Powered By Blogger

Sunday, June 04, 2023

Mr.P & Mr.U.P. !!

 நண்பர்களே,

வணக்கம். ஒரே நேரத்தில் உங்களுக்கு 2 அடையாளங்கள் உண்டு guys ! "சுலபமாய்க் கணிக்கக்கூடியவர்கள்" என்பது ஒரு அடையாளமெனில், "இம்மியும் கணிக்க இயலாதவர்கள்"  என்பது அடையாளம் # 2 !! 

சில தருணங்களில், உங்களுக்கு செமையாகப் புடிக்கும் என்ற நம்பிக்கையினில், ஏதேதோ ரெசிபிக்களை யூடியூபில் தேடிப்பிடித்து, எங்கெங்கிருந்தெல்லாமோ exotic ஐட்டங்களைக் கொள்முதல் பண்ணி, "செம wonderful dish ya...இதை சப்பானிலே சாக்கி சான் சாப்ட்டாகோ ;  மொரோக்கோவில மைக்கேல் சாக்ஸன் சாப்ட்டாகோ" என்ற பில்டப் சகிதம்,  'டக்கிலோ' என்ற சமையலை ஆரம்பித்தால், அடுக்களை பக்கமாய் மயான நிசப்தம் நிலவிடுவதுண்டு ! அதே சமயம் "க்ளாஸிக் மறுபதிப்புகள்" என்ற சர்க்கரைப் பொங்கலை, வழக்கமான பச்சரிசியும், வெல்லமும், நெய்யும் போட்டு, அடுப்பில் ஏற்றிய  நொடியே, பிகில்கள் காதை பிளப்பதுண்டு ! Predictable & Unpredictable too folks !!

நேற்றைய பதிவினில், உங்களின் அந்த 2 அடையாளங்களையுமே தரிசிக்க எனக்கு இயன்றது ! "கார்சனின் கடந்த காலம்" நிச்சயமாய் உங்களின் ஆர்ப்பரிக்கும் அபிமானங்களை ஈட்டிடும் என்றமட்டில் என்னால் யூகிக்க முடிந்திருந்தது ! So உங்களை Mr.Predictables ஆக அங்கே பார்த்திட முடிந்தது ! 

அதே சமயத்தில், "MAXI சைசில் போட்டாலென்ன ?" என்ற எனது நப்பாசைக்கு, பிய்ந்த விளக்குமாறுகளே பரிசாகப் பறக்குமென்று  எதிர்பார்த்திருந்தேன் ! "ரெண்டாம் கண்ணாலம் கட்டப் போற ஆன்ட்டிக்கு, பார்லருக்குப் போய் bridal makeup வேற கேக்குதோ ?" என்று முட்டுச் சந்துக்குள் கடாசிக் குமுறி எடுப்பீர்கள் என்றே எதிர்பார்த்திருந்தேன் ! இருந்தாலும் வடிவேலு பாணியில், கொஞ்சம் விறைப்பாக நின்னுக்கினே "ஆருகிட்டே கேக்க போறோம்....நம்ம அண்ணனுங்க..தம்பிங்க கிட்டே தானே ? மிஞ்சி போனா ஒரு ராவுக்கோ, ரெண்டு ராவுக்கோ மூ.ச.விலே வைச்சு ராவி எடுப்பாங்க !! போவோம்..போயி தான் பாப்போமே ?! என்றபடிக்கே பிட்டைப் போட்டு வைத்தேன் ! And ஆத்தாடியோவ்...சுனாமியாய் ஆதரவு - proving that you can be Mr.Unpredictables too !!

சேலத்திலும் சரி, கரூரிலும் சரி, திருப்பூரிலும் சரி, பூத் ஏஜெண்ட்கள் உருட்டைக்கட்டைகள் சகிதம் ஓட்டுக்களை சாகுபடி செய்தது ஒருபக்கமென்றாலும், நமக்கு ஓசையின்றி வந்துள்ள மின்னஞ்சல்களிலும், வாட்சப் தேர்வுகளிலும் கிட்டத்தட்ட 90% வோட்டுக்கள் MAXI சைசுக்கே விழுந்துள்ளன ! இன்னமும் நேரம் இருப்பதால் இதோ - நேற்றைக்கே நான் போட ரெடி பண்ணி வைத்திருந்த independent poll-ன் லிங்கையும் இங்கே தருகிறேன் இப்போது !

https://strawpoll.com/polls/e7ZJGpl9Gy3

ஒரு பார்வை அங்கேயும் பார்க்கலாமே folks ?

எது எப்படியோ - I now have here the numbers & details for the ஈரோட்டு சம்பவம்ஸ் :

1.சுஸ்கி & விஸ்கி ஸ்பெஷல் - ரூ.330 

2.The BIG BOYS ஸ்பெஷல் - ரூ.300 

3.விதி எழுதிய வெள்ளை வரிகள் - ரூ.100 

4.மார்ட்டின் in கலர் - ரூ.85 

5.(ஒரிஜினல் ஆடலும், பாடலுடனும் )கார்சனின் கடந்த காலம் !

கா.க.கா.MAXI சைஸ் தேர்வாகிடும் பட்சத்தில் - மொத்த package : ரூ.1550 + கூரியர் என்றிருக்கும் ! கூரியர் கட்டணங்கள் பற்றி நாளை தெரிந்ததும் சரியாக அறிவித்து விடுகிறேன் !

இது முன்பதிவுகளுக்கான பிரத்தியேக விலை மாத்திரமே - which means MAXI சைசிலான கா.க.கா.விற்கென நீங்கள் தரவிருப்பது ரூ.735 மட்டுமே !

கடைகளிலோ, இதழ் வெளியான பிற்பாடு விழாக்களிலோ வாங்கிட எண்ணிடும் பட்சத்தில் the price would be higher ! முன்பதிவுகள் செய்யாது அந்நேரம் கழுவிக் கழுவி ஊத்திடும் சங்கத்தைச் சார்ந்தோராய் நீங்கள் இருப்பின், sorry folks ! Can't do much about it ! 

And "இது வேணாம் ; அது போதும்" என்று தேர்வு செய்து வாங்கிட நீங்கள் எண்ணும் பட்சத்தில், உங்கள் தேர்வுகளோடு ஒரு வாட்சப் தகவலை  73737 19755 என்ற ஆபீஸ் நம்பருக்கு அனுப்பினால், கூரியர் சேர்த்து எவ்வளவு அனுப்பிட வேண்டுமென்று சொல்லுவார்கள் ! இங்கே நான் தந்துள்ளது மொத்தமாய் 5 இதழ்களையும் வாங்கிடவுள்ள நண்பர்களுக்கான முன்பதிவுக் கட்டணம் மாத்திரமே ! முன்பதிவுகள் ஜூலை 10 வரையிலும் தான் guys !! 

And ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்ள விரும்புவோராய் நீங்கள் இருக்கும் பட்சத்தில், கூரியர் கட்டணங்களுக்கு அவசியங்கள் இராது ! ஆனால் அதை முன்கூட்டியே நீங்கள் தெரிவிக்க வேண்டியிருக்கும் - for us to bring your books there !

Phewwwww !! 'எல்லாத்தையும் கவர் பண்ணியாச்சு' என்றபடிக்கே மல்லாக்கப் படுத்தால், நிச்சயமாய் ஏதேனுமொரு புதுக் கேள்வியோடு நம்மாட்களை நாளைக்குப் பந்தாடுவீர்கள் என்பது தெரிந்தது தான் !! But still இப்போதைக்கு எல்லா பக்கமும் கேட்டை போட்டாச்சு என்ற நினைப்போடு ரூபினின் பணிகளை நிறைவு செய்யக் கிளம்புகிறேன் guys ! Bye for now ; have a sweet Sunday !! 


110 comments:

 1. வணக்கம் நண்பர்களே!!

  ReplyDelete
  Replies
  1. ஒரிஜினல் ஆடலும் பாடலுடன் காககா...

   சூப்பர்!!!!

   @கி.ஆ.க.

   Delete
  2. வெற்றி வெற்றி

   Delete
 2. முதல் முறையாக பத்துக்குள்

  ReplyDelete
 3. ஆகா.. சூப்பர் சார்... ஈரோடு தெறிக்கட்டும் ..

  ReplyDelete
 4. கார்சனின் கடந்த காலம்
  ஒரு காவியம்!! அந்த காவியத்தை மீண்டும் ஒரு முறை எங்களுக்காக அழகாக பெரிய பேனரில் வருவதில் சந்தோஷமே!! ❤️💥💥🙏

  ReplyDelete
 5. கா க காலம்.. மேக்சி சைசில் .. அட்டையில் லீனாவின் பாடல் வரிகளோடு - பாடும் காட்சி - ரசிக்கும் கார்சன்.. மனம் கொள்ளை போகுதே..

  ReplyDelete
  Replies
  1. ஐயா தாங்கள் ஒருமுறை இந்த முழு பாடலை டைப் பண்ணி போட்டு இருந்தீர்கள். இப்போது இருப்பின் இங்கே போட வேண்டுகிறோம்.😍🙏

   Delete
 6. ஏற்கனவே வந்த கதை திரும்பவும் வந்த size'லையே hard cover மட்டுமே எனும் போதுதான் அது ""ரெண்டாம் கண்ணாலம் கட்டப் போற ஆன்ட்டிக்கு, பார்லருக்குப் போய் bridal makeup வேற கேக்குதோ ?" . Maxi size with big panels என்பது, பொ.செ மற்றும் Leoல் வந்து கலக்கும் த்ரிஷா வின் அழகு சார்...

  ReplyDelete
  Replies
  1. சின்ன நந்தினி💞 என்பது அடியேனின் சிறு கருத்து ஐயா

   Delete
 7. ஹைய்யா புதிய பதிவு...

  ReplyDelete
 8. உள்ளேன் ஐயா....🙏

  ஹாய் ப்ரெண்ட்ஸ்💞

  ReplyDelete
 9. ஆசிரியரே கா.க.க. முதல் பக்கத்தில் குடும்ப போட்டோ இடம் பெற வாய்ப்புண்டா

  ReplyDelete
 10. வாவ்! பழைய பாடல் வரிகளுடன் மேக்ஸி சைஸ்.

  எதிர்பாராத சர்ப்ரைஸ் அனைவருக்கும். 😁😍

  நன்றி ஆசிரியரே 🙏

  ReplyDelete
 11. வெற்றி வேல்..
  வீர வேல்..!!!!!

  ReplyDelete
 12. ஒரு சிக்கன் பிரியாணிய போட்டுட்டு ஃபிரியா மல்லாக்க படுப்போம்...

  ReplyDelete
 13. சூப்பர் சார்...சுஸ்கி அட்டைப்படம் இது வரை வந்ததிலையே டாப்பாருக்கும் போல படுது....

  சார் வேரியண்ட் கவருடன் எக்ஸ்ட்ரா ஓர் புக்1850 க்கு வாங்கலில் கொரியரில் மாற்றமிருக்குமா என கேள்வி நிச்சயமெழும்...அதே தொகைதானா கூடுமா கொரியர் செலவென குறிப்பிடல் நலம்...வேற கேட்டுகளும் திறக்கலாம்

  ReplyDelete
 14. சார்1850 அனுப்பினால....நான் ஈரோட்டில் ஸ்பைடர் மாயாவி இரு அட்டைகளுடன் வாங்கப் போகிறேன்.

  ReplyDelete
 15. ஆஃபீஸ்ல.....
  1850 ...1550(2)....கொரியர்+இதழ்....என நாலு பொட்டிகள திறக்கச் சொல்லுங்க...ஈரோட்டில் நேரடியாய் கொலைப் படை இரு இதழ் வாங்குவோர்....கொலைப் படை ஓரிதழ் வாங்குவோர்....அதில் இரண்டு பிரிவு மாயாவி தனியே ஸ்பைடர் தனியே.....கொரியரில் வாங்குவோர் என நான்கு மெயின் பாக்ஸ்

  ReplyDelete
 16. அருமை சார்... இரண்டு நாட்கள் வலை பக்கம் வராமல் இருந்தால்... என்னென்ன களேபரங்கள் நடந்துள்ளன... கா. க. கா. MAXIக்கே எனது வோட்டை பதிவு செய்ய ஓடி வந்தால்... இங்கு ப்ரிண்டே முடிந்து கூரியர் படலம் ஆரம்பித்து விட்டது போலேயே... ம்ம்ம்ம்ம்... நடக்கட்டும், நடக்கட்டும்....

  ReplyDelete
 17. 1550 ஆ அல்லது 1850 ஆ? புரியலியே?

  ReplyDelete
  Replies
  1. The big boys special-2வேரியன்ட் கவர்களுடன் வருது சார்.... இரண்டும் வேணும்னா 1850... ஏதாவது ஒரு கவர் உடன் மட்டுமே எனில் ரூ1550.

   ரூ1550 செலுத்தும் பட்சத்தில்,
   ஸ்பைடரா? இரும்பாரா? எந்த கவர்னு குறிப்பிடணும். இல்லையெனில் ஆட்டோவாக ஸ்பைடர் கவர் அனுப்பி விடுவாங்க..

   Delete
  2. 1550 செலுத்தும் பட்சத்தில் சிலந்தியாரே இருப்பார்..

   Delete
 18. [ (ஒரிஜினல் ஆடலும், பாடலுடனும் )கார்சனின் கடந்த காலம் ! ]

  (ரொம்ப சந்தோசமாய்) உள்ளேன் ஐயா..!!

  ReplyDelete
 19. Almost everybody in Tex willer's group has love episodes including Tex willer but among the lot it is kid carson whose episode always rocks. 🥰

  ReplyDelete
 20. நானும் ஓட்டு போட்டுட்டேன்

  ReplyDelete
 21. Great decision.
  Looking forward to receive this IMAX version of கார்சனின் கடந்த காலம் Sir

  ReplyDelete
 22. All these are fine about specials, but when can we see the subscription issues. With all the new issues planning, there is a back log happening in the subscription issues in the last two months.. We should not skid to the situation of initial years.

  ReplyDelete
  Replies
  1. Sir, Please do a count of the books advertised and a recount in December when the subscription ends...! Everything has been planned meticulously though it might not seem so from the outside !

   Delete
  2. May be the comment was about the date of dispatch sir - interludes pushing the monthly timeline - that is what he meant sir - not the total books delivered per year.

   Delete
  3. The only delay thus far has been in May sir. ..and for obvious reasons too !

   Delete
 23. ///போவோம்..போயி தான் பாப்போமே ?! என்றபடிக்கே பிட்டைப் போட்டு வைத்தேன் ! And ஆத்தாடியோவ்...சுனாமியாய் ஆதரவு - proving that you can be Mr.Unpredictables too !!///

  லெஃப்ட்ல கையை காட்டி,
  ரைட்ல இன்டிகேட்டர் போட்டு,
  ஸ்ட்ரெய்ட்டாக போறதை தாங்கள் தானே பயிற்று வித்தீர்கள் சார்....

  ReplyDelete
 24. ///சேலத்திலும் சரி, கரூரிலும் சரி, திருப்பூரிலும் சரி, பூத் ஏஜெண்ட்கள் உருட்டைக்கட்டைகள் சகிதம் ஓட்டுக்களை சாகுபடி செய்தது ஒருபக்கமென்றாலும், நமக்கு ஓசையின்றி வந்துள்ள மின்னஞ்சல்களிலும், வாட்சப் தேர்வுகளிலும் கிட்டத்தட்ட 90% வோட்டுக்கள் MAXI சைசுக்கே விழுந்துள்ளன ! ////

  ஹி...ஹி....அன்பா சில வாக்குகளை கேன்வாஸ் பண்ணியிருப்பாங்க அன்பு தம்பிங்க....😉

  ReplyDelete
 25. https://strawpoll.com/polls/e7ZJGpl9Gy3

  ஜனநாயக கடமையை ஆத்தியாச்சுங்க சார்..

  ஆனாக்கா ரிசல்டை காட்டலீங்களே...

  ReplyDelete
  Replies
  1. இந்த முறை தேர்தல் முடியும் போது மட்டுமே முடிவுகள் தெரியும் சார் ! So 'சப்பக்' சப்பக்கென்று எதேனும் ஒன்றில் குத்துவது இம்முறை சாத்தியமாகிடாது !

   அப்படி இருந்துமே Option 4 க்கு கஷ்டப்பட்டு 2 டுபாக்கூர் ஓட்டுக்கள் இருமுறை பதிவாகியுள்ளன ! சிஸ்டமே அடையாளம் காட்டி விடுகிறது - அத்தகைய முயற்சிகளை !

   Delete
  2. ஓகே சார்.. சர்ப்ரைஸ் நல்லது..

   எது இந்த ஆப்சன்4க்கு கள்ள ஓட்டா?

   //"டிக்கியை சாத்தினால் சாலச் சிறந்தது" என்று கீழடியில் கல்வெட்டில் இருக்குதாம்ப்பா !///---ஓஹோ எதுவும் போட வேணாம்னு சொல்ல மெனகெட்டு கள்ள ஓட்டா.....!!!


   Delete
  3. ஆப்சன் நாலுக்கு சிரமப்பட்டு கள்ள ஓட்டா? 🤣🤣🤣🤣

   Delete
 26. ///5.(ஒரிஜினல் ஆடலும், பாடலுடனும் )கார்சனின் கடந்த காலம் !///

  ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்...😍

  """""தப்பியோடிக் காணத் துடிக்கிறேன்..
  அந்தச் சின்னப் பெண்ணை..
  நான் பிரிந்துவந்த காதல் தேவதையை..
  பாதையில் தடையாய் பாவி செவ்விந்தியர்கள்..""""----என லினா பாடும் போது கரைஞ்சி போவுது கார்சர் மட்டுமல்ல... பழங்காலத்தை நினைத்து நமக்குள் உரையும் ஒவ்வொரு கார்சரும் தான்...💞💞💞💞

  ReplyDelete
 27. ///கா.க.கா.MAXI சைஸ் தேர்வாகிடும் பட்சத்தில் -////

  ---இதற்கு மேலும் கா.க.கா. செலக்ட் ஆக என்ன தடை வந்திடப் போகுதுங் சார்...

  கேன்வாஸ் ஏதும் பண்ணனுமா?? திருப்பூர் தம்பியும் கரூர்,சேலம் டீமும் ரெடியாக உள்ளது.😜

  ReplyDelete
 28. ////இது முன்பதிவுகளுக்கான பிரத்தியேக விலை மாத்திரமே - which means MAXI சைசிலான கா.க.கா.விற்கென நீங்கள் தரவிருப்பது ரூ.735 மட்டுமே !////

  ---போடு வீடியோ... கிட்டதட்ட புத்தக விழா சலுகையை முன்பதிவுகளுக்கு அளித்து விட்டீர்கள்.. நெஞ்சார்ந்த நன்றிகள் சார்!🙏🙏🙏

  அகில உலக தமிழ் பார்சன் ரசிகர்களும் மகிழ்ச்சி....

  ReplyDelete
 29. ///ஈரோட்டில் நேரில் பெற்றுக் கொள்ள விரும்புவோராய் நீங்கள் இருக்கும் பட்சத்தில், கூரியர் கட்டணங்களுக்கு அவசியங்கள் இராது //--

  ஆஹா...ஆஹா..

  ஈரோடு விழாவில் ஒவ்வொருவர் பெயராக வாசிக்க வாசிக்க ஆருயிர் நண்பர்களது பலத்த கரகோஷத்துக்கு இடையே இதழ்களை, மரியாதைக்குரிய சீனியர் சார் அல்லது திரு கருணையானந்தம் ஐயா அவர்களிடம் இருந்து பெறும்போது அப்படியே நெகிழ்ச்சியாக இருக்கும்...🤩🤩🤩
  இப்பொழுதே அந்த மகிழ்ச்சியான நொடிகள் மானசீகமாக வந்து போகுது...

  ReplyDelete
 30. சுஸ்கி விஸ்கி அட்டை அதகளம் பண்ணுது.....💞

  இதுவும் ஈரோடு தாண்டினாலே அதிசயம் தான் சார்....

  பேரிக்காய் போராட்டம் தான் ஈரோட்டில் முதல் ரீடிங்..

  ReplyDelete
 31. ஓட்டுப் போட்டாச்சுங்க.

  ReplyDelete
 32. டியர் எடி, நான் போன பதிவில் என்ன முடிவு எடுத்தேனோ, அதே இந்த ஓட்டிலும் போட்டு விட்டேன்.

  Maxi Size படிப்பதற்கு மட்டுமல்ல, சேகரிப்பிற்கும் உகந்தது அல்ல. அது அட்டை மடங்காமல், கோணம் கசங்காமல், பார்த்துக் கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.

  கூடவே நடப்பு ஆண்டில், ஏற்கனவே காமிக்ஸ் பட்ஜெட் ரொம்ப அதிகம். அனைத்து புத்தகங்களையும் சேர்க்க வேண்டும் என்று எண்ணும் என்னை போன்ற ஆட்களுக்கு இது கூடுதல் சுமை தான்.

  எனவே எனது ஓட்டு ==========

  • ரெகுலர் டெக்ஸ் சைஸ் ஹார்ட்பவுண்ட் மட்டுமே ....

  .... வழக்கம்போல ஜனநாயக கடமையாற்ற முன்பதிவு செய்து விட்டு ஈரோட்டில் பெற்றுக் கொள்ளலாம் என்று எண்ணி உள்ளேன் ..... சீக்கிரம் உறுதி செய்யுங்க. 🥰👍

  ReplyDelete
 33. அப்பாடா இப்பவாது பஸ்ஸை புடிச்சு நேரத்துக்கு வந்தோமே....:-)

  ReplyDelete
 34. Sir - I am TEX FAN since Sivappai oru Soppanam and I have voted for KKK Color MAXI - however I see why the same standard is not applicable to another iconic story - THANGAK KALLARAI.

  Though I supported KKK Color Maxi - this album is not my personal favourite and was reprinted fairly recently. I would have liked TK with original dialogues in color maxi ahead of KKK at least. Anyways will go for the full set. If Tintin releases I may plan an Erode trip sir - want to talk on Tintin.

  ReplyDelete
  Replies
  1. த.க. வைத்தான் சில மாதங்களுக்கு முன்பு ஓட்டிங்கின் போது வேணாம்னு நம்மவர்கள் சொல்லி இருந்தாங்களே..


   அநேகமாக கா.க.வா. வை பார்த்தா த.க. வுக்கு டிலானின் இன்கிரீஸ் ஆக கூடுமோ?!!

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Sir, Thanga Kallarai was reprinted an year and a few months before KKK. And it was reprinted again after 8 months, when the original stock ran out. So no real big difference in timelines between the 2 reprints !

   If Thanga Kallarai hadn't been found wanting in support, would definitely have been in the scheme of things !

   Delete
  4. And timeline TINTIN isn't in my hands at all sir...everything hinges on their approval process !

   Delete
 35. 4வது ஆப்ஷன் தான் எனது ஓட்டும்.

  வேறு ஒரு மறுபதிப்பு ஆகாத எத்தனையோ கதைகள் இருக்க மறுபடியும் கா.க.கா எனது தேர்வில் இல்லை.

  இதே சைசில் வேறு கதையை முயற்சி செய்திருந்தால் 7 முதல் 77- ஐ கவர்ந்திருக்கும்.🥰

  குறிப்பு: சேகரிப்பில் ஈடுபடுபவர்களை வேண்டுமானால் வாங்கிக்கோ, இல்லையென்றால் வேண்டாம் என சொல்லி விடக்கூடாது! 🙄

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. மீண்டு(ம்) வந்த மாயன் - 330 பக்கங்கள்

   The SUPREMO ஸ்பெஷல் - 550 பக்கங்கள்

   The சிக்ஸர் ஸ்பெஷல் - 360 பக்கங்கள்

   கைதியாய் கார்சன் - 220 பக்கங்கள்

   இவையெல்லாமே நீங்கள் குறிப்பிடும் 7 to 77 க்கான தேர்வுகள் தானே நண்பரே ? கூட்டிப் பாருங்களேன் - page count என்னவென்று ?

   புதியனவற்றில் கவனத்தைக் களைந்து, மறுபதிப்புகளின் திக்கில் மட்டுமெ நாம் நடந்து வரும் பட்சத்தில், நீங்கள் சொல்வதில் சாரமிருக்கும் ! ஆனால் நாக்குத் தொங்கும் அளவிற்குப் புதுப் பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து கொண்டிருப்பது கண்கூடாய்த் தெரியும் போதும், ஒரு பெரும்பான்மைக் கோரிக்கைக்கு செவி மடுப்பது குற்றமாகிடுமா ? ஆகிடுமெனில் அந்தப் பழியை ஜாலியாய் ஏற்றுக் கொள்வேன் நண்பரே !

   Delete
  3. வார்டன்னா அடிப்போம் மொமென்ட்...

   Delete
 36. வணக்கம் நண்பர்களே

  ReplyDelete
 37. ஜனநாயக கடமையை ஆற்றியாச்சு...

  காககா மேக்ஸி சைஸ் வந்த பிறகு தங்கக் கல்லறைக்கு ஒரு ஓட்டெடுப்பு நடத்துங்கள் சார்...

  டைகர் கதைகள் அனைத்தும் மேக்ஸி ஹார்ட் கவரில் சிறிய கால இடைவெளியில் வந்தால்... ஆஹா ஆஹா...

  கனவு மெய்ப்படட்டும்

  ReplyDelete
 38. சொல்ல மறந்துவிட்டேன்.. சுஸ்கி விஸ்கி அட்டை அட்டகாசம்... இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும்...

  முதல் புத்தகத்தைப் போல இரண்டாவதும் தெறிக்க விட நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 39. சுஸ்கி-விஸ்கி அட்டை படம் அருமை. முன்பதிவு செய்தாச்சு.

  ReplyDelete
  Replies
  1. இரவினிலும் வோட்டுப்பதிவுகள் நடந்துள்ளன ; காமிக்ஸ் ஜனநாயகக் கடமையை இதுவரையிலும் 150+ நண்பர்கள் ஆற்றியுள்ளனர் ! And இந்தப் புதிய poll வழிமுறையில் ஓட்டுக்களை சரி செய்து கொள்ளவுமே வாய்ப்பிருப்பதால் surprise ...surprise ...Option # 4 க்கு குத்தப்பட்ட 2 x 2 டப்ஸா வோட்டுக்களையும் நண்பர்களே செப்பனிட்டு விட்டார்கள் ! அப்புறம் "நொந்தவன்" என்ற பெயரினில் ஓட்டுப்போட்டதொரு நண்பரும் பங்கேற்றுள்ள 150+ல் ஒருவர் !

   பின்மதியம் நிறைவுறவுள்ள poll என்பதால் இன்னமும் ஒட்டுப் போட்டிருக்கா நண்பர்கள் can do us the honors ப்ளீஸ் !

   Delete
  2. இப்போதய நிலவரப்படி யார் முன்னிலையில் இருக்காங்கன்னு சொன்னா கொஞ்சம் கள்ள ஒட்டு ரெடி பண்ண வசதியா இருக்குங்க சார்.

   Delete
  3. போல் முடிவுகள் பத்தி சுவராஸ்யமான தகவல் கொண்ட பதிவு வரும் போல 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

   Delete
  4. ///"நொந்தவன்" என்ற பெயரினில் ஓட்டுப்போட்டதொரு நண்பரும்///

   ரொம்பவே நொந்து போயிருப்பார் போல...😂

   Delete
 40. ஜுன் வெளியீடுகள் என்னவாயின?

  ReplyDelete
  Replies
  1. June 12 ; July 6 ; August 4 ; September 4 ; October 1 ; November 1 ; December 1 என்பதே நடப்பாண்டின் மாதாந்திர டைம்லைன்ஸ் !

   Delete
  2. சூப்பர் எடி... ஒரு வழியா ஒண்ணாந் தேதி சீக்கிரம் எட்டிப் பிடிக்கிறோம். நடுவில் எதுவும் திடீர் ஸ்பெஷல் இதழ் வந்து நாட்களைத் திண்ணுடாம இருக்கணும்.... 😁

   Delete
  3. Ha Ha - it will come - one more online fair :-)

   Delete
  4. Not until the Christmas break :-)

   Delete
  5. Super Sir thanks for the Heads up.

   Delete
  6. அட்டே summer mela மாதிரி விண்டர் மேளாவும் உண்டா. ஜனவரி சென்னை புத்தக விழா முன்னே.

   @குமார்..வாங்க நாம இப்பவே உக்காந்து லிஸ்ட் போட ஆரம்பிப்போம்.

   Delete
  7. @Mahi : எடிட்டர நிம்மதியா இருக்க விட மாட்டீங்களே 😁

   Delete
 41. ஆஹா வென்றது மேக்ஸி.
  அடுத்த ஆடலும் பாடலும் தான் ஸ்டார்ட் மியூசிக்.

  ReplyDelete
 42. அப்புறம் எனக்கு தி பிக் பாய்ஸ் ஸ்பெசலில் தான தலைவன் ஸ்பைடர் அட்டைப்படம் மட்டும் போதும்.

  ReplyDelete
 43. கடைசிநிமிடங்களில் நானும் ஜனநாயகக் கடமையை ஆத்திட்டேன்! மேக்ஸிக்கே எனது வோட்டு!

  ReplyDelete
  Replies
  1. மேக்ஸி ன்னு பேர் இருக்கறப்பவே நீங்க அதுக்குத்தான் ஓட்டு போடுவிங்கன்னு தெரியும் குருநாயரே.!
   இதுவே.. அந்த சைசுக்கு லுங்கி.. கைலி ன்னு பேர் வெச்சிருந்தா ஓட்டு போட்டிருப்பிங்களா..?

   Delete
 44. Poll closed என வருகிறது ஆசிரியர் சார்..
  முடிவுகள் & உறுதியான முன்பதிவு விவரங்களை அடக்கிய பதிவு இன்று உண்டுங்களா சார்!

  ReplyDelete
 45. Dear Editor Sir,
  Payment of Rs.1700 sent via Gpay for ERODE SPECIALS.
  Regards.
  S.Gopinath, Chennai

  ReplyDelete
 46. My vote is for Maxi... But the poll has been closed.

  ReplyDelete
  Replies
  1. சரியாக 24 மணி நேரங்களுக்கான poll அது உதய் ; தானாய் முடித்துக் கொள்ளும் !

   Delete
 47. எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே! :)

  ReplyDelete