கெட் திருவிழா 2023"
ReplyDelete// எனக்கு தேலையானது இங்கேநீங் பகிர்ந்து இருக்கீங்க டியர் எடி .. மேலும் என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க ..
Cricket festival designings super.
ReplyDeleteவணக்கம் 🙏
ReplyDeleteஅனைவருக்கும் அன்பான வணக்கம்
ReplyDeleteவணக்கம் நண்பா
Deleteதிங்கள் அல்லது செவ்வாய் கிளம்பி புதன் அல்லது வியாழன் புத்தகங்கள் கைக்கு கிடைக்க சான்ஸ்.புனிதமானிடோ அருள் வேண்டி பிரார்த்தனைகள்
ReplyDeleteவணக்கம் நண்பர்களே🙏
ReplyDeleteகோவை கடல் மற்றும் லால்குடி ரவீந்திரன் அவர்கள் அனுப்பிய புகை சமிஞ்சை வேறு அலுவலகத்தில் மூச்சு முட்ட வைத்திருக்கும் :)
ReplyDelete🙃🙃🙃🙃🙃
Deleteதங்களை காமிக்ஸ் கிரிக்கெட் க்ருப்பில் தேடி கொண்டு உள்ளனர்
Deleteவணக்கங்கள் ஆசிரியரே
ReplyDeleteஸ்கோர் வழக்கம்போல் ஓவியம் அட்டகாசம். ஆனால் இம்முறைடெக்ஸ் ஓவியங்கள்சாகோரைப்போலவே அற்ப்புதமாக இருப்பது ஐசிங் ஆன் தி கேக்
ReplyDeleteஉள்ளேன் ஐயா..!!
ReplyDeleteLucky Super Kings டீம் பேரும் லோகோவும் செம்ம அசத்தலா இருக்கே..!
டாப் லோகோவே உடஞ்ச மூக்கார் தான்...பரவால்ல வாழ்த்துக்கள் கண்ணரே
Deleteஇருக்காதா பின்னே
Delete// டாப் லோகோவே உடஞ்ச மூக்கார் தான் // நன்றி ஸ்டீல்
Deleteஉண்மையை எடுத்துக்கூறிய தம்பி ஸ்டீலுக்கு , தளபதி அவை சார்பாய் பொன்னாடை போர்த்த ரம்மி சாரை அழைக்கிறேன்.
Deleteகுமார் உங்க தயாரிப்பா....
Deleteஎந்த தளபதின்னு சொல்லிடுங்க நண்பரே
//டாப் லோகோவே உடஞ்ச மூக்கார் தான்...பரவால்ல வாழ்த்துக்கள் கண்ணரே//
Delete+999😊😊
அண்ணே மண்ட மேல உள்ள கொண்டய மறைக்கல நீங்க..
ReplyDelete🏃🏃🏃🏃
DeleteTex and lucky logo super
ReplyDeletelogo all are vey nice..
ReplyDeleteespecially young blueberry is awesome...
wait to watch the live action ....
I have one doubt ,,,
wat about the Free color books for the subscribers ??
Is any update in it ???
வணக்கம் உறவுகளே!
ReplyDeleteவணக்கம் நண்பரே
Delete// So நாளை (திங்கள்) or in the worst case செவ்வாயன்று டெஸ்பாட்ச் இருந்திடும் ! // ஒரு வழியாக ஜூன் இதழ்கள் கிளம்பப் போகுது மகிழ்ச்சி...
ReplyDeleteகரையெல்லாம் குருதி ஓவிய பாணியும்,வர்ணச் சேர்க்கைகளும் ஜாலம் செய்யும் போல...!!!
ReplyDelete// "காமிக்ஸ் & கிரிக்கெட் திருவிழா 2023" என்ற பெயரில் 4 அணிகளாய், ஆக்ரோஷமாய், ஆவேசமாய், நம்ம சிங்கங்கள் ஈரோட்டில் ஜூலை 30-க்கு களமிறங்குகின்றன ! //
ReplyDeleteIPL,TNPL போல இது CPL (COMICS PREMIRE LEAGUE), சீஸனோ...
நல்லா அடிச்சி ஆடுங்கப்பா...
நானும் வந்துட்டேன்.
ReplyDeleteசூப்பர் சார்....
ReplyDeleteலோகோக்கள் பிரம்மாதம் நண்பர்களே...
நானும் கலந்து கொள்ள வெகு ஆசைதான்....ஆனா எவ்ளோ நாட்கள் வரனுமோங்ற பயம்...
வாழ்த்துக்கள்...நன்றிகள் நண்பர்களே நம்ம லயனை முன்னிறுத்த முயலும் கடும் உழைப்புக்கு....
சார் நானும் சென்ற மாத இதழின் அடுத்த வெளியீடுகளை பார்க்கையில் கேக்க நினைத்தேன்....பத்து புக்கு தாமதத்தால் இந்த வினையென நினைக்க....காரணம் வேறாயிருப்பினும்....
ஒரு இதழ்தானோ என்ற ஐயத்தைநீக்குவதுடன் ...தமிழ் காமிக்ஸ் வரலாற்றிலே டாப் அட்டயயும்(டெக்ஸ்)...அட்டகாச பக்கங்களையும் பார்க்க ரெண்டு நாட்களை கடந்து துடிப்பாய் துடிக்கும் இதயத்துடன்....சாகோரும் அட்டை சூப்பர்னு சொல்லி....
அடுத்த வி'யாரின் தொகுப்பில் குண்டு புத்தகமொன்றை ஈரோட்டில் போட்டுத் தாக்கும் வாய்ப்பையும் அருள செந்தூரானை வேண்டிக் கொண்டு..
ஜெயிக்கும் டீம் கேக்கும் கதையை தயார் செய்து அவர்களுக்கு பரிசாயும் எங்களுக்கு ஊக்கப்பரிசாயும் செப்டம்பரில் தந்தால் நல்லாருக்கும்னு கேட்டுக் கொண்டு.....
ஒரு காலத்தில் இரண்டு மூன்று மாதங்களுக்கெல்லாம் புத்தகம் வராமல் பாண்டிச்சேரி, திருவெண்ணெய்நல்லூர், விருத்தாசலம் என்று சுற்றியவன் நான். 5 ரூபாய் புக் வாங்க பத்து ரூபாய் பஸ் டிக்கெட் எடுத்ததால் லாம் தனி கதை.
ReplyDeleteபிறகு புத்தகங்களை மாதாமாதம் மணி ஆர்டர் அனுப்பி வீட்டுக்கே வரவழைத்தது பரிணாம வளர்ச்சியில் ஒன்று.
இப்போது திட்டமிட்டு மாதந்தோறும் இங்கே இங்கிலாந்தில் படிப்பேன் என்று அப்போது யாராவது சொல்லியிருந்தால் அவருக்கு கிறுக்கு என்று சிரித்துக் கொண்டே போயிருப்பேன்.
சர்வதேச தரத்தில் குறைந்த விலையில் நம் இதழ்களில் வரும் கதைகளை வேறெந்த மொழியிலும் நாட்டிலும் வருவதாக எனக்கு தெரிந்து இல்லை. அதுவும் நம் அழகு தமிழில் என்பது நமக்கெல்லாம் கூடுதல் இனிப்பு.
வெளியிடும் நீங்களும் அதனை ரசிக்க இருக்கும் இந்த சிறிய கூட்டமும் வேறு இந்திய மொழிகளில் இல்லை.
தொடரட்டும் உங்கள் முயற்சிகளும் தேடல்களும்... வளரட்டும் எங்கள் ரசனைகளும் வாங்கும் வசதிகளும்...
உருவாக்கி சந்தைக்கு கொண்டு வரும் நமது சிறிய அணிக்கு என் நன்றிகளும் பாராட்டுகளும்!
// சர்வதேச தரத்தில் குறைந்த விலையில் நம் இதழ்களில் வரும் கதைகளை வேறெந்த மொழியிலும் நாட்டிலும் வருவதாக எனக்கு தெரிந்து இல்லை. அதுவும் நம் அழகு தமிழில் என்பது நமக்கெல்லாம் கூடுதல் இனிப்பு. // சத்தியமாக
Deleteவந்துட்டேன்
ReplyDelete🙏🙏
ReplyDeleteவணக்கம் அனைவருக்கும்.
ReplyDelete/////..மொத்தம் 6 நண்பர்களுக்கு பிழை திருத்தம் செய்திட பக்கங்களை அனுப்பியிருந்தோம்.////?????
ReplyDeleteஎனக்கு டீ வரவே இல்லை.
இதற்காகவே ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தேன்.
கொரியர்- காரர் தா சதி செஞ்சுட்டார் போல...
பரவாயில்லை சார்.
/////முதன்முறையாக நண்பர்களின் இந்த initiative வெற்றி காண நாம் இயன்ற ஒத்தாசைகளைச் செய்திடுவோமா folks ? /////
ReplyDeleteநா மேட்ச் பாக்க வாரேன்....
வாருங்கள் சகோ
Deleteவாங்க சார் உங்கள் வருகை மகிழ்ச்சியை கொடுக்கும்
Deleteகடல்யாழ் மற்றும் செந்தில் சத்யா அவர்களுக்கும் நன்றி. கண்டிப்பாக வருகிறேன். ஆண்டுகள் கழித்து உங்கள் அனைவரையும் சந்திக்கலாம்.
Deleteஈரோடு புக் பேர் வந்திருந்தேன். எந்த ஆண்டு நினைவில் இல்லை. அதன் பின் எடிட்டர் இல்ல திருமண விழாவிற்கு பின் நண்பர்கள் யாரையும் சந்திக்க வில்லை. கிரிக்கட்ல யார் யாரு களம் இறங்கிறாங்க.
Deleteஒரு 44 நண்பர்கள் சகோ. நீங்க வாங்க உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. நானும் வருகிறேன். கோவை, பெங்களூரு, சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர் இன்னும் பல இடங்களில் இருக்கும் நண்பர்களும் வருகின்றனர்.
Deleteஜாலி...ஜாலி.....
Delete// 4 அணிகளாய், ஆக்ரோஷமாய், ஆவேசமாய், நம்ம சிங்கங்கள் ஈரோட்டில் ஜூலை 30-க்கு களமிறங்குகின்றன !//
ReplyDeleteExpendables 4 முன்னாடியே ரிலீஸ் ஆகுதுங்களா?
;-)))))
DeleteHi..
ReplyDeleteஅட்டைப்படங்கள் அனைத்தும் அருமை சார்..இதழை நேரில் காணும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..
ReplyDeleteஇப்படிக்கு..
வெற்றி பெறும் டெக்ஸ் டைனமட் குழுவினர்..
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteதலைவரே,
Deleteநீங்க பொதுவா நில்லுங்க. இல்லைன்னா உங்கள Third அம்பயரா ப்ரோமோட் செய்வோம்.
ஆமா சொல்லிபுட்டேன்.
Helloooo
ReplyDeleteஞாயிறு வணக்கங்கள் சகோதரர்களே
ReplyDeleteடெக்ஸ் அட்டைப்படம் செம
ReplyDeleteஜாகோர் வீராவேசுத்துடன் நிற்கிறார்
DeleteTiger logo attakasam.
ReplyDeleteநன்றி பத்து சார்
Deleteவணக்கம் நண்பர்களே!!!
ReplyDeleteAll the best for our cricket teams.
ReplyDeleteகோடையின் கொடை மலரின் அட்டய கண்ல காட்டையே சார்
ReplyDeleteஈரோடு புக் பேருக்கு வராத முன்பதிவு நண்பர்களுக்கு புத்தகங்களை இலவசமாக கொரியரில் அனுப்பிடலாமே?? டிஸ்கவுண்ட்க்கு பதிலாக.
ReplyDeleteடெக்ஸ் 460 பக்கங்களை படித்துவிட்டு இப்போது 46 பக்கங்களில் படிக்கப் போவதை யோசித்தால் இலவச இதழ் தான் ஞாபகம் வருகிறது.. டெக்ஸின் சிறிய இதழ்கள் எப்போதுமே சுவாரஸ்யக் குறைவு தான் என் மட்டில்.
ReplyDeleteலக்கி லூக், தோர்கல், அளவு உள்ள 46பக்கங்கள்.. இது ஒரு முழு நீள ஆல்ப உணர்வை தரும்🤩
Delete😀😀😀😃ama ,தோர்கலின் அடுத்த புத்தகம் குண்டு புத்தகமாக வந்தால் நன்றாக இருக்கும் . 😄 ஆசைதான் 😋
Deleteகடல் புறா, யவன ராணி பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் ,இவற்றையெல்லாம் படித்துவிட்டு சிறிய காமிக்ஸ் புத்தகங்களை படிக்கும் போது குண்டு புக்குகள் எப்போது கிடைக்கும் என்ற ஏக்கமே மேலோங்குகிறது....... டெக்சும், சாகோரும் , எடிட்டரும் அருள் புரியட்டும்....
ReplyDeleteSir- take time and send June and July books together around first week of July sir - it will be 5-6 books together again :-)
ReplyDeleteLate ஆனாலும் பரவாயில்லை சார்
ReplyDeleteயெஸ் நான் சொல்ல வந்ததை சொல்லி விட்டீர்கள் நண்பரே.
Delete+1
Deleteசார் உங்க பாணியில் ஒரு தன்னிலை விளக்க பதிவு.
ReplyDeleteஇந்த மாத இதழ்கள் வரும் போது வரட்டும் சார். ஒன்றும் அவசரம் இல்லை. எனக்கு அதிக பட்சம் ரெண்டு நாள் தான் புத்தகம் படிக்க எப்போதும் முதல் வாரத்தில் படித்து விட்டு அடுத்த மாத புத்தகத்துக்கு காத்து இருப்பேன். இந்த முறை 3 ஆவது வாரம் படித்து விட்டு அடுத்த மாத புத்தகத்துக்கு காத்து இருக்கப் போகிறேன். நான் இந்த மாதம் சம்மர் ஸ்பெஷல் மற்றும் V காமிக்ஸ் இரண்டும் தான் வரும் என்று நினைத்தேன். டெக்ஸ் வருவது போனஸ் தான்.
கரையெல்லாம் குருதி செம்மையாக இருக்கு. கலரிங், அட்டை எல்லாம்.
Deleteஅடுத்த 3 மாத V comics பற்றி எழுத விக்ரம் இன்னும் வரவில்லையே.
DeleteJuly 30 Cricket போட்டிக்கு நண்பர்கள் ஆரவாரமாக தயாராகி வருகிறார்கள்.அந்த ஆர்வம் மற்ற நண்பர்களையும் தொற்றிக்கொண்டது. It's going to be fun. நானும் எனது மனம் கவர்ந்த கதாநாயகன் அணியில். இதை விட என்ன சந்தோசம் வேண்டும்.
Deleteசார் ஒரு விண்ணப்பம். அந்த மாயாவி அட்டை preview இன்னும் காட்டவில்லை. சில நண்பர்கள் அந்த அட்டை preview வந்து விட்டால் எந்த புத்தகத்துக்கு பணம் கட்டுவது என்று காத்து இருக்கிறார்கள். எனவே மாயாவி அட்டை பிளீஸ்
Deleteஆனால் எனக்கு தானைத் தலைவன் அட்டை தான் வேண்டும்.
Delete// இம்புட்டு நாளா கோழி கடை வாசலிலே நின்னிருக்க நான் கோலி ஆக மாட்டேனா ? நேக்கும் தொப்பை கீது..ரோஹித்துக்கும் தொப்பை கீது...நாங்களும் அடிப்போம்லே ?// நீங்க யாரை சொன்னீங்க என்று தெரிந்து விட்டது சார் ஹிஹிஹி
ReplyDeleteK .s .ஜி .சார் 2பேர சொல்றாருனு னநினைக்கிறேன்.
ReplyDeleteஆமாம் சார். ரெண்டு பேர் தான்
Deleteபுகை சமிக்கை வந்து இருக்கானு பார்க்க வந்தா
ReplyDeleteமெதுவா வரட்டும்னு புகை சமிக்கையை சகோதரர்கள் அனுப்பி உள்ளனர்
நம்மளும் அப்பிடியே புகை சமிக்கை அனுப்பி விடுவோம்
நண்பர்கள் அனைவரும் கிரிக்கெட் பயிற்ச்சியில் மும்முரமாக இருப்பதால் தளம் சற்று களையிழந்து காணப்படுகிறது இம் மாத புத்தகங்கள் வந்தவுடன் மீண்டும் களை கட்டும்
ReplyDeleteஆமாம் சத்யா. புத்தகம் வரட்டும். I'm waiting
Delete👍
Deleteகிரிக்கட் டீம் மெம்பர்கள் லிஸ்ட் போடலாமே
ReplyDeleteபைனல் லிஸ்ட் பிரிப்பேர் ஆகலை சகோ
Deleteரெடி ஆனதும் போடுகிறேன் சகோ
நன்றிகள் கடல்
Deleteme the 100 !
ReplyDelete101
ReplyDeleteசார் புக் கிளம்பி விட்டதா?????
ReplyDeleteஇன்னொரு புதனிரவு
ReplyDeleteபுக் கிளம்பி விட்டது வெற்றி வெற்றி...
ReplyDeleteவெற்றி மேல் வெற்றி...நாளை கோடை மலர்
Deleteநண்பர்கள் அனைவரும் கிரிக்கெட் பயிற்சியில். மனநலம்பேணிவந்த காமிக்ஸ் உடல்நலனையும்பேணகளத்தில். எல்லாப்புகழும் லயனுக்கே
ReplyDeleteகிரிக்கெட் டோர்ணமெண்ட். இடம் இன்னும் அறிவிக்கவில்லையே .cn collageமைதானமேவா
ReplyDeleteஇன்னும் மைதானம் தேடிக் கொண்டு இருக்கிறோம் சார். கிடைத்த வுடன் தகவல் பகிர்கிறோம்
Deleteசேப்பாக்கத்ல கேட்டுப் பாருங்க
Deleteஇது பேச்சு...
Delete
ReplyDeleteகோடைமலர் என்றாலே கொண்டாட்டம்
ஏன்???
#லயன்காமிக்ஸ் கோடைமலர்கள்,
#முத்துவில் சம்மர் ஸ்பெசல்கள்-முத்து ஸ்பெசல்1988, சம்மர் ஸ்பெசல்1989, மின்னும் மரணம் 1998(Rs25), முத்து300-புயல தேடிய புதையல்-2005
#திகிலில் கோடை மலர்கள்-கோடைமலர்1987, சைத்தான் சாம்ராஜ்யம் 1991,
#மினிலயன் சம்மர் ஸ்பெசல்-1988,
----இப்படி நான்கு வகையான கோடைமலர்கள் வந்திருந்தாலும் லயன் கோடைமலர்கள் பட்டையை கிளப்பின. ஏன்??? ஏன்???ஏன்???
*கோடைமலர்கள் என்றாலே கொண்டாட்டம் எனும்போது, அதை அதிகப்படுத்துவது லயன் கோடைமலர்கள் தானே...!!!
"""யோவ்,அதான் எங்களுக்கே தெரியுமே நீ என்னய்யா சொல்ற???""-னு நீங்கள் கேட்பது தெரிகிறது நண்பர்களே!!!
#முத்து, திகில், மினிலயன்- கோடைமலர்கள் எல்லாமே அவ்வப்போது வரும் ஞாயிறு & இரண்டு நாள்-மூன்று நாள் வரும் பண்டிகை விடுமுறைகள் போன்றது. ஆனா,
""""லயன் கோடைமலர்கள் என்பவை ஏப்ரல்-மே மாதம் வரும் கோடை விடுமுறைகள் போன்றது; கோடைவிடுமுறை என்றாலே கிடைக்கும் குதூகலத்தை நினைத்து பாருங்கள் நட்பூஸ்...இரு மாதங்கள் விடுமுறை; அவருவர்க்கு பிடித்த தாத்தா,பாட்டி, மாமா வீடுகள், ஊர் சுற்றல்கள், பல்வேறு சுற்றிலாக்கள் என ஆடித்தள்ளுனோமே.... அதே கொண்டாட்டம் தான் லயன் கோடை மலரை கையில் ஏந்தும் போதும்....."""
*லயன் கோடைமலர்களுக்கும் பல்வேறு பெயர்களில் ஒவ்வொரு கோடையிலும் அசத்தின. கோடைமலர், சம்மர் ஸ்பெசல், ஹாலிடே ஸ்பெஷல், சென்சுவரி ஸ்பெசல், Top10 ஸ்பெசல், ட்ரீம் ஸ்பெசல், ஜாலி ஸ்பெஷல், கெளபாய் ஸ்பெசல் என்பன அவ்வப்போது காலத்திற்கும், சாதனை மைல்களின் போதும் சூட்டி, நம்மை மகிழ்வித்து- எடிட்டர் சாரும் மகிழ்ந்தவை
*சதி வலை-1985
*கோடைமலர்-1986
*கோடைமலர்-1987
*ட்ராகன் நகரம்-1988
*வைக்கிங் தீவு மர்மம்-1989
*திக்குத் தெரியாத தீவில்-1990
*லயன் ஹாலிடே ஸ்பெஷல்-1992
*இரத்த வெறியர்கள்-1993
*லயன் சென்சுவரி ஸ்பெசல்-1994
*லயன் Top10 ஸ்பெசல்-1995
*மரணமுள்-1996
*கார்சனின் கடந்த காலம்1&2-1997
*மந்திர மண்டலம்-1999
*இருளின் மைந்தர்கள்-2003
*மெகா ட்ரீம் ஸ்பெசல்-2004
*லயன் ஜாலி ஸ்பெஷல்-2005
*லயன் கெளபாய் ஸ்பெசல்-2006
---இவைகள் 2012 கம்பேக்கிற்கு முன்பான கோடைமலர்கள்..
"லயன்-முத்து" இணைந்த கம்பேக்கிற்கு பிறகு ஏப்ரல்-மாதங்களில் தடிதடியான குண்டுபுக்குள் வெளியானாலும் கோடைமலர் என்ற பெயரில் வெளியாகாமல் இருந்தன.... அந்த குறையை எல்லாம்,
----லயன்-முத்து கோடைமலர்-2018,
""""டியூராங்கோவின்---"மொளனமாயொரு இடிமுழக்கம்"""
---போக்கியது....
தொடர்ந்தன கோடைமலர்கள்,
லயன்-முத்து கோடைமலர்-2019-வதம் செய்ய விரும்பு
லயன்-முத்து கோடைமலர்-2021-ரெளத்திரம் கைவிடேல்
லயன்-முத்து கோடைமலர்-2022-(ரூபின்,ஜானி&உட்சிடி சிரிப்பு போலீஸ்)
*இந்தாண்டு லயன்- முத்து கோடைமலர் பட்டையை கிளப்பபடி, இன்னும் சிலமணி நேரங்களில் நம்மை வந்தடையப்போகிறது....குதூகலிப்போம் வாருங்கள் நண்பர்களே....💞💞💞💞💞💞💞
💐💐💐💐💐❤💐❤❤❤💐💐❤❤💐💐❤❤💐
Deleteசூப்பர் டெக்ஸ்....முதல் மூன்று கோடை மலர்கள் அப்படியே வந்தா இரத்தப்படல சாதனையை செய்யும்....தருவாரா ஆசிரியர்
Deleteபுக் வந்தாச்சாம்...மாலை கைப்பற்றிய பின்
ReplyDelete👍👍👍👍👍
Deleteசோ இன்று மாலை எங்களுக்கு விவரிப்புகள் கிடைக்கப்பெறும்
கவிதை உடனா ?
சகோ
Deleteடீம் லிஸ்ட் கீழே போட்டு உள்ளேன்
எடிட்டர் அய்யா,
ReplyDeleteRs.300 paid for "V comics July to September subscription".🙏
ஸ்ரீபாபு, நாமக்கல்
9486785447
7904540866 (Whatsapp)
என்னா ஃபாஸ்டு
DeleteWow 😊
Deleteஆனா புக்கு வர லேட்டாகுது. அவ்வ்வ்
Deleteகோடை மலர் பற்றிய அருமையான தொகுப்பிற்கு நன்றி stvrஜி. தொடர்ந்த உங்கள் காமிக்ஸ்தொகுப்புகளுக்குநன்றி.நன்றி.நன்றி மிகவும்நன்றி
ReplyDeleteComics Cricket Teams (Players List)
ReplyDeleteLucky Luke Team
டீம் கேப்டன் - கண்ணன் கிட் ஆர்டின்
துணை கேப்டன் - டாக்டர் Akk Raja
Players
1. கண்ணன் கிட் ஆர்டின், யாதும் ஊரே யாவரும் கேளிர் (Salem)
2. டாக்டர் AKK Raja, Karur
3. Sathish alagu, "Singampunari"
4. Yuva Kannan, Salem
5. Prabu CP, Coimbatore
6. Praburaj Rajasekar, Salem
7. Kalaiselvan M, Thiruvarur
8. Raghu Raman S, Salem
9. Vinothkumar P, Krishnagiri
10. Senthilkumar S, Kangeyam
11. Vadivelu Manikkam, Chennai
Tex Willer Team
டீம் கேப்டன் - சி பாஸ்கரன்
துணை கேப்டன் - விஜயராகவன்
Players:
1. பாஸ்கரன் C, Bangalore
2. டெக்ஸ் விஜயராகவன், Salem
3. திருநாவுக்கரசு, வழுக்குப்பாறை
4. Akkil, Velampalayam
5. Dineshkumar, Chennai
6. Sures Dhanapal, Thiruvannamalai
7. Paranitharan (தலீவர்), Tharamangalam (Salem)
8. Matheswaran C, Attur (Salem)
9. Sriram, Salem
10. Sathish K, Erode
11. Tharun Karthick, Salem
12. Tex Sampath, Tiruppur
Zagor Team
டீம் கேப்டன் - சிவகுமார் சிவா
துணை கேப்டன் - பேபி சுசி
Players:
1. Sivakumar, Tiruppur
2. L Suseendrakumar, Salem
3. Senthil Sathya, Chennai
4. Hameed, Erode
5. Prakash Balakrishnan(Bruce Wayne), Chennai
6. Giridharasudharsan, Chennai
7. Rummi, Tiruppur
8. Shallum Fernandas, Nagercoil
9. Vairamuthu, Tirunelveli
10. Suresh, Chennai
11. Bhoopathi, Mettur Dam (Salem)
Tiger Team
டீம் கேப்டன் - Modesty Blaise Babu
துணை கேப்டன் - Palladam Saravanakumar
Players:
1. Blaise Babu, கோவை
2. Saravanakumar, Palladam
3. Kumar, Salem
4. Rajeshkumar, Salem
5. Senthamil Selvan, Udmalpet
6. Vijayasankar, Trichy
7. DV Karthick, கோவை
8. Babu M, Attur (Salem)
9. Parani, Bengalore
10. K Anandha Ayyappan, Karur
11. Boopathi, Mettypalayam
12. Kadalyaazh Ramya, கோவை
சூப்பர்.... வாழ்த்துக்கள் நண்பர்களே
Deleteகடல் நீங்களுமா...சூப்பர்....மகளிர் இட ஒதுக்கீட்டுடன் முதல் டீம்...
Deleteடைகர்
😊😊😊😁😁
Deleteநன்றி சகோ
கிரிக்கெட்டில் பங்கு கொண்டு விளையாடும் அனைத்து நண்பர்களுக்கும் முன் கூட்டியே வாழ்த்துக்கள் 💐🤝
Deleteஅருமையான பணி ரம்யா. நீங்கள் டைகர் அணியில் இணைந்தது மிக்க மிக்க மகிழ்ச்சி. ஒரே பெண் புலி அதும் டைகர் அணியில் என்ன ஒரு Coincidence
Deleteசம்மர் ஸ்பெசல் 23"-ஐ கைப்பற்றியாச்சி......💞💞💞💞
ReplyDeleteஹார்டு கவரில் , பளீர்னு மின்னும் கலரில் டாலடிடக்கிறது....
சம்மரின் தாக்கத்தை பிரதிபலிக்கும் அடர் மஞ்சள் வர்ணம் செம..
தகதகக்கும் பொன்னிற பின்னணியில் டேங்கோ சும்மா தெறிக்கிறார்.
பின்னட்ட்டை ரூபின், உட்சிடிபோலீஸ், ஆல்ஃபா உடன் தனி தனி வர்ண பின்னணியில் டாலடிக்கிறது.
ஹிட் ஆஃப் த மன்த் இதான் சார்
😍😍😍😍😍
Deleteஆமாங்க STV ஆமா அந்த புத்தகத்தை கையில் ஏந்தும் போதே ஒரு நிறைவு. படித்து முடித்து விட்டு வருகிறேன். முதலில் V காமிக்ஸ் தான். அடுத்து டெக்ஸ் கடைசியாக தான் சம்மர் ஸ்பெஷல்.
DeleteV comics அட்டை அள்ளுது...அட்டை படமே பாதி கதையை சொல்கிறது...
ReplyDeleteஅடுத்த ஸோகோர் புக் ரொம்ப எதிர்பார்க்க வைக்கும் போலயே..
வழக்கம்போல ஸோகோர் ஒரு பெண்ணின் மரணவலையில் மாட்டி நிற்கிறார்.....
டெக்ஸ் கரையெல்லாம் குருதி"- மாஸான அட்டைப்படம்....
ReplyDeleteகதையின் இறுக்கத்தை அட்டை படமே பிரதிபலிக்கும் போலயே...
ஓன்றையாய் நிற்கும் கற்றாழை , தொழிலாளர்ளுக்கு சிம்பாளிக்காக சூன்யத்தை காட்டுவது போல உள்ளது...
வித்தியாசமான தெறிக்கும் பாணி ஓவியம், மாஸான கலரிங் பாணி வேற லெவல்....
நீஈஈஈண்ட இடைவெளிக்குப் பின் டெக்ஸ் பெரிய சைசில் கலக்குது!
வழக்கம்போல V comicsல ஆரம்பிப்போம்!
இ
ReplyDeleteந்
த
ஒ
ற்
றை
ப்
ப
க்
க
மா
தி
ரி
யி
ன்
சை
ஸி
லே
யே
இ
த
ழு
ம்
இ
ரு
ந்
தி
டு
ம்!
ஈரோடு இதழ்களின் முன்னோட்டம் செம....
Deleteமெர்சலூட்டும் சைஸில் கா.க.கா! கோயிங் டூ த ஹிட் ஆஃப் த இயர்!💞💞💞💞💞💞
ஈரோடு வருகிறோம் கொண்டாடுகிறோம்
Deleteபெரிய மெகா சைஸ் வண்ண தாளில் ஆன விளம்பரம், மின்னும் மரண தொகுப்பின் விளம்பரத்தை நினைவூட்டுதுங் சார்.. செம மாஸ்!
ReplyDeleteலீனாவின் அழகிய வதனம் அகன்ற 70mm ஸைசிலர பன்னாக்கில் உலவ வைக்கிறது, அப்பாவிகளுக்கிடையே..
பழைய ஆடலும் பாடலும் விளம்பரத்திலயே உறுதி செய்யப்பட்டுள்ளது....
தவிக்குதே நெஞ்சம், தனிமையில்.. தடையாய்
Deleteபாதையில் பாவி செவ்விந்தியர்கள்!--- னு சும்மா தெறிக்குது இசையில்
ஆகஸ்டு 5எப்ப வருமோ???
லீனா வீ 💞💞💞யூ
ஆமா செம்ம preview Hardcover ஆக maxi சைசில் பார்க்கும் போது ஆஹா ஆஹா
Deleteவன்மேற்கின் அத்தியாயங்கள் அடுத்த மாதம் இரண்டு லட்டாக....
ReplyDeleteகண்ணா ரெண்டு லட்டு சாப்பிட ஆசையா???
"லக்கி லயன் ஆண்டுமலர்-"---உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக கோடைமலர்& ஆண்டு மலர் அடுத்தடுத்த மாதங்களில்....
சோ எக்ஸைட்டிங்
Book vanthuduchuu
ReplyDeleteEnjoy reading them.
Deleteமே மாசம்- ஆன்லைன் ஸ்பெசல் கம்பேக் 500
ReplyDeleteஜூன்-சம்மர் ஸ்பெசல்
ஜூலை-ஆண்டுமலர்
ஆகஸ்ட்-ஈரோடு பஞ்ச தந்திர ஸ்பெசல்ஸ்...ஆஹா தொடருது ஃபெஸ்டிவல்...
நிஜமான காமிக்ஸ் பொற்காலந்தான் இது🤩🤩🤩🤩🤩
(ஆசிரியரை பார்த்தாலும் கொஞ்சம்... ஹி...ஹி)
சும்மா சுத்தியடிக்கிறார்...தரைல கால் படாமலே
Deleteகொரியரில் இருந்து போன் வந்துவிட்டது. வேலை பளு காரணமாக அடுத்த சனிக்கிழமை தான் கைப்பற்ற வேண்டும். இதில் இன்னும் ஒரு சோக என்னவென்றால் ஜனவரியில் இருந்து மே வரை வந்த இதழ்களில் டெக்ஸ் மறுமதிப்பு இதழ் ஒன்றை மட்டுமே இதுவரை படித்துள்ளேன். வேலை பளு காரணமாக மற்ற இதழ் பண்டல்களை இன்னும் உடைக்கவே இல்லை
ReplyDeleteI hope you will get time to read them soon.
Deleteபொக்கிசப் புதையல் காத்திருக்கு...என்ஜாய்
Deleteகொரியர் ஆஃபீசுக்கு
ReplyDeleteவாங்கியாச்...நன்றிகள் சார்
ReplyDeleteஇப்போது தான் புத்தகம் கையில் கிடைத்தது. என்ன தான் இருந்தாலும் இந்த லயன், முத்து காமிக்ஸ் மாதம் ஆனா நம்ம கையில் வீட்டில் கிடைக்கும் சுகம் இருக்கே. அப்பப்பா வார்த்தைகளால் விவரிக்க முடியாது அந்த சந்தோசத்தை.
ReplyDeleteYes Kumar
Deleteஎல் தம்பி மன்னிச்சுக்கல
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete
ReplyDeleteஎன் மகன்டருந்து வாங்க முடியல...முதல் அட்டகாசம் அந்த நோட்டீஸ்......செம சார்....கார்சனின் கடந்த காலம்.பட்டைய கிளப்புது.....பக்கம் முழுக்க மூனே பேனல் முழங்க...பெரிய சைசுல ...நெனச்சுப் பாருங்க நண்பர்களே....முன்னட்டைல கார்சன மட்டும் போடுவீங்களோ இல்லையோ பின்னட்டைல அந்த அப்பாவிகள் கும்பல் அனைவரின் தலையும் நிச்சயமா இருக்கனும்....அப்பாவியின் வேண்டுகோள் சார்...அடப்பாவின்னு ஒதுக்கிடாதீங்க...
பக்கத்த புரட்டுனா விளம்பரமா பாத்த அந்த பக்கம் வண்ணமய கார்களுடன் கலக்க அருமை ...
அனைத்து அட்டைகளும் பிரம்மாண்டமாய் பின்னியெடுக்க அசால்ட்டா முதலிடம் பிடிக்கிறார் இரவுக் கழுகார்...சார்.....இதுதான் காமிக் சுக்கான் அட்டையோன்னு தோணுது....பழங்காலத்துக்கே போனது போலிருக்க...உள் பக்க சந்தோசங்கள் சொல்லி மாளாது...வார்த்தைகள் போதாது....
சம்மர் ஸ்பெசல் முன்னட்டை தகிக்க...பின்னட்டையோ கூலாய் வருது ரசிக்க துப்பறியும் பாப்போவோட ஜில்லுன்னா...நம்ம ஆல்ஃபா இரவினழகில் அசத்த ...
கீழே தகிக்குது கிட்டினருளால்...
உள்ள புரட்டுனா பக்கங்களைனைத்தும் காத்து வீசுவது திறந்ததால் மட்டுமல்ல....ஆல்ஃபா வாலும்...டேங்கோவாலும்னாலும்....ரூபி வண்ணங்களால் குளிர்ச்சியூட்டி டேங்கோ வை விஞ்சி நிற்கிறார்...
சாகோர் வழக்கம் போல அருமை
வி காமிக்சுக்கு 300 அனுப்பியாச் சார்
ReplyDeleteஆஹா அடுத்த மாதம் நான்கிதழ்கள்....
ReplyDeleteவி காமிக்ஸில் வன்மேற்கு...மற்றும் கானக மிஸ்டர் நோ ஆகஸ்டில்... ஆகஸ்டே எத்தனை இன்பங்களை தருவாயோ ...தாங்க ஏலாது போல
லக்கி ஆண்டு மலர்...வன்மேற்கு வியியிலும் வன்மேற்கு...கைதியாய் கார்சனும் சேத்து அடுத்த மாதமும் தூள் கிளப்ப ...அதுக்கடுத்த மாதம் ஐயா..ஐய்ஐய்யா...ஹையா ...ஹையய்யா...
ஒரு திருஷ்டி பொட்டாய் நம்ம சம்மர் ஸ்பெசல் சரியா காயல போல...பரணிய கிண்டல் செய்ததன் பலன் போல...பரணிக்கு போல நல்லா காய வச்சே அனுப்புங்க சார் தாமதமானாலும் பரவால்ல
ReplyDeleteசெம்ம ஸ்டீல் செம்ம டைமிங். ஆமா ஆமா பரணிக்கு புக் நல்லா காஞ்ச பிறகு அனுப்பினால் போதும்
Deleteஎடிட்டர் அய்யா🙏,
ReplyDeleteஎனக்கு இன்றுவரை ஜூன் மாத சந்தா புத்தகங்கள் கிடைக்கப் பெறவில்லை.
ஸ்ரீபாபு,
நாமக்கல்
9486785447
7904540866(whatsapp)
Sometimes it takes 3-4 days due to courier delay.
Deleteபுக் வரலைன்னா லயன் ஆபீஸீக்கு போன் செஞ்சு கேட்கலாம்..அதை விடுத்து தளத்தில் நீங்கள் அடிக்கடி இதே போல் கேட்பது
Deleteஎடிட்டரை நீங்கள் கொரியர் பாய் போல் ட்ரீட் செய்வது போல உள்ளது...
ஸ்ரீபாபு,
Deleteஇன்னேரம் உங்களுக்கு புத்தகம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.
ஆபிஸில் போன் செய்து விசாரியுங்கள்.
உங்களது பிரட்சனை, மற்றவர்க்கு வேறொரு கண்ணோட்டத்தை தரும்.
Sri Babu - In general please wait for one more day (after Coimbatore/erode belt delivery). That is how it comes to chennai. But distance between Selam and Namakkal is not much - I think it is to do with ST Courier nasty handling.
DeleteDr.Sunder அய்யா..🙏
Deleteநான் ஒண்ணும் உங்களை கேக்கலையே..😃
சந்தா பணம் கட்டிருக்கேன்..
புக் வரலன்னே வேற யார கேக்க முடியும்?.. 😶லேட்டானால் எடிட்டரதான் கேக்கணும்.. அததான் நான் செஞ்சேன்..😃
அதுவும் மரியாதையாக "எடிட்டர் அய்யா, எனக்கு புக் இன்னும் வரலைங்க" அப்படின்னு தானே கேட்டேன்... இதுல என்ன மரியாதை குறைவ நீங்க கண்டுபுடிச்சீங்க..😃
கொஞ்சம் வாசகர்களுக்கு மட்டும் புக் மறுநாளே கிடைச்சு கருத்தும், அட்டை படமும் போட்டு தூள் கிளப்பறப்ப.. எனக்கும் ஆதங்கம் வரும்தானே..😃
நான் எடிட்டர்கிட்ட கேட்டால் உங்களுக்கு என்னங்க வலிக்குது?.😄.
எடிட்டர் என்ன உங்களுக்கு மட்டும்தான் சொந்தமா?.. ஏன் எனக்கு சொந்தம் இல்லையா?..😀
உங்க மாதிரிதான் நானும் ... 😃
ஒரு காமிக்ஸ் ரசிகன், வாசகன்..😃
அது என்ன "கொரியர் பாய ட்ரீட் பண்ணறமாதிரி"ன்னு தேவையில்லாத வசனம் எல்லாம் பப்ளிக்கா பேசி நீங்கதான் எடிட்டர சங்கடபடுத்திட்டுகிட்டிருக்கிங்க...😶
என்ன..எனக்கும் எடிட்டருக்கும் சண்டை இழுத்துவிட பாக்கிறீங்களா?..😀
போற போக்க பாத்தா.. ஆட்டோவுல வந்து என்மேல ஆசிட் அடிப்பீங்க போல..😀
இது லயன்/முத்து காமிக்ஸ் வாசகர்களுக்கான தளம்..👍
எனக்கு "லயன்/முத்து காமிக்ஸ்" சந்தாபுக் வரலேன்னா இங்க கேக்காம வேற எங்க..
"வகம் காமிக்ஸ் தளம்" அல்லது "ரங்லீ காமிக்ஸ்" தளத்துலயா போய் கேப்பாங்க..😃
My mind voice:
"என்னமோ போடா..மாதவா"..
நான்பாட்டுக்கு எனக்கு புக் வர்லன்னு எடிட்டருகிட்ட கேட்டா..சேலத்து டாக்டருக்கு ஏன் கோபம் வருதுன்னு தெரியலியே...😏
அப்புறம்..முக்கியமான பின்குறிப்பு டாக்டர் சுந்தர்..
*எனக்கு இன்னைக்கு புக் பார்சல் வந்திருச்சு*😃😃😀
@புன்னகை ஒளிர் ஜி..😃
Deleteதங்களின் மேலான ஆலோசனைக்கு நன்றிகள் 🙏
Lion office க்கும் Whatsapp போட்டிருந்தேன்.உடனே ரசீது நம்பரும் அனுப்பிச்சிட்டாங்க..
Thanks to Lion office for immediate response..🙏💐
@ராகவன் ஜி..🙏
Deleteஇன்னைக்கு சந்தா புக்ஸ் வந்துருச்சுங்க ஜி..😃
May be courier delay or 2nd batch despatch..😃
Anyhow received June subscription books ji..😃
நீங்களும் ஜம்ப் பன்னிடுங்க டாக்டர் எங்களைச் போலவே....
Deleteடேங்கோ முதல் ஓர் பக்கம் போதுமே....பட்டாசு சார்...வரிகளும் ...விரிகடல் கொண்ட ஓவியங்களும்
ReplyDeleteமுதல் பக்க புரட்டலில் லக்கி லூக் போல உள்ளது கிட்....
ReplyDeleteரூபினோ நீங்க சொன்னத போல விறுவிறு....பக்ங்கள புரட்ட துடித்த கைகள் கட்டுபடுத்தியாச்
ReplyDeleteஆல்ஃபா செம் சார்...அட்டகாச வரலாற்றுப் பயணம் அற்புத ஓவியங்களின் வெளிச்சத்தில் காத்திருக்கு நிச்சயமாய்
ReplyDeleteடெக்சோ எல்லாத்துக்கும் மேலாய்
ReplyDeleteவி காமிக்சோ வீறுகொண்டெழ தயார்ங்றார் மாயாத்மா வரிகளில்
ReplyDeleteதெய்வமே,
Delete20 நிமிசத்துல, 6 கதையை படிச்சிட்டீங்களா.
ஒரே வரியில ஒவ்வொரு கதைக்கும் நச்சுன்னு விமர்சனம்.
எங்கேயோ போயிட்டீங்க ஸ்டீல்...
ஹிஹிஹி....நல்லா பாருங்க
Deleteரூபின் செம விறுவிறுப்பு .அடுத்தடுத்த திருப்பங்கள். ரிப்போர்ட்டர் ஜானியின் ஆரம்பகாலகதைகள்போலரொம்ப நாள் பேசப்படும் கதையாக அமைந்துவிட்டது . கரூர் ராஜ சேகரன்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஆர்வத்தை தூண்டி விட்டீர்கள் ராஜ சேகரன். நான் இன்னும் புத்தகம் அனுப்ப சொல்லவே இல்லை.
Deleteஇருப்பினும் இந்த மாதத்தின் எனது முதல் வாசிப்பு ரூபினியே.
பெண் கதா நாயகிகளில் மாசஸ்டி பிளசி - க்கு பிறகு பட்டையை கிளப்புவது இந்த நங்கையே.
என்னா Style என்னா அடி ...
கொரியர் டப்பியை நேற்றிரவு கைப்பற்றினேன். மழையில் நனைந்தபடி வீடு திரும்பி டப்பியை ஆவேசமாக உடைத்தால் உள்ளிருந்து அழகாய் கைகளில் வந்துவிழுந்தது 'சம்மர் ஸ்பெஷல்'! ஜூன் மாத இறுதியில் 'சம்மர் ஸ்பெஷலை' பார்த்ததும் கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது!
ReplyDeleteஉள்ளே புரட்டினால் விதவிதமான வண்ணங்களில் தினுசு தினுசாய் கதைகள்! ஆனால் அவசரகதியில் மேற்கொள்ளப்பட்ட பைண்டிங் பணியாலோ என்னவோ உள்பக்கங்களில் ஒருவித ஈரம் தெரிந்தது! சன்னமான பைண்டிங் நூல்கள் வெளியே தெரிய அதையொட்டிய பேப்பர் பகுதிகள் மடங்கிநெளிந்து பயமுறுத்தியது! படக்கென்று மூடி வைத்துவிட்டேன். இரண்டு மூன்றுநாட்கள் கழித்து புத்தகத்தின் கதியைப் பரிசோதிக்கத் திட்டம்!
ஒரு தவறு இன்னொரு தவறுக்கு வித்திட்டுள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது! இனிவரும் காலங்களில் பைண்டிங் பணியாளர்கள் ஏக பிஸியிலிருக்கும் வழக்கமான மாதங்களில் ஹார்டுகவர் வெளியீடுகளைத் தவிர்த்துவிட்டால் இதுபோன்ற பிரச்சினைகளையும் தவிர்த்துவிடலாமே என்பது என் தாழ்மையான கருத்து!
டெக்ஸ் இதழ் - அடர் வண்ணங்களில் அட்டகாசமாக வந்திருப்பதை உணரமுடிகிறது! பிராங்கோ பெல்ஜிய புத்தக அளவுகளில் டெக்ஸைப் படிக்கயிருப்பது அடிக்கடி வாய்த்திடாத ஒரு புது அனுபவமாய் இருந்திடக்கூடும்!
V-காமிக்ஸில் ஸாகோர் அட்டகாசமான சித்திரங்களில் அசத்துகிறார்!
இன்றைய மாலைப்பொழுது டெக்ஸுடன்!
கடைசி வரியை அவசரத்துல ஒரே ஒரு .எழுத்து மாத்தி படிச்சுப்புட்டோமுங்க - ஒரு நிமிஷம் 'திக்'க்குன்னு ஆஆயிருச்சுங்க - என்னடா இதை எல்லாம் வெளிய சொல்றாப்டின்னு ;-)
Deleteகரையெல்லாம் குருதி!
ReplyDeleteவித்தியாசமான கதைக்களம்!
சின்ன சின்ன திருப்பங்கள் கதைப்போக்கின் ஊடே வந்து திகைக்க செய்கின்றன.
கதையின் முடிவு எதிர்பாராதது.
இதழின் சைஸ் சொகுசான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.
9.25/10
கிட் ஆர்டின்..உஷார்!
ReplyDeleteவழக்கமான ரகளைகள்!!!!
Fart போன்ற சொற்பிரயோகம் சகல வயதினரும் படிக்கும் இதழில் தேவையா?
9/10
ஜூன் இதழ்கள் நேற்று வெற்றிகரமாக கைப்பற்றப்பட்டது...
ReplyDelete*கரையெல்லாம் குருதி*
ReplyDelete48 பக்கங்கள்ன்றதால சீக்கிரம் படிச்சு முடிச்சுடலாம்னு முதல்ல எடுத்தேன்.
*கலரிங் & ஓவியங்கள் செம்ம*
*இந்த கலரிங் ஆர்டிஸ்டுக்கு ஒரு பாராட்டு விழாவே வைக்கலாம்.*
முன்பு படிச்ச *ஒரு கொளபாய் காதலி* கதையும் சரி இந்த கதையும் சரி கலரிங் சும்மா அள்ளுது 😍🤩
கதையில வர்ற பெலிப் தான் முக்கிய புள்ளி.
வழக்கம் போல ஊர்ல வசதியான பெரும்புள்ளி தன்னோட செல்வ வளத்தால ஏழைகளுக்கு பாதிப்பு வர்ற மாதிரி ஒரு பொல்லாக் காரியத்தை செஞ்சுபுடறான்.
அதை எதிர்த்து பெலிப்பும் அவன் கிராம வாசிகளும் போராடும் போது அந்த பணக்காரனோட ஆளுங்க அவங்களை எல்லாம் சுட்டுடறாங்க.
அதுல தப்பிக்கற பெலிப் தன் கிராம மக்கள் நலனுக்காக அந்த பணக்காரனுக்கு எதிராக ஒரு திட்டம் போடறாங்க.
நடுவுல நம்ம ஹீரோ இரவுக் கழுகும், கார்சனும் உள்ள புகுந்து அதிரடி காட்டுறாாங்க.
இறுதியில அவன் தன் கிராம மக்களின் நலனுக்காக செய்யும் தியாகம் கலங்க வைக்குது.
@எடிட்டர் அய்யா 🙏
ReplyDeleteஇன்றைக்கு எனக்கு ஜூன் மாத புக்ஸ் வந்துருச்சுங்க..🙏
Whatsapp ல் லயன் ஆபிசுக்கு மெசேஜ் போட்டவுடனே கூரியர் ரசீது எண் உடனே அனுப்பிச்சுட்டாங்க...👍
Thanks to Lion comics front office staff for immediate response.👏👌💐💐
Ok ஸ்ரீபாபு.
DeleteHappy reading ...
*கரையெல்லாம் குருதி*
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு பெரிய அளவில் டெக்ஸை அட்டைப்படத்தில் பார்த்ததுமே சிறிது மகிழ்ச்சி கூடுதலானது உண்மையே வழக்கமான அளவில் அதிகம் விருப்பம் அதிகமாகவே இருந்தாலுமே.....
எனக்கு ஒரே சந்தேகம்தான் கதையின் ஆரம்ப பக்கங்கள் இரு பக்கங்களை படித்ததுமே கதை இப்படி தான் செல்லும் ,இதன் முடிவு இப்படி தான் இருக்கும்..கதையின் "நாட் " இதுவே என்பதையும் நம்மால் முழுதாக உணர முடிந்தாலுமே கூட கதையை வாசிக்க தொடங்கியவுடன் முடியும்வரை எப்படி இப்படி மிக ஆவலுடன் பரபரவென...விறுவிறுப்பென கதையை கொண்டு செல்ல முடிகிறது என்பது தான் .....அது சிறிய பக்கங்களான கதை என்றாலும் சரி ,நீண்டு செல்லும் மிக நீண்ட பக்கங்கள் கொண்ட கதை என்றாலும்.
அதே பரபர விறுவிறுதான் இந்த கரையெல்லாம் குருதி ..ஆனால் இந்த கதையில் இறுதி க்ளைமேக்ஸ் நான் எதிர்பாரா ஒன்றே என்பதையும் மறுப்பதற்கு இல்லை...வித்தியாசமான வண்ண சித்திரங்கள் ,அழகான அட்டைப்படம்..சிறப்பான மொழிஆக்கம் இதழை இன்னும் மெருகூட்டுகிறது...டெக்ஸின் மற்றோரு வெற்றி படைப்பு இந்த கரையெல்லாம் குருதி.
தலைவர்னா தலைவர்தா. சான்ஸே இல்லை.
Delete198
ReplyDelete199
ReplyDeleteMe the 200 !! :-)
ReplyDelete201
ReplyDelete